நிகனார் பார்ரா கவிதைகள் (Nicanor Parra) / ஆங்கிலம் : மில்லர் வில்லியம்ஸ் (Miller Williams) / தமிழில் : தி.இரா.மீனா

[ A+ ] /[ A- ]

நிகனார் பர்ரா

நிகனார் பர்ரா

இறுதித் தெரிவிப்பு

.நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்,

நமக்கு மூன்று விருப்பேற்பு மட்டுமே;

நேற்று ,இன்று மற்றும் நாளை.

மூன்று கூட இல்லை

தத்துவாதி சொல்வது போல

நேற்று என்பது நேற்றுதான்

அது நினைவில் மட்டுமே நமக்குச் சொந்தமானது:

ரோஜா ஏற்கெனவே பறிக்கப்பட்டுவிட்டதால்

எந்த இதழ்களும் உருவாகமுடியாது.

விளையாடக் கூடிய சீட்டுக்கள்

இரண்டு மட்டும்தான்

நிகழ்காலமும் எதிர்காலமும்.

இரண்டு கூட இல்லை

கடந்தகாலத்தின் விளிம்பு நிகழ்காலம்

என்பது தவிர அது இருப்பில்லில்லை

இளமையைப் போல அது நுகரப்பட்டு விட்டது.

இறுதியில் நாம் நாளையோடுதான் விடப்பட்டிருக்கிறோம்

நான் என் கோப்பையை உயர்த்துகிறேன்.

வராமலே போகும் அந்த நாளுக்காக

ஆனால் அது மட்டும்தான் நீக்கத்திற்குரியதாக நம்மிடம் .

இளம்கவிஞர்கள்

உங்களால் எப்படி முடியுமோ

என்ன நடை விருப்பமோ அப்படி எழுதுங்கள்.

அந்த ஒரே ஒரு பாதைதான் சரி

என்று நம்பிக் கொண்டேயிருப்பதால்

பாலத்திற்கடியில் அதிக குருதியோடிக் கொண்டிருக்கிறது

கவிதையில் எல்லாவற்றிற்கும் அனுமதியுண்டு

என்றாலும் இந்த ஒரு கட்டுப்பாடு மட்டும்

நீங்கள் வெற்றுத்தாளை மேம்படுத்த வேண்டும்.

நிகனார் பார்ரா

நிகனார் பார்ரா

நான் கூறிய அனைத்தையும் திரும்பப் பெறுகிறேன்

நான் போவதற்கு முன்பாக

எனக்கென்று கடைசி ஆசை ஒன்றிருக்க வேண்டும்

பெருந்தன்மையான வாசகர்

இந்தப் புத்தகத்தை எரித்துவிட்டார்.

இது நான் சொல்லவிரும்பியதேயல்ல.

அது இரத்தத்தில் எழுதப்பட்டபோதிலும்

அது நான் சொல்லவிரும்பியதல்ல.

வேறெவரும் என்னைவிட சோகமாக முடியாது

என் நிழலாலேயே நான் தோற்கடிக்கப்பட்டேன்;

என் வார்த்தைகள் என்னைப் பழிகொண்டன.

வாசகனே என்னை மன்னித்துவிடு, வாசகனே

நான் அன்பான தழுவலோடு உன்னைப் பிரிய முடியாவிட்டால்

வலுக்கட்டாயமான சோகப் புன்னகையோடு உன்னைப் பிரிகிறேன்

அதுதான் நான் போலும்.

ஆனால் என் கடைசி வார்த்தையைக் கேள்.

நான் கூறிய அனைத்தையும் திரும்பப்பெறுகிறேன்

உலகின் மீதான மிகப்பெரிய கசப்புணர்வோடு

நான் கூறிய அனைத்தையும் திரும்பப் பெறுகிறேன்.

—-

Comments are closed.