Category: அறிமுகப் படைப்பாளிகள்

பிலஹரி மார்த்தாண்டம் ராமகிருஷ்ணன் ( சிறுகதை ) / ரமேஷ் கண்ணன்

பிலஹரி மார்த்தாண்டம் பிள்ளையைப் போலவே காட்சி தருவார் ராஜேஷின் தந்தை. நான் தான் ஒருநாள் எதேச்சையாகச் சொன்னேன்.அப்படியொரு அரைதொந்தி கூர்மையான பார்வை மனைவியின் மீது காட்டும் அதீத உரிமை.யாரையுமே விட்டேத்தியாக சொல்லால் காலி செய்யும் தைரியம் அவருக்கு இருந்தது.அந்த காலத்தில் வந்த அரசு வேலையை வேண்டாமென்று சொல்லி விட்டு தமிழகத்தின் புகழ்பெற்ற நிறுவனத்திற்கெனத் தன்னையே ஒப்புக்கொடுத்தவர்.

தற்போதைய ஊதிய விகிதத்தில் அவரெடுத்த முடிவு தவறானதே ஆனாலும் அதையொரு பொருட்டாக கருதாது கம்பெனி பெருமையால் தனக்குத் தானே மகுடத்தை சூட்டிக் கொள்வார்.ஒருவகையில் கம்பனியில் அவருக்கென்று தனி ஜீப்பொன்றே தந்திருந்தார்கள்.தும்பைப்பூ நிறத்தில் டிரைவர் சீருடையணிந்து வீட்டின் முன்பு பவ்யமாய் காத்திருப்பதில் ராமகிருஷ்ணனுக்கு மனமெல்லாம் பூரித்துக் கிடக்கும்.அரசு நிறுவனத்திற்கு சென்றவர்கள் இவரைக் காட்டிலும் வசதியாக இருந்தாலும் இந்த மரியாதையை அவர்கள் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது.இந்த போதை தான் உயர்நிர்வாகப் பணியாளர்களை நிறுவனத்தோடு வசமாய்க் கட்டிப் போட்டது.

ராமகிருஷ்ணன் தனது அத்தை பெண்ணையே திருமணம் செய்து கொண்டார்.அவ்வளவு படிப்பறிவு இல்லையென்றாலும் குடும்பத்தைக் கொண்டு செலுத்துவதில் சமத்து.பிலஹரி வீட்டில் என்ன நடக்கிறது என்பதையெல்லாம் கருத்தாகவே எடுத்துக்கொள்வதில்லை.சரோஜா அம்மா கைபக்குவம் எட்டு வீட்டையும் தாண்டும்.பிள்ளைகளுக்கும் அவருக்கும் ரசனையாக ஆக்கிப் போடுவதற்காகவே கடவுள் படைத்தான் என்பதாக சதா அடுப்பங்கரையிலேயே கிடப்பாள்.இரண்டு வெஞ்சனம் வைத்து அப்பளம் வடகம் வத்தல் பொரிக்காமல் ஒரு மதியத்தை விடமாட்டார்.

கவுச்சி இல்லாத ஞாயிறு ஆவணி மாதத்தில் மட்டுமே வரும்.

பிலஹரிக்கு ஆபிஸ் அருகே இருந்தபடியால் பெரும்பாலும் மதிய உணவுக்கு வந்து விடுவார்.அவர் குறை சொல்லாத நாளை எண்ணி விடலாம்.அது வெறும் பேச்சு என்பதும் சரோஜாவுக்குத் தெரியும்.நாங்கள் கூடுமிடம் ராஜேஷின் வீடு தான்.ராஜேஷுக்கு கோபால் என்றொரு அண்ணன்.அவருக்கும் நண்பர்கள் உண்டு.ஆனாலும் கூடும் பருவத்தை அவர்கள் கடந்து விட்டார்கள்.இப்போது எங்களின் முறை.கிடையாய் கிடப்போம்.சீட்டுக்கட்டு கேரம் போர்டு டேப் ரிகார்டுகளில் பாடல்கள் கேட்பது பொழுது நன்றாகப் போகும்.அவ்வவ்ப்போது நாங்கள் எழுப்பும் ஓசையும் கூச்சலும் அம்மாவையே கோபம் கொள்ளச் செய்து விடும்.மாடியில் போட்டிருந்த கோடைகாலப் பந்தலுக்கு விறுவிறுவென வந்தவர் ஒருநாள் சொன்னார் எனக்கு மட்டும் பெண் குழந்தையொன்று இருந்தால் ஒரு பய இங்கிட்டு வந்திருக்க முடியாது என்றார்.நாங்கள் சிரித்தோம் அம்மாவும் சிரித்தாள் இல்லையா பின்னே களவாணிப் பயலுகளா என.

பிலஹரி சொந்த கிராமத்திலிருந்து மதுரை வந்த பின்பு அவரை வைத்து படிப்பு வேலையென தனித்தனியாக வந்தவர்கள் குடும்பமாக வந்து தங்கி விட்டனர்.பெரிய அளவில் பொருளுதவி இல்லையாகினும் அவருடைய சிபாரிசு மூலம் ஒவ்வொருவரும் தலையெடுக்க ஆரம்பித்து விட்டனர்.

வள்ளியம்மாள் அவருக்கு மகள் முறை வீட்டிற்கு அருகிலேயே குடி வைத்தார்.கணவர் சோலையும் சொந்தம் தான்.அவரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அருகிலுள்ள துணிக்கடையில் சேர்த்து விட்டார்.அவர்களுக்கு திருமணமாகி பத்து வருடமாகிறது.குழந்தைப்பேறு இல்லை.சரோஜாவோடு ஒட்டிக்கொண்ட வள்ளியம்மாள் சோலை கடைக்குச் சென்ற பின்பு பிலஹரி வீடே கதியெனக் கிடப்பாள்.

துணி துவைப்பது பாத்திரம் துலக்குவது வரை அத்தனை விருப்பமாய் இழுத்துப்போட்டு செய்வார்.வள்ளியம்மாள் வீட்டு அடுப்படிக்கு வேலையே இருக்காது.சோலை வேலை முடித்து பிலஹரி வீட்டிற்கு வந்து வள்ளியை அழைத்துச் செல்வார்.வள்ளி சோலைக்கான உணவை அதற்கென உள்ள பாத்திரங்களில் எடுத்துத் தயாராக வைத்திருப்பாள்.வள்ளி அக்கா வீட்டில் இருக்கையில் வீட்டையே கலகலப்பாக வைத்திருப்பாள்.அவளுக்கெனத் தனி சோகம் இருப்பதே அவளுக்குத் தோணாது.

வள்ளியொருத்தி தான் பிலஹரியிடம் வார்த்தைக்கு வார்த்தை மல்லுக்கு நிற்பவள்.அவர்கள் சண்டை போடுவதைக் காணுகையில் அத்தனை வாஞ்சையோடு பேசிக்கொள்வதைப் போலவே தோன்றும்.பெரும்பாலும் வள்ளி தானாக வலிந்து தோற்று விடுவாள்.அவளது பேச்சு வெற்றியாக மாறுகையில் தான் கண்ணைக் கசக்கிக் கொண்டு அழுவாள்.சரோஜாவுக்கு நன்றாகப் பழகிப்போனது.சரோஜாவுக்குப் பரிந்து பேசித்தான் சச்சரவே ஆரம்பித்திருக்கும்.

மாறி வரும் சூழலில் பிலஹரியின் கம்பனி பல ஆண்டுகளாக ஊதிய உயர்வை அளிக்காமல் தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தது. கீழ்மட்டத்தில் இது பெரும் புகைச்சலானது.கம்பனி ஆரம்பித்ததில் இருந்து தொழிற்சங்கமே இல்லாத ஒன்றென்றால் அதுதான்.அவ்வவ்ப்போது இதைப் பெருமையாக சொல்லிக்கொள்வார் பிலஹரி.அதனால் தான் எங்கள் கம்பனி லாபத்தில் இயங்குகிறது.

தொழிற்சங்கம் வந்தால் உரிமை போராட்டம் என இழுத்து மூடுவார்களென விவாதிப்பார்.எனக்குத் தோன்றிய ஒன்றிரண்டு விஷயங்களைச் சொன்னாலும் முரண்படுவார்.சில நாட்களுக்குப் பின்பு அங்கு யூனியன் ஆரம்பிப்பதற்கான சட்டரீதியான நடவடிக்கைகளையும் ஊழியர்கள் மத்தியில் ஆதரவையும் திரட்டி ஒரு குழு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டது.பிலஹரி கம்பனியின் தீவிர விசுவாசி.அவருக்கு ஊழியர்களைக் கண்காணிப்பதும் மூளைச்சலவை செய்வதும் துணைப்பணியாக வழங்கப்பட்டது.ஆளுங்கட்சி எதிர்க்கட்சி யென ஆதரவு இருந்ததால் அந்த குழுவினர் தனித்தனி நபராகப் பிரிக்கப்பட்டு கம்பனியை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

தொழிற்சங்க கோரிக்கைகளில் நூறு சதம் நியாயம் இருப்பினும் காலச்சூழலில் ஒரு வேலையை இழந்து போராடும் வாழ்க்கையை யாருமே ஏற்றுக்கொள்ள மனம் வாய்க்கவில்லை.இரண்டாண்டுகள் இங்கும் அங்குமாய் அலைந்த போராட்டக் குழுவினர் சின்ன பெட்டிக்கடைகளை ஆரம்பித்து வாழ்க்கையை ஓட்டினர்.

பிலஹரி இப்போதெல்லாம் பழைய மாதிரி இல்லை.எங்களோடு சகஜமாகப் பேச ஆரம்பித்தார்.எனக்கு இது வினோதமாகப் பட்டது.சிறுவயதிலிருந்து கூடும் நாட்களில் அவர் நிழல் தென்பட்டாலே நாங்கள் மெள்ள நகர்வோம்.அவரைக் கண்டவுடன் வணக்கம் பா போயிட்டு வர்றேன் பா என்றபடியே சென்று விடும் எங்களை இப்போதெல்லாம் உக்காத்தி வைத்து பேசுகிறார்.இது நாங்கள் எதிர்பார்க்காத ஒன்று.

ராஜேஷின் அப்பா ஒருநாள் காலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.அலுவலக சீருடை தும்பைப்பூ நிறம்.நான் வண்டியை நிறுத்தி என்னப்பா நடந்து போறீங்க என்றேன். ஒண்ணுமில்லபா சும்மா நடந்து போறேன் என்றார்.வாங்கப்பா நான் ஆபிசுல இறக்கி விடுறேன்னு சொல்லி வண்டியில் ஏத்திட்டுப் போய் இறக்கி விட்டு வந்தேன்.இறங்குகையில் எனது கைகளைப் பற்றியவர் கண்கலங்கியபடியே விடைபெற்றார்.நான் அதை கவனிக்காதது போலவே காட்டிக்கொண்டேன்.இப்போதைக்கு அதுதான் அவருக்கு ஆறுதல். அந்த நிறுவனத்தின் ஆளுயுறக் கதவுகள் திறந்தன.செக்யூரிட்டியின் சுரத்தில்லாத வணக்கம் என்னையே என்னவோ செய்தது.

மூச்சு முட்டும் பெருமை பேசிய கம்பனியின் சுயரூபத்தை ஓரளவு என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. தனிப்பேச்சில் ராஜேஷிடம் கேட்கையில் குறிப்பிட்ட தொலைவுக்கு அருகே இருப்பவர்களின் வாகன வசதியை நிர்வாகம் நிறுத்தி விட்டதாகவும் மதிய உணவை வீட்டுக்கு வந்தெல்லாம் சாப்பிடக்கூடாதென்றும் சொல்லி விட்டார்களாம்.இதுவொரு பிரச்சனையாக அவருக்கு ஆகி விட்டது. நாலு வார்த்தை அம்மாவைத் திட்டி அவளின் முகம் பார்த்து சாப்பிட இயலாததும் பிலஹரிக்கு வருத்தமாகி விட்டது.

இது இப்படியாகப் போய்க்கொண்டிருக்க இன்னொரு முறை மாலை நேரம் அவர் நடந்து வந்து கொண்டிருந்தார்.நான் அவரை அமரவைத்து சென்று கொண்டிருந்தபோது நீ தப்பா நெனைக்கலையினா பத்தாயிரம் தேவைப்படுது என்றார். ராஜேஷ்ட்ட சொல்லிராத என்றார். என்னப்பா பெரிய வார்த்தைலாம் சொல்றீங்க என்னால ஐயாயிரம் முடியும்பா.நீங்க திருப்பி தரணும்னு அவசியமில்லைன்னு சொல்லி விட்டேன்.எதற்கு என நான் கேட்காத நிலையில் எனக்கு வண்டி ஓட்டுனான்லப்பா மாரிமுத்து பிள்ளைக்குக் கல்யாணம் வச்சிருக்கான்.

பத்தாயிரம் தேவைப்படும் போல.என் காதுக்கு சேதி வந்துச்சு அதான்பா என்றார்.அப்பா என்ட்ட இப்படில்லாம் விளக்கம் சொல்லத் தேவையில்லை பான்னேன்.சரி வண்டிய வீட்டுக்கு விடு போவோம்.
பிலஹரி அவர்களின் ஸ்ருதி குறைந்தபடியே இருந்தது.ஆனாலும் சரோஜா எப்போதும் போலவே அவரிடம் தலையைக் கொடுத்து முரண்டு செய்தபடியே இருப்பாள்.அவளுக்கு நாளொன்றில் வசை வாங்கவில்லையென்றால் சோறே இறங்காது.இது பிலஹரிக்கும் தெரியும். உப்பும் உறப்புமே பெரும்பாலும் கை கொடுத்து விடும்.சமீபமாக சாப்பாட்டு நேரத்தில் பிலஹரி ஏதும் சொல்வதில்லை.

சரோஜா அம்மாவுக்கு இதை எப்படியாவது மாற்ற வேண்டுமென முயன்று பார்த்தாள்.பாத்திரங்களை வேண்டுமென்றே தவற விட்டாள்.பிலஹரி அசைந்தபாடில்லை.வீட்டின் அருள் குறையத் தொடங்கி விட்டது. நாள்பட்ட சுவர்களில் ஒளி இருளை எதிரொளிக்கச் செய்தது.குறைந்த வோல்டேஜில் அவர்கள் வாழ்க்கையை வாழத்தலைபட்டனர்.

வள்ளியக்காவும் முன்பு போல வருவதில்லை.ஒரு நாளிரவு நடந்த வாக்குவாதத்தில் வள்ளி அக்காவை அடிக்கக் கையை ஓங்கினார் பிலஹரி.

சோலை அதுவரை இல்லாததாய் விசனமாகப் பேசிவிட்டார்.தாங்கமுடியாத பிலஹரி நிலைகுலைந்து போனார்.வள்ளியக்கா எவ்வளவு சொல்லியும் சமாதானப்படாத பிலஹரி முகத்தைத் திருப்பி வைத்துக்கொண்டார்.அன்றிலிருந்து பிலஹரி உள்ள சமயம் வள்ளியக்கா வீட்டிற்கு வருவதில்லை.தனி சமையலுக்கு பழகி விட்டாள்.சரோஜா அம்மாவால் சில தினங்கள் இதனை சமாளிக்க முடியவில்லை.காலம் அவளுக்கு மெள்ள பழக்கப்படுத்தியது.

பிலஹரி வீட்டிற்கு வரும் விருந்தாடிகளின் எண்ணிக்கை குறைந்தன.இரண்டு தெருக்கள் தள்ளியிருந்த பங்காளிகளின் வீட்டிற்கு வந்து விட்டு சொல்லியும் சொல்லாமலும் செல்ல ஆரம்பித்தனர்.இதற்கு முந்தியெல்லாம் பிலஹரி முன் அவர்கள் எவ்வளவு பவ்யமாய் பேசிப்பழகியவர்களென நானே பார்த்திருக்கேன்.

