நான் எப்போது பிறந்தேன்? / ( மொழிபெயர்ப்பு கவிதைகள் 3 ) (பூச்சுங். டி. சோனம் ) திபேத்திய கவிஞர் / தமிழில் : லதா ராமகிருஷ்ணன்

[ A+ ] /[ A- ]

download (85)

1.நாடுகடத்தப்பட்டவன்

வீட்டிலிருந்து வெகுதொலைவில்

என்னுடைய முப்பத்தியாறாவது வாடகையறையில் வசித்துவருகிறேன்

பொறியில் சிக்கிய ஒரு தேனீ மற்றும் ஒரு மூன்று-கால் சிலந்தியுடன்

சிலந்தி ஊர்கிறது சுவரில்

நான் தரையில்

தேனீ மோதியறைகிறது ஜன்னலின் மீது

நான் மேஜையின் மீது

அடிக்கடி நாங்கள் ஒருவரையொருவர்

வெறித்துப் பார்த்துக்கொள்கிறோம்

எங்கள் தனிமைத் திரளைப் பகிர்ந்தவாறு

அவை சுவருக்குச் சாயம்தீட்டுகின்றன

எச்சங்களாலும் வலைப்பின்னல்களாலும்

நான் அவற்றுக்குத் தருகிறேன் கோர்வையற்றுக் கிடக்கும்

சொற்கள் வலை, தாறுமாறாய் சிக்குண்டு கிடக்கும் இறக்கைகள், ரீங்கரிப்பு, சிறகடிப்பு

வீட்டிலிருந்து வெகுதொலைவில்

என் நிமிடங்கள், நாழிகைகளாய்

சிலந்தி பயணமாகிறது ஜன்னலிலிருந்து உத்தரத்திற்கு.

தேனீ பறக்கிறது ஜன்னலிலிருந்து

குப்பைத்தொட்டிக்கு

நான் ஜன்னலுக்கு வெளியே வெறித்துப்பார்க்கிறேன்

எங்களில் யாரும் ஒருவர் மொழியை மற்றவர் பேசுவதில்லை.

என் மௌனத்தின் முன்

நீங்கள் செவித்திறன் அற்றுப்போவீர்கள் என்று

விழைகிறேன் நான்.

Banishment

Away from home

I live in my thirty-sixth rented room

With a trapped bee

and a three-legged spider

Spider crawls on the wall

and I on the floor

Bee bangs at the window

and I on the table

Often we stare at each other

Sharing our pool of loneliness

They paint the wall

with droppings and webs

I give them isolated

words net, maze, tangle

wings, buzz, flutter

Away from home

My minutes are hours

Spider travels from the window to the ceiling

Bee flies from the window to the bin

I stare out of the window

Neither speaks each other’s tongue

I wish

You would go deaf

Before my silence

2.நான் எப்போது பிறந்தேன்?

அம்மா, நான் எப்போது பிறந்தேன்?

ஆறு வற்றிப்போன வருடத்தில்

அது எப்போது?

விளைச்சல் பொய்த்துப் பல நாட்கள் நாங்கள் பட்டினியாய்க் கிடந்தபோது, நீ உயிர்பிழைக்க வழியேயில்லை என்று நாங்கள் பயந்தபோது

அந்த வருடம்தான் நாம் வேறொரு வீட்டிற்குச் சென்றோமா?

அந்த வருடம்தான் அவர்கள் நம்முடைய வீட்டைப் பறிமுதல் செய்து அதை நாட்டுப்பற்று மிகுந்த கட்சி உறுப்பினர்களுக்குப் பகிர்ந்தளித்துக்கொண்டார்கள் நாம் மாட்டுக்கொட்டகைக்கு விரட்டப்பட்டோம் அங்குதான் நீ பிறந்தாய்

அது எந்த வருடம்?

அந்த வருடம்தான் அவர்கள் மடாலயத்தை இடித்து எல்லாவிதமான வெண்கலத் திருச்சிலைகளையும் உருக்கி தோட்டாக்களைத் தயாரித்தார்கள் வானம் புழுதியால் நிறைந்த அந்த நேரத்தில் நீ பிறந்தாய்

அந்த வருடத்தில்தான் தாத்தா போய்விட்டாரா?

அந்தவருடம்தான் அவர்கள் உன் தாத்தாவை சிறைக்கு அனுப்பினார்கள். அங்கே அவர் மலங் கழுவி சுத்தப்படுத்தினார், வயல்வெளிகளில் இருந்த பூச்சிகளைக் கொன்றுகுவித்தார்

நம் வீட்டில் ஆளரவமற்றிருந்த சமயத்தில் நீ பிறந்தாய்

சுவர்கள் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட வருடம்தான் நான் பிறந்தேனா?அந்த வருடம்தான் அவர்கள் பிரார்த்தனைக் கூடத்தை நொறுக்கிச் சிதைத்தார்கள் மரப்பாளங்கள் அடித்துநொறுக்கப்பட்டன

சுவரோவியங்கள் அழுக்கடைந்தன.

கிழக்கிலிருந்து காற்று விசித்திரமாய் வீசிய நேரத்தில் நீ பிறந்தாய்

எந்த வருடம் அது?

