Category: கவிதை

றியாஸ் குரானா கவிதைகள்

download (3)கீழுள்ள கூற்றை விளக்கவும்

‘திரைப்படத்தின் குறித்த காட்சி

பார்வையாளர்கள் நுழைவதற்கு ஏதுவாக மாறியிருந்தது’

விசில் சத்தங்கள்

கூக்குரல்கள்

மகிழ்சி ஆரவாரங்கள் கிழம்ப

அவைகளினூடாகத்தான்

கதாநாயகன் திரையில் தோண்றுகிறார்.

திரையரங்கில் நிரம்பி வழிந்த கரகோசங்கள்

மெல்ல வற்றிக்கொண்டிருந்தன

அவசரமாக

சுவரில் மோதி எதிரொலித்தவைகள்

செவியிலிருந்து தூரமாகியபடி இருந்தன

அடுத்த காட்சியில்,

கதாநாயகி ஆற்றோரம் காத்திருக்கிறாள்

பெரும் வரலாற்றுத் துயரை

எதிர்கொள்வதைப்போல

திரையரங்கே அமைதியாகின.

அவளைக் கடந்து செல்ல எத்தனித்த

புல்லாங்குழலிசை நுழைந்து

அரங்கின் அமைதியைக் கைப்பற்றியது

மெதுவாகத் தொடங்கி

உரத்து ஓலமிடும் வயலினின் அழுகை

அவசரமாகக் குறுக்கிட்டு

அனைவரினுள்ளும் உறையவைத்தது

திரையில் உருவாகும்

மங்கலான இருளினுள்

அவள் மூழ்கிக்கொண்டிருந்தாள்

அவளின் தலைக்குமெலிருந்த

மரக்கிளையின் இலைகள்

இதயத்திற்கு நிகராகத் துடித்தன

எதிர்த்திசைக்குத் திரும்பி

ஆறு ஓடத்தொடங்கியது

நாயகி காத்திருக்கிறாள்

நாயகன் இன்னும் வரவில்லை

துயரைத் தாங்காத நான்

எழுந்து, அவளருகே சென்று

ஆறதல்கள் சொல்லிவிட்டுத் திரும்பினேன்.

அன்றிலிருந்து,

கூற்றை வாசிக்கவும்.

துயரம்

…………..

மண் தரையும் தண்ணீரும்

கடலுக்கு தேவைப்பட்டது

அங்கிருக்க

ஒரு மனிதன் தேவைப்பட்டது

சோகமாக இருக்கும்போதுதான்

அங்குவரவேண்டுமென

அவன் சொன்னான்

அதற்காக அவசரமாக

காதலில் தோற்க வேண்டும்

தோற்பதற்கு முதலில்

காதலிக்க வேண்டும்

ஒரு பெண்ணை தேடினான்

அதற்காக, பஸ் தரிப்பிடத்தில்

காத்திருக்கிறான்.

அதோ வருகிறாள்

வாழ்நாளில்,

தற்போதுதான் சந்திக்கும்

இந்தப் பெண்தான்

பல நாட்களுக்கு முன்

கடற்கரையில் சோகமாக

அமர்ந்திருக்க காரணம்.

அடையாளம்

………………………

மதிலினுாடாக பதுங்கி வந்து

கைகளின் மீது பாய்ந்துவிடும் போது

பூனையைப் புரிந்துகொள்ள முடியும் என

கனவு கண்டேன்.

என்னைக் கடந்து பாய்ந்தது.

இதை மொழி பெயர்த்தபோது cat என

தனது பெயர் இருக்கட்டும் என்றது

பூனை என்பதும் அதுதான் என்றேன்.

அது நம்பவில்லை.

நான் எலிகளைப் பிடிப்பதில்லை என்றது.

இந்திரன் கவிதைகள்

download (2)

நன்றி நவிலல்.

 

நடு இரவில் தூக்கம்  கலைகையில்

அதிகாலையில் படுக்கை  விட்டெழுகையில்

பகலில் உணவகத்தில்

அலுவலகத்தில் வேலைகளுக்கு  நடுவில்

கணிணியை அடிக்கடி திறந்து பார்க்கும் பழக்கம் தொற்றிக்கொண்டது எனக்கு .

 

பிளாட்பாரம் கிடைக்காமல்

வெளியே நிற்கும் ரயில்கள் போல்.

திறந்து வாசிக்கப்படாத  உனது ஈமெயில்கள்

எங்கே காத்திருக்க  நேருமோ என

கணந்தோரும் அஞ்சுகிறேன்.

 

உனது வார்த்தைகள்  முடியுமிடத்தில்

எனது வார்த்தைகள் தொடங்குகின்றன..

 

உனது உதடுகளை எனது நாவினால் தடவி ஈரப்படுத்தி

நான் என்னைப் பேசிக் கொள்ள முயல்கிறேன்.

 

பிறை நிலவு கிழக்கு  நோக்கிப் பயணிக்கும் பின்னிரவில்

பித்த மனநிலையில்

சன்னதம் கொண்டு நீ சொன்ன மந்திரச் சொற்களில்

கனன்று கொண்டிருக்கும் நெருப்பில்

எனது சிகரெட்டுகளைப் பற்ற வைத்துக் கொள்கிறேன்.

 

நமக்கிடையே உள்ள தூரங்களில் கவிந்திருக்கும்

மூடு பனியிலிருந்து நூல் நூற்று

எனது வார்த்தைகளை நெய்தெடுக்கிறேன் நான்.

 

 

 

 

 

 

எனது விழித்திரையில் உனது பிரதிகள் தீட்டும்

திரை ஓவியங்களில் மறைந்திருக்கும்  ரகசிய குறிப்புகளில்

எனது மூதாதையர்கள் விட்டுச் சென்ற புதையல் பெட்டியின் தொலைந்து போன சாவியைக் கண்டெடுக்கிறேன்.

