Category: அறிவிப்பு

மருத்துவ உதவிக்கான ஒரு கோரிக்கை

download (7)

நண்பர் சண்முகசுந்தரம் கோபிசெட்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர். ஆனால் கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக பெங்களூருடன் தொடர்பு கொண்டிருந்தார். கோபிசெட்டிப்பாளையத்திலும் பெங்களூரிலுமாக மாறிமாறி வசித்துவந்தார். அவர் நீண்ட கால இலக்கிய வாசகர். வாசிப்பின் வழியாக சிற்றிதழ் சார்ந்த எல்லா எழுத்தாளர்களுடனும் நேரடி அறிமுகம் கொண்டிருந்தார். சிரித்த முகத்துடன் அன்புடன் பேசக்கூடியவர். உரையாடலில் மிகவும் ஈடுபாடு கொண்டவர். இலக்கியம், நாடகம், திரைப்படம் சார்ந்து பேசிக்கொண்டே இருக்க விருப்பம் கொண்டவர். பெருமாள் முருகன் தொகுத்த கொங்குநாட்டு வட்டாரச்சொல் வழக்ககராதியைப் பிரசுரித்த பெருமை அவருக்குண்டு. சமீபத்தில் எதிர்பாராத விதமாக நிகழ்ந்துவிட்ட ஒரு சாலைவிபத்தில் தலையில் படுகாயமுற்று கோவை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். மூளைப்பகுதியில் ரத்தம் உறைந்துபோயிருக்கிறது. ஓர் அறுவை சிகிச்சை முடிந்திருக்கிறது. இன்னும் அறுவை சிகிச்சைகள் செய்யவேண்டியிருக்கிறது. நண்பர் எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் மருத்துவச் செலவுக்கு பொருளுதவி தேவைப்படுகிறது. நண்பர்கள் தம்மால் முடிந்த உதவியைச் செய்யவேண்டும்.

சண்முக சுந்தரத்தின் சித்தியையும் அம்மாவையும் தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி எண்: 9980636945, 9445275042

அவர் சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனையின் தொலைபேசி எண்: 95009 80128 / 0422 4001000/4001001

சண்முக சுந்தரத்தின் சித்தப்பாவின் பெயர் மற்றும் வங்கி கணக்கு விவரங்கள்

N. NAGARAJAN

CORPORATION BANK

IFSC : CORP0000403

SAVINGS BANK ACCOUNT NUMBER 040300101004616

NARASIPURAM BRANCH

COMBATORE – 641109

வெங்கட் சாமிநாதன் அஞ்சலி நிகழ்ச்சியும் ஆவணப்படத் திரையிடலும் – பெங்களூர்

வெங்கட் சாமிநாதன்

அஞ்சலி நிகழ்ச்சியும்

ஆவணப்படத் திரையிடலும்

 

 

நாள்:  01.11.2015 ஞாயிறு

நேரம் காலை 10.00 மணி

VenueSai Mitra Meadows, Community Hall, August Park Road,

1st-A Cross, Kaagadaasapura, C V Raman Nagar, Bnagalore-560093

 

 

பங்கேற்போர்

விட்டல்ராவ்  ஜி.கே.ராமசாமி  ஜி.எஸ்.ஆர்.கிருஷ்ணன்

ப.கிருஷ்ணசாமி மகாலிங்கம்  முகம்மது அலி பாவண்ணன் திருஞானசம்பந்தம் மற்றும் நண்பர்கள்

ஆவணப்படம் திரையிடல்

இயக்குநர் அருண்மொழி, சென்னை

 

 

For More Details: Sambandam: 09448584648, Paavannan: 9449567476

சர்வதேச படைப்பிலக்கிய நூல்களுக்கான “மொழி” விருது வழங்கும் விழா 2014.

தோப்பு இலக்கிய வட்டம் சிறந்த இலக்கிய நூல்களுக்கான மொழி விருது வழங்கும் விழா ஒன்றினை இவ்வாண்டு இறுதியில் நடாத்த ஏற்பாடுகளை செய்து கொண்டு வருகிறது.

 

பின்வரும் நான்கு பிரிவுகளில் நூல்கள் வகைப்படுத்தப்பட்டு தகைமை பெறும் ஒவ்வொரு வகைக்கும் பரிசளிக்கப்படும்.

