உவர் மண் அறிமுகம் / பொன். குமார்

[ A+ ] /[ A- ]

download

இலக்கியத்தில் பாடல்களே முதல் வடிவமாகும். பாடலிலிருந்து பிறந்த தே கவிதையாகும். கவிதைக்குப் பிறகு நாவல் வந்த து. கதை வந்த து. கட்டுரை வந்த து. பொதுவாக சொன்னால் உரை நடை வந்த து. ஆனால் இன்று உரை நடைக்கு இருக்கும் வரவேற்பு கவிதைக்கு இருப்பதில்லை. சில கவிதைத் தொகுப்புகளைத் தவிர, சிலரின் கவிதைத் தொகுப்புகளைத் தவிர பிறரின் தொகுப்புகள் பொது வெளியில் பேசப் படுவதில்லை. வரவேற்பு இருப்பதில்லை. பொதுவாக மறுபதிப்பு காண்பதில்லை.

மறுபதிப்பு கண்ட
கவிதைத் தொகுப்பு ‘ உவர் மண் ‘. ஆசிரியர் நட. சிவ குமார். 1997 ஆம் வெளி வந்து 2017 ஆம் ஆண்டு மறுபதிப்பு கண்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

வீடு என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிக முக்கியமானது.
மனிதரில்லா வீடு இருக்கும். வீடில்லா மனிதர் இல்லை. தாயின் கருவறையும் மனிதர்க்கு பத்து மாதம்தான். ஆனால் வீடு என்பது இருக்கும் வரை. இறுதி வரை. மனிதர் எங்கு சுற்றினாலும் வீடு வந்து சேர்ந்தேயாக வேண்டும். வீட்டிலிருக்கும் நாம் வீட்டைப் பற்றி சிந்திப்பதில்லை. வாடகை வீடோ , சொந்த வீடோ மனிதர்க்கு தேவை. கவிஞர் நட. சிவகுமார் ‘ வீடு பற்றிய கவிதைகள் ‘ எழுதியுள்ளார். வீட்டைக் குறித்து சிந்திக்கச் செய்துள்ளார். வீடு இல்லாமல் சுதந்திரமாக வாழ எண்ணுகிறார். வீட்டுக்குள் இருக்கும் பிரச்சனைகளை எண்ணி வெறுக்கிறார். ஒழுகும் வீட்டுக்குள் இருக்கும் சிரமத்தைக் கூறுகிறார். வாடகையை உயர்த்தினாலும் ஒரு வருடம் மட்டுமே வாழ முடியும் என்று வருந்துகிறார். வீடு என்றாலும் விடுபடாது தொல்லைகளும் தொடரும் என்கிறார்.

கிணறு மக்களுக்குத் தேவையான தண்ணீர் வழங்கி வந்த து. வற்றாத அமுத சுரபியை வற்றச் செய்து விட்டார்கள். இன்று கிணறையும் மக்கள் இல்லாமல் செய்து விட்டார்கள். கிணறைக் காண்பது அரிதாகி விட்டது. இந்நிலையில் கவிஞரின் ‘ கிணறு ‘ பற்றிய கவிதை கிணறைக் கண் முன் நிறுத்துகிறது. கிணறு தண்ணீரைக் கொடுத்தாலும் திறந்த வெளியில் இருப்பதால் பூச்சிகளும் எச்சங்களும் விழுவது குறித்து பேசியுள்ளார். அந்த தண்ணீரையே குடிக்க வேண்டியள்ளது என்று வருந்தியுள்ளார். பூனை விழுந்த பின் அதை அகற்றுவதற்கு உடன் குடியிருப்பவர்களின் ஒத்துழையாமைக் குறித்து வருந்தியுள்ளார். இதிலும் வாடகைக்கு குடியிருப்போர் நிலைமையே வெளிப் பட்டுள்ளது.

வாடகை வீட்டில் வசிப்போருக்கு காதலும் கை கூடாது , எட்டாமலே போய் விடும் என்று விவரிக்கிறது ‘ எட்டாவது வீடு ‘ கவிதை .

கிணறு பற்றியதைத் தொடர்ந்து குளம் தொடர்பான கவிதை ஒன்றையும் எழுதியுள்ளார். ‘கால் ‘ கழுவின, மீன் செத்துக் கிடந்த குளத்து நீரில்தான் குளிக்க வேண்டியிருக்கிறது என்கிறார். சொறி பிடித்தாலும் வேறு வழியில்லை என்கிறார். கிணறு நீர் குடிப்பதற்கு என்றால் குளத்து நீர் குளிப்பதற்கு என்கிறார். மக்கள் குடிக்கவும் குளிக்கவும் சுத்தமான, சுகாதாரமான நீரில்லை என்கிறார். அன்றைய நிலை அவ்வாறு என்றால் இன்றைய நிலை சுகாதாரம் என்னும் பெயரில் இரசாயணம் கலந்த நீரையே பயன் படுத்தப்பட வேண்டியுள்ளது.

