ஆறுமுகம்முருகேசன் கவிதைகள்

[ A+ ] /[ A- ]

 262105_2072604503055_8043447_n

 

 

ஜென்மம்போதாதல்லவோ 

 

ஒரு குளத்தை அப்படியே எடுத்து

சிறுகல்லில் எறிவதென்பது

 

உங்களுக்குப் புன்னகையை வரவழைக்கலாம்

உங்களை வித்தியாசமாக உணரச் செய்யலாம்

சாத்தியமல்லவென மறுக்கவும் கூடச் செய்வீர்கள்

 

ஆனால்

அதுதான் நிகழ்ந்தது.

 

இப்பொழுது

பாவனைச் செய்து கொள்ளுங்கள்

நீங்கள் விரும்பியபடி

 

அதற்குள்

நாங்கள் இருவரும் கைகளை இறுக்கமாகக் கோர்த்துக்கொண்டு

சுமார் பதினெட்டாயிரத்து மூன்னூற்றி சொச்சம் கிலோமீட்டர் கடந்திருப்போம்

 

*****

 

நிரூபணங்களின் ஆதிமழை 

 

பெரிதாக ஒன்றும் செய்யவில்லை நான்

ஆண்டாண்டு காலமாக நீங்கள்

கவனித்துக்கொண்டிருக்கும் ரோஜா செடியிலிருந்து

ஒற்றைச் சிகப்பு ரோஜாவைப்பறித்து அவளிடம் நீட்டினேன்.

 

மௌன மழையை அசரடித்துவிட்டுத் தலையேறிக்கொண்டது

அச்சிகப்பு ரோஜா.

 

இக்கணம் நாங்கள் இருவரும் உயிரோடில்லை

என்பதை மட்டும்

தம்பி செழியா

நீ ரகசியமாக வைத்துக்கொள்

 

*****

 

 

Leave a Reply