Category: இதழ்147

நிறங்களின் அதிகாரம் ( சிறுகதை ) / ந.பெரியசாமி

எரிச்சலடைந்தான். என்ன இது பைத்தியக்காரத்தனமாக இருக்கிறதே. எல்லா நேரங்களிலும் எல்லாச் சூழலிலும் இது எப்படி சாத்தியமாகும். நெருக்கடி மிகுந்த நேரங்களில் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். அதற்காக யாருமற்ற நள்ளிரவில் கூட கடைபிடிக்க வேண்டும் என்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். அரசு எப்பொழுதுமே தவறானவற்றை மட்டுமே சிந்திக்குமோ, அதிகாரம் நடைமுறைச் சிக்கலை கவனத்தில் கொள்ளாதோ, மீறலைச் செய்வோருக்கு சிறிதான அபதாரம் போட்டால் பரவாயில்லை. அதற்காக ஆதார் கார்டை பறிமுதல் செய்துவிடுவார்களாம், எல்லாவற்றிற்கும் ஆதாரை கட்டாயமாக்கிவிட்டு இப்படியொரு சட்டத்தைப்போட்டால் என்னதான் செய்வது. யாராவது காவலர்கள் நின்றால்கூட யாதாகினும் சாக்குபோக்கு சொல்லி போகலாம். அதற்கும் வழியில்லை. எங்கும் கேமராக் கண்கள்.

இரவு ஷிப்ட் வந்தாலே இதுதான் பிரச்சினை. பத்துநிமிடத்தில் வீடடைந்த சூழல் மாறி இப்பொழுதெல்லாம் ஒரு மணி நேரமாகிவிடுகிறது. யாருமற்ற போதும் நின்று நின்று வரவேண்டியிருக்கிறது. எல்லா நேரங்களிலும் சிக்னலை கடை பிடிக்க வேண்டும் இல்லையாயின் ஆதார் கார்டை பறிமுதல் செய்வோம் இது நம் தேசத்தின் நலன் பொருட்டுப் போடப்படும் சட்டம் இச்சட்டம் சமூக விரோதிகளிடமிருந்து நம் தேசத்தை காக்கும் என கையில் சூலாயுதத்தை ஓங்கி பிடித்தவாறு மோடிஜி ஆக்ரோசமாக அறிவித்த காட்சி மனதில் தோன்ற புல்லட் வண்டியின் சத்தம் நினைவைக் கிழித்து விரைந்தபடி இருந்தது. யாராவது மந்திரி மகனாகவோ சொந்தக்காரனாகவோ இருப்பான் அதான் இவ்வளவு துணிச்சலாக போகிறான் என அவ்வண்டியை பார்த்துக்கொண்டிருக்கையில் அத்தெருவில் முகப்பு வீட்டின்முன் எரிந்துகொண்டிருந்த சிவப்பு விளக்கு அணைந்தது.

•••

ஒவ்வொருவருக்குள்ளும் உருகும் பனிச்சாலைகள் – சமயவேல்

பி.கே.சிவகுமார்

பனிச்சாலைகள் நம் ஒவ்வொருவருக்குள்ளும் அவ்வப்பொழுது உருவாகின்றன. எப்போதாவது மனதுக்குள் நிகழும் பனிப்பொழிவு நமது திடமான மனதையும் பனிச்சாலையாக மாற்றிவிடுகிறது.. வாழ்வின் அளவுக்கதிகமான வெப்பத்தில், அச்சாலைகள் உடனுக்குடனே உருகி வழிந்துவிட, மீண்டும் மனம் தினசரி வாழ்வை எதிர்கொள்ளும் சராசரிச்சாலை ஆக மாறிவிடுகிறது. ஆனால் கவிஞர்கள் என்ற ஒரு இனத்தினருக்கு மட்டும் சீதோஷ்ணநிலை மாறிக் கொண்டே இருக்கிறது.

எப்போதும் புயல், சூறாவளி, வெள்ளம், உறைபனி, பூகம்பம், சுனாமி என பேரவஸ்தையில் சிக்கவே விரும்பி அலைவார்கள் போலும். அவர்களுக்குள் பனிப்பொழிவும் அடிக்கடி நிகழ்வதால், அத்தகைய பனிச்சாலைகளைக் கொஞ்சம் கவனமாகக் காப்பாற்றி வருகின்றனர். பனிச்சாலைகளின் உருகும் உறைபனிக் கட்டிகளை அவர்கள் மொழியிடம் கைமாற்றி கவிதைகளைப் பெறுகிறார்கள். அயலகத்தில், உண்மையான பனிச்சாலைகளை அடிக்கடி காண நேரிடும் புலம்பெயர்ந்த வெப்பதேச மனிதனும் கவிஞனாகிவிடுகிறான். அப்படிக் கவிஞனாகியிருக்கும் பி.கே.சிவக்குமார் ஒரு தொகுப்பு நிறையக் கவிதைகளை நமக்கு வாசிக்கத் தந்திருக்கிறார்.

மரங்களின் கவிஞன்

பி.கே.சிவக்குமாரைக் கவிஞனாக ஆக்கியிருப்பது மரங்களே என்பதைக் கண்டு மகிழ்ச்சியாக இருந்தது. மரங்களோடும் செடிகளோடும் பறவைகளோடும் பேசத்தெரிந்த எந்த மனிதனும் கவியே. குளிர்நாடுகளில் குடிபுகும் அயல் மனிதன் முதன் முதலாகப் பார்க்கும் ஒரு பனிமரம் அவனைப் போலவே அனாதரவாக நடுங்குவதைக் காண்கிறான். ஒரு டிசம்பரில் எழுதப்பட்ட கவிதையில் “இறகுகள் உதிர்த்த மரம்/குளிரில் உடல் விறைத்து” நிற்கிறது.

“சருகுகள் கொணர்ந்து அமரும்
இடம்தேடியலையும் பறவை
ஸ்பரிசம் தந்த கதகதப்பில்
சிறகுகள் முளைத்து மரம்
சிரிக்கும் கொஞ்சமாய் அசைந்து” (பக்கம் 47)

எல்லா உயிர்களும் உள்ளுக்குள் ஏங்குவது பிறப்பதற்கு முன்பு குடியிருந்த கதகதப்பையே. கவிஞன் மரத்தோடு சேர்ந்து, பறவையின் ஸ்பரிசம் ஈந்த கதகதப்பைக் கவிதையின் வழியாகப் பெற்றுக் கொள்கிறான். இன்னொரு கவிதையில் (பக்கம்-49) “சென்று பார்க்க இடமின்றி/ நின்று மரங்கள் ஏங்க) என்று எழுதுகிறார். நிலைப்பையே உயிர் இயக்கமாக மாற்றிக் கொண்ட மரங்களையும் மனிதர்களாகவே கருதும் கொஞ்சம் மனிதர்களில் பி.கே.சிவக்குமார் போன்ற கவிகளும் இருக்கிறார்கள்.

94ம் பக்கத்தில் வரும் மரம் அவரது வீட்டின் வாசலில் “காவல்தோழன் மாதிரி நிற்கிறது.”

“அதனுள் வாழும் பறவையின் கூடு மாதிரி
அது வாழ்கிறது என் வீட்டில்
அதன் பெயர் கூட அறிய முயலாத நான்
அதைப் பொருட்படுத்துவதில்லை….”
இவ்வாறு ஒரு மரத்திடம் கூட அன்னியப்பட்டு நிற்கும் நம்மை கவிஞன், மீண்டும் கொண்டுபோய் அதனுடன் இணைத்து விடுகிறார். “என் வீட்டைக் கண்டுபிடிக்க மரம் அடையாளம்/சுற்றமும் நட்பும் சொல்கிற அந்த நொடிகளில்” பி.கே.சிவகுமாருக்குப் புரிந்து விடுகிறது. மரம் பயன்பாட்டு ரீதியான ஒரு அடையாளம் மட்டமல்ல என்பது.

“அந்த மரம் கொள்கிறது என் முகம்
நான் விரிகிறேன் அதன் கிளையிளைகளில்.”
என்று கவிதையை ஒரு கண்டுபிடிப்பில் கொண்டு போய் நிறுத்துகிறார். உண்மையில் இவர் தான் மரத்தின் முகத்தைப் பெறுகிறார். அதை “நான் விரிகிறேன் அதன் கிளையிளைகளில்” என ஒப்புக்கொள்ளவும் செய்கிறார்.