 

எண்ணெயிட்ட அகல் விளக்கைக் கையில் ஏந்தியபடி

இருளில் தவித்துக்  கொண்டிருந்தபோது

நீ கொடுத்த ஒரே  ஒரு தீக்குச்சியை வைத்து

நான் வளர்த்திய  யாக நெருப்புகள்

உனக்கு நன்றி தெரிவிக்க இயலாமல் தோற்றுப் போகின்றன.

 

வெற்றிலைக் கொடிகள்  ஊடுபயிரைத் தழுவி வளர்வதுபோல்

உன்னைச் சுற்றி

சதா துளிர்விட்டுக் கொண்டே இருக்கும் வார்த்தைகள்

செய்வதறியாது கைபிசைந்து நிற்கின்றன

உனக்கு நன்றி  தெரிவிக்கும் தருணத்தில் மட்டும்.

 

மழையில் நனைந்த செங்கொன்றை மரம் உதிர்த்த

சிவப்பு மலர்களும் பழுப்பு இலைகளும் புதைந்த

களிமண் பூமியின் ஈரத்தை என் பாதங்களில் உணர்ந்தபடி

நான் உன்னிடம்

எனது மெளனங்களையும்

கொஞ்சம் சிவப்பு ரோஜாக்களையும் மட்டும் கொடுத்து நிறைவடைகிறேன்.

வழி தெரியவில்லை நன்றி சொல்ல.

*

உனது டைரியில் எனது பதிவுகள்

 

 

என் கையில் உனது டைரி.

 

தொல் பழங்கால  விலங்குகளின் பாதச் சுவடுகள் பதிந்த

பாறையை ஆய்வாளர்கள்  வாசிப்பதுபோல

நான் உன்னை வாசிக்கத் தொடங்குகிறேன்.

 

என் மீதான உனது காதல்

உனது  கடைவிழியில் வழிந்து இறங்கி

இரவினை ஜோடிக்கத்  தேவையான கருப்பு வண்ணத்தை தானமாகக் கொடுக்கிறது.

 

காதலின் போதை நிரம்பிய அற்புத பொழுதில்

எனது சாதாரண வார்த்தைகளுக்கெல்லாம் சிரித்து

என் தோள் மீது நீ சாய்கையில்

உன் கூந்தலின்  உச்சி முகர்ந்த வாசனை

என் மனதின் உள்  அறைகளில்

சூரிய ஒளிக்கற்றையாய் ஊடுருவிப் பாய்கிறது.

 

ஒளிக்கிரணத்தில் காற்றில் மிதந்து உருண்டு  புரளும்

தூசுகளைத் தங்கத் துகள்களாய் மாற்றி விடுகிறது

நம் நெருக்கத்தைச்  சூடாக்கும் தனிமை.

 

நெருப்பாய்க் கொதிக்கும் உன் நெற்றியில்

என் உள்ளங்கை பதிக்கிறேன்.

 

இன்னும் சில கணங்களில்

இதழ் விரிக்கப் போகும் குவிந்த மலர் போன்ற உன்னில்

மெலிதான முத்தம்  ஒன்று பதிக்கையில்

சிகரத்தை அடைவதில் இருவருமே தீவிரமடைகிறோம்.

 

உனக்கு நிறைவு தோன்றுகையில் நான் உற்சாகமடைவதும் எனக்கு நிறைவு தோன்றுகையில் நீ ஊற்சாகமடைவதுமாய்

ஓய்வில்லா உளிச்  சத்தத்தில்

கருவறைச் சிற்பத்தைச் செதுக்கத் தொடங்கி விடுகிறது காமம்.

 

ஊண் உடம்பை ஆலயமாய்க்  கொண்டு

ஆண்டாண்டு காலமாய் நடந்து வரும் திருவிழாவில்

சன்னதம் கொண்டு செடல் குத்தி ஆடுகின்றன ஆசைகள்.

 

உன் மேசை இழுப்பறையிலிருந்து நான் திருடி வந்த

உன் டைரியை

காற்று வெளியில் திறந்து வைத்து மெளனமாய்

வானத்தைப் பார்த்து நிற்கிறேன்.

 

காற்றில் பறக்கும் எழுதப்படாத வெற்றுப் பக்கங்களில்

அந்தரங்கமான எனது குறிப்புகளை

பதிவு செய்கிறேன்

ரகசியமாய்

உனது டைரியில்.

 

***

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

நிஷா 4 கவிதைகள்

 

384257_155219461288646_1689202367_n

வார்த்தைகள் 
உன் மனப்பாலுறுப்புக்களுக்கு
கிளர்ச்சியூட்டுவைக்கும்
எவ்வித வார்த்தைகளும்
இல்லை என்னிடம்

இவை உனக்கு நினைவூட்டலாம்
நீ மறைத்துவைத்திருக்கும்
சில துரோகங்களை
சில அயோக்கியத்தனங்களை
சில பொய்ச் சத்தியங்களை
சில நன்றி மறத்தல்களை

அவை உன் கயமைத்தனத்தின்
புன்னகைகளை சாகடிக்கும்
வன்ம வார்த்தைகள் அல்ல
மாறாக
சுய இரக்கத்தின் குற்ற உணர்ச்சியிலிருந்து
பீறிடும் வடிகால்கள்

மேலும்
உன் பிழைகளின் இருள் அறைகளில்
வெளிச்சமிட்டுக் காட்டும்
என் வார்த்தைகள்
உனக்கானவை மட்டுமல்ல
எனக்கானவையும்தான்..!!
விடலைக் காமம் 

ஊருக்கு வெளியே ஒதுக்குப் புறமாய்
இரண்டாம் காட்சி
காமப் படம் பார்த்துவிட்டு
கிராமம் திரும்ப பஸ் இல்லாமல்
குட்டியானையின் பின்புறம்
சிமெண்ட் மூட்டைகளின் நடுவே
முகம் மறைத்து..
சீருடை நிறம் மறைத்து..
சால்வைபோர்த்தி
பதுங்கி அமர்ந்திருக்கும்
விடலைச் சிறுவனால்
மறைக்கவே முடியவில்லை…
அவன் கண்களில்
பொங்கி வழிந்து
சிமெண்ட் மூட்டைகளை
நனைத்துக் கொண்டிருக்கும்,
காமக் கடும்புனலை..!!

