Category: இதழ் 94

ஷமீலா நடித்த படம் (சிறுகதை) / எம்.ஜி.சுரேஷ்

images

பாமரத் தமிழில் கோர்ட் என்று அழைக்கப்படும் குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தைக் (சம்மனில் அப்படித்தான் குறிப்பிடப்பட்டிருந்தது) கண்டுபிடிப்பதில் அவனுக்குச் சிரமம் ஏதும் இருக்கவில்லை. அந்தக் கட்டடம் பிரதான சாலைக்குப் பக்கத்திலேயே இருந்தது. துல்லியமாகச் சொல்வது என்றால், சாலையிலிருந்து கொஞ்சம் உள்ளொடுங்கி இருந்தது. சமீபத்தில் சடங்கான ஒரு கிராமத்து இளம் சிறுமியைப்போல் வெட்கத்துடன் பிரதான சாலையை எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தது. அதைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்புறம் வேறு சில அரசு அலுவலகங்கள் அசமந்தமாக நின்றிருந்தன. கட்டடங்களைச் சுற்றிலும் தூங்குமூஞ்சி மரங்களும், ஒதிய மரங்களும் நின்றிருந்தன. அவன் தன் கையிலிருந்த சம்மனை ஒரு தடவை பிரித்துப் பார்த்தான். காலை பத்து மணிக்கு அவன் ஆஜராக வேண்டும் என்று அதில் எழுதி இருந்தது. இந்தக் கம்ப்யூட்டர் யுகத்திலும் சம்மன்களைக் கையால் எழுதுகிறார்களே என்று நினைத்துக் கொண்டான். கட்டடத்தை நோக்கி நடந்தான்.

கைக்கடிகாரத்தைப் பார்த்தான். மணி பத்து ஆகிவிட்டிருந்தது. தாமதமாக வந்துவிட்டோமோ என்ற பயத்தில் சற்று வேகமாக நடந்தான். காய்ந்திருந்த இலைகளும், சிதறிக் கிடந்த தூங்கு மூஞ்சி மரத்தின் பூக்களும் அவன் கால்கள் பட்டு நெரிந்தன. தாமதித்து விட்டோமோ என்று பயந்திருக்க வேண்டியதில்லை. கோர்ட் அறை அனேகமாக காலியாக இருந்தது. அது தொலைவிலிருந்தே பார்த்ததில் தெரிந்தது. வக்கீல் உடையணிந்திருந்த சிலரும்,, இரண்டு போலீஸ்காரர்களும் கோர்ட்டுக்கு வெளியே நின்றிருந்தார்கள். கூடவே,வேட்டி சட்டை அணிந்த பலரும், ஜீன்ஸ் பாண்ட் டீ ஷர்ட் தரித்த சிலரும் நின்றிருந்தார்கள். கூடவே, தீராத வலியால் துன்பப்படுவதைப்போல் புளியமரம் ஒன்று உடலை முறுக்கிக் கொண்டு நின்றிருந்தது.

குற்றவியல் நடுவரின் நீதி வழங்கும் அறைக்குள் நுழைந்தான். அது அந்தக் காலத்துப் பழைய வீட்டின் நீண்ட கூடத்தைப் போல் இருந்தது. உள்ளே ஒரு தட்டச்சர் மட்டும் உட்கார்ந்திருந்தார். குளித்து, நெற்றியில் விபூதி குங்குமம் இட்டு வெள்ளையில் வேட்டி, சட்டை அணிந்திருந்தார். தனது தட்டச்சு இயந்திரத்தை ஒரு அழுக்குத் துணியால் சிரத்தையுடன் துடைத்துக் கொண்டிருந்தார். அவர் இருக்கையை ஒட்டி ஒரு மேடை இருந்தது. அதில் ஒரு மேசையும், நாற்காலியும் போடப்பட்டிருந்தன. அதுதான் நடுவரின் இருக்கை என்று புரிந்து கொண்டான். நடுவரின் நேர் எதிரே ஒரு இற்றுப்போன நீண்ட மேசையும், அதற்குப் பொருத்தமான ஆறு நாற்காலிகளும் எதிர் எதிராகப் போடப்பட்டிருந்தன. ஜூரிகள் உட்காருவதற்காக என்று நினைத்துக் கொண்டான். சுவரோரமாக ஒரு குற்றவாளிக்கூண்டு தன்னந்தனியாக நின்றிருந்தது. ஒன்றுதானா? இரண்டு இருக்குமே? அதற்குச் சற்றுத் தள்ளி ஒரு பெஞ்ச் போடப்பட்டிருந்தது. அதில் இரண்டு பெண்கள் கவலையுடன் உட்கார்ந்திருந்தார்கள். அம்மாவும் மகளும் போல் தெரிந்தார்கள். பெண்ணின் கையில் இரண்டு வயதில் ஒரு கைக்குழந்தை. எதற்காக வந்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

இதுதான் கோர்ட் அறையா என்று வியந்தான் இதற்கு முன் அவன் கோர்ட் படியை மிதித்ததில்லை. அதற்கான சந்தர்ப்பம் வாய்த்ததில்லை. சினிமாக்களில் மட்டுமே அவன் கோர்ட்டைப் பார்த்திருக்கிறான். . கோர்ட் என்றால் ஒரு பெரிய மேஜையின் முன் நீதிபதி அமர்ந்திருப்பார். அவருக்கு அருகே சீருடை அணிந்த ஒரு டவாலி செங்கோல் போன்ற ஒருதடியைக் கையில் பிடித்தபடி நின்றிருப்பான். மிகப் பிரமாண்டமான அந்த ஹாலில் அவர் எதிரே இரண்டு குற்றவாளிக்கூண்டுகள் இருக்கும். இரண்டு குற்றவாளிக் கூண்டுகளுக்கும் இடையில் ஆங்கில் U எழுத்து வடிவில் மேசை போடப்பட்டிருக்கும். அதில் வக்கீல் உடை தரித்த ஐந்தாறு பேர் உட்கார்ந்திருப்பார்கள். இங்கே சூழ்நிலை வேறு மாதிரி இருந்ததில். அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது. அம்மாவும், மகளும் அமர்ந்திருந்த பெஞ்சில் தானும் போய் உட்கார்ந்து கொண்டான்.

சில நிமிஷங்கள் கழிந்தன. யாரிடம் விசாரிப்பது என்று தெரியவில்லை. கொஞ்ச நேரம் சும்மா உடகார்ந்திருந்தான். சற்றுத் தொலைவில் வாகனங்கள் விரைந்து கொண்டிருந்தன. பெயர் தெரியாத பறவைகள் கூச்சலிட்டன. அந்த நேரம் பார்த்து ஒரு போலீஸ்காரர் அவன் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார். கையில் ஒரு டயரியும், சில காகிதங்களும் வைத்திருந்தார். அவனை நெற்றி சுருங்கப் பார்த்தார். அவன் சட்டென்று, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான். ‘ஓ. சென்சார் ஆஃபீஸா’ என்றார். ’எங்கேயும் போயிடாதீங்க,இங்கேயே இருங்க. மொதல்ல நம்ப கேஸைதான் எடுப்பாங்க. சீக்கிரம் முடிஞ்சுடும்’ என்றார். அவன் ஒரு அசட்டுச் சிரிப்பை விட்டெறிந்தான்.அவனது அசட்டுச் சிரிப்பை அவநம்பிக்கைச் சிரிப்பாகப் புரிந்து கொண்டு, ’மொதல்ல கவர்ன்மெண்ட் கேஸ். அப்புறம்தான் மத்த கேஸ்’ என்று வலியுறுத்தித் தனது நிலைப்பாட்டை நிறுவினார். அதற்கு அவன் மௌனமாகத் தலையசைத்தான். இந்தத் தடவை அவன் சிரிக்கவில்லை.

அவன் ஒரு பத்திரிகையாளன். பத்திரிகைகளில் கதைகள் எழுதுவான். கட்டுரைகள் எழுதுவான். சமயங்களில் சினிமா பற்றியும் எழுதுவான். நூறு நாட்கள் ஓடும் படங்களைத் திட்டி எழுதுவான். தியேட்டரில் நான்கைந்து பேர் மட்டுமே அலுப்புடன் பார்க்கும், ரசிகர்களின் ஆதரவைப் பெறாத, படங்களை விதந்தோதி எழுதுவான். சென்சார் போர்ட் எனப்படும் வட்டாரத் திரைப்பட சான்று வழங்கும் அலுவலகத்தின் தலைமை அதிகாரியின் கண்களில் அவன் எழுதும் சினிமாக்கட்டுரைகள் பட்டன. அதன் விளைவாக அவனும் அந்தத் துறையில் ஓர் ஆலோசனை வழங்கும் உறுப்பினராகச் சேர நேர்ந்தது. முதலில் சென்சார் போர்டில் உறுப்பினராகச் சேர்வதில் அவனுக்குத் தயக்கம் இருந்தது. அவன் பத்திரிகையாளன். சுய சிந்தனையாளன். அடிப்படையில் சென்சாருக்கு எதிரானவன். அவன் எப்படி சென்சார் போர்டுக்கு ஆலோசனை உறுப்பினனாக இருக்க முடியும்?

அவனுடைய குழப்பத்தைப் போக்குவதற்கு வட்டார அதிகாரி உதவிக்கு வந்தார். ‘இதன் பழைய பெயர்தான் சென்சார் போர்ட். அதை மாற்றியாகிவிட்டது. இப்போது அதன் புதுப்பெயர் மத்திய திரைப்படச் சான்றிதழ் வழங்கும் துறை. நீங்கள் எதையும் சென்சார் செய்யப்போவதில்லை. சான்றிதழ்தான் தரப்போகிறீர்கள்’ என்றார். அவனுக்கு இந்த விளக்கம் சரி என்று பட்டது.

துறையில் அவனைப் போலவே இன்னும் சில உறுப்பினர்கள் இருந்தார்கள். வக்கீல், டாக்டர், அரசியல்வாதி, சினிமாக்காரர் என்று சமூகத்தின் பல்வேறு துறைகளில் இருப்பவர்கள். பெரும்பாலும் ரிடயர் ஆனவர்கள். அவர்களில் சிலர் இன்ன நடிகரின் இன்ன படத்தை நான்தான் சென்சார் செய்தேன் என்று பெருமையுடன் கூறி இறும்பூது எய்துபவர்கள். சந்தர்ப்பம் கிடைத்தால் அந்த நடிகருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டு தெரிந்தவர்களிடம் காட்டி மகிழ்ச்சியில் மாய்ந்து போகிறவர்கள்.

ஒரு ‘திரைப்படத்தை ரிலீசாவதற்கு முன்பாகப் பார்த்து, அதற்கான சான்றிதழ் வழங்கவேண்டியது இவர்கள் வேலை. ‘ஏ’, ‘யு’, ‘யுஏ’ என்று மூன்று விதமான சான்றிதழ்கள் உண்டு. இவற்றில் ஏதோ ஒன்றை அந்தப் படத்துக்குப் பொருந்தும்படி பார்த்துத் தர வேண்டும். அதன் பிறகுதான் அந்தப் படம் தியேட்டரில் ரிலீசாக முடியும். படத்தைப் பார்ப்பதற்குப் பணம் கொடுப்பார்கள். வாரத்தில் மூன்று நான்கு படங்கள் பார்க்கும்படி இருக்கும். ஒவ்வொரு படத்தைப் பார்த்து முடித்ததும் கையோடு சான்றிதழில் கையொப்பம் இட்டுக் கொடுத்துவிட வேண்டும். கையோடு பணத்தையும் கொடுத்து விடுவார்கள். ’எல்லாரும் காசு குடுத்துப் படம் பார்ப்பார்கள். உனக்குப் படம் பாக்கக் காசு குடுக்குறாங்க’ என்று நண்பர்கள் கேலி செய்தார்கள். இப்படியாகக் கொஞ்ச காலம் ஓடியது. அவனுக்கும் இந்த அனுபவம் சுவாரஸ்யமாகத்தான் இருந்தது.

சென்சாருக்கு வரும் படங்களில் பத்தில் ஒன்பது படங்கள் சகிக்க முடியாத அளவுக்குப் படு மோசமாக இருக்கும். நல்ல படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இந்தக் குப்பைகளைப் பார்த்துத்தான் ஆக வேண்டுமா என்று அவனுள் மனபோராட்டம் நிகழும். சலிப்பாக இருக்கும். அப்படி வேலையில் சற்று சலிப்புத்தட்டியபோது, ஒரு நாள் வட்டார அதிகாரி அவனை அழைத்தார். ‘தியேட்டரில் இருந்து ஒரு பிட் படத்தைப் பிடித்துக் கொண்டு வந்திருக்கிறார்கள். அதை நீங்கள் பார்த்து அது ஆபாசமா இல்லையா என்று சான்று வழங்க வேண்டும்’ என்றார். ’ஓ, இப்படி ஒரு விஷயம் இருக்கிறதா?’ சட்டென்று அவனுக்கு வேலையில் சுவாரஸ்யம் தட்டியது.. உடனே ஆர்வத்துடன் ‘சரி’ என்றான். அந்த வேலை ஒரு நாள் தன்னைக் கோர்ட் வாசலை மிதிக்க வைக்கும் என்கிற விஷயம் அப்போது அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை.

பிட் என்பதற்கு இடைச்செருகல் என்பது பொருள். ஆங்கிலத்தில் இண்டர்பொலேஷன் என்பார்கள். இடைச்செருகல்கள் பண்டைய இலக்கியங்களில்தான் இருக்கும் என்பதில்லை. நவீன காலத் திரைப்படங்களிலும் உண்டு. ஒரு படம் ஓடிக்கொண்டிருக்கும் போது,.அதில் சற்றும் எதிர்பாராமல் திடும் என்று ஒரு காட்சி வந்து குதிக்கும். அதில் ஆவேசமான இரண்டு நிர்வாண உடல்கள் பின்னிப் பிணைந்து, மூர்க்கத்தனமாக ஒன்றை ஒன்று முட்டி மோதி இயங்கிக் கொண்டிருக்கும். இயங்கும் போது வரும் முக்கலும், முனகலும், ஸ்..ஆ..சத்தங்களும் கிளர்ச்சியைத் தூண்டும். இன்றோடு இந்த உலகம் முடிந்து விடப்போகிறது; அதற்குள் இதை முடித்து விட வேண்டும் என்பது போல் அந்த உடல்கள் இடைவிடாமல் போராட்டம் போல் இயங்கிக்கொண்டிருக்கும். சில நிமிடங்கள் மட்டுமே ஓடும் இந்த இடைச்செருகல்களை ஊடிழைப்பிரதி என்று சொன்னால் பின்நவீனவாதிகள் அடிக்க வரக்கூடும். நிற்க. இதை வைத்துப் பலர் கோடீசுவரர்களாகி விட்டார்கள் என்பது இந்தக் கதைக்கு வெளியே தொங்கிக் கொண்டிருக்கும் விஷயம்.

திருட்டுத்தனமாகத் தியேட்டர்களில் திரையிடப்படும் இந்த ‘பிட்’ படங்களை போலீசார் கையும் களவுமாகக் கண்டு பிடித்துக் கைப்பற்றுவார்கள். அந்த பிலிம் சுருள்களை பெட்டியில் வைத்து மூடி, அரக்கு சீல் வைத்து, சென்சார் அலுவலகத்துக்கு நேரடியாக ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் மூலம் கொடுத்து அனுப்புவார்கள். சென்சார் அலுவலகம் அந்தப் படத்தைப் பார்த்து, அது ஆபாசப்படம்தான் என்று உறுதி செய்யவேண்டும். அப்படிச் செய்துவிட்டால் அவ்வளவுதான். தியேட்டர் மேனேஜரைக் கைது செய்வதற்கும். தியேட்டருக்கு சீல் வைப்பதற்கும் சாத்தியம் உண்டு. அதைத் தவிர்ப்பதற்காகத் தியேட்டர் முதலாளிகள் கோர்ட்டில் அப்பீல் செய்வார்கள். தியேட்டரை சீல் வைப்பதற்கும், மேனேஜரைக் கைது செய்வதற்கும் இடைக்காலத் தடை வாங்குவார்கள். அப்புறம் வருஷக்கணக்கில் வாய்தா வாங்கிக் கொண்டே இருப்பார்கள். இந்தச் சடங்கில் ஒரு சம்பிரதாயம்தான், சென்சார் ஆலோசனைக் குழு உறுப்பினரை சாட்சி சொல்லுமாறு கோர்ட்டுக்கு அழைப்பது. அந்தச் சம்பிரதாயத்தை நிறைவேற்றுவதற்காக அவன் இங்கு வந்திருக்கிறான்.

சென்சார் அலுவலகத்தில் பிட் எனப்படும் இந்த ஊடிழைப்பிரதிகளைப் போட்டுப் பார்ப்பதற்கென்று தனி அறை உண்டு.அந்த அறையில் ஒரு டிவி போன்ற. திரையுடன் கூடிய படம் ஓட்டும் கருவி இருக்கும். அது ஒரு படத்தொகுப்புக் கருவி. அதில் இது போன்ற சர்ச்சைக்குரிய செல்லுலாய்ட் சுருள்களைப் போட்டுப் பார்க்க முடியும். நினைத்த இடத்தில் சட்டென்று ஓடிக்கொண்டு இருக்கும் படத்தை நிறுத்திப் பார்க்கலாம். ஒவ்வொரு ஃப்ரேமாகப் பார்க்கலாம். படத்தை எடிட்டர் ஓட்டிக் காண்பிப்பார். ஆட்சேபகரமான இடங்களை அந்த எண்ணிலிருந்து எந்த எண் வரையிலான ஷாட் என்று துல்லியமாகப் பிரித்துக் காகிதத்தில் தனியே குறித்துக் கொள்ளலாம்.

சர்ச்சைக்குரிய அந்தப் படத்தின் பெயர் காமத் திருடன். சிவாஜி கணேசன் – சாவித்திரி நடித்த ஒரு பிரபலமான பழைய கறுப்பு-வெள்ளைத் திரைப்படத்தின் நடுவில் அது இடைச்செருகப்பட்டிருந்தது. பதினைந்து நிமிடங்கள் ஓடக்கூடிய அதை ஒரு குறும் படமாகவும் வைத்துக் கொள்ளலாம். பொதுவாக ஒரு திரைப்படத்தை நான்கு உறுப்பினர்கள் பார்க்க வேண்டும். அதில் இருவர் ஆண்கள். இருவர் பெண்கள். இது போன்ற காமக்களியாட்டப் படங்களை ஆண்களுக்கு மட்டுமே போட்டுக் காட்டுவார்கள். இதில் வரும் ஆபாசக்காட்சிகள் பெண்களை நிலைகுலையச் செய்துவிடும் என்பதால் அவர்களுக்குக் காட்டுவது இல்லை. பலகீனமான இதயம் உள்ளவர்கள், ரத்த அழுத்த நோயாளிகள் ஆகியோர் உணர்ச்சிக் கொந்தளிப்பில் மதி மயங்கி விழக்கூடும் என்பதால் அவர்களுக்கும் காட்டுவதில்லை. இந்த மாதிரியான படங்களைப் பார்ப்பதற்குத் திடகாத்திரமான இளைஞர்களுக்கு முன்னுரிமை உண்டு.அவன் திடகாத்திரன். அதனால் அவனுக்கு அழைப்பு வந்திருந்தது. .

எடிட்டர் புரந்திரன் ரசமான மனிதர். ஐம்பதுகளில் இருந்தார். நகைச்சுவையாகப் பேசுவார். அவரிடம் பேசினால் ஔரங்கசீப்புக்கும் சிரிப்பு வரும். கறுப்பு வெள்ளை சினிமாக்காலத்தில் ஒரு எடிட்டரிடம் அப்ரெண்டீஸாகச் சேர்ந்து, பின்பு எடிட்டராக உயர்ந்தவர். சினிமாத் தொழிலின் நிரந்தரமற்ற தன்மையால் மத்திய அரசு வேலை என்று இங்கு வந்து சேர்ந்தவர். தனது சர்வீஸில் எண்ணற்ற நீலப்படங்கள் பார்த்தவர். ஒரு படம் ஓட ஆரம்பித்த உடனேயே அதில் நடிக்கும் நடிகைகளின் பயோ டேட்டாவை ஒப்பிப்பார். ‘இவ பேரு ரீட்டா. சன்னிதித் தெருலே இருக்கா’ என்பார். வேறொரு படத்தை ஓட்டும் போது தென்படும் இன்னொரு நடிகையை, ‘அட, இவ மகாலட்சுமி. மசூதித் தெருவிலே குடியிருந்தா. இப்ப எங்கேன்னு தெரியலே’ என்று கூறிவிட்டு, ’மசூதித் தெரு மகாலட்சுமி’ என்று ஒரு அறிவிப்புப் போல் சொல்லுவார். கேட்பவர்களுக்குச் சிரிப்பு வந்துவிடும். இன்னொரு நடிகையின் காட்சி வரும்போது, ‘இவ பேரு ராணி… வேற மாதிரி இருக்காளே…’ என்பார். ’ஏன், என்ன ஆச்சு’ என்று கேட்டால், ராணிக்கு மாங்கா சிறிசு, இவளுக்குப் பெரிசா இருக்கே’ என்பார் வெடிச்சிரிப்புடன்.

பிலிம் சுருள்கள் அவரிடம் பேசும். விரும்பிய ஃபிரேம் தானாக முன் வந்து நிற்கும். பாம்பாட்டி தனது கூடைகளிலிருந்து பாம்புகளை அலட்சியமாக எடுத்துக் காட்டிவிட்டு, மீண்டும் கூடைகளில் போட்டு மூடுவது போல், பெட்டிகளிலிருந்து பிலிம் சுருள்களை வெளியே உருவி எடுத்துப்பார்த்துவிட்டு, மீண்டும் பெட்டிக்குள்ளேயே போட்டு மூடிவிடுவார். பிலிம் சுருள்கள் அவரது அடுத்த தொடுகைக்காக ஆவலுடன் காத்திருக்கும். சமயத்தில் பிலிம் சுருள்களிலிருந்து ஓரடி, ஒன்றரை அடி ஷாட்களை வெட்டி எடுப்பார். அவற்றை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்துச் சரிபார்ப்பார். பார்ப்பதற்கு பண்டைக்காலப் புலவர் ஒருவர் தான் எழுதிய ஓலைச்சுவடிகளை அடுக்கி வைத்துச் சரிபார்ப்பது போல் தோன்றும்.

பிரச்சனைக்குரிய அந்தப் படத்தை அவன் இரண்டாண்டுகளுக்கு முன்பு பார்த்திருந்தான். ஆலோசனைக் குழு உறுப்பினராகச் சேர்ந்த புதிது. இவ்வளவு நாட்களுக்குப் பிறகு இப்போதுதான் அதற்கு விமோசனம் கிடைத்திருக்கிறது. காமத்திருடன் என்ற பெயரில் தயாரிக்கப்பட்டிருந்த அந்தப் படத்தில் பிரபல நீலப்பட நடிகை ஷமீலா கதாநாயகியாக நடித்திருந்தாள். தற்காலத்தில் சன்னி லியோன் பரபரப்பாகப் பேசப்படுவதைப்போல் சில வருடங்களுக்கு முன் தமிழ் நாட்டில் பரபரப்பாகப் பேசப்பட்டவள் அவள். வாலிப வயோதிக அன்பர்களின் ஆசைக்குரிய பிம்பமாக அவள் இருந்தாள்.

