Category: இதழ் 126

நவீனத்துவத்துக்கு அப்பால்: தமிழ்ச்சிறுகதையின் இயங்குவெளி / ஜிஃப்ரி ஹாஸன் ( இலங்கை )

download (39)

நவீன இலக்கியம் 1800 களிலிருந்தே தொடங்குகிறது. அந்தவகையில் பார்த்தால் நவீன இலக்கியமானது இன்று 217 வருடங்களே பழமைவாய்ந்தது. இந்த 217 வருடங்களில் நவீன இலக்கியம் உலகளவில் வேகமாகவே வளர்ந்துள்ளது. பல மகத்தான இலக்கியப் பிரதிகளை நவீன இலக்கியப் படைப்பாளிகள் உலகுக்கு வழங்கியுள்ளனர். ஏறத்தாழ உலகின் எல்லா மொழிகளிலுமே இந்த நவீன இலக்கியங்கள் உருவாகியுள்ளன. எனினும் போட்டி மிக்க உலக இலக்கிய அரங்கில் சில மொழி இலக்கியங்களே கவனப்படுத்தப்படுகின்றன.

நவீன இலக்கியங்கள் அதிகமும், நாவல், கவிதை, சிறுகதை போன்ற இலக்கிய வடிவங்களிலேயே தோற்றங்கொண்டு வளர்ந்தன. தமிழிலும் நவீன கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் குறிப்பிட்டுச் சொல்லும்படியான வளர்ச்சியை, முன்னேற்றத்தை வெளிப்படுத்தின. ஒரு காலகட்டத்தில் தமிழ்ப் புனைவுலகில் நவீனத் தமிழ்ச் சிறுகதைகளே நவீன தமிழ் நாவல்களை விட எழுச்சியுடன் படைக்கப்பட்டு வந்தன.

நவீனத் தமிழ்ச் சிறுகதைகளைத் தமிழில் வளப்படுத்தி முன்னெடுப்பதில் பல படைப்பாளிகளின் பங்களிப்பு இருந்தது. புதுமைப் பித்தனில் தொடங்கி ஜே.பி. சாணக்யா வரை இந்தப் பங்களிப்பாளர்களின் பட்டியல் மிகவும் விரிந்தது. தமிழில் 19ம் நூற்றாண்டில் சிறுகதை முயற்சிகள் தொடங்கப்பட்டாலும் இருபதாம் நூற்றாண்டில்தான் நவீன சிறுகதைகள் அதன் சரியான அர்த்தத்தில் வேரூன்றி நிலைபெற்றன. தமிழின் நவீன சிறுகதை எழுத்தாளர்கள் எல்லோரும் நவீனத்துவம் (modernism) வரைந்த எல்லைக்குள்ளேயே மிக நீண்ட காலமாக நின்று கொண்டு தம் எழுத்துச் செயற்பாட்டை முன்னெடுத்தனர். ஏறத்தாழ நூறு ஆண்டுகள் எனும் ஒரு நீண்ட யுகம் தமிழில் தனி நவீன கதைகளின் காலமாகவே இருந்து வந்தது.

download (51)

பின்னர் அந்த நிலைமை தமிழவன், ரமேஷ்-பிரேம், எம்.டி. முத்துக்குமாரசாமி, எம்.ஜி. சுரேஷ், சாரு நிவேதிதா போன்றவர்களால் மீறப்பட்டு தமிழ்ச் சிறுகதைகள் நவீனத்துவத்தைத் தாண்டி கொண்டு செல்லப்பட்டன. அவர்கள் தெளிவாக நவீனத்துவத்தின் எல்லைக்கோடுகளை மீறி தமிழில் புதிய கதை உலகுக்கான பாதையை வரைந்தனர். நவீன இலக்கிய விமர்சகர்களின் கடுமையான தாக்குதலை வெற்றிகரமாக முகங்கொடுத்தே தமிழில் அந்தப் புதிய உடைப்பு நிகழ்த்தப்பட்டது.

நவீன கதைகளை நியாயப்படுத்தியும், பின்-நவீனப் பண்புக்கூறுகள் கொண்ட கதைகளை நிராகரித்தும் நவீன இலக்கிய விமர்சகர்களால் மிகைநிலைக் கதையாடல்கள் (meta narratives) முன்வைக்கப்பட்டன. பின்நவீன கதைகள் குறித்த ஜெயமோகனின் விமர்சனங்கள் இந்த வகையைச் சார்ந்தவைதான். அவர் நவீன இலக்கியத்தின் வரையறைகளை மீறி எழுதும் புதிய படைப்பாளிகள் பலரையும் நிராகரிக்கிறார். அவர்களின் படைப்புகள் புனைவுத் தன்மையற்றிருப்பதாக அடிக்கடி சொல்கிறார். இதனால் பின்நவீனப் படைப்புகள் மேலோட்டமானவை, ஆழமற்றவை, புனைவுத்தன்மையற்றவை என அவர் குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார். அது அவரது மிகவும் மேலோட்டமான புரிதலிலிருந்து மேற்கிளம்பும் விமர்சனமாகும். நவீன இலக்கியத்தில் வினைபுரியும் அவர் பின்-நவீன இலக்கிய உலகத்தால் தான் புறக்கணிக்கப்படக் கூடும் என்ற அச்சத்தில் எழுப்பும் குரலாகவே அவரது அந்த மதிப்பீடுகளைக் கருத வேண்டியுள்ளது.

images (44)

உலகளவில் பின்-நவீனப் புனைவுகளாக கொண்டாடப்படும் சில புனை பிரதிகளில் வெளிப்படும் ஆழ்ந்த புனைவுத் தன்மையையும், புனைவின் அழகியலையும் கவனத்திற் கொண்டு நோக்கும் போது இந்த மதிப்பீடு அதன் அர்த்தத்தை இழந்து விடுகிறது. தமிழின் பின்-நவீனப் புனைவுகள் கூட இப்படியான மிகைநிலைக் கதையாடல்களால் புறந்தள்ளிவிட முடியாதபடி புனைவின் சாத்தியப்பாடுகளையும், அழகியலையும் கொண்டிருப்பதையும், காலப்போக்கில் மகத்தான தமிழ் நவீனத்துவப் படைப்புகளுக்கு (modern fiction) நிகரான தமிழ் பின்-நவீன படைப்புகள் வெளிவருவதற்கான சமிக்ஞைகள் தமிழ்ச்சூழலில் தென்படுவதை நவீன இலக்கிய விமர்சகர்கள் கவனத்திற் கொண்டே ஆக வேண்டும். இதனால் தமிழ்ச் சூழலில் இந்த ஒப்பீட்டை கொஞ்சம் ஒத்திப் போட வேண்டிய தேவையேயுள்ளது.

நவீனத்துவம் (modernism) கலையை மனித வாழ்வு பற்றிய உண்மையாகவே நோக்குகிறது. அதன்படி, ஒரு இலக்கியப் படைப்பின் தொழிற்பாடு மனித வாழ்வை உள்ளபடி சித்தரிப்பதாகும். தமிழில் புதுமைப்பித்தன் தொடங்கி சுந்தரராமசாமி வரைக்கும், ஜெயகாந்தன் தொடங்கி ஜெயமோகன் வரைக்கும் வாழ்வை உள்ளபடி சித்தரித்தல் என்ற நவீன இலக்கிய நோக்கின் ஏக பிரதிநிதிகளாகவே வலம் வந்தனர். வாழ்வை உள்ளபடி சித்தரித்தல் என்ற நவீனத்துவ கோஷத்தின் பின்னால் உண்மையில் மறைந்திருப்பது வாழ்வைப் போதிக்கும் படைப்பாளியின் தன்னகங்காரமும், அதிகாரத் தொனியும்தான் என்பதை வாசகன் கண்டுணரும் போது ஒருவித அலைக்கழிப்புக்குள்ளாகிறான். இன்று நான் நவீன இலக்கியப் பிரதிநிதிகளைப் பார்த்து எழுப்ப விரும்பும் கேள்வி இதுதான். வாழ்வை உள்ளபடி சித்தரிக்கின்ற நவீன படைப்புகள் மூலம் வாழ்வைப் புரிந்துகொண்டவர்கள் எத்தனை பேர்? அது நிகழ்ந்தால் உண்மையில் அந்தப் பணியை நவீன இலக்கியப் பிரதிகளால் மட்டும்தான் செய்ய முடிகிறதா?

download (48)

இந்த இடத்தில் பின்-நவீன சிந்தயைாளர் லியோடார்ட் இன் கருத்து கவனிப்புக்குரியதாகிறது. ஓவியத்தின் நவீனத்துவ விதிகள் குறித்து அவர் சொல்லும் போது இப்படிச் சொன்னார், “தமது முன்னோர்களிடமிருந்த ஓவியத்தின் விதிகள் அல்லது கதையாடலின் விதிகளைக் கேள்விக்குள்ளாக்க வேண்டும். விரைவில் அவ்விதிகள் ஏமாற்றுவதற்கும், மயக்குவதற்கும், மறு உறுதி செய்வதற்குமானவையாக, உண்மையானவர்களாக இருப்பதை தடுப்பவையாக அவர்களுக்கு தோன்ற வேண்டும்”

உண்மையில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இன்றைய உலகின் புனைவுத் தன்மையும், நிச்சயமற்ற தன்மையும் வாழ்வை எந்த நம்பிக்கைக்கூடாகவும் புரிந்துகொள்ள முடியாத சிக்கல் தன்மையையே தந்துள்ளன. இந்நிலையில் வாழ்வை விளக்கமுற்படும் படைப்பு என நாம் எந்தவொரு படைப்பையும் எப்படிக் கொண்டாட முடியும். பின்-நவீனக் கதைகளும் மனித வாழ்வைப் பற்றிப் பேசுபவைதான். ஆனால் அது வாழ்வை யதார்த்தத்தின் (realism) வரண்ட மொழியால் வரையறுத்துக் காட்டாமல் கற்பனையின் அதீத மொழியால் புனைந்து காட்டுகிறது.

இன்றைய தமிழ்ச் சிறுகதைகளை அதன் வடிவம் (form) (பெரும்பாலும் கூறுமுறை) மற்றும் உள்ளடக்கம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு மூன்று வகையினமாகக் குறிக்கலாம்.

தனி நவீன கதைகள்.
நவீனத்துவம் மற்றும் பின்நவீனத்தும் எனும் இரு பண்புகளையும் கொண்ட கதைகள்
தனிப் பின்-நவீனக் கதைகள்.

தனி நவீனத்துவக் கதைகள்

தமிழ்ச் சிறுகதைவெளியில் தனி நவீனத்துவக்கூறுகளைக் கொண்ட கதைகளே அதிகம். ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு கால வளர்ச்சியையுடையது தமிழில் நவீனச் சிறுகதைகள். இன்று தமிழின் நவீன சிறுகதைகள் எண்ணிக்கையில் எத்தனை ஆயிரங்களைத் தாண்டி இருக்கும்? என்பதைக் கண்டறிவதற்கு நாம் ஒரு இலக்கியக் கணக்கெடுப்பையே செய்ய வேண்டியுள்ளது. மிகச்சிறந்த நவீனச் சிறுகதை எழுத்தாளர்களையும் தமிழ் உலகுக்குத் தந்துள்ளது. தமிழ் தனி நவீன கதைகள் புதுமைப்பித்தனில் தொடங்கி இன்று வரை எழுதப்பட்டு வருகின்றன. இன்னும் சில ஆண்டுகள் வரை அது நீண்டு செல்வதற்கான வாய்ப்புகளே தமிழ்ச் சூழலில் உள்ளது.

நவீன கதைகளை வாசகர்களுக்கு மிக எளிமையாகவே புரிய வைத்துவிடலாம். ஒரு நவீன தமிழ்ச் சிறுகதையானது தொடக்கம், உச்சம், முடிவு எனும் மூன்று புள்ளிகளிலேயே சுழலக்கூடியது. அது ஒரு மைய சம்பவத்தைக்கொண்டிருக்கும். ஒரு மையக் கதாபாத்திரத்தின் வழியே அந்த மைய சம்பவம் படிப்படியாக கதையாசிரியரால் நகர்த்தப்படும். ஒரே தொடருறு (continuity) எழுத்து முறையும் அதீத வர்ணனைகளும் குறுக்கீடு செய்தபடி இருக்கும்.

நவீன சிறுகதையில் கதையின் தொடக்கத்திலிருந்து அதன் முடிவு வரைக்கும் கதாபாத்திரம் ஒன்றோ, பலவோ இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நவீன படைப்பாளியிடம் இருக்கும். அந்தக் கதாபாத்திரங்களுக்கு இறுதிவரை என்ன நடக்கிறது என்ற ஒருவித படபடப்பு ஒரு புறம் வாசகனை கலங்கவைக்கிறது. இத்தகையதொரு பதட்டமான சூழலில் இலக்கியத்தை நிலைநிறுத்துவது நவீன இலக்கியச் சூழலின் ஒரு விளைவுதான். எனினும் அந்தப் பதட்டம் ஒரு பரபரப்பான வாசிப்பையும், வாசகனின் இலக்கிய ஈடுபாட்டையும் தொடர்ந்து பேணிக்கொள்ள பங்களிப்புச் செய்வதாகவே இருக்கிறது. இதே பாணியில் வாசகனைத் திகிலடையச் செய்கின்ற அனுபவங்களை வழங்குவதிலும், ஒரு பரபரப்பான வாசிப்பை ஏற்படுத்துவதிலும் பின்-நவீனத் தமிழ் ச்சிறுகதைகளுக்கும் ஒரு பங்களிப்பு இருக்கத்தான் செய்கிறது.

அவர்கள் வாழும் காலத்தினால் தீர்மானிக்கப்பட்ட கதாபாத்திரங்களைத்தான் நவீன படைப்பாளிகளால் உருவாக்க முடிந்தது. புதுமைப்பித்தன் இதற்கு நல்ல உதாரணம். ஒரு கால கட்ட வாழ்வை, அதன் துயரத்தையும், வீழ்ச்சியையும் ஒருவிதப் பகடியுடனும் பிரதிபலித்தவர் அவர். அவரது சில கதாபாத்திரங்கள் இன்று முக்கியத்துவமற்றுப் போயுள்ளன. புதுமைப்பித்தன் நவீன சிறுகதைகளில் உருவாக்கிய கதாபாத்திரங்களை ஓரளவு ஒத்த வாழ்வை எளிய பகடிகளால் கடந்து செல்லும் வாழ்வின் ஆழமான பக்கங்களுக்குள் ஊடுறுவி தத்துவம் பேசாத கதாபாத்திரங்களை தமிழின் பின்-நவீனப் படைப்பாளிகள் உருவாக்கி வருகின்றனர் என்பது இன்னொரு புறம் கவனிக்கத்தக்க விசயமாகும்.

நவீனத்துவம், பின்நவீனம் (modernism and post-modernism) எனும் இரு கூறுகளையும் கொண்டகதைகள்

நவீனத்துவத்தின் பண்புகளையும், பின்நவீனப் பண்புகளையும் ஒருங்கே கொண்ட தமிழ்ச்சிறுகதைகள் இன்று தமிழ்ச் சிறுகதைகளின் ஒரு புதிய போக்காக எழுச்சியடைந்து வருகிறது. எஸ்.ராமகிருஷ்ணன், யுவன் சந்திரசேகர், திலீப் குமார், விமலாதித்த மாமல்லன் போன்றவர்களின் கதைகளில் இந்த இருகூறுப் பண்புகளைக் காண முடிகிறது. இந்தவகைக் கதைகள் நவீனத்துவத்தின் மையக்கதை, மையக் கதாபாத்திரம், வடிவம் எனும் பண்புக் கூறுகளுடன் பின்நவீனத்துவக் கூறுகளான அலங்காரங்கள் நிறைந்ததாகவும், அதீத புனைவுத் தன்மை, பலவற்றின் கலவை, முரண்நகை போன்ற பண்புகளையும் ஒருங்கே கொண்டதாகவும் இருக்கின்றன.

