Category: இதழ் 84

வெங்கட் சாமிநாதன் அஞ்சலி நிகழ்ச்சியும் ஆவணப்படத் திரையிடலும் – பெங்களூர்

வெங்கட் சாமிநாதன்

அஞ்சலி நிகழ்ச்சியும்

ஆவணப்படத் திரையிடலும்

 

 

நாள்:  01.11.2015 ஞாயிறு

நேரம் காலை 10.00 மணி

VenueSai Mitra Meadows, Community Hall, August Park Road,

1st-A Cross, Kaagadaasapura, C V Raman Nagar, Bnagalore-560093

 

 

பங்கேற்போர்

விட்டல்ராவ்  ஜி.கே.ராமசாமி  ஜி.எஸ்.ஆர்.கிருஷ்ணன்

ப.கிருஷ்ணசாமி மகாலிங்கம்  முகம்மது அலி பாவண்ணன் திருஞானசம்பந்தம் மற்றும் நண்பர்கள்

ஆவணப்படம் திரையிடல்

இயக்குநர் அருண்மொழி, சென்னை

 

 

For More Details: Sambandam: 09448584648, Paavannan: 9449567476

வெங்கட்சாமிநாதனின் அஞ்சலி கூட்டம்

 

download (15)

 

 

 

விருட்சமும் டிஸ்கவரி புத்தக அமைப்பும் சேர்ந்து நடத்தும் கூட்டம்

    
             வெங்கட்சாமிநாதனின் அஞ்சலி கூட்டம்

    இடம் :         டிஸ்கவரி புத்தக விற்பனை நிலையம்
            கே கே நகர் மேற்கு, சென்னை 78
            (புதுச்சேரி  விருந்தினர் மாளிகை அருகில்

    தேதி        23.10.2015  (வெள்ளிக் கிழமை)        
    நேரம்         மாலை 5.30 மணிக்கு

    தலைமை :     பாரதி மணி 
    
    பேசுவோர் :           வெளி ரங்கராஜன், அம்ஷன் குமார்,   
ம.ராஜேந்திரன், க்ருஷாங்கினி, பாரவி, சிவக்குமார், பொன் தனசேகரன், வேல் கண்ணன், விஸ்வம், வேடியப்பன், அழகியசிங்கர், கிருபானந்தன்
இன்னும் பலர்…..

    வெங்கட் சாமிநாதன் : எழுத்து காலத்திலிருந்து தொடங்கி புத்தக விமர்சனத்தையே தன் முழு நேர உணர்வாகக் கொண்டு எழுதியவர்.  கடைசி மூச்சு வரை எழுதுவதையும், படிப்பதையும் தன் முழு நேரமாக மாற்றிக் கொண்டவர்.  அவருடைய எதிர்பாரத மரணம் குறித்துதான் இந்த அஞ்சலி கூட்டம். 

       அனைவரும் வருக,

        அன்புடன்
நவீன விருட்சம் -  டிஸ்கவரி புத்தக அமைப்பு    

வெங்கட் சாமிநாதனைப் பற்றி சில தகவல்கள்…… – அழகியசிங்கர் 

 

download (3)

    சமீபத்தில் நான் பங்களுர் சென்றேன்.  கிட்டத்தட்ட பல ஆண்டுகள் கழித்து. என் உறவினர் ஒருவர் உடல்நிலை சரியில்லை என்றுதான் சென்றேன்.  எப்போதும் நான் பங்களூர் செல்லும்போதெல்லாம் எழுத்தாளர்கள் சிலரை சந்திக்காமல் இருக்க மாட்டேன்.  அப்படிச் சந்திக்காமல் இருந்து விட்டால் பங்களூர் என்னை ரொம்பவும் தனிமைப் படுத்தி விடுவதாக தோன்றும்.
    மல்லேஸ்வரத்தில் உள்ள என் உறவினர் வீடு ரொம்ப பிரமாதமான இடம்.  ஆனால் நான் விரும்புகிற மாதிரி பேசுகிற நண்பர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.  சென்னையில் நான் இருந்தேன் என்றால் எதாவது பேசிக்கொண்டிருப்பேன்.  எழுதிக் கொண்டிருப்பேன்.  ஆனால் பங்களூரில் அதுமாதிரி முடியாது.  வெயிலை அதிகமாகக் காண முடியாத அந்த இடமும் என்னை வெறுப்படைய வைத்துவிடும்.
    நான் மதிக்கும வெங்கட் சாமிநாதன் சென்னையிலிருந்து பங்களூர் சென்று விட்டார்.  அவர் மனைவி இறந்த பிறகு.  அவருடைய ஒரே பையன் வீட்டில்தான் அவர் வசித்து வந்தார்.  இந்த முறை பங்களூர் வந்தபோது அவரைக் கட்டாயம் பார்க்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டேன். அதுதான் கடைசி முறையாக அவரைப் பார்க்கிறேன் என்பது எனக்கு இப்போதுதான் தெரிகிறது. ஒவ்வொரு முறையும் நான் அவரைப்  பார்க்கும்போதும் அவருடைய கோபத்தையே பார்ப்பதுபோல் தோன்றும்.  
    சென்னையில் அவர் இருக்கும்போது பல தடவைகள் அவரைப் பார்ப்பதுண்டு.  தில்லியை விட்டு அவர் சென்னை வரும்போது ஒருமுறை அவர் மனைவி நகைகள் சிலவற்றை தொலைத்து விட்டார். எதைச் சொல்லும்போதும் வெ சா பதட்டத்துடன் சொல்ல மாட்டார்.  சொல்வதில் வருத்தம் இருக்கும்.  ஆனால் அவர் கோபப்படடடால் அதை வெளிப்படுத்தாமல் இருக்க மாட்டார்.  யார் மீதாவது அவருக்குக் கோபம் இருந்தால அதில் விடாப்படியாக இருப்பார்.
    சிறு பத்திரிகைகள் மூலம் அவரைப் பற்றி கேள்விபட்டபோது, ஒரு முறையாவது அவரைச் சந்திக்க வேண்டுமென்று நினைப்பதுண்டு. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன் அவர் வீடு தேடி நான் டில்லிக்குச் சென்றேன்.  
    நான் இருந்த இடமும் அவர் இருந்த இடமும் எங்கோ இருந்தது.  பாஷை புரியாத அவஸ்தை.  எனக்கோ எல்லார் வாயிலும் அகப்பட்டுக் கொள்கிற இந்த வெங்கட் சாமிநாதனை எப்படியாவது பார்த்து விட வேண்டுமென்று தோன்றியது.  என் முதல் சந்திப்பு அப்போதுதான் நடந்தது.
    என்னைப் பற்றியெல்லாம் விஜாரித்து பேசிக் கொண்டே வந்தவர் ஒரு அறையைக் காட்டினார். 
    “என்ன?” என்றேன்.
    “இதில் உள்ள புத்தகங்களை எடுத்துக் கொள்ளுங்கள்,” என்றார்.
    எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  அந்த அறை முழுவதும் சுவரை ஒட்டி புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. நான் சில புத்தகங்களை எடுத்துக் கொண்டேன்.  பின், “இந்த டில்லியில் பஸ்ஸில் போவது மோசமானது.  நான் உங்களை கொண்டு விடுகிறேன்  சிறிது தூரம்,” என்றார். 
    எழுத்து மூலம் அவர் பலருடன் சண்டைப் போடுவது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  குறிப்பாக பிரமிள், அசோகமித்திரன், ஞானக்கூத்தன். ஒருவரைப் பிடிக்கவில்லை என்றால் அதிலேயே உறுதியாக இருப்பார் என்பதையும் நான் அவரிடம் எதிர்பார்க்கவில்லை.
    அன்று தில்லியில் அவருடன் பஸ்ஸில் போனபோது, கண்டக்டருக்கும் ஒரு சில பயணிகளுக்கும் பெரிய கலகலப்பே ஏற்பட்டது.  என்னுடன் என்னை ஒரு இடத்திற்குக் கொண்டு வர இருந்த வெங்கட்சாமிநாதனைப் பார்க்கும்போது, ஒன்றுதான் ஞாபகம் வந்தது. இவர் போகுமிடமெல்லாம் எதாவது சண்டை ஏற்படுகிறதே என்று. வெங்கட் சாமிநாதனுக்குசுச் சிலரைப் பிடிக்கவில்லை என்றால் அவர்களைப் பற்றி மோசமாக சொல்லாமல் இருக்க மாட்டார்.
    அவர் தில்லியிலிருந்து சென்னைக்கு  குடி வந்தபோது ஒரு மாசம் காலியாக இருந்த என் வீட்டில்தான் தங்கியிருந்தார்.  மடிப்பாக்கத்தில் அவர் வீடு கட்டிக்கொண்டு போகும்போது, மடிப்பாக்கத்திலேயே ஒரு வீட்டில் குடியிருந்தார்.  
    நான் அடிக்கடி அவரைச் சந்திப்பது உண்டு.  எதாவது உதவிகளும் அவருக்குச் செய்வதுண்டு.  அவர் தன் சேமிப்புகளில் சிலவற்றை சில இடங்களில் டெபாசிட் பண்ணி இருந்தார்.  அதிக வட்டிக்கு ஆசைப்பட்டுக்கொண்டு.  பங்களூரில் இருந்த என் உறவினர் கூட கிட்டத்தட்ட 10 லட்சம் வரை அப்படி டெபாசிட் செய்து எல்லாவற்றையும் இழந்து விட்டார்.  வெ சாவும் அப்படி இழந்து விட்டார்.
    வெங்கட் சாமிநாதன் எப்போதும் பிடிவாதமானவர்.  அவர் சென்னைக்கு வந்தபிறகுதான் அவருடைய எழுத்துக்கள் பல புத்தகங்களாக வெளிவந்தன.  முதன் முதலில் அவர் டில்லியில் இருந்தபோது எழுதாமல் இருந்தார்.  நான் அவரிடமிருந்து கேட்டு விருட்சத்தில் பிரசுரம் செய்தேன்.  இதெல்லாம் ஆரம்பத்தில்.  அதன் பின் அவர் சென்னையில் அதிகமாகவே எழுதினார்.
    அவர் யாரைப் பார்த்தாவது விமர்சனம் செய்தார் என்றால் கடூரமாக இருக்கும்.  சில சமயம் அதைக் படிக்குமபோது தாங்க முடியாத சிரிப்பையும் வரவழைத்து விடும்.  உதாரணமாக அவர் வல்லிக் கண்ணனைப் பற்றி ஒன்று சொல்வார்.  ‘அவர் ஒரு டெச்பேட்ச் க்ளார்க்’ என்று.  உண்மையில் வல்லிக் கண்ணனும், திகசியும் அவர்களுக்கு அனுப்பும் புத்தகங்களையும் பத்திரிகைகளையும் பார்த்து படித்து விட்டு வாழ்த்தி ஒரு கார்டில் கடிதம் எழுதாமல் இருக்க மாட்டார்கள்.  பத்திரிகை புத்தகம் போடுபவரை உற்சாகப்படுத்தாமல் இருக்கமாட்டார்கள்.  நான் என் பத்திரிகையை அனுப்பினால் கடிதம் எழுதாமல் இருக்க மாட்டார்கள்.  அவர்கள் கடிதம் வந்தபிறகுதான் எனக்கு நிம்மதி மூச்சு வரும்.  ஓ  நம் பத்திரிகை எல்லோருக்கும் போய்ச் சேர்ந்து விட்டது என்று.

download (16)

 

 


    அவர் சென்னையில் இருந்தபோது அந்த நாட்கள் மறக்க முடியாதது.  பல நிகழ்ச்சிகளுக்கு அவரை அழைத்துப் போயிருக்கிறேன்.  அவரைச் சந்திக்கும்போதெல்லாம் அவர் என் மற்ற எழுத்தாள நண்பர்களை எல்லாம் கிண்டல் செய்யாமல் இருக்க மாட்டார்.  ஏன் இவருக்கு இதுமாதரி எல்லார் மீதும் கோபம் என்று தோன்றும்.  
    நான் அடிக்கடி எல்லோரிடமும் போன் பண்ணி பேசிக் கொண்டிருக்க மாட்டேன்.  எப்போதாவது போன் பண்ணி பேசும்போது மட்டும், “என்ன உன் குரு சொல்றபடி கேட்கிறியா?”என்பார். 
    “நான் யாரையும் குருவாக ஏற்றுக் கொள்ளமாட்டேன்.  என்னை யாரும் சிஷ்யனாகவும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்,”என்பேன்.
    ஆனால் என்னைப் பார்த்தால் நம்ப மாட்டார்.  ந பிச்சமூர்த்திக்கு ஒரு விழா எடுத்தோம்.  நான், ஞானக்கூத்தன், ராஜகோபாலன் என்று பலருடைய முயற்சியில் நடந்தது.  அக் கூட்டத்திற்கு ஜி கே மூப்பனார் தலைமை வகித்தார். வெங்கட் சாமிநாதனும் அக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.  மறக்க முடியாத கூட்டம் அது.
    வெங்கட் சாமிநாதன் பங்களூர் சென்ற பிறகு நான் அவரை சந்திப்பது நின்றே போய்விட்டது.  பங்களுரிலிருந்து யாரையாவது பார்த்தால் வெ சாவைப் பற்றி விஜாரிக்காமல் இருக்க மாட்டேன். என் பையன் திருமணத்திற்கு பத்திரிகை அனுப்பினேன். அவர் வாழ்த்தி பதில் எழுதினார்.  போனில் பேசவே எனக்கு அவரிடம் நடுக்கம்.  கோபத்துடன் பேசுவாரோ என்ற பயம்தான்.
    சமீபத்தில் பங்களூர் செல்லும்போது ஜøலை மாதம் அவரைப் பார்க்கச் சென்றேன்.  மகாலிங்கம் என்ற நண்பர்தான் என்னை அழைத்துக் கொண்டு போனார்.  அதே கம்பீரமான தோற்றத்துடன் வெங்கட் சாமிநாதன் இருந்தார்.  ஆனால் அதே கோபத்துடன் அவர் பேசினார்.  அவர் எதையுமே மறக்க வில்லை.  தேவை இல்லாமல் மற்ற இலக்கிய நண்பர்களைத் திட்டாமல் இல்லை.   வேண்டாத விருந்தாளியைப் பார்ப்பதுபோல்தான்ல என்னைப் பார்த்தார். அவரைப் பார்ப்பது இதுதான் கடைசி முறையாக இருக்குமோ என்று கூட எனக்குத் தோன்றியது.  அவர் வீட்டில் உள்ளவர்களை எனக்கு அறிமுகப்படுத்தினார்.  அவர் ஒன்றே ஒன்றுதான் என்னைப் பார்த்துக் கேட்டார்.  “நீ ஏன் என் புத்தகங்களைப் படித்து விட்டு ஒன்றும் எழுதுவதில்லை,” என்று.
    அவர் கேட்டது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  அவர்தான் பலருடைய புத்தகங்களைப் படித்துவிட்டு விமர்சனம் எழுதிக் குவிப்பவர்.  பொதுவாக நான் சிலருடைய புத்தகங்களை விமர்சிப்பதில்லை.  அதில் வெங்கட்சாமிநாதனும் ஒருவர்.  நான் எதையாவது எழுதப் போய் அவருக்குப் பிடிக்காமல் போய்விடுமோ என்ற அச்சமதான் காரணம்.  
    நான் பங்களூரிலிருந்து திரும்பி வந்தபோது அவர் புத்தகம் எதையாவது விமர்சனம் செய்ய வேண்டுமென்று எடுத்து வைத்துக்கொண்டேன். 

 

download (18)

அவருடைய, “என் பார்வையில் சில கதைகளும் சில நாவல்களும்” என்ற புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டேன்.  ஒரு படைப்பாளியாக மாறாமல விமர்சராகவே கடைசி வரை இருந்துவிட்டாரே என்ற ஆச்சரியம் எனக்கு அவர் மீது உண்டு.  எல்லோரையும் திருப்தி செய்வதுபோல் ஒரு புத்தகத்தை பாராட்டவே முடியாது.  எத்தனைப் புத்தகங்களைப் பற்றி தன் மனதில் பட்டதை எழுதி இருக்கிறாரே என்ற ஆச்சரியம் எனக்கு எப்போதும் உண்டு.

    காலையில் அவர் மரணம் அடைந்த செய்தியை அறிந்தேன்.  அவர் ஆத்மா சாந்தி அடைய எல்லாவல்ல இறைவனை வேண்டுகிறேன்.  
    

**********

ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜூலியட் / ஆங்கில வழி மொழியாக்கம் – சத்தியப்பிரியன்.

download (12)

 

ஒரு சொல் : ரோமியோ ஜூலியட் கதை காலம் கடந்த காதல் கதை. உலகில் மொத்தம் பத்து காதல் கதைகளை பட்டியலிட்டால் அதில் இந்த ரோமியோ ஜூலியட் கதை கண்டிப்பாக இடம் பெறும். இரண்டு தனிக்குடிகளுக்கு இடையில் உள்ள பகைமை இரண்டு காதலர்களை வாழ்வில் ஒன்று சேரவிடாமல் மரணத்தில் ஒன்று சேர்க்கும் கதை. ஷேக்ஸ்பியர் இதனை எழுதத் தொடங்கிய தனது ஆரம்ப காலங்களில் காதல் ஒன்றும் சோகத்தில் முடியும் விஷயமாக இருக்கவில்லை. எழுதப்பட்ட காலத்தில் இந்த நாடகம் மிகவும் பிரபலமானது. ஷேக்ஸ்பியரின் வாழ்நாளுக்குள் இரண்டு முறை இந்த நாடகம் நூல் வடிவில் அச்சேறியது, மிகப் பெரிய சாதனை. நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னர் அச்சுக்கலை இப்போது இருப்பதை போல நவீன தொழில்நுட்பத்துடன் இருக்கவில்லை. இதில் வரும் மேல்மாடக் காட்சி இன்றளவில் பெரிதும் ரசிக்கபட்டும், பலரது கற்பனைக்கு ஒரு உந்துதலாகவும் இருந்து வருகிறது.

பெரும்பாலான ஷேக்ஸ்பியரின்  நாடகங்கள் தனக்கு முன்னால்  இருந்த நூல்களின் கதைகளை  ஒட்டியே இருக்கும். இந்த  நாடகம் கூட ஆர்தர் ப்ரூக்  என்ற எழுத்தாளரின் ரோமியோ  ஜூலியட் இருவரின் சோக  வரலாறு என்ற நூலிலிருந்து  எடுத்தாளப்பட்டட கதைதான். குடிவழி வம்சாவழி பெருமைகளைத் தூக்கி நிறுத்தும் நாடகம் என்றாலும் இந்த ரோமியோ ஜூலியட் நாடகம் ரசிகர்களிடம் எளிதில் சென்றடைந்த நாடகம். ஜூலியஸ் சீசரைப் போலவே எலிசபெத் கால நாடக உலகை பற்றி அறிந்து கொள்ள மேற்கத்திய மாணவர்களால் பெரிதும் விரும்பி படிக்கப்பட்ட நாடகம் இதுவாகும். இந்த நாடகம் முழுவதும் ஷேக்ஸ்பியர் மொறு மொறு என்று தூவிய காதல் கவிதைகளுக்காவே இந்த நாடகம் பலரைச் சென்றடைந்தது. அனைத்து மறுக்கப்பட்ட காதல் கதைகளுக்கும் இந்த ரோமியோ ஜூலியட் முன்மாதிரி.

கதைச் சுருக்கம் :

 

மாண்டேகு மற்றும் கபுலெட் இரண்டும் இத்தாலி நாட்டில் உள்ள வெரோனா நகரின் இரண்டு உயர்குடிகள். அரசாங்கப் பணியில் உயர்பதவி வகிப்பவர்கள். ஆனால் இரண்டு குடிகளுக்கும் நடுவில் ஜென்மப்பகை ஒன்று வம்சாவழியாகத் தொடர்கிறது. இரண்டு குடியினருக்கும் நடுவில் நடந்த கைகலப்பிற்கு பின்புதான் ரோமியோ அறிமுகமாகிறான்.இந்தக் கைகலப்பினால் வெறுத்துப்போன வெனோரா நகர இளவரசர் எஸ்கலஸ் தலையிட்டு இனி இது போன்ற மோதல் நிகழ்ந்தால் இரண்டு குடிகளும் கடுமையான தண்டனை பெறநேரிடும் என்று எச்சரித்து விடுகிறார்.

நாடகத்தில் வெறும்  வாய்மொழியில் அறியப்படும்  ரோசலின் என்ற பெண்தான்  ரோமியோவின் முதல் காதல். ஆனால் கைகூடாத காதல். ரோசலின்  நினைவாக வாடும் ரோமியோ. பதின்மூன்று வயதே நிரம்பிய ஜூலியட் வெனோராவின் துடிப்பும் வசீகரமும் காதலும் நிரம்பிய பாரிஸ் என்ற இளைஞனுக்கு நிச்சயம் செய்யப்படுகிறாள். இருவரும் ஜூலியட்டின் தந்தையான திருவாளர் . கபுலெட் இல்லத்தில் இரவு நடைபெற உள்ள முகமூடி பால் நடனத்தில் சந்திக்க உள்ளனர். ரோமியோவும் அந்த பால் நடனத்தில் மாற்றுடையில் தனது காதலியான ரோசலின் கலந்து கொள்ளஇருப்பது தெரிந்து படு உற்சாகமாக கிளம்பி வருகிறான். விதி மாற்று வழிகளை காட்டிவிட ரோமியோவும் ஜூலியட்டும் காதலில் வீழ்கின்றனர். ஜூலியட்டின் ஒன்றுவிட்ட சகோதரன் திபல்ட் ரோமியோவை அடையாளம் கண்டு கொள்கிறான். அந்த இடத்திலேயே ரோமியோவை கொன்றுவிட முயற்சிக்கிறான். அவன் முயற்சி வெற்றியடையவில்லை. கபுலெட் பிரபு தடுத்து விடுகிறார்.

பார்ட்டி முடிந்ததும் ரோமியோ ஜூலியட் மாளிகையில் அவளுடைய மேல்மாடத்தின் கீழ் உள்ள இடத்தில் பதுங்கி தங்களது திருமணம் குறித்து திட்டமிடுகிறான்.

இனிமேல்தான் கதையில் சிக்கல் ஏற்படுகிறது. ரோமியோ ஜூலியட் இருவர் மீதும் அபிமானம் கொண்ட பாதிரியார் லாரன்சை ரோமியோ சந்தித்து தனது காதலைத் தெரிவிக்கிறான். தனது செவிலித்தாயிடம் ஜூலியட் தனது காதலைத் தெரிவிக்கிறாள். செவிலி ரோமியோவையும் எந்த தருணத்தையும் நகைப்புக்கிடமாக்கும் அவனது நண்பன் மெர்குஷியோவையும் சந்திக்கிறாள். ரோமியோ செவிலியிடம் ஜூலியட்டை பாதிரியார் லாரன்ஸ் இருக்கும் இடத்திற்கு அழைத்துவரச் சொல்லுகிறான். மறுநாள் பாதிரியார் லாரன்ஸ் முன்பு ரோமியோ ஜூலியட்டை ரகசியமாக மணக்கிறான்.  செவிலி மணநாள் இரவு ஜூலியட்டின் சாளரத்தை எட்டுவதற்கு ஒரு ஏணி ஏற்பாடு செய்கிறாள்.

மறுநாள் ரோமியோவின் ஒன்றுவிட்ட சகோதரனும் அவசரக்காரனுமான திபல்ட் ரோமியோவைத் தேடி வருகிறான். ரோமியோவைக் காணாது ரோமியோவின் நண்பர்களான பென்வோலியோ மற்றும் மெற்குஷியோ இருவருடனும் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறான். நடுவில் நுழையும் ரோமியோவை திபல்ட் வலுச் சண்டைக்கு இழுக்கிறான். அந்த நேரம் சமாதானமாக போகவே ரோமியோ தீர்மானிக்கிறான். ஆனால் திபால்டின் பேச்சினால் கிளர்ந்தெழும் மெற்குஷியோ அவனுடன் சண்டைக்கு செல்கிறான். திபல்ட் கையில் உள்ள வாளால் மெற்குஷியோவைத் தாக்கி விட்டு சென்று விடுகிறான். மெற்குஷியோ இறந்து விடுகிறான். இதனால் ஆத்திரமடையும் ரோமியோ திபால்டை வாளால் வெட்டிக் கொன்று விடுகிறான். இந்தக் கலவரத்தின் இறுதியில் வரும் இளவரசர் எஸ்கலஸ் ரோமியோவை வெனோரா நகரத்திற்குள் நுழையக்கூடாது என்று உத்தரவிடுகிறார்.

அந்த இரவு ஜூலியட்டின் அறைக்குள் ரோமியோ நுழைகிறான். அந்த இரவு அவர்களது முதல்இரவாகிறது. விதியின் விளையாட்டு குரூரமாகிறது. முதல் இரவு கழிந்த மறுநாள் ஜூலியட்டின் பெற்றோர்களான கபுலெட் தம்பதிகள் சுளியட்டிற்கு பாரிசை நிச்சயம் செய்கின்றனர். ஜூலியட் மறுத்தும் பயனில்லை.

