மலை மற்றும் கடல் கவிதைகள் மூன்று / சிபிச்செல்வன்

[ A+ ] /[ A- ]

download (12)

ஒரு மலையைப் பார்த்து வியந்து நிற்கிறேன்

சப்தமேயில்லாமல் போய்க் கொண்டிருந்தது
மலை

•••

மலையைப் பார்த்தவாறே நின்றிருந்தேன்.
அடர்கருமேகம் எங்கேயிருந்தோ பறந்து மலையை மொத்தமாக மூடியது.
மலையைப் பார்த்தவாறே யிருந்தேன்.
மலைமீது வெயில் தகதகவென மின்னியது.
மலை என்னைப் பார்த்து கண் சிமிட்டியது

•••
உள்ளங்கையளவு கடல்நீரை அள்ளினேன்.
அலையடித்து
புயல்காற்று சுழன்றடித்து
மழை பொழிந்தது

தலைநகரம் மூழ்கிக்கொண்டேயிருக்கிறது.

•••

Comments are closed.