வேலை இல்லாதவன் பசி ( சிறுகதை ) / தொ.பத்தினாதன்

[ A+ ] /[ A- ]

images (69)

பொதுவாக எல்லோரும் இரவு தூங்கி காலையில் எழுந்து வேலைக்கு செல்வார்கள். ஆனால் நான்… காலை 11 மணிக்கு படுத்து தூங்கி மாலை 4 மணிக்கு எழுந்தேன். குளிக்க அறையில் தண்ணீர் இல்லை என்பதால் பல்லு விளக்கி முகம் கழுவிக் கொண்டு எப்பவும் போல் கறுப்பு பேண்டும, காதிக்கராப் ஜிப்பாவும் சிறிது அழுக்கானாலும் பரவாயில்லை என்று அணிந்து கொண்டு புறப்பட்டேன் அறையை பூட்டி சாவியை பையில் போட்டுக் கொண்டு நடந்தேன்.

இரண்டு கிலோமீட்டர் நடக்க வேண்டும், பேருந்தில் போகலாம் இரண்டு ரூபாய்தான். ஆனால் அந்த இரண்டு ரூபாயுடன் ஒரு ஐம்பது பைசா சேர்த்தால் டீ சாப்பிடலாம். இரண்டு ரூபாயை பார்த்தால் இரண்டு கிலோமீட்டர் நடக்க வேண்டுமே அப்படி நடக்கும் போது உனது உடம்பில் உள்ள சக்தி விரயமாகி மேலும் பசிக்கும். அப்போத என்ன செய்வாய் ஐம்பது பைசா சேர்த்து அந்த பேருந்து கட்டணம் இரண்டு ரூபாயுடன் ஒரு டீ சாப்பிடுவேன். அதுமட்டுமல்ல வேலையில்லாத நான் சோம்பேறியாகி விடக்கூடாது. அதனால் இரண்டு என்ன ஐந்து கிலோமீட்டர் என்றாலும் நடக்கலாம். தப்பில்லை. அப்போ கூடுதலாக பசிக்குமே இப்படி தர்க்கம் பண்ணிக் கொண்டே ஒரு கிலோ மீட்டருக்கு மேல் நடந்து வந்துட்டேன்.

இப்படி முடிவில்லாத தர்க்கம் செய்து கொண்டே எங்கே நடந்து கொண்டிருக்கிறேன்? எப்பவும் பணம் எடுக்கும் இயந்திரத்தை (யுவுஆ) நோக்கி நடக்கிறேன். என்ன இது விசித்திரமாக இருக்கிறது? வங்கி கணக்கிருக்கிறது எப்பவும் பணம் எடுக்கும் அட்டையிருக்கிறது. ஆனால் இரண்டு ரூபாய்க்கும் ஐம்பது பைசாவுக்கம் கணக்கு பார்த்துக் கொண்டே இரண்டு கிலோமீட்டர் நடந்து கொண்டிருக்கிறாய்?

அது ஒன்றுமில்லை. நான் வேலை செய்த ஓட்டலில் சம்பளம் வங்கிக் கணக்கில்தான் போடுவார்கள். அதனால் அங்கு வேலை செய்கிற எல்லோருக்கும் வங்கி அட்டை கொடுக்கும் போது எனக்கும் கொடுத்தது. இப்ப வங்கி யுவுஆக்குத்தான் போய்க் கொண்டிருக்கிறேன். ஆனால் பணம் இருக்க வேணுமே. தற்போது வேலையை இராஜினாமா செய்துவிட்டேன். ஏன் என்பது தணிக்கதை. வேலையை விட்டு விலகியதால் குறை மாதச்சம்பளம் விடுமுறை நாட்களுக்கான சம்பளம் எல்லாம் சேர்த்து 2961 ரூபாய்க்கு செக்கு கொடுத்தார்கள். கொடுத்தது தான் கொடுத்தார்கள் காசாக கொடுத்திருக்கலாம். அல்லது வங்கி கணக்கு இருக்கும் வங்கி காசோலை கொடுத்திருக்கலாம், இரண்டுமில்லை வேறு வங்கி காசோலை விழுந்தவன் மேல் ஏறி மிதக்கும் பணக்கார உலகம்.