ஜூலியட் தங்கள் இருவருக்கும் மணமுடித்து வைத்த பாதிரியார் லாரன்சை சந்திக்கிறாள். அப்போது அந்தப் பாதிரியார் மூலிகை மருந்து ஒன்றை ஜூலியட்டிற்கு தருகிறார். அந்த மருந்தை உட்கொள்வதால் சரியாக 42 மணி நேரத்திற்கு இறந்தவளைப் போல பிணமாக கிடக்க்கலாம் என்றும் அவள் இறந்து விட்டாள் என்று கபுலட் தம்பதியர் அவளை மயானத்தில் அடக்கம் செய்வார்கள் என்றும் அதைக் கேள்விப்பட்டு ஓடிவந்து பார்க்கும் ரோமியோ ஜூலியட் சாகவில்லை என்பது அறிந்து அவளை அழைத்துக் கொண்டு விடுவான் என்கிறார்.

விதி வேறு விதமாக விளையாடியது…..

எப்படி என்பதை என்னுடன் malaigal.com என்ற இணைய இதழில் தொடர்ந்து வாருங்கள் ஐந்து வாரங்கள். ஷேக்ஸ்பியரின் காதல் கவிதைகளுடன் சற்று ஆசுவாசமாக பயணிப்போம்.

அன்புடன் என்றும்,

சத்தியப்பிரியன்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஷேக்ஸ்பியரின்  -ரோமியோ ஜூலியட்- தமிழில் மொழியாக்கம் –சத்தியப்பிரியன்.

பீடிகை

சேர்ந்திசைப் பாடல்.

வெனோரா நகரில் வாழ்ந்திருந்த உயர்குடி இரண்டின் கதை சொல்வோம்.

வேதனை மிகுந்த பகைமையினால் வீணாய்ப் போன கதை சொல்வோம்

பறந்து திரியும் ஆண்சிட்டு பருவம் நிரம்பிய பூஞ்சிட்டு-தம்மை

மறந்து சேர்கையிலே பகைமை வீழ்த்திய கதை சொல்வோம்.

பெற்றவர் இருவர் பகைமையினால் பிள்ளைகள் மரித்த கதை சொல்வோம்.

உற்றவர் கேளிர் ஆகாமல் இரத்தம் சிந்திய கதைசொல்வோம்.

குலத்தின் பெருமை காத்திடவே உருவிய வாளின் முனையினிலே

கொடிகள் இரண்டு வதைபட்டு குற்றுயிரான கதை சொல்வோம்.

காதல் என்பது தெய்வ வழி; காளையற்கெல்லாம் அன்பு வழி

நோதல் நிறைந்த உலகினிலே காதல் என்றும் மரணவழி.

இரண்டே மணித்துளி நேரத்தில் இந்தக் கதையை கூறிடுவோம்

கவனம் கொண்டு கேட்டிடுங்கள் காதலை வாழ்த்திப் பாடுங்கள்.

 

 

 

 

 

 

 

 

 

 

காட்சி -1

இடம் : வெனோரா நகர வீதி.

கபுலெட் குடியைச் சேர்ந்த இருவர் கைகளில் வாள் கேடயத்துடன் வருகின்றனர். ஒருவன் சாம்சன் மற்றவன் கிரிகாரி.

சாம்சன் : சத்தியமாக சொல்கிறேன் இனிமேலும் என்னால் அவர்களது ஏளனம் என்ற பொதியை சுமக்க முடியாது.

கிரிகாரி ( வெறுபேற்றும் துவனியில் ) பொதி சுமக்க நீ என்ன கழுதையா?

சாம்சன் : அவர்கள் நம்மை வெறுப்பேற்றினால் அவர்கள் மேல் பாய்ந்து விடுவேன்.

கிரிகாரி : கழுத்துப்பட்டை இருக்கிறாதா என்று பார்த்துக் கொண்டு பாயப்பா. பிறகு உரிமம் இல்லையென்று பிடித்துக் கொண்டு போய்விடுவார்கள்.

சாம்சன் : எனக்கு கோபமூட்டாதே. கோபம் வந்தால் நான் நானாக இருக்க மாட்டேன்.

கிரிகாரி : உன்னை அவ்வளவு எளிதில் கோபப்படுத்த முடியுமா என்ன?

சாம்சன் : மாண்டேகு வீட்டு நாய் ஒன்று என்னை விட்டு ஆட்டி விட்டது.

கிரிகாரி : அசைந்து ஆட்ட வேண்டும். துணிந்து நிற்க வேண்டும். அசைந்தால் உன்னால் நிற்கமுடியாது. நழுவி விடுவாய்.

சாம்சன் : அந்த மாண்டேகு வீட்டு நாய்தான் என்னை இப்படி நிற்க வைத்திருக்கிறது. வரட்டும் வருவது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் மாண்டேகு வீட்டு வேலைக்காரரின் சுவரில் சாய்த்து இடுப்பை முறிக்காமல்  விடப்போவதில்லை.

கிரிகாரி : போக்கத்தவர்கள்தான் சுவரை நோக்கி செல்வார்கள்.

சாம்சன் : பெண்கள்தான் போக்கற்றவர்கள். ஒன்று செய்கிறேன் மாண்டேகு வீட்டு ஆண் வேலைக்காரர்களை விட்டு விட்டு பெண்களை சுவற்றில் வைத்து சாத்துகிறேன்.

கிரிகாரி : தம்பி ! பகை நமக்கும் அந்த வேலைக்காரகளுக்கும் இல்லை. நமது எஜமானர்களுக்கு நடுவில்.

சாம்சன் : நான் அடங்காதவன் என்று அவர்களுக்குக் காட்டுகிறேன். ஆண்களின் மண்டையையும் பெண்களின்…

கிரிகாரி : பெண்களின் ?

சாம்சன் : வாயையும் கிழித்து விடுகிறேன்.

கிரிகாரி : என்னது பெண்களைக் கிழிக்கப் போகிறாயா? என்ன வேண்டுமானாலும் பண்ணிக் கொள்.

சாம்சன் :நான் சொன்னதை எப்படி வேண்டுமானாலும் அர்த்தப் படுத்திக் கொள்

கிரிகாரி : நீ கிழிக்கப் போவதை அந்த பெண்களுக்கு உணர வை.

சாம்சன் : நான் கிழிப்பதில் கெட்டிக்காரன் என்று அவர்களுக்கு ஏற்கனவே தெரியும். நான் சுறா.

கிரிகாரி : சுறாவோ கருவாடோ யாருக்குத் தெரியும்?

( மாண்டேகு இல்லத்திலிருந்து ஆப்ரகாம் மற்றும் ஒரு பனியாலும் வருகின்றனர். )

அதோ மாண்டேகு வீட்டிலிருந்து ஆள் வருகிறது. உன் ஆயுதத்தை உருவி தயார் நிலையில் வைத்துக் கொள்.

சாம்சன் : உறையிலிருந்து என் கூர்மையான ஆயுதத்தை வெளியில் உருவி வைத்திருக்கிறேன். நீ முன்னால் போ. நான் உன் பின்னால் வருகிறேன்.

கிரிகாரி : என் பின்னாலிருந்தா? என் பின்னால் இருந்து என்ன செய்வாய்? ஒரே ஓட்டமாக ஓடி விடுவாயா?

சாம்சன் : என்னை பற்றி கவலைப்படாதே.

கிரிகாரி :பின்னால் இருந்து தாக்குவதாக சொல்கிறாய். எப்படி கவலைப்படாமல் இருக்க முடியும்?

சாம்சன் : நாம கட்டுபாட்டை மீறாமல் இருப்போம். அவர்கள் ஆரம்பிக்கட்டும். அப்புறம் பார்.

கிரிகாரி :அவர்கள் கடந்து செல்லும்போது முகத்தை சுளிக்கிறேன். அது அவர்களுக்கு எரிச்சலூட்டும்.

சாம்சன் :நான் வாயில விரலை வச்சு சூபுகிறேன். அது அவர்களை மேலும் வெறுப்பேற்றும் ( வாயில் வெறுப்பேற்றும் விதமாக கடை விரலை சூப்புகிறான் )

ஆப்ரஹாம் : யார் வாயில் விரலை வைத்து சூப்பியது?

சாம்சன் : நான் இல்லை.

ஆப்ரகாம் ( கிரிகாரியைப் பார்த்து ) நீங்களா ஐயா?

கிரிகாரி :இல்லை.

சாம்சன் : நான் விரல் சூப்பினேன். ஆனால் உங்களை பார்த்து சூப்பவில்லை.

கிரிகாரி : ஐயா கோவித்துக் கொண்டு விட்டார். சண்டைக்கு வருவார் பாரேன்.

ஆப்ரகாம் : சண்டைக்கா? இல்லவே இல்லை.

சாம்சன் : சண்டை போட வேண்டும் என்றால் என்கிட்டே வாங்க ஐயா. நான் உங்களுக்குத் தகுதியானவன். ஒரு நல்ல எஜமானனுக்கு நான் சேவகம் செய்பவன்.

ஆப்ரகாம் : சிறந்தவர் இல்லை.

சாம்சன் : அப்புறம் ?

( பென்வோலியோ நுழைகிறான் )

கிரிகாரி ( சாம்சன் காதில் மட்டும் விழும்படி ) நம் எஜமானனின்  உறவினர் வருகிறார். சிறந்தவர் என்று சொல்.

சாம்சன் “ இல்லை. அவர் சிறந்தவர்.

ஆப்ரகாம் : பொய் சொல்லாதே.

சாம்சன் : பொய்யா சொல்கிறேன் ( வாளை உருவுகிறான் ) ஆண் மகன் என்றால் வாளை உருவி நில்லுங்க பார்ப்போம்.

( திபல்ட் வருகிறான் )

திபல்ட் : என்னது ? இந்த அற்பர்களுக்காகவா வாட்களை உருவினீர்கள்? திரும்பிப் பார் பென்வோலியோ உன் தலையெடுக்க யார் வந்திருப்பது என்று.

பென்வோலியோ :அமைதி ஏற்படுத்தவே இங்கே வந்தேன்.உன் உருவிய வாளை ஒன்று உறையில் போடு. அல்லது இந்த சச்சரவை அமைதிபடுத்த வா.

திபல்ட் : யார்….?… யார் அமைதியை பற்றி பேசுவது? வாளை உருவி நிற்கும் நீயா? சாவைப் போலவே அமைதி என்ற வார்த்தையை நான் வெறுக்கிறேன். உன்னையும் மாண்டேகுக் குடியினரையும் வெறுப்பது போல. வா பார்க்கலாம் ஒரு கை.

( இருவரும் வாட்சண்டை இடுகின்றனர். நான்கைந்து குடிமக்கள்  கைகளில் ஈட்டி, கம்புகளுடன்  வருகின்றனர். )

குடிமக்கள் :உங்கள் ஈட்டிகளாலும் கழிகளாலும் அவர்களை விரட்டுங்கள். கபுலெட் ஒழிக. மாண்டேகு ஒழிக.

( திருவாளர் கபுலெட் அவர்  மனைவியுடன் வருகிறார். )

கபுலெட் : என்ன சச்சரவு இங்கே ? என் நீண்ட வாள் எங்கே ?

திருமதி கபுலெட் : ஊன்றுகோல் பிடிக்கும் கைக்கு வாள் கேட்கிறதா வாள் ?

( மாண்டேகும் அவர் மனைவியும்  வருகின்றனர். )

மாண்டேகு: பாதகா ! உன்னை என்ன செய்கிறேன் பார் ( பின்னால் திருமதி மாண்டேகு பிடித்திழுக்க ) விடு விடு என்னை.

திருமதி மாண்டேகு : ம் ! எதிரியை நோக்கி ஒரு அடி கூட நீங்கள் வைக்க விடமாட்டேன்.

( இளவரசர் எஸ்கலஸ் வருகிறார் )

இளவரசர் : எதிரிகளான குடிகளே ! நீங்கள் எதிர்ப்பது அமைதியை. அண்டைவீட்டினர் நடுவில் ஆயுதமா? நான் சொல்வது காதில் விழவில்லையா? நீங்கள் மனிதர்களா இல்லை விலங்குகளா? அடுத்தவன் இரத்தத்தில் குளிக்க நினைக்கும் நீங்கள் மனிதர்கள் இல்லை மிருகங்கள். வாளைக் கீழே போடாவிட்டால் கடுமையான தண்டனைக்கு ஆளாவீர்கள். சினம் கொண்ட உங்கள் இளவரசரின் பேச்சைக் கேளுங்கள். ( மாண்டேகு, கபுலெட் மற்றும் அவர்களைச் சேர்ந்தவர்கள் ஆயுதங்களைக் கீழே போட்டு விடுகிறார்கள் ) இதுவரை மூன்றுமுறை கலவரம் மூண்டிருக்கிறது; மூத்த கபுலெட் மற்றும் மாண்டேகு உங்கள் இருவரின் சூடேற்றும் வார்த்தைகளால். இந்த வெனோரா மூத்த குடிமக்களும் உங்களுக்காக தங்கள் செல்வத்தையிழந்து ஈட்டி கேடயத்தை ஏந்தி உங்க பக்கம் நிற்க வேண்டியுள்ளது. மீண்டும் ஒரு முறை இப்படி ஒரு கலவரத்தை பார்க்க நேரிட்டால் அதன்பிறகு இந்த நகரின் அமைதியை குலைத்ததற்காக கடுமையான விளைவுகளை நீங்கள் எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கிறேன்.மற்ற எல்லோரும் கலைந்து செல்லுங்கள் (கபுலெட்டை நோக்கி ) கபுலெட் நீங்கள் மட்டும் என்னுடன் வாருங்கள். (மண்டேகுவைப் பார்த்து ) மாண்டேகு நீங்கள் இன்று மதியம் பழைய நகரில் இருக்கும் நீதிமண்டர்த்திற்கு வாருங்கள். அங்கு நான் தீர்ப்பளிக்கிறேன். அதன் பிறகு நீங்கள் செய்ய வேண்டியவற்றைப் பற்றி கூறுகிறேன். மற்ற எல்லாருக்கும் எச்சரிக்கை. உயிர் மேல் பயம் இருந்தால் உடனே இந்த இடத்தை காலி செய்யுங்கள்.

( அனைவரும் அகல்கின்றனர். திருவாளர் மாண்டேகு , திருமதி. மானடேக் மற்றும் பென்வோலியோ மட்டும் இருக்கின்றனர்.)

மாண்டேகு : இந்த சண்டையைத் துவங்கியது யார் ? மருமகனே சொல்லு. நீ கலவரம் தொடங்கியபோது இருந்தாயா?

பென்வோலியோ : உங்கள் சேவகர்களும் உங்கள் எதிரி சேவகர்களும் நான் வருவதற்கு முன்பே சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். அவர்களை அமைதி படுத்த என் வாளை உருவ வேண்டி வந்தது.அந்த நேரம் பார்த்து பொசுக்கென்று கோபம் கொள்ளும் இந்த திபல்ட் கையில் உருவிய வாளுடன் வந்து விட்டான். எங்கள் வாய்ச்சண்டை வாட்சண்டையானது. இதனைப் பார்த்ததும் குடி மக்கள் சிலர் சேர்ந்து கொண்டனர். பெரிய கலவரமான பின்னரே இளவரசர் வந்து தடுத்தார்.

திருமதி . மாண்டேகு : ஓ ! நம்ம ரோமியோ எங்கே ? இன்னிக்கு அவனை யாராவது பார்த்தீர்களா? நல்லவேளை இந்த கலவரத்தின்போது அவன் இங்கே இருக்கவில்லை.

பென்வோலியோ : சீமாட்டி ! இன்று காலை நாம் வணங்கும் தெய்வமான ஆதவன் தனது பொன் கிரணங்களை நீட்டியபடி கீழவானச் சன்னலை திறந்து எட்டி பார்க்கும் முன்னர் என் மனதில் இருந்த சிறிய தடுமாற்றத்தினால் காலாற நடந்து வரச் சென்றிருந்தேன். இந்த நகரின் மேற்கு பகுதியில் உள்ள சிகமூர் தோப்பில் உங்கள் மகன் நடந்து சென்றதை பார்த்தேன். அந்த மரங்களின் ஊடே நடந்து வந்த அவன் கண்களில் நான் பட்டிருக்க வேண்டும். அவன் உடனே தன்னை அந்த தோப்பின் மரங்களின் பின்னால் தன்னை மறைத்துக் கொண்டுவிட்டான். அவனும் என்னைப் போலவே தனக்குத்தானே துணைஎனக் கொண்டு தனிமையில் இருக்க விரும்பியிருக்க வேண்டும்.அவன் நோக்கம் தெரிந்ததும் நானும் சந்தோஷமாக அவனை தனிமையில் விட்டு விட்டு அங்கிருந்து அகன்றேன்.

மாண்டேகு :பலநாட்கள் காலை வேளைகளில் காலைப் பனிக்கு மேலும் துளிகளை சேர்க்க அவன் கண்ணீர்த் துளிகளுடன் அங்கு நிற்பதை நானும் பார்த்திருக்கிறேன். அவன் பெருமூச்சுகள் வானில் மேகங்களாக மிதப்பதை பார்த்திருக்கிறேன். உற்சாகச் சூரியன் துருவ ஒளியின் மடியிலிருந்து இருள் திரைகளை விலக்கும் நேரம் என் மகன் வெளிச்சத்திலிருந்து ஒளிந்து கொள்ள வீட்டிற்கு வந்து விடுவான். தன் அறையில் அடைந்து கிடப்பான். சன்னல்களை சாத்தி அழகிய பகல் பொழுதை பூட்டி வைப்பான். தனக்கென ஒரு செயற்கை இருளை நாட்டி வைப்பான்.  அவனுக்கு ஆறுதல் கூறி எவராவது அவன் மனதில் இருப்பதை அறியும்முன், அவனுடைய இந்த இருண்ட மனோபாவம் அவனுக்குக் கெடுதியைத்தான் கொண்டு சேர்க்கும்.

பென்வோலியோ : மதிப்பிற்குரிய மாமாவிற்கு அவன் சோகத்தின் காரணம் தெரியுமா?

மாண்டேகு : எனக்கு தெரியவும்  தெரியாது. கேட்டாலும் சொல்ல மாட்டான்.

பென்வோலியோ : எல்லா வழிகளிலும் முயற்சி செய்து பார்த்தீர்களா?

மானடேக் : நான் மட்டுமில்லை எனக்குத் தெரிந்த நான்கைந்து பேர்களும் கேட்டு பார்த்துவிட்டோம். தானே தனக்கு துணையென இருக்கிறான். அவனே அவனுக்கு நல்ல நண்பனா என்பது தெரியாது. அவன் ரகசியங்கள் கண்டுபிடிக்க முடியாத புதைவுகள். புழு துளைத்த பூக்கள் இதழ் விரிப்பதில்லை.தன் வனப்பையும் காட்டுவதில்லை.அவனுடைய சோகத்தின் ஊற்றுக்கண்ணை கண்டுபிடித்துவிட்டால் அவனை மீட்பது எளிது.

( ரோமியோ நுழைகிறான் )

பென்வோலியோ : அதோ ரோமியோ வருகிறான். கொஞ்சம் அவன் கண்பார்வையிலிருந்து மறைந்திருங்கள். நான் அவன் மனதில் உள்ள புதைவுகளை அறிய முயற்சிக்கிறேன்.

மாண்டேகு : அவன் சோக பல்லவியை நீ கேட்க நினைப்பது சந்தோஷம். வா அம்மணி நாம் நகர்வோம் ( மாண்டேகு திருமதி மாண்டேகுவை அழைத்துக் கொண்டு அகல்கிறார். )

பென்வோலியோ : காலை வணக்கம் மாப்ள !

ரோமியோ : இன்னும் காலைப் பொழுதின் இளமை குறையவில்லையா?

பென்வோலியோ : இன்னும் மணி ஒன்பதைத் தாண்டவில்லை.

ரோமியோ : என் நேரம். வேதனைப் பகல் பொழுதுகள் வளர்கின்றன. இப்போது அவசரமாக சென்றது என் தந்தைதானே?

பென்வோலியோ :ஆமாம் அவர்தான். உன் உன் பகல் பொழுதை வேதனையுடன் நீட்டிக்கும் அந்த சோகத்தின்காரணம் என்ன ரோமியோ?

ரோமியோ : பொழுதை சுருக்கும் கருவி என்னிடம் இல்லை.

பென்வோலியோ : காதலிக்கிறாயா ?

ரோமியோ : கிறேன் இல்லை த்தேன். காதலித்தேன். என்னைக் காதலிக்காதவளை நான் காதலித்தேன்.

பென்வோலியோ : காதல். காதல் வெளித்தோற்றத்திற்கு வசீகரமானது மென்மையானது. காதலின் உள்தோற்றம் கடுமையானது. கடினமானது.

ரோமியோ ; ஹ ! காதலுக்கு கண்ணில்லை என்பார்கள். கண்களற்ற காதல் தன் வழியில் நம்மைக் கொண்டு செல்லும் வல்லமை பெற்றது. எங்கே சாப்பிடுவோம்? ( கீழே சிந்திய இரத்தக் கரைகளைப் பார்த்து விட்டு ) அடக் கடவுளே ! இங்கு சண்டை ஏதாவது நிகழ்ந்ததா? தெரியும் என்ன நடந்திருக்குமென்று. பகைமை பாராட்டுவோர் இன்று பலருண்டு. அன்பு பாராட்டுவோர்தாம் அருகி வருகின்றனர். பூசலிடும் காதலே ! விரும்பப்படும் பகைமையே ! சூனியத்திலிருந்து தோன்றிய முழுமையே ! சோக சந்தோஷமே ! அறிவுள்ள முட்டாள்தனமே ! அழகிய உருவங்களின் அசிங்கமான அணிவகுப்பே !இரும்புச் சிறகுகளே ! வெளிச்ச புகை மூட்டமே ! குளிர்ந்த நெருப்பே ! நலிந்த நலமே ! உறங்கும் விழிப்பே ! காதலைத் தவிர மற்ற எல்லாமுமான காதல். உணர்ச்சியற்ற இந்தக் காதலை உணர்கிறேன்…. .நீ ஒன்றும் சிரிக்கவில்லையே?

பென்வோலியோ : இல்லை எனக்கு கண்ணீர் வருகிறது.

ரோமியோ : நல்ல மனம் உனக்கு. ஏன் கலங்குகிறாய் பென்வோலியோ?

பென்வோலியோ : உன் வருத்தமே என் கண்ணீரின் காரணம்.

ரோமியோ : ஏன்? இதுதான் காதலின் வரம்பு மீறுதல். காதலின் சோகம் எனக்கு. என் சோகம் உன்னை தாக்கி என்  சோகத்தை அதிகபடுத்துகிறது. ஏற்கனவே சோகத்தால் என் நெஞ்சு கனக்கிறது. நீ சோகப்படுவதை பார்த்து வருத்தப்படுவதால் என் சோகம் அதிகரிக்கறது. காதல் பெருமூச்சுகளால் எழுப்பப்பட்ட புகைமூட்டம். புகைமூட்டத்தை விலக்கினால் காதல் உன் காதலியின் கண்களில் மின்னும் கனல் பொறி. கொந்தளிப்பால் காதல் கண்ணீர்த் துளிகளால் நிரம்பிய கடல். இல்லைஎன்றால் வேறு எதுதான் காதல் ? ஒரு நளினமான பைத்தியக்காரத்தனம். தொண்டையில் சிக்கிய மிட்டாய். வருகிறேன் ப்ரோ.

பென்வோலியோ : நில்லு. நானும் வருகிறேன். என்னை இப்படி தனியாக விட்டு சென்றால் எனக்கு நீ தீங்கிழைக்கிறாய்.

ரோமியோ : ப்ச். நான் என்னை இழந்து விட்டேன். என் வசம் நான் இல்லை. இவன் ரோமியோ இல்லை. அவன் எங்கிருக்கிறானோ தெரியாது.

பென்வோலியோ : வருத்தத்துடன் சொல். உன் காதல் யார் என்று.

ரோமியோ : என்னது வருத்தத்துடன் என்றால் புலம்பிக் கொண்டே சொல்லவா?

பென்வோலியோ : புலம்பலா ? வேண்டாம். அக்கறையுடன் சொல் உன் சர்க்கரை யார் என்று.

ரோமியோ : அக்கறை …… மரணப்படுக்கையில் இருப்பவனிடம் உயில் எழுதச் சொல்லும் அக்கறை. அக்கறையுடன் சொல்கிறேன். நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன்.

பென்வோலியோ : நினைத்தேன். நிச்சயம் நீ காதலில் விழுந்திருப்பாய் என்று

ரோமியோ : குறி பார்த்து எறிவதில் தேர்ந்தவனான நீ சொல்வது சரிதான். நான் ஒரு அழகியைக் காதலித்தேன்.

பென்வோலியோ : சரியாக வீசப்பட்ட குறி தப்பாது.