படத்தை எடிட்டர் புரந்தரன் படம் ஓட்டும் கருவியில் போட்டுக் காட்டினார். அவனும், உதவி வட்டார அலுவலரும் பார்த்தார்கள். ஷமீலா நடித்த படம் என்பதால் அவர்கள் ஒரு விதமான படபடப்புடன் இருந்தார்கள். சட சட என்ற சத்தத்துடன் படம் ஓட ஆரம்பித்தது. முதலில் சில பெருக்கல் குறிகள் தெரிந்தன. பின்பு திடுக் என்று ஷமீலா பாத்ரூம் ஷவரில் நிர்வாணமாகக் குளிக்கும் காட்சி தோன்றியது. அவனுக்குத் திக்கென்றது. குப்பென்று வியர்த்தது. உதவி வட்டார அலுவலர் தன் கையிலிருந்த பேனாவைத் தரையில் நழுவ விட்டுவிட்டார்.

தனது பெரிய ஸ்தனங்கள் குலுங்க ஷமீலா குளிக்கிறாள். ஸ்தனம் ஒவ்வொன்றையும் தனித்தனியே கையிலெடுத்து சாவகாசமாக சோப் போடுகிறாள். குழந்தை போன்ற முகம். அதற்குச் சற்றும் பொருந்தாத பெரிய ஸ்தனங்கள். குறுகிய இடுப்பு. அதனுடைய நீட்சியாக சம்பந்தமின்றி திடீரென்று நீளும் பருத்த தொடைகள். ஆர்டர் கொடுத்து விசேஷமாகத் தயாரிக்கப்பட்ட உடல் போல் இருந்தாள். அழகிப் போட்டி என்றால் பென்சில் போன்ற ஒல்லியான ‘ஜீரோ சைஸ்’ உடம்பைக் கோரும் ஆண் மனம், காமத்துய்ப்புக்கு மட்டும் உலக்கை போன்ற உடலைக் கேட்கிறதே. இதென்ன விபரீத வேட்கை என்று அவன் யோசித்தான்.

’சின்னப்பொண்ணுதான் சார், ஹார்மோன் இஞ்சக்‌ஷன் போட்டு இப்பிடி எல்லாத்தையும் பெரிசு ஆக்கிட்டானுங்க, படுபாவிப்பசங்க’ என்றார் புரந்தரன். காமிரா அவளைச் சுற்றிச் சுற்றி வந்து தோப்புக்கரணம் போடுகிறது. திடீரென்று காமிரா அவளிடமிருந்து விலகி மேலே இருக்கும் வெண்டிலேட்டரை நோக்கி உயர்கிறது. அப்போதுதான் வெண்டிலேட்டர் வழியாக இரண்டு கண்கள் அவள் குளிப்பதைக் கவனிப்பது தெரிகிறது. இது தெரியாத அவளோ படு நிதானமாகக் குளித்தபடி இருக்கிறாள். வெண்டிலேட்டர் மூலமாக டாப் ஆங்கிளில், பாய்ண்ட் ஆஃப் வியூ ஷாட் வேறு.

அதற்கப்புறம் பாத்ரூம் கதவு தட்டப்படுகிறது. திடுக்கிட்டு, ‘யாரு’ என்று கேட்பதற்குள் கதவைத் தள்ளிக் கொண்டு, வெண்டிலேட்டர் ஆசாமி பாத்ரூமுக்குள் வருகிறான். அவள் திடுக்கிடுகிறாள். தன் கைகளால் தன் மார்புகளை அரை குறையாகத் தெரியும்படி வைத்து மூடிக்கொள்கிறாள். ’ஆணையிட்டேன் நெருங்காதே’ என்று பாடிவிடாமல் ‘வெளியே போய்விடு’ என்கிறாள். அவனோ முரட்டு ஆசாமி. அவள் மன்றாடலுக்குச் செவி சாய்க்காமல், தன் உடைகளைக் களைந்தபடி அவள் மேல் பாய்கிறான். அவள் தடுக்கிறாள். அவனோ வெறி பிடித்தவன் போல் இயங்குகிறான். அவளைக் கதறக் கதற கற்பழிக்கிறான். முதலில் எதிர்க்கும் அவள் பின்னால் இணங்கி விடுகிறாள். முதலில் அவள் கதறல் ஒலி பின்னணியில் ஒலிக்க, காமிரா தரையை நோக்கிப் போகிறது. பின்பு கதறல் ஒலி கொஞ்சம் கொஞ்சமாக மாறி இன்பக் கூச்சலாக மாறிவிடுகிறது. நகர்ந்த காமிரா ஓரிடத்தில் நிற்கிறது. அங்கே பாத்ரூம் தண்ணீர் வெளியேறும் ஜலதாரையில் பதிக்கப்பட்டிருக்கும் ஜல்லியில், தண்ணீர் சுழன்று சுழன்று வெளியேறுவது காட்டப்படுகிறது.

அதைத் தொடர்ந்து மீண்டும் மீண்டும் பல தடவை உடலுறவு நிகழ்த்தப்படுகிறது. இந்த உடலுறவுக் காட்சிகள் இன்–டோர், அவுட்-டோர் என பல இடங்களில் வைத்து, ’மொந்தாஜ்’ முறையில் பல காமிராக் கோணங்களில் காட்டப்படுகின்றன. மலைகள் போன்ற அவளது ஸ்தனங்களினூடே புறப்பட்டுப் பயணிக்கும் காமிரா, கீழ்நோக்கிச் சரேலென்று பாய்ந்து, அடிவயிற்று டெல்டா பிரதேசத்தைக் கடந்து, மதுரை திருமலை நாயக்கர் மஹாலின் தூண்களை ஒத்த அவளது பருத்த தொடைகளைக் காட்டும் போது, அது ஒரு பாய்ண்ட் ஆஃப் வியூ ஷாட் என்று தெரிகிறது. அந்த பாய்ண்ட் ஆஃப் வியூ ஷாட் முரட்டு ஆசாமியினுடையது என்றும் தெரிகிறது. அந்த ஷாட்டுக்குப் பின் அவன் அவள் மேல் பாய்ந்து அவள் உடம்பில் பல்லி போல் ஒட்டிக் கொள்கிறான்.

படம் பதினைந்து நிமிட நேரம் ஓடியது. பதினைந்து நிமிட நேரமும் இதே களியாட்டம்தான். படம் முடிந்ததும், பெரு மழை அடித்து ஓய்ந்தமாதிரி இருந்தது. அறையில் மௌனம் நிலவியது. அவனுக்கு இதயம் படபடத்தது. வாய் உலர்ந்துவிட்டிருந்தது. வட்டார உதவி அலுவலரும் ஒரு தம்ளர் தண்ணீர் குடித்தார்.

’சைலன்ஸ்’ என்ற குரல் கேட்டது. திடுக்கிட்டான். தனது நினைவுகளிலிருந்து. மீண்டான். அந்தக் குரல் கோர்ட் டவாலியினுடையது. நடுவர் வந்துவிட்டார் என்பதை அறிவிக்கும் குரல் என்று தெரிந்து கொண்டான். . பரபரப்படைந்தது கோர்ட். வர வேண்டிய எல்லோரும் வந்து விட்டிருந்தார்கள். நடுவர் உள்ளே நுழைந்ததும் அனைவரும் எழுந்து நின்றனர். அவனும் அனிச்சையாக எழுந்து நின்றான். பின்பு அவர் தன் இருக்கையில் அமர்ந்தார். எல்லோரையும் ஒரு பார்வை பார்த்தார். அனைவரும் அமர்ந்தனர்.

நடுவர் ஒரு பெண். நடுத்தர வயதில் இருந்தார். முப்பத்தைந்து வயது மதிக்கலாம். மாநிறமும் இல்லாமல், கறுப்பும் இல்லாமல் நடு நிறத்தில் இருந்தார். அழகு நிலையத்துக்குப் போகும் வழக்கம் உள்ளவர் போல. புருவத்தைத் திருத்தி இருந்தார். வரிசையான வெள்ளைப் பற்களைக் காட்டி வசீகரமாகச் சிரித்தார். ஆழ் நீலநிறப் பின்னணியில், வெள்ளைப் பூக்கள் போட்ட வண்ணப்புடவை கட்டி, அதன் மேலே நடுவர் அணியும் கறுப்புச்சீருடை அணிந்திருந்தார்.

அவனுக்குத் தர்மசங்கடமாக இருந்தது. வழக்கோ நீலப்படம் சார்ந்தது. என்னதான் நடுவர் என்றாலும் அவர் ஒரு பெண்ணாயிற்றே. அவரிடம் எப்படி நீலப்படத்தைப் பற்றிப் பேச முடியும் என்று யோசித்தான். அந்தச் சமயம் பார்த்து ’மொதல்லெ நம்ப கேஸதான் எடுப்பாங்க’ என்று சொன்ன போலீஸ்காரர் வந்தார். அவன் பக்கத்தில் உட்கார்ந்தார். அவனருகே குனிந்தார். குப்பென்று சிகரெட் நெடி வந்தது.

‘அவர் வரலையா?’ என்று கேட்டார்.

‘யாரு?’

‘உங்க ஆபீசர். அவரும் நீங்களும்தானே படம் பாத்தீங்க?’

‘ஆமா. அவருக்கும் சம்மன் போயிருக்கா?’

‘போயிருக்கு. பரவாயில்லே, நீங்க வந்திட்டீங்க இல்லே. அது போதும். ஒருத்தர் கூட வரலேன்னாதான் பிரச்சனை வரும்’

‘அவர் வந்துக்கிட்டு இருப்பார். லேட் ஆனாலும் வந்துடுவாரு’

‘நிதானமா வரட்டும்’

அவன் பதில் ஒன்றும் பேசவில்லை. தனியாக மாட்டிக் கொண்டுவிட்டோமே என்று நினைத்தான்.

அன்று விசாரிக்க வேண்டிய முதல் கேஸ் தொடர்பான காகிதங்கள் நடுவரின் முன்னால் சமர்ப்பிக்கப்பட்டன. அதைப் பார்த்துவிட்டு, ’யார் வந்திருக்கிறது?’ என்று கேட்டார். போலீஸ்காரர் அவன் கையைப் பிடித்து அழுத்தினார். உடனே அவன் தன் கையை உயர்த்திக் காட்டினான். நடுவர் தன் அழகான பெரிய வட்டக் கண்களால் அவனைப் பார்த்தார். அவனுக்கு உடல் கூசியது.

போலீஸ்காரர் சொன்ன மாதிரியே முதல் கேஸ் அவனுடையதுதான்.

அரசுத் தரப்பு வக்கீல் தனது வாதங்களை வாய்ப்பாடு ஒப்பிப்பது போல் முன் வைத்தார். சம்பவம் நடந்த அன்று குற்றம் சாட்டப்பட்டவரின் தியேட்டரில் சம்பந்தப்பட்ட படம் காட்டப்பட்டுக் கொண்டிருந்தது. உடனே ஓடும் படத்தை நிறுத்திக் கையும் களவுமாக சம்பந்தப்பட்ட படத்தைக் காவல்துறை கைப்பற்றி இருக்கிறது. அந்தப் படத்தை சென்சார் துறைக்கு அனுப்பியதில், அந்தத் துறையும் இந்தப் படம் ஆபாசப்படம்தான், இதைத் திரையிட அனுமதிக்க முடியாது என்று சான்றிதழ் வழங்கி இருக்கிறது. இதோ அந்தச் சான்றிதழ் என்று கூறி ஒரு காகிதத்தை நடுவரிடம், தட்டச்சர் மூலம் கொடுத்தார். அதை நடுவர் வாங்கிப் பார்த்தார். அப்போது மேலும் தொடர்ந்து பேசிய வக்கீல், ‘குற்றம் சாட்டப்பட்டவர், 1952ஆம் வருட சினிமாட்டோகிராபிச் சட்டப் பிரிவு 7ன்படி குற்றம் சாட்டப்பட்டவர் குற்றம் இழைத்திருக்கிறார். அதற்கான தண்டனையை அவருக்கு வழங்க வேண்டும் என்று கூறித் தனது உரையை முடித்துக் கொண்டார்.

நடுவர் ஒரு கணம் மௌனமாக இருந்தார். பின்பு தட்டச்சரிடம் ’சென்சார் துறையிலிருந்து யாராவது வந்திருக்கிறார்களா’ என்று கேட்டார். உடனே அவன் ஸ்விட்ச் போட்ட பொம்மை மாதிரி எழுந்து நின்றான். தட்டச்சர் அவனைப் பார்த்து ‘முன்னாடி வாங்க’ என்றார். அவனுக்குத் திக்கென்றது. சாவி கொடுத்த பொம்மை மாதிரி முன்னால் நடந்து போனான். எங்கே போவது என்று இலக்கு தெரியாமல் குத்துமதிப்பாக நடந்தான். தட்டச்சர் குற்றவாளிக் கூண்டைக் காட்டி, ’அங்கே போய் நில்லுங்க’ என்றார். அதிலும் ஒரு குழப்பம். குற்றவாளிக் கூண்டின் மேலே ஏறி நிற்பதா, அல்லது பக்கத்தில் நின்றால் போதுமா என்று யோசித்தான். பின்பு ஒரு வழியாக முடிவெடுத்து குற்றவாளிக் கூண்டின் மேலே ஏறி நின்றான்.

நடுவர் அவனை ஒரு முறை கூர்ந்து பார்த்தார். அவனுக்குள் என்னமோ செய்தது. அப்போது ஒருவர் அவனிடம் வந்து, ‘சொல்வது எல்லாம் சத்தியம்’ என்று சொல்லச் சொன்னார். சொன்னான். வேத நூலின் மேல் கை வைத்து, ’நான் சொல்வதெல்லாம் உண்மை, உண்மையைத் தவிர வேறில்லை’ என்று சினிமாக்களில் வருவது போல் சொல்லுமாறு அவனிடம் கேட்கவில்லை. பின்னர், நடுவர் அவனிடம், அவன் பெயர் என்ன என்று கேட்டார். சொன்னான் .பின்பு, சம்பந்தப்பட்ட படம் ஆபாசப்படம்தானா என்று கேட்டார். ஆமாம் என்றான். அதன் பிறகு, கோர்ட்டில் இருந்த யாரையோ பார்த்து, இவரை விசாரிக்க விரும்புகிறீர்களா என்று வினவினார். நடுவர் பார்வை போன திசையில் அவன் பார்த்தான். அங்கே கறுப்பு உடை தரித்து நான்கு வக்கீல்கள் உட்கார்ந்திருந்தனர். அந்த நான்கு பேரில் ஒருவர் எழுந்து நின்றார். நடுவரைப் பார்த்துக் கை உயர்த்தி, ‘யுவர் ஹானர், லெட் மி ஆஸ்க் ஹிம் சம் க்வெஸ்சன்ஸ்’ என்றார். நடுவர் ’ப்ரொஸீட்’ என்றார்.

அவர் தன் இருக்கையில் இருந்து எழுந்து நடந்தார். அவரைப் பார்த்ததும் கோர்ட்டில் நிசப்தம் நிலவியது. அனைவரும் அவரையே பயபக்தியுடன் பார்த்தனர். வயது எழுபதுக்கு மேல் இருக்கும். தோல் சுருங்கிய நீண்ட முகமும், இடுங்கிய கண்களுமாக – சட்டென்று பார்ப்பதற்கு – டிராகுலா படங்களில் நடித்துப் புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டோஃபர் லீயை நினைவூட்டினார். அவர் அணிந்திருந்த நீண்ட கறுப்பு அங்கியும் ட்ராகுலா அணியும் நீண்ட அங்கியை ஞாபகப்படுத்தியது. நிதானமாக காற்றில் மிதப்பது போல் முன் நகர்ந்து வந்தார். அங்கிக்குக் கீழே கால்கள் தெரியாததால், அவர் நடக்கிறாரா அல்லது ட்ராலியின் மேல் நின்றுகொண்டு ஊர்ந்து வருகிறாரா என்பதை அனுமானிக்க முடியவில்லை. அனுபவம் வாய்ந்த மூத்த வக்கீலாக இருப்பார் என்று தோன்றியது. பெரிய வக்கீலாகப் பார்த்துதான் தியேட்டர் முதலாளி கேஸ் ஆட வந்திருக்கிறார் என்று நினைத்தான்.. இவரை எப்படி நான் சமாளிக்கப் போகிறேனோ என்று யோசிக்கையில் மனம் பதற்றம் அடைந்தது.

அவர் அவன் அருகில் வந்து நின்றார். சன்னமான குரலில் என்னமோ கேட்டார். அது அவன் காதுகளில் விழவில்லை. ‘பார்டன்’ என்றான்.

‘நீங்கள்தான் இந்தப் படத்தைப் பார்த்தீர்களா?’

‘நானும், எடிட்டரும், வட்டார உதவி அலுவலரும் பார்த்தோம்’

‘கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொன்னால் போதும். வியாக்யானங்கள் பேசக்கூடாது.’

’சரி’ என்று தலையாட்டினான்.

‘நான் கேட்கும் கேள்விக்கு சுருக்கமாக ஓரிரு வார்த்தைகளில் பதில் சொல்ல வேண்டும்’ என்று சொல்லிவிட்டுச் செருமினார்.

‘இந்தப் படத்தை நீங்கள் பார்த்தீர்களா?’

‘ஆமாம்’

‘இந்தப் படத்தை ஆபாசம் என்று எதை வைத்துச் சொல்கிறீர்கள்?’

‘இதில் வரும் காட்சிகள் ஆபாசமாக இருக்கின்றன’

‘உதாரணத்துக்கு ஒன்றைச் சொல்ல முடியுமா?’

’இதில் ஒரு பெண் நிர்வாணமாகக் குளிக்கிறாள்’

குளிப்பவர்கள் நிர்வாணமாகத்தானே குளிப்பார்கள். அது எப்படி ஆபாசம் ஆகும்? என்று ஜோக் அடித்தார். பின்பு, ‘ஒரு மனிதர் ஒரு பெண் முழு நிவாணமாகக் குளிப்பதை ஒரு ஓவியமாக வரைந்தார். அதை ஆபாசம் என்று யாரும் சொல்லவில்லை. அதை மாபெரும் கலைப்படைப்பு என்று கொண்டாடுகிறார்கள், தெரியுமா உங்களுக்கு?’ என்று கேட்டார்.

அவன் மௌனமாக இருந்தான்.

‘ரெம்ப்ராண்ட் வரைந்த ’குளிக்கும் பெண்’ என்ற ஓவியம்தான் அது’ என்று சொல்லிவிட்டு, ’ஆபாசம் நாம் பார்க்கும் பொருளில் இல்லை. நம் மனதில்தான் இருக்கிறது’ என்று சாக்ரடீஸ் போல் தத்துவம் பேசினார். பிறகு,

’சரி, நம் பிரச்சனைக்கு வருவோம். ஒரு பெண் நிர்வாணமாகக் குளிக்கிறாள். அப்புறம்?’

அவன் பார்வை நடுவர் மேல் பட்டது. அவர் ஏற்கெனவே பெரியதாக இருந்த தனது வட்டமான கண்களை இன்னும் பெரிதாக அகல விரித்து அவனையே கவனித்துக் கொண்டிருந்தார். அவனுக்குக் குரல் உள்ளே இழுத்துக் கொண்டது. எச்சிலை விழுங்கி உலர்ந்த வாயை ஈரப்படுத்திக் கொண்டான்.

‘கோ அஹெட்’

‘வெண்டிலேட்டர் வழியாக ஒரு ஆண் அவள் குளிப்பதைப் பார்க்கிறான்’

‘சரி’

‘பிறகு பாத்ரூமுக்கே வந்து ….’

‘வந்து’’’?’

‘அவளை ரேப் செய்கிறான்’

‘நல்லது. அவன் அவளை நேரடியாகக் கற்பழிக்கிறானா? அல்லது சஜஸ்டிவாகக் கற்பழிக்கிறானா?’

‘நேரடியாகக் கற்பழிக்கிறான்’

‘யோசித்துச் சொல்லுங்கள். ஒரு பெண் நிர்வாணமாக மல்லாந்து படுத்திருக்கும்போது, அவள் மேல் ஒரு ஆண் நிர்வாணமாகக் குப்புறப் படுத்தால், அவள் நிர்வாண உடலை ஆணின் உடல் மறைத்துவிடும். பின்பு நிர்வாணமான ஆணின் முதுகுதான் காமிராவுக்குத் தெரியும். பெண்ணின் உடல் தெரியாது. ஆணின் நிர்வாண முதுகு காட்டப்பட்டால் அது ஆபாசம் ஆகாது. அதுதான் சஜஸ்டிவ் ரேப்’

இந்த விஷயம் அவனுக்கும் தெரியும். இருந்தாலும் வியாக்யானம் பேசக்கூடாது என்பதால் மௌனமாக இருந்தான்.

‘ஆனால், இந்தப் படத்தில் நேரடியாகவே இருவரின் நிர்வாண உடல்களும் காட்டப்படுகின்றன. உடலுறவு கொள்கின்றன. சஜஸ்டிவ் எல்லாம் காற்றில் பறக்கிறது’ என்று முடிந்த வரை வியக்யானம் தவிர்த்த தன் பதிலைச் சொன்னான்.

’சரி அப்புறம் என்ன நடந்தது. நீங்கள் பார்த்ததை அப்படியே உள்ளது உள்ளபடி சொல்ல முடியுமா?’

அவனுக்குச் சங்கடமாக இருந்தது. அதை எப்படிச் சொல்வது? நடுவரின் கண்கள் அவன் மேல் நின்றன. கோர்ட்டிலிருந்த அனைவரின் கண்களும் அவன் மேல்தான் இருந்தன. தயங்கி நின்றான்.

அவன் தயக்கத்தைப் புரிந்து கொண்ட நடுவர், அவனையும், வக்கீலையும், அரசுத்தரப்பு வக்கீலையும், தட்டச்சரையும் தவிர, மற்ற அனைவரையும் கோர்ட்டுக்கு வெளியே போகுமாறு கூறினார். உடனே அனைவரும் வெளியே போனார்கள்.

‘ஆர் யு கம்ஃப்ர்ட்டபிள் நவ்?’ என்று அவனிடம் கேட்டார் நடுவர்.

‘ஆமாம்’ என்று தலையசைத்தான்.

‘தென் கோ அஹெட்’

‘கமான், கோ அஹெட்’ என்றார் வக்கீல்.

‘அவன் தன் கண்களை மூடிக் கொண்டு அந்தப் படத்தில் வந்த களியாட்டக் காட்சிகளை அப்படியே விவரித்துச் சொன்னான். முதலில் தமிழில் சொல்ல ஆரம்பித்தான். பின்பு, சொல்லும் போது சொல்லக் கூசும் விஷயங்களை ஆங்கிலத்தில் சொன்னான்.

கோர்ட்டில் கொஞ்ச நேரம் மௌனம் நிலவியது. எங்கோ ஒரு சிட்டுக் குருவி சிடுசிடுத்தது.

நடுவர் எவ்வித உணர்ச்சியையும் காட்டாமல் மௌனமாக இருந்தார். வக்கீலைப் பார்த்தார்.

‘இவர் சொல்வதைப் பார்த்தால் இது உண்மையிலேயே ஆபாசப்படம்தான் என்று தோன்றுகிறது. சந்தேகமே இல்லை’ என்று வக்கீல் ஒரு முறை தனக்குத்தானே பேசிக்கொள்வது போல் சொன்னார். பின்பு நடுவரிடமும் அதையே சொன்னார்.

‘இதைப் பொது மக்களுக்குக் காட்டக் கூடாதுதான்’ என்று ஒரு தீர்ப்பு வழங்குவது போல் சொன்னார்.

அனைவருக்கும் வியப்பாகப் போய் விட்டது. இது ஆபாசப்படம் இல்லை என்று வாதாட வந்தவர் ஆபாசம்தான் என்று ஒப்புக் கொள்கிறாரே. என்ன ஆச்சு இவருக்கு? கேஸ் அரசுத் தரப்புக்குச் சாதகமாக மாறிவிடுமா? அவனுக்கு நிம்மதி வந்த மாதிரி இருந்தது.

நடுவர் ஒன்றும் புரியாமல் வக்கீலையே பார்த்தார்.

