Category: இதழ் 91

தலைவன் ( சிறுகதை ) தமிழவன்

images

என் பெயர் லஃபோர்க் என்பதாகும்.நான் ஒரு நாவலாசிரியன் என்பதையும் புகழைப் பற்றி நான் கவலைப்படாதவன் என்பதையும் முதலிலேயே சொல்லிவிடவேண்டும் . ஆகவே உங்களுக்கு என் பெயர் அறிமுகமில்லாமல் தான் இருக்கும்.

என்னுடைய வயதான காலத்தில் நான் வசித்துகொண்டிருக்கும் இந்தத்தீவில் பேசப்படும் ‘ஒலவு’ என்ற மொழி பற்றி டாக்டர் வெண்டல்வெஸ்கி என்ற பேர்கேட்ட ஐரோப்பியர் இலக்கணம் எழுதியதால், அம்மொழி உலக அரங்கில் பிரபலமானது என்கிறார்கள். அந்த மொழியில் எழுதப்பட்டு 2007-இல் ஆகஸ்டு மாதம் எட்டாம் தேதி வெளியான என் நாவல் ஒன்று அனைத்துலகப் போட்டியில் முதல் பரிசை வென்றதுகூட உங்களுக்குத் தெரியாமலிருக்கலாம். அதற்காக நீங்களோ நானோ இப்போது கவலைப்பட்டு எதுவும் நடக்கப்போவதில்லை. எவ்வளவுதான் நீங்கள் இலக்கியத்தின் அனைத்துலகப் போக்குகளையும் நுட்பத்தையும் அத்துப்படியாக வைத்திருந்தாலும் சில விசயங்கள் கவனத்துக்கு வராமல்தான் இருக்கும்.
ஒலவு மொழியில் நான் எழுதும்போது நடக்கும் மர்மத்தைப்பற்றிக் கூறிவிடுகிறேன். நான் எழுதும் எழுத்து என்னுடைய கற்பனையை மட்டுமல்லாமல் அம்மொழியில் எழுதும் எல்லோருடைய கற்பனையையும் தீர்மானிக்கிறது என்று நான் கூறினால் ஏற்பீர்களோ என்னவோ. அதுபோல என் எழுத்து எல்லாவிதமான அர்த்தங்களையும் அர்த்தத்தின் பகுதியான செயல் பாட்டையும் – சேர்த்துத் தீர்மானிக்கிறது. (இது நம்ப முடியாதது என்று எனக்குத்தெரியும்; எனினும் நம்பித்தான் ஆகவேண்டும் என பிடிவாதம் பிடிக்கமாட்டேன்..)
அதனால்தான் இவ்வளவு பீடிகையுடன் நான் இந்தக் கதையைச் சொல்ல வேண்டியிருக்கிறது. (சொல்வது வேறாகவும் எழுதுவது வேறாகவும் அமையும் மொழி என்னுடைய ஒலவு மொழி என்பது இன்னொரு உபதகவல்).

என் கற்பனை பற்றி என் சக எழுத்தாளர்களுக்குப் புரியவில்லை என்று நானும், இவன் ‘பிக்க்ஷன்’ எழுத்தாளன் அல்ல, ஒலவு மொழியின் நாட்டுப்புறவியல் எழுத்தாளன் மட்டும்தான் என்று என்னோடு சேர்ந்து இரவெல்லாம் குடித்துவிட்டுக் காலையில் அவிழ்ந்து கிடக்கும் துணியை எடுத்துக் கட்டியபடி(சிவந்திருக்கும் வீங்கிய கண்களால் என்னைக் கோபத்தோடு பார்த்து) சொல்லும் மூத்த எழுத்தாளனின் பேச்சைத் தான் நான் ஒரு எழுத்தாளனாய் கண்ட பலன்.

ஆனால் எனக்குச் சில நிச்சயமான கருத்துக்கள் உண்டு. என் கதைகளில் கற்பனையாக நான் கொண்டுவரும் பாத்திரங்கள் எனது தீவினது மரம் செடி கொடிகளில் பல ஆண்டுகளாய் ஆவிகளாய் வாழும் மூதாதையர்களின் பேச்சையே பேசுகிறார்கள். கற்பனையாக நான் என் ஒலவு மொழி மூலம் எழுதும் ஒவ்வொரு சொல்லும் நிஜமான இன்னொரு குரல்தான் என்பது எனது பல ஆண்டுகால கருத்து.

இதுபோன்று என் எழுத்தில் காணப்படும் வேறு குணங்கள் பற்றி பாரிசிலிருந்து வந்த ஒரு பத்திரிகையாளருக்கு ஒருமுறை கொடுத்த பேட்டியின் போது நான் பேசியதையும் உங்களிடமிருந்து மறைக்கத் தேவையில்லை.

என் எழுத்துக்களில், சரித்திரத்தில் ஒரு காலத்தில் உண்மையாக இருந்துவிட்டு மறைந்த நாயகர்களைப் பற்றியும் அவர்கள் அற்பாயுளில் மறைந்து போனபோது அவர்களால் வெளிப்படுத்த முடியாத அவர்களின் ஆசை அபிலாசைகளையும் தான் எழுதுகிறேன் என்று பேட்டி அளித்தேன். வேறு எழுத்தாளர்களும் தற்கால மக்களின் ஆசை அபிலாசைகளைத் தானே எழுதுகிறார்கள் என்று தோய்ந்து மறையும் கீழ்குரலில் அந்தப் பேட்டியாளன் சொல்லிவிட்டுப் பேட்டியைப் பாதியில் முடித்துக்கொண்டு மறைந்தான். அது அவனது கீழான குணத்தைத்தான் காட்டுகிறது என்றே நினைத்தேன். பேட்டி எடுத்தவனின் நடத்தையைப்பார்த்து பிரான்சு நாடு எங்களைக் காலனியாக வைத்து ஒரு காலத்தில் ஆண்டுகொண்டிருந்தது கூட எனக்கு ஞாபகத்துக்கு வந்தது.

நான் எழுதும்போது என்னைச் சுற்றி ஆட்டம்போடும் இறந்து போனவர்களின் குரல் எனக்கு நிதர்சனமாய் எப்போதும் கேட்கிறது. எனவே, கற்பனையும் நிஜமும் என்னைப் பொறுத்தவரையில் வித்தியாசமற்று என் புனை கதைகளில் வடிவம் கொள்கின்றன. ஆனால் நான் என் ஒருவனைப் பற்றி மட்டும் எழுதும் சுயநலக்காரன் அல்ல என்கிறேன். என்னைச் சுற்றியுள்ளவற்றைப் பற்றி- எழுதும் என் அறிவு வளராத காலத்திலேயே, காலரா நோய்வந்த மூன்றே நாட்களில் இறந்துபோனார் என்று சொல்லப்பட்ட என்னுடைய தாத்தாவும், அவரது தாத்தாவும் பல மூதாதையர்களும் என் எழுத்தில் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். அந்தத் தாத்தாவின் தாத்தாவும் அவர்களின் மூதாதையர்களும் கூட என்னோடு நான் எழுதும்போது பேசுகிறார்கள் என்பது மிகவும் துல்லியமாகவும் அவர்களின் வித்தியாசமான குரல் அடையாளத்துடனும் தெரிந்துகொண்டுள்ளேன். இதனால் எழுத்தின் முக்கியமான பிரச்சனைகளான கர்வமோ, சுயபரிதாபமோ எனக்கு இல்லவே இல்லை.

இப்படியாக நான் எழுதுவதால் எனக்குப் பிறரைப் பற்றிய எல்லா விஷயங்களும் அத்துப்படி. அவர்களின் கள்ளக்காதலிகள், அவர்கள் சொந்த சகோதரர்களுக்குச் செய்த துரோகங்கள், எத்தனை திருமணங்களைத் தடுத்தார்கள் (திருமணங்களைத் தடுப்பது எங்கள் சமூகத்தில் மன்னிக்க முடியாத பாபம்) என்பதெல்லாம் எனக்குத் தெரிந்துவிடும். அதாவது என் எழுத்துச் சம்பவிக்கும் போது பல உண்மைகளைக் கண்டுபிடிக்கும் மந்திரக்கண்ணாடி ஒன்று என் கண்முன் இயற்கைத் தெய்வத்தின் உதவியால் பிடிக்கப்படும். இப்படித்தான் என்னால் எழுதமுடியும். கற்பனையை நிஜத்திலிருந்து கொஞ்சமும் என்னால் பிரித்தெடுக்க முடிந்ததில்லை.( இதைதானே என் விரோதிகள் என் பலவீனமெனக் கூறித் தூற்றுகிறார்கள்.)

இப்படித்தான் குகி என்ற பெயரில் என் மொழியில் எழுதும் ஒருவனின் எழுத்தினுள் மறைந்திருக்கும் பல விஷயங்களை நான் கண்டுபிடித்து எழுதி வெளிக்கொண்டுவந்தேன். அதனால் அவன் என் அலுவலகத்துக்கு வந்து ஒரு குவளையில் எடுத்துவந்த திராவகத்தைக் கோபத்தோடு வீசினான். நல்ல காலம் குறி தப்பி திராவகம் சுவரில் தொங்கிக் கொண்டிருந்த காலண்டரில் இருந்த நடிகையின் முகத்தைப் பாழ்படுத்தியது. என் அலுவலக சிப்பந்திகள் குகியைப் பிடித்து நையப்புடைத்துப் போலீஸில் ஒப்படைத்தார்கள். போலீஸ் உயர் அதிகாரிக்குக் குகி வசித்து வந்த வீட்டை விற்றுப் பணம் கொடுத்துச் சிறைக்குப் போகாமல் தப்பினான் என்று எங்கள் தீவின் வதந்திகளை எழுதுவதற்காக நடத்தப்பட்ட ‘ஒலவு அப்ஸர்வர்’ என்ற பத்திரிகை, பின்பு செய்தி வெளியிட்டது.

எழுத்தில் வாசகர்கள் நம்மைத் துப்பறியும் காரியமும் நடக்கிறது. ஒரு பெண்மணியின் குடும்ப வாழ்க்கை பற்றி ஒரு கதை எழுதியிருந்தேன். குடும்பத் தலைவியை ஏமாற்றும் குடும்பத் தலைவன் வேலைக்காரியுடன் தொடர்பு வைத்திருந்ததைப் பற்றி எழுதியபோது குடும்பத் தலைவி என் எழுத்துத் தன்னைப் பற்றியது என்று கண்டுபிடித்ததோடு நிற்காமல் என் வீட்டுக்கு வந்து என்னைப் பார்த்து எங்கள் மொழி வழக்கப்படி வணக்கம் கூறி பரிசுகளும் தந்து என் எழுத்தின் மூலம் தான் கண்டுபிடித்த பல உண்மைகள் பற்றி விளக்கியபோது எனக்கே ஆச்சரியமாகவிருந்தது.இதுதான் எங்கள் மொழியில் உண்மைசார்ந்த எழுத்தின் இலக்கணம் என்கிறார்கள்.
இப்படிப் கொஞ்ச காலம் போனபோது எனக்குத் தோன்றுவதெல்லாம் உண்மைகளைச் சார்ந்ததாய் அமைந்தன; ஆனால் அப்படி ஒரு உண்மை பற்றிய கருத்து எனக்குள் இல்லை என்பதுபோல் இயல்பாய் எழுத ஆரம்பித்தேன். ஆனாலும் நாலு நாட்கள் உணவும் நீரும் இல்லாமல் ஒருமுறை ஒரு ஆவேசத்துடன் எழுதியபோது பல விஷயங்கள் (எனக்குப் புத்தியில் பதியாதவை) என் எழுத்தில் வந்திறங்கியதை அறிந்தேன். பாலைவனத்தை இதுவரை பார்த்தறியாத நான் பாலைவனத்தின் தன்மைகள், உஷ்ணநிலை, வாழ்க்கைமுறை, வானிலை என்று மிகவும் கச்சிதமாக எழுதியதாய் துபாய் பக்கத்திற்கு வேலைக்குச் சென்றிருந்த பாலைவன அனுபவமுள்ள ஒருவர் தனக்குத் தெரிந்த தகவல்களைப் பற்றி எனக்குத் தெரிவித்துப் புகழ்ந்தார்.

என் எழுத்துக்களை அதன்பிறகு நான் அவதானிக்க ஆரம்பித்தேன். நான் ஏன் எழுதுகிறேன்?. தொடர்ந்து 56 ஆண்டுகளாக ஏன் எதாவது எழுதிக்கொண்டே இருக்கிறேன்?. எல்லோரும் எழுதுகிறார்களா என்ன? பரிசுக்காக என் மொழியில் பலர் எழுதுகிறார்கள். அரசியல்வாதிகளோடு தொடர்பு ஏற்படுத்துவதற்காக – வேலையில் பதவி உயர்வு வாங்குவதற்காக, தாம் செய்த ஊழலை மறைப்பதற்காக, மினிஸ்டர்களை அணுகி உதவி பெறுவதற்காக, தேர்தலில் சீட் வாங்குவதற்காக, உயர்ந்த இடத்தில் பெண் எடுப்பதற்காக – இப்படி இப்படி எத்தனையோ நோக்கங்களுடன் எழுதுகிறார்கள். சாகும்போது ஆன்மா சாந்தி அடைய வேண்டுமென்பதற்காக எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள் என்றுகூட எழுதுகிறவரின் எதிரிகள் பேசியதும் உண்டு. சரி, நான் எதற்காக எழுதுகிறேன்? அதுவும் வழக்கமில்லாத வாக்கியத் தொகுப்புகளைப் பயன்படுத்தி எதற்காக நான் எழுத வேண்டும்?. யோசணைகள் தொடர்கின்றன.
இப்படி இருக்கிற ஒருநாள் நான் வேலை பார்க்கும் சினிமா பற்றிய பத்திரிகையில் புதிதாய் வந்து வேலைக்குச் சேர்ந்த குள்ளமான, அரைத்தாடியும் சப்பை மூக்கும் சுருட்டை முடியும் கூர்மையான பார்வையும் கொண்ட இலங்கைக்காரர், தங்கள் மொழிக்காக ஒரு நாடு இல்லை என்பதால் கவலைப்பட்டு ஒரு படையை உருவாக்கி 30 ஆண்டுகள் படை நடத்தி இறுதியில் என்ன ஆனான் என்று அறியமுடியாதவனான ஒரு மனிதனையும் அவனது குடும்பத்தையும் பற்றி பல மணிநேரம் என்னிடம் பேச ஆரம்பித்தார்.

படை நடத்திய அந்த மனிதன் மீது எனக்கு முதலில் ஆர்வமோ, அவன்பற்றிச் சொல்வதைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஊக்கமோ ஏற்படவில்லை. வயதான பின்பு பல விஷயங்கள் இப்படி ஆகிப் போகின்றன என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். ஆனால், இலங்கைக்காரர் என்ன காரணத்தினாலோ – அல்லது எந்தக்காரணமுமில்லாமலோ – நான் அலுவலகத்திலிருந்து வெளியில் செல்லும்போதெல்லாம் என்னைத் தொடர்ந்தார். அது எனக்கு விளங்கா விட்டாலும், அவர் என்னுடன் ஒட்டுறவுடன் நடக்கத் தொடங்கியதன் அர்த்தம் பிடிபட்டது. விளங்காவிட்டாலும் நாம் சில நடவடிக்கைகளில் ஈடுபடுகிறோம் தானே. இப்படித் தான் நான் கதைகள் சிலவற்றிலும் எழுதுகிறேன். விளையாட்டு மைதானத்தில் கசங்கிய ஆடையுடன் வந்து கிரிக்கட் விளையாடும் இளைஞர்களைப் பார்க்க தினமும் வருகிற மத்திய வயதினன் – வருத்தமான முகமும், கலைந்த தலையும், கண்களில் பெரிய சட்டமிட்ட கண்ணாடியும் தேய்ந்த பழைய செருப்பும் அவனுடையவை – கதை முடியும்போது எந்த நிகழ்ச்சியிலும் பங்கெடுக்காமல் கதை தொடக்கத்தில் எப்படி மைதானத்தில் இருந்தானோ அப்படியே கதை முடிவிலும் இருக்கிறான். இந்தக் கதையும் என் பிற கதைகள் போல புரியாத கதை என்ற லேபலைப் பெற்றது. என்னிடம் விளக்கம்பெற கேள்விகள் கேட்ட – பல்கலைக்கழக முனைவர்பட்ட மாணவ மாணவியர் உட்பட – அத்தனை பேரும் நான் பதிலாக ஏதோ உளறியதைக் கேட்டுத் திருப்தி அடையாமல் போனதைப் பார்த்து எனக்குள் ரகசியமாய் மகிழ்ந்தேன். இது என் குணம்.

இலங்கைக்காரர் தனிநாடு கேட்டுப் போராடிய மனிதனைப் பற்றித் கூறியபடியே என்னைத் தொடர்வது நிற்கவில்லை. இலங்கைக்காரரும் நானும் நல்ல நண்பர்களாகிப் போனதுதான் மிச்சம். அவர்நோக்கம் புரியவில்லை. தனி நாட்டுக்காக ஒரு படையை உருவாக்க உதவிய பக்கத்துப் பெரிய நாட்டு உளவுப்பிரிவுதான் தனிநாடு கேட்டவனுக்குப் பயிற்சி அளித்து அவனுக்குப் பணமும் கொடுத்தது என்றும் கடைசியில் அந்தப் பெரிய நாட்டின் அதே உளவுப் பிரிவும் மூன்று உயர் அதிகாரிகளும் சேர்ந்துதான் அவனையும் அவன் இனத்தைச்சார்ந்த ஒன்றரை லட்சம் மக்களையும் கொன்றது என்றும் கூறினார்.
என் கதைகளைப் பற்றிய இன்னொரு விசயமும் திடீரென்று என்புத்தியில் பதிகிறதை, உடனடியாக, நான் பதிவு செய்யாவிடில் என் இந்த எழுபதைத் தாண்டிய வயதில், மறந்து போவேன், எனவே பதிவு செய்கிறேன். ஆம் என் எதிரில் இருந்து என் பாத்திரங்களுடன் பேசும் குரல் ஒன்று எப்போதும் என் மூதாதையர்களிடமிருந்து எனக்குத் தொடர்ந்து வந்து கொண்டிருப்பது பற்றிய விளக்கம் இது. அந்த நேரங்களில் நானும் என் கதைப் பாத்திரமும் நிஜமாகிவிடுவோம். அதுதான் முக்கியம். நிஜமாவது. இரண்டுபேர் நிஜமாகி விடும்போது இரண்டு உடல்கள் ஒன்றன் முன் இன்னொன்று அமர்ந்திருக்க வேண்டும். அப்படி அமர்கையில் வெளிப்படும் வார்த்தைகளும் வாக்கியங்களும் நிஜமானதாக அமையும். இதுதான் என் கதைகளில் மறைந்திருக்கும் உண்மை. மறைவாய் இரண்டு பேர் என் ஒவ்வொரு கதையிலும் மறைந்திருக்கிறார்கள்.மூதாதையர் நேரடியாய் வெளிப்பட்டுத் தோன்றும் முறை, இல்லாதது தோன்றும் தன்மை, அல்லது தெரியாதது தெரியும் தன்மை. இதுதான் என் எழுத்தை நான், பிறர் ஏற்கிறார்களோ இல்லையோ என்பதை சட்டை செய்யாது – அறிந்துகொள்ளும் அடிப்படை.
திரைப்படப் பத்திரிகையில் கம்ப்யூட்டர் பிரிவில் என் இலங்கைக்கார நண்பர் பணியாற்றினார். நான் சினிமாவின் கதைப்பிரிவு சார்ந்த எடிட்டோரியல் பகுதியில் பணியாற்றினேன். அது ஒரு விநோதமான வேலைப் பிரிவினைதான் என்பது எனக்கும் தெரியும். எனக்குக் கதை எழுதுவதன் தத்துவம், உத்திகள், தொடக்கத்துக்கும் நடுவுக்கும் முடிவுக்கும் மத்தியில் இருக்கும் உறவு இப்படி எல்லாம் யோசிப்பதும், விவாதிப்பதும் பிடிக்கும் என்பதால் தீவில் பிரசித்திபெற்ற பத்திராதிபரான என் நண்பர், அந்த சினிமாப் பத்திரிகையில் எனக்கென்றே அந்த கதைவிவாதப் பகுதியை உருவாக்கியிருந்தார். அதனால் அவர்களின் சினிமா விமரிசனம் வளம் பெற்றது என்று பத்திராதிபர் கூறியது உண்மைதான்.

நாங்கள் வசித்தது என்னவோ சிறிய நாடுதான் என்றாலும் சினிமா தயாரிப்பதிலும் சினிமா வியாபாரத்திலும் அவுட்டோர் ஷுட்டிங் நடத்தவரும் பல வெளிநாட்டு நிறுவனங்களுக்கு உதவுவதிலும் நல்ல வருமானம் வந்தது. எங்கள் நாட்டிலும் ஜனாதிபதியாக வருபவர் முன்னாள் நடிகராகவோ நடிகையாகவோ தான் இருக்கிறார். எங்கள் மக்கள் அதற்கெல்லாம் அசராமல் தொடர்ந்து சினிமாக்காரர்களையே தேர்ந்தெடுத்து வருகிறார்கள். சமீப காலங்களில் நிலமை இன்னும் மோசம்.

இலங்கைக்காரர் என்னிடம் அவர்கள் நாட்டில் படங்கள் தயாரிப்பு வளரவில்லை என்றார். ஒருநாள் வழக்கம் போல – நான் எதிர்பார்த்ததும் அதுதான் – தனிநாடு கேட்டு அவர்கள் நாட்டில் நடத்த யுத்தத்தில் படை உருவாக்கிய மனிதனின் முடிவு பற்றி மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மனதில் விசனத்துடன் சொன்னார்.
“கடைசியில் அந்த மனிதன் எதிரியின் சைன்யத்தால் கேவலப்படுத்தப்பட்டுக் கொல்லப்பட்டான். அவனுடைய உடைகள் களையப்பட்டிருந்தன; அவை பல இணையத்தளங்களில் புகைப்படங்களாய் வெளிப்பட்டன. தலையில் கோடரி போன்ற வஸ்துவால் வெட்டப்பட்டது. கண்களை மூடாமல் படம் எடுத்திருந்ததால் மரணமுற்ற மனிதனின் கண்கள் திறந்திருந்தன. எதிரி இரக்கமில்லாதவன் என்பதையும் எதிரியை மரணத்திற்குப் பிறகும் அவன் பார்த்துக்கொண்டு இருக்கிறான் என்று அவனுடைய இனத்தவரான நாங்கள் நினைப்போம் என்பதையும் அந்தத் திறந்த கண்கள் சுட்டிக் கூறின”.

இலங்கைக்காரரின் நட்பால் கவரப்பட்டிருந்த நான் அவருடைய உணர்வில் இப்போதெல்லாம் பங்கெடுக்க ஆரம்பித்தேன். எங்கோ இருந்த யாரோ ஒரு தேசியத் தலைவைனைப் பற்றிக் கூறுகிறார் என் நண்பரான இலங்கைக்காரர் என்ற உணர்வு மாற ஆரம்பித்தது. என் எழுத்துக்களின் உள்ளே இருக்கும் ஒரு மர்மமான முடிச்சை விடுவிக்கும் விடுகதைக்கான பதிலை என் நண்பர் எப்படியோ எனக்குள் உருவாக்கிவிட்டார் என்று உணர ஆரம்பித்தேன். எனக்கு வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அந்தத் தேச சுதந்திரத்துக்குத் தன் உயிரையும் மனைவி மக்களின் உயிரையும் பணயம் வைத்த தலைவனைப் பற்றிய தகவல்களை நானும் திரட்ட ஆரம்பித்தேன்.

தொடர்ந்து நான் கூறிக்கொண்டுவரும் என் எழுத்தின் தத்துவம், பின்புலம், உளவியல் விவரணைகள் என் ஒவ்வொரு எழுத்திலும் வரும்படி எழுதிக்கொண்டே இருந்தேன். அத்தகைய காலத்தில் நான் ஒரு புதிய கதை எழுதுவதற்கான தகவல்களைத் திரட்டிக்கொண்டிருந்தேன். தனிமையாலும் வயோதிகத்தாலும் பீடிக்கப்பட்ட ஒருவன் தனித்தீவில் மாட்டிக்கொண்டு வாழ்வின் அர்த்தத்தை எல்லாவித ஆபத்துக்களையும் எதிர்கொண்டு மனதுக்குள் உருவாக்கும் அந்தக் கதையில் ஒவ்வொரு ஆபத்தும் அவன் மனதைத் திறந்துவிடுகின்றது. ஆபத்தில்லாவிட்டால் அவனால் வாழமுடியாதென்று கருதும் அளவு போகிறான். அதற்காகத் தற்கொலை மனோநிலையை அவன் உருவாக்குவதில்லை என்பதுதான் அவன் கதையின் தனிச்சிறப்பு என்பது எனக்கு நன்கு தெரிந்திருந்தது.
அக்காலத்தில் இலங்கைக்கார நண்பர் தனிநாடு கேட்டுத் தன் மக்களுக்காக மரணமடைந்த மனிதனைப் பற்றிய புதுத் தகவல்களைக் கொண்டு வந்தார்.

ஒன்றரை லட்சம் மக்கள் இறந்த யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் நடந்த தகவல்கள் யாருக்கும் தெரியவில்லை. அந்தத் தலைவனின் மனைவியும் மகனும் கொலை செய்யப்பட்ட தகவல் மட்டும் வெளியில் வந்திருந்தது.நண்பரும் அதைக் கூறி வருந்தினார். நான் எதிர்பார்க்காத விதமாய் இந்தத் தகவல்களைக் கொண்டுவந்த மறுநாள் பெருமையாய் அந்த இலங்கைக்காரர் வந்து எனக்கு உணவு வாங்கிக் கொடுத்தார். எதற்கு என்று கேட்டபோது தலைவனின் மரணப்புகைப்படங்கள் மார்ஃப் செய்தவை; எதிரிகளால் செயற்கையாக உருவாக்கப் பட்டவை என்றார். தலைவனும் அவனது துணைவியும் தப்பிவிட்டார்கள் என்று தகவல்கள் வந்துள்ளன என்றார். அவரளவு நான் அச்செய்தியைக் கேட்டு மகிழவில்லை. எனக்கு எதுவும் புரியாமல் இருந்தது. ஒருவேளை இறந்தவன் உயிர்த்தெழுவது எனக்குப் புதியதல்ல என்பதாலாக இருக்கலாம்.

அதன் பின்பு வழக்கம்போல நண்பர் அவரது கணினி வேலையிலும் நான் என்னுடைய கதை டிப்பார்ட்மென்டில் கதைகளை அலசும் வேலையிலும் ஈடுபட்டோம். என் காரியங்கள் வேறு. இன்று ஒரு சினிமாவில் வரும் தேவையில்லாத ஒரு பெண் பாத்திரம் இறுதியில் சந்திக்கும் விபத்து பற்றி யோசித்தபடி இருந்தேன். அது எனக்குப் பிடிக்காத என்தொழில். எனினும் அடுத்த நாளிலிருந்து எனக்குப்பிடித்த காரியமான சுயபரிசோதனையில் ஆழ்ந்தேன்: நான் என் கதைகளைப் பற்றியும் என் இலக்கியத்தின் அடிப்படைத் தன்மை பற்றிய தொடர் விசாரத்திலும் ஈடுபட்டேன். ஒருவன் எதற்காக எழுதுகிறான்? நான் எதற்காக எழுதுகிறேன்?என்ற கேள்வி மீண்டும் வந்தது. ஒரு ஆங்கிலக் கவிஞன் ‘நான் கவிதை எழுதுவதால் எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை என்பதைக்கண்டுபிடித்தேன்’ என்றான். அப்படியென்றால் எனக்கும் கடவுள் நம்பிக்கை இல்லை என்பதால் நான் எழுதுகிறேனா என்ற கேள்வி தோன்றியது. எனக்குக் கேள்விகள் போதும் என்று நான் வாழ்பவன். அதனால் விடைகளை நான் கஷ்டப்பட்டுக் கண்டுபிடிப்பதற்குச் சிரமம் எடுப்பதில்லை. கேள்விகளே விடைகளின் சந்தோஷத்தை எனக்கு அளிக்கின்றன. இந்த அர்த்தத்தைக் கொண்ட வாக்கியம் புரியாததாகப் பல மொழிகளில் கருதப்படும்போது என் மொழியில் இது மிகவும் நன்றாகப் புரிகிற வாக்கியம் என்பதை நான் சொல்லித் தான் தீர வேண்டும்.