ரோமியோ : கணை வீசப்பட்டது அவள் மீது. டயானாவைப் போல  அவள் தூய்மையானவள். கற்பெனும் கவசம் அணிந்தவள். மன்மதனின் அம்பு அவள் மீது சரியாகப் பாயவில்லை. காதலின் மென்மையான அம்புகள் அவளைத் தாக்குவதில்லை. காதல் மொழிகளுக்கு மடங்காத செவிகள்; காதல் பார்வையால் வீழ்த்த முடியா விழிகள்; பொன்னுக்கும் பொருளுக்கும் மயங்காத மடிகள். அழகின் செல்வமகள். மரணத்தில் மட்டுமே அவள் வறியவள் மரணத்தின்போது மட்டுமே அவளுடைய அழகு என்னும் நிதி மறைகிறது.

பென்வோலியோ : என்றும் செல்வியாக இருக்க சபதம் எடுத்தவளா?

ரோமியோ : அப்படித்தான் இருக்கும்.காமம் தவிர்த்த அழகு சந்ததியை வளர்க்க முடியுமா? அவள் அழகி; புத்திசாலி; புத்திசாலியான அழகி. பேரின்பத்தை அளக்க வேண்டிய அவள் அழகு என் விரக்தியை வளர்க்கிறது. காதலுக்கு எதிராக அவள் எடுத்த சபதம் என்னை நடைப்பிணமாக்கி உன்னுடன் பேச வைத்துள்ளது.

பென்வோலியோ : நான் சொல்வதைக் கேள். அவளை மறந்து விடு.

ரோமியோ : நினைப்பதை மறக்கும் வழி இருந்தால் சொல்.

பென்வோலியோ : சேணம் பூட்டப்பட்ட உன் விழிகளின் கட்டுக்களை அவிழ்த்துவிடு. அவை இன்னும் பல அழகுகளை மேயட்டும்.

ரோமியோ : வேண்டாம். அது அவளை மேலும் அழகானவளாகக் காட்டும். அழகான பெண்கள் திரையிட்டு அழகை மறைத்தாலும் ஆண்களின் மனமோ திரை விலக்கி பார்க்கவே துடிக்கும். கண்பார்வையிழந்தவனுக்குத்தான் பார்வையின் அருமை தெரியும். ஒரு நகரும் அழகான நங்கையை எனக்கு காட்டு. அவளுடைய அழகின் அடையாளங்கள் மேலும் ஒரு அழகை பார்த்து நகரச்சொல்லும் வந்தனம். நீ எனக்கு மறப்பதற்கு பாடம் எடுக்க முடியாது.

பென்வோலியோ : நான் அந்த பாடம் சொல்கிறேன். இல்லையென்றால் உனக்கு கடன்பட்டவனாவேன்.

திரை.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

அங்கம் -1-காட்சி-2

கபுலெட் , சீமான்.பாரிஸ் மற்றும் பணியால் பீட்டர் மூவரும் நுழைகின்றனர்.

கபுலட் : ஆனால் மாண்டேகும் என்னை மாதிரி உறுதிமொழி எடுத்துக் கொண்ட உயர் அதிகாரிதான். எனக்கு கிடைத்த தண்டனைதான் அவருக்கும். ஆண்கள் வயதானவர்கள் என்றாலும் அமைதியை காக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.

பாரிஸ் : நீங்கள் இருவருமே சமமான நற்பெயர் கொண்டவர்கள். என்னவோ தெரியவில்லை காலம் காலமாக தொடரும் பகைமை உங்களை எதிரிகளாக ஆக்கி விட்டது. நான் கேட்டது என்னவாயிற்று?

கபுலெட் : ஏற்கனவே நான் சொன்னதுதான். என் மகள் இன்னும் மங்கை பருவத்தை எட்டவில்லை. அவளுக்கு இந்த உலகம் புதிது. பதினான்கு வயதைக் கூட இன்னும் அவள் கடக்கவில்லை. இன்னும் இரண்டு கோடை போகட்டும். அதன்பிறகு அவள் திருமணம் குறித்து யோசிப்போம்.

பாரிஸ்: இவளைவிடவயதில் குறைந்த பெண்கள் மணம் புரிந்துகொண்டு சந்தோஷமாக தாய்மை அடைந்திருக்கின்றனர்.

கபுலெட் : சிறுவயதுத் திருமணம் பெண்களை ஆளாக்குகின்றன. மறுக்கவில்லை என் உலகம் என் நம்பிக்கைகளை விழுங்கி விட்டது. அவள் என் உலகின் நம்பிக்கைக்குரிய பெண்.. போ முயற்சி செய் பாரிஸ். அவள் இதயத்தை வாங்கப் பார். அவள் சம்மதம் முக்கியம் எனக்கு. அப்படி சம்மதித்தால் என் வாழ்த்துக்களும் இனிய ஆசீர்வாதங்களுக்கும் அவளுக்கு எப்போதும் இருக்கும். இன்று இரவு என் இல்லத்தில் ஒரு பாரம்பரிய விருந்து ஒன்றிற்கு ஏற்பாடாகி உள்ளது. எனக்கு நெருக்கமானவர்களுக்கு அழைப்பு சென்றுள்ளது. அவர்களில் நீயும் ஒருவன். மீண்டும் அழைக்கிறேன். அவசியம் வருகை புரி. இரவைப் பகலென மாற்றும் விண்மீன்கள் பிரகாசிக்கும் இன்றைய இரவில் இந்த எளியவன் குடிலுக்கு வா. வசந்த கால மலர்களைப் போல அழகிய நங்கையர்கள் பலரை நீ சந்திக்கலாம். உனக்கு பிடித்தவளை தேர்ந்தெடு. அழகில் சிறந்த பெண்கள் நடுவில் தகுதியுடைய யாரை தேர்ந்தெடுப்பது என்பதில் உன் கணக்கு தவறாகலாம். வா என்னுடன். ( பீட்டரிடம் ஒரு காகிதத்தை அளிக்கிறார் ) இந்த இந்தக் காகிதத்தில் என் நெருக்கமானவர்களின் பட்டியல் உள்ளது. போ வெனோரா நகர் முழுவதும் அலைந்து என் அழைப்பை சொல்லி அவர்களை விருந்திற்கு கூப்பிடு.

( கபுலேட்டும் பாரிசும்  மறைகின்றனர் )

பீட்டர் ( கபுலெட் கொடுத்த காகிதத்தை மேலும் கீழும் பார்த்து ) இதில் உள்ள நபர்களின் பெயர்களை நான் படிக்க வேண்டுமா? நல்லதுதான். ஒரு செருப்பு தைப்பவன் துடுப்பை உபயோகிப்பது மாதிரி, தையல்காரன் செருப்பு கட்டையை உபயோகித்தது மாதிரி, வலைஞன் எழுதுகோலால் மீன் பிடித்தது மாதிரி, ஓவியன் மீன் வலையில் ஓவியம் வரைந்தது மாதிரி எழுதப் படிக்கத் தெரியாத நான் இந்தப் பட்டியலில் உள்ள பெயர்களை வாசித்து அவர்கள் இல்லங்களுக்கு சென்று அழைப்பு விடுக்க வேண்டும் . முதலில் இதை வாசிக்கத் தெரிந்த படித்தவன் எவனாவது கண்ணில் சிக்குகிரானா என்று பார்ப்போம்.

( பென்வோளியோவும் ரோமியோவும்  வருகின்றனர். )

பென்வோலியோ : விடு ரோமியோ. நெருப்பை நெருப்பால்தான் அணைக்க வேண்டும். ஒரு வழியை மற்றொரு வேதனைதான் தீர்க்கும்.தலை சுற்றல் வந்தால் எதிர் திசையில் தலையை சுற்றினால் மயக்கம் மட்டுப்படும். ஒரு வாட்டத்தை மற்றொரு வாட்டம் போக்கும். இன்னும் ஒருமுறை உன் கண்களை காதல் கிருமி தாக்கட்டும். இந்தக் கிருமியின் தாக்கத்தால் உனது பழைய கிருமி இறந்துவிடும்.

ரோமியோ :உன் வாழையிலை சிகிச்சை அற்புதமாக இருக்கிறது.

பென்வோலியோ :எதற்கு ?

ரோமியோ :உன் உடைந்த தடைக்கு.

பென்வோலியோ : என்ன சொல்கிறாய் ? சித்தக் கோளாறா உனக்கு?

ரோமியோ :பைத்தியமில்லை. ஆனால் ஒரு பைத்தியக்காரனை விட சித்தம் தடுமாறிப் போயிருக்கிறேன். என்னைச் சிறையிலிடு. பட்டினி போடு. சவுக்கால் விளாசு ( பீட்டரை பார்த்து ) நல்லது என் நண்பனே.

பீட்டர் : நல்லது துரை. உங்களுக்கு படிக்கத் தெரியுமா?

ரோமியோ : என் வருங்காலத்தை என் துன்பத்தில் படிப்பவன் நான்.

பீட்டர் : புத்தகம் இல்லாமல் அப்படி வாசிக்க நீங்கள் கற்றிருக்கலாம். ஆனால் நீங்கள் பார்பவற்றை உங்களால் வாசிக்க முடியுமா?

ரோமியோ : மொழியும் சொற்களும் புரியுமானால் வாசிப்பேன்.

பீட்டர் : நல்லது துரை. உங்கள் நேர்மை பாராட்டுக்குரியது. இதனை வாசியுங்கள்.

ரோமியோ :நில்லு. நான் வாசிக்கிறேன் ( அந்தக் காகிதத்தை வாங்கி வாசிக்கத் தொடங்குகிறான். ) பிரபு மார்டினோ , அவர் மனைவியும் , பெண்களும்,;சீமான் அன்செலம் மற்றும் அவருடைய அழகிய இளம் சகோதரிகளும்,;வர்சூவியோவின்  இளம் விதவை; சீமான் பிலசென்ஷியோவும் அவர் இளம் மருமகள்களும், மெர்கூஷியோவும் அவன் இல வயது தம்பியும், என் மாமன் கபுலெட்டும் அவர் மனைவியும் பெண்களும், என் அழகு ரோசலினாவும் லிவியாவும். பிரபு வாலன்ஷியோவும் அவர் சகோதரி மகன் திபால்டும். லுசியோவும் உயிர்ப்புடன் இருக்கும் ஹெலெனாவும். அழகின் தொகுப்பு. ஆமாம் இவர்கள் எங்கே வரவேண்டும்?

பீட்டர் : மாளிகையின் மேல் மடத்திற்கு/

ரோமியோ :எங்கே ? இரவு விருந்திற்கா?

பீட்டர்: எங்கள் மாளிகைக்கு.

ரோமியோ : யாரு இல்லத்திற்கு ?

பீட்டர் : என் எஜமானனின் மாளிகைக்கு.

ரோமியோ : இவ்வளவு கேட்டதற்கு முதலிலேயே நீ யார் என்று கேட்டிருக்க வேண்டும்.

பீட்டர் : நீங்கள் கேட்காமலே சொல்கிறேன். என் எஜமானர் செல்வச் சீமான் திருவாளர்.கபுலெட். மாண்டேகு குடியைச் சேர்ந்தவர் இல்லையென்றால் நீங்களும் விருந்தில் கலந்து கொள்ள வாருங்கள். உங்கள் நாள் நல்ல நாளாக அமையட்டும்.(பீட்டர் மறைகிறான் )

பென்வோலியோ : கபுலெட் ஏற்பாடு செய்திருக்கும் இந்த விருந்து நிகழ்ச்சிக்கு உன்னுடைய காதலி ரோசலினாவும் மற்ற வெனோரா நகரத்து இளம் தேவதைகளும் வருகை புரிய உள்ளனர். அவளது அழகையும் நான் குறிப்பிட்டு சொல்லும் பெண்ணின் அழகையும் ஒத்துப்பார். அன்னம் போன்றவள் என்று நீ எண்ணிக்கொண்டிருக்கும் ரோசளினா காகம் போல தோன்றுவதை பார்க்கப் போகிறாய்.

ரோமியோ : என் கண்கள் பொய் சொல்லுமாயின் அவற்றிலிருந்து பொங்கும் கண்ணீர்த் துளிகள் நெருப்பாக மாறி பொய்சொன்ன என் கண்களைப் பொசுக்கட்டும். என் காதலியைவிட இன்னொருத்தி அழகியா? இந்த மண்ணுலகம் தோன்றிய நாள் முதல் அந்தச் சூரியனும் அறியமாட்டான் இப்படி ஒரு பேரழகை.

பென்வோலியோ :இங்க கவனி தம்பி. வேறு யாரும் அருகில் இல்லாதப்து நீ அவளை அழகியென்று முடிவெடுத்தாய். வேறு ஒருவரும் அருகில் இல்லாததால் அவள் உனக்கு ஒப்புவமையற்றவளானாள். இன்று விருந்திற்கு வரும் வேறொரு நங்கையின் வனப்பை உனக்கு காட்டுகிறேன். பிறகு பார் அவளின் அழகின் பிரகாசம் மங்கித் தெரிவதை.

ரோமியோ : நான் உன்னுடன் வருகிறேன்.நீ காட்டப் போகும் அழகிக்காக அன்று. என் காதலியைக் காண்பதற்காக.

( இருவரும் மறைகின்றனர் )

காட்சி முடிவு.

 

காட்சி-3.

திருமதி. கபுலெடும் ,  ஜூலியட்டின் வளர்ப்புத் தாயும் நுழைகின்றனர்.

திருமதி கபுலெட்  : எங்கே என் மகள் ? அவளை அழைத்து வரச் சொல்லுங்கள்.

செவிலி : அவள் பன்னிரு பருவ கன்னிமையின் மீது ஆணையிட்டு சொல்கிறேன் அவளை இங்கு ஏற்கனவே வரச் சொல்லியிருந்தேன். என்ன செல்லகுட்டியாடே! என் மைனாவே ! கடவுளின் மறுப்பே ! எங்கே சென்றாள் இவள் ? ஜூலியட்  !

( ஜூலியட் உள்ளே  நுழைகிறாள் )

ஜூலியட் : என்ன? யார் அழைத்தது ?

செவிலி : உன் அம்மா.

ஜூலியட் : அம்மா . நான் இங்கே இருக்கிறேன். என்ன வேண்டும் உங்களுக்கு?

திருமதி கபுலெட் : என்ன விஷயம் என்று சொல்கிறேன். செவிலி கொஞ்சம் வெளியில் போய் இரு. நாங்கள் கொஞ்சம் அந்தரங்கமாக பேச வேண்டியுள்ளது. இப்போதுதான் நினைவுக்கு வருகிறது. இரு நீயும் நாங்கள் பேசிக் கொள்வதை கேட்கலாம். என்னதான் இருந்தாலும் இவள் சிறு பெண்தானே ?

செவிலி :இவள் வயதை என்னால் மணிக்கணக்கில் துல்லியமாக கூற முடியும்.

திருமதி கபுலெட் : அவளுக்கு இன்னும் பதினான்கு வயது கூட முடியவில்லை.

செவிலி : என் பதினாலு பற்களை கழற்றி கொடுத்து விடுவேன். ஆனால் என்னிடம் வெறும் நான்கு பற்கள்தான் இருக்கிறது. அவளுக்கு இன்னும் பதினான்கு வயது முடியவில்லை. லாமாவின் திருவிழாவிற்கு இன்னும் எவ்வளவு நாட்கள் உள்ளன?

திருமதி கபுலெட் : இரண்டு வாரமும் ஒன்றோ இரண்டோ நாட்களும் உள்ளன.

செவிலி : ஒண்ணோ இரண்டோ ? லாமாவின் திருவிழா வந்தால் அவளுக்கு பதினான்கு வயது முடிகிறது. சூசனுக்கும் இவளுக்கும் ஒரே வயசு. கடவுள் எல்லா உயிர்களுக்கும் இளைப்பாறுதல் தருகிறார். என் மகள் சூசனுக்கு கொஞ்சம் முன்பாகவே தந்து விட்டார். அவளும் இருந்திருந்தால் அவளுக்கும் பதினான்கு வயதாகி இருக்கும். அவளை எனக்கு நிறைய பிடிக்கும்.சொன்னா மாதிரி இந்த கோதுமைத் திருவிழா வந்தால் இவளுக்கு பதினான்கு வயதாகிறது. எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. அந்த பூகம்பம் வந்து பதினொரு வருஷங்கள் ஆகிறது. அப்போது அவளுக்கு மூன்று வயது. பால்குடியை அப்போதுதான் மறக்கடித்தேன். அவள் பால்குடியை மறக்கணும் என்று இரண்டு மார்பிலும் மரப்பட்டையை அரைத்து பூசிக் கொண்டு வாசல் சுவரின்கீழ் புறாக்கூண்டு நிழலில் உட்கார்ந்திருந்தேன். இந்த பட்டுகுட்டி ஓடி என் மேலே ஏறி என் மார்பில் வாய் வைத்தாள். அந்த மரப்பட்டையின் கடுஞ்சுவையில் எரிச்சல் பட்டு கீழே நழுவினாள். அப்போதுதான் பூம் என்ற சப்தத்துடன் அந்த பூகம்பம் நிகழ்ந்தது. நீங்களும் பிரபுவும் அப்போது இங்கில்லை. மான்சுவா வரை போயிருந்தீர்கள். அந்த இடத்தைவிட்டு அகலவேண்டும் என்று எனக்கு யாரும் சொல்லித்தர வேண்டியதில்லை. ஆயிற்று. இது நிகழ்ந்து பதினொரு வருஷங்கள். அப்பொழுதுதான் அவள் கைபிடிக்காமல் நடக்கக் கற்றுக் கொண்ட சமயம். நிஜமா கையை விட்டுட்டு தத்தக்கா புத்தக்கா என்று எல்லா இடங்களிலும் சுற்றி வருவாள். அதற்கு முதல் நாள்தான் கீழே விழுந்து நெற்றியில் காயம் பட்டு கொண்டாள். அப்போ என் கணவரும் என்னுடன்  இருந்தார். கடவுள் அவர் ஆன்மாவை காப்பாற்றட்டும். அவர் சரியான உற்சாகப் பேர்வழி. குழந்தை கீழே விழுந்ததும் அவளை செல்லமாக தட்டி ‘ போக்கிரி. இப்படி நெற்றியில் காயம் பட்டுக் கொண்டாள் உன்னை எவண்டி கட்டிப்பான் ? ‘ என்று கேலி செய்தார். ஓடிக் கொண்டே இருந்த ஜூலியட் அழுகையை நிறுத்தி சிரித்துக் கொண்டே “ கட்டிப்பான் ‘என்றாளே பார்க்கணும். பாருங்களேன் அன்று விளையாட்டு போல சொன்னது இப்போது நிஜமாகவே நடக்க இருக்கிறது. எத்தனை யுகங்கள் ஆனாலும் எனக்கு அது மறக்கவே மறக்காது.

திருமதி கபுலெட் : என்ன இது செவிலி ? ஏன் இப்படி உணர்ச்சிவசப்படுகிறாய்? விடு அமைதியாக இரு.

செவிலி : இல்லை அம்மா.. அழுதுகொண்டே ஓடிய குழந்தை நின்று தீர்மானமாக கட்டிப்பான் என்றாள் பாருங்கள் அதை நினைத்தால் என்னால் சிரிப்பதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை. அவள் நெற்றியில் அடிபட்டதால் சேவலோட விதைக் கோட்டை அளவுக்கு ஒரு புடைப்பு ஏற்பட்டது. நல்லா ஞாபகம் இருக்கு. காயம் வலித்திருக்க வேண்டும் பாவம் குழந்தை அழுது கொண்டே இருந்தாள். அந்தநேரம் என் கணவர் குறும்புடன் உன்னை இனிமேலே எவன் கட்டிப்பான் என்றதும் தீர்மானமாக இவள் கட்டிப்பான் என்று சொன்னதை இன்று நினைத்தாலும் சிரிப்பு வருகிறது.( சிரிக்கிறாள் தொடர்ந்து ).

ஜூலியட் :செவிலி தயவு செய்து நிறுத்துங்கள்.

செவில் : கப்சிப். நிறுத்தி விட்டேன்.  நான் எடுத்து வளர்த்த குழந்தைகளில் மிகவும் அழகானவள் நீதான் ஜூலியட். உன் திருமணத்தைப் பார்க்கும் வரை நான் உயிருடன் இருந்தால் என்னுடைய ஆசீர்வாதம் உனக்கு நிச்சயம் உண்டு.

திருமதி கபுலெட் : திருமணம். அதுதான். அதைப்பற்றி பேசத்தான் நான் இங்கு வந்தேன். ஜூலியட் இந்த வயதில் மணம்புரிந்து கொள்வதில் உன் அபிப்பிராயம் என்ன?

ஜூலியட் : திருமணம் என்ற புனிதமான விஷயத்தை நான் இன்னும் மனதால் கூட நினைக்கவில்லை அம்மா.

திருமதி கபுலெட் : மணத்தின் மீது மனது வை. வெனோரா நகரத்தில் உள்ள கண்ணியமான குடும்பத்தைச் உன் வயதுப் பெண்கள் திருமணம் புரிந்து தாயாக கூட ஆகிவிட்டனர். ஜூலியட் உன் வயதில் எனக்குத் திருமணமாகி நீ பிறந்து விட்டாய். ஆனால் நீ இன்னும் கன்னியாகவே இருக்கிறாய். சரி நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன். எல்லாவிதத்திலும் பொருத்தமான த பாரிஸ் உன்னை பெண்பார்க்க வருகிறான்.

செவிலி : அவனா? எப்பேற்பட்ட காளை அவன். அவனைப் போல இந்த உலகம் முழுவதிலும் ஒருவன் கிடைக்க மாட்டான். மெழுகில் வார்த்தது போன்ற மேனி அவனுக்கு.

திருமதி கபுலெட் : வெனோராவின் புத்தம் புது மலரை விட வசீகரமானவன்.

செவிலி : மலர்தான். அவன் ஒரு வசீகரமான மலர்.

திருமதி கபுலெட் : ( ஜூலியட்டை நோக்கி ) என்ன சொல்லுகிறாய் ? அவனை உன்னால் நேசிக்க முடியுமா? இன்று நம் இல்லத்தில் நடைபெறும் இரவு விருந்தில் நீ அவனை சந்திக்கலாம். பரிசின் முகமேனும் அழகிய புத்தகத்தைப் பார். பேரழகு எனும் எழுதுகோலால் அவன் முகத்தில் எழுதப்பட்ட ஆனந்த வாசகங்களைப் பார். ஒவ்வொரு வரியாக சோதித்து பார். அந்த வரிகள் எவ்வாறு ஒன்றுக்கொன்று இயைந்து அவன் வசீகரத்தை கொடுக்கிறது என்று பார். அதில் உனக்கு தெளிவு ஏற்படவில்லை என்றால் உண்மை சொல்லும் அவன் கண்களைப் பார். இந்த அழகிய காதல் புத்தகம் இந்த வரம்புகளற்ற காதலன் ஒரு மணப்பெண் என்னும் மூடும் அட்டை இன்றி இருக்கிறான். மீன்கள் தரையை விட்டு விலகி கடலில் இருக்கட்டும். உன்னைப் போன்ற அழகிய இளம்பெண் எதற்கு அவன் பார்வையிலிருந்து விலகி இருக்க வேண்டும்? உன்னைப் போல ஒரு அழகிய பளபளப்பான அட்டை அவனுடைய வசீகர ஒளியை மேலும் வசீகரமாக்கும். எனவே நீ ஒன்றையும் இழக்காமல் அவனுடைய வசீகரத்தின் ஒளியில் மின்னலாம். நீ ஒன்றும் அவனுக்கு குறைந்தவள் இல்லை.

செவிலி : ஆமாம் ஆமாம் ஆண்கள் பெண்களை திருமணதிற்கு பின் பெரிதாக்கி விடுவார்கள்.

திருமதி கபுலெட் : சீக்கிரம் சொல்லு நீ அந்த பாரிசை காதலிக்கிறாயா?

ஜூலியட் : அரும்பும் பார்வையை அவன் மேல் படர விடுகிறேன். அது விரும்பும் பார்வையாகிறதா என்று பார்க்கிறேன். ஆனால் ஒன்று உன் அனுமதி அளிக்கும் அளவில்தான் என் பார்வைக் கொடி அவன் மேல் படரும்.

( பீட்டர் உள்ளே  நுழைகிறான்  )

பீட்டர் : சீமாட்டி ! விருந்தினர் வந்து விட்டனர்; இரவு உணவு பரிமாறப்பட்டது; உங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது; உணவுக் கூடத்தில் செவிலி தூற்றப்படுகிறாள்; எதுவும் கட்டுக்குள் இல்லை. நான் அவர்களை உபசரிக்க போக வேண்டும். எனவே இப்போதே என் பின்னால் தொடருங்கள்.

திருமதி கபுலெட் : இதோ இப்போது வருகிறோம். ஜூலியட் கிளம்பு. உனக்காக பெருங்குடி விருந்தினர் காத்திருக்கின்றனர்.

செவிலி : பெ வா ஜூலியட் . உன் ஆனந்தபகல் பொழுகளின் இறுதியில் சந்தோஷ இரவுகளை தரும் ஒருவனைத் தேடு.