நுட்பமான கவிதை மனம் இவ்வாறு தான் இயங்க முடியும். ஒரு மனிதன், பல காலம் கண்டு கொள்ளாத ஒன்றை, கவிப்பொறி திடீரென கண்டுபிடிக்க வைக்கிறது. மனிதன் மரமாகுவதும் அணில் ஆவதும் பறவைகள் ஆவதும் சாத்தியம் என்பதையும் அவ்வாறு ஆகுதல் மூலம் இயற்கையின் விஸ்வரூபத்துடன் அவன் கலக்க முடியும் என்பதையும் கவிகளே கண்டுபிடிக்கிறார்கள். மதம் சாராத ஆன்மீகத்தின் எளிய பாதையை ஆதி தமிழ்க்கவிகள் இவ்வாறே திறந்து வைத்தார்கள்.

96ம் பக்கத்தில் வரும் மரம் ஒரு தத்துவ மரமாக இருக்கிறது. அது பனிக்காலம் முதலிய நான்கு பருவங்களிலும் அவதானம் பெறுகிறது. மரத்தின் இருப்பு காலவாரியாக “பறவைகள் கைவிட்ட துர்பாக்கியம்” “வசந்த காலத்தில் வண்டுகள் தொல்லை” “இலையுதிர்காலம் துறவின் பருவம்” என்று ஓரிரு சொற்களில் அட்டவணை இடுபவர்

“நான்கு பருவத்திலும் மனிதர் பிரச்னை
தற்பித்தில் திளைத்தது போல்
நிற்கிறது எப்போதும் சாந்தமாய்”

என்று எழுதுகிறார். தன்-பித்தில் திளைத்தல் என்பது எல்லாம் கடந்த நிலை. தனக்கு வெளியே இருக்கும் அனைத்தும் மறந்து தன்னில் சுழலும் கருந்துளைக்குள் பிரபஞ்சங்களை உறிஞ்சித் துப்பும் காலாதீதம். அதனால் தான் நமது சித்தர்கள் மரத்திடம் பேசினார்கள். மரம் தன்-பித்தில் திளைத்தது போல் நிற்கிறது. அவ்வளவே. மரத்திற்குள், அதைப் பேசும் மனிதனுக்குள், என்ன நிகழ்கிறது என்னும் ஆழ்ந்த வினாக்களை எழுப்பிப் போகும் வரிகள் இவை.

அணிலாடும் தமிழ்க் கவிதை

சங்க காலத்திலிருந்தே அணில், தமிழ்க் கவிதையில் ஒரு அடையாளமாக இருந்து வருகிறது. குறுந்தொகையில் “அணிலாடும் முன்றில்” என்று மகிழ்ச்சியோடு கூறப்படவில்லை. மனிதர்கள் இல்லாத வீட்டின் முற்றத்தில் அணில்கள் ஆடுகின்றன. அதற்காக வருந்தும் வீட்டைப் போல தலைவி வருந்துகிறாள் என்பது ஒரு துயரம்.

ஆனால் இங்கே, ஊரில் விட்டு வந்த முருங்கை மரம், உயிர்ப்புடன் கூடியதொரு அற்புதக் காணொளிச் சித்திரமாக விரிகிறது. (பக்கம்-86-87) அது ஒரு “அணிலாடும் முருங்கை” என எழுதுகிறார். அணில், குரங்குகள், அணிலைப் புகார் சொல்லாமல் குரங்குகளை மட்டும் விரட்டும் தாத்தா, அணிற்பிள்ளை என செல்லமாய் அழைக்கும் பாட்டி, உறவினர் வீடுகள் போகும் முருங்கைக் காய்கள், நெய் காய்ச்ச கீரை கேட்கும் அக்கம்பக்கம் என முருங்கையைச் சுற்றி ஒரு பெரிய இயக்கமே நடக்கிறது.

“முருங்கைப்பூ பார்க்கும் போதெல்லாம்
இப்போதும் பார்க்கிறேன்
அனுப்பி வைத்த அணில் முகங்கள்”

என்று கவிதை முடிகிறது. நிலைப்பையே உயிர் இயக்கமாக நிகழ்த்திக் காட்டும் இயற்கையின் சாகசம் ஒரு மரம் எனில், அதை ஒரு கவிதையாய் வளர்ப்பது கவிஞனின் சாகசம்.

30-31ம் பக்கக் கவிதையில் அமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்த ஒரு தமிழனின் வண்ணமயமான தினசரி வாழ்க்கை பத்தி பத்தியாய் அடுக்கப்படுகிறது. கடைசிப் பத்தி

“எதுவுமில்லை
மற்றவர் போடுகிற
ஃபிரெஞ்ச் ஃப்ரையையும்
சிக்கன் நக்கட்டையும்
ரொட்டித் துண்டையும்
கைநீட்டி வாங்கித் தின்றுவிட்டு
துணையைத் துரத்துகிற
நியுயார்க் ராக்பெல்லர் சென்டர்
மரத்து அணிலுக்கு”

“எதுவுமில்லை” என்ற ஒரே சொல்லுக்குள் பூமியின் அனைத்து உயிர்களின் இருத்தலியல் தர்க்கமும் அடங்கிவிடுகிறது. நமது அணில் பி.கே.சிவகுமாருக்காகவே நியுயார்க் சென்று வாழ்வின் அடிப்படையைப் போதித்திருகிறது.

98ம் பக்கத்தில் உள்ள பாம்பு கவிதையில் இருத்தலின் இறுதி நெருக்கடியே பேசப்படுகிறது.

“பாம்பு என்னைப் பார்த்துப் பயந்தது
நான் பாம்பைப் பார்த்துப் பயந்தேன்
உறைந்து நாங்கள் நின்ற வேளை
தளுக்கென்று தண்ணீரில் குதித்து மறைந்தது தவளை”

அவ்வளவே. திருமூலரின் செய்யுள் போன்ற ஒரு எளிய குழந்தைக் கவிதை வரிகளில், வாழ்வியல் நெருக்கடி தீர்க்கப்படுகிறது. சங்கிலியாய் நகரும் கணங்களின் வரிசையில் திடீரென ஒரு எதிர்பாராக் கணம் குதித்து தவளையைக் காப்பாற்றிவிடுகிறது.

பௌதிக உறவு

இவ்வாறு மரங்கள், அணில்கள் என்னும் உயிருள்ளவை மட்டுமல்ல, பௌதிக பொருட்களையும் உயிருள்ளவைகளாகப் பாவிக்கும் போக்கை குழந்தைகளிடமும் கவிஞர்களிடமும் மட்டுமே நாம் காண முடியும். டிரெட்மில்லைப் பற்றி இந்தத் தொகுப்பில் இரண்டு கவிதைகள் இருப்பது நாம் யாருமே எதிர்பாராதது. 61ம் பக்கத்தில் உள்ள கவிதை ஒரு பயன்படுத்தப்படாத டிரெட்மில் பற்றியது.

“ஆனாலுமிந்த டிரெட்மில்லைத்
தூக்கியெறிய மனமில்லை
என் காலடித்தடங்களை
வைத்திருக்கிறதே.”

இவர் ஒரு கவிஞனாக இருப்பதை உறுதி செய்வதற்காக எழுதப்பட்ட கவிதையோ என்னும் ஐயமும் வருகிறது. 114ம் பக்கக் கவிதையில் டிரெட்மில்லை இவரைப் போன்ற ஒரு ஆணாகவே மாற்றி அதைப்பற்றிய புலம்பலாகக் கவிதையை அமைக்கிறார்.

“என்கூட நிற்கிறது
நடக்கிறது ஓடுகிறது
மூச்சிரைக்கிறது முனகுகிறது
வியர்ப்பதில்லை உடல் இளைப்பதில்லை”

என்று கவிதையைத் தொடங்கி :

“ஓடாமல் நிற்கும்போதும்
இப்படி ஓடிக்கொண்டிருக்குமோ அது”

எனக் கேட்டு கவிதையை முடித்துவிடுகிறார். எண்ணியல் (digital) உலகின் அபத்த உபகரணங்களுடனும் கவிஞன் உரையாட முடிவது கவிதையின் சாகசம் ஆகும்.

கவிதையின் சமகாலமும் குழந்தைமையும்

சமகாலம் என்பது மிக சிக்கலான காலமாக இருக்கிறது. ஒரு சமகாலக் கவிஞன் இயல்பாக சுவாசம் கொள்கிற உறவாக குழந்தைகளுடன் கூடிய உறவே இருக்கிறது. இன்னும் ஈரம் காயாத பச்சையம் நிறைந்த குழந்தைமையை சமகாலக் கவிகள் பலரும் கொண்டாடுவதைப் பார்க்க ஆசுவாசமாக இருக்கிறது. பி.கே.சிவக்குமாரின் சில கவிதைகள் குழந்தைமையால் துளிர்த்து அசைகின்றன.

