என் கவிதை என்பது பிரித்தறிவது ; வாழ்க்கையும் அப்படித்தான் ” ஜான் அஷ்பெரி [ John Ashbery ] / தி.இரா.மீனா

[ A+ ] /[ A- ]

download (81)

இருபதாம் நூற்றாண்டின் தலை சிறந்த அமெரிக்கக் கவிஞராக மதிப்பிடப் படும் ஜான் லாரன்ஸ் அஷ்பெரி [1927] அமெரிக்க நாட்டின் கவிதைக்கான ஒவ்வொரு உயர்ந்த விருதையும் பெற்றவர். Pulitzer Prize ,the National Book Award, the Yale Younger Poets Prize, the Bollingen Prize, the Ruth Lilly Poetry Prize, the Griffin International Award, MacArthur “Genius” Grant என்று சிலவற்றை வரிசைப்படுத்தலாம்.

ரோசெஸ்டரில் பிறந்த ஜான் அஷ்பெரி பள்ளி நாட்களில் ஓவியத்தின் மீதும் இலக்கியத்தின் மீதும் ஈடுபாடுடையவராக இருந்தார். அவர் முதல் கனவு ஓவியராக வேண்டுமென்பதுதான்.

பள்ளிக் காலத்தில். W.H.Auden மற்றும் Dylan Thomas ஆகியவர்களின் கவிதைகளை விரும்பிப் படித்தவர்.ஹார்வர்டு பல்க லைக் கழகத்தில் பட்டம் பெற்றவர். பிரெஞ்சு இலக்கியம் பயின்றவர்.பாரிசில் கலை விமர்சகராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியவர்.1953 ல் அவருடைய முதல் கவிதை வெளியானது. New York School of Poets என்ற அமைப்பிலிருந்த Frank O’Hara, James Schuyler and Kenneth Koch ஆகிய கவிஞர்களுடன் அவருக்கு பரிச்சயமேற்பட்டது. அவருடைய கவிதைகள் பின் நவீனத்துவப் பாணியில்அமைந்தவை.

பரவலாக மதிக்கப்படுகிற,அபூர்வமாக நிந்திக்கப்படுகிற கவிஞரான அவர் தன் சமகாலத்து ஐம்பது சதவிகித ஆங்கில மொழிக் கவிஞர்களால் முன்மாதிரியாக கருதப் பட்டது போலவே மீதமான ஐம்பது சதவிகிதக் கவிஞர்களால் புரிந்து கொள்ள முடியாத கவிஞர் என்றும் வர்ணிக்கப்பட்ட கடைசிக் கவிஞர் “என்று ஒரு விமரிசகர் இவரைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

கவிதையின் இலக்குகள்.கருக்கள் ,நவீன சொற்களின் கட்ட மைப்பு என்று எல்லாவற்றிலும் தனக்கெனத் தனிப் பாணி கொண்டதாக அவர் கவிதைகள் அமைகின்றன. Wallace Stevens பாதிப்பு அஷ்பெரியிடம் அதிகம் வெளிப்படுவதாக David Perkins குறிப்பிடுகிறார்.

Abstract expressionism என்று சொல்லப்படும் தாக்கத்தை அடிப்படையாகக் கொண்டே அஷ்பெரியின் கவிதைகள் அமைந்தன என்று விமர்சகர்கள் கூறு கின்றனர். நவீன ஓவியம்தான் அவரது முதல் ஆளுமையாக இருந்ததென Helen McNeil குறிப்பிடுகிறார். 1950 களில் அவர் எழுதத் தொடங்கிய போது அமெரிக்கக் கவிதை இறுக்கமாகவும்,மரபு சார்ந்ததாகவுமிருந்தது.அந்தச் சூழலில் அறிமுகமான abstract-expressionist Art ஐரோப்பிய பரிசோதனை [avant garde ] முயற்சி சார்ந்த நிலை தீவிரம் பெற்றிருந்தது.

இத்தாக்கத்தால் Expressionism உத்திகளை மிக இயல்பாக ,தாராளமாக அஷ்பெரி தன் கவிதைகளில் வெளிக் கொண்டு வந்ததாகவும் ’verbal canvas” ஆக அவை இருந்ததென்றும் Fred Moramarco குறிப்பிடுகிறார். 1950 மற்றும் 60 களில் New York , Partisan Reviewஆகிய பத்திரிகைகளுக்கு கலை விமர்சகராகப் பணியாற்றிய அனுபவம் அவரை abstract expressionism த்தில் ஆழமான ஈடுபாடு கொள்ள வைத்தது.நவீன ஓவியம் தவிர பல்வேறு ஆளுமைகளும் அவருக்கென ஒரு தனி பாணி உருவாகக் காரணமானது. London Times பத்திரிக்கையில் கவிதைக் கான விளக்கம் பற்றிக் குறிப்பிடும்போது “ வாழ்க்கை எதையும் நேரடியாகச் சொல்வதில்லை.

