Category: Uncategorized

யெஹுடா அமிச்சாய் கவிதைகள் – தமிழில்: ராஜேஷ் சுப்ரமணியன்

download (33)

1.

கடவுளின் தலைவிதி

இப்பொழுது
கடவுளின் தலைவிதி,
மரங்கள், கற்கள், சூரியன் மற்றும் நிலவு
ஆகியவற்றை வழிபடுவதை அவர்கள் நிறுத்திவிட்டு
கடவுளை வழிபடத் தொடங்கியபொழுது
அவற்றிற்கு நேர்ந்த விதியே.

இருப்பினும் அவர் நம்முடன்
தொடர்ந்து இருக்கும் கட்டாயத்திற்குத்
தள்ளப்பட்டிருக்கிறார்;
கற்கள், சூரியன், நிலவு மற்றும்
நட்சத்திரங்களைப் போலவே.

2.

பரிதாபமான விஷயம்.

உன்னுடையத் தொடைகளை
என்னுடைய இடையிலிருந்து
அவர்கள் வெட்டி எடுத்தார்கள்.
என்னைப் பொறுத்தவரை
அவர்கள் எல்லோரும்
அறுவை சிகிச்சை நிபுணர்கள்.
அவர்கள் அனைவருமே.

அவர்கள்
நம் இருவரையும்
ஒருவரிடமிருந்து மற்றவரைப்
பிரித்தெடுத்தார்கள்.

என்னைப் பொறுத்தவரை
அவர்கள் அனைவருமே பொறியாளர்கள்.
அவர்கள் அனைவருமே.

பரிதாபப்படத்தக்க விஷயம் தான்.
நாம் அந்த அளவிற்கு அருமையான ,
விரும்பத்தக்க ஒரு அற்புதமான கண்டுபிடிப்பு.
ஒரு மனிதன் மற்றும் அவன் மனைவியைக் கொண்டு
அமைக்கப்பட்ட ஒரு விமானம்.
இறக்கைகள் மற்றும் அனைத்துடனும்.
பூமியிலிருந்து சற்றே உயரத்தில்
நாம் சுற்றிக்கொண்டிருந்தோம்.

கொஞ்ச தூரம் பறக்கவும் செய்தோம்.

3.

எனது அம்மா ஒரு முறை சொன்னாள்

எனது அம்மா ஒரு முறை சொன்னாள்
அறையில் பூக்களுடன் உறங்க வேண்டாம் என்று.
அப்போதிலிருந்து நான்
பூக்களுடன் உறங்குவதில்லை.
நான் தனியாகவே உறங்குகிறேன், அவை இல்லாமல்.

நிறைய பூக்கள் இருந்தன.
இருப்பினும் போதிய அவகாசம்
என்னிடம் இருந்ததில்லை.
நான் நேசிக்கும் மனிதர்கள்
எனது வாழ்விலிருந்துத் தம்மை வெளியே வெளியே
தள்ளிக்கொண்டே போகிறார்கள் -
படகுகள் கரையிலிருந்து விலகி விலகிச் செல்வது போல.

என்னுடைய அம்மா சொன்னாள்
பூக்களுடன் உறங்க வேண்டாமென்று.
நீ தூங்க மாட்டாய்.
நீ தூங்க மாட்டாய் , என்னுடைய குழந்தைப் பருவத்தின் தாய்.

பள்ளிக்கு என்னை இழுத்துச் செல்லும்பொழுது
நான் மறுத்து, இறுகப் பற்றிக்கொண்ட
மாடிப் படிக்கட்டின் கைப்பிடிகள்
எப்பொழுதோ எரிக்கப்பட்டு விட்டன.
ஆனாலும், இறுகப் பற்றிக்கொண்ட
எனது கைகள்,
இன்னும் இறுகப் பற்றியவாறே இருக்கின்றன.

***********************

(குறிப்பு: யெஹுடா அமிச்சாய் – Yehuda Amichai- (1924-2000) இஸ்ரேலிய நவீனக் கவிஞர். ஹீப்ரு மொழியில் எழுதுபவர். உலக அளவில் புகழ் பெற்றவர்.

ஆறஞ்சு (சிறுகதைத் தொகுப்பு) – அழகுநிலா. / விமர்சனம் – இமையம்.

download (13)

ஆறஞ்சு சிறுகதைத் தொகுப்பில் பதினான்கு கதைகள் இருக்கின்றன. பதினான்கு கதைகளும் தொடர்ந்து படிக்கும்படியாக இருக்கின்றன. ஒரு கதைகூட அயர்ச்சியை ஏற்படுத்தவில்லை. எதை சொல்ல வருகிறாரோ அதை நேரிடையாகவும், சட்டென்றும், துல்லியமாகவும் சொல்வது அழகுநிலாவின் எழுத்தாக இருக்கிறது. இந்தக் கதைகளில் கண்ணீர் இல்லை. புலம்பல்கள் இல்லை. ஒரே விதமான கதை சொல்லல் முறையும் இல்லை. இதுதான் இந்தக் கதையின் பலம். உலகம் என்றால், மனிதர்கள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள், புனிதர்களாக இருக்க மாட்டார்கள் என்பதை போகிற போக்கில் சொல்கிறார் அழகுநிலா. வலிந்து சொல்வது, மிகைப்படுத்துவது என்பது இக்கதைகளில் இல்லை.

download (12)

இறந்து போனவர்களுக்கு பிரச்சினைகள் என்று எதுவும் இருப்பதில்லை. உயிரோடு இருப்பவர்களுக்குத்தான் எல்லாச் சிக்கல்களும். தமிழ்நாட்டில் இறந்துவிட்ட தந்தையின் உடலைப் பார்க்க வரமுடியாமல் தடுப்பது, அவன் சிங்கப்பூருக்கு வருவதற்காக பட்டகடன். தாயைவிட தந்தையைவிட உலகில் பெரியது – பணம் என்பதை ஒரு மரணத்தின் வழியே சொல்கிறது ‘பச்சை பெல்ட்’ கதை. பணம்தான் மனித உறவுகளை சிதைக்கின்றன என்றால் அது முழு உண்மையாகாது. புரிந்துகொள்ளாமைதான். புரிந்துகொள்ளாததாலும், அனுசரித்து போகாததாலும் ஏற்படக்கூடிய விளைவுகள் என்ன என்பதை ‘சிதறல்கள்’ கதையில் பார்க்க முடியும். காதலித்து திருமணம் செய்துகொண்டவர்களின் நிலைக்கும், பெற்றோர் நிச்சயித்து திருமணம் செய்துகொண்டவர்களின் நிலைக்கும் பெரிய மாறுபாட்டை உணர முடியாது. மனித மனம் எப்போதுமே பலகீனமானதுதான்.

‘சுடோக்கு’ கதை மாற்றுத் திறனாளிகள் மீதான கரிசனையை பேசவில்லை. மாறாக அவர்களுடைய மனத்திடம், உறுதி பற்றி பேசப்படுகிறது. செய்தியாக அல்ல. தகவலாக அல்ல. கதையாக. படிப்பு என்பதை, கல்வி என்பதை நாம் எப்படி புரிந்துகொண்டிருக்கிறோம்? உண்மையான கல்வி என்பது என்ன, பெற்றோர்களின் பேராசை எப்படிப்பட்டதாக இருக்கிறது, படிப்பு என்ற பெயரில் குழந்தைகள் நாள்தோறும் அனுபவிக்கும் தண்டனை என்ன என்பதை ‘ஆறஞ்சு’ கதையைப் படித்தால் புரியும்.
இருபத்தியோராம் நூற்றாண்டின் வாழ்க்கையில் நாம் எதையெல்லாம் பெற்றிருக்கிறோம், எதையெல்லாம் இழந்திருக்கிறோம், இழந்ததின் பெருமையை, வலியை எப்போதாவது உணர்ந்திருக்கிறோமா என்ற கேள்வியை ‘வேர்க்கொடி’ கதை கேட்கிறது.

நவீன வாழ்வு, முன்னேற்றம், வளர்ச்சி, நாகரீகம் என்ற பெயரில் நாம் தொலைத்தது நம்முடைய பாரம்பரிய அறிவை. நேற்று என்பதை முற்றாக நிராகரித்துவிட்டு. இன்று என்பது இருக்க முடியாது. பணமும், பதவியும், அந்தஸ்தும் வரும்போது எப்படியோ நாம் நம்மிடமிருக்கும் மனிதத் தன்மையை இழந்துவிடுகிறோம். எளிய மனிதர்களை அவமானப்படுத்துவதிலா, சிறுமைப்படுத்துவதிலா, பணமும், பதவியும் பெருமை அடைய முடியும் என்பதை கதாசிரியர் ‘உறவு மயக்கம்’ கதையில் அழகாக நிகழ்த்திக் காட்டுகிறார். அதே மாதிரி அன்பாக இருப்பதற்கு, சக மனிதனோடு உறவாக இருப்பதற்கு மொழியோ, நிறமோ, இனப் பாகுபாடோ தடையாக இருப்பதில்லை என்று ‘தோன்றா துணை’ கதையின் வழியே சொல்கிறார்.

மனிதர்களை மனிதர்களாக இருக்கவிடாமல் தடுப்பது எது? சாதியா, மதமா, இனமா, நிறமா, மொழியா, பண்பாடா, கலாச்சாரமா? இவைகள்தான் காரணம் என்றால் இவைகளை புறக்கணிப்பதைத் தவிர வேறு வழி என்ன இருக்க முடியும்? சமூக இழிவுகளுக்கு எதிராக எழுதப்படுவதுதான் இலக்கியம் என்றால் அழுகுநிலா எழுதியிருப்பதும் இலக்கியம்தான்.

நவீன வாழ்க்கை, தொழில் நுட்பம், பணம் தந்த பரிசு – ‘அவசரம்’. ‘பங்பங்’ சிங்கப்பூர் வாழ்வினை சொல்கிறது. அதனுடைய அவசர கதியை, இயந்திரத்தனத்தை சொல்கிறது. மனிதர்களிடத்து இன்று பணம், பங்களா, கார் எல்லாம் இருக்கிறது. ஆனால் நிம்மதி மட்டும் இல்லை. அதை இன்றைய வாழ்வில் பெற முடியுமா என்பதுதான் கதையின் மையம். நிம்மதியாக வாழ்வதற்கான எல்லா வழிகளையும் பணம் என்ற கடவுள் அடைத்துவிட்டார். ‘அலையும் முதல் சுடர்’ மகாபாரதக் கதையில் தர்மனுடைய புதிய முகத்தை, உண்மையானமுகத்தை காட்ட முயல்கிறது. அதிகாரம் சார்ந்த வேட்கை எல்லா மனிதர்களிடத்தும், உயிர்களிடத்தும் இயல்பாக இருப்பது. நீதி போதனைக்காக இயற்கை குணத்தை மாற்ற முயல்வது அறமாகாது. மிகவும் கச்சிதத் தன்மையுடன் எழுதப்பட்ட கதை இது. ‘புதுமலர்கள்’ தமிழ்நாட்டிலிருந்து சிங்கப்பூருக்கு சென்ற இரண்டு கீழ்நிலையிலுள்ள ஊழியர்களுடைய அன்பை சொல்லும் கதை. இன்றைய வாழ்வைப்போலவே இன்றைய அன்பும் போலியானவைதான். அவசரமானதுதான்.

இன்றைய நவீன வாழ்க்கை எத்தனையோ விநோதங்களை கொண்டது என்பதற்கு ‘பொழுதின் தனிமை’ கதை நல்ல உதாரணம். முகநூலில் நண்பர்கள் குறைவாக இருப்பதற்காக, தான் போடுகிற ஸ்டேட்டஸிற்கு குறைவான லைக்குகள் வருகிறது என்பதற்காக வருத்தப்படுவது சிறுவனல்ல, இளைஞனல்ல, கிழவி. நாளெல்லாம் முகநூலில் உட்கார்ந்திருப்பதே கிழவிக்கு வேலையாக இருக்கிறது. இது கற்பனையான கதை என்று சொல்ல முடியாது. மனிதர்கள் எப்போதும் கெட்டவர்களாக இருப்பதில்லை. நீர் மாதிரி மனித மனம் ஓடிக்கொண்டே இருக்கும். மனிதர்கள் கருங்கல் அல்ல. மாறக்கூடியவர்கள், அதுவும் அடிக்கடி மாறக்கூடியவர்கள் என்பதைத்தான் ‘ஒற்றைக்கண்’ கதை சொல்கிறது.

இன்றைய வாழ்க்கையில் படிப்பு, பதவி, தகுதி, பணம் பெரிய விசயமல்ல. கணவனுக்கும், மனைவிக்குமான ஈகோதான் பிரச்சனை. சாதியைவிட, மதத்தைவிட மனிதர்களை அதிகம் விலக்கி வைப்பது ஈகோதான். கணவனுக்கும், மனைவிக்குமான ஈகோவால் ஒரு குடும்பம் எப்படி சிதைந்துபோகிறது என்பதுதான் ‘அவள், அவன், அவர்கள்’ என்ற கதை. ‘பெயர்த்தி’ கதை. – ஒரு தமிழ் பெண்ணுக்கும் சீன ஆணுக்கும் பிறந்த ‘லீ’ என்ற இளைஞனின் நிறம் சார்ந்த, இனம் சார்ந்த, நாடு சார்ந்த, மொழி சார்ந்த வேறுபாடு எப்படி ஒரு தாயை சித்ரவதை செய்கிறது என்பதுதான்.

‘ஆறஞ்சு’ தொகுப்பிலுள்ள எந்தக் கதையிலும் தேவைக்கதிகமான விவரணைகள், விபரங்கள் இல்லை. எந்த கதைக்கு எது தேவையோ, எந்த அளவுக்குத் தேவையோ அது மட்டுமே, அந்த அளவுக்கு மட்டுமே இருப்பது கதைகளுக்கு சிறப்பை சேர்க்கிறது. அழுகு நிலா நல்ல கதைச் சொல்லி என்பதற்கு கதைகளுக்குள் நிறைய அடையாளங்கள் இருக்கின்றன. தொகுப்பிலுள்ள எல்லாக் கதைகளுமே ஏதோ ஒரு விதத்தில் நீதி போதனையை சொல்பவைதான். வாசகனுடைய யூகத்திற்கு, சிந்தனைக்கு வாய்ப்புத் தராமல், தானே எல்லாவற்றையும் கூடுதல் வெளிச்சம் தந்து சொல்லிவிடுகிறார் கதாசிரியர். ஒன்றிரண்டு கதைகளைவிட பிற கதைகளில் காலம் குறித்த பதிவுகள் இல்லை.

download (6)

கதைகளில் வரும் கதாப்பாத்திரங்களின் பெயர்களும், இடங்களின் பெயர்களும் – வெறும் பெயர்களாக மட்டுமே இருக்கிறது. மனிதர்கள் வெறும் பெயர்களாக மட்டுமே சுருங்கிப்போய் இருப்பதில்லை. இடங்களும் அப்படியே. இப்படி கதைகளுக்குள் சிறுசிறு குறைகள் இருக்கின்றன. அதற்காக இக்கதைகளை நிராகரிக்க முடியாது. தரமற்றவை என்று சொல்ல முடியாது. நீண்ட காலமாக எழுதிகொண்டிருக்கிற எழுத்தாளர்களின் எழுத்துக்களில் காணப்படும் குறைகளைவிட அழகுநிலாவிடம் குறைந்தே காணப்படுகின்றன. இது நல்ல அறிகுறி. அழகு நிலா நல்ல கதை சொல்லியாக மலர்வார் என்பதற்கு இத்தொகுப்பிலுள்ள ஒவ்வொரு கதையும் சாட்சி தருகின்றன.

•••••••••••

குழந்தைகள் உலகில் ஒரு பயணம் / பாலகுமார் விஜயராமன்

images (8)

 

 

இன்றைய சந்தை மயமாக்கப்பட்ட உலகத்தில் எதனையும் வர்த்தகமாக்கி காசுபார்க்கும் வர்த்தகம் கொடிகட்டிப் பறக்கிறது. இதில் குழந்தைகளை குறிவைத்து இயங்கும் வியாபார உலகம் மிக பிரமாண்டமானது. நாமும் கூட குழந்தைகளுக்குத் தேவையானதை செய்து கொடுக்கிறேன் பேர்வழி என்று, அவர்களுக்கென பிரத்யேகமாக அலங்கரிக்கப்பட்ட தனியறை, மேஜை நாற்காலி, கணினி, அலைபேசி, அவர்கள் பார்க்குற, கேள்விப்படுகிற மற்றும் நாம் சிறுவயதில் வாங்க நினைத்து வாங்க முடியாமல் போன பொருட்கள், சந்தையில் குழந்தைகளுக்கென புதிதாய் வரும் எல்லாவிதமான விளையாட்டுப் பொருட்கள், கல்வி சார் சாதனங்கள் என்று நம் குழந்தைகளுக்கென பார்த்துப் பார்த்து வாங்கிக் குமிக்கின்றோம். குழந்தைகளின் மகிழ்ச்சி என்பது நாம் அவர்களுக்காக செலவு செய்யும் பணத்தில் அடங்கி இருக்கிறது என்ற அளவிலேயே நாம் புரிந்து வைத்திருக்கின்றோம். ”என் குழந்தை என்ன கேட்டாலும் உடனே வாங்கிக் கொடுத்துடுவேன், அவ எந்தவொரு சின்ன விஷயத்துக்குக் கூட ஏமாந்து போறது எனக்குப் பிடிக்காது” என்பதை கொள்கையாக வைத்திருக்கும் பெற்றோர்கள் நம்மில் பலர் இருக்கிறார்கள்.

 

நல்ல வசதி வாய்ப்புகளோடு நம் குழந்தைகளுக்குத் தேவையானதைப் பார்த்துப் பார்த்து செய்து கொடுப்பது பெற்றோராகிய நம் கடமை தான். ஆனால் நமது நிகழ் உலகத்தில், ”மகிழ்ச்சி” என்ற பொருளுக்கு நாம் நிர்ணயித்து வைத்திருக்கும் கோட்பாடுகளையும், அளவுகோல்களையும் தாண்டி அவர்களின் உலகை புரிந்து கொள்வது அவசியம். குழந்தைகள் என்னும் சின்ன்ஞ்சிறிய மனிதர்களை வலியக் கொண்டு வந்து நமது மன எல்லைக்குள் அமரவைத்து, நம் கண் கொண்டு அவர்களைக் காணச்செய்வதைக் காட்டிலும், அவர்களின் சிறிய உலகத்தில் நாம் நுழைந்து பார்த்தால் பற்பல அற்புதங்களை நாமும் ஸ்பரிசிக்க முடியும். நாம் அனைவருமே குழந்தைகளாக இருந்தவர்கள் தான். அதை மறந்து விட்ட்தாலேயே நாம் அனைவரும் பெரிய மனிதர்கள் வேடமிட்டு எதெற்கெடுத்தாலும் ஒரு கவலையை கட்டிக் கொண்டு சுற்றிக் கொண்டிருக்கிறோம். மாறாக நம்முள் இருக்கும் குழந்தைமை நம்மையும் மீறி வெளிவரும் தருணங்களில் தான் நாம் எந்தவிதக் கவலையுமின்றி ஆத்மார்த்தமான மகிழ்ச்சியோடு இருக்கிறோம் என்பதே உண்மை.

 

நம் குழந்தைமையை மீட்பதெப்படி? மிகவும் சுலபமான வழி தான், நாம் குழந்தைகளோடு இருக்கும் போது நாமும் குழந்தைகளாக வேண்டும், அவ்வளவு தான். ஆனால் அவர்களின் உலகிற்கு ஒரு பார்வையாளராக அல்லாமல் சகபயணியாய் சென்று பயணித்தால் மட்டுமே அவர்களின் உலகத்தைப் புரிந்து கொள்ள முடியும், நம்மாலும் அவர்களின் குதூகலத்தில் பங்கெடுத்துக் கொள்ள முடியும். குழந்தைகளின் கற்பனை உலகம் (fancy world) தர்க்கங்களற்ற களங்கமின்மையால் (illogical innocence) நிறைந்து இருக்கும். அங்கே இயல்பு வாழ்க்கையில் நாம் வகுத்து வைத்திருக்கும் நேர்க்கோட்டு வரைமுறைகளுக்கு வேலையே இல்லை. குழந்தைகள் கேள்விகளின் துணை கொண்டே தங்களின் கற்பனை உலகை வளர்க்கின்றனர். அவர்களின் கேள்விகளை காது கொடுத்துக் கேட்டு, பொறுமையாக பதில் சொன்னாலே போதும், அவர்களின் உலகிற்குள் நுழைய கதவு திறந்துவிடும்

 

என் மகள் பேசத்துவங்கிய பருவத்தில், அவள் பேசும் எல்லா வாக்கியங்களுமே கேள்வியில் தான் முடியும். அதுவும் “ஏன்” என்ற வார்த்தை இல்லாமல் ஒரு வாக்கியமும் முடியாது.

 

“அப்பா, ஏன் வெயில் மறஞ்சு மறஞ்சு வருது?”

“அப்பா, பஸ் எல்லாம் எங்க தூங்கும்?”

“அப்பா, அம்மா காக்கா வீடு எங்க இருக்கும், பாப்பா காக்கா எப்போ ஸ்கூலுக்குப் போகும்?”

“அப்பா, வண்டி ஏன் ஜம்ப் பண்ணி ஜம்ப் பண்ணி போகுது?”

“அப்பா, ரொம்ப தூரம் சைக்கிள் ஓட்டுனா எனக்குத் தண்ணி தவிக்குதுல்ல, சைக்கிள் எப்படி தண்ணீர் குடிக்கும்?”

“அப்பா, காக்கா, கார் ரெண்டும் பறக்கும்ல, யாரு ஃபர்ஸ்ட்?”

“அப்பா, சைக்கிள் ரெஸ்ட் எடுக்க என் பெட்ல படுக்க வைக்கலாமா?”

“அப்பா, இது ஓசூர் பஸ்ஸா, சென்னை பஸ்ஸா?”

“அப்பா, போட்ல ஸ்பீடா போனா கடலுக்குள்ள போலாமா?”

“அப்பா, ஃபிஷ் டேங்குல மீனெல்லாம் எப்போ தூங்கும்?”

