Category: நாடகம்

ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜூலியட் ( அங்கம் -5. ) ஆங்கில வழி மொழியாக்கம் – சத்தியப்பிரியன்

ROMEO-JULIET-Amber

அங்கம் -5.

காட்சி-1

மான்சுவா நகரின் ஒரு வீதி. ரோமியோ நுழைகிறான்.

ரோமியோ :இரவில் தூக்கத்தின் முகஸ்துதியாய் விளங்கும் கனவுகளை நான் நம்பினால் என் கனவுகள் என்னிடம் சில சந்தோஷ செய்தியை கொண்டு சேர்த்திருக்கிறது.என் மனமெனும் சிம்மாசனத்தில் காதல் மென்மையாக அமர்ந்திருக்கிறது. இந்தநாள் முழுவதும் இனம்புரியாத உணர்வு என்னை பாதம் படாமல் பூமியின் மீது சில சந்தோஷ நினைவுகளுடன் மிதக்க வைக்கிறது. என் கதாநாயகி என்னை வந்து பார்க்க வரும்போது நான் இறந்துகிடப்பதைப் போல கனா கண்டேன். என்ன ஒரு அதிசயமான கனவு. இறந்தவன் சிந்திப்பது போன்றொரு அதிசயம்………அவள் அருகில் வந்தாள் தன் இதழ் எனும் அமுதத்தால் என்னை உயிர்பித்தாள். நான் ஒரு மன்னவனாக உயிர் பெற்று எழுந்தேன். காதலின் சாயலுக்கே இத்தனை ஆனந்தம் என்றால் காதல் தன்னிடம் இன்னும் எவ்வளவு இனிமையை கொண்டிருக்கும். ( ரோமியோவின் உதவியாளன் பால்தசார் வருகிறான். ) வெரோனாவிலிருந்து ஏதாவது செய்தி உண்டா பால்தசார் ? பாதிரியாரிடமிருந்து கடிதம் உண்டா ?என் மனைவி எப்படி இருக்கிறாள் ? என் தந்தை நலமா? ஜூலியட் எப்படி இருக்கிறாள் ? திருப்பி திருப்பி இதை ஏன் கேட்கிறேன் என்றால் அவள் நலமாக இருந்தால் வேறு எந்தக் கெடுதியும் நேராது.

பால்தசார் : அப்படி என்றால் ஜூலியட் நலமாக இருக்கிறாள். அவள் உடல் கபுலெட் கல்லறையில் துயில் கொண்டுள்ளது: அவள் ஆவி வானுலகில் இளைப்பாறுகிறது. அவள் அவர்களது குடும்பத்தினருக்கு சொந்தமான கல்லறைப் பகுதியில் ஒரு பேழையில் வைத்து மண்ணில் வைக்கப்பட்டுள்ளதை என் கண்களால் பார்த்தேன். நீங்கள் எனக்கு இடப்பட்ட பணி என்பதால் இந்தத் துயரச் செய்தியை உங்களிடம் கூறாமல் என்னால் இருக்க முடியவில்லை.

ரோமியோ : அப்படியா ? ஓ கிரகங்களே உங்களை நான் மீறுவேன். நான் எங்கிருக்கிறேன் என்பது உங்களுக்கு தெரியாது. உடனே எனக்கு ஒரு பேனாவும் காகிதமும் கொண்டு வா. ஒரு குதிரையை கொண்டு வா. நான் இன்றிரவே வெரோனாவிற்குக் கிளம்புகிறேன்.

பால்தசார் : ஐயா உங்களை மன்றாடிக் கேட்கிறேன். கொஞ்சம் பொறுமையுடன் இருங்கள். உங்கள் கண்கள் சிவந்து மிகவும் வெறியுடன் தோற்றம் கொண்டிருக்கிறீர்கள். பெரிய இடரில் சிக்கிக் கொள்ளாதீர்கள்.

ரோமியோ : தவறு. என்னை தனிமையில் இருக்க விடு. நான் இட்ட கட்டளைகளைச் செய். பாதிரியாரிடமிருந்து எனக்கு கடிதம் உள்ளதா?

பால்தசார் : இல்லை ஐயா.

ரோமியோ :பரவாயில்லை. நீ கிளம்பு இப்போது. நான் சொன்னதுபோல குதிரை ஒன்றைக் கொண்டு வா. இன்றிரவு நாமிருவரும் நேராக வெனோரா கிளம்புகிறோம். ( பால்தசார் கிளம்புகிறான் ) ஜூலியட் ! இன்றிரவு நான் உன்னுடன் பள்ளி கொள்வேன். எப்படி என்று யோசிக்கிறேன். ச்சை ! நம்பிக்கையிழந்தவனிடம் குழப்பம் மட்டும் சொல்லாமல் கொள்ளாமல் ஓடி வந்து விடுகின்றது. எனக்கு ஒரு மருந்துக்கடைக்காரரைத் தெரியும்.மூலிகைகளிலிருந்து மருந்து தயாரிப்பவர். இங்கேதான் எங்கோ அருகில் இருக்கிறார். கந்தல் ஆடையும் அடர்த்தியான புருவமுடையவர் என்பது நினைவில் உள்ளது. வறியவர் போன்ற தோற்றமுடையவர். அவர் பார்வை பரிதாபமாக இருக்கும். பெரும்இன்னல் அவரை எல்லும்தோலுமாக ஆக்கியிருக்கும். அவருடைய மருந்துக்கடையில் ஆமை ஓடு ஒன்று தொங்கிக் கொண்டிருக்கும். பாடம்பண்ணபட்ட முதலையின் உருவம் ஒன்று இருக்கும். அதிசய மீன் ஒன்றின் உடலும் பாடம் செய்யப்பட்டு வைக்கபட்டிருக்கும். காலியான அட்டைபெட்டிகள், பச்சைநிறக் களிமண் பானைகள், தோல் பைகளும், பூஞ்சைக்காளான் பிடித்த விதைகளும் பார்வைக்கு வைக்கப்பட்டு ஒரு மருந்துக்கடை என்பதை கூறிக் கொண்டிருக்கும். பழைய நூல் கண்டுகள், அழுத்தி வைக்கப்பட்ட ரோஜா இதழ்கள்…என்று அவனுடைய வறுமையை காணுற்ற நான் ஒருமுறை எனக்கு நானே ‘ இந்த மான்சுவா நகரில் தடை செய்யப்பட்டுள்ள விஷம் வாங்க வேண்டுமென்றால் இந்த வறியவன் அதனை விற்பதற்கு தயாராக இருப்பான் ‘ என்று கூறினேன். அப்போது இந்த எண்ணம் தோன்றியபோது எனக்கு விஷம் தேவையிருக்கவில்லை. இப்போது அவரிடம் நிச்சயம் விஷம் இருக்கும். இதுதான் அவர் வீடாக இருக்கும். விடுமுறைதினம் என்பதால் கடை மூடியிருக்கிறது. கூப்பிடலாம். மருந்துக் கடைக்காரரே !

( மருந்துக்கடைக்காரர் வெளியில் வருகிறார் )

மருந்துக்கடைக்காரர் : யாரது இப்படி உரக்க அழைப்பது ?

ரோமியோ :இங்கே வாருங்கள் மருந்துக்கடைக்காரரே ! நீங்கள் வறியவர் என்பது தெரிகிறது. இந்தாருங்கள் பிடியுங்கள் இதில் நாற்பது டியூகட் பணம் உள்ளது. எனக்கு சிறிதளவு நஞ்சு கொடுங்கள்.அந்த நஞ்சு நாவில் பட்டதும் உடலில் உள்ள நாளங்களில் பரவி உட்கொண்டவனை பீரங்கியிலிருந்து கிளம்பிய குண்டு எவ்வாறு சர்வநாசம் செய்யுமோ அப்படி ஒரு நாசத்தை விளைவித்து இறக்க செய்ய வேண்டும்.

மருந்துக்கடைக்காரர் : அப்படிப்பட்ட கொடிய விஷம் என்னிடம் உள்ளது. ஆனால் மான்சுவா நகரில் விஷம் விற்பவர்களுக்கு தண்டனை என்ன தெரியுமா? ….மரணம்.

ரோமியோ : வறுமையின் காரணமாக கேடு கெட்டு போயிருக்கும் உங்களுக்கு மரணம் மேலும் அச்சம் கொடுக்குமா என்ன? பஞ்சத்தின் கொடுமையை உங்கள் கன்னங்கள் சொல்லும். தேவையும், மாளாத்துயரும் உங்கள் கண்களில் தெரிகின்றன. வெறுப்பும், பிச்சைக்காரத்தனமும் உங்கள் முதுகில் நடமிடுகின்றன. இந்த உலகம் உங்கள் நண்பனில்லை. அதைப்போல அதன் சட்டமும். உங்களைப் போன்றவர்களை வளமுடையவராக்க உலகில் எந்தச் சட்டமும் கிடையாது. பிறகு வறுமையில் இருப்பதால் என்ன பயன் ? உடைத்துக் கொண்டு வெளியில் வாருங்கள். இந்தக் காசை பிடியுங்கள். ( கைகளில் பணத்தை நீட்டிக் காட்டுகிறான் )

மருந்துக்கடைக்காரர் : இதனை என் வறுமை ஒப்புக்கொள்ளும் . ஆனால் என் கொள்கை ஒப்புக்கொள்ளாது.

ரோமியோ : நான் கொடுப்பது உங்கள் வறுமைக்கு உங்கள் கொள்கைக்காக இல்லை.

மருந்துக் கடைக்காரர் ( ரோமியோவிடம் நஞ்சை நீட்டியபடி ) இதை எந்த பானத்திலும் கலக்கி குடி. உனக்கு இருபது மனிதர்களின் சக்தி இருந்தாலும் இந்த விஷம் உன்னை பரலோகம் அனுப்பிவிடும்.

ரோமியோ : ( அவர் கைகளில் பணத்தை கொடுக்கிறான் ) இந்தாருங்கள் இது உங்கள் தங்கம். இந்தப் பணம் மனிதனுக்கு நஞ்சை விடக் கொடியது. இந்த துன்பம் நிறைந்த உலகில் பணம் செய்யும் கொலைகள் நீங்கள் விற்க மறுக்கும் நஞ்சு செய்யும் கொலைகளைவிட அதிகம். நான்தான் உங்களுக்கு நஞ்சை கொடுத்துள்ளேன். நீங்கள் என்னிடம் கொடுத்தது நஞ்சில்லை. வருகிறேன். நல்ல உணவு வாங்கி சாப்பிட்டு வற்றிய உடம்பைத் தேற்றுங்கள். வா என்னுடைய உற்சாக பானமே ! நீ நஞ்சில்லை. ஜூலியட்டின் கல்லறையில் உன்னை உட்கொள்கிறேன்.( இருவரும் அகல்கின்றனர் )

திரை.

காட்சி-2

( வெனோரா நகரில் பாதிரியார் லாரன்ஸ்ஸின் இல்லம். பாதிரியார் ஜான் உள்ளே நுழைகிறார்.)

ஜான் : வணக்கம் அருட்தந்தை லாரன்ஸ் ( உள்ளிருந்து பாதிரியார் லாரன்ஸ் வருகிறார் )

பாதிரியார் லாரன்ஸ் : ( வந்து கொண்டே ) இது அருட்சகோதரர் ஜானின் குரல் அல்லவா? மான்சுவாவிலிருந்து வருகிறீர்கள் அல்லவா ? வாருங்கள்.ரோமியோ என்ன சொல்கிறான் ? அவன் எண்ணங்களை கடிதமாக வடித்திருந்தான் என்றால் அந்தக் கடிதத்தை கொடுங்கள்.

ஜான் : நான் எனக்குத் துணையாக மேலும் ஒரு அருட்சகோதரரைத் தேடி போனேன். அவருக்கு நோயாளிகளை சந்தித்து சிகிச்சை அளிப்பது பணியாக இருந்தது. எங்கள் இருவரையும் பார்த்த நகர சுகாதார அதிகாரிகள் நாங்கள் குடியிருக்கும் இல்லங்களில் பெருநோய் இருப்பதாக ஐயம் கொண்டு எங்கள் இருவரையும் என் இல்லத்திலிருந்து வெளியேற விடாமல் உள்ளே வைத்து பூட்டி விட்டனர். எனவே என்னுடைய மான்சுவா பயணம் தடைபெற்று விட்டது.

பாதிரியார் லாரன்ஸ் : பிறகு என் கடிதத்தை ரோமியோவிற்கு யார் கொண்டு போனது ?

ஜான் : அதனை என்னால் எடுத்து செல்ல முடியவில்லை. இதோ.( பாதிரியார் லாரன்ஸிடம் ஒரு கடிதத்தை நீட்டுகிறார். ) அங்கிருந்தும் உங்களுக்கு தகவல் கொண்டுவர என்னால் முடிய்டவில்லை. தோற்று நோய் உடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் சுகாதார அதிகாரிகளின் செய்கையால் இவ்வாறு நேர்ந்து விட்டது.

பாதிரியார் லாரன்ஸ் : என்ன ஒரு துரதிர்ஷ்டம். அருட்சகோதரரே ! அது கடிதம் மட்டுமில்லை. பல தகவல்கள் அடங்கியது. அது அவன் கையில் கிடைக்காத பட்சத்தில் பல ஊறுகள் நேரலாம். அருட்சகோதரர் ஜான் உடனே சென்று ஒரு இரும்பு கடப்பாறை ஒன்றை என் அறைக்குள் எடுத்துக் கொண்டு வாருங்கள்.

ஜான் : இதோ இப்பொழுதே கொண்டு வருகிறேன் ( ஜான் மறைகிறார் )

பாதிரியார் லாரன்ஸ் : கல்லறைக்கு நான் மட்டும் தனியாகப் போக வேண்டும். இன்னும் மூன்று மணி நேரத்தில் ஜூலியட் விழித்துக் கொண்டுவிடுவாள். ரோமியோவிற்கு இந்த நிகழ்வு தெரிவிக்கப்படவில்லை என்பதற்கு அவள் என் மேல் கடுங்கோபம் கொள்வாள். நான் மீண்டும் ஒருமுறை மான்சுவாவிற்கு கடிதம் அனுப்ப வேண்டும். ரோமியோ வரும்வரை ஜூலியட்டை என் குடிலில் மறைத்து வைத்திருக்க வேண்டும். இறந்தவனின் கல்லறையில் கிடத்தப்பட்ட பாவம் அவள் ஒரு வாழும் பிணம்.( பாதிரியார் அகல்கிறார். )

.காட்சி-3

கபுலெட்டின் கல்லறை .பாரிஸ் ஒரு வேலைக்காரனுடன் நுழைகிறான்.

பாரிஸ் : அந்த விளக்கை என்னிடம் கொடுத்துவிட்டு தூரப் போ. உன்னிடம் உள்ள விளக்கை அனைத்து விடு. அப்போதுதான் நான் மற்றவர் கண்களுக்கு தெரியமாட்டேன். தூரத் தெரியும் ஊசியிலை மரங்களின் அடியில் உன்னை மறைத்துக் கொள். உன்னை மறைத்துக் கொள். கீழே படுத்துக் கொண்டு நெகிழ்வான தரையில் காதுகளை வைத்துக் கொண்டு கவனமாக இரு. இந்தக் கல்லறைக்குள் வேறு காலடி சத்தம் கேட்கக் கூடாது. அப்படி வேறு யாராவது உள்ளே வருகின்றனர் என்றால் எனக்கு மெல்லிய விசில் மூலம் தகவல் தெருவி. உன் கையில் உள்ள மலர்களை என்னிடம் கொடு. போ நான் சொன்னதுபடி செய்.

( வேலைக்காரன் விளக்கை அணைத்துவிட்டு பாரிசிடம் மலர்களை கொடுக்கிறான் ).

வேலைக்காரன் : இந்த மயானத்தில் காத்திருப்பது எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது. இருந்தாலும் சவாலாக எதிர்கொள்ள வேண்டும்.( வேலைக்காரன் அகல்கிறான். ).

பாரிஸ் ( மலர்களை அவளுடைய பேழையின் மேல் தூவியபடி ) இனிமையான மலர்களே . என் மணமகளின் படுக்கையில் சிதறியிருங்கள். உனது சப்ர மஞ்சம் மண்ணாலும் கல்லினாலும் ஆனது. இதனை நான் தினமும் நறுமணமுள்ள நீரினால் உன் மஞ்சத்தை நனைப்பேன். இல்லையெனில் வருத்தத்தில் தோய்ந்த என் கண்ணீரால் கழுவுவேன். அதுவும் இல்லையென்றால் என் இரவுநேர ஈமைச் சடங்கு உன் கல்லறை மீது மலர் தூவி கண்ணீரால் நனைப்பதுதான்.( வேலைக்காரன் விசில் ஒலி எழுப்புகிறான். ) யாரோ வருகிறார்கள். வேலைக்காரன் சமிக்ஞை செய்கிறான். இந்த இரவில் வருவது யாராக இருக்கும் ? இந்த இரவு வேளையில் என் ஈமைச் சடங்குகளை செய்யவிடாமல் குறுக்கிடுபவர்கள் யாராக இருக்கும் ? விளக்கு வெளிச்சத்துடன் வருகிறார்கள். இதோ இந்த இருட்டில் ஒளிந்து கொள்கிறேன்.

(பாரிஸ் ஒளிந்து கொள்கிறான். ரோமியோவும் பால்தசாரும் வருகின்றனர். )

ரோமியோ :அந்த கடப்பாரையையும் மண்வெட்டியையும் என்னிடம் கொடு( பால்தசாரின் கையிலிருக்கும் கருவிகளை வாங்குகிறான். ) இந்தா இந்தக் கடிதத்தை பிடி. நாளை காலை பாதிரியாரிடமும் , என் தந்தையிடமும் கொண்டு போய்க்கொடு. அந்த விளக்கை என்னிடம் கொடு ( விளக்கை அவனிடமிருந்து வாங்குகிறான். ) என் உயிரின் மீது ஆணையிட்டு சொல்கிறேன். நீ இங்கு எதை பார்த்தாலும் எதுவும் பேசாமல் தனியாக இருக்க வேண்டும். என் முயற்சியில் நீ குறிக்கிடக் கூடாது.இந்தக் கல்லறைக்குள் நுழைந்து என் மனைவியின் முகத்தை கைகளில் ஏந்திக் கொள்ள போகிறேன். நான் ஒரு முக்கிய காரணத்திற்காக கல்லறைக்குள் இறங்குகிறேன். என் ஆருயிரின் கை விரலில் ஒரு மோதிரம் உள்ளது. அதனை கழற்றி எடுக்க வேண்டும். வேறு ஒரு செயலுக்காக எனக்கு அந்த மோதிரம் தேவைப் படுகிறது . ஆனால் நீ என் மீது சந்தேகம் கொண்டு என்ன நடக்கிறது என்று பார்க்க வந்தாய் என்றால் பிறகு அந்தக் கடவுள் மீது ஆணை உன்னை நார் நாராக கிழித்து இந்த மயானத்தில் உலவும் கொடிய மிருகங்களுக்கு இரையாக போட்டு விடுவேன். ஜாக்கிரதை. என் நோக்கம் கொடியதும் காட்டுமிராண்டித்தனமுமாகும் ஒரு கொடும் புலியை விடவும் கொந்தளிக்கும் கடலையும் விடவும் என்னுடைய சீற்றம் அதிகமாக உள்ளது.

பால்தஸார் :நான் சென்று விடுகிறேன் ஐயா. உங்களைத் தொந்தரவு செய்ய மாட்டேன்.

ரோமியோ : நட்புக்கு இதுதான் அழகு ( அவனிடம் கொஞ்சம் பணம் கொடுக்கிறான் ) இந்தா இதை வாங்கிக் கொள். போ! நன்றாக இரு. உனக்கு என் வந்தனம்.

பால்தஸார் ( தனக்குள் ) நான் சொன்னது போலில்லாமல் நான் இங்கே மறைந்து கொள்கிறேன். அவர் பார்வை என்னக்கு அச்சமூட்டுகிறது. அவர் செய்கை என்னை ஐயப்பட வைக்கிறது.( பால்தஸார் அங்கிருந்து விலகி படுத்து தூங்கத் தொடங்குகிறான். )

ரோமியோ ( கல்லரையை பார்த்து ) ஓ ! நிரம்பாத இரைப்பையே ! இந்த உலகின் அழகிய படைப்பை விழுங்கி விட்டாய். நான் உன் தாடையைப் பிளந்து உன் இரைப்பைக்குள் மேலும் ஒரு இரையை போடப்போகிறேன். ( ரோமியோ கையிலிருந்த கருவிகளால் கல்லறையை உடைக்கத் தொடங்குகிறான். )

பாரிஸ் ( மெதுவான குரலில் ) இது நாடுகடத்தப்பட்ட அந்த யோக்கியன் ரோமியோ அல்லவா? இவன்தான் என்னுடைய காதலியின் உறவினன் டிபல்டை கொலை செய்தவன். அவர்கள் என்னடா என்றால் அவள் தன் ஒன்றுவிட்ட சகோதரனுக்காக அழது அழுது உயிரை விட்டதாக நம்பிக் கொண்டிருக்கின்றனர். இவன் இங்கே ஏதோ அக்கிரமம் செய்ய வந்திருக்கிறான். இதோ அவனை கையும் களவுமாக பிடிக்கிறேன் ( ரோமியோவை நோக்கி ) உன்னுடைய பாதகச் செயலை நிறுத்து மாண்டேகு.மரணத்தையும் தாண்டிய வஞ்சம் உண்டா என்ன? அயோக்கியப் பதரே உன்னை கைது செய்கிறேன். நான் சொல்வதை கேட்டு என்னுடன் வா. இல்லை யென்றால் உனக்கு மரணம்தான் முடிவு.

ரோமியோ : நான் எதை எண்ணியிருக்கிறேனோ அதை செய்வதற்கு வந்திருக்கிறேன். நல்ல இளைஞனாக தெரிகிறாய். பெரும் துயரத்தில் ஆழ்ந்தவர்களை தொந்தரவு செய்யக் கூடாது. இங்கிருந்து ஓடி விடு. என் போக்கில் என்னை விடு. இறந்தவர்களை பற்றி கொஞ்சம் யோசித்து பார். அவர்கள் உனக்கு அச்சமூட்டட்டும். எனக்கு கோபமூட்டி மேலும் ஒரு குற்றம் புரிய வைத்து விடாதே ! எனவே இங்கிருந்து போய் விடு . நான் என்னையும் விட உன்னை அதிகம் நேசிக்கிறேன். இந்த ஆயுதங்கள் என் முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறேன். இங்கே நிற்காதே . போய் விடு. ஒரு பைத்தியக்காரனின் கருணையால் தப்பித்து வந்ததாக நீ வாழப்போகும் நாட்களில் மற்றவரிடம் கூறு,

பாரிஸ் உன் வேண்டுகோள் நிராகரிக்கப்படுகிறது. நான் உன்னை கைது செய்கிறேன்.

ரோமியோ : நீ என்னை தூண்டுகிறாயா? அப்படியென்றால் வா ஒரு கை பார்க்கிறேன் ( இருவரும் சண்டையிடுகின்றன்மார் )

வேலைக்காரன் : ஐயோ அவர்கள் இருவரும் சண்டையிடுகின்றனர். நான் காவலாளிகளை அழைத்து வருகிறேன் .( வேலைக்காரன் மறைகிறான். )

பாரிஸ் ( கீழே விழுந்து சரிந்தபடி ) கடவுளே நான் செத்தேன். முடிந்தால் என்னை அந்தக் கல்லறையைத் திறந்து என் ஜூலியட்டின் அருகில் படுக்க வை. ( பாரிஸ் இறக்கிறான். )

ரோமியோ :இவன் யாரென்று பார்க்கிறேன். அட இது மெற்குஷியோவின் உறவினன் மேன்மை பொருந்திய பிரபு பாரிஸ் அல்லவா? இவன் என்ன சொன்னான் ? நாங்கள் சண்டை போட்டபொழுது சரியாக கவனிக்கவில்லை. பாரிஸ் ஜூலியட்டை மணக்க இருந்ததாக அல்லவா கூறினான் ? இல்லை அது கனவில் சொன்ன வார்த்தைகளா? உன் கரங்களைக் கொடு. உன் கதையும் என் கதையும் ஒன்றுதான். உன்னை ஒரு பிரமாண்ட கல்லறைக்குள் கிடத்துகிறேன். ( ரோமியோ ஜூலியட் இருக்கும் கல்லறையை உடைத்து உள்ளே இருக்கும் ஜூலியட்டின் உடலைப் பாக்கிறான். ) இது கல்லறையா என்ன? ஒளிவிளக்கு பாரிஸ் ! ஜூலியட் இங்கே கிடப்பதால் இந்தக் கல்லறை பிரகாசமாக ஒளிர்கிறது. இறந்தவனை இறப்பவன் புதைக்கும் இடம் இது.( பாரிசை அந்தக் கல்லறையில் கிடத்துகிறான். )மரணம் நிகழும் அந்த கணத்தில் இறப்பவனின் முகத்தில் என்ன ஒரு பிரகாசம். மரணத்திற்கு முன்பு தோன்றும் மின்னல் என்பார்கள். ஓ ! இவள் முகத்தில் மிளிர்வதை மின்னல் என்று கூற முடியுமா என்ன? மரணம் உன் உயிர்த்தேனை உறிஞ்சு விட்டு உன் வனப்பை மட்டும் வெல்லமுடியாமல் விட்டு வைத்திருக்கிறது. அழகிய பூங்கொடியே உன் கன்னங்களிலும் இதழ்களிலும் இன்னும் செந்நிறம் மிச்சம் இருக்கிறது. மரணத்தின் சவ வெளுப்பு இன்னும் உன்னை முற்றுகையிடவில்லை. டிபல்ட் ! நீ இரத்தப் போர்வையில் மரித்து கிடக்கிறாயா? உன்னைக் கொன்று உன் இளமையை அழித்த அந்தக் கொலைகாரனை என் கைகளினால் கொள்வதைத் தவிர உனக்கு நான் வேறு என்ன கைமாறு செய்ய முடியும் நண்பா? என் உறவினனே என்னை மன்னித்து விடு. ஓ ஜூலியட் ! நீ ஏன் இன்னமும் அழகாக இருக்கிறாய் ? மரணம் உன்னை நேசித்து உன்னை தன் மனைவியாக்கி வைத்துக் கொண்டிருக்கிறதா? தனியாக இருப்பதற்கு அஞ்சாதே. நானும் உன்னுடன் இங்கே உனக்குத் துணையாக இந்த இரவில் இருப்பேன். இனி உன்னை பிரிய மாட்டேன்.உன் அறைத்தோழிகளான புழுக்களுடன் நான் இருப்பேன். என்னுடைய இறுதி ஒய்வு இங்குதான். என்னை துன்புறுத்திய அந்த இராசியில்லாத கிரகங்கள் குறித்து நான் கவலைப்பட போவதில்லை. கண்கள் இறுதியாக ஒருமுறை உன்னை பார்க்கட்டும்; உன் இறுதித் தழுவலை கரங்கள் பெறட்டும்; சுவாசத்தின் கதவுகள் போன்ற இதழ்களே ஓர் விருப்ப முத்தம் கொடுத்து மரணத்துடன் முடிவில்லாத ஒப்பந்தம் செய்து கொள்ளுங்கள்.( ஜூலியட்டை முத்தமி.ட்டுவிட்டு நஞ்சினை கையில் எடுக்கிறான் ). துன்பத்திற்கு வழிகாட்டும் வழித்துணையே ! இனிமையற்ற நண்பனே ! ஆற்றல்மிக்க மாலுமியே வா ! வாழ்க்கைக்கடலில் தத்தளிக்கும் இந்த படகினை மரணம் என்ற பாறையின் மீது வலுவுடன் மோதுவோம். என் காதலிக்காக ( நஞ்சை அருந்துகிறான். ) ஓ அந்த மருத்துக்கடைக்காரர் சொன்னது சரிதான் . நஞ்சு விரைந்து வேலை செய்யத் தொடங்கி விட்டது. ஒரு முத்தத்துடன் என் வாழ்வை முடித்துக் கொள்கிறேன். ( ரோமியோ இறக்கிறான்.)

( பாதிரியார் லாரன்ஸ் கையில் விளக்கு , மண்வெட்டி , கடப்பாரையுடன் வருகிறார். )

பாதிரியார் லாரன்ஸ் : புனித பிரான்சிஸ் நீங்கள்தான் அருள் பாலிக்க வேண்டும். இந்த முடியாத வயதில் என் பாதங்கள் எத்தனை முறை இன்று ஒருநாள் மட்டும் இந்த மயானத்தில் அலைந்திருக்கும் ?

பால்தஸார் : ஐயா எனக்கு உங்களை நன்கு தெரியும்.

பாதிரியார் : கடவுள் உன்னை ஆசீர்வதிப்பாராக. நண்பனே சொல்லு அங்கே தெரியும் விளக்கு எதற்காக உள்ளது ? கல்லறையில் உள்ள புழுக்களுக்கும், கபாலங்களுக்கும் ஒளி கொடுப்பதற்காகவா? எனக்கு தெரிந்தவரை அந்த விளக்கு கபுலெட் கல்லறையிலிருந்துதானே எரிகிறது ?

பால்தஸார் : என் எஜமானன் அங்கே இருக்கிறார். உங்களுக்கு வேண்டப்பட்டவர்.

பாதிரியார் : யார் அது ?

பால்தஸார் : ரோமியோ.

பாதிரியார் : எத்தனை நாழிகையாக அவன் அங்கே இருக்கிறான் ?

பால்தஸார் : சரியாக அரைமணி நேரமிருக்கும்.

பாதிரியார் :அந்தக் கல்லறைக்கு என்னுடன் வா.

பால்தஸார் :மாட்டேன் ஐயா. என் எஜமானனுக்கு நான் இருப்பது தெரியக் கூடாது. இந்த இடத்தை விட்டு அகலவில்லையென்றால் என்னைக் கொன்று விடுவதாக மிரட்டியிருக்கிறார். நான் வர மாட்டேன்.

பாதிரியார் :அப்படியானால் இங்கேயே இரு. இது என்ன திடீரென்று பய உணர்வு ஏற்படுகிறது ? நடக்கக்கூடாத எதுவோ நடந்திருக்குமோ ?

பால்தஸார் : நான் இங்கே படுத்து பாதி தூக்கத்தில் இருந்தபோது என் எஜமானர் வேறு ஒருவருடன் சண்டையிட்டு அவரைக் கொன்று விட்டது போல கனா கண்டேன்.

பாதிரியார் : ( கல்லறையை நெருங்குகிறார் ) ரோமியோ ஓ ரோமியோ ! ஆ இது என்ன இரத்தம் கல்லறையின் வாயிலை நனைத்தபடி ? சமரசம் உலாவும் இந்த இடத்தில் இரண்டு வாட்கள் கீழே கிடக்கின்றனவே? ( கல்லறைக்குள் எட்டி பார்க்கிறார் ) ரோமியோ ! ஓ ! ரோமியோ !வேறு யார் உள்ளே கிடக்கின்றனர்? பிரபு பாரிசுமா? ஓ பாரிஸ் குருதியில் நனைந்திருக்கிரானே?எப்போது இந்த துக்ககரமான விஷயம் நடைபெற்றது ? அந்தப் பெண் அசைகிறாள் .( ஜூலியட் கண் விழிக்கிறாள் )

ஜூலியட் :என் அன்பிற்குரிய அருட்தந்தையே என் பிரபு எங்கே ? நான் எங்கிருக்க வேண்டுமோ அங்’கே இருக்கிறேன் என்பது தெரிகிறது.என் ரோமியோ எங்கே ?( கல்லறையின் வெளியில் குரல் கேட்கிறது )

பாதிரியார் : ஏதோ ஓசை கேட்கிறது. மரணத்தின் கூண்டிலிருந்து நீ முதலில் வெளியில் வந்து விடு பெண்ணே. தொற்று நோயிலிருந்தும் இயற்கைக்கு முரணான தூக்கத்திலிருந்தும் வெளியில் வா. நாம் வெல்ல வேண்டும் என்று எண்ணிய மகாசக்தி நமது எண்ணங்களை பொடி பொடியாக்கி விட்டது. வா வெளியேறு. உன் நெஞ்சில் குடி கொண்டுள்ள உன் தலைவன் உள்ளே இறந்து கிடக்கிறான். உடன் பாரிசும் இறந்து கிடக்கிறான். வா ! நான் உன்னை கன்னியாஸ்த்ரீகள் தங்கி இருக்கும் இடத்தில் பாதுகாப்பாக சேரக்கிறேன். கேள்வி எதுவும் கேட்காதே. காவலர்கள் வந்து விடுவார்கள். வா ஜூலியட் . இங்கே அதிகம் தங்கியிருப்பது உசிதமில்லை.

ஜூலியட் : போங்கள் இங்கிருந்து போய்விடுங்கள் . நான் எங்கும் வருவதாக இல்லை.

( பாதிரியார் மறைகிறார் )அது என்னது என் அன்பிற்குரியவன் கைகளில் உள்ள குப்பி? நஞ்சு. இவனுடைய காலமற்ற முடிவுக்கு இந்த நஞ்சுதான் காரணமா? இரக்கமற்றவன் எனக்கு துளி கூட வைத்திராமல் அனைத்தையும் குடித்திருக்கிறான். உன்னுடைய இதழ்களை முத்தமிடுகிறேன் அவற்றில் இன்னும் சிறிது விஷம் மிச்சமாக ஒட்டிக் கொண்டிருக்கும்.( அவன் இதழ்களில் முத்தமிடுகிறாள் ) உன் இதழ்களில் கதகதப்பு இன்னும் குறையவில்லை ரோமியோ.

( காவலாளிகளும், பாரிசின் வேலைக்காரனும் நுழைகின்றனர் )

முதன்மைக் காவலாளி : எந்தப் பக்கம் ?

ஜூலியட் : என்ன சப்தம் ? சீக்கிரம் செயலாற்ற வேண்டும்.என் இனிய குறுவாளே இனி இதுதான் உறை. என் வயிற்றில் இறங்கி என்னை இறக்க அனுமதி.( ரோமியோவின் குறுவாளால் தன வயற்றில் குத்திக் கொண்டு மடிந்து விழுகிறாள் )

வேலைக்காரன் : இதோ இதுதான். விளக்கு எரியும் கல்லறை.

முதன்மைக் காவலாளி : கீழே இரத்தம் சிந்தியிருக்கிறது. ஓடுங்கள். இந்த மயானம் முழுவதும் தேடுங்கள். கண்ணில் தென்படுபவர்களை கைது செய்யுங்கள்.( சில காவலாளிகள் ஓடுகின்றனர். ) பரிதாபமான காட்சி. பிரபு இறந்து விட்டார். ஜூலியட்டின் ரத்தம் இன்னும் கதகதப்பாக இருப்பதால் இரண்டு நாட்களுக்கு முன்பே அவள் புதைக்கபட்டிருந்தாலும் இப்போதுதான் இறந்திருக்க வேண்டும். ஓடு. இளவரசருக்கு தகவல் தெரிவி. கபுலெட்டுகளுக்கு தகவல் அளியுங்கள். மாண்டேகுகளை எழுப்புங்கள். மேலும் வேறு சிலரைத் தேடுங்கள்.( மேலும் சில வேலைக்காரர்கள் நகர்கிறார்கள் ) இந்த துக்க செயலுக்கு காரணம் எதுவென்று புரிகிறது. இருப்பினும் முழுக் கதையையும் துப்பு துலக்காமல் எளிதில் கண்டு பிடிக்க முடியாது.( இரண்டாவது காவலாளி ரோமியோவின் வேலைக்காரன் பால்தசாரை பிடித்துக் கொண்டு வருகிறான். )

இரண்டாவது காவலாளி : இதோ பால்தஸார் ரோமியோவின் பணியால். இங்கேதான் மயானத்தில் இருந்தான்.

முதன்மை காவலாளி : இளவரசர் இங்கே வரும்வரை பத்திரமாக அவனைக் காவலில் வைத்திருங்கள்.

( மூன்றாவது காவலாளில் பாதிரியார் லாரன்சுடன் வருகிறான். )

மூன்றாவது காவலாளி : இதோ இங்கே இந்தப் பாதிரியார் நடுங்கிக் கொண்டும், பெருமூச்சு விட்டு கொண்டும் அழுது கொண்டும் இருக்கிறார். அவர் மயானத்தை ஒட்டியிருந்த பகுதியிலிருந்து வரும்போது மண்வெட்டி ஒன்றையும், கடப்பாறை ஒன்றையும் அவரிடமிருந்து கை பற்றியிருக்கிறோம்.

முதன்மைக் காவலாளி : பெருத்த ஐயத்தை ஏற்படுகிறது. அவரையும் பிடித்து வையுங்கள்.

( இளவரசரரும் அவரது சேவகர்களும் வருகின்றனர். )

இளவரசர் : இந்த அதிகாலை வேளையில் என் காலைநேர தூக்கத்தை கெடுத்க்கும் அளவிற்கு அப்படி என்ன விபரீதம் நேர்ந்துள்ளது ?

( திருவாளர் கபுலெட்டும் திருமதி கபுலெட்டும் வருகின்றனர். )

கபுலெட் : வெளியில் உள்ளவர்கள் கூச்சலிடும் அளவிற்கு அப்படி என்ன விபரீதம் இனி நடப்பதற்கு உள்ளது ?

திருமதி, கபுலெட் : என் வீதியில் சிலர் ரோமியோ என்றும், ஜூலியட் என்றும், பாரிஸ் என்றும் கூச்சலிடுகிறார்கள். அவர்கள் அனைவரும் கிளர்ந்தெழுந்து மயானம் நோக்கி வருகின்றனர்.

இளவரசர் : எந்த பயங்கரம் இவர்களை இப்படி கூச்சலிட வைக்கிறது ?

முதன்மை காவலர் : அரசே ! இங்கே பிரபு பாரிஸ் இறந்து கிடக்கிறார். ரோமியோவும் இறந்துகிடக்கிறான். இரண்டு நாட்களுக்கு முன்பே இறந்தவள் என்று புதைக்கப்பட்ட ஜூலியட் சற்று முன்புதான் இறந்திருக்கிறாள்.

இளவரசர் : இந்த முறை தவறிய கொலை எப்படி என்று கண்டுபிடியுங்கள்.

முதன்மைக் காவலர் : இதோ ரோமியோவிற்கு நெருங்கியவரான பாதிரியார் லாரன்ஸ். இந்தக் கல்லறைகளை பிளந்து திறக்க இவர் கைகளில் இருந்த மண்வெட்டியையும் கடப்பாரையையும் கைப்பற்றி இருக்கிறோம்.

திருவாளர் கபுலெட் : என்ன கொடுமை இது. மணவாட்டி பார் நம் அருமை மகள் ஜூலியட் இன்னும் இரத்தம் சிந்திக் கொண்டிருக்கிறாள். அந்த கேடு கேட்ட மாண்டேகுவின் முதுகில் இருக்க வேண்டிய கத்தி என் மகளின் நெஞ்சில் உள்ளது.

திருமதி.கபுலெட் : ஐயோ இந்தக் காட்சி என்னை கல்லறைக்குக் கொண்டு செல்லும் சாவு மணி போல உள்ளதே.

( மாண்டேகு உள்ளே வருகிறார் )

இளவரசர் : வாருங்கள் மாண்டேகு. இத்தனை வேகமாக அதிகாலையில் எழுந்து வந்தது இத்தனை வேகமாக’ உங்கள் மகனும் வாரிசுமான ரோமியோ வீழ்ந்து கிடப்பதைக் காணவா?

மாண்டேகு ஐயோ இளவரசரே ! ! இன்று இரவுதான் என் மனைவி தன் மகன் நாடு கடத்தபட்டான் என்பதை கேட்டு அதிர்ச்சி தாங்கமுடியாமல் இறந்தாள். இந்த வயாதான காலத்தில் எனக்கு இன்னும் வேறு என்ன துன்பம் நேரிட வேண்டும் ?

இளவரசர் :பாருங்கள் எதுவென்று தெரியும்.

மாண்டேகு : ( ரோமியோவின் இறந்த உடலைப் பார்த்து ) அட அறியாத மகனே ! இது என்ன நாகரீகம் மகனே உன் தந்தை நான் உயிருடன் இருக்கும்போது நீ ஏனப்பா கல்லறைக்குள் சென்றாய் ?

இளவரசர் : உங்கள் ஆற்றொணா துயரத்தின் வாயை சற்று ஆறவிடுங்கள். இது எங்கு தொடங்கியது எப்படி நடந்தது எப்படி முடிந்தது என்பனவற்றை ஆராயுந்து அறியவேண்டும். அது முடிந்த பின்னரே நான் உங்கள் துயரத்தில் பங்கு கொள்ள முடியும். அதன் பிறகு உங்களுக்கு இறுதி வரையில் துணை வருவேன். அதுவரையில் பொறுமையாக இருங்கள். யார் அங்கே சந்தேகப்படும் நபர்களை அழைத்து வாருங்கள்.

பாதிரியார் லாரன்ஸ் :நான் மிக உயர்ந்த ஸ்தானத்தில் இருந்தாலும் கீழ்த்தரமான செயல்கள் புரியக்கொடியவன் என்ற குற்றத்துடன் இருக்கிறேன். காலமும் சூழலும் இடமும் என்னை சந்தேகத்திற்குரியவனாக என்னை உங்கள் முன்னால் கொண்டு நிறுத்தியிருக்கிறது.. நீங்கள் என்னை விசாரணை செய்யலாம். தண்டனை அளிக்கலாம். என்னை நானே கடிந்து கொண்டு சுய மன்னிப்பு கேட்டு கொண்டு விட்டேன்.

இளவரசர் : அப்படி என்றால் இதில் உங்களுக்கு தெரிந்தவற்றை இப்போதே கூறுங்கள்.

பாதிரியார் லாரன்ஸ் :சொல்கிறேன் . என்னுடைய இரைக்கும் மூச்சின் அளவு இந்த சோர்வுமிக்க நீண்ட கதையைவிட குறைந்தது. அங்கு இறந்து கிடக்கும் ரோமியோ ஜூலியட்டின் கணவன். அவனருகில் கிடக்கும் ஜூலியட் ரோமியோவின் பத்தினி. நான்தான் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தேன். அந்த ரகசிய திருமணம் நடந்த அன்றுதான் டிபல்டின் துர்மரணம் நிகழ்ந்தது. அந்த மரணம் மணமகனை நாடு கடத்தியது. ஜூலியட்டின் வருத்தம் எல்லாம் டிபல்ட் இறந்ததினால் இல்லை. ரோமியோ நாடு கடத்தபட்டதற்குதான். அவள் சோகத்தை போக்குவதற்காக நீங்கள் அவளுக்கும் பிரபு பரிசுக்கும் திருமண ஏற்பாடுகளைச் செய்தீர்கள். அவள் நேரே என்னிடம் வந்தாள்.அவளுடைய கடுமையான பார்வை தன்னை இந்த இரண்டாவது திருமணத்திலிருந்து தப்பித்துக் கொள்ள வழி கேட்டு மிரட்டியது. நான் மறுத்தால் என் அறையிலேயே தற்கொலை செய்து கொள்வதாகச் சொன்னாள். அப்போதுதான் என் நிபுணத்துவத்தில் உருவாக்கிய நெடுநேரம் இறந்தவர் போல தூங்கச் செய்யும் நஞ்சு போன்ற மருந்தை கொடுத்தேன். நான் எண்ணியது போலவே சாவு போன்ற தூக்கத்தை அந்த மருந்து அவளுக்கு அளித்தது. இதற்கு நடுவில் நான் ரோமியோவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பினேன். அவன் இங்கே வரவேண்டும் மருந்து தனது வீரியத்தை இழக்கும் கால அவகாசத்திற்குள் இந்த போலியான மரணத்திலிருந்து அவளை எழுப்பிக் கொண்டு செல்லவேண்டும் என்று . ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்தக் கடிதத்தை கொண்டு சென்ற சகோதரர் ஜான் ஒரு விபத்தில் மாட்டிக் கொண்டு கடிதத்தை கொடுக்காமல் திருப்பி கொண்டுவந்து விட்டார்.அந்த நேரம்தான் நான் அவளை அவர்கள் குடும்பக் கல்லறையிலிருந்து வெளியில் எடுத்து என் அறையில் ரோமியோ வரும்வரை மறைத்து வைக்கலாம் என்று கிளம்பினேன். நான் இங்கு வந்த நேரம் அதாவது ஜூலியட் நீண்ட உறக்கம் தெளிந்து எழுவதற்கு சிறிது நேரம் முன்பு இங்கு வந்து பார்த்தால் ரோமியோவும் பாரிசும் இறந்து கிடந்தனர். உள்ளே கல்லறைக்குள் ஓசை கேட்டது. எழுந்து வந்த ஜூலியட் மிக்க மனவேதனை காரணமாக என்னுடன் வர மறுத்து விட்டாள். இதைப் பார்க்கும்போது அவளே தனக்கு ஊறு விளைவித்துக் கொண்டுவிட்டாள் என்று நினைக்கிறேன். இவை அனைத்தும் எனக்குத் தெரியும். அவர்கள் இல்லத்தில் இருக்கும் செவிலிக்கும் இந்த அந்தரங்க விஷயங்கள் தெரியும். இந்த விபரீதம் என்னால்தான் நிகழ்ந்தது என்று நீங்கள் முடிவு செய்தால் சட்டத்திற்கு மதிப்பளித்து நன் இறக்கவும் சம்மதிக்கிறேன்.

இளவரசர் : எங்களை பொறுத்தவரை நீங்கள் புனிதமான மதகுருதான். ரோமியோவின் வேலைக்காரன் எங்கே ? அவன் சொல்வதையும் கேட்போம்

பல்தசார் :நான் என் எஜமானனுக்கு ஜூலியட் இறந்த செய்தியைக் கொண்டு போனேன். அதன்பிறகு அவர் மான்சுவாவிலிருந்து இங்கே கிளம்பி வந்தார்.( ஒரு கடிதத்தை காட்டுகிறான் ) இந்தக் கடிதத்தை அவர் தனது தந்தையிடம் கொடுக்க சொன்னார். என்னை இவ்விடத்தை விட்டு அகலச் சொன்னார் மறுத்தால் என்னைக் கொன்றுவிடுவதாக மிரட்டினார்.

இளவரசர் : கொஞ்சம் அந்தக் கடிதத்தை நான் பார்க்கிறேன்.( பால்தசாரிடமிருந்து கடிதத்தைப் பெறுகிறான் ) பிரபு பாரிசின் வேலைக்காரன் எங்கே ? அவன்தானே காவலர்களை அழைத்தது ? சிரா உன் எஜமானருக்கு இங்கே இந்த இரவில் ஏன் வரவேண்டும் என்று தோன்றியது ?

வேலைக்காரன் : அவர் மலர்களை எடுத்துக் கொண்டு கல்லறையின் மேல் தூவுவதற்கு வந்தார். என்னை தனியாக இருக்கச் சொன்னார். நானும் விலகி இருந்தேன். அதன் பிறகு யாரோ ஒருவர் கையில் விளக்குடன் வந்தார். என் எஜமானர் அவர் மேல் பாய்ந்தார். நான் உடனே காவலர்களை அழைக்க ஓடினேன்.

இளவரசர் ( கடிதத்தை வெளியில் எடுத்து மேலோட்டமாக படித்தபடி ) ம்ம் இந்தக் கடிதம் பாதிரியார் சொல்வதைத்தான் உறுதி செய்கிறது. அவர்கள் இருவரின் காதலை, ஜூலியட்டின் மரணத்தை இந்தக் கடிதம் சொல்கிறது. ரோமியோ ஒரு ஏழை மருந்துக் கடைக்காரரிடம் விஷம் வாங்கியது குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நஞ்சுடன் இந்தக் கல்லறைக்கு வந்து ஜூலியட் அருகில் இறப்பதற்கு வந்திருக்கிறான். எங்கே அந்த இரு பகைவர்களும் ? கபுலெட் மாண்டேகு பாருங்கள் உங்கள் பகைமை இரண்டு உயிர்களை பலி வாங்கியிருக்கிறது. காதல் மூலம் உங்கள் சந்தோஷங்களை அழிக்க அந்த கிரகங்கள் முடிவு செய்திருக்கின்றன. உங்கள் பகைமையை நான்தான் முடிவுக்குக்கொண்டு வராமல் இருந்து விட்டேன். அதனால் என்னுடைய சில உறவுக்காரகள் இறந்து விட்டனர். அனைவருக்கும் தண்டனை வழங்கப்பட்டு விட்டது.

கபுலெட் : மாண்டேகு ! என் சகோதரனே கையைக் கொடுங்கள். இதுதான் என் மகளுக்கு நீங்கள் அளிக்கும் ஜீவனாம்சம். வேறு ஏதும் நான் கேட்கவில்லை.

மாண்டேகு : ஆனால் நான் உங்களுக்கு இதைவிட அதிகம் தருவேன்.அவள் சிலையை முழுவதும் பொன்னில் வார்ப்பேன். வெனோரா நகரம் இருக்கும் வரை ஜூலியட் போன்று உண்மையும் நேர்மையும் கொண்ட மனைவி இல்லை என்ற பெயரும் நிலைத்திருக்கும்.

கபுலெட் : ஜூலியட்டின் அருகில் கிடக்கும் துர்பாக்கியசாலி ரோமியோவிற்கு நான் அதனை விட சிறந்த சிலை எழுப்புவேன். நமது பகைமையினால் இரண்டு உயிர்கள் பலியாகி விட்டன.

இளவரசர் : இந்தக் காலை ஒரு ஒளியற்ற சமரசத்தை கொண்டு வந்திருக்கிறது. சூரியன் இந்த சோகத்தினால் தலைகாட்டது. வாருங்கள் இந்த சோகத்தின் பரிமாணங்களை மேலும் பேசுவோம். சிலர் மன்னிக்கப்படுவார்கள்: சிலர் தண்டிக்கப்படுவார்கள். ரோமியோ ஜூலியட் இருவரின் கதையை போல இவ்வளவு சோகமான கதை வேறு இல்லை.

( அனைவரும் அகல்கின்றனர் )

திரை

நிறைவுற்றது.

ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜூலியட் ( அங்கம் -4. ) ஆங்கில வழி மொழியாக்கம் – சத்தியப்பிரியன்.

ROMEO-JULIET-Amber

அங்கம் -4.

காட்சி-1

லாரன்ஸ் பாதிரியாரின் வீடு.

லாரன்ஸ் பாதிரியாரும் பிரபு பாரிசும் நுழைகின்றனர்.

பாதிரியார் : என்னது வியாழக்கிழமையா? நேரம் மிகவும் குறைவாக இருக்கிறதே.

பாரிஸ் : என் வருங்கால மாமனார் அந்தநாளைத்தான் குறித்துள்ளார். அவர் வேகத்தை நான் தடுக்க மாட்டேன்.

பாதிரியார் : அந்தப்பெண் என்ன நினைக்கிறாள் என்று தெரியவில்லை. பாதை கரடுமுரடாக இருக்கும்போது பயணிப்பது சிறந்ததில்லை.

பாரிஸ் : டிபல்டின் மறைவிற்காக அவள் மனம் உடைந்து வருத்தத்தில் அழுது கொண்டே இருக்கிறாள். அவளிடம் போய்ப்பேசலாம் என்றால் அவள் கேட்கும் நிலையில் இல்லை. கண்ணீர் மிதக்கும் இல்லத்தில் காதல் தேவன் சிரிப்பதில்லை. அவர் தந்தை கூட அவள் இந்த அளவிற்கு சோகத்தில் ஆழ்வது தீங்கு என்றுதான் நினைக்கிறார். அதற்கு மாற்றாகத்தான் எங்கள் திருமணத்தை அவசர அவசரமாக நிச்சயித்திருக்கிறார். அவள் விடாமல் தனக்குத் தானே அழுது கொண்டிருக்கிறாள். அவளுக்கு துணையாக நான் இருந்தால் அவளுடைய இந்த வருத்தம் நீங்கும். இப்போது புரிகிறதா அவர் ஏன் இவ்வளவு அவசரப்படுகிறார் என்று ?

பாதிரியார் ( தனக்குள் ) இந்தத் திருமணம் ஏன் தாமதமாகிறது என்ற காரணம் எனக்குத் தெரியாமல் இருக்கவே பிரியப்படுகிறேன். ( உரக்க ) அதோ அவளே வருகிறாளே .

( ஜூலியட் உள்ளே வருகிறாள் )

பாரிஸ் : வரவேண்டும் என் சீமாட்டியே ! என் மணவாட்டியே!

ஜூலியட் : இவ்வாறு அழைப்பது ஒருவேளை என் திருமணத்திற்குப் பிறகு பிரபு.

பாரிஸ் : அந்த ஒருவேளை திருவேளை ஆவது வெகுதொலைவில் இல்லை. இதோ வரும் வியாழனன்று.

ஜூலியட் : என்னது ஒருவேளை திருவேளை என்று .

பாதிரியார் அது ஒன்றுமில்லை ஜூலியட் ஒரு உத்திரவாதத்திற்கு.

பாரிஸ் : எதற்கு இங்கு வந்திருக்கிறாய் ?பாதிரியாரிடம் பாவ மன்னிப்பு கேட்கவா?

ஜூலியட் : உண்மையைச் சொல்வதென்றால் நான் உங்களிடம்தான் பாவமன்னிப்பு கேட்கவேண்டும்.

பாரிஸ் : அவரிடம் நான் அவனைக் காதலிக்கவில்லை என்று மட்டும் மன்னிப்பு கோராதே.

ஜூலியட் : அப்படி என்றால் உங்களிடம் அவனைக் காதலிக்கிறேன் என்று கோருகிறேன்.

பாரிஸ் : ஒப்புதல் வாக்கு கோருகிறாய் என்னை காதலிப்பதாக.

ஜூலியட் : அப்படி கோருவது என்றால் அது கண்டிப்பாக உங்கள் முகத்திற்கு நேராக அல்ல முதுகுக்குப் பின் நின்றுதான் கோர வேண்டியிருக்கும்.

பாரிஸ் : உன் முகம் கண்ணீரால் எப்படி இப்படி வாடி விட்டது பார்.

ஜூலியட் : இந்த விஷயத்தில் கண்ணீர் தோற்றுவிட்டது என்றுதான் கூறுவேன். அவை வருவதற்கு முன்பே என் முகம்வாடிதான் இருந்தது.

பாரிஸ் : இப்படி கூறுவதன் மூலம் கண்ணீரை விட உன் முகத்தை உன்னுடைய இந்த விமர்சனம்தான் மேலும் மோசமாக்குகிறது.

ஜூலியட் : அது பழிப்பதன்று; நிஜம். எதைச் சொன்னேனோ அது என் முகத்திற்குச் சொன்னேன்.

பாரிஸ் : உன் முகம் இனி என் முகம். அதை பழிக்க விடமாட்டேன்.

ஜூலியட் : இருக்கலாம். ஏன் என்றால் என் முகம் என்னுடையதல்ல. ( பாதிரியாரிடம் ) உங்களுக்கு என் ஒப்புதல் வாக்குமூலத்தைக் கேட்பதற்கு நேரம் இருக்கிறதா அருட்தந்தையே ! அல்லது மாலை நேர தொழுகைக்கு வரவா?

பாதிரியார் :உனக்கு ஒதுக்க நேரம் இருக்கிறது ஆழ்ந்த யோசனையுடைய பெண்ணே! ( பாரிசிடம் ) பிரபு தவறாக நினைக்கவில்லை என்றால் தாங்கள் விடை பெறலாம்.

ஜூலியட் : தெய்வ காரியத்தைத் தடுக்க நான் யார் ? ஜூலியட் வியாழன்று காலையில் உன்னை எழுப்புகிறேன்.( அவளை முத்தமிட்டு ) அதுவரையில் இந்த புனித முத்தம் போதும் உனக்கு. நான் வருகிறேன். ( மறைகிறான் ).

ஜூலியட் : ஹூஃப். கதவை மூடிவிட்டு என் அருகில் வந்து என்னுடன் சேர்ந்து கண்ணீர் விடுங்கள். எனக்கு நம்பிக்கையில்லை; தீர்வு இல்லை: மார்க்கமில்லை.

பாதிரியார் :ஜூலியட் உன் துக்கம் எனக்குத் தெரியும். என்ன செய்வது என்று என் மூளைக்கு ஒரு வழியும் தோன்றவில்லை. வரும் வியாழன்று நீ இந்தப் பிரபுவை மணக்க வேண்டியிருக்கும் என்ற செய்தியைக் கேள்விபட்டேன். அதைத் தடுக்க எந்த யோசனையும் என்வசம் இல்லை.

ஜூலியட் :கேள்விப்பட்டேன் என்று என்னிடமே கூறவேண்டாம் தந்தையே ! இதை தடுப்பதற்கு என்ன வழி என்று மட்டும் கூறுங்கள். அப்படி ஒரு வழியும் தோன்றவில்லை என்பது உங்கள் புத்திசாலித்தனம் என்றால் என் புத்திசாலித்தனத்தைக் கொஞ்சம் பாருங்கள் ( தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை வெளியில் எடுக்கிறாள் ) இந்தக் கத்தியின் மூலம் நான் வழி தேடிக் கொள்கிறேன். உங்கள் கரங்களால்தான் எங்கள் இருவரையும் இணைத்து வைத்தீர்கள். உங்களால் ரோமியோவைப் பற்றிய இந்தக் கைகள் வேறு ஒருவனை பற்றுமேயானால் எனக்கு என்னை மாய்த்துக் கொள்வதைத் தவிர வேறு வழி தெரியவில்ல்லை. நீங்கள் அனுபவசாலி என்பதால் எனக்கு அறிவுரை கூறுங்கள். அல்லது ஒதுங்கி நின்று வேடிக்கை பாருங்கள். இந்த இக்கட்டிலிருந்து தப்பிக்க எனக்கு இந்தக் கத்தி போதும் தீர்ப்பெழுத. அறிவும், அனுபவமும் கொண்ட நீங்கள் தீர்க்க முடியாத இந்த வில்லங்கத்தை என்னுடைய கத்தி தீர்த்து விடும். வாய் திறந்து பதில் சொல்லுங்கள். உங்கள் வார்த்தைகளில் வழி இல்லையென்றால் மரணம் ஒன்றுதான் என் வழி.

பாதிரியார் :நில் பெண்ணே . ஒரு மார்கமிருக்கிறது. ஆனால் சிறிதளவும் நம்பிக்கையைக் கொடுக்காத அந்த மார்கத்தில் நடக்க அதீத நம்பிக்கை வேண்டும் . பாரிசை மணப்பதற்கு பதில் சாகத்துணிந்த உன்னால் சாவின் விளிம்பு வரை கொண்டு செல்லும் இந்த வழியில் உன்னால் பயணிக்க முடியும். அது ஒன்றுதான் உன்னுடைய அவமானத்தைத் துடைக்கும் வழி. மரணத்திற்கு நிகரான இந்த வழிதான் உன்னுடைய இப்போதைய அவமானத்திற்கு மாற்று. மரணத்துடன் மோதுவதே இதற்கு மார்க்கம். அதற்கு நீ துணிந்தாய் என்றால் உனக்கு நான் மருந்து தருகிறேன்.

ஜூலியட் : என்னைப் பாரிசை மணந்து கொள் என்று சொல்வதற்கு பதில் போர்க்களத்தில் பெரிய கோட்டையின் உச்சியிலிருந்து குதி என்று சொல்லுங்கள்; அல்லது கடுன்குற்றவாளிகள் வசிக்கும் பகுதியில் உள்ள வீதிவழியாக நடந்து விட்டுவரச் சொல்லுங்கள்; அல்லது கொடிய விஷ நாகங்கள் நிறைந்த புற்றினில் வசிக்கச் சொல்லுங்கள்; அல்லது கொடிய கரடிகள் நடுவில் என்னைக் கட்டி போடுங்கள்: துர்நாற்றம் வீசும் அழுகிய மனித உடல்களும், எலும்புக் கூடுகளும், தாடை எலும்புகள் இல்லாத மண்டை ஓடுகள் நிறைந்த ஒரு பிணவறையில் ஒரு இரவு முழுவதும் இருக்கச் சொல்லுங்கள்; அல்லது புதிதாக எழுப்பப்பட்ட கல்லறையைத் திறந்து புதிதாக புதைக்கப்பட்ட பிணத்தை கட்டி பிடித்து இருக்கச் சொல்லுங்கள். இது போன்ற செயல்களை கேட்ட மாத்திரத்க்தில் பயந்து அலறுபவள் நான். ஆனால் என் காதல் மணவாளனுக்காக இவற்றில் எதையும் செய்ய சித்தமாக இருக்கிறேன்.

பாதிரியார் : போதும் நிறுத்து. இனி சந்தோஷமாக உன் வீட்டிற்கு செல்லலாம். பாரிசை மணக்க சம்மதம் தெரிவித்த்து விடு. நாளை புதன்கிழமை. நாளை இரவு நீ உன்னறையில் தனியாக இருக்குமாறு உன்னை தயார் படுத்திக்கொள். உன் செவிலி உன்னுடன் இருக்க வேண்டாம். ( ஒருவிஷ மருந்து குப்பியை காட்டுகிறார் ) இதனை எடுத்துக் கொண்டு உன் படுக்கையறையில் ஏதாவது ஒரு பானத்துடன் கலந்து குடி. உன் நாடிகளில் ஒரு ஆழ்ந்த தூக்கம் பரவத் தொடங்கும். உன் நாடித் துடிப்பு மெல்ல அடங்கத் தொடங்கும். உன் உடல் சூடு தணிந்து மேனி குளிரத் தொடங்கும். உன் மூச்சு மெல்ல மெல்ல அடங்கத் தொடங்கும். இதழ்களின் இரத்தச் சிவப்பு சாம்பல் பூத்தது போல வெளுக்கத் தொடங்கும். உன் கண் இரப்பைகள் விழுந்து விடும். பகலின் வாசலை இரவு தட்டுவது போல மரணம் உன் உயிரைத் தட்டும். உன்னால் அசையமுடியாமல் போய் உன் உடல் பிணம் போல கிடக்கும். இந்த மரண நிலை உன் உடலில் மொத்தம் 42 மணிநேரம் நீடிக்கும். அதன் பிறகு உறக்கத்திலிருந்து எழுவது போல புத்துணர்வுடன் எழுவாய். மணமகன் உன்னை வியாழன் காலையில் உன்னை உன் படுக்கையறையில் எழுப்ப வரும்போது நீ இறந்து கிடப்பதைபோல இருப்பாய். நம் வழக்கப்படி உனக்கு புத்தாடை அணிவித்து உயர்தர மூடி திறந்திருக்கும் சவப்பெட்டியில் வைத்து கபுலெட் குடும்பத்தினருக்கு உரிய கல்லறைக்குக் கொண்டு செல்வார்கள். இதற்குள் நான் ரோமியோவிற்கு ஒரு வார்த்தை சொல்லி அனுப்புகிறேன். அவன் வருவான். நாங்கள் இருவரும் நீ எப்போது விழித்துக் கொள்வாய் என்பதை கவனித்துக் கொண்டிருப்போம். அன்றிரவே அவன் உன்னை மான்சுவாவிற்கு அழைத்துச் செல்வான். இது உன்னுடைய தற்போதைய சீர்கேட்டிலிருந்து காப்பாற்றும். இது உன் மன உறுதியைப் பொறுத்த விஷயம். இல்லை, நான் பயந்து நடுங்கி வாழப்போகும் ஒரு முட்டாள் பெண் என்றால் பிறகு நீ பேசியதற்கு அர்த்தமில்லாமல் போய்விடும்.

ஜூலியட் : கொடுங்கள் அந்த விஷக் குப்பியை. அச்சம் குறித்து எனக்கு கூறவேண்டாம். நான் எதற்கும் துணிந்து விட்டேன் இப்போது.

பாதிரியார் ( குப்பி ஒன்றை அவளிடம் தருகிறார். ) இந்தா . நீ கிளம்பு. இதே உறுதியுடனும் நம்பிக்கையுடனும் இரு. நான் ஒரு அருட்சகோதரனை அனுப்பி உன் ரோமியோவிற்குத் தகவல் அனுப்புகிறேன்.

ஜூலியட் : காதல் எனக்கு சக்தியளித்திருக்கிறது. சக்தி என் முயற்சியை வெற்றியடையச் செய்யும். வருகிறேன் அருட் தந்தையே.

( இருவரும் வெவேறு வழிகளில் மறைகின்றனர். )

திரை

காட்சி-2

திருவாளர் கபுலெட் இல்லத்தில் ஒரு கூடம்.

கபுலெட், திருமதி.கபுலெட், தாதி , ஒன்றிரண்டு வேலைக்காரர்கள் வருகின்றனர் .

கபுலெட் ( ஒரு பணியாளனிடம் ஒரு காகிதத்தை நீட்டுகிறார் ) இந்தப் பட்டியலில் இருப்பவர்கள் அனைவருக்கும் அழைப்பு அனுப்பு.

( முதல் பணியாளன் மறைகிறான் )

( இரண்டாவது பணியாளனிடம் ) தம்பி !எனக்கு திறமையான இருபது பரிசாரகர்களை ஏற்பாடு செய் .

இரண்டாவது பணியாள் : நான் கண்டிப்பாக மோசமான பரிசாரகர்களை அழைத்து வரமாட்டேன். நன்றாக சமைப்பார்களா என்பதை அவர்கள் கை விரல்களை அவர்களே நக்கி பார்க்க வைத்து கண்டு பிடித்துவிடுவேன்.

திருவாளர் கபுலெட் :அந்த முறையில் எப்படி கண்டுபிடிப்பாய் ?

இரண்டாவது பணியாளன் : சுலபம் ஐயா. எவன் ஒருவனுக்கு நன்றாக சமைக்கத் தெரியவில்லையோ அவனுக்கு தன் விரலை நக்க பிடிக்காது. எவன் ஒருவன் தன் கை விரலை தானே நக்க மறுக்கிறானோ அவன் ஒரு மோசமான சமையல்காரன். அவனை அழைக்க மாட்டேன்.

கபுலெட் : கிளம்பு நீ முதலில் ( இரண்டாவது பணியாளன் அகல்கிறான். ) இந்தத் திருமண நிகழ்ச்சிக்கு நாம் இன்னும் தயாராகவில்லை.( தாதியிடம் ) என்னது ஜூலியட் பாதிரியார் லாரன்சை பார்க்க போயிருக்கிறாளா ?

செவிலி : ஆமாம் நிஜம்தான் பிரபு.

கபுலெட் : அதுவும் நல்லதுதான். அருட்தந்தை எப்படியாவது அவள் மனதை மாற்றுவார். சரியான பிடிவாதக்காரி. ( ஜூலியட் உள்ளே நுழைகிறாள். )

செவிலி : பாருங்கள் அதோ அவள் பாவ மன்னிப்பு கேட்டு விட்டு முகத்தில் சந்தோஷத்துடன் வருகிறாள்.

