Category: புகைப்படங்கள்

எழுத்தாளர்களின் புகைப்பட கேலரி / படங்கள் / செல்வம் ராமசாமி

எழுத்தாளர்களின் புகைப்பட கேலரி ஒன்றை உருவாக்கும் நோக்கில் இங்கே சில படங்கள் /

நன்றி
படங்கள் செல்வம் ராமசாமி

தமிழச்சி தங்கபாண்டியன்

தமிழச்சி தங்கபாண்டியன்

எஸ்.ஏ.பெருமாள்

எஸ்.ஏ.பெருமாள்

சீராளன்

சீராளன்

பெங்களூர் பெரிய ஆலமரம் – படங்கள்: ராமலக்ஷ்மி

download (3)

download (5)

வெண்ணிற இரவுகள் இயக்குனர் பிரகாஷ் ராஜாராம் – நேர்காணல்: கே.பாலமுருகன்

1381780_10202359297082407_1248781799_n

 

 

 

 

 

 

 

 

‘சாதிவெறி பிடித்தவர்களுக்கு இந்தப் படம் சூடு போடும்’ – இரா.பிரகாஷ்

 

மலேசியத் தமிழ் சினிமா துறையில் கடந்த 10 வருடங்களாகத் தீவிரமாக இயங்கி வரும் படைப்பாளி திரு.இரா.பிரகாஷ். வெண்ணிற இரவுகள் தொடங்கி மியான்மார் படம்வரை இயக்கியுள்ளார். இவருடைய ‘வெண்ணிற இரவுகள்’ படம் சர்வதேசத் திரைப்பட விழாக்களில் சிறப்புக் காட்சிக்காக ஒளிப்பரப்பப்பட்டுள்ளதோடு பலரின் பாராட்டுகளையும் பெறிருக்கின்றது.

கேள்வி: வெண்ணிற இரவுகள் படத்தின் கதை இன்று ஒரு படைப்பாக உருவாகி வர ஏதேனும் தனித்துவமான காரணம் உண்டா?

ஆமாம் உண்டு. ஒரு கலைஞனுக்கு அவன் வாழ்க்கையில் நடந்த அனுபவங்கள்தான் அவன் படைப்பிற்கு முதல் காரணமாக இருக்க முடியும். என் வாழ்வில் நடந்த அனுபவங்களை எந்தவொரு சினிமாத்தனமும் இல்லாமல் காட்ட முயற்சி செய்திருக்கிறேன். சாதரணமாகக் கதையைச் சொல்லாமல் உலகம் அதிகம் அறியாத மியன்மார் தமிழர்களையும் அவர்களின் வாழ்வையும் இப்படத்தில் இணைத்துள்ளேன்.
2. மியன்மாரில் இருக்கும் தமிழர்களையும் மையப்படுத்தியிருப்பது பாராட்டத்தக்க முயற்சி. இப்படம் தொடர்பான கதை கலந்துரையாடல்கள் எங்கே எப்பொழுதெல்லாம் நடத்தப்பட்டது? எப்படி அமைந்தது?

 

பத்து வருடங்களாகக் கலைத்துறையில் இருக்கின்றேன். நான் ஆர்வம் காட்டும் இந்தத் துறையில் ஏதேனும் சாதிக்க வேண்டும் என்ற வேட்கை இருந்தது. ஆனால், அதே சமயம் செய்வதைச் சரியாகச் செய்ய வேண்டும் என்ற காரணத்தால் இத்தனைநாள் அனுபவத்தைத் தேடி அலைந்தேன். அதில் இப்படம் தொடர்பாக நடந்த கதை கலந்துரையாடலும் முக்கியமானதாகும். உண்மையான சினிமாவின் மீது ஆர்வமும் பயிற்சியும் கொண்ட நண்பர்கள் சிவா பெரியண்ணன், செந்தில் குமரன், சஞ்சய் டேவிட் போன்றவர்களுடன் ‘வெண்ணிற இரவுகள்’ கதை கலந்துரையாடலில் ஈடுப்பட்டேன். நிறைய கருத்துப் பறிமாற்றம் நிகழ்ந்தன. மேலும் ‘வெண்ணிற இரவுகள்’ என்ற பெயரை இப்படத்திற்கு வைத்ததே நண்பரும் இப்படத்தின் துனை இயக்குனருமான சிவா பெரியண்ணன்தான். கதை கலந்துரையாடல் இப்படத்தை மேலும் செம்மைப்படுத்தின.