எதிர்பாராத விதமாக – என் தீவிலிருந்து, மிகப் பல ஆண்டுகளுக்கு முன்பு – 1943-இல் ஜனவரி நாலாம் தேதி காணாமல்போன என் தம்பி, தாடியுடன் நேற்று திரும்பி வந்தபோது என் வீட்டில் அவனை அமர வைத்துவிட்டு வெளியே நான் போனேன். நான் அப்படி ஒரு அடி வெளியே எடுத்து வைத்துவிட்டு மீண்டும் வீட்டுக்குள் சென்று அவனையே பார்த்துக் கொண்டு நின்றேன். அவன் கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது.

என் எழுத்துக்கள் தோல்வியானவையா வெற்றி பெற்றவையா என்று ஆங்கிலத்திலும் பிறமொழிகளிலும் வருகின்ற நூல்களைப் படித்த எங்கள் விமரிசகர்கள் எப்போதும் ஒரு கேள்வியைக் கேட்பதற்குச் சலிப்படைவதில்லை. அந்தக் கேள்வியை அவர்கள் கேட்டுக்கொண்டு சாகட்டும் என்று நான் விட்டுவிட்டேன். என்ன பதில் வரப்போகிறதென்று நான் தலைமுடியைப் பிய்த்துக் கொள்வது கிடையாது; அப்படி இருப்பது என் வரப்பிரசாதமான மனநிலை என்று எனக்கு நான் கூறிக் கொள்கிறேன். அதுபோல் என்னைப் போலவே புனைகதை எழுதும் எழுத்தாளர்கள் – என்மொழியில் சக எழுத்தாளனைப் பற்றிப் பேசினாலே அது கெட்ட சகுனம் – அவர்களின் ஒலவு மொழி எழுத்து எங்கள் தீவில் பிரசுரிக்கப்படுகின்றன. இங்குக் கிடைக்கும் ‘சீப்’பான தாளில் அழகற்ற ஆதிவாசிப் பெண்களின் (இவர்கள் படத்தைப் போட்டால்தான் நூல் விற்கும் என்கிற மூடநம்பிக்கை இருக்கிறது) அட்டைப் படத்துடன் முதல் பதிப்பு, 500 பிரதிகள் அச்சடிக்கப்படும். எங்கள் ஜனாதிபதிகள் கடந்த 45 வருடங்களாக மாறிமாறி ஆட்சிக்கு வரும் போது இருவரும் போட்டி போட்டு நாவல் எழுதுகிறார்கள்.(அதற்கு முன்பு பிரான்ஸிடமிருந்து தீவின் சுதந்திரத்துகாகப் போராடியவர்கள் ஜனாதிபதிகளாய் இருந்தனர்.) போட்டிபோட்டு அவர்கள் இருவர் எழுதும் கி.பி. 1000 ஆண்டைச் சார்ந்த வரலாற்று நாவல்கள் மட்டும் 6000 காப்பிகள் விற்கும். பிரஞ்சு மொழியில் அவை பெரிய விளம்பரத்துடன் வந்து விடுகின்றன என்ற தகவல் உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் தொடர்ச்சியாக என் எழுத்து எதற்காக உருவாக்கப்படுகிறதென்று எனக்குள் எழும் கேள்விகளுக்குப் பதில் எதிர்பார்த்தபடியே வாழ்வதும் எழுதுவதுமாக என் காலம் ஓடிக்கொண்டேயிருக்கிறது.

1943-இல் எங்கள் தீவில் அந்நியர்கள் வாழ்ந்தபோது காடுகளில் பதுங்கியிருந்து ‘ஓகோல்’ (சுதந்திரம் என்று பொருள்) என்ற ரகசிய இயக்கத்தின் துணைத் தளபதியாக இருந்து நாடு கடத்தப்பட்ட என் தம்பி பல ஆண்டுகளுக்குப் பிறகு வயதான தோற்றத்தில் வந்தவன் யாருக்கும் தெரியாமல், ஒரு வாரம் முழுதும் தூங்கிக் கொண்டேயிருந்தான்.இத்தனை ஆண்டுகள் ஒருநாள்கூட தூங்குவதற்கு நேரம் கிடைக்காதவன் போலத் தூங்கினான். இன்றைய அரசாங்கம் அவன் உயிருடன் இருக்கிறான் என்பதை அறிந்தால் என்ன செய்யும் என்பதைப் பற்றிய எந்த அறிவும் இல்லாத நாங்கள் அவன் ஊரில் இருக்கும் விசயத்தை யாருக்கும் சொல்லவில்லை. என் வீட்டுக்குப் பல நாட்டு சினிமாக்காரர்கள் வந்துபோவது வாடிக்கை என்பதால் யாரும் தாடியுடன் இருக்கும் என் வயதொத்த இன்னொரு முதியவனைச் சந்தேகக் கண்கொண்டு பார்க்கவில்லை என்றாலும் என் தம்பி ஒரு வாரத்துக்குபின் என்னிடம் சொல்லாமல் புறப்பட்டு விட்டான் என்பது மட்டும் புரிந்தது.
என் புனைகதைகளின் அடுத்த விசயத்துக்கு வருகிறேன். விலங்குகளும் குழந்தைகளும் பாத்திரங்களாய் தோன்றியபோது அவர்களும் காலங்காலமாக என் பிறப்புக்கு முன்பிருந்தே என்னிடம் பேசியவைகளை என் கதைகளிலும் அமர்ந்து பேசினார்கள். அது பற்றிய ஒரு நிச்சயமான எண்ணம் எனக்கு இருந்தாலும் அவ்விஷயத்தை யாருக்கும் சொன்னதில்லை. எனினும் என் பேட்டிகளைத் தொகுத்து வெளியிட்டிருந்த என் வாசக நண்பர் சமீபத்தில் என்னிடம் இக்கருத்தைப்பகிர்ந்து கொண்டபோது எனக்கு ஆச்சரியம் ஏற்பட்டது.

இலங்கைக்காரர், நான் உடல்நலமின்றி இருந்ததால் அலுவலகம் போகாதபோது இரண்டு நாட்கள் எனக்காகக் காத்திருந்த விஷயத்தை பின்பு நான் அலுவலகம் போனபோது கூறி அவர்களின் தலைவன் பற்றிய மிகப் பிந்திய தகவலை என்னிடம் பகிர்ந்தார்.

‘அவரும் குடும்பமும் பலிபோடப்பட்டுவிட்டார்கள். நான் போனமுறை சொன்னது தவறாகிவிட்டது’ என்றார்.

‘அது நான் எதிர்ப்பார்த்தது தான்’ என்று அவரிடம் கூறிவிட்டு, இருவரும் எங்கள் தீவில் தயார் செய்யப்பட்ட கசப்பு மிகுந்த டீயை அருந்தியபடி பேசிக்கொண்டு அமர்ந்தோம். அவர் தொடர்ந்தார்.
‘உண்மையா? எங்கள் மக்களின் விடுதலைக்கு இனி யாரும் இல்லையா? தலைவனும் அவன் துணைவியும் உயிரோடு இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை பொய்யாகி விட்டதா?’
‘உங்கள் மக்களின் தலைவனையும் அவன் மனைவியையும் யாரும் கொல்ல முடியாது’ என்றேன் மிக உறுதியாக. என் நண்பர் திருப்தி அடையவில்லை என்னுடைய பதிலால் என்பதறிந்தேன்.

‘உண்மை என்ன சொல்லுங்கள். நான் போன வாரம் உங்கள் தம்பியைச் சந்தித்தேன். இறந்துபோனவர் என்று பல ஆண்டுகளுக்கு முன்பு உங்கள் மக்கள் நினைத்தார்கள். அவர் உயிருடன் இருக்கிறார். அதுபோல் எங்கள் தலைவனும் வருவானா?’

‘என் தம்பியைத் திரும்ப இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு சந்திப்பேன் என்று நானும் நினைக்கவில்லை.’என்றேன்.
‘அவர் ஏன் புறப்பட்டுப் போய்விட்டார்?’
‘அவரைப் பொறுத்தவரையில் அவர் பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்து போனவர்’.

‘உங்களைப் பொறுத்தவரையில்?’

இலங்கைக்காரர் கேட்ட கேள்விக்கு நான் சொல்லப் போகும் பதில் அவருக்குத் தெரியும் என்பதுபோல் அவருடைய முகபாவம் தென்பட்டது.

அதனால் அவர் அமைதியானார். என் வாய் அவருக்குத் கேட்காதபடி முணுமுணுத்தது.

‘என் தம்பி ஏற்கனவே இறந்து போனவர்’.
எழுபத்தைந்தாம் வயதைத் தொடப் போகிற நான் மறுநாள் வெளிநாட்டுப் படத் தயாரிப்புக் குழு ஒன்றின் வருகைக்காகக் காத்திருந்தபோது இலங்கைக்காரர் எனது பின்பக்கமிருந்து ஒரு நிழல்போல் வந்து என் முன்பு தென்பட்டார். அன்று சுள்ளென்று சூரியன் சுடுவதுபோல் வெயில் அடித்தது. வழக்கமாய் எப்போதும் 25 டிகிரி செல்சியஸ்க்கு மேல் போகாத இதமான காலநிலை இருக்கும் எங்கள் தீவில் வெயில் அடித்ததால் அது எல்லோருக்கும் குதூகலமான மனநிலையை உருவாக்கியது.
அப்போது அடித்த வேகமான காற்றில் நண்பர் சொன்னது லேசாகக் கேட்டது.

‘எங்கள் தலைவனும் அவனது துணைவியாரும் உயிருடன்தான் இருப்பார்கள்.மீண்டும் வருவார்கள்.’
உணர்ச்சிப் பெருக்கால் நண்பரின் தொண்டை கமறியது. கண்களில் கண்ணீர் முட்டியது.
நான் ஆமோதித்தேன். என்னை அறியாமல் சொற்கள் வெளிப்பட்டன.

‘தலைவன் கண்டிப்பாக வருவான்.நான் உண்மையாகவே நம்புகிறேன்.’

அவரின் முகத்தில் தெரிந்த பிரகாசம் அமானுஷியமாயிருந்தது.
அதன் பின்பு நான் அவரைப்பல மாதங்கள் சந்திக்கவில்லை. வேலையை விட்டு விட்டாரோ என்று நினைத்தேன்.
அப்படி பல மாதங்கள் கடந்தன. இடையில் ஏதேதோ வேலைகளில் நான் ஈடுபட்டேன்.

மீண்டும் ஒருநாள் என் நினைவுகளில், நான் எழுதப்போகிற – அல்லது எழுதிய பல பாத்திரங்கள் என்னுடன் பேச ஆரம்பித்தார்கள். அவற்றில் உயிர் உள்ள பாத்திரங்களும் இல்லாத பாத்திரங்களும் இருந்தனர். எப்போதும் என் கற்பனை எழுத்துக்குள் நான் கொண்டு வருகிற உரையாடலில் என்னதான் பழைய மூதாதையர்கள் தூண்டுகோலாக வந்தாலும் ஒரு நிஜ நபரின் குரல் கேட்காவிட்டால் என் கதையை நான் தொடர்ந்து எழுத முடியாதென்று பல காலமாக உணர்ந்த விஷயம் இப்போதும் மனதில் பதிந்தது.

என் தம்பி மீண்டும் கனவில் வந்த அன்று தீவில் பேரளவு கடல்கொந்தளித்தது. பல கட்டுமரங்கள் சிதைந்து பதினெட்டுத் திமிங்கலங்கள் செத்து கரை ஒதுங்கிய அன்று பல்வித உற்பாதங்களும் தீவில் ஏற்பட்டபோது எனக்கு ஏனோ அரைதாடியும் சுருட்டை முடியும் கொண்ட இலங்கைக்காரரும் அதுபோல் கண்திறந்தபடி காட்சி தந்த ஒரு தலைவனும் மனக்கண்ணில் ஒப்புமையில்லா உள்காட்சியாய் தோன்றினார்கள்.

••••••••••••

பேராசிரியர் ராமானுஜமும், நானும் – வெளி ரங்கராஜன்

download (6)

1980-களில் நாடகம் குறித்த ஈடுபாடுகள் வலுப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் பேராசிhpயா; ராமானுஜத்தின் நாடகச் செயல்பாடுகள் குறித்து மிகுந்த அபிமானம் கொண்டவனாக இருந்தேன். 1977-ல் காந்திகிராமத்தில் பன்சி கௌலுடன் இணைந்து அவா; நடத்திய நாடகப் பட்டறை தமிழ் நாடகச் சூழலில் புதிய பாh;வைகளையும், அணுகுமுறைகளையும் உருவாக்கிய ஒரு முக்கிய திருப்புமுனை என்ற உணா;வு எனக்கு இருந்தது. அந்தப் பட்டறையில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை என்றாலும் அதில் பங்கேற்றவா;களிடம் அது உருவாக்கிய உணா;வுகளைக் கேட்டறிந்த போது ஒரு எழுச்சியான மனநிலை ஏற்பட்டது. உடலையும், மனத்தையும் எவ்வாறு நாடகத்துக்கு சிறப்பாக பயன்படுத்துவது என்பது குறித்தே அவரது கவனம் இருந்தது. பிறகு 1980-ல் பாதல்சா;க்காh; சென்னை சோழ மண்டலத்தில் நடத்திய நாடகப் பட்டறை இந்த உணா;வுக்கு மேலும் வலுவும், வண்ணமும் சோ;த்தது. எந்த தொழில் நுட்பத்தையும் சாராமல் மனித உடலின் பல்வேறு ஆற்றல்களை திரட்டுவதின் மூலம் பல்வேறு வடிவங்கள் கொண்ட ஒரு திறந்த அரங்கத்தை உருவாக்கமுடியும் என்கிற மனநிலையை அவா; உருவாக்கினாh;. ராமானுஜம் இயற்கை அழகியல் சாh;ந்த மனநிலைக்கு அழுத்தம் கொடுத்த போது பாதல்சா;க்காh; சமூக மனவியல் சாh;ந்த உடல் கட்டுமானத்தை வலியுறுத்தினாh;. ஆனால் இவை இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்தான் என்று எனக்குத் தோன்றியது.

இந்த இரு உத்வேகங்களின் அடிப்படையில் நான் என்னுடைய நாடக செயல்பாடுகளை உருவாக்கிச் கொண்டிருந்த காலகட்டத்தில் அடிப்படையில் நான் ஒரு சிறுபத்திhpகை மனநிலை சாh;ந்தவனாக இருந்ததால், தமிழில் அhpதான நாடக ஆக்கங்களை ஆவணப்படுத்துவதின் மூலம் நாடக இயக்கம் மேலும் செறிவு அடையும் என்ற உணா;வுடன் வெளி இதழை 1990-ல் துவக்கினேன். அப்போது நாடக ஆக்கங்களுக்காக நான் முதலில் அணுகியது பேராசிhpயா; ராமானுஜம் அவா;களைத்தான். என்னுடைய நாடக ஆh;வங்கள் மீது மதிப்பு கொண்டிருந்த ராமானுஜம் வெளியின் உருவாக்கத்துக்கு தொடா;ந்து பங்களிப்புகள் செய்பவராக இருந்தாh;. அவா; சென்னையில் நடத்திய நாடகப்பட்டறைகளின் போதெல்லாம் பயிற்சி மாணவா;களுக்கு வெளியை அறிமுகம் செய்து அவா;களுடன் உரையாடல்களுக்கு ஏற்பாடு செய்தாh;. ஒருமுறை சென்னையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வளாகத்தில் அவா; ஏற்பாடு செய்திருந்த பயிற்சிப்பட்டறையில் ஆரம்பம் முதல் அவருடைய கற்பனையும், படைப்புணா;வும் கொண்ட பயிற்சி வழிகாட்டுதல்முறைகளையும், நாடக உருவாக்கத்தையும் பாh;க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்படி உருவானதுதான் ஜாpஷ் நாடகாசிhpயா; ளுலபெந-ன் ‘சுனைநசள வழ வாந ளுநய’ நாடகம். ராமானுஜத்தால் மிகவும் அற்புதமாக வடிவமைக்கப்பட்ட அந்த நாடகத்தின் நுட்பங்கள் பற்றி நான் எழுதியபோது ராமானுஜம் அதிக மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாh;.

அதற்குப் பிறகு பலமுறை நாங்கள் சந்தித்து உரையாடுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டன. அவா; புதிய நாடக ஆக்கங்கள், எதிh;கால நாடகத்திட்டங்கள் ஆகியவை குறித்த பல செய்திகளை அவ்வப்போது என்னுடன் பகிh;ந்து கொண்டாh;. கலைக்கும், வாழ்க்கைக்குமான நீரோட்டம் குறித்த எங்கள் பாh;வைகளில் அதிக இணக்கம் இருப்பது புலப்பட்டு எங்கள் பரஸ்பர உரையாடல்கள் அதிக நேசம் கொண்டன. 1995-ல்; அவா; கைசிக நாடக மீள் உருவாகத்தில் ஈடுபட்டு திருக்குறுங்குடி கோவிலில் முதல் அரங்கேற்றத்தை நிகழ்த்துவதற்கு முன்னால் ஒரு ஒத்திகையை வடுவூh; கோவில் வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்தாh;. அதை பாh;ப்பதற்கு வடுவூh; வரும்படி அவா; என்னையும், வெங்கட் சாமிநாதனையும் அழைத்தாh;. ஒத்திகைக்கு முன்னால் அக்கலைஞா;களுடன் ஒரு உரையாடல் நிகழ்வையும் ஏற்பாடு செய்திருந்தாh;. அப்போது தான் தேவதாசி நடனம் பற்றி நன்கு அறிந்த இசைவேளாளா; மரபில் வந்த ஹேரம்பநாதனுடன் எனக்கு பாpச்சயம் ஏற்பட்டது. அவா;தான் கைசிக நாடகத்துக்கான தாளங்களையும், நடன அசைவுகளையும் ஒழுங்கு செய்தவா;. வடுவூh; கோவில் பின்புலத்தில் நிகழ்ந்தப்பட்ட அந்த ஒத்திகை நிகழ்வு ஒரு பிரமிப்பான அனுபவமாய் இருந்தது. திருக்குறுங்குடி கோவிலில் நடந்த முதல் அரங்கேற்ற நிகழ்வையும் நான் பாh;க்கவேண்டும் என்று விரும்பி அதற்கான ஏற்பாடுகள் செய்திருந்தாh;.

இப்படி பரஸ்பர மதிப்பும், அபிமானமும், கொண்டிருந்த எங்கள் உறவில் ஒருபெரும் அன்பின் நீரோட்டத்தை நான் பாh;த்தேன். சமகாலத்திலும், கடந்த காலத்திலும் அதிக வெளிச்சத்துக்கு வராத நிகழ்கலைக் கலைஞா;கள் பற்றி நான் தீராநதியில் தொடா; எழுதிய போது அதில் அதிக ஈடுபாடு கொண்டு இன்னும் வெளிவராத பல கலைஞா;கள் பற்றி என்னுடன் தொடா;ந்து உரையாடினாh;. அதன் தொடா;ச்சியாகவே கைசிக நாடகத்தில் பங்கேற்ற எளிய பெண் நடனக் கலைஞா;கள் பற்றி நான் எழுத நோ;ந்தது. அவருடைய தஞ்சை வீட்டில் அக்கலைஞா;களுடன் அவா; ஒரு உரையாடலுக்கு ஏற்பாடு செய்தபோது ஒரு நெருக்கமான சூழல் நிலவியது. அந்தக் கட்டுரைகள் பின்னா; ஒரு புத்தகமாக வெளி வந்தபோது அவருடைய சிறப்பான ஒரு முன்னுரையுடனேயே அது வெளிவந்தது.

இவை எல்லாவற்றையும் விட தஞ்சை சென்று எனக்குப் பிடித்தமான ஒரு தஞ்சை சூழலில் அவருடன் உரையாடுவது எனக்கு கிளா;ச்சியான ஒரு அனுபவமாக இருந்தது. நான் தஞ்சை வரும்போதெல்லாம் எனக்காகவென்று தஞ்சை ஸ்டேஷன் எதிரே கொஞ்சம் ஒதுக்குப்புறமாக அமைந்த வள்ளி ஹோட்டலில் எனக்காக ரூம் ஏற்பாடு செய்துவிடுவாh;. வள்ளி ஹோட்டல் சூழல் எனக்கு மிகவும் விருப்பமானது. அமைதியும், நல்ல உணவும், கேட்பதற்கு பழைய பாடல்களும் நிறைந்த அந்த சூழலில் என்னுடைய நேசங்கள் குறித்த ஒரு நினைவுப் பயணம் மேற்கொள்வதும், செயல்பாடுகள் குறித்த பாpசீலனைகளில் ஈடுபடுவதும் எனக்கு மிகவும் பிடித்தமானவை. படைப்பு சாh;ந்த பல காரணங்களுக்காக அந்த ஹோட்டலில் தங்கி என்னுடைய பொழுதுகளை கழிக்கும் தருணங்களை நான் விரும்பினேன்.

இப்போது ராமானுஜம் மறைந்த பிறகு அந்த வள்ளி ஹோட்டல் அவ்வளவு மகிழ்ச்சி தருமா என்பது சந்தேகமாக உள்ளது. ஒரு நாடக முரண் போன்று ராமானுஜம் மறைந்த போது தஞ்சை சென்று அவரை கடைசியாக பாh;ப்பதற்கு கூட வாய்ப்பில்லாத ஒரு நிலைக்கு நான் தள்ளப்பட்டிருந்தேன்.

*********

அதிகாலைக் கருக்கலில் பிறந்தவன் (IN TWILIGHT BORN) இந்தோனேசியன் – ப்ரமோத்யா ஆனந்த டோயர் ( Pramoedya Ananta Toer) / ஆங்கிலம் – ஜான் எச். மெக்கிளின் (John H. McGlynn) / தமிழில் / ச.ஆறுமுகம்

download (3)

ப்ரமோத்யா ஆனந்த டோயர் (1925 – 2006) புகழ்பெற்ற இந்தோனேசிய படைப்பாளர். மனித உரிமைப் போராளி. இலக்கியம் மற்றும் கலைத் தொடர்புப் படைப்பூக்கத்திற்காக 1995 ஆம் ஆண்டின் ராமன் மாக்சசே விருது பெற்றவர். தொடர்ச்சியாகப் பல ஆண்டுகளாக இலக்கியத்தில் நோபல் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டவர். இவரது நாவல்களும் சிறுகதைத் தொகுதிகளும் உலக அளவில் புகழ்பெற்றவை. இவரது படைப்புகள் மிகவும் எளிமையான எழுத்து நடையும் நேரடியாகக் கருத்தினைத் தெரிவிப்பதாகவும் உள்ளன. 1947 – 49 ஆம் ஆண்டுகளில் டச்சு காலனிய ஆதிக்க அரசாலும், 1965 – 1979 வரையிலான பதினான்கு ஆண்டுகளில் சுகர்த்தோவின் ஆட்சியாலும் விசாரணை ஏதுமின்றி அரசியல் கைதியாக புரு தீவில் சிறையில் அடைபட்டிருக்க வேண்டியதாயிருந்தது. சுகர்த்தோவின் 33 ஆண்டுகால ஆட்சியில் இவரது படைப்புகள் அனைத்தும் தடை செய்யப்பட்டிருந்தன. அவரது சிறை அனுபவங்கள் வெளிப்படும் This Earth of Mankind, Child of All Nations, Footsteps, House of Glass (all republished in English by Penguin) என்ற நான்கு நாவல்களும் Mute`s soliloquy என்ற நினைவுக்குறிப்புகளும் உலகப் புகழ் பெற்றன. அவரது தாய்மொழி ஜாவானியம். இருப்பினும் அவரது படைப்புகள் அனைத்தும் இந்தோனேசிய மொழியிலேயே உள்ளன. ’’ இந்தோனேசிய மொழியில் எழுதுவதென்பது இந்தோனேசியாவை ஒரே தேசமாகக் கட்டும் செயல்பாடு (nation building act)” என, அவர் தெரிவித்துள்ளார். இனெம் (INEM) என்ற நாவல் இந்தோனேசிய ஆணாதிக்கச் சமூத்தில் பெண்ணின் நிலையைச் சித்திரிக்கிறது.

எழுதுவது குறித்த கேள்விக்கு, ‘’நான் வாசகர்களை மகிழ்விப்பதற்காக எழுதுவதில்லை; ஆனால் அவர்களுக்கு ஒரு நேர்மை உணர்வினை ஏற்படுத்தவேண்டும்.’’ என ப்ரமோத்யா, ஒரு நேர்முகப் பேட்டியில் தெரிவித்தபோது ‘’மகிழ்விப்பதற்காக எழுதுபவர்கள் போலி நம்பிக்கைகளை விதைப்பதாக எண்ணுகிறீர்களா?’’ என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு அவர், ‘’மகிழ்விப்பதற்காக எழுதுபவர்களைப்பற்றித் தீர்ப்பு சொல்லும் உரிமை எனக்கு இல்லை; ஆனால், எழுதுவது என்பது நேர்மை உணர்வுள்ள ஒரு மனச்சாட்சியை உருவாக்குவதற்கான போராட்டமே தவிர மகிழ்ச்சியளிப்பதற்கானதல்ல.’’ (It is a stuggle to give conscience not joy) எனப் பதிலளித்தார். (http://progressive.org/news/1999/04/3334/pramoedya-ananta-toer-interview)

தற்போது தமிழாக்கம் செய்யப்பட்டுள்ள IN TWILIGT BORN சிறுகதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட பின்னர் தான் இவரது படைப்புகள் உலக கவனம் பெற்றதாகக் கூறப்படுகிறது. இவரது சுன்னத்து (Circumcision) என்ற சிறுகதை குறும்படமாக இணையத்தில் கிடைக்கிறது.

*********

நான் சிறுவனாக இருந்தபோது, என் குடும்பத்து வீடு இளைஞர்களால் – அவர்களில் சிலர் எனது மூத்த வளர்ப்பு சகோதரர்கள், மற்றவர்கள் எங்கள் வீட்டில் தங்கிப்படித்த மாணவர்கள் – நிரம்பியிருந்தது. எனது வளர்ப்பு சகோதரர்களில் ஒருவர் ஹூரிப்; அவர் அப்போதுதான் மாநிலத் தலைநகர் செமராங்கில் மாநில இளநிலை உயர் பள்ளியில் பட்டம் பெற்றுத் திரும்பியிருந்தார். இளைஞர்களின் மிகப்பொதுவான வழக்கப்படி, எங்களில் ஒரு குழுவினருக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு, கூட்டமாகக் காற்று வாங்குவதுதான். அவர்கள் பேசிக்கொள்வதில் பல விஷயங்கள் எனக்குப் புரியவில்லையென்றாலும் அவர்கள் என்ன சொன்னார்களென்பது எனக்கு இப்போதும் நினைவிருக்கிறது. உரைவீச்சில் எப்போதுமே வல்லவரான ஹூரிப் ஒருநாள் இப்படி ஒரு வியாக்கியானத்தைச் சொன்னார் : ‘’இந்த நாட்டுக்கு இப்போது என்ன தேவை தெரியுமா, சுறுசுறுப்பு -டைனமிசம் தான். காலத்தால் நம் மக்கள் உறைந்துபோயுள்ளனர். முதலும் கடைசியுமாக ஒரே வார்த்தையில் சொல்கிறேன், அரசாங்க ஊழியனாகப் பணிபுரிவதே நமது இலட்சியமாக இருக்கவேண்டுமென்ற கருத்தினை மறுக்கின்ற ஊக்கத்தினை நாம் பெற வேண்டும்!’’

நான் அதீத ஆர்வமுள்ள ஒரு சிறுவனாக இருந்த காரணத்தால், என் பெற்றோரின் புத்தகங்கள் அல்லது என் தந்தையின் மேசையில் என் கேள்விகளுக்கான பதிலைத் தேடும் சிரமத்தை மேற்கொள்ளத் தயங்கியதேயில்லை. நான் கேள்விப்பட்டதன் பொருளைத் தெரிந்துகொண்டதாக நான் நினைத்தபோது, என் கருத்து சரியானதுதானா என்று அம்மாவிடம் கேட்டுச் சரிபார்த்துக்கொள்வேன். இப்படியாகத்தான் ஹூரிப் சொன்னதன் பொருளை அம்மாவிடம் கேட்க வந்தேன்.