கபுலெட் : தலைக்கனம் மிகுந்த பெண்ணே எங்கே சென்றுவிட்டு வருகிறாய் ?

ஜூலியட் : எங்கு என் தந்தை தாய் கூறுவதை கேட்டு நடக்காமல் இருப்பது பாவம் என்று கூறுவார்களோ அங்கு சென்றுவிட்டு வந்தேன். பாதிரியார் லாரன்ஸ் என்னை உங்கள் இருவர் பாதத்திலும் விழுந்து மன்னிப்பு கேட்கச் சொன்னார் ( அவள் இருவர் முன்பும் மண்டியிடுகிறாள் ) என்னை மன்னித்து விடுங்கள். மன்றாடிக் கேட்கிறேன். இந்தக் கணத்திலிருந்து இனி நீங்கள் சொல்வதை கேட்பேன்.

திருவாளர். கபுலெட் : நம் பிரவிற்கு சொல்லி அனுப்புங்கள். இங்கு நடந்ததைக் கூறுங்கள். நாளை காலையில் இந்த திருமணம் நிகழும்.

கபுலெட் : எனக்கு உன் மாற்றம் மிக்க மகிழ்ச்சியளிக்கிறது பெண்ணே. இது நல்லதற்குதான். எழுந்திரு. ( ஜூலியட் எழுந்திருக்கிறாள் ).இப்படித்தான் இது இருக்க வேண்டும். பிரபுவை இங்கு அழைக்க வேண்டும் கடவுள் சாட்சியாக இந்த வெனோரா நகரம் நமது பாதிரியாருக்கு மிகவும் கடன் பட்டிருக்கிறது.

ஜூலியட் : தாதிம்மா என் அறைக்கு வருகிறாயா? நாளை நான் அணிந்து கொள்ளவேண்டிய நகைகளையும் ஆடைகளையும் எடுத்து வைக்கலாம் வா என்னுடன்.

திருமதி.கபுலெட் : வியாழக்கிழமைதானே இன்னும் நேரம் இருக்கிறதே இப்பொழுதே எதற்கு ?

கபுலெட் :போ தாதி ஆவலுடன் போ. நாளை தேவாலயம் போகவேண்டும்.

( செவிலியும், ஜூலியட்டும் அகல்கின்றனர் )

திருமதி.கபுலெட் : நாளை மணநாளுக்கான மளிகை பொருட்கள் தேவையான அளவிற்கு இல்லை. பொழுதோ இருட்டத் துவங்கி விட்டது.

கபுலெட் : நான் பார்த்துக் கொள்கிறேன். முடுக்கிவிட்டால் போதும் எல்லாம் தன்னால் நடக்கும். நான் நிச்சயமாகச் சொல்கிறேன் மணவாட்டி. நீ ஜூலியட்டிடம் செல். அவளுக்கு வேண்டிய உதவிகளைச் செய்.நான் இன்றிரவு படுக்கைக்குச் செல்ல மாட்டேன். நான் தனியாக இருக்கிறேன். ஒரு குடும்பத்தலைவியின் பாத்திரத்தை இன்று ஒருநாள் நான் ஏற்றுக் கொள்கிறேன் . போ. ( திருமதி. கபுலெட் மறைகிறாள்).

ஹோ ! அப்பாடா ! அவர்கள் எல்லோரும் போய் விட்டார்களா ? நான் மெல்ல பிரபு பாரிசிடம் சென்று அவரை நாளைக்கு ஆயத்தபடுத்துகிறேன். என் மனம் ஆனதத்தில் நிரம்பி வழிகிறது. இந்தப்பெண் தனது சஞ்சலத்திருந்து இவ்வளவு சீக்கிரம் மீண்டு வருவாள் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை.( கபுலெட் அகல்கிறார். ).

திரை.

காட்சி-3.

ஜூலியட் அறை. ஜூலியட்டும் செவிலியும் . ஜூலியட் கையில் ஓர் ஆடையுடன் நிற்கிறாள்.

ஜூலியட் : ஆமாம் இந்த ஆடை மிக அழகாக இருக்கிறது. நல்லது தாதிம்மா இன்றிரவு என்னை தனிமையில் இருக்க விடு. கடவுள் என்னை ஆசீர்வதிக்கட்டும். என் இரவு பிரார்த்தனையை செய்கிறேன். உனக்கே தெரியும் என் வாழ்க்கை எவ்வளவு சிக்கல்களும் பாவங்களும் நிறைந்ததென்று.( திருமதி.கபுலெட் நுழைகிறார் )

திருமதி.கபுலெட் : என் செல்லமே முனைப்பாக இருக்கிறாயா? என் உதவி தேவைப்படுமா என் கண்ணே?

ஜூலியட் :இல்லை அம்மா. நாளைய நிகழ்ச்சிக்கு தேவையான துணிமணிகளையும், அணிகலன்களையும் தேர்வு செய்து எடுத்து வைத்து விட்டோம். உனக்கு சந்தோஷம்தானே ? சரி இப்போது என்னை கொஞ்சம் தனிமையில் இருக்க அனுமதியுங்கள். பாவம் நீங்கள் ஒருவரே நாளை நடைபெறவிருக்கும் திடீர் மணவிழாவிற்கு ஒற்றை ஆளாக நின்று எல்லாவற்றையும் சமாளிக்க இயலுமா? இந்தத் தாதியையும் துணைக்கு அழைத்துக்கொள். என்னை சிறிது நேரம் தனிமையில் இருக்க விடுங்கள்.

திருமதி.கபுலெட் : அதுவும் சரிதான். நானும் தாதியும் கிளம்புகிறோம். நீ நன்றாக ஓய்வெடு. உனக்கு தூக்கம் அவசியம். ( திருமதி. கபுலெட்டும் தாதியும் அகல்கின்றனர்.. ).

ஜூலியட் : வந்தனம் போய்வாருங்கள். மீண்டும் நாம் எப்போது சந்திப்போம் என்பது அந்தக் கடவுளுக்குதான் வெளிச்சம்.. என் நாளங்களில் ஒருவித அச்சம் படர்வதை என்னால் உணரமுடிகிறது. வாழ்வின் வெப்பத்தை அது குளிரச் செய்து வருகிறது. ஓ ! அவர்களை உதவிக்கு அழைக்கிறேன்.தாதியம்மா ! அவளை அழைத்து என்ன பயன் ? நான் ஒற்றையாக சமாளித்துக் கொள்கிறேன். (விஷக் குப்பியை வெளியில் எடுக்கிறாள் ) வா குப்பியே. இந்த விஷம் வேலை செய்யாமல் போனால் என்ன செய்வது ? நாளை நான் மணம்புரிந்து கொள்ள நேரிடுமோ? ச்சே ச்சே ! அப்படி எதுவும் நேராது. அப்படி நேர்ந்தால் இது காப்பாற்றும் ( கத்தி ஒன்றை கீழே வைக்கிறாள் ). அவர் மணம்புரிந்து வைத்த ரோமியோவை விடுத்து நான் பாரிசை மணப்பது பிடிக்காமல் பாதிரியார் லாரன்ஸ் ஒருவேளை இந்த மருந்தில் நிஜமாகவே விஷம் கலந்திருப்பாரா? இருக்காது. இதில் நிச்சயம் விஷம் கலந்திருக்காது. பாதிரியார் நம்பத் தகுந்த மனிதர்தான். நான் கல்லறையில் சவப்பெட்டியில் கிடக்கும்போது என்னை மீட்க வரும் ரோமியோ சற்று தாமதமாக வந்து விட்டால்?.. அதற்குள் எனக்கு விழிப்பு வந்து விட்டால் ? …….. ஐயோ ! அது ஒரு அச்சமூட்டும் நினைப்பு. கல்லறையில் எப்படி கிடப்பது ? அங்கு சுவாசிக்க நல்ல காற்று இருக்குமா? ரோமியோ வரும்வரை என்னால் தாக்கு பிடிக்க முடியுமா? ரோமியோ வருவதற்குள் தாக்கு பிடிக்க முடியாமல் இறக்க நேரிட்டால்? சரி இறக்காமல் மயக்கம் தெளிந்து இருக்க நேரிட்டால் என்னை சுற்றி மரணமும் மௌனமும் இருளும் சூழ்ந்திருக்கும். அந்த நினைப்பே திகில் ஊட்டுவதாக உள்ளது. பல நூறு ஆண்டுகளாக இறந்த என் மூதாதையரின் பிணங்களின் எலும்புக் குவியல் புதைக்கப்பட்ட கல்லறைக்குள் நான். இளம்பிணனமான திபால்டின் உடலும் அங்கு கல்லறையில் மண்ணில் மக்கிக் கொண்டிருக்கும்.. மற்றவர்கள் சொல்வது போல இரவில் கல்லறையில் ஆவிகள் அலைந்து கொண்டிருக்குமோ? ஐயோ ஐயோ ! கண்டிப்பாக அப்படி எதுவும் இருக்காது. இல்லை இல்லை ! பிணநாற்றம் என்னை உறங்கவிடாமல் செய்து விடும். அங்கு எழும் ஓலங்களை கேட்க நேரிட்டால் பைத்தியம் பிடித்து விடாதா? குறித்த நேரத்திற்கு முன்பாகவே எனக்கு விழிப்பு வந்து விட்டால் இந்த திகில் ஊட்டும் விஷயங்களும் , அச்சமூட்டும் செயல்களும் என்னை பைத்தியம் ஆக்கிவிடாதா? பைத்தியம் பிடித்த நிலையில் என் மூதாதையர்களின் எலும்புகளை எடுத்து விளையாடத் தொடங்கி விட்டால்? டிபல்டை அவனுடைய மரணப் போர்வையிலிருந்து எழுப்பி விடுவேனோ ? இந்த விளையாட்டில் மறந்து போய் ஒரு மூதாதையரின் எலும்பினால் என் கபாலத்தை நான் பிளந்து கொண்டுவிட்டால் ? பார் நான் டிபல்டின் ஆவியைப் பார்க்க போகிறேன்.டிபல்டின் ஆவி ரோமியோவிற்காக காத்திருக்கும். பொறு டிபல்ட். பொறு ரோமியோ ! இதோ இந்த விஷமருந்து உங்களைத் தேடி நான் வருகிறேன்.

( நஞ்சு கலந்த மருந்தை உண்டுவிட்டு படுக்கையில் சாய்கிறாள். )

.திரை.

ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜூலியட் ஆங்கில வழி மொழியாக்கம் – சத்தியப்பிரியன்.

romeo_and_julia_still_04

அங்கம்-3.

காட்சி-1.

மெற்குஷியோ , பென்வோலியோ மற்றும் மெற்குஷியோவின் எடுபிடி மூவரும் அரங்கினில் நுழைகின்றனர்.

பென்வோலியோ : நல்லது மெற்குஷியோ ஓய்வெடுக்கலாம் என்று நினைக்கிறேன். பகல் பொழுது கடும் வெப்பமாக இருக்கிறது. மேலும் கபுலெட்காரர்கள் ஊரெல்லாம் அலைந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் மாட்டினோம் என்றால் மீண்டும் ஒரு ரகளை ஏற்படும். வெப்ப நாட்களில்தான் கொதிக்கும் ரத்தம் மேலும் சூடேறும். சண்டை வேண்டாம். ஓய்வெடுப்போம்.

மெற்குஷியோ : நீயு’ம் அந்த வெட்டிப் பயல்களை போலத்தான். சத்திரத்தின் சுவர்களுக்குள் நுழையும்போதே உறைவாளை பார்த்து இன்று உனக்கு வேலையிருக்காது ‘என்று சொல்வது போலத்தான். மதுச் சாலையில் இரண்டாவது கோப்பை மதுவை குடிப்பதற்குள் வாளை எடுத்து இழுப்பறையில் வைத்து பூட்டுவதைப் போலதான்.

பென்வோலியோ : நான் என்ன அப்படிப்பட்ட வெற்று பையன்களில் ஒருவனா?

மெற்குஷியோ : ச்சே ச்சே நீ அப்படி கிடையாது. உனக்கு கோபம் வந்தால் இத்தாலியில் வேறு யாராலும் உன் முன்னால் நிற்க முடியாது. உணர்ச்சிவசப்பட உனக்கு மனநிலை சரியில்லாமல் போக வேண்டும். ஆனால் மனநிலை சரியில்லாமல் போக நீ உணர்ச்சிவசப் படவேண்டும்.

பென்வோலியோ : அதற்கு என்ன இப்போது ?

மெற்குஷியோ : உன்னை போல இரண்டு நபர்கள் இருந்தால் போதும் பிறகு வேறு எவரும் தேவையில்லை. நீங்கள் இருவருமே அடித்து கொண்டு இறந்து விடுவீர்கள். எதிரியின் தாடிமுடியில் ஒன்று கூட இருந்தாலோ அல்லது ஒன்று குறைவாக இருந்தாலோ கூட போதும் நீங்கள் இருவரும் சண்டையில் இறங்க. கொட்டை உடைக்கும் ஒருவனை உன் கொட்டை கண்களால் பார்த்தால் கூட போதும் நீ சண்டைக்குக் கிளம்பி விடுவாய். முட்டையின் உள்ளே மஞ்சள் கரு இருப்பது போல உன் தலை முழுவதும் சண்டையைத் தவிர வேறு எதுவும் கிடையாது. மஞ்சள் கரு அடிக்கப்படுவது போல உன் மூளையும் சண்டையால் கலங்கிக் கிடக்கிறது. தெருவில் பகல் வேளையில் உறங்கிக் கொண்டிருந்த நாயை தனது இருமலால் எழுப்பிவிட்டான் என்று ஒருவனோடு நீ சண்டைக்கு சென்றாய். ஒரு தையல்காரன் ஈஸ்டர் பண்டிகைக்கு முன்பே புதுத்துணி உடுத்திக் கொண்டான் என்பதற்காக அவனை அடிக்கக் கிளம்பவில்லையா? இன்னொரு முறை வேறு ஒருவன் தனது புதிய ஷூவிற்கு பழைய லேசை மாட்டிக் கொடுத்ததற்காக சண்டைக்குப் போகவில்லையா? நீ பேசுகிறாய் ஓய்வைப் பற்றி.

பென்வோலியோ : உன்னைப் போல நானும் நொடிக்கு நூறு சண்டை போடுபவனாக இருந்தால் என் உயிருக்கு மதிப்பே இல்லாமல் போய்விடும்.

மெற்குஷியோ :உயிருக்கு விலை? முட்டாள்தனம்.

( டிபல்ட், பெட்ரூஷியோ, மற்றும் சில கபுலெட்கார்கள் வருகின்றனர். ).

பென்வோலியோ : அட! மயிரே போச்சு. கபுலெட் ஆட்கள் வந்து விட்டனர்.

மெற்குஷியோ : தலையே போனாலும் கவலையில்லை அவர்கள் வரட்டும்.

டிபல்ட் ( பெட்ரூஷியோ மற்றும் உள்ளவர்களைப் பார்த்து ) என்னைத் தொடர்ந்து வாருங்கள். நான் அவர்களிடம் பேசிப் பார்க்கிறேன். ( மாண்டேகு காரர்களைப் பார்த்து ) வந்தனம் கணவான்களே. உங்களில் ஒருவரோடு ஒரு வார்த்தை.

மெற்குஷியோ : ஒருவருடன் ஒரு வார்த்தையா? அதனுடன் வேறு ஒன்றையும் இணையுங்கள். ஒரு வாள்வீச்சு. ஒரு உதை. இவற்றில் ஒன்றை.

டிபல்ட்: அதற்கு நான் தகுந்தவன்தான் சந்தர்ப்பம் நேரிடும்போது.

மெற்குஷியோ : சந்தர்ப்பம் எதிர்ப்படுமா? நேரிடுமா?

டிபல்ட் : மெற்குஷியோ நீதான் ரோமியோவின் இணையா?

மெற்குஷியோ : இணை? நாங்கள் என்ன இசைக்கலைஞர்களா ? இனைந்து ஒத்து ஊத? சேர்ந்து ஓடினோம் என்று வைத்துக்கொள் உன் செவி பிய்ந்து போய்விடும்.உன் காதுகளில் இசை கேட்காது ஓசைதான் கேட்கும்.( வாளின் முனையை தடவியபடி ) இதுதான் என்னுடைய வயலினின் ஃபிடில். இதன் அசைவிற்கு உன்னை ஆடவைப்பேன். இணை ! ஹ்ம்ம்.

பென்வோலியோ : இப்படி நான்கு பேர்களுக்கு நடுவில் பேசுகிறோம். ஒன்று பேச்சை குறைக்க வேண்டும். அல்லது தனியிடத்தில் தொடரவேண்டும். யோசித்து பேசலாம். அல்லது இங்கிருந்து விலகுவோம். எல்லோரது விழிகளும் நம் மேல்தான்.

மெற்குஷியோ : ஆண்களின் விழிகள் பார்பதற்கு அமைக்கப்பட்டவை. அவை பார்க்கட்டும். எனக்கு அடுத்தவரை திருப்தி படுத்த வேண்டிய அவசியம் இல்லை. ( ரோமியோ உள்ளே நுழைகிறான் . )

டிபல்ட் : நல்லது சமாதானம். இதோ என்னுடைய வேலைஆள் வந்து விட்டான்.

மெற்குஷியோ : அவன் உன் வேலையாளா? ஒரு வயல்வெளியில் முன்னால் செல்லுங்கள். உங்களை துரத்தி வருவான். அப்போது சொல்லு இவன் உன்னுடைய ஆள் என்று.

டிபல்ட் : உன்னை ஆசையுடன் அழைக்க எனக்கு வேறு வார்த்தை இல்லை ரோமியோ . நீ ஒரு வில்லன்.

ரோமியோ : டிபல்ட் உன்னை நேசிக்க எனக்கு ஒரு காரணம் இருப்பதால் உன் மீது எனக்கு உள்ள கோபத்தை தள்ளி வைத்துள்ளேன். நான் வில்லன் இல்லை. வந்தனம். உனக்கு நான் யார் என்று தெரிந்திருக்க நியாயம் இல்லை.

டிபல்ட் : பையா உன்னுடைய இந்தச் சமாதானம் எனக்கு ஏற்பட்டுள்ள காயங்களுக்கு மருந்து போடப் போவதில்லை. நிறுத்து. இப்படி திரும்பு. உன் வாளை சுழற்று.

ரோமியோ : நான் மறுக்கிறேன். உனக்கு நான் என்றுமே காயம் ஏற்படுத்தியதில்லை. நான் உன் மேல் வைத்திருக்கும் அன்பை நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை. நல்லது கபுலெட் என் பெயரைப் போல உன் பெயரை நான் நேசிக்கறேன். என்னை நம்பு.

மெற்குஷியோ : இந்தப் பணிவு நியாயமற்றது மட்டுமன்று கீழ்த்தரமானதும் கூட. ஒரு வாளின் சுழற்சி போதும் இதனை முடிவுக்குக் கொண்டுவர.( தனது வாளை உருவுகிறான். ) டிபல்ட் ! எலி துரத்துபவனே

டிபல்ட் : என்ன எதிர்பார்க்கிறாய் என்னிடம் ?

மெற்குஷியோ : பூனைகளின் தலைவனே. உன்னுடைய ஒன்பது உயிர்களில் ஒரு உயிரை எடுக்க வந்திருக்கிறேன். அதன் பிறகு நீ எப்படி நடந்துகொள்கிறாய் என்பதைப் பொறுத்து மீதியுள்ள எட்டு உயிர்களை விட்டு வைக்கிறேன். உன் வாளை உறையிலிருந்து வெளியில் எடு. சீக்கிரம். உன் வாள் உயரும்முன்னர் என் வாள் உன் காதுகளில் ரத்தக்கோடு தீட்டியிருக்கும்.

டிபல்ட் : இதோ நான் தயார். ( வாளை உயர்த்துகிறான். )

ரோமியோ : மெற்குஷியோ தயவு செய்து உன் வாளை உறையில் போடு.

மெற்குஷியோ : ( டிபல்டை நோக்கி ) வா வா முன்னேறி வா. ( மெற்குஷியோவும் டிபல்டும் சண்டை போடுகிறார்கள் )

ரோமியோ ( வாளை உருவுகிறான். )உன் வாளையும் உறையிலிருந்து எடு பென்வோலியோ. நம் வாள்களால் அவர்கள் வாட்களை ஓய வைப்போம். கணவான்களே இந்த வெட்டி சண்டையை நிறுத்துங்கள். டிபல்ட் மெற்குஷியோ கேளுங்கள். வெனோராவின் இளவரசர் தெருச் சண்டைக்கு தடை விதித்துள்ளார். டிபல்ட் நிறுத்துங்கள். மெற்குஷியோ வேண்டாம் சொல்வதைக் கேள்.

(ரோமியோ சண்டையை விலக்க முற்படுகிறான்.டிபல்ட் ரோமியோவின் கைகளுக்கு இடையில் புகுந்து மெற்குஷியோவை வாளால் குத்தி விடுகிறான். ).

பெட்ரூஷியோ : வா டிபல்ட் நாம் அகன்று விடுவோம்.

( டிபல்ட் பெட்ரூஷியோ மற்றும் இதர கபுலெட்காரர்கள் அகன்று விடுகின்றனர். )

மெற்குஷியோ : ஐயோ நான் செத்தேன். உங்கள் இரண்டு குடிகளின் தலையில் இடி விழ. அவன் காயமின்றி தப்பி விட்டானா?

( மெற்குஷியோவின் எடுபிடியும் மறைகிறான். )

ரோமியோ : நம்பிக்கையையும் துணிவையும் இழக்காதே மெற்குஷியோ

மெற்குஷியோ : ஆமாம் இது ஒரு கிணறைப் போல ஆழமானது இல்லை. ஒரு தேவாலயக் கதவின் அளவிற்கு அகலமானதுமில்லை. நான் இறந்தாலும் என் பணியைத் தொடர்வேன். நாளைக்கு நீ என்னை கல்லறையில்தான் பார்க்க வேண்டியிருக்கும். நான் இதற்கென்று படைக்கப்பட்டவன். உங்கள் இருவர் வீட்டிலும் வைசூரி கொண்டு போகட்டும்.அந்த நாய் பூனை எலி, மூஞ்சூறு பயல் என்னைக் குத்தி விட்டான்.ஒரு தற்பெருமைக்காரன், ஓர் அயோக்கியன். ஒரு போக்கிரி சரியான காலக் கணிப்புகளினால் என்னைத் தாக்கி விட்டான். அவன் எப்படி உன்னுடைய கைகளின் இடையில் புகுந்தான்? உன் தோள்களின் ஊடே புகுந்து என்னை தாக்கி விட்டான்.

ரோமியோ : அந்த நேரத்தில் அதைவிட வேறு எதுவும் செய்திருக்க முடியாது.

மெற்குஷியோ : பென்வோலியோ என்னை ஏதாவது ஒரு வீட்டினுள் அழைத்துச் செல். நான் செத்துக் கொண்டிருக்கிறேன். உங்கள் இரண்டு குடிகளையும் கொள்ளைநோய் கொண்டு போக. நான் அழுகிய உணவாகிக் கொண்டிருக்கிறேன். உங்கள் இரண்டு குடிகளும் நாசமாகப் போகட்டும்.

( மெற்குஷியோவும், பென்வோலியோவும் மறைகின்றனர். )

ரோமியோ : இந்த மெற்குஷியோ என்னுடைய நல்ல நண்பனும் இந்த வெனோரா இளவரசனின் சொந்தக் காரனும் கூட. ஐயோ இப்படி என்னைக் கொல்ல வந்த டிபல்டின் வாள்வீச்சிலிருந்து காப்பாற்றுவதற்காக தன்னுயிர் தந்து மாண்டு விட்டானே. டிபல்ட் கூட சென்ற ஒருமணி நேரத்திற்கு முன்பு என் உறவுக்காரன் என்று எண்ணி மகிழ்ந்தேனே. என் அன்பே ஜூலியட் உன் மீதான காதல் என்னை ஒரு பெண்ணைப் போல மென்மையாக்கி விட்டதே. இரும்பாலான என் வீரக் கவசத்தை பருத்தித் துணியைப் போல மென்மையாக்கி விட்டாயே.

( பென்வோலியோ உள்ளே நுழைகிறான். )

பென்வோலியோ : ரோமியோ. மாவீரன் மெற்குஷியோ’ இறந்து விட்டான்.அவனுடைய கம்பீரமான ஆத்மா இந்த மண்ணுலகில் தன் இருப்பைக் குறைத்துக் கொண்டு, வான்வெளியில் கலந்து விட்டது.

ரோமியோ : இந்த நாளின் கொடும் விதி இனிவரும் நாட்களின் மீது கவியுமே. ஒரு பெரும் இடரின் வருகையை இவன் சாவு கட்டியம் கூறிவிட்டதே.

(டிபல்ட் உள்ளே வருகிறான். )

பென்வோலியோ : இதோ உன்னுடைய கொடும் பகைவன் டிபல்ட் வருகிறான்.

ரோமியோ : வெற்றியும் வாழ்வும் இவனுக்கு. வேதனையும் சாவும் அவனுக்கா? கண்ணியத்திற்கும் இரக்கத்திற்கும் இனி இடமில்லை. கோர நெருப்பில் பற்றி எரியும் கோபமே இனி என் செயல். இங்கேபார் டிபல்ட். என்னை வில்லன் என்று அழைத்தாயே அப்படியே அழை. நான் உன் வில்லன். மெற்குஷியோவின் ஆன்மா நம் தலைகளின் மேல் சுழன்று கொண்டிருக்கிறது. வா. அங்கே மெற்குஷியோ தனியாக சுவர்க்கம் செல்ல பிரியப்படாமல் காத்திருக்கிறான். ஒன்று நீ அல்லது நான் அவனுக்கு துணை போக வேண்டும்.

டிபல்ட் : போக்கிரிப் பயலே. நீயா என்னை சண்டைக்கு அழைப்பது? நீதான் உன் மெற்குஷியோவிற்கு நல்ல துணை.

ரோமியோ : அதனை நீ முடிவு செய்ய வேண்டாம் அவனுக்கு யார் துணை என்பதை சண்டை முடிவு பண்ணட்டும்.

( அவர்கள் சண்டையிடத் தொடங்குகின்றனர். முடிவில் டிபல்ட் கீழே சாய்கிறான். )

பென்வோலியோ : ரோமியோ ! போ போய்விடு இங்கிருந்து. நகர மக்கள் கூடத் தொடங்கி விட்டனர். இப்படி அதிர்ந்து போய் நிற்காதே. நீ பிடிபட்டாய் என்றால் இளவரசர் உனக்கு மரணதண்டனையை விட குறைந்த தண்டனையை கொடுக்க மாட்டார். இப்பொழுதே இடத்தை காலி பண்ணு.

ரோமியோ : நான் ஒரு அதிர்ஷடம் கெட்டவன்.

பென்வோலியோ : இன்னும் எதற்க்காக காத்திருக்கிறாய் ரோமியோ. சொல்வதைக் கேள் . கிளம்பு.

( ரோமியோ அகல்கிறான். நகரமக்கள் கூடுகின்றனர். )

மக்கள் : மெ’ற்குஷியோவைக் குத்திக் கொன்று விட்டு ஓடிப்போன அந்த அயோக்கியன் எந்த வழியில் சென்றான் ? டிபல்ட் சொல்லுங்கள் எந்த வழியில் சென்றான் ?

பென்வோலியோ : இதோ டிபல்ட் இங்கே வீழ்ந்து கிடக்கிறான்.

குடிமகன்-1 : ஐயா வாருங்கள் எங்களுடன் செல்லலாம். இது இளவரசர் ஆணை.

( இளவரசர் திருவாளர் மாண்டேகு, திருமதி மாண்டேகு, திருவாளர் கபுலெட், திருமதி. கபுலெட் வேறு சிலருடன் வருகின்றனர். )

இளவரசர் : இந்தக் கலவரத்தைத் தொடங்கிய அந்தத் தீயவர்கள் எங்கே ?

பென்வோலியோ : மேன்மைதாங்கிய இளவரசே ! நான் என்ன நிகழ்ந்ததென்று ஆரம்பத்திலிருந்து சொல்கிறேன். அதோ அங்கே இறந்து கிடக்கும் டிபல்ட் உங்கள் உறவினன் மெற்குஷியோவை வாள்சண்டையில் கொன்றான். அதற்கு பழி வாங்க ரோமியோ அவனைக் கொன்றான்.

திருமதி கபுலெட் : டிபல்ட் ஐயோ தம்பி. என் சகோதரனின் கண்மணில்லவா நீ? இளவரசே ! என் அத்தான் பாருங்கள் இரத்தம் என் சகோதரனின் மகனை நனைத்து கிடப்பதைப் பாருங்கள். இளவரசே ! என்ன கொடுமை இது. இதோ இப்போதே சிந்திய இந்த கபுலெட் இரத்தத்திற்கு இந்த மண்ணில் ஒரு மாண்டேகுவின்’ இரத்தம் சிந்தட்டும். ஓ தம்பி டிபல்ட்.

இலவரர் : முதலில் இந்த இரத்தக் களரியை ஆரம்பித்தது யார் ?

பென்வோலியோ : ரோமியோவால் கொல்லப்படுவதற்கு முன்னால் இதோ வெட்டுண்டு இறந்து கிடக்கும் டிபல்ட்தான் இந்த தகராறைத் தொடங்கினான்.ரோமியோ அவனிடம் மிகவும் பணிவாக அவன் வாதங்கள் எந்த அளவிற்கு பொய்யானவை என்று எடுத்துக் கூறினான். இதுபோன்ற கலவரங்களை நீங்கள் வெனோரா நகரில் அனுமதிப்பதில்லை என்றும் கூறினான். இத்தனையையும் அவன் பணிவான மொழியில்,சீரான மூச்சோடு, சிரம் தாழ்ந்துதான் சொன்னான். சமாதனம் என்ற வார்த்தைக்கு செவி மடுக்காத டிபல்டிடம் ரோமியோ கூறிய வார்த்தைகள் செவிடன் காதில் ஊதிய சங்கின் ஓசையைப் போலானது. டிபல்டின் கூர்மையான வாள் மெற்குஷியோவின் மார்பின் மீது பாய்ந்தது. மெற்குஷியோவும் சளைத்தவன் இல்லை. பதில் தாக்குதல் நடத்தினான். அதன் பிறகு இருவர் நடுவிலும் கடும் வாள்சண்டை தொடங்கியது. ஒவ்வொரு வீச்சும் மரண வீச்சுதான். ரோமியோ கூக்குரலிட்டு “ நண்பர்களே வேண்டாம் இந்த சண்டை “ என்று மன்றாடினான். அவன் வார்த்தைகளை விட வேகமான கரங்கள் இரண்டு வாள்முனைகளையும் தடுத்து நிறுத்த எவ்வளவோ பிரயத்தனப்பட்டன. முடியவில்லை. ரோமியோவின் தோள்களின் ஊடே புகுந்து மெற்குஷியோவை வாளால் டிபல்ட் கொன்று விட்டு ஓடத்தொடங்கினான். சென்றவன் மீண்டும் வந்தபோது ஆசைகள் நிறைந்த ரோமியோவின் மனம் பழிவாங்கும் உணர்ச்சியால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. மின்னல் வீசியதா இல்லை வாள்கள் உரசிக் கொண்டனவா தெரியாது. அப்படி ஒரு வாள் சண்டை இருவர் நடுவிலும். நான் சண்டையை நிறுத்தும் முன்னர் டிபல்ட் இறந்து விட்டான். டிபல்ட் இறந்தது தெரிந்ததும் ரோமியோ பறந்துவிட்டான். என் உயிரின் மீது ஆணை. நான் சொன்னது அத்தனையும் உண்மை.

திருமதி கபுலெட் : அவன் மாண்டேகு குடும்பத்தைச் சார்ந்தவன். பரிவு இருப்பவனிடம் நேர்மை இருக்காது. அவன் கூறுவது உண்மையில்லை. இருபது மாண்டேகுகாரர்கள் அவனை சூழ்ந்து தாக்கியிருக்கின்றனர். இருபது சேரும் சேர்ந்து ஒருவனை பலி வாங்கியிருக்கிறார்கள். இளவரசரே உங்களிடம் நீதி வேண்டி மன்றாடுகிறேன். ரோமியோ டிபல்டைக் கொன்று விட்டான். இனி அவன் உயிருடன் இருக்கக் கூடாது.

இளவரசர் : ரோமியோ டிபல்டைக் கொன்றான். டிபல்ட் மெற்குஷியோவைக் கொன்றான். சரி இப்போது மெற்குஷியோவின் உயிருக்கு யார் பொறுப்பேற்பது?

திருவாளர். மாண்டேகு : ரோமியோ மீது குற்றமில்லை இளவரசே அவன் மெற்குஷியோவின் நண்பன். தன் நண்பனின் உயிருக்கு ரோமியோ நீதி வழங்கியிருக்கிறான். அவ்வளவுதான்.

இளவரசர் : ரோமியோவின் இந்தக் கொலைச் செயலுக்காக வெனோரா நகரத்திலிருந்து நாடு கடத்தப்படுகிறான். உங்கள் சண்டையில் தேவையில்லாமல் நானும் பங்குகொள்ள நேர்ந்து விட்டது. இரத்தம் சிந்தி செத்தவன் என்னுடைய இரத்த சம்பந்தம் உடைய உறவினன். எனக்கு நீங்கள் இழைத்திருக்கும் பாதகத்திற்கு நான் அளிக்கப் போகும் கடுமையான தண்டனையை எண்ணி எண்ணி நீங்கள் காலம் முழுவதும் வருந்த வேண்டியிருக்கும். எந்தச் சமாதானமும் எனக்குத் தேவையில்லை. அழுவதாலோ வருந்தி மன்றாடுவதாலோ ஒரு பயனும் இருக்கப்போவதில்லை. ரோமியோ உடனே வெனோரா நகரை விட்டு அகல வேண்டும். வெளியேற மறுத்தால் அவனுக்கு மரணம் உறுதியாகி விடும். இந்த இறந்த உடலை இங்கிருந்து அப்புறப்படுத்துங்கள். நான் சொல்லும் வண்ணம் செய்யுங்கள். கொலைபாதகதிற்கு காட்டும் கருணை மேலும் கொலைகளுக்கு இட்டுச் செல்லும்.

( அவர்கள் மறைகின்றனர் )

காட்சி நிறைவு.

காட்சி-2

( ஜூலியட் இல்லம். ஜூலியட் உள்ளே வருகிறாள் ).

ஜூலியட் : சூரியத்தேரில் பூட்டப்பட்ட புரவிகளே உங்கள் எஜமானரை சீக்கிரம் மேற்குப் பகுதிக் கொண்டு செல்லுங்கள். பகலைக் கொண்டு சென்ற வேகத்தில் இரவைக் கொண்டு வாருங்கள். அறையின் திரைச் சீலைகள் இழுத்து மூடப்படும். நான்கு சுவர்களுக்குள் காதல் களிநடனம் புரியட்டு’ம். விண்மீன்கள் கண் சிமிட்டும். இந்தத் தோள்களில் ரோமியோ விழுந்து கிடப்பான். எவர் கண்களிலும் படாமல் எவர் செவிகளிலும் விழாமல். காதலர்களின் அழகினால் இங்கே ஆராதனைகள் நடைபெறும். காதலுக்குக் கண் இல்லை என்பதால்தான் காதலுக்கு உகந்த நேரம் இரவு போலும். கருப்பு அங்கியை அணிந்து கண்கள் கலங்கிய பேரிள’ம்பெண்ணைப் போல இரவே வருக. களங்கமற்ற இரண்டு காதல் ஜோடிகள் காதல் விளையாட்டில் எப்படி தோற்பது என்பதை கற்றுக் கொள்ள வா. உன் கறுப்புப் போரவையால் என் கன்னங்களின் சிவப்பை மூடி விடு. இரவுகளின் ஊடே என் நேர்மையான காதல் பாடம் தொடரட்டும். இரவே வருக. ரோமியோ வருக. பகல் போன்ற இரவே வருக. அண்டங்காக்கையின் சிறகுகளில் படிந்திருக்கும் வெண் பணியை போல இரவினில் பகலே வருக. நளினமான இரவே வா. காதல் இரவே வா. கரும்புருவம் கொண்ட இரவே என் காதலன் ரோமியோவை எனக்குக் கொடுத்துவிடு. நான் இறந்தபிறகு என்னிடமிருந்து அவனை மீட்டு வானில் மின்னும் விண்மீன்களாக மாற்றி விடுங்கள். அவன் வானை அழகுபடுத்துவதோடு இரவுகளை காதல் இரவுகளாக மாற்றிவிடுவான். காதலர்கள் இரவின் மீது காதல் கொண்டு பொழுதை விடியவேண்டாம் எட்ன்று மன்றாடுவார்கள். காதல் மாளிகை ஒன்றைக் கட்டி வைத்து இன்னும் குடி புகாமல் இருக்கிறேன். ரோமியோவின் சொந்தமாகிவிட்டேன். இருப்பினும் இன்னும் அவன் என்னை சிறைஎடுக்கவில்லை. பகல் என்னை வாட்டுகிறது. புத்தாடை இருந்தும் அதை அணிய முடியாத குழந்தையைப் போல ஏங்குகிறேன்.

( செவிலி சில கயிறுகளுடன் வருகிறாள் . )

அதோ தாதி வந்து விட்டாள். செய்தி கொண்டு வந்திருப்பாள். என்ன நீளமான வாய் இவளுக்கு. எதுவானாலும் அவன் உச்சரிக்கப்படுவதை கேட்பதே கம்பீரம்தான். தாதி என்ன செய்தி சொல்லி அனுப்பினான் ரோமியோ ? அது என்ன கைகளில்? இந்தக் கயிற்று ஏணியை ரோமியோ கொண்டுபோகச் சொன்னானா?

செவிலி : ஆமாம் இது காயிற்று ஏணிதான்.

ஜூலியட் : என்ன செய்தி தாதி ? ஏன் உன் முகம் வாடியிருக்கிறது ?

செவிலி : சீமாட்டி இது ஒரு கொடுமையான தினம். அவன் இறந்துவிட்டான் அம்மா இறந்து விட்டான். நாம் மோசம் போய்விட்டோம் தாயே மோசம் போய்விட்டோம். ஐயோ இப்படி ஒரு நாளாக இது விடிய வேண்டுமா/ அவன் இல்லை. கொல்லப்பட்டுவிட்டான். இறந்து விட்டான்.

ஜூலியட் : கடவுள் அவ்வளவு வெறுக்கத் தகுந்தவரா ?

செவிலி : கடவுள் எப்படியோ தெரியாது ரோமியோ வெறுக்கப்பட வேண்டியவன். ரோமியோ ஐயோ ரோமியோ நீ என்பது எங்களுக்குத் தெரியாமல் போனதே.

ஜூலியட் : நீ என்ன சாத்தானின் மறுஜன்மமா? ஏன் இப்படி என்னை வதைக்கிறாய்? நீகொடுக்கும் ஹிம்சை அந்த நரகத்தில் கொடுப்பதைவிட குறைவாகத்தான் இருக்கும்.ரோமியோ நிஜமாகவே தற்கொலை செய்து கொண்டானா? நீ மட்டும் ஆமாம் என்று சொன்னால் சாத்தான் உமிழும் விஷத்தை விடக் கொடிய விஷத்தை உமிழ்வேன் எச்சரிக்கை. ரோமியோ தற்கொலை செய்துகொண்டான் என்று சொல் பிறகு நான் நானாக இருக்க மாட்டேன் ஆமாம். அவன் கொலை செய்யபட்டானா? ஆமாம் என்றால் ஆமாம் என்று சொல் இல்லையென்றால் இல்லை என்று சொல். இந்த ஒற்றைச் சொற்கள் என் வலியையும் சந்தோஷத்தையும் தீர்மானிக்கட்டும்.

செவிலி : நான் காயங்களை என் கண்களால் பார்த்தேன் கடவுளே கொடுமையான காயம் அது. . நெஞ்சில் ஏற்பட்ட காயம்.குருதி வழியும் பிணக் கோலம் அது. வெளுத்துப் போன சாம்பல் நிற உடல் குருதியில் நனைந்து கிடக்கும் கோரக்காட்சி. உறைந்து போன குருதி. நான் அந்த கோர காட்சியைக் கண்டதும் மயங்கி விழுந்து விட்டேன்.

ஜூலியட் : ஐயோ ! என் ஒன்றுக்கும் உதவாத இதயம் உடைந்து விடும் போலிருக்கிறதே,. என் கண்களை சிறைப்படுத்தி விட்டேன். விழிகளே உனக்கு இனி பார்வையில்லை. இமைஎனும் சிறையில் அடைபட்டு கிட. வேறு ஒருவரையும் நீ பார்க்க வேண்டாம். என் பாவ உடல் பூமியில் வீழ்ந்து மாளட்டும். என் பாவங்கள் நின்று போகட்டும். என்னுடைய உடலும் ரோமியோவின் உடலும் ஒரே பிணவறையில் கிடக்கட்டும்.

செவிலி : டிபல்ட் ஐயா டிபல்ட்! என்னிடம் மிகவும் சிநேகமாக இருந்தவரே ! பணிவுடைய’ மரியாதைக்குரிய கணவான் இல்லையா அவர்? அவர் இறந்து கிடப்பதை பார்க்கவா எனக்கு இப்படி ஒரு நெடிய ஆயுளை கடவுள் தந்திருக்கிறார்?

ஜூலியட் : எத்தகைய கொடுமை இது தாதி ? டிபல்டும் இறந்து விட்டானா? அவன் என்னுடைய ஒன்றுவிட்ட சகோதரன். என்னிடம் அதிக பிரியம் கொண்டவன். ரோமியோ அவனையும் விட என் மேல் பிரியம் கொண்டவன். இருவருமா இறந்து விட்டனர்? இசைகருவிகள் சோக கீதத்தை இசைக்கட்டும். இருவரும் இறந்துவிட்டால் பின் இருப்பவர் யார்?

செவிலி :டிபல்ட் இறந்துவிட்டான். ரோமியோ நகரிலிருந்து வெளியேற்றப் பட்டுள்ளான். டிபல்டைக் கொன்ற குற்றத்திற்காக ரோமியோ வெனோராவிலிருந்து வெளியேற்றப்பட்டு விட்டான்.

ஜூலியட் : ஐயோ ! ரோமியோவின் கரங்களா டிபல்டின் இரத்தத்தில் நனைந்தது ?

செவிலி : ஆமாம் அவன் கைகள் தான் அவன் கைகள்தான். சாபமிடு இந்த துக்க தினத்திற்கு.

ஜூலியட் : கொடிய விஷ நாகத்தின் இதயம் கொண்ட மலர் முகமே ! ரோமியோ ! இப்படி ஒரு அழகிய குகையிலா அந்த வேதாளம் ஒளிந்திருந்தது ? அழகான கொடுங்கோலன். அரக்கக் குணமுடைய தேவன் அவன். புறாவின் இறகுகள் கொண்ட வல்லூறு’. பசுத்தோல் போர்த்திய புலி. அவனை நான் வெறுக்கிறேன். இருப்பினும் நான் சந்தித்தவர்களில் மிகவும் சிறந்தவன் அவன்தான். . தோற்றம் போலில்லை அவன். தோற்றத்திற்கு நேர் எதிர் தோற்றம் உடையவன். கபட சந்நியாசி. மதிப்பற்குரிய அயோக்கியன். கடவுளே ! அவனை என்ன செய்யப் போகிறாய் ? ஒரு கொடிய ஆத்மாவிற்கு எதற்காக இப்படி ஒரு அழகிய வடிவம் கொடுத்தாய் ? கடும் சொற்கள் நிறைந்த புத்தகத்திற்கு இப்படி ஒரு முகப்பு அட்டையா? இவ்வளவு அழகிய மாளிகையில் வசிப்பது சாத்தானா ?

செவிலி : ஆடவர்களில் நம்பத்தகுந்தவர் எவருமில்லை; நேர்மையானவர்கள் எவருமில்லை. அத்தனை ஆண்களும் பொய்யர்கள்; அத்தனை ஆண்களும் ஏமாற்றுக்காரகள்; அத்தனை ஆண்களும் குறுகிய புத்தியுடையவர்கள். என்னுடைய ஏவலாள் எங்கே ? எனக்கு சிறிது மது அருந்தக் கொடு. இந்த வருத்தங்கள், இந்த சோகங்கள், இந்த துயரங்கள் என் வயதை அதிகரிக்கின்றன. ரோமியோவை பெருத்த அவமானம் சூழ்ந்து கொண்டு விட்டது.

ஜூலியட் :ரோமியோவை சொன்ன உன் நாக்கு புழுத்து போகட்டும். அவன் பிறக்கும்போதே அவமானப்பட வேண்டுமென்றா பிறந்தான் ? கௌரவம்தான் அவனை அலங்கரிக்கும் சிம்மாசனம். இந்த மொத்த பூமண்டலதிலும் கௌரவிக்கப் பிறந்தவன் அவன். நான் ஒரு கேடு கெட்ட விலங்கு. எனக்கு என்ன தகுதி இருக்கிறது அவன் மீது கோபம் கொள்ள ?

செவிலி : உன் ஒன்றுவிட்ட சகோதரனைக் கொன்றவனை புகழ்ந்து பேச உனக்கு எப்படி மனம் வருகிறது அம்மணி ?

ஜூலியட் : என் கணவரை தவறாகப் பேசச் சொல்கிறாயா தாதி ? என் பரிதாபத்திற்குரிய பிரபுவே ! குறுகிய காலமே உங்களுடைய மனைவியான நான் உங்களை பாராட்டிப் பேசாவிடில் வேறு எந்த நாக்கு உங்களை புகழ்ந்து பேசும் ? இருப்பினும் கொடியவரே எதற்காக என் சகோதரனைக் கொன்றீர்? அந்தக் கொடியச் சகோதரன் உங்களைக் கொன்றிருக்க வேண்டும். என் கண்ணீர் தவறான சோகத்திற்கு சிந்தப்படுகிறது. டிபல்ட் இறந்து விட்டான்; ரோமியோ உயிருடன் இருக்கிறான். நான் எதற்கு கண்ணீர் சிந்த வேண்டும் ? யாரைக் கொல்ல நினைத்தானோ அந்த ரோமியோ உயிருடன் இருக்கிறான். என் கணவனைக் கொல்ல நினைத்த டிபல்ட் இறந்து கிடக்கிறான். இதுவும் நல்லதற்குதான். பிறகு நான் ஏன் அழ வேண்டும் ? டிபல்டின் இறப்பைக் கூறும் செய்தியை விட ரோமியோ நாடு கடத்தப்பட்டார் என்ற செய்தி ஆயிரம் மடங்கு கொடியது. நாடு கடத்தல் ஆயிரம் கொலையுண்ட டிபல்டிற்கு சமம். டிபல்டின் மரணம் இப்படி முடிந்ததால் அது கண்டிப்பாக சோகம்தான். ஆனால் எந்த சோகமும் தனித்து வருவதில்லை. துணைக்கு மற்றும் ஒரு சோகத்தை அழைத்து வந்து விடுகிறது. டிபல்ட் இறந்துவிட்டான் என்ற செய்தியின் தொடர்ச்சியாக உன் தந்தை இறந்து விட்டார் உன் தாயார் இறந்து விட்டார் அல்லது உன் பெற்றோர் இருவரும் இறந்து விட்டனர் என்று கூறியிருந்தால் கூட அது அந்தச் சோகச் செய்ததியின் இயல்பை பாதித்திருக்காது. டிபல்டின் மரணச் செய்தியைக் கூறிவிட்டு ரோமியோ நாடு கடத்தப்பட்டான் என்று கூறுவது என் தாய் , தந்தை,டிபல்ட், ரோமியோ, ஜூலியட் அனைவரும் கொலையுண்டு மாண்டார்கள் என்று கூறுவதை விடக் கொடுமையானது. போகட்டும் அனைவரும் செத்து மடியட்டும். ரோமியோ நாடு கடத்தபட்டான்.என்ற செய்திக்கு முன்பு எத்தனை கணக்கற்ற எண்ணிலடங்காத , அளக்கமுடியாத கொலைச் செய்திகளும் ஈடாகா. அந்தச் செய்தியின் வலியை விளக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. என் தாய் தந்தையர் எங்கே ?

செவிலி : டிபல்டின் மரணம் தாளாமல் அழுது கொண்டிருக்கிறார்கள். அவர்கள் துக்கத்தை பகிர்ந்து கொள்ள செல்கிறாயா சொல். நான் அழைத்துச் செல்கிறேன்.

ஜூலியட் : ஓ டிபல்டின் காயங்களை தங்களது கண்ணீரால் ஆற்றிக் கொண்டிருக்கிறார்களா? அவர்கள கண்ணீர் வறண்டு விட்டால் நான் இருக்கிறேன் கண்ணீர் சிந்த ரோமியோ நாடு கடத்தப்பட்டதற்கு. இந்த கயிற்றேணியை எடுத்து விடு தாதி. என்னைப் போல இதற்கும் பயனில்லை. ரோமியோ நாடு கடத்தப்பட்டு விட்டான். என் மஞ்சத்திற்கு செல்லும் சாலையாக இந்த ஏணியை கொடுத்து வைத்திருந்தான். என்ன செய்யட்டும் ? நான் இன்னும் கன்னிதான். விதவையாகப் போகும் கன்னி. வா கயிற்றேணியே இனி உனக்கும் எனக்கும் வேலையிலை. ரோமியோ இந்த மஞ்சத்தில் என் கன்னித்தன்மையை பறிக்க வருவான் என்று நம்பியிருந்தேன். ஆனால் மரணம் முந்திக் கொண்டு என் கன்னித்தன்மையை பறிக்கப் போகிறது.

செவிலி : ஜூலியட் அலட்டாமல் படுக்கச் செல். நான் ரோமியோவை அனுப்பி உன்னை சமாதானப் படுத்தச் சொல்கிறேன்.அவன் எங்கிருக்கிறான் என்று தெரியும். இன்றிரவு உன் ரோமியோ உன்னிடம் வருவான். அவனிடம் இப்போது சென்று சொல்கிறேன். அவன் பாதிரியார் லாரன்ஸ் மடத்தில்தான் இருக்கிறான்.

ஜூலியட் ( செவிலியிடம் ஜூலியட் ஒரு மோதிரத்தை கொடுக்கிறாள். ) தாதி போ இதை என் உண்மையான வீரனிடம் கொடு. என்னுடைய இறுதி பிரியாவிடையை பெற்றுச் செல்லச் சொல். வந்தனம். ( அவர்கள் மறைகின்றனர் )

திரை .

காட்சி-3.

பாதிரியார் லாரன்சின் அறை.

பாதிரியார் : வெளியில் வா ரோமியோ. வெளியில் வா. தைரியமற்றவனே வெளியில் வா. துன்பம் உன்னோடு உடன் பிறந்தது. பேரிடரை நீ மணந்து கொண்டுள்ளாய்.

( ரோமியோ நுழைகிறான். )

ரோமியோ : என்ன செய்தி வந்திருக்கிறது அருட்தந்தையே ? இளவரசரின் தீர்ப்பு என்ன? என்னை வீழ்த்தவிருக்கும் பழி எங்கே மறைந்திருக்கிறது ?

பாதிரியார் : துயரத்துடனான உன்னுடைய பிணைப்பு அனைவரும் அறிந்ததுதான் ரோமியோ. இளவரசரின் தீர்ப்பைக் கொண்டு வந்திருக்கிறேன்.

ரோமியோ : இறுதிநாளின் தீர்ப்பை விடவா இளவரசரின் தீர்ப்பு கடுமையாக இருக்கப்போகிறது?

பாதிரியார் : சற்று மென்மையான தீர்ப்பத்தான் அவர் சொல்லியிருக்கிறார். நீ கொலைக்களப்படுத்தப் படவில்லை; நாடு கடத்தப்பட்டிருக்கிறாய்.

ரோமியோ : நாடு கடத்தப்படுமா? தெய்வமே கருணை கூர்ந்து தீர்ப்பை மரணம் என்று மாற்று. நாடு கடத்தப்படுவது என்பது மரணத்தை விட கொடியது. நாட்டை விட்டு வெளியேறு என்று மட்டும் சொல்லாதீர்கள்.

பாதிரியார் : இந்த நொடியிலிருந்து நீ வெனோரா நகரை விட்டு துரத்தப்படுகிறாய். கொஞ்சம் பொறுமையாக இரு. உலகம் விசாலமானது; பெரியது.

ரோமியோ :எனக்கு வெனோராவைத் தவிர போக்கிடம் இல்லை. கழுவு அல்லது நரகம்தான் போக்கிடம். வெனோராவை விட்டு வெளியில் செல்ல வேண்டுமென்றால் எனக்கு மரணம்தான் அந்த வேற்றிடம். மரணத்திற்கு நாடு கடத்தப்படுதல் என்று வேறொரு பெயரும் உள்ளதா? கழுத்தில் விழுவது தங்கக் கோடாலி என்றாலும் தழுவப்போவது மரணமே அன்றோ ?

பாதிரியார் : கொலை பாதகா ! நன்றியில்லாத முரட்டுப் பயலே ! நமது சட்டம் உன்னுடைய குற்றத்திற்கு மரணம் விதித்திருக்கிறது. இளவரசர் நல்ல மனதுடன் அதனை மாற்றி உன்னை நாடு கடத்தச் சொல்லியிருக்கிறார். இது அவருடைய கருணையை காட்டுகிறது. அது உன் கண்களுக்குத் தெரியவில்லையா?

ரோமியோ : இதற்குப் பெயர் பாதகம் கருணையில்லை. எங்கு ஜூலியட் வசிக்கிறாளோ அது என்னுடைய சுவர்க்கம். நாய், பூனை, எலி என்று எல்லா ஜீவராசிகளுக்கும் இந்த வெனோரா நகரில் இடம் இருக்கும். ரோமியோவிற்கு மட்டும் கிடையாதாம். காதல் களியாட்டம் செய்தபடி ஈக்கள் வாழலாம் ரோமியோ இருக்கக் கூடாதா? அவை ரோமியோவின் கைகளில் அமரலாம். ரோமியோவின் இதழ்களை வட்டமிட்டு முத்தமிடலாம். இதழ்கள் ஒன்றை ஒன்று உரசிக்கொல்லும்போது அவை முத்தம் என்று எண்ணி முகம் சிவக்கும் கன்னி அவள். அவளை ரோமியோ முத்தமிடக்கூடாது. அவன் நாடு கடத்தப்பட்டு விட்டான். ஈக்களுக்கு இருக்கும் சுதந்திரம் எனக்கில்லை. ஏன் என்றால் நான் நாடு கடத்தப்பட்டு விட்டேன். ஆனால் நீங்கள் கூறுகிறீர்கள் துரத்தப்படுதல் மரணமில்லை என்று. நீங்கள் கத்தி பிடிக்க வேண்டாம்; கொடிய விஷம் கொடுக்கவேண்டாம் என்னைக் கொல்வதற்கு , நாடு கடத்தபட்டாய் என்ற ஒரு சொல் போதும் என்னைக் கொல்ல. நரகத்திற்கு மற்றொரு பெயர் நாடு கடத்தப்படுதலா அருட்தந்தையே ? நீங்கள் நிஜமாகவே மற்றவர்களின் பாவங்களை சுமக்கும் புனித அருட்தந்தை என்றால், என் மீது நட்பு கொண்டவர் என்றால் எதற்கு நாடு கடத்தப்படுதல் என்ற வார்த்தையின் மூலம் என்னை உருத்தெரியாமல் அழிக்கிறீர்கள் ?

பாதிரியார் : முட்டாள் பைத்தியக்காரா கொஞ்சம் நான் சொல்வதைக் கேள்.

ரோமியோ : ஹோ ! நீங்கள் மீண்டும் நாடுகடத்தல் குறித்து பிரசங்கம் செய்யப் போகிறீர்களா?

பாதிரியார் : உன்னை அந்தச் சொல்லிலிருந்து தடுத்து நிறுத்துகிறேன். சங்கடத்திற்கு மாற்று மருந்து கொடுக்கிறேன்…..தத்துவம். தத்துவம்தான் உன்னை நாடு கடத்துதலிலிருந்து உன்னை காப்பாற்றும்.

ரோமியோ : இன்னமுமா நீங்கள் நாடு கடத்துவது குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள்? தத்துவம்என்ற சொல்லை மறந்து விடுங்கள். தத்துவத்தால் என்ன பயன் ? அதனால் மற்றுமொரு ஜூலியட்டை உண்டாக்க முடியுமா? வேறொரு நகரத்தை மாற்றியமைக்க முடியுமா? அல்லது அரசர் ஆணையை மாற்ற முடியுமா? பிறகு அந்தத் தத்துவத்தால் என்ன பயன் ? அதனால் உதவவும் முடியாது; தடுக்கவும் முடியாது. இனி வேறு எதுவும் கூறாதீர்கள்.

பாதிரியார் : உன்னைப் போன்ற புத்திகோளாறுடையவர்களுக்கு செவிகள் மந்தமாகத்தான் இருக்கும்.

ரோமியோ : புத்தி கோளாறுடையவன் எப்படி கேட்பான் புத்தி நேரானவர்களுக்கு கண் தெரியாதபோது ?

பாதிரியார் : உன் நிலைமையை உனக்கு விளங்க வைக்கிறேன்.

ரோமியோ : எதனை நீங்கள் உணரவில்லையோ அதனை நீங்கள் விளக்க முடியாது. நீங்கள் என்னைப் போன்ற வாலிபனாக இருந்தால், ஜூலியட் மீது நீங்கள் காதல் வயப்பட்டிருந்தால், ஒருமணி நேரம் முன்புதான் உங்களுக்குத் திருமணம் நடந்திருந்தால், என்னைப் போல் விரகத்தில் தவித்தால், என்னைப் போல நாடு கடத்தப்பட்டிருந்தால் பிறகு நீங்கள் பேசுங்கள். விளக்குங்கள். தலையை கழுத்திலிருந்து கிள்ளி எறிந்து விட்டு என்னைப் போல தரையில் வீழுங்கள் ( சொல்லிவிட்டு ரோமியோ தரையில் வீழ்கிறான். ) கால்களை நீட்டி எழுப்படவேண்டிய கல்லறையின் அளவு பாருங்கள் ( வாசற்கதவு ஒலியெழுப்பும் சப்தம் கேட்கிறது. )

பாதிரியார் : யாரோ கதவைத் தட்டுகிறார்கள். எழுந்திரு ரோமியோ. போய் ஒளிந்துகொள்.

ரோமியோ : என் இதயத்திலிருந்து கிளம்பும் பெருமூச்சுகள் ஒரு மூடு பனியைப் போல என்னை முழுவதும் போர்த்தி மற்றவர் கண்களிலிருந்து என்னை மறைக்கும் வரையில் நான் ஓடி ஒளிய மாட்டேன்.

பாதிரியார் : இங்கே பாரு ரோமியோ அவர்கள் வந்து விட்டார்கள் ( வாயிலை நோக்கி ) யாரது ? ( ரோமியோவை நோக்கி ) ரோமியோ எழுந்திரு. அவர்கள் வந்தால் உன்னை பிடித்துச் சென்று விடுவார்கள். (மீண்டும் கதவைத் தட்டும் ஒலி) என்னுடைய படிப்பறையில் மறைந்துகொள். இது என்ன முட்டாள்தனம் ? இதோ வருகிறேன். இதோ வருகிறேன் ( மீண்டும் கதவு தட்டும் ஓசை ) யாரது ? என்ன வேண்டும் ? ஏன் இப்படி போட்டு கதவை உடைக்கிறீர்கள் ?

செவிலி : ( வெளியிலிருந்து குரல் மட்டும் ) நான் முதலில் உள்ளே வருகிறேன். பிறகு எதற்கு தூது வந்திருக்கிறேன் என்பதைக் கூறுகிறேன். நான் ஜூலியட் வீட்டிலிருந்து வருகிறேன்.

பாதிரியார் ( கதவைத் திறந்து ) அப்படி என்றால் உள்ளே வா.( செவிலி உள்ளே வருகிறாள். )

செவிலி : அருட்தந்தையே ! சொல்லுங்கள் என் எஜமானியின் காதலன் எங்கே ? ரோமியோ எங்கே ?

பாதிரியார் : அதோ அங்கே தரையில் விழுந்து கிடக்கிறான். தனது தண்ணீரில் தத்தளித்து கிடக்கிறான்.

செவிலி : ஐயோ ! என் சின்ன எஜமானி போல் அல்லவா இவரும் கிடக்கிறார்? வேதனைக்குரிய பரிதாபம். பரிதாபத்திற்குரிய இக்கட்டு. அவளும் இவரைப் போலவே கீழே விழுந்து கிடக்கிறாள். புலம்புகிறாள்; அழுகிறாள். அழுகிறாள் : புலம்புகிறாள். எழுந்திருங்கள். எழுந்திருங்கள். நீங்கள் ஒரு ஆண்மகன். ஜுலியட்டிற்காக எழுந்திருங்கள். எதற்காக இப்படி ஒரு சோகக்கடலில் மூழ்கி கிடக்க வேண்டும் ?

ரோமியோ : செவிலி

செவிலி : நல்லது ஐயா. ! மரணம் அனைவருக்கும் இறுதியானதுதான்.

ரோமியோ : ஜூலியட்டை பற்றி கூறினாயா தாதி ? ஜூலியட் எப்படி இருக்கிறாள் ? அவள் என்னை ஒரு கொலைபாதகன் என்று நம்புகிறாளா? எங்கள் மாறாத காதலை அவள்து உறவினர் இரத்தத்தால் களங்கபடுத்தி விட்டேன் என்று வருந்துகிறாளா? எங்கே இருக்கிறாள் ? எப்படி இருக்கிறாள் ? மறந்த காதல் குறித்து என் மறைந்த காதலி என்ன கூறுகிறாள் ?

செவிலி : அவள் எதுவும் பேசுவதில்லை ஐயா. கண்ணீர் கண்ணீர் படுக்கையில் விழுகிறாள். எழுந்திருக்கிறாள். டிபல்ட் என்று கூவியபடி மீண்டும் விழுகிறாள். அழுகிறாள். மீண்டும் எழுந்து ரோமியோ என்று புலம்புகிறாள். அழுகிறாள். மீண்டும் படுக்கையில் விழுகிறாள்.

ரோமியோ : நெஞ்சைத் துளைக்கும் துப்பாக்கி ரவையைப் போல என் பெயரை கேட்டதும் துடிக்கிறாளா தாதி ? சொல்லுங்கள் அருட்தந்தையே என் உடலில் எந்த பாகத்தில் என் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது ? அதனை வெட்டி எறிந்து விடுகிறேன். ( தனது குறுவாளை கையினில் எடுக்கிறான் )

பாதிரியார் :உன் அவநம்பிக்கையை கொஞ்சம் நிறுத்து ரோமியோ. நீ ஆண்மகன்தானா? உன் கண்களில் வழியும் கண்ணீர் உன்னை ஒரு பெண்பிள்ளையாக காட்டுகிறது. உன்னுடைய கடுஞ்செயல்கள் ஒரு கொடிய மிருகத்தின் சீற்றத்தை போல உள்ளது. ஆண்மகன் தோற்றத்தில் ஒரு பெண்ணின் செயல். என்னை வியப்படைய வைக்கிறாய். நான் ஆணையிட்டு சொல்வேன் உன்னுடைய இந்தச் செயல் வழக்கமாக நடுநிலையுடன் நடந்து கொள்ளும் உன்னுடைய தன்மையை போல இல்லை. நீ டிபல்டை கொன்றாயா? இப்போது உன் செய்கை உன்னை தற்கொலை செய்து கொள்ளத் தூண்டும் வண்ணம் உள்ளது. உன் தற்கொலையால் ஜூலியட்டும் உயிரை இழக்க நேரிடும். உன் பிறப்பையும் இந்த பூமியையும் அந்த வானகத்தையும் ஏன் பழிக்கிறாய்’ ? பூமியும் வானமும் நிர்ணயம் செய்யும் உன்னுடைய அற்புதமான பிறப்பை இப்படி இழக்க சம்மதிப்பாயா ? ச்சீ ச்சீ !உன் மனதிற்கும், பெயருக்கும், உன் காதலுக்கும் நீ பேரவமானம் தேடிக் கொள்ளப் போகிறாய். உன் உடல் கண்ணியமான மனித உடல் இல்லை. வெறும் மெழுகு உருவம்தான். உன் காதல் பொய் வாக்குறுதிகளால் கட்டமைக்கப்பட்டுள்ளது. எந்தக் காதலை நீ தழைக்க வைக்க நினைத்தாயோ அதனை நீ வேரோடு அழித்துக் கொண்டிருக்கிறாய். உன் தோற்றத்திற்கும், காதலுக்கும் மூல காரணமான உன்னுடைய புத்திசாலித்தனம் இரண்டையும் .கெடுத்துக் கொண்டிருக்கிறது. ஒரு திறமையற்ற வீரனின் துப்பாக்கியில் இருக்கும் கந்தக பொடி போல நீ உன் காதலை வீணாக கெடுத்துக் கொள்கிறாய். எவற்றை உன் தற்காப்பிற்காக வைத்துக் கொண்டிருக்கிறாயோ அவை உன்னை காவு வாங்கப்போகிறது. எழுந்திரு மகனே ! உன்னுடைய ஜூலியட் உயிருடன் இருக்கிறாள். எவருக்கு என்பது வேண்டாம் நீ உன் இன்னுயிரை இழக்க இருந்தாய். டிபல்ட் உன்னைக் கொன்றிருப்பான். ஆனால் நீ அவனைக் கொன்று விட்டாய். அதற்கு சந்தோஷப்படு. எந்தச் சட்டம் உன் மரணத்தை நிர்ணயிக்க இருந்ததோ அது உன் மேல் கொஞ்சம் கருணைகாட்டி நாடு கடத்துதலாக மாறியுள்ளது. நல் ஆசீர்வாதங்கள் உன்னைப் பின் தொடர்கிறது. சந்தோஷம் தேவையான அளவு உன்னுள் குடி கொண்டுள்ளது. ஆனால் சொல்பேச்சு கேட்காத பாவப்பட்ட பெண்ணை போல உன் அதிர்ஷ்டத்தையும் காதலைப் பற்றியும் புலம்புகிறாய். கவனமாகக் கேள். உன்னைப் போன்று புலம்புபவர்கள் பரிதாபமாக இறக்கிறார்கள். திருமணத்தில் நிறைவடைய வேண்டிய உன் காதலை ஏற்றுகொள். அவள் மாடத்தின் மீதேறி அவளுடைய படுக்கையில் அவளை சமாதான படுத்து. இரவுக் காவலாளிகள் காவலுக்கு வரும்முன்னர் அவளுடைய இடத்திற்குச் செல். அதன்பிறகு நாளை மான்சுவா நகருக்கு செல். அங்கேயே வசி. நாங்கள் உங்கள் இருகுடியின் பகைமையைப் போக்கி , இளவரசரையும் சமாதானம் செய்து , உன்னுடைய திருமணத்தை ஊரறிய நடத்தி உன்னுடைய தண்டனையை குறைத்து இப்போது உனக்கு இருக்கும் சந்தோஷத்தைப் போல இருபதாறாயிரம் மடங்கு சந்தோஷத்தைக் கொண்டுவரும் வரையில் காத்திரு. நீ முதலில் செல் தாதி. ஜூலியட்டிற்கு என் வாழ்த்துகளைத் தெரிவி. வீட்டில் உள்ள அனைவரையும் படுக்கையில் கட்டிப்போடச் சொல். எந்த துக்கம் அவர்களை அழுத்துகிறதோ அதே துக்கம் அவர்களை தூக்கத்தில் ஆழ்த்தும். ரோமியோ அதன் பிறகு அங்கு வருவான்.