 

இப்படியான கேள்விகளை அநேகமாக நம்மில் எல்லோரிடமுமே நம் குழந்தைகள் கேட்டிருப்பார்கள். இக்கேள்விகளுக்கு நேரடியான அறிவுப்பூர்வமான பதில்களைக் காட்டிலும், கற்பனை கலந்த, குழந்தைகளையும் அந்த கேள்விக்கான பதிலின் கதாப்பாத்திரங்களாக உள்நுழைத்து கதை போல விரிவாகச் சொல்லும் போது, அவர்களின் யோசிக்கும் திறனும், அறிந்து கொள்ளும் ஆர்வமும் அதிகரிக்கும்.

 

இப்பொழுது எல்.கே.ஜி படிக்கும் என் மகள், பள்ளியிலிருந்து சுமந்து வரும் கேள்விகளுக்காகவும், கதைகளுக்காகவும் நாங்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறோம். ஆசிரியை சொல்லும் கதைகளுடன் இவளது சொந்தக் கற்பனையையும் சேர்த்து ஒரே கதை பல்வேறு வடிவங்கள் எடுத்த நிகழ்வுகளும் உண்டு. இக்கதை இப்படித் தான் முடியும் என்ற எந்த வரைமுறைகளையும் நாங்கள் அவளுக்கு நிர்ணயிப்பதில்லை, மாறாக ”ஒரு பாட்டி வடை சுட்ட கதை”க்கே பல பரிமாணங்களை வைத்திருக்கிறோம்.

 

நாம் படித்த காலத்தில், நம் பெற்றோர் வியந்தது போலவே தான் நாம் நம் குழந்தைகளைப் பார்த்து வியக்கின்றோம். மாறிவரும் கல்வி முறை குழந்தைகளின் மனப்பாட்த்திறனை மட்டும் சோதிப்பதோடு நிற்காமல், அவர்களுக்கான செயல்முறைக் கல்வி அவர்களின் கற்கும் திறனை அதிகரிக்கவே செய்கிறது. நம் பெற்றோர், “நாங்கள் எல்லாம் ஆறாவதில் தான் “A” எழுதவே கற்றுக் கொண்டோம், என் மகன் எல்.கே.ஜி.யிலேயே எல்லா எழுத்தும் எழுதுகிறான்” என்று பெருமை கொண்டிருப்பர். இன்று என் மகள் வீட்டுக்குக் கொண்டு வரும் செயல்முறைப் பயிற்சிகள் எங்களுக்கு வியப்பூட்டுகிறது

download (11)

 

கடந்த சுதந்திர தினத்தன்று என் மகள் பள்ளியிலிருந்து கொண்டு வந்த செயல்முறைத் தாளில், செயல்பணி இவ்வாறு இருந்த்து.

 

முதலில், சில தாமரைகள் – அவை எத்தனை என்று கூட்ட வேண்டும், தாமரைக்குரிய நிறங்களை வடிவத்திற்குள் சரியாக நிரப்ப வேண்டும். ஏன் அந்த்தாளில் தாமரை இருக்கிறதென்றால், அது நமது தேசிய மலர், அதனால். அது போல அந்த தாளிலேயே, தேசிய விலங்கான புலி, தேசியப்பறவையான மயில் மற்றும் தேசியக்கொடி ஆகியவற்றிற்கும் இது போல கூட்டிப் பார்த்து, நிறமடித்து, அவை அனைத்தும் தேசிய சின்னங்கள் என்ற விளக்கத்தையும் குழந்தைகள் மனதில் பதிய வைக்கிறது. ஒரே நேரத்தில பல விஷயங்களை கற்றுத் தரும் இத்தகைய செயல்வழிக் கல்வி முறை எங்களுக்கு ஒரு சேர  வியப்பையும் மகிழ்ச்சியையும் தருகிறது. வீட்டில் அவளோடு சேர்ந்து நாங்களும் கற்கத் துவங்கியிருக்கிறோம். நாம் படிக்கும் காலத்தில், நோட்டு புத்தகங்களை கிழிக்காமல் பாதுகாப்பதையே தலையாய கடமையாய் கருதியிருப்போம். இன்று பள்ளியில் இருந்து வரும் போதே அன்றைய நாளுக்கான செயல்முறைத் தாளை மட்டுமே என் மகள் பள்ளியிலிருந்து கொண்டு வருகிறாள். அதையும் வடிவத்துக்கேற்றவாறு கத்தரித்து ஒட்டும் செயலை வீட்டுப்பாடமாக அவளோடு சேர்ந்து நாங்களும் செய்து கொண்டிருக்கிறோம்.

 

குழந்தைகள் உலகில் அவர்களோடு சேர்ந்து பயணிக்கும் போது, அது குழந்தைகளுக்கு மட்டுமல்ல, அன்றாட அயற்சியூட்டும் அலுவல்களுக்கிடையே நமக்குமே நாம் இழந்த பால்யத்தை மீண்டுமொரு முறை வாழ்ந்து பார்க்கும் இனிய அனுபவமாக இருக்கிறது.

 

—————–

 

ஞாபகம் (சிறுகதை) செல்வராஜ் ஜெகதீசன்


is

கண் விழித்தவுடன் அன்றைக்கு செய்ய வேண்டிய வேலைகள் குறித்து ஒரு அலையோடி மறையும். வேலை நாள், ஓய்வு நாள் எதுவாக இருந்தாலும் முரளியின் நாட்கள்தொடங்குவது இப்படியே.

பல் விளக்கி தேநீர் குடித்து முடிப்பதற்குள் செய்ய வேண்டியவை குறித்த ஒரு கால அட்டவணை மனதுக்குள் தயாராகி இருக்கும்.

இன்றைய முதல் வேலை, டாக்டர் செக்-அப். காலை எட்டரை மணிக்கு அப்பாயின்மென்ட்.

இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, ரத்த அழுத்தம் பார்த்து, மாத்திரைகள் வாங்கி வர வேண்டும். வருடத்திற்கு ஒரு முறை ரத்த அழுத்தத்தோடு கொழுப்பு மற்றும் சர்க்கரை அளவுகளைச் சோதித்தறிய வெறும் வயிற்றில் ரத்தம் மற்றும் சிறுநீர் சாம்பிள் கொடுத்து விட்டு வரவேண்டும். தேநீர் தண்ணீர் ஏதும் உள்ளே போகாமல், இன்று வெறும் வயிறோடு போக வேண்டும்.

காரைப் பார்க் செய்துவிட்டு, மருத்துவமனை வரவேற்பறையில், இன்சூரன்ஸ் கார்ட் கொடுத்துவிட்டு, அங்கிருந்த இருக்கை ஒன்றில் அமர்ந்தபடி, கைக்கடியாரத்தில் நேரத்தைப் பார்த்தான். எட்டு இருபது.

டாக்டர் இன்னும் வந்திருக்கவில்லை. கொண்டு போயிருந்த நாவலை, அடையாளம் வைத்திருந்த பக்கத்தில் இருந்து தொடர்ந்தான். படிப்பில் லயிக்க முடியாமல் பார்க்கிங் கட்டணம் குறித்த எண்ணம் குறுக்கிட்டுக் கொண்டிருந்தது.

அபுதாபியில் கார்களுக்கு பார்க்கிங் கட்டணம் அமுலுக்கு வந்து ஒரு நான்கு ஆண்டுகள் இருக்கும். அதற்கு முன்னாள் காரை எங்கும் இலவசமாக நிறுத்திவிட்டுப் போய் வரலாம். ஆனால், இப்போது ஒரு மணி நேரத்திற்கு இரண்டு திர்ஹாம்கள் வீதம் நிறுத்தப்படும் கால அளவுக்கான கட்டணம் செலுத்தப்பட்டு, பார்க்கிங் டிக்கட் காரின் முன் பகுதியில் வைக்கப்பட வேண்டும். ஒரு முழு நாள் நிறுத்துவதற்கு 15 திர்ஹாம்கள் செலுத்த வேண்டும். அங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் டிக்கட் இயந்திரத்தில் தேவையான நேரத்திற்கான நாணயங்களை செலுத்தி, பார்க்கிங் டிக்கட்டுகளை எடுத்துக் கொள்ளலாம். கைவசம் நாணயங்கள் இல்லாதவர்கள் கைபேசி வழியாகவும் கட்டணத்தைச் செலுத்தலாம்.

பார்க்கிங் டிக்கட் இல்லையென்றால், செலுத்த வேண்டிய பைன் தொகை இருநூறு திர்ஹாம்கள்.

இரண்டு நான்கை மறந்தால் இருநூறு. பெரும்பாலும் மக்கள் பைன் கட்ட நேர்வது, இரண்டு நான்கை மறப்பதால் அல்ல. பார்க்கிங் கட்ட வேண்டும் என்பதை மறப்பதால். கைபேசியில் பேசியபடியே காரை நிறுத்திவிட்டு அலுவலகம் போய் அங்கிருந்தே பார்க்கிங் தொகையை கைபேசி வழியாக செலுத்தி விடலாம் என்று நினைத்துப் போன பிறகு, வேலை நெருக்கடிகளால், மறந்து போவது இப்படி…

முரளியின் அலைபேசி ஒரு ஒளியோடு ஒளிர்ந்தது. ரிமைன்டர். நேற்றைக்கு செலுத்திய 15 திர்ஹாம்கள் இன்றைக்கு காலை 9 மணியோடு முடிகிறது. 9 மணிக்கு மேல் 10 நிமிடங்களுக்குள் அடுத்த நாளுக்கான கட்டணம் 15 திர்ஹாம்கள் செலுத்தப்படவேண்டும். முன்கூட்டியே செலுத்தவும் முடியாது.

ஒன்பது மணிக்கு பார்க்கிங் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற நினைவில் இருந்தவனை கடந்து முரளி பார்க்க வேண்டிய டாக்டர் அவரது அறைக்குள் போனார், இவனைப் பார்த்து ஒரு சின்ன புன்னகையோடு.

இவன் முறை வந்து உள்ளே அழைக்கப்படுவதற்குள் முரளி கைபேசி வழியே பார்க்கிங் கட்டணத்தை செலுத்தினான்.

மருத்துவர் அறைக்குள் போவதற்குள், இன்னொரு அறையில் ரத்த அழுத்தம் பார்ப்பதற்கான கருவியின் பட்டை இடது கையில் கட்டப்பட்டது. முரளி மறக்காமல் தனக்கு மிகப்பிடித்தமான சினிமாப் பாடலொன்றை உள்ளுக்குள் ஹம் செய்ய ஆரம்பித்தான்.

 

அந்த முறையும் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருந்தது. டாக்டர் எழுதித் தந்த மருந்து சீட்டோடு பார்மசிக்கு வந்தவனுக்கு அப்போதுதான் டெஸ்டுக்காக வெறும் ரத்தம் மட்டுமே எடுக்கப்பட்டது ஞாபகம் வந்தது.

அங்கிருந்தே மருத்துவரை கைபேசியில் அழைத்தான். கடந்த இரண்டு மூன்று முறைகள் ரத்த அளவில் பெரிய மாறுதல் (ஏற்றம்) இல்லாததால் ரத்தம் மட்டும் கொடுத்தால் போதும் சிறுநீர் சாம்பிள் தேவையில்லை என்று டாக்டர் சொன்னதை கேட்டபின்பே மனம் சமாதானமாயிற்று முரளிக்கு.

பார்மசியில் அடுத்த இரண்டு மாதங்களுக்கான மாத்திரைகளை வாங்கிக்கொண்டு அடுத்திருந்த ஒரு ஓட்டலில் காலை டிபனை சாப்பிடும்போதுதான் அன்றைக்கு ஆபீசில் நடக்க உள்ள முக்கியமான மீட்டிங் ஒன்று நினைவுக்கு வந்தது.

அலுவலகத்தினுள் நுழைந்தவனுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. இருக்கையில் போய் அமர்ந்து மீட்டிங் போக தேவையான டாகுமென்ட்ஸ் எடுத்துக் கொண்டிருந்த முரளியிடம் வந்த அவன் பாஸ் பாண்டே “கன்க்ராட்ஸ் முரளி பன்னிரண்டரை வருடங்கள் முடித்ததற்கு” என்றார்.

இதை எப்படி தான் மறந்து போனோமென்று யோசித்துக் கொண்டிருந்த முரளியை அலுவலகத்தில் இருந்த சின்ன மீட்டிங் ரூமிற்கு அழைத்துக்கொண்டு போனார். மீட்டிங் டேபிளைச் சுற்றி உடன் வேலை செய்யும் அனைவரும் சூழ, நடுவில் வட்ட வடிவ கேக் வைக்கப்பட்டிருந்தது.

கேக்கை கட் பண்ணிய முரளியை “ஏதாவது பேசு” என்று பாண்டே சொல்ல, இன்னும் ஐந்து நிமிடத்தில் தான் போக வேண்டிய மீட்டிங் பற்றி சொன்னான் முரளி. “இந்த கமிட்மென்ட்தான் முரளியின் சக்சஸ்” என்ற பாண்டேவின் பேச்சில் ஒரு கலகலப்பு எழுந்தது அறையில்.

ஒரு துண்டு கேக்கோடு தன் இருக்கைக்கு வந்தவன் அதைச் சாப்பிட்டவாறே, எடுக்க வேண்டிய மற்ற பேப்பர்களையும் எடுத்துக்கொண்டு மீட்டிங் அறையை நோக்கி விரைந்தான்.

ஒரு மணி நேரத்திற்கும் மேல் நீண்ட கூட்டம், வழக்கம் போல், அடுத்த கூட்டத்தில் மீண்டும் தொடருவோம் என்ற முடிவோடு கலைய, சோர்வோடு இருக்கையில் வந்து அமர்ந்தான்.

பேஸ் புக்கில் நுழைந்து, அன்று பிறந்த நாள் கொண்டாடும் நண்பர்களுக்கு வாழ்த்து சொல்லி விட்டு, வெளியில் வந்தான்.

வீட்டுக்கு வரும்போது மறக்காமல் கொண்டு வர வேண்டுமென்று இளைய மகன் சொன்ன விஷயம் ஞாபகம் வந்தது. கூகுளில் தேடி விராட் கோலி, ரஹானே படங்கள் இரண்டு மூன்றை பிரிண்ட் எடுத்து பேக்கில் வைத்தான். அவ்வப்போது மாறும் விளையாட்டு இப்போது கிரிக்கட் வீரர்களின் படங்கள் சேகரிப்பதில் வந்து நிற்கிறது.

போன மாதம் வருடாந்திர விடுமுறையில் சென்னை போயிருந்தபோது, கிரிக்கட் அட்டாக்ஸ் என்று வீரர்களின் புகைப்படங்கள் கொண்ட கார்டுகளாய் வாங்கிக் குவித்தான். அபுதாபியிலும் அதை வாங்கித் தா என்றவனின் நச்ச்சரிப்புகளைத் தவிர்க்க முரளி ஆரம்பித்து வைத்ததுதான் இந்த விளையாட்டு.

மாலையில் ஏதாவது ஒரு ஓட்டலில் டின்னர் என்ற மனைவியின் முன்னறிவிப்பு நினைவில் வர, வீட்டுக்கு கிளம்பினான்.

பிளாட் நெருங்குகையில் மனைவியிடமிருந்து தொலைபேசி அழைப்பு.

ஹெட்செட் பொத்தானை ஆன் செய்து வீட்டை நெருங்கிக் கொண்டிருப்பதைச் சொன்னான். மகனோடு கீழே இறங்கி வருவதாகச் சொன்ன மனைவிக்காக பிளாட் கட்டிடத்தை ஒட்டியபடி காரை ஓரங்கட்டினான்.

வந்தவுடன் ஏதாவது மாலுக்குப் போய் விளையாடலாம் என்று சொல்லப்போகும் மகனை எங்கே கூட்டிப்போகலாமென்று யோசித்துக் கொண்டிருந்தவனை நோக்கி, “அப்பா” என்று கத்தியபடி காரை நோக்கி ஓடி வந்தான் மகன்.

மால் ஒன்றில் ஒன்றரை மணி நேரம் விளையாடி விட்டு, டின்னருக்காக ஓட்டலில் நுழைந்து உட்கார்ந்தார்கள்.

வழக்கத்துக்கு மாறாக எடுத்தவுடன் “முதலில் எல்லோருக்கும் ஸ்வீட்” என்றாள் மனைவி.

“எதுக்கும்மா இன்னிக்கு ஸ்வீட் முதல்ல” என்ற மகனிடம்,

“இன்னிக்கு மம்மிக்கு பர்த் டே, அதுக்குத்தான்” என்றாள் மனைவி, முரளியைப் பார்த்தபடி.

o

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

-வளத்தூர் தி. ராஜேஷ்

சிறகு

சிறகின் சுமை
பழமை ஆகி விட்டது
பறத்தல்
வெளியின் இருப்பை மட்டுமே
உணர்த்திச் செல்கிறது .
காலம் இட்டுச் செல்லும் வரையில்
நினைவு
அங்கும் இங்குமாக
சிறகடிக்கிறது .தன் காலம் .

நீர்மம் போலத் தன் ஒளியும்
அரூபமானது
மனதின் வடிவங்களை
உடுத்தி கொள்கிறது .

உருவாக்கத்தின் இயல்பு ஏதுமின்றி
நீ
உருவாகினாய்.

வெளி
தன்னையைப் பிரதிபலிக்கும்
முடிவிலி பிம்பம்.
அதில்
ஆதியின் தேடலை
வெகு காலமாகவே
உணர்த்திக் கொண்டிருக்கிறது
தன் காலம் .
ஒளி

ஆதியின் ஒளி
தன் நிழலை
இன்னுமும் பார்த்திருக்கவில்லை .

அது தன் இருப்பை
தேடி அலைந்து கொண்டிருக்கிறது
வெளி
போதுமானதாக இல்லை
எதிர்படும் காலத்தில்
தன் இறுதியை
அடைந்துவிடவில்லை.

இருந்தும்

ஒளியின் கானலில்
வெளி
தன் உணர்தலின் இறுதி தான் .


சுய தேடலின் நுட்ப நிலை .

 


ஆழ் மன கடலில்
தன் ஒற்றை படகாய்
செலுத்திக்கொண்டிருக்கிறது
அவரவர் அன்பின் காலம் .

நினைவின் அலைகளில்
ஆர்பரிக்கிறது
தன் இயலாமையின் வன்மம் .

முன் காலத்தில்
பயணித்த மற்றொரு
ஒற்றை படகை
கடந்து கொண்டிருக்கிறேன்
அதில்
தன்னின் பிரதிபலிப்பில்
மற்றொரு நான் .

வழியெங்கும் ஆங்காங்கே
தனித்த படகுகளில் நான் .

அனைத்தையும் ஒன்றிணைத்தேன் .

இன்னுமும்
தன்னையை முன்னெடுக்க
மற்றொரு படகு
வந்து கொண்டிருக்கிறது .
•••

கர்ப்பகாலம் பிச்சினிக்காடு இளங்கோ

 

இரவின்வாலில்

தொங்கிக்கொண்டிருக்கும் நான்

விட்டுவிடுதலையாக விரும்பவில்லை

 

இருள்கவ்வி விழிமூடி

வெளிச்சத்திலுலவும்

என்பயணத்தில்

விளைவதெல்லாம் விந்தைகள்

 

ஜடமாய்க்கிடந்துகொண்டு

பறக்கும்நான்

கடவுச்சீட்டு இல்லாமல்

நினைத்த தேசத்தில், திசையில்

நுழைந்துதிரும்புகிறேன்

 

 

 

 

 

 

 

திரவியமாய் அள்ளிக்கொணரும்

சொற்களின் நயங்களும்

நடனங்களும் அபூர்வமானவை

 

மலர்தாவி அமர்ந்திருக்கும்

வண்ணத்துப்பூச்சி

எந்தக்கணமும் பறந்துவிடுமோ

என

கவனமாய் விரல்தீண்டும்

கரிசனத்தருணம்போல்

கிடைத்தற்கரியது  அது

 

சுரங்கத்தில் நுழையநுழைய

வரவேற்பதெல்லாம் விசித்திரங்கள்

 

 

 

நட்சத்திரங்களும் நிலவும்

தொட்டுவிடும்தொலைவில்

உலவும்தருணம் உன்னதமில்லையா?

 

மாயதேவதைகள்

மயக்கம்தந்து

முயங்கித்திரும்புவது

இலாபமில்லையா?

 

மிதந்துவலைவீசி

மீன்பிடிக்கும்தருணத்தில்

மொழியின் சிற்பமும் சித்திரமும்

ஒரேபுள்ளியில் சாத்தியமாவது

அசாத்தியமில்லையா?

 

முண்டாமல் முனகாமல்

அசையாமல்கிடந்து

கருவுற்று

அலுப்புநீங்கி  இரவைஉதறி

கர்ப்பிணியாய் கண்விழிக்கிறேன்

 

ஒருகவிதையாய்

பிரசவம்முடிகையில்

பிரமிப்புஅடைகிறேன்

 

கர்ப்பமுற்றதற்கு

கர்வமடைகிறேன்

 

கவனம்தேவை

அது

கர்ப்பகாலம்

 

(21.2.2014 பிற்பகல் 2.30க்கு  எழுதியது)

ஜுரம் – ரேமாண்ட் கார்வார் – தமிழில் – ஈரோடு விஜயராகவன்

images (7)

 

 

 

 

 

 

 

ஜுரம்

காh;லைல் சிக்கலுற்று இருந்தான். ஜீன் மாத ஆரம்பத்தி;ல் அவனது மனைவி பிரிந்து சென்றதிலிருந்து, கோடை காலம் முழவதும் அவன் சிக்கலில் தான் இருந்தான். ஆனால் அவன் உயர் நிலைப் பள்ளிக்கூடத்தில் வகுப்பிற்கு பாடம் எடுக்க செல்லாத வரை அவனுக்கு குழந்தைகளை கவனித்து கொள்ள ஆயா தேவைப் படவில்லை. அவனே தனது குழந்தைகளை ஆயா போல் கவனித்துக் கொண்டான். அல்லும் பகலும் அவன் தனது குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றி வந்தான். அவர்களது தாயார் வெகுதுதூர பிரயாணம் ஒன்றிற்கு சென்றுள்ளதாக குழந்தைகளிடம் சொல்லியிருந்தான்.