“எத்தனை இலை
துளிர்க்கிறதென தினம்
எண்ணி மகிழ்கின்ற
குழந்தைகளைப் பார்த்த பின்னே” (பக்கம்-19)

இந்தப் பகுதியை வாசித்த பிறகு எதிர்கால சமூகம் மேல் மிகுந்த நம்பிக்கை உண்டாயிற்று. கான்கிரீட் காடுகளுக்குள் அடைத்து வைக்கப்பட்ட குழந்தைகள் செடிகளின் மேல் வைத்திருக்கும் ப்ரியம் பெரும் நம்பிக்கை அளிக்கிறது. இலைகளை எண்ணி மகிழ்கின்ற குழந்தைகளுடன் மட்டுமே சமகாலக் கவிஞன் உரையாட முடியும். 35ம் பக்கக் கவிதையில் குழந்தைகள் ஒரு நீண்ட கவிதையை எழுத வைக்கிறார்கள். குழந்தைகள் அற்று தனியாக முதியோர்கள் தெருவில், அடுக்ககத்தில் வாழும் எண்ணிறந்த முதியவர்கள் பல முறை படித்து மகிழலாம்.

“எதையெடுத்துக் கொண்டு
உள்ளே நுழைந்தாலும்
இல்லாமல் போயிருந்த
புதிய சந்தோஷம் ஒன்றையும்
ஒவ்வொரு முறையும்
உடனழைத்து வந்தார்கள்” (பக்கம்-35)

என்ன நிகழ்ந்தாலும் சட்டென்று உடனே தங்களது இயல்புநிலைக்குத் திரும்பிவிடும் குழந்தைகளிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதையும் இந்தக் கவிதை மென்மையாக வலியுறுத்துகிறது.

91ம் பக்கத்தில் உள்ள கவிதையில் குழந்தைகள் குழந்தைகளுடனும் அம்மாக்களுடனும் போக்கர் ஆட்டம் ஆடுகிறார்கள். கவிஞன் தேர்ந்தெடுக்கும் கவிதைக் களங்களில் முதன்மையான இடங்கள் இத்தகைய மென்-பித்த வெளிகளே எனலாம். விளையாட்டுகளில் ஜெயிப்பது தோற்பது என்னும் எளிய இருமையின் படிகளில் அமர்ந்து ஊஞ்சலாடுகையில் ஆட்டக்காரர்களும் பார்வையாளர்களும் மென்பித்த வெளியில் மிதக்கிறார்கள்.

“குழந்தைகள் நிபுணர்கள் கண்டுபிடிப்பதில்
அம்மாக்களைத் தோழியாக்கும் விளையாட்டுகளை”

இந்தக் கவிதையில் அப்பாக்களும் அம்மாக்களும் குழந்தைகளும் ஒரு புதிய ஒளியில் மிளிர்கிறார்கள். அது குழந்தைமையின் ஒளி. 92ம் பக்கத்தில் உள்ள பாதாள உலகத்திற்கு வழிகாட்டும் கவிதையும் குழந்தைமையின் ரகசியத்தை வெளிப்படுத்துகிறது. கதை கேட்டல் நிகழும் அத்துவானக் காட்டில் குழந்தைகள் மட்டுமே சோர்வின்றி அலைய முடியும். கதைகளில் தொற்றி எதன் மூலமும் வியப்படையும் மாயவெளியில் மிதக்கும் குழந்தைகள் பாதாள உலகம் என்ன, ஏழேழு உலகத்திற்கும் கூட வழி கண்டுபிடிப்பார்கள்.

56ம் பக்கத்தில் உள்ள சிறிய கவிதையின் இரண்டு வரிகளுக்குள் எதிர்காலம் அறிந்ததொரு கவிஞன் தென்படுகிறான்.

“முட்டைகளைக் கவனித்தேன்
எதையும் நம்பியிருக்கவில்லை”

தாய்மார்களின் கருப்பைக்குள் நுழையும் லட்சக்கணக்கான முட்டைகள் எதை நம்பிக் குழந்தையாகின்றன? அது பிறக்க இருக்கும் குடும்பம் பற்றியோ அந்த ஊரைப் பற்றியோ உலகம் பற்றியோ ஏதும் அறியா முட்டைகள் அவை. எதையும் நம்பியிருக்காத கவிஞரின் முட்டைகள் அவை. அந்தக் கவிஞரின் பெயர் பி.கே.சிவக்குமார்.

———-

உள்ளுருகும் பனிச்சாலை
(கவிதைகள்)

பி.கே.சிவக்குமார்
பிரக்ஞை பதிப்பகம்,
சென்னை 600017
விலை ரூ.110/-
.

.

வெல்லும் சொல் வெளியீடாக வரயிருக்கும் அமர்நாதின் ‘மாயபிம்பம்’ நாவலின் ஒரு பகுதி மாயபிம்பம் – நாவல் அமர்நாத்