வாழ்வின் ஏற்றத்தாழ்வுகளில் பணத்திற்கு முதன்மையான பங்குள்ளது.மேலும் சிக்கலான நிலையில் உள்ளவர்களைக் கண்டும் காணாது நகர எப்போது பழகுகிறார்கள்.சொல்லி வைத்தாற் போல எண்வரிசை போல கிரமமாய் நடக்கிறது.

திருமணப் பத்திரிக்கைகளை பிலஹரி இல்லாத நேரம் கொடுத்துவிட்டுப்போவது பக்கத்தில் இருப்பவர்களுக்கு நேரில் வைத்து விட்டு இவருக்கு தபாலில் அனுப்புவது எல்லாமே நடந்தது.
சிங்கமாய் கர்ஜனையோடு இருந்த பிலஹரி அரை விளக்கொளியில் அமரப்பழகிக்கொண்டார்.கம்பனியிலிருந்து ஓய்வுபெறுகையில் அவரை சகலவிதத்திலும் மரியாதையாகவே பிரிவு உபசார விழா நடத்தி வழியனுப்பி விட்டார்கள்.

முருகப்பன் பிலஹரி வேலை பார்த்த கம்பனிக்கு ஒப்பந்த அடிப்படையில் உதிரி பாகங்கள் சப்ளை செய்பவன்.பிலஹரி மீது பெரிதும் மரியாதை வைத்திருப்பவன்.அன்றைய விழாவில் அவன் பேசியது அவருக்கு மகிழ்ச்சியளித்தது.

முருகப்பன் கடின உழைப்பாளி.ஒரு காலத்தில் கம்பனியில் வேலை செய்து விட்டு வெளியேறி அவுட்சோர்சிங் முறையில் கம்பனியோடு ஒப்பந்த பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்தான்.

தன் பணச்சிக்கல்களைப்பெரிதும் வெளியே காட்டிக்கொள்ளாத பிலஹரியின் அனுபவம் அப்படியே இருந்தது.மூன்று வீடு தள்ளியிருந்த முருகப்பன் ஒருநாள் காலையில் அவரின் வீடு தேடி வந்து பார்த்தார்.கையில் தாம்பாளத்தட்டில் தேங்காய் வாழைப்பழம் சகிதமாய் வந்து சரோஜா அம்மாவையும் பிலஹரியையும் நிறுத்தி வைத்து சாஷ்டாங்கமாய்க் காலில் விழுந்து புதிய கிளையொன்றை கப்பலூரில் துவங்குகிறேன்.உங்களின் ஆசீர்வாதத்துடன் நீங்களே துவக்கி வைத்து ஆலோசகராகவும் இருந்து வழிநடத்த வேண்டும் என்றார்.பிலஹரிக்கு ஆச்சரியம் என்றாலும் உடனே ஏற்றுக்கொள்வதிலொரு தயக்கம் இருந்தது.

முருகப்பன் ஐயா நீங்கள் எப்பேர்ப்பட்ட கம்பனியில் எப்படி உயர்பதவியில் இருந்தவங்கன்னு தெரியும்.ஒரு குறையும் வராது.தினந்தோறும் காலையில் அலுவலகம் வாங்க ஐயா.அதே மாதிரி மதியம் வீட்டுக்கு வந்துட்டு சாயங்காலம் விளக்கு வைக்கிறப்ப சிறிது நேரம் உக்காந்திட்டு போனீங்கன்னாப் போதும்யா என்றான்.அவன் சொன்ன ஊதியத்தொகையும் கணிசமானது தான்.இப்போதைய பல சிக்கல்களைத் தீர்த்து விடலாம் தான்.

முருகப்பன் கம்பனி துவக்க விழாவை பிரமாதப்படுத்தி விட்டான்.ஃபிரண்ட் ஆபீஸ் அவ்வளவு அருமை.எல்லாவற்றையும் நேர்த்தியாக செய்திருந்தான்.

அன்றைய நாள் நிறைநாளாய் இருந்தது.

நேற்று முருகப்பன் சொன்ன இன்னொரு தகவல் ராமகிருஷ்ணனுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.ஐயா,கம்பனி ஜீப் ஏலத்தில் வந்தது. அதை வாங்கி சர்வீஸ் விட்டு தயாராகி விட்டது. நல்ல கண்டிஷன்.நாளையிலிருந்து நீங்கள் அதிலேயே ஆபிஸ் வாங்க ஐயா என்று சொல்லியிருந்தான் முருகப்பன்.

மாரிமுத்து ஜீப்பை எடுத்து ராமகிருஷ்ணன் வீடு நெருங்குகையில் வள்ளி தலையில் அடித்தபடி ஓடிவந்து கொண்டிருந்தாள்.
ராமகிருஷ்ணன் பிலஹரியாக எழமுடியாது நிரந்தரமாக உறங்கிப்போனார்
•••

இதற்கேதானே ஆசைப்பட்டீர்கள்! – வா.மு.கோமு.

நம்மைச் சுற்றிலும் நடப்பனவற்றை இப்படியெல்லாம் நடக்கிறதென, வேதனையான விசயங்களை கூட ஐயோ என்ற பரிதவிப்பு இல்லாமல் சொல்லிக் கடந்து போகிறோம். தினச்செய்திகளைத் தரும் பத்திரிக்கைகளில் தொடர்ந்து பாலியல் வன்முறைகள் இருந்து கொண்டே இருக்கின்றன. கிழவர்கள் சிறுமிகளை பாலியல் துன்புறுத்தல் செய்கிறார்கள் என்கிற தகவல் வந்து கொண்டேயிருக்கிறது. கிழவர்களைக் கண்டால் குழந்தைகளை வீட்டில் வைத்திருக்கும் பெற்றோர்கள் வீணான கற்பனை செய்து பயப்படுகிறார்கள். அவர்களுக்கு எந்தப்புற்றில் பாம்பு இருக்கும் என்று தெரியாது தான். ஆகவே புற்று என்றிருந்தால் பாம்பு இருக்கும் என்பதாக நம்புகிறார்கள்.

இண்டர்நெட்டில் பாலியல் வலைதளங்கள் இயங்குவது அனைவருக்குமே தெரியும். அவைகள் பல காமுகர்களின் வெறியைத் தணிக்கும் வேலையை செவ்வனே செய்கின்றன என்று தான் படுகிறது. அவைகள் ஜப்பான், இந்தியா, சீனா, அமெரிக்கா, ரஷ்யா என்று பல தேசத்து ஆண் பெண் உறவுகளை பிரித்து வைத்து வீடியோக்களாக பதிவேற்றி வைத்திருக்கின்றன. ஆண் பெண் உடலுறவில் பல்வேறு வகை மாதிரிகளையும் பிரித்து வரிசைப்படுத்தி பார்வையாளர்களுக்கு சிரமத்தை குறைத்து வைத்திருக்கின்றன.

எனக்கு ஆச்சரியம் என்னவென்றால் யார் இவைகளை இப்படி புத்தக லைப்ரெரி மாதிரி மெனக்கெட்டு சேகரித்து அதன் வகைகளைப் பிரித்து வைக்கிறார்கள்? என்பது தான். எம்.எம்.எஸ் என்றும், ஸ்கேண்டல் என்றும் ஹோம் என்றும் லெஸ்பியன் என்றும் கிளாசிக் என்றும் கே என்றும் இவற்றில் பிரிவுகள் இருக்கின்றன. இவைகளில் தினமும் மணிக்கொருமுறை புதிய வீடியோக்கள் ஏற்றப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

அவற்றில் ஒவ்வொரு ஆடவனும் தன் சாமார்த்தியத்தை நிருபித்துக் காட்ட வேண்டுமென்றும், தன்னுடைய வீடியோவும் அதில் இடம்பெற்றிருக்க வேண்டுமென்றும் நினைக்கிறார்களோ என்று தான் படுகிறது. ஒரு அரசாங்க லைப்ரேரியில் தன் புத்தகமும் இருக்க வேண்டுமே! என்று எழுத்தாளன் ஆசைப்படுவது போல. ஒவ்வொரு லைப்ரேரியிலும் தாங்கள் வெளியிட்ட புத்தகங்கள் அனைத்தும் இருக்க வேண்டுமென ஒரு பதிப்பகத்தார் ஆசைப்படுவது போல.

இவற்றில் ஒரு ஆண் தான் பயன்படுத்திக் கொள்ளும் பெண்ணுக்குத் தெரியாமல் தன் அலைபேசியில் பதிவு செய்து அதை வலையேற்றுவதும் நடக்கிறது. அந்த வீடியோக்களுக்கு ரசிகர்கள் பலர் இருக்கிறார்களாம். போக பெண்கள் குளிக்கும் காட்சி திருட்டுத்தனமாக எடுக்கப்பட்டு வலைதளத்தில் ஏற்றப்படுகிறது. பாலியலில் ஒரு மனிதனுக்கு என்னவென்ன வக்கிரங்கள் இருக்கிறதோ அவை அனைத்துமே வீடியோக்களாக ஏற்றப்பட்டு லட்சக்கணக்கில் கிடக்கின்றன.

இதில் பெண்களே தங்கள் உடல் அழகை ரசித்து சுயமைதுனம் செய்து கொள்வதை பார்த்து ரசித்ததோடு ஓயாமல் அவற்றை வலைதளத்தில் ஏற்றி விடுகிறார்கள். வக்கிரங்கள் ஆணிடமும் பெண்ணிடமும் சம அளவிலேயே இருக்கின்றன என்பதை இந்த வலைதள ரசிகர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

இம்மாதிரியான வலைதளங்கள் மனிதர்களின் அளவுகடந்த பாலியல் இச்சையை தீர்க்கும் பணியை செவ்வனே செய்து கொண்டிருக்கின்றன. இவைகளும் இல்லாவிட்டால் செய்தித் தாள்களில் இன்னமும் அளவுக்கு அதிகமான சம்பவங்கள் தான் நடந்ததாக அச்சேறிக் கொண்டே இருக்கும். இந்த சமயத்தில் பாலியல் கல்வியின் தேவையை அனைவருமே உணருகிறோம்.

இந்த வலைதளங்களின் பார்வையாளர்கள் என்று ஆண்களும் பெண்களும் சரிசமமாகவே இருக்கிறார்கள். அவர்கள் யாரும் இந்த வீடியோக்களை சும்மா பொம்மை பார்ப்பது போல பார்க்க வருவதில்லை. பெண்ணானவள் பல ஆண்களின் உடல் அழகை காணவும், ஆணானவன் பலவித பெண்களின் உடல் அழகை காணவுமே வருகிறார்கள்.

பாலியலில் பலவித விருப்பங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கின்றன. லெஸ்பியன் உறவுக்காரர்கள் வலைதளத்தில் லெஸ்பியன் பிரிவிலேயே இருக்கிறார்கள். பின்புற உறவில் ஆர்வமும் காமமும் உடையவர்கள் அந்தப்பிரிவிலேயே இருக்கிறார்கள். இப்படித்தான் இங்கு நடந்து கொண்டிருக்கின்றன.

பொதுவாக மனிதர்கள் பாலியல் உணர்வுகளை உள்ளுக்குள் மறைத்து வெளியே மறுத்துப் பேசியே வருகிறார்கள். பெண்கள் வெளியே அதுவொரு கெட்ட சமாச்சாரம் என்றே பேசுகிறார்கள். அப்படியானவர்களின் காம இச்சையை தீர்க்கும் விதமாக இந்த வலைதளங்கள் செயல்படுகின்றன.

முன்பெல்லாம் மலையாள, ஆங்கில பி கிரேடு படங்கள் தான் ஆண்களின் காம் இச்சையை தீர்க்கும் வடிகாலாக இருந்து வந்தன. ஒரு திரைப்படத்தில் இரண்டு பெண்கள் நடித்திருந்தால் அந்த இருவருமே குளிக்க எப்போது செல்வார்கள்.. என்று காத்திருக்கும் முகங்கள் திரையரங்கில் நிறைந்திருந்தன. அது அரைகுறையாய் நிறைவேற்றப்பட்ட பின் படுக்கையறையில் கணவனின் நண்பனோடு எப்போது உருளுவார்கள்? என்று காத்திருந்தார்கள். அப்படி ஏதேனும் காட்சிகள் திரைப்படத்திலேயே இல்லாவிடினும் தியேட்டர்காரர்கள் பிட்டுப்படங்களை இணைத்து ரசிகர்களின் காம இச்சையை தீர்த்தார்கள். அதற்காக அவர்கள் போலீசுக்கு மாமூல் கொடுத்து அழுதார்கள்.

இன்று இணையதளத்தில் ரசிகர்களை திருப்திப்படுத்துவர்கள் தனக்குத் தானே என்ற திட்டத்தின்படி செயல்படுகிறவர்கள். ரசிகர்களே ரசிகர்களை திருப்தியுறச் செய்கிறார்கள். இந்த வலைதளங்கள் தீமைகளை உற்பத்தி செய்கின்றன என்று ஒருசாரர் வாக்குவாதத்தில் ஈடுபடலாம். மார்க்கெட்டில் வரும் சில சோப்புகள் சிலருக்கு உடலில் ஒவ்வாமையை கொடுக்கத்தான் செய்யும். அந்தச் சோப்பு செரியில்ல, வேற போட்டுப் பாக்கணும்! என்பார்கள். அப்படித்தான் எதுவும்.

குண்டாக இருக்கும் ஆண்களை சில பெண்களுக்குத்தான் பிடிக்காது. சிவப்பாக இருக்கும் ஆண்களை சில பெண்களுக்குத்தான் பிடிக்கும். உண்ணும் உணவிலிருந்து எல்லாவற்றிலும் தான் தீமைகள் இருக்கின்றன. பறவைக்காய்ச்சலில் இருந்து கண்ட காய்ச்சல் எல்லாம் சிக்கன் உணவிலிருந்து தான் மனிதர்களுக்கு வருகின்றன என்கிறார்கள். சாப்பிட வேண்டாம் என்று சத்தமில்லாமல் அதிகாரிகள் கூறி விடுவார்கள். ஒருகிலோ சிக்கனின் விலை இன்னமும் குறைந்தபாடில்லை. அதை உண்பவர்களின் எண்ணிக்கை ஓரளவு குறைந்திருந்தால் இந்த நேரம் அதன் விலையும் இறங்கியிருக்குமே!

ஞாயிறுகளை நடுத்தரவர்க்கம் சிக்கன் உணவை வைத்தே கழிக்கின்றன. ஊசியிடப்பட்டு அதிவேக வளர்சியில் வளரும் இந்தக் கோழிகளால் உடலுக்கு தீங்குண்டு என்பது அவர்கள் அறியாத விசயமல்ல. தவிர நாக்கு ருசி என்று ஒன்று பழகிப்போனதாகவே இருக்கிறது. தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை என்பது போலத்தான். கள்ள உறவுக்கு என்றொரு மதிப்பு இருக்கத்தானே செய்கிறது. திருட்டு மாங்காய்க்கு ருசி அதிகமிருப்பது போல! மேலும் எம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்களே.. கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும் கொரங்கு மாதிரி ஒரு கூத்தியாவும் வேணுமாம்.

நாம் தவறுகளை சுட்டிக்காட்டி கோஷம் எழுப்புவதால் நாளை தவறுகளே நடக்காமல் போய்விடுமா என்ன? பெட்ரோல் விலையேற்றத்தைக் கண்டித்து கோஷம் எழுப்பப்படுகிறது என்றால் 30 காசு குறைக்கப்பட்டதாக அறிவிப்பு வரும். ஒவ்வொரு பெட்ரோல் பங்குகளிலும் தங்கள் வண்டிக்கு பெட்ரோல் நிரப்புபவர்கள் விசாரித்துக் கொண்டா நிரப்பிக் கொள்கிறார்கள்? அப்படி குறைந்த 30 காசு என்னவாயிற்று? என்று விபரமாக கேட்டால், ‘எங்களுக்கு இன்னும் ஆர்டர் வரலை சார்’ என்பார்கள். எரியுற வீட்டில் எது கிடைத்தாலும் மிச்சம் தானே! என்கிற கணக்கு தான் இது.