(அனைவரும் அகல்கின்றனர். )

திரை.

 

காட்சி -4.

( விருந்து நடைபெறும்  கூடத்தின் உள்ளே ரோமியோ, பென்வோலியோ, மெற்குஷியோ  மற்றும் ஐந்தாறு முகமூடி  நடனக் கலைஞர்கள் மற்றும்  ஓரிரு விளக்கு தாங்கிகளுடன்  உள்ளே நுழைகின்றனர். ).

ரோமியோ :என்ன சம்மாதானம் கூறப் போகிறோம்? அல்லது மன்னிப்பு எதுவுமின்றி நேரடியாக கலந்து கொள்வோமா?

பென்வோலியோ : இந்த நாளில் இதுபோன்ற நெடிய விளக்கம் சொல்லத் தேவையில்லை. மன்மதன் முகத்தை கண்களை கட்டி  கைகளில் முனை மழுங்கிய அம்புகளைத் தாங்கி நாம் இளம்பெண்களை சோளக்கொல்லை பொம்மைகளைப் போல அச்சமூட்டப் போவதில்லை. அல்லது நமது வருகைக்கு கட்டியம் கூறப்போவதில்லை. நம்மை அவர்கள் எப்படி எடை போடுகிறார்களோ அப்படி போட்டுக்கொள்ளட்டும். நமது களியால் அவர்களை களிப்பாக்குவோம்.

ரோமியோ : எனக்கு ஒரு விளக்கைத் தாருங்கள் போதும். தாங்கிப் பிடிக்கிறேன். என் வருத்தமான மனதுடன் களியாட்டத்தில் மனம் செல்லவில்லை.

மெற்குஷியோ : இல்லை ரோமியோ நீ கண்டிப்பாக நடனம் ஆட வேண்டும்.

ரோமியோ : உங்கள் அடிகள் நடனத்திற்கு ஏற்ப உள்ளன. உங்கள் காலணிகள் இறகினும் மென்மையானவை. என்னுடைய அடிகள் இரும்பைவிடக் கனமானவை. நான் வாங்கிய அடிகள் என்னை பூமியிலிருந்து மேலே உயர்த்தாது.

மெற்குஷியோ : நீ ஒரு காதலன். எனவே மன்மதனின் இறக்கைகளை வாங்கிக் கொண்டு பறக்கலாம்.

ரோமியோ : மன்மதனின் அம்பு பட்ட காயம். இறகைத் தாங்க முடியாத காயம். காயத்துடன் பறக்காது இந்தக் காயம். காதல் எனும் பாரம் என்னை மூழ்கடிக்கிறது.

மெற்குஷியோ: நீ மூழ்கும்போது மென்மையான காதல் மூழ்காது.

ரோமியோ : காதல் மென்மையானதா? காதல் கடுமையானது.முரட்டுத்தனமானது; மூர்க்கத்தனமானது;  முள்ளைப் போல கூர்மையாகத் தாக்குவது.

மெற்குஷியோ : காதல் உன்னிடம் முரட்டுத்தனமாக இருந்தால் நீயும் முரட்டுத்தனமாக இரு. முள் போல் காதல் குத்தினால் நீயும் போட்டு குத்து. எனக்கு ஒரு முகமூடி கொடுங்கள் என் முகத்தை மறைக்க. முகமூடிக்கு ஒரு முகமூடி. என் தழும்புகளை குறு குறுவென எவராவது பார்த்தால் நான் என்ன ஆவது? இந்தக் கரியநிற முகமூடியை அணிந்து கொள்வோம்.

ரோமியோ : எனக்கு ஒரு விளக்கு கொடுங்கள் போதும். ஆடுவோர் ஆடட்டும். ஆடாதவனுக்கு இழப்பில்லைஎன்று  நமது முன்னோர்களின் பழமொழி ஒன்றைப் போல நான் விளக்கு ஏந்தி வேடிக்கை பார்க்கிறேன்.* இவ்வளவு அருமையான ஆட்டத்தை நான் பார்த்ததில்லை. இருப்பினும் நான் இங்கேயே இருக்கிறேன்.

மெற்குஷியோ: : சேற்றில் அகப்பட்ட தடியைப் போல காட்சியளிக்கிறாய். இரவு நேர ரோந்து காவல்காரனைப் போல முன்னெச்செரிக்கையாக இருக்கிறாய். காதல் என்ற சேற்றில் சிக்கிக் கொண்ட உன்னை விடுவிக்கிறோம் வா. நாங்கள் கடுமையாக நடந்து கொள்வதற்கு கோபம் கொள்ளாதே. காது வரையில் நீ சேற்றில் சிக்கிக் கொண்டாலும் உன்னை வெளியில் இழுத்து விடுவோம். பகல் வெளிச்சம் வீணாகிறது. வாருங்கள் போவோம்.

ரோமியோ : ஹேய் இது இரவுப் பொழுது.

மெற்குஷியோ : பொழுது வீணாகிறது என்பதற்காக அப்படி சொன்னேன். வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் பார்க்காதே ரோமியோ. ஐந்தறிவை உபயோகிப்பதற்கு பதில் பொது அறிவை உபயோகி.

ரோமியோ: இந்த பாலே நடனத்திற்கு செல்வது மனதுக்கு உகந்ததாக இருக்கலாம். புத்திக்கு உகந்தது அல்ல.

மெற்குஷியோ : ஏன் இப்படி சொல்கிறாய் என்று தெரிந்து கொள்ளலாமா?

ரோமியோ : நேற்றிரவு என் நெஞ்சினில் ஒரு கனவு.

மெற்குஷியோ: கனவு எனக்கும்தான் வரும்.

ரோமியோ : என்ன கனவு ?

மெற்குஷியோ : கனவுகள் பாதிநேரம் பொய்யானவை.

மெற்குஷியோ : இரவு ராணி மேப்புடன் நீ படுக்கையில் இருப்பதாக கனவு கண்டேன்.

பென்வோலியோ : இரவு ராணி மேப் . யார் அவள்?

மெற்குஷியோ : அவள் தேவதைகளின் மருத்துவச்சி. பெருஞ்செல்வந்தர்கள் அணியும் மோதிரத்தில் உள்ள ரத்தினக் கல்லை விட சிறிய தோற்றம் கொண்டவள். அணுத்துகள்கள் இழுத்துவர உறங்குபவர்களின் மூக்கின் மீது பயனிப்பவள். அவள் சக்கரத்தின் ஆரங்கள் பெருஞ்சிலந்திகளின் நீண்ட கால்களால் ஆனவை. அந்த கோச்சுவண்டியின் உறை வெட்டுக்கிளியின் இறகினால் ஆனது.. அந்த வண்டியின் சேணம் மிகச்சிறிய சிலந்தியின் வலையில் செய்யப்பட்டது. அந்தப்பெட்டியின் கட்டைகள் வெண்ணிலவின் கிரணங்களால் ஆனவை. வண்டியின் சாட்டை வெட்டுக்கிளியின் எலும்பினால் ஆனவை. வண்டியின் ஓட்டுனர் சாம்பல் நிற மேலங்கி அணிந்த ஒரு மூட்டை பூச்சி. சோம்பித்திரியும் இளம்பெண்களின் விரலிடுக்கில் உற்பத்தியாகும் புழுவை விட பாதி அளவுதான் அந்த மூட்டைபூச்சி. அவளுடைய சாரியட் பாதாம் கொட்டையின் ஓடுகளால் செய்யப்பட்டது. அந்த சாரியட்டை ஒரு அணிலோ அல்லது வயதான மண்புழுவோ செய்திருக்கக் கூடும். தேவதைகளின் ரதங்களை அவைகள்தாம் செய்கின்றன. இந்த நிலையில் அந்த தேவதை ஒவ்வொரு இரவும் காதலர்களின் மனங்களின் வழியாக தனது ரதத்தை ஓட்டுகிறாள். காதலர்கள் கனவு காண்கின்றனர். அரசாவையினரின் முழங்கால்களில் நிமிர்ந்த கனவாய் மலர்கிறது. வழக்கறிஞர்களின் கைவிரல்களில் கட்டணமாக மலர்கிறது. பெண்களின் இதழ்களில் முத்தக்கனவுகளாக மலர்கிறது. இரவுராணி மேப் அந்தப் பெண்களின் வாயில் மிட்டாய் மனம் வீசுவதால் அவற்றில் கொப்புளங்களை உண்டாக்குகிறாள். சில நேரங்களில் அரசவையினரின் மூக்கின் மீது தன் ரதத்தை செலுத்தும்போது அவர்கள் பணம் பண்ணுவது குறித்து கனவு காண்கிறார்கள். சிலநேரங்களில் அவள் கோவில்காளையின் வால் நுனியால் பூசாரிகளின் மூக்கை உரசச் செய்கிறாள். பிறகு அந்தப் பூசாரிகள் வளப்பமான தானத்தைப் பற்றி கனவு காண்கின்றனர். சில நேரங்களில் போர் வீரர்களின் கழுத்தில் ரதத்தை செலுத்துகிறாள். உடனே அந்த வீர்கள் எதிரி கழுத்தை அறுப்பது போலவும், கோட்டைச் சுவர்களை இடிப்பது போலவும், ஸ்பானியாவின்  வாள், போன்றவற்றை கனவு காண்கின்றனர். பிறகு செவியில் முரசு முழங்கும் ஓசை கேட்டு பயந்து எழுந்திருந்து பின்பு கனவென்று தெரிந்து மீண்டும் உறங்கச் செல்கின்றனர். இந்த மேப் தான் குதிரைகளின் வாலில் உள்ள மயிர்க்கற்றையில் பின்னலையும் அவிழ்க்கமுடியா சிக்கலையும் ஏற்படுத்துகிறாள். அவற்றை அவிழ்க்கும் நேரம் கெட்டகாலம் பிறக்கிறது. இந்தக் கிழட்டு ராணிதான் பெண்களின் பின்பகுதியில் ஏறிக் கொண்டு அவர்களை நன்றாக அழுத்தி அவர்களை சுமப்பவர்களாக மாற்றுகிறாள். இவள்தான்….

ரோமியோ : சமாதானம் சமாதானம். மெற்குஷியோ நீ நடவாதவற்றை பேசுகிறாய்.

மெற்குஷியோ : ஆமாம் நான் கனவுகளைப் பற்றி பேசுகிறேன். கனவுகள் சோம்பேறிகளின் பிள்ளைகள். உள்ளீடற்ற வெற்று கற்பனைகள் அவை. காற்றைவிட மெலிதானது. காற்றை விட உள்ளீடற்றது. உறைந்து போயிருக்கும் வடதிசை மலை முகடுகளில் தழுவி காதலுரச் செய்யும். சினம் கொண்டு அங்கிருந்து விலகி பனிவிழும் தென்திசை நோக்கி பாயும்.

பென்வோலியோ : இது நமக்குள்ளே மேலும் கீழும் ஓடும் வாயுவைக் குறித்து நீ கூறுகிறாய். வாருங்கள் இரவு விருந்து பரிமாறப்பட்டு விட்டது.

ரோமியோ : கிரகங்களின் ஆளுமையினால் சில அசம்பாவிதங்களுக்கு அவன் நாள் குறித்து விடுவானோ என்று சற்று முன்னதாகவே என மனம் சஞ்சலப்படுகிறது. இந்த இரவு விருந்து என் மனதில் கவிந்து கிடக்கும் வெறுப்பான இந்த வாழ்வை மரணம் மூலம் முடிவுக்குக் கொண்டுவரும். என் கப்பலின் பாய்மரத்தை தன் பிடியில் வைத்திருக்கும் அவன்தான் என் பயணத்தை நிர்ணயிக்கிறான். பயணம் தொடங்கட்டும் அன்பர்களே.

பென்வோலியோ : முரசம் அதிரட்டும்

( வீர நடை போட்டு  அவர்கள் அகல்கின்றனர். )

திரை.

காட்சி-5.

( பீட்டரும் பரிசாரகர்கள்  சிலரும் சிப்பந்திகள்  சிலரும் அவர்களுக்குரிய  உடையில் வருகின்றனர். )

பீட்டர் : எங்கேப்பா தட்டு எடுக்கறவன் போய்த் தொலைஞ்சான்? அவனை கூப்பிட்டு உணவு மேசைகளில் இருக்கும் தட்டுக்களை எடுக்கச் சொல்லுங்கப்பா.

முதல் பரிசாரகர் :ஒன்றிரண்டு பேர்களின் கைகளில்தான் நல்ல பழக்கம் ஒட்டிக் கொண்டுள்ளது. அவர்கள் கைகள் கூட கழுவப்பாடாமல் அழுக்காகத்தான் உள்ளது.

பீட்டர் : அந்த சைடு முக்காலிகளை அகற்றுங்களப்பா. அப்படியே அந்த பக்கவாட்டு பலகையை எடுங்க. தட்டுக்கள் எல்லாம் சுத்தமா இருக்கான்னு பாருங்க. தம்பி அப்படியே அந்த பாதாம் ஹல்வாவை கொஞ்சம் எனக்கு எடுத்து வையப்பா. நெல், அந்தோணி அப்புறம் போட்பான் மூன்று பெரும் கவனமா கேட்டுக்கொள்ளுங்கள் சூசன் மாவு அரைக்கும் எந்திரத்தை உள்ளே கொண்டு வைக்கிறார்களா என்பதில் கவனமாக இருங்கள்.

இரண்டாவது பரிசாரகன் : தம்பி நான் தயார்.

பீட்டர் : வாப்பா  வா ! இவ்வளவு பெரிய சேம்பரில் உன்னைத்தான் காணவில்லை என்று கேட்டாங்கப்பா தேடினாங்க .

முதல் பரிசாரகன் : நமக்கு என்ன இரண்டு மூன்று உருவமா எடுக்க முடியும் ? இங்க கூப்பிட்டால் வருவதற்கும் அங்கே கூப்பிட்டால் போவதற்கும்? பசங்களா சீக்கிரம் எல்லாவற்றையும் எடுங்கப்பா. யாரு அதிக பாத்திரங்களை அப்புறப்படுத்துகிறானோ அவனுக்கு நூறாயுசு.

( பீட்டரும் மற்ற  பரிசாரகர்களும் அகல்கின்றனர். )

( திருவாளர்  கபுலெட்டும் அவருடைய ஒன்றுவிட்ட சகோதரன் டிபல்டும் வருகின்றனர் . திருமதி கபுலெட் தன் மகள் ஜூலியட் மற்றும் இரண்டு மூன்று பேர்களுடன் வருகின்றனர். கபுலெட் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ரோமியோ, பென்வோலியோ, மெற்குஷியோ ,ஆகிய மூவரையும் பார்க்கின்றனர். மற்ற விருந்தினர்களும் மற்றும் முகமூடி நடனக் கலைஞர்களும் வரவேற்கப்படுகின்றனர்.)

கபுலெட் ( விருந்தினர்களை பார்த்து ) வரவேண்டும் கனவான்களே ! எந்தப் பெண்களின் பாதங்களில் காய்ப்பு காய்க்கவில்லையா அந்தப் பெண்கள் உங்களுடன் ஆட வருவார்கள். மறுக்கும் பெண்களுக்கு ஆணையிட்டு சொல்கிறேன் பாதத்தில் காய்ப்பு இருக்கிறது.

வாருங்கள் கனவான்களே ! அது ஒரு காலம். இதுபோன்ற நடனங்களின்போது முகமூடி அணிந்து அழகான இளம்பெண்ணின் காதில் கிசுகிசுப்புடன் கதை சொன்ன நாட்கள் எப்போதோ முடிந்து விட்டது.

தங்கள் வரவு நல்வரவாகுக. இசைக் கலைஞர்களே தொடங்கட்டும் உங்கள் இசை மழை.

( இசை முழங்க அனைவரும்  நடனமாடத் துவங்குகின்றனர். )

ஒரே ஒரு கூடம்தான் உள்ளது நடனமாட. எனவே ஆடுபவர்கள் அடுத்தவர்கள் ஆட இடமளித்து ஆடுங்கள். ( பரிசாரகர்களைப் பார்த்து ) அயோக்கியப் பசங்களா எல்லா விளக்குகளையும் போடுங்கள். சீக்கிரம் விரைவாக உணவு மேஜைகளை ஆயத்த படுத்தி கணப்பை நிறுத்துங்கள். இந்தக் கூடம் கொஞ்சம் சூடாகவே உள்ளது. ( தனது ஒன்றுவிட்ட சகோதரனைப் பார்த்து ) இந்தக் களியாட்டம் ரசிக்கும்படி உள்ளது. வா இப்படி உட்கார். பார்த்து என்ன பயன் ? நீயும் நானும் நடனமாடும் வயதைக் கடந்து விட்டோம்.( கபுலெட்டும். டிபல்டும் அமர்கின்றனர் ) நீயும் நானும் இதுபோல முகமூடி அணிந்து நடனமாடி எத்தனை வருஷங்கள் இருக்கும்?

கபுலெட் சகோதரன் : அது இருக்கும் முப்பது வருடம்.

கபுலெட் : என்னது அவ்வளவு நீண்ட இடைவெளியா? இருக்காது. லுசென்ஷியோவின் திருமணத்தின்போது என்று நினைக்கிறேன் பெந்தகோஸ்த் ! நாட்கள்தான் எப்படி பறக்கின்றன? இருபத்தைந்து வருடங்கள் இருக்கும் நாமும் இது போன்று முகமூடி அணிந்திருந்தோம்.

கபுலெட் சகோதரன் : இல்லை லுசென்ஷியோ மூத்த மகனுக்கே முப்பது வயதாகி விட்டது.

கபுலெட் : என்னிடமா சொல்கிறாய் ? அவன் மகன் இரண்டு வருடங்களுக்கு முன்னால் ஒரு மைனர் . தெரியுமா?

ரோமியோ : ( ஒரு பரிசாரகனைப் பார்த்து ) அந்த அதிர்ஷ்ட்டக்கார வீரனின் தோள்களைத் தழுவியுள்ள அந்த இளமங்கை யார் ?

பரிசாரகன் : எனக்குத் தெரியாது ஐயா.

ரோமியோ : ஓ ! எரியும் விளக்குகளை பிரகாசிக்கச் செய்யும் ஒளி வெள்ளம் இவள். இரவின் கன்னங்களில் மின்னும் விடிவெள்ளி இவள். ஒரு ஆப்பிரிக்க தேசத்தவன் செவிகளில் தொங்கும் விலை மதிப்பில்லா நகை. பயன்பாட்டை மீறிய பெருஞ்செல்வம் பூமி தாங்கா அழகின் மிகை. கன்னியர் நடுவில் மிதக்கும் இந்தச் சின்னப்புறா காகங்களின் நடுவில் பறக்கும் வண்ணப்புறா. நடனத்தின் முடிவில் அவள் நிற்கும் புரம் அவள் கரங்களின் ஸ்பரிசம் என் உயிரின் உரம். இதுவரை நான் யாரையாவது காதளித்தவனா? மாற்றிவிடு மனதை. பார்த்ததில்லை இதுபோல் வேறெங்கும் ஓர் அழகிய மலரை.

திபல்ட் :இந்த குரல் ஒரு மாண்டேகுவினுடையது போலிருக்கிறது. (தனது அடியாளிடம் ) தம்பி என் வாளை எடுத்து வா! என்ன தைரியம் முகமூடியணிந்து வந்து இந்த விருந்தை இகழ்வதற்கும் ஏளனம் செய்வதற்கும் வந்திருக்கிறானா? குலப்பெருமை ஒன்றே மிச்சம். அவன் தலையெடுப்பது துச்சம்.

கபுலெட் : பங்காளி என்ன ஆயிற்று உனக்கு ? ஏன் இத்தனை கோபம்?

திபல்ட் : மாமா அதோ அவன் ஒரு மாண்டேகு. நமது எதிரி. அவன் இங்கு வந்திருப்பது களியாட்டதிற்காக அல்ல. நமது நிகழ்ச்சியை களியாக்குவதற்காக.

கபுலெட் : ஓ அது ரோமியோ இல்லையா?

திபல்ட் : அவன்தான் அந்த அயோக்கியன் ரோமியோ.

கபுலெட் : இவ்வளவு கோபம் வேண்டாம் பங்காளி. அவனை விடு. அவனை பார்த்தால் கண்ணியமான கணவான் மாதிரிதான் இருக்கிறது. நிஜமாக சொல்ல வேண்டுமென்றால் இந்த வெனோரா நகரமே ரோமியோ ஒரு குணசீலன் நன்னடத்தை கொண்டவன் என்று மெச்சுகிறது. என்ன ஆனாலும் சரி நான் ரோமியோவை இந்த வீட்டிற்குள் அவமரியாதை பண்ண மாட்டேன். பொறுமையாக இரு. அவனை கண்டுகொள்ளாதே. இது என் விருப்பம். இதனை நீ மதிப்பதென்றால் உன் முகத்தின் கோப ரேகைகளை மறைத்துக் கொண்டு புன்னகை ரேகைகளை படர விடு. ஒரு விருந்தில் இப்படியா முகம் காட்டுவார்கள்?

திபல்ட் : ஓர் அயோக்கியன் விருந்திற்கு வந்தால் இப்படித்தான் முகம் மாறும். என்னால் இவனைப் பொறுக்க முடியாது.

கபுலெட் : பொறுத்துப் போகலாம். தவறில்லை. என்ன சின்ன பையா? என்ன நான் சொல்வது சரியாய் ? போ. இங்கே நீ எஜமானனா? நான் எஜமானனா? போ. நீ பொறுத்துப் போக மாட்டாய் . கடவுளே காப்பாற்று. என் விருந்தினர் நடுவில் கலகமூட்டாதே. அனாவசிய ஆர்ப்பாட்டத்தை இங்கு உண்டாக்காதே.

திபல்ட்: ஏன் மாமா நாம் அவமதிக்கப்படுவது உங்களுக்கு புரியவில்லையா?

கபுலெட் : போ போ. நீ சரியான துடுக்கு பிடித்தவன். அப்படித்தானே? உன்னுடைய இந்த முட்டாள்தனமான செயல் உன் மீதே பாயும்.. சொல்வதை கேட்க மாட்டாயா? முரண்டு பிடிப்பதுதான் உனது வாடிக்கையா? இரு உனக்கு சரியான பாடம் புகட்டுகிறேன். ( விருந்தினரை நோக்கி ) என் அன்பிற்குரிய விருந்தாளிகளே ( திபல்டைப் பார்த்து ) நீ ஒரு கோமாளி. கொஞ்சநேரம் வாயை மூடிக்கொண்டு இரு.( பரிசாரகர்களைப் பார்த்து ) யாரப்பா? இங்கே இன்னும் நான்கைந்து விளக்குகள் கொண்டு வாருங்கள் (திபல்டை பார்த்து ) வெட்கமாயில்லை உனக்கு? இரு உன் வாயை அடைக்கிறேன் . ( விருந்தினரை நோக்கி ) ஓ ! சந்தோஷமாக ஆடுங்கள் நண்பர்களே.

( மீண்டும் இசை முழங்க  நடனம் துவங்குகிறது )

திபல்ட் :வலுகட்டாய நிதானமும் , வேண்டி வரவழைத்த ஆவேசமும் என் சிந்தையில் ஓடி என் நாடி நரம்புகளை கொதித்தெழ வைக்கிறது. இப்போது அகல்கிறேன் இங்கிருந்து. ரோமியோவின் குறும்புகள் இப்போது ரசிக்கும்படியாகவும் அதுவே வெறுக்கும்படியாகவும் ஆகும் வேளை வரும்.

( திபல்ட் நகர்கிறான் )

ரோமியோ ( ஜூலியட்டின் கரங்களை பற்றி ) உனது கரங்கள் பாவம் போக்கும் புண்ணியத் தலம். பாவங்கள் நிறைந்து பற்றத் தகுதியற்றது இந்த பக்தனின் கரம். என் முரட்டுப் பிடியை மிருதுவாக்க வேண்டி  எனது இருவிதழ்கள் காத்திருக்கின்றன ஏங்கி.

ஜூலியட் : நல்லது பக்தனே ! உன் கரங்களை இகழாதே. வணங்குவதன் வகையறிந்த கரங்கள். பக்தர்கள் தீண்டும்வண்ணம் மகான்களுக்கும் கரங்கள் உள்ளன . மகான்களைக் கரங்களால் தீண்டுதலே யாத்திரிகர்களின் முத்தங்களாகும்.

ரோமியோ : மகான்களுக்கும் யாத்திரிகர்களுக்கும் உதடுகளும் இருக்குமல்லவா கரங்களைப் போலவே ?

ஜூலியட் : ஆமாம் . அந்த உதடுகளை பிரார்த்தனையின்போது பயன்படுத்துவார்கள்.

ரோமியோ :என் பிரிய துறவியே ! கரங்கள் செய்வதை இதழ்கள் செய்யட்டும். அவை வேண்டுகின்றன. நீ வரம் தருவாய் என் நம்பிக்கை பொய்த்துப் போகாத வண்ணம்.

ஜூலியட் : துறவிகள் அசைவதில்லை பிரார்த்தனைகளை நிறைவேற்றும்போழுது கூட.

