Category: இதழ் 31

போர்வை ( சிறுகதை ) இஸ்மத் சுக்தாய் / தமிழில் . ஜி. விஜயபத்மா

download

பனிகாலமாதலால் குளிர் அதிகமாக இருக்கிறது . காலடியில் கிடந்த ,மெத்தென்ற போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டால் குளிருக்கு அடக்கமா க கதகதப்பு உணர்வுடன் , அசந்து தூங்கி விடலாம் என்ற எண்ணத்தில் , போர்வையை இழுத்து போர்த்தி கொண்டேன். எதேச்சையாக என் கண்கள் கட்டிலின் அருகில் உள்ள சுவற்றைப்பார்க்க , அங்கே கட்டிலின் என் அசைவுகள் , நிழலாய் அசைந்து குட்டி யானை ஒன்றின் இயக்கம் போல் தோன்றியது

அந்த நிழலும் , அதன் அசைவுகளும் , குட்டி யானை உருவங்களாகவும் ,நான் மறக்க நினைத்து ஒதுக்கி தள்ளிய அந்த கொடூர சம்பவத்தின் , அதே
தாக்கத்தை இன்று என் மேல் அதன் முழு வீச்சுடன் என்னை ஆக்ரமிப்பதாகவும்இருந்தது . அடிவயிற்றில் இருந்து , ஒரு கலவரம் பிறந்து , என் மொத்த ரத்த
அணுக்களிலும் நிறைந்து , என்னை அச்சுறுத்தியது .

.

எதையோ நான் உங்களுக்கு சொல்ல போகிறேன் , அது அற்புதங்கள் நிறைந்த சுவாரசியமான கதையாக இருக்கும் . அது தேவதைக் கதைகளில் வரும் , விநோத ஆச்சரியங்கள் நிறைந்தது போன்ற என் போர்வை கதை என்று நீங்கள் நினைத்தால்
,தவறு . இது விளக்கி சொல்ல இயலாத கலவரம் விதைக்கும் , அச்சுறுத்தும் சம்பவங்கள் நிறைந்த கொடூர கதை என்றுதான் சொல்ல இயலும் .

இன்று சுவற்றில்நான் பார்த்த நிழலின் அசைவுகள் , எனக்குள் உறைந்து போன அந்த பழைய
சம்பவங்களின் , கசப்பு படிமங்களை உயிர்ப்பித்து விட்டது . என் வயதை ஒத்தபெண் குழந்தைகளும் , என் சகோதரிகளும் , தங்கள் எண்ணங்களை வண்ணங்களாக்கி ,ஓரிடத்தில் அமர்ந்து சித்திரங்கள் தீட்டி , பல கதைகள் பேசி வாழும் பொது
, அந்த மேன்மை உணர்வுகளுக்கு , முற்றிலும் எதிரான மூர்க்க குணமும் ,எப்பொழுதும் சண்டைக்கு தயாராக நிற்கும் சேவல் போல இருந்தேன் நான்.எப்பொழுதும் சகோதரர்களிடம் சண்டையிடுவதும் , அவர்கள் நண்பர்களுடன்
மல்லுக்கு நிற்பதுமே என் பால்ய வயதின் பொழுது போக்கு . பல சமயங்களில்நான் ஏன் இப்படி சதா சர்வ காலமும் , போர்க்குணத்தினை சுமந்து
திரிகிறேன்? என்னால் ஏன் என் சகோதரிகள் போல மென்மையாக வாழ இயலவில்லை என்று யோசித்துவிடைதெரியாமல்தோற்றுபோயிருக்கிறேன் சிந்தனைகள் ஓடிதன் விடையைத் என் மூளையில் தேடி எடுக்கும் வரை கூட காத்திருக்கும்
பொறுமை எனக்கு இருப்பதில்லை யோசிக்கும் அந்த கணத்தின் அடுத்த நொடி என்சகோதரனோ அல்லது அவனது நண்பர்களோ என் போரில் எனக்கு எதிரியாக என்கைகளுக்குள் சிக்கிக் கொண்டு இருப்பார்கள் .நாங்கள் கட்டி உருண்டு ,
ஆக்ரோஷத்தின் உச்சத்தில் நின்று சண்டை போட்டு கொண்டு இருப்போம்

அம்மா ஏதோ வேலையாக ஒரு வாரம் ஆக்ரா வரை போக வேண்டி இருந்தது . என்னுடைய
மூர்க்கத்தின் வேகம் தெரிந்தவள் அவள் . என்னை வீட்டில் விட்டு சென்றால்
, என் சண்டையில் என் சகோதரர்களின் மண்டை உடை படும் என புரிந்ததால் ,
எங்களின் உறவுக்கார பெண் பேகம் ஜான் என்பவளிடம், தான் வரும்வரை என்னைப்
பார்த்து கொள்ள சொல்லி விட்டு சென்றாள் .

அந்த பெரிய வீட்டில் நானும் , பேகம் ஜானும் சில பணிப் பெண்களும்
இருந்தோம் . என் வயது குழந்தைகள் யாரும் இல்லாமல் , எனக்கு சண்டை போட
ஒரு சுண்டெலி கூட இல்லாத வீடாக அது இருந்தது . . இது அம்மா எனக்கு
கொடுத்த மிகப் பெரிய தண்டனை என்று மிகவும் வெறுப்பாக இருந்தது

என்னை பாதுகாப்பாக அம்மா விட்டுச் சென்ற பேகம் ஜானின் , போர்வை தான் ,
என் நினைவுகளில் , கொல்லன் தன் உளியால் ஆழமாய் செதுக்கிய உருவங்கள் போல
, அழியா வடுக்களாக பதிந்து விட்டிருந்தன. . அந்த நினைவுகள் ஒவ்வொரு
இரவின் தனிமையிலும் ,, நிழலாடும் சுவர்களின் பிம்பத்திலும்
ஒளிந்திருந்து அவ்வப்போது என்னை பயமுறுத்துவதாகவே இருந்தது .

பேகம் ஜானினின் ஏழைப் பெற்றோர் அவளை , அவளை விட வயதில் முதிர்ந்த
நவாப்பிற்கு அவளை திருமணம் செய்து கொடுத்து இருந்தனர். . நவாப்
இயல்பிலேயே மிகவும் ஒழுக்கமானவர் , மத நம்பிக்கைகளில் ஊறியவர் . புனித
ஹஜ் யாத்திரை சென்று வந்தவர். வேறு யாரும் ஹஜ் பயணம் போக வேண்டும் என்று
கேட்டால் , உடனே அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்து தருவார் . இத்தனை
வருட காலத்தில் , அவருக்கு எந்தப் பெண்ணுடனும் சகவாசம் இருந்ததில்லை .
விபச்சாரிகளிடமும் அவர் சென்றதாக ஒருவரும் கேள்வி பட்டதுமில்லை .
இவ்வளவு நல் ஒழுக்கங்களை பேணும் இவரை விட தங்கள் பெண்ணுக்கு பொருத்தமான
ஒருவரை காண இயலாது என்று பேகம் ஜானின் பெற்றோர் திடமாக நம்பினர். அதனால்
இருவருக்குமான வயது வித்தியாசங்களை அவர்கள் பெரிதாக எண்ணாமல்
திருமணத்தை நடத்தி விட்டனர்

வாழ்க்கையில் ஒவொருவருக்கும் ஒரு பொழுது போக்கு இருக்கும் . சிலர்
பந்தயப் புறா வளர்ப்பார்கள் , சிலர் சண்டைச் சேவல் வளர்ப்பார்கள் ,
அந்த சேவலின் பராமரிப்பை மிகவும் கவனமாக பார்த்து பார்த்து செய்வதே
அவர்களின் வாழ்வின் மிக முக்கிய பணியாக இருக்கும் .இது போன்ற பொழுது
போக்குகளில் நவாப்பிற்கு ஒரு போதும் விருப்பம் இருந்ததில்லை ,அவை
வாழ்வின் வெட்டி பொழுது போக்குகள் என்று வெறுப்புடன் சொல்வார்

நவாப்பிற்கும் விருப்பாமான பொழுது போக்கு இருந்தது . சிவந்த நிறமும் ,
மெல்லிய இடையை உடைய பருவ வயது இளைஞர்கள் எப்பொழுதும் அவரைச் சுற்றி
இருந்து கொண்டே இருப்பார்கள் . அவர்களுக்குத் தேவையான அனைத்து
செலவுகளையும் நவாப் மிகவும் மகிழ்ச்சியுடன் செய்வார். மற்றவர்களுக்கு
புறா , சேவல் மாதிரி , நவாப்பிற்கு இந்த வாலிபர்கள் . பருவ வயது
இளைஞர்களுக்கு அவர் வீட்டில் உரிமை அதிகம் . அவர்கள் எந்த நேரமும்
நவாப்பைத் தேடி வரலாம் . உரிமையுடன் தங்கி சாப்பிட்டு போகலாம் .

நவாப்பிற்கு திருமணம் என்ற ஒன்றின் தேவையே இருப்பதாக அவர் ஒரு போதும்
யோசித்தது இல்லை . உறவுக்காரர்கள் சொல்கிறார்கள் என்று பேகம் ஜானை அவர்
திருமணம் செய்து கொண்டார் . திருமணம் முடிந்த அடுத்த சில மணி நேரங்களில்
பேகம் ஜானை வீட்டிற்கு கூட்டி வந்து அவளுக்கு சவுகரியமாக வாழ தனியறை ,
பணிப்பெண்கள் என அணைத்து வசதிகளையும் செய்து கொடுத்து விட்டு , இப்படி
தனக்கு ஒரு மனைவி இருக்கிறாள் என்பதையே கிட்டத்தட்ட மறந்து விட்டார்.
அவரைப் பொறுத்தவரை அவர் வீட்டில் , எத்தனையோ பொருட்கள் சேகரிக்கப் பட்டு
வைக்கப்பட்டு இருக்கின்றன . அவற்றுள் ஒன்றாக , உயிருள்ள பேகம் ஜானும் ,
வைக்கப் பட்டு விட்டாள் . .

ஏழ்மையில் இருந்து இந்த வாழ்விற்கு வந்த பேகம்ஜான் , போக வேறு இடம்
இல்லாமல் , தன் நிலையை யாரிடமும் எடுத்துக் கூற இயலாமல் இதுதான் தனக்கு
விதிக்கப்பட்ட வாழ்வு என , தனிமையில் , கலக்கமுற்று உலர்ந்து போனதொரு
வெறுமை வாழ்வை வாழப் பழகி இருந்தாள்

பேகம் ஜானின் வாழ்வு எந்த இடத்தில பிறழந்தது என யார் ஒருவராலும்
அறுதியிட்டு கூற இயலாது . அவள் பிறந்த கணத்திலா , அல்லது அவள் நவாப்பை
திருமணம் செய்து கொண்ட பொழுதா , உறுதியான நான்கு மரக்கால்களில்
உயர்ந்து நிற்கும் , அந்த கனத்த மெத்தையில் ஏறி அவள் உறங்க
முயற்சிக்கும் கணங்களிலா இளமைத் ததும்பும் , பருவ வயது வாலிபர்களுக்கு ,
அவளது சமயலறையில் இருந்து செல்லும் , சுவைமிக்க பதார்த்தங்களை , உண்ணும்
அந்த இளைஞர்களின் சட்டைக்குள் தெரியும் மார்பை, முன்னறை ஜன்னலில்
இருந்து ரசித்து பார்க்கும் நேரங்களிலா எவராலும் கூற இயலாது. ஆனால்
இளமையின் விளிம்பில் தகிக்கும் , தனிமையில் வாடும் பேகம் ஜானுக்கு , அந்த
இளைஞர்களைப் பார்க்கும் பொது , அவளது உடல் அக்னியில் வீழ்ந்து எழுந்தது
போல் தகித்து போவதை மட்டும் அவளால் தாங்க முடிவதே இல்லை அவளைச் சுற்றி
ஒரு வெம்மை எப்பொழுதும் அவளை வாட்டிக் கொண்டே இருந்தது

தன்னை விட்டு விலகியே இருக்கும் கணவனை , தன்னை நெருங்கச் செய்ய ,பேகம்
ஜான் இரவு முழுவதும் பூஜைகள் செய்வது , புனித நூல்களை இடை விடாமல்
ஓதச் செய்வது , மந்திரித்து தாயத்து கட்டிக் கொள்வது என தன் அறிவுக்கு
எட்டிய வரையில் தோன்றிய அத்தனையும் செய்து பார்த்தாள் .எதற்கும் பலன்
இல்லை . இனி தன் வாழ்வு இதுதான் என்று அவளே ஒரு தீர்மானதிற்கு வந்தவளாக
இயலாமையுடன் அமைதியாகி விட்டாள்

தூக்கம் வரா இரவுகளை கழிக்க , புத்தகங்களை தனக்கு துணையாக்கி கொண்டாள்
. ஆழ்ந்த வாசிப்புகளுக்குள் தன்னை வலுக்கட்டாயமாக திணித்துக் கொண்டாள்
. ஆனால் பாவம் அவள் !, நாவல்களில் விவரிக்கப்பட்ட உணர்ச்சி மயமான
காதல் வர்ணனைகளும் , மோகத்தை கிளம்பச் செய்யும் கவிதைகளும் , அவளது
வெறுப்பை அதிகமாக்கியதே தவிர குறைக்கவில்லை . அவை அவளது காம உணர்ச்சிகளை
மேலும் அதிகமாக்கி , உள்ளுக்குள்ளேயே உழன்று அவள் உடலை கொதி கலனாக்கின .
அவள் மனம் இதுவரை அவள் அனுபவித்திராத காதல் அனுபவங்களுக்காக ஏங்கத்
துவங்கியது . அவளது உணர்ச்சிகள் கட்டுக்கடங்காமல் , கடலலைகள் போல
எழும்பி , எழும்பி அமைதி இல்லாது , அல்லலுற்றது .

மற்றவர்களை கவர்ந்து இழுக்கத்தானே ஆடை ? தன்னை ஒரு நிமிடம் கூட
திரும்பிப் பார்க்க நேரமிலாது , மெல்லிய சட்டைகளை துரத்திக் கொண்டு
திரிபவனாக கணவர் இருக்க , எதற்கு இந்த ஆடை , அலங்காரம் எல்லாம் என்று
வெறுப்பாக இருந்தது பேகம் ஜானிற்கு . தன் ஆடைகளை அவிழ்த்து எரியும்
அடுப்பில் வீசி விட்டு , நிர்வாணமாக நிற்பதே மேல் எனும் அளவுக்கு அவள்
உளத் தகிப்பு அவளை பாடாய்ப் படுத்தியது .அவளை வீட்டை விட்டு வெளியில்
அனுப்பவும் நவாப்பும் தயாராக இல்லை

. அவர்கள் வீட்டிற்கு ஆட்கள் வருவதும் , போவதும் குறைவில்லாது இருந்தது
. சிலர் வீட்டிற்கு வந்தால் , மாதக் கணக்கில் தங்கிச் செல்வதும் கூட
வழக்கமாக இருந்தது . ஆனால் ஆனால் அவளது தனி உலகில் எந்த மாற்றமும்
இல்லாமல் , வெறுமையும் , தனிமையுமாகவே இருந்தது

அவர்களின் வீட்டிற்கு வருபவர்கள் அனைவரும் , இலவசங்களுக்கு அலைபவர்களாகவே
இருந்தனர். விறைத்த பருத்தி துணிபோல் தன் போர்வைக்குள் திமிரும்
இளமையை, தன் உடலை ஒளித்து வைத்துக் கொண்டு தவிக்கும் இவளை பொருட்
படுத்தாமல் , அவர்கள் தாங்களே, சமயலறையில் வித விதமாக சமைத்து உண்பதும் ,
கேலியும் கிண்டலுமாக ,வாழ்வை கொண்டாடி மகிழ்ந்தார்கள் . அவர்களைப்
பார்க்கையில் பேகம் ஜானின் இரத்தம் கொதித்தது .

தூக்கம் வராமல் அவள் தன் போர்வைக்குள் சுருண்டு படுத்து ,புரண்டு
அசையும் போது , அவளின் நிழல்கள் சுவற்றில் வித விதமான உருவங்களின்
அசைவுகளை அவளுக்கு காட்சி படுத்தின . ஆனால் அவை , அவளது வாழ்விற்கு எந்த
விதமான , பிடிப்பையும் ஏற்படுத்துவதாக இல்லை . வாழ்ந்தாக வேண்டிய
நிர்பந்தத்தில் அவள் வாழ்ந்து கொண்டு இருந்தாள்

விரக்தியுடன் , தன் வாழ்வை வெறுப்பும் , தவிப்புமாக கழித்து கொண்டு
இருந்த பேகம் ஜானுக்கு , ,இனி தன் வாழ்வை முழுமையாக வாழ்ந்து விட
வேண்டும் , என்ற துடிப்பும் , ஆர்வமும் பிறந்தது . அதற்கு காரணம் ரப்பு
. தன்னையே இழந்து , வீழ்ந்து கொண்டு இருந்த , பேகம் ஜானின் வாழ்வை
மீட்டெடுக்கவந்தவளாக ரப்பு இருந்தாள் .

ரப்பு ,அவள் வாழ்வில் வந்த பிறகு மெலிந்து , வதங்கி உலர்ந்து போயிருந்த
பேகம் , ஜான் ஆச்சர்யம் தரும் வகையில் , வனப்பு கூடி மிளிர்ந்தாள் அவள்
கன்னங்களில் சதைபிடித்து கவர்ச்சியானது . அவளது வசீகரத்திற்கு காரணமான
அழகு குறிப்பு என்ன என்பது எந்த பத்திரிகையிலும் சொல்லாத ரகசியம்

விஜய் பத்மா

விஜய் பத்மா

நான் முதன் முதலாக பேகம் ஜானைப் பார்க்கும் போது அவளுக்கு நாற்பது
வயதிருக்கும் . வசீகரமான பாரசீக தேவதைப் போல ஒயிலாக அவள் படுக்கையில்
சாய்ந்து இருந்தாள் . அவளுக்கு நேர் பின்னால் அமர்ந்து ரப்பு ஏதோ
எண்ணெயால் அவளது இடுப்பு , பின் பகுதிகளை தேய்த்துக் கொண்டு இருந்தாள் .
ஊதா நிற சால்வை ஒன்றால் அவள் பாதங்களை மூடி இருந்தாள் கம்பீரமான
மகாராணியின் அழகு அவள் தோற்றத்தில் இருந்தது அவளது அசர வைக்கும் அழகை
நாள் முழுவதும் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் இருக்கும் . நான்
அவளின் எதிரில் அமர்ந்து , அவளையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டு
இருப்பேன் அவளது உடல் நிறம் வெண்மையாக மாசு மருவில்லாத பளிங்கு சிலை
போன்று இருந்தது .அடர்ந்த கருமை நிறத்தில் மினு மினுப்பான அவளது கூ ந்தல்
மிக நேர்த்தியாக வார பட்டு இருக்கும் அதில் ஒரு இழையாவது கலைந்து
பிரிந்து தொங்கி நான் பார்த்ததே இல்லை

அடர்ந்த கருமை நிற விழிகளும், சாந்தமான பார்வையை உடைய அவளது கண்கள் ,
மிகவும் வசீகரமானது . நேர்த்தியாக , வளைத்து நேர் செய்யப்பட புருவங்கள்
இரண்டும் , அந்த கண்களுக்கு மேல் இரு வில்களைப் போல் கவிழ்ந்து
இருந்தன. அவளது கண் இமைகள் மிகவும் அடர்த்தியாக இருந்தது . அவளது
முகத்தில் பார்த்தவுடனேயே காந்தமாய் இழுப்பது அவளது , உதடுகள் தான்.
எப்பொழுதும் உதட்டு சாயம் பூசப் பட்டே காணப்படும் .அவள் கீழ் உதட்டின்
மேல் ஒரு கோடு போல் படிந்து இருந்தது , அவள் மேல் உதடு .அவளது கரிய
நீண்ட கூந்தல் , குவிந்து எழுந்து நின்ற மார்பகங்களை போர்த்தி மறைத்து
இருந்தன அவளைக் கூர்ந்து கவனித்து பரர்க்கையில் , அவளது முகம்
வாலிபனுடைய முகம் போல் கூட எனக்குத் தோன்றியதுண்டு

அவளது தோல் மிக மென்மையானதாகவும் , சுருக்கமில்லாமல் அவள் உடலில்
இணைத்து தைத்த வெண் பட்டு போல மின்னும் .எண்ணெயை காலில் நீவி விட வசதியாக
, அவள் கால்களை அகட்டி விரித்த பொது , பளீரென ,, மின்னிய ஒளியில்
மெய்மறந்து கண் இமைக்காமல் செயல் மறந்து பார்த்துக் கொண்டு
இருந்தேன்.சராசரி பெண்களை விட உயரமானவளாகவும், உடலில் எங்கு தாராளமாக
சதை இருக்க வேண்டுமோ அங்கெல்லாம் தாராளமாகவும் , எங்கு இறுக்கி
பிடிக்கப் பட்டு இருக்க வேண்டுமோ அங்கே அளவோடும் , இருந்த அவளது
உடலமைப்பு , பல வளைவுகளுடன் , கூடிய கம்பீரமான அற்புத அழகின் குவியலாக
இருந்தது .அவளுக்கு மென்மையான நீண்ட விரல்களும் , நீண்ட கைகளும்
அமைந்திருந்தன. அவளது இடையோ அளவெடுத்து செதுக்கியது போல் இருந்தது .
அவளது வளமையான பிருஷ்டத்தை , ரப்பு , நேரமே பார்க்காமல் , மணிக்கணக்காக
தேய்த்துக் கொண்டே இருப்பாள் . இப்பொழுதெல்லாம் , இடைவிடாமல் அவள் உடலை
தேய்த்தும் , நீவியும் விடுவது , அவள் வாழ்வின் அன்றாட செயல் என்பது ,
உருமாறி , பேகம் வாழ்வதே அந்த சுகத்துக்காகத்தான் என்பது போல் ஆகி
விட்டது .ரப்புவுக்கு அந்த வீட்டில் வேறு எந்த வேலையும் கொடுக்கப்
படவில்லை . அவளது ஒரே வேலை பேகம் ஜானின் உடல் பாகங்களை அழுத்தியும் ,
தேவைப்படும் இடங்களில் மசாஜ் செய்தும் , சுகமாக நீவிக் கொண்டு இருப்பதுமே
. ரப்பு நீவுவதற்கு வசதியாக படுக்கையில் , சாய்ந்து கொண்டு தன் உடலை
முழுவதுமாக ரப்புவி ன் கைகளுக்குள் ஒப்புவித்து விடுவாள் பேகம் ஜான் .சதா
சர்வ காலமும் , ரப்பு , பேகம் ஜானை தேய்த்துக் கொண்டு இருப்பதும் , அதை
மிகவும் ரசித்தபடி பேகம் ஜான் கட்டிலில் , சாய்ந்து கொண்டு , தேய்க்க
எதுவாக தன் உடல் பாகங்களை ரப்புவின் கைகளுக்கு கொடுத்து விட்டு ,
மல்லாந்து கிடப்பதைப் பார்க்க , எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும் . இது
எப்படி கொஞ்சம் கூட , களைப்பில்லாமல் , தேய்த்துக் கொண்டிருக்க
முடிகிறது ? என்னை யாரவது இப்படி தேய்த்துக் கொண்டே இருந்தால் , நான்
என்றோ அழுகி செத்துப் போயிருப்பேன் .

படுக்கையில் படுத்துக் கொண்டு நீவி விடுவது போதாதென்று , தினமும் , ரப்பு
பேகம் ஜானை இரண்டு மணி நேரம் உட்கார வைத்து , பலவித எண்ணெய்களையும்,,
வாசனைத் திரவியங்களையும் அவள் உடலில் தடவி , பேகமின் தொலையே உருவி
எடுத்து விடுவது போல் தேய்த்து குளிப்பாட்டி விடுவாள் .ரப்பு தேய்க்கும்
வேகத்தைப் பார்த்தாலே எனக்கு உடலை வலிப்பது போல் இருக்கும்
குளியலறைக்குள் ரப்பு மட்டுமே அனுமதிக்கப் படுவாள் . மற்ற பெண்கள்
குளியலறைக் கதவிற்கு வெளியில் நின்று ரப்பு கேட்கும் பொருட்களைக்
கொடுப்பதுடன் சரி. பக்கமும் , ரப்பும் , குளியலறைக்குள் சென்று கதவை
மூடிக் கொள்வார்கள். பேகம் தன் ஆடைகளைக் களைந்து குளியலறைக்கதவில்
போட்ட பின்னரே உள்ளிருந்து மசாஜ் செய்யும் கலவையான ஒலிகள்
கேட்கத்துவங்கும் . பேகம் தன் உள்ளாடைகள் வரை அனைத்தையும் களைந்து
றப்புவின் முன் முழு நிர்வாணமாக அமர்ந்து குளிக்கிறாள் என்பதை கற்பனை
செய்து பார்க்கவே , எனக்கு குமட்டலாக வரும்

பேகம் ஜானுக்கு உடலின் சில பக்கம் தோலில் அரிப்பு எடுத்துக் கொண்டே
இருக்கும் . அரிப்புக்கு சில ஆங்கில மருத்துவர்களையும் , நாட்டு
வைத்தியர்களையும் சந்தித்து சிகிச்சை எடுத்துக் கொண்டாள் பேகம் .
அப்படியும் அரிப்பு நிற்க வில்லை . மருத்துவர்கள் சொன்னார்கள் , பேகமின்
தோலுக்கு பின்னால் , சில ஒவ்வாமையினால் நீர்கள் சுரப்பது தான் இதற்கு
காரணம் என்று .ஆனால் ரப்பு , பேகமை ஓரக்கண்ணால் மயக்குவதைப் போல் கண்
கொட்டாமல் பார்த்துக் கொண்டு , நமட்டுச் சிரிப்புடன் சொல்வாள் ” இந்த
டாக்டர்களே இப்படித்தான் , ஏதாவது சொல்லிக் கிட்டு இருப்பாங்க . உன்
உடம்புக்கு எதுவும் குறையில்லை . உன் உடம்பு சூடுதான் இதற்கு காரணம் ”
என்று

பேகம் ஜான் எவ்வளவு வெண்மையாக இருந்தாலோ , அதற்கு நேர் எதிரான அடர்ந்த
கருப்பு நிறத்தில் ரப்பு இருந்தாள் . அவள் பழுக்க காய்ச்சிய
இரும்புத்துண்டை ப் போல் கருத்து காணப் பட்டாள் .ரப்பு உருவத்தில் ,
குட்டையாகவும் , பருத்த உடலும் , தொந்தியுடனும் காணப் பட்டாள் அவள்
கைகள் குட்டையாகவும் , துரு துருவென்று ம் காணப் படும் . அவளது பருத்து
வீங்கிய பெரிய உதடுகளோ , எப்பொழுதும் எச்சில் நிறைந்து ஈரமாகவே
காணப்படும் ரப்பு அருகில் வந்தாலே , ஏதோ ஒரு கெட்ட துர்நாற்றம் அவள்
உடலில் இருந்து வீசும்

பருத்த குட்டையான ரப்பின் கைகள் , பேகம் ஜானின் உடலில் மிகவும் லாவகமாக
, ஒரு தாள ஸ்ருதியுடன் இயங்குவதை நான் பார்த்து , வியந்து போயிருக்கிறேன்
. இப்பொழுது அவளது கைகள் பேகமின் இடுப்பு பகுதியை , பிசைந்துக் கொண்டு
இருக்கின்றன. அப்படியே இயந்திரத்தின் லாவகத்துடன் , இயங்கி ,
பின்புறத்தை தேய்க்கிறது . இப்பொழுது இன்னமும் கீழே துலாவிக் கொண்டு
அவள் தொடைகளின் இடைவெளியில் அசைகின்றன. பின் சதைகள் திமிரிக் கொண்டு
இருக்கும் கெண்டைக் கால்கள்

வழக்கமாக , காக்ரோ ஜோலி என்படும் ரவிக்கை , மற்றும் ஜரிகைகளால் ஆன அகல
பாவாடையும் , போன்ற ஆடையையே விரும்பி அணிவாள் பேகம் . உள்ளே அடர்ந்த
நிறங்களில் பைஜாமா அணிந்து இருப்பாள் . வெயிலில் , சூடு அதிகமானால் ,
மின் விசிறியை சுழல விட்டு , மெல்லிய சால்வையைப் போர்த்திக் கொண்டு
படுத்து விடுவாள் பேகம் ஜானுக்கு பனிக்காலம் என்றால் மிகவும் விருப்பம்
. அவள் அதிகம் வெளியில் போவதை விரும்புவதில்லை . எனக்கும் கூட
பனிக்காலத்தில் அவள் வீட்டில் இருப்பதில் விருப்பம் அதிகம் . பேகம்
ஜான் ஒய்யாரமாக படுக்கையில் படுத்துக்கொண்டு , உளர் திராட்சைபி பழங்களை
தின்று கொண்டு இருப்பாள் . இதில் எதிலும் தனக்கு சம்பந்த மே இல்லாதது
போல் , ரப்பு அவள் உடலை மெதுவாகத் தேய்த்துக் கொண்டே இருப்பாள் . அந்த
வீட்டில் இருந்த மற்ற பணிப்பெண்கள் எல்லோரும் , பேகம் ஜான் ரப்புவுக்கு
கொடுக்கும் தனி உரிமையினால் , றப்புவின் மேல் பொறாமை கொண்டு இருந்தனர். ”
ரப்பு ஒரு சூனியக்காரி , பேகத்தை மயக்கி விட்டாள் . அவள் தின்பது ,
படுப்பது எல்லாமே பேகம் ஜானுடன்தான் . என்று அவர்களுக்குள் ரப்புவை
திட்டுவது வழக்கமான ஒன்றாகிப் போனது . தங்ககளது ஒய்வு நேரத்தில் அந்தப்
பணிப் பெண்கள் பேசுவதற்கு , வம்பு பேகம் ஜானும் , ரப்புவுதான் .
பணிப்பெண்களில் யாராவது ஒருவர ரப்பு எனக் குறிப்பிட்டவுடன் , மற்ற
அனைவரும் , சப்தமாக சொல்லி வைத்தது போல் சிரிப்பார்கள் . இவர்கள்
இருவரையும் பற்றி அவர்கள் கிண்டல் பண்ணி பேசுகிறார்கள் என்பது புரிந்தது
ஆனால் அவர்கள் கிண்டல் பண்ணி பேசும் அளவுக்கு ரசமான விஷயம் என்ன என்பது
எனக்கு புரியவில்லை

பேகம் ஜான் இந்த பேச்சுக்கள் எல்லாவற்றையும் பற்றி , தெளிவாக தெரிந்து
தான் வைத்திருந்தாள் . ஆனால் இதற்கெல்லாம் வருத்தப்படும் மன நிலையில்
அவள் இல்லை .அவள் தன்னை சுற்றி உள்ள உலகை குறித்த கவலை இல்லாது ,
தனக்கென்று ஒரு சின்னல உலகை உருவாக்கி அதில் வாழக் கற்றுக் கொண்டு
இருந்தாள் . இன்றெல்லாம் அவளது சிந்தனை முழுவதும் தன் சுக துக்கங்கள்
பற்றியும் , தனக்கு வந்துள்ள அரிப்பு நோய் குணமாக வேண்டும் எனபதில் ல்
மட்டுமே ,நிலைப் பெற்று இருந்தது .அதில் மட்டும் தான் அவளது அக்கறையும்
செயல் பாடுகளும் இருந்தன.

நான் முதலிலேயே குறிப்பிட்டுள்ளேன் , அந்த நாட்களில் நான் மிகவும் சிறுமி
என்றும் , பேகம் ஜானின் அழகில் மயஙகி அவளை மிகவும் நேசித்தேன் என்றும் .
பேகம் ஜானும் அப்படித்தான் என்னிடம் மிக அன்பாக பழகினாள் அம்மா ஆக்ரா
கிளம்பி செல்லும் பொது , நான் சகோதரர்களிடம் மல்லுக்கு நிற்பேன்,
வீட்டிற்கு அடங்காமல் ஊர் சுற்றுவேன் என்று பேகம் ஜான் வீட்டில்
செல்லும் போது ஆரம்பத்தில் அது அம்மா எனக்கு கொடுத்த மிகப் பெரிய தண்டனை
என்று தோன்றினாலும் , பின்னாளில் அவள் எனக்கு மிகவும் நல்லதே செய்து
இருக்கிறாள் என்று புரிந்தது . பேகம் ஜானுக்கும் கூட அப்படித்த்தான் ,
அவளுடன் நான் தங்கி இருப்பதை மிகவும் விரும்பினாள் .இவ்வளவுக்கும் பேகம்
ஜான் அம்மாவின் தூரத்து உறவுதான் . ஆனால் என்னை மிகவும் அன்பாக
பார்த்துக் கொண்டாள் . அத்தனை பெரிய வீட்டில் நான் , இரவில் எங்கு
உறங்குவேன் என்று யோசித்தேன் . எனக்கு பேகம் ஜானின் கட்டிலின் அருகே
இன்னொரு சின்ன கட்டில் போடப்பட்டு படுக்கை அமைக்கப் பட்டது தினமும்
இரவு பத்து, , பதினோரு மணி வரை , நானும் , பேகம் ஜானும் , பல கதைகளை
பேசிக் கொண்டும் , கைகளால் தட்டி , ஒருவரை ஒருவர் , வெல்லும்
“chance” விளையாட்டை விளையாடுவோம். . பின் எனக்குத் தூக்கம் வர , நான்
தூங்கி விடுவேன்.நான் அசந்து தூங்க செல்லும்வரையிலும் , கொஞ்சம் கூட
களைப்பில்லாமல் ,ரப்பு , பேகம் ஜானின் உடல் முழுவதையும் , தடவிக் கொண்டே
இருப்பாள் . அவள் உடல் முழுவதும் எல்லா இடத்திலும் மிக சுதந்திரமாக அவள்
கைகள் நுழைந்து , தடவுவதை , நான் பார்ப்பேன் , ” இவள் மிகவும் அருவெரு
ப்பானவள் ” என எனக்குள்ளேயே சொல்லிக் கொண்டே தூங்கி விடுவேன் .

ஒருநாள் இரவு , தூக்கத்தில் முழிப்பு வந்து விட்டது . அந்த அறைக்குள்
கும்மிருட்டு . எனக்கு பயமாக இருந்தது . மெதுவாக பேகம் ஜானின்
படுக்கையைப் பார்த்தேன். அங்கே பேகம் ஜானின் போர்வை மிக வேகமாக
இயங்கிக் கொண்டிருந்தது . குட்டியானை ஒன்று அந்த போர்வைக்குள் மாட்டிக்
கொண்டு வெளிவரத் துடிப்பதைப் போல , அந்த போர்வை , மிக வேகமாக உப்பிக்
கொண்டு ஆடிக் கொண்டு இருந்தது பயத்தில் குரல் நடுங்க , தயங்கி மெல்லிய
குரலில் , பேகம் ஜான் ” என்று அழைத்தேன் . அந்த குட்டி யானை தன் அசைவை
நிறுத்தியது . போர்வை மெல்ல தளர்த்தப் பட்டது

“என்ன ஆச்சு உனக்கு ? தூங்கு !” என்று பேகம் ஜான் பேசினாள் . அவள் குரல்
எங்கோ இருந்து வருவது போல் ஈனஸ்வரத்தில் கேட்டது .

“எனக்கு பயமாக இருக்கிறது ” என்று நான் சிணுங்கினேன்

“பேசாம தூங்கு , இப்ப என்ன ஆச்சு பயப்படறதுக்கு ? ஆயத்துல் குர்ஸி சொல்லு ”

“அப்ப சரி ”

பேகம் ஜானின் கட்டளைக்கு மந்திரத்தில் கட்டுண்டவள் போல் கட்டுபட்டு
ஜெபத்தை சொல்லத் துவங்கினேன் . ஓவ்வொரு முறை “ஆலு மா பெயின் ”
சொல்லியதும் , அடுத்த வார்த்தைகளை சொல்வதில் மிகுந்த தடுமாற்றம் ஏற்பட்டு
, வார்த்தைகள் நினைவிற்கு வரவில்லை . இவ்வளவுக்கும் , நான் மிகவும்
மனப்பாடமாக கற்று ஒப்பிவிக்கும் திறமைப் பெற்ற வரிகள் அவை.

“நான் உன் பக்கத்தில் வந்து படுத்துக்க கொள்ளவா பேகம் ஜான் ?”

“இல்லை வேண்டாம் குழந்தை . நீ தூங்கு ”

பேசிக் கொண்டு இருக்கும் போதே அவள் வார்த்தை , நின்று போனது . அதன் பின்
இருவர் கிசு கிசுப்பாய் ஏதோ பேசிக் கொள்வது போல் தோன்றியது .ஐயோ ,
இன்னொருவர் யார் இந்த அறையில் இருப்பது . உண்மையிலேயே பயத்தில் உறைந்து
போனேன்

“பேகம் ஜான் , இந்த அறைக்குள் யாரோ திருடர்கள் ஒளிந்து இருக்கிறார்கள்
என்று நினைக்கிறேன் ”

” இல்லை கண்ணே.. நீ தூங்கு , இங்கு திருடர்கள் யாரும் இல்லை .”
இப்பொழுது பேகமிற்கு பதில் ரப்பு பதில் கூறினாள்

போர்வையை இழுத்து என் தலையையும் சேர்த்து மூடிக் கொண்டு தூங்கிப் போனேன்
இரவில் நடந்த திடுக்கிடும் சம்பவங்கள் , பயம் எல்லாம் மறந்து போய், காலை
இனிதாக விடிந்தது . மூடநம்பிக்கைகள் என்னுடனே பிறந்தது . இரவில் கலவையான
பயங்கள், தூக்கத்தில் நடப்பது , தூக்கத்தில் உளறுவது என்பதெல்லாம் என்
சிறு வயதில் அன்றாட நிகழ்வுகள்தான்

கெட்ட ஆவிகளின் , ஆதிக்கம் என் உடலில் இருப்பதாக கூட எல்லோரும் ,
சொல்வார்கள் . அதனால் , இரவு நடந்த விஷயங்கள் எதுவும் என் நினைவில்
இல்லாமல் மறந்து போனது .பேகம் ஜானின் போர்வை எதுவும் நடவாதது போல்,
அப்பாவியாய் கட்டிலில் கிடந்தது .

ஆனால் மறுநாள் மீண்டும் இரவில் நான் கண் விழித்தேன் . பேகம் ஜானும் ,
ரப்புவும் , சன்னக்குரலில் ஏதோ காரசாரமாக விவாதித்துக்
கொண்டிருந்தனர்.அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று எனக்கு
புரியவில்லை .ஆனால் விவாதத்தின் முடிவில் ரப்பு விசும்பும் சப்தம்
கேட்டது . பின் அந்த சப்தமும் அடங்கி , போர்வைக்குள் ஏதோ பூனை ஒன்று
தட்டை நக்கி , உறிவது போல் சப்தம் கேட்டது . எனக்கு பயம் அதிகமாகி,
போர்வையை இழுத்து மூடிக் கொண்டு தூங்கிப் போனேன் .

மறுநாள் காலை ரப்பு தன் மகனைக் காண செல்கிறேன் என்று சொல்லி கிளம்பி
விட்டாள் . அவன் ஒரு கோபக்கார முரட்டு இளைஞன் . அவன் வாழ்வில் முன்னேற
வேண்டும் என்று பல வழிகளிலும் உதவி செய்தாள் பேகம் ஜான் .பக்கத்துக்கு
கிராமத்தில் நல்ல வேளை வாங்கி கொடுத்தாள் . அது அவனுக்கு பிடிக்கவில்லை
என்றவுடன் , சொந்தமாக கடை ஒன்று வைத்து கொடுத்தாள் . அதையும் அவன் சரிவர
கவனிக்க வவில்லை , பேகம் ஜான் அவனுக்கு செய்த எந்த உதவிகளும் அவனுக்கு
திருப்திகரமாக இல்லை அவன் நவாப் சாஹேப் உடன் சிறிது காலம் தங்கி
இருந்தான் . அவனுக்கு நவாப் நல்ல உடைகள் , பரிசுகள் கொடுத்து அவனை
நன்றாகத்தான் பார்த்துக் கொண்டு இருந்தார் ஆனால் அவன் எவரிடமும் எதுவும்
சொல்லாமல் , ஒரு காரணமும் இல்லாமல் , வீட்டை விட்டு ஓடிப் போனான் . அதன்
பிறகு அவன் ரப்புவை பார்ப்பதற்காகக் கூட வீட்டுப் பக்கம் வரவில்லை
.யாரோ ஒரு உறவினர் வீட்டில் தான் ரப்பு தன் மகனைச் சந்திக்க போகிறாள் .
ரப்புவை அனுப்ப பேகம் ஜானிற்கு சிறிதும் விருப்பம் கிடையாது . மிகுந்த
தயக்கத்துடன் , பாதி மனதுடன் தான் அவளை அனுப்பி வைத்தாள் . ரப்பு
மிகவும் பரிதாபத்துக்கு உரியவள் . வேறு ஆதரவு எதுவும் இல்லாதவள் . என்ற
ஒரே காரணத்திற்காகத்தான் பேகம் அவளை தடுக்கவில்லை

மறுநாள் காலையில் எழுந்ததில் இருந்து பேகம் ஜான் தன் நிலையில் இல்லாது
தவித்து போனாள் .அவள் உடலின் மூட்டுக்கள் ஒவ்வொன்றும் தனித்தனியே கழலுவது
போன்ற வேதனை அவளைத் தாக்கியது ,. எதுவும் சாப்பிடாமல் , தன்
படுக்கையில் புரண்டு , நெளிந்து கொண்டு இருந்தாள் .மற்ற பணிப்பெண்கள்
அருகில் வந்தாலே , கோபமுற்று அவர்களை விரட்டினாள் . அவள் உடலை
ஒருவரையும் தொட அவள் விடவில்லை . அவள் நிலை பார்க்க எனக்கு பரிதாபமாக
இருந்தது . அவள் கட்டிலின் அருகே , கலைந்த சீட்டுகளை அடுக்கி கொண்டே
ஆர்வத்துடன் கேட்டேன்

,” நான் வேண்டும் என்றால் உனக்கு தேய்த்து விடவா பேகம் ஜான் ? ”

என் கேள்விக்கு பதில் ஏதும் சொல்லாமல் , என்னையே கூர்ந்து பார்த்துக்
கொண்டிருந்தாள் பேகம் ஜான்

‘நிஜமாகத்தான் கேட்கிறேன் .நான் தேய்த்து விடவா பேகம் ஜான் ?” என்று
பேசிக் கொண்டே அவள் பதிலை எதிர்பாராமல் சீட்டுக்கட்டினை அடுக்கி ஓரமாக
வைத்து விட்டு , அவள் பின் புறத்தில் அமர்ந்து கொண்டு அவள் பின்புறத்தை
தேய்க்க ஆரம்பித்தேன் . அவள் பதில் ஏதும் சொல்லாமல் , நான் தேய்க்க
ஏதுவாக புரண்டு படுத்து அவள் பின் புறத்தை க் காண்பித்தாள் . மறுநாள்
வருவதாக ச் சொல்லி சென்ற ரப்பு வரவில்லை . பேகம் ஜான் நிலை கொள்ளாது ,
எரிச்சலானாள் . கோபத்தில் , அவளுக்கு தலை வலிக்கத் துவங்கியது .
கணக்கில்லாமல் டீ போட்டு தர சொல்லி குடித்துக் கொண்டே இருந்தாள் . நான்
மீண்டும் அவள் பின்புறத்தை தேய்க்கத் துவங்கினேன் . மேஜையின் மேற் பகுதி
போல் வழுவழுப்பாகவும் அதே சமயம் மென்மையாகவும் இருந்தது இருந்தது
அவள் உடல் , , ஏதோ நம்மால் அவளுடைய வேதனையை குறைக்க உதவ முடிகிறதே என்ற
அளவில் எனக்கும் அவளைத் தேய்த்து விடுவதில் மகிழ்ச்சியாகத் தான்
இருந்தது .

“இன்னும் கொஞ்சம் அழுத்தி தேய் …ரவிக்கையை கழற்றி விட்டு அழுந்த தேய்
” என்று கண் மூடி நான் தேய்க்கும் சுகத்தை ரசித்தபடி சொன்னாள் பேகம்
ஜான் . ‘இன்னும் கொஞ்சம் .. கீழே தேய் … ஆ ..அங்கில்லை .. இன்னும்
கொஞ்சம் .. கையை கீழ் இறக்கு..” அவளின் தேவையை எனக்கு சொல்ல
ஆரம்பித்தாள். அவள் சொல்வது போல … அந்த இடங்களில் என் கைகள் தானாகவே
நழுவி செல்ல ஆரம்பித்தன. அவள் சுகத்தின் போதையில் லயித்து …. ”
ஸ்ஸ்…ஆஹா .. என்ன சுகம் ” என பிதற்ற ஆரம்பித்தாள் . சில இடங்களை அவளால்
மிக எளிதாக தொட்டு , விட முடியும் , அங்கெல்லாம் கூட என்னை தேய்க்க
சொல்லி கேட்க , எனக்கு பெருமையாக இருந்தது . நான் ரப்பை போலவே நன்றாக
தேய்த்து விடிகிறேனோ ? என்று எனக்கு வியப்பாக கூட இருந்தது .

“ஹேய் .. நீ ..என்னை கூச்சம் செய்கிறாய் .. ” என்று அவள் உடலை சிணுங்கி சிரித்தாள்

திடீரெண்டு , உடலை சிணுங்கி சிரித்தபடி “ஹேய் .. நீ ..என்னை கூச்சம்
செய்கிறாய் .. ” என்றாள் . நான் எதுவும் பேசாமல் , மிகவும் கவனமும் ,
கருத்துமாக எல்லா இடங்களையும் தேய்த்து விட்டுக் கொண்டு இருந்தேன்.
அவளுக்கு என் சேவை மிகவும் பிடித்து இருந்தது போலும் . என்னை மேலும்
உற்சாகப் படுத்தும் வண்ணம் பேசத் துவங்கினாள் .

“நாளை , உன்னை சந்தைக்கு அனுப்புகிறேன். உனக்கு என்ன வேண்டுமோ வாங்கிக்
கொள் .படுக்க வைத்தால் கண் மூடும் . நிறுத்தி வைத்தால் கண் திறக்குமே
அந்த பொம்மை வேண்டுமா ” என்றாள் உற்சாகத்துடன்

” என்ன பேகம் ஜான் , நான் என்ன குழந்தையா , எனக்கு பொம்மைகள் எல்லாம்
வேண்டாம் ” என்று மறுத்தேன் .

“ஓ .. அப்ப நீங்க பெரிய மனுசி ஆயிட்டி ங்களா .. குழந்தை இல்லையா ? அப்ப
சரி , உனக்கு ஆண் பொம்மையும் , நிறைய துணிகளும் வாங்கித் தருகிறேன் .
உன் ஆணுக்கு நீ விதம் விதமாக துணி தைத்து அலங்காரம் செய்து ரசித்து கொள்
” என்றாள்

இது எனக்கு பிடித்து இருந்தது ” ஓ சரி ” என்றேன் உற்சாகமாக .

இங்கே தேய் .. என்று அவளுக்கு அரிப்பு எடுக்கும் இடத்தில் என் கையை
எடுத்து வைத்தாள் .. நான் என் ஆண் பொம்மையை மறந்து அவளின் அரிப்பு
பிரதேசங்களை எல்லாம் அக்கறையுடன் தேய்க்கத் துவங்கினேன்.

நாளைக்கு தையல் காரரைக் கூட வரச் சொல்கிறேன் ., உனக்கு நிறைய புது
பாவாடைகள் தைத்து தருகிறேன் . உங்கள் அம்மா கூட சில துணிகள் கொடுத்து
சென்று இருக்கிறாள் அதையும் தைக்க சொல்கிறேன் என்று கூறினாள் .

” இல்லை எனக்கு அம்மா கொடுத்து சென்ற சிகப்புத் துணி வேண்டாம் . அது
பார்ப்பதற்கு ரொம்ப பழைய துணி போல் தோன்றுகிறது ” என்று அவளிடம் பேசிக்
கொண்டே தேய்த்ததில் , பேச்சு சுவாரஸ்யத்தில் என் கை எங்கு போகிறது என்று
நான் கவனிக்கத் தவறி விட்டேன் . பேகம் ஜான் படுத்துக்கொண்டே கூறினாள் ,

” ஹேய் உன் கைகள் எங்கு செல்கின்றன என்று கவனித்தாயா ?” என்று

சட்டென்று துணுக்குற்று கைகளை விலக்கி கொண்டேன் . பேகம் ஜான் கண்
சிமிட்டி குறும்பாக என்னைப் பார்த்து சிரித்தாள் . எனக்கு வெட்கமாக
இருந்தது .

” சரி இங்கே வா .. என் அருகில் படுத்துக் கொள் என்று என்னை இழுத்து அவள்
அருகில் படுக்க வைத்து , கைகளால் என்னை அனைத்து கொண்டு , எங்கே உன்
மார்பை காட்டு , உன் விலா எலும்புகளை எண்ணுவோம் என்று கூறி எண்ணத்
துவங்கினாள்

எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது . அவள் கைகளில் இருந்து நான் திமிறி
வெளியேற முயற்சி செய்தேன் .

“பொறு . நான் ஒண்ணும் உன்னைத் தின்று விட மாட்டேன் . இந்த ஸ்வட்டர்
உனக்கு இறுக்கமாக இல்லையா ,? உன் உள் ஆடைகள் எல்லாம் சூடாகி விட்டன
பார் ” என்று அவள் பேசிக் கொண்டே அவற்றை கழற்ற எனக்கு சங்கடமாக இருந்தது
.

எனக்கு பட படப்பாக இருந்தது . என் உடலின் சங்கடத்தை உணர்ந்தவள் போல
என் சிந்தனைகளை திசை திருப்ப பேச்சை மாற்றினாள் .

” ஒரு மனிதனுக்கு எத்தனை விலா எலும்புகள் இருக்கும் ? உனக்கு தெரியுமா
?” என்றாள் .

“ஒரு பக்கம் ஒன்பது . இன்னொரு பக்கம் பத்து ” என்று பதற்றத்துடன் என்ன
பேசுகிறேன் என்று புரியாமலே உளறினேன் .

” இரு நீ சொன்னது சரியா என்று பார்க்கிறேன் ” என்று கூறி அவள் தன்
விரல்களை வைத்து எண்ணத் துவங்கினாள் .

எனக்கு அவள் பிடியில் இருந்து வெளியேறி , அந்த இடத்தை விட்டு ஓடிவிட
வேண்டும் போல் இருந்தது . நெளிந்து திமிறி அவள் கைகளை விலக்க
முயற்சித்தேன் . அவள் என் உடலை வளைத்து இறுக்கி பிடித்து இருந்தாள் .
என்னால் வெளியேற இயலவில்லை பேகம் ஜான் சப்தமாக சிரிக்கத் துவங்கினாள்

அந்த நொடியில் அவள் முகத்தில் தெரிந்த கலவையான உணர்ச்சிகளை இன்று
நினைத்து பார்த்தாலும் , என் மொத்த நரம்புகளும் , தளர்ந்து போனது போல்
ஒரு நடுக்கத்தை உணர்கிறேன்.

அவள் கண் இமைகள் செருகி இருந்தன. அவளது உதடுகளிலும் , முக்கு நுனியிலும்
வியர்வைத் துளிகள் வைரம் போல் மின்னியது அவள் கைகள் பனிக்கட்டியை ப்
போல சிலீரென இருந்தது . அவள் உடல் முழுவதும் வியர்வை வழிந்து , கைகளில்
இருந்த ஈரத்தில் அவள் தோலை உரித்து விடலாம் போல் அத்தனை மென்மையாக
இருந்தது . அவள் தான் அணிந்திருந்த காக்ரோ சோளி , பைஜாமா
எல்லாவற்றையும் கழற்றி எறிந்தாள் . அவள் கழற்றிய வேகத்தில் அவளது
மேலங்கியில் இருந்த தங்க நிற பொத்தான்கள் கழன்று தொங்கின . அவளது
நிர்வாண உடல் , வெண்ணிற மாவு உருண்டை போல் இருந்தது . மாலை மயங்கி , இரவு
விழிக்கும் நேரமாதலால் , அந்த அறையில் இருள் தன் ஆதிக்கத்தை துவக்கி
இருந்தது . இனம் புரியாத கலவரம் என்னுள் வியாபித்து என் உடலை அசைய
விடாமல் செய்தது . பேகம் ஜான் என் உடலை வெறித்து பார்க்கத் துவங்கினாள்
. என் கலவரம் அதிகமாகி , எனக்கு அழுகை வந்தது . அவள் களிமண் பொம்மை போல்
என்னை பிசையத் துவங்கினாள் . அவளின் வேகமான இயக்கத்தின் வேகத்தில் ,
அவள் உடலில் ஒரு வெம்மை பரவத் துவங்கி , ஏதோ ஒரு துர்நாற்றம்
கிளம்பியது .

என் உடல் எங்கோ நழுவி செல்வது போல் இருந்தது .ஆனால் அவள் என்னை
முழுவதுமாக ஆட்கொள்ள துவங்கினாள் . என்னால் அழவோ , கத்தவோ முடியாமல் ,
விக்கித்து போனேன் .வெறித்தனமாக என்மேல் இயங்கியவள் , சிறிது சிறிதாக
களைத்து , துவண்டு என் அருகில் சரிந்து விழுந்தாள் . அவள் முகம் வெளிறி ,
களைத்து போய் இருந்தது . கண்கள் செருகி , வேகம் வேகமாக மூச்சிரைக்க ,
அசையாமல் கிடந்தாள் . எனக்கு அவளைப் பார்க்க பயமாக இருந்தது . அவள்
சாகப் போகிறாளோ என்று தோன்றியது . அவசரமாக எழுந்து அந்த அறையை விட்டு
வெளியேறினேன் .நல்லவேளை , கடவுள் கிருபையால் , அந்த இரவு ரப்பு திரும்பி
வந்து விட்டாள் .

எனக்கு மிகவும் பயமாக இருந்தது . என்ன நடக்குமோ என்ற கலவரத்தில் , அன்று
மிகவும் சீக்கிரமாகவே தூங்குவது போல் சென்று என் படுக்கையில் படுத்துக்
கொண்டேன் . போர்வையை இழுத்து தலையில் இருந்து கால்வரை போர்த்திக்
கொண்டு படுத்து விட்டேன் . ஆனால் தூக்கம் வர பல மணி நேரம் பிடித்தது .
மனம் முழுவதும் திகிலால் நிறைந்து இருந்தது .

அம்மா ஆக்ராவில் இருந்து வர ஏன் இவ்வளவு நாட்கள் ஆகிறது என்று
தெரியவில்லை . மீண்டும் பேகம் ஜானின் அறைக்குள் சென்று அவளை நிமிர்ந்து
பார்க்க எனக்குத் தயக்கமாக இருந்தது . என் பகல் முழுவதையும் மற்ற பணிப்
பெண்களுடன் பொழுதை கழித்தேன் . பேகம் ஜானின் அறைக்குள் செல்லவே
நடுக்கமாக இருந்தது .

யாரிடம் போய் நான் என்ன சொல்ல முடியும் ? எனக்கு பேகம் ஜானைப் பார்க்க
பயமாக இருக்கிறது என்று எப்படி சொல்வது ? பேகம் ஜான் என் மேல் மிகவும்
பிரியமாக இருக்கிறாளே .. நான் என்ன செய்வது ?

அன்று இரவு மீண்டும் , பேகம் ஜானுக்கு , ரப்புவுக்கும் இடையில் ஏதோ
வாக்கு வாதம் ஏற்பட்டது

அவர்களுக்கு சண்டை வந்தால் , அது எனக்குதான் பிரச்சனையாகும்
எனத்தோன்றியது . ஏனெனில் மீண்டும் பேகம் ஜானின் பார்வை என்மேல் தான்
விழும் என்று கலக்கமாக இருந்தது .

நான் அறைக்குள் வராமல் எப்பொழுதும் , வெளியில் பனியில் அலைவதை கண்டு ,
எங்கே எனக்கு குளிர் காய்ச்சல் வருமோ என்று பயந்து போய் என்ன அறைக்குள்
அழைத்தாள் .

” என்ன குழந்தை .. உனக்கு ஏதாவது ஆகிவிட்டால் , எல்லோரும் என்னை என்ன
சொல்வார்கள் ? மற்றவர்கள் முன் நான் அசிங்கப்பட வைக்க போகிறாயா ?” என்று
என்னை அவள் அருகில் கூப்பிட்டு அமர வைத்துக் கொண்டு ,பேசினில் தண்ணீர்
வைத்து முகம் , கை களை கழுவினாள் . அவள் அருகே உள்ள மேசையில் டீ
தயாரிக்க பொருட்கள் தயார் நிலையில் வைக்கப் பட்டிருந்தன.

” உனக்கும் , எனக்கும் டீ தயார் செய் ” என்று கூறிக் கொண்டே துண்டால்
தன் முகத்தை துடைக்கலானாள் பேகம் ஜான்.

” நீ டீ தயார் செய்வதற்குள் , நான் உடை மாற்றிக் கொள்கிறேன் என்று கூறிக்
கொண்டே ஆடையைக் கழற்றி மாற்றத் துவங்கினாள்

அவள் ஆடையைக் களைந்து மாற்றத் துவங்கும் பொது , என்னையும் அறியாமல் என்
உடல் உதறத் துவங்கியது . அவள் உடலில் இருந்து என் பார்வையை வேறு பக்கம்
திருப்பிக் கொண்டு , டீயை குடிக்கத் துவங்கினேன்.

அம்மா சீக்கிரம் வரவேண்டுமே என்று என் மனம் ஏங்கித் தவித்தது . என்
சகோதரர்களுடன் நான் சண்டை யிடுகிறேன் என்பதற்காக அம்மா எனக்கு கொடுத்த
இந்த தண்டனை மிகவும் கொடுமையானது என்று தோன்றியது .ஆண் பிள்ளைகளுடன் ,
சரிக்கு சமமாக நான் விளையாடுவதை அம்மா ஒரு போதும் விரும்பியதே இல்லை .
நீங்களே சொல்லுங்கள் ஆண் பையன்கள் என்ன நம்மைத் தின்று விடுவார்களா ?
அவர்களுக்கு நேசத்துக்கு உரியவர்களை அவர்கள் தின்பார்களா என்ன ? அவள்
குறிப்பிடும் ஆண் பிள்ளைகள் என்றால் யார் ? என் அருமை சகோதரர்களும் ,
அவர்களது பலஹீனமான குட்டி நண்பர்களும் தான் .பெண் குழந்தைகள் , ஆண்
குழந்தைகளிடம் இருந்து விலகியே வளர வேண்டும் என்ற பிற்போக்கு
நம்பிக்கையில் ஊறிபோனவள் அவள் .அவளுக்குத் தெரியாது , உலகின் அத்தனை
பொறுக்கிகளையும் விட மோசமானவள் இந்த பேகம் ஜான் என்று .

இந்த பேகம் ஜானை விட்டு , விலகி தெருவில் இறங்கி தொலை தூரத்துக்கு
சென்று விட மனம் துடிக்கிறது . ஆனால் என்ன செய்வது ? இயலமையால் ,
விருப்பம் இன்றி , இங்கே தங்கி இருக்க வேண்டியதாக இருக்கிறது .

பேகம் ஜான் தன்னை அலங்கரித்துக் கொண்டு , வாசனைத் திரவியங்களை
பூசிக்கொண்டாள் .. அதன் பின் என்னை மிகுந்த வாஞ்சையுடன் , அன்பு பொங்க
பார்த்தாள் .

” நான் வீட்டிற்கு போக வேண்டும் என்று அவளிடம் கூறத் துவங்கினேன் . அவள்
என்னை சமாதனப் படுத்த என்னவெல்லாமோ சொன்னாள் . அவை அனைத்திற்கும்
என்னுடைய பதில் ” வீட்டுக்கு போக வேண்டும் : என்பதாகவே இருந்தது . ஒரு
கட்டத்தில் என் சுய கட்டுபாட்டை இழந்து , அழத் துவங்கினேன் .

” நல்ல பிள்ளை தானே நீ. அழ க் கூடாது . இரு நான் உன்னை சந்தைக்கு
கூட்டிப் போகிறேன் என்றாள் என்னை சமாதனப் படுத்தும் பாவனையில் . நான்
மீண்டும் பிடிவாதமாக வீட்டிற்கு போக வேண்டும் என்று அழுதேன் .எனக்கு அவள்
வாங்கித் தருகிறேன் என்று கூறிய இனிப்புகள், பொம்மைகள் , ஆடைகள்
எவற்றிலும் விருப்பம் இல்லாமல் போனது . இவளை விட்டு வீட்டிற்கு போக
வேண்டும் என்ற எண்ணம் என்னை ஆக்கிரமித்தது

” நீ வீட்டிற்கு சென்றால் , உன் சகோதரர்கள் உன்னை அடிப்பார்களே கண்ணே
..! உனக்கு பரவாயில்லையா ? என்று செல்லமாக என் கன்னத்தை கிள்ளி
கொஞ்சினாள் பேகம் ஜான்

‘பரவாயில்லை அவர்கள் என்னை அடிக்கட்டும் ” என்றேன் அழுகையுடன் .

” கனியாத மாங்காய் புளிக்கும் பேகம் ஜான் ” என்று பொறாமையின்
சீற்றலோடு கூறினாள் ரப்பு .

பேகம் ஜான் ஒரு முடிவுக்கு வந்தவளாக என்னை நெருங்கினாள். அடுத்த நொடி ,
அவள் எனக்கு கொடுத்த தங்க நெக்லஸ் சுவற்றில் அடித்து , சுக்கலாக
நொறுங்கியது . அவள் மேல் போட்டு இருந்த , மெல்லிய துப்பட்டா கிழிந்து
அவள் மார்பு தெரிந்தது . கலையவே கலையாத அவள் தலை முடிபிய்க்க பட்டு
அலங்கோலமாக தொங்கியது .அவள் ஓ வென்று தலையைப் பிடித்துக் கொண்டு அலறினாள்
.நான் அந்த இடத்தில நிற்காமல் ஓடிவிட்டேன் .

மற்ற பணிப் பெண்கள் எல்லோரும் உதவிக்கு வந்து , அவள் தன் நிலைக்கு வர
சிறிது நேரம் ஆகியது .

நான் மீண்டும் பூனை போல் சப்தமில்லாமல் வந்து அறைக்குள் என்ன நடக்கிறது
என்று கவனித்தேன் . ரப்பு , பேகம் ஜானின் இடுப்பு பகுதியில் தேய்த்து
விட்டுக் கொண்டிருந் தாள் . நான் எதுவுமே நடக்காதது போல் ,
ஓசையில்லாமல் அறைக்குள் நுழைந்து போர்வையை தலையில் இருந்து , கால்வரை
இழுத்து போர்த்திக் கொண்டு தூங்க ஆரம்பித்தேன் .மீண்டும் இரவின் இருளில்
அந்த அறைக்குள் கலவையான ஒலிகள் கேட்கத்துவங்கின . பேகம் ஜானின்
போர்வைக்குள் குட்டியானை நுழைந்து அது எழும்பி எழும்பி ஆடத்துவங்கியது
“ஹே . அல்லாஹ் !

கேவலமான முனகல் ஒலி போர்வைக்குள் இருந்து வந்தது .போர்வைக்குள் இருந்த
யானை எழும்பி, பேகம் ஜானின் மேலே உட்கார்ந்து . நான் அமைதியாக
சப்தமில்லாது இருந்தேன் .போர்வைக்குள் யானை வேகமாக ஆடத் துவங்கியது
.பயத்தில் உறைந்து போய் , போர்வையின் இயக்கத்தையே பார்த்துக் கொண்டு
இருந்தேன் .என்ன ஆனாலும் சரி , அந்த அறையின் விளக்கை எரிய விடலாம் என்று
தீர்மானித்தேன் .

யானை மீண்டும் எழும்பி குதிக்கத் துவங்கியது . அதன் இயக்கம் மிக வேகமாக
இருந்தது . இப் பொழுது இயக்கம் நின்று போய் , சுவையான ஊறுகாயை நக்கி ,
தின்பது போல் , நாக்கை சுழற்றி நக்கி சுவைப்பது போல் சப்தம் கேட்கத்
துவங்கியது . இப்பொழுதான் புரிந்தது , காலையில் இருந்து பேகம் ஜான்
ஒன்றுமே சாப்பிடாதது ஏன் என்று .

அந்த ரப்பு , சூனியக்காரி , அவள் பெருந்தீனி தின்பவள் என்றும் புரிந்தது
.அவள் எதோ சில சாமான்களை பாலீஸ் செய்கிறாள் போலும் .

கலவையான வாசனை காற்றில் கலந்து வந்தது . அது வேறு ஒன்றும் இல்லை , அத்தர்
, சந்தானம் மற்றும் மருதாணி யின் நறுமணங்கள் தான் .மீண்டும் அந்த
போர்வைக்குள் குட்டி யானை ஆடத் துவங்கியது . நான் கலவரத்துடன் அமைதியாக
தூங்கவே முயற்சித்தேன் . என்னால் முடியவில்லை . அசையும் அந்த போர்வை ,
என் கற்பனைக்கு எட்டாத பல வடிவங்களை என் கண்முன் கொண்டு நிறுத்தி என்னை
கலவர படுத்தியது .அந்த போர்வை மிகபபெரிய தவளையாக உருமாறி என் மேல் பாயத்
தயாரானது . நான் அதிர்ச்சியில் என்ன செய்வது என்று கலங்கினேன் .

” ஆ .. ஐயோ அம்மா ” என முனகினேன் . ஆனால் என் முனகலை ஒருவரும் கண்டு
கொள்ளவில்லை . அந்த போர்வை நழுவி என் மூளைக்குள் இடம் பெயர்ந்து பெரிதாக
வளத் துவங்கியது . என்னை விட பெரிதாக அது வளர்ந்தது . நடுக்கத்துடன் என்
கால்களை நீட்டி கட்டிலின் அருகில் இருக்கும் , அறை விளக்கின் சுவிட்சை
கால் விரலால் தட்டி விட்டேன் . அறைக்குள் விளக்கு வெளிச்சம் பரவியது
சட்டென்று போர்வைக்குள் இருந்த குட்டி யானை எம்பி குதிக்க போர்வை
உயர்ந்து அடங்கியது . அந்த குட்டி யானை எம்பி தலைகீழாக குதிக்கும் போது
போர்வை ஒரு அடி உயரத்திற்கு மேல் எழுந்து அடங்கியது .நல்லது கடவுளே !
நான் நிம்மதி பெருமூச்சுடன் என் படுக்கையில் புதைந்து கொண்டேன் .

தர்ம சாலாவில் மழை விழும்போது.. ( திபேத்திய கவிதைகள் ) / பூச்சிங் டீ சோனம். / தமிழில் விஜயராகவன் ( ஈரோடு )

download (84)

தர்மசாலாவில் விழும் மழைத்துளிகள்
குத்துசண்டை கையுரைகளை போட்டு கொள்கின்றன
ஆயிரக்கணக்கான துளிகள்
எனது அறையை பாய்ந்து சாடும்.
தகரகூரையின் கீழே அறை சாடல் பொறாமல் உள்ளிருந்து கதறும்.
மழை எனது படுக்கையையும்
எழுதிய தாள்களையும்
நனைத்துவிடும்.
சில நேரங்களில் இந்த புத்திசாலி மழை எனது அறையின் பின்புறமாக வரும்போது இந்த நன்றிகெட்ட சுவர்கள் அனுமதிப்பதால் எனது அறையில் சிறு வெள்ளமே வந்துவிடும்.

எனது தீவுநாடாக மாறிய படுக்கையில் இருந்து கொண்டு
வெள்ளம் என் தேசத்தை சூழ்வதை பார்ப்பேன்.
சுதந்திரம்பற்றிய பதிவுகள்,
எனது சிறைநாட்களின் நினைவுகுறிப்புகள்,கல்லூரி நண்பர்களின் கடிதங்கள்,
மேகி நூடிலும், ரொட்டி துணுக்குகளும், இந்த ஜலபெருக்கில் மறந்தநினைவுகள் திடீரென வருவதுபோல் மேலே வந்து
மிதக்கும்.

மூன்று மாத சித்ரவதை
பருவமழையானது ஹிமாலயத்தின் ஊசியிலை பைன் மரங்களை கழுவி சுத்தபடுத்தி விடுவது மாலை
சூர்யஒளியில் ஒளிர்கிறது.

பிரித்தானிய அரசாட்சி காலம்தொட்டு பயனிலுள்ள
எனது அறைத்தகர கூரையை
மாரிக்காலம் அடித்து அடங்குமட்டும் நான் சமாதானம் செய்ய வேண்டியுள்ளது.
இந்த அறை பல வீடற்ற அபலைகளுக்கு இடமளித்துள்ளது.

தற்போது கீரிகளும்,எலிகளும்,
பல்லிகளும்,சிலந்திகளும்,
கைப்பற்றியுள்ள இதில் நானும் வாடகைக்குள்ளேன்.

இல்லம் என குடியிருக்க வாடகை அறை எடுப்பது
தாழ்வான பிழைப்புதான்.
எண்பது வயதான எனது காஷ்மீரி வீட்டு சொந்தகாரி
தனது சொந்த பூமிக்கு திரும்ப முடியவில்லை.
அடிக்கடி திபேத்தா,காஷ்மீரா
எது சிறந்த அழகு என
விவாதித்துகொள்வோம்.

ஒவ்வொரு சாயங்காலமும்
எனது வாடகை அறைக்கு திரும்ப வருவேன்.
ஆனால் நான் இப்படியே இருந்து இறக்கப்போவதில்லை.

இங்கிருந்து அகல ஏதாவது
ஒரு வழி இருக்கத்தான் செய்யும்.

எனது அறையை போல என்னால் அழ முடியாது.
வேண்டுமென்கிற அளவிற்கு சிறைச்சாலைகளிலும்,எனது
இக்கட்டுகளிலும் அழுதிருக்கிறேன்.

இங்கிருந்து அகல ஏதாவது ஒரு வழி இருக்கத்தான் செய்யும்.

நான் அழப்போவதில்லை,
போதுமான அளவிற்கு எனது
அறையே ஈரமாகத்தான் உள்ளது…

••••

கவிதையைக் கண்டடைதல் ( கட்டுரை ) / ராஜேஷ் சுப்ரமணியன்

1623604_10201990198890135_836757269_n

நவீனத் தமிழ் கவிதை உலகம், கடந்த சுமார் பத்து ஆண்டுகளில் பெரும் மாற்றத்தை சந்தித்திருக்கிறது. இணையத்தின் பெரும் வளர்ச்சியும், அதன் மூலம் உலகம் முழுவதிலுமிருந்தப் படைப்புகளை வாசிக்க கிடைத்ததும் புதியப் படைப்பாளிகளுக்கு உத்வேகத்தைக் கொடுத்திருக்கின்றன. ஒவ்வொரு வருடமும் பெருகி வரும் மொழிப்பெயர்ப்புப் படைப்புகளும் ஒரு ஆரோக்கியமான வளர்ச்சியை நோக்கி செல்வதை சான்றுக் கூறுகிறது.

அரசியல், பெண்ணியம், சமூக நீதி போன்ற ” கருத்துக்களை ” மையமாகக் கொண்டக்கவிதைகள் பொதுவாக நேரடித்தன்மைக் கொண்டவையாகவும், அகப் பிரச்சினைகள் , உள் மனவுலகம் சம்பந்தப்பட்டக் கவிதைகள் சிக்கல் நிறைந்த மொழியால் எழுதப்பட்டவையாகவும் பெரும்பான்மையான சமயங்களில் இருக்கின்றன.

மொழியின் எளிமையிலா, கடினத்திலா , எதில் இருக்கிறது கவிதை? ஒரு கவிதை, தன்னகத்தே “கவிதையை ” கொண்டிருக்க வேண்டாமா ? கவிப்பொருளை சொல்ல வரும் நவீனக் கவிஞன், ஏன் தனது “கவிதையை” சிக்கலான வார்த்தைகளுக்கு இடையில் மறைத்து வைக்கிறான் ? பல சமயங்களில் வாசகனை அருகே நெருங்கவிடாமல் நழுவிப் போய்விடுகின்றனவே கவிதைகள் !

நவீனக் கவிதைகளின் கடின மொழிக்கு ஒரு காரணம் இருக்கக்கூடும். பழகிய மொழியின் பெரும்பான்மையான வார்த்தைகள், தமது வீரியத்தை இழந்து, அவைகளின் அர்த்தங்கள் சேதப்பட்ட நிலையில் , தேய்ந்து,நைந்துப் போன சொற்களாக (cliches ) நிற்கின்றன. ஆகவே, தனது கவிதையைக் கட்டமைக்கும் கவிஞன், புதிய சொற்களைத் தேடி அலைகிறான், தனது “கவிதையின் ஆன்மாவை” வாசகனுக்கு சேர்ப்பிக்க. ஒரு வேளை, புழக்கத்தில் உள்ள சொற்களையேப் பயன்படுத்தினால், வாசகனை இதயத்தை அடையும் பயணத்தில், தனது கவிதை குறைத்தூரத்திலேயே தோற்றுப் போய் , வெற்றுக் கூச்சலாக நின்றுவிடுமோ என்று அச்சப்படுகிறான்.

இத்தாலிய கவிதை இதழ் “பொயசியா ” (Poesia ), கட்டுடைத்தல் (deconstruction ) கோட்பாட்டின் தந்தையான தெர்ரிதாவிடம் (Jacques Derrida ), தனது தலையங்கமான ” எதுக் கவிதை ?/ கவிதை என்றால் என்ன ? ” எனும் தலைப்பில் ( இத்தாலிய மொழியில், “Che cos’e la poesia ? ) அவரது கருத்துக்களைக் கேட்டபொழுது, அவரால் பிரெஞ்சு மொழியில் சொல்லப்பட்டு, இத்தாலிய மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டக் கட்டுரை, மிகவும் புகழ்ப்பெற்றது . வார்த்தைகளால், ஒலி /எழுத்து சங்கேதங்களால் ஆன மொழி, அந்த மொழியால் எழுதப்பட்ட பிரதி ( புனைவு / கதை /கட்டுரை/கவிதை எதுவாயினும்) எப்பொழுதும் குறைப்பாடுகளால் ஆனதே ; அவை எப்போதுமே உண்மையை , புனைவு ஆசிரியன் சொல்ல வந்ததை, முழுவதுமாக வெளிக்கொணர்வதில்லை. தொடர்ந்த கட்டுடைத்தல் மூலமாகவே , ஒரு பிரதியின் ஆழத்தை, ஆன்மாவை அடைய முடியும் எனும் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது கட்டுடைத்தல் தத்துவம்.

தெர்ரிதாவின் மேற்சொன்ன கட்டுரையில், கவிதையை ஒரு முள்ளெலியுடன் (ஆங்கிலத்தில், “hedgehog “, பிரெஞ்சில், “herrison” ) ஒப்பிடுகிறார். கவிதை, சாலையைக் கடக்க முயலும் ஒரு முள்ளெலியைப் போன்றது. முற்கள் நிறைந்த மேல்தோலையும், மென்மையான உள்பாகத்தையும் கொண்டிருக்கிறது முள்ளெலி .

கவிதை என்றால் என்ன ? எது கவிதை? கவிதையை விளக்க முற்படும்போது, வார்தைகளால்தான் சொல்ல இயலும். அத்தகைய விளக்கம், உரைநடையை நோக்கி நகர்கிறது. கவிதை, தன்னுடைய கவிதைத் தன்மையை இழந்தவாறே , வார்த்தைகளால் ஆன உரையால் (prosaic ) தன்னை விளக்கிக் கொள்ள முற்படுவது, முள்ளெலி சாலையைக் கடக்க முற்படுவதற்கு ஒப்பானது. கவிதைக்கான விளக்கம், சாலையில் வேகமாக வரும் வாகனத்தைப் போன்றது. வாகனத்தைக் கண்டு, முள்ளெலி பயத்தால் தன்னுடலை உள்நோக்கி சுருக்கிக் கொள்கிறது. அவ்வாறு தன்னைத்தானே காப்பாற்றிக்கொள்ள கவிதை முற்படும்பொழுது, தன்னை விளக்கிக் கொள்ளும் சக்தியை இழக்கிறது. கவிதைக்கான விளக்கமும் குறைப்பாடுடனே நிற்கிறது.

download

“சுருங்கிக் கொள்ளும் முள்ளெலி ” என்னும் உதாரணப் படிமம், கவிதைக்கும் உரைநடைக்கும் உள்ள முரண்பாட்டை மட்டும் அல்ல,கவிதையை மொழிபெயர்க்கும் முயற்சிக்கும் பொருந்தும். கவிதையை மொழிபெயர்ப்பது என்பது, கவிதையைத் தாக்கி, அதன் இதயத்தைக் கண்டடைந்து , அதன் மொழிப் பயன்பாட்டை உணர்ந்து, இன்னொரு மொழியில் ஆக்குவது, கவிதை என்னும் முள்ளெலியைத் தாக்க வரும் வாகனத்திற்கு ஒப்பானது. உடனே, அது உள்முகமாக சுருங்கிக்கொள்கிறது, தன்னை முழுவதுமாக வெளிப்படுத்த மறுக்கிறது. தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் முயற்சியில், ஆபத்திலிருந்து (மொழிபெயர்ப்பிலிருந்து) தன்னைத் தற்காத்துக்கொள்ளும் முயற்சியில், இன்னொரு மொழியின் சங்கேதக் குறிகளில் (வார்த்தைகளில்) தன்னை முழுவதுமாக அது வெளிப்படுத்திக்கொள்ள மறுக்கிறது. மொழிபெயர்ப்பின் முயற்சியிலும், முள்ளெலி சாலையைக் கடக்கத் தவறுகிறது.

வார்த்தை சங்கேதங்களால் ஆன மொழி, புற உலகையும், அக உலக அனுபவங்களையும் பிரதிபலிக்க முயற்சிக்கிறது. அந்த “மொழியிலும்”, உரைநடையைத் தவிர்த்த கவிதை மொழி, தனக்கே உரிய “இதயத்தைக்” கொண்டுள்ளது. அந்த “இதயத்தை” அடைய வாசகன் செய்யும் முயற்சி,” தன்னைத் தக்க வரும் முயற்சியாகக் ” கருதும் கவிதை முள்ளெலி , உடனே உள் சுருங்கிக்கொள்கிறது. எனவே,கவிதை சொல்ல வரும் அனுபவத்தையும், வாசகனால் முழுவதுமாக உள்வாங்கிக் கொள்ள இயலாமல் போய்விடுகிறது. அது அப்படி சுருங்கிக் கொள்வதனாலேயே, எதிரே வரும் வாகனத்தால் கொன்றுவிடப் படும் அபாயத்திற்கு உட்படுத்திக்கொள்கிறது, அதனை அணுகும் வாகனம் ( வாசகன்) தன்னைக் கொன்றுவிடுவானோ என்ற அச்சத்தில்.

கவிதை தன்னைப் பற்றியே சொல்கிறது, ” நான் ஒரு உச்சரிக்கப்பட்ட வார்த்தை, என்னை மனப்பாடமாக கற்று உணருங்கள், என்னை பிரதி எடுங்கள், பாதுகாத்து பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள், என்னை நன்றாக கவனியுங்கள்- உச்சரிக்கப்பட்ட உச்சரிப்பு, உங்கள் கண்களுக்கு நேரெதிராக: ஒலிப் பேழை, விழிப்பு, ஒளிக்கீற்று, மரணத் துக்க விருந்தின் புகைப்படம்.”

கவிதை, உச்சரிக்கப்பட்ட வார்த்தையாக உலா வருகிறது; அதை சரியாக உள்வாங்கிக்கொள்வது அவசியம். அந்த வார்த்தையை பிரதி எடுத்து, மீண்டும் மீண்டும் அணுகவேண்டும். கவிதையை, ” விழிப்பு” (wake ) என்றும் தெர்ரிதா குறிப்பிடுகிறார். கவிதையின் “விழிப்பை” உணர்பவன், கவிதை தரும் ஞானத்தை அடைகிறான். ஒரு புகைப்படம் போல், உருவங்களின் விகசிப்பைக் கண் முன் நிறுத்துகிறது கவிதை. ஒளி/ஒலி காட்சியாக உரு மாறுகிறது, வாசகனின் மனதில் கவிதை.

கவிதையின் அடிப்படை குணாம்சங்களை இரண்டு வார்த்தைகளில் சொல்லவேண்டுமானால், அவை: “அடர்த்தி” மற்றும் “இதயம்”. ஒரு கவிதை, மிகக் குறைந்த வார்த்தைகளில், அடர்த்தி நிறைந்ததாக, எந்தப் பொருளைப் பற்றி பேசும் கவிதையாக இருந்தாலும், தன்னகத்தே அடர்த்தி நிறைந்ததாக இருத்தல் அவசியம். “இதயம்” என்பதை கவிதையின் ஆன்மா என்றுக் கருதலாம். கவிதையின் ஆன்மாவைக் கண்டடைதலே சிக்கலான விஷயம்.

முள்ளெலியின் முட்கள் போன்றவை, கவிதையின் சிக்கனமான, கடினமான வார்த்தைகள்; அவற்றுள்ளே புதைந்துள்ளது, கவிதையின் ஆன்மா. தனது ஆன்மாவைப் பாதுகாத்துக்கொள்வதற்காக, எதிர்வரும் ஆபத்துகளில் இருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ளும் சாதனமாக தனது முற்களால் ஆன மேலாடையை அணிந்திருக்கிறது கவிதை. ஒரு வாசகன் , முற்களால் தளர்ந்து விடாமல் , கவிதை முள்ளெலியை “சாலையைக் கடக்க” செய்ய வேண்டும். அவ்வாறு செய்து விட்டான் என்றால், கவிதையை அவன் பூரணமாக உள்வாங்கி விட்டான், “மொழிபெயர்த்து” விட்டான் என்றே சொல்லி விடலாம். ஆனால், அது அவ்வளவு சுலபமானதில்லை.

முள்ளெலி மேலுள்ள முட்கள் போன்ற அடர்த்தியான வார்த்தைகளுக்குளே புதைந்திருக்கிறது கவிதையின் ஆன்மா . அதைக் கண்டடைய நெருங்கும்பொழுது, தன்னையே சுருக்கிக் கொள்வதின் மூலம் , தனது முழு ஆன்மாவையும் தரிசிக்கத் தருவதில்லை எந்த நல்லக் கவிதையும். ஒரு வாசகன் மீண்டும் மீண்டும் முயற்சிக்கிறான், கவிதை சொல்லும் செய்தியை அறிந்துவிட. ஒவ்வொரு முறையும் தனது ஆன்மாவின் ஒவ்வொரு முகத்தையோ , பகுதியையோ காட்ட வல்லது கவிதை. ஆகவே தான், ஆங்கிலத்தில், “learn by heart ” என்று சொல்வதுப் போல, வாசகனின் இதயம் நேரடியாக கவிதையின் இதயத்துடன் உறவாடும்பொழுதே, உண்மையான கவிதை நிகழ்வு நேரிட வாய்ப்புண்டு.

வாசகனின் இதயமும் கவிதையின் இதயமும் உறவாடத் தடையாக இருப்பது மொழி. உண்மையை, கருத்துக்களை, எண்ணங்களை, புற /அக கருத்துக்களை மொழி என்றும் நூறு சதவிகிதம் பிரதிலிபலித்ததில்லை . தன்னுடைய நீண்ட வரலாறினால், மொழி மாசு அடைந்திருப்பதால், கவிஞன் சொல்ல விரும்பும் கவிதையை, அவனுடைய மொழி சற்று அரைகுறையாகத்தான் எதிரொலிக்கிறது. அத்தகைய ஒரு படைப்பை, வாசகன் மீண்டும் அதே மொழி மூலம் அணுகும்பொழுது, மொழியின் குறைப்பாடுகளால், அவன் கவிதை மூலம் பெறுவதும் முழுமையானதன்று. அதனால்தான், தெர்ரிதா, கவிதையின் “இதயத்தை, ஆன்மாவைப் ” , நமது இதயம்/ஆன்மா மூலம் நேரடியாக அணுக சொல்கிறார்.

கவிதையை ஒரு மொழியிலிருந்து வேறொரு மொழிக்கு மொழிபெயர்ப்பது ஒரு புறம்; கவிதை சொல்லும் பொருளை புரிந்துக் கொள்ள வாசகன் முற்படுவதும், கவிதையை ” மொழிபெயர்ப்பதற்கு ” சமமே. அவ்வாறு வாசகன் மொழிபெயர்ப்பதன் மூலமே, அதாவது,கவிதையின் வார்த்தைகள் சுட்டும் அனுபவத்தை உள்வாங்குவதும் ஒரு வகையான மொழிப்பெயர்ப்பே.அவ்வாறு ஒரு வாசகன் தன்னை நெருங்குகிறான் என்று தெரிந்ததுமே, கவிதை தனது தற்காப்பு கவசத்தை போர்த்திக்கொள்கிறது; தன்னை முழுவதுமாக வெளிப்படுத்தப் பயந்து, உள்முகமாகத் திரும்பிக்கொள்கிறது. கவிதையுடன் வாசகனின் போராட்டம் ஒரு தொடர்க் காதல் கதையாகி விடுகிறது. அவனும் கவிதையை விடுவதில்லை; கவிதையும் அவன் வசப்படுவதில்லை. ஒவ்வொரு கவிதையின் கதையும் இதுவே.

***

ஜிஃப்ரி ஹாஸன் கவிதைகள் ( இலங்கை )

download (33)


எழுதுவதைத் தவிர

ஒரு கவிதையை எழுத நினைத்து

அமர்ந்து பின்

எழுத முடியாமல் தோற்று எழும்புகிறேன்

சொற்களை அடுக்கி

நான் கட்டமுனையும் கோபுரம்

அரூபமாய் சரிந்து விழுகிறது

எனக்கு வேறு வழியில்லை

மீண்டும் மீண்டும்

எழுதுவதைத் தவிர!

வாழ்வென்பது மிகப்பெரும் பொய்

எனக்குள் மாயமாய் மேலெழும்

உலகை

எனக்குள் இருக்கும் என்னை

எப்படி உங்களிடம் கொண்டுசேர்ப்பது

என்ற அங்கலாய்ப்பில்

என் கணங்கள் கரைந்துகொண்டே செல்கின்றன

நான் எதைக் காண்பிக்க விரும்பினேனோ

அதுவல்ல நான் இதுவரை காண்பித்தது

நான் எதைச் சொல்ல விரும்பி இருந்தேனோ

அதுவல்ல நான் இதுவரை சொல்லியது

நான் படைக்கப்பட்ட மண்ணிலிருந்து

புதைக்கப்படும் மண் வரையிலான

தொலைவு வரைக்கும் மனதைப் பாய விடுகிறேன்

ஆயினும் அந்த உரு

நான் அடைய முடியாதபடி அரூபமாய்

நழுவிக்கொண்டே செல்கிறது

விழித்த கணத்தில் கண்களை விட்டுச் செல்லும்

கனவுக்குப் பின்னும் முன்னுமாய்

நான் காட்டமுனைந்த நிஜமும், நினைவும்

கனவுபோல் வெறும் பொய்தான்

வாழ்வென்பது மிகப்பெரும் பொய்!

•••

சிங்களக் கவிஞர் சந்திரகுமார விக்ரமரத்ன / அவர்கள் நம் அயல்மனிதர்கள் 07 – எம்.ரிஷான் ஷெரீப்

download

பத்திக் கட்டுரைத் தொடர்

சிறைச்சாலைகளைத் தாண்டிச் செல்ல நேரும்போதெல்லாம் ஒரு வாக்கியம் அதன் வாயிலில் எழுதப்பட்டிருப்பதைக் கண்ணுற்றிருக்கிறோம். எல்லோருக்குமே கண்கள் இருக்கின்றன. ஆனாலும் எம்மைப் பாதிக்காதவற்றை நாம் காண்பதில்லை என்பதே நிதர்சனம். ‘சிறைக்கைதிகளும் மனிதர்களே’.

இந்த வாக்கியத்தை வெறும் வாக்கியமாகக் கருதி நாம் இதனை வாசித்து விட்டு எளிதாகக் கடந்து விடுகிறோம். ஆழ்ந்து நோக்கும்போதே இதன் உள்ளார்ந்த அர்த்தம் எமக்குப் புலப்பட ஆரம்பிக்கிறது.

சடுதியாக மனிதனுக்கு ஏற்படக்கூடிய கோபத்தின் காரணமாகவும், உணர்ச்சிக் கொந்தளிப்பாலும், போதையின் தாக்கத்தாலும், வலியவர்களது தூண்டுதல்களின் காரணத்தாலும் சிறியதாகவும், பாரதூரமாகவும் குற்றங்களைச் செய்துவிட்டு, எம்மைப் போன்ற சக மனிதர்கள் பலரும், இதனை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கும் கணத்திலும் கூட சிறைத் தண்டனையை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். சிறைச்சாலைக்கு வெளியே வெகு சுதந்திரமாக உலவித் திரியும் பயங்கரமான குற்றவாளிகளைப் போலவே, நீதி தேவதையின் கண்கள் பணத்தினாலும், அதிகாரத்தினாலும் கட்டப்பட்டிருப்பதன் காரணத்தால் அநீதமாகக் குற்றம் சுமத்தப்பட்டு சிறைத் தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கும் நிரபராதிகள் பலரும் நம் மண்ணில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளில், நடுத்தர மக்களையும், வறியவர்களையும் குற்றவாளிகளாக்குவதில் பெரும் பங்கு மதுவிடம் இருக்கிறது. மதுபோதை ஏற்படுத்தும் தாக்கத்தினால் குற்றங்களைச் செய்து சிறைக்குச் சென்று பின்னர் தமது நிலைமைக்காகவும், தாம் செய்த குற்றத்துக்காகவும் வருந்துவோர் அநேகம். சடுதியாக சிறைக்குச் சென்று அங்கு தமது ஜீவிதத்தைத் தொடர நேரும் இவ்வாறான சிறைக் கைதிகளை விடவும், தமது வாழ்வாதாரங்களுக்காக இவர்களையே நம்பியிருந்த குடும்பங்கள்தான் இவ்வாறான கைதுகளால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன.

இந்த சூழ்நிலையையே சிங்களக் கவிஞர் சந்திரகுமார விக்ரமரத்னவின் ‘அந்தகாரத்துக்கு முன்பு’ எனும் சிங்கள மொழிக் கவிதை மிகத் தெளிவாகவும் காத்திரமாகவும் எடுத்துரைக்கிறது.

அந்தகாரத்துக்கு முன்பு

வாசலருகே மலர்ச்செடியின்

பூக்களுக்கு வரும் வண்ணத்துப் பூச்சிகளே

கொழும்புக்குச் செல்லும் வழி அறிவீரோ

அம்மாவின் மரணத்துக்காக இன்றிரவு

பாடப்படப்போகும் போதனை கீதங்களை

கொழும்புக்குச் சென்று

அப்பாவிடம் உரைப்பீரோ

அமாவாசைக் கனவுகள் வந்து

தம்பியை அச்சுறுத்துகையில்

நள்ளிரவில் தாலாட்டுக் கவிகள் பாட

யாருமில்லை வீட்டில் இப்பொழுது

இன்றிரவு சொந்தங்கள்

எம் குடிசையில் விழித்திருப்பர்

எவ்வாறிருக்குமோ நாளை

நாம் உணரும் அந்தகார இருள்

வண்ணத்துப் பூச்சிகளே

மெதுமெதுவாக

மறைந்துகொண்டிருக்கிறான் சூரியன்

இனி

பாழடைந்த வெண்ணிலவின் உச்சியில்

உறைந்துவிடும் அம்மாவின் வாசனை

அனைத்தும் வீழ்ந்தழிவதற்கு முன்பு

மயானத்துக்கு வந்து நாளை

கூட்டிச் செல்லுங்கள் அப்பா

சிறைச்சாலைக்கு எம்மையும்

மது போதை ஏற்படுத்திய தாக்கத்தில் மனைவியைத்தாக்கி, அதில் படுகாயமடைந்த மனைவி இறந்து விடுகிறாள். அத் தம்பதிகளுக்கு வண்ணத்துப்பூச்சியோடு கதைத்துத் திரியும் பருவத்திலொரு மூத்த குழந்தையும், அதற்குத் தம்பியொன்றும் இருப்பது கவிதையின் வரிகளில் புலப்படுகிறது. தந்தையைக் கைது செய்து கொழும்புக்குக் கொண்டு சென்றிருப்பதுவும், தாயின் இறுதிச் சடங்குகள் முடிந்ததன் பிறகு அக் குழந்தைகள் துணைக்கு யாருமற்று தனித்து விடப் போவதையும் இக் கவிதை காத்திரமாக எடுத்துரைக்கிறது அல்லவா?

இவ்வாறாக சிதைந்து போகும் வாழ்வியல், ஒரு சமூகத்துக்கு மாத்திரமானதல்ல. உலகில் போதையின் பிடியில் செய்யப்படும் குற்றங்களே அநேகமானவையாக இருக்கின்றன. கவிதைகள் வாழ்வியலையே எடுத்துரைக்கின்றன. அவ்வாறான கவிதைகள் மனிதர்களிடையே விழிப்புணர்வையும் ஏற்படுத்துமானால் அவை மிகச் சிறந்த கவிதைகளாக மாறி விடுகின்றன. அவ்வாறாக, கவிஞர் சந்திரகுமார விக்ரமரத்னவின் மிகச் சிறந்த கவிதைகளிலொன்று இது.

கவிஞர் சந்திரகுமார விக்ரமரத்ன 1980 களில் நடைபெற்ற புரட்சிகளில் பங்குகொண்ட முக்கியமான இலக்கியவாதி ஒருவர். சந்திரே என அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் அவர் இடதுசாரிப் போராளியாகத் திகழ்ந்தவர். அதனால் அவரது கவிதைகள் அனைத்துமே மக்களின் மீட்புக்காகவே இருந்தன. அவரைக் குறித்து அச்சம் கொண்ட அப்போதைய அரசால் எண்பதுகளின் இறுதியில் அவர் கடத்தப்பட்டு, சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு, 1991 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அவர் கொல்லப்பட்டிருந்தார்.

••••

mrishanshareef@gmail.com

ஜுனைத் ஹசனி கவிதைகள் ( அறிமுகக் கவிஞர் )

download

மழை

வெண் மேகத்திலிருந்து

ஈரப்பதங்களிழுத்து வரும் மாலைக்காற்றின்

அசாதாரண வேகம்

மிகவும் உலுக்கி விட்டிருந்தது

தெருப்போக்கர்களை

கயிறுழுத்துக்கட்டப்பட்ட தன் மூக்குக் கண்ணாடி வழியே

இப் பிரபஞ்சத்தை ஆய்கிறார்

ஒர் முதியவர்

ஈனப்பட்ட அவர் கரப்பிடியின்வழியாய்

அவரது குடை அவரை

ஆக்கிரமித்துக்கொண்டு விட்டது.

வழிக்காற்று கொணர்ந்து சேர்த்த

உணர்வற்ற ஏதோ ஒரு ஜடப்பொருளாய்

நிலைகுலைந்து கொண்டிருந்தார்

அப்பாதைக்கு நடுவாய்

அவ்வயோதிகர்

தடதடத்துக்கொண்டிருக்கும்

அவரது இதய லப்டப்களினூடே

கிஞ்சிற்றும் இருப்பதற்கில்லை

அம்மழை சார்ந்த ஈரங்களும்

அதன் லயிப்புகளும்

பேனாப் பற்றிய

ஓர் கவிஞனுக்கோ

காகிதமுடைத்த ஓர் சிறுவனுக்கோ

போய் சேரட்டும் அம்மழை.

எல்லா மழைகளும்

எல்லோரையும் ஈர்த்துவிடுவதில்லை

எல்லா கவிதைகளைப் போல்.

சாளரம்

கதகதப்பூட்டும் இளவேனிற்காலத்தோர்

சாயங்காலப் பொழுதை

இன்னுமின்னும் சுவாரஷ்யமூட்டிக்கொண்டிருக்கிறது

முற்றத்துச் சாளரம்.

போவோர் திரிவோரின் சிலேடைப் பேச்சுக்களுடனே

அவ்வப்போது சில தும்பிகளையும்

மென் காற்றினூடே எறிந்து விட்டுத் திரும்புகையில்

படபடவென அசைக்கும் கதவுகள்

சமயங்களில் திகிலூட்டும் பேய்க்கதைகளை ஒத்திருக்கின்றன.

மெல்லிய ஸ்பரிசமாய் விலகிப் பிரிகின்ற

நினைவுச் சாரல்களின்

மென் வருடல்களைப் போலும்

இருட்டுலகின் கொடுங் கனவுகளைப் போலும்

திசை மாறி

சுரம் மாற்றி

தன்னசைவு மாற்றி

எக்காலத்தும்

துடித்தபடித்தான் கிடக்கின்றன

இந்தச் சாளரத்துக் கதவுகள்.

•••

மனச் சிட்டு.. ( சிறுகதை ) ராகவபிரியன்

images

“எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டாள்..எப்பொழுது பார்த்தாலும் என் அண்ட்ராயரை வாசல் கொடியிலதான் காயவைப்பாள்..என் மானம் போறதுல அவ்வளவு சந்தோஷம்….”

புலம்பிக்கொண்டிருந்தார் புகழேந்தி..

“என்னங்க என்னை திட்டிக்கிட்டே ஆபீஸ் போகாதீங்க ..ஏற்கனவே உங்களுக்கு அங்க நிறைய மானப் பிரச்சனை இருக்கு..அண்ட்ராயர எங்க காயப்போட்டா என்ன..? இல்ல இந்த ஊர்ல யாருமே அன்ட்ராயர் போடலயா…சீக்கிரம் கிளம்புங்க ..பஸ் போயிடப்போவுது…”சவுந்தர்யா அம்மாள் தன் பங்குக்கு அவரின் மானத்தை வாங்க சத்தமாக கூவத்தொடங்கினாள்..

இது என்ன பிரச்சனை..?

மானம் அவமானம் என்பதெல்லாம் என்ன..?

புகழேந்திக்கு தலை சீவாமல் புறப்பட்டாலே மானம் போவது போல் தெரியும்..சவுந்தர்யா.. பிராவின் நாடா தோளில் தெரியும் படி உடையணிந்து உடன் வந்தால்..அவரின் மூடு அவுட்டாகிவிடும்..

என் மானம் போறது..மானம் போறது..என்றபடி புலம்பிக்கொண்டே வருவார்..

அவரின் கைச்சட்டையை கால்சட்டையினுள் டக் செய்து வருகையில் இடுப்போரம் அவரின் அண்ட்ராயரின் எலாஸ்டிக் வெளித்தெரிவதாய் யாராவது சுட்டிக் காட்டினால் அவர் அங்கேயே உயிரை விட்டு விடுவார்…

மானம் மறைக்கத்தானே..துணி..?துணியின் துளியில் மானம் தூக்கு மாட்டிக்கொள்கிறதா…? புரியாது புகழேந்திக்கு…

புகழேந்தியின் எதிரில் வருபவர்கள் எல்லோரும் அவரையே பார்ப்பதாக அவரின் உள்ளுணர்வு அவரை உறுத்தும்..அவரின் குறைகள் எல்லோர் கண்களிலும் படுவதாக ஒரு பிரமை வந்து போகும் ..சட் டென்று..அதனால் தன் மானம் பங்கப்பட்டுவிட்டதாக… ஒரு தாழ்வு மனப்பாண்மை அவர் இதயத்தில் எல்லாத் தொகுதிகளிலும் ஜெயிக்கும்..

கிழிந்த சட்டைக்காலர்..பிய்ந்த பட்டன்..தொப்புள் விட்டிறங்கியிருக்கும் அரை வட்டக கால் சட்டையின் பலூன் வடிவ பிம்பம்..எல்லாமே..எல்லாமே அவரை கட்டிப்போட்டுவிடும் அவ்வப்போது..

மானம் போகும் வேகத்தில் அலுவலகம் வந்து சேர்ந்தார் புகழேந்தி..எதிரில் வந்த கிஷோர் வேண்டுமென்றே குட்மார்னிங்க் சொல்லாமல் போவது போல் தோன்றியது..கிஷோர் அவரின் ஜூனியர்..அடுத்த பதவி உயர்வு பட்டியலில் புகழேந்திக்கு அடுத்த பெயர் கிஷோருடையதுதான்..

கிஷோர் கொஞ்சம் கர்வம் உடையவன் என்று புகழேந்தி எல்லோரிடமும் சொல்வார் சமய சந்தர்ப்பம் வாய்த்தால்..ஒரு பனிப்போர் இருவரிடையே நீண்ட நெடு வருடங்களாய் நடந்து கொண்டிருப்பதை அந்த அலுவலகச் சுவர்கள் கூட அறியும்..

புகழேந்தியின் இந்த அமைதியற்ற தன்மையைக் கிளறி சீண்டிப்பார்ப்பதில் கிஷோருக்கு அல்ப சந்தோஷம்..ஒரு சின்ன குறுகுறுப்பு.. ஒரு கணப்பித்தம்..ஆனால் அது எவ்வளவு அகல இடைவெளியை இருவருக்குமிடையில் கட்டியிருக்கிறதென்பதை சொன்னால் புரியாது… இருவருக்குமே..

“புகழேந்தி சார்..இன்னைக்கு புரமோஷன் லிஸ்ட் வருதுன்னு சொல்றாங்களே..தெரியுங்களா..”

கிண்டல் எனத் தெரியும் புகழேந்திக்கு…தன் மானத்தை வாங்கவே கிஷோர் கிண்டலடிப்பதாய் நினைத்து முகத்தைத் திருப்பிக்கொண்டார்..

“சார்..என் பேரு முதல்ல இருக்குன்னு சொல்றாங்க…அப்ப உங்கள விட்டுட்டாங்களா…கொஞ்சம் செக் பண்ணிக்கோங்க..”

சற்றே துளிர்த்த நெருப்புக் கொழுந்தின் மேல் நெய்வார்த்தன கிஷோரின் வார்த்தைகள்.. சுற்றி நிறைய சக ஊழியர்கள் நிற்பதைக் கவனித்தவர் கூனிக் குறுகிப்போனார்….

கிஷோர் மாபாதகம் செய்யவும் தயங்கமாட்டான் என்பது அவரின் அபிப்ராயம்..எதோ தகிடுதத்தம் கிஷோரின் தலைமையில் நடந்திருக்க வேண்டும் என நினைத்தார்…நடு வீதியில் ஆடைகளற்று அம்மணமாய் நிற்பது போல் உணர்ந்தவர் விருட் டென்று தன் இருக்கையில் போய் அமர்ந்தார்..

அவரின் மானம் போயே போய்விட்டது..எப்படி அதைத் திரும்ப அழைத்துவருவது என்ற யோசனையில் ஆழ்ந்திருப்பதுபோல் தலைகவிழ்ந்திருந்தார்…

அண்ட்ராயரின் நாடாக்கள் வெளியில் தொங்குவது போல் உணர்ந்த அந்த நொடியில்..குனிந்து கால்சட்டையின் இழுவை[ஜிப்] சரியாக இருக்கிறதா என உறுதி செய்து கொண்டார்..மானம் போகவில்லையென்பதை உணர்ந்து இயல்பு நிலைக்குத் திரும்பியவுடன்..

வேக வேகமாக மேலதிகாரியின் அறைக்குள் நுழைந்தார்…

“வாங்க புகழ்…குட்மார்னிங்க்..என்ன எதோ டென்ஷனா இருக்கறாப்ல இருக்கு…” மேலதிகாரின் கனிவான குரலில் கொஞ்சம் குளிர் புகழேந்தியின் இதயம் வரை எட்டிப்பார்த்தது…

“சார்..புரமோஷன் லிஸ்ட் வந்திருக்குங்களா…? தெரிஞ்சுட்டுப் போக வந்தேன்..”

“இன்னும் வரல…ஒரு போஸ்ட் தான இருக்கு..ஸீனியருக்கு கிடைக்கும்..நீங்க ஸீனியரா..இல்ல கிஷோர் ஸீனியரா…”

எதுவும் தெரியாதவர் போல மேலதிகாரி கேட்பதாகவும்..இதில் ஏதோ உள்குத்து இருப்பதாகவும் புரிந்துகொண்ட புகழேந்தி..தன்னை மீறி கிஷோருக்கு பதவி உயர்வு வந்தால் என்னாவது என்ற ஷண நினைப்பில்

தனது மன இயல்பின் மான அரக்கனிடம் தன்னை இழந்தார்..

“சார்…இது அநியாயம் சார்..எனக்கு ஜூனியர் சார் அவன்..எனக்குத் தராம புரமோஷன அவனுக்குக் குடுத்தா..என் மானம் போயிடும் சார்…”புகழேந்தியின் கண்களில் காவிரியின் துளி ஒன்று புறப்படத் தயாரானதைக் கண்ட மேலதிகாரி..

“புகழ்..ஏன் டென்ஷன் ஆகறீங்க..லிஸ்ட் வரட்டும் …பார்க்கலாம்…நீங்க போய் உங்க வேலையைப் பாருங்க..” கண்டிப்பு நிறைந்த மேலதிகாரியின் பதிலில் புரமோஷன் தனக்கா இல்லை கிஷோருக்கா எனப் புரிபடாமல்..இறுக்கிப்பிடிப்பானின் பிடியில் கொடியில் தொங்கி காற்றிலாடும் அண்ட்ராயர் போல் இங்கும் அங்கும் கால்வைத்து தன் இருக்கைக்கு வந்தார் புகழேந்தி..

கிஷோருக்குத்தான் பதவி உயர்வு என்பது ஏறக்குறைய உறுதியாகி விட்டது போன்ற செய்திகள் வர அவரின் மானம் துளித்துளியாக வெளியேறுவதாக உணர்ந்தவர்.. ஒரு துண்டுக் காகிதம் எடுத்தார்…

ராஜினாமா கடிதத்தைத் எழுதி முடித்தார்..உறுதி செய்யப்படாத தகவல் தான் எனினும்..மானம் முக்கியம்…கிஷோருக்கு பதவி உயர்வு வந்து அவனின் கீழ் தான் வேலை செய்ய வேண்டிய நிலையை விட ராஜினாமா சாலச் சிறந்தது என முடிவு செய்தார்..

அப்போது தான் எங்கிருந்தோ வந்த சிட்டுக் குருவியொன்று அவரின் இருக்கையில் இருந்த பெயர் தெரியா பூச்சி ஒன்றை கொத்திவிட்டுப் பறந்து போனது..அதன் இறகுகளில் அவரின் மானமும் ஒட்டிக் கொண்டுவிட்டிருக்க வேண்டும்..

ஷணச் சித்தம்..ஷணப்பித்தம்..

மேலதிகாரியிடம் ராஜினாமா கடிதம் குடுத்துவிட்டு ..போன மானத்தை மீட்டெடுத்த திருப்தியுடன் வெளியில் வந்தவர்..ஒரு வாஞ்சையுடன் அந்த அலுவலகத்தை புதிதாக பார்ப்பது போல் பார்த்தார்..கேண்டின் வந்து ஒரு தேனீர் சொல்லிவிட்டு ..எதையோ சாதித்த முகபாவத்தைக் கொண்டு வந்தபடி சுற்று முற்றும் பார்த்தார்..

கிஷோர் ஒரு சாடிஸ்ட் என்பது ஓரளவு உண்மை என்பதை கிஷோரே ஒப்புக்கொள்வான்..கல்லூரியில் நிறைய ராகிங்க் செய்திருக்கிறான்..அவனே சொன்னது தான்..அலுவலகத்திலும் புதிதாய் யாராவது சேர்ந்தால் ஒரு வித்தியாசமான ராகிங்க் செய்து கெட்டபெயரெடுப்பதை ஒரு கெளரவமான செயலாகவே எண்ணிக் கொண்டிந்தான்..

அந்த கிஷோர்தான் இப்போது பக்கத்து மேசையில் தனக்குப் பிடிக்காத இன்னும் சில சகஊழியர்களுடன் தேனீருக்காகக் காத்திருப்பதைக் கண்டார் புகழேந்தி..

வாசல் கொடியில் காய்ந்து கொண்டிருக்கும் அண்ட்ராயரை பார்த்து எல்லோரும் சிரிப்பது போல் ஒரு அட்டகாசமான நம்பியார் சிரிப்பு அவரைச் சுற்றிச் சூழ்ந்து கொண்டது..அவரின் இதயத் துடிப்பு பக்கத்து மேசை கிஷோருக்கும் கேட்டது..

“சார்..இன்னிக்கி யூனியன் மீட்டிங்க் இருக்கு சார்..அதுல எனக்கு புரமோஷன் வந்ததைப் பாராட்டி நீங்க தான் பேசப் போறீங்க..” கிஷோர் கன கச்சிதமாக தன் சாடிசத்தின் சாகஸ முடிச்சை அவிழ்க்கத் தொடங்கினான்..

எதுவும் பேசாமல் அங்கிருந்து வெளியேறிய புகழேந்தியை கூவிக் கூப்பிட்டார் கேண்டின் சிப்பந்தி.. கேண்டின் சிப்பந்தியின் அண்ட்ராயரின் கோடுகளையும் கட்டங்களையும் ஏற்கனவே கவனித்து முகம் சுளித்தவர் இப்போது இன்னும் கோபத்துடன் திரும்பிப் பார்த்துக் கத்திவிட்டுப் போனார்..

தேனீர் தேவையில்லை என்பதை சிப்பந்தி புரிந்து கொள்ள வேண்டும்..

புரமோஷன் கிஷோருக்குத்தான் கிடைத்தது..

புரமோஷன் களின் ரிஷிமூலம் நதிமூலம் கண்டறிவது இப்போதும் கடினமாகத்தான் இருக்கிறது..அதிர்ஷ்ட்டம் என்று சமயத்தில் அதற்கு பெயரும் வைத்துவிடுகிறார்கள்..கோவணம் கட்டத் தொடங்கிய காலத்திலிருந்து புகழேந்திக்கு அந்த பாழாய் போன அதிர்ஷ்ட்டம் வந்ததேயில்லை..ஆனால் அவருக்கு மானபங்கம் அடிக்கடி வந்துவிடுகிறது என நொந்து கொள்வது அவரின் வாடிக்கை..இப்போதும் அது நடந்துவிட்டதில் அவரின் கோபம் அந்த சிட்டுக் குருவியின் மேல் திரும்பியது…மேசைக் கனத்திற்காக வைத்திருந்த அந்த பூவேலைப்பாடுடைய கண்ணாடிக் குடுவையை தூக்கி அடித்தார்..குருவியின் மேல் அது படாமல் ஜன்னல் வழி எங்கோ போய் விழுந்தது நல்லதாகப் போய்விட்டது..

கொஞ்சம் இடது கால் எக்கி தன் அண்டராயரைச் சரிசெய்தார் புகழேந்தி..அடங்காசினத்துடன்..யூனியன் மீட்டிங்க் நடக்கும் அறைக்குள் நுழைந்தார்..அங்கே அதீத மெளனம்..

புகழேந்தியைப் பார்த்து கிஷோர்…”சார்..உங்க சர்வீஸ் ரெக்கார்ட்ல எதோ அட்வர்ஸ் ரிமார்க்ஸ் இருக்கு..அதனால உங்கள ஓவர் லுக் பண்ணி என்ன புரமோட் பண்ணிருக்காங்க…அப்படி என்னதான் சார் பண்ணினீங்க…”

இப்போது எல்லோரும் நகைத்தார்கள்..இடது கையால் தன் கால்சராயின் வெளித்துருத்திக் கொண்டிருக்கும் அண்ட்ராயரை உள்ளே தள்ளி மறைத்தபடி

“இது ரொம்ப அநியாயம்.. இது நடக்கும்னு தெரிஞ்சுதான் நான் வேலையை ராஜினாமா செஞ்சுட்டேன்..உனக்கு வாழ்த்துக்கள்..” என்று சொல்லியபடி எழுந்த புகழேந்தியை எல்லோரும் ஏளனம் செய்வது போல் கைத்தட்டினார்கள்..

“கிஷோர்..பதவிக்காக எதை வேணும்னாலும் விற்கத் தயாரான காலம் இது..நீ எதை விற்று இந்த புரமோஷன் வாங்கினேன்னு இங்க எல்லோருக்கும் தெரியும்..” அணல் பறந்தது அவரின் வார்த்தைகளில்..

நிலமை புத்தம் புதிய உள்ளாடையின் எலாஸ்டிக்காய் இறுக்கத் தொடங்கியது…

கிஷோர் கோபமானான்..” புகழேந்தி..மானம் போனப் பிறகு …எதுக்கு மேல்சட்டை போட்டிட்டிருக்க..கழட்டி வீசிட்டு ..புரமோஷன் இல்லங்கறத்துக்காக வேலையை விட்டெறிஞ்ச மாதிரி..விட்டெறிஞ்சுட்டுப் போக வேண்டியதுதானே…”

இப்போது உண்மையிலேயே புகழேந்தியின் உயிர் பிரியும் நேரம் வந்து விட்டதாக உணர்ந்தார்..

“கிஷோர்..உன்னோட வக்கிரம் இப்ப எல்லோருக்கும் தெரிஞ்சு போச்சு..நான் சட்டைய கழட்டிட்டு போக முடியும்..நம்ம கூட வேலை செய்யற லேடிஸும் இங்க இருக்காங்க..என்னோட நெலமையில அதுல யாராவது இருந்தா அவங்க கிட்டயும்..சட்டைய கழட்டச் சொல்வியா….”

கோபம் கொப்பளித்தாலும் நிதானமிழக்காமல் நியாய வார்த்தைகளை பேசுவதாக நினைத்து அப்படிக் கேட்டுவிட்டார் புகழேந்தி..

ஒரு கனத்த மெளனம்…

கிஷோர் இதை எதிர்பார்க்க வில்லை…சாடிஸத்தின் இறுதிக் கட்டம் என்பது மட்டும் அவனுக்குப் புரியவில்லை..உச்ச கட்டம் என்பதும் தான்..அவரை இன்னும் காயப்படுத்துவதாக நினைத்து..”நிச்சயமா புகழேந்தி..லேடிசா இருந்தாலும் கழட்டச் சொல்லுவோம்..” என்றான்…

இப்போது தன்னுடைய கால்சட்டையின் இழுவை மூடியையும் மீறி அண்ட்ராயரின் நாடாக்கள் வெளியில் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தார் புகழேந்தி…செளந்தர்யாவின் கழுத்திலும் பிராவின் நாடா வெளியில் துருத்திக்கொண்டிருக்க வேண்டும்…

••••••••

நெய்ப் பந்தம் ( சிறுகதை ) ( அறிமுக எழுத்தாளர் ) / பிரதீப் கென்னடி

download

எது நேர்ந்துவிடக்கூடாது என மறந்தாற்போல் இருந்தானோ அதுவே நேர்ந்துவிட்டது போல் அவன் மனதை ‘பதைபதை’க்கச் செய்தது. அந்தி மங்கி மறைந்து போகப்போகும் இந்த வேளையில், இருபுறமும் கண்ணுக்கெட்டிய தூரம்வரை பச்சிளம் நாத்துகளைத் தாங்கிய வயல்பரப்புகளின் நடுவே வகுடெடுத்தாற்போல் நீண்டு செல்லும் அந்த தார்ச்சாலையில், தன் சைக்கிளின் பெடல்களை அழுத்தி மிதித்தான். ஆத்தாவீட்டுக்கு விரைந்துவிட்டு எப்படியாவது வீடு திரும்பிவிட நினைத்தான். எங்கும் எதிலும் அமைதியும் நிசப்தமும் நிலைத்திருக்க அவனுக்கு மட்டும் கேட்கும் செய்ன் கவரில் செய்ன் உரசும் “கிரீச் கிரீச்” இன்னும் ‘கிலி’யைத் தருவதுபோல் இருந்தது.

இதேபோல் அந்தி மங்கிய பல வெள்ளி இருளின் துவக்கத்தில் இந்த ஆரேழு மைல் தூரத்தை “ஆத்தாவூட்டுக்கு போறோம்” என சந்தோசம் தளும்ப கடந்ததறியாமல் கடந்திருக்கிறான். ஒருநாளும் ஆத்தாவீடு இன்றுபோல் அவனுக்கு தூரமாய் இருந்ததேயில்லை.

” அப்பாட்ட செலவுக்கு எவ்ளோ காசு கேக்குறது? மத்த பயலுவோலாம் ஐநூருவா கொண்டு வாரானுவோ, அப்பா ஐநூருவா கேட்டா தருவாரா? அங்க குளுருமாமா, அப்பத்தாவ சொட்டரத் தொவச்சு போட சொன்ன. போட்டுச்சா? ஸ்கூல்ல காலைல அஞ்சு மணிக்கெல்லாம் பஸ் எடுத்துருவாங்க, ஸ்கூலுக்கு அஞ்சுமணிக்கெல்லாம் போயிர இங்க நம்மூர்லெந்து நாலுமணிக்கெல்லாம் பஸ் கெடைக்குமா? கெடைக்கலன்னா?” இப்படி எண்ணற்ற கேள்விகளோடு பள்ளியில் இருந்து வீடு திரும்பியவனுக்கு ‘ஆத்தா’வைப் பற்றி எந்த கேள்விகளும் எழுந்திருக்கவில்லை.

ப்ரின்ஸ்பல் சார் எட்டாம் வகுப்பு ‘ஏ’ சக்ஸனுள் நுழைந்து இரண்டு நாள் “டூர்” அறிவிப்பு செய்து ஊட்டியையும் ப்ளாக்தண்டரையும் பற்றி செய்த விவரணைகளிலேயே அவன் டூர் போக முடிவெடுத்துவிட்டிருந்தாலும் அப்பொழுது ஆத்தாவைப் பற்றி இவ்வளவு பயம் இருந்திருக்கவில்லை. “டூர்” பணம் ஆயிரத்தைனூரு எண்ணி கொடுத்த அப்பா, ” ஒங்க ஆத்தா இப்டி இருக்கடா” என்ற பொழுது வெளிரித்தான் போனாலும் எப்படியோ “அதெல்லா ஒண்ணூ ஆவாது” என நம்பி இருந்தவனாய் இன்று இருக்கமுடியவில்லை.

இவ்விருதினங்களாக ஆத்தாவை மறந்து வேறெந்த நினைவுமின்றி, டீவியில் ப்ளாக்தண்டர் விளம்பரம் போடச்சொல்லி ஏங்குவதும், நண்பர்களோடு சேர்ந்து எப்படி ஆறுபேர் சீட்டை பிடிப்பது அதில் நாமெப்படி சன்னலோர சீட்டைப்பிடிப்பது என்ற யோசனையுமாய் ஊட்டியின் உருவ அமைப்புகளை அவனாக உருவகப்படுத்தி உருபோட்டுக்கொண்டிருந்தான். விரல் விட்டு எண்ணி ஒவ்வொருநாளைக் கழித்து நாளை “டூர்” கிளம்பிவிடலாம் வென்றிருக்கையில் “ஆத்தாவுக்கு ரொம்ப முடியல, ஆத்தா ஒன்னப் பாக்கணுங்குது அப்பு” என்ற சின்னமாமி யின் அழைப்பு அவன் ஆசைகள் யாவையும் ஆட்டிப்படைத்து அவனை ஆழ்ந்த அக்கழிப்புக்குள்ளாக்கிவிட்டது.

” நா போன வாரோ பாத்தப்பக்கூட ஆத்தா நல்லாத்தான் இருந்துச்சு, யேன் எல்லாரு என்ன ஏமாத்ரிய ” என உள்ளார புழுங்கியபடி யாரும் ஏமாற்றவில்லை என்ற உண்மையறிந்தும் அதை எள்ளளவும் ஏற்றுகொள்ள மனமில்லாதவனாய் – இடக்கையால் ஹேன்டில்பாரை பற்றி வலக்கையால் கண்ணீரைத் துடைத்து, ” கடவுளே ஆத்தா இன்னைக்கி செத்தரக்கூடாது கடவுளே, நா நாளைக்கி எப்டியாது டூர் போவனு கடவுளே, ப்ளீஸ் கடவுளே ப்ளீஸ் கடவுளே ” என வேண்டியழுதவாறே சைக்கிளை இன்னும் வேகமாக அழுத்தி மிதித்தான்.

ஆத்தாவின் நிலைமைபற்றி சின்னமாமி இவன் அப்பாவுக்கு போன் செய்து இவனிடம் கொடுக்க சொல்லி சேதி பேசுவதெல்லாம் புத்தம் புதிய வழக்கம், ஒருவேளை பெரியமாமி போல் ஆத்தாவின் அண்ணன் மகளாய் பிறந்துவிடாதவள், புதிதாய்தான் புகுந்தவள் என்பதனால் பகையில் பாத்துசம் இல்லாமலிருக்கலாம். ஆத்தாவீட்டிற்கும், இவன்வீட்டிற்கும் பேச்சு மூச்சு அற்றுப்போய் பத்து வருடங்களாவது இருக்கும். இவனின் மூன்று வயதில் அவன் அம்மா தன்னைத்தானே மாய்த்துக்கொண்டபின் இருகுடும்பங்களுக்கிடையே ஒட்டு-ஒறவு நல்லது-கெட்டது என எதுவுமில்லை. “என் ஒத்த புள்ளையே பொய்த்து ஒங்க ஒறவெதுக்கு எங்களுக்கு” என ஆத்தா வீட்டில் அப்படியே இருந்து விட்டார்கள். இரு மாமன்களின் கல்யாணத்தின் போதும்கூட இவனப்பா உயிரோடிருக்க பத்திரிக்கையில் மாப்பிள்ளை என இவன் பெயரைத்தாம் அடித்தார்கள். அவர்களுக்கு இவன் மட்டும் போதும் – இவன் தான் அங்கு எல்லாம் – இவன் தான் அவர்களுக்கு ராசா.

இவனும் தீபாவளி, பொங்கல், வார விடுமுறை, கோடைவிடுமுறை என அங்கு தான் கிடப்பான். ஏன் கிடக்கமாட்டான் ? தரையில் இவன் கால்படவிடாது தோளில் தூக்கித் திரிந்த தாத்தா – அவர் இப்போதில்லை. மாமன்கள், “திங்க மெல்லதான் செல்லம்” என அவ்வபோது அதட்டினாலும் தாயில்லா பிள்ளை என தாலாட்டும் சீராட்டும் பாராட்டும் ஏகபோகம். எல்லாத்துக்கும் மேலாய் இன்றுவரை (இன்று அவளால் முடியாது என்றாலும் முடிந்தால் இன்றுவரை), “டங்” என ஊரில் இருந்து வந்தவனின் சைக்கிள் ஸ்டாண்ட் சத்தம் கேட்டதுமே சத்தமின்றி எண்ணெய்சட்டியை அடுப்பில் ஏற்றுவிட்டு முந்தானையால் கண்ணைத் துடைத்தவாறே இவன் முகம் பார்க்க ஓடிவரும் ஆத்தா, இவனை நினைத்தும் இவனை இப்படிவிட்டுவிட்டு போன தன் பெண்னை நினைத்தும் அவள் அழாத நாளே இல்லை . இந்த ஆத்தாவை இதுநாள்வரை இறந்துவிடக்கூடாது என நினைத்துவிட்டு இன்று ‘ இன்று இறந்துவிடக் கூடாது’ என்று நினைப்பது சரியா என்ற கேள்வி “சுருக் சுருக்” என குத்தினாலும் அவனால் அப்படிதான் நினைக்கமுடிந்தது.

அன்று இதேபோல் சின்னமாமி, “ஆத்தா ஒன்ன பாக்கணுங்குது அப்பு ” என்று போன் செய்த பின் ஆத்தாவீட்டிற்குப் போய் அங்கிருந்து சின்னமாமனுடன் மோட்டர்சைக்கிளில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்த ஆத்தாவை முதன் முதலாய் பார்க்கப் போனவன், “தஞ்சாவூர் புற்றுநோய் மருத்துவமனை என்ற பெயரிடப்பட்ட ஆஸ்பத்திரியும், கட்டிலில் கட்டி தொங்கவிடப் பட்டிருந்தப் பரீட்சை அட்டையின் முதல் தாளில் பேஷண்ட் நேம் கிருஷ்ணவேணி என்பதையும் அதன் கீழ் ஏதோ கேன்சர் என்ற கோழிக்கிறுக்கல் எழுத்தையும்” பார்த்துவிட்டு ஆத்தாவுக்கு கெர்பப்பை ஆபரேஷன் என்றிருந்தவன்(அவனுக்கு அப்படித்தான் சொல்லப்பட்டிருந்தது) திக்பிரமை பிடித்தவனாய் நின்றான். ரேடியேஷன் அறையில் இருந்து வார்டுக்குள் நுழைந்த ஆத்தா, “நானும் ஒன்ன விட்டுட்டு போப்போரணடா” என்று அவனை வாரியணைத்து அழுத பொழுது புரிந்தும் புரிந்துகொள்ள முடியாதவனாய் அழுதான் – அன்று மூக்குறுஞ்சலும் கண்துடைத்தலும் இடர்பட ஆத்தா ” நீ ஒன்னாப்பு படிச்சப்ப ஒன் தாத்தா இப்படித்தான் படுத்த படுக்கையா கெடந்தாரு. ஹார்ட்டடாக்கு . ஒன்ன பாக்கனு பாக்கனுட்டு இருந்தாரு. பள்ளியோடத்லேருந்து ஒன்ன அலச்சார ஆள் போய்ருந்தது .நான் சும்மா இருக்காம சும்மானாச்சுக்கும் ‘அப்பு வந்துட்டாயா’ன்னேன். ‘எங்க எங்க’ ன்னு படக்குன்னு எந்துருச்சு பாத்துட்டு படுத்தவருதான் அப்டியே போய்த்தாரு” என்றுவிட்டு “நா சாவயில நீ என் கண்ணு முன்னாலயே நிக்கனுயா” என்று சொன்னதன் நினைவு வந்ததும் என்ன நினைத்தானோ? ‘ஆத்தா இன்னிக்கி சாவவே கூடாது கடவுளே’ என்ற வேண்டுதலை ‘ஆத்தா சாவவே கூடாது கடவுளே” என்று மாற்றிகொண்டு “எப்டியாது டூர் போவனு கடவுளே”என்பதையும் சேர்த்துக் கொண்டான்.

“ஆத்தா ஒன்ன பாக்கனுங்குது அப்பு ” என்று ஃபோன் செய்த சின்னமாமியின் மீதும், “டங்” என இவனின் சைக்கிள் ஸ்டாண்ட் சத்தம் கேட்டு வாசலுக்கு வந்து எட்டி பார்த்துவிட்டு உள்ளே போய் ஆத்தாவிடம் ” அம்மா அப்பு வந்துடான் மா” என்ற சின்னமாமன் மீதும், ஆத்தா மீதும் எல்லோரின் மீதும் அவனுக்கு ஏவெரிச்சலாய் வந்தது-ஊட்டி மலைத்தொடர்களும்,ப்ளாக்தண்டர் நீர் விளையாட்டுகளும், “ஹேர்பின் பெண்டுல பஸ்சு எப்டி போவும் தெரியுமா” என்ற முன்னமே ஊட்டி போய் வந்திருந்த நண்பர்களின் சிலாகிப்பும், ” நாளைக்கு நம்ம ரெண்டு பேரும் பக்கத்து பக்கத்துல உக்காந்துக்கலாம்” என்றுவிட்டு இந்நேரம் தூக்கம் வராமல் புரண்டு படுத்துக் கொண்டிருக்கும் உயிர்நண்பனும், காலை கிளம்பிவிட இருக்கும் கலர் விளக்குகள் பொருத்தப்பட்ட செமிஸ்லீப்பர் பஸ்சும், இரவு மேட்டுப்பாளையம் ஹோட்டல் அறையில் நண்பர்களோடு சேர்ந்து போடப்போகும் குட்டி குட்டி கும்மாலங்களும் அவனை வாவா! என்றழைத்தது.

****

கன்னத் தசைகள் வற்றிப்போய் மருக்கள் மட்டுமே முகமாய் , சுண்டுவிரலால் உச்சந்தலையில் குண்டுமணியளவு கொண்டை போடுமளவு தலைமுடி கொட்டிப்போய், கேன்சர் கட்டி உறுஞ்சிவிட்டு போட்ட மீதியாய் கட்டிலில் உருக்குலைந்து கிடந்த அவளைப் பார்க்க அங்கு அழும் மாமா, மாமி, உறவுமுறைகள், அக்கம் பக்கத்து பெண்கள் என யாருக்கு எப்படி இருந்ததோ? அந்த அறையின் ஒரு மூலையில் சம்மனங்காலிட்டு அமர்ந்திருந்தவனுக்கு ஆத்தாவும், அந்த அழுகுரலுக்கு மத்தியில் இருந்து அவனுக்கு மட்டும் கேட்கும் அவளின் மூச்சு காற்றும் , அவனையும் ‘நாளைக்கு எப்டியாது டூர் போவனு கடவுளே’என்ற அவனின் பிரார்த்தனையையும் மாறி மாறி அறைவது போல் பட்டது.

பேச்சுமூச்சற்று அடித்துப்போட்டாற் போல் கிடந்த ஆத்தா அவனை முற்றிலும் நம்பிக்கையிழந்தவனாகச் செய்தாள். அவன் மாமா மாமி என யாரிடமும் நாளை “டூர்” போகவேண்டும் என்ற செய்தியைச் சொல்லவில்லை, ஏதோ ஒரு சனிக்கிழமை மதியம் இவன் தலையில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய போது முதுகில் வழிந்தோடும் நாலைந்து பேன்களை பார்த்துவிட்டு முச்சந்தியில் ‘ஒனக்கு ஒருத்தி அம்மானு இருந்துருந்தா ஒன் தல இப்புடி இருக்குமாடா’ என மாரில் அடித்துகொண்டு அழுதுவிட்டு அர டப்பா அரப்பை தலையில் தேய்த்து குளிப்பாட்டிய ஆத்தா, வாரா வாரம் சனி ஞாயிறுகளில் வந்து இருந்துவிட்டுப் போகும் அவனுக்கு வாரத்தின் ஒவ்வோரு நாளும் செருவாடு சேர்த்து கையில் நூறுகளில் பெருவாடாக கொடுத்தனுப்பும் ஆத்தா,இப்படி இன்னும் எத்தனையோ “ஆத்தா” முக்கியமா “டூர்” முக்கியமா என அவர்கள் நினைத்தவிடக் கூடும் என்று பயந்தான்.

“அழுவாத அப்பு அழுவாத அப்பு ஆத்தா நம்மல விட்டு எங்கயும் போவாது ப்பு”என்று பெரியமாமன் இவன் கண்ணைத் துடைத்தபோது ‘பத்து வருசத்துக்கு முன்னாடி டாக்டர் சொன்னப்பயே கெர்பபைய எடுத்துருந்தா அம்மா வுக்கு இந்த நெலம வந்துருக்குமா’ என்ற குற்றவுணர்வு அவனுக்கிருந்ததோ இல்லையோ ‘டூர் போவ முடியாதோ’ என அழுதவனுக்கு அவனின் கண்துடைப்பு அருவருப்பை தந்தது. ஒரு கணம்,ஒரே ஒரு கணம் ” டூர் போவேனா” என நினைத்தான்.

ரா சாப்பாட்டிற்கு நேரமாகி விட்டதால் அக்கம் பக்கத்து பெண்கள் கிளம்பினார்கள், எதாவது சேதி என்றால் சொல்லச் சொல்லி விட்டு பக்கத்து ஊரில் இருந்து வந்த ரத்த பந்தங்கள் ஒறவுமுறைகளும் கிளம்பிற்று. மாமா மாமி அந்தன்ட இந்தன்ட நகர தன்னந்தானியாய் கட்டிலில் கிடந்த ஆத்தாவின் தலைமாட்டருகில் முட்டி இட்டு அமர்ந்து ” ஆத்தா நாளைக்கி நா டூர் போரந்தா ஊட்டி த்தா ஒனக்கு ஒண்ணுமில்லத்தா நீ நல்லாதான் ஆத்தாயிருக்க ப்ளீஸ் த்தா- செத்துராதத்தா என சொல்ல நினைத்தாலும் அதை சொல்லவில்லை – நா டூர் போவனுத்தா ப்ளீஸ்த்தா நா டூர் போவனுத்தா”என அவளுக்கு மட்டும் கேட்கும்படி இதை திரும்ப திரும்ப சொல்லி கேவியழுது ஆத்தாவின் காதுமடல்களை கண்ணீரால் நனைத்தான்.

ஆச்சரியம் தான் ,எதற்கோ கோபித்துக் கொண்டு குப்புறப் படுத்த குழந்தை அது கிடைத்துமே படக் என எழுந்துவிட கூடாது என பொறுமையாக எழுவதுபோல ,அடுத்த அரைமணி நேரத்தில் ஆத்தா அப்படி இப்படி அசைந்து ஒருஒரமாக ஒருகணித்துச் சாய்ந்து அரை டம்ளார் பால் குடித்தாள்,பின் சீனி போட்டு சுடுதண்ணி விட்டு ஒரு இட்லியும் தின்றாள்,ஓரிரு வார்தைகளும் பேசினாள்.

ஆத்தா தேறியதைக் கண்டு உடனே கிளம்பிவிடலாம் என மனம் துடியாய்துடித்தாலும் அவன் அப்படி செய்துவிடவில்லை .” இருந்துட்டு நாளைக்கு போலம்லடா” என்ற பெரியமாமனுக்கு ” இல்ல மாமா நாளைக்கி கண்டிப்பா வரணுமாமா டெஸ்ட் இருக்கு”என்றுவிட்டான் ” மணி ஒம்போதுக்கு மேல ஆவபோவுதடா யாரையாச்சும் கொண்டாந்து விட சொல்லவா” என்றதுக்கு ” இல்ல மாமா நான் போய்ருவன்,போய்த்து சின்னமாமிக்கி போன் பண்ணி சொல்லியரன்” என முடித்துவிட்டு அடுத்த அரைமணி நேரத்தில் சைக்கிளை எடுத்துவிட்டான். “போய்த்து வாரன் த்தா” என்றதுக்கு ஆத்தா காற்றில் அவனுக்கு மட்டும் கேட்கும்படி இரண்டு வார்த்தைகள் பேசி கண்ணால் அனுப்பி வைத்தாள்.

நட்சத்திரங்கள் நிறைந்திருந்த அவ்விருளில் அழகாய்ச் சிரித்துச்சென்றவனை, கருமேகங்கள் கைபிடித்து ஊட்டி அழைத்துச் சென்றது. சைக்கிள் செய்ன் கவரில் செய்ன் உரசும் ‘கிரீச் கிரீச்’, “பாத்து பத்ரமாபோ” என்ற ஆத்தாவின் அசரிரியாய் ஒலித்தது.

பொட்டனிக்கல் மலர்பூங்காவின் பூக்களின் மத்தியுள்ளும், தொட்டபெட்டா மலை சிகர உச்சியிலும், ப்ளாக் தண்டர் ஜெயண்ட்வீல் ராட்டனங்களிலும் ஆத்தாவின் உயிரை அவன்தான் தன் கையில் கெட்டியாய் பிடித்துவைத்திருந்தான் – ” இந்த ஊர்ல இது பேமஸ்” என்று கிளாஸ் டீச்சர் சொன்னதும் வாங்கி எங்கு மாமாவோ மாமியோ என்ன?ஏது? என கேட்டுவிடுவார்களோ எனப் பயந்து அவன் சம்படத்தில் எடுத்து வந்திருந்த ஊட்டி வறுக்கிகளில் ஒன்றை பாலில் ஊற வைத்து மசித்து ஆத்தா உண்ட போது இருவர் கண்களிலும் , நீரூத்தெடுத்தது.

****

ஆத்தா இறந்தபின், ஆத்தா இல்லாத ஆத்தாவீட்டில் அவளின் நினைவுகள் நிழற்படமாய் ஓட அவன் எவ்வளவோ அழுதிருக்கிறான். ஆனால் ஆத்தா இறந்த அன்றிரவு, இந்திய கிரிக்கெட் அணி விளையாடி அந்த பிரம்மாண்ட தொடரின் ஒவ்வொரு போட்டியையும் பார்த்துவிட்டு, இரவு நடக்கபோகும் இறுதிபோட்டிக்காக காலையில் இருந்து கடிகார முள்ளைக் கவனித்து கொண்டிருந்தவன், ஆத்தாவிற்கு நெய்ப் பந்தம் ஏந்திய கைகளோடு “இந்தியா ஜெய்சிருச்சா?” என யாரிடம், எப்படி ? கேட்பது என்பதறியாமல் தவித்தான்.

•••••••••••••

மலைகள் அடையாளமாக மாறிக்கொண்டிருக்கிறது / சிபிச்செல்வன்

சிபிச்செல்வன்

சிபிச்செல்வன்

வணக்கம் நண்பர்களே

மலைகள் இந்த இதழுடன் 128 ஆவது இதழாக வெளிவருகிறது

மலைகள் இணைய இதழ் தொடங்கிய காலத்திலிருந்து இரவு முழுவதும் பணி செய்வதால் இது எனக்கு 128 ஆவது சிவராத்திரி

ஆக, விடாப்பிடியாக இதழைக் கொண்டு வருகிறிர்களே என வியப்பைக் காட்டுகிற நண்பர்களும் இருக்கிறார்கள்.

சேலம் மண்ணின் மைந்தரான அக் பரந்தாமன் கடந்த மாதம் மறைந்துவிட்டார். அவருக்கு மலைகள் தன்னடைய அஞ்சலியை செலுத்துகிறது.

ஒருவகையில் இந்த விடாப்பிடிக்கு சி.மணி மற்றும் அக் பரந்தாமன் மற்றும் மீட்சி பிரம்மராஜன் இப்போது இதழ்களை கொண்டுவரும் புது எழுத்து ஆகிய என் முன்னோடிகள்தான் காரணம் என நினைக்கிறேன். ( இவர்கள் எல்லோரும் சேலம் சார்ந்து இயங்குபவர்கள் )

மேலும் ஒருவரைக் குறிப்பிட வேண்டுமானால் நவீன விருட்சம் அழகியசிங்கரைக் குறிப்பிட வேண்டும். நவீன விருட்சம் 102 இதழை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறது. கனவு இதழும் இந்த வரிசையில் தொடர்கிறது,

இவர்களைத் தவிர என் சிற்றிதழ் முன்னோடிகள் அனைவரையும் நன்றியுடன் இந்த நொடியில் நினைத்து பார்க்கிறேன். அவர்களின் தொடர்ச்சியாகவே நான் இயங்கிக்கொண்டிருக்கிறேன்,

ஒவ்வொரு இதழையும் கொண்டு வருவதில் பெரும் சிரமங்கள் இருக்கின்றன. முக்கியமாக படைப்பாளிகளிடம் படைப்புகளை வாங்குவது

சமீபத்தில ஒரு நண்பர் இதை சுட்டிக்காட்டினார். ஒவ்வொரு இதழுக்கும் பிச்சை கேட்பதைப் போல முகப்புத்தகத்தில் குரல் எழுப்புவதாக நண்பர்கள் சொல்கிறார்கள் என்றார்,
உண்மைதான். ஆம் நான் அப்படிதான் ஒவ்வொருவரிடமும் கெஞ்ச வேண்டியிருக்கிறது.

என்ன செய்ய படைப்பாள நண்பர்கள் கருணை காட்டினால்தானே இதழ் ஒழுங்காக வரும்

இவ்வளவிற்கும் 6 வருடங்களாக இதழை நடத்த இந்த படைப்பாள நண்பர்கள் இல்லையெனில் இதழ் குறித்த நேரத்திற்கு வருவது சாத்தியமேயில்லை

கடைசி நொடியில் சில நண்பர்கள் உரிமையெடுத்து அனுப்புவார்கள்

சில நண்பர்கள் அப்போதும் அனுப்பாமல் இதழ் பதிவேற்றம் செய்த அடுத்த நாள் காலையில் சுடச்சுட அனுப்புவார்கள்

அப்புறம் உடனே பதிவேற்றம் செய்யவில்லையே எனக் கோபித்து வேறு இதழுக்கு அனுப்புவார்கள்
அல்லது சிலர் பதிவேற்றம் பெற்ற உடன் அவர்களின் முகப்புத்தக பக்கத்தில் பதிவேற்றுவார்கள் .

அல்லது அவர்களின் வலைப்பக்கத்தில் அதை அப்படியே பதிவேற்றுவார்கள். தவறை சுட்டிக்காட்டினால் என் விருப்பத்திற்கு அப்படிதான் போடுவேன் என படுகோபத்தைக் காட்டுவார்கள்.

இன்னும் சில நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மலைகள் இதழில் வெளியாகி அது பரவலாக கவனிக்கப்படுகிற கதையோ கட்டுரையோ மொழிபெயர்ப்போ எதுவாக இருந்தாலும் அதை அப்படியே கட் காப்பி பேஸ்ட் செய்து அவர்கள் வலைப்பக்கங்களில் போஸ்ட் செய்வார்கள்
இதை குறிப்பாக வெளிநாடுகளில் வாழுகிற சில நண்பர்கள் தான் செய்கிறார்கள். ( வெளிநாட்டிலிருந்து படைப்புகளை பங்களிப்பவர்கள் இதை செய்வதில்லை )

முதிர்ச்சியான படைப்பாளிகள் மேற்சொன்ன காரியங்களை செய்வதில்லை என்பதுதான் ஒரே ஆறுதல். அவர்களுக்கு புரிதல்கள் இருக்கின்றன.

இப்படி நிறைய பிரச்சினைகள் இருந்தாலும் மலைகள் விடாப்பிடியாக வெளிவருகிறது என்பது மட்டுமல்லாமல் அதில் வெளியாகும் படைப்புகளின் தேர்வினாலும் , படைப்பாளிகளின் சிறப்பான பங்களிப்புகளாலும் வாசகர்களிடம் நல்ல கவனிப்பைத் தொடர்ந்து பெற்று வருகின்றன.

கடந்த இதழில் இடம் பெற்ற எழுத்தாளர் லஷ்மி சரவணக்குமாரின் சிறுகதை இதுவரை மலைகள் இதழில் வெளியான சிறுகதைகளிலேயே அதிக கவனம் பெற்று இதழின் உள்ப்பக்க முகப்புத்தக பகிர்வாக 775 பெற்றுள்ளது என்பது மகிழ்ச்சியான தகவல்.

பல மூத்த எழுத்தாளர்கள் மலைகள் இதழைத் தொடர்ந்து வாசித்தாலும் வெளிப்படையாக பேசவோ எழுதவோ செய்யாமல் கள்ள மௌனம் காக்கிறார்கள் என்பது இலக்கியத்தை சுமார் 30 ஆண்டுகளாக கவனித்துக்கொண்டிருக்கிற எனக்குப் புரியாமல் இல்லை.

சில குழுக்களில் நான் இல்லாததால் இந்தக் கவனிப்பு இல்லையென்பதும் எனக்குப் புரியாமல் இல்லை, அப்புறம் எனக்கோ மலைகள் இதழுக்கோ இதுவரை குழுக்கள் இல்லாததும் ஒரு காரணமாக இருக்கலாம்.

குறைந்தபட்சமாக என் நிறத்தவர்கள் யாருமே இலக்கிய பங்களிப்பவர்களாக இல்லாமல் இருப்பதும் இவற்றிற்கு காரணங்களாக இருக்கலாம். இன்னும் வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் நான் பிறந்த ஜாதியில் எந்த சங்கத்திலும் அங்கத்தினராக நான் இல்லாமல் இருப்பதும்கூட ஒரு மிக முக்கியமான காரணமாக இல்லாமல் இருக்கலாம். ( இப்படி எழுதுவதில் எனக்கு கூச்சமாக இருப்பதாக நினைக்கிறேன். இந்த நினைப்புதான் இதுபோல இருக்கிற பலரிடம் என்னை நெருங்கவிடாமல் செய்கிறது.)

இன்னொரு உண்மையும் இருக்கிறது என் சொந்த ஜாதியைச் சேர்ந்த யாருமே இலக்கிய துறையில் இல்லாமல் இருப்பதுதான் ஆகப் பெரிய உண்மை. அப்படி யாராவது இருந்திருந்தால் மலைகள் இதழைக் கொண்டாடியிருப்பார்களோ?

( மேலே சொன்னது அனைத்தும் தற்போது தமிழிலக்கியத்தில் நடைபெறுகிற யதார்த்தம். இந்த யதார்த்தம் எப்போதும் எனக்கு பொருந்தாமலே போகட்டும்.)

இதுதவிர மலைகள் இதழின் தொடக்க காலத்திலிருந்து மொழிபெயர்ப்பு கதைகள் கவிதைகள் சிறப்பாக நண்பர்கள் தோழிகள் படைத்து அனுப்புகிறார்கள். மலைகளின் பலமாக அதை பலரும் குறிப்பிடுகிறார்கள்.

மலைகள் இணைய இதழ் எனக்கு இப்போது ஒரு தனித்த அடையாளத்தைக் கொடுத்திருக்கிறது என்பது நான் இப்போது அடிக்கடி சந்திக்கிற புதுப்புது நண்பர்களிடம் காண்கிறேன்.

மலைகள் சிபிச்செல்வன் என சொன்னால் இலக்கிய நண்பர்கள் அல்லது அவர்களின் நண்பர்கள் உடனே அடையாளம் கண்டுகொள்கிறார்கள் என்பது 100 சதவிகித உண்மையாகி வருகிறது

வழக்கம்போல என் குடும்பத்தாரின் ஒத்துழைப்பின்றி இதழை தொடர்ந்து நடத்துவது சாத்தியமில்லை என சொல்லி வழக்கம்போல தப்பிக்க நினைக்கவில்லை, உண்மையிலேயே கடந்த 5 தேதியன்ற என் மகன் அமுதராஜின் திருமண வரவேற்பிற்கு இலக்கிய நண்பர்கள் பெருமளவில் நேரில் வந்திருந்து வாழ்த்தியமை என்னைவிட என் குடும்பத்தார் அதிகமாக நெகிழ்ந்து போனார்கள். என் சொந்த பந்தங்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகமாக வந்திருந்து வாழ்த்தினார்கள் என் இலக்கிய நண்பர்கள்.

படைப்பாள நண்பர்கள் மொழிபெயர்ப்பாள நண்பர்கள் பதிப்பக நண்பர்கள் பத்திரிகையாளர்கள் ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளை சார்ந்த நண்பர்கள் சமூக ஆர்வலர்கள் கல்விதுறை சார்ந்தவர்கள் இப்படி பல்வேறு துறை சார்ந்த நண்பர்களும் நேரில் வந்திருந்து வாழ்த்தினார்கள்.

சில நண்பர்களுக்கு தவிர்க்கவியலாத காரணங்களால் நேரில் வரமுடியாமல் ( வெளிநாட்டு நண்பர்களும் இதில் அடங்குவார்கள் ) தங்களது வாழ்த்துகளை போனில் இமெயிலில் வாட்சப்பில் முகப்புத்தகத்தில் என பல்வேறு சமூக ஊடகங்களின் வழியாக வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள் .

இவர்கள் அனைவருக்கும் என் சார்பிலும் என் குடும்பத்தாரின் சார்பிலும் நெஞ்சார்ந்த கோடானு கோடி நன்றி

டாக்கிங் டாம் பிம்பத்தோடு பேசிச் சலிப்பவர்கள் ( கவிதைகள் ) / நேசமித்ரன்

நேசமித்ரன்

நேசமித்ரன்

டாக்கிங் டாம் பிம்பத்தோடு பேசிச் சலிப்பவர்கள்

டாக்கிங் டாம் பிம்பத்தோடு
பேசிச் சலித்து அழுகையோடு
உறங்கும் குழந்தைகள் நிரம்பிய நகரம் இது

நிழல் அடர்வு குறைந்து மெல்ல ஒளியாக மாறுவதை பால்கனி
பிரம்பு ஊஞ்சல் வெறித்து
சிப்ஸ் கொறித்தபடி தனிமை
உணர்தல் விலையென்று பெயரிடப்பெற்ற தண்டனை

மனப்பாடமாகி விட்ட வசனங்களோடு ஏசி ரிமோட்டோடு
ஜோடி சேர்ந்து குழப்பும் சலித்தெறிந்த டிவி ரிமோட்
வெல்வதில் உள்ள பரவசம்
தீர்ந்த கணிணி ஆட்டங்கள்
காற்று குறைந்த பலூனைத் தழுவி வெறுமனே நீந்துவதைப் போலாக்குகின்றன பொழுதை

சரணாலயத்தின் விலங்குகள்
அறியாமல்
கண்காணிக்கும் காமிராக்களாய்
ஏதேனும் இரண்டு கண்கள்
எப்படியோ பின் தொடர்ந்து கொண்டே அலைகின்றன

அந்த கண்கள் பார்க்காத போது
பார்க்கப் பழகி இருக்கின்றன
அந்த கரங்கள் எதேச்சை போல்
நடிக்கும்
ஆடைவிலக்கும்
தீண்டல் பழகியவை
தப்பிதங்களை அனிச்சை என்றும் நம்பும் குழந்தைமைதான்
அவர்களது பசி
நஞ்சும் யாருக்கோ எச்சில்தான்
ஆம்
கோழைகளும் நீசர்களும் எதிர்ப்பற்ற எளிய
உடல்களையே தேர்கிறார்கள்

கதறல்களில் கிளறும் மனவியாதி
தொற்றிய அவை
தற்கொலைக்கு நகர்த்தும் குரூரவழிகளைப் பழகியவையாய் இருக்கின்றன
வளர்ச்சியற்ற பசும் உடல்கள்தான் அந்த
பிரேதப் புழுக்களுக்கு இரத்தம் பாய்ச்சுகின்றன

மேகப் பொதிகளில்
வானவில் வரையும் கனவுகள்
கொண்ட மென்னுலகில்
பூதங்களைப் போல் பிரவேசிக்கிறார்கள்
பூதங்கள் சாக்லேட் தருபவையாய் இருக்கின்றன
பூதங்கள் ஒரே ஒரு முறை என்று
கெஞ்சுபவையாய் இருக்கின்றன
பூதங்கள் சிறிய தவறுகளைச் சொல்லி சொல்லி மிரட்டுபவையாய் இருக்கின்றன
அவமானங்களை பணயமாக்கி
மீண்டும் மீண்டும் வதைப்பவையாய் இருக்கின்றன
பூதங்கள் இண்டர்னல் மார்க் போடுகிற பேனாவாய் இருந்து தொலைக்கின்றன
விரல்முனையில் வெற்றுடல்
காட்சிப்படுத்தும் விஞ்ஞானம்
பிறழ்ந்த பிசாசை வெறியூட்டி
நச்சுக்குப்பியாக்குகிறது

செவிகேளா குரலற்றவர்களின்
தேசிய கீதமாய்
செய்கைகளை புரிந்து கொள்வதற்குள்
சகலமும் முடிந்து
சருகுகளாக்கப் படுகின்றன தளிர்கள்

அப்போது உடல் நடுங்க
அச்சிறுமிகள் பிரார்த்தித்தபோது
அவர்களோ செவிடாய் இருந்தார்கள்
சப்தமிடாதே என்று அடித்தபோது
யாரேனும் தேவதை காப்பாற்ற வரக் கூடும் என்று நம்பிக் கொண்டிருந்தபோது அம்மிருகங்கள் மும்முரமாய் இருந்தன
யாரிடமும் சொன்னால்
என்று விழியுருட்டப்பட்டபோது
வாய் பொத்திய
விசும்பல்களிடையே காரணமே
தெரியாமல் வதையுற்ற போது
அவள் கடைசியாய் அழைத்தது
நம்மில் யாரோ ஒருவரின் பெயரைத்தான்

கைவிட்ட நம் பொன்னுலகோ
புனிதத்திற்கும் வலிக்கும்
உள்ள தூரத்தை மரணங்களால்
அளந்து கொண்டிருக்கிறது

***

தப்புக்கதிர்கள்

தளர்குழல் உதற தலைசாய்க்கும் தருணங்களில்
விழுதிறக்கிய கரையோர மரம் ஆற்றுடன் பேசும் இரவுநேர
ரகசியங்கள் நினைவூறுகின்றன

அப்பிரியத்தின் ஆரம்
கடல்வாழிகளின் கூடு
ஆமைகள் ஆழிவழியே
பூமி சுற்றும் பாதை அதன்
அலைவுதூரம்

பேரிச்சை விதைகள் திறக்க மறுக்கும் உதடுகளாய் இறுக்கம்
பேசுகையில்
உலர்ந்தாலும் உள்ளே குழைந்திருக்கும் கள்ளிப்பழம்
அவ்வுதடுகளின் முத்தம்

பயணங்களில் தொடைசாய்ந்து
கண்ணயர்கையில்
கன்னத்துக்கு தொடைக்கும்
இடையே உள்ளங்கை ஏந்தி
தாங்கும் கூச்சமும் ப்ரியமும் இழைந்த வேர்வை
வைக்கோல் சூட்டில் கனிந்து
பழுக்கும் வாசனை உடையது

பூமியில் எப்போதும் கொஞ்சம் பகல்
எஞ்சியிருக்கும் தேசத்தில்
அதன் சுள்ளிகள் கூடாக
சேமிக்கப்பட்டிருக்கிறது

அறுவடை முடிந்த நிலத்தின் ‘தப்புக்கதிர்கள்’ சேகரிக்க வருபவர்களாய்
புணராமல் தழுவிப் பிரிந்ததில் நெரிந்து உதிர்ந்த
மயிர்களை ஆடைமாற்றுகையில்
உதிராமல் பதைத்துப் புறப்படுத்தும்
மென்வெட்கத்தை உனக்கு
சொல்ல முடிந்ததில்லை

பாலூட்டியபடி தானும் உறங்கிவிட்ட தாயின்
கலைந்த ஆடையை சரி செய்து விழித்ததும் அவள் கொள்ளும் சிறுபதைப்பை ஒத்தி வைத்து உறங்க முயலும்
தகப்பனாய்
இந்த காமத்தை துயிலாழ்த்தி ரசிக்கிறது காதல்