செவிலி : உங்களுடைய இவ்வளவு நல்ல அறிவுரைகள் முழுவதையும் கேட்க நான் இங்கேயே தங்கி விடலாம் என்று வருகிறது. என்றும் படித்தவர்கள் படித்தவர்கள்தான். ( ரோமியோவிடம் ) நான் முதலில் போகிறேன். நீங்கள் வந்து விடுங்கள்.

ரோமியோ : அதைப் போலவே செய் தாதி. என் காதலியிடம் என்னுடன் வாதம் செய்ய தயாராக இருக்கச் சொல்.

செவிலி : நல்லது ஐயா. என் சின்ன எஜமானி உங்களிடம் ஒரு மோதிரத்தைக் கொடுக்கச் சொன்னாள்.( அவனிடம் ஜூலியட் கொடுத்த மோதிரத்தை கொடுக்கிறாள் ) சீக்கிரம் வந்து விடுங்கள். இப்போதே நேரமாகி விட்டது. ( அகல்கிறாள் )

ரோமியோ : அப்பா இப்போதுதான் நான் சமாதானமானேன்.

பாதிரியார் : இந்த மனதுடனே செல். இதுதான் உன் நிலை. ஒன்று இரவுக்காவலர்கள் வரும் முன்னர் போ. அல்லது இரவில் செல்வதென்றால் மாறு வேடத்தில் செல். சிறிது காலம் மான்சுவாவில் வசி. உன் சேவகனைக் கொண்டு உனக்கு அவ்வப்பொழுது செய்தி அனுப்பிக் கொண்டிருக்கிறேன். உன் கரத்தைக் கொடு.கிளம்பு. நேரமாகிறது. இரவு வணக்கம்.

ரோமியோ : இழந்த என் சந்தோஷம் என்னை அழைக்காதிருக்குமானால் இவ்வளவு குறுகிய காலத்திற்குள் உங்களை பிரிய எனக்கு வருத்தமாக உள்ளது. வருகிறேன். ( அகல்கிறான் )

காட்சி-4.

திருவாளர் கபுலெட்டின் இல்லம். திருவாளர் மற்றும் திருமதி கபுலெட் மற்றும் பாரிஸ்.

கபுலெட் : துரதிர்ஷ்டவசமாக ஆரம்பித்தது விபரீதமாகி விட்டது. எங்களுக்கும் ஜூலியட்டை சமாதானம் செய்து உங்களை மணக்க சம்மதிக்க வைக்க நேரமில்லாமல் போய்விட்டது. அவள் தனது உறவினனான டிபல்ட் மீது அதிக பாசம் வைத்திருந்தாள். எனக்கும் அதேதான். என்ன செய்வது நாங்கள் சாகப் பிறந்தவர்கள். நேரம் அதிகமாகி விட்டது. இனி ஜூலியட் கீழே இறங்கி வருவாள் என்று தோன்றவில்லை. நான் சொல்வதை நம்புங்கள் நீங்கள் இங்கே என்னை வந்து பார்த்திராவிட்டால் நானே ஒருமணி நேரம் முன்பு உறங்கச் சென்றிருப்பேன்.

பாரிஸ்: இது கலந்குவதற்கான நேரம் காதல் புரிவதற்கான நேரமன்று. நான் கிளம்புகிறேன். இரவு வணக்கம். உங்கள் மகளிடம் என் வந்தனங்களை சொல்லுங்கள்.

திருமதி கபுலெட் : நிச்சயம் சொல்கிறேன். இன்று அவள் அளவுக்குஅதிகமான சோகத்தில் தனது அறைக்கதவை சாத்திக் கொண்டு மேல் மாடத்தில் இருக்கிறாள்.

திருவாளர் கபுலெட் : ஐயா அவளிடம் தனிப்பட்டமுறையில் அவள் காதல் குறித்துஒரு வாதத்தை முன்வைக்கிறேன். அவள் அவசியம் என் சொற்படி நடப்பவள். அவள் என் பேச்சை கேட்டு நடப்பவள் மட்டுமில்ல அதற்கும் மேலாக எனக்கு உறுதுணையாக இருப்பாள். இதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை. அம்மா நீ அவளுடைய அறைக்குச் செல் அல்லது உன் படுக்கையறையில் தூங்கச் செல். இதோ இந்த பாரிசின் காதலை அவளிடம் கூறு. அவளிடம் கூறு…..என்னைப்பார்…….புதன்கிழமை….இன்று என்ன கிழமை?

பாரிஸ் : திங்கட்கிழமை ஐயா.

திருவாளர் கபுலெட் : திங்கள்…நல்லது புதன் உடனே வந்து விடும். வியாழன் பரவாயில்லை.அவளிடம் சொல் வரும் வியாழன்று அவள் ஒரு கண்ணியமான பிரபுவை மணக்க இருக்கிறாள் என்று. நீயும் தயாராகி விடுவாய் அல்லவா? அவசரக் கல்யாணம் என்று எண்ணுகிறாயா ? மிகவும் ஆடம்பரமாக செய்ய வேண்டியதில்லை. ஒருசில நண்பர்களை மட்டும் அழைப்போம். ஆடம்பரமாக நடத்தினால் நமது உறவினர்கள் டிபல்ட் இறந்து சிறிது காலத்திற்குள் இப்படி ஒரு மணவிழாவா என்று கேட்பார்கள். அரை டஜன் நண்பர்களை அழைத்து மணவிழா செய்வோம். நீ என்ன நினைக்கிறாய் ? வியாழக்கிழமை சரியாக இருக்கும் இல்லையா ?

பாரிஸ் : ஐயா வியாழன் ஏன் நாளையே வரக்கூடாது என்று எனக்கு தோன்றுகிறது.

திருவாளர் கபுலெட் : நல்லது நீ கிளம்பலாம் இரவு வணக்கம். சரி மணவிழா வியாழன்று நடைபெறும். நீ போகும்போது ஜூலியட்டை அவளது படுக்கையறையில் சென்று பார்த்துவிட்டு போ. வரும் வியாழன்று திருமணத்திற்கு தயாராக இருக்கச் சொல்.,( பரிசிடம் ) வந்தனம் பிரபு. நான் இப்போது உறங்கச் செல்கிறேன்.இரவு வெகுநேரமாகி விட்டது. விட்டால் பொழுது விடிந்தே விடும். இரவு வணக்கம்.

( அனைவரும் அகல்கின்றனர். )

திரை.

காட்சி-5

ஜூலியட் வீட்டின் மேல்மாடி

ஜூலியட் : கிளம்புகிறாயா ரோமியோ ? விடிவதற்கான அறிகுறியே தென்படவில்லையே. இப்போது கூவியது வானம்பாடி. சேவல் இல்லை.பயப்படாதே. தினமும் அந்த மாதுளை மரத்தில் அமர்ந்து இரவின் அழகை ரசித்து இந்த வானம்பாடி இப்படிக் கூவும். என்னை நம்பு.

ரோமியோ : அது சேவல்தான். விடியலின் பறவை. வானம்பாடி இல்லை.கீழ்த் திசையின் ஓரங்களில் செக்கர் கோடுகள் ஏன் தோன்ற வேண்டும்? இரவின் ஒளி வடியத் தொடங்கிவிட்டது. மகிழ்காலை மலையின் மேல் முழங்கி வருவதைப் பார். ஒன்று நான் சென்று வாழ வேண்டும். அல்லது இருந்து சாக வேண்டும்.

ஜூலியட் : அந்த ஒளி விடியலின் ஒளியன்று. எரி நட்சத்திரத்தின் ஒளியாக இருக்கும். நீ மான்சுவா செல்வதற்கு வழி காட்டும் எரிநட்சத்திரம். கொஞ்சம் என்னுடன் இரேன். இப்போதே கிளம்ப வேண்டாம்.

ரோமியோ : என்னை சிறைபிடிக்கட்டும். எனக்கு மரணதண்டனை விதிக்கட்டும். எனக்கு கவலையில்லை. இதுதானே நீ விரும்புவது? மேகத்தின் வெளுப்பு விடியலில்லை என்று நானும் கூறுகிறேன். நிலவின் பால் ஒளி என்கிறேன். கூவுவது சேவல் இல்லை இரவு வானம்பாடியின் குரல் என்கிறேன். நான் ஓடாமல் தேங்குகிறேன். மரணமே வா . ஜூலியட்டின் விருப்பம் இது. இப்போது சந்தோஷமா என் உயிரே? வா காலை வரை பேசுவோம்.

ஜூலியட் : இது அதுதான். இது அதுதான். சுதி மாறி கூவுவது வானம்பாடிதான். அதனால்தான் அப்படி ஒரு கோரமான குரல். இரவையும் பகலையும் வானம்பாடி தனது மெல்லிய குரலால் பிரிக்கிறது என்பார்கள். வானம்பாடி தனது கோரமான விழிகளை தவலயிடமிருந்து பெற்றதாகக் கூறுவார்கள். இன்று அதன் குரலைக் கேட்டால் கண்களை மட்டுமல்ல குரலையும் அந்தத் தவளையிடமிருந்துதான் பெற்றிருக்க வேண்டும். இந்தக் குரல் உன் தோள்களையும் என் தோள்களையும் பிரிக்கும் குரல். அவர்கள் உன்னைப் பிடிக்க மனித வேட்டை ஆடி வருகிறார்கள்.போ அகன்று விடு. ஒளி மேலும் மேலும் பெருகி வருகிறது.

ரோமியோ : அதிக வெளிச்சம் அதிக துயரம்.

( செவிலி வருகிறாள் )

செவிலி : அம்மணி

ஜூலியட் : தாதி.

செவிலி : உங்கள் தாயார் வந்து கொண்டிருக்கிறார். பொழுது புலர்ந்து விட்டதம்மா. ஜாக்கிரதை. பாத்து நடந்து கொள்ளுங்கள்.

ஜூலியட் : சாளரம் வழியே பகல் நுழையட்டும் உயிர் போகட்டும்.

ரோமியோ : வந்தனம் வந்தனம். ஒரு முத்தம் கொடு சென்று விடுகிறேன்.

( முத்தமிட்டுக் கொள்கின்றனர் . ரோமியோ நூலேணியை இறக்கி விட்டு கீழே இறங்கிச் செல்கிறான் )

ஜூலியட் : இப்படிதான் செல்ல வேண்டுமா ரோமியோ என் அன்பரே? என் பிரபு ? என் அத்தான் என் காதலா.. ஒரு நிமிடத்தில் பல நாட்கள் உள்ளன. இப்படி கணக்கு பண்ணினால் நான் ரோமியோவை பல வருடங்கள் கழித்து கிழவியாகத்தான் சந்திப்பேன்.

ரோமியோ : வருகிறேன். என் காதலை வெளிப்படுத்த எந்த ஒரு சந்தர்பத்தையும் நான் நழுவ விடமாட்டேன்.

ஜூலியட் : நாம் மீண்டும் சந்திப்போம் என்று நம்புகிறாயா ரோமியோ ?

ரோமியோ : எனக்கு அதில் எள்ளளவும் சந்தேகம் கிடையாது ஜூலியட். இந்த வருத்தங்கள் நாம் பின்னால் அனுபவிக்கும் சந்தோஷங்கள்.

ஜூலியட் : தீயவற்றை எண்ணி நைந்து போன ஆன்மா என்னுடையது ரோமியோ. நீ கீழே நின்று கொண்டிருப்பது ஏதோ கல்லறையில் இருப்பதை போல உள்ளது. ஒவ்வொரு கணத்திலும் உன்னைப் பற்றி நான் தினமும் அறிய வேண்டும். ஒன்று என் பார்வையில் கோளாறு இருக்க வேண்டும். அல்லது நீ வெளுத்து காணப்பட வேண்டும்.

ரோமியோ : என் கண்களுக்கும் நீ வெளுத்துதான் தெரிகிறாய். நம் சோகம் நம் வண்ணங்களை உறிஞ்சு விடுகின்றன. போய்வருகிறேன் அன்பே ! ( ரோமியோ மறைகிறான் )

ஜூலியட் :என் செல்வமே என் செல்வமே.அறிந்தவர்கள் நீ நிலையற்றது என்று கூறுகின்றனர். நீ நிலையற்றது என்றால் ரோமியோவை உன்னால் என்ன செய்ய முடியும்? அவன் நம்பிக்கையின் மறுவடிவம். செல்வமே அவனிடம் நில்லாது அகல். அவன் விரைந்து வீட்டிற்கு செல்லட்டும்.

திருமதி கபுலெட் : ஹேய் ஜூலியட் நீ விழித்துக் கொண்டு விட்டாயா?

ஜூலியட் : யார் அழைப்பது ? என் தாயா? நேரம் கழித்து தூங்கச் செல்கிறாளா? அல்லது நேரம் ஆவதற்கு முன்பே எழுந்து விட்டாளா? எந்த விபரீத செயல் அவளை இங்கு அழைத்து வருகிறது ?

(திருமதி கபுலெட் உள்ளே நுழைகிறார் )

திருமதி. கபுலெட் : ஜூலியட் என்ன நடக்கிறது இங்கே ?

ஜூலியட் : எனக்கு கொஞ்சம் உடல்நிலை சரியில்லை சீமாட்டி.

திருமதி.கபுலெட் : இன்னுமா உனது உறவினன் டிபல்டின் மரணத்தை நினைத்து அழுது கொண்டிருக்கிறாய் ? நீ விடும் கண்ணீர் அவன் கல்லறையை மூழ்கடித்துவிடும் போலிருக்கிறதே. அவனை மீண்டும் உயிர்பிக்க உன்னால் முடியுமா? உன்னால் முடியாது. எனவே அழுவதை நிறுத்து. வருத்தம் குறைவாக இருக்கும்போது உன் அபரிமிதமான அன்பு வெளிப்படும். ஆனால் வருத்தம் அதிகமானால் உன் அறிவீனம்தான் வெளியில் தெரியும்.

ஜூலியட் : இருக்கட்டும் அந்தப் பேரிழப்பிற்கு நான் அழுது கொண்டிருப்பதில் தவறில்லை.

திருமதி.கபுலெட் : இழப்பிற்கு நீ வருந்தலாம். ஆனால் இறந்தவன் வருந்த முடியாது.

ஜூலியட் : நான் அழுது கொண்டே என்னுடைய இழப்பிற்காக வருந்துகிறேன்.

திருமதி. கபுலெட் : இறந்தவனுக்காக நீ இங்கே அழுது கொண்டிருக்கிறாய். ஆனால் அங்கே அவனைக் கொன்ற அந்த கொலைபாதகன் நலமாக இருக்கிறான்.

ஜூலியட் : யார் அந்த பாதகன்.

திருமதி.கபுலெட் :அந்த பாதகன் ரோமியோ.

ஜூலியட் ( திருமதி.கபுலெட்டிற்குக் கேட்காத வண்ணம் ) அவன் பாதகனாக இருக்க முடியாது (திருமதி.கபுலெட்டிடம் ) கடவுள் அவனை மன்னிக்கட்டும். அவனை விட வேறு எவராலும் என்னை இப்படி வருத்தப்பட வைக்க முடியாது.

திருமதி.கபுலெட் : அதற்க்குக் காரணம் அந்தத் துரோகி இன்னும் உயிருடன் இருக்கிறான்.

ஜூலியட் : ஆமாம் அம்மணி. என் கரங்களுக்கு எட்டாத தொலைவில் இருக்கிறான். என்னைத் தவிர வேறு யாரும் என் உறவினனின் கொலைக்கு அவனைப் பழி வாங்க முடியாது.

திருமதி.கபுலெட் : வருத்தப்படாதே . அவனை பழி வாங்க வேண்டியது எங்கள் பொறுப்பு. அழுவதை நிறுத்து. நான் மான்சுவா விற்கு என்னுடைய ஆள் ஒருவனை அனுப்புகிறேன். அங்குதான் அந்த கொலைபாதகன் நாடு கடத்தப்பட்டு வசித்து வருகிறான். என்னுடைய ஆள் அவன் இடத்திற்கு சென்று அவன் அருந்தும் பானத்தில் விஷம் வைப்பான். பிறகு டிபல்ட் போய்ச் சேர்ந்த இடத்திற்கே அவனும் போய்ச் சேர்வான். அதற்குப் பிறகு நீ சமாதானம் அடைவாய்.

ஜூலியட் :என் கைகளில் ரோமியோ சிக்காதவரையில் என் உறவினன் டிபல்டின் மரணம் என்னை வாட்டிக் கொண்டுதான் இருக்கும். உன்னுடைய ஆளை அவனுக்கு விஷம் கொடுக்க அனுப்பினால் அந்த விஷத்தை நான் நன்றாக பாடம் பண்ணித் தருகிறேன். அதனைப் பருகியதும் ரோமியோ மீளா உறக்கத்தில் ஆழ்ந்திட வேண்டும். அவன் பெயரைக் கேட்டாலே பற்றிக் கொண்டு வருகிறது. என் டிபல்ட் மீது எனக்கு இருக்கும் பாசத்தின் காரணமாக ரோமியோவை பிடிக்கமுடியவில்லையே என்று வருத்தமாக உள்ளது.

திருமதி.கபுலெட் : நீ வழியைச் சொல். நான் ஆள் ஏற்பாடு செய்கிறேன். போகட்டும். உனக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி.

ஜூலியட் : சந்தோஷச் செய்தி, தேவையான சமயத்தில்தான் வரும். கூறுங்கள் அன்னையே அது என்ன மகிழ்ச்சியான செய்தி ?

திருமதி. கபுலெட் : உன்னை கவனித்துக் கொள்ள உனக்கு நல்ல அக்கறையுள்ள தந்தை இருக்கிறார் ஜூலியட். உன்னுடைய இந்தப் பெரிய துயரத்தை ஒரு திடீர் சந்தோஷ தினத்தின் மூலம் மாற்றப் போகிறார்.. நீயும் என்னவென்று நினைத்துப் பார்த்திருக்க மாட்டாய் நானும் அப்படி யோசிக்கவில்லை.

ஜூலியட் : சந்தோஷ தினமா? எந்த தினமம்மா அது ?

திருமதி.கபுலெட் : நல்லது என் கண்ணே ! வரும் வியாழக் கிழமை காலை வேளையில் கம்பீரமும் மிடுக்கும் பொருந்திய மேன்மைமிக்க பிரபு பாரிஸ் உன்னை புனித பீட்டர் தேவாலயத்தில் ஆனந்த மணமகளாக மாற்றுக்கிறார்..

ஜூலியட் : புனித பீட்டர் தேவாலயமாக இருந்தால் என்ன? நான் அந்த புனித பீட்டர் மீதும் கூட ஆணையிட்டுச் சொல்வேன் பாரிசால் என்னை ஒரு ஆனந்த மணமகளாக மாற்ற முடியாது. எதற்கு இத்தனை அவசரம் திருமணத்திற்கு? எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. என்னை காதலிக்காத ஒருவரை நான் எப்படி என் கணவனாக ஏற்றுக் கொள்ள முடியும்? உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன் அம்மா அப்பாவிடமும் அந்தப் பிரபுவிடமும் சொல்லி விடுங்கள் நான் இப்போது திருமணம் செய்து கொள்வதாக இல்லை. அப்படி நான் திருமணம் செய்து கொள்வதென்றால் அது நான் வெறுக்கும் ரோமியோவைத்தான். பாரிசை அன்று. இதுதான் நான் சொல்ல விரும்புவது.

திருமதி. கபுலெட் : உன் அப்பாவே வருகிறார். அவரிடம் நீ சொன்னதைச் சொல். அவர் எப்படி அதைக் காதில் வாங்கிக் கொள்கிறார் என்று பார்க்கலாம்.

( செவிலியும், திருவாளர். கபுலெட்டும் உள்ளே நுழைகின்றனர். )

கபுலெட் : பகலவன் மறையும்போது பணி பொழியத் துவங்கும். ஆனால் என் சகோதரனின் மகன் டிபல்ட் இறந்தவுடன் இங்கே மழை பொழிவது போலிருக்கிறது என்ன ஆயிற்று பெண்ணே ? உன் விழிகள் மழைக்கால ஊற்றுக்கண் போல பொழிகிறதே. இன்னும் அழுது கொண்டா இருக்கிறாய் ? உன்னுடைய இந்தச் சின்ன உடல் எனக்கு ஒரு கப்பலைபோலவும் கடலைப் போலவும், கடலில் வீசும் காற்றை போலவும் தெரிகிறது. உன் கண்கள் கடல் போல் உள்ளது. உன் உடல் அந்தக் கடலில் பயணிக்கும் கப்பல் போல் உள்ளது. உன் பெருமூச்சு கடலில் வீசும் காற்றைப் போல் உள்ளது. உன் பெருமூச்சு எனும் காற்று சீரும் கண்ணீருடன் சேரும்போது உன் கப்பல் போன்ற மேனியை சாய்த்து விடும் அம்மா. எனவே ஒரு முன்னறிவிப்பு இல்லாத அமைதியை நீதான் தருவித்துக் கொள்ள வேண்டும். என் மணவாட்டியே நிலைமை எப்படி உள்ளது ? நான் சொல்லச் சொன்னவற்றை சொல்லி விட்டாயா?

திருமதி.கபுலெட் : சொல்லி விட்டேன். பயனில்லை. அந்த முட்டாள் தனது கல்லறையைத்தான் மணக்கப் போகிறாள்.

கபுலெட் : பொறு பொறு அமைதியாக இரு மணவாட்டி. எப்படி ? எப்படி அவள் இதை மறுப்பாள் ? அவள் அத்தனை நன்றி இல்லாதவளா? இப்படி ஒரு மணமகன் கிடைப்பதில் அவளுக்குப் பெருமைதானே ? தான் மிகவும் கொடுத்து வைத்தவள் என்ற நினைப்பு அவளுக்கு வரவில்லையா? இப்படி ஒரு செல்வாக்கும் அந்தஸ்தும் உள்ள மணமகனுக்கு தான் கொஞ்சம் கூட பொருத்தமில்லாதவள் என்று அவளுக்குத் தோன்றவில்லையா?

ஜூலியட் : நீங்கள் பார்த்த வரன் மீது எனக்கு பெருமையில்லை. ஆனால் எனக்கு வரன் பார்த்த உங்கள் எண்ணத்தின் மீது நன்றியும் விசுவாசமும் உள்ளது.. நான் வெறுப்பதன் மீது எனக்கு பெருமையில்லை. ஆனால் அந்த வெறுப்பு எனக்கு காதலாக பரிந்துரைக்கப் படும்போது எனக்கு நன்றி விசுவாசம் ஏற்படுகிறது.

கபுலெட் : இது என்ன கன்றாவி ? என்ன மாதிரி இதனை அர்த்தப்படுத்திக் கொள்வது? ‘ பெருமை’, ‘ நன்றி விசுவாசம் ‘ ‘ நன்றிவிசுவாசம் இல்லை’ ‘, பெருமையில்லை’ மணவாட்டி. நீ அவளை கெடுத்து குட்டிச்சுவர் ஆக்கி விட்டாய்.நீ எனக்கு நன்றி விசுவாசமாகவும் இல்லை. உன்னுடைய செயல் எனக்கு பெருமை சேர்ப்பதாகவும் இல்லை. இருப்பினும் வரும் வியாழக்கிழமை புனித பீட்டர் தேவாலயத்தில் பிரபு பாரிசை மணக்க தயாராக இரு. நீ வரவில்லை என்றால் உன்னை இழுத்துக் கொண்டு செல்ல வேண்டியிருக்கும். கேடு கெட்டவள் ! மக்கிய குப்பை ! மூட்டைப் பூச்சி ! சவத்து மூதி !

திருமதி. கபுலெட் : வெட்கமாக இல்லை இப்படி பேச ? மூளை பிசகி விட்டதா உங்களுக்கு ?

ஜூலியட் : நல்லது தந்தையே ! நான் மண்டியிட்டு மன்றாடுகிறேன். என்னை பேச அனுமதியுங்கள். நான் என்ன சொல்லவருகிறேன் என்பதை பொறுமையுடன் கேளுங்கள்.

கபுலெட் : எங்கேயாவது போய்த்தொலை! சொல் பேச்சு கேட்காத பாவி. நான் சொல்வதைக் கேள். வியாழக்கிழமை தேவாலயம் போ. என் முகத்தில் விழிக்க உனக்கு இனிமேல் தகுதியில்லை. பதில் எதுவும் பேசாமல் வாயை மூடிக் கொண்டிரு.( ஜூலியட் எழுந்திருக்கிறாள் ) என் கைகள் திணவெடுக்கின்றன. மணவாட்டி ! கடவுள் நமக்கு இவள் ஒருத்தியைத்தான் மகளாக அளித்தார். அந்தக் கருணைக்கே நாம் இன்னும்நன்றி சொன்னதில்லை.. இப்போதுதான் தெரிகிறது இந்த ஒன்றே போதும். இவள் நாம் வாங்கி வந்த வரம் இல்லை ;சாபம். போகச் சொல் எங்கேயாவது இந்த போக்கிரியை. இவளைப் பார்க்கவே வெறுப்பாக உள்ளது.

செவிலி : கடவுளே ! ஐயா மிகவும் தவறு. நீங்கள் இவளை இவ்வளவு கீழ்த்தரமாக தூற்றக் கூடாது.

கபுலெட் : ஏன் புத்திசாலியே ? நீ வாயை மூடிக் கொண்டு பேசாமல் இரு கிழவி. நல்ல புத்திமதி. உன் வம்பை உன்னுடன் நிறுத்திக்கொள்.

செவிலி : நான் எதுவும் தவறாக பேசவில்லையே பிரபு.

கபுலெட் : ஆமாம் சொன்னார்கள்.

செவிலி : எனக்குக் கொஞ்சம் பேச அனுமதி கிடைக்குமா?

கபுலெட் : முணுமுணுக்காமல் வாயை மூடிக் கொண்டிரு. மதியம் சோற்றைக் கொட்டிக் கொள்ளும்போது உன் வம்பிகளிடம் பேசு. இங்கே வேண்டாம்.

திருமதி.கபுலெட் : ஏன் இதற்குப் போய் இவ்வளவு கோபம் உங்களுக்கு ?

கபுலேய்ட் : அடக் கடவுளே ! எனக்கு பைத்தியம் பிடிக்கும் போலிருக்கிறதே. இரவும் பகலும் , ஒவ்வொரு மணியிலும், வேலை பார்க்கும் இடம், கேளிக்கை இடம், மற்றவர்களுடன் இருக்கும் நேரம் எப்போதும் எனக்கு இவளுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளை பார்க்க வேண்டும் என்ற நினைப்புதான் இருந்தது.இப்போது பார்த்திருக்கும் வரனுக்கு என்ன குறை? உயர்குடியில் பிறந்த கணவான். திறமைசாலி. புத்திசாலி. ஒரு ஆண்மகனுக்குரிய வடிவம் உடையவன். ஆனால் இந்த முட்டாள் கண்களுக்கு இது எதுவும் தெரியவில்லை. ‘ எனக்கு திருமணம் வேண்டாம் ‘, ‘ எனக்கு காதல் வரவில்லை ‘ , ‘ நான் மிகவும் சிறியவள் ‘ , ‘மன்னியுங்கள், மன்றாடுகிறேன்’ என்று உளறுவாள் அதை நான் கேட்டுக் கொண்டிருக்கவேண்டும். இதோ பார். நீ இதற்கு மறுத்தால் உன்னை மன்னித்து விடுவேன். எவ்வளவு வேண்டுமானாலும் சொகுசாக இருந்து கொள்….ஆனால் இந்த வீட்டில் வேண்டாம். நான் சொல்வதை யோசி . எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று முடிவு செய். நான் இதனை விளையாட்டுக்குக் கூறவில்லை. திரும்பிப் பார்த்தால் வியாழக் கிழமை வந்து விடும். உன் நெஞ்சில் கையை வைத்து யோசி. நான் சொல்வதைக் கேள். என் நண்பனுக்கு உன்னை மணம் புரிவேன். இல்லையென்றால் தெருத்தெருவாக பசியில் பிச்சையெடுத்து மாண்டு போ. பிறகு உன்னை திரும்பிக் கூட பார்க்க மாட்டேன். உன்னை மீண்டும் வீட்டில் சேர்க்க மாட்டேன். திரும்பவும் யோசி. ஒரு முடிவுக்கு வா. நான் சொன்னது சொன்னதுதான்.( திருவாளர். கபுலெட் மறைகிறார் )

ஜூலியட் : என் மீளாத் துயரை பாக்க அந்தக் கடவுளுக்குக் கண்கள் இல்லையா? என் கண்ணான தாயே ! என்னை துரத்தி விடாதீர்கள். இந்தத் திருமணத்தை ஒரு மாதம் தள்ளிப்போடுங்கள் அதிகம் என்று எண்ணினால் ஒரு வாரம் தள்ளிப் போடுங்கள். இல்லையென்றால் மணமகள் அறையை டிபல்டின் கல்லறைக்கு அருகில் கட்டுங்கள்.

திருமதி. கபுலெட் : இனி என்னிடம் ஒரு வார்த்தை பேசாதே . உனக்காக எண்ணி எண்ணி நான் பட்ட வேதனை போதும்.

( திருமதி. கபுலெட் அகல்கிறாள் )

ஜூலியட் : ஓ தாதி ! இதனை எப்படி தடுப்பது ? என் கணவன்தான் எனக்கு இந்த பூமியில்; ஒரே நம்பிக்கை அந்தக் கடவுளிடம் செல்லாமல் என் நம்பிக்கைகளை என் காதலனால் மீட்டுத் தர முடியாதா? எனக்கு ஆறுதல் கூறுங்கள். எனக்கு வழி காட்டுங்கள். அந்தோ அந்தோ அந்தத் தெய்வங்களுக்கு தங்கள் தந்திரங்களை பிரயோகிக்க என்னைத் தவிர வேறு ஒருவரும் கிடைக்கவில்லையா? நீ என்ன சொல்கிறாய் தாதி ? ஒரு சிறிய மகிழ் செய்தி கூடவா உன்னிடம் இல்லை? எனக்குக் கொஞ்சமாவது ஆறுதல் கூறு தாதி.

செவிலி : இதைத்தான் சொல் விரும்புகிறேன். ரோமியோ நாடு கடத்த பட்டிருக்கிறான். அவன் மீண்டும் வந்து உன்னை மீட்பான் என்பதில் ஒருவருக்கும் நம்பிக்கையில்லை. அப்படி அவன் வருவான் என்றால் உன்னை தந்திரமாகத்தான் சிறையெடுக்க வேண்டியிருக்கும். அது நடக்கக் கூடிய காரியமில்லை. நீ பேசாமல் அந்த பிரபுவையே மணம்புரிந்து கொள். என்ன ஒரு கணவான் அவர். ரோமியோ அவருடன் ஒப்பிட்டால் கந்தல் துணி போன்றவன். என்னை எப்படி வேண்டுமானாலும் சாபமிடு. ஆனால் உனக்கு இந்த இரண்டாவது திருமணம் கண்டிப்பாக முதல் திருமணத்தை விடச் சிறந்ததுதான். சந்தேகமில்லை. உன் முதல் திருமணம் முடிவுக்கு வந்து விட்டது. ரோமியோ இங்கு இல்லை. அவனால் உனக்கு பயன் இல்லை.

ஜூலியட் : உன் அடிமனதிலிருந்துதான் பேசுகிறாயா தாதி ?

செவிலி : என் மனதிலிருந்து மட்டுமில்லை என் ஆன்மாவிலிருந்தும் பேசுகிறேன். வேண்டுமென்றால் இரண்டையும் சபித்துக் கொள்.

ஜூலியட் : அப்படியே.

செவிலி : என்னது ?

ஜூலியட் : நல்லது தாதி. இதுவரையில் எனக்கு பிரமாதமாக ஆறுதல் கூறியதற்கு மிக்க நன்றி. என் தாயிடம் நான் என் தந்தையை மனம் வருந்தப் பண்ணியதற்கு பாதிரியார் லாரன்ஸ் குடிலுக்கு பாவமன்னிப்பு கேட்கச் சென்றிருப்பதாகச் சொல்.

செவிலி : நல்லது இது கூட நல்ல யோசனைதான். நான் சொல்லிக் கொள்கிறேன்.

( செவிலி மறைகிறாள் . )

ஜூலியட் :கிழட்டுப் பிசாசு. கெட்ட புத்திக்காரி ! என் மணஒப்பந்தத்தை முறித்துக் கொள்வது எவ்வளவு பாவம். இவளா அப்படி செய்யச் சொன்னது ? என் கணவனை பற்றி இதே வாய்தானே இதற்கு முன்பு பல்லாயிரம் முறை புகழ்ந்து பேசியிருக்கிறது? நீயும் ஆயிற்று; உன் புத்திமதியும் ஆயிற்று. போ .தாதி இந்த நொடியிலிருந்து என் மனதில் தோன்றுவதையெல்லாம் உன்னிடம் சொல்லிக் கொண்டிருக்க மாட்டேன். நான் பாதிரியார் இல்லத்திற்கு சென்று வழி தேடுவேன். அதுவும் முடியவில்லை என்றால் என் உயிரை விடுவதற்கும் தயங்க மாட்டேன்.

( ஜூலியட் செல்கிறாள் )

திரை.

ரோமியோ ஜூலியட் ( அங்கம்-2. ) / ஆங்கிலவழி மொழியாக்கம் – சத்தியப்பிரியன்.

DSC_0844

 

 

 

 

சேர்ந்திசைப்பாடல்.

இசைக் குழுவினர் :

பழைய காதல் மஞ்சம் வரும்முன் உதிர்ந்ததே

புதிய காதல் நெஞ்சம் முழுவதும் மலர்ந்ததே.

காதலில் கலங்கிய காளைக்கு கன்னியின் காதல் நிலைக்கவில்லை.

ரோசலின் காதலில் மனம்வருந்தி சிந்திய கண்ணீர் காயவில்லை.

வாடிய நெஞ்சில் நீரூற்ற வந்தது புதிய காதலொன்று.

ஜூலியட் என்ற பேரழகில் ரோசலின் காதல் வாடுதிங்கே.

அவள் காதலித்தாள்’ அவன் காதலித்தான்

காதலர் இருவர் பார்வை வழி காதல்கம்பளம் நீண்டதிங்கே.

காதல் கொண்டால் உறவெல்லாம் பகையாகும் காலமிது.

காதல் கொண்டான் பகைஎன்னும் குடியோடு உடன்கொண்ட துணிவோடு.

பகைக்குடி காதல் என்பதனால் பாதி நடுக்கம் பாவைக்கு.

சாகசக் காதல் இல்லையது பாதி வருத்தம் காளைக்கு.

காதலில் அவளும் சளைக்கவில்லை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

காதல் சபதம் எதுவுமின்றி காளையின் காதலில் உவப்புமில்லை.

காதல் என்னும் சக்தி கொண்டு சந்திக்க முடிந்தது இருவருக்கும்.

காதல் என்னும் சக்திகொண்டு சாதிக்க முடிந்தது இருவருக்கும்.

 

காட்சி-1

ரோமியோ மட்டும் கபுலெட் வீட்டு மாடத்தின் அருகில் நுழைகிறான்.

ரோமியோ : என் இதயம் இங்கிருக்க வெற்றுடல் சுமந்து செல்வேனோ நான்? பூமியே சற்று திரும்பி உன் அச்சு எங்கிருக்கிறது என்று பார்.

( ரோமியோப் நகர்கிறான். பென்வோலியோவும் மெற்குஷியோவும் வருகின்றனர். )

பென்வோலியோ : ரோமியோ என் சகோதரா !

மெற்குஷியோ : நல்ல பையன். இப்போது அவன் வீட்டிற்கு சென்று உறங்கத் தொடங்கியிருப்பான்.

பென்வோலியோ : இந்தப் பக்கம் இந்தச் சுவர் தாண்டித்தான் சென்றான். இந்தத் தோப்பிற்குள்தான் சென்றிருப்பான்.

மெற்குஷியோ : அவனுக்குதான் மாயம் பண்ண தெரியுமா? எனக்கும் தெரியும். ரோமியோ ! பைத்தியக்காரா! பேராசைக்காரா ! காதலா! உன்னை ஒரு பெருமூச்சின் மூலம் வெளிபடுத்து. ஓர் எதுகையில் உன்னை வெளிபடுத்து நான் சமாதானம் அடைவேன். காதல் நோதல் என்று உளறு அது போதும். காதல் கடவுள் வீனசிடம் ஒரு வார்த்தை சொல். காதலர்கள் மேல் காமக்கணை தொடுக்கும் வீனசின் கண்ணிழந்த புதல்வன் க்யூபிடை புகழ்ந்து பேசு. அவன் நான் சொல்வதை கேட்கவில்லை; என்னை பார்க்கவில்லை; சைகையும் செய்யவில்லை. இந்த மனிதக் குரங்கு தவ்வி ஒட்டி விட்டது. அவனை மீண்டும் உயிர்ப்பித்துக் கொண்டு வரவேண்டும். ரோசலினின் மாயக் கண்களால் மந்திரம் போடுகிறேன்.அவளுடைய பளிங்கு போன்ற நெற்றியின் மூலம், அவளுடைய செக்கச் சிவந்த இதழ்களின் மூலம், அவளுடைய வாழைத் தண்டு கால்களினால், சிங்காரச் சிற்றிடையால் அவனைக் கட்டி போடுகிறேன். சூ மந்திரக்காளி அவனை இப்போதே இங்கே அழைத்து வா.

பென்வோலியோ : உன் மந்திரம் அவன் காதினில் விழுந்தால் நீ காலி.

மெற்குஷியோ : அவனுக்கு நான் போட்ட மந்திரத்தை கேட்டு கோபம் வராது. என் மந்திரம் காதலர்கள் இடையே அன்பை உயர்த்தும் நல்மந்திரம். காமத்தை உயர்த்தும் மந்திரம் அல்ல. இந்த மந்திரம் அவனை எழுப்புவதற்கு போடப்பட்ட மந்திரம்.

பென்வோலியோ : அந்த இருள்படிந்த மரங்களின் நிழலில் அவன் தன்னை புதைத்துக் கொண்டிருக்கிறான். அவன் காதல் ஒளியற்றது. எனவே அவன் இருளில் தன்னை மறைத்துக் கொண்டிருக்கிறான்.

மெற்குஷியோ : காதலுக்கு கண் இல்லை என்றால் அதற்கு குறிபார்த்து தாக்க தெரியாது. அவன் ஒரு நாகலிங்க மரத்தின் அடியில் அமர்ந்து அவன் மனைவியின் வடிவம் ஒரு நாகலிங்கப்பூ போல இருக்கும் என்று கற்பனை செய்து கொண்டிருப்பான். நாகப்படமும், லிங்கமும். ரோமியோ ! நான் என் கட்டிலுக்கடியில் படுக்கப் போகிறேன். இந்த திறந்தவெளி மஞ்சம் குளிரடிக்கிறது.( பென்வோலியோவிடம் ) வா படுக்க செல்லலாம்.

பென்வோலியோ : தோன்ற நினையாதவனை வேண்டி என்ன செய்வது? வா உறங்கச் செல்லலாம்.

(அவர்கள் அகல்கின்றனர் )

திரை.

காட்சி-2

( ரோமியோ மீண்டும் நுழைகிறான். ஜூலியட் அவள் வீட்டு மாளிகையின் மேல் மாடத்தில் தோன்றுகிறாள். )

ரோமியோ :நில் . அந்த சாளரத்தின் வழியே தோன்றும் ஒளிவெள்ளம் யாருடையது? ஓ! ஜூலியட் என்ற சூரியன் தோன்றும் கிழக்கு திசை அல்லவா அது? . அழகிய சூரியப் பிழம்பே உன் பளிச்சிடும் கிரணங்க’ளால் அந்த நிலவின் ஒளியை மங்கச் செய். நீயும் உன் தோழியரும் அவளை விட அழகு என்ற பொறாமையில் அந்த நிலவு ஒளி மங்கித் தெரிகிறது. உன் வரவால் அவளுடைய கன்னிமை மெருகு குலைந்து காணப்படுகிறது. என் காதல் கண்மணி மாடத்தில் தோன்றும் நேரம் நிலவே உனக்கு வானில் தோன்ற எந்தத் தகுதியும் இல்லை. போய் வா.அவள் என் கண்மணி; அவள் என் காதலி. அவளும் இதனை அறிவாள். அவள் ஆயிரம் வார்த்தைகள் பேசுகிறாள் இதழ்கள் அசையாமல். அவள் விழிகள் பேசும். நான் மறுமொழி கூறுவேன். அவள் என்னுடன் பேசவில்லை. வானில் மின்னும் இரு விண்மீன்களுடன் பேசுகிறாள். அந்த விண்மீன்கள் வேறு வேலையாக வெளியில் செல்வதால் அவை வரும்வரை இவளுடைய விழிகள் இரண்டும் விண்மீன்களாக வானில் மின்ன முடியுமா என்று அனுமதி கேட்கின்றன அவளிடம். அவள் விழிகள் கண்மீனாக இருந்தால் என்ன? விண்மீனாக இருந்தால் என்ன? பகல் வெளிச்சம் விளக்கின் ஒளியைச் சுற்றிப் படர்வதை போல. அவள் கன்னங்களின் ஒளி வனப்பு அவள் விழிச் சுடரின் எல்லைகளை தீட்டும் . விண்ணில் மின்னும் அவள் விழிகளின் பிரகாசத்தில் மயங்கி பறவைகள் பகலென பாடத் துவங்கும். ஓ ! நான் அவளுடைய கையுறைகளாக இருந்திருந்தால் இந்நேரம் அவள் கன்னங்களை வருடிக் கொண்டிருப்பேன்.

ஜூலியட் : என்னவனே !

ரோமியோ : அவள் பேசுகின்றாள். மேலும் பேசு தேவதையே ! இந்த இரவின் வெளிச்சமென மின்னும் நீ ஒரு தேவதை. எனக்கு மேல் நீ இருந்து பார்ப்பது இறந்தவர்களை அழைத்து செல்ல வரும் விண்ணக தேவதையைப் போல தோன்றுகிறாய். இறந்தவன் மேகத்தில் மிதக்கும் தேவதைகளை அண்ணாந்து பார்ப்பது போல நான் உன்னை பார்க்கிறேன்.

ஜூலியட் ( ரோமியோ தான் பேசுவதை அறியாமல் ) ரோமியோ ! ஓ ரோமியோ! நீ ஏன் ரோமியோ என்று அழைக்கப் படவேண்டும் ? உன் தந்தையை மறந்து உன்னுடைய ரோமியோ என்ற பெயரை மாற்றிக் கொள். அல்லது நீ என்னைக் காதலிப்பதாக சத்யம் செய் நான் என் கபுலெட் பெயரைத் துறந்து விடுகிறேன்.

ரோமியோ ( தனக்கு தானே ) கேட்கட்டுமா ? பேசட்டுமா?

ஜூலியட் ( ரோமியோ இருப்பது தெரியாமல் ) உன் பெயர் என் எதிரியின் பெயர். நீ ஒரு மாண்டேகுவாக இல்லாமல் போனாலும் நீ நீயாகத்தான் இருப்பாய். மாண்டேகு ! அது என்ன மாண்டேகு ? அது என்ன உடலின் ஒரு அங்கமா? சிரமா? கரமா? அடியா? ஒரு பெயர் அவ்வளவுதான். பெயரில் என்ன இருக்கிறது ? ரோஜாவை வேறு பெயரிட்டு அழைத்தால் அது மணக்காமல் போய்விடுமா ? ரோமியோவை ரோமியோ என்று அழைக்காவிட்டாலும் அவன் கட்டழகன்தான்.ரோமியோ உன் பெயரை உதிர்த்து விடு. உன் உடலின் எந்தப் பகுதியிலும் சேராத உன் பெயரை உதிர்த்து விட்டு என்னை முழுவதும் ஏந்திக் கொள்

ரோமியோ : ( ஜூலியட்டை பார்த்து ) உன் வார்த்தைகளை நம்புகிறேன் என் கண்மணி ! என்னை காதல் என்று அழை. போதும் நான் மறுபடி ஜன்மம் எடுப்பேன் உனக்காக. என் புனர்ஜன்மத்தில் நான் ரோமியோவாக இருக்க மாட்டேன்.

ஜூலியட் : யார் நீ? இருளில் மறைந்து என் அந்தரங்கத்தை ஒட்டு கேட்கும் உன் பெயர் என்ன?

ரோமியோ : பெயர் மூலம் என்னை உங்களுக்கு அறிமுகபடுத்திக் கொள்ள முடியாது. என் பிரிய துறவியே ! உனக்கு பிடிக்காத என் பெயர் எனக்கும் பிடிக்கவில்லை. என் பெயர் எழுதியுள்ள துண்டுக் காகிதத்தை கூட நான் கிழித்தெறிந்து விடுவேன்.

ஜூலியட் : உன் மொழி புரியவில்லை உன் த்வனி புரிகிறது. நீ ரோமியோதானே ? நீ அந்த மானடேகுதானே?

ரோமியோ : நீ விரும்பவில்லை என்றால் சுந்தரியே அவை இரண்டும் என் பெயரில்லை.

ஜூலியட் : நீ எப்படி இங்கே வந்தாய் ரோமியோ ? தோப்பை சுற்றி எழுப்பப்பட்டுள்ள மதில் உயரமானது. ஏறுவதற்குக் கடினமானது. என் மக்கள் ,பார்வையில் பட்டால் நீ உயிருடன் தப்ப முடியாது.

ரோமியோ : காதலின் மெல்லிய சிறகுகளை விரித்து இந்த மதிலைக் கடந்து வந்தேன். கற்சுவர்கள் காதல் சிறகுகளைத் தடுக்கும் திறனற்றவை. காதலே காதலனின் சக்தி. எனவே உன் மனிதர்களால் என்னை ஒன்றும் செய்ய முடியாது.

ஜூலியட் : அவர்கள் உன்னை பார்த்தால் கொன்று விடுவார்கள்.

ரோமியோ : உன் விழிகளில் மின்னும் கோபத்தைவிடவா உன் மனிதர்களின் வாளின் கோபம்’ என்னைக் கொன்று விடும் ? உன் கண்களால் என்னைப் பார். அது போதுமே நான் அவர்கள் கண்களிலிருந்து தப்பிக்க?

ஜூலியட் : உன்னை அவர்களிடமிருந்து காப்பாற்ற எதையும் கொடுக்க நான் ஆயத்தம்.

ரோமியோ : அவர்கள் கண்களிலிருந்து தப்பிக்க நான் இந்த இரவு என்ற போர்வையை அணிந்து கொள்வேன். நீ என்னை காதலிக்க மறுத்தால் அவர்கள் பார்வையில் நான் விழுவேன். காதலில் உயிர்க்கும் என் உயிர் உன் வெறுப்பில் கருகட்டும். தவறில்லை.

ஜூலியட் : இந்த இடத்தின் கீழே நான் இருப்பேன் என்று உனக்கு சொன்னவர்கள் யார்?

ரோமியோ : காதல் என்னை வழி நடத்தியது. காதல் எனக்கு வழி காட்டியது. காதல் தன் கண்களை எனக்கு அளித்தது. நான் ஒரு கடற்பயணி இல்லை. நீ என்னுடைய எட்டா தீவென்றால் நான் காதல் கடல் கடக்கும் ஒரு கடற்பயணியாவேன்.

ஜூலியட் : என்னை இரவுத் திரையிடவில்லை என்றால் உன் காதல் மொழியினால் என் கன்னங்கள் சிவந்திருப்பதை பார்த்திருப்பாய். உன்னுடன் இனிந்திருந்தால் அந்த ஆனந்தத்தில் நான் கூறியவற்றை மறுத்திருப்பேன். என் வாழ்த்துரையே உன்னை வழி அனுப்பி வைக்கிறேன். நீ என்னை காதலிக்கிறாய் அல்லவா? நீ ஆம் என்றுதான் கூறுவாய். மாறாக நீ காதலிப்பதாக சபதம் செய்தால் உன் பேச்சு பொய்யுரை என்பது விளங்கி விடும்.காதலர்கள் பொய்யுரைக்கும்போது அவர்கள் விதியை நினைத்து ஜூபிடர் ஏளனம் செய்கிறான். என் இனிய ரோமியோ ! நீ என்னை காதலிப்பது உண்மை என்றால் அதற்கு எளிமையான வார்த்தைகள் போதும் அலங்காரமும் சூளுரைகளும் வேண்டாம். என்னை அடைவது எளிது என்று தவறாக நினைத்தால் உன் நினைப்பு என்னை எரிச்சலடையச் செய்யும். உன் எண்ணம் ஈடேறாமல் போய்விடும். உன்னை உண்மையில் காதலிக்கிறேன் அழகிய ரோமியோ ! அதனால் என் நடத்தை உனக்கு எளிதாகத் தோன்றலாம். மேலுக்கு வெட்கப்படும் பெண்களை விட என் காதல் புனிதமானது மாண்டேகு. நான் உன்னிடம் சற்று தள்ளி நின்றுதான் பழகியிருக்க வேண்டும் ரோமியோ. எனக்கு தெரியாது என்னுடைய மனதில் இருந்த உன்னுடைய காதலை நான் வெளிபடுத்துவதை நீ மறைந்திருந்து ஒட்டு கேட்டு கொண்டிருக்கிறாய் என்று. என் காதல் வெளிப்பட்ட நிலையில் நான் அடைவதற்கு எளியவள் என்று எண்ணி விடாதே. என் காதல் தீவிரமற்றது என்று நம்பி விடாதே.

ரோமியோ : பழ மரங்களின் மேல் வெள்ளிக் கோடுகள் வரையும் அந்த வான்நிலவின் மேல் ஆணையிட்டுக் கூறுகிறேன் என் காதல் உண்மையானது.

ஜூலியட் : தினம் மாறும் நிலவின் மீது ஏன் ஆணையிடுகிறாய்? மாதம் ஒரு முறை தேய்ந்து மறையும் நிலவைப் போலவா உன் காதல்?

ரோமியோ : பின் எதன் மீது ஆணையிடட்டும் சொல்ல ?

ஜூலியட் : எதற்கு ஆணையிட வேண்டும்? அப்படி ஆணையிடுவேன் என்றால் உன்னுடைய அந்த அற்புத ‘ தான் ’ மீது ஆணையிடு. உன்னுடைய அந்தத் தானை நான் மிகவும் நேசிக்கிறேன்.

ரோமியோ : என் இதயத்தின் மீது கண்ணே ஜூலியட்…

ஜூலியட் : ஆணையிடாதே ரோமியோ ! உன்னை சந்தித்ததில் எனக்கு மகிழ்ச்சிதான். இருப்பினும் மகிழ்ச்சியை ஆணைகளை பரிமாற்றம் செய்து கொள்ளும் அளவிற்கு நாம் இன்னும் பழகவில்லை. இதற்குள் இத்தனை அவசரம் வேண்டாம். இது புத்திசாலித்தனமும் இல்லை. இவ்வளவு வேகமும் வேண்டாம். மின்னும் நம் காதல் மின்னலல்ல எளிதில் மறைய. இனியவனே இரவு வணக்கம். போய் வா! நம் காதல் மொட்டு வசந்தத்தின் பூங்காற்று பட்டு அடுத்தமுறை நாம் சந்திக்கும்போது மலர்ந்து மணம் வீசட்டும். இரவு வணக்கம். என் மனதில் நிலவும் அதே இன்ப அமைதியை நீயும் உணர்ந்திருப்பாய் என்று நம்புகிறேன். இரவு வணக்கம்.

ரோமியோ : என்னை தவிக்க விட்டு விலகப் போகிறாயா?

ஜூலியட் : உன் தவிப்பு அடங்க இந்த இரவில் என்ன வேண்டும்?

ரோமியோ : உன் காதல் மீதும் என் காதல் மீதும் பரஸ்பர ஆணைகளைத்தவிர வேறு எனக்கு என்ன வேண்டும்?

ஜூலியட் : என் காதல் நம்பிக்கையை ஏற்கனவே உனக்கு அளித்துவிட்டேன். மீண்டும் கேட்டால் கொடுத்ததை வாங்குவதைத் தவிர வேறு வழியில்லை..

ரோமியோ : திருப்பி எடுத்துக் கொள்ளப் போகிறாயா என் அன்பே? எதற்காக?

ஜூலியட் : உள்ளதை சொல்வதென்றால் உன்னிடம் கொடுப்பதற்கே வாங்குகிறேன். ஏற்கனவே என்னிடம் உள்ள பொருளின் மீது ஆசைப்படுகிறேன். என் வள்ளல்தன்மை சமுத்திரத்தைப் போல’ வரம்பற்றது; என் காதல் கடலை விட ஆழமானது/ உனக்கு எவ்வளவு வழங்குகிறேனோ அந்தளவு என்னிடமும் இருக்கும் பெறுவதும் தருவதும் முடிவில்லாதது.

( செவிலி உள்ளிருந்து அழைக்கிறாள் )

உள்ளே யாரோ அழைக்கிறார்கள். வருகிறேன் செவிலி. ரோமியோ இங்கேயே இரு. நான் நொடியில் வந்து விடுகிறேன். ( உள்ளே மறைகிறாள் )

ரோமியோ : புண்ணிய இரவுகளே ! என்னை இருள் சூழ்ந்திருப்பதால் இவை அனைத்தும் இனிய கனவாக முடிந்து விடுமோ என்று அஞ்சுகிறேன்..

ஜூலியட் ( மீண்டும் மாடத்தில் தோன்றி ) மூன்று வார்த்தைகள் ரோமியோ அதன் பிறகு நிஜமாகவே வந்தனம்தான்.உன் காதல் நேர்மையானது என்றால் , என்னை முறையாக மணக்க எண்ணினால் நாளை எனக்கு ஒரு வார்த்தை சொல்லி அனுப்பு. நான் உனக்கு ஒரு தூது அனுப்புகிறேன் அந்தத் தூதுவனிடம் நாம் மணக்க இருக்கும் நாள் குறித்து தகவல் சொல்லி அனுப்பு. என் வாழ்வை உன் காலடியில் அர்ப்பணித்து உன் நிழலென தொடர காத்திருக்கிறேன்.

செவிலி ( குரல் மட்டும் ) அம்மணி.

ஜூலியட் ( செவிளியிடம் ) இதோ தாதி வந்து கொண்டே இருக்கிறேன் ( ரோமியோவிடம் ) ஆனால் உன் நோக்கம் தவறானது என்றால்…

செவிலி ( குரல் மட்டும் ) அம்மணி.

ஜூலியட் : இரு செவிலி இதோ வந்து விட்டேன். என் நிலவரம் அறிந்து என் கலவரத்தை போக்கு நாளை உனக்கு தூது அனுப்புகிறேன்.

ரோமியோ : என் ஆவி உன் சேதியில் தொக்கி நிற்கிறது.

ஜூலியட் :கோடி வந்தனங்கள் உனக்கு. போய்விட்டு வா! ( ஜூலியட் உள்ளே மறைகிறாள் )

ரோமியோ : உன்னைப் பிரிவது கோடிமுறை நான் அனுபவிக்கும் துக்கம். பள்ளியிலிருந்து வெளியில் வரும் சிறுவனை போல காதலன் காதலியை நோக்கி செல்லும்போது உற்சாகமடைகிறான். காதலியைப் பிரியும்போது பள்ளிக்கு செல்வது போல வேதனைப் படுகிறான்.

( ரோமியோ விலக எத்தனிக்கும்போது . ஜூலியட் மீண்டும் மாடத்தில் தோன்றுகிறாள். ) ஜூலியட் : ரோமியோ !ரோமியோ ! இந்தக் காதல் வல்லூறை மீட்டுக் கொண்டு வர நானும் ஒரு வல்லூரின் சிறகுகளை பெற வேண்டும். என் சிறகுகள் இந்த வீட்டில் கட்டப்பட்டுள்ளது. சும்மா இருப்பதைத் தவிர வழியில்லை. எதிரொலி கிளம்பும் குகையை கண்டுபிடிக்க எவ்வளவு நேரமாகப் போகிறது ? என் இடைவிடாத புலம்பல் எதிரொலியின் ஓசையை ரோமியோ என்றே மாற்றி விடும்.

ரோமியோ : என் உயிர் என் பெயரை உச்சரிக்கிறது. காதல் கண்மணிகளின் வெள்ளிமணிக் குரல்கள் எத்தனை இனிமையானவை. காதலன் கேட்டிராத மெல்லிசை.

ஜூலியட் : ரோமியோ !

ரோமியோ : சொல் என் காதல் புறாவே !

ஜூலியட் : நாளை எத்தனை மணிக்கு தூது அனுப்பட்டும்?

ரோமியோ : ஒன்பது மணி சுமாருக்கு.

ஜூலியட் : மறக்க மாட்டேன். இன்னும் இருபது வருடம் போனால் உன்னை மீண்டும் அழைத்த காரணத்தை மறந்திருப்பேனோ என்னவோ ?

ரோமியோ :உனக்கு மீண்டும் நினைவு வரும்வரை நான் காத்திருக்கிறேன்.

ஜூலியட் : நீ இங்கே காத்திருக்க வேண்டும் என்று நான் அதனை நினைவுக்கே கொண்டு வரமாட்டேன். என் நினைவில் இருப்பதெல்லாம் உன்னுடைய பிரியாத துணையைத்தான்.

ரோமியோ : நீயும் மறந்து கொண்டே இரு . நானும் இருந்து கொண்டே இருக்கிறேன். இந்த இடத்தை விட எனக்கு சிறந்த உறைவிடம் வேண்டாம் ஜூலியட்.

ஜூலியட் : பொழுது புலரப் போகிறது ரோமியோ. நீ போகத்தான் வேண்டும். உன்னை அனுப்ப எனக்கு மனமில்லை. துக்கிரி சிறுவர்கள் கயிற்றில் சின்னஞ்சிறு பறவைகளை கட்டி வைத்து அவற்றை கட்டியிழுப்பது போல உன்னை இப்போது விடுவிக்கிறேன். இது காதல் பொறாமை ரோமியோ.

ரோமியோ : உன் கைகளில் பறவையாக விரும்புகிறேன் ஜூலியட்.

ரோமியோ : எனக்கும் அதுதான் ஆசை ரோமியோ. ஆனால் என் செல்லப் பறவையை செல்லம் கொஞ்சியே கெடுத்து விடுவேன். இரவு வந்தனம். பிரிதல் ஓர் இனிய துயரம். நாளைய இரவு வரை கூட நான் இரவு வந்தனம் சொல்லிக் கொண்டிருக்க தயார்.

ரோமியோ : தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே- அந்தத் தூக்கமும் அமைதியும் நானானால் உன்னைத் தொடர்ந்திருப்பேன். என்றும் துணையிருப்பேன்.

காலையில் நானும் காத்திருப்பேன்; கோவிலில் நமது காதல் சொல்வேன்.

பாதிரி சொல்லும் பாதையில் நானும் பூத்திருப்பேன் என்றும் பூத்திருப்பேன்.

(ரோமியோ அகல்கிறான் )

திரை

காட்சி-3.

பாதிரியார் லாரன்சின் மாளிகைத் தோட்டம். பாதிரியார் தனது கையில் ஒரு கூடையுடன் நுழைகிறார்.

லாரன்ஸ்: சாம்பல் பூக்கும் காலை சிவந்த இரவை பார்த்து சிரிக்கிறது. சிவக்கும் கீழ்வானம் ஒளியினால் மின்னுகிறது. ஆதவனின் தேர்ச் சக்கரங்களுக்கு பயந்து ஒரு குடிகாரனைப் போல இருள் தள்ளாடி ஒதுங்கிக் கொண்டிருக்கிறது. சூரியன் மேல் எழுந்து மலர்களின் பனித்துளிகளை வாங்கிக் கொள்ளும் முன் நான் மலர்களைப் பறிக்க வேண்டும். இந்தக் கூடையை விஷ வேர்களாலும் மருத்துவகுணம் மிக்க மலர்களாலும் நிரப்ப வேண்டும். தாவரங்களின் கருவறையும் பூமிதான் கல்லறையும் பூமிதான். பூமியன்னையின் மடியில் பல்வேறு தாவரங்களும் மற்ற உயிரினங்களும் தோன்றுகின்றன. அவள் மடியில்தான் நமக்கு அமுதூட்டப்படுகிறது. இயற்கையின் ஒவ்வொரு படைப்பும் அதிசயமானவை மட்டுமல்ல தனித்துவமானவையும் கூட. மூலிகைகளிலும், செடிகளிலும், கற்களிலும் நிறைய அபூர்வ சக்திகள் அடங்கியுள்ளன. இந்தப் பூமியில் உள்ளவை அனைத்தும் தீங்கானவை அல்ல. ஒவ்வொன்றிலும் நன்மைகள் உள்ளன. அவை தவறான முறையில் பயன்படுத்தப் படும்போது விஷமாக மாறுகின்றன. தீமைக்கு பயன்படும் நற்செயல் பாவமாகிறது. தீச்செயல் கூட நல்ல நோக்கத்திற்கு பயன்படும்போது நன்மை பயக்கிறது. ( ரோமியோ உள்ள வருகிறான். )

இதோ இந்த சின்னஞ்சிறிய மலரில் உள்ள விஷத்தில் நன்மை பயக்கும் மருந்து இருக்கிறது. இதனை முகரும்போது மணக்கிறது. பருகும்போது புலன் அடங்குகிறது. இரண்டு முரணான விஷயங்கள் இந்த மலரில் உள்ளன. மலரில் மட்டுமல்ல மனிதரிலும் அமுதும் உண்டு. நஞ்சும் உண்டு. நஞ்சு ஒரு செடியை புற்று நோயைப் போல உறிஞ்சி விடுகிறது.

ரோமியோ : காலை வணக்கம் தந்தையே !

லாரன்ஸ் : கடவுள் உன்னை ஆசிர்வதிக்கட்டும். எதற்காக இத்தனை அதிகாலையில் என்னை பார்க்க வந்திருக்கிறாய்? இத்தனை விரைவாக நீ படுக்கையிலிருந்து எழுந்திருக்கிறாய் என்றால் உன்னிடம் ஏதாவது கோளாறு இருக்க வேண்டும் இளைஞனே ! கவலைகள் ஒவ்வொரு முதியவனின் கண்களையும் தூங்க விடாமல் கட்டி இழுக்கின்றன. கவலை விழித்திருக்கும்போது கண்கள் உறங்குவதில்லை. பொறுப்புகளற்ற, மனபாரம் எதுவுமில்லாத உன்னுடைய உறக்கம் ஆளும் எலும்புமூட்டுக்களில் துள்ளல் இருப்பதைப் பார்த்தால் நீ சூழலின் வெப்பத்திற்கு ஆளாகியிருக்க வேண்டும். அல்லது சரியாகச் சொல்வதென்றால் நேற்று இரவு இந்த ரோமியோ படுக்கைக்கே செல்லாமல் இருந்திருக்க வேண்டும்.

ரோமியோ : நீங்கள் இறுதியாகச் சொன்னதுதான் சரி. நான் நேற்றிரவு உறக்கத்தை விட இனிமையான அமைதியில் இருந்தேன்.

பாதிரியார் : தவறு செய்திருந்தால் அந்த ஆண்டவன் உன் பாவத்தை மன்னிக்கட்டும். நேற்று நீ ரோசலினுடன் இருந்தாயா ?

ரோமியோ : என்னது ரோசலினுடனா என் ஆன்மத் தந்தையே? நான் பெயரை மறந்து விட்டேன். ரோசலின் என்பது என் விரோதியின் பெயர் .

பாதிரியார் : நல்லது மகனே ! அப்படியென்றால் நேற்றிரவு நீ எங்கிருந்தாய் ?

ரோமியோ : இன்னொருமுறை நீங்கள் கேட்கும் முன் நானே கூறிவிடுகிறேன். எங்கள் பரம்பரைப் பகைவன் இல்லத்தில் நான் விருந்து கொண்டிருந்தேன். திடீரென்று ஒரு நபர் காதலால் தாக்க, நானும் அந்த நபரை காதலால் காயப்படுத்தினேன். அந்தக் காயத்திற்கு உங்களிடம் மருந்து உள்ளது என்பது எனக்குத் தெரியும்.. எனக்கு காயம் ஏற்பட்டதால் என் எதிரியின் மீது எனக்கு வருத்தமில்லை. என் கோரிக்கை என் எதிரிக்கும் சாதகமாகும்.

பாதிரியார் : உன் வார்த்தைகளில் பட்டவர்த்தனம் வேண்டும் மகனே. தெளிவில்லாத பாவ மன்னிப்பு என்றும் சிக்கலில் கொண்டுவிடும்.

ரோமியோ : நல்லது நான் உண்மையை நேராகச் சொல்கிறேன். என் நெஞ்சம் கபுலெட்டின் மகள் இனிய ஜூலியட் மேல் காதல் கொண்டுவிட்டது. அவளுக்கு என் மேலும், எனக்கு அவள் மேலும் மையலானது. எங்களை திருமணத்தின் மூலம் எங்களை ஒன்று சேர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நாங்கள் பார்த்தது, பழகியது, காதல் கொண்டது போன்றவற்றை நான் பிறகு உங்களிடம் விவரிக்கிறேன். ஆனால் இப்போது உங்களிடம் எங்களை சேர்த்து வைக்குமாறு மன்றாடுகிறேன்.

பாதிரியார் : புனித பிரான்சிஸ் அவர்களே ! இது என்ன இப்படி ஒரு திடீர் மாற்றம் ! உன்னால் மிகவும் காதலிக்கப்பட்ட ரோசலின் அவ்வளவு சட்டென்று உன் மனதிலிருந்து மறைந்து விட்டாளா ? அப்படியெனில் இளம் காதலர்களின் காதல் கண்களில் இருக்கிறது; இதயத்தில் இல்லை. ஏசப்பா மேரி மாதா! எத்தனை முறை ரோசலினுக்காக அழுது புலம்பியிருப்பாய் ? நீ சுவைக்காத ஒரு காதலுக்கு எத்தனை உப்பு கண்ணீரால் உரமிட்டிருப்பாய்? உன் காதல் பெருமூச்சுகளை ஆதவன் இன்னும் உறிஞ்சக் கூட இல்லை. உன் புலம்பல்கள் இன்னும் என் செவியிலிருந்து மறையவில்லை. அவளுக்காக நீ சிந்திய கண்ணீர்த் தடம் இன்னும் உன் கன்னங்களிலிருந்து மறையவில்லை. நீ நீயாக இருந்தால் உன் சோகம் நிஜம் என்றால் இந்தச் சோகம் முழுவதும் ரோசலிளினுக்காக. ஆனால் நீ மாறி விட்டாயா? இந்த வாசகத்தை உச்சரித்துப் பார். ஆடவர்களிடம் வலிமையற்று போகும்போது பெண்கள் வீழ்கிறார்கள்.

