Category: இதழ்150 ஆவது சிறப்பிதழ்

சிபிச்செல்வன் கவிதைகள் / ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு லதா ராமகிருஷ்ணன்

சிபிச்செல்வன்

12. BASEMENT

Standing at the mountain-base
I kept watching for a long time
The mountain was all tall and massive
I waited there itself
One can see the mountain from all sides
of our place
Viewing it from a distance
we won’t see its base.
But, the mountain-base never worried about it
It had no grievance at all of its absence
when I watch so.
In mountain-climbing
the base remains the start
and the close.

மலை யடிவாரம்

மலையடிவாரத்தில் வெகுநேரம் பார்த்திருந்தேன்
மலை மிக மிக உயரமாகத் தெரிந்துகொண்டிருந்தது
அங்கேயே காத்திருந்தேன்
ஊரின் எல்லாப் பக்கங்களிலிருந்தும்
மலையைப் பார்க்கலாம்
தொலைவிலிருந்து பார்க்கும்வேளை
மலையடிவாரம் தெரியாது
ஆனால் அதைப் பற்றி ஒரு நாளும் கவலைப்பட்டதில்லை மலையடிவாரம்
நான் பார்க்கும்போது அது இல்லையென்பதில் அதற்கு ஒரு நாளும் குற்றச்சாட்டு கிடையாது
மலையை ஏறத்தொடங்கும் ஆரம்பமும்
மலையடிவாரத்தில்தான்
மலையிலிருந்து இறங்கும்போது அதுதான் முடிவாகமுடிந்தும் நிற்கிறது
•••

13. THE CHILD IN ITS FATHER’S SHIRT

Getting inside its father’s shirt
The child was trying to become the father.
That the father is wearing the shirt of his child
which has grown along with the father
_ his friends make fun of him.
The son goes to office, wearing his father’s shirt.
Wearing his son’s trendy shirts the father tries to
Appear youthful.
The son who had worn his father’s shirt
Implies his desire to become a father.
Thus Time keeps enjoying
The father’s shirt
And that of the son
Turning all too hastily
Time-worn.

அப்பாவின் சட்டைக்குள் குழந்தை

நுழைந்து அப்பாவாக முயற்சித்துக்கொண்டிருந்தது
அப்பாவோடு வளர்ந்த குழந்தையின் சட்டையை அப்பா அணிந்துகொண்டிருப்பதாக
நண்பர்கள் பகடி செய்கிறார்கள்
அப்பாவின் சட்டையை மாற்றிப்போட்டுக்கொண்டு அலுவகம் போகிறன் பிள்ளை
பிள்ளையின் காலத்திற்கேற்ற பேஷன் சட்டைகளை உடுத்திக்கொண்டு இளமையின் மெருகை காட்டிக்கொள்ள விரும்புகிறார் அப்பா
அப்பாவின் சட்டையைப் போட்டுக்கொண்ட பிள்ளை
குறிப்பாலுணர்த்துகிறான் அப்பாவாக மாறவிரும்புவதை
இப்படியாக இந்த விளையாட்டை
ரசித்துக்கொண்டிருக்கிறது காலம்
அப்பாவின் சட்டையும்
பிள்ளையின் சட்டையும்
வேகமாக நைந்துகொண்டிருப்பதை
••

14. THE NOON-MAN’S SMOKY PLAY

A man keeps watching from beneath a towering over-bridge
The wagons going at so great a height;
also their hues and shades;
furthermore their varying speeds
The noon-man kept on watching
the cars that whizzed past along the roads
underneath the bridge
driving away the noon
in a hot chase
When he became bored
buying a cigarette from a roadside shop,
he lit it.
Inhaling the first smoke deeply,
relishing it
he blew it out.

The smoke taking its own time flew
and dispersed in the air.
Following that
commencing the game of
inhaling and exhaling smoke
when he was turning fatigued,
in the last curl of smoke blown out
the over-bridge vanishing,
in a few moments
the noon-man almost ran
terribly agitated.
He remained watching the traffic-police
blowing his whistle
and chasing him in hot pursuit.

மத்தியானவாசியின் புகை விளையாட்டு

உயரமான மேம்பாலத்தின் அடியிலிருந்து
ஒருவன் பார்த்துக்கொண்டிருக்கிறான்
உயரமாக போய்க்கொண்டிருந்த வாகனங்களை
மற்றும் அதன் வண்ணங்களை
மற்றும் அதன் வேகங்களை
பாலத்தின் கீழிருந்த சாலையிலும் மத்தியானத்தை விரட்டிக்கொண்டு போன கார்களையும் பார்த்தபடியே இருந்தான் அந்த மத்தியானவாசி.
சலிப்புற்ற ஒரு கணத்தில் சாலையோர பெட்டிக்கடையில் சில்லறைகொடுத்து ஒரு சிகரெட் வாங்கி கொளுத்தினான்.
முதல் புகையை ஆழ்ந்து இழுத்து ரசித்தவாறே
புகையை வெளியே ஊதினான்
புகை அதன் வேகத்தில் மெல்ல காற்றில் கலைந்தது
அடுத்தடுத்து புகையை இழுப்பதும்
அதை வெளியே ஊதுவதுமாக ஒரு விளையாட்டைத் தொடங்கி அதை அவனே சலித்துக்கொண்டிருந்தவேளையில்
கடைசியாக விட்ட சுருள் சுருளான புகையில்
மேம்பாலம் மறைய
சில கணங்களில்
பதட்டமாக விரைந்தான் மத்தியானவாசி.
போக்குவரத்துக் காவலர் வீசில் ஊதி அவனைப் பின்னாலேயே விரட்டிக்கொண்டு போவதைப் பார்த்தவாறேயிருந்தான் அவன்.
••••

THOSE WHO KEEP ON WASHING THEIR HANDS

In bathrooms
In the kitchen wash-basin
In toilets
and everywhere else
they have kept dettol solutions in bottles
As soon as you wake up in the morning
First you should wash the hands and then only
brush the teeth.
After attending to nature’s call at the loo
you should wash your hands with great caution
focusing on your utmost safety
then, after taking bath,
should squeeze the dettol soap-solution
and wash impeccably
Each time you should wash for twenty seconds.
First you should pour the solution in your palm
and spread and press it slowly oh softly
Then increase the speed, entwining your palms
tightly pressing against each other.
First wash the left palm with the right
and then the right with the left
Pressing, squeezing, wiping.
Then, repeat the exercise
upon the outer portion of the palms
From right to left and left to right;
Spare no spot but wipe hard in between the fingers
and on the rims and edges of nails.
Thus whenever there is time in a day
they go on washing their hands
trying to be clean to the core.
They keep cleaning the hands for ever.
Over and over
pouring water all over
saying that germs shouldn’t be there
they keep on butchering bacteria
and
fellow humans
washing their hands off…
all the time….
Oh my…..

குளியலறைகளில்
சாப்பாட்டு அறை வாஷ்பேஸின்களில்
கழிவறைகளில் என எல்லாயிடங்களிலும்
கைகளைக் கழுவிக் கொள்வதற்காக நவீன டெட்டால் சோப்பு நீரை பாட்டில்களில் அடைத்து வைத்திருக்கிறார்கள்
காலையில் எழுந்ததும் முதலில் கைகளைக் கழுவிக்கொண்டுதான் பல் துலக்க வேண்டும்
கழிவறைகளில் காலைக்கடன்களை கழித்ததும்
கைகளைக் கழுவிக்கொள்ள வேண்டும்
பின் குளித்து முடித்ததும் ஒருமுறை அதீத பாதுகாப்பு கருதி கைகளில் டெட்டால் சோப்பு நீரை பிதுக்கி சுத்தமாக கழுவிக்கொள்ள வேண்டும்.

ஒவ்வொருமுறையும் இருபது நொடிகள் கழுவுதல் வேண்டும்
முதலில் உள்ளங்கையில் சோப்புநீரை விட்டு
மெதுவாக மிக மெதுவாக தேய்த்து
பின் வேகவேகமாக தேய்த்துவிடவும்
வலது கையிலிருந்து இடது கையையும்
இடது கையிலிருந்து வலது கையையும் தேய்க்கவும்
உள்ளங்கைகளை சுத்தமாக அழுத்தி தேய்க்கவும்
பின் கைகளின் மேற்புறத்தில் இதேபோல இடவலமாக வலஇடமாக தேய்க்கவும்
விரல்களுக்கிடையில் நகக்கண்களுக்கிடையில் என ஒரு இடம் விடாமல் தேய்க்கவும்
இப்படியாக ஒரு நாளின் வாய்ப்புகள் கிடைக்கும்போதெல்லாம்
சுத்தம் சுத்தமென கைகளைக் கழுவிக்கொண்டேயிருக்கிறார்கள்.
கைகளைக் கழுவிக்கொண்டேயிருக்கிறார்கள் ஓயாமல்
கழுவிக்கொண்டேயிருக்கிறார்கள்.
கிருமிகள் ஒட்டிக்கொள்ளக்கூடாதென சொல்லியவாறே
ஓயாமல் கொல்கிறார்கள் பாக்டீரியாக்களை
மற்றும்
சக மனிதர்களை
ஓயாமல் கைகளைக் கழுவிக்..,,,,,

PHANTOM FOE

They were rehearsing boxing
From a corner I was watching it
They were punching at those in front.
The wrestlers
jumping and leaping to and fro,
front and back
rehearsing hard
would be forever
giving their make-believe foes
ferocious shadow-punches.
So early that morn
the playground was overcrowded.
With the nose broken
the trainer’s face turns bloody.
The other coaches come running
shouting that the practice is over
The foe escapes then, from there
on a fantasy flight.

பாவனை எதிரி

குத்துச்சண்டை பயிற்சியை மேற்கொண்டிருக்கிறார்கள்
ஒரு ஓரத்திலிருந்து அதை நான் பார்த்துக்கொண்டிருந்தேன்
முன்னால் இருந்தவர்களை நோக்கி
குத்திக்கொண்டிருக்கிறார்கள்
முன்னும் பின்னுமாக குதித்து
கடும் பயிற்சியை மேற்கொண்ட குத்துச் சண்டை வீரர்கள்
இப்போதும் அப்போதும்
எதிரிலில்லாத எதிரியை நோக்கி
குத்துகிறார்கள் பாவனையாக
அவ்வளவு அதிகாலையில் நிறைந்திருக்கிறது விளையாட்டு மைதானம்
மூக்குடைபட்டு இரத்தம் தெறித்து
வழிகிறது பயிற்சியாளனின் முகம்
பயிற்சி நிறைந்துவிட்டதாக கத்திக்கொண்டு ஓடிவருகிறார்கள்
மற்ற பயிற்சியாளர்கள்
அப்போது பாவனையாக தப்பித்து ஓடுகிறான்
எதிரி வீரன்
•••

நன்றியறிதல்/ சிபிச்செல்வன்

சிபிச்செல்வன்

வணக்கம் நண்பர்களே / தோழிகளே

மலைகள் 150 ஆவது இதழை இதோ பதிவேற்றம் முடித்து உங்களோடு உரையாடும் நிலைக்கு வந்துவிட்டேன்.
இணைய இதழை நடத்துவது எளிதான விஷயமாக பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் எல்லா எளிதான விஷயங்களைப்போலவே அதுவும் அப்படி ஒரு மாய தோற்றத்தைக் கொடுப்பதில் வல்லமை கொண்டது.
ஒவ்வொரு இதழைக் கொண்டு வரும்போதும் எதிர்பாராத வகையில் தொழில்நுட்ப கோளாறுகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
நேற்று மதியம் படைப்புகளை லே அவுட் செய்கிற சமயத்தில் கணினியில் படைப்பாளிகளின் படங்களை மலைகள் இணைத்தில் கொண்டு வருவதற்கு இயலாமல் செக்யூரிட்டி காரணங்களை காட்டி படங்களை ஏற்க மறுத்து அடம் பிடித்தது.
நல்லவேளை வீட்டில் என் மருமகள் ஐஸ்வர்யாவும் ( கணினி பொறியாளர் ), என் இளைய மகன் அருண்பாலாஜியும்( 9 ஆம் வகுப்பு ) கணினியில் காரணங்களை கண்டுபிடித்து அதை பழுது நீக்க முயன்றார்கள்.இவர்களுக்கு சென்னையிலிருந்து என் மூத்த மகன் அமுதராஜ் ( கணினி பொறியாளர் ) தொலைபேசி வழியாக உதவினார். இது சுமார் இரண்டு மணி நேரமாக நீடித்தது. பிறகே சரியானது.
இவர்களுக்கு நன்றி.
•••
மலைகள் இதழில் தொடர்ந்து பங்களித்து வரும் எழுத்தாளர் திரு . வண்ணதாசன் மற்றம் மொழிபெயர்ப்பு பணிகளில் சளைக்காமல் பங்கேற்றுவருகிற திரு.ச.ஆறுமுகப் பிள்ளை மற்றும் பல படைப்பாள நண்பர்களுக்கம் , வாசகர்களுக்கும் , விமர்சகர்களுக்கும் நன்றி.
••

இவ்வளவு கஷ்டப்பட்டு இந்த மலைகள் இணைய இதழை எதற்காக நடத்த வேண்டும் .
உங்களைப் போலவே எனக்கும் தெரியாது.
ஆனால் இப்போது வரை அதை நடத்த வேண்டும் என்கிற விடாப்பிடியான மனோபாவம் இருப்பது ஆச்சர்யம்தான். பல காரியங்களை செய்வதில் நான் சோம்பேறி.ஆனால் மலைகள் இதழை மட்டும் உற்சாகமாக விடாப்பிடியாக நடத்துவது எனக்கே ஆச்சர்யம்தான்.

எத்தனையோ காரணங்களால் மலைகள் நின்றிருக்க வேண்டியது. குறிப்பாக, கடந்த 2 ஆண்டுகளாக என் உடல்நிலை அவ்வப்போது மிக மோசமானது. பல சமயங்களில் இதழை கொண்டு வருவது சாத்தியமேயில்லை என்ற நிலைகளும் வந்தன. எப்படியோ கடைசி நேரத்தில் உடல்நிலைகளை மற்றும் மனநிலைகளை எதிர்கொண்டு மலைகள் இதழ்கள் வெளிவந்தன.
•••

கடந்த 150 இதழ்களாக ஒவ்வொரு இதழிலும் ஆசிரியர் பக்கங்களை எழுதியிருந்தால் 150 கட்டுரைகள் வெளிவந்திருக்கும். இப்போது நினைத்துப் பார்த்தால் ஏன் அதை செய்யவில்லை என்ற கேள்வி உங்களைப் போலவே கடந்த சில நாட்களாக எனக்கும் எழுந்தது.
இதழைப் படிக்கும் போது எக்காரணத்தை முன்னிட்டும் நான் என்ற தடை உங்களைப் படிக்க தொந்தரவாக இருக்கக்கூடாது என்ற சுய கட்டுப்பாடும் ஒரு காரணம்.
••
இன்னும் எத்தனை இதழ்கள் வெளிவரும்?
இந்தக் கேள்விக்கு விடை உங்களைப் போலவே எனக்கும் தெரியாது.
எவ்வளவு வலிமை உண்டோ அவ்வளவு மலைகள் இதழ்கள் வரும்.
••
இந்த நெகிழ்வான தருணத்தில் மேலும் கோடானுகோடி நன்றி தெரிவிப்பது சம்பிரதாயமானதல்ல.


படைப்பாளிகள்,வாசகர்கள்,விமர்சகர்கள்,நண்பர்கள்,தொழில்நுட்ப உதவிகளை எப்போதும் செய்கிற என் மூத்த மகன் அமுதராஜ்,என் மருமகள் ஜஸ்வர்யா மற்றும் என் இளைய மகன் அருண் பாலாஜி மற்றும் மலைகள் இதழை நடத்துவதை கேள்வி கேட்காத என் மனைவி அமுதலட்சுமி ஆகிய என் குடும்ப உறுப்பினர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றி.
••

சீரங்கம். ( சிறுகதை ) / வண்ணதாசன்.

கவிஞர்

எழுத்தாளர் வண்ணதாசன்

திரவியம் பிள்ளைக்கு திடீரென்று செத்துப் போய்விடவேண்டும் என்று தோன்றிவிட்டது. வேறு எந்த விசாரமும் அவருக்கு இல்லை. வழக்கம் போல ரேடியோவில் ஒன்பது மணி நியூஸ் கேட்டார். ஈசி சேரில் சாய்ந்தபடி, பக்கத்தில் இருந்த வெங்கலச் செம்பில் கவிழ்த்தியிருந்த தம்ளரைப் பார்த்தார். அது பித்தளையால் ஆனது. உளி போல இருக்கும். இரண்டும் சீரங்கம் கொண்டுவந்தது.

சீரங்கம் போய்ச் சேர்ந்து பத்துப் பன்னிரண்டு வருஷம் இருக்கும். தனியாகத்தான் இருக்கிறார். பையன் கூப்பிட்டுப் பார்த்தான். தான் சொன்னதைக் கேட்காவிட்டாலும் மருமகள் சொல் தட்டமாட்டார் என்று நித்தம் மூலம் சொல்லிப் பார்த்தான். ‘நான் இங்கேயே இருக்கேன்.’ என்று திட்டமாகச் சொல்லிவிட்டார்.

திரவியத்திற்கு அது ஆச்சரியம் தான். வீட்டிற்கு உள்ளே சீரங்கம் நடமாடுகிறது போல இருக்கும். பீரோ திறக்கிற சத்தத்தில் கீல் முனங்கும். சமையல் அறையில் ஏனம் கழுவிக் கவிழ்த்துகையில் ஒன்றின் மேல் ஒன்றாகப் புரண்டு சருகுகிறது காதில் விழும். மத்தியானச் சாப்பாட்டுக்கு முன்னால் புறவாசல் ஓட்டுச் சாய்ப்பில் காக்காய்க்குச் சோறு வைத்துக் கா,கா என்று கூப்பிடுவது அந்த தூரத்துக்கும் வெயிலுக்கும் தக்க கூடக் குறையக் கேட்கும். அங்கணக் குழியில் ஒன்றுக்கு இரண்டு செம்பாகத் தண்ணீர் கோதிக் கால் கழுவிக்கொள்கிற சத்தம் இரண்டாம்கட்டில் விரித்திருக்கிற ஜமுக்காளம் வரை வரும்.

எல்லாம் ஒரு நாள் சட்டென்று நின்றுவிட்டது. பெட்டியை இறக்கிக் கீழே வைத்திருந்து எடுத்துக்கொண்டு போவது போல, சீரங்கம் கருப்பந்துறை போய் இத்தனை வருஷமும் கேட்டுக்கொண்டு இருந்தது, சட்டென்று அதன் பிறகு சுத்தமாகக் கேட்கவில்லை.
அந்த நாளை அவருக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. சாயந்திரம் இரண்டு கிண்ணம் மரச் சீனிக்கிழங்கு வெந்து தாளித்துச் சாப்பிட்டிருந்தார். இன்னும் இரண்டு கரண்டி மிச்சம் இருந்தது. படுக்கப் போகும் முன்பு தேவைப்பட்டால் சாப்பிட்டுக்கொள்வோம் என்று இருப்புச் சட்டியில் தட்டைப் போட்டு மூடி அடுப்பிலேயே வைத்திருந்தார்..

ஆனால் சரியாக விரிக்கக் கூட இல்லை. தரையில் துண்டை விரித்துப் படுத்தவர் அப்படியே தூங்கியிருக்கிறார். விடிய விடிய மழை பெய்தது கூட அவருக்குத் தெரியவில்லை. .வீட்டுக்குள் இருந்து ஒரு யானை வெளியே போகிற மாதிரி ஒரு சொப்பனம். நான்கு சுவர்களும் அந்த யானையின் பெரிய உருவத்திற்கு ஏற்ப அகன்று கொடுக்கிறது, தலை வாசல் கதவில் முழுக்க முழுக்கத் தாழம்பூவாகக் கட்டித் தோரணம் தொங்கவிட்டிருக்கிறார்கள். அதுவும் அப்படியே இளகி நெளிந்து வழி விடுகிறது. யானை வெளியே போக எடுத்துவைத்த பின்னங்கால் அசைவும் மடங்கலும் அப்படி இருக்கிறது.

கழுத்தில் சத்தியக் கயிறு, முதுகில் மணி எதுவும் கிடையாது. ஒரு ஈத்தங்காட்டிலிருந்து இன்னொரு ஈத்தங்காட்டுக்குப் போகிற நடை. . நீண்டவால் உள்ள ஒரு பறவை கொஞ்ச நேரம் மத்தகத்தில் உட்கார்ந்து பறந்து போனது. ஆனால் திரவியத்திற்கு வடக்குப் பிரகாரத்தின் கல் கட்டுமானத்திற்குள் அடங்கி,, தாமரைப்பூ வாடுவது போல் ஒரு மணிச் சத்தம் ஒலித்துக் கூம்புவது கேட்டது. வீட்டுக்குள் ஒரு பாசிபிடித்த தெப்பக்குளம் வந்துவிட்டது போல, பச்சை வாசம் அடித்தது. நீராழி மண்டபத்திற்கு யாரோ நீந்திப் போய்க்கொண்டு இருந்தார்கள்.

திரவியம் பிள்ளை எழுந்த போது எந்தப் பதற்றமும் இல்லை. நிம்மதியாக இருந்தது. எப்போதுமே ஜன்னல் வசமாகத் தெரிகிறபடியே படுத்திருப்பார். ஜன்னல் பக்கம் போய் நின்று பார்க்கும் போதுதான் அப்படி ஒரு மழை பெய்திருப்பது தெரிந்தது. தெருவைப் பார்த்தார். தெருவில் கரண்டை அளவு மழைத் தண்ணீர் ஓடிக்கொண்டு இருந்தது. எல்லாக் கசடையும் ஏற்கனவே கழுவி ஆயிற்று என்பது போல், மழைத்தண்ணீர் ஒரு கருங்கல் ஜல்லி நிறத்தில் புரண்டுகொண்டு சென்றது.

கொஞ்ச நேரம் வீட்டில் ஒவ்வொரு அறையாகத் திரவியம் போய்ப் பார்த்துவிட்டு வந்தார். எல்லா அறைகளையும் அலம்பிவிட்டது போல் இருந்தது. ஏற்கனவே ஒரு விளக்கேற்றியிருப்பது போல, பனி நிறத்தில் ஒரு வெளிச்சம் இருப்பதை அவர் உணர்ந்தார்.. இப்போது புழங்காத, அந்த அறையைத் திறந்து , கட்டில் முன்னால் நின்றார். விரிப்பு எதுவுமற்ற அந்த மரக்கட்டிலின் வழுவழுப்பு அப்படியே தலை தூக்கிப் படம் விரித்து அசைவற்றது.

மறுபடியும் வந்து அவர் தரையில் கிடந்த துண்டில் படுத்தார். விடிவதர்கு முன் எழுந்திருந்த சமயம் பூனை கூப்பிடுவது கேட்டது. காகம் ஒன்றிரண்டு அதனதன் கிளைகளில் அமர்ந்திருந்தது. கிளை முறிந்த பச்சை வாசம் அடித்தது. ஆனால் அதற்குப் பிறகு சீரங்கம் குரலை ஒரு அடையாளமாகக் கூட மீட்டுக்கொள்ள முடியவில்லை.
இன்றைக்கு அவர் முன்னால் இருக்கும் வெண்கலச் செம்பையும் அதன் மேல் கவிழ்த்தியிருக்கும் டம்ளரையும் பார்க்கும் போது , சற்றுக் கூடுதல் அவதானத்துடன் அதன் விளிம்புகளில் புள்ளிப் புள்ளியாக வெட்டப் பட்டிருக்கிற நா.ஸ்ரீ என்ற அந்த எழுத்துக்களையே பார்த்தார்;. ஆழமான புள்ளிகளில் அந்த எழுத்துகளைக் கோர்த்து அதன் பக்கத்தில் ஒரு வளைந்த காம்பில் மூன்று இதழ்களுடைய ஒரு பூ தொங்குவது போலும் அந்த ஆசாரி அதில் பெயரை வெட்டியிருந்தார். அந்தப் பூவைப் பார்க்கப் பார்க்க, அந்தப் பூவைப் பார்த்த கண்ணோடு அப்படியே தான் நிறைந்துவிடவேண்டும் என்று திரவியம் தன்னை ஈசி சேரில் தளர்த்திக்கொண்டார்.

எதிரே காம்பவுண்டு சுவரில் இருந்த கல் தொட்டிகள் இரண்டையும் பார்த்தார். தாத்தா வீட்டை எல்லாம் கிரயம் பண்ணி ஆயிற்று. பூசை மடத்துக்காரர் வீடு என்றால் எல்லோருக்கும் தெரியும். கிழக்குப் பார்த்த வீடு. இந்தப் பக்கமும் கமான் வைத்துக் கட்டியிருக்கும். கமானில் பூ வேலைப்பாடு. அந்தக் காரையும் சுதையுமாக நெளிந்துகிடப்பது எல்லாம் இந்தக் கல் தொட்டியில் இருந்து முளைத்திருப்பது போல், இரண்டுபக்கமும் இந்தக் கல்தொட்டிகளை வைக்கத் தாத்தா ஏற்பாடு செய்திருப்பார். அதில் அவரே வழிய வழியக் காலையிலும் சாயந்திரமும் தண்ணீர் ஊற்றுவார். வேனல் காலத்தில் குருவிகள் அதில் முங்கி முங்கி இறகைச் சிலுப்பும் போது தெறிக்கிறதைத் திரவியமே சின்ன வயதில் அதிசயமாகப் பார்த்து இருக்கிறார்.

இரண்டையும் பின்னால் கன்றுகுட்டிக்குக் கஞ்சி வைக்க உபயோகப்படுத்தி வந்தார்கள். உடைந்து கீறிப் போனதில் டேபிள் ரோஜா வளர்த்தாள் திரவியத்தின் அக்கா. இவர் இதைத் தூக்கிக்கொண்டு வந்து தாத்தா போல குருவிக்குத் தன்ணீர் வைத்துக் கொண்டு இருக்கிறார். குருவிக்குப் பதிலாக இப்போது கல்தொட்டியில் அணில் வந்துவிட்டுப் போகிறது.

திரவியத்திற்கு அந்தக் கல்தொட்டியை நிரப்ப வேண்டும் என்று தோன்றியது. குழாயில் தன்ணீர் பிடித்து வழிய வழிய அதை நிரப்பி, புடைத்த கல் இடுக்குகள் வழியாகக் கசிந்து இறங்கும் நீர் இழையைப் பார்த்தபடி நின்றார். அந்தக் கை வாக்கில் இருக்கிற மற்ற எல்லாச் செடிகளுக்கும் தண்னீர் ஊற்றினால் என்ன என்று தோன்றிற்று. அந்தப் பகுதிக்கான விளக்குக்கான ஸ்விட்சை நடைப்பக்கம் ஏறிப் போட்டுவிட்டு வந்தார். பழையகாலத்து குண்டு பல்ப் வெளிச்சத்தில் அந்த இடத்திற்கு ஒரு பழையகாலம் திரும்பியிருந்தது.. செடிகளும் பழைய காலத்திற்குப் போயிருந்தன.

