லாவண்யா கவிதைகள்

[ A+ ] /[ A- ]

images (11)

 

 

 

 

 

 

 

 

 

உயிரின் சுருதி

 

 

புதிய பாடலொன்றைப் பாட விரும்புகிறேன்.

என்னுயிரின் சுருதியொலிக்கும்

புதிய பாடலொன்றைப் பாடவிரும்புகிறேன்

களிமண் குடமாகும் மனோலயமிக்க

புதிய பாடலொன்றைப் பாடவிரும்புகிறேன்

நிகழ் மறைத்த என் கிராமத்துப் பெண்கள்

நெல்குத்தும் தாளத்தில்

புதிய பாடலொன்றைப் பாடவிரும்புகிறேன்.

கற்கண்டாய்இனிக்கும் ராகத்தில்

புதிய பாடலொன்றைப் பாடவிரும்புகிறேன்.

தாழம்பூ மணக்கும் காற்றைப்போல

புதிய பாடலொன்றைப் பாடவிரும்புகிறேன்.

சப்தம் சொல்லாகவும் சொல் நளின

சங்கீதமாகவும் காத்திருக்கிறேன்.

 

2.

உலர்ந்த கிளையில் தளர்ந்த நிலையில்

உட்கார்ந்திருக்குது காலை

உயிர் நிகழிலும் உள்ளம் நினவிலுமாய்

நடந்து செல்கிறது காற்று

பரிதியின் ஒளிவருடல்களில்

பூக்கின்றன குளத்துத் தாமரைகள்.

பெண்ணே, பிறந்த்தும் இருந்த்தும்

இருவருமிணைந்த்தும்

அசோகமரத்தின் இலையடர்த்தியில்

ஒளிந்த்தும் தெரிந்த்தும் சுகம்

சாரல்மழையில் நனைந்த்து சுகம்

காலநதியில் மிதந்த்து சுகம்

புயல் சிதைத்த கூடும்

பூனை பிய்த்த இறகும்

பறவை வாழ்வில் அற்பத் துயரம்.

மற.

 

 

மயிரின் மகிமை

 

அடிக்கடி

சொல்கிறாய் தம்பீ

 

மயிரே போச்சு

மயிருக்குச் சமானம்

மயிரைக்கூட பிடுங்கமுடியாது

 

மயிரென்றால் மிகவும

துச்சமாய் நினைக்கிறாய்

மனசு சங்கடப்படுகிறது அதனால்

மயிரின் மகிமையைச்

சொல்கிறேன் கேள்.

 

மயிர் மரியாதைக்குரியது

மலையனுக்கும் முருகனுக்கும்

காணிக்கையாவது

 

மயிர் மர்மங்கள் நிறைந்த்து

சுட்டால் கரியாகாது.நமக்கு

ஏவல்பேயாகும் முனிக்கு

 

மயிருக்கு மகா

பாரத்தஃதில் இடமுண்டு

 

மயிருக்கு சரித்திரமுண்டு

மன்ன்னை முடித்தே தலை

மயிரை முடிந்தான்

நாலுந் தெரிந்த ஒருவன்

 

மயிர் கவிகள்

கார்மேகமென்று வர்ணிப்பது

 

மயிர் குற்றவியலில்

முக்கியத்தடயமாவது

 

மயிரைவிற்று

மாதனம் கண்டான்

மலைமீதொரு வணிகன்

 

மயிர் போனாலும்

தலையிலிருப்பது

மட்டும்தான் போகும்

 

மற்றவை போகாது

மழித்து மாளாது.

 

 

 

 

***

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.