நேற்றுத்தான் காசோலை கொடுத்தார்கள். எனது வங்கி கணக்குக்கு பணம் வர குறைந்தது இன்று வந்திருக்காதா? என்ற நம்பிக்கையில் நடந்து கொண்டிருக்கிறேன். யுவுஆ கண்ணில் தெரிகிறது. நான் அதை நோக்கி வேகமாக நடக்கிறேன். பசிவேறு வயிற்றை புரட்டி புரட்டி போடுகிறது. ஒருவேளை என் நல்ல நேரத்திற்கு (இருந்தால்தானே) பணம் வந்திருந்தால் முதல் வேலையாக வயிறு முட்ட சாப்பிட வேணும்.

அதன்பின்பு புத்தகக் கடைக்கு போய் புத்தகம் வாங்க வேணும். சரி காசு வரவிலலை என்றால் என்ன செய்வாய்? என்ற செய்வது இரவு நாளை காலை மதியம் வரை சாப்பாட்டுக்கு என்ன செய்வது. இப்போது பணம் இல்லை என்றால் நாளை மதியத்திற்கு மேல்தான் பணம் வருமாம். அதுவரை என்ன செய்வது ஒன்றும் செய்ய வேண்டாம். நேராக அறைக்கு போய் படுத்து தூங்கி விட வேண்டியது தான்.

பகல் முழுவதும் நன்றாக தூங்கி விட்டாய் இரவு எப்படி தூக்கம் வரும், இல்லை யுவுஆல் காசு வந்திருக்கம் இப்படியே நடந்து கொண்டிருந்த நான் யுவுஆமை நெருங்கிவிட்டேன். கூட்டமா இருந்தது. வரிசையின் கடைசியில் நிக்கிறேன். காசு வந்திருக்கும். இல்லை நேற்றுத்தான் காசோலை போடப்பட்டது, நாளைதான் வரும் இன்று வராது, இல்லை இன்று வந்திருக்கும் எப்படி இன்று வரும் சரி சரி எதற்கு வீண் பிரச்சனை, சண்டை இன்னும் ஐந்து நிமிடங்களில் தெரிந்துவிடும். அதற்குள் ஏன் விவாதம் அவசரம் எனக்கு முன்னாடி ஒருத்தர்தானிருந்தார்.

அவரும் யுவுஆக்குள் சென்று விட்டார். அவர் வெளியே வந்ததும் நான் உள்ளே போக வேணும். மனது இருப்பு கொள்ளவில்லை. அங்கலாய்க்கிறது. உள்ளே சென்றவர் சற்று தாமதம் ஆகவே கோவம் கோவமாக வருகிறது. அவர் உள்ளே சென்று இரண்டு நிமிடம் ஆகியிருக்காது, ஆனால் எனக்கோ அவர் உள்ளே சென்று ஒருமணிநேரம் ஆனதுபோல் தோன்றுகிறது. எல்லாம் இந்த பசி செய்கிற வேலை கடவுள் மனிதனை பசியில்லாமல் படைத்திருக்கலாம்.

அவர் மனிதனை படைக்கும் போது என்னிடம் யோசனை கேட்டிருக்கலாம். மனிதனுக்கு ஏன் பசிக்க வேண்டும். எதற்காக உணவு உண்ண வேணும், பசியில்லாமலிருந்தால் இந்த உலகம் எப்படியிருக்கும். சே ஏன் என் மனது இப்படி எல்லாம் யோசிக்கிறது. அடிவயிறு குடைகிறது. மேல் வயிறு கணக்கிறது. வயிற்றில் கையை வைத்து நானாக சொல்லிக் கொண்டேன். இன்னும் சற்றுநேரம் பொறுத்துக் கொள். காசு வந்ததும் முதலில் சாப்பாடு அப்புறம் தான் மற்றதெல்லாம். ஒருவேளை காசு வரவில்லை என்றால் இது என்ன கொடுமை என்மனது என் உடம்பு ஒருவேளை உணவில்லாமல் இருக்க முடியாமல் தவிக்கிறது.

பையிலிருந்து யுவுஆ அட்டையை கையில் தயாராக வைத்திருக்கிறேன். உள்ளே சென்றவர் வெளியே வந்தார். அவர் முழுவதுமாக வாசல் வழியாக வெளியே வருவதற்குள் அவரை இடித்துக் கொண்டு வேகமாக உள்ளே செல்கிறேன். அவர் ஒருவேளை திரும்பி என்னை முறைத்து விட்டுக்கூட சென்றிருக்கலாம். அது எனக்கு அவசியமில்லை. இப்படி எல்லாம் அநாகரீகமாக நடந்து கொள்கிறேன். நான் என்ன செய்வது எந்தளவுதான் என்னை நான் கட்டுப்படுத்துவது என் கட்டுப்பாட்டை நானே மீறும்போது வெறுமனே வேடிக்கை மட்டும்தான் என்னால் பார்க்க முடிகிறது.