ரோமியோ : நான் ரோசலினை காதலித்ததற்கு என்னை நீங்கள் பலமுறை கடிந்திருக்கிறீர்கள்.

பாதிரியார் : அவள் மேல் கொண்ட காதலால் சிறுபிள்ளைத் தனமாக நடந்து கொண்டதற்குக் கடிந்தேன். அவளை காதலித்ததற்கு அன்று.

ரோமியோ : என் காதலை புதைத்துவிடச் சொன்னீர்கள்.

பாதிரியார் : உன் காதலை மண்ணில் புதைக்க சொல்லவில்லை வேறொரு மனதில் விதைக்க சொன்னேன்.

ரோமியோ : உங்களை மன்றாடி வேண்டுகிறேன். என்னை சபிக்காதீர்கள். என்னுடைய இப்போதைய காதலி என் காதலை வாங்கிக் கொண்டு தன் காதலை திருப்பி கொடுத்து விட்டாள். அவள் என் காதலை ஏற்கக் கூட இல்லை.

பாதிரியார் : அவளுக்குத் தெரிந்திருக்கும் உன் காதல் உதட்டிலிருந்து உச்சரிக்கப்பட்ட காதல்; இதயத்திலிருந்து உச்சரிக்கப்பட்டது இல்லை என்று. சஞ்சல மனம் படைத்த இளங்காளையே வா ! இந்த ரகசியத் திருமணத்தை நான் நடத்தி வைக்கிறேன். இந்தத் திருமணம் உங்கள் இரண்டு குடிகளின் பழமைப்பகையை வேருடன் களைவோம்.

ரோமியோ : நாம் இங்கிருந்து செல்வோம். நான் மிக அவசரமாக வந்துள்ளேன்.

காட்சி-3.

பாதிரியார் லாரன்சின் மாளிகைத் தோட்டம். பாதிரியார் தனது கையில் ஒரு கூடையுடன் நுழைகிறார்.

லாரன்ஸ்: சாம்பல் பூக்கும் காலை சிவந்த இரவை பார்த்து சிரிக்கிறது. சிவக்கும் கீழ்வானம் ஒளியினால் மின்னுகிறது. ஆதவனின் தேர்ச் சக்கரங்களுக்கு பயந்து ஒரு குடிகாரனைப் போல இருள் தள்ளாடி ஒதுங்கிக் கொண்டிருக்கிறது. சூரியன் மேல் எழுந்து மலர்களின் பனித்துளிகளை வாங்கிக் கொள்ளும் முன் நான் மலர்களைப் பறிக்க வேண்டும். இந்தக் கூடையை விஷ வேர்களாலும் மருத்துவகுணம் மிக்க மலர்களாலும் நிரப்ப வேண்டும். தாவரங்களின் கருவறையும் பூமிதான் கல்லறையும் பூமிதான். பூமியன்னையின் மடியில் பல்வேறு தாவரங்களும் மற்ற உயிரினங்களும் தோன்றுகின்றன. அவள் மடியில்தான் நமக்கு அமுதூட்டப்படுகிறது. இயற்கையின் ஒவ்வொரு படைப்பும் அதிசயமானவை மட்டுமல்ல தனித்துவமானவையும் கூட. மூலிகைகளிலும், செடிகளிலும், கற்களிலும் நிறைய அபூர்வ சக்திகள் அடங்கியுள்ளன. இந்தப் பூமியில் உள்ளவை அனைத்தும் தீங்கானவை அல்ல. ஒவ்வொன்றிலும் நன்மைகள் உள்ளன. அவை தவறான முறையில் பயன்படுத்தப் படும்போது விஷமாக மாறுகின்றன. தீமைக்கு பயன்படும் நற்செயல் பாவமாகிறது. தீச்செயல் கூட நல்ல நோக்கத்திற்கு பயன்படும்போது நன்மை பயக்கிறது. ( ரோமியோ உள்ள வருகிறான். )

இதோ இந்த சின்னஞ்சிறிய மலரில் உள்ள விஷத்தில் நன்மை பயக்கும் மருந்து இருக்கிறது. இதனை முகரும்போது மணக்கிறது. பருகும்போது புலன் அடங்குகிறது. இரண்டு முரணான விஷயங்கள் இந்த மலரில் உள்ளன. மலரில் மட்டுமல்ல மனிதரிலும் அமுதும் உண்டு. நஞ்சும் உண்டு. நஞ்சு ஒரு செடியை புற்று நோயைப் போல உறிஞ்சி விடுகிறது.

ரோமியோ : காலை வணக்கம் தந்தையே !

லாரன்ஸ் : கடவுள் உன்னை ஆசிர்வதிக்கட்டும். எதற்காக இத்தனை அதிகாலையில் என்னை பார்க்க வந்திருக்கிறாய்? இத்தனை விரைவாக நீ படுக்கையிலிருந்து எழுந்திருக்கிராய் என்றால் உன்னிடம் ஏதாவது கோளாறு இருக்க வேண்டும் இளைஞனே ! கவலைகள் ஒவ்வொரு முதியவனின் கண்களையும் தூங்க விடாமல் கட்டி இழுக்கின்றன. கவலை விழித்திருக்கும்போது கண்கள் உறங்குவதில்லை. பொறுப்புகளற்ற, மன பாரம் எதுவுமில்லாத உன்னுடைய உறக்கம் ஆளும் எலும்பு மூட்டுக்களில் ஓட்டம் இருப்பதென்றால் நீ சூழலின் வெப்பத்திற்கு ஆளாகியிருக்க வேண்டும். அல்லது சரியாகச் சொல்வதென்றால் நேற்று இரவு இந்த ரோமியோ படுக்கைக்கே செல்லாமல் இருந்திருக்க வேண்டும்.

ரோமியோ : நீங்கள் இறுதியாகச் சொன்னதுதான் சரி. நான் நேற்றிரவு உறக்கத்தை விட இனிமையான அமைதியில் இருந்தேன்.

பாதிரியார் : தவறு செய்திருந்தால் அந்த ஆண்டவன் உன் பாவத்தை மணிக்கட்டும். நேற்று நீ ரோசளினுடன் இருந்தாயா ?

ரோமியோ : என்னது ரோசலின் உடனா என் ஆன்மத் தந்தையே? நான் பெயரை மறந்து விட்டேன். ரோசலின் என்பது என் எதிரியின் பெயர் .

பாதிரியார் : நல்லது மகனே ! அப்படியென்றால் நேற்றிரவு நீ எங்கிருந்தாய் ?

ரோமியோ : இன்னொருமுறை நீங்கள் கேட்கும் முன் நானே கூறிவிடுகிறேன். என் எதிரி இல்லத்தில் நான் விருந்து கொண்டிருந்தேன். திடீரென்று ஒரு நபர் காதலால் தாக்க, நானும் அந்த நபரை காதலால் காயப்படுத்தினேன். அந்தக் காயத்திற்கு உங்களிடம் மருந்து உள்ளது என்பது எனக்குத் தெரியும்.. எனக்கு காயம் ஏற்பட்டதால் என் எதிரியின் மீது எனக்கு வருத்தமில்லை. என் கோரிக்கை என் எதிரிக்கும் சாதகமாகும்.

பாதிரியார் : உன் வார்த்தைகளில் பட்டவர்த்தனம் வேண்டும் மகனே. த்ளிவில்லாத பாவ மன்னிப்பு என்றும் சிக்கலில் கொண்டுவிடும்.

ரோமியோ : நல்லது நான் உண்மையை நேராகச் சொல்கிறேன். என் நெஞ்சம் கபுலெட்டின் மகள் இனிய ஜூலியட் மேல் காதல் கொண்டுவிட்டது. அவளுக்கு என் மேலும், எனக்கு அவள் மேலும் மையலானது. எங்களை திருமணத்தின் மூலம் எங்களை ஒன்று சேர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நாங்கள் பார்த்தது, பழகியது, காதல் கொண்டது போன்றவற்றை நான் பிறகு உங்களிடம் விவரிக்கிறேன். ஆனால் இப்போது உங்களிடம் எங்களை சேர்த்து வைக்குமாறு மன்றாடுகிறேன்.

பாதிரியார் : புனித பிரான்சிஸ் அவர்களே ! இது என்ன இப்படி ஒரு திடீர் மாற்றம் ! உன்னால் மிகவும் காதலிக்கப்பட்ட ரோசலின் அவ்வளவு சட்டென்று உன் மனதிலிருந்து மறைந்து விட்டாளா ? அப்படியெனில் இளம் காதலர்களின் காதல் கண்களில் இருக்கிறது; இதயத்தில் இல்லை. ஏசப்பா மேரி மாதா! எத்தனை முறை ரோசலினுக்காக அழுது புலம்பியிருப்பாய் ? நீ சுவைக்காத ஒரு காதலுக்கு எத்தனை உப்பு கண்ணீரால் உரமிட்டிருப்பாய்? உன் காதல் பெருமூச்சுகளை ஆதவன் இன்னும் உறிஞ்சக் கூட இல்லை. உன் புலம்பல்கள் இன்னும் என் செவியிலிருந்து மறையவில்லை. அவளுக்காக நீ சிந்திய கண்ணீர்த் தடம் இன்னும் உன் கன்னங்களிலிருந்து மறையவில்லை. நீ நீயாக இருந்தால் உன் சோகம் நிஜம் என்றால் இந்தச் சோகம் முழுவதும் ரோசலிளினுக்காக. அனால் நீ மாறி விட்டாயா? இந்த வாசகத்தை உச்சரித்துப் பார். ஆடவர்களிடம் வலிமையற்று போகும்போது பெண்கள் வீழ்கிறார்கள்.

ரோமியோ : நான் ரோசலினை காதலித்ததற்கு என்னை நீங்கள் பலமுறை கடிந்திருக்கிறீர்கள்.

பாதிரியார் : அவள் மேல் கொண்ட காதலால் சிறுபிள்ளைத் தனமாக நடந்து கொண்டதற்குக் கடிந்தேன். அவளை காதலித்ததற்கு அன்று.

ரோமியோ : என் காதலை புதைத்துவிடச் சொன்னீர்கள்.

பாதிரியார் : உன் காதலை மண்ணில் புதைக்க சொல்லவில்லை வேறொரு மனதில் விதைக்க சொன்னேன்.

ரோமியோ : உங்களை மன்றாடி வேண்டுகிறேன். என்னை சபிக்காதீர்கள். என் இந்தக் காதலி என் காதலை வாங்கிக் கொண்டு தன் காதலை திருப்பி கொடுத்து விட்டாள். அவள் என் காதலை ஏற்கக் கூட இல்லை.

பாதிரியார் : அவளுக்குத் தெரிந்திருக்கும் உன் காதல் உதட்டிலிருந்து உச்சரிக்கப்பட்ட காதல்; இதயத்திலிருந்து உச்சரிக்கப்பட்டது இல்லை என்று. சஞ்சல மனம் படைத்த இளங்காளையே வா !இந்த ரகசியத் திருமணத்தை நான் நடத்தி வைக்கிறேன். இந்தத் திருமணம் உங்கள் இரண்டு குடிகளின் பழமைப் பகையை வேருடன் கலையட்டும்.

ரோமியோ : நாம் இங்கிருந்து செல்வோம். நான் மிக அவசரமாக வந்துள்ளேன்.

பாதிரியார் : பார்த்து நிதானமாக போ. ஓடுபவன் விழுவான்.

திரை.

காட்சி-4.

(பென்வோலியோவும், மெற்குஷியோவும் வருகின்றனர். )

மெற்குஷியோ : எங்கே போய்த் தொலைந்தான் இந்த ரோமியோ? இரவு வீட்டுக்கு வந்தானா ? இல்லையா?

பென்வோலியோ : அவர்கள் வீட்டிற்கு அவன் திரும்பவில்லை. வேலைக்காரன் சொன்னான்.

மெற்குஷியோ : எதற்கு அந்த வேசி ரோசலின் இப்படி ஒரு கல் நெஞ்சுடன் அவனை அலைக்கழிக்கிறாள்? இப்படியே போனால் ரோமியோ சீக்கிரமே பயித்தியம் பிடித்து அலையப்போகிறான்.

பென்வோலியோ :டிபல்ட் அதுதான் அந்த கபுலெட்டின் சொந்தக்காரன் ரோமியோவின் தந்தைக்கு ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறான்.

மெற்குஷியோ : அது ஒரு சவாலாக இருக்கும்.

பென்வோலியோ : ரோமியோ அதற்கு பதில் கூறட்டும்.

மெற்குஷியோ: இது என்ன பெரிய விஷயமா? எழுதத் தெரிந்த எல்லோருக்கும் பதில் எழுதவும் தெரியும்.

பென்வோலியோ : இல்லை ரோமியோ கடிதம் எழுதியவனுக்கு அவன் சவாலை ஏற்றுக் கொள்வதாக பதில் எழுதுவான்.

மெற்குஷியோ : பாவம் ரோமியோ, ஏற்கனவே அவன் ஒரு சதிகாரியின் கண்களால் குத்தப்பட்டு கிடக்கிறான்; காதல் கீதம் அவன் செவியில் குடைந்து கொண்டிருக்கிறது; மன்மதனின் அம்பினால் அவன் இதயம் துளைக்கப் பட்டு விட்டது. இவனா டிபல்ட்டை எதிர் கொள்ளப் போகின்றவன் ?

பென்வோலியோ : யார் இந்த டிபல்ட்? அவன் கதை என்ன?

மெற்குஷியோ : ஒரு மாயாவியை விடத் திறமையானவன். தீரன்; பாராட்டுக்களுக்கு உரியவன். ஒரு பாட்டு பாடுவதைப் போல அவன் அனுபவித்து சண்டை போடுபவன். நேரம் , தூரம், போன்றவற்றின் விகித நிர்ணயம் அறிந்தவன்.சண்டையில் அவன் ஒய்வு எடுப்பதே இல்லை. மூன்று எண்ணுவதற்குள் மீண்டும் தாக்கத் தொடங்கி விடுவான். வாய்ச்சண்டையை வாள்சண்டையாக மாற்றுவதில் சமர்த்தன்.வாள்சண்டை கூடத்தில் முதன்மையான மாணவன். முன் வீச்சிலும், பின் வீச்சிலும் நேராக சொருகுவதிலும் நிபுணன்.

பென்வோலியோ : வேறு ?

மெற்குஷியோ : அவனிடம் அடிவாங்கியவர்களின் பைத்தியக்கார வேற்றுமொழி புலம்பல்களை கேட்கவேண்டும். அவர்களுடைய அலறலும் துடிப்பும் ..” ஏசுவே இவன் பயங்கரமான் வீரன் , ங்கோத்தா என்னமா வாள் சுழற்றுகிறான் என்று புலம்புவதை கேட்கும்போது வெறுப்பாக இருக்கும். இது வருத்தமளிக்கும் விஷயமில்லையா? வேடிக்கை பார்ப்பவர்களுக்கு வாள்சுற்றத் தெரியுமா? ஆனால் அவர்கள் அவனுடைய வாள்வீச்சை பார்த்துவிட்டு வெளிநாட்டினர் சரியான வெறிபிடித்த ரசிகர்கள் கூப்பாட்டினை கேட்க சகிக்காது.. ஐயோ என் எலும்பு முறிஞ்சது என்று கூவுவதை கேட்க வேண்டும்.

( ரோமியோ உள்ளே நுழைகிறான். )

பென்வோலியோ : ரோமியோ வந்துவிட்டான். வந்து விட்டான்.

மெற்குஷியோ : அவனைப் பார். எல்லும் தோலுமாய் கருவாடு போல தெரிகிறான். பளபள என்று நுங்கும் நுரையுமா இருந்தவன் இப்போது காய போடப்பட்ட மீன் மாதிரி ஆகி விட்டானே . காளிதாசனின் கவிதையில் வரும் பாத்திரம் போல் தோன்றுகிறான். இவனுடைய காதல் கண்மணியுடன் ஒப்பிட்டால் சீதை இணையாக மாட்டாள். சகுந்தலை இவள் கால் தூசுக்கு சமமாக மாட்டாள். தமயந்தி இவள் வீட்டு பணிப்பெண். அகலிகை ஒரு பிச்சி. ரோமியோ பிரெஞ்சு நாடகங்களில் வருபவனைப் போல உடையணிந்து நேற்று எங்களை ஏமாற்றி விடு எங்கே சென்றாய்?

ரோமியோ : காலை வணக்கம். நேற்று உங்களை ஏமாற்றினேனா?

மெற்குஷியோ : நேற்று சொல்லாமல் கொள்ளாமல் நழுவி விட்டாய் நழுவி…

ரோமியோ : நேற்று எனக்கு ஒரு பெரிய வேலை இருந்தது. அந்த வேலையின் காரணமாக என்னால் விடைபெறும் சாதாரண நல்ல பழக்கத்தைக் கூட கடைபிடிக்க முடியவில்லை.

மெற்குஷியோ : இடை பிடிப்பதற்காக நல்ல விஷயங்களை கடை பிடிக்கவில்லை என்று சொல்லு.

ரோமியோ : இடை என்றா சொன்னீர்கள்?

மெற்குஷியோ : இலக்கை குறியால் சரியாக தாக்கிவிட்டாய்.

ரோமியோ : நான் சாதாரணமாகத்தான் சொன்னேன்.

மெற்குஷியோ : நான் சரியாகத்தான் சொன்னேன்.

ரோமியோ : இடை?

மெற்குஷியோ : ஆமாம்.

ரோமியோ : நடுவில் மாட்டிக் கொண்டேன்.

மெற்குஷியோ : நானும் அதைத்தான் சொல்கிறேன்.

ரோமியோ : மட்டமான நகைச்சுவை. கீழ்த்தரமானதும் கூட.

மெற்குஷியோ : இப்படியே கண்ணாமூச்சி ஆடினால் என்னால் ஒன்றும் செய்ய முடியாது. உன் கைகளில் ஒரேசமயம் ஐந்து பேர் சிக்குவர். எனக்கு ஐந்து முறை முயற்சித்தால்தான் ஒன்று சிக்கும். நீட்டி பிடிப்பதில் உன் பக்கம் கூட என்னால் வரமுடியாது.

ரோமியோ : நான் நீட்டும்போது நீங்கள் ஏன் என் அருகில் வரவேண்டும்?

மெற்குஷியோ : உன்னுடைய இந்த நகைச்சுவைக்கு உன் காதுகளைக் கடிக்க வேண்டும்.

ரோமியோ : ஐயோ நான் பாவம். என்னை கடிக்க வேண்டாம்.

மெற்குஷியோ : உன்னுடைய இந்த நகைச்சுவை எனக்கு சிரிப்பை வரவழைக்கிறது. இடுப்பைப் பிடித்து சிரித்தாலும் அடங்காது.

ரோமியோ : மறுபடியும் இடையா?

மெற்குஷியோ : தொட்டா நீண்டு கொண்டே போகும் போலிருக்கிறதே இது.

ரோமியோ : என்னால் முடியல.

மெற்குஷியோ : சின்ன பையன் நீ முடியவில்லை என்று சொல்லக் கூடாது. நீயோ வாலிப வயசுப் பையன். அதிலும் ரோமியோ. அறிஞ்சது தெரிஞ்சது பார்த்து நடந்து கொள்பவன். காதலிக்கத் தெரிந்தவன். உன் காதல் , ஒரு புலம்பும் முட்டாள் தனது சாமானை மறைத்து வைக்க பொந்து தேடுவது போல இருக்கிறது.

பென்வோலியோ : ச்சை ! நிறுத்துங்கப்பா இத்தோட.

மெற்குஷியோ : நான் நிறுத்தவே இல்லியேப்பா? ரோமியோ நீ நிறுத்துகிறாயா?

பென்வோலியோ : இப்போது நிறுத்தவில்லை என்றால் நிறுத்த வேண்டிய சமயம் நிறுத்த முடியாம பண்ணிவிடுவேன்.

மெற்குஷியோ : நீ தவறாக கூறுகிறாய். நான் நிறுத்தியிருப்பேன். ஏன் என்றால் கதையின் ஆழமான பகுதிக்கு போய்க் கொண்டிருந்தேன். இதற்கு மேல் எதுவும் சொல்ல விரும்பவில்லை.

( செவிலியும் அவளுடைய வேலைக்காரன் பீட்டரும் வருகின்றனர். )

ரோமியோ : இதோ ஒரு நல்ல விஷயம்.

பென்வோலியோ : பீப்பாய் பீப்பாய்

மெற்குஷியோ : இரண்டு ஒன்று ஆண் மற்றது பெண்.

செவிலி : பீட்டர்.

பீட்டர் : உத்தரவு அம்மணி.

செவிலி : பீட்டர் எங்கே எனது விசிறி?

மெற்குஷியோ : நல்லது பீட்டர். உங்க எஜமானியிடம் அவள் விசிறியைக் கொடு. முகத்தை மறைத்துக் கொள்ளட்டும். விசிறி அவள் முகத்தை விட அழகாக இருக்கிறது.

செவிலி : காலை வணக்கம் கனவான்களே.

மெற்குஷியோ : மாலை வணக்கம் சீமாட்டி.

செவிலி : இது என்ன மாலை நேரமா என்ன?

மெற்குஷியோ : உன்னைப் பார்த்தால் ஆறரை கடிகார முள்ளைப் போல் ஆகிறது. அதனால்தான் மாலை என்றேன்.

செவிலி : ச்சை என்ன மனிதனோ நீ?

மெற்குஷியோ : கடவுள் என்னை நாசமடைவதற்கென்றே படைத்திருக்கிறார் அம்மணி.

செவிலி: சரியாகச் சொன்னாய். புண்ணியவான்களே இளைய ரோமியோ எங்கே இருக்கிறான்?

ரோமியோ : நான் சொல்கிறேன். இளையவன் அந்த ரோமியோ நீங்கள் தேடிக் கண்டுபிடிக்கும்போது முதியவன் ஆகி விடுவான். நான்தான் அந்தப் பெயரை உடைய இளைஞன். என்னை விட இளைஞர் எவரும் இங்கில்லை. என்னைப் போன்ற மோசமானவர்களும் இங்கில்லை.

செவிலி : நன்றாகப் பேசுகிறாய் தம்பி.

ரோமியோ : மோசமானதை நன்றாக பேசுவதாகக் கூறுகிறாயே நீ நல்லவள்.

செவிலி : நீங்கள்தான் இளைய ரோமியோ என்றால் இன்றிரவு நாமிருவரும் தனியாக சிந்திப்போமா?

பென்வோலியோ : அந்த தாதி அவனை இரவு விருந்திற்குப் பிழைக்கிறாள். ( செவிலி சந்திப்பு சிந்திப்பு என்று பேசியதால் பென்வோலியோ கேலி செய்வதற்காக அழைப்பு பிழைப்பு என்று மாற்றி பேசுகிறான் )

மெற்குஷியோ : மாமா மாமா மாமா . ஓ இவள் மாமி அல்லவா? நான் கண்டு கொண்டேன் .

ரோமியோ : எதனைக் கண்டீர்கள்?

மெற்குஷியோ : வயதான தாசி . தனது வேசித்தனத்தை தனது கிழட்டு தோற்றத்தால் மறைக்கும் தாசி.( பாடுகிறான் )

வயதான மொசக்குட்டி முடி நரைச்ச மொசக்குட்டி

பசிக்கிறப்போ தேடினேன் சின்ன முயல் மாட்டலை.

ஆபத்துக்கு பாவமில்லை கிழட்டு முயல் தேவலை.

தொட்டு விடு விரைவுல. கொடுத்த காசு பழுதில்ல

(ரோமியோவிடம் பேசுகிறான் ).ரோமியோ இன்றிரவு உணவு உண்ண உன் தந்தை இல்லத்திற்கா செல்கிறாய்? ஏன் என்றால் நாங்கள் அங்கு செல்கின்றோம்.

ரோமியோ : நான் உங்களை சற்று நேரம் கழிந்த பின்பு தொடர்வேன்.

மெற்குஷியோ : வரட்டுமா ? மூதாட்டியே ? மூதாட்டி மூதாட்டி மூதாட்டி

( மெற்குஷியோவும் பென்வோலியோவும் மறைகின்றனர். )

செவிலி : சொல்லுங்கள் ஐயா இவர்கள் யார் ? கீழ்த்தரமான நகைச்சுவைகளை பேசும் இந்த மட்டமான மனிதர் யார்?

ரோமியோ : தாதி அவர் ஒரு கனவான் . தன் குரலை தானே ரசிக்கும் தன்மை கொண்டவர். ஒரு மாதம் செய்ய வேண்டிய விஷயங்களை ஒரு நிமிடத்தில் பேசும் வல்லமை பெற்றவர்.

செவிலி : என்னை பற்றி மோசமாக பேசினால் அவனை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவேன். அவன் பெரிய பருப்பா? நான் அவனை விட இருபது மடங்கு பெரிய பருப்பு. என்னால் முடியவில்லை என்றால் ஆள் வைத்தாவது அவனை ஒருவழி செய்து விடுவேன். கண்ணியமற்ற கீழ்த்தரமானவன். நான் ஒன்றும் அவன் கூத்தியாள் கிடையாது. அவனுடைய நண்பனும் இல்லை அவன் கத்தியைப் பிடிப்பதற்கு.( பீட்டரிடம் ) இங்கேயே நில். என்னை கேலி செய்யும் எவனையும் உள்ளே அனுப்பு. என் கால்களால் பந்தாடி விடுகிறேன்.

பீட்டர் : நீங்கள் உதைத்து நான் பார்த்ததில்லை. அந்த மாதிரி நீங்கள் உதைப்பது தெரிந்தால் எனக்கு எதற்கு இந்தக் காவல் தாங்கும் அயுதம்? என்ன அப்படி பார்க்கிறீர்கள்? ஒரு சண்டை தொடங்கி விட்டால் நியாயத்தின் பக்கம் நான் நின்றால் மற்றவர்களைப் போலவே எந்நாளும் சுழன்று சுழன்று வாள் வீச முடியும்.

செவிலி : ஆணையிட்டுச் சொல்கிறேன். என் உடல் நடுங்குகிறது. நாற்றமடிக்கும் அயோக்கியபயல்.( ரோமியோவிடம் ) ஐயா ஒரு வார்த்தை உங்களிடம் பேசலாமா? என்னுடைய சின்ன எஜமானி உங்களுடன் கொஞ்சம் பேசவேண்டும் என்றார். அவள் என்ன சொல்லச் சொன்னாள் என்பதை நான் என்னிடம் வைத்துக் கொள்கிறேன். அதற்கு முன்பு இதனைக் கூறி விடுகிறேன். பழைய கூற்றின்படி நிச்சயமானதும் அவளை சொர்கத்திற்கு அழைத்துச் செல்வது என்பது கொஞ்சம் மூர்கத்தனமான விஷயம். ஏன் என்றால் அவள் ஒரு சிறுமி. சரி அதனை விடுத்து அவளை மயக்கி அழைத்துச் செல்வதென்றால் அது பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி. பாவச் செயலும் கூட.

ரோமியோ : தாதி என்னை உங்கள் எஜமானியிடம் அழைத்துச் செல்லுங்கள். நான் ஆணையிட்டு சொல்கிறேன்…..

செவிலி : நல்ல மனம் உங்களுக்கு. என்னை நம்புங்கள் உங்களை பற்றி நிறைய சொல்கிறேன். கடவுளே கடவுளே என் எஜமானி மிகவும் சந்தோஷப் படுவாள்.

ரோமியோ : என்னவென்று சொல்வாய் தாதி ? நீ இன்னும் நான் சொல்வதைக் காது கொடுத்தே கேட்கவில்லையே?

செவிலி : நீங்கள் அவளை நிச்சயம் பேச போவதைச் சொல்வேன்.

ரோமியோ : அவளை அவள் இல்லத்திலிருந்து வெளியேறி இன்று மதியம் பாதிரி லாரன்ஸ் இருக்கும் தேவாலயத்திற்கு வரச் சொல்லு. அங்கே அவள் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கலாம். மணம் புரியலாம்.( ரோமியோவுக்கு வெள்ளிக் காசுகள் கொடுக்கிறான். ) இந்தா தாதி உன்னுடைய முயற்சிக்கு என்னுடைய பரிசு.

செவிலி. : மன்னிக்கணும். இதில் ஒரு காசுகூட எனக்கு வேண்டாம்.

ரோமியோ : சொல்றேன் எடுத்துக்கோ தாதி.

செவிலி ( வாங்கிக் கொள்கிறாள் ) இன்று மதியமா? கண்டிப்பாக வருவாள்.

ரோமியோ : சற்று பொறு தாதிம்மா. இன்னும் ஒருமணி நேரத்தில் என்னுடைய ஆள் ஒருவன் கயிற்றேணி ஒன்று கொண்டுவந்து மாடத்தின் அருகில் வந்து கொடுப்பான். அந்த ஏணி மேல்தான் ஏறி அவளை பார்க்க வருவேன். இரவில் மறைவில் அவளை அந்தரங்கமாகவும் ஆனந்தமாகவும் சந்திப்பேன். வருகிறேன். என்னை நம்பு உன்னுடைய இந்தச் செய்கைக்கு நான் நல்ல வெகுமதி அளிப்பேன். என் வாழ்த்துக்களை உன் சின்ன எஜமானிக்கு தெரிவி தாதிம்மா.

செவிலி : அந்த வானகத் தலைவன் உங்களை வாழ்த்தட்டும் ஐயா. ஒரு நிமிடம் நான் சொல்வதைக் கேளுங்கள்.

ரோமியோ : இன்னும் சொல்வதற்கு என்ன இருக்கிறது ?

செவிலி : உங்கள் ஆள் நம்பத்தகுந்தவர்தானா? ஒரு பழைய வாக்கு உண்டு . ஒருவருக்குத் தெரிந்தால் அது அந்தரங்கம். இருவருக்குத் தெரிந்தால் அது அம்பலம்.

ரோமியோ : நம்புங்கள் என்னுடைய ஆள் இரும்பை விட உறுதியானவன்.

செவிலி :நல்லது ஐயா. என் சின்ன எஜமானி அவ்வளவு இனிமையானவள். சிறு பெண்ணாக இருக்கும்போது அவளை பார்த்திருக்க வேண்டும்….இந்த நகரின் பெருங்குடியைச் சேர்ந்த பாரிஸ் என்ற பிரபு ஒருவர் அவளை மணக்க முன்வந்தார். ஒரு தவளையைப் பார்ப்பது போல ஜூலியட் அவரைப் பார்த்தாள். சில நேரங்களில் அவளை கோபப்படுத்துவதற்காக உங்களை விட அந்த பிரபு பாரிஸ் அழகன் என்று சீண்டுவேன். அவள் முகம் வெள்ளைக் காகிதத்தைப் போல வெளிறிவிடும். ரோஸ்மேரியும் ரோமியோவும் ஒரே எழுத்தில்தான் தொடங்குகிறது என்பேன்.

ரோமியோ : ஆமாம் தாதியம்மா இரண்டு வார்த்தைகளும் ஒரே எழுத்தில்தானே தொடங்குகிறது ?

செவிலி : அது கிண்டலுக்கு. ரோஸ்மேரி எங்கள் வீட்டு நாயின் பெயர். அவள் இரண்டுபேரை பற்றியும் ஏராளமான விஷயம் சொல்லியிருக்கிறாள். கேட்டுப் பாருங்கள் சொல்லுவாள்.

ரோமியோ : என் வாழ்த்துக்களை தெரிவியுங்கள்.

செவிலி ; ஆயிரம் முறை. பீட்டர்.

பீட்டர் : நான் தயார்.

செவிலி : இந்த என் விசிறி. போ போ சீக்கிரம் போ.

( அனைவரும் மறைகின்றனர். )

திரை.

காட்சி -5

அதே வீடு. ஜூலியட் நுழைகிறாள்.

ஜூலியட் : செவிலியை அனுப்பியபோது மணி ஒன்பது. அரைமணிநேரத்தில் திரும்பி விடுவதாக சொல்லிவிட்டு போனவள்.ஒருவேளை அவனை பார்க்கவில்லையோ? ச்சே ! நிச்சயம் அப்படி இருக்க வாய்ப்பில்லை. இவள் சோம்பேறி. மனமே காதலுக்கு ஏற்ற தூது. அவை ஆதவனின் கதிர்களைவிட வேகாமாக செல்லக் கூடியவை. மலைகளில் நிழல்களைப் படியவிட்டு செல்பவை. எனவேதான் காதல் கடவுள் வீனஸை புறாக்கள் எளிதில் சுமந்து செல்கின்றன. எனவேதான் காமவேள் க்யுபிட்டின் சிறகுகள் காற்றைவிட மெல்லியதாக உள்ளன. ஒன்பதிலிருந்து மூன்று மணி நேரம் ஓடிவிட்டது. இன்னும் தாதியைக் காணவில்லை. தாதிக்கு இளவயதிருந்தால் பந்தைப் போல துள்ளி ஓடியிருப்பாள். என் காதலனுக்கு நான் கூறிய வார்த்தைகள் அவளை அங்கு கொண்டு தள்ளியிருக்கும். அவன் எனக்குக் கூறிய மறுமொழி அவளை இங்கு கொண்டு தள்ளியிருக்கும். அவள் ஒரு பறந்தோடி வரும் தூதாகியிருப்பாள். ஆனால் இந்த வயதானவர்கள் இருக்கிறார்களே பாதி இறந்தது போலாகி மந்தமாக, மெதுவாக ,ஈயத்தைப் போல வெளுத்து…..

(செவிலியும் பீட்டரும் நுழைகின்றனர் ) அப்பாடா வந்து விட்டாள். என் செல்ல தாதி எனக்கு என்ன சேதி கொண்டு வந்திருக்கிறாய் ? அவனைப் பார்த்தாயா? (பீட்டரை சுட்டி ) உன் எடுபிடியை முதலில் அனுப்பு.

செவிலி : தம்பி நான் வரும்வரை நீ வாசல் கதவில் காத்திரு.( பீட்டர் மறைகிறான். )

ஜூலியட் : என் சமர்த்து தாதி . ஏன் உன் முகம் வாடியிருக்கிறது ? சேதி சரியில்லை என்றாலும் மறைக்காமல் சொல். அவன் நல்ல செய்தி அனுப்பியிருந்தால் முகத்தை உம்மென்று வைத்து பொய்சொல்லி என்னை அழவைக்காதே.

செவிலி : அப்பாடா ! நான் மிகவும் களைத்துப் போயிருக்கிறேன். ஐயோ என் எலும்புகள் நோகின்றன. இங்கேயும் அங்கேயும் ஓடி ஓடி களைத்து விட்டேன்.

ஜூலியட் : என் எலும்புகளை வாங்கிக் கொண்டு நீ கொண்டு வந்துள்ள செய்தியை என்னிடம் கொடுத்து விடு. சீக்கிரம் சொல்லும்மா. சீக்கிரம்.

செவிலி : என்ன பெண் நீ? கொஞ்சம் கூட பொறுக்கக் கூடாதா? எனக்கு எப்படி மூச்சு வாங்குகிறது?

ஜூலியட் : மூச்சு வாங்குகிறது என்று சொல்வதற்கு மூச்சு இருக்கும்போது என் செய்தி சொல்ல மட்டும் மூச்சு இல்லையா தாதி? உன் சால்ஜாப்பு நீ கொண்டு வந்த செய்தியை விட நீளமாக இருக்கும் போலிருக்கிறதே. சரி நீ கொண்டு வந்துள்ள சேதி நல்லதா கெட்டதா ? எதுவாயிருந்தாலும் பரவாயில்லை. நான் பார்த்துக்கொள்கிறேன் . சொல்லு. அந்த சேதி நல்லதா ? கெட்டதா ?

செவிலி : நல்ல ஆள் என்று ஒருவனைத் தேர்ந்தேடுத்திருக்கிராய் போ. அந்த ரோமியோ… அவனுடைய முகம் வேறு எந்த வாலிபனின் முகத்தையும் விட வசீகரமானதுதான். அவனுடைய கால்கள் மற்ற அனைவரை காட்டிலும் அழகானவை. அவனுடைய கரங்கள், பாதங்கள் மற்ற அங்கங்களை பற்றி வர்ணிக்கவில்லை அவையும் வர்ணனைகளுக்கு அப்பால்பட்டவைதான். அவன் மலர் போன்ற மென்மையானவன் என்று கூற மாட்டேன் ஆனால் நிச்சயம் ஒரு ஆட்டுக்குட்டியை விட சாதுவானவன். உன் மனதில் நினைப்பது போல நடந்து கொள். சாப்பிட்டாயா ?

ஜூலியட் : ஆயிற்று. நீ சொன்னது முழுவதும் எனக்குத் தெரிந்ததுதான். அவன் திருமணம் குறித்து ஏதாவது சொன்னானா?

செவிலி : ஐயையோ ! என் தலை எப்படி வலிக்கிறது தெரியுமா ? என்ன ஒரு தலைவலியோ . தலை இருபது முப்பது துண்டுகளாக வெடித்துவிடும் போலுள்ளது. முதுகு வேறு வலிக்கிறது. ( ஜூலியட் செவிலியின் முதுகைத் தடவிக் கொடுக்கிறாள். ) அங்க இல்லை. இந்தப் பக்கம். கடவுளே வலி பொறுக்க முடியவில்லையே. உன்னைச் சொல்லணும் . என்னை இப்படி அலைகழித்து விட்டாயே. நோவில் செத்துவிடுவேன் போலிருக்கிறது.

ஜூலியட் : என்னை நம்பு. உன் வலியின் தீவிரம் புரிகிறது.செல்லம் செல்லம் செல்லம். சொல்லேன் என் அன்பன் ரோமியோ என்ன சொன்னான் ? என் காதல் என்ன சொல்கிறது ?

செவிலி : ஒரு நேர்மையான கண்ணியவனைப் போல, ஒரு மரியாதை மிக்கவனைப் போல, கருணையும் அழகும் உன்னதமும் மிக்க உன்னத புருஷனைப் போல உன் காதலன் கேட்கிறான் “ உன் அம்மா எங்கே ? ‘

ஜூலியட் : என் அம்மாவா? அவள் உள்ளே இருக்கிறாள். தாதி உன் பதில் விநோதமாக இருக்கிறதே. என் அம்மா உள்ளேதானே இருப்பாள் ? உன் பதில் விசித்திரமாக இருக்கிறது. “மிக்க உன்னத புருஷனைப் போல உன் காதலன் கேட்கிறான் “ உன் அம்மா எங்கே ? ‘ இதற்கு என்ன அர்த்தம் தாதி ?

செவிலி : மேரி மாதாவே ! உனக்குக் கொஞ்சம் கூட பொறுமை என்பதே இல்லையா? இதுதான் நீ என் நோகும் எலும்புகளுக்கு தடவும் களிம்பா? நீயும் ஆயிற்று உன் சேதியும் ஆயிற்று.

ஜூலியட் : நீதான் குழப்புகிறாய். சொல்லு ரோமியோ என்ன சொன்னான்?

செவிலி : இன்று தேவாலயம் சென்று ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கும் நிகழ்ச்சிக்கு செல்ல உனக்கு இன்று அனுமதி கிடைக்குமா?

ஜூலியட் : ஆமாம் கிடைக்கும்.

செவிலி : அப்படி என்றால் பாதிரியார் லாரன்ஸ் இருக்கும் அறைக்கு ஓடு. அங்கே ஒருவன் மங்கை என்ற உன்னை மனைவி என்று மாற்ற காத்திருப்பான். பாருடா . இதைச் சொன்னதும் உன் முகம் இப்படி சிவந்து போகிறதை. இனிமேல் எந்தச் செய்தியைச் சொன்னாலும் உன் முகம் மேலும் சிவப்பாகும். நீ தேவாலயத்திற்கு ஓடு. நான் வேறு ஒரு பாதையில் சென்று நூலேணி ஒன்று கொண்டு வருகிறேன். உன் காதல் பறவை தத்தி, தத்தி அந்த ஏணியில் ஏறி இரவில் உன்னை கூட கூடு வரும். உனக்காக இந்த மாதிரி குற்றேவல் செய்கிறேன். என் நேரம். ஆனால் நீ இரவில் சுகமான சுமையை பொறுத்துக் கொள்ள வேண்டும். நான் மதிய உணவுக்கு செல்கிறேன். நீ பாதிரியாரைப் பார்க்கச் செல்.

செவிலி : என் பொன்னான வருங்காலத்திற்கு வாழ்த்து சொல் தாதிம்மா! உனக்கு மிக்க நன்றி தாதி.

( அவர்கள் மறைகின்றனர் )

திரை.

 

காட்சி-6.

பாதிரியார் லாரன்சின் அறை. ரோமியோவும் பாதிரியாரும்.

பாதிரியார் : எல்லாம் வல்ல ஆண்டவன் இந்தத் திருமணத்தை ஆசிர்வதிக்கட்டும். எவ்வித அசம்பாவிதமுமின்றி உங்கள் வருத்தங்கள் தொலையட்டும்.

ரோமியோ : ஆமென் ஆமென். இருப்பினும் எந்தத் துயர் வந்தாலும் அவளுடைய பார்வை ஒன்று போதும் எனக்கு என் சந்தோஷத்தை பெருக்கெடுக்க. உங்களுடைய வேலை எங்களுடைய கரங்களை இணைத்து வைத்து திருமண மந்திரத்தை ஓதுவது மட்டும்தான். அதன் பிறகு மரணத்தையும் வெல்லும் காதல் போதும் எனக்கு. அவள் என்னுடையவள் என்ற நினைப்பு ஒன்றே போதும்.

பாதிரியார் : இந்த ஆவேச ஆசைகள் ஆவேசமான முடிவைக் கொண்டவை. வெற்றி என்னும் நெருப்பில் பற்றிக் கொள்ளும் வெடி மருந்து போன்றவை. முத்தத்தில் பற்றிக் கொண்டு விடுபவை. பருக பருக திகட்டும் இன்பத் தேன். அளவுக்கும் மிஞ்சிய அமுதம் காதல். எனவே அளவோடு இரு. அதிக வேகமும் வேண்டாம்; ஆமை வேகமும் வேண்டாம். அளவான வேகமே நீடித்த காதலுக்கு உகந்தது.

( ஜூலியட் அவசர அவசரமாக உள்ளே நுழைகிறாள். ) அதோ அந்த சீமாட்டி வருகிறாள். பூ போன்ற பாதங்கள் பாறைகளைக் கடக்க வருகின்றன. காதலர்கள் எடையற்றவர்கள் ; அவர்களால் காற்றில் ஊசலாடும் சிலந்தி வலையின் மீது கூட விழுந்து விடாமல் நடக்க இயலும். மாயம் என்றும் கனமற்றது.

ஜூலியட் : தேவ வணக்கம் என்னுடைய பாவமன்னிப்பை வழங்கவல்ல பாதிரியாரே!

பாதிரியார் : ரோமியோ எங்கள் இருவருக்காகவும் நன்றி சொல்வான் பெண்ணே.

ஜூலியட் : அவனைப் போல நானும் நன்றி சொல்வேன். நாங்கள் இனி இருவர் இல்லை ஒருவர்.

ரோமியோ :ஓ ஜூலியட் ! உன் ஆனந்தம் என்னுடையதைப் போன்றே பொங்கி எழுகின்றது எனில் உன் சொல்வன்மையால் அவற்றை வெளிப்படுத்து. உன் சந்தோஷப் பெருமூச்சுகளால் இந்த அறையின் வாசனையை அதிகப்படுத்து;இசையின் நாவினால் இந்த இன்ப மோதலின் கற்பனைகெட்டாத சந்தோஷத்தை முழங்கு.

ஜூலியட் : என் கர்வம் வார்த்தைகளை விட வலிமை வாய்ந்த என் எண்ணத்தில் உள்ளது. எனவே அவை ஆடம்பரமின்றி தன்னை வெளிப்படுத்தும். செல்வத்தை வெளியிலிருந்து அளப்பவர்கள் பிச்சைக்காரகள். என் காதல் அளப்பரிய மகிழ்ச்சியை எனக்கு வழங்கியிருப்பதால் என்னால் என்னுடைய செல்வத்தை பாதி அளவு கூட எண்ண முடியாது.

பாதிரியார் : சீக்கிரம் சீக்கிரம் வாருங்கள் நமது சடங்கினை விரைவில் முடிக்க வேண்டும். இந்தப் புனித தேவாலயம் உங்கள் இருவரையும் தம்பதியராய் இணைத்து வைக்காமல் உங்கள் இருவரையும் தனித்து விடுவதாக நான் இல்லை. வாருங்கள்.

( அவர்கள் மறைகின்றனர்,. )

திரை.

 

 

 

 

 

 

 

 

தமிழ் நில வெளியில் தற்கால நாடகங்கள் — வெளி ரங்கராஜன்

 

mirugavithushagam_1

 

 

 

 

 

தமிழ் பண்பாட்டு வெளியில் நாடகத்துக்கென ஒரு சிறப்பான இடம் உண்டு ஆடலும் பாடலும் தமிழ் வாழ்வின் பிhpக்க முடியாத அம்சம்களாக இருந்திருக்கின்றன. சங்க காலத்திலும் பின்னா; வந்த காப்பிய காலத்திலும் நம்முடைய இசை மற்றும் ஆடல் மரபுகள் குறித்த பல்வேறு செய்திகள் உள்ளன. தொல்காப்பியா; காலத்தில் வாழ்ந்த சாத்தனாh; இயற்றிய கூத்தநுhல் நடன இலக்கணம் மற்றும் வகைகள் குறித்த எண்ணற்ற குறிப்புகள் கொண்ட ஒரு செறிவான ஆவணமாக உள்ளது. அதில் நாடகம் பிறந்த நிலை இவ்வாறு கூறப்படுகிறது.

 

மோனத்து இருந்த முன்னோன் கூத்தில்

உடுக்கையில் பிறந்தது ஓசையின் சுழலே

ஒசையில் பிறந்தது இசையின்
உயிh;ப்பே

இசையில் பிறந்தது ஆட்டத்து இயல்பே

ஆட்டத்தில் பிறந்தது கூத்தினது அமைப்பே

கூத்தில் பிறந்தது நாட்டியக் கோப்பே

நாட்டியம் பிறந்தது நாடக வகையே

 

அதாவது உடுக்கையிலிருந்து ஓசையும், ஓசையிலிருந்து கூத்தும், கூத்திலிருந்து நாட்டியமும், நாட்டியத்திலிருந்து நாடகமும் தோன்றின என்று கூத்தநுhல் கூறுகிறது. இவ்வாறு ஆடல், பாடலுடன் ஒரு சிறப்பான செய்தியை சொல்வது என்கிற நிலையில் நாடகம் உருவாகிறது. பாணரும், விறலியரும் தங்கள் பாடல் மூலமாகவும் ஆடல் மூலமாகவும் பல்வேறு கலாச்சார செய்திகளை சுமந்து திhpந்திருக்கிறாh;கள். அவா;களுடைய நாடகச்சலனங்கள் கொண்ட எண்ணற்ற குறிப்புகள் நம்முடைய கலித்தொகை, பாpபாடல், பதிற்றுப்பத்து ஆகிய நுhல்களில் உள்ளன. இறந்துபட்டோhpன் புகழைப் போற்றும் சடங்காக துணங்கை கூத்து போh;க்களத்தில் நிகழ்கிறது. சிலப்பதிகாரம் குரவைக்கூத்து போன்ற நிகழ்கலை வடிவங்களை உள்வாங்கிய ஒரு காப்பிய நாடகம். வேத்தியல், பொதுவியல் ஆகிய பிhpவுகளுடன் மன்னா; சிறப்புகளை சொல்லும் அரசவை நாடகங்கள் ஒருபுறமும் பள்ளு, குறவஞ்சி, நொண்டி நாடகம் என அடித்தள மக்கள் வாழ்வியலை சொல்லும் நாடகங்களும் கலாச்சாரத்தின் பகுதிகளாக இருந்திருக்கின்றன. இவற்றின் வளா;ச்சியடைந்த வடிவங்களாகவே கீh;த்தனை நாடகங்களும் பின்னா; தெருக்கூத்தும் பரவலாக இடம் பெறுகின்றன. கும்மி, அம்மானை, பறை, தப்பாட்டம், தேவராட்டம், கணியான் கூத்து என பல்வேறு விளையாட்டு மற்றும் சடங்குகளுடன் இணைந்த கொண்டாட்ட வடிவங்களாகவும் நாடக உணா;வுகள் வெளிப்பாடு கொண்டுள்ளன. பரம்பரை பரம்பரையாகவும், வாய்மொழியாகவும் பல பிரதிகள் காலப்போக்கில் உருவாகி நாடகம் என்கிற வடிவம் பரந்துபட்ட மக்களின் அபிமானத்துக்குhpய வடிவமாக நிலைபெறுகிறது.

பொதுவாக ஓசைகளும், அசைவுகளும் தீவிரமாக மனித மனத்தை அலைக்கழிக்கும் தன்மை கொண்டவையாக இருக்கின்றன. அதனால்தான் இலக்கியம் போன்றவை அறிவுபூh;வமான தாக்கங்களுடன் நின்றுவிடுகிற நிலையில் ஓசைகளையும், அசைவுகளையும் அடிப்படையாகக் கொண்ட நாடகம் போன்ற நிகழ்கலைகள் பல அடிமன உணா;வுகளை கிளா;ந்தெழச் செய்பவைகளாக இருக்கின்றன. படித்தவா; முதல் பாமரா; வரை எல்லோருக்கும் பல்வேறு சுவையுணா;வுகளை எழுப்பி சமூகத் தளத்தில் பரவலான மதிப்பீடுகள் உருவாகக் காரணமாக அமைகின்றன. முத்துசாமி தன்னுடைய ‘வண்டிச்சோடை’ கட்டுரையில் கிராமப்புற பாதைகளில் வண்டிகள் செல்லும் போது சருகுகள் எழுப்பும் ஓசைதான் தன்னுடைய கற்பனைகள் துhண்டப்பட காரணமாக அமைந்தது என்கிறாh;. நடுநிசியில் வண்டி ஓட்டிச் செல்கிறவனின் தெம்மாங்குப் பாட்டு, ஏற்றம் இறைக்கிறவா;களின் கீதம், காலையில் ஊh;க்கோவிலில் வாசிக்கும் நாதசுரத்திலிருந்து பிறக்கிற பூபாள ராகம், இரண்டு மைல்களுக்கு அப்பால் உள்ள தண்டவாளத்தில் சீட்டி அடித்துக் கொண்டு ஓடும் ரயில் முழக்கம், முள்ளங்கி முள்ளங்கி என்று கூவிவிற்கும் ஏழைச் சிறுவா;களின் குரல், கோலப் பொடியை மொக்குமாவு என்று கூவிவிற்கும் சிறு பெண்ணின் குரல் என்று தான் ரசித்த மண்ணுலகத்து நல்லோசைகளைப் பட்டியலிடுகிறாh; சிறுகதை எழுத்தாளா; கு.அழகிhpசாமி. அண்மையில் நிகழ்த்தப்பட்ட முத்துசாமியின் இங்கிலாந்து நாடகத்தில் நம்முடைய வாகனங்கள் மற்றும் வாழ்விடங்களின் இழப்பு குறித்த ஒரு ஆழ்ந்தகுரல் ஒலித்தது.

இந்தி நாடகாசிhpயா; தா;மவீh; பாரதியின் ‘சிருஷ்டியில் பிறந்த மனிதன்’ என்ற நாடகத்தை கனவுவெளி என்ற அமைப்பு அண்மையில் நிகழ்த்தியது. இந்த நாடகம் இயற்கைக்கு எதிராக மனிதன் நடத்தும் போராட்டங்களையும் அதனால் அவன் எதிh;கொள்ளும் அவலங்களையும் பற்றிய ஒரு நாடகம். நடிகா;களின் தோ;ந்த உடல்மொழியும், கவிதைகளும் கொண்டு ஒரு எளிய அரங்கச் சூழலில் அழிவுகளுக்கு இடையிலும் உயிh;ப்புகளுக்கான சாத்தியங்கள் தொடா;ந்து உருவாகிக் கொண்டிருப்பதை நாடகம் நினைவூட்டியது. அந்த நாடகத்தை பாh;த்துக் கொண்டிருந்தபோது அண்மையில் ஜப்பானில் நிகழ்ந்த இயற்கைப் போpடா; குறித்த நினைவுகளும் அவைகளை எதிh;கொள்வதில் அந்தநாடு வெளிப்படுத்திய ஆற்றலும் நினைவுக்கு வந்தன. ஜப்பான், சீனா போன்ற கீழை நாடுகளின் உடல்கூறுக் கலாச்சாரமும், புனைவு மரபுகளின் கற்பனை மற்றும் படைப்புணா;வுப் பொறிகளும் எண்ணற்ற மனித ஆற்றல்களுக்கான களனாக இருப்பதையும், சூழலின் சிக்கலான அடா;ந்த தன்மையை ஒரு வாழ்வியல் அம்சமாக எதிh;கொள்ளும் சாத்தியங்கள் நிறைந்து இருப்பதையம் அது நினைவூட்டியது. அதுவே அப்போpடா;களை சந்திப்பதற்கான மன ஆற்றலை வழங்கிக் கொண்டிருப்பதான உணா;வும் ஏற்பட்டது. அதே போல் உடல்கூறுக் கலைகளும், உடல் மொழியின் நுட்பங்களும் பரவலாக வேரூன்றியுள்ள நம்முடைய நாட்டுப்புறச் சூழல்களில் மனித பலகீனங்கள் குறித்த நெகிழ்வுகளும், கறாh;தன்மையற்ற மதிப்பீடுகளும் இயல்பாக நிலவுவதையும், தொன்மைக் கதையாடல்கள் மூலமாக உருவாக்கப்படும் பிம்பங்கள் மனித உறவுநிலைகள் குறித்த சமநிலைகளை உறுதி செய்வதையும் நாம் பாh;க்க முடியும்.

 

download (2)

 

 

 

உடலும் மனமும் அந்நியமாகிப் போகிக் கொண்டிருக்கிற இன்றைய சூழலில் உடல் தன்மையின் லயத்திலிருந்தே மனிதன் தன்னுடைய மீட்புக்கான சாத்தியங்களை ஆராயவேண்டியுள்ளது. இந்நிலையில் அரங்கம் ஒரு உயிh; இயக்கத்துக்கான சாத்தியங்களை முன்வைக்கிறது. ஓசைகளும், அசைவுகளும், கொண்ட ஒரு செறிவான மனித இயக்கம் அங்கு சாத்தியப்படுகிறது. நெடுந்துhரத்திலிருந்து ஒலிக்கும் விவசாயப் பெண்ணின் பாடலில் உள்ள சோகம் ஒரு கவிஞனின் மனத்தை அலைக்கழிக்கிறது. இன்று பறை, துடும்பு போன்ற இசைக்கருவிகள் விடுதலை உணா;வின் குறியீடாக நாடகங்களில் ஒலிக்கின்றன. ஒரு அடா;த்தியான இசைத்தன்மை முருகபூதியின் நாடகங்களில் ஊடுருவிச் சென்றபடி உள்ளது. உறுமி ஓசையும், புல்லாங்குழலும், டிஜ்ருடுவும், கிலுகிலுப்பைகளும், பல நாடோடி இனக்குழுக்களின் வாத்தியங்களும் ஒரு தொன்மைச் சூழலையும், நிகழ்வுக்கான ஒரு இறுக்கமான லயத்தையும் உருவாக்குகின்றன.

ஒரு சமூகத்தின் நினைவுகளுக்கு உயிரூட்டி செயலுhக்கம் வழங்குவதற்கான உந்துதலை அரங்கம் கொண்டிருக்கிறது. ‘நினைவின் நகரம்’ என்று செஞ்சியை மையமாக வைத்து அண்மையில் எடுக்கப்பட்ட ஒரு ஆவணப்படத்தில் திரௌபதி கூத்துகளில் வெளிப்படும் திரௌபதியின் பெருஞ்சினம் என்கிற குறியீட்டின் ஊடாக பல்லவா; மற்றும் சாளுக்கியா; காலகட்டப் போh; நினைவுகள் கிளறப்படுவதை பாh;க்க முடிந்தது. போhpல் மாண்டவா;கள் பற்றிய நினைவுகள், அரசின் வாpவிதிப்புக் கொடுமைகளால் கிராமங்களிலிருந்து மக்கள் கூண்டோடு வெளியேற்றம், ஊh;திரும்பும் ஏக்கம் என பல்வேறு நினைவோட்டங்கள் துhண்டப்படுவதையும் திரௌபதி கூத்து கிராமத்தின் நினைவாகவே தங்கிவிட்டிப்பதையும் பாh;க்க முடிந்தது. அண்மையில் சென்னையில் நிகழ்த்தப்பட்ட பிரசன்னா ராமசாமியின் சக்திக்கூத்து நாடகம் திரௌபதியின் குரலில் அரசவை மேலோhpன் மௌனத்தை கேள்விக்குட்படுத்தும் பாரதியின் மனநிலையை இன்றைய காலத்துக்கு பொருத்தி போh;களில் நிகழும் பெண் மீதான ஒடுக்குமுறை, இயற்கை மற்றும் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் மாசு. மனித உhpமை மீறல்கள் ஆகியவை குறித்த எதிh;ப்புக் குரலாக ஒலிக்கிறது. சென்னை பல்கலைக் கழகத்தில் நிகழ்த்தப்பட்ட பழனியின் வியூகம் நாடகத்திலும் மனிதா;கள் தமக்குhpய தா;மங்களுடன் வேட்டையாடியும், புசித்தும், குளித்தும், கொண்டாடியும் எண்ணற்ற உயிhpகளுடன் இணைந்து ஆடியும், பாடியும் மகிழ்ந்திருந்த காலகட்டங்கள் நினைவுகூரப்பட்டன.

பன்னாட்டு அரசியல் நாசமடைந்து மூன்றாம் உலக நாடுகளின் கலாச்சார சின்னங்களும், அடையாளங்களும் அழிக்கப்படுவதும், சமண பௌத்தப்படுகைகள் பாறை வியாபாhpகளால் தகா;க்கப்படுவதும், மரபு விதைகள் அழிக்கப்பட்டு விவசாயம் வறண்டு விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்படுவதும், ஏh;வாடி மனநோயாளிகள் எhpக்கப்படுவதுமான அழிவுகள் நாடகத்தின் உயிh;ப்பொருள்களை சிதைத்து கலாச்சார மீட்டுருவாக்கத்தை சிக்கலாக்குவதை உணா;ந்த நிலையில் ஒரு கலைஞனின் எதிh;ப்புக்குரலாக முருகபூபதி பித்த நிலத்தின் பொம்மைகளை உருவாக்குகிறாh;. போhpனால் காயமான பூமியெங்கும் பொம்மைகளை ஊன்றுகிறாh;. பாமியான் மலையில் தகா;க்கப்பட்ட புத்தா; சிலை உதிர முகமூடி நாடகத்தில் உயிh;த்தெழுந்து வருகிறது. வனத்தாதியில் எhpக்கப்பட்ட நுhலகங்கள் பற்றிய பேச்சு வருகிறது. வனத்தாதி பல்வேறு வாதைகளுக்கு ஆற்றுதல் செய்யும் தாவர சிகிச்சைகளின் குறியீடாக இருக்கிறாள். கூந்தல் நகரவாசிகள் எந்தப் பாத்திரமாகவும் மாறுகிற சக்தி கொண்ட தங்கள் கூந்தலை விhpத்து அhpக்கேன் ஒளியில் மிதந்த சுடாpன் காலத்தை நினைவுபடுத்துகிறாh;கள். சமூகத்தின் மறுக்கமுடியாத கலாச்சார உடல்கள் சடங்கில் வாழ்ந்து கொண்டிருப்பதையும், அதை மொத்த சமூகத்தின் கூட்டிசைவாகவும் உணரும் முருகபூபதி சுய அடையாளங்களை வைத்துக் கொண்டிருக்கும் கலையும், மரபு நடிகனும் கைகோh;க்கும் பயணத்தை தம்முடைய நாடகங்களில் முன்மொழிகிறாh;. சடங்கும், நிலமும், உடலும் இயங்கும் கனவுவெளியில் அவா; பயணம் தொடா;கிறது. நாடகத்தில் அலைவுறும் உடல்களின் இசை, வெற்றுடம்பு, வேறுவிதமான உடலையும் உயிரையம் உருவாக்கும் ஒப்பனைகள், முகமூடிகள் மற்றும் சுயத்தை தொலைத்த கலாச்சார நடிகா;கள் என ஒரு கூட்டியக்கம் உருக்கொள்கிறது. வழக்கமான பிரதி உருவாக்கத்துக்கு மாறாக எண்ணற்ற இணைப்பிரதிகளும், தீவிரமான கவிதை மொழியும், ஆதி இசையும், உயிhpனங்களின் அசைவுகளும், நிலத்தின் உயிh;ப்புகளை உள்வாங்கிய அரங்கப் பொருள்களுமாய் அதிகாரத்துக்கு எதிரான கலாச்சாரத்தின் உயிh;ப்பு சக்திகளை திரட்டும் குறியீடாகவும், எதிh;காலத்துக்கான நம்பிக்கையூட்டும் அரங்கமாகவும் முருகபூதியின் அரங்கம் தோற்றம் கொள்கிறது.

ஒற்றைக் குரல்களின் ஆதிக்கங்களும், அபாயங்களும், பெருகி வருகிற இன்றைய சூழலில் பன்மைக்குரல்களும், சிறுகதையாடல்களும் செயல்படும் தளமாக அரங்கம் இயங்குவதற்கான சாத்தியங்கள் உள்ளன. நம்முடைய காப்பியங்களில் கூட அதுபோன்ற எண்ணற்ற சரடுகளை நாம் பாh;க்க முடியும். அவை அரங்கம் போன்ற ஒரு காட்சித்தளத்தில் இன்னும் அதிக செறிவை அடைகின்றன. அண்மையில் நான் பாh;த்த முத்துசாமியின் அh;ச்சுனன் தபசு நாடகத்தில் அh;ச்சுனன் ஆயுதம் வேண்டி கைலாயத்தை நோக்கி தவமிருப்பதை ஏகலைவனின் சீடா;களான வேடா;கள் எதிh;க்கிறாh;கள். தாங்கள் வில்லேந்துவது உணவுக்காக மட்டுமே. அh;ச்சுனன் செய்வது போல உலக அழிவிற்காக அல்ல என்று அவா;கள் வாதிடுகிறாh;கள். கற்பனை எதிhpகளை உருவாக்கிக் கொண்டு ஆயுதக்குவிப்புக்கு ஆயத்தமாகும் வல்லரசுகளின் போக்கை அh;ச்சுனன் தபசு நினைவுபடுத்துகிறது. சமகால நுண்ணுணா;வுத் தளங்களும், நுண் அரசியலும் அழகியல் தன்மையுடன் செயல்படக்கூடிய தளங்களை கூh;மைப்படுத்தும் வல்லமை கொண்டிருக்கிறது அரங்கம். வடகிழக்கு மாநிலங்களில் நிலவும் காவல் சட்டங்களுக்கு எதிராக மணிப்புhp நாடகங்கள் உடலையே ஆயுதமாக முன்நிறுத்துவதை நாம் பாh;க்க வேண்டும். உடல் குறித்த கட்டுமானங்கள் விலக்கப்பட்டு உடலின் அதிகபட்ச சாத்தியங்கள் இங்கு முன்வைக்கப்படுகின்றன. முக்கியமாக பால்தன்மையின் இறுக்கங்கள் உடைகின்றன.

தொன்மங்களும், காப்பியங்களும், நாட்டுப்புறக் கதையாடல்களும், இசைப்பாடல்களும், கூத்தும் நம்முடைய நாடக வடிவங்களின் செறிவான பின்புலங்களாக நம்முடைய கலாச்சாரத்தில் தொடா;ந்து இருந்து வருகின்றன. எளிய கதை வாசிப்பில் நாம் உணரத்தவறிய பல தருணங்களை இந்த நிகழ்வுகள் மீட்டெடுக்கின்றன. ஒவ்வொரு முறை நிகழ்த்தப்படும் போதும் காலம் மற்றும் சூழல் மாறுபாடுகளுக்கேற்றபடி மாறுபபட்ட தொனிகளும், அh;த்தங்களும் கொண்டவையாக இருக்கின்றன. நம்முடைய சமகால அழகியல் அணுகுமுறைகளுக்கான ஊக்கமும், உத்வேகமும் பெறக்கூடிய வாய்ப்புகளை இவை உருவாக்குகின்றன.

கண்முன்னே நிகழ்த்தப்பட்டு மனித ஸ்பாpசத்தையும் உரையாடலையும் உயிh;ப்புடன் முன்நிறுத்தக் கூடிய அhpய கலையாக அரங்கம் இருந்தாலும் வேகமாகச் சென்றடையக்கூடிய காட்சி ஊடகங்களின் ஆக்கிரமிப்புகளால் அரங்கத்தின் இருப்பும், செயல்பாடும் பின்னடைவு கொண்டதான தோற்றம் உள்ளது. இன்றைய உலகமயமாக்கல் சூழலில் பண்பாட்டு வோ;கள் சிதைந்து தனிமையில் உழலும் தனிமனிதனை சமூகப்படுத்தும் வேலையை ஒரு நாடகமே செய்ய இயலும். சமூகம் தொழில் நுட்பத்தையே அதிகம் சாh;ந்து நிற்கிற இன்றைய சூழலில் தனிமனிதன் தன்னுடைய உடலின் உள்ளாh;ந்த ஆற்றல்களை மீண்டும் மீண்டும் புதுப்பித்துக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது. நாடகம் அதற்கான அண்மையை வழங்கும் எண்ணற்ற சாத்தியங்கள் கொண்டது.

 

 

******************

ஷேக்ஸ்பியரின ரோமியோ ஜூலியட் ஆங்கில வழி மொழியாக்கம் – சத்தியப்பிரியன்.

download (18)

 

ஒரு சொல் :

 

ரோமியோ ஜூலியட் கதை காலம் கடந்த காதல் கதை. உலகில் மொத்தம் பத்து காதல் கதைகளை பட்டியலிட்டால் அதில் இந்த ரோமியோ ஜூலியட் கதை கண்டிப்பாக இடம் பெறும். இரண்டு தனிக்குடிகளுக்கு இடையில் உள்ள பகைமை இரண்டு காதலர்களை வாழ்வில் ஒன்று சேரவிடாமல் மரணத்தில் ஒன்று சேர்க்கும் கதை. ஷேக்ஸ்பியர் இதனை எழுதத் தொடங்கிய தனது ஆரம்ப காலங்களில் காதல் ஒன்றும் சோகத்தில் முடியும் விஷயமாக இருக்கவில்லை. எழுதப்பட்ட காலத்தில் இந்த நாடகம் மிகவும் பிரபலமானது. ஷேக்ஸ்பியரின் வாழ்நாளுக்குள் இரண்டு முறை இந்த நாடகம் நூல் வடிவில் அச்சேறியது, மிகப் பெரிய சாதனை. நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னர் அச்சுக்கலை இப்போது இருப்பதை போல நவீன தொழில்நுட்பத்துடன் இருக்கவில்லை. இதில் வரும் மேல்மாடக் காட்சி இன்றளவில் பெரிதும் ரசிக்கபட்டும், பலரது கற்பனைக்கு ஒரு உந்துதலாகவும் இருந்து வருகிறது.