முதல்மாதத்தைவிடஇரண்டாவதுவேகமாகப்போய்விட்டது. இத்தனைக்கும்அக்டோபரில்கூடஒருநாள். மறுநாள்சம்பளம்வந்ததும்இரண்டுமாதம்சேர்த்தபணத்திலிருந்துஆன்டர்சன்பெயரில்நானூறுடாலருக்குசெக்வாங்கிஅனுப்பிவிட்டால்கடனைஅடைத்தநிம்மதிவரும். அப்பென்டிக்ஸ்வெட்டியசிகிச்சைக்குப்பின்ஏவ்ரம்நான்குநாள்படுக்கையில்முழுஓய்வுஎடுத்தான். பிறகுஒருவாரம்பாதிநாள்வேலை. கடைக்குப்போவது, சமைப்பது, வீட்டைசுத்தம்செய்வதுஎல்லாம்அருளின்பொறுப்பு. இப்போதுகிட்டத்தட்டசாதாரணநிலை.
அன்றுஹலோவீன். அதுபேகன்களின்பண்டிகைஎன்பதுபாஸ்டோரலின்கொள்கை. பிசாசுகளையும், பூதங்களையும்சிறப்பிக்கும்விரும்பத்தகாதவழக்கம். அதேசமயம்வித்தியாசமாகஇருக்கக்கூடாதுஎனநுழைவாயிலைஒட்டியதிறந்தவெளியில்பிற்பகல்நான்குமணிக்குஒருகொண்டாட்டம். ஏழெட்டுஸ்டால்கள். பல்கலைக்கழகத்தைச்சுற்றிவசிக்கும்குழந்தைகள்மாறுவேடங்களில்திரிந்தார்கள். அன்றையஆண்டுபெண்களுக்குபிரபலமானவேஷம்போகஹான்டாஸ். பையன்களுக்குநிஞ்சாஆமைகள். ஒருஸ்டாலில்ரவியும்அருளும். சிறுவர்கள்வெறுமனே ‘ட்ரிக்ஆர்ட்ரீட்!’ சொன்னால்மட்டும்போதாது. ரவிகேட்டகேள்விக்குசரியாகபதில்சொன்னால், அருளிடமிருந்துஒருநீளஹெர்ஷி. தவறாகச்சொன்னால், சரியானபதிலுடன்அதேஹெர்ஷிபரிசு.
“இயேசுகிறித்துவுக்குஎத்தனைசீடர்கள்?”
“அவர்களில்அவருக்குயாரைஅதிகம்பிடிக்கும்?”
“சொர்க்கத்தில்இயேசு (பைபிள்) கடவுளுக்குஎப்பக்கம்அமர்ந்திருக்கிறார்?”
ஐந்தரைமணிக்குரவியும்அருளும்கடைகட்டினார்கள். மீந்துபோனஇனிப்புகளைதிருப்பிக்கொடுக்கமாணவர்மையம்நோக்கிஒருநடை.
“உன்ரூம்மேட்டின்மனமாற்றம்எப்படிப்போகிறது?”
“ம்ம்ம். நிறையவிவாதிக்கிறோம், ஒருவன்மற்றவனின்சிந்தனையைத்தூண்டுகிறமாதிரி. ஆனால், அவன்இம்மியும்நகரக்காணோம்.”
“சரி, தொலைகிறான்விடு! இன்னும்ஒருமாதம்தான்அவன்சகவாசம்.”
அதற்குப்பிறகும்முடிந்தபோதுஏவ்ரமைசந்தித்துஉரையாடஅருளுக்குஆசை.
“அவன்உன்னைமாற்றிவிடப்போகிறான். எதற்கும்ஜாக்கிரதையாகஇரு!”
“ஹ! அதுமட்டும்நடக்காது.”
“சரி! இயேசுபற்றியஆராய்ச்சிஎங்கேநிற்கிறது?”
“வரும்புதனுக்குஅடுத்தபுதன்கிழமை, இஸ்ரேலில்இருந்துஆர்டீஸ்திரும்பிவருகிறார். அதற்குள்ஒருஅவுட்லைன்எழுதப்பார்க்கிறேன்.”
“பரவாயில்லையே!”
“எனக்குநேரம்நிறைய. படிக்கவும்பிடிக்கும்.”
“இப்போதுஎன்னபடிக்கிறாய்?”
“முதல்நூற்றாண்டுரோமஆட்சியின்சமுதாயஅமைப்புபற்றி. ஆர்டீஸ்பரிந்துரைத்தபுத்தகங்களில்அதுவும்ஒன்று. பொடிஎழுத்தில்அறுநூறுபக்கமாவதுஇருக்கும். இயேசுவைநன்குஅறியஅதுஉதவுகிறது.”
“அத்தனைசிரமம்எதற்கு? லூயிஸைப்படித்தால்போதுமே.”
“எந்தலூயிஸ்? ‘க்ரானிக்ல்ஸ்ஆஃப்நார்னியா’எழுதியவரா?”
“அவரேதான். சி. எஸ். லூயிஸ்சிறுவயதில்நாத்திகர். கடவுளைத்தேடஉலகமதங்கள்அத்தனையும்ஆராய்ந்து, கடைத்தேறஒரேவழிகிறித்துவம்தான்என்றமுடிவுக்குவந்துஅதைப்பின்பற்றியவர். அவருடைய ‘மியர்க்றிஸ்டியானிடி’ஒருஅற்புதபடைப்பு! அதன்முதல்அத்தியாயத்தைமட்டும்படித்துகிறித்துவைநம்பத்தொடங்கியநாத்திகவிஞ்ஞானிகள்எத்தனையோபேர்!”
“படித்துப்பார்க்கிறேன்.”
“அப்புத்தகத்தில்இயேசுகிறித்துயார்என்பதைஅவர்அறிவுபூர்வமாகநிரூபிக்கிறார். ஏப்ரஹாமுக்கும்முந்தியேநான்இருந்தேன், பாவங்களைமன்னிக்கும்அதிகாரம்எனக்குமட்டுமே, என்வழியாகத்தான்மனிதர்களுக்குஉய்வு – என்றுஇயேசுசொன்னதைஎல்லாம்கூட்டிப்பார்த்தால்அவர்பைத்தியமாகவோ, பொய்யராகவோ, இல்லைகடவுளாகவோதான்இருக்கமுடியும். ஜெருசலம்கோவிலில்பன்னிரண்டுவயதிலேயேமெத்தப்படித்தவர்களைதன்ஞானத்தால்வியக்கவைத்தஒருவர்நிச்சயம்பைத்தியமாகஇருக்கமுடியாது. காஸ்பெல்சொல்வதுஅத்தனையும்நிஜம், உண்மையைத்தவிரவேறுஇல்லை, என்றுலூக்ஆரம்பத்திலேயேஉறுதிதருவதால்இயேசுசொன்னதுபொய்இல்லை. அதனால், அவர்கடவுளாகத்தான்இருக்கமுடியும்”என்றுரவிஅழுத்திச்சொன்னான்.
“ஆக… இயேசுபிரான்பித்தன், பித்தலாட்டக்காரன், அல்லதுபிரபுஎன்கிறமூன்றுசாய்ஸ்தானாஎனக்கு?”153 மாயபிம்பம்
“அதுபோதாதா? அவர்வேறுயாராகஇருக்கமுடியும்?”
அருள்ஒருகணம்யோசித்தான்.
“நற்செய்திஜான்இயேசுவின்வாழ்க்கைமுடிந்துஎழுபதுஎழுபத்தைந்துஆண்டுகள்கடந்தபிறகுதான்எழுதப்பட்டது.”
அந்தவரலாற்றுத்தகவல்சரியென்றுஎப்படிச்சொல்லமுடியும்?
“அதன் 8:1-8:11 உனக்குநிச்சயம்தெரிந்திருக்கும்.”
“படித்திருக்கிறேன்.”
“அப்பகுதிபிற்காலத்தில்எழுதிசேர்க்கப்பட்டதற்குஆதாரம்இருக்கிறது. வரலாறுஇல்லையென்றாலும்சம்பவம்நிஜமாகநடந்திருக்கக்கூடும். என்நோக்கில்… இயேசுயார்என்பதைஅதுதெளிவாகக்காட்டுகிறது. இயேசுகோவிலில்சமநீதிபோதிக்கிறார். அப்போது, யூதஅதிகாரிகள்ஒருபெண்ணைஇழுத்துவந்துஇயேசுமுன்நிறுத்தி ‘இவள்சோரம்போய்விட்டாள், இவளைஎன்னசெய்வது?’ என்றுகேட்கிறார்கள். இதுஅவரைமாட்டிவைக்கும்சூழ்ச்சி. இயேசு ‘அவள்செய்தபாவத்துக்குசரியானதண்டனைஅவளைகல்லால்அடித்துக்கொல்வது’என்றால்அவர்போதித்தஅன்பு, கருணை, மன்னிப்பு, எல்லாம்அர்த்தமற்றுப்போய்விடும். ‘பாவம்! ஆதரவற்றஅபலை. தவறுசெய்யாதவர்கள்இவ்வுலகில்யார்? போனால்போகிறது, தயவுசெய்துஅவளைவிட்டுவிடுங்கள்!’ என்றால் (பைபிள்) கடவுள்சொல்லித்தரமோசஸ்இயற்றியசட்டம்அவருக்குத்தெரியவில்லையே, தெரிந்தாலும்அதைக்கடைப்பிடிக்கவில்லையேஎன்றஅவச்சொல்வரும். இயேசுஇக்கட்டைஎப்படிசமாளிக்கிறார்? ‘உங்களில்எவன்பாவம்செய்யவில்லையோஅவன்முதல்கல்லைஅவள்மேல்வீசட்டும்’என்றுசொல்லிவிட்டுகுனிந்துதரையில்கிறுக்குவதுபோல்பாவனைசெய்கிறார். ஒவ்வொருவராகபழிசுமத்தியவர்கள்அகன்றதும்நிமிர்ந்து ‘உன்னைப்பழிக்கயாரும்இல்லையா?’ என்றுஅந்தப்பெண்ணைக்கேட்கிறார். ‘இல்லைஐயா!’ என்கிறாள்அவள். ‘நானும்உன்னைப் 154 அமர்நாத்
பழிப்பதாகஇல்லை. இனிநல்லபடியாகநட!’ என்றுஅறிவுரைசொல்லிஅனுப்புகிறார். இந்தசம்பவத்தில்இயேசுதன்பெயரைமட்டுமல்ல, அந்தப்பெண்ணின்உயிரையும்காப்பாற்றிவிடுகிறார். என்னசாமர்த்தியம்!”
ரவிக்குசந்தேகத்தில்வரும்குழப்பம். அருள்சொன்னவிளக்கத்தில்குற்றம்குறைஇல்லாவிட்டாலும்ஏதோஉதைத்தது. நற்செய்திஜான்நிஜமானவரலாறா, இல்லைகற்பனைகலந்ததா? கிறித்துவைகடவுள்என்றுஅவன்ஏற்கிறானா, இல்லையா? உதவிப்ரோவோஸ்ட்நெட்டில்ஸிடம்அருளின்மனப்போக்கைஎச்சரிக்கநினைத்தான். பிறகு, இன்னும்கொஞ்சகாலம்பொறுத்துப்பார்க்கலாம்என்றுமனதைமாற்றினான். எப்படியும்இரண்டுவாரத்தில்அருளின்மென்டோர்திரும்பிவருகிறார். அவன்அறிக்கையைப்படித்துவிட்டுஅவரேஒருமுடிவுஎடுக்கட்டும். எதற்கும், தவறானபாதையில்அருள்வெகுதூரம்போவதற்குமுன்அவனைஇழுத்துப்பிடிக்க…
“என்னைக்கேட்டால், நீ ‘மியர்க்றிஸ்டியானிடி’யைஇப்போதேபடிப்பதுநல்லது. தள்ளிப்போடாதே! என்னிடம்ஒருபிரதிஇருக்கிறது. தரட்டுமா?” என்றான்.
“வேண்டாம்! எனக்குபுத்தங்கள்சேகரிக்கப்பிடிக்கும். நானேவாங்குகிறேன்.”
“லூயிஸின் ‘மிரக்ல்ஸை’யும்சேர்த்துக்கொள்! அறிவியல்தத்துவம்படித்தநீஅற்புதங்கள்நிகழாதுஎனநம்பலாம். அப்புத்தகம்உன்மனதைமாற்றிவிடும்.”
மாணவர்புத்தகக்கடைக்குப்போய்இரண்டுபுத்தகங்களையும்அருள்வாங்கியதைப்பார்த்தபிறகேரவிஅவனிடமிருந்துவிடைபெற்றான்.