 

மைய விளிம்பு 

பரிசுப் பொருட்களைச் சுற்றி அனுப்பப்படும்
வண்ண ரிப்பன்களை
என்ன செய்வது

பெருகிவிட்ட உனது கடிதங்களைப்
பதுக்கிவைக்க
மறைவாய் அறைகளில்லை பீரோவில்

குசுகுசுக்கும் குரல்களில் உருவாகின்றன
நமக்கிடையேயான உறவு குறித்த
ரகசிய புனைவுகள்

விரும்பும் முன்னுரிமையை அளிக்க முடிவதில்லை
நீ இருக்கும் புகைப்படங்களை
என் குடும்ப ஆல்பத்தில்
(நீயோ எனக்கென பிரத்யேக ஆல்பம் வைத்திருக்கிறாய்)

தீராத தாகத்தில் அவிழ்க்கப்படாத
முடிச்சுக்கள்
இன்னும் தீராமலிருக்கின்றன

கிளர்ந்து முத்தமிட யத்தனிக்கையில்
இடருகிறது
கூந்தலூடே தெரியும் நரையின் துவக்கம்

வாடிவிடலாகாதென பாலிதீனில் பேக்செய்து
நீ தந்த ரோஜா
அழுகிவிட்டிருக்கிறது இப்போது.

 

 

கீற்று 

மருத்துவமனை வளாகமெங்கும்
இரைந்து கிடக்கும்
வலிகளின் வேதனைகளை
மிதிக்காமல் கடக்க
முடியவில்லை

பிரிதலின் துயரத்துடனும்
நிராதரவின் மிரட்சியுடனும்
மிதக்கின்றன
சோகத்தில் உறைந்த குரல்கள்

இயலாமையும் ஆற்றாமையும்
நம்பிக்கையும் அவநம்பிக்கையும்
பெருக்கெடுத்து ஓடுகின்றன
ரத்த உறவுகளின் புலம்பல்களில்

கடந்தகால உதாரணங்களும்
நிகழ்கால புன்னகைகளும்
மிகுந்த ஆசுவாசத்தைத் தருகிறது
ஆறுதல் தேடும் மனதுக்கு

மலைபோல நம்பியிருப்பது
மருத்துவரையும்
மடிப்பணத்தையும் மட்டுமின்றி
நெக்குருகும் பிரார்த்தனைகளையும்தான்

இழப்பின் துயரம் கொப்புளிக்கும்
முகங்களை எதிர்கொள்ளும் பக்குவம்
இனிமேலும் வாய்க்குமா தெரியவில்லை

மருத்துவர் சொற்களில் மிதக்கும் பூடகம்
எளிய கேள்விகளால் உலுக்கப் படுகிறது
நூற்றுக்கணக்கான சாவுகள் கண்டு
சுவர்போல் நகர்கிறாள் தலைமை தாதி

எனினும் இச்சூழலை அழகாக்கி
மெளனங்களையும் அவநம்பிக்கைகளையும் தகர்த்து
ஒரு இதமான பரவசத்தை அலைபோல் பரப்புகிறது,
ஒரு பச்சை சிசுவின் முதல் அழுகை…!!

—————————————————————————————————————————————————————

கவிஞர் சுகந்தி சுப்பிரமணியத்தின் சிறப்பிதழ் 19 கவிதைகள்

 

mail.google.com

 

பெண்ணையே நாம் கண்டதில்லை.
ஆணைiயே நாம் கண்டதில்லை.
உடல்கள் உடைகளில் மறைந்திருக்க
வயிற்றுக்குள் உணவும் பலமும் கலந்திருக்க
ஒவ்வொரு கடவுளுக்கும் பண்டிகைக்கு மட்டும்
பூஜை செய்ய
சூரியனும் சந்திரனும் கடமையில் இருக்க
அம்மாவுக்காக நான் காத்திருக்க
எனக்காக என் குழந்தைகள் காத்திருக்க
போதும் ஏக்கம் எதுக்கினி இவ்வுடல்
காசு பணம் என்னத்துக்கு
நாற்காலியும் மேஜையும் மின்விசிறியும்
பணத்துக்கு அடையாளமாய் இருக்க
வயிற்றுக்கு நீரைவிட்டு
அதுவும் பணத்துக்கு வாங்கி
எதுவும் தெரியா…..

 

 

காத்திருத்தல்
இன்று வரை
அல்லது
நாளை, நாளை மறுநாள்
தேவைப்பட்டால் கொஞ்சம் அன்புடன்
மீதமிருக்கிற நிலையில்
மௌனம் விரைகிறது
வெளியெங்கும்
பக்கத்து நபருடன் அல்லது
வீட்டில், வெளியில்
அனைவருடன் பேச
எத்தனை நாள்தான் காத்திருப்பது?
நிமிருகிற நிமிடங்களில்
நீண்டு போகிற மனவழியே
தாவிக்குதித்து விரைகிறது
மனம் குதிரை,
இன்னும்

 

 

தோழிக்கு
நீ அழுது கொண்டிருக்கலாம்
அல்லது
மௌனமாய்
அதுவுமல்லாமல்
ஏதாவது ஒன்றை செய்து கொண்டிருக்கலாம்.
நீ எதிர்பார்க்கின்ற ஒன்று
நமக்குள் நிகழாமல் போகலாம்.
ஆனால்
மிகச் சரியானது
நமது அன்பு மட்டுமே
நீ உணர்ந்தால்
எனக்குள் கொஞ்சம் ஒளியேற்று.
சந்தோஷமாய் வரவேற்கிறேன்.
துக்கங்களுக்கிடையில்
உனது சிரிப்பை
மௌனங்களுக்கிடையில் எதிரொலிக்கும்
உனது குரலை.
மிகச் சரியானது உன்னைப் பற்றிய
எனது அன்பு
எதுவும் அற்புதம்தான்
நாம் எதிர்பார்க்காத நிமிடங்களில்
உணர்ந்து சிரிக்கும் குழந்தையின்
சிநேகம் என் தோழி
உனக்குள் மலரட்டும்.
எனக்கும் கொஞ்சம் சொல்லிக்கொடு.
அன்பான புரிதல் குறித்து.