பெரும்பாலான ஷேக்ஸ்பியரின்  நாடகங்கள் தனக்கு முன்னால்  இருந்த நூல்களின் கதைகளை  ஒட்டியே இருக்கும். இந்த  நாடகம் கூட ஆர்தர் ப்ரூக்  என்ற எழுத்தாளரின் ரோமியோ  ஜூலியட் இருவரின் சோக  வரலாறு என்ற நூலிலிருந்து  எடுத்தாளப்பட்டட கதைதான். குடிவழி வம்சாவழி பெருமைகளைத் தூக்கி நிறுத்தும் நாடகம் என்றாலும் இந்த ரோமியோ ஜூலியட் நாடகம் ரசிகர்களிடம் எளிதில் சென்றடைந்த நாடகம். ஜூலியஸ் சீசரைப் போலவே எலிசபெத் கால நாடக உலகை பற்றி அறிந்து கொள்ள மேற்கத்திய மாணவர்களால் பெரிதும் விரும்பி படிக்கப்பட்ட நாடகம் இதுவாகும். இந்த நாடகம் முழுவதும் ஷேக்ஸ்பியர் மொறு மொறு என்று தூவிய காதல் கவிதைகளுக்காவே இந்த நாடகம் பலரைச் சென்றடைந்தது. அனைத்து மறுக்கப்பட்ட காதல் கதைகளுக்கும் இந்த ரோமியோ ஜூலியட் முன்மாதிரி.

கதைச் சுருக்கம் : மாண்டேக் மற்றும் கபுலெட் இரண்டும்இத்தாலி நாட்டில் உள்ள வெரோனா நகரின் இரண்டு உயர்குடிகள். அரசாங்கப் பணியில் உயர்பதவி வகிப்பவர்கள். ஆனால் இரண்டு குடிகளுக்கும் நடுவில் ஜென்மப்பகை ஒன்று வம்சாவழியாகத் தொடர்கிறது. இரண்டு குடியினருக்கும் நடுவில் நடந்த கைகலப்பிற்கு பின்புதான் ரோமியோ அறிமுகமாகிறான்.இந்தக் கைகலப்பினால் வெறுத்துப்போன வெனோரா நகர இளவரசர் எஸ்கலஸ் தலையிட்டு இனி இது போன்ற மோதல் நிகழ்ந்தால் இரண்டு குடிகளும் கடுமையான தண்டனை பெறநேரிடும் என்று எச்சரித்து விடுகிறார்.

நாடகத்தில் வெறும்  வாய்மொழியில் அறியப்படும்  ரோசலின் என்ற பெண்தான்  ரோமியோவின் முதல் காதல். ஆனால் கைகூடாத காதல். ரோசலின்  நினைவாக வாடும் ரோமியோ. பதின்மூன்று வயதே நிரம்பிய ஜூலியட் வெனோராவின் துடிப்பும் வசீகரமும் காதலும் நிரம்பிய பாரிஸ் என்ற இளைஞனுக்கு நிச்சயம் செய்யப்படுகிறாள். இருவரும் ஜூலியட்டின் தந்தையான திருவாளர் . கபுலெட் இல்லத்தில் இரவு நடைபெற உள்ள முகமூடி பால் நடனத்தில் சந்திக்க உள்ளனர். ரோமியோவும் அந்த பால் நடனத்தில் மாற்றுடையில் தனது காதலியான ரோசலின் கலந்து கொள்ளஇருப்பது தெரிந்து படு உற்சாகமாக கிளம்பி வருகிறான். விதி மாற்று வழிகளை காட்டிவிட ரோமியோவும் ஜூலியட்டும் காதலில் வீழ்கின்றனர். ஜூலியட்டின் ஒன்றுவிட்ட சகோதரன் திபால்ட் ரோமியோவை அடையாளம் கண்டு கொள்கிறான். அந்த இடத்திலேயே ரோமியோவை கொன்றுவிட முயற்சிக்கிறான். அவன் முயற்சி வெற்றியடையவில்லை. கபுலெட் பிரபு தடுத்து விடுகிறார்.

பார்ட்டி முடிந்ததும் ரோமியோ ஜூலியட் மாளிகையில் அவளுடைய மேல்மாடத்தின் கீழ் உள்ள இடத்தில் பதுங்கி தங்களது திருமணம் குறித்து திட்டமிடுகிறான்.

இனிமேல்தான் கதையில் சிக்கல் ஏற்படுகிறது. ரோமியோ ஜூலியட் இருவர் மீதும் அபிமானம் கொண்ட பாதிரியார் லாரன்சை ரோமியோ சந்தித்து தனது காதலைத் தெரிவிக்கிறான். தனது செவிலித்தாயிடம் ஜூலியட் தனது காதலைத் தெரிவிக்கிறாள். செவிலி ரோமியோவையும் எந்த தருணத்தையும் நகைப்புக்கிடமாக்கும் அவனது நண்பன் மெர்குஷியோவையும் சந்திக்கிறாள். ரோமியோ செவிலியிடம் ஜூலியட்டை பாதிரியார் லாரன்ஸ் இருக்கும் இடத்திற்கு அழைத்துவரச் சொல்லுகிறான். மறுநாள் பாதிரியார் லாரன்ஸ் முன்பு ரோமியோ ஜூலியட்டை ரகசியமாக மணக்கிறான்.  செவிலி மணநாள் இரவு ஜூலியட்டின் சாளரத்தை எட்டுவதற்கு ஒரு ஏணி ஏற்பாடு செய்கிறாள்.

மறுநாள் ரோமியோவின் ஒன்றுவிட்ட சகோதரனும் அவசரக்காரனுமான திபால்ட் ரோமியோவைத் தேடி வருகிறான். ரோமியோவைக் காணாது ரோமியோவின் நண்பர்களான பென்வோலியோ மற்றும் மெற்குஷியோ இருவருடனும் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறான். நடுவில் நுழையும் ரோமியோவை திபால்ட் வலுச் சண்டைக்கு இழுக்கிறான். அந்த நேரம் சமாதானமாக போகவே ரோமியோ தீர்மானிக்கிறான். ஆனால் திபால்டின் பேச்சினால் கிளர்ந்தெழும் மெற்குஷியோ அவனுடன் சண்டைக்கு செல்கிறான். திபால்ட் கையில் உள்ள வாளால் மெற்குஷியோவைத் தாக்கி விட்டு சென்று விடுகிறான். மெற்குஷியோ இறந்து விடுகிறான். இதனால் ஆத்திரமடையும் ரோமியோ திபால்டை வாளால் வெட்டிக் கொன்று விடுகிறான். இந்தக் கலவரத்தின் இறுதியில் வரும் இளவரசர் எஸ்கலஸ் ரோமியோவை வெனோரா நகரத்திற்குள் நுழையக்கூடாது என்று உத்தரவிடுகிறார்.

அந்த இரவு ஜூலியட்டின் அறைக்குள் ரோமியோ நுழைகிறான். அந்த இரவு அவர்களது முதல்இரவாகிறது. விதியின் விளையாட்டு குரூரமாகிறது. முதல் இரவு கழிந்த மறுநாள் ஜூலியட்டின் பெற்றோர்களான கபுலெட் தம்பதிகள் சுளியட்டிற்கு பாரிசை நிச்சயம் செய்கின்றனர். ஜூலியட் மறுத்தும் பயனில்லை.

ஜூலியட் தங்கள் இருவருக்கும் மணமுடித்து வைத்த பாதிரியார் லாரன்சை சந்திக்கிறாள். அப்போது அந்தப் பாதிரியார் மூலிகை மருந்து ஒன்றை ஜூலியட்டிற்கு தருகிறார். அந்த மருந்தை உட்கொள்வதால் சரியாக 42 மணி நேரத்திற்கு இறந்தவளைப் போல பிணமாக கிடக்க்கலாம் என்றும் அவள் இறந்து விட்டாள் என்று கபுலட் தம்பதியர் அவளை மயானத்தில் அடக்கம் செய்வார்கள் என்றும் அதைக் கேள்விப்பட்டு ஓடிவந்து பார்க்கும் ரோமியோ ஜூலியட் சாகவில்லை என்பது அறிந்து அவளை அழைத்துக் கொண்டு விடுவான் என்கிறார்.

விதி வேறு விதமாக விளையாடியது…..

எப்படி என்பதை என்னுடன்   malaigal.com   இணைய இதழில் தொடர்ந்து வாருங்கள் ஐந்து வாரங்கள். ஷேக்ஸ்பியரின் காதல் கவிதைகளுடன் சற்று ஆசுவாசமாக பயணிப்போம்.

அன்புடன் என்றும்,

சத்தியப்பிரியன்.

ஷேக்ஸ்பியரின் ஒதெல்லோ ( அங்கம்-5 ) – மொழியாக்கம் -சத்தியப்பிரியன்

ஷேக்ஸ்பியர்

ஷேக்ஸ்பியர்

அங்கம்-5

காட்சி-1
சைப்ரஸ் நகரில் ஒரு வீதி.

பாத்திரங்கள் : இயாகோ மற்றும் ராடெரிகோ.

இயாகோ : இந்தக் கட்டிடத்தின் பின்னால் மறைந்துகொள். அவன் நேரே இங்குதான் வருவான். உன் உடைவாளை தயாராக வைத்திரு. அவன் குரல்வளையில் சொருக வேண்டும். உன் செயல் படுவேகமாக இருக்கட்டும். எதற்கும் அஞ்சாதே. நான் உன்னருகில் இருப்பேன். உன் செயல்தான் அனைத்தையும் தீர்மானிக்கும். உன் தீர்மானத்தில் சஞ்சலம் கூடாது.

ராடெரிகோ: என்னருகில் இருங்கள் இயாகோ. நான் தவறு செய்து விடப் போகிறேன்.

இயாகோ : இதோ உன்னருகிலேயே இருக்கிறேன். தைரியமாக இரு. உன் முடிவில் உறுதியாக இரு. ( இயாகோ ராடெரிகோவை விட்டு விலகி நிற்கிறான். )

ராடெரிகோ : எனக்கு இந்தக்கொலையில் முழு ஈடுபாடு கிடையாது. ஆனால் இயாகோ நம்பும்படியான காரணங்களைக் கூறுகிறான். என் வாளுக்கு கண்டிப்பாக ஒருவன் இரையாகப் போகிறான். அதில் மாற்றம் இல்லை.

இயாகோ : இவனை எங்கு தட்ட வேண்டுமோ அங்கு தட்டி விட்டேன்.இவனுடைய கோபம் அதிகமாகத் தொடங்கி விட்டது. இவன் கேஷியோவைக் கொன்றாலோ அல்லது கேஷியோ இவனைக் கொன்றாலோ அல்லது இருவருமே குத்திக் கொண்டு செத்தாலும்  எனக்கு இலாபம்தான். ராடெரிகோ உயிருடன் பிழைத்தால் டெஸ்டிமோனாவிடம் கொடுக்கப் போவதாகச் சொல்லி நான் பதுக்கி வைத்துள்ள ஆபரணங்களை திரும்பக் கேட்பான். கேஷியோ உயிருடன் இருந்தால் அவன் பதவி காரணமாக அவன் மெருகு ஏறும் என் மெருகு அழியும். மூரிடம் கேஷியோவைப் பற்றி நான் பொய்யாகச் சொன்ன குற்றங்களை மூர் அவனிடம் சொல்ல நேர்ந்தால் என் பாடு ஆபத்துதான். எனவே அவன் நிச்சயம் இறக்க வேண்டும். அதோ அவன் வருகிறான்.

( கேஷியோ வருகிறான் )

ராடெரிகோ : காலடி ஓசை கேட்கிறது. வருவது கேஷியோதான். சாவுடா அயோக்கியப் பதரே! (ராடெரிகோ கேஷியோவை நோக்கித் திரும்புகிறான். )

கேஷியோ : இது எதிரியின் தாக்குதல். நல்லவேளை நான் உள்ளே கவசம் அணிந்து வந்துள்ளதால் உயிர் தப்பினேன். வா எதிரியே ! உன்னை என் வாளுக்கு இரையாக்குகிறேன்.    ( தன் உடைவாளை சுழற்றி ராடெரிகோவைக் காயப்படுத்துகிறான். )

ராடெரிகோ : ஐயோ செத்தேன்.

( இயாகோ கேஷியோவின்  கால்களை மறைந்திருந்து  வாளால் வெட்டுகிறான் )

கேஷியோ : ஐயோ ! என் கால்கள் துண்டிக்கப்பட்டு நான் முடமாக்கப் பட்டு விட்டேனே. ( மயங்கிச் சாய்கிறான் )

( ஒதெல்லோ தொலைவில்  வருகிறான். )

ஒதெல்லோ : அங்கு கேட்பது கேஷியோவின் கூக்குரல் அல்லவா?  இயாகோ தான் கூறியதை முடித்து விட்டான்.

ராடெரிகோ : என்ன ஒரு அயோக்கியன் நான்.

ஒதெல்லோ : அதில் சந்தேகம் என்ன ?

கேஷியோ : உதவி உதவி ஐயோ யாராவது மருத்துவரை அழைத்து வாருங்கள்.

ஒதெல்லோ :அவனேதான். ஓ இயாகோ ! உன் நேர்மையும் நியாயமும் மெச்சதக்கவைதான். நண்பன் செய்த குற்றத்தை தக்க முறையில் தண்டித்து விட்டாய். எனக்கு பாடம் புகட்டி விட்டாய். பெண்ணே ! உன் காதலன் முடிவை நோக்கி வருகிறான். விதி உன் முடிவை தொட வருகிறது. .வேசியே ! இதோ வருகிறேன்.என் இதயத்திலிருந்து உன்னுடைய பரவசமூட்டும் கண்களை பிடுங்கி எறிந்து விடுகிறேன். பாவச் செயலால் கறைபடிந்த உன் மஞ்சம் உன்னுடைய காமக்குருதியால் நனையப்போகிறது. ( மறைகிறான். )

( லொடோவிகோ கிராஷியானோ  வருகின்றனர். )

கேஷியோ : யாரங்கே ? காவலர்கள் எவருமில்லையா? ஒருவரும் வரவில்லையா? கொலை கொலை !

கிராஷியானோ : இங்கு ஏதோ விபத்து நடந்திருக்கிறது. அடிபட்டவனின் அலறல் பரிதாபமாக உள்ளது.

கேஷியோ : உதவி உதவி !

லொடோவிகோ : அதோ பார்.

ராடெரிகோ : அயோக்கியப் பதரே !

லொடோவிகோ : இரண்டு மூன்றுபேர்களின்  அலறல் கேட்கிறதே. மை இருட்டில் ஒன்றும் கண்ணுக்குத் தெரியவில்லை. இன்னும் இரண்டு மூன்று பேர்கள் உடனிருந்தால் அருகில் சென்று என்னவென்று பார்க்கலாம்.

ராடெரிகோ : யாருமில்லையா?  ? நான் இரத்தம் கசிந்து சாகப்போகிறேன்.

லொடோவிகோ : அங்கே பார் !

( இயாகோ ஒரு விளக்குடன்  வருகிறான். )

கிராஷியானோ :அதோ ஒருவர் கையில் விளக்குடனும் ஆயுதத்துடனும் வருகிறார்.

இயாகோ : யாரது கொலை கொலை என்று அலறியது ?

லொடோவிகோ : தெரியவில்லை.

இயாகோ : யாரோ ஒருவன் வழியில் முனகுவது உங்களுக்கு கேட்கவில்லையா?

கேஷியோ : கடவுளே யாருமில்லையா உதவிக்கு ?

இயாகோ : என்ன ஆயிற்று?

கிராஷியானோ( லொடோவிகோவைப் பார்த்து,) : அது ஒதெல்லோவின் துனைத்தளபதியின் குரல் போல இருக்கிறதே.

லொடோவிகோ : ஆமாம் அவர்தான். உபதளபதி எங்கே இருக்கிறீர்கள் ?

இயாகோ ( கேஷியோவை பார்த்து ) யார் இது வேதனையில் அரற்றுவது ?

கேஷியோ :இயாகோ ! நான் கொலைபாதகர்களால் சாய்க்கப்பட்டு விட்டேன். கொஞ்சம் உதவி புரியுங்கள்.

இயாகோ :கேஷியோ. எந்தக் கொலை பாதகன் இந்த அக்கிரமத்தைப் புரிந்தது ?

கேஷியோ : இங்கேதான் அவன் இருக்கிறான். தப்பமுடியாது அவனால்.

இயாகோ : கொடும் பாவிகள்.( லொடோவிகோ மற்றும் கிராஷியானோ இருவரையும் பார்த்து ) யாரது ? கொஞ்சம் வந்து உதவி செய்யுங்கள் .

ராடெரிகோ : உதவிக்கு யாராவது வாருங்களேன்.

கேஷியோ : என்னை வீழ்த்தியவர்களில் அதோ ஒருவன்.

இயாகோ :அடேய் கொலைகாரப் பாவி.

ராடெரிகோ : இயாகோ என்ற படுபாவியே ! நீ உருப்படுவியா நாயே ?

இயாகோ : இப்படியா இருளில் கொலை புரிவார்கள்? எங்கே அந்த கொலை பாதகர்கள்? இது என்ன இரவில் இப்படி தூங்கும் நகரம். அங்கு வருபவர்கள் யார் ? நீங்கள் நல்லவர்களா? கொலை புரிபவர்களா?

லொடோவிகோ : நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.

இயாகோ : திருவாளர் லொடோவிகோ ?

லொடோவிகோ : நான்தான்  ஐயா.

இயாகோ : மன்னிக்கவேண்டும். இங்கு கேஷியோ கொலை பாதகர்களால் தாக்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.

கிராஷியானோ : கேஷியோ

இயாகோ : சகோதரா ! உனக்கு இப்போது எப்படி உள்ளது?

கேஷியோ : எனது இரண்டு கால்களும் துண்டிக்கப்பட்டு விட்டன.

இயாகோ : யார் அங்கே ஓலமிடுவது ?

பியான்கா : என் அருமை கேஷியோ ! ஐயோ உங்களுக்கா இந்த நிலை? கேஷியோ கேஷியோ கேஷியோ .

இயாகோ : கேடுகெட்ட வேசியே தள்ளி போ ! கேஷியோ ! உன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்கள் யார் என்று தெரியுமா?

கேஷியோ : தெரியாது.

கிராஷியானோ : உங்களை இவ்வாறு பார்ப்பேன் என்று எண்ணவில்லை. உங்களைத் தேடிக்கொண்டுதான் இங்கு வந்தேன்.

இயாகோ : யாரவது இறுக்கிக் கட்ட கயிறு கொண்டு வாருங்களேன். ஒரு தூக்குப் பலகை இருந்தால் நல்லது.

பியான்கா : ஐயோ அவர் மயக்கமடைந்து விட்டார்.

இயாகோ : பெருந்தகைகளே ! இதோ இந்த வேசியும் இந்த கொலைபாதகத்தில் பங்குடையவளாக இருக்கக் கூடும். ஐயா! கொஞ்சம் பொறுத்துக் கொள். வாருங்கள் வாருங்கள்! விளக்கை என்னிடம் கொடுங்கள். இந்த முகம் யாருடையது? அட இது ராடெரிகோ ! என் நண்பன். என் ஊரைச் சேர்ந்தவன். ஆமாம் அவனேதான்.ராடெரிகோ !

கிராஷியானோ : என்னது இவர் வெனிஸ் நகரைச் சேர்ந்தவனா?

இயாகோ : ஆமாம் ஐயா அவனை உங்களுக்குத் தெரியுமா?

கிராடியனோ : தெரியுமாவா ? நன்றாகத் தெரியும்.

இயாகோ : திருவாளர் கிராஷியானோ ! தங்களை கண்டு கொள்ளவில்லை என்று தவறாக எண்ண வேண்டாம். இங்கு இந்தக் கொலைக் கூப்பாட்டில் எனக்கு எதுவும் ஓடவில்லை.

கிராஷியானோ : உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.

இயாகோ : கேஷியோ இப்போது எப்படி இருக்கிறது. ஒரு நாற்காலி கொண்டு வாருங்கள்.

கிராஷியானோ : ராடெரிகோ .

இயாகோ : அவன்தான் அவன்தான். இதோ தூக்குப் பலகை வந்துவிட்டது. நல்ல திடமான யாராவது அவரை மருத்துவரிடம் கொண்டு செல்ல உதவுங்கள். (பியான்காவை நோக்கி ) பெண்ணே கவலை வேண்டாம். இங்கு வெட்டுப்பட்டு கிடக்கும் இந்த ராடெரிகோ எனது உற்ற நண்பன். கேஷியோ ! உங்கள் இருவர் நடுவில் அப்படி என்ன நேர்ந்தது?

கேஷியோ : எந்தப் பிரச்சினையும் இல்லை. எனக்கு இவனை முன்னே பின்னே தெரியாது.

இயாகோ ( பியான்காவிடம் ). ஏன் உன்முகம் இப்படி வெளுத்துப் போயிருக்கிறது?                     ( உதவியாளர்கள் ராடெரிகோவையும், கேஷியோவையும் எடுத்துச் செல்கிறார்கள் ) பாருங்கள் கனவான்களே. அவளைக் கண்காணியுங்கள். நமக்கு முழுக்கதையும் தெரிய வரும். குற்றம்புரிந்தவர்களின் மெளனம் கூட சேதி சொல்லும்.

( எமிலியா வருகிறாள் )

எமிலியா: ஐயோ என்ன நடந்தது ? அத்தான்  என்ன நடந்தது?

இயாகோ : கேஷியோவை இருட்டில் ராடெரிகோவும் அவன் ஆட்களும் சாவின் விளிபில் கொண்டு தள்ளியிருக்கிறார்கள். ராடெரிகோ முக்காலும் செத்து விட்டான்.

எமிலியா ; ஐயோ என்ன கொடுமை இது ?

இயாகோ : வேசித்தனத்திற்கு கிடைத்த பயன் இதுதான். கேஷியோவிடம் அவன் எங்கு தனது இரவு உணவை உண்டான் என்று கேள். ஏன் பியான்கா உனக்கு இப்படி நடுங்குகிறது?

பியான்கா : அவர் என் வீட்டில்தான் இரவு உணவை உண்டார். ஆனால் அது என்னை நடுக்கமுறச் செய்யவில்லை.

இயாகோ : அப்படியா ? உனக்கு ஆணையிடுகிறேன். நீ என்னுடன் வா பெண்ணே.

எமிலியா : வேசியே நீ நாசமாய்ப் போக !

பியான்கா : நான் ஒன்றும் வேசி இல்லை. உங்களைப் போன்ற கண்ணியமானவள்.

எமிலியா: என்னைப் போல கண்ணியமானவளா? அடி செருப்பாலே.

இயாகோ :கணவான்களே ! கேஷிய்வின் காயங்கள் மருந்தால் நன்கு கட்டபடட்டும்.(பியான்காவை பார்த்து ) அம்மணி. அடுத்த கதையைக் கூறுங்கள். நாங்கள் கேட்க தயாராக இருக்கிறோம். எமிலியா கொத்தளதிற்குள் சென்று ஒதெல்லோ மற்றும் டெஸ்டிமோனாவிடம் இங்கு நடந்ததை சொல்லி விட்டு வா. போ இப்போதே சொல்லு. இந்த இரவுதான் என்னை வாழ வைக்கும் அல்லது வீழ வைக்கும் இரவு.

காட்சி நிறைவு.

 

அங்கம் ஐந்து

காட்சி-2

ஒதெல்லோவின்  அரண்மனையில் உள்ள படுக்கையறை. டெஸ்டிமோனா படுத்து உறங்கிக் கொண்டிருக்கிறாள். ஒரே ஒரு விடிவெள்ளி மட்டும் எரிகிறது..

ஒதெல்லோ ( உள்ள நுழைந்தபடி ) இதுதான் முடிவு. இதுதான் முடிவு என் உயிரே . தூய வான் நட்சத்திரங்களே  ! உங்களிடம் கூறமாட்டேன். ஆனால் இதுதான் முடிவு. பாலினும் வெண்மையான , பளிங்கினும் வழவழப்பான இவளுடைய தேகத்தைக் கீறி இரத்தம் சிந்த விட மாட்டேன். இருப்பினும் அவள் சாக வேண்டும் மேலும் ஆண்களை வஞ்சிக்கப்படாமல் இருப்பதற்கு. விளக்கின் ஒளியை முதலில் அணைக்க வேண்டும். பிறகு அவள் வாழ்வின் ஒளியை அணைக்க வேண்டும். எரியும் விளக்கே  ! உன்னை அணைத்தால் மீண்டும்  ஏற்றி விடலாம். ஆனால் உயிரின் விளக்கை அனைத்து விட்டால் மீண்டும் ஏற்றுவதற்கு என்னிடம் மாயக் கந்தகம் எதுவும் இல்லை. நான் வருத்தபட்டும் பயனற்றுப் போய்விடும். ரோஜா மலரை செடியிலிருந்து பறித்து விட்டால் மீண்டும் என்னால் அதனை மலர வைக்க இயலாது. எனவே ரோஜாமலரை செடியில் இருக்கும்போதே முகர்ந்து பார்க்கிறேன் ( டெஸ்டிமோனாவை  முத்தமிடுகிறான் ). உன்னுடைய இந்த மென்மையான சுவாசம் என் வாளை ஓங்ககவிடாமல் தடுக்கிறது. உறங்கும்போது இருப்பதைப்போலத்தான் நீ இறந்தபின்னும் அழகாக இருப்பாய் என்றால் உன்னை முதலில் கொன்று விடுகிறேன் பின் காதலிக்கிறேன். இன்னும் ஒன்றே ஒன்று. ஓ ! இந்தக் கடைசி முத்தம் ! ஓ ! இனிக்கும் உன் முத்தம் இப்படி விஷமாக இருந்ததில்லை. நான் அழ வேண்டும் டெஸ்டிமோனா . என் கண்ணீர்த் துளிகள் கொலைத்துளிகள். கொடூரமானவை.  புராணங்களில் வரும் கடவுள்களைப் போல காதலித்தவளையே கொல்லும் நிலைக்கு தள்ளபட்டுள்ளேன். என்ன ஒரு வேதன்பை ! ஓ அவள் விழித்து விட்டாள்.

டெஸ்டிமோனா{ விழித்தபடி ) யார் அங்கே? ஒதெல்லோ?

ஒதெல்லோ : ஆமாம் டெஸ்டிமோனா.

டெஸ்டிமோனா: படுக்கைக்கு வருவீர்களா அன்பே?

ஒதெல்லோ : இரவு பிரார்த்தனையை முடித்து விட்டாயா டெஸ்டிமோனா?

டெஸ்டிமோனா ; ஆயிற்று என் பிரபு.

ஒதெல்லோ : பாவமன்னிப்பு கேட்கபடாத குற்றங்கள் உன்னிடம் உண்டென்றால் இதுதான் சமயம் அவற்றிற்கு இப்போதே பாவ மன்னிப்பு கேட்டு விடு.

டெஸ்டிமோனா: பிரபு இதன் மூலம் நீங்கள் தெரிவிக்க நினைப்பது என்ன?

ஒதெல்லோ : சீக்கிரம் நடக்கட்டும். நான் காத்திருக்கிறேன். ஆயத்தமடையாத ஆத்மாவாக உன்னை வானுலகம் அனுப்பப் பிரியப்படவில்லை. சொர்க்கத்தைத் தவிர வேறு எங்கும் உன்னை அனுப்ப நான் பிரியப்படவில்லை.

டெஸ்டிமோனா: என்னைக் கொல்வது குறித்தா பேசுகிறீர்கள்?

ஒதெல்லோ : ஆமாம் . நான் அதைப் பற்றிதான் கூறுகிறேன்.

டெஸ்டிமோனா: என் கருணையே என் மீது இரக்கம் காட்டுங்கள்.

ஒதெல்லோ : அப்படியே ஆகட்டும். என் இதயத்தின் அடிஆழத்திலிருந்து இதனைக் கூறுகிறேன்.

டெஸ்டிமோனா; நீங்கள் கூறுவது உண்மை என்றால் நிச்சயம் நீங்கள் என்னைக் கொல்ல மாட்டீர்கள்.

ஒதெல்லோ : ஹூப்

டெஸ்டிமோனா: உங்களை பார்த்தால் பயமாக இருக்கிறது. விழிகளை அங்குமிங்கும் உருட்டி நீங்கள் பார்க்கும் பார்வை அச்சமூட்டுவதாக உள்ளது. என்னிடம் குற்றமில்லை. இருப்பினும் அஞ்சுகிறேன்.

ஒதெல்லோ : உன் பாவங்களை எண்ணிக்கொள்

டெஸ்டிமோனா : உங்களைக் காதலித்ததைத் தவிர வேறு எந்த குற்றமும் புரியவில்லை..

ஒதெல்லோ : இதற்காகவே நீ கொல்லப்படவேண்டும். ஏன் உங்கள் அடிஉதடு இப்படி துடிக்கிறது? ஏன் உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருக்கிறீர்கள்? இவையெல்லாம் எனக்கு அபசகுணங்களாகப் படுகின்றன. அவை எனக்கானவை அல்ல என்று நினைக்கிறேன்.

ஒதெல்லோ : பொறு.அமைதியா இரு.

டெஸ்டிமோனா: அப்படியே பொறுமையுடன் இருக்கிறேன். முழுவதும் என்ன நடந்ததென்று கூறுங்கள்.

ஒதெல்லோ : எந்தக் கைக்குட்டையை நான் அதிகம் நேசித்து உன்னிடம் கேட்டேனோ அதனை நீ அந்த கேஷியோவிடம் கொடுத்தாய்.

டெஸ்டிமோனா: என் உயிரின் மேல் ஆணை. நான் அவனிடம் இதனைக் கொடுக்கவில்லை. வேண்டுமென்றால் அவனை இங்கே அழைத்து வந்து விசாரியுங்கள்.

ஒதெல்லோ : மரணப் படுக்கையில் அமர்ந்து கொண்டு பொய்  பேசாதே என் இனியவளே.

டெஸ்டிமோனா: ஆனால் நான் இன்னும் இறக்கவில்லை.

ஒதெல்லோ : இதுவரை. எனவே உன் குற்றங்களுக்கு பாவ மன்னிப்பு கேள். உண்மையுடன் உன் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை நீ மறுத்தாலும் என் எண்ணத்தை உன்னால் மாற்ற முடியாது. எப்படியும் நீ சாகத்தான் போகிறாய்.

டெஸ்டிமோனா : வானகமே என் மீது கருணை காட்டு.

ஒதெல்லோ : அப்படியே ஆகட்டும் என்று கூறுகிறேன்..

டெஸ்டிமோனா: அதே சமயம் என் மீதும் கருணை காட்டுங்கள். உங்களுக்கு நான் இதுவரை நான் எந்தத் துரோகமும் புரியவில்லை.  கேஷியோவை நான் இதுவரை காதலித்ததில்லை. மற்றவர்களை  நேசிப்பது போலத்தான் அவனை நேசித்தேனே தவிர காதலுக்கு நான் இடம் அளிக்கவில்லை.

ஒதெல்லோ : வானகம்…இந்தக் கைக்குட்டை கேஷியோவிடம் இருந்தது.  பொய்ப்பித்தலாட்டக்காரி ! என் இதயத்தை இரும்பக்காதே. எதனை நான் தியாகம் என்று நினைக்கிறேனோ அதனை ஈனப்படுகொலை என்று மாற்றிவிடாதே. அந்தக் கைக்குட்டையை நான் பார்த்தேன்.

டெஸ்டிமோனா : அவன் வேறு எங்காவது அதனை எடுத்திருக்கலாம். அவனை அழைத்து விசாரியுங்கள். உண்மை புலப்படும்.

ஒதெல்லோ : அவன் ஏற்கனவே குற்றத்தை ஒப்புக் கொண்டுவிட்டான்.

டெஸ்டிமோனா : என்னது பிரபு?

ஒதெல்லோ : அவன் உன்னை பயன்படுத்தியதை ஒப்புக் கொண்டுவிட்டான்.

டெஸ்டிமோனா: எப்படி ? இது நீதிக்கே அடுக்காது.

ஒதெல்லோ : ஆமாம்.ஒப்புக் கொண்டுவிட்டான்.

டெஸ்டிமோனா ; இருக்காது. அவன் அப்படி கூறியிருக்க மாட்டான்.

ஒதெல்லோ : இனி அவன் மேற்கொண்டு பேசமாட்டான். அதற்கான ஏற்பாட்டினை இயாகோ செய்து முடித்து விட்டான்.

டெஸ்டிமோனா: என்னது உண்மையாகவா? அவன் இறந்து விட்டானா?

ஒதெல்லோ : அவன் தலையில் இருக்கும்  மயிர்களின் எண்ணிக்கையை விட அவனைக் கொல்லவேண்டும் என்ற என் வஞ்சத்தின் எண்ணிக்கை பெரியது டெஸ்டிமோனா! : அவன் வஞ்சிக்கப்பட்டான். நான் துண்டிக்கபட்டேன்.

ஒதெல்லோ : சாத்தானே ! அவன் செத்ததற்கு என் முன்னால் ஒப்பாரி வைக்காதே.

டெஸ்டிமோனா: என்னை துரத்தி விடுங்கள். ஆனால் கொன்றுவிடாதீர்கள்.

ஒதெல்லோ : ஒழிந்து போ வேசியே !

டெஸ்டிமோனா: !நாளை என்னைக் கொல்லுங்கள்.  இன்று  இரவு என்னை வாழ விடுங்கள்.

ஒதெல்லோ : இப்படி எதிர்த்துப் பேசினாய் என்றால்….

டெஸ்டிமோனா :ஒரு அரைமணி நேரம் பொறுங்கள்.

ஒதெல்லோ : ஒருகணம் கூட பொறுக்க முடியாது.

டெஸ்டிமோனா: என் பிரார்த்தனையை செய்வதற்கு அனுமதி அளியுங்கள்.

ஒதெல்லோ : மன்னிக்கவும் பெண்ணே. நேரம் கடந்து விட்டது. ( அவளை மூக்கை அழுத்தி மூர்ச்சையாக்குகிறான். )

எமிலியா: ( கதவைத் தட்டியபடி )பிரபு என்னுடைய பிரபு

ஒதெல்லோ :என்ன சத்தம் வெளியில் ? இன்னும் சாகவில்லையா? நான் கருணை மிகுந்தவன். நான் அதேசமயம் கொடூரமானவன்.  அவள் இறக்கும்போது துடிப்பதை காண சகியாதவன்.

எமிலியா : ஓ பிரபு ! ஓ பிரபு !

ஒதெல்லோ : யாரது வெளியில் ?

எமிலியா : (குரல் மட்டும் ) பிரபு ஒரு நிமிடம் உங்களிடம் பேச வேண்டும்.

ஒதெல்லோ : அது எமிலியா அல்லவா?- இரு எமிலியா- ஆ இறந்து விட்டாள். எமிலியா கேஷியோ இறந்த செய்தியை சொல்ல வருகிறாளோ ? வெளியில் இரைச்சல் அதிகமாக உள்ளது. இனி நீ அசைய மாட்டாய் அல்லவா? சவமாகக் கிடக்கிறாய். அவளை உள்ளே வரச் சொல்லலாமா? அது சரிதானா? அதோ அவள் அசைகிறாள். இன்னமும் உயிர் போகவில்லை. இப்போது என்ன செய்யலாம்? அவள் உள்ளே வந்தால் நிச்சயம் என் மனைவியிடம் பேசுவாள். என் மனைவி. என் மனைவி. எனக்கு ஏது இனிமேல் மனைவி? ஓ ! இதனை ஏற்கமுடியாது. இன்று சந்திர கிரகணமாகவோ அல்லது சூரிய கிரகணமாகவோ இருக்க வேண்டும். டெஸ்டிமோனா இந்த மண்ணை விட்டு இன்று அகன்று விட்டாள்.

எமிலியா: ( குரல் மட்டும் )உங்களை மன்றாடிக் கேட்கிறேன். உங்களிடம் பேசவேண்டும் பிரபு.

ஒதெல்லோ (கதவைத் திறக்க உள்ளே நுழையும் எமிலியாவைப் பார்த்து} இன்று என்னவாயிற்று உங்களுக்கு?

எமிலியா: அங்கே கொடூரக் கொலைகள் நடந்திருக்கின்றன பிரபு.

ஒதெல்லோ : இப்பொழுதா?

எமிலியா: ஆமாம் இதோ இப்போது.

ஒதெல்லோ நிலவுப்பெண்ணின் பிழையிது. பூமிக்கு மிக அருகில் வந்து ஆண்களை பைத்தியமாக்குகுகிறாள்.

எமிலியா: கேஷியோ ராடெரிகோ என்ற வாலிபனைக் கொன்று விட்டார்.

ஒதெல்லோ : ராடெரிகோ இறந்துபட்டானா? அப்போது அந்த கேஷியோவும் கொல்லபட்டானா?

எமிலியா: இல்லை. அவர் உயிருடன் இருக்கிறார்.

ஒதெல்லோ: என்னது கேஷியோ கொல்லப்படவில்லையா? குறி தவறிய அம்பு. ஆ ! மோக வஞ்சம் இப்படியானதே.

டெஸ்டிமோனா: ஐயோ ! நான் தவறுதலாக பலி வாங்கப் பட்டு விட்டேன்.

எமிலியா: யாருடைய அழும் குரல் இது பிரபு?

ஒதெல்லோ : என்னது ? எது?

எமிலியா: ஓ! இது என் தலைவியின் முனகல் அல்லவா?

( எமிலியா படுக்கையை சுற்றியிருந்த  திரையை விலக்குகிறாள் ).

உதவி உதவி ! ஓ ! என் இனிய தலைவியே. அம்மா உங்களுக்கு என்னவாயிற்று?

டெஸ்டிமோனா: குற்றமற்ற சாவு என்னைத் தழுவிக் கொண்டிருக்கிறது.

எமிலியா: இந்த கொடூரத்தை உங்களுக்கு நிகழ்த்தியது யார் அம்மா?

டெஸ்டிமோனா: யாருமில்லை. இது நானே வரவழைத்துக் கொண்டது. விடைகொடு. வருகிறேன். என் தலைவனிடம் என் காதலைச் சொல். நான் வருகிறேன் . ( இறக்கிறாள். )

ஒதெல்லோ : அவள் ஏன் கொலை செய்யபட்டாள்?

எமிலியா: யாருக்குத் தெரியும் ? இறைவா!

ஒதெல்லோ : நான் கொல்லவில்லை என்று அவள் கூறியதை நீ கேட்டாய் அல்லவா?

எமிலியா: ஆமாம் அப்படித்தான் சொன்னாள். நான் இதனை பற்றி புகார் அளிக்கவேண்டும். வருகிறேன்.

ஒதெல்லோ : நரகத்தின் வாசற்படியை மிதிக்கச் சென்றாலும் அவள் பொய் சொல்வதை நிறுத்தமாட்டாள். கொன்றது நான். இல்லை என்று கூறினாள்.

எமிலியா: இந்தச் சாவின் மூலம் என் தலைவி ஒரு தேவதையாகவும் நீங்கள் ஒரு சாத்தானாகவும் மாறி விட்டீர்கள்.

ஒதெல்லோ : அறிவு கெட்டவள். வேசி.

எமிலியா ; அவளை நம்பாத, நீங்கள் ஒரு சைத்தான் பிரபு.

ஒதெல்லோ : நீரைப் போல களங்கமானவள்.

எமிலியா: நீங்கள் நெருப்பைப் போல ஆத்திரக்காரர். அவளை பழி சொல்ல மிகவும் அவசரப்பட்டு விட்டீர்கள். வானகம் சாட்சியாக அவள் தூய்மையானவள்.

ஒதெல்லோ : கேஷியோ அவளுடன் தகாத உறவு வைத்திருந்தான். உன் கணவனிடம் கேட்டு பார். இந்தக் கொலையை நான் செய்வதற்கு சரியான காரணம் இல்லையென்றால் என்னை நரகத்தில் கொண்டு தள்ளு. உன் கணவனுக்கு எல்லாம் தெரியும்.

எமிலியா: என் கணவன்…?

ஒதெல்லோ : உன் கணவன்.

எமிலியா: புனிதமான திருமணத்திற்கு புறம்பாக நடந்தாள் என்றாரா?

ஒதெல்லோ : ஆம் கேஷியோவுடன் கள்ளத் தொடர்பில் இருந்தாள். அவள் மட்டும் நேர்மைதவறாமல் இருந்திருந்தால் அந்தக் கடவுளே வந்து மிகப் பெரிய விலைமதிப்பற்ற மாணிக்கக் கல்லை கொடுத்து அதற்கு ஈடாக இவளைக் கேட்டிருந்தாலும் கொடுத்திருக்கமட்டேன்.

எமிலியா: என் கணவர்?

ஒதெல்லோ : உன் கணவன்தான் கூறினான். நாணயமானவன். அவளுடைய கெட்ட நடத்தையை முதலில் என்னிடம் கூறியவன்.

எமிலியா: என் கணவரா?

ஒதெல்லோ : உன் கணவன் என்று ஆரம்பத்திலிருந்து கூறுகிறேன். திருப்பி திருப்பி என் கணவனா என்கிறாயே?

எமிலியா: ஐயோ அம்மணி ! ஒரு பாதகன் உங்கள் காதலுக்கு மாசு கற்பித்திருக்கிறான். என் கணவர் சொன்னாராம் இவள் நடத்தை கெட்டவள் என்று.

ஒதெல்லோ : உன் கணவன்தான். நான் சொல்வது உன் காதில் விழவில்ல்லையா? உன் கணவன். இயாகோ என்ற நாணயஸ்தன்.

எமிலியா: அந்த ஆள் அப்படி சொல்லியிருந்தால் அவர் அணு அணுவாக அழுகிச் சாகட்டும். பச்சை பொய் சொல்லியிருக்கிறார். ஒன்றுக்கும் உதவாத இந்தத் திருமண பந்தத்தையா இவள் தலையில் வைத்துக் கொண்டாடினாள்?

( ஒதெல்லோ உடைவாளை உருவுகின்றான். )

ஒதெல்லோ : ஹா !

எமிலியா: வாருங்கள். என்னைக் கொன்று போடுங்கள். என்னைக் கொல்வதால் உங்களுக்கு சொர்க்கப் பதவி கிடைக்கப் போவதில்லை. என் தலைவிக்கு ஏற்ற துணை கண்டிப்பாக நீங்கள் கிடையாது.

ஒதெல்லோ : வாயை மூடு.

எமிலியா: உன் வாளால் என் உடலில் ஏற்படுத்தும் ரணத்தை இப்போது நீங்கள் ஏற்படுத்தியுள்ள ரணம் கொடூரமானது. முட்டாளே ! அறிவு கெட்டவனே ! மண் ஆந்தையே கெட்ட காரியம் செய்து விட்டாய். இனி உன் வாளுக்கு நான் அஞ்ச மாட்டேன். நீ யார்என்று த உலகத்துக்கு சொல்லப் போகிறேன். உதவி உதவி ! மூர் என் தலைவியைக் கொன்று விட்டார். கொலை கொலை !

( மாண்டனோ கிராஷியானோ, மற்றும் இயாகோ மூவரும் வருகின்றனர் )

மாண்டனோ : என்ன விஷயம் ? இங்கு என்ன நடக்கிறது தளபதி?

எமிலியா: வந்து விட்டாயா இயாகோ ? நல்ல காரியம் செய்து விட்டாய். இனி மற்றவர்கள் உன்னைக் காரணம் காட்டி கொலை செய்யலாம்.

கிராஷியானோ : என்ன விஷயம் ?

எமிலியா : ( இயாகோவைப் பார்த்து ) நிஜமாகவே நீங்கள் ஆண்மக்கள் என்றால் இவன் மீது குற்றம் சுமத்தி இழுத்துச் செல்லுங்கள். இவன் அவரிடமே அவர் மனைவி நடத்தைகெட்டவள் என்று பொய்யாக  பழி சொல்லியிருக்கிறான்.  நீங்கள் அத்தனை கல்நெஞ்சம் படைத்தவர்கள் இல்லை என்று நினைக்கிறேன். பேசுங்கள். இனி உணர்ச்சிப்பிழம்பாக மாறிவிட்ட என் இதயம் பேசாது.

இயாகோ : எனக்குத் தோன்றியதை நான் கூறினேன். அவரால் முடிந்ததை அவர் புரிந்து கொண்டார்.

எமிலியா: அவள் நடத்தைகெட்டவள் என்று நீ சொல்லவே இல்லையா?

இயாகோ : சொன்னேன்.

எமிலியா: கேவலமான அருவருக்கத்தக்க பொய். என் ஆத்மாவிற்கு தெரியும். அது கீழ்த்தரமான வஞ்சகப் பொய் என்று. சொல் அவளுக்கும் கேஷியோவிற்கும் கள்ளத் தொடர்பு இருந்தது என்று நீ பொய் சொல்லவில்லை?

இயாகோ : கேஷியோவுடனா ? அம்மணி கொஞ்சம் நாவை அடக்கு.

எமிலியா : எதற்கு நான் நாவை அடக்க வேண்டும்? முடியாது. என் தலைவி அங்கே படுக்கையில் கொலை செய்யப்பட்டு கிடக்கிறாள்.

அனைவரும் : கடவுளே அப்படி நடக்காமல் தடுப்பாயாக.

எமிலியா: உன்னுடைய அபாண்டம் ஒரு கொலையில் முடிந்திருக்கிறது.

ஒதெல்லோ : அப்படி பார்க்காதீர்கள் கணவான்களே. நிஜம்தான். நான்தான் செய்தேன்.

கிராஷியானோ : ஜீரணிக்க முடியாத நிஜம்.

மாண்டனோ : மிருகத்தனமான செயல்.

எமிலியா : என்ன ஒரு கயவாளித்தனம். கயவாளி. அப்பொழுதே எனக்கு சந்தேகம் வந்தது. தடுத்திருக்கலாமே. ஐயோ இப்போது புலம்பி என்ன செய்ய? என் குற்றவுணர்ச்சி என்னைக் கொன்றுவிடும் போலிருக்கிறதே.

இயாகோ : உனக்கு பைத்தியம் பிடித்து விட்டதா? சைத்தானே ஆணையிடுகிறேன். இங்கிருந்து போ.

எமிலியா; நல்லது கனவான்களே. என்னைப் பேச அனுமதியுங்கள். அவர் சொல்லுக்குக் கட்டுப்படுவதுதான் முறை. ஆனால் இப்போது அல்ல. இதற்குப் பிறகு எனக்கு வீட்டிற்கு செல்லும் வாய்ப்பு கிட்டாமல் போகலாம் இயாகோ.

ஒதெல்லோ : ஐயோ ஐயோ ஐயோ !

எமிலியா; விழு புரண்டு அழு ! கதறு ! எங்குமே காணக்கிடைக்காத ஒரு இனிமையான அப்பாவியின் கண்களை மீண்டும் திறக்கவிடாமல் மூடிய பாவத்திற்கு அழு.

ஒதெல்லோ ( எழுந்து கிராஷியானோவைப் பார்த்து ) ஓ! அவள் நடத்தை கெட்டவள். உங்களை நான் அதிகம் பார்த்ததில்லை மாமா. உங்கள் மருமகள் இறந்து கிடக்கிறாள். என்னுடைய இந்தக் கரங்களால்தான் கொன்றேன். எனக்குத் தெரியும் இது கொடூரமான செயல்; பயங்கரமான செயல்.

கிராஷியானோ : டெஸ்டிமோனா : பாவப்பட்ட பெண்ணே ! நல்லவேளை உன் தந்தை இப்போது உயிருடன் இல்லை. உன் திருமணத்தை கேள்விப்பட்ட அதிர்ச்சியிலேயே உனக்கு முன்பே போய்ச்சேர்ந்து விட்டார். உன் சாவை அவர் பார்க்க நேர்ந்திருந்தால் அவருடைய சாபம் தேவதைகளையும் எரிச்சலுறச் செய்திருக்கும்.

ஒதெல்லோ : பரிதாபம். இருப்பினும் இயாகொவிற்குத் தெரியும் அவள் எத்தனை ஆயிரம் முறை கேஷியோவுடன் சல்லாபித்திருக்கிறாள் என்று. கேஷியோ ஒப்புக் கொண்டுவிட்டான் அவன் செய்த பாவங்களை. காதல் அடையாளமாக நான் அவளுக்குக் கொடுத்த கைக்குட்டையை நான் கேஷியோவிடம் பார்த்தேன். அது ஒரு பழமையான பரிசுச் சின்னம். என் அன்புத்தந்தை என் தாயாருக்குக் காதல் பரிசாகக் கொடுத்தது.

எமிலியா: வானகமே வானகத்து தெய்வங்களே !

இயாகோ : துத்தேறி மூடு வாயை.

எமிலியா : உண்மை வெளிப்படும். உண்மை வெளிப்படும். நான் வாயை அடைக்கணுமா?  முடியாது. இந்த பூமியும் அந்த வானமும் அதில் உள்ள தேவர்களும் மாந்தர்களும் வந்து சொன்னாலும் உண்மையைக் கூறாமல் நான் வாய் மூட மாட்டேன்.

இயாகோ : புத்திசாலியா வீட்டுக்கு போ. ( இயாகோ தனது உடைவாளை உருவுகிறான். )

எமிலியா :  மாட்டேன்.

கிராஷியானோ : உன் வீரத்தை பெண்ணிடம் காட்டாதே  இயாகோ.

எமிலியா: பாழாய்ப்போன மூரே ! அந்த கைக்குட்டை கீழே கிடந்தது. நான்தான் கண்டெடுத்து என் கணவனிடம் கொடுத்தேன். என் கணவன் என்னை பலமுறை அந்தக் கைக்குட்டையை அவளிடமிருந்து திருடிக் கொண்டு வரச் சொல்லி நச்சரித்துக் கொண்டிருந்தான்.

இயாகோ : பச்சைத் தேவிடியா !

எமிலியா : என் தலைவி அதனை கேஷியோவிடம் கொடுத்தாளா ? இல்லை பிரபு . நான் எடுத்து என் கணவனிடம் கொடுத்தேன்.

இயாகோ : கேடு கெட்டவளே ! பொய்யா சொல்கிறாய் ?

எமிலியா: ஐயா புண்ணியவான்களே  நான் சொல்வதைக் கேளுங்கள். நான் பொய்சொல்லவில்லை ( ஒதேல்லோவைப் பார்த்து ) முட்டாள் மூர் !  ஒரு  தேவதையைப் போன்ற  மனைவியைக்  கொல்வதைத் தவிர உன்னால் வேறு என்ன செய்திருக்க முடியும்

ஒதெல்லோ : இயாகோ தலை மீது  வானம் பிளந்து இடி   விழட்டும்.( இயாகொவைப் பிடிக்க ஓடுகிறான். இயாகோ எமிலியாவை வாளால் குத்தி விடுகிறான். )

கிராஷியானோ : அதோ அவள் கீழே சரிகிறாள். இயாகோ தன மனைவியைக் கொன்று விட்டான்.

எமிலியா ( சரிந்தபடி ) என் தலையின் அருகிலேயே என்னையும் படுக்க வையுங்கள்.

( இயாகோ தப்பி ஓடிவிடுகிறான் )

கிராஷியானோ : அவன் தப்பி விட்டான். அவன் மனைவி இறந்து விட்டாள்.

மாண்டனோ : கொடூரமான அயோக்கியன். மூரிடமிருந்து பறித்த ஆயுதத்தை வாங்கிக் கொள்ளுங்கள். சீக்கிரம் கதவுகளை மூடச் சொல்லுங்கள். அவன் இங்கிருந்து தப்பிவிடக் கூடாது. அவன் உயிருடன் வேண்டும். நான் அவனைப் பின் தொடர்ந்து செல்கிறேன். மகா பாதகன்.

( மாண்டனோவும், கிராஷியானோவும்  வெளியில் ஓடுகிறார்கள் )

ஒதெல்லோ : என் வாளை ஓர் அற்பன் பறித்துச் செல்வதைத் தடுக்க முடியாத கோழையாகி விட்டேன். நாணயம் பறிபோனபின்பு வீரம் ஏன் வாழ வேண்டும் ? எல்லாம் தொலைந்து போகட்டும்.

எமிலியா: என் தலைவியே நீ பாடிய பாடலின் பொருள் என்ன? நான் இசையில் மூழ்கி ஒரு அன்னப்பறவையைப்போல மடிகிறேன். ( பாடுகிறாள் )

ஒற்றை மரத்தின் கீழிருந்து ஒரு புள்ளினம்

மூங்கில் காட்டை நினைத்து பாடும் பலதினம்.

மூர் அவள் புனிதமானவள். அதிகமாக உன்னைக் காதலித்தவள். என் ஆன்மாவின் மீது சத்தியம். என் மனம் நினைப்பதைத்தான் நான் சொல்கிறேன். ஆ! இறக்கிறேன். ( மடிகிறாள் )

ஒதெல்லோ : என்னிடம் வேறொரு வாள் உண்டு. ஸ்பெயின் தேசத்து வாள். பனியில் இறுகியது. கூரானது. இதோ இங்கிருக்கிறது. மாமா நான் வெளியில் வருகிறேன்.

கிராஷியானோ : ( வெளியில் இருந்தபடி ) வேண்டாம். தப்பிக்க முயற்சிக்காதே. ஆயுதமில்லாத உனக்கு காயம் அதிகமாகும்.

ஒதெல்லோ : என்னை பார்த்துவிட்டு பேசுங்கள். ஆயுதம் இல்லாத நிராயுதபாணியாக இருந்தாலும் உங்களைப் பிளந்து விடுவேன்.

( கிராஷியானோ உள்ள  வருகிறான் )

கிராஷியானோ : என்ன விஷயம் ?

ஒதெல்லோ : இதோ பாருங்கள். என்னிடம் ஒரு வாள் உள்ளது.ஒரு வீரனின் தொடையைத் தடையின்றி பிளந்து செல்லும் கூரான வாள். இன்று என் தோள்களும் , என் வாளும் எத்தனை தடைகள் வந்தாலும் அத்தனை தடைகளையும் தகர்த்து எறிந்துவிடும். அகந்தை பிடித்தவனே! உன் விதியை யாரால் தடுக்க முடியும்? ஆனால் இந்தக் கணம் அப்படி எதுவும் நிகழாது. அச்சப்படாதீர்கள். என் பயணத்தின் இறுதிப் பகுதிக்கு வந்து விட்டேன். முடிவே என் இலக்கு. என் வாழ்வென்னும் கடல் பயணத்தில் கலங்கரைவிளக்கம் கண்ணில் பட்டுவிட்டது. பயந்து பின்வாங்காதீர்கள். பயப்படத்தேவையில்லை. இப்போது ஒரு இறகு போதும் என்னை தடுக்க. நான் ஓய்ந்துவிட்டேன். ஒதெல்லோ ! நீ எங்கே போகவேண்டும் ? டெஸ்டிமோனா ! நீ இப்போது எங்கே பார்க்கிறாய் ? அதிர்ஷ்டமில்லாத வான் நிலவே ! உன் இரவு அங்கியைப் போல நீயும் வெளுத்துத் தோன்றுகிறாய். தீர்ப்பெழுதும் நாளில் உன்னுடைய இந்தப்பார்வை என்னை நரகத்தில் தள்ளிவிடும். சைத்தான்கள் என் மேல் பாய்வார்கள். உன் கற்பைப் போலவே உறைந்து போய் கிடக்கிறாயே டெஸ்டிமோனா ! ஐயோ ! நான் ஒரு அடிமை. சபிக்கப்பட்ட அடிமை. சைத்தான்களே  ! என்னை சாட்டை கொண்டு விளாசுங்கள் .காற்றில் வீசிஎறியுங்கள். நெருப்பில் வாட்டுங்கள். எரிமலைக் குழம்பில் என்னை மூழ்கடியுங்கள். ஓ டெஸ்டிமோனா ! என் கண்ணே ! இப்படி வீணாக இறந்து போனாயே !

( லொடோவிகோ, கிராஷியானோ, நாற்காலியில் அழைத்த்வரப்பட்ட  கேஹியோ, இயாகோ மற்றும்  ஒரு சிறைக்கைதி ஆகியோர்  உள்ளே நுழைகின்றனர். )

லோடோவிகா : எங்கே அந்த அவசரபுத்திக்காரன் ?

ஒதெல்லோ : நான்தான் அவன். இதோ .

லொடோவிகோ : எங்கே அந்த நச்சுப்பாம்பு. இழுத்து வாருங்கள் அந்த பாதகனை.

( இயாகோ முன்னால்  இழுத்து வரப்படுகிறான் )

ஒதெல்லோ : சைத்தானின் பாதங்களைத் தேடுகிறேன் அவன் பாதங்களில். அவன் உண்மையில் சைத்தான் என்றால் என்னால் அவனை அழிக்க முடியாது.( இயாகோவைக்காயப்படுத்துகிறான்

லொடோவிகோ : அவன் கையில் உள்ள வாளினை பறித்துவிடுங்கள்.

இயாகோ : காயம்பட்டு இரத்தம் சிந்தினாலும் இறக்கவில்லை இன்னும் நான்.

ஒதெல்லோ :எனக்கு வருத்தமில்லை. என்னைப் பொறுத்தவரை மரணம் ஒருவனுக்கு விடுதலை.

லொடோவிகோ : அடப்பாவி ஒதெல்லோ ! ஒரு காலத்தில் மிக நல்லவனாக இருந்தாயே ! ஒரு அடிமை நாயின் பொய்யுரைகளை நம்பி இப்படி கீழ்த்தரமாகி விட்டாயே ! நீ ஏதாவது இறுதியாகக் கூற விரும்புகிறாயா?

ஒதெல்லோ: என்னை எப்படி வேண்டுமானாலும் குற்றம் சாட்டுங்கள். ஒரு கௌரவக் கொலைகாரன் என்று கூட அழையுங்கள். ஆம். நான் இந்தக் கொலையை வெறுப்பினால் செய்யவில்லை. கௌரவத்திற்காக செய்தேன்.

லொடோவிகோ : இந்தப் பாதகன் தனது சதித் திட்டத்தை ஒப்புக் கொண்டுவிட்டான். கேஷியோவின் கொலைமுயற்சியில் உங்களுக்கும் பங்கிருக்கிறதா ஒதெல்லோ ?

ஒதெல்லோ : ஆம்.

கேஷியோ : தளபதி ! நீங்கள் என் மீது வெறுப்பு கொள்ளும் எந்தச் செயலிலும் நான் ஈடுபடவில்லையே.

ஒதெல்லோ : ஆம். எனக்கும் அது தெரியும். என்னை மன்னித்து விடு. முடிந்தால் அந்தச் சைத்தானிடம் கேள் என் உடல், மனம் இரண்டையும் அவன் பற்றிவிட்ட காரணத்தை.

இயாகோ :இனி என்னிடமிருந்து எதையும் எதிர்பார்க்காதீர்கள். உங்களுக்கு தெரிந்தது உங்களுக்கு தளபதி ! இனி நான் பேசப்போவதில்லை.

லொடோவிகோ : இறுதி பிரார்த்தனைக்கு கூடவா வாய் திறக்க மாட்டாய் ?

கிராஷியானோ : போடுங்கள் வாயில். அடிக்கிற அடியில் வாய் திறக்காமல் போகிறதா என்று பார்ப்போம்.

ஒதெல்லோ : ஆகட்டும். உங்களால் முடிந்தவற்றை முயற்சியுங்கள்.

லொடோவிகோ : ஐயா ! தங்களுக்கு நிக்ழ்ந்தவைத் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். தெரியவில்லை என்றால் இவன் சதித்திட்டம் என்னவென்று கூறுகிறேன்.ராடெரிகோவின் சட்டைப் பயில் இந்த காகிதத்தை எடுத்தோம். அதில் அவன் கேஷியோவை எப்படிக் கொல்லவேண்டும் என்று தெளிவாக விளக்கியுள்ளான்.

ஒதெல்லோ : அடப்பாவி !

கேஷியோ : கடவுளுக்கும் அடுக்காத செயல்.

லொடோவிகோ : அட இன்னுமொரு கடிதம் அவன் பையிலிருந்து. இது இயாகோவிற்கு எழுதபட்டிருக்கிறது. முழுவதும் புகார்க் கடிதம். இதனை ராடெரிகோ இயாகோவிடம் கொடுத்து விளக்கம் கேட்க நினைத்திருக்க வேண்டும். இதை அறிந்து கொண்ட இயாகோ அவனைக் கொல்வதன் மூலம் அவன் புகார்களுக்கு பதில் அளித்திருக்க வேண்டும்.

ஒதெல்லோ : ஓ கேடு கெட்ட நயவஞ்சகனே ! உனக்கு என் மனைவியின் கைக்குட்டை எப்படி கிடைத்தது கேஷியோ ?

கேஷியோ : என் இருப்பிடத்தில் கீழே கிடந்தது. இதோ இப்பொழுது இயாகோவும் தன்னுடைய சொந்தத் தேவைக்காகவே அந்தக் கைக்குட்டையை என் இருப்பிடத்தில் நழுவ விட்டதாக ஒப்புக் கொண்டிருக்கிறான்.

ஒதெல்லோ : முட்டாள் முட்டாள் !

கேஷியோ : அதே கடிதத்தில் நான் காவலில் இருக்கும்போது என்னை தூண்டிவிட்டு ஆத்திரமூட்டி தவறிழைக்கச் செய்து அதன் மூலம் என் அதிகாரத்தை குறைப்பதற்கான நடவடிக்கை குறித்தும் இயாகோ ராடெரிகோவிற்கு ஆலோசனை வழங்கியிருக்கிறான். இதனை இப்போது இந்த இயாகோ ஒப்புக் கொண்டிருக்கிறான்.

லொடோவிகோ : ஒதெல்லோ ! இன்னும் சிறது நேரத்தில் உன் இந்த இருப்பிடத்தை காலி செய்துவிட்டு எங்களுடன் புறப்படு. உன் அதிகாரமும் பதவியும் பறிக்கப்படுகின்றது. கேஷியோ சைப்ரசின் அதிபதியாகிறான். எந்தக் கொடிய தண்டனை இயாகோவை காயமும் செய்து நெடு நாட்கள் வாழ வைக்குமோ அந்தத் தண்டனை அவனுக்கு வழங்கப்படும். உன் குற்றத்தை வெனிஸ் அரசாங்கத்திடம் எடுத்துரைக்கும் வரையில் நீ எங்களின் கைதியாவாய். அவரை அழைத்துச் செல்லுங்கள்.

ஒதெல்லோ : பொறுங்கள் ! உங்களிடம் ஓரிரு வார்த்தைகள் கூறிக் கொள்ள ஆசைப்படுகிறேன். இந்த அரசாங்கத்திற்கு என்னால் இயன்றவரை சிறிது சேவை புரிந்திருக்கிறேன்.அவ்வளவுதான் அவர்களுக்கு என்னை பற்றி தெரியும். அரசாங்கத்திடம் நீங்கள் தாக்கல் செய்யப்போகும் குற்றபத்திரிகையில் இந்த சோக நிகழ்ச்சிகளை பட்டியலிடும்போது என்னை நானாகவே எடுத்துக் கூறுங்கள்.  தளபதி என்பதால் குறைத்தும் மதிப்பிட வேண்டாம். அல்லது கோபத்தில் அதிகமாகவும் மதிப்பிட வேண்டாம்.மேலும் சொல்லுங்கள், அதிகமாக காதலிக்கத் தெரிந்தவனுக்கு புத்திசாலித்தனமாக காதலிக்கத் தெரியவில்லை. எளிதில் சந்தேகப்படும் ஒருவன் மற்றவரின் தூண்டுதலினால் இதுபோன்ற அதீத செயல் புரிந்ததைக் கூறுங்கள். வாராது வந்த மாமணியை ஒரு ஏழை இந்தியன் இழந்து நிற்பதைப் போல நான் நின்றதைக் கூறுங்கள். கண்ணீர் வழிந்தறியாத என் கண்களில் மலேய நாட்டு ரப்பர் மரங்களில் பால் வடிவதைப் போல நீர் வழிவதைப் பாருங்கள.இப்படித்தான் அலெப்போ நகரில் முன்டாசுகட்டிய துருக்கினாட்டுக்காரன் என் தாய்மண்ணை குறைத்துப் பேசியதும் அவன் குரல் வளையை இதோ இப்படித்தான் வாளால் வெட்டினேன்.( தன் கையிலிருக்கும் வாளினால் தன் கழுத்தை வெட்டிச் சாகிறான் )

லொடோவிகோ : என்ன ஒரு இரத்த முடிவு !

கிராஷியானோ : இப்போது நடந்த எதுவும் சரியில்லை.

ஒதெல்லோ : உன்னைக் கொல்வதற்கு முன்பு முத்தமிட்டேன். இப்போது இறக்கும் தருவாயில் உன்னை முத்தமிடுகிறேன்.

( ஒதெல்லோ டெஸ்டிமோனாவை  அவளுடைய படுக்கையில் சரிந்து  முத்தமிட்டு மடிகிறான் )

கேஷியோ : இப்படித்தான் முடியும் என்று நினைத்தேன். அவரிடம் ஆயுதம் இல்லை என்று நம்பினேன். ஏன் எனில் அவர் இதயத்தால் நல்ல மனிதர்.

லொடோவிகோ ( இயாகோவிடம் ) இரத்தவெறி பிடித்த ஓநாயே ! பார் ! நீ வேதனையைவிடக் கொடியவன். பசியைவிட துன்பமானவன். அளவில் கடலைவிடக் கொடுமையானவன். இந்த மஞ்சம் தாங்கும் சோகச் சுமையைப் பார். சதிகாரா ! உன்னால் நேர்ந்தது இது. கண்களைக் குருடாக்கும் காட்சி இது. திரையிட்டு மூடுங்கள் இந்த மஞ்சத்தை. கிராஷியானோ மூரின் செல்வங்களைக் கைப்பற்று. இனி அதன் உடமைதாரன் நீதான்.( கேஷியோவைப் பார்த்து )  பிரபு ! இந்தப் பாதகனின் தண்டனையை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். இடத்தையும் எந்த நேரம் என்பதையும், தண்டனையின் அளவையும் ஆணையிடுங்கள். இப்பொழுது நான் கப்பலில் வெனிஸ் நகரம் சென்று கனக்கும் நெஞ்சுடன் அரசவையில் இங்கு நடந்த கோர நிகழ்ச்சிகளை எடுத்துரைக்க வேண்டும்.