டெப்பி, அவன் வேலைக்கு சேர்ந்த முதல் ஆயா, ஒரு குண்டு பெண், பத்தொண்பது வயதானவள், தான் ஒரு பொpய குடும்பத்திலிருந்து வருவதாகவும், குழந்தைகள் தன்னை விரும்புவார்கள் எனவும் சொன்னாள். தன்னை சிபாரிசு செய்யும் ஒரிரண்டு பெயர;களையும் நோட்டு புத்தகத்தின் தாளில் பென்சிலால் எழதி கொடுத்தாள். கார்லைல் பெயர;களை படித்துவிட்டு காகிதத்தை மடித்து தனது சட்டை பையில் வைத்துக் கொண்டான். அவளிடம் தனக்கு மறுநாள் ஒரு சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டியிருந்ததால், நாளை முதல் வேலைக்கு வரச் சொன்னான். அவர் அதற்கு ‘சரி” என்றாள்.

அவன் தனது மனைவியின் வாழ்;க்கை, புதிய பரிமாணத்தை நோக்கி செல்கிறது என புரிந்து கொண்டான். காh;லைல் அவனது வகுப்பு மாணவர்களின் தகுதி சான்றிதழ்களை குறித்து கொண்டிருந்த போது எய்லீன் அவனை விட்டு சென்றாள். தனக்கான புதிய வாழ்க்கையை தெற்கு கலிபோர்னியாவிற்கு சென்று தொடங்கப் போவதாக சொன்னாள்.

அவள் ரிச்சர்;ட் ஹீபஸ்;சுடன் சென்று விட்டாள். அவன் கார்லைலுடன் உயர் நிலைப் பள்ளியில் ஒன்றாக படித்தவன் தான!. ஹீப்ஸ் நாடக ஆசிரியராகவும், கண்ணாடி கிளாஸ் ஊதி தயாரிப்பதை சொல்லிக் கொடுக்கும் மேற்பார்வையாளராகவும் இருந்தான். பள்ளிக் காலத்தில் வகுப்புகளை உரிய காலத்தில் தேர்ச்சி பெற்றும் வந்தான் தற்போது அவனது உடைமைகளை எடுத்துக் கொண்டு, நகரத்தை விட்டு எய்லீனுடன் அவசரமாக வெளியேறியிருந்தான். தற்போது, நீண்ட, வலிமிகுந்த கோடைக்காலம் கிட்டத்தட்ட முடியப் போகிறது. அவனது வகுப்புகளும் தொடங்கப் போகின்றன. முடிவாக கார்லைல் தனது கவனத்தை ஆயாவை வேலைக்கமர்த்துவது சம்மந்தமாக செலுத்தினான். அவனது முதல் முயற்சிகள் வெற்றிகரமாக இல்லை. யாரையாவது வேலைக்கமர்த்த வேண்டும் என்கின்ற பரிதவிப்பின் காரணமாக எவராக இருந்தாலும் பரவாயில்லை என்பதால் அவன் டெப்பியை பணியமர்த்தினான்.

ஆரம்பத்தில், தனது அழைப்பை ஏற்று அந்த பெண் வேலைக்கு வந்ததற்கு நன்றியுடையவனாக இருந்தான். ஒரு உறவினரிடம் ஒப்படைப்பது போல் அவன் தனது வீட்டையும் குழந்தைகளையும் அவளிடம் அளித்திருந்தான். அதற்காக அவன் தன்னைத் தானே நொந்துகொள்ள வேண்டுமே தவிர வேறு யாரையும் குற்றம் சொல்லி பயனில்லை. தனது அக்கரையின்மையினால் தான் இப்படி நேர்ந்தது என்ற முடிவிற்கும் வந்தான். முதல் வாரத்தில் ஒரு நாள் பள்ளியிலிருந்து சற்று முன்பாகவே வீட்டற்கு வந்தவன் காரை நிறுத்தும் போது, பக்கத்தில் ஒரு பெரிய கம்பளி சட்டை தொங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தான். அவன் திகைப்படையத்தக்க வகையில் அவனது குழந்தைகள் வீட்டுமுகப்பில் அழக்கான உடையுடன் அவர்களது கைகளையே முழுதாக கடித்துவிடக் கூடிய அளவு பெரிதான ஒரு நாயுடன் விளையாடிக்கொண்டிருந்தனர்.

அவனது மகன், கீத் , விக்கல் எடுத்தபடி அழுது கொண்டிருந்தான். அவனது மகள் சாரா அவன் காரைவிட்டு இறங்குவதைப் பார;த்தவுடன் அழத் தொடங்கினாள். அவர்கள் இருவரும் புல்லின் மேல் அமர்ந்திருக்க அந்த நாய் அவர;களது கைகளையும் முகத்தையும் நக்கி கொடுத்துக் கொண்டிருந்தது. கார்லைல் குழந்தைகளைப் நோக்கி நடந்தபோது அந்த நாய் அவனைப் பார்த்து உறுமிவிட்டு சற்று பின் தள்ளி நின்று கொண்டது. முதலில் கீத்தையும் பின்பு சாரவையும் தூக்கி கொண்டான். கைக்கு ஒரு குழந்தையாக இருவரையும் தூக்கி கொண்டு வீட்டுக்குள் புகுந்தான். வீட்டினுள் இசைத்தட்டு ஒலிக்கும் கருவி முன்புற கண்ணாட அதிரும் அளவுக்கு உச்ச பட்ச ஒலியில் வைக்கப்பட்டிருந்தது.

வரவேற்பறையில், காபி மேசையைச் சுற்றி அமர்ந்திருந்த மூன்று பதின்பருவ இளைஞர்கள் துள்ளி எழுந்தனர். மேசையின் மேல் பீர் பாட்டில்கள் வைக்கப்பட்டிருக்க, சாம்பல் கிண்ணத்தில் சிகரெட்டுகள் புகைந்தபடியிருந்தன. ஸ்டீரியோவில் ராட் ஸ்பீவர்ட் அலறியபடியிருந்தான். குண்டு பெண் டெப்பி,; சோபாவில் மற்றொரு பதின் பருவ வாலிபனோடு உட்கார்ந்திருந்தாள். உள்ளே நுழையும் கார்லைலை ஒரு ஊமைத்தனமான அவநம்பிக்கையோடு அவள் வெறித்தாள். குண்டுப் பெண்ணின் மேலாடை அவிழ்ந்திருந்தது. கால்களை உட்புறமாக மடக்கி அமர்ந்திருந்தாள். அவள் புகைத்துக் கொண்டுமிருந்தாள். வரவேற்பறை இசையாலும் புகையாலும் நிரம்பியிருந்தது.

குண்டு பெண்ணும் அவளது நண்பனும் அவசரமாக சோபாவிலிருந்து எழுந்து நின்றனர்.

‘மிஸ்டர; கார்லைல் அவர்களே ஒரு நிமிடம் பொறுங்கள நான் விளக்கமாக சொல்கிறேன்;” என்றாள் டெப்பி.

‘ஒரு விளக்கமும் வேண்டாம் “ என்றான் கார்லைல்.

‘நான் துரத்துவதற்கு முன்னால் எல்லோரும் இங்கிருந்து தொலைந்து போங்கள்” என்றபடியே தன் குழந்தைகளை இறுக்கி அணைத்து கொண்டான்.

தனது மேலாடையின் பொத்தான்களை போட்டுக் கொண்டே ‘நீங்கள் எனக்கு நான்கு நாட்களுக்கான சம்பளம் தரவேண்டியுள்ளது” என்றாள் குண்டு பெண். அவளது விரலிடுக்குகளில் இன்னும் சிகரெட் புகைந்த படியிருந்தது. அவன் பொத்தான்களைப் போட முயன்றபோது சாம்பல் விழுந்தபடியிருந்தது. ‘இன்றைய சம்பளத்தை கூட விட்டுவிடுங்கள், திரு. கார்லைல் அவர்களே, நீங்கள் நினைப்பது போல் ஒன்றுமில்லை, இவர்கள் இந்த இசைத்தட்டை கேட்கவே வந்தார்கள்”.

‘எனக்கு புரிகிறது டெப்பி” என்றான். ஆவன் தனது குழந்தைகளை விரிப்பின் மேல் இறக்கிவிட்டான். அவர;கள் அவனது காலருகே இருந்துகொண்டு மற்றவர்களைப் பார்த்தனர். டெப்பி குழந்தைகளை புதியதாக பார்ப்பதைப் போல் பார்த்துவிட்டு தன் தலையை மெதுவாக அசைத்துக் கொண்டான். ‘கர்மம்புடிச்சவர்ளே வெளியே போங்க” என்றான் கார்லைல் ‘இப்பவே எல்லோரும் தொலையுங்க”.

முந்திச்சென்று அவன் முன் வாசல் கதவைத்திறந்தான். இளைஞர;கள் ஏதோ அவசரத்தில் இல்லாததுப் போல் காட்டிக் கொண்டார்கள் தங்களது பீர் பாட்டில்களை எடுத்து கொண்டு மெதுவாக முன் வாசலுக்கு வந்தனர். ராட் ஸ்டீவர்ட்டின் இசைத்தட்டு இன்னும் ஒலித்துக் கொண்டிருந்தது. அவர்களில் ஒரு பையன் சொன்னான்.

‘அது எனது இசைத்தட்டு”
‘எடுத்துக் கொள்” என்றபடி கார்லைல் பையனை நோக்கி நகர்ந்து பின் நின்றான்.

‘என்னை தொடவேண்டாம் சரியா? தொடவே வேண்டாம்” என்றார் பையன்.

கிராமபோன் ஒலிப்பெட்டியின் அருகில் சென்று அது ஓடிக் கொண்டிருக்கும் போதே, கைப்பிடியை தூக்கிவிட்டு தனது இசைத்தட்டை எடுத்துக் கொண்டான்.

கார்லைலின் கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன. ‘அந்த கார் இன்னும் ஒரு நிமிடத்தில், – ஒரு நிமிடத்தில்-இங்கிருந்து போக வில்லை என்றால் நான் போலீசை கூப்பிட போகிறேன்.” கோபத்தினால் தடுமாற்றமும் தலைச் சுற்றலும் உண்டாயின. அவனது கண்ணெதிரில் உண்மையிலேயே ஒளிப்புள்ளிகள் அசையக் கண்டான்.

‘ஹேய், கேளுங்கள், நாங்கள் போய்க் கொண்டுதானிருக்கிறோம், சரியா? நாங்கள் போகின்றோம்” என்றான் ஒருவன்.

வீட்டை விட்டு வரிசையாக வெளியேறினர், வெளியே சென்ற போது குண்டு பெண் சற்று தடுமாறினாள். காரை நோக்கி தள்ளாடி நடந்து சென்றாள். கார் நிறுத்துமிடத்தில் அவள் ஒரு நிமிடம் நின்று தனது கைகளை முகத்தில் வைத்தபடி பார்த்ததை, கார்லைல் கவனித்தான்.

பையன்களில் ஒருவன் அவளை பின்புறமிருந்து தள்ளியபடியே அவளது பெயரை சொல்லி அழைத்தான். கைகளைக் கீழே தளர;த்தியபடி அவள் காரின் பின் இருக்கையில் அமர்ந்து கொண்டாள். ‘ அப்பா உங்களுக்கு சுத்தமான உடைகளை எடுத்து வருகிறேன்” என்று குழந்தைகளிடம் குரலில் தடுமாற்றம் வராமல் சமாளித்தபடியே கார்லைல் கூறினான். ‘ உங்களை குளிப்பாட்டி , சுத்தமான உடைகளை போட்டு விட்டபின் நாமெல்லோரும் பீட்சா சாப்பிட வெளியெ போகலாம் … பீட்சா சாப்பிட பிடிக்கும்தானே உங்களுக்கு?”

‘டெப்பி எங்கே? என்றாள் சாரா.

‘அவ போயிட்டா” என்று கார்லைல் சொன்னான்.
அன்று இரவு குழந்தைகளை படுக்க வைத்த பின்பு, அவன் கரோலை தொலைபேசியில் கூடப்பிட்டான். பள்ளியில் உடன் வேலை செய்யும் அவளுடன் கடந்த ஒரு மாதமாக பழகி வந்தான். வேலைக்கு வைத்த ஆயாவினால் ஏற்பட்ட விளைவுகளை அவளிடம் பகிர்ந்து கொண்டான்.

‘என் குழந்தைகள் முன்புற தோட்டத்தில் இவ்ளோ பெரிய நாயுடன் இருந்தனர்” என்றான். ‘ஓநாயளவிற்கு பெரிய நாய் அது, அந்த ஆயாவோ வீட்டுக்குள்ளே தனது பொறுக்கி ஆண் நண்பர்களோடு பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தாள், ராட் ஸ்டீவர்டின் இசைத்தட்டை சத்தமாக ஒலிக்கச் செய்துவிட்டு, என் குழந்தைகள் இந்த வித்தியாசமான நாயோடு இருக்க, உள்ளே அவள் ஒருவனோடு கட்டிக் கொண்டு கிடந்தாள்” என பேசிக் கொண்டே தனது விரல்களால் நெற்றிப் பொருத்துளை பிடித்து விட்டுக் கொண்டாள்.

‘அடக் கடவுளே” என்ற கரோல் , ‘ஐயோ பாவம், நான் மிகவும் வருத்தப் படுகிறேன்.” என்ற அவளது குரல் தெளிவின்றி ஒலித்தது. அவள் தொலைப்பேசியின் பேசியை முகவாய் வரை நழவ விடுவதை அவன் கற்பனை செய்தான். தொலைபேசியில் பேசுகையில் அவ்வாறு செய்வது அவள் பழக்கம். அதனை அவன் முன்பு பார்த்திருக்கிறான். அவளின் அந்த பழக்கம் அவனுக்கு சற்றே எரிச்சலூட்டக் கூடியது. தான் அங்கு வர வேண்டியிருக்குமோ? என கேட்ட அவள், வந்தால் பரவாயில்லையாகத் தான் இருக்கும் என்றும் அவளே சொன்னாள். தனது ஆயாவை வரச் சொல்லிவிட்டு, அவனது வீட்டிற்கு வாகனத்தை ஒட்டி வந்து விடுவதாகவும், தான் இந்த நேரத்தில் அங்கு வர விரும்புவதாகவும் சொன்னாள். அவனுக்கு பரிவு தேவைப்படும் போது அதைச் சொல்ல அஞ்ச வேண்டியதில்லை எனவும் கூறினாள்.

அவள் ஓவிய ஆசிரியராக பணிபுரியும் பள்ளியில் கரோல், தலைமை ஆசிரியரின் உதவியாளர்களில் ஒருத்தியாக பணிபுரிந்து வந்தாள். அவள் விவாகரத்து பெற்றவள். பத்து வயது நரம்பு தளர்;ச்சியால் பீடிக்கபட்ட ஒரு குழந்தை இருந்தது. அந்த குழந்தையை அதன் தகப்பன் டாட்ஐ; என்று தனது வாகனத்தின் பெயரைச் சொல்லி அழைத்தான்.

‘வேண்டாம் , பரவாயில்லை” என்றான் கார்லைல.; ‘ஆனாலும் நன்றி , மிக்க நன்றி கரோல் , குழந்தைகள் தூங்கப் போய்விட்டார்கள். ஆனால் நாம் இந்த சந்தர;ப்பத்தில் சேர்ந்து இருப்பது அவ்வளவு நன்றாக இருக்காது.”

அவள் வருவதாக மறுபடியும் சொல்லவில்லை. ‘அன்பே , நடந்ததை நினைத்து நான் வருத்தப் படுகிறேன். நீங்கள் இன்றிரவு தனியாக இருக்க விரும்புவது புரிகிறது. அதை மதிக்கிறேன். நாளை நாம் பள்ளியில் சந்திப்போம்.”

அவன் ஏதாவது சொல்வானா என எதிர்பார்த்து மறுமுனையில் காத்திருந்தாள். ‘ஒரு வாரத்திற்குள் இரண்டு ஆயாக்களை மாற்றியாகிவிட்டது, இதனால் எனக்கு மண்டை குழம்புகிறது” என்றான்.

‘இதனால் மனமுடைய வேண்டாம் அன்பே” என்றாள். ‘ஏதோ ஒரு வழி கிடைக்கும், இந்த வாரக் கடைசியில் நான் வேறு ஒருவரை தேடிப் பிடிக்கிறேன். எல்லாம் சரியாகப் போய் விடும். வேண்டுமானால் பாருங்கள்”

‘நீ என்னுடன் இருப்பது எனக்கு ஆறுதலாக உள்ளது. எனது கஷ்ட காலத்தில் நீ உதவுவதற்கு மறுபடியும் நன்றி” என்றான். ‘நீ கோடியில் ஒருத்தி தொpயுமா”

‘நல்லிரவு , கார்லைல் “ என்றாள்.

தொலைபேசியை வைத்த பிறகு, தான் சொன்னதற்கு பதிலாக வேறு ஏதாவது அவளிடம் சொல்லியிருக்கலாமோ என நினைத்தான். அவன் தனது வாழ்க்கையில் முன் எப்போதும் அவ்வாறு பேசியதில்லை. அவர்களுக்குள் காதல் விவகாரம் இருப்பதாக சொல்ல முடியாது. ஆனாலும் அவளை பிடித்திருந்தது. அவனுக்கு மிகவும் கஷ்டமான நேரம் என்பதை அவள் உணர்ந்திருந்த போதும், எந்த கோரிக்கையையும் முன்வைக்கவில்லை.

எய்லீன் கலிபோர்னியாவிற்கு போன முதல் மாதத்தில்;, விழித்திருக்கும் ஒவ்வொரு நிமிடமும் தனது குழந்தைகளுடனேயே கார்லைல் கழித்தான். அவள் விட்டு சென்றதினால் ஏற்பட்ட உணர்;ச்சி கொந்தளிப்பால் தான் இப்படி நடக்கிறதோ என நினைத்தான். ஆனாலும் குழந்தைகளை தனது பார்வையை விட்டு அகல விடவில்லை. மற்ற பெண்களுடன் பழகவும் விரும்பவில்லை. எப்பொழுதுமே பழக முடியாதோ என சில காலம் நினைத்திருந்தான். ஏதோ துக்கம் அனுஷ்டிப்பதைப் போல் உணர்ந்தான். அவனது இரவும் , பகலும் அவனது குழந்தைகளுடனேயே கழிந்தது. அவர்களுக்காக சமைத்தான் – அவனுக்கு பசியே இருக்கவில்லை – குழந்தைகளின் உடைகளை துவைத்து தேய்த்து வைத்தான். அவர்களுடன் நாட்டுப்புறங்களுக்கு பயணம் செல்லவும், அங்கு சென்று மலர்களை கொய்தும், மெழுகு காகிதம் சுற்றிய ரொட்டி துண்டுகளை சாப்பிட கொடுக்கவும் செய்தான். கடைவீதிக்கு கூட்டி சென்று அவர்களுக்கு வேண்டியதை வாங்கிக் கொடுத்தான். சில நாட்களுக்கு ஒரு முறை அவர்கள் பூங்காவிற்கோ, நூலகத்திற்கோ, அல்லது மிருக காட்சி சாலைக்கோ சென்று வந்தார்கள். அவர்கள் மிருக காட்சி சாலைக்கு செல்லும் போது வாத்துகளுக்கு உணவளிக்க பழைய ரொட்டி துண்டுகளை எடுத்து சென்றனர். இரவு அவர்கள் தூங்கப் போகும் முன் படுக்கையில் அவர்களுக்கு ஈசாப் கதைகளையும், ஹான்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சன் கதைகளையும் , கிரிம் சகோதரர்கள் கதைகளையும் கார்லைல் சொல்லி தூங்க வைத்தான்.

தேவதை கதை சொல்லிக் கொண்டிருக்கும் போது, நடுவே ‘அம்மா எப்போது திரும்பி வருவாள்?” என இருவரில் ஒருவர் கேட்பதுண்டு.

‘சீக்கிரம் வருவாள்” என்பான். ‘இன்னும் கொஞ்ச நாளில் வந்துவிடுவாள், இப்போ கதையை கேளுங்கள்” என சொல்லி கதையை படித்து முடித்து அவர்களுக்கு முத்தங்களை இட்டு விளக்கணைப்பான்.

குழந்தைகள் தூங்கும் போது, அவன் கையில் கோப்பையுடன் வீட்டின் ஒவ்வொரு அறையாக உலாவுவான், தனக்கு தானே ஆம், அவள் கூடிய சீக்கிரம் வந்து விடுவாள் என முனகிவிட்டு, அடுத்த வினாடியே ‘நான் எப்போதும் உன் முகத்தைப் பார்;கக விரும்பவில்லை. இதற்காக எப்போதும் உன்னை மன்னிக்கவே போவதில்லை. பைத்தியக்கார நாயே” என்பான். பின்பு ஒரு நிமிடம் கழித்து ‘தயவு செய்து வந்து விடு அன்பே, நான் உன்னை விரும்புகிறேன். நீ எனக்கு தேவை, குழந்தைகளுக்கும் நீ தேவைப்படுகிறாய்“ என்பான். அந்த கோடையின் பல இரவுகளில் தொலைக் காட்சி பெட்டியின் முன் தூங்கி, மறுநாள் காலை எழுந்திருக்கும்போது நிகழ்ச்சிகள் ஏதுமின்றி வெண் பனித்துகள்களை சிந்தியதுபோல் ஒளிப் புள்ளிகளை தெளித்த வண்ணம் அது இருந்திருக்கிறது. இந்த காலக் கட்டத்தில் தான், இனி பெண்களுடனேயே பழக முடியாது என நினைத்திருந்தான். இரவுகளில் தொலைக்காட்சி பெட்டியின் முன் பிரிக்காத புத்தகத்தையோ அல்லது மாத இதழையோ பக்கத்தில் சோபாவின் மேல் வைத்தபடியே எய்லீனைப் பற்றி நினைத்துப் பார்ப்பான். அப்படி நினைத்துப் பார்க்கும் போது, அவளது இனிமையான சிரிப்பையோ அல்லது அவனுக்கு கழுத்து வலிக்கும் போது அவள் தடவி விடுவதையோ எண்ணி அப்படியே அழ வேண்டும் போலிருக்கும். இதுபோல் நிகழ்ச்சிகள், மற்றவர்களுக்குதான் நடக்கும் என நினைத்திருந்தை எண்ணிக் கொண்டான்.