சூழ்நிலையைச் செம்மையான அமைப்போடு கூடிய கவிதை யால் பிரதிபலிக்க முடியாது என்று நினைக்கிறேன். என் கவிதை என்பது பிரித்தறிவது ;ஆனால் வாழ்க்கையும் அப்படித்தான்.” என்று குறிப்பிடுகிறார்.

இருபதுக்கும் மேற்பட்ட கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன அவற்றுள் சில : Some Trees , Breezeway ,Wakefulness, A Wave ,Self-portrait in a Convex Mirror, Rivers and Mountains , Three Poems இவை தவிர உரைநடை ,மொழி பெயர்ப்பு நூல்களும் இவர் படைப்பு வரிசையிலடங்கும்.

சில மேற்கோள்கள் :

நான் மன அனுபவங்களை எழுதுகிறேன்.ஆனால் நான் அதைப் பற்றியெழுத வில்லை.அவற்றிலிருந்து எழுகிறேன்.

படிப்பது மகிழ்ச்சியானது.படித்து முடித்து ,இறுதியில் ஒரு வெறுமைக்குத் திரும்புவதும் மகிழ்ச்சிதான்.

வாழ்க்கையை கவிதை மேம்படுத்த வேண்டும் என்றொரு கருத்திருக்கிறது இரட்சிப்பு இராணுவத்தோடு கவிதையைத் தொடர்புபடுத்தி மக்கள் குழம்புகிறார்களென்று நினைக்கிறேன்.

•••
கவிதைகள்

பதற்றம் என்னும் பிரச்னை

நான் உன்னிடம் சொல்லிக் கொண்டிருக்கும்.
அந்த இருட்டு நகரங்களில் நான் வசிக்கத் தொடங்கி
ஐம்பது வருடங்கள் கடந்து விட்டன
மிக அதிகமாற்றமில்லை.

தபால் அலுவலகத்திலிருந்து பூங்காவிற்குள்ளிருக்கும்
ஊஞ்சலுக்கு எப்படிச் செல்வதென்று.
இன்னும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை

ஆப்பிள் மரங்களின் குளிர்கால மலர்களோ
டான்டிலியன் செடியின் துகள் போன்ற
என் தலைமுடியின் நிறமோ மெய்பிப்பில்லை
ஒரு வேளை இந்தக் கவிதை உன்னைப்பற்றி எனில்-
நான் கவனமாக ஒதுக்கிய விஷயங்களை நீ சேர்ப்பாயா;
வலியின் விளக்கம் ,உடலுறவு,மனிதர்கள் ஒருவருக்கொருவர்
காட்டிக்கொள்ளும் நேர்மையற்ற விதம்? இல்லை, அவை எல்லாம்
சில புத்தகங்களில் இருக்கிறது போலும்.. உனக்காக
விரல் சான்ட்விச் விள்க்கங்கள் வைத்திருக்கிறேன்.
வெண்கல ஒளித்திரை வலையிலிருந்து அந்தப் பளிங்கு விழி
திடுக்கிட்டு என்னை வெறிக்கிறது.ஒரு போதும் திருப்தியடையாது.
.

சில மரங்கள்

இவை அற்புதமானவை: ஒவ்வொன்றும்

அக்கம்பக்கத்தோடு இணைந்தவை

அசைவின் இயக்கத்தில்

யதேச்சையாகப் பேசிக் கொண்டிருப்பவை போல.

தொலைவிலான உலகில்

நீயும் நானும்

இந்தக் காலைச் சந்திப்பு

மரங்கள் சொல்லும் இணைவு

அவற்றின் இருப்பு என்பது

நம்மிருப்பை நமக்குச் சொல்வது :

அவற்றின் இணைவு ; விரைவில்

நாம் தொடலாம் ,காதலிக்கலாம் ,விளக்கலாம்.

நம்மைச் சூழந்திருக்கும் இந்த வனப்பு

அறியப்படாதிருப்பதில் மகிழ்ச்சியே

ஓர் அமைதி ஏற்கெனவே சத்தங்களோடு நிரம்பியிருக்கிறது.

ஒரு சித்திரம் வெளிப்படுகிறது

இந்த மொழிகள் அவர்களின் பாதுகாப்பு :

புன்னகைகளின் குழு , ஒரு கார்காலக் காலை

மெலிதான குழப்பம்

மௌனத்தில் வைக்கப்பட்டுள்ள நாட்கள்.

••••

என் இன்பம் இரட்டை

இன்று வேலை செய்ய மனமில்லை என்கிறான் அவன்

அது பரவாயில்லை. இங்கே நிழலில்

வீட்டிற்குப் பின்னால்,தெருச் சத்தத்திலிருந்து பாதுகாக்கப்பட்டு

ஒருவர் எந்த வகையான பழைய நினைவுக்கும் போகலாம்

சிலரைத் தூக்கி எறியலாம்.சிலரை வைத்துக் கொண்டு.

வார்த்தை விளையாட்டு

சுற்றியுள்ள சில உணர்வுகளிடியேயான குழப்பத்தை உண்டாக்கும்போது

எங்களுக்குள்ளே தீவிரமாகிறோம்.