இப்படி தவறுகள் என்பன மட்டுமே நம்மைச் சுற்றிலும் நடந்தவண்ணமே இருக்கின்றன. தவறுகள் மட்டுமே வெளிச்சமிட்டும் காட்டப்பட்டு வருகின்றன. மக்களுக்கு தவறுகள் மீது தான், அதைப்பற்றி அறிந்து கொள்வதில் தான் ஆர்வம் குவிந்திருக்கிறது. தவறை தவறே இல்லாமல் செய்வதெப்படி? என்பதை அறிந்து கொள்வதில் ஆர்வமாய் இருக்கிறார்கள்.

திருப்பூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்குச் சென்ற பெண் பிரசவ வார்டில் அனுமதிக்கப்பட்டார். குறைப்பிரசவத்தில் ஒரு பெண் குழந்தையை ஈன்றெடுத்தார் அவர். குழந்தையின் எடை 1300 கிராம் இருந்ததால் இன்குபேட்டரில் வைக்கப்பட்டது. மறுநாள் காலை குழந்தைகள் சிகிச்சைப்பிரிவுக்கு டாக்டர்கள் வந்த போது ஈன்றெடுத்த தாயைக் காணோம். போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மருத்துவமனைக்கு தனியாக வந்த அந்தப்பெண் பதிவேட்டில் பிருந்தா வயது 19, கணவர் பெயர் குமார், கே.ஆர்.எஸ் லே அவுட், டைமண்ட் தியேட்டர் எதிரில், திருப்பூர். என்று முகவரி கொடுத்திருக்க போலீசார் விசாரிக்கையில் முகவரி போலியானது என்றும், அந்தப்பெண் திருமணமாகாதவள் என்பதும் தெரியவந்தது. அந்தப்பெண் குறித்து போலீசார் விசாரித்தவண்ணமிருக்கிறார்கள்.

அந்தப்பெண் மீண்டும் இன்னொரு காதலனை தேடிப்பிடித்து குடும்ப வாழ்க்கை வாழலாம். மிக தைரியமான பெண் என்று தான் தெரிகிறது. 100 ரூபாய் மாத்திரையில் முடிந்திருக்க வேண்டிய விஷயம் என்று அந்தப் பெண்ணுக்கு தெரியாமல் இருந்திருக்காது. இதுவே கிராம சூழ்நிலையில் வாழும் பெண் என்றிருந்தால் தற்கொலை முடிவுக்கு சென்றிருக்கக்கூடும். பிள்ளை ஒன்று பெற்றாள், விட்டு விட்டுப் போய் விட்டாள் என்ற தகவலை வைத்து குட்டி ஜப்பானில் போலீசார் எந்தப்பெண் என்று தேடுவார்கள்? நாள் ஒன்றிற்கு நகரில் ஒரு பிரச்சனையா நடக்கிறது?

கடந்த 20 வருடங்களில் இந்தியாவில் 20 கோடி குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்பட்டு இருப்பதாக சமூக நலவாரியம் தெரிவிக்கிறது. 3 நிமிடங்களுக்கு ஒருமுறை பெண்களுக்கு எதிராக குற்றம் இந்தியாவில் நடக்கிறது. 9 நிமிடங்களுக்கு ஒருமுறை கணவராலோ, உறவினராலோ கொடுமைகளுக்கு பெண்கள் ஆளாகிறார்கள். 15 நிமிடத்திற்கு ஒருமுறை பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். 29 நிமிடத்திற்கு ஒருமுறை ஏதாவது ஒரு பெண் கற்பழிப்புக்கு ஆளாகிறாள்.

தமிழகத்தில் 560 ஸ்கேன் மையங்கள் கொண்ட அரசு மருத்துவமனைகள் உள்ளன. 8 மரபணு ஆய்வுக்கூடங்களும், 3943 அல்ட்ரா சவுண்ட் சோதனைக் கூடங்களும், 38 கருத்தரிப்பு மையங்களும், 11 குரோமோசோம்கள் குறித்து ஆராயும் ஆம்னியோ சென்சிடிங் மையங்களும் பதிவு பெற்று இயங்குகின்றன.

இவற்றை அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. இப்படிப்பட்ட மையங்களில் பெண் குழந்தைகள் கருவிலேயே கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவர்கள் மூலம் கொலை செய்யப்படுகின்றன. எங்களுக்கு பெண் குழந்தை தான் வேண்டுமெனச் சொல்லும் தம்பதியினரை இனியேனும் தனித்து பாராட்டி அரசாங்கம் சலுகைகளை வழங்கலாம்.

ஒரு காலத்தில் பெண் குழந்தைகளுக்கு கள்ளிப்பால் கொடுப்பார்கள். இப்போது வயிற்றில் உயிர்த்துடிப்போடு இருக்கும் பெண் சிசுக்களை துண்டு துண்டாக வெட்டியெடுத்து கொலை செய்கிறார்கள். மருந்துக்கடைகளில் கருக்கலைப்பிற்கான மாத்திரைகள் டாக்டரின் பரிந்துரை இல்லாமலேயே கிடைக்கிறது. கருக்கலைப்பிற்கு மருத்துவமனைகள் வாங்கும் தொகைகள் என்று பார்த்தால் மூன்று மாத கர்ப்பத்தைக் கலைக்க 3000 ஆயிரம் ரூபாயும், ஐந்து மாத கர்ப்பத்தைக் கலைக்க 6000 என்றும் ஏழுமாத கர்ப்பத்தைக் கூட பணத்திற்காக மருத்துவர்கள்\ கலைப்பதாகவும் கூறுகிறார்கள்.

கணவரின் நிர்பந்தத்தாலோ அல்லது கணவரின் குடும்பத்தின் நிர்பந்தத்தாலோ அல்லது கள்ள உறவினாலோ சிசுக்கலைப்பிற்காக பெண்கள் மருத்துவமனைக்கு பரிதாப ஜீவன்களாக வருகிறார்கள். கருக்கலைப்பு என்பது சட்ட ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தவறான ஒன்று. பணத்தைக் கொடு கருவைக் கலைத்து அனுப்புகிறோம் என்று மருத்துவமனைகள் செயல்படுவது மருத்துவத்திற்கு அழகல்ல.

குழந்தையின்றித் தவிப்பவர்கள் உங்களைச் சுற்றிலும் கூட இருக்கிறார்கள். குழந்தை வேண்டுமென கோவில் கோவிலாய் சுற்றுபவர்கள் உங்களைச் சுற்றிலும் இருக்கிறார்கள். குழந்தை என்பது ஒரு உயிர். மருத்துவர்கள் கருக்கலைப்பிற்கு வரும் பெண்களின் கணவர்களை வரவழைத்துப் பேசலாம். ஆனால் டெங்கு, பறவை, மர்மக்காய்ச்சல் என்று மருத்துவமனையில் கூட்டம் நிரம்புவதால் அதற்கெல்லாம் அவர்களுக்கு நேரமில்லை.

பிழைக்க வழி சொல்லுங்கள் நண்பா! என்றொருவர் வந்தார். இருக்கே! என்றவன் தீபாவளி பலகாரச்சீட்டு ஆயிரம் அடித்து மாதா மாதம் வீடு வீடாய் சென்று தொகை வாங்கி சேர்த்துடா! என்றேன். கொஞ்சம் யோசித்தான். அதன் விளைவுகளை. கடைசியாக நல்லதாகத்தான் படுகிறது, என்றான். தீபாவளி நெருங்கும் சமயம் ஊரை காலி செய்து விட்டு ஓடி விடு! என்றேன்.

அடுத்ததாக கேரளாவுக்கு அரிசி கடத்துடா! என்றேன். ஐயோ நண்பரே! என்றான். இப்ப நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க? என்றான் என்னிடமே! தீவாளி செலவுக்கு பைக்கு திருடி வித்தேன். தீபாவளி முடிஞ்சு பிடிச்சாங்க, உள்ளார உக்காந்துட்டு வர்றேன், என்றேன். சீட்டு ஒன்னு சேர்த்தலாம்னு இருக்கேன்டா அடுத்ததா மூனு மாசத்துக்கு ஒருக்கா 4000. மொத்தம் பதினஞ்சு பேரு.. உன் பேரை சேர்த்திக்கறேன்டா.. என்றதும் எஸ்கேப்டா சாமி! என்றோடினான்.

மகளைச் சீரழித்த வளர்ப்புத் தந்தை, பணத்துக்காக மைனர் மகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய தந்தை, ஓடும் ரயிலில் இருந்து தள்ளப்பட்ட இளம்பெண் உயிருக்கு ஊசல் என்று கேரளாவிலும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நடக்க, அந்தப் பட்டியலில் கிட்னியை விற்க ஒப்புக்கொள்ளா விட்டால் மகனைக் கொன்று விடுவேன் என மிரட்டிய காதல் கணவனின் பேச்சைக் கேட்டு சிறுநீரகத்தை விற்ற இளம்பெண் மஞ்சு சமீபத்தில் ஆங்கிலப்பத்திரிக்கைக்கு தந்த பேட்டியில் கூறியது…

கொச்சியில் டீ எஸ்டேட்டில் நான் வேலையில் இருந்தேன். அதே டீ எஸ்டேட்டில் சேல்ஸ் பிரதிநிதியாக வேலை பார்த்த பினு என்பவரை 2005ல் சந்தித்தேன். பஞ்சும் நெருப்பும் பற்றிக் கொண்டதால் இருவரும் வீட்டிற்குத் தெரியாமல் திருமணம் செய்து அந்த தீயை அணைத்தோம். தீ அணைந்த ஒரு வருடத்தில் ஆண் மகவு ஒன்றை ஈன்றெடுத்தேன். பினுவின் குடும்பம் 2009ல் கடுமையான கடன் தொல்லையில் சிக்கித் தவித்தது.

அதே நேரத்தில் தனது நண்பர் ஒருவர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு மாற்று சிறுநீரகம் தேவைப்படுவதாகவும் எனது சிறிநீரகத்தை விற்றால் 10 லட்சம் தொகை கிடைக்குமெனவும், அதை வைத்து கடன்களை தீர்த்து விடலாமென்றும் பினு கூறினார். நான் அதற்கு, கிசுக்கணும்! உன்னுதை வித்துக்கோ, கடனைக் கட்டிக்கோ! என்றேன். எனது மகனை தூக்கிப்போய் சினிமா பணியில் கொன்று விடுவேன் என்று மிரட்டினார் பினு. தாய்ப்பாசத்தால் சம்மதித்தேன். அறுவை சிகிச்சைக்குப் பிறகு பினுவைக் காணவேயில்லை. பினு எஸ்கேப் ஆகிவிட்டதை தெரிந்து கொண்டேன். பல இடங்களில் தேடியும் பினுவைக் காணாததால் 2011ல் புகார் கொடுத்தேன்.

இந்தப் பெண்ணின் பேட்டியிலிலிருந்து நம் தமிழ்ப்பெண்கள் ஏதாவது உணர்ந்து கொள்வார்களா? என்றே யோசித்தேன். ஏற்கனவே கழுதைப்புலியை முறத்தால் விரட்டிய பாரம்பரியத்தில் வந்த பெண்கள் தான் இன்று கரப்பான் பூச்சிக்கு பயந்து காதலன் மீது தாவிக் குதிக்கிறார்கள்.

மாரியம்மன் கோவிலில் அம்மன் சிலை மீது பச்சைக்கிளி ஒன்று வந்து அமர்ந்து கொண்டதாம். கோவில் நிர்வாகிகள் கூறுகையில் ஒரு மாதத்திற்கு முன்பாக பூஜை நடந்து கொண்டிருந்த போது இடது கண்ணில் காயத்துடன் பறந்து வந்த கிளி கர்ப்பக்கிரகத்தினுள் சென்று அம்மன் சிலை மீது உட்கார்ந்து கொண்டது. அன்று முதல் கிளியை வெளியே கொண்டு வந்து விட்டாலும் மீண்டும் அம்மன் சேலையைப் பிடித்து மேலேறி உட்கார்ந்து கொள்கிறது.

பூசாரி கூறுகையில் அபிஷேகம் செய்யும் போது கீழே இறங்கி வந்து விடுகிறது. மற்ற நேரங்களில் அம்மன் மீதே அமர்ந்திருக்கிறது. இரவு கோவிலை பூட்டும் போதும் கருவறையை விட்டு வருவதில்லை. பழம், பொங்கலை விரும்பி சாப்பிடுகிறது. அர்ச்சனை செய்யும் போதோ, மணி அடிக்கையிலோ பயப்படுவதில்லை.

சுற்று வட்டார பொதுமக்கள் கூட்டமாய் வந்து கிளியை பார்த்து வணங்கிச் செல்கின்றனர். முன்பு மாட்டின் கண்ணில் ஒரு தலைவர் தெரிகிறார் என்று கும்பல் கூடியது. வருமானம் இல்லாத கோவில்களில் நல்ல பாம்பாட்டியிடம் பேசி பல் பிடுங்கிய பாம்பை சிலை மீது நீண்ட வாக்கில் படுக்க வைத்து விட்டால் கோவிலில் கூட்டம் கூடும். சர்க்கஸ் கம்பெனியாரிடம் பேசி புலி, சிறுத்தை என்று கூட முயற்சிக்கலாம். குரங்கை வைத்து தீபாராதனை காட்டலாம். ஜனங்களுக்கு எல்லாமே அதிசயம் தான்.

இருமுடி ஏந்தி சபரிமலை சென்ற +2 மாணவனை காட்டு யானை மிதித்துக் கொன்றது. அவனுடன் சென்ற ஆறு பேரையும் யானை தாக்கியதில் அவர்கள் காயமடைந்தனர். நம் ஆட்கள் எதையும் உருப்படியாக செய்வதேயில்லை. மாலை போட்டு விட்டேன் என்று சொல்லி டாஸ்மார்க் பாரில் நிற்பான். குடியை சிலநாட்களேனும் விட்டொழிப்போம் என்பதற்காக மாலை போட்டுக் கொள்வான். பின் மாலை நேரத்தில் மாலையை கழற்றி வீட்டில் சாமி பட்த்தின் முன்பு வைத்து விட்டு வந்து குவாட்டர் குடிப்பான் மீன் சில்லி சாப்பிட்டபடி. வாயில் சிகரெட் புகையும். பின்பாக வீடு சென்று குளித்து துன்னீரு பூசுக் கொண்டு மீண்டும் மாலையை அணிந்து கொள்வான். போக இதை நான் தவறென சொல்ல மாட்டேன். அது அவன் பிரியம்.

மனைவியின் பாலியல் டார்ச்சர் பொறுக்க முடியாமல் சர்க்கரை வியாதிக்காரன் அதற்காகவே பயந்து முருகனுக்கு, ஐய்யப்பனுக்கு என்று மாலை போட்டுக் கொள்வது பரிதாபத்திலும் பரிதாபம் தானே!. சபரிமலைக்குச் சென்ற வேன் கவிழ்ந்து ஆறு பேர் மரணம் என்று படிக்கிறோம். தப்பு செஞ்சுட்டு சாமியத் தேடிப்போனா இப்படித்தான் நடக்கும் என்று சமாதானம் பேசிக் கொள்கிறோம். நம் டாஸ்மார்க் சாமி லெக் பீஸ் கடித்துக் கொண்டே சியர்ஸ் போட்டு குடிக்கிறது.
000

”வாழ்வின் பசியம் தேடும் அறிவியல் கதைகள்” சந்தோஷ் நாராயணன் எழுதிய அஞ்ஞானச் சிறுகதைகள் குறித்து பாலகுமார் விஜயராமன்

சந்தோஷ் நாராயணன்

நூறு அஞ்ஞானச் சிறுகதைகளையும், கதை குறித்து இணையத்தில் வந்த ஒருவரி கருத்துக்களையும் தொகுத்து உருவாகியிருக்கும் இந்த புத்தகத்தின் கடைசி வரி – “எப்போ புத்தகமா போடுவீங்க?”. அதேபோல கடவுளிடம் சவால்விட்டு, சந்தோஷ் நாராயணன் எழுதாத நூறாவது கதையுடன் தான் நூறு கதைகள் முடிகின்றன. இப்படி உணர்வுப்பூர்வமாக புத்தகத்தின் ஒவ்வொரு வார்த்தையிலும் ஏதாவது சித்து விளையாட்டு காட்டி, அறிவியல் புனை கதைகளில் வாழ்வியலைப் பேசியிருக்கிறார் சந்தோஷ்.