‘’நீ வளரும்போது புரிந்துகொள்வாய்,’’ என என் கேள்விக்கு எந்தவிதத்திலும் பதிலேயாகாத ஒன்றைப் புன்னகையுடன் சொன்னாள், அம்மா. பின்னர், என் விளையாட்டுத் தோழர்களிடம், அவர்கள் என்ன நினைக்கிறார்களெனக் கேட்டேன்; ஆனால், அவர்களாலும் பதில் சொல்ல முடியவில்லை. குடும்பத்தின் வேலைக்காரர், என்னுடைய மதிப்பில் மிகப் பண்டைக்காலத்தவரான, அவராலும் கூட எனக்குத் திருப்தியான விளக்கத்தினைத் தர இயலவில்லை.

டச்சு மொழி இளநிலை உயர்பள்ளியின் பட்டதாரியாக ஹூரிப் எங்கள் இல்லத்தில் ஒரு தனியிடம் பெற்றிருந்தார். என் அம்மாவும் கூட அவருக்குத் தனிமரியாதை கொடுத்தார். அதனால், ஹூரிப் பேசுவதற்காகக் குரலை உயர்த்திய போதெல்லாம், ஒவ்வொருவரும் கவனித்ததில் வியப்பு ஏதும் இல்லை. ஒவ்வொரு விவாதத்தின்போதும் அசைக்கமுடியாத அதிகாரம் பெற்றவராக அவரே இருந்தார்.

ஹூரிப் ஒரு அரசியல்வாதியென, ஒருநாள் அம்மா என்னிடம் சொன்னபோது, எனக்கு அதிர்ச்சியோடு வியப்பாகவும் இருந்தது. அப்போது `அரசியல்` என்பதன் பொருள் எனக்குத் தெரியாமலிருந்தது, தான்; ஹூரிப் ஒரு `காவல்துறை காவலர்’’ என அவள் சொல்வதாகப் புரிந்துகொண்டேன். சிறுவனாக இருந்த அந்தக் காலத்தில், குடும்பத்தின் வெறுப்பு முழுவதும் காவலர்கள் மீது இருந்ததென்பதும் எனக்கு நன்கு தெரிந்திருந்தது.

‘’அவர் ஒரு காவலராக இருப்பது குறித்து உனக்கு அவர் மீது வெறுப்பில்லையா?’’ நான் அம்மாவிடம் கேட்டேன்.

அம்மா புன்னகைத்துவிட்டு, `அரசியல்` என்பதன் பொருளை விளக்கத் தொடங்கிப் பின்னர் எந்தவொரு அரசியல் கட்சியைச் சேர்ந்த இந்தோனேசியனும் காவல் துறைக்கு எதிரிதானென்றுப் பிற்குறிப்பு ஒன்றும் தெரிவித்தாள்.

இந்தத் தகவலைக் கேட்டுத் திருப்தியோடு மகிழ்ச்சியான நான் என் நண்பர்களுக்கு `அரசியல்` என்பதன் அர்த்தம் சொல்ல ஓடினேன்; ஆனால், அவர்கள் என் விளக்கத்தைக் கேட்டுவிட்டுச் சிரிக்க மட்டும் செய்தார்கள். வேலைக்காரர் கூடச் சந்தேகமாகத்தான் பார்த்தார்.

இன்னொரு முறை நிகழ்ந்தது எனக்கு நினைவுக்குவருகிறது – ஒருநாள் மாலையில் நாங்கள் குளித்து முடித்தபின், வளர்ந்த பையன்கள் சதுரங்கம் விளையாடத் தொடங்குவதற்கு அல்லது அவர்களது பள்ளிப் பாடங்களைச் செய்வதற்கு முன்னால் – வீட்டுப்பாடங்களைச் செய்யும் உயரம் குறைந்த மேசையைச் சுற்றிலும் நாங்கள் வட்டமாக அமர்ந்திருந்தோம்.

ஹூரிப் திடீரென்று அரசாங்க வேலைபற்றிப் பேசத்தொடங்கும் போது, நான் அவருக்கு நேராகப் பின்னால் அமர்ந்திருந்தேன். ‘’ஒரு அரசு ஊழியனின் வேலை என்பது சலிப்பானது,’’ என அவர் அறிவித்தார். ‘’ஒரு அரசு ஊழியன் ஒவ்வொரு நாள் காலையிலும் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் வேலைக்குப் புறப்பட்டுப் போகிறான், அவனுடைய மேசையின் பின்னால் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட சில மணி நேரங்கள் அமர்கிறான், அதோடு ஒவ்வொரு நாள் மாலையிலும் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் வீட்டுக்கு வருகிறான். அங்கே மனைவியோடு சிறிது சிரித்து மகிழ்ந்துவிட்டு, மனைவியைக் கருத்தரிக்கச் செய்து, இப்படியாக, இந்த உலகத்துக்கு எப்படியாவது இன்னுமொரு குழந்தையைக் கொண்டுவருகிறான். வருடா வருடம், நாள் தவறாமல் இதுதான் நடக்கிறது – மொத்தத்தில் வாழ்க்கையில் ஒரு கற்றை வைக்கோல், ஒரு வாளி தண்ணீர், படுப்பதற்கு ஒரு இடம் தவிர வேறு எதையும் எதிர்பார்க்காத ஒரு வண்டிக்குதிரையை விடச் சிறப்பொன்றுமில்லாத, முழுவதுமாக ஒரு சலிப்பான அனுபவம்.

‘’ஒரு அரசு ஊழியன் நல்ல சம்பளம் கிடைக்குமென்ற கனவிலேயே ஒவ்வொரு நாளையும் கழிக்கிறான். அவனது மேலதிகாரி நாய்க்கு எலும்புத் துண்டு போடுவது போல, ஏதாவது ஒரு பாராட்டு தெரிவித்தால், ஏதோ பதவி உயர்வு கிடைக்கப்போகிறதென்று மகிழ்ச்சியில் எம்பிக்குதிக்கிறான். ஆனால், மேலதிகாரி கடிந்து விழும்போது, அறுத்துவிட்ட விலங்கு ஓடுவது போல், இருக்கிற பதவியும் போய்விடுமோவெனப் பயந்து வாலைக் கால்களுக்கிடையே நுழைத்துக்கொண்டு, ஓடுகிறான்.’’

பிற பையன்கள் ஹூரிப்பின் மீது கவனம் செலுத்தியது போலவே நானும் கவனித்தேன். அவர் சொன்னது எல்லாமே புரியவில்லையென்ற போதிலும் நான் கவனமாகக் கேட்டேன். எப்படியானாலும், என் வளர்ப்புச் சகோதரரின் வியாக்கியானமான, ஒரு மனிதன் அவன் மனைவியிடம் சிரித்து மகிழும்போது, அது எப்போதுமே குழந்தை ஒன்றினைப் பெறுவதாகவே முடியும் என்கிற ஒரு விஷயம் என் மனத்தில் தெளிவாகப் பதிந்துவிட்டது.

நாங்கள் இரவு சாப்பிட்டபின், ஒரு மனிதன் அவன் மனைவியோடு சிரித்து மகிழும்போதெல்லாம், அவள் குழந்தை பெறுவதாக முடிகின்றதென, ஹூரிப் சொன்னது உண்மையா என அம்மாவிடம் கேட்டேன். அம்மா உடனே பதில் சொல்லவில்லை; ஹூரிப்பைக் கூப்பிடுமாறு சொல்லும்போதும், அதன் பின்னர் என்னை வீட்டுப் பாடத்தைச் செய்யுமாறு சொல்லும்போதும் அவள் முகபாவனை சிறிதும் மாறவில்லை. நான் அவள் சொல்லியதை உடனடியாகச் செய்யாமல், பதிலை எதிர்பார்த்து அங்கேயே நின்றபோது, என்னை வீட்டுப்பாடம் செய்யச்சொல்லி மீண்டும் கூறினாள்.

அப்படியொரு அழுத்தமான பையனாக, நான் என் கேள்வியை மீண்டுமொருமுறை சொன்னபோது, அம்மா மிவும் கோபமாகிவிட்டாள். அவளது முகத்திலிருந்த அசைவற்ற பாவனையைக்கண்டு, கடைசியில் நான் என் புத்தகங்களை எடுக்கக் கிளம்பினேன்.

நான், அந்த அறையைவிட்டு வந்த பின், அம்மாவே ஹூரிப்பைப் பெயர் சொல்லி அழைப்பதை நான் கேட்டேன். அம்மா, ஹூரிப்பிடம் பேசிய அன்றைய இரவுக்குப் பின், அவர் உரையாடல்களைக் குறைந்தபட்சம் நான் இருக்கும்போதாவது குறைத்துக்கொண்டதை நான் கவனித்தேன். அதுவே, அவர் பிற பையன்களுடன் கடினமான விவாதமாக இருந்தாலும், அறைக்குள் நான் சென்றதும் டக்கென விஷயத்தை மாற்றவோ அல்லது வேடிக்கைப் பேச்சுக்கள் சொல்லவோ தொடங்கிவிடுவார்.

* * *

வாழ்க்கை என் சொந்த ஊரில் எளிமையாக இருந்தது; ஆனால், ப்ளோராவிலும், ஒரு மாற்றம் வந்தது. அந்த நேரத்தில் என்ன நிகழ்ந்துகொண்டிருந்ததென்பதை நான் புரிந்துகொண்டிருந்தேன் என்பதல்ல; ஆனால் என்னால் மாற்றத்தைக் கண்டுகொள்ள முடிந்தது. என் காதுகளில் விழுந்த துண்டு உரையாடல்களிலிருந்து அரசு ஊழியர், வியாபார அலுவல் மனிதர்கள், விவசாயிகள், தொழிலாளிகள் போன்றவர்களின் செயல்பாடுகள் குறித்த சில தகவல்களைத் தெரிந்துகொண்டேன். ஹூரிப்பிடமிருந்து, குறிப்பாக, முதன்மையான, புதிய, வினோதமான சில வார்த்தைகள் மற்றும் கருத்தாக்கங்களைக் கேட்டேன்: எடுத்துக்காட்டாக, இந்தியாவில் தொடங்கியிருந்த சுதேசி, சுய-சார்பு இயக்கம் மற்றும் ஜப்பானும் ஆசியாவும் எப்படி முன்னேற்றத்திலிருக்கின்றன என்பவை பற்றி.

ஹூரிப் அதுபோன்ற விஷயங்களைப் பேசியபோது, என் அப்பா பொதுக் கூட்டங்களில், ‘’இந்த நாட்டில் நிலப்பிரபுத்துவம் வளர்ச்சியுற்றதிலிருந்தே ஆளும்வர்க்கம் தகுதியற்ற அதிகாரக் குவியலை அனுபவித்துவருகிறது,’’ எனப் பேசுவதைப் போலவே அனல் பறக்கும் குரலில் பேசினார். ஹூரிப் அறிவித்தார். ‘’ அவர்கள், இது அவர்களது உரிமையெனப் பேசுகிறார்கள்; ஆனாலும், நினைவில்கொள்ளுங்கள், அவர்களது வர்க்கத்துக்கு வெளியிலுள்ள எவரும் அதனை ஏற்றுக்கொள்ளவோ அல்லது அந்த உரிமையென்று சொல்லப்படுவதை வரன்முறைசெய்யவோ இல்லை. அவர்கள், அவர்களது வர்க்கத்துக்கு வெளியே உள்ள மக்கள் அவர்களுக்கு இணங்கிப்போக வேண்டியது இயற்கையானதென்று ஒப்புக்கொள்கிறார்கள். அவர்களுடைய காலம் தொந்தரவுகள் ஏதுமின்றி மிக எளிதானதாக இருக்கிறது; ஏனென்றால், அவர்களுடைய வர்க்கத்துக்கு வெளியே நிகழ்வது எதுவும் அவர்களுக்குத் தொடர்பற்றதென்று நினைக்கிறார்கள். அவர்களுடைய நோக்கம் முழுவதும் அவர்களுடைய பதவி உயர்வு, அதிகாரம் மற்றும் சொத்துசேர்ப்பது ஆகியவற்றிலேயே உள்ளது. சில நேரங்களில், அவர்களுடைய சொந்த மேலதிகாரிகள் அவர்ளுக்கெதிராகத் திரும்பி, அவர்களது ஊதியம் மற்றும் சலுகைகளைக் குறைத்துவிடுவார்களோ எனப் பயப்படுகிறார்கள்; ஆனால், அத்தகைய கவலைக்கு அடிப்படை ஏதுமில்லையென்பதைக் கடந்தகாலம் நிரூபிக்கிறது. ஆனால், இப்போது, நாடு எழுச்சியிலிருப்பதால், அவர்கள் இயக்கத்தில் சேரவில்லையானால், அவர்களது வர்க்கம் இல்லாமல்போவதை அவர்கள் சொந்தக் கண்களாலேயே காணப்போகிறார்கள்.’’

* * *

எனது சொந்தச் சிறிய ஊரின் அன்றாட வாழ்க்கை ஒரு வகையான உற்சாக வெள்ளத்தால் தாக்கம்பெற்றதை நான் கண்டேன்: மக்கள் கால்பந்து குழுக்களை நிறுவத் தொடங்கினர்; உதாரணமாக, நகரின் ஒவ்வொரு பகுதியிலும் மூன்றுக்குக் குறையாத கால்பந்துக் குழுக்கள், கண்ணிமைக்கும் முன்பு தோன்றிவிட்டன; அவற்றில் சில குழந்தைகளுக்கெனவே தனியாகத் தொடங்கப்பட்டவை. மேல் வகுப்பினர் மத்தியில், கலை தொடர்பான சங்கங்கள் – மரபார்ந்த நாடகம் முதல் பாவைக்கூத்து, பொம்மலாட்டம் வரையிலும், ஜாவானிய நாடகம் முதல் ஜாவானிய வாய்ப்பாட்டு மற்றும் இசைக்குழு வரையிலும் கூட முகிழ்த்து வேர்விடத் தொடங்கின. இளைஞர்கள் மத்தியில், திடீரென மேலைநாட்டு நாடகம் மற்றும் இசைக்குழு மோகம் பெருமளவில் தோன்றியது. என் தந்தை அதுபோன்ற அமைப்புகள் பலவற்றுக்கும் ஆதரவு அளித்தார். அம்மாவும் பல பெண்கள் குழுவில் சுறுசுறுப்பாக இயங்கிவந்தார்.

நகரத்தின் எங்கள் பகுதியில் இளைஞர்களில் பலர் காவல் துறையில் பணியாற்றுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அரசு காவல் படையின் அளவைப் பெருக்குவதற்குத் தீவிரமாக முயன்றது என்பதை அவர்களிடமிருந்துதான் நாங்கள் தெரிந்துகொண்டோம். அதுவுங்கூட, எழுச்சி பெற்றுக்கொண்டிருந்த இளம் தேசியவாதி சுகர்ணோ, ப்ளோராவுக்குப் பேச வந்தபோது, அவரைப் பார்ப்பதற்காகப் பெருவாரியான பொதுமக்கள் திரளுவதைத் தடுக்கவில்லை.

அதிகாலைகளில், நகரத்துச் சாலைகளில் மக்கள் துருப்புகள் அணி அணியாக ஓடிக்கொண்டிருந்தன. சிறுவர் இசைக்குழுக்கள் இராணுவ பாணியில் பாட்டிசைத்தன. ‘’இப்போது கிழக்கில் கதிரவன் ஒளிர்கிறது. விழித்தெழுந்து நாமெல்லோரும் ஒன்று சேர்ந்து கை உயர்த்துவோம்…..’’

வீட்டிலுள்ள சிறுவர்கள் எல்லோரும் சாணரர் இயக்கத்தில் சேருமாறு அப்பா உத்தரவிட்டார். ஒருநாள் இரவில், கொழுந்து விட்டெரியும் கணப்புத் தீயைச் சுற்றிநின்று, சாணரர்களின் பெற்றோர் பலர் என் அப்பா உட்பட, கவுரவ சாணரர்களாக உறுதிமொழியேற்றதை நான் பார்த்தேன். இந்தோனேசிய சாணர இயக்கத்தில் ஒரு நான்கு முனை வளர்ச்சிக்கான உந்துதலில் இன்னும் இரண்டு சாணர இயக்கங்கள் – ஒன்று மதத்தோடு தொடர்புடையது, மற்றொன்று அலுவல் மொழியாக டச்சு மொழி பயன்பாட்டிலிருந்தது – ஏற்படக் காரணமானது.

இந்தக் காலத்தில், டச்சு மீதான வெறுப்பும் வளர்ந்தது. மெதுவாக, ஆனால், நிச்சயமாக, இந்த உணர்வு, மொத்த மக்கள்தொகையும் டச்சு மீதான வெறுப்பினைப் பகிர்ந்துகொண்டதாகத் தோன்றியது. என்கு அப்போது ஏழு வயதுதான், ஆனால் எனக்கு ஞாபகம் இருக்கிறது, ஒருநாள் அப்பா, என் அம்மாவிடம், ‘’மேற்கத்தியர்கள் எப்போதும் இங்கே உயர்பதவிகளில் இருப்பார்கள் என்று நம்பாதே.’’ எனச் சொல்லிக்கொண்டிருந்தார்.

நான் அம்மாவைப் பார்த்தேன்; அமைதியாகப் புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தவளின் கண்களில் தெரிந்த ஒளியைக் கண்டு, எனது தந்தையின் வார்த்தைகளிலிருந்து அவள் பெற்றிருந்த மகிழ்ச்சியின் அளவினை என்னால் தெரிந்துகொள்ளமுடிந்தது. பின்னர், மேலும் நெருக்கமாகப் பார்த்தபோது அவள் வயிறு பருத்திருந்ததைக் கவனித்தேன். அவள் ஒரு குழந்தை பெறவிருக்கிறாள்!

அப்பாவை நோக்கிப் பார்த்துவிட்டுப் பின் அம்மா என்னிடம், ‘’ஒரு அலுவலகத்தில் வேலைசெய்வது மட்டுமே பிழைப்புக்கு வழியென்று நினைத்துவிடாதே. நீ வளர்ந்த பிறகு என்னவாக வேண்டுமென்று நீ நினைக்கிறாய்?’’ என்றாள்.

‘’ஒரு விவசாயி!’’ என்றேன், நான், உடனடியாக.

‘’என்ன விவசாயியா?’’ கேட்டார், என் தந்தை.

நான் என் பதிலை மீண்டும் உறுதியாகச் சொன்னபோது, அம்மா, என்னிடம், ‘’நீ உண்மையிலேயே ஒரு விவசாயியாக விரும்பினால், இப்போது மாதிரி சும்மா சுற்றித் திரிய முடியாது.’’ என்றாள். அவளது பதில் எனது ஆர்வத்தை திடப்படுத்தி, வீட்டின் முன்பக்கத்தில் என் பெற்றோர் எனக்காக ஒதுக்கிவைத்திருந்த சிறிய அளவிலான பாத்தியில் விவசாயம் செய்வதற்கான ஆர்வத்தைத் தூண்டியது. சில நேரங்களில் அம்மா எனக்கு உதவி செய்வதற்காக, வெளியே பாத்திக்கு வந்து, ஒருமுறை நாங்கள் சீனிக் கிழங்கு நடவுசெய்துகொண்டிருந்தபோது, முழு நம்பிக்கை தொனித்த அவளது குரலில் குறிப்பிட்டாள்: ஒருவரின் சொந்த உழைப்பின் கனிகள் அதிக இனிப்பு கொண்டவை. உன்னையே பாரேன்; வியர்வையில் குளிக்கிறாய்! இது உனது இரத்தத்துக்கும் உனது உடல் நலத்துக்கும் நல்லது.’’ ‘’நமது நாடு ஒருநாள் நமது சொந்த இந்தோனேசியர்களால் ஆளப்படும்; இனிமேலும் டச்சுக்காரர்களால் அல்ல,’’ என அவள் மேலும் சொன்னாள். ‘’இப்போது நீ ஒரு சிறிய பையன், ஆனால் பள்ளி முடித்த பின்னர், உன் அப்பா படிக்கும் புத்தகங்களையெல்லாம் நீயும் படிக்கமுடிகிறபோது, இன்னும் அதிகமாகத் தெரிந்துகொள்வதோடு, நீ நடுகிற சீனிக் கிழங்கு வளர்ந்து மேலும் மேலும் பெருகித் துளிர்த்துத் தழைக்கும்…. எனக்குத் தெரியும், அவற்றையெல்லாம் தெரிந்துகொள்வதற்கு நீ இன்னும் சிறுவனாக இருக்கிறாய், ஆனால் அதற்கான சரியான காலம் வரும். உன் தந்தை ஒரு ஆசிரியர், ஆனால், உண்மையில் அவர் என்ன செய்கிறாரென்று உனக்குத் தெரியுமா?’’ என்றாள்.

நான் தலையை அசைத்து மறுத்தேன். ‘’எனக்குத் தெரிந்ததெல்லாம், அவர் அநேகமாக வீட்டில் ஒருபோதும் இருப்பதில்லை, என்பதுதான்.’’

‘’அது எதற்கென்றால், இனிவரும் வருடங்களில் உனது சொந்தத்திற்கான கிழங்கின் வரவு என்றென்றும் குறைவுபடாமலிருப்பதற்காக, அவர் வெளியே சீனிக்கிழங்கு நடவுசெய்கிறார்.’’

அவள் என்ன சொல்கிறாள் என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியவில்லை.

‘’ நீ சாப்பிடுகிற சீனிக் கிழங்குகள் அல்ல, அவை,’’ என அவள் விளக்கமாகச் சொன்னாள். ‘’ நீ வளர்ந்த பிறகு சாப்பிடக்கூடிய கிழங்கின் வகைகளைப்பற்றி –உனக்கும், உனது நண்பர்களுக்கும் இன்றைய நிலையைவிட மேலானதாக இருக்கப்போகிற ஒரு நிலையைப் பற்றி நான் சொல்லிக்கொண்டிருக்கிறேன்.’’

என்ன பதில் சொல்வதென்று எதுவுமே புரியாமல், நான் வேலைசெய்வதை நிறுத்திவிட்டு, அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

* * *

எனது சொந்த ஊரின் உற்சாக வெறிபிடித்த சூழ்நிலை எனது வளர்ப்புச் சகோதரர், ஹூரிப்பின் வாழ்க்கையை மிகவும் பாதித்தது; அதுவும் அப்பா முதல்வராயிருக்கும் பள்ளியில் அவரை வேலைக்குச் சேர்த்தபின்னர் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அவருக்குப் பணியில்லாத நேரம் என்பதே இல்லாமலாகிவிட்டது. பகல் நேரம் முழுவதும் பள்ளியில் இருந்தார்; மாலை நேரங்களில் பள்ளி மாணவர்களின் வீட்டுப் பாடங்களைத் திருத்தினார்; இரவில் அவர் படித்தார். இப்போதெல்லாம் அவர் எதைப்பற்றிப் பேசினாலும் உணர்ச்சி மிக்க தொனியிலேயே பேசினார். குறிப்பாக, ஒரு விஷயம் என் நினைவிலிருப்பது, வரிகள் பற்றியானது. ‘’அரசாங்க வரிகள் நம்மைக் கொல்கின்றன.’’ என ஒருநாள் இரவில் மற்ற மாணவர்களிடம் அவர் அறிவித்தார். ‘’இப்போதெல்லாம், எல்லாவற்றுக்கும் வரிகள்; நாம் அவற்றின் பாரத்தைச் சுமக்கவேண்டியிருக்கிறது. வாங்குகிற ஒவ்வொரு மீட்டர் துணிக்கும் வரி; தார்ச்சாலையில் எடுத்துவைக்கிற ஒவ்வொரு அடிக்கும் வரி கொடுக்கிறோம்.’’

அவர் என்ன சொல்கிறாரென்று எனக்குப் புரியவில்லையென்றாலும், வரி கொடுக்கவேண்டியில்லாவிட்டால், மக்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருப்பார்களென்பதை மட்டும் என்னால் நிச்சயமாக உணரமுடிந்தது.

நம் எல்லோரையும் அரசாங்க உயர் அலுவலர்களாக்குவதற்காக ஒன்றும் டச்சுக்காரர்கள் இங்கு வரவில்லை,’’ என்று அவர் தொடர்ந்தார். ‘’ வரிகள் மூலம் பெரும் செல்வத்தைக் கொள்ளையடிப்பதற்காவே அவர்கள் இங்கு வந்திருக்கிறார்கள். நாம் வரிகொடுக்க மறுத்தால், அவர்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி வன்முறையாக வசூல் செய்ய முயற்சிக்கிறார்கள்; அப்போதும் நாம் எதிர்த்தால் அவர்கள் நம்மைக் கட்டாய உழைப்பு முகாமுக்கு அனுப்புகிறார்கள். நீங்கள் சாமின் மக்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? மேற்கு ஜாவாப் பழங்குடியினரான அவர்கள் வரி செலுத்துவது உட்பட வெளி உலகத்துடன் அனைத்து விதத் தொடர்பினையும் மறுத்தனர். நான் அவர்களுக்கு உற்சாக வாழ்த்துக் கூறுகிறேன்.’’

ஹூரிப் அப்படியான ஒரு உணர்ச்சிமிக்கத் தொனியிலேயே எப்போதும் பேசியதால், பிற பையன்கள் எல்லோரும், அவர் சொன்னதை அப்படியே நம்பியதில் வியப்பு ஏதுமில்லை.

* * *

நான் கவனித்த மற்றொரு மாற்றம், கொஞ்சம் சிறந்த ரகம் வாங்குவதற்கு வசதியானவர்கள் எப்போதாவது பயன்படுத்துகிற, ஆனால், கிராமத்து மக்கள் வழக்கமாக அணிகின்ற, வீட்டிலேயே தயாரிக்கப்படும் முரட்டு ரக லூரிக் ஆடைகளை அதிகமான மக்கள், உயர்நிலை மக்களும்கூட அணியத் தொடங்கியிருந்தனர் என்பதுதான். நான் ஒன்றும் நற்பேற்றின் வாரிசு இல்லைதான்; ஆனால் லூரிக் அணிவதில் எனக்கு விருப்பம் இல்லை. அது சொரசொரப்பாக, உடலை உறுத்துவதோடு, வெகு விரைவிலேயே, ஒன்று அல்லது இரண்டே சலவைக்குப் பின், நிறம் மங்கிப்போகும். இருந்தபோதிலும் என் தந்தை வீட்டில் அணிவதற்காக ஒரு ஜோடி லூரிக் பைஜாமாவும் தினசரி அணிவதற்காக சாரங் என்னும் லுங்கியும் மேற்சட்டையும் வாங்கினார். அதன் பிறகு ஒருநாள், வீட்டிலுள்ள ஒவ்வொருவருக்கும் அப்படியான ஓரிணை ஆடை வாங்கிக்கொடுத்தது எனக்கு வியப்பாக இருந்தது.

ஹூரிப் தான் அந்த நடைமுறை குறித்து விளக்கினார். ‘’அது இந்தியாவில் போல,’’ என அவர் சொன்னார். ‘’அங்கே மக்கள் வீட்டில் நெய்யும் துணிகளை அணிவதுடன் இறக்குமதித் துணிகளை நெருப்பிட்டுக் கொளுத்துகின்றனர்.’’ ,

உடனடியாகத் தன்னிச்சையாக, நான், ‘’அடக் கடவுளே, எனக்குச் சில அயல்நாட்டு ஆடைகள் வேண்டுமென்றல்லவா ஆசைப்பட்டேன்!’’ எனக் கூறினேன். ஆச்சரியப்படும்படியாக, என் பேச்சு அங்கிருந்த ஒவ்வொருவரையும் சிரிக்கவைத்து, அதன் விளைவாக, விவாதங்களின்போது, என்னுடைய பணி வெறுமனே கேட்டுக்கொண்டிருப்பது மட்டுமே தவிர, கருத்து தெரிவிப்பதல்ல என்ற சங்கடமான நிலையை எனக்கு உணர்த்தியது.