’ஆனால் ஒரு விஷயம். அதைத் தெளிவு படுத்திக் கொண்டுதான் இந்த வழக்கில் ஒரு முடிவுக்கு வர முடியும்’ என்றார் வக்கீல்.

அடப்பாவி, புதிதாக ஏதாவது குண்டைத் தூக்கிப்போடப் போடுகிறாரோ?

அவனுக்கு வியர்த்துவிட்டது. தான் முக்கியமான கட்டத்துக்கு வந்திருப்பதாக நினைத்தான். இப்போது இவன் சொல்லும் பதிலை வைத்துத்தான் இந்த கேஸின் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படப் போகிறது..

‘இந்த பிலிம் சுருள் உங்களிடம் எப்படி வந்தது?’

சற்று நேர யோசனைக்குப் பின் அவன் சொன்னான்: ’ஒரு போலீஸ்காரர் சாக்குப் பையில் போட்டுக் கொண்டு வந்தார்’

‘சரி, அப்போது அந்த சாக்குப்பையில் அரக்கு சீல் வைக்கப்பட்டிருந்ததா, இல்லையா?’

‘ஆமாம் வைக்கப்பட்டிருந்தது’

‘அரக்கு சீலை உடைத்துத் தானே சாக்குப்பையைத் திறந்து பார்த்தீர்கள்/’

ஆமாம்’

‘படத்தைப் பார்த்து முடித்த பிறகு மீண்டும் அதே சாக்குப் பையில் வைத்து மூடி மீண்டும் அரக்கு சீல் வைத்தீர்கள், சரிதானா?’

‘இப்போது நன்றாக யோசித்துச் சொல்லுங்கள். நீங்கள் சாக்குப் பையைத் திறந்த போது அதில் எத்தனை இடங்களில் அரக்கு சீல் வைக்கப்பட்டு இருந்தது. பின்பு மீண்டும் மூடியபோது எத்தனை இடங்களில் அரக்கு சீல் வைத்தீர்கள்?’

அரசுத் தரப்பு வழக்கறிஞர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.

‘யுவர் ஹானர், ஐ அப்ஜெக்ட் திஸ். இது வழக்குக்குச் சம்பந்தமில்லாத விஷயம். வேண்டுமென்றே எதிர் தரப்பு வக்கீல் என் கட்சிக்காரரைக் குழப்பி ஆதாயம் தேடுகிறார்.’

’இல்லை யுவர் ஹானர், இந்த வழக்கை ஒரு முடிவுக்குக் கொண்டு வரும் முக்கியமான விஷயமே இதில்தான் இருக்கிறது’

‘ப்ரொஸீட்’

‘சொல்லுங்கள். போலீஸ்காரர் கொண்டு வந்து கொடுத்த சாக்குப்பை பேக்கிங்கில் எத்தனை அரக்கு சீல்கள் வைக்கப்பட்டிருந்தன?’

’மாப்பு வச்சாண்டா ஆப்பு’ என்று மனக்குறளி அலறியது. இரண்டு வருஷங்களுக்கு முன் பிரிக்கப்பட்ட சாக்குப்பையில் எத்தனை அரக்கு சீல் இருந்தது என்று இப்போது எப்படிச் சொல்லமுடியும்?’

சட்டென்று அவனுக்கு ஞாபகம் வந்தது. சாக்குப் பையைப் பிரிக்கும் போதும், மீண்டும் மூடி சீல் வைக்கும் போதும் எத்தனை அரக்கு சீல்கள் இருந்தன என்பதைக் குறித்துக் கொள்வார்கள். பின்பு அறிக்கை தயார் செய்யப்படும்போது அதில் அதைக் குறிப்பிடுவார்கள்.

‘அதை நாங்கள் எங்கள் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறோமே’ என்று முனகினான் அவன்.

வக்கீல் தட்டச்சரிடம் கையை நீட்ட அவர் சில காகிதங்களை எடுத்து அவரிடம் கொடுத்தார்.

அந்தக் காகிதங்களில் ஒன்றை அவனிடம் கொடுத்த வக்கீல் அமைதியாகக் கேட்டார்: ‘பாருங்கள், இதுதான் நீங்கள் பேக்கிங்கைப் பிரித்தபோது குறித்துக் கொண்ட தகவல். ‘பிரிக்கும் போது மொத்தம் நான்கு அரக்கு சீல்கள் இருந்தன. மீண்டும் பேக் செய்தபோது ஐந்து சீல்கள் வைக்கப்பட்டன’

அவன் அதை வாங்கிப் பார்த்தான். அவர் சொன்னது சரிதான். அதில் அப்படித்தான் இருந்தது.

‘ஆமாம். சரிதான். இப்போது ஞாபகம் வந்துவிட்டது. பிரிக்கும் போது நான்கு சீல்கள். பேக் செய்யும் போது ஐந்து சீல். கரெக்ட்தான்’ என்றான்.

‘சரி, அது கரெக்ட் என்றால், இது?

என்றபடி இன்னொரு காகிதத்தை நீட்டினார். அதை வாங்கிக் பார்த்தான். அது போலீஸ் ஸ்டேஷனில் தயார் செய்யப்பட்டிருந்த அறிக்கை. அதில் அவர்கள் பிலிம் சுருளை பேக் செய்து சென்சார் அலுவலகத்துக்கு அனுப்பிய போது, ஐந்து அரக்கு சீல் வைத்ததாகவும், சென்சார் அலுவலகத்திலிருந்து திரும்பி வந்த போது நான்கு சீல்கள் வைக்கப்பட்டிருந்ததாகவும் பதிவு செய்யப்பட்டிருந்தது.

‘இதில் எது சரி?’

அவனுக்குக் குழப்பமாக இருந்தது. இரண்டு அறிக்கைகளுமே பச்சை மசியால் கையழுத்திடப்பட்டிருந்தன. பச்சைமசி சீசரின் மனைவியைப் போன்றது. சந்தேகத்துக்கு அப்பாற்பட்டது.

பதிலேதும் பேசாமல் குழப்பத்துடன் நின்றான் அவன்.

‘தட்டச்சில் நேர்ந்த குளறுபடியாக இருக்கும்’ என்றான் அவன். கோர்ட் தட்டச்சரின் முகம் கோபத்தால் சிவந்தது.

‘சரி, அப்படியே இருந்தாலும், இந்த இரண்டில் ஏதாவது ஒன்றுதான் சரியாக இருக்க வேண்டும், இல்லையா? அது எது?’ இரண்டில் ஏதாவது ஒன்று தப்பா அல்லது இரண்டுமே தப்பா?’

அவன் பதில் தெரியாமல் நின்றான்.

‘யுவர் ஹானர். ஃபிலிம் சுருள் பேக்கிங்கில் ஏற்பட்டிருக்கும் குழப்பம் ஒரு சதி நடந்திருப்பதை வெட்ட வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

என் கட்சிக்காரர் அப்பாவி. நிரபராதி. அவர் யதார்த்தமாக ஒரு கறுப்பு வெள்ளைப் படத்தைத் தன் தியேட்டரில் போட்டிருக்கிறார். அதில் இப்படி இண்டர்பொலேட் செய்து ஒரு ஆபாசப்படத்தை யாரோ வைத்துவிட்டார்கள் என்பது அவருக்குத் தெரியாது. எனவே இந்த இண்டர்பொலேஷனுக்கு இவரைப் பொறுப்பாக்க முடியாது.. இதில் சதி நடந்திருக்கிறது என்பதற்கு இந்த அரக்கு சீல் எண்ணிக்கையில் நடந்த குளறுபடியே ஆதாரம். இவரைப் பழிவாங்குவதற்காக இவரது எதிரிகள் யாரோ செய்த குற்றம் இது. அதற்கும் இவருக்கும் சம்பந்தம் இல்லை’ .

உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிக்கும் வரை, இவர் குற்றம் புரிந்தவர் என்பது சந்தேகத்துக்குரியதே. எனவே, சந்தேகத்தின் பலனை என் கட்சிக்காரருக்கு சாதகமாக்கி இந்த வழக்கைத் தள்ளுபடி செய்து அவரை விடுவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். தட்ஸ் ஆல் யுவர் ஹானர்’

என்று சொல்லிவிட்டுத் திரும்பினார் வக்கீல். தனது கறுப்பு அங்கி காற்றிலசைய, தரையில் கால் பாவாமல் மிதந்து செல்வது போல் நிதானமாக நகர்ந்து போனார். அவன் அவரையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.

ஆவணங்களில் கையெழுத்துப் போட்டுவிட்டு, கோர்ட்டை விட்டு அவன் வெளியேறுகையில் மணி பிற்பகல் இரண்டு ஆகிவிட்டிருந்தது. அவனுக்குப் பசியே இல்லை. எரிச்சலுடன் நேரே நடந்தான். புளிய மரத்தடியில் போலீஸ்காரர் நின்றிருந்தார். இவனைப் பார்த்ததும், ‘என்ன சார் இப்படி சொதப்பிட்டீங்களே’ என்றார். பின்பு ‘வாங்க சாப்பிட்டுவிட்டுப் போகலாம்’ என்றார். அவன் ‘பரவாயில்லே’ என்றான். ‘சரி வாங்க, பஸ் ஸ்டாண்டிலே ட்ராப் பண்ணிடறேன்’ என்றார்.

அவருடன் பின் சீட்டில் பைக்கில் உட்கார்ந்து போய்க் கொண்டிருந்த அவனுக்கு மனம் ஒரு நிலையில் இல்லை. இனம் புரியாத குற்ற உணர்வில் ஊசலாடிக்கொண்டிருந்தது.

‘தியேட்டர் முதலாளி ஒண்ணாம் நம்பர் ஃபிராடு. இப்படி பிட் படம் போட்டே கோடீஸ்ரவரன் ஆயிட்டான். முதல்லே டெண்ட் கொட்டாய்தான் வச்சிருந்தான். இன்னிக்கு பெரிய தியேட்டர் ஓனர். இருபது வருஷமா இதே பிசினஸ்தான். ஒவ்வொரு தடவையும் போலீஸ்லே மாட்டிக்குவான். மொதல்லே போலீஸ்கிட்டே காம்ப்ராமைசுக்கு வருவான். எப்படியாவது செட்டில் பண்ணப்பாப்பான். முடியலேன்னா, அப்புறம் நல்ல வக்கீலாப் பாத்து வச்சு வாதாடி ஜெயிச்சுடுவான். அவன் ஜாலியாத்தான் இருப்பான். கேஸ் அந்தரத்துலெ தொங்கும். நீங்களும் நானும்தான் மண்டையைப் பிச்சுக்கணும்’

என்று பேசியவாறே வண்டியை ஓட்டிக் கொண்டிருந்த போலீஸ்காரர், திடீரென்று சாலையில் ஓரம் கட்டினார். வண்டியை ஒரு ஓட்டலின் வாசலில் நிறுத்தினார். பின் சீட்டில் இருந்து அவன் இறங்கி நின்றான். அவர் தன் வண்டியை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு வந்த அந்த ஒரு நிமிட இடைவெளியில், அவன் பார்வை எதிர்ச்சுவரில் பட்டது. அதில் ஒட்டியிருந்த ஒரு சுவரொட்டியின் மேல் நிலைத்தது. அது ஷமீலா நடித்த படம். இது வேறு ஒரு படம். பிட் படங்கள் இல்லாமல் முழு நீளப்படங்களிலும் ஷமீலா நடித்திருக்கிறாள். அதில் ஒன்று இது. போஸ்டரில் ஷமீலா அரைகுறை ஆடையில் இருந்தாள். ஹார்மோனால் செறிவூட்டப்பட்ட அங்கங்கள் பிதுங்கித் தெரிய, ஒருக்களித்துப் படுத்திருந்தாள். வெள்ளந்தியாகச் சிரித்துக் கொண்டு.

#########

எனக்கும் அப்படித்தானுங்க தோணுச்சு! ( சிறுகதை ) / வா.மு.கோமு

images (4)

வரதராஜனுக்கு நேரம் ஆகியபடியிருந்தது. வீட்டில் அம்மா ஒருத்தி மட்டும் தான். நேரம் இரவு பத்தையும் தாண்டிவிட்டது. கிட்டத்தட்ட அந்த குறுநகரில் எல்லாக் கடைகளும் சாத்தப்பட்டுக் கொண்டிருந்தன. இவன் பேருந்து நிறுத்தத்தில் காத்து நின்றிருந்தான். அம்மா இவன் போய் வீடு சேர்ந்து வண்டியை நிறுத்தும் வரை தூங்காது. அம்மாவுக்கு ப்ரஷர் வேறு இருக்கிறது. மாத்திரையை சரியான நேரத்திற்கு போட்டு விட்டு தூங்க வேண்டும். அம்மாவுக்கு ஒரு செல்போனை வாங்கி கொடுத்து விட்டால் இந்த மாதிரி சமயங்களில் வர தாமதமாகுமெனச் சொல்லி விடலாம்.

எப்படியும் சீதா வந்து நிறுத்தத்தில் இறங்க பதினொன்று கூட ஆகிவிடும். சற்றும் முன்பாகத்தான் அவள் எண்ணிற்கு அழைத்துப் பேசியிருந்தான். பேருந்து இறைச்சலில் அவள் சொன்னது, ‘இன்னம் அரைமணி நேரத்துல வந்துடுவேங்கண்ணா!! அண்ணா சாரிண்ணா’. இவன், சாரியெல்லாம் எதுக்கு சீதா! என்று சொல்லி விட்டு வைத்து விட்டான். சீதாவை இதற்கும் முன்பாக இரண்டுமுறை சந்தித்திருக்கிறான் வரதராஜன். அதுவும் இவன் கீதா அறிமுகப்படுத்திய பின் தான்.

என்னோட ஆள் தான் வரதராஜன், என்று சீதாவிடம் முதன்முதலாக அறிமுகப் படுத்துவாள் என்று நினைத்திருந்தவனுக்கு அன்று ஏமாற்றம் தான். என்னோட பெஸ்ட் ஃப்ரண்டு, எனக்குன்னா எது வேணா செய்யும், என்றே அறிமுகப்படுத்தினாள் கீதா. அது இவனுக்கு ஏன் என்று தான் தெரியவேயில்லை.

கீதாவும் சீதாவும் ஒரே கம்பெனியில் தான் வேலை செய்கிறார்கள். சீதாவுக்கு சொந்த ஊர் திருநெல்வேலியாம். இப்படி வெளியூர்களில் இருந்து பெண்கள் பலர் இங்கே திருப்பூர் பகுதிகளுக்கு வந்து அறையெடுத்து தங்கி பணிக்குச் சென்றுவந்து கொண்டுதான் இருந்தார்ர்கள். சீதாவை இருள் சூழ்ந்த நேரத்தில் கீதா அன்று அறிமுகப்படுத்தினாள். இவன் உயரத்திற்கே கீதா இருப்பாள். ஆனால் சீதா இவன் தோள்பட்டைக்குத்தான் வருவாள் போலிருந்தது. போக சீதா மாநிறமா? சிவப்பா? என்றுகூட இரவு நேரத்தில் இவனால் கண்டறிய முடியவில்லை. ஆனால் கீதாவை விட சாப்பாடு நன்றாய் சாப்பிடுகிறாள் போல! என்று நினைத்துக் கொண்டான். மஞ்சள் வர்ணத்தில் சுடிதார் அணிந்திருந்தாள்.

அவளின் அறை ஒரு காம்பெளண்டினுல் பின்பக்கத்தில் இருந்தது. சாலையோரத்தில் முகப்பில் வீட்டு ஓனர் பங்களாவில் தங்கியிருந்தார். அன்று அந்த சாலையில் நின்று தான் அவசரமாய் பேசி விடைபெறுவதில் கீதா குறியாய் இருந்தாள். இரண்டாவது முறையாக கீதா இவனை பகலில் ஒரு விடுமுறை நாளில் கூட்டிப் போனாள். பத்துக்கு பத்து அளவிலான சிறிய அறை தான் அது. பெண்கள் தங்கியிருக்கும் அறைகளுக்குள் இவன் முன்பாக எங்குமே சென்றதில்லை. உள்ளே வெய்யில் வேக்காட்டிலும் வேறு எதோ பூவின் மணம் வீசிக் கொண்டிருந்தது. போக முகம் பார்க்கும் கண்ணாடி, சீப்பு, பவுடர் டப்பா என்று ஒரு ட்ரேயில் இருந்தன.

காலையில் சிக்கன் ஒருகிலோ எடுத்து வந்திருந்தாளாம் சீதா. இவளுக்கு போனைப் போட்டு அறைக்கு மதியம் வரச் சொல்லி விட்டாள். இவள் வரதராஜனை வண்டியை எடுத்துக் கொண்டு வரச் சொல்லி விட்டாள். இவனுக்கு சிக்கன் விசயம் அறைக்கு வந்தபிறகுதான் தெரிந்தது. சும்மா எப்படி வாயை நனைக்காமல் சிக்கனில் கை வைப்பது? இவன் ஒன்றும் பேசாமல் சுவற்றில் சாய்ந்து அமர்ந்து அவளின் சூட்கேஸ் மீது கிடந்த விகடன் இதழை எடுத்து புறட்ட ஆரம்பித்தான்.

இரண்டு பெண்கள் சேர்ந்து கொண்டால் பேச்சுக்கு குறைச்சலாகவா இருக்கும்? கம்பெனி விசயங்களை அலாசு அலாசென அலாசினார்கள். மேனேஜருக்கு வர வர திமுறு ஜாஸ்த்தி ஆயிட்டே இருக்குடி! என்று பேசினார்கள். அடிக்கடி குமாரு, குமாரென பேசிக் கொண்டார்கள். இவன் பத்திரிக்கையை புறட்டுவதை நிறுத்தி அவர்களைப் பார்த்தான். இவன் பார்ப்பதைக் கண்ட கீதா இவனுக்கு பதில் சொன்னாள். ‘குமாரு கம்பெனில இவளோட ஆளு!’

ஆமாம் பின்னே வெளியூரிலிருந்து வந்து தங்கியிருக்கும், சம்ப்பாதிக்கப் போகும் பெண்ணுக்கு ஒரு காதலன் இல்லாமல் இருந்தால் எப்படியிருக்கும்? போரடிக்குமே சும்மா இருந்தால்! என்று இவனாக மனதில் நினைத்துக் கொண்டு பத்திரிகையில் ஆழ்ந்தான். ஆனால் கீதா விட்டபாடில்லை இவனை. ‘இவுங்க ரெண்டு பேரும் இன்னம் ரெண்டொரு மாசத்துல கல்யாணம் பண்ணிக்கப் போறாங்க வரது. அப்புறம் இந்த ரூமை காலி பண்ணிட்டு அவன் ரூமுக்கு திருப்பூரே போயிடுவா.’ என்று சொல்லிக் கொண்டிருகையில் சீதா தன் செல்போனை எடுத்துக் கொண்டாள். ‘யாருக்குடி போன் பண்றே? குமாருக்கா?’ என்ற கீதாவுக்கு ஆமாமென தலையை ஆட்டினாள் சீதா.

எதிர்முனையில் ஆள் எடுத்ததுமே கீதா இவனிடம் ஆரம்பிப்பது மாதிரியே. ‘எங்கிருக்கீங்க?’ என்றாள். பேசிக்கொண்டே அறையை விட்டு வெளியே சென்றாள் சீதா. சீக்கிரமாய் திரும்பி வந்தவள், ‘குமாரு கஜலட்சுமியில படம் பாத்துட்டு இருக்கான். அவன் பேசுறதே கேக்க மாட்டீங்குது!’ என்று சொல்லியபடி வந்து அமர்ந்தாள்.

‘நீயும் போயிருக்கலாமேடி! ஜம்முனு உக்கோந்து ஞாயித்துக்கிழமையும் அதுவுமா ஜாலியா படம் பாக்கிறதை உட்டுட்டு’ என்றாள் கீதா அவளிடம்.

‘பாத்தீல்லடி வெளிய, ஆறுசெட் துணிமணிகளை துவைச்சி காயப் போட்டிருக்கேன். குமாரு கூட போயி படம் பார்த்துட்டு இருந்தா அழுக்குத் துணி போட்டுட்டு தான் கம்பெனிக்கி வரணும். சரி சாப்பிடலாமா?’ என்றாள். ‘சரி நீங்க சாப்பிடுங்க, நான் வண்டியெடுத்துட்டு போயிட்டு வந்துடறேன்’ என்றான் வரதராஜன்.

‘எங்கெ சரக்கடிக்கிறக்கா?’ என்றாள் கீதா. இவன் ஒன்றும் சொல்லாமல் எழுந்தான்.

‘நீங்க அங்கியே அடிச்சுட்டு வர்றப்ப எங்களுக்கு மூனு பீர் வாங்கிட்டு வாங்க! சீக்கிரம் வரணும் பாத்துக்கங்க! எனக்கு பசி இப்பவே!’ என்றாள் கீதா. கீதா எப்பாவது இவனோடு அமர்ந்து பீர் அருந்துவாள். ஆனால் இன்று அவள் தோழி சீதாவோடு இருக்கையில் குடி பற்றி பேசவே மாட்டாள் என்றுதான் நினைத்திருந்தான் வரதராஜன். ஆனால் அவளோ அவளுக்கும் சேர்த்து வாங்கி வரச் சொல்லிவிட்டாள். இவன் சரி என்று சொல்லி விட்டு கிளம்பினான்.

இவன் டாஸ்மார்க் பாரில் அமர்ந்து அருந்திக் கொண்டிருக்கையில் கீதாவின் அழைப்பு வந்தது. வரும்போது பெப்ஸி ஒன்னரை லிட்டர் கேன் வாங்கி வரவேண்டுமாம். இவனிடம் பைசா அதற்குத் தேறாது தான். மூன்று பியர் பாட்டில்களோடு அறைக்கு இவன் திரும்பி வந்ததும் கீதா முதலாக அதைத்தான் கேட்டாள். இவன் ‘மறந்துட்டேன் சாரி’ என்றான்.

‘உங்க சாரியைக் கொண்டி குப்பைக்கூடைல போடுங்க! ஒன்னு சொன்னா மறந்துட்டேன்னு சொல்லிடறது. சரி நீங்க முதல்ல சாப்டுட்டு கிளம்புங்க! நாங்க அப்புறம் சாப்பிட்டுக்கிறோம். ஈவனிங் நான் பஸ்சுல வந்துடறேன்.’ என்றாள். பாட்டில்களை அறையின் ஓரத்தில் வைத்து விட்டு,’கடையிலயே சாப்டுட்டேன் கீதா, நான் கிளம்புறேன்’ என்று சொல்லி விட்டு வெளியேறினான். கீதாவோ இல்லை சீதாவோ எதாவது சொல்லுவார்கள் என்று எதிர்பார்த்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. சே! வெட்டிச் செலவு செய்யவே வந்த மாதிரி ஆயிடுச்சே!, முனகிக்கொண்டே வண்டியைக் கிளப்பினான்.

பின்பாக இப்போது தான் சீதாவுக்காக இங்கே காத்து நின்றிருக்கிறான் இரண்டு மாதங்களுக்குப் பிறகாக. இதுவும் கீதாவின் ஏற்பாடு தான். சீதா திருநெல்வேலியில இருந்து கிளம்பி இங்கே வந்து சேர எப்பிடியும் மணி பத்தாயிடும் வரது. நீதான் பார்த்து கூட்டிட்டு வந்து அவ ரூம்ல விடணும், என்று காலையிலேயே கீதா இவனிடம் சொல்லியிருந்தாள். இவனைப் பற்றி சுத்தமாய் தெரிந்து வைத்திருந்தாள் கீதா. இவனும், அதுக்கென்ன! கூட்டிட்டு வந்து விட்டுடறேன்! என்றே சொலியிருந்தான். ஒன்பதரை மணி போல ஒரு கோட்டர் போட்டது. கொஞ்சம் திருகலாய் இருந்தது. எதற்கும் இருக்கட்டுமே என்று ஒரு கோட்டரையும் தண்ணி பாக்கெட்டும் வாங்கி வண்டி டேங்க் கவரில் வைத்திருந்தான். வெறும் வயிறாய் இருக்க பசி வேறு அவனை வாட்டியது. நல்ல காரமாய் மீன் சில்லி வீசலாம்! ஆனால் எட்டரை மணிக்கே தள்ளுவண்டிக்காரர்கள் பொருள்களை முடித்து விட்டு கிளம்பி விடுவார்கள்.