( திரை விழுகின்றது )

•••
ஒதெல்லோ நாடகம் நிறைவு பெற்றது.

•••••

ஷேக்ஸ்பியரின் ஒதெல்லோ ( அங்கம்-4 ) – மொழியாக்கம் -சத்தியப்பிரியன்

images (4)

அங்கம்-4

காட்சி-1

மீண்டும் நகரில் ஒரு வீதி

(இயாகோவும் ஒதேல்லோவும்  வருகின்றனர். )

இயாகோ : அப்படி எண்ணுகிறீர்களா?

ஒதெல்லோ :எண்ணுவதா ? எதை பற்றி?

இயாகோ : எதுவா? அவர்கள் தனிமையில் முத்தங்களை பரிமாறிக் கொண்டதை பற்றி?

ஒதெல்லோ : அங்கீகாரமற்ற முத்தங்கள்.

இயாகோ : சரி அது வேண்டாம். இருவரும் ஒரே படுக்கையில் உடலில் பொட்டு துணியின்றி ஒருமணி நேரமோ அரைமணி நேரமோ எதுவும் செய்யாமல் கிடப்பதைப் பற்றி…?

ஒதெல்லோ : நிர்வாணமாக படுக்கையில் தவறு செய்யாமலா? இயாகோ! அது சாத்தானை ஏமாற்றுவதற்கு சமம். சாத்தான் அவர்களைத் தூண்டுவான். அவர்கள் சொர்க்கத்தை தூண்டுவார்கள்.

இயாகோ : அவர்கள் மஞ்சத்தில் சல்லாபிக்கவில்லை என்றால் மன்னிக்கப்படலாம். ஆனால் என் மனைவியிடம் பரிசாக ஒரு கைக்குட்டையை அளிக்கிறேன் பிறகு…

ஒதெல்லோ : பிறகு என்ன நடக்கிறது?

இயாகோ : அது அவளுடைய சொந்தமாகிறது.தனக்குச் சொந்தமான ஒன்றை அவள் தனக்கு விருப்பப்பட்ட ஒருவனிடம் கொடுப்பது தவறில்லையே.

ஒதெல்லோ : அவளுடைய கைக்குட்டையை மட்டுமல்ல அவளுடைய நற்பெயரையும் காப்பாற்ற வேண்டியவளாகிறாள். நற்பெயரையும் இழப்பாளா அவள்?

இயாகோ : நற்பெயர் நறுமணம் போன்றது.  உணரமுடியும், பார்க்கமுடியாது. பெருவாரியானவர்களுக்கு தங்கள் பெற்றுள்ள நற்பெயருக்கு மாறாகவே செயல்கள் அமைகின்றன. அந்தக் கைக்குட்டை….

ஒதெல்லோ : கடவுளே ! அந்தக் கைக்குட்டையை மறக்க முடியாதா ?  பிணம் இருக்கும் வீட்டின் மீது பறக்கும் காகங்களைபோல அவன் என் கைக்குட்டையை வைத்துக் கொண்டிருக்கிறான் என்ற நினைப்பு என் மனதை விட்டு நீங்காமல் சுற்றிக் கொண்டிருக்கிறது.

இயாகோ : அதற்கு இப்போது என்ன?

ஒதெல்லோ : இது நல்லதற்கில்லை.

இயாகோ : என்னது? ஒருவேளை அவன் மோசம் செய்வதை நான் பார்த்தோ அல்லது கேட்டோ இருந்தால்- இவனை மாதிரி கொஞ்சம் பேர்கள் இருக்கின்றனர். விடாது நச்சரித்து தங்கள் துன்பங்களை தாண்டி விடுபவர்கள். இன்னும் சிலரோ விருப்பத்தை வெளிக்காட்டாமல் தங்கள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்பவர்கள்.

ஒதெல்லோ : அவன் இது குறித்து ஏதாவது சொன்னானா?

இயாகோ: சொன்னான் அவன்தான் செய்தான் என்று.

ஒதெல்லோ : என்னது என்னது?

இயாகோ : மஞ்சத்தில் அவன்…..

ஒதெல்லோ : அவளுடனா?

இயாகோ : அவளுடன்…அவள் மேல்….நீங்கள் எப்படி நினைக்கின்றீர்களா அப்படி.?

ஒதெல்லோ : மஞ்சத்தில் அவளுடன் இருந்தான் என்பது அவதூறு. மஞ்சத்தில் அவள் மேல் இருந்தான் என்பது மிகவும் ஆபத்தானது. அந்தக் கைக்குட்டை-ஒப்புதல் வாக்குமூலங்கள்-கைக்குட்டை. ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கப்பட வேண்டியது உடனே அவனைத் தூக்கில் இடுவது ஒன்றுதான் வேலை. இல்லை அவனை கொன்றுவிடுகிறேன். அதன்பிறகு அவன் ஒப்புதல்வாக்குமூலம் பெறுகிறேன் . கொலைவெறியில் என் உடல் நடுங்குகின்றது இயாகோ. இயற்கை உள்ளே உறைந்துகிடக்கும் பேரார்வத்தை இது போன்று குறிப்புகளால் வெளிப்படுத்துகின்றன. வார்த்தைகள் என்னை குலைப்பதில்லை இயாகோ. ப்ச்! செவிமடல்கள்,விழிகள் இதழ்கள்….சத்தியமா ? ஒப்புதல்கள் கைக்குட்டை….ஓ சாத்தானே! ( அதிர்ச்சி மயக்கத்தில் கீழே சரிகிறான் )

இயாகோ : உன் வேலையைத் தொடங்கு விஷமே ! ஏமாறும் முட்டாள்கள் இப்படித்தான் மாட்டிக் கொள்கிறார்கள். மிக நல்ல அப்பாவி பெண்கள் சிலரும் இவ்வாறு பலியாகிறார்கள். என் தலைவனே என் தலைவனே ! ஓ ! ஒதெல்லோ.( கேஷியோ வருகிறான் ) கேஷியோ கேஷியோ வா சீக்கிரம்.

கேஷியோ : என்ன ஆயிற்று இயாகோ ?

இயாகோ : என் தலைவனுக்கு வலிப்புடன் மயக்கம் வந்துவிட்டது. இந்த வலிப்பு இரண்டாவது முறை வருகிறது. நேற்று ஏற்கனவே ஒருமுறை வந்தது.

கேஷியோ : நெற்றிப்பொட்டில் இறுக்க தேய்த்து விடுங்கள்.

இயாகோ : வேண்டாம் இப்படியே விட்டு விடுவது நல்லது. வலிப்பு தானே அடங்க வேண்டும். இல்லையென்றால் வாயில் நுரைதள்ளி பித்து பிடிக்கும் நிலைமைக்கு தள்ளப்படுவார். பார். அசைகிறார். நீ அவர் பார்வையில் படாமல் இரு.அவர் கிளம்பியதும் நான் உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும். போய்விடாதே.( கேஷியோ அகல்கிறான் ) தளபதி ! இப்போது பரவாயில்லையா? தலையில் அடிபட்டு விட்டதா?

ஒதெல்லோ : என் நிலைமையை எள்ளி நகையாடுகிறாயா இயாகோ?

இயாகோ : சத்தியமாக இல்லை தளபதி. ஒரு சராசரி மனிதனைப்போல கெட்டசெய்தியை நீங்கள் எதிர்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

ஒதெல்லோ : வஞ்சிக்கப்பட்டவன் ஒரு மிருகம் போல கொம்பு முளைத்தவன்.

இயாகோ : இது போன்று கொம்பு முளைத்த மனிதர்கள் இந்த நகரத்தில் ஏராளம் உள்ளனர்.

ஒதெல்லோ : அவன் ஒப்புக் கொண்டானா?

இயாகோ : ஒரு சாதாரண மனிதனாகவே இருங்கள் தளபதி. நிஜமாக தங்களது படுக்கை என்று நம்பி லட்சக்கணக்கான ஆண்கள் தவறான படுக்கையில்தான் படுத்து கிடக்கின்றனர். உங்கள் விஷயத்தில் இது வேறு மாதிரி. நல்லவேளை நீங்கள் அறியாதவர் இல்லை. ஆனால் ஒன்று ஒரு ஒழுக்கன் கெட்டவேளை முத்தமிட்டு அவளை பத்தினி என்று நம்ப வேண்டியுள்ளது. முதலில் எனக்கு அவள் எப்படிப்பட்டவள் என்பது தெரிய வேண்டும்.என்னை அறிந்து கொள்கிறேன் பிறகு அவளைப் புரிந்துகொள்கிறேன்.

ஒதெல்லோ :இது புத்திசாலித்தனம். நிச்சயமாக.

இயாகோ : இந்த இடத்தைவிட்டு கொஞ்சம் விலகி  இருங்கள். மறைந்திருந்து என்ன நடக்கிறது என்று கவனமாகப் பாருங்கள். நீங்கள் மயங்கிக் கிடந்தபோது கேஷியோ வந்திருந்தான்.நான் அவனை விரட்டிவிட்டேன்.மீண்டும் நீங்கள் போனதும் என்னை வந்து பேசச் சொல்லியிருக்கிறேன். கவனியுங்கள் அவனுடைய கேலி பேச்சை. இகழ்ச்சியை, பொய்யின் வனப்பை. அவனை மீண்டும் புதிய கதை பேச வைக்கிறேன்.உங்கள் மனைவியிடம் எப்போது ஒன்றாக படுக்கையை பகிர்ன்ந்து கொண்டான், பகிர்ந்து கொள்கிறான், இனிவரும் காலங்களில் என்ன திட்டம் வைத்துள்ளான் இதுபற்றியெல்லாம் பேசுவான். என்ன பேசுவான் என்பதை கவனியுங்கள்.பொறுமையாக இருங்கள். உணர்ச்சிவசப்பட்டு மனிதத்தை இழந்து விடாதீர்கள்.

ஒதெல்லோ : நான் சொல்வதைக் கேளுங்கள். நான் பொறுமையுடன் இருக்கிறேன். ஆனால் அவன் இன்னும் என் கைகளில் சிக்கவில்லை.

இயாகோ : நல்லது தளபதி ! சரி மறைந்திருந்து என்ன நடக்கிறது என்பதை வேடிக்கை பாருங்கள்.                          ( ஒதெல்லோ மறைகிறான் )

கேஷியோ : வந்தஉடன் அவனிடம் பியான்கா பற்றி பேச வேண்டும்.. பியான்கா தன் தேவைகளுக்காக உடலை விற்கும் வேசி. அவளுக்கு கேஷியோ மீது தீராத காதல். ஒரு வேசி பலரிடம் பொய்யான காதல் கொண்டாலும் ஒருவனிடம் மட்டும் உண்மையான காதல் கொள்வாள். இதை கேஷியோவிடம் கூறும்போதுஅவனால் சிரிப்பை அடக்க முடியாது. அதோ அவனே வருகிறான்.                 ( கேஷியோ மீண்டும் வருகிறான் )

அவன் சிரிப்பான் : ஒதேல்லோவிற்கு பித்து பிடிக்கும். ஒதேல்லோவின் பொறாமை கேஷியோவின் எளிமையான புன்னகைகளை, சூதுவாது அற்ற நடவடிக்கைகளை தப்பாகவே அர்த்தப்படுத்திக் கொள்ளும். ( கேஷியோவைப் பார்த்து ) வாருங்கள் உப தளபதி அவர்களே !

கேஷியோ : நீங்கள் கொடுத்த பட்டம் என் கைக்கு எட்டாமல் என்னை வாட்டுகிறது.

இயாகோ : டெஸ்டிமோனாவிடம் மன்றாடிக் கொண்டே இருங்கள் . உங்களுக்குநிச்சயம் உண்டு. ( குரலை தாழ்த்தி ) இந்த வழக்கு முடிவதற்கு பியான்கா போதும் என்றால் இந்த வழக்கு என்றோ முடிந்திருக்கும்.

கேஷியோ: பாவம் பரிதாபத்திற்குரியவள்.

ஒதெல்லோ : திருடன் சிரிக்கத் தொடங்கி விட்டான்.

இயாகோ : இப்படி விழுந்து விழுந்து காதலிக்கும் பெண்களை நான் இதுவரை சந்தித்ததில்லை.

கேஷியோ :சரியான குறும்புக்காரி. அவள் என்னை விரும்புவது உண்மைதான் என்று நினைக்கிறேன்.

ஒதெல்லோ : மிகவும் லேசாக மறுக்கிறான். ஆனால் எப்படி சிரிக்கிறான் ?

இயாகோ : கேஷியோ !  சொல்வது காதில் விழுகிறதா?

ஒதெல்லோ : மீண்டும் அவன் கதையை இயாகோ வற்புறுத்திக் கேட்கிறான். ம்ம் சீக்கிரம் சொல்லு.

இயாகோ : அவள் உங்களை மணக்கபோவதாகக் கூறுகிறாளே … உங்களுக்கும் விருப்பம் இருக்கிறதா?

கேஷியோ : ஹா ஹா ஹா.

ஒதெல்லோ : நீ ஜெயித்து விட்டாயா ரோமானியனே நீ ஜெயித்து விட்டாயா ?

கேஷியோ : நான்  அவளையா ? அவளுடைய வாடிக்கையாளன் நான். எப்படி மணக்க முடியும்? என் மூளையை குறைவாக எடை போடாதீர்கள் இயாகோ. நான் அந்த அளவிற்கு முட்டாள் இல்லை.

ஒதெல்லோ :அதனால்… அதனால்… அதனால்… வெற்றி பெற்றவன் சிரிக்கிறான்.

இயாகோ : நீங்கள் அவளைத்தான் மணக்கப் போவதாக பேச்சு அடிபடுகிறதே.

கேஷியோ : இந்த விளையாட்டு வேண்டாம் .உண்மையைக் கூறுங்கள் இயாகோ.

இயாகோ : இது உண்மை என்றால் என்னை அயோக்கியன் என்று தூற்றுங்கள் கேஷியோ.

ஒதெல்லோ : என்னை பைத்தியக்காரன் ஆக்குகிறார்கள். நடக்கட்டும்.

கேஷியோ : அந்த மந்திதான் இதனை வெளியில் உலாவ விட்டிருப்பாள். நான் அவளை மணக்கப் போவதாக அவள் தனக்கு தானே நம்பிக்கொண்டிருக்கிறாள். அந்த நம்பிக்கையை நான் அவளுக்குக் கொடுக்கவில்லை.

ஒதெல்லோ : அதோ இயாகோ கைகளால் ஜாடை காட்டுகிறான். கேஷியோ கதை சொல்ல தொடங்குவான் போலிருக்கிறது.

கேஷியோ : இப்பது கூட அவள் இங்குதான் இருந்தாள். அவள் என்னை ஒவ்வொரு இடத்திலும் விடாமல் துரத்துகிறாள். இதே போல்தான் அன்றொருநாள் கடற்கரையில் அமர்ந்து சில வெனிஸ் நகர மக்களுடன் பேசிக் கொண்டிருந்தேன். இந்த கேடு கேட்டவள் வந்து என் கழுத்திக் கரங்களால் பின்னிக் கொண்டாள். அப்படியே என் மீது சரிந்துவிட்டாள்.

ஒதெல்லோ : ஓ என் அன்பே கேஷியோ என்று கூவியிருப்பாள். இதைத்தானே இப்படி நெளிந்து சொல்ல வருகிறான் இவன்.

கேஷியோ : கழுத்தைப் பிடித்து தொங்கினாள். குழைந்தாள்; கொஞ்சினாள்.அழுதாள். ஹா ஹா ஹா ! எப்படி இருக்கிறது ?

ஒதெல்லோ : அப்படியே தூக்கிக் கொண்டு எங்கள் படுக்கையறைக்கு போன கதையைக் கூறப்போகிறான். உன் மூக்கு என் கண்களில் தென்படுகிறது. ஆனால் அதனை வெட்டி எறிவதற்கு நாய் எதுவும் என் கண்களில் படவில்லை.

கேஷியோ : அவளைக் கை கழுவிவிட வேண்டும்.

இயாகோ : என் முன்பா? அதோ அவளே வருகிறாள். ( பியான்கா வருகிறாள் ).

கேஷியோ : அலையும் மரப்பட்டிகளில் இவளும் ஒருத்தி. செயற்கை வாசம் பூசியவள். எதற்காக என்னையே வட்டமிடுகிறாய் ?

பியான்கா : உன் சாத்தானின் தலையில் இடி விழ. இந்தக் கைக்குட்டையை என்னிடம் கொடுக்கக் காரணம் என்ன? நான் ஒரு இவள்…. நீ கொடுத்தால் வாங்கிக் கொண்டு போனேன். நல்ல கதை. நீ தங்கியிருக்கும் இடத்தில் இது கீழே கிடந்ததாம். ஆனால் எவர் இதனைத் தவறவிட்டார்கள் என்பது தெரியாதாம். உன் எஜமானிகளில் எவளாவது உனக்குக் காதல் பரிசாக கொடுத்திருப்பாள். நான் அதை எடுத்துக் கொண்டு இதன் பூவேலைப்படுகளை நகல் எடுக்க வேண்டும். எந்தக் கழுதை கொடுத்ததோ அதனிடமே திருப்பிக் கொடு. நகல் எடுக்கும் வேலையெல்லாம் நமக்கு ஆகாது.

கேஷியோ : என்ன ஆயிற்று பியான்கா? எங்கே தவறானது ?

ஒதெல்லோ : கடவுளே ! இது டெஸ்டிமோனாவிற்கு நான் கொடுத்த கைக்குட்டையல்லவா?

பியான்கா : இன்று இரவு விருந்திற்கு என்னுடன் வந்தால் உண்டு. இல்லையென்றால் ஒழிந்து போ.                                    ( பியான்கா மறைகிறாள் )

இயாகோ : அவள் பின்னால் போங்கள்  பின்னால் போங்கள்.

கேஷியோ : இதோ போகிறேன். இல்லையென்றால் தெரு முழுக்க கூவிக் கொண்டே போவாள்.

இயாகோ : இரவு உணவு அவளுடன்தானே ?

கேஷியோ : வேறு வழி ?

இயாகோ உங்களை அங்கு சந்திக்கிறேன். உங்களுடன் கொஞ்சம் பேச வேண்டியிருக்கிறது.

கேஷியோ : நிச்சயமாக.வாருங்கள் சரியா?

இயாகோ : போதும் போதும் கிளம்புங்கள்.

( கேஷியோ மறைகிறான் )

ஒதெல்லோ ( வெளியில் வந்தபடி ) அவனை எப்படி கொல்லப்போகிறேன் ?

இயாகோ: தனது கேடுகெட்ட செயலுக்கு அவன் சிரித்ததை உங்களால் உணர முடிந்ததா ஒதெல்லோ?

ஒதெல்லோ : ஆமாம் இயாகோ.

இயாகோ : அந்தக் கைக்குட்டையை பார்த்ததீர்களா?

ஒதெல்லோ : என்னுடையதா அது ?

இயாகோ :சத்தியமாக இது உங்களுடையதுதான். உங்கள் மனைவி என்ன ஒரு முட்டாள் ! அவள் அவனிடம் கொடுத்தாள். அவன் அதை இந்த வேசியிடம் கொடுத்துள்ளான்.

ஒதெல்லோ : அவனை ஒன்பது வருடங்கள் அணுஅணுவாக சித்திரவதை செய்து கொள்ளவேண்டுமென்று ஆத்திரம் வருகிறது. ஓ ! அவள் நல்லவள்; அழகானவள்; வசீகரமானவள்.

இயாகோ : அவை அனைத்தையும் மறக்கவேண்டிய தருணம் இது.

ஒதெல்லோ : ஹா ! அவள் புழுத்து அழுகட்டும். இன்றிரவு அவள் நாசமாவது உறுதி. இனி அவள் வாழ்வது நிச்சயமில்லை. என் நெஞ்சம் கல்லாகிக் கொண்டு வருகிறது. நெஞ்சை கைகளால் ஓங்கி அடிக்கும்போது கையில் காயம் ஏற்படுகிறது. ஒரு சக்கரவர்த்தியின் அருகில் அமர்ந்து அவனை அடிமையாக்கி வைத்திருக்கும் இது போன்ற அழகிய உயிரினம் வேறு ஒருவரும் இருக்க முடியாது.

இயாகோ : வேண்டாம் தளபதி.! இது போன்று நடந்து கொண்டு உங்கள் பெருமையை குலத்துக் கொள்ளாதீர்கள்.

ஒதெல்லோ : தூக்கிலிடுங்கள் அவளை. அவளைப் பற்றி உண்மையாக வர்ணிக்கிறேன். அவள் அழாகாக தையல் கலை அறிந்தவள். ஒரு உன்னத இசைக் கலைஞர். ஒரு முரட்டுக் கரடியைக் கூட தனது பாடலால் உறங்கச் செய்யும் திறமையுடையவள்.அவளுடைய புத்திசாலித்தனமும் கற்பனையும் அபாரமானவை.

இயாகோ : கொஞ்சம் நளினமானவளும் கூட.

ஒதெல்லோ :  அதிலென்ன சந்தேகம் ? ஆனால் கொடுமை இயாகோ கொடுமை.

இயாகோ : இன்னமும் அவளுடைய மோசடியை நீங்கள் அனுமதிப்பதென்றால் அனுமதியுங்கள். எவருக்கு என்ன நட்டம் வரப்போகிறது ?

ஒதெல்லோ : அவளை கண்டம் துண்டமாக வெட்டிஎறியப்போகிறேன். அவள் என்னை எப்படி மோசம் செய்யலாம் இயாகோ ?

இயாகோ: அவள் பெயரில்தான் குற்றம்.

ஒதெல்லோ : அதுவும் என் கீழ் பணியில் இருக்கும் அதிகாரியுடன்…

இயாகோ : அது இன்னும் கேவலம்.

ஒதெல்லோ : எனக்கு எங்கிருந்தாவது கொஞ்சம் விஷம் கொண்டு வாருங்கள் இயாகோ . இனி அவளுடன் விவாதித்து பயனில்லை. அவளுடைய அங்கங்களின் வசீகரமும் அசைவுகளும் என்னை மேலும் தகுதியிழக்கச் செய்யவேண்டாம். இன்று இரவு இயாகோ !

இயாகோ : விஷம் வேண்டாம். அவள் உறங்கும்போது அந்தப் படுக்கையிலேயே அவளை நெரித்துக் கொன்றுவிடுங்கள். அந்தப்படுக்கை கூட கரை படிந்தது.

ஒதெல்லோ :  அதுவும் சரிதான் .நல்லது மிக நல்லது. நியாயமானது. நீதியின் விருப்பம்.

இயாகோ : கேஷியோவை நான் பார்த்துக் கொள்கிறேன். நாளை நள்ளிரவிற்குள் நல்ல செய்தி கொண்டுவருகிறேன்.

ஒதெல்லோ : அட்டகாசம். நல்லது இயாகோ.

( தூரத்தில் எக்காளத்தின்  ஓசை கேட்கிறது. )

ஒதெல்லோ : எதற்கு எக்காளம் ?

இயாகோ : இது வெனிஸ் நகரச் செய்திக்கானதாக இருக்கும். வெனிஸ் பிரபுவிடமிருந்து தகவல் வந்திருக்கும். அதோ வெனிஸ் பிரபுவின் பிரதிநிதியாக லோடோவிகோ. உங்கள் மனைவி டெஸ்டிமோனாவும் உடன் வருகிறாள் பாருங்கள்.

( லோடோவிகா, டெஸ்டிமோனா மற்றும்  பணியாளர்கள் )

லோடோவிகா : வந்தனம் ஒதெல்லோ.

ஒதெல்லோ : என் மனமார்ந்த வந்தனம் பிரபு.

லோடோவிகா: வெனிஸ் நகர பிரபுவும் மற்றும் உயர்மட்டக் குழுயனரும் தங்கள் வாழ்த்துக்களை உங்களுக்கு தெரிவித்துள்ளனர். ( ஒரு கடிதத்தை நீட்டுகிறான் )

ஒதெல்லோ : அவர்களுக்கு என் நன்றி. அவர்கள் கட்டளை என் செயல்.

டெஸ்டிமோனா : வெனிசில் இருந்து ஏதாவது நல்ல செய்தி உண்டா சகோதரரே?

இயாகோ : உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி ஐயா. சைப்ரசிற்கு தங்கள் வருகை நல்வரவாகட்டும்.

லோடோவிகா : நல்லது. கேஷியோ எப்படி இருக்கிறார் ?

இயாகோ : உயிருடன்தான் இருக்கிறார்.

டெஸ்டிமோனா : சகோதரரே ! என் கணவருக்கும் கேஷியோவிற்கும் இடையில் சின்னதாக ஒரு மனக்கசப்பு. நீங்கள் மனது வைத்தால் அதனை சரி செய்து விடலாம்.

ஒதெல்லோ : நிச்சயமாக முடியும் என்று நம்புகிறாயா?

டெஸ்டிமோனா : மன்னிக்கவும் என்ன சொன்னீர்கள்?

ஒதெல்லோ : ( கடிதத்தை வாசிக்கத் தொடங்குகிறான் ) இதனை செய்து முடிக்க மறுக்கவேண்டாம். ஏனென்றால் நீங்கள்….

லோடோவிகா : அவர் எதுவும் சொல்லாமல் படிக்கத் தொடங்கிவிட்டார். தளபதிக்கும் கேஷியோவிற்கும் மனக்கசப்பு என்பது நிஜம்தானா?

டெஸ்டிமோனா : மிகவும் வருத்தத்திற்குரிய ஒன்று. கேஷியோ மீது நான் கொண்ட பற்றின் காரணமாக அவர்களை இணையச் செய்ய நான் எந்த முயற்சியும் செய்யத் தயாராக உள்ளேன்.

ஒதெல்லோ : நெருப்பும் வெடிமருந்தும்.

டெஸ்டிமோனா: மன்னியுங்கள் தலைவா.

ஒதெல்லோ : உன் புத்தி நேராகத்தானே இருக்கிறது.

டெஸ்டிமோனா: எதற்காக இப்படி கோபப்படுகிறார் ?

லோடோவிகா : ஒருவேளை அந்தக் கடிதம் அவர் கோபத்தை அதிகப்படுத்தியிருக்கலாம். அவரை நாட்டிற்கு அனுப்பிவிட்டு கேஷியோவிற்கு ஆளுநர் பதவியை அவர்கள் வழங்கியிருக்க வேண்டும்.

டெஸ்டிமோனா : இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தி.

ஒதெல்லோ : இருக்க்காதா பின்னே ?

டெஸ்டிமோனா; அத்தான்?

ஒதெல்லோ : என் எதிரில் பித்து பிடித்தவளாக மாறியது எனக்கு மகிழ்ச்சி.

டெஸ்டிமோனா: ஏன் என் அன்பரே ?

ஒதெல்லோ ( அவளை ஓங்கி அறைந்து ) பிசாசே!

டெஸ்டிமோனா : நான் என்ன தவறு செய்தேன்? எதற்கு இந்த தண்டனை?

லோடோவிகா: இது வெனிஸ் நகரில் நிகழமுடியாத விஷயம். நான் இதை வெனிஸ் நகரில் சென்று என் கண்களால் கண்டதாகச் சொன்னாலும் எவரும் நம்ப மாட்டார்கள். அவளைத் தேற்றுங்கள். கண்ணீர் வடிக்கிறாள்.

ஒதெல்லோ : இரவு பகல் எனப்பாராமல் நீ அழுது புலம்பினாலும் நீ வருத்தப்படுகிறாய் என்று நான் நம்பப் போவதில்லை சைத்தானே! பெண்களின் கண்ணீர்த் துளிகள் மண்ணில் விழுந்து உயிர்க்குமானால் ஒவ்வொரு துளி கண்ணீரும் ஒரு முதலையாக உயிர்ப்பெறும். என்கண் எதிரில் நிற்காதே போய்விடு.

டெஸ்டிமோனா: இங்கே நின்று உங்களை புண்படுத்த விரும்பவில்லை. நான் அகல்கிறேன்.

லோடோவிகா: நிஜமாகவே நல்ல பெண்மணி அவள். அவள் கிளம்புகிறாள். தடுத்து நிறுத்துங்கள் தளபதி.

ஒதெல்லோ : அம்மணி.

டெஸ்டிமோனா: அத்தான் ?

ஒதெல்லோ : அவளுடன் என்ன வேண்டும் பிரபு ?

லோடோவிகா: யாருக்கு எனக்கா ?

ஒதெல்லோ :நீங்கள்தானே சொன்னீர்கள போகிறவளை தடுத்து நிறுத்தி திருப்பு என்று ? அவள் திரும்புவாள். உடனே திரும்புவாள். அடிக்கடி திரும்புவாள்.  அழுவாள். நன்றாக அழுவாள். பணிவானவள். மிகவும் பணிவானவள். அழுகையை தொடங்கு அம்மணி. இந்தக் கடிதத்தில் –சித்திரக் காதலே – என்னை மீண்டும் வெனிஸ் நகரத்திற்கு அழைக்கிறார்கள் போ உள்ளே.      ( டெஸ்டிமோனா மறைகிறாள் ). நான் இந்த ஆணையை மதிக்கிறேன். வெனிசிற்கு திரும்புகிறேன். என் இடத்தில் இனி கேஷியோ இருப்பான்.பிரபு இன்றிரவு தங்கள் வருகையை சிறப்பிக்கும் முகமாக நாம் இருவரும் இரவு விருந்து சேர்ந்து உண்ணுவோம். சைப்ரசிற்கு தங்கள் வரவு நல்வரவாகட்டும்  ஆடுகளே மந்திகளே !

( ஒதேல்லோவும் அகல்கிறான். )

லோடோவிகா: இவனையா இந்த முறையா வெனிஸ் நகர மந்திரிகளின் உயர்மட்டக் குழு முழுமையானவன் என்று முத்திரை குத்தியது? உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டவன் என்று நம்பியது இவனுடைய இந்த இயல்பையா? இந்த வீரமா எந்தப் போரிலும் சிதறடிக்கப்பாடாதது என்று நம்பினார்கள்?

இயாகோ : இல்லை. அவர் மாறிவிட்டார்.

லோடோவிகா : இவருடைய புத்திசாதூர்யம் என்ன ஆயிற்று? மூளை எங்காவது பிசகியுள்ளதா?

இயாகோ : அவர் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். அதைப்பற்றி அபிப்பிராயம் சொல்லும் தகுதி எனக்கில்லை. அவர் யாராக இருக்கவேண்டுமோ அவர்போல இல்லையென்றால்  அவர் அவராகவே இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன்.

லோடோவிகா: மனைவியை கை நீட்டி அடிக்கிறார்.

இயாகோ. நடந்திருக்க கூடாத விஷயம். போகட்டும். இதனைவிட மோசமாக எதுவும் நிகழாமல் போகட்டும்.

லோடோவிகா: இதுதான் இவரின் பழக்கமா? அல்லது அந்தக் கடிதம் இவரது இரத்தத்தை கொதிப்பேற்றி  இவரை இவ்வாறு செய்யத் தூண்டியதா?

இயாகோ :கடவுளே கடவுளே ! நான் கண்டதையும் அறிந்ததையும் பேசுவது கண்ணியமன்று. நடக்கபோகும் நிகழ்வுகளில் கவனமாக இருங்கள். அவை சொல்லும் அவர் யாரென்று. என் குறிப்புகள் மிச்சமாகட்டும். அவரைத் தொடர்ந்து என்ன செய்கிறார்  என்று பாருங்கள்.

லோடோவிகா : என் அபிப்பிராயங்களை மோசம் செய்தவன்.

( உள்ளே செல்கின்றனர் )

காட்சி-3 நிறைவு.

 

காட்சி-4.

அரண்மனையில் ஒரு அறை. ஒதேல்லோவும் எமிலியாவும் வருகின்றனர்.

ஒதெல்லோ : வேறு எதையும் நீங்கள் பார்க்கவில்லையா?

எமிலியா : கேட்கவுமில்லை: சந்தேகப்படவும் இல்லை.

ஒதெல்லோ : அவளை கேஷியோவுடன் நீங்கள் சேர்த்து பார்த்திருக்கிறீர்கள்.

எமிலியா: தவறாக எதுவும் தோன்றவில்லை. அவர்கள் பேசிய ஒவ்வொரு சொல்லும் என் செவிகளில் விழுந்தது.

ஒதெல்லோ : அடிக்குரலில் மெதுவாக பேசிக்கொள்ளவில்லையா?

எமிலியா; நிச்சயமாக இல்லை.

ஒதெல்லோ : அல்லது உங்களை அறைக்கு வெளியில் காத்திருக்கச் சொல்லவில்லையா?

எமிலியா: இல்லை.

ஒதெல்லோ : உங்களை சும்மாகவேனும் தனது தொப்பியை அல்லது கையுறையை அல்லது விசிறியை எடுத்து வரச்சொல்லி அனுப்பவில்லையா?

எமிலியா: இல்லை பிரபு.

ஒதெல்லோ : இது அதிசயமாக இருக்கிறது.

எமிலியா: அவள் அப்பழுக்கற்றவள் பத்தினி என்று சபதமிட்டு சொல்கிறேன் பிரபு. இதற்காக என் உயிர் போனாலும் பரவாயில்லை. அவளைப்பற்றிய வேறு விதமான எண்ணங்கள் உங்கள் நெஞ்சில் எழுந்தால் அதனை எடுத்து விடுங்கள். அவள் புனிதமானவள். எவனாவது பாதகன் உங்கள் மனதில் அவளைப் பற்றிய தப்பெண்ணத்தை கற்பித்திருந்தால் அவன் மேலுலகின் சாபத்திற்கு ஆளாவான்.அவள் புனிதமானவள் இல்லை என்றால், அவள் நேர்மையானவள் இல்லை என்றால், அவள் உண்மையானவள் இல்லை என்றால் பின்பு உலகில் எந்தக் கணவனும் தன் மனைவியை நம்ப மாட்டான்.

ஒதெல்லோ : அவளை நான் கூப்பிட்டதாகச் சொல்லுங்கள் .

(எமிலியா உள்ளே செல்கிறாள் ) சரியாக பேசுகிறாள். ஒரு விபசார விடுதி நடத்துபவளால் வேறு எப்படி பேச முடியும்?  மிக நுட்பமான வேசி இவள். அயோக்கியத்தனமான ரகசியங்களை பாதுகாக்கும் பெட்டகமல்லவா இவள்? மண்டியிட்டு புலம்புகிறாள் நல்லவளைப் போல. எனக்குத் தெரியும்.

(டெஸ்டிமோனாவும் எமிலியா வும் வருகின்றனர். )

டெஸ்டிமோனா: என்ன வேண்டும் அன்பரே ?

ஒதெல்லோ : என் அன்பே அருகில் வா.

டெஸ்டிமோனா: தங்கள் விருப்பம் என்னவென்று சொல்லுங்கள் அன்பரே !

ஒதெல்லோ : உன் கன்னங்களைப் பார்க்கவேண்டும். என் முகத்தைப்பார் .

டெஸ்டிமோனா: எந்த பயங்கரத்தை கற்பனை செய்து வைத்திருக்கிறீர்கள்?

ஒதெல்லோ : (எமிலியாவைப் பார்த்து, ) உங்களுடைய கடமைகள் சில உள்ளன. உறவு கொள்பவர்களிளை தனியே அறையில் இருக்க வைத்துவிட்டு கதவை மூடிக் கொண்டு வெளியில் நில்லுங்கள். அந்நியர்கள் வரும்போது லேசாக கணித்து எங்களுக்குஎச்சரிக்கை செய்யுங்கள்.. இதுதான் உங்கள் விதிக்கப்பட்டது..( எமிலியா மறைகிறாள் )

டெஸ்டிமோனா: உங்கள் பேச்சு எதனை குறிக்கிறது என்பதை தயவு செய்து சொல்லி விடுங்கள். உங்கள் த்வனியின் கோபத்தைப் ,புரிந்து கொள்ள முடிகிறது. உங்கள் வார்த்தைகளையல்ல.

ஒதெல்லோ : ஏன்? நீ யார் ?

டெஸ்டிமோனா :உங்கள் மனைவி பிரபு. உண்மையும் விசுவாசமும் உடைய மனைவி.

ஒதெல்லோ : வா டெஸ்டிமோனா ! வா வந்து சத்தியம் செய். உன்னையே நீ இழிவு படுத்திக்கொள். வானுலக பத்தினிகளைப் போல சத்தியம் செய். சாத்தான் கூட உன்னை தொடுவதற்கு அச்சப்பட வேண்டும். சத்தியம் செய் நேர்மையானவளே.

டெஸ்டிமோனா: வானுலகம் என்னை அறியும்.

ஒதெல்லோ : வானுலகம் அறியும் நீ நரகத்தை விட கொடியவள் என்று.

டெஸ்டிமோனா; யாருடன் ? யாருடன் பிரபு? சொல்லுங்கள் நான் எந்தவைகையில் தவறானவள்?

ஒதெல்லோ : ஓ டெஸ்டிமோனா! இங்கிருந்து போய்விடு. எனக்கு இப்போது தனிமை அவசியம்.போ போபோ !

டெஸ்டிமோனா: என்ன ஒரு மோசமான நாள் இன்று. எதற்காக வருந்தி அழுகிறீர்கள்? உங்கள் கண்ணீரின் காரணம் யார்? நானா? உங்களை மீண்டும் வெனிஸ் நகரத்திற்கு அழைத்துக் கொண்டது என் தந்தைதான் என்று நீங்கள் சந்தேகப்பட்டால் அதற்காக என் மீது பழி சொல்லாதீர்கள். அவர் உங்களுக்கு தேவையில்லை என்றால் எனக்கும் தேவையில்லை.

ஒதெல்லோ : கடவுள் என்னை சோதனைகளுக்கு ஆட்படுத்துவார் எனில், மொத்த அவமானங்களையும் என் தலையில் கொட்டினாலும், மீட்சியற்ற வறுமையைத் தந்தாலும், என் நம்பிக்கைகளை சிதறடித்தாலும், எனது வற்றிய ஆன்மா அதனை பொறுமையுடன் சகித்துக் கொண்டிருக்கும். ஆனால் கடவுளோ என்னை அனைவரும் பார்த்து எள்ளி நகையாடும்படி என்னை ஒரு கேலிக்கூத்தாக மாற்றிவிட்டான். அதைக்கூட பொறுத்துக் கொள்வேன். நன்றாக பொறுத்துக் கொள்வேன். மிக நன்றாக. என் வாழ்வு பொங்கிப் பெருகும் ஜீவ நதியைப்போல விளங்க வேண்டுமா ? அல்லது  வற்றி மறைய வேண்டுமா ? அல்லது வெறும் குட்டையாகத் தேங்கி அதனுள் தவளைகள் நீந்த வேண்டுமா? பொறுமை ! ஹ்ஹா ! பொறுமை. பொறுமையின் உருவான பூமித் தாயே உன்னால் கூட இந்த கொடுமையைக் கண்டு பொறுமையுடன் இருக்க முடியாது.

டெஸ்டிமோனா : என் பிரபு என்னை நாணயமானவள் என்று நம்பட்டும்.

ஒதெல்லோ :  அசையும் காற்றிலும் இனப்பெருக்கம் செய்யும் அழுகிய இறைச்சியில் அமரும் ஈக்களைப் போல நாணயமானவள். காண்பவர்களின் உணர்வைக் கொல்லும் வனப்பும் வாசனையும் கொண்டும் மயக்கும் காட்டுச் செடியே! நீ பிறந்திருக்கவே கூடாது.

டெஸ்டிமோனா: அப்படி என்ன கொடிய குற்றம் புரிந்தேன் நான்?

ஒதெல்லோ: அழகிய பெண்ணே ! நீ வேசி என்பதை முரசறிவிக்கச் சொல்கிறாயா? என்ன குற்றம் புரிந்தாயா? என்ன குற்றமா புரிந்தாய்? வேசி! நீ புரிந்த குற்றத்தை என் வாயால் கூறினால் என் வாய் வெந்துவிடும். என்ன குற்றம் புரிந்தாய் என்றா கேட்கிறாய்? உன் குற்றங்களை அடுக்கிக் கூறினால் ஆகாயம் தனது செவிகளை மூடிக் கொள்ளும்; நிலவு தனது விழிகளை மூடிக் கொள்ளும்; காற்று தனது இதழ்களை மூடிக் கொள்ளும். கூறட்டுமா? திமிர் பிடித்த தேவடியாளே! !

டெஸ்டிமோனா: ஐயோ கடவுளே எனக்கு ஏன் இப்படி துரோகம் இழைக்கிறாய்?

ஒதெல்லோ : சொல் ! நிஜமாகவே நீ ஒரு வேசிதானே ?

டெஸ்டிமோனா : நான் மத நம்பிக்கை உடையவள். வேசியில்லை. இந்தக் கலன் என் கணவனுக்கென்று உரியது. தர்மத்திற்கு புறம்பாக அன்னியர் கரம் இதனை  ஸ்பரிசித்திருந்தால் நான் உயிர் தரிக்க மாட்டேன்.

ஒதெல்லோ : என்னது நீ வேசியில்லையா ?

டெஸ்டிமோனா; என் ஆத்மா பரிசுத்தமானது. இரட்சிக்கப்படும்.

ஒதெல்லோ : அப்படியா ?

டெஸ்டிமோனா : தெய்வமே எங்களை மன்னியுங்கள்.

ஒதெல்லோ : அடடா! என் மீது கருணை காட்டு வெனிஸ் நகரின் வஞ்சக வேசியான நீ ஒதேல்லோவை மணந்து கொண்டவள் என்று எண்ணி விட்டேன். நீ சொர்கத்தை காவல் காக்கும் புனித பீட்டரின் எதிரில் உள்ள நரகத்தைக் காவல் காப்பவள் என்பது தெரியாமல் கூறிவிட்டேன். (எமிலியா மீண்டும் உள்ளே வருகிறாள் )

வாம்மா வா ! எங்கள் காரியம் முடிந்து விட்டது . எங்களுக்காக வெளியில் வேதனையுடன் காவல் இருந்ததற்கு இந்தா இந்த கூலியை வாங்கிக் கொள். நான் உன்னிடம் வேண்டிக் கொள்வதெல்லாம் அறைக்கதவை சாற்றிக் கொண்டு கவனமாக உன் காவல் தொழிலை தொடரு. இங்கு நடந்ததை யாரிடமும் மூச்சு காட்டாதே!. ( ஒதெல்லோ மறைகிறான். )

எமிலியா : கடவுளே ! என்ன இது ? இவருக்கு என்ன ஆயிற்று ஏன் கண்டபடி கற்பனை செய்து பேசுகிறார்? சீமாட்டி ! நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? நன்றாகத்தானே இருக்கிறீர்கள் ?

டெஸ்டிமோனா : பாதி இறந்துவிட்டேன்.

எமிலியா: என் பிரபுவிற்கு என்ன நேர்ந்தது ?

டெஸ்டிமோனா : யார் உன்னுடைய பிரபு?

எமிலியா: உங்களுடையவர்தான் என்னுடைய பிரபு

டெஸ்டிமோனா : எனக்கு இனி தலைவன் என்று எவருமில்லை. என்னுடன் எதுவும் பேசாதே

எமிலியா. எனக்கு அழுவதற்கு சக்தியில்லை எமிலியா. கண்ணீரால் எதனை சுத்தபடுத்த முடியும்? இன்றிரவு என் படுக்கையில் எங்கள் திருமணநாளன்று விரிக்கப்பட்ட விரிப்பை விரி. மறக்காதே. போ இப்போது உன் கணவனை இப்போது இங்கு வரச் சொல்.

எமிலியா: என்ன ஒரு மாற்றம் ! ( மறைகிறாள் )

டெஸ்டிமோனா: எனக்கு இந்த அவப்பெயர் தேவைதான். எந்தத் தவறும் இழைக்காத என் மீது அவர் ஏன் இப்படி ஒரு அபாண்டத்தை சுமத்தினார் ?( எமிலியா இயாகோவுடன் வருகிறாள் )

இயாகோ :உங்களுடைய தேவை என்ன சீமாட்டி?

டெஸ்டிமோனா : தெரியவில்லை இயாகோ. அடம்பிடிக்கும் சிறு குழந்தைகளை பெரியவர்கள் கண்டித்து வளர்ப்பார்கள். இவரும் அப்படித்தான் என்னை ஒரு தண்டிக்கப்பட வேண்டிய குழந்தையாக எண்ணியிருக்க வேண்டும்.

இயாகோ : என்ன நிகழ்ந்தது அம்மா ?

எமிலியா; ஐயோ அன்பரே !  நமது பிரபு இவளுக்கு வேசி என்ற முத்திரையை குத்தினார். வெறுப்புகளையும், பழிச் சொற்களையும் இவள் மீது அள்ளி வீசினார். தூய நெஞ்சங்கள் இதனை தாங்க மாட்டா.

டெஸ்டிமோனா : எனக்கு அப்படி ஒரு பெயர் வேண்டுமா இயாகோ ?

இயாகோ : எப்படிப்பட்ட பெயர் அம்மணி ?

டெஸ்டிமோனா ; என் பிரபு கூறியது போல.

எமிலியா : அவர் இவளை வேசி என்று கூறினார். ஒரு குடிகாரன் தனது குடிபோதையில் கூட தன் மனைவியைக் கூற விரும்பாத அவப்பெயர்.

இயாகோ : அவர் ஏன் அவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?

டெஸ்டிமோனா : தெரியவில்லை. நான் அப்படிப்பட்டவள் இல்லை.

இயாகோ : அழாதீர்கள் அம்மணி ! என்ன ஒரு மோசமான நாள் இது.

எமிலியா: எவ்வளவு உயர்ந்த வரன்கள் இவளை இவள் தந்தையின் பரிந்துரையில் இவளை பெண் கேட்டு வந்தனர்? அத்தனையையும் வேண்டாம் என்று உதறித் தள்ளியவள் இவள். எதற்கு ? இப்படி வேசி என்ற பட்டம் சுமக்கவா ? இதற்கு அழாமல் இருக்க முடியுமா ?

டெஸ்டிமோனா: என் துரதிர்ஷ்டம்.

இயாகோ : அவர் வீணாகப் போகட்டும் அம்மணி. ஆனா உங்கள் மேல் இப்படி ஒரு  அபாண்டம் சுமத்த வேண்டும் ?

டெஸ்டிமோனா : அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

எமிலியா: இது உள்ளிருந்து எவனோ ஒரு அயோக்கியன், பொறுக்கி தனது சுய இலாபத்திற்காக இந்த மட்டமான அபாண்டத்தை இவள் மேல் சுமத்த காரணமாக இருக்கிறான். இது நிச்சயம். அப்படி ஒருவன் இல்லையென்றால் நான் உறுதியாக தூக்கு மாட்டி சாவேன்.

இயாகோ ; அப்படி யாரும் இங்கே இருப்பதாகத் தெரியவில்லை. இதற்கு சாத்தியமில்லை.

எமிலியா: மரணம் அவன் செய்த பாவத்தை மன்னிக்கட்டும். நரகம் அவனை கண்டதுண்டமாக்கட்டும். ஏன் அவன் இவளை வேசி என்ற பட்டத்தை கொடுக்க வேண்டும்? இவள் அப்படி எவருடன் இருந்தாள் ? எந்த இடத்தில் ? எந்த நிலையில் ? எந்த வடிவில் ? மூர் ஒரு துரோகியினால் பொய்யுரைக்கபட்டுள்ளார். அந்தக் கீழ்த்தரமான அயோக்கியனை வானுலகம் அடையாளம் காட்டவில்லைஎன்றால் அவனை நிர்வாணமாக்கி, எல்லா திசைகளிலும் இழுத்துச் சென்று உறுதியான சவுக்கினால் அடித்து துன்புறுத்த்வில்லைஎன்றால் உண்மைக்கு மதிப்பின்றி போய்விடும்.

இயாகோ : சத்தம் போடாதே !

எமிலியா; கேவலம். அப்படி ஒரு அயோக்கியன் மூருடன் என்னை இணைத்து உங்களையும் நம்ப வைத்திருக்கிறான்.

இயாகோ : நிறுத்து முட்டாள்.

டெஸ்டிமோனா : ஆனால் இயாகோ என் பிரபுவை நான் மீண்டும் அடைய என்ன செய்ய வேண்டும் ? கடவுள் சாட்சியாக நான் அவரை எப்படி இழந்தேன் என்று தெரியவில்லை. இதோ நான் மண்டியிட்டு சூளுரைக்கிறேன். என் எண்ணம் அவரது விருப்பத்திற்கு எதிராக கட்டவிழ்ந்து  சென்றாலோ, மனதாலோ, வாக்காலோ, இந்த சரீரத்தினாலோ நான் பிற ஆடவரை கவர்ந்திருப்பேன் ஆயின்….. அப்படி நிகழ்ந்திருக்காது….அதனை காரணம் காட்டி அவர் என்னை விவாகரத்து செய்தால் கூட நான் அவர் மீது அன்புடன்தான் இருப்பேன். இரக்கமின்மை எதுவேண்டுமாயினும் செய்யும். இரக்கமின்மை என் வாழ்வை நாசமாக்கும். ஆனால் இரக்கமின்மை என் காதலை எதுவும் செய்ய முடியாது. வேசி என்ற சொல் என்னை மிகவும் வேதனைபடுத்துகிறது.  இந்த உலகை முழுவதும் விலையாக கொடுத்தாலும் நான் ஒரு வேசியாக மாட்டேன்.

இயாகோ : உங்களை கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். சற்று அமைதியாக இருங்கள். அவருடைய நக்கலான மனநிலை என்று எடுத்துக் கொள்ளுங்கள். அவர் பணியின் அழுத்தம் அவரை அவ்வாறு கூறத் தூண்டியிருக்கும்.

டெஸ்டிமோனா : அப்படித்தான் இருக்கும்.

இயாகோ : அப்படி இல்லை நான் உறுதியளிக்கிறேன். ( துந்துபி நாதம் எழுகிறது.. ) இரவு விருந்திற்கு அழைக்கிறார்கள். வெனிஸ் நகர கணவான்கள் விருந்திற்கு காத்திருக்கிறார்கள். உள்ளே செல்லுங்கள் சீமாட்டி. அழாதீர்கள். எல்லாம் நல்லவிதமாக முடியும்.( எமிலியாவும், டெஸ்டிமோனாவும் உள்ளே போகின்றனர். )

( ராடெரிகோ உள்ளே நுழைகிறான் )

இயாகோ : எப்படி இருக்கிறாய் ராடெரிகோ ?

ராடெரிகோ : நீங்கள் என்னிடம் உண்மையாக நடந்து கொள்ளவில்லை.

இயாகோ : ஏன் இந்த முரண் ராடெரிகோ?

ராடெரிகோ : ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு தந்திரத்தால் நீங்கள் என் முயற்சியை தடுத்து விடுவதாகக் கருதுகிறேன்.என் சந்தர்ப்பங்களை தடுத்து என் நம்பிக்கைக்கு உலை வைக்கிறீர்களோ என்று தோன்றுகிறது. இனி பொறுப்பதற்கில்லை. அமைதியாக ஒரு இடத்தில் இருந்து நீங்கள் என்னை முட்டாளாக்கியதால் எனக்கு ஏற்பட்ட நட்டங்களை கணக்கு எடுக்கப் போகிறேன்.

இயாகோ : நான் சொல்வதை கொஞ்சம் காதுகொடுத்து கேட்கிறாயா ராடெரிகோ ?

ராடெரிகோ :நிறைய கேட்டுவிட்டேன். உங்கள் செயலும் சொல்லும் முரண்படுபவை.

இயாகோ : என்னை மட்டமாக மதிப்பிடுகிறாய் .

ராடெரிகோ : உண்மையைத்தான் சொன்னேன். டெஸ்டிமோனாவிடம் கொடுப்பதாக நீங்கள் வாங்கிச் சென்ற நகைகளின் மதிப்பு ஒரு பெண்துறவியின் மனதைக்கூட மாற்றிவிடும் .நகைகளை அவளிடம் கொடுத்ததாகக் கூறினீர்கள்; என்னை காணத்துடிபதாகக் கூறினீர்கள். அப்படி எதுவும் நிகழவில்லை.

இயாகோ : நல்லது, மேலே சொல்.

ராடெரிகோ : தொடர்ந்து சொல்கிறேன்; ஆனால் இது நல்லதற்கில்லை. அற்ப வழிகளில் நான் முட்டாளாக விரும்பவில்லை.அவ்வளவுதான்.

இயாகோ : நல்லது.

ராடெரிகோ: எது நல்லது ? எனக்கென்ன? நான் டெஸ்டிமோனாவை சந்திக்கப் போகிறேன். அவள் என் நகைகளை திருப்பி கொடுத்துவிட்டால் முறைகேடான முன்மொழிதலுக்கு வருத்தம் தெரிவிப்பேன். திருப்பி தரவில்லை என்றால் பிறகு உங்களுகு இருக்கிறது வேட்டு. தக்க சன்மானம் உங்களுகு கொடுப்பேன்.

இயாகோ : இப்போது சொல் இதனை.

ராடெரிகோ : என் விருப்பம் இதுதான்.

இயாகோ : அடேயப்பா ! பரவாயில்லையே உனக்குக் கூட கொஞ்சம் ஆவேசம் வருகிறதே? இந்த சமயத்திலாவது உன்மேல் இதற்கு முன் மற்றவருக்கிருக்கும் அபிப்பிராயத்தை மாற்றிக் கொள் ராடெரிகோ . கையைக் கொடு ராடெரிகோ. உனக்கு என்மேல் இப்படி ஒரு வெறுப்பு இருந்தாலும் பரவாயில்லை. உன் விஷயத்தை நான் நேர்மையாகத்தான் கையாண்டு வந்திருக்கிறேன்.

ராடெரிகோ : எனக்கு அப்படி தோன்றவில்லை.

இயாகோ :  வெளிப்படையாகத் தெரியாது ராடெரிகோ . நீ சந்தேகப்படுவது உன் புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறது. இதுவரை உன்னிடம் கண்டிராத துணிவும், தைரியமும் நிஜமாகவே உன்னிடம் இருக்கிறது என்றால் இன்று இரவு வரை பொறுத்துக் கொள். நாளை இரவு உனக்கு டெஸ்டிமோனாவை அனுபவிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்றால் என் முதுகில் ஓங்கி கத்தியால் குத்தி என்னைக் கொன்று விடு.

ராடெரிகோ : நல்லது. என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?எல்லாம் சொன்னபடி நடக்குமில்லையா.

இயாகோ : வெனிஸ் நகரிலிருந்து ஒரு சிறப்புக் குழு ஒதேல்லோவிற்கு பதில் கேஷியோவை நியமனம் செய்ய வருகிறது.

ராடெரிகோ : நிஜமாகவா? அப்படியென்றால் ஒதெல்லோவும் டெஸ்டிமோனாவும் மீண்டும் வெனிஸ் திரும்பி விடுவார்களா?

இயாகோ : இல்லை ஒதெல்லோ இங்கிருந்து மௌரதானியா போகிறான். உடன் அழகுப்பதுமை டெஸ்டிமோனாவும் செல்கிறாள். ஏதாவது விபத்து நிகழ்ந்தால்தான் இதனைத் தடுக்க முடியும். கேஷியோவை  ஒழித்து விட்டால் இது சாத்தியப்படும்.

ராடெரிகோ :ஒழித்து விடுவது என்றால் என்ன அர்த்தம் ?

இயாகோ : ஒதேல்லோவின் இடத்திற்கு அவன் வரக்கூடாது என்றால் அவன் மண்டையில் தட்டி கதையை முடிப்பது.

ராடெரிகோ : அதையும் நான்தான் செய்ய வேண்டுமா?

இயாகோ : செய்தாய் என்றால் அது உன் நன்மைக்கும் இலாபத்திற்கும் வழி வகுக்கும். கேஷியோஇன்றிரவு ஒரு வேசியின் வீட்டில் இரவு விருந்திற்கு செல்கிறான். நானும் அவனை சந்திக்கப் போகிறேன். தன் தலை மீது ஏறப் போகும் மகுடம் குறித்து அவனுக்கு இன்னும் தகவல் போகவில்லை. அவன் அந்த வேசியின் வீட்டிலிருந்து கிளம்பும் சமயம் நள்ளிரவு பனிரெண்டு மணியிலிருந்து இரவு ஒரு மணிக்குள் உனக்கு வழி வகுத்துக் கொடுக்கிறேன். அவனை போட்டுத் தள்ளி விடு. நானும் உனக்கு துணையாக இருக்கிறேன். நம் இருவர் நடுவில் அவன் பிணமாக சரிவான். வாயைப் பிளந்து கொண்டு நிற்காதே. வா என்னுடன் கிளம்பு. அவனைக் கொல்வதற்கு சரியான காரணம் சொல்கிறேன். பிறகு நான் சொல்வதற்கு கட்டுப்படுவாய். இது சரியான இரவு நேரம். இரவு முடிவை நோக்கி நகர்கிறது. வா போகலாம்.

ராடெரிகோ : எனக்கு இதனைப் பற்றி தெளிவாகத் தெரிய வேண்டும்.

இயாகோ : வா என்னுடன். விளக்கமாக சொல்கிறேன்.( இருவரும் மறைகின்றனர் )

காட்சி-3 நிறைவுற்றது

அங்கம்-4

காட்சி-4

அரண்மனையில் ஒரு அறை. ஒதெல்லோ, லோடோவிகா, டெஸ்டிமோனா, எமிலியாமற்றும் காவலர்கள்.

லோடோவிகா : தயை கூர்ந்து தங்களை அதிகம் வருத்திக்கொள்ள வேண்டாம் ஐயா.

ஒதெல்லோ :மன்னிக்க வேண்டுகிறேன். சிறிது தூரம் காலாற நடந்தால் நல்லது எனப்படுகிறது.

டெஸ்டிமோனா’ இரவு வந்தனம் அம்மணி. தங்களுக்கு எனது நன்றி.

டெஸ்டிமோனா : பெருந்தைகைக்கு வந்தனம்.

ஒதெல்லோ : என்னுடன் நடக்க வருகிறீர்களா? ஓ டெஸ்டிமோனா..

ஒதெல்லோ : நீ இப்போதே உன் படுக்கைக்குச் செல். சீக்கிரம் திரும்பி விடுகிறேன். உனக்கு துணையாக இருக்கும் எமிலியாவை அனுப்பி விடு. நான் சொன்னதைச் செய்.

டெஸ்டிமோனா : அப்படியே பிரபு.

( ஒதெல்லோவும், லோடோவிகோவும்  காவலர்களுடன் மறைகின்றனர். )

எமிலியா : இப்போது எப்படி போகிறது ? உன்னுடைய பிரபு கொஞ்ச நேரத்திற்கு இருந்ததைவிடக் கொஞ்சம்  கனிந்தவராகத் தோன்றுகிறார்.

டெஸ்டிமோனா : அவர் உடனே திரும்பி விடுவதாக சொல்லியிருக்கிறார். என்னை படுத்துக் கொள்ள சொல்லியிருக்கிறார். நீங்கள் இங்கிருந்து கிளம்ப வேண்டுமாம்..

எமிலியா : என்னது ? நான் போக வேண்டுமா?

டெஸ்டிமோனா : அப்படித்தான் சொல்லியிருக்கிறார். எனவே என்னுடைய இரவு அங்கியைக் கொடுங்கள். நீங்களும் இங்கிருந்து சென்று விடுங்கள். இந்த சமயத்தில் அவர் சொல்வதைக் கேட்பது நலம்.

எமிலியா : நீங்கள் அவரை சந்திக்காமலே இருந்திருக்கலாம் டெஸ்டிமோனா.

டெஸ்டிமோனா : நான் அப்படி நினைக்கவில்லை எமிலியா. என் காதல் அவருடைய தவறுகளை மன்னித்து விட்டது.அவரது சீற்றமும், பிடிவாதமும்,கோபப்பார்வையும் என்னை கவரவே செய்கிறது எமிலியா.அவற்றில் அவருடைய கருணையும், பரிவும் ஒளிந்துள்ளன.

எமிலியா : நீங்கள் கூறியது போல உங்கள் படுக்கை மீது உங்கள் மணநாள் விரிப்பை விரித்திருக்கிறேன்.

டெஸ்டிமோனா : எல்லாம் ஒன்றுதான். பாரேன் நம் மனது சில நேரங்களில் எவ்வளவு சல்லித்தனமாக செயல்படுகிறது ? எமிலியா நீ இறப்பதற்கு முன் நான் இறந்துவிட்டால் என்னை என் மணநாள் விரிப்பிலேயே சுற்றி வை.

எமிலியா : பேசுங்கள்  டெஸ்டிமோனா . உங்களால் முடிந்தவரை பேசுங்கள்.

டெஸ்டிமோனா : என் அம்மாவிற்கு உதவி செய்ய ஒரு பணிப்பெண் இருந்தாள். பார்பரா என்பது அவள் பெயர். சின்னப் பெண். அவள் காதலித்தாள். அவளுடைய காதலனுக்கு பைத்தியம் பிடித்தது. அவளிடமிருந்து விலகினான். பார்பரா எப்போதும்  ஒரு சோக கீதம் பாடுவாள். மிகப்பழைய பாடல்தான் இது. இருப்பினும் அந்தப்பாடல் அவள் வாழ்க்கையை கூறுவது போல இருக்கும். அந்தப்பாடலை பாடிக்கொண்டே அவள் இறந்து விட்டாள். என்னவோ அந்தப்பாடல் இந்த இரவில் எனக்கு நினைவுக்கு வருகிறது. பார்பராவைப் போலவே தலையை ஒரு பக்கமாக சாய்த்து கொண்டு அந்தப் பாடலை பாடவேண்டும் போல உள்ளது. சீக்கிரம் இங்கிருந்து போய்விடு.

எமிலியா: நான் உங்கள் இரவு அங்கியை எடுத்து வரட்டுமா?

டெஸ்டிமோனா: முதலில் இந்த உடையின் ஊக்கினை கழற்று. இந்த லோடோவிகோ ஒரு கச்சிதமானவன்   இல்லையா?

எமிலியா: நல்ல அழகன்.

டெஸ்டிமோனா: நன்றாக பேசவும் செய்கிறான்.

எமிலியா: எனக்குத் தெரிந்து ஒரு பெண் பாலஸ்தீனத்திலிருந்து வெனிஸ் வரை இவனிடம் ஒரு முத்ததிற்காக நடந்தே வந்தாள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். .

டெஸ்டிமோனா ( பாடத் தொடங்குகிறாள் ).

ஒற்றை மரத்தின் கீழிருந்து ஒரு புள்ளினம்

மூங்கில் காட்டை நினைத்து பாடும் பலதினம்.

கரங்களில் தனம் புதைத்து முழங்காலில் முகம் புதைத்து

மூங்கில் காட்டை நினைத்துப் பாடும் பலதினம்..

புதுப்புனல் கால்வழி நனைந்தோடி அவள்சோகம் கரைக்கும் சரிபாதி.

மூங்கில் காட்டை நினைத்து பாடும் பலதினம்.

கண்களில் வழியும் நீர்பட்டு கல்லும் கரையுது பார்இங்கு.

மூங்கில் காட்டை நினைத்து பாடும் பலதினம்.

வருவான் விரைந்து ஒருநாள் என்வாழ்வில் அதுதான் திருநாள்.

மூங்கில் இலைகளில் ஒருமாலை பழிப்பது வேண்டாம் அவனை நாளை

யார் கதவை தட்டுவது ? எமிலியாவா?

எமிலியா : காற்று

டெஸ்டிமோனா : ( மீண்டும் பாடுகிறாள் )

பலரிடம் காதல் ஆண்களுக்கு ஒன்றே போதும் பெண்களுக்கு.

இரவு வணக்கம் எமிலியா. என் கண்கள் நோகின்றன. படுத்துக் கொள்ளப் போகிறேன். பாடலின் எச்சரிக்கை வரப்போகும் துயரத்தை குறித்தா எமிலியா?

எமிலியா; அப்படி எதுவும் தெரியவில்லையே

டெஸ்டிமோனா: ரெண்டு மூணு பேர் சொல்லியிருக்கிறார்கள். ஓ ! இந்த ஆண்கள். உண்மையைச் சொல் எமிலியா. இதுபோல தங்கள் கணவனை ஏமாற்றும் பெண்கள் இருக்கிறார்களா?

எமிலியா: இருப்பார்கள் . இதிலென்ன சந்தேகம் ?

டெஸ்டிமோனா: உன்னால் அப்படி ஒரு செயலைச் செய்ய முடியுமா ?

எமிலியா: நீங்கள் செய்வீர்களா?

டெஸ்டிமோனா : கடவுள் சாட்சியாக செய்ய மாட்டேன். உன்னால் முடியுமா எமிலியா

?

எமிலியா: பகல் சாட்சியாக முடியாது. ஆனால் இரவில் எப்படி என்று தெரியவில்லை.

டெஸ்டிமோனா : இந்த உலகமே ஈடாக கிடைத்தாலும் உன்னால் அப்படி ஒரு மோசமான செயலைப் புரிய முடியுமா?

எமிலியா: உலகம் மிகப் பெரியது. இந்தச் சின்ன பாவத்திற்கு எதற்கு அதை இழுப்பானேன் ?

டெஸ்டிமோனா : நீ அப்படி ஒரு தவறை புரிவாய் என்று நான் நம்பவில்லை.

எமிலியா : நான் புரிவேன் என்று நினைக்கிறேன். அப்படி புரிந்தபின் மீண்டும் புரிய மாட்டேன். கேவலம் ஒரு ஆடைக்காவோ அல்லது ஒரு மேல் அங்கிக்காவோ அதுவும் இல்லை ஒரு தொப்பிக்காகவோ இந்த மோசத்தை செய்ய மாட்டேன். உலகமே கிடைக்கும் என்றால் சும்மாவா? எந்த வீணாய்ப் போன பெண்ணிற்கு தன் கணவன் ஒரு சக்கரவர்த்தியாவது பிடிக்காமல் போகும்? என் கணவனுக்காக இந்த இன்னலைக் கூடவா நான் தாங்க மாட்டேன் ?

டெஸ்டிமோனா : இந்த உலகமே ஈடாக கிடைத்தாலும் நான் இப்படி ஒரு மோசமான செயலைப் புரிய மாட்டேன்.

எமிலியா: தவறு ஏன் இந்த உலகில் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது? ஆனால் இந்த உலகம் ஈடாகக் கிடைக்கும் என்றால் தவறு சரியாகி விடும்.

டெஸ்டிமோனா: எனக்கு தெரியவில்லை இப்படியும் ஒரு பெண் இருப்பாளா என்று.