 

 1. நாவல், குறுநாவல், சிறுகதை, குறுங்கதை
 2. கவிதை
 3. கட்டுரை, பத்திகள், ஆய்வுகள்
 4. மொழி பெயர்ப்புக்கள்: சிங்கள, ஆங்கில மூல நூல்களை தமிழ் மொழியில் பெயர்த்து எழுதப்பட்ட நூல்கள்

 

 

விதிகளும் கட்டுப்பாடுகளும்

 

 • உலகின் எப்பாகத்திலும் உள்ள எழுத்தாளர்கள் பங்குபற்றலாம் (தோப்பு இலக்கிய வட்ட நிருவாக உறுப்பினர்கள் தவிர)
 • 2012 ஜனவரி முதலாம் திகதியில் இருந்து 2014 ஜூன் இறுதி வரையான காலப் பகுதியினுள் வெளியான முதல் பதிப்பு நூல்களின் மூன்று பிரதிகள்அனுப்பப்படல் வேண்டும்.
 • நூல் தெரிவுகளுக்கு என்றே நியமிக்கப்பட்ட சுதந்திர நுட்ப தெரிவுக்குழுவின் (ITEC) முடிவையே இறுதியானதாகக் கொண்டு பரிசில்களுக்குபரிந்துரைக்கப்பட்ட நூல்களின் விபரங்களை தோப்பு இலக்கிய வட்டம் வெளியிடும்.

 

 • மேலே குறிப்பிடப்பட்ட காலங்களுக்குள் ஒரு எழுத்தாளர் மேலே குறிப்பிடப்பட்ட பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் ஒன்றுக்கு மேற்பட்ட நூல்களை வெளியிட்டிருப்பின் அவைகளில் மும்மூன்று பிரதிகளையும் அனுப்ப முடியும். எப்படியாயினும் அப்பிரிவில் தகைமை பெறும் ஒரு நூலுக்கு மாத்திரமேபரிசளிக்கப்படும். அனால் வெவ்வேறு பிரிவுகளில் படைப்பாக்கப்பட்டிருந்தால் ஒவ்வொரு பிரிவுக்கும் தகுதி பெறும்.

 

 • பரிசில் பணத்தொகை இலங்கை நாணயத்தில் வழங்கப்படும்.

 

 • பரிசில்கள் : (ஒவ்வொரு பிரிவிலும்)
  1. முதலாம் பரிசு : மொழி விருதுடன் ரூபாய் 20,000.
  1. இரண்டாம் பரிசு : மொழி விருதுடன் ரூபாய் 15,000.
  2. மூன்றாம் பரிசு : மொழி விருதுடன் ரூபாய்  10,000.
  3. அடுத்துவரும் முதல் மூன்று நூல்களுக்கு இறுதிச்சுற்றுக்கு தகைமை பெற்ற சான்றிதழ்.

 

 • இலங்கைக்கு வெளியே வதியும் தகைமை பெற்ற நூலாசிரியர்களுக்கு விழாவில் கலந்து கொண்டு விருதினை பெற்றுக்கொள்ள அழைப்பு விடுக்கப்படும்.பயணத்தின் பேரில் ஏற்படும் எவ்வித செலவுகளுக்கும் தோப்பு இலக்கிய வட்டம் பொறுப்பு ஏற்கமாட்டாது. அன்றில் இலங்கையில் வதியும் யாராகினும் அவரின் பிரதிநிதியாக அதிகாரம் அளிக்கும் பட்சத்தில் அவர் நிகழ்வில் கலந்துகொண்டு பரில்களை பெற தகுதியுண்டு. அதுவுமில்லை எனில் கூரியர்சேவை மூலம் பரிசில்கள் தங்கள் வதியும் முகவரிக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படும்.

 

 • நூல்கள் யாவும் The Chairman  Thoppu Ilakkiya VaddamNo: 163, Town Hall Road, Kalmunai -07, Sri Lanka. எனும் முகவரிக்கு 20. 10. 2014  திகதிக்கு முன் கிடைக்கக் கூடியதாக அஞ்சலில் அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.

 

 • நூல்கள் வந்தடைந்தது பற்றியும், தகைமை பெற்ற நூல்கள் பற்றியும் அனுப்பியவர்களுக்கு மின் அஞ்சலில் அல்லது தபால் மூலம் அறிவிக்கப்படும்.

 

விழா ஏற்பாட்டுக்குழு

தோப்பு இலக்கிய வட்டம்

கல்முனை.

16.07.2014

_________________________________________________________________________________

Postal Address : # 163, Town Hall Road, Kalmunai. 07, Sri Lanka.

