செஸ்லா மிலோஸ் கவிதைகள் / தமிழில் : வே.நி.சூர்யா

[ A+ ] /[ A- ]

download (87)

1.சந்திப்பு

நாம் உறைந்த நிலவெளிகளுனூடாக பாரவண்டியில் வைகறையில் சவாரி செய்தோம்

இருளில் சிவப்பு இறகொன்று மேலெழும்பியது

திடீரென ஒரு முயல் சாலையின் குறுக்கே ஓடியது

நம்மில் ஒருவர் நம் கைகளால் அதை சுட்டிக் காட்டினோம்

இவை சிலகாலங்களுக்கு முன்பு. இன்று நம்மில் யாரும் உயிரோடில்லை

அந்த முயலும் இல்லை,சமிக்ஞை காட்டிய மனிதருமில்லை

ஓ, என் காதலி, எங்கே அவர்கள், எங்கே போனார்கள் அவர்கள், எங்கே கையின் தசை, மின்னுகிற அசைவுகள், கூழாங்கற்களின் சலசலப்பு.

நான் இதை துயரத்தின் பொருட்டு கேட்கவில்லை

ஆனால் வியப்பில் கேட்கிறேன்

•••

2.அச்சம்

“தந்தையே, எங்கிருக்குறீர்கள்? இந்த வனம் கொடூரமானது,

இங்கே மிருகங்கள் இருக்கின்றன, புதர்கள் ஆட்சி செய்கின்றன. பழத்தோட்டங்கள் விஷமுள்ள நெருப்பால் எரிக்கப்படுகின்றன,

ஏமாற்றுகிற ஆழமான பள்ளங்கள் எங்கள் பாதங்களுக்கு அடியில் பதுங்குகிறது.

“தந்தையே எங்கிருக்குறீர்கள்? இந்த இரவு முடிவற்றது.

இப்போதிருந்து இருள் நிரந்தரமானதாகிறது.

பயணிகள் வீடற்று இருக்கிறார்கள், அவர்கள் பசியில் மரிக்கிறார்கள்,

எங்கள் ரொட்டி கசப்பானது மேலும் கற்களை போல கடினமானது.

“கோரமான மிருகத்தின் அனல் மூச்சு எங்களை கொஞ்சம் கொஞ்சமாக நெருங்குகிறது, அது தன் துர்நாற்றத்தை வெளியே தள்ளுகிறது.

எங்கே போயிருந்தீர்கள் தந்தையே ? நீங்கள் ஏன் அனுதாபப்படவில்லை உங்கள் குழந்தை அந்தகாரமான வனத்தில் தொலைந்தபோது ?

•••

மேற்கண்ட கவிதைகள் Czeslaw Milosz: New and Collected Poems 1931-2001 நூலில் இருந்து எடுக்கப்பட்டவை.

Comments are closed.