எமிலியா: இந்த உலகில் பெண்கள் இருக்கும் வரை இது போல ஒரு பெண் இல்லை ஒரு டஜன் பெண்கள் இருப்பார்கள். பெண்களின் மோசடிக்கு அவர்கள் காரணமில்லை. அவர்களுடைய கணவன்மார்களே காரணம். தங்கள் கடமைகளை மறந்து நமது உடைமைகளை வேறு ஒருத்தியின் மடியில் கொண்டு கொட்டும்போது, நம் மீது தேவையில்லாமல் சந்தேகப்பட்டு நம்மை எங்கும் போகவிடாமல் கண்காணிக்கும்போது, நம்மை அடிக்கும்போது, வெறுப்புடன் கொடுக்கும் பணத்தையும் குறைத்துக் கொடுக்கும்போது, நமக்கு வருத்தம் ஏற்படத்தான் செய்யும். நம்மிடம் பெருந்தன்மையும்,கருணையும் இருந்தாலும் கூடவே ஒருவித ஆத்திரமும் இருக்கும். கணவன்மார்களுக்கு தங்களைப் போலவே தங்கள் மனைவிகளுக்கும் உணர்வு பொதுவானது என்பது தெரிய வேண்டும்.சுவைப்பதற்கும் முகர்வதற்கும் அவர்களுக்கும் அவர்கள் கணவன்மார்களைப்போல வாயும் மூக்கும் ஒன்றுதான் என்பது தெரியவேண்டும். பிறகு ஏன் நாம் இருக்கும் இடத்தில் வேறு ஒரு பெண்ணை கொண்டு வருகிறார்கள்? இது நியாயமா? ஆமாம் நியாயம்தான் போல.இது பிரியமாக செய்வதா ? அப்படித்தான் போல.இது அவர்களுடைய பலவீனமா? அப்படித்தான் இருக்க வேண்டும். அவர்களுக்கு இருக்கும் அதே நியாயம், பிரியம், பலவீனம் பெண்களாகிய நமக்கு இருக்கக் கூடாதா? அப்படி இருக்கக்கூடாது என்றால் ஆண்கள் நம்மை நல்லவிதமாக நடத்தட்டும். இல்லையென்றால் அவர்களிடம் கற்றுக் கொண்டவற்றை நாமும் செய்து காட்டுவோம்.

டெஸ்டிமோனா : இரவு வணக்கம். இரவு வணக்கம். கடவுளே இது போன்ற பெண்களிடமிருந்து கெட்ட நடவடிக்கைகளை கற்றுக் கொள்ள வேண்டும்; நடப்பதற்கு அல்ல விளக்குவதற்கு.

காட்சி நிறைவு.

அங்கம் -4 நிறைவுற்றது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

.

 

 

 

 

 

 

 

 

 

ஒதெல்லோ II. – மொழியாக்கம்- சத்தியப்பிரியன்.

download (13)

 

 

 

 

 

அங்கம் II.

காட்சி -1

சைப்ரசில் உள்ள ஒரு துறைமுக நகரம். கடற்புரத்தின் அருகில் ஒரு திறந்தவெளி. மோண்டனோவும் வேறு இரண்டு அதிகாரிகளும் நுழைகின்றனர்.

மோண்டனோ : கடல்கரையிலிருந்து பார்த்தால் உங்கள் கண்களுக்கு ஏதாவது தென்படுகிறதா?

முதல் கணவான் : என் கண்களுக்கு எதுவும் தெரியவில்லை.கடல் பொங்கிக் காணப்படுகிறது. கடலுக்கும் ஆகாயத்திற்கும் நடுவில் ஒரு கப்பலை கூட காணமுடியவில்லை.

மோண்டனோ : நிலத்தில் காற்று பலமாக வீசுகிறது. இன்னும் பேய்க்காற்றாக மாறினாலும் நமது கொத்தளங்களுக்கு ஒன்றும் நேராது. இதே காற்று கடலில் வீசுமேயானால் மலை உயரத்திற்கு ஓங்கி எழும் அலைகளை கப்பல்கள் எவ்வாறு எதிர் கொள்ளும் ? இதன் விளைவு என்னவாகுமோ?

கணவான்-2 : துருக்கிய கப்பற்படையின் அழிவுகாலம். கடற்கரையில் நின்று பாருங்கள். பொங்கும் அலைகள் விண்ணுலகம் வரை எழுகின்றன. கடலின் பேரலைகள் விண்மீன்களின் வெப்பத்தை தணிப்பதாக உள்ளது. பிரகாசமான துருவ நட்சத்திரம் முற்றிலும் மறைந்துவிடும் போல் உள்ளது. இப்படி ஒரு சீற்றத்தை நான் இதுவரையில் கண்டதில்லை.

மோண்டனோ : துருக்கியர்களின் கப்பல் கரை ஒதுங்காவிடில் அதன் கதை முடிந்துவிடும். இந்தக் கடல் சீற்றத்தை தாங்கும் வலிமை அதற்கு கிடையாது.

—-மூன்றாவது கணவான் வருகை ——

மூ.க : நல்ல செய்தி நண்பர்களே! துருக்கியப் போர் முடிவுக்கு வந்துவிட்டது. புயல் துருக்கியரை மூர்க்கமாக தாக்கி விட்டது.அவர்கள் முற்றுகை முறியடிக்கப்பட்டது. வெனிஸ் நகர கப்பல் ஒன்று துருக்கியரின் கப்பல்படை புயலில் சிக்கி சின்னாபின்னமானதை நேரில் பார்த்ததாக தகவல் வந்திருக்கிறது.

மோண்டனோ :நிஜமா இந்தச் செய்தி ?

மூ.க: வெனிஸின் கப்பல் இதோ இப்போதுதான் கரைசேர்ந்தது. போர்போலவே காணப்படும் மூரின் தளபதி மைக்கேல் கேஷியோ இதோ வருகிறார்.மூர் சைப்ரஸ் நாட்டின் ஆளுநரைப் போல இன்னமும் கடலில்தான் இருக்கிறார்.

மோண்டனோ : சந்தோஷம். மூர் அதற்குத் தகுதியானவர்தான்.

மூ.க : துருக்கியரின் நஷ்ட கணக்கை ஒப்பிக்க இதோ கேஷியோ இருப்பினும் நண்பனை புயலில் பிரிந்த வேதனை அவர் கண்களில் தெரிகிறது.

மோண்டனோ : வானம் அவருக்கு வசப்படட்டும். நான் அவர்கீழ் பணிபுரிந்திருக்கிறேன். ஒரு முழுமையான போர்த் தலைவர்.வாருங்கள் கடல் அருகில் செல்வோம்.வந்திருக்கும் கலத்தில் ஒதேல்லோவின் வரவைத் தேடுவோம்.

மூ.க : ஆமாம் . ஒவ்வொரு கலமாக திரும்பியவண்ணம் உள்ளது. மூரின் வருகையை எதிர்கொள்வோம்.

__கேஷியோ வருகை ___

கேஷியோ : மூரின் புகழ் பாடும் இந்தத் தீவின் வீரர்களுக்கு என் வந்தனம். இன்னல்களிலிருந்து அவரை அந்த வானகம் காப்பாற்றட்டும். அவரை ஒரு மோசமான புயல் சூழலில் பிரிந்தேன்.

மோண்டனோ : அவர் இருந்த கப்பல் தரமானதுதானே?

கேஷியோ : அவர் இருந்த கப்பல் உறுதியானது. அதன் மாலுமி வல்லவன். எனவே அவர் கடலுக்கு இரையாவது அத்தனை சுலபமில்லை.

—- கடற்புரத்தில் ஏலேலோ ஏலேலோ என்ற ஆரவாரம் எழுகிறது—–

கேஷியோ : என்ன ஓலம் இது ?

மோண்டனோ : ஊருக்குள்ளிருந்த ஜனம் முழுவதும் இங்கே திரண்டு விட்டனர். மணற்குன்றுகளின் மேல் நின்று போடும் ஏலேலோ ஓலம் அது.

கேஷியோ : அப்படி என்றால் நமது ஆளுநர் வருகிறார் என நினைக்கிறேன்.

—-வானில் துப்பாக்கி இரையும் ஓசை கேட்கிறது —

இரண்டாவது கணவான் : நமது ஆளுநரை வரவேற்க இது மரியாதை நிமித்தம் முழங்கப்படுகிறது.

கேஷியோ : ஆமாம் நீங்கள் சென்று யார் என்று பார்த்து விட்டு வாருங்கள்.

இர க : இதோ போகிறேன். ………….கிளம்புகிறார்—-

மோண்டனோ : தளபதியாரே ! உங்கள் தலைவருக்குத் திருமணம் ஆகிவிட்டதா ?

கேஷியோ” : ஒரு தேவதையுடன் திருமணம் ஆகியிருக்கிறது. அவள் வர்ணனைகளுக்கு அப்பாற்பட்டவள். விவரணைகளுக்கு மேலானவள். கவிஞனின் எழுதுகோலின் வரம்பு மீறியவள். ஓவியனின் தூரிகைக்கு சிக்காதவள்.

—- இரண்டாவது கணவான் வருகை————-

கேஷியோ : ஓ ! இப்போது யார் வந்தது ?

இர. கண : இயாகோ . மூரின் கீழ் பணிபுரியும் மூத்த அதிகாரி.

கேஷியோ: அவர் பயணம் விரைவாக இருக்கட்டும். அவரது பயணம் காலநிலைக்கு சாதகமாக இருக்கட்டும். சீறும் புயலும் ஓங்கிய கடலும், சுழலும் காற்றும், கடும்பாறைகளும், புதைமணல்களும் கப்பலை கவிழ்க்கும் வல்லமை வாய்ந்த கொடிய குணமுடையவை. இவை டெஸ்டிமோனாவின் தெய்வீக அழகில் மயங்கி தங்கள் கொலைநோக்கை மாற்றி மூரின் கப்பலுக்கு ஒரு அச்சமற்ற தொலைநோக்கை அளித்திருக்கும்.

மோண்டனோ : யார் அவள்?

கேஷியோ : நான் இப்போது கூறியது நம் அதிகாரியை அதிகாரம் செய்பவளை பற்றி. துணிச்சல் மிகுந்த இயாகோவின் பாதுகாப்பில் விடப்பட்டிருப்பவள். இந்தக் கரையை அந்த ஒதெல்லோ தனது கப்பலின் மூலம் புனிதப்படுத்தட்டும்: தனது திரண்ட தோள்களின் மூலம் டெஸ்டிமோனாவின் காதலை வெளிப்படுத்தட்டும். சைப்ரசை தனது வீரத்தால் பெருமைபடுத்தட்டும்

—- டெஸ்டிமோனா,எமிலா, இயாகோ, ரோடெரிகோ மற்றும் உதவியாளர்கள் வருகை—

கேஷியோ ( தொடர்கிறான் ) அதோ பாருங்கள் கப்பல் கொணர்ந்த பொக்கிஷம் நம் கண் எதிரில். சைப்ரஸ் மக்களே அவள் முன் மண்டியிட்டு வணங்குங்கள்.கடவுளின் வாழ்த்துக்கள் உங்களை தழுவட்டும்.

டெஸ்டிமோனா, : நல்லது கேஷியோ என் கணவரை குறித்து என்ன செய்தி கொண்டு வந்திருக்கிறாய்?

கேஷியோ :இன்னும் அவர் கரை திரும்பவில்லை மேடம். ஆனால் அவர் நலமாகத்தான் இருக்கிறார்.

டெஸ்டிமோனா, : எனக்கு அச்சம் தீரவில்லை. நீ எப்படி அவரை பிரிந்தாய்?

கேஷியோ : கடலின் சீற்றமும் வானின் முழக்கமும் எங்களைப் பிரித்து விட்டது சீமாட்டி.

அதோ இன்னும் ஒரு ஐலசா கோஷம்.

—மீண்டும் ஏலேலோ ஐலசா கோஷமும் துப்பாக்கி முழக்கமும் கேட்கின்றன—

இர.கண: இதுவும் ராஜ மரியாதையின் ஓசைதான். வந்திருப்பது நமது நண்பர்களாகத்தான் இருக்க வேண்டும்.

கேஷியோ : சென்று யாரென பார்த்து வாருங்கள்.

—-இரண்டாவது கணவான் மறைகிறான்—-

கேஷியோ : ( தொடர்ந்து ) வாருங்கள் கொடிதாங்கும் மூத்தவர் இயாகோ அவர்களே (எமிலாவை வணங்கி ) வாருங்கள் சீமாட்டி. பொறுமை இழக்க மாட்டீர்களே இயாகோ? என் வளர்ப்பும் பழக்கவழக்கமும் அப்படி. சீமாட்டிகளை நான் முத்தமிட்டு வரவேற்பதுதான் வழக்கம். சம்மதம் கிடைக்குமா இயாகோ ?

இயாகோ : முத்தமிடும்போது எனக்கு தன் நாவை கொடுப்பது போல உங்களுக்கு இதழ்களைத் தருவாள். ஐயா ! எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம் முத்தமிடுங்கள் —- ( கேஷியோ முத்தமிடுகிறான். )

டெஸ்டிமோனா : இதற்கு அவள் சம்மதம் வேண்டாமா ?

இயாகோ : சொல்லப்போனால் அவள் பேச்சுதான் இரவில் நான் படுக்கச் செல்லும் வரை நீடிக்கும். உங்கள் முன்னால் இருப்பதால் தன் நாவினால் என்னை கட்டுவதற்கு பதில் தன் சிந்தையால் கட்டி போட்டுக் கொண்டிருக்கிறாள்.

டெஸ்டிமோனா :நீங்கள் இப்படி கூற ஒரு காரணமும் இல்லை.

இயாகோ : வாருங்கள் சீமாட்டி வாருங்கள். உங்களை பற்றி எடுத்து விடட்டுமா? நீங்கள் எல்லாம் தொங்கவிடப்பட வேண்டிய சித்திரங்கள் வீட்டிற்கு உள்ளே அல்ல. வீட்டிற்கு வெளியில்; அழைக்கும் மணிகள் ஆனால் உள்ளே வரவேற்பறையில். காட்டுப்பூனைகள் ஆனால் உங்கள் சமையலறையில். துறவிகள் ஆனால் உங்கள் வன்மைங்களில். சாத்தான்கள் ஆனால் உங்களைக் குற்றம் கூறும்போது,. வீட்டுவேலைகளில் விளையாட்டுப்பாவைகள். படுக்கையில் இல்லத்தரசிகள்.

டெஸ்டிமோனா : ஹக் ! என்ன துக்கிரித்தனம் உங்களுக்கு. நீங்கள் பெண்களை வெறுப்பவரா?

இயாகோ : சத்தியமாக நான் சொன்னது உண்மை. இல்லையென்றால் நான் ஒரு துருக்கியன் என்று எடுத்துக் கொள்ளுங்கள்.* நீங்கள் படுக்கையிலிருந்து எழுவது விளையாட. படுக்கைக்கு செல்வது வீட்டுவேலைகளைச் செய்ய.

எமிலா : என் பெருமைகளை எழுத நீர் வரவேண்டாம்.

டெஸ்டிமோனா : என் புராணம் பாடுவதாக இருந்தால் என்னை பற்றி என்ன எழுதுவீர்கள்?

இயாகோ : அம்மணி என்னை மாட்டி விடாதீர்கள். நான் குற்றம் காணும் பழக்கமுடையவன்.

________________________________________________________________________________________________________ நாத்திகன் என்ற பொருளில் துருக்கியன் என்று இயாகோ குறிப்பிடுகிறான்.

*

 

டெஸ்டிமோனா: பரவாயில்லை. முயற்சி பண்ணிப் பாருங்கள் ……. யாராவது துறைமுகத்திற்கு சென்றிருக்கிறார்களா?

இயாகோ :ஆம் சீமாட்டி.

டெஸ்டிமோனா : நான் மகிழ்ச்சியாக இல்லை. ஒதேல்லோவின் நலன் குறித்த கவலையை நான் வெளி காட்டிக்கொள்ளவில்லை..சீக்கிரம். என்னை பற்றி எப்படி புகழ்ந்து எழுதுவீர்கள்?

இயாகோ : பல்லில் மாட்டிகொண்ட சூயிங்கம் போல என் மூளையில் மாட்டிக் கொண்ட எண்ண ஓட்டம் இழுபடுகிறதே தவிர வெளியில் வரமாட்டேன் என்கிறது. பிரசவ வேதனையுடன் நான் ஈன்றெடுத்த கவிதை இதோ

அவள் அழகானவள் அவள் புத்திகூர்மையானவள் அவளது வனப்பு விவேகம்,

இரண்டில் ஒன்றை அவளும் மற்றொன்று அவளையும் பயன்படுத்திக் கொள்ளும்

டெஸ்டிமோனா: அவ்வளவு மோசமில்லை உங்கள் புகழ்ச்சி. சரி அவள் கருப்பாகவும் விவேகமாகவும் இருந்தால் என்ன செய்வாள்?

இயாகோ: அவள் புதிக்கூர்மையுடைய கருப்பழகி என்றால் தனது கரிய நிறத்திற்கு ஈடாக ஒரு வெள்ளை மனிதனை இணையாகத் தேர்ந்தெடுப்பாள்.

டெஸ்டிமோனா : மோசம் ஆக மோசம்.

எமிலா: அவள் அழகாகவும் இருந்து முட்டாளாகவும் இருந்தால்?

இயாகோ : அழகிய பெண்கள் முட்டாள்களா இருப்பதில்லை. அழகிய பெண்கள் துணை தேடிக்கொள்வதில் முட்டாள்கள் ஆவதில்லை..

டெஸ்டிமோனா : இதுவெல்லாம் மதுக்கடைகளில் வெட்டியாக கதை கேட்பவர்களுக்கு சொல்லப்படும் கட்டுக்கதை. சரி , ஒரு பெண் அழகற்றவளாகவும், அசடாகவும் இருந்து விட்டால்?

இயாகோ : அப்படி ஒரு பெண் இன்னும் பிறக்கவில்லை. அப்படியே அபூர்வமாக பிறந்திருந்தால் அழகும் அறிவும் உடையவள் என்ன செய்வாளோ அதையேதான் இவளும் செய்வாள்.

டெஸ்டிமோனா : இவ்வளவு அறியாமையா? யாரு கடைநிலையோ அவளை முத்லானவள் என்று பாராட்டுகிறீர்கள். மற்றவர்களின் மதிப்புரைகளை பற்றி கவலைப்பாடாத அழகும் குணமும் ஒரஐங்கே நிறைந்த பெண்ணை எப்படி பாராட்டுவீர்கள்?

இயாகோ : என்றும் அழகுடன், அகந்தை என்றுமின்றி

வாக்கிருந்தும் வன்மையின்றி

பணமிருந்தும் பகட்டின்றி

சினமிருந்தும் வஞ்சமின்றி

ஆசையிருந்தும் ஆணவமின்றி

தவறுகளை கட்டி வருத்தங்களை பறக்கவிட்டு

விவேகமிருந்தும் அச்சமின்றி

இருப்பதைக் கொண்டு பறப்பதை மறந்து

எண்ணமிருந்தும் வெளிக்காட்டாமல்

வாலிபர்கள் வட்டமிட்டாலும் தன்னை வெளிப்படுத்தாமல்

ஒரு பெண் இருந்தால்….

டெஸ்டிமோனா : இருந்தால்…?

இயாகோ : பிள்ளைகளை வளர்த்த் ஆளாக்கவும்,, வீட்டு வேலைகள் செய்யவும் போயிருப்பாள்.

டெஸ்டிமோனா : என்ன மோசமான கண்ணோட்டம் ? சரியான கோணல் புத்திக்காரர். எமிலா இவர் உன் கணவரே என்றாலும் இவர் சொல்படி கேட்காதே.

கேஷியோ: வாய்க்கு வந்ததை பேசுகிறார் சீமாட்டி. வீரர்களிடம் விவேகம் இருக்காது.

இயாகோ: ( மெதுவாக ) பாரு அவள் பாதங்களை ஏந்துகிறான்.. காதோடுதானே பேசுகிறாய் பேசு. இந்தச் சிலந்திக்கு சின்ன வலை போதும் கேஷியோ உன் போன்ற பெரியபூச்சியைப் பிடிக்க . சிரி சிரி! உன் சபையிலேயே உனக்கு விலங்கு பூட்டுகிறேன். கணவானைப் போல முத்தமிட்டுக் கொண்டிருப்பவனே தொடர்ந்து முத்தமிட்டுக் கொண்டிரு என்னுடைய தந்திரங்களில் ஒன்று உன்னை பதவியிழக்கச் செய்யும்வரை.

( தூரத்தில் படை ஒலி எழுகிறது )

இயாகோ: அவனுடைய போர் நாதம்தான் இப்போது எழுவது. மூர் வந்து கொண்டிருக்கிறான்.

கேஷியோ : நிச்சயமாக இப்போது வருவது அவர்தான்.

டெஸ்டிமோனா; இதோ நான் சென்று அவரை எதிர்கொள்கிறேன்.

கேஷியோ : சீமாட்டி அதோ அவரே வந்துவிட்டார்.

______ஒதேல்லோவும் அவுடைய உதவியாளர்களும் வருகின்றனர்________

ஒதெல்லோ : என் அழகிய வீராங்கனையே !

டெஸ்டிமோனா: என் அருமை ஒதெல்லோ !

ஒதெல்லோ : உன்னைக் காண விழைந்தேன். நீயே என் முன்னால் . என்ன வியப்பு ! என் ஆத்மாவின் ஆனந்தமே ! எல்லா புயல்களுக்குப் பின்னும் உன்னைப் போல ஒரு இன்ப அமைதி பிறக்கும் என்றால்காற்று மரணத்தை ஏற்படுத்தும் வரையில் ஓங்கி வீசட்டும். அலைகளால் எழுப்பப்படும் கப்பல்கள் ஒலிம்பஸ் மலை உயரத்திற்கு மேலே எழுந்து மீண்டும் பாதாளத்திற்கு செல்வது போல கீழே இறங்கட்டும். இக்கணத்தில் இறப்பேன் எனில் என் ஆத்மா ஆனந்தத்தில் மிதக்கும். இதுபோன்ற மனநிறைவை வேறொரு சமயம் நான் பெறுவேனோ மாட்டேனோ?

டெஸ்டிமோனா: அந்தக் கடவுளே தடுத்தாலும் நமது காதலும் நலனும் நாளுக்குநாள் வளரவேண்டும் ஒதெல்லோ .

ஒதெல்லோ: அப்படியே ஆகட்டும் என் ஆதாரசக்தியே !என் மனநிறைவை விவரிக்க முடியவில்லை. என் வார்த்தைகள் நின்று போகின்றன. மிகவும் மகிழ்ச்சியான தருணம் இது. (முத்தமிட்டபடி ) இதோ இந்த முத்தம் நம்மிடையே கருத்து வேறுபாடு எதுவுமில்லை என்பதை நமது இதயங்களுக்குத் தெரிவிக்கட்டும்.

இயாகோ ( மெல்லிய குரலில் ) சுதிசேர்க்கபட்ட யாழின் நரம்புகளைப் போல பேசுகிறாய். பொறு தந்திக் கம்புகளின் முறுக்கினைத் தளர்த்தி விடுகிறேன்.

ஒதெல்லோ : வா ! நாம் அரண்மனைக்கு செல்லலாம். நல்ல செய்தி நண்பர்களே. போர் முடிவுக்கு வந்து விட்டது. துருக்கியக் கப்பல்கள் கடலில் மூழ்கிவிட்டன. என் பழைய நண்பரால் எல்லோரும் நலம்தானே? பெண்ணே (டெஸ்டிமோனாவைப் பார்த்து ) சைப்ரசில் நீ பெரிதும் விரும்பப்படுவாய் பெண்ணே. என் பிரிய சகியே ! அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டு தேவையில்லாமல் பிதற்றி அளவு கடந்த ஆனந்தத்தில் புலம்புகிறேன். ( இயாகோவைப் பார்த்து ) இயாகோ நீ மிகவும் நல்லவன். போ ! கடற்கரைக்கு ஆள் அனுப்பி என் பெட்டி படுக்கைகளை எடுத்துவரச் சொல்.( டெஸ்டிமோனாவைப் பார்த்து) அவன் நல்லவன். அவன் மதிப்பு மரியாதைக்குரியது. வா டெஸ்டிமோனா !( இருவரும் அகல்கின்றனர் )

இயாகோ : ரோடெரிகோ ! நீ என்னை துறைமுகத்தில் வந்து பார். நீ துணிச்சல்காரன்தானே ? அற்பர்களும் காதல் வயப்பட்டால் பிரபுக்களாக மாறிவிடுவதால் நான் சொல்வதைக் கேள். இன்றிரவு கேஷியோவிற்கு இரவுக்காவல் வேலை. முதலில் ஒன்றைக் கூறி விடுகிறேன். டெஸ்டிமோனா அவனைக் காதலிக்கிறாள்.

ரோடெரிகோ : என்னது ? கேஷியோவையா? நிச்சயம் இருக்காது.

இயாகோ : வாயை மூடிக் கொண்டு நான் சொல்வதைக் கேள். எதற்காக அவள் அந்த மூரைக் காதலித்தாள்? தனது அனுபவங்கள் என்று அவன் அளந்த கற்பனைப் பொய்களை நம்பித்தானே ? மீண்டும் மீண்டும் அவன் பிதற்றல்களை அவள் நேசிப்பாளா என்ன? நான் எண்ணவில்லை. விழிகளுக்கு விருந்திட அந்தப் பாழாய்ப் போன மூரிடம் அப்படி என்ன கவர்ச்சி உள்ளது? வாலிபத்தில் துடிக்கும் ரத்தம் வற்றிவிட்டால் அதை மீண்டும் துடிப்பேற்ற , ஆரம்பப் பசியைத் தூண்ட, மேலும் ஒரு அழகிய வசீகரமான முகம் தேவை. இது எதுவும் மூரிடம் இல்லை. இந்தத் தேவைப் பயன்பாட்டிற்காக டெஸ்டிமோனாவின் மிருதுவான இளமை தாக்கப்பட்டு, வெறுப்புற்று, ருசி மரத்து மூர் மீது வெறுப்பைத் தூண்டும். உடலின் இயல்பு காரணமாக இரண்டாவது காதலனை தேர்ந்தெடுக்கச் சொல்லும். இந்த கதியில் கேசியோவைத் தவிர வேறு யார் அவள் முன் நான் சொன்ன தகுதிகளுடன் இப்போது உலாவுகிறார்கள்? பச்சைத் துரோகி. ஒரு சாதாரணக் குடிமகனைப் போல தோற்றமளிக்கும் காமுகன் அவனைத் தவிர வேறு யாரும் இருக்கமுடியாது. சந்தர்ப்பங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் துரோகி. மேலும் இந்தத் துரோகி அழகன். மிடுக்கன். அனுபவமில்லாதவர்களின் வசதிக்கு தோதானவன் . இந்தப் பெண் முன்பே அவனை நன்கறிந்து கொண்டுவிட்டாள்.

ரோடெரிகோ : டெஸ்டிமோனாவா? ச்சேச்சே ! அவள் கண்டிப்பாக அப்படிப்பட்ட பெண் இல்லை. மிக உயர்ந்த குணங்களை உடைய தூய்மையான பெண். விண்ணகத்தால் அசீர்வதிக்கபட்டவள்.

இயாகோ: தூய்மையானவள் ஹக் ! அவள் அருந்தும் மதுவும் திராட்சை பழத்திலிருந்துதான் தாயாரிக்கப்படுகிறது. ஆசீர்வதிக்கப்பட்டவள் எனில் எதற்காக அந்த மூரைக் காதலித்தாள்? கேஷியோ அவளை தனது கைகளால் செல்லமாக தட்டியதை கவனித்தாயா?

ரோடெரிகோ: கவனித்தேன். அதில் எவ்வித பண்புக்குறைவும் இல்லை.

இயாகோ : கண்டிப்பாக அது காம வேட்கைதான். செல்லமாக தட்டுவது என்பது காமத்திற்கு மறைமுகமாக அழைக்கும் விடுப்பு. மூச்சினால் கட்டுண்டவர்களைப் போல இதழ்களால் நெருங்கினார்கள். இவை கேவலமான எண்ணங்கள் ரோடெரிகோ. இந்தப் பரிபாஷைகளே பின்னர் பாவம் சுமந்த உடல்களால் பேசப்படும் மொழியாகிறது. என் சொல்படி நட. நான்தான் உன்னை வெனிஸ் நகரத்திலிருந்து அழைத்து வந்தவன்.இன்று இரவு என்ன நடக்கிறது என்பதைப் பார். கேஷியோவிற்கு உன்னைத் தெரியாது. நானும் உன்னைப் பிரிந்து வெகு தொலைவு செல்ல மாட்டேன்.. நீ செய்ய வேண்டியது இதுதான். இரைந்து பேசுவதன் மூலமாகவோ அவன் கண்ணியத்தை தூற்றுவது போலவோ கேஷியோவிற்கு சினத்தை ஏற்படுத்து. அல்லது வேறு ஏதோ ஒரு காரணத்தைக் கொண்டு அவனை ஆத்திரமடையச் செய். மற்றவற்றை காலம் நிர்வகிக்கும்.

ரோடெரிகோ : அப்படியே செய்கிறேன்.

இயாகோ ; ஐயா ! அவன் கோபக்காரன். ஆத்திரக்காரன். மூர்க்கன். அவசரக்காரன்.எதிர்பாராமல் உன்னை தாக்க வருவான். நீ தடுக்காதே. அவன் அடிக்கட்டும். பிறகு இதனைக் காரணம் காட்டி சைப்ரஸ் மக்களை கேஷியோவிற்கு எதிராக திருப்பி கலகம் மூட்டுகிறேன். அதன் பிறகு அவனுக்கு பதவியை இழப்பதைத் தவிர வேறு மார்க்க்கமில்லை.கவலைப்படாதே ரோடெரிகோ உன் லட்சியத்தை அடையும் பாதையில் முட்கள் அகற்றப்பட்டு மலர் தூவப்படும்..

ரோடெரிகோ :எனக்குக் கிடைக்கும் சந்தர்ப்பத்தை நான் நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்கிறேன்.

இயாகோ : கவலைப்படாதே ! கண்டிப்பாக உன் எண்ணம் ஈடேறும். அரண்மனையில் சந்திப்போம். மூரின் உடைமைகளை எடுத்து வர கடற்கரை வரை செல்கிறேன். வந்தனம்.

ரோடெரிகோ : வந்தனம். ( மறைகிறான் )

இயாகோ : கேஷியோ அவளைக் காதலிக்கிறான். இதில் மறுப்பதற்கு எதுவுமில்லை. அவளும் அவனைக் காதலிக்கிறாள். ஒதேல்லோவிடம் உதார குணம் இல்லாமல் இருக்கலாம். மாறாத காதல் உடையவனாக இல்லாமல் இருக்கலாம். இருப்பினும் டெஸ்டிமோனாவிற்கு ஒரு நல்ல கணவனாக இருக்கிறான். நானும் டெஸ்டிமோனாவைக் காதலிக்கிறேன். காமத்தினால் அன்று. மாற்றான் மனைவியைக் காதலிப்பது பாவம். என் பதவியை அந்த மூர் தட்டி விட்டான். அதனால் மூண்ட வஞ்சத்தீ அவளை நேசிக்க சொல்கிறது. என் மனைவியின் மூலமே அவன் என் பதவிக்கு உலை வைத்தான். என் மனைவியையும் அவன் பறித்துக் கொண்டதாக எனக்குள் எழுந்துள்ள சந்தேகம் என் உடலில் விஷம் போல ஏறிக்கொண்டிருக்கிறது. பழிக்கு பழி; வஞ்சத்துக்கு வஞ்சம்; மனைவிக்கு மனைவி. அப்போதுதான் என் ஆத்மா சந்ந்தியடையும். வஞ்சத்தில் எரியும் ஆத்மா. அதுவும் இயலவில்லை என்றால் எரியும் பொறாமைத்தீயினால் அந்த மூரை எரித்து சாம்பலாக்கப் போகிறேன். என் பிடியில் சிக்கி விட்டாள் இவள் மூலமாக கேஷியோவை வதம் செய்வேன். ஏன் எனில் கேஷியோ என் மனைவியுடன் தவறான உறவு வைத்துக் கொண்டிருப்பதாக சந்தேகப்படுகிறேன்.மூரை நம்ப வைக்கப்போகிறேன்.எனக்கு நன்றி கூறுவான்; பாராட்டுவான்; விருது வழங்குவான் அவன் அமைதியைக் கெடுத்து அவனை பைத்தியமாக ஆக்கியதற்கு. துரோகம் வெளியாகும்வரை துரோகிக்கும் மனித முகம்தான்.

——————————–காட்சி முடிவடைகிறது———————–

 

 

 

 

 

 

 

 

 

 

காட்சி-2

சைப்ரஸ்நகரின் ஒரு வீதி.

கட்டியம் கூறுபவன் செய்தியறிவிக்க முன்வர மக்கள் அவனை பின் தொடர்கிறார்கள்.

கட்டியங் : தளபதி ஒதேல்லோவின் விருப்பத்திற்கு ஏற்ப துருக்கியரின் கப்பல் படை முறியடிக்கப்பட்டு விட்டது. சைப்ரஸ் நகரக் குடிமகன் ஒவ்வொருவரையும் இந்த வெற்றி அலங்கரிக்கிறது. இந்த வெற்றியைக் கொண்டாடுங்கள். ஆடுங்கள். பாடுங்கள். வாணவேடிக்கைகளில் உங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துங்கள். ஆனந்தத்தில் மிதந்து மனம் போனபடி ஒதேல்லோவின் வெற்றியைக் கொண்டாடுங்கள்.சைப்ரசின் வெற்றியைக் கொண்டாடுவதோடு நமது மூரின் திருமண வைபவத்தையும் கொண்டாடுங்கள். இது மூரின் விருப்பம். அனைத்து அலுவலகங்களும் அவர் வெற்றியைக் கொண்டாடும் முகமாக திறந்தே இருக்கும். வானகம் சைப்ரஸ் தீவையும் ஒதேல்லோவையும் வாழ்த்தி அருளட்டும்.

————————————–காட்சி நிறைவு——————————————-

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

காட்சி -3.

இராசமாளிகையில் ஒரு கூடம்.

( ஒதெல்லோ,டெஸ்டிமோனா, கேஷியோ, சில பணியாட்கள் வருகை )

ஒதெல்லோ : நல்லது கேஷியோ ! இரவுநேர காவலை நீ பார்த்துக்கொள். மனம் செல்லும்வண்ணம் நாம் மகிழ்ச்சியில் திளைக்காமல் கட்டுப்பாடு என்றொரு அணை போடுவோம்.

கேஷியோ : என்ன செய்ய வேண்டுமென இயாகோ ஆணை பிறப்பித்துள்ளார். இருப்பினும் நானும் இரவுக்காவலை என் நேரடி பார்வையில் வைத்துக் கொள்கிறேன்.

ஒதெல்லோ : இயாகோ ஒரு நேர்மையான அதிகாரி. சரி மைக்கேல் இரவு வணக்கம். நாளை காலையில் உன்னுடன் ஆலோசிக்கிறேன்.

( டெஸ்டிமோனாவை அழைத்துச் செல்;கிரான். இயாகோ வருகிறான் )

கேஷியோ : வந்தனம் இயாகோ. இரவுக்காவலர்களைக் கண்காணிப்போம்.

இயாகோ : இந்த நேரத்திலா ? மணி பத்து கூட ஆகவில்லையே ? நமது தளபதி அவருடைய மனைவி மேல் கொண்ட மோகத்தால் நம்மை தனியே விட்டு விட்டு போய்விட்டார். அதற்காக நாம் டெஸ்டிமோனா மீது வெறுப்படைய வேண்டாம். அவள் ஜோவி*ன் காதலி.

கேஷியோ : அவள் அற்புதமான நங்கை.

இயாகோ : துடிப்பானவள்.

கேஷியோ ; புதுமையும் மென்மையும் ஒன்றாக செய்த கலவை.

இயாகோ : என்ன ஒரு விழிகள் வா என்று அழைப்பதை போல.

லேஷியோ : அழைக்கும் விழிகள் இல்லை கண்ணியம் மாறாத கற்பை அடைகாக்கும் விழிகள்.

இயாகோ : அவளது பேச்சு காதலின் அழைப்புமணி போல இருக்கிறது.

கேஷியோ : அனைத்திலும் முழுமையானவள்.

இயங்கோ : வாருங்கள். ஒரு குடுவை நிறையும் மதுவை அருந்தி மூரின் வெற்றியைக் கொண்டாடுவோம்.சைப்ரஸ் மக்களின் மகிழ்ச்சியில் மதுவுடன் கலப்போம்.

ஜோவ் ரோமானியப் புராணத்தில் திவங்களின் தலைவன்.
கேஷியோ : வேண்டாம் இயாகோ. எனக்கு மது அருந்த மனமில்லை. வேறு வழிகளில் அவர்கள் ஆனந்தத்தில் கலந்து கொள்வோம்.

இயாகோ : அவர்கள் நம் நண்பர்கள்தான். பரவாயில்லை. எனக்காக ஒரு கிண்ணம் மட்டும் மது அருந்துங்கள். மீதியை நான் அருந்துகிறேன்.

கேஷியோ : வேண்டாம். ஏற்கனவே ஒரு கிண்ணம் மதுவை அதிக நீர் கலந்து அருந்திவிட்டேன். வற்புறுத்தாதீர்கள். என் பலவீனத்தை அதிகப்படுத்தாதீர்கள்.

இயாகோ: நல்ல மனிதர் நீங்கள். இது கொண்டாட்ட இரவு.இளைஞர்கள் உங்களுக்காக காத்திருக்கிறார்கள்.

கேஷியோ : எங்கே அவர்கள் ?

இயாகோ : இதோ வாசலுக்கு வெளியில். அழைத்து வாருங்கள்.( கேஷியோ மறைகிறான் ).

இயாகோ : இன்றிரவு அவனை ஒரு கோப்பை மதுவை அருந்தவைத்தால் என் எஜமானியின் நாயைப்போல கத்தி கலாட்டா பண்ணிவிடுவான். காதலில் சோர்வடைந்துள்ள இந்த முட்டாள் ரோடெரிகோ காதலினால் கலங்கிப் போய் அளவுக்கு அதிகமான மதுவை டெஸ்டிமோனா நலன் கருதி குடித்து நடக்கப்போவதை பார்க்க இருக்கிறான். சைப்ரஸ் நகரைச் சேர்ந்த கெளரவம் மிக்க மூன்று கணவான்களும் இன்று நடப்பதை பார்க்க உள்ளனர். அவர்களுக்கும் மதுவை ஊற்றித் தரப்போகிறேன். இந்தக் குடிகாரகளுக்கு நடுவில் கேஷியோவை ஆடவிட்டு வேடிக்கை பார்க்க போகிறேன்.அவன் செயல் இந்த சைப்ரஸ் மண்ணையே எரிச்சலடைய செய்ய வேண்டும்.இதோ அவர்கள் வருகிறார்கள். இனி நிகழ்வது எனக்கு சாதகமானால் என் படகு சுகமாக நீரோட்டத்திலும் காற்றிலும் கலங்காமல் மிதக்கும்.

( கேஷியோ மோண்டனோ மற்றும் மூன்று கணவாண்களுடன் மீண்டும் வருகிறான். உடன் மதுவகைகளைப் பரிமாறுவதற்கு பணியாளர்களும் வருகின்றனர். )

கேஷியோ : கடவுளே ஏற்கனவே ஒரு கோப்பை ஊற்றிக் கொடுத்து விட்டனர்.

மோண்டனோ : கண்டிப்பாக நீங்கள் ஒரு மடக்கைத் தவிர அதிகம் குடிக்கவில்லை ஒரு உண்மையான வீரன் என்பதால் நான் சொல்வதை நம்புங்கள்.

இயாகோ : கொஞ்சம் மது. எடுத்து வாருங்கள்.

மதுகின்ணங்கள் மதுரமிசைக்கட்டும்

மதுக்கிண்ணங்கள் மதுரமிசைக்கட்டும்

வீரன் என்பவன் மனிதனன்றோ ?

வாழ்வு அவனுக்கு சிறியதன்றோ ?

வீரர்களே! மதுவருந்துங்கள். மது கொண்டு வாருங்கள் சேவகர்களே.

கேஷியோ : அற்புதமான பட்டு.

இயாகோ : இங்கிலாந்தில் கற்றுக் கொண்ட பாட்டு இது. ஆங்கிலேயர் குடியை கலையாக வளர்த்தவர்கள். ஜெர்மானியரே ! ஹாலந்து நாட்டினரே ! டச்சுக்காரர்களே வாருங்கள்.

கேஷியோ : ஆங்கிலேயர் அவ்வளவு பெரிய குடிகாரர்களா?

இயாகோ : நீங்கள் டானிஷ்காரர்கள். நீங்கள் குடித்து நிறுத்திய பின்னும் கூட ஒரு ஆங்கிலேயனால் தொடர்ந்து குடிக்க முடியும். ஒரு ஜெர்மானியனையும் விஞ்சி விடுவான். இந்த மது போத்தலை திறப்பதற்குள் ஹாலந்து பிரதேசத்தைச் சேர்ந்தவன் வாந்தி எடுத்து விடுவான்.

கேஷியோ: நமது மூரின் நலனுக்கு சியர்ஸ்.

மோண்டனோ : நானும் அப்படியே. சியர்ஸ்.

இயாகோ : ( பாடுகிறான் )

ஸ்டீஃபன் என்றொரு அரசன் அவன் அரசருக்கெல்லாம் அரசன்

தைக்கக் கொடுத்தான் தனதாடை அந்தத் தையலன் கேட்டான் உடன் நா(ட்)டை

கூலி அதிகம் என்றெண்ணி அரசன் வெகுண்டான் தையலனை

காட்டான் என்றே மனம்வெதும்பி ஏசி நின்றான் தையலனை

அரசன் மிகவும் நல்லவன்தான் அவன் கௌரவம் உனைவிடச் சிறந்ததுதான்.

ஆணவம் ஆண்டால் பூலோகத்தில் அனைவரும் வீழ்வார் பாதாளத்தில்.

நைந்த ஆடையை நீ உடுத்தி களிப்புடன் இருப்பாய் கவலைவிடு.

ஊற்றுங்கள் நண்பர்களே மேலும் ஊற்றுங்கள்..

கேஷியோ “ உங்கள் முந்தைய பாடலைவிட இது இன்னும் அற்புதம்.

இயாகோ : மீண்டும் பாடட்டுமா?

கேஷியோ : வேண்டாம். பதவியின் தகுதிக்கு புறம்பாக நடப்பவன் வீரன் இல்லை.இருக்கட்டும். ஆண்டவர் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார். சில உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன. சில உயிர்கள் கைவிடப்படுகின்றன.

இயாகோ : வாஸ்தவம் வீரனே.

கேஷியோ: என் தலைவனுக்கோ அவனைச் சார்ந்தவர்க்கோ நான் தீங்கு இழைத்ததில்லை. எனவே நான் சுவர்க்கம் செல்வேன்.

இயாகோ : நானும்தான் துணைத் தளபதி.

கேஷியோ : எனக்கு முன்னால் நீங்கள் செல்லக்கூடாது. தளபதிக்கு முன்பு கொடிதாங்கி* செல்லக்கூடாது. குடிப்பதை நிறுத்திவிட்டு அலுவல்களுக்கு செல்வோம்.ஆண்டவரே எங்கள் பாவங்களுக்காக எம்மை மன்னியும். பண்பாளர்களே! காரியத்தில் இறங்குவோம்.நான் குடித்திருப்பதாக நினைக்க வேண்டாம்.இது எனது கொடி ( கொடியை உயர்த்திக் காட்டுகிறான். )இது என் வலது கை. இது எனது இடது கை. நான் குடித்திருக்கவில்லை. என்னால் தள்ளாடாமல் நேராக நிற்க முடியும். என்னால் குளறாமல் பேசமுடியும்.

அனைவரும் : ஆமாம் நீங்க தெளிவுடன்தான் பேசுகிறீர்கள்.

கேஷியோ : நல்லது. இனி நான் குடித்திருப்பதாக நீங்கள் நினைக்க வேண்டாம். கேஷியோ அகல்கிறான் )

மோண்டனோ : படை வீரர்களே வாருங்கள். இயங்குதளம் சென்று நம் காவல்பணியைத் தொடர்வோம்.

( அந்த உயர்குடியினர் அகல்கின்றனர் )

இயாகோ : முன்னால் சென்றவனைக் குறித்து உனக்கு தெரியுமா? அவன் பெயரைப் போலவே வல்லமை பொருந்திய வீரன். ஆனால் இப்போது அவனது செய்கையைப் பாருங்கள். அறிவிற்கும் வீரத்திற்கும் எதிராக உள்ளது.ஒதெல்லோ இவன் மேல் கொண்ட நம்பிக்கை இந்தக் குடிஎன்னும் பலவீனத்தால் பாழாகிவிடும் போலிருக்கிறது.

மோண்டனோ: எப்போதும் இப்படித்தான் இருப்பாரா?

இயாகோ : தூங்கச் செல்லும் முன் குடித்தே ஆக வேண்டும் இவனுக்கு. போதுமான அளவு குடிக்கவில்லைஎன்றால் இவனுக்கு காலத்தை கட்டி இழுப்பது போல பாரமாக இருக்கும்.

இயாகோ இந்த நாடகம் முழுவதும் Ancient என்ற பதத்தின் மூலமே ஷேக்ஸ்பியரால் அழைக்கப்படுகிறான். Ancient என்றால் ஒரு உபதலபதிக்கும் கீழே கொடிதாங்குபவன் என்ற பொருள் உள்ளது. ஆனால் இயாகோவின் பொறாமையே தனக்கு கிடைக்கவேண்டிய உபதளபதி பதவி கேஷியோவிற்கு ஒதேல்லோவின் பரிந்துரையின் பேரில் கிடைத்ததற்கு வஞ்சம் தீர்க்க எழுதப்பட்ட நாடகம். எனவே ஷேக்ஸ்பியர் இயாகோவை வெறும் கொடிதாங்கி என்று கீழ்மட்டத்தில் வைத்து பேசியிருக்க வாய்ப்பில்லை. எனவே நான் ancient என்ற பதத்திற்கு என் மொழிபெயர்ப்பு முழுவதும் மூத்தவர் என்றே குறிப்பிட்டுள்ளேன். பதவியில் அனுபவத்தில் மூத்தவர் என்ற பொருளில். பதவி உயர்வு கிடைக்காமல் போவதற்கு இந்தப் பெயர் பொருத்தமாக இருக்கும் என்பதால்
மாண்டனோ: தளபதி ஒதேல்லோவின் கவனத்திற்கு இதனைக் கொண்டு செல்லவேண்டும். அவருக்கும் கேஷியோவின் குடிப்பழக்கம் குறித்து தெரிந்திருக்க வேண்டும்.கேஷியோவின் மற்ற நல்ல குணங்கள் காரணமாக இந்த கெட்ட குணம் தெரியவில்லையோ என்னவோ ?

————ரோடெரிகோ வருகை ——————-

இயாகோ : என்ன ரோடெரிகோ இப்பொழுது வருகிறாய் ? சீக்கிரம் லெப்டினன்ட் பின்னால் போ. (ரோடெரிகோ மறைகிறான் )

மாண்டனோ: பதவியில் தனக்கு அடுத்தநிலையிலுள்ள கேஷியோவின் இந்த பலவீனத்தை மாண்புமிகு மூர் அகற்ற வேண்டும்.இதை அவரிடம் தெரிவிப்பது நமது கடமையாகும்.

இயாகோ : இந்த அழகிய சைப்ரஸ் தீவில் நானும் கேஷியோ மேல் அன்பு செலுத்துகிறேன். நேசிக்கிறேன். அவனை இந்தக் கெடுதலிலிருந்து காப்பாற்றுவோம். ..ப்ச் என்ன சப்தம் அனகே?

( உள்ளேயிருந்து காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்ற குரல் கேட்கிறது. )

( கேஷியோ வெளியில் வருகிறான். ரோடெரிகோ துரத்தி வருகிறான். )

கேஷியோ : துத்தேரி ! அயோக்கியப் பதரே !

மாண்டனோ : என்ன விஷயம் துணைத் தளபதியாரே?

கேஷியோ : ஒரு அயோக்கியன் எனக்கு ஒழுக்கம் குறித்து வகுப்பெடுக்கிறானாம். நான் மிதிக்கும் மிதியில் பாத்திரம் நசுங்குவது போல நசுங்கி விடுவான். ஆமாம்.

ரோடெரிகோ : எங்க அடி பார்க்கலாம்.

கேஷியோ : என்னடா பேத்தற துரோகி (ரோடெரிகோவை கேஷியோ அடிக்கிறான். )

மாண்டனோ : உபதளபதி என்ன இது விடுங்கள் அவனை. கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்.

கேஷியோ : ஓடிப்போய் விடு இல்லையென்றால் உன் மண்டையைப்,பிளந்து விடுவேன்.

மாண்டனோ : கேஷியோ நீங்கள் குடித்திருக்கிறீர்கள்.

கேஷியோ : என்னடா சொன்ன? நான் குடிச்சிருக்கேனா?( இருவரும் கட்டிபிடித்து கைகலப்பில் ஈடுபடுகிறார்கள் )

இயாகோ : (ரோடெரிகோவிற்கு மட்டும் கேட்கும் வண்ணம் ) வெளியில் போ. கலகம் மூண்டுள்ளதாக கூச்சல் போடு. ( ரோடெரிகோ அகல்கிறான். ) .ஓ உபதளபதி. புண்ணியவான்களே ! உதவி உதவி. ஓ ! உபதளபதி ! மாண்டேனா ! ஐயோ இது பெரிய கூத்தாக ஆகிவிட்டதே!( அபாய மணி ஒலிக்கிறது ) ஐயோ என்ன இது அபாயமணி ஒலிக்கிறதே. நிறுத்துங்கள் அதை. நகரம் விழித்துக் கொள்ளப்போகிறது. கேஷியோ உன் செய்கைக்காக தலைகுனியப் போகிறாய். ( ஒதேல்லோவும் காவலர்களும் வருகின்றனர்)

ஒதெல்லோ : என்ன நடக்கிறது இங்கே ?

மாண்டனோ : கைகளில் வழியும் இரத்தம் இன்னும் நிற்கவில்லை. ஐயோ அடித்துக் கொன்றுவிட்டான். (மயங்கிச் சரிகிறான். )

இயாகோ : உபதளபதியாரே ! எழுந்திருங்கள். மாண்டனோ எழுந்திருங்கள் உங்களுடைய கடமையிலிருந்து தவறி விட்டீர்களா? .நமது தளபதி வந்திருக்கிறார்.

ஒதெல்லோ : என்ன ஆனது உங்களுக்கு எல்லாம்? துருக்கியர்களை விரட்டிவிட்ட ஆணவத்தில் நாமும் துருக்கியரைப் போல மாறிவிட்டோமா? நல்ல கிருத்துவர்கள்தாமே நாம் அனைவரும் ? இது என்ன காட்டுமிராண்டித்தனம். வாள் எடுப்பவன் வாளால் மடிவான். தெரியாதா உங்களுக்கு? ச்சை ! அந்த மணி அடிப்பதை நிறுத்துங்கள். இந்த மணியின் நடுக்கம் தரும் ஒலியை நிறுத்துங்கள்.இந்த நகரத்தையே இந்த மணியின் ஓலம் நிரப்பிவிடும் போல் உள்ளது.என்ன நடந்தது என்று சொல்லுங்கள்.இயாகோ ! நேர்மையானவரே ! சொல்லுங்கள் என்ன நடந்தது என்று.யார் ஆரம்பித்தது இதனை? உங்கள் மீது உள்ள பிரியத்தால் ஆணையிடுகிறேன். கூறுங்கள்.

இயாகோ : எனக்கு எதுவும் தெரியாது. இந்தக் கணம் வரையில் நண்பர்களாகவே பழகினோம் இதுவரை. பள்ளியறைக்குள் நுழையும் கணவன் மனைவியைப் போலவே பழகினோம்.என்ன கிரகக் கோளாறோ தெரியவில்லை வாளை உருவுவதும் நெஞ்சைப் பிளப்பதுமாய் குதிக்கத் தொடங்கிவிட்டார்கள். இந்தக் கோளாறு எப்படி நேர்ந்தது என்பது தெரியவில்லை.போரில் காலை இழந்தால் பெருமைப்படலாம். இப்படி ஒரு தகராறில் என் காலில் வெட்டு படவேண்டுமா?

ஒதெல்லோ : எதற்காக உன் நிதானத்தை இழந்தாய் கேஷியோ?

கேஷியோ : என்னை மன்னிக்கவும். நான் எதுவும் பேசமுடியாத நிலையில் இருக்கிறேன்.

ஒதெல்லோ :மாண்டனோ நீ கண்ணியத்திற்கு பெயர் போனவன் ஆயிற்றே. விவரம் அறிந்தவர்கள் தங்கள் வாயால் உன்னைப் புகழ்வார்களே.? ஏன் உன் நற்பெயரை காற்றில் பறக்கவிடுகிறாய்? தெருவில் அடித்துகொள்பவர்களை போல ஏன் மாறினீர்கள்? எனக்கு விடை கொடு.

மாண்டனோ: மதிப்பிற்குரிய ஒதெல்லோ! நான் கடுமையாக தாக்கபட்டுள்ளேன். உங்கள் உதவியாளர் இயாகோ இதற்கு விடை கூறுவார்.என்னால் பேச இயலவில்லை. மூச்சு வாங்குகிறது. தற்காப்பு கூட நம் மீது கலகம் வந்து சரியும்போது குற்றமாகி விடுகிறது.

ஒதெல்லோ: என் ரத்தம் இன்னும் கொதிக்கத் தொடங்கைவில்லை. என் விருப்பமும் என்னைத் தணிந்து போகவே சொல்கிறது. நானும் கொதிக்கத் தொடங்கினாலோ, என் வாளை உருவினாலோ என்ன ஆகும் தெரியுமா? சொல்லுங்கள் இயாகோ இந்தக் கீழ்த்தரமான சண்டையை முதலில் ஆரம்பித்தது யார்? யார் இதைச் செய்திருப்பினும்…. அவன் எனது இரட்டைச் சகோதரனில் ஒருவனாக இருப்பினும் என் அன்பை இழந்துவிடுவான்.என்ன நடக்கிறது இங்கே ? போரின் பயங்கரத்தால் அமைதி இழந்திருக்கும் மக்களை சமாதானபடுத்துவதை விட்டுவிட்டு காவலர்களான நீங்கள் சொந்தச் சண்டையை பெரிபடுத்திக் கொண்டு?…..விலங்குகளா நீங்கள்? சொல்லுங்கள் இயாகோ யார் ஆரம்பித்து வைத்தது இதனை?

மாண்டனோ : உன் பதவியின் படிநிலை காரணமாகவோ அல்லது கேஷியோவின் மீது உனக்கு இருக்கும் அக்கறை காரணமாகவோ உண்மைக்குப் புறம்பாக பேசாமல் இயாகோ உண்மையான வீரன் என்றால் நடந்ததைக் கூறுங்கள்..

இயாகோ : என்னை குத்திக்காட்ட வேண்டாம் ஒதெல்லோ. என் கூற்று மைக்கேல் கேஷியோவிற்கு களங்கம் ஏற்படுத்துமாயின் என் நாக்கு துண்டிக்கபடட்டும். இருப்பினும் நான் சொல்வது அவனுக்குப் பழியை ஏற்படுத்தாமல் இருக்கட்டும்.நானும் மாண்டனோவும் பேசிக் கொண்டிருந்தோம்.அப்போது ஒருவன் உதவி உதவி என்று அலறியபடி ஓடி வந்தான்.கேஷியோ உருவிய வாளுடன் அவனைத் துரத்திக் கொண்டு பின்தொடர்ந்து வந்தான்.மண்டனோ குறுக்கே புகுந்து கேஷியோவைத் தடுக்க முயன்றான்.நான் அலறியபடி ஓடியவனை பின்தொடர்ந்து என்னவென்று விசாரிக்க ஓடினேன். வந்துபார்த்தால் இவர்கள் இருவருக்கும் நடுவில் கடுமையான வாட்போர்.இதற்கு மேல் என்னால் எதுவும் கூற இயலாது. ஆண்கள் என்றுமே ஆண்கள்தாம். ஆத்திரம் கண்களை மறைக்கும்போது நண்பனும் பகைவனாக மாறுவது இயற்கைதானே? இருப்பினும் துரத்தப்பட்ட மனிதன் கேஷியோவை புண்படுத்தும் விதமாக ஏதாவது பேசியிருக்க வேண்டும்.

ஒதெல்லோ: எனக்குத் தெரியும் இயாகோ. கேஷியோ மீது நீங்கள் கொண்டுள்ள அன்பே இதனை தவறான கண்ணோட்டத்திலிருந்து பார்ப்பதை தவிர்க்கிறது. கேஷியோ ! நான் உன் மீது பிரியம் வைத்துள்ளது உண்மைதான்.இருப்பினும் இன்றுமுதல் என்னுடைய பணியிடத்தில் உனக்கு வேலை இல்லை.

( டெஸ்டிமோனா வருகிறாள் )

ஒதெல்லோ : (தொடர்ந்து ) பாருங்கள் என் அன்பிற்குரியவள் விழித்திருக்கவில்லை என்றால் உங்களுக்கு நல்ல பாடம் புகட்டியிருப்பேன்.

டெஸ்டிமோனா : என்ன ஆயிற்று அன்பே?

ஒதெல்லோ : எல்லாம்சரியானது இனியவளே ! வா! பள்ளியறைக்கு செல்வோம். ஐயா ( மாண்டனோவைப் பார்த்து ) உங்கள் காயங்களுக்கு நானே மருந்தாகிறேன். யாரெங்கே இவரை சிகிச்சைக்கு அழைத்துச் செல்லுங்கள்.இயாகோ ! நகரைப் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த விலங்குகளால் சலனமடைந்த நகரின் அமைதியை குன்றவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.வா டெஸ்டிமோனா ! கலவரங்களால் அமைதியையும் தூக்கத்தையும் இழக்க நேரிடுவதுதான் வீரகளுக்கு விதிக்கபட்டிருக்கிறது. ( உள்ளே செல்கின்றனர் )

இயாகோ : வலிக்கிறதா உப தளபதியாரே?

கேஷியோ : இது எந்த மருந்திற்கும் ஆறாத காயம்.

இயாகோ : அப்படி சொல்லாதீர்கள்.

கேஷியோ : என் நற்பெயர் ஐயோ என் நற்பெயர் ஐயோ நான் என் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்திக் கொண்டுவிட்டேனே. அழியாதது என்று எண்ணிய என் நன்மதிப்பை இழந்து உயிரற்ற உடலாகிப் போனேனே. நற்பெயர் இயாகோ எனது நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுவிட்டது இயாகோ .

இயாகோ : அட போங்கள்அய்யா ! நீங்கள் ஏதோ வலியில் புலம்புவதாக எண்ணியிருந்தேன்.நீங்கள் என்னவோ நற்பெயருக்குக் களங்கம் வந்ததற்கு புலம்புகிறீர்கள். நற்பெயர் என்றால் என்ன? பயனில்லாத பொய்யாக நிறுவப்படும் பிம்பம். தகுதியில்லாதவரை அடைவதும் தேவையான நேரத்தில் கைக்கு எட்டாமல் இருப்பதும்தான் நற்பெயர் என்பது. நீங்கள் ஏன் உங்கள் நற்பெயரை இழந்துவிட்டதாகப் புலம்புகிறீர்கள்? என்ன ஆளப்பா நீங்கள் ? தளபதியின் மனதை மாற்ற வேறு எத்தனையோ வழிகள் உள்ளன. தளபதி உங்களை நீதிக்காக தண்டித்திருக்கிறார். நட்பிற்காக அன்று. எஜமானனை சமாதானபடுத்த நாயை அடித்தது போலாகிவிட்டது இது. மீண்டும் அவனிடம் மன்னிப்பு கோரு . அவன் உன்னை மன்னிப்பான்.

கேஷியோ :கழிவிரக்கம் என்னைக் கொல்கிறது. ச்சே இப்படி ஒரு படைவீரன் குடிகாரனாக இருப்பதைவிட….நான் பேதைக்கிளியைப் போல புலம்புகிறேனா? நான் வீம்பாவா நடந்து கொள்கிறேன்? பிதற்றுகிறேனா? என் நிழலைப் பார்த்து குதிக்கிறேனா? யார் நான் ? நான் ஏன் குடிக்க வேண்டும்? கண்ணுக்கு புலப்படாத போதையை அளிக்கும் மதுவே இன்று முதல் நீ மது அல்ல. சாத்தான் என்றே அழைக்கப்படுவாய்.

இயாகோ : ஆமாம் எவனோ ஒருவனை உருவிய வாளுடன் துரத்தினாயே யார் அவன்?

கேஷியோ : எனக்கு நினைவில் இல்லை.

இயாகோ : நிஜமாகவா?

கேஹயோ : நிறைய விஷயங்கள் குழப்பமாக இருக்கிறது. எந்த விஷயமும் தெளிவாகத் தோன்றவில்லை. ஒரு பெரிய கைகலப்பு நிகழ்ந்தது மட்டும் நினைவில் இருக்கிறது. கடவுளே! வாய்வழி சென்று அறிவைச் சூறையாடும் அரக்கனை மது என்று போற்றுகிறார்கள்.ஆனந்தமும் ஆர்ப்பரிப்புமாக விளங்கும் மனித வாழ்க்கை மதுவினால் விலங்கினும் கீழான நிலைக்கு தள்ளப்படுகிறது.

இயாகோ : இப்போது தெளிவாகிவிட்டீர்களே எப்படி ?

கேஷியோ : ஆத்திரம் என்ற பேய் குடிபோதை என்ற பேயை விரட்டி விட்டது. அதனால்தான்.

இயாகோ :விடுங்கள் கேஷியோ இவ்வளவு கடுமையா இருக்காதீர்கள். நேரம்.இடம், நாட்டின் போர் வெற்றிச் சூழல் இவைதாம் உங்களைத் தீயவனாக காட்டிவிட்டன. உங்கள் தகுதிக்கு இது நடந்திருக்க வேண்டாம். நடந்து விட்டது. நல்லதற்குத்தான் என்று எடுத்துக் கொள்ளுங்கள்.

கேஷியோ : நான் அவரிடம் என் பதவியைத் திருப்பித் தருமாறு மன்றாடுவேன். அவர் என்னைக் குடிகாரன் என்று ஏசுவார். அந்த ஆதிசேஷனைப் போல எனக்கும் ஆயிரம் நாவுகள் இருந்தால் என் நிலைமையை எடுத்துரைப்பேன். என்ன செய்வது ? எனக்கு இருப்பது ஒன்றுதானே? நல்லவர்கள் குடியினால் அறிவிழந்து மிருகமாகி விடுகிறார்கள். எல்லா மதுக் கோப்பைகளும் சபிக்கப்பட வேண்டியவை. அந்தக் கோப்பைகள் ஏந்துவது மதுவை அல்ல பாவங்களை.

இயாகோ : அளவு தெரிந்தால் மது நம் சொல்கேட்கும் செல்லப் பிராணி. இதற்கு இவ்வளவு வருத்தப்படத் தேவையே இல்லை. நல்லது உபதளபதியாரே ! நான் உங்களை நேசிப்பதை நீங்கள் தெரிந்து கொண்டால் போதும்.

கேஷியோ : நான் அதை ஏற்கனவே அங்கீகரித்து விட்டேன் ஐயா. சொல்லுங்கள், நான் குடிகாரனா?

இயாகோ : இங்கே பாருங்கள் மனிதனாக பிறந்துவிட்டால் குடிக்காமல் இருக்க முடியாது. இனிமேற்கொண்டு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பேசுவோம், நம்மை ஆள்வது மூர் என்றால் அந்த மூரை ஆள்பவள் டெஸ்டிமோனா. மூர் தன் காதலுக்காகவும் அவளது அழகிற்காகவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். அவளிடம் கையேந்துங்கள். உங்கள் பதவியை மீட்டுத் தர வேண்டுங்கள். அவள் எளிமையானவள்; கருணை மிக்கவள்;பொருத்தமானவள்; நற்குணங்களால் ஆசீர்வதிக்கபட்டவள். கேளாத எவருக்கும் அவள் நன்மை செய்யமாட்டாள். உனக்கும் அவள் கணவருக்கும் இடையில் முறிந்துபோன நட்பின் பாலத்தை அவள் ஒருத்தியால்தான் சீர்செய்ய முடியும்..

கேஷியோ : நல்லவிதமாக புத்திமதி கூறினீர்கள்.

இயாகோ : நிஜமான அன்பினாலும் உங்கள் மேல் உள்ள கருணையினாலும் இவ்வாறு நடந்துகொள்கிறேன் .

கேஷியோ : நீங்கள் சொன்னதை இரவெல்லாம் ஆலோசிக்கிறேன். காலையில் டெஸ்டிமோனாவிடம் என் யாசகத்தைச் சொல்வேன். என் எதிர்காலத்தை இந்த இடத்தில்தான் நிர்ணயிக்கப் போகிறேன்.

இயாகோ : நீங்கள் சொல்வது மிக்கச் சரி. நல் இரவு லெப்டினன்ட். நான் பார்த்துக் கொள்கிறேன்.

கேஷியோ : நல் இரவு இயாகோ.( மறைகிறான் ).

இயாகோ : எவராவது என்னைப் பார்த்து கெடுதல்புரிபவன் என்று நம்புவார்களா? நான் திறந்த மனதுடன் கொடுக்கும் அறிவுரை கேஷியோவை மூருடன் இணைத்து வைக்கும் என்றே தோன்றும்.டெஸ்டிமோனாவின் கபடமற்ற எளிய நல்ல குணங்களினால் இதனை எளிதில் செய்து கொடுக்க முடியும். மூரும் அவள் அழகிலும் தோற்றத்திலும் மயங்கி காலடியில் வீழ்ந்து கிடக்கிறான். டெஸ்டிமோனா எது சொன்னாலும் கேட்பான். கேஷியோவிற்கு நான் கூறிய புத்திமதி அவனைக் கெடுக்கும் நோக்கத்துடன் கூறப்பட்டது என்று எவராலும் எளிதில் அறிந்து கொள்ள முடியாது. ஓ ! நரகத்தின் மேன்மையே . சாத்தான்கள் பாவம் செய்யத் தூண்டும்போது பாம்பின் முகத்தை காட்டுவதில்லை. ஆப்பிள் முகத்தையே தாங்குகின்றன. கேஷியோ டெஸ்டிமோனாவிடம் உதவிகோரப் போகிறான். அதற்கு முன்பு நான் மூரிடம் சென்று டெஸ்டிமோனா கேஷியோவின் கட்டான உடல் மீது மோகம் கொண்டுவிட்டதாகக் பொய் கூறப்போகிறேன். எனவே அவன் கேஷியோவிற்கு உதவ வேண்டும் என்ற அவளது நல்லெண்ணம் புதைகுழியில் மூடப்படும். கலைமான்கள் அழகிய கொம்பினால் வேடுவர்களிடம் மாட்டிக் கொள்கிறது. டெஸ்டிமோனாவிற்கு அவளுடைய நல்லகுணமே அவளுடைய அழிவு. அவளைச் சார்ந்தவர்களுக்கும் அதுவேதான்.