விமலாதித்த மாமமல்லன் தமிழில் நவீனத்துவம் மற்றும் பின்நவீனத்துவம் எனும் இரு கூறுகளையும் இணைத்துக் கதைசொல்லும் தற்காலத் தமிழ் சிறுகதையின் இரண்டாம் வகையினத்தைச் சேர்ந்தவர். இந்தவகைக் கதைசொல்லிகளுள் ஒருவரான விமலாதித்த மாமல்லன் இறுக்கமான நவீனத்துவக் கதைக் கட்டமைப்பிலிருந்து/ பாணியிலிருந்து (style) விலகி பின்நவீனத்துவத்தின் எல்லைப் பகுதிகளில் சஞ்சரிக்கும் ஒரு கதைசொல்லி. யுவன் சந்திரசேகர்,திலீப்குமார் மரபுக் கதைசொல்லிகளுள் ஒருவர். இவர்களுள் யார் முதலில் எழுத வந்தவர் என்பதையும் நாம் கவனத்திற்கொள்ள வேண்டியுள்ளது.

இவர் ஒரே கதைக்குள் பன்முக கதாபாத்திரங்களை (Multiple characters) உருவாக்குபவர். Irony (அங்கதம்) வகைப் பகடியால் கதைக்குள் மெல்லிய அங்கதத்தை இழையோட விடுபவர். எடுத்துக்காட்டாக, அவரது உயிர்த்தெழுதல் கதையை இந்தப் பண்புக்கூறுகளை வெளிப்படுத்தும் கதையாக குறிப்பிட முடியும்.

உருவத்துக்கு பதில் எதிர்-உருவம் (anti-form) எனும் வகைப்பட்ட கதைகூறல் (narration) இதிலுள்ளது. பறவைகளை எழுத்தாளர்களுக்கு உருவகப்படுத்துகிறார். “எல்லாப் பறவைகளுக்குமான ஆகாயம் பறந்து விரிந்து நிற்கிறது” என அனைத்தின் இருப்பையும் ஏற்கும் குரல் அவரது உயிர்த்தெழலுக்குள்ளிருந்து கேட்கிறது. நவீனத்துவ நேரடி விபரிப்பு முறை இக்கதைக்குள் தவிர்க்கப்பட்டிருக்கிறது.

விமலாதித்த மாமல்லனின் குருவிச் சாமியார் கதையும் ஓர் இரண்டாம் வகைக் கதை தான். ஒரு போலிச் சாமியாரின் வாழ்க்கையையும் அவரது தவத்தையும் ஒரு வித அங்கதத்துடன் சொல்லும் கதை. நவீனத்துவம் எதிர்பார்க்கும் கலையின் பணியை அதாவது யதார்த்ததைப் பேசும் பணியை நிறைவு செய்யும் அதேவேளை இன்னொரு புறம் யதார்த்தத்தை கடந்து ஒருவிதப் புனைவுத் தன்மையை மெடாபிக்ஸன் தன்மையையும் இக்கதை கொண்டுள்ளது.

யுவன் சந்திரசேகர் ஒரு முழுமையான பின்நவீன எழுத்தாளர் என்றொரு விமர்சனம் தமிழ்ச் சூழலிலுள்ளது. குறிப்பாக ஜெயமோகன் இவரை பின்நவீன எழுத்தாளராகவே காண்கிறார். யுவன் நவீனத்துவம், பின்நவீனத்துவம் எனும் இருபண்புக் கூறுகளையும் இணைத்துக் கதைசொல்பவர். அந்தவகையில் இரண்டாம் வகைக்குள்ளேயே அவர் இடம்பெறக்கூடியவர். அந்தவகையில் பார்க்கும் போது, ஜெயமோகனின் விமர்சனம் பொருட்படுத்தத்தக்க ஒன்றாகத் தெரியவில்லை. விமலாதித்த மாமல்லன், திலீப் குமார் யுவன் போன்றவர்கள் தமிழ்ச்சிறுகதைப் போக்கில் ஒரே வரிசையில் இடம்பெறக்கூடியவர்கள்தான். அவர்களது புனைவின் வித்தியாசம் கதையின் உருவத்தையோ, மொழியையோ அன்றி உள்ளடக்கத்தையே சார்ந்திருக்கிறது.

தமிழ்ச்சிறுகதைகளின் இந்த இரண்டாம் வகைக் கதைகளுக்கு ஏடத்துக்காட்டான கதைகளை திலீப் குமாரின் கடவு சிறுகதைத் தொகுப்பு கொண்டுள்ளது.

தனி பின்நவீனக் கதைகள்

சமகால தமிழ்ச் சிறுகதை எனும் விரிந்த பரப்பின் மூன்றாவது வகையினமாக தனி பின்-நவீனக் கதைகள் என்பதைக் குறிப்பிடலாம். இன்றுள்ள நிலையில் தமிழில் கணிசமானளவு இந்த வகைக் கதைகள் எழுதப்பட்டு வருகின்றன.

நவீன சிறுகதைகளுக்கு சில நோக்கங்கள் இருந்தன. அந்நோக்கங்களை நிறைவு செய்வதே இலக்கியத்தின் ஈடேற்றமாக அது கருதியது. கதையின் வெற்றி அதன் நோக்கம் நிறைவு செய்யப்படுவதிலேயே தங்கி இருந்தது. தமிழில் புதுமைப்பித்தனில் உக்கிரமாகத் தொடங்கிய இந்நவீனத்துவச் சிறுகதைகள் “எழுத்து“ காலப்பகுதியில் ஒரு தீவிர வளர்ச்சியை எட்டியது. அப்போதிருந்து இப்போது வரை அது ஒரு “கட்டுப்பட்ட வடிவத்தை“ யே கொண்டிருக்கிறது. ஆனால் பின்நவீனக் கதைகள் நவீனத்துவத்தின் இலக்கிய நோக்கின் தலைகீழ் வடிவமாக தன்னை முன்னிறுத்திக் கொண்டுள்ளது. அது நோக்கத்துக்குப் (purpose) பதிலாக விளையாட்டையும்(play), கட்டுப்படுத்தப்பட்ட வடிவத்துக்கு பதிலாக வடிவமற்ற ஒரு திறந்த நிலையையும் (open condition) வலியுறுத்தியபடி இருக்கிறது. அது கதைகூறலின் அல்லது எடுத்துரைப்பின் அடுத்த கட்ட வளர்ச்சியாகவோ, மாற்றமாகவோ நோக்குவதற்கு இன்று ஒரு தலைமுறை தயாராக இருக்கிறது.

நவீனத்துவ எடுத்துரைப்பின் (narration of modernism) தொகுத்தல், ஒருங்கிணைத்தல் போன்ற முறைமைகளுக்கு பதிலாக பின் நவீனத்துவம் தகர்ப்பமைப்பையும் (Deconstruction), எதிர்த்தலையும் (counter) சிபார்சு செய்கிறது.

நவீனத்துவச் சிறுகதைகள் எப்போதும் ஏதேனுமொன்றினதோ அல்லது பலவற்றினதோ இருப்பைக்கொண்டே (ஆசிரியரின் இருப்பு, மையக்கதையின் இருப்பு, மையக்கதாபாத்திரத்தின் இருப்பு, சுயத்தின் இருப்பு) தன்னை ஒரு கதையாக வாசகன் முன்னால் முன்னிறுத்திக் கொள்கிறது. பின்-நவீனத்துவக் கதைகள் இந்த “இருத்தல்களை“ (presence) மறுத்து “இன்மைகளை“ (absence) ஒரு பொதுத்தன்மையாக முன்னகர்த்தியுள்ளது.

பின்-நவீன கதையில் நம்பிக்கைக்குரிய மையமுடைய பிரக்ஞைத் தன்மையோ, கதைசொல்லியோ இல்லாமல் போகலாம். ஆனால் அதுவே கதையின் கலையம்சத்தை, அதன் தொனியை சிதைத்து விடுவதில்லை. அவை தன்னளவில் வாசகனோடு உரையாடவே செய்கின்றன. பின்நவீன படைப்பின் கதபாத்திரங்கள் கூட மாறும் தன்மையுடையவர்களாகவும் நம்பிக்கைக்குரியவர்களாக இல்லாமலும் இருக்கலாம். நவீன வாழ்க்கையைக் கேலி செய்பவர்களாக கூட இருக்கலாம். ரமேஷ்: பிரேமின் மனவெளிநாடகம் கதையில் வரும் கதாபாத்திரம் தன்னை வெளிப்படுத்தும் போது அவனது பேச்சும் உரையாடல்களும் நவீன வாழ்க்கையை கேலி செய்வதாகவும், அவனே ஒரு நிச்சயமற்ற புள்ளியில் கரைந்துவிடுபவனாகவும் இருக்கிறான்.

நவீன சிறுகதை ஏற்படுத்தும் வாசக அனுபவத்திற்கும், பின்-நவீன கதை ஏற்படுத்தும் வாசக அனுபவத்திற்கும் தெளிவான வேறுபாடுகளுண்டு. அந்த வேறுபாட்டை ஜெயமோகனின் “சோற்றுக் கணக்கு” கதையையும், ரமேஷ்: பிரேமின் “பரதேசி” கதையையும் வாசிக்கும் ஒருவர் இந்த இரு வேறுபட்ட அனுபவங்களைத் தரிசிக்கலாம். சோற்றுக்கணக்கு சொல்ல வரும் செய்தியும் தத்துவமும் நடப்பியல் (realism) தன்மையுடன் கலந்ததாகவும், பரதேசி வாழ்வு பற்றிய துண்டு துண்டான அனுபவங்களையும் வாசகனோடு பகிர்ந்துகொள்கிறது. சோற்றுக்கணக்கு தரும் நேர்கோட்டு அனுபவம் பரதேசிக்குள் ஒரு வாசகனுக்கு கிடைப்பதில்லை. ஒரு தத்துவத்தையோ, கருத்தியலையோ, செய்தியையோ பின்நவீனக் கதை மையப்படுத்தி இருப்பதில்லை. சொல்லப் போனால் வாழ்வு பற்றிய எந்த உண்மைகளையும் அது சீரியஸாக உரையாட விரும்புவதுமில்லை. வாசகன் மீது அதிகாரத்தைச் செலுத்த கதைகூறலை அது ஒரு கருவியாகப் பயன்படுத்துவதே இல்லை.

download

கோபிகிருஷ்ணனின் “பீடி” ஒரு தனிப்பின்நவீனக் கதையாகக் கொள்ளத்தக்கவகையில் பின்நவீனப் பண்புகளோடு நகரும் கதைப் பிரதி. பீடி ஒரு குறியீடாக (sign) கதைசொல்லி அறிவிக்கிற போதிலும் அது ஒரு வழமையான நவீனத்துவக் குறீயீடாகவன்றி பின்நவீனக் குறிப்பானாகவே (signifier) வருகிறது. அந்தவகையில் அது குறியீட்டுக்கு பதிலாக குறிப்பானை முன்னிறுத்துகிறது. புறமொதுக்கப்பட்ட பீடியை கதையின் மையக் குறிப்பானாக (centered signifier) கொண்டு வந்திருக்கிறார். கதை கூறலிலும் அது ஒரு எதிர்-வடிவத்தன்மையைப் பெற்றிருக்கிறது.

எம்.டி. முத்துக்குமாரசாமியின் மைத்ரேயி தமிழில் தனிப் பின்நவீனக் கதை எனும் வகைமைக்கு எடுத்துக்காட்டான கதையாகச் சொல்லலாம். கதைசொல்லி ஒரு கதாபாத்திரத்தை நோக்கி கதைசொல்லும் பாங்கில் இந்தக் கதைசொல்லப்படுவது தமிழுக்கு ஒரு புதிய கதைகூறுமுறையாகும். அதி புனைவுத் தன்மையும் (metafiction) ஒருவித மொழி விளையாட்டும் எதிர்-வடிவமும் கதையை முழுக்க பின்நவீன கதையாக மாற்றுகின்றன.

தமிழ்ச் சூழலில் தனிப் பின்-நவீனக் கதைகள் எனும் வகைமைக்கு அதிக பங்களிப்புச் செய்து வருபவர்களாக தமிழவன், ரமேஷ் பிரேம் போன்றோரைக் குறிப்பிடலாம்.

தமிழின் முக்கிய பின்-நவீனக் கதைசொல்லிகளுள் ஒருவர் தமிழவன். மனித வாழ்வின் மீதான நுண்ணிய அதிகாரங்களையும், அவமதிப்புகளையும் அதனை எதிர்கொள்ளும் மனிதர்களின் மன அதிர்வுகளையும் தமிழவன் தன் கதைகளில் பதிவு செய்கிறார். தமிழவன் கதைகளில் உலவும் மனிதர்கள் வாழ்வின் அநீதியை எதிர்கொண்டு மேலெழும் வேட்கையுடன் வருகின்றனர்.

நமது தமிழ்ச்சிறுகதைகளின் கதைநிகழ்களத்தை வேறொரு தளத்துக்கு கொண்டு சென்று அர்த்தப்படுத்தும் முனைப்பு தமிழவனின் அநேகமான கதைகளுக்குள் கிட்டத்தட்ட ஒரு கோட்பாடாகவே வடிவம் கொண்டுள்ளது.

தமிழவன் தமிழின் நவீனத்துவக் கதைப்போக்கிலிருந்து ஒரு புரட்சிகரமான மீறலைச்செய்துகொண்டு தமிழ் எதார்த்தத்தை, தமிழ் வாழ்க்கையை புதியதொரு கோணத்தில் புனைவாக்கியவர். அவரது நடனக்காரியான 35 வயது எழுத்தாளர் தொகுப்பிலுள்ள கதைகள் தனிப் பின் நவீனக் கதைகளுக்கு எடுத்துக்காட்டான கதைகளைக் கொண்டுள்ள தொகுப்பாகும். இக்கதைகளுக்குள் மையக் கதாபாத்திரம் என்று யாரும்/எதுவும் இருப்பதில்லை. மையமான கதைச்சம்பவம் என்றும் எதுவும் இருப்பதில்லை. உதாரணமாக, மொழிபெயர்ப்பு நிறுவனம் எனும் கதையில் மொழிபெயர்ப்புத் துறைப் பொறுப்பாளனா?, 17 வயதுச் சிறுவனா, அல்லது மொழிபெயர்ப்பு பணியகப் பணியாளர்களில் ஒருவரா யார் மையக் கதாபாத்திரம் என்ற கேள்விக்கு வாசகனால் இறுதிவரை விடை காண முடிவதே இல்லை.

ரமேஷ்: பிரேம் தமிழில் பின்நவீனப் படைப்பாளிகளாகவே அறியப்படுபவர்கள். இரட்டையர்களான இவர்கள் ஒரே பிரதியை இரு மூளையால் சிந்தித்து எழுதியவர்கள். அவர்கள் புனைவு (fiction) மற்றும் அபுனைவு (non-fiction) எனும் இரு தளங்களிலும் இயங்கியவர்கள். பின் நவீனத்துவம் முன்மொழியும் “முரண்நகை“ப் (antithesis) பண்பை அவர்களது கதைகூறலிலும் வெளிப்படுவதை வாசகன் கண்டுகொள்கிறான். இவர்களின் அநேகமான கதைகள் தன்னிலை ஒருமையில்தான் சொல்லப்படுகின்றன. இரட்டையர்களான இவர்கள் தன்னிலை ஒருமையிலன்றி தன்னிலைப் பன்மையில்தானே கதை சொல்ல வேண்டும் என்ற கேள்வி வாசகனுக்குள் எழுவதில்லை. ஏனெனில் முரண்நகை எனும் பின்நவீன அழகியலாக ஒரு வாசகன் அதனை நோக்குகிறான். எடுத்துக்காட்டாக பரதேசி எனும் கதையில் வரும் கதைசொல்லி கதையை தன்மை ஒருமையில்தான் சொல்லிச் செல்கிறான். இந்த எடுத்துரைப்புமுரண் இதுவரை கேள்வி எழுப்பப்படாததாக இருந்து வருவது இந்த பின்நவீன முரண்நகை (antithesis) அழகியலுக்கான அங்கீகாரமாகவே கருத வேண்டியுள்ளது.