( ரோமியோ அவளை முத்தமிடுகிறான் )

ரோமியோ : என் பாவத்தை என் இதழிலிருந்து உன் இதழ்களில் இறக்கி விட்டேன்.

ஜூலியட் : என் இதழ்கள் இப்போது உங்கள் பாவத்தை சுமக்கிறது.

ரோமியோ : என் இதழிலிருந்து உன் இதழுக்கு பாவம் இடம் மாறி விட்டதா? அத்துமீறலை நீதான் அனுமதித்தாய். சரி சரி என் பாவத்தை என்னிடமே திருப்பிக் கொடு.( அவர்கள் மீண்டும் முத்தமிட்டுக் கொள்கிறார்கள். ) என் பாவத்தை என் இதழ்களிலிருந்து உன் இதழ்கள் ஒற்றி எடுத்துவிட்டன.

ஜூலியட் : ஓ ! என் இதழ்களில் மீண்டும் உன் பாவமா?

ரோமியோ : என்னது உன் இதழ்களில் என் பாவமா? வா அத்துமீறலுக்கு அனுமதியளி. என் பாவத்தை நான் எடுத்துக் கொள்கிறேன். ( மீண்டும் முத்தமிட்டுக் கொள்கின்றனர். )

ஜூலியட் : புத்தகம் கற்று தெரிந்தவன் போல் முத்தமிடுபவன் நீ.

செவிலி ( ஜூலியட் அருகில் வந்து ) அம்மணி தங்களை உங்கள் தாய் அழைக்கிறார்.

( ஜூலியட் நகர்கிறாள் )

ரோமியோ : இவளுடைய தாய் யார் ?

செவிலி : வணக்கத்துக்குரிய வாலிபனே  ! இவள் தாய் இந்த வீட்டின் எஜமானி. நலபென்மணி பண்புள்ளவள்.புத்திசாலியும் கூட. நீ இப்போது பேசிக் கொண்டிருந்தாயே அவளை நான் வளர்த்து ஆளாக்கிய செவிலி. அவள் கரத்தை பற்றுபவன் செல்வத்தின் கரத்தை பற்றியவன்.

ரோமியோ : ( தனக்குள் ) கபுலெட் குடும்பத்தைச் சேர்ந்தவளா ? என் உயிர் என் பகைவனின் கடன்.

பென்வோலியோ: ( ரோமியோவிடம் ) கிளம்பு போகலாம். இதுதான் சிறந்த தருணம்இங்கிருந்து விலகிச் செல்ல.

ரோமியோ : சரி இருந்தாலும் மற்ற நேரங்களில் இல்லாத அளவிற்கு நான் மனக்கலக்கத்திற்கு ஆளாகி இருக்கிறேன்.

கபுலெட் : இப்போது போகவேண்டாம் கணவான்களே.! இன்னும் சிறிது நேரத்தில் ஒரு ருசியான விருந்து காத்திருக்கிறது.( அவர்கள் இருவரும் திருவாளர். கபுலெட் காதுகளில் கிசுகிசுகிறார்கள். ) நீங்கள் சொல்வது நிஜமா? உங்களுக்கு என்னுடைய வந்தனம். கண்ணியம் மிக்க கணவான்களே நன்றி உங்களுக்கு. நல்லிரவு வணக்கம். யாரப்பா இங்கே இன்னும் இரண்டு விளக்குக் கொண்டு வாருங்கள்.( தனது ஒன்றுவிட்ட சகோதரனைப் பார்த்து ) வா. நாம் படுக்க செல்லலாம். ஏற்கனவே இரவு வெகு நேரமாகி விட்டது. எனக்கு ஒய்வு தேவை.

( சுளியட்டையும் செவிலியையும் தவிர அனைவரும் அகல்கின்றனர் )

ஜூலியட் : செவிலி இங்கே வா ! யார் அந்த இளைஞன்?

செவிலி : மூத்த டைபெரியோவின் ஒரே வாரிசு.

ஜூலியட் : இப்போது வாசல் வழிய வெளியேறினானே அவன் யார் ?

செவிலி : ஓ அவன் இளைய பெட்ரூஷியோ.

ஜூலியட் : இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்தானே நடனத்தில் கூட அவன் பங்கு கொள்ளவில்லை. யார் அவன் ?

செவிலி : தெரியலியே கண்ணு.

ஜூலியட் : போ போய் அவன் யாரென்று விசாரித்து வா. ( செவிலி அகல்கிறாள் ) அவன் திருமணமானவன் என்றால் என் கல்லறைதான் என் மணவறை.

செவிலி : (மீண்டும் வந்து ) அவன் பெயர் ரோமியோ . அவன் ஒரு மாண்டேகு குடியைச் சேர்ந்தவன். உங்களுக்குத் தீராப் பகைவனின் ஒரே புதல்வன்.

ஜூலியட் : ( தனக்குள் ) என்னுடைய ஒரே பகைமையிலிருந்து என் காதல் மலர்கிறது.அவன் யார் என்று தெரியும் முன்பு காதலித்தேன். அவன் யாரென்று தெரிந்தபோதுகாலம் கடந்ததற்கு பேதலித்தேன் . நான் வெறுக்கும் பகைவனைக் காதலிக்கச் சொல்லும் இந்தக் காதல் ஒரு மகா அதிசயமானது

செவிலி : என்னம்மா சொல்கிறாய் ? பெண்ணே என்ன சொல்கிறாய் ?

ஜூலியட் : இல்லை செவிலி அது ஒரு நடனப் பாடல். இப்போது விருந்தில் யாரோ பாடியது.   ( ஜூலியட் என்று யாரோ அழைக்கிறார்கள் )

செவிலி : நல்லது விருந்தினர்கள் அகன்று விட்டனர். வா நாமும் செல்வோம்.

( திரை ).

அங்கம் -1 நிறைவுற்றது.

அகாடமி அவார்ட் ( சிறுகதை) மலையாள மூலம் : வி.கே.என் – தமிழில்: ஸ்ரீபதி பத்மநாபா

download (7)

அகாடமி அவார்ட்

(1980 களில் எழுதப்பட்ட சிறுகதை)

மலையாள மூலம் : வி.கே.என்

தமிழில்: ஸ்ரீபதி பத்மநாபா

 

எழுத்தாளரின் டம்ளரை நிரப்பியபடி அட்சர சத்ருவான பதிப்பாளன் கேட்டான்:

”மண்ணின் கானம்’ங்கிற உன்னோட புத்தகத்துக்கு அகாடமி அவார்ட் வாங்கித் தந்தா நீ எனக்கு என்ன தருவே?”

எழுத்தாளன் கேட்டான்:

”மத்தியமா, மாநிலமா?”

”மத்திய அவார்டுடா, பரதேசி”

எழுத்தாளன் சொன்னான்:

”அவார்டுல பாதி காசு உனக்கு தரேன்.”

”ச்சீ! காசை நீயே வச்சுக்க. எனக்கு தேவை காசில்ல.”

”வேறென்ன வேணும்”

”இனி நீ எழுதற எல்லா புத்தகமும் நாந்தான் வெளியிடுவேன்.”

”சரி, தரேன்.”

”அவார்ட் கிடைச்சதுக்கப்புறம் வார்த்தை மாறக்கூடாது.”

”இல்ல.”

“மாறினேன்னு வச்சுக்க, உன் ஈரல் கொலையக் கடிச்சு தின்னுபோடுவன்.”

”அதுக்கு உனக்கு முழு உரிமையும் இருக்கு.”

மீண்டும் டம்ளரை நிரப்பி எழுத்தாளனும் பதிப்பாளனும் கைகள் அடித்துக்கொண்டார்கள்.

பதிப்பாளனின் மாமா ஒரு இலக்கிய விமர்சகர் மட்டுமல்லாது மத்திய சாகித்திய அகாடமியில் உறுப்பினரும்கூட. அன்று இரவு மாமாவின் முன் தலையை சொறிந்தபடி நின்று பதிப்பாளன் சொன்னான்:

”நம்ம டி.பி.எஸ் ஒரு புத்தகம் எழுதிருக்காரு. மண்ணின் கானம்னு”

மாமா கேட்டார்:

“அதுக்கு…? நான் என்ன செய்யணும்?”

”மத்திய அகாதமி அவார்டுக்கு முயற்சி பண்ணா பரவாயில்ல…”

மாமா சீறினார்:

”ச்சீ… முட்டாப் பயலே! நீ வெளியிட்டேன்றதுக்காக கண்டவனோட புத்தகத்துக்குப் பின்னால அலைஞ்சு திரியற அளவுக்கு முட்டாளாடா நான்?”

முட்டாள் பயலானதால் பதிப்பாளனுக்கு அவர் சொன்னதன் பொருள் விளங்கவில்லை. மாமா அருள் புரிகிற மாதிரி இல்லை என்பது மட்டும் பொதுவாகப் புரிந்துகொண்டான்.

இனி அத்தைதான் சரணம். பதிப்பாளன் அவரிடம் சென்று ‘ப்ரீஃப்’ செய்தான்.

டி.பி.எஸ். ஒரு புத்தகம் எழுதியிருக்காரு. மண்ணின் கானம். அதுக்கு மத்திய அகாடமி அவார்ட் கிடைக்கணும். பெரியவர் நினைச்சா நடக்கும். நம்ம பிசினஸும் நல்லா வளரும். ஸ்டேட் அகாடமியிலிருந்து புத்தகத்தை லிஸ்ட்ல சேத்துற வேலையை நான் பாத்துக்குவேன். பெரியவரை சிபாரிசு பண்ண வெக்க வேண்டிய வேலையை அத்தைதான் பாத்துக்கணும்.

அத்தைக்கு இலக்கிய ரீதியாக ஒரு எளவும் புரியவில்லை. மருமகனின் பிசினஸ் வளர்ச்சியடைகிற முக்கியமான விஷயம் இது என்று மட்டும் ஓரளவு புரிந்துகொண்டார்.

இலக்கிய விமரிசகர் இரவு உணவு அருந்த அமர்ந்தபோது அத்தை சொன்னார்:

“ஏதோ டி.பி.யோ யாரோ, ஒரு புத்தகம் எழுதிருக்காருன்னு பையன் சொல்றான். அதுக்கு காசு வாங்கிக் குடுக்கறதுல உங்களுக்கு என்ன பிரச்சினை?”

இலக்கிய விமரிசகர் கேட்டார்:

”ஓஹோ! அவன் புராணத்தை எடுத்துட்டு உங்கிட்டயும் வந்துட்டானா?”

”அதைக் கொஞ்சம் வாங்கிக் குடுத்துடுங்களேன்…”

”சாத்தியமே இல்லையென்பதை நான் மறுபடி மறுபடி தெளிவுபடுத்திக் கொள்கிறேன்.”

அத்தை கேட்டார்:

“எதுக்கு நீங்க இப்படி துள்ளிட்டிருக்கீங்க?”

செய்தியைக் கேட்டதும் பதிப்பாளனின் முகம் வாடி விட்டது. இருந்தாலும் பிடிவாதம் விடவில்லை. அவன் போர்முறைகளைத் துவங்கினான். உண்ணாவிரதம் அனுஷ்டித்தான். தாடியை மழிக்கவில்லை. நாட்கள் செல்லச் செல்ல எலும்பும் தோலுமாக உருமாறினான். இப்படியே போனால் போய்ச்சேர்ந்துவிடுவான் போலிருந்தது.

அத்தை விமர்சக நிபுணரிடம் கேட்டார்:

”அன்னந் தண்ணி இல்லாம பையன் செத்துப்போயிடுவான் போலிருக்கு.”

நிபுணர் வாயே திறக்கவில்லை. அத்தை சொன்னார்:

”அந்தக் காசு வாங்கிக் குடுக்கலேன்னா நானும் சோறு தண்ணி சாப்பிட மாட்டேன்.”

நிபுணருக்கு பைத்தியம் பிடித்துவிடும் போலிருந்தது. அவர் தன் தலைமுடியைப் பிய்த்துக்கொண்டபடி சொன்னார்:

”தொலஞ்சு போட்டும்… முயற்சி பண்றேன்…”

பதிப்பாளன் உணவு அருந்தி, தாடி மழித்து பழையபடி ஆனான்.

ஸ்டேட் அகாடமி இரண்டு புத்தகங்கள் மத்திக்கு அனுப்பியது. ’மண்ணின் கானம்’ என்கிற நாவலும், ‘வானம் நீலம்தான்’ என்கிற நாடகமும்.

ஸ்டேட்டில் இருந்து மத்திய போர்டில் இருப்பவர்கள் இரண்டு பேர். ஒருவர் நம் இலக்கிய நிபுணர். இன்னொருவர் வரலாற்றியலாளரான ஒரு ராஜதந்திரி. ராஜதந்திரி நாடகம் பக்கம் சாய்வுடையவர். மத்திய போர்டு உறுப்பினர்களை கவர்வதற்காக அவர் நாடக ஆசிரியரையும் நடிகர்களையும் அழைத்து வந்திருந்தார்.

மத்திய போர்டு கலந்தாய்வு நடப்பதற்கு முன் தினம் நாடகம் நிகழ்த்தப்பட்டது. போர்டு சேர்மேன் ஆன பிரதம அமைச்சர் உட்பட எல்லோரும் அழைக்கப்பட்டிருந்தனர். சிறிது நேரம் பிரதம அமைச்சர் ’வதை’யை சகித்துக்கொண்டிருந்தார்.

அடுத்த நாள் கலந்தாய்வு துவங்கியது. பிரதம அமைச்சர் தலைமை தாங்கினார். பல்வேறு மொழிகளின் புத்தகங்களெல்லாம் நிறைவான பிறகு சொந்த மொழி வந்தபோது ராஜதந்திரி கூறினார்:

”நேற்று நாமெல்லாம் கண்டுகளித்த நாடகம் ‘வானம் நீலம்தான்’, தேசம் முழுக்க அலையடிக்கும் சமூக பொருளாதார புரட்சியை உயிர்ப்புத்தன்மையோடு வரைந்து காட்டுகிற இந்தப் படைப்பு….”

பிரதம அமைச்சர் இடைநுழைந்தார்:

”இந்தப் படைப்பின் சமூக மதிப்பைப் பற்றி உங்கள் கருத்து…?”

ராஜதந்திரி கூறினார்:

”அதை நோக்கித்தான் வந்துகொண்டிருக்கிறேன்.”

அவர் வெகு நேரம் உரை நிகழ்த்தினார்.

கண்மூடி அமர்ந்திருந்த பிரதம அமைச்சர் கேட்டார்:

“வேறு ஏதாவது படைப்பு இருக்கிறதா?”

நம் நிபுணருக்கு முகூர்த்தம் கிடைத்துவிட்டது. அவர் உற்சாகத்தோடு சொன்னார்:

“இருக்கிறது. ’மண்ணின் கானம்’. யுக யுகங்களாய் பாடுபட்டுக்கொண்டிருக்கும் மக்களின் ஒரு பகுதியினர் வயநாட்டின் மண்ணில் போராடும் இதிகாசப் போராட்டத்தின் கதை இது…”

பிரதம அமைச்சர் கண் திறந்தார்:

‘அருமையான தீம்!”

போர்டு உறுப்பினர்களுக்கு உடனே வெளிச்சம் கிடைத்துவிட்டது. அவர்கள் ஏக அங்கமாக தலை ஆட்டினார்கள்.

துள்ளிக்குதித்து ஓடிவந்த பதிப்பாளனிடம் அத்தை கேட்டார்:

”ப்ரைஸ் கிடைச்சுதாடா?”

”கிடைச்சாச்சு…”

அத்தை சொன்னார்:

”இனி எல்லா மாசமும் கிடைக்கணும்னு புடிவாதம் புடிக்கக் கூடாது, செரியா! உன் மாமா ஒரு சிடுமூஞ்சி, தெரியுமில்ல…?”

***

சிங்கம் – ஒரு நீதிக்கதை  –    The Lion – A Moral Tale – ஸ்லாவோமிர் மிரோஜெக் (போலிஷ்) - Slawomir Mrozek -  ஆங்கிலம் : எய்ன்ட் ஓ கல்லகன் ( Einde O’Callaghan ) – தமிழில் ச. ஆறுமுகம்  

download (4)

 

சீசர் கையைக் காட்டினான். கூண்டின் வாயிற்கதவு மேலாக உயர்ந்தது. இருண்ட குகைக்குள்ளிருந்து இடியைப் போன்ற முழக்கம் எதிரொலித்தது. அரங்கத்தின் மையத்தில் நின்ற கிறித்துவர்கள் ஒருவருக்கொருவர் நெருங்கிக் கைகளைக் கோர்த்துக்கொண்டனர். கூட்டம் நன்கு பார்ப்பதற்கு வசதியாக எழுந்து நின்றது. மாபெரும் பனிப்பாறை  வீழும் கனத்த சத்தம் – என்ன நிகழுமோ, எப்படி நிகழுமோ என்ற  எதிர்பார்ப்பில் எழுந்த ஆழப்பெருமூச்சுகளும் அச்சத்தின் கூக்குரல்களும் பரவிச் சூழ்ந்தது. மிகுந்த வேகம் கொண்ட முதல் சிங்கம், அதற்கு இசைவாக இயங்கும் உடலோடு அரங்கத்தில் குதித்தது. விளையாட்டு தொடங்கியது.

சிங்கக் காப்பாளன் போன்டனி கையஸ் நீண்ட கம்பும் கையுமாக, எல்லா விலங்குகளையும் களமிறக்குவதில் குறியாக நின்றான். அவன் `அப்பாடா` என நிம்மதிப் பெருமூச்சொன்றை வெளியிடும் நேரத்தில், கடைசிச் சிங்கம் மட்டும் அரங்கத்தில் குதிக்காமல், குகை வாயிலில் அமைதியாக அமர்ந்துகொண்டதோடு, காரட் ஒன்றை ருசித்துச் சுவைக்கவும் தொடங்கியது. கையஸ் வசவுகளைப் பொழிந்தான். எல்லா விலங்குகளையும் களத்திலிறக்குவது அவன் கடமையில்லையா, என்ன? அவன் அதனருகில், ஆனால், உயிருக்கும் உடலுக்கும் பாதுகாப்புக்காகப் பணிவிதிகள் அனுமதிக்கும் குறைந்தளவு தூரத்தில் எட்டி, சிங்கத்தின் பின்னால் நின்று கையிலிருந்த நீளக்கம்பால்  குத்திக்குத்தி, அதை எழுப்பிவிடத் தூண்டினான். ஆனால், அதுவோ, ஆச்சரியப்படும்படியாகச் சுற்றிலும் ஒரு நோட்டமிட்டுப் பார்த்துவிட்டு அமைதியாக வாலைக் குழைத்தது. கையஸ் மீண்டும் கொஞ்சம் வலுவாகக் குத்தி எழுப்ப முயற்சித்தான்.

‘’ஷ்ஷூ, சும்மாயிரு’’ என்றது சிங்கம்.

கையஸ் தலையைச் சொறிந்தான். சிங்கம் அடியையோ வசவுகளையோ விரும்பவில்லையென்பதைத் தெளிவாகவே காட்டியது. கையஸ் ஒன்றும் மோசமான வேசிமகன் இல்லை. ஆனாலும் மேற்பார்வையாளன் பார்த்துத் தொலைத்துவிட்டால், வேலையில் அசட்டையென்று சொல்லி அரங்க மையத்தில் கிறித்துவர்களோடு கொண்டு போய் நிறுத்திவிடுவான். மேலும் சிறிது முயற்சிப்பதென அவன் தீர்மனித்தான்.

‘’நீ இதை எனக்காகச் செய்துதான் தீர வேண்டும்’’ என்றான் சிங்கத்திடம்.

‘’என்னைக் கழுதையென்று நினைத்துவிடாதே,’’ என்றது சிங்கம், காரட் சுவைப்பதை நிறுத்தாமலேயே.

போன்டனி குரலைத் தாழ்த்திக்கொண்டான். ‘’நீ ஒன்றும் யாரையும் தின்ன வேண்டாம். ஆனால், உன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவாவது, அது மாதிரி சும்மா, நடித்துக் காட்டேன்,’’. சிங்கம் திரும்பித் தன் வாலை, விழித்து நோக்கியது.

‘’இங்கே பார், கிழவா, நானொன்றும் முட்டாள் அல்ல. அவர்கள் எல்லோரும் தான் பார்ப்பார்கள்; மறந்து விடுவார்களா என்ன? நான் யாரையுமே சாப்பிடவில்லையென்று சொன்னால், பிற்காலத்தில் யாரும் நம்ப மாட்டார்கள்.’’

காப்பாளன் களைத்துப் பெருமூச்சு விட்டான். ஆனால், சிறிது வருந்தும் குரலில் கேட்டான். ‘’ என்ன இழவுக்குத் தான் இப்படி அடம் பிடிக்கிறாய்?’’

சிங்கம் சிந்தனை நோக்கோடு அவனை நேருக்கு நேராக அவன் கண்களில் பார்த்தது.

‘’உன்னைக் காப்பாற்றிக்கொள்ளவாவது’’ என்றாயில்லையா? இந்த ரோமாபுரிக் கோமான்கள் இறங்கி வந்து, அவர்களே இந்தக் கிறித்துவர்களைத் தின்ன வேண்டியதுதானே? ஏன் எங்களைத் தின்னச் சொல்கிறார்கள்?’’

‘’அது எனக்குத் தெரியாது. அவர்கள்  எல்லோருக்குமே மிகவும் வயதாகிவிட்டது…. போதாக்குறைக்கு ஆஸ்துமா வேறு …. உடம்பும் அவ்வளவுக்கு வளையாது…….’’

‘’ஆமாமா, ரொம்பத்தான் கிழவன்கள்!’ சிங்கம் இகழ்ச்சியும் சினமுமாக வார்த்தைகளைத் துப்பியது.

‘’உனக்கு அரசியல் பற்றி ஒன்றுமே தெரியவில்லை. அவர்கள் தங்கைளத் தற்காத்துக்கொள்கிறார்கள்.’’

‘’அது சரி, யாரிடமிருந்து?’’

 ‘’எதுவும் மாறி, எப்படியுமாகலாம் என்ற விதியிலிருந்து. வரலாற்றில் ஒருவன் எப்போதுமே மாற்றத்தின் செயல்பாடுகளைக் கவனத்தில் கொண்டிருக்கவேண்டும். இந்த கிறித்துவர்களும் ஒருநாள் ஆட்சி அதிகாரத்துக்கு வருவார்கள் என்று உனக்குத் தோன்றவேயில்லையா?

‘’அவர்களா? ஆட்சிக்கா?’’

‘’ஒருவிதத்தில் சரிதான். ஆனால், நீ வரிகளுக்கிடையில் வாசிக்கப் பழக வேண்டும். இன்றோ, நாளையோ என்றோ ஒருநாள், கிறித்துவர்களோடு, ரோமானியச் சக்கரவர்த்தி,  கான்ஸ்டன்டைன் தி கிரேட் சமரசமாகப் போவார். அப்புறம் என்னவாகும்? மறுவிசாரணை, வழக்கு, இழப்பீடு, மறுவாழ்வு என்று எல்லாமும். இன்றைக்கு மேடையில் இருப்பவர்கள் எல்லோருமே கையை விரித்துவிடுவார்கள். மிகவும் எளிதாகச் சொல்வார்கள், நாங்கள் எதுவும் செய்யவில்லை, எல்லாம் அந்தச் சிங்கங்கள்தான், என்று.’’

‘’உண்மையில் நான் இப்படியெல்லாம் நினைத்துக் கூடப் பார்க்கவேயில்லை.’’

‘’அதனால்தான் சொல்கிறேன், ஆனால், நானொன்றும் அவர்களைப் பற்றிக் கவலைப்படவில்லை, என்னை எப்படிக் காப்பாற்றிக்கொள்வதென்றுதான் பார்க்கிறேன். அப்படியொரு மாற்றம் நிகழ்ந்தால், எல்லோருக்கும் தெரியும், நான் இங்கே தனியாக உட்கார்ந்து காரட் மட்டுந்தான் சாப்பிட்டுக் கொண்டிருந்தேனென்று. அப்புறம், மற்றொன்று, இது நமக்குள் மட்டும், அவர்கள் இரத்தத்தை விரும்பிச் சுவைக்கிறார்கள்.’’

‘’உன் நண்பர்கள், கிறித்துவர்களைப் பிறாண்டிப் பிறாண்டித் தின்றாலும், அவர்கள் தான் சரியாகச் செய்து கொண்டிருக்கிறார்கள்.’’ என்றான், கையஸ் சிறிதும் இரக்கமின்றி.

சிங்கம் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டது.

‘’அடிமைகள். அவர்களது மூக்குக்கு அப்பால் என்ன நடக்கிறதென்பதைக்கூட அறியமாட்டாதவர்கள். அவர்கள் எதனோடு வேண்டுமானாலும் சேர்ந்துகொள்வார்கள். தந்திரம் என்றால் என்னவென்றே தெரியாது. தொலை தூரக் கிராமங்களின் விவசாயிகள்.’’

