சிபிச்செல்வன் கவிதைகள்

[ A+ ] /[ A- ]

••
பார்த்து கொண்டிருந்த போது
அக்கட்டிடம் சாய்ந்துவாறேயிருந்தது
இன்னும் சில விநாடிகள் கழித்துப் பார்த்தபோதும் சாய்ந்தபடியே
நின்றது.
எப்போது சாயுமென
அதற்கும் தெரியாதுபோலும்.
கோபித்துக்கொண்டு
சாய்ந்து சாய்ந்து நடந்துகொண்டிருந்த வேளை
சற்றே நிமிர்ந்து நிற்கிறதந்த சாய் கட்டிடம்

••
தவிட்டு நிறத்தில் ஒரு புலி
என்னைப் பார்த்து உர்ர்ர்…
என உறும
தவிட்டு நிறத்தில் இருந்த பெண்புலியான நானும்
திரும்பி உறும
தவிட்டு புலி உடலை உதறி பதறி
கொர்ர்ர்என உறங்கியதுபோல நடிக்கிறது.

••
இரவெல்லாம் மழைபொழிந்த பின் வந்த காலை
மரங்கள் பறவைகளை அடைகாத்தவேளையில்லை.ஆனாலும் பறவைகள் மழையில் நனைந்தபடியே சிறகுகளை கோதியவாறே கூச்சலிடுகின்றன.
இதமான வானிலையை ரசித்து
ஒருகோப்பை தேரீரை அருந்தியபின்னும்
இன்னும கொஞ்சம் இன்னும் கொஞ்சம் என
தேநீரை ஊற்றச்சொல்லி கெஞ்சுகிறது
அதிகாலை மழையின் தட்பவெப்பம்.
#
17/3/18
மதியம் 1.11

Comments are closed.