ஹூரிப் என்னை மடியில் தூக்கிவைத்துக்கொண்டு, அவரது பேச்சைத் தொடர்ந்தார். ‘’உள்ளூர்த் துணிகளாலான ஆடைகளையே அணிவது போன்ற விஷயங்கள் சுதேசி முறைக்கான பங்களிப்பாகும். இதனுடைய முழுப் பரிமாணம் சுய சார்பு வாழ்க்கை என்பதோடு, நமது மக்களுக்கு வேலைகளை உருவாக்குவதுமாகும். உயிர் பிழைத்திருப்பதற்கு நமது மக்களுக்குத் தொழில் வேண்டும் என்னும்போது, நீ அயல்நாட்டுத் துணிகளை அணிந்தால், அவர்களுக்கு வருமானமும் வேலையும் கிடைக்கவிடாமல் செய்து அவர்களின் வாயிலும் வயிற்றிலும் அடிப்பதாகும். முடிவில் அனைத்து இலாபங்களையும் அயல்நாட்டினர் அள்ளிக்கொண்டுவிடுகின்றனர்.’’

அந்த நேரம் தான், நெசவுத் தொழிலாளியான ஒரு கிராமத்துப் பெண், என் அம்மாவைச் சந்தித்தபோது, என்னுடைய அம்மா உடனேயே வீட்டிலிருந்த குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் தலைக்கு ஒன்றாகப் பன்னிரண்டு லூரிக் இணை ஆடைகள் தயாரிக்குமாறு தெரிவித்தது எனக்கு நினைவுவந்தது. இருந்தாலும், அம்மா, அவளுக்கென ஒரு ஆடை தயாரிக்குமாறு சொல்லவில்லையென்பதை நான் கவனித்துக்கொண்டேன். அதாவது இந்த ஆடை விஷயத்தில் அம்மா என் கருத்தைத் தான் கொண்டிருந்தாள் என்பது உறுதியாகத் தெரிந்தது.

பணி ஆணை பெற்றதில் அந்த நெசவுத்தொழிலாளி மகிழ்ச்சியடைந்தது இயல்புதானே. ‘’ இப்போதெல்லாம் நிறைய ஆட்கள் லூரிக் ஆடை தயாரிக்கச் சொல்கிறார்கள்,’’ என அவள் சொன்னாள்.

‘’ நல்லது தானே, இது சுதேசி யுகம்,’’ என அம்மா பதில்சொன்னாள்.

அந்தப் பெண்ணும் தலையசைத்தாள். ‘’ஆமாம், சுதேசி – எங்கள் ஊரிலும் எல்லோரும் இதைத்தான் சொல்கிறார்கள். பணி ஆணைகளை உடனுக்குடன் செய்துகொடுப்பதற்காக என் வீட்டு அக்கம்பக்கத்து ஆட்களெல்லாம் இரவும் பகலும் உழைக்கிறார்கள். நான் சிறுமியாக இருந்த காலம் போலவே இப்போது மாறியிருக்கிறது.’’ என வாயெல்லாம் சிரிப்பாகச் சொன்னாள். ‘’மக்கள் சொந்தமாகப் பருத்தி பயிரிடுகிறார்கள். தேய்ந்து போன கார் டயர்களிலிருந்து செருப்பு தயாரிக்கும் உள்ளூர் செருப்புத் தொழிலாளிக்கும் செய்து கொடுக்க முடியாத அளவுக்குப் பணி ஆணைகள் குவிகின்றன. இப்போது அவனிடம் பதினைந்து பேர் கூலிக்கு வேலை செய்கின்றனர்.’’

இந்தச் செய்தியால் நெஞ்சு நிமிர்த்திய அம்மா, அந்த நெசவுத்தொழிலாளிப் பெண் சென்ற பிறகு, தனக்குத் தானே சொல்லிக்கொண்டாள்; ஆனால், அவளது கண்கள் என்மீதே நிலைத்திருந்தன. ‘’சுதேசி இயக்கம் கைவினைப் பொருட்கள் உற்பத்திக்குப் புதியதொரு உயிர்ப்பினைக் கொடுத்திருக்கிறது; கிராமத்தினருக்கும் பிழைப்புக்கு வழிசெய்திருக்கிறது.’’ அவள், பிழைப்புக்காகக் மூங்கில் பொருட்கள் முடைந்துகொடுக்கும் பக்கத்து வீட்டுக்காரர் பாக் க்ரோமோவின் வீட்டைச் சுட்டிக்காட்டினாள். ‘’நாம் மட்டும் இந்த இயக்கத்தை இன்னுமொரு பத்தாண்டுகள் அல்லது அதற்கு மேலும் தாக்குப் பிடித்து, நீடித்துவிட்டால், பாக் க்ரோமோ இப்போதைய சிரமப்படும் வாழ்க்கையைக் காட்டிலும் நல்லதான ஒரு வாழ்க்கையைப் பெற்றுவிடுவார். எட்டு குழந்தைகள்; ஒரு கூடைக்கு அவருக்கு என்ன கிடைத்துவிடும்? ஒரு கூடை முடைவதற்கு ஒன்றரை நாள் ஆகிறது; ஆனால் இரண்டரை சென்ட்தான் கிடைக்கும்!’’

* * *

இதற்கிடையில், வாரங்கள் செல்லச் செல்ல, அம்மாவின் பேறுகாலம் நெருங்கி, அவளால் அதிக உழைப்புள்ள வேலைகளைச் செய்யமுடியவில்லை. மூன்று மாதங்ளுக்கு முன்பு அம்மா ஒரு தறியை வாங்கி, அதை எப்படிப் பயன்படுத்துவதெனக் கற்றுக்கொள்வதற்காக ஒரு நெசவுத் தொழிலாளியையும் கூலிக்கு அமர்த்தினார். ஆனால், இப்போது அவள் வயிறு பெரிதாக இருப்பதால், அவளால் சேர்ந்தாற்போல மூன்றுமணி நேரத்துக்கு மேல் வேலைசெய்யமுடியவில்லை. அது உடம்பு முழுவதையும் அடித்துப் போட்டாற்போல் குலுக்கிவிடுகிறது என்றாள், அவள். அதனால், தறி பழைய சாமான்கள் கிடங்குக்குப் போய்விட்டது; அவள் பெரும்பாலும் முன் மண்டபத்தின் மேலாக ஒரு நாற்காலியைப் போட்டு அமர்ந்து வாசிப்பதிலும் தோட்டத்துக்கும் அப்பால் பார்த்துக்கொண்டிருப்பதுமாக நேரத்தைச் செலவழித்தாள்.

அப்பா எப்போதாவதுதான் வீட்டிலிருந்தார். அப்பாவைப்பற்றி நான் அம்மாவிடம் கேட்கும்போதெல்லாம், அப்பா எதிர்காலத்திற்காக சீனிக் கிழங்கு நடுவதற்காகப் போயிருக்கிறார் எனத்தான் சொல்வாள். அப்பா வீட்டுக்கு வந்த போதெல்லாம், பெரும்பாலும் லூரிக் ஆடையணிந்து, வெறுங்கால்களோடு அல்லது தேய்ந்த டயர் செருப்பு அணிந்த மூன்று அல்லது நான்கு பேர்களையும் கூடவே இழுத்துக்கொண்டுதான் வந்தார். அவர்களுடைய பேச்சு – பல தரப்பட்ட விஷயங்களை உள்ளடக்கியதாக, வெடிச்சிரிப்புகளும், கிசுகிசுக்கும் இரகசியங்களுமாக – பெரும்பாலும் என் அறிவுக்குப் புரிந்துகொள்ள இயலாததாக இருந்தது; ஆனால், `கூட்டுறவு`, மக்கள் வங்கி`, `ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி`, `மக்கள் வாசிப்பு இயக்கத்திற்கான மூலங்கள்` மற்றும் `அடித்தள ஈர்ப்பு இயக்கம்` போன்ற வார்த்தைகளை அவர்களிடமிருந்துதான் நான் கற்றுக்கொண்டேன்.

காலம் செல்லச்செல்ல, மேலும், மேலுமாக மக்கள் எங்கள் வீட்டைத் தேடி வந்துகொண்டிருந்தார்கள். எழுதப் படிக்கத் தெரியாத என் பக்கத்து வீட்டுக்காரர்கள் கையெழுத்திடக் கற்கும் வகுப்புகளில் சேர்வதற்காக வந்தார்கள். மற்றவர்களும் – அந்தப் பகுதியிலிருந்த தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளின் சிறந்த மாணவர்களும் அரசியல், பொருளாதாரம் மற்றும் இதர பாடங்களில் ஆசிரியர்களாகப் பயிற்சிபெற அல்லது ஏதாவது ஒரு தொழிலில் தேர்ச்சி பெறுவதற்காக வந்தனர். அப்பா தொடங்கிய பயிற்சிவகுப்புகளில் பாடம் நடத்தும் பொறுப்பு என்னுடைய மூத்த வளர்ப்பு சகோதரர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது; அந்த வகுப்புகளில் சேரும் மாணவர்கள் அதிகமாக, அதிகமாக, வெற்றி மின்னும் கண்களுடன் அப்பா வகுப்புப் பணிகளை மேற்பார்வையிட்டார். எழுதப் படிக்கக் கற்கும் வகுப்புகளில் முன்னூறு பேரையும் ஆசிரியப் பயிற்சியில் நாற்பது பேரையும் தொழிற்கல்வியில் முப்பது பேரையும் பொதுப் பயிற்சி வகுப்புகளில் ஐம்பது பேரையும், மழலையர் பள்ளிக்கு பதினைந்து மாணவர்களையும் ஆங்கில மொழிப்பாடம் கற்பதற்காக இருபது மாணவர்களையும் சேர்த்திருந்தார். அவர் ஏற்படுத்தியிருந்த டச்சு மொழிப் பாடத்திட்ட வகுப்புகளுக்கு பதினொரு மாணவர்கள் மட்டுமே சேர்ந்திருந்தனர்.

பிறகு, இரண்டு நகலெடுக்கும் கருவிகள், ஐந்து தட்டச்சு எந்திரங்கள், ஒரு பெரிய காகித மூட்டை அனைத்தும் வாசலில் தென்பட்டன. எங்கள் வீடு, திடீரென ஒரு அலுவலகம் போலத் தோன்றியது. பகல் முழுவதும் தட்டச்சு எந்திரங்களின் தட்,தட் ஒலியும் நகலெடுப்புக் கருவிகள் உருளும் ஓசையும் பாடத் திட்டங்கள் வகுப்பது குறித்த பேச்சொலியும் தான் கேட்க முடிந்தது.

அப்பாவோடு அவரது பணியும் அந்தச் சிறிய ஊரில் முக்கிய கவனம் பெற்றது. அவர் எப்போதுமே அலுவல் அவசரமாகவே காணப்பட்டார்; ஆனால், அவர் வீட்டைவிட்டுச் செல்வதும் அதிகமாகவே இருந்தது. அவர் திருத்தவேண்டிய வீட்டுப் பாடங்கள் மலை, மலையாகக் குவிந்ததால், வளர்ப்புச் சகோதரர்கள் எல்லோரும் உதவிசெய்யுமாறு பணிக்கப்பட்டனர். அம்மாவிடம் ஆலோசனை கோரி வரும் பெண்கள் அதிகமானதால், அம்மா மனம் மகிழ்ந்ததாகத் தோன்றியது. அவர்களின் வேண்டுகோள்களை அம்மாவால் ஒருபோதும் நிராகரிக்க இயலாது. மகப்பேற்று நிலை ஒருவிதத்தில் அவளுக்குச் சிரமமாக இருந்தாலும், சமாளித்துக்கொண்டு அவர்களின் கூட்டங்களுக்குச் சென்று வந்தாள்.

அப்பா வீட்டிலிருந்த நேரங்களில், காவல்துறையின் காவலர்கள், அவர்களின் மிதிவண்டிகளில் எங்கள் மீது சந்தேகப் பார்வையை வீசிக்கொண்டே, எங்கள் வீட்டுக்கு அடிக்கடி சோதனைக்கு வந்தனர். அவர்கள் கண்காணிப்பதற்கான காரணத்தை நான் அம்மாவிடம் கேட்டதற்கு, ‘’உன் அப்பா எதுவுமே செய்யாமல் இருப்பதைத்தான் மொத்தத்தில் அவர்கள் விரும்புவார்கள்.’’ என்று சொன்னாள்.

‘’ஆனால், அவர் ஒரு ஆசிரியராயிற்றே,’’ என நான் சூழ்நிலையை உணராமல் எதிர்ப்பு தெரிவித்தேன்.

‘’அது சரிதான், ஆனாலும் மக்களைக் கல்வியறிவு அற்றவர்களாக, அறியாமையில் மூழ்கடித்து வைத்திருக்கவே அரசாங்கம் விரும்புகிறது.’’ என அம்மா சொன்னாள்.

எனது சொந்த ஊரில், அந்த நேரம், என்ன நிகழ்ந்துகொண்டிருந்ததென்பதை நான் தெரிந்துகொள்வதற்குப் பல ஆண்டுகள் ஆயின; ஆனால், என் அப்பாவின் மதிப்பு உயர்ந்துகொண்டிருந்தது என்பது எனக்கு அடிக்கடி உணர்த்தப்பட்டது. பல வேளைகளில், அந்தப் பக்கமாகச் செல்வோர், என்னை அவர்களது கூட்டாளிகளுக்குக் காட்டி, ‘’அவருடைய மகன்,’’ என அவர்கள் சொல்வது என் காதில் விழும். முற்றிலுமான அந்நியர்கள் என்னை நிறுத்தி, அப்பாவைப் பற்றிக் கேட்பார்கள். சிலர் என் செலவுக்குப் பணம் கூடத் தருவார்கள்; அது எனக்கு மிக மகிழ்வினைத் தந்தது. இத்தகைய கவனங்களிலிருந்து, என் தந்தை எங்கள் ஊரின் மிக முக்கியமான மனிதரென்பது எனக்குப் புரிந்தது; அது எனக்கு மிகவும் பெருமிதத்தை அளித்தது.

ஆனால், ஒருநாள், பள்ளியிலிருந்து அப்பா திரும்பி வந்தபோது, அவர் எப்போதுமான சாந்த உணர்வுடனான அப்பாவாக இல்லை. மதிய உணவுக்காக, அவர் மேசையில் அமர்ந்தபோது, அவரது முகத்தில் இறுக்கமும் கோபமும் கலந்த பார்வையினைக் கண்டேன். என்ன விஷயமென்று தெரிந்துகொள்வதற்காக, நான் அந்த அறைக்குள்ளேயே வளைய வளையச் சுற்றிவந்தேன்.

‘’நிரம்பவும் கடினமாக உழைக்கிறீர்கள்,’’ என்றாள், அம்மா, உணவைப்பரிமாறிக்கொண்டே. ‘’உடம்பு சரியாக இருக்கிறதா?’’

நான் ஒரு மாதிரியாக இருப்பதற்கு, வேலையல்ல, காரணம்.’’ எனப்பதில் சொன்ன அப்பா, ‘’விஷயம் என்னவென்றால், நான் இதற்கு முன்பு இப்படிப் பார்த்ததில்லை. முன்பெல்லாம், ஒரு மனிதனுடைய சொந்த வீட்டில், அவன் விரும்புவதைச் செய்ய முடியும். அவன்தான் அந்த வீட்டுக்கு முதலாளி.’’

அம்மா திகைத்தது போல் தோன்றினாள். ‘’எதைப் பற்றிப் பேசுகிறீர்கள்?’’ எனக் கேட்டாள்.

‘’ஒரு கடிதம் வந்திருக்கிறது.’’ அப்பா வெடுக்கென்றார்.

‘’என்ன சொல்கிறீர்கள்?’’ அவள் அதிர்ச்சியோடு கேட்டாள்.

‘’அரசாங்கத்திடமிருந்து வந்திருக்கிறது.’’ அப்பா சத்தமாக, உரத்துக் கோபத்தோடு சொன்னார்.

‘’என்ன மாதிரி கடிதம்?’’

‘’மிரட்டல், அல்லது நினைவூட்டு என்றும் சொல்லிக்கொள்ளலாம்.’’ அவர் பெருமூச்சிட்டார். ‘’பள்ளிக்கூடத்தை மூடுடா என்கிறார்கள்.’’

அம்மா நம்பிக்கை இல்லாமலேயே அப்பாவை உறுத்துப்பார்த்தாள்.

மேற்கொண்டும் பொறுமையில்லாமல், அப்பா சொன்னதை ஹூரிப்புக்குச் சொல்வதற்காக நான் அவரது அறைக்கு ஓடினேன். அவர் அதைக்கேட்டு வியப்படைந்ததாகவே தோன்றவில்லை என்பதுதான் எனக்கு வியப்பாக இருந்தது. அவரும் கவலையும் சோர்வுமாகத் தோன்றினார்.

பின்னர், நான் அடுக்களைக்குச் சென்று, சமையற்கார அம்மாவிடம் அப்பா சொன்னதைச் சொன்னேன்.

‘’என்ன சொல்கிறாய்?’’ என்று அவள் வெறுப்புடன் கேட்டாள். ‘’கற்றுக்கொடுப்பதிலிருந்தும் உன் அப்பாவை யார் தடுக்க முடியும்? அப்படியான துணிவு யாருக்கு இருக்கிறது? மாவட்ட அதிகாரி கூட உன் அப்பாவோடு வைத்துக்கொள்ளமாட்டார், புரிந்துகொள்.’’

சமையற்கார அம்மா சொன்னதை வார்த்தைக்கு வார்த்தை அப்படியே, பிறரிடம் சொல்வதற்காக மனப்பாடமாக ஞாபகம் வைத்துக்கொள்ள முயன்றேன்; ஆனால் அப்பாவின் முகத்தில் நான் பார்த்த இறுக்கம் என் நினைவுகளின் மேலாக உறைந்தது. நான் கேள்விப்பட்டதைச் சொல்வதற்காக இன்னொரு வளர்ப்பு சகோதரரைத் தேடி விரைந்தேன்.

‘’எனக்கு ஏற்கெனவே தெரியும்,’’ என்றார், அவர். ‘’உன் அப்பா, எனது குடிமையியல் வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருக்கும்போதுதான் அவர்கள் வந்தார்கள். ஐந்து காவலர்களும் ஒரு ஆய்வாளரும்! முதல் மற்றும் இரண்டாம் நிலைக்குரிய அனைத்துப் பாடப் புத்தகங்களையும் வாரியெடுத்துக் கொண்டுபோனார்கள். குறைந்தது 700 புத்தகங்கள் இருக்கும். அவற்றைத் தயாரிப்பதற்காக, உன் தந்தை ஏகப்பட்ட பணத்தையும் உழைப்பினையும் காலத்தினையும் செலவிட்டிருந்தார்! அதன் பிறகு, எல்லா ஆசிரியர்களையும் ஒன்றாக அழைத்துக் கூட்டிவைத்து, வகுப்புகள் முடிந்ததாக அறிவித்தார்கள். அவர்கள் வெளியேறும் முன்பு பள்ளிக்கான மின்சார இணைப்பினைத் துண்டித்தனர். எனவே இனிமேல் மாலை வகுப்புகள் கிடையாது.’’

இந்தச் செய்தியால் நான் திகைத்துப் போனேன். உணவு அறைக்கு நான் திரும்பி வந்தபோது, அம்மாவும் அப்பாவும் சாப்பிட்டு முடித்திருந்தனர்; ஆனாலும் அப்பா தோற்றுவித்திருந்த ஒரு கடன் வசதி வங்கி பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

‘’வங்கியில் நீங்கள் போட்டிருந்த ஐயாயிரம் ரூபாயும் என்னவாகும்?’’ அம்மா கேட்டாள்.

அப்பா வெறுமனே தலையசைத்தார். ‘’அதெல்லாம் போய்விட்டது……’’. பின்னர், அவர் மெதுவாக, மிகக் கவனமாக வார்த்தைகளை நிறுத்தித் தெளிவாகப் பேசினார். ‘’இப்போது நாம் செய்யக்கூடிய ஒரே விஷயம் இன்னும் கடினமாக உழைப்பதுதான். நாம் நம்பியபடியான சூழ்நிலை அமையவில்லை என்பதற்காக, நாம் கைசோர்ந்துவிடக் கூடாது.’’

அம்மா ஒரு பெருமூச்சினை வெளியிட்டார். ‘’நான் எப்போதுமே உங்கள் பாதுகாப்பிற்காகவும் உங்கள் உழைப்புக்கான வெற்றிக்காகவுமே பிரார்த்தனை செய்கிறேன். ஆனால், கேடு வருமென்றால், நம்மால் அதுபற்றி எதுவும் செய்யமுடியாது என்றுதான் சொல்கிறேன்.’’ அவளுடைய குரல், அதற்கு முன்னர் நான் கேட்டிராத ஒரு நிச்சயமற்ற தொனியில் நடுங்கியது.

* * *

அந்த நாளிலிருந்து எங்கள் வீட்டுக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது; என்னுடைய விளையாட்டுத் தோழர்கள் கூட என்னிடமிருந்தும் விலகிச்சென்றனர். பாலைவனச் சோலையாக இருந்த எங்கள் வீடு இப்போது எங்கேயோ வெகுதொலைவிலுள்ள ஒரு சிறிய தீவு போலாகிவிட்டது. அம்மா எப்போதாவதுதான் பேசினாள். ஹூரிப் வீட்டிலேயே கையில் எப்போதும் ஒரு புத்தகத்துடன் உட்கார்ந்திருந்தார்; ஆனால் அதைப் படிக்காமல், எப்போதும் சிந்தனையில் மூழ்கியவராகவே தெரிந்தார்.

ஒரு சில நாட்களுக்குள்ளாகவே, அப்பாவின் பள்ளியில் மாணவர் எண்ணிக்கை நானூறிலிருந்து இருபத்தெட்டாகக் குறைந்துவிட்டது. எப்போதும் உயிர்ப்போடு, சுறுசுறுப்பாகத் தோன்றும் அப்பாவின் பள்ளி மந்தமாகக் காலியாகக் காணப்பட்டது. அப்பாவின் பள்ளியில் குழந்தைகளைச் சேர்த்த அரசு ஊழியர்களுக்கு உதவித்தொகைகள் நிறுத்தப்பட்டதாக அரசு ஊழியர் ஒருவரின் மகனான எனது வகுப்புத் தோழன் என்னிடம் சொன்னான்.

ஒரு நாள் இரவு பக்கத்து அறையில் கேட்ட பேச்சுக்குரல்களால் நான் தூக்கம் கலைந்து எழுந்தேன். ஹூரிப் தான் பேசிக்கொண்டிருந்தார்; அவருடைய குரலிலிலிருந்தே அவர் கோபமாக இருக்கிறாரென என்னால் சொல்ல முடியும். அடுத்த நாள் காலையில் அவர் துணிமணிகளைப் பையில் அடைத்துக்கொண்டு, அப்பாவிடம் வீட்டைவிட்டுச் செல்வதற்கான அனுமதி கேட்கப் போனார். ‘’ நம்முடைய குரல்வளையைப் பிடித்து நெறிக்கிறார்கள்.’’ அவர் சொன்னார். ‘’ இதற்கு மேலும் இந்த ஊரில் மனிதர்கள் உயிர் வாழ முடியாது.’’

விடைபெற்றபின், ஹூரிப் புறப்பட்டுப் போனார். அதன் பிறகு அவரைப் பற்றி எங்கள் குடும்பம் கேள்விப்படவேயில்லை.

என்ன நிகழ்ந்துகொண்டிருந்ததென்று எனக்கு முற்றிலும் தெரியாதுதான், ஆனால், அதனால்தான் அப்பா வீட்டுக்கு வெளியிலேயே அதிக நேரத்தைச் செலவிடுகிறாரென்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. சில வேளைகளில், மூன்று அல்லது நான்கு நாட்கள் கூட, அவரது பள்ளிக்கூடம் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் காணாமல் போய்விடுவார். வீட்டில் இருக்கும்போதும், புத்தகம் படிக்கவோ அல்லது மாணவர்களின் வீட்டுப்பாடங்கள் திருத்தவோ இல்லை; என்னுடைய தோட்டத்துச் செடிகளைப் பார்ப்பதற்காகவும் வெளியில் வரவில்லை; காலையில் அவரோடு நடைப்பயிற்சிக்கு வருமாறும் என்னை அழைக்கவில்லை. அவர் எப்போதாவது தான் சிரித்தார். பேசியது கூட எப்போதாவது ஒருமுறை தவிர்க்கமுடியாத அவசியமென்றால் மட்டுமே பேசினார்.

இதற்கிடையில் அம்மா அடுக்களையில் சமைக்கவோ, தோட்டத்தில் செடிகளைப் பேணவோ இல்லாமல் எப்போதும் படுக்கையில் படுத்தே இருந்தார். ஊழ்வலியின் திடீர்த் திருப்பத்தால், என் பெற்றோர் வாழ்க்கையில் நிகழ்வனவற்றிற்கு என்னால் உதவமுடியாதென்பதை, ஆனால் நடப்பதெல்லாம் அவர்களின் கட்டுப்பாட்டை மீறியவை என என்னுடைய முழுதும் வளர்ச்சிபெற்றிராத அப்பாவி மனத்தாலும் உணரமுடிந்தது.

ஒருநாள், அம்மா என்னை அருகே அழைத்து, அறிவுரை கூறினாள். ‘’உன் பாடங்களை நீ நன்றாகப் படிக்கவேண்டும். ஹூரிப் ஒரு அறிவார்ந்த இளைஞன்; ஆனால் இக்காலச் சூழ்நிலைக்கு அவனால் ஒத்துப்போக முடியவில்லை. அதனால்தான், அவன் வெளியே போய்விட்டான். உன் அப்பாவும் திறமையானவர் தான். ஆனால் இப்போதைய விஷயங்களை மாற்றும் வலிமையும் அதிகாரமும் அவருக்கு இல்லை. அதனால்தான், நீ நன்றாகப் படிக்கவேண்டும். அவர்கள் இருவரை விடவும் நீ திறமையானவனாக வேண்டும். எனக்குத் தெரியும் நீ அப்படி வருவாய். நீ எவ்வளவோ பெரிய அறிவுள்ளவன்; உன் செயலில் நீ தோற்கமாட்டாய்.’’

அம்மா என்ன சொல்கிறாளென்று உண்மையில் எனக்குப் புரியவில்லைதான்; ஆனாலும், அவளுடைய குரலில் தெரிந்த மென்மை என் கண்ணீரை அடக்க உதவியது. அவள் என்னை அணைத்து, என் கழுத்தில் முத்தமிட்டபோது, அவளது கண்ணீரின் வெப்பத்தினை என் மேனியில் உணரமுடிந்தது – என்றாலும் இன்னொரு நிகழ்வினை என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை.

‘’அப்பாவால் வேலை செய்ய முடியவில்லை; சரி. ஆனால், அவர் ஏன் எப்போதும் வெளியே போய்விடுகிறார்?’’ எப்படியோ சமாளித்துக், கேட்டுவிட்டேன்.

அம்மா என் முகத்தை அவரது இரு கைகளிலும் தாங்கிக்கொண்டு, என் கண்களுக்குள் நோக்கினாள். ‘’அப்பா இப்போது மிகப்பெரிய ஏமாற்றத்தில் இருக்கிறார். நான் சொல்வது என்னவென்று நிச்சயமாக உனக்குப் புரியாது. நீ இன்னும் சின்னப் பையன் தானே, வளர்ந்த ஒருவரின் ஏமாற்றத்தை இன்னும் நீ உணர்ந்திருக்க முடியாது. ஆனால், உன் அப்பா வெளியே போவது எதற்காகவென்றால், மனத்திலிருப்பதையெல்லாம் ஒழித்துவிடத்தான்.’’

ஒரு சிறுவனாக, ஊர்ப்புறத்தைத் தெரிந்துகொள்வதற்காக, நானும் அடிக்கடி வீட்டிலிருந்தும் காணாமற்போவதுண்டு. எனக்குப் பிடித்த இடங்களில் ஒன்று உள்ளூர்ச் சந்தை; சிலவேளைகளில், அங்கு செல்வதும் திரும்புவதுமான நடைகளில் அப்பாவும் அவரது நண்பர்களும் சீட்டாடுவது அல்லது அந்த ஆட்களில் ஒருவரின் வீட்டு முன் தாழ்வாரத்தில் வேறு ஏதாவது சூதாட்டத்தில் ஈடுபட்டிருப்பது என் கண்களில் தட்டுப்படுவதுண்டு. ‘’அப்பாவின் மனத்திலிருப்பதையெல்லாம் ஒழித்துவிடுவதன் அவசியம்’’ பற்றி அம்மா சொன்னதன் பொருள் இதுதானா என்று அப்போது நான் நினைத்தேன்.