3. இது போன்ற கதை குறித்த விவாதங்கள், கலந்துரையாடல்கள் இன்றைய காலக்கட்டத்தின் தரமான சினிமா உருவாக்கத்திற்கு முக்கியமாகின்றது. வெண்ணிற இரவுகள் இந்தச் சமூகத்தில் வாழும் எந்தநிலை மனிதர்களைப் பற்றி பேசுகிறது?

 

சமூகத்தில் முக்கியமானவர்களாகக் கருதப்படும் படித்தவர்களும், நவீனமாக வாழத் தெரிந்தவர்களும் சாதி என வரும்போது மட்டும் அதன் மீது வெறிப்பித்து அலையும் சூழல் உருவாகின்றது. அது போன்ற மனிதர்களைத்தான் நான் இப்படத்தின் வழி பேசியுள்ளேன். அவர்கள் படித்தவர்கள் ஆனால் ஆபத்தானவர்கள்.

4. சாதியம் சமூக அடுக்குகளில் எல்லாம் நிலைகளிலும் பதிந்து கிடக்கின்றன. சரியான நேரத்தில் முக்கியமான விசயத்தைப் படத்தில் பேசியிருக்கிறீர்கள். எந்தெந்த நாடுகளில் படம் சிறப்புக் காட்சிக்கு ஒளியேறியது? அங்குள்ள மக்களின் வரவேற்பும் கருத்தும் எப்படி அமைந்திருந்தன?

 

வெண்ணிற இரவுகள் படம் இதுவரை அமெரிக்கா, பிரான்ஸ், நோர்வே, ஜெர்மனி, இந்தியா, மியன்மார் போன்ற நாடுகளில் சிறப்புக் காட்சிக்காக ஒளிப்பரப்பட்டுள்ளது. இன்னும் ஆஸ்ட்ரோலியா, நியூசிலண்ட், தென் ஆப்பிரிக்கா, கனடா, இலங்கை போன்ற நாடுகளிலும் முயற்சி செய்து வருகிறோம். கண்டிப்பாக மலேசியச் சினிமாவை அங்கெல்லாம் எடுத்துச் செல்வோம். இதுவரை அவர்கள் பார்த்திராத பழக்கமில்லாத கலாச்சார வாழ்வை இப்படம் காட்டுவதாகவும் அது அவர்களைக் கவர்வதாகவும் பலவகையான கருத்துகள் கிடைக்கப்பெற்றன. மேலும் எங்களின் இந்தப் படத்தில் தென்னிந்திய சினிமாவின் சாயல் இல்லை. அசலாக மலேசிய வாழ்வையும் மலேசியக் கலாச்சாரத்தையும் மட்டுமே காட்டியுள்ளோம். காட்சியமைப்புத் துவங்கி பாடல்கள் வரை அனைத்திலுமே இந்திய தமிழ் சினிமாவின் சாயல் விழுந்துவிடாமல் இருக்கும்படி கவனமாகப் பார்த்துக்கொண்டோம். இதுவே வெளிநாடுகளில் வசிக்கும் அவர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கின்றது.

5. மலேசியாவில் ஓர் இயக்குனராக தடம் பதிக்க நினைக்கும் ஒருவருக்கு உங்கள் அனுபவத்திலிருந்து சொல்ல நினைப்பது?

 