நேர்த்தியான ஒரு படித்தான கதாபாத்திரப் பண்புகளை நவீனத்துவச் சிறுகதைகள் கொண்டிருக்கும் அதேவேளை இதற்கு நேரெதிரான சிதைந்ததும், குழம்பியுள்ளதுமான கதாபாத்திரங்களை பின்நவீனக் கதைசொல்லிகள் தங்கள் கதைகளில் உருவாக்கி வருகின்றனர். பரதேசியில் வரும் கதைசொல்லி “நான் மிகமிகச் சாதார்ணமானவன். ஒருவகையில் சாமான்யர்களை விட அதிகம் சிதைந்தும், குழம்பியும் உள்ளவன்“ என்கிறான். இந்தக் கதாபாத்திரத்தின் குழப்பமும், சிதைவும் கதைசொல்லியின் சுயபேச்சில் வெளிப்படுகிறதேயொழிய கதைநகர்வில் புறவயமான நிலையில் அந்த சிதைவும், குழப்பமும் இடம்பெறுவதில்லை. பாத்திரங்களின் சிதைவு புறவயமாக கதையில் நிகழ்வதே ஒரு பின் நவீன வாசகனின் எதிர்பார்ப்பாகும். ஏனெனில் படைப்புகளில் கதாபாத்திரங்கள் தங்களை விநோதமானவர்களாக அல்லது நலிவடைந்தவர்களாக அல்லது சிதைந்து போனவர்களாக நேரடியாகப் பிரகடனம் செய்து கொள்ளும் மரபை வாசகன் அநேக நவீனச் சிறுகதைகளில் கண்டிருக்கிறான்.

download

மௌன வாசிப்புக்குரிய பேச்சுக்கூறுகளின்றி அமைந்த கதைகள் காவிய மரபிலிருந்து நவீனத்துவத்தின் உட்சிடுக்கான மொழிதலிலிருந்தும் தன்னைத் துண்டித்துக் கொண்ட புதுவிதக் கதைசொல்லும் உத்தி. இம்மரபை பின்-நவீனக் கதைசொல்லிகளான தமிழவனிலும், எம்.ஜி. சுரேஸிலும் அதிகம் காணலாம். ரமேஷ்: பிரேமின் கதைகூறலில் ஒரு வித இறுக்கமும், மொழியின் ஆழ்புனைவுத் தன்மையும் வெளிப்படுகிறது. ரமேஷ்: பிரேமின் அபுனைவான “சிதைவுகளின் ஒழுங்கமைவு: பின்நவீனத்துவப் பிரச்சினைப்பாடுகள்” இலும் அவர்களது புனைவு மொழியில் வெளிப்படும் ஆழ்புனைவுத்தன்மை வெளிப்படுகிறது. ஆனால் எம்.ஜி. சுரேஸின் “பின்நவீனத்துவம் என்றால் என்ன?” அபுனைவு அவரது புனைவுகள் போலவே ஆழ்தளத்திலன்றி மேல்தளத்தில் மிதந்து கொண்டிருக்கிறது.

ரமேஷ்:பிரேமின் மனவெளி நாடகம் குறித்து

ரமேஷ் பிரேமின் அதிகமான கதைகள் பின்-நவீனத் தன்மை கொண்டவை. தமிழில் பின்நவீனப் பரிசோதனை எழுத்துகளாக அடையாளங் காணப்பட்டவை. அவர்களின் கதைகூறலில் ஒரு கதைப் பிரதி பல உட்கதைகளாக பெருக்கங் கொள்வதும் (extend), அவற்றுக்கிடையிலான தொடர்பின்மையும், மையமற்றதன்மையும் போன்ற பின்-நவீனக் கூறுகள் அவர்களின் கதைகள் நவீனத்துவத்தைக் கடந்துவிட்ட பின்-நவீனக் கதைகள் என்பதை நிரூபணம் செய்கின்றன.

ரமேஷ்:பிரேமின் மனவெளி நாடகம் எனும் கதை பின்-நவீனத்தன்மையுடன் கூடிய ஒரு கதை. கதையில் கதைசொல்லி அடுக்கடுக்காக கேள்விகள் கேட்டுக்கொண்டே செல்கிறான். அதுவே புனைவாக மாறிக்கொண்டு செல்கிறது. கேள்விகள் அவன் தன்னிடமே கேட்டுக்கொள்வது போலவும், வாசகனிடம் கேட்பது போலவும் இரட்டைச் சாத்தியப்பாடுகளைக் கொண்டுள்ளன. இது பின்-நவீனத்துவம் கூறும் ambiguity எனும் பல்பொருள் சாத்தியப்பாட்டை வெளிப்படுத்துவதாக உள்ளது. கதைக்குள் முகிழ்க்கும் மிகு நேர்த்தியான கவித்துவ அழகியல் பிரதியின் நோக்கமற்ற விளையாட்டுத் தன்மையை மேலும் அதிகரிக்கச் செய்கிறது. ஆனந்தன், இளங்கோ எனும் சமப்பாலுறவாளர்களின் கதையாகவும், ஒரு தனிமனிதன் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒழுக்கநெறிகளுக்குள் உட்பட்டு வாழ்வதைத் தவிர வேறு வழியற்ற அவனது கையறுநிலையையும், அந்த நிலை உக்கிரமடையும் போது அவன் அடையும் தன்னிலை முரண்களையும், அவனது மனவெளியையும் ரமேஷ் பிரேம் இக்கதைக்குள் சித்தரிக்கின்றனர். ரமேஷ் பிரேமின் பின்-நவீனக் கதைகளில் இக்கதையின் மொழி மிகவும் எளிமையானதாகவும், விளையாட்டுத் தன்மைமிக்கதாகவும் உள்ளது. சொற்கள் மிக நேர்த்தியாகத் தெரிவுசெய்யப்பட்டு வாக்கியங்களாக வடிவம் பெற்றிருக்கிறது.

இக்கதையில் விளிம்புகள் மீதான கவனமும் குவிக்கப்பட்டிருப்பது கதையின் பின்-நவீனத் தன்மையை மேலும் உறுதிப்படுத்துவதாகவுள்ளது. ஆயினும் அந்த விளிம்புகள் கதையின் மேலோட்டமான விபரணங்களில் இடையில் வந்து போகின்றவர்களாகவன்றி அவர்களைப் பற்றிய கதையாக இது இருப்பதில்லை. “சிதைவுபட்ட உடல்கள், பிச்சை கேட்கும் குரல்கள், பசித்த குழந்தைகளின் கண்கள், அழுகைகள், நிரந்தர வலிகள், நிறைமாத கர்ப்பினிப் பிச்சைக்காரர்கள்“ என்று கதையில் விரிந்து செல்லும் வரிகளில் மட்டுமே விளிம்புகளின் (margin) குரலைக் கேட்க முடிகிறது. மற்றப்படி கதை ஒருவனின் மனதில் நிகழும் சுய நினைவுகளின் சுய நாடகங்களின் கதையாக விரிந்து கொண்டு செல்கிறது.

எச். முஜிபுர் ரஹ்மான் தமிழின் மற்றுமொரு பின்-நவீன கதைசொல்லி. இவரது பின்-நவீனச் சிறுகதைத் தொகுப்பொன்று வெளிவந்திருப்பதாக அறிய முடிகிறது. இவரது தீயடி நானுனக்கு கதை ஒரு தனியனுக்கு ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமையை விபரிக்கும் கதை. இக்கதையுடன் இணங்கிப் போவதற்கு வாசகனுக்கு ஒரு பின்-நவீன மனநிலை தேவைப்படுகிறது. இக்கதையின் கதைசொல்லி மீது திடீரென்று தீ பற்றிக்கொள்கிறது. அதை அணைப்பதற்கான எல்லா முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையிலும் அவன் சாதாரணமாக நடமாடித் திரிகிறான். இங்கு அவன் மீது பற்றியெரிந்து கொண்டிருக்கும் தீ யாரையும் சுட்டெரிப்பதில்லை. அவனைக் கூட. அது ஒரு வகை மாயத்தீ. அது ஒருவகை விளையாட்டுத் தீ. தீப்பற்றிக் கொண்ட ஒரு மனித உடலின் நவீனத்துவச் சித்திரத்தை இந்தக் கதை முற்றிலும் மாற்றியமைக்கிறது.
தமிழ்ச்சிறுகதையின் இன்றைய திசைமுகத்தைச் செப்பனிடுவதிலும், அதை முன்னொண்டு செல்வதிலும் புதிய தலைமுறை ஒன்று தீவிரமாக வினைபுரிந்து வருகிறது. இப்புதிய தலைமுறையினரில் சிலர் பின்-நவீனக் கதைசொல்லிகளாக விளங்குகின்றனர். அவர்கள் சொல்லும் கதைகள் நவீனத்துவத்துடன் முரண்படுவதாகவும், பின்-நவீனக் கதைகூறலுடன் அணுக்கமுறுவதாகவும் சொல்ல முடியும். காலத்துகளின் சிறுகதைகள் நவீனத்துவ எல்லைக்குள் நின்றாலும் நவீனத்துவத்துக்குள் அது ஒரு புதிய வார்ப்புத்தான்.
றாம் சந்தோஷின் சில கதைகளில் பின்நவீனத் தன்மையை அதிகமாக காணலாம். அவரது ஆஸ்டல், ஹாஸ்டல், ஓஸ்டல் கதை நவீனத்துவ எல்லைகளை மீறும் ஒரு கதைப் பிரதி.
இக்கதைக்குள் கதையைச் சொல்பவர்கள் இரு வேறு தரப்பினர். ஒரு கதாபாத்திரம் கதைக்கு உள்ளேயும், இன்னொரு கதாபாத்திரம் கதைக்கு வெளியேயும் இருக்கிறது. “தன்மை“க் கதை சொல்லல் (first person narration) மற்றும் “படர்க்கை“ கதைசொல்லல் (third person narration) எனும் இரட்டைக் கதைகூறுமுறையை (binary narration in a single story) இந்த ஒரே கதைக்குள் நுட்பமாக கையாள்கிறார் றாம் சந்தோஷ்.
இக்கதை மூன்று பேர் பற்றி கிண்டலடிக்கும் கதை. சம்பவங்களை ஒரு நேர்கோட்டில் வெளிப்படையாக முன்வைக்காமல் புனைவின் அதீத மொழியால் குறிப்பான்களால் அந்த மூன்று நபர்களும், அவர்களின் செயல்பாடுகளும் கதையில் மறுவிசாரணைக்குள்ளாகிறது. மூன்று இளவரசர்கள் என அவர்கள் சொல்லப்படுவதிலிருந்து ஒருவகையில் ஏதேனுமொரு துறையில் அவர்கள் அதிகாரத்தை அடைய காத்திருப்பவர்கள் என்பது புலனாகிறது. அவர்கள் வினைபுரியும் களம் இலக்கியமாகக் கூட இருக்கலாம். தமிழ்ச் சூழலில் இன்று சொல்லப்படுகின்ற மும்மூர்த்திகளே அந்த மூன்று இளவரசர்களாகவும் கூட இருக்கலாம். வாசகனின் அனுபவத்துக்கேற்ப அவனுள் இக்கதையின் அர்த்தங்கள் துலக்கம் பெறுகின்றன.
றாம் சந்தோஷின் ஒர்றோண்டு, பின்னை டார்வீனன் ஆகிய கதைகளும் நவீனத்தவத்தைக் கடந்து வரும் அவரது ஏனைய கதைகளாகும்.
தமிழ்ச் சூழலில் நவீனத்துவக் கதைகூறலிலிருந்து விலகிச் சென்ற ஒருவர் சாரு நிவேதிதா. எனினும் இவர் சிறுகதை என்று கருதி எதையும் எழுதாமல் எழுதிவிட்டு அதை சிறுகதை என்று அறிவிப்பது போல்தான் அவரது அநேகமான சிறுகதைகள் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக அவரது பக்தாத் பேரழகி அல்லது இட்லி மிளகாய்ப் பொடி செய்வது எப்படி? சிறுகதை அவரது தன்னிலை விளக்கமாக தன் அகவுலகின் வழியே ஒரு கதைசொல்லியின் அகவுலகுக்குள் வாசகனை உட்பிரவேசிப்பதற்கான சந்தர்ப்பத்தை இந்தக் கதை உருவாக்கிக் கொடுக்கிறது. அதேநேரம் நவீனச்சிறுகதையின் எல்லைகளையும் தாண்டிச் செல்கிறது. இக்கதை “கதை“ எனும் தளத்தில் பல மறுப்புகளைச் செய்தபடி நகர்கிறது. சிலவேளைகளில் ஒரு தேர்ந்த நவீனத்துவ, பின்-நவீனத்துவ வாசகனுக்கு இதைப் புனைவாக நோக்குவதில் மனத்தடைகள் உருவாகின்றன. அந்தத் தடைகள் வாசகனுக்குள் இயல்பாக உருவாவதாகவன்றி அவரது கதைகளாலேயே உருவாக்கப்படுகின்றன. அவரது பக்தாத் பேரழகி அல்லது இட்லி மிளகாய்ப் பொடி செய்வது எப்படி? எனும் இந்தக் கதையையும் ஒரு கதையாக ஏற்பதில் அல்லது புரிந்துகொள்வதில் வாசகனுக்கு ஏதோ ஒரு தடை இருந்துகொண்டே இருக்கிறது. சிறுகதை ஒன்றை எழுத முடியாமல் தடுமாறும் ஒருவனின் மனநிலை விபரிப்பாகவும் இந்தக் கதையை நோக்கலாம். அதனால் அவர் தனது பத்திகளைக்கூட சிறுகதையாக அறிவிக்கிறார் என்ற மனநிலைக்கே இன்றைய தமிழ்வாசகன் ஒருவன் வந்து சேர்கிறான். சிலவேளைகளில் அந்த எழுத்தின் அகப் பக்கம் ஒருவித போலித் தன்மையுடன் இருப்பதாகவும் வாசகனை உணர வைத்து விடுகிறது. இது இலக்கியக் களத்தில் படைப்பாளி ஒருவன் தற்கொலைசெய்து கொள்வதற்கு சமாந்திரமான ஒரு நிகழ்வாகும்.

இங்கு சுட்டிக்காட்டப்பட்டவை மிகச்சில தமிழ் பின்-நவீனக் கதைகள்தான். இது தொடர்பில் இன்னும் ஒரு விரிவான பட்டியலோ அல்லது கட்டுரையோ எழுதப்பட முடியும்.

தமிழில் நவீனத்துவ மற்றும் பின்நவீனத்துவக் கதைகள் தமிழ் மொழியின் இலக்கிய எழுச்சிக்கும் செழுமைக்கும் எப்போதும் வளமூட்டுவதாகவே இருக்கும். பின்-நவீனப் படைப்புகளை புறக்கணித்து நவீனத்துவப் படைப்புகளை மட்டும் கொண்டாடுவதோ அல்லது நவீனத்துவப் படைப்புகளை புறக்கணித்து பின் நவீனத்துவப் படைப்புகளை மட்டும் கொண்டாடுவதோ அந்த மொழி இலக்கியத்தின் இயல்பான எழுச்சிக்கும் மாற்றங்களுக்கும் உகந்த சூழலை ஏற்படுத்துவதில்லை. இந்த இரண்டு வகையான பாதைகளும் மேலும் முன்னகர்ந்தபடியும், புதிய வரவுகளுக்கான, கண்டடைவுகளுக்கான சாத்தியங்களையும் எப்போதும் கொண்டதாகவே இருக்கும். அந்தவகையில் ஒரே படைப்பாளியே இரண்டு தளங்களிலும் இயங்கவும் முடியும். அது ஒரு மொழிக்குள் மேலும் திறந்தநிலைகளை உருவாக்கும்.

(கட்டுரையில் இடம்பெறும் கதைகள்

1.இருபதாம் நூற்றாண்டுச் சிறுகதைகள் நூறு- தொகுப்பு- வீ.அரசு.
2. நவீன தமிழ்ச் சிறுகதைகள்- தொகுப்பு- சா. கந்தசாமி.
3. பரதேசி- ரமேஷ்: பிரேம்
4. கடவு- திலீப்குமார்
5. மலைகள் இணையத்தளம்
6. பதாகை இணையத்தளம் போன்றவற்றிலிருந்து எடுத்தாளப்பட்டது)

செத்துப்போனவர் ( சிறுகதை ) / இந்திரன்

images (58)

அவர் இறந்து போனபோது அவருக்கு வயது 81. தூங்குகிற மனிதனை ஐஸ் பெட்டிக்குள் ஏன் வைத்தார்கள் என்று பார்க்கிறவர்கள் பதறுகிற அளவுக்கு , எண்ணெய் தேய்த்து குளித்த அசதியில் அசந்து தூங்குவது போல் இருந்தார்.