‘’நான் சொல்வதைக் கொஞ்சம் கேள்…’’ திக்கித் திணறினான், கையஸ்.

‘’ம், சொல்லு, என்ன?’’

‘’கிறித்துவர்கள் ஒரு வேளை எப்போதாவது ….சரி, நல்லது…’’

‘’என்ன, நல்லது?’’

‘’இல்லை, நல்லது, அவர்கள் எப்போது அதிகாரத்துக்கு வந்து….?’’

‘’சரி?’’

‘’எது வேண்டுமானாலும் நடக்கலாமென்று நீ சொல்லவில்லையா? நானொன்றும் உன்னைக் கட்டாயப்படுத்தவில்லை.’’

ஒருவரின் மிக முக்கிய கடமை நாட்டைப் பாதுகாப்பதுதான், நாட்டின் பாதுகாப்புக்கும் மேலானது எதுவுமில்லை.’’ எனத் தலையை நிமிர்த்திச் சொல்லிவிட்டு, மீண்டும் காரட்டைத் தின்னத் தொடங்கிவிட்டது.

https://www.marxists.org/history/etol/newspape/isj/1960/isj003/mrozek.htm

சின்னப்பயல்  கவிதைகள்

download (14)

பலகாலம் தூசிபடிந்த
அறையைத்துடைத்துக்கொண்டிருந்தேன்
வண்ணத்துப்பூச்சியின்
இறக்கைகள் கிடைத்தது

 

***

 

சிலந்தி
பூக்களுக்கு விரிக்கவில்லை
வலை

 

***

 

தவறி விழுந்த குஞ்சுகளை
கூட்டில் சேர்க்க
அதன் தாய்மொழி
தெரிந்திருக்கவேண்டியதில்லை

 

***

 

புத்தனுக்கும் தெரியாத
ஒன்று
எனக்குத்தெரியும்

 

***

 

வண்ணத்துப்பூச்சிகளை
ஹெர்பேரியத்தில் மட்டுமே
பார்க்கப்பிடிக்கும்

 

***

 

சலனங்களில்லாத
கவிஞன் நான்

 

***

 

***

உரத்துச்சொல்லவியலாத
கதை ஒன்று
என்னிடம் உள்ளது
என்பது
உனக்கு மட்டுமே தெரியும்

 

***

 

நேற்றிலிருந்து
அந்தப்பறவை
உன் பெயர் சொல்லித்தான்
அழைத்துக்கொண்டிருக்கிறது

 

***

 

சிந்தாமல் சாப்பிடு
என்று ரொட்டித்துண்டுகளை
கொடுத்துவிட்டுச்சென்றாள்
அவசியமாய்ச்சிந்திக்கொண்டே
உண்டுமுடித்தேன்
என் பாதங்களின் கீழ்
எறும்புகள்

 

***

கட்டுடைத்து வெளிவந்த
முன்னவீனத்துவம்
அவை

 

***

கவிதை சுயமைதுனம்
அதில் ஹைக்கூ
துரித ஸ்கலிதம்

***
-

நகைச்சுவை இரட்டையா;கள் – சத்யஜித் ரே தமிழில் : எஸ்.அற்புதராஜ்

 

download (2)

 

 

 

 

 

‘இன்றைக்கு நான் ஒரு சினிமா நட்சத்திரம் பற்றி சொல்லப் போகிறேன்,’;- டீ யை உறிஞ்சிக் கொண்டே தாரிணி மாமா சொன்னார்.

 

‘எந்த சினிமா நட்சத்திரம்? அவருடைய பெயர் என்ன?’ நாங்கள் எல்லோரும் ஒரே குரலில் கத்தினோம்.

 

நீங்கள் அவரைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்க மாட்டீர்கள் என்று தொடர்ந்தார், அவர் ஓய்வு பெற்ற பிறகு தான் நீங்கள் பிறந்திருப்பீர்கள்.

 

‘சரி இருக்கட்டும் அவர் பெயரைச் சொல்லுங்கள’,; நேப்ளா லேசில் விடுவதாக இல்லை,’நாங்கள் டி.வி.யில் பழைய படங்களைப் பார்க்கிறோம், அவர்களில் அநேக நட்சத்திரங்களைத் தெரியும’;.

 

‘சரி, சரி’ அவருடைய பெயர் ரத்தன்லால் ரக்ஸித்.

 

‘ஆமாம் யாரைச் சொல்லுகிறீர்கள் என்று நான் அறிவேன்,’நேப்ளா அறிஞன் போல் தலையை ஆட்டினான’;. மூன்று மாதங்களுக்கு முன்பு டி.வி யில் ‘ஜாய் போற ஜாய்’ (வெற்றியும் தோல்வியும்) என்று ஒரு படம் பார்த்தேன். ரத்தன்லால் அதில் கதாநாயகனின் தந்தையாக நடித்திருந்தாh’;.

 

‘பிறகென்ன? ஒரு படத்தில் அவரைப் பார்த்திருக்கிறீர்கள் என்றால் நான் சொல்லப் போகும் கதையை நிச்சயம் ரசிப்பீர்கள்’;.

 

‘அது ஒரு பேய் கதையா என்ன?’

 

‘இல்லை ஆனால் ரொம்பப் பழசாகி மறந்து போன ஒரு கதை. அந்த வகையில் அதை நீங்கள் பேய்க்கதை என்றும் அழைக்கலாம். அது கடந்த காலம் பற்றியது அந்தக் காலச் சம்பவங்கள் நிறைந்தது.

 

‘சரி, சரி. கதையை ஆரம்பியுங்கள்.’

 

தாரிணி மாமா தலையணை திண்டை இன்னும் கொஞ்சம் அருகில் வைத்து சாய்ந்து கொண்டு கதையைத் தொடந்தார்.

 

‘ரத்தன்லால் தன்னுடைய எழுபதாவது வயதில் 1970 ல் ஓய்வு பெற்றார். அவருடைய உடல்நலம் அவ்வளவு சரியில்லை என்பதால் டாக்டர் பூரண ஓய்வு எடுத்துக் கொள்ள சொல்லி விட்டார்.அவர் நாற்பத்தைந்து ஆண்டு காலம் மௌனப் படங்களின் காலத்திலிருந்தே நடித்துக் கொண்டிருந்தார். நிறைய பணம் சம்பாதித்தார். கல்கத்தாவில் அவருக்கு மூன்று வீடுகள் உண்டு. அவற்றில் ஆம்ஹெஸ்ட் தெருவில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். மற்ற இரண்டையும் வாடகைக்கு விட்டிருந்தார்.

 

ஓய்வு பெற்ற பின் ஒரு நாள் ரத்தன்லால் தனக்கு ஒரு செயலாளர் வேண்டுமென்று செய்தித் தாள்களில் விளம்பரம் கொடுத்திருந்தார். நான் அப்பொழுது கல்கத்தாவில் இருந்தேன். அப்பொழுது எனக்கு ஐம்பது வயதாகியிருந்தது. நான் அந்த விளம்பரத்தைப் பார்த்ததும் பயணங்களிலும் பல வேலைகளிலும் என்னுடைய வாழ்நாள் எல்லாம் கழிந்து விட்;ட நிலையில், இனிமேலாவது என்னுடைய சொந்த மண்ணில் காலூன்றி நிற்க நேரம் வந்து விட்டதோ என்று உணர்ந்தேன். எனவே நான் அதற்கு மனுச் செய்தேன். ரத்தன்லாலின் பெயர் நான் நன்றாக அறிந்ததே. அவருடைய படங்களை நான் பார்த்திருந்தது மட்டுமல்ல் மேலும் நான் சினிமாவில் வெகுவாக ஆர்வமுடையவன் என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.

 

ஒரு வாரத்தில் எனக்குப் பதில் கிடைத்து ஒரு நேர்காணலுக்கு வருமாறு.

நான் ரக்ஸித்தின் வீட்டிக்குச் சென்றேன். அவர் உடல்நலம் குறைவானவர் என்பதை அறிந்திருந்தேன். என்றாலும் சுகவீனத்திற்கான எந்த அடையாளமும் காணப்படவில்லை. தோலில் சுருக்கமில்லை. பற்கள் நன்றாக இருந்தன. முதலாவது என்னை அவர் கேட்டது தன்னுடைய படங்களில் எதையாவது பார்த்திருக்றேனா என்று. பின்னாளில் வந்த படங்களைத் தவிரவும் ஆரம்பகாலப் படங்கள்,மௌனப் படங்கள் சிலவற்றை தவிரவும் மற்ற படங்களை யெல்லாம் ஒரளவு பார்த்திருக்கிறேனென்றும் சொன்னேன்.

 

என்னுடைய பதில் அவருக்கு மகிழ்ச்சியளித்திருக்க வேண்டும். அவர் சொன்னார், நான் கடந்த சில ஆண்டுகளாக என்னுடைய மௌனப் படங்களின் பிரதிகளை யெல்லாம் பெரும்பாலும் சேகரித்து வைத்திருக்கிறேன். இந்த வீPட்டின் ஒரு அறையையே திரையரங்கமாக வைத்திருக்கிறேன். ஒரு ப்ரொஜெக்டரும், அதை இயக்குவதற்கு ஒருவரையும் நியமித்து இருக்கிறேன். மௌனப் படங்களைச் சேகரிப்பது பெரிய கஷ்டமாக இருக்கிறது. திரைப்படக் காப்பகத்தில் ஏற்பட்ட தீவிபத்தைப் பற்றி நீங்கள் கேள்விப் பட்டிருக்கலாம், அதில் வங்காளத்திலிருந்த பெருவாரியான மௌனப் படங்கள் பல அழிந்து விட்டன. ஒரு முறையல்ல இரண்டு முறை அவ்வாறு நிகழ்ந்துவிட்டது. அதன் விளைவாக அந்தப் படங்களின் பிரதி கிடைப்பது வெகு கடினமாக இருக்கிறது. ஆனாலும் நான் என்னுடைய முயற்சியைக் கைவிடவில்லை. பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்திருந்தேன். இறுதியாக என்னுடைய படத்தயாரிப்பாளர்களில் என்னுடைய படங்களில் பல பத்திரமாக இருக்கின்றன என்று அறிந்தேன் காரணம் மீர்ச்சந்தனி என்பவரிடம் என்னுடைய படங்கள் பத்திரமாக இருக்கின்றன என்று அறிந்தேன். காரணம் மிர்ச்சந்தனி வெறும் படத்தயாரிப்பளர் மட்டுமல்ல அவருடைய காப்பகத்தில் என்னுடைய ரசிகரும் கூட. அவர் நான்கு வருடங்களுக்கு முன்பு இறந்து போனார். நான்;; அவருடைய மகனிடம் பேசி, அவரிடம் இருந்த படங்களையெல்லாம் விலை கொடுத்து வாங்கிக் கொண்டேன். பின் மீண்டும் விளம்பரம் கொடுத்து, கொஞ்ச காலத்தில் மீதமுள்ள படங்களையும் சேகரித்தேன். என்னுடைய நலக்குறைவு என்னை ஓய்வு பெற வைத்து விட்டது. ஆனால் என் படங்களை விட்டுப் பிரிய மனமில்லை. ஆகையால் என்னுடைய படங்களை நானே பார்த்து வருகிறேன். ஒவ்வொரு மாலையும் இனிதாகக் கழிகிறது. உங்களுடைய வேலை என்னுடைய திரைப்படக் காப்பகத்தை பார்த்துக் கொள்வது. அந்தப் படங்களுக்கான பட்டியல் ஒன்று தயாரிப்பது விட்;டுப் போன படங்களைக் கண்டு பிடித்துச் சேகரிப்பது. உங்களால் முடியுமா?’

 

‘நிச்சயமாக என்னால்; முடிந்தவரை சிறப்பாகச் செய்கிறேன்’, என்றேன். ஏற்கனவே அவரிடம் உள்ள படங்களின் பட்டியலைச் சீர்படுத்துவது அப்படி யொன்றும் சிரமமாக இருக்கப் போவதில்லை. அவரிடம் இல்லாத படங்களின் பிரதிகளைத் தேடி யெடுப்பது தான் மிகவும் பெரிய சவால். ‘நான் என்னுடைய மௌனப் படங்களை மட்டும் சொல்லவில்லை,’ மிஸ்டர் ரக்ஸித் தொடர்ந்தார்,’ என்னுடைய ஆரம்பக்கால படங்களிலும் சில தவறிவிட்டன. ஆனால் தரம்தோலா ஏரியாவில் உள்ள என்னுடைய படத்தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்கள் அலுவலகங்களில் சென்று விசாரித்தால் நிச்சயமாக நமக்கு தேவையான படப்பிரதிகள் கிடைத்துவிடும் என்று நினைக்கிறேன். நான் என்னுடைய சேகரிப்பில் ஒரு படம் கூட தவறாமல் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். என்னுடைய படங்களை யெல்லாம் பார்த்து ரசித்தவாறே என் முதுமைக் காலத்தைக் கழிக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறேன்.’

 

எனக்கு வேலை கிடைத்தது. மிஸ்டர் ரக்ஸித் ஒரு அரிய மனிதர். அவருடைய மனைவி பதினைந்து வருடங்களுக்கு முன்பே இறந்து விட்டாள். அவருக்கு இரண்டு மகன்கள். இருவரும் தென்கல்கத்தாவில் வசிக்கிறார்கள். ஒரே மகள் அலகாபாத்தில் வசிக்கிறாள். அவளுடைய கணவர் அங்கேயே டாக்டராக இருக்கிறார். எப்பொழுதாவது அவருடைய பேரக்குழந்தைகள் அவரைப் பார்க்க வருவார்கள். அது போலவே அவர் மகன்களும் அவ்வப்போது வருவார்கள். ஆனால் மிஸ்டர் ரக்ஸித் அவருடைய குடும்பத்தினர் யாருடனும் நெருங்கிய தொடர்பு வைத்திருக்க வில்லை. இரண்டு பணியாட்கள். ஒருவர் சமையல்காரர், இன்னொரு பணியாளர் லஷ்மிகாந்த். லஷ்மிகாந்துக்கு வயது அறுபது தாண்டியிருக்கும், அவர் தன்னை எசமானருக்கு முழுமையாக அர்ப்பணித்திருந்தார். மிஸ்டர் ரக்ஸித் அப்படி ஒருவரைப் பெற்றிருந்தது, அவருடைய அதிர்ஷ்டமே.

 

நான் லஷ்மிகாந்த்தின் உதவியோடு வேலையைத் தொடங்கினேன். அவருடைய சேகரத்திலுள்ள எல்லாப் படங்களின் பிரதிகளையும் பார்த்து பட்டியல் செய்;யத் தொடங்கி பத்து நாட்களில் முடித்தோம். பின்னர் தரம்தோலாவில் உள்ள பட விநியோகஸ்தர்களின் அலுவலகங்களுக்குச் சென்று மிஸ்டர் ரக்ஸித் நடித்திருந்த அநேக ஆரம்பகால பேசும் படங்களைக் கண்டோம். ஒவ்வொரு படத்தின் பிரதி ஒன்றை அவர் வாங்கிக் கொண்டார்.

 

நான் காலை பத்து மணியிலிந்து மாலை ஐந்து மணி வரை வேலை செய்தேன். ஆனால் சில சமயங்களில், ஐந்து மணிக்கு வீட்டிற்கு போவதற்கு பதிலாக அவருடன் சேர்ந்து படம் பார்ப்பேன். அவர் வழக்கமாக மாலை ஆறரை மணிக்கு படம் பார்க்கத் தொடங்கி எட்டு முப்பதுக்கு முடித்து விடுவார். பட ஆபரேட்டர் ஆஷு பாபு மிகவும் மகிழ்ச்சியுடையவன். ரசிகர்கள் நாங்கள் மூன்று பேர் மட்டுமே. மிஸ்டர் ரக்ஸித், லஷ்மிகாந்த், நான். மிஸ்டர் ரக்ஸித் ஹுகா புகைக்க லஷ்மிகாந்த் உதவி வேண்டியிருந்தது. லஷ்மிகாந்த் அவ்வப் பொழுது அதை வெளியே எடுத்துச் சென்று மீண்டும் நிரப்பிக் கொண்டு வருவார். அந்த அறை இருளாக இருந்த போதிலும், லஷ்மிகாந்தின் முகத்தைக் காண நேரும் போதெல்லாம் அந்தப் படங்களை யெல்லாம் அவன் ரொம்பவும் ரசித்துப் பார்த்தார் என்றே சொல்ல வேண்டும்.

 

அவற்றில் மௌனப் படங்களே மிகவும் சிறந்தவையாக இருந்தன. நான் முன்பே சொல்லிருக்கிறேன் மிஸ்டர் ரக்ஸித் மௌனப்பட காலத்தில் நகைச்சுவைப் படங்களில் நடித்திருந்தார் என்று. அவை ஒவ்வொன்றும் இருபது நிமிடங்கள் ஓடக்கூடிய இரண்டு ரீல்கள் தான். அவை லாரல் – ஹார்டியை நினைவூட்டும் பிஷு-ஷிபு என்ற இரட்டையர்களின் சாகஸங்களாக அமைந்திருந்தன. மிஸ்டர் ரக்ஸித் பிஷு பாத்திரத்தையும் ஷரத் குண்டு என்பவர் ஷிபு பாத்திரத்தையும் ஏற்று நடித்திருந்தனர். இந்த இருவரின் கும்மாளங்களைப் பார்க்க ஆரம்பித்தால் இருபது நிமிடங்களும் பறந்தோடிவிடும். சில படங்களில் வணிகர்களாக அல்லது சூதாடிகளாகத் தோன்றினர். இன்னும் சிலவற்றில் சர்க்கஸ் கோமாளிகள் அல்லது ஒரு ஜமீன்தாரும் அவரது சகாவும் அவர்களுடைய காலத்தில் அவர்கள் எவ்வளவு புகழோடு இருந்தார்கள் என்பதை அறிவேன். இத்தகைய குறும்படங்கள் முழுநீள கதைப் படங்களுக்கு முன்பாக திரையிடப்படும்.

 

இந்தப் படங்களைப் பார்த்து நான் ரசிப்பதைக் காட்டிலும், மிஸ்டர் ரக்ஸித் தன்னுடைய நடிப்பை எப்படி ரசிக்கிறார் என்பதையே நான் ரசித்தேன். தன் கோமாளித் தனங்களைப் பார்க்கும் போதெல்லாம் அவர் விழுந்து விழுந்து சிரிப்பார். ஒரு நகைச்சுவை நடிகன் தன்னுடைய நடிப்பைக் கண்டு தானே அந்த அளவுக்கு சிரிக்கக் கூடும் என்பதை சில சமயங்களில் நம்புவதற்கு முடியவில்லை. இயல்பாகவே நானும் அவரோடு சேர்ந்து சிரிக்க வேண்டியிருந்தது. சமயங்களில் அவர் சொல்லுவார், தாரிணி நான் இந்தப் படங்களில் நடிக்கும் பொழுதெல்லாம் இவை வேடிக்கையாகத் தோன்றவே இல்லை. உண்மையில் அவை எனக்கு கோணங்கித்தனமாகவும் நகைச்சுவை திணிக்கப்பட்டதாகவுமே உணர்ந்தேன். எரிச்சலாக இருக்கும். ஆனால் இப்பொழுது அவைகள் எவ்வளவோ தூய்மையாக மாசுமறுவற்ற கேளிக்கைகளாகவே தெரிகின்றன. இன்றைய நவீன நகைச்சுவைக் காட்சிகளோடு ஒப்பிட அவைகள் மிக உயர்ந்தவை என்று உணர முடிகிறது.

 

சில நாட்களாகவே என்னை உறுத்திக் கொண்டு இருந்த விஷயம் குறித்து அவரிடம் ஒரு நாள் கேட்டேன், ‘ஒரு விஷயம் பற்றி உங்களிடம் கேட்க வேண்டும் என்று எனக்கு ஆசை. நீங்கள் பிஷு பாத்திரத்தை ஏற்று நடித்தீர்கள். ஆனால் ஷிபு பாத்திரம் ஏற்று நடித்த சரத் குண்டு என்னவானார்? அவருக்கு என்னவாயிற்று? அவருடன் இன்னும் தொடர்பு இருக்கிறதா உங்களுக்கு?.’

 

மிஸ்டர் ரக்ஸித் தலையை ஆட்டினார். நான் அறிந்ந வரை பேசும்படம் ஆரம்பித்ததும் சரத்குண்டு நடிப்பதை நிறுத்திவிட்டார். நாங்கள் இருவரும் இணைந்து நடித்த பொழுது ரொம்ப நெருக்கமாக இருந்தோம். நாங்கள் எங்கள் மூளையை வருத்திக் கொள்வோம். நடிப்புக்கான எங்கள் திட்டங்களை நாங்களே தீட்டுவோம். பெயருக்கு மட்டும் இயக்குநர் என்று ஒருவர் இருந்தார். எல்லாவற்றையும் நாங்களே செய்தோம்;. நடிப்புக்கு வேண்டிய உபகரணங்கள் உடைகள் எல்லாவற்றையும் நாங்களே தீர்மானித்து தயாரித்துக் கொண்டோம். பின் ஒருநாள் செய்திகளில் படித்தோம், ஹாலிவுட் படங்கள் எல்லாம் ஒலியுடன் தயாரிக்கப்படுகின்றன என்று எனவே பாத்திரங்கள் பேச ஆரம்பித்த பொழுது ரசிகர்கள் அவர்கள் குரல்களைக் கேட்க முடிந்தது. அது 1928 அல்லது 1929-ல் நிகழ்ந்தது மூன்று, நான்கு ஆண்டுகளுக்குப் பின் இந்தியப் படங்களிலும் அது நிகழ்ந்தது. அது ஒரு மாபெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. திரைப்படத் தயாரிப்பு அடியோடு மாறிப்போனது அதே போல நடிப்பிலும் மாற்றம் நேர்ந்தது. என்னைப் பொறுத்த வரை அது ஒரு பிரச்சினையாக இல்லை. என்னிடம் குரல்வளம் இருந்தது. எனவே பேசும் படங்களால் எனக்கு இழப்பேதும் இல்லை. அப்போது என்னுடைய வயது முப்பதுகளில் இருந்தேன். வங்காளத் திரைப் படத்தொழில் நல்ல குரல் வளம் மிக்க ஹீரோவை தேடிக் கொண்டிருந்தது. அந்தத்தேவையை நான் சிரமமில்லாமல் பூர்த்தி செய்து விட்டேன். இருபது நிமிடங்கள் கோமாளிக் கூத்துக்கு ஒரு முடிவு வந்தது. நான் ஒரு கதாநாயகன் ஆனேன். ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் ஷரத்குண்டு காணாமல் போய்விட்டார். நான் அவரைப் பற்றி சிலரிடம் கேட்டுப் பார்த்தேன். ஆனால் அவர் எங்கே இருக்கிறார் என்று யாராலும் சொல்ல முடியவில்லை. இளம் வயதிலேயே ஒரு வேளை இறந்திருக்கலாம். கடவுளே அறிவார்.

 

அப்படியானால் அவரைத் தேடுவதில் அர்த்தமில்லை. ஆனால் ஷரத்குண்டுவைப் பற்றி இன்னும் சரியாக விசாரிக்க வேண்டும் என்று உள்மனம் சொல்லியது. அந்த இருபது நிமிடப் படங்களைப் பார்த்தபின் அவர் திறமையில் ரத்தன்லால் ரக்ஸித்துக்கு சற்றும் குறைந்தவர் அல்ல என்று தோன்றியது.

 

நான் தோலிகஞ்ச்சுக்குச் சென்று நான் அறிந்த சிலரை விசாரித்தேன். நரேஷ் சன்யால் என்ற பத்திரிகையாளர் வங்காளத்தின் ஆரம்பகால படங்களைக் குறித்து விளக்கமான புத்தகம் எழுதுவதாகவும் அறிந்தேன். எப்படியோ அவர் முகவரியைக் கேட்டறிந்து கொண்டு ஒரு ஞாயிற்;றுக்கிழமை காலை அவருடைய வீட்டை அடைந்தேன். மிஸ்டர் சன்யால் ஷரத்குண்டு பற்றி தான் அறிந்தவற்றைச் சொல்லலானார். ஐந்து வருடங்களுக்கு முன்பு வெகுவாகச் சிரமப்பட்டு ஷரத்குண்டு வின் முகவரியைப் பெற்று அவரிடம் பேட்டி எடுக்க முனைந்தாராம் அவரை எங்கே கண்டு பிடித்தீர்கள்? என்று கேட்டேன். கோபகனில் ஒரு சேரிப் பகுதியில் அப்பொழுது அவர் மிகவும் வறிய நிலையில் இருந்தார், சன்யால் சொன்னார்.

 

மௌனப் படங்களில் நடித்த எல்லா நடிகர்களையும் பேட்டி கண்டு விட்டீர்களா? நான் தெரிந்நு கொள்ள விரும்மினேன்.

 

‘என்னால் முடிந்நவரை செய்து விட்டேன். ஆனால் ஒரு சிலரே உயிரோடிருக்கிறார்கள்?’ என்றார் சன்யால்.