பெற்றொர் இன்றி எவரும் பிறப்பதில்லை. பெற்றோரை
வணங்காதோர், மதியாதோர் பிள்ளையுமில்லை. கவிஞர்கள் கவிதைகள் மூலம் பெற்றோரைப் போற்றுகின்றனர். வழிபடுகின்றனர். கவிஞரும் ‘அம்மா சில வரைப் படங்கள் ‘ மூலம் அம்மாவின் அவஸ்தைகளை, அம்மாவின் அருமைகளைக் கவிதையாக்கித் தந்துள்ளார்.
ஸ்கூலுக்குப் போகும் எனக்கும்
சைக்கிளில் போகும் அப்பாவுக்கும்
காலை டிபனுக்காக
மதியம் சாப்பட்டிற்காக
மாடு மாதிரி வேலை செய்யும் அம்மா
அம்மாவைப் பற்றி எழுதிய கவிதையில் இது ஒரு மாதிரி. மற்றவைகளும் இதே மாதிரிகள்.
மரண அவஸ்தைப் படும் அம்மாவிற்காக இரக்க்கப் பட்டு ‘ மரணக் குறிப்புகள் ‘ கவிதையில் எழுதியுள்ளார்

அம்மாவைத் தொடர்ந்து ‘ அப்பாவின் உலகத்திற்குள்ளும் ‘ வாசகர்களை அழைத்துச் சென்றுள்ளார்.
கவர்மெண்ட் வேலையிலிருக்கும் அப்பாவுக்கு
முன்னூறு ரூபாய்க்கு மேல
வட்டிக் கடன்.
இருந்தாலும் அப்பா
எப்போதும் போல் சிரித்துக் கொண்டு
மனத்திற்குள் சுமை இருந்தாலும் வெளிக் காட்டிக் கொள்ளாதவர்கள் அப்பாக்கள் என்கிறார். ஆனாலும் மகளுக்கு நல்ல வரனாக அமைய வேண்டும் என்பதில் அக்கறைக் கொண்டவர்களும் அப்பாக்கள் என்கிறார்..

‘ சித்தப்பா ‘ குறித்தும் ஒரு சிறிய பதிவு உண்டு. கிராமத்தில் திருவிழாக்களில் வேண்டியதை வாங்கிக் கொடு்த்த சித்தப்பா பட்டணத்தில் தடுமாறுவது அவமானமாக உள்ளது என்கிறார்.

‘ பாட்டிகள் பற்றி சில தகவல்களை’ யும் கவிஞர் கூறியுள்ளார். அதில் ஒரு தகவல்
கண்டாங்கிச் சேலையுடன்
காதில் பாம்படம் தொங்க
காரியமான காரியத்துக்குக் கூட
கணவன் பெயரை உச்சரிக்காதவளாய்..
பண்பாடு மாறாத பாட்டியைப் படம் பிடித்துக் கற்பித்துள்ளார்..
குறத்திப் பெண்ணுக்க கூட
கொஞ்ச நாளு குடும்பம் நடத்தி்க்கிட்டு
குடும்ப கெளரவம் பாதிக்குமிண்ணு
விட்டுட்டு வந்துட்டாரு
தாத்தாவின் குணத்தைத் தள்ளாட்டமில்லாமல் கூறியுள்ளார்.

ஒரு பெண்ணுடன் வாழாமல் பலவுடன் வாழ்ந்து அனாதையாக இறந்து போன ‘ வைரவன் தாத்தா’ கதையை ஒரு பாடமாக கற்பித்துள்ளார்

சின்ன பிள்ளைங்க சேர்ந்து விளையாடி சந்தோசமாக சாமி கும்பிட்டு விளையாட நினைத்தாலும் மழை பெய்வதை சாமி தடுக்கவில்லை என ‘ ஒடக்கு ‘ வில் கொஞ்சம் கோப ப் பட்டுள்ளார். சாமிகளுக்கு மக்கள் சந்தொசமாக இருப்பது பிடிக்க வில்லை என்கிறார்.

பல வண்ண ‘மீன்கள் ‘ ஒரே தொட்டியில் ஒன்றாக மகிழ்ச்சியாக வாழ்கின்றன என்று கவிதை குறிப்பிட்டாலும் இதன் மூலம் ஒற்றுமையின்றி வாழ்கின்றனர் என்று வருத்தப் பட்டுள்ளார். ‘ ஊர்க் கோவில் ‘ கவிதையில் மக்கள் கலவரமின்றி ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று பிரார்த்தித்து தன் எண்ணத்தை வெளிப் படுத்தியுள்ளார்.