images (68)

உள்ளே சென்ற நான் வேகமாக அட்டையை செருகினேன். மொழியை தெரிவு செய்கிறேன். ரசகிய என்ணை வேகமாக அழுத்துகிறேன். மீண்டும் ஏதோ பட்டனை அழுத்தினேன். இடி விழுந்தமாதிரியிருந்தது. இன்னும் காசு வரவில்லை. மீதியிருப்பது ஐம்பது ரூபாய் என்று காட்டுகிறது. அதனை எடுக்கமுடியாது. அதனால் தான் அது இருக்கிறது.

சோகத்துடன் ஏமாற்றத்துடன் மெதுவாக யுவுஆமை விட்டு வெளியே வந்தேன். ஒருவன் என்னை இடித்துக் கொண்டு உள்ளே வேகமாக சென்றார். எனக்கு சிரிப்புத் தான் வந்தது. பாவம் அவர் நிலைமை என்னை போல்தானா? அல்லது அவர் சுபாவமே அப்படிதானா? தெரியவில்லை.

இனி என்ன செய்வது? மதியம் சாப்பாடு இல்லை. இரவு காலை மதியம் வரை சாப்பாட்டுக்கு வளியில்லை என்ன செய்யப்போகிறாய் என்ற பெரிய கேள்வி. தெரு ஓரமாக அறையை நோக்கி நடக்கிறேன். மெதுவாக நடக்கிறேன். ஒருவேளை சாப்பாடு இல்லாததாலே நடை மெதுவாகிவிட்டது. ஆழ்ந்த சிந்தனை பணம் வராததால் ஏமாற்றம் பசிவேறு பாடாய் படுத்துகிறது.

ஒரு அண்ணா சுவிஸ்ல, ஒரு அக்கா லண்டன்ல, ஒரு அண்ணன் மதுரையில, என் கூடப் பிறந்தவர்கள் பன்னிரண்டு பேர். எல்லோரும் எனக்கு மூத்தவர்கள், ஆனால் இப்ப எனது அகோர பசிக்கு சாப்பாடு இல்லை, பசி, பசி, பசி அவர்கள் என்ன செய்வார்கள். உன் திமிர் கொழுப்பு அடங்காமை அதனால் அனுபவிக்கிறாய். அதற்காக அடுத்தவரையா குற்றம் சாட்டுவது. டேய் டேய் ஒரு வேளை சாப்பாட்டுக்கா சின்னப்பிள்ளை மாதிரி புலம்புகிறாய்.

உன் உடம்பில் தெம்பில்லையா, தேவையில்லாமல் புலம்புவது உனக்கே அசிங்கமாக இல்லை. எங்கே போனது உனது திமிரும், வெட்டி வீராப்பும். இப்படி என்னை நானே கேட்கிறேன். சமாதானம் ஆக முயற்சி செய்கிறேன். ஆனால் பசிக்கு இது புரியவில்லையே அது என் சொல்லை கேட்காமல் தான்தோன்றித்தனமாக போராட்டம் போடுகிறதே.

இப்படி தன்னிச்சையான ஒரு சிந்தனையுடன் நடந்த நான் பிரதான சாலை ஓரமாக நிக்கிறேன். அடுத்த என்ன செய்வது? கண்முன்னால் எந்த வழியும் தெரியவில்லை. பிரதான சாலையிலிருந்து வலதுபக்கம் சந்து வழியாகப் போனால் எனது அறை வரும். ஆனால் அங்கு போத விருப்பமில்லை. காலையிருந்து அறைக்குள்தான் அடைந்து கிடந்தேன். தூக்கம் படிப்பு மறுபடியும்அறைக்கா? வேறு எங்கு செல்வது என்ன செய்வது எதுவும் புரியவில்லை. அறைக்கும் போகவில்லை அப்படியே செயலற்று தெருவோரத்தில் நிக்கறேன்.