கதைகளில் வரும் பாத்திரங்களின் பெயர்கள் அர்த்தப்பூர்வமானவை. படைப்பின் இயந்திரத்துக்குள் ப்ரம் மற்றும் விஷ் ஆகியோரை உள்ளிட்டு எண்ணிக்கையில்லா பிரதியெடுக்கும் ஷிவ், வெற்றியின்மையையும், தோல்வியின்மையையும் குறிக்கும் அவிக்டர் அஃபெயில், காஸ்மிக் எனர்ஜியை அடையத் துணியும் நந்தன், துவக்கத்தையும் முடிவையும் குறிக்கும் ஆதன் அந்தன், வன அரசி மெர்குரி திரவமாய்க் கண்ணீர் சிந்துவதைக் காணும் பாண்ட்ஸ்… இப்படி இதிகாசங்களையும், தத்துவங்களையும், சமகால நிகழ்வுகளையும் அறிவியலுக்குள் உள்ளீடு செய்து, வினையூக்கியாக செழுமையான புனைவைச் செலுத்திக் கிடைக்கும் அற்புதமான விளைபொருளாக இருக்கின்றன இந்த அஞ்ஞானச் சிறுகதைகள்.

அறிவியல் புனைகதைகள் யார் எழுதினாலும், எழுத்தாளர் சுஜாதாவுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் எண்ணம் பொதுவாகவே பலருக்கும் எழுவதுண்டு. சுஜாதாவின் எழுத்துகள் சென்றடைந்த வீச்சு அத்தகையது. சுஜாதாவின் கதைகள், பெரும்பாலும் விஞ்ஞானத்தின் வளர்ச்சியை, அதன் மூலம் சாதிக்கும் அதிசயங்களை, அது சாத்தியப்படுத்த வாய்ப்பிருக்கும் மாயாஜாலங்களை ஆச்சரியத்துடன் வியந்து ரசிக்கக்கூடிய வகையில் அமையப்பெற்றிருக்கும். ஆனால் சந்தோஷின் கதைகள் அநேகமாக அதற்கு நேர் எதிரானவை. அவை அறிவியலின் பூதாகர வளர்ச்சியைப் பகடி செய்பவை. எளிய வாழ்வுக்கு மனிதனைத் திருப்ப முடியாதா என்ற ஏக்கம் கொண்டிருப்பவை. எதிர்காலத்தில் வரவாய்ப்பிருக்கும் இயந்தரகதியான வாழ்வை, உணர்ச்சிகளற்ற உறவுகளை, வளங்களின் பற்றாக்குறைகளை அங்கதத்துடன் ஏகடியம் செய்யக்கூடியவை. சந்தோஷின் குறுங்கதைகளில் பாறை ஓவியம் வரையும் பழங்காலத்தவனும், சஞ்சீவி மூலியை இமைகளின் அடியில் பதுக்கியிருக்கும் ஆதிவாசியும் தான் நாயகர்களே தவிர காலங்கள் பின்சென்று ஓவியனை அழைத்துவரும் விஞ்ஞானியோ, ஆதிவாசியை ஆராயும் ஆய்வாளர்களோ அல்ல. அவ்வகையில் இந்த அஞ்ஞானச்சிறுகதைகள் அறிவியல் மீபுனைவு தோற்றம் கொண்டிருந்தாலும், இயற்கையை நேசிக்கும், எளிமையில் வாழ விரும்பும், மண்ணையும், மனதையும் மாசுபடுத்த விரும்பாத ஒரு அறிவியல் ஆய்வாளனின் மனப்பதிவாகவே தோன்றுகின்றன.

ஹிட்லரின் சாம்பலை விலைக்கு வாங்கி வைத்திருக்கும் இந்திய, இலங்கை அரசியல் பிரமுகர்கள், எழுத்தாளனைக் கொல்லக் கொல்ல முளைக்கும் லட்சம் மூளைகள், லட்சம் உடல்கள், பிரதேசங்கள் எத்தனை துண்டுகளானாலும், அத்தனை துண்டுகளிலும் துளிர்க்கும் பொதுவுடைமை என்று சமகால அரசியலையும் பேசியிருக்கின்றன இக்கதைகள்.

மிதிலையின் பெரிய விளையாடு மைதானத்தில் சீறிவரும் காளையை அடக்கக் காத்திருக்கிறான் மாயன். ஏறுதழுவல் விளையாட்டுக்கான திடீர் தடையால் கொதித்தெழுவது மாயன் மட்டுமல்ல, விளையாடக் காத்திருக்கும் காளையும் தான். அதேபோல, தனது மகனான நரகாசுரன் கொல்லப்பட்ட கோபத்தை, தன்னை லெட்சுமி வெடியாக்கி வெடித்துத் தீர்க்கிறாள் பூமாதேவி. இன்னொறுபுறம்,பெட்ரோலுக்காக சண்டையிட்டு பூமியின் மொத்த மனிதர்களும் அழிந்த பிறகு, மடிந்த உயிரிகளின் படிமங்களில் இருந்து உருவாகியிருக்கும் எரிபொருளை ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கழித்துக் கண்டுபிடிக்கிறார்கள் வேற்றுகிரக அறிவுஜீவிகள். இப்படி இன்றைய எதார்த்த நடைமுறைகளையும், பிரச்சனைகளையும், சிக்கல்களையும் நாம் யோசிக்காத இன்னொரு கோணத்தில் சொல்லி, நம்மை ஒரு நொடி அதிர்ச்சியடையவோ, வியப்படையவோ வைக்கின்றன அஞ்ஞானக்கதைகள். சந்தோஷ் இந்தக் குறுங்கதைகளுக்காக எடுத்திருக்கும் கருக்கள் நாம் அன்றாடம் புழங்கும் விஷயங்கள் தாம். ஆனால் அவர் அவற்றை பிராஸஸ் செய்து கதையாக வடிக்கும் கலை தனித்துவமானதாக இருக்கின்றது.

சில கதைகள், பாதியில் நிறுத்தியவை போல ஏமாற்றமளித்தன. இன்னும் சில, கதையே இல்லை என்று தோற்றமளித்தன (நமக்குத்தான் புரியவில்லையோ!). ஆனாலும் நூறு என்ற எண்ணிக்கை நிறைவானதாக இருந்தது. சந்தோஷ் இயல்பில் ஒவியர் என்பதனால் அத்தனை கதைகளுக்கும் மிகப்பொருத்தமான ஓவியங்களை வரைந்திருக்கிறார். அவை நன்றாகவும் இருக்கின்றன. ஆனால் அவை கதைகளின் வாசிப்புக்கு செய்த மதிப்புக்கூட்டல் மிகக்குறைவே. ஓவியங்கள் இல்லாமல் இருந்தாலும், இக்கதைகள் இதே உணர்வைத்தான் தந்திருக்கும் என்று தோன்றுகிறது.

இன்றைய இணைய உலகில் புதிய வாசகர்களைக் கவர, கதைகளையும் கேப்சூல் வடிவில் கொடுக்கவேண்டியிருக்கிறது. நவீன யுகத்தின் தற்போதைய புதிய இலக்கிய வடிவம் குறுங்கதைகள். அறிவியல் புனைகதைகளை குறுகத் தரித்துக் கொடுத்திருந்தாலும், தன் வேர்களையும் வாழ்வியலையும் மறக்காமல் அதை இந்தப் புதிய இலக்கித வகைமைக்குள் பொருத்தியிருக்கும் நண்பர் சந்தோஷ் நாராயணனுக்கும், புத்தகத்தை வெளியிட்ட உயிர்மை பதிப்பகத்துக்கும் வாழ்த்துகள். இன்றைய கல்லூரி மாணவர்களிடம் இந்த புத்தகம் பரவலாகச் சென்றுசேர வேண்டுமென்று விரும்புகிறேன். கல்லூரி ஆசிரியராக இருக்கும் நண்பர்கள், கல்லூரிகளில் சிறப்புரை ஆற்றச் செல்லும் நண்பர்கள் இந்த புத்தகத்தை மாணவர்களிடம் அறிமுகப்படுத்துங்கள். அறிவியலில் இன்றைய வாழ்வியலைக் கலந்த சுவாரஸ்யமான ஒருபக்கக் கதைகள் என்ற வகையில் இளைஞர்களை இந்தப் புத்தகம் நிச்சயம் ஈர்க்கும்.

******
அஞ்ஞானச் சிறுகதைகள்
சந்தோஷ் நாராயணன்
உயிர்மை வெளியீடு
பக்கங்கள்: 224
விலை: ரூ. 200
******

கனவுகளைக் கட்டுடைத்தல் ( கவிதைகள் ) / நர்மதா குப்புசாமி

நர்மதா குப்புசாமி


படிமம் 1

பனிபடர்ந்த நிலையத்தில்

ஏறவோ இறங்கவோ கதவுகளற்ற

இரயில் பெட்டியில்

புகைச்சித்திரமாய் நீ அமர்ந்திருக்கிறாய்.

நடைமேடையில் பதற்றத்துடன் நான்

நிலைத்த உனது பார்வையில்

எனையும் கடந்து

காலத்தை ஊடுருவுகிறாய்.

நானோ உதிர்ந்த இலையின்

பரிமாணத்தில் அளைந்தபடி

தொடர்கிறேன் உன்னை

இரயில் விரைகிறது.

இருவருக்குமான இடைவெளியில்

பச்சையமற்ற தாவரங்களாய்

ஞாபகங்கள் துவள்கின்றன.


படிமம் 2

பொட்டல்வெளி , இருள் மசி பூசிய

பாதையில் ஈர நதியின் மினுமினுப்பு

பேரிரைச்சலின் அதிர்வும்

பேரமைதியின் உறைவும்

ஒருங்கே ஒழுகும்

ஓட்டைக் குடமாய் காலம்

கூகை போல இருண்மையைக் கிழித்து

உன் பறத்தல் இரா வானமெங்கும்

இழுக்கிறாய் உன் போக்கில் எனை

நீண்டுகிடக்கிறது சாம்பல் நிற சர்ப்பமென

இரவின் வெளி.

வெளிச்சப்புள்ளிகளின் துவக்கக் கோட்டில்

மிகத்துல்லியமாய்

புகையாகக் கலக்கிறாய் மேகத்துணுக்குகளில்.

பாதைதிரும்புகிறேன் தனியாய் மறுபடியும்.

படிமம் 3

எனக்கான ஏகாந்தவெளியில்

ஒளி நிரம்பிய உனதிருப்பு .

உயிர்திரவம் ததும்பும்

தீர்ந்துவிடாத அதே புன்னகையுடன்

எனக்கான மன்னிப்புகளை

கையளிக்கிறாய் தேவதையைப் போல் .

காற்றையே சிறகாய் அணிந்த

ஒரு பறவைக்கு

உனது சாயல்கள் .

யாக்கையில் உவர்ப்பாய்

படிந்துக் கிடக்கின்றன

கதைக்கவேண்டிய கனவுத்துகள்கள் .

நீர்மை கோர்த்த நினைவுமணிகள்

புலரியின் மடியில் பனித்திவலையாய்

படர்ந்து மிதக்கின்றன.

உனக்கான ஒரு கவிதையை

எப்போதும்

அந்தத் துளியிலிருந்தே

துவங்கச் சொல்கிறாய்.

•••

எட்டு கவிதைகைள் – பி.கே. சிவகுமார் ( அமெரிக்கா )

பி.கே. சிவகுமார்தனிமரத்துக்குத்
தன்னிழல் போதும்
தன்னிழல் துணையல்ல
தன்னிருப்பின் அடையாளம்
தனக்காகத்தான் நிற்கிறது
வேருண்டு கனியுண்டு என்பது
கிளிகள் அறிந்த ரகசியம்
கிளிகள் தேடியமரும் நேரம்
தோப்பாகிறது தனிமரம் என்பது
இரண்டுமே அறியாதவை
தன்னைக் குடைவிரிக்கும் தனிமரத்தில்
எப்போதோ அமரும் கிளிகளைத்
தொலைவிலிருந்து பார்க்கிறீர்கள்
ஆச்சரியத்துடன்
அசைக்கிற இலையிசையில்
துய்க்கிற தனிமரத்துக்கு
மொட்டை மாடியில் நின்று
வேடிக்கை பார்க்கிற
தனிமரத்தின் மேல்
ஏன்
ஒருமுறை கூட
கிளிகள் அமர்வதில்லையென்ற
அனுதாபத்துடன் அது
உங்களைப் பார்க்கிறது

*****

தனிமரமாக நிற்கிறவர்
விரைவில்
ஒன்று
வீணையாகிறார்
அல்லது
விறகாகிறார்
அப்போது அறிகிறார்
வீணைக்கும் விறகுக்கும்
வித்தியாசம் இல்லை

****

தனிமரத்துக்குத் துணை
கிளைகளில் தலைவிரித்தாடும் பேய்கள்
முதல் பேய் குடியேறியபோது பயமாக இருந்தது
போகப் போகப் பழகிவிட்டது
பேய்களுக்கிடையே
எல்லைப் பிரச்னை எழும்போதெல்லாம்
ஜாக்கிரதையாக எத்தரப்பும் எடுப்பதில்லை அது
எந்தப் பேய் எந்நேரத்தில்
கோடாலி எடுக்குமோ என்ற கவலையுண்டு
இரவுகளில் காற்றின் வருடலை
பேய்களின் அன்பென எடுத்துக் கொள்ளப் பழகிவிட்டது
எப்போதும் ஒரு பேய்
பூர்வீக
வாழ்க்கையையோ
காதலையோ
துரோகத்தையோ
சொல்லிப் புலம்பிக் கொண்டே இருக்கிறது
அலுக்காமல் ஆறுதல் சொல்வதே
அமைதிக்கு வழியென அறிந்தது கொண்டது மரம்
சீக்கிரமே
பேய்களின் பிரச்னைகள் கேட்டுக் கேட்டு
தன் பிரச்னைகள் மறந்தது தனிமரம்
ராஜா மாதிரி தனியாக நிற்கும்
மரத்துக்கென்ன பிரச்னை எனக் கேட்டுக்
கிண்டல் செய்தன பேய்கள்
பேய்கள்
அறையும்போதும் உலுக்கும்போதும்
நடுங்கியது மரம்
அவை அணைத்துக் கொள்ளும்
அரிதான சந்தர்ப்பத்துக்கு ஏக்கப்பட ஆரம்பித்தது
நெருப்பும் பனியும் கலந்து இறுக்கும்
பேய்களின் அணைப்பு பிடித்துப் போனது
நான் நீ யெனத் தனக்காகப் பேய்கள்
போட்டியிட வேண்டுமென்ற
கிளுகிளுப்புக் கனவு மட்டும்
இன்றுவரை நிறைவேறவில்லை
தனிமரத்துக்கு
ஒரு பேய் உடனிருந்தால்
அடுத்த பேய் வழிவிடும் நாகரீகம்
கொண்டிருந்தது பேய்ச்சமூகம்
ஆளில்லா வீடுகளில் பேய்கள்
அடைக்கலமாகும் புயல் மழையில்
தனியாக நிற்கும்போது மட்டும்
இப்போதெல்லாம்
பயப்படுகிறது தனிமரம்

*****

தனிமரத்தைப் பற்றி
அதன்
நிழலைப் பற்றி
வேர்களைப் பற்றி
கனிகளைப் பற்றி
எப்போதேனும்
வந்தமரும் கிளிகள் பற்றி
இசைக்கிற அதனிலைகள் பற்றி
எழுதுகிறேன்
அதன் பட்டைகளில் படர்ந்து நிறைந்து
அருவருக்கச் செய்யும்
கம்பளிப் பூச்சிகள் பற்றி
ஏன் எழுதுவதில்லை என்கிறாய்