வியாழன்உயிரியல்உதவிவகுப்பு. பிரதானவகுப்பில்முடிக்கப்பட்டபாடத்தைஅன்றுஅருள்கால்மணிக்குள்விளக்கிவிட்டான். மீதிநேரத்தைவீணாக்காமல்அடுத்தபாடத்துக்குமுன்னுரை. டேவிட்டாதேஎழுதிய ‘ஹிஸ்டாரிகல்ஜியாலஜி’என்றபுத்தகத்தில்இருந்துஇரண்டுநாட்களாகசேகரித்தவிஷயங்களின்சுருக்கம்.
உயிரினங்களின்வரலாறு
சரித்திரத்தின்முதல்படிகாலக்கணக்கு. இரண்டுநிகழ்வுகளில்எதுமுன்னது, எதுபிந்தையதுஎன்றுஅறிவதுஅவசியம். பிரமிட்கள், பார்த்தனான்கோவில், ரோமவிளையாட்டுஅரங்கு – இவைஇவ்வரிசையில்இந்தந்தக்காலங்களில்கட்டப்பட்டனஎன்றுபலபதிவுகளைஆராளிணிந்துவரலாற்றாசிரியர்கள்நிர்ணயித்துஇருக்கிறார்கள். அதுபோல, மரங்களின்குறுக்குவட்டங்கள்மற்றும்பவளத்தின்மேல்வரிகள், இவற்றைவைத்துஅவைதோன்றிய
காலத்தைஅறியலாம். வரலாற்றுக்குமுந்தையகற்களின்வயதைஅளவிடவும்வழிகள்இருக்கின்றன. பாறைப்படிவங்களில்காலத்தில்முற்பட்டதுஅடியிலும், பிற்பட்டதுமேல்மட்டத்திலும்அமைந்திருப்பதைபத்தொன்பதாம்நூற்றாண்டிலேயேஅறிஞர்கள்கவனித்தார்கள். ஜுராஸிக்சமீபத்தியகாலம், கேம்ப்ரியன்மிகப்பழமையானதுஎன்றாலும்அவற்றின்வயதுஆண்டுக்கணக்கில்யாருக்கும்சரிவரத்தெரியாது. கதிரியக்கம்கண்டுபிடிக்கப்பட்டபிறகுஎரிகற்களின்வயதைநிர்ணயிக்கமுடிகிறது. அதற்குப்பரவலாகபயன்படுத்தப்படும்தனிமம்பொட்டாஷியம்-40. இதுசிதைந்துஆர்கான்வாயுவாகமாறபலபில்லியன்ஆண்டுகள்ஆகின்றன. இரண்டின்அளவுகளையும்ஒப்பிட்டுகல்லின்வயதுகணக்கிடப்படுகிறது.
இதுசரியானமுறைஎன்றுஎப்படித்தெரியும்?
ஒருஎரிகல்லில்ஒன்றுக்குமேற்பட்டகதிரியக்கத்தனிமங்கள்இருந்துஅவற்றைஅளவிடும்போதுஏறத்தாழஒரேவயதுதான்அறியப்படுகிறது. பலஆளிணிவுக்கூடங்களின்முடிவுகளும்தங்களுக்குள்ஒத்துப்போகின்றன. ஒருஎரிகல்லுக்குள்இன்னொருஎரிகல்புகுந்திருந்தால், பின்னதுவயதில்குறைவாகஇருக்கும்எனஎதிர்பார்ப்போம். கதிரியக்கசிதைவிலும்அதைத்தான்காண்கிறோம்.
சலவைக்கல், சுண்ணாம்புபோன்றபடிவுக்கற்களின்வயது?
அதைஇம்முறையில்நேரடியாகஅளக்கவழியில்லை. அவற்றைஒட்டியஎரிகற்களின்வயதுகளிலிருந்துதோராயமாகஅதுஅறியப்படுகிறது.
எலும்புகளின்வயது?
கார்பன்14 உயிரினம்உயிர்வாழும்போதுஅதன்உடலில்தங்குகிறது, இறந்ததும்சிதைகிறது. மிச்சமிருக்கும்கார்பன்14 மூலம்எலும்புகளின்காலத்தைநிர்ணயிக்கலாம். ஆனால், ஐம்பதாயிரம்ஆண்டுகளுக்குமுந்தையஎலும்புகளில்கார்பன்14 கிட்டத்தட்டமறைந்துவிடுவதால்இவ்வழிஉதவாது. அவைபுதைந்தகற்களிலிருந்துஅவற்றின்காலம்கணக்கிடப்படுகிறது.

முடிவுகள்எவ்வளவுநிச்சயம்?
கணக்கில்பிழைகள்ஏற்படலாம்இல்லையா?
சந்தேகம்இல்லாமல்,

எந்தஅளவிடும்முறையிலும்நிச்சயமின்மைஇருப்பதுஇயற்கை. அதனால்தான்ஒன்றுக்குப்பலமுறைஅளக்கிறோம். இரத்தத்தில்கொலஸ்டராலின்அளவைநூற்றியறுபதுக்குமேல்நூற்றியெழுபதுக்குள் (மில்லிகிராம்) என்றுஇருவரம்புக்குள்குறிப்பிடுகிறோம். அதனால், அதுதவறுஎன்றுஆகாது.

அதுபோல, டைரானாசாரஸ்ரெக்ஸ்வாழ்ந்தகாலம்அறுபத்தியெட்டுமில்லியன்ஆண்டுகளுக்குமுன்னால்என்றுசொல்லும்போதுஒருசிலமில்லியன்கூடுதலாகவோ, குறைவாகவோஇருக்கலாம்தான்.
அருள்பேசிமுடித்துமாணவர்களின்கேள்விகளுக்குக்காத்திருந்தான். சிலநிமிடங்களின்அமைதி. அதிர்ச்சியால்வந்தநிசப்தம்.
மாணவர்கள்சார்பில்ஸ்டேசிசந்தேகம்கிளப்பினாள். எப்போதும்போல்உச்சியிலிருந்துதழைந்தஇரட்டைப்பின்னல்.
“நீசொல்லும்காலம்மில்லியன்கணக்கில்ஓடுகிறது. பூமியின்வயதுஆறாயிரம்ஆண்டுகள்தானே.”
“அதுஎப்படிஅறியப்பட்டதுஎன்றுசொல்கிறேன். முன்னூற்றிஐம்பதுஆண்டுகளுக்குமுன்அயர்லாந்தைச்சேர்ந்தபிஷப்உஷர்போட்டகணக்கு.

பாபிலோன்அரசர்நெபுகட்நெஸர்முற்காலம் 597-இல்இறந்ததாகவரலாற்றுப்பதிவுகள்தெரிவிக்கின்றன. அதுஜுடாவின்அரசன்ஜெஹோசின்நாடுகடத்தப்பட்டமுப்பத்திஏழாவதுஆண்டு (2 அரசர்கள் 25:27) எனபைபிள்குறிப்பிடுகிறது. அதில்தொடங்கிஇஸ்ரேலைஆண்டஅரசர்களின்ஆட்சிக்காலங்களைக்கூட்டிஏப்ரஹாம்முற்காலம் 2200-இல்வாழ்ந்ததாகநினைத்தார். ஆதாமில்இருந்துஏப்ரஹாம்வரையிலானஆண்கள்பாரம்பரியவரிசையையும், ஒவ்வொருவருக்கும்மூத்தமகன்எப்போதுபிறந்தான்என்ற

விவரத்தையும்பைபிள்தருகிறது. (950 ஆண்டுகள்வாழ்ந்தநோவாவுக்குஅவன்ஐநூறுவயதானபோதுமுதல்பிள்ளைபிறந்தான் – படைப்பு 5:32) காலத்தில்பின்னோக்கிச்சென்று, ஆதாமை (பைபிள்) கடவுள்படைத்ததுமுற்காலம் 4004 என்றுஅவர்கணக்கிட்டார்.”
“இரண்டுஎண்களில்எதுசரி?”
இரண்டுமுறைகளையும்விளக்குவதுஎன்கடமை. அவற்றைப்புரிந்துகொள்வதுஉங்கள்அறிவுவளர்ச்சிக்கும், நான்கொடுக்கப்போகும்தேர்வுக்கும்அவசியம்.
“உன்சொந்தஅபிப்பிராயம்என்ன?”
“அதைச்சொல்லிஉன்கருத்தைநான்மாற்றுவதுநியாயம்இல்லை. நீயாகவேஇரண்டுமுறைகளையும்ஒப்பிட்டுஎதுஏற்கத்தக்கதுஎன்றுதீர்மானிக்கவேண்டும்ஞ்”ஸ்டேசிவிடுவதாகஇல்லை.
“பைபிளின்ஆறாயிரம்ஆண்டுக்கணக்குஎப்பவும்மாறவேமாறாது. ஆனால், அறிவியல்மதிப்பீடுஅப்படிஇல்லை. சென்றநூற்றாண்டில்லார்ட்கெல்வின்இருபதுமில்லியன்ஆண்டுகளுக்குமுன்உலகம்தோன்றியதாகக்கணக்கிட்டார். இந்தநூற்றாண்டின்ஆரம்பத்தில்உலகின்வயதுஒருபில்லியனாகஇருந்தது. தற்போதுநாலரைபில்லியன். இப்படிஎண்களைஅடிக்கடிமாற்றிக்கொண்டேஇருக்கும்விஞ்ஞானத்தைஎப்படிநம்புவது?”