திரவியம் இப்போது வேறொருவர் ஆகியிருந்தார். ரப்பர் குழாய்ப் பீச்சலில் மண் விலகி வரும் வாசனையும், இலைகளின் பளபளப்பும் அவருக்குள் ஒரு கணியான் கூத்துப் பாடல் ஒன்றை, கீழ்க்குரலில் பாடவைத்தது. அவருடைய வேளார் சினேகிதர் ஒருவர் செய்யும் இசக்கி அம்மன் உருவங்களை நினைத்துக் கொண்டார். குமிழ் குமிழாய் அரும்பியிருக்கும் மார்புடன் வன்னி மரங்களில் சாய்ந்திருக்கும் அவற்றிற்கு நீலம் , மஞ்சள், வெள்ளை என்று வர்ணம் தீட்டிய ஒரு இரவு இப்போது அவருக்கு அருகில் வந்து நின்றது. திரவியம் ரப்பர் குழாயைக் கீழே வைத்துவிட்டுக் கைகளைக் கூப்பி, அந்தத் திக்கைக் கும்பிட்டார். பாதங்களுக்குக் கீழ் தண்ணீர் பெருகி ஓடி, அவரை அவருடைய சித்தாற்றுப் படுகைக்கு இழுத்துப் போயிற்று. திரவியம் நாணல் புதரில் கிடக்கும் மூன்று முட்டைகளைப் பார்த்துக்கொண்டு இருந்தார்.

திரவியத்திற்கு , தான் சாகவேண்டும் என்று தோன்றிய ஒரு இரவில் இவ்வளவும் நிகழ்வது பிடித்திருந்தது. எத்தனையோ வருடங்களுக்கு முன்பு சிற்றாற்றங்கரையில் பார்த்த நாணல் புதரும் முட்டைகளும் இப்போது கண்ணில் தெரிந்ததில் அவர் நிரம்பிப் போயிருந்தார். அவருக்கு அந்தச் செடிகளைப் போலத் தானும் தன்னை நனைத்துக்கொண்டால் என்ன என்று தோன்றிற்று. ரப்பர் குழாய்த் தண்ணீரைத் தன் மேல் முற்றிலும் திருப்பிக்கொண்டார்.

ஈர உடையை எல்லாம் களைந்து கொஞ்ச நேரம் அந்தச் செடிகளுக்கு அருகில் அப்படியே நின்றார். பிழிந்து உதறி உடுத்தி வீட்டுக்குள் போனதும் அவருக்கு அவர் அந்த மழை பெய்த ராத்திரியும் யானை வெளியேறும் சொப்பனமும் வந்த தினத்தில் படுத்திருந்த இடத்தில் சற்று உட்கார்ந்திருக்கத் தோன்றியது. இந்த இடம்தான் என்று ஏதோ ஒன்று அவரை ஒரு சதுரத்தில் உட்காரத் தூண்டியது. திரவியம் அந்தச் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து அங்கே சம்மணம் போட்டு உட்கார்ந்தார். வில் மாதிரி நிமிர்ந்து அவரால் உட்கார முடிந்தது. அமைதியாக ஒரு தெப்ப உற்சவத்தையும் வாண வேடிக்கையையும் பூச்சிதறல்களையும் பார்த்தபடியே இருந்தார்.. முதுகு சொடுக்கி, கற்பூரம் அடங்கித் தணிந்ததும் எழுந்தார்.

எல்லாக் கதவுகளையும் திறந்து வைத்துவிட்டால் என்ன என்று திரவியம் நினைத்தார். அப்படி நிறையக் கதவுகள் எல்லாம் ஒன்றும் கிடையாது. முன் வாசல், பின்வாசல், பக்கவாட்டில் ஒன்று. அது தவிர, மச்சுப்படி ஏறிப்போனால் தட்டோட்டி வாசல் ஒன்று. முன்வாசல் ஏற்கனவே திறந்திருந்தது. பின்வாசல் கதவு திறந்ததும் காற்று அப்படிப் பந்து பந்தாய்ச் சுருண்டு உள்ளே வந்தது. கொடியில் கிடந்த அவருடைய நான்கு முழ வேட்டி, கடலில் இருந்து தப்பித்துவந்த ஒரே ஒரு அலை போலப் பொங்குவதையே பார்த்தார். அது ஒரு கட்டத்தில் தணிவது வரை அப்படியே நின்றார். பக்கவாட்டு வாசல் சமீபத்தில் புழங்காதது. பூட்டு, அடிதண்டா, நாதாங்கி என்று நிறைய அடுக்குகள் இருந்தன.

அந்த வாசலை அவர் திறந்ததும் தன்னுடைய வீடு இதுவரை இல்லாத வேறொரு உலகத்திற்கு நகர்த்தப்பட்டு விட்டது போல இருந்தது திரவியத்திற்கு. பின்வீட்டில் அடர்த்தியும் பருமனுமாக மூங்கில் வளர்ந்து கப்பும் கவருமாக அசைந்துக்கொண்டு இருந்தது. மூங்கில் கொல்லையின் உச்சியில் அவருக்கு மட்டும் காட்ட என்று, திரவியம் நீ மட்டும் பார் என்று ஒரு நீலச் சொட்டு போல நட்சத்திரம் ஒளிர்ந்து, மூங்கில் விலகவும் மறைக்கவுமாக அவருக்குள் இறங்கியது. அவருக்கு நீல நஞ்சின் சுவை பிடித்திருந்தது.

திரவியம் மச்சுப் படிக்கட்டில் ஏறினார். முதலில் பத்து, அப்புறம் ஒன்று அகலச் சதுரமாய்., மறுபடி ஒரு ஏழு என்ற கணக்குக்குக் கால்கள் பழகியிருந்தன. அவருக்குள் மீண்டும் இப்போது ஒரு பாடலின் கோர்ப்பு உண்டாகியிருந்தது. சற்றுமுன் அசைவதைப் பார்த்த பக்கவாட்டு மூங்கிலில் இருந்து அதை எடுத்திருந்தார். திர் திர் திர் என்று அவருக்குள் காற்றுத் துளையிட்டுப் பொங்கியது.

அவர் அப்படியொன்றின் இசைப்புடன் தட்டோட்டி வாசலை அகலத் திறந்தார். ஒவ்வொரு கதவாகத் திறக்காமல் இரண்டையும் சேர்த்து அகலத் திறந்தார். திறந்த அந்த இரு கதவுகளும் தன் உடலின் இடவலத்தில் இருந்தது போல, இரண்டு கைகளையும் அகல விரித்துத் தன்னைச் சுழற்றிக்கொண்டார். அவர் முகம் வானத்தில் மட்டுமெ லயித்திருந்தது. வெள்ளி ரேகையிட்ட விளிம்புகளுடன் மேகங்கள் நகர்ந்துக்கொண்டே இருந்தன. அவர் மேலும் தன்னைச் சுழற்றினார். அந்தக் கிறுகிறுப்பு அவரை மெய்மறக்கவைத்தது.

அப்போதுதான் திரவியம் வடக்கு மூலையில் அந்த உருவத்தைப் பார்த்தார். அது ஒரு பச்சைக்குழந்தை போல சுருண்டு படுத்திருந்தது. கைகளில் பஃப் வைத்த சட்டை. பைஜாமாவுக்கு வெளியே சாம்பல் நிற அடர் ரோமங்களில் படிந்திருந்த சலங்கை. தொட்டிலுக்கு வெளியே தொங்குவது போல பாதங்கள்..
உடம்பின் மடங்குகளில் இரண்டு பங்காக வால் நீண்டு வளைந்து கிடந்தது.

திரவியம் குனிந்து பார்த்தார். கண்கள் மூடியும் மூடாமலும் இருந்தன. முகத்தில் ஒரு சிரிப்பு இருந்தது. நூறு வருஷம் வாழ்ந்தது போல ஒரு அமைதியும், இப்போது பிறந்து வந்திருப்பது போல ஒரு சிசுமையும் இருந்தது. திரவியம் எவ்வளவு கவனமாக எடுத்தாலும், அதன் கால்களில் இருந்த சலங்கைகள் சத்தம் உண்டாக்குவதை அவரால் தவிர்க்க முடியவில்லை. எந்தச் சத்தம் வந்துவிடக் கூடாது என்று நினைத்தாரோ அந்தச் சத்தம் அவருக்குப் பிடித்திருந்தது. அந்தப் பாதங்களை அசைத்தார். வெதுவெதுப்பு எல்லாம் அடங்கிய அந்த வலது பாதத்தை முகத்தோடு வைத்து ஒற்றிக்கொண்டார்.

அவர் முழுதாக எடுத்தணைத்து தன்னோடு பூப்போலசேர்த்து வைத்துக் கொண்டு அமைதியாக அப்படியே இருந்தார்.

கீழே யாரோ நடமாடுகிற சத்தமும் ஏனங்களைக் கவிழ்த்துகிற சத்தமும் கேட்டது.

%

வண்ணதாசன்.

விருட்சம் நினைவுகள் 6 / அழகியசிங்கர்

பொதுவாக ஒரு சிறுபத்திரிகை 3 வருடங்கள் தொடர்ந்து வருவது ரொம்ப கடினம். அதுவும் ஒரு குழுவாக நடத்தப்பட்டால் 3 வருடம் தாக்குப்பிடிப்பது பெரிய விஷயம். குழுவில் உள்ள பலுக்குள் கருத்து வேற்றுமை தோன்றி பத்திரிகை நின்று விடும்.
தற்செயலாக எனக்கு ஒரு கசடதபறவின் கடைசி இதழ் கிடைத்தது. ஏன் அந்தப் பத்திரிகையைத் தொடர்ந்து கொண்டு வர முடியவில்லை என்று காரணம் எழுதப்பட்டிருந்தது. அதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். ஜøன் – ஜøலை 1973 கசடதபற இதழில் வெளிவந்த தலையங்கம்.

“மூன்றாண்டுகளுக்கு முன்பு ஒரு அக்டோபர் மாதத்தில் தொடங்கிய கசடதபற இந்த அறிவிப்புடன் தனது வெளியீட்டை நிறுத்திக் கொள்கிறது. இலக்கியச் சிற்றேடுகளின் புறப்பாடும், நிப்பாடும் ஆன வாழ்க்கை அதை இயக்குபவர்களின் உற்சாகத் தைப் பொறுத்தது என்று இந்தியச் சிற்றேடுகளைப் பற்றிக் கூறப்படுவதுண்டு. இதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கருத்தைக் கொண்டு வெளியீட்டை நிறுத் திக் கொள்கிறது கசடதப ற. இலக்கியம் என்பதை ஒரு கலைஞனின் அநுபவத் தைக் கொண்டு பார்த்தால் அதற்குத் தொடர்ச்சிதான் குறிப்பே தவிர தொலைதல் இல்லை என்பது தெளிவா கிறது. இலக்கிய முயற்சிகளும் அப்படித்தான். கசடதபறவின் இதழ்கள் வெளிவந்த சமயத்தில் அதனோடு தொடர்பு கொண்டிருந்த அத்தனைப் பேர் களுக்கும் கசடதபற நன்றி தெரிவிக்கிறது.”
கசடதபற பத்தரிகைக்குப் பின் வந்த பிரக்ஞை இதழும் நின்றுவிட்டது. 3 ஆண்டுகள் என்றுதான் நினைக்கிறேன். இப்படி சிறு பத்திரிகை வருவதும் நிற்பதும் வாடிக்கை.
சமிபத்தில் தமிழ் இந்து 14.07.2018 அன்று வந்திருந்த பத்திரிகையின் தலையங்கத்தில் üசிறுபத்திரிகைகள் களம் மாற வேண்டும்,ý என்ற பெயரில் சிறு பத்திரிகையைப் பற்றிய குறிப்பு வந்தது.
இதில் தமிழ் சிறுபத்திரிகை தன் வாசக பலத்தை இழந்து கொண்டிருப்பதாக தமிழ் இந்து புலம்புகிறது. எப்போது சிறுபத்திரிகைக்கு வாசக பலம் இருந்திருக்கிறது. கசடதபற பிரக்ஞை பத்திரிகைகள் வந்த காலத்தில் கூட ஆயிரம் பேர்கள் அந்தப் பத்திரிகைகளைப் படித்திருப்பார்களா என்பது சந்தேகம்.
எனக்குத் தெரிந்து ழ பத்தரிகையை 500 பிரதிகள்தான் அச்சடிப்பது வழக்கம். ஏன் இந்த மாதத்தலிருந்து 30 ஆண்டை நிறைவு செய்யும் விருட்சம் இதழ் 700 பிரதிகள் மேல் தாண்டியது இல்லை. ஒவ்வொரு ஆண்டும் லைப்பரரி ஆர்டர் வாங்குவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிடும். ஒவ்வொரு ஆண்டும் வாசகர்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள். ஏன் குறைந்துகொண்டே போவார்கள். இதையெல்லாம் உணர்ந்துதான் சிறுபத்தரிகையைக் கொண்டு வர வேண்டி உள்ளது.
சிறு பத்திரிகையைப் பயன்படுத்திக்கொண்டு எழுதும் எழுத்தாளர்கள் மிக மிகக் குறைவு. பெரிய பத்திரிகைகளில் சிறு பத்திரிகை எழுத்தாளர்கள் புகுந்துகொண்ட பின் தீவிர எழுத்தாளர்கள் என்பதே இல்லாமல் பத்தரிகை உலகம் ஜனநாயகப்படுத்தப்பட்டு விட்டது.
ஐராவதம் என்ற என் நண்பர் சொல்வார் : ‘வேற வழி இல்லாதவர்கள்தான் சிறுபத்திரிகையில் எழுதுவார்கள்’ என்று. அது ஓரளவு உண்மை. நான் 1988ஆம் ஆண்டு விருட்சம் ஆரம்பித்தேன். அதன் தொடர்ச்சியாக 30 ஆண்டுகளில் பெரிய வித்தியாசத்தை நான் உணரவே இல்லை.
எப்போதும் போல சிறுபத்திரிகையைப் படிக்காதவர்கள் அப்போதும் உண்டு. இப்போதும் உண்டு. சரி, சிறுபத்திரிகை வர வேண்டுமா? வேண்டாமா? கட்டாயம் வேண்டும்.

•••

வீழ்கையில் இறகு, எழுகையில் பறவை – ந.பெரியசாமி

வலியேதுமில்லை. வாழ்வில் முதல்முறையாக இப்படியான ஆச்சரியத்தை உணர்ந்தான். அங்கிருந்தவர்களுக்குமே ஆச்சரியம்தான். யார் செய்த புண்ணியமோ நீ பிழைத்தாய் என்றவாறு இட்லி விற்றுக்கொண்டிருந்த பாட்டி ஓடிவந்து தலையை நீவி அங்காலாயத்தாள்.

ஆட்சியிலிருப்பவர்களால் இவ்வாறான கொடுமையை நிகழ்த்தமுடியும் என்பதை பெரும்பாலான மக்கள் உணர்ந்த தருணம். விஷத்தை விடவும் கொடுமையான வன்முறைகளை ஒரு அரசே செய்வதை கண்ட மக்களின் நம்பிக்கை சில்லுபடத் தொடங்கியது. தன் தேசத் தலைவன் தன் ஊர் வருவதை அறிந்த மக்கள் தன் இல்லத்தில் கருப்புக்கொடியை ஏற்றிக்கொண்டிருக்க அங்கிருந்த இளைஞர்கள் கருப்புக்கொடியை உயரமாக இருந்த கம்பங்களில் கட்டிக்கொண்டிருந்தார்கள். அப்படிக் கட்ட மேலேறும்போதுதான் அங்கிருந்து வீழ்ந்தான். அங்கு ஏறி இருக்கத் தேவையில்லைதான். எதிர்ப்புணர்வு எதையும் செய்யத் துணியும்.

தன்னைச் சூழ்ந்த ஆச்சரியங்களை மெல்ல விலக்கி நிதானத்திற்கு வந்தவன் எப்படி இது சாத்தியமாயிற்று என யோசிக்கலானான். சட்டென நேற்றைய கனவு நினைவிற்கு வந்தது. குதிரை ஒன்றில் மிகு வேகத்தில் வந்த ஒருவன் தூங்கிக்கொண்டிருந்த எனை எழுப்பி தழுவி முத்தமிட்டு வீழ்கையில் இறகாகவும், எழுகையில் பறவையாகவும் மாற்றம்கொள்வாய் என மறைந்தார். எவ்வளவு யோசித்தும் அவரது உருவம் நினைவு வர ஏமாற்றமாகி கம்பத்தில் கைக்கு எட்டிய தூரத்தில் கருப்புக்கொடியை கட்டி முடித்தான்.
—————–

துண்டிக்கப்பட்ட தலையின் கதை ( முகம்மத் பர்ராடா – தமிழில் : கார்த்திகைப் பாண்டியன்

கார்த்திகைப் பாண்டியன்

முகம்மத் பர்ராடா (1938)

மொராக்கோவின் பழமைவாய்ந்த நகரமான ஃபெஸ்ஸில் பாரம்பரியமிக்க ஆனால் வறுமையில் உழன்றதொரு குடும்பத்தில் பிறந்தவர். புனைகதை எழுத்தாளர் மற்றும் விமர்சகர். இளமைக்காலத்தில் பிரெஞ்சு ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து தேச விடுதலைக்காகப் போராடினார்.

1975-ல் அராபிய இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றார். பல வருடங்கள் ரபாத் நகரின் கிங் முகம்மது பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பின் பாரிஸ் நகருக்குக் குடிபெயர்ந்தார். 1976-ல் மொரோக்கோ எழுத்தாளர்கள் கூட்டமைப்பின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பான Flaying Skins 1979-ல் வெளியான பிறகு புதினங்களையும் எழுதத் தொடங்கினார். அன்பு, கோபம் மற்றும் விசுவாசம் ஆகியவற்றை விரிவாகப் பேசிய பர்ராடாவின் The Game of Forgetfulness (1993) ஒரு அற்புதமான, சுயசரிதைத்தன்மையுடனான நாவல். The Fleeting Light (1993), Roses and Ashes (2000), Woman of Forgetfulness (2001) ஆகியவை இவருடைய மற்ற முக்கியமான ஆக்கங்கள்.

***

என் ரத்தம் நடைபாதையில் வழிந்தோடியது. வாளால் ஒரே வீச்சில் வெட்டி வீழ்த்தியதைப்போல, உடலை விட்டுப் பிரிக்கப்பட்டது என் தலை. பேருந்தோ பாரவண்டியோ ஏறிப்போகும்படி, தார்ச்சாலையின் மீது கைவிடப்பட்டதாக, எனது உயிரற்ற உடல் அங்கே கிடக்க நேர்ந்தது எனக்குள் வலித்தது. உடலைத் தூக்கும்படி என் கைகளுக்கு ஆணையிட முயற்சி செய்தேன், ஆனால் இனிமேலும் என்னுடைய கட்டளைகளுக்குக் கட்டுப்படும் நிலையில் அவை இல்லை என்பதை உணர்ந்தேன். எனது தமனிகளும் சிரைகளும் தரையின் மேல் ஒரு காட்டு நீரூற்றைப் போல பீய்ச்சியடித்தன, ஏதொவொரு செந்நிற ஊற்றினை நிர்மாணிக்கும் அரசாங்கப்பணியை விரைந்து முடிக்க விரும்புவதைப்போல குருதிக்கறை தரையில் பரவியது.

கடந்து சென்றவர்கள் தங்கள் பாதையில் போனார்கள், அவர்களின் பார்வை சிதறிக்கிடந்த என் குருதியின் மீது படிந்து மீண்டது. ரத்தத்தெறிப்புகளை வெறுமனே கடந்து போன அவர்கள் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. ஒரு முதியவர் முணுமுணுப்பதைக் கேட்டேன். “அடக் கடவுளே!” (ரத்தச்சகதிக்குள் கால் வைத்து தனது காலணிகளை அவர் அழுக்காக்கிக் கொண்டிருந்தார்).
எனக்குள் மகிழ்ச்சி வெள்ளமெனப் பெருக்கெடுத்துச் செல்லும்முன் என்னைக் கொன்றவனை நான் கவனிக்கவே இல்லை: துண்டிக்கப்பட்ட எனது தலையால் இன்னும் அசையவும் பேசவும் முடிந்தது. என் கண்கள் முன்னும் பின்னுமாக அலைந்தன. என்ன செய்வது? இந்த வினோதமான சங்கதியை அவசரக்குடுக்கைகள் யாரேனும் கண்ணுற்று, இறந்த உடலோடு எனது தலையையும் சேர்த்து ஏதாவதொரு மௌனமான குழிக்குள் போட்டு மூடுவதற்கு முன்னால், இந்த வெட்டுப்பட்டத் தலையை வைத்துக்கொண்டு நான் என்னதான் செய்வது?

கண்களை மூடி, ஒரு யோகா குருவைப்போல ஒற்றைப்புள்ளியில் எனது கவனத்தைக் குவித்தேன், நான் வாழ்ந்த அடையாளத்தின் மீதமாகக் கிடந்த அனைத்தின் மீதும். நான் முணுமுணுத்தேன்: “கடவுளே, தூரமாக.. வெகுதூரம் என்னைக் கூட்டிச் செல்லும்படியாக சிறகுகளைக் கொடு. இப்படியாக நான் பிழைத்திருப்பேன், ஒரேயொரு நாள் என்றாலும் பரவாயில்லை.”
இறுதி வார்த்தையை நான் முடிக்கும் முன்னரே, என் தலை சீராகக் காற்றில் உயர எழும்பத் தொடங்கியது.. சிறகுகளின் தேவையின்றி! வேகமாக மேலேறிச் சென்று தெற்கில் விரைந்தேன்.

மேலேயிருந்து பார்க்கையில், ரபாத் நகரம் எனக்கு ஒரு பாம்புக்குழியைப் போலத் தெரிந்தது, ஒரு குகையைப் போல, அழுக்கான நரியைப் போல, துருப்பிடித்த வாளைப் போல, கடலால் வெளித்தள்ளப்பட்ட கடற்பாம்பைப் போல, தேனீக்கள் இல்லாத தேன்கூட்டைப் போல, தேய்ந்து மொட்டையான ஒரு பாறையின் தலைப்பகுதியைப் போல…

இருமுறை நான் பெருமூச்செறிந்தேன். என் கன்னங்களைக் கொத்திய சூரியவெப்பத்தால் தூண்டப்பட்டு தொடர்ந்து சென்றேன். பறவைகள் கூட்டத்தின் நடுவே நான் பறந்தபோது என்னிடமிருந்து அவை விலகிப் போயின, வெட்டப்பட்ட மனிதனொருவன் பறந்து வருவதைப் பார்த்ததால் அதிர்ச்சியடைந்து, தங்கள் கூடுகளை நோக்கி அலையலையாகப் பறந்து சென்றன..

திகைக்கச்செய்யும் வேகத்தில் காற்றைக் கிழித்து நான் முன்னேற, கடல் என் பார்வையிலிருந்து மறைந்தது. ரகசியங்கள் ஏதுமின்றி, சிதைவுகள் எதுவுமில்லாமல் உலகம் எனக்குக் கீழே விரிவதைக் கண்டேன். ஆனால் என் மூளையை ஒரு கேள்வி குடைந்து கொண்டேயிருந்தது: “துண்டிக்கப்பட்ட தலையே, அலைச்சல்களெல்லாம் தீர்ந்து மீண்டும் பூமிக்குத் திரும்பும்போது நீ என்ன செய்வாய்?” என்னால் முடிந்த மட்டும் பறக்கும் வேகத்தைக் கட்டுப்படுத்தினேன், காற்றுப்புழையைப் போல என் மூக்கு உள்ளிழுத்துக் கொண்ட காற்று கழுத்தின் நரம்புகளின் வழியாக வெளியேறிப் போக, என் வேகம் இரட்டிப்பானது. பறத்தலின் மீது அப்பாஸ் இப்ன் ஃபிர்னாஸ்1 கொண்டிருந்த ஆர்வத்தின் ரகசியம் எனக்குப் புரிய ஆரம்பித்தது: வழமையான சங்கதிகளின் மேல் நாம் வைத்திருக்கும் மதிப்பு உயர வேண்டுமெனில் பூமியை நாம் பிரிந்திருக்க வேண்டும். நமக்கிருக்கும் சக்திகளின் மீது பரிபூரண நம்பிக்கையோடு நாம் வாழும் சமயங்களிலெல்லாம் தினசரி வாழ்க்கை தனது கவிதைகளை மீட்டெடுக்கிறது. என்னால் பறக்கவும் பார்க்கவும் பேசவும் சாத்தியப்படும் வரை எனது உடலை இழந்ததைப் பற்றி நான் வருந்தப் போவதில்லை. நம்புங்கள், உள்ளம் தெளிவாக இருந்தது, எனது அறிவாற்றலும் இரண்டு மடங்கு துலக்கமுற்றதாக.. உணர்வுநிலைகள் மேலோங்கி பித்துநிலையின் எல்லையில் நின்றிருந்தன. நான் யோசித்தேன், இந்த சக்திகளை சோதித்துப் பார்க்க வேண்டும்.. பார்வையில் தென்படுகிற முதல் மனிதக்கூட்டத்தின் முன்னால் நான் தரையிறங்குவேன்: அது ஜமி’ அல்-ஃபனா2வின் நிலமாயிருந்தால் அங்கிருக்கக்கூடிய தர்வீஷுகள், கதை சொல்லிகள் மற்றும் ஏமாற்று வித்தைகாரர்கள் ஆகியோரிடம் நான் விவாதம் புரியலாம்.

சதுக்கத்தில் நின்றிருந்த மனிதர்களின் தலைக்கு மேல் நான் சுற்றி வந்தேன், அவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கான ரீங்கரிப்பு சத்ததோடு. முகங்கள் ஆச்சரியத்தில் மேல்நோக்கித் திரும்பின. விரல்களும் குரல்களும் உயர்ந்தன: “ஒரு மனிதனின் தலை அங்கு பறந்து கொண்டிருக்கிறது” என யாரோ அலறினார்கள்.
பலவிதமான மனிதர்களைக் கொண்டிருந்ததொரு கூட்டம் என்னைச் சூழ்ந்து கொண்டது. நேரத்தை நானும் வீணடிக்கவில்லை – அவர்களோடு உரையாடுகிற எனது விருப்பம் கட்டுக்கடங்காததாக மாறியிருந்தது.