மருந்தடித்துக் கொல்லப்படாமல் இருந்தால்
வண்ணத்துப் பூச்சிகளாய்
அவை மாறுவதை யெழுதக்
காத்திருக்கிறேன் கண்ணே

*****

தனிமரமென்று எதுவுமில்லை
என்றறிந்தது தனிமரம்
என்றெழுதிய கவிஞருக்கு
வந்த வாசகர் கடிதத்தில்

“அட பைத்தியக்காரா
சீக்கிரம் கிளம்பி வா
அடுத்த குழி பட்டுவிட்டது

இப்படிக்கு
தனிமரமென உணர்ந்த தோப்பு”

என்று எழுதியிருந்தது

*****

தலையில்
மரத்துடன் நடந்து கொண்டிருந்த
நண்பரைப் பார்த்தேன்
என்ன இது என்றேன்
நல்ல இடம் தேடிக் கடைசியில்
தலையில் நட்டுக் கொண்டதாகச் சொன்னார்

மரம் என்ன சொல்கிறது என்றேன்
அதற்கென்ன குறைச்சல்
தனக்குத்தான் சுமையென்றார்
சுகமான சுமையென்றும்
சொல்லத் தவறவில்லை

எனக்கென்னவோ
அவர் பார்க்காதபடிக்கு
மரம்
நமட்டுச் சிரிப்பு செய்ததாய்த் தோன்றியது

அடுத்த மரம் நட
எங்கே போவீர்கள் என்றேன்
இதைவிட நல்ல மரமென்றால்
இதைப் பிடுங்கி எறிந்து விட
வேண்டியதுதான் என்றார்

ஐயோ அப்போ தலை என்றேன்

ஒவ்வொரு மரமும்
ஒரு தலையுடன் வருகிறதே என்றார்

தலையுடன் வரும் மரங்களா என்றேன்
ஒன்றுமில்லாமல் வருவதற்கு
மரத்துடன் வருகிற தலை மேல்தானே என்றார்

மரத்துக்குக்
காபி குடிக்கிற நேரமாகிவிட்டது
என்றபடியே கிளம்பிப் போனவருடன்
பேசிவிட்டுத் திரும்பும்போது கவனித்தேன்
அவர் கவிதைக்கான வரிகளை
அவர் மரம்
அவர் காதில் சொல்லுவதை

என் தலை வலிக்கத் தொட்டுப் பார்த்தேன்
மரத்துக்குத் தோண்டிய குழி தெரிந்தது

*****

பெருவழியில் எதிர்ப்படும்
தனிமரத்தைப் பார்க்கும்போது
நட்டவர் யாரென்று கேட்க வேண்டாம்
வளர்த்தவர் யாரென்று கேட்க வேண்டாம்
துணைக்கு யாரென்று கேட்க வேண்டாம்
பதிலறிந்து
மாறப்போவது ஒன்றுமில்லை
கேள்விக்குறி போல் நிற்கும்
தனிமரம் சொல்ல வருவது
கேள்விகளின் அபத்தத்தைத் தான்

*****

காலை எழுந்தபோது
நேற்று பார்த்த
தனிமரம் இல்லை
என்னாயிற்று என்றேன்
அதன் பொந்தில் வசித்த பாம்பிடம்
அதோ போகிறார் பார்
அவர்தான் வெட்டினார் என்றது
அவரைக் கேட்டேன்
நின்று கொண்டே இருப்பது அலுத்துக்
கொஞ்ச நேரம் மனிதர் போல்
கால் நீட்டிப் படுக்க ஆசைப்பட்டது
அதனால் வெட்டினேன் என்றார்
அவர் போன பிறகு பாம்பு சொன்னது
அவர் பொய் சொல்கிறார்
நின்று கொண்டே புணர்கிற குறை தவிர
தனிமரத்துக்குக் குறை எதுவும் இல்லை
நானும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன்
ம்ம்ம்ம்
நீ என்ன சொன்னாய் என்றேன்
எப்படிப் புணர்ந்தால் என்ன
புணர்வதும் புணரப்படுவதும் தான் முக்கியம்
மரமென்ன சொன்னது என்றேன்
புணர்ச்சி போதும்
உணர்ச்சிகளே தேவையென்றது
அப்புறம் என்றேன்
அப்புறமென்ன
அதோ போனாரே
அந்த மனிதரைக் காதலித்தது

*****

அன்றாடங்காய்ச்சி ( சிறுகதை ) – சே. தண்டபாணி தென்றல்

இப்பவெல்லா யாரு சார் சாதி பாக்குறாங்க? இனிமேல் இதை யாராவது தன்னிடம் சொன்னால், அவரை பளார் பளாரென்று அறைந்து , தரத்தரன்னு இழுத்துட்டு வந்து இந்தக் காட்சியைக் காட்டலாம் போலிருந்தது வார்டன் சுகுமாரனுக்கு. தினந்தோறும் காலையில் உணவுக் கூடத்திற்கு வரும்போது அவர் கண்ணில் தவறாமல் பட்டுவிடுகிறது அக்காட்சி . இதற்காகவே வேறொரு நேரத்தில் வரலாமென்றாலும் அவனும் அன்று தாமதமாகவே வருகிறான். இதற்கொரு வழியைப் பார்க்க வேண்டுமே? என்ன செய்வது? கையைப் பிசைந்தவாறே யோசித்துக் கொண்டிருந்தார் வார்டன் சுகுமாரன்.

அப்பல்கலைக் கழகத்தில் முனைவர் சுகுமாரன் அறிவியல் பேராசிரியராகச் சேர்ந்து பத்து வருடங்கள் தாண்டிவிட்டன. ஒரு வருடத்திற்கு முன்னால்தான் ஆண்கள் விடுதியின் வார்டனாக நியமிக்கப்பட்டது அவருக்கும் கூடுதல் மகிழ்ச்சிதான். வெறும் வகுப்பறையில் செயற்கையாக நெகிழியைப் போல பாடத்தை திணிப்பதற்குப் பதிலாக சமுகம், அறிவியல் எனப் பல விஷயங்களில் ஈடுபாடுள்ள மாணவர்களை வழிப்படுத்த முடியுமெனவும் நம்பி புன்னகை பொங்க ஏற்றுக் கொண்டார்.

விடுதிக் காப்பாளராக சுகுமாரன் சார் இணைந்து முதல் நாள். சுமார் எட்டேகால் மணியிருக்கும். உணவுக் கூடத்திற்குள் பழக்கப்பட்ட இடத்தைப் போலவே வார்டன் சுகுமாரன் நுழைகிறார். மாணவர்கள் ஒவ்வொருவராக அங்கு வைக்கப்பட்டிருந்த தட்டுகளை எடுத்து தண்ணீரில் அலசிவிட்டு சாப்பிடச் செல்கின்றனர். சுப்பர் வைசருக்கான சேரில் மெல்ல அமர்ந்தவாறே வார்டன் சுகுமாரன் கவனித்துக் கொண்டிருக்கிறார். அப்பொழுதுதான் அவரின் மனம் கசக்கும் படியான ஒரு செயலை கிட்டத்தட்ட யானையைப் போலிருந்த ஒரு பையன் அசால்டாக செய்து கொண்டிருக்கிறான். பின்னொரு நாளில் அதே சம்பவத்தின்போது எழுந்து சென்று விசாரித்துப் பார்க்கலாமா? அல்லது பளாரென்று கன்னத்துடன் பேசிப் பார்க்கலாமா? எனத் தீவிரமாக சிந்தித்துப் பார்த்ததுண்டு. “எடுத்தோம் கவுத்தோமென்று” இருக்கக் கூடாது.

சரியான சந்தர்ப்பம் வரும்வரை பொறுத்திருக்கலாம். வெளியே யாருக்கும் கேட்காமல் தனக்குக் கேட்குமாறு மட்டுமே மனசுக்குள் வார்டன் சுகுமாரன் பொருமிக் கொண்டார்.

வெள்ளிக்கிழமை. மதியம் ஒருமணியிருக்கும் . வகுப்பிற்குச் சென்றுவிட்டு தன் அறைக்கு வந்து அமர்ந்ததும்…கெட்இன் சார்? வகுப்பு மாணவி ரேணுகாவின் குரல்கேட்டு உள்ளே வர அனுமதித்தார்.. சார் யுனிவெர்சிட்டில பெரியார் பிறந்தநாளுக்கு பல போட்டிகள் வெய்க்குறாங்க சார். அதுல கட்டுரைப் போட்டிக்கு “சாதி உண்டு என்பானும் இருக்கின்றானே?” அப்படீன்னு தலைப்பு கொடுத்துருக்காங்க சார் …நல்ல விஷயம் பா… ஆல் தி பெஸ்ட். நல்லா எழுதுங்க.

தேங்க்ஸ் சார்.. ஆனா சற்றே இழுத்த ரேணுகா தான் வந்ததற்கான நோக்கத்தை மெல்ல மெல்லச் சொல்ல ஆரம்பித்தாள். எப்புடிக் கட்டுரையக் கொண்டுபோய் முடிக்கிறதுன்னு தெரியலைங்க? சார்.

சட்டென்று அவருக்கு தினமும் உணவுக்கூடத்தில் தான் பார்க்கும் அன்றாடங்காய்ச்சி ஞாபகம் வரவும், முடிவுரையில் இதனைக் கண்டிப்பாக சேர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். ‘தேங்க் யூ சார்’ சொல்லி ரேணுகா விடை பெறவும் சிறிது தண்ணீர் குடித்து பேராசிரியர் சுகுமாரன் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.

சில விஷயங்களை கதைகளைப் போல சொல்லித் திருத்தலாம். அவைகளுக்கு நிரூபணங்கள் ஒரு பொருட்டாய் இருப்பதில்லை. வேறு சில விஷயங்கள் அறிவியலைப் போல நிரூபித்தே ஆக வேண்டும். சுகுமாரன், தன் அறையில் மாட்டி வைத்திருந்த புகைப்படத்தைப் பார்த்தார். மூன்று குரங்குகள் மூன்று விதத்தில் இருந்ததைக் கண்டதும் சட்டென பேராசிரியர் சுகுமாரனுக்கு ஓர் அனிச்சை யோசனை தோன்றியது. இன்னும் சிறிது நேரத்தில் வேறொரு துறையிலிருக்கும் இன்னொரு பேராசிரியையை சந்தித்தே ஆக வேண்டும்.

மதியம் ஒன்று முப்பது மணி. கண்ணாடிகளால் ஆக்கப்பட்டிருந்த பேராசிரியை அபிராமியின் அறைக்கு முன்பாக பேராசிரியர் சுகுமாரன் நின்றிருந்தார். இதுவரைக்கும் நிறைய அலுவல் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்காக அவரை சந்தித்திருக்கிறார். ஆனால் இன்று போயும் போயும் ஒரு குரங்கு வேண்டுமென்றா? கேட்கப் போகிறேன். அன்றொரு நாள் பேச்சு வாக்கில் பெண்கள் விடுதியில் நிறையக் குரங்கிருப்பதாக பேராசிரியர் அபிராமி சொன்னது இன்று பயன்படுமென்று அவரே நினைத்துப் பார்க்கவில்லை.

“கேர்ள்ஸ்சோட ஸ்நாக்ஸ், டிரஸ் எல்லாத்தையும் இந்தக் கொரங்கு அதகளம் பன்னிடுதுங்க சார்.? அன்னிக்கி பிடிச்சிட்டு போயும் மறுபடியும் வந்துடுதுங்க சார். சுகுமாரன் புன்னகைத்தவாறே சொன்னார். பாய்ஸ் ஹாஸ்டல்ல கொரங்குகளே இல்லிங்க மேடம்.”

உள்ளேவந்த பேராசிரியர் சுகுமாரனை இருக்கையில் அமரச் சொன்னார். கொஞ்சம் தயக்கத்துடன்தான் தனது தேவையைக் கேட்டார். “கொரங்கா? சார் ஒன்னுதானே? தாராளமாக பிடிச்சுக்குக் கோங்க.. தேங்க்ஸ் மேடம்.” இப்பொழுது பேராசிரியர் சுகுமாரனின் மனதில் தயக்கம் போய் உற்சாகம் பிறந்துவிட்டது.

அன்று மாலை ஐந்து மணி. தன் ஆய்வு மாணவர் அருண்குமாரை, சுகுமாரன் அழைத்தார். கூடவே முதுகலை மாணவன் ராஜேஷையும். நாளைக் காலை என்ன செய்யவேண்டுமென்பதை இன்று இரவு போனில் சொல்வதாகவும், ஆறு மணிக்கெல்லாம் ஆய்வகம் வந்துவிடவேண்டுமென்றும் கூறினார். இதைக் கேட்டதும் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். திகில் கலந்த மர்மமாகவே இருவருக்கும் இருந்ததில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. எந்த ஆசிரியராவது காலை ஆறு மணிக்கு, அதுவும் ஆராய்சிக்காக வருவாரா? சுத்தம். சரி பார்ப்போம். இருவரும் ஆசிரியரிடமிருந்து விடைபெற்றனர்.

மறுநாள், பேராசிரியர் சுகுமாரன் சொன்ன அதே நேரம். அவரின் துறைக்கு கைதேர்ந்த குரங்குப்பிடி மூலமாக பெண்கள் விடுதியிலிருந்து குரங்கொன்று வந்திறங்கியது. கூடவே தன்னுடன் அன்றாடங்காய்ச்சி மாணவனையும் அழைத்து வந்துவிட்டார். இந்நாளுக்காகவே இரண்டு மாதங்கள் தீவிரமாக திட்டம் தீட்டிக் கொண்டிருப்பது அவருக்கு மட்டுமே தெரியும்.

மூன்று மாணவர்கள், பேராசிரியர் சுகுமாரன், குரங்கு ஆகியோர் ஆய்வகத்திற்குள் சென்றனர். அனைத்துக் கருவிகளும் ஆயத்தமாக இருந்தன. முந்தைய நாள் இரவு, வழிகாட்டி தெளிவாகக் கூறியதைப் போலவே இரண்டு மாணவர்களும் செயல்படத் தொடங்கினர். குரங்கு கையில் வாழைப்பழம் கொடுத்து ஒரு சேரில் கட்டிப் போட்டிருந்தனர். அன்றாடங்காய்ச்சி மாணவன், பேராசிரியர் சுகுமாரன், ராஜேஷ் ஆகியோரிடமிருந்தும் மேலும் சிறப்பு விருந்தாளியான குரங்கிடமிருந்தும் கவனமாக ரத்தம் எடுத்த அருண்குமார், அடுத்தகட்ட சோதனையில் தீவிரமாக இறங்கினார். சோதிப்பது கடவுளல்ல, அறிவியல்தான் என்பது கற்றவர்களுக்கு மட்டுமே தெரிந்த விஷயம். கூடவே அதை மனிதர்களும் செய்யலாம் என்பதுவும் இன்று அங்கிருந்தவர்களுக்குத் தெரிந்திருந்தது.

தான் புதிதாகச் செல்லும் ஒவ்வொரு வகுப்பிற்கும் மனிதர்களோட உயிர் வேறெங்கும் இல்ல. டி. என் . ஏலதான் இருக்கு என்று போதித்து வருபவர் பேராசிரியர் சுகுமாரன். இன்றும் அதையொட்டிதான் சோதனை நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இரண்டு மணி நேரத்தில் நான்கு டி. என் . ஏ சேம்பில்களும் கிடைத்துவிட்டது. எல்லா டி. என் . ஏக்களும் ஒரே நேர்கோட்டில் இருந்தன. எந்த டி. என் . ஏ யாருடையது என்று குறிக்கப் பட்டு அன்றாடங்காய்ச்சி மாணவரிடம் காட்டி “தம்பி இங்க பாருங்கப்பா? ஏறக் குறைய குரங்கும் மனுசனும் ஒன்னுதான் பா. மனுஷனுக்கு மனுஷன் ரத்தக் கலரு மட்டும் ஒன்னில தம்பி உசிரு கூட ஒன்னுதான். தயவுசெய்து உன்னோட பழக்கத்த மாத்திக்கோ தம்பி”. மிகவும் தாழ்மையுடன் சுகுமாரன் சார் கேட்டுக் கொண்டார்.