Tele:  Catheer : (0094) 77 313 8 109,   Anar : (0094) 77 254 6 569,  Nafeel : (0094) 71 491 4 153

E.Mail : thoppuvaddam@gmail.com

 

ஈரோட்டு புத்தகத் திருவிழாவில் எழுத்தாளர் வா.மு.கோமுவின் புத்தகங்கள் வெளியீட்டு விழா

1098544_10200409806543004_374622806_n

அறிவிப்பு – குவர்னிகா – 41வது இலக்கியச் சந்திப்பு மலர்

download

தேசிய இனப் பிரச்சினைப்பாடுகளையும் யுத்த மறுப்பையும் அமைதிக்கான வேட்கையையும் சாதிய எதிர்ப்பையும் பெண்விடுதலையையும் விளிம்புப் பால்நிலையினரின் குரலையும் வஞ்சிக்கப்பட்ட மாந்தரின் பாடுகளையும் பேசும் பெருந்தொகுப்பு.

கட்டுரைகள், சிறுகதைகள், நேர்காணல்கள், கவிதைகள் என நான்கு பகுப்புகள். பன்னிரெண்டு நாடுகளிலிருந்து  எழுதப்பட்ட  எழுபத்தைந்துக்கும்  அதிகமான பனுவல்கள். இலக்கியச் சந்திப்பின் மரபுவழி கட்டற்ற கருத்துச் சுதந்திரத்திற்கான களம்.

rநிலாந்தன்  rசோலைக்கிளி  rயோ. கர்ணன் rஅ.முத்துலிங்கம்  rதமிழ்க்கவி rமு. நித்தியானந்தன் rசண்முகம் சிவலிங்கம் rந.இரவீந்திரன்  rஸர்மிளா ஸெய்யித்  rதேவகாந்தன் rபொ.கருணாகரமூர்த்தி rஏ.பி.எம். இத்ரீஸ்   rஇராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்  rகற்சுறா  rசெல்வம் அருளானந்தம் rலெனின் மதிவானம் rலிவிங் ஸ்மைல் வித்யா rறியாஸ் குரானா rஎம் .ரிஷான் ஷெரீப்  rம.நவீன்  rஓட்டமாவடி அறபாத் rஹரி ராஜலட்சுமி  rகருணாகரன் rமா. சண்முகசிவா rகறுப்பி rமோனிகா  rதமயந்தி  rபூங்குழலி வீரன் rஎம்.ஆர்.ஸ்ராலின்   r திருக்கோவில் கவியுவன் rஇராகவன்  rலீனா மணிமேகலைrராகவன்  rதேவ அபிரா  rகே.பாலமுருகன்  rகுமரன்தாஸ் rவிஜி  rயாழன் ஆதி  rலெ. முருகபூபதி rதர்மினி  rஆதவன் தீட்சண்யா   rஅகமது ஃபைசல் rகலையரசன்  rஅ. பாண்டியன்  rஅஜித் சி. ஹேரத்   rச.தில்லை நடேசன்  rஎஸ்.எம்.எம்.பஷீர் rமகேந்திரன் திருவரங்கன் rமஹாத்மன்  rலதா  rஷாஜஹான் rபானுபாரதி rயாழினி rவிமல் குழந்தைவேல்  rமேகவண்ணன்  rஅஷ்ரஃப் சிஹாப்தீன்  rமெலிஞ்சிமுத்தன்  rயோகி  rஅஸ்வகோஷ் rந.பெரியசாமிrதேவதாசன்  rராஜன் குறை  rஷோபாசக்தி… மற்றும் பலரின் எழுத்துகளுடன் எண்ணூறுக்கும் அதிகமான பக்கங்கள், ‘கருப்புப் பிரதிகள்’ வெளியீடு.

2013 ஜுலை 20ம் தேதி யாழ்ப்பாண இலக்கியச் சந்திப்பில் மலர் வெளியிடப்படும்.  பிரதிகளைப் பெறுவதற்கு:

இலங்கை - கருணாகரன், poompoom2007@gmail.com / இந்தியா - கருப்புப் பிரதிகள், karuppupradhigal@gmail.com / மலேசியா - ம.நவீன், na_vin82@yahoo.com.sg /அவுஸ்திரேலியா -லெ. முருகபூபதி, letchumananm@gmail.com / கனடா - மெலிஞ்சிமுத்தன், melinchi10@gmail.com / பிரித்தானியா -ராகவன், raagaa@hotmail.com / நெதர்லாந்து -கலையரசன், kalaiy26@gmail.com / ஜேர்மனி -ஜீவமுரளி,  jsinnatham@aol.com / டென்மார்க் - கரவைதாசன், karavaithasan@yahoo.dk / நோர்வே - தமயந்தி, simon.vimal@yahoo.no /பிரான்ஸ் - ஷோபாசக்தி, shobasakthi@hotmail.com  :

 

 

கோவை இலக்கியச் சந்திப்பு 31 ஆவது கூட்டம்

literal meet

அறிவிப்பு அசோகன் முத்துசாமி முதலாமாண்டு நினைவுச் சொற்பொழிவு

92V57Tgr43F2FWAN4fbtRBCM

அறிவிப்பு சேலத்தில் கவிதைத் திருவிழா 18 புத்தகங்கள் விமர்சன கூட்டம்

164444_4595415318689_243696063_n

அறிவிப்பு லண்டன் நிகழ்வு

Flyer for March 16 (1)

சவுதியில்மரணதண்டனைக்குஉள்ளானரிசானாநஃபீக்எழுதியகடிதம்!

 

download (13)

 

எனது உண்மையான வயது 19. நான் பிறந்த தேதி 02-02-1988. எனது வயது ஏஜெண்ட் அஜிர்தீன் என்பவரால் 02-02-1982 என மாற்றப்பட்டு எனக்காக கடவுச்சீட்டு வழங்கப்பட்டது. 01-04-2005-ல் நான் சவுதி அரேபியாவுக்கு வீட்டு வேலைக்காக வந்தேன். சுமார் ஒன்றரை மாதங்கள் ஒரு செல்வந்தரின் வீட்டில் வீட்டு வேலை செய்தேன். இந்த வீட்டில் சமைத்தல், பாத்திரங்களை கழுவுதல், நான்கு மாதக் குழந்தையைக் கவனித்துக் கொள்ளுதல் உள்ளிட்ட வேலைகளை நான் பார்த்து வந்தேன்.

 

 

 

குறித்த சம்பவம் நடந்த தினம் எனக்கு நினைவில் இல்லை. அது ஒரு ஞாயிற்றுக் கிழமை பகல் 12-30 மணியிருக்கும். அப்போது யாரும் வீட்டில் இருக்கவில்லை. நான் மட்டுமே இருந்தேன். அங்குள்ள நான்கு மாதக் குழந்தைக்கு நானே பால் கொடுப்பேன். அன்றைக்கும் வழமை போல பால் கொடுத்த போது குழந்தையின் மூக்கிலிருந்து பால் கொட்டியது. அப்போது நான் குழந்தையின் தொண்டையை தடவிக் கொடுத்தேன். குழந்தை கண் மூடியிருந்த படியால் நான் அது அயர்ந்து உறங்குகிறது என நினைத்துக் கொண்டேன்.

 

 

 

குழந்தையின் தாய் எஜமானி சுமார் 1-30 மணியளவில் வந்து சாப்பிட்டு விட்டு குழந்தையைப் பார்த்தார். பின்னர் என்னை செருப்பால் அடித்து விட்டு குழந்தையைத் தூக்கிச் சென்றார்.அப்போது அவர் அடித்ததில் என் மூக்கில் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. பின்னர் என்னை போலீசில் ஒப்படைத்தார்கள். அவர்கள் என்னை ஒரு பட்டியில் அடைத்து அடித்தார்கள் குழந்தையின் கழுத்தை நெறித்ததாக எழுதிக் கொடுக்குமாறும், கையொப்பமிடுமாறும் மிரட்டினார்கள்.

 

 

கையெழுத்திடவில்லை என்றால் மின்சார வதை கொடுக்கப் போவதாக மிரட்டிய போது நான் பயந்து போய் அவர்களுக்கு கையொப்பமிட்டுக் கொடுத்தேன். அப்போதுதான் நான் பயங்கரமாக உணர்ந்தேன்.சரியான நினைவு எனக்கில்லை குழம்பிய மன நிலையில் கையொப்பமிட்டேன்.

 

 

அல்லாஹ் மீது ஆணையாகச் சொல்கிறேன் நான் அக்குழந்தையின் கழுத்தை நெறிக்கவில்லை.

 

 

ரிஸானா நபீக்.

அல் த்வாத்மி சிறைச்சாலை,

அல் தவாத்மி, சவுதி அரேபியா.