“ஏர்லைஸ்டேசிநன்றாகமாட்டிவிட்டாள். அவளிடம்பேசிஜெயிக்கமுடியுமா?” என்றுசந்தோஷப்பட்டான்ரவி,
அருள்சிலநொடிகள்யோசித்து ”வாடவேவாடாதகாகிதப்பூ. வாசம்வீசி, வண்டுகளைக்கவர்ந்து, ஒருநாளில்வாடிகனியாகமாறும்மலர். இரண்டையும்ஒப்பிடமுடியுமா? அதுபோலத்தான்”என்றான்.
அருளின்சாமர்த்தியபதிலைக்கேட்டு ”சும்மாசொல்லக்கூடாது, பயல்நன்றாகவேசமாளிக்கிறான்”என்றுரவிபாராட்டினான்.
வகுப்புகலைந்தது.

ஒவ்வொருவியாழனும்பிற்பகல்மூன்றுமணிக்குலீடர்ஷிப்செமினார். ஜோன்ஸ்ஹாலைஒட்டியபிருமாண்டமானஅரங்கில். ஆராளிணிச்சிமாணவர்களும், இறுதிஆண்டுஇளங்கலைமாணவர்களும்கட்டாயம்ஆஜராகவேண்டும். விருப்பப்பட்டால்மற்றவர்களும்கலந்துகொள்ளலாம். படித்தபிறகுமாணவர்கள்கிறித்துவத்தில்மட்டுமின்றி, அரசியல், அறிவியல், வணிகம்என்றுஎல்லாத்துறைகளிலும்முன்நின்றுமற்றவர்களைவழிநடத்தவேண்டும்என்றநோக்கில், சமுதாயத்தில்சாதனைபுரிந்தவர்களின்சொற்பொழிவுகள்.
அதுவரைபேசியசிலரும், அவர்களின்உரையும்… பெண்களின்ஒழுக்கத்தைக்கெடுக்கும்கருத்தடைக்குசட்டப்படிதடைபோடமுயற்சிக்கும்காங்கிரஸ்
அங்கத்தினர்எலிஸபெத்ப்ரௌன்,
அமெரிக்கப்பல்கலைக்கழகங்களின்சமயசார்பற்றகல்வியைஎதிர்க்கும்வில்லியம்பக்லி, எல்லாநாடுகளையும்ஒரேமட்டத்தில்வைக்கும்ஐக்கியநாடுகள்சபையிலிருந்துயு.எஸ். விலகுவதைவலியுறுத்தும்ஜான்போல்ட்டன்.
இரண்டரைக்குஅருள்தன்மேஜையிலிருந்துஎழுந்தான். நீண்டநேரம்பொடிஎழுத்துகளைப்படித்ததாலோஎன்னவோகாற்றாடநடக்கவேண்டும்போல்இருந்தது. சாலைவழியேபோகாமல்பேலிஹாலின்பின்புறத்துமரங்களின்நடுவேநடந்தான்.

ஒருமரத்தில்கிட்டத்தட்டஎல்லாஇலைகளும்செம்மைபடர்ந்துதீயில்எரிவதுபோல்தோன்றின. அதன்அழகைரசித்தபடிநின்றான். அவன்கண்எதிரிலேயேஒருஇலைஉதிர்ந்துதரையில்விழுந்தது. அதைக்கையில்எடுத்துஅதிசயமாகப்பார்த்தான். அதன்காலம்முடிந்துவிட்டது.

அருளுக்குமரணத்தைப்பற்றியசிந்தனை. ஆனால், அதுஅப்போதுஅச்சத்தையோ, அதிர்ச்சியையோதரவில்லை. மிருகத்துக்குஎன்னநேர்கிறதோ, அதுவேமனிதனுக்கும். ஒன்றுஇறப்பதுஉண்மையென்றால்மற்றதுக்கும்அதேகதிஎன்கிறபைபிளின்தத்துவமனப்பான்மை.

உயிர்கள்அனைத்துக்கும்சுவாசம்ஒன்றுதான். மனிதன்எவ்விதத்திலும்மிருகங்களைக்காட்டிலும்உயர்ந்தவன்அல்ல, அவன்எவ்வளவுதம்பட்டம்அடித்தாலும். கடைசியில், எல்லாரும்போகும்இடமும்ஒன்றுதான்.

– பிரசங்கியார் 3:19
ஆனால், அதற்குமுன்நிறையசாதிக்கவேண்டும்என்றஉந்துதல். பின்னோக்கிப்பார்த்தான். முதன்முறைசந்தித்தபோதுஏவ்ரம்புகழ்ந்ததுபோல்பரந்தஅறிவு, கட்டுப்பாடானஒழுக்கம், அளவானஆசைகள்என்றுவாழ்க்கைக்குநல்லஅஸ்திவாரம்போட்டிருக்கிறான்.

இனிஅதன்மேல்பலருக்குஉபயோகமானகட்டடம்எழுப்பவேண்டும். அதுதான்அவன்குறிக்கோள். கட்டிமுடித்ததும், எல்லாஉயிரினங்களையும்போல, எந்தப்புழுதியில்இருந்துதோன்றினானோஅதேபுழுதிக்குஅவன்திரும்பிவிடுவான்.

அவன்விட்டுச்செல்லும்எச்சம்தான்அருள்ஆனந்தம்என்றுஒருவன்இவ்வுலகில்வாழ்ந்தான்என்பதற்குஅத்தாட்சி.
இந்தகருத்தில்ஒருசமயசிற்றுரைபுனைந்தால்…

மாயபிம்பம் (நாவல்)
வெல்லும் சொல் வெளியீடு
ஜூன் வெளியீடு
பக்கங்கள் : 896 , Hard Binding விலை : 800/-
முன்பதிவு விலை ( ஜூன் 15 வரை) ரூ 550/-

பூதக்கண்ணாடி ( கவிதைகள் ) / வே.நி.சூர்யா

வே.நி.சூர்யா

0
ஒரு தனித்தனியான ஆள் என்ன செய்வான்
தனியாக இருப்பான்
மேலும் தனியாக இருப்பான்
பின்பு தனித்தனியாக தன்னை உடைத்துப் போடுவான்
கடைசியிலும் தனியாக இருப்பான்
ஒரு நீர்த்துளி மெல்லச் சிரிக்கும்
இன்னொரு சிலந்திப்பூச்சியோ
அவனை சுற்றி வலைபின்னும்
மழைத்துளியின் கழுத்தில் கயிற்றை கட்டியிழுப்பதாக கனவு வரும்
அதற்குபிறகும் அவன் தனியாக இருப்பான்

0
அவனுடைய கண்ணீர் அனைத்தும் உப்பாயிற்று
அந்த உப்பை கொண்டு அவன் ஒரு மண்வெட்டி செய்தான்
அம்மண்வெட்டியை எடுத்துக்கொண்டு ஒரு கொடிய இரவில் தன்னைத்தானே
தோண்டத் தொடங்கினான்
அவனுக்கு பல இரவுகளுக்கு பிறகு ஒரு புதையல் கிடைத்தது:
இன்னும் நூறு மண்வெட்டி செய்யும் அளவுக்கு உப்பு

0
வெட்டவெளியில் தன்னைத்தானே எழுப்பிக் கொள்கிறது ஒரு கோவில்
காற்றில் ஒரு கோபுரம்
நீரால் ஒரு பிரகாரம்
சந்தேகமேயில்லை கோவில் கட்டப்பட்டாயிற்று
அங்கே அவனை
சிலையாக நிறுவுகிறது வாழ்க்கை
கறுப்பு மழை பொழிய
அந்தம் வந்து நடையை சாத்துகிறது
இனி
கோவில் வேகமாக பாழடையும்
அவனுடைய சிலை வெடித்து உடையும்
எதுவும் புரியாது வெளவால்களுக்கு