வந்து வந்து நின்று கிளம்பிக் கொண்டிருக்கும் பேருந்துகளில் சீதா ஏதேனுமொன்றில் இறங்கி விடுவாளென பேருந்துகளின் படிக்கட்டுகளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். ஒருவழியாய் சீதா கையில் ஒரு பெரிய பேக்கோடு பேருந்தில் வந்து இறங்குகையில் சரியாய் மணி பதினொன்று தான். கூடவே ஒன்றிரண்டு பேர் இறங்கினார்கள். பேருந்திலிருந்து இறங்கியதுமே இவனைப் பார்த்து விட்ட சீதா பேக்கை தூக்கிக் கொண்டு இவனிடம் வந்ததும் மீண்டும், ‘சாரிண்ணா! கீதா வேற போன்ல திட்டிட்டே இருந்தா இப்பக் கூட! உங்ககிட்ட எதாச்சும் சொன்னாளுங்களா அண்ணா?’ என்றாள். இவனுக்கு அவள் காலையில் சீதா வரும் தகவலை சொன்னதோடு சரி. இப்போது வரை அவள் இவனுக்கு போன் செய்யவேயில்லை. அதுவும் கூட ஆச்சரியமாய் இருந்தது இவனுக்கு.

‘நைட்டுக்கடையில சாப்டுட்டு போயிடலாம் சீதா’ என்றான் இவன்.

‘ஐய்யோ வேண்டாம்ணா! போலாம்ணா. வீட்டுல ரவை இருக்கு போயி செஞ்சுக்கறேன்’

‘இல்ல எனக்கு பசி கொன்னெடுக்குது. பேசாம வண்டியில ஏறு சீதா. கடைசிக்கி ஆளுக்கு ரெண்டு புரோட்டாவாச்சிம் சாப்டுட்டு போயிடலாம்’ என்றதும் மேலே பேசாமல் இவனுடன் இரவுக் கடைக்கு வந்து மூன்று விரலில் புரோட்டாவை எடுத்து சாப்பிட்டாள். ‘நல்லா அள்ளிப் பூசு சீதா’ என்று சொல்லலாமென நினைத்தான் வரதராஜன். ஆனால் அவள் எப்படி எடுத்துக் கொள்வாளோ! என்று விட்டு விட்டான். அதற்குள் சீதாவுக்கு கீதாவின் அழைப்பு வந்துவிட்டது. சீதா மெதுவாகவே அவளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தாள். ‘சாப்டு முடிச்சுட்டு கூப்பிடறேன்’ என்று கட் செய்து கொண்டாள்.

சாப்பிட்டு முடித்தபிறகு இவன் கல்லா டேபிள் மீது வைக்கப்பட்டிருந்த சுவீட் பீடா இரண்டை எடுத்து வாயினுள் திணித்துக் கொண்டான். சீதாவுக்கும் இரண்டு எடுத்துக் கொடுத்து விட்டு பணத்தைக் கொடுத்து விட்டு வண்டி அருகே வந்தான். வண்டி சீதாவை ஏற்றிக் கொண்டு கிளம்பிற்று. தன் பெரிய பேக்கை முதுகில் மாட்டிக் கொண்ட சீதா தாண்டுக்கால் போட்டு இப்போது இவனை ஒட்டி அமர்ந்து கொண்டாள். எப்பவுமே டூவீலரில் தாண்டுக்கால் போட்டுத்தான் உட்காருவாளாம்! ஒரு சைடாக அமர்ந்தால் கீழே விழுந்து விடுவோமோ என்று பயமாய் இருக்குமாம்! மெயின் சாலையிலிருந்து இவளின் அறை இருக்கும் ஊருக்கு கிளைப்பாதையில் பிரிந்தான்.

‘அண்ணா அப்படி ஓரமா வண்டியை நிறுத்துங்கண்ணா! யூரின் எனக்கு பஸ்ல வர்றப்பவே அர்ஜெண்ட்டு!’ என்றாள் சீதா. இவன் சாலையின் ஓரமாய் வண்டியை நிப்பாட்டினான். அவள் பேக்கை கழற்றி சீட்கவர் மீது வைத்து விட்டு தூரமாய் தள்ளிப் போனாள். உலகத்திலேயே யோக்கியமானவனாக இருப்பவன் போல அவள் சென்ற திசை நோக்கிப் பாராமல் எதிர்க்கே சாலையில் ஏதாவது தட்டுப்படுகிறதா? என்று பார்க்க ஆரம்பித்தான்.

இவனுக்கும் சிறுநீர் வரும்போல இருக்கவே நேராக நடந்து குழி அருகில் நின்று பேண்ட் ஜிப்பை இறக்கினான். ஒருவருக்கு வந்தால் அடுத்தவருக்கும் வந்துவிடுமென சொல்கிறார்களே! அது நிசம் தான் போல! என்று நினைத்துக் கொண்டான். இவன் திரும்ப வண்டிக்கி வருகையில் சீதா காதில் செல்போனை வைத்து பேசிக் கொண்டிருந்தாள்.

‘வந்துட்டோம்டி! வீட்டுக்கிட்ட இறக்கி வுட்டுட்டு இப்பத்தான் கிளம்பிப் போனாப்ல வரதராஜண்ணன்’ என்றவள் கட் செய்து விட்டு சிறிது நேரம் மேலே வானத்தை அன்னாந்து பார்த்தாள். அவள் விடும் மூச்சு கொஞ்சம் விரைவாக இருப்பது மாதிரி இவனுக்கு தோன்றியது. அடுத்து இவனது செல்போன், ‘லில்லி மலருக்குக் கொண்டாட்டம்! உன்னைப் பார்த்ததிலே!’ என்று பாட ஆரம்பித்தது.

‘கீதாவா இருந்தா அவுட் ஸ்பீக்கர் போடுங்கண்ணா!’ என்றாள் சீதா. இவன் அழைப்பது கீதா தான் என்று சீதா சொன்னது மாதிரியே அவுட்ஸ்பீக்கர் போட்டு பேசினான்.

‘எங்கிருக்கிறீங்க?’

‘வந்துட்டேன் நம்ம ஊருக்கிட்டயே!’

‘வண்டிச் சத்தமே கேக்கலியே! ஏன் தான் இப்படி பொய் பேசறீங்களோ! சீதாவை எந்தக் காட்டுக்குள்ள கூட்டீட்டு போயி பண்ணீட்டு இருக்கீங்க?’

‘ஏண்டி இப்படியெல்லாம் பேசுறே? பாவம்டி! பாவம் புடிச்சுக்கும் உனக்கு!’

‘பாவம் புடிக்குது அஞ்சாறுல, எனக்கு சீதாவைப் பத்தி தெரியாதுன்னு நினைச்சுட்டீங்களா? இல்ல உங்களைப் பத்தி தான் எனக்கு தெரியாதா? அதும் நைட்டுல சான்ஸ் கெடச்சு நீங்களாவது உடறதாவுது! அவ அதுக்கும் மேல இருப்பா!’

‘போனை வெய்யிடி மொதல்ல லூசுக்கருமம்! அப்புறம் ஏண்டி என்னை கூட்டிட்டு போயி உட்டுருங்க! பாவம் சாமத்துல அவ என்ன பண்டுவான்னு சொன்னே? மூடீட்டு கம்முன்னு இருந்துருக்கலாம்ல!’ கோபம் மிகுதியில் போனை கட் செய்தான். இப்போது இவனும் வானத்தை வெறிக்கப் பார்த்தான்.

மீண்டும் அவள் அழைப்பே வந்தது. கட் செய்தான். மீண்டும் அழைப்பு வரவே ஒட்டு மொத்தமாய் சுவிட்ச் ஆப் செய்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டான். இப்போது இவனுக்கும் மூச்சு வாங்கிற்று.

‘இவ பேசிக் கடுப்பைக் கிளப்புறதைக் கேட்டா இவ சொன்னமாதிரி நெசமாவே பண்ணிடலாம்னு இருக்கு சீதா!’ வானம் பார்த்துக் கொண்டே பேசினான்.

‘எனக்கும் அப்படித்தானுங்க தோணுச்சு வரது’ என்றாள் சீதாவும். அப்போது அவள் போனுக்கு அழைப்பு வரவே யாரெனப் பார்த்து கட் செய்து இவனைப் போலவே செல்போனை சுவிட்ச் ஆப் செய்தாள் சீதா.

‘உடுங்க வண்டியை, என்னோட ரூமுக்கு போயிடலாம். நீங்க மெதுவா அப்புறம் போயிக்குவீங்களாம்’ என்றாள் சீதா.

000

15-3-2016

அதைவிட அபத்தம் / சுஜாதாவுடன் நான் அடித்த அரட்டை / பொ.கருணாகரமூர்த்தி ( பெர்லின் )

images (4)

அது 1990களின் ஆரம்பம் என நினைக்கிறேன். ‘மின்னம்பலம்’ என்கிற இணையப்பத்திரிகை வர்ணத்தில் பக்கங்களைக்கொண்டு வந்துகொண்டிருந்தது. அப்பத்திரிகையை நடத்துவதற்கான ’நல்கை’ இந்தியா ரூடேயினது என்று சொல்லிக்கொண்டார்கள். உண்மை தெரியவில்லை. இங்கே நான் சொல்லவரும் விஷயம் வேறு.

மின்னம்பலந்தான் முதன்முதல் உரையாடும் வசதிகளுடன் அமைந்திருந்த தமிழ் இணையப்பத்திரிகை. அதில் பிரதி சனிதோறும் காலையில் இந்தியநேரம் 10:00 மணிக்கு சுஜாதா அவர்கள் தன் வாசகர்களுடன் அரட்டை அடிப்பார். அப்போ ஒருங்குறிப்பயன்பாடோ, பிறதமிழ் எழுதும் வசதிகளோ கிடையாது. சிலர் ஆங்கிலத்திலும் சிலர் தமிங்கிலிஷிலும் அவருடன் உரையாடுவர். எந்தத்துறையதானாலும் கருத்தார்ந்த கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்வார். ‘நீங்கள் அணுக்கத்தில் பார்த்த நடிகைகளில் யார் வடிவு’ , ‘ரம்பாவின் எதிர்காலம் எப்படி இருக்கும்’ போன்ற கேள்விகளையும், எள்ளல் சீண்டல் ரகக்கேள்விகளையும், அரசியல் கேள்விகளையும் லாவகமாகத் தவிர்த்துவிட்டு மேலே சென்று கொண்டிருப்பார்.

ஒருநாள் ஆவல்மேலீட்டால் அவ்அரட்டைக்குள் நானும் புகுந்து “ I am Karunaharamoorthy from Berlin ”என்றேன். “ Hey………are you the Writer, how are you.” என்றாரே பார்க்கலாம். உறைந்துபோனேன். அப்போதெல்லாம் நான் 30 கதைகள் எழுதியிருந்திருப்பேன் என்றால் அது அதிகம். அவைகளிலும் செம்பகுதி புகலிடச்சஞ்சிகைகளில்த்தான். எவ்வெவற்றையெல்லாம் தேடிப்படித்திருக்கிறார் மனிதன்!

சுஜாதா ‘அரிசி’ என்றொரு கதை எழுதியிருப்பார். முதியவர் ஒருவர் அரைகிலோ அரிசிவாங்கி பையை மிதியுந்தின் கைபிடியில் கொளுவிக்கொண்டு வந்துகொண்டிருப்பார். தெருவால்போன சிற்றுந்து ஒன்று அவரை மோதிவிட அரிசி வீதியில் சிதறிவிடும். முதியவரும் காயம்பட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பார். ஜனக்கூட்டம், காவல்துறை எல்லாம் வந்து அவ்விடம் அமளிப்பட்டுக்கொண்டிருக்கும். அவை எதிலும் கவனம்கொள்ளாது அங்கே வந்த சிறுவர்கள் இரத்தம் தோய்ந்திராத அரிசிமணிகளைத் தவிர்த்துப் பொறுக்கித்தம் களிசான் பைகளில் திணித்துக்கொண்டிருப்பார்கள்.. அப்படி ஒரு காட்சியை நிஜத்தில் கண்ட பின்னால்தான் சுஜாதா அக்கதையை எழுதினாரோ, இல்லை வெறும் கற்பனையில் எழுதினாரோ தெரியவில்லை. ஆனால் அப்படியான காட்சியொன்றை நான் பெர்லினில் நேரடியாகப் பார்த்திருந்தேன்.

அதொரு அந்திக்கருக்கல் நேரம், என் வீட்டின் ஜன்னலுக்கு வெளியே சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். நடுத்தரவயதுடைய மனிதர் ஒருவர் கையில் அட்டைப்பெட்டி ஒன்றை ஒரு குழந்தையைப்போல் தூக்கிப்பிடித்தபடி வீதியைக்கடந்தார். நான் பாட்டைகளிலமைந்ததும், அதிகம் போக்குவரத்துள்ளதுமான வீதி அது. வேகமாக வந்த காரொன்று அவரைத்தூக்கி அடுத்த/எதிர் நிரையில்வீசவும் அந்த நிரையால் வந்துகொண்டிருந்த வேறொரு கார் அவரின்மேலாக ஏறி இறங்கிவிட்டு நின்றது. அது கிறிஸ்துமஸ் விழாக்காலம் அது. அவரது அந்தப் பெட்டிக்குள் இருந்தவை வைன்போத்தல்கள் இருந்திருக்கவேண்டும், அவை நொருங்கிய சத்தம் பலமாகக்கேட்டது. நொடிக்குள் காவல்துறை, அவசரகால மருத்துவ உதவிச்சேவை வாகனங்கள் எல்லாமும் வந்துவிட்டன. இங்கெல்லாம் நடுவீதியில் மக்கள்கூடி விபத்துக்களை வேடிக்கை பார்க்கமாட்டார்கள். ஆனாலும் இதை வீதிநடைபாதையில் நின்றுகொண்டு கொஞ்சப்பேர் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவரதுபெட்டிக்குள் இருந்த இறால்கள் வீதியிலும் ஓரமாகவும் சிதறிப்பரவியிருந்தன. முக்காடு அணிந்தவொரு நடுவயதுப்பெண் வந்தாள். சிந்து/ரோமா நாடோடியாகவோ, துருக்கியராகவோ இருக்கலாம், ஏதோ தன்னுடைய உடமையைப்போல வேகவேகமாக இறால்களைப் பொறுக்கித் தன் பையினுள் போடத்தொடங்கினாள்.

இச்சம்பவம் நினைவுக்கு வரவும் அவ்வரட்டையின்போது சுஜாதாவுக்குச் சொன்னேன். கேட்டுவிட்டு “ உலகம் பூராவும் மக்கள் ஒரேமாதிரியாகத்தான் இருக்கின்றார்கள்” என்றார்.

*

குமுதம் பிரதிவாரமும் முன்னொருகால் பிரபலங்களின் மாமா மாமியரைப்பேட்டிகண்டு வெளியிட்டு வந்தது. அதில் சுஜாதாவின் முறைவந்தபோது அவரது மாமன், மாமியரின் பேட்டி இடம்பெற்றது. அட்டைப்படமாகவும் அவர்களது படமே இருந்ததாக ஞாபகம்.

பேட்டியாளர் அவரது மாமனாரைக் கேட்டிருந்தார். “உங்களது மருமகனின் படைப்புக்களில் ஆகச்சிறந்ததென்று எதனைக்குறிப்பிடுவீர்கள்”

மாமன் தடாலடியாகச்சொன்னார்: “ சிப்பஞ்சிப்பமாய் எழுதிறான்னு தெரியும், ஆனாக்கா……………….அதில ஒன்றைக்கூட இதுவரை நான் படித்ததில்லை.”

அப்பேட்டியைப் படித்தகாலத்திலிருந்தே அப்பதில் எனக்கு மிகவும் உறுத்தலாக இருந்துகொண்டிருந்தது. அரட்டையின்போது அவ்விஷயமும் ஞாபகத்தில் பொறிக்கவும் உடனே அதுபற்றிக் கேட்டேன். “உங்கள் மாமனார் பேட்டியில் அப்படிச்சொல்லி இருந்தாரே……அந்தப்பதில் உங்களுக்கு வருத்தத்தைத் தரவில்லையா………………… அதை எப்படி எடுத்துக்கொண்டிருந்தீர்கள்.”

“ அவர் அப்படிச்சொன்னதே பிடித்திருந்தது…………….வேறேதும் சொல்லியிருப்பாரேயானால் அது அதைவிட அபத்தமாய் இருந்திருக்கும்.”

“புரியலை சார்?”

“ மனுஷனுக்குத்தன் ஒரு அக்ஷரம் தமிழ் படிக்கத்தெரியாதே…………அவர் பிறந்தது வளர்ந்ததெல்லாம் கர்நாடகா.”

*–*

மேக்பெத் ( அங்கம் -2 ) ஆங்கிலவழி மொழியாக்கம் – சத்தியப்பிரியன்.

download (5)

காட்சி-1

இடம் : மேக்பெத்தின் மாளிகை.

பாத்திரங்கள் : பாங்கோ, அவன் புதல்வன் ஃ ப்லீன்ஸ் மற்றும் மேக்பெத்.

காட்சியின் ஆரம்பத்தில் பாங்கோவும், அவன் மகன் ஃ ப்லீன்சும் கையில் விளக்குடன் வருகின்றனர்.

பாங்கோ : இரவு எப்படி போய்கொண்டிருக்கிறது மகனே ?

ஃ ப்லீன்ஸ் : சந்திரன் ஓயத் தொடங்கிவிட்டான். கடிகாரச் சப்தம் இன்னும் என் காதில் விழவில்லை.

பாங்கோ : நிலா சாயும் நேரம் என்றால் அது நள்ளிரவு.

ஃ ப்லீன்ஸ் : இல்லை நேரம் அதற்கும் மேலே இருக்கும் அப்பா.

பாங்கோ : இந்தா என் வாளைப் பிடி. வானுலகில் சிக்கனம் பார்க்கத் தொடங்கி விட்டனர் போலும். நட்சத்திரங்கள் அங்கொன்றும் இங்கொன்றும் எரிகின்றன. என்னவோ தெரியவில்லை ஒருவித பாரம் என் நெஞ்சை அழுத்துகிறது. தூக்கமும் வரவில்லை. இறைவா ! என் மனதில் கிளம்பும் அச்ச உணர்வை தடுத்து நிறுத்து.

( மேக்பெத்தும், சேவகர்களும் கையில் தீவட்டிகளுடன் நுழைகின்றனர். )

என் வாளைக் கொடு மகனே ! யாரது ?

மேக்பெத் : உன் நண்பன்.

பாங்கோ : நீங்கள் இன்னும் உறங்கச் செல்லவில்லையா ஐயா? மன்னர் படுக்கையறைக்குச் சென்று விட்டார். அவர் இன்று பெருமகிழ்ச்சியில் இருக்கிறார் என்று நினைக்கிறேன். உங்கள் ஊழியர்களுக்கு வெகுமதிகளை அள்ளி வழங்கிக் கொண்டிருந்தார். உங்கள் மனைவியின் விரும்ந்தோம்பலைப் பாராட்டி இதோ இந்த வைரமோதிரத்தை பரிசாகக் கொடுத்திருக்கிறார். ( மேக்பெத்திடம் ஒரு வைர மோதிரத்தை காட்டுகிறான். )

மேக்பெத் : அவர் இப்படி ஒரு திடீர் விஜயம் என் இல்லத்தில் மேற்கொள்வார் என்று எண்ணவில்லை. தெரிந்திருந்தால் இன்னும் நன்றாக அவரை கவனித்திருப்போம்.

பாங்கோ : எல்லாம் நல்லதற்குதான் மேக்பெத். நேற்று அந்த சூனியக்காரிகளை கனவில் கண்டேன். அவர்கள் உங்களைப் பற்றி சொன்னவற்றில் ஒரு பகுதி சரியாக உள்ளது.

மேக்பெத் : நான் அவற்றை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. உனக்கு மேலும் ஒருமணிநேரம் கழித்து சமயம் கிடைக்குமானால் பேசுவோம். இப்போது வேண்டாம்.

பாங்கோ : உங்கள் சௌகரியம் மேக்பெத். எப்போது வேண்டுமானாலும் பேசுவோம்.

மேக்பெத் : என் பயணத்தில் நீ உடன் வருவாய் என்றால் உனக்கும் சில நன்மைகள் காத்திருக்கின்றன.

பாங்கோ : என் வளர்ச்சியில் எனக்கும் அக்கறை உண்டு. இருப்பினும் என் கடப்பாடிலும், ராஜ விசவாசத்திலும் என்னுடைய உறுதி சற்றும் குலையாமல் இருக்கும். அதற்காக நான் எதையும் இழக்கத் தயாராக இருக்கிறேன்.

மேக்பெத் : அதுவரை ஓய்வெடு பாங்கோ.

பாங்கோ :நீங்களும்தான் மேக்பெத்.( பாங்கோவும் ,ஃ பிளீன்சும் மறைகின்றனர். )

மேக்பெத் ( வேலைக்காரர்களை நோக்கி ) என் மனைவியிடம் சென்று என்னுடைய பானம் தயாரானபின்பு எனக்கு அழைப்புமணி அடிக்க சொல்லுங்கள். சொல்லிவிட்டு நீங்கள் கிளம்பலாம்.. ( வேலைக்காரர்கள் கிளம்புகின்றனர் . )

மேக்பெத் : { தனக்கு தானே பேசிக் கொள்கிறான். அவன் கண் எதிரில் ஒரு குறுவாள் இருப்பதாக பாவித்துக் கொண்டு நீண்ட உரையாற்றுகிறான் . ) இதுதான் அந்தக் குறுவாளா ? என் கண் முன்னால் தோன்றி தன் கைப்பிடியை என் கைகளின் அருகில் கொண்டுவந்து நிற்கிறதே. வா வாளே உன்னை என் கரங்களில் ஏந்துகிறேன். ( கைகளில் அந்தக் குறுவாளை வாங்குவது போல பாவிக்கிறான். ) என் கைகளில் நீ இன்னும் வரவில்லை. இருப்பினும் உன்னை தீண்டும் உணர்வை அடைந்துவிட்டேன். மரணத் தோற்றமே! கண்ணில் தெரியும் நீ கைகளில் வாராயோ? அல்லது நீ மனதின் மாயத் தோற்றமோ ? அடக்கி வைத்திருக்கும் எண்ணத்தின் வெளிப்பாடோ ? இருப்பினும் உன்னைக் காண்கிறேன் இதோ இப்போது நான் உருவி எடுத்த உடைவாளை போல . ( தனது உரையிலிருந்து சரேல் என்று ஒரு உடைவாளை உருவி எடுக்கிறான். ) நீ என்னை நான் போக எண்ணும் இடத்திற்குதான் அழைத்துச் செல்கிறாய். நான் விரும்பிய அதே வாள்தான் நீ. என் கண்கள் மற்ற புலன்களை முட்டாள்களாக்கி விட்டன. அல்லது மற்ற புலன்களை விட விழிகள் மட்டுமே உயிர்ப்புடன் உள்ளன. இருந்தும் உன்னைக் காண்கிறேன். உன் வாள்முனையில் குருதி வழிகிறது. இதற்கு முன் நான் பார்த்திராத இரத்தம். ( மீண்டும் தெளிவு பெற்றவனாக ) ஓ! இங்கு வாள் எதுவும் இல்லை. நிகழப்போகும் கொலை என்னை இவ்வாறு பேச வைக்கிறது. பாதி உலகம் தூங்கச் சென்றுவிட்டது. உறக்கம் திரையிட்ட மனங்களில் சூனியக் கனவுகள் படம் காட்டுகின்றன. சூனியக்காரிகள் மரணதேவதைக்கு பலி போட்டுக் கொண்டிருக்கும் நேரமிது. மரணம் என்னும் வயோதிகன் டார்குவின் என்ற இளவரசன் ரோமானியனின் மனைவியைக் கற்பழிக்கச் சென்றதை போல முன்னேறிச் செல்கிறான். ஏ ! பூமியே ! என் காலடி எழுப்பும் ஓசையைக் கொண்டு அவை செல்லும் பாதையை பார்க்காதே ! பயத்தில் என் ஓசையை எதிரொலிக்க செய்யாதே. இந்த இரவு அமைதியாக செல்லட்டும். இரவின் பயங்கரத்தை மாற்றிவிடு. அமைதி ஒன்றுதான் இப்போது ஏற்றது. நான் பேசிக் கொண்டிருக்கிறேன். அவன் வாழ்ந்து கொண்டிருக்கிறான். என் பேச்சு என் தைரியத்தின் தீயை அனைத்துவிடுமோ ? நான் செல்கிறேன்; அதனை முடிக்கிறேன்.இதோ இப்போது கேட்கும் மணியோசை என் செயலுக்கு வாழ்த்துரை வழங்குகிறது. மணியோசையைக் கேட்காதே டங்கன். அது சொர்கத்தின் மனியோசையாகவும் இருக்கலாம்; உன் மரணத்தின் மணியோசையாகவும் இருக்கலாம். ( அகல்கிறான். )

காட்சி -2.