ஒரே ஒரு வித்தியாசம்தான். தூங்கும்போது அவர் வாயைப் பிளந்து கொண்டு தூங்குவார். . . இப்போது பிளந்த வாயை மூடி வெள்ளைத் துணியால் கட்டியிருந்தார்கள். அப்படியும் இலேசாகப் பிளந்திருந்த உதட்டில் வெற்றிலை மடித்து வைத்திருந்தார்கள்.

கொஞ்சம் உரக்கப் பேசினால் அவரது தூக்கம் எங்கே கலைந்து விடுமோ என்று சிலர் அஞ்சினார்களோ என்னவோ , ஐஸ் பெட்டிக்குப் பக்கத்தில் குசுகுசுவென்று சத்தம் காட்டாமல் பேசிக் கொண்டார்கள்.

”காலையிலேதானே பார்த்தேன்; பால் வாங்க வந்திருந்தாரே”, என்றும் “பேப்பர் கடையிலே விகடன் வாங்கி அங்கேயே நின்னு படிச்சிட்டிருந்தாரே” என்றும், பலரும் பேசிக் கொண்டிருக்கும்போதே ரோஜா மாலை ஒன்றைத் தூக்கியபடி அந்த பக்கத்து ஆட்டோ ஸ்டேண்ட்காரர்கள் வந்து விட்டார்கள். கும்பலாகப் போய் மாலை போட்டு மரியாதை செலுத்தி விட்டு வந்தார்கள்.

“தங்கமான மனுஷன் சார் …எங்க கிட்ட பேரமே பேச மாட்டாரு ….நீ என்ன பெருசா கொள்ளையடிச்சிட போற…அதிகம் போனா இருபது ரூபா மேல வாங்கிடுவியான்னு கேப்பாரு …..பெரிய ஆஸ்பத்திரிக்காரன் கிட்ட நான் ஏமாறுறத விடவா உங்கிட்ட ஏமாந்துடப் போறேன்னு சொல்வாறு …இத போல மனுஷன்லாம் கெடைக்க மாட்டாங்க சார் ”.

சரி….இப்படிபட்ட அந்த மகான் என்னதான் வேல செஞ்சாரு?

“ அவரு வேலைக்கின்னு போனது கிடையாதுங்க………சதாகாலமும் படிப்பு படிப்பு படிப்பு……படிப்புல அப்படி என்னதான் தேடினாரோ தெரியாது. . . . ……கால நேரம் பாக்காமெ எழுதிகிட்டே கெடப்பாரு மனுஷன்……சில நாள்ள சாயங்காலம் கொஞ்சம் பிராந்தி சாப்பிட்டிட்டு உக்காந்தார்னா…..ராத்திரி முழுக்க எழுதி விடிகாலை அஞ்சுமணிக்குத்தான் தூங்கியிருப்பாரு . . .ஒருநாள் நடுராத்திரியில எழுதிகிட்டு இருந்தவரை அக்கா போய் பார்த்தா குலுங்கி குலுங்கி அழுதுகிட்டிருக்காரு . . .அக்கா போய் கேட்டா எதுவுமே பதில் சொல்லல….மறுநாள் சாப்பிடும்போது அக்கா கேட்டுச்சு . . . அவர் எழுதிகிட்டிருந்த கதாபாத்திரத்துக்கு அவ்வளவு பெரிய கஷ்டம் வந்திடுச்சாம்…அவரால தாங்க முடியாமா அழுதாராம்…”

ஈமக் கிரியைகளுக்கான ஏற்பாடுகளைத் தலையில் போட்டுக் கொண்டு அலைந்து கொண்டிருந்த அவரது மைத்துனன் தன் அலுவலகத்திலிருந்து வந்திருந்தவர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தான்.

” காலமுச்சூடும் எங்கக்காதான் டீச்சர் வேலை செஞ்சு காப்பாத்திச்சு அவரை. …..ஆனா எங்கக்காக்கு அவர ரொம்பப் பிடிக்கும்….அவரோட சமையல்னா அது உசிர விட்டுடும்…அவ்வளோ நல்லா சமைப்பாரு….அக்காவுக்கு பெருமாள் மேல பக்தி அதிகம்……ஆனா அவரு கடவுளாவது மசிராவதுன்னு உதாசீனமா பேசுவாரு…ஆனாலும் அக்காவுக்கு அவர் மேல கோவமே வராதுங்க …. அக்கா ரிடயர்மெண்டு வாங்கினப்பறம்கூட அதோட பென்ஷன்லதான் அவரும் வாழ்ந்தாரு…” அவரது மைத்துனன் தன் அலுவலக நண்பர்களிடம் தன் மாமனின் மகாத்மியத்தை உரக்கச் சொல்லிக் கொண்டிருந்தான்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த மைத்துனனின் அலுவலக நண்பர்களில் ஒருவர் சொன்னார்.“ ஓ எழுத்தாளரா……அதான் மொகத்தில களை தெரியுது.” இதைச் சொன்ன அசடு யாரென்று ஒரு சிலர் திரும்பிப் பார்த்தார்கள்.

ஒரு எழுத்தாளன் செத்துப் போவது என்பது அவ்வளவு ஒன்றும் பெரிய விஷயமாக அங்கே யாருக்கும் தெரியவில்லை….. பொறுப்பு இல்லாமல் பொண்டாட்டி சம்பாத்தியத்தில் 81 வயது வரை ஒரு மனிதன் வாழ்ந்து இருக்கிறான் என்றால் அவன் என்னத்த எழுதி என்ன பிரயோஜனம்? கால் காசு சம்பாதிக்க முடியாதவன்லாம் பூமிக்கு பாரம் …அவ்வளோதான் சொல்ல முடியும். எழுதறதையாவது எதையாவது சுவாரஸ்யமா எழுதித் தொலைச்சாரா? இல்லையே….இல்லாத ஊர் வம்பையெல்லாம் தன்னோட கதைல கொண்டு வந்து கொட்டிக்குவாரு. இப்படித்தான் ஒரு தடவை . . . . ” கல்பனாவின் கனவு”ன்ற ஒரு நாவல் எழுதி வெளியிட்டாரு. எமெர்ஜென்சிய எக்குத் தப்பா திட்டி எழுதிட்டு உள்ளே தூக்கி வெச்சிப்புட்டாங்க……சரி எல்லாரும் செய்யிறா மாதிரி ஒரு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து விட்டு வெளியே வருவாரா என்றால் அதுவும் இல்லை….” கிரிமினல்களே மன்னிப்புக் கேட்காத நாட்டில் ஒரு சத்தியத்தை எழுதியதற்காக நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் ? “, என்று மறுத்து விட்டார்.

அவரது பேரப்பிள்ளைகள் அவரை மதித்ததில்லை….50 பைசா சம்பாதிக்காத ஒரு கிழவனை மதிக்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இல்லை. சரி அதுதான் போகட்டும்…அவர் ஒரு மகா கலைஞன் என்று சிறுபத்திரிகை உலகிலாவது ஒரு பேச்சு அடிபடுவது உண்டா என்றால் அதுவும் கிடையாது….அவரை திட்டமிட்டு இருட்டடிப்பு செய்கிறார்கள் என்று புலம்புவதற்குக் கூட அவருக்கென்று சீடர்கள் யாரையும் அவர் வைத்துக் கொள்ளவில்லை….தனக்காக சீடர்களைக் கட்டுவதில் அவர் சமர்த்தர் இல்லை.

அது சரி, விருதுகள் ஏதாவது வாங்கியிருக்காறா ? ” விருதா ? …” ஹஹஹஹா என்று அவர் உரக்கச் சிரிக்கும் சத்தம் நாலு வீடு தாண்டியும் கேட்கும். . விருதுக்கு நம்ம புஸ்தகத்தை நம்பளே அனுப்பறத போல மானங்கெட்ட பொழப்பு கெடையாதுன்னு சொல்லுவார் . ஒரு எழுத்தாளனை அவன் ஒரு சிறந்த எழுத்தாளன்னு கண்டு பிடிக்க ஒரு இலக்கிய அமைப்புக்கு திராணி இல்லைனா அது வெட்கக் கேடு . . . சாதி சண்டைல பத்து பேரைச் சாகடிச்சுட்டு, ஊரான் சொத்தையெல்லாம் மிரட்டி எழுதி வாங்கும் அமைச்சர் கையால அரசாங்க விருது வாங்கற அளவுக்கு எழுத்தாளனுக்கு சொரணை கெட்டுப் போச்சா என்ன ? விருது கொடுக்கிற யோக்யதை இவங்களுக்கு எல்லாம் எங்கேயிருந்து வருது ? ”

அப்ப எந்த கோட்டைய பிடிக்கறதுக்காக இவர் சதா சர்வகாலமும் எழுத்தும் கையுமாக இருந்தார்?

அவர் அடிக்கடி சொல்லுவார்:

” தெருவுல அலையிறானே பைத்தியக்காரன் . . . கண்ட குப்பைய எடுத்து ரத்தினக் குவியலா நெனச்சு, மூட்டை கட்டிக்கிட்டு அலைகிறானே….அவன்கிட்ட போய் கேளுங்கையா ஏண்டா இப்படி செய்றேன்னு….அதே போல்தான் நானும்……என்ன அவன் குப்பைய பொறுக்கறான்…….நான் வார்த்தைய பொறுக்கறேன்.”

முதல்நாள் இரவு 8 மணிக்கு இறந்து போனவரின் உடம்பு தாங்காது என்பதால் இன்று இரண்டு மூணு மணிக்கெல்லாம் இறுதி ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்து விட்டார்கள். பாடை கட்டுபவர்கள் வந்து விட்டார்கள். ஈமக்கிரியைகளைச் செய்ய பண்டாரமும் சங்கும் கையுமாக வந்து சேர்ந்தாச்சு. எழுத்தாளரின் மகன் மீசை எடுத்து ஈரத்துணியோடு வந்து நின்றாயிற்று. மைத்துனர் முன்னின்று எல்லா சடங்குகளும் சரியாக நடைபெறுகிறதா என்று மேற்பார்வை பார்த்தபடி நிலை கொள்ளாமல் உள்ளேயும் வெளியேயும் அலைந்து கொண்டிருந்தார்.

வாசலில் மரப் பெஞ்சைப் போட்டு விட்டார்கள். அவரைச் சுற்றி அமர்ந்திருந்த பெண்களெல்லாம் புலம்ப உடம்பை தூக்க முடியாமல் தூக்கி வந்து கிடத்தியாயிற்று. அவரது மனைவி தலை நிறைய பூவும் பொட்டுமாய் வந்து உட்கார்ந்தார்கள்.

அவருக்கு குடம் குடமாய் நீர் ஊற்றி சுத்தம் செய்தாகி விட்டது..பண்டாரம் நல்ல கணிர் குரலில் பாடத் தொடங்கி விட்டான். நாமத்தை நன்றாகக் குழைத்து அவர் நெற்றியில் சாத்தினான். நாமம் அவரது நெற்றியில் பளீரெனத் துலங்கியது.

தூரத்தில் மரநிழலில் நின்று கொண்டிருந்த பரம வாசகர் ஒருவர் முகத்தைத் திருப்பிக் கொண்டார். “என்னங்க இது? இந்த அநியாயத்தைக் கேட்க ஆளில்லையா?….தன்னோட கதை முழுக்க கடவுள் இல்லைனும், மதங்களும் கோயிலும் மக்கள ஏமாத்துதுன்னும் சலியாது எழுதி வந்த எழுத்தாளன் செத்துப் போனா நாமம் போட்டுடுவீங்களாயா ? ” சவப்பெட்டி ” என்ற தனது சிறுகதை ஒன்றில் செத்த பிறகு ஒரு மனிதனுக்கு நேரும் அவமானங்களை நெஞ்சிலே ஆணி இறங்குறா மாதிரி எழுதி இருந்த புரட்சிகர எழுத்தாளனுக்கு செத்த பிறகு ஏன்யா நாமம் போடுறீங்கன்னு கேக்க இங்க ஒரு வாசகன்கூடவா இல்லாம போயிட்டான் ?”

எனக்குப் பிடிக்காத மதச் சின்னத்தை ஏண்டா என் நெத்தியில போடறீங்கன்னு கேட்க எழுத்தாளர் பாடையிலிருந்து எழுந்து வர மாட்டார் என்ற ஒரே தைரியம்தான் எல்லோருக்கும்.

லட்சிய வெறியோடு அவரது புத்தகத்தை வெளியிட்டு கைக்காசை இழந்த பதிப்பாளரும் அங்கே வந்திருந்தார். மாநிறமாய் டயபடீசில் அடிபட்டவர்போல இளைத்து பலகீனமாய்க் காணப்பட்டார் அவர். கண்கள் அழுது அழுது சிவந்திருந்தன. தனக்கு பக்கத்தில் இருந்த 30 ஆண்டுகளாக எழுதி வரும் மூத்த துணுக்கு எழுத்தாளர் ஒருவரிடம் மனம் விட்டு பேசிக் கொண்டிருந்தார்.

“ தமிழ் நாட்டோட சல்மான் ருஷ்டீ சார் அவரு…அவரோட நாலு புஸ்தகத்தையும் நாந்தான் வெளியிட்டேன்….ஒவ்வொன்னும் 800 பக்கம்….மகா காவியம் சார் ஒவ்வொன்னும்….தமிழனோட மூட நம்பிக்கையையும், மதம்ன்ற பேர்ல இங்க நடக்கிற முட்டாள்தனத்தையும் கிண்டலடிச்சு சிரிக்கறதுல அவர அடிச்சிக்க முடியாது சார்….. இதெல்லாம் யாருக்கு சார் தெரியும்?…நான் சொல்றேன் பாருங்க….. எழுத்தாளனோட ஆன்மாவைப் புரிஞ்சிக்காத நாட்டில புல் பூண்டு கூட மொளைக்காது சார்.”

அவர் கொடுத்த சாபத்தில் அங்கே இஷ்டத்தும் பச்சைப் பசேலென வளர்ந்திருந்த புற்களெல்லாம் ஏனோ கருகிப் போனது போலத் தெரிந்தது.

——

முத்தொள்ளாயிரம் ( எளிமையான பேச்சு வழக்கு உரை பாடல்களுடன் ) / வளவ துரையன்

images (74)

முத்தொள்ளாயிரம் ரொம்பப் பழமையான நூலு; எட்டுத்தொகை, பத்துப்பாட்டுக்கும் முந்தியதுன்னு கூடச் சொல்றாங்க; இதை எழுதியது யாருன்னே தெரியலை; ஆனா இதுல இருக்கற சில பாட்டுங்க நக்கீரர் எழுதிய சில நூல்கள்ள அதாவது ”கைலை பாதி காளத்தி பாதி” அப்பறம் ”திருஈங்கோய் மலை எழுபது”ன்ற நூல்கள்ல இருக்கற சில பாட்டுங்க போல இருக்கறதால அவரு எழுதி இருக்கலாம்னு சொல்றாங்க; முத்தொள்ளாயிரம்னா மூணு வகையான தொள்ளாயிரம் பாட்டுங்க உள்ள நூலுன்னு பொருளாம்; மூணு வகைனா சேர, சோழ, பாண்டியரைப்பத்தின்னு பொருளுங்க; இதுல நமக்குக் கெடச்சுது மொத்தமே 130 பாட்டுங்கதாம்!
அவங்களோட ஆட்சி எப்படி இருந்தது? வீரம் எப்படி? படைகள்ளாம் எப்படி? இருந்ததுன்னு இதைப் படிச்சா தெரிஞ்சுக்கலாம்; அத்தோட அந்தக்காலத்துல இருந்த சில பழக்க வழக்கங்களும் தெரிய வருமுங்க. மொதல்ல கடவுள் வாழ்த்து;.

