தற்சாவு – ஹோர்ஜ் லூயி போர்ஹே / தமிழில்: வே.நி.சூர்யா

[ A+ ] /[ A- ]

download (57)

ஒரு நட்சத்திரம் கூட இரவிடம் இருக்காது.

இரவு கூட எஞ்சியிருக்காது.

நான் மரிப்பேன், என்னுடன் தாங்கயியலாத பிரபஞ்சத்தின் எடையும் மரிக்கும்.

நான் பிரமிடுகளை, பதக்கங்களை, கண்டங்களை, முகங்களை அகற்றுவேன்.

நான் திரட்டப்பட்ட கடந்தகாலத்தை அகற்றுவேன்.

நான் வரலாற்றின் சாம்பலை, சாம்பலின் சாம்பல் ஆக்குவேன்.

இப்போது நான் கடைசி சூரிய அஸ்தமனத்தை பார்க்கிறேன்.

கடைசி பறவையின் குரலை கேட்கிறேன்

நான் வெறுமையை யாருக்கும் கையளிக்கப்போவதில்லை.

••••••••

Comments are closed.