அப்பாவின் பள்ளி கிட்டத்தட்ட தோல்வியடைந்துவிட்டபோது, அவரைப் பற்றியும், சூதாட்டத்தில் நேரத்தைப் போக்கடிக்கவே அவர் தேசிய இயக்கத்தைக் கைவிட்டுவிட்டதாகவும் மக்கள் பேசுவதை நான் கேட்பதுண்டு. நான் இளையவன் என்ற போதிலும் அந்த வார்த்தைகளின் எதிர்மறைக் குறிப்பைப் புரிந்துகொள்ள இயன்றவனாகத்தான் இருந்தேன். அதனால்தான், அப்பாவைப் பற்றிய எனது யூகங்கள் சரியானவைதானாவென அம்மாவிடம் நான் கேட்கவில்லை. அதனாலேயே, அப்பா எங்கிருக்கிறாரென்று தெரியுமாவென அம்மா கேட்டபோது தெரியாதெனப் பாவனைசெய்யவும் என்னால் இயலாமற்போயிற்று.

‘’அப்படியென்றால், அவரைத் தேடிக் கண்டுபிடித்து, வீட்டுக்கு வருமாறு சொல்.’’ என்றாள், அம்மா.

என் அப்பாவைத் தேடி வீட்டைவிட்டுப் புறப்பட்டதும், உண்மையிலேயே அவரது வழக்கமான அரட்டையிடம் ஒன்றில் அவரைக் கண்டுவிட்டேன். அவர் என்னைக் கண்டதும், கோபமான பார்வை ஒன்றை என்மீது வீசினாலும், அது, அம்மாவின் செய்தியை நான் அவருக்குத் தெரிவிப்பதிலிருந்தும் என்னைத் தடுத்துவிடவில்லை.

‘’ இன்னும் ஒரு நிமிடத்தில் வீட்டில் இருப்பேனென்று உன் அம்மாவிடம் சொல்,’’ என்று மட்டுமே அவரால் சொல்ல முடிந்தது.

வீட்டுக்கு நான் திரும்பி அதிக நேரமாகும் முன்பாகவே, அப்பா வாசலுக்கு வந்து நின்றார். அம்மா அவரிடம் மிகவும் கொஞ்சமாகவே பேசினாள். அவரும் மவுனம் காத்தார்; ஆனாலும், அன்று இரவு, நான் எனது அறைக்கு வந்த பின், அம்மா, அவரிடம் பேசுவது எனக்குக் கேட்டது: ‘’ உங்கள் ஏமாற்றத்தை விட்டொழிப்பதற்காகத் தொலைத்த நேரம் போதுமென்று நினைக்கிறேன்.’’

அடுத்த இரண்டு நாட்கள் இரவும் பகலும் வீட்டுச் சூழ்நிலை இயல்புக்குத் திரும்பிவிட்டதாகத் தோன்றியது; பள்ளி வேலை முடிந்ததும் வேறு எங்கும் வெளியே போகாமல், அப்பா நேராக வீட்டுக்கு வந்தார். ஆனால், மூன்றாவது நாள், அவர் படபடப்பாகவும் பதட்டமாகவும் காணப்பட்டார்; அன்று இரவில் எங்கு செல்கிறார் என்ற விவரம் ஏதும் கூறாமலேயே திடீரென்று வீட்டைவிட்டுக் கிளம்பிவிட்டார். அன்றும் அதைத் தொடர்ந்த நாட்களிலும் அவர் வீட்டைவிட்டுச் செல்வதைத் தடுப்பதற்கு அம்மா எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை; எந்த வார்த்தையும் பேசவுமில்லை. பின்னர், ஒருமுறை, ஒரேயடியாக, நான்கு நாட்களாக அவர் வீட்டுக்கு வராமலிருந்தபோது, மறுநாள் அவள், என்னை அவளது படுக்கையறைக்கு அழைத்து, ஒரு பென்சிலும் வெள்ளைத்தாளும் எடுத்துக்கொண்டு வருமாறு சொன்னாள். நான் அவற்றைக் கொண்டுவந்து அவளிடம் கொடுத்ததும் அவள் கடிதம் ஒன்றை எழுதத் தொடங்கினாள்.

அவள் எழுத, எழுத, வார்த்தைகளைத் தாளில் எழுதுவதென்பது அம்மாவுக்கு எவ்வளவு சிரமமாக இருந்ததென்பதை, நான் கவனித்தேன். குறிப்பினை மடித்த பிறகு எதுவும் சொல்லாமல் என்னிடம் தந்துவிட்டு மீண்டும் படுத்துக்கொண்டாள்.

‘’இதை அப்பாவிடம் கொடுத்துவிடச் சொல்கிறாயா?’’ நான் கேட்டேன்.

பதில் சொல்வதற்குப் பதிலாக, அவள் என் கண்களில் உறுத்துப் பார்த்து, அமைதியாக, ஆமெனத் தலையாட்டினாள்.

முந்தைய முறை நான் அப்பாவைத் தேடியதுபோலில்லாமல், இப்போது, எங்கு தேடினாலும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. வழக்கமாக, அவர் செல்கின்ற வீடுகள் எதிலும் அவரைக் காணவில்லை. நான்கு அல்லது ஐந்து மணிநேரத்துக்கும் மேலாக, நான் ஊரைச் சல்லடையிட்டுத் தேடியும் எந்தப் பயனுமில்லை; ஆனால், அம்மாவின் முகம் என் கண்களிலேயே நின்றதால், அப்பாவைத் தேடிக் கண்டுபிடிக்காமல் என்னால் வீட்டுக்குத் திரும்பிச் செல்ல முடியவில்லை. கடைசியில் மொத்த நம்பிக்கையும் இழந்து, களைப்புடன் ஓய்வெடுப்பதற்காக, சாலையோரப் புளியமரம் ஒன்றின் அடியில் அமர்ந்தேன்.

துயரமான எண்ணங்கள் எழுந்து மனம் முழுதும் நிறைத்தன: அப்பாவின் புத்தகங்களைக் காவல் துறை பறிமுதல் செய்தது, அப்பா முதலீடு செய்திருந்த வங்கி மூடப்பட்டது, திவாலான கூட்டுறவுகள், அப்பாவின் பள்ளியில் மாணவர்கள் வருகை குறைந்தது, மவுனமாகிப்போன நகலெடுப்புக் கருவிகள், ஊமையாகிப்போன தட்டச்சு எந்திரங்கள்…. பிம்பங்களின் படையெடுப்பு மேலும் மேலுமாகத் தொடர்ந்துகொண்டிருந்தது. கெட்ட காலத்தின் உணர்வு திடீரென மேலெழுந்து என்னை அழுத்தி வீழ்த்தவே, நான் மரத்தின் அடிப்பக்கமாகச் சாய்ந்து, அதன் திடத்தன்மையில் கொஞ்சத்தினையாவது உறிஞ்சி எடுத்துக்கொள்வதுபோல, அடிமரத்தில் முதுகு அழுந்திப்படுமாறு நிமிர்ந்து உட்கார்ந்தேன்.

காற்சட்டைப் பைக்குள் துளாவி, அம்மா எழுதிய கடிதத்தை வெளியே எடுத்தேன். அதைப் பிரித்து வாசிப்பதற்கு நான் முழுவதுமாகவே பயந்தேன்; என்றாலும் என்னால் அதைப் படிக்கும் எண்ணத்தினை என்னால் தடுக்கமுடியவில்லை:

என் வயிற்றிலிருக்கும் குழந்தையைப் பற்றி உங்களுக்குக் கவலையே கிடையாதா? தயவுசெய்து வீட்டுக்கு வாருங்கள்!

பிறக்கப்போகும் உங்கள் குழந்தை அறிவும் மதிப்பும் மிக்க ஒரு மனிதனாக வேண்டுமென, எல்லாம் மிகுந்த வல்லமையின் முன் தலை தாழ்த்திப் பிரார்த்தனை செய்து குழந்தையைக் கவுரவியுங்கள்.

இந்தக் கடிதம் கிடைத்தபிறகும் வீடு வந்து சேர உங்களுக்கு விருப்பமில்லையெனில், நான் மரணிக்கட்டுமென்றும், பிறக்கப்போகும் குழந்தையை நான் கல்லறைக்கு என்னுடன் எடுத்துப்போகவுமாக எனக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்.

நான் அழத் தொடங்கினேனென்றாலும், திடீரென்று, கடிதத்தைத் திரும்பவும் மடித்துப் பைக்குள் திணித்துவிட்டு மீண்டும் ஒருமுறை அப்பாவைத் தேடுவதெனத் தீர்மானித்தேன். முடிவில், ஒரு சீன மனிதனின் வீட்டின் பின்புறம் சூதாடிக்கொண்டிருந்த அப்பாவை நான் கண்டுவிட்டேன்.

முன்பு போலவே என்னைப் பார்த்ததும் அப்பா கோபமாகத் தோன்றினாலும், நான் நீட்டிய கடிதத்தை வாங்கிக்கொண்டார்.

அன்றைய இரவில் அப்பா வீட்டுக்கு வந்தும் அம்மாவின் அறைக்கு நேரடியாகச் செல்லவில்லை. பதிலாக, முன் அறையிலேயே தங்கி குழந்தைகளுடன் பேசினார். அவரது குரல் இயற்கையாக இல்லாமல், எங்களுக்காக இல்லாமல், அம்மாவுக்குக் கேட்கவேண்டுமென்பதற்காகவே, வலிந்து உரத்துச் சத்தமாகப் பேசுவதாக என் காதுகளில் கேட்டது.

இரவுகளில் அப்பா வெளியில் செல்லாமல் ஒரு வாரம் கழிந்தது. அந்த வாரம் முழுவதும் அவர் இரவுகளில் வீட்டிலிருந்து குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் எழுதவும் படிக்கவும் உதவி செய்தார். ஆனால், அடுத்த வாரத்தில் ஒரு நாளில் அப்பாவின் நண்பர்கள் மூன்று பேர் வீட்டில் தலைகாட்டினர். அந்த நேரம் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது: அது பிற்பகல் இரண்டு மணி. விருந்தினருக்குச் சிற்றுண்டி அளிக்குமாறு அப்பா என்னைப் பணித்தார். குடிப்பதற்காக எதையோ கொண்டுவந்து, கொடுத்துவிட்டு, நான் அந்த அறையையே, இயல்பாகச் சுற்றிவந்தேன்.

கால் மணிநேரம் போல அவர்களுடன் பேசிக்கொண்டிருந்த அப்பா, அவர்களிடம் இதோ வருகிறேனென்று அனுமதி கேட்டுக்கொண்டு, அம்மாவைப் பார்ப்பதற்காக அவளது அறைக்குச் சென்றார். அம்மாவிடம் அவர் என்ன சொன்னாரென்பதை நான் கேட்கவில்லை; ஆனால், வழிக்கூடத்தில் நடைபயின்றுகொண்டிருந்த, என் காதுகளில் அம்மா கோபமாக, உரத்துச் சொன்னது கேட்டது: “ குழந்தைகள் இருக்கும் வீடு, இது. இதைச் சூதாட்டக் கூடமாக்க நான் அனுமதிக்கமாட்டேன்.’’

விருந்தினர் அமர்ந்திருந்த முன்னறைக்குத் திரும்பிவந்த அப்பா, அங்கிருந்து நானூறு மீட்டர் தொலைவில் எங்களுக்குச் சொந்தமாக இருந்த ஒரு காலி வீட்டிற்கு அவர்களை அழைத்துச்சென்றார்.

எனக்குத் தெரிந்தவரையில், அப்பாவின் விருந்தினர்களை அம்மா வரவேற்று உபசரிக்காமலிருந்தது, அந்த ஒருமுறை மட்டுமே. அதைவிடவும் வியப்பாக நான் கண்டது என்னவென்றால், அன்று, அப்பாவும் அவரது விருந்தினர்களும் அவர்களாகவே காலிவீட்டுக்குச் சென்ற பின்னர், அம்மா படுக்கையிலிருந்தும் விரைவாக எழுந்து, சமையலறைக்குள் புகுந்து, உணவுக்குப் பிந்தைய இனிப்பு வகைகளில் அப்பாவுக்கு மிகவும் பிடித்தமான ரொட்டிப் புட்டு செய்யத் தொடங்கினாள். கூடுதல் ருசிக்காக மாவுடன் பாலாடைக்கட்டியை அதிகமாகச் சேர்த்துப் பிசைந்தாள். மாலையில், உலை அடுப்பிலிருந்து புட்டினை வெளியே எடுத்தபின், என்னிடமும் நான்கு வளர்ப்புச் சகோதரர்களிடமும் அதனைக் கொண்டுபோய் அப்பாவும் அவரது விருந்தினர்களும் சூதாடிக்கொண்டிருக்கும் வீட்டில் கொடுத்துவரச் சொன்னாள்.

புட்டு மற்றும் அம்மா அனுப்பியிருந்த இதர உணவு வகைகளுடனான தட்டுகளைப் பார்த்ததும் அப்பா மிகவும் வியப்படைந்ததாக எங்களுக்குத் தோன்றியது. உணவு வகைகளைப் பரிமாறி முடித்த உடனேயே நாங்கள் கிளம்பிவிட்டோம்; ஆனால், எதனாலோ தெரியவில்லை, அன்று மாலை நாங்கள் மீண்டும் வீட்டுக்குத் திரும்பும் வழியில் எங்களுக்குள் ஒரு வார்த்தை கூடப் பேசிக்கொள்ளவில்லை.

* * *

சற்றும் எதிர்பாராத ஒரு நாளில், அந்த வயதான லூரிக் நெசவுப்பெண் அம்மாவைப் பார்ப்பதற்காகக் கிராமத்திலிருந்து வந்தாள். அம்மா, அவளது விருந்தாளியை வரவேற்பதற்காக முன் வாசலுக்குச் சென்றபோது, நானும் அவள் பின்னாலேயே தொற்றிக்கொண்டு சென்றேன்.

அம்மாவைப் பார்த்தவுடனேயே ‘’ லூரிக், இப்போது, அவ்வளவாக விற்க மாட்டேனென்கிறது,’’ என்றாள், அந்த வயதான பெண். ‘’எங்களுக்கு எந்தப் பணி ஆணையும் கிடைக்கவில்லை. எங்கள் கையிலிருக்கும் இருப்பு கூட விற்கவில்லை; கிராமத்து ஆட்கள் மட்டுமே வாங்குகிறார்கள்; அவர்களிடமும் செலவுக்குப் பணம் இல்லை. நீங்கள் கொஞ்சம் பணி ஆணை கொடுக்க விரும்புவீர்களா?’’ என அவள் கெஞ்சும் குரலில் கேட்டாள்.

அம்மா, அவளால் எவ்வளவு முடியுமோ, அந்தளவுக்கு மென்மையாக மறுத்து, அணியப்படாத லூரிக் ஆடைகள் அலமாரியில் நிறையவே அடுக்கியிருப்பதை விவரித்தாள்.

‘’சுதேசி நாட்களெல்லாம் முடிந்து விட்டதென்றுதான் நினைக்கிறேன்,’’ என்று கண்களில் நீர் தளும்பச் சுரத்தேயில்லாமல் சொன்னாள், அம்மா. அவளைப் பார்க்க வருபவர்களிடம் நேரம் காலமில்லாமல் பேச விரும்பும் அம்மா, இப்போது பேசுவதற்கு எதுவுமே இல்லாதது போல் நின்றதாகத் தோன்றினாள்.

நெசவுப்பெண் ஆமெனத் தலையாட்டினாள். குனிந்த தலையும், குறுகிய தோள்களுமாகத் திரும்பிய அவள் தளர்ந்த நடையில் வீட்டைவிட்டும் மெதுவாக வெளியேறினாள்.

அம்மா சொன்னது சரி – அல்லது அப்படித் தோன்றியது, சுதேசி நாட்களும் ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டதும் முடிந்து போயின. இப்போது சோகம் பீடித்த உணர்வு எங்கள் சிறிய நகரம் முழுக்கப் பரவியது. இப்போதெல்லாம், மக்கள், உதயமாகப்போகும் எங்கள் தேசம் குறித்த கனவுகள், பெருமைகளைப் பற்றியெல்லாம் பேசுவதில்லை. மேற்கொண்டும் ஐம்பது காவலர்களை அரசு தேர்வு செய்யவிருப்பதாகச் செய்தி பரவியது. களவும் கொலையும் சூதும் கூடிக்கொண்டே போயின.

வீட்டில், நகலெடுப்புக் கருவிகளும் தட்டச்சு எந்திரங்களும் அவற்றின் பெட்டிகளில் மீண்டும் வைத்துக் கட்டப்பட்டன. சில நாட்கள் கழிந்ததும், வீட்டு உபயோகப் பொருட்கள் சிலவற்றையும் எடுத்துப்போகச் சிலர் வந்தனர். நம் வீட்டுப் பொருட்களுக்கு என்னவாகிறதென நான் அம்மாவைக் கேட்டபோது, அவளால் தலையை மட்டுமே குலுக்கிக்கொள்ளமுடிந்தது. பிற்காலத்தில்தான், அந்தப் பொருட்களெல்லாம் என் அப்பா செலுத்தவேண்டிய கடன்களுக்காகப் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிந்துகொண்டேன். இதற்கிடையில், அவர் மீண்டும் ஒருமுறை காணாமல் போனார்.

அதே நாள் இரவில் அம்மாவின் பனிக்குடம் உடைந்தது. அது நிகழ்ந்ததும், அம்மா, குழந்தைகளையெல்லாம் அழைத்து, என் வளர்ப்பு சகோதரர் ஒருவரிடம் அப்பாவைத் தேடிப்பிடிக்குமாறு கூறினாள். இன்னொருவரை பேறுகால மருத்துவப்பெண்ணை அழைத்துவரச் சொன்னாள். வேலைக்காரர் தண்ணீர் கொதிக்கவைக்க உதவுமாறு என்னிடம் கூறினாள்.

இரண்டு மணி நேரமான பிறகும், அம்மாவின் ஆணைகளை நாங்கள் இருவர் மட்டுமே நிறைவேற்றியிருந்தோம். அப்பாவைத் தேடிப்பிடிக்குமாறு கூறப்பட்ட வளர்ப்புச் சகோதரர் தனியாகவே வீட்டுக்கு வந்தார். ஆனால், குழந்தை பிறக்கத் தயாராக இருந்தது. எனவே வீட்டில் அப்பா இல்லாமலேயே எனது புதிய சகோதரன் பிறந்தான். அவன் வீலெனக் கத்தியபோது, நாங்கள் எல்லோருமே விடுதலைப் பெருமூச்சினை வெளியிட்டோம். அவனது கத்தல் ஆரோக்கியமான அழுகையாக இருந்தது.

அடுத்த நாள் காலை, நான் முன்பாதங்களில் நடந்து, என் தம்பியைப் பார்ப்பதற்காக அம்மாவின் அறைக்குள் நுழைந்தபோது, அவள் புன்னகையோடு வரவேற்றாள். என் தம்பி, அம்மாவின் அணைப்பிலேயே அமைதியாகத் தூங்கிக்கொண்டிருந்தான். அம்மாவின் முகத்திலிருந்து, அத்தனை துயரமும் வேதனையும் வடிந்துபோனதாகத் தோன்றியது.

என் தம்பியை முத்தமிடுவதற்காக, நான் குனிந்த போது, அப்பா திடீரென்று அறைக்குள் விரைந்து நுழைந்தார்.

‘’ஆம்பளைப் பிள்ளை’’ அவர் மகிழ்ச்சியில் உரக்கவே கத்தினார். ‘’ அப்பா, அம்மாவை விடவும் பெரியவனாக, நல்லவனாக வளரப்போகிற ஒரு ஆண்மகன்.’’

அம்மா, அவரை இறுக்கமாகவே உறுத்து நோக்கினாள். பின்னர், அவள் வலிமையெல்லாம் இழந்துவிட்டதாகத் தோன்றிய ஒரு மெல்லிய குரலில், ஆனால் வித்தியாசமான பெருமிதம் தொனிக்கும் வகையில், சொன்னாள் : ‘’ஆமாம், உங்களுக்கு ஒரு பிள்ளை பிறந்திருக்கிறான். மகன், உங்களிடமிருந்தோ, இந்தக் காலம் அல்லது இடத்திலிருந்தோ எதுவுமே பெற்றுக்கொள்ளாமல், அவனாகவே வளரப்போகிற ஒரு மகன்.’’

அம்மா வேறு என்ன சொன்னாளென என் காதுகளில் கேட்கவில்லை; அமைதியாக, அறையிலிருந்தும் நழுவி வெளியேவந்தேன்.

* * *

ஆக, என் பெற்றோரின் நான்காவது குழந்தை பிறந்த நேரத்தில், நாட்டின் சுயசார்புத் தன்னிறைவுக் கனவு இறந்துகொண்டிருந்தது. முடிவில், அனைத்துமே முன்பிருந்தது போலவே, திரும்பி, என் சொந்த ஊரான ப்ளோராவில் அமைதியும் சமாதானமும் நிலவியது. உதயத்தின் மெல்லொளிக் கருக்கல் நேரம் பிறந்தது; காலைக் கதிரவன் உதயமாகும் முன்னர் முதலில் இருள்தான் விலகுமென்பதைத்தான் நாம் அறிவோமே!

நன்றி : http://www.warscapes.com/retrospectives/indonesia/twilight-born

•••••••

நாட்டுப்புற இசை ஆய்வாளர் கே.ஏ.ஜியை இழந்தோம் – வெ.வெங்கடாசலம்

images (10)

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் நாட்டுப்புற நிகழ்க்கலைத் துறையின் தலைவராக பணியாற்றிய கே. ஏ. குணசேகரன் அவர்கள் மறைந்தார் என்ற செய்தியை ஜன-17 அன்று முகநூலில் கண்டதும் மேடையில் இன்குலாப் எழுதிய ” மனுசங்கடா… நாங்க மனுசங்கடா ” என்னும் பாடலை உரத்தக் குரலில் அரங்கமதிர பாடி நிற்கும் அவரது சுறுசுறுப்பான உருவம் ஒரு கணம் கண்களில் வந்துபோனது. நாட்டார் வழக்காற்று இசை ஆய்வில் முனைவர் பட்டம் பெற்ற கே.ஏ.குணசேகரன் பாடகர், நாடக ஆசிரியர், ஆய்வாளர், எழுத்தாளர், நாவலாசிரியர் என்னும் பன்முக ஆளுமையாய் வலம் வந்து கேஏஜி என்று சுருக்கமாய் எல்லோராலும் அறியப்பட்டவர். நாட்டார் மரபு இசை வடிவம் என்ற அறிமுகத்துடன் தம் பாடல்களை அவராலேயே நிறுவப்பட்ட தன்னானே இசைக்குழுவுடன் இணைந்து ஏற்ற இறக்கங்களுடன் கச்சேரி மேடைகளில் அவர் பாடப்பாட கேட்போர் அப்பாடல்களின் துடிப்பில் கரைந்து உறைந்துபோவர்.

இடதுசாரி அமைப்புகளின் கலை இலக்கிய மேடைகளில் ஒடுக்கப்பட்டோரின் குரல்களாக ஒலிக்கத் துவங்கிய அவரது இந்த நாட்டுப்புற இசைப் பயணம் தொண்ணூறுகளுக்குப் பின்பு தலித் கலை இலக்கிய வெளியில் மையம் கொண்டது. அதற்குப் பிறகு அவர்தம் எழுச்சியான குரல் தலித் கலை, கலாச்சார, பண்பாட்டுத் தளங்களில் மேலதிக ஈடுபாடுடன் ஒலித்தது. தன்னானே கலைக்குழுவை ஊர் ஊராக அழைத்துச் சென்று தலித் அரசியல் மேடைகளிலும், பொது வெளிகளிலும் நாட்டுப்புற இசைக் கருவிகளை மட்டுமே பயன்படுத்தி அவர் முழங்கிய பாடல்கள் தலித் இளைஞர்களின் அரசியல் உணர்வை உசுப்பி விட்டன என்றால் அது மிகையாகாது.

நாட்டுப்புறப் பாடல்கள், நாடகம், திரைப்படம், எழுத்து என தமது கலை பரிமாணங்கள் வாயிலாக சாதிய பாரபட்சங்களால் / அணுகுமுறைகளால் தலித்துகள் அனுபவிக்க நேர்ந்திருக்கும் வலிகளை அம்பலப்படுத்தி வந்தது மட்டுமல்லாமல் ஓர் அத்துமீறலாக நவீன சமூக வெளிக்குள் நுழைந்து நமது மரபார்ந்த செழுமைகளைப் பாழ்ப்படுத்திவரும் அர்த்தமற்ற நவநாகரிகங்களை எள்ளி நகையாடியதுடன் அவ் அநாகரிகங்களுக்கு எதிராக தம் தனித்தன்மையான கலை இலக்கிய ஆயுதங்களை உயர்த்திப் பிடித்து களமாடியவர் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.

ஒரு தலித்தின் தன் வரலாறாக அவரால் எழுதப்பட்ட “வடு” நாவல் தமிழ் இலக்கிய ஆளுமைகளால் பரவலாக பேசப்பட்ட நாவலாகும். “பலியாடுகள்”, “தொடு,” “மழி”, “மாற்றம்” உள்ளிட்டு மற்றும் பிற நாடகங்கள், நாட்டார் கலை மரபு சார்ந்த தொகுப்பு நூல்கள், தலித் அழகியலை எடுத்தியம்பும் கட்டுரைகள் என முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதி அவற்றை தமிழ் கலை இலக்கிய வெளிக்கான தமது பங்களிப்பாக விட்டுச் சென்றுள்ள அக்கலைஞர் இன்று நம்முடன் இல்லை. சாகா வரம் பெற்ற அவரது கலை வடிவங்களும் அம்சங்களும் சாதி ஆதிக்கத்தால் ஒடுக்கப்பட்ட மக்களின் துயரம் தோய்ந்த வாழ்வியலை பேசும் சாட்சியங்களாக நம்முன் எப்போதும் நடமாடிக்கொண்டே இருக்கும் ; வாழ்ந்துகொண்டே இருக்கும். அக்கலை அம்சங்களை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்துவதில் நமக்கிருக்கும் பொறுப்பை உணர்வதுவே கேஏஜி என்னும் அம்மாபெரும் கலைஞனுக்கு நாம் செலுத்தப்போகும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.

**********

பெருந்துறையில் சித்ராதேவியை இன்னொருவனுடன் பார்த்த மார்ச் மாத மதியத்தில்… ( சிறுகதை ) – வா.மு.கோமு

download (2)

சித்ராதேவியை நான் நான்கைந்து வருடங்களாக காதலித்து பின்பாக அவள் சுயபுத்தியை இன்ச் பை இன்ச்சாக தெரிந்த பின்பாகவும் அவளையே கல்யாணம் செய்து கொள்வேன் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. அப்புறம் அவளை அவள் விருப்பம் போல தனியே கழட்டி விட்டு விட்டு, ஒண்டிக்கட்டையாய் நான் என் வீட்டில் கிடப்பேன் என்பதையும் நான் நினைத்தே பார்க்காத வகையில் சேர்த்திக் கொள்ளலாம்.

எல்லோருமே விதம் விதமாய் வாழ்க்கையை வாழ்ந்து கழித்துக் கொண்டிருக்கிறார்கள். சித்ராதேவி வாழும் விதமும் ஏன் நான் வாழும் விதமும் கூட வாழ்க்கையோடு சேர்த்தி தான். கொஞ்சம் நிதானமாக யோசித்துப் பார்த்தால் இதிலெல்லாம் ஒன்றுமே இல்லை தான்.