கடவுள் வாழ்த்து

முன்னம் படைத்த முதல்வன்
மன்னிய நாண்மீன் மதிகனலி என்றிவற்றை
முன்னம் படைத்த முதல்வனைப்—பின்னரும்
ஆதிரையான் ஆதிரையான் என்றென்[று] அயருமால்

ஊர்திரைநீர் வேலி உலகு
[ மன்னிய=நிலைபெற்றுள்ள; நாண்மீன்=நட்சத்திரம்; மதி=சந்திரன்; கனலி= சூரியன்; அயரும்= சொல்லும்; திரை=அலை; ]

ஆகாசத்துல இருக்கற நட்சத்திரம், சந்திரன், சூரியன் எல்லாத்தையும் படைச்சது ஆதிமூலமா இருக்கற சிவன்தானே; ஆனா அது தெரிஞ்சிருந்தும், அவனை ‘ஆதிரையான், ஆதிரையான்’ன்னு இந்த உலகம் சொல்லுதேன்னு இந்தப் பாட்டு வியப்பா சொல்லுது.
அவன்தான் எல்லாத்தையும் படைச்சான்; ஆதிரையோட எல்லா நட்சத்திரத்தையும் அவன்தானே படைச்சான்; அப்படி இருக்கச்சே அவனை ஆதிரையான், ஆதிரையான்னு மட்டும் இந்த உலகம் சொல்லுதே; ஆதிரை நட்சத்திரம் அவனைப் போலவே செவப்பா இருக்கும்; அதுவும் அவனைப் போலவே ஆடிக்கிட்டு இருக்கும். அதால அப்படிச் சொல்றாங்களாம். ஆனா அவனுக்குப்போயி உவமை சொல்லமுடியுமா? உருவம் சொல்லமுடியுமா? இல்ல; பெயரைத்தான் சொல்ல முடியுமா? என்னா இந்த ஒலகம் இப்படிப் பேசுதேன்றதுதான் இதுக்குப் பொருளு; அவன் தன்மையை விடக் கொறைவானதைச் சொல்லக் கூடாதுங்களே!

முத்தொள்ளாயிரம்

புகழ்
இன்தமிழால் யாம் பாடும் பாட்டு

மடங்கா மயிலூர்தி மைந்தனை நாளும்
கடம்பம்பூ கொண்டேத்தி அற்றால்—தொடங்கமருள்
நின்றிலங்கும் வென்றி நிறைகதிர்வேல் மாறனை
இந்தமிழால் யாம்பாடும் பாட்டு

மொதல்ல இருக்கற 41 பாட்டுங்க பாண்டியனைப் பாடுது; இந்தப்பாட்டுல முருகனை, பாண்டியனை, செந்தமிழைப் பாராட்டறாரு; முருகன் நான் கொடுக்கறக் கடம்பப் பூ மாலையை மகிழ்ச்சியோட ஏத்துக்கறாரு. அதேபோல பாண்டிய மன்னன் நான் கொடுக்கற தமிழ்ப் பாமாலையையும் ஏத்துக்குவான்னு சொல்றாரு.
”தொடங்கற போரில வெற்றி கொள்ளும் பாண்டியனை நான் இனிமையான தமிழால பாடற பாட்டு மயிலை வாகனமா வச்சுருக்கற முருகனுக்கு நான் கடம்பமாலை சாத்தற மாதிரி”ன்னு அவரு சொல்றதுதான் பாட்டோடப் பொருளு.

முத்தொள்ளாயிரம்
3. சூடிய பூ

செங்கண் நெடியான்மேல் தேர்விசையன் ஏற்றியபூப்
பைங்கண் வெள்ளேற்றான்பால் கண்டற்றால்—எங்கு
முடிமன்னர் சூடியபூ மொய்ம்மலர்த்தார் மாறன்
அடிமிசையே காணப்படும்
இந்தப் பாட்டுல ஒரு பாரத நிகழ்ச்சி சொல்லியிருக்காரு; குருச்சேத்திரப் போர் நடக்குது; அதில பதிமூணா நாள் போருல அருச்சுனன் வேறெங்கோ போய்ப் போர் செய்யறான். அப்ப அவன் மகன் அபிமன்யுவை எல்லாரும் சேந்துகிட்டுக் கொன்னுடறாங்க; வந்த அருச்சுனன் துடிக்கறான்; என் மகனைக் கொன்னவங்களை நாளைக்கு நான் சாகடிப்பேன்; இல்லன்னா தீயில குதிச்சுடுவேன்னு சபதம் செய்யறான்; அதோட எதுவும் சாப்பிடாம இருக்கறான். அப்ப கண்ணன் அருச்சுனனைச் சாப்பிடச் சொல்லறான். அதுக்கு அருச்சுனன், “நான் சிவனுக்குப் பூசை செய்யாம சாப்பிடமாட்டேன்ல” இங்க எங்க பூசை செய்யறது”ன்னு கேக்கறான். உடனே கண்ணன், “ என் தலை மேலே பூ போட்டுப் பூசையைச் செய்; அது சிவனின் காலடியிலப் போய்ச் சேரும்”னு பதில் சொல்றான். அதே மாதிரி அருச்சுனன் பூசை செய்யறான். அன்னிக்கு ராத்திரியே அருச்சுனன் கைலாயம் போய்ப் பாக்கறான்; அங்க இவன் கண்ணன் தலையில போட்ட பூவெல்லாம் சிவனோட காலடியில கிடக்குதுங்க;
விசயன் போட்ட பூவெல்லாம் வெள்ளையான காளை மேல வர்ற சிவனோட காலடியில கிடக்குதுல்ல; இங்க எல்லா அரசரும் பாண்டியனோட காலடியில வந்து விழுந்து வணங்கறாங்களாம்; அப்ப அவங்க அவங்க தலையிலேந்து பூவெல்லாம் பாண்டியன் காலடியில விழுந்து கிடக்குமாம். இதான் பாட்டோட பொருள்; பாண்டியன் எவ்வளவு உயர்ந்தவன்னு சொல்ற பாட்டு இது.

முத்தொள்ளாயிரம்–4
எங்கே ஒளித்தாய்?

கூந்தன்மா கொன்று குடமாடிக் கோவலனாய்
பூந்தொடியைப் புல்லிய ஞான்றுண்டால்—யாங்கொளித்தாய்
தென்னவனே தேர்வேந்தே தேறுநீர்க் கூடலார்
மன்னவனே மார்பின் மறு
[கூந்தன்மா=பிடரி மயிர் உள்ள குதிரை; ஞான்று=அப்பொழுது; தேறுநீர்=தெளிந்த நீர்]
இந்தப் பாட்டு பாண்டியனைக் கண்ணனாகவே நெனச்சுப் பாடற பாட்டுங்க; திருமால் மார்பில ஒரு மறு இருக்குமாம்; அதைக் கேக்கதுஇந்தப் பாட்டு; “பாண்டியனே! தேரெல்லாம் உடைய மன்னவனே! தெளிந்த நீர் இருக்கற கூடல்ல இருக்கறவனே! நீ பிடரி மயிர் உள்ள குதிரையைக் கொன்ன போதும், குடக் கூத்தாடியபோதும், நப்பின்னையைக் கட்டிக்கிட்ட போதும் ஒன் மார்புல மறு இருந்ததே! இப்ப அதைக்காணோமே? எங்க ஒளிச்சு வச்ச?”
இந்தப் பாட்டுல மூணு கதை வருது; கண்ணனோட மாமன் கம்சன் கண்ணனைக் கொல்ல ஒரு அரக்கனை அனுப்பி வச்சான்; அந்த அரக்கன் ஒரு குதிரையா வந்தான். கண்ணன் அந்தக் குதிரையைக் கொன்னு போட்டான்.

வாணன்னு ஒருத்தன்; அவன் பொண்ணு பேரு உஷை; அவளை மன்மதன் மகனான அநிருத்தன் காதலிச்சான். அதனால அநிருத்தனை புடிச்சுப் போயி வாணன் சிறையில வச்சுட்டான். கண்ணன் அவனை மீட்டுக்கொண்டு வர்றதுக்காக மண்ணாலயும் செம்பாலயும் குடங்கள் செய்து குடக்கூத்தாடினானாம்.

மூணாவது கதை கண்ணன் எடையர் குலத்தில் அவதரிச்சதைப்பத்தி; அங்கதானே ஏழு எருதுகள அடக்கி நப்பின்னையை கல்யாணம் செஞ்சுகிட்டான். இதெல்லாம் இந்தப்பாட்டுல வருது.

முத்தொள்ளாயிரம்—5
வெண்சங்கும் நித்திலமும்

பார்படுப செம்பொன் பதிபடுப முத்தமிழ்நூல்
நீர்படுப வெண்சங்கும் நித்திலமும்—சாரல்
மலைபடுப யானை வயமாறன் கூர்வேல்
தலைபடுப தார்வேந்தர் மார்பு
வயமாறன்னா வலிமையான பாண்டியனுங்க; அவனோட நாட்டுல இருக்கற நெலத்துல செம்பொன் வெளையுது; அவனோட ஊரெல்லாம் முத்தமிழ் வளருதாம்; கடலிலே அதிகமான சங்கு முத்து எல்லாம் கெடக்குது; அவனோட மலையிலே யானைக்கூட்டம் வளருதுங்க; அவனோட கூர்மையான வேலு எதிரிங்களோட மார்பையே பொளந்துடுமாம்;
இந்தப்பாட்டுல பாண்டியனோட நெலவளம், தமிழ்வளம், கடல்வளம், மலைவளம், வேல்வளம் எல்லாம் நல்லாவே தெரியும்

முத்தொள்ளாயிரம்—6
ஐந்தலை ஆடரவம்

அருமணி ஐந்தலை ஆடரவம் வானத்[து]
உருமேற்றை அஞ்சி ஒளிக்கும்; செருமிகுதோள்
செங்கண் மாறன் சினவேல் கனவுமே
அங்கண்மா ஞாலத் தரசு
நாம நம்பறமோ இல்லியோ இந்தப் பாட்டுல ஒரு செய்தி சொல்லப்படுதுங்க; அதாவது பாம்போட தலையில மணி உண்டாகுமாம். பாம்போட தலைக்கு மின்சார ஆற்றலுண்டாம். அதால மின்னல் மின்னும்போது பாம்பு வெளியில வந்தா அது தலையில வந்து இறங்கிடுமாம். அதேபோல இடியும் தலையில் விழுந்திடுமாம். அது பாம்புக்கும் நல்லாவே தெரியுமாம். பாம்பு மழைக்காலத்துல அதாலதான் புத்த விட்டே வெளியில வராதாம்; ஆடரவம்னா ஆடுகின்ற பாம்பு; உருமேற்றைன்னா சத்தம் போடற இடி.
அதாவது ஐஞ்சு தலை இருக்கற பாம்பு சத்தம் போட்டு இடிக்கற இடிக்குப் பயந்து ஒளிஞ்சு கெடக்கும்; அதேபோல செவந்த கண்ணும் எப்பவும் வெற்றியுமே இருக்கற பாண்டியனோட கோபமான வேலைக் கனவில கண்டா கூட பயந்துகிட்டு ஒலகத்துல இருக்கற அவனோட எதிரிங்க பயந்துகிட்டுக் கெடப்பாங்களாம்.

முத்தொள்ளாயிரம்—7
திரு உத்திராடத் திருநாள்

கண்ணார் கதவம் திறமின் களிறொடுதேர்
பண்ணார் நடைப்புரவி பண்விடுமின்—நண்ணாதீர்
தேர்வேந்தன் தென்னன் திருஉத்தி ராடநாள்
போர்வேந்தன் பூசலி லிலன்
இந்தப் பாட்டுல ஒரு முக்கியமான செய்தி திருவிழா காலங்கள்ள அரசன் போர் செய்ய மாட்டான்.
பாண்டிய மன்னன் எதிரியோட மதிலை வளைச்சு முற்றுகை போட்டுட்டான். எல்லாப்படைகளையும் தயாரா கொண்டு வந்து நிறுத்திடான்; அப்ப நாள் பாத்துச் சொல்றவன் வந்து அன்னிக்கு திரு உத்திராடம்னு சொல்லிட்டான்; அதுதாங்க பாண்டியன் பிறந்த நாளு;
அப்ப பாண்டியனோட வீரன் ஒருத்தன் சொல்றான், “அய்யா எதிரிங்களே! எங்க அரசரு திரு உத்திராடத்தில போர் செய்ய மாட்டாரு; அதால யானை, தேரு, குதிரை எல்லாத்திலயும் போருக்காகச் செஞ்சிருக்கறதெல்லாம் எடுத்திடுங்க; ஒங்க கோட்டைக் கதவெல்லாம் தெறந்து வச்சிடுங்க: பயப்படாதீங்க”

முத்தொள்ளாயிரம்—8
நாடு
முத்தம்போல் தோன்றும்

நந்தின் இளஞ்சினையும் புன்னைக் குவிமொட்டும்
பந்தர் இளங்கமுகின் பாளையும்—சிந்தித்
திகழ்முத்தம் போல்தோன்றும் செம்மற்றெ தென்னன்
நகை முத்த வெண்குடையான் நாடு
இந்தப்பாட்டுல பாண்டியனோட நாட்டு வளம் பற்றிச் சொல்லப்படுது; [நந்து=சங்கு; பந்தர்=பந்தல்; செம்மற்று= தலைமையை உடையது]
ஒரு பொண்ணு தன் ஊரைவிட்டு அசலூருக்குப் போறா; அங்க போயி வேற ஒரு பொண்ணுகிட்ட தன் நாட்டைப் பத்திச் சொல்றா. “எங்க அரசனோட கொடை அழகான வெண்கொற்றக்கொடையாகும். ஏன் தெரியுமா? அதுகூட முத்துகளால அழகு செய்யப்பட்டிருக்கும்; அது மட்டும் இல்லீங்க; எங்க நாட்டுல சங்கிலேந்து பிறந்த முத்துகள் எல்லா இடத்திலேயும் சிதறிக் கெடக்கும். புன்னை மரத்துலேந்து சிந்திய அரும்பெல்லாம் பாக்கறதுக்கு முத்துகள் போலவே கெடக்கும்; பந்தல் போலே அழகா இருக்கற கமுகோட பாளை இருக்குல்ல; அதிலேந்து உதிர்ந்து போன மணிகளெல்லாம் கூட பாக்கறதுக்கு முத்துகள் போலவே கெடக்கும்; எங்கே பாத்தாலும் என்னா இவ்வளவு முத்துகளே கெடக்குதுன்னு நெனச்சிப்பே”
முத்துக்களாலான் கொடையைக் கொண்ட அவன் நாட்டுல எல்லாமே முத்துகள்தான்னு சொல்றது எவ்வளவு அழகா இருக்குல்ல;

முத்தொள்ளாயிரம் 9.நகர்

மைந்தரோ[டு ஊடி மகளிர் திமிர்ந்திட்ட
குங்கும ஈர்ஞ்சாந்தின் சேறிழுக்கி—எங்கும்
தடுமாற லாகிய தன்மைத்தே தென்னன்
நெடுமாடக் கூடல் அகம்
[திமிர்ந்திட்ட=சிதறிவிட்ட; ஈர்ஞ்சாந்து=குளிர்ந்த சந்தனம்; இழுக்கி=வழுக்குதலால்]
இந்தப்பாட்டுல பாண்டிய மன்னனோட நகர் எப்படி வளமா இன்பமா இருந்ததுன்னு சொல்லப்படுது;
”பாண்டியனோட மதுரையில இருக்கற வீதியெல்லாம் பெரிய ஒசரமான மாடங்கள்ளாம் இருக்குது; அந்த வீதிகள்ள போறவங்க எல்லாம் வழுக்கி விழுந்துடுவாங்களாம்; ஏன் தெரியுமா? மாட மாளிகையில்ல இருக்கற பொண்ணுங்க அவங்க கணவனோட ஊடல்சண்டை போட்டுக்கிட்டுக் கோபத்துல குங்குமத்தையும், சந்தனத்தையும் சன்னல் வழியா வீதியில் எறிஞ்சுடுவாங்களாம். அதெல்லாம் ஒண்ணா சேந்து ஒரே சேறா இருக்குமாம். அதுல போறவங்க நேராப் போக முடியாம தடுமாறுவாங்களாம்.

முத்தொள்ளாயிரம்

திறை

10.பூமி மிதியாப்பொருள்

நேமி நிமிர்தோள் நிலவுதார்த் தென்னவன்
காமர் நெடுங்குடைக் காவலன்—ஆணையால்
ஏம மணிப்பூண் இமையார் திருந்தடி
பூமி மிதியாப் பொருள்
[நேமி=பூமி; தார்=மாலை; ஏமமணிப்பூண்=பொன்னாலும் மணியாலும் செய்த அணிகலன்; இமையார்=கண் இமைக்காத தேவர்; திருந்தடி=நல்ல அழகான காலடி]
ஒரு படைவீரன் பாண்டியனோட உத்தரவைப் புகழ்ந்து பேசறான். “ஏம்பா அரசருங்களே! நீங்க நெலத்துல அதாவது பூமியில காலு வச்சுட்டா ஒடனே எங்க பாண்டியனுக்குக் கப்பம் கொடுத்திட வேண்டியதுதானே? அவன்தானே இந்த ஒலகம் பூரா தாங்கறன்; ஆளறான்; தாங்கற தோளெல்லாம் வெற்றி மாலைதானே போட்டிருக்கான்; கண் இமைக்காத தேவருங்க எல்லாம் ஏன் ஆகாயத்துலியே இருக்காங்க தெரியுமா? அவங்க எல்லாம் இந்த மண்ணில கால வச்சுட்டா ஒடனே எங்க பாண்டியன் அவங்கள புடிச்சுச் சிறையிலே போட்டுட்டு அவங்க போட்டிருக்கற பொன்னாலும் மணியாலும் ஆன நகையெல்லாம் எடுத்து வச்சிக்குவான்; அதாலதான் அவங்களே பயந்துகிட்டு ஆகாயத்துலேயே இருக்காங்க; நீங்கள்ளாம் எம்மாத்திரம்? ஒடனே கப்பம் கட்டிடுங்க”

முத்தொள்ளாயிரம்

11. இறையோ முறையோ

நிறைமதிபோல் யானைமேல் நீலத்தார் மாறன்
குடைதோன்ற ஞாலத்[து] அரசர்—திறைகொள்
இறையோ எனவந்[து] இடம்பெறுதல் இன்றி
முறையோ எனநின்றார் மொய்த்து
இந்தப்பாட்டுல அந்த நாள்ல இருந்த ஒரு வழக்கம் தெரியுது. அதாவது எதிரி அரசரைத் தோக்கடிக்க நாள் குறிச்சாச்சு; அப்ப ஒடனே அரசனோட குடையை எடுத்து யானைமேல வச்சு அதை வேற எடத்துல கொண்டு போயி வைப்பாங்களாம். இது தெரிஞ்சுகிட்டு எதிரிங்க வந்து கப்பம் கட்டுவாங்களாம்.

பாண்டியனோட படைத்தலைவன் சொல்ற பாட்டு இது. “டேய், நம்ம அரசரு நீல வண்ணத்துல குவளைப் பூமாலைதான் போட்டிருந்தாரு; சண்டைக்குப் போகச்சே போடற தும்பைப் பூமாலைகூட போடல; ஆனா யானைமேல அழகான் வெள்ளையான அரசரோட குடையை யானை மேலே வச்சுக்கிட்டுப் போனோமா? அப்ப அது பௌர்ணமிச் சந்திரன் போல இருந்தது. அதை எதிரிங்க தெரிஞ்சிக்கிட்டாங்கடா; அவங்க மட்டுமா? இந்த ஒலகத்து மன்னரெல்லாம் பயந்துபோயிட்டாங்க; குடைநாட்கோளா? அது எங்களை அழிச்சுடுமே! அரசரே! இறைவனே! இது முறையோ? எங்க கப்பத்தையெல்லாம் வாங்கிட்டு எங்களை நீங்கதான் காக்கவேணும்னு கெஞ்சறாங்கடா”

முத்தொள்ளாயிரம்—12
எயில்கோடல்

செருவெங் கதிர்வேல் சினவெம்போர் மாறன்
உருமின் இடிமுர[சு] ஆர்ப்ப—அரவுஉறழ்ந்[து]
ஆமா உகளும் மணிவரையின் அப்புறம்போய்
வேம்ஆல் வயிறெரிய வேந்து
[செரு=போர்; வெம்மை=விருப்பம்; வெம்போர்=கொடும்போர்; உரும்=இடி; ஆர்ப்ப=முழங்க; அரவு=பாம்பு; உறழ்ந்து=நடுங்கி; ஆமா= பசுபோல இருக்கும் ஒரு விலங்கு; உகளும்=துள்ளிக் குதிக்கும்; வேம்=உள்ளம் கொதிக்கும்; ஆல்=அசைச்சொல்]
கப்பம் கட்டாத அரசருங்க மேலே பாண்டியன் படை எடுத்துட்டான்; பெரிய படை கிளம்பிடுச்சு; போர் மொரசு இடி போல மொழங்குது; எதிரிங்க எல்லாம் இடியோசை கேட்ட நாகம் போல பயந்து போயி மலைக்கு அப்பால போயி மறைஞ்சிகிட்டாங்க; ஆனாலும் பயத்தால இன்னும் நெஞ்சில திகிலு போகல; வயிறு பயத்தால எரியுதாம்;
மொத ரெண்டு வரியில பாண்டியனோட வேலைப்பத்தியும், மொரசம் பத்தியும் சொல்லப்படுது; போர்க்களத்துல ஒளி இருக்கற வேலையும், பகைவர் மேல கோபத்தைக் கொண்டவனுமான பாண்டியனோட மொரசு மொழங்குது; கேட்ட எதிரிங்கள்ளாம் இடி கேட்ட நாகம் போல பயந்து ஓடறாங்க; அவங்களோட மதிலை எல்லாம் விட்டுட்டுக் காட்டுப்பசுக்கள்ளாம் மேயற மலைக்குப் போறாங்க; அதையும் தாண்டிப் போறாங்க; ஆனாலும் அங்கியும் பயந்துக்கிட்டு நடுங்கறாங்கன்றதுதான் பாட்டோட பொருளாம்;

முத்தொள்ளாயிரம்—13
குதிரை மறம்

புரைசை அற நிமிர்ந்து பொங்கல்

நிரைகதிர்வேல் மாறனை நேர்நின்றார் யானைப்
புரையசை அறநிமிர்ந்து பொங்கா—அரசர்தம்
முன்முன்னா வீழ்ந்த முடிகள் உதைத்தமாப்
பொன்னுரை நற்போன்ற குளம்பு
[புரையசை=யானையின் கழுத்தில் இடப்பட்ட கயிறுகள்; அற=அறும்படியாக; நிமிர்ந்து பொங்க= தலையெடுத்து மோதிச் சீறி]
இந்தப்பாட்டுல ஒரு அருமையான உவமையைப் பாக்கலாம். அதாவது நாம பவுன் நகையைக் கடையில கொண்டு போயி விக்கப்போறோம்னு வச்சுக்குங்க; அது நல்ல பவுனான்னுன்னு தெரிஞ்சுக்கறதுக்காக கடைக்காரரு அந்த நகையை லேசா ஒரு கல்லுல வச்சு ஒறைச்சுப் பாப்பாரில்ல; ஒறச்சு ஒறச்சுப் பாக்கறதால அந்தக்கல்லு பவுனு நெறத்துக்கே மாறிடும். அதுபோல குதிரையெல்லாம் இங்க போர்க்களத்துல் சண்டைபோடும்போது எதிரி மன்னனரோட தலை முடியெல்லாம் ஒதைச்சு ஒதைச்சு அந்தக் குதிரையோட கால்ல இருக்கற கொளம்பெல்லாம் ஒறச்சுப் பாக்கற கல்லு போல ஆயிடுச்சாம்.

”பாண்டியனோட குதிரை எப்படி போரிட்டதுன்றதைச் சொல்கிற பாடல் இது. குதிரைப்படைகள் எல்லாம் போயி பாண்டியனோட பகை மன்னரோட யானைப் படையோட சண்டை போட்டன. குதிரையானது யானையோட கழுத்தில மோதிச்சாம்; அதால யானை கழுத்தில கட்டிருந்த கயிறு அவுந்து போச்சு; கழுத்துக் கயிறுல காலை வச்சுக்கிட்டிருந்த அரசுருங்க கீழே உழுந்தாங்க; அவங்களோட தலை முடியை ஒதச்சதால குதிரையோட கால் கொளம்பெல்லாம் பொன்னை ஒறச்சுப்பாக்கற கல்லு நெறத்துக்கு மாறிடுச்சாம்;”

முத்தொள்ளாயிரம்—14
யானை மறம்

வையகம் எல்லாம் எமது
மருப்பூசி யாக மறங்கனல்வேல் மன்னர்
உருத்தகு மார்போலை யாகத்—திருத்தங்க
வையகம் எல்லாம் எமதென்[று] எழுதுமே
மொய்யிலைவேல் மாறன் களிறு
[மருப்பு=கொம்பு; ஊசி=எழுத்தாணி; [மறம்=வீரம்; உருத்தகு மார்பு=பகைவரால் அஞ்சத்தக்க மார்பு; திருத்தக்க=செல்வம் நிலைத்த]
இலை போன்ற வேலையுடைய பாண்டியனுடைய யானையானது, தனது கொம்பை எழுத்தாணியாகவும், வீரமுள்ள வேலையுடைய மன்னரது அஞ்சத்தக்க மார்பினை ஓலையாகவும் கொண்டு, அம்மார்பில் “செல்வம் நிலைத்த உலகெல்லாம் எம் மன்னனுடையது” என்று எழுதுகின்றது.

இதான் பாட்டோட பொருளுங்க; போர்க்களத்துல பாண்டியனுடைய ஒரு வீரன் யானை சண்டை செய்யறதைப் பாக்கறான். வேற ஒரு வீரன்கிட்ட சொல்றான், “டேய், அதோ பாருடா, நம்ம அரசரோட யானை என்னா செய்யுது பாத்தியா? அதோட கொம்பையே எழுத்தாணியா வச்சு, பகைவனோட மார்பை ஓலையா வச்சு அதிலேயே எழுதுது பாருடா; என்னா எழுதுது தெரியுமா? ‘எங்க எங்க செல்வம் நெறைய இருக்கோ அந்த ஒலகமெல்லாம் எங்களுக்குத்தான்னு எழுதுது’ அதால இன்மே எல்லா நாடும் நம்ம பாண்டியனுக்குத்தான்”

இதேபோல “ஆய்களிற் றசனிவேகம் அதன்மருப் பூசியாகச்
சீவகன் அகன்ற மார்பம் ஓலையாத் திசைகள் கேட்பத்
காய்பவன் கள்வரென்ன எழுதுவித் திடுவம்’ என்று சீவக சிந்தாமணியில் திருத்தக்கதேவர் பாடியுள்ளார்.

முத்தொள்ளாயிரம்—15
மதில் திறக்குமால்

உருவத்தார்த் தென்னவன் ஓங்கெழில் வேழத்
திருகோடும் செய்தொழில் எண்ணில்—ஒருகோடு
வேற்றார் அகல முழுமே ஒருகோடு
மாற்றார் மதில்திறக்கும் ஆல்
[உரு=அச்சம்; தார்=வேப்பமாலை;வேழம்=யானை;கோடு=கொம்பு; ஆல் என்பது அசைச்சொல் பொருளற்றது]
இந்தப்பாட்டும் பாண்டியனோட யானையின் வீரத்தைத்தான் சொல்லுது; உருன்னா அச்சமாம்; அதாவது பயம்; பேய்களுக்கே பயம் தரக் கூடிய வேப்பமாலையை அணிந்தவனாம் பாண்டியன். அவனோட படையெல்லாம் போயி எதிரிங்களோட மதிலை வளைச்சுக்கிச்சு; அவங்கள்ளாம் பயந்துகிட்டு மதில்கதவைச் சாத்திக்கிட்டு உள்ளேயே இருக்காங்க; யானை என்னா செஞ்சுது தெரியுமா? அதுகிட்டதான் ரெண்டு கொம்பு இருக்குல்ல; ஒரு கொம்பால மதில் கதவைத் திறந்துடுமாம்;. இன்னொரு கொம்பை எதிரியோட மார்பான வயல்ல கலப்பையா வைச்சு உழுதிடுமாம்

முத்தொள்ளாயிரம்—16

மலைத்தோற்றமும், கடல் முழக்கமும், புயல் மதமும்
தோற்ற மலைகடல் ஓசை புலங்கடாஅங்
காற்றில் நிமிர்ந்த செலவிற்றாய்க்—கூற்றுங்
குறியெதிர்ப்பக் கொள்ளும் தகைமைத்தே எங்கோமான்
எறிகதிர்வேல் மாறன் களிறு.
[புயல்=மேகம்; கடாம்=மதநீர்]
இந்தப் பாட்டுலயும் பாண்டியனோட யானையின் வீரத்தைத்தான் சொல்றாங்க; ஒளி வீசற வேலை வச்சிருக்கான் பாண்டிய மன்னன்; அவன் வச்சிருக்கற யானையோட தோற்றம் அதாவது அதன் உருவம் மலைபோல இருக்குமாம்; அது பிளிறிச்சுனா அந்த ஓசை கடல் முழக்கம் போலிருக்குமாம்; அந்த யானையோட மதநீரோ மழை பெய்யறது போல பொழிஞ்சுகிட்டே இருக்குமாம். காத்தைவிட வேகமா நிமிந்துகிட்டே போகுமாம்; எதிரிங்களை எப்படிக் கொல்றதுன்றதை எமன்கூட அதுகிட்டக் கடன் வாங்கித் தான் தெரிஞ்சுக்கணுமாம். நெனச்சாலே பயமாயிருக்குதில்ல;

முத்தொள்ளாயிரம்—17

மன்னர் குடரால் மறைக்கும்
அடுமதில் பாய அழிந்தன கோட்டைப்
பிடிமுன் பழகழிதல் நாணி—முடியுடைய
மன்னர் குடரால் மறைக்குமே செங்கனல்வேல்
தென்னவர் கோமான் களிறு
[அடுமதில்=பொறி முதலியவற்றால் பகைவரைக் கொல்கின்ற மதில்; குடர்=குடல்]
இதுவும் பாண்டியன் ஆண் யானையோட வீரம் சொன்னாலும் அதன் வெக்கத்தையும் சொல்லுதுங்க; தென்னவன் கோமான்னு சொல்ற பாண்டியன் யானைப் போருக்குப் போச்சு; அங்க எதிரி கோட்டை மதிலு பெரிசா இருந்துச்சு; மதிலே பொறியெல்லாம் வச்சு எதிரிங்கள கொல்ற மாதிரி இருந்துச்சு; ஆனா யானை கோபமா போயித் தன் கொம்பால அந்த மதில இடிச்சுது; அதால மதிலும் ஒடைஞ்சுது; யானை கொம்பும் ஒடைஞ்சுது; மேல சண்டை போட்டதுல எதிரிங்க குடலெல்லாம் யானையோட கொம்பில மாட்டிக்கிச்சாம்; அடுத்து இப்ப சண்டை முடிஞ்சுடுச்சி; யானையை அரண்மனையில யானைக் கொட்டாயில கொண்டு வராங்க; தன் ஒடைஞ்ச கொம்பைப் பாத்துப் பெண்யானை இழிவா நெனக்குமேன்னு அது ஒடைஞ்சு போன கொம்பை எதிரிங்க குடலால மறைக்குதாம்.
சில பதிப்புல குடரால்னு இருக்கறதுக்குப் பதிலா குடையால்னு இருக்குதுங்க; அதாவது ஒடைஞ்ச கொம்பை அதுல மாட்டிக்கிட்டிருக்கற எதிரியோட குடையால மறக்குதுன்னு அதுக்குப் பொருளாம்.

முத்தொள்ளாயிரம்—18
களம்
புருவ முரிவு

வெருவரு வெஞ்சமத்து வேல்இலங்க வீழ்ந்தார்
புருவ முரிவுகண்[டு] அஞ்சி—நரிவெரீஇச்
சேட்கணித்தாய் நின்றழைக்கும் செம்மற்றே தென்னவன்
வாட்கணித்தாய் வீழ்ந்தார் களம்
[அஞ்சி=பயந்து; வெரீஇ=நடுங்கி; சேட்கணித்தாய்=தொலைவிடத்தில்; வாட்கணித்தாய்=வாளுக்கு இடமாய்]
இந்தப் பாட்டு போர்க்களக் காட்சியைக் காட்டுதுங்க; போர் மும்முரமா நடக்குது; பாண்டியன் வாளுக்குப் பலர் வெட்டுப்பட்டு வீழ்ந்து கெடக்கறாங்க; வேலால சண்டைப் போட்டவங்களும் நெறய பேர் வீழ்ந்து கெடக்கறாங்க; அப்படி விழுந்தவங்க புருவம் எல்லாம் வளைஞ்சு கோபமா முரிக்கறது மாதிரி இருக்கு. செத்தவங்களைத் தின்னறதுக்கு ஒரு நரி வருது; அது அந்த வீரன் புருவம் வளைந்து கோபமா இருக்கறதைப் பாத்துப் பயந்துடுது. அதால கொஞ்சம் தூரமா போயி நின்னுக்கிட்டு வேற ஒரு நரியைத் தொணைக்கு அழைக்குதாம்.

முத்தொள்ளாயிரம்—19

புல்லார் பிடி புலம்பல்

ஏனைய பெண்டிர் எரிமூழ்கக் கண்டுதன்
தானையால் கண்புதைத்தான் தார்வழுதி—யானையெலாம்
புல்லார் பிடிபுலம்பத் தாம்கண் புதைத்தவே
பல்யானை அட்ட களத்து
“பல யானைகள் கொல்லப்பட்டு வீழ்ந்து கிடக்கின்ற போர்க்களத்தில், பகையரசர் பலர் மாள்கின்றனர். அவர்கள் மாண்ட பின்னர் “எம் கணவர் இறந்தபின் நாங்கள் வாழமாட்டோம்” என்று அவர்களின் மனைவியரும் தீக்குளித்தனர். களம் காண வந்த பாண்டிய மன்னன் அதனைக் காண முடியாமல் தன் கண்களைப் பொத்திக்கொண்டான். பகை வேந்தரின் ஆண்யானைகள் இறந்து போக, அவற்றைக் கண்டு அவற்றின் பெண் யானைகள் புலம்பின. அக்காட்சியைக் கண்ட பாண்டியனின் பெண்யானைகளும் கண்களை மூடிக்கொண்டன” என்பது இப்பாடலின் பொருளாகும்.
பகைவர்தம் மனைவியர்தம் துன்பம் பொறுக்காத பாண்டியன் போலவே அவன் யானைகளும் மாற்றரசனின் பெண் யானைகளின் துன்பத்தினைக் கண்டு மனம் பொறுக்காமல் கண்களை மூடிக்கொண்டன என்பது பகைவர்க்கும் அருளும் நெஞ்சத்தைக் காட்டுகிறது.

முத்தொள்ளாயிரம்—20
படுபேய்க்குப் பாராட்டு

வாகை வனமாலை சூடி அரசுறையும்
ஓகை உயர்மாடத்[து] உள்ளிருந்[து]—கூகை
படுபேய்க்குப் பாட்டயரும் பண்பிற்றே தென்னன்
விடுமாற்றங் கொள்ளாதார் நாடு
[வாகை வனமாலை=வாகைபூ வடிவில் செய்யப்பட்ட பொன்மாலை; ஓகை=மகிழ்ச்சி; விடுமாற்றம்=அரசன் சொல்லி அனுப்பிய சொல்]
இந்தப் பாட்டுல பாண்டியனோட வீரம்தான் சொல்லப்படுது; அவன் சொல்ல ஏத்துக்கணுமாம். இல்லாம எதுத்து நிக்கறவங்க நாடு மொதல்ல நல்லா இருந்ததாம். ஆனா பாண்டியன் சொல்லி அனுப்பிய சொல்ல ஏத்துக்காததால அவன் படையெடுத்தான். அதனால அவனோட எதிரிங்க நாட்டு மாட மாளிகைகளிலெல்லாம் பேய்கள்தான் தூங்கிக் கிடந்ததாம். மொதல்ல மகிழ்ச்சியா இருந்த அங்க தூங்கற பேய்களுக்குக் கூகைதான் தாலாட்டுப் பாடிட்டு இருக்குமாம். கூகைன்னா ஆந்தைங்க; அவ்வளவு மோசமா போயிடுமாம் அந்த நாடு.

முத்தொள்ளாயிரம்—21
திறை முறையின் உய்த்தல்

பறைநிறை கொல்யானைப் பஞ்சவர்க்குப் பாங்காய்த்
திறைமுறையின் உய்யாதார் தேயம்—முறைமுறையின்
ஆள்போய் அரிவையர்போய் ஆடவர்போய் ஆயீன்ற
ஈன்பேய் உறையும் இடம்
[திறைமுறை உய்த்தல்னா இதுவரை முன்னோர்கள் கட்டிவந்த கப்பம் கட்டுதல்; பஞ்சவர்= பாண்டியர்; பாங்காய்=நட்பாய்]
பாண்டிய மன்ன்னுக்கு கப்பம் கட்டாத நாடு எப்படி ஆயிடும்னு இந்தப்பாட்டு சொல்லுது; மொதல்ல பாண்டியனோட யானைப் படை எப்படி வரும்னு சொல்றாரு. அதாவது “எல்லாரும் விலகிப்போங்க; பாண்டிய அரசரோட யானைப்படை வருது” ன்னு முரசை ஒலிச்சுகிட்டே போவாங்களாம். அதுக்கப்பறம் எதிரிங்களக் கொல்ற பாண்டியனோட யானைப்படை வருமாம். அப்படிப்பட்ட படை வந்து கூட அவனுக்குத் திறை அதாவது கப்பம் கட்டாதவங்க நாடு என்ன ஆகும் தெரியுமா? கொஞ்சம் கொஞ்சமா அந்த நாட்டுல இருக்கற பசு மாட்டையெல்லாம் பாண்டியனோட படை எடுத்துக்கிட்டு போயிடும்; சண்டை நடக்கறதால அந்த நாட்டுப்பொண்ணுங்க எல்லாரும் போயிடுவாங்க; குழந்தை இல்லாதவங்க, நோயாளிங்க, வயசானவங்க, சண்டைக்குப் பயந்த ஆம்பளை எல்லாரும் போயிடுவாங்க. அந்த நாட்டுல அதுக்கப்பறம் தாய்ப்பேய்களுக்குப் பிறந்த இளமையான பேய்கள்தாம் வந்து தங்குமாம். அவ்வளவு மோசமாப் போயிடுமாம் அந்த நாடு.

முத்தொள்ளாயிரம்—22
வெற்றி

களிறணையாக் கண்படுத்தல்
கொடித்தலைத்தார்த் தென்னவன் தோற்றான்போல் நின்றான்
மடித்தவாய் சுட்டிய கையால்—பிடித்தவேல்
கண்ணேரா ஓச்சிக் களிறணையாக் கண்படுத்த
மண்ணேரா மன்னரைக் கண்டு
[கண்ணேரா=கண்ணுக்கு நேராக; களிறணை=யானைப்படுக்கை; மண்ணேரா=மண்கொடாத]
வெற்றி பெற்ற பாண்டியன் இப்ப போர்க்களைத்தைப் பாக்கப் போறான்; அங்க நெறய யானை வெட்டுப்பட்டுக் கீழே விழுந்து கெடக்குது; போர் வீர்ர்களும் செத்துக் கெடக்கறாங்க; அப்ப ஒரு காட்சியைப் பாக்கறான். அதைப் பாத்ததும் ஜெயிச்சாலும் தோத்ததுபோல நிக்கறானாம்.
ஒரு வீரன் செத்துக் கெடக்கறான். கோபத்துல அவன் வாய் மடிச்சிருக்கு; கையில இன்னும் வேல வச்சுக்கிட்டிருக்கான்; அதையும் கண்னுக்கு நேராக் குத்திடற மாதிரி நீட்டிக்கிட்டிருக்கான்; கீழே விழுந்துகெடக்கற யானையையே படுக்கையா வச்சு அதன் மேலேயே படுத்துக்கிட்டிருக்கான். செத்துக் கூட வேலைக் கோபமா வச்சுக்கிட்டு யானை மேல இன்னும் எங்க மண்ணைக் குடுக்கமாட்டோம்னு கெடக்கற அவன் வீரத்தைப் பாத்துப் பாண்டியன் வெற்றி பெற்றாலும் தோத்தவன் மாதிரி நின்றானாம்

முத்தொள்ளாயிரம்—23
முன்னிறீஇப் பினிற்றல்

[முன் நிறுத்திப் பின் நிற்றல்]
தொழில்தேற்றாப் பாலகனை முன்னிறீஇப் பின்னின்[று]
அழலிலைவேல் காய்த்தினார் பெண்டிர்—கழலடைந்து
மண்ணிரத்தல் என்ப வயங்குதார் மாமாறன்
கண்ணிரத்தம் தீர்க்கும் மருந்து
[அழலிலைவேல்=இலை வடிவான நெருப்புபோல் ஒளிர்கின்ற வேல்; கழல்=திருவடி; மண்ணிரத்தல்=மண்னுலகை இரந்து வேண்டல்; கண்ணிரத்தம்=கண்ணிலுள்ள சிவப்பு;]
பாண்டியனின் கோபத்தைத் தீர்க்கும் மருந்து கூறல்; ஒரு வீரன் மற்றொருவனிடம் கூறுகிறான்.
”டேய்! நம்ம ராசாவோட கோபம் தீக்கற மருந்து எது தெரியுமா? அவரோட நெருப்புபோல மின்னுற இலை வடிவுல இருக்கற வேலுக்குக் கோபம் உண்டாக்கிட்டாங்கல்ல; அந்த ராசாக்களோட மனைவிங்க எல்லாரும் வரணும்; அவங்க தங்களோட ஒண்ணுமே தெரியாத பிள்ளைகளை நம்ம ராசா முன்ன நிறுத்தணும்; பிள்ளைங்க பின்னால அவங்க நின்னுக்கிட்டு தங்க ராச்சியத்தைக் கெஞ்சிக் கேக்கணும்” அதாண்டா மருந்து”

முத்தொள்ளாயிரம்—24
கைக்கிளை

அளியானை அளிப்பான்
களியானைத் தென்னன் கனவில்வந்[து] என்னை
அளியான் அளிப்பானே போன்றாந்-தெளியாதே
செங்காந்தள் மென்விரலால் சேக்கை தடவந்தேன்
என்காண்பேன் என்னலால் யான்
[களியானை=மதம் பொருந்திய யானை; அளியான்=கருணையால்; சேக்கை=படுக்கை]
இந்தப்பாட்டு கைக்கிளை வகையைச் சேந்ததுங்க. அதாவது அவ வந்து பாண்டிய மன்னனை மனசால நெனச்சுட்டா. அவனையே நெனச்சுக்கிட்டிருக்கா. இதைத்தான் கைக்கிளைன்னு சொல்வாங்க; தன் தோழிகிட்ட சொல்றா;
தோழீ! மதமுள்ள யானைகளின் சொத்தக்காரனான பாண்டியன் என் கனவில் வந்தாண்டி; வந்து என்ன செஞ்சான் தெரியுமா? எனக்கு அவன் கருணையால நல்லா இன்பம் தர்ற மாதிரி பொய்யா என்கிட்ட இருந்தாண்டி; நானோ அதை உண்மைன்னு நெனச்சுக்கிட்டு அவன் என் படுக்கையிலதான் பக்கத்துல படுத்திருக்கான்னு நெனச்சுக்கிட்டு என்னோட செங்காந்தள் அரும்பு போல இருக்கற மெலிசான விரல்களால தடவிப் பாக்கறேன்; என்னத்தைப் பாக்கறது? அவனைக் காணோம்டி; நான் மட்டும்தான் தனியாக் கெடக்கறேண்டி;

முத்தொள்ளாயிரம்—25
நீர் நிலை நின்ற தவம்

கார்நறு நீலம் கடிக்கயத்து வைகலும்
நீர்நிலை நின்ற தவங்கொலோ—கூர்நுனைவேல்
வண்டிருந்த நக்கதார் வாமான் வழுதியாற்
கொண்டிருக்கப் பெற்ற குணம்
[கார்நறு நீலம்=கருமையும், நறுமணமும் உள்ள குவளைப் பூ; வாமான்=தாவுகின்ற குதிரை; வண்டிருக்க நக்க தார்=வண்டுகள் இருப்ப அதனாலே மலர்ந்த மலர்களால் கட்டிய மாலை; வழுதி=பாண்டியன்]
தலைவி தன் நெஞ்சுகிட்ட சொல்ற பாட்டு இது; “நெஞ்சமே! பாண்டியன்கிட்ட கூரிய நுனி இருக்கற வேற்படை இருக்கு; வாசனையால வண்டெல்லாம் வந்து பூக்களை மொய்க்குது; அதனால் அந்தப் பூவெல்லாம் மலருது; அந்த மலரால தொடுத்த மாலையைத்தான் பாண்டியன் கழுத்தில போட்டிருக்கான்; கூடவே குவளை மலரானால மாலையும் போட்டிருக்கான்; அவன்கிட்ட தாவிச்செல்ற குதிரை இருக்குது; அந்தக் குவளைப் பூவுக்கு அப்படிப்பட்ட உயர்ந்த எடம் எப்படிக் கெடச்சுது? அங்க போக நல்ல கொணம் எப்படி கெடச்சுது தெரியுமா? கருமையான நல்ல வாசனையோடிருக்கற அந்தக் குவளைப் பூ தன் ஒற்றைக்காலால் கொளத்துத் தண்ணியில நின்னுகிட்டுத் தவம் செஞ்சதுல்ல; அதனாலதான் அதுக்கு அந்தக் கொணம் கெடச்சுது”
உண்மையில் குவளைப் பூ தவம் செய்யல;அது தன் ஒத்தத் தாளால நிக்குது; அதைத்தான் பாடியவரு இப்படிச் சொல்றாரு. இதைத்தான் தற்குறிப்பேற்ற அணின்னு சொல்வாங்களாம்.

•••

கவிஞர் ஷஸிகா அமாலி முணசிங்க ( அவர்கள் நம் அயல்மனிதர்கள் – 05 ) – எம்.ரிஷான் ஷெரீப் ( இலங்கை )

download

பத்திக் கட்டுரைத் தொடர்

அலுவலக நேரங்களில், நகரத்தின் ரயில், பேரூந்து நெரிசல்களுக்குள் சிக்கிக் கொண்டு பயணிப்பவர்களுக்குத் தெரியும் அவற்றுக்குள்ளிருக்கும் இன்னல்கள். ஆண்களும், பெண்களுமாய் ஜீவிக்க வேண்டி அனுபவிக்க நேரும் இவ்வாறான சிக்கல்கள்தான் வாழ்க்கையை நகர்த்துகின்றன. எவருமே இக் கஷ்டங்களை வரவேற்பதில்லை.

வீட்டிலிருந்து, அழகாக, நேர்த்தியாக உடையணிந்து பேரூந்திலேறும் ஒருவர் அலுவலகத்துக்கருகில் இறங்கும்போது அவரது ஆடைகளைப் போலவே, கசங்கி விட்டிருப்பார். அவ்வாறே வேலைசெய்து களைத்து, அலுவலகத்திலிருந்து வெளியேறி, பேரூந்திலேறி வீட்டுக்கு வந்து சேரும்போது அவரது அனைத்துப் பலமும் உறிஞ்சப்பட்டு, சக்கை போல ஆகி விட்டிருப்பார். ஆண்களைப் போலவே பெண்களும் இக் கொடுமைகளை அனுபவித்த போதிலும், பெண்கள் இவற்றை விட மேலதிகமாகவும் பல கொடுமைகளை பிரயாணங்களின் போது அனுபவிக்கின்றனர்.

இச் சிங்கள மொழிக் கவிதையைப் பாருங்கள். எழுதியிருப்பவர் பெண் கவிஞர் ஷஸிகா அமாலி முணசிங்க. ஒரு சட்டத்தரணியான இவர் கவிஞர், விமர்சகர், சமூக ஆர்வலர், கலைஞர் எனப் பன்முகம் கொண்டவர். சிங்கள மொழியில், வாழ்வின் அனுபவங்களைக் கவிதைகளாக எழுதும் இவரது கவிதைகள் பல காத்திரமான இதழ்களிலும், பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன. கவிதைத் தொகுப்புக்களையும் வெளியிட்டிருக்கிறார்.

இக் கணத்தின் யதார்த்தம்

சேலைத் தலைப்பை இழுத்துக் கீழே தள்ளி விட்டு

பருத்த ஆண்கள் பேரூந்தில் ஏறுகையில்

தயக்கத்தோடு படியில் தொற்றிக் கொள்கிறேன்

பேரூந்தின் கர்ப்பத்துக்குள்

மெதுமெதுவாகத் தள்ளப்படுகிறேன்

வியர்வையில் தெப்பமாகி

இடைவெளிகளிடையே நகர்த்தப்படுகிறேன்

விழுந்திடாதிருக்க முயற்சிக்கிறேன்

சரிகிறேன் எழுகிறேன்

சூழவும் எதுவும் தென்படாத அதியுச்ச தள்ளுகைகளிடையே

நான் சிந்திக்கிறேன்

‘யார் நான்

கவிதாயினியா

மிக அழகிய இளம்பெண்ணா

அவ்வாறும் இல்லையெனில்

உயர்பதவியேதும் வகிப்பவளா

காதலியா, தாயா, அன்பான மனைவியொருத்தியா

இதில் எது பொய்யானது

தீயாயெரியும் பேரூந்தொன்றுக்குள் சிறைப்பட்டு

களைப்போடு துயருறும் விலங்கொன்றுதான் நானன்றி

இக்கணத்தில் வேறெவர்?’

யதார்த்தம் என்பது என்ன

பேரூந்திலிருந்து இறங்கி

வீட்டில் காலடி வைக்கும் கணம்

குறித்துக் கனவு காண வேண்டுமா

குளிர்ந்த நீரில் உடல் கழுவி

தேனீரைச் சுவைக்கும் விதம் பற்றிச் சிந்திக்க வேண்டுமா

எனில் யதார்த்தம் எனப்படுவது இக்கணம்தான்

பெரும் காரிருளில் மூழ்கி

இருப்பின் துயரத்தை அனுபவிக்கும் விலங்கொன்றாக மட்டும்

என்னை நானே சந்திக்கும் இக் கணம்

‘நான்’ வீழ்ந்துடைந்து அழிந்து போகும் இக் கணம்

கவிஞனான போதும்

இடரை அனுபவிப்பது இப் பேரூந்தினுள்ளேதான்

இங்கு வைத்தியரோ, வேறெவராயினுமொருவரோ

பெண்ணோ, ஆணோ

தெள்ளத் தெளிவாகத் துயரனுபவிக்கும்

விலங்கொன்றன்றி வேறெவர்

இது இக்கணத்தின் யதார்த்தம்

இக் கணம் துயரத்திலிருந்து தப்பிக்கச் செய்யும்

கதவைக் காணக்கூடிய கணம்

பேரூந்திலிருந்து இறங்கிச் செல்ல முன்பு

வெளிச்சம் என்னை நெருங்கட்டும்

இவ் வாழ்வைப் பிணைத்திருக்கும் கயிறு தளர்ந்து போகட்டும்

****
images (14)

நகர வாழ்க்கை ஒரு மாயை. அது பல விதக் கிராம மக்களால்தான் ஒளியூட்டப்படுகிறது. அப் பளபளப்பான வெளிச்சம், இன்னுமின்னும் கிராம மக்களை ஜீவிக்கவென நகரத்துக்கு ஓடி வரும்படி செய்து கொண்டேயிருக்கிறது. நீங்கள் இதை வாசிக்கும் இக் கணமும் எவரேனும் ஒருவர் புதிதாக, நகரத்துப் பேரூந்தில் வந்து இறங்கியிருப்பார் பாருங்கள். அதுதான் வாழ்க்கை.

– எம்.ரிஷான் ஷெரீப்

mrishanshareef@gmail.com

SIBICHELVAN’S 6 POEMS ( II ) Rendered in English by Latha Ramakrishnan

602784_10200198662103337_515294167_n

6. SO A JOURNEY

On its own the journey had begun.

Some hours, faraway,

All others not pre-planned,

went on.

In many a milestone

they’ve written the name of an ailment

in languages not in vogue till then.

In milestones, sometimes they’ve written

the journey’s age and sometimes

the ‘volume’ of the disease.

As they’ve kept hidden

the distance of one’s destination

We are journeying all too hastily, agitatedly ,

through a terrible, challenging

want of time.

Your compasses won’t work here;

your GPS instruments won’t.

Gadgets that measure your pressure

and your ECG machine

and your treadmills

Further your ultra-modern scientific devices

don’t come to your aid.

Those who you had firmly believed

would accompany you

are waving hands, bidding goodbye to you.

At the instant when you realize

that no name nor ailment nor life

is inscribed in your journey’s unforeseen milestone

the word Nature would be written in that.

But, then your eyes would be almost closed.

How would you read Nature?

6. என்றொரு பயணம்

தன்னாலே தொடங்கிவிட்டது பயணம்

தொடங்கிய இடத்திலிருந்து

வெகுதொலைவாக சில சமயங்கள்

திட்டமிடாதவையாக மற்ற அனைத்து சமயங்கள்

போய்க்கொண்டிருக்கின்றன

பல மைல்கற்களில் அதுவரை இல்லாத மொழிகளில்

ஒரு நோயின் பெயரை எழுதிவைத்திருக்கிறார்கள்

மைல்கற்களில் சில சமயங்களில் பயணத்தின் வயதையும்

சிலநேரங்களில்

நோய்களின் அளவையும் எழுதிவைத்திருக்கிறார்கள்

போய்ச் சேரவேண்டிய தொலைவையும்

நேரத்தையும் ரகசியமாக வைத்திருப்பதால்

ஒரு திகிலான

ஒரு சவாலான

ஒரு நேரமின்மையில்

பரபரப்பாக பயணம் மேற்கொண்டிருக்கிறோம்

உங்கள் திசைகாட்டிகள் இங்கே வேலைசெய்யாது

உங்கள் ஜிபிஎஸ் கருவிகள் இங்கே வேலைசெய்யாது

உங்கள் பிரஷரை அளவிடுகிற கருவிகள்

மற்றும் உங்களின் இசிஜி கருவிகள்

மற்றும் உங்கள்

டிரட் மில்கள்

மேலும் உங்களின் அதிநவீன அறிவியல் கருவிகள்

துணைக்கு வருவதில்லை

பயணத்தில் உங்களோடு யாவரும் வருவார்கள் என

நீங்கள் உறுதியாக நம்பியவர்கள்

இப்போது கையசைத்து உங்களுக்கு விடைகொடுக்கிறார்கள்

உங்கள் பயணத்தின் எதிர்பாராத மைல்கல்லில்

எந்தப் பெயரும் எந்த நோயும் அல்லது எந்த உயிரும்

அங்கே பதியப்பட்டிருக்கவில்லை என்பதை

நீங்கள் அறியும் நொடியில்

அந்த மைல்கல்லில் இயற்கை என எழுதியிருக்கும்

அப்போது கண்கள் சொருகியிருக்கும்

எப்படிப் படிப்பீர்கள்

இயற்கையை

7. BLUE SKY’S WHITENESS

I was of the impression that only in our place

there was blue sky.

Crossing the sea I went to another soil.

There too the sky was in blue alone.

As I visited more and more places

Everywhere the sky was widespread

in blue only.

Should go somewhere having sky sans blue.

Also, should visit a place where there is

no sky at all.

And I should paint it in the hue and shade

That I desire.

If I throw a drop of milk

Won’t the entire sky turn white?

In all the places I tread in that instant

in silvery white sky there wander, flying

going round and round _ the clouds.

7. நீலவான் வெண்மை

எங்களூரில் தான் நீலவானம் இருக்கிறது என நினைத்திருந்தேன்

கடல் கடந்து பறந்து போனேன் ஒரு நிலம்

அங்கேயும் நீலத்தில்தான் இருந்தது வானம்

இன்னும் இன்னும் என நிறைய ஊர்களுக்கு

போகப்போக எல்லா ஊர்களிலும்

வானம் நீலத்தில்தான் விரிந்துகிடந்தது.

போகவேண்டும்

நீலமற்ற வானம் இல்லாத ஊருக்கு.

வானமேயில்லாத ஊருக்கும் ஒருநாள் போகவேண்டும்.

அதற்கு நிறத்தை நான் விரும்பிய வண்ணத்தில் ஏற்றவேண்டும்

துளிப்பாலை வீசினால்

வானம் முழுக்க வெண்மையேறாதா

அத்தருணத்தில்

நான் போகிற எல்லா ஊர்களிலும்

வெண்மையான வானத்தில்

பறந்துபறந்து அலைகின்றன மேகங்கள்

*****

8. FORENOON

I sliced a guava fruit into two and ate it.

Some more I offered to my guests.

The remaining one I threw off

from the terrace of our house.

Before landing on the floor

spreading branches in the wind

the guava fruits

growing in clusters

fell on the ground

thudding.

8. முன் மதியம்

முன் மதியம் ஒரு கொய்யாப் பழத்தை

விண்டு உண்டேன்

இன்னும் சில பழங்களை விருந்தினர்க்குக் கையளித்தேன்

மீதியான

ஒரே ஒரு கொய்யாப்பழத்தை என் வீட்டின் மாடியிலிருந்து

தூக்கியெறிந்தேன்

தரையில் விழுவதற்குள் காற்றில் கிளை பரப்பி

கொத்து கொத்தாக காய்த்த கொய்யாப்பழங்கள்

மண்ணில்

சொத்தென

சொத்தென

விழுந்தன

**

download (98)

9. IDENTIFYING MY HOUSE

My house stands on the highways

leading to the capital city.

In one corner of the road

there stands an ATM of a bank having branches

all over the country.

Opposite to that there is a 24×7 clinic.

Near to that

ambulances remain waiting in readiness

to receive and caryy the corpsus.

So close to the clinic there is a cinema-theatre.

Colourful movies aplenty

studded with stunt scenes and love songs

would fill the auditorium

with whistles playing a pivotal role.

Adjacent to the theatre there is a

century-old crematorium.

For announcing ‘I have turned modern’

the electric crematorium name-boards

are hanging in multi-colour Flexes.

In the road opposite the crematorium

a massive wedding-hall.

There the song ‘Vaaraayoe Thoezhi Vaaraayoe…’

would be heard always.

Very near to all those my house remains.

Tell me now

If I mention which one specifically

you could identify my house easily?

So as to enable each one of you to spell it in the manner you like

let me draw it in a modern form:

My house there

near

a clinic

electric crematorium

a petrol bunk

a wedding-hall

Further, as my house stands on a highway

As soon as you are born

You can come and go so easily

near everything.

9. என் வீட்டின் அடையாளம்

என் வீடு ஒரு தலைநகருக்குப் போகிற நெடுஞ்சாலையின்மீது இருக்கிறது

அந்தச் சாலையின் ஒரு ஓரத்தில் நாடெங்கும் கிளை பரப்பியிருக்கிற

ஒரு வங்கியின் ஏடிஎம் எந்திரம் இருக்கிறது

எதிரில் புகழ்பெற்ற 24 மணிநேர மருத்துவமனை ஒன்று

மருத்துவமனை அருகில் தயாராக ஆம்புலன்ஸ்கள் காத்திருக்கின்றன

பிணங்களை வரவேற்று சுமந்து போக

மருத்துவமனையின் மிக அருகில் ஒரு சினிமா தியேட்டர் இருக்கிறது

அதில் பல வண்ணப் படங்கள் சண்டைக் காட்சிகளோடு

காதல் பாடல்களோடு விசில்களின் அரங்கேற்றத்தில் நிறையும்.

தியேட்டருக்கு அருகில் இருக்கிறது

நூற்றாண்டுப் பழமை வாய்ந்த ஒரு சுடுகாடு

நவீனமாகிவிட்டேன் எனச் சொல்ல மின்மயான போர்டின் அறிவிப்பு

சுடுகாட்டு வாசலில் பல வண்ண பிளக்ஸ்களில் தொங்கியபடியிருக்கின்றன

சுடுகாட்டுக்கு எதிர்ச்சாலையில் ஒரு மாபெரும் திருமண மண்டபம்

அங்கு எப்போதும் வாராயோ தோழி வாராயோ

என்ற பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும்

அவற்றிற்கு மிக மிக அருகில்தான் என் வீடு

இப்போது சொல்லுங்கள்

என் வீட்டிற்கு அடையாளமாக எதைக் குறிப்பிட்டுச் சொன்னால்

உங்களால் எளிதில் அடையாளம் காண இயலும்

அதை அவரவர் விருப்பத்திற்குச் சொல்ல வசதியாக

ஒரு நவீன வடிவத்தில் வரைந்து காட்டுகிறேன்

என் வீடு இருக்கிறது

ஒரு மருத்துவமனை

ஒரு வங்கி ஏடிஎம்

ஒரு எலெக்ட்ரிக் சுடுகாடு

ஒரு பெட்ரோல் பங்க்

மற்றும்

ஒரு கல்யாண மண்டபம் அருகில்

மேலும் என் வீடு ஒரு தேசிய நெடுஞ்சாலையின்மீது இருப்பதால்

நீங்கள் பிறந்ததும் எளிதாக வந்து போகலாம்

எல்லாவற்றிற்கும் அருகில்

10. THE DOWNPOUR THAT DRIZZLED A LITTLE WHILE AGO

The frogs have started croaking;

The sound of thunder was bursting out

here and there

The earthy odour rose and spread.

Lightnings caused the dark sky glowed in patches and left.

Thus there began to appear

Indications of the impending rain.

Whether- forecast also was announcing once again

that there would be rain soon.

In the mud formed of the downpour

some time before

expecting rain the more a traveler walks.

Another appears as the ‘rain’s advent;

as the very sky filled with the possibility

of having rain cent percent.

10.சற்றுமுன் தூறலாகப் பெய்த மழை

தவளைகள் கறட்கறட்டென கத்தத் தொடங்கியிருந்தன

இங்கொன்றும் அங்கொன்றுமாக இடியோசை வெடித்துக்கொண்டிருந்தது

மண்வாசனை கிளர்ந்து பரவியது

இருண்ட வானில் வெளிச்சம் கீறி மறைந்தன மின்னல்கள்

இவ்வாறாக மழை வருவதற்கான அறிகுறிகள்

தென்படத் தொடங்கியிருந்தன

வானிலை அறிக்கையும் மழை வருவதை மீண்டும்

ஒருமுறை அறிவித்துக்கொண்டிருந்தது

சற்றுமுன் தூறலாகப் பெய்து

ஓய்ந்திருந்த சற்றில்

இன்னும் மழை வருமா என எதிர்பார்த்து நடக்கிறார் ஒரு சகபயணி

வந்துவிடுவதைப் போலவேயிருக்கிறார் மற்ற சகபயணி

நூறு சதவிகிதம் மழை வருவதற்கு வாய்ப்பிருக்கும் வானமுமாக

11.

Cleaving two lands the tar-road goes on.

In one corner luscious green fields

and on the other side dry lands

The road proceeds in between.

Thirsty zebras in the centre.

They yearn to drink whatever water is

Within eyes’ reach.

The mirage runs in front

splashing wave after wave

In the speed of the road

on its other side

fields dry in luscious green lie.

11.

இரண்டு நிலங்களைப் பிளந்துகொண்டு போகிறது தார் சாலை

ஒரு ஒரத்தில் பச்சைப் பசேலென வயல்களும்

இன்னொரு புறத்தில் கோடையில் காய்ந்த நிலங்களும்

நடுவில் போய்க்கொண்டிருக்கிறது சாலை

தாகமெடுத்த வரிக்குதிரைகள் சாலையின் நடுவில் கடக்கிறது

கண்ணில்பட்ட நீரைக் குடிக்க தவிதவியாய் தவிக்கிறது

கானல்நீர் அலையடித்து அலையடித்து முன்னால் போய்க்கொண்டிருக்கிறது

சாலையின் வேகத்தில்

சாலையின் அடுத்த பக்கத்தில் பச்சைப் பசேலென வயல்கள்

காய்ந்திருக்கின்றன

•••

SIBICHELVAN’S 6 POEMS ( II ) Rendered in English by Latha Ramakrishnan