தெரு ஓர சுவரில் ஒட்டப்பட்ட சினிமா போஸ்டர் கண்ணில் பட்டது. ஆனால் அது என்ன படம் எந்த நடிகன் எதுவும் மனசுக்கு அறிவுக்குள் செல்லவில்லை. ஒருவேளை அந்த படம் வறுமையின் நிறம் கறுப்பு என்றுகூட இருந்திருக்கலாம். ஏன் அப்படி அணில ஏறவிட்ட நாய் மாதிரி சினிமா போஸ்டரையே பார்த்துக் கொண்டு நிக்கிறாய். உனக்கு வேற வேலையில்லை? இல்லை அதனால் தான் இப்படி நிக்கறேன். யாராவது உன்னை இப்படியே பார்த்தால் சரியான சினிமா பைத்தியம் என்று நினைக்க மாட்டார்களா? நினைக்கட்டுமே எப்படி வேண்டுமானாலம் நினைக்கட்டும். அப்படி நினைக்கிறவன் என் வயித்து பசிக்கு சோறு போடுவானா?

கொஞ்சம் அழுக்காகயிருந்தாலும் நல்ல சட்டை பேண்டு போட்டிருக்கிறாய். கையில் செல்போன் வேறு வைத்திருக்கிறாய். ஆமாம் ரிக்சாக்காரன் கூடத்தான் வைத்திருக்கிறான். (செல்போன் நண்பர் ராஜா உபயம்). அதுக்கு என்ன செய்ய? உன் கை கால் நல்லாயிருக்கு ஒருவேளை சாப்பாடு இல்லாததால் முகம், கொஞ்சம் வாடியிருக்கு மற்றபடி நன்றாகத் கிறாய்.

அப்புறம் எவன் உனக்கு இலவசமாக சாப்பாடு தருவான். அடுத்தவன் இலவச சாப்பாட்டை சாப்பிட உனக்கு வெட்கமாகயில்லை. உன் தன்மானம் எங்கே உன் தனித்தன்மை எங்கே, மானம் கெட்டவனே, கேவலமானவனே சாதாரண பசிக்காக உன் கொள்கைகள் எல்லாம் கொல்லைப்புறம் வழியாக ஓடிவிட்டதோ? வெட்கமாகத்தானிருக்pகறது. ஆனால் பசிக்கிறதே, நான் என்ன செய்ய? அதுக்காக பிச்சை எடுப்பியா?

பாக்கெட்டில் பணம் தானில்லை. எழுதிக் கொண்டிருந்த போனாவில் மையும் காலியாகிவிட்டது. ஆமாம் துன்பத்திற்கு துன்பத்தில் மேல்தான் இன்பம்.

அறைக்கு போகவில்லை. மறுபடியும் நடக்கிறேன். ஆழ்ந்த யோசனை இந்த மூளைக்கு மட்டும் எப்படித்தான் இவ்வளவுவு சிந்தனை வருகிறதோ? எங்கிருந்து எப்படித்தான் வருகிறதோ? ஒரு மேம்பாலம் வருகிறது. இதில் ஏறுவதற்கும் உடம்பில் உள்ள சக்தி வீணாகிவிட்டால் பசி அதிகமாகி விடுமே, என்றெல்லாம் அறிவு கெட்ட அறிவு யோசிக்கிறது. பாலம் ஏறி இறங்கும்போது நாலு ரோடு பிரிகிறது. இதில் எந்தப்பக்கம் போவது எந்தப்பக்கம் போனால் என்ன? என்று யோசிக்கும் முன்பே சிக்னல் விழுந்து வாகனங்கள் நேராக போகிறது. நானும் நேராக போகிறேன். எங்கு போகிறேன் என்பதை நான் தீர்மானிக்கவில்லை. அதுவாகப் போகிறது. நடக்கிறேன். நடக்கிறேன். நேரம் போக வேண்டுமே, அதனால் நடக்கிறேன். போகும் வழியில் மறுபடியும் அதே வங்கியின் யுவுஆம் கண்ணில் படுகிறது.

இதிலும் ஒரு தடைவ பணம் வந்துவிட்டதா என்று முயற்சி செய்து பார்க்கலாமே என்ற எண்ணம் தோன்றவே இப்பதான் அங்கு பார்த்தாய் வரவில்லை. அதற்குள் எப்படி இங்கு வரும்? ஒருவேளை வந்திருந்தால் வந்திருக்கும் சும்மா ஒருதடவை முயற்சி செய்து பார்க்கலாமே வந்திருக்காது. வந்திருக்கும் இப்படியே யுவுஆ கிட்ட போனேன். கொஞ்சம் கூட்டம் அதிகமாகயிருந்தது. இவர்கள் வங்கி கணக்கில் தேவைக்கு அதிகமாக காட்ட பணமிருக்கலாம். அந்த தேவைக்கு அதிகமான பணம் கட்ட தேவை என்று சேமித்து வைத்திருக்கலாம். அதில் என்னைப் போல் சிலரும் இருக்கலாம். அது இருக்கட்டும், இல்லாமல் போகட்டும். உன் வயித்துப் பசிக்கு இப்ப என்ன முடிவு முதலில் அதை தோடு எப்பவும் போல் வரிசையில் கடைசியில் நிக்கறேன்.