மனைவியாகப்பட்டவள் தனக்கு மட்டுமே உரியவளாக இருக்க வேணுமென்று ஒவ்வொரு கணவன்மார்களும் நினைத்துக் கொள்கிறார்கள். அழகான மனைவியை பெற்ற கணவர்கள் அவளை பேருந்திலோ, டூ வீலரிலோ, காரிலோ ஏனையோர் வாய் பிளந்து பார்க்கும் விதமாய் அரவணைத்து அழைத்துச் செல்வதில் கவனமாய் இருக்கிறார்கள். கொஞ்சம் ஏமார்ந்தாலும் அல்லது கண்ணயர்ந்தாலும் அருகிலிருப்பவன் அவளை தட்டிக் கொண்டு எஸ்கேப் ஆகிவிடுவானோ என்ற கவலை உள் மனதில் ஓட தோளில் கைபோட்டு வைத்துக் கொள்கிறார்கள்.

நானும் அந்த வகையில் சேர்த்தி தான். ஆனால் எல்லோரும் வாய் பிளந்து பார்க்கும் விதமான நிறம் அவளுடையது அல்ல. ஆனால் அவள் என்னுடன் கிளம்புகையில் பயங்கரமான கலரில் ஒரு சுடிதாரும், பயங்கரமாய் முகப்பூச்சும், பயங்கரமாய் உதட்டுச் சாயமும், பிஸ்ஸு பிஸ்ஸு என துணிமீது அடித்துக் கொள்ளும் பயங்கர வாசனையும் என்னை அதீத மிரட்சிக்கு உள்ளாகி விடும்!

அப்போது எனக்கு கொஞ்சம் உலகக் கடுப்பாய் இருக்கும். சாலையில் டூவீலரில் செல்கையில் மற்றோர் என்னை பரிதாபமாக பார்க்க வைத்து விடுவாள் சித்ராதேவி. போக எந்த ஊரிலும் அவளுக்கு நட்பு வட்டம் இருக்கும் போல. ‘டேய் சுரேசு, நீ இங்க என்ன பண்றே? டேய் அரவிந்து.. அப்ப பாத்த மாதிரியே இருக்கீடா இன்னும்’ என்று சாலையில் யாரைப் பார்த்தாலும் வண்டியை நிறுத்தச் சொல்லி கதையடிக்க ஆரம்பித்து விடுவாள்.

கடைசியாக, ’இந்தப் பிள்ளைப்பூச்சி தான் எங்க வீட்டுக்காரரு’ என்று நகம் கொறித்துக் கொண்டிருக்கும் என்னை அறிமுகப்படுத்தி வைப்பாள். போக,’வீட்டுக்கு வாடா ஒரு நாளைக்கி, நாங்க சீனாபுரத்துல தான் இருக்கோம்! என் நெம்பரை நோட் பண்ணிக்கோ!’ என்று வேறு அதையும் அவர்களுக்கு சொல்லி வைப்பாள்.

எனக்கென்னவோ அப்பாவிக் கணவன்மார்களுடைய மனைவிகள் சுறுசுறுப்புக்கு பேர் போனவர்களாகவும், சண்டைக்கு அஞ்சாதவர்களாகவும் இருப்பதாக தோன்றுகிறது. சித்ராதேவியை நல்லபெண் என்று உள்ளூரிலேயே யாரும் சொல்வதில்லை. ஆனால் அவள் உள்ளூரில் ஒன்றிரண்டு பெண்களுடன் தொடர்பில் இருந்தாள். அந்த ஒன்றிரண்டு பெண்களும் கணவன் என்று பெயருக்கு வீட்டில் ஒரு அப்பாவியை வைத்துக் கொண்டு வெளியில் கணவன் என்று கைக்கு ஒரு ஆளை வைத்திருப்பவர்கள். அவர்கள் தறி முதலாளியாகவோ, தோட்டம் காடு வைத்து வட்டிக்கி பணம் கொடுப்பவர்களாகவோ இருந்தார்கள். ஓரளவிற்கு விசயத்தை இந்த நேரம் கிரகித்துக் கொண்டிருப்பீர்கள் என நான் நினைக்கிறேன்.

ஆக இது எந்த ஊர்? என்ற கேள்வி உங்களுக்கு வந்திருக்கும். இப்போதைக்கு அது கிராமம் என்று வைத்துக் கொள்ளுங்கள். திருமணமான கையோடு ஊரில் கேவலம் சில நாட்கள் பேசுவார்கள் என்று தான் சீனாபுரம் வந்து வீடு வாடகைக்கு எடுத்து சட்டி பானை வாங்கி கஞ்சி காய்ச்சி குடித்துக் கொண்டிருந்தோம். இந்த ஊர் வழியாக பெருந்துறைக்கு பலமுறை சித்ராதேவி என் டூவீலரின் பின் இருக்கையில் அமர்ந்திருக்க கடந்து சென்றிருக்கிறேன். அப்போது நான் இங்கே வீடெடுத்து அவளோடு குடும்பம் நடத்துவேன் என்று வழக்கம்போல நினைத்தே பார்க்கவில்லை. அப்போதெல்லாம் சித்ராதேவி எல்லா புதிய திரைப்படங்களையும் வரிசையாக பார்த்து ரசித்தவண்ணமிருந்தாள்.

அதற்காக சித்ரதேவி ஒரு சினிமா பைத்தியமென்று முடிவு செய்து விடாதீர்கள். அவள் சினிமாவிலிருந்து எதையோ கற்றுக் கொள்ள முயற்சிக்கிறாள் என்பதை மட்டும் என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. அது என்ன இழவு? என்று எனக்கு இன்று வரை தெரியாது. போக இப்போது அவள் அவளுடைய கிராமத்தில் அவள் அப்பாவோடு இருக்கிறாள். வீட்டுக்கு ஒத்தைப் பிள்ளை அவள். அவள் அப்பா என்கிறவர் நிதமும் ஏதாவது ஒரு வேலை செய்து மாலையானதும் கொஞ்சமாய் கிறுக்கு வெள்ளம் சாப்பிட்டு கட்டிலில் சாய்ந்து விடுபவர்.

என் காதல் கதையை நான் சொல்லத் துவங்கலாம் என்றால் முன்பாகவே திருமணம், தனித்து வாழ்தல் என்று கப்பலோட்டி விட்டேன். இனி அந்தக்காதலில் என்ன இருக்கப்போகிறது? வெறும் சில முத்தங்களும், தொணதொணப்புகளும், சில சண்டைக்காட்சிகளும், ஒருமுறை கருக்கலைப்பும் என்று சுவாரஸ்யம் மிகுந்தவைகள் தான். கருக்கலைப்பா? என்று வேறு ஆச்சரியம் கொள்ளதீர்கள். அது வேண்டவே வேண்டாமென நான் சித்ராதேவியிடம் காலில் விழா குறையாக கேட்டுக் கொண்டேன். ஆனால் அவள் ஊரில் என்னை கேவலம் பேசுவார்கள்! கலியாணத்துக்கு முந்தி லோடாயிட்டேன்னு வீட்டுக்கு வீடு பேசுவார்கள்! என்றாள். கலியாணம் செய்து கொள்கிறேன் என்று நான் சொன்னதும்.. அதுமட்டும் கேவலமில்லையா? என்று ஒத்தைக்காலில் நின்று கருக்கலைப்பு செய்து கொண்டாள். அந்தச் சமயம் பார்த்து கையில் பத்து பைசா என்னிடமில்லை. கடன் உடன் வாங்கி கிட்டத்தட்ட நான் சரக்கடித்தது போக ஐய்யாயிரம் ரூவாயில் அவளுக்கு ஆப்பிள் ஜூஸ் வாங்கிக் கொடுக்க மட்டும் மிச்சப்பட்டது.

பின்பாக ஒருவருடம் கழித்துத்தான் அவள் என்னைக் கட்டிக் கொண்டாள். சொல்ல மறந்து விட்டேன் அந்த ஒருவருடத்தில் கருக்கலைப்புக்கு போகாமலிருக்கும் விதமாய் சில முன்னேற்பாடுகளுடன் பொறுப்பாய் நடந்து கொண்டோம். திருமண நாள் நெருங்குகையில் சித்ராதேவி ஒரு இரவு நேரத்தில் என்னை அழைத்தாள். கொஞ்சம் துணிமணிகளுடன் என் இருசக்கர வாகனத்தில் ஏறியவள் குன்னத்தூர் வரை வண்டியை விடச் சொன்னாள். என்ன ஏது என்று நான் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை. வண்டியில் வருகையில் யாரோ ஒருவரிடம், அல்லது ஒருவனிடம் கொஞ்சம் கராறாய் சப்தம் போட்டபடி வந்தாள். கொஞ்சம் கெட்ட வார்த்தைகளும் விழுந்து கொண்டிருந்தது.

விசயத்தை என்ன என்று கூட யூகிக்க முடியவில்லை என்னால். ஒருவேளை அப்படியிருக்குமோ? இப்படியிருக்குமோ? என்று பலவாறு யோசனையில் தான் நான் வாகனத்தை அந்த இரவில் செலுத்திக் கொண்டிருந்தேன். எங்காவது போலீஸ்க்காரர்கள் சாலையில் நின்று கைகாட்டி நிறுத்தி விசாரித்தால் என்ன சொல்வது? என்ற யோசனையில் இருக்க அவள் யாரிடம் பேசிக்கொண்டு வருகிறாள் என்பதில் அதிகம் கவனம் செலுத்த முடியவில்லை.

திடீரென அவள் வண்டியை நிப்பாட்டச் சொன்னாள். குன்னத்தூர் நாம போக வேண்டாம் என்றாள். என்ன ஏது? என்றேன் இந்த முறை. ஏன் அதைச் சொல்லியே தான் ஆகணுமா? என்றாள். கடுப்பில் இருப்பாள் போலிருக்கிறது. உன்னோட நண்பர்கள் யாராச்சும் ரூம் எடுத்து தனியா இருக்காங்களா? நான் இனி வீடு போக முடியாது. கூட்டிட்டு போ! காலையில நாம எதொ ஒரு கோவில்ல கல்யாணம் பண்ணிக்கலாம்! என்றாள். நான் உன்னைக் கட்டிக்கிறேன்! என்று சொன்னது மாதிரியும் இருந்தது.

கல்யாணம் என்றதும் எனக்கு பயமாக இருந்தது. ஊரே கேளு நாடே கேளு என்று பரவிய விசயம் தான். சொந்தத்தில் பலர் வீடு வந்து அவளை விட்டுத் தொலையடா கண்ணா! என்றார்கள். சொன்னவர்கள் யாரும் பொண்ணு பார்த்து கட்டி வைக்கிறேன் என்று சொல்லவில்லை. இன்னாரு பையன் இப்படி இன்னாரு பிள்ளையோட தெருத் தெருவா பைக்கில வச்சுட்டு சுத்துறான் என்று காதில் கேட்டால் தூக்குப் போட்டு சாவலாமென அவர்களுக்கு இருக்கிறதாம். இருக்கட்டும். என்ன இருந்தலும் சித்ரா தேவியை கட்டி அணைத்தால் உலக மகிழ்ச்சிகள் வந்து என்னை அணைத்துக் கொள்கிறது. என்ன இருந்தாலும் சித்ராதேவி என் கீழுதட்டைக் கடித்து சப்பி உறிஞ்சினால் சொய்ய்ங்கென நான் வான் நோக்கி எவ்வுகிறேன். போக அவளின் பின்புறங்களில் என் கைகளை வைத்து அழுத்தினால் .. சொல்லமாட்டேன் வெக்கமா இருக்குது.

யார் கீழுதட்டை கடித்து உறிஞ்சினாலும் சொய்ய்ங்கென நீ வான் நோக்கிச் செல்லலாம் என்று விளக்கம் சொல்ல ஒரு உருப்படியான நண்பன் இல்லாமல் போய் விட்டேன் பாருங்கள்! எல்லா நண்பர்களும் புத்திமதி சொல்வதிலேயே குறியாய் இருந்தார்கள். குறிப்பாக சித்ராதேவி மாதிரியான பெண்ணோடு பழகுவதை விடு! அதை மட்டுமே திரும்பத் திரும்ப போதித்தார்கள். சித்ராதேவி போல ஒருத்தியைக் கைகாட்டி இதைப்பாரு மாப்ள நீ! என்று ஒருவனும் கைகாட்டவில்லை.

சித்ராதேவி நல்லவளா கெட்டவளா? என்பதை பற்றியெல்லாம் திருமணத்திற்கு பின்பாகத்தான் யோசிக்க ஆரம்பித்தேன். கெட்டுது கழுதை! என்கிறீர்களா? முன்பாகவே சொல்லி விட்டேன் நான். வாழ்க்கையை பலர் பலவிதங்களாய் வாழ்ந்து கழிக்கிறார்கள். சித்ராதேவியோடு நான் சரியாய் பதினொரு மாதங்கள் குடும்பம் நடத்தினேன். சித்ராதேவி பணிக்கு என்று எங்கும் கிளம்பிப் போகும் உத்தேசம் ஏதுமின்றி முதல் மூன்று மாதத்தை வீட்டில் ஓட்டினாள். காதல் மனைவிக்கு சம்பாதித்துப் போடும் கணவனாக என்னை நான் உணர்ந்து தறிக்குடோனில் இரவு, பகல் என்று கிடந்தேன்.

சித்ராதேவியை ஒரு நாள் மதியம் வீடு வருகையில் உடலில் துணியில்லாமல் கட்டிலில் பார்த்தேன். முன்பாக ஒருவன் என் வருகையை அறிந்ததும் கீழே கிடந்த துணிமணிகளை அள்ளிக்கொண்டு விரைந்து வெளியேறினான். அவனை இதற்கும் முன்பாக நான் பார்த்ததே இல்லை. கோபம் வந்திருக்க வேண்டும் என்கிறீர்கள். சரிதான். சித்ராதேவி அங்கு எதுவும் நடவாதது போல நிதானமாய் எழுந்து கட்டிலோரத்தில் கிடந்த நைட்டியை எடுத்தாள்.

கொஞ்சம் சிரம்மாய் இருக்கிறது எனக்கு. கல்யாணம் ஆன காலம் முதல் ஒரு இரவு கூட தாலி கட்டிய எனக்கு அவள் தன் முழு உடலை பிறந்த மேனியாய் காட்டியதில்லை. எல்லாமே விளக்கணைத்து இருட்டில் தான். கோபத்தில் அவளை கன்னத்தில் ஒன்று வீசினேன். அடுத்த வீச்சை அவள் தடுத்துக் கொண்டாள்.

‘இந்த அடிக்கற வேலையெல்லாம் வெச்சுக்காதே கண்ணா! அப்புறம் சுத்தப்படாது பாத்துக்க!’

‘ஏண்டி இப்படி பண்ணுறே? இது உனக்கே நல்லா இருக்கா?’ என்றேன்.

‘என்னமோ என்னையப் பத்தி ஒன்னுமே தெரியாதவன் மாதிரி பேசுறே? என்னைப்பத்தி எல்லாம் தெரிஞ்சுதானே கட்டிக்கிடே! அப்புறமென்ன?’

அப்போ என் நண்பர்கள் சொன்னது அனைத்தும் உண்மைதானா! சித்ராதேவி அவர்கள் சொல்வது போலவெல்லாம் இருக்க மாட்டாள், நல்லவள் என்று நான் தான் நம்பிக்கொண்டு இருந்தேனா? ஒரு நூல் கூட தெரியவில்லையே! யாரிடமாவது பேசிக் கொண்டிருந்தாள் என்றால் ஒன்று நண்பன் என்பாள், இல்லை அது எங்க அண்ணன் மாதிரி என்பாள். நம்பித் தொலைத்தவன் நான்.

சரி இதற்கு ஒரே முடிவாய் அவளிடம் அமர்ந்து பேச்சைத் துவங்கினேன். அவளோ தன் வாழ்க்கையே நாசமாப்போச்சு! என அழுதாள். என்ன இருந்தாலும் சித்ராதேவி அழுவதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. வேலைக்கு கிளம்புவதாயும் இந்தக்காலத்தில் இருவர் சம்பாதித்தால் தான் குடும்பம் நடத்த முடியுமென்றும் அவள் பேசிக் கொண்டிருந்தாள். இந்த வாழ்க்கை நானாக தேடிக் கொண்டது. நாளை பிரிந்து வீடு போய் கிடந்தாலும் ‘அப்பவே சொன்னம்ல மாப்ளே!’ என்று எல்லோரும் பேசிச் சாகடிப்பார்கள். ஒருவழியாக சமாதானமாகி மீண்டும் எங்கள் காதல் வாழ்க்கை சீனாபுரத்தில் நகரத் துவங்கியது. அவள் சில சத்தியங்களை எனக்கு செய்து கொடுத்திருந்தாள்.

நான் இந்த மாதிரி வேறொருத்தியோட இப்படி நம்ம வீட்டுல கிடந்திருந்து நீ பாத்திருந்தா என்ன பண்ணியிருப்பே? என்றேன் அவளிடம். கொன்னுபோடுவேன் உன்னை! என்றாள்.

ஆனால் எப்படிக் கட்டிகாத்தும் என் வாழ்க்கை பயங்கர கேனைத்தனம் நிரம்பியதாக மாறி விட்டது. அவளது அலைபேசியில் ஆண்கள் பெயர்களாகவே இருந்தன. வரும் அழைப்புகள் அனைத்தும் சித்ரா இருக்காப்பலைங்களா? என்று என்னைக் கேட்டன. குளிச்சுட்டு இருக்காப்லைங்க! என்றே சொல்ல முடிந்தது என்னால். இல்ல இன்னிக்கி ஈரோடு போலாம்னு சொன்னாப்லைங்க! என்று பேச்சு வர, நானாக கட் செய்து டேபிள் மீது வைத்து விட்டு சுவற்றை வெறித்துக் கொண்டிருப்பேன். நானாக என் வீடு போய் விடுவது அவ்வளவு நல்லதா? இல்லை அவளாக அவள் வீடு போய் விடுவது நல்லதா? ஆக ஒரு முறை இரண்டு நாட்கள் வீடு வராத சித்ராதேவியை அலைபேசியில் அழைத்தேன். ஊட்டியில் கம்பெனி டூர்ல வந்திருக்கேன். நைட்டு கூப்பிடறேன் கண்ணா! என்று சொல்லி விட்டு அணைத்துக் கொண்டாள். நான் திரும்பவும் என் கிராமத்திற்கு வந்து விட்டேன்.

அவளது அழைப்பும் பின்பாக எனக்கு வரவும் இல்லை. ஆயிற்று இப்போது நான்கைந்து மாதம். பெருந்துறையில் வேறொருவன் டூவீலரின் பின் இருக்கையில் அவள் சென்று கொண்டிருப்பதை இன்று மதியம் பார்த்தேன். இப்படியான ஒரு அழகிய வாழ்க்கை திருப்புக் காட்சியாக வரவே அந்த ஞாபகத்தில் அங்கேயே வெகு நேரம் நின்றிருந்தேன். எந்த மாப்பிள்ளைகளும் தேடிவந்து, ‘நான் அப்பவே சொன்னேன் கேட்டியா மாப்ளே!’ என்று என்னிடம் கேட்கவே இல்லை. அவர்கள் என் முகம் கண்டாலே வேறு புறமாக பார்த்துப் போய் விடுகிறார்கள் அல்லது நானே முகத்தை திருப்பிக் கொள்கிறேன்.

000

சமாதானம் ( சிறுகதை ) குமாரநந்தன்

download

எல்லா வேலைகளும் முடிந்துவிட்டது. அவன் அதுவரை எதுவும் பேசவில்லை. திக்பிரமை பிடித்தவன் மாதிரி அல்லது ஏதோ ஒன்றை யோசித்தே தீர்த்துவிடுபவன் மாதிரி உட்கார்ந்து கொண்டே இருந்தான்.

காயத்ரி அவனிடம் குறுக்கிடவில்லை. சாப்பாடு தயாராகிவிட்டது. தட்டைக் கழுவி சாப்பாட்டை எடுத்துவைத்துவிட்டு அவனைக் கூப்பிட்டாள். அவன் எதுவும் பேசவில்லை. கையைக் கழுவிக் கொண்டு வந்து உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தான். என்ன வேண்டும் வேண்டாம் என்று எதுவும் பேசவில்லை. அவனுக்கு ஏற்ற மாதிரி அவள் பரிமாறியதை சாப்பிட்டு முடித்துவிட்டான்.

அதற்கு மேல் அவளுக்குப் பொறுக்க முடியவில்லை. ஐயே காலைல இருந்து அப்படி என்ன யோசன?

அவன் இப்போதுதான் அவளைப் பார்ப்பது மாதிரி பார்த்தான். நாம உடனே எங்கியாவது போயிடனும். இன்னும் கொஞ்ச நேரத்தில

அவளுக்கு திக்கென்று நெஞ்சை அடைத்தது. இந்தா என்ன ஆச்சி?

நம்ம தோட்டத்தில ஒரு பொண்ணு செத்துக் கெடக்கறா? கொலை!

அவள் முகத்தின் மீது யாரோ குத்தியது மாதிரி முகம் கோணலாகிவிட்டது. என்ன சொல்றீங்க? எப்போ? காலையிலதான் பாத்தேன்.

அட உங்களுக்கு என்ன பைத்தியமா? உடனே யாருகிட்டயாவது சொல்றதில்லையா? இப்படியா மணிக்கண்க்கா பைத்தியம் புடிச்ச மாறி உக்காந்திருப்பாங்க? போலீஸ்ல சொல்லாட்டி நாம தான் கம்பி எண்ணணும் தெரியுமா?

அவன் கண்கள் கலங்கிவிட்டது. சொன்னாலும் நான் தான் உள்ள போப்போறேன்.

ஏன்?

அது என்னமோ தெரியலை? போலீஸ் என்ன கொண்டு போய் உள்ள தள்ற மாதிரி வர்ற நினைப்பை மாத்தவே முடியல அவள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுதாள். அக்கம் பக்கத்தில் இருந்து எல்லாம் ஜனங்கள் வர ஆரம்பித்தார்கள்

விசயம் இப்படியாகத் துவங்கிவிட்டது.எல்லாம் தன் இயல்பாக நடந்தன. யார் யாரோ வந்தார்கள். அவனைக் கேள்வி கேட்டுக் குடைந்து கொண்டே இருந்தார்கள். முடிவில்லாத கேள்விகள். அவன் திணறிப் போனான். சத்தம் போட்டு அழுதான். அவன் மனதில் இந்தக் கொலைக்காக தான் தேவையில்லாமல் எதைஎதையோ அனுபவிக்கப் போகிறோம் என்கிற எண்ணத்தைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.

போலீஸ் வந்து முதலில் அவனைத்தான் பார்த்தது. அப்போதும் அவன் அழுதான். ஒரு போலீஸ்காரர் வந்து ஓங்கி அவன் கன்னத்தில் அறைந்தார். அவன் பஞ்சு பஞ்சாய் பறந்துவிட்டதைப் போல உணர்ந்தான். நடக்க வேண்டிய எல்லா மோசமான சம்பிரதாயங்களும் தானே நடந்து கொண்டிருந்தன. மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது பிணத்திடம் இருந்து கயிற்றை இழுத்துக் கொண்டு அவனிடம் வந்தது. அவன் கையெடுத்துக் கும்பிட்டபடி கதறி அழுதான்.கடைசியில் அவன் நினைத்த மாதிரியே நான்கைந்து போலீசார் வந்து அவனை நெட்டித் தள்ளி ஜீப்பில் ஏற்றினர். சுற்றியிருந்த கூட்டத்திலிருந்து அடக் கொடுமையே அடப் பாவமே அவன் ரொம்ப நல்லவனாச்சே. அட அவம் மூஞ்ச பாத்தாக் கூடவா தெரியாது அடக் கன்றாவியே என்று ஏக காலத்தில் பரிதாப வார்த்தைகளின் மெல்லிய அலை வலிமையாக எழுந்து சுழன்றது. போலீசார் கூட்டத்தின் அத்தனை அத்தனை வார்த்தைகளையும் புரிந்து கொண்டனர். அத்தன பேரையும் உள்ள தள்ளிருவேன் என்கிற ரீதியில் ஒரு தீப் பார்வையை சுழற்றினர். சட்டென்று அங்கே ஜீவராசிகளே இல்லை என்கிற மாதிரி அமைதியாகிவிட்டது. காயத்ரி காலையில் இருந்து அழுது அழுது தொண்டை வறண்டு போனவளாக மீண்டும் கத்த முயற்சித்தாள். அவள் தொண்டையில் இருந்து குரல் எதுவும் வரவில்லை.

அப்படியே விட்டுவிட்டால் அவனை அடித்துக் கொன்று விடுவார்களோ என்று பயமாய் இருந்தது. உடல் அசதியையும் பொருட்படுத்தாமல் ஸ்டேசனுக்கு ஓடினாள்.

போலீசார் சத்தம் போட்டனர். இந்தாம்மா இங்க வந்து அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுனா உன்னயும் பிடிச்சி உள்ள தள்ளிருவேன். வாய மூடு. உம் புருசன் சாதாரண ஆள் இல்ல. எங்ககிட்ட இருந்து யாரும் தப்ப முடியாது. கொட்டைய பிதுக்குனா தானா உண்மைய ஒத்துக்குவான்.

அவன் சிறையில் அடைக்கப்பட்டுவிட்டான். சந்தர்ப்ப சூழ்நிலைகள் தடயங்கள் எல்லாம் அவனுக்கு எதிராகவே இருந்தன.

விசாரணைக் கைதியான அவனை வெளியில் கொண்டு வரலாம் என்று வக்கீல் ஒருத்தர் சொன்னார். ஆனால் கொலைக் குற்றங்கறதால ஜாமீன் அவ்வளவு சீக்கிரமா கிடைக்குமான்னு சொல்ல முடியாது என்றார். காயத்ரி எங்க காட்ட வேணும்னா எழுதிக்கிங்க அவர விட்ருங்க. என்னம்மா லூசு மாதிரி பேசற. காட்ட எடுத்துகிட்டு நான் என்ன பண்றது. ஜாமீன்ல வர்றதுன்னா விடுதலைன்னு நெனைச்சிகிட்டியா வெளியில இருந்து கேச நடத்தணும். தீர்ப்பு பாதகமாச்சுன்னா திரும்பவும் உள்ள தான் போவனும்.

கையில் பணம் எதுவும் இல்லை. மூன்று பவுன் சங்கிலியை விற்றுப் பணம் திரட்டிக் கொண்டாள். கோர்ட்டுக்கு வக்கீல் வீட்டுக்கு ஸ்டேசனுக்கு ஜெயிலுக்கு என மாறி மாறி நடந்து கொண்டே இருந்தாள். அவளுக்கு நடக்கின்ற விசயங்கள் என்ன என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. யார் எங்கே எவ்வளவு பணம் கேட்டாலும் யோசிக்காமல் எடுத்துக் கொடுத்தாள். சிறையில் அவனைப் பார்த்தபோது சந்திக்க வந்த ஜனங்கள் கைதிகள் இடையே ஒரு நீண்ட வலை ஜன்னல் தடுப்பு இருந்தது. ஒரே சத்தமாய் இருந்தது. எல்லா சத்தத்தையும் மீறி அவன் ஓவெனக் கதறி அழுதான்.

ஜாமீன் எடுக்க யாரையாவது ரெண்டு பேர சொந்த வீடு இருக்கறவங்கள கூட்டிகிட்டு வா என்று வக்கீல் சொல்லி இருந்தார். அவள் தனக்குத் தெரிந்தவர்களையெல்லாம் ஆலோசனை கேட்டாள். எல்லோரும் அவளுக்கு நிச்சயம் உதவுவதாகச் சொன்னார்கள். ஆனால் ஜாமீன் தர முடியாததற்கு எல்லோருக்குமே ஒரு காரணம் இருந்தது. அவள் நெருக்கமாக அறிந்த உறவினர்கள் தெரிந்தவர்களிடம் இருந்து நூற்றுக் கணக்கான அற்புதமான கதைகளை சில வாரங்களில் தெரிந்து கொண்டாள். ஆனால் அது எதுவும் நினைவில் இல்லை. அவர்களுக்கு உதவ யாருக்கும் மனம் இல்லை. அல்லது தைரியம் இல்லை. தைரியம் இல்லையென்பதுதான் சரி. யார் இந்த மாதிரி விசயத்தில் போய் தலையைக் கொடுப்பார்கள். நாம் போய் இப்படி யாருக்காவது செய்வோமா?