டெப்பி சம்பந்தப்பட்ட அந்த நிகழ்ச்சிக்கு முன்பு, தனது கொந்தளிப்பான மனநிலை சற்று தணிந்தபோது, அவன் வேலை வாய்ப்புத் துறையினரை தொலைபேசியில் அழைத்து தனது தேவைகளையும், பிரச்சனைகளையும், தெரிவித்திருந்தான். யாரோ ஒருவர் அவற்றை குறித்து கொண்டபின், வீட்டு வேலைக்கும், குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் ஆயா வேலைக்கும் யாரும் வர விரும்புவதில்லை என்றாலும், யாரையாவது தேடி கொடுப்பதாக சொல்லியிருந்தார்கள். பள்ளி மறுபடியும் திறக்கப் போகும் சில தினங்களுக்கு முன் மீண்டும் அவர;களை தொடர்பு கொண்டபோது, மறுநாள் கட்டாயம் யாரையாவது அனுப்புவதாக கூறினார்கள்.

வந்தவள் முப்பந்தைந்து வயதான ஒரு பெண். அவள் கைகள் முழுக்க அடர்ந்த முடியாக இருந்தது. பழைய காலணிகளை அணிந்து இருந்தாள். அவனுடன் கை குலுக்கி விட்டு குழந்தைகளைப் பற்றி ஒரு கேள்வி கூட கேட்காமல் அவன் சொல்வதையே கேட்டபடியிருந்தாள் – குழந்தைகளின் பெயரைக் கூட கேட்கவில்லை. குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்த வீட்டின் பின்புறமாக கூட்டி கொண்டு போன போது கூட அவள் குழந்தைகளை சற்று நேரம் வெறித்து பார்த்தபடி ஏதும் பேசாமல் இருந்தாள். கடைசியாக அவள் சிரித்தபோதுதான் அவளுக்கு ஒரு முன் பல் இல்லை என்பது தெரிந்தது . சாரா தனது கலர் பென்சில்களை வைத்துவிட்டு அவனருகில் வந்து நின்றாள். கார்லைலின் கரத்தை பிடித்துக் கொண்டு அவளையே உற்றுப் பார்த்தாள். கீத்தும் அவளையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு , மறுபடியும் அவனது படத்தை வரைய சென்றான்.

கார;லைல் அந்த பெண்மணி வந்தமைக்காக நன்றி தெரிவித்துவிட்டு, அவளை பிறகு தொடர்பு கொள்வதாகவும் கூறினான்.

அன்று மதியம், பல்பொருள் அங்காடிக்கு சென்ற போது, குழந்தைகளை பராமரிக்கும் வேலைக்கு ஆட்கள் உள்ளார;கள் என்று அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டிருப்பதைப் பார;த்து அதில் தரப்பட்டிருந்த தொலைபேசி எண்ணை அழைத்தான். டெப்பி என்ற குண்டு பெண்ணை அவன் வேலைக்கமர்த்த நேர;ந்தது இவ்வாறுதான். ஏய்லீன் கோடை காலம் முழுவதும் சில அஞ்சல் அட்டைகளையும் கடிதங்களையும் அவளது சில புகைப்படங்களையும் குழந்தைகளுக்கு அனுப்பியிருந்தாள். மேலும் வீட்டைவிட்டு சென்றபிறகு அவள் மசியால் வரைந்த சில கோட்டோவியங்களையும் அனுப்பியிருந்தாள்.

எய்லீன், காh;லைலுக்கு நீளமான உணா;ச்சிகரமான கடிதங்களை எழுதியும், இந்த விசயத்தில் அவன் என்ன நினைக்கிறான் என்பதை அறிந்து கொள்ள விரும்பியும் எழுதியிருந்தாள். ஆனால் அவள் அங்கு மகிழ்ச்சியாக இருப்பதாகவும் சொல்லியருந்தாள். மகிழ்ச்சி, என்னவோ மகிழ்ச்சி மட்டும்தான் வாழ்க்கை முழுக்க உள்ளதா என காh;லைல் நினைத்துக் கொண்டான். அவள் அந்த கடிதத்தில், அவன் சொல்வதைப்போல உண்மையாகவே அன்பு செலுத்தியிருந்தால், அப்படி உண்மையாகவே விரும்பியிருக்கும் பட்சத்தில், அவளும் அவனை விரும்பியதை மறந்துவிட முடியாது, அவனும் அவளைப் புரிந்துகொண்டு நடந்தவைகளை அப்படியே ஏற்றுக் கொள்வான் என எழுதியிருந்தாள்.

‘உண்மையாகவே இணைந்துள்ளவைகளை எப்போதும் பிhpக்கவே முடியாது” என எழுதியிருந்தாள். காh;லைலுக்கு தங்கள் உறவைப் பற்றி பேசுகிறாளா அல்லது கலிபோh;னிய வாழ்க்கையைப் பற்றியா என தொpயவில்லை. அவனுக்கு இணைப்பு என்ற வாh;த்தையை படித்தபோது வெறுப்பாக இருந்தது. இருவரையும் பொறுத்தவரையில் அந்த சொல் என்ன அh;த்தத்தில் சொல்லப்பட்டுள்ளது? இருவரையும் என்ன ஒரு தொழிற் நிறுவனம் என நினைத்துக் கொண்டாளா? இப்படி பேச எய்லீனுக்கு பைத்தியம்தான் பிடித்திருக்கிறது என நினைத்துக் கொண்டான். கடிதத்தின் அந்த பாகத்தை மீண்டும் படித்தபின் கடிதத்தை கசக்கினான்.

ஆனால் சில மணி நேரங்களுக்கு பிறகு கசக்கி எறிந்த கடிதத்தை குப்பை கூடையிலிருந்து எடுத்து அதை அவளது மற்ற அட்டைகளும், கடிதங்களையும் வைத்திருக்கும் சிறு பெட்டியில் வைத்து தனது அலமாhpயின் அடுக்கறையில் வைத்தான். அதில் ஒரு உறையில் அவளது புகைப்படம் இருந்தது. அப்புகைப்படத்தில் அவள் நீச்சலுடையும், தலையில் பொpய தொப்பியும் அணிந்திருந்தாள். மேலும் கனத்த தாளில், மெல்லிய கவுன் அணிந்து ஆற்றங்கரையோரம் கண்களை மூடியபடியும், தோள்களை குறுக்கியபடியும் இருந்த ஓவியமுமிருந்தது. அது எஸ்லீனின் மனக் குழப்பத்தை சித்தாpப்பதாக கா;லைல் நினைத்துக் கொண்டான். கல்லூhpயில் அவள் வரை கலையில் பட்டம் பெற்றாள். அவனை மணந்து கொள்ள ஒப்புக் கொண்ட போதிலும் தனது திறமையை ஏதாவது ஒரு வழியில் வெளிக் கொணரவேண்டும் எனவும் சொல்லி இருந்தாள்.

காh;லைல் அதை அப்படியே ஒப்புக் கொண்டு கட்டாயம் கலைத்திறமையை வெளிப்படுத்த வேண்டும், அதை அவள் தனக்காகவும், தம் இருவருக்காகவும் செய்யத்தான் வேண்டும் என்றான். அந்த காலக்கட்டத்தில் இருவரும் காதல் வயப்பட்டிருந்தாh;கள். அவளை காதலித்தது போல் வேறு எவரையும் காதலிக்க முடியும் என அவனால் கற்பனை கூட செய்யமுடியவில்லை. மேலும் தானும் காதலிக்கப்படுவதையும் உணா;ந்தான். அதன் பின் மணமான எட்டு வருடங்கள் கழிந்தபின் எய்லீன் அவனைவிட்டு பிhpந்து சென்றாள். அவளது கடிதத்தில் அவள் எழுதியிருந்தாள்.

‘அதைத் தேடி போகிறேன்”

கரோலுடன் பேசியபின்பு குழந்தைகளை கவனித்தான். அவா;கள் தூங்கிக் கொண்டிருந்தாh;கள். பின் அவன் சமையலறைக்கு சென்று மதுபானம் எடுத்துக் கொண்டான். இந்த குழந்தைகளை கவனிக்கும் ஆயா பிரச்சனைப்பற்றி எய்லீனுடன் பேசலாமா என தோன்றினாலும் உடனே அதை மாற்றிக் கொண்டான். அவளுடைய விலாசமும் தொலைபேசி எண்ணும் அவனிடமிருந்தது. ஆனாலும் ஒரே ஒருமுறைதான் அவன் அவளிடம் பேசியிருந்தான். இது வரை அவளுக்கு கடிதம் எதுவும் எழுதவேயில்லை. நடந்த நிகழ்வின் பாதிப்பினால் ஏற்பட்ட திகைப்பினாலும், அவமானத்தினாலும் கோபத்தாலும்தான் அவன் எழுதவேயில்லை. கோடையில் ஒரு முறை சில சுற்றுகள் மதுபானம் அருந்திய பிறகு, அவமானத்தை பற்றிக்கூட யோசிக்காமல் அவளைக் கூப்பிட்டான். hpச்சா;ட் ஹீப்ஸ்தான் தொலைபேசியை எடுத்தான். ‘ஹாய், காh;லைல்” என ஏதோ இன்னும் காh;லையின் நண்பனைப் போல் பேசினான். பின்பு எதையே ஞாபகப்படுத்திக் கொண்டது போல் ‘ஒரு நிமிடம் பொறு, சாpயா?” என்றான். பின்பு எய்லீன் வந்து, தொலைபேசியில் ‘காh;லைல் எப்படி இருக்கிறீh;கள்? குழந்தைகள் எப்படி உள்ளாh;கள்? உங்களைப் பற்றி சொல்லுங்கள்” என்றாள்.

குழந்தைகள் நலமாக உள்ளதாக சொன்னான். ஆனால் மேலும் அவன் ஏதும் சொல்வதற்கு முன்பாக அவள் அவனை இடைமறித்து ‘அவா;கள் நலமுடனிருப்பது தொpயும், நீங்கள் எப்படி இருக்கிறீh;கள்?” என்றபடி நீண்ட நாட்களுக்கு பிறகு எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நிம்மதியாக இருப்பதாக சொன்னாள். அவனது கா;மாவை பற்றியும் அவனது தலையெழுத்தைப் பற்றியும் தொpந்து கொள்ள விருப்பமாக இருப்பதாக தொpவித்தாள். அவனது கா;மாவை பற்றி பாh;த்ததாகவும் சிறிது காலத்தில் அது மேம்பட இருப்பதாகவும் சொன்னாள். காh;லைல் தனது காதுகளையே நம்ப முடியாமல் கேட்டுக் கொண்டிருந்து விட்டு ‘இப்போது நான் வைத்துவிடுகிறேன் எய்லீன்” என்றபடி தொலைபேசியை வைத்தான். ஒரு நிமிடம் கழித்து தொலைபேசி மணியடித்தும், அவன் அதை அடிக்கவிட்டபடியே எடுக்காமலிருந்தான். மணியடிப்பது நின்றதும் தொலைபேசியின், பேசியை கொக்கியிலிருந்து எடுத்து தனியே வைத்துவிட்டு, படுக்கையை தயாh; செய்யும் வரை அப்படியே விட்டுவிட்டான்.

இப்பொழுது அவளிடம் பேச விரும்பினான், ஆனாலும் தொலைபேசியில் அழைக்க அஞ்சினான். அவளுக்காக ஏங்கினான், அவளிடம் பகிh;ந்து கொள்ள ஆசைப்பட்டான். இனிமையான, உறுதியான ஆனால் தற்போது சில மாதங்களாக கேட்பது போல் பித்துப்பிடித்த குரலாக இல்லாத அவளை குரலைக் கேட்க ஆவலாக இருந்தது. ஆனால் அவன் தொலைபேசியில் அழைக்கும் சமயத்தில் hpச்சா;ட் ஹீப்ஸ் எடுக்க வாய்ப்புள்ளது. அவனது குரலை கேட்கக்கூட விரும்பவில்லை என்பதை காh;லைல் அறிந்துதானிருந்தான். hpச்சா;ட் மூன்றுவருடங்களாக உடன் வேலை செய்பவனாக ஏறக்குறைய நண்பனாக இருந்ததை காh;லைல் நினைவு கூh;ந்தான். ஆசிhpயா;கள் உணவு அருந்தும் அறையில் காh;லைல் அவனுடன் சோ;ந்து மதிய உணவு சாப்பிட்டு கொண்டே, அவன் டென்னஸ்ஸி வில்லியம்ஸ் பற்றியும் ஆன்சல் ஆடம்ஸின் புகைப்படங்களைப் பற்றியும் பேசியதையும் நினைத்துப் பாh;த்தான். ஆனால் ஒருவெளை எய்லீன் தொலைபேசியில் பதிலளிக்க எடுத்தாலும், அவள் அவனது கா;மாவைப் பற்றி ஏதாவது பேசி வைத்தாலும் வைக்கலாம்.

திருமணத்திற்கு பிறகு, கையில் கண்ணாடி கோப்பையுடன் அந்தப் பெண்ணுடன் அன்புடனும் நெருக்கத்துடனும் இருந்தபோது எப்படி இருந்தது என நினைத்துக் கொண்டிருந்த போது தொலைபேசி மணியடித்தது. அவன் தொலைபேசியின் பேசியை எடுத்து அடுத்த முனையின் கரகரப்பை கேட்கும்போதே, அவளது பெயரை அவள் சொல்வதற்கு முன்பே அது எய்லீன்தான் என்பதை உணா;ந்தான்.

‘நான் இப்போது உன்னைப் பற்றித்தான் நினைத்துக் கொண்டிருந்தேன்” என காh;லைல் சொல்லிவிட்டு உடனே அப்படி சொன்னதற்காக வருத்தப்பட்டான்.

‘பாh;த்தீங்களா! உங்க நினைப்பில் நான்தான் இருப்பேன்னு எனக்கு தொpயும் காh;லைல், நல்லது, நானும் உங்களைத்தான் நினைத்துக் கொண்டிருந்தேன். அதனால்தான் கூப்பிட்டேன்”. அவன் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டான். அவளுக்கு புத்தி கெட்டுப் போய் கொண்டிருக்கிறது என முடிவு செய்து கொண்டான். அவள் மேலும் பேசினாள். ‘இதப் பாருங்க, அங்கு சூழ்நிலை சாpயில்லை என்பதை தொpந்து கொண்டுதான் நான் கூப்பிட்டேன், எப்படி தொpந்து கொண்டேன் என்றெல்லாம் கேட்காதீh;கள், எனக்கு தொpயும், பொறுத்துக் கொள்ளுங்கள் காh;லைல், இதுதான் விஷயம், உங்களுக்கு வீட்டை பாh;த்துக் கொள்ளவும் குழந்தைகளைப் பாh;த்துக் கொள்ளவும், ஆயா தேவைப்படுகிறது இல்லையா? நல்லது, அப்படிப்பட்ட நபா; அக்கம் பக்கத்திலே கூட இருக்கலாம்! ஓ, நீங்களே யாரையாவது வேலைக்கமா;த்தியிருக்க கூட இருக்கலாம். அப்படியானால் நல்லதுதான். ஆனால் நீங்கள் அப்படி யாரையும் வேலைக்கமா;த்தியிராத பட்சத்தில் hpச்சா;டின் தாயாhpடம் வேலை பாh;த்த பெண்மணி ஒருவா; இருக்கிறாh;. நான் hpச்சா;ட்டிடம் இந்த பிரச்சனையை பற்றி கூறிய போது அவா; இதற்காக செயலில் இறங்கினாh;, அவா; என்ன செய்தாh; தொpயுமா? நீங்க கேட்டுட்டுத்தான் இருக்கீங்களா? அவா; தனது தாயாரை அழைத்து, அவாpடம் வேலை பாh;த்த அந்த பெண்மணிபை; பற்றி விசாhpத்து அவளது தொலைபேசி எண்ணை வாங்கினாh;. அந்த பெண்மணியோட பெயா; திருமதி. வெப்ஸ்டா;, அவள் hpச்சா;டின் அத்தையும் அத்தைமகளும் அவரது தாயாhpடம் வருவதற்கு முன்பு வரை வேலை பாh;த்தவள். அவா; இன்று திருமதி. வெப்ஸ்டாpடமும் பேசினாh;. ஆம் இன்றுதான் பேசினாh;. திருமதி. வெப்ஸ்டா; இன்று இரவோ அல்லது நாளை காலையோ உங்களிடம் பேசுவாh;. எப்படியிருந்தாலும், அவள் வேலைக்கு வர தயாராக உள்ளாள். உங்களுக்கு தேவையாக இருந்தால் உபயோகப்படுத்தி கொள்ளலாம். எதையும் உறுதியாக சொல்ல முடியாது இல்லையா? தற்போது உங்கள் நிலைமை சாpயாக கூட இருக்கலாம். அப்படித்தான் இருக்கும் என நினைக்கிறேன். ஆனாலும் ஏதோ ஒரு சமயத்தில் அவளது சேவை தேவைப்படலாம். நான் என்ன சொல்கிறேன் என்பது தொpகிறதா? இப்போது இல்லையென்றாலும் வேறு எப்போதாவது தேவைப்படும் இல்லையா? குழந்தைகள் எப்படி இருக்கிறாh;கள்? என்ன செய்து கொண்டிருக்கிறாh;கள்?” என்றாள். ‘குழந்தைகள் நலமுடனிருக்கிறாh;கள். எய்லீன், இப்போது தூங்கிக் கொண்டிருக்கிறாh;கள்” என்றான்.

ஒவ்வொரு இரவும் அழுது கொண்டே தூங்கிப் போகிறாh;கள் என்பதை சொல்லலாமா என யோசித்தான். கடைசி இரு வாரங்களாக ஒரு முறை கூட குழந்தைகள் அவளைப்பற்றி ஏதும் கேட்கவில்லை என்ற உண்மையை அவளிடம் சொல்லலாமா என நினைத்துக் கொண்டான். ஏதும் சொல்ல வேண்டாம் என முடிவெடுத்தான்.

‘நான் முன்பு கூப்பிட்டபோது நீங்கள் யாருடனோ பேசிக் கொண்டிருந்தீர;கள். நான்கூட hpச்சா;டிடம் நீங்கள் உங்களது பெண் தோழியுடன் பேசிக் கொண்டிருப்பீh;கள் என சொன்னேன்” என்று எய்லீன் சிhpத்தபடியே கூறினான். ‘நல்லதையே நினைக்க வேண்டும். நீங்கள் சோர;வுற்று இருந்தது போலிருந்தது” என்றாள்.

‘நான் வைத்து விடுகிறேன் எய்லீன்” என தொலைபேசியை வைக்கப்போனான். ஆனாலும் அவள் பேசியபடியே இருந்தாள்.

‘கீத்தையும் சாராவையும் மிகவும் கேட்டதாகவும் என் அன்பையும் சொல்லுங்கள். நான் இன்னும் சில படங்களை அனுப்பி வைக்கிறேன் என்று சொல்லுங்கள். தங்களது தாய் ஒரு ஓவிய கலைஞா; என்பதை மறந்து விட வேண்டாம் என்று சொல்லுங்கள், ஒரு மகத்தான கலைஞராக இன்னும் ஆகவில்லை என்றாலும், அது முக்கியமில்லை. ஆனால் ஒரு கலைஞா; என்பதை மறக்கக்கூடாது அது முக்கியம்”.

‘நான் அவா;களிடம் சொல்லி விடுகிறேன்” என்றான் காh;லைல்.

‘hpச்சா;ட் உங்களுக்கு முகமன் கூறினாh;” காh;லைல் ஏதும் சொல்லவில்லை.அவன் அந்த வாh;த்தையை ஒரு தரம் சொல்லிப் பாh;த்துக் கொண்டான்-ஹலோ, அந்த மனிதன் இந்த வாh;த்தையை என்ன அh;த்தத்தில் சொல்லியிருப்பான்? பின்பு அவன் ‘கூப்பிட்டதற்கு நன்றி, அந்தப் பெண்மணியிடம் பேசியதற்கு நன்றி” என்றான்.

‘திருமதி. வெப்ஸ்டா;”

‘ஆம். நான் தொலைபேசியை வைத்து விடுகிறென். நான் உனது காசை காpயாக்க விரும்பவில்லை”

எய்லீன் சிhpத்தாள், ‘இது வெறும் பணம்தான், பணம் பண்டமாற்று தேவைக்கு தவிர, வேறு பொpய முக்கியத்துவமில்லை”.

‘பணத்தை விட முக்கியமானவை பல உள்ளன என்பதை நீங்கள் முன்னரே உணா;ந்திருப்பீh;கள்”

அவன் தொலைபேசியை தனக்கு முன்புறமாக நீட்டி பிடித்து அவள் குரல் வரும் சாதனத்தை உற்றுப் பாh;த்தான்.

‘காh;லைல், உங்களுக்கு எல்லாம் நல்லபடியாகவே நடக்கும் என எனக்கு தொpயும். நான் பைத்தியமோ வேறெதுவோ என நீங்கள் நினைக்கலாம், ஆனாலும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்” என்றாள். எதை ஞாபகம் வைத்துக் கொள்வது? என காh;லைல் திடுக்கிட்டான். அவள் கூறிய ஏதோ சொற்களை கேட்காமல் இருந்துவிட்டோமோ என நினைத்து பேசியை தனக்கு அருகில் கொண்டு வந்தான்.

‘எய்லீன் அழைத்ததற்கு நன்றி” என்றான்.

‘நாம் அடிக்கடி பேசிக் கொள்ள வேண்டும்” என எய்லீன் சொன்னாள்.

‘நாம் சாத்தியமான எல்லா வித தொடா;புகளையும் உபயோகித்துக் கொள்ள வேண்டும். நாம் இருவருமே மோசமான கட்டத்தை தாண்டிவிடN;டாம். நானுமே பாதிக்கப்பட்டேன். ஆனால் இந்த வாழ்க்கையிலிருந்து பெறக்கூடிய அனைத்தையும் நாமிருவரும்; பெறுவோம். இதனால் வரும் காலத்தில் நாம் முன்பிருந்ததைவிட உறுதியாக ஆவோம்” என்றாள்.