( இதுவும் மேக்பெத்தின் மாளிகை. திருமதி. மேக்பெத் நுழைகிறாள் )

திருமதி. மேக்பெத் : அவர்களை மயங்கச் செய்த குடி என்னை வாழவைக்கப் போகிறது. எந்தக் குடி அவர்கள் தாகத்தை தணித்ததோ அந்தக் குடி என் வேட்கையை அதிகப்படுத்தியுள்ளது. அமைதியாகக் கேள் ! ஆந்தைகளின் ஓலம் சாவுமணிகளைப் போல நல்லிரவு வணக்கம் சொல்கின்றன. அதோ அவர் வரும் காலடியோசை கேட்கின்றது. டங்கன் உறங்கும் படுக்கையறைக் கதவுகள் திறந்திருக்கின்றன.. காவலர்களின் குறட்டை அவர்கள் செயலை கேலி செய்வது போல ஒலிக்கிறது. அவர்கள் உட்கொண்ட மதுவில் நான் அதிக அளவில் போதை மருந்தை சேர்த்துள்ளேன். அவர்கள் உறங்குகின்றனரா இறந்துவிட்டனரா என்பது கூட தெரியாது.

மேக்பெத் ( குரல் மட்டும் மன்னரின் படுக்கையறையிலிருந்து ) யாரங்கே ? ஓ ! யாரது ?

திருமதி மேக்பெத் : ஐயையோ ! வேலைக்காரகள் விழித்துக் கொண்டு விட்டார்கள். இனி கொலை நடக்காது. செயல் இல்லை முயற்சியே நம்மை சீர்குலையச் செய்பவை .( ஓர்ஒலியைக் கேட்கிறாள்) கத்திகளை ஆயத்தபடுத்தி வைத்துள்ளேன். அவருக்கு தோதாக இருக்கும். உறங்கும்போது மன்னர் தோற்றத்தில் என் தந்தையின் சாயலில் இல்லாமல் போயிருந்தால் நானே அவரைக் குத்திக் கொன்றிருப்பேன். ( மேக்பெத் கையில்குருதி தோய்ந்த குறுவாளுடன் வெளியில் வருகிறான். ) ஆ! என் கணவர்.

மேக்பெத் : காரியத்தை முடித்துவிட்டேன். உள்ளேயிருந்து நீ சப்தம் எதையாவது கேட்டாயா?

திருமதி.மேக்பெத் :உள்ளே ஆந்தைகளின் அலறலையும், இரவுக் கோழிகளின் ஓலைத்தையும் தவிர வேறு எதையும் கேட்கவில்லை. நீங்கள் ஏதாவது கூறினீர்களா?

மேக்பெத் : எப்போது ?

திருமதி.மேக்பெத்: இதோ இப்போது.

மேக்பெத் : நான் வரும்போதா/

திருமதி.மேக்பெத் : ஆமாம்.

மேக்பெத் : என்னது நானா? இரண்டாவது படுக்கையறையில் யார் படுத்திருக்கிறார்கள் ?

திருமதி.மேக்பெத் :டொனால் பெயின்.

மேக்பெத் ( தனது இரத்தக்கறை படிந்த கைகளை பார்த்து ) என்ன ஒரு அவலமான காட்சி.

திருமதி.மேக்பெத் ; இப்படி கூறுவது பேதமை.

மேக்பெத் : காவலர்களில் ஒருவன் எழுந்து ‘கொலை, கொலை ‘ என்று அலறினான். ஒருவரை ஒருவர் எழுப்பிக் கொண்டதை பார்த்தேன். ஆனால் இருவரும் தங்கள் பிரார்த்தனைகளை இறைவனுக்கு செலுத்திவிட்டு மீண்டும் உறங்கச் சென்றுவிட்டனர்.

திருமதி.மேக்பெத் : மால்கம் , டொனால்பெயின் இருவருமே ஒரே அறையில்தான் படுத்திருந்தார்கள்.

மேக்பெத் : காவலர்களில் ஒருவன் “ கடவுள் நம்மை காக்கட்டும் “ என்றான். அடுத்தவன் “ அப்படியே ஆகட்டும் “ என்றான். அவர்கள் என் குருதிபடிந்த கரங்களைப் பார்த்தவர் போல அலறினார்கள். அவர்கள் போட்ட கூச்சலில் நான் ஆமென் கூற மறந்துவிட்டேன்.

திருமதி.மேக்பெத் : காரியம் முடிந்தபின் வழியை பற்றி எண்ணக்கூடாது. பிறகு நமக்கு பித்து பிடித்துவிடும்.

மேக்பெத் : என் செவிகளில் ஒரு குரல் ஒலித்தது. “ உனக்கு இனி தூக்கம் இல்லை. மேபெத் தூக்கத்தை கொன்றுகொண்டிருக்கிறான். “ களங்கமில்லா உறக்கம். நமது கவலைகளை பிரித்து அக்கறையை பின்னல்களாக பின்னும் உறக்கம்; பொழுதை மடியச் செய்யும் உறக்கம்; கடும் உழைப்பாளியின் இன்பக் குளியல் உறக்கம்; காயப்பட்ட இதயங்களில் பூசப்பெறும் களிம்பு உறக்கம்; உறக்கம் இயற்கை நம் வாழ்வெனும் விருந்தில் நமக்களித்த சுவையான உணவு.

திருமதி.மேக்பெத் : என்ன உளறுகிறீர்கள் ?

மேக்பெத் : மீண்டும் மீண்டும் அந்தக் குரல் ஒலித்ததைக் கேட்டேன் : யாரும் உறங்காதீர்கள் கிளாமிசின் தலைவன் தூக்கத்தைக் கொன்றுவிட்டான். இனி காடரின் தலைவனுக்கு தூக்கம் கிடையாது . இனி மேக்பெதிற்கு உறக்கமில்லை”

திருமதி.மேக்பெத் : யாருடைய குரல் அது ? ஏன் இப்படி புலம்புகிறீர்கள் தானைத் தலைவரே ? சிந்தையை நலியச் செய்யும் எண்ணங்களுக்கு இடம் கொடுத்தால் உங்கள் துணிவு வலுவிழந்துவிடும். போங்கள். போய் சில்லென்று ஒருவாய் குளிர்ந்தநீர் பருகிவிட்டு வாருங்கள். உங்களைக் காட்டிக் கொடுக்கும் இரத்தக்கறையை நன்றாக துடைத்துவிட்டு வாருங்கள். தேவையில்லாமல் இந்தக் குறுவாளை அந்த அறையிலிருந்து ஏன் எடுத்து வந்தீர்கள் ? அவை அங்கேயே இருக்க வேண்டியவை. உள்ளே போய் தூங்கும் காவலர்களின் முகத்தில் இரத்தத்தை பூசிவிட்டு வாருங்கள்.

திருமதி.மேக்பெத் : இனி நான் மீண்டும் உள்ளே போகமாட்டேன். என் செயல் எனக்கே அச்சமூட்டுகிறது. அதை மீண்டும் பார்க்கும் தைரியம் எனக்கு இல்லை.

திருமதி.மேக்பெத் : கோழை. அந்தக் குறுவாட்களைக் கொடுங்கள். உறங்குபவர்களும் இறந்தவர்களும் சித்திரம் போலத்தான். அவர்களைக் கண்டு சிறுவர்கள்தான் அஞ்சவேண்டும். டங்கன் இரத்தம் சிந்திக் கொண்டிருந்தால் அந்த இரத்தத்தால் காவலர்கள் முகத்தில் கறை உண்டாக்குவேன். பார்ப்பவர்ககளுக்கு காவலர்களே அவர்களைக் கொன்றதாக சந்தேகம் எழும்.

(திருமதி.மேக்பெத் மறைகிறாள். வெளியிலிருந்து கதவு தட்டப்படும் ஒலி கேட்கிறது. )

மேக்பெத் : எங்கிருந்து கதவை தட்டும் ஒலிகேட்கிறது ? எனக்கு என்ன நேர்கிறது ? எல்லா ஓசையும் என்னை அச்சமூட்டுகின்றதே.( தனது கரங்களைப் பார்த்து ) இது யாருடைய கரங்கள் ? என் விழிகளை பெயர்க்க வருவது போல் உள்ளதே. இந்த உலகின் உள்ள மொத்த கடல்நீரால் கூட இந்த இரத்தக்கறைகளை போக்கமுடியாது போலிருக்கிறதே. இல்லை என் கரங்கள் கடலின் தூய்மையைக் களங்கப்படுத்திவிடும்.

(திருமதி.மேக்பெத் வருகிறாள் )

திருமதி.மேக்பெத் : என் கரங்களும் உங்கள் கரங்களைப் போல சிவப்பாக உள்ளது. அது எனக்கு உவப்பாக உள்ளது. உங்கள் இதயம் வெள்ளையாக இருப்பது உங்களுக்கு தொல்லையாக இருக்கும்.( கதவு தட்டும் ஓசை ) தெற்கு வாயிலின் கதவிலிருந்து ஓசை கேட்கிறது. வாருங்கள் செல்லலாம். சிறிது நீர் போதும் நம் இரத்தக்கறைகளைக் கழுவ. அவ்வளவேதான். இது உங்களுக்கு தெரியாமல் போயிற்றே . ( மீண்டும் கதவு தட்டப்படும் ஓசை ) அதோ கேளுங்கள். மீண்டும் கதவு தட்டப்படும் ஒலி. வாருங்கள். உங்கள் இரவு உடையை அணிந்து கொள்ளுங்கள். யாராவது நாம் விழித்திருப்பதை பார்த்தால் நமக்குதான் ஆபத்து. உங்கள் எண்ணங்களில் தொலைந்து போகாதீர்கள்.( அகல்கிறாள் )

மேக்பெத் : என் செயல் குறித்த அறிதலை விட என் எண்ணங்களில் மறைந்து போவது எவ்வளவோ மேல்.( மீண்டும் கதவு தட்டப்படும் ஓசை கேட்கிறது ) எழுப்புங்கள். நன்றாக எழுப்புங்கள். உங்கள் ஓசையால் முடிந்தால் டங்கனை எழுப்புங்கள். ( மறைகிறான் )

திரை.

காட்சி-3.

( வாயிற்காப்போன் ஒருவன் உள்ளே நுழைகிறான். மீண்டும் கதவு தட்டப்படும் ஓசை கேட்கிறது. )

வாயிற்காப்போன் : காதே பிளப்பது போன்று இதென்ன ஓயாத கதவு தட்டப்படும் ஓசை ? யோசித்துப் பாருங்கள் . நரகத்தில் இறந்தவர்களின் ஆவிகளை உள்ளே அனுமதிக்கும் காவல்காரனாக நான் இருந்திருந்தால் மீண்டும் மீண்டும் எத்தனை முறை கதவின் தாழ்ப்பாளை விலக்க நேர்ந்திருக்கும்? (மீண்டும் தடதட ஒலி ) தட்தட் தட் ( தன்னை நரகத்தின் வாயிற்காப்போனாக பாவித்து ) யாரது அங்கே சாத்தானின் பெயருடன் உள்ளே வருவது ? அவன் ஒரு உழவனாக இருக்கலாம் நெல்லுக்கு சரியான கொள்விலை கிடைக்காமல் போய் தற்கொலை செய்துகொண்டிருப்பான்.( அந்த பாவனை விவசாயியிடம் பேசுவது போல பாவித்து ) வா வா. சரியான நேரதிற்குதான் வந்திருக்கிறாய். கைக்குட்டை கொண்டு வந்திருக்கிறாயா? உள்ளே அதிகம் வியர்க்கும்.( இரண்டாவதுமுறை கதவு தட்டும் ஒலி கேட்கிறது. ) தட் தட்தட் அது யாரது மீண்டும் ஒரு சாத்தான் ? ஓ ! அந்த இரட்டை நாக்குக் காரனா? இவன் உண்மையை மறைத்துப் பேசித் திரிந்தவன் அல்லவா ? மாற்றி மாற்றி பேசிய நாக்கு இறைவன் முன்னாள் பேசமுடியாது. பொய்வாக்குமூலத்திற்காக நரகம் வந்திருக்கிறாய். வா வா ! ( மூன்றாவது தட் தட் ஒலி கேட்கிறது. ) தட் தட் தட் ! சாட் யாரப்பா மீண்டும் ? இதோ ஒரு பிரஞ்சுக்காரனின் காலுறைகளைத் திருடிய ஆங்கிலேய தையல்காரன் வருகிறான். வாப்பா வா! உள்ளே வா! உன் இஸ்திரி பெட்டியை நன்றாக சூடு படுத்திக் கொள்ள வா!. ( மீண்டும் தட் தட் தட் ஒலி ) எப்போதும் தட் தட் தட் ச்சை ! நரகத்தின் வாயில் காப்போனுக்கு ஒய்வு என்பதே கிடையாதா/? இவ்வளவு குளிர்ந்து இருக்கும் இந்த இடம் நரகமாக இருக்க வாய்ப்பில்லை. போதும் இந்த வேடம். அனைத்து தரப்பிலிருந்தும் ஆட்களை இந்த நரகத்திற்குள் அனுமதிக்கிறேன். ( மீண்டும் கதவு தட்டப்படும் ஒலி கேட்கிறது. ) இதோ வருகிறேன். இன்று ஏன் இந்தக் கதவு இப்படி ஓசையை ஏற்படுத்துகிறது ? ( வாயிற்காப்போன் கோட்டை கதவை திறக்கிறான்.

( மாக்டப், லெனாக்ஸ் மற்றும் சில பிரபுக்கள் உள்ளே நுழைகின்றனர். )

மாக்டப் : என்னப்பா சீக்கிரமே தூங்கப் போய்விட்டாயா? எழுந்து வந்து கதவு திறக்க அதிக நேரம் ஆயிற்றா?

வாயிற்காப்போன் :நீங்கள் சொன்னது சரிதான் ஐயா . நாங்கள் விடிகாலை மூன்றுமணிவரையில் குடித்துக் கொண்டிருந்தோம். குடி மூன்று விஷயங்களைத் தூண்டக் கூடியது.

மாக்டப் : அது என்னப்பா மூன்று விஷயங்கள் மதுவால் தூண்டப்படுபவை?

வாயிற்காப்போன் : குடி உங்கள் மூக்கின் வர்ணத்தை சிவப்பாக்கி விடும்; தூங்க வைக்கும்; அதிக மூத்திரத்தை வெளியேற்றும். காமஉணர்வு ஒன்று தூண்டப்படும் அல்லது துண்டிக்கப்படும். நான் என்ன சொல்லவருகிறேன் என்றால் அது உணர்வைத் தூண்டும்; செயற்பாட்டை தடுக்கும். எனவே அதிகம் குடித்த ஒரு குடிகாரன் காம விஷயத்தில் ஒரு இரட்டை நாக்கு உடையவன். காமம் ஒரு மனிதனை ஆக்கவும் செய்யும் அழிக்கவும் செய்யும். எழுப்பவும் செய்யும்; வீழ்த்தவும் செய்யும். தூண்டும்; துவட்டும். துடித்து நிற்க வைக்கும்; தொடர்ந்து நிற்க வைக்காது. மயக்கத்தில் எழுப்பும்; வேறு ஒன்றிற்கும் பயனின்றி சிறுநீர் கழிக்க வைக்கும்.

மாக்டப்: இதுவெல்லாம் உனக்கு போன இரவில் நடந்தவைகளா?

வாயிற்காப்போன் : ஆமாம் ஐயா மது எனக்கு இவற்றை நிகழ்த்தியது என்னவோ நிஜம்தான். உள்ளே சென்ற மதுவிற்கு நான் பலமானவன் என்பது தெரியாது. அது என்னதான் என் காளைகளைத் தள்ளாட வைத்தாலும் வாந்தி எடுத்து அதனை படுக்க வைத்துவிட்டேன்.

மாக்டப் : உன் எஜமானர் எழுந்து விட்டாரா?

(மேக்பெத் வருகிறான். )

லென்னாக்ஸ் : வணக்கம் ஐயா.

மேக்பெத் : உங்கள் இருவருக்கும் வணக்கம்.

மாக்டப் : தானைத் தலைவரே ! மன்னர் உறக்கம் களைந்து எழுந்து விட்டாரா?

மாக்பெத் : இன்னும் இல்லை.

மாக்டப் : அவர் என்னை அதிகாலையில் எழுப்பச் சொல்லியிருந்தார். எனக்குதான் அவர் சொன்ன நேரம் தப்பிவிட்டது.

மேக்பெத் : இதோ நான் அவரை அழைத்து வருகிறேன்.

மாக்டப் : விருந்தோம்பலில் சிறப்பும் உண்டு; சிரமும் உண்டு. எனக்கு தெரியும்.

மேக்பெத் : செயலின் ஈடுபாடு உடலின் வலியை மறக்கடிக்கும். இதோ இதுதான் கதவு.

மேக்பெத் : கத்தி எழுப்புவதில் எனக்கு சிரமமில்லை. அது என் கடமை.

( மாக்டப் மறைகிறான். )

லென்னாக்ஸ் : மன்னர் இன்றே இங்கிருந்து கிளம்புகிறாரா?

மேக்பெத் : அப்படித்தான் செய்ய இருக்கிறார். கிளம்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய சொல்லியிருக்கிறார்.

லென்னாக்ஸ் : இரவு குழப்பமாக சென்றது. நாங்கள் படுத்திருந்த இடத்தில் சிம்னிகூண்டு வழியாக காற்று ஆங்காரமாக வீசிச் சென்றது. காற்றில் துயர ஓலங்கள் கேட்டதாக சொன்னார்கள். மரணத்தின் மர்ம ஒலி. ஒரு பேரிடரின் முன்தோன்றும் அவலக்குரலாக இருந்தது என்றார்கள். ஆந்தையின் அலறல் இரவு முழுவது கேட்டுக் கொண்டிருந்தது. குளிர்ஜுரம் வந்தது போல பூமிக்கு நடுங்கியது என்றார்கள்.

மேக்பெத் : ஆமாம் அது கடுமையான இரவுதான்.

லென்னாக்ஸ்: நான் சிறியவன். என் நினைவில் அப்படி எதுவும் இல்லை.

( மாக்டப் பதற்றத்துடன் வருகிறான் )

மாக்டப் : ஐயோ என்ன கொடுமை என்ன கொடுமை ! வார்த்தைகளுக்கு நம்பிக்கைகளுக்கும் அப்பால்பட்டதாக உள்ளதே நான் கண்ட காட்சி.

மேக்பெத் & லென்னாக்ஸ் : என்ன விஷயம் ?

மாக்டப் : குழப்பம் அதன் உச்சத்தில் உள்ளது. அரசரின் புனித உடலான ஆலயத்தை உடைத்து உள்ளே நுழைந்த பாதகர்கள் அதன் ஜீவனை திருடிச் சென்று விட்டனர்.

மேக்பெத் : ஜீவனா? நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ?

லென்னாக்ஸ் : மன்னரையா நீங்கள் கூறிப்பிடுவது ?

மாக்டப் : படுக்கையறையில் சென்று பாருங்கள். அந்தக் கொடுமையை கண்களால் காண முடியாது. என்னை எதுவும் கேட்காதீர்கள். போய்ப்பாருங்கள். பிறகு பேசுங்கள்.

( மேக்பெத்தும் ,லெனாக்சும் படுக்கையறைக்குள் நுழைகின்றனர். )

எழுந்திருங்கள் ! எழுந்திருங்கள் ! கொலை ! கொலை ! தேசத்துரோகம் ! பாங்கோ ! டொனால் பெயின் ! மால்கம் ! எழுந்திருங்கள். சாவு போன்ற தூக்கத்தை உதறி விட்டு வாருங்கள். நிஜமான சாவு எப்படி இருக்கும் என்று பாருங்கள். எழுந்திருங்கள், எழுந்திருங்கள். இந்த இறுதி நாளின் சாயலைப் பாருங்கள். உங்கள் படுக்கைகளிலிருந்து செத்தவன் உடலிலிருந்து கிளம்பும் ஆவியை போல எழுந்து இந்தக் கொடூரத்தைக் காண வாருங்கள். அபாய மணியை எழுப்புங்கள் ( ஆபத்துமணி ஒலிக்கிறது. திருமதி. மேக்பெத் வருகிறாள் . )

திருமதி.மேக்பெத் : என்ன விஷயம் ? ஏன் அபாய மணி இப்படி அலறுகிறது? இங்கே பலருக்கு இன்னும் தூக்கம் கலையாமல் உள்ளது. சொல்லுங்கள் என்ன நிகழ்ந்தது ?

மாக்டப் : அம்மணி , நான் சொல்வதை நீங்கள் கேட்காமல் இருப்பது நல்லது. நான் அதனை மீண்டும் கூறினால் உங்களால் தாங்க முடியாது. மூச்சு நின்றுவிடும் உங்களுக்கு..

( பாங்கோ வருகிறான். ) பாங்கோ பாங்கோ ! நமது அரசர் கொலை செய்யப்பட்டு விட்டார்.

திருமதி.மேக்பெத் : ஐயோ ! இந்த வீட்டிலா?

பாங்கோ : எங்கு நிகழ்ந்தால் என்ன ? இது நடக்கக்கூடாத கொடுமை. மாக்டப் சொல்லுங்கள். நீங்கள் இப்போது கூறியது பொய் என்று கூறுங்கள். ( மேக்பெத், லெனாக்ஸ், ராஸ் மூவரும் வருகின்றனர் ).

மேக்பெத் : இந்த நேரத்திற்கு ஒருமணிநேரம் முன்பு நான் இறந்திருந்தால் நான் ஆசிர்வதிக்கபட்டவனாக இருந்திருப்பேன். இப்படி ஒரு நிகழ்வின் பின்பு வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லை. எல்லாமே பொம்மை விளையாட்டுதான் போல. புகழும், கருணையும் கொண்ட நம் மன்னர் இறந்து கிடக்கிறார். வாழ்வின் உயிர்த்தேன் வடிந்து விட்டது. வெறும் கூடு மட்டும் எஞ்சியுள்ளது.( டொனால்பெயினும், மால்கமும் வருகின்றனர். )

டொனால்பெயின் : என்ன இசைகேடு இப்போது ?