 

ரத்தன்லால் ரக்ஸித் பற்றி சொன்னேன். வேண்டுமானால் அவருடன் பேட்டி ஒன்றுக்கு ஏற்பாடு செய்வதாகவும் சொன்னேன். இந்த விஷயத்தை சன்யால் உற்சாகத்தோடு வரவேற்றார்.

 

அப்பொழுது நான் என்ன தெரிந்து கொள்ள விரும்புவதை பற்றிச் சொன்னேன். ‘பேசும்படம் வந்ததும் ஷரத்குண்டு நடிப்பதை நிறுத்தி விட்டாரா?’

 

ஆமாம் குரல்வளச் சோதனையில் அவர் நிராகரிக்கப் பட்டார். அதற்குப் பின் அவர் எப்படி வாழ்ந்தார் என்று சொல்லவில்லை.ஒரு வேளை கசப்பான வாழ்க்கை அனுபவம் குறித்து அவர் சொல்லிக்கொள்ளவிருப்படவில்லை போலும். அவர் மௌனப் பட யுகம் குறித்து நான் அவரிடம் நிறையத் தெரிந்து கொண்டேன்.

 

அதன் பிறகு நான் மீண்டும் தோலிகஞ்ச் பகுதிக்குச் சென்று மற்றும் சிலரை விசாரித்தேன். ஷரத்குண்டு பேசும்படங்களில் அவருக்கு எதிர்காலம் இல்லையென்று தெளிவாகிய பின்னும் வாய்ப்பு தேடி ஸ்டியோக்கள் பக்கமே சுற்றிக் கொண்டிருந்ததாகவும் அறிந்தேன் அவருடைய பொருளாதார நிலைமை மிகவும் மோசமாகி விட்டது. தோலிங்கஞ்சில் மாயாபுரி ஸ்டுடியோ மானேஜர் சொன்னார் ஷரத்குண்டுக்கு எப்பொழுதாவது சினிமாவில் எக்ஸ்ட்ராவாக நடிக்கச்சந்தர்ப்பம் கொடுக்கப்படும் அது அவருக்குக் கொஞ்சம் வருமானத்தை ஈட்டியது. ஒரு எக்ஸ்ட்ரா என்றால் வழக்கமாக திரையில் கூட்டத்தில் ஒரு ஒரமாக தலைகாட்ட வேண்டும். அவர் ஒன்றும் பேச வேண்டி இருக்காது.

 

அதே மாயாபுரி ஸ்டுடியோவில் ஒரு வயதான புரொடெக்ஷன் மேனேஜரான த்வாரிக் சக்கரவர்த்தி, ‘பெண்டிங் தெருவில் உள்ள நடராஜ் கேபினுக்குப் போய்ப் பாருங்கள். சில வருடங்களுக்கு முன்பு ஷரத் குண்டுவை நான் அங்கே சந்தித்தேன்’, என்று சொன்னார்.

 

அந்த நாட்களில் எனக்குள் ஒரு தீர்மானம் ஷரத்குண்டுவை எப்படியாவது இந்த மறக்கப்பட்ட நிலையிலிருந்து மீட்டுவிட வேண்டும் என்று. எனவே நான் நடராஜ் கேபினுக்கு சென்றேன். அதற்கு முன் சொல்ல மறந்து விட்டேன். கோபகன் பக்கம் சென்று அவர் அங்கே இருந்து போய்விட்டார் என்று அறிந்தேன். ஷரத்குண்டுவைக் கண்டு பிடிப்பதற்கான என்னுடைய முயற்சிகளில் ரத்தன்லால் ரக்ஸித்தின் முழுமையான ஆதரவு கிடைத்து வந்தது என்பதைச் சொல்லத் தேவையில்லை. என்னைப் போலவே அவருக்கும் ஆர்வம் ஷரத்குண்டுவைக் கண்டுபிடிக்க வேண்டுமென்று. என்னை ஆக்கிரமித்திருந்த உணர்வுகள் ஒரு தொற்றுவியாதி போல் ரத்தன் லாலையும் பற்றிக் கொண்டது. அவர் அவருடன் கொண்டிருந்த நெருக்கமான நட்புறவு பற்றியும் சொல்ல ஆரம்பித்தார். சினிமாவுக்குச் சென்ற மக்களெல்லாம் பிரதான படத்தை விட பிஷு ஷிபுவைப் பார்க்கவே பெரிதும் விரும்பினர். மகாபிரசித்தி பெற்றிருந்தனர் அந்த இரட்டையர்கள். ஆனால் இப்போது அவர்களில் ஒருவர் மட்டுமே இருக்கிறார். இது நியாயமாகப்படவில்லை. மற்றவரையும் கண்டுபிடித்தே ஆக வேண்டும்.

 

நடராஜ் கேபினின் மேனேஜர் புலின்தத்தா சொன்னார். ‘மூன்று வருடங்களுக்கு முன்பு ஷரத்பாபு தவறாமல் இங்கே வந்து போய்க்கொண்னடிருந்தார். அதன்பின்பு அவரை நான் பார்க்கவே இல்லை’.

 

‘அவருக்கு வேலை ஏதாவது இருந்ததா?’

 

‘அது எனக்குத் தெரியாது. அதைப் பற்றிக் கேட்ட போதெல்லாம் அவரிடமிருந்து நேரடியான பதில் எதுவும் கிடைக்கவில்லை. அவர் சொன்னதெல்லாம் என்னைப் பட்டினியிலிருந்து காத்துக்கொள்ள நான் செய்யாத வேலையில்லை. ஆனால் நாளடைவில் சினிமாவில் வேலை செய்வதையும், ஏன் சினிமா பார்ப்பதையும் கூட நிறுத்திவிட்டார். பேசும்படத்தின் வருகை அவருடைய தொழிலை அழித்துவிட்டது என்பதை அவரால் ஒருக்காலும் மறக்க முடியவில்லை’.

 

‘நான் புலின்தத்தாவைச் சந்தித்து ஒரு மாதம் ஆகிவிட்டது. மற்றும் சில இடங்களில் விசாரித்தபோதும் எங்கேயும் ஏமாற்றம்தான். ஷரத்குண்டு தவறியது ரக்ஸித்துக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்தது. ‘அவர் ஒரு திறமைமிக்க நடிகர். அவர் சொல்லி வருத்தப்படுவார். பேசும்படத்தினால் ஒழிக்கப்பட்டவர், இன்று முற்றிலும் மறக்கப்பட்டு விட்டார். அவர் பெயரை இன்று யாருக்குத்தெரியும்? இது மரணத்தைப் போன்ற கொடுமையல்லவா?

 

இதை விடவும் இனியொன்றும் செய்வதற்கில்லையென்பதால் ஷரத்குண்டுவைத் தேடும் முயற்சியைக் கைவிட முடிவு செய்தேன். வேறு ஒரு விஷயத்தில் கவனத்தைத் திருப்பினேன். ‘நீங்கள் பேட்டி ஏதேனும் கொடுப்பீர்களா? என்று கேட்டேன்.

 

‘பேட்டியா? யார் கேட்டது’.

 

நரேஷ் சன்யால் பற்றிச் சொன்னேன். சன்யால் அன்று காலை என்னை அழைத்து மறுநாள் பேட்டியெடுக்க வரலாமா என்று கேட்டிருந்தார்.

 

‘ஆல்ரைட், நாளை காலை பத்து மணிக்கு வரச்சொல். ஆனால் நான் அவரோடு அதிக நேரம் பேசிச் செலவழிக்க முடியாது என்பதை மட்டும் சொல்லிவிடு.:

 

தொலைபேசியில் நரேஷ் சன்யானுக்கு சொல்லிவிட்டேன்.

 

அன்று மாலை புரொஜெக்ஷன் அறையில் பிஷு-ஷிபு கூத்துக்களை காண்பதற்கு இருந்து கொண்டேன். மொத்தம் நாற்பத்திரண்டு படங்கள். நான் வேலைக்குச் சேருமுன் முப்பத்தேழு படங்கள் ஏற்கனவே ரக்ஸித்தின் கலெக்ஷனில் இருந்தன. ஒரு வழியாக மீதி ஐந்து படங்களையும் நான் கண்டு பிடித்தேன். அன்று நான் அவற்றில் சிலவற்றைப் பார்த்த போது மீண்டும் ஷரத்குண்டுவின் நடிப்பைக் கண்டு ஆச்சர்யப்பட்டேன். உண்மையிலேயே வரம்பெற்ற நகைச்சுவை நடிகர்தான். ரக்ஸித் மிகுந்த வருத்தத்தோடு தன் நண்பனின் மறைவை எண்ணி நாக்கு ச்….. ச் சொட்டுவதைக் கேட்டேன்.

 

மறுநாள் காலை நான் அலுவலகம் வந்து சேர்ந்த பத்து நிமிடத்தில் சன்யால் வந்துவிட்டார். தன் பார்வையாளரை வரவேற்க ரக்ஸித் தயாராக இருந்தார். ‘பேட்டியைத் தொடங்குவதற்கு முன் ஒரு டீ குடிப்போமே’ என்றார். சன்யால் மறுப்பேதும் சொல்லவில்லை.

 

தினந்தோறும் பத்து மணிக்கு டீ குடிப்பது எங்கள் வழக்கம். அதன் பிறகு ரக்ஸித்தும், நானும் அன்று செய்ய வேண்டிய வேலையை தீர்மானிப்போம். பிறகு நான் என்னுடைய வேலையைத் தொடர்வேன். அவர் தன்னுடைய அறைக்கு ஓய்வெடுக்கச் சென்று விடுவார். நான் பட்டியல் தயார் செய்யும் வேலையை முடித்திருந்தேன். இப்பொழுது பிஷு-ஷிபு படங்களுக்கான கதைச் சுருக்கம் மற்றும் நடிகர்கள், இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள் போன்ற பணியாளர்கள் பட்டியல் தயார் செய்யும் வேலையைச் செய்து கொண்டிருந்தேன். அப்படிப்பட்ட பட்டியல் ‘ஃபில்மோக்ராஃபி’ என்று அழைக்கப்படுகிறது.

 

அன்றைக்கு பார்வையாளரைக் கௌரவிக்கும் விதமாக டீயடன் ஒரு பிளேட் சூடான கசூரியும் இருந்தது. டீ கொண்டு வரப்பட்ட பொழுது சன்யால் பேசிக் கொண்டிருந்தார். டீ கொண்டு வந்து மேசை மீது வைக்கப்பட்ட கணத்தில் சன்யால் திடீரென்று பேச்சை நிறுத்தினார். டீ கொண்டு வந்தவரை சன்யால் உற்றுப் பாhத்ததை கண்டேன். அவர் ரக்ஸித்தின் பிரத்யேக வேலைக்காரர் லஷ;மிகாந்த்.

 

நானும் கூர்ந்து கவனித்தேன். ரக்ஸித்தும் கவனித்துப் பார்த்தார். லஷ;மிகாந்தின் மூக்கு, அவருடைய தாடை, அகன்ற நெற்றி, கூர்மையான பார்வை.. இதையெல்லாம் எங்கோ பார்த்திருக்கிறேனே….. இத்தனை காலமாக நான் அவரைச் சரியாகக் கூர்ந்து கவனித்துப் பார்க்கவே இல்லை. அதற்கான காரணம் எதுவும் ஏற்படவில்லை. ஒரு வேலைக்காரரைக.; காரணமின்றி நான் ஏன் கூர்ந்து கவனிக்கப் போகிறோம்.

 

ஒரே பெயர் எல்லோருடைய உதடுகளிலிருந்து ஒரே குரலாக ஒலித்தது. ‘ஷரத்குண்டு’.

 

இல்லை. இதில் எந்தவித சந்தேகத்திற்கும் இடமேயில்லை. ஒரு காலத்தில் ரக்ஸித்தின் சகநடிகள், இன்றைக்கு அவருடைய பிரத்யேக வேலைக்காரர்.

 

‘என்ன இது சரத்?’ என்று ரக்ஸித் கத்தினார். ‘உண்மையிலே நீங்களா இது. இத்தனை நாட்களாக என்னுடைய வீட்டில்……?

 

ஷரத் குண்டுவுக்குப் பேசமுடியவில்லை. நெற்றியில் வியர்வை, அதைத் துடைத்துக் கொண்டே இறுதியாக’, நான் என்ன செய்ய முடியும்? இந்த பெரிய மனிதர் என்;னக் கண்டு கொள்வார் என்று நான் எப்படி அறிவேன்? அவரால் முடியாது என்றால் நிச்சயமாக உங்களால் முடியாது. உங்களால் என்னை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை, இல்லையா? எப்படி முடியும், நீங்கள் என்னைக் கடைசியாகப் பார்த்து நாற்பது ஆண்டுகள் ஆகிவிட்டதே நடந்தது, இது தான். நான் வேலை தேடி ஒரு நாள் மீர்சந்தனி அலுவலகம் சென்றேன். அங்கே தான் கேள்விப் பட்டேன் நம்முடைய பழைய படங்களின் பிரதிகளை யெல்லாம் நீங்கள் வாங்கிச் சென்று விட்டீர்கள் என்று. எனவே நான் நினைத்தேன் உங்களுடைய வீட்டில் வேலை கிடைத்தால் என்னுடைய படங்களை யெல்லாம் மீண்டும் பார்க்க வாய்ப்புக் கிடைக்கும் என்று தோன்றியது. அந்தப் படங்கள் எல்லாம் இன்னும் இருக்கக் கூடும் என்று தெரியாது. அதிர்ஷ்டவசமாக எனக்கு நீங்கள் வாய்ப்பு அளித்தீர்கள். இந்த வேலை கிடைத்தது. எனவே நீங்கள் என்னை அடையாளம் கண்டு கொள்ளாவிட்டாலும் நான் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. நான் கடந்த காலத்தில் கூலி வேலை பார்த்திருக்கிறேன். அதன் பிறகு கிடைத்த இந்த எளிய வேலை எனக்கு விண்ணுலகமே கிடைத்த மாதிரி இருந்தது என்று சொல்வேன். மேலும் நான் இங்கே நான் இருப்பது உண்மையில் மகிழ்ச்சியாக இருக்கிறது. பேசும் படங்கள் வருவதற்கு முன்பாக நாம் நடித்த அந்தப் படங்கள் எல்லாம் நன்றாகவே இருக்கின்றன இல்லையா? ஆனால் இப்பொழுது இனியும் அந்தப் படங்களைப் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்காது என்று தோன்றுகிறது.’

‘ ஏன் ? நீ ஏன் பார்க்க முடியாது ?’ ரக்ஸித் குதித் தொழுந்தார். ‘ இப்பொழுது முதல் நீங்கள் என்னுடைய மேனேஜர். தாரிணி இருக்கின்ற அறையில் தான் உங்களுக்கும் இடம். நீங்கள் என்னுடனேயே தான் இருக்கப் போகிறீர்கள் இதே வீட்டில் ஒவ்வொரு நாள் மாலையும் நம்முடைய படங்களை இருவரும் பார்ப்போம். புகழ் பெற்ற இரட்டையர்களான எங்களை துரதிர்ஷ்டமான இடைக்காலம் பிரித்திருக்கலாம். அது இந்தக் கணத்திலிருந்து முடிந்து விட்டது. என்ன சொல்லுகிறீர்கள் தாரிணி?’

நான் நரேஷ் சன்யாலைப் பார்த்தேன். அப்படி வாயடைத்துப் போய் உட்கார்ந்திருந்த ஒரு மனிதரை நான் ஒரு போதும் கண்டதில்லை. ஒரு பத்திரிகையாளனின் பார்வையில் இதைவிடவும் அருமையான விஷயம் வேறென்ன இருக்க முடியும் ?

 

 

 

 

 

திரைப்பார்வை – நீல மல்லிகை – குமாரநந்தன்  

download

 

 

 

 

 

 

 

ஜாஸ்மின் தனக்குத்  தானே பேசிக் கொள்ளும்  பழக்கம் அல்லது நோய்  உடையவள். கணவனை விட்டு  விலகி ஏதுமற்றவளாக தன்னுடைய  சகோதரியின் வீட்டுக்கு  வருகிறாள். அவளுடைய பணக்காரத்தனமான  பழக்க வழக்கங்கள் அவளை  விடவில்லை. விமானத்தில்  முதல் வகுப்பில் தான்  பயணம் செய்கிறாள்.

அவளும் அவள்  தங்கை ஜிஞ்சரும் சகோதரிகள்  என்றாலும் வெவ்வேறு தாய்  தகப்பன்களுக்குப் பிறந்து  வேறொரு தாய் தகப்பனால்  தத்தெடுக்கப்பட்டவர்கள்.

ஜிஞ்சரின் கணவனின்  ஆகீயின் லாட்டரியில் கிடைத்த  அபரிமிதமான பணம் ஜாஸ்மினின்  கணவன் ஹாலினால் மோசடி  செய்யப்பட்டுவிடுகிறது. .ஜிஞ்சரும்  அவள் கணவனும் பிரிந்து  விடுகிறார்கள்.

ஜாஸ்மினுடைய தத்து  மகன் தந்தையுடைய பித்தலாட்டங்களைத்  தெரிந்து கொண்டு இவள்  எவ்வளவோ தடுத்தும் கேளாமல்  வீட்டை விட்டுப் போய்விடுகிறான்

நடுத்தர ஏழைத்  தங்கையைத் தஞ்சமடைந்திருக்கும்  ஜாஸ்மின் டென்டிஸ்ட்டிடம்  ரிசப்சனிஸ்ட்டாகச் சேர்ந்து  கம்ப்யூட்டர் கிளாசும்  சேர்கிறாள். இரண்டும் கஷ்டமாக  இருக்கிறது. டென்டிஸ்ட்  அவளை டின்னருக்கு அழைக்கிறான். .

ஜிஞ்சரின் வீட்டில்  அவளின் நண்பர்களின் கூத்தடிப்பால்  படிக்க முடியாமல் தவிக்கிறாள். இருவருக்கும் மற்றும் அவள் நண்பர்களுக்கும் இடையேயான உரையாடல் மோசமாகப் பலவிதமாகத் திரிந்து செல்கிறது. நீ கடுமையா உழைக்கிறாய் இன்னும் வாழ்க்கையில் செட்டில் ஆகாமல் இருக்கிறாய் என்கிறாள் ஜாஸ்மின். இந்த மாதிரியான நண்பர்களோடு ஏன் சேர்கிறாய் உனக்கு இரண்டு வளர்ந்த பிள்ளைகள் இருக்கிறார்கள் என்று வருத்தப்படுகிறாள்.

கம்ப்யூட்டர்  கிளாஸ் தோழி பார்ட்டிக்கு  வரச் சொல்லி ஜாஸ்மினை  அழைக்கிறாள். ஜாஸ்மினும்  ஜிஞ்சரும் பார்ட்டிக்குப்  போகிறாள். அங்கே ஜிஞ்சர்  ஒரு சவுண்ட் எஞ்சினியரையும்  ஜாஸ்மின் ஒரு அம்பாசிடரையும்  சந்திக்கிறார்கள்.

பார்ட்டிக்குப்  போன விசயம் ஜிஞ்சரின்  பாய்பிரண்டுக்குத் தெரிந்து  போய்விடுகிறது. அவன் வீட்டுக்கு  வந்து நீ எதற்காகப் பார்ட்டிக்குப்  போனாய் என்று சத்தம்  போடுகிறான். ஜாஸ்மின் தான்  தன்னைக் கூட்டிப் போனாள்  என்கிறாள். இது எல்லாம்  இவள் திட்டமா என்று கேட்கிறான். இவள் என்னை மதிக்கவில்லை  இவள் நமக்கு நன்மையைச்  செய்யவில்லை. இவள் கணவன்  மற்றவர்கள் பணத்தில் வாழ்கிறவன்  எப்போது இவள் இங்கிருந்து  போவாள் என்று கண்டபடி  சத்தம் போட்டுவிட்டுப்  போகிறான்.

ஜாஸ்மின் புதிய  நண்பனிடம் தன்னுடைய கணவன்  இறந்துவிட்டதாகவும் தனக்குக்  குழந்தைகள் இல்லை என்றும்  தன்னுடைய கணவன் ஒரு சர்ஜன்  என்றும் சொல்லியிருக்கிறாள். அவன் இவளுடைய பழைய ஸ்டேட்டஸ்  க்கு ஈடு கொடுக்கும்  அளவுக்குப் பணக்காரன்  இவளுக்கு அவன் மேல் காதல்  உண்டாகிறது.

ஜிஞ்சரின் புதிய  காதலனுக்குத் திருமணம்  ஆகியிருக்கும் தகவலைத்  தெரிந்து கொண்டு அவள்  தன் பழைய தன் சகோதரிக்குப்  பிடிக்காத அந்தக் காதலனிடமே  திரும்பி தஞ்சம் அடைகிறாள்.

ஜாஸ்மினைத் தெருவில்  சந்திக்கும் ஆகி அவளுடைய  மகன் அலாஸ்காவில் இருப்பதைத்  தெரிவிக்கிறான். அவளுக்கு  ஒரு மகன் இருப்பதைத்  தெரிந்து கொண்ட புதிய  காதலன் அவள் தன்னிடம்  பொய் சொல்லிவிட்டதாகச் சொல்லி அவளைக் கைவிடுகிறான்.

ஜாஸ்மின் மகனைப்  போய்ப் பார்க்கிறாள். அவன்  அவள் தன்னுடைய அப்பாவைக்  காட்டிக் கொடுத்து போலீசில்  சிக்க வைத்தது தவறு என்று  வாதிடுகிறான். முடிந்தது  போகட்டும் இனி தன்னுடைய  வாழ்க்கையில் அவளைக் குறுக்கிட  வேண்டாம் என்று கேட்டுக்  கொள்கிறான்.

மனம் ஒடிந்து  போனவளாகத் தங்கையின் வீட்டுக்குத்  திரும்பும் போது அவள்  தன் பழைய காதலனுடன் இணைந்ததைக்  கொண்டாடிக் கொண்டிருக்கிறாள். ஜாஸ்மின், நீ ஏன் இப்படி  இருக்கிறாய் என்று திட்டுகிறாள். ஜிஞ்சர் அதற்கு நீ தான்  காரணம் வாழ்க்கையில் ஒரே  ஒரு முறை கிடைத்த பெரும்  பணத்தை உன்னால்தான் தொலைத்தேன்  என்று கதறுகிறாள். அவளுடைய  காதலன் அவளைத் தேற்றி  இப்போது எதற்கு அதெல்லாம்  நாம் சந்தோஷமாக இருக்கிறோம். பெரிய இடத்தில் காதலனைப்  பெற்ற அவளும் சந்தோஷமாக  இருக்கிறாள். எனவே நாம்  சந்தோஷமாக இருப்போம் என்கிறான். ஜாஸ்மின் ஆம் நான் இங்கேயிருந்து  என்னுடைய காதலன் வீட்டுக்குப்  போகப் போகிறேன் என்கிறாள்.

ஜிஞ்சரும் அவளுடைய  காதலனும் குதூகலமாகக்  கொஞ்சிக் கொண்டிருக்கும்  வேளையில் ஜாஸ்மின் அந்த  இடத்தை விட்டு வெளியேறி  சாலையில் ஒரு பெஞ்சில்  அமர்ந்து கொண்டு தனக்குத்  தானே பல விசயங்களைப்  பேசிக் கொண்டிருக்கிறாள்.

படத்தில் ஒவ்வொரு  முக்கியமான பாத்திரமும்  அழகாக வந்திருக்கிறது. ஜாஸ்மின்  கேட் பிளாஞ்செட் எல்லாப்  பாத்திரங்களுக்கும் தலமையேற்றுச்  செல்வதைப் போல பாத்திரத்தின்  தன்மையை முழுமையாக உள்வாங்கி  கிட்டத்தட்ட அந்தப் பாத்திரமாகவே  நடிப்பில் அசத்தியிருக்கிறார். இனி அவர் வேறு ஏதாவது  ஒரு பாத்திரத்தை வேறு  ஏதாவது ஒரு பரிணாமத்தில்  செய்தால் அன்றி அவரைப்  பார்க்கும் போதெல்லாம்  ஜாஸ்மினாகவே தோன்றும்

தனக்குத் தானே  பேசிக் கொள்வது மிகுந்த  மன அழுத்தத்தின் போது  மூச்சுவிட முடியாமல் திணறுவது. அதிகமாகக் குடித்துவிட்டுப்  போதையில் இருப்பது கோபம் இயலாமை மகிழ்ச்சி என நடிப்பின் எல்லாவிதமான வண்ணங்களையும் அத்தனை இதமாக எதார்த்தமாக நடித்து பிரமிக்க வைத்துவிடுகிறார்.