0
இறுதியாய் எதிலுமே இருட்டையே அவன் தேர்கிறான்
இருட்டும் மனமும் ஒன்றுதான் என்றாகின்றன அப்போது
உடனே தெரிகிறது
ஒரு முறிந்துபோன காதல்
இன்னும் தூரத்தில்
அவனுடைய பால்யம்
அதற்கும் தொலைவில்
பிறப்பதற்கு முன்பிருந்த இடம்
அங்கே சென்றாக வேண்டும் அவனுக்கு

0
அவன் தன்னை தனித்தனியாக கழட்டிபோட்டிருக்கிறான். இப்போதைக்கு அவனுக்கு இது ஓய்வு. கால்கள் இரண்டையும் கட்டி ஒரு துடைப்பத்தை செய்திருந்தான், அவன் ஒரு ஊன்றுகோல் செய்திருந்தால் கைகளில் கால்களை பிடித்துக்கொண்டு நடக்கும் மனிதனாக இருந்திருப்பான். கண்களை மிளகு டப்பாவினுள் போட்டு தொலைகாட்சி பெட்டிக்கு முன்பு மூடிவைத்திருந்தான், அநேகமாக இதற்குமுன் அவை வறட்டு இருமலில் அவதிப்பட்டிருக்கக்கூடும். குளிர்சாதனபெட்டியில் காதுகளை வைத்திருந்தான், ஏனென்றே தெரியவில்லை. சோபாவுக்கு அடியில் மூக்கை வைத்திருந்தான், ஒருவேளை ஈர மரக்கட்டையின் வாசனை பிடிக்குமோ என்னவோ. நீளமான நாக்கை சீனி டப்பாவினுள் புதைத்து வைத்திருந்தான், எறும்புகள் வந்துவிடக்கூடாது என்ற பிரார்த்தனை எறும்புக்கொல்லியாய் சுற்றி தூவப்பட்டிருந்தது. தலையை கால்பந்திற்கு அருகே வீசியிருந்தான். வியப்பாக உள்ளது இரண்டு கைகளையும் ஒரேசமயத்தில் யார் உதவியுமின்றி எப்படி கழட்டிவைத்தானென்பது, அவையிரண்டும் சமையலறையில் காஃபி போட்டுக் கொண்டிருக்கின்றன. தலையணையில் கழுத்தை வைத்து தூங்கிக் கொண்டிருக்கிறது அடியும் முடியுமில்லாத உடல். எவ்வளவு அழகாக ரத்தம் வடிந்துகொண்டிருக்கிறது தெரியுமா. எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறான் தெரியுமா

**

காட்சிநோக்காடி VIEWFINDER ஆங்கிலம் : ரேமண்ட் கார்வர் Raymond Carver – தமிழில் ச.ஆறுமுகம்.

ரேமண்ட் கார்வர் Raymond Carver

கைகளில்லாத ஒரு மனிதர், எனது வீட்டின் புகைப்படம் ஒன்றினை என்னிடம் விற்பதற்காக என் வாசலுக்கு வந்தார். குரோமியக் கொக்கிகள் தவிர்த்து, அவர் ஒரு சாதாரணமான ஐம்பது அல்லது அதுமாதிரியான தோற்றமுள்ளவராகவே இருந்தார்.

அவருடைய தேவையினை அவர் சொல்லி முடித்ததும் ”உங்கள் கைகளை எப்படி இழந்தீர்கள்?” என நான் கேட்டேன். “அது வேறு கதை,” என்றார், அவர்.

”உங்களுக்கு இந்தப் படம் வேண்டுமா, வேண்டாமா?”
“உள்ளே வாருங்கள்,” என்றேன், நான். “இப்போதுதான் காபி போட்டேன்.”

கூடவே, பழவகை இனிப்பாக ஜெல்லோவும் இப்போதுதான் செய்து முடித்திருந்தேன். ஆனால் அதை, அந்த மனிதரிடம் சொல்லவில்லை.

உங்கள் கழிவறையை நான் பயன்படுத்தலாமாவெனக் கேட்டார், அந்தக் கையில்லா மனிதர். அவர் குவளையை எப்படிப் பிடிப்பாரென்பதைப் பார்த்துவிடவேண்டுமென்று, நான் நினைத்தேன்.

புகைப்படக்கருவியை அவர் பிடிக்கும் விதத்தை நான் அறிவேன். அது ஒரு பழைய போலராய்டு, பெரிது, கருப்பு. அவரது தோளோடும் முதுகோடும் சேர்த்திணைத்தத் தோல்வாரோடு அந்தப் புகைப்படக்கருவி பிணைக்கப்பட்டிருந்தது.

அதனால் அது, அவரது நெஞ்சுப்பகுதியில் பத்திரமாகத் தொங்கியது. உங்கள் வீட்டின் முன்பான ஓர நடைபாதையில் நின்றுகொண்டு, காட்சி நோக்காடி வழியாக உங்கள் வீட்டினைப் பார்த்து, அவரது கொக்கிகளில் ஒன்றால் புகைப்படக்கருவியின் விசையைத் தட்டி, உங்கள் வீட்டின் படத்தினை எடுத்துவிடுவார். என் வீட்டுச் சாளரம் வழியாக நான் கவனித்துக்கொண்டுதானிருந்தேன், பார்த்துக்கொள்ளுங்கள்.

”கழிவறை எங்கிருக்கிறதெனச் சொன்னீர்கள்?”
‘’ உள்ளேதான், வலதுபக்கம் திரும்புங்கள்.”
வளைந்து, குனிந்து தோள்வார்க்கட்டுக்குள்ளிருந்தும் கழன்றுகொண்ட அவர், நிழற்படக்கருவியை சாய்மெத்தை மீது வைத்துவிட்டு, மேல்சட்டையை நேர்படுத்தி இழுத்துவிட்டுக்கொண்டார்.

”நான் வரும்வரையில் நீங்கள் இதைப் பார்த்துக்கொண்டிருங்கள்.” அவரிடமிருந்த நிழற்படத்தை நான் கையில் எடுத்தேன். சிறு புல்வெளிச் செவ்வகம் ஒன்றுடன் காரோடும் பாதை, கார் ஷெட், முன்புறப்படிகள், புடைப்புச் சாளரம் மற்றும் சமையலறையிலிருந்து நான் கவனித்துக்கொண்டிருந்த சாளரமும் இருந்தது.

அப்படியிருக்கையில் இந்தத் துயர நிழற்படம் எனக்கு எதற்கு?
நான் இன்னும் நெருக்கமாகப் பார்த்தபோது சமையலறைச் சாளரத்தில் என் தலையை, என் தலையையேதான் பார்த்தேன். என்னை அதைப்போலப் பார்த்தபோது அது, என்னைச் சிந்திக்கவைத்தது. ஆம். அது ஒரு மனிதனைச் சிந்திக்கச்செய்கிறதென்பதை என்னால் உங்களுக்குக் கூறமுடியும். கழிவறையில் நீர் ஊற்றப்படுவது எனக்குக் கேட்டது. அவர் ஜிப்பினை மேலிழுத்துக்கொண்டு, சிரித்தவாறே, ஒரு கொக்கி அவரது இடைக்கச்சினைப் பிடித்திருக்க, இன்னொன்றால் காற்சட்டைக்குள் மேற்சட்டையை உட்தள்ளிக்கொண்டே அறைக்கூடத்துக்குள் வந்தார்.

“என்ன, சிந்தனை?” எனக்கேட்டவர், “எல்லாம் சரிதான்!” என்றும் சொன்னார்.

என்னைப் பொறுத்தவரையில் எல்லாமே நன்றாகப் போகிறதென்றுதான் நினைக்கிறேன். நான் என்னசெய்கிறேனென்பது எனக்குத் தெரியாமல் போகுமா? எதையும் எதிர்கொள்வோம், அது ஒரு அலுவல் சார்ந்த போட்டி.

அவர் அவரது கவட்டையில் சொரிந்துகொண்டார்.
”காபி இங்கிருக்கிறது” என்றேன்.

”நீங்கள் தனியாகத்தான் வசிக்கிறீர்கள், சரிதானே? என்ற அவர், வசிப்பறைக்குள் நோக்கிவிட்டுத் தலையைக் குலுக்கினார். “கஷ்டம், கஷ்டம்” என்றார்.

அவர் நிழற்படக்கருவியின் அருகில், பெருமூச்சுடன் பின்பக்கம் சாய்வாக அமர்ந்த பின், அவர் தெரிந்துகொண்டதை என்னிடம் சொல்லப்போவதில்லை என்பது போல முறுவலித்தார்.