மேக்பெத் :நீங்கள்தான், உங்களுக்குத் தெரியாது. உங்கள் இரத்தத்தின் ஊற்று நின்று போய்விட்டது.

மாக்டப் : உங்கள் தந்தை இறந்துவிட்டார்.

மால்கம் : எப்படி ? யாரால் ?

லெனாக்ஸ் : அவர் அறையில் இருந்த பாதுகாவலர்களே அவரைக் கொன்றுவிட்டனர் என்று நினைக்கிறேன். அவர்கள் கரங்களும் முகங்களும் ரத்தத்தில் தோய்ந்து கிடக்கின்றன. அதேபோல இரத்தம் படிந்த இரண்டு குறுவாட்கள் அவர்கள் தலையணையின் மேல் கிடக்கின்றன. அவர்களின் பார்வையில் குழப்பம் மிகுந்திருந்தது. உயிரை நம்பி ஒப்படைக்க அவர்கள் நல்ல பாதுகாவலர்கள் அல்லர்.

மேக்பெத் : அவர்களை அவசரப்பட்டு கொன்ற எனது கோபத்தின் மீது எனக்கு வருத்தமாக இருக்கிறது.

மாக்டப் : ஏன் அப்படி செய்தீர்கள் ?

மேக்பெத் : ஒருவனால் ஒரே நேரத்தில் புத்திசாலித்தனமாகவும், ஆச்சரியமுடையவனாகவும், அமைதியாகவும், ஆத்திரம் கொண்டவனாகவும், விசுவாசமுடையவனாகவும், நடுநிலைலயாளனாகவும் இருக்க முடியுமா என்ன? யாராலும் முடியாது. அங்கு நடந்த கொடுமை எனக்கு என் தலைவன்பால் இருந்த நேசத்தால் என்னை யோசிக்கவிடாமல் தடுத்து உடனடி செயலில் இறங்கவைத்து விட்டது. அங்கே டங்கன் செத்து கிடந்தார். அவர் மேனி முழுவதிலும் அவருடைய உயர்ந்த இரத்தம் வழிந்து கிடந்தது. அவர் மீது விழுந்த கத்திக் கீறல்கள் அழிவு உள்ளே நுழைய வசதியாக இயற்கையின் மீது வீசப்பட்டது போல தோன்றின. அவருக்கு மிகவும் அருகாமையில் இரண்டு காவலர்களும் குருதிவழிய மயங்கிக் கிடந்தனர். அந்தக் கொலைபாதகர்கள் கத்திகளில் இரத்தம் ஒழுகிக் கொண்டிருந்தது. அவர் மீது அன்பும் அந்த அன்பை வெளிப்படுத்த துணிவும் உள்ள ஒருவரால் அந்த நிகழ்வைப் பார்த்து வாளாதிருக்க இயலுமா ?

திருமதி மேக்பெத் : ஏதாவது செய்யுங்கள் உடனே. உதவி உதவி ( மயங்கிச் சரிவது போல நடிக்கிறாள் )

மாக்டப் : அந்த சீமாட்டியை பார்த்துக் கொள்ளுங்கள்.

மால்கம் ( டொனால்பெயினை பார்த்து ) : ஏன் நாம் இருவரும் பேசவேண்டிய தருணத்தில் பேசாமல் வாய் மூடிக் கிடக்கிறோம் ?

டொனால்பெயின் ( மால்கதிற்கு மட்டும் கேட்கும் வண்ணம் ) இங்கு நாம் பேச என்ன இருக்கிறது ? எந்த வேளையில் அபாயம் ஒரு சம்மட்டியை போல நம்மை தாக்குமோ தெரியவில்லை. இன்னும் நமக்கு கண்ணீர் சிந்த சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

மால்கம் ( டொனால்பெயின் மட்டும் கேட்கும் வண்ணம் ) : நமது துக்கத்தை வீறுகொண்டு எழும் செயலாக மாற்றும் தருணம் இன்னும் வரவில்லை.

பாங்கோ : அந்தப் பெண்மணியை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

( திருமதி. மேக்பெத்தை தாங்கிச் செல்கின்றனர் )

பாங்கோ : நம் பலவீனங்களை மறைத்து நாம் துணிவுடன் காட்சி தரும்போது நாம் ஒருமுறை சந்தித்து இந்தக் குருதி படிந்த பயங்கரம் குறித்து பேசுவோம். அச்சமும், சந்தேகமும் நம்மை நிலைகுலையச் செய்கின்றன. கடவுளின் கைகளில் என்னை ஒப்படைக்கிறேன். அவருடைய துணையுடன் இந்த ராஜத்துரோகமான படுபாதகத்தின் காரணத்தை துப்பறியலாம்

மாக்டப் : நானும்.

மாஎக்பெத் : அனைவரும் அவசர அவசரமாக உடையணிந்து கொண்டு அரசவைக்கு வாருங்கள். நாம் அங்கு கலந்தாலோசிப்போம்.

அனைவரும் : அப்படியே .

( அனைவரும் கலைந்து சென்றபின்னர் மால்கமும்,டொனால்பெயின் மட்டும் இருக்கின்றனர். )

மால்கம் : நீ என்ன செய்யப் போகிறாய் ? நாம் அவர்களுடன் ஒன்றும் கொஞ்சிக் குலாவ வேண்டாம். போலியான துக்கத்தை வெளிபடுத்துவது ஒரு பொய்யனுக்கு வேண்டுமானால் இது கைவந்ததாக இருக்கலாம். நான் இங்கிலாந்து செல்கிறேன்.

டானால்பேயின் : நான் ஐயர்லாந்து செல்கிறேன். தனி தனியே செல்வது நம் இருவருக்கும் நல்லது. நாம் எங்கு சென்றாலும் சிரிப்பவர்களின் புன்னைகையில் குறுவாள் ஒளிந்திருக்கும் என்பதை மறந்து விடக்கூடாது. இரத்த உறவினர்களே இரத்தம் எடுக்கும் உறவினர்கள்.

மால்கம் : கொலைகாரனின் எரிக்கம்பு இன்னும் தீ பற்றவைக்கப்படவில்லை. வா அதனிடமிருந்து தப்பி செல்வதே நமக்கு பாதுகாப்பு. கண்ணியமாக விடைபெறுவதில் தவறில்லை. எவ்வளவு சீக்கிரம் இங்கிருந்து விலகிச் செல்ல முடியுமோ அவ்வளவு சீக்கிரம் செல்ல வேண்டும். கருணையின் பாதுகாப்பு கிடைக்காதபோது, தப்பி செல்வதைத் தவிர ஒரு குற்றமற்றவனுக்கு வேறு என்ன பிடியாணை இருக்கப்போகிறது ? ( அவர்கள் மறைகின்றனர் .

திரை.

இடம் : மேக்பெதின் கோட்டைக்கு வெளியில் ஒரு வீதி. ஒரு கிழவனும், பிரபு ராஸும் தோன்றுகின்றனர். )

கிழவர் :என்னுடைய இத்தனை கால அனுபவத்தில் பல மிரட்டும் சம்பவங்களை பார்த்திருக்கிறேன். இந்தக் கொடுமையான இரவில் நடந்திருப்பது அவற்றை நகைப்பிற்கு இடமாக்கியுள்ளது.

ராஸ் ; ஆம் பெரியவரே . அந்த ஆகாயத்தைப் பாருங்கள். மனிதன் போடும் பித்தலாட்டங்களால் அவனதுமேடையாகிய இந்தப்பூமி மேடை ஆட்டம் கண்டு விடும்போல் உள்ளது.கடிகாரத்தின்படி இது பகல் பொழுது. ஆனால் இருளானது பகல் விளக்கை ஊதியணைத்துவிடும் போலுள்ளது. ஏன் என்று தெரியவில்லை. ஒன்று இரவு பலமாக இருக்கவேண்டும். அல்லது பகல் பலவீனமாக இருக்க வேண்டும். பகலாய் மலர வேண்டிய பூமிப்பெண்ணின் முகத்தை இருள் ஏன் முத்தமிட வேண்டும்?

கிழவர் : இப்போது நிகழ்ந்த மரணத்தை போல இது இயற்கைக்கு மாறானதுதான். . சென்ற வாரம் வானத்தில் வட்டமிட்டுக் கொண்டிருந்த வல்லூறை, சாதாரண எலிகளை பிடிக்க செல்லும் ஆந்தை கொன்றுவிட்டது.

ராஸ் : இன்னும் ஒன்று விபரீதமாக நிகழ்ந்தது. அழகும் மிடுக்கும் வேகமும் கொண்ட டங்கனின் குதிரைகளுக்கு என்ன நேர்ந்தது என்று தெரியவில்லை, முரட்டுத்தனமாக மாறி தொழுவத்தின் கட்டைகளை உடைத்துக் கொண்டு வெளியேறின. அடங்கிக் கிடக்கும் அவை மனித இனத்தை போரிட்டு அழிக்கக் கிளம்பியதைப் போன்று கிளம்பிவிட்டன.

கிழவர் : அவை ஒன்றை ஒன்று அடித்துத் தின்றதாக பார்த்தவர்கள் கூறினார்கள்.

ராஸ் : சத்தியம் . நான் அந்தக் காட்சியை என் கண்களால் பார்த்தேன். எத்தைகைய காட்சி அது ! அதோ மாக்டப் வருகிறார். ( மாக்டப் வருகிறார். ) உலகம் எப்படி போய்க்கொண்டிருக்கிறது ஐயா?

மாக்டப் : ஏன் உனக்கு கண்கள் இல்லையா/

ராஸ் : யார் அந்தக் கொலையை செய்தது என்ற துப்பு துலங்கியதா?

மாக்டப் ; அந்த ரத்தக்கறை படிந்த பாதுகாவலர்களை மாக்பெத் கொன்றுவிட்டார்.

ராஸ் ; அடக் கடவுளே ! அவர்களைக் கொல்வதால் யாருக்கு என்ன இலாபம் ?

மாக்டப் : தங்கள் தலைவரைக் கொள்ள அவர்களுக்கு கூலி கொடுக்கபட்டிருக்க வேண்டும்.சந்தேகத்தை உறுதிபடுத்தும் விதமாக மன்னரின் இரண்டு புதல்வர்கள் மால்கமும் டொனால்பெயினும் தப்பி ஓடிவிட்டனர்.

ராஸ் : இன்னமும் இது இயற்கைக்கு புறம்பான செயல்தான். என்ன ஒரு முட்டாள்தனம் தங்களை முழுவதும் நம்பிய தந்தையைக் கொள்ளும் புதல்வர்கள். இனி நடப்பதைபார்த்தால் அரசபதவி மேக்பெத்தை வந்தடையும் என்றுதான் தோன்றுகிறது.

மாக்டப் : அவனை அரச பதவிக்கு ஏற்கனவே முன்மொழிந்து விட்டனர். அவன் “ ஸ்கோன் ‘ வரை முடிசூட்ட சென்றிருக்கிறான்.

ராஸ் : டங்கனின் உடல் எங்கே கிட்க்கிரதுய் ?

மாக்டப் : குளோம்கில் என்ற அவர்கள் மூதாதையர்களை புதைத்து வைக்கப்படும் கல்லறைக்கு சென்றுள்ளது. அங்குதான் அவர்களின் எலும்புகள் பத்திரபடுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ராஸ் : நீங்கள் குளோன் செல்ல இருக்கிறீர்களா?

மாக்பெத் ; இல்லை நண்பனே . நான் ஃபிஃபே செல்ல இருக்கிறேன்.

ராஸ்; நல்லது நான் ஸ்கோன் செல்கிறேன்.

மாக்டப் : நல்லது அங்கு விஷயங்கள் நல்லவிதமாக முடியாததும். புதிய ஆடைகளை விட பழைய ஆடைகளே உடலுக்கு பொருத்தமாக இருக்கும்.

ராஸ் : வருகிறேன் :பெரியவரே.

கிழவர் : உங்களுக்குக் கடவுளின் ஆசிகள் கிடைக்கட்டும் அதே போல கெடுதியிலிருந்து நன்மை செய்பவருக்கும், பகைவர்களிலிருந்து நண்பர்கள் கண்டுபிடிப்பவர்களுக்கும் கடவுளின் ஆசி கிட்டட்டும். ( அனைவரும் மறைகின்றனர். )

திரை.

தமிழ் சினிமா : காட்டப்படுவதுவும் காண்பதுவும் – அ.ராமசாமி / விமர்சனம் – இமையம்.

download (8)

அண்மைக் காலத்தில் வெளிவந்து பெரிதும் பாராட்டப்பட்ட, விமர்சிக்கப்பட்ட, வசூல் ரீதியாக வெற்றி பெற்ற, தோல்வியுற்ற தமிழ் சினிமாக்கள் குறித்து எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பே காண்பதுவும், காட்டப்படுவதுவும். இந்த நூலின் வழியே தமிழ் சினிமா பார்வையாளனிடம் அ.ராமசாமி ஒரு உரையாடலை நிகழ்த்த விரும்புகிறார். இந்த உரையாடலின் மையமாக இருப்பது சினிமா சார்ந்த ரசனையை, பார்வையை உருவாக்குவது. எது நல்ல சினிமா, எது கெட்ட சினிமா, எது பார்க்க வேண்டிய படம், எது நிராகரிக்கப்பட வேண்டிய படம் என்ற கேள்விகளை முன்வைத்து தன்னுடைய கட்டுரைகளின் வழியே பதில்களை தேடுகிறார். “நான் எப்போதும் சினிமா விமர்சனம் எழுதவில்லை” என்று அ.ராமசாமி சொல்கிறார். அவர் விமர்சனம் எழுதவில்லை. அது உண்மைதான். ஆனால் தன்னுடைய கட்டுரைகளின் வழியே ஒரு விவாதத்தை உருவாக்குகிறார். தமிழ் சினிமா என்று ஒன்று இருக்கிறதா, இந்திய, உலக சினிமா என்று ஒன்று இருக்கிறதா என்று கேட்கிறார். அப்படியிருந்தால் அதற்கான காரணங்கள் என்ன? சினிமாவை எப்படிப் பார்க்கிறோம், எப்படிப் புரிந்துகொள்கிறோம்? கலை என்பது நமது மனதை பண்படுத்த வேண்டும். பண்பாட்டை ஒரு படி மேலே உயர்த்த வேண்டும். இவைதான் கலைக்கான விசையாக இருக்க வேண்டும். ஆனால் நமது சினிமா நம் மனதை கெடுக்கிறது. நமது பண்பாட்டை அழிக்கிறது. இது ஒரு கலை வடிவம் செய்யக்கூடிய வேலை அல்ல.

download

மெட்ராஸ், விஸ்வரூபம், ஏழாம் அறிவு, அழகர்சாமியின் குதிரை, பரதேசி, அவன் இவன், நான் கடவுள், எந்திரன், கந்தசாமி, அரவான், ராவணன், திருமணம் என்னும் நிக்காஹ், பூர்ணமை நாளில் ஒரு மரணம், ஈசன் போன்ற தமிழ் படங்கள் ஒவ்வொன்று குறித்தும் அ.ராமசாமி விரிவாக எழுதியிருக்கிறார். இந்த படங்கள் அதனுடைய ரசிகர்களான பார்வையாளனுக்கு சொன்ன செய்திகள் என்ன? எந்திரன், கந்தசாமி, நான் கடவுள், ஏழாம் அறிவு போன்ற படங்கள் எந்த அளவுக்கு யதார்த்த சமூகத்தோடு ஒட்டியிருந்தன? சாதாரண புதுமுக, தோற்றப் பொலிவுக்கூட இல்லாத ஒரு நடிகனை வைத்து எடுக்கப்பட்ட அழகர்சாமியின் குதிரை எப்படி வெற்றி படமானது? தமிழ் சினிமா பார்வையாளனுடைய ரசனையை எப்படி மதிப்பிடுவது? ஒவ்வொரு படமும் எப்படி வெற்றி பெற்றது, எதனால் தோல்வியுற்றது என்பதோடு அந்தந்த சினிமா படம் முன்னிருத்திய, முன்னிருத்த விரும்பிய மையம் எதுவென்று ஆராய்கிறார் அ.ராமசாமி. மணிரத்தினத்தின் ‘ராவணன்’ படம் எதனால் தோல்வி படமானது, ‘கந்தசாமி’ படம் மிகைக்கற்பனையால் நம்பகத்தன்னையை எப்படி இழந்து நிற்கிறது? ‘டர்ட்டி பிக்சர்ஸ்’ படம் சினிமா ஆசையில் வரும் இளம்பெண்களுககு சொல்லத்தவறியது என்ன? இம்சை அரசன் 23ஆம் புலிகேசி வெற்றிப் படமானதற்கு எது காரணம்? எந்திரன் ஏன் நல்ல படம் இல்லை? ‘மெட்ராஸ்’ திரைப்படம் தமிழ் சினிமா வரலாற்றில் கவனிக்கத்தக்கப் படமாக ஏன் இருக்கிறது? சில்க் ஸ்மிதாவின் தற்கொலை எப்படி சுய அழிவின் வெளிப்பாடாக இருந்தது என்பது குறித்தெல்லாம் விரிவாக எழுதியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் நாயகர்களின் காலம் என்பதுபோய், இயக்குநர்கள் கூடுதல் வெளிச்சம் பெற வைப்பது எது? பாலா எப்படி மற்ற இயக்குநர்களைவிட கூடுதல் வெளிச்சம் பெறுகிறார்? சினிமா என்பது முற்றிலும் கூட்டுழைப்பு அடிப்படையில் உருவாவது. ஆனால் தமிழ் சினிமா நடிகரை முன்னிருத்துகிறது. இல்லையென்றால் இயக்குநரை முன்னிறுத்துகிறது. ஏன்? தமிழ் சினிமா முன்னிருத்துகிற நடிகரோ, இயக்குநரோ அவ்வளவு சிறப்பானவர்களா? சிறப்பு எதுவும் பெறாதபோதும் எப்படி முன்னிலைப் பெறுகிறார்கள் என்பது ஆச்சரியம். சங்கர், பாலா, மணிரத்தினம் போன்ற இயக்குநர்கள் சிறப்பான தகுதி பெறுவதற்குரிய மனிதர்களா? இவர்களுக்கு மட்டும் ஏன் ஊடகங்கள் முன்னுரிமை அளிக்கிறது? இதற்குப் பின்னால் உள்ள அரசியல் செயல்பாடுகள் எவை என்று முக்கியமான கேள்விகளை இக்கட்டுரையில் கேட்டிருக்கிறார். நடிகர்களுக்கு, இயக்குநர்களுக்கு கிடைக்கிற புகழ், வெளிச்சம், விளம்பரம், பணம் ஏன் நடிகைகளுக்கு கிடைப்பதில்லை?

download (11)

அறிவார்ந்த சமூகத்தில் காட்சி குறிப்பாக சினிமா என்ற ஊடகத்தின் பங்கு என்னவாக இருக்க வேண்டும்? தமிழ் சினிமா தனக்கான அறத்தை, பொறுப்புணர்வை செய்யாதது மட்டுமல்ல தொடர்ந்து உதாசினப்படுத்தியே வந்திருக்கிறது. தனக்கான சமூகக் கடமையை முற்றிலுமாக புறக்கணித்தே வந்திருக்கிறது. தன்னுடைய அறத்தை, சமூகக் கடமையை உணராத, ஒரு வகையில் இழிவுப்படுத்தியே வருகிற தமிழ் சினிமாவை – தமிழ் ரசிகர்களால் எப்படி கொண்டாட முடிகிறது? பார்க்கவும், ரசிக்கவும் முடிகிறது? இதற்கான சமூக உளவியல் காரணங்கள் எவை என்பதை ஆராய்ந்து சொல்வதுதான் அ.ராமசாமியின் காட்டப்படுவதுவும் காண்பதுவும் என்ற இந்த கட்டுரைத் தொகுப்பு நூல்.

தமிழ் சினிமா அவ்வப்போது நிஜத்தைக் காட்டுவதாக பாவனை செய்கிறது. பாவனைகள் சிலநேரம் வெற்றி பெறுகின்றன. பல நேரங்களில் தோல்வியுறுகின்றன. அழகர்சாமியின் குதிரை வெற்றி பெற்றதற்கும், பாபா படம் சுருண்டு போனதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன. தமிழ் சினிமா ஒருபோதும் நிஜத்தைக் காட்டுவதே இல்லை. காட்டியதுமில்லை. காட்டப்போவதுமில்லை. தமிழ் சினிமா என்றாலே மிகைதான். பிரம்மாண்டம்தான். யதார்த்தத்திற்கு அதில் வேலை இல்லை. தமிழ் மண்ணுக்கே உரிய இயல்பான வாழ்வை, தமிழ்ச்சமூகத்திற்கான வரலாற்றை, தொன்மத்தை, நம்பிக்கைகளை எந்த அளவிற்கு தமிழ்சினிமா வெளிப்படுத்தி இருக்கிறது? வெளிப்படுத்தவில்லை என்றால், ஏன் செய்யவில்லை என்ற கேள்வியை சராசரி பார்வையாளனின் நிலையிலிருந்து, சராசரி ரசிகனின் மனநிலையிலிருந்து கேட்டிருக்கிறார் அ.ராமசாமி. நாம் பார்த்து, ரசித்து, கொண்டாடிய சினிமாக்ககளில் நாம் பார்க்கத் தவறிய, பார்த்தும் பொருட்படுத்தத் தவறிய பல நுணுக்கமான விசயங்களை நூலிலுள்ள கட்டுரைகள் நினைவுப்படுத்துகின்றன.

இசை, நடனம், காட்சி அமைப்பு, கதை, கேமரா கோணம், எடிட்டிங் என்று பல விசயங்கள் தமிழ் சினிமாவில் எப்படி இருக்கின்றன என்பதை அறிவதற்கு இந்நூலைப் படிக்க வேண்டும். தமிழ் சினிமா அதனுடைய எஜமானர்களான பார்வையாளர்களுக்கு என்ன செய்திருக்கிறது. தற்காலிக கிளுகிளுப்பை மட்டுமே ஏற்படுத்துகிற தமிழ் சினிமாவின் நாயகர்களை தங்களுடைய கடவுளாக ரசிகர்கள் ஏன் கருதுகிறார்கள்? ரசிகர்களுடைய கடவுளாக இருக்கிற, கடவுளாக மாற்றப்பட்ட சினிமா நடிகர்களுடைய நடவடிக்கைகள் எப்படி இருக்கின்றன? கடவுள்களாக வணங்கப்படுகிற நாயகர்கள் வணங்கப்படுவதற்கு – தகுதியானவர்களா? நடிகர்கள் மட்டும்தான் என்றால் அவர்கள் நிஜமான கலைஞர்களா? தமிழ் சினிமா நடிகர்கள் ஏன் எப்போதும் அரசியல்வாதிகளைப் போலவே நடந்துகொள்கிறார்கள்? ஏன் சமூகம் சார்ந்து சிறிதும் அக்கறையற்றவர்களாக இருக்கிறார்கள்? இதற்கெல்லாம் இந்த நூலில் விடைகள் இல்லை. பதில்களும் இல்லை. கேள்விகள் மட்டுமே முன்வைக்கப்படுகிறது. அதுதான் இந்நூலின் நோக்கமும்.

சமூகத்திற்கான ஊடகமாக இருந்திருக்க வேண்டிய தமிழ் சினிமா என்ற கவலை வடிவம், பெரும் பணக்காரர்களுடைய, கார்ப்பரேட் நிறுவனங்களுடைய ஊடகமாக எப்படி மாறியது? சராசரி சினிமா ரசிகனுடைய வேலை சினிமாவைப் பார்த்துவிட்டு, மறந்துவிட்டு அடுத்த படத்திற்கு காத்திருப்பது மட்டும்தானா? தமிழ்ச் சமூகத்தைப்பற்றி ஏன் தமிழ் சினிமா ரசிகர்களும், சமூகமும் கவலை கொள்ளாமல் இருக்கிறது என்பதுதான் அ.ராமசாமியினுடைய கவலை. இது அவருக்கு மட்டுமான கவலை அல்ல. நமக்கான, சமூகத்திற்கான கவலை.