ஏன் கூட்டம் அதிகமாகயிருக்கிறது என்ற எனது கேள்விக்கு எனக்கு முன் நின்றவஐடய பதில் யுவுமு இயந்திரத்தில் காசு தீர்ந்து விட்டதாம். காசு நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அரைமணிநேரம் ஆகுமாம். பதிதாக போரும் காசில் என்னுடைய எனக்கான காசும் வந்திருக்குமா? இப்பதானே பார்த்தேன் வரவில்லை. இங்கேயும் வந்திருக்காது பேசாமல் போய்விடலாமா? ஆனால் பசிக்கிறதே எங்கே போய் வெட்டி முறிக்கப் போகிறாய் பேசாமல் நில்லு பார்க்கலாம்.

இயந்திரம் தயாராகி விட்டது. ஒவ்வொருத்தராக உள்ளே வெளியே கடைசியில் என் நேரம் உள்ளே சென்றேன். எவ்வளவு வேகமாக உள்ளே சென்றேனோ அவ்ளவு வேகமாக வெளியே வந்தேன். காசு வரல அட வெண்ண அது எப்படி வரும் நான்தான் முன்னாடியே சொன்னேனே கேட்டியா? தோல்வியை அடுத்தவன் தலையில் சுமத்திவிட்டுத்தானே நமக்கு பழக்கம். அது நமது இரத்தத்தில் கலந்திருக்கிறது.

அரைமணிநேரம் வீணாகி விட்டதே , நேரத்தை கறைப்பது தானே வாழ்க்கi. ஆமாம் பெரிய மயிர் தத்துவம், பசியில தான் அப்படி எல்லாம் பினாத்துகிறாய். இனி யுவுஆயை நம்பி பிரயோஜனமில்லை. வங்கியில் வேலை செய்பவர்கள் எல்லாம் வீட்டுக்கு போயிருப்பார்கள். அதனால் இன்று காசு வராது. அடுத்து என்ன செய்வதாக உத்தேசம்? நட நட நட மறுபடியும் தெருவோரம் சினிமா போஸ்டர் உனக்கு பைத்தியமா மறுபடியும் சினிமா போஸ்டரையே பார்த்துக் கொண்டிருக்கிறாய். உன் உடல் இரத்தம் என் சுண்டிப்போய் விட்டதா? அப்ப ஏன் அவ்வளவு சிந்தனை உலகத்தில் எவ்வளவு பேர் தினமும் ஒருவேளை உணவில்லாமல் இருக்கிறார்கள். எவ்வளவு பேர் பட்டினியால் சாகிறார்கள். உனக்கு என்ன கோதாரி நல்லாத்தானேயிருக்கிறாய். ‘உலகத்தில் கோடிக்கணக்கானவர்கள் உணவின்றி வாழ்கிறார்கள்’ உணவை வீணாக்காதீர்கள்’ நான் வேலை செய்த ஓட்டலில் எங்களுக்கான கேண்டீனில் பெரிய கொட்டை எழுத்தில் எழுதி வைத்திருக்கிறார்கள்.

images (70)

தேவைக்கு அதிகமான உணவுகளையும் மீதமிருக்கும் சமைத்த உணவுகளையம் மேலாளருக்கு தெரியாமல் எவ்வளவு குப்பையில் கொட்டி மறைத்திருப்பேன். அதற்கு தண்டனையாயிது.

உன்னிடம்தான் இருபது ரூபாய் இருக்கிறதே. அதற்கு ஏதாவது சாப்பிட்டுட்டு போய் அறையில் படுத்துகொள். நாளை பார்க்கலாம். இல்லை இப்படியே போனால் நான் பைத்தியமாகி விடுவேன். அதனால் நான் பத்து ரூபாய் டிக்கெட்டில் சினிமா படத்திற்கு போகப்போறேன். அப்ப பசிக்குமே சினிமாவுக்கு போனால் பசி மறந்து போய்விடும். இல்லை எனக்கு சினிமா பைத்தியம். அதனால் இப்படி ஒரு காரணம் சொல்லி நீ சினிமா பார்க்கப் போகிறாய்., இல்லை இதை என்னால் ஏற்க முடியாது. அதிகமாக யோசித்தால் உடம்பு சூடாகி இரத்தம் சுண்டி மூளை பழுதாகிவிடும். அதற்கு மாற்றுவழி சினிமா? நீ எவன் சொல்லை எப்ப கேட்டிருக்கிறாய்.