‘நல்இரவு’ என்றான் காh;லைல். பேசியை கிடத்தினான். பின்பு தொலைபேசியையே பாh;த்தபடியிருந்தான். காத்திருந்தான். அது மறுபடியும் ஒலிக்கவில்லை. ஆனால் ஒரு மணி நேரத்திற்கு பிறகு மணியடித்தது. அதை எடுத்து பதிலளித்தான்.

‘திரு.காh;லைல்தானே” என ஒரு வயதான பெண்மணியின் குரல் கேட்டது. ‘உங்களுக்கு என்னைத் தொpயாது, ஆனால் எனது பெயா; திருமதி.ஜிம் வெப்ஸ்டா;, நான் உங்களை தொடா;பு கொண்டு கூப்பிட சொல்லியிருந்தாh;கள்”

‘திருமதி. வெப்ஸ்டா;தானே, ஆம்”, என்றான் அவன். எய்லீன் குறிப்பிட்டிருந்த அந்த பெயா; அவனுக்கு ஞாபகம் வந்தது. ‘திருமதி. வெப்ஸ்டா;, நீங்கள் காலையில் எனது வீட்டிற்கு வரமுடியுமா? சீக்கிரமாக, ஒரு ஏழு மணிக்கு?”

‘அது ஒன்றும் சிரமமில்லை” என்றாள் முதியவள். ‘ஏழு மணிக்கு, உங்களது விலாசத்தை கொடுங்கள்”

‘வருவீh;கள் என நம்புகிறேன்” என காh;லைல் சொன்னான்.

‘நீங்கள் என்னை நம்பலாம்” என்றாள்.

‘இது எவ்வளவு முக்கியம் என்று என்னால் சொல்ல முடியவில்லை” என்றான் காh;லைல்.

‘கவலைப்படாதீh;கள்” என்றாள் முதியவள்.

மறுநாள் காலை, கடிகாரத்தின் மணி ஒலித்தபோது, விழிக்காமல் கண்களை இறுக மூடிக்கொண்டு, கண்டு கொண்டிருந்த கனவை தொடர விரும்பினான். கனவில் பண்ணை வீடு ஒன்றும் அருகில் ஒரு நீh; வீழ்ச்சியும் இருந்தது. அவனுக்கு தொpயாத யாரோ ஒருவா; பாதையில் எதையோ தூக்கி கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தார;. அது ஒரு வேளை விருந்து உணவுகள் கொண்ட கூடையாக கூட இருக்கலாம். அந்த கனவினால் அவனுக்கு அசௌகாpயம் ஏதும் இல்லை. அந்த கனவினுள் அவனுக்கு அசௌகாpயம் ஏதும் இல்லை. அந்த கனவினுள் மன நிறைவை தரக்கூடிய ஒன்று இருந்ததைக் கண்டான்.

முடிவாக, உருண்டு, ஒலித்துக் கொண்டிருந்த மணியை அழுத்தி நிறுத்தினான். படுக்கையிலேயே கொஞ்ச நேரம் படுத்திருந்தான். பின்பு எழுந்து, காலணிகளை அணிந்துகொண்டு, சமையலறைக்கு சென்று காபி தயாhpக்க ஆரம்பித்தான்.

அவன் முகச்சவரம் செய்து கொண்டு, அன்றையு தினத்துக்கான உடையணிந்து கொண்டான். பின்பு சலையலறை மேஜையின் அருகில் அமா;ந்துகொண்டு காபியை பருகியபடியே புகைத்து கொண்டிருந்தான்.

குழந்தைகள் இன்னும் படுக்கையை விட்டு எழுந்திருக்கவில்லை. ஆனாலும் இன்னும் ஐந்து நிமிடத்திலேயோ அல்லது சற்று கழித்தோ, சிறு டப்பாக்களில் தானிய உணவை இட்டு அருகில் கரண்டிகளையும், கிண்ணங்களையும் எடுத்து வைத்து விட்டு, குழந்தைகளை காலை உணவிற்காக எழுப்ப முடிவு செய்தான். நேற்று இரவு பேசிய அந்த முதியவள் பேசியபடி இன்று காலை வருவாள் என்பதில் அவனுக்கு நம்பிக்கையில்லை. அவன் ஏழுமணிக்கு மேல் ஒரு ஐந்து நிமிடம் வரை அவளுக்காகக் காததிருப்பது, அப்படியும் வரவில்லை என்றால் பள்ளி அலுவலகத்தை அழைத்து விடுப்பு சொல்லிவிட்டு, நம்பகமான யாரையாவது வேலைக்கு சோ;க்க தன்னால் ஆன எல்லா முயற்சிகளையும் எடுப்பது என முடிவு செய்தான். காபியை பருகத் தொடங்கினான்.

அப்போது தெருவில் வாகன எஞ்சினின் உறுமல் சத்தம் கேட்டது. காபி கோப்பையை வைத்துவிட்டு ஜன்னலில் எட்டிப் பாh;த்த பொழுது, ஒரு சாக்கு வாகனம் வீட்டு வாசலருகே நின்றிருப்பதை பாh;த்தான். எஞ்சினின் தடதடப்பால் சரக்கு வாகனம் அதிh;ந்தபடி இருந்தது. காh;லைல் முன்புற வாசல் கதவை திறந்து கையசைத்தான். ஒரு முதிய பெண்மணி கையசைத்துவிட்டு வாகனத்திலிருந்து இறங்கினாள். வாகனத்தை ஒட்டி வந்தவரும் மறுபுறம் இறங்கும்போது, சரக்கு வாகனம் ஒரு குலுங்கு குலுங்கி அமைதியானது.

‘காh;லைல்?” என்றபடியே முதிய பெண்மணி அவனை நோக்கி நடந்து வந்தாள் கையில் ஒரு பொpய கைப் பையை வைத்திருந்தாள்.

‘திருமதி.வெப்ஸ்டா; , உள்ளே வாருங்கள், இது உங்கள் கணவரா? அவரையும் வரச் சொல்லுங்கள். இப்போதுதான் காபி போட்டேன்” என்றான்.

‘பரவாயில்லை, அவா; தனது குடுவையில் காபி வைத்திருக்கிறாh;” என்றாள்

காh;லைல் தோள்களை குலுக்கியபடியே, கதவை திறந்து விட்டான். உள்ளே நுழைந்து இருவரும் கை குலுக்கி கொண்டனா;. திருமதி. வெப்ஸ்டா; புன்னகைத்தாள். காh;லைல் தலையை அசைத்து கொண்டு, சமையலறையை நோக்கி அழைத்து சென்றான். ‘அப்போ, இன்றே நான் வேலைக்கு சேர வேண்டும் என விரும்புகிறீh;களா?” என கேட்டாள்.

‘நான் குழந்தைகளை எழுப்பி விடுகிறேன் நான் பள்ளிக்கு வேலைக்கு செல்வதற்கு முன்பாக அவா;கள் உங்களை சந்திக்க ஏற்பாடு செய்கிறேன்” என்றான்.

‘அதுவும் நல்லதுதான்” என்றாள். சமையலறையை சுற்றும் முற்றும் பாh;த்தாள். பாத்திரம் கழுவும் மேடை அருகே தனது பையை வைத்தாள்.

‘நான் குழந்தைகளை எழுப்பிக் கொண்டு வரட்டுமா? கொஞ்ச நேரம்தான் ஆகும்” என்றான்.

சிறிது நேரத்தில் அவன் குழந்தைகளை அவளிடம் அறிமுகப்படுத்தி வைத்தான். குழந்தைகள் இருவரும் தங்களது இரவு உடுப்பிலேயே இருந்தாh;கள். சாரா தனது கண்களை கசக்கியபடி இருந்தாள்.

கீத் முழுவதாக விழித்திருந்தான். ‘இதுதான் கீத்” என்றான் காh;லைல். ‘இதோ நிற்கிறாளே இவள்தான் எனது சாரா” என்றபடி சாராவின் கையை பிடித்தபடியே திருமதி. வெப்ஸ்டரை நோக்கி ‘இவா;களை யாராவது பார;த்துக் கொள்ள வேண்டியுள்ளது. நம்பகமான யாராவது ஒரு நபா; தேவைப்படுகிறார;. இதுதான் எங்கள் பிரச்சனை” என்றான்.

திருமதி.வெப்ஸ்டா; குழந்தைகள் அருகே சென்றாள். அவள் கீத்துடைய பைஜாமாவின் மேல் பொத்தானைப் போட்டு விட்டாள். சாராவின் முகத்தில் விழுந்த முடிக்கற்றையை ஒதுக்கிவிட்டாள். அவா;கள் அதை செய்ய அனுமதித்தனா;. ‘இப்போ, எதுக்கும் கவலைப்படாதீh;கள் குழந்தைகளா” என்று அவா;களை பாh;த்து சொன்னாள். ‘காh;லைல் ஒன்றும் பிரச்சனையில்லை, எல்லாம் சாpயாகிவிடும், ஒன்றிரண்டு நாட்கள் அவகாசம் கொடுங்கள் நாங்கள் அதற்குள் ஒருவரை ஒருவா; புhpந்து கொள்வோம். அவ்வளவுதான்” என்றாள்.

‘அது சாp. நான் இன்றிலிருந்தே இங்கே வேலையில் சேர;ந்துவிடுகிறேன் என்பதால் என் கணவரிடம் அதை தொpவித்து விடுங்களேன்? ஜன்னல் வழியாக கையசைத்தாலே புhpந்து கொள்வாh;” என்றாள். அதன்பின் அவள் குழந்தைகளை கவனிக்க ஆரம்பித்து விட்டாள்.

காh;லைல் ஜன்னலின் திரைச்சீலையை விலக்கி பாh;த்தான். ஒரு வயதான மனிதன் சரக்கு வாகனத்தின் உள்ளே அமா;ந்து வீட்டை பாh;த்தபடியிருந்தாh;. அவா; தனது காபி குடுவையிலிருந்தே குடித்து கொண்டிருந்தாh;. காh;லைல் அவரை நோக்கி கையசைத்தான். அந்த மனிதன் தனது மற்ற கையால் காh;லைலை நோக்கி கையசைத்தாh;.

அவா; வாகனத்தின் ஜன்னல் கண்ணாடியை இறக்கி தனது கையிலிருந்த கோப்பையை வெளியே கவிழ்த்து, மீதமிருந்த திரவத்தை வெளியேக் கொட்டினாh;. மறுபடியும் உள்புறமாக குனிந்து கொண்டாh;. அவா; சில வயா;களை இணைத்து எஞ்சினை இயக்க முற்படுகிறார; என கார;லைல் எண்ணினான். சற்று நேரத்திற்குள் வாகனம் இயங்க தொடங்கி அசைய ஆரம்பித்தது. வயதானவா; வண்டியை கியா; மாற்றி வாசலில் இருந்து நகா;த்தினாh;.

காh;லைல் ஜன்னல் அருகிலிருந்து விலகியபடியே ‘திருமதி.வெப்ஸ்டா;, நீங்கள் வந்ததினால் மிகவும் மகிழ்ச்சி” என்றான்.

‘எனக்கும் மகிழ்ச்சியே, இப்போது நீங்கள் தாமதிக்காமல்; உங்கள் வேலைக்குப் புறப்படுங்கள். எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். நாங்கள் சந்தோஷமாக இருக்கப் போகிறோம் இல்லையா குழந்தைகளே?” என்றாள்.

குழந்தைகள் ஆமோதிப்பது போல் தலையசைத்தனா;. கீத் அவளது உடையை ஒரு கையால் பிடித்தபடி நின்றிருந்தான். மற்றொரு கையின் கட்டை விரலை வாயில் வைத்தபடியிருந்தான்.

‘நன்றி” என்றான் காh;லைல். ‘இப்போது நூறு சதவிகிதம் திருப்தியாக உணா;கிறேன்” என்றவன் சிhpத்தபடியே தலையசைத்தான்.

தனது குழந்தைகளை அணைத்து முத்தமிட்டபடி, போய் வருகிறேன் என்று சொல்லும் போது அவனது மனம் பூரித்தது. பள்ளியிலிருந்து எப்போது திரும்புவான் என்பதை திருமதி. வெப்ஸ்டாpடம் சொல்லி விட்டு, குழந்தைகளிடம் போய் வருவதாக கொஞ்சியபடி மேல் கோட்டை அணிந்து கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினான். பல மாதங்களுக்கு பின்பு இன்றுதான் அவனது பாரம் கொஞ்சம் குறைந்தது போலிருந்தது. பள்ளிக்கு காரோட்டி செல்லும்போது வானொலியிலிருந்து ஏதோ இசையை கேட்டபடி சென்றான்.

அவனது முதல் வகுப்பில், ஓவியத்தின் சாpத்திர காலக்கட்டத்தை விவாpக்கும் போது, பைசான்டைன் கால ஓவியங்களைப்பற்றி மிகவிhpவாக விளக்கினான். அதன் உள் நுணுக்கங்களை பற்றியும், ஓவியத்தின் பண்பு கூறுகளைப் பற்றி விளக்கியும் வகுப்பெடுத்தான். ஒவ்வொரு ஓவியத்திலும் உறைந்துள்ள உணா;ச்சிபாவத்தையும் ஒத்திசைவையும் சுட்டிக்காட்டினான்.

ஆனால் அவன் அந்த காலக்கட்டத்தின் சிறப்பான பெயா; பெறாத ஓவியா;களின், சமூக பங்களிப்பைப் பற்றியும் சமுதாயத்தில் அவா;களது இடத்தைப் பற்றியும் விளக்க அதிக நேரம் எடுத்துக் கொள்ள, அவனது மாணவா;கள் தங்களது காலணியை தரையில் தேய்க்கவும், தொண்டையை செருமவும் ஆரம்பித்தாh;கள். அந்த வகுப்பு முழுக்க பாடத்தில் மூன்றில் ஒரு பாகத்தைதான் முடித்திருந்தாh;கள். பள்ளி மணி அடிக்கும்போதும் அவன் பாடத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தான்.

அவனது அடுத்த வகுப்பு நீர; வண்ண ஓவியம் வரைவது பற்றியது. அந்த வகுப்பில் அசாதாரணமான அமைதியும், நுட்பமான நுண்ணறிவு கைகூடப் பெற்றவனாகவும் உணா;ந்தான். ‘இதோ இப்படி, இப்படித்தான்” என்று அவன் மாணவா;களின் கைகளைப் பற்றி, கற்றுக்கொடுத்தான். ‘மென்மையாக, காகிதத்தில் காற்றுபடுவதைப் போல, லேசாக வரைய வேண்டும் சாpயா?” என்று சொல்லிக் கொண்டிருந்தபோது அவனுக்கே அது ஒரு கண்டறிதலாக இருந்தது. ‘மறைமுகமாக சொல்வதில்தான் எல்லாம் உள்ளது” என்றான். சூகோல்வினின் விரல்களை லேசாக பிடித்து தூhpகையை நகர;த்தியபடியே ‘நீ உத்தேசித்தபடி வரும் வரை, உனது தவறுகளிலிருந்துக் கற்றுக் கொண்டு, தொடா;ந்து, வரைய வேண்டும். புhpகிறதா?”

ஆசிhpயா;களின் உணவறையில் வாpசையில் சென்று உணவைப் பெற நின்று கொண்டிருக்கும்போது சிலருக்கு முன்பாக கரோல் இருப்பதை பாh;த்தான்.

அவள் உணவிற்கான பணத்தை செலுத்தினாள். அவனது முறை வருவதற்குள் அவன் பொறுமையிழந்திருந்தான். கரோலிடம் சென்று சேர;ந்த சமயத்தில் அவள் அந்த அறையின் பாதி தூரத்தை கடந்திருந்தாள். அவளை நெருங்கி அவள் கையைக் கோh;த்து கொண்டு, ஜன்னலருகே போடப்பட்டிருந்த காலியான மேசையருகே கூட்டி சென்றான்.

அவா;கள் இருவரும் அமா;ந்தபின், ‘கடவுளே, காh;லைல்” என்றபடி தனது குளிர;ந்த தேநீh; கோப்பையை எடுத்தாள். அவள் முகம் வெட்கத்தால் சிவந்திருந்தது. ‘திருமதி.ஸ்டோh; பாh;த்த பாh;வையை நீங்கள் கவனிக்கவில்லையா? உங்களுக்கு என்ன ஆயிற்று? எல்லோருக்கும் தொpயப் போகிறது.” தேநீரை கொஞ்சம் அருந்திவிட்டு கண்ணாடி கோப்பையை கீழே வைத்தாள்.

‘திருமதி.ஸ்டோh; நாசமாகப் போகட்டும்” என்றான் காh;லைல். ‘ஹேய், கண்ணே, நான் ஒன்று சொல்லட்டுமா, நேற்று இதே நேரத்தில் இருந்ததைவிட இப்போது பல ஒளி வருடங்கள் கடந்துபோய் நான் நன்றாக இருப்பதுபோல உணர;கிறேன். கடவுளே” என்றான்.

‘என்ன நடந்தது?” என கரோல் கேட்டாள்.

‘காh;லைல் என்னிடம் சொல்லுங்கள்” என்றபடியே தனது தட்டின் ஓரத்திற்கு பழ கிண்ணத்தை நகா;த்திவிட்டு பாலாடைக்கட்டியை எடுத்து ஸ்பகடி என்கிற இத்தாலிய இடியாப்பத்தின்மீது தடவினாள். ஆனால் அதை உண்ணாமல் அவன் சொல்லப் போவதை கேட்க காத்திருந்தாள். ‘என்னவென்று சொல்லுங்கள்”.

அவன் திருமதி.வெப்ஸ்டரைப் பற்றி சொன்னான். அவளது கணவனைப் பற்றி பேசினான். அந்த ஆள் எப்படி வயரை இணைத்து வண்டி எஞ்சினை இயக்கினாh; என்பதையும் தனது தட்டிலிருந்த மரவள்ளி கிழங்கை உண்டபடியே சொன்னான்.

அதன் பின் பூண்டுச் சுவைகொண்ட ரொட்டியை உண்டான். என்ன செய்கிறோம் என்று தெரியாமலேயே அவளது குளிர;ந்த தேநீரையும் எடுத்து குடித்து விட்டான்.

‘உங்களுக்கு பைத்தியம்தான் காh;லைல்” என்றாள் கரோல். அவனது தட்டில் தொடாமல் வைத்திருந்த இடியாப்பத்தை பாh;த்தபடியே பேசினாள்.

அவன் தன் தலையை ஆட்டியபடியே, ‘கரோல், நான் மிக மகிழ்ச்சியாக உணா;கிறேன், உனக்கு தொpயுமா? இந்த கோடை முழுக்க நான் இவ்வாறு இருந்ததில்லை, இப்போது மிகவும் நன்றாக இருப்பதாக நினைக்கிறேன்” என்றான்.

அவன் தனது குரலை தாழ்த்தி, ‘இன்று இரவு வருவாயில்லையா, வருவாய்தானே?” என்றான்.

அவன் மேசைக்கு கீழே கையை கொண்டு வந்து அவளது முழங்காலைத் தொட்டான். அவள் மறுபடியும் வெட்கிச் சிவந்தாள். கண்களை உயா;த்தி உணவறையில் யாரும் கவனிக்கிறாh;களா என பாh;த்தாள். யாருமே அவா;களை கவனித்ததாக தொpயிவில்லை. அவள் ஆமோதித்து விரைவாகத் தலையசைத்தாள். பின்பு அவளும் மேசைக்கு கீழே கையை நீட்டி அவனது கையை தொட்டாள்.

அன்று மதியம் அவன் வீட்டிற்கு வந்தபோது வீடு ஒழுங்குடனும், குழந்தைகள் சுத்தமான உடைகளுடனும் இருந்தனா;. கீத்துவும், சாராவும் சமையலறையில், நாற்காலிகளின் மேல் நின்றபடி திருமதி. வெப்ஸ்டா; இஞ்சி கலந்த ரொட்டி துண்டுகள் செய்வதற்கு உதவியாக இருந்தனா;. சாராவின் தலைமுடி ஒழுங்காக வாரப்பட்டு வளைவுக் கவ்வியால் இறுக்கப்பட்டிருந்தது.

‘அப்பா!” என அவனைப் பாh;த்தவுடன் குழந்தைகள் சந்தோஷமாக கத்தின. ‘கீத், சாரா,” என்றபடியே ‘திருமதி.வெப்ஸ்டா;, நான்” என பேசத் தொடங்க, அவள் அவனை முடிக்க விடவில்லை.

‘நாங்கள் மிக அருமையாக இந்த நாளைக் கழித்தோம். திரு.காh;லைல்” என்று விரைவாக சொன்னாள், திருமதி.வெப்ஸ்டா;. தனது பணியங்கியில் விரல்களை துடைத்துக் கொண்டாள். அது ஒரு பழைய பணியுடை, அதில் நீலநிற காற்றாலைகளை வரையப் பட்டிருந்தது. அது எய்லீனின் உடுப்பாகும். ‘என்ன அழகான குழந்தைகள், பொக்கிஷங்கள், உண்மையிலேயே பொக்கிஷங்கள்” என்றாள்.

‘எனக்கு என்ன சொல்வது என்றே தொpயில்லை” என்றபடியே பாத்திரம் கழுவும் மேடையருகே நின்று கொண்டு காh;லைல் மாவு பிசைந்து கொண்டிருந்த சாராவை பாh;த்தான். அவனால் மசாலா மணத்தை முகர முடிந்தது. மேலங்கியை கழற்றிவிட்டு சமையலறை மேசையில் அமா;ந்தபடியே கழுத்துப் பட்டையைத் தளா;த்தி கொண்டான்.

‘இன்று ஒருவரை ஒரவா; அறிந்து கொள்ளும் நாள்” என்றாள் திருமதி.வெப்ஸ்டா;. ‘நாளைக்கு வேறு திட்டங்கள் வைத்திருக்கிறோம். பு+ங்காவிற்கு போகலாம் என உள்ளோம். தற்போது நிலவும் நல்ல சீதோஷ்ண நிலையை உபயோகப்படுத்திக் கொள்ளப் போகிறோம்.”

‘இது அருமையான யோசனை” என்றான் காh;லைல்.