இயக்குனராக நினைப்பதில் தவறில்லை ஆனால் முதலில் அதற்காகக் கொஞ்சமாவது படிக்க வேண்டும் அல்லது மூன்று வருடமாவது அனுபவம் இருந்திருக்க வேண்டும். முக்கியமாக தொலைக்காட்சி நாடகத்திற்கும் சினிமாவிற்கும் வித்தியாசம் தெரிந்திருக்க வேண்டும். இந்திய சினிமா தழுவல் இல்லாமல் அசலான பிராந்திய சினிமாவைக் கொடுக்கத் தெரிந்திருக்க வேண்டும். மலேசிய வாழ்க்கையைச் சொல்லக்கூடிய கதைகளைத் தேர்ந்தெடுக்கத் தெரிந்திருக்க வேண்டும். தன்னால் எந்த மாதிரியான படங்களைக் கலப்பு இல்லாமல் கொடுக்க முடியும் என்கிற முன்னறிதல் ஓர் இயக்குனருக்குக் கட்டாயம் இருக்க வேண்டும். சினிமா எடுக்கிறோம் என்கிற பெயரில் நகைச்சுவை, சண்டை, மர்மம், காதல் என அனைத்தையும் ஒரே படத்தில் திணித்து மசாலாவைத் தந்துவிடுகிறார்கள். இந்தக் குழப்பம் நடக்காமல் இருக்க வேண்டுமென்றால் முதலில் தனக்கு எந்தத் தன்மைக் கொண்ட படம் பிடித்திருக்கிறது தன்னால் எந்த வகையான படத்தைத் தந்தால் சிறப்பாக மக்களைச் சென்றடைய செய்ய முடியும் என்கிற தெளிவு இருக்க வேண்டும். பொது அறிவு இருக்க வேண்டும், நிரம்ப வாசிக்க வேண்டும். ஆர்வம் இருக்க வேண்டும் ஆனால் ஆர்வக்கோளாறு இருக்கக்கூடாது.

 

603235_10202359297042406_165016855_n (1)

 

 

 

 

 

 

 

6. வெண்ணிற இரவுகள் ஏன் இன்னமும் வெளிவரவில்லை? ஏன் தாமதம்?

 

மலேசியப் படத்தை மலேசியாவில் ஒளிப்பரப்ப எங்களுக்குத் திரையரங்குகள் கிடைக்கவில்லை. இதுவரை வெளிவந்த மலேசியத் தமிழ்ப்படங்கள் நல்ல வசூலையோ அல்லது நல்ல தரத்தையோ கொடுத்ததில்லை. ஆர்வம் என்கிற பெயரில் வருடத்திற்குப் பல படங்கள் அரைகுறையாக எடுத்து மலேசியத் தமிழ்ப்படம் என்றாலே தவறான கருத்து மக்கள் மத்தியில் பரவ வழிச்செய்துவிட்டார்கள். இதுவே ஒரு சாபக்கேடும்கூட.

7.மலேசியத் தமிழ் சினிமாவின் வளர்ச்சியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அது வெண்ணிற இரவுகளிலிருந்து தொடங்கியிருக்கிறது என எடுத்துக்கொள்ளலாமா?

 

மலேசியத் தமிழ்ப்படங்கள் இன்னமும் வளரவே இல்லை. அதிக எண்ணிக்கையில் படம் வெளிவருவதுனால் மட்டுமே திரைப்படத்துறை வளர்ந்துவிடாது. தரத்தை முதன்மைப்படுத்தி அப்படியொரு படைப்பிற்காக உழைக்கத் தெரிந்திருக்க வேண்டும். ஆனால், யாரும் அதை முக்கியமானதாகக் கருதுவதில்லை. விசயம் தெரிந்த நல்ல இயக்குனர்கள் படம் செய்ய வேண்டும் எனக் காத்திருக்கிறார்கள். ஆர்வக்கோளாறு மிகுதியால் முழுமையாக விசயம் அறியாமலே படங்களை எடுத்துக் குவித்துத் தள்ளுபவர்கள் இருக்கிறார்கள். இந்த நிலை அப்படியே நீடிக்குமானால் 100 வருடங்கள் ஆனாலும் மலேசியச் சினிமாத்துறையை வளர்க்க முடியாது. வெண்ணிற இரவுகள் படம் மலேசிய சந்தைக்காகச் செய்யப்பட்ட படைப்பு கிடையாது. புலம்பெயர்ந்து வாழும் உலகத் தமிழர்களுக்காகச் செய்யப்பட்ட படைப்பு. இது மாற்றத்தைக் கொடுக்குமா என்பது மக்களின் வரவேற்பிலேயே உள்ளது.

8. மலேசியப் படைப்பிற்கு மலேசியர்களின் ஆதரவுகள் எப்படி உள்ளன? தியேட்டர்கள், அமைப்புகள் ஏதேனும் உங்களுக்கு உதவியாகவோ ஆதரவாகவோ இருந்தனவா?