எப்படியோ பணத்தைக் கொடுத்து இரண்டு பேரைத் தயார் செய்து வைத்திருந்தாள். அவர்களின் புகைப்படங்களையும் வீட்டுப் பத்திரங்களையும் எடுத்துக் கொண்டு முன்சீப்பிடமும் தாசில்தாரிடமும் நடையாய் நடந்து கையெழுத்து வாங்கினாள். வக்கீல் அவர்களிடம் கோர்ட்டில் எப்படிப் பேச வேண்டும் என்று பயிற்சி கொடுத்திருந்தார். எல்லாம் சரியாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால் விசாரணை அன்று மதியம் சாப்பிட்டுவிட்டு இதா கடை வரைக்கும் போயிட்டு வாறோம் என்று போனவர்கள் திரும்பி வரவே இல்லை. எப்படியும் வந்துவிடுவார்கள் என்று நம்பிக்கையோடே இருந்தாள். வக்கீல் வேறு எங்கம்மா அவங்க போய் கூட்டிட்டு வாம்மா கூட்டிட்டு வாம்மா என்று நச்சி எடுத்தார். கடைசியில் கோர்ட்டில் கூப்பிட்டும் விட்டார்கள். அவள் தான் நிர்க்கதியாய் கைவிடப்பட்டதை உணர்ந்து பெருங்குரலில் கதறியவளாக கோர்ட் அறையின் நடுவே நீதிபதியின் காலில் விழுவதைப் போலத் தெண்டணிட்டாள். நீதிபதி இந்தாம்மா இங்க இந்த மாதிரியெல்லாம் பண்ணக்கூடாது என்று எரிச்சலாய்க் கூற இரண்டு பெண் போலீசார் வந்து அவளை வெளியே இழுத்துக் கொண்டு போயினர். கொஞ்சம் கொஞ்சமாக அவள் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டாள். நடப்பது நடந்தே தீரும். எல்லாம் பழகிடும் பழகிக்க வேண்டியதுதான். ஒரு கொலைக்கு என்ன தூக்குலயா போட்ருவாங்க. கடவுள் விட்ட வழி. பிறகுதான் அவளுக்குத் தான் கர்ப்பிணியாய் இருப்பது நினைவுக்கே வந்தது.

***

அவள் இப்போது அமைதியாகிவிட்டாள். எந்தக் குழப்பமும் இல்லை. வீட்டை சுத்தமாகக் கழுவ வேண்டும். அந்த வேலைதான் இப்போது நடந்துகொண்டிருந்தது. ஈரத்துணி பிழியப் பிழிய அழுக்கு. ஏகப்பட்ட அழுக்கு.

சுசீந்திரன் வந்துவிடுவார் அதற்குள் குளித்து ரெடியாகிவிட்டால் வந்ததும் பூஜையில் உட்கார்ந்து விடுவார். பூஜை சாமான்களெல்லாம் மூலையில் குவிந்து கிடந்தன. இன்னும் சக்கரைப் பொங்கல் வைக்க வேண்டும்.

பரபரப்பான வேலைகளுக்கிடையேயும் மனம் அவன் மேல் தான் குவிந்திருந்தது. முதலில் அவன் எப்படிப் பயந்திருந்தான். உலகமே அவன் தலையில் விழுந்துவிட்டதைப் போல. இப்போது பரவாயில்லை. சிறைக் கம்பிகளூடாகப் பார்க்கும் போது சிரிக்கக்கூடச் செய்கிறான். ஏற்றுக் கொண்டுவிட்டான் ஏற்றுத்தான் ஆகவேண்டும்.

தூளியில் குழந்தை அசைந்தது. அவன் பிடிபடும் போது அவள் தான் ஒரு கர்ப்பிணி என்பதைக் கூட மறந்துவிட்டாள். ஒரே அச்சமும் நடுக்கமும். கரு சிதைந்துவிடும் என்று நினைத்தாள். சிதைந்துவிட்டால் கூடப் பரவாயில்லை என்றிருந்தது. இவன் உருவான நேரம் தான் அப்பனை ஜெயிலில் தள்ளிவிட்டது. என நினைத்தாள்.

சுசீந்திரன் வாசலில் ஏறும் போது எல்லாம் தயாராக இருந்தது. நெற்றியில் திரிசூரணம் சந்தனம் குங்குமம் காவிச் சால்வையில் ஓம் நம சிவாய. கொத்தாய் நெற்றியில் விழும் இளமுடி. பன்னீர் வாசம் காவி வேட்டி எல்லாம் ரெடியா இருக்காம்மா. அவர் எதுவும் யோசிக்கவில்லை. மளமளவென்று எல்லாவற்றையும் எடுத்து வைத்தார். எதை எப்படி வைக்க வேண்டுமோ அப்படி வைத்தார். ஒரு யந்திரம் சுவிட்ச் போட்டதும் வேலைகளைச் செய்வது போல அவ்வளவு வேகமான செயல்பாட்டுக்கு இடையேயும் அவளிடம் வரிசையாகக் கேள்விகள் கேட்டார்

பசுவுக்கு அமாவாசை அன்னைக்கி அகத்திக் கீரை கொடுத்தியா?

கொடுத்துட்டேன் சாமி

அஞ்சு சுமங்கலிங்களுக்கு அன்னதானமும் புடவையும் வச்சுக் கொடுத்தியா?

கொடுத்துட்டேன் சாமி

வெள்ளிக்கிழமை தட்சினா மூர்த்திக்கி எருக்கம் பூ மாலை போட்டியா?

போட்டுட்டேன் சாமி

ஒருமண்டலம் விநாயகருக்குத் தண்ணி ஊத்தினியா?

ஊத்திகிட்டிருக்கேன் சாமி இருவது நாள் ஆவுது

பைரவருக்கு விளக்குப் போட்டியா?

போட்டேன் சாமி.

சனி பகவானுக்கு எள்ளுப் பொங்கல் வச்சிப் படைச்சியா?

படைச்சிட்டேன் சாமி

எந்திரத் தனமாக அவர் கேட்டுக் கொண்டே இருந்தார். ஒன்றுவிடாமல் அவள் செய்திருந்தாள். சொல்லச் சொல்ல அவளுக்குப் பெருமையாக இருந்தது. அசைக்க முடியாத நம்பிக்கை மனதில் வளர்ந்தது.

இன்னைக்கிப் பூஜ முடிஞ்சதும் ஒரு நடை சோட்டானிக்கரை போயிட்டு வந்துட்டா எல்லாம் சரியாயிடும். இன்னும ஒரு மாசத்தில உன் வீட்டுக்காரர் இந்த வீட்டு வாசல்ல வந்து நிப்பார். நீ எதுக்கும் கவலப்படாத. அவள் கண்கள் கலங்கியது. கலங்காதம்மா எல்லாம் விதிப்படி நடக்குது. பூர்வஜென்ம தோசம் தொரத்துது. நம்ம கையில என்ன இருக்கு. தெய்வத்துக்கிட்ட கையேந்தி நிக்கறதத் தவிர. அவள் கண்களில் இருந்து இரண்டு பொட்டுக் கண்ணீர் உருண்டு விழுந்தது. அவரு வெளிய வந்துட்டா போதும் சாமி. ஒரு வருசத்துக்கு மேல ஆயிடிச்சி. அவர் விளக்கை ஏற்றி வைத்துப் பூஜைகளை ஆரம்பித்தார்.

மத்தியானம் ஆகிவிட்டது. பத்துபேருக்கு இலைபோட்டு சோறு போட்டு முடிந்ததும் சாப்பிட்டுவிட்டு தட்சணையை வாங்கிக் கொண்டு கிளம்பிவிட்டார்.

காலையில் இருந்து ஒரு மடக்குத் தண்ணீர் கூட குடிக்கவில்லை. பசியே மறந்துவிட்டது. சாப்பிடாமல் இருக்கக்கூடாது. சாமி கும்பிட்டுவிட்டு கண்களை மூடி திருநீறு அள்ளி பூசிக் கொண்டாள். ஒருவாய் தண்ணீர் குடித்துவிட்டு தழுவில் இருந்த சக்கரைப் பொங்கலை எடுத்து வைத்துக் கொண்டு சாப்பிட்டாள். பொங்கலை ரசிக்க முடியவில்லை. கண்கள் தளும்பியது. ரெண்டு வாய் சாப்பிட்டதும் நெஞ்சை அடைத்துக் கொண்டது. சாமி பிரசாதம் இப்படிப் பண்ணக்கூடாது. போராடி தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு தின்று முடித்தாள். கையைக் கழுவியதும் கோ வென்று அழுகை வந்ததைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கேவிக் கேவி அழுது கொண்டே படுத்திருந்தாள். தூங்கிவிட்டாள். ஐந்து நிமிடத்தில் குழந்தை அழுதது. திடுக்கிட்டு எழுந்து கொண்டாள். பையனைத் தூக்கிக் கொண்டு வெளியே வந்து பராக்குக் காட்டினாள்.

கோழிகள் கூட்டமாய் வீட்டைச் சுற்றிலும் கொத்திக் கிளறிக் கொண்டிருந்தன. அவை அத்தனையும் ஒவ்வொரு சாமிக்கும் நேர்ந்துவிட்டவை.

•••

அத்தை போன் செய்தாள். காயத்ரி பேப்பரப் பாத்தியா?

என்னம்மா

அந்த வனிதாவக் கொன்னவன புடிச்சிட்டாங்கடீ?

எப்போ கேட்கும் போதே அவளுக்கு அழுகை வந்துவிட்டது. எப்பன்னு சரியா தெரியல. இன்னைக்கிப் பேப்பர்ல போட்டிருக்கு. போயி வக்கீலப் பாரு.

மேலும் ஒரு மாதம் கழித்துதான் அவனை வெளியே விட்டார்கள். அதுவும் அவள் குழந்தையை வைத்துக் கொண்டு வாழ்க்கையை வெறுத்து அலைந்து திரிந்த பின் தான் நடந்தது.

இன்னும் ஒரு வாரம் ஆகும். திங்கக் கிழமை வாம்மா என்று வக்கீல் சொல்லியிருந்தார். ஆனால் அன்று இரவே அவன் வந்துவிட்டான். அவளால் அவள் கண்களையே நம்ப முடியவில்லை. அணையைத் திறந்துவிட்ட மாதிரி கதறினாள். அவன் தேம்பினான். குழந்தை அழுதது. அக்கம் பக்கத்தவர்கள் எல்லாம் வந்துவிட்டார்கள். எல்லோரும் கண் கலங்கி இருந்தனர். இந்தாடி அழுவாத. அதான் வந்துட்டாரில்ல. நீ கும்புட்ட சாமி உன்னக் கை விடல. போயி எதாவது ஆக்கிப் போடு. ஆலாத்தி கரைச்சிகிட்டு வா. மனுசனுக்கு நேரம் கெட்டுப் போச்சின்னா எது வேனா நடக்கும். ஏதோ இந்த வரைக்கும் அந்தப் பகவான் கருணை காட்டுனாரே. போங்க போயி சாமி கும்புடுங்க. பிறகு எல்லோரும் போய் விட்டார்கள். அவள் அவனைக் கூட்டிப் போய் சாமி படத்துக்கு முன்னால் நிற்க வைத்து திருநீறை அள்ளிப் பூசினாள். நீண்டு விழுந்து அழுதாள். அவன் அவளைத் தூக்கினான். பைத்தியம். இங்க பாரு உக்காரு தண்ணி குடி. எனக்குத் தண்ணி கொண்டா.

அவள் தான் செய்த பூஜைகளையும் பட்ட கஸ்டங்களையும் சன்னமான குரலில் முடிவின்றி சொல்லிக் கொண்டே இருந்தாள். அவன் மடியில் குழந்தை அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தது. என்னவோ புரிந்த மாதிரி சிரிக்க முயற்சித்தது.

அவன் நீ ஒரு பைத்தியம் என்றான். என்ன நடக்கனுமோ அது நடந்துதான் தீரும். நீ பூஜை பண்ணினா எல்லாம் மாறிருமா?

போன ஜென்மத்தில நீங்க ஏதோ ஒரு கொலையில பொய் சாட்சி சொல்லிட்டீங்களாம். அதுதான் இப்ப இப்படி ஆச்சின்னு சுவடி பாத்து சொன்னாங்க.

போன ஜென்மத்துல செஞ்சதுக்கு இந்த ஜென்மத்தில தண்டன அனுபவக்கிறதுல என்னடி ஞாயம் இருக்கு. ஒருத்தன் தப்பு பண்ணின பின்னால அவனுக்குப் பழசெல்லாம் மறந்து போச்சின்னு வச்சிக்க. அப்ப அவனுக்குத் தண்டன கொடுப்பாங்கலா?

தெரியலையே?

கொடுக்க மாட்டாங்க. பழச மறந்துடறது ஒரு பைத்தியம் மாதிரிதான். பைத்தியத்த தண்டிக்கறதுல என்ன அர்த்தம்.

நீங்க பேசறது எனக்குப் புரியல.

உனக்குப் புரியாது.

நீங்க என்னென்னவோ பேசறீங்க. ஜெயில்ல இப்படி யெல்லாம் சொல்லித் தந்தாங்களா?

ஆமா ஜெயில்ல சொல்லித்தர்றாங்க.

நீங்க இப்படியெல்லாம் எப்பவும் பேசினதே இல்ல.

ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டு. நான் ஜெயில்ல இருந்ததுக்கு நானே தான் காரணம். நான் பண்ண வினை. எத்தன பிச்சக்காரங்க பசிச்சி வந்து வாசல்ல நின்னப்ப மனசார இல்லைன்னு சொல்லியிருப்போம். போன வருசம் மார்கழி மாசக் குளிர்ல ஒரு நாய் தன்னோட நாலு குட்டிங்களோட நம்ம வீட்டுப் பக்கம் ஒண்டினப்போ கொஞ்சம் கூட இரக்கமே இல்லாம அடிச்சித் தொரத்தினமே. அந்தப் பாவம் தாண்டி இது. அந்த நாய் அந்தக் குளிர்ல எப்படித் தவிச்சி இருக்கும். இந்த மாதிரி இன்னும் எவ்வளவோ நம்மள அறியாமலேயே பாவம் செய்யிறோம். அதுக்கான தண்டனையை ஏதோ ஒரு ரூபத்தில அனுபவிக்கிறோம்.

அவள் ஏதும் பேசவில்லை. பாவம் ஜெயிலுக்குப் போயிட்டு வந்ததுக்கு ஒரு சமாதானம் வேணுமில்ல. அதுக்காக என்னென்னவோ பேசறார். பேசட்டும். அப்படியாவது அவருக்கு நிம்மதி கிடைக்கட்டும். என்று நினைத்தாலும் அவளை மீறி ஒரு சிரிப்பு அரும்பியது.

என்ன சிரிக்கிற? இல்ல அறியாம தெரியாம செய்யறதெல்லாம் கூடப் பாவமா?

ஆமான்டி மனுசன்னா பாவ புண்ணியங்களப் பத்தித் தெரிஞ்சுக்கணுன்டி தெரியலைன்னா எல்லாத்தையும் அனுபவிச்சிதான் ஆகணும்.

உங்கள ஜெயில்ல வச்ச அந்தப் போலீஸ் காரருக்குத் தெரியும் அந்த வார்டனுக்குத் தெரியும். அந்த நீதிபதியம்மாவுக்குத் தெரியும் நீங்க இந்தக் கொலைய செஞ்சிருக்க மாட்டீங்கன்னு. ஆனா அவிங்க அதுக்கெல்லாம் அஞ்சலையே அப்போ அவிங்கெல்லாம் என்ன ஆவாங்க.

அவனால் எதுவும் பேச முடியவில்லை. கொஞ்ச நேரம் கழித்து நான் சொல்லல உனக்கு இதெல்லாம் புரியாது. அவ்வளவுதான். என்றான்.

சரி போகட்டும் போய் படுங்க நேரம் ஒரு ஜாமம் ஆயிடிச்சி. நாளைக்கி அம்மங் கோயிலுக்குக் கோழி சாவ பொங்க கொண்டு போவணும் என்றாள்.

•••••••••••••

பயணம் ( சிறுகதை ) லாவண்யா சுந்தரராஜன்

images (1)

பால்கனியின் அமர்ந்து தெருவினை வேடிக்கை பார்த்து கொண்டி கடந்த போன நினைவுகளை சேகரித்துக் கொண்டிருந்தாள் அர்ச்சனா. தூரத்து விளக்கு மஞ்சளாக மத்தாப்பூ சிதறலை உதிர்ப்பது போல ஒளிர்ந்து கொண்டிருந்தது, அதன் வெளிச்சம் பட்டு மஞ்சள் நிறத்தில் வேப்பிலை அசைந்து கொண்டிருந்தது, அது மாலை மயங்கும் மெல்லிய ஒளிக்கு சற்றும் ஒவ்வாது இருந்தது. தடதடவென்று தள்ளு வண்டியை உருட்டிக் கொண்டு ஒரு குழந்தை விளையாட்டாக தெருவில் கடந்து போயிற்று. எதிரே வந்த இரு சக்கர வண்டி கீரிச்சிட்டு நின்றது. அந்த குழந்தையைப் பயந்து தெருவின் ஓரமாக ஒதுங்கியது பார்த்த அர்ச்சனாவும் பயந்து போனாள். எதிர் வீட்டு அடுக்கு மாடி கட்டிடத்தில் காவேரி என்று எழுதப்பட்ட கருமை நிற நீர் சேகரிக்கும் ப்ளாஸ்டிக் டேங்க் நிறைந்து சட சடவென வழிவது யாரோ சிறுநீர் கழிப்பது போன்ற ஓசையை எழுப்பிக் கொண்டிருந்தது. வானத்தில் கருமை நிற பறவைகளின் சிறு கூட்டம் வேகமாக தன் கூடு தேடிப் போய்க் கொண்டிருந்தது. கண்ணுக்கு எட்டும் தொலைவு வரை அதனை தொடர்ந்தாள் அவள். சிலு சிலுவென காற்று அடித்துக் கொண்டிருந்தது. கையில் காப்பி கோப்பையுடன் மிதமான தலைவலிக்கு காப்பி கோப்பையின் மென்சூட்டால் ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருந்தாள். அடிக்கடி பயணப்படும் வேலையில் இருந்தாள் அவள்.

இந்த காட்சிகள் அனைத்தும் அவள் சமீபத்தில் பார்த்த மலை சார்ந்த ஒரு கிராமத்தில் கண்ட காட்சிகளோடு ஒப்பிட்டு பார்த்தாள். அங்கே மரமொன்று மத்தாப்பூ உதிர்வது போல் பூக்களை உதிர்ந்து கொண்டிருந்தது. அந்த மஞ்சள் மலர்களுக்கு பெயர் அவளுக்கு தெரியவில்லை. பார்க்க அழகாய் இருப்பது மட்டுமே புரிந்தது. நிஜ காவேரி அலைபரித்து கொட்டிக் கொண்டிருந்த ஒரு அருவியை அருகில் கண்டு ரசித்தாள். சரம் சரமாய் ஓடிய புள்ளிமான்கள் அவ்விடத்தில் பயமற்ற குழந்தைகள் குதித்தோடுவது போல் இருந்தது. இன்னொரு நாள் ஒரு காப்பி தோட்டத்தினுள் அமர்ந்திருந்தாள். மயக்கும் மாலை அங்கிருமிருந்தது. பறவைகள் கூடையும் இடத்தில் அருகிலிருந்து பார்த்து கொண்டிருந்தாள். அச்சமயம் அவளின் ரத்தம் உறிஞ்சிய அட்டை மிக பருத்து தானாய் கீழே விழுந்தது. வீட்டிலிருக்கும் போது அடிக்கடி எட்டி பார்க்கும் தலைவலி அங்கிருக்கும் போது இல்லை. வீட்டிலிருந்து பார்க்கும் பறவையை பறக்கும் தூரம் வரை கண்தொடர முடியும், ஒரே மரத்தில் இலைகளை நாள் முழுக்க கண்கொட்டாமல் பார்த்தாலும் அதை மட்டுமே பார்க்க முடியும், ஆனால் பயணிக்கும் போது காட்சிகள் மாறி மாறி வரும், ஒரு பறவையில் பறத்தல் இன்னோரு பறவையிடம் தொடர் ஓட்டமாய் மட்டுமே பார்க்க முடியும். பயணக்கும் போது ஒரே பூவை ஒரே மரத்தின் இலையை எப்போதும் இருமுறை பார்க்க முடியாது

“பயணங்களின் போது வாழ்க்கை நகர்ந்த வண்ணமிருக்கிறது. பயணத்தில் பயணிப்பது உடல் மட்டுமா?”

பயணங்கள் வித்தியாசமான அனுபவங்களை தந்திருக்கிறது அவளுக்கு. ஒவ்வொரு பயணமும் ஒரு போதி மரம். பயணத்தில் கடக்கும் ஆடுகள், கோழிகள், தேனீர்க்கடைகள், கடையில் வேலைப்பார்க்கும் பையன்கள், தங்கும் விடுதி அதில் தங்கி இருந்த பிற பயணிகள் என்று எல்லாமும் எப்போதும் ஏதேனும் கற்று தந்த வண்ணமே இருக்கும். அலுவல் நிமித்தம் அவள் தனித்து பயணக்கும் ஒவ்வொரு பயணத்தின் இரவும் திகில் நிறைந்தாயும், தெளிவற்றதாயும், வினோதமானதாயும் கழிந்திருக்கும். சென்ற ஊருக்கே சென்றாலும் ஒரே விடுதியில் தங்குவதில்லை. தனித்த ஒருத்தியாய் அறையினை பதிவு செய்யும் போது கள்ளப் பார்வைகள் கடந்து போகும். நடு இரவில் கதவு உயிர் பெற்று பேசக்கூடும். ஆரம்பத்தில் அச்சம் கொண்டவள் பின்னர் பழகி இருந்தால். விடுதியில் ஓய்வெடுக்கும் நேரம் உணவினை தருவித்து உண்ணும் வழக்கமுண்டு. உணவு வழங்குபவன் கூட தனித்திருக்கிறாள் என்று சற்று தாராள மனப்பான்மை கொண்டிருப்பான். அவளொன்றும் ரதியில்லை ஆயினும் பெண் தானே.

ஒரு முறை பயணவிடுதியில் நள்ளிரவில் கதவு தடதடவென்று தட்டப்பட்டது. அவள் அசைவின்றி இருந்தாள், இன்னும் பலமுறை கதவு பலமாக தட்டப்பட்டது. அவளுக்கு அடிவயிற்றில் சூரீர் என்று ஏதோ பரவியது போலிருந்தது. யாரோ ஒரு பெண் அழும் குரல் கேட்டது. கணவனுக்கு தொலைபேசினாள். கதவை திறக்கவேண்டாமென்று அவள் கணவன் சொன்னான். இருந்தாலும் “ப்ளீஸ் ஹெல்ப்கீஜியே” என்ற பெண்குரல் அவளை மிகவும் சலனப்படுத்தியது. அவளுக்கு ஹிந்தி தெரியும், அந்த விடுதியில் யாருக்கும் தெரியவில்லை. விடுதி மேனேஜரும் கதவிடம் வந்து மேடம் பக்கத்து ரூம்ல ஏதோ பிரச்சனை வந்து என்னவென்று கேட்டு சொல்லுங்க என்றதும், அவள் கொஞ்சம் தைரியமாக கதவினை திறந்து வந்தாள். அந்த பெண் பேயறைந்தது போலிருந்தாள். அவள் கணவன் மிக அதிகமாய் குடித்து மயங்கி இருந்தான். வாயிலிருந்து ஏதோ நுரை தள்ளிக் கொண்டிருந்தது. அவள் “தீதி ஷமகீஜியே, மேரே பதிக்கோ குச் ஹோகையாஹே, ஹாஸ்பிடல் லெஜான ஹே. அப்க்கா மதத் சாயியே”(சகோதரி மன்னியுங்கள், என்னுடைய கணவருக்கு என்னவோ ஆகிவிட்டது, மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும், உங்களுடைய உதவி தேவை) என்றாள். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவைத்து மருத்துவமனை வரை சென்றாள். அவள் கணவன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான். அந்த பெண்ணுக்கு எழுத்தறிவும் இல்லை. பாஷையும் பிரச்சனையே. மருத்துவமனையில் முதல்கட்ட சம்பிரதாங்களை அவளே செய்தாள். ஆனால் அவளால் அங்கே அதிக நேரமிருக்க முடியாது, அவள் வீட்டினை தொடர்பு கொள்ள செய்து விட்டு விடுதி திரும்பினாள்.

குழந்தைகளை அவளுக்கு பிடிக்கும். ஒருமுறை விடுதிக்கு அருகிருந்த ஒரு தேனீர் கடையில் ஒரு சிறுவனை கைதவறி ஒரு டீகிளாஸை உடைத்ததற்காக, அதன் முதலாளி சகட்டுமேனிக்கு அடித்துக் கொண்டிருந்தார். சிறுவனின் சட்டையற்ற முதுகு சிவந்து கிடந்தது. அவளுக்கு சிறு குழந்தைகள் வேலைக்கு அமர்ந்தபடுவதில் பெருங்கோபமுண்டு, அதுவும் இப்படி மனிததனமற்று அடித்தது பொறுக்க முடியாமல், சிறுவனை முதலாளி மிரட்ட மிரட்ட கூட்டுக் கொண்டு சென்றாள். அவனை எங்கே கொண்டு விடுவது என்று பெரும் பிரச்சனை ஆகி போனது. ஒரு அனாதை விடுதில் சேர்க்க முற்பட்ட போது, நீங்கள் யார், உங்களுக்கு என்ன அக்கறை, உங்களுக்கு அந்த சிறுவனுக்கும் என்ன உறவு என்று நீண்ட கேள்விகளுக்கு ஒவ்வொரு கதவிடமும் பதில் சொல்ல நேரிட்ட போது கொஞ்சம் சலிப்பாக இருந்தது. அவனை கூடவே கூட்டிச் செல்லவும் முடியாது. ஆனால் இத்தகைய கேள்விகளுக்கென்று பயந்து அவனை ஆதரவில்லாமல் விட்டும் செல்லவும் முடியாது. தேனீர்க்கடைக்காரன் இருவரையும் தேடிக் கொண்டிருப்பதும் தெரியும். அங்கே அந்த பையனை விட்டுவிட்டு வந்தாலும் அவன் அங்கேயே இருக்கக் கூடுமோ என்ற கவலை அவள் வீடு திரும்பும் வரை தொற்றிக் கொண்டே வந்தது. வீடு வந்து கணவரிடம் சொன்ன போது ஏன் அந்த சிறுவனை வேறு நகரத்தில் எங்கேனும் விடுதியில் சேர்ந்திருக்கலாமே என்றதும் ஆச்சரியப்பட்டாள். மேலும் இது போன்ற வேலைகளை செய்ய வேண்டாமென்ற அறிவுரையும் கூடவே கிடைத்தது. அவள் அந்த சிறுவனை அங்கே விட்டு வரும் போது வாங்கிக் கொடுத்த பைன்னை லபக் லபக்கென்று அவசரமாய் தின்ற போது “மெல்ல தின்னு” என்றதற்கு “முதலாளி திட்டுவாரு” என்று சொன்ன அந்த சிறுவனின் பால முகம் நினைவில் வந்து அவளை வருத்தியது.

மற்றுமொரு முறை ஒரு தம்பதியனர் இவளுக்கு மிகவும் நெருக்கமாயினர். அவளிடம் ஒரு பெண் குழந்தை சிறு வயதில் இவளை பார்த்தது போலவே இருந்தது. ஆகவே அத்தனை எளிதாக யாருடனும் பழகாதவள் இந்த குழந்தையோடு ஒட்டிக் கொண்டாள். அந்த குழந்தைக்கும் இவளை பிடித்திருக்க வேண்டும். உணவு அருந்த பொதுவாக அவள் அவர்களுடன் சென்று வந்தாள். அந்த தம்பதிகளுக்கு குழந்தை இவளுடனும் இருந்தது ஒருவிதத்தில் அவர்களுக்கு உதவியாக இருந்திருக்கக் கூடும். மிக சுட்டியான அந்த குழந்தையை இவள் அவ்வளவு இலகுவாக கையாண்டாது அவர்களுக்கு பிடித்திருந்தது மேலும் அவர்களுடைய பளு குறைந்தது போலிருந்திருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் காலையிலேயே அவர்கள் அந்த குழந்தையை அவளிடம் விட்டு விட்டு தங்கள் அறையில் தஞ்சம் அடைந்து விடுவார்கள் இரவு வரை அவளுடனேயே இருந்தது. பலவித விளையாட்டுகளை காட்டுவாள். கதை சொல்வாள். பாட்டு பாடச் சொல்லி கேட்பாள். அந்த குழந்தை அதிக நேரம் அவளுடன் இருந்ததை பற்றி அந்த தம்பதியினர் அதிகம் கவலை கொள்ளாமல் இருந்தது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. பார்க்க இருவரும் நவீனமாக இருந்தாலும் அவர்களின் இணக்கம் கொஞ்சம் அதிகப்படியாக இருந்தது. அவளுக்கு குழந்தையுடன் நேரம் சரியாக இருந்ததால் எதைப்பற்றியும் அதிகம் சிந்திக்கவில்லை.

