துரத்தப்படுதல். ( கவிதை ) (பூச்சுங். டி. சோனம் ) திபேத்திய கவிஞர் மொழிபெயர்ப்பு… / விஜயராகவன் ( ஈரோடு )

[ A+ ] /[ A- ]

download (84)

துரத்தப்படுதல்.

வீட்டிலிருந்து தொலைவே
எனது36வது வாடகை அறையில்
அடைபட்டதேனீ மற்றும் ஒரு மூன்று கால் சிலந்தியுடன் வசிக்கிறேன்.

சிலந்தி சுவற்றில் ஊர
நான் தரையில் ஊர்கிறேன்.
தேனீ ஜன்னலில் முட்ட
நான் மேஜையில் முட்டிக்கொள்கிறேன்.அவ்வப்போது பார்த்துகொண்டு எங்களது தனிமையை பகிர்ந்து கொள்வோம்.

அவர்கள் சுவற்றை வலையாலும், எச்சத்தாலும் வர்ணமடிக்க
நான் அதற்கு வலை,புதிர்பாதை, சிக்கல்,சிறகுகள், ரீங்காரம்,சிறகடிப்பு என தனித்த வார்த்தைகளை அளித்தேன்.

வீட்டிலிருந்து தொலைவினால் எனது நிமிடங்கள் மணிகளானது.

சிலந்தி ஜன்னலிருந்து கூரை முகட்டிற்கும்,
தேனீ ஜன்னலிருந்து குப்பை தொட்டிக்குமாக பறக்கிறது.

ஒருவர் மற்றவரின் மொழியை பேசாமல்,
ஜன்னலுக்கு வெளியே வெறிக்கிறேன் நான்.

எனது வெறுமையான அமைதிக்கு முன்னால்
நீ
செவிடாக
போகக்கடவாயாக….

••••

Comments are closed.