இன்னொரு சுற்றா?இல்லை,

எப்போதும் நீ சொல்ல விரும்புவது இனிமை /அழகே என்னைக் காப்பாற்று

இரவு வருவதற்கு முன்னால் நாங்கள் எங்கள் கனவுகளில் மிதக்கிறோம்

பனிக்கட்டியால் உருவான தெப்பத்தில் /படகில்

கேள்விகளால் துளைக்கப்பட்டும் விண்மீன்களின் விரிசல்களிலும்

கனவுகளைப் பற்றிய சிந்திக்க அது எங்களுக்கு எழுச்சி தருகிறது.

அவை நிகழ்கின்றன. சில சம்பவங்கள்.நீ சொன்னாய்

நான் சொன்னேன் ஆனால்

என்னால் மறைக்க முடியுமெனினும் அதை விடுத்து நான் சொன்னேன்.

நன்றி. உனக்கும் நன்றி.

முரண்படு மெய்மையும் முரண் சொல்லடுக்கும்

இந்தக் கவிதை மிக எளிய நிலையிலான மொழியுடையது

அது உங்களுடன் பேசுகிறது பாருங்கள்.ஜன்னல் வழியாக வெளியே பாருங்கள்.

அல்லது பரபரப்பாக இருப்பதாக நடியுங்கள்.அது உங்களிடமிருக்கிறது.ஆனால்

அது உங்களிடமில்லை.

நீங்கள் அதைத் தவறவிட்டீர்கள்.அது உங்களைத் தவறவிட்டது.ஒருவரையொ

ருவர் தவற விட்டீர்கள்.

இந்தக் கவிதை சோகமாகயிருக்கிறது ஏனெனில் அது உங்களுடையதாக

இருக்க விரும்புகிறது .ஆனால் முடியாது.

மிக எளியநிலையெனில் என்ன ? அது அதுவும் மற்ற விஷயங்களும்,

நாடக அமைப்பிற்குள் அதைக் கொண்டுவரவேண்டும்.நாடகம்?

ஆமாம்,உண்மையில் ஆனால் நான் நாடகமாக எண்ணுகிறேன்.

ஓர் ஆழமான வெளிப்புறப் பொருள்,கனவான வடிவம்,

இந்த நீண்ட ஆகஸ்ட் நாட்களின் நயமெனும் வடிவம்

ஆதாரமற்றது.திறந்த நிலை.உங்களுக்குத் தெரிவதற்கு முன்னால்

அது தட்டச்சு இயந்திரங்களின் உரையாடலில் ஆவியாய்த் தொலைகிறது.

அது இன்னொருமுறை அரங்கேறியிருக்கிறது.நீயிருக்கிறாய் என நினைக்கிறேன்

உன் நிலைக்கு மாற்றும்படிச் சொல்லிவிட்டு நீ அங்கில்லாமல் போகிறாய்

அல்லது நீ வித்தியாசமான மனப்பாங்கை ஏற்கிறாய்.கவிதையும்

உன்னருகே என்னை மென்மையாய் வைக்கிறது. நீதான் கவிதை

இரண்டு காட்சிகள்

I

நாம் நடந்து கொள்ளும் விதத்தை நாம் உண்மையாகவே பார்க்கிறோம்:

ஒவ்வொரு கோணத்திலிருந்தும் குறிப்பிடத்தக்க உரிமைச் சலுகையோடு

ரயில் மகிழ்ச்சியைச் சுமந்து வருகிறது:

தீப்பொறியிலிருந்து வரும் வெளிச்சம் மேஜையை ஒளியாக்குகிறது.

விதி மாலுமியை வழிநடத்துகிறது,அது அதன் விதி.

இதற்கு முன்பு நாம் பல இரைச்சலான செய்திகளைக் கேட்டதில்லை.

நாள் இளஞ்சூடாகவும் இனிமையாகவுமிருந்தது.

“உங்கள் முடியிலிருந்து உங்களை அறியலாம்,

மலைகளின் முகடுகளைச் சுற்றிக் காற்று ஓய்வெடுக்கிறது.

II

ஓர் அருமை மழை கால்வாய் இயந்திரத்திற்கு அபிஷேகம் செய்கிறது.

இது உண்மை நாளாக இருக்கலாம்

உலக வரலாற்றில் முன்னுதாரணம் இல்லாததாக.

ஜுவாலைகள் ஒருமைப்பட்ட அதிகாரமாக இல்லையெனினும்

மெய்யாக வறுமையைப் போல வரண்டதுதான்.

அச்சமூட்டும் அலகுகள் ஒரு வயதானவன் மேல்

சில வர்ண குவளைகளின் நீலநிற நிழல்

படைப்பயிற்சியாளன் சிரிப்போடு சொல்வது போல்

“இறுதியில் எல்லாவற்றிற்கும் ஓர் அட்டவணை இருக்கிறது,

அது என்ன என்று உங்களால் கண்டுபிடிக்க முடிந்தால்.

———

download (82)

Comments are closed.