மோசமான நாள் ( கவிதை ) / பா. மணிகண்டன்

[ A+ ] /[ A- ]

download (27)

மோசமான ஒரு நாள்

மோசமாகவே ஆரம்பிக்கும்

என்ரெல்லாம்

சொல்ல முடியாது….

மோசமான ஒரு நாள்

மிகவும்

இனிமையாகவும் ஆரம்பிக்கலாம்.

அன்றைக்கு உன் முகம்

மிகவும் பிரகாசமாக இருக்கலாம்.

அன்றைக்கு உன் உடைகள்

மிக நேர்த்தியாக இருக்கலாம்.

அன்றைக்கு நீ

மிகவும் சுறுசுறுப்பாகவும்

உற்சாகமாகவும் இருக்கலாம்.

அன்றைக்கு

நீண்ட நாட்களுக்கு பிறகு

நீ உன் நண்பர்களிடம்

ஏதேனும் ஒரு நகைச்சுவை துணுக்கை

பகிர்ந்து கொண்டு

மனம் விட்டு சிரித்து மகிழ்ந்து இருக்கலாம்.

அன்றைக்கு நீ

அழகான மேகங்கள்

வானத்தில் மிதந்து

செல்வதை கூட பார்த்து

ரசித்திருக்கலாம்.

ஒரு மோசமான நாள்

மிகவும் மோசமாகவே

ஆரம்பிக்கும் என்று

சொல்ல முடியாது……..

Comments are closed.