உன் உடம்பு நன்றாகத்தானிருக்கிறது. அதற்கு தற்போது பசி தவிர வேறு குறையில்லை. ஆனால் உன் மூளை குழம்பிவிடப் போகிறது. அதனால் தாமதிக்காமல் சினிமாவுக்கு போ நேரம் ஆகிறது. ஆமாம் அப்படியே ஒரு படத்திற்கு போனேன். அது இந்திப்படம் ஒரு மண்ணும் புரியவில்லை. இருந்த பத்து ரூபாயும் வீணானது தான் மிச்சம். அவசரக் காரனகு;கு புத்தி சரியாக வேலை செய்வதில்லை.

படம் முடிந்தது. வயித்து பசியும் என்னுடன் போராடி களைத்து சோர்ந்து போய்விட்டது. வயிறு ஒட்டிப் போயிருந்தது. வயித்தில் கை வைத்துப் பார்த்தே சூடாகியிருந்தது. அதற்கும் கோவம் வந்து சற்று அடங்கியிருந்தது போல தொங்கப்பட்ட தலையுடன் அறைக்கு வந்தேன். மீதம் பத்து ரூபாயை செலவு செய்யவில்லை. நாளையப் பொழுதுக்கு பத்து ரூபாய் வேணுமே, குடத்துத் தண்ணீர் வயிற்று சூட்டை தற்காலிகமாக தணித்தது. எனது சூட்டை பீடிப்புகை தணித்தது. படுத்தால் தூக்கம் வரும்? எப்படி வரும்.

5.07.2006 காலை அரைத்தூக்கமாகயிருந்தது. வேகமாக தலையை சாய்த்து சுவரில் இருந்த கடிகாரத்தில் நேரம் பார்த்தேன். மணி எட்டுதானாகியிருந்தது. எழுத்திருக்க மனமில்லை. எழுந்தால் பசிக்குமே மறுபடியும் தூங்க முயற்சி செய்தேன். என் முயற்சி எல்லாம் தோல்வியில் முடிவதுபோல் இந்த தூக்க முயற்சியும் தோல்வியில் முடிந்தது. ஒன்பது மணிக்கு எழுந்து மீதயிருந்த பத்து ரூபாயுடன் தேனீர் கடையில் போய் உட்கார்ந்தேன். எப்பவும் போல் சூடான அருமையான தேனீர் அறைக்கு வரும் வழியில் மூன்று ரூபாய்க்கு ஒரு பிஸ்கட் பாக்கெட் இன்றைய பொழுதுக்கு இதுதான். எப்படி எனது சென்னை அறையை புரட்டிப்போட்டு தேடினாலும் நான்கு ரூபாய் ஐம்பது பைசா தவிர வேறு காசு எதுவுமில்லை. பழைய பேப்பரை விற்றால் பத்து ரூபாய் தேறலாம். கடைசிநேர பசியிலிருந்து என்னைக் காப்பாற்றும் தெய்வம் அதுவாகத்தானிருந்தது. அப்ப அப்ப அந்தப் பேப்பரை விற்கு சாப்பிடலாம் என்பதிலேயே மனசு ஓடிக் கொண்டிருந்தது.

நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று தோன்றவே சமூக விஞ்ஞானம் என்ற ரஸ்யப் புத்தகம் ஒன்றை தூக்கி வைத்துக் கொண்டு படிக்கிறேன். மூலையில் கிடந்த பழைய பேப்பர் ஞாபகத்துக்கு வந்து கொண்டிருந்தது. அவ்வாறு எனது வயித்துப்பசி எனது கவனத்தை திசை திருப்பிக் கொண்டிருந்தது. மறுபடியும் புத்தகத்தில் கவனம் செலுத்த முயற்சி செய்தேன். அந்தப் புத்தகத்தை தூக்கி மூலையில் வீசி எறிந்தேன். இதற்கு காரணம் பசியில்லை. அந்த புத்தகத்தின் தமிழ் மொழி பெயர்ப்பு.

வீசி எறிந்த புத்தகத்தையே பார்க்கிறேன். அது இலங்கை ராணுவத்தால் கற்பழிக்கப்பட்ட ஈழத்து தாய்மாதிரி அலங்கோலமாக கிடக்கிறது. பரிதாபமாக பார்த்து என்னை கேட்கிறது. என்னால் முடியவில்லை. என்னை சற்று தூக்கி விடு என்பது போல் எனக்கு தோன்றவே எழுந்து சென்று அதைத்தூக்கி முடிந்தவரை சரி செய்து ஏற்கனவே வரிசையில் அடுக்கியிருக்கும் புத்தகத்திற்கு நடுவில் வைத்தேன். அதற்கான பாதுகாப்பு கிடைத்து விட்ட மகிழ்ச்சி அதற்கு ஆனால் எனது வயித்து பசிக்கு தான் இன்னும் வழி தெரியவில்லை.

படிக்க வேண்டாம், ஏதாவது எழுதலாம் என்று நீங்கள் படித்துக் கொண்டிருப்பதை பாதி எழுதினேன். மணி மதியம் பன்னிரண்டை தாண்டிக் கொண்டிருந்தது. மறுபடியும் பசி என்ற சுனாமி என்னை சுருட்டி வாரி அள்ளிப்போக தயாராவது போல் தோன்றியது. காசு இல்லை என்றால் அதிகம் பசிக்குமாம். எப்போதோ படித்ததோ, கேட்டதோ, ஞாபகமில்லை. ஆனால் அதுவே இப்போது அனுபவமாக கண்முன்னே நிக்கிறது.

அறையின் அமைதியை கொடுத்துக் கொண்டு கைபேசி அலறியது. ஒரு கணம் தொலைபேசியில் சாப்பாடு அனுப்ப முடியுமா? விஞ்ஞானத்திடம் கேட்க வேண்டும் என்ற சிறிய சிந்தனையுடன் கைபேசியை எடுத்து வணக்கம் நான்… பேசுகிறேன் என்றேன். மறுமுனையில் நண்பர் பாபு எங்கிருக்கிறீர்கள் பாபு நான் அறையிலிருக்கிறேன். சரி நானும் அறைக்கு வருகிறென். சாப்பிட்டீங்களா? இல்லை பாபு இனிமேல்தான் சரி நான் சீக்கிரம் வந்தால் நாமிருவரும் சாப்பிடலாம் நான் தாமதமானால் நீங்கள் சாப்பிடுங்கள் என்றார் சரி என்றேன்.

எனக்கு கடவுளிடம் மண்டியிட்டு பழக்கமில்லை யாராவது எனக்காக கடவுளிடம் பரிந்துரை செய்யுங்கள் பாபு சீக்கிரம் வர வேண்டும் என்று இப்படியும்தான் எனக்கு தோன்றியது.

முதலில் எழுதியதை மூடி வைத்து விட்டேன். மறுபடியும் வேறு ஏதாவது எழுதலாமே என்ன எழுதுறது ஏதாவது சரி சினிமாவுக்கு கதை எழுதலாமே எனக்கே என்னை நினைத்து சிரிப்பாக வந்தது. வரும் சிரிப்பை அதுவும் எப்பவாவது வரும் சிரிப்பை ஏன் தடை செய்ய வேணும். ஒருதடவை என்னை நினைத்து நானே சிரித்துக் கொண்டேன். என்ன சிரிப்பு வேண்டியிருக்கிறது. ஏன் சினிமாவுக்கு நான் கதை எழுதக் கூடாது. எழுதலாம். அது இப்ப சாப்பாடு போடுமா? இல்லை. பாபு தவிர வேறு எதனாலும் எனக்கு இப்ப சாப்பாடு போட முடியாது. எனக்கு பொழுது போக வேணும். ஏதாவது செய்யணும் இப்படி எதுவும் எழுதாமல் மணியைப் பார்த்தேன். மணி மதியம் 2.30 தாண்டிக் கொண்டிருந்தது.

சிறிது நேரத்தில் நண்பர் பாபு சிலநேரங்களில் சரியான நேரத்தில் வந்து நிப்பார் இந்த பாபு. சாப்பிட்டாச்சா என்றார் சாப்பிட்டேன் என்று பொய் சொல்ல எனது வயித்துப்பசி என்னுடன் ஒத்துழைக்கவில்லை. உண்மையை சொன்னேன். சாப்பிடவில்லை. நல்ல சாப்பாட வாங்கி கொடுத்தார். அவர் ஏற்கனவே சாப்பிட்டிருந்தார். சாப்பிடுவதற்கு முன்பாக பாபுவிடம் கேட்டேன். காசு இருக்குது தானெ என்றேன். நான் காசு கொண்டு வரவில்லை. அதனால் கேட்டேன் என்றேன். ஏற்கனவே நான் அவரிடம் வாங்கிய ரூ.500ஃ- இன்னும் நான் திருப்பி கொடுக்கவில்லை. பின்பு அறைக்கு வந்தோம். பேசிக் கொண்டிருந்தோம்.

நான்கு மணிக்கு அவர் புறப்படும் முன்பு காசு வேணுமா என்றார். நான் வேண்டாம் என்றேன். வேணும் என்றால் கோளுங்கள் என்று கூறிவிட்டு புறப்பட்டார். தற்காலிகமாக வயித்துப் பசி போனது. காசு வருவதற்கான ஒரே வழி நண்பர் பாhபு அவரிடம் வேண்டாம் என்று முட்டாள்தனமாக மறுத்து விட்டேன். யுவுஆல் இன்று காசு வரவில்லை என்றால் இரவு நாளை மறுபடியும் பழைய கதையாகிப் போய்விடுமே.

பாபு சென்றதும் அதே பேண்டு அதே ஜிப்பா அதே நடை. அதே யுவுஆ சிறுமாறுதல், யுவுஆ இயந்திரம் பழுதாகிவிட்டது. சரி செய்து கொண்டிருக்கிறார்கள். பரவாயில்லை. இப்பவென்றாலும் எனக்கு பணம் வரவேண்டும். கடவுளிடம் ஒருதடவை கேட்டுப் பார்க்கலாமா வேண்டாம். எதற்கும் கேட்காத நான் இதற்கு கேட்கலாமா? பணம் வரவில்லை என்றால் நேற்றைய நிலை தானே நாளையும். நினைத்தாலும் பயமாகயிருக்கிறதே, அகோர பசிக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லையே, கடன் காரணை விட படுமோசமாக, இருக்கிறதே இந்தப்பசி.

மறுபடியும் உள்ளே வெளியே பணம் வரவில்லை. அட என்ன சார் கொடுமை என்று சினிமா வசனம் பேசினாலும் பணம் வரவில்லை. அருகில் வங்கியில் சென்று கேட்டேன். இன்று நாள் முடிவதற்குள் வந்திரும் என்றாள் அந்த பெண்மணி. தாயே நீதான் என்னை துன்பத்திலிருந்து காப்பாத்தணும் என்று சொல்லநினைத்தேன். ஆனால் நாகரீகம் தடுத்துவிட்டத. பாபுவின் உபயம் இல்லை என்றால் அதையும் சொல்லியிருப்பேன். ஆனாலும் ஒரு அப்பாவியாக ஒரு ஏக்கத்துடனே அந்தப் பெண்மணியை பார்த்தேன். அதற்கு என்ன புரிந்ததோ தெரியவில்லை. நம்பிக்கையோடு போங்க சார் கண்டிப்பா இன்று பணம் உங்களுக்கு கிடைக்கும்.

வாழ்க்கை என்பது நம்பிக்கைதான் ஆனால் எனக்கு நம்பிக்கையில்லை. நம்பிக்கைதானே. எல்லாம் போச்சு இனி எப்படி நம்புறது. அகோர பசியில் அகப்பட்டுப் போனேன். ஆனாலும் வேறு வழி.

இப்ப மணி இரவு ஒன்பதாகிறது. இன்னும் எனக்கு என் கைக்கு பணம் வரவில்லை. இதை எழுதி முடித்த பின்புதான் யுவுஆ போய் பணம் வந்திருக்கா என்று பார்க்க வேண்டும்.

உயர்தர சைவ உணவகம்

சூடான இட்லி – 10.00

சாதா தோசை – 17.50

விற்பனை வரி 2மூ – 0.55

கூடுதல் சேர்க்கை – 0.05

மொத்தம் 28.00

வுஐPளு 12.00

40.00

எனக்கு உணவு பரிமாறிய மனிதர் நன்றியடன் செயற்கை தனமில்லாமல் என்னைப் பார்க்கிறார். பெருமிதத்துடன் நன்றி என்றேன். ஒரு ஓட்டல் தொழிலாளியான அவனுக்கும் அவன் குடும்பத்திற்கும் என்னைப் போல் ஒரு சூழ்நிலை வரக்கூடாது என்று நான் ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன். எனக்கும் இனிமேல் இதுபோல் ஒரு சூழ்நிலை வரக்கூடாது என்று நீங்க கடவுள்கிட்ட வேண்டிக்கோங்க. கடைசியாக ஒரே ஒரு உண்மையை சொல்கிறேன். நானும் அவனும் ஈழத்து அகதி ;.

••••

Comments are closed.