“இழிந்த மனிதர்களே,” என்றேன். “உண்மைகளை மறந்து மூடநம்பிக்கைகளைப் பற்றிக்கொண்டு இங்கே இன்னும் எதிர்பார்ப்போடு நீங்கள் காத்திருக்கிறீர்கள். உண்மை உங்கள் கண்களைக் கூசச்செய்யும், எனவேதான் ’அந்தர்3, ஸெய்த்4 மற்றும் வக் வக்5 என்னும் நிலம் போன்ற கட்டுக்கதைகளில் உங்களை நீங்களே மயக்கத்தில் அமிழ்த்திக் கொள்கிறீர்கள். கனவு காண்கிறீர்கள். அழகான ஹௌரிக்களைப் பற்றிய கனவுகளை, அபரிமிதமான அவர்களின் மார்புகள் உங்களுக்குள் கொழுந்து விட்டெரியும் இச்சையைத் தூண்டுகின்றன, உங்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்வதாக அவர்கள் உறுதியளிக்கிறார்கள் – ஆனால் நிதர்சனத்தில் பசி, தோல்வி மற்றும் அடக்குமுறை என யாவற்றையும் உங்களின் காமம் மூடி மறைக்கிறது.”
“என் பாவப்பட்ட மக்களே, துருப்பிடித்த கதவுகளைத் தட்டித்திறக்கவும் கிஞ்சித்தும் கருணையற்ற இதயங்களை அசைத்துப் பார்க்கவும் நான் வந்திருக்கிறேன், அப்படியாவது உங்களின் மௌனத்தை உடைத்தெறிவீர்கள் என நம்புகிறேன், உண்மையை உரக்கச் சொல்லுங்கள், நிதர்சனத்தையும் உங்களுடைய இயலாமைகளையும் எதிர்கொள்ளுங்கள், பிறகு அது வளர்ந்திடும், விருத்தியடையும், இறுதியில் எழுந்து நிற்கும், ஆயிரம் கைகளைக் கொண்ட ஒரு அரக்கனாக..”

இடிமுழக்கத்தின் வேகத்தோடும் அதீத பதற்றத்தோடும் வார்த்தைகள் என் வாயிலிருந்து வெடித்துக் கிளம்பின. எனக்குள் சேமித்திருந்த அனைத்தையும் சொல்ல விரும்பினேன், இதற்கு முன்னால் வெளிப்படையாக நான் பேச அனுமதிக்கப்பட்டிராத அனைத்தையும். மக்கள் வாயடைத்துப் போனவர்களாக கேட்டுக் கொண்டிருந்தார்கள். சிலருக்கு நான் சொன்னது புரியவில்லை, விகாரமாய்த் தென்பட்ட ஒரு பைத்தியக்காரனின் தலை தங்களுக்கு அறிவுரை சொல்வது பற்றி சிலர் முணுமுணுத்தார்கள். அவர்களுடைய நாடகங்களை நான் விஞ்சிவிட்டேன் என்பதைப்போல தர்வீஷுகள் என்னை நோக்கி வந்தார்கள்.

அவர்கள் சொன்னார்கள், “மேற்பகுதி கழன்று விழுந்து விட்ட பறக்கும் தட்டாக இருக்கக்கூடும்.”

“அல்லது அவர்கள் அனுப்பிய பதிவு செய்த பேச்சால் நிரப்பப்பட்ட ஒரு இயந்திரத்தலையாகவும் இருக்கலாம்.”

“எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், நம்மை அசிங்கப்படுத்தவும் வம்பிழுக்கவும் செய்கிற யாரையும் நம்மால் பொறுத்துக் கொள்ளவியலாது!”

மக்கள்திரளின் கவனத்தை என்னிடமிருந்து தர்வீஷுகள் தட்டிப் பறிக்கும் முன்பாக நான் கூட்டத்திடம் திரும்பினேன், “உங்களில் எத்தனை பேருக்கு வேலையில்லை? இதற்கு யார் காரணமென்று எப்போதாவது உங்களை நீங்களே கேட்டுப் பார்த்திருக்கிறீர்களா? உடலளவில் திடகாத்திரமாக இருந்தாலும் ஏன் மனதுக்குள் முதுமையடைந்தவர்களாக மாறிப் போனீர்கள்? பழங்கதைகளிலும் மூடநம்பிக்கைகளிலும் ஏன் உங்களைத் தொலைக்கிறீர்கள்? சூரியன் வாட்டியெடுக்கும் இந்த பாழ்நிலத்தில் ஏன் சிறிய அப்பத்துண்டுகளும் பாம்பின் மூளைகளும் பஞ்சத்தால் இறந்த பூனைகளின் அழுகிப்போன மாமிசமும் போதுமென்று வெறுமனே பிழைத்துக் கிடக்கிறீர்கள்?”

“வேலைகளுக்காக நீங்கள் போராடியதை நானறிவேன்.. ஆனால் என்ன நடந்தது? மாபெரும் நெடுஞ்சாலை ஒன்றை அமைப்பதில் உங்களைப் பணியமர்த்துவதாக அவர்கள் வாக்களித்தார்கள்.. ஆனால் அந்த அதியற்புத நெடுஞ்சாலையில் பறக்கப்போகும் வாகனங்களின் உரிமையாளர்களுக்கும் உங்களுக்கும் நடுவேயுள்ள இடைவெளியை என்ன செய்வது? நடைபிணங்களை அரவணைத்துக்கொள்ளும் ஒரு ராட்சதக் கல்லறைக்குள் நாம் இப்போது நிற்கிறோம். “நல்ல குடிமகன்கள்” என்கிற பாத்திரத்தை ஏற்று நடித்துக் கொண்டேயிருப்பதில் நீங்கள் திருப்தியடைய விரும்புகிறீர்களா, பொதுவிலும் பிறகு தனிப்பட்ட முறையிலும், இதைச் சொல்லித்தான் கடவுளைக் கொண்டாடவும் அவருடைய நன்மைகளுக்கும் ஆசிர்வாதங்களுக்கும் நன்றி சொல்லவும் செய்கிறார்கள்; யாருடைய அதிகாரத்தின் முன் நீங்கள் மண்டியிடுகிறீர்கள்? வளம்பொருந்திய இந்நிலத்தில் துயரங்களுடன் வாழ்வதில் நீங்கள் நிம்மதி கொள்கிறீர்களா?”

“…கேடுகெட்ட மனிதர்களாகிய நீங்களெல்லாம் அபு அல்-தர்தா6 பற்றி அல்-திர்மிதி7 சொன்ன வார்த்தைகளைப் போன்றவர்கள்: ‘எனது மக்களில் சிறந்தவர்கள் யார் என்று சொன்னால் அது நம் வரலாற்றின் தொடக்கத்திலும் அதன் முடிவிலும் வாழ்ந்தவர்கள் மட்டுமே; இவையிரண்டுக்கும் நடுவில் வாழ்ந்தவர்களில் பலரும் வெற்றுத்துயர்தான்’. உங்களில் பலரும் அதுபோன்ற வெற்றுத்துயர்தான்.”

கூட்டம் முணுமுணுக்கத் தொடங்கியது.
“இந்தத் துண்டிக்கப்பட்ட தலை மிகவும் அதிகமாகப் பேசுகிறது.”
“நாம் நமது துயரங்களுக்கு மத்தியிலும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறோம்; ஏன் அவன் நமது கவலைகளை தட்டியெழுப்பி மறந்திருக்கும் சில காயங்களை மறுபடியும் திறக்க வேண்டும்? ஆளுனரின் உளவாளிகள் எங்கே? பிரச்சினைக்குரிய இந்த மனிதனைப் பற்றி புகார் கொடுக்காமல் ஏன் அவர்கள் தாமதிக்கிறார்கள்?”

மற்ற குரல்கள் நம்பிக்கையோடு குறுக்கிட்டன, “தன்னுடைய தடவாளங்களையெல்லாம் வெடித்துத் தள்ளுவதற்கான நேரத்தை அவர்கள் அவனுக்குத் தருகிறார்கள். அதன் பிறகே அவர்கள் தீர்மானிப்பார்கள், வந்திருப்பவன் தனியாக வந்திருக்கும் உளவாளியா அல்லது வேறெந்த அந்நியதேசமும் பயிற்சி தந்து இவனை அனுப்பியிருக்கிறதா என்பதை.”

மற்றொரு குரல்: “ஆனால் அவன் பயப்படவில்லை – கவனி, அவனுடைய தொண்டை வெட்டப்பட்ட பிறகும் உண்மைகளைத்தான் சொல்கிறான் – குறைந்தபட்சம் அவன் பொய் சொல்லவில்லை.”
முகங்களை ஆராய்ந்து திருப்தியாகப் புன்னகைத்தவாறே வட்டத்தின் நடுப்பகுதியை நோக்கி மெல்ல நான் நகர்ந்தேன், ஏனெனில் உணர்ச்சிகளைத் தொலைத்தவர்களாயிருந்த இந்த மனிதக்கூட்டத்தை கடைசியாக விவாதிக்கும் இடத்துக்கு நகர்த்தியிருக்கிறேன், மேலும் சில புதிய ராகங்களைக் கவனிக்கவும் வைத்திருக்கிறேன்.

திடீரென்று அந்தக் கூட்டம் சற்றே விலகி சில தீயணைப்பு வீரர்களுக்காக வழிவிட்டது. காவலர்கள் சூழ்ந்திருக்க, நீளமானதொரு இரும்புக்கம்பத்தில் இணைக்கப்பட்டிருந்த பிரமாண்டமான வலையை அவர்கள் சுமந்து வந்தார்கள்.

மேலேயிருந்து அந்த வலை என் மீது விழுவதைப் பார்த்து சத்தமாகச் சிரித்தேன்; நான் எதிர்க்கவில்லை. என்னுடைய சிரிப்பைப் பார்த்து அனைவரும் அதிர்ந்து நின்றார்கள். சூழலின் விசித்திரத்தன்மை அதிகரித்துக் கொண்டே போக கொதித்துப் போயிருந்த மக்களின் குரல்கள் உயர்ந்தன, மேலும் அடுத்து என்ன செய்வதென்பதை விவாதித்ததில் அவர்களுடைய குழப்பங்களும் அதிகரித்தன.
காவலர்களின் தலைவன் அலறுவதை நான் கேட்டேன், “அவனைத் தொடாதீர்கள்! நச்சுப்பொருட்களும் வெடிமருந்துகளும் அவனது உடலில் பொருத்தப்பட்டிருக்கலாம்! கூண்டுக்குள் அவனை அடைத்த பிறகு நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லலாம்!”

இரும்புக் கூண்டிலிருந்து வெளியே பார்த்தபோது தலையின் பாரம் குறைந்திருந்ததை உணர்ந்தேன், ஒரு பலகையின் மீது வைத்து தீயணைப்பு வீரர்கள் அந்தக் கூண்டைத் தங்களுடைய தோள்களில் தூக்கிக் கொண்டிருந்தார்கள். எனக்குப் பின்னால் கூட்டம் ஊர்வலமாக நடக்கத் தொடங்கியது, ஆனால் காவலர்கள் அவர்களை விரட்டியடித்தார்கள். என்னால் முடிந்தமட்டும் பலமான குரலில் நான் கத்தினேன், “சென்று வருகிறேன்! உங்கள் உரிமைகளைக் கேளுங்கள்! கறியும், கோழிக்கறியும், பழரசமும் வேண்டும் எனக் கேளுங்கள், திருப்தியான உடலுறவும் கூட! கேளுங்கள் – உடன் உங்களுடைய சுயத்தையும் கேள்விக்கு உட்படுத்துங்கள்!”
பதிலுக்கு குரல்கள் ஆர்ப்பரித்தன, “அவனைப் பேச விடுங்கள்.. வெறுமனே பேசுவதற்காகவெல்லாம் எந்தத் தண்டனையும் தர முடியாது.. அவன் அருமையானதொரு உரையை வழங்கியிருக்கிறான்.. எப்போதிருந்து இந்த அரசாங்கம் வார்த்தைகளைக் கண்டு பயப்படத் தொடங்கியது?”

வாகனத்துக்குள் மறையுமுன் நான் அலறினேன், “என்னை வெளிப்படையான விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென்று கேளுங்கள்!”

என்னுடைய வழக்கு மிகச்சிக்கலானது என்கிற சங்கதி ஆளுனரின் அலுவலகத்தில் தெளிவானது. வல்லுநர்களும் ஆலோசகர்களும் நீதிபதிகளும் என எல்லோரும் குழம்பிப் போயிருந்தார்கள்: புத்தகங்களோ அல்லது தந்திரங்களோ அல்லது உளத்திட்பமோ எதுவும் அவர்களுடைய உதவிக்கு வரவில்லை.

வெண்ணிறப் பட்டுக் கையுறைகள் அணிந்து ஆளுனர் உள்ளே நுழைந்தார். கண்ணியமும் அரசியல் செயல்திறனும் கொண்டதொரு மனிதனின் பாத்திரத்தை வரித்துக்கொண்டு அவர் என்னிடம் கேட்டார், “புரட்சியைத் தூண்டும் செயலென்று இதைச் சொல்லலாம்தானே, துண்டிக்கப்பட்ட தலையே? மக்களைக் குழப்புவதற்காக நீ வெளியிலிருந்து வந்திருக்கிறாய்; உன்னுடைய பகற்கனவுகளையும் கம்யூனிசப் பசப்புரைகளையும் மக்களிடம் சொல்லியிருக்கிறாய்.. சட்டத்தை நீ அறிய மாட்டாயா?”

விவாதத்தை வளர்க்க விரும்பாத காரணத்தால் நான் வெறுமனே பதில் சொன்னேன், “நான் எனது உடலைத் தேடி வந்தேன், அது தெற்கில்தான் இருப்பதாக எனக்குச் சொல்லப்பட்டது.”

“ஆக நீ மிகவும் தந்திரமானவன் என்று அறிகிறேன், ஜமி அல்-ஃபனாவில் உன்னுடைய நடவடிக்கைகள் பற்றிய ஆய்வறிக்கைகள் அப்படித்தான் சொல்கின்றன, இந்த சூழ்ச்சிவலைக்குள் எப்படி நீயாக வந்து சிக்கிக்கொண்டாய்?”

“மக்கள்திரள் எனக்குள் குதூகலத்தை உண்டாக்குகிறது: மனிதர்கள் அற்புதமான ரகசியங்களைத் தங்களுக்குள் ஒளித்து வைத்திருக்கும் நத்தைக்கூடுகளைப் போன்றவர்கள் என்றே எப்போதும் உணர்ந்து வந்திருக்கிறேன் – அவர்களை எப்போதும் சோம்பலின் ஆழ்துயிலில் அமிழ்த்தி வைத்திருக்க வேண்டுமென்பதில் ஏன் நீங்கள் இத்தனை கவனமாயிருக்கிறீர்கள்? என்னுடைய நாக்கைத் தவிர எதுவும் என்னிடம் மீதமிருக்கவில்லை, ஆகவே எனக்கு நானே சொல்லிக் கொண்டேன், ‘துள்ளிக் கொண்டேயிருக்கும் இந்தச் சின்னஞ்சிறு சதைத்துண்டினைக் கொண்டு நம்மால் பெரிதாக என்ன சாதித்து விட முடியுமென்பதைப் பார்க்கலாம்.’”

“நீ நெருப்புடன் விளையாடுகிறாய்.”

“மரணம் கூட என்னை ஊடுருவிப் போனதேயொழிய என்னை வெல்ல முடியவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள்.”

நேர்த்தியான இளைஞனொருவன் அவசரமாக உள்ளே நுழைந்து ஆளுனரின் காதுகளில் கிசுகிசுத்தான். ஆளுனர் என் பக்கமாகத் திரும்பிக் கேட்டார், “உனக்கென்று தனிப்பட்ட கோரிக்கைகள் எதுவும் இருக்கிறதா?”

“மக்களிடம் பேசுவதற்காக ஒரு மன்றம்.”

“கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இப்போது உன் மீதான விசாரணையைத் தொடங்குவோம்.”

“நான் ஏற்கனவே இறந்து போனவன்.”
அவர் உடனே புன்னகைத்தார், எனக்கான சரியான தீர்வைக் கண்டுபிடித்து விட்டவரைப் போல.

“இந்த வழக்கைப் பொறுத்தவரை, உன்னை விசாரிக்க இறந்துபோன எங்களுடைய நீதிபதிகளில் ஒருவரை அழைத்து வருவோம்.”
காத்திருந்தவாறே, கூண்டுக்குள் நான் தனியாயிருந்தேன். அவ்வப்போது மகிழ்ச்சியான கரகோஷங்களின் எதிரொலிகள் என் காதுகளை எட்டின: “துண்டிக்கப்பட்ட தலை நீடூழி வாழ்க!”
எவ்வளவு நேரம் தூங்கினேன் என்று எனக்குத் தெரியவில்லை. கண்களைத் திறந்து பார்த்தபோது, கூண்டை நோக்கித் திருப்பி நிறுத்தியிருந்த பாவொளி விளக்குகளிலிருந்து, ஒளிக்கற்றைகள் என் மீது வெள்ளமெனப் பாய்வதைக் கண்டு திடுக்கிட்டேன்.

காலடிச்சத்தங்கள் தொடர்ச்சியாகக் கேட்டன, பகட்டான ஆடைகளிலும் அலங்காரங்களிலும் மின்னிய மாபெரும் மனிதர்களின் கூட்டத்தால் அந்த அரங்கம் வேகமாக நிரம்பியது. குரூரமும் பதற்றமும் நிரம்பிய அதே சிரிப்பு ஆளுனரின் முகத்தில் மெல்லக் கவிந்து பரவியது. அனைவரையும் அமைதியாக உற்றுப்பார்ப்பதை நான் தொடர்ந்தேன். சிறிது நேரம் கழித்து ஒரு பலத்த குரல் அறிவித்தது, “மேன்மைக்கும் மரியாதைக்கும் உரிய பில்-பாக்தாதி பாஷா, துண்டிக்கப்பட்ட தலையின் வழக்கில் தீர்ப்பு சொல்வதற்காக அவருடைய கல்லறையை விட்டு வெளியேறி வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்.”

இத்தகைய எண்ணப்போக்கே எனக்கு கிச்சுகிச்சு மூட்டியது. மகிழ்ச்சி பொங்க சத்தமாகச் சிரித்தேன். குறைந்தபட்சம் தங்களுடைய இயலாமையைச் சரிக்கட்ட என்ன செய்ய வேண்டுமென்பதாவது அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. மூதாதையர்களின் அறிவு நிச்சயம் இவர்களின் கேவலமான புத்தியைக் காட்டிலும் சிறந்ததாகத்தான் இருக்கும். மோசமில்லை. அரசாங்க நீதிபதி என்ன சொல்லப்போகிறார் என்பதைக் காத்திருந்து பார்ப்போம்.

என்னுடைய குற்றம் பற்றி அவரிடம் என்ன சொல்லப்பட்டது என்பது எனக்குத் தெரியாது, அல்லது மக்களுக்குத் துரோகம் செய்த அவருடைய ஐந்தாம்படை மகனைச் சுதந்திர தினத்தன்று கட்டி இழுத்துச் சென்றுக் கொன்றதாகவும் பட்டியலில் சேர்த்துச் சொல்வார்களோ என்றெல்லாம் நான் தேவைக்கதிகமாக சிந்திக்கவுமில்லை. என்னுடைய புலன்களும் எச்சரிக்கையுணர்வும் மிகக் கூர்மையாகி ஒரு உச்சத்தைத் தொட்டபிறகு உரையாடல் விளையாட்டுகளைத் தொடரவோ பரிகாச உணர்வைக் கைக்கொள்ளவோ என்னால் முடியவில்லை. பறத்தலுக்கான ஆர்வம் எனக்குள் மீண்டும் கிளர்ந்தது, ஆபத்தை உணர்ந்த முதல் தருணத்தில் அங்கிருந்து தப்பிச் செல்லாமல் போனதற்காக என்னை நானே நொந்து கொண்டேன்.

பில்-பாக்தாதி பாஷா தனது தாடியை தடவிக் கொடுத்தார், விரல்களை அதன் வெண்ணிற மயிர்களினூடாக அலைய விட்டபடி. சுதந்திரத்துக்குப் பிறகானதொரு அரசாங்கத்துக்குத் தன்னுடைய சேவையை வழங்க முடிந்ததில் மிகுந்த மகிழ்ச்சியோடிருப்பவராக அவர் தென்பட்டார். இறுதியில் தீர்க்கத்தோடு தனது தீர்ப்பை அவர் வழங்கினார்:

“ஏற்கனவே உடலை நீங்கள் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்து விட்டீர்கள் – எனவே இந்தத் தலையையும் அதன் உடம்பிடம் கொண்டு போய் சேர்த்து விட்டு இதன் நாவை வெட்டி விடுங்கள்.”
குறிப்பு: துண்டிக்கப்பட்ட தலையின் கதை இங்கே முடிவுறுகிறது. தெளிவாகச் சொல்வதென்றால், அடுத்ததாக துண்டிக்கப்பட்ட நாவின் கதை வரவேண்டும்: என்றாலும், இந்த வழிமுறை எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான், நாம் அனைவருமே இதை அனுபவித்திருக்கிறோம் அல்லது அனுபவித்துக் கொண்டிருக்கிறோம், இந்தக் குறிப்பிட்ட தருணத்தையும் மற்ற பொதுவான சங்கதிகளையும் வித்தியாசப்படுத்தக்கூடியது என்று எதுவுமில்லை. ஆகவே, மன்னித்துக் கொள்ளுங்கள், கதை இங்கே முற்றுப்பெறுகிறது.

குறிப்புகள்:

1. அப்பாஸ் இப்ன் ஃபிர்னாஸ் – இஸ்லாமிய ஸ்பெயின் என்றழைக்கப்பட்ட அண்டலூசியாவைச் சேர்ந்த அறிஞர், கவிஞர் மற்றும் விஞ்ஞானி (கி.பி. 810 – 887). பறத்தலைப் பற்றிய ஆராய்ச்சிகளில் ஈடுபாடு கொண்டிருந்தார். பறவைகளின் சிறகுகளாலான ஆடைகளையும் இறக்கைகளையும் உடலில் பொருத்திக்கொண்டு செங்குத்தான பாறைகளிலிருந்து குதித்துப் பறக்க முயற்சித்திருக்கிறார்.

2. ஜமி’ அல்-ஃபனா – மொராக்கோவின் மர்ரகேஷ் நகரில் இதே பெயரைக் கொண்ட சதுக்கத்தினருகே அமைந்திருக்கும் பிரதான மசூதி.

3. ’அந்தர் – ஏமேனில் வாழ்ந்த சரித்திரப் புகழ்பெற்ற கவிஞர் அந்தரா இப்ன் ஷத்தாத் பற்றிய குறிப்பு இது. அவருடைய வீரத்துக்காகவும் தைரியத்துக்காகவும் உடன்பிறந்தாரின் பிள்ளையான ஆப்லா மீது கொண்டிருந்த அன்புக்காகவும் போற்றப்பட்டவர். கருப்பினத்தைச் சேர்ந்தவர், அபிசீனிய அடிமைப் பெண்ணொருத்திக்கு மகனாகப் பிறந்தார், தொடக்கத்தில் அவமானப்படுத்தப்பட்டாலும் அவருடைய வீரதீர செயல்களும் தைரியமும் அவரது இனக்குழுவான ‘ஆப்ஸின் முன்னேற்றத்துக்கு உதவின. பிற்காலத்தில், அவருடைய பெயரைக் கொண்டு மாபெரும் கதையாடல்கள் உருவாகின, உண்மையான சரித்திரத்தோடு பல்வேறு புனைவுகளும் சேர்ந்து அவரொரு மகாபுருஷராகச் சித்தரிக்கப்பட்டார்.

4. ஸெய்த் – வடக்கு ஆப்பிரிக்காவுக்குக் குடிபெயர்ந்த பானு ஹிலால் என்கிற இனக்குழுவைச் சேர்ந்த அபு ஸெய்த் அல்-ஹிலாஹ் பற்றிய குறிப்பு. இங்கும், அராபிய வாய்மொழிக்கதைகளில், அவருடைய வீரதீர சாகசங்களைப் பற்றிய ஏராளமான கதைகள் சொல்லப்படுகின்றன.

5. வக் வக் – ஆயிரத்தோரு அரேபிய இரவுகளில் குறிப்பிடப்படும் பழம்பெரும் தீவு. மனிதர்களின் சக்திக்கு அப்பாற்பட்டதாகவும், மாயமந்திரங்களின் உதவியின்றி யாரும் அங்கு செல்ல முடியாதென்றும் சொல்லப்படுகிறது.

6. அபு அல் தர்தா – எட்டாம் நூற்றாண்டு ஈராக்கில் வாழ்ந்த துறவி

7. அல் திர்மிதி – கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த புகழ்பெற்ற பெர்சிய அறிஞர் அபு ‘ஐசா அல்-திர்மிதி பற்றிய குறிப்பு. நபியின் வார்த்தைகளைக் குறிப்பெடுக்கும் ஹடித்தைச் சேகரித்தவர்.

அன்பாதவன் கவிதைகள்

அரவணைப்பு

சிரசுகள்ஐந்துகொண்டசர்ப்பமொன்றுதரித்திருந்ததெனைதன்னோடு

கடைக்கண்புன்னகையோர்தலைவிழியில்…

பாதிமூடியகிறக்கமயக்கத்திலொன்னொருதலைக்கண்

புணருமெனைப்பார்த்துகண்சிமிட்டுமொருகண்

ஒருசிரவிழிக்கோசற்றேஒன்றரைக்கண்…மாறுகண்ணோ…

அதிர்ஷ்டம்என்பாரே..ம்ம்ம்

ஏங்கும்தாபம்அய்ந்தாம்கண்ணில்மின்னபொங்கும்வேகமென்னுள்

ஐநாவும்தீண்ட

அடரிரவிலும்மிளிர்நீலம்

ஒளிர்ந்துசிலிர்க்குமென்உடலில்…

ஓய்ந்தாலும்சோராமல்பாதம்தொடங்கி

உச்சிவரைஊர்ந்துஇறுக்கிமூச்சடைத்துஉச்சம்ஏற்றும்

ஐந்தலைநாகத்திடம்தோற்பதேநித்யசுகம்

கதிர்நுழைக்காலையில்

கூந்தல்நீர்சொட்ட

குறுஞ்சிரிப்பாய்நோக்கும்நாகம்

போர்வைகொண்டுசேமிக்குமென்சடலத்தை……இரவுக்காய்…

2
நான்

கீறிப்பார்க்கிறாய்

ரப்பர்மரமல்ல

கோட்டோவியம்காக்கும்

பாறைநான்.