 

 

பொங்கி எழும் நினைவுகள்
என்னோடு பரவுகிறது
சூழ்நிலைகளின் பங்கில்
என் வழியில் பிரக்னஞயற்று
இயங்கினேன்.
எழுதாமல் படிக்காமல்
என்னோடு எதிர்காலம் நடக்கிறது.
ஒன்றாக சந்திக்க மட்டுமே
விழாக்கள் அமைகிறது.
சொல்லிச் சொல்லி அழுத நிமிடங்கள்
அதிகாலையில் ஓயலாம்.
தினமும் பிடிக்கும் என்பவை எல்லாம்
அடிக்கடி வீணாகிறது.
முகம் பார்த்து வேலை அமைகிறது.
படிப்புடன் பாசம் பயன்படுகிறது
குழந்தைகளை வெறுக்கும் இன்றைய
கவிஞர்களுக்கு.
அழகான முகம் பார்த்து
ஆசைகளை உடலில் விட்டு
ஒன்றுமில்லாமல் போகிறது.
படித்த புத்தகங்கள் வீடு நிறைய
அழகழகாக தோற்றங்களில்
நாங்கள் மேதைகள் என்ற கனவுகளும்
சுயநினைவுகளின் சுறுசுறுப்பாகவும்
எழுதுவதும் படிப்பது மட்டும் வேலை
என்றாகிறது.
ஏதோ ஒன்று என
ரகசியமாய் காலைக் கிரணங்களில்
கேட்கக் கேள்வியற்றுப் பார்க்கத் தோன்றுகிறது.
உன் அழுகையும் ஓய்ந்து போகும் தருணங்களும்
ஆறுதலாய் அமையலாம் இனிய பொங்கள்
விழாவில்.
சுயநலங்களின் போராட்டமும்
சொல் தெரியாது என விஷயங்களை மனதில்
மறைத்து வாழும் வழிகளின் பிரயாணங்களில்
எங்கு தொலைத்தோம் அன்பை நாம்.
ஒரே விதமான உடல்களின் அவஸ்தைகள்
விதவிதமான அழகான முகங்களின்
அமைதியான விநோத ஆசைகள்.

உருவாகுதல்
எப்போதும் எனக்கு
என்னைப்பற்றித்தான் எண்ணம்.
இப்படித்தான் அவர்கள் பேசுகையில்
நான் சொன்னேன்.
அவர்கள் சரி பேசுங்கள் என்றனர்.
ஆனாலும்
நான் யோசிப்பதாகவே சொன்னேன்
அவர்கள் மீண்டும் மீண்டும் பேசினர்.
இடையில் எனது பதிலும் அதுவாகவே
அவர்கள் கேட்காமலேயே.
இனியும் மழைக்கு ஒதுங்குதல்
நல்லதில்லையெனவும்
சுத்தமான நீரை கையில் பிடித்தபடியும்
மழையை இரசிக்கத் தெரியாமல்
மௌனமாய் நான் நடந்தேன்
எனது காலடியில்
எனது ஆசைகள்
மற்றும் அலையும்
மழையில் வழிந்து தரை சுத்தமானது.
சூழ்நிலை குறித்து அறிய
யோசனை பிறந்தது மெதுவாகவே.

 

பாய்ந்து ஓடும் காவேரிதான்
பாய்ந்திருக்கு மனசில தான்
உங்க சொல் எல்லாம் இனிக்குதையா
சிந்திச்சா சொற்களோ போராட்டம்தான்
நினைக்க நினைக்க வாழ்வெல்லாம்
நிஜமான வேப்பிலைதான்.
சொல்லாலே சொல்லி வச்சு
எதுக்குமே போராட்டம்தான்
மனசு வெச்சா மல்லிகைதான்
மனம் போல வாழ்க்கையெல்லாம்
நான் ஒன்னும் சொல்லலையே
உங்கிட்ட எதிர்க்கலையே
உல்லாசமா நடக்கையிலே.

குறுக்கு வழியில மனசு போனா
இதயம் பொறுக்கல
வேசித்தனம் வந்துவிட்டா மனசுதான் பொறுக்கல
நீயும் நானும் திட்டிக்கா கோபம் தான் தீரலை.
நாளும் கிழமையுமா நல்ல விதமா மாறிக்கோ.
சோகம் சொந்தம் எல்லாம் சொர்க்கமுன்னு நெனச்சுக்கோ.

சொப்பனத்தில் நான் காண
குழந்தை மனசாய் மாறும் தருணங்களில்
என்றும் மாறாத மனிதர் கூட்டத்தை வாழ வைக்க
வாழ்க்கைப் போராட்டத்தினை தினமும் சந்தித்து
அழுது ஓயும் கண்கள்
மீண்டும்
நாம் வாழ வாழ்க்கையைத் தொடர
யார் என்று தன்னை கேட்க
நம்பிக்கைத் தென்றலாய்
நீ வாழ வேண்டும்
ஆடும் இயேசுவும்
சொல்லாத புதிரெல்லாம்
ஆத்மாவில் அடங்கும் விளையாட்டுக்களைத் தவிர்த்து விடு.