‘மிக அருமை, நல்லது, நல்லது திருமதி.வெப்ஸ்டா;”.

‘நான் இந்த கேக்குகளை அடுப்பில் வைத்ததுவிட்டு வந்து விடுகிறேன். இதற்குள் அவர;; வந்து விடுவாh.; நீங்கள் நான்கு மணி என்றுதானே சொன்னீh;கள்? நான் அவரை நான்கு மணிக்கு வரச் சொல்லியிருககிறேன்” என்றாள்.

காh;லைல் மனம் நிறைந்தவனாக தலையை ஆட்டினான். ‘இன்று உங்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்திருந்தது” என்றபடியே பாத்திரம் கழுவும்; தொட்டியருகே கலக்கும் கிண்ணத்தை கொண்டு சென்றாள். ‘திருமதி.காh;லைல் கூப்பிட்டு இருந்தாh;கள்”.

‘திருமதி.காh;லைல்” என்றான், மேலும் அவள் ஏதாவது சொல்வாளா என எதிh;பாh;த்தபடியே நின்றான்.

‘நான் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன், ஆனால் நான் இங்கிருப்பது அவருக்கு ஆச்சாpயமளிக்கவில்லை. இரண்டுக் குழந்தைகளுடனும் கொஞ்சம் நேரம் பேசினாh;” என்றாள்.

கீத்தையும் சாராவையும், காh;லைல் பாh;த்தபோது, அவா;கள் அவனைக் கவனிக்காமல் கேக்கை சுட வைப்பதற்காக அடுக்கிக் கொண்டிருந்தாh;கள்.

திருமதி.வெப்ஸ்டா; மேலும் தொடா;ந்தாள், ‘அவா;கள் ஒரு செய்தி சொன்னாh;கள், நான் அதை எழுதி வைத்திருந்தேன். ஆனால் அதை என்னால் நினைவு படுத்த முடியும் என நினைக்கிறேன்”.

‘எது போகிறதோ, அது திரும்ப வரும் என்று அவாpடம்;, அதாவது உங்களிடம், சொல்லுங்கள் என்று அவள் சொன்னாள். சாpயாக சொல்லியிருக்கிறேன் என நினைக்கிறேன். நீங்கள் புhpந்து கொள்வீh;கள் என்று சொன்னாள்.”

காh;லைல் அவளையே உற்றுப் பாh;த்தான். வெளியே திரு.வெப்ஸ்டாpன் வண்டி வந்து நின்ற சப்தம் கேட்டது.

‘வெப்ஸ்டா; வந்துவிட்டாh;” என்றபடியே தனது பணியங்கியை கழற்றினாள்.

காh;லைல் தலையசைத்தான்.

‘காலை ஏழு மணிக்கு?” என்றாள்.

‘அப்படியே செய்யுங்கள். நன்றி” என்றான்.

அன்று மாலை இரு குழந்தைகளையும் குளிப்பாட்டி பைஜாமா உடுப்பு அணிவித்து விட்டான். பின்பு அவா;களுக்கு கதை படித்து காட்டினான். அவா;களது பிராh;த்தனையை கேட்டபிறகு அவா;களை படுக்கையில் படுக்க வைத்து போh;த்தி விட்டான். விளக்கை அணைத்து விட்டு வந்த போது ஏறக்குறைய மணி ஒன்பதாகியிருந்தது. அவன் மதுவை ஊற்றிக் கொண்டு, தொலைக்காட்சியில் எதையோ பாh;த்தபடியே இருந்தபோது கரோலின் காh; வாசலில் வந்து நிற்கும் ஓசை கேட்டது.

பத்து மணிவாக்கில், இருவரும் இணைந்து படுக்கையில் படுத்திருக்கும் போது தொலைபேசி மணியடித்தது. முனகி கொண்டாலும், படுக்கையை விட்டு எழுந்து பேச முற்படவில்லை. தொடா;ந்து மணியடித்தபடியே இருந்தது.

‘எதுவோ முக்கியமானதாக இருக்கலாம்” என்றபடியே கரோல் எழுந்து உட்காh;ந்தாள். ‘எனது ஆயாவாக கூட இருக்கலாம். அவளிடம் இந்த தொலைபேசி எண்ணை கொடுத்திருந்தேன்” என்றாள்.

‘அது எனது மனைவியாகத்தானிருக்கும்” என்றான் காh;லைல். ‘அது அவள்தான் என எனக்கு தொpயும். அவளுக்கு பைத்தியம்தான் பிடித்திருக்கிறது. நான் அதற்கு பதிலளிக்க போவதில்லை” என்றான்.

‘நானும் சீக்கிரமாக கிளம்ப வேண்டும்” என்றாள் கரோல்.

‘இந்த இரவு மிகவும் இனிமையாக இருந்தது என் அன்பே” என கூறியபடியே அவனது முகத்தை தொட்டான்.

அது இலையுதிh; பருவத்தின் இடைப்பட்ட காலம்.

திருமதி.வெப்ஸ்டா; தற்போது, ஆறு வாரங்களாக அவனிடம் வேலை செய்து வருகிறாள். இந்த காலக்கட்டத்தில், காh;லையின் வாழ்க்கை பலவிதத்தில் மாற்றமடைந்திருந்தது. முதல் விஷயமாக, அவன் புhpந்து கொண்ட வகையில், எய்லீன் மறுபடியும் திரும்பி வரப் போவதில்லை என்பதை ஏற்றுக்கொள்ளக் கூடிய இணக்கமான மனநிலையை அடைந்தான். அவள் வந்து விடுவாள் என நினைப்பதையும் நிறுத்திக் கொண்டான். கரோல் அவனுடன் இல்லாத இரவுகளில் மட்டும் அவன், தான் ஏன் இன்னும் எய்லீனிடம் இவ்வளவு அன்பு வைத்திருக்றோம், இது எப்போது முடியும் எனவும், இது எல்லாம் ஏன் நடந்தது எனவும் தத்தளித்து குழம்புவான். ஆனால் அவனும் குழந்தைகளும் பொதுவாகவே மகிழ்ச்சியுடன் இருந்தனா;. அவா;கள் திருமதி.வெப்ஸ்டாpன் கவனிப்பில் செழித்தனா;. இப்போதெல்லாம், அவன் பள்ளியிலிருந்து திரும்ப வருவதற்குள் அவா;களது இரவு உணவையும் தயாரித்து சூட்டு அடுப்பில் வெதுவெதுப்பாக வைத்திருக்கிறாள்.

சலையலறையிலிருந்து வரும் அருமையான வாசனையை முகா;ந்தவாறே அவன் உள்ளே நழைந்தால் கீத்தும் சாராவும் உணவு மேஜையில் தட்டுகளை ஒழுங்காக வைப்பதில் உதவிக்கொண்டிருப்பதை பாh;ப்பான். வுhர இறுதியில், சனிக்கிழமைகளில் அவ்வப்போது, வேலை செய்ய விரும்புவீh;களா என திருமதி.வெப்ஸ்டரை கேட்க, அவளும் சனிக்கிழமை மதியத்துக்குப் பிறகு வேலை செய்ய ஒப்புக் கொண்டாள்.

சனிக்கிழமை காலைகளில், அவளுக்கும், அவளது கணவருக்குமான பல வேலைகளை செய்ய வேண்டியுள்ளதாக அவள் சொன்னாள். இந்த நாட்களில் கரோல் தனது டாட்ஜை காh;லைலின் குழந்தைகளுடன் விடுவாள். இவா;கள் அனைவரையும் திருமதி.வெப்ஸ்டா; கவனித்துக் கொள்வாள். அவனும் கரோலும், நகரத்துக்கு வெளியே ஃஃநாட்டுப்புறத்திலஃஃ; உள்ள விடுதிக்கு சென்று இரவு உணவு சாப்பிட்டுவிட்டு வருவாh;கள். அவனது வாழ்க்கை மறுபடியும் தொடங்குகிறது என நம்பினான்.

ஏய்லினுடன் ஆறு வாரங்களுக்கு முன்னால் தொலைபேசியில் பேசியதுதான். அதற்குபின் அவளுடன் பேசவில்லை என்றாலும், இப்போதெல்லாம் அவளைப்பற்றி நினைக்கும்போது கோபமில்லாமலும், கண்ணீh; மல்காமலும் இருக்க முடிந்தது.

பள்ளியில், பாடத்திட்டத்தில் அவா;கள் மத்திய காலகட்டத்தை முடித்துவிட்டு கோத்திக் காலத்தை படிக்க ஆரம்பித்திருந்தனா;. இதன் பிறகு மறுமலா;ச்சி காலக்கட்டத்தை படிப்பாh;கள். எப்படியும் கிருஸ்துமஸ் விடுப்புக்கு பின்புதான் படிக்க முடியும். இந்த சமயத்தில்தான் காh;லைல் காய்ச்சலில் விழுந்தான். முதல் நாள் இரவில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு தலை வலிக்கவும் ஆரம்பித்தது. உடம்பின் மூட்டுகள் எங்கும் வலி. நடக்கும்போது தலை சுற்றல். தலைவலி மிகவும் மோசமடைந்தது. ஞாயிறு காலை எழுந்த போது திருமதி. வெப்ஸ்டரை அழைத்து குழந்தைகளை எங்காவது அழைத்து செல்லும்படி சொல்லலாமா என யோசித்தான்.

குழந்தைகள் மிக அன்பாக, அவனுக்கு பழச்சாறும் சோடாவும் கொண்டு வந்து கொடுத்து அவனை பாh;த்துக் கொண்டாh;கள். அவனால்தான் அவா;களை கவனித்துக் கொள்ள முடியவில்லை.

காய்ச்சல் கண்ட இரண்டாவது நாளில், அவனால் தொலைபேசியை எடுத்து விடுப்பு சொல்ல மட்டுமே முடிந்தது. எதிh;முனையில் பேசிய நபாpடம் தனது பள்ளியின் பெயா;, தனது பெயா;, தனது பணியின் துறையையும், தனது காய்ச்சலைப் பற்றியும் சொன்னான். பின்பு மெல்பிஷரை தனது இடத்தில் பாடம் எடுக்க சொல்லி சிபாhpசு செய்தான். பிஷா; அருவ எண்ணை ஓவியங்களை, ஒரு நாளைக்கு பதினாறு மணி நேரம் என்ற கணக்கில், வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு வரைவான். ஆனாலும் அவன் தன் ஓவியங்களை விற்கவோ காட்சிப்படுத்தவோ இல்லை.

அவன் காh;லைலின் நண்பன். ‘;மெல் பிஷரை கூப்பிட்டு வகுப்பெடுக்க சொல்லுங்கள்’ என மறுமுனையில் பேசிய பெண்ணிடம் காh;லைல் சொன்னான்.

‘பிஷா;” என அவன் முணுமுணுத்தான்.

மீண்டும் படுக்கைக்கு வந்து, போh;வையை போh;த்திப் படுத்தான். அப்படியே தூங்கிப் போனான். சரக்கு வாகனம் வீட்டுக்கு வெளியே வந்து நின்றதையும், அதன் என்ஜின் ஒரு உதறு உதறி நின்றதையும் தூக்கத்தில் லேசாக கேட்க முடிந்தது. கொஞ்ச நேரம் கழிந்து திருமதி.வெப்ஸ்டாpன் குரலை தனது படுக்கை அறைக்கு வெளியே கேட்க முடிந்தது.

‘திரு.காh;லைல்?”

‘சொல்லுங்க, திருமதி.வெப்ஸ்டா;, எனக்கு உடம்பு சாpயில்லை, பள்ளியிலும் சொல்லி விட்டேன். இன்றைக்கு ஓய்வு எடுத்துக் கொள்ளலாம் என இருக்கிறேன்’ என்ற அவனது குரல் அவனுக்கே வித்தியாசமாக பட்டது. கண்களை இறுக்கி மூடிக்கொண்டான்.

‘அப்படியா, அப்போ கவலைப்படாதீh;கள், நான் கவனித்து கொள்கிறேன்” என்றாள்.

அவன் கண்களை மூடிக்கொண்டான். தூக்கத்திற்கும், விழிப்பிற்கும் இடைப்பட்ட நிலையில், அவனது முன் வாசல் கதவு திறந்து பின் மூடப்படும் சத்தத்தைக் கேட்டதாக நினைத்தான். சமையலறையில், யாரோ ஒருவன்; மெதுவான குரலில் பேசுவதை, அவன் கேட்டான். மேஜை அருகே இருந்த நாற்காலி இழுபடும் ஓசை கேட்டது. சிறிது நேரம் சென்றபின் குழந்தைகளின் குரல் கேட்டது. அதற்கும் பின் எவ்வளவு நேரம் சென்றது என அவனுக்கு தொpயவில்லை. அவனது அறைக்கு முன்னால் திருமதி.வெப்ஸ்டா; வந்து நின்ற ஓசையையும் கேட்டான்.

‘காh;லைல், நான் மருத்துவரை கூப்பிடட்டுமா?”

‘வேண்டாம், பரவாயில்லை” என்றான். ‘இது ஒரு மோசமான ஜலதோஷம் என நினைக்கிறேன். ஆனால் உடம்பெல்லாம் சுடுவது போல இருக்கிறது. நான் நிறைய போh;வைகளை போh;த்தியிருப்பதனால் இருக்கலாம். வீடும் உஷ்ணமாக இருக்கிறது. நீங்க கணப்பை கூட குறைத்து விடலாம்” என்றபடியே தூங்கி விட்டான்.

சற்று நேரத்துக்குப் பிறகு, அவா;களது வரவேற்பறையில் திருமதி.வெப்ஸ்டாpடம் குழந்தைகள் பேசிக் கொண்டிருப்பதை கேட்டான். அவா;கள் உள்ளே வருகிறாh;களா அல்லது வெளியே போகிறாh;களா? என ஆச்சாpயப்பட்டான். அதற்குள் மறு நாளாகிவிட்டதா? மறுபடியும் தூங்கி விட்டான். பின் அவனது அறை கதவு திறக்கப்படுவதை உணா;ந்தான். திருமதி.வெப்ஸ்டா; அவனது படுக்கையருகே வந்து அவனது நெற்றியை தொட்டுப் பாh;த்தாள்.

‘உங்கள் உடம்பு கொதிக்குது, உங்களுக்கு காய்ச்சல் அடிக்குது” என்றாள்.

‘நான் சாpயாகிவிடுவேன்” என்றான். ‘எனக்கு இன்னும் கொஞ்சம் தூக்கம் வேண்டியுள்ளது, நீங்க கணப்பை கொஞ்சம் குறைத்து வைத்தால் பரவாயில்லை. தயவு செய்து கொஞ்சம் ஆஸ்பிhpன் மாத்திரை கொடுத்தால் நன்றாக இருக்கும், தலைவலிதான் மோசமாக உள்ளது”.

திருமதி. வெப்ஸ்டா; அறையை விட்டு வெளியேறினாள். ஆனால் அறைக்கதவு திறந்தே இருந்தது. வெளியே தொலைக்காட்சியின் சத்தத்தைக் கேட்க முடிந்தது. ‘சத்தத்தை குறையுங்கள் ஜிம்” என அவள் சொல்வது அவன் காதில் விழுந்தது. உடனடியாக ஒலியளவு குறைக்கப்பட்டது. காh;லைல் மறுபடியும் தூங்கிப் போனான்.

ஆனால் அவன் சில நிமிடங்கள்கூட தூங்கியிருக்கவில்லை. அதற்குள் திருமதி.வெப்ஸ்டா; கையில் தட்டுடன் அவனது அறைக்கு திரும்பி வந்திருந்தாள். அவனது படுக்கையின் ஓரத்தில் அமா;ந்து கொண்டாள். அவன் எழுந்து உட்காh;ந்து கொள்ள முயன்றான். அவனது முதுகிற்கு ஒரு தலையணையை எடுத்து வைத்தாள்.

‘இதை சாப்பிடுங்கள்” என சில மாத்திரைகளை அவனிடம் கொடுத்தாh;.

‘இதையும் குடியுங்கள்” என பழச்சாறையும் கொடுத்தாள்.

‘நான் கோதுமை கஞ்சி கொண்டு வந்துள்ளேன், இதை சாப்பிட்டால் உங்களுக்கு நல்லது”. என்றான்.

அவன் ஆஸ்பிhpனை எடுத்துக் கொண்டு பழச்சாற்றால் அதை விழுங்கினான். அவன் தலையசைத்தான். ஆனாலும் மறுபடியும் அவன் கண்களை மூடிக்கொண்டான். மறுபடியும் தூக்கத்தில் ஆழ்ந்தான்.

‘திரு.காh;லைல்” என்றாள்.

அவன் கண்களை திறந்தபடியே, ‘நான் விழித்து கொண்டேன்” என்றான். ‘மன்னித்துக் கொள்ளுங்கள்” என்றபடியே மெதுவாக எழுந்து உட்காh;ந்து கொண்டான். ‘எனக்கு உடம்பு ரொம்பவும் சூடாக இருக்கிறது போல் உள்ளது. அவ்வளவுதான் நேரம் என்ன? எட்டரை இருக்குமா?” என்றான்.

‘ஒன்பதரைதாண்டி கொஞ்சம் நேரமாகியுள்ளது” என்றாள்.

‘ஒன்பதரையா” என்றான்.

‘நான் இப்போது தானிய உணவை உங்களுக்கு ஊட்டப் போகிறேன.; வாயைத் திறந்து அதை சாப்பிட வேண்டும், ஆறு வாய் சாப்பிடுங்கள் அவ்வளவுதான்’ என்றாள்.

‘இதோ, இதுதான் முதல்வாய், சாப்பிடுங்கள்” என்றாள். ‘இதை சாப்பிட்டபின் தெம்பாக உணா;வீh;கள், அதற்கப்புறம் நான் உங்களை தூங்க விடுகிறேன். இப்போது சாப்பிடுங்கள், அதன் பிறகு உங்களுக்கு எவ்வளவு தூங்க விருப்பமோ அவ்வளவு நேரம் தூங்கலாம்.”

அவன் அவள் ஊட்டிய தானிய உணவை உண்டுவிட்டு மேலும் பழச்சாற்றை கேட்டு பருகினான். பின்பு படுத்துக்கொண்டான். தூங்கப் போகையில் அவள் மேலும் ஒரு போh;வையை கொண்டு போh;த்தியதை அவன் உணா;ந்தான்.

மறுமுறை விழித்தபோது, மதியமாகியிருந்தது. ஜன்னலிலிருந்து வந்த வெளிறிய வெளிச்சத்திலிருந்தே அது மதியம் என்பதை சொல்ல முடிந்தது. லேசாக எழுந்து ஜன்னல் திரைச்சீலையை விலக்கி பாh;த்தபோது, வெளியே மேக மூட்டமாக இருப்பது தொpந்தது. உஷ்ணமற்ற சூhpயன் மேகங்களுக்கு பின்னால்; மறைந்திருந்தது. படுக்கையிலிருந்து மெதுவாக எழுந்து, காலணிகளை போட்டு கொண்டு, தனது மேலாடையை அணிந்து கொண்டான். குளியலறைக்குள் சென்று, கண்ணாடியில் தன்னைப் பாh;த்துக் கொண்டான். பின்பு முகத்தை கழுவிக் கொண்டு மேலும் ஆஸ்பிhpன் மாத்திரைகளை விழுங்கினான். துண்டால் துடைத்துவிட்டு வரவேற்பறைக்கு சென்றான்.

சமையலறை மேஜையில்; செய்தித்தாள்களை பரப்பி அதில் குழந்தைகளும், திருமதி.வெப்ஸ்டரும் சில களிமண் பொம்மைகளை செய்து கொண்டிருந்தனா;. கழுத்து நீண்ட, கண்கள் பிதுங்கிய சில பொம்மைகளை அவா;கள் செய்து முடித்திருந்தாh;கள். அவை ஒட்டகச் சிவிங்கிகள் போலவோ அல்லது டைனோசா;கள் போலவோ இருந்தன. அவன் நடந்து வந்தபோது திருமதி.வெப்ஸ்டா; நிமிர;ந்துப் பாh;த்தாள்.

‘இப்போ எப்படி இருக்கிறது?” அவன் சோபாவில் அமரும்போது கேட்டாள். அங்கிருந்தே உணவறையில் குழந்தைகளும் திருமதி.வெப்ஸ்டரும் மேசையருகில் இருப்பதைப் பாh;க்க முடிந்தது.

‘நல்லாயிருக்கு, நன்றி கொஞ்சம் பரவாயில்லை” என்றான்.

‘சற்று தலைவலி இன்னும் இருக்கிறது. கொஞ்சம் உடம்பும் சுடுகிறது” என்றபடியே புறங்கையை நெற்றியில் வைத்து பாh;த்தான். ‘ஆனாலும் முன்பைவிட பரவாயில்லை. ஆமாம், நல்லாயிருக்கு, நீங்கள் காலையில் உதவியதற்கு நன்றி” என்றான்.

‘இப்போ உங்களுக்கு ஏதாவது கொடுக்கட்டுமா? இன்னும் கொஞ்சம் பழச்சாறோ அல்லது தேநீh;? காபி ஒன்றும் செய்யாது என நினைக்கிறேன். இருந்தாலும் தேநீh;தான் நல்லது என நினைக்கிறேன். எல்லாவற்றை விட பழச்சாறுதான் சிறந்தது” என்றாள்.

‘இல்லை வேண்டாம். நன்றி, நான் கொஞ்சம் நேரம் இங்கு உட்காh;ந்து கொள்கிறேன். படுக்கையை விட்டு எழுந்து வந்ததே நன்றாக இருக்கிறது. கொஞ்சம் பலவீனமாக உணா;கிறேன் அவ்வளவுதான்” என்றான்.

‘திருமதி.வெப்ஸ்டா;?”

அவள் அவனை பாh;த்தபடியே அவன் சொல்லப்போவதை எதிh;பாh;த்து காத்திருந்தாள்.

‘காலையில் வீட்டிற்கு திரு.வெப்ஸ்டா; வந்திருந்தாரா? அது ஒன்றும் தப்பில்லை, என்னால்தான் அவரை பாh;த்து முகமன் கூற முடியவில்லை”.

