அம்ருதா ப்ரீதம் கவிதைகள் ..- மொழிபெயர்ப்பு தமிழில் – பத்மஜா நாராயணன்

[ A+ ] /[ A- ]

images (22)

மீண்டும் உன்னை சந்திப்பேன் 

உன்னை நான் மீண்டும் சந்திப்பேன்

எங்கு அல்லது எப்படி என்பது மட்டும் தெரியாது

உன் கற்பனையின் சிறு துணுக்கு கூட நானாகலாம்
அல்லது

உன் வரைச்சீலையில்

ஒரு மர்ம வரியாய் படர்ந்து

உன்னை வெறித்து நோக்கலாம் .

உன் வண்ணங்கள் தழுவும்

ஒரு சூரிய ரேகையை மாறி

என்னை நானே வரைந்து கொள்வேன்.
எங்கு அல்லது எப்படி என்று மட்டும் தெரியாது
உன்னை சந்திப்பது மட்டுமே உறுதி .

ஒரு நீருற்றாய் நான் மாறி

பொங்கும் நுரைத்திவளங்களை

உன்னுடலில் தடவலாம்

உன் தகிக்கும் மார்பில்

என் குளுமையை இருத்தலாம்

இந்த வாழ்க்கை என்னுடன் நடக்கும்

என்பதைத் தவிர

வேறொன்றும் எனக்குத் தெரியாது .

உடல் அழிந்தால்

அனைத்தும் அழிந்துவிடுகிறது.

ஆயின் ஞாபக இழை

நிலையான அணுக்களால் கோர்க்கப்பட்டுள்ளது.

அத்துகள்களை சேகரித்துக் கொண்டே இருக்கிறேன்

அப்போது உன்னை நான் மீண்டும் சந்திப்பேன் .

———————————————————————————————-

வெற்றிடம் 

இரண்டு ராஜ்ஜியங்கள் இருந்தன

முதலாவது அவனையும் என்னையும் வெளியே துப்பியது

இரண்டாவதை நாங்கள்  நிராகரித்து விட்டோம்

வெற்றுவெளியின் கீழ்

என் உடல்மழையில்  வெகுநேரம்  ஊறிக்கொண்டிருந்தேன்

அவனும் வெகுநேரம் தன் மழையிலேயே அழுகிக் கொண்டிருந்தான்

பின் விஷமருந்துவது போல்

வருடங்களின் பிரியத்தை அருந்தத்  தொடங்கினான்

தன்  நடுங்கும் கரத்தால்

என் கரம் பற்றி

தூரத்தே காண்

வாய்மைக்கும் பொய்மைக்கும் இடையே

சிறு இடைவெளி தெரிகிறது பார்

குறை காலம் நம் தலைக்கு மேல்

ஒரு கூரை ஒன்றை மைத்துக் கொள்வோம் வா

என்றான்

Comments are closed.