சுயாந்தன் கவிதைகள்

[ A+ ] /[ A- ]

download (42)

1. எழுத்துப் பட்டினி

ஒரு கவிதையைப் பற்றிக் கண்டனம் எழுது.
ஒரு கண்ணீரைப் பற்றிக் காதலை எழுது.
ஒரு கனவினைப் பற்றிக் கடிதங்கள் எழுது.
ஒரு கவிஞனைப் பற்றிச்
சரிதைகள் எழுது.
ஒரு கடவுளைப் பற்றிய
நாத்திகம் எழுது.

எதுவானாலும் எழுது.
போனவருடம் உன் காதலி சொன்ன கல்யாணம் பற்றி இக்கணம் எழுது….
அதைவிட,
உன் மனைவி மரக்கறி வாங்கத் தந்த லிஸ்ட் நீரில் அமிழ்ந்து நனைந்து விட்டது.

ஆதலால் முதலில் அதனை ஆரம்பத்திலிருந்து புதிதாக எழுதத் தொடங்கு…

அவளின் இன்றைய விரதத்தில் நீயும் பட்டினி கிடக்காமல் இருக்க…..

2. வனம்புகுதல்

நீ இருப்பதாக எண்ணி
இல்லாத சொற்களிடம் வனம்புகும் என் கவிதைகள்
நாளையுன் கூந்தலுக்கான பூக்களை அள்ளிச்சூடத் தயாராகின்றன…
நீ கூந்தலில் பூச்சுடுபவள் “அல்ல”
என்றறிந்தும்,
காடுகள் பூக்களில் வனம்புகுந்தன….

3. நிறைகுளம்.

நிறைகுளம்
தனித்த தாமரை
நீக்கமற நிறைந்த
நீர்க்காகங்கள்.
தைப்பனி மழையில்
மேலும் நிறைந்துருகும்
நீரையே பருகும் முதலைகள்.
இருந்தாலும் எதற்கு அந்த
தாமரையும், நீர்ககாகங்களும்????

Comments are closed.