 

மக்களிடம் ஆதரவு குறைவாகத்தான் இருக்கிறது. இதற்கு முன் தரமான ஒரு படைப்பைக் கொடுத்து மலேசியத் தமிழ் இரசிகர்களின் மனத்தைப் பாதிக்காதது தங்களை இயக்குனர் எனச் சொல்லிக்கொண்டு அரைவேக்காட்டுத்தனமாகப் படம் எடுத்தவர்கள் செய்த தவறு. அதற்கு இப்பொழுது கூலி கிடைகின்றது. ஒவ்வொருமுறையும் திரையரங்கிற்குச் சென்று ஏமாந்து வந்தவர்கள்தான் அதிகம். மலேசியத் திரையரங்கு முதலாளிகள் மலேசியத் தமிழ்ப்படங்களை மதிப்பதும் இல்லை. வியாபாரத்தை முதன்மைப்படுத்தும் அவர்கள் தமிழ்நாட்டுப் படங்களுக்கே முதலிடம் கொடுக்கிறார்கள். அதையே தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடுகிறார்கள். இந்த நிலையில் தரமான படத்தை எடுத்துக் கையில் வைத்திருக்கும் ஒருவர் போராடித்தான் அதனை மக்களிடம் போய் சேர்க்க வேண்டியுள்ளது.

9. வெண்ணிற இரவுகளுக்குப் பிறகு அடுத்து மலேசிய வாழ்வைக் காட்டக்கூடிய படங்கள் ஏதேனும் திட்டத்தில் உண்டா?

 

இதற்குப் பிறகு மியன்மார் படங்களை இயக்கவிருக்கிறேன். ஏற்கனவே “Royal Guile Mask’ என்ற மியன்மார் படத்தை இயக்கியிருக்கிறேன். இன்னும் சில மியன்மார் பட வாய்ப்புகளும் கைவசம் உள்ளன. அதற்கடுத்து தமிழ்ப் படங்களை இயக்கினாலும் அது மலேசியப்படம் என்கிற அடையாளத்தில் இருக்காது. எவ்வளவுத்தான் நன்றாகப் படம் எடுத்திருந்தாலும் அது மலேசியத் தமிழ்ப்படம்தானே என்ற அலட்சியப்போக்கு இங்கு வேரூன்றிவிட்டது. உள்ளூர் படம்தானே என்ற புறக்கணிப்பும் கீழான பார்வையும் மக்களிடையே இருக்கின்றது. இனி மலேசியா வாழ்வைச் சொல்லும் வெளிநாட்டுப் படங்களையே இயக்கவிருக்கின்றேன்.

10. வெண்ணிற இரவுகள் இந்தச் சமூகத்தை எந்த விதத்தில் பாதிக்கும் என நினைக்கிறீர்கள்?

 

மக்கள் திரையரங்கம் சென்று ‘வெண்ணிற இரவுகள்’ படத்தைப் பார்த்தால், கட்டாயம் மலேசியாவிலும் தரமான படத்தை எடுக்க முடியும் என்கிற உண்மையை உணர்வார்கள். இதுவே முதல் கட்டப் பாதிப்பாகும்.

உங்களின் ‘வெண்ணிற இரவுகள்’ படம் மலேசியத் தமிழ் சினிமாவின் முதல்கட்ட வளர்ச்சியை நிர்ணயம் செய்யும் என நம்புகின்றேன். உங்களின் பணி தொடர வாழ்த்துகள்.

நேர்காணல்: கே.பாலமுருகன்

 

•••

பூவில் வண்டு – ராமலக்ஷ்மி

பூவில் வண்டு

சிரம் தாழ்த்தி – ராமலஷ்மி

சிரம் தாழ்த்தி.. (1)

பூம்பூம் மாட்டுக்காரி – வனிலா பாலாஜி

பூம்பூம் மாட்டுக்காரி

9620704924_9ff06eebbd

 

 

 

நண்பேன்டா – வனிலா பாலாஜி

நண்பேன்டா

9568328280_eb369a040e_z

அருண் செல்வராஜ் மற்றும் ராமலட்சுமி புகைப்படங்கள்

அருண் செல்வராஜ்   புகைப்படங்கள்

டுலீப் திருவிழா

 

download (4)

 

 

 

 

 

 

 

தியானம்

download (3)

 

 

 

 

 

 

 

ராமலட்சுமி சேலத்தில் எடுத்த படங்கள்

 

download (2)

 

 

 

 

 

 

download (1)

,

 

 

 

 

 

download

புகைப்படம் மெர்வின் ஆன்டோ

download (7)

புகைப் படங்கள் சுந்தர ராஜன்

sundera rajan 2