மனிதர்களில் பெரு தெயவங்களை வணங்குபவர்கள் உண்டு. சிறு தெய்வங்களை வணங்குபவர்களும் உண்டு. இரு தெய்வங்களை வணங்குபவர்களும் உண்டு. கவிஞர் நட. சிவகுமார் சிறு தெய்வங்களை வழிபடுபவராக உள்ளார் என்பது கடுவா மூர்த்தி சாமி, கோமரத்தாடி, பலி ஆகிய கவிதைகள் மூலம் அறிய முடிகிறது.

மனிதர்களில் பலர் உயர்ந்தவர்களாக உள்ளனர். அவர்களில் ஒரு பிரிவினர் மற்றவர்களின் துணியை வெளுத்திடும் வண்ணார்கள். சமூக அழுக்கையும் சேர்த்து வெளுத்துக் கொண்டிருப்பவர்கள் ஆவர். நட. சிவகுமாரின் கவிதைகளில் வண்ணார்கள் பற்றிய தகவல்கள் மிகுதியாகவே உள்ளன. வண்ணார்கள் குறித்த கவிதைகளை வெளுத்து வாங்கியுள்ளார்.
…..வெளுத்த துணிகளை
வீட்டுக் காரம்மாவிடம்
வாசலில் நின்று கொடுத்துக்
கொண்டிருந்தான்
வண்ணான்.
இருக்கையில் இருந்தும்
இருக்காத து போல
சூடு அதிகரிப்பது போல
இருந்த து எனக் கு.
கவிஞர் தனக்குத் தானே ‘ சூடு ‘ வைத்துக் கொள்கிறார். வண்ணார்களை வணக்கத்திற்குரியவர்கள் பட்டியலில் சேர்த்துள்ளார். வண்ணார்களை வண்ணான் என்று ஒருமையில் உரிமையில் குறிப்பிட்டுள்ளார். துரைக்கு துணி வெளுத்த பரம்பரை என்று பெருமைப் பட்டுக் கொண்ட அம்மாவின் பெருமையை ‘ சவடால் ‘ கவிதையில் சாம்பலாக்கியுள்ளார். தீண்டா வண்ணார்களைத் தீண்டச் செய்துள்ளார். ‘ வெள்ளாவி ‘ வைப்பதற்கு சாமான்கள் வாங்கப் போனாலும் கடை காரன் மதிக்காமல் கடைசியிலே கொடுப்பான் என ஒரு வண்ணாரின் கோபத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
இப்படி எல்லாம் கஷ்டப் பட்டு உரசி விட்டு
வேலை செஞ்சபொறவும்
எங்கள ரசவாதம் செஞ்சுக்க மனசில்ல
பாவி பயலுவளுக்கு
என ரசவாதம் கவிதையிலும் வெளிப்பட்டுள்ளது கவிஞரின் கோபம்.

ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு வாழ்க்கைச் சூழல் இருக்கும். வாழ்க்கை முறை இருக்கும். வாழ்க்கை நிலை இருக்கும். அவரவர் நிலையை அவரவர் எழுதும் போதே சிறப்பாக இருக்கும். கவிஞர் நட. சிவகுமார் ‘ உவர்மண் ‘ தொகுப்பு மூலம் வாழ்க்கைச் சூழலை, வாழ்க்கை முறையை, வாழ்க்கை நிலையைப் பதிவுச் செய்துள்ளார் . பதிவுச் செய்வதுடன் மாற்றத்துக்கும் வழி வகுத்துள்ளார். ஆதிக்க சமூகத்தின் மீதான ஆற்றாமையையும் கவிதைகளின் மூலம் உரைத்துள்ளார். வட்டார வழக்கு மொழியைக் கையாண்டதுடன் கவிதை மொழியையும் கை விடாமல் கவிதைகளைப் படைத்துள்ளது கவிஞரின் தனிச் சிறப்பு. குடும்ப ப் பின்னணிப் பிரச்சனைகளை மையமாக வைத்துத் தொடங்கிய தொகுப்பு உறவுகளின் உணர்வுகளைப் பேசி இறுதியாக ஒரு குறிப்பிட்ட இன மக்கள் நிலையைப் பேசுவதில் முடிந்துள்ளது தொகுப்பு. கவிதைகளில் வரிகளை பிரித்துக் காண்பிப்பது பெரும் சிரம ம். பிரித்துக் காட்டுவதும் இயலாத து. கவிஞர் நட. சிவகுமார் கவிதைகளுக்கு புத்துணர்வூட்டி, புது பரிமாணத்தைத் தந்துள்ளார். கவிதைகள் என்றும் ஓயாது என்பதற்கும் நட. சிவ குமாரின் கவிதைகள் அடிப் படையாக உள்ளன.

வெளியீடு
குமரிப் பதிப்பகம்
சிவகிரி நிவாஸ்
சிதம்பர நகர் ஜங்சன்
நாகர் கோவில் 1
9942118989
9442079252
விலை ரூ 100/-

Comments are closed.