3
பிரதிதுருவப்பயணம்

தென்றலின்திசையிலிருந்துதொடங்கும்பயணம்

எதிர்காலஇலட்சியமொன்றினைப்பயணப்பையில்சுமந்தபடி

முதுகுப்பைநிறையமுயற்சி

கைப்பைக்குள்சேமித்தகனவுகள்

பிராத்திக்கிறான்(ள்)

உடன்வரும்உற்றஉறவுஉயிரோடுதிரும்ப

பார்வைத்திறனற்றநம்கடவுள்கள்

கேட்குன்சக்தியைஇழந்ததறியாமல்

பஞ்சுமிட்டாய்மொழியில்வாசித்தவனு(ளு)க்குவினாத்தொகுப்போஅடர்கந்தகஅமிலமொழி

தேர்வரங்கத்தில்சோதகர்களின்விரல்கள்விளையாடுகின்றன

தேர்வர்களின்சிறுநீர்த்தாரைவரை

சற்றேறக்குறையஅரைநிர்வாணப்படுத்தப்பட்டஎதிர்காலமருத்துவம்சேமிக்கிறதுதம்வெஞ்சினத்தை. ஆட்காட்டிவிரலின்நகஇடுக்கில்

அடிநாக்கில்கசப்பும்வெறுப்பும்

இளங்குருத்துகள்அறியார்இத்தேர்வின்அழுக்கரசியலை…

தேர்வுமுடிவில்வெளுக்கும்அழுக்கு

4
அபத்ததினமொன்றின்குறிப்பு

விடிந்ததுகாலை; ராசய்யாவின்இசையோடு! கூடவேமுகநூல்துப்பியஅதிர்வும்’கவிக்கோமறந்தார்.’ ரமலான்மாசுபாங்கொலிஓதபகலனலிலும்பாலைச்சாலையில்தொழுகைக்காய்க்கூடும்பிறைச்சோதரர். அப்துல்ரகுமான்அய்யாவுக்காகவும்பிராத்தியுங்கள்நண்பர்களே!

காலையில்வைத்தஅரிசிமணிகளைத்தீண்டவும்வராதவழக்கப்புறாக்களுக்கு

என்னகோபமோஎன்மேல்…?

வாசிக்காதநூல்களைஏக்கத்துடன்நோக்கஎழுதாக்கவிதைகளின்உயிர்ச்சொற்கள்

இறைந்துகிடக்கின்றனவீடுமுழுதும்.

உனதுகுரலுக்காய்க்காத்திருந்துபட்டினியாத்தூங்கிப்போனவரின்கையறுநிலைப்பாடலை

எகத்தாளம்செய்யும்விதமாய்சிறுகரப்புகளின்சில்மிஷம்தான்சகிக்கஇயலாததாய்..

நீரிழிவுக்கானகசப்புவில்லைகளைவிழுங்கும்போதெல்லாம்நினைவில்வருகிறது

சினேகிதனின்வற்றியமுகமும், ஊசித்ததழும்புகள்நிறைந்தமுழங்கையும். அறைகளுள்மவுனம்மறைத்தவீடொன்றுவிழுங்கயத்தனிக்குமென்னை; தனிமையின்கடுங்கரமொன்றுஎன்மென்னியைநெரிக்கத்திணருமென்மூச்சு! இசைஞானியின்தோய்ந்தகலைஞானியின்இளஞ்சோகக்குரல்கரைக்கிறதென்

அபத்தப்பொழுதுகளை… இதோ… கவிழ்கிறதுஇருள்.

5
தினசரியில்இலவசஇணைப்பினூடாகஒருபயணம்

வாரவிடுமுறைதினத்தில்வாசலில்கிடந்ததினசரியோடுஇலவசசஞ்சிகை! வண்ணங்களால்இழைக்கப்பட்டஇதழது’வா’ வெனக்கைப்பிடித்துஅழைத்துச்சென்றதோர்கொலாஜ்உலகம். ஒட்டகமொன்றுஅமர்ந்தபடிஅசைபோடஅருகேஏதோஒருதேசச்சிறுமிபுன்னகையோடுஊட்டிக்கொண்டிருக்கிறாள்கேரட்துண்டுகளை. ராட்சதமதுப்போத்தல்களுக்குமுன்’செல்பி’ எடுத்துக்கொண்டபல்தேசத்தவர்காலிக்கோப்பைகளைஉயர்த்திக்கூவ’சிஷர்ஸ்’.

பொன்னிறஇதழொன்றின்ஓவியத்திலிருந்துவழிகிறதுசெம்பொன்துளி. ‘ஒன்றுக்கொன்றுஇலவசம்விளம்பரம்வாசித்துஉதடுதுடைத்துநகருமிணையைநாசூக்காய்கவ்வமுயலுபவன்கண்களில்மின்னுவதுகாதலா… காமமா…! கருப்புஐஸ்கிரீம்பூசியக்கன்னிகையைஏக்கத்துடன்நோக்கும்தனியன். மூடியமண்கொடிகளுக்குள்இருப்பதென்னமாயப்புதிர்களா… பதிலில்லாவினாக்களா…? பறவைகள்பாலாவின்சிறகுகளைசட்டகத்துக்குள்அடைத்துப்படைப்பொன்றைஉருவாக்கியவன்கையெழுத்திட்டதுஎம்மொழியில்லை. யோகநிலையில்அமர்ந்தவன்சிரசில்ஆவிசீறும்பிரஷர்குக்கர்ஒளியைவிழுங்கியஓவியம்சொல்வதெதை…! விதவிதமானஉணவுவகைகள்… அழகியபடங்கள்… ஊரும்எச்சில். கடாய்சிஅட்டையில்உற்றுநோக்கும்கருப்புவவ்வால்கண்சிமிட்டியதுபொல்லாததோன்றுவதுவவ்வால்கண்சிமிட்டியதுபோலத்தோன்றுவதுஎனக்குமட்டுந்தானா…?

•••

நுண்கதைகள் ( சிறுகதைகள் ) – த.அரவிந்தன்.

வால்காக்கையின் கையசைப்பு

வால்காக்கை என்னை எட்டி உதைத்து, பனைமரத்திலிருந்து கீழே மட்டும்தான் தள்ளவில்லை. அதன் ஆத்திரச் செய்கையைப் பார்த்ததும், என்னுடைய ஜீன்ஸ் பேன்ட் கிழிந்து, தொடைகள் இரண்டும் சிராய்க்க, கிட்டத்தட்ட மேலிருந்து தரையில் குதிக்கவே செய்தேன். இருபது ஆண்டுகளுக்கும் மேலான என் வேட்கையை நிறைவேற்றிய வால்காக்கையின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாதது பனங்கருக்கை எடுத்து அறுத்ததுபோல உடல் முழுவதும் அவமானம் கலந்த ரத்த எரிச்சலாக இருந்தது.

பறவைகளைப் பார்த்து கையசைக்கும் விநோதம் சிறுவயது முதலே என்னிடம் இருந்து வந்தது. குழந்தைகளைப் பார்த்ததும் கையசைப்பதுபோல செடி, கொடிகள், மரங்கள், பறவைகள், விலங்குகளை எங்குப் பார்த்தாலும் கையசைப்பேன். வெளியூருக்குச் செல்லும்போது, என் கையசைப்பு இன்னும் ஆத்மார்த்தமாக இருக்கும். அங்கு பார்க்கும் பறவைகள், மரங்களிடம், ‘இனிமேல், உங்களை எப்போது பார்க்கப் போகிறேனோ’ என்று பிரிவு துயர் உருக அவற்றிடம் கையசைத்து விடைபெறுவேன்.

இந்த விநோதம் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில், என்னுடைய பதினேழாவது வயதில் ஒரு சனிக்கிழமை இரவு ஆழ்ந்த உறக்கத்தின்போது ஒரு கனவு கண்டேன். ஏறமுடியாத செங்குத்து பாறையில் ஏறி, ஒரு பறவையின் கூட்டை அடைகிறேன். அது, எந்த இடம்? என்ன பறவை என்பதெல்லாம் தெரியவில்லை. பனங்காடையைப் போல கண்ணைத் திகைப்புற செய்யும் வகையிலான அரிய வண்ணங்களின் கூட்டுக் கலவை நிறத்தில் அந்தப் பறவை இருந்தது. குஞ்சுகளுக்குப் புழுக்களை உண்ணக் கொடுத்துக் கொண்டிருந்த அந்தப் பறவையிடம், “ஹலோ, நலமா” என்று கையசைக்கிறேன். அதற்கு, அந்தப் பறவையும் “ஹாய். நலம். உங்கள் நலம் எப்படி?” என்று அதன் கால்களில் ஒன்றைத் தூக்கி என்னைப் போல அசைத்துக் காட்டியதும் கண் விழித்துக் கொண்டேன்.

அந்தக் கனவுதான் என்னுடைய இந்த முப்பத்தேழு வயதுவரை பறவைகளின் பின்னாலேயே சிறகடிக்க வைத்தது. ஒரே ஒரு பறவையிடமிருந்தாவது அதன் கையசைப்பை நேரில் பெற்றுவிட வேண்டும் என்று நான் ஏறி இறங்காத மரமோ, மலையோ இல்லை. மே, ஜூன் மாதங்களில் போக்குவரத்துச் சிக்னல் கம்பங்களில் காக்கைகள் கட்டி வைத்திருக்கும் ஒவ்வொரு கூடுகளையும்கூட எட்டிப் பார்த்து இறங்கியிருக்கிறேன். ஒரு காக்கைக்குஞ்சுகூட கையசைக்க முன்வரவில்லை. எப்போது நான் கையசைத்தாலும், பறவைகள் முதலில் மிரட்சியோடு விபரீதமான ஒன்றைப் பார்த்ததுபோல பார்க்கும். “பயப்படாதே. ஒத்தக் காலை மட்டும் தூக்கி, அசைத்துக் காட்டிவிடு. போய்விடுகிறேன்” என்று கொஞ்சம் நெருங்கினால், உடனே, அந்தப் பறவைகள் கண்காணாத தூரத்துக்குப் பறந்துபோய்விடும்.

ஒரு முறை அரச மரத்தின் உச்சிக் கிளை ஒன்றில் அமர்ந்திருந்த தவுட்டுக்குருவியை நெருங்கி கையசைத்தபோது, பக்கத்துக் கிளையிலிருந்து பச்சைப் பாம்பு ஒன்று என் மேல் ஏற, அங்கிருந்து இரண்டு பேரும் கீழே விழுந்தோம். பாம்பு தப்பித்து ஓடிவிட, கால் எலும்பு முறிவுக்காக இருபத்தைந்து நாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மீண்டும் நடக்கத் தொடங்கியபோது, ஒரு வண்ணத்துப் பூச்சி சடக்சடக் என என் மேல் சிறகடித்துப் பறந்தது. அந்தச் சிறகடிப்பு என்னைப் பார்த்து கையசைப்பதுபோல சிலிர்க்க வைக்க, மீண்டும் பறவைகளின் பின்னாலே சுற்றத் தொடங்கியபோதுதான் பனை மரத்தில் அமர்ந்திருந்த வால்காக்கையைப் பார்த்தேன்.

மரங்கள் அடர்ந்த பகுதியிலேயே காணப்படும் நீண்ட வாலும், பாக்குநிற முதுகும் கொண்ட காக்கையான அது, ஒத்தையில் நின்ற மரத்தில் உட்கார்ந்திருந்ததைப் பார்த்ததும், உச்சிவெயிலையும் பொருட்படுத்தாமல் மேலே ஏறினேன். பாதி தூரம் ஏறும்போதே அது பறந்துவிடும் என நினைத்தேன். அது அசையாமல் அப்படியே உட்கார்ந்திருக்க, மேலேறி கருக்குகள் கிழிக்க இரண்டு மட்டைகளுக்கு நடுவில் லாவகமாக உட்கார்ந்து, என் கையைத் தூக்கியபோது, “என்ன?” என்று கடும் கோபத்தில் இருப்பதுபோல எரிந்து விழுந்தது. அந்தப் பறவை பேசுகிறது என்பதைக்கூட அப்போது உணராமல், “இருபது ஆண்டுகளாக பறவையின் கையசைப்பைப் பெறுவதற்காக அலைகிறேன். ஒரே ஒரு கையசைப்பு மட்டும் போதும். என் வாழ்நாள் வேட்கை நிறைவேறிவிடும். இதோ, இதுபோல செய்தால் போதும்” என்று கையைத் தூக்கி அசைத்துக் காட்டினேன். அதற்கு, அது, “என்ன பெரிய கையசைப்பு” என்று ஒத்தக் காலை மட்டும் தூக்கி நையாண்டி புரிவதுபோல அசைத்துக் காட்டியது. அந்த அதிசயத்தை உடல் முழுவதையும் கண்களாக்கி நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான், அது, “சரி, உன் வேட்கையை நிறைவேற்றிவிட்டேன். என் வேட்கையை நிறைவேற்றிக் காட்டு பார்க்கலாம். நானும் எல்லா மனிதர்களிடமும் சைகை மூலம் பல ஆண்டுகளாகக் கேட்டுப் பார்த்துவிட்டேன். ஒருவருக்கும் புரிந்த மாதிரி தெரியவில்லை” என்று அதன் இறக்கையைத் தூக்கி, கழுத்தை வளைத்து அலகால் உடலைச் சொறிந்தவாறு, “இதுபோல் செய்து காட்டு” என்று கூறியது. அதன் செய்கை தெளிவாகப் புரிந்தாலும், எதுவும் புரியாததுபோல இருந்தது. “எனக்கு இறக்கையும் இல்லை, அலகும் இல்லை. நான் எப்படிச் செய்ய முடியும்” என்று நான் சொல்லத் தொடங்கும்போதே, அதற்கு எங்கிருந்துதான் ஆவேசம் வந்ததோ தெரியவில்லை. வெறியோடு பறந்து வந்து என் தலையில் அலகு உள்ளே இறங்கும் அளவுக்குத் கொத்தியது. மரத்திலிருந்து கிட்டத்தட்ட நான் குதித்தேன்.

ஆசிஃபாவின் குதிரை

ஆசிஃபாவின் குதிரை வீட்டுக்கு வந்தபோது, வழி தவறி வந்துவிட்ட, புதிதாகப் பிறந்த மான்குட்டியை ஒரு சிங்கம் அதன் பாதுகாப்பில் வைத்துப் பேணும் ஆவணப் படம் ஒன்றைத் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தேன். நான்கு கால்களையும் கொஞ்சம் அகட்டி தத்தக்குபித்தக்கு என்று சென்ற அந்த மான்குட்டி, படுத்திருக்கும் காட்டுத்தாடியுடைய ஆண் சிங்கத்தை முட்டுவதற்கு முயற்சிக்க, அது கண்களைச் சுருக்கிக் கொண்டு முகத்தைக் காட்டிக் கொண்டிருந்தது. அதைப் பார்க்க உலகம் ஏதோ புரண்டு படுத்துக் கொண்டதுபோல ஓர் உணர்வு ஏற்பட்டது.

‘முதலில் ஆசிஃபா யாரெனக் கூற வேண்டுமா?’ கொடுமை. ரத்த ஈரம் காய்வதற்குள்ளேவா மறந்துவிட்டீர்கள்? ஜம்மு – காஷ்மீரின் கதுவா பகுதியில் முஸ்லீம் நாடோடி குடும்பத்தைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி ஆசிஃபா. அந்தச் சிறுமியைக் கோயில் ஒன்றில் எட்டு நாள்கள் அடைத்து வைத்து, ஹிந்து வெறியர்களாகப் பிரகடனப்படுத்திக் கொண்ட எட்டுப் பேர் கூட்டு வன்புணர்வு செய்து, கொடூரமாக கொலை செய்து தூக்கி எறிந்தார்கள். அந்தச் சிறுமியின் அப்பா கூட, என் மகளை எங்கங்கோ தேடினேன். புனிதமான அந்தக் கோயிலின் உள்ளே மட்டும் தேட வேண்டும் என்று தோன்றவில்லை என்று கூறினாரே, வளர்ப்புக் குதிரைக்கு ஓடையில் தண்ணீர் காட்டச் சென்றபோதுதான் சிறுமி கடத்தப்பட்டிருக்கிறாள் என்றெல்லாம் செய்திகள் வந்தனவே, அவை உங்கள் மூளையில் இடம்பிடிக்கவில்லையா?

“மானைக் கொல்வதற்கு என்றே காட்டைச் சுற்றும் சிங்கத்தைக்கூட பாருங்கள். குட்டியைக் கொல்லக்கூடாது என்று அதற்குத் தெரிகிறது. பெற்ற தாயைப்போல அந்தக் குட்டியைக் காக்க, பிற விலங்குகளிடம் சண்டைக்குப் போவதைப் பாருங்கள். இந்த மனிதர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்? ஆசிஃபா எவ்வளவு அன்பானவள் தெரியுமா?” என்று குதிரையின் கண்கள் கலங்கின. எலும்புகள் எல்லாம் தெரிய, இளைத்துப் போயிருந்த குதிரை, வாயில் நுரை தள்ள மூச்சிரைப்புடனே பேசியது. “காஷ்மீரின் பள்ளத்தாக்குகளில் உறையும் பனியையும்விட அப்பழுக்கில்லாத பால்மனம் கொண்டவள் ஆசிஃபா. அவளுக்கு இந்தக் கடவுள், அந்தக் கடவுள் என்பதெல்லாம் தெரியாது. புல்லைக்கூட வணங்குவாள். என்னுடைய விலா எலும்புகள் மூடி செழிப்பாகத் தெரிய வேண்டும் என்பதற்காக எனக்கு அவள் கடைசியாகத் தண்ணீர் காட்டிய அந்த ஓடையைக்கூட வணங்கியிருக்கிறாள். அன்றும் அப்படித்தான் ஓடையில் தண்ணீர் காட்டிவிட்டு, நான் நன்றாகச் சாப்பிட வேண்டும் என்று செழித்த புற்கள் உள்ள பகுதியில் என்னை விட்டுட்டு, விளையாடிக் கொண்டிருந்தாள். திடீரென எங்கே போனாள் எனத் தெரியவில்லை. வீட்டுக்குப் போயிருப்பாள் என வீட்டுக்கு வந்தால், அங்கும் இல்லை. அவள் என் குழந்தை. அவளை நான்தான் சிங்கத்தைப் போல பொறுப்பாகப் பாதுகாத்திருக்க வேண்டும். விதையற்ற பழங்களை உருவாக்குகிறார்கள். அதுபோல விதையற்ற மனிதர்களை உருவாக்கினால் என்ன?” என்று தேம்பியது.

எனக்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியவில்லை. அதைக் கத்தரித்தால் மட்டும் பிரச்னை தீர்ந்துவிடாது. இது மனநலம் பாதிக்கப்பட்டவர்களால் எழும் பிரச்னை. எல்லாப் பாதைகளுமே சக மனிதனை நேசிப்பதற்காக செப்பணிடப்பட்டவை என்பது மாறி, அதிகாரத்தை அடைதலுக்கான வழிகளில் ஒன்றாகவும், சக மனிதனை வீழ்த்துவதற்கான வழிகளில் ஒன்றாகப் பார்க்கத் தொடங்கியதால் வந்த வினை. அதை மாற்றுவதற்கான வழிமுறைகளைக் கண்டறிந்து கூறினாலும், அதை ஏற்காமல் பிறரைக் கொன்று குவிப்பதாகக் கருதிக் கொண்டு, தன்னைத் தானே கொன்றுகொண்டு உலகம் முழுவதும் மனிதன் சாகிறான் என்று சொல்ல நினைத்தேன். மூச்சிரைக்க அது பேசுவதைப் பார்த்தபோது, அதன் உணர்ச்சியை மேலும் தூண்டிவிட வேண்டாம் என எப்போதும் கடைப்பிடிக்கும் மௌனத்தையே அதற்குப் பதிலாகத் தந்தேன்.

“ஆசிஃபா அடைப்பட்டிருந்த இடத்தின் மீதும், அந்த எட்டு கயவர்கள் மீதும் எனக்கு ஆரம்பத்திலேயே சந்தேகம். முன்னங்கால்களால் தரையைப் பெயர்த்து புழுதியைப் பறக்கவிடுவது உள்ளிட்ட என்னால் முடிந்த எல்லாச் சமிக்ஞைகளையும் தொடர்ந்து காட்டினேன். யாரும் என் குறிப்பை உணர்ந்து கொள்ளவில்லை. கடைசியாக எப்படியோ அந்தக் கயவர்களைக் கண்டுபிடித்து கைது செய்து விட்டார்கள். விசாரணையும் நடைபெறுகிறது. ஆனால், அதில் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று உறுதியாக என்னால் நம்ப முடியவில்லை. அதனால்தான், அவர்களை நானே தண்டிக்க முடிவு எடுத்துள்ளேன். ஆசிஃபா இறந்ததை அறிந்ததில் இருந்து தண்ணீர் குடிப்பதைக்கூட நிறுத்திவிட்டேன். அந்தக் கயவர்களை நேரடியாக என்னால் கொல்ல முடியாவிட்டாலும், என் நினைவில் உள்ள அவர்களை என் இறப்பின் மூலம் கொல்வேன். அவர்கள் துடிதுடிக்க இறப்பதைக் காண்பேன்” என்று புறப்படத் தயாரானது.

“இனிய குதிரையே, இயலாமையின் வேதனையில் எடுக்கும் முடிவு இது. ஏதோ ஒரு கதைப் புத்தகத்தைப் படித்ததால் உனக்கு ஏற்பட்ட கருத்தாக்கம் போல் இது தெரிகிறது. கயவர்களைக் கொல்கிறேன் என்று ஆசிஃபாவின் நினைவுகளையும் கொல்லப் பார்க்கிறாய். நீ உயிர்த்திருக்க வேண்டும். எங்கும் ஆசிஃபாவாக உலவ வேண்டும். உன் குளம்புகளின் சத்தத்திலிருந்து உலகம் முழுமைக்குமான அமைதி பிறக்க வேண்டும்” என்று நான் கூறியதைச் செவிமடுக்காமல் அது செல்லத் தொடங்கியது.

“குதிரையே, எல்லோரிடமும் இதுபோல் சொல்லிக் கொண்டிருக்காதே. பார்த்துப் போ” என்று அனுப்பிவிட்டு, தொலைக்காட்சியின் பக்கம் திரும்பினேன்.

பசித்த வயிற்றோடு தாய்ச் சிங்கம் இரை தேடி அசைந்து அசைந்து முன்னால் சென்றது. அதன் மான்குட்டி பின்னால் இருந்து ஓடிவந்து, சிங்கத்தை முட்டியது. சிங்கம் ஒரு காலைத்தூக்கி தட்டிவிட்டது. குட்டி தப்பித்து ஓடி, திரும்பவும் வந்து முட்டியது. அப்போது, புதருக்குள் இருந்து திடீரென பாய்ந்து வந்த நான்கு சிங்கங்களில் ஒன்று மான்குட்டியின் கழுத்தைக் கவ்விக் கொண்டு ஓடியது. மூன்று சிங்கங்கள் மானின் தாயோடு கடும் சண்டையிட்டன.

காந்தியின் உடல்

உலகின் கண்களில் மண்ணைத் தூவி, காந்தியின் உடலை இந்தியா ரகசியமாகப் பதப்படுத்தி வைத்திருப்பதாகவும், அதைப் பார்த்ததாகவும் மஹோத் சிங் கூறியபோது நானும் நம்பவில்லை. ராணுவத் தளபதியின் மகன் அவன். தெருவில் பினாயில் விற்பவனைக் கைது செய்தாலும், என் அப்பா தீவிரவாதிகளைத் துப்பாக்கி இல்லாமலே விரட்டிச் சென்று பிடித்தார் எனக் கதையளக்கும் காவல் ஆய்வாளர்களின் மகன்கள்போல மஹோத்தும் அவன் தந்தையின் உயர்தகுதிக்கேற்ப அதீதமாகச் சிந்திக்கிறான் என நினைத்தேன். என்னுடைய சந்தேகங்களுக்கு அவன் அளித்த பதில்களும் மேலும் சந்தேகம் அளிப்பதாகவே இருந்ததே தவிர, முழு திருப்தியை அளிக்கவில்லை.

“காந்தியின் உடலை ஏன் பதப்படுத்தி மறைத்து வைத்திருக்க வேண்டும்?”

“அதுதான் ரகசியம். காந்தியின் உடல்தான் இந்தியாவிடம் இருக்கும் மிகப் பெரிய ஆயுதம். எல்லா நாடுகளும் அணு ஆயுதங்களை ரகசியமாக அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. அணுகுண்டு சோதனைகளை நாமும் செய்கிறோம் என்றாலும் காந்தி எனும் ஆயுதத்துக்கு முன் எவ்வளவு சக்திமிகு ஆயுதங்களாக இருந்தாலும் அவை வலுவிழந்து போய்விடும். நீருக்காகவோ, மதத்துக்காகவோ மூன்றாம் உலக யுத்தம் எப்போதும் வரலாம். அப்போது காந்தியின் உடலை உலகுக்கு வெளிப்படுத்தினால், எந்த நாடும் இந்தியாவின் மீது தாக்குதல் தொடுக்காது. காந்தியின் உடல் உள்ள மண்ணை அழிக்க எந்த நாடும் துணியாது. சிறு அணுகுண்டும் வீசாது, அகிம்சை வழியில் உலக யுத்தத்தில் வெற்றிபெறுவதே நம் ராணுவத்தின் எதிர்காலத் திட்டம்.”

“பொய்யே சொல்லாதவரின் உடலை வைத்து, உலகுக்கே இந்தியா பொய் சொல்லிவிட்டது என்கிறாய். இது இந்தியாவை மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள எல்லோரையும் அவமானப்படுத்தும் செயல் என்பதை உணர்ந்து பேசுகிறாயா எனத் தெரியவில்லை. காந்தியின் உடலை நிரந்தரமாகப் பதப்படுத்தி வைக்கலாம் என்ற யோசனையை அவரது மகன் தேவதாஸ் ஏற்காததுடன், காந்தியின் சிதைக்கு அவரின் மற்றொரு மகன் ராம்தாஸ் கற்பூரம் ஏற்றி தீ மூட்டி தகனம் செய்யப்பட்டது என்பது உலகமே கண்ட உண்மை. ஒருவேளை, நீ சொல்வதுபோல இருந்தால், யுத்தமில்லாத இந்தக் காலத்திலேயே காந்தியின் உடலை உலகுக்கு அறிவித்தால் நல்லதுதானே?”

“அதுதான் உலகின் கண்களில் மண்ணைத் தூவிய ரகசியம் என்று ஆரம்பத்திலேயே கூறிவிட்டேன். ஆங்கிலேயேர்கள் இந்தியாவை விட்டு முழுமையாக அகலாத நிலையிலும் காந்தியின் உடலை இந்தியா உலகுக்குத் தெரியாமல் சாமர்த்தியமாக மறைத்துவிட்டது. மேலும், இந்த விவகாரத்தில் சாதாரண மனிதர்கள்போல் நீ யோசிக்கிறாய். அது தவறு. காந்தியின் நிலையில் இருந்தும், இந்திய ஆட்சியாளர்கள் நிலையில் இருந்தும் இதைப் பார்க்க வேண்டும். காந்திக்கு எப்போதும் ஆபத்து உள்நாட்டில்தான். அவரது உடலைத் துளைத்த தோட்டாக்கள் ஆங்கிலேயர்களுடையது அல்ல. காந்தியைச் சுட்ட துப்பாக்கியிலிருந்து இப்போதும் புகை பறக்கிறது. மேலும், காந்தி உயிரோடு இருந்தபோது மக்களின் மனங்களில் என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று நினைத்து முயன்று தோல்வி கண்டாரோ, அந்த மாற்றங்கள் அனைத்தும் அவரின் பூதஉடல் மூலம் மக்களிடம் ஏற்பட்டுவிட்டால், அது ஆட்சியாளர்களுக்கும்தான் ஆபத்து. காந்தியின் வாய்மை மக்களை எழுச்சியுற செய்து, ஆட்சியாளர்களைத் தூக்குற செய்துவிடும். அதனால், காந்தியின் உடலுக்கும் ஆபத்து வர வேண்டாம், ஆள்பவர்களுக்கும் ஆபத்து வர வேண்டாம் என்று ரகசியம் காக்கப்படுகிறது.”

“உண்மையிலேயே இவ்வளவு பெரிய ரகசியத்தை யாருக்கும் தெரியாமல் காக்க முடியுமா? ”

“நேதாஜி எப்படி இறந்தார் என்று நேருவில் தொடங்கி இன்றைய ஆட்சியாளர்கள் வரை யாருக்குமே தெரியாது என்று நம்புகிறாயா? ஒவ்வொரு நாட்டுக்குமான ரகசியங்கள் அந்நாட்டு ராணுவத்தின் அதி முக்கிய அதிகாரிகளால் காக்கப்படுகின்றன. ஆட்சியாளர்கள் என்பவர்கள் வெறும் பார்வையாளர்கள். வருவார்கள். போவார்கள். ஆனால், அவர்களும் பதவியேற்கும்போது ரகசியக் காப்பு உறுதிமொழியை எடுத்துக் கொள்கின்றனர் என்பதையும் தாண்டி, நாட்டின் தலைவன் என்ற இடத்துக்கு வந்து விடுகின்றனர். வீட்டின் ரகசியத்தை குடும்பத் தலைவன் வெளிப்படையாகப் பேசுவானா? மேலும், ரகசியம் என்பது ஓர் அணுகல் அல்லது அறிதல். ஒன்றை ஆர்வத்துடன் அணுகி, அதை அறிந்துவிட்டால் ரகசியம் என்பதே இல்லாமல் போய்விடுகிறது. குளத்தில் விழுந்த காசுபோல அது மனதில் அமைதியாகக் கிடக்கத் தொடங்கிவிடுகிறது. காந்தியின் உடல் குறித்த ரகசியமும் அப்படித்தான் அறிந்தவர்களின் மனங்கள் அமைதியாகத் தூங்குகிறது.”

“உன்னைப் போல நிறைய பேர் காந்தியின் உடலைப் பார்த்திருப்பார்கள். யாருமே காந்தியின் உடலை வெளி உலகுக்கு எடுத்து வர முயற்சிக்கவில்லையா?”

“அது நடக்காமல் இருக்குமா? முன்னாள் ராணுவத் தளபதியின் மகன் கிர்பால் சிங் யாருக்கும் தெரியாமல் அவனது நண்பர்கள் மூன்று பேரை அழைத்துச் சென்று பார்த்திருக்கிறான். காந்தியை உற்றுப் பார்த்தபோது அவர் சிரிப்பதுபோல இருந்திருக்கிறது. அதில் நால்வருக்கும் பயம் தொற்றி, வீடு திரும்பி பல நாள்கள் காய்ச்சலோடு கிடந்திருக்கிறார்கள். அதோடு, விட்டிருந்தால் பிரச்னை எதுவும் எழுந்திருக்காது. நால்வரும் சேர்ந்து காந்தியின் உடலை வெளியே கொண்டு வருவதற்கு ஒரு நாள் இரவில் முயன்றுள்ளனர். ராணுவத்திடமிருந்து தப்பிக்க முடியுமா? இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அரசு மருத்துவமனையில் இருந்து பிணத்தைக் கடத்தியதாக வழக்குத் தொடரப்பட்டு, ஒருவன் சிறையில் இருந்து வெளியே வர முடியாதவனாக அடைப்பட்டு கிடக்கிறான். கிர்பால் சிங் மட்டும் தப்பினான்.”

இந்த உரையாடலுக்குப் பிறகு, சிறு பொழுதும் மஹோத் சிங்கைவிட்டு விலகாமல் அவனையே சுற்றி வந்து காந்தியின் உடலைப் பார்க்க வேண்டும் என்று கெஞ்சினேன். அவன் பிடி கொடுக்காமல் நாயாய் அலையவிட்டான். ஒரு நாள் அவன் காலைப் பிடித்துக் கொண்டு விடாமல் கெஞ்சியபோதுதான் சம்மதித்தான். பிறகு, அவன் அப்பாவிடம் அனுமதி பெற்று, வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என்ற வாக்குறுதியுடன் காந்தியின் உடலைப் பார்ப்பதற்காக என்னை அழைத்துச் சென்றான்.

காஷ்மீரில் பெயர் தெரியாத ஒரு சிகரப் பகுதியில் அமைந்திருந்த பனிமூடிய அந்த மாளிகைக்குள் நுழைவதற்குள் ஏகப்பட்ட சோதனைகள். ராணுவத் தளபதியின் மகன் என்றாலும் அவனையும் சேர்த்தே ஒவ்வொரு தடையரண்களிலும் இயந்திரத் துப்பாக்கிகளோடு நின்றிருந்த ராணுவ வீரர்கள் முழுமையாகப் பரிசோதித்தே உள்ளே அனுமதித்தனர். அந்த மாளிகைக்குள் காலடி எடுத்து வைத்தபோது சூரியனில் இருந்து அடுத்த காலடியை நிலவில் வைப்பதுபோல இருந்தது. அதுவரை பெரிய மாளிகையாகத் தெரிந்தது, திடீரென சிறு குடிலாகத் தெரியத் தொடங்கியது. ரகுபதி ராகவ ராஜாராம் பாடல் மெல்ல ஒலித்துக் கொண்டிருந்தது. அந்தப் பாடல் எங்கிருந்து வந்தது என்று எங்களால் கண்டறிய முடியவில்லை. சிறு குடிலில் உள்ளேயும் ஓர் அறை இருப்பதுபோல தெரிந்தது. அதை நோக்கி நடந்தோம். அது முடிவடையாத பாதைபோல நீண்டுகொண்டே சென்றது. இடைஇடையே கதர் ஆடை அணிந்த வெண்தாடி பூண்ட குடுகுடு கிழவர்கள் தென்பட்டார்கள். அவர்கள் அனைவரும் சாந்த முகத்துடன் புன்முறுவல் பூத்து எங்களை வரவேற்று, காந்தி இருக்கும் திசையைக் காட்டினர். அந்தத் திசையை நோக்கி நடக்க, நடக்க எங்களிடம் இருந்த பொய்கள், குரோதம், வன்முறைகள் என எதிரான அனைத்து அம்சங்களும் அழிந்து, வெடித்த பருத்தியாக உள் அறை நோக்கி பறக்கத் தொடங்கினோம். அந்த அறைக்குள் நுழைய நுழைய அந்த அறையே பேரொளியால் கட்டப்பட்டதுபோல எங்களின் கண்களின் வழியே ஒளி உள் புகுந்து எங்களை ஆக்கிரமிக்கச் செய்தது. அந்த ஒளிக்குள் அமிழ்ந்து கிடந்துபோது, அமைதியின் பேழையில் சிரித்த முகத்துடன் காந்தி தூங்குவதைப் பார்த்தோம். அவர் மார்பிலும், வயிற்றிலும் மூன்று குண்டுகள் துளைந்திருந்த இடங்களில் ரோஜா பூக்கள் வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தபோது, அறையின் மூலையில் காந்தி எழுதிய நூல்களும், அவரின் பேச்சுகள் அடங்கிய தொகுப்புகளும் கண்ணில் பட்டன. அந்த மூலையில் இருந்துதான் பேரொளி உதித்தெழுவதுபோலத் தோன்ற, உடனே, காந்தியின் உடலைப் பார்த்தோம். ஒளியின் ஊற்றாக அந்த உடல் தெரிந்தது. அதற்கு மேல் எங்களை அங்கிருக்க குடுகுடு கிழவர்கள் அனுமதிக்கவில்லை. சாந்தமான முகத்துடன் எங்களுக்குத் திரும்பும் திசையைக் காட்டினர். சூரியனில் காலெடுத்து வைத்து திரும்பினோம்.

வரும் வழியெல்லாம் பேரொளி என்னோடு பேசிக் கொண்டே வந்தது. அதன் பேச்சைக் கேட்க கேட்க காந்தியின் உடலை வெளியே எடுத்து வந்து, மக்களின் மேல் தூய வெளிச்சத்தைப் பாய்ச்சுவது போன்ற சித்திரக் கோடுகளைக் காற்றில் என் கைகளால் வரைந்தவாறே வந்தேன். யாருக்கும் தெரியாமல் காந்தியின் உடலை எடுத்து வர நள்ளிரவு பனிக்குடிலுக்குச் செல்லவும் முடிவு எடுத்தேன்.

மாற்றுத் தலை

கடலால் சூழப்பட்ட யாராலும் கண்டறியப்படாத இந்தத் தீவுக்குள் ஒரே ஒரு தலை கொண்ட மனிதன் என்று என்னை அறிமுகம் செய்து கொள்ள அச்சமாக இருக்கிறது. பல் விழுந்து பல் முளைப்பது போல ஒருவனின் தலை வெட்டப்பட்டால், அடுத்த ஒரு மணி நேரத்தில் இங்குள்ள மனிதர்களுக்கு மற்றொரு தலை முளைத்து விடுகிறது. தலை முளைக்கும் ஒரு மணி நேரம் அந்த மனிதன் யாராலும் கண்டு கொள்ளப்படாமல் முண்டமாகக் கிடக்கிறான். அந்த முண்டங்களை நான் உற்றுப் பார்த்தால், இங்குள்ளவர்கள் என்னை விநோதமாகப் பார்ப்பதுடன், அப்படிப் பார்க்கக் கூடாது என்றும் மிரட்டவும் செய்கின்றனர். தலையைப் பிரசவிக்கும்போது யாராவது உற்றுப் பார்த்தால் முண்டமாகக் கிடப்பவனின் பழைய முகம் காணாமல் போய் வேறொரு முகமாக மாறி முளைக்குமாம். அப்படி முளைத்தால், அவனின் மனைவியும், பிள்ளைகளும் அவனை ஏற்க முடியாமல் புறக்கணிக்கத் தொடங்கி விடுவார்களாம். அதனால் முண்டங்கள் அதன் பிரசவத்தை முடிக்கும் வரை யாரும் அதை நெருங்கக் கூடாது, பார்க்கக் கூடாது என்கின்றனர்.

ஆனால், என்னால் அப்படிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. யார் கண்களிலும் படாமல் மறைந்து நின்று, முண்டங்களில் நடக்கும் தலை பிரசவத்தைப் பார்த்து வருகிறேன். இதுவரை முந்நூறுக்கும் மேற்பட்ட முண்டங்களின் பிரசவத்தைப் பார்த்துவிட்டேன். யாரும் அவர்களுடைய பழைய முகத்தைத் தொலைத்து பிறக்கவில்லை. அச்சில் வார்ப்பதுபோல பழைய முகம் வந்ததும், முண்டமாகக் கிடந்தவன் எழுந்து நடக்கத் தொடங்குகிறான். இங்குள்ள ஒவ்வொரும் வெட்டவெட்ட நான்கு தலைகளைப் பெறக்கூடியவர்களாக இருக்கிறார்கள். நான்காவது தலையும் வெட்டப்பட்டால்தான் ஒருவனின் உயிர் போகிறது. ஆனாலும், இவர்களின் ஆயுள் ஒரே ஒரு தலையுடைய மனிதனைவிட குறைவாகத்தான் இருக்கிறது.

நான்கு தலை என்பதால் அதுதான் இங்குள்ளவர்களின் பெரும் முதலீடாக இருக்கிறது. அந்த முதலீட்டை வைத்து நாள் முழுவதும் பெரும் சத்தத்துடன் சூதாடுகிறார்கள். பாறையில் மண்டையோட்டை வைத்து சின்னச் சின்ன கற்களை வைத்து நகர்த்தி விந்தையான முறையில் ஆடுகிறார்கள். தோற்றவன் தலை வெட்டப்பட்டு, வேறொரு தலை முளைக்கிறது. மூன்று தலைகளை இழந்தவன், மனைவி, பிள்ளைகளின் தலைகளை வைத்து சூதாடுகிறான். தலைகளை அடகு பிடிக்கும் வழக்கமும் இங்குள்ளது. நான்கு தலைகளையும் மொத்தமாக ஒப்புக் கொடுப்பவனுக்கு பெரிய தோப்பு அளிக்கப்படுகிறது. ஏற்கெனவே தலை வெட்டப்பட்டு மூன்று தலை, இரண்டு தலை உடையவன் என்றால் அதற்கேற்ப தோப்பின் அளவு குறைக்கப்படுகிறது. தோப்பைப் பெற்றவன் அதில் அவர்களின் முக்கிய உணவான செவ்வாழையைப் பயிரிட்டு அவன் குடும்பத்துக்குப் போக, பெரும் பங்கை அடகு பிடிப்பவனுக்குக் கொடுக்க வேண்டும். அப்படிக் கூறியவாறு கொடுக்க முடியாவிட்டால், அடகு வைத்தவனின் நான்கு தலைகளும் வெட்டப்பட்டுக் கொல்லப்படுகிறான். அதன் பிறகு கொல்லப்பட்டவனின் மனைவியும் மகனும் தோப்பைப் பராமரித்து செவ்வாழைகளை அளிக்க வேண்டும். அவர்களாலும் முடியாவிட்டால், அவர்களின் தலைகளும் கொய்யப்படும். அடுத்து அவர்கள் வம்சத்தில் யார் இருந்தாலும் அவர்களின் தலைகளும அடகு பிடித்தவனுக்குத்தான் சொந்தம். அவர்களின் தலையை வெட்டவும் அடகு பிடிப்பவனுக்கு அந்தத் தீவின் சட்டம் உரிமை அளிக்கிறது.

காட்டுமிராண்டித் தனமான இந்தச் சட்டத்தின் மீதும், காட்டுமிராண்டிகளாக இருக்கும் அந்த மனிதர்களையும் நினைக்க நினைக்க பரிதாபமாகத் தோன்றியது. அவர்களின் அறியாமையை எப்படியாவது போக்க வேண்டும் என்று பல நாட்கள் யோசித்துப் பார்த்து ஒரு முடிவுக்கு வந்தேன். சூரியன் கூட்டுக்குள் அடைந்து கொண்டிருந்த நேரத்தில் சிறிய பாறை மீதேறி கூடி நின்ற மனிதர்கள் மத்தியில் முழங்கினேன்.

“வெட்ட வெட்ட துளிர்க்கும் தலைகளை உடைய அரிய மனிதர்களே, ஒரே ஒரு தலைகளுடன் பிறக்கும் சாதாரண மனிதர்கள் இந்த உலகத்தில் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா? மாற்றுத் தலையில்லாமல் தாயின் சேலையால் கட்டப்பட்ட தூளி இறுகியதால் மட்டுமே எத்தனை குழந்தைகள் இறந்து போகின்றன தெரியுமா? எறும்பைப்போல வாகனங்களில் தலைகள் நசுங்கி எத்தனை மனிதர்கள் இறந்து போகிறார்கள் தெரியுமா? மாற்றுத் தலை வந்து சாட்சியம் சொல்லும் வாய்ப்பு இல்லாததால் கொலைகள் சர்வசாதாரணமாக நடப்பதை அறிவீர்களா? குறிப்பாக பெண்கள் கேட்பாரற்று கற்பழித்துக் கொல்லப்படுவதை அறிவீர்களா? இவை எல்லாவற்றுக்கும் சாட்சியமாக ஒரே ஒரு தலையை மட்டும் உடையவனாக உங்கள் முன் நிற்கிறேன். உங்களுக்கு என் மேல் சந்தேகம் என்றால், என் தலையை வெட்டிக்கூட பாருங்கள். ஆனால், என் தலையை வெட்டி துண்டாக்கியதற்குப் பிறகு நான் உயிர்த்தெழுவதற்கு அறவே வாய்ப்பு இல்லை. எங்களுக்கு இருப்பது ஒரே ஒரு உயிர்தான். அதுபோனால் திரும்புவதில்லை. அது போகாமல் பாதுகாக்கத்தான் நாங்கள் போராடுகிறோம். அப்படியும் எங்களில் நூறு வயது வரை வாழ்கிறவர்கள் அனேகம். உங்களைப் பாருங்கள். உலக மனிதர்களில் அரியவர்களாக நான்கு தலைகளை அடையக் கூடியவர்களாக இருந்தாலும் இருபத்தைந்து வயதைக்கூட தாண்ட முடியாதவர்களாக இருக்கிறீர்கள். தலைகளைத் துண்டித்து சூதாடுவதை விட்டு, உங்கள் அறியாமை வெட்டி எறியுங்கள். அந்தப் பறவையைப் பாருங்கள். ஒரே தலையுடன் உங்கள் ஆயுளையும் கடந்து வாழ்கிறதல்லவா? வரப்பிரசாதமாக உங்களுக்கு எது கிடைத்ததோ, அதையே வாய்க்கரிசியாகப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டீர்கள். நான்கே நான்கு உயிர்கள்தான் இருக்கின்றன என்று நினையுங்கள். நீண்ட ஆயுளோடு வாழ்வதற்கான வாழ்க்கை முறையை மாற்றியமையுங்கள். சூதாட்டத்தைக் கைவிடுங்கள். உயிரைப் பறிக்கும் சட்டத்தைத் தூக்கி எறியுங்கள். தீவின் நிலத்தை எல்லாருக்கும் பொதுவாக்கிப் பண்படுத்தி ஒன்றுபட்டு வாழுங்கள். ஒருவருக்கு நான்கு உயிர்கள் இருக்கிறது என்றாலும் அதைப் பறிக்கும் உரிமை யாருக்கும் இல்லை என்பதை உணருங்கள். எந்த ஒன்றும் கூடுதலாக இருப்பது என்பதற்காக தலைகால் புரியாமல் ஆடாதீர்கள். உங்கள் சந்ததியே உலகில் இல்லாமல் அழிந்துபோய்விடும் என்பதை மட்டும் உங்கள் தலையில் ஏற்றிக் கொள்ளுங்கள்” என்று ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக எழுச்சியைக் கொட்டினேன்.

தீவில் உள்ள எல்லோருமே திரண்டுவிட்டதுபோல பெரும்கூட்டம் சூழ்ந்திருந்தது. பாறையில் இருந்து இறங்கியதும், “ஒழுக்கத்துக்குப் பிறக்காத ஒற்றைத் தலையனே” என்று தாறுமாறாக அடித்து மயக்க நிலையில் அவர்களின் தலைவன் முன் என்னைக் கொண்டு போய் நிறுத்தினர். பல தரப்பு விசாரணைக்குப் பிறகு, “சூரிய நட்சத்திரம் எழும் நேரத்தில், இவனின் கடைசி தலையின் உயிர் போகும் வரை கொல்லப்பட வேண்டும்” என்று தலைவன் தீர்ப்பளித்துவிட்டு குகை போன்ற அவனின் இருப்பிடத்துக்குச் சென்றான். என்னை இழுத்துச் சென்று, ஒரு பாறையோடு சேர்த்து கட்டிய சிலர், “எனக்கு மாற்றுத் தலை உண்டா, இல்லையா” என்று தங்களின் தலைகளைப் பந்தயத்தில் வைத்து சூதாடியவாறே சென்றனர்.

இரவு விரைவாக கடந்து கொண்டிருந்தது. தீவில் நடப்பதை எல்லாம் அமைதியாகவே வேடிக்கை பார்த்துச் சென்றிருக்கலாம் என்று தோன்றியது. ஒருவேளை, இந்தத் தீவுக்கு என்று தனித்தன்மை இருந்து, வெட்டப்பட்ட பிறகு என்னுடைய முண்டமும் தலையைப் பிரசவித்தால் என்று ஓர் ஆசை துளிர்த்தது. கடைசி தலையின் உயிர் போகும் வரை வெட்டப்பட வேண்டும் என்று அளிக்கப்பட்ட தீர்ப்பு நினைவுக்கு வந்து, உள்ளுக்குள் இருளடைந்தவனாக அழத் தொடங்கினேன். அப்போது, யாரோ பாறையின் பின்புறமாக வந்து என்னைச் சுற்றியிருந்த கட்டுகளை அவிழ்த்தனர். முழுமையாக கட்டுகள் அவிழ்ந்து, எழுந்த நேரத்தில் என் முன் தீவின் தலைவன் நின்றான். கோழியைப் போல வெடவெடத்துப் போனேன். “தலைவரே, மன்னித்துக் கொள்ளுங்கள்” என்று அவனின் காலில் விழப் போனேன். அதற்குள்,”நானும் உன்னைப் போல ஒரே தலையுடையவன்தான். இந்தத் தீவுக்குள் தெரியாமல் வந்து சிக்கி, எப்படியோ இவர்களை ஏமாற்றி தலைவனாகிவிட்டேன். இவர்கள் யாருக்கும் நான் ஒற்றைத் தலையன் என்பது தெரியாது. உனக்கு ஒரு வாய்ப்புத் தருகிறேன். கடல் வழியே தப்பி ஓடிவிடு. என்னைக் காட்டிக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால், அது நடக்காது. இது என்னுடைய சொர்க்கம். என்னை மீறி இங்கு காற்றும் அசையாது. தப்பிச் செல்கிறாயா? தலையை இழக்கிறாயா? உன் வழியே நீயே முடிவு செய்து கொள்” என்றான் தலைவன்.

கடலுக்குச் செல்வதற்கான வழியை மட்டும் அவனிடம் கேட்டேன்.

கதவு

வாசல் கதவு எப்படி வெளிப்புறமாகப் பூட்டிக் கிடக்கிறது என்று காவல்துறை செய்திகளைச் சேகரிக்கும் மூத்த பத்திரிகையாளர் லியோவுக்குத் திகைப்பாகவும், பதற்றமாகவும் இருந்தது. இரவு தூங்கப் போகும்போது அவர்தான் கதவின் உள்பக்கத் தாழ்ப்பாளை அழுத்திச் சாத்திவிட்டு வந்து படுத்தார். காலை ஆறரை மணிக்கு எழுந்து, கண்ணை மூடியபடியே வந்து, கதவைத் திறந்து சூரியனைப் பார்த்து கண் விழிப்பது அவருக்குள்ள பழக்கம். இந்தப் பழக்கத்துக்காகவே சுற்றிலும் வீடுகள் இல்லாத, காட்டு வாசனை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வரும் மலர்வனம் பகுதிக்கு சிறிய அளவில் வீடு கட்டி வந்தார். கடந்த மூன்று ஆண்டுகளில் மழைநாள் தவிர்த்து, மற்ற எல்லா நாள்களிலும் அவரின் முதல் விழிப்பும், முதல் குளிப்பும் சூரியனிலேயே இருந்து வந்துள்ளது. இப்போதும் அதற்காகத்தான் எழுந்து வந்து கதவைத் திறந்தார். உடல் வலுவைக் கைகளில் திரட்டி இழுத்துப் பார்த்தார். தூங்கும் மனைவியையும், மகன்களையும் பயமுறுத்திவிடக் கூடாது என்பதற்காகவே முடிந்தளவு பொறுமையோடு கையாண்டு பார்த்தார். கதவை அசைக்கக்கூட முடியவில்லை.

வெளியில் நின்று யாரோடு விளையாடுகிறார்கள் என, ” கதவை ஒழுங்கா திறங்க. வெளியில் வந்தேன், நடக்குறதே வேறு. எதில் விளையாடுறதுனு இல்ல” என்று இரண்டொரு தடவைக் கூறியவர் பொறுமை இழந்து கத்தியபடியே ஆவேசமாக இழுக்கத் தொடங்கினார். சத்தம் கேட்டு, மகன்களோடு எழுந்து வந்த மனைவியும் கதவை இழுத்துப் பார்த்தாள். பயன் எதுவும் இல்லை என்றதும் ஜன்னலைத் திறந்து வாசல் பக்கம் பார்த்தவள் அதிர்ந்து, அலறத் தொடங்கினாள். அவளைப் பார்த்து மகன்களும் கத்தத் தொடங்க, லியோவும் நடுக்கத்தோடு ஜன்னல் வழியே பார்த்தார். வீட்டையே மறைக்கும் அளவுக்கு செங்கற்கள் வரிசையாக அடுக்கி, கதவு பூட்டப்பட்டிருந்தது. அந்தக் காட்சி விளங்கிக் கொள்ள முடியாததாக இருந்தது. எல்லோரும் செங்கல் குவியலுக்குள் சிக்கி இறந்துபோய் கிடக்கிறோமோ, நினைவுகள்தாம் வீட்டை சுற்றி வருகின்றனவோ என்றுகூட குழம்பினார்.

சிறிது நேர தெளிவுக்குப் பிறகு நண்பரான போலீஸ் கமிஷனர் ஜேக்கப்பைக் கைப்பேசியில் அழைத்துச் சொல்ல முடிவு செய்தார். பிறகு, அவ்வளவுதூரம் விஷயத்தைப் பெரிதுபடுத்த வேண்டாம் என இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரனை கைப்பேசியில் அழைத்துச் சொன்னார். லியோ சொன்ன விஷயங்கள் இன்ஸ்பெக்டருக்குப் புரிந்ததுபோலத் தெரியவில்லை. எனினும், அரை மணி நேரத்துக்குள் காவலர்களோடு ரவிச்சந்திரன் வந்தார். ஒன்றரை மணி நேரத்துக்குள் வீட்டு வாசலில் இருந்த செங்கல்லை எல்லாம் அப்புறப்படுத்தி அவர்களை விடுவித்தார். லியோவுக்கு அப்போதுதான் உயிரே வந்ததுபோல இருந்தது. எனினும், பயத்தைக் காட்டிக் கொள்ளாமல் இயல்பாகவே செயல்பட்டார். ரவிச்சந்திரன் நடந்தவற்றையெல்லாம் எழுதி, யாரார் மீதெல்லாம் சந்தேகம் இருக்கிறது என்பதைப் புகாராகத் தருமாறு கேட்டுக் கொண்டிருக்கும்போதே, லியோவின் கைப்பேசியில் போலீஸ் கமிஷனர் வந்தார். நடந்த விவரங்களை எல்லாம் கேட்டுவிட்டு, இன்ஸ்பெக்டரிடம் கைப்பேசியைக் கொடுக்கச் சொல்லி “என்னய்யா ஏரியாவ வைச்சிருக்க” என்று தொடங்கி சகிக்க முடியாத வார்த்தைகளால் திட்டிவிட்டு வைத்தார்.

இன்ஸ்பெக்டரைப் பார்க்க லியோவுக்குச் சங்கடமாகவே இருந்தது. அவருக்கு ஆறுதல் கூறியதுடன், “இந்த விஷயத்தைப் பெரிதுபடுத்த வேண்டாம். கமிஷனர்கிட்ட பேசிக்கிறேன்” என்று அவரை அனுப்பி வைக்கும்போது பத்திரிகை முதலாளி அழைத்து விவரங்களைக் கேட்டார். சின்ன விஷயம்தான் என்று சொல்லி வைப்பதற்குள் அடுத்தடுத்த அழைப்புகள். காட்டுத்தீ போல செய்தி பரவ,வேலைக்குக்கூட போகாமல் எல்லோருக்கும் பதில் சொன்ன களைப்பிலே இரவு தூங்கிப் போனார்.

விடியல் காலை ஆறரை மணிக்கு எழுந்து கண்ணை மூடியபடியே வந்து கதவைத் திறந்தார். எல்லாம் முயற்சியும் தோல்வியில் முடிய ஜன்னலைத் திறந்து பார்த்தபோது, ஜல்லிக்குவியலால் வீடு மறைக்கப்பட்டிருந்தது. மனைவியின் அதே அலறல். அதே அழுகை. இன்ஸ்பெக்டர் வந்தார். ஜல்லிகளை அப்புறப்படுத்தினார். புகார் கேட்டார். எந்தெந்த ரௌடிகளுக்கு எதிராக இதுவரை செய்திகள் வெளியிட்டாரோ அந்த ரௌடிகளின் பெயரை எல்லாம் லியோ எழுதிக் கொடுத்தார். புகார் கொடுத்த இரண்டு மணி நேரத்துக்குள் எல்லா ரௌடிகளிடம் விசாரித்ததாகவும், யாரும் ஒத்துக் கொள்ளவில்லை என்றும், வேறு எந்த ரௌடியின் பெயரையாவது மறந்துவிட்டீர்களா என்று கைப்பேசியில் அழைத்து இன்ஸ்பெக்டர் கேட்டார். யோசித்துச் சொல்கிறேன் என கூறி வைத்ததுதான் தாமதம், அடுக்கடுக்காக கைப்பேசி அழைப்புகள். “எங்களுக்கு எதிராக செய்தி எழுதியபோதே உன் தலையை எடுத்திருக்கணும்”. “புகாரா கொடுக்குற. வீட்டோட சேர்த்துக் கொளுத்திடுவேன்.”. “உன் பொண்டாட்டி புடவையை உருவுறானா இல்லையானு பாரு”. “உன் புள்ளைங்க தலை உன் வீட்டு வாசல்ல கிடக்கும் பாரு” என்று ஒவ்வொரு ரௌடியாக அழைத்து மிரட்ட, உடலில் உள்ள இரத்தமெல்லாம் ஒரே நொடியில் வெளியேறியது போன்ற சோர்வுடனும் நடுக்கத்துடனும் வெளியில் செல்லாமல் பகல் முழுவதும் ஜன்னல் ஓரம் மர நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். மனைவியும், மகன்களும் தூங்கிப் போக இரவும் அந்த இடத்தைவிட்டு அவர் நகரவில்லை.

அதிகாலை மூன்று மணியளவில் கண்கள் சொக்கி ஒன்றரை மணி நேரம் தூங்கி இருப்பார். எழுந்து பார்த்தால், வீட்டை மறைக்கும் சாணிக் குவியல். இந்த முறை லியோவும் வாய்விட்டு அலறினார். இன்ஸ்பெக்டரை அழுதபடியே அழைத்தார். எல்லாவற்றையும் அப்புறப்படுத்திய பிறகும் அழுகையைக் குறைக்க முடியவில்லை. இன்ஸ்பெக்டரின் கைகளைப் பிடித்துக் கொண்டு. “என் குடும்பத்தை எப்படியாவது காப்பாற்றுங்கள். இந்த இடத்தைவிட்டே போய்விடுகிறேன்” என்று கதறினார். “பயப்படாதீங்க. ஒண்ணுமில்லை பார்த்துக்கலாம்” என்று பத்து நிமிடங்களுக்கு மேலாக ஆறுதல் சொன்ன இன்ஸ்பெக்டர் கடைசியாக, “ஸார், நான் சொன்னேன்னு சொல்லிக்காதீங்க. கமிஷனரை நேரில் பார்த்துப் பேசுங்க.எல்லாம் சரியாகப் போய்விடும்” என்று கூறிவிட்டு திரும்பிப் பார்க்காமல் சென்றார்.
சூரியனில் குளிப்பதற்கான கதவு மறுநாள் திறந்தது.

•••

ரோஷான் ஏ.ஜிப்ரி கவிதைகள். ( இலங்கை )

பயணம்.

பயணத்தை துவக்கிவைத்த 
சில நாளில்
ஒரு நிறுத்தத்தில்
அப்பா இறங்கிக்கொண்டார்
அது எங்களுக்கு
பெரும் கொடையை விட்டுச்சென்ற
ஒரு மழை நாளாயிருந்தது
அம்மாவுக்கு பிள்ளைப்பாசம்
கூடவே இருந்துகொண்டாள்
நாங்கள் ஏறியிருந்த 
நாள்வண்டி 
24,48,72 என்று மிதவேகத்தில்
பல..365 மைல்கல்களை
பசி பிரதேசங்களின்
நெருக்குவார தெருக்களை
பல மலைத்தொடர்களை
கொண்டை ஊசி வளைவுகளைத்தாண்டி
ஓடிக்கொண்டிருந்தது…….,
பின்னொருநாள் அசதியில்
இனி என்னை எழுப்பவேண்டாமென
அம்மாவும்
நீள் துயில்கொண்டாள்
அக்கணமே
எனது பயணத்தை முடிவாக்க யோசித்தும்
முடியாமல் போனது
தனக்கும் ஏற்பட்ட பிள்ளைப்பாசம்!
எனக்கான நாளையை
நிச்சயமற்றதாக்கி
இன்றை இழுத்துக்கொண்டு
ஒரு மலையுச்சியைதாண்டிய பள்ளத்தில்
ஓடிக்கொண்டிருக்கிறது
மீண்டும் நாள்வண்டி…
இதனால் என் பிள்ளைகளிடம்
சொல்லவருவது யாதெனில்;
நான் தூங்கினால் எழுப்பிவிடாதீர்கள்
பயணித்துக் கொண்டிருக்கிறேன்
நிரந்தரமாக!

எஞ்சிவிடும் கேள்விகள்…
இன்றும் வழமைபோன்று
அதிகாலையை கடக்கிறேன்
நேற்றைவிட எரிச்சலூட்டும்படி
நெரிசலாயிருந்தது சாலை
மையவாடியை கடக்கையில்
என்னுடன் ஓடிக்கொண்டிருந்தவன்
நினைவுகளுக்குள் ஒரு பூனைபோல்
சமாதியிலிருந்தெளுந்து
குறுக்கறுத்து செல்கிறான் இருந்தும்
அற்பமாயிருக்கும் வாழ்க்கை
அனைத்தையும் மறக்கடித்து
என்னை காவிக்கொள்கிறது
நம்பிக்கைமிகு எழுச்சி குடிகொள்ள
மிருதுவான இதம்வழிய
புலர்வென்பது
பரிசுத்தம்
குடியிருக்கும் வீடாகிறது

இயற்கையாகவே வந்தடையும்
இச்சிறப்புமிகு வெகுமதிகள்
காலம் தினமும்
பகிர்ந்தளிக்கும் கொடையாகி
பங்கீடு சமமாயிருப்பினும்
வாங்கிக்கொள்ள வக்கற்று
பலர் தூங்கிவிடுகிறோம்

வாழ்வில் நான்
ஒரு குவளை நீரையேனும்
கொட்டிவிடாத இடத்திலிருந்து
முற்றத்துமல்லி புன்னகைத்தபடி
ஒரு பூங்கொத்துடன்
வாசமாய் வரவேற்கின்றது

அந்த குயில் தன்மொழியை
ஒரு பாடலாகத் தொகுத்து
எத்தனை ரசனையுடன் வெளியிடுகிறது
சில்லென வருடியபடி
பொங்கும் பும்புனலில்
மிதக்கும் இந்த
தென்றல் யாரின் தேர்வு?

அனைத்தையும் மனக்கிண்ணத்தில் ஊற்றி
தேனீர்கோப்பையாய்
சுவைக்கத்தொடங்குகிறேன்
வடிகட்டியதாய்
இளம்சூட்டுடன்
பானம் உள்ளிறங்கினாலும்
கோப்பையில் தங்கிவிடும் ஈறுபோல்
எத்தனைபெரிய மடத்தனங்களை
முன்னால் வைத்திருக்கிறோம் என
பணப்பெயாய் அலையும்
என்னிடம் சில கேள்விகள்
எஞ்சிவிடுகின்றன..!
என்னுடைய இரவு!
மாத முடிவில்
கிடைக்கவேண்டிய
‘சம்பளப்படி’ பசியால்
அடுத்தமாதத்தில்
அரைவாசியை
தின்றுவிடுகிறது
முன்பெல்லாம் இங்கு
காணக்கிடைக்காத பசி
வியர்வை தின்று வளரும்
ஒருகொடிபோல் இப்போது
எல்லா இடத்திலும்
பற்றிப் படர்கிறது
மிக கடுமையான வெப்பத்தில்
பசியுடன்
வாகனநெரிசலில் புதையுண்டு
பகல் முழுவதும் அலைந்து
இப்போது
இரவை வந்தடைந்து விட்டேன்
பால் மா முடிந்ததாக சொன்னவள்
பிள்ளையை எப்படி உறங்க வைத்திருப்பாள்
என்ற கவலையை
போர்த்திக்கொள்கிறது இருள்
என் படுக்கையறைக்கு அருகே
கண்களை மூடிக்கொண்டு
விழித்திருக்கிறது இரவு!
குழந்தை பொம்மை!
போனமுறைபோல்
பிள்ளைகளுக்கான
விளையாட்டுப் பொருட்களுடன்
திரும்பிவிடுவேனென
இம்முறை போன தினக்கூலி
வீடு திரும்பாததால்
தெருவுக்கு வந்தது
கூலி இல்லாத தினம்
அப்போதிருந்தே
பொய்த்த வானம்
இன்று
பொழிந்துகொண்டிருந்தது
அவளது கண்களில்…..,
ஊரின் கழிவிரக்கத்தில்
உதிக்கும் வைகறை 
அன்றாட யாசகத்தில்
சமைபடுகிறது இப்பொழுது
இருந்தும்
சாலை கடக்கையில்
பொம்மைக்கடைக்கு இழுத்துச்செல்லும்
குழந்தையை அழுதபடி பார்க்கும்
தாய்க்கு
எண்ணத் தோன்றுகிறது
தானும் ஒரு பொம்மையாய்
பிறந்திருக்கலாமென்று!

ஒரு கூடைத்துயர்.
கிள்ளிப்போட்ட
தேயிலைத் துளிர்
கூடைக்குள் வாடையில்
பிள்ளையின் பசிவயிறு
வீடுதிரும்ப
கனக்கிறது அவள் மார்பு!
****

கோப் நகருக்கு ஒரு நடைப்பயணம் A Walk to Kobe ஜப்பானியம் : ஹாருகி முரகாமி Haruki Murakami – ஆங்கிலம் : பிலிப் காப்ரியேல் Philip Gabriel – தமிழில் – . ச.ஆறுமுகம்.

arumuga pillai1

கோப் நகரில் நிகழ்ந்த நிலநடுக்கப் பேரழிவுக்குப் பின் இரண்டு ஆண்டுகள் கழிந்து, மே, 1997 இல் அந்த நகரின் மையத்திலிருக்கும் சான்னோமியாவுக்கு நிஷினோமியாவிலிருந்து ஓய்வான ஒரு தனிமை நடையாகச் செல்லும் எண்ணம் எனக்குள் திடீரென எழுந்தது. அந்த நேரத்தில் நான் வேலைக்காக க்யோட்டோவிலும் அப்படியே தொடர்ந்து நிஷினோமியாவிலும் தங்கவேண்டியதாயிருந்தது. வரைபடத்தில் அங்கிருந்து மேற்குத்திசையில் கோப் நகர், சுமார் பதினைந்து கி.மீ தூரமெனத் தெரிந்தது. அது ஒன்றும் மிக எளிதில் கடக்கக்கூடிய கல்லெறி தூரமாக இல்லையெனினும் துன்புறுத்தக்கூடிய அளவுக்கு நெடுந்தூரமும் இல்லை என்பது மட்டுமின்றி நானும் ஒரு தன்னம்பிக்கைமிக்க நடைப்பயிற்சியாளராக இருந்தேன்.

நான் க்யோட்டோவில் தான் பிறந்தேனென்றாலும் மிகக் குறுகிய காலத்திற்குள்ளாகவே என் குடும்பம் நிஷிமோனியாவின் ஊரகப் பகுதியான ஷூகுகாவாவுக்கு இடம்பெயர்ந்திருந்தது. அங்கிருந்தும் அதிகக் காலமாகும் முன்னரே கோப் நகரை ஒட்டியுள்ள ஆஷியாவுக்கு நகர்ந்தோம். அங்குதான் எனது பதின்வயதுப் பருவத்தின் பெரும்பகுதியும் கழிந்தது.

எனது உயர்நிலைப்பள்ளி, நகருக்கு மேலாக இருந்த குன்றுப்பகுதியிலிருந்ததால், நல்ல ஒரு மகிழ்ச்சியாக நேரத்தைக் கழிக்க நினைக்கும்போது, இயல்பாகவே நான் கோப் நகரின் மையப்பகுதி அதிலும் குறிப்பாக சான்னோமியா வட்டத்திற்கே வரவேண்டியிருந்தது. ஒசாகா மற்றும் கோப் நகருக்கு இடையிலான பகுதியைக் குறிப்பிடுகிற ஒரு ஹன்சின்-கான் பையனாகவே மாறிப் போயிருந்தேன். அந்தக் காலத்தில் என்றில்லை, இப்போதுங்கூடத்தான், இளைஞர்கள் வளர்வதற்குச் சிறப்பான ஒரு இடமாக, அதுவே இருக்கிறது. அமைதியான, எவ்விதப் பரபரப்புமற்ற ஒரு விரியத் திறந்த இளைப்பாறுகை உணர்வோடிருந்த அது பெருங்கடல், மலை மற்றும் அருகிலிருந்த ஒரு பெரிய நகரம் ஆகியவற்றாலும் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தது. நான், இசைநிகழ்ச்சிகளுக்குச் செல்வதையும் பழைய புத்தகக்கடைகளில் மலிவான காகித அட்டைப் பதிப்புகளைத் தேடிப்பிடிப்பதிலும், ஜாஸ் இசைச் சிற்றகங்களில் நேரத்தைச் செலவிடுவதையும், ஆர்ட் தியேட்டர் கில்டு புது அலைப் படங்களைப் பார்த்து மகிழ்வதையும் விரும்பிச்செய்தேன். அந்த நேரத்தில் எனக்கு மிகமிகப் பிடித்தமான ஆடை எது? விஏஎன் VAN ஜாக்கெட் என்ற உயர் வட்டக் கழுத்து, முழுக்கைச் சட்டை தான்.
ஆனால், அதன்பின், நான் கல்லூரிப் படிப்புக்காக டோக்கியோவுக்குச் செல்ல நேர்ந்து, திருமணமாகி, வேலைசெய்யவும் தொடங்கியதோடு எப்போதாவது ஒசாகாவுக்கும் கோப் நகருக்கும் இடைப்பட்ட அந்த நீட்டு நிலப்பகுதிக்குப் போய்வந்துகொண்டுதானிருந்தேன். நான் அங்கே சென்றாகவேண்டிய அவசியமும் இருந்ததுதான்; ஆனால் அங்கே செய்யவேண்டியிருந்த வேலையைச் செய்து முடித்ததுமே, அதிவேக புல்லட் தொடரிக்குள் தாவிப் புகுந்து நேராக டோக்கியோ நோக்கித் தலைநீட்டிவிடுவேன். அப்போது எனது வாழ்க்கை பரபரப்பாக இருந்ததோடு, வெளிநாட்டிலும் நெடுநாட்கள் தங்கியிருக்க நேர்ந்தது. அதில் எனக்கேயான சொந்தக் காரணங்களும் பலவாக இருந்தனதாம். சிலர் அவர்களது சொந்த ஊருக்குத் தொடர்ச்சியாகக் காந்தம் போல் ஈர்க்கப்பட்டுப் போவதும் வருவதுமாக இருக்கும் போது, வேறுசிலரோ ஒருபோதும் திரும்பிச் செல்லவே முடியாதென்று நினைக்கலாம். அநேக விஷயங்களிலும் விதிதான் இரண்டு குழுக்களையும் பிரிப்பது போலத் தோன்றினாலும் அந்த நிலத்தின் மீதான உங்கள் உணர்வு எவ்வளவு வலுவான பிடிப்புள்ளதாக இருந்தாலும் அதில் நீங்கள் எதுவுமே செய்துவிட முடியாது. விரும்பியோ விரும்பாமலோ நான் அந்த இரண்டாவது குழுவைச் சேர்ந்தவனாகவே எனக்குத் தோன்றியது.

என்னுடைய பெற்றோர் ஆஷியாவில் பல ஆண்டுகளாக வசித்தவர்கள்; ஆனால், 1995 ஜனவரியில் ஹான்சின் நிலநடுக்கம் தாக்கியதில் அவர்கள் வசித்த வீடு மேற்கொண்டு தங்குவதற்கியலாதபடியாகிவிட்டதால், அவர்கள் உடனடியாக டோக்கியோவுக்குக் குடிபெயர்ந்தனர். அப்படியாக, நான் எனக்குள்ளாகவே சேர்த்து வைத்திருந்த (எனது விலைமதிப்புமிக்க பொக்கிஷங்கள்) நினைவுகளெல்லாம் ஒருபுறமிருக்க, எனக்கும் ஹான்சின் பகுதிக்கும் உண்மையான எந்தத் தொடர்பும் இல்லாமலாயிற்று. வெட்டொன்று துண்டிரண்டாகப் பேசினால், அது, மேற்கொண்டும் என்னுடைய சொந்த ஊராக இல்லைதான். ஆனால், அந்த இழப்பின் ஆழத்தினை எனது நினைவுமையம் கழன்று விலகி, மங்கி மறைவதாக உணர்ந்தாலும், எனக்குள் அது கிறீச்சிடுவதை என் செவிகளால் கேட்கிறேன். உலக்கையால் இடிபடுவது போலொரு வலி.

அதுவேதான், அங்கே நான் கண்டுகொள்ள விரும்பியதைக் காண்பதற்கான அக்கறையும் விழிப்புமான தேடலுக்காகவே கால் நடையாக நடந்து செல்லவேண்டுமென என்னைத் தூண்டிய காரணமாக இருக்கலாம். எனது சொந்த ஊருடன் எல்லாத் தொடர்புகளையும் முழுவதுமாகவே இழந்துவிட்டுள்ள எனக்கு, அது இப்போது என்னவாகத் தெரிகிறதென்பதைத் தெரிந்துகொள்ள விரும்பினேனாகவுமிருக்கலாம். எனது நிழல் அல்லது நிழலின் நிழலுருவத்தில் எவ்வளவு பகுதியினை அங்கு நான் கண்டுகொள்ளப் போகிறேன்?

நான் வளர்ந்த அந்த நகரில் ஹான்சின் நிலநடுக்கத்தின் தாக்கம் எந்த அளவுக்கு இருந்ததென்பதை என் கண்களால் உணர விரும்பினேன். நிலநடுக்கத்திற்குப் பின் கோப் நகருக்கு நான் பலமுறை சென்றபோது, அழிபாட்டு மிகுதியினைக் கண்டு அதிர்ந்துபோயிருந்தேன். ஆனால், இப்போது, ஒரு இரண்டாண்டுகளுக்குப் பிறகு, நகரம் ஒருவழியாக எழுந்து, தன்னை நிலைநிறுத்திக்கொண்ட வேளையில், என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பதை – இந்த உச்சபட்ச வன்முறை நகரத்திடமிருந்து எவ்வெவற்றைத் திருடிச் சென்றிருக்கிறது, அதன் சுவடுகளாக எது எதை விட்டுச் சென்றிருக்கிறதென்பதை – என் கண்ணால் காண விரும்பினேன். இப்போதிருக்கிற நானாகிய எனக்கும் அந்த நகருக்கும் ஏதோ ஒரு சிறிதளவு தொடர்பாவது இருந்தேயாகவேண்டுமென நான் நம்பினேன்.

நடப்பதற்கேயான ரப்பர் மெத்தையிட்ட காலணிக்குள் பாதம் புதைத்து, தோளில் முதுகுப்பை ஒன்றும் சிறிய ஒளிப்படக்கருவி ஒன்றுமாக நிஷினோமியா தொடரி நிலையத்தில் இறங்கி, மேற்குநோக்கி ஓய்வாக என் நடையினைத் தொடங்கினேன். நல்ல வெயிலும் கண்கள் கூசுமளவுக்கு ஒளியாகவுமிருந்ததால் நான் குளிர் கண்ணாடி அணிந்திருந்தேன். நிலையத்திலிருந்து வெளியேறுவதற்கான தெற்கு வாயிலுக்கு அருகிலுள்ள அங்காடிப்பகுதிக்குத் தான் முதலில் வந்தடைந்தேன். தொடக்கப்பள்ளியில் படிக்கும்போது, எனது மிதிவண்டியில் பொருட்கள் வாங்குவதற்காக அங்கு வருவது வழக்கமாயிருந்தது. நகர நூலகம் அருகிலேயே இருக்கவே, நேரம் கிடைத்தபோதெல்லாம் நான் அங்குசென்று கையில் கிடைத்த, வயதுவந்த பருவத்தினருக்கான புத்தகங்கள் முழுவதையும் கரைத்துக் குடித்தேன். அங்கே, அருகிலேயே இருந்த ஒரு கைவினைப் பொருட்கள் கடையிலிருந்துதான் நெகிழி மாதிரிகளை வாங்கிக் குவித்திருந்தேன். ஆக, அந்த இடம் எனக்குள் மாபெரும் நினைவுப் பேரலைகளைத் தோற்றுவிப்பதாயிருந்தது.

நான் இங்கே வந்து நீண்ட காலமாகிவிட்டிருந்தது. மேலும் அங்காடிப்பகுதி முன்பிருந்தது தெரியாத அளவுக்கு நிறையவே மாறிப்போயிருந்தது. அந்த மாற்றத்தில் காலத்தினால் ஏற்பட்ட சாதாரண மாற்றம் எவ்வளவென்றும் நிலநடுக்கப் பேரழிவினால் ஏற்பட்டது எவ்வளவென்றும் உண்மையாகவே என்னால் சொல்லமுடியவில்லை. ஆனாலும், நிலநடுக்கம் விட்டுச் சென்ற அழிவின் வடுக்கள் தெளிவாகவே தெரிந்தன. கட்டிடங்கள் நொறுங்கிவிழுந்த இடங்களில், இப்போது ஏகப்பட்ட பற்கள் காணாமற்போன குழிகள் போல அங்கங்கே மனைகள் காலியாகக் கிடக்க, அவற்றுக்கிடையில் ஒரு தொடர்பினை உருவாக்குவதுபோல தொழிற்கூடத் தயாரிப்புகளான, தற்காலிக கட்டிடங்கள் அமைந்திருந்தன. சிமென்ட் தெருக்கள் முழுவதும் அதல பாதாள வெடிப்புகளாகக் கிடந்தன. வேனிற்காலப் புல், பூண்டுகள் காலி நிலங்களைச் சுற்றி வளைத்துப் படர்ந்து வளர்ந்திருந்தன. பயங்கரப் பேரழிவுக்கான தடயங்கள் சுற்றிலும் எல்லாவிடத்திலுமாகப் பரந்து கிடக்க, அப்பகுதி முழுவதும் தொல்லியல் கால எச்சங்கள் போலத் தெரிந்தது. உலகிற்கு அதிகமாகக் காட்டப்பட்டு, நிலநடுக்கத்திற்குப் பின் வேகவேகமாக மறுசீரமைக்கப்பட்ட கோப் நகரத்தின் மையப்பகுதியோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, காலி இடங்கள் அவற்றின் மவுனம் நிறைந்த ஆழக்குழிகளுடன் எனக்குள் மிகப் பெரிய சோகத்தையும் மனச்சோர்வினையும் தோற்றுவித்தன. இது, நிஷிமோனியா அங்காடிப் பகுதிக்கு மட்டுமேயான உண்மை நிலை என்பதில்லை; கோப் நகரினைச் சுற்றி இது போல அநேகப் பகுதிகள் இது மாதிரியான காயங்கள் மற்றும் வடுக்களுடன் இருக்கலாம்; ஆனால் அவையனைத்துமே அநேகமாக மறக்கப்பட்டுவிட்டன.
அங்காடிப்பகுதியைத் தாண்டிப் பிரதானத் தெருவின் மறுபக்கமாக எபிசு கோவில் உள்ளது. வளாகத்துக்குள்ளேயே அடர்ந்த காட்டினையுடைய அது, ஒரு மிகப்பெரிய கோவில். நான் சிறு பையனாக இருந்தபோது என் நண்பர்களுடன் விரும்பி விளையாடிய அந்த இடத்தை இப்போது தெரிகிற இடிபாடுகளுடன் காணும்போது தாங்கமுடியாத வலி ஏற்படுகிறது. ஹான்சின் நெடுஞ்சாலையின் பெருங்கல் விளக்குத் தொடர் வரிசையில் பெரும்பாலான கம்பங்களும் அவற்றின் தலைப்பகுதியான விளக்குகளை இழந்துவிட்டன. அவற்றின் தலைகள் கூரியவாளால் வெட்டிச் சாய்க்கப்பட்டது போல் தரையில் சிதறிக்கிடந்தன. தலையற்ற கம்பங்கள், ஒரு கனவின் மிச்சம் மீதி போல, எவ்விதப் பயனும் நோக்கமுமற்ற கற்சிலைகளின் வரிசையாக, நீண்ட அமைதியில் உறைந்துபோய் நிற்கின்றன.

நான் சிறுவனாக இருந்தபோது ஷ்ரிம்ப் இறால்கள் பிடிக்கிற (அது ஒரு எளிய தொழில்நுட்பம்: காலிப்புட்டிக்குள் இரையாக நூடுல் மாவினை வைத்து, புட்டியின் கழுத்தில் ஒரு நூல்கயிற்றினைக் கட்டித் தண்ணீருக்குள் அமிழ்த்தும் போது இறால்கள் இரைக்காக புட்டிக்குள் வரும். அதன்பின், நான் புட்டியை இழுத்து எடுத்துக்கொள்வேன்) குளத்தின் குறுக்காக இருந்த கற்பாலம் இடிந்து அதன் இடிபாடுகள் அப்படிக்கப்படியே கிடந்தன. குளத்து நீர் கறுப்படைந்து, சேறாகிக்கிடக்க, காய்ந்த பாறைகளின் மீது குஞ்சு குளுவான் முதல் வயது முதிர்ந்தன வரையிலுமான பல்தரப்பட்ட ஆமைகள் கால்களைப் பரப்பியவாறே வெயில் காய்ந்துகொண்டிருந்தன. அவற்றின் மூளைகளுக்குள் நிச்சயமாக, எந்தச் சிந்தனையுமிருந்திருக்காதென்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. பயங்கரப் பேரழிவுக்கான தடயங்கள் சுற்றிலும் எல்லாவிடத்திலுமாகப் பரந்து கிடக்க, அப்பகுதி முழுவதும் தொல்லியல் கால எச்சங்கள் போலத் தோன்றியது. அந்த அடர் காடுகள் மட்டும் தான் சிறுவயதிலிருந்தே என் நினைவிலிருந்தபடியாக, அப்படியே இருண்டு எந்த மாறுதலுமின்றிக் காலத்தை வென்று நின்றன.

கோவில் மைதானத்தில் இளவேனிற்கால வெயிலில் அமர்ந்து சுற்றுப்புறத்தை மீண்டுமாக நாலாபுறமும் சுற்றி நோக்கி என் கண்ணில் படுவனவற்றோடு உடன்பட்டுச் சிந்திக்க முயற்சித்துக்கொண்டிருந்தேன். காட்சிப்பரப்பினை எவ்வளவு இயற்கையாக உள்வாங்கி அதனை மனத்தாலும் நினைவாலும் ஒப்புக்கொள்ள இயலுமோ அந்த அளவுக்கு உள்வாங்கிக் கொண்டிருந்தேன். அந்தக்காலத்தில் நான் எப்படியிருந்தேனென நினைவுகொள்ள முயற்சித்துக்கொண்டிருந்தேன். நீங்கள் நினைப்பது போலவே தான் இவையெல்லாம் நீண்டநேரமாக நிகழ்ந்துகொண்டிருந்தன.

2

நிஷிமோனியாவிலிருந்து சுகுகாவாவுக்கு மெல்ல நகர்ந்தேன். அப்போது மதியமாகியிருக்கவில்லையென்றாலும் சுறுசுறுப்பான நடையினால் எனக்கு வியர்க்கத் தொடங்கும் அளவுக்கு வெயில் கடுமையாகவே இருந்தது. நான் எங்கிருக்கிறேனேனத் தெரிந்துகொள்ள எனக்கு வரைபடமெதுவும் தேவைப்படவில்லைதான்; ஆனால், தனித்தனியான தெருக்களை என்னால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. இந்தத் தெருக்களின் வழியாக நூற்றுக்கணக்கான முறை போயும் வந்துமிருப்பேன். ஆனாலும் இப்போது எனக்கு எதுவுமே தெரியவில்லை. அவற்றை எதனால் என்னால் நினைவுகொள்ள இயலவில்லை? அது புரியாத புதிராகத்தானிருந்தது. அறைகலன்கள் அனைத்தும் மாற்றி வைக்கப்பட்ட வீட்டுக்குள் நுழைந்துவிட்டது போல திக்குத்தெரியாத ஒரு குழப்பத்தை உணர்ந்தேன்.

அதன் காரணத்தை நான் விரைவிலேயே புரிந்துகொண்டேன். வழக்கமாகக் காலியாகக் கிடக்கும் மனைகள் காலியாக இல்லாமலும் தற்போது காலியாகக் கிடக்கும் மனைகள் முன்னர் அப்படி இல்லாமலுமாக – ஒளிப்பட அசலும் நகலும் ஒன்றுக்கொன்று இடம் மாற்றிக்கொண்டதால்தான் அப்படி. அநேக நேர்வுகளிலும் முன்னர் காலிமனைகள் தற்போது குடியிருப்புகளாகவும் மற்றவை வீடுகளாக இருந்து நிலநடுக்கத்தால் இடிந்துவிட்டனவுமாக இருந்தன. இந்த முன்னர் மற்றும் பின்னர் பிம்பங்களும் நகரம் எப்படி இருந்ததென எனக்குள்ளிருந்த கற்பனை நினைவுகளுமாகச் சேர்ந்து ஏற்பட்ட ஒரு ஒருங்கிணைந்த விளைவுதான் அது..
சுகுகாவா அருகிலிருந்த நான் வசித்த பழைய வீடு இல்லாமலாகி, அதில் நகர வீடுகளின் வரிசை ஒன்று வந்து அமர்ந்திருந்தது. அதோடு, உயர்நிலைப்பள்ளி அருகிலிருந்த மைதானமும் நிலநடுக்கத்தில் தப்பிப் பிழைத்தவர்கள் கட்டிய தற்காலிக வீடுகளால் நிறைந்திருந்தது. இந்தத் தொழிற்கூடத் தயாரிப்புகளான தற்காலிகத் தங்குமிடங்களில் வசிப்பவர்கள் அவர்களது சலவைத்துணிகள் மற்றும் படுக்கை விரிப்புகளை நானும் எனது நண்பர்களும் வழக்கமாக தளப்பந்து விளையாடிய இடத்தில் தொங்கவிட்டு, அது நெருக்கம் மிகுந்த ஒரு அடைக்கப்பட்ட வெளியாகத் தோற்றமளித்தது. கடந்த காலத்தின் சுவடுகளைக் காண என்னாலான மட்டும் முயற்சித்தும், அநேகமாக எதுவுமே அங்கில்லை. ஆற்றில் ஓடும் நீர் முன்பு போலவே தெளிவும் சுத்தமுமாக இப்போதும் பாய்கிறது; ஆனால், ஆற்றின் இருகரைகளும் கான்கிரீட் கொண்டு அழகுறக் கட்டப்பட்டிருந்த தோற்றம் எனக்குள் வித்தியாசமான ஒரு தனியுணர்வினையே தோற்றுவித்தது.

கடலை நோக்கிச் சிறிது நேரம் நடந்த நான் உள்ளூர் சூஷி (பொங்கல் மாதிரியான ஜப்பானிய அரிசிக் கலவை உணவு) கடை ஒன்றில் போய் நின்றேன். அது ஒரு ஞாயிற்றுக்கிழமை பிற்பகலாக இருக்கவே, அவர்கள் வழக்கம்போல் ஏற்கெனவே பெறப்பட்ட வெளியிடக் கேட்புகளுக்கு உணவு வழங்குவதில் அவசரமும் பரபரப்புமாக இருந்தனர். வெளியிடத்திற்கு வழங்குவதற்காக உணவினை எடுத்துச் சென்ற இளம் உதவியாளன் நெடுநேரமாகத் திரும்பிவரவில்லை. உரிமையாளருக்கோ தொலைபேசி அழைப்புகளுக்குப் பதில் சொல்லவே சரியாக இருந்தது. அது, ஜப்பானில் நீங்கள் எல்லாவிடங்களிலும் காண்கிற மாதிரியான ஒரு காட்சியேதான். பீரை உறிஞ்சி,உறிஞ்சிச் சுவைத்துக்கொண்டும் தொலைக்காட்சியை அரைப்பார்வை பார்த்துக்கொண்டுமாக, நான் கேட்டிருந்த உணவுக்காக, காத்திருந்தேன். ஹையோகோ மாநில ஆளுநர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் யாரோ ஒருவருடன் நிலநடுக்கத்துக்குப் பிறகான மறுகட்டுமானப் பணிகள் எவ்வாறு போய்க்கொண்டிருக்கின்றன என்பது பற்றி உரையாடிக்கொண்டிருந்தார்.

அவர் என்னதான் பேசினாரென்பதைக் குறிப்பாக இப்போது நினைவுக்குக் கொண்டுவர முயற்சிக்கிறேன் ஆனால், அவற்றில் ஒரு வார்த்தையைக்கூட என் வாழ்க்கை முழுவதிலுங்கூட நினைவுக்குக்கொண்டுவரமுடியாது போலிருக்கிறது.
நான் சிறுவனாயிருக்கும்போது ஆற்றின் கரைமீது ஏறியதும், பார்வைக்கு எந்தத் தடையுமில்லாமல் கடல், நேருக்கு நேராக என் கண் முன்பாக விரிந்து கிடக்கும். கோடையில் நான் அங்கே நீச்சலுக்குச் செல்வது வழக்கம். நான் பெருங்கடலினை நேசித்ததோடு நீச்சலையும் நேசித்தேன். நான் மீன் பிடிக்கவும் சென்றிருக்கிறேன் என்பதோடு, என் நாயை நாள்தோறும் அங்கே நடைப்பயிற்சிக்கு அழைத்துச்சென்றுமிருக்கிறேன். சிலநேரங்களில் அங்கே எதுவுமே செய்யாமல் வெறுமனே அமர்ந்திருக்க விரும்புவேன். சிலநேரங்களில் இரவில் வீட்டைவிட்டும், கம்பி நீட்டி நண்பர்களுடன் கடலுக்குச் சென்று, ஒதுங்கிய மரக்கட்டைகளைச் சேகரித்துத் தீ வளர்த்ததும் உண்டு. கடலின் வாசத்தை, அதன் நெடுந்தொலைவு முழக்கத்துடன், அது கொண்டுவருகிற எல்லாவற்றையும் நேசித்தேன்.

ஆனால், இப்போது அங்கே கடல் இல்லை. மலைகளை வெட்டி, அனைத்துக் கல், மண் குப்பைகளையும் லாரிகள் மற்றும் கன்வேயர் பெல்ட் மூலம் கொணர்ந்து கொட்டியிருக்கின்றனர். கடலும் மலையும் அருகருகிலிருக்கவே, இப்பகுதி அப்படியான ஒரு கட்டுமானப்பணிக்கு மிகப் பொருத்தமானது. மலைகள் இருந்த இடத்தில் அழகான சிறுசிறு குடியிருப்புக் குழுமங்கள் முளைத்துள்ளதோடு, உரக்குழிகள் இருந்த இடங்களிலும் அழகழகான குடியிருப்புகள் எழுந்துள்ளன.

இப்போது எனக்கு டோக்கியோ அருகிலுள்ள கனகாவா மாநிலத்தின் கடற்கரை நகரமொன்றில் ஒரு சொந்த வீடு உள்ளது. டோக்கியோவிற்கும் அதற்குமாகப் போய்வந்து பயணித்துக்கொண்டிருக்கிறேன். கெடுவாய்ப்போ அல்லது மிகக் கெடுவாய்ப்போ, நான் சொல்லியே ஆகவேண்டும், இந்த கடல்புர நகரம் எனது சொந்த ஊரினை, எனது சொந்த ஊரினைவிடவும் அதிகமாக நினைக்கச்செய்கிறது. அப்பகுதியில் பசுமை மலைகள் மற்றும் ஒரு அற்புதமான நீச்சல் கடற்கரை அமைந்திருக்கிறது. இவற்றை என்னால் முடிந்த அளவுக்குச் சிறப்பாக என்னுள் பத்திரப்படுத்திவைக்க விரும்புகிறேன். ஏனென்றால் இயற்கை நிலக்காட்சியை ஒரு முறை இழந்துவிட்டால், அது முற்றும் இழந்ததுதான். மனிதர்களால் ஏற்படுத்தப்படும் வன்முறை மட்டும் ஒருமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டாலுங்கூட, மறுபடியும் அதனைச் சரிசெய்துவிடமுடியாது.

ஆற்றின் கரைகளைத் தாண்டி, கோரோய்ன் கடற்கரை விடுதியாக இருந்த பகுதி மேற்கூரையிடப்பட்ட வசதியான ஒரு நீர்நிலை அல்லது குளமாக அமைக்கப்படுவதற்காக மேடுறுத்தப்பட்டிருந்தது. நீர்ப்பலகையாளர்கள் காற்றோடு நீர்ப்பாய்ச்சலில் செல்ல அவர்களால் முடிந்த அளவுக்கு முயன்றுகொண்டிருந்தனர். மேற்கில் ஆஷியா கடற்கரையாக இருந்த பகுதியில் உயரமாக எழுந்த அடுக்ககக் குடியிருப்புக் கட்டிடங்கள் எண்ணற்ற, பெரும்பெரும் ஒற்றைப் பெருங்கற்பாறை வரிசைகளாக நிற்கின்றன. கடற்கரையில் பெரும்பெரும் வேகன் கார்கள் மற்றும் சிறு வேன்களில் வந்திருந்த சில குடும்பங்கள் வெளியிடங்களில் சமைத்துக் கொதிக்கக் கொதிக்கச் சாப்பிடுவதற்கான எரிவாயுக் குடுவை பொருத்திய அடுப்புகளைப் பயன்படுத்திக்கொண்டிருந்தனர். அப்படியான வெளிவட்டாரச் செயல்பாடுகள். அவர்கள் இறைச்சி, மீன் மற்றும் காய்கறிகளை அடுப்பில் வாட்டி வதக்கிக்கொண்டிருக்க, அதிலெழுந்த வெண்புகைத் திரள் பெரும் தீப்பந்தம் ஒன்று வானத்தை நோக்கி எரிவதுபோலப் பெருத்த அமைதியோடு அந்த மகிழ்ச்சியான ஞாயிற்றுக்கிழமை மாலையில் எழுந்துகொண்டிருந்தது.
வானத்தில் ஒரு துளி மேகத்தைக்கூடக் காணமுடியவில்லை. அது ஒரு மிகச் சரியான மே மாதக் காட்சி. காங்கிரீட் கரை மீது உறைந்த சிலையாக, வழக்கமான, உண்மையான கடலை நினைத்துக்கொண்டு எல்லாவற்றையும் கண்ணால், பார்த்துக்கொண்டு, மெதுமெதுவாக, அமைதியாகக் காற்றுப் போகும் ரப்பர் சக்கரம், அதன் உண்மை இருப்புணர்வினை இழந்துகொண்டிருப்பது போல் அமர்ந்திருந்தேன்.
இந்த அமைதியான காட்சியின் மத்தியில் வன்முறையின் சுவடுகள் புலப்படுவதை மறுக்க முடியாது. அப்படித்தான், அது எனக்குத் தோன்றியது. அந்த வன்முறை இயல்புகளின் ஒரு பகுதி நேரடியாக நமது பாதங்களின் கீழ் மறைந்திருக்க, மறுபகுதி நமக்குள்ளாகவே மறைந்துள்ளது. ஒன்று மற்றதன் உருவகமாக இருக்கிறது. அல்லது அவை ஒன்றுக்கொன்று இடம் மாறிக்கொள்பவை எனலாம். அங்கேயே படுத்துத் தூக்கத்தில் ஒரே கனவினைக் காணும் ஓரிணை விலங்குகள்.

சிற்றாறு ஒன்றினைக் குறுக்காகக் கடந்து, ஆஷியாவுக்குள் சென்றேன். எனது பழைய இளநிலை உயர்பள்ளியை, நான் வசித்த வீட்டினை, விரைந்து கடந்து ஆஷியா தொடரி நிலையத்துக்கு வந்தேன். அங்கிருந்த ஒரு சுவரொட்டி விளம்பரம் அன்றைய தினமே பிற்பகல் இரண்டு மணிக்கு ஒசாகாவிலுள்ள கோஷீன் மைதானத்தில் ஹான்சின் புலிகள் மற்றும் யாகல்ட் குருவிகள் தளப்பந்தாட்டக் குழுக்களுக்கிடையே ஒரு விளையாட்டுப் போட்டி நடக்கவிருப்பதாக அறிவித்தது. அதைப் பார்த்ததும் அங்கு போகவேண்டுமென்ற தீவிரம் எனக்குள் ஏற்பட்டது. சட்டெனத் திட்டங்களை மாற்றித் தொடரிக்குள் குதித்தேறிப் புகுந்தேன். போட்டி அப்போதுதான் தொடங்கியிருக்கும், ஆகவே நான் இப்போது அங்கு சென்றால், மூன்றாவது இன்னிங்ஸ் தொடக்கத்துக்குள் அங்கு போய்ச் சேர்ந்துவிடலாமென நான் எண்ணிக்கொண்டேன். நடையினை மறுநாள் மீண்டும் தொடங்கிக்கொள்ளலாம்.

கோஷீன் அரங்கம், நான் சிறுவனாக இருந்தபோதிருந்ததைவிடச் சிறிது மாறியிருந்தது. காலக் கோளாறில் தடுமாறி விழுந்தது போல், அந்தச் சூழலுக்கு நான் வேற்றாள் போன்ற ஒரு வலுவான ஏக்கவுணர்வினை – சொற்றொடரில் ஒரு தலைகீழ் மாற்றமென்பதை, ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும் – உணர்ந்தேன். அங்கே மாறியிருந்த ஒரே விஷயம் புள்ளிகள் நிறைந்த சுங்கடி ஆடையணிந்து, கால்ப்பிஸ் என்னும் மோர்ப் புட்டிகளைத் தோளில் சுமந்து கூவி விற்கும் விற்பனையாளர்கள் இல்லாததும் (அது, மேற்கொண்டு இவ்வுலகத்தில் கால்ப்பிஸ் அருந்துகிறவர்கள் அதிகம் இல்லை எனச் சொல்வதுபோலத் தோற்றமளிக்கிறது) அரங்கத்தின் வெளியே ஸ்கோர்ப் பலகை மின்னியல் அறிவிப்பாகியிருப்பதும் (அதுவும் பகலில் மங்கலாகி சரியாகத் தெரிவது கடினமாக இருக்கிறது)தான். ஆனால் விளையாட்டுக்களத்தின் அழுக்குப்படிந்த தோற்றம் முன்பு போல அப்படியே, புல்லின் பசுமை நிறம் போல மாறாதிருக்க. ஹான்சின் ரசிகர்களும் எப்போதும் போலவே புகழ்பெற்ற தீவிரத்துடனிருந்தனர். நில நடுக்கங்கள், புரட்சிகள், போர் மற்றும் நூற்றாண்டுகள் வரலாம், போகலாம்; ஆனால், ஹான்சின் ரசிகர்கள் நிரந்தரமானவர்கள்.

ஹான்சின் வெற்றி 1 – 0 ஆக இருக்க, விளையாட்டு, கவாஜிரி மற்றும் டகாட்சு இருவருக்கிடையிலான பிட்சர் தனிப்போட்டியாக மாறிப்போனது. ஒற்றை ஓட்ட வித்தியாசமென்பது பரபரப்பான போட்டியாக இருக்குமென நீங்கள் நினைக்கலாம்; ஆனால் அது அப்படியில்லாதது மட்டுமல்ல, எந்தவிதமான கற்பனை நீட்சிக்கும் இடமில்லாததாக இருந்தது. ஏதாவது ஒன்றைச் சொல்வதென்றால், சிறப்பு எதுவுமில்லாத ஒரு போட்டியாக இருந்தது. இன்னும் வெட்டவெளிச்சமாக்கிச் சொல்வதென்றால், பார்ப்பதற்குத் தகுதியில்லாத ஒரு போட்டி, அவ்வளவுதான். அதுவும் அரங்கத்திலிருந்தும் தூரமான இருக்கைகளில் அமர்ந்திருக்கும் எங்களைப் போன்றவர்களுக்குச் சொல்லவேண்டியதேயில்லை. வெயில் கடுமையாகக் கடுமையாக, அகோரமாகத் தாகமெடுத்தது. என்னிடம் குளிர்ந்த பீர்கேன்கள் சில இருக்கவே, நீங்கள் கணிப்பதுபோலவே, அந்தத் திறந்தவெளி இருக்கையிலேயே கண்ணயர்ந்து விட்டேன். விழித்துப் பார்த்தபோது எதுவும் புரியாமல் பரக்கப் பரக்க விழித்தேன். (இதென்ன எழவு? எங்கிருக்கிறேனென்று வியந்துகொண்டேன்) பேரொளி விளக்கு வெளிச்சத்திலேற்பட்ட நிழல்கள் என் திசையை நோக்கி, என்னைத் தொட்டுவிடுவதாக நீண்டிருந்தன.

3

கோப் நகரில் ஒரு சிறிய ஓட்டலில் அறையெடுத்து நுழைந்துகொண்டேன். அங்கு வந்திருந்தவர்கள் பலரும் குழுக்களாக வந்திருந்த இளம் பெண்களாக இருந்தனர். நான் சொல்கிற மாதிரியான ஓட்டல் எதுவென நீங்கள் விளங்கிக்கொண்டிருப்பீர்களென நினைக்கிறேன். மறுநாள் காலை ஆறு மணிக்கு எழுந்து கூட்டமில்லாத நேரத்துத் தொடரியைப் பிடித்து ஆஷியாகவா நிலையத்துக்குச் சென்று அங்கிருந்து எனது சிறுநடைப் பயணத்தை மறுபடியுமாகத் தொடங்கினேன். அதற்கு முந்தின நாள் போலில்லாமல், வானம் மேகங்களால் மூடப்பட்டு, காற்று கொஞ்சம் குளிராக இருந்தது. செய்தித் தாளின் வானிலை அறிக்கை, பிற்பகலில் கண்டிப்பாக மழைபெய்யுமென தன்னம்பிக்கையோடு முன்கணித்திருந்தது. ( அவர்கள் சரியாகத்தான் சொல்லியிருந்தார்கள். மாலையில் நான் முழுவதுமாக நனைந்துவிட்டிருந்தேன்.)

சன்னோமியா தொடரி நிலையத்தில் நான் வாங்கிய காலைச்செய்தித் தாளில் சூமா நியூ டவுன்( மலையைச் செதுக்கி வீழ்த்தி அமைக்கப்பட்ட இதுவும் ஒரு புது இடமென நினைக்கிறேன். நான் அதைப்பற்றிக் கேள்விப்படவேயில்லை) பகுதியில் இரண்டு இளஞ்சிறுமிகள் மீது நடத்தப்பட்டிருந்த வன்முறை குறித்து முழுவிவரம் இருந்தது. அவர்களில் ஒருத்தி இறந்துவிட்டாள். காவல் துறையினர் இதனை எப்போதாவது நடக்கின்ற ஒரு தாக்குதலென்றும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லையென்றும் தெரிவிக்கின்றனர். குழந்தைகளுடன் வசிக்கும் குடியிருப்பாளர்கள் மிகவும் பயந்துபோயிருக்கின்றனர். இது கோப் நகரில் நடந்த பதினொரு வயதுச் சிறுவன் ஜன் ஹேஸ் பயங்கரக் கொலைக்கும் முந்தியது. எந்தவகையில் பார்த்தாலும், தொடக்கப்பள்ளிக் குழந்தைகளைக் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல் மிகப் பயங்கரமானதும் கொடூரமானதும் அர்த்தமற்ற செயலுமாகும். நான் செய்தித்தாள்களை எப்போதாவது தான் படிப்பதால் எனக்கு இந்தத் தாக்குதல் பற்றிக்கூடத் தெரிந்திருக்கவில்லை.

உண்மை விவரம் புரிந்துகொள்வதாக இன்னும் ஆழமாக அந்தச் செய்தி வரைவின் சொற்றொடர்களுக்கிடையிலாகக் கிடைத்த வழக்கம் மீறிய அடிக்குரலினையும் உணர்ந்ததை இப்போது நினைவுகொள்கிறேன். எனக்குள் சட்டென்று தோன்றிய எண்ணத்தில் செய்தித்தாளை மடித்துவைத்தேன். வாரப் பணிநாள் ஒன்றின் மத்தியில் தான் மட்டுமாகச் சுற்றித் திரியும் ஒரு மனிதன் மிகவும் சந்தேகத்திற்குரியவனாகத் தோன்றுதல் இயல்புதானே. புதுப்பிக்கப்பட்ட வன்முறையின் இந்த நிழல் இங்கே என்னை அந்நியனாக நான் உணர்ந்த உணர்வுக்கு அடிக்கோடிடுவதாக இருந்தது. தனக்குத் தொடர்பில்லாத இடத்தில் நுழைந்துவிட்ட வேண்டாத விருந்தாளியாகத்தான் நானிருந்தேன்.

மலையடிவாரத்தில் தண்டவாளப் பாதைக்கு இணையாகச் செல்லும் பாதையில் நடந்த நான் மேற்கில் எனது வழியில் சிறிது பிரிந்து சென்று முப்பது நிமிடங்களில் ஆஷியாவுக்குள் நுழைந்துவிட்டேன். அது, வடக்கிலிருந்து தெற்காக நீளுகின்ற ஒரு அகலம் குறைந்த நகரம். கிழக்காகவோ, மேற்காகவோ நடந்தால் விரைவிலேயே நீங்கள் நகரத்துக்கு வெளியே வந்துவிடுவீர்கள். சாலையின் இரு பக்கமும் இங்கும் நிலநடுக்கத்துக்குப் பின்னர், காலியாக விடப்பட்ட மனைகள் மற்றும் ஒரு பக்கமாகத் திரும்பியிருந்த குடியிருப்பு வீடுகள் காலிசெய்யப்பட்டும் கிடந்தன.

ஹன்சின்- கான் பகுதியின் அடி மண் டோக்கியோவைப் போலில்லாமல் வேறுபட்டிருக்கிறது. அது ஒரு மணற்பாங்கான மலைப்பகுதி. அதனாலேயே நிலம் மென்மையானதாகவும் வெண்மையானதாகவுமிருக்கிறது. அதனாலேயே காலி மனைகள் அதிகமும் அப்படிக்கப்படியே விடப்பட்டுள்ளன. அந்தப் பகுதி கோடைகாலப் பசுமைக் களைப்பூண்டுகளால் நிறைந்து கண்ணுக்குத் தெரிகிற முரணோடிருந்தது. எனக்கு நெருக்கமான ஒருவரின் உடலில் அறுவைசிகிச்சையால் ஏற்பட்ட பெரிய நீண்ட தழும்போடு அதனை ஒப்புமைப்படுத்திக் காட்சிப்படுத்தவே, அக்காட்சி என் உடம்புக்குள் கத்தியால் குத்தியது போல் வலியேற்படுத்தியது. காலத்தோடு அல்லது நிலத்தோடு இணைந்ததாக இல்லை, அந்த வலி.
இயல்பாகவே அங்கு களைகள் மூடிய காலி மனைகள் அதிகமாகவே இருந்தன. பல கட்டுமானத் தளங்களையும் நான் கண்டேன் தான். இன்னும் ஒரு ஆண்டுக்கும் குறைவான காலத்துக்குள்ளாகவே அங்கே புதிதாகக் கட்டப்பட்ட வீடுகளின் வரிசைகள் நிறையவே அதிகமாகி, அந்த இடத்தை என்னால் அடையாளம் கண்டுபிடிக்க முடியாதபடி மாறிவிடுமென நினைத்துக்கொண்டேன். புத்தம் புதிய கூரைத் தள ஓடுகள் வெயிலின் காலை ஒளியில் பளபளவென மின்னிக்கொண்டிருந்தன. அப்புறமென்ன, அங்கிருந்த நிலக் காட்சிக்கும் ஒரு மனிதனாக எனக்குமிடையில் பொதுவாக எதுவுமே இருக்கப் போவதில்லை. (அநேகமாக எதுவுமிருக்காது). எங்களுக்கிடையில் (அநேகமாக) வலுக்கட்டாயப் பிளவு ஒன்றினை வெளிப்படுத்தி, நில நடுக்கம் என்ற பெயரில் ஒரு மாபெரும் பேரழிவுக் கருவி நிற்கிறது. நான் வானத்தை அண்ணாந்து நோக்கி, மெல்லிய மேகமூட்டத்துடன் கூடிய காலைக் காற்றினை உள்ளிழுத்து வெளியிட்டுவிட்டு, என்னை இப்படியான ஒரு மனிதனாக உருவாக்கிய இந்த மண்ணைப் பற்றியும் இந்த மண் உருவாக்கிய மனிதனைப் பற்றியும் நினைத்துப் பார்த்தேன். நம்மால் கட்டுப்படுத்த முடியாத பல்வகைப்பட்ட விஷயங்கள் தாம் எத்தனையெத்தனை, ஹூம்.

அடுத்த நிலையமான ஒகமோட்டோ நிலையத்துக்குப் போனதும் ஒரு காபியகத்தில் – எப்படிப்பட்டதாகயிருந்தாலும் பரவாயில்லை – நின்று, அவர்களின் காலை உணவில் ஒரு செட் கொண்டுவருமாறு சொல்லவேண்டுமென நினைத்தேன். அன்று காலையிலிருந்தே எதனையும் நான் சாப்பிட்டிருக்கவில்லை. ஆனால், அப்போது எந்த காபிக்கடையும் திறந்திருக்கவுமில்லை. அது ஒரு நகரம் மாதிரியான, அந்த வகைப்பட்ட ஊரல்லவென்று நான் நினைத்துக்கொண்டேன். வேறுவழியில்லாமல் சாலை ஓரமாகத் தென்பட்ட லாசன்ஸ் கடையில் கலோரிமேட் எனர்ஜி பார் ஒன்றை வாங்கி, பூங்கா ஒன்றின் நீளிருக்கை ஒன்றில் அமர்ந்து, அமைதியாகத் தின்று முடித்து ஒரு கேன் காபியை விழுங்கி, அதனைக் கீழே இறக்கினேன். அந்தப் பயணத்தில் அதுவரையில் நான் கண்டவற்றைக் குறிப்பெடுத்துக்கொள்வதில் அந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டேன். ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு எமிங்வேயின் கதிரும் உதித்தது நாவலின் காகித அட்டைப் பதிப்பினை எனது பையிலிருந்தும் உருவி, விட்ட இடத்திலிருந்து மீண்டும் தொடங்கினேன். உயர்நிலைப்பள்ளியிலிருக்கும் போது அந்த நாவலை வாசித்திருக்கிறேன்தான், ஓட்டல் படுக்கையிலிருக்கும்போது எதேச்சையாக எடுத்து வாசிக்கத் தொடங்கிய நான் கதைக்குள் முழுவதுமாக என்னை இழந்துவிட்டேன். அது எப்படிப்பட்ட ஒரு மிகச் சிறந்த நாவலென்பதை அதுவரையில் எப்படி நான் உணராமற் போனேனென்பது எனக்கு இப்போதும் வியப்பாகத்தான் இருக்கிறது. அந்தப் புரிதலுணர்வு வித்தியாசமான ஒரு உணர்ச்சியைத் தோற்றுவித்தது. என் மனம் அப்போது வேறெங்கோ அலைந்திருக்கவேண்டுமென இப்போது நினைக்கிறேன்.
அடுத்த நிலையமான மைக்கேஜிலும் காலை உணவுச் சேவை எதுவும் காணப்படாததால் நான் அமைதியாக தொடரிப்பாதை வழியாகவே களைப்பும் ஆவி பறக்கும் ஸ்ட்ராங் காபி மற்றும் வெண்ணெய் தடவி வாட்டப்பட்ட கனத்த ரொட்டித் துண்டுகளின் கனவுமாக நடையைத் தொடர்ந்தேன். முன்பு போலவே கணக்கற்ற காலி மனைகளையும் கட்டுமானத் தளங்களையும் நான் கடந்தேன். என் பக்கமாக வழுக்கிச் சென்ற பல மெர்சிடெஸ் பென்ஸ் இ கிளாஸ் சேடன்கள் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு பள்ளிக்கோ தொடரி நிலையத்துக்கோ செல்வதாக நானாகவே கற்பனை செய்துகொண்டேன். அந்த மகிழுந்துகளில் எந்தவொரு சிறு கறையோ அல்லது கீறலோ இல்லை. சின்னங்களில் எந்தப் பொருளுமில்லாதது போலவே காலத்தின் நகர்வுக்கும் எந்த நோக்கமும் இல்லை. எல்லாவற்றுக்குமே நிலநடுக்கத்துடன் அல்லது வன்முறையுடனும் எந்தத் தொடர்புமில்லை. அநேகமாக அப்படித்தான்.

ரோக்கோ தொடரிநிலையம் முன்பாக மீச்சிறு சலுகை ஒன்றினை எடுத்துக்கொண்டு, மெக்டொனால்டு விற்பனையகத்துக்குள் நுழைந்து முட்டை மெக்மஃபின் செட் ஒன்று ( 360 யென்) கொண்டுவருமாறு சொல்லி, கடல் உறுமுவதைப் போல என் வயிற்றுக்குள் ஊளையிட்டுக்கொண்டிருந்த பசியை ஒருவழியாகச் சாந்தப்படுத்த முடிந்தது. முப்பது நிமிடங்கள் இடைவேளை எடுத்துக்கொள்வதெனத் தீர்மானித்தேன். அப்போது காலை மணி ஒன்பதாக இருந்தது. 9.00 மணிக்கு மெக்டொனால்டுக்குள் நுழைந்த நான் மிகப்பெரிய கற்பனையும் உண்மையுமான மெக்டொனால்டு சாம்ராஜ்யத்துக்குள் ஈர்க்கப்பட்டுவிட்டதாக உணர்ந்தேன். அல்லது தன்னுணர்விழந்த ஒரு பெருநிலையின் பகுதியாகிவிட்டிருந்தேன். ஆனால், உண்மையாகவே என்னைச் சுற்றியிருந்த எல்லாமே எனது சொந்த தனி ஆளுமை இயல்புதான். நல்லதற்கோ அல்லது கெட்டதற்கோ அந்தத் தனிநபருணர்வு, தற்காலிகமாகவேனும் செல்வதற்கு வேற்றிடம் எதுவுமில்லாதிருந்தது.

அவ்வளவு தூரத்தை நான் சமாளித்துக் கடந்து வந்திருந்தேன்; அதனாலேயே எனது பழைய உயர்நிலைப்பள்ளிக்குச் செல்லும் ஏற்றப்பாதையில் ஏறிவிடுவதெனத் தீர்மானித்தேன். என் நெற்றியில் மெல்லிய வியர்வைப்படலமொன்று துளிர்த்தது. பள்ளி நாட்களில் நான் எப்போதுமே முழுவதுமாக நிறைந்த பேருந்தில் தான் பள்ளிக்கு வந்தேன். ஆனால், இப்போது அதே சாலையில் எனது சொந்த வியர்வையில் நடக்கிறேன். மலைச் சரிவுகளை வெட்டிச் சரித்து உருவாக்கிய பரந்த விளையாட்டு மைதானத்தில் மாணவிகள் அவர்களது உடற்பயிற்சி வகுப்பின் பகுதியாக கைப்பந்து விளையாடிக்கொண்டிருந்தனர். சுற்றிலுமாக, எப்போதாவது கேட்கும் மாணவிகளின் கூக்குரல் ஒலியைத் தவிர வேறு நிலச் சப்தம் ஏதுமின்றி அமைதி நிலவியது. அது அப்படியொரு முழுமையான உறைநிலை போன்றிருக்கவே, நான் செல்லக்கூடாத ஏதோ ஒரு வெளிக்குள் தடுக்கி விழுந்துவிட்டதாக உணர்ந்தேன். ஏன் அப்படியான ஒரு முழு அமைதி?

மிகவும் குறைவான ஒளியுடன் தூக்கக் கலக்கத்திலிருந்த கோப் துறைமுகத்தை நோக்கிப் பார்த்ததோடு, கடந்த காலத்தின் எதிரொலி எதையாவது கேட்டுவிடலாமென்ற நம்பிக்கையில் கவனமாகக் காது கொடுத்தும் நான் எதையுமே பெற்றுவிடவில்லை. வெறுமனே மவுனத்தின் குரல்!. அவ்வளவுதான். ஆனால், நீங்கள் என்னதான் செய்துவிட முடியும்? முப்பது ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தவற்றைப் பற்றியல்லவா நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம்.
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக! என்னால் நிச்சயமாகச் சொல்வதற்கு ஒரு விஷயமிருக்கிறது : வயதாக, வயதாக மனிதன் தனிமையாகிறான். இது எல்லோருக்குமான உண்மை. ஆனால், அது தவறானதாக இருக்காது. நான் என்ன சொல்கிறேனென்றால், நம்முடைய வாழ்க்கை என்பது நம்மைத் தனிமைக்குப் பழக்கப்படுத்த உதவுவதற்கான தொடரான ஒரு படிநிலைகளைத் தவிர வேறொன்றுமில்லையென்கிறேன். அப்படியானதாக இருக்கும்போது புகார் சொல்வதற்கோ குறைப்பட்டுக்கொள்வதற்கோ எந்தக் காரணமும் இல்லை. அது மட்டுமில்லாமல் நாம் யாரிடம் போய், எந்த வகையில் புகார் சொல்ல முடியும்? அல்லது குறைப்பட்டுக்கொள்ள முடியும்?

4

நான் எழுந்து, உயர்நிலைப் பள்ளியிலிருந்து வெளியே வந்து அந்த நீண்ட சரிவில் ஆர்வமற்ற ஒரு உணர்வோடு கீழே இறங்கத் தொடங்கினேன். நான் சிறிது களைப்புற்றிருந்தேன். நான் புல்லெட் தொடரிகள் மட்டுமே நிற்கும் ஷின் கோப் நிலையத்திற்கு, இடையில் எங்கும் நிற்காமல் எனது நடையைத் தொடர்ந்தேன். அங்கிருந்து எனது இலக்கான சன்னோமியாவுக்கு ஒரே மூச்சில் போய் இறங்கிவிடலாம்.

எனக்குக் கூடுதல் நேரம் கிடைக்கவே, முழுமையான ஒரு ஆர்வத்தில் தொடரி நிலையத்திற்கு அருகில் புதிதாகத் திறக்கப்பட்டிருந்த மாபெரும் வகை ஓட்டலான புதிய கோப் ஓரியண்ட் ஓட்டலுக்குள் சென்றேன். கபே முன்புற இருக்கைப் பகுதியிலிருந்த சாய்மெத்தையில் சாய்ந்து அமர்ந்து, கடைசியில், அந்த நாளில் நான் விரும்பிய முதல் தரக் காபி ஒன்று கிடைக்கப்பெற்றேன். என்னுடைய முதுகுப் பையைத் தாழ்த்தி, எனது குளிர் கண்ணாடியைக் கழற்றி, ஆழ்மூச்சு எடுத்து என் கால்களுக்கு ஒரு ஓய்வினை அளித்தேன்.

அங்கிருந்த வசதிகளை நான் பயன்படுத்தும் தேவை எழுந்திருப்பதாக எனக்குத் தோன்றவே, காலையில் ஓட்டலிலிருந்து வந்தபின்பு முதல் முறையாக அப்போதுதான் போய் என்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு வந்தேன். பின்னர் நான் சாய்ந்து அமர்ந்து, மீண்டுமொரு காபி கொண்டுவருமாறு சொல்லிவிட்டுச் சுற்றிலுமாக ஒரு நோட்டமிட்டேன். ஓட்டல், துறைமுகம் அருகிலிருந்த பழைய கோப் ஓரியண்டல் ஓட்டலின் (நிலநடுக்கத்தினால் மூடப்பட்ட, அருமையான இதம் மிகுந்த ஒரு ஓட்டல்) உலகங்களோடும் அதற்கப்பாற்பட்டும் பயங்கரமாகப் பெரிதும் பரந்த வெளியோடிருந்தது. இந்தப் புதிய ஓட்டலைப் பரந்த வெளியுடையதென அழைப்பதைக்காட்டிலும் பாலைவனம் மாதிரியானதெனக் கூறுவதுதான் உண்மைக்கு மிக அருகிலானதாக இருக்கும். அது போதுமான பிணங்கள் இல்லாத பிரமிடு போன்ற வகையானது. நான் வெறுமனே விளையாட்டுக்காகச் சொல்லவில்லை; நான் தங்க விரும்பாத இடமாக அது இருந்தது.
ஒரு சில மாதங்களுக்குப் பின்னர், அந்த அதே லவுஞ்சில் யகூசா தொடர்பான துப்பாக்கிச்சூடு நடந்து இரண்டு பேர் கொல்லப்பட்டனர். அதுபோல் அந்த இடத்தில் ஏதாவதொன்று நடக்குமென்று எனக்குத் தெரிந்துகொள்வதற்கு எந்த வழியுமில்லைதான் என்றபோதிலும் மீண்டும் ஒருமுறை காலம் எங்களைப் பிரித்த இடைவெளிக்குப் பின் அதைக்கடந்துசெல்லுதல் நிகழ்ந்தபோதும் வன்முறையின் நிழல் ஒன்று படிந்தது.. நீங்கள் அதைத் தற்செயல் எனக்கூறினாலும், அது இயற்கைக்குப் புறம்பான ஒன்றாக எனக்குத் தோன்றியது. அது கடந்தகாலம், நிகழ்காலம்மற்றும் எதிர்காலமென எல்லாமே முன்னும் பின்னுமாக மின்னி ஒருங்கிணைந்து என் மீதாகக் கடந்துசென்றன.
எதனால் நாம் அப்படியான ஒரு கட்டவிழ்த்துவிடப்பட்ட, தொடர் வன்முறைக்கு இலக்காக்கப்படுகிறோம்? இந்தச் சிறு நடைப்பயணத்திற்கு நான்கு மாதங்களுக்குப் பின்னர், என் மேசையில் அமர்ந்து இந்த வார்த்தைகளை எழுதும்போது வியந்துகொள்வதைத்தவிர என்னால் வேறெதுவும் செய்ய இயலவில்லை. கோப் பகுதியைச் சிறிது அப்பால் தள்ளிவைத்துவிட்டாலுங்கூட, வன்முறையின் ஒரு நடவடிக்கை நமக்கு விதிக்கப்பட்டதென்பது போல ( உண்மை நடப்பிலோ அல்லது உருவகமாகவோ) ஒன்று மற்றொன்றுக்கு இட்டுச் செல்வதாக உணர்கிறேன். இதற்கு ஏதாவதொரு வகைப்பட்ட தலைமுறைத் தவிர்ப்பு முறைகள் ஏதும் இருக்கின்றனவா?

நான் அமெரிக்காவில் வசித்துக்கொண்டிருந்தபோது ஹான்சின் நிலநடுக்கம் தாக்கியது. அதற்கு இரண்டு மாதங்களுக்குப் பின், டோக்கியோ சுரங்க வழியில் சாரின் விஷவாயுத் தாக்குதல் நிகழ்ந்தது. நான் இதனை ஒரு சம்பவங்களின் தொடராகத் தெரிவதாகவே பார்த்தேன். அந்தக் கோடையில் நான் ஜப்பானுக்குத் திரும்பியதும் சாரின் தாக்குதலில் உயிர் பிழைத்தவர்களைப் பேட்டி காணத் தொடங்கினேன். ஒரு ஆண்டுக்குப் பின் நான் Underground அண்டர் கிரவுண்ட் வெளியிட்டேன். அந்தப் புத்தகத்தில் நான் எதைத் தேடினேன், எதைப்பற்றி எழுத விரும்பினேனென்றால் – நான் உண்மையிலேயே எதைப்பற்றி மேலும் அதிகமாகத் தெரிந்துகொள்ள விரும்பினேனோ அதனை, நமக்குள்ளேயே ஒளிந்திருக்கிற நமது சமூகத்தின் வன்முறையினைப் பற்றித்தான். உள்மறைந்திருக்கிற சாத்தியக்கூறாக நிறைந்துள்ள வன்முறையினைப் பற்றியும் வன்முறை வடிவமாகத் தன்னை வெளிப்படுத்திக்கொள்கிற அந்தச் சாத்தியக்கூறு பற்றியும், அது உள்ளிருக்கிறதென்பதை மறக்க முயலுகிற நம் எல்லோரையும் பற்றியும் தான். அதனாலேயே, நான், தாக்கியவர்களை அல்லாமல் பாதிக்கப்பட்டவர்களை நேர்காணல் காணத் தேர்ந்தெடுத்தேன்.

நிஷிமோனியாவிலிருந்து கோப் நகருக்கு நான் அமைதியாக நடந்த இரு நாட்களிலும் இந்தச் சிந்தனைகளே என் மூளைக்குள் சுழன்றுகொண்டிருந்தன. நிலநடுக்கத்தின் நிழலினூடாகவே எனது பாதையை வகுத்துக்கொண்ட நான் எனக்குள்ளாகவே கேட்டுக்கொண்டிருந்தேன் : சுரங்க வழியில் நிகழ்ந்த சாரின் விஷவாயுத் தாக்குதல் முழுவதுமாக எதைப்பற்றியது? அதே நேரம் சாரின் விஷவாயுத் தாக்குதலின் நிழல்களினூடாக நான் என்னை இழுத்துச் சென்றபோது, நான் வியந்துகொண்டேன் : ஹான்சின் நிலநடுக்கம் என்பது என்ன? அந்த இரண்டு நிகழ்வுகளும் என்னைப் பொறுத்தவரையில் தனித்தனியானதல்ல; ஒன்றினைப் பற்றி ஆய்வுசெய்வது இன்னொன்றினை வெளிப்படுத்த உதவக்கூடும். இது ஒரே நேரத்திலான உடலியல் மற்றும் உளவியல் சிக்கல். மறுதலையாகச் சொல்வதெனில் உளவியலே உடலியல். அவை இரண்டினையும் இணைக்கின்ற இணைப்புச் சந்தியினை நானே உருவாக்கிக்கொள்ளவேண்டியுமிருந்தது.

இதோடு இன்னும் அதிகமான சிக்கல் நிறைந்த மற்றொரு கேள்வியையும் இணைத்துக்கொள்ள முடியும்: இது குறித்து நான் என்ன செய்ய இயலும்?

சொல்வதற்கு வருத்தமாக உள்ளது, இந்தக் கேள்விகளுக்கு இன்னும் நான் ஒரு தெளிவான தர்க்கபூர்வமான பதிலினைக் கண்டுபிடிக்கவில்லை. என்னால் எந்த ஒரு இறுதியான முடிவுக்கும் வர இயலவில்லை. இந்தக் கருத்துமுனையில் நான் செய்யக்கூடியதெல்லாம் என்னுடைய நிச்சயமற்ற உரைநடை மூலம், எனது சிந்தனைகள் ( என் பார்வையும் கால்களும்) என்னை வழிநடத்திச்செல்லுகிற உண்மையான பாதையில் ஒரு எதிரிடைக்கலமாகச் சேவைசெய்ய இயலும். நீங்கள் இதைப் புரிந்துகொள்வீர்களென நம்புகிறேன். எல்லாவற்றுக்கும் மேலாக, நான், எனது கால்களை, எனது உடலை, படிப்படியாக, நின்றும் நிதானித்தும் செய்கிற உடலியல் நடைமுறை மூலம் மட்டுமே முன்னேறுகிற வகையைச் சேர்ந்தவனாக இருக்கிறேன். இது அதிக காலம் பிடிக்கிற ஒன்று. மிக அதிகமாகவே காலம் பிடிக்கும். அது மிகமிகத் தாமதமாகிவிடாதென்றும் நான் வெறுமனே நம்பிக்கைகொள்கிறேன்.

இறுதியில் நான் சன்னோமியாவுக்குத் திரும்பி வந்து சேர்ந்தேன். இதற்கிடையில் என் உடலில் நாற்றம் பிடிக்கத் தொடங்கிவிட்டது. உங்கள் காலை நடையைவிடக் கொஞ்சம் அதிகத் தூரம் அவ்வளவுதான். ஓட்டல் அறையில் வெந்நீர்க்குளியல் எடுத்துக்கொண்டேன். என் தலைமுடியைக் கழுவி முடித்து, குளிர்பெட்டியிலிருந்து குளிர்ந்த மினரல் நீர்ப்புட்டி ஒன்றை எடுத்து அதிலிருந்த நீரை விழுங்கினேன். எனது பையிலிருந்து புதிய ஆடைகளை எடுத்து மாற்றிக்கொண்டேன். கடற்படை நீல போலோ சட்டை, நீலப் பருத்தி மேற்கோட்டு மற்றும் பெய்கு சினோஸ். என் கால்கள் சிறிது வீக்கம் கொண்டிருந்தாலும் நான் அதுபற்றிச் செய்துகொள்வதற்கு எதுவும் இல்லை. என் தலைக்குள் தீர்வாகாமல் இருண்டு கிடக்கும் தெளிவற்ற கேள்விகளை வெளித்தள்ள இயலாமலிருப்பது போன்றது தான் அது.

நான் செய்வதற்கான காரியமெனக் குறிப்பாக எதுவும் இல்லாததால், என் கண்ணில் பட்ட டாம் க்ரூய்ஸ் நடித்த ஒரு திரைப்படத்திற்குச் சென்றேன். அது ஒன்றும் அவ்வளவு நன்றாகப் போன படமல்லவென்றாலும் மிக மோசமானதாகவும் இல்லை. நான் நேரத்தைக் கடத்துவதாக ஓய்வாக உட்கார்ந்திருந்தேன். என் வாழ்க்கையின் இரண்டு மணி நேரம் இப்படியாக நல்லபடியாகவுமில்லாமல் மோசமாகவுமில்லாமல் கடந்தது. மாலை வரும்போது நான் திரையரங்கினை விட்டு வெளிவந்து, மலையை நோக்கி ஒரு சிறிய உணவுவிடுதிக்கு நடந்தேன். கவுண்டரில் அமர்ந்து கடலுணவு பிட்சாவும் ஒரு திரா பீரும் கொண்டுவரச் சொன்னேன். நான் ஒருவன் தான் தனக்குத் தானே பரிமாறிக்கொள்ளும் வாடிக்கையாளனாக இருந்தேன். ஒருவேளை அது எனது கற்பனையாகவுமிருக்கலாம்; ஆனால் அங்கிருந்த எல்லோருமே மகிழ்ச்சியாக இருப்பதாகத்தான் தோன்றியது. இணையர்கள் நிறைவோடிருப்பதாகத் தோன்ற, ஆண்களும் பெண்களுமாக ஒரு குழுவினர் உரக்கக் கூவிச் சிரித்தனர். சில நாட்கள் அப்படித்தான் நிகழும்.

அவர்கள் எனக்கு அளித்த கடலுணவு பிட்சாவில் `நீங்கள் உண்டு மகிழவிருக்கும் இந்த பிட்சா எங்கள் உணவுவிடுதியால் தயாரிக்கப்பட்ட 958,816 ஆவது பிட்சா` என அறிவிக்கின்ற ஒரு துண்டுச் சீட்டும் இணைக்கப்பட்டிருந்தது. எனக்கு அந்த 958,816 ஐப் புரிந்துகொள்ள இயலவில்லை. அதிலிருந்து நான் என்ன மாதிரியான தகவல் தெரிந்துகொள்ளவேண்டுமென எதிர்பார்க்கிறார்களோ தெரியவில்லை.

நான் இளைஞனாக இருந்தபோது எனது பெண் தோழியோடு இங்கு வந்து சில குளிர்ந்த பீர்களை விழுங்கியதோடு இது மாதிரி எண்கள் குறித்த துண்டுச் சீட்டு கோர்த்த, புத்தம் புதிதாகத் தயாரித்த பிட்சாக்களையும் உண்டிருக்கிறேன். நாங்கள் எங்கள் எதிர்காலம் பற்றிப் பேசிக்கொண்டிருப்போம். அப்போது நாங்கள் செய்துகொண்ட உறுதிகளில் ஒன்றுகூட உண்மையாகவில்லை. ஆனால், அது நீண்ட நெடு, நெடுங்காலத்துக்கு முன். அது இங்கே கடல் இருந்த காலம். அது இங்கே மலைகள் இருந்த காலம்.
அதற்காக இப்போது கடலும் மலைகளும் இங்கில்லை என்பதல்ல. அவை இருக்கத்தான் செய்கின்றன. நான் சொல்வது வேறு கடல், வேறு மலைகள். இப்போது இங்கிருப்பவற்றிலிருந்தும் வேறுபட்டவை. என்னுடைய இரண்டாவது பீரை உறிஞ்சிக்கொண்டே, எனது காகித அட்டைப் பிரதியான `கதிரும் எழுகிறது` நூலை எடுத்துத் திறந்து நான் விட்ட இடத்தைக் கண்டுபிடித்துத் தொடர்ந்தேன். இழந்துபோன ஒரு தலைமுறையின் இழந்த கதை. அவர்களது உலகத்துக்குள் விரைவாகவே ஈர்க்கப்பட்டேன்.

அந்த உணவுவிடுதியைவிட்டு நான் கிளம்பும்போது முன் கணித்தபடியே மழை பெய்து நான் நனைந்தேன். முழுவதுமாக நனைந்து எலும்புகளுங்கூட ஊறிப்போயின. ஆனால், இந்த இடத்தில் ஒரு குடை வாங்குவதென்பது பெரும் பிரச்னையே.

****
.