ஒரு வாரம் கடந்திருந்தது. உணவுக் கூடத்தில், வார்டன் சுகுமாரன் நுழைவதற்கு முன்பே முகப்பில், கதவிற்கு மேல் வைக்கப் பட்டிருந்த ஒரு படம் அவரின் கண்ணில்பட்டது.தலை நிமிர்ந்து பார்த்தார். அவரின் அறையில் வைக்கப் பட்டிருந்த மூன்று குரங்குகளுடன் இன்னொரு புகைப்படம் இணைக்கப் பட்டிருந்தது. அதில் ஒரு மாணவன் நின்றிருந்தான். அவனது கைக்கு அருகாமையில் இரண்டு சிவப்புக் கோடுகள் எக்ஸ் வடிவத்தில் இருந்தன. உள்ளே நுழைந்தார். வரிசையில் முதலாவதாக அன்றாடங்காய்ச்சி மாணவன் நின்றிருந்தான். வார்டன் சுகுமாரனின் கண்கள் அவனின் கைகளைத் தேடின. வழக்கத்திற்கு பதிலாக அவனது கையில் பொதுவாக எல்லோரும் பயன்படுத்தும் தட்டிருந்தது.

சமீபத்தில் படித்த புத்தகங்கள் – 1 – பி.கே. சிவகுமார்

முன்னுரை:

பொதுவில் விரிவாகப் பகிர்கிற, எழுதுகிற, பெயர் வாங்குகிற மனநிலை முதலில் இப்போதெல்லாம் வாய்ப்பதில்லை. இது வரமா, சாபமா எனத் தெரியாது. என் வசதிக்கு வரமென நினைத்துக் கொள்கிறேன். மனநிலை வாய்த்தால் நேரம் எப்படியும் கிடைத்துவிடும். ஆனாலும் ஒத்த ஆர்வம் உடைய நட்புகள் மிகச் சிலர் கொண்ட சிறு வாட்சப் குழுமங்களில் படித்தவை என்ன, பார்த்தவை என்ன என்ற பெயர்களையேனும் தொடர்ந்து பகிர்ந்துதான் வருகிறேன். இயலும்போதெல்லாம் அவை குறித்த சிற்சில வரிகளையும். அந்தத் திருப்தியில் அடுத்தது நோக்கி நகர்ந்து விடுகிறேன்.

தேடல் இருக்கிறது. அதைப் பொதுவில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டுமா என்ற எண்ணம் அடிக்கடி தலைதூக்குகிறது. ஒருவிதமான அலுப்பு, உற்சாகமின்மை, என்னவோ நினைத்துக் கொள்ளட்டும் என்ற விட்டேற்றி குணம் உலகத்தைப் பற்றி கொஞ்சம் கொஞ்சமாய்ப் பரவுகிறது. என்ன சொல்லி என்ன ஆகப் போகிறது என்ற அலுப்பு அல்ல. சொல்லிக் கொள்ள வேண்டியவை முதலில் எனக்கே என வந்த தெளிவு.

வயதாக ஆக எது குறித்தும் இருந்த திட்டவட்டமான கருத்துகள் கேள்விக்குரியதாகின்றன. இது வளர்ச்சியா குழப்பமா எனத் தெரியவில்லை. குழப்பமும் கூட வளர்ச்சிக்கான விரைவான படிக்கல்தான். எல்லாவற்றையும் கேள்விக்குரியதாக்கும் சிந்தனைகளுக்குப் பொதுவில் பெரிய ஊக்கம் கிடைப்பதில்லை. நான் எதிர்பார்ப்பதுமில்லை. எதிர்மறை கருத்துகளும் எதிர்ப்புமே மிகும். அவற்றுக்குப் பதில் சொல்வதில் விரயமாகிற நேரத்தோடு அது நம் சிந்தனையை நம் போக்கில் வளரவிடாது முட்டுக்கட்டை போடுகிறது. இப்போதெல்லாம் எல்லாவற்றைப் பற்றியும் உறுதியிட்டு அறுதியாகக் கூறுகிறவர்களை நான் கவனிப்பதோடு சரி. அப்படிப்பட்ட நிலைகளில் இருந்து நானும் நகர்ந்தவன் என்ற முறையில், மாற்றத்துக்கு உதவாத நிலைப்பாடுகள் எனக்கு அயர்ச்சியளிக்கின்றன. அவை அரசியல், இலக்கியம் , சமூகம் எது குறித்து இருந்தாலும்.

தமிழின் செழுமையான மரபிடம் இருந்தும், அதை எனக்குப் போதித்த இடதுசாரி ஆசான்களிடம் இருந்தும், மகாத்மா காந்தியிடமிருந்தும் நான் பெற்ற மனிதாபிமானமும், ஜனநாயக நம்பிக்கையும், அஹிம்சையும், கோட்பாடுகளுக்குள் முடங்காது திமிறும் சுதந்திரச் சிந்தனையுமே என் ஆதார சுருதிகள். ஆதார சுருதிகளையும் உரசிப் பார்க்கும் சுதந்திரத்தையும் என் ஆசான்களே கொடுத்திருக்கிறார்கள். கீழே விழுந்து கிடக்கிறவர்களும், அடிப்படை அறம் மறுக்கப்படுகிறவர்களுமே என் ஆதரவுக்குரியவர்கள். ஆனாலும் அவர்களின் போராட்டமும் அற விழுமியங்களை மீறக் கூடாது என்ற எதிர்பார்ப்பு எனக்கு இருக்கிறது. எதிரியே நம் ஆயுதத்தைத் தீர்மானிக்கிறார் என்பது போன்ற தத்துவங்களில் எனக்கு இப்போது நம்பிக்கை இல்லை.

என்னுடைய உள்முகமான தேடலின் பொருட்டுப் பொதுவில் நான் எழுதுவதை நிறையக் குறைத்து விட்டேன். இடையில் பொருள் தேடும் உலகின் கடமைகள் பெரிய தடை இல்லை என்றாலும், என்னைப் பின்னிருந்து எழுது எழுது என உலுக்குகிறப் பிரச்னைகள் இல்லை. நான் வேண்டுமானால் பிறருக்குப் பிரச்னையாக இருக்கலாம்.

ஆனாலும் – தனிப்பட்ட அளவில் தொடர்ந்து படித்துக் கொண்டும் திரைப்படங்கள் பார்த்துக் கொண்டும்தான் இருக்கிறேன். சொல்லப்போனால், கடந்த ஒன்றரை வருடங்களாகப் பார்த்ததைவிட நிறைய படித்தேன். இவையெல்லாம் எனக்குள் நான் கொண்டிருக்கிற அலைச்சலின், தேடலின் ஒரு பகுதிதான். இதையே உடற்பயிற்சி அல்லது ஓட்டம் ஆகியவற்றின் மூலமும் என்னால் நிரப்பிக் கொள்ள முடியும். அவற்றையும் முயல்கிறேன்.

எழுத்தும் திரைப்படமும் எனக்கு ஒரு முழுதான கிரியா ஊக்கியாகவோ, மருந்தாகவோ இல்லை. எனக்குள்ளில் இருந்துதான் வாழ்வதற்கான, வாழ்வை நோக்குவதற்கான பார்வைகளும், உறுதியும் எனக்குப் பிறக்கின்றன. எனக்குள்ளில் இருந்துதான் என் தற்கால நம்பிக்கைகளுக்கு வலுவான எதிர்த்தரப்பும் கிடைக்கிறது.

அந்த வாழ்க்கை புரட்டிப் போடுகிற சமயங்களில், பாலையென வெக்கை கக்கும் பொழுதுகளில், பாறையென என்னையாக்கிவிடுமென அச்சுறுத்தும் சந்தர்ப்பங்களில், ஒரு சிறிய இளைப்பாறல் போலவே நான் புத்தகங்கள், திரைப்படம், உடற்பயிற்சி ஆகியன பக்கம் ஒதுங்குகிறேன். இவ்விஷயங்களில் எனக்குள் இருக்கும் ஓர் உள்ளொழுங்கு, தொடர்பயிற்சி காரணமாக இவற்றைத் தொடர்ந்து செய்ய முடிகிற தேர்ச்சி பெற்றிருக்கிறேன். புத்தகங்கள், திரைப்படங்கள் இல்லாமலும் தனக்கான பாதையை ஒருவர் கண்டடைய முடியும். அதனால் வாசிப்பை அளவுக்கு மீறி புனிதப்படுத்துகிற மார்க்கெட்டிங் யுக்திகளை இப்போது நான் நம்புவதில்லை.

வெளிப்பார்வைக்கு நான் கரை தொட்டு ஓடினாலும், மணல் வெளுத்துக் காய்ந்தாலும், உள்ளுக்குள் என் தாகம் மட்டுமேனும் தீர்க்கும் சுனைநீர் எனக்குள் சுரந்து கொண்டேதான் இருக்கிறது. எனக்கு அந்த நீர் போதும். அந்த நீர் அடுத்தவருக்கு ஏற்குமா என்றும் எனக்குத் தெரியாது.

என் வாசிப்பில், ரசனையில், கருத்துகளில் – உடன்பட்டாலும் எதிர்பட்டாலும் – மதிப்பு வைத்திருக்கிற அன்பு நண்பர்கள் சுரேஷ் கண்ணன், வெற்றிவேல், தமிழில் பெண் எழுத்தாளர்களில் எழுத்தின் உச்சம் தொட்ட மிகச் சிலரில் ஒருவர் என நான் நினைக்கும் உமா மகேஸ்வரி ஆகியோர் எனக்குப் பிடித்த 10 புத்தகங்களைப் பட்டியலிட அழைத்திருக்கிறார்கள். அவர்களின் அன்புக்கு முதலில் நன்றி.

இப்படியான “பிடித்த 10 புத்தகங்கள்” விளையாட்டை வலைப்பதிவு காலங்களில் விளையாடிய நினைவு இருக்கிறது. அதனால் அதையே திருப்பிச் செய்யாமல், சமீபத்தில் படித்த புத்தகங்கள் குறித்துச் சிலவரிகளேனும் இத்தொடரில் எழுத ஆசை. இந்த இழை மாற்றத்துக்கு என்னைப் பொறுத்துக் கொள்ளுமாறு வேண்டுகிறேன்.

மேலும் நான் இப்போது பெரும்பாலும் மின்னூல்களுக்கு மாறிவிட்டேன். அதனால், இதழின் அட்டைப்படத்தை மின்னூலில் இருந்து எடுத்துப் பகிர இயலாவிட்டால், நூலின் தலைப்பையும் ஆசிரியர் பெயரையும் தர முயல்கிறேன். அதற்கும் பொறுத்துக் கொள்ளவும்.

தமிழ் மின்னச்சைக் கைத்தொலைபேசியில் செய்கிற வழக்கத்துக்கு நான் வந்துவிட்டேன். மடிக்கணினி பயன்பாடு அலுவலகத்துக்கு மட்டும் என்றாகி விட்டது. இப்பதிவைக் கூட நேரடியாகக் கைத்தொலைபேசியில்தான் எழுதுகிறேன். ஆதலால், என் பதிவுகள் தொடர்பற்ற குறிப்புகளாகத் (Bullet Points) தெரியலாம்.

(தொடரும்)

நா.வே.அருள் கவிதை

கடலின் புனைபெயர்

அந்தி மஞ்சள் வெயிலில்

புதரோரம்

பின்னி நடனமிடும் நாகமும் சாரையும்

உடல் திமிர்ந்தும் பிளந்தும்

ஈருயிரில் வழியும்

தீரா இம்சையின் துவம்ச நதி

காமத்தில் பழுத்த கடும்பசி மின்னல்கள்

பளீர் பளீரெனக்

கண்களில் மின்னும்

ஷணநேரக் கவ்வலுக்காய்க்

காத்துக்கிடக்கின்றன

கண்களின் இமைகள்

ஒன்றிற்குள் ஒன்றாய்ப்

புணர்ந்து உள்புகும்

ஓசையிடும் இதயங்கள்.

காதலின் முகத்துவாரத்தில்

நாவின் சுவர்களில்

சொற்களின் சாவிகள் தொங்குகின்றன.

முயக்கமோ

மௌனத்தை யாசிக்கும்.

என்றென்றைக்குமான கால வெளியில்

ஈருயிர் துடித்துவிழும்

இன்பத்தின் சாகரத்தில்.

கரங்களின் ஆரத்தழுவுதலில்

கட்டுக்குள் அடங்கவில்லை கடல்.

காமத்தின் கழிமுகத்தில்

உதட்டுக் கூரையில் ஒளிந்திருக்கின்றன

முத்தத்தின் திறவுகோல்கள்.

இருள் தினவெடுத்த சூரியனும்

ஆசை தின்று தீர்த்த அமாவாசை நிலவும்

முயங்கிப் புணர்ந்து மூச்சிறைக்க

மர்மங்கள் அவிழ்ந்துகொள்கின்றன.

காதலுக்கும் காமத்துக்கும்

ஏதொரு விகிதாச்சாரம்?

ஏதிங்கு ஆச்சாரம்?

••••

கனவென்பது ( சிறுகதை ) / ரமா சுரேஷ்

அவன் தன் வாழ்க்கையில் நீண்டதூர பயணங்கள் எதுவும் மேற்கொண்டதில்லை. தன் ஊரும் ஊரைச் சுற்றியிருந்த சிறு நகரங்களும் மட்டுமே உலகமென இத்தனை காலம் நம்பிக் கொண்டிருந்தவன், மேற்கொண்டுள்ள இந்த பயணத்தை வாழ்வில் மிக முக்கியமானதாய் உணர்ந்தான். எந்த பயணமும் தொடங்கும் இடத்தில் முடிவதில்லை என்பது மாமா அவனுக்கு சொல்லிக்கொடுத்த பாடங்களில் ஒன்று. தன் வயதை விடவும்

அதிகமாக வாழ்நாள் முழுவதிற்கும் மாமாவைக் குறித்த நினைவுகள்தான் அவன் தோள்களில் வேதாளம் போல் தொங்கிக் கொண்டிருக்கின்றன. அவனைப் போலவே பருவத்தில் அதிகம் ஊர் சுற்றியிருக்காத அவனது மாமா இப்படியானதொரு பயணமாகத்தான் சிங்கப்பூர் வந்தார். அது நடந்து முடிந்து இருபது வருடங்களாகின்றன. அதன்பிறகு அவர் வாழ்வின் பாதியை இந்த சின்னஞ்சிறிய தேசம் எடுத்துக் கொண்டிருந்தது.
விமானத்தின் உள்ளிருந்து ஜன்னல் வழியே அதன் ரெக்கைகளை வினோதமாக பார்த்தான். மேக கூட்டத்திற்குள் அது மட்டும் தனித்து பறப்பது போன்றிருந்து.

பயத்தில் கண்களை இறுக மூடிக்கொண்டான். வாழ்க்கையில் இக்கட்டான நேரங்களில் எல்லாம் கண்களை மூடிக்கொண்டால் எவ்வளவு எளிதாக இருக்கும் என்று நினைக்கும்போதே அவன் தோள்களை மேகமூட்டங்கள் உரசுவது போலிருந்தது. ‘எக்ஸ்க்யூஸ்மி’ என்ற குரல் காதுகளை உரச கண்களை திறந்தான். “சீட் பெல்ட் ப்ளீஸ்” விமான பணிப்பெண் சொல்லியபடி நகர்ந்துசென்றாள். பட்ஜெட் விமானத்தைவிட, தஞ்சாவூரில் இருந்து சென்னைக்கு வந்த சொகுசு பேருந்து அவனுக்கு வசதியாகவே தெரிந்தது. ஜன்னல் கண்ணாடி வழியே மீண்டும் ரெக்கைகளை பார்த்தான். கண்களுக்கு புலப்படவில்லை. சூரியன் இன்னும் விழித்தெழாத ஒரு குட்டி தேசம் இரவும் இல்லாமல், பகலும் இல்லாமல் நீரின் ஒளியில் மின்னிக்கொண்டிருந்தது. அந்த சிறிய சன்னல் தீவின் முழு அழகையும் காட்ட மறுத்தது.