நல்ல சினிமா எது, வியாபார சினிமா எது, அழகியல் ரீதியாகவும், கருத்தியல் ரீதியாகவும் ஒரு படத்தை எவ்வாறு புரிந்துகொள்வது என்பது தெரியாததால் ஏற்படுகிற குழப்பங்கள் அதிகம். இதனால்தான் நடிகர்கள் கடவுளாக மதிக்கப்படுகிறார்கள். மாற்றப்படுகிறார்கள். கடவுள் ஆவதற்கான தகுதியுடையவர்களா தமிழ் நடிகர்கள்? கலை என்றால் என்ன? கலைஞன் என்பவன் யார் என்று அறியாதவர்கள்தானே தமிழ் நடிகர்கள்.
தமிழ் சினிமா காட்டப்படுவதுவும், காண்பதுவும் நூலில் சினிமா சார்ந்த தொடர்ச்சியான உரையாடலை நிகழ்த்துவதின் வழியேதான் நிஜமான, சமூகத்திற்கான சினிமாவை உருவாக்க முடியும், பார்க்க முடியும் என்று அ.ராமசாமி கூறுவது மிகையான கூற்று அல்ல. சாத்தியப்படாததுமல்ல. இதுபோன்ற நூல்களை படிப்பதன் வழியேதான் சினிமா என்ற மகத்தான கலைவடிவத்தின் முழுத் திறனையும், வலிமையையும் புரிந்துகொள்ள முடியும், சினிமா சார்ந்த ரசனையை வளர்த்துக்கொள்ள முடியும். அதற்கு இந்நூல் நிச்சயம் உதவும். சினிமா சார்ந்த புரிதலை ஏற்படுத்தும்.
••••••••••••••••

பர்மா அங்கம் 02A – நடேசன் ( ஆஸ்திரேலியா )

download

அடுத்த நாள் யங்கூன் வீதி வழியாக சென்றபோது வழியில் சந்திந்த பெண்கள் யாவரும் வயது வித்தயாசமின்றி முகத்தில் சந்தனம் போல் எதனையோ பூசி கன்னத்தை அலங்கரித்திருந்தார்கள். அதைப் பற்றிக் கேட்டபோது அது அலங்காரத்திற்கு மட்டுமல்ல வெய்யிலின் தாக்கத்தை தடுக்கும் சன் கிறீமாகவும் பாவிக்கிறார்கள் என்றார் எமது வழிகாட்டி .

தனகா எனப்படும் இந்த மரம் சந்தனமரத்திற்கு ஒப்பானது. மரத்தை அரைத்து கிரீம்போல் பூசுவார்கள். மேற்கத்தைய அழகு சாதனங்கள் இன்னும் ஊடுருவாத நாட்டிற்கு போயிருந்தேன் என்பது எனக்கு சந்தோசமாகவும் இருந்தது. எந்தவொரு தென் கிழக்காசிய நாடுகளிலும் இந்த நிலமையில்லை.

பர்மீய பெண்களில் மற்றய ஆசியப்பெண்கள்போல் மஞ்கள் நிறமானவர்கள். பெரும்பாலானவர்கள் பாரம்பரிய லுங்கியில் காட்சி தந்தனர். உடல் பெருத்தவர்களைக் காணமுடியாது.அப்படிப் பெருத்தால் இந்திய மற்றும் ஐரோப்பியர்கள் போல் வயிறு அல்லது பிஷ்டம் சிலபகுதிகள் மட்டும் கொழுப்பு போடாமல் சமச்சீராக பருப்பார்கள் என ஜோர்ச் ஓவல் தனது நாவலில் குறிப்பிட்டுள்ளார்.

கடைவீதியில் கூடைகளில் சிட்டுக்குருவியை வைத்துக்கொண்டு எம்மைக் கூவியழைத்தார்கள். தனகா பூசிய இந்தியப் பெண்ணிடம் பேசியபோது ஐந்து குருவி இரண்டு டாலர் என்றாள். ஆரம்பத்தில் புரியவில்லை. வழிகாட்டியின் உதவியுடன் ஐந்து குருவிகளை சுதந்திரமாக பறக்கவிடுவதற்கு இரண்டு டாலர். இரண்டு டாலரைக் கொடுத்து ஐந்து குருவிகளை பறக்கவிட்டு நாங்களும் பர்மீய வழியில் புண்ணியம் தேடிக்கொண்டோம். புண்ணியத்தை விட குருவிக்காரப் பெண்ணின் முகத்தில் இரண்டு டாலரால் உருவாகிய புன்னகை எனக்கு முக்கியமாக இருந்தது. பாதைகளில் நாங்கள் கண்ட காட்சிகளில் ஏராளம் புத்த பிக்குகள் காணப்பட்டார்கள். அப்பாவியான சிறுவர்கள் பலரைக் துறவற உடையில் காணும்போது மனத்திற்கு சங்கடமாக இருந்தது.விளையாடும் பருவத்தில் காவியாடை ஒரு சுமைபோல்த் தெரிந்தது.

ஆங்கிலேய காலனித்துவத்திலும் பின்னர் சுதந்திரமடைந்து பல வருடங்களாக பர்மீய தலைநகராக இருந்த யங்கூன் இப்பொழுது வர்த்தகத் தலைநகரமாக மாத்திரம் பாவிக்கப்படுவதால் ஆங்கிலேயர் காலத்து பல கட்டிடங்களில் அரசாங்க திணைக்களங்கள் இயங்கிக் கொண்டிருந்தாலும் போதிய பராமரிப்பற்று பரிதாபமாக தெரிந்தது.

ஆங்கிலேயர் காலத்தில் ஸ்கொட்லாந்தினர் ஆங்கிலேயருக்குப் போட்டியாக பார்மாவில் வர்த்தகம் செய்தார்கள். இருதரப்பினரதும் கட்டிடங்களும் எதிர் எதிராக இருந்தன. இந்தக் கட்டிடங்களை இனிவரும் அரசுகள் மேற்கத்தைய நாடுகளில் இருப்பதுபோல் புராதன கட்டிடங்களாக பாதுகாக்கவேண்டும் என நினைக்க வைத்தது.. காலனித்துவம் கசப்பாக வெறுக்கப்பட்டாலும் நாட்டின் வரலாறு அழிக்கப்படக்கூடாது.

பாதையோரத்துக் கடைகள் அதிக பொருட்களற்று இருந்தன. மற்றய தென் கிழக்கு ஆசிய நாடுகளில் காணப்படும் தன்னியல்பான வியாபாரத்தன்மை காணப்படவில்லை. பாங்கொக்கில் வீதியால் செல்லும்போது ஒரு நாள் திடீரென மழை வந்தது. கடைகளின் முன்னால் என்னைப்போல் பலர் ஒதுங்கினார்கள். அப்பொழுது மூதாட்டி கடையொன்றிற்கு சென்று பல குடைகளை வாங்கி எங்களைப் போன்றவர்களிடம் விற்றாள். இருபது குடைகள் விற்பனையாகின. இப்படியான தனிப்பட்ட வியபார தன்முனைப்புகளை பல ஆசிய நாடுகளில் காணமுடியும்.ஆனால் பர்மிய சோசலிசம் கடந்த 50 வருடங்களில் அதை காலிபண்ணியிருக்கும்.

கடைகளில் இருந்த இலத்திரன் பொருட்கள் சீனாவில் இருந்து வந்தவை. அதிக அளவில் புத்தகங்களோ அல்லது புத்தகக் கடைகளோ அங்கு இல்லை.

யங்கூனின் மத்திய பகுதியில் உள்ள பூங்காவில் சுதந்திர சதுக்கம் இருந்தது. அதன் மத்தியில் அமைந்திருந்த உயரமான தூண் ஸ்தம்பத்தினருகே நின்றபோது ஒரு இந்திய இளம்பெண் வந்து பர்மா சம்பந்தமான வர்ணப் புகைப்படங்களை எங்களுக்கு விற்க முனைந்தாள். அந்தப் பெண்ணுடன் பேசிய போது அவள் இந்தியப் தமிழ்ப் பெண் என்றாள்.

நடிகர் விஜய்யின் இரசிகை என்றும் கடைசியாக வேட்டைக்காரன் படம் பார்த்ததாக சொல்லியதுடன் தனக்கு தமிழ் பேசத் தெரியாது என்றும் சொன்ன அவள் ஆங்கிலம் நன்றாகப் பேசினாள். அவள் எங்களுக்கு பர்மாவின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை போட்டோக்களாக விற்றாள். எங்களுடன் சேர்ந்து போட்டோ எடுத்துக்கொண்டாள்.

இந்தியப்படங்கள் தியேட்டர்களில் ஓடுவதைப் பார்க்க முடிந்தது. மாதுரி என்ற பெயருடைய அந்தத் தமிழ்ப் பெண் பலவருடங்களாக சுவனியர்களை (Souvenir) உல்லாசப்பிராணிகளுக்கு விற்பதாக எமது வழிகாட்டி சொன்னான். தற்போது பர்மாவில் வாழும் இந்தியர்கள் பர்மீய அடையாளத்துடன் வாழ்வதாகத் தெரிகிறது. இந்திய மொழிகள் எதுவும் அங்கு கல்வித் திட்டத்தில் இல்லை. தமிழர்கள், தங்கள் குழந்தைகளுக்கு இரவு மற்றும் வார விடுமுறை நாட்களில் தமிழ் கற்பிப்பதாக ஒருவர் சொன்னார்.

எங்களது ஹோட்டலின் மிக அருகில் இஸ்லாமிய பள்ளிவாசல். அதற்கு எதிரே பகோடா இருந்தது. சிறிது தூரத்தில் கிருஸ்ணர் கோவிலும் மேலும் சற்றுத்தூரத்தில் முத்துமாரியம்மன் மற்றும் சுப்பிரமணியர் கோவில்கள் இருந்தன. இந்தியா இலங்கையில் தென்படும் சூழ்நிலையை காணமுடிந்தது. என்னுடன் வந்த மனைவியும் நண்பர்களும் கோவில் உள்ளே சென்றபோது நான் வெளியில் நின்றவர்களிடம் இந்தச் சிலைகள் உள்ளுரில் செய்ததா அல்லது இந்தியாவில்; இருந்து வரவழைக்கப்பட்டதா எனக்கேட்டபோது உள்ளுரில் கலைஞர்கள் இருப்பதாகச் சொன்னார்கள்.

கோவிலின் அறிவிப்பு பலகையில் இந்தியத் திருத்தலங்களின் யாத்திரை பற்றிய விடயம் தமிழில் எழுதப்பட்டிருந்தது. கோவில் பூசைபற்றி தமிழில் எழுதியிருந்தார்கள். கோவில்கள் உள்ளும் புறமும் மிகவும் சுத்தமாகவும் ஒழுங்காகவும் இருந்தன.

(((((((((((((()))))))))))))

“ஒரு படைப்பு அதன் மொழிபெயர்ப்புக்கு உண்மையாய் இருப்பதில்லை” / பாலகுமார் விஜயராமன்

“ஒரு படைப்பு அதன் மொழிபெயர்ப்புக்கு உண்மையாய் இருப்பதில்லை”

— ஜார்ஜ் லுயிஸ் போர்ஹே

இணையப்புழக்கம் பெருகி விட்ட இந்தக்காலத்தில், எந்த நாட்டின் படைப்புகளையும், இலவச கோப்புகளாக தரவிறக்கிக் கொள்ள எல்லா வசதிகளும் கிடைக்கப்பெற்றிருக்கிறோம். எந்தவொரு படைப்பாளரைப் பற்றிய குறிப்புகளையும், பின்புலனையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள முடிகிற இந்த யுகத்தில், உண்மையில் மொழிபெயர்ப்புக்கான தேவை இருக்கிறதா என்ன? இது பொதுவாக இன்றைய மொழிபெயர்ப்பாளர்கள் எதிர்கொள்கிற பிரதான கேள்வி. முன்பு பிற மொழிப்படைப்பாளர்களின் அறிமுகம் நூலகம் தவிர பிற வடிவங்கள் மூலமாக கிடைக்கப்பெறாத சூழ்நிலையில் அவர்களின் கலை, கலாச்சாரம், வாழ்க்கைமுறை ஆகியவற்றை மொழிபெயர்ப்பாளர்கள் மூலமாக அறிந்து கொண்டோம். உலகமயமாக்கலுக்குப் பின்னான இன்றைய சூழ்நிலையிலும், ஒரு படைப்பின் மொழிபெயர்ப்புக்கு எத்தகைய வரவேற்பு இருக்கிறது?

என்ன தான், பிறமொழிப்படைப்புகளை வாசித்தாலும், தன் தாய்மொழியில் ஒரு படைப்பை வாசிப்பதற்கு நிகரான இன்பத்தை, திருப்தியை ஒரு வாசகனுக்கு வேறு எதுவும் தரமுடியாது என்பதைத் தான் இன்றைக்கும் கணிசமான அளவிற்கு வெளியாகும் மொழிபெயர்ப்புப் படைப்புகள் உணர்த்துகின்றன. இத்தகைய நிலையில், மூலப்படைப்பை சிதைத்து விடாமல், அதே சமயம் தனக்கிருக்கும் குறைந்த பட்ச சுதந்திர எல்லைக்குள் படைப்பை மறு ஆக்கம் செய்வது என்பது இன்றைய மொழிபெயர்ப்பாளருக்கு இருக்கும் மிகப்பெரிய சவால். அத்தகைய சவாலை தன் எளிமையான மொழியின் மூலமாக, மூலப்படைப்பிற்கு மிக அணுக்கமான நடையில் அழகாக மொழிபெயர்த்திருக்கிறார் ஸ்ரீதர்ரங்கராஜ்.

ஜப்பானிய எழுத்தாளரான ஹருகி முரகாமியின் சிறுகதைகளில் ஸ்ரீதர்ரங்கராஜ்
மொழிபெயர்த்த ஏழு கதைகளை ”நீர்க்கோழி” என்ற தலைப்பில் தொகுப்பாக்கி
வெளியிட்டு இருக்கிறது வலசை பதிப்பகம். முரகாமி எழுத்துக்கள் தனித்துவம்
வாய்ந்தவை. கிழக்காசிய எழுத்தாளராக இருந்தாலும் அவரது படைப்புகளில்
மேற்கத்திய வாழ்க்கைமுறை பழக்கவழக்கங்களின் சாயல்கள் இருப்பதைக் காண
முடியும். இயல்பாய் யதார்த்த நிகழ்வுகளோடு தெளிந்த நீரோடை போன்ற வாழ்க்கை
முறை பற்றிய விவரணை ஒருபுறம். மாய உலகின் கனவுகளோடும், அமானுஷ
கற்பனைகளின் படிநிலையான சித்திரம் இன்னொரு புறம். இவையிரண்டும்
சமுத்திரத்தில் கலக்கும் நதிகள் போல ஒன்றோடு ஒன்று இணையும் தருணம். மாய
யதார்த்ததில் நிகழ் உலகம் தொலைந்து போவது போலவோ அல்லது நிஜ உலகில்
அமானுஷத்தின் சுவடுகள் அமிழ்ந்து போவது போலவோ அவரது கதைகள் முடிவுறும்.

இக்கதைகள் மலைகள் மின்னிதழில் தனித்தனியாக வெளியான பொழுது
வாசித்ததற்கும், இப்போது தொகுப்பாக வாசிக்கையில் உள்ள அனுபவத்தையும்
குறிப்பாகச் சொல்லலாம். முரகாமியின் கதைகள் அனைத்திலும் அவரே பிரதான
பாத்திரமாக இருக்கிறார். ஒரு மனிதன் தன் சுயம் சார்ந்த பிரச்சனைகள் மூலம்
உலகத்தை அணுகும் கதைகள் அவருடையது. இந்த அகமுகச் சிந்தனை (introvert)
தன்மை கொண்ட கதைகளை வாசிக்கும் போது நாமும் அந்த பாத்திரமாக மாறி
கதைக்குள் நம்மை எளிதாக ஒப்புக்கொடுக்க முடிகிறது. எளிமையான சிக்கலற்ற
வாழ்க்கை ஓர் எதிர்பாராமையை சந்திக்கும் போது நிகழும் தருணங்களைத் தாம்
அவரது கதைகள் பேசுகின்றன.

இந்த தொகுப்பில் உள்ள கதைகள் ஒவ்வொன்றிற்குமே தொடர்பு இருப்பது போலத்
தோற்றமளிக்கிறது. “நீர்க்கோழி” கதையில் புதிதாய் வேலைக்குச்
செல்பவனுக்கும், “எதேச்சையின் பயணிக்கும்” ஏதோ உறவு இருக்கிறது. ”டோனி
தகிதானி”யின் தந்தை தான் ”ஏழாவது மனிதர்” தானோ. “நேற்று” கதையில் வரும்
எதையும் மரபார்ந்த முறையில் கேள்விகளின்றி எதிர்கொள்ளும் எரிகா என்னும்
அழகிய பெண்ணின் எதிர் வடிவம் தான் ”இரும்புத்துண்டுடன் ஒரு
நிலக்காட்சி”யில் வரும் கேளிக்கைத்தீயை மணிக்கணக்காய் பார்த்தபடி
அமரந்திருக்கும் ஜுன்கோவோ என்ற எண்னமும் எழுகிறது. அல்லது இவர்கள்
எல்லோருமே ஒருவர் தானோ என்ற எண்ணம் கதைகளை ஒரே வாசிப்பில் தொகுப்பாக
வாசிக்கும் போது ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. இவர்களுக்குள்
ஒவ்வொருவரின் தனிப்பட்ட குணநலன்கள், செயல்பாடுகள், எண்ணவோட்டம்,
எதிர்வினை, பார்வை எல்லாவற்றையும் வரைபடநிரலாக (graph chart)
காட்சிப்படுத்தி அதனை ஆய்வு நோக்கில் அணுகிப் பார்த்தால், இன்னும் கூட
விரிவான சித்திரம் கிடைக்கும்.

நிறைவான மொழிபெயர்ப்பை தந்திருக்கும் ஸ்ரீதருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் !

••••••••

நீர்க்கோழி – ஹருகி முரகாமி கதைகள்

(தமிழில் ஸ்ரீதர்ரங்கராஜ்)

மொழிபெயர்ப்பு சிறுகதைகள்

வலசை பதிப்பகம்

விலை: ரூ 120.

மழை விட்டுச் சென்ற கோடை. / ரோஷான் ஏ.ஜிப்ரி ..(இலங்கை)

download (12)

மழை விட்டுச் சென்ற கோடை.

**

மலைப் பூவில் அலையும்

மேக வண்ணாத்திகளின் சிறகில்

வளைகிறது நிற வாளின் கூர்”மை”

பின் அந்தி

மேல் திசையில்

மஞ்சள் சோறாக்க

கழுவி துடைத்த வான இலை

கோடை விருந்துக்கு தயாராய்

நட்சத்திரங்களின் கண் பட்டு

ஒளிரும் பிரயாசத்தில்

மின்னி திளைக்கிறது

உப்புநீர் சாலையில் பால்நிலா

சாளரத்தை சாத்தி தாளிட்டு

திரை சீலையை

இழுத்து விட்ட

இந்து சமுத்திர கடல் வீடருகில்

கோடைக்குள் தாகிக்கும் குடியிருப்புகள்

நறுமுகைகள்

பனியில் இதழ் திறக்க

கனவில் பூவுதிர்க்கும் சொற்கவனம்

வேர்படர வாடி தேய்கிறது

அந்திம மடிப்புகளில்

மழையற்ற வெம்மையில்

சமுக பதக்கடைகளின் விளைச்சல்

அமோகமாய் ஆக

சாக்குகளை நிறைக்கின்றன

வெறும் கொந்துகள்

இடைவெளியின்

இணைப்புச் சங்கிலிகள்

கண்ணறுந்து துண்டிக்க

நங்கூரம் விலக

பிடி தளரும் படகாய் அவ்வோடம்

கால காற்றின் பால்

இழுபடுகிறது இருப்பு

பாலையை சமீபித்தபடி

யாரோ விட்டுச் சென்ற

தனிமையின் அருகில் யாரோ

நீர் வற்றிய குளக்கரையில்

அலைந்திருக்கின்றன

பசித்தலைந்த பட்சியின் அலகுகள்

பெயரை எழுதி வைக்காமல் போன

எவரோ ஒருவரின் வாழ்வின் தடம்

ஈரம் காயாமல் இருக்கிறது

மழை விட்டுச் சென்ற

கோடையையும் தாண்டி!

***********

காத்திருத்தல்!

வருஷங்களாய்….,

நீடித்துப் போனது எனது நோன்பு

சீரற்ற காலமொன்றில்

வசித்தல்

வகிடெடுக்கவோ

வாரி விடவோ

இயலாத இருப்பாய்

சிக்காகிப் போயிற்று

வாழ்விற்கான நெடும் பயணம்

இலக்கை சமீபிப்பதற்கு

இடையில்

குறுக்கீடுகளால் திசை திரும்ப

தடை செய்யப்பட்ட

தரவாகிறது

தோற்றுத் திரும்பிய

கணங்களாய் நம் காலங்கள்

பிரிந்த இடத்திலேயே

பருவங்களை பறிகொடுத்த

பலியாடுகள் நாம்

இன்னும்…..,

காத்திருப்பின்

கடைசி நம்பிக்கையின்

கால்களும் தேய

உன் வரவுக்கான வாசலில் தான் நான்

இன்றும்

வீதி,வீதியாய் தேட விட்டிருக்கிறேன்

விழிகள் இரண்டையும்

நீ இல்லாமல்

யாரைப் பார்க்க அது எனக்கு?

***********

ஈரம்.

முன்பு போல் இதுவும்

விசா வாழ்விற்குள் நுழைய

விடை பெறுவதற்கான கணம்

ஈர முத்தங்கள்

இரக்க முத்தங்கள்

இனிப்புப் பதார்த்தங்கம் என

எதிர் பார்ப்பின் பொதிகள்

என்மேல் ஏற்றப் படுகின்றன

வெளியே சிரித்தும்

உள்ளே சலித்தும்

கவலை தோய்ந்த

கழுதை போல் நான்

அவர்கள் என்னை

வழியனுப்பும் வாஞ்சையுடன்

மனசை அசைக்காமல்

கையை அசைக்கிறார்கள்

இப்போது அம்மாவின் நேரம்..

அவளிடம் ஒன்றுமில்லை

எனக்காய் தர

உயிரை வைத்திருக்கிறாள்

குரல் குழைய

கண்ணீரில் மிதந்த படி

கவனமாக போய் வா என்ற

தாயிடம் தோற்றுத்தான் போகிறேன்

ஒவ்வொரு முறையும்.

•••••••

பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு – மு. கோபி சரபோஜி

download (13)

பொள்ளாச்சி இலக்கிய வட்டம் வழி வந்திருக்கும் கவிஞர் இரா.பூபாலனின் இரண்டாவது கவிதைத்தொகுப்பு “பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு”. இத்தொகுப்பில் விரவி நிற்கும் தன் கவிதைகள் பற்றித் தன்னுரையில் ”எனது எல்லாத் தப்பித்தலுக்கும், மறு மொழிகளுக்கும், வலிகளுக்குமான என் யுக்தி” என்று குறிப்பிடுகிறார். படைப்புத்தளத்தில் நிற்கும் பெரும்பாலான படைப்பாளிகள் தன் வடிகாலாகத் தன்னுடைய படைப்புகளை வைத்திருப்பதைப் போல இல்லாமல் பூபாலன் தன் வடிகால்கள் வழி வாசிப்பாளனின் அக, புற வயங்களைத் திறந்து விடுகிறார். இத்தொகுப்பின் ஒவ்வொரு பக்கமும் ஒரு இறகாய் மாறி நமக்குள் பறக்கத் துவங்குகிறது. நம்மை மையமாகக் கொண்டு சக்கர ஆரங்களாய் விரிந்து செல்கிறது.