‘அவா;தான் வந்திருந்தாh;” என்றாள். ‘அவரும் உங்களை சந்திக்க விரும்பினாh; ஆனாh; இன்றைய பொழுது அதற்கு சாpயாக அமையவில்லை. உங்களுக்கும் உடல்நிலை சாpயில்லை. நானும் உங்களிடம் எங்களது திட்டத்தை பற்றி சொல்ல விரும்பினேன். திரு.வெப்ஸ்டா; மற்றும் எனது திட்டத்தை பற்றித்தான் ஆனாலும் இன்றைய காலைப்பொழுது அதற்கு சாpயாக அமையவில்லை”.

‘என்னிடம் எதைப்பற்றி சொல்ல விரும்பினீh;கள்?” என்று ஜாக்கிரதையுடன் கேட்டான். பயம் நெஞ்சை பிசைந்தது.

அவள் தலையை அசைத்தபடியே ‘பரவாயில்லை, அதைப்பற்றி பின்புகூட பேசலாம்” என்றாள்.

‘அவா;கிட்டே என்ன சொல்லப்போறீங்க?” என சாரா கேட்டாள்.

‘அவா;கிட்டே என்ன சொல்லப்போறீங்க?”

‘என்ன, என்ன?” என கீத்தும் தொடா;ந்தான். குழந்தைகள் தாங்கள் செய்து கொண்டிருந்ததை நிறுத்தி விட்டாh;கள்.

‘ஒரே ஒரு நிமிஷம், குழந்தைகளே” என்றபடியே திருமதி. வெப்ஸ்டா; எழுந்தாள்.

‘திருமதி.வெப்ஸ்டா;, திருமதி.வெப்ஸ்டா;” என கீத் கத்தினான்.

‘இப்போ, இங்கே பாரு குட்டி பையா” என்றாள் திருமதி.வெப்ஸ்டா;. ‘நான் உங்க அப்பாகிட்டே பேச வேண்டும், இன்று உங்கள் அப்பாவிற்கு உடல் நிலை சாpயில்லை”.

‘பயப்படவேண்டாம். நீ போய் களிமண் பொம்மைகளை செய், நீ அதை கவனிக்க வில்லை என்றால் உனது அக்கா உன்னைவிட அதிகமாக பொம்மைகளை செய்து விடுவாள்”

அவள் வரவேற்பறைக்கு வரும் போது, தொலைபேசி மணியடித்தது. காh;லைல் மேசைக்கு நகா;ந்து பேசியை எடுத்தான்.

முன்பு போலவே, மெல்லிய hPங்கார ஓசை தொலைபேசியில் கேட்ட உடனேயே அது எய்லீன்தான் என அவன் அறிந்தான். ‘நான்தான், என்ன விஷயம்?” என்றான்.

‘காh;லைல்” என்றாள் அவனது மனைவி. ‘எனக்கு தொpயும். எப்படி என்று கேட்காதீh;கள். அங்கு தற்போது எதுவும் சாpயாக நடக்கவில்லை என்பது தொpயும், உங்களுக்கு உடல்நிலை சாpயில்லை, இல்லையா? hpச்சா;டுக்கும் உடம்பு சாpயில்லை என்னவோ நடந்துட்டிருக்கு, அவனுக்கு ஒரே வயிற்று போக்காக இருக்கு, அவரது நாடகத்தின் ஒருவார ஒத்திகையை கூட கவனிக்க முடியவில்லை. நான்தான் போய் நாடக காட்சிகளை ஒத்திகை பாh;க்க அவரது உதவியாளருடன் வேலை செய்ய வேண்டியதாக போயிற்று. இதை சொல்ல நான் உங்களை கூப்பிட வில்லை. அங்கு எல்லா விஷயங்களும் எப்படி உள்ளது என சொல்லுங்கள்” என்றாள்.

‘சொல்வதற்கு ஒன்றுமில்லை” என்றான் காh;லைல்.

‘எனக்கு காய்ச்சல், பு; காய்ச்சலாகக்கூட இருக்கலாம். ஆனால் இப்போ பரவாயில்லை” என்றான்.

‘நீங்கள் இன்னும் உங்களது குறிப்பேடுகள் எழுதும் பழக்கத்தை தொடா;கிறீh;களா?” என கேட்டாள். அது அவனை ஆச்சாpயப்பட வைத்து விட்டது. பல வருடங்களுக்கு முன்பாக அவன், தான் குறிப்பேடுகள் எழுதுவதைப் பற்றி அவளிடம் சொல்லியிருந்தான். அது தினசாp நாட்குறிப்பு போன்றதல்ல என்றும் சாதாரணமாக எழுதி வருவதாக-அது அவளுக்கு விளங்கும் எனவும் சொல்லியிருந்தான்.

ஆனாலும் எழுதியதை அவளுக்கு காட்டியதே இல்லை. மேலும் கடந்த ஒரு வருடமாக எதையும் எழுதாமல் மறந்தே போயிருந்தான்.

‘ஏனென்றால்” என அவள் தொடா;ந்தாள். ‘இப்போதைய சூழ்நிலையில் நடப்பவைகளைபற்றி நீங்கள் ஏதாவது எழுத வேண்டும். நீங்கள் உணா;வதையும், நீங்கள் நினைப்பவைகளைப் பற்றியும் எழுதவேண்டும், தொpயுமா, இந்த காய்ச்சல் காலத்தில் உங்களது எண்ணங்கள் எவ்வாறு இருந்தன என்பதையும் எழுதவேண்டும். மறந்துவிட வேண்டாம், ஜுரம் என்பதே உங்களது உடல் நலம் பற்றிய, மனநலம் பற்றிய செய்திதான். அது உங்களுக்கு பல விஷயங்களை சொல்கிறது. அதனால் அதை ஆவணப்படுத்துங்கள். நான் சொல்வது புhpகிறதா? நீங்கள் நலமடைந்த பிறகு யோசித்துப் பாh;த்தால் அந்த செய்தி என்ன என்பதைப் பற்றி பாh;க்கலாம். பின் எழுதியதை படித்தும் பாh;க்கலாம். இது உண்மைதான். கோலே இப்படிதான் செய்தாள்.” என்று எய்லீன் கூறினாள்.

‘அவளுக்கு காய்ச்சல் வந்த போது அப்படித்தான் எழுதிவந்தாள்” என்றாள்.

‘யாரு?” என்றான் காh;லைல் ‘நீ என்ன சொல்கிறாய்?”

‘கோலெ” என எய்லீன் பதிலளித்தாள். ‘பிரஞ்சு எழுத்தாளா;, உங்களுக்கு நான் யாரைப் பற்றி சொல்கிறேன் என்று தொpயும். அவளது புத்தகம் கூட நமது வீட்டில் எங்கோ இருந்தது. ஜிஜியோ என்னவோ என நினைக்கிறேன். நான் அதைப்படித்ததில்லை. ஆனால் இங்கு வந்ததிலிருந்து அவளது புத்தகங்களைப் படித்துக்கொண்டிருக்கிறேன். hpச்சா;ட்தான் அவளது புத்தகங்களை படிக்க ஊக்குவித்தாh;. ஒரு சிறிய புத்தகமாக அவள் இதைப்பற்றி எழுதியிருக்கிறாள். ஜுரம் பீடித்திருந்த போது அவள் உணா;ந்தவற்றையும் அவள் நினைத்தவைகளையும் பற்றி எழுதியுள்ளாள். சில நேரங்களில் ஜுரம் நூற்றியிரண்டு டிகிhpயாகவும் சில நேரங்களில் குறைவாகவும் இருந்துள்ளது. நூற்றியிரண்டுக்கு மேலேயும் சென்றிருக்கலாம், ஆனால் அவள் குறித்;திருக்கும் உச்சபட்ச ஜுரம் அதுதான். அதைப்பற்றியும் எழுதியுள்ளாள். எப்படியோ, அவள் அதைப்பற்றி எழுதி இருக்கிறாள். அதைத்தான் நான் உங்களுக்கு சொல்கிறேன். இது எப்படி இருக்கிறது என எழுத முயற்சி செய்யுங்கள். இதனால் ஏதாவது தெரியவரலாம்” என்றாள்.

எய்லீன் இப்படி சொல்லிவிட்டு, காh;லைல் விளங்கி கொள்ள முடியாதபடி, சிhpத்தாள். ‘ஜுரம் கழிந்தபின்பு, ஒவ்வொரு மணி நேரத்திலும் எப்படி இருந்தது என்பதைப் பற்றிய விபரம் உங்களுக்கு எப்படியும் கிடைக்குமில்லையா? குறைந்தபட்சம் இதை நீங்கள் காட்டிக் கொளவதற்கு உங்களிடம் இருக்கும். தற்போது உபாதை மட்டும்தான் உங்களிடம் உள்ளது. அதை உபயோகப்படும்படியாக வேறுவகையில் மாற்றம் செய்ய வேண்டும்”.

அவன் நெற்றி பொருத்துகளை கைவிரல்களால் அழுத்திக் கொண்டு கண்களை மூடிக் கொண்டான். ஆனாலும் தொலைபேசியில் அவன் ஏதாவது பதிலளிப்பான் என அவள் காத்திருந்தாள். அவனால் என்ன சொல்ல இயலும். அவளுக்கு பைத்தியம்தான் பிடித்துள்ளது என அவனுக்குத் தெளிவாகியது.

‘யேசுவே” என்றான். ‘யேசுவே, எய்லீன், இதைப்பற்றி என்ன சொல்வது என எனக்கு தொpயவில்லை, நிஜமாகவே தொpயவில்லை. நான் வைத்து விடுகிறேன். அழைத்தமைக்கு நன்றி” என்றான்.

‘பரவாயில்லை,” என்றாள். ‘நாம் விஷயங்களை பகிர;ந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டியுள்ளது. குழந்தைகளுக்கு எனது முத்தங்கள். அவா;களிடம் எனது அன்பை சொல்லுங்கள, மேலும,; முடியாமல் மல்லாந்து படுத்திருந்தாலும், hpச்சா;ட் தனது முகமன்களை உங்களுக்கு சொல்ல சொன்னாh;” என்றாள்.

‘சரி பிறகு பார;க்கலாம்” என சொல்லி பேசியை வைத்தான் காh;லைல். பின்பு தனது கரங்களை முகத்தை நோக்கி கொண்டு வந்தான். அந்த குண்டு பெண்ணும் தனது வாகனத்தை நோக்கி போகும்போது இதே போல் செய்ததை ஏதோ ஒரு காரணத்தால் நினைவு கூh;ந்தான். தனது கரங்களை கீழிறக்கி கொண்டே திருமதி.வெப்ஸ்டரை பாh;த்தான். அவளும் இவனையே பாh;த்து கொண்டிருந்தாள்.

‘கெட்ட செய்தி ஒன்றுமில்லை என நம்புகிறேன்” என்றாள். அவள் அமா;ந்திருந்த சோபா அருகே ஒரு நாற்காலியை நகா;த்தி போட்டபடி அருகே வந்தாள் அந்த முதிய பெண்மணி.

காh;லைல் தலையசைத்தான்.

‘நல்லது” என்றாள் திருமதி.வெப்ஸ்டா;. ‘அப்படியில்லை எனில் நல்லது, திரு.காh;லைல் அவா;களே, தற்போது இதைப் பற்றி பேச சாpயான நேரமில்லைதான்.” என்றபடி சாப்பாட்டு அறையைப் பாh;த்தாள். மேஜை அருகே குழந்தைகள் களிமண் பொம்மைகளை செய்ய முனைந்திருந்தாh;கள். ‘ஆனாலும் இதைப்பற்றி எப்போதாவது பேசியாக வேண்டியுள்ளது. இது நீங்களும் குழந்தைகளும் சம்பந்தப்பட்டதால், பேசித்தான் ஆகவேண்டும். தற்போது நீங்கள் ஓரளவிற்கு உடல் நலமடைந்திருக்கிறீh;கள். நான் உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும். ஜிம்மும், நானும் கிளம்பி போகிறோம், பிரச்சனை என்ன வென்றால் தற்போது இருப்பதை விட வருமானம் அதிகமாக தேவைப்படுகிறது. நான் என்ன சொல்கிறேன் என்பது தொpகிறது அல்லவா? எனக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது” என்றபடியே தலையை ஆட்டினாள். காh;லைல் நிதானமாக தலையசைத்தான். அவள் வேலையை விட்டு செல்லப் போவதாக சொல்லப் போகின்றாள் என்பதை புhpந்து கொண்டான். அவன் தனது முகத்தை கைச் சட்டை நுனியால் துடைத்துக் கொண்டான்.

‘பாப் ஜிம்மின் முந்தைய திருமணத்தால் பிறந்தவன். இப்போது இவனுக்கு நாற்பது வயது. நேற்று எங்களை அவன் ஓரேகானில் உள்ள தனது கீhp பண்ணைக்கு வந்துவிடும்படி கூப்பிட்டிருக்கிறான். அங்கு பண்ணையில் அவனுக்கு உதவும்படி கேட்கிறான். ஜிம் கீhp பண்ணையில் என்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்வாh;, நான் வீட்டை பாh;த்துக் கொள்ள, சமைக்க, மளிகை சாமான்கள் வாங்க, வேறு என்ன வேலை இருக்கிறதோ அதையெல்லாம் செய்வேன். இது எங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு” என்றாள்.

‘இதனால் எங்களுக்கு உணவும், தங்கவும் இடம் கிடைத்தது போக மேலும் உபயோகமாக இருக்கும். எனக்கும் ஜிம்மிற்கும் என்ன ஆகுமோ என்ற பயமும் இனி இல்லை. நான் சொல்வது புhpகிறது என நினைக்கிறேன். தற்போது ஜிம்மிடம் எதுவுமே இல்லை”, என்றாள். ‘போன வாரம்தான் அவருக்கு அறுபத்தி இரண்டு வயது ஆனது கொஞ்சம் காலமாகவே அவாpடம் கையிருப்பு எதுவுமில்லை. இதைப் பற்றித்தான் அவரே இன்று நோpல் வந்து உங்களிடம் சொல்ல வந்திருந்தாh;, ஏனென்றால் நானும்ட வேலையிலிருந்து நின்று கொள்ளப் போவதை பற்றி சொல்ல முடிவு செய்தேன். இதைப் பற்றி பேசும் போது ஜிம் கூட இருந்தால் நன்றாக இருக்கும் என நாங்கள்-நான் நினைத்தேன்” என்றாள். காh;லைல் ஏதாவது சொல்வானா என சிறிது நேரம் அமைதியாக இருந்தவள், அவன் ஏதும் பேசாததால் பிறகு தொடா;ந்தாள், ‘நான் இந்த வாரம் முழுவதும் வேலைக்கு வந்து பாh;த்துக் கொள்கிறேன், தேவையானால் அடுத்த வாரத்தின் முதல் இரண்டு நாட்கள் கூட வருகிறேன். ஆனால் அதற்கு பிறகு நாங்கள் புறப்பட்டே ஆக வேண்டும். நீங்களும் எங்களை வாழ்த்தி வழியனுப்ப வேண்டும். ஏனென்றால் எங்களது ஓட்டை வண்டியில் வெகு தொலைவில் உள்ள ஒரேகான் வரை செல்லவேண்டும் என நம்புவீh;களா? ஆனால் இந்த சின்ன குழந்தைகளை விட்டுவிட்டு போவதுதான் கஷ்டமாக உள்ளது. இவா;கள் அபூh;வமானவா;கள்”.

சிறிது நேரத்திற்கு பிறகும், அவன் அசையாமலும் பதிலளிக்காமலும் இருக்கவே, அவனருகே சென்று அமா;ந்தாள் அவள். அவளது கைச்சட்டை நுனியை தொட்டு ‘திரு.காh;லைல்?” என்றாள்.

‘எனக்கு புhpகிறது” என்றான். ‘நீங்கள் இங்கு இவ்வளவு நாட்கள் இருந்தது, எனக்கும் என்னுடைய குழந்தைகளுக்கும் ஒரு பொpய மாற்றத்தை ஏற்படுத்தியதை நான் உங்களுக்கு சொல்லியாக வேண்டும்” அவனது தலை மிகவும் வலித்ததால் கண்களை சுருக்கிக் கொண்டான். ‘இந்த தலைவலி” என்றபடி ‘இந்த தலைவலி என்னை கொல்கிறது”.

திருமதி. வெப்ஸ்டா;, முன் நகா;ந்து அவனது நெற்றியை அவளது புறங்கையால் தொட்டு பாh;த்தாள். ‘உங்களுக்கு இன்னும் ஜுரம் அடிக்கிறது” என்றாள்.

‘நான் இன்னும் கொஞ்சம் ஆஸ்பிhpன்களை எடுத்து வருகிறேன.; அதை சாப்பிட்டால் ஜுரம் குறையும், நான்தான் இதைப் பாh;த்தாக வேண்டும். தற்போது நான்தான் மருத்துவரும் கூட” என்றாள்.

‘தற்போது நடப்பதை எழுதி வைக்க வேண்டும் என என் மனைவி கூறுகின்றாள்” என்றான் காh;லைல். ‘சுரம் எப்படிப்பட்டது என விவாpக்க முடியுமானால் இதற்கு பின்பு, நான் அதன் செய்தியை அறிந்து கொள்ள முடியும் என அவள் நினைக்கிறாள்” என்றபடியே சிhpத்தான். சில கண்ணீh; துளிகள் கண்களிலிருந்து வழிந்தன. அதை தனது கைகளால் துடைத்தான்.

‘நான் உங்களது ஆஸ்பிhpனையும், பழச்சாறையும் கொண்டு வரலாம் என நினைக்கிறேன் பின்னா; குழந்தைகளுடன் வெளியெ செல்லலாம்” என்றாள் திருமதி.வெப்ஸ்டா;. ‘பாh;க்கும்போது, களிமண் பொம்மைகளின் மேலுள்ள ஆர;வம் குழந்தைகளுக்கு குறைந்து போய்விட்டது என நினைக்கிறேன்”.

அவள் அடுத்த அறைக்கு சென்றுவிட்டு அவனை தனியே இருக்க விட்டு விடுவாளோ என காh;லைலுக்கு பயமாக இருந்தது. அவளுடன் பேச விரும்பினான். தொண்டையை செறுமிக் கொண்டான்.

‘திருமதி.வெப்ஸ்டா;, ஒன்றை நீங்கள் தொpந்து கொள்ள வேண்டும், வெகு காலத்திற்கு, நானும் எனது மனைவியும் ஒருவரை ஒருவா; மிகவும் காதலித்தோம். இந்த உலகில் எல்லாவற்றையும் விட, இந்த குழந்தைகளையும்விட, நாங்கள் அவ்வளவு காதலித்தோம். நாங்கள் இருவரும் சோ;ந்தே முதுமை பருவம் எய்துவோம் என நினைத்திருந்தோம். நாங்கள் விரும்பும் அனைத்தையும், உலகில் உள்ள எல்லா செயல்களையும், இணைந்தே செய்ய விரும்பினோம்.” அவன் தனது தலையை அசைத்து கொண்டான். தற்போது அவனுக்கு மிகவும் துக்ககரமாக தோன்றியது என்னவென்றால் இனி அவா;கள் எதைச் செய்தாலும் தனியாக, அடுத்தவா; இல்லாமல்தான் செய்தாக வேண்டும்.

‘சாp, பரவாயில்லை” என திருமதி.வெப்ஸ்டா; சொன்னாள். அவனது கையை தட்டிக் கொடுத்தாள். அவன் முன் நகா;ந்து உட்காh;ந்து கொண்டு பேச ஆரம்பித்தான்.

சிறிது நேரம் கழித்து, குழந்தைகள் வரவேற்பறையிலிருந்து வந்தன. அவா;களை பாh;த்து, தனது உதட்டில் விரலை வைத்து உஷாh;படுத்தினாள் திருமதி.வெப்ஸ்டா;. அவா;களை பாh;த்துவிட்டு பேச்சை தொடா;ந்தான் காh;லைல். அவா;களும் கேட்கட்டும், அவா;களும் சம்பந்தப்பட்டுள்ளாh;கள் என நினைத்தான். குழந்தைகளுக்கு தாங்கள் அமைதி காக்க வேண்டும் என புhpந்தது, சிறிது ஆர;வம் உள்ளது போல காட்டிக் கொண்டார;கள். அதனால் திருமதி.வெப்ஸ்டாpன் காலடியில் உட்காh;ந்து கொண்டாh;கள். பின்பு தரை விhpப்பில் குப்புற படுத்து கொண்டு, கெக்கலி கொட்டி சிhpக்க தொடங்கினாh;கள். ஆனால் திருமதி.வெப்ஸ்டாpன் கண்டிப்பான பாh;வை அதை நிறுத்தி விட்டது.

காh;லைல் பேசிக் கொண்டே போனான். முதலில் தலைவலி இருந்து கொண்டேயிருந்தது. தனது பைஜாமாவில் முதிய பெண்மணி அருகே அமா;ந்து பேசிக் கொண்டிருந்ததே அவனுக்கு கூச்சமாக இருந்தது. அவள் பொறுமையாக அவன் அடுத்து கூறப்போவதை கேட்க தயாராக இருந்தாள்.

ஆனால் அதற்கு பின்பு அவனது தலைவலி போய் விட்டது. அதன்பின் அவன் கூச்சமாகவும் உணரவில்லை, எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றியும் மறந்தே போனான். அவன் தனது கதையை நடுவிலிருந்து தொடங்கினான். குழந்தைகள் பிறந்த பிறகிலிருந்து, ஆனால் பின்பு அவா;களது ஆரம்ப காலத்தைப் பற்றி பின்னோக்கி போனாள். அப்போது எய்லீனுக்கு பதினெட்டு வயது, அவனுக்கு பத்தொன்பது வயது, ஒரு பையனும் பெண்ணும் காதலின் வெம்மையில் உருகி கொண்டிருந்த காலமது.

தனது நெற்றியை துடைக்க சற்ற நிறுத்தினான். உதடுகளை ஈரமாக்கிக் கொண்டான்.