‘காபியைக் குடியுங்கள், ” என்றேன், நான்.
ஏதாவது பேசவேண்டுமே, என்ன பேசலாமென நான் யோசிக்க முயற்சித்தேன். ”மூன்று பையன்கள், நடைபாதை ஓரக்கல்லில் என் முகவரியைத் தீட்டுவதாகக் கூறி இங்கு வந்து நின்றார்கள். அதற்காக ஒரு டாலர் கேட்டார்கள். உங்களுக்கு அதைப்பற்றி எதுவும் தெரியாதில்லையா, இல்லை, தெரியுமா?”

அது ஒரு தொலைதூரக் காட்சிப்பிடிப்பு. ஆனால், நானும் அவரை அப்படியேதான் பார்த்திருந்தேன்.
அவர் முன்பக்கமாக, முக்கியமாக அவரது கொக்கிகளுக்கிடையில் தம்ளரைச் சமநிலைப்படுத்திக்கொண்டு முற்சாய்ந்தார். அவர் அதனை மேசை மீது வைத்தார்.

“ என் வேலைகளை நானாகவேதான் செய்துகொள்கிறேன்.” என்ற அவர், “எப்போதுமே, இனிமேலும் அப்படித்தான். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” எனக் கேட்டார்.
“நான் இணக்கமான இணைப்பினை ஏற்படுத்த முயற்சித்துக்கொண்டிருந்தேன்.” என்றேன். எனக்குத் தலை வலித்தது. அதற்குக் காபி நல்லதில்லையென்று எனக்குத் தெரியும்; ஆனால், சிலசமயம் ஜெல்லோ அதைச் சரிசெய்துவிடும். நான் அந்தப் படத்தைக் கையிலெடுத்தேன்.

“ நான் சமையலறையிலிருந்தேன்.” என்றேன், நான்.
]
“வழக்கமாக நான் பின்பக்கத்தில் தான் இருப்பேன்.”

“அது எல்லா இடத்திலும் அப்படித்தான் நிகழ்கிறது.” என்றார், அவர். “ஆக, அவர்கள் அப்படிக்கப்படியே உங்களை விட்டுப் போய்விட்டார்கள், சரிதானே? இப்போது, நீங்கள் என்னை எடுத்துக்கொள்ளுங்களேன், நான் தனியாகத்தான் பணிசெய்கிறேன். இதற்கு நீங்கள் என்ன சொல்வீர்கள்? உங்களுக்குப் படம் வேண்டுமா?”

“அதை நான் வாங்கிக்கொள்கிறேன்.” என்றேன், நான்.
நான் எழுந்து தம்ளர்களை எடுத்துக்கொண்டேன்.
“ நிச்சயம் வாங்கிக்கொள்வீர்கள்,” என்றார், அவர். ”நகரமையத்தில் ஒரு அறை வைத்திருக்கிறேன். எல்லாம் சரியாகத்தான் நடக்கிறது. வெளியே செல்லும் பேருந்து ஒன்றில் ஏறிச் சென்று ஊர்ப்புறங்களில் வேலை முடிந்த பிறகு மற்றொரு நகர்மையத்துக்குப் போகிறேன். நான் சொல்வதைக் கவனிக்கிறீர்களா? ஹூம், ஒரு காலத்தில் எனக்கும் குழந்தைகள் இருந்தனர். எல்லாம் உங்களைப் போலவேதான்.” என்றார், அவர்.

நான் கையில் தம்ளர்களோடு, சாய்மெத்தையில் அவர் அவஸ்தைப்பட்டுக்கொண்டிருந்ததைக் கவனித்து நின்றேன்.
“அவர்கள் எனக்குத் தந்ததுதான் இதுவெல்லாம்.” என்றார், அவர். என்முன் நீண்ட அந்தக் கொக்கிகளைக் கண்கள் விரியப் பார்த்தேன்.

“ காபிக்கு நன்றி. கழிவறை பயன்படுத்த அனுமதித்ததற்கும் நன்றி. எனக்கும் இரக்கமாகத்தானிருக்கிறது. “
அவர் எழுந்து கொக்கிகளைத் தாழ்த்திக்கொண்டார்.
” காட்டுங்கள்.” என்றேன், நான். “எவ்வளவென்று காட்டுங்கள். வீட்டையும் என்னையுமாக இன்னும் அதிகப் படமெடுங்கள்.”

“அதெல்லாம் வேலைக்காகாது” என்றார், அந்த மனிதர். “அவர்களெல்லாம் மீண்டும் வரப்போவதில்லை.” அவர் தோல்வாரை மாட்டிக்கொள்வதற்கு, நான் உதவி செய்தேன். “ எதாவது ஒரு விலையைச் சொன்னால் தானே, நான் இதை உங்களுக்குத் தர முடியும்’’ என்றார், அவர். ”ஒரு டாலருக்கு மூன்று.” ”நான் இதற்கும் கீழே குறைத்தால், என்னால் வெளியே போகமுடியாது.” என்றார், அவர்.

நாங்கள் வெளியே சென்றோம். அவர் கருவியின் மூடுகதவினைச் சரிசெய்தார். நான், எங்கே நிற்கவேண்டுமென்று அவர் சொன்ன இடத்திற்கு நாங்கள் இறங்கிச் சென்றோம். நாங்கள் வீட்டைச் சுற்றி நடந்தோம். எல்லாமே முறைப்படியானது தான்.

சிலநேரங்களில் நான் ஓரப்பாதைகளைப் பார்ப்பேன். சிலநேரங்களில் நேருக்கு நேராகப் பார்ப்பேன்.
‘’நல்லது,” என்பார், அவர். “அதுவும் நல்லது,” என, நாங்கள் வீடு முழுவதும் சுற்றிப் பின்பக்கம் வந்து, பின்னர் முன்பக்கம் வந்தபோதும் சொன்னார்.

“இருபது ஆகிவிட்டது. இது போதும்.”
“இல்லை,” என்றேன், நான். “கூரை மேலேயும்,” என்றேன்.
“சேசுவே,” என்றார், அவர். அவர் கட்டிடத்தை மேலும் கீழுமாகக் கண்களாலேயே அளவிட்டார்.
“நிச்சயமாக,” என்றவர், “இப்போதுதான், நீங்களாகப் பேசுகிறீர்கள்.” என்றார்.

‘’மொத்தமாக எல்லாமும். அவர்கள் துடைத்தெடுத்துவிட்டார்கள்.” “ இதைப் பாருங்கள்.” என்ற அந்த மனிதர் மீண்டும் கொக்கிகளை மாட்டினார்.
நான் உள்ளேசென்று நாற்காலி ஒன்றினை எடுத்துவந்து, கார் ஷெட் கூரை அடியில் வைத்தேன். ஆனாலும் அந்த உயரம் போதவில்லை. அதனால் நான் அளிக்கூடை ஒன்றை எடுத்து வந்து நாற்காலியின் மீது வைத்தேன்.

கூரை மீது ஏற அது போதுமானதாக இருந்தது.
மேலே ஏறி நின்று, சுற்றிலும் பார்த்தேன். நான் கையசைத்தேன்; அந்தக் கையில்லாத மனிதர் பதிலுக்குக் கொக்கிகளை அசைத்தார்.

அப்போதுதான் நான் அவற்றைப் பார்த்தேன். சிறுகற்கள். புகைபோக்கிக் கூண்டின் மீது ஒரு கூடு போல அந்தக் கற்குவியல் இருந்தது. உங்களுக்குத்தான் அந்தப் பையன்களைத் தெரியுமே. அவர்கள் கற்களைப் புகைபோக்கிக்குள் வீசுவதாக நினைத்து எப்படி வீசுவார்களென்றும் உங்களுக்குத் தெரியுமே.
”ரெடியா?” எனக்கேட்ட நான் ஒரு கல்லைக் கையிலெடுத்துக்கொண்டு, காட்சி நோக்காடியில் நான் தெரிவதை அவர் சரிப்படுத்தும் வரை அப்படியே நின்றேன்.
“ஓ.கே.” என்றார், அவர்.

நான் கையைப் பின்னுக்கு இழுத்து, “இந்தா வாங்கிக்கோ!” எனக்கத்தி, அந்தப் பொட்ட நாய்க்குப் பிறந்தமகன் மீது எவ்வளவு தூரமாக எறியமுடியுமோ அவ்வளவு தூரத்துக்கு எறிந்தேன்.

”எனக்குத் தெரியாது, நானென்ன, அசையும் படமா பிடிக்கிறேன் ” என அவர் கத்துவது என் காதில் விழுந்தது.
“ திரும்பவும் எடுங்கள்!” எனக்கத்திக்கொண்டே இன்னொரு கல்லை எடுத்தேன்.

***