உணர்ச்சிவயத்தில் எழுந்து நின்று பார்க்க முயன்றவனை பணிப்பெண் சிரித்தப்படியே அதட்டி அமரவைத்தாள். பெரும் மலை முகடுகள் அற்ற காடும், பேரலைகள் அற்ற கடலும் பின்னி பிணைந்துகிடந்தன. எனக்கு நீ உனக்கு நான், நமக்கான தனித்துவமே இந்த அமைதிதான் என்று அவர்கள் போக்கிலேயே கிடந்தார்கள். தனக்காக இந்த தீவில் ஒரு ஜீவன் காத்துகிடப்பதாக அவன் உள் மனம் கூறியது. “அஞ்சு லச்சத்தை வட்டிக்கு வாங்கிட்டு சிங்கப்பூருக்கு வேலைக்கு போகும் நீ, உன் மாமன் மாதிரி எங்களை நடு ரோட்டில் விட்டுடாத” அம்மா அழும்போது அவன் ஏதும் பேசாமல் நின்றிருந்தான். அவன் வாழ்வில் அர்த்தப்பூர்வமான எல்லா தருணங்களிலும் மாமாதான் ஒரு முன் மாதிரியாய் அவனுக்கு இருந்திருக்கிறார். அவரின் தோள்களிலிருந்தபடியே இந்த உலகைப் பார்க்க பழகியவன் என்கிற வரையில் இவனுக்கு எல்லாமே மாமா சொல்லிக் கொடுத்ததுதான். முதல் மழையை, முதல் சூரைக்காற்றை, திருவிழாக் கூட்டத்தையென அவன் குழந்தை பருவத்தின் சந்தோசங்கள் எல்லாம் தரும், அவரின் வியர்வை கலந்த அருகாமையிலிருந்து துவங்கியவையே.

எங்கு போனாலும் மாமாவுக்கு இவன்தான் காவடி. தோளில் தூக்கிக்கொண்டு வீதி முழுவதும் சுற்றித் திரிவார். இந்த கொண்டாட்டங்கள் எல்லாம் மாமா சிங்கப்பூர் வரும் வரை அவன் வாழ்வில் நடந்தேறியது. சிறு வயதில் தண்ணீர் என்றால் குடிக்க கூட பயப்படுபவனை குளிக்க வா என்றால், நாடு நகரத்தையே சுற்றி வருவான். இரண்டு நாளைக்கு ஒரு முறை இவனை தோளில் தூக்கிக்கொண்டு மாமாத்தான் குளத்திற்கு அழைத்துச்செல்லுவார். அப்படியொரு நாள் போகையில் “ஏண்டா மாப்ள, ஏதோ கெட்ட நாத்தமா வருதே உனக்கு ஏதாவது தெரியுதா!” மாமா மூக்கை சொறிய இவன் பல்லை கடவாய் வரை இளித்தப்படி “நான்தான் இன்னும் குண்டி கழுவல,” என சிரித்தான். “அடப் பீக்குண்டி பயல, டவுசரு கூட போடாம மேல ஏறி ஜம்முன்னு உக்காந்துருக்க,” குளக்கரையில் நின்றபடியே குளத்துக்குள் வீசி, மாமாவும் வாளையாய் பாய்ந்தார்.

“ஏண்டா என்னத்த தின்னு தொலச்ச, பிசினு மாதிரி ஒட்டிகிட்டு போகமாட்டேங்குது!” என்று குளத்தில் கிடந்த கொடிப்பாசியால் தேய்த்து குளுப்பாட்டிவிட்டதை நினைக்கையில் சத்தமாகவே சிரித்துக்கொண்டான். மேக மூட்டங்கள் கலையாமல் ஒரே இடத்தில் தவழ்ந்து கொண்டிருந்தன. விமானம் பறக்காமல் ஒரே இடத்தில் நிற்பது போன்றும், உறக்கத்தில் நடப்பவன் போல் குலுங்கி குலுங்கி நகர்வதும், நிற்பதுமாக இருந்தது. திடீரென அடிவானம் பீறிட்டு சிவப்பு குழம்புகளை கக்கத் துவங்கியது. செவ்வான ஒளியில் தீவு தங்கத்தை விழுங்கியவள் போன்று மின்னியது. காதில் ‘கொய்ங்’ என்ற சத்தத்துடன் அடைத்துக்கொள்ளவே அப்போதுதான் கவனித்தான் விமானம் மெல்ல தரையிறங்கி, கடகடவென்ற சத்தத்தோடு சாலையில் ஓடிக்கொண்டிருந்தது. மாமாவுக்கு வெள்ளை வேட்டி சட்டை வாங்கி வைத்திருந்த பையை மார்போடு அணைந்திருந்தான்.

மாமா வீடும், அவன் வீடும் ஒரே தெருவில்தான் இருந்தது. மாமாவின் உயரத்திற்கு ஏற்றார் போல் பரந்து திரண்டுகிடக்கும் மார்பின்மேல் சட்டை இல்லாமல் கைலியுடன் தெருவிற்குள் சுற்றும்போதெல்லாம் இவனின் மிகப்பெரிய நாயகனாக மாமாதான் காட்சியளித்தார். காலையில் எழுந்தவுடன் மாமா இவன் வீட்டு வாசலில்தான் நிற்பார். தலையில் துண்டை முண்டாசாக சுற்றிக்கட்டி, வாயில் வேப்பங்குச்சியை பீப்பி ஊதுவதுப்போல் ஒருகை நீளத்திற்கு குச்சியின் முனையில் இலையை கூட ஒடிக்காமல் வருவார்.

சில சமயம் அவன் அம்மாயி வீட்டு ஆடு மாமா வாயில் இருக்கும் இலையை தின்பதற்காக கூடவே ஓடிவரும். அன்று அவன் தூங்கி எழுந்து வரும்போது வீட்டு வாசலில் ஊர் பெரியவர்கள் சிலர் நின்றுக்கொண்டிருந்தார்கள். “மச்சான் என்ன இருந்தாலும் இன்னொருத்தனுக்கு பரிசம் போட்ட பொண்ணை, கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்து நிக்கிறியே இது நல்லாவா இருக்கு?” அவனுடைய அப்பா மாமாவை கடிந்துகொண்டிருந்தார். அப்பொழுதுதான் கவனித்தான், திண்ணையில் மாடிவீட்டு அத்தை மிரட்சியுடன் பேந்தப்பேந்த விழித்தபடி நின்றுக்கொண்டிருந்தாள்.
“என்னது! மாமாவுக்கு கல்யாணம் ஆச்சா? என்னைய தூங்க வெச்சுட்டு பந்தல் போட்டு, பீப்பி ஊதி, மோளம் அடிச்சு கல்யாணம் பண்ணிட்டிங்களா!” அவன் வயிற்றில் அடித்துக்கொண்டு வாசலில் உருண்டு ஆழ ஆரம்பித்துவிட்டான்.

“இவன் வேற நேரகாலம் புரியாம” அதட்டியப்படியே அவனை தூக்கி சமாதானம் செய்ய ஆரம்பித்தாள் அம்மா. சிறிது நேரத்திற்கெல்லாம் வீட்டு வாசலில் ஊர் பெரியவர்கள் அனைவரும் கூடவே, இனிதான் கல்யாணம் என்ற நம்பிக்கையுடன் மாமாவை கட்டிக்கொண்டான். நேரம்தான் கடந்ததே தவிர கல்யாணமும் நடக்கவில்லை, சாப்பாடும் போடவில்லை சண்டையாகத்தான் மாறியது. மாடிவீட்டு தாத்தா இடுப்பில் இருந்த வேட்டியை அவுத்து தாண்டினார். “அவ, செத்தா கூட முகத்தில் முழிக்க மாட்டேன், அதே மாதிரி அந்த ஓடுகாலி சிறுக்கி என் வீட்டு வாச நிழலை கூட மிதிக்க கூடாது” தாத்தா கோபமாக போய்விட்டார். மாடிவீட்டு அத்தை அழுதுக்கொண்டே இருப்பதை அவன் பாவமாக பார்த்துகொண்டிருந்தான் .

“இந்த வெறும் பய சிவப்பு தோலையும், வாட்ட சாட்டத்தையும் பார்த்து மயங்கியாடி வந்த, சாதி சனம் முன்னாடி மூக்கறுத்துட்டியே பாவி, நீ நடுத்தெருவுலதான் நிப்ப!” அத்தையை திட்டிய மாடிவீட்டு பெண்கள் மண்ணை வாரி தூற்றியபடியே சென்றார்கள். யார் பேச்சையும் சட்டை செய்யாமல், “என் புள்ள, பொண்டாட்டிய எப்படி காப்பாத்துறதுன்னு எனக்கு தெரியும்” ஆவேசமாக கத்தியவன் அவனை தூக்கி தோளில் வைத்துக்கொண்ட மாமா “டேய் மாப்ள, அஞ்சே மாசத்துல உனக்கு ஒரு தேவதைய பெத்து தாறேன், கட்டிக்கிட்டு சந்தோசமா இருடா” மாடிவீட்டு அத்தையின் வயிற்றில் குட்டி பாப்பா இருக்கும் சந்தோசத்தில் அவன், மாமாவின் தோளில் காவடியாக சுழன்று ஆடத் துவங்கினான்.

இவன் சிங்கப்பூர் வரும்போது அம்மா எப்படி அழுது ஊரைக் கூட்டினாளோ, அப்படித்தான் மாமா சிங்கப்பூர் வரும்போதும் அழுது ஊரைக் கூட்டி வைத்திருந்தாள். “இப்ப நீ எதுக்கு அழுதுட்டே இருக்க நான் சிங்கப்பூருக்கு விசிட்டிங் விசாவுலதான் போறேன், நாலு மாசம் ஒளிஞ்சுகிடந்து வேலப்பாத்தா நம்ம கஷ்டமெல்லாம் ஓடிடும்” ஆறுதல் சொன்ன மாமா அவனை அணைத்து முத்தமிட்டான். “அவளை நல்லா பாத்துக்கக்கா செல்வாக்கா வாழ்ந்தவ” சொல்லும் போதே மாமாவின் குரல் உடைந்தது. “அடியே உங்க அப்பன் வீட்டு வாசலில் அடி வெச்ச, என்னைய மறந்திடனும்.” மனைவியை அதிகாரத்துடன் அதட்டினாலும் கண்கள் என்னென்னமோ சொல்லியது.

அவன் கைகள் நிறைய காசுகளை அள்ளி கொடுத்த மாமா, “வெச்சுக்கடா மாப்ள, நான் சம்பாதிக்கறது எல்லாம் உனக்குதான், இந்த ஊர்லயே பெரிய வீடா கட்டி, என் பொண்ணையும் உனக்கே கட்டிதாறேன்,” அப்படி சொல்லிவிட்டு வந்த மாமா ஒரே வருடத்தில் சிங்கப்பூரில் காணாமல் போனார்.
சாங்கி விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தவுடன் அவனுக்கு தெளிவாக ஒன்று புரிந்தது, ஊரில் சொன்னதுபோல் ஒரே நாளில் சிங்கப்பூரை சுற்றி வர இயலாது. சிங்கப்பூர் வந்த புதிதில் மாமாவை தேடுவது அவனுக்கு மிக சிரமமாக இருந்தது. எப்படி, எங்கு யாரிடம் விசாரிப்பது? எந்த அடையாளத்தை சொல்லி கேட்பது என்ற தயக்கத்துடன் சிவந்த உயர்ந்த மனிதர்களை பார்த்தால் அவர்கள் பின்னால் ஓடி ஏமாந்தான். விடுமுறை நாட்களில் லிட்டில் இந்தியா முழுவதும் சுற்றி திரிவான். முதலில் வாட்சப்பில் மாமா பெயரில் ஒரு குரூப்பை துவங்கி ஊர்க்காரர்களுடன் தேடத் துவங்கினான்.

“பங்காளி மாமாவை மாதிரி தேக்காவில் இருக்க வீராச்சாமி ரோட்டில் பார்த்தேன்டா, புக்கீஸ் பக்கம் தாய்லாந்துகாரிகூடப் பார்த்தேன்,” இப்படி, அப்படியென மாமாவை பற்றி வதந்திகள் பரவினாலும், அவன் மாமா யார் கண்ணிலும் படாமல் காத்துபோல உலாவினான். ஒரு நாள் பெரியப்பா, போன்போட்டு “ஏண்டா உன் மாமா என்ன தியாகியா? பல வருசமா ஒளிஞ்சு கிடந்து வேலைப்பாத்துட்டு கிடக்கிறவன், நீயே அவன் போட்டோவை சிங்கப்பூர் முழுவதும் அடிச்சு ஒட்டி போலீஸ்கிட்ட காட்டி கொடுத்துடுவ போலயிருக்கே. சூதனமா தேடுங்கடா.” பெரியப்பா சொன்னது அவனுக்கு சரியாகப் படவே காதும் காதும் வைத்தார்போல் மாமாவை தேட ஆரம்பித்தான்.

சாப்பாட்டு கடை ஒன்றில் மேனேஜர் வேலை என்று சொல்லித்தான் ஏஜெண்டு ஐந்து லட்சம் வாங்கிக்கொண்டான். ஆனால், இங்கு வந்தபிறகுதான் தெரிந்தது, ஒரு கடை அல்ல முப்பது கடைகளை உள்ளடக்கி மிகப்பெரிய உணவகம் என்று.

முதல்நாள் வேலைக்கு சென்றபோது, மேனேஜர் வேலையும் அல்ல, தட்டு கழுவும் வேலையென்று புரிந்தபோது குடும்ப சூழலும், மாமாவின் ஏக்கங்களும் அவனை தலையசைக்க வைத்தது. யூசூன் எம்.ஆர்.டி நிலையத்தில் உள்ள ஷாப்பிங் மாலில் இயங்கும் உணவகத்தில் ஒரு நாளைக்கு ஆயிரம் பேர் குறையாமல் சாப்பிடும் இடத்தில் தட்டு, மங்கு கழுவுவது அவ்வளவு சுலபம் அல்ல. சோப்பு தண்ணீர்க்குள் கை ஊறி, நகம் கருத்து உப்பிக்கொண்டு நின்றது. B.Com படித்த அவனுக்கு அங்கு இருந்த ஆறுதல் அவனுடன் வேலைப்பார்க்கும் MBA, MCA மற்றும் BE நண்பர்களே. “ஏண்டா முதலாளிகூட ஓடியாடி வேலை பார்க்கணும் நீ உட்க்காந்த இடத்தை விட்டு நகராம வேலை பார்க்கலாம்னு சொல்லி கூட்டிட்டு வந்திருப்பாங்களே,” இப்படியாக தங்கள் சோகங்களை கேலியாக மாற்றி சிரித்துக்கொள்வார்கள்.

அன்று சாப்பாட்டு மேசையில் இருந்த காலி மங்குகளை எடுக்கும் போது எதேச்சையாக அருகில் நின்றவரை இடித்துவிட்டான், “பார்த்துலா பொடியா” என்று அதட்டலாக சொல்லிவிட்டு எதிர் மேசையில் அந்த கும்பல் அமர்ந்துகொண்டது. அவர்கள் அனைவருமே மலேசிய தமிழர்களாகத்தான் இருக்க வேண்டும். ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான அதுவும் பலநாட்டு, பல இன மக்கள் வந்துபோகும் சாப்பாட்டு கடையில் இந்த மனிதன் இன்னாட்டுக்காரன், இந்த இனத்தான் என்று சொல்வது புதியவர்களுக்கு வேண்டுமானால் கடினமான ஒன்று. ஆனால், மனித முகங்களை மட்டுமே பார்த்து பழகிப்போனவர்களுக்கு கண்ணையும் மூக்கையும் வைத்தும், அவர்கள் வாங்கும் சாப்பாட்டை வைத்தும் எந்த நாடு என்று கண்டு பிடிப்பது சுலபமான காரியம்.

பொதுவாக சிங்கப்பூர் தமிழர்களை விட மலேசிய தமிழர்கள் உயரமாகவும், தடிமனாகவும் இருப்பார்கள். அதோடு மலேசிய தமிழர்கள் உடம்பில் கை கால் முதுகு என்று உடல் முழுவதும் பச்சை குத்தி இருப்பார்கள். தலையில் சாயம், காதில் கடுக்கன் என்றும் கூடுதல் அடையாளமாக இருக்கும்.
“தம்பி எந்தவூருப்பா!” என்று தோளில் கை விழவே அவன் தடுமாறித்தான் போனான்.

“சார் தெரியாமல்தான் கை பட்டுச்சு,” அவன் தயங்கி நின்றான்.
“தஞ்சாவூர் பக்கமா?” கைகள் அவன் தோளை இறுக்கியது. அவன் அப்போதுதான் அந்த முகத்தை உற்றுப்பார்த்தான். சில உருவங்கள் அடையாளமாக மனதில் பதிவதில்லை. அப்படித்தான் அவர்கள் இருவரும் சந்திக்கும் போது உணர்வுகள் மட்டுமே அடையாளம் கண்டுக்கொண்டது. அவன் மாமாவை இறுக்கி கட்டிக்கொண்டு “மாமா! மாமா!” விசும்பலாக வெகு நேரம் அழுதுக்கொண்டிருந்தான்.

ஒரே இரவில் அவனும் மாமாவும் இருபது வருட வாழ்கையை கடை விரித்துப் போட்டார்கள். இருவருக்கும் எதை எப்படி துவங்குவது, யாரைப்பற்றி பேசுவது, என்று புரியாமல் ஆடு மாடு குலம் வாய்க்கா வரப்புன்னு பேசவும் செய்தார்கள். இருவரும் கடந்த வாழ்க்கையின் காரணங்களை தேடவில்லை. மீண்டும் சந்தித்துக்கொண்டோம் என்ற நிதர்சனமே கடந்தகால சோகங்களை தகர்த்தெறிந்தது. உனக்கு இரட்டை பொண்ணுங்க நினைவு இருக்கா மாமா? உன் பொண்ணுங்க இரண்டுபேரும் உருவத்திலும் சரி, குணத்திலும் சரி அப்படியே நீந்தான்? அவன் ஆதங்கத்துடன் மாமாவை பார்த்தான்.

இடது கை முழுவதும் குத்தியிருந்த வண்ண பச்சையை தடவிய மாமா “தனா உன்னிடம் சொல்ல தயக்கம் என்னடா?” பல வருடங்களாக தனா என்று அழைக்கப்படாத தன் பெயரை மாமா அழைத்தபோது சிறு வெட்கத்துடன் மாமாவுடன் அணைந்தும், அணையாமலும் நெருங்கி உட்கார்ந்துகொண்டான் தனசேகர். மனிதனின் மனநிலைக்கும், சூழலுக்கும் ஏற்றார் போல் வியர்வையின் வாசனை மாறத்தான் செய்கிறது. படிப்பறிவு இல்லாத மாமா கலெக்டர் வேலைக்காகவா இங்கே வந்தார், சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு தெரியாமல் ஒளிந்திருந்து ஏதோ நாலு காசு சம்பாதிக்க எந்த வேலை கிடைத்தாலும் போதும் என்று எண்ணி வந்தார். இருபது வருடங்களுக்கு முன்பு ‘ஓவர் ஸ்டெ’ என்பது சிங்கப்பூரில் பரவலாகவே இருந்த காலம்.

ஆரம்பத்தில் கிடைத்த வேலைகளையெல்லாம் செய்து வந்தவர், இரட்டை பெண் குழந்தைகள் என்ற கடுதாசியை பார்த்தபிறகு, தன் குழந்தைகளை எப்படி வளர்த்து ஆளாக்கப்போகிறோம் என்ற பயத்தில் தாறுமாறாக சிந்திக்க துவங்கினான். மனிதனின் ஆசையை விட, பயம் கொடியது. பயம் யோசிக்க விடாமல் எதை வேண்டுமானாலும் செய்யச்சொல்லும், அந்த பயமே அவனை வழிநடத்த துவங்கியது. கடன் கொடுக்கும் முதலாளிகளிடம் வேலைக்கு சேர்ந்தான். வட்டிக்கு கடன் கொடுக்கும் முதலாளிகளை சிங்கப்பூரில் செல்லமாக ‘முதலைகள்’ என்றும் கூப்பிடுவார்கள். முதலைகள் கொடுத்த கடனை வசூல் செய்துகொடுக்க அவர்கள் சில கேங்ஸ்டர்களை சட்டத்திற்கு புறம்பாக வைத்திருந்ததும் உண்டு. அவன் உயரமும், உடல்வாகும் முதலைகளுக்கு மட்டும் அல்ல, சில சமயம் தாய்லாந்து, இந்தோனேசியாவில் இருந்து வரும் அழகிகளுக்கும் அடியாளாகவும் செல்வான். அப்படி அறிமுகமானவள்தான் தாய்லாந்து பேரழகி.

உறவையும், உரிமையையும் எளிதில் இழக்கும் மனிதன் தன் உடலையும், அது கொடுக்கும் வெட்கையையும் அவ்வளவு எளிதில் இழக்க முடிவதில்லை. மனித வாழ்வின் அடையாளமாக மட்டும் அல்லாது உலகின் அடையாளமாகவும் இந்த வெப்பம் மிதமிஞ்சியே கிடக்கின்றது. பல உடல்களின் வெப்பத்தை உள் வாங்கவே அவள் தாய்லாந்தில் இருந்து சிங்கப்பூர் வந்துபோவாள். கிராஞ்சி அருகில் இருக்கும் பேக்டரியில்தான் அவளுக்கு நிறைய கஸ்டமர்ஸ். ஓடாத கண்டனையர்கள் அவளுக்கு அழகிய படுக்கையறையாக அலங்கரிக்கப்பட்டு காத்திருக்கும். அவளுக்காக வரிசையில் காத்து கிடக்கும் உயிர்களை ஆராதித்து அரவணைத்துக்கொள்வாள். ஒருவன் கலைத்து, களைந்து வெளியே வரும் போது இன்னொருவன் உள்ளே செல்வான். வேட்டையாட தெரிந்த மனிதனுக்கு, வேட்டையின் நுட்பங்கள் புரிவதில்லை. பலர் உள்ளே சென்றவுடனே வெளியே வந்துவிடுவார்கள், சிலரை இவன்தான் அதட்டி வெளிய இழுத்துவருவான். அவள் உள்வாங்கிய வெப்பத்தின் அளவைப்பொறுத்தே கட்டணங்கள் வசூலிக்கப்படும்.

யாரிடம் எவ்வளவு வாங்க வேண்டும் பத்தா, இருபதா, முப்பது வெள்ளியா என்று உள்ளிருந்து சொல்லுவாள், அதில் பல பய கடன் சொல்லிட்டு போவான்! காவலுக்கு வெளியில் நிற்கும் இவன் கடனாளிகளின் பெயரை நோட்டுப்போட்டு எழுதி வைத்துக்கொண்டு மாத முதல் வாரத்தில் வசூல் செய்து கொடுப்பான். வங்கதேசத்தை சேர்ந்த ஊழியர்கள் சம்பளத்தை வாங்கி அப்படியே கொடுத்துவிட்டு போவதும் உண்டு. இதையெல்லாம் யாருக்கோ நடந்தது போல் சாதாரணமாக மாமா சொல்லிக் கொண்டிருக்க, தனா மலைப்போடு கேட்டுக் கொண்டிருந்தான்.

முதலையிடம் கடன் வாங்கியவர்கள் சொன்ன தேதியில் பணத்தை திருப்பி தரவில்லை என்றால், அவர்கள் வீட்டு வாசலின் முன் கலர் சாயத்தை ஊத்தி, வீட்டு தொலைப்பேசி எண்ணைய் குடியிருப்பு பகுதி முழுவதும் எழுதி போட்டு விடுவார்கள். ஒரு முறை அவனும் அவன் கூட்டாளியும் வேலையை முடித்துவிட்டு வரும் வழியில், கடன் வாங்கியவன், அவர்களை ஆள் வைத்து அடித்து லொங்கானில் வீசிவிட்டான். அதில் அவன் கூட்டாளி இறந்துபோனது மட்டுமல்லாமல் இவனின் நிலை கவலைக்கிடமாகவும் இருந்தது.

பாஸ்போர்ட், விசா இல்லாத அந்த நேரத்தில் போலீசாரிடம் இருந்து அவனை காப்பாற்றியதும் தாய்லாந்தழகியே! முதலையிடம் சண்டைபோட்டு அவன் மருத்துவ செலவிற்காக பணத்தை வாங்கி மலேசியா வழியா தாய்லாந்து கூட்டி போனாள். சிறிது காலம் தாய்லாந்து, மலேசியா என்று சுற்றி திரிந்தவன் மலேசிய பாஸ்ப்போட், குடியுரிமையை திருட்டுத்தனமாக பெற்றான். இந்த இருபது வருட வாழ்க்கையில் அவன் மட்டும்மல்ல, சிங்கப்பூரும் பல சட்டதிட்டங்களை கடுமையாக்கியது. கடன் கொடுக்கும் முதலைகள், தாய்லாந்து அழகி போன்ற பெண்கள் நினைத்த நேரத்தில வந்து, கிடைத்த இடத்தில தொழில் செய்ய முடியாது. மாமா தன் துயரத்தை எல்லாம் சொல்லி “என் வாழ்கையையே இழந்துட்டு நிக்கிறேன் தனா.” மாமா எதை நினைத்து பெருமூச்சு விட்டார் என்று தெரியவில்லை. ஆனால், தனாவின் கண்கள் கலங்கி கண்ணீர் கசிந்தது. வார்த்தைகள் இருந்தும் பேச விரும்பாதவன் போல், தலையை கோதிக்கொடுத்த மாமாவின் கைகளை எடுத்து, மடியில் வைத்துக்கொண்டான்.

நம் வாழ்வில் நடைப்பெறும் அனைத்து சம்பவங்களுக்கும் பின் ஆயிரம் காரணங்களை அடிக்கிக்கொண்டே போகலாம். ஏழு வயதில் மாமாவின் தோளில் இருந்து இந்த உலகை மட்டுமல்லாமல் மாமாவின் வாழ்க்கையையும் பார்த்து ரசித்தவன். திருவிழா கூட்டத்திலும் சரி, நிலவற்ற இருளிலும் சரி மாமாவை பார்த்து மிரளும் அந்த அழகிய கண்களை தனா ஆவலுடன் பலமுறை பார்த்து இருக்கிறான். மாடிவீட்டு அத்தையாக பார்த்ததைவிட தனாவின் அத்தையாக அவளை மிகவும் பிடித்து போனது. மாமாவிற்கு பிறகு தனாவின் மிகப்பெரிய சந்தோசம் அத்தைதான். மாமாவிடம் இருந்து வரும் கடிதத்தை அத்தையின் மிரளும் விழிகள் கண்ணீருடன் படிக்கும் போது இவனும் காரணமே புரியாமல் அத்தையுடன் சேர்ந்து அழுது இருக்கிறான். திடீரென அத்தையின் விழிகளில் இருந்த மிரட்சி காணாமல் போய்விட்டதாக தனா நினைத்துக்கொள்வான். ஆனால், வருகிறேன் என்று கடைசியாக மாமா போட்ட கடிதத்தை அத்தை இப்போதுக்கூட மிரட்சியுடன் ஒரு முறை படித்திருப்பாள் என்பதையும் உணர்வான். ஒரு முறை மாமாவீட்டு வாசலில் ஊரும், உறவும் ஒன்றுகூடி மாமா இறந்துவிட்டதாக ஒப்பாரி வைத்து அழுதார்கள். அன்று தனாவும் அழுதான், அப்போதுதான் அத்தையின் கண்கள் எரிச்சலை உமிழ துவங்கியதை கவனித்தான்.

“ராஜ குமாரியாட்டம் வளர்ந்தவ, ஆயியப்பான் பேச்சை கேக்காம போனதால நடு ரோட்டில நிக்கிறாத பார்த்தியா” என்று ஊரில உள்ள வயது பிள்ளைகளுக்கு உதாரணமா காட்டும் போதும், திருவிழா கூட்டத்திலும், இழவு வீட்டிலும் ஒத்த மனுசியாக தனிச்சு நிற்கும் அத்தையை பார்க்கும் போதெல்லாம் அவள் கண்களில் கசிந்து வரும் ஒளியில் நவரசங்களும் கரைவதை பார்த்து இருக்கிறான். அத்தைக்கும் தனாவிற்கும் பத்து வயதுதான் வித்தியாசம். ஆனால் அவன் வளர்வதற்குள் அத்தை கிழவியாகி விட்டதுப்போல் உணர்ந்தான். மாடிவீட்டு தாத்தா கெஞ்சியும், உறவுகள் அதட்டியும் மாடிவீட்டு பக்கம் போக மறுத்த அத்தைக்காக, தனா மேற்கொண்ட பயணத்தில் துக்கத்திலும், சந்தோசத்திலும், கோபத்திலும் மாறி மாறி மாமாவின் மடியில் அழுதுக்கொண்டிருந்தான்.

ஓரிரு நாட்களில் மாமாவை அழைத்துக்கொண்டு ஊருக்கு போகப்போகிறோம் என்ற நினைப்பே தனாவை தூங்க விடவில்லை. ஊருக்கு போனவுடனே ஊரை கூட்டி அத்தையின் கையால் விருந்து வைக்கணும், எந்த முன்னறிவுப்பும் இல்லாமல் மாமாவை அத்தை முன் நிப்பாட்டி பதினெட்டு வயதில் அவள் தொலைத்த வாழ்க்கையை திரும்ப கொடுக்கும்போது அவள் முகத்தை பார்க்கணும், என்று மாமாவின் கைகளை இருக்க பற்றிக்கொண்டான். அதில் இருந்த குளிர்ச்சியும் வெப்பமும் சிரித்துக்கொண்டன.

அதிகாலை கனவைப்போல இருந்தது எல்லாம் அவனுக்கு, அம்மாவிடம் இருந்து ஃபோன் வரும் வரை. இவன் ஹலோ என்று சொல்வதற்கு முன்பே “ஏலே தம்பி நாம மோசம் போயிட்டோம்டா உங்க அத்த!” அம்மா அதற்கு மேல் பேச முடியாமல் திணறினாள்.
“கொஞ்ச நாளா சந்தோசமா இருந்தாடா, மாரியாத்தா கண்ண தொறந்துட்டான்னு பல வருசத்துக்கு பிறகு கோயிலுக்கு போயிட்டு வாரேன்னு சொல்லிடு இரண்டு நாளைக்கு முன்ன போனவ இன்னும் வீடு வரலடா,”

“அம்மா முதல்ல அழுவதை நிப்பாட்டு, அத்தை எங்கயும் போயிடாது வந்துடும்.” சொல்லும் போதே அவன் குரல் உடைந்தது, மாமாவுக்கு தெரியாமல் கண்களை துடைத்துக்கொண்டான்.

“இல்லடா, ஊமச்சி வரமாட்டா! அவ இனி வரமாட்டா!” பல அழுகை குரல்கள் கேட்டன. தனாவுக்கு உறுதியாக ஒன்று மட்டும் தெரிந்தது மாடி வீட்டு அத்தை இறந்திருக்க மாட்டாள். இத்தனை காலம் காத்திருந்தவள் திடீரென எங்கு போயிருக்க முடியும்? துக்கங்களை சந்தோசமாக ஏற்றுக் கொண்டவள் சந்தோசமாக வாழ்வைத் துவக்க வேண்டிய நேரத்தில் ஏன் யாரிடமும் சொல்லாமல் மறைந்து போக வேண்டும