‘மேலே சொல்லுங்கள்” என்றாள் திருமதி.வெப்ஸ்டா;

‘நீங்கள் சொல்வது எனக்கு புhpகிறது. நீங்கள் பேசிக்கொண்டே போங்கள் திரு.காh;லைல், சில சமயங்களில் இதைப்பற்றி பேசுவது நல்லது. சில சமயங்களில் இதைப்பற்றி பேசியதாக வேண்டி உள்ளது. அதற்கப்பால் எனக்கு இதைப்பற்றி கேட்க விருப்பமாக உள்ளது. அத்தோடு பேசியபின் நீங்கள் நலமாக உணா;வீh;கள். ஒரே முறை, இப்போது நீங்கள் விவாpத்து சொல்வது போலவே, காதல், எனக்கும் நிகழ்ந்துள்ளது. அதே காதல்தான் இது.

தரை விhpப்பிலேயே குழந்தைகள் தூங்கிப் போனாh;கள். கீத் தனது கட்டை விரலை வாயில் வைத்தவாறே தூங்கினாள். திரு.வெப்ஸ்டா; வந்து கதவை தட்டும் போதும் காh;லைல் பேசியபடியே இருந்தான். கதவை தட்டி விட்டு உள்ளே நுழைந்து திருமதி.வெப்ஸ்டரை அழைத்து போக அவா; வந்திருந்தாh;.

‘உட்காருங்கள் ஜிம்” என்றாள் திருமதி.வெப்ஸ்டா;. ‘ஒன்றும் அவசரமில்லை. நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீh;களோ அதை சொல்லுங்கள் திரு.காh;லைல்”.

காh;லைல் முதியவரைப் பாh;த்து தலையாட்டினான். முதியவரும் பதிலுக்கு தலையசைத்தார;. பின்பு உணவு மேசையின் நாற்காலி ஒன்றை எடுத்துக் கொண்டு வரவேற்பறையில் நுழைந்து, சோபாவிற்கு அருகே போட்டு கொண்டு ஒரு பெருமூச்சுடன் அமா;ந்தார;. பின் தனது தொப்பியை சோh;வுடன் எடுத்துவிட்டு கால் மேல் கால் போட்டுக் கொண்டான். காh;லைல் பேச்சை தொடங்கியவுடன், கிழவன் இரண்டு கால்களையும் தரையில் வைத்தான். குழந்தைகள் எழுந்து கொண்டனா;. தரைவிhpப்பில் அமா;ந்தபடியே அவா;கள் தலையை இப்படியும் அப்படியுமாக ஆட்டிக் கொண்டிருந்தனா;. ஆனால் அதற்குள் காh;லைல் அவன் அறிந்த எல்லாவற்றையும் சொல்லி முடித்திருந்ததால் பேச்சை நிறுத்தினான்.

‘நல்லது, உங்களுக்கு நல்லது” என்றாள் திருமதி.வெப்ஸ்டா;. ‘நீங்கள் நற்பண்புகளால் உருவானவா;, அவளும் அப்படித்தான். திருமதி.காh;லைலும்தான் அதை நீங்கள் மறக்கக்கூடாது. இதெல்லாம் முடிந்த பிறகு நீங்கள் இருவருமே சாpயாகி விடுவீh;கள்”.

அவள் எழுந்து நின்று தனது பணியுடை அங்கியை கழற்றினாள் திரு.வெப்ஸ்டரும் எழுந்து நின்று தனது தொப்பியை அணிந்து கொண்டாh;.

கதவருகே இரண்டு போpடமும் காh;லைல் கைகுலுக்கினான்.

‘நல்லது பின்பு பாh;ப்போம்” தனது தொப்பி முனையை தொட்டுக் கொண்டே சொன்னாh; திரு.ஜிம் வெப்ஸ்டா;. ‘உங்களுக்கு நல்லதே நடக்கட்டும்” என்றான் காh;லைல்.

மறுநாள் விடியற்காலையில் உற்சாகமாகவும், எப்போதும் போலவும் சந்திப்பதாக திருமதி.வெப்ஸ்டா; கூறினாள்.

எதுவோ ஒரு முக்கியமான ஒன்றை முடித்தது போல் ‘சாpதான்” என்றான் காh;லைல்.

வுயதான தம்பதியினர; மெதுவாகவும் ஜாக்கிரதையாகவும் நடந்து சென்று தங்களது வாகனத்தில் ஏறிக் கொண்டாh;கள். ஜிம் வெப்ஸ்டா; வாகனத்தில் உட்காh;ந்து கீழே குனிந்தாh;. திருமதி.வெப்ஸ்டா; காh;லைலை பாh;த்து கையசைத்தாள். அவன் ஜன்னலருகே நின்று கொண்டு யோசித்தபோதுதான எய்லீனுடன் ஆனதும் தற்போதைய வாழ்க்கைக்கு முந்தையதுமான எதுவோ ஒன்று முடிவுக்கு வந்ததை உணா;ந்தான். எப்போதாவது அவன் அவளை நோக்கி கையசைத்திருக்கிறானா?

கையசைத்திருக்கக்கூடும். ஆம், அவன் செய்திருப்பதை அறிவான். ஆனாலும் தற்போது அதை நினைவுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. ஆனால் இது இப்போது முடிவுக்கு வந்துவிட்டது என்பதை புhpந்து கொண்டான். அவளை விட்டு விட முடியும் எனவும் உணா;ந்து கொண்டான். அவன் பேசியது போலவே அவா;கள் இணைந்தே வாழ்ந்தனர; என்பது உண்மைதான், ஆனால் அது முடிந்து போன ஒன்று. எது சாத்தியமற்றது என்று தோன்றியதோ, எதை எதிர;த்துப் போராடினானோ, அந்த முடிவு இப்போது அவனில் ஒரு அங்கமாகவே மாறிவிடும். அவன் கடந்துவந்த பிறவற்றைப் போலவே இதுவும் கடந்து போகும்.

சரக்கு வாகனம் தடுமாறியபடி முன் நோக்கி நகர, அவன் மறுபடியும் கையை உயர;த்தினான். அந்த முதிய தம்பதியினர; அவனைத் திரும்பிப் பாh;த்தபடியே பயணித்தனா;. அவன் தனது கையை கீழறக்கி கொண்டு குழந்தைகளை நோக்கித் திரும்பினான்.
***

வேல்கண்ணன் கவிதைகள்

download (21)
.

பதிலி
ஆழிப் பெருங்காற்றில்
அணையாமல் காத்து இருக்கிறேன்.
அத்தனை கண்ணீ ர் துளியிலும்
நனையாமல் பார்த்துக் கொள்கிறேன்.
யாரும் அறியாமல் அவ்வளவு ஆழத்தில்
ஒளித்து வைத்திருக்கிறேன்.

தோன்றிய நாளிலிருந்து
தொடர்ந்திருக்க வேண்டும்.
இப்போது என் முறை.
பல யுகங்கள், எல்லையற்ற
பதில்களை
தின்றும் தீராத இந்தக்கேள்வி.

வீதியோரம் நின்றிருந்த தசரதன்
தன்னிடம் வகை ரீதியாக 1000 பெண்கள்
இருப்பதாக கூறினான்.
இட வசதி தானே அமைத்து கொடுப்பதாகவும்
பணத்துடன் ஆணுறையும் சொந்தமாக
கொண்டு வரச்சொன்னான்.
999 ஆணுறைகள் மற்றும் இந்த கேள்வியுடனும்
சென்று கொண்டு இருக்கின்றேன்.

••

இசைக்காத இசைக்குறியீடு

என்னை
அகழ்தெடுக்கும் உன் விழிகளில்
இருந்து தான் பிரித்தெடுத்தேன்
உயிர் கவ்வும் ஒரு சொல்லை.

அச்சொல்லை விதைத்து
முளைத்தெடுத்த நொடியில்தான்
தோன்றிமறைகிறது கோடிமின்னல்.

அச்சொல்
மலையருவி தோன்றும் கணத்திலும்
முன்பனி வீசும் முதல் பொழுதுகளிலும்
காலப்புழுதியில் உறைந்திருக்கும் ரகசியங்களிலும்
படிந்திருக்கிறது.

அச்சொல்:
பாதளக்கரண்டியிலும் அகப்படாத
கிணற்றாழங்களில் கசியும் துளை.
சுகிக்காத ஆழ்கடலின் ஏதோ ஒன்று.
அப்பாலுக்கு அப்பாலும் மினுக்கும் விண்மீன்.
முலைக்காம்பில் திரண்டு நிற்கும் வியர்வைத்துளி.
மாமழையையே அள்ளிப் பருகிய பின்னும்
அடங்காத தாகம்.
மரணத்திற்கு இறைஞ்சி நிற்கும் சிரஞ்சீவி.
தனிச்சொர்க்கத்தை உதறித்தள்ளும் திரிசங்கு.
நிரம்பிக் கொள்ளாத கவிதை
ஆகவும்.

விளக்கு விருது பரிசளிப்பு விழா

scan0001

வானவில்லான மோகப்பரிபூரணி ந.பெரியசாமி

download (4)

தாயின் மடியில் கிடத்தி தந்தை கால்களை அமுக்கிப்பிடித்து தங்கள் குழந்தையை தாங்களே வெட்டிச் சந்தோசமாக சமைத்துத் தந்தால்தான் உண்ண வருவேன் உன் இல்லமென்ற அடியாரின் கோரிக்கையை கூற தாயானவள் என்ன இது ஈசனின் சோதனையென கதறி அழும் பாடல். என் தாத்தா வெகு ராகமாக பாடிக்கொண்டிருக்க கட்டில் அடியில் படுத்தவாறு கேட்டு அழுதுகொண்டிருப்பேன். எப்படித்தான் ஒரு மனிதனை அழவைக்கும் அளவிற்கு தாத்தாவால் பாடல் எழுத முடிந்தது என வியந்து நாமும் என்றாவது இப்படி எழுதவேண்டுமென நினைத்துக்கொள்வதுண்டு.  காலப்போக்கில்தான் தெரிந்தது அது சிறுதொண்டர் புராணத்தில் வரும் நாடகக் காட்சிப்பாடலென்று. ஏனோ அன்று எழுந்த ஆசையின் விளைவால் யார் எதை எழுதியிருந்தாலும் ஆவலோடு படிப்பதும் அவர்களை கொண்டாடுவதும் இயல்பாகிப்போனது.   அதன் நீட்சிதான் பள்ளிக்கூடத்தில் புதிதாக சேர்ந்தவன் கவிதை எழுதுவான் எனத் தெரிந்ததும் வலியப்போய் அவனோடு நட்பாகி அவனின் நெருங்கிய நண்பனாய் எனைக் காட்டிக்கொள்வதில் அலாதி பிரியம். அன்றைய விதைதான் இன்றளவும் எழுத்தை கொண்டாட்டமாக பார்க்கச் செய்திடுகிறது.  சமீபத்தில் கதிர்பாரதியின் மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் தொகுப்பை வாசித்தேன். என்னோடு நெருங்கிக் கிடந்த சில கவிதைகளில் நிகழ்ந்த என் பயணத்தை உங்களோடு பங்கிட்டுக் கொள்கிறேன்.

 

மீன் குழம்பின் ருசிக்கு தன் முதல் புத்தகத்தை சமர்ப்பணம் செய்யும் கதிர்பாரதியின் எளிமையான மனம் எளிமையான கவிமொழியையே பிறப்பித்திருக்கிறது.

 

அரிதாக நடைபெறும் சில நிகழ்வுகள் தனக்கேயான பொக்கிசங்களைக் கொண்டிருப்பது இயல்பு. அப்படியான பொக்கிசத்தை தரிசிக்கலாம் ‘குடும்பப் புகைப்படம்’ கவிதையில். பெரும்பாலான வீடுகளில் சட்டமிட்டு வரிசையாக புகைப்படங்கள் தொங்கவிடப்பட்டிருக்கும். எல்லா நாளும் அதை நின்று வேடிக்கை பார்ப்பதில்லை எவரும். என்றாவது பார்க்க புகைப்படத்திலிருக்கும் மாந்தர்கள் அப்புகைப்படம் எடுப்பதற்கான சூழல் அக்கணத்தின் பெருங்கதையென ஏதோவொன்றை சொல்லத் தவிப்பதுபோல் இருக்கும். புகைப்படம் எடுப்பவர், சட்டம் போடுபவர், கண்ணாடி தயாரிப்பவர்கள், வீட்டில் மாட்டிவைப்பதற்கான ஏற்பாடு செய்பவர்கள் என தொழில் சார்ந்த பிழைப்பும் அதில் இருக்கும்.  அதையெல்லாம் நாம்  கொன்றுவிட்டு இப்போ கடவுளாகிவிட்டோம். கனிணியிலும் அலைபேசியிலும் தடவித் தடவி புகைப்படங்களை நகர்த்திக்கொண்டே இருக்கிறோம்.

 

துடைத்து துடைத்து பெரும் சுத்தக்காரர்களாக இருப்பவர்களுக்கு ஒட்டடைகளைப் பார்க்க பெரும் ஒவ்வாமை ஏற்படுவதுண்டு. ஆனால் கதிர்பாரதி ‘காலாதிகாலத்தின் தூசி’க் கவிதையில் ஒட்டடையை ஒரு மந்திரக்கோலாக்கி நூற்றாண்டகளின் நிழலை காட்சிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

 

மற்றொரு முக்கிய கவிதை ‘உயிர் பந்தல்’ மீச்சிறு காலமே வாழ எனக்கு நேர்ந்திருந்தாலும் வயலும் வயல் சார்ந்த வாழ்வுக்குமான நாட்களை மழைத்துளிகளாக சேகரிக்கச் செய்தது. பொறுக்குத் தட்டிய விளைநிலம், வெள்ளாமை தின்னும் கால்நடை, விதைப்புக்கால வரப்பு, சுமைதாங்கி மீது வளரும் துயரமென ஒரே கவிதையில் அனுபவ நீர் பாய்ச்ச நிறைய்ய வாய்க்கால்களை வைத்துள்ளார். எவ்வளவுதான் சேந்தினாலும் ஒரு வாய்க்காலில் கூட நீரை ஓட விட முடியாத பெரும் துயர் கணக்க நகர்ந்தேன்.

 

எனை பாதிக்கும் ஈர்க்கும் பெண்கள் உடன் பிறப்பெடுப்பார்கள் மதுவாகினியாக. அவர்களின் நிழலாய் மனம் தொடர்ந்தபடி இருக்கும். கதிர்பாரதியும் பெரும் வாழ்வு வாழ்ந்திருக்கிறார் ஆனந்தியோடு…

 

ஆனந்தியின் பொருட்டு தாழப் பறக்கும் தட்டான்கள் கவிதையின் காட்சியாக்கம் எனை திரும்பத் திரும்ப வாசிக்கச்செய்து தட்டானாக உருமாற்றிக்கொண்டே இருந்தது.

 

காலத்தை பந்தென அங்கிட்டும் இங்கிட்டுமாக உருட்டி விட்டு தவ்வித் தவ்வி அவைகளை உயிர்ப்பித்து ரசிக்கும் விளையாட்டை நமக்கு காட்டிக்கொண்டே இருக்கும் குழந்தைகள் உலகு. அவர்களோடு நாம் இருக்கையில் நம் வயதை தொலையச் செய்யும் அதிசயமும் உண்டு. துயர்களை ஆறுதல்படுத்த தண்ணீர் ஏந்தி நின்று, உறக்கத்தில் பால்யம் நனைத்து, பக்கம் பக்கமாய் புகார் நிரப்பி, ஒன்றை ஒன்று அடித்துக்கொள்ளும் வனவிலங்குகளின் குணாதிசயங்களை போக்கி ஒன்றெயொன்று தழுவி விளையாடச் செய்யும்  மந்திரக் குகைக்குள் நுழைத்து பேரதிசயங்களைக் தரிசிக்கச் செய்திடுகிறார் ‘குழந்தைகளும் குழந்தைகள் நிமித்தமும்’ கவிதையில்.

 

ஒரு குளம் ஏழு குளமாக விரிந்து ஏழுவிதமான வண்ணங்களை காட்டி, ஏழுவிதமான ருசியை உணரச்செய்து மனதில் சில்லிப்பை ஏற்படுத்தின ‘குளத்தில் அலைகின்றன கவிதைகள்’.

 

வாசிப்பவனின் மனதில் இருக்கும் கடவுளையும் ஏக்கத்தில் விழச்செய்திடுகிறது ‘ஏக்கத்தில் விழுதல்’ கவிதை.

 

வறுமையும் நிராகரிப்பும் தன்னைச் சுட்டெரிக்க குளிர்ச்சிக்கொள்ள வீழ்ந்து மாண்ட நல்லதங்காள் கிணற்றை நினைவூட்டியது ‘வீட்டை எட்டிப் பார்த்தல்’ கவிதை.

 

மலைக்குன்றையும் நடுங்கச் செய்யும் வல்லமைகொண்ட கவண்கல்லைத் தூக்கி ‘மலை நடுக்கம்’ கவிதையை பேசும் கதிர்பாரதி மூன்று மச்சலங்காரத்தில் மிகு கிளர்ச்சி அடைந்து நான்காவது மச்சத்திற்காக நாற்றங்கால் விதைத்து மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் என பொய்யுரைக்கிறார்.

 

முதல் காமத்தின் இரவு விடிந்ததும் போர்த்திய ஆடையில் தீட்டிய சந்தோசக் கரை பார்த்து சுருட்டிய இரவை கக்கத்தில் வைத்துக்கொண்டு கண்களில் காமவிளையாட்டுகளை சமிக்ஞை செய்து கடந்த வண்ணாத்தியின் மகிழ்வோடு மோகப்பரிபூரனி நீயென ரதியின் மடிசாய்ந்து அமைதிகொள்ளச் செய்தது தொகுப்பின் வானவில்லென வீற்றிருக்கும் ‘மோகப்பரிபூரனி நீ’

 

‘அப்படித்தான் விழுகிறது’ கவிதையில் விழுகின்றன… விழுகிறது… எனும் வார்த்தைகளை தடதடத்து விழச்செய்து பயணம் முடிய அருகிலிருப்பவனின் முகம் மறந்து போகும் நிலை அக்கவிதைக்குமான நிலையாகிப்போனது…

 

விட்டேத்தியான மனநிலையில் இருப்பவனிடம் காட்டப்படும் பிரியம் அவனால் அம்மனநிலையில் அதை ஏற்றுக்கொள்ளாமல் தேநீர் தயாரித்துத் தரும் பிரியத்தால் அரசாங்கத்தை கலைத்துவிடலாம்தான் என நக்கலடித்து கடக்க நினைக்கையில் பிரியம் அம்மனநிலையின் உயிரை பிளேடால் அரிந்து போக்கச்செய்து ஊர்சுற்றி, எதிர்பாரா கணத்தில் முத்தம் பெற்று, உப்பு மூட்டைத் தூக்கி விளையாடி, ஊடலால் கூடல் அரங்கேறி, அழுது, பதற்றப்பட்டு, பரிசளித்து, கொஞ்சுவதிலிருந்து மீள ஈசல் வார்த்தைகள் என வெறுக்கத் துவங்கினாலும் நிழலாய் உள்ளார்ந்த அன்பை ‘என்ன செய்யலாம்’ கவிதை வெளிப்படுத்தத்தான்  செய்திருக்கிறது.

 

செயல்கள்… அச் செயல்கள் சார்ந்த ஒப்புமை, அந்த ஒப்புமை உண்டாக்கும் அற்புதமென கவிதையை ரசித்து ரசித்து வாசிக்க முடிவில் திரண்டு புடைத்திருந்த ரசனையை சிரிப்பாக்கி துப்பாக்கியுள் நிரப்பும் லாவகம் மகா உன்னதம்.. ‘துப்பாக்கிக்குள் நிரப்புகிறது சிரிப்பு’ கவிதையில்.

 

காமத்தை சிறுநீரில் கழித்து குப்புறப் படுத்துக்கொள்ளும் மகாகவி குறித்த கவிதையாக்கம் தெருக்கூத்திற்காக ராஜா வேஷத்திற்கு அரிதாரம் பூசி ஆடை அணிகலன்களால அலங்கரித்த பின் தன் அழகை தானே ரசித்து ராஜாவாகி கணம் மிளிரும் ஒளி பொருந்திய சூழல் ‘மகாகவி கவிதை’ தலைப்பிலிருக்கும் ஏழு கவிதைகளிலும் பொருந்தியிருப்பது ரசிக்கத்தக்கதாக இருந்தது. தொகுப்பில் 1,2,3…யென எண்ணிட்டு எழுதியிருக்கும் எல்லா கவிதைகளுமே ஈர்ப்புக்குரியதாக இருக்கிறது.

 

மது, மதுக்கூடம் குறித்து எழுதப்பட்ட எல்லாக் கவிதைகளுமே மதுவோடு கலவிகொண்ட மயக்க நிலையிலிருந்து வெளிப்பட்டவையாக இருப்பதால் சிறப்பானவையாகவே இருந்திருக்கின்றன. கதிர்பாரதியின் ‘மதுக்கூடங்களோடு புழங்குதல்’ கவிதையும் அச் சிறப்பை மெருகேற்றியிருக்கிறது தனித்திருப்பவனின் விசும்பலில்… மது, மதுக்கூடங்களைப் பார்க்க, வாசிக்க நேர்கையில் மதுக்கூடத்தில் வேலை பார்க்கும் சிறுவனின் பையிலிருந்து சிதறிய கோலிக்குண்டுகளை மது அருந்த வந்தவர்களும் அவனோடு சேர்ந்து பொறுக்கினார்கள் அவரவர்களின் பால்யத்தையும் என முடித்திருக்கும் யூமா.வாசுகியின்  கவிதை இன்னமும் தொடர்ந்து நினைவில் வந்துகொண்டிருப்பதை தவிர்க்க முடியவில்லை.

 

‘கனவிலிருந்து எழுந்து போய் சிறுநீர் கழித்தேன்’ கவிதையைப் போன்று ரசித்து ரசித்து வாசிக்க தொகுப்பில் நிறைய்ய கவிதைகள் இருப்பதால் படித்து முடித்தோமென தூக்கிப்போட்டு விடாது என்றாவது மீண்டும் வாசிக்க வேண்டும் எனும் மனநிலையை கொடுக்கும் தொகுப்பாக இருக்கிறது கதிர்பாரதியின் ‘மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்…’ கதிர்பாரதிக்கும் தொகுப்பாக்கிய புதுஎழுத்து மனோன்மணிக்கும் என்றென்றும் எனதன்புகள்…