ஒருநாள் மதியம் குழந்தை வாந்தி எடுத்தது. இவள் பதறிப் போனாள். பக்கத்து அறை இறுக மூடி இருந்தது. என்ன செய்வதென்று தெரியாமல், அவளே அருகிலிருந்த மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றாள். இதற்கு முன்னர் இது போல் வந்திருக்கிறதா என்று வினவிய மருத்துவருக்கு எதுவும் பதில் சொல்ல முடியவில்லை. முன்னர் என்னன்ன மருந்துகள் கொடுக்கப்பட்டது என்ற விபரம் தெரிந்தால் அதற்கு தகுந்தற்போல சிகிச்சை அளிக்க முடியும் என்று சொன்ன மருத்துவர், என்ன அம்மா நீங்கள் என்றார். அவரிடம் இவள் விளக்க முற்படவில்லை. கொடுத்த மருந்தினை வாங்கி கொடுத்து விட்டு விடுதிக்கு வந்தாள். இப்போதும் அடுத்த அறைக்கதவு அடைத்தே இருந்தது. குழந்தைக்கு பாலை கலந்து தந்துவிட்டு, மாத்திரைகளை கொடுத்தாள். கொடுத்து பழக்கமில்லாத காரணத்தால் குழந்தை விக்கி விக்கி துப்பியது. ஒரு வழியாக சமாளித்து மருந்தினை கரைத்து பாலில் கலந்தே கொடுத்தாள். சாயுங்காலம் வரை தூங்கியது குழந்தை. இவள் உறங்கவில்லை. பக்கத்து அறை திறந்தபாடில்லை.

இரவு உணவறந்த வேண்டியே பக்கத்து அறை தம்பதியினர் வந்தார்கள். குழந்தை அப்போதும் உறங்கிக் கொண்டிருந்தது. அதுவும் அவள் மடியிலேயே உறங்கிக் கொண்டிருந்தது. மதியம் நடந்ததை சொன்னாள். இருவரும் சற்றும் அதிர்ச்சி அடையவே இல்லை. மருந்துகளை கூட என்ன ஏதென்று விசாரிக்கவில்லை. உணவருந்த செல்வதிலேயே குறியாக இருந்தார்கள். குழந்தையை அப்படியே படுக்கையில் கிடத்திவிட்டு வாங்க. அறையை பூட்டிவிட்டு சொல்வோம் என்றார்கள். அந்த தம்பதியாரின் நடவடிக்கை ஏதோ மிகவும் செயற்கையாக இருந்தது. அவர்களுக்கு தாங்கள் பெற்ற பிள்ளையின் மீது இவ்வளவு அக்கரையில்லாமல் இருக்குமா என்று சந்தேகம் எழுந்தது. அவள் எண்ண ஓட்டத்தை புரிந்து கொண்ட அவர்கள் அது அவளுக்கு அப்படி தான் அடிக்கடி வரும் பின்னர் தானா சரியாகிவிடும் என்றார்கள்.

மறுநாள் வார இறுதி முடிந்து அங்கிருந்து கிளம்ப அந்த தம்பதியினர் ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர். குழந்தையை எடுத்துக் கொண்ட தாய் அவளுக்கு நன்றி சொன்னாள். இந்த முறை பயணம் மிக இனிமையாக இருந்தது. அவளிருந்தது அவர்களுக்கு மிக உதவியாக இருந்தது என்றாள். குழந்தையை எப்போதாட கீழே இறக்கிவிடுவோம் என்பது போலவே இருந்தது அவள் செய்கை. கணக்கை முடித்து விட்டு வெளியே போகும் வரை அவள் வர முயற்சி செய்த போது வேண்டாம் என்று இருவருமே அவசரமாக தடுத்தார்கள். ஆண்டி ஆண்டி என்று ஏட்டிக் கொண்டு வந்த குழந்த்தையை ஒரு அடி வைத்தாள் அவள். ரிசப்பனிலிருந்து கிளம்பிய போது அவன் அவளுக்கு ஏதோ கவரில் தந்தான். பின்னர் இருவரும் வந்த வாகனத்தில் ஏறி போனார்கள். கொஞ்ச தூரத்தில் வாகனம் நிற்பது தெரிந்தது. வாகனத்திலிருந்து யாரோ இறங்கியது போல தெரிந்தது. சற்று தொலைவாகா இருந்த காரணத்தால் அவளால் சரியாக பார்க்க முடியவில்லை.

“பயணத்தின் போது வாழ்க்கை நிராதவாய் இருக்கின்றது, மேலும் விடையற்ற கேள்விகளை கொட்டி வைக்கிறது ஒவ்வொரு பயணமும்”

பயணத்தில் தனிமை கடுமையானதாக இருக்கிறது. வீட்டிலிருக்கும் போது கணவன் வெளியூர் சென்றால் கூட வீடே துணையென இருப்பதென ஆகிறது. பயணத்தில் அலுவல் முடிந்த விடுதிக்கு வரும் வழி, வழி மேல் ஊர்ந்து அவளை விடுதி சேர்க்கும் வாகனம், விடுதிக் கதவுகள், விடுதிப் பணியாளர்கள், பக்கத்து அறையாளர்கள் அனைவருமே அவள் தனிமையை பறையுரைப்பவர்களாவே இருக்கின்றார்கள். அலுவலற்று இருக்கும் ஒவ்வொரு நொடித்துளிகளில் நீளம் சற்றே அதிகப்படியாக இருப்பதென தோன்றும். உணவினை பற்றிய பிராஞ்கை தோன்றுவதில்லை. உண்ணும் ஆர்வமும் இருப்பதில்லை. அவளே சமையல் செய்ய நேர்ந்தாள், வீட்டில் சமைக்கும் போது ஆகும் அரைமுக்கால் மணி நேரம் அங்கே மூன்று மணி நேரமாய் ஆகிறது. சமைத்து முடிக்கும் முன்னரே பசியடங்கி போகிறது. இதனால் எப்போதும் பழங்களை வாங்கி சாப்பிட்டு காலத்தை கழித்து வருவாள்.

அவ்வாறாக ஒருமுறை பழங்களை வாங்கி வரும் போது, “நீங்கள் தமிழா” என்று ஒரு குரல் கேட்க திரும்பி பார்த்துவிட்டு ஆமென்பது போல தலையசைத்தாள். “உங்கள் சமையலறையில் உணவாக்கும் வாசனை எதுவும் புலப்படுவதில்லையே, உணவு சமைக்க சோம்பேறித்தனமென்றால் என் அறைக்கு வாருங்கள் நான் சமைத்து வைத்திருக்கிறேன்” என்றான். “இல்லை வேண்டாம் நன்றி” என்று சொல்லிவிட்டு விடுவிடுவென்று நடந்து சென்றவளின் உருவம் மட்டும் அவனுடன் சென்றது. அவன் அறை அளவாளவியது. சாப்பிட்டது. விக்கிய போது தலைத்தட்ட உயர்ந்த கை உரசியது. காதலுற்றது. கசிந்துறுகியது. கணவர் மேலிருக்கும் அன்பால் இப்படி பறபுருசனுடம் உறவு கொண்டதற்கு வருந்தியது. இத்தனை கற்பனையையும் செய்து கொண்டிருப்பதற்கு பதில் அவன் அறைக்கே சென்றிருக்கலாம் என்று நினைத்தாள். மறுநாள் “நேற்று முழுவதும் உறங்கவில்லை போலிருக்கே” என்றதும் அவள் “உங்கள் வேலை ஏதேனுமிருக்கிறதா அல்லது என்னுடைய அறையின் சுண்ணாம்பை முகர்வது மட்டுமே உங்கள் வேலையா?” அவ்வளவு ஆவேசத்தை எதிர்பார்த்திருக்கமாட்டான். முகம் சுண்டி போனான். அவ்வளவு கோபப்பட்டிருக்க வேண்டாமோ என்று ஒரு குரல் கேட்டாலும், அந்த நேரத்தில் அவனிடமிருந்து தப்பிக்க ஒரு வழி ஏற்பட்டதே என்று தோன்றியது. மேலும் அவனுக்கு எத்தனை துணிச்சலிருந்தால் இரவெல்லாம் அவனை நினைத்திருக் கொண்டிருந்தேனா என்ற தோணியில் என்னிடம் பேசலாம் என்று கோபமும் வந்தது. சில ஆண்கள் இப்படித் தான் நாம் இன்னது நினைக்கிறோம் என்று அணுமானித்து கொள்கின்றனர் அல்லது அதனை தெளிவாக உணர்ந்து கொள்கின்றார்கள்.

அதன் பின்னர் அவளை எங்கே அவனை கடக்க நேர்ந்தால், அவன் இறுக்கமாக சென்ற போது இவள் புன்னக்கைக்க முயற்சி செய்வாள், அவன் கண்டு கொள்ளாமல் கடந்து போனால் கொஞ்சம் நேரம் அந்த கடுமை அவளை சுற்றி வந்தது. அன்று இருவரும் ஒரே பேருந்தில் பயணக்க நேர்ந்தது, கைநிறைய சுமையுடன் வந்தாள், அவன் வாங்கிக் கொண்டான், விரல் உரசியதை அவன் பொருட்படுத்தியதாக தெரியவில்லை. இவள் ஒருவேளை வேண்டுமென்றே செய்தான் என்று நினைத்தாள். விடுதியில் இருக்கியதும் நன்றி என்றாள் அவன் ஒன்றுமே பேசாது போய்விட்டான். இவளுக்கு குறுகுறுவென்று இருந்தது. மீண்டுமொரு முறை பேசி பார்க்கவேண்டும் என்று நினைத்தாள்.

மறுநாள் சாயுங்காலம் அவன் அறைக்கதவினை தட்டி, நீங்க மில்க் வாங்கிட்டு வந்தீங்களா, என்னுடைய அறையில் ப்ரிட்ஜ் வேலை செய்யல. இங்கே வைக்கவா என்றாள். ஒன்றுமே பேசாது வாங்கி வைத்துவிட்டு “வேறென்ன” என்பது போல பார்த்தான். இவள பேசாமல் வந்துவிட்டாள். அவன் பார்வை பின்னாலிருந்து இவளை முழுக்க தின்பது போல பட்டது. திரும்பிப் பார்த்தாள் அவன் கதவை அடைத்துக் கொண்டு உள்ளே சென்றிருந்தான்.

இரவு பசிப்பது போலிருந்தது உண்ண ஒன்றுமில்லை. பாலையும் அவனறையில் வைத்திருந்தாள். பழங்கள் எதுவும் இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தது. அறையில் பாத்திரங்களையும், பிற டப்பாக்களையும் உருட்டிக் கொண்டிருந்தாள். அறைக்கதவு தட்டப்பட்டது. “நான் தான் திறவுங்கள்”. திறந்த போது, கையில் பாலுடன் அவன் நின்றிருந்தான். அறைக்கதவை முழுதாய் திருந்தவள். “வாருங்கள்” என்று பாலை வாங்கிப் பருகிவிட்டு, “அப்பாடா இப்போது தான் நிம்மதியாக இருக்கிறது ” என்றாள். அவன் புன்னகைத்தான். காலை சந்திப்போம் என்று சென்றதும். அவள் கதவை அடைத்தாள். சுகமான நினைவுகளோடு உறங்கி போனாள்.

பின்னர் ஒரு நாள் இவளுக்கு காய்சல் கண்டிருந்தது. மெல்ல முணகிக் கொண்டே படுத்திருந்தாள். படுக்கையை விட்டு எழுந்திருக்க கூட இல்லை. கதவை தட்டப்பட்ட போது திறக்கக் கூட திரணியற்று கிடந்தாள். மேனேஜரிடம் மாஸ்டர் கீ வாங்கி வந்து கஞ்சியும், மாத்திரைகளை கட்டிலருகே வைத்து விட்டு மௌனமாக திரும்பி போகப் பார்த்தான். கைகளை பிடித்துக் கொண்டாள். “என்ன” என்பது போல பார்த்தான். “மன்னியுங்கள் உங்களுக்கு அலுவல் இல்லையென்றால் என்னருகேயே இருக்க முடியுமா?” என்றாள். அவள் முன் நெற்றியில் முடியினை ஒதுக்கிவிட்டு, தோளினை தடவி கொடுத்து, வேலையிருக்கு போயிட்டு சீக்கிரம் வந்துடறேன். கவனமாக பார்த்துக்கோங்க” என்றான். அந்த பயணம் முடியும் வரை தனிமையை தேடிக் கொண்டிருந்தாள்.

“பயணங்கள் சில சமயம் சுவாரஸ்யமான நினைவில் இருத்திக் கொள்ளும் அனுபவங்களையும் தருகிறது.”
•••••••••

சின்னப்பயல் கவிதைகள்

images (2)

இதுவரை
குறிலாக இருந்த காதல்
இப்போதெல்லாம்
நெடிலாக மாறியிருக்கிறது
வேற்றுமை உருபுகள்
உட்புகுந்திருக்கின்றன.
இன்னிசை அளபெடைகளுக்கு
இனியும் இடம் கிடைக்குமா ?

***

அண்டமே எனதானாலும்
சிறுகை திருடித்தின்னும்
வெண்ணையில் தான்
சுகம்

***

என் கடைசி விருப்பு
பிறர் வருந்தா
இறப்பு.

***

காத்திருக்கும்
நொடிகளில்
இடம் மாறும்
முட்கள்

*****

எத்தனை நாட்கள் தான்
உயிரைப்போல் ஒளிந்திருப்பது
உடலுக்குள் ?
காதல் சொல்!

****
உன்னருகில் ஒரு
பழைய கவிதை
யாரது ?

*****

அற்ற குளத்துத்தவளை
ஒன்று
பாஷோவை அழைக்கிறது

*****

எனது கற்பனைகள் கூட
யாரோ ஒருவர்க்கு
நிகழ்ந்ததுதான்

*****

புதினம் தேய்ந்து
ஹைக்கூவானது
பிறை

*****

நினைத்ததெல்லாம்
சொல்லமுடிந்தால்
கவிதை
முடியாவிட்டால்
காதல்

*****

கண்ணருகில் பறந்த
பட்டாம்பூச்சி
முழு வானத்தையும்
மறைத்துவிட்டது

******

விரும்பிச்சுவைத்த
தேநீர் முடிந்துவிட்டதே
என வருந்தும் போது
நீ பேசத்துவங்கினாய்

******

எல்லாம் கடந்து போகும்போது
நானும் கடந்து போயிருப்பேன்….

****

உலகில் மிகச்சிறந்த
கவிதைகளைப்படைத்தவன்
எனக்கர்வம் கொண்டேன் அவளிடம்
வீனஸிலிருந்து வந்தேன்
என்றாள் மெதுவாக

*****

மிகை எதார்த்தத்தில்
சிறு கற்பனை
கலந்தே உள்ளது

*****

காற்றில் உன் துப்பட்டா
பறக்கிறது
இத்தனை பெரிய உடலை
சுமந்து செல்லும்
வண்ணத்துப்பூச்சியின்
இறக்கைகள் அவை.

******

மொழிக்கு முன்னரே
காதல் இருந்தது
இப்போது என்னிடம்
மொழியில்லை

*****

மொழி என்னைக்கொண்டு
தனக்கென எழுதிக்கொண்ட
கவிதை வரிகளில்
நீ எங்கனம் உட்புகுந்தாய் ?

******

பறவையின் அலகில்
சிறைப்பட்ட மண்புழு
பெய்த மழையின் சிறுதூறலில்
நெளிந்து நெளிந்து
நனைந்து கொள்கிறது

************

கடவுள் என் வீட்டில்
ஒளிந்துகொண்டிருக்கிறார்
என்னைக்கடவுள்
என்று யாருக்கும் அறிமுகப்படுத்திவிடாதே
என்று இரைஞ்சிக்கேட்டுக்கொண்டு

************

அம்மணக்குண்டி
நிலா
ஆடை அணிய அணிய
அமாவாசை

************

உன்னுள் அலைகளை
உருவாக்கியிருப்பின்
எனை மன்னித்துவிடு
எனினும் அவை
உன்னிழலால்
என்னுள் உருவானவை.

***********

யாரும் எளிதில்
தொட்டுவிடமுடியாத
இத்தனை உச்சியில்
பூத்துக்கிடக்கும் மலருக்கு
என்ன ஆசை
இருந்துவிடப்போகிறது ?

***********

பெயர் தெரியாவிட்டால் என்ன
அந்தப்பறவையின் குரல்
நன்றாகத்தானிருக்கிறது
என்ன ஒன்று
நான் எழுந்து போய்ப்பார்ப்பதற்குள்
பறந்துவிட்டது.

***************

கூடிழத்தல் – ஒரு தேற்றம் / ஆதி பார்த்திபன்

images (3)

நாங்கள் அழித்தலுக்காக திருவிழா

கொண்டாடுகிறோம்- அதனால் நாங்கள்

அழிவதை கொண்டாட்டமாக்கினார்கள்

நாங்கள் கூடுகளை ஆக்கி குருவிகளை சேர்த்து

பின் கலைத்தோம் காரணம்

நாங்கள் அழித்தலுக்காக திருவிழா கொண்டாடுகிறோம்

நாங்கள் கண்களை

மூடிக்கொண்டிருப்பதை வெறுப்பவர்கள்

இடம் கேட்டுவரும் பறவைகளின் வகையறியாது

கூடுகளை பரிமாறுபவர்கள்

விருந்தோம்பலில் திளைத்தவர்கள்-இருந்தும்

நாங்கள் கூடுகளைக் கொடுத்து பின் கலைத்தோம்

ஏதோவொன்றை செய்திருக்கலாம்

குடுத்தலை அல்லது எடுத்தலை

அல்லது சும்மாயிருத்தலையாவது – ஆனால்

நாங்கள் பழிவாங்குதலில் பரீட்சயமாகிப் போனவர்கள்

எங்கள் வேதங்களும் புராணங்களும் அதைத்தான் சொல்கின்றன

நாங்கள் உயிர்களை நேசி என்றுவிட்டு

அழித்தலுக்காய் திருவிழா எடுப்பவர்கள்

நாங்கள் முரணானவர்கள்

நாங்கள் ஏதோவொன்றை செய்திருக்கலாம்

நிச்சயமாக அழித்தலை அல்லது காத்தலை

அல்லது சும்மாயிருப்பதில் பரிச்சயமாகிப்போயிருக்கலாம்

ஆனால் நாங்கள் முரணானவர்கள்

அதனாலே கூடிழந்தோம்.

இயக்கம்

வானம் ஒரு கறுத்த நதியாக ஓடிக்கொண்டிருக்கிறது
ஆம் ஒரு கறுத்த அல்லது ஆழமான ஒரு நதியாக
அது ஒரு
விரித்துப்போட்ட குளிர்ப்போர்வை போல
எனது தலைக்கு மேலே படுத்திருக்கிறது
பிறகு அசைகிறது
அது எனது தலைக்கு மேலே ஒரு புயலை
ஒரு வானவில்லை
உருவாக்கிவிட்டு மௌனமாயிருக்கிறது
அதற்கும் மேலே மங்கல் சூரியன்
ஒரு படகைப்போல மிதக்கிறது என்பதை நம்புவீர்களா
நகர்வது வானமா சூரியனா
அல்லது எப்போதும் யாரும் அறியாவண்ணம்
சுருட்டிவைத்திருக்கும் என் உணர்ச்சிகளா என்பதொரு கேள்வி
அதை நீங்கள. வானமாகவோ
நதியாகவோ பார்ப்பதையிட்டு நான் அச்சம் கொள்வதற்கில்லை
உங்களின் இயக்கத்தைக்கொண்டு
அவற்றினதை தீர்மானிப்பதையிட்டே அச்சம்கொள்கிறேன்
ஒரு வானத்தின் இயக்கத்தை
கடலைக்கொண்டோ சூரியனைக்கொண்டோ – அல்லது
உங்களைக்கொண்டோ தீர்மானிப்பது முட்டாள் தனம்
எதனுடைய இயக்கமும் அதைச்சாரந்ததே என்னை நம்புங்கள்- இனி
நீங்கள் இயக்கமாக இருக்கிறீர்களா
ஆகவே
நீங்கள் இயங்கிக்கொண்டிருக்கிறீர்கள் என்பதை
நான் எதைக்கொண்டு நம்பவேண்டும்
கொஞ்சம் மௌனமாயிருந்து அவதானியுங்கள்
அவை உங்களை விட நூதனமாக
இயங்கிக்கொண்டிருக்கின்றன.

_

ப.மதியழகன் கவிதைகள்

images (9)

1

என்னெல்லாமோ விற்கிறார்கள்
வாங்குவதற்குத் தான் வக்கில்லை
கிராக்கு பார்க்கும் நம்மை
கடைக்குள் அழைக்கிறார்கள்
கையில் காசில்லாதவன்
வெறுமனே வேடிக்கைப் பார்க்காமல்
என்ன செய்வான்
கழைக்கூத்தாடியை கண் இமைக்காமல்
பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
கையில் தட்டை ஏந்தியவுடன்
பின்னங்கால் பிடரியில் அடிக்க
ஓடி ஒளிவார்கள்
ஒரு ஜான் வயிற்றுக்காக
கண்ட கண்ட கழிசடைகள்
காலிலெல்லாம் விழ நேர்கிறது
எனது உணவையும் சேர்த்து
நீயே தின்றால்
எனக்கெப்படி வயிறு நிறையும்
நாடக மேடையில் கூத்து கட்டுபவர்கள்
அதே வேடத்தில் திரிய மாட்டார்கள்
வாழவைத்து சித்ரவதை செய்யும் கடவுளை
தீர்த்துக் கட்ட நினைப்பவர்கள் நாங்கள்.

2

அப்படியொன்றும் பாக்கி
வைத்ததில்லை
ஆனானப்பட்டவர்கள் கூட
பணத்தைக் கண்டால்
வாயை பிளக்கிறார்கள்
விருதாவாக வாழ முயன்றால்
திருவோடு தான் ஏந்த வேண்டும்
இரண்டு வேளை வயிறு
நிரம்ப வேண்டுமென்றால்
குட்டிக் கர்ணம் தான்
போட வேண்டும்
காலம் வலை பின்னுகிறது
அதில் சிக்கி உயிர்கள்
வதைபடுகிறது
நோய் மிரட்டுகிறது
எப்போது வேண்டுமானாலும்
ஜீவனை கொண்டுபோய்விடும்
என்பதால்
வாதைக்கு பயந்து பொதுஜனம்
மருத்துவர்களை நாடுகிறது
வித்தையை கற்றவனால்தான்
வியூகத்தை உடைத்து வெளிவர முடியும்.

3

வயிற்றுக்காக சிங்கி அடிப்பவர்கள்தான்
நாம் எல்லோரும்
ருசிக்காக அல்ல பசிக்காக சாப்பிடுபவர்கள் தான்
நாம் எல்லோரும்
காசு பின்னால் ஓடுகின்ற மத்யதரவர்க்கம் தான்
நாம் எல்லோரும்
வீசியெறியப்படும் துட்டுக்காக காட்டிக் கொடுப்பவர்கள் தான்
நாம் எல்லோரும்
கங்கையில் முங்கினால் பாவம் தொலையும் என்று
நம்புகிறவர்கள் தான்
நாம் எல்லோரும்
பண்ணுகிற தவறான செயலுக்கு நியாயம்
கற்பிப்பவர்கள் தான்
நாம் எல்லோரும்
எந்தத் திசையில் செல்வது என முடிவெடுக்கத்
தயங்குபவர்கள் தான்
நாம் எல்லோரும்
செய்த பாவத்துக்காக குற்றவுணர்ச்சியால் பீடிக்கப்பட்டு
நரகத்தில் உழல்கிறவர்கள் தான்
நாம் எல்லோரும்
மரணம் நிகழாத வீட்டைத் தேடிக்
கொண்டிருப்பவர்கள் தான்
நாம் எல்லோரும்
வாழ்வுப் புத்தகத்தில் தன் பெயரை
பதிவுசெய்யாதவர்கள் தான்
நாம் எல்லோரும்
பிறந்துவிட்டோம் என்பதற்காக வாழ்ந்து
தொலைப்பவர்கள் தான்
நாம் எல்லோரும்
வாழ்க்கை கடவுள் இட்ட பிச்சை
என்று உணராதவர்கள் தான்
நாம் எல்லோரும்
பிச்சை இட்ட கடவுளை ஏன்
கோயிலில் சிறை வைத்தார்கள்
என்பதை தெரியாதவர்கள் போல்
நடிப்பவர்கள் தான்
நாம் எல்லோரும்
வாழ்க்கை சலிப்பூட்டும் முன் மரணம்
வந்து விடுவதற்கு
இயற்கைக்கு நன்றி சொல்வோம்
நாங்கள் எல்லோரும்
எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல்
சாத்தானுக்கு சேவகம் பண்ணுகிறீர்கள்
நீங்கள் எல்லோரும்.

4

விதி வகுத்த வழி
போன மார்க்கம்
கண்ட காட்சி
நின்ற கோலம்
எதுவும் புரிபடவில்லை
உச்சாணிக் கொம்பில்
இருப்பவனுக்கு
மனிதரெல்லாம் மண்புழுக்கள் தாம்
தேவைகள் பூர்த்தியாகும்
போது தான் மனிதன்
மிருகமாகிறான்
காசை தூக்கி எறிந்தால்
எல்லாம் கிடைக்கிறது
அறிவுரைகளை நிறுத்துங்கள்
எனக்கந்த ஆண்டவன்
புரிய வைப்பான்
உங்களது மரமென்றாலும்
காற்றை சிறை வைக்கமுடியாது
வறுமை தாண்டவமாடும்
குடிசை வீட்டில்
அடுப்பெரிந்தால் அன்று
தான் தீபாவளி
படுத்தவுடன் தூங்குபவர்கள்
பாக்கியசாலிகள்
முளைவிடும் விதைகளுக்குத்
தெரியும் எப்படி பூமியை
பிளப்பது என்று
கண்ணீர் விட்டு கதறி
அழுதாலும் மாண்டவர்
மீளமாட்டார்
வடம் பிடித்து இழுக்காமல்
தேர் நிலைக்கு
வராது
ஊரே கூடி ஒப்பாரி
வைத்தாலும்
சிலை உயிர் பெறாது.

5

வகுத்து வைத்தவனைத்தான்
நான் தேடிக் கொண்டிருக்கிறேன்
வாழ்க்கையில் இத்தனை
சில்லரைத்தனங்களை ஏற்படுத்திவிட்டு
போய்விட்டான் அவன்
வானுக்கு சுமையில்லை
நிலாவும் நட்சத்திரங்களும்
சித்திரகுப்தன் வாழத் தகுதியில்லாதவன்
என்று எனது கோப்பில் முத்திரை
குத்திவிட்டான்
சாமனியப்பட்டவன் முதல்
சக்கரவர்த்தி வரை
விதியின் கீழ் உழன்று
கொண்டு தான் இருக்கிறார்கள்
பாவப்பட்ட ஜனங்கள்
கரையேறுவதற்கு
கலங்கரை விளக்கமாய்
சிலபேர் இருக்கிறார்கள்
சம்பாதித்த காசையெல்லாம்
டாஸ்மாக்கில் தொலைக்கிறார்கள்
விதிவிட்ட வழியென்று
தன்னை மறக்கிறார்கள்
வாக்களிக்க காசு வாங்கி
ஜனநாயகத்தை குழி
தோண்டிப் புதைக்கிறார்கள்
ஒன்றுமில்லாமல் போனதற்கப்புறம்
இரத்தக் கண்ணீர் வடிக்கிறார்கள்.

••••••••••••••