அந்த வருடம்தான் அவர்கள் ஊர்ச் சதுக்கத்தில் மறைநூல்களை தீக்கிரையாக்கினர்

பின் கட்சியைப் போற்றி புரட்சிகரப் பாடல்களைப் பாடினர்

புல்நுனிகள் வளர மறுத்த சமயத்தில்தான் நீ பிறந்தாய்

நீ பாடுவதை நிறுத்திக்கொண்ட வருடமா அது?

அந்த வருடம்தான் அவர்கள் நம் அண்டைவீட்டுப்பெண்

ஒரு கால்வாயை வெட்டிக்கொண்டிருந்த வேளை நம் வழிவழியான பாடலொன்றைப் பாடியதற்காய்

அவளை கொடுமையான வதைமுகாமுக்கு இழுத்துச் சென்றார்கள்

ஒருவர் பின் ஒருவராய் மனிதர்கள் காணாமல்போய்க்கொண்டிருந்த நேரத்தில்தான் நீ பிறந்தாய்

அது எப்போது?

அந்த வருடம்தான் அவர்கள் ‘துருத்திக்கொண்டிருக்கும் தலைகள் அடித்து நொறுக்கப்படும்’ என்ற பெரிய சிவப்பு முழக்கத்தை சுவர்களில் எழுதினார்கள்.

சூரியன் நம்முடைய வானத்தில் உதிக்கத் தயங்கி அப்பாலேகிய நேரத்தில்தான் நீ பிறந்தாய்.

அது எப்போது?

அந்த வருடம்தான் உன் அப்பா… உன் அப்பா….

When was I Born?

Moher, when was I born?

In the year the river dried

When was that?

That was the year when crops failed And we went hungry for many days We

feared that you would never survive

Was that the year we moved to a new house?

That was the year when they confiscated our house And divided it among the

patriotic Party members We were banished to the cowshed where you were born

What year was that?

That was the year when they destroyed the monastery Melted all the bronze

images to make bullets You were born when dust filled the sky

Was that the year grandpa went away?

That was the year when they sent your grandfather to prison Where he cleaned

shit and butchered insects in the fields You were born when there were

no men in

our house

Was I born in the year the walls were pulled down?

That was the year when they ripped apart the prayer hall Wooden beams were

hammered to splinters and frescoes soiled You were born when a crazy wind blew

from the east

What year was that?

That was the year they burnt scriptures in the village square And sang

revolutionary songs in praise of the Party

You were born when blades of grass refused to grow

Was it the year you stopped singing?

It was the year they took our neighbour to the hard labour camp When she sang a

traditional song while digging a canal You were born when people disappeared

one after another

When was that?

That was the year they wrote the big red slogan on the walls ‘Heads

that stick out

will be hammered down’ You were born when the sun shied away from our sky

When was that?

That was the year when your father… your father

download (98)

3.ஒரு பாடல்

என்னுடைய நொடிகளெல்லாம் உனக்குச் சொந்தமானவை

நான் இன்னமும் தனிமையில்,

ஒரு மரத்தின் கீழான சின்ன ‘டாண்டேலியன்’ மலர்ச்செடிபோல்

உன் நிழலின் புகையால் போர்த்தப்பட்டு

என்னுடைய தலை உன் நினைவுகளால் நிரம்புகிறது

என் மனமோ இன்னமும் காலியாகவே,

பெண்குதிரைத் திரளோடு செல்லமாட்டாமல் பின்தங்கிவிட்ட

ஒரு குளம்பற்ற கழுதையாய்.

அப்பழுக்கற்ற தொலைதூர நிலா நீ

நான் உன்னுடைய ஒளியில் நனைந்தபடி

அடுத்த அலைக்காய்க் காத்திருக்கும்

கடற்கரையொன்றிலான கூழாங்கல்

உதிர்ந்த இலையே நான்,

ஜூனிபர் மரத்தின் மீது ஒட்டிக்கொண்டிருக்கும் சிறகிழை

ஆனால்

நட்சத்திரங்கள் நிலவைக் காட்டிலும் அதிக ஒளிசிந்தும் காலம்வரை

நான் உன்னுடைய கோள்வட்டப்பாதையைச்

சுற்றிவந்தபடியே.

உன் இதமான இளஞ்சூடு தேடி

நான் பருந்தொன்று பறக்கும் பாதையைப் பின்தொடர்கிறேன்.

என் சிட்டுக்குருவி இறக்கைகள் என்னை அழைத்துச்செல்கின்றன

என் அறையின் பாழ்மூலைக்கு.

இங்கு நான் என்னுடைய புழுதிபடர்ந்த மடிக்கணினித் திரைக்குள்

வெறித்துப்பார்க்கிறேன்.

உன்னுடைய நறுமணத்தைக் கொண்டுவருகின்ற தென்றலைப்பற்றி

ஒரு பாடல் எழுதும் எதிர்பார்ப்போடு

3.A Song

All my moments belong to you

And I am lonely still, enveloped

In the smoke of your shadow

Like a dandelion under a tree

My head swells with your thoughts

And my heart is empty still, left

Behind by your pack of mares

Like a hoofless donkey

You are a spotless distant moon

I’m a pebble on a shore

Waiting for the next wave

Bathed in your light

I am no more than a fallen leaf

A feather stuck on a juniper tree

But I circle your orb until

Stars outshine the moon

In search of your warmth

I follow the path of a vulture’s flight

And my sparrow’s wings take me

To the desolate corner of my room

Here I stare into

The dusty screen of my laptop

Hoping to write a song about

The breeze that brings your fragrance

••••

Comments are closed.