———————- ரோடெரிகோ மீண்டும் வருகிறான் ————————

ரோடெரிகோ: வேணும் எனக்கு. இந்த வினோத வேட்டையில் என் கால்கள் தளர்ந்து விட்டன. துரத்தியதால் இல்லை. துரத்தப்பட்டதால்.என் பணம் முழுவதும் கரைந்து விட்டது. செம்மத்தியா அடி வேறு வாங்கிவிட்டேன். இதுபோன்று ஒரு வேதனையை இதற்கு முன்பு நான் அனுபவித்ததில்லை. பணமும், வேடிக்கை பேச்சுமின்றி வெனிஸ் திரும்பப் போகிறேன்.

இயாகோ : பொறுமையில்லார்க்கு இந்தப் பூவுலகமில்லை. எந்த வெட்டுக்காயம் விரைவில் ஆறியிருக்கிறது? வேடிக்கை பேச்சு கூட சொல்லப்படும் நேரத்தை பொறுத்தே ரசிக்கப்படும்.சரியா தவறா என்று பார்க்கிறாயா? கேஷியோ உன்னை அடித்தான். உனக்கேற்பட்ட சின்ன காயம் மூலமாக அவன் பதவிக்கே உலை வைத்துவிட்டாய். வினை விதைத்தவன் வினை அறுப்பான். போதும் இதோடு மனநிறைவு பெறு. பொழுது விடிந்து விட்டது.இந்த இடத்தை காலி பண்ணிச் செல்.நீ இந்த இடத்தில் இருப்பது எவருக்கும் தெரியக்கூடாது. கிளம்பு ! ( ரோடெரிகோ மறைகிறான். ) இன்னும் இரண்டு காரியங்கள் செய்ய வேண்டியுள்ளன. ஒன்று என் மனைவியை அந்த டெஸ்டிமோனாவுடன் நெருங்கிப் பழகவிட வேண்டும். இன்னொன்று அந்த மூரை அங்கிருந்து வேறு இடத்திற்கு கொண்டுபோக வேண்டும். அப்போதுதான் கேஷியோவால் அவளிடம் யாசகம் கேட்க முடியும்.

காட்சி மூன்று நிறைவுறுகிறது.

அங்கம் இரண்டு நிறைகிறது.

 

 

 

 

 

.

 

 

 

 

 

:

 

 

 

 

 

 

 

ஒதெல்லோ- ஷேக்ஸ்பியர் / தமிழில் / சத்தியப்பிரியன்.

 

download (1)

 

 

 

 

 

உலகின் முக்கிய திரைப்படங்களுக்கு நேரிடையாகவும் மறைமுகவும் உந்துசக்தியாக இருக்கும் ஷேக்ஸ்பியரின் நாடங்களில் முக்கியமான ஒதெல்லா நாடகத்தை தமிழில் வழங்குவதில் மலைகள் இதழ் பெருமையடைகிறது. நண்பர்கள் தொடர்ச்சியாக வாசிக்க வேண்டுகிறேன்

சிபிச்செல்வன்

ஆசிரியர்

 

 

••••
உளவியல் ரீதியான பாத்திரங்களை படைப்பதில் ஷேக்ஸ்பியர் மிகவும் வல்லவர். மேக்பத், ஹம்லட் ,கிங் லியர் நாடக வரிசையில் சற்றும் தரத்தில் குறையாத நாடகம் இந்த ஒதெல்லோ. துறைசார் பொறாமை எவ்வாறு ஒருவனை அழித்து விடும் என்பதை ஒரு சிக்கலான பாத்திரப் படைப்பான இயாகோ என்ற பாத்திரத்தின் மூலம் மிக அற்புதமாக ஷேக்ஸ்பியர் கதை சொல்லியிருப்பார். இனபேதத்தின் அராஜகம் எவ்வாறு தனி மனிதர்களை அழித்து விடுகிறது என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம். சந்தேகப்புயல் ஒருவனுடைய வாழ்வை எப்படியெல்லாம் சூறையாடுகிறது என்பதைச் சொல்லும் நாடகம். மதுரைவீரனின் கதை இதனோடு ஒப்புநோக்கத்த்தக்கது. முன்னிலை பாத்திரங்களான கறுப்பின மூர் படைத் தளபதி ஒதெல்லோ அவனது மனைவி டெஸ்டிமோனா இவர்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு இயாகோவின் பாத்திரத்தை ஷேக்ஸ்பியர் செதுக்கியிருப்பார் என்றால் மிகையில்லை.

 

அங்கம்-1

காட்சி-1

இடம் : வெனிஸ் நகரத்தின் வீதி.

காலம்: நள்ளிரவு.

பாத்திரங்கள் :1-இயாகோ என்னும் படைவீரன். பதவி உயர்வுக்காக காத்திருப்பவன்

2-ரோடெரிகோ- இயாகோவின் நண்பன்.

பிரபான்சியோ- கதாநாயகி டெஸ்டிமோனாவின் தந்தை. ஒரு பணக்கார பிரபு. செல்வந்தர். அரசின் உயர்பதவியில் இருப்பவன்.

மற்றும் வேலையாட்கள்.

ரோடெரிகோவும் இயாகோவும் பிரபான்சியோவின் மாளிகை இருக்கும் வீதியில் நடந்து வருகின்றனர்.

ரோடெரிகோ: இயாகோ! என்னிடம் கூட சொல்லவில்லையே நீ? உன் மேல வருதம்தான். இப்படியா பெட்டி எங்கிட்ட இருந்தாலும் சாவி உன்கிட்ட இருப்பது மாதிரி நடந்துக்குவ?

இயாகோ: ஷிட்! நா என்ன சொன்னாலும் நீ கேக்கப்போறதில்ல. சத்தியமா என் மனசில் அப்படி உன்னை விட்டுட்டு ஒருசெயலில் இறங்கனும்கிற நினைப்பெல்லாம் கிடையாது.

ரோடெரிகோ : இல்ல இயாகோ. நீ புலம்பினாய். அவனை உன்னுடைய வெறுப்பெனும் கயிறினால் கட்டப் போவதாக புலம்பினாய்.

இயாகோ : நீ சொல்வதற்கு மாறாக நான் நடந்துகிட்ட அப்புறம் என்னை தூத்து.மூன்று முக்கிய பிரமுகர்கள் என்னை அவனுடைய படையின் தளபதியாக நியமிக்க பரிந்துரைத்தனர். ஆனா அவங்களோட பரிந்துரையை அவன் ஏற்கவில்லை.என்னவோ அவனுக்குத்தான் எல்லாம் தெரியும் என்பது போன்ற மமதை; ஆணவம்; திமிர்.என்னை ஒரேடியாக ஒதுக்கி விட்டான். போய்கேட்டதற்கு தன் அதிகாரியை தான் ஏற்கனவே நியமித்து விட்டதாக கூறினான். அதிலும் அலட்சியமாக.அந்தத் தளபதி யார் தெரியுமா? கேசியோ ! ஆமாம் கேசியோவேதான். ஏட்டுச் சுரைக்காய் , அவனுக்கு என்ன தெரியும் போர் முறைகளை பற்றி? புத்திசாலித்தனமாக ஒரு படை வியூகம் அமைக்கத் தெரியுமா? இவனைவிட ஒரு பெண் போர்முறைகளை நன்கு அறிவாள். இவன் போன்ற புத்தகப்புழுக்களை பாழாய்ப்போன மந்திரிகள் முன்மொழியவில்லை என்றால் இவனுக்கு இப்படி ஒரு பதவி கிடைத்திருக்குமா? சண்டை என்று வந்துவிட்டால் வாய் கிழிய பேசுவான் அவ்வளவுதான். வாளால் ஆகாத பயல். ஆனால் மூருக்கு என் திறமையைப் பற்றி நன்கு தெரியும். தெரிந்திருந்தும் கேசியோ படைத் தளபதி; நான் அவனுக்குக் கீழே கைகட்டி சேவகம். உடம்பெல்லாம் எரிகிறது –ரோடெரிகோ எரிகிறது.

ரோடெரிகோ : எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை இயாகோ. அதிகாரிகளுக்கு வரம்பு உள்ளது.

இயாகோ: உழைப்பின் சாபம் இது. பரிந்துரைக்குத்தான் என்றுமே முன்னுரிமை. திறமைக்கு இல்லை. இப்பொழுது சொல் ரோடெரிகோ நான் ஒதேல்லோவிற்கு விசுவாசமாக இருக்க வேண்டுமா?

ரோடெரிகோ : அப்படி என்றால் நானும் அவருக்குக் கீழ்ப்படிய மாட்டேன்.

இயாகோ: அடக்கி வாசி ரோடெரிகோ. என் சந்தர்ப்பத்தை அவன் மேல் பிரயோகிக்கவே நான் காத்துக் கொண்டிருக்கிறேன். அதற்காகத்தான் அவனுக்குக் கீழ் பணிகிறேன்.நாம் எப்போதும் எஜமானர்களாக இருக்க முடியாது. எப்போதும் அடிமைகளாகவும் இருக்கமுடியாது. உனக்குத் தெரியும் துரோகிகள் மண்டியிட்டு பணிசெய்யும் அடிமைகள் போல தங்கள் அடிமைத்தனத்திலேயே காலம் முழுவதும் மோகித்திருப்பார்கள். எஜமானர்களின் கழுதையைப் போல காட்சி தருவார்கள்.வெளித்தோற்றத்தில் தமது எஜமானருக்கு நன்றி விசுவாசத்துடன் இருப்பது போல காட்டிக் கொண்டு உள்ளே தமக்குத் தாமே அகங்காரத்துடன் இருப்பார்கள். இவர்களிடம்தான் கொஞ்சம் உயிர்ப்பு இருக்கிறது. ரோடெரிகோ நான் அவர்களைப் போல.நான் இந்த கருப்பு மூரை பின்பற்றமாட்டேன்…..என்னை பின் பற்றுவேன்.சொர்கமே என் நீதி மன்றம். என் புறத்தோற்றம் ஏற்படுத்தும் பிம்பத்தைப் போல நான் காதலுக்கோ கடமைக்கோ கட்டுப்பட்டவன் இல்லை. தோன்றுவது போல் நான் இல்லை.

ரோடெரிகோ : என்ன ஒரு பொன்னான வருங்காலத்தை இந்த முரட்டு இதழ்கள் ஏந்தியுள்ளன.

ரோடெரிகோ : அவளது தந்தையைக் கூப்பிடு. எழுப்பு அந்தக் கிழவனை. அவனை முச்சந்தியில் நிறுத்து. அவன் எவ்வளவு சுத்தமான இடத்தில் வசித்தாலும் அந்த இடத்தை பெருச்சாளிகள் நிறைந்த சாக்கடையாக மாற்று. அவன் சந்தோஷத்தின் சாயத்தை கழுவி ஊற்று.

ரோடெரிகோ : இதோ இங்கேதான் அவள் தந்தையின் இல்லம்.நான் கூப்பாடு போடுகிறேன். இதோ.

இயாகோ : கூவு. கத்து. நரிகளைப் போல ஊளையிடு. இரவின் அமைதியில் உன் கூக்குரல் இந்த நகரத்தில் தீயைப் போல பரவட்டும்.

ரோடெரிகோ : பிரபான்சியோ ஓ பிரபான்சியோ !

இயாகோ:விழித்துக் கொள்ளுங்கள். பிரபான்சியோ. விழித்துக்கொள்ளுங்கள். உங்கள் வீட்டிற்கு திருடன் வந்த விட்டான். உங்கள் உடைமைகளையும், வீட்டையும் உங்கள் மகளையும் பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். திருடன்.திருடன்.

-பிரபான்சயொவின் மாளிகையின் முகப்பு விளக்கு எரிகிறது. முதலில் கதவைத் திறந்து பிரபான்சியோ வெளியில் வருகிறார். –

பிரபான்சியோ : என்ன வெளியில் இப்படி ஒரு காட்டுகூச்சல்? யாரப்பா அது ?

ரோடெரிகோ : பிரபுவே தங்கள் குடும்பம் முழுவதும் உள்ளே பத்திரமாக இருக்கிறது இல்லையா?

பிரபான்சியோ : உமக்கு எதற்கப்பா இந்த வீண்கவலை?

இயாகோ( இருளில் நின்றபடி ) : நீங்கள் கொள்ளையடிக்கப்பட்டு விட்டீர்கள் பிரபு. கொள்ளையடிக்கபட்டுவிட்டீர்கள். வெட்கம். பெருத்த அவமானம். சீக்கிரம் உங்கள் மேலங்கியை அணிந்து கொள்ளுங்கள் இழந்தது எதுவென . உங்கள் இதயம் அறிந்தால் உடைந்துவிடும். தாங்க முடியாத இழப்பு. உங்கள் ஜீவனில் பாதி திருடு போய்விட்டது. ஒரு கருப்புநிற பொலிகாளை உங்கள் சிவப்புநிறபசுவைத் துரத்துகிறது. விழித்துக் கொள்ளுங்கள். மற்றவர்களையும் எழுப்புங்கள். இல்லையென்றால் அந்தக் காளை உங்களை தாத்தாவாக்கிவிட்டு போய்விடும்.விழித்துக் கொள்ளுங்கள் பிரபுவே !

பிரபான்சியோ : உங்களுக்கு என்ன பைத்தியமா?

ரோடெரிகோ : தெளிவுடன்தான் இருக்கிறோம். எங்கள் குரலை உங்களால் அடையாளம் கண்டுபிடிக்க முடிகிறதா?

பிரபான்சியோ : தெரியவில்லை நீங்கள் யார் ?

ரோடெரிகோ : என் பெயர் ரோடெரிகோ.

பிரபான்சியோ : ரொம்ப சந்தோஷம். என் வீட்டு வாசலில் வந்து வீணாக சுற்றி நிற்காதே. நிச்சயம் என் மகளின் விரலில் நீ மோதிரம் அணிவிக்க நான் ஒருபோதும் சம்மதிக்க மாட்டேன். என் அமைதியை குலைக்க மதுவருந்திவிட்டு கலாட்டா பண்ணலாம்னு நினைக்காதே.

ரோடெரிகோ ஐயோ ஐயோ !

பிரபான்சியோ: என் பதவியும் செல்வாக்கும் தெரியுமல்லவா? போய்விடுங்கள்.

ரோடெரிகோ : கொஞ்சம் பொறுமையாக இருங்கள் ஐயா !

பிரபான்சியோ : என் வீடு திருடு போயிற்று என்று கூவுகிறீர்களே. நான் தீவில் வசிக்கவில்லை. வெனிஸ் நகரில்தானே வசிக்கிறேன் ?

ரோடெரிகோ : மிகவும் வருத்தப்படுகிறேன் பிரபான்சியோ பிரபு அவர்களே. நல்ல மனதுடனே உங்களை நாடி வந்திருக்கிறேன்.

இயாகோ :சாத்தான் தீண்டும் வரை கடவுளை நினையாத இனத்தைச் சார்ந்தவரா நீங்கள்? உங்களுக்கு உதவி புரிய வந்த எங்களை இப்படி உதறித் தள்ளாதீர்கள். உங்கள் பெண்ணை போயும் போயும் ஒரு அரேபியக் குதிரைக்கு கட்டி வைக்க முயல்கிறீர்களே நியாயமா?

பிரபான்சியோ : என்ன மோசமான ஆட்களப்பா நீங்கள்?

இயாகோ : அப்படியே இருந்துவிட்டு போகிறோம். உங்கள் மகளும் அந்த அரேபியனும் கொஞ்சிக் குலாவுவதை உங்களிடம் சொல்ல வந்தது எங்கள் தவறுதான்.

பிரபான்சியோ : நீ ஒரு சரியான வில்லன்.

ரோடெரிகோ : நீங்கள் ஒரு அதிகாரி.

பிரபான்சியோ : இது பதிலில்லை ரோடெரிகோ. உன்னை நான் நன்கறிவேன்.

ரோடெரிகோ : ஐயா ! இதற்கு நான் பதிலளிக்க தயாராக உள்ளேன். உங்கள் உயிரினும் மேலான பெண் ஒரு படகோட்டியின் உதவியுடன் காமவெறி பிடித்த ஒரு அரேபிய கறுப்பின மூருடன் ஓடிப் போயிருக்கிறாள் என்பது உங்களுக்குத் தெரியுமானால் மன்னியுங்கள் நாங்கள் உங்களுக்கு தீங்கிழைத்து விட்டோம். மாறாக உங்களுக்கு இந்தச் செய்தி தெரியவில்லை என்றால் உங்களை எச்சரிக்க வந்துள்ளோம். எப்போதும் ஒரு கனவானைப் போல சிந்திக்காதீர்கள். உள்ளே சென்று பாருங்கள். அவள் வீட்டில் இருந்தால் உங்களை இந்த அகாலத்தில் தொந்தரவு செய்ததன் காரணமாக உங்கள் அதிகாரத்தை எங்கள் மேல் கட்டவிழ்த்து விடுங்கள்.

ப்ரபான்சியோ: அபாய எச்சரிக்கை மணியை அடிக்கச் சொல்லுங்கள்.எனக்கு ஒரு விளக்கு எடுத்து வாருங்கள். என் ஆட்களை உடனே எழுப்புங்கள். இந்த விபத்து என் கனவில் வந்ததல்ல. இதன் சாத்தியக்கூறு என்னை பாதிக்கத் தொடங்கிவிட்டது. சீக்கிரம் விளக்கு கொண்டு வாருங்கள்.( உள்ளே போகிறார் ).

இயாகோ: நான் உன்னிடமிருந்து விலகுகிறேன் ரோடெரிகோ .மூரின் கீழ் பலகாலமாக வேலைபார்த்துவிட்டு இப்போது இங்கிருந்தால் அவன் பேரில் குற்றம் சுமத்தப்படும்போது நான் அவனுக்கு எதிராக சாட்சி சொல்ல வேண்டியிருக்கும். என்னதான் அவப்பெயர் ஏற்பட்டாலும் வெனிஸ் நகரம் ஒதேல்லோவை விட்டு கொடுக்காது. சைப்ரஸ் போருக்கு ஆயத்தமாகி நிற்கும் அவன் பின்னால் வெனிஸ் நகரம் கை கட்டி நிற்கிறது.ஒதெல்லோ இல்லாமல் வெனிஸ் இயங்காது. சைப்ரஸ் போர் ஏற்கனவே மூண்டுவிட்டது. ஒதெல்லோவிற்கு மாற்றாக ஒருவனை காட்ட ஆட்சியாளர்களால் தற்சமயம் இயலாது. இந்த மறுக்கமுடியாத உண்மைகளின் காரணமாக அவனை நான் விஷம் போல மனதில் வெறுத்தாலும் சூழ்நிலை காரணமாக அவனுடன் நட்பு பாராட்ட வேண்டியுள்ளது.இதைப் புரிந்து கொள். இது ஒரு நாடகம்தான். நான் சாகிடரி என்ற விடுதிக்கு செல்கிறேன். அவனைத் தேடி வரும் கூட்டத்தை அங்கு அழைத்து வா. அவனுடன் நான் இருப்பேன். ( இயாகோ மறைகிறான் ) .

பிரபான்சியோ( வேலையாட்கள் சூழ கையில் விளக்குடன் வருகிறார். )

பெரிய தீங்கு நேர்ந்து விட்டது. என் நேரம் சரியில்லை ரோடெரிகோ. அவள் சென்று விட்டாள். நீ அவளை எங்கு பார்த்தாய்? ஐயோ மோசம் போய்விட்டாயே பெண்ணே ! அந்த மூருடன் சென்றதை நீ பார்த்தாயா? என்ன ஒரு அதிர்ஷ்டம் கெட்ட தந்தை நான்.நீ பார்த்தது அவள்தான் என்று உன்னால் உறுதியாக கூற முடியுமா ? ஐயோ என்னை இப்படி மோசம் செய்து விட்டாலே. உன்ன்டியம் ஏதாவது கூறினாளா? வேலையாட்களே இன்னும் நான்கைந்து விளக்கை ஏற்றுங்கள். அவர்கள் திருமணம் புரிந்து கொண்டு விட்டார்களா?

ரோடெரிகோ : என்னுடைய நேர்மையான பதில் ஆமாம் என்பதுதான்.

ப்ரபான்சியோ : கடவுளே ! எப்படி அவள் என்னை விட்டு அகன்றாள்? நம்பிக்கை துரோகி. உலகத் தந்தைமார்களே உங்கள் மகள்களின் புறத்தோற்றத்தைக் கொண்டு உங்கள் பெண்களை எடை போடாதீர்கள். பெண்பிள்ளைகளின் இளமையையும் கன்னித்தன்மையையும் கட்டி காப்பாற்ற ஏதாவது மந்திரம் இருக்கிறதா ரோடெரிகோ ? உனக்குத் தெரியுமா?

ரோடெரிகோ : தெரியும்.

பிரபான்சியோ : என் சகோதரனை அழையுங்கள். அவனுக்கு இது தெரியுமா எனக் கேட்போம். ஏதாவது ஒரு வழி. எப்படியாவது அவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அவர்கள் சென்ற இடம் எங்கே என்று ரோடெரிகோ உனக்குத் தெரியுமா?

ரோடெரிகோ : தெரியும். நீங்கள் துணைக்கு இரண்டு மூன்று கவலாளிகளுடன் அவன்தாள் அவர்கள் இருப்பிடத்தை நான் காட்டுவேன்.

பிரபான்சியோ : உன்னை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். வழி காண்பித்த வண்ணம் நீ முன்னால் செல். விசாரிக்கிறேன். என் அதிகாரத்தை பயன்படுத்துகிறேன். ஆயதங்கள் எடுத்து வாருங்கள். நல்ல திறமையான அதிகாரிகளை அழைத்து வாருங்கள். ரோடெரிகோ ! எனக்காக நீ மேற்கொண்டுள்ள சிரமத்தை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்.

 

காட்சி -2.

வெனிஸ் நகரின் வேறொரு வீதி.

நேரம் : அதே இரவு நேரம்.
பாத்திரங்கள் : ஒதெல்லோ,இயாகோ, மற்றும் வேலையாட்கள் விளக்குகளுடன்.

இயாகோ : போர்களில் நான் கொலை புரிந்திருக்கிறேன். ஆனால் இதுவரையில் ஒரு கொலையை நான் திட்டமிட்டு செய்ததில்லை. வஞ்சகம் என்னிடம் குறைவாக இருப்பதுதான் காரணம். ஏழெட்டுமுறை அந்த ரோடெரிகோவை மார்பில் குத்திக் கொன்றுவிடலாமா என்பதுபோல ஆத்திரம் வருகிறது.

ஒதெல்லோ : நல்ல வேளை. அப்படி எதுவும் நேரவில்லை.

இயாகோ : இல்லை. அவன் என்ன உளறல் உளறினான் தெரியமா? உங்கள் புகழையும் பெருமையையும் எவ்வளவு கேவலமாக பேசினான் தெரியுமா? என்னிடம் சிறிதளவு ஒட்டிக் கொண்டிருந்த நற்பண்பு காரணமாக அவன் சொன்னதை எல்லாம் பொறுத்துக் கொண்டேன். உங்களுடைய திருமணம் அவசரத்திருமணமா? மறுப்புகளை மீறிய திருமணமா? ஏன் சொல்கிறேன் என்றால் கனவான் பிரபான்சியோ மக்களால் நேசிக்கப்படுபவன். அவன் திறமையினால் வெனிஸ் நகரக் கோமகனைக் காட்டிலும் இருமடங்கு வல்லமை படைத்தவன். உங்களை ஒதுக்கி வைத்து விடுவான்.சந்தர்ப்பத்திற்குக் காத்திருந்து தனக்கு ஏற்பட்ட பழியை துடைக்க சட்டம் மூலம் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க முயற்சிப்பான்.

ஒதெல்லோ : அவரால் முடிந்ததை செய்து கொள்ளட்டும்.அரசுக்கு நான் ஆற்றிய பணிகள் அவருடைய தூற்றல்களுக்கு முற்றுபுள்ளி வைக்கும்.ஒன்றை உறுதியாகச் சொல்கிறேன் இயாகோ. மன்னர் பரம்பரையில் வந்த என்னை நான் வாங்கிய பட்டங்களே என் எதிர்காலத்திற்கு என்னை இட்டுச் செல்லும். நான் மென்மையான டெஸ்டிமோனாவைக் காதலிக்கிறேன். ஆமாம் இயாகோ. நான் அவளை காதலிக்கிறேன். என் காதல் என்னை கட்டிப் போடாது. என் காதல் என்னுடைய சுதந்திராச் சிறகுகளை பூட்டி வைக்காது. காதல் காலில் பூட்டிய விலங்கு இல்லை இயாகோ. காலில் மாட்டிய சக்கரம். அங்கே பார் விளக்குகளின் ஒளி நெருங்கி வருகிறது. யாரென்று பார்.

இயாகோ : டெஸ்டிமோனாவின் தந்தையும் அவருடைய ஆட்களாக இருக்கக் கூடும்.நீங்கள் உள்ளே செல்லுங்கள்.

ஒதெல்லோ : மாட்டேன். ஏன் மறைந்து கொள்ள வேண்டும்? என் திறமை என் நற்பெயர் , என் ஆத்மா இவை என்னை இந்த உலகிற்கு நல்லமுறையிலேயே இதுவரை சித்தரித்துக் காட்டி வந்துள்ளன. இல்லையா?

இயாகோ : கடவுள் பொதுவாக அப்படித்தான்.

( கேஷியோவும் வேறு சில அதிகாரிகளும் கைகளில் விளக்குடன் வருகின்றனர். )

ஒதெல்லோ : கோமகனின் சேவகர்களே ! எனது படைதளபதிகளே !இரவு வணக்கம். எங்கே இவ்வளவு தூரம் ?

கேசியோ : கோமகன் தங்களுக்கு வாழ்த்து சொல்லி அனுப்பியுள்ளார். அதோடு தங்களை இந்த இரவுவேளையில் அவரை வந்து பார்க்கும்படி பணித்துள்ளார்.

ஒதெல்லோ : எதற்காக இருக்கும் என்று நினைக்கிறீர்கள் ?

கேசியோ : சைப்ரசிலிருந்து தகவல் ஏதாவது வந்திருக்கும். அவசர நிமித்தம் என்று நினைக்கிறேன்.கப்பல்களில் பத்து பனிரெண்டு தூதுவர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். ஏழெட்டு மந்திரிகள் இரவென்று பாராமல் கோமகனின் அரண்மனையில் கண்விழித்துக் கிடக்கின்றனர். உங்கள் உறைவிடத்தில் நீங்கள் இல்லை என்பதால் உங்களை அழைத்து வர ஆள் அனுப்பியிருக்கிறார்கள்.

ஒதெல்லோ : சற்று பொறுங்கள். உள்ளே சென்று ஒரு நொடியில் வந்து விடுகிறேன்.( செல்கிறான் ).

கேஷியோ : மூத்த அதிகாரி அவர்களே ! இவர் ஏன் இந்த இடத்தில் இருக்கிறார்?

இயாகோ : அது வேறு ஒன்றுமில்லை. ஒரு பெரிய கப்பலை சிறைபிடித்து விட்டார். அதனால். டெஸ்டிமோனாவை மனதில் நினைத்துக் கொண்டு இவ்வாறு கூறினான். ) அதை அவர் சட்டபூர்வமாக்கிக் கொண்டால் இனி அவரை பிடிக்க வெனிசில் ஒரு மனிதன் கூட இருக்க முடியாது.

கேஷியோ : புரியவில்லை ஐயா

இயாகோ : அவர் திருமணம் செய்து கொண்டுவிட்டார்.

கேஷியோ : யாரை ?

இயாகோ :அவர் மணந்தது யாரை என்றால் …( ஒதெல்லோ வருகிறான். ) வாருங்கள் தளபதி. கிளம்பி விட்டீர்களா?

ஒதெல்லோ : நீங்கள் இல்லாமலா?

கேஷியோ : அடடே ! வேறொரு குழு கூட உங்களைத் தேடுகிறது.

இயாகோ : பிரபான்ஷியோ கெட்டஎண்ணத்துடன் வருகிறார் போலிருக்கிறது. தளபதி எச்சரிக்கை.

( பிரபான்ஷியோ , சில அதிகாரிகள் விளக்கு மற்றும் ஆயுதங்களுடன் வருகிறார்கள். )

ஒதெல்லோ: ஓஹ்ஹோ நில்லுங்கள் அப்படியே .

ரோடெரிகோ : கனவானே ! அதோ அவன்தான் அந்தக் கறுப்பின மூர்.

பிரபான்ஷியோ : பிடியுங்கள் அவனை. அயோக்கியப்பயல்.

( இரு அணியினரும் வாள் உருவி நிற்கின்றனர். )

இயாகோ : வா ரோடெரிகோ வந்து என் வாளுக்கு பதில் சொல்.

ஒதெல்லோ : மின்னும் வாளுக்கு பயிற்சி கொடுங்கள். இல்லையென்றால் கடல் ஈரம் வாளை துருவேற்றி விடும். உயர் அதிகாரி அவர்களே ! நீங்கள் உங்கள் அனுபவத்தால் மதிக்கப்பாட வேண்டியவர் ஆயுதத்தால் அல்ல.

பிரபான்ஷியோ : அயோக்கிய பதரே ! என் பெண்ணை என்கே ஒளித்து வைத்திருக்கிறாய் ? நீ அவளுக்கு என்ன சொக்குபொடி போட்டாய்? உன்மேல் பித்து பிடித்து போய்தான் பெரும்பதவியில் இருக்கும் அழகிய செல்வந்தர்களை எல்லாம் விட்டுவிட்டு உன் கருப்பு உருவத்தின் பின்னால் வந்து விட்டாளா.? என்ன மந்திரம் போட்டாய்? என்ன ஏவல் செய்தாய்? உன்னைக் கைது செய்வதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. பிடித்து கட்டுங்கள் அவனை.

ஒதெல்லோ : பொறுங்கள். இரு புறமும் அமைதி காக்க வேண்டுகிறேன்.எனக்கு யுத்தம் செய்ய சொல்லித் தரவேண்டாம். என்னை கைது செய்தால் என்ன பண்ணுவீர்கள் ?

பிரபான்ஷியோ : சிறைச்சாலையில் அடைப்போம்.

ஒதெல்லோ : இந்தத் தருணத்தில் உங்கள் கட்டளைக்கு அடிபணிந்து நான் சிறைக்குள் அடைபட்டால் என்ன நடக்கும் தெரியுமா? என்னுடன் இருப்பவர்கள் எவர் என்று அறிவீர்களா? இந்த இரவு என்னுடன் மந்திராலோசனை நடத்த கோமகன் என்னை கூட்டிவர அழைப்ப்பு விடுத்திருக்கிறார்.

பிரபான்ஷியோ : என்னது கோமகன் உங்களை அழைத்துவரச் சொல்லியிருக்கிறாரா? விட்டு விடுங்கள் அவனை. இவன் கோமகனின் மாளிகைக்கு செல்லட்டும். அங்கு என்போன்ற உயர் அதிகாரிகள் மத்தியில் இவன் அவமானப்படட்டும்.அவர்கள் இவனுடைய அயோக்கியத்தனத்தை புரிந்து கொள்வார்கள். தண்டனை அளிப்பார்கள். இல்லை என்றால் இந்த வெனிஸ் நகரம் இவன் போன்ற அரேபிய கருப்பு மூர்களால் நிரம்பி வழியட்டும்

காட்சி -3

கோமகன் மற்றும் முக்கிய மந்திரிகள், அதிகாரிகள்

கோமகன் : அவர்கள் கொண்டு வந்த செய்தியில் தெளிவில்லை என்பதால் நம்பகத் தன்மை குறைவாக உள்ளது.

முக்கிய மந்திரி -1 : முறையாகவும் இல்லை. எனக்கு வந்த செய்தியில் நூற்றியேழு கலங்கள் என்றுள்ளது.

முக்கிய மந்திரி -2 என் கடிததிதில் இருநூறு என்றிருக்கிறது. எண்ணிக்கையில் வேறுபாடு இருப்பினும் துருக்கிய கப்பல் படை சைப்ரஸ் நோக்கி வந்து கொண்டிருக்கிறது என்ற செய்தி உண்மையானது

கோமகன் : என் அச்சம் கூட கலங்களின் எண்ணிக்கையில் இல்லை கலங்களின் மீதுதான்.

மாலுமி ( வாயிலில் நின்றபடி ) ஐயா உங்களைத்தான் ஐயா!

மு.ம-1 : கப்பல் படையிலிருந்து ஒரு மாலுமி.

( மாலுமி உள்ளே நுழைகிறான் )

கோமகன் : என்ன விஷயம் ?

மாலுமி : கடற்தளபதி ஆங்கெலோ அனுப்பியதால் வந்திருக்கிறேன்.துருக்கியர் ரோடெஸ் தீவை கைப்பற்றுவதில் முனைப்பாக உள்ளனர்

கோமகன் : துருக்கியரிடம் ஏன் இப்படி ஒரு மாற்றம்?

மு.ம-1 : இது நடக்க முடியாத செயல். நம் கவனத்தை திசை திருப்ப இது ஒரு அலங்கார அணிவகுப்பு. அவ்வளவுதான்.துருக்கியருக்கு ரோடெஸ்சை விட சைப்ரஸ் மீதுதான் கவனம் அதிகம். மேலும் சைப்ரஸ் ரோடெஸ்சை போல அத்தனை பெரிய பாதுகாப்பு அரணுக்குள் இருக்கவில்லை. துருக்கியருக்கு சைப்ரசை கைப்பற்றுவது மிகவும் முக்கியம். இவற்றையெல்லாம் பார்க்கும்போது தன் மீது தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்திக் கொள்ளவே துருக்கி ரோடெஸ் தீவை கைப்பற்றியுள்ளது.

கோமகன் : அவர்கள் கண்டிப்பாக ரோடெஸ் மீது படைஎடுத்திருக்க மாட்டார்கள்.

மு.ம-1 : மற்றுமொருவன் செய்தியுடன்.

( இன்னொரு சேதி சொல்லி உள்ளே நுழைகிறான். )

சேதி சொல்லி : ரோடெஸ்சில் மூக்கை நுழைத்த துருக்கியர்களை பலப்படுத்த மேலும் ஒரு கப்பல் படை அதன் துணைக்கு சேர்ந்துள்ளது.

கோமகன் : இந்தப்படையில் மொத்தம் எத்தனை கப்பல்கள்?

சேதி சொல்லி :முப்பதிற்கும் மேல் இருக்கும். கலங்கள் சைப்ரஸ் நோக்கி திரும்புகின்றன. தங்கள் நம்பிக்கைக்கு பாத்திரமான மாண்டனோ என்னும் கப்பல் தளபதி இந்தத் தகவலை அனுப்பியுள்ளார்.

கோமகன் : இனி மாற்று சிந்தனைக்கு இடமில்லை.மர்கஸ் லூசிகொஸ் நகரில் இருக்கிறாரா?

மு.ம:1 : அவர் இப்போது ஃப்லோரன்சில் இருக்கிறார்..

கோமகன் : உடனே அவருக்குத் தகவல் கொடுங்கள்.

மு.ம-1 : இதோ பிரபான்ஷயொவும் மகாதீரன் மூரும் வருகின்றனர்.

–பிரபான்ஷியோ,ஒதெல்லோ , கேஷியோ, இயாகோ மற்றும் ரோடெரிகோ உள்ளே வருகின்றனர்.—

கோமகன் : அதிதீரனே உன்னை இப்போதே அந்த துருக்கியர்களுக்கு எதிராக உன்னை அனுப்ப வேண்டும் ( பிரபான்ஷியோவைப் பார்த்து ) இந்த நேரத்தில் உங்களை இங்கு எதிர்பார்க்கவில்லை கனவானே. வாருங்கள் . உங்களுடைய ஆலோசனையும் உதவியும் இந்த இரவிற்கு மிகவும் அவசியம்.

பிரபான்ஷியோ : அதைப் போலவே உங்களுடைய கருணை எனக்கு வேண்டும்.என்னுடைய பதவியோ, அல்லது இந்த நாட்டின் நிலைமையோ,அல்லது இந்த நாட்டின் மீது எனக்குள்ள அக்கறையோ என்னை என் படுக்கையிலிருந்து எழுப்பி இங்கே கொண்டு வரவில்லை. என்னுடைய சொந்தக்கவலை தனது விஸ்தீரணத்தால் மற்ற எல்லா கவலைகளையும் ஒதுக்கி விட்டு தனியாக முன் நிற்கிறது கோமகனே.

கோமகன் : அப்படி என்ன கவலை உங்களுக்கு ?

பிரபான்ஷியோ: ஐயோ என் மகள் என் மகள்.

கோமகனும் மந்திரிகளும் : என்னது உங்கள் மகள் இறந்துவிட்டாளா?

பிரபான்ஷியோ : என்னைப் பொறுத்த வரையில் அவள் இறந்துவிட்டாள். என்னிடமிருந்து பறிக்கப்பட்டு விட்டாள். களவாடப்பட்டு விட்டாள்.போலி மருத்துவர்களின் மருந்தினாலும், மாயாவிகளின் மாயத்தினாலும் மோசம் போய்விட்டாள்.மனித இயல்பு தன்னளவில் செயலாற்றல் இல்லாமல் போனாலோ, குருடானாலோ, அல்லது சிந்திக்கும் திறன் அழிந்து போனாலோ அன்றி இப்படி மோசம் போகாது என்று நான் கருதுகிறேன்.

கோமகன்:இந்தக் குற்றத்தைப் புரிந்தவன் என் சொந்த மகனாக இருப்பினும் அவன் மேல் சட்டம் பாயும். இது என் உத்தரவு.

பிரபான்ஷியோ: மிக்க நன்றி கோமகனே ! இந்த கொடுன்செயலைப் புரிந்தவன் உங்களால் இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்ட இந்த மூர்தான்.

கோமகனும் மந்திரிகளும் : நாங்கள் இதற்கு வருத்தம் தெரிவிக்கிறோம்.

கோமகன் ( ஒதெல்லோவிடம் ) நீ ஏதாவது கூற விரும்புகிறாயா?

ஒதெல்லோ : வல்லமையும் கடுமையும் நிறைந்த என்னுடைய மூத்த அதிகாரிகளே ! மாண்பும் மாட்சிமையும் நிறைந்த என்னுடைய நம்பிக்கைக்கு உரிய தலைவர்களே ! நான் இவருடைய மகளை மணந்து கொண்டேன் என்பது நிச்சயமான மறுக்கப்பட முடியாத உண்மை.இது ஒன்றுதான் நான் செய்த குற்றம். வேறு ஒன்றுமில்லை.எனக்குக் கோர்வையாக பேசத் தெரியாது. ஒரு சிறந்த பேச்சாளனைப் போல பேசும் ஆற்றல் கொண்டவன் கிடையாது. என்னுடைய ஒன்பதாவது பிராயத்திலிருந்து ஆயுதம் ஏந்தியவன் நான். போர்க்களம் புரிந்த எனக்கு இந்த உலக நடவடிக்கை தெரியாது. சாமர்த்தியமாக என் வாதத்தை எடுத்து வைத்துதான் என் கட்சிக்கு வாதாட வேண்டும் என்றால் நான் தோற்றுத்தான் போவேன். உங்கள் அனுமதியுடன் என்னுடைய அலங்காரம் எதுவுமற்ற நேரடியான காதல் கதையை கூற விரும்புகிறேன். அதைக் கேட்ட பின்பாவது என் மீது சுமத்தப்பட்டுள்ள அந்த மாயம் எது அந்த ஏவல் எது என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.

பிரபான்ஷியோ : அச்சம் மிகுந்தவள். கூச்சம் மிகுந்தவள். தன் அசைவுகளினால் சிவந்து விடும் மென்மையான மேனி கொண்டவள் டெஸ்டிமோனா. அவளுடைய இயல்பான உள்ளுணர்வுகளை விடுத்து இப்படி வயதினாலும், பருவ காலங்களாலும், விருப்பு வெறுப்புகளினாலும் இடைவெளி மிகுந்த, பார்க்கவே பயன்கரத் தோற்றத்துடன் கூடிய ஒருவன் மீதா காதல் கொண்டிருப்பாள் ? டெஸ்டிமோனாவைப் போன்ற ஒரு நளினமான பெண் இயற்கைக்கும், சிந்தித்து அறியும் குணத்திற்கும் எதிராக செயல்பட்டிருப்பதாகக் ஒரு புத்தியில்லாதவன்தான் கூறக் கூடும். மாந்த்ரீகத்திலும் தாந்த்ரீகத்திலும் வல்லவர்கள்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.உட்கொண்டவுடன் ரத்தத்தில் கலந்து உடனே வேலையைத் தொடங்கும் மாய மருந்து ஒன்றைத்தான் அவன் பயன்படுத்தியிருக்க வேண்டும்.

கோமகன் : இதற்கு போதிய நிரூபணங்கள் இல்லை. வெளிப்படையான ஆதாரங்கள் கிடையாது என்பதால் தங்களது குற்றச்சாட்டில் போதிய நம்பகத்தன்மை இல்லை என்றே கருதுகிறேன்.

மு.ம-1 : நீ கூறு ஒதெல்லோ இவர் மகளை கவர்வதற்கு நீ ரகசியமான அல்லது சட்டத்திற்கு புறம்பான வழிகளை பின்பற்றினாயா?

ப்தேல்லோ : இல்லை மந்திரியாரே ! அழைத்து வரச் சொல்லுங்கள் டெஸ்டிமோனாவை. அவளிடம் அவள் தந்தை முன் விசாரியுங்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கிறாள் என்று.. அவள் என்னை பழி சொன்னாலோ குற்றம் கூறினாலோ என்னை என்னுடைய பதவியிலிருந்து நீக்குங்கள். அவ்வளவு ஏன் எனக்கு மரண தண்டனை கூட அளியுங்கள். ஏற்றுக் கொள்ள காத்திருக்கிறேன்.

கோமகன் : டெஸ்டிமோனாவை அழைத்து வாருங்கள்.

ஒதெல்லோ : மூத்தவரே ! ஆட்களை சாகிடரிக்கு அனுப்புங்கள். உங்களுக்குத்தான் அந்த இடம் எங்கே இருக்கிறது என்று தெரியும்..

-இயாகோவும் சில காவலாட்களும் அகல்கின்றனர்—

ஒதெல்லோ ( தொடர்ந்தபடி ) அவர்கள் வரும் வரையில் கடவுளிடம் பாவமன்னிப்பிற்கு மன்றாடும் ஒருவனைப் போல என் காதல் கதையை உங்களிடம் கூற ஆசைப்படுகிறேன்.

கோமகன் : சொல்லு ஒதெல்லோ கேட்கக் காத்திருக்கிறோம் .

ஒதெல்லோ : டெஸ்டிமோனாவின் தந்தை ஒருகாலத்தில் என்னை நேசித்தவர். என்னை அவருடைய இல்லத்திற்கு பலமுறை உபசரித்திருக்கிறார். நானும் சென்று அளவளாவியிருக்கிறேன். நான் புரிந்த போர்கள், நான் இட்ட முற்றுகைகள், என் எதிர்காலம் என்று எனது ஏற்ற,இறக்கங்களை அவருடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.எத்தனை போராட்டங்கள் ! மலையிலும்,கடலிலும், பாலைவனங்களிலும் அலைந்த போராட்டங்கள். முற்றுகையின்போது கோட்டை சுவர் இடிந்ததில் காயம் ஏதுமின்றி தப்பிய கதையைக் கூறியிருக்கிறேன். ஒரு முரட்டு எதிரியிடம் மாட்டிக் கொண்டது; அவன் என்னை ஒரு வியாபாரியிடம் விற்றது; நான் என் எஜமானனிடமிருந்து தப்பியோடி வந்தது என்று பல கதைகள். நான் சந்தித்த வினோதமான மனிதர்களைப் பற்றி கூறியிருக்கிறேன். மனிதக் கறி உண்பவர்கள் ; தோள்களுக்குள்ளேயே தலை வளரும் மனிதர்கள் ; காட்டுமிராண்டிகள் இவர்களை பற்றி சொல்லியிருக்கிறேன். காடுகள் , மலைகள், சொர்கத்தை முகரும் மலை உச்சிகள் என்று பல. என் வர்ணனை அவளது ஆர்வத்தைத் தூண்டியிருக்க வேண்டும். வருவாள். சிறிது நேரம் கேட்பாள். பெண் அல்லவா? வீட்டு வேலை பாக்கி இருக்கும்.உள்ளே போய்விடுவாள். வேலையை முடித்துக் கொண்டு அவசர அவசரமாக என் கதையைக் கேட்க வந்துவிடுவாள். இளமைக்காலத்தில் நான் சந்தித்த இன்னல்கள் அவளிடம் கண்ணீராகவும் பெருமூச்சுகளாகவும் வெளிப்பட்டன. என் வாழ்வில் நான் சந்தித்த சம்பவங்கள் அதுவரை தான் கேட்டிராத ஒன்று என்பாள். வருத்தம் தருவதாகக் கூறுவாள். எனக்கு ஒரு நண்பன் இருந்து அவனிடம் எந்த மாதிரி தன் கதைகளை அவளிடம் கூறினால் அவள் அவனிடம் காதலில் விழுவாள் என்பதைக் கூறினாள். இது என் காதலை அவள் குறிப்பால் வெளிப்படுத்திய விதமாகும். நான் அவள் காதலில் விழுந்தேன்.நான் சந்திக்க நேர்ந்த இன்னல்களுக்காக அவள் என்னை காதலித்தாள். என் மீது அவள் காட்டிய அக்கறைக்காக நான் அவளைக் காதலித்தேன். ஒருவருக்கொருவர் இடையில் நிகழ்ந்த இந்தப் புரிதல்தான் அவள் தந்தை குற்றம் சாட்டிய பில்லி ஏவல் எல்லாம்.அதோ டெஸ்டிமோனாவே வருகிறாள் . அவளிடமே கேட்டுக் கொள்ளுங்கள்.

–டெஸ்டிமோனா , இயாகோ மற்றும் காவலர்கள் வருகை –

கோமகன் : ஓ இந்தக்கதை என் மகளைக் கூட உங்கள் மீது காதல் கொள்ள வைத்து விடும் நல்லது பிரபான்ஷியோ இந்த மோசமான தருணத்தை நல்லவிதமாக பயன்படுத்திக் கொள். வெற்று கைகளை விட உடைந்த ஆயுதம் ஏந்திய கைகளையே ஆண்கள் அதிகம் பயன்படுத்துவார்கள்.

பிரபான்ஷியோ : வணங்குகிறேன் கோமகனே இதோ என் மகள் அவள் பேசட்டும்.இவன் காதலில் இவளுக்கும் சரி பங்கு உண்டென்று சொன்னால் நான் இனி எதுவும் சொல்லப்போவதில்லை. அப்படி பழி சொன்னால் என் தலையில் இடி விழட்டும். அம்மா இங்க வா. இப்போது சொல் உன் மரியாதை எந்தப்பக்கம் என்று..

டெஸ்டிமோனா ; என் மதிப்பிற்குரிய தந்தையே ! என்னுடைய கடமை இருகூறாக பிரிந்து கிடக்கிறது. ஒன்று என்னை இதுவரை வளர்த்து ஆளாக்கிய உங்களுக்காக, என் வாழ்வும் கல்வியும் உங்களால் நான் பெற்றது.அதற்காக நான் உங்களுக்கு கட்டுப்பட்டவள்.உங்களை எப்படி விட்டு கொடுப்பது ? கடமை தவறாதவர் நீங்கள்.இதுவரையில் நான் உங்கள் மகள். ஆனால் இதோ இவர் என் கணவர். என் தாய் தனது தகப்பனை விட உங்களுக்கு அதிக கடமை ஆற்றியது போல நான் இந்த மூருக்கு ஆற்றவேன்டாமா சொல்லுங்கள்.

பிரபான்ஷியோ :வந்தனம் பெண்ணே .இனிமேல் பேசுவதற்கு என்ன இருக்கிறது? இனி உன் கருணை இந்த நாட்டு நலத்தின் மேல் இருக்கட்டும்.இனிமேல் நான் ஒரு குழந்தையை பெற்றுக் கொள்வதை விட தத்து எடுத்துக் கொள்வதுதான் நல்லது.மூர் ! இங்கே வா. நீ ஏற்கனவே எடுத்துக் கொண்டதை நான் திருப்பி உன்னிடம் தருகிறேன். நல்ல வேளை எனக்கு வேறு பிள்ளைகள் இல்லை. இருந்திருந்தால் உன்னுடைய இந்த மரியாதைக் குறைவான செயல் மற்ற பிள்ளைகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் கொடுங்கோன்மையாக மாறியிருக்கும்.

கோமகன் : உன் வழியிலேயே என் தீர்ப்பை உனக்கு சாதகமாக அளிக்கிறேன் . தீர்வுகள் இறந்தகாலத்தில் இருந்தது என்றால் வருத்தங்கள் தொலைந்தன என்று எண்ணிக்கொள். ஒரு பிரச்சினைக்கு தீர்வில்லாதபோது அதனை நினைத்துப்புலம்புவது வேறு ஒரு பிரச்சினைக்கு வழிவகுக்கும். சந்தர்ப்பம் நமக்கு சொந்தமானவற்றை திருடிச் செல்லும்போது பொறுமை நமது வலியைப் பார்த்து சிரிக்கும். திருடனைப் பார்த்து பறிக்கபட்டவன் சிரிக்கும்போது திருடன் இழந்தவனாகிறான். பறிகொடுத்தவன் மாறாக வருந்தினால் மேலும் பறிகொடுத்தவனாகிறான்.

ப்ரபான்ஷியோ :துருக்கியர்கள் நம்மை சைப்ரஸ்சை விட்டு துரத்தட்டும். அந்த இழப்பின் வலியை சிரித்து ஏற்றுக் கொள்வோம். வருத்தம் இல்லாதவனுக்கே பிறர் வருத்தத்தை கேட்கும் பொறுமை இருக்கும். வருத்தபட்டவனுக்கோ அடுத்தவன் வலியை பொறுமையுடன் கேட்பதோடு தன் வலியைப் பொறுத்துக்கொள்ளவும் தெரிந்திருக்க வேண்டும். என்ன இருப்பினும் வார்த்தைகள் வார்த்தைகள்தானே ? புண்பட்ட நெஞ்சத்திற்கு வார்த்தைகள் என்றும் மருந்திட்டதில்லை. இனி நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது? நாட்டு நிலையில் கவனம் செலுத்துங்கள்.

கோமகன் : துருக்கியர்கள் பெரும் கப்பல் படையுடன் சைப்ரசை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். ஒதெல்லோ உனக்கு அவர்கள் இருக்கும் திசை தெரியும். உனக்கு ஈடு செய்ய திறமையான தளபதிகள் இருந்தாலும் இது போன்ற பொதுமக்களின் விஷயங்களில் மக்களின்ள் குரலுக்கு மதிப்பு கொடுத்தாக வேண்டும். பொதுமக்கள் உன் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளது. இந்த உறுதியான ஆவேசமான தருணத்தில் நீ உனது கல்யாணக் கனவுகளை தள்ளி வைப்பது உத்தமம்.

ஒதெல்லோ : அடிபணிவது என் வழமை. போர்க்களம் எனக்கு விரித்த கடுமையான மெத்தையை விடவா என் நெஞ்சம் சயன மஞ்சத்தில் சாயப்போகிறது? கடினமானதை எதிர்கொள்வதே என்னுடைய பழக்கமாகிப் போனது. எனவே துருக்கியர்களுக்கு எதிரான இந்தப் போரை எதிர்கொள்வது எனக்கு கடினமில்லை. தற்சமயம் என் கவலையெல்லாம் என் மனைவிக்கு பத்திரமாக தங்குவதற்கு ஓர் இடமும் அவள் வாழ்க்கை வசதிக்கான ஏற்பாடுகளும்தான்.

கோமகன் : உனக்கு ஆட்சேபணை இல்லையென்றால் அவள் தனது தந்தையுடன் வசிக்கட்டும்.

பிரபான்ஷியோ : எனக்கு அதில் உடன்பாடில்லை

ஒதெல்லோ : எனக்கும்தான்.

டெஸ்டிமோனா :எனக்கும் சம்மதமில்லை. அவர் கண்களில் பட்டுக் கொண்டிருந்தால் அவருக்கு என்மேல் எரிச்சல் இருந்துகொண்டிருக்கும். அது வேண்டாம்.வேறு வழி சொல்லுங்கள்.

கோமகன் : சரி உன் வழியைச் சொல் டெஸ்டிமோனா.

டெஸ்டிமோனா: மூர் இருக்கும் இடம்தான் என் வாழ்வின் ஆரம்பம் முடிவு எல்லாம்.நான் எடுத்துள்ள இந்த மூர்க்கத்தனமான முடிவையும் இதனால் என் வாழ்வில் வீசப்போகும் புயலையும் குறித்து இப்போதே நாட்டு மக்களுக்கு முரசறிவியுங்கள். இரும்புத் தூணில் படரும் கொடி தூணின் தன்மைக்குப் பழகிக்கொள்ளும்.என் கண்களுக்குத் தெரிவது மூரின் கம்பீரமே அன்றி கருத்த முகமன்று. நான் இங்கு பாதுகாப்பாக இருந்தால் எந்த வீரத்தையும் கம்பீரத்தையும் நான் காதலித்தேனோ அதற்கு அர்த்தமில்லாமல் போய்விடும். எனவே நான் மூருடன் செல்லவே பிரியப்படுகிறேன்.

ஒதெல்லோ : அவள் விரும்பிய வண்ணமே அனுமதியளியுங்கள். நாவின் சுவை கருதியோ, தாளாத மோகத்தினாலோ நான் இதைச் சொல்லவில்லை.அவளது கருத்திற்கு மதிப்பளியுங்கள்என்று கேட்கிறேன்.என்னிடம் அவள் கொண்டதைப் போலவே நான் உங்களுக்குக் கடமை பட்டுள்ளேன். மன்மதன் என்மீது கணை தொடுப்பான் அதனால் என்னுடைய சிந்தை திரியும் என்று நீங்கள் நம்பினால் என் தலைக்கவசம் பெண்களின் அடுப்படியில் குழம்புக் கிண்ணமாகட்டும். என் மார்பில் உள்ள கவசம் அடுப்படியில் உள்ள தோசைகல்லாகட்டும்.

கோமகன் : அவள் உன்னுடன் வரச் சம்மதிப்பதும் மறுப்பதும் உங்கள் இருவரின் சொந்தப்பிரச்சினை.இப்போது அவசர நிலை. தேவை உடனடி சம்மதம்.

மு.ம-1 : இன்றிரவே நீ கிளம்ப வேண்டும்.

ஒதெல்லோ : முழுச் சம்மதம்.

கோமகன் : நாளைக்காலை ஒன்பது மணிக்கு உன்னை மீண்டும் சந்திக்கிறேன். உன் நம்பிக்கைக்கு பாத்திரமான ஒரு அதிகாரியை இங்கு விட்டு செல் ஒதெல்லோ. நாளை எங்களுடைய ஆணைகளையும் அறிக்கைகளையும் அவரிடம்தான் கொடுத்து விடப்போகிறோம்.

ஒதெல்லோ: இதோ நம்பிக்கைக்கு பாத்திரமான ஒரு அதிகாரியை விட்டு செல்கிறேன்.என் மனைவியையும் அவர்தான் பாதுகாக்க உள்ளார். அவர் மூலமே தகவல் சொல்லி அனுப்புங்கள்.

கோமகன் : நல்லது. அனைவருக்கும் வந்தனம். (பிரபான்ஷியோவைப் பார்த்து ) உண்மையின் ஜொலிப்பு பார்வைக்கு தெரியாது.பிரபான்ஷியோ உன் மருமகன் கரியவன் இல்லை அழகன்.

மு.ம-1 : நல்லது மூர். டெஸ்டிமோனாவிடம் நல்லவிதமாக நடந்து கொள்

பிரபான்ஷியோ : கண்கள் இருப்பதை மறந்து விடாதே மூர். அவள் தந்தையை ஏமாற்றியவள்.

ஒதெல்லோ : அவள் மேல் நான் கொண்டுள்ள நம்பிக்கைதான் எங்கள் வாழ்விற்கான அடிப்படை. நேர்மையின் உறைவிடமாகத் திகழும் இயாகோ ! உங்கள் பொறுப்பில் என் கண்மணியை ஒப்படைக்கிறேன்.உங்கள் மனைவி அவளை பார்த்துக் கொள்ளட்டும். வா டெஸ்டிமோனா ! என் காதலை, என் கனவை, என் நிஜத்தை , என் பழக்க வழக்கங்களை உன்னுடன் பகிர்ந்து கொள்ள இன்னும் ஒருமணி நேரம்தான் உள்ளது. காலத்தைப் பணிவோம் வா!.

( ஒதெல்லோவும் டெஸ்டிமோனாவும் அகல்கின்றனர் )

ரோடெரிகோ ; இயாகோ

இயாகோ : என்ன விஷயம் வீரனே ?

ரோடெரிகோ : நான் என்ன செய்யட்டும்?

இயாகோ : நன்றாக போர்த்திக் கொண்டு படு.

ரோடெரிகோ : ஒரேடியா தூங்கிடறேன். பிரச்சினை இல்லை.

இயாகோ : முட்டாள் ! மரணம் உன் கைகளில் இல்லை.தோல்விகளுக்காக இறப்பவன் மனிதன் இல்லை. ரோடெரிகோ என்ற பெயரில் எனக்கொரு நண்பன் இருந்ததையே நான் மறந்து விடுவேன்.

ரோடெரிகோ : புயலை சிறுபடகு எதிர்ப்பதால் என்ன பயன் ? எமனின் மருந்துச்சீட்டில் மரணம் என்பதைத் தவிர வேறு என்ன எழுதியிருக்க முடியம்?

இயாகோ : கஷ்டம். என்னுடைய இருபத்தெட்டு வருட அனுபவத்தில் சாதகம் எது பாதகம் எது என்று என்னால் கண்டுபிடிக்க முடியும். இருப்பினும் தன்னைத் தானே காதலிக்கத் தெரியாத முட்டாளை இப்போதுதான் சந்திக்கிறேன்.தகுதியற்ற ஒரு பெண்ணின் காதலுக்கு என் வாழ்வை முடித்துக் கொல்வதற்கு பதில் ஒரு குரங்காவாவது வாழ்ந்திருப்பேன்.

ரோடெரிகோ : என்ன செய்வது இயாகோ ? காதலிப்பவன் வெட்கப்படலாமா? காதலினால் நான் பெற்ற காயங்களை ஆற்றும் மருந்து என்னிடம் இல்லை. என் இயல்பை மாற்றும் ஆற்றல் என் கண்ணியத்தில் இல்லை.

இயாகோ : ப்ச் ! கண்ணியத்தைப் பற்றி பேசுகிறாய். தேவையற்றது. நாம் எவ்வாறோ நம் கண்ணியமும் அவ்வாறே. நமது மனம் ஒரு பூந்தோட்டம் என்றால் நமது மணஉறுதிதான் தோட்டக்காரன். நம் மணஉறுதிதான் விதைக்கப்படவேண்டியது கண்ணியத்தையா அல்லது சாமர்த்தியங்களையா என்பதை நிச்சயிக்கிறது. . நம் மணஉறுதிதான் நமது தோட்டம் பூத்துக் குலுங்க வேண்டுமா அல்லது தரிசாகப் போகவேண்டுமா என்பதை முடிவு செய்கிறது. மனம் நம் உடலைவிட வலிமையானது. நமது துடிப்பிற்கும் நமது பகுத்தறிவிற்கும் ஒரு சமன் இருக்குமேயானால் மோகமும் நடத்தை கேடும் நம்மை எதுவும் செய்ய முடியாது. காதல் என்ற கனியைக் கொடுக்கும் மோகத்தையும் துடிப்பையும் ஒரு கட்டுக்குள் வைக்கவேண்டும் என்பதில் அர்த்தம் உள்ளது.

ரோடெரிகோ : உன்னுடன் எனக்கு உடன்பாடில்லை.

இயாகோ : இரத்தத்தின் கொழுப்புதான் காதல். மணஉறுதி அதனைக் கட்டுபடுத்தும். நீரில் மூழ்குவதை குறித்துக் கூறினாய். பூனைகளும் நாய்க்குட்டிகளும்தான் மூழ்கும். ஒரு மனிதனை போல நடந்து கொள்.உன்னை சேர்த்து கட்டு. உன்னுடைய திறமையின் காரணமாகவே நான் உன்னை நண்பனாக ஏற்றுக் கொண்டுள்ளேன். உனக்கு உதவ இதுதான் சந்தர்ப்பம். உன் மணிபர்சில் பணம் நிரப்பி கொள். என்னுடன் கிளம்பு. ஒரு பொய்த்தாடியை மாட்டி கொண்டு வேஷம் போட்டு கொண்டு வா. உன் மணிபர்சை நிரப்பிக் கொள்ள மறக்காதே. இன்னும் கொஞ்ச காலத்தில் மூரின் மேலான காதல் டெஸ்டிமோனாவிடம் குறைந்துவிடும். அதைப்போலத்தான் மூருக்கும்- உன் மணிபர்சை நிரப்ப மறக்காதே- ஆவேசமாக தொடங்கும் எல்லா காதலும் ஆவேசத்தில்தான் முடியும். மணிபர்சை நிரப்பு. இந்த மூர்கள் மணஉறுதியற்றவர்கள் உன் மணிபர்சை நிரப்ப மறக்காதே. அவனுக்கு இப்போது இனிக்கும் காதல் இன்னும் சிறிது நாளில் கசக்கத் தொடங்கி விடும்.அவளும் வேறு ஒரு வாலிபனைத் தேடத் தொடங்குவாள். மூருடனான துடிப்பு அடங்கும்போதுதான் தான் எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டோம் என்பதை உணர்வாள்.அந்த நேரம் வேறுஒருவனுக்காக மூரைக் கைகழுவி விடுவாள். எனவே உன் மணிபர்சில் நிறைய பணம் இருக்கட்டும். உன்காதல் நரகம் என்றால் அதற்கு வேறு வழியைத் தேடு மூழ்க வேண்டாம். உன்னால் எவ்வளவு பணம் எடுத்துக் கொள்ள முடியுமோ அவ்வளவு பணம் எடுத்துக் கொள். அலையும் மூருக்கும் , சூது நிரம்பிய டெஸ்டிமோனாவிற்கும் நடுவில் உள்ள ஒழுக்கமும், திருமண பந்தமும் உறுதியில்லை என்றால் என் தந்திரம் அவற்றை குலைத்துவிடும்.அப்போது உன் டெஸ்டிமோனாவை நீ அடையலாம். எனவே பணத்துடன் தயாராக இரு. நீரில் மூழப்போகும் உன் என்னத்திற்கு முடிவு கட்டு. அதைப் பற்றி எண்ணாதே.

ரோடெரிகோ : உன்னை எண்ணும்போது என் நம்பிக்கையின் பக்கம் நிற்பாயா?

இயாகோ: நீ என்னை முழுவதும் நம்பலாம் பணத்தை மட்டும் தயாராக வைத்துக் கொள். ஏற்கனவே பலமுறை சொன்னதுதான் நான் அந்த மூரை அடியோடு வெறுக்கிறேன். இப்போது உனக்கும் அவனை வெறுக்க ஒரு காரணம் கிடைத்து விட்டது. வன்மத்தில் நாம் இருவரும் இணைவோம். உன்னால் அவளை பெண்டாளமுடியும் என்றால் அது உனக்கு மகிழ்ச்சி எனக்கு ஒரு விளையாட்டு. காலத்தின் கர்ப்பத்தில் வெளிவராத பல நிகழ்ச்சிகள் இன்னும் உள்ளன. பணத்தை தயார் பண்ணு. இது குறித்து நாளை மேலும் யோசிப்போம். வருகிறேன்.

ரோடெரிகோ : காலை மீண்டும் எங்கும் சந்திக்கலாம்?

இயகோ : என் விடுதியில்.

ரோடெரிகோ : சீக்கிரம் வந்து விடுகிறேன்.

இயாகோ : இது போதும். போய் வா ரோடெரிகோ. நான் சொன்னது காதில் விழுந்தது இல்லையா?

ரோடெரிகோ : என்ன சொன்னாய்?

இயாகோ : நீரில் மூழ்குவது குறித்த உன் நினைப்பை மாற்று. சரியா?

ரோடெரிகோ : என் நினைவை நான் மாற்றிக் கொண்டுவிட்டேன். அடுத்து என்னுடைய நிலங்களை விற்று பணமாக்குவதுதான்.

இயாகோ : கிளம்பு. விற்று பணமாக மாற்று. (ரோடெரிகோஅகல்கிறான் )

இந்த முட்டாள் என் பர்சை தொட அனுமதிக்கமாட்டேன். இது போன்ற முட்டாளுடன் என் நன்மைக்கும் கேளிக்கைக்கும் உறவாடும்போது என் மூளையையும் உலக அனுபவத்தையும் உபயோகிப்பேன்.இந்த மூரை நான் வெறுக்கிறேன். என் மனைவியுடன் இவன் படுத்திருக்கிறான் என்றொரு வதந்தி உலவுகிறது. உண்மையா என்று தெரியவில்லை. அது நிரூபிக்கப்படவில்லை என்றாலும் அதன் சாத்தியத்தை நான் நம்புகிறேன்ஆனால் அவன் என் அலுவலைக் களவாடி விட்டான்.அவன் என்னை நன்றாகவே நடத்துகிறான். இதனை எனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளப்போகிறேன் . கேஷியோ நல்லவன். இனி ஆகவேண்டியதை யோசிக்கிறேன்.அவன் இடத்தை பிடிப்பது: என் மண என்னத்தை நிறைவேற்றிக்கொள்வது; இந்த இரண்டு சூழ்ச்சிகளையும் முடிக்கவேண்டும்.சிறிதுகாலம் சென்றபின் கேஷியோ ஒதேல்லோவின் மனைவியுடன் அடிக்கடி நெருக்கமாக இருப்பதாக மூரின் காதுகளில் போட்டு வைப்பேன். கேஷியோவும் சந்தேகப்படும் அளவிற்கு அழகான வடிவானவன்தான். பெண்களை வசியப்படுத்தக் கூடிய தோற்றமுடையவன்தான்.மூர் வெளிப்படையானவன். திறந்த மனமுடையவன்.மனிதர்கள் அவ்வளவு நேர்மையானவர்கள் என்று நம்புகிறான் ஒரு கழுதையைபோல. என் திட்டம் ஏற்கனவே முழுமை பெற்றுவிட்டது. என் வஞ்சக சூழ்ச்சியும். இரகசிய வேலைகளும் அதற்கு மேலும் உரமூட்டவேண்டும்.

அங்கம் ஒன்று நிறைவு பெற்றது.

 

 

 

 

: