Category: இதழ் 33

அஞ்சலி – ஸீமஸ் ஹீன்னி, ஐரிஷ் கவி – கவிஞர் சமயவேல்

1234814_516988471721726_588649875_n

 
டப்ளின் பல்கலைக்கழக சட்டக் கல்லூரி (2009)

ஸீமஸ் ஹீன்னி, ஐரிஷ் கவிதையின் ஆத்மா, தனது 74வது வயதில் கடந்த வெள்ளிக்கிழமை, டப்ளின் நகரில் இறந்தார்.

பிறப்பு: 13 ஏப்ரல், 1939;
மரணம்: 30 ஆகஸ்டு, 2013;

கவிஞர் ராபர்ட் லோவலால், W.B.ஈட்ஸ்க்குப் பிறகு ஐரீஷ் குடியரசின் மிகச் சிறந்த கவிஞராகக் கருதப்பட்ட, நோபல் கவிஞர் ஸீமஸ் ஹீன்னி, தனது 74வது வயதில், டப்ளின் நகர் மருத்துவமனை ஒன்றில் வெள்ளிக்கிழமை காலமானார். இறுதிச் சடங்குகள் இன்று (02.09.2013) நடந்தன. அவருக்கான இறுதி ஆராதனை டான்னி ப்ரூக்கில் உள்ள புனித இதய தேவாலயத்தில் முடிந்த பிறகு கோ டெர்ரியின் பெல்லஹி கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டார்.

இலக்கியம், அரசியல் மற்றும் அனைத்துக் கலைப்பிரிவிலிருந்தும் நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டனர். அவரது ஊர்ப்பகுதியான டெர்ரியிலிருந்து அருட்தந்தை டெவ்லின் இறுதி ஆராதனையை நடத்தி முடித்துவிட்டுக் கூறினார்: ஹீனியால் ஸ்வீடன் மன்னருடன் பேச முடியும், ஆக்ஸ்போர்டுக்காரராகவும் இருக்க முடியும் அதே சமயத்தில் வெகு சாதாரணமாக மனிதத்தைப் பகிர்ந்து கொள்கிற தென்பகுதியின் டெர்ரிக்காரராகவும் இருக்க முடியும். எங்கள் நடுவிலிருந்து ஸீமஸ் மறைந்தது எவ்வளவு பெரிய இழப்பு என்பதை நாங்கள் நன்கு அறிவோம்.

ஆராதனையின் இறுதியில் ஹீன்னியின் இரண்டாவது தொகுப்பிலிருந்து ‘கொடுக்கபட்ட குறிப்பு’ என்னும் கவிதை வாசிக்கப்பட்டது.

அவரது மகன் மைக்கேல் ஹீன்னி பேசும்பொழுது, ‘ வெள்ளிக்கிழமை அப்பாவின் கடைசிச் சொற்கள் அவர்க்குப் பிடித்த லத்தீனில் அம்மாவுக்கு அனுப்பிய குறுஞ்செய்தி: “பயப்பட வேண்டாம்”

சேண்டிமவுன்ட் குடும்பத் தோட்டத்திலிருந்து ஏராளமான பூக்களும் ஹீன்னியின் கவிதைத் தொகுப்புகளும் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டவர்களுக்கு வழங்கப்பட்டது.

முக்கியமாக ஐரீஷ் நாட்டுக் குடியரசுத்தலைவர், பிரதமர், சமூகப் பாதுகாப்பு அமைச்சர் அட்டர்னி ஜெனரல், முன்னால் குடியரசுத்தலைவர், பாடகர்கள், நடிகர்கள், நடிகைகள் என்று ஒரு கவிஞனின் இறுதிச் சடங்கில் ஒரு நாடே கலந்து கொள்கிறது.
டெர்ரி, பெல்பாஸ்ட், மற்றும் டப்ளின் நகர்களில் இரங்கல் புத்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன.

1939ல் கோ டெர்ரியில் பாட்ரிக் ஹீன்னிக்-மார்கரட் தமபதியரின் ஒன்பதாவது குழந்தையாகப் பிறந்த இவர் மோஸ்பான் பண்ணையில் வளர்க்கப்பட்டார். 1954ல் குடும்பம் பெல்லஹிக்கு வெளியே உள்ள ‘தி வுட்’ பண்ணைக்கு நகர்ந்தது. அருகிலுள்ள பள்ளியிலும், டெர்ரி கொலம்ப் கல்லூரியிலும் பின் பெல்பாஸ்ட் ராணி பல்கலைக் கழகத்திலும் படித்தார். அவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது அவரது சகோதரர் ஒருவர் நான்கு வயதில் ஒரு சாலை விபத்தில் இறந்துவிடுகிறார். க்ளான்மோரின் கரும்பறவை, பருவ-மத்திய விடுமுறை முதலிய கவிதைகள் இந்த இறப்பைப் பேசுபவை.

பட்டம் பெற்ற பிறகு பெல்பாஸ்ட் பள்ளி ஆசிரியராகவும், பின் புனித ஜோசப் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியிலும், 1966ல் ராணி பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகவும் பனியாற்றுகிறார். பிறகு டப்ளினுக்கும், ஹார்வர்டுக்கும் செல்கிறார். ஆன்ஸ்போர்டில் கவிதைத் துறைப் பேராசிரியராகவும் ஆகிவிடுகிறார்.

 

இவரது இளமைக் காலத்தில் ராபர்ட் ப்ராஸ்ட் மற்றும் டெட் ஹியூக்ஸ் கவிதைகளால் தாக்கம் பெற்று கவிதைகள் எழுதத் தொடங்கினார். முதல் இரண்டு தொகுப்புகளிலும் கோ டெர்ரியிலுள்ள அவரது குடும்பப் பண்ணையின் குழந்தைப்பருவப் படிமங்களைப் பெரிதும் பார்க்கலாம். அந்த சமயத்தில் ஹாப்கின்ஸ், வோர்ட்ஸ்வொர்த், தாமஸ் ஹார்டி மற்றும் தாந்தே கூட அவரைப் பாதித்த கவிஞர்களாகக் கூறலாம்……..

 

இவர் 13க்கும் மேற்பட்ட கவிதைத் தொகுப்புகள், இரண்டு நாடகங்கள், பல முக்கியமான மொழிபெயர்ப்புகள், விமர்சனப் புத்தகங்கள் என ஏராளமாக எழுதிக் குவித்திருக்கிறார்.
1970ல் ஹீன்னி

கவிதைத் தொகுப்புகள்
1966: இயற்கையாளரின் மரணம்
1969:இருளில் இருக்கும் கதவு
1972: வெளியே குளிர்தல்
1975: நிலையங்கள்
1975: வடக்கு
1979: களப்பனி
1984: நிலையத் தீவு
1987: ஹா விளக்கு
1991: பொருட்களைப் பார்த்தல்
1996: ஆத்ம நிலை
2001: மின் விளக்கு
2006: மாவட்டமும் வட்டமும்
2010: மனிதச் சங்கிலி
கவிதை திரட்டுகள்
1980: தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் 1965-1975, Faber & Faber
1990: புதிய தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் 1966-1987, Faber & Faber
1998: திறந்த மைதானம் 1966-1996, Faber & Faber
நாடகங்கள்Plays[edit source | editbeta]
1990: ட்ராயில் ஒரு சிகிச்சை (சோபக்கிள்ஸின் நாடகத்தைத் தழுவியது.
2004: தேபஸைப் புதத்தல் (சோபக்கிள்ஸின் ஆன்டிகனி)
இது போக நான்கு முக்கிய உரைநடை நூல்கள் மற்றும் ஏராளமான மொழிபெயர்ப்புகள்.
அவர் பெற்ற முக்கிய விருதுகள்:
இ.எம். பாஸ்டர் விருது, 1975
நோபல் விருது, 1995
டி.எஸ்.எலியட் விருது, 2006
கிரிஃபின் அறக்கட்டளையின் வாழ்நாள் கவிதைச் சாதனையாளர் விருது, 2012.

நன்றி: ஐரீஷ் டைம்ஸ், கார்டியன், நியூ யார்க் டைம்ஸ் மற்றும் விக்கிப்பீடியா.

விரிவான கட்டுரையும் சில முக்கியமான கவிதைகளும் அடுத்த இதழில்

எஸ்.ராமகிருஷ்ணன் ஒரு சந்திப்பு – மலைகள் மூன்றாம் நிகழ்வு – சிவபிரசாத்

 download (4)

 

 

வெள்ளிக் கிழமை(23.08.2013) காலையில் கவிஞர் சிபியிடமிருந்து வந்த தொலைப்பேசி அழைப்பில் இன்று மாலை 6 மணிக்கு “மலைகள்” ஏற்பாடு செய்யும் மூன்றாம் நிகழ்வு “எஸ்.ராமகிருஷ்ணனுடன் ஒரு வாசக சந்திப்பு”. நீங்களும் கலந்துக் கொள்ளுங்கள் என்றார்.அந்த கணத்திலிருந்து அந்த நாள் மிகவும் சந்தோசமான நாளாய் மாறாத் தொடங்கியது.

 

எழுத்தாளர் எஸ்.ராவை ஏற்கனவே சேலம் தமிழ்ச் சங்கத்தில் ஒரு முறைச் சந்தித்து இருக்கிறேன். தமிழ் சங்கத்திற்க்கு முன் இருந்த டீக்கடையில் நின்ற படியே இரண்டு மணி நேரத்திற்க்கு மேல் பேசி இருக்கிறேன் என்றாலும், அப்போது அவரின் படைப்புகளைக் குறைவாகவே வாசித்திருந்ததால், அவர் அப்போது விகடனில் எழுதி வந்த துணையெழுத்துக் கட்டுரைப் பற்றியும்,பாபா கதை வசனம் பற்றியும், நடிகர் ரஜினிகாந்திடம் அவருக்கிருந்த நட்பு பற்றியும் ஏதேதோ அபத்தமாக கேட்டுக் கொண்டிருந்தேன்.அவர் சற்றும் சளிப்படையாமல் ஒரு புது வாசகனின் எல்லாக் கேள்விகளுக்கும் பதிலளித்துக் கொண்டிருந்தார். அந்த சந்திப்பு எஸ்.ராவின் மேல் ஒரு விருப்பத்தை உண்டாக்கியது. அவரின் படைப்புக்களை வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டியது. அப்போது எனக்கு வேண்டிய புத்தகங்களை எழுத்தாளர் பெருமாள் முருகன் சாரிடம் தான் வாங்கி வாசிப்பேன். அவரிடம் எஸ்.ராவை வாசிக்க விரும்பும் என் ஆர்வத்தை சொன்னதும் “தாவரங்களின் உரையாடல்” என்னும் சிறுகதைத் தொகுப்பைக் கொடுத்தார்.அந்த சிறுகதைத் தொகுப்பு என்னை எஸ்.ராவின் எழுத்துக்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் பின் இன்று வரை எஸ்.ராவின் எழுத்துக்களைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். அவர் எழுதிய அனைத்து சிறுகதைகளையும், கட்டுரைகளையும் இதழ்களில் வந்த சமயத்திலும், தொகுப்பாக வந்த சமயத்திலும்,அவரின் வலைதளத்திலும் என்று எனக்கு பிடித்த கதைகளை ஐந்தாறு முறை கூட வாசித்து நண்பர்களுடன் விவாதித்திருக்கிறேன். அவர் பரிந்துரைக்கும் நூல்கள், உலக சினிமாக்கள் என்று என்னுடைய ரசனைகளை மாற்றியதில் அவருக்குத் தான் பெறும் பங்கிருகிறது. அவர் பரிந்துரை செய்த “எண்ணும் மனிதன்” என்னும் புத்தகத்தை இது வரை நான்கு முறை வாசித்து விட்டேன். நண்பர்களுக்கு பரிசளிக்கும் நூலாக அது மாறி விட்டது.

download (3)

 

ரஷ்ய இலக்கியத்தின் மேல் எனக்கான விருப்பத்தை தூண்டியவர் அவர் தான். அவர் எழுத்தில் வாசித்து வாசித்தே எனக்கு தஸ்தாயொஸ்கியும், ஆண்டன் செகாவும் தமிழ் எழுத்தாளர்களைப் போல ஆகி விட்டார்கள். “குற்றமும் தண்டனையும்” வாசித்து முடித்தற்க்கும் “கரமசோவ் சகோதரர்களை” வாசித்துக் கொண்டிருப்பதற்க்கும் எஸ்.ராவின் கட்டுரைகளே காரணம்.

 

எனக்கு உலக இலக்கியத்தின் சரளத்தை அவரின் “விளித்திருப்பவனின் இரவுகள், செக்காவின் மீது பனி பொய்கிறது, எனதருமை டால்ஸ்டாய் என்ற கட்டுரைகளின் தொகுப்பே அறிமுகப்படுத்தியது.

 

அவரின் சிறுகதைகள்,கட்டுரைகள்,மேடைப் பேச்சுக்கள்,நேர்காணல்கள் முதலியவற்றில் இருக்கும் ஈடுபாடு ஏனோ அவரின் நாவல்கள் மேல் வரவேயில்லை. அவரின் “உப பாண்டவம்” என்னும் நாவலை நான்கு ஆண்டிற்க்கு முன் வாசித்தேன். அது ஏனோ என்னை கவரவில்லை அல்லது அதை புரிந்துக் கொள்ளும் பக்குவம் எனக்கு கிட்டவில்லை. அதிலிருந்து தென்னாலி ராமனின் பூனை மனநிலையில் தான் இருக்கிறேன். நெடும்குறுதி, உறுபசி, யாமம், துயில் என்று தன் நாவல் உலகை விரிவாக்கிக் கொண்டே போனாலும் அதை பின் தொடரும் மனநிலை மட்டும் வாய்க்கவே மறுக்கிறது. அந்த மனநிலையை மாற்றும் மருந்துக்காகத் தான் இந்த வாசகர் சந்திப்பிற்க்கு போனேன். எஸ்.ராவின் நேர்பேச்சுகள் வாயிலாக அவரின் நாவலுக்குள் நுழையும் வழிகளைக் கண்டு கொள்ளலாம் என்று எண்ணினேன்.

download (5)

 

நான் சென்ற போது கவிஞர் ஷாஅ, கவிஞர்.வே.பாபு, கவிஞர்.சிபி செல்வம்,சதீஷ்,மற்றொரு நண்பர் என்று ஒரு சிறிய குழு எஸ்.ராவிடம் பேசிக் கொண்டிருந்தது. பேச்சு சங்க இலக்கியத்தில் இருக்கும் இமய மலைப் பற்றிய துள்ளியமான பதிவைப் பற்றியும், பாண்டிய மன்னர்களின் மீன் கொடி, பூர்வீகம் என்று ஆராய்ந்து ஹரப்பா, மொகஞ்சதாரோ நாகரீகத்தோடு இணைத்து ஒரு புதிய வரலாற்றுப் பார்வையைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்.

 

பின் பேச்சு ஜப்பானிய எழுத்தாளர் ஹாருகி முரகாமி கதைகளைப் புரிந்து கொள்வதற்க்கான வழியாக ஜப்பானிய கலாச்சரத்தைப் பற்றியும், திருமணம் செய்வதில் அவர்கள் கடைபிடிக்கும் மரபுகள், அதற்க்கு வேண்டிய பொருளாதரமின்மையால் ஏற்படும் “get together” வாழ்க்கை. அதில் வரும் சலிப்பு,விவாகரத்து என்று பேச்சு நீண்டது. முகாரமி கதைகளில் வரும் காபி ஷாப், பூனைகள் முதலியவைகளுக்கான காரணங்களைச் சொன்ன போது முராமின் கதைகளை எஸ்.ரா எவ்வளவு ஆழமாய் வாசித்து உள்வாங்கியுள்ளார் என்பதை உணர முடிந்தது.

 

 

“சார் உங்கள் “கண்ணகியோடு நடந்தேன்” என்ற பயணக் கட்டுரையின் மூலம் சிலப்பதிகாரம் உண்மையாக நடந்த கதை என்று அறிய முடிகிறது. அதே போல் ஐம்பெரும் காப்பியத்திலும், ஐச்சிறு காப்பியத்திலும் எதெல்லாம் உண்மையில் நடந்த கதைகள்” என்ற கேள்வியைக் கேட்டேன்.

 

அந்த கணத்திலிருந்து ஒரு மணி நேரம் எனக்கும் எஸ்.ராவிற்க்குமான உரையாடலாகவே மாறியது. அவருடைய சிறுகதைகளைப் பற்றி என்னுடைய பார்வைகளைச் சொல்ல நினைத்து, அவரின் சமீபத்திய கதைகளின் மீது எனக்கு இருக்கும் விமர்சனங்களைச் சொன்னேன். அதை மறுத்த அவர். அந்த கதை எப்படி பார்க்க வேண்டும் என்று தெளிவாக விளக்கினார். பின் அவர் நாவலில் குழந்தைகளின் உலகம் பற்றி சதீஷ் கேட்டார். அதற்க்கு பொறுமையாக பதிலளித்தார். அவர் இப்போது என்ன நாவல் எழுதிக் கொண்டிருக்கிறார் என்றுக் கேட்ட போது காது கேளாதவர்கள் பற்றி “நிசப்தம்” என்று ஒரு நாவல் எழுதிக் கொண்டிருப்பதாகவும் அது வரும் சென்னை புத்தகத் திருவிழாவில் வெளி வரும் என்றார்.

 

இதற்க்குள் இரவு ஒன்பது மணிக்கு மேல் ஆனதால் எல்லோரும் அவரிடம் விடைப் பெற்றுச் சென்றோம். சந்திப்பின் போது சிபி அவர்களின் மனைவி கொடுத்த காபியும் சிற்றுண்டியும் சுவையாக இருந்தது. சந்திப்பின் போது புதியவர்களுக்காக வாய்ப்பு கொடுத்து, தேவையான இடங்களில் மட்டும் தன் கருத்துக்களைப் பதிவு செய்த சிபி,ஷாஅ,வே.பாபு போன்றவர்களின் செயல் நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயமாய் தோன்றியது. மலைகள் நடத்தும் நிகழ்வுகள் சேலத்தின் மேல் புதிய கவன ஈர்ப்பைத் தருகிறது என்றே நினைக்கிறேன். அந்த வகையில் சிபி செல்வம் சாருக்கு என் நன்றிகள்.

download (14)

 

 

 

 

அடையாளம் ஜாய்ஸ் கரோல் ஓட்ஸ் (தமிழில் நர்மதா குப்புசாமி)

download (9)

 

 

 

 

 

 

 

 

 

 

 

‘நாங்கள் லிஸெட் முல்வியைப் பார்க்கவேண்டும்.ஒருவரை அடையாளம் காட்டுவதற்காக.’அவர்கள் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

இது எதிர்பாராதது.

இரண்டாவது பாடவேளையில்,காலை காலை 9.40 க்கு,ஏதோ ஒரு சபிக்கப்பட்ட திங்கள் கிழமை,சபிக்கப்பட்;ட குளிர்மாதம்;;;;;;;.அது புது வருடமாக இருந்தும்கூட, திரைப்படத்தின் காட்சியமைப்பில் வரும் வானவெளி போல் குழம்பி போன அவளுக்கு மாதம் கூட நினைவில் இல்லை.

அன்று காலைதான் ஒரு ஜோக் சொன்னதற்காக சில சீனியர் மாணவர்கள் அவளுக்கு அளவுக்கு அதிகமாக பியர் வாங்கிக் கொடுத்திருந்தனர்.அந்தப் பையன்கள் அவளைப் பார்த்து சிhpத்ததை விட லிஸெட் தனக்குத் தானே சிhpத்துக்கொண்டதுதான் வேடிக்கை.அவர்கள் அவளைக் கிண்டல் பண்ணவில்லை(லிஸெட் அப்படி நினைத்தது இல்லை).ஆனால் அவர்களுக்கு அவளைப் பிடித்திருக்கறது. ‘லிஸ்-ஸெட்,லிஸ்-ஸெட்’அதுதான் அவர்களுக்கு அவளுடைய பெயர்.உச்ச ஸ்தாயியில் வௌவால் போல் கிறீச்சிட்டுக்கொண்டு,தொட முடியாத அளவுக்கு கொதிப்பவள் போல் அவளுடைய கைகளின் மேலும்,பின்புறத்தின் மேலும் விரல்களால் அளைவார்கள்.

பள்ளிக்குப் போகும் வழியில் அவளை கூட்டி வந்திருந்தார்கள். மேல்நிலைப் பள்ளியும் நடுநிலைப் பள்ளியும் அருகருகே இருந்தன.அநேக நேரம் அவள் தன்னுடைய சிநேகிதிகளான கெய்‘hவுடனோ,தான்யாவுடனோ இருப்பாள்.அவர்கள் வயதுக்கு மீறிய முதிர்ச்சியுடன் இருந்தனர் – குறிப்பாக கெய்‘h – மற்ற நடுநிலைப்பள்ளிப் பெண்களைப்போல கூச்ச சுபாவி அல்ல.பையன்களிடம் எப்படி பேச வேண்டும் என்று அவர்களுக்குத் தொpயும், அவர்களிடம் எப்படி பேச வேண்டும் என்று பையன்களுக்கும் தொpயும்.ஆனால் அவை பெரும்பாலும் வெறும் பேச்சுதான்.

இப்போது கணக்கு வகுப்பா? – லிஸெட்டுக்குப் பிடிக்காத வகுப்பு.அது அவளை முட்டாளைப் போல் உணர வைக்கும். அதற்கு காரணம் அவள் முட்டாள் என்று அல்ல,சில சமயம் அவளது எண்ணங்கள் அவளது கூந்தலைப்போல் சிக்கலானதாக இருப்பதால்தான்.மேலும் அவளது ஆழ்ந்த இளஞ்சிவப்புக் கண்ணாடிக்கு பின்னிருந்த கண்களிலிருந்து நீர் கசிவதால் டீச்சர் பலகையில் என்ன கருமத்தைக் கிறுக்குகிறாள் என்று பார்க்க முடிவதில்லை.அது என்ன வடிவம் என்று கூட தொpவதில்லை.இடையில் மிஸ் நோவிகி நம்பிக்கை மிகுந்த தனது குரலில் ‘இந்த இடத்தில் யார் எனக்கு உதவப் போகிறீர்கள்? யார் அடுத்த வழியைக் கண்டுபிடிக்கப் போகிறீர்கள்?’என்று கேட்பாள்.பெரும்பான்மையான குழந்தைகள் கூப்பிட்டு விடக்கூடாதே என்று வெறித்துக்கொண்டும்,இளித்துக்கெண்டும் கம்மென்று உட்கார்ந்திருப்பார்கள்.ஆனால் லிஸெட் கணக்கு வகுப்பில் அhpதாக எழுப்பபடுவதுண்டு. –சில நேரங்களில் அவள் கடுமையாக சிந்திப்பவளைப் போல் கண்களை மூடி பாவனை செய்வாள்.அவள் கண்களைத் திறப்பதற்குள் வகுப்பிலிருக்கும் மூன்று,நான்கு புத்திசாலியான குழந்தைகளில் ஏதாவது ஒன்று நோவிகியிடமிருந்து சாக்பீஸை வாங்கிக்கொண்டு பலகையினருகே சென்றிருப்பார்கள்.அவள் பலகையை பார்த்து புhpந்து கொள்ள முயற்சிப்பாள்.ஆனால் அங்கே சாக் பலகையில்-அது கரும்பலகையல்ல,பச்சை – மோதும் அந்த ஒலியும் அவள் புhpந்துகொள்ள நினைக்கும் எண்களும் ஏனோ அவள் தலையைச் சுற்றவைக்கும்.

அவளுடைய அம்மா யிவெட்டிக்கு எண்களுடன் எந்தப் பிரச்சனையுமில்லை.அவள் காசினோ ராயலில் பிளாக்ஜாக் தரகர;.பிளாக்ஜாக் தரகராக இருக்க வேண்டுமென்றால் நீங்கள் புத்திசாலியாகவும்,துhpதமாக யோசிப்பவராகவும்,என்ன செய்யவேண்டும் அறிந்தவராகவும்; இருக்கவேண்டும்.

சீட்டுகளை எண்ணுதல். அது தடை செய்யப்பட்டது.யாராவது சீட்டுகளை எண்ணுவதை நீங்கள் கண்டுபிடித்து விட்டால்; உதவி கோhp சமிஞை செய்ய வேண்டும். யிவெட்டிக்கு என்றாவது ஒருநாள் தனது பெயரையும்,தலைமுடியின் நிறத்தையும் இன்னும் அவளால் எதையெல்லாம் மாற்றிக்கொள்ள முடியுமோ அதையெல்லாம் மாற்றி வேகாஸூக்கோ அல்லது அதைவிட மட்டமான ரெனோவுக்கோ போய், கற்றுக்குட்டித்தனமாக இல்லாமல் யாராலும் கண்டுபிடிக்க முடியாத பிளாக்ஜாக்கியாக வேண்டும் என்று ஆசை என்பாள்.
ஆனால் அவள் ‘அப்போது, ‘என்னையும் அழைத்துச் செல்வாய் இல்லையாம்மா?’’ என்று கேட்டால் மட்டும் அவள் ஏதோ முட்டாள்தனமாக பேசிவிட்டதைப் போல்,முகத்தை கடுகடுப்பாக வைத்துக்கொண்டு ‘ஸ்வீட்டி நான் சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன்.உனக்கு இந்த கேசினோ ஆட்களையெல்லாம் சமாளிக்கத் தொpயாது’ என்பாள்.

இந்த முறை அவள் வேகாஸூக்கோ,ரெனோவுக்கோ போகவில்லை.அது நிச்சயம் லிஸெட்டுக்குத் தொpயும்.அவள் அதிகம் உடைகள் எடுத்துச் செல்லவில்லை.
ஏழாவது கிரேட் படிக்கும்போது லிஸெட்டுக்கு கணக்கு தொல்லையாக இருந்ததில்லை.எந்தப் பாடமும் அவளுக்கு பிரச்சனையாக இருந்ததில்லை.அவள் எப்போதுமே ‘டீ’கிரேட்தான் வாங்குவாள்.அவளுடைய மதிப்பெண் அறிக்கையை அம்மா குளிர்பதனப்பெட்டியின் மீது வாழ்த்து அட்டையைப் போல் ஒட்டி விடுவாள். அதெல்லாம் எப்போதோ நடந்தது போல் இருக்கிறது.

அசையாமல் உட்கார்ந்திருப்பது அவளுக்கு க‘;டமாக இருந்தது. அவளது ஆடைக்குள்ளும்,கை கவட்டிலும்,கால்களுக்கு இடையிலும் எறும்பு ஊறுகிற மாதிhp எhpச்சலும்,அhpப்பும் வந்து கிச்சுகிச்சு மூட்டியது. தவிர அவளது நகங்கள் மிகவும் கூர்மையாக இருந்ததால் அவள் நினைத்தபடி சொறிந்து கொள்ள முடியவில்லை. வெறுமனே அhpத்த இடத்தை தொடுவதால் எந்த பிரயோஜனமும் இல்லை.அது நிலைமையை இன்னும் மோசமாகத்தான் ஆக்கும்.
குறுத்தெலும்பும், எலும்பும் சீர் செய்யப்பட்டிருக்கும் மூக்கின் நுனியில் ஒரு மரத்துப்போன தன்மை இருந்தது.மேலும் அவளது இடது கண்ணில் நீர் கசிந்தபடி இருந்தது. ‘லிஸெட் அழறா!லிஸெட் அழறா!ஏன் அழற லிஸ்-ஸெட்?’
அவர்கள் அவளை நேசித்தனர்-அந்த சீனியர் மானவர்கள்.அதனால்தான் அவளைச் சீண்டினர்.ஒரு அழகான செல்லப்பிராணி போல் -ஒரு மஸ்கட் போல்!
முதல் முறை அவள் து.ஊ (துiஅஅல ஊhயபெ – ஆறாவது கிரேடில் அவளுடைய வகுப்புக்கு மாற்றலாகி வந்தவன்) யை பார்த்த போது கெய்‘hவை முழங்கையால் முட்டி ஓ……………. என்றாள்.ஆவுஏ யில் விரக வேதனையை வெளிப்படுத்தும் முனகல் போல். அதற்கு என்ன பொருள் என்றெல்லாம் அவளுக்குத் தொpயாது.அவள் அம்மாவுக்குத்தான் ஸாஃப்ட் ராக்,ரெட்ரோ ராக்,நாட்டுப்புற இசை,மேற்கத்திய இசை,டிஸ்கோ எல்லாம் விருப்பமானவை.அம்மா குளிக்கும்போது ஒருமாதிhp பாடுவதையும்,முனகுவதையும் அவள் கேட்டிருக்கிறாள்.அது சந்தோ‘மா,கோபமா என்று அவளால் இனங்கான முடிந்ததில்லை.

ஓ! கணக்கு வகுப்பை அவள் வெறுத்தாள்.அந்த இடத்தையே வெறுத்தாள்.ஜன்னலுக்கருகே இருந்த டெஸ்கில் அவளுடைய வாpசையில்,வகுப்பில் முன் பகுதியில் அமர்ந்திருப்பது அவள் அந்த வகுப்பின் அங்கத்தினளே அல்ல என்பது போலவும், ஓரத்தில் அமர்ந்;து கொண்டு அந்தப் பிரகாசமான அறையை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருப்பது போலவும் அவளுக்குத் தோன்றியது. ‘நீ கவனிக்க வேண்டும் என்றுதான் இப்படி மிக அருகில் உட்கார வைத்திருக்கிறது’என்றாள் நோவிகி.எனவே லிஸெட் கவனத்தை சிதறவிடவோ,பகல் கனவு காணவோ கூடாது.ஆனால் இது எதிர் விளைவைத்தான் உண்டுபண்ணியது. பலநாட்கள் தான் அங்கு இருப்பதாகவே லிஸெட் உணர்ந்;ததில்லை.

கண்களை தேய்த்துக் கொண்டாள். எறும்புகள் கடித்துக்கொண்டிருந்ததைப் போல் அhpத்த புட்டங்களை அசைத்தாள்.டீச்சர் தனது பருத்த பின்பாகத்தைத் திருப்புவதற்காக நாசமாய போன பதினைந்து விநாடிகள் காத்திருந்தாள். அப்போதுதான் அவள் மடித்து வைத்திருந்த கடிதத்தை இடுக்கு வழியாக கெய்‘hவிடம் கொடுத்து,அடுத்த வாpசையிலிருக்கும் து.ஊ யிடம் கொடுக்க முடியும். இந்தக கடிதம் காகிதமல்ல,அது க்ளீனெக்ஸ்.அதன் மீது ஒரு லிப்ஸ்டிக் முத்தம் – இனிய திராட்சை நிற லிப்ஸ்டிக் முத்தம் – து.ஊ க்காக, லிஸெட்டிடமிருந்து.
க்ளீனெக்ஸ் மீது உதடுகளை அழுத்தும்போது அவள் கனவில் மிதந்தாள். -புத்தம் புதிய,ஆழ்ந்த இளஞ்சிவப்பு லிப்ஸ்டிக் -அவளுடைய அம்மாவுக்கு அதைப்பற்றி எதுவும் தொpயாது.ஏனெனில் அவளுடைய தோழிகளைப் போல் வீட்டை விட்டு வெளிவந்த பின்பு லிஸெட் அதைப் பு+சிக்கொள்வள் -விநாடிக்குள் எப்படி அவர்கள் அனைவரும் வித்தியாசமாக,எவ்வளவு முதிர்ச்சியாகவும்,கவர்ச்சியாகவும் காட்சியளிப்பார்கள் என்பது வியப்புக்குhpயது.

ஓரக்கண்ணால் அவள் து.ஊ யை கவனித்துக் கொண்டிருந்தாள் – து.ஊ அவனது நீண்ட கால்களை பென்ச் இடைவெளியில் நீட்டுகிறான்,பட்டுப் போன்ற காpய கேசம் அவனுடைய நெற்றின் குறுக்கே விழுகிறது.து.ஊ யை நீங்கள் சாதாரணமாக நினைத்து விடமுடியாது.து.ஊ யும் சாp அவனது ‘கூட்டத்தினரையும்’ பற்றி அவள் கேள்விப்பட்டிருக்கிறாள்,எச்சாpக்கப் பட்டுமிருக்கிறாள்.இவர்கள் ஓhpரு வயது மூத்தவர்கள்.அவர்க்ள் வகுப்பில் பின்தங்கியவர்களோ அல்லது தாமதமாக சேர்ந்தவர்களோ. ஆனால் லிஸெட்டின் மண்டைக்குள்ளிருந்த பியர் மயக்கம் அவளை அலட்சியமாகவும்,பொறுப்பில்லாமலும் ஆக்கியிருந்தது.
அவனுடைய அப்பா டிரம்ப் தாஜ்மஹலில் வேலை செய்தவர்.அவர் அங்கே சீனாவில் உள்ள ஏதோ பே-ஜிங் என்ற இடத்திலிருந்து வந்திருந்தார்.ஏதோ ஒரு அரசு உயர் அதிகாhpக்கு அவர் ஓட்டுனராகவோ அல்லது மெய் காப்பாளராகவோ பணியாற்றியுள்ளார்.தன்னுடைய அப்பா துப்பாக்கியை ஏந்தியிருப்பார் என்று து.ஊ பெருமையடித்துக் கொள்வான்.ஒரு முறை து.ஊஅதைக் கையில் வைத்திருந்தானாம், கடவுளே! அவன் அதை உபயோகித்தும் இருக்கிறானாம்.

ஒரு பெண் து.ஊ யிடம் அவன் யாரையாவது எப்போதாவது துப்பாக்கியால் சுட்டு இருக்கிறானா என்று கேட்டதற்கு அவன் தோளைக் குலுக்கிவிட்டு சிhpத்திருக்கிறான்.

லிஸெட்டின் அம்மா நியு+ஜெர்ஸியின் எடிசனிலிருந்து குடிபெயர்ந்து அட்லாண்டிக் நகரத்திற்கு வந்த போது லிஸெட்டுக்கு ஒன்பது வயது.அவள் அம்மா கணவனிடமிருந்து பிhpந்திருந்தாள்.ஆனால் பின்னர் அப்பா இராணுவத்திலிருந்து விடுமுறைக்கு வந்தபோது அவர்களோடு தங்குவதற்காக வந்தார். பிறகு மீண்டும் அவர்கள் பிhpந்து விட்டனர். இப்போது அவர்களுக்கு விவாகரத்து ஆகி விட்டது.
லிஸெட் அவளுடைய அம்மா வேலை செய்த இடங்களைக் குறிப்பிட விரும்புவாள்.அவை அத்தனை வித்தியாசமான பெயர்கள் : டிரம்ப் தாஜ்மஹல்,பாலிஸ்,ஹர்ராஸ்,காஸினோ ராயல்.மற்றபடி காஸினோ ராயலில் இப்போதும் யிவெட்டி வேலை செய்கிறாளா,அவள் இப்போதும் பிளாக்ஜாக் தரகர்தானா என்பது நிச்சயமாக அவளுக்குத் தொpயாது,யிவெட்டி மீண்டும் காக்டெயில் பாpமாறுபவளாகவும் இருக்கலாம்.

இதுதான் லிஸெட்டுக்கு மிகமிக,தலையைப் பிய்த்துக்கொள்ளும் அளவுக்கு கோபத்தை ஏற்படுத்தும்.நாம் அவளை ‘நீ எங்குதான் வேலை செய்து தொலைக்கிறாய் அம்மா?’என்று கேட்டால் கூட அவளுடைய பதில் அந்த நேரத்துக்கு புhpகிற மாதிhp இருந்தாலும் அப்புறம் கரைந்து போகும், தண்ணீhpல் போட்ட டி‘;யு+ காகிதத்தைப் போல்.

து.ஊ யின் அப்பா தாஜில் பாதுகாவலனாக வேலைபார்த்தவர். து.ஊ யும் அவனது நண்பர்களும் தாஜிற்கு சென்றதேயில்லை என்பது உண்மைதான்.ஆனால் அந்தத் தெருவின் தெற்கு முனையில்தான் சுற்றிக்கொண்டு இருந்தார்கள்.அங்குதான் மலிவான மோட்டல்கள்,துhpத உணவகங்கள்,வட்டிக்கடைகள்,பத்திரங்கள் விற்கும் கடைகள்,குட்டி தேவாலயங்கள்,கார் நிறுத்தமற்ற காராஜூகளில் தாறுமாறாக நிறுத்தப்பட்டிருக்கும் கார்கள் எல்லாம் இருக்கும்.எனவே அவர்கள் இருட்டிய பிறகு யாரும் பார்க்காத போது தெருவோரங்களில் இருக்கும் வாகனங்களை பு+ட்டை உடைத்து உள்ளே நுழைந்து விடுவார்கள். மிகச் சுலபமாக தாங்கள் பு+ட்டியிருக்கும் காரையோ,பெட்டியையோ உடைத்து அதில் மற்றவர் விட்டுச் சென்றிருக்கும் பொருட்களை – உதாரணமாக பிராட்வாக்கில் நடந்து செல்லும் பெண் தூக்கிச்செல்ல விரும்பாத கனமான கைப்பை – போன்றவற்றை எடுக்கும் போது பையன்கள் தங்களுக்குள் சிhpத்துக்கொள்வார்கள். உதவாக்கரைகள்!அவர்களில் சிலர் மிகவும் முட்டாள்கள்,பாpதாபத்துக்குhpயவர்கள்.

லிஸெட் இன்னமும் நோவிகியின்; கவனம் திசைதிரும்பக் காத்திருந்தாள்.அவள் பொறுமையிழந்திருந்தாள்.அந்த லிப்ஸ்டிக் முத்தத்தை து.ஊ க்கு கொடுத்துவிட்டு ‘ஓ.கே நீ என்னை புணர வேண்டுமா?கட்டிக்கொள்ள வேண்டுமா? என்ன வேண்டுமானாலும் செய்து கொள். ஏய் நான் உனக்குத்தான்.’என்று சொல்லத் துடித்தாள்.

அதுகூட ஒரு நகைச்சுவை போலத்தான் இருந்தது.பல வி‘யங்கள் நகைச்சுவையாகத்தான் இருந்தன.அதன் உண்மையான விளைவை பின்னர்தான் நாம் சமாளிக்க வேண்டியிருக்கிறது.லிஸெட் பின்னால் நடப்பதைப் பற்றி தீவிரமாக நினைத்ததில்லை.

அவள் கண்களை விரல் நுனியால் தேய்த்துவிட்டுக் கொண்டாள்.அறுவை சிகிச்சைக்குப் பின் அவள் அதுபோல் செய்யக்கூடாது என்றிருக்கிறார்கள்.உன் விரல்கள் அழுக்காக இருக்கின்றன.அந்த அழுக்கு விரல்களால் உன் கண்களைத் தொடக்கூடாது.நோய்க்கிருமி தொற்றிக் கொள்ளும் அபாயம் இருக்கிறது.ஒ!கடவுளே அவளுடைய இரண்டு கண்களிலும் குளிரான மாதங்களிலும்,பிரகாசமான வெளிச்சத்திலும் கண்ணீரால் நிரம்பி வழிவதை,அவள் பள்ளிகளின் அனைத்து அறைகளிலும்,வராண்டாவிலும் இருக்கும் முட்டாள்தனமான ஃப்;ரஸன்ட் விளக்குகளை வெறுக்கும் அளவுக்கு வெறுத்தாள்.அதனாலேயே லிஸெட் பள்ளிக்கு அடர் ஊதா வண்ண வெயில் கண்ணாடி அணிந்து செல்ல அம்மா அனுமதி வாங்கியிருந்தாள்.அது அவளை பதிமூன்று வயது நடுநிலை பள்ளி மாணவியைப் போலில்லாமல் பதினாறு,பதினேழு வயதுள்ள உயர்நிலைப் பள்ளி மாணவியைப்போல் அமர்த்தலாகக் காட்டியது.

‘ஹே!உனக்கு பதிமூன்று வயதுதானா?உண்மையாகவா?’அவளுடைய அம்மாவின் நண்பர்களுள் ஒருவன் சந்தேகத்துடன் கேட்டான்.இது போன்ற வி‘யத்துக்கு அவள் ஏன் பொய் சொல்லப் போகிறாள்.அம்மாவின் இந்த நண்பன் செஸ்டர்-செட் எப்போதுமே ஒரு பொறுக்கிதான்.ஆனால் இவன்தான் லிஸெட்டின் கண் சிகிச்சைக்கு கொஞ்சம் பண உதவி செய்திருக்கிறான்.

இன்று காலை லிஸெட் தானாகவே எழுந்திருக்க வேண்டியிருந்தது.காலை உணவையும் -குசழளவநன றாநயவநைள-தானே தயாhpத்துக் கொண்டு தொலைக்காட்சி முன்பு உட்கார்ந்து கொண்டாள்.காலை நேர தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அவள் வெறுப்பாள்,கார்ட்டூன்கள்,மற்ற அபத்தங்கள்,அதைவிட மோசம் செய்திகள்.மூன்றாவது இரவாக அவள் அதே உடையுடன் – அதே கருப்பு டீ‘ர்ட்,உள்ளாடைகள்,உல்லன் சாக்ஸ் – ஜீன்ஸ் மீது இழுத்துவிட்டுக்கொண்டு, ‘வுயுது’ என்று ஸாட்டின் எழுத்துக்கள் பொறித்த அவள் அம்மாவின் அழுக்கான கருப்பு ஸ்வெட்டர்,பு+ட்ஸ் சகிதம் தூங்கினாள்.தொலைபேசி செய்திகளை பாpசோதித்தாள்.எதுவுமில்லை.

வௌ;ளிக்கிழமை இரவு ஒன்பது மணிக்கு அவளுடைய அம்மா அழைத்திருந்தாள்.லிஸெட் எண்ணைப் பார்த்துவிட்டு எடுக்காமல் இருந்துவிட்டாள். ‘ஒழிந்து போ! என்னை விட்டுட்டு வெளியே போகிறாய்.என்ன கருமத்துக்கு நான் உன்னுடன் பேச வேண்டும்’. பிறகு சிறிது நேரம் கழித்து தெருவில் சப்தமான பேச்சுக்குரலைக் கேட்டு ஒருவித பயத்துடன் தன்னுடைய அம்மாவின் கைப்பேசிக்கு அழைப்பு செய்து பேச முயற்சித்தாள்.ஆனால் இணைப்பு கிடைக்கவில்லை. நாசமாய் போ! உன்னை வெறுக்கிறேன்,வெறுக்கிறேன்,வெறுக்கிறேன்.

ஆம் அவள் அம்மா ஏதாவது பாpசு வாங்கி வரும் வரை அப்படித்தான். அவள் அம்மாவும்,அப்பாவும் இரண்டாவது தேநிலவுக்கு லௌடர்டேல் கோட்டைக்குச் சென்றிருந்த போது,பிரச்சனை இருந்தபோதிலும் கூட லிஸெட்டுக்கு பவளச் சிவப்பில் உடையும்,ட்யு+னிக் மேல்சட்டையும்,கால்சட்டையும் பாpசாக தர அவள் மறக்கவில்லை.

இப்போது இது நடந்திருக்கிறது,அதுவும் இத்தனை விரைவில்.
யாரோ கதவைத் தட்டியதால் நோவிக்கி வகுப்பறையின் கதவருகே சென்றாள் -சீக்கிரம் – துடிக்கும் இதயத்துடன் லிஸெட் முன்புறம் சாய்ந்து மிருதுவாயிருந்த கிளீனெக்ஸ் காகிதக் குறிப்பை கெய்‘hவிடம் கொடுத்தாள்,அவள் அதை து.ஊயின் டெஸ்க் மீது தூக்கிப் போட்டாள்.அந்தக் குறிப்பை து.ஊஏதோ மேற்கூரையிலிருந்து விழுந்த வஸ்துவைப் போல் அதைப் உற்றுப்பார்த்தான்.கெய்‘hவையோ,கருப்புக் கண்ணாடிக்குள் இருந்து உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த லிஸெட்டையோ கவனிக்காமல் தோள்பட்டையைக் குலுக்கிக்கொண்டான். து.ஊ எதற்கும் அலட்டிக்கொள்ளாதவன்.அவன் செய்ததெல்லாம் அந்த கிளீனெக்ஸ் காகிதக் குறிப்பை உள்ளங்கையில் வைத்து சுருட்டி ஜீன்ஸ் பாக்கெட்டுக்குள் திணித்துக் கொண்டான்.

வேறு யாராயிருந்தாலும் அதில் என்ன எழுதியிருக்கிறது என்று பார்க்க பிhpத்து இருப்பார்கள்.ஆனால் ஜிம்மி சேங்க் அப்படிப்பட்டவனில்லை.வகுப்பில் பெண்கள் குறிப்புகளை எறிவது து.ஊ க்கு பழகிவிட்டிருந்தது,அதுவும் சிடுக்கு கூந்தலும்,கருப்புக் கண்ணாடியும் அணிந்த பெண் அனுப்பிய குறிப்பைப் பற்றி அறிய அவனுக்கு அதிக ஆர்வம் இல்லை.அல்லது அது என்னவாக இருக்கும் என்று அவனுக்கு முன்பே தொpந்திருக்கலாம்.முத்தம் -முத்தம் – முத்தம் – முத்தம்.முக்கியமான வி‘யம் என்னவென்றால் து.ஊ சிhpக்கவில்லை,ஒரு குப்பையைப் போல் அதை கசக்கிவிட்டான்.

இதற்குள் லிஸெட்டின் உதடு பஞ்சு போல உலர்ந்து போயின.து.ஊ க்கு இது போன்ற குறிப்பு அனுப்புவது இதுவே முதல் முறை,அவளை மகிழ்ச்சியாகவும்,தன்னம்பிக்கையோடும் உணரவைத்த பியர் போதை வேகமாக இறங்கியது.பாதி பியர்தான் சாப்பிட்டிருப்பாள்.பேருந்துகள் நிறுத்தப்பட்டு காற்றே நாற்றமடித்துக் கொண்டிருந்த வாகன நிறுத்தத்தில் பாதியைக் கொட்டி,மீதியைத்தான் சாப்பிட்டிருந்தாள்..ஆனால் பையன்கள் எதையும் கவனிக்காமல்,சத்தமாக பேசிக்கொண்டும்,சிhpத்துக்கொண்டுமிருந்தார்கள்.சிலசமயம் அவர்கள்‘லிஸெட் முல்வி மிகவும் கவர்ச்சிகரமானவள்’; என்று அவளை நோட்டமிட்டதைக் கவனித்திருக்கிறாள்.

பியரை சட்டை மீது ஊற்றிக்கொண்டதால் அழுத்தப்பச்சை கால்சட்டையில் பியர் கறையாகிவிட்டது,எப்போது திரும்பி வந்தாலும் ,முகர்ந்து பார்த்தால் அம்மா அதைக் கண்டுபிடித்து விடுவாள்.

இது திங்கள் கிழமை,ஜனவாp மாதம்,ஆம் இது ஜனவாp மாதம்.அவள் தேதியை மறந்து விட்டிருந்தாள்.அம்மா மாத்திரை,சொட்டுமருந்து வாங்குவதற்காக கொடுத்திருந்த சீட்டையும் தவறவிட்டு விட்டாள்.அது போன வாரம் அவள் அம்மாவைக் கடைசியாகப் பார்த்தபோது –வியாழனோ அல்லது புதனோ – கொடுத்தது.கண் அறுவை சிகிச்சைக்குப் பின் போட வேண்டிய ஸ்டீராய்டு மருந்து அது.ஆனால் அந்தத்துண்டு காகிதத்தை இப்போது அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை.அவளது சட்டையிலும் இல்லை,பையிலும் இல்லை,சமையலறையிலும் இல்லை,படுக்ககையறையிலும் இல்லை. எங்கேயும் இல்லை.

இப்போது நோவிக்கி வாசலிலிருந்து திரும்பி பார்த்தாள்- யார் லிஸெட்டா?என்றாள். அது ஒரு சொப்பனம் போலிருந்தது.உங்களை ஒரு அந்நியர் அதுவும் ஒரு காவல்துறை அதிகாhp –அப்படித்தான் தொpந்தது- தேடி வருவது ஒரு துர்சொப்பனந்தான்.

‘லிஸெட் தயவு செய்து; எங்களோடு கொஞ்சம் வெளியே வரமுடியுமா’
நோவிக்கியின் பக்கத்தில் ஒரு பெண் சீருடையில் நின்றிருந்தாள். அவள் அட்லான்டிக் சிட்டியின் P.னு யாக இருக்க வேண்டும்.ஸ்பெயின் தனமான முகம், நிறம். மிருதுவான கரும்பழுப்பு கூந்தலை இறுக்கமாக பின்னால் முடிச்சிட்டிருந்தாள்.வகுப்பில் அனைவரும் இப்போது ஆணியடித்தது போல் வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்க பாpதாபமாக லிஸெட் தன் இருக்கையில் அதர்ச்சியினால் செயலிழந்து போயிருந்தாள்.உதட்டைக் கடித்துக் கொண்டே எழ முயற்சித்தாள். அவளது கால்கள் நாசமாய் போன புத்தகப்பையில் மாட்டிக்கொண்டது. அவள் காதுகளுக்குள்ளே எழுந்த இரைச்சல்களினூடே அந்த பெண்காவலாpன் குரல் ஒலித்தது, ‘உனது பொருட்களையெல்லாம் எடுத்துக்கொள்’. லிஸெட் அவள் பையையும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றால் அவள் வகுப்புக்குதிரும்பி வரமுடியாது என்று பொருள்.

அதீத பயத்தில் அவளுக்கு பியர் ஏப்பம் வந்தது.புளித்த வாந்தி போன்ற பியாpன் சுவை அவளது வாயில் இருந்தது- ஓ ஜீஸஸ்!- அந்த காவலர்கள் அதைக் கண்டுபிடித்து விட்டால் என்னாகும்?

அவள் காதுகளில் இரைச்சல் கேட்டுக்கொண்டிருக்க வராந்தாவில் அந்தப் பெண் உரக்க,‘நீ லிஸெட் முல்வி என்றால் என்னுடன் வா! அடையாளம் காட்ட’ என்று சொன்னாள்.

அடையாளம்- அடையாளம்– க‘;டப்பட்டு கேட்க முயற்சித்தாலும் அந்தச்சொல் கடற்பறவையின் ஓலம் போல் காற்றை கிழித்துக்கொண்டு எழும்பி அடங்கியது.
திரும்பினால் அவளைத் தேடிவந்த இரண்டு காவலாளர்கள் அங்கே இருந்தனர்.
ஸ்பெயின் முகம் கொண்ட பெண் காவலர் தன்னை அறிமுகம் செய்து கொண்டாள்;;;;;;;:அதிகாhp மொலினா. லிஸெட் இந்தப்பெயரை நினைவில் வைத்துக்கொண்டு அதை மட்டுமே உபயோகப் படுத்தப் போவதைப் போல் கூறினாள்.இன்னொரு போலிஸ் ஆண்,அந்தப்பெண்ணை விட சற்று இளையவன்.அவனது தோல் சொரசொரப்பாக,பருக்களுடன் நிறம் மட்டாக இருந்ததால் அவன் ஆங்கிலேயனா என்று சொல்வது கடினமாக இருந்தது.
இருவரும் லிஸெட்டை ஒரு மாதிhp பார்த்தார்கள். அந்தப்பார்வையில் இருந்தது என்ன? வருத்தமா?இழிவா? என்ன?

அந்த ஆண் காவலாpன் கண்கள் அவளுடைய இறுக்கமான ஜீன்ஸின் மீது படிந்து மீண்டும் பயம் அப்பிய அவள் முகத்தில் நின்றது.முழங்கால்களில் சிவப்பு நிற துண்டு வைத்துத் தைத்த ஜீன்ஸை அவள் அணிந்திருந்தாள்.

கணக்கு வகுப்பில் குறிப்பு எழுதியதற்காக கைது செய்ய காவலர்கள் வந்திருக்க மாட்டார்கள்.அன்று ஒருநாள் ரைட்எயடில் 69 செண்ட் என்று குறிப்பிடப்பட்டிருந்த கூடைக்குள்ளிருந்து தன்னையறியாமல் மூன்று லிப்ஸ்டிக்குகளைத் திருடியதற்காக ஒருவேளை கைது செய்ய வந்திருப்பார்களோ?
‘நீ யிவெட்டி முல்வியின் மகள் லிஸெட் முல்வி அல்லவா?’
லிஸெட் உணர்ச்சியின்றி தலையாட்டினாள்.

அதிகாhp மொலினாதான் கேட்டாள்.அவளுடைய கையை பலவந்தமாக இல்லாவிட்டால் கூட உறுதியாகப் பற்றியபடி படிகளில் நடத்திச்சென்ற விதத்தில் பதில் பேசவே பயந்தாள் லிஸெட்.சொல்லப்போனால் மொலினா அவளிடம் அன்போடும்,அமைதியோடும் ‘உனக்கு ஒன்றுமில்லை,எல்லாம் சாpயாகிவிடும்’ என்ற தோரணையில்தான் பேசிக்கொண்டிருந்தாள்.

‘கடைசியாக உன் அம்மாவை எப்போது பார்த்தாய்,பேசினாய்?இன்றைக்கு பேசினாயா லிஸெட்?

இன்றைக்கு பேசினேனா? அவளால் நினைவுப்படுத்த முடியவில்லை.
‘உன் அம்மா வெளியே போயிருந்தார்களா லிஸெட்? உனக்கு ஃபோன் செய்தார்களா?’

லிஸெட் தலையாட்டினாள்.

‘அம்மா வெளியே போகவில்லையா? ஆனால் அவள் வீட்டில் இல்லையே, அப்படித்தானே?’

லிஸெட் யோசிக்க முயற்சி செய்தாள். எது சாpயான பதிலாக இருக்கும்? ஒரு விசித்திர பய புன்னகை அவள் உதடுகளில் பரவியது. அவளது அம்மாவுக்கு எhpச்சலூட்டும் புன்னகை.அதை அவள் வேறுவிதமாக புhpந்து கொள்வாள்.
மொலினா,‘எப்போது உன் அம்மாவுடன் கடைசியாக பேசினாய்?’ என்று கேட்டாள்.
லிஸெட் அசூயையுடன் தனக்கு நினைவில்லை என முணுமுணுத்தாள்.
‘இன்றைக்கு காலையில் நீ பள்ளிக்கு போகுமுன் பேசவில்லையா?’
‘இல்லை. பேசவில்லை’ லிஸெட் தலையாட்டி மறுத்தாள்.இதையாவது தன்னால் சாpயாகச் சொல்ல முடிந்ததே என மகிழ்ச்சியடைந்தாள்.

அவர்கள் பள்ளியின் பின்புறம் வந்தார்கள்.அங்கே ஒரு காவலர் வாகனம் நின்றிருந்தது.லிஸெட்டுக்கு பயம் மேலிட்டது. அவளை கைது செய்துவிட்டார்களா? சிறுவர் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்போகிறார்களா? து.ஊ யின் நண்பர்கள் சிறுவர் நீதிமன்றத்தைப் பற்றி ஒருமுறை பகடி செய்திருக்கிறார்கள்.

வறண்ட குளிர் காற்றில் லிஸெட்டுக்கு மிச்சமீதியிருந்த பியர் போதையும் ஆவியானது.அந்தக் காவலர்கள் இருவரும் அவளை மிகவும் அனுதாபத்துக்குhpயவளாக,ஏதோ சீழ் வடியும் சொறிநாய் ஒன்றைப்பார்ப்பது போல வெறித்துப்பார்ப்பதை அவள் அடியோடு வெறுத்தாள். அவளுடைய மயிர்கால்களில் தொpந்த சிறுபுண்களையும்,சிக்குப்பிடித்த கூந்தலையும் பார்த்தனர். சீப்பு போட்டு வாரவோ,ப்ர‘; போடவோ அவளுக்கு நேரமிருக்கவில்லை.நாலைந்து நாட்களாக அவள் தலையைக் கசக்கக்கூட இல்லை.அத்தனை நாட்களாக அவள் அம்மா வீட்டை விட்டுப் போயிருக்கிறாள்.

வாரஇறுதி விடுப்பில் வெளியே சென்றிருக்கிறாள். யாரோடு- தொpயவில்லை.அம்மாவின் இரகசியங்களில் அதுவும் ஒன்று.அவள் காஸினோ கேளிக்கை விடுதியில் சந்தித்த புது ‘நண்பன்’ யாராவதாக இருக்கலாம். நாடோடி போல் திhpந்து கொண்டிருக்கும் மனிதர்கள் அட்லாண்டிக் நகாpல் அதிகம் இருந்தனர். கேளிக்கை விடுதியில் அவா;கள் வெற்றிப்பெற்றால் அதைக் கொண்டாட யாராவது தேவைப் பட்டனர். அதே போல் தோற்று விட்டாலும் அவா;களை சந்தோ‘ப் படுத்தவும் யாராவது தேவைப் பட்டனா;. யீவெட்டி அப்படிப்பட்டவர்களுள் ஒருத்தி! லிஸெட்டினுடையதைப் போல் அழுக்கு நிறமாக இல்லாமல் தேன் நிறக்கூந்தல் தோள்களில் அலையாகப் புரளும் அவளுக்கு. ஒளிரும் கண்கள், கர;ண கொடூரமாக வெட்டுவது போலில்லாத – ஒரு ஆண் விரும்பும் மென்மையான சிரிப்பு, எவனையும் சூடேற்றும்.
வாரஇறுதி விடுமுறைக்கு யாருடன் வெளியே செல்கிறாய் என்று லிஸெட் தன் அம்மாவிடம் கேட்டிருந்தாள், அதற்கு அவள்,“உனக்குத் தெரிந்தவா;கள் யாருமில்லை” என்று சொல்லிவிட்டாள். ஆனால்;- லிஸெட்டிடம் இல்லாமல் தனக்குத் தானே அவள் சிரித்த விதமும், டைவ் அடிக்கும் பலகையிலிருந்து காற்றில் குதிக்க இருப்பவளைப் போல் ஆழம் காணமுடியாத பாவம் அவள் முகத்தில் தெரிவதைக்கண்ட லிஸெட்டுக்குச் சற்றென்று உரைத்தது,‘அப்பாவா?’

அம்மா இன்னமும் அப்பாவோடு தொடா;பில் இருப்பது அவளுக்குத் தெரியும். அவள் அம்;மா சொல்லியிருக்கா விட்டாலும் அவளுக்கு எப்படியோ இது தெரியும். கேவலமான அந்த விவாகரத்துக்குப் பின்னும் கூட, அவா;கள் தொடா;பில்தான் இருந்தாh;கள். அது எதனால் என்றால் (அவளுடைய அப்பா அவளுக்கு விளக்கியிருந்ததைப் போல) அவள் எப்போதும் அவருடைய மகளாக இருப்பாள் என்பதால். மற்ற எல்லா வி‘யங்களும் மாறலாம்- உதாரணத்திற்கு, அப்பா இருக்குமிடம், அம்மாவுக்கும் அவருக்கும் நடந்த திருமணம்- ஆனால் இது மாறாது. எப்போதும்.

எனவே லிஸெட் அவளுடைய அம்மாவை வற்புறுத்திக் கேட்டாள், அப்பாவுடனா அவள் வெளியே போகிறாள்? அப்பாவுடனா? அப்படியா?- அவள் அம்மா சிரித்துக்கொண்டே ‘அடச்சீ, அந்த சனியனை நான் திரும்பவும் பாh;க்கவே மாட்டேன்’ என்று சொல்லும் வரை அவள் தொணதொணவென்று கேட்டாள்.

ஆக அவள் அம்மா வாரஇறுதிக்கு வெளியே போய் விட்டாள். “ஒழுங்காய் இருப்பாய் என்று நம்பலாம் அல்லவா லிஸெட்?” என்றாள் அவள். “நிச்சயம். நிச்சயம் நம்பலாம்” என்றாள் லிஸெட்.

தனியாக வீட்டில் இருப்பது என்றால் லிஸெட்டுக்கு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் விழித்துக்கொணடிருக்கலாம். அப்புறம் அவள் விரும்பும் டிவி சேனல் பாh;க்கலாம். அப்புறம் காலைப் பரப்பிக்கொண்டு செல் போனில் எவ்வளவு நேரம் வேணடுமானாலும் பேசலாம்.

உறைந்து போன இரவு உணவை எளிதாக மைக்ரோ ஓவனில் சூடு செய்து டிவி முன்பு உட்காh;ந்து சாப்பிடலாம் என்றாலும் கூட,கென்டகி ஃபிரைட் சிக்கனுகோ,விட்டோவின் பிஸாரியாவுக்கோ, டாக்கோ பெல்லுக்கோ ஏதோ ஒரு மினிமாலுக்கு ஒரு நடை போய் வரலாம்.

முதல் நாள் இரவு கெய்‘h வந்திருந்தாள். சிறுமிகள் இருவரும் கெய்‘h கொண்டு வந்திருந்த டிவிடி யை பாh;த்தபடியே குளிh; சாதனப்பெட்டியிலிருந்த உணவை உண்டனா;. ‘உன் அம்மா வீட்டைவிட்டு போயிருந்தது உனக்கு நல்லதா போச்சு இல்லையா,அவள் எங்கே போயிருக்கிறாள்?

லிஸெட் யோசித்தாள். அநேகமாக அம்மா லாஸ்வேகாசுக்குதான் சென்றிருக்க கூடும். அவளுடைய ஆண் நண்பனோடோ அல்லது யாருடனோ. இது போன்ற நடுங்கும் குளிரும், ஊதல் கடல் காற்றும் உள்ள பருவத்தில் போவதற்கு ஏற்ற இடம் லாஸ்வேகாஸ்தான்.

‘அவளுக்கு கேளிக்கை விடுதி மூலம் நிறைய நண்பா;கள் இருக்கிறாh;கள். அங்கே எப்போது வேண்டுமானாலும் போக அவளுக்கு அனுமதி இருக்கிறது. என்னைக்கூட அழைத்து போயிருப்பாள்,ஆனால் இந்த பாழாய் போன ஸ்கூல் இருக்கறதே’.

‘ஆக கடைசியாக அவங்களோடு எப்போது பேசினாய்?’

அவள் திருதிருவென்று கையைப்பிசைந்து கொண்டு,தடுமாறுவதைப் பாh;த்து கொண்டிருந்த போலிஸ் அவளை முறைத்துப் பாh;த்த படி, அவளது பதிலுக்காக காத்துக் கொண்டு இருந்தது. ‘நேற்று அல்லது நேற்று முன்தினமாக இருக்கலாம்’ என்றாள்.

பித்துப் பிடித்த பறவை ஒன்று ஐன்னலில் மோதிக்கொண்டதைப்போல அவளது இதயம் நெஞ்சுக்கூட்டுக்குள் படபடத்தது.

யிவெட்டி முல்விக்கு சட்டப்பிரச்சனை இருந்தது அல்லவா?

ஓ‘ன் கவுன்டி குடும்ப நீதிமன்றம் மட்டும்தான் லிஸெட்டுக்குத் தெரியும். அங்குதான் நீதிபதி யிவெட்டி முல்விக்கு லிஸெட்டை பாதுகாக்கும் அதிகாரத்தையும், ட்யுவான் முல்விக்கு லிஸெட்டைப் பாh;த்துச் செல்;ல அனுமதியும் வழங்கினாh;. யிவெட்டி முல்விக்கு ஏதாவது நோ;ந்து விட்டால், லிஸெட் சிறுவா; பராமரிப்பு இல்லத்துக்கு அனுப்பப் படுவாள். அவள் அப்பா ரு.ளு இராணுவத்தில் சிப்பாயாக பணிபுhpவதால் லிஸெட்டுக்கு அவருடன் வசிப்பது சாத்தியமில்லை.கடைசியாக அவள் கேள்விப்பட்ட படி அவரை மூன்றாவது முறையாக ஈராக்கிற்கு னுநிடழலநன(சிப்பாய்களை தகுந்த இடங்களில் நிறுத்துதல்) செய்திருக்கிறாh;கள். அது என்ன வாh;த்தையோ- னுந-pடழலநன.

அப்பா அவளை அடிக்க வேண்டும் என்று எண்ணவில்லை.அம்மா கூட அதை நம்பினாள், அதனால்தான் அவள் 911 னை அழைக்கவில்லை. நு.சு ல் டாக்டா; எப்படி அவளுக்கு முகத்தில் பயங்கரமாக அடிபட்டது, எப்படி மூக்கும் கண்முழியும் பிய்ந்து போனது என்று கேட்டபோது அவள் அது ஒரு விபத்து என்று சொன்னாள்- அவள் ஓடி வந்து மாடிப்படியில் விழுந்து விட்டதாகக் கூறினாள்.

அது என்னவோ உண்மைதான். அவள் ஓடிதான் விழுந்தாள், அப்பா அவளுக்குப் பின்னால் கத்திக்கொணடே,மு‘;டியை தாறுமாறாக சுற்றிக்கொணடே- அவளை அடிப்பதற்காக அல்ல- ஓடி வந்தாh;.ஆனால் அவா; போதையில் இருந்தாh;. ஆனால் அதற்கப்புறம் அவா; சொன்னதைத்தான் அவள் எப்போதுமே கேட்க விரும்பினாள். அது அவளை அழவைத்தது. எப்போதுமே.

‘உன் அப்பாவை சமீபத்தில் எப்போது பாh;த்தாய் லிஸெட்?’

போலிஸ் ஜீப்பை அந்த ஆண் போலிஸ் ஓட்ட,மொலினா முன் சீட்டிலிருந்து லிஸெட்டைப் பாh;க்கும்படி திரும்பி உட்காh;ந்தாள். அவளது சொ;ரி நிற உதடுகள் மட்டும் விளம்பர பலகையில் இருப்பது போல் முகத்தில் பிரகாசமாக இருந்தன மற்றபடி முகம் வாடி இருந்தது. அவளது காpய கூந்தல் சீல் மிருகத்தின் தோல் போல் பளபளத்தது, கண்களில் சொல்லமுடியாத அறிவு மிளிh;ந்தது.அது லிஸெட் வழக்கமாக அவளுடைய அம்மாவை விட வயது முதிh;ந்த பெண்களின் கண்களில் காணப்படும் ஒரு முகக்குறி. அவா;கள் அப்படி பாh;ப்பது வெறுப்பால் அல்ல பச்சாதாபத்தினால்.

லிஸெட்டை நெளியவைக்கும் முகக்குறி அது.அவள் அதை நோவிக்கியின் முகத்திலும் கண்டிருக்கிறாள். அதை விட ஆச்சாpயமாகவோ,அவமானமாகவோ பாh;ப்பது மேல்.

இரண்டு அல்லது மூன்று முறை மொலினா லிஸெட்டை எங்கே அழைத்துப்போகிறாh;கள் என்பதை விளக்கியிருப்பாள். அவா;கள் அவளை ஒரு அடையாளம் காட்ட மருத்துவமனைக்கு அழைத்துப்போகிறாh;கள். ஆனால் வாh;த்தைகள் கோh;வையாக வரவில்லை.

அ..டையா..ளம்,அ….டை..யாளம்.

‘நீ எவ்வளவு நேரம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறாயோ அவ்வளவு நேரம் இருக்கலாம். அல்லது உடனே கிளம்பலாம் என்றாலும் பரவாயில்லை,உன் இ‘;டம். ஒரு நிமிடத்தில் முடிந்துவிடும்.’

மொலினா லிஸெட்டிடம் பேசிய விதம் இதமாக இருந்தாலும் அh;த்தமற்று தொனித்தது.பேசிய விதம் எப்படி இருந்தாலும் அதன் பின் இருந்த பொருள் லிஸெட்டுக்கு பிடிபடவில்லை.சில சமயம் பொpயவா;கள் லிஸெட் நக்கலாக சிhpக்கிறாள் என்று தவறாக நினைத்துவிடுவதுண்டு. அதற்கு காரணம் அவளது இடது கண். இடது கண்ணின் விழிக்கோளம் பியந்து தைக்கப்பட்டிருப்பதால் முகத்தின் அந்தப்பகுதியில் நரம்புசெல்கள் அழிந்து போய் ஒரு உறைந்த பாவத்தைக் காட்டும். ‘எப்படிப்பட்;ட ஒரு விநோதமான விபத்து’ அவள் அம்மா சொன்னாள். ‘மாடிப்படியில் ஓடாதே! ஓடாதே! என்று சொல்லியிருக்கிறேன்.எப்படி ஓடுகிறாh;கள் தொpயுமா இந்தக்குழந்தைகள்?’பாதிக்கெஞ்கலுடன் சா;ஜனிடம் ‘இந்தக் காயம் ஆறிவிடுமா,அறுந்துபோன நரம்புகள் கூடிவிடுமா?’ கூடாது என்று தொpந்திருந்தும் அவள் கேட்டாள்.

நரம்புகள் அறுந்துபோகவில்லை,அழிந்து போய்விட்டன.

மருத்துவமனையின் பின்புறம் வண்டியை நிறுத்தினாh;கள்.மெதுவான குரலில் மொலினா அந்த ஆண்போலிசுடன் ஆலோசித்தாள்.அவா;கள் என்ன பேசுகிறாh;கள் என்று லிஸெட்டால் கேட்க முடியவில்லை. கேட்க விரும்பவும் இல்லை.ஆனால் அந்த ஸபானியப் பெண்ணை தனது தோழியாகவும் , நம்பக்கூடியவளாகவும் லிஸெட் கருதினாள். ஏனெனில் அவளோடு படிக்கிறவா;களின் ஸ்பானிய அம்மாக்கள் எல்லோரும் நல்லவா;வகளாகவும் ,அன்பானவா;களாகவும் இருந்தாh;கள்.மொலினாவும் அதே போல அன்பானவள், அவள் தன் குழந்தைகளிடம் ஏன் பேரக்குழந்தைகளிடம் கூட அன்பாகத்தான் இருப்பாள் என்று தோன்றியது.அவள் போலிஸாக துப்பாக்கியை தூக்கிக் கொண்டிருப்பது துரதிரு‘;டம்தான்.

லிஸெட்டின் அம்மாவுக்கு சில காவல்காரர்களைத் தொpயும். ஒருவனோடு வெளியே கூட சென்றிருக்கிறாள்.ஒரு போலிஸின் வாழ்க்கை மிகவும் சோh;வு+ட்டக்கூடியது என்று அவள் சொல்லியிருக்கிறாள். எப்போதாவது ஒரு முறை ஏதாவது நடந்தாலும் அதுவும் விரைவாக நடந்து,அந்த வினாடியோ அல்லது அதற்கு அடுத்த வினாடியோ குண்டடிப்பட்டு இறந்து போக நோpடலாம். ஆனால் பொதுவாக பிளாக் ஜாக்கி சீட்டுகளை பொறுக்கிகளோடு கையாள்வதைப்; போல மிகவும் சலிப்பான வேலைதான். அவா;கள் எப்போதும் சூதாட்ட விடுதியையே ஜெயித்து விடலாம் என்று கோட்டை கட்டுவாh;கள். அது எப்போதும் நடக்கவே நடக்காது.

அவா;கள் மருத்துவமனையின் உள்ளே முதல் மாடியின் மின்தூக்கியின் அருகே நின்று கொண்டிருந்தாh;கள்.புகைப்படத்தின் பின்னணியில் தொpயும் தெளிவற்ற காட்சி போல மக்கள் அவா;களுக்கு அருகிலும்,அவா;களைக் கடந்தும் சென்று கொண்டிருந்தாh;கள். மொலினா லிஸெட்டின் கையை மீண்டும் பிடித்த விதத்தில் அவள் அவசரமாக ஏதோ சொல்ல வருகிறாள் என்று தொpந்தது.லிஸெட் தப்பித்துப் போய் விடுவாள் என்று மொலினா நினைத்தாளா? அந்த ஆண் போலிஸ் சிடுசிடுப்புடன் கொஞ்சம் தள்ளி நடந்து வந்தான்.

மொலினா பேசிக்கொண்டு வந்ததெல்லாம் சூழ்நிலைக்குப் பொருத்தமில்லாமல் இருந்ததாக லிஸெட் நினைத்தாள்,ஆனால் பின்னால்தான் புhpந்தது அவள் கேட்டதெல்லமே சாpதான் என்று: மூன்று வாரங்களுக்கு முன் வந்த கிறிஸ்துமசைப் பற்றிக் கேட்டாள்,அப்புறம் புத்தாண்டைப் பற்றி- லிஸெட்டும் அவள் அம்மாவும் விடுமுறைகளில் என்ன செய்தாh;கள், அதில் ஏதாவது விசே‘மாக நடந்ததா? என்றெல்லாம்.

லிஸெட் யோசிக்க முயற்சி செய்தாள். “விடுமுறை” என்ற வாh;த்தையை அவளோ,அவள் அம்மாவோ பயன்படுத்தியது கிடையாது. ‘சும்மா சிலபேரை சந்திப்போம்,முக்கியமாக எதுவும் இல்லை’

‘உன் அப்பாவை சந்திக்க மாட்டாயா?’

‘இல்லை’

‘கடைசியாக அவரை எப்போது பாh;த்தாய்?’

லிஸெ;ட் நினைவு படுத்திப்பாh;த்தாள்;: முக அறுவை சிகிச்சையும்,கண் அறுவை சிகிச்சையும் நடந்த போது போனவா;தான்.அப்புறம் அவள் பள்ளிக்கு சென்று விட்டாள். கோடை விடுமுறையாக இருக்க வேண்டும். ஜுலை 4 போல.

‘சமீபத்தில் பாh;க்கவில்லையா?’

லிஸெ;ட் கண்கள் மீது பட்டென்று அடித்துக்கொண்டாள்.இதெல்லாம் ஏதாவது ஒரு ரகசியமான போலிஸ் டிவி நிகழ்ச்சியா?

‘புத்தாண்டு இரவு உன்னுடைய அம்மா வெளியே சென்றாh;களா’?

‘ஆமாம்.அம்மா புத்தாண்டு இரவு எப்போதுமே வெளியே செல்வாh;கள்’

‘அவள் யாருடன் சென்றாள் என்று தொpயுமா?’

‘தொpயாது’

‘உன் அம்மாவை அழைத்துச் செல்ல அந்த நபா; வீட்டுக்கு வரவில்லையா?’

லிஸெட் யோசித்தாள். அது யாராக இருந்திருந்தாலும் லிஸெட் நிச்சயம் அந்த ஆளிடமிருந்து ஒளிந்து கொண்டுதான் இருந்திருப்பாள், அவள் அம்மாவுடைய தோழிகள் வரும்போது செய்வதைப் போல. ஏன்?காரணம் எதுவுமில்லை,சும்மா அப்படி செய்வாள்.

லிஸெட் நீ எவ்வளவு வளா;ந்து விட்டாய்!

லிஸெட் உன் அம்மாவை விட நீ உயரமா?

அவா;கள் மின்தூக்கியில் ஏறி ‘சவக்கிடங்கு’ என்று குறிப்பிடப் பட்டிருந்த கீழ் தளத்திற்குச் சென்றனா;.

மருத்துவமனையின் இந்தப்பகுதி வித்தியாசமாக இருந்தது.காற்றில் குளிh;ச்சியும்,இரசாயன வாசனையும் இருந்தது.அங்கே பாh;வையாளா;களே இல்லை.குறைவான மருத்துவமனை ஊழியா;கள் மட்டுமே அங்கே இருந்தனா;.; வௌ;ளை கால்சட்டையும்,மேல் சட்டையும், காh;டிகன் ஸவெட்டரும் அணிந்தஒரு பெண் கடைநிலை ஊழியா;,இன்னும் சற்;று நேரத்தில் உதவி பிண ஆய்வாளர் அங்கு வந்துவிடுவாh; என்று கூறினாள்.

அவா;கள் உட்காh;ந்தாh;கள்.லிஸெ;ட் இரு போலிசுக்கும் இடையே இருந்தாள். மூட்டுகளில் மிகவும் பலவீனமாக உணா;ந்தாள்.அவளை கைது செய்து,பிடித்து வைத்திருப்;பது போலவும்,அவளை பேச வைக்க இதுவும் ஒரு உத்தி என்றும் உணா;ந்தாள். வேறு ஏதோ பேசிக்கொண்டிருந்த மொலினா மிக இயல்பாக லிஸெட்டிடம் நகாpன் தெற்கு மூலையில் இருக்கும் ஒரு மோட்டலைப்பற்றிக் கேட்டாள். அது அட்லான்டிக்கில் இருக்கும் ப்; மூன் மோட்டல். லிஸெட் அந்த மோட்டலைப் பற்றி கேள்வி பட்டிருக்கிறாளா? இல்லை என்றாள்,ப்; மூன் பற்றி அவளுக்குத் தொpயாது.அட்லான்டிக் நகரம் முழுவதும் நிறைய மோட்டல்கள் உள்ளன. அவற்றில் சில முறைகேடானவை.மொலினா கேட்பது போல அவற்றில் எதிலாவது எப்போதாவது அம்மா வேலை பாh;த்ததாக லிஸெட்டுக்குத் தோன்றவில்லை. யிவெட்டி முல்வி ப்; மூனில் வேலைப் பாh;த்திருந்தால் அது லிஸெட்டுக்கு தொpந்திருக்கும். ஆனால் அப்படி இல்லை.தன் அம்மா மோட்டல் பணிப்பெண்ணோ அல்லது மதுபானம் விநியோகிக்கும் பெண்ணோ அல்ல அவள் ஓரு ப்ளாக்ஜாக்கி தரகா;,அதற்கு பயிற்சி எடுத்திருக்க வேண்டும் என்று லிஸெட் கூறினாள்.

‘அம்;மா….. ஏதாவது பிரச்சனையில் இருக்கிறாh;களா?’ இருட்டில் தட்டுத்தடுமாறியவளைப் போல் லிஸெட் கேட்டாள்.

பெருங்கோபத்தின் சிக்கலான முடிச்சு ஒன்று நெஞ்சில் நிரடியது. எல்லாம் அம்மாவின் தவறுதான்.

மொலினா தனக்கு உறுதியாகத் தொpயாது என்றாள். அதற்குத்தான் அடையாளம் காட்டினால் தெளிவாகிவிடும்.

‘உனது ஒத்துழைப்பு வேண்டும் லிஸெட், நீ அடையாளம் காட்டுவாய் என்று நம்பிக்கொண்டிருக்கிறோம்’

அடையாளம் காட்ட வேண்டும் என்று பள்ளியில் வந்து சொன்னதைக் கேட்ட போது எத்தனை அசாதாரணமாக இருந்தது. அவளை குழப்புவதற்காக குறுக்கே வந்த தடை போல அது இருந்தது.மாடிப்படியில் இருந்து விழுந்து அவளது முகத்திலும்,தலையிலும் அடிப்பட்டுக்கொண்டு,சுவர் மீது சாநய்தபடி,நடக்கமுடியாமல் தள்ளாடி பின்பு அவளது மூளையில் சிறு தடை ஏற்பட்டு,எல்லா வி‘யங்களும் மறக்க ஆரம்பித்ததைப் போலவே இதுவும் இருந்தது.

‘லிஸெட் உனக்கு இவையெல்லாம் அடையாளம் தொpகிறதா?’

சவக்கிடங்கு ஊழியர் ஒருவர் ஒரு பெட்டி நிறைய பொருட்களை கொண்டு வந்து வைத்தார்,அவற்றில் ஓரு பெண்ணின் கைப்பையும்,பர்ஸும் இருந்தன.கையுறை அணிந்த கரங்களால் மொலினா அவற்றை கவனமாக எடுத்தாள்.

லிஸெட் அந்தக் கைப்பையையும்,பர்ஸையும் வெறித்துப் பார்த்தாள். என்ன இதெல்லாம்?அம்மாவுடையதாக இருக்குமோ? அவற்றை இதற்கு முன் பார்த்திருக்கிறாளா என்று உறுதியாகத் தொpயவில்லை.பழுப்பு வண்ணத்தில் பித்தளை பக்கிள் போன்ற அலங்காரத்துடனுடம்,பட்டைகளுடன் இருந்த கைப்பையையும்,தெருவோரத்தில் சீந்துவாhpன்றிக் கிடக்கும் அழுக்குப் பர்ஸ் போல காணப்பட்ட கருப்பு பர்ஸையும் உற்றுப்பார்த்தாள்.

‘இந்தப் பொருட்கள்’ ப்; மூன் மோட்டலின் பின்னாலிருக்கும் சாக்கடையிலிருந்து ‘மீட்கப்பட்டதாக’ மொலினா சொல்லிக் கொண்டிருந்தாள்.

அத்துடன் ஒரு பெண்ணின் உடலும் அந்த சாக்கடையில் கிடந்தது- ‘மிகவும் சேதமடைந்த’ பெண்ணின் உடல்- இன்னமும் அவர்களால் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத உடல்.

மொலினா கவனமாக பேசினாள்..லிஸெட் அடிக்கடி செய்து கொண்டிருந்ததைப் போல் தன் இடது கண்ணை அடித்துக்கொள்வதையோ,தொடுவதையோ தடுக்கும் விதமாக தனது கைகளை லிஸெட்டின் கைகள் மீது மென்மையாக வைத்தாள்.

‘பர்ஸ் காலியாக்கப்பட்டு,அதன் உறை கிழிக்கப்பட்டு உள்ளது. உள்ளே யிவெட்டி முல்விக்கு நியு+ ஜெர்ஸியில் வழங்கப்பட்ட வாகன ஓட்டும் உhpமம் இருந்தது.ஆனால் பணமோ,கடன் அட்டையோ அல்லது வேறு அடையாள அட்டை எதுவும் இல்லை. அதனுள் அவசர கால உதவிக்கு அழைப்பதற்கான ஒரு எண்ணும்,பெயரும் இருந்தது, ஆனால் அந்த எண் தொடர்பில் இல்லை. அது எடிசனில் இருக்கும் அல்லது இருந்த உன் அம்மாவின் உறவினாpன் எண். ஐhpஸ் பெடர்ஸனா?’

லிஸெட் தலையை உதறிக்கொண்டாள்.இதெல்லாம் மிக அதிகம்,மிக மிக. அவளால் கிரகித்துக்கொள்ள முடியாத அளவு அதிகம். அவளால் அந்த கைபையையும்,பர்ஸையும் அடையாளம் காண முடியவில்லை.நிச்சயமாக. இப்படி கேட்க பட்டதே ஆத்திரத்தை வரவழைத்தது.கந்தலான இந்தப் பொருட்கள் எல்லாம் அம்மாவுடையது என்று நினைப்பதற்கே அவமானமாக இருந்தது.

மொலினாவின் கண்களை மிக அருகில் பார்த்தாள்.அவள் அம்மா மஸ்காரா தூhpகையால் தன்னுடையதை அழகுப் படுத்திக்கொள்ள முயற்சி செய்வதைப் போன்ற அடர்ந்த, காpய, அழகான இமைக்கற்றைகள்.மொலினாவின் கண்களைச் சுற்றி இருந்த தோல் மிகவும் மிருதுவாகவும்,காயம் பட்டது போலும் இருந்தது.கழுத்தில் சிறிய கருப்பு மச்சங்கள் காணப்பட்டன.மொலினா போன்ற தாய்மை கொண்ட பெண்கள்-( நிச்சயம் அவள் தாயாகி இருப்பாள், அந்த அகன்ற இடையும்,அவளது சட்டையில் தினறிக்கொண்டிருந்த பெருத்த மார்பகங்களையும் பார்த்தாலே தொpகிறது-) ஒரு போலிஸாக இருப்பது சாpயில்லை. அவள் விரும்பினால் உபயோகிக்க லெதர் பெல்ட்டோடு இணைக்கப்பட்;ட துப்பாக்கியை சுமந்து கொண்டிருப்பது கூட பொருத்தமேயில்லை.

லிஸெட் அவளை அடித்தோ,உதைத்தோ,தட்டிவிட்டோ அல்லது கடித்துவிட்டோ ஓடினால் மொலினா லிஸெட்டை சுடுவாளா? என்று குருட்டு யோசனை தோன்றியது.

ஆண் போலிஸ் துப்பாக்கி வைத்திருப்பதையும் அதை உபயோகிப்பதையும் நாம் எதிர்பார்க்கலாம்.

அப்பா ஈராக்கிலிருந்து கொண்டு வந்திருந்த துப்பாக்கிகளை அவர்களுக்குக் காட்டியிருக்கிறார்.அவை இராணுவத்துடன் சம்பந்தப்பட்டவை அல்;ல,சொந்தத் துப்பாக்கிகள்.மர கைப்பிடி கொண்ட பிஸ்டல் ஒன்று,கனமான கைத்துப்பாக்கி ஒன்று,அப்புறம் ஒரு ரிவால்வர்.அதையெல்லாம் சீட்டாட்டத்தில் ஜெயித்ததாக அப்பா சொன்னார்.

ஒரு வேளை அவர் அதை ஈராக்கிலிருந்து வாங்கிவராமல்,அவர் தங்கியிருந்த ஃபோர்ட் ப்ராக் கிலிருந்து வாங்கியிருக்கலாம்.

அவள் அம்மாவின் ஓட்டுநர் உhpமம் அந்தப் பர்ஸில் இருந்திருந்தால் அது அம்மாவுடையதாக இருக்கலாம்.ஆனால் சர்வ நிச்சயமாக அவளுக்கு அதை பார்த்த ஞாபகமே இல்லை என்று லிஸெட் சொல்லிக் கொண்டிருந்தாள்.

ஐhpஸ் பெடா;ஸனைப் பொருத்தவரை அவர் (ஐhpஸ் அத்தை) அம்மாவுடைய அத்தை,அவளுடைய அத்தையில்லை.ஐhpஸ் அத்தை லிஸெட்டின் பாட்டியாக இருக்க கூடிய அளவுக்கு வயதானவள் மேலும் பல காலமாக அவளோ அவள் அம்மாவோ அவரைப் பார்த்;த ஞாபகம் இல்லை.அவர்களுக்கு தொpந்த வரையில் அந்தக் கிழவி இறந்துவிட்டாள் என்பதே.

‘நாங்களும்,எடிசன் போலிஸும் அவளை தொடர்புக்கொள்ள முயன்றோம்.ஆனால்…..’

இறந்த பெண் யிவெட்டி முல்விதானா என்று உறுதிப்படுத்த யிவெட்டி முல்வியை நன்றாகத் தொpந்தவர்கள் யாராவது அடையாளம் காட்ட வேண்டியது அவசியம் என்று சொன்னாள் மொலினா. உண்மையில் அது யிவெட்டிமுல்வியா அல்லது அவள் வயதையொத்த வேறு பெண்ணா என்று தீர்மானிக்க வேண்டும். உடலின் நிலைமையாலும்,முகத்தில் உள்ள காயங்களாலும் ஓட்டுநர் உhpமத்தில் உள்ள புகைப்படத்தை பார்த்தோ அல்லது யிவெட்டி முல்வி வேலை செய்த கேளிக்கை விடுதிகளின் கோப்புகளில் உள்ள புகைப்படத்திலிருந்தோ தீர்மானிக்க க‘;டமாக இருக்கிறது.

அடையாளம் சொல்ல லிஸெட்டின் அப்பாவை (ட்யு+ன் டேவிட் முல்வி)தேட முயன்றதாக சொன்னாள் மொலினா.அவர்களைப் பொறுத்த வரையில் அவன் எடிசனிலோ அல்லது நியு+ஜெர்ஸியிலோ குடியிருக்கவில்லை.

லிஸெட்,‘அப்பா அமொpக்க இராணுவத்தில் இருக்கிறார். அமொpக்க இராணுவத்தில் அப்பா சார்ஜெண்டாக பணிபுhpகிறார்.அவர் ஃபோர்ட் ப்ராக்கில் வழக்கமாக தங்கியிருப்பார் ஆனால் இப்போது ஈராக்கில் இருப்பார்’ என்றாள். மொலினா,‘இல்லை லிஸெட் அதெல்லாம் மாறி விட்டது என்று அச்சப்படுகிறோம்.உன் அப்பா இப்போது அமொpக்க இராணுவத்தில் வேலை பார்க்கவும் இல்லை,ஈராக்கிலும் இல்லை.இராணுவத்தில் தற்போது ட்யு+ன் முல்வி பற்றி எந்தத் தகவலும் இல்லை. அவர் சென்ற டிசம்பர் 26 முதல் பணியற்ற விடுப்பில் (யுறுழுடு யடிளநவெ றiவாழரவ iவெநவெ வழ னநளநசவ) இருந்திருக்கிறார்’ என்றாள்.

லிஸெட் அதிர்ச்சியில் பேசமுடியாமல் இருந்தாள். மொலினா மட்டும் அவள் கையைப் பிடித்துக்கொண்டிருக்காவிட்டால் அவள் தாவிக்குதித்து ஓடியிருப்பாள்.

அவள் நடுங்கிக் கொண்டு இருந்தாள்.அவள் அணிந்திருந்த பருத்தி சட்டை குளிர்காலத்துக்கு பொருத்தமானவை அல்ல அதுவும் இந்த அருவருப்பான குளிருக்கு. ‘கடவுளே! தடிமனான உடையணிந்து கொள்! இது ஜனவாp மாதம்’ என்று திட்டுவதற்கு இன்று காலை அம்மா வீட்டில் இருந்திருக்கவில்லை.

மற்றுமொரு சவக்கிடங்கு ஊழியர்,இந்தியத் தோற்றம் கொண்ட – ஏதோ ஒரு வகையான மருத்துவர் – வந்து போலிஸ் அதிகாhpகளுடன் தணிவான குரலில் பேசினார்.சட்டென்று லிஸெட் அதை கவனிக்காமல் கண்களை மூடிக் கொண்டாள்.தான் விட்டு விட்டு வந்த வகுப்பறையை நினைவுப்படுத்த முயன்றாள்.அங்கே நோவிக்கி மெல்லிய சாக்பீஸுடன் பலகையருகே நின்றிருந்தாள். து.ஊ முகத்தின் மீது முடி விழ,தன்னுடைய டெஸ்க்கில் சாpந்து உட்கார்ந்திருந்தான்.அப்புறம் உற்சாகமாக இருக்கும் போதும் பயப்படும் போதும் வாயால் மூச்சு விடும்கெய்‘hவும்.அதற்கடுத்து லிஸெட்டின் டெஸ்க் இவ்வளவு தாமதமாகி,மூன்றாவது பிhpயட் ஆரம்பித்த பிறகும் காலியாகவே இருந்தது. து.ஊ லிஸெட்டின் ஆங்கில வகுப்பில் இல்லை,அதுதான் எப்போதும் இருக்கிறதே கேன்டின்.11.45க்கு மணி அடிக்கும்போது மதியஉணவு நேரமாகியிருக்கும்,அவள் வாசலுக்கு வெளியே எண்ணெயில் செய்த உணவின் மணத்திற்கும்,ஃப்ரெஞ்சு உணவு,மக்ரோனி,சீஸ்பன் வகையறாக்களுக்கு மத்தியில் வாpசையில் நின்றுகொண்டு இருப்பாள்.லிஸெட்டின் வாயில் எச்சில் ஊறியது.

கிளினெக்ஸில் இருந்த இளஞ்சிவப்பு லிப்ஸ்டிக் முத்தத்தைப் பார்த்து அவளுக்கு சிhpப்பு வந்தது.து.ஊ அதைப் பிhpத்துப் பார்க்கும்போது ஆச்சாpயப்படுவான்!

அவள் லிப்ஸ்டிக் போடுவதை அம்மா விரும்புவதில்லை.அவள் கிடக்கட்டும்,அவள் வயதொத்த பெண்கள் எல்லோரும் போடுகிறார்கள்.

போன தடவை அம்மாவை அப்பாவுடன் பார்த்திருக்கிறாள்,அப்பா அவருடைய படைவீரன் உடையில் மிக அழகாக இருந்தார்.அவரது முடி ஒட்ட வெட்டப்பட்டு இருந்தது.

இந்த முறையல்ல, இதற்கு முன்அப்பா ஈராக்கிலிருந்து முதல்முறையாக வந்தபோது லிஸெட்டின் அம்மா அவரது முகத்தை இளஞ்சிவப்பு லிப்ஸ்டிக் முத்தக் கறையால் நிறைத்திருந்தாள்.லிஸெட் அப்போது சிறுகுழந்தை.அவள் அதைப் பார்த்துவிட்டு அப்பாவுக்கு ஏதோ அடிப்பட்டு இரத்தம் வந்துவிட்டது என்று நினைத்தாள்.

வரு‘ங்கள் குழப்பின.- பல சந்தர்பங்கள்,பல அப்பாக்கள் – அவளால் ஞாபகப்படுத்திக் கொள்ள முடியவில்லை. ஒரு முறை அப்பா அம்மாவை லௌடர்டேல் அழைத்துச் சென்றார்.அவர்கள் லிஸெட்டையும் அழைத்துச் செல்ல விரும்பினர்.ஆனால் அந்த சமயம் லிஸெட்டுக்கு பள்ளிக்கூடம் போக வேண்டியிருந்தது.அப்போது அவள் பாலிஸில் வேலை செய்து கொண்டிருந்த அவளுடைய அம்மாவின் தோழி வீட்டில் சென்று தங்கிக் கொண்டாள். ஃப்ளோரிடாவில் அவர்கள் பத்து நாட்கள் தங்குவதாகத் திட்டம். ஆனால் ஒரே வாரத்தில் லிஸெட்டின் அம்மா திரும்பி வந்ததுதான் ஆச்சாpயம். அம்மா, அவ்வளவுதான் எல்லாம் முடிந்து விட்டது என்று சொன்னாள்.அப்பா குடித்துவிட்டு அவளை அடித்ததால் போலிஸைக் கூப்பிட வேண்டியிருந்திருக்கிறது.மேலும் தங்கும் விடுதியில் அப்பா நாற்காலியெல்லாம் உடைத்தாராம்,எனவே அம்மாவுக்கு போதும் போதும் என்றாகிவிட்டதாம்.இனி எதுவும் இல்லை.

யிவெட்டிக்கு காஸினோவில் சந்தித்த ஆண் நண்பர்கள் இருந்தனர். அவர்களில் பெரும்பான்மையானவர்களை லிஸெட் சந்தித்ததேயில்லை.சந்திக்க விரும்பியதுமில்லை.அவர்களில் ஒருவன் மன்மௌத் கவுண்டியில் hpயல் எஸ்டேட் பிரதிநிதி – லிஸெட்டுக்கு ஏறக்குறைய அவனுடைய பெயர் நினைவில் இருந்தது.அது அப்டன்,அப்வெல் போல ஏதோ வித்தியாசமான ஒன்று.

இந்தியனைப் போலிருந்த அந்த மருத்துவர் ஒரு மருத்துவர் போலவே இல்லாமல் மிக இளைஞனாக இருந்தார்.அவருடைய ஒயர் விளிம்பு கண்ணாடிக்குப் பின் இருந்த கண்கள் மென்மையான கருப்பில்,கவலை படிந்திருந்தது.அவருடைய முடி கருப்பாக இருந்தாலும் து.ஊ யினுடையதைப் போல் பட்டு போல இல்லாமல் சொரசொரப்பாக இருந்தது.

அவர் லிஸெட்டையும், அந்தக் காவலர்களையும் குளிரூட்டப்பட்ட அறைக்குள் அழைத்துச் சென்றார்.மொலினா லிஸெட்டின் கையை கெட்டியாகப் பற்றியிருந்தாள். ‘எங்களால் முடிந்தவரை உனக்கு சுலபமாக இருக்கும்படி பார்த்துக் கொள்கிறோம் லிஸெட். நீ செய்ய வேண்டியதெல்லாம் என் கையை அழுத்துவது மட்டும்தான்,அப்படியென்றால் ‘ஆம்’ என்று பொருள்’.

ஆம்?என்ன ஆம்? லிஸெட் வலுக்கட்டாயமாக பள்ளியின் கேண்டினை நினைவுப் படுத்திக் கொண்டாள்.மூலையில் இருக்கும் நீளமான மேசையில்தான் ஜாலி பேர்வழிகளான து.ஊ யும் அவன் நண்பர்களும் உட்கார்வார்கள்.சிலநேரம் குறிப்பிட்ட சில பெண்களும் அங்கே உட்கார அனுமதிக்கப் படுவார்கள்.இன்று து.ஊ ஒருவேளை லிஸெட்டை அங்கே உட்கார அழைத்திருக்கலாம். லிஸெட்,ஏய் லிஸெட்! ஏனெனில் அந்த இளஞ்சிவப்பு முத்தம் கொடுத்த வாக்குறுதி அவனுக்குப் பிடித்திருக்கலாம்.

‘எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் எடுத்துக்கொள் லிஸெட்,நான் உன் பக்கத்திலேயேதான் இருப்பேன்’

பிறகு மிக விரைவில் – அது – முடிந்து விட்டது!

அவள் அடையாளம் சொல்ல வேண்டியிருந்த அந்தப்; பெண்ணின் உடல் அவளுக்குத் தொpந்த யாருமில்லை அவள் அம்மா உட்பட.

யிவெட்டியை விட கருமையான கூந்தல்.அதன் பழுப்பு அடிபாகம் மலிவான விக் போல பின்னப்பட்டிருந்தது. நெற்றி மிகவும் காயமுற்று வீங்கியிருந்தது.அப்புறம் கண்கள்- அதைப் பார்க்கவே முடியவில்லை – வாய் கிழிந்திருந்தது. முகம் கிட்டத்தட்ட புhpந்துகொள்ள முடியாமல் இருந்தது.அதை சாமனம் வைத்து சாpயாக்க வேண்டும் போலிருந்தது.

‘இல்லை,இது அம்மா இல்லை.’

லிஸெட் வெடுக்கென்று அழுத்தமாகக் கூறினாள்.மொலினா பிடித்துக் கொண்டிருந்த அவளது கையை விடுவித்துக் கொள்ள பலமாகத் திமிறினாள்.

இது சவக்கிடங்கு. இது பிணம்.

இது பெண்ணில்லை,பிணம்.அது எப்போதாவது பெண்ணாக இருந்திருக்கும் என்பதை நம்புவதே கடினம்.முகமும்,தலையும் மற்ற பாகங்கள் வௌ;ளைத் துணியால் போர்த்தப்பட்டிருந்தது.அதன் தோற்றத்தையும்,அளவையும் பார்க்கும்போது நிச்சயம் லிஸெட்டின் அம்மா இல்லை என்று வெளிப்படையாகத் தொpகிறது. அம்மாவை விட வயதானது. ஏதோ காரணத்தால் உடல் மிகவும் குறுகி,சிறியதாக ஆகியிருந்தது.கடற்கரையில் ஒதுங்கியிருக்கும் குப்பைப் போன்ற பாpதாபத்துக்குhpய பெண்.

நெஞ்சு வரை துணி போh;த்தியிருந்தது அதிர்‘;டம்தான்.இந்த வயதுடைய ஒரு பெண்ணின் மார்புகளையும்,வயிற்றையும்,யோனி மயிரையும்,தடித்தத் துடுப்பு போன்ற தொடைகளையும் பார்க்க யாரும் விரும்ப மாட்டார்கள். பையனகள் உடனே கிணடல் செய்து சிhpப்பார்கள். அழகில்லாத,தட்டையான மார்பகங்கள் கொண்ட,கொஞ்சம் குண்டான எந்தப் பெண்ணும் அவர்களது பார்வையிலிருந்து விலகித்தான் போக வேண்டியிருக்கும்.

‘இது அம்மா இல்லை.இது எனக்குத் தொpந்த யாருமில்லை’

மொலினா லிஸெட்டுக்கு மிக அருகில் நின்று கொண்டு இன்னும் ஒரு தடவை சாpயாகப் பார் என்று அறிவுறுத்தினாள். இந்தப் பெண்ணை அடையாளம் காண்பது மிகமிக முக்கியம்,அப்போதுதான் இப்படிப் பட்ட கொடூரத்தை அவளுக்கு செய்தவனை காவலர்களால் கண்டு பிடிக்கமுடியும் என்று மொலினா சொல்லிக்கொண்டிருந்தாள்.

லிஸெட் மொலினாவிடமிருந்து விடுவித்துக்கொண்டாள். ‘இது அம்மா இல்லை என்று சொல்லிவிட்டேன். அவ்வளவுதான்’.

வயிற்றில் இருந்து காரமாக,புளிப்பாக ஏதோ ஒன்று புரட்டிக் கொண்டு வந்ததை உள்ளுக்குள் விழுங்கினாள். மீண்டும் வாயைப் பொத்திக்கொண்டாள்.பற்கள் உருட்டிவிடப்பட்;ட தாயக் கட்டைகள் போல நடுங்கின.குளிர்பதனப் பெட்டி போல குளிர்ந்த, டால்கம் பவுடரும் வியர்வையும் கலந்த களைப்புட்டும் நெடியும் கொண்ட அருவருப்பான அந்த அறையிலிருந்து ஓடிவிட விரும்பினாள்.

இப்போது அந்தப் பெட்டியிலிருந்து சில உடமைகளை அவர்கள் காட்டிக் கொண்டிருந்தார்கள்.அழுக்கான,இரத்தக்கரைப் படிந்த கந்தல்கள்,அப்புறம் அவள் அம்மாவுடையதைப் போன்ற மிருதுவான தோலால் ஆன சிவப்பு கோட் ஒன்றும்.ஆனால் இது சேறுபடிந்து,கிழிந்து இருந்தது. ஒரு வருடத்திற்கு முன் ஜனவாp சந்தையில் அம்மா வாங்கிய கோட்டு போல அது ஆடம்பரமாக இல்லை.

இந்தப் பொருட்களையெல்லாம் இதற்கு முன் பார்த்ததே இல்லை என்று லிஸெட் சொன்னாள். ஆம் அவள் ;பார்த்ததில்லை.ஆஸ்துமா உள்ள கெய்‘hவைப் போல் அபத்தமாக மூச்சுவிட்டுக் கொண்டிருந்தாள்.மொலினா அவளது கையைப் பற்றிக் கொண்டு அவளை ஆறுதல் படுத்த,அமைதியாயிரு எல்லாம் சாpயாக விடும் என்று உளறிக் கொண்டிருந்தாள்.இது அவள் அம்மா என்று லிஸெட் நினைத்தால் சாp கொலையுண்டது யாரென்று கண்டுபிடிக்க வேறு வழிகள் உள்ளன என்றாள்.

கொலையுண்டவள்!இது புதிய வார்த்தை,பிணம்,பாதாள சாக்கடை போல் இதுவும்.

மொலினா அவளை கழிப்பிடத்திற்கு அழைத்துச்சென்றாள். லிஸெட்டுக்கு உடனே போக வேண்டியிருந்தது.அவளது உட்புறம் முழுவதும் எhpயும் திரவமாகி இருந்தது.அது உடனே வெளியேற்றப் பட வேண்டும். தொட்டியில் வாந்தியெடுக்க முயற்சித்தாள்.ஆனால் முடியவில்லை.மீண்டும் மீண்டும் கையைக் கழுவினாள்.கண்ணாடியில் ஒரு முகம்,இளஞ்சிவப்பு நிற கண்ணாடியிடன்,ஊதா நிற உதடுகளுடன் ஒரு சிறுமியின் முகம் ஊசலாடிற்று.இடது கண்ணைச் சுற்றியிருந்த தழும்பு கிட்டத்தில் பார்க்காத போது புலப்படவில்லை.அவள் கிட்டத்தில் பார்க்க விரும்புவும் இல்லை.மூன்று அறுவை சிகிச்சைகள் நடந்து விட்டன.ஒவ்வொரு அறுவை சிகிச்சைக்கு பின்னும் அம்மா ‘நன்றாகி விடுவாய்,நீ இப்போது இருப்பதை விட அழகாகி விடுவாய்’ என்று உறுதியளிப்பாள்.

அவர்கள் அவளை எங்கோ-குடும்ப சேவைமையத்துக்கு- அழைத்துச் செல்ல விரும்பினாள்.ஆனால் மீண்டும் பள்ளிக்கே திரும்பப் போக வேண்டுமென்று லிஸெட் சொன்னாள். தான் மீண்டும் பள்ளிக்குச் செல்ல தனக்கு உhpமை உண்டு என்றாள்.எனவே அவர்கள் ‘சாp இப்போதைக்கு பள்ளிக்குப் போ’என்றனர்.பிறகு அவளை பள்ளிக்கு அழைத்து வந்து விட்டனர்.மதிய உணவு இடைவேளைக்கான மணி அப்போதுதான் அடிக்கப்பட்டிருந்தது.அவள் வாpசையில் நிற்க அவசியமின்றி நோpடையாக கேண்டினுக்குள் தட்டு எடுத்துக் கொள்ளாமல் போட்டிருந்த மேல் கோட்டு சகிதமாகவே தெளிவில்லாத ஒருவிதமான கூச்சல் நிறைந்த அவளுடைய தோழிகள் நின்றிருந்த மேசையருகே சென்றாள்.அங்கே கெய்‘h இருந்தாள்.அவளை அக்கறையுடன் பார்த்தபடி ‘லிஸெட் ,ஏய் லிஸெட் என்ன ஆச்சு? உனக்கு ஒன்றுமில்லையே?’ என்றாள்.லிஸெட் குழப்பத்துடன் உரக்க சிhpத்தபடி,‘ஓ!எனக்கு என்ன?நான் நன்றாக இருக்கிறேன்’ என்றாள்.

••• 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கடவுளின் மனிதன் சாதத் ஹசன் மண்டோ ஆங்கிலத்தில்- காலித் ஹசன் தமிழில்- உதயசங்கர்

 

download (2)

சௌத்ரிமௌஜூ அவனுடைய ஹூக்காவைப் புகைத்துக் கொண்டு இலைகள் அடர்ந்த ஒரு அரசமரத்தின் கீழ் ஒரு கயிற்றுக்கட்டிலில் உட்கார்ந்திருந்தான். உச்சிப்பொழுது வெப்பமாயிருந்தது. ஆனால் வயல்களிலிருந்து வீசிய மெல்லிய தென்றல் ஹூக்காவின் ஊதா நிறப்புகையைக் கலைத்து விசிறியடித்தது.

அவன் அதிகாலையிலிருந்தே அவனுடைய வயலை உழுது கொண்டிருந்தான். ஆனால் இப்போது சோர்ந்து போய்விட்டான். சூரியன் சுட்டெரித்தான். ஆனால் அதெல்லாம் அவனுக்கு ஒரு பொருட்டில்லை. அவன் கிடைத்த அந்த ஓய்வை அநுபவித்துக் கொண்டிருந்தான்.

அவனுடைய ஒரே மகளான ஜீனா அவனுடைய மதிய உணவான சுட்டரொட்டியும் மோரும் கொண்டு வருவதை எதிர்பார்த்து அவன் அங்கே உட்கார்ந்து காத்துக் கொண்டிருந்தான். வீட்டு வேலைகளில் அவளுக்கு உதவி செய்ய யாரும் இல்லையென்றாலும் அவள் எப்போதும் நேரத்திற்கு வந்து விடுவாள். அவன் ஒரு கோபாவேசத்தில் அவளுடைய அம்மாவை இரண்டு வருடங்களுக்கு முன்பு விவாகரத்து செய்து விட்டான்.

ஜீனா அப்பாவை நன்றாகக் கவனித்துக் கொள்கிற கீழ்ப்படிதலுள்ள மகளாக இருந்தாள். அவள் ஒருபோதும் சும்மா இருந்ததில்லை. அவளுடைய வீட்டு வேலைகள் முடிந்து விட்டால் அவள் கை ராட்டினத்தில் நூல் நூற்கும் வேலையைச் செய்வாள். எப்போதாவது தான் அவளுடைய தோழிகளிடம் கதை பேசப்போவாள்.

சௌத்ரிமௌஜூக்கு அதிக நிலம் இல்லை. ஆனால் அவனுடைய எளிய தேவைகளுக்கு அதுவே போதுமானதாக இருந்தது. அந்தக் கிராமம் சிறியது. பல மைல் தூரத்தில் ரயில்நிலையம் இருந்தது. அந்த கிராமத்தை ஒரு மண்சாலை தான் இன்னொரு கிராமத்தோடு இணைத்தது. அதில் தான் சௌத்ரிமௌஜூ மாதம் இரண்டு முறை பலசரக்கு வாங்கப் போவான்.

அவன் மகிழ்ச்சியானவனாகவே எப்போதும் இருந்தான். ஆனால் அவனுடைய விவாகரத்திலிருந்து அவனுக்கு வேறு குழந்தைகள் இல்லை என்கிற விஷயம் அவனைத் தொந்திரவு செய்து கொண்டேயிருந்தது. இருந்தாலும் அவன் சிறந்த மதப்பற்றாளனாக இருந்ததால் இதெல்லாம் கடவுளின் சித்தம் என்று தன்னை ஆறுதல்படுத்திக் கொண்டு சமாளித்தான்.

அவனுடைய நம்பிக்கை ஆழமானது. ஆனால் அவனுக்கு மதத்தைப் பற்றி எதுவும் தெரியாது. கடவுள் இருக்கிறார், அவரை வணங்க வேண்டும். முகமது அவருடைய தீர்க்கதரிசி. குரான் முகமதுக்குக் கடவுள் வெளிப்படுத்திய செய்தி. அவ்வளவு தான் அவனுக்குத் தெரியும்.

அவன் ஒருபோதும் நோன்பு இருந்ததில்லை. தொழுகை நடத்தியதில்லை. உண்மையில் அந்த கிராமம் மிகச் சிறியது என்பதால் அதில் ஒரு மசூதி கூட இல்லை. மக்கள் தங்கள் வீடுகளில் தொழுதனர். பொதுவாகவே கடவுளுக்குப் பயந்தவர்களாக இருந்தனர். ஒவ்வொரு வீட்டிலும் குரான் ஒரு பிரதி இருந்தது. ஆனால் யாருக்கும் அதை எப்படி வாசிப்பது என்று தெரியாது. அது வீட்டிலுள்ள மேலடுக்கில் பொதிந்து வைக்கப்பட்டிருக்கும். எப்போதாவது யாராவது உறுதிமொழி எடுக்க வேண்டி வரும்போது பயன்படுத்தப்படும்.

திருமணங்களில் சடங்குகளை நடத்துவதற்காக ஒரு மௌல்வியை அந்தக் கிராமத்துக்கு வரவழைப்பார்கள். இறுதிச் சடங்குப் பிரார்த்தனைகளை கிராமத்துக்காரர்களே செய்து விடுவார்கள். அரபியில் இல்லை. அவர்களுடைய சொந்த மொழியான பஞ்சாபியில் பிரார்த்தனை செய்வார்கள். சௌத்ரிமௌஜூக்கு அந்த மாதிரியான நேரங்களில் கிராக்கி அதிகமாக இருக்கும். அவன் அவனுக்கென்று சுயமாக அஞ்சலி உரையை உருவாக்கிக் கொள்வான்.

உதாரணத்திற்கு,ஒரு வருடத்துக்கு முன்னால் அவனுடைய நண்பன் டினூ தன் மகனை இழந்து விட்டான். சௌத்ரிமௌஜூ கல்லறைக்குள் பிரேதத்தை இறக்கிய பிறகு கிராமத்தார்களிடம் இரங்கல் உரையை நிகழ்த்தினான்.

எப்பேர்ப்பட்ட அழகான, பலசாலியான இளைஞன் அவன்! அவன் எச்சிலைத் துப்பினால் அது இருபது அடி தூரம் தள்ளி விழும். அதேபோல அவனுடைய அடிவயிற்றில் அவ்வளவு சக்தி இருந்தது. அதனால் அவனால் இந்தக் கிராமத்திலிருக்கிற எந்த இளைஞனை விடவும் மிகத் தூரமாக மூத்திரம் பெய்ய முடியும். மல்யுத்தப்போட்டியில் அவன் ஒருபோதும் தோற்றதில்லை. நீங்கள் சட்டை பொத்தானைக் கழட்டுகிற மாதிரி அவன் எதிரியின் பிடியிலிருந்து மிகச் சுலபமாகத் தன்னை விடுவித்துக் கொள்வான்.

டினூ என் நண்பனே! உனக்கான தீர்ப்பு நாள் ஏற்கனவே இங்கே எழுதப்பட்டு விட்டது. நீ அதிலிருந்து தப்பிக்க முடியாது என்று நான் சந்தேகப்படுகிறேன். நீ கட்டாயம் இறந்து விடுவாய் என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் இவ்வளவு பெரிய அதிர்ச்சியைத் தாங்கிக் கொண்டு நீ எப்படி வாழப்போகிறாய்? ஓ….எத்தனை அழகிய வாலிபன் உன்னுடைய மகன்! எனக்கு உண்மையில் தெரியும் தங்க ஆசாரியின் மகள் நெட்டி அவனுடைய காதலைப் பெறுவதற்காகப் பலமுறை வசிய மந்திரத்தை ஏவினாள். ஆனால் அவன் அவளை நிராகரித்து விட்டான். அவளுடைய அழகும் இளமையும் அவனை மயக்கவில்லை. கடவுள் சொர்க்கத்தில் அவனுக்கு ஒரு எழில் அணங்கை வழங்கட்டும். அங்கும் அவன் தங்க ஆசாரியின் மகள் நெட்டியிடம் இருந்ததைப் போலவே அந்த எழில் அணங்கிடம் மயங்காமல் இருக்கட்டும். கடவுள் அவன் ஆத்மாவை ஆசீர்வதிக்கட்டும்.

இந்தச் சுருக்கமான உரையை மிக உணர்ச்சிகரமாக நிகழ்த்துவான். சௌத்ரிமௌஜூ உட்பட எல்லோருக்கும் அழுது விடுவார்கள்.

மௌஜூ அவனுடைய மனைவியை விவாகரத்து செய்ய வேண்டும் என்று முடிவு செய்த போது அவன் மௌல்விக்கு ஆளனுப்பவில்லை. அவனுக்கு மூத்தவர்களிடமிருந்து அவன் கேள்விப்பட்டிருந்தான். அதற்குத் தேவையானதெல்லாம் அவன் மூன்று முறை ‘ தலாக்…தலாக்…தலாக்..’ என்று சொல்ல வேண்டியது தான். உண்மையில் அதைத் தான் அவன் செய்தான். மறுநாள் அவன் வருத்தப்பட்டான். அதோடு அவனை நினைத்தே அவன் வெட்கப்பட்டான். கணவன், மனைவிக்குள் வருகிற தினசரிச் சச்சரவுக்கு மேல் பெரிய தீவிரமான எதுவும் அதில் கிடையாது. அது விவாகரத்தில் முடிய வேண்டிய அவசியமும் இல்லை.

அவனுடைய மனைவி பதானை அவன் விரும்பவில்லை என்று சொல்லமுடியாது. அவன் அவளை விரும்பினான். அவள் இளமையாக இல்லையென்றாலும் அவள் உடம்பு கட்டுக்கோப்பாக இருந்தது. அதோடு அவனுடைய மகளுக்குத் தாய் அவள். இதற்கு மேல் என்ன வேண்டும். ஆனால் அவன் அவளைத் திரும்பி அழைக்க எந்த முயற்சியும் செய்யவில்லை. அப்படியே வாழ்க்கை போய்க் கொண்டிருந்தது.

ஜீனா அவளுடைய அம்மா இளமையில் இருந்ததைப் போலவே அழகாக இருந்தாள். சிறு பெண்ணாக இருந்த அவள் இரண்டு வருடங்களில் இளமையான, கவர்ச்சியான, பெண்ணாக, வளர்ந்திருந்தாள். அவன் அடிக்கடி அவளுடைய திருமணத்தைப் பற்றிக் கவலைப்பட்டான். குறிப்பாக அந்த நேரங்களில் அவனுடைய மனைவியைத் தேடுவான்.

அவன் இப்போது அவனுடைய கயிற்றுக் கட்டிலில் சாய்ந்து கொண்டு இன்பமாகப் புகைத்துக் கொண்டிருந்தான். அப்போது

“ கடவுளின் ஆசீர்வாதங்களும், சாந்தியும் உன் மீது இறங்கட்டும்…”

என்ற குரல் கேட்டது.

அவன் திரும்பினான். அங்கே ஒரு வயதான மனிதர் தூய வெள்ளாடை உடுத்தி காற்றில் அலைபாயும் தாடியுடன், தோள்வரை வளர்ந்த நீண்ட தலைமுடியுடன், நின்று கொண்டிருப்பதைப் பார்த்தான். எங்கேயிருந்து அவர் முளைத்து வந்தார் என்று ஆச்சரியத்துடன் மௌஜூ அவரை வணங்கினான்.

அந்த மனிதர் உயரமாக இருந்தார். அவருடைய முகத்தில் பெரிய கருப்பிந்திய கண்கள் குறிப்பிடத்தகுந்ததாக இருந்தன.அவர் தலையில் ஒரு பெரிய வெள்ளைத் தலைப்பாகையும் அவருடைய ஒரு தோளில் மஞ்சள் துண்டும் அணிந்திருந்தார்.அவருடைய கையில் வெள்ளிப்பிடி போட்ட கைத்தடி வைத்திருந்தார். அவருடைய பூட்ஸ் மென்மையான தோலால் செய்யப்பட்டிருந்தது.

சௌத்ரிமௌஜூ உடனே அவரால் கவரப்பட்டான். இன்னும் சொல்லப்போனால் அவருடைய அழுத்தமான பெரியமனிதத் தோற்றத்தினால் அவனுக்கு வியப்பு விளிம்பிட்ட ஒரு ஆழ்ந்த மரியாதை அவர் மீது தோன்றியது. அவன் கட்டிலிலிருந்து எழுந்து,

“ நீங்கள் எங்கிருந்து எப்போது வந்தீர்கள்?”

என்று கேட்டான்.

அந்த மனிதர் புன்முறுவலோடு,

“ நாங்கள் கடவுளின் மனிதர்கள் சூன்யத்திலிருந்து வருவோம்.. எங்களுக்கு போவதற்கு வீடு கிடையாது. எந்தக் கணத்தில் வருவோம்.. எப்போது போவோம் என்று யாருக்கும் தெரியாது.. அந்தக் கடவுள் அவருடைய விருப்பத்தை நிறைவேற்ற எங்களுக்கு வழி காட்டுவார்.. அதேபோல அந்தக் கடவுள் தான் எங்களுடைய பிரயாணத்தை எங்கே நிறுத்தவேண்டும் என்றும் கட்டளையிடுவார்..”

என்று சொன்னார். சௌத்ரிமௌஜூவை இந்த வார்த்தைகள் மிகவும் பாதித்தன. அவன் அந்தப் புனிதரின் கையைப் பிடித்து மிகுந்த மரியாதையுடன் முத்தமிட்டு கண்களில் ஒற்றிக் கொண்டான். பின்பு,

“ என்னுடைய எளிய வீடு உங்களுடையது..”

என்று சொன்னான்.

அந்தப் புனிதர் புன்னகையுடன் கட்டிலில் உட்கார்ந்தார். அவருடைய இரண்டு கைகளாலும் கைத்தடியைப் பிடித்துக் கொண்டு அதில் தலை சாய்த்துக் கொண்டு,

“ உன்னுடைய எந்தக் காரியம் கடவுளின் கண்களுக்குப் பிடித்து அவர் இந்தப் பாவியை உன்னிடம் அனுப்பியிருக்கிறார் என்று யார் சொல்ல முடியும்? “

என்று சொன்னார். உடனே சௌத்ரிமௌஜூ,

“ மௌல்வி சாகிப்.. நீங்கள் கடவுளின் ஆணைப்படியா என்னைத் தேடி வந்தீர்கள்?”

என்று கேட்டான். அந்தப் புனிதர் தலையை உயர்த்தி கோபமான குரலில்,

“ அப்படின்னா உன்னுடைய கட்டளையின் பேரில் இங்கே வந்தேன் என்று நினைக்கிறீயா.. உனக்குக் கீழ்ப்படிவோமா இல்லை நாப்பது வருடங்களாக பணிவுடன் அந்தக் கடவுளைத் தொழுது வந்ததிருக்கிறோம். கடைசியில் அவர் அவருடைய அருளைப் பெற எங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் அவருக்குக் கீழ்ப்படிவோமா?..”

என்று சொன்னார். சௌத்ரிமௌஜூ பயந்து விட்டான். அவனுடைய எளிய கிராமத்துப் பாணியில் அவன் தேம்பிக் கொண்டே,

“ மௌல்வி சாகிப் நாங்கள் படிப்பறிவில்லாத மக்கள் இதைப்பற்றியெல்லாம் எதையும் அறியாதவர்கள்.. எங்களுக்கு எப்படி பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று கூடத் தெரியாது..உங்களைப் போன்ற கடவுளின் மனிதர்கள் கிடையாது.. அதனால் கடவுளின் கண்களில் பாவமன்னிபை நாங்கள் பார்த்ததேயில்லை..”

என்று சொன்னான்.

“ அதற்காகத் தான் நாம் இங்கிருக்கிறோம்..”

என்று அந்தப் புனிதர் பாதிக்கண்களை மூடிக் கொண்டே சொன்னார்.

சௌத்ரிமௌஜூ கீழே தரையில் உட்கார்ந்து கொண்டு விருந்தினரின் கால்களை அமுக்கி விட்டுக் கொண்டிருந்தான். அப்போது ஜீனா அவனுடைய சாப்பாட்டுடன் அங்கு வந்தாள். அவள் அந்த அந்நியரைப் பார்த்தவுடன் அவளுடைய முகத்தை மூடிக் கொண்டாள்.

“ யார் அது சௌத்ரிமௌஜூ? “

“ என்னுடைய மகள்..மௌல்வி சாகிப்..”

மௌல்வி சாகிப் ஓரக்கண்ணால் ஜீனாவைப் பார்த்துக் கொண்டே,

“ எங்களைப் போன்ற பிச்சைக்காரங்க முன்னால ஏன் அவள் முகத்தை மூடணும்னு கேளு..”

என்று சொன்னார்.

“ ஜீனா.. மௌல்வி சாகிப் கடவுளோட விஷேசத் தூதுவர்.. முக்காட்ட எடுத்துரு..”

என்று அவன் சொன்னான். ஜீனா அவளிடம் சொல்லப்பட்டதைச் செய்தாள். மௌல்வி சாகிப் அப்படியே அவளை மேலும் கீழும் அளவெடுத்துக் கொண்டே,

“ உன்னோட மகள் அழகாக இருக்கிறாள்..சௌத்ரிமௌஜூ..”

என்று சொன்னார். ஜீனா வெட்கப்பட்டாள். மௌஜு,

“ அவள் அவளோட அம்மா மாதிரி..”

என்று சொன்னான். ஜீனாவின் இளமை பொங்கும் கன்னியுடலை நோட்டமிட்டுக் கொண்டே,

“ அவளோட அம்மா எங்கே? “

என்று கேட்டார். அதற்கு எப்படிப் பதில் சொல்வதென்று தெரியாமல் சௌத்ரிமௌஜூ தயங்கினான். திரும்பவும் மௌல்வி சாகிப்,

“ அவளோட அம்மா எங்கே? “

என்று கேட்டார். மௌஜூ வேகவேகமாக,

“ அவ இறந்துட்டா..”

என்று சொன்னான். அதைக்கேட்டு திடுக்கிட்ட ஜீனாவைக் கவனமாகப் பார்த்தார். பிறகு அவர்,

“ நீ பொய் சொல்றே..”

என்று முழங்கினார். மௌஜூ அவர் காலில் விழுந்தான். குற்றவுணர்ச்சியுடன்,

“ ஆமாம். நான் உங்க கிட்ட பொய் சொன்னேன்..தயவு செய்ஞ்சு என்ன மன்னிச்சிருங்க.. நான் ஒரு பொய்யன்.. உண்மை என்னன்னா.. நான் அவளை விவாகரத்து பண்ணிட்டேன்..மௌல்வி சாகிப்..”

என்று சொன்னான்.

“ நீ ஒரு பெரிய பாவி.. அந்தப் பெண் செய்த தவறு தான் என்ன? “

“ எனக்குத் தெரியல..மௌல்வி சாகிப்.. அது வந்து உண்மையிலே ஒண்ணுமில்லை..ஆனா கடைசியில அவளை விவாகரத்து செய்யும்படியாயிருச்சி.. உண்மையில நான் ஒரு பாவி.. நான் மறுநாளே என்னோட தப்ப உணர்ந்துட்டேன்.. ஆனால் ரெம்பத் தாமதமாகியிருச்சி..அதுக்குள்ளே அவ அவளோட அப்பாஅம்மாகிட்ட போயிட்டா..”

மௌல்வி சாகிப் தன்னுடைய வெள்ளிக் கைப்பிடி போட்ட கைத்தடியினால் மௌஜூவின் தோள்களைத் தொட்டு,

“ கடவுள் பெரியவர்.. அவர் கருணையும் அன்பும் கொண்டவர்.. அவர் விரும்பினால் எல்லாத் தவறுகளையும் சரி செய்து விடலாம்.. அது தான் அவருடைய கட்டளையாக இருந்தால் அவருடைய இந்த வேலைக்காரன் உன்னை உன்னுடைய மீட்சியை நோக்கி வழி நடத்தவும் உனக்கு மன்னிப்பு வழங்கவும் சக்தி படைத்தவனாகிறான்..”

என்று சொன்னார். முழுமையான பணிவுடனும் நன்றியுடனும் சௌத்ரி மௌஜூ அவருடைய கால்களில் விழுந்து அழுதான். மௌல்வி சாகிப் ஜீனாவைப் பார்த்தார். அவளுடைய கன்னங்களிலும் கண்ணீர் வழிந்தோடியது.

“ இங்கே.. வா..பெண்ணே..” என்று கட்டளையிட்டார் அவர்.

அவருடைய குரலில் அப்படியோரு அதிகாரம் இருந்தது. அவளால் அதற்குக் கீழ்ப்படியாமல் இருக்க முடியவில்லை.அவள் சாப்பாட்டை ஓரமாக வைத்து விட்டு அவரை நோக்கி நடந்தாள். மௌல்வி சாகிப் அவளுடைய கைகளைப் பற்றி இழுத்து,

“ உட்கார்..”

என்று சொன்னார்.

அவள் கீழே தரையில் உட்காரப்போனாள். ஆனால் மௌல்வி சாகிப் அவளை அவர் பக்கமாக இழுத்து,

“ என் பக்கத்தில இங்கே உட்கார்..”

என்று உத்தரவிட்டார். ஜீனா உட்கார்ந்தாள். மௌல்வி சாகிப் அவருடைய கைகளால் அவளுடைய இடுப்பைச் சுற்றி வளைத்து அவளை இறுக்கிப் பிடித்துக் கொண்டே,

“ சரி.. எங்களுக்காக என்ன கொண்டு வந்திருக்கிறாய்..? ”

என்று கேட்டார். ஜீனா விலக நினைத்தாள். ஆனால் மௌல்வி சாகிப்ப்பின் பிடி கிடுக்கிப் பிடியாக இருந்தது.

“ சுட்ட ரொட்டியும் மோரும் கொஞ்சம் கீரையும் கொண்டு வந்திருக்கேன்..”

என்று தாழ்ந்த குரலில் சொன்னாள். மௌல்வி அவளுடைய மெல்லிய இடையை மறுபடியும் ஒரு தடவை பிசைந்தார். பின்பு,

“ அப்படியா..போ.. போய் அதைக் கொண்டு வந்து எங்களுக்குச் சாப்பாடு போடு..”

ஜீனா எழுந்தவுடன் மௌல்வி சாகிப் தன்னுடைய கைத்தடியினால் மௌஜூவின் தோள்களில் மெல்லத் தட்டி,

“ மௌஜூ.. என்னுடைய கைகளைக் கழுவ உதவி செய்..”

மௌஜூ அருகிலிருந்த கிணற்றுக்குச் சென்றான். ஒரு வாளியில் நல்ல தண்ணீரைக் கொண்டு வந்தான். ஒரு உண்மையான சிஷ்யனைப் போல அவன் மௌல்வி சாகிப் அவருடைய கைகளைக் கழுவ உதவினான். ஜீனா உணவை அவருக்கு முன்னால் வைத்தாள்.

மௌல்வி சாகிப் எல்லாவற்றையும் சாப்பிட்டு விட்டார். பின்பு அவர் அவருடைய கைகளைக் கழுவத் தண்ணீர் ஊற்றும்படி ஜீனாவுக்கு ஆணையிட்டார். அவள் கீழ்ப்படிந்தாள். அவருடைய செய்கையில் அப்படி ஒரு அதிகாரம் இருந்தது.

மௌல்வி சாகிப் சத்தமாக ஏப்பமிட்டார். அதை விட சத்தமாக கடவுளுக்கு நன்றி சொன்னார். ஈரக்கைகளால் அவருடைய தாடியைக் கோதி விட்டுக் கொண்டே கட்டிலில் சாய்ந்தார். ஒரு கண்ணால் ஜீனாவையும், இன்னொரு கண்ணால் அவளுடைய அப்பாவையும் கவனித்தார். அவள் சாப்பாட்டுப்பாத்திரங்களை எடுத்துக் கொண்டு போனாள். மௌல்வி சாகிப் மௌஜூவிடம்,

“ சௌத்ரி.. நாம் சற்று ஓய்வெடுக்கப் போகிறோம்..”

என்று சொன்னார்.

சௌத்ரி அவருடைய கால்களையும் பாதங்களையும் கொஞ்சநேரம் அமுக்கி விட்டான். அவர் உறங்கிவிட்டார் என்பதை உறுதிசெய்த பிறகு அங்கிருந்து நகர்ந்து அவனுடைய ஹூக்காவை பற்ற வைத்தான். அவன் சந்தோஷமாக இருந்தான். அவனுடைய நெஞ்சிலிருந்து மிகப்பெரிய பாரத்தை அகற்றியது போல அவன் உணர்ந்தான். அவனுக்குத் தெரிந்த எளிய வார்த்தைகளால் கருணையின் தேவர்களில் ஒருவரை மௌல்வி சாகிப்பின் வடிவில் கடவுள் அவனிடம் அனுப்பி வைத்தற்காக இதயபூர்வமாக நன்றி சொன்னான்.

மௌல்வி சாகிப் ஓய்வெடுப்பதையே சற்று நேரம் அங்கேயே இருந்து பார்த்துக் கொண்டிருந்து விட்டு, அவனுடைய வயலுக்கு வேலை செய்யப் போனான். அவனுடைய பசி கூட அவனுக்குத் தெரியவில்லை. உண்மையில் மௌல்வி சாகிப்புக்கு உணவளிக்கும் கௌரவமே அவனுக்குப் பெரிய விஷயமாக இருந்தது.

மாலையில் அவன் வேலை முடிந்து திரும்பியபோது மௌல்வி சாகிப் அங்கில்லாதது மிகப் பெரிய ஏமாற்றமாக இருந்தது. அவன் அவனையே சபித்துக் கொண்டான். அந்த இடத்தை விட்டு போய் அவன் கடவுளின் மனிதரை அவமானப்படுத்தி விட்டான். ஒருவேளை போவதற்கு முன்னால் அவர் அவனைச் சபித்து விட்டும் போயிருக்கலாம். அவன் பயத்தில் நடுங்கினான். கண்ணீர் அவனுடைய கண்களில் குளமாய் கட்டியது.

அவன் கிராமத்தில் மௌல்வி சாகிப்பைத் தேடிப்பார்த்தான். ஆனால் அவரைக் காணவில்லை. மாலை இரவினுள் மூழ்கிக் கொண்டிருந்தது. ஆனால் மௌல்வி சாகிப்பைப் பற்றி ஒரு துப்பும் தெரியவில்லை. அவனுடைய வீட்டை நோக்கி ஏதோ இந்த உலகத்தையே அவனுடைய தோள்களில் சுமப்பதைப் போல அவன் தலையைக் குனிந்து கொ்ண்டே நடந்தான். கிராமத்திலிருந்து இரண்டு இளைஞர்களை அவன் எதிர்கொண்டான். அவர்கள் பயந்து போயிருந்தார்கள். முதலில் அவர்கள் என்ன நடந்ததென்று சொல்லவில்லை. அவன் வற்புறுத்திக் கேட்டபிறகே அவர்களுடைய கதையைச் சொன்னார்கள்.

கொஞ்ச நாளைக்கு முன்னால் அவர்கள் கடுமையான நாட்டுச்சாரயத்தைக் காய்ச்சி வடித்து மண்பானையில் ஊற்றி ஒரு மரத்தின் அடியில் புதைத்து வைத்தார்கள். அன்று மாலை அவர்கள் அந்த இடத்துக்குப் போனார்கள். அவர்களுடைய விலக்கப்பட்ட செல்வத்தைத் தோண்டியெடுத்தார்கள். அதைக் குடிக்கப்போகும் சமயம் ஒரு வயதான மனிதர் ஒரு விசித்திரமான ஓளி முகத்தில் வீச திடீரென அந்த இடத்தில் பிரசன்னமாகி அவர்கள் அங்கே என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று கேட்டார்.

அவர்கள் செய்யவிருந்த பாவச்செயலுக்காக அவர்களைக் கடுமையாக ஏசினார். கடவுளே மனிதர்கள் தொடவேக்கூடாது என்று விலக்கிவைத்திருந்ததைக் எப்படி அவர்கள் குடிக்க நினைக்கலாம் என்று கேட்டார். அவர்கள் திகிலடைந்துபோய் அந்த இடத்தை விட்டு மண்பானையை அங்கேயே விட்டு விட்டு ஓடிப்போய் விட்டார்கள்.

சௌத்ரி மௌஜூ அவர்களிடம் சொன்னார், அந்த விசித்திரமான ஒளி வீசும் வயதான மனிதர் யார் தெரியுமா அவர் கடவுளின் புனிதர். அவர் அவமானப்படுத்தப் பட்டதால் அநேகமாக அந்த முழுக்கிராமத்தின் மீதும் சாபம் விட்டுப் போயிருக்கலாம்.

கடவுள் நம்மை காப்பாற்றட்டும் என் மக்களே…கடவுள் நம்மை காப்பாற்றட்டும்…..என் மக்களே.. என்று அவன் முணுமுணுத்தவாறே அவனுடைய வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான். ஜீனா வீட்டிலிருந்தாள். ஆனால் அவன் அவளிடம் பேசவில்லை. மௌல்வி சாகிப்பின் சாபத்திலிருந்து தப்பமுடியாது என்று அவன் மனதார நம்பினான்.

ஜீனா மௌல்வி சாகிப்பிற்கும் சேர்த்துக் கூடுதல் உணவு தயாரித்திருந்தாள்.

அவள் “ அப்பா மௌல்வி சாகிப் எங்கே? ” என்று கேட்டாள்.

“ போய்ட்டாரு.. அவர் போய்ட்டாரு.. எப்படி கடவுளின் மனிதரால் நம்மைப் போன்ற பாவிகளோடு சேர்ந்து இருக்க முடியும்? “ என்று வருத்தந்தோய்ந்த குரலில் அவன் சொன்னான்.

ஜீனாவும் வருத்தப்பட்டாள். ஏனென்றால் மௌல்வி சாகிப் அவளுடைய அம்மாவை திரும்பி வரவழைக்க ஒரு வழி கண்டுபிடிப்பதாக வாக்களித்திருந்தார். இப்போதென்றால் அவர் போய் விட்டார் அவளை அவளுடைய அம்மாவுடன் சேர்த்து வைப்பதற்கு. இனி யாரிருக்கிறார்கள்? ஜீனா கீழே மணைப்பலகையில் உட்கார்ந்தாள். உணவு குளிர்ந்து கொண்டிருந்தது.

கதவை நோக்கி நெருங்கி வரும் காலடி ஓசையை அவர்கள் கேட்டார்கள். அப்பாவும் மகளும் துள்ளியெழுந்தார்கள். திடீரென மௌல்வி சாகிப் உள்ளே நுழைந்தார். கிளியாஞ்சட்டி விளக்கின் மங்கலான வெளிச்சத்தில் அவர் தடுமாறிக் கொண்டே வருவதைப் பார்த்துவிட்டாள். அவருடைய கையில் ஒரு சிறிய மண்கலயத்தை வைத்திருந்தார்.

மௌஜூ அவர் கட்டிலில் உட்காருவதற்கு உதவி செய்தான். அவனிடம் அந்த மண்கலயத்தைக் கொடுத்துக்கொண்டே மௌல்வி சாகிப்,

” இன்று கடவுள் நம்மை பெருஞ்சோதனைக்கு ஆட்படுத்திவிட்டான். எதிர்பாராதவிதமாக உன் கிராமத்திலிருந்து கொடிய பாவமான சாரயம் குடிக்கவிருந்த இரண்டு இளைஞர்களைச் சந்தித்தேன். நாம் அவர்களை நிந்தித்த போது அவர்கள் ஓடி விட்டார்கள். நாம் மிகுந்த துக்கத்திலிலாழ்ந்து விட்டோம். அவ்வளவு இளம்வயதில் இவ்வளவு கொடிய பாவமா? ஆனால் அவர்களுடைய இளமைதான் அவர்களை இந்தப்பாவத்தைச் செய்யத் தூண்டியது என்று நாம் உணர்ந்தோம். கடவுளின் மேலோக நீதிமன்றத்தில் அவர்களை மன்னித்தருளுமாறு நாம் பிரார்த்தனை செய்தோம். நமக்கு என்ன பதில் கிடைத்ததென்று உனக்குத் தெரியுமா? “ என்று கேட்டார்.

” தெரியாது..” என்று உணர்ச்சிவயப்பட்டு சௌத்ரி மௌஜூ கூறினான்.

“ அந்த பதில் என்னவென்றால் நீ அவர்களுடைய பாவத்தின் விளைவுகளை எதிர்கொள்ளத் தயாராய் இருக்கிறாயா? அதற்கு நாம் சொன்னோம் சரி எல்லாம்வல்ல இறைவனே. அதன் பிறகு நாம் குரலைக் கேட்டோம்.. இந்த மண்கலயத்திலுள்ள அத்தனை சாராயத்தையும் குடிக்கும்படி ஆணையிடுகிறேன். நாம் அந்தப் பையன்களை மன்னித்தருளுவோம்..”

மௌஜூக்கு மயிர்க்கூச்செரிந்தது. “ பிறகு நீங்கள் அதைக் குடித்தீர்களா?”

மௌல்வியின் நாக்கு இன்னும் குழறியது, “ ஆமாம் நாம் குடித்தோம்.. அந்த இளம்பாவிகளின் ஆத்மாக்களைக் காப்பாற்றுவதற்காக..இந்த உலகத்தில் வணங்கவேண்டிய ஒரே ஆளான கடவுளின் கண்களுக்கு முன்னால் மதிப்பைச் சம்பாதிப்பதற்காக.. இன்னும் கொஞ்சம் மீதமிருக்கிறது அதையும் நாம் தான் குடிக்கவேண்டுமென ஆணையிடப்பட்டிருக்கிறோம்.. இப்பொழுது அதைக் கவனமாகப் பத்திரப்படுத்து.. ஒரு சொட்டுகூட வீணாகிவிடக்கூடாது..பாத்துக்கோ..”

மௌஜூ அந்த மண்கலயத்தை எடுத்தான். அதனுடைய வாயை ஒரு சுத்தமான துணியினால் மூடிக்கட்டினான். பின்னர் அதை அவனுடைய எளிய வீட்டிலுள்ள ஒரு இருட்டறையில் வைத்தான். அவன் திரும்பிய போது மௌல்வி சாகிப் கட்டிலில் கைகால்களைப் பரப்பிக் கொண்டு கிடந்தார். ஜீனா அவருடைய தலையைப் பிடித்து விட்டுக் கொண்டிருந்தாள்.அவர் அவளிடம் சொல்லிக் கொண்டிருந்தார், “ யார் மற்றவர்களுக்கு உதவி செய்கிறார்களோ அவர்களே கடவுளின் அன்புக்கு பாத்திரமாவார்கள்.. அவர் இந்தக் கணத்தில் உன்மீது பிரீதியோடு இருக்கிறார்.. நாமும் உன்மீது பிரீதியோடு இருக்கிறோம்..”

பிறகு மௌல்வி சாகிப் அவருக்கு பக்கத்தில் அவளை உட்காரவைத்து அவளுடைய நெற்றியில் ஒரு அழுத்தமான முத்தத்தைப் பதித்தார். அவள் எழுந்து கொள்ள முயற்சி செய்தாள் ஆனால் அவளால் அவரிடமிருந்து விடுவித்துக் கொள்ள முடியவில்லை. மௌல்வி சாகிப் அவளைக் கட்டியணைத்துக் கொண்டு மௌஜூவிடம் சொன்னார், ” சௌத்ரி நான் உன் மகளுடைய உறங்கிக் கொண்டிருக்கும் விதியை எழுப்புகிறேன்..”

மௌஜூ மிகுந்த உணர்ச்சிவசப்பட்டான். அவனால் நன்றியைக் கூட சரியாகச் சொல்ல முடியவில்லை. அவனால் சொல்ல முடிந்ததெல்லாம்,

“ எல்லாம் உங்களுடைய பிரார்த்தனைகளாலும் அன்பினாலும் வந்தது…”

அவ்வளவு தான். மௌல்வி சாகிப் ஜீனாவை அவருடைய நெஞ்சோடு சேர்த்து இறுக்கிக் கொண்டு சொன்னார், “ உண்மையில் கடவுள் தன்னுடைய அனுக்கிரகத்தை உனக்கு அளித்துவிட்டார். ஜீனா நாளை நாம் உனக்கு புனித பிரார்த்தனையைச் சொல்லிக் கொடுப்போம்.. நீ அதை எப்போதும் சொல்லிக் கொண்டிருந்தால் கடவுளின் கண்களுக்கு எப்போதும் நீ ஏற்றவளாக இருப்பாய்..”

மறுநாள் மௌல்வி சாகிப் தாமதமாக எழுந்தார். மௌஜூ ஒருவேளை அவன் அவருக்குத் தேவைப்படலாமோ என்று பயந்து வயலுக்குப் போகவில்லை. கடமையுணர்வோடு அவன் காத்திருந்தான். மௌல்வி கண் விழித்தபோது அவர் தன்னுடைய முகத்தைக் கழுவவும், கைகளைக் கழுவவும் அவன் உதவினான். அவருடைய விருப்பத்திற்கிணங்க அந்த மண்கலயத்தை எடுத்துக் கொண்டு வந்தான்.

மௌல்வி சாகிப் முணுமுணுத்தபடியே ஒரு தொழுகை நடத்தினார். பிறகு மண்கலயத்தின் வாயை மூடியிருந்த துணியை அகற்றி விட்டு மூன்று முறை பானைக்குள் ஊதினார். மூன்று பெரிய கோப்பைகள் நிறைய மதுவைக் குடித்தார். பிறகு இன்னொரு பிரார்த்தனையை முணுமுணுத்தார். வானத்தை அண்ணாந்து பார்த்து முழக்கமிட்டார்.

“ கடவுளே நீ எங்களைச் சோதிக்கும் சோதனையை நாங்கள் விரும்புவதாக நீ நினைத்து விடக்கூடாது..”

பிறகு அவர் மௌஜூவைப் பார்த்து, “ சௌத்ரி, நீ உடனே உன்னுடைய மனைவியின் கிராமத்துக்குப் போய் அவளை அழைத்துக்கொண்டு வரவேண்டும் என்று இப்போதுதான் புனிதகட்டளையை நாம் பெற்றோம்… நாம் எதிர்பார்த்திருந்த சமிக்ஞை கிடைத்துவிட்டது…” என்று சொன்னார்.

மௌஜூவுக்குப் புல்லரித்தது. அவன் குதிரையின் மீது ஏறினான். மறுநாள் அவளை அழைத்து வருவதாக சத்தியம் செய்தான். ஜீனாவிடம் மௌல்வி சந்தோஷமாகவும் வசதியாகவும் இருப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்து கொடுக்கும்படி அறிவுறுத்தினான்.

ஜீனாவின் தந்தை போனபிறகு அவள் வீட்டுவேலைகளில் மூழ்கி விட்டாள். மௌல்வி சாகிப் நிதானமாகக் குடித்துக் கொண்டேயிருந்தார். பிறகு அவர் சட்டைப்பையிலிருந்து ஜெபமாலையை எடுத்து அவருடைய விரல்களில் உருட்ட ஆரம்பித்தார். ஜீனா வேலைகளையெல்லாம் முடித்தவுடன் அவர் அவளைச் மேனியலம்பும் சடங்குகளைச் செய்யச் சொன்னார்.

அவள் அப்பாவியாக “ மௌல்விசாகிப், எப்படி அதைச் செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியாது..” என்று சொன்னாள்.

அவசியமான மதச்சடங்குகளைப் பற்றிய அறிவு கூட இல்லாமைக்காக அவளை மென்மையாக மௌல்விசாகிப் கடிந்து கொண்டார். பின்பு அவர் அவளுக்கு மேனியலம்பும் சடங்கை எப்படிச் செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார். இந்த சிக்கலான பயிற்சி உடல்களின் நெருக்கம் மூலம் நிகழ்ந்தேறியது.

மேனியலம்பும் சடங்குக்குப் பின்னால் மௌல்விசாகிப் பிரார்த்தனைபாயைக் கேட்டார்.

அந்த வீட்டில் அப்படியொன்று இல்லை. மௌல்விசாகிப் அதிருப்தியடைந்தார். அவர் அவளிடம் ஒரு படுக்கைவிரிப்பைக் கொண்டுவரும்படி சொன்னார். உள்ளறையில் அதைத் தரையில் விரித்து ஜீனாவை உள்ளே வரும்படி ஆணையிட்டார். அதோடு வரும்போது அந்தப்பானையையும், கோப்பையையும் கொண்டு வரச் அறிவுறுத்தினார்.

மௌல்விசாகிப் கோப்பையில் நிறைய ஊற்றி, அதில் பாதியைக் குடித்தார். பிறகு தன் விரல்களில் ஜெபமாலையை உருட்ட ஆரம்பித்தார். ஜீனா அதை மௌனமாகக் கவனித்துக் கொண்டிருந்தாள்.

வெகுநேரத்துக்கு மௌல்விசாகிப் ஜெபமாலையை சுறுசுறுப்பாக உருட்டிக்கொண்டிருந்தார். அவருடைய கண்கள் மூடியிருந்தன. பிறகு அவர் கோப்பைக்குள் மூன்றுமுறை ஊதி விட்டு ஜீனாவைக் குடிக்குக்கும்படிச் சொன்னார்.

ஜீனா நடுங்கும்கரங்களால் அதைக் கையில் எடுத்தாள். மௌல்விசாகிப் இடிக்குரலில் சொன்னார்,” நீ இதைக் குடிக்கும்படி நாம் கட்டளையிடுகிறோம். உன்னுடைய எல்லாவேதனைகளும், துன்பங்களும் ஒரு முடிவுக்கு வந்துவிடும்.”

ஜீனா அந்தக்கோப்பையை அவளுடைய உதடுகளுக்குக்கருகில் கொண்டு போனாள். ஒரே மூச்சில் அதைக் குடித்துவிட்டாள். மௌல்விசாகிப் புன்னகைத்தார்.

“ நாம் நம்முடைய சிறப்புப்பிரார்த்தனையைத் தொடரப்போகிறோம்…ஆனால் எப்பொழுதெல்லாம் நாம் சுட்டுவிரலை உயர்த்துகிறோமோ அப்பொழுதெல்லாம் பானையிலிருந்து அரைக்கோப்பை ஊற்றிக் குடிக்கவேண்டும்..தெரிந்ததா?”

அவர் அவளை பதில்சொல்ல அநுமதிக்கவில்லை. அவள் ஆழ்ந்த மயக்கத்துக்குள் போய்க்கொண்டிருந்தாள். ஜீனாவின் வாயில் ஒரு மோசமான ருசி. நெஞ்சில் தீ எரிவதைப்போன்ற எரிச்சல். அவள் எழுந்து சென்று வாளிவாளியாய் குளிர்ந்த நீரைக் குடிக்க விரும்பினாள். ஆனால் அதற்கு அவளுக்குத் தைரியமில்லை. திடீரென்று மௌல்விசாகிப்பின் சுட்டுவிரல் உயர்ந்தது. அவள் மனோவசியம் செய்யப்பட்டவளைப் போல ஏற்கனவே மௌல்விசாகிப் சொல்லியமாதிரி அரைக்கோப்பை ஊற்றி ஒரே மடக்கில் குடித்தாள்.

மௌல்விசாகிப் தொடர்ந்து பிரார்த்திக் கொண்டிருந்தார்.அவளால் ஜெபமாலையின் மணிகள் ஒன்றோடொன்று உரசும் சத்தத்ததைக் கேட்க முடிந்தது. அவளுடைய தலை சுற்றியது. அவள் உறக்கம் வருவதைப்போல உணர்ந்தாள். ஒரு முகம் மழிக்கப்பட்ட இளைஞனின் மடியில் இருப்பதாகவும், அவன் அவளிடம் அவளைச் சொர்க்கத்துக்கு அழைத்துச் சென்று கொண்டிருப்பதாகவும் சொல்லிக்கொண்டிருப்பதைப் போல அவளுக்கு ஒரு தெளிவில்லாத, கிட்டத்தட்ட தன்னுணர்வில்லாத உணர்வு தோன்றியது.

அவள் உணர்வுக்கு வந்தபோது அவள் உள்ளே தரையில் படுத்திருந்தாள். மங்கலான கண்களால் சுற்றிலும் பார்த்தாள். ஏன் அவள் அங்கே படுத்துக்கிடக்கிறாள்? எப்போதிருந்து? எல்லாமே பனிமூட்டமாக இருந்தது. மறுபடியும் தூங்க விரும்பினாள். ஆனால் அவள் எழுந்துவிட்டாள். மௌல்விசாகிப் எங்கே? அப்புறம் அந்த சொர்க்கம் எங்கே மறைந்து போனது?

அவள் திறந்தவெளி முற்றத்திற்குப் போனாள். கிட்டத்தட்ட சாயங்காலமாகி விட்டதைப் பார்த்து ஆச்சரியப்பட்டாள். மௌல்விசாகிப் மேனியலம்பும் சடங்கைச் செய்து கொண்டிருந்தார். அவள் வருகிற சத்தம் கேட்டு புன்னகைமுகத்துடன் திரும்பினார் மௌல்விசாகிப். அவள் அறைக்குத் திரும்பி தரையில் அமர்ந்து அவளுடைய அம்மா வீட்டுக்குத் திரும்பி வரப்போவதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள். இன்னும் ஒரு இரவு இருக்கிறது.அவளுக்கு ரெம்பப் பசித்தது. ஆனால் அவள் சமையல் செய்ய விரும்பவில்லை. அவளுடைய மனம் முழுவதும் விளங்காத, பதிலில்லாத கேள்விகள் நிறைந்திருந்தன.

திடீரென மௌல்விசாகிப் கதவருகில் தோன்றினார். “ நாம் உன்னுடைய அப்பாவுக்காக விசேசபிரார்த்தனைகள் செய்ய வேண்டும். நாம் இரவு முழுவதும் கபர்ஸ்தானில் இருந்து பிரார்த்தனை செய்துவிட்டு காலையில் திரும்பி வருவோம். உனக்காகவும் நாம் பிரார்த்தனை செய்வோம்..” என்று சொன்னார்.

அவர் மறுநாள் காலையில் தோன்றினார். அவருடைய கண்கள் சிவந்திருந்தன. பேசும்போது லேசாக வாய் குழறியது. அவரால் நிலையாக நிற்க முடியாமல் தள்ளாடிக் கொண்டிருந்தார். அவர் வெளிமுற்றத்துக்கு நடந்துபோய் ஜீனாவை உணர்ச்சியுடன் இறுக்கிக் கட்டிப் பிடித்து முத்தமிட்டார். ஜீனா மனைப்பலகையில் உடகார்ந்துகொண்டு கடந்த இருபத்திநாலு மணி நேரத்தில் நடந்த புதிரான, அரைகுறைஞாபகங்களோடு உள்ள நிகழ்வுகளை புரிந்துகொள்ள முயற்சித்துக்கொண்டிருந்தாள். அவளுடைய அப்பா திரும்பி வரவேண்டும் என்று விரும்பினாள். இரண்டுவருடங்களாக வீட்டை விட்டு போயிருந்த அம்மாவும் திரும்பி வரவேண்டும் என்று விரும்பினாள். அப்புறம் அங்கே அந்த சொர்க்கம்… அவளை அழைத்துக் கொண்டு போயிருந்தது என்ன வகையான சொர்க்கம்? அப்புறம் மௌல்விசாகிப்…. அவரா..அவளை சொர்க்கத்துக்கு கூட்டிப் போனது…அப்படியிருக்காது.. ஏன்னா ஒரு இளைஞன் அதுவும் தாடியில்லாதவனாக அவள் ஞாபகத்தில் வந்தான்.

மௌல்விசாகிப் அவளைப்பார்த்து, “ ஜீனா உன்னோட அப்பா இன்னும் வரல்ல..” என்று சொன்னார். அவள் ஒன்றும் சொல்லவில்லை.

அவர் திரும்பவும், “ இரவு முழுவதும் உன்னோட அப்பா என்னுடன் பிரார்த்தனையில் இருந்தான்..இப்பொழுது உன்னுடைய அம்மாவுடன் வந்திருக்கவேண்டுமே…”. என்று சொன்னார்.

ஜீனாவால் சொல்லமுடிந்ததெல்லாம் இதுதான்,” எனக்குத் தெரியல.. அவர் வந்துக்கிட்டிருப்பாரு..அம்மாவைக் கூட்டிக்கிட்டு..ஆனா உண்மையில் எனக்கு ஒண்ணும் தெரியாது…”

முன்கதவு திறந்தது. ஜீனா எழுந்தாள். அங்கே அவளுடைய அம்மா. இருவரும் ஒருவர் கைகளில் ஒருவர் விழுந்தனர். இருவருக்கும் கண்ணீர் பெருகியது. மனைவியின் பின்னால் மௌஜூவும் வந்தான். மிகுந்த மரியாதையுடன் மௌல்வி சாகிப்பை வணங்கினான். பின்னர் தன்னுடைய மனைவியிடம், “ பதான் நீ மௌல்விசாகிப்பை வணங்கவில்லையே….” என்று சொன்னான்.

பதான் மகளிடமிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, கண்களைத் துடைத்தாள். பின்னர் மௌல்விசாகிப்பை வணங்கினாள். அதுவரை தன்னுடைய ரத்தச்சிவப்பான கண்களால் பதானையே முறைத்துப்பார்த்துக் கொண்டிருந்த மௌல்விசாகிப், “ நாம் உனக்காக இரவு முழுவதும் பிரார்த்தனையில் இருந்தோம்; இதோ நீ வந்து விட்டாய்.. கடவுள் நம்முடைய பிரார்த்தனைகளைச் செவிமடுத்துவிட்டார்.. இனி எல்லாம் நல்லபடியாய் நடக்கும்..” என்று சொன்னார்.

சௌத்ரிமௌஜூ தரையில் உட்கார்ந்து மௌல்விசாகிப்பின் கால்களை அமுக்கி விட்டுக் கொண்டிருந்தான். தொண்டை தழுதழுக்க, அவன் தன் மனைவியிடம், “ பதான், இங்கே வா… மௌல்விசாகிப்புக்கு உன் நன்றியைத் தெரிவி…. எனக்கு எப்படிச் சொல்லணும்னு தெரியல..” என்று சொன்னான்.

பதான் முன்னால் வந்து,” நாங்கள் ஏழை எளிய கிராமத்து ஆட்கள்…எங்களிடம் செய்வதற்கு எதுவுமில்லை…..புனித கடவுள்மனிதரே!..” என்று சொன்னாள்.

மௌல்விசாகிப் பதானை கூர்மையாகப் பார்த்துக் கொண்டே,” மௌஜூ சௌத்ரி நீ சொன்னது சரிதான்.. உன் மனைவி அழகாக இருக்கிறாள்.. இந்த வயதிலும் அவள் இளமையாகத் தெரிகிறாள்.. அவள் இன்னொரு ஜீனா… அவளை விட மேல்… நாம் எல்லாவற்றையும் சரி செய்வோம்.. பதான், கடவுள் உன்மீது அன்பும் கருணையும் கொள்ள தீர்மானித்துவிட்டார்…..” என்று சொன்னார்.

சௌத்ரி மௌஜூ மௌல்விசாகிப்பின் கால்களைப் பிடித்து விட்டுக் கொண்டேயிருந்தான். ஜீனா சமையலில் தீவிரமாக ஈடுபட்டிருந்தாள்.

சிறிது நேரம் கழித்து மௌல்விசாகிப் எழுந்தார். பதானின் தலையை ஆதூரத்துடன் தட்டிக் கொடுத்துக் கொண்டே மௌஜூவிடம்,” எல்லாம் வல்ல கடவுளின் விதிப்படி எப்போது ஒரு மனிதன் தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டபிறகு மீண்டும் அவளை கூட்டிக் கொண்டு வரவேண்டுமானால் அவள் இன்னொரு மனிதனைத் திருமணம் செய்து விவாகரத்து செய்தபிறகே தன்னுடைய முதல் கணவனுடன் சேர முடியும்….” என்று சொன்னார்.

மௌஜு மெல்லிய குரலில், “ நானும் கேள்விப்பட்டிருக்கேன்.. மௌல்விசாகிப்..” என்று சொன்னார்.

மௌல்விசாகிப் அவனை எழுந்து நிற்கச் சொன்னார். அவனுடைய தோளில் அவருடைய கையைப் போட்டுக் கொண்டு, “ நேற்று ராத்திரி நீ செய்த தவறுக்காக உன்னை தண்டிக்காமலிருக்குமாறு எல்லாம் வல்ல கடவுளிடம் மன்றாடினோம்..அசரீரி சொல்லியது என்னவென்றால்,எவ்வளவு நாள் தான் மற்றவர்களுக்காக உன்னுடைய பரிந்துரைகளை நான் ஏற்றுக் கொள்வது? உனக்காக எதையாவது கேள். அதை நாம் வழங்குகிறோம்… நாம் மீண்டும் மன்றாடினோம்.. பிரபஞ்சத்தின் அரசரே..எல்லாநிலங்களின் கடல்களின் இறைவனே, நாம் எதையும் நமக்காகக் கேட்பதில்லை.. நீங்கள் எமக்கு போதுமானதைக் கொடுத்திருக்கிறீர்கள்..மௌஜூ சௌத்ரி அவனுடைய மனைவிமீது அன்பாக இருக்கிறான். அதற்கு அந்தக்குரல், நாம் அவனுடைய அன்பையும் உன்னுடைய விசுவாசத்தையும் சோதிக்கப்போகிறோம்… நீ தான் அவளை ஒருநாள் திருமணம் செய்து மறுநாள் அவளை விவாகரத்து செய்து மௌஜூவிடம் ஒப்படைக்கவேண்டும்..இதைத்தான் நாம் உனக்கு வழங்கமுடியும்.. ஏனெனில் நீ நாப்பது வருடங்களாக என்னை விசுவாசமாக வணங்கிவருகிறாய்…என்றது.” என்று சொன்னார்.

மௌஜூ உணர்ச்சிவசப்பட்டு,” நான் ஏற்றுக் கொள்கிறேன் மௌல்விசாகிப்.. நான் ஏற்றுக்கொள்கிறேன்..” என்று சொன்னான். பிறகு அவன் பதானைப்பார்த்தான். அவனுடைய கண்கள் உள்ளே பொங்கிய மகிழ்ச்சியில் ஒளிர்ந்தது. “ சரியா பதான்..? ” என்று கேட்டவன் அவளுடைய பதிலுக்காகக் காத்திருக்காமல் “ நாங்கள் இருவரும் ஏற்றுக்கொள்கிறோம்..” என்று சொன்னான்.

மௌல்விசாகிப் அவருடைய கண்களை மூடி ஒரு பிரார்த்தனையைப் பாடினார்.பின்பு அவர்களுடைய முகத்தில் ஊதிவிட்டார். அவருடைய கண்களை மேலுலகத்தை நோக்கி உயர்த்தியபடியே, “ எல்லாவானங்களீன் கடவுளே! நீங்கள் வைத்துள்ள இந்த சோதனையில் நாங்கள் தோற்றுவிடாமலிருக்க எங்களுக்கு வலிமையைத் தாரும்..” என்றார்.

பிறகு அவர் மௌஜூவிடம், “ இப்போழுது நாம் போகிறோம்.. ஆனால் நீயும் ஜீனாவும் இன்று இரவு மட்டும் எங்காவது சென்றுவிடவேண்டும் என்று விரும்புகிறோம்.. நாம் பிறகு வருகிறோம்..” என்றார்.

மாலையில் அவர் திரும்பி வரும்போது, ஜீனாவும், மௌஜூவும் கிளம்புவதற்குத் தயாராக இருந்தார்கள். மௌல்விசாகிப் வாய்க்குள்ளேயே ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தார். அவர் அவர்களிடம் பேசவில்லை. அவர்களைப் போகச்சொல்லி சைகை செய்தார். அவர்கள் போய்விட்டார்கள்.

மௌல்விசாகிப் கதவைத் தாழ்ப்பாள் போட்டார். பிறகு பதானிடம்,” இந்த ஒரு இரவு நீ என்னுடைய மனைவி… உள்ளே போ.. படுக்கையைக் கொண்டுவந்து இந்த கட்டிலில் விரித்து வை. நாம் ஒரு சிறு தூக்கம்போட விரும்புகிறோம்…” என்று சொன்னார்.

பதான் உள்ளே சென்று படுக்கையை கொண்டுவந்து கயிற்றுக்கட்டிலில் அழகாக விரித்தாள்.மௌல்விசாகிப் அவளிடம் அவருக்காகக் காத்திருக்கும்படி சொல்லிவிட்டு உள்ளே போனார்.

ஒரு அகல்விளக்கின் நிழலான ஒளி அந்தச் சிறிய அறையை அலங்கரித்தது. அந்த மண்பானை மூலையில் இருந்தது. மௌல்விசாகிப் அதில் ஏதாவது மீந்திருக்கிறதா? என்று அதைக் குலுக்கிப்பார்த்தார். அதில் இருந்தது. அவர் அந்தப்பானையை உதடுகளுக்குக் கொண்டுபோய் அவசரமாக சில மிடறுகள் குடித்தார். அவருடைய மஞ்சள்நிற பட்டுத்துணியினால் வாயைத் துடைத்துவிட்டு வெளியே வந்தார்.

பதான் கட்டிலில் உட்கார்ந்திருந்தாள். மௌல்விசாகிப்பின் கைகளில் ஒரு கோப்பையை வைத்திருந்தார். அவர் அதில் சில புனிதமந்திரங்களை மூன்றுமுறை ஓதி அதை பதானிடம் கொடுத்து,” இதைக் குடி….” என்று சொன்னார்.

அவள் குடித்த உடனேயே புரையேறிச் சிரமப்பட்டாள். ஆனால் மௌல்விசாகிப் அவளுடைய முதுகில் பலமாகத் தட்டிக் கொடுத்துக்கொண்டே,” உனக்குச் சரியாயிரும்..” என்று சொல்லிவிட்டி படுத்துக்கொண்டார்.

அடுத்தநாள் காலையில் ஜீனாவும், மௌஜூவும் திரும்பிவந்த போது பதான் முற்றத்தில் கிடந்த கட்டிலில் படுத்துறங்கிக் கொண்டாள். மௌல்விசாகிப் அருகில் எங்கும் இல்லை. ஒருவேளை அவர் வயல்கரைகளில் நடைப்பயிற்சிக்குப் போயிருக்கலாம் என்று மௌஜூ நினைத்தான். அவன் மனைவியை எழுப்பினான். அவள் கண்களைத் திறந்ததும் “ சொர்க்கம்…சொர்க்கம்..” என்று பிதற்றினாள். அவள் மௌஜூவைப் பார்த்ததும் எழுந்து உட்கார்ந்தாள்.

அவன்,” மௌல்விசாகிப் எங்கே? “ என்று கேட்டான்.

பதான் இன்னும் தள்ளாட்டத்தில் தான் இருந்தாள். “ மௌல்விசாகிப்பா… எந்த மௌல்விசாகிப்? அவர் எங்கே என்று எனக்குத் தெரியாது…அவர் இங்கே இல்லை…” என்று சொன்னாள்.

“ வேண்டாம் …நான் போய் அவரைத் தேடிப்பார்த்துட்டு வாரேன்..” என்று மௌஜூ கூவினான்.

அவன் கதவருகில் போய்க்கொண்டிருக்கும்போது பதானின் அலறலைக் கேட்டான். அவள் தலையணைக்கடியிலிருந்து ஏதையோ எடுத்தபடியே நடுங்கிக் கொண்டிருந்தாள்.

அவள், “ இது என்னது?..” என்று கேட்டாள்.

மௌஜூ, ‘ முடி மாதிரி தெரியுது..” என்று சொன்னான்.

பதான் அந்தக் கறுப்புக்குவியலைத் தரையில் வீசினான். மௌஜூ அதை எடுத்து சோதித்துப் பார்த்துவிட்டு, “ மனிதமுடி மாதிரி இருக்கு..” என்று சொன்னான்.

” மௌல்விசாகிப்பின் தாடியும் தோள்வரை தொங்கிய தலைமுடியும்…தான் இது .” என்று ஜீனா கூக்குரலிட்டாள். மௌஜூ குழப்பமடைந்தான்.

ரவிஉதயன் கவிதைகள்

images (1)

 

 

 

 

 

 

 

 

1. வேண்டுமானால்
நீ சென்று வா.
இந்தப் பூ பூக்கின்ற வரை…
இருந்தாக வேண்டும் நான்
இந்த பூங்காவில்.

 

2. நினைவின்கண் மீன்கள்
விரல்களை பிடித்தவாறே
எவ்வளவு
பகிர்ந்துகொள்ள இயலும் உன்னால்!

பிரிவை அறிவிக்க
வந்து நிற்கிறது நீள்ரயில்.
கடைசித் தருணப் பரபரப்பில்
ஆழத்திலிருந்து உனது
இருகண் மீன்கள்
மேலேழும்பித் துலங்குகின்றன.

நீந்தும் விழிகளை
கண்ணாடித் தொட்டிக் கவனத்தோடு
பெற்றுக் கொள்கிறேன் இறுதியாக
இதயத்தில் அப்படியே!

இனி என்றைக்கும்
நினைவுகளை தின்றுகொண்டு
நீந்தியவாறு இருக்கும்
உன் நினனைவாக
இரு கண் மீன்கள்.

 

3. இன்றிரவு உறங்கவில்லை.
விழிகளால்
நடந்து கொண்டிருந்தேன்
புத்தகத்தின் பாதைகளில்.

 

4.பூ விரிவது போல
குருதி பெருகுகிறது.
நறுமணத்தைப் போல
வலி பரவுகிறது.
நம் பிரிவின் பின்
நீ நட்ட
ஒரு ரோஜா செடியின் கீழ்
என்னால்
இப்படிதான்
இருக்க முடிகிறது!

•••

இருட்டின் இதழ்கள் – 3 எபிரேயம் – அகரான் ஆப்பெல்ஃபெல்டு ஆங்கிலம் – ஜெஃப்ரே எம். கிரீன். தமிழ் – ச.ஆறுமுகம்.

images (3)

( அகரான் ஆப்பெல்ஃபெல்டு முந்தைய ருமேனியாவின் ஜடோவா என்ற நகரத்தில் 1932ல் பிறந்த யூதர். இந்த நகரம் இப்போது உக்ரேனில் உள்ளது. அவருக்கு எட்டு வயதிருக்கும்போது 1941ல் ருமேனிய இராணுவம் தாக்கியதில், அவரது அம்மா இறந்து போனார். அவரும் அவரது அப்பாவும் நாஜி வதைமுகாமுக்கு அனுப்பப்பட்டனர். ஆப்பெல்ஃபெல்டு மட்டும் வதை முகாமிலிருந்து தப்பி மூன்றாண்டுகள் ஒளிந்து வாழ்ந்த போது, சோவியத் படையினர் அவரைக் கண்டெடுத்து ஒரு சமையல்காரராகச் செம்படையில் சேர்த்துக்கொண்டனர். இரண்டாம் உலகப்போர் முடிந்தபின் அவர், இத்தாலியிலுள்ள ஒரு அகதிகள் முகாமில் பல மாதங்கள் தங்கி, இஸ்ரேல் சுதந்திரம் பெறுவதற்கு இரண்டாண்டுகளுக்கு முன்னர், 1946ல் பாலஸ்தீனம் வந்து சேர்ந்த அவர், தற்போது இஸ்ரேலில் வசிக்கிறார். இருபது வருடங்களுக்குப் பின்னர் அவரது தந்தையுடன் இணைந்தார். அந்த நேரத்து உணர்ச்சிகளைத் தன்னால் இதுகாறும் எழுத்தில் வடிக்க முடியவில்லையென்கிறார், ஆப்பெல்ஃபெல்டு.

ஆப்பெல்ஃபெல்டின் தாய்மொழி ஜெர்மன். அவர் தனது இருபதாவது வயதுக்குப் பின் இஸ்ரேலில் ஹீப்ரு மொழியைக் கற்று, அந்த மொழியிலேயே இருபத்தைந்தாவது வயதில் எழுதத் தொடங்கினார்; ஜெருசலேம் ஹீப்ரு பல்கலைக் கழகத்தில் படிப்பினை முடித்து அங்கேயே ஹீப்ரு இலக்கியம் கற்பிக்கவும் செய்தார். இதுகாறும் நாற்பதுக்கும் மேற்பட்ட நாவல்களை ஹீப்ரு மொழியில் படைத்துள்ள அவரிடம் நீங்கள் ஏன் தாய்மொழியான ஜெர்மனில் எழுதுவதில்லையென ஒரு பேட்டியாளர் கேட்ட போது ` அது ஒரு கொலைகாரர்களின் மொழி (My mother-toungue is a murderer`s language. Hebrew is my mother-language) எனப் பதிலளித்தார்.தற்போது மேவசெரெட் ஜியான் நகரில் வசிக்கும் அவர் இப்போது 81வது வயதிலும் நெகெவ் பென்குரியான் பல்கலைக்கழகத்தில் ஹீப்ரு இலக்கியம் கற்பிக்கிறார்.

ஹீப்ரு இலக்கிய முன்னணிப் படைப்பாளர்களில் ஒருவராகத் திகழும் இவருக்கு யுகோஸ்லேவியன், உக்ரேனியன், ருஷ்யன், ஆங்கிலம் மற்றும் இத்தாலிய மொழிகளும் தெரியும்.

ஆப்பெல்பெல்டின் படைப்புகளில் மவுனம், செயலற்ற நிலை மற்றும் துன்பங்களே கருக்களாக இருக்கின்றன. இயலாமையே வாழ்வின் வலிமையாக மாறுவதை எடுத்துக்காட்டும் இவரது படைப்புகள் பியாலிக் விருது, இஸ்ரேல் விருது, ப்ரிக்ஸ் மெடிஸிஸ், நெல்லி சாச்ஸ் விருது, ப்ரென்னர் விருது தேசிய யூத இலக்கிய விருது எனப் பல விருதுகளை வென்றுள்ளன.

மிகச்சிறந்த 200 இஸ்ரேலியர்களில் 157 வது நபராகச் சிறப்பிக்கப்படுகிற இவரையே பிலிப் ராத் என்ற படைப்பாளர் அவரது ஆப்பரேசன் ஷைலாக் என்ற நாவலில் ஒரு பாத்திரமாகப் படைத்துள்ளார்.

புக் டிரஸ்டின் அயலகப் படைப்புகளுக்கான 2012 விருது பெற்ற Blooms of Darkness என்ற நாவலின் முதல் ஐந்து அத்தியாயங்களிலிருந்து இந்தக் கதைப் பகுதி தமிழாக்கம் செய்யப்படுகிறது)

 

3

கெட்டோ காலியாகிக்கொண்டிருக்கிறது. தெருக்களிலிருந்தும் வீடுபுகுந்தும் வயதானவர்களையும், குழந்தைகளையும் பிடித்துச்செல்லத் தொடங்கிவிட்டார்கள். இருண்ட பாதாள அறைக்குள்ளேயே பகல் முழுதும் அரிக்கன்விளக்கு வெளிச்சத்தில் ஹ்யூகோ எதையாவது வாசித்துக்கொண்டும் சதுரங்கம் விளையாடிக்கொண்டும் கழித்தான். அடர்ந்த இருள் அவனைத் தூக்கத்தில் ஆழ்த்தியது. அவன் காவலர்களிடமிருந்து தப்பி ஒரு மரத்தில் ஏறிவிடுகிறான்; ஆனால், கடைசியில் ஒரு குழிக்குள் விழுந்துவிடுகிறான். விழித்துப் பார்த்தபோது, தனக்கு அடி,இடி ஏதும் படவில்லையெனக்கண்டு மகிழ்ந்தான்.

மணிக்கொரு முறை அல்லது இரண்டு மணிக்கொரு தடவை அம்மா அவனைப் பார்க்க வருவாள். வெண்ணெய் தடவிய ரொட்டித்துண்டு, அல்லது ஒரு ஆப்பிள், அல்லது ஒரு பேரி, அல்லது, வேறு ஏதாவதொன்றைக் கொண்டுவருவாள். அவனுக்குக் கொடுப்பதற்காகவே அவள் இப்போதெல்லாம் உண்ணாமலிருப்பது அவனுக்குத் தெரிகிறது. அவன் தன்னுடையதில் ஒரு பகுதியை அம்மாவுக்குக் கொடுப்பான். ஆனால் அம்மா மறுத்துவிடுகிறாள்.

ரயில்வேத்தெருவில் மீண்டும் ஆட்களைக் கொண்டுசெல்கிறார்கள். அந்த ஒடுங்கிய சன்னலருகே நின்று, ஹ்யூகோ கவனித்தான். முரட்டுத்தனமாக நெருக்கித்தள்ளுவதும் கடும் வெறுப்பான சண்டையும் அலறலும் கூச்சலுமாக இருந்தது. நெருக்கமான அந்தக் கூட்டத்தில் ஃப்ரீதாவின் அழகிய உருவம் தனித்துத் தெரிந்தது. அவர் பூப்போட்ட ஆடை அணிந்திருந்தார். அவரது தலைமுடி கலைந்திருந்தது. தூரத்திலிருந்து பார்க்கும்போது அவரை நெருக்கித் தள்ளிச்செல்வது அவருக்குச் சிரிப்பாகத் தெரிந்தது போல் இருந்தது. அவர் ஏதோ பிடிபடவில்லையென்றும், அவராகவே விருப்பப்பட்டு விடுமுறையைக் கொண்டாடச் சுற்றுலா செல்வது போலவும் அவரது கைகளை அசைத்துக்கொண்டிருந்தார்.

‘’அம்மா, ஆட்களைப் பிடித்துச்சென்றதில் ஃப்ரீதா அத்தையைப் பார்த்தேன்.’’

‘’இருக்காது.’’

‘’என் கண்ணாலேயே நான் பார்த்தேன், அம்மா.’’

ஃப்ரீதா பிடிபட்டதோடு அவரது எந்த உடைமையையும் எடுத்துச்செல்ல அனுமதிக்காமல் வெளியேற்றப்பட்டார் என்பதை மாலையில் அம்மா தெரிந்துகொண்டாள். அவரது உக்ரேனிய சிநேகிதன் அவர்களுக்கு அடைக்கலமளிப்பான் என்ற ஒரே நம்பிக்கையும் தகர்ந்துபோயிற்று.

ஹ்யூகோவின் அம்மா மீண்டும் மீண்டுமாக மரியானாவைப்பற்றி அதிகமாகச் சொல்லத்தொடங்கினாள். மரியானா நகரத்துக்கு வெளியே வசிக்கிறாள். பாதாளச் சாக்கடை வழியாகத்தான் அவளது இருப்பிடத்துக்குச் சென்றடைய முடியுமென்று தெரிந்தது. பாதாள வடிநீர்க் குழாய்கள் அகன்று விரிந்தவை. நடுஇரவுக்குப் பின் அசுத்தநீர் கொஞ்சமாகவே செல்லும். அம்மா சாதாரணமான குரலில் பேசவே முயன்றாள்; அது என்னமோ வீரதீரச் செயல்போல இடையிடையே கொஞ்சம் சேர்த்துச் சொன்னாள். அவனை அமைதிப்படுத்துவதற்காகவே அப்படிச் சொல்கிறாளென அவன் புரிந்துகொண்டான்.

‘’ஓட்டோ எங்கே?’’

‘’அவனும் ஒரு பாதாள அறைக்குள் ஒளிந்துகொண்டிருப்பான் என்றுதான் நினைக்கிறேன்.’’ என்றாள், அம்மா, வெடுக்கென்று.

மரியானாவின் வீட்டுக்குப் பாதாளச் சாக்கடை வழியாக அழைத்துச் செல்வதாக அம்மா கூறியதிலிருந்தே, ஹ்யூகோ, மரியானாவின் முகத்தைத் தனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே மீட்டெடுத்துக் காண முயற்சித்தான். அவனும் உடனிருந்தபோது, அம்மாவை அணைத்துக்கொண்ட அவளது உயரமும், நீளமான கைகளும் தான் நினைவுக்கு வந்தன. அந்தச் சந்திப்புகள் எல்லாமே அநேகமாக மிகக் குறுகிய நேரத்துக்குள் நிகழ்ந்தவை. அவனுடைய அம்மா அவளிடம் இரண்டு பொட்டலங்களைக் கொடுப்பாள். மரியானா அம்மாவைப் பிரியத்தோடு அணைத்துக்கொள்வாள்.

‘’மரியானா ஊர்ப்புறத்திலா வசிக்கிறாள்?’’ இருளுக்குள் புதிய தடம் தேடுவது போல ஹ்யூகோ கேட்டான்.

‘’கிராமத்தில்.’’

‘’நான் வெளியே விளையாட முடியுமா?’’

‘’அப்படி நான் நினைக்கவில்லை. மரியானா உனக்கு எல்லாவற்றையும் விளக்கிச் சொல்லுவாள். நாங்கள் சிறு வயதிலிருந்தே தோழிகள். அவள் மிகவும் நல்லவள்; ஆனால், விதி அவளுக்குச் சாதகமாயில்லை. அவ்வளவுதான். அவள் செய்யச் சொல்வதையெல்லாம் நீ நிரம்பவும் ஒழுக்கத்துடன் சரியாகச் செய்ய வேண்டும்.’’

`விதி அவளுக்குச் சாதகமாயில்லை` என்பதன் பொருள் என்னவாக இருக்குமென்று நினைத்து ஹ்யூகோ ஆச்சரியப்பட்டான். அந்த உயரமான அழகிய பெண்ணை ஏமாற்றமும் மனத்தளர்ச்சியுமாக, மதிப்புக்குறைவான தோற்றத்தில் கற்பனைசெய்ய அவனுக்கு மனமில்லாமலிருந்தது.

அம்மா மீண்டும் சொன்னாள்: ‘’ ஒவ்வொருவருக்கும் அவரவர் தலைவிதி என ஒன்று இருக்கிறது.’’

இந்தத் தொடரும் முந்தையதைப் போலவே புரிந்துகொள்ள இயலாதது.

இதற்கிடையில் ஒருநாள், அம்மா பின்புற முதுகுப்பை ஒன்றையும் சூட்கேஸ் ஒன்றையும் பாதாள அறைக்குள் எடுத்துவந்தாள். முதுகுப்பைக்குள் புத்தகங்களையும் சதுரங்கப் பெட்டியையும் டோமினோக்களையும் வைத்தாள். ஆடைகளையும் காலணிகளையும் சூட்கேசுக்குள் திணித்தாள். அது உப்பிப் பருத்துக் கனத்தது.

‘’கவலைப்படாதே, மரியானா எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வாள். நான் அவளோடு பேசிவிட்டேன். அவளுக்கு உன்னைப் பிடித்துவிட்டது.’’ என நடுங்கும் குரலில் சொன்னாள், அம்மா.

‘’ நீ எங்கே போவாய், அம்மா?’’

பக்கத்து கிராமத்தில் ஒளிந்துகொள்ள ஏதாவது ஒரு புகலிடம் தேடிக்கொள்வேன்.’’

அம்மா பைபிள் வாசிப்பதை நிறுத்தினாள். ஹ்யூகோ அரிக்கன் விளக்கை அணைத்ததும் அம்மா கூப்பிடுவது போல் கேட்டது. அவள் குரல் மென்மையாக, இனிமையாக, ஆனால், கண்டிப்பானதாக இருந்தது.

‘’நீ வயதான பிள்ளையாகப் பெரியவனாக நடந்துகொள்ளவேண்டும்.’’ என்றாள். ஆனால், அது அம்மாவின் குரல் போலவே இல்லை. `மரியானா சொல்வதையெல்லாம் கேட்டு, அப்படியே செய்வேன்` என்று சொல்ல நினைத்தான். ஆனாலும் தனக்குள்ளாகவே நிறுத்திக்கொண்டான்.

இரவில் வெளியே எழுந்த கலவரக் கூச்சலில் பாதாள அறை அதிர்ந்தது. காவலர்களிடம் குழந்தைகளைப் பறிகொடுத்த அம்மாக்களின் அவலக்குரலே அதிகமாக இருந்தது. அவர்கள் துணிச்சலாகக் காவலர்களின் பின்னாலேயே ஓடித் தங்கள் குழந்தைகளைத் தந்துவிடுமாறு கெஞ்சினார்கள். அதனாலேயே காவலர்கள் வெறிகொண்டு, அந்தப் பெண்களை மூர்க்கமாகத் தாக்கினார்கள்.

குழந்தைகளைச் சிறைபிடித்துக் கடத்துவது முடிந்தபின் கல்லறைத்தோட்ட அமைதி நிலவியது. எப்போதாவது ஒரு தேம்பல் மட்டும் அடங்கிய குரலில் கேட்டது.

ஹ்யூகோ விழித்துக்கொண்டே படுத்திருந்தான். தெருவில், வீட்டில், நிகழ்கிற எல்லாமே அவனைப் பாதித்தன. ஏதோ ஒரு வாய்ப்பில், அவன் காதில்விழுகின்ற வார்த்தைகள், இரவில் அவனுக்குள் உறுமலோடு மீண்டெழுகின்றன. அவனால் படிக்க, சதுரங்கம் விளையாட, எதுவுமே முடியவில்லை. எல்லாமே கடினமாக இருந்தன. பிம்பங்களும் சப்தங்களுமே அவனுக்குள் நிறைந்திருந்தன.

‘’ ஓட்டோ எங்கே?’’ அவன் அம்மாவை விடாமல் கேட்டுக்கொண்டிருந்தான்.

‘’ பாதாள அறையில்.’’

ஓட்டோவும் பிடிபட்டு, வாகனத்துக்குள் வீசப்பட்டு, உக்ரேனுக்குச் சென்றுகொண்டிருப்பானென்று ஹ்யூகோவுக்கு நிச்சயமாகத் தெரிந்தது.

அவன் அம்மா கால்களைக் குறுக்காகக் கட்டிக்கொண்டு, குந்தியமர்ந்து, மரியானா வசிக்கும் இடத்தை விவரித்துக் கொண்டிருந்தாள். ‘’ அவளுக்கு ஒரு நல்ல விசாலமான பெரிய அறையும் அதற்குள் ஒரு தனியறையும் இருக்கிறது. பகலில், நீ பெரிய அறையில் இருக்கலாம். இரவில் தனியறைக்குள் தான் தூங்க வேண்டும்.’’

‘’நான் மரியானாவின் வீட்டுக்குள்ளிருந்தாலும் அவர்கள் வந்து என்னைப் பிடிக்கலாமா?’’ மிகுந்த முன்னெச்சரிக்கையோடு ஹ்யூகோ கேட்டான்.

‘’ மரியானா ஒரு கழுகு மாதிரி உன்னைக் காப்பாற்றுவாள்.’’

‘’நான் ஏன் தனியறைக்குள் படுக்கவேண்டும்?’’

‘’பாதுகாப்புக்காகத்தான்.’’

‘’எனக்காக அவள் பைபிள் வாசிப்பாளா?’’

‘’நீ கேட்டால்.’’

‘’அவளுக்குச் சதுரங்கம் விளையாடத் தெரியுமா?’’

‘’தெரியாதென்றுதான் நினைக்கிறேன்.’’

கேள்விகளும் குறுகிய பதில்களும் மறைவான பயணத்துக்கான தயாரிப்பு என அவனுக்குத் தோன்றியது. பாதாள அறைக்குள் அமர்ந்து அமர்ந்து அவனுக்கும் வெறுப்பாகிப்போனது. முதுகுப்பையைச் சுமந்துகொண்டு அம்மாவுடன் பாதாள வடிகுழாய்க்குள் இறங்கிச்செல்லும் நாளை அவன் ஆவலுடன் எதிர்நோக்கத் தொடங்கிவிட்டான்.

‘’ அங்கே பள்ளிக்கூடம் இருக்குமா?’’ அவன் திடீரென்று கேட்டான்.

‘’அடேய், கண்ணா, நீ அங்கே மறைவாக ஒளிந்திருக்கப் போகிறாய். பள்ளிக்கூடத்துக்குப் போகவில்லை.’’ அம்மா வேறு மாதிரியான ஒரு குரலில் கூறினாள்.

அது அவனுக்கான தண்டனையென்று அவனுக்குப்பட்டது. அவன் கேட்டான்: “எல்லாநேரத்திலும் நான் ஒளிந்தேதான் கிடக்க வேண்டுமா?’’

‘’போர் முடியும் வரை.’’

`அப்பாடா` என்றானது, அவனுக்கு. போர் அதிக நாட்கள் நீடிக்காதென அவன் கேள்விப்பட்டிருந்தான்.

ஹ்யூகோவின் கேள்விகள் இருட்டில் தட்டுத்தடுமாறித் துழாவுவது போன்றவைதாம்; என்றாலும் அவை அவனது அம்மாவைத் துளைத்தன. வழக்கமாக அவள் முழுத் தொடர்களாக அல்லது பாதியாகப் பதில் சொல்வாளென்றாலும் அவனை ஏமாற்றியதில்லை. அவளுக்கென ஒரு விதி வைத்திருந்தாள், அது `ஒருபோதும் ஏமாற்றாதே.` என்பதுதான். ஆனால் உண்மையாகச் சொல்வதெனில், இப்போதெல்லாம் அவள் சில விஷயங்களை மழுப்புவதும், சிலவற்றில் அவனை வேறுதிசைக்கு இழுத்து, உண்மைகளை மறைப்பதுமாகச் சிலநேரங்களில் நிகழ்கிறது. அதனாலேயே அவளது மனச்சாட்சி முள்ளாக உறுத்துகிறது. மனச்சாட்சியின் குத்தல்களிலிருந்தும் தப்பிப்பதற்காகவே அவள் ஹ்யூகோவிடம், ‘’ ஒன்றை மட்டும் நன்றாகத் தெரிந்துகொள். எவர் என்ன சொன்னாலும் கவனமாகக் கேட்டுக்கொள். நாம் வேறுமாதிரியான காலகட்டத்தில் இருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள். முன்பிருந்ததுபோல் இல்லை, இப்போது’’ என்றாள்.

அம்மா வருந்துவதைப் புரிந்துகொண்ட ஹ்யூகோ, ‘’அம்மா, நான் எப்போதும் கேட்கத்தான் செய்கிறேன். எல்லாநேரத்திலும் கவனித்துக் கேட்பேன்.’’ என்றான்.

‘’நன்றி, கண்ணா.’’ என்கிறாள், அம்மா. இப்போதெல்லாம் வார்த்தைகளின் மீதான கட்டுப்பாட்டை அவள் இழந்துவிட்டதாக உணர்கிறாள். அவை அவள் வாயிலிருந்தும் வெளியேறுகின்றன; ஆனால் மையத்தைத் தொடுவதில்லை. உதாரணமாகச் சொல்வதென்றால் மரியானாவைப்பற்றியும் அவளது தொழில்பற்றியும் ஹ்யூகோவிடம் சொல்லிவிட வேண்டுமென நினைக்கிறாள். அதற்காக அவள் தேடும் வார்த்தைகள்தாம் அவளுக்கு உதவ மறுக்கின்றன.

‘’மன்னித்துக்கொள்.’’ என்கிறாள், திடீரென்று.

‘’எதற்காக, அம்மா?’’

‘’ஒன்றுமில்லை, என் தப்புதான்,’’ என்று சொல்லிக் கைக்குட்டையால் வாயைப் பொத்திக்கொள்கிறாள்.

ஹ்யூகோ மீண்டும் தன்னிலை இழந்தான். அவனுடைய அம்மா ஏதோ ஒரு பெரிய ரகசியத்தைத் தன்னிடம் சொல்ல முயற்சிப்பதும், ஆனால் ஏதோ காரணத்துக்காகத் தயங்குவது போலவும் அவனுக்குத் தோன்றியது. அந்தத் தயக்கமே மேற்கொண்டும் அவனைப் பேசத்தூண்டியது. அவன் ஏற்கெனவே கேட்டவற்றையே மீண்டும் கேட்டான்:

“மரியானாவுக்குக் குழந்தைகள் இருக்கிறார்களா?’’ அவன் வேறுவழியில் முயற்சித்துப் பார்க்கிறான்.

‘’அவளுக்குத் திருமணமாகவில்லை.’’

‘’ அவள் என்ன செய்கிறாள்?’’

‘’வேலை பார்க்கிறாள்.’’

விசாரணைக் கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக அவள், ‘’ இவ்வளவு தூரம் துளைத்துக் கேட்கவேண்டிய அவசியமே இல்லை. நான் திருப்பித் திருப்பிச் சொல்கிறேன். மரியானா நல்லவள். அவள் உன்னைக் கழுகு போலக் காப்பாற்றுவாள். நான் அவளை நம்புகிறேன்.’’ என்றாள்.

இப்போதும் ஹ்யூகோ அவமதிக்கப்பட்டதாக உணர்ந்தான். அவன் சொன்னான்: ‘’ நான் இனிமேல் எதையும் கேட்க மாட்டேன், அம்மா.’’

‘’நீ எப்பொழுதுமே கேட்கலாம்தான். ஆனால், எல்லாக் கேள்விகளுக்குமே விடை உண்டு என்பதில்லை; அதை நீ சரியாகப் புரிந்துகொள்ளவேண்டும். விளக்கம் சொல்லமுடியாத விஷயங்கள் சில இருக்கின்றன. உன் வயதுப் பையன்களால் புரிந்துகொள்ள முடியாத விஷயங்களும் உண்டு.’’

அவனை ஆறுதல்படுத்துவதற்காகவே அம்மா மீண்டும் சொன்னாள்: ‘’ என்னை நம்பு, உனக்கு எல்லாமே தெளிவாகத் தெரியும் காலம் வரும். சீக்கிரமாகவே நிறைய விஷயங்களை நீ புரிந்துகொள்வாய். நீ புத்திசாலிப் பையன். விடைகள் இல்லாமலேயே உனக்கு விளங்கும்.’’

அவன் அம்மா கண்களை அகலத் திறந்தாள். அவை இரண்டும் சிரித்தன.

( தொடரும் )

***

குறிப்பு : மரியானா பாலியல் விடுதியிலேயே தங்கித் தொழில் செய்பவள். அந்தப் பாலியல் விடுதிக்குள்ளேயே எல்லோர் கண்ணிலும் மண்ணைத் தூவி ஹ்யூகோவை யாருக்கும் தெரியாமல் மறைவாக வளர்க்க வேண்டும்.

கிருஷ்ண குமார் கவிதைகள்

images (2)

 

 

 

 

 

 

 

 

வெயில் பார்வை:
ஈரமில்லாத
புழுதி நிரம்பிய அடர்ந்த காற்று
கைகளில் பிடித்திருக்கும்
எடையற்ற குடையை
வானம்பார்த்து
தீர்க்கமாக
பிடுங்கி எறிய முயற்சிக்கிறது.

பிடிவாதமான
நெடும் கைகளிடமிருந்து
மெலிந்த அக்குடை
நழுவாமல்
அழுந்திவிட்டதும்
முழுவலி திரட்டி
காற்று இழுக்கிறது.

பிடிவாத மனிதக் கைகளுக்கும்
அறிவில்லாத காற்றுக்குமான
போட்டியில்
வன்மத்துடன் வெயிலானது
நிலத்தை ஆக்கிரமித்தபோது
இருவருமே
குடையின்றி
தோல்வியடைந்திருந்தார்கள்.

**********************************

தீட்டு:

துக்கம்
பகல் வெளிச்சம் போல
ஊர்ந்து
குடுவையிலிருந்து
தரையில் இரைந்து படர்ந்த நீரின்
மிதமான வேகத்துடன்
பரவக்கூடியது.

படுக்கையின் மங்கலான விளக்கொளியில்,
சாலையின் இருளில் பின் தொடர்தலில்,
கழிவறைக் கதவடியில்,
காய்ந்த இலை உதிர்ந்து திரிதலில்,
தனித்தொரு தடத்தில் அலைகையில்,
மெல்ல ஊர்ந்து
படியும்.

அது ஒரு அடர்த்தியான
கறை
மேலும்
தொடு தீண்டாமையற்ற
ஒருவகை
தீட்டு.

அப்போதெல்லாம்
தொடரும் ரயில் பயணமொன்றின்
ஜன்னல் மேடையில்
கைகளை ஊன்றியபடி
பெருத்த சுவாசம் வெளியேறிய நிலையில்
உருவாகக்கூடிய அகம்
ஏனோ
மறுவுரு கொள்ள
மறந்து தொலைத்துவிடுகிறது.

இல்யா காமின்ஸ்கியின் கவிதைகள் தமிழில்: சமயவேல்

download

ஈராண்டுகளுக்கு ஒரு முறை இலக்கியத்திற்காக வழங்கப்படும், ‘அமெரிக்க நோபல்’ என அழைக்கப்படுகிற, ‘நியுஸ்டாட் 2014’ விருதுக்காகப் (50,000 அ.டாலர்) பரிந்துரைக்கப்பட்டிருக்கும் ஒன்பது படைப்பாளிகளில், இருவர் மட்டும் கவிஞர்கள். எனக்குப் பிடித்த ஹருகி முரகாமி உட்பட மற்ற எல்லோரும் கதைக்காரர்கள். அந்த இரண்டு கவிஞர்களில் ஒருவர் அரபு உலகத்தின் முக்கியமான இளம் கவிஞர் ஹாஸன் ஜாக்குட்டன். இன்னொருவர் இல்யா காமின்ஸ்கி. சோவியத்தின் உக்ரைன் பகுதியில் ‘ஒடிஸ்ஸா’ என்ற இடத்தில் பிறந்தவரான இவர் 1993ல் அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்தார். புகழ் பெற்ற ‘எக்கோ உலகக் கவிதைகள்’ தொகுப்பின் தொகுப்பசிரியரான இவரது முதல் கவிதைத் தொகுப்பு “ஒடிஸ்ஸாவில் நடனமாடுதல்”. ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு மிக எளிமையாக, ஆனால் மிக அழகாக அச்சிடப்பட்டிருக்கும் இந்தத் தொகுப்பிலிருந்து சில கவிதைகள் மட்டும் இங்கே தமிழில். ஹாஸன் ஜாக்குட்டன் கவிதைகள் அடுத்த இதழில்.

 

1. ஆசிரியரின் பிரார்த்தனை

 

இறந்தவர்களுக்காக நான் பேச வேண்டுமென்றால், நான் கைவிடவேண்டும்.

எனது உடம்பின் இந்த மிருகத்தை,

 

அதே கவிதையைத் திரும்பத் திரும்ப நான் எழுத வேண்டும்,

அவர்களது சரணடைதலின் வெண்.கொடிக்காக ஒரு வெற்றுப்பக்கம்.

 

அவர்களுக்காக நான் பேசவேண்டுமென்றால், நான் நடக்கவேண்டும் என்னின்

விளிம்பின்மீது. ஒரு குருடனைப்போல நான் வாழ வேண்டும்

 

அவன் அறைகளின் ஊடாய் ஓடுகிறான்

இருக்கைகளைத் தொட்டுவிடாமல்

 

ஆம். நான் வாழ்கிறேன். ‘இது என்ன ஆண்டு?’ என்று கேட்டபடி தெருக்களை நான் கடக்கமுடியும்

எனது தூக்கத்தில் நான் நடனமாடவும் சிரிக்கவும் முடியும்

 

கண்ணாடியின் முன்னால்.

தூங்குவதுகூட ஒரு பிரார்த்தனைதான், ஆண்டவரே,

 

உனது உன்மத்தத்தை நான் வாழ்த்துவேன், மற்றும்

என்னுடையது இல்லாத மொழியில், பேசுவேன்

 

எங்களை எழுப்பும் அந்த இசையைப் பற்றி, நாங்கள்

தளுதளுக்கிற இசை, நான் கூறுவது எல்லாமே

 

ஒருவகையான விண்ணப்பம்தான், மற்றும்

நான் வாழ்த்துவேன் மிக இருண்ட நாட்களை.

 

 

2. ஒடிஸ்ஸாவில் நடனமாடுதல்

 

 

புறாக்களும் காகங்களும் சேர்ந்து கூட்டாக ஆட்சி செய்கிற நகரத்தில், புறாக்கள் முக்கிய மாவட்டத்தையும் காகங்கள் மார்க்கட்டையும் கவனித்துக் கொண்டன. ஒரு செவிட்டுப் பையன் தனது அண்டை வீட்டின் புழக்கடையில் எத்தனை பறவைகள் இருக்கின்றன என்று எண்ணினான், ஒரு நான்கு இலக்க எண்ணை அடைந்தான். அந்த எண்ணை டயல் செய்து இணைப்பில் வந்த குரலிடம் தனது காதலை மன்றாடினான்.

 

எனது ரகசியம். நான்கு வயதில் நான் செவிடானேன். நான் எனது கேட்கும் திறனை இழந்தபோது, நான் குரல்களைப் பார்க்கத் தொடங்கினேன். ஒரு நெரிசலான ட்ராலியில் ஓர் ஒற்றைக்கை மனிதன் கூறினான், எனது வாழ்க்கை என் தேசத்தின் வரலாற்றோடு பிணைக்கப்பட்டிருப்பதாக. இன்னும் எனது தேசத்தைக் காண முடியவில்லை, அதன் குடிமக்கள் தேர்தலை நடத்துவதற்காக ஒரு கனவில் சந்தித்தார்கள். அவன் அவர்களது முகத்தை விவரிக்கவில்லை, ஒரு சில பெயர்கள் மட்டும்: ரோலண்ட், அலாவுதீன், சிந்துபாத்.

 

000000

 

எதிர்காலத்துக்கு வடக்கே நாங்கள் வாழ்ந்தோம், நாட்கள் திறந்தன

ஒரு குழந்தையின் கையெழுத்துடன் கூடிய கடிதங்கள், ஒரு ராஸ்பெர்ரி, ஆகாயத்தின் ஒரு பக்கம்

 

எனது பாட்டி தக்காளிகளை எறிந்தாள்

அவளது பால்கனியிலிருந்து, அவள் இழுத்தாள் கற்பனையை என் தலையிலிருந்து. ஒரு போர்வையைப் போல. நான் வரைந்தேன்

என் தாயின் முகத்தை, அவள் புரிந்து கொண்டாள்

தனிமையை, இறந்தவர்களை மறைத்தாள் பூமியொத்த தடுப்புகளில்.

 

இரவு எங்களை நிர்வாணமாக்கியது (அதன் நாடித்துடிப்பை நான்

எண்ணினேன்) என் அம்மா நடனமாடினாள், கடந்த காலத்தை அவள் நிரப்பினாள்

பீச் பழங்களையும் கேஸ்ஸரோல்களையும் கொண்டு. இதைப் பார்த்து என் மருத்துவர் சிரித்தார்,

அவருடைய பேத்தி் எனது இமைகளைத் தொட்டாள்– நான் முத்தமிட்டேன்

 

அவளது முழங்காலின் பின்புறம். நகரம் நடுங்கியது,

ஒரு பேய்க்கப்பல் பாய்விரித்துக் கிளம்பியது

மற்றும் என் வகுப்புத்தோழன் 20 பெயர்களைக் கண்டுபிடித்தான் யூதர்களுக்காக.

அவன் ஒரு தேவதூதன், அவனுக்குப் பெயரில்லை

நாங்கள் குஸ்தியிட்டோம், ஆம்.எனது தாத்தாக்கள் போரிட்டார்கள்

 

டிராக்டர்களில் ஜெர்மன் டேங்குகளோடு, நான் வைத்திருந்தேன் ஒரு பெட்டி நிறைய

ப்ராட்ஸ்கி கவிதைகள். நகரம் நடுங்கியது,

ஒரு பேய்க்கப்பல் பயணம் தொடங்கியது.

இரவில் குசுகுசுப்பதற்காக நான் எழுந்தேன். ஆம் நாங்கள் வாழ்ந்தோம்

நாங்கள் வாழ்ந்தோம், ஆம், அதை ஒரு கனவெனக் கூறாதீர்கள்.

 

உள்ளூர் தொழிற்சாலையில், எனது அப்பா

ஒரு கை நிறைய பனித்துகளை அள்ளி, என் வாயிலிட்டார்

சூரியன் ஒரு வழக்கமான கதையைத் தொடங்கினான்

அவர்களது உடல்களை வெளுப்பாக்கி, அம்மா, அப்பா நடனமாடியபடி, அசைந்தபடி

இருட்டு அவர்கள் பின்னால் பேசியதைப் போல

அது ஏப்ரலாக இருந்தது. சூரியன் கழுவியது பால்கனியை, ஏப்ரல்

 

ஒளி என் கைகளுக்குள் செதுக்கிய கதையை நான் திரும்பச்

சொல்கிறேன்; குட்டிப் புத்தகமே நகருக்குச் செல் நானில்லாமலே.

0000000

3. சிரிப்பதை வாழ்த்தி

 

 

எங்கு நாட்கள் வளைந்தும் நிமிர்ந்தும் இருக்கிறதோ

எந்த நாட்டுக்கும் சொந்தமில்லாத ஒரு நகரத்தில்

ஆனால் காற்றின் எல்லா நாடுகளும்,

 

அவள் பேசினாள் பாப்லார் மரங்களின் மொழியை–

அவளது காதுகள் நடுங்கியபடி அவள் பேசும்போது, எனது ரோஜா அத்தை

சலூன்களுக்கும் மருந்துக்கடைகளுக்கும் வாழ்த்துப்பாக்களை இயற்றினாள்.

 

அவளது ஆத்மா இரண்டு கால்களில் நடந்தபடி, ஆத்மா இருக்கிறதோ இல்லையோ, ஒரு

குழந்தையின் கரிசனம்

தெரு இசைஞர்களை அவள் காதலித்தாள் மற்றும் அவளுக்குத் தெரியும்

எனது தாத்தா நமது தேசத்தில் மேகங்களின் ‘வினியோகமும்

 

தேவையும்’ பற்றிய உரைகளைத் தயாரித்தார் என்று:

அரசு அவரை மக்களின் எதிரி என்று பிரகடனப்படுத்தியது

அவர் தனது கோட்டில் தக்காளிகளோடு ஒரு ரயிலின் பின்னால் ஓடினார்

 

மற்றும் எங்கள் வீட்டின் முன்னால் மேஜையில் நடனமாடினார் நிர்வாணமாக–

அவர் சுடப்பட்டார், மற்றும் என் பாட்டி கற்பழிக்கப்பட்டாள்

அரசாங்க வக்கீலால், அவர் தன் பேனாவால் குத்தினார் அவளது பிறப்புறுப்பில்

 

இருபது ஆண்டுகளாக மக்களுக்குக் கையெழுத்திட்ட பேனா அது

ஆனால் கோபத்தின் ரகசிய வரலாற்றில்–ஒரு மனிதனின் மௌனம்

மற்றவர்களின் உடல்களில் வாழ்கிறது– விழுவதைத் தவிர்ப்பதற்காக நடனமாடுவதைப் போல,

 

மருத்துவருக்கும் வழக்குரைப்பவருக்கும் நடுவில்:

எனது குடும்பம், ஒடிஸ்ஸாவின் மக்கள்,

பெருமுலைகள் கொண்ட பெண்கள், குழந்தைத்தனமான அப்பாவி முதியவர்கள்,

 

எங்கள் எல்லாச் சொற்களும், எரியும் இறகுகளின் குவியல்கள்

ஒவ்வொரு மீள்கூறலிலும் அது உயர்கிறது மேலும் உயர்கிறது.

 

00000

4. நடாலியா

 

அவளது தோள்: மாலைப்பொழுதுக்கு ஒரு வாழ்த்துப்பா, அத்தகைய ஆர்வம்.

 

நான் உறுதி கூறுகிறேன் நான் அவளுக்குக் குதிரைச் சவாரி செய்யக் கற்றுக் கொடுப்பேன். நாங்கள் போவோம் மெக்ஸிகோ, அங்கோலா, ஆஸ்தி்ரேலியா. நாங்கள் திறப்போம் ஒரு சிறிய மிட்டாய்க்கடையை– அவளது காதலர்கள் மற்றும் எனது அண்டைவீட்டார்கள் (கைகள் நிறைய மில்க் சாக்லெட்டைத் திருடுபவர்கள்) தவிர எங்களுக்கு வேறு வாடிக்கையாளர்களே இருக்க மாட்டார்கள், ஒடிஸ்ஸாவின் அந்த அவதூறு மிக்க நாட்களை அவள் கற்பனை செய்ய வேண்டுமென்று நான் விரும்புகிறேன்..

 

இனிப்பூட்டிய பாதாம்பருப்புகள், உலர்ந்த பூக்களால் அலங்கரிக்கப்பட்ட இனிப்புகள், பெட்டி பெட்டியாய் இனிப்புகள், தேனில் ஊறிய செர்ரிப் பழங்கள் நிரம்பிய அடுக்குகள் நடுவே நடனமாடியபடி ஒருவருக்கொருவர் எங்களது உண்மைக் கதைகளைக் குசுகுசுப்போம்.

 

அவளது முழங்காலின் பின்புறம்: ஓர் ஆசீர்வதிக்கப்பட்ட பிரதேசம், எனது ஆசைகளை நான் அங்குதான் வைத்திருக்கிறேன்.

 

 

 

ரோஜா அத்தை

ஒரு இராணுவவீரனின் சீருடையில், மர ஷூக்களில், அவள் நடனமாடினாள்

நாளின் இரு முனைகளிலும், என் ரோஜா அத்தை

அவளது கணவன் காப்பாற்றினான் ஒரு கர்ப்பவதியை

 

எரியும் வீட்டிலிருந்து– அவர் கேட்டார் சிரிப்பை,

ஒவ்வொரு நாளின் சொந்த சிறிய பீரங்கிகள்– அந்தத் தீயில்

அவர் சுட்டுக்கொண்டார் தனது விதைப்பைகளை, என் ரோஜா அத்தை

 

பிற மக்களின் குழந்தைகளை வளர்த்தாள்- அவர்கள் அழுதபோது அவள் நாக்கைச் சொட்டினாள்

மற்றும் ஆகஸ்டு இழுத்துவிட்டது திரையை மாலைக்குப் பின் மாலையாய்

நான் அவளைப் பார்த்தேன், அவளது விரல்கள் நடுவில் சாக்பீஸ்

 

ஒரு வெற்றுக் கரும்பலகையில் அவள் பாடங்களை எழுதினாள்

அவளது கை நகர நகர, கரும்பலகை காலியாகவே இருந்தது

ஒரு கடலோர நகரத்தில் நாங்கள் வாழ்ந்தோம் ஆனால் அங்கே

 

இன்னொரு நகரம் இருந்தது கடலுக்கடியில்

அது இருப்பதை உள்ளூர்க் குழந்தைகள் மட்டுமே நம்பினார்கள்

அவர்களை அவளும் நம்பினாள். அவள் தொங்கவிட்டாள் அவளது கணவரின்

 

புகைப்படத்தை அவளது வீட்டின் சுவரில், ஒவ்வொரு மாதமும்

வெவ்வேறு சுவர்களில். அந்தப் படத்தோடு இப்பொழுது நான் அவளைப் பார்க்கிறேன், சுத்தியல்

அவளது இடது கையில், ஆணி அவளது வாயில்.

 

அவளது வாயில், காட்டுப் பூண்டின் ஒரு வாசனை–

அவள் வருகிறாள் என்னை நோக்கி அவளது பைஜாமாவில்

விவாதிக்கிறாள் என்னுடன் மற்றும் அவளுடனும்

 

மாலைப்பொழுதுகள் என் சாட்சியம், இந்த மாலைப் பொழுது

அதில் அவளது கைகளை நனைக்கிறாள் அவளது முழங்கை வரை

மாலைப்பொழுது உறங்குகிறது அவளது தோளுக்குள்– அவளது தோள்

 

தூக்கத்தால் திரண்ட.

 

 

00000000

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஒரு குட்டி ரெட்ரோ – கிருஷ்ணமூர்த்தி

download (16)

என்னிடம் பலர் பேசும் போது நான் நிறைய உலக சினிமாவும் உலக இலக்கியத்தையும் வாசித்ததாக நினைத்து நிறைய கேட்கிறார்கள். அவர்கள் கேட்கும் சினிமாக்களும் இலக்கியங்களும் நான் அறிந்தது கூட இல்லை. தெரியாது என்று சொல்லி சொல்லி வாய் வலித்தது தான் மிச்சம். சில நேரங்களில் இந்த உண்மையை சொல்லக் கூட பயமாக இருக்கிறது. என்னால் அவர்களின் கேள்வியை எதிர்கொள்ள முடியும். முடியாத விஷயம் ஒன்றும் இருக்கிறது. அவர்கள் அந்த குறிப்பிட்ட சினிமாவையோ இலக்கியத்தையோ வைத்து இது கூட தெரியாமல் எப்படி நீ சினிமா இலக்கியத்தைப் பற்றியெல்லாம் எழுதலாம் என்கிறார்கள். இக்கேள்விக்கு நான் என்ன பதில் சொல்வேன் ? மௌனம் மட்டுமே என் வசம் மீதம் இருக்கும். அவர்களுக்கு சொல்லமுடியாத ஒரு பதில் என்னிடம் ஒன்று உள்ளது. எனக்கு கிடைத்த ஒரு வரம் என் வயது. இன்னமும் நான் நினைத்ததை வாசிக்கவும் பிடித்த சினிமாக்களை பார்க்கவும் போதுமான அளவு வயது இருக்கிறது. ஒருவேளை வயது முடியும் நேரத்தில் வருத்தம் கொள்வேன் இன்னமும் மீதி வைத்து செல்கிறேனே என்று. இப்போதோ அக்கவலை என்வசம் இல்லை.

இக்கவலை இல்லாததால் தான் இந்த கட்டுரையை தைரியமாக எழுத முடிகிறது. பொதுவாக மலைகள் இதழுக்கு சினிமா சார்ந்து எழுத நினைப்பேன். அப்படி எழுதுவதற்கு நான் ஏதேனும் ஒரு இயக்குனரின் அனைத்து படங்களையும் பார்க்க வேண்டும். அப்படி பார்பதற்கு நான் பதிவிறக்கம் செய்ய வேண்டும். அப்படியே செய்தாலும் எனக்கிருக்கும் இணைய வசதியில் அது இடையில் தடைபட்டுவிடும். இதனாலேயே கடந்த இரண்டு முறையும் எழுத முடியாமல் போனது. இம்முறையும் வாய்ப்பை தழுவ நினைக்கவில்லை. மற்றும்மொரு விஷயம் இம்முறையும் சரக்கு இல்லை.

அப்படியெனில் எழுதப்போவது ? நான் பழைய தமிழ்ப்படங்களிலேயே பார்ப்பதற்கு நிறைய படங்களை வைத்திருக்கிறேன். ஒருபுறம் அப்படங்கள் நமக்கு ஒரு படம் பார்ப்பதன் திருப்தியை கொடுக்குமா என்று கூட சந்தேகத்தை ஏற்படுத்தியதுண்டு. இது ஒரு ஃபாஸிச மனப்போக்கும் கூட. உலக சினிமாவை பார்ப்பதால் இந்திய சினிமா எப்போதுமே தரக்குறைவானது என்னும் எண்ணத்தை வளர்த்துக் கொள்வது. இந்ட்த மனப்பாங்கில் இருந்து நானும் மீளவில்லை. அப்படிப்பட்ட எனது மன ஓட்டத்திற்கு பலத்த அடியாய் விழுந்தது ஒரு பழைய திரைப்படம்.

இப்படம் 1978 இல் வெளியாகியிறுக்கிறது. இயக்கியவர் ருத்ரய்யா. பட்த்தின் பெயர் – அவள் அப்படித்தான்.

வெறுமனே இப்படத்தை மட்டும் சொல்லாமல் ஒரு டிட் பிட்ஸாக இன்னுமொரு படத்தையும் இறுதியில் சொல்கிறேன். இந்தப்படத்தை உறுதியாக சொல்ல முடியும் இது ஒரு உலகத்தரமான திரைப்படம் என்று. அதற்கு இரு காரணங்கள் உள்ளது. மூன்று மணி நேர திரைப்படம் என்று வைத்துக் கொள்வோம். மற்றொன்று ஐந்திற்குள் அடங்கும் கதாபாத்திரங்கள் கொண்ட திரைப்ப்படம். இந்த இரு திரைப்படமும் ஒரே வித தாக்கத்தை தான் பார்வையாளனிடம் ஏற்படுத்தும். அதாவது இரு இடத்திலும் பார்வையாளனை உட்கார வைப்பதே பெரிய சவால். இந்த இரண்டாம் ரக சினிமாவில் பார்வையாளனை உட்கார வைப்பது முன்னதை காட்டிலும் கடினமானது.

மிகக் குறைந்த அளவில் கதாபாத்திரங்களை கொண்டு ஒரு சினிமா செய்கிறோம் எனில் அங்கு அந்த கதாபாத்திரங்களின் ஒவ்வொரு செயல்களும் கணக்கில் கொள்ளப்படும். அல்லது அவர்கள் பேசும் வசனம் பிரதானமாகும். ஒருவேளை வசனம் பிரதானமாவதாக இருப்பின் அது அதி சுவாரஸ்யமாக அல்லது பார்வையாளனுடன் நெருக்கத்தில் செல்லக்கூடிய வசனங்களாக இருக்க வேண்டும். அப்படி இல்லையேல் அங்கும் படம் தன் தோல்வியையே தழுவி நிற்கும்.

இந்தப்படம் எனக்கு எங்குமே தொக்கி நிற்பதாக தெரியவில்லை. அதை விட மேன்மையான ஒரு விஷயம் எந்த ஒரு படமாகினும் அது பார்வையாளனுக்கு ஒரு புதுமையை தர வேண்டும். அதற்கு முந்தைய படங்களின் சாயல் அதில் தெரிதல் கூடாது. மேலும் இப்படத்தின் சாயல் அதற்கு பின்னாட்களில் வந்த படங்களில் காப்பியடிக்கப்பட்டிருந்தாலும் இப்படம் தனியே ஒரு ஸ்தூலமாக நிற்க வேண்டும். அவள் அப்படித்தான் படம் மேற்கூறியபடியே நிற்கிறது.

குறைந்த கதாபாத்திரங்களை கொண்டு எடுக்கப்படும் படங்கள் மெல்லிய கதையம்சத்தை கொண்ட்டிருக்கும்.(ex – following, pi). இப்படத்தில் கதை மூன்று இழையாக இருக்கிறது. ஒன்று ரஜினியின் பாத்திரம். அவர் ஒரு ஆணாதிக்கவாதி. பெண்களை எப்போதும் ஒரு பண்டமாக பாவிக்கும் ஒரு மனது. அடுத்து கமல். படத்தினுள் இயக்குனராக இருக்கிறார். அவர் பெண்களை மையமாக வைத்து அவர்களும் ஆண்களும் சரி சம்மானவர்களே என்று ஒரு படம் எடுக்க முயற்சிக்கிறார். ரஜினி மூலமாக கமலின் அப்படத்திற்கு உதவி செய்ய வரும் பெண் தான் ஶ்ரீ ப்ரியா. அவளுக்கு ஆண்களை கண்டாலே பிடிக்காது. அவள் வாழ்க்கையில் கண்டு வந்த ஆண்கள் எல்லோரும் காமத்துப்பாலால் நிறைந்து வேட்கையை சுமந்து திரியும் ஜடமாக மட்டுமே இருந்திருக்கிறார்கள். தான் தான் பெரியவள் என்னும் கர்வம் என்று ஒரு கம்பீரப்பெண்ணாக வருகிறார். இம்மூன்று பேரும், மூன்று கோட்பாடுகளும் இணையும் புள்ளி எப்படி இருக்கும் ? ஒரு தீர்வு கிடைக்குமா ? கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா ? இது தான் கதை.

மூன்று பேர் என்பதற்கு பதில் மூன்று கோட்பாடுகள் என்பது தான் உசத்தியாக இருக்கும். எல்லா காலங்களிலும் பெண்ணிற்குள் எப்போதும் தன் சுயம் சார்ந்த ரகசியங்கள் அழுகிக் கொண்டே இருக்கிறது. ஆயுள் முழுக்க வெளிக்காட்ட ஒருவரை தேடிக் கொண்டே இருக்கிறாள். சிறியதொரு நம்பிக்கை கூட அவளுக்கு பெரிய தூணாக இருந்து விடுகிறது. அந்த நிலைமையில் அவனை/அவளை பற்றிய மதிப்பீடுகள் அவளுக்கு தேவையற்றதாக அமைந்து விடுகிறது. தன் ரகசியங்களை அந்த மனிதர்களிடம் மனம் விட்டு பேச ஆரம்பித்து விடுகிறாள். அப்போது கொள்கை ?

கொள்கை பிடிப்பு எப்போதும் நிரந்தரமான ஒன்று அல்ல. கொள்கையை கட்டிக் கொண்டே இருந்தால் நாம் நிகழ்காலத்தில் ஏதோ ஒன்றை எப்போதும் இழந்து கொண்டே தான் இருக்க வேண்டியிருக்கும். கொள்கைபிடிப்பு மிக மெலிதான ஒன்று. எப்போது வேண்டுமெனினும் அது கழன்று பறந்து கொண்டிருக்கலாம். மனிதனோ பறந்து கொண்டிருப்பதைக் கண்டு அழுது கொண்டிருக்கிறான். இந்த இரு நிலைகளையும் படத்தில் மிக அழகாக சித்தரித்திருக்கிறார் இயக்குனர்.

எடுக்கப்பட்ட விதத்திலும் படம் கொஞ்சமும் சோடையில்லை. படத்தின் பெயர்கள் போடும் நேரத்தில் பிண்ணனியில் கசாமுசா என்று வசனக் குவியல்களாய் ஓடிக் கொண்டிருக்கும். அவை என்ன என்று தெரியாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். அவையனைத்தும் அந்த படத்தின் உள்ளே வரும் வசனங்கள். அதை பெயர் போடும் போதே இட்டு காட்டியிருக்கும் முறை அக்காலத்தில் ஒரு நவீன முயற்சியாக நிச்சயம் இருந்திருக்கும். இது மட்டுமின்றி சில பேட்டிகள், படம் எடுப்பது பற்றிய படங்கள், ஆவணப்படங்களின் அக்காலத்திய நிலை, மக்களிடம் சென்று ஒரு இயக்குனர் பேசும் வெளிப்படையான விஷயங்களும் பதில்களும் என ஒவ்வொரு காட்சியும் எனக்கு இப்போதும் புதுமையை கொடுக்கிறது.

கொண்டாடிய படம் என்றே சொல்ல வேண்டும். ரஜினியின் நடிப்பு அதி அபாரமானது. எங்கே போனார் ரஜினி என்றே இக்கட்டுரைக்கு தலைப்பிட நினைத்தேன். ஏனோ மாற்றிவிட்டேன். அப்படியொரு நடிப்பை கொடுத்திருப்பார். இப்போதிருக்கும் நடிகர் சிவாவின் நடிப்புகள் அவரின் காப்பியோ என்று சந்தேகத்தை கொடுக்கிறது.

இது கறுப்பு வெள்ளைப்படம் தான். அதற்காக இக்காலத்தியவர்கள் நிராகரித்துவிடாதீர்கள். இக்காலப்படங்களில் நாம் காணமுடியாத ஒரு நவீனம் இப்படத்தில் மிளிர்கிறது. இதை எனக்கு அறிமுகபடுத்தியவர் யார் என்று எப்படி நினைத்தாலும் நினைப்பில் வரமாட்டேன் என்கிறது. அந்த பெயர் மறந்து போன பாக்கியவானுக்கு என் நன்றிகள்.

பின் குறிப்பு : இன்னுமொரு படத்தை சொல்கிறேன் என்று சொல்லியிருந்தேன். அது கேங்க்ஸ் ஆஃப் வாசேப்பூர் என்னும் ஹிந்திப்படம். இப்படம் இரண்டு பாகம். இப்படத்தை நான் என் இணையத்தில் எப்போதோ எழுதியிருந்தேன். சமீபத்தில் நான் செய்த மீள்பார்வையின் விளைவு இந்த வார்த்தைகள். ஒரு பழிவாங்கும் படத்தை எப்படி எடுக்க வேண்டும் என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டு இந்த படம். கில்பில் என்னும் ஆங்கில படத்தை எடுத்த போது அதன் இயக்குனர் ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அது இரண்டு பாக திரைப்படம். இரண்டு பாகத்திரைப்படத்தின் முக்கிய பங்கு முதல் பாகத்தில் அனைத்து கதாபாத்திரங்களும் அறிமுகம் ஆக வேண்டும். மேலும் இரண்டு பாகங்களும் தனித்தனியாக ஒரு முழு படத்திற்கான திருப்தியை கொடுக்க வேண்டும் என்று. இந்த இரண்டில் இரண்டாவதை முழுமையாக இப்படம் செய்கிறது. முதல் விஷயத்தில் உள்ள பிரச்சினை யாதெனில் இரண்டாம் பாகத்தில் சில கதாபாத்திரங்களும் பெயர்களும் சேர்கிறது. இப்படத்தில் இருக்கும் authenticity என்னை அதிகம் கவர்கிறது. இப்படத்தில் இருப்பது முழுக்க வதையின் கொண்டாட்டமான உருவம். வதை விரும்பிகளுக்கான ஒரு அறுசுவை விருந்து கேங்க்ஸ் ஆஃப் வாசேப்பூர்.

ஒரு வெள்ளை அறிக்கை – உஷாதீபன்

 images (3)

,

 

 

 

 

 

 

 

ரொம்ப வருஷம் கழித்து அவன் அந்த அலுவலகத்திற்கு மாறுதலில் வந்தபோதுதான் அவளைப் பார்த்தான். அவளும், தான் வேலை பார்க்கும் துறையிலேயேதான் பணியாற்றுகிறாள் என்ற விபரமே அப்போதுதான் அவனுக்குத் தெரியவந்தது. அதுவே அவளிடம் கொஞ்சம் நெருங்கிவிட்டதைப் போலத் தோன்றி சிலிர்ப்பை ஏற்படுத்தியது. இத்தனை வருஷம் பார்க்காமல் இருந்திருந்தாலும், இப்போது பார்க்க நேர்ந்ததில் ரொம்பவும் நெருக்கமாக உணர்ந்தான். எதற்காக இப்படித் தோன்றுகிறது என்று நினைத்துப் பார்த்தபோது, ஊரில் இருக்கையிலேயே அவள் அழகு தன்னை வசீகரித்திருந்ததும், இவளெல்லாம் எங்கே தனக்குக் கிடைக்கப் போகிறாள் என்று மனம் ஏங்கிக் கிடந்ததையும், இருந்த காலங்களில் ஒரு முறை கூட மறந்தும் அவள் தன்னைப் பார்த்ததில்லை என்பதுவும், மறைந்தும், ஒளிந்தும், தயங்கியும், தவித்தும், பார்த்துப் பார்த்துப் பெருமூச்சு விட்டதையும், இப்பொழுது அவளைப் பார்த்த இந்தக் கணத்தில் கூடத் தன்னுள் அந்த ஏக்கம் தவிர்க்க முடியாமல் வெளிப்படத்தான் செய்கிறது என்பதை நினைக்கையில், அன்றிருந்ததை விட இப்பொழுது அழகு கூடியிருக்கிறதோ என்று நினைக்கத் தலைப்பட்டான்.

அவள் வந்து போவதைப் பார்த்தால், கடந்த சில வருஷங்களாகவே இந்த அலுவலகத்திலேயேதான் பணியாற்றிக் கொண்டிருக்கிறாள் என்பதாகத் தோன்றியது. அவளுக்கிருக்கும் அழகுக்கு அவள் எதையும் சாதிக்க முடியும் என்று நினைக்க வைத்தது. முன்பே பழக்கமிருந்திருந்தால், அவள் இங்கிருக்கும் விபரம் தெரிந்திருந்தால், அதே அழகைப் பயன்படுத்தி, அந்த செல்வாக்கில், தனக்கும் ஒரு மாறுதலை அவள் வாங்கிக் கொடுத்திருக்கலாம் என்று விபரீதமாய்த் தோன்ற, அது எப்படி சாத்தியம், ஒரே ஊர்க்காரன் ஆனாலும் அவள்தான் தன்னையெல்லாம் ஏறிட்டுக் கூடப் பார்த்ததில்லையே என்று தன்னிரக்கம் மேலிட்டது இவனிடம். இது என்ன நினைப்பு என்று மெல்லிய சிரிப்பு உதித்தது..

ஆனாலும் ஒன்று. அவள் அழகுக்கு அவள் அப்படி இருந்ததுதான் சரி. ஏறிட்டுப் பார்த்துப் பேசக் கூட ஒரு மூஞ்சி வேண்டாமா? ஒரு வேளை நிமிர்ந்து பார்த்திருந்தால் தன்னால் நிச்சயமாக அவள் முகத்தை நேருக்கு நேர் கூச்சமின்றி நோக்கியிருக்க முடியாதுதான். சட்டென்று குனிந்து, விலகித்தானே போயிருப்போம், அதனால்தானே மறைந்து, ஒளிந்து திருட்டுத்தனமாய் அவள் அழகை ரசித்தது. அந்தக் காரியங்களிளெல்லாம்தான் எத்தனை சுகமிருந்தது.

இவனுக்கு இதேதாண்டா பொழப்பு…அவ பின்னாலேயே பார்க்கிறான் பாரு….பிடிங்கடா அவனை…ஓடிப்போய் கைல பிடிச்சுக் கடிச்சிரப் போறான்…

நண்பர்கள் கூட்டத்தில் இவன் மட்டுமேதான் அவளைப் பார்த்தான். ஏன் அவள் அழகு மற்றவர்களை ஈர்க்கவில்லை? ரசனையே இல்லையே எவனுக்கும்?தன் கண்ணுக்குத் தோன்றிய பேரழகு அவர்களுக்கு மட்டும் ஏன் உறுத்தவில்லை. சலனப்படுத்தவில்லை. தன் வயதொத்தவர்கள் தானே எல்லோரும்? அவர்கள் அப்படி இருந்ததுதான் தனக்கு வசதியாய்ப் போயிற்று. ஆனால் ஒன்று. அவர்களெல்லாம் நன்றாகப் படித்தார்கள். அதை இங்கே சொல்லித்தான் ஆக வேண்டும். அதில் கோட்டை விட்டது தான் மட்டுமே. இவன் திருந்த மாட்டான்டா என்று உதறிவிட்டார்கள். இவளால்தான் அது கெட்டுப் போனதா? அப்படி ஒரேயடியாயும் கூறி விட முடியாதுதான். தனக்கு சினிமாவும், பாட்டும், கூத்தும் என்றுமே பிரதானமாய்த் தோன்றியிருக்கின்றன. பரீட்சைக்கு முதல்நாள் பயமில்லாமல் சினிமாப் பார்த்தவனாயிற்றே…! அந்த நாயகியின் இடத்தில் இவளை வைத்து ரசித்தவனாயிற்றே…ஆனாலும் காலம் தன்னை அத்தனை இழி நிலைக்குத் தள்ளி விடவில்லைதான். எப்படியோ தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஒரு வேலைக்குப் போயாயிற்று. …அதற்கான முயற்சியின்போது உஷாராகித்தான் இருந்தோம்…தன்னைப் போல் அசுர முயற்சி செய்தவன் எவனுமில்லை. அதே உழைப்பைப் படிக்கும்போதும் காட்டியிருந்தால், சென்று சேர்ந்த இடம் எவ்வளவோ உயரத்தில் போயிருக்கும். சினிமா, கலை, பாட்டு, கூத்து என்று இருப்பவன் கதையெல்லாம் இந்த அளவுக்குத்தான் இருக்கும் போலும்…இன்றும் விடாமல் அவையெல்லாம் கூட வந்து கொண்டேயிருக்கிறதே…! இதோ, தன் வாழ்க்கையில் இப்பொழுது மீண்டும் வந்து விட்டாளே…! இந்தப் பயணத்தின் நெடுக இவள் தென்பட்டுக் கொண்டேயிருப்பாள் போலிருக்கிறதே…!

பத்து வருடங்களாகத் தான் வெளியூரில் இருந்து விட்டு, முறைப்படி விண்ணப்பித்து, விதிவழிப்படியான எண் வரிசையில் இங்கே வந்து சேர்ந்திருப்பதும், இருக்கும் போட்டியில், வெவ்வேறு விதமான சிபாரிசுகளில் இதுவும் எத்தனை மாதங்களுக்கோ அல்லது எத்தனை நாளுக்கோ என்று ஒரு பயம் தோன்றிக் கொண்டேயிருப்பதும், என்னவெல்லாம் செய்தால் தன்னை அவர்கள் தவிர்க்க முடியாது, அனுப்ப முடியாது என்கிற நிலையை எய்த முடியும் என்ற சிந்தனையே தன்னிடம் ஓடிக் கொண்டிருப்பதும், அதற்கான முயற்சிகளை வலியத் தான் மேற்கொள்வதும், நாராயணனைக் கூப்பிடுங்க, அவர்தான் சரி…என்கிற வார்த்தைகள் சமீபத்தில் அவ்வப்போது வர ஆரம்பித்திருப்பதும், ஏதோவொரு வகையில் தன்னைத் திருப்திப்படுத்தி வருவதை உணரத்தான் செய்கிறது மனம்.

நாராயணன் என்ற தன் பெயர் கூட ஒருவகையில் ஊரில், தெருவில், கேலிக்குரியதாகத்தான் விளங்கியது அன்று. நாராயணன் நரைத்தலையன்……நாராயணன் நரைத் தலையன்….என்று யாரோ திரும்பத் திரும்பச் சொல்வதாகத் தோன்ற கை அவனையறியாமல் தலையைக் கோதியது. தன்னை அப்படி அழைத்துத்தானே கேலி செய்தார்கள்? யே…நரைத் தலையா…டே….நரத் தலையா….வாடா இங்க….! அந்தச் சின்ன வயதிலேயே தன் தலைமுடி நரைத்துவிட்டதற்குத் தான் எப்படிப் பொறுப்பாக முடியும்? வறுமை காரணமா? ஊட்டச் சத்து இல்லாமை காரணமா? அல்லது பெற்றோரின் உடல் வாகு வம்சாவளியாகத் தனக்கும் வந்த காரணமா? முடி நரைத்தால் அது ஒரு கேவலமா? வயதில் சின்னவனுக்கு நிறைய நரைத்திருப்பது பார்க்கக் கொஞ்சம் ஒரு மாதிரியாகத்தான் இருக்கும். சற்றே வயதான தோற்றத்தை வெளிப்படுத்தும்தான். அதற்காக நான் என்ன செய்ய முடியும்? அதற்காக அது கேலிக்குரிய விஷயமா? எதைச் சொல்வது? அப்பாவுக்கு அப்படி இல்லையாயினும், இளைய சித்தப்பா முடி வெள்ளையாய்த்தானே அலைந்தார்? சொல்லித்தான் என்ன ஆகப் போகிறது. நரைத்த தலை நரைத்ததுதான்? இப்போது மாதிரி அப்போதெல்லாம் முடியைக் கருப்பாக்கிக் கொள்ளும் வழக்கமிருந்ததில்லையே?அப்படிக் கருப்படித்துக் கொண்டிருந்தால் இந்தக் கேலிகளிலிருந்து தப்பித்திருக்கலாமோ? ஒரு வேளை அந்த வழக்கமிருந்து, தனக்குத் தெரியாமல் போயிருந்திருக்கலாம். யாருக்குமே தெரிந்ததாகவும் தெரியவில்லை. அத்தோடு அப்போது அதெல்லாம் தவறான வழக்கங்கள் என்கிற வகைப்பாடுக்குட்பட்டதாக வல்லவோ இருந்தன? அதெல்லாம் சினிமா ஸ்டார்கள் செய்து கொள்பவை என்பதாக…! இவையெல்லாம் கிடக்கட்டும்…இதெல்லாம் அன்று ஒரு பிரச்னையே இல்லையே…படிக்கணும்…வேலைக்குப் போகணும்…இதுதானே எப்போதுமான போதனை….படி…படி…படி…!இப்படிச் சொல்லித்தானே விரட்டிக் கொண்டிருந்தார்கள்.

ஒருவேளை தன் பெயரும், நரைத்த தலையுமே அவளுக்குப் பிடிக்காமல் போயினவோ என்னவோ…? எப்போது அவள் தன்னை அப்படி நோக்கி அறிந்திருக்க முடியும்? எல்லோரும் பாட்டாய்ப் பாடுவது அவள் காதிலும் விழுந்து, அவளும் அந்த எண்ணத்திற்கு வந்திருக்கலாம். தூசுக்கு சமானமாய் இருந்த காலம்தானே அது…! தன்னையெல்லாம் அவள் என்று ஒரு பொருட்டாய் மதித்தாள். அவள்பாட்டுக்கு ஒரே பார்வையாய், என்ன திமிராய் நிமிர் நடை நடப்பாள்.

இன்று அவளைப் பார்க்கையில் அந்த எல்லா எண்ணங்களும் சற்றும் அழிவில்லாமல்….சரிபோகட்டும்….அதற்காக அவளுமா இப்படிப் புத்தம் புதியதாய் இருப்பாள். அன்று கண்ட மேனி அழியாமல் என்கிறார்களே…அதுதான் இதுவோ….இவளுக்கு வயது என்பதே கிடையாதா? என்ன ஒரு மினு மினுப்பு…என்னவொரு பளபளப்பு…? அந்த உறாலே அவளால்தான் ஒளி வீசுகிறதோ…? சுற்றிலும் பரவியிருக்கும் சுகந்த மணம் அவளிடமிருந்து தோன்றுவதுதானோ?

உள்ளே நுழைகையில் வராண்டாவுக்கு அடுத்த படுக்கை வசமான நீண்ட அகல உறாலின் எதிர் வரிசையில் சற்றே இடது புறமான இடத்தில் அவள் இருக்கை இருந்ததுவும், வலியத் திரும்பிப் பார்த்தால்தான் அந்த உறாலைக் கடப்பதற்குள் அவளை ஒரு பார்வை பார்த்து விட முடியும். அப்படி வலியக் கழுத்தை ஒடித்து நோக்குவதே மற்றவர்களின் பார்வையில் பட்டு விடக் கூடும். யாரும் அறியாமல் அவளை எப்படிப் போகிற போக்கில் ஒரு நோக்கு நோக்கிவிட்டுக் கடப்பது? மொத்த நாளில் அந்தப் பக்கமாய் வருவதே ஒரு சில முறைதான். அதுவும் இந்தப் பாடாய் இருந்தால், பின் எப்படித்தான் பார்ப்பதாம்? . உள்ளூருக்கு வந்து பணியில் சேர்ந்து, முதலில் அந்த இடத்தைத் தக்க வைத்துக் கொள்வது எப்படி என்கிற சிந்தனையில்லாமல், இவள் தன்னை இப்படி வசீகரித்து விட்டதும், பழைய ஞாபகங்களைக் கிளறி விடுவதும் இம்சையாகத்தான் இருக்கிறது. இன்பமான இம்சை. மனதுக்கு அது வேண்டித்தான் இருக்கிறது. என்னவோ ஒரு குறுகுறுப்பு. தவிர்க்க முடியவில்லைதான்.

இப்படித்தான் சொந்த ஊரில் இருந்த காலத்தில் படிப்பில் கவனம் செலுத்த விடாமல் அலைக்கழித்தாள். நெஞ்சக் குளத்தில் கல்லெறிந்து, ஆசை அலைகளைக் கிளப்பிக் கொண்டேயிருந்தாள். அதனாலேயே மார்க் குறைந்து போனதும், அது தெரியாமல், என்னத்தப் படிச்சுக் கிழிச்சே…நீ, ஐம்பது சதவிகித மார்க்கெல்லாம் ஒரு மார்க்கா, எப்படி வேலை வாங்குவியோ எனக்குத் தெரியாது, இனி உன் சாமர்த்தியம் என்று அப்பா கை கழுவி விட்டதும், தான் சுதாரித்த காலங்களில் கூட அவளும், அவள் நினைப்பும்,அந்தக் கொள்ளை அழகும் தன் கூடவே வந்து கொண்டிருந்ததும், தான் பார்த்த, ரசித்த, மயங்கி மண்டியிட்ட ஒரே தேவதை அவள்தான் என்று தோன்றி இப்பொழுதும் ஏக்கப் பெருமூச்சைக் கிளர்த்திக் கொண்டிருக்கிறது இவனிடம்.

அந்தக் கட்டடத்தில் இவன் இருக்கிறானேயொழிய அந்த அலுவலகப் பணியாளன் அல்ல. அவள் வேலை பார்க்கும் அந்த அலுவலகத்திற்கு இவன் மாறுதலில் வரவில்லை. அதுவே அவன் அங்கே வந்த பின்னால்தான் அவனுக்கே தெரிந்தது. புதிதாகத் தோன்றிய ஒரு அலுவலகத்தின் பணியாளனாக, வேறு கட்டடம் கிடைக்கும்வரை அங்கு இருந்துகொள்பவனாகவே அவன் அலுவலகம் இருந்தது. அவனும் வந்து போய்க் கொண்டிருந்தான். ஆனால் அவன் தலைமை அந்த இடத்தை விட்டுப் போவதாய் இல்லை என்று சொன்னது இவனுக்குப் பிடித்திருந்தது. பக்கம் பக்கமாகவே கோயிலும், கடைகளும், பேருந்து நிலையமும், உணவகங்களும் அமைந்து போன அந்த இடம் ரொம்பவும் வசதி என்பதால், தாங்கள் பிடித்திருக்கும் அந்தக் கடைக்கோடி அறைதான் கடைசிவரை என்று உறுதியாய் இருந்தார் அவர். வேறு வாடகைக் கட்டடத்திற்கான பிரேரணையை அனுப்புவதில் தாமதம் செய்தார்.

வாரத்தில் ஐந்து நாட்கள் முகாமில் இருந்துவிட்டு, ஆறாவது நாள் அலுவலகம் வருவார். அவர் குறிப்பிடும் வேலைகளை அவரின் எதிர்பார்ப்பிற்கு முன்பே முடித்துக் கொடுக்கும் திறன் .இருந்தது இவனிடம். இவன் மீது அவர் கொண்டிருந்த மதிப்பு, ஒண்டியிருக்கும் அலுவலகத்திற்கான பல அவசரப் பணிகளில் முன்னின்று இவன் உதவும் போக்கு, அவர்களோடு நட்புறவுடன் இருந்து ஒட்டிக் கொள்ளும் தன்மை, அதனால் அடையும் சிறு சிறு பலன்கள் எல்லாமும் சேர்ந்து, அவனை ஒரு தவிர்க்க முடியாத பணியாளனாய் அந்தப் பெரிய அலுவகத்திற்கு ஆக்கியிருப்பது தாங்கள் வேறு இடம் பார்த்துச் செல்ல வேண்டிய அவசியமே இல்லை என்பதை நாளுக்கு நாள் உறுதிப் படுத்திக் கொண்டேயிருந்ததை உணர்ந்து அவர் அவனைப் பாராட்டினார்.

நான் கேம்ப் போயிட்டு வாரத்துல ஒரு நாள் ஆபீஸ் வர்றேன். நமக்கு எதுக்கு தனிக் கட்டடம்? இந்த எடத்தைத் தக்க வச்சிக்கிறது உங்க கைலதான் இருக்கு. அதான் நம்ம எல்லாருக்குமே வசதியானது…என்றார். ஒரு கணினி இயக்கியும், பியூனும் ஆக மொத்தம் நால்வர் அணிதான் அவர்கள் அலுவலகம்.

இவனின் வேலைத் திறன், அவள் காதுக்கும் போயிருக்கும்தானே என்றது இவன் மனம். தான் அந்த அலுவலகத்தின் எல்லோருக்கும் உதவுகையில், அவளுக்கு மட்டும் தன் உதவி தேவைப்படாதா என்ன? ஒன்றுகூடக் கிட்டவில்லையே இன்றுவரை என்று வலிய அவாவியது மனம். இதென்ன வேண்டாத சிந்தனை? தன்னின் இருப்பு பற்றி அவளுக்குத் தெரிந்தால் என்ன, தெரியாவிட்டால்தான் என்ன?

அந்த அலுவலகத்தின் பல பிரிவுகளுக்கும் செய்யும் உதவி, ஒரு நாள் அவளுக்கும் தேவைப்படாமலா போய்விடும்? அப்போதாவது வந்து கேட்கமாட்டாளா? அன்றாவது இரண்டொரு வார்த்தைகள் அவளோடு பேச வேண்டி வராதா? அந்த நல் வாய்ப்பும் கிட்டாமலா போய் விடும்?

அது கிடக்கட்டும். முதலில் மாறுதலில் வந்து கடந்த ஓரிரு மாதங்களுக்கும் மேலாய் அங்கு பணியாற்றிக் கொண்டிருக்கும் தன்னை அவள் அறிவாளா? தான்தான் அந்தப் பழைய நாராயணன் என்பதையாவது உணர்வாளா? ஒரு வேளை அப்போதும் நரைத்தலையன் நாராயணன் என்ற அடைமொழியோடு தன் பட்டப்பெயரைத் தானே வாய்விட்டுச் சொன்னால்தான் புரியுமோ? தானே தன்னைப் பற்றி அப்படிச் சொல்லிக் கொள்ள முடியுமா? பட்டப்பெயரை எப்படிப் பெருமையாய்ச் சொல்வது?அது தவிர்க்க முடியாமல் சொல்வதுதானே? பெருமை எங்கிருந்து வந்தது? அப்படிச் சொல்ல அவள் அன்பு கிட்டாமல் போனால்?, எடுத்த எடுப்பில், மனதில் அந்த வெறுப்பு மீண்டும் வந்து புகுந்து கொண்டால்? அதே விலகல் வந்து ஒட்டிக் கொண்டால்? ஏன் இப்பொழுதும் இப்படி விலகலாக உணர்கிறது மனம்? எங்கெங்கோ சிதறிக் கிடந்த மனம் அவளைக் கண்டதும் அந்தக் குவி மையத்தில் வந்து உட்கார்ந்து கொண்டதே…!

பார்த்தால் கல்யாணம் ஆனவள் போல்தான் தெரிகிறாள். இதையும் குறிப்பாய்த்தான் கவனிக்க வேண்டியிருக்கிறது. அப்பொழுது

போல்தான் அதே சின்னஞ்சிறு பொட்டை வைத்திருக்கிறாள். திருமணம் ஆனதின் அடையாளமாய் சற்றுப் பெரிய பொட்டை அணிந்தால்தான் என்ன? ரொம்பவும் அகலமல்லாத, ரொம்பவும் குறுகலும் அல்லாத தன் நெற்றிக்கு இந்த அளவுக்கான பொட்டுதான் சரி என்ற அழகுணர்ச்சிதான் காரணமாக இருக்க முடியுமோ? இரு புருவங்களுக்கும் மேல் அல்லாமல், நடுவில் அமர்ந்திருக்கும் அந்தப் பொட்டு, சற்றே மேல் தூக்கியிருந்தால் இன்னும் அந்த முகம் பளிச்சிடும் என்று தனக்குத் தோன்றுவது அவளுக்கு ஏன் தோன்றவில்லை? என்று அவள் இதைச் சரி செய்வது? இதுநாள் வரை, இத்தனை வருடங்களாய் அவளுக்கு இந்த முக்கிய யோசனையை யாருமே சொல்லவில்லையா…!

இத்தனை ஆண்டுகளாய் அவள் தன்னோடு ஒரு வார்த்தை கூடப் பேசியதில்லை என்ற நிலையில், நெற்றியில் வைத்துக் கொள்ளும் பொட்டைப்பற்றித் தான் நெருக்கமாய்ச் சிந்திப்பது கேவலமாய் இல்லை? அபத்தமில்லையா இது?

யாராவது அவளைப் பற்றிப் பேசுவார்கள் என்று பார்த்தால் ஒருத்தரும் இன்றுவரை வாய் திறக்கவில்லை. யாருடனும் அவளும் பேசி நின்று பார்க்கவில்லை. வேலை நிமித்தமே கூட அப்படி எதுவும் நிகழவில்லையே?

ஆனால் ஒன்று. அந்த அலுவலக ஆண் பணியாளர்கள், பெண் பணியாளர்கள்பற்றி எதுவும் கேலியாகவோ, கிண்டலாகவோ, விளையாட்டுக்கே கூடப் பேசி இன்றுவரை இவன் கேட்டதில்லைதான். முன்பு இருந்த வெளியூர் அலுலவலகத்தில் அப்படி இல்லை. அங்கு ஒரு பெண் கிளார்க்கை, தனக்குப் பேசி முடித்து விடலாமா என்பதுவரை போனார்கள் நண்பர்கள். அந்தப் பெண்ணும் எப்படியோ இந்தப் பேச்சை அறிந்து கொண்டு, தன்னிடம் சிரித்தும், வெட்கப்பட்டும் நெளிந்ததைப் பார்த்தான். அப்போது இவளுக்கு மட்டும் தன் நரைத்தலை பிடித்திருக்கிறதோ என்று தோன்றியது. ஒரு வேளை வரி வரியாய் ஓடும் அந்த வெள்ளை முடிகள் இவளைக் கவர்ந்து விட்டதோ என்று நினைத்தான். மாறுதல் வராமல் இருந்திருந்தால் மாட்டி வைத்திருப்பார்கள்தான். தப்பித்தோம், பிழைத்தோம் என்று வந்து சேர்ந்து விட்டான் உள்ளூருக்கு.

இங்கு வந்தால், இளம் பிராயத்தில் தன் மனத்தில் தோகை விரித்து ஆடிய அதே பொன் மயில்.இன்றும் தன் மேன்மை குன்றாமல்….இறைவன் ஆனாலும் ஓரவஞ்சனைக்காரன். ஒரே இடத்தில்கொண்டா இத்தனை அழகைக் குவித்து வைப்பது?

அந்த மேடம்….என்று ஒரு நாள் ஆவணப்பிரிவு நாகுவிடம் வாய் திறந்தபோது அவர் சொன்னார்.

அவுங்களா…யாரு..? சாந்தா மேடத்தைத்தானே சொல்றீங்க….அவுங்க ஆடிட் செக் ஷன் பார்க்குறாங்க……பெர்ஃபெக்ட் லேடி…..அவராகவே சொன்னார் இப்படி.

இவனுக்குப் புரியவில்லை. அதென்ன பெர்ஃபெக்ட்? எதுக்காக? எதில்? கேள்விகள் பிறந்தன.

அவுங்க வேலைல சொன்னேன்யா…. – சாதாரணமாய் உடைத்தார் புதிரை. அந்தக் கால இருவர் உள்ளம் திரைப்படத்தில் வரும் சாந்தா காரெக்டரை நினைவு வந்தது இவனுக்கு. அந்தக் கதாபாத்திரமும் ஏறக்குறைய அப்படித்தானே…? கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவி அந்தப் பாத்திரத்தை எத்தனை அழகாய்ச் செய்திருப்பார்கள்? சரோஜாதேவி என்கிற உருவம் மனதில் நன்றாய்ப் பதிந்திருக்கும்போது, எப்படி இவர்களால் அந்தந்தக் கதாபாத்திரங்களாய் வெவ்வேறு வடிவில் வாழ முடிகிறது? ரசிகர்கள் மனதில் எப்படி அப்படியாய் நிலைக்க முடிகிறது? வியந்து வியந்து ரசித்திருக்கிறான் இவன்.

அவுங்களும், நானும் ஒரே ஊர்தான் என்று சொல்ல இவனுக்கு ஆசையாய் இருந்தது. அசட்டு ஆசை என்றும் தோன்றியது. இத்தனை அழகு பிம்பமாய் இருக்கும் அவளின் ஊர்க்காரன் நான், நாங்கள் ஒரே தெருதான்…என்று மனம் அடித்துக் கொண்டது. தினமும் பார்த்துப் பார்த்து ரசித்து ஏங்கியிருக்கிறேன் என்று யாரிடம் சொல்வது? மனதிற்குகந்த ஆப்த நண்பன் என்று யாருமில்லையே? இவர்களிடம் சொன்னால் சிரிப்பார்களே? லூசு போலிருக்கு என்று நினைத்து விட்டால்?

எதற்காக இப்படியெல்லாம் மரை கழன்றதுபோல் நினைத்துக் கொள்கிறோம்? அவள் யாரோ? நான் யாரோ? நான் உண்டு, என் வேலை உண்டு. அவளைப் பற்றியே ஏன் நினைத்துக் கொண்டிருக்க வேண்டும்? அவள் அப்படியா இருக்கிறாள்? குனிந்த தலை நிமிர்ந்திருக்கிறாளா என்றாவது? பேனாவும் கையுமாய் இருக்கும் அவள் இதுநாள் வரை ஒரு முறை கூட முகம் நிமிர்த்திப் பார்த்ததில்லையே? யாராவது அருகில் போய் அவள் நெற்றியை விரலால் நிமிர்த்தி, ம்…நல்லா பார்த்துக்குங்க….என்று சொன்னால்தான் ஆச்சு. அது நடக்குமா?

அன்றொரு நாள் ஏதோவோர் தேசத் தலைவரின் நினைவுநாளுக்கு உறுதி மொழி எடுத்துக் கொள்ளப் பணியாளர்கள் அனைவரும் வாயிலில் கூடிய போது நேர் எதிரே ஆண்கள் வரிசையில் இவன் நின்றான். தெரிந்தமாதிரி ஒரு புன்னகையை இவன் சிந்த, எந்த எதிர்வினையும் இல்லையே? உண்மையிலேயே அவள் தன்னைத் தெரிந்து கொள்ளவில்லையா? தெரிந்தும், தெரியாததுபோல் இருக்கிறாளா? அல்லது தெரிந்தும் பொருட்படுத்தாதவளாய் அலட்சியப்படுத்துகிறாளா? காலத்தால் ஒருத்தியிடம் மாறுபாடே தோன்றாதா? அனுபவங்கள் மெருகேற வைக்காதா? கேள்வியே சரியில்லை. தான் மாறியிருக்கிறோமா? அன்றுபோலவே இன்றும் ஏங்குகிறாயே அவளுக்காக…அது சரியா? அவள் திருமணம் ஆனவள்…அவளை நினைக்கிறாயே…தப்பல்லவா…?

ஒன்றிரண்டு குழந்தைகளுக்காவது தாயாகியிருப்பாளே…அழகு குன்றாமல் இருக்கிறாள். அது வேறு…என்றாலும் பழக்க வழக்கங்களில் நெகிழ்ச்சி என்று ஒன்றைத் துளியும் காணோமே? இந்த அலுவகத்தில் இருக்கும் பலரும் அம்மாவாகவும், அப்பாவாகவும்தானே இருக்கிறார்கள்? அவர்களில் ஒருவள்தானே இவளும்…இவளுக்கு மட்டும் என்ன வந்தது?

குழந்தையாவது குட்டியாவது…நீங்க வேறே…ஒங்களுக்கு விஷயமே ஒண்ணும் தெரியாது போலிருக்கு…இப்பதானே வந்திருக்கீங்க….அந்தம்மாவுக்குக் குழந்தையெல்லாம் இல்ல…..

மகேஷ்வரன் இப்படிச் சொன்ன அன்று சற்றே அதிர்ந்து போனான் இவன். தன் மனதில் ஓடும் எண்ணங்களை எப்படி அறிந்தார் இவர். என்னவொரு நடைமுறை அனுபவம்?

ஏங்க? ஏன் அப்படி? என்றான் பதறியவனாய்.

ஏன் அப்டீன்னா? யாருக்குத் தெரியும்…போய் வேணும்னாக் கேளுங்க…என்றார் சிரித்தவாறே.

சரி….அத விடுங்க…இப்ப அதுவா முக்கியம்….எனக்கு இந்த ரிப்போர்ட்டை டாலி பண்ணிக் கொடுங்க….ப்ராஃபிட் அன்ட் லாஸ்ல எங்கயோ உதைக்குது…நீட்டினார் ஒரு அட்டவணையை.

யாருக்கு ப்ராஃபிட்? யாருக்கு லாஸ்? இவன் மனம் கேள்வி கேட்டுக் கொண்டது.

எனக்கு லாஸ் என்று வைத்துக் கொண்டாலும், அவளுக்கு ப்ராஃபிட் இல்லை போலிருக்கிறதே…! கிறுக்குத்தனமான நினைப்புதான்….

அன்று அவளை அந்தக் கோயிலில் பார்த்தான். ஆடி வீதியில் வலம் வந்து கொண்டிருந்தாள். சற்றும் எதிர்பார்க்கவில்லைதான். ஓதுக்குப் புறமாய் நின்றுகொண்டு இசைத் தூண்களை ரசித்துக் கொண்டிருந்தான் இவன். அப்படி ஒன்றும் வித்தியாசமாய் அவை ஒலிப்பதாய்த் தோன்றவில்லை. அவரவர் மனநிலைக்கேற்ப அது தோன்றக் கூடுமோ என்றிருந்தது. திரும்பி நடக்க ஆரம்பித்தபோது, அவள் அந்த மண்டபத்தைக் கடந்து கொண்டிருந்தாள். தவறு, தவறு அங்கிருந்து எழுந்து நடக்க ஆரம்பித்திருந்தாள். அப்படியானால் அத்தனை நேரம் அங்குதான் உட்கார்ந்திருந்தாளா?

அடடா…தெரியாமல் போயிற்றே? – இவன் கால்கள் சற்று வேகமெடுத்தன. அத்தனை நேரம் ஓய்வில் அமர்ந்திருந்த தெம்போ என்னவோ அவள் நடையில் வேகமிருந்தது. ஆனாலும் இந்த வேகத்தில் அவள் போக வேண்டாம்தான். யாரோ விரட்டுவதுபோல. சுற்றிலும் நடந்து செல்லும் பலருக்கும் நடுவே, தான் வழக்கத்திற்கு மாறான வேகத்தைக் காட்டுவது அத்தனை நல்லதல்ல என்று ஏனோ அந்த நிமிடத்தில் தோன்றியது.

ஆடி வீதியின் தெற்கு வாசல் பக்கம் திரும்பியிருந்தாள் அவள். இவன் ஆட்களை விலக்கிக் கொண்டு போய்விட முயல்கையில், வேக வேகமாய் தங்க ரதம் குறுக்கிட்டது. ஊர்வலம் நெருங்கி வர ஆரம்பித்திருந்தது. நாதஸ்வர மேளம் முழங்க கூட்டம் நெருங்க ஆரம்பித்திருந்த வேளையில் நிச்சயம் திருப்பத்தில் அவள் இதற்காக நிற்கக் கூடும் என்று தோன்றியது.

தனியாய்த்தான் இருக்கிறாள். இன்று எப்படியும் அவளிடம் பேசிவிட வேண்டும் என்று மனம் அவாவித்தது. குறைந்தபட்சம் ஒரு சுமுகமான அறிமுகத்தையாவது ஏற்படுத்திக் கொண்டாக வேண்டும். அதன் மூலம் அவள் பற்றியதான சிந்தனையின் அலைக்கழிப்பிலிருந்து, இன்றோடு விடுபட்டு விட வேண்டும். ஒரு மென்மையான உறவை, அல்லது நட்பை அவளிடம் ஏற்படுத்திக் கொண்டு விட வேண்டும்.

நினைத்தவாறே ரதம் தன்னைக் கடப்பதற்கு முன் கால்களை வீசிப் போட்டு முன்னேறினான். கூட்டம் இவனை விட வேகமாய்த் திரளோடு இடம் பெயர்ந்து கொண்டிருந்தது.

திருப்பத்தைக் கடந்து அந்த வாயிலின் படிகளின் மேல் ஏறி நின்று கொண்டு பார்த்தால் அவள் எங்கு நிற்கிறாள் என்பதைக் கண்டு பிடித்துவிட முடியும் என்று வரிசைக்காகக் கம்புகள் கட்டப்பட்டிருந்த ஆட்கள் இல்லாத ஓரப் பகுதியாய்த் தேர்ந்தெடுத்து விறு விறு வென்று முன்னேறினான். சிங்க முக சிற்பத்தினை ஒட்டிய படிகளில் மளிச் மளிச்சென்று ஏறித் திரும்பி நோக்கினான். கூட்டத்தின் அசைவுகளில் கண்கள் பயணித்தன. அதற்கு அவசியமில்லை என்பதுபோல் வெகு அருகிலேயே பக்கவாட்டின் கடைக்கோடியில் அவள் நின்று கொண்டிருப்பது ஒரு தற்செயலான திரும்பலில் கண்ணில்பட்டது. தீர்க்கமாய், அத்தனை அருகில் அவளின் இருப்பினை மனம் உணர்ந்தபோது, சந்தோஷப்பட்டது. அருகில் நின்று கொண்டிருந்த அந்த ஆண் மகனின் கை அவள் கைகளைக் கெட்டியாய்ப் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தது. கூட்டத்தில் தவறி விடுவாளோ என்பதைப் போல. அவளை எங்கோ அழைத்துக் கொண்டு போகப் போகிறான்…சீக்கிரம் நெருங்கு என்றது மனம். உருண்டு வேகமாய் வந்து கொண்டிருக்கும் ரதத்தின் முன் பகுதி நோக்கி தரிசனத்திற்காக முன்னேறியது கூட்டம்.

ஒரு கணம் அது யார் என்று உன்னிப்பாகக் கவனிக்க முற்பட்டபோது,ஆங்காங்கே கட்டப்பட்டிருந்த பெரிய பெரிய மெர்க்குரி விளக்குகளின் தாங்க முடியாத பளீர் வெளிச்சத்தில் அந்த உருவம் ஒரு திடீர் அதிர்ச்சியை இவனுக்குள் ஏற்படுத்திப் பதற வைத்தது. கண்ணில் ஒளி சிதறப் பளிச்செனப் பட்டது அந்த முழுதும் நரைத்து வெளிறிப் போன, கலைந்து காற்றில் பறந்து திரிந்த அவனின் தலை முடி. ஆடி வீதியின் தெற்கு வெளியில் தொடர்ந்து அடித்துக் கொண்டிருந்த அந்தப் பலத்த காற்றில், இழுத்து வந்த தேரே ஒரு கணம் கோணலாய்த் திரும்பித் தள்ளாட, பரந்து அகன்ற அந்த வெற்றுடம்பில் போர்த்தியிருந்த ஜரிகைத் துண்டு பிய்த்துக் கொண்டு கழன்று உயரப் பறக்க. அவனின் பளீரென்ற தேகம் அவன் பார்வையில் பளிச்சிட்டது. புள்ளிப் புள்ளியாய் விட்ட இடம் போக மீதிப் பகுதி எங்கும் , வித்தியாசமின்றிப் பரவலாய் அடர்ந்து பரவிப் படர்ந்திருந்த அந்தப் பார்வைக்கு வித்தியாசமான வெள்ளைத் தோலின் மாறுபாடான நிறம் இவனை ஒரு கணம் நிலைகுலைய வைத்தது. யாரோ எடுத்து நீட்டிய பறந்த துண்டை மீண்டும் விரித்துப் போர்த்தி, சாந்தாவைத் தன்னோடு அணைத்து நெருக்கமாய் நிறுத்தியிருந்தான் இப்போது அவன்.

பார்வையைச் சிறிதும் அகற்ற முடியாமல், வைத்த கண் வாங்காமல், அதிர்ச்சியில் அப்படியே நிலை குத்தி, தவிர்க்க முடியாமல் பனித்த கண்ணீர்த் துளிகளோடு, உறைந்துபோய் நின்றிருந்தான் நரைத்தலையன் நாராயணன்.

அவன் அவளை அணைத்துப் பிடித்தவாறே நகர்ந்து கொண்டிருந்தான்.

•••