யோசித்துக் கண்டித்தால் எதிர்கொள்ளும்
மனவெறி அடங்கும் சில நிமிடங்களுக்கு
செல்லும் வாகனங்களின்
விரைவு நேரங்களின் அவஸ்தைகள்
எதிர் கொள்ளும் நண்பனுக்குத்தான்
தெரியும்.
சொல்லச் சொல்ல எனக்கு மறதி.
படித்துப் பார்த்தும் படிப்பாளர்கள்
ஓயவில்லை நேரங்களை உபயோகமாக்க
தென்றல் வருமென்று முன்னே சொன்ன
மூக்குத்திகள் பேச்சு உல்லாசமாக என்று வரும்.
வருகின்ற நேரமெல்லாம் பசியடங்கும் வரை அன்பை வளர்க்கும்.
பவனி வரும் கார்களுக்குள்
பாசம் வரும் பணிவு வரும்
வந்து போகும் மறதி யாருக்கு?

எழுத்தொன்று ஊசலாட
மனசொன்று ஓயாது நினைக்க
செயல்களோ நித்தம் தடுமாற
எங்கு வைத்தேன் என்னை
சீரும் சிறப்புமாய் நான் வாழ
பெற்றதுவும் இவ்வையகத்தில்
இரண்டும் யானாகி
என்னுள் நீயாகி கலப்பதெப்போ
என் மனசே.
சிந்திக்க நேர்ந்தாலும்
மனசை பிடிக்க முடியாமல்
மண் அள்ளி வாயில் போட்டேன்
சிரித்து மழுப்பியது.
எங்கும் வியாபித்திருக்கின்ற ஒன்று
தென்படாமலே விலகுமோ என்னை.
தொடருகின்ற பாதையாய்
தொடாமலே செல்லுமோ வானம்
எழுதுகின்ற போதிலும்
நீ விலகுவேனோ என்னை
சிரிப்பிலே தவழும் குழந்தை
மறக்குமோ தன்னையன்னை
எருது வண்டி செய்ப்போனான்
மெக்கிலாதபடிக்கு
கிடைத்த மரமோ விறாகிப்போக
பயணம் மட்டும் தொடர்கிறது.

 

 

 

எழுதுகின்ற வேளையும்
நான் மறந்திருந்தால் என்னை
நினைவூட்டும் சூரியன்
எங்கு மறந்து தொலைந்தான்
பாடலின் தெளிவும்
ஆரம்பம் ஆகின்றன
சூழ்நிலை கைதியாய் மாறிவிட
எல்லாம் உனக்கு
கவலைப்படாதே எதிர்க்கலாம்
உன்னை நானும்
வென்றெடுக்கலாம் என்னை நானும்
எதிர்க்கின்ற வேளையும்
தொலைந்து போக
மீதியிருத்தலின் ரகசியம்
எனக்குள் உதயமாகவில்லை இன்னும்
சூரியனோ மெல்லச் சிரித்தபடி
மெதுவாய் நகர்கிறான்.
ஆசை கொண்டேன் அவனுள் செல்ல
அனுமதிக்குமோ காலம்
ஆசை தீராக் காதல் கொண்டேன்
இடைவெளியை தகர்த்தெறிந்து.

சூரியனும், நானும்
பொழுதுகளின் விளையாட்டில்
சிக்கித் தவிக்கும் பொம்மையாய்
அலறுகின்ற குழந்தையின் தூக்கமும்
செயலில் ஏதும் நினைத்தபடியற்றுத் தவித்து
பெற்று எண்களை காகிதத்தில் எழுதி
வானத்தில் பறக்கவிடும் நான்
எங்கே தொலைந்தாய் என
உன்னை நானும் என்னை நீயும்
கேட்டுத் தொலைக்க
சிரித்தபடி சிவக்கும் சூரியன்
மேலெழுவான் ஓர் ஓரமாய்
சிந்தையற்று அமர்ந்திருந்தால்
சுளீரென அடித்து
பிரக்ஞையாய் பேச வைப்பான்.
இழந்து போன நிமிடங்களை
எண்ணிக் கணக்கிட நிமிர்ந்தால்
இருதயத்தின் நிகழ்காலம் பலியாகிறது.
அனலின் ஓரம் முகம் சிவக்க அமர்ந்தேன்
வயிற்றின் உபாதையையறிந்தளித்தது.
செத்துப் போனவர்களின் புகலிடம்
மாற வண்டும் என்றேன்..
ஓர் இடமும் பாக்கியில்லையென்றான்
கண்ணீர் வற்றிக் காய்ந்துபோன
கண்களை
மீட்டுத்தர முடியவில்லையா என்றேன்.
கவலையுடன் அவனும் சிரித்தான்.
நிகழ்காலத்தின் அற்புதம் அவ்வப்போது
மறந்துவிடு என விளையாட
நானோ இருப்பில் இருப்பதை
ஒடெக்கு போட்டுவிட்டேன்.
நீர் கண்டு விளையாடினேன்
அது கானல் நீரெனத் தெளிந்தேன்.

ஊர்கள் பல சென்றேன்.
கோவிலே தெரிந்தது.
நண்பர்கள் தோழிகள்
அவனேயாயினர்
திரும்பி வந்தேன்.
எனக்கு முன்னே காத்திருந்தான்
தெளிந்தும் தெளியாமல்
சிரித்து வைத்தேன்.
அமைதியின் சிரிப்பை
கண்களில் காட்டினான்.
இன்னும் காத்திருக்கவோ நான்?