ஜாஸ்மினுக்கு  அடுத்த படியாக அவரின்  தங்கை ஜிஞ்சர் (சாலி ஹாக்கின்ஸ்) குட்டையாக அப்படி ஒன்றும்  அழகு என்று சொல்ல முடியாதபடி  ஏழையாக ஆனாலும் ஏழ்மையைப்  பற்றிப் பெரிதும் அலட்டிக்  கொள்ளாத தன்னுடைய வாழ்க்கையை  எந்தப் புகாரும் இன்றி  வாழ்கிற சகோதரியின் கணவன்  துரோகம் செய்திருந்தாலும்  அதற்காக அவளை வெறுக்காத  அதே சமயம் அவன் அவளுக்குத்  துரோகமாக நடந்துகொள்வதைக்  கண்டு பொருமுகின்ற அவள்  மீது உண்மையிலேயே பாசம்  கொண்ட அப்பாவியான என்று  இந்தக் கேரக்டார்தான்  எத்தனை எத்தனை விதமாக  விரிந்து செல்கிறது..

உண்மையில் கதையை  இவருடைய கோணத்தில் இருந்துதான்  எடுத்திருக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை இவர்தான்  கதாநாயகி வுடி ஆலன்  இவர்  பக்கம் இருந்து இவரை  மையமாக வைத்துப் படம்  எடுத்திருந்தால் எப்படியெல்லாம்  இருந்திருக்கும் என்றுப்  பலவிதமாக எனக்குள் யோசனைகள்  ஓடிக் கொண்டே இருக்கிறது.

ஆனால் வுடி ஏன்  அப்படிச் செய்யவில்லை. தங்கையை  கதாநாயகியாக வைத்து இதே  கதையை எடுத்திருந்தால்  படத்தில் பணம் மட்டுமே  வாழ்க்கையில்லை என்கிற  தொனி வந்திருக்கும். அப்படி  ஒரு கிளிஷேவான செய்தியைத்  தன்னுடைய படத்தில் வைக்க  அவர் விரும்பாதிருக்கலாம். பொதுவாகவே படத்தில் மெஸேஜ்  சொல்ல ஏராளமான இடம் இருந்தாலும்  அதையெல்லாம் அவர் தவிர்த்தே  இருக்கிறார்.

ஜிஞ்சரின் காதலன் (பாபி கன்னவேல்) நடுத்தர  வர்க்கத்தின் அழகான பிரதிநிதி  அவனை ஒன்றுக்கும் உதவாதவன்  என்று ஜாஸ்மின் வெறுத்தாலும்  ஜிஞ்சரின் மீது விட்டுக்  கொடுக்க முடியாத காதலோடு  ஜிஞ்சர் வேலை செய்யும்  இடத்திற்கே வந்து கலாட்டா  செய்வது அழுவது ஜாஸ்மின்  தனக்கு எதிராக எவ்வளவோ  பேசினாலும் அவளை இவன்  வெறுத்தாலும் ஜிஞ்சர்  கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில்  அவளைப் பெருந்தன்மையாக  மன்னிப்பது என்று வெவ்வேறு விதமாக மின்னுகிறார்.

இந்தத் திரைப்படம், படம் பார்ப்பது ஒரு நுண்  நாவலை வாசிப்பது ஒரு  அழகான டிராமாவைப் பார்ப்பது  மேலும் ஒரு சினிமாவைப்  பார்ப்பது என்று மூன்று  வெவ்வேறு தளங்களில் மனதை  நிறைவடையச் செய்கிறது. வசனங்கள்  வெளிப்படும் விதம் அழகாகவும்  இதமாகவும் இருக்கிறது. இசை  சினிமாவுக்கும் நாடகத்திற்கும்  நடுவாந்திரமாக காட்சிகளுக்கு  இதுவரைப் பார்த்து மனதில்  பதிந்து கிடக்கும் இசைக்  கோர்வையை ஒட்டி இல்லாமல்  முதலில் குழப்பமாகவும்  பிறகு இனிமையாகவும் இருக்கிறது. இதையும் டைரக்டர் திட்டமிட்டேதான்  செய்திருக்கிறார் என்றே  தோன்றுகிறது. மனப்பதிவுகளில்  ஊறிப்போன இசை, டெம்ப்ளேட்டான  இசை வடிவங்களை முற்றிலுமாக  நிராகரித்துவிட்டு வேறுவிதமாக  முயற்சித்திருக்கிறார். ஆரம்பத்தில்  இது ஒருமாதிரி எரிச்சலூட்டும்படி  கூட இருந்தாலும் படம்  போகப் போக படத்திற்கு  வழக்கமான வேறுவிதமான இசைக்  கோர்வைகளை நம்மால் கற்பனை  செய்துகூடப் பார்க்க முடியவில்லை.

ஜாஸ்மின் தன்னுடைய  கணவனைப் பிரிந்து வரும்  இடத்திலிருந்து துவங்கும்  கதையில் இடையிடையே அவளின்  கணவன் பழைய வாழ்க்கைப்  பற்றிய நினைவுகள் நினைத்துப்  பார்ப்பது ஞாபகம் வருவது  என்கிற ரீதியில் இல்லாமல்  சட்டெனத் தாவி அடுத்த  அத்தியாயம் போல விரிவடைந்து  மீண்டும் நிகழ்காலத்திற்கு  வந்து நிற்கும் சொல்முறை  உத்தி ஏராளமான ஆங்கிலப்  படங்களில் கையாளப்பட்டிருந்தாலும்  இதில் கால வேறுபாடு குறித்து  எவ்வித அறிவிப்பும் இன்றி  சட்சட்டென நிகழ்காலம்  போலவே வருவதும் போவதுமாக  இருப்பது ஒருமாதிரி சில  சமயங்களில் குழப்பிவிட்டாலும்  ரசனையாய் இருக்கிறது. இந்த  இடத்தில் படத்தின் எடிட்டிங்கைப்  பற்றியும் குறிப்பிட வேண்டும். பிசிறில்லாமல் அத்தனைக்  கச்சிதமாகவும் கட்டுக்  கோப்பாகவும் தொகுத்திருக்கிறார்.

டைட்டானிக் படத்தில்  மேல்தட்டு மக்கள் மற்றும்  சாதாரண மக்கள் அவர்களுடைய  வாழ்க்கை என்ற கோணம்  வருவது போல இந்தப் படத்தில்  வந்தாலும் அதில் ஒரு  காவியத்தன்மையின் சாயல்  இருக்கும். இதில் மிகவும்  யதார்த்தமான வியர்வை வாசனையும்  சென்ட் வாசனையும் துல்லியமாய்  மணக்கும் படி நேரடியாய் இருக்கிறது.

கதையில் மேல்தட்டு வர்க்கத்தின் பார்வைகள் பிரச்சனைகள் நடுத்தர வர்க்கத்தின் பார்வைகள் பிரச்சனைகள் இவை இரண்டும் சந்திப்பதால் உண்டாகும் முரண்கள் ஆகியவை திட்டமிட்டு சொல்லப்படாமல் போகிற போக்கில் கதைக்குத் தேவையான அளவில் கையாளப்பட்டாலும் படம் பேசுகின்ற விசயமே அதுதான்.

ஜாஸ்மினால் ஏன் வாழ்க்கையை அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ளமுடியவில்லை? அதே சமயம் அவ்வளவு வசதி இல்லையென்றாலும் ஜிஞ்சர் எப்படி மகிழ்ச்சியாக இருக்கிறாள்? என்பதுதான் படம் நம் முன் வைக்கும் மில்லியன் டாலர் கேள்வி.

மன்னிக்கவும் நம் இயக்குநர்களின் கையில் இந்தப் படம் கிடைத்திருந்தால் பணம் மட்டுமே வாழ்க்கையில்லை என்கிற ஆன்மீகத்தை எவ்வளவு பலவந்தமாகவும் மூன்றாந்தரமாகவும் நம் மீது திணித்திருப்பார்கள் என்று நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை

இந்த வாழ்க்கை என்பது பணமோ அல்லது ஆன்மீகமோ அல்லது நம் குணமோ மட்டும் இல்லை இவையெல்லாம் ஏதோ ஒரு விகிதத்தில் குறுக்கிட்டும் சுழற்றிவிட்டும் நம்மைப் பாதித்தபடி செல்வதுதான் என்பதை வுடி ஆலன் அருமையாகப் பதிவு செய்திருக்கிறார்.

குறையாக எனக்குத்  தெரிவது ஜாஸ்மின் மாதிரியான  ஒரு மேல்தட்டு வர்க்கப்  பெண்மணிக்கு இந்தக் காலத்தில்  கம்ப்யூட்டர் பற்றித்  தெரியாது என்று சொல்வது. சரி அப்படித்தான் தெரியாது  என்றாலும் ஒரு ஆன்லைன்  கோர்சில் சேருவதற்காக  புதிதாக ஒரு கம்ப்யூட்டர்  கோர்சில் சேர்ந்து முழுமையாகக்  கம்ப்யூட்டரையே கற்றுக்  கொள்ள வேண்டுமா என்ன? இந்த  ஒரு சின்ன விசயத்தைத்  தவிர பெரிதாகக் குறை  என்றோ அல்லது படத்தைப்  பாதிக்கின்ற விசயம் என்றோ  எதுவும் எனக்குத் தென்படவில்லை.

வுடி ஆலன் (வயது 79)ஆஸ்கர் விருதில் பதினாறு  முறை சிறந்த திரைக்கதைக்கான  விருதுக்காக இறுதிச் சுற்று  வரை வந்தவர். மூன்று முறை  சிறந்த திரைக்கதைக்கான  விருதும் ஒரு முறை சிறந்த  டைரக்டருக்கான விருதும் பெற்றவர். கதாநாயகி கேட்பிளாஞ்சட் 2013 ஆம் ஆண்டின் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை இந்தப் படத்திற்காகப் பெற்றிருக்கிறார்.

வுடி ஆலன் இந்தப்  படத்தை இந்தியாவில் வெளியிடவில்லை. காரணம் புகை மது போன்ற  காட்சிகளின் போது திரையில்  எச்சரிக்கை செய்ய வேண்டும்  என்கிற நம்முடைய சென்சாரின்  சட்டத்தில் அவருக்கு சம்மதமில்லை

இது கமர்சியல் படம், கமர்சியலாகவும் பெறும் வெற்றி பெற்றிருக்கும் நுண்மையான படம்.

வேறொரு நிலம் ( சிறுகதை ) / ஆறுமுகம் முருகேசன்

functioning-alcoholic

” ஒரு தொப்பை போலிஸ் ஜேப்படித் திருடனின் செவிட்டில் படார்ர்ரென அறைகிறான்.”
தனிமையின் இரவு கொண்டாட்டத்திற்குப் ( உறக்கம் வராமல் ) பிறகு அசந்து படுத்திருந்தான் சிவா. நீலத்தில் பொடிக்கட்டம் போட்ட கைலிக்குள் புகுந்து முதுகையும், புட்டத்தையும் பொளேர்ரென்றது வெயில். எரியும் கண்களை அவிழ்த்து, பக்கத்தில் ஒரு குட்டிப் பூரானெனக் கிடந்த ரோலக்ஸ் வாட்ச்சில் டைம் பார்த்தான். பத்தா, பதினொன்றா என்று புலப்படாமலேயே கண்களைச் சுருக்கி, எச்சிலை வீங்கி பாத்ரூமிற்குள் போகிறான். முகத்தை அழுத்தி துடைத்துவிட்டு டவ்வலை ஒரு உதறு உதறியவன், மடிக்கப்படாமல் கிடந்த பெட்ஷீட்டில் சற்று பொறுமையாக உட்கார்ந்து கொண்டான். ஏதோ நினைப்பு வந்தவனாக மொபலை எடுத்து, ராத்திரியில் பார்த்த ப்ளூபிலிமை மறுபடியும் ஓடவிட்டு ஒருமுறை சுயமைதுனம் செய்தான்.

சாவியைத் திருகிவிட்டு, கதவில் தொங்கும் பூட்டினை லேசாக இழுத்துப் பார்த்துக் கொண்டான். பிறகு, தேமெனக் கிடக்கும் ஞாயிறு வீதியில் இறங்கி நடக்கிறான். ஒரு பொத்தை நாயை மற்றொரு சாம்பல் கலர் நாய் பின்புறத்தில் ஏறி ஏறி செய்துகொண்டிருந்தது, மூச்சுக் காற்றை உசுப்பியபடி. எச்சிலை தொண்டைக்குள் நுழையவிட்டு ‘மாஷ்டர், சீனி கூடுதலா ஒரு டீ’ கிங்க்ஸ் சிகரெட் ஒன்றையும் தீயில் உசுப்பி உதட்டை நனைத்துக் கொண்டான் சிவா.

மணலில் தட்டிய கைலியின் நுனியை இடது கையால் தூக்கியவன் புத்தம்புதியதாக பார்ப்பது போல தனது சற்று மெலிந்திருந்த கால்களை நொடிகளில் பார்த்துவிட்டு “சாமத்துக்குப் பிறகும் தூக்கம் வராம முழிச்சிட்டு இருக்கேன்ல,  ஜாஸ்தியாயிடுச்சு இப்பலாம் சொந்தமா.., நெனச்சுட்டுக் கிடக்கேன்ல எப்பவும், சரியா திங்கிறதும் கிடையாது..” தனக்குள்ளாகவே முனங்கி திரும்ப நடந்து கொண்டிருந்தான். த்தீ என மேய்ந்த கண்களில் நாய்கள் எதுவும் அகப்படவில்லை. ( முடித்துவிட்டு, வள் வள்ளென ஒலியெழுப்பிக் கொண்டிருந்தன பெட்ரோல் பங்க் ஓரத்தில் அந்த நாய்கள் ) ஒரே திருக்கில் திறந்துகொண்ட பூட்டை ‘டீவியின்’ தலையில் பொதுக்கென வைத்துவிட்டு பாத்ரூமிற்குள் சென்றான். சோப் இல்லாமல் வெறும் ‘டவ்’ அட்டை மாத்திரம் இருந்தது, முந்தைய நாளில் குளித்தப் பின்பு சோப்பை எடுத்து வெளியில் தூக்கி எறிந்தது நினைவு வந்து சிரித்துக் கொண்டான். குளித்து முடித்து வெளியில் வந்தவன் டீவியை ஆன் செய்தான். கொஞ்ச நேரம் ஆ ஊ என கத்திப் பார்த்துக் கொண்டிருந்தது அது. அந்தச் சத்தங்கள் எதுவும் பிடிக்காமல், டைம் காட்டும் பூரானை கட்டிக் கொண்டு டிப்டாப்பாக வெளியில் கிளம்பிச் சென்றான்.

அந்தக் காம்ப்ளக்ஸில், “தனி ஒருவன், NO ESCAPE” சினிமாக்கள் ஓடிக்கொண்டிருந்தன. தனியா ஒருத்தனா? ஏற்கெனவே தனியாத்தான இருக்கோம் சொல்லிச் சிரித்தபடி no escape ஒரு பால்கெனி டிக்கெட் என்று எஸ்கேப் ஆகிறான். படத்தில் செமையா இம்ப்ரஸ்ஆகி குளிர்ந்துகொண்டான். படம் முடிந்து வெளியில் வந்தவன் இந்த மகிழ்ச்சியை சந்தோசமாக கொண்டாடியாக வேண்டுமென்று சொல்லியவாறு ஒரு ஏர்கண்டீசன் பாருக்குள் நுழைந்து கொள்கிறான். நாலாவது ஸ்மால் வாங்கும்போது, சர்வரிடம் அர்த்தமின்மையாக ஸ்மைல் செய்தவன், சினிமாவையே உறிஞ்சிக் கொண்டிருந்தான் ( எக்ஸேட்டாக, அந்தக் கணத்தில், உயிருக்குப் பயந்து போராடி மாடியிலிருந்து தன் மனைவி, குழந்தைகளை கீழே குதிக்கவிட்டு, ஹீரோவும் குதிக்கிறான். உயிர் தப்பிப் பிழைக்கிறார்கள். அப்பொழுது, சிறிய மகள் i am hungry என்கிறாள். ப்ராக்ஸன் ஆப் செகண்ட் தாமதிக்காமல் am not food என்று சிரித்துக்கொண்டேச் சொல்லி அச்சூழலை சமநிலைக்கு கொண்டு வருகிறான் ஹீரோ தகப்பன்! )

இரவு கொஞ்சம் குடித்திருந்ததால் அதிகாலையிலேயே உறக்கத்திலிருந்து விடுபட்டுக் கொண்டவன் நினைவுகளில் அலைபாய்ந்தான். முன்னாடிலாம் லீவுக்கு ஊருக்கு வந்தா, எப்பவும் ப்ரண்ட்ஸ்கூட சுத்திட்டுத் திரிவோம். ஒரு நிமிஷம்கூட தனியா விடமாட்டங்க பசங்க, இப்ப?! ம்! சரி, போகட்டு, நாமதான யாரயும் நெருங்காம தனியா இருக்கோம், அவங்களச் சொல்லி தப்பில்ல. ‘ஆனா, நிஜம் என்னன்னா, பசங்களச் சேர்த்தா; என்னடா, பொண்ணு கிடக்கிலயா மண்ணு கிடக்கிலயா கல்யாணம் என்னாச்சுனு எரிச்சல் ஊட்டுவானுங்க, கழுத்துமுட்ட வாங்கி வேற கொடுத்து தெண்டம் அழுவனும் இவனுங்களுக்கு’ ஆசுவாசப்படுத்தி கொண்டான்.

லீவ்ல, ஊர்ல இருக்கும்போது, திங்கட்கிழமை பெருமாள் கோயில் போறது வழக்கம். சரி, சிவானு புறப்படுவோம்னு தன்னைத்தானே அலசிக்கொண்டு கோவிலுக்குப் புறப்பட்டான். விபூதி மணமே மணந்தான்! நிலைப்பிள்ளையாரை கும்பிட்டுவிட்டு பெருமாள் முன் அமைதியாக நிற்கிறான். பெண்கள் சைடில், இடுப்பில் கைக்குழந்தையோடு ஒரு இருபத்தைந்திலிருந்து இருபத்தெட்டு வயதிற்குள்ளான செக்கச்செவேல்னு ஒரு பெண் தீபத்தை அள்ளிக்கொண்டிருந்தாள். பிரகாரத்தைச் சுற்றிவிட்டு கோவில் வராந்தாவில் கண்களைத் திறந்த வண்ணம் ஒரு பார்வையற்றவன் மாதிரி அமர்ந்திருந்தான் சிவா. ஒரு பச்சைக் கிளிக்குஞ்சின் மெல்லிய உதட்டசைப்பென அச்-செக்கச்சிவந்தப் பெண்ணின் குரல், அவனை திசைக்குள் இழுத்தது. “குழந்தைய ஒரு ரெண்டு நிமிஷம் பார்த்துக்கிறீங்களா?” “இதோ இப்ப வந்துடுறன்”. சிவாவின் முகப்பரப்பில் சரி, சம்மதம் என்ற பதில் துள்ளிக்காட்டியது.
என்னடா, “புச்ச்சு புச்ச்சு லலல்லாலீ… பத்து நிமிஷம் ஆகுது, ஒங்க அம்மைய எங்கடா? மவளே அற்புதமே மகிழே மொழியே அனலே பனியே முருகேஸ்வரியே ஆராதனையே…?.” குழந்தைக்கு கரகர சத்தக் கொஞ்சல் பிடிக்கல போல. பால்குடி மாறாத குழந்தைக்கு என்ன தெரியும்?! நாற்பது நிமிஷம் ஆகுது, பதட்டம், உடைந்த கைவளையல் போல நிலத்தை மீறி உள்ளில் அகத்தில் நெஞ்சில் பார்வையில் ஒட்டிக்கொள்கிறது.

மஸ்கட்டிலிருந்து லீவுக்கு ஊருக்கு வரும்போதெல்லாம், திருநெல்வேலி சொந்த வீட்டில் பாதி நாட்களும், சென்னை புறநகர் விடுதியில் மீதி தினங்களுமாகத் தான் கடந்த சில வருடங்களாக போக்கி கொண்டிருந்தான் சிவா. அம்மாவிடம் தொலைபேசி விஸயத்தைச் சொன்னான். சென்னைல தான இருக்க, மல்லிகா அக்காவுக்குப் பேசுடா, அம்மா சற்று நிதானமான குரலிலேயே சொன்னாள். “மல்லிகா அக்கா, டேய் நீ குழந்தையோட உடனே ஒரு ஆட்டோ பிடிச்சு வீட்டுக்கு வா”. ஆட்டோ, பெருங்குளத்தூர் தாண்டி பல்லாவரம் பாதையில் சென்று கொண்டிருந்தது. குழந்தை இடைவிடாமல் அலறிக் கொண்டிருந்தது. சிவாவின் காதுகள் செவிடு அடைந்தது போன்று, நினைவின் கட்டடத்தை அடுக்கவும் கலைக்கவுமாக இருந்தான்.

மல்லிகா அக்கா சிவாவைக் காட்டிலும்  ஆறு வயது மூத்தவள். மல்லிகா அக்கா குடிச்ச எச்சிப்பாலை அம்மாட்ட இருந்து குடிச்சு வளர்ந்தவன்தான் சிவா. பிராயக் காலங்களில் மல்லிகாவும், சிவாவும் ஒருவர் மீறி ஒருவர் புறந்தள்ளிக்கொள்ள மிகுந்த சிரமப்பட்டிருக்கிறார்கள். பல இரவு பகல்கள் அவர்களுக்காக எரியவும் அணையவுமாக இருந்த பிராயகாலம், மல்லிகா அக்கா கல்யாணம் முடித்து சென்னைக்குப் போனபிற்பாடுதான் ஓர் அசாதாராண நிதானமாக மாறியது என்று சொல்லிக்கொள்ளலாம்.
“ப்ரியமும் காகமும் உடலும் மனமும் ஒரு நோயா?! அல்லது ஒரு நோய்க்கொல்லியா?!” கண்களிலிருந்து இரக்கமற்ற ஒரு சொட்டு நீர் பிறந்தது. சார், நீங்க சொன்ன அட்ரஸ் வந்துவிட்டது, இறங்குறீங்களா? ஆட்டோ, பம்மலில் அக்கா வீட்டு தெருவில் நின்றது. எவ்வளவு ஆச்சு? ‘ஒன் தேட்டி’ கொடுங்க சார்.

என்னடா, வந்த மொத நாள் வீட்டுக்கு வந்ததோட சரி, அப்புறம் இந்தப் பக்கம் ஆளயே காணும்? மாமா ஆர்வமாக கையைப்பிடித்துக் கொண்டு கேட்டார். “குழந்தை.. அழாம..? தூங்குதே?! எப்படிடா?!” இல்ல மாமா, இங்ளோ நேரம் வண்டில விடாம அழுதுக்கிட்டேதான் வந்துச்சு.வீட்டுக்குள்ள வந்ததும்தான் அழுகையை நிப்பாட்டுச்சு.! புரியல மாமா, ஆச்சர்யமா இருக்கு! மல்லிகா அக்காவின் முலைமடியில் குழந்தை சமர்த்தாக கண்களைத் திறந்து சாய்ந்திருந்தது. டேய் ஒங்க அக்கா சொன்னா நீ கேக்க மாட்டியாம், அதான் நானே சொல்றேன் கேளு “போலிஸ் ஸ்டேஸன், கம்ப்ளைன்ட் எல்லாம் ஒன்னும் வேண்டாம்” ஒனக்குத் தெரியாதது இல்ல; வருஷங்கள் ஓடியாச்சு, குழந்தை இன்னும் இல்ல. டாக்டரும் கைவிட்டுட்டாரு. சாமியும் கண்ண மூடிடுச்சுனு இருக்கோம். நீ, கோயில்ல இருந்து குழந்தையோட வந்திருக்க. சாமி கொடுத்ததுனு நெனச்சிக்கிறோம்டா. யாராவது வந்து கேட்டா குழந்தைய கொடுத்துறலாம். மாமா ஒடஞ்சி ஒடஞ்சி கெஞ்சிக் கொண்டிருக்கிறார், அக்கா சத்தமா அழ ஆரம்பிச்சாச்சு. குழந்தை, மௌனத்தின் அதீதமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது.
சரி அக்கா, சரி மாமா, அப்படியே நீங்க சொன்ன மாதிரியே குழந்தை இங்கயே இருக்கட்டும். மல்லிகா அக்கா சிவாவை அணைத்து கண்களிலும், நெற்றியிலும், உச்சித்தலையிலுமாக முத்தமிட்டாள். மாமாவின் கண்கள் நிரம்பியிருந்ததது.

சிவா, விடுதியை காலிசெய்துவிட்டு விடுமுறையின் கடைசி வாரம் வழக்கம்போல நெல்லை வீட்டிற்குப் போகாமல் அக்காவுடனும், குழந்தையுடனும் கரைந்து போனான். வானவில்லை நெடுநேரம் பார்த்தது மாதிரி மிக மிக சந்தோசமாக கரைந்து போனான்.
ஹூண்டாய் காரின் சைடுமிரரில் அக்காவின் கலங்கிய சலனமற்ற கண்கள் தெளிவாகத் தெரிந்தது. பச்சைக் குழந்தையும் அழாமல் சமர்த்தாக இருந்ததுபோல பட்டது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் தானியங்கி கதவு திறந்துகொண்டது. வேறொரு நிலத்தின் தரையில் சிவாவின் கால்கள் ஒரு எறும்பு போல புறப்பட்டுப் போய்க்கொண்டிருந்தது.

***