ந. பெரியசாமி கவிதைகள்

[ A+ ] /[ A- ]

images (4)

1. இறகு

பிரிவு கொண்டு
மண்ணில் மிதந்திருக்க
கைக்கொண்டு காது குடையாது
பரிசளிக்கிறீர்கள்.

கிரீடம் சூடி
ராஜா ராணியாக
அற்புதம் கொள்கிறார்கள்.

தோழமையை வருடி
துள்ளும் நாணத்திற்கு
குதியாடுகிறார்கள்.

புத்தகப் பக்கங்களை
வாழ்விடமாக்கி
மகிழ்ந்திடுகிறார்கள்.

கனவில் உடன் பறந்து
களைப்பில் பிதற்றிடுகிறார்கள்.

உணர்ந்திடுகிறீர்கள்
இறகின் அழகு
பறத்தலில் மட்டுமல்ல.

*

2. பின் உறக்கம்

மௌனித்திருக்கும் நிசியில்
நா மீட்டிட
பற்றும் சுடர் கனன்ற
விரவும் வெதுவெதுப்பு.

சுழிதல் கொள்ளும் இசை
பீச்சிட்ட திரவத்தின் நிழலில்
பிணைகளின் உறக்கம்
ததும்பும் நிறைவோடு.

•••

Comments are closed.