பூபாலன் பார்க்கும் ஒரு காட்சியில் அசைவற்ற குளத்தில் கொக்கும் அசைவற்றே நிற்கிறது. கொக்கின் அசைவற்ற நிலை அதன் உணவின் வருக்கைக்கான காத்திருப்பாக இருந்தபோதும் குளத்தின் அசைவற்ற நிலை அதற்குச் சாதகமாக இல்லையோ? என அவரை நினைக்க வைக்கிறது. உடனே தன் கையிலிருக்கும் பந்தால் குளத்தில் ஒரு அசைவை உருவாக்க முனைகிறார். ஆனால், அது எதிர்பார்த்த பலனைத் தரவில்லை என்பதை

குளத்தில் மோதி

என் மீதே எம்பியடித்தது என்கிறார். தொடர்ந்து நகரும் அந்தக் கவிதையை

அறையின் சுவற்றில்

மாட்டியிருந்த அந்தக் குளத்தில்

கொக்கை வரைந்தவன்

ஒரு மீனைக் கூட

நீந்தவிடவில்லை – என்று ஒரு வரைபடமாக மட்டுமே நிறுத்தி விடாமல்

என்னையே பார்க்கும்

கொக்கின் அலகில்

மீனாகிறேன்

நான் இப்போது – எனச் சொல்லி அந்த வரைபடத்திற்குத் தன்னையே ஒப்புக் கொடுக்கிறார். முதல் கவிதையில் அவரின் இந்த ஒப்புக் கொடுத்தலைப் போலவே நாமும் நம்மை இத் தொகுப்பில் உள்ள கவிதைகளுக்கு ஒப்புக் கொடுப்பதை வாசிக்கும் போதே பல இடங்களில் உணர முடிகிறது.

தந்திரமாய் ஒரு வியத்தலை நிகழ்த்திக் காட்ட செய்ய வேண்டிய எத்தனங்களின் உச்சத்தைப் பேசும் கவிதையை

மனசாட்சியை ஒரு

கந்தல்துணியைப் போல கழற்றி

சாக்கடையில் வீசியெறிய

சம்மதிக்க வேண்டும் – என்று முடிக்கிறார். வெறுமனே மனசாட்சியை வீசி எறிந்தால் போதும் என்று மட்டும் சொல்லி இருந்தால் ஒருவேளை அது மீண்டு வந்து நிகழ்த்தும் சமரில் வியத்தலில் லயித்தல் நிகழாது போய்விட்டால்? அதற்காகக் கையாண்ட நுட்பம் சிதைவடைந்து விட்டால்? என்ற கேள்வி தொக்கி நிற்கக் கூடும். அதையே நெருங்க அருவெறுப்பூட்டும் துர்நாற்றச் சாக்கடையில் வீசி விட்டால் மனசாட்சியின் மீள இயலா நிலை வியத்தலையும், நுட்பத்தையும் சிதைவின்றி வைத்திருக்கும் என்பதாலயே அப்படிச் சொல்கிறாரோ? என நினைக்கத் தோன்றுகிறது.

கடவுளிடம் அருள் வாங்க சாதியின் சாயம் துறக்கும் உயர் சாதி மனம் அதே கடவுள் அருள் தருவதற்காக வந்திறங்கிய மனிதனை மட்டும் ஏற்க மறுக்கும் முரணை ”அய்யனார்(எ)மாரப்பன்” கவிதையில் பகடி செய்கிறார்.

கடனட்டைக்கு அழைத்த சகோதரியின் அழைப்பால் நிகழ்ந்த கவிதை கருக்கலைப்பைச் சொல்லும் கவிதை நம் கவனத்தின் கூர்களைச் சட்டெனக் கிளர்ந்து எழும் எவரும், எதுவும் முனை மழுங்கச் செய்து விடும் அபாயத்தை நேர்த்தியாய் நம் முன் விரிக்கிறது.

தன்னை விடப் பிறர் மீது அக்கறை கொள்ளும் தனிநபர்களால் சூழ்ந்தது தான் சமூகம். அந்தச் சமூக அமைப்பில் தனிமனிதன் வழி நமக்குள் இழையோடும் சந்தோசம் போலவே துயரங்களும் அளப்பறியது. தேன் தடவிய கோப்பையில் விசம் தரும் மனித சமூகத்தின் புற வெளிப்பாடுகள் ஒருவனைக் கண் கொத்திப் பாம்பாய் பார்த்து எக்காளமிடுகின்றன. அக்கறை என்ற பெயரில் நிகழும் இப்படியான வன்மங்கள் அவனின் சுய தேடலை புதைகுழிகளுக்கு அஞ்சல் செய்கின்றன. இது தலைமுறைக் கடத்தல் நிகழ்வாகி விட்டதாலோ என்னவோ

எப்போதாவது அவன்

உங்களைச் சந்திக்க வருவான்

அப்போதாவது அவனிடம்

கேட்காதிருங்கள்

அவன் என்ன செய்கிறான் என – கோரிக்கையாக நம் முன் நீட்டுகிறார்.

”அடுத்த வீட்டில் நடந்தால் அது செய்தி. அதுவே நம் வீட்டில் என்றால் துக்கம்” என்ற பொது விதிக்குப் பொருந்தாத பத்திரிக்கையாளர்களின் பணி பற்றிப் பேசும் கவிதையில் வரும்

உங்கள் தந்தை

கொல்லப்பட்டதை

நீங்களே செய்தியாக்கும்

படியும் அமையலாம் – என்ற வரிகளை வாசித்து முடித்ததும் அதற்கிடப்பட்டிருக்கும் “அத்தனை சுலபமில்லை” என்ற தலைப்பை உதடுகள் தாமாகவே முணுமுணுத்து விடுகின்றன.

”கடன் அன்பை முறிக்கும்” என்ற வணிகத்துக்கான வரி இன்று சற்றே பிறழ்ந்து நட்புக்கான உத்திரவாத வரியாகவும் புழக்கத்திற்கு வந்து விட்டது. உதவிகளைச் செய்கின்ற நட்பு உதவிகளைக் கோரும் போது குறிப்பாக அந்தக் கோரல் பணம் சார்ந்ததாக அமைந்து விட்டால் அங்கு நட்பு விரிசல் விட வரிந்து கட்டுகிறது. உங்களுக்கு நண்பனாக இருப்பது எனக்கு மிகச் சிரமமாயிருக்கிறது என்ற வரி அச்சரம் பிசகாது நம் நண்பனுக்கும் பொருந்திப் போவதால் விதிவிலக்குகள் எடுத்துக்காட்டாகாது என்ற சொல்லாடலை நட்பில் நிலை கொள்ளச் செய்தல் அவசியமாகிறது.

மரங்கள் குறித்து அக்கறையும், ஆதங்கமுமாய் நிற்கும் கவிதைகளை வாசிக்க, வாசிக்க நம் மீதே நமக்கு ஒரு சுய பகடித்தனம் உருவாகிறது. சுற்றுச்சூழல் மாசுபடலில் தொடங்கி, ஓசோன் பொத்தல் வரை நிகழும் மாற்றங்கள் குறித்துத் கற்றுத்தரும், கற்றுக் கொள்ளும் நாம் அதைப் போதனைகளாக மட்டும் சேமித்துத் திரிகிறோம். ஒரு பக்கம் கதறிக்கொண்டே மறுபக்கம் கழுத்தறுப்பு வேலைகளை நிகழ்த்திக் கொண்டிருக்கிறோம். இந்த விழிப்புணர்வின்மையை தன் கவிதைகள் வழி சாடும் பூபாலனின் கோபத்திற்கு தெய்வமும் தப்பவில்லை.

கோடாரிகளே இல்லாத

மனிதனாக அவனை

மாற்றி விடும்

மதிக்கூர்மை கூட இல்லாத நீ

என்ன தேவதையென – மரம் வெட்டிக்குக் கோடாரி கொடுத்த தெய்வத்தை விளாசி எடுக்கிறார்.

ஒவ்வொரு இறகாக/ வெட்டி எறியப்பட்ட பறவை/ வெலவெலத்த படி/ நிற்பதாக இருந்தது / அந்தக் கவிதை இறுதியில் –

நீங்கள் புரிந்து கொண்டதாக / ஒரு விளக்கவுரை/ கொடுக்கும் போது தான்/ அழத் தொடங்கும்/ கவிதை – போன்ற வரிகளில் அடர்த்தி குறைந்த தன் மேதாவித்தனங்கள் காட்டும் தேர்ச்சியற்ற விமர்சிப்பால் ஒரு படைப்பை அதன் நிலையிலிருந்து கீழிறக்கி, உருச்சிதைத்துப் பார்க்கும் மனநிலையைச் சாடும் அதே சமயம் மறைமுகமாகச் சில கேள்விகளையும் விமர்சகர்களிடம் வைக்கிறார்.

வெற்றுப்பார்வையாளன் படைப்பாளியாக ஆக முடியாது என்பதைப் போல ஒரு காட்சியை எதிர் நிலையில் மாற்றிப் பார்க்காமல் அப்படியே உள் வாங்குபவன் கலைஞனாக – கவிஞனாக மாற முடியாது என்பதற்கு

அறையெங்கும் நிறைந்திருக்கிறது

மெழுகுவர்த்தி வெளிச்சம்

ஒளிக்குப் பயந்து விட்ட இருள்

ஒளிந்து கொண்டுள்ளது.

அறையிலுள்ள பொருட்கள்

ஒவ்வொன்றின் பின்னால்

அதனதன் நிழலாக – என்ற கவிதை இன்னும் ஒரு சாட்சியாகிறது

நம்மை நோக்கி நீட்டப்படும் எதுவும் நமக்கு உவப்பானவைகளாக இல்லாத போது செய்கின்ற முதல் காரியம் அந்த இடத்தை விட்டு கடந்து போய் விடுவோம். இது நேரில் சாத்தியம். அதுவே ஒரு படைப்பாய் நம் மடியில் அமர்ந்து கொண்டு நம்மோடு யுத்தப் பிரகடனம் நிகழ்த்தினால் என்ன செய்ய முடியும்? மடியில் இருந்து அதை இறக்கி விடலாம். அப்படிச் செய்யும் போது அடுத்து வரும் பக்கங்கள் நமக்கு உவப்பனவையாக இருக்குமோ? என்ற சந்தேகம் அக்குள் அரிப்பாய் இருந்து கொண்டே இருக்கும். அப்படியான சமயங்களில்

வெடுக்கென்று புரட்டி விடுங்கள்

இந்தப் பக்கத்தை – என்கிறார். நம் வாழ்வியல் பக்கங்களில் துயரங்களைக் கடந்து தொடர்ந்து செல்ல இந்தக் கடைசி இரண்டு வரிகள் தரும் புரட்டல் – தாவல் அவசியம். அப்போது தான் வாழ்வை அதன் நீள் வட்டப் பாதையில் அறுபடாமல் நகர்த்திச் செல்ல முடியும்.

அன்பைப் போதிக்கும் அம்மாக்களின் வாஞ்சைகளுக்கு அப்பாக்கள் எக்காலத்திலும் இணையாக முடியாததைப் போல அப்பாக்கள் பிள்ளைகள் சார்ந்து முனையும் சேகரிப்புகளுக்கும், தேடல்களுக்கும் அவர்கள் மட்டுமே அவர்களுக்கு இணையாவார்கள். அவர்களின் எல்லா இயங்கு தளங்களிலும் பிள்ளைகளின் எதிர்காலம் மட்டுமே அச்சாணியாய் சுழலும். அதனால் தான் காலத்தை புகைப்படமாய் உறையவைக்கும் போது கூட அப்பாவை அவராக மட்டுமே அதில் பதிய முடிகிறது பூபாலனுக்கு.

உறைவித்த புகைப்படத்திலும் அவர்

உதடுகள் முணுமுணுத்தபடி இருந்தன

பிள்ளைகளைப் படிக்க வைக்கணும்

வீடு கட்டணும்

என்று நீளமாய் – என்ற வரிகளை வாசித்து முடிக்கையில் நம் அப்பாக்களும் நம் மனதில் அப்படியாகவே உறைகிறார்கள்,

கடவுளுக்கு நிகர் இல்லை என்பதால் அந்தக் கடவுளாகவே குழந்தைகளைத் தன் கவிதைகளில் கொண்டாடித்திரியும் கவிஞர் பூபாலன் அந்தக் கடவுள்கள் இழி மனிதர்கள் சூழ்ந்த தேசத்தில் எப்படியெல்லாம் வதைபடுகிறார்கள். சிறகொடிக்கப் படுகிறார்கள் என்பதையும், சக மனிதர்களிடம் நாம் கவனிக்க மறந்தவைகளையும் அவர்களிடம் நாம் அறிந்திருக்க வேண்டிய விசயங்களையும் உன்னிப்பாய் அவதானித்துச் சொல்கிறார். நம் கை பற்றிக் கவிதை மொழியில் பேசுகிறார்.

ஒருமுகமாய் ஓடும் நதியாய் இல்லாமல் மலையிலிருந்து விழும் அருவி சிதறி நாலா பக்கமும் பாய்ந்து சங்கமத்திற்காகக் கடலை நோக்கி நகருவதைப் போல பூபாலனின் கவிதைகள் ஒற்றையாய் இல்லாமல் பல்வேறு சமூகம் சார்ந்த நிகழ்வுகளையும் பேசுகிறது. ஒருவித அக்கறையோடும், சில இடங்களில் ஆற்றாமையோடும் அவைகள் தொகுப்பிலிருந்து நமக்குள் மடை மாறுகின்றன.

சில கவிதைகளில் ஒரு வரியில் இடைவெளி விட்டு நிற்க வேண்டிய சில வார்த்தைகள் தன்னை முறித்துக் கொண்டு அடுத்தடுத்த வரிகளுக்குத் தாவி நிற்கிறது. இதில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். தனக்கான மொழி அறிவைக் காட்டி வாசகனிடம் மொழிச்சிக்கலை உருவாக்கும் தந்திரங்கள் ஏதுமின்றி தேர்ந்தெடுத்த எளிய சொற்களில் தன் கவிதைகளை பூபாலன் கட்டமைத்திருக்கிறார். அதுதான் தொகுப்பை இன்னும் இளக்கமாய், இணக்கமாய் நம்மோடு இயைந்து நிற்கச் செய்கிறது. நேர்த்தியான வடிவமைப்பில், கண்ணை உறுத்தாத எழுத்தளவில் வந்திருக்கும் தொகுப்பை முழுமையாக வாசித்து முடிக்கையில் பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு – ஒற்றைச் சாளரம் அல்ல என்பதை உறுதிப் படுத்தி விடுகிறது.

——–

முன்றில் இதழின் இலக்கியப் பங்களிப்பு – வெளி ரங்கராஜன்

images (5)

மணிக்கொடி, எழுத்து நடை, கசடதபற, பிரக்ஞை என ஒவ்வொரு காலகட்டத்திலும் நவீன இலக்கியச் செயல்பாடுகளின் மையங்களாக இலக்கியப் பத்திhpகைகள் இயங்கியிருக்கின்றன. அவைகள் தங்களுக்குhpய இலக்கியப் பாh;வைகளுடன் செயல்பட்டாலும் மாறுபட்ட பாh;வைகள் கொண்ட இலக்கிய விவாதங்களைத் தாங்கி பொதுவான இலக்கிய சூழலை முன்நகா;த்துவதில் முக்கிய பங்கு வகித்தன. அந்தப் பத்திhpகையின் இலக்கியப் பாh;வையுடன் உடன்படாதவா;கள் கூட அந்தப் பத்திhpகை மேற்கொண்ட விவாதங்களில் பங்கு பெறக்கூடிய ஒரு சூழல் ஏற்பட்டது. ஆனால் சாதகமாகவோ, பாதகமாகவோ இலக்கியச் காரணங்களைத்தாண்டி தனிநபா;கள் சாh;ந்தும் குழுக்கள் சாh;ந்தும் பிரத்யேகமான நிலைப்பாடுகள் கொண்டு பத்திhpகைகள் ஒருவித இறுக்கத்தை அடைந்தபோது தளா;ச்சியும், தேக்கமும் உருவானதை நாம் பாh;க்க முடிந்தது. ஆனால் முன்றில் பத்திhpகைக்கு அப்படிப்பட்ட ஒரு விபத்து ஏற்படவில்லை. அது ஆரம்பத்திலிருந்து கடைசிவரை குழுவின் பலத்தில் இயங்காமல் சில இலக்கிய நம்பிக்கைகளின் பலத்தில் ஒரு திறந்த அமைப்பாக இயங்கியது. பத்திhpகையின் தோற்றத்திலும், வெளிப்பாட்டிலும் ஒருவித எளிமையும், வெளிப்படைத்தன்மையும் கொண்டு ஒரு இலக்கிய வாசகருக்கு உடனடியான நெருக்கத்தை உருவாக்கியது அதன் முக்கியமான ஒரு குணாம்சம்.

ஒரு இலக்கியப் பிடிப்பும், மரபின் உள்ளாh;ந்த வலிமையின் மீது நம்பிக்கையும், ஒரு நெருக்கமான உரையாடலும் முன்றிலின் பலங்களாக இருந்தன. இன்று பளபளப்பாக பல இலக்கிய இதழ்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவை இலக்கிய hPதியாக பல பாh;வைகளை முன்வைத்தாலும் ஒரு இயல்பான, தன்னிச்சையான நெருக்கத்தை அவைகளால் உருவாக்க முடியவில்லை. பளபளக்கும் பேப்பருடன் இலக்கியத்தை இணைத்துப் பாh;ப்பது கடினமாக இருக்கிறது. சற்று நிறம் குறைந்த கடினமான பேப்பரே நமக்கு நெருக்கமானது. முன்றில் அவ்வித தோற்றத்துடன் ஒருவித நெருக்கமான குரலையும், எதுவும் வரலாம் என்பது போன்ற ஒரு வகைப்படுத்த முடியாத தன்மையும் கொண்டிருந்தது.

முக்கியமாக தனக்காக இலக்கியச் சாh;புகள் கொண்டிருந்தாலும், அவைகளுக்குள் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ளாமல் வளா;ந்துவரும் இலக்கியப் போக்குகளின் குரலை அது பிரதிபலித்தது. ஆரம்பத்தில் க.நா.சு, அசோகமித்திரன், நீலபத்மநாபன் போன்ற படைப்பாளிகளின் நவீனத்துவ பாh;வைகளுடனும், சொல்லாடல்களுடனும் அது இயங்கினாலும் காலப்போக்கில் நாகாh;ஜீனன், தமிழவன், பன்னீh;செல்வம், கோணங்கி, எஸ்.ராமகிருஷ்ணன், பா.வெங்கடேசன் ஆகியோhpன் மொழியியல் மற்றும் பின்நவீனத்துவ சொல்லாடல்களுக்கு களம் அமைத்துத்தர முன்றில் தயங்கவில்லை. நகுலன் மட்டும் கால மயக்கமின்றி அங்கு என்றைக்கும் புதியவராக இருக்கிறாh;. இவை தவிர பிரமிளின் விமா;சனப் பாh;வைகளும், பத்திhpகையின் அடிச்சரடாக இயங்கிவரும் மா.அரங்கநாதனின் தமிழ் மரபு மற்றும் தத்துவாh;த்த பின்புலங்களும் பத்திhpகைக்கு ஒரு குறிப்பிட்ட திசையை வழங்குவதற்கு அடிப்படையான காரணங்களாக இருந்திருக்கின்றன.

download (14)

முன்றில் இயங்கிய காலகட்டமும் நவீனத்துவ கருத்தோட்டங்களுக்குப் பிறகு தமிழ்ச் சூழலில் மொழி சாh;ந்தும், சிந்தனை சாh;ந்தும் ஏற்பட்ட பல்வேறு தாக்கங்களின் குரல்கள் இடம் பெறத் துவங்கிய ஒரு காலகட்டம். அவைகளுக்கு ஒரு உற்சாகமான வரவேற்பை வழங்கி வளா;ந்து வரும் போக்குகளுடன் முன்றில் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டது. இந்தப் புதிய அடையாளங்களின் எழுச்சியாக முன்றில் 90-களில் தமிழ் இலக்கியம் குறித்து நடத்திய கருத்தரங்கு அமைந்தது என்று கூறவேண்டும். அந்தக் கூட்டம் நவீனவாதப் போக்குகள் அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டியதற்கான ஒரு அழைப்பாக இருந்தது. இரண்டு தலைமுறை மதிப்பீடுகள் ஒரு தீவிரமான விலகலை உணரத்துவங்கிய ஒரு கட்டம் அது. சொல்லுக்கும், அh;த்தத்துக்கும் உள்ள உறவை மரபுவழியில் உள்வாங்கும் போக்கை நிராகாpக்கும் குரல்கள் அங்கு ஒலித்தன.

டி.கண்ணன், எஸ்.என்.நாகராஜனைப் பாh;த்து எது தா;மம் என்று சொல்ல முடியுமா என்று கேட்டது எனக்கு நினைவுக்கு வருகிறது. முழுமை, முற்று முடிவான விளக்கம், ஒட்டுமொத்த விடுதலை, ஒரே கட்டமைப்பு ஆகிய செவ்வியச் சொல்லாடல்கள் இன்று வழக்கொழிந்து போய்க்கொண்டிருப்பதின் அடையாளமாக அது இருந்தது. கலாச்சாரப்படுத்துதல் என்கிற நிலைப்பாட்டிலிருந்து எதிh;க் கலாச்சாரம் மற்றும் விளிம்புநிலை என்பதற்கான நகா;வு குறித்த ஒரு சிந்தனையை அது துhpதப்படுத்தியது என்று கூற வேண்டும். சிறுபான்மை மாற்றுக் கலாச்சாரம் பற்றிப் பேசி வந்த தமிழ் இலக்கியவாதிகள் வெகுஜனக் கலாச்சாரம் பற்றிய தவறான கணிப்புகளிலிருந்தும், அணுகுமுறைகளிலிருந்தும் விடுபடுவதற்கான ஒரு குரல் அங்கு ஒலித்தது. பின் வரும் காலங்களில் அக்குரல்கள் மேலும் வலிமை பெற்றது முன்றில் கருத்தரங்கின் வெற்றிக்கான நிரூபணம். ஆசிhpயனின் மரணம். கனவுகளின் சாவு போன்ற கருத்தாக்கங்களின் காலகட்டமாக பின்வரும் காலங்கள் அமைந்ததை முன்றில் கருத்தரங்கம் ஒருவிதமாக உருவகப்படுத்தியது. அக்கருத்தரங்கைத் தொடா;ந்து வந்த இதழ்களும், அக்காலகட்ட படைப்பாளிகளும் தங்கள் நிலைப்பாடுகளை உரசிப் பாh;த்துக் கொள்வதற்கான ஒரு சூழல் அதன் பின்விளைவாக உருவானது.

தற்போது வருகிற இலக்கிய இதழ்கள் ஒரு நிச்சயமான stereotype வடிவத்துடன் சுலபத்தில் அலுப்பூட்டும் தன்மை கொண்டுள்ள நிலையில் முன்றில் ஒரு நிச்சயமற்ற தொடா;ச்சிக்கான விழைவை பிரதிபலித்தது. பத்திhpகை இயங்காதபோது கூட அதன் அலுவலகம் இலக்கியவாதிகளின் சந்திப்புக்கும், உரையாடலுக்குமான களமாக விளங்கியது.

*****