 

 

மண்
நீரை நிரப்பி மண்ணை பதம் பார்த்து
மனசோடி விளையாடி
வந்து விட்டான்
எங்கிருப்பாய் என அறிந்து கொள்ளும் பட்சத்தில்
அமைதியாய் மறந்திருந்திருந்தேன் என்னை.
ஏகமாய் வசவுகளுடன் காத்திருந்தாள் ஒருத்தி.
வீடு பற்றிக் கவலைப்பட
மனசில்லாமல் ஓய்ந்து போக
மெல்ல வரும் மல்லிகைப் பூவாய்
மனசு மாறியாச்சு.
அவன் மிதித்த மண்ணை
ஏகதேசமாய் அள்ளிக் கொண்டாயிற்று
உயர்ந்தோங்கும் மலையிடை
ஊடுருவும் காற்றுப் போல்
ஆசை வந்து நதியாய் வழிந்தோடியது.
சின்ன சின்ன எறும்பு வந்து
சர்க்கரைத் தடாகத்துள் விழுந்தது.
குழந்தையின் சிரிப்பில் மறந்திருக்குமா அன்னை
தன்னையென விதியில் விளையாடுகிறாள் ஒருத்தி.
எழுந்தருவாள் என பாய்ந்தோடிச் சென்றேன்
என் முன்னே வீட்டில் காத்திருந்தாள்
அன்னை.
இறைஞ்சுகின்ற குரலில் தன் ரத்தம் வழிய
ஏங்குமோ தன் பறவை.

மெதுவாய் மறந்திருமோ தன்னை.
ஒன்றொன்றாய் எண்ணினேன்
இருட்டில் சிக்கித் தவிக்கும் குழந்தை
மறந்து விடு என்றதியற்கையுடன்
கலந்திருந்த வேளையில்
நான் நினைத்த ஒருவன்
அன்பானான் என் முன்னே.

காற்று, காற்று
சிவக்கும் பாதங்களில்
கொலுசு அசைய சிரிப்புடனே என்தோழி
வந்தவர்ந்தான் என் அருகே
சந்தனமும் குங்குமம் நெற்றியில்
சிவக்க வெற்றிலையும்
சந்தோஷமாய் பூவிட்டு வைத்தாள் அவனுக்கு
உறையில் இட்ட பஞ்சுப் பொதியை
மேகத்தில் சிதறியடித்தாள்
பின் மீண்டும் குழந்தையாய்
அழுதடம்பிடித்து வேண்டும் என்றாள்.
சிரிப்புடனே சின்னக் குழந்தை என
செல்லமாய் திட்டி நகர்ந்தான்
எங்கிருந்தோ வரும் காற்று
ஏகதேசமாய் உள் நுழைந்தாடியது
கண்கள் சிவந்து அழுகையில்
உறங்க வைத்து சென்றது.
கவலையில் தோய்ந்த சிரிப்பை
பதமுடன் வைத்திருந்தேன்
தொலையுமோ என் அஞ்சி
விழிகளை காட்சியில் நிறைத்தபடி சென்றேன்
மனிதர்கள் வாடிப் போயினர்
மீண்டும் கண்களை எங்கே வைப்பதாம்
சிரித்தபடி அழைத்துச் சென்றது
ஒரு வண்ணப் பறவை.
சிவந்திருக்கும் மண்ணில்
சிரித்து விளையாடும் தாவரமாய்
காட்சியளிக்கும் காற்றுக்கு ஒத்திப் போடுதல் அத்துபடியாச்சு.

அவலம்
என் சொற்களை மிக முயற்சி செய்தும்
மீட்டெடுக்க இயலவில்லை.
ஏதோ ஒன்றுக்காய் எழுதுகிறேன்.
அது உனக்காக அல்ல.
என் அறியாமைகள் நீ உணர்த்த
நான் மகிழ்கிறேன்.
எனக்கான விதிகளை நானே செயல்படுத்த
என் சொற்களை பிடுங்கி கோரமாய்
என் முகத்தில் நர்த்தனமாடும் அது.
நான் என்ற சொல்லும்
நீயும் நிஜமான ஒன்றல்ல.
பின் எதுதான் நிஜம்.
நிகழ்வு நிஜமல்ல எதுவும் நிஜமல்ல.
போலிகளின் விளையாட்டில்
சூதறியாமல் சிரிக்கும் குழந்தை.
குழந்தையின் விளையாட்டில்
திணறும் நாட்கள்.
நீ எப்படி சொன்னாலும்
சரியாகச் சொல்லாய்
நிஜம் தவிர.

விரல்கள்
விரல் வழியே நழுவிப்போனது எனது ஆசைகள்,
விழுங்கித் தவிக்கும் பாம்பாய் மனசு
எதுவுமற்று இடுப்பை வளைக்கும் எண்ணம்
ஏங்கிப்போய் சாக்கடையில் வீழும்
எல்லாம் சரியென
சும்மா இருந்தது பார்வை
எதற்கும் இருக்கட்டும் என
சொல்லி வைத்தது தற்கொலைக்கு
என்றாலும் முடியாது போயிற்று
உயிரைத்தின்று நீண்டு வாழ
ஏகப்பட்ட உபதேசங்களை
பரணில் அடுக்கியானது
இறக்கிவைக்கும் சுமைகளோடு
என்னையும் சேர்த்து
கட்டிப் போட்டாயிற்று
எல்லாமுனக்குத்தான் சொல்லிச்சிரித்தான்
விஷப் பற்கள் தெரிய
அதுவும் சரிதானென
ஏகமனதாய் ஒத்துக் கொண்டபின்
என் கால்களை நானே வெட்டினேன்
சிறகுகள் ஒடிந்த பறவையாய்
வானத்தில் கிடக்கிறது உயிர்.

 

முக்கியமாய்
ஏதோவொன்றுக்கெனத் தொடங்கி
எல்லாவற்றுக்குமாய் காத்திருந்தேன்
எதுவும் கிடைத்தபடியில்லை
கொஞ்சம் கவிதை தவிர.
மீண்டும் மீண்டும்
பிரயாணங்களில் அலுப்பேயில்லாமல்
தேடலைத் தொடர்கையில்
எந்திரங்களின் சப்தம் மட்டும்.
பொழுதுபோக்குக்காய் கொஞ்சம்
தேவைக்காய் கொஞ்சம்
மிக அவசியத்திற்காய் கொஞ்சம்
என வார்த்தைகளை உதிர்த்தபின்
அவை காணாமல் போனது
மௌனத்தையும் தனிமையையும்
என்னிடத்தில் தந்து.
சிரிப்பதற்கென எல்லோருக்கும்
ஏதோகிடைக்கிறது.
மிகச் சலனங்களுடன்
நான்.
தவிர
முக்கியமாய எதுவுமில்லை

செ.சுஜாதா ஒவ்வாமையின் வாசனை

download (10)

 

 

சர்ப்பம் போன்ற உனது வருகையால்

சலசலத்துக் கைமாறும் என் தேசம்

கரை ஒதுங்கும்

கடல் தின்ற மிச்சமென

 

வால் முளைத்த வலிகள்

குருதியின் வாசனை பொங்க

நீந்தத்தொடங்கும் அதன் பாதையெங்கும்

 

நனைந்த தீபத்தின் திணறும் ஒளியினூடே

கருகிப்புகையும் மௌனகாலத்தில்

மனம் சுரண்டி

ஒற்றை அச்சில் சுழன்று அடங்கும்

சர்ப்ப வருகை

 

நான் ஒருஓவியம் வரைந்தேன்

 

பறக்கும் அந்த ஜோடிப்புறாக்களில்

ஒன்று நான் எனில் மற்றொன்று யார்

என்ற ஆர்வம் உங்களுக்கு

 

மூடிய அந்தக் கதவுக்குப் பின்னால் இருப்பது

நான் தான் என்பதை

உறுதி செய்துகொள்ளும் பதற்றம் உங்களுக்கு

 

அடித்துப் பெய்யும் அம்மழைக்காட்சி

என் சோகமா வெறுமையா காமத்தின் சாயலா

பெருத்த ஐயம் உங்களுக்கு

 

ஒரு மோப்பநாயினை ஒத்து

என் ஓவியத்தைக் கலைத்திருக்கிறீர்கள்

 

நானொரு கவிதை எழுத விளைகிறேன்

அதிலேனும் என்னைத் தேடாதிருங்கள்

 

***

 

ஆதவன் தீட்சண்யா ஆள்மாறாட்டம்

download (6)

 

 

 

 

 

இனியும் தள்ளிப்போடவேண்டாமென்று இரங்கி

பார்த்துவர போயிருந்த என்னை

அதீதப் பிரியங்களுடன் வரவேற்ற கடவுள்

ஐந்தாறு நாட்களாவது

விருந்தினனாக தங்கிப்போக வேண்டினார்

ஏழேழு லோகத்தையும் அண்டசராசரங்களையும்

இடையறாது பார்த்து இயக்கும் பொருட்டு

இமைக்கவே இமைக்காது

சிசிடிவி போன்று ஓயாதொளிரும் அவரது கண்களின்

பொழிந்தணைக்கும் கருணையை

தட்டிக்கழிக்க முடியாமல் தங்கிப்போக சம்மதித்தேன

மேலோகமா பாதாளமாவென அறிந்துணராப் பாங்கில்

நட்சத்திர விடுதியின் வசதிகளோடிருந்த மாளிகையில்

எனக்கென்று அவர் நிர்மாணித்திருந்த அறை

பூமியைவிட விசாலமானது

ஒம்பாமல் போகக்கூடும் என்பதால்

பாற்கடலைத் தவிர்க்கச் சொன்ன கடவுள்

நீராடுவதற்கென வெதுவெதுப்பான நன்னீர்க்கடலையும்

உடுத்துவதற்கு நீராவியன்ன துகில்களையும்

ஏழுபுரவிகள் பூட்டிய ரதத்தை சவாரிக்காகவும் அருளினார்

தேவைப்பட்டதை

நினைத்தமாத்திரத்தில் வரவழைத்துக்கொள்வதற்காக

அங்கிருக்கும் நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் வகையில்

தனது சக்தியில் ஒரு பகுதியையும் கொடுத்து

என்னையும் தன்னைப்போல்

தற்காலிகமாய் ஆக்கியிருந்தார் கடவுள்

கடவுளைக் கொன்றுவிட்டு

அவரது இடத்தை நிரந்தரமாய் கைப்பற்றும் ஆசையை

இவ்விதமாக தூண்டிவிட்ட கடவுள்

நான் திரும்பவேண்டிய நாளின் இரவில்

காணாதொழிந்தார்

இமைக்கவே முடியாத என் கண்களால்

பூமியைப் பார்க்கிறேன்

நானாகச் சென்றுவிட்ட கடவுள்

உல்லாசமாய் சுற்றித்திரிகிறார் அங்கு.

***

 

 

 

 

கண்டராதித்தன் கவிதை

download (4)

 

கொடுங்கால் ரத்தக்காட்டேரியுடன்

நெடுநாள் பழக்கம் எனக்கு

சாமப் பூசைகளுக்கு தூபக்கால்  திருடித் தந்து

அதனுடன் சம்சார சினேகம்

பதிலுக்கு சேவல் பாடி,

தேங்காய் மூடிகளென உபசரிப்பும் அதம் பறக்கும்

எழுத்தூர் கபாலச்சாமிக்கு என்மேல்

வருத்தமென்று எனக்குத் தெரியாது

எக்சர்சைஸ் எடுபிடிகளைவைத்து என்னை

வெட்ட முடிவு செய்தார்

வெட்டுக்குத்து ரத்தமெல்லாம் நமக்கு

சகஜம்போல் பிடிபிடித்தேன்

நாலாம் நாள் நள்ளிரவின்  நடுச்சாமம்

கட்ட இது நல்ல நேரம் யாரைக்கட்ட என்றது                                                      

வைத்தவினை செய்வினையாகட்டும்

நீலி சூரியின் மாயை ஓய்ந்து போகட்டும்

இவர்களைக் கட்டு நீ என்றதும்

திகைத்த காட்டேரி கட்ட மறுத்தது.

எட்டி ஒட்டுக் கேட்டு

பெட்டிப்படுக்கைகளை

கட்டிமுடித்த கபாலச்சாமி

இருகூர்வரை நீட்டி விட்டார்

ஒரு கொட்டாவி.

( இசைக்கும்,இளங்கோ கிருஷ்ணனுக்கும்)

ஷாஅ கவிதைகள்

images

 

 

கவிதை 1

 

 

எத்தனை புயல்

 

அத்தனை மணல் உரசி நிற்கும்

 

வெள்ளை காணாத சுவர்

 

கீழே

 

கவிழ்ந்தும் கவிழாமலும்

 

கரும்பானையொன்று

 

எப்பொழுதும் மத்தியானமாக இருக்கும்

 

ஒரு உச்சிப்பொழுதில்

 

பானைக்குள் எட்டிப்பார்த்தேன்

 

அங்கே இருளில்லை

 

எல்லாம் இருட்டாக இருந்தது

 

அடியாழத்தில்

 

உருவிய வாள்போல்

 

முதல் வீரனின் வானம் பளிச்சிட

 

தலை நிமிர்த்தி

 

அண்ணாந்து பார்க்கிறேன்

 

நூறு நூறு ஆண்டுகள்முன்

 

இத்தலைமேல் படிந்த

 

அதே வெயில்

 

 

 

-ஷாஅ

 

 

 

கவிதை 2

 

 

 

 

 

மைதானத்தில் கால் வைத்ததில்லை

 

குறுக்கே நடந்து செல்ல அனுமதியுமில்லை

 

ஆனால் எப்பொழுதும்

 

ரசிகனாக இருக்கிறேன்

 

குதூகலமாக அரங்கத்தில் அமர்ந்து கொள்கிறேன்

 

எல்லோருடனும் சேர்ந்து

 

உற்சாகமாக ஆட்டம் போடுகிறேன்

 

பிடித்த அணி ஜெயிக்கவேண்டும்

 

தோற்றுப்போனால்

 

அவன் சரியில்லை

 

இவன் சரியில்லை

 

வசை கொஞ்சம் பாடித் தீர்த்தபடியே

 

ஆட்டம் என்றால் அப்படித்தான்

 

வரும் போகும்

 

என்னை நானே தேற்றிக்கொள்கிறேன்

 

ஒருநாளும் எப்படி

 

விளையாடுவது எனக் கற்றுக் கொள்ளாமலே

 

திரும்பிப் போகிறேன்

 

ஒவ்வொரு இருக்கையிலும்

 

ஒரு கிழிந்த சீட்டு

 

 

 

.**

மணிவண்ணன் வெங்கடசுப்பு கவிதை

அறிமுக படைப்பாளி
மணிவண்ணன் வெங்கடசுப்பு கவிதை

இந்த உலகமே
அழும்போது
நீ மட்டும் சிரித்துக்கொண்டிருந்தாய்
உன்னை
காலத்தின் நிராகரிக்கப்பட்ட தழும்பு
என்று வெறியுடன் எதிர்த்தோம்
உன் சிரிப்பு
எங்களிடம் தொற்றிக்கொண்ட பொழுதில்
உன்னை அழவைத்து
கைகொட்டி சிரித்தோம்
நீ அழுத கண்ணீர்
ஆறாய் பெருகி ஓடுகையில்
அதில் மலம் கழுவி
பிணத் தெப்பம் விட்டு
பிலாக்கணம் பேசினோம்
தாய்மையுடன் எங்களை
நீ
தழுவ முற்படுகையில்
உன் பாலூட்டும் தனங்களை
பேய்களென பிய்த்து தின்றோம்
ஒவ்வொரு முறையும்
இரவில் உனை தூக்கிலிட்டு
பகலில் உயிரிப்பித்தோம்
இன்னும் எங்களுக்கென
என்ன வைத்திருக்கிறாய்?
கேள்விகளாலேயே உனை துளைத்து எடுத்து
அலாதி திருப்தி காண்கிறோம்
ஆயினும்
உனைப் புரியாமல்
நாங்கள் வாழ்ந்த அந்த நாட்கள்
அதி அற்புதமானவை!

கவிதை அறிமுகப் படைப்பாளிசெந்தமிழன் கவிதைகள்

கவிதை
செந்தமிழன் கவிதைகள்

 

 

images (6)

உண்டியல்

ஒவ்வொரு உண்டியலும்
சேமித்து வைத்துள்ளது
ஓரிரு சில்லறைகளையும்
ஓராயிரம் ஆசைகளையும்

ஒப்பாரி

பலர் பெற்ற நிழல்
ஊஞ்சலாடிய சிறுமி
கிளை நிரப்பிய பறவைகள்
பழம் தின்ற பயணிகள்
உடல் சொரிந்த எறும்புகள்
என விடாமல் புலம்புகிறது
ஒரு வெட்டப்பட்ட மரம்

பசி

உணவருந்த மறுக்கும் குழந்தைக்கு
எதைஎதையோ காட்டிச் சோரூட்டினாள்
பசிக்கு அழுகும் இன்னொரு குழந்தையை கூட

காவலாளி

இரவெல்லாம் விழித்திருந்து
ஒய்யாரமாய் தூங்கும்
நாயின் மேல் பொறாமை கொண்ட
வீட்டை காத்த கிழவன் பெறுகிறான்
அதை ஒதுக்குப்புறமாய் கூட்டி
செல்லும் வேலையை

காதல்

நாம் சேர்ந்து விளையாடிய
ஊஞ்சல் கயிற்றில் தனியாக
தொங்கியிருக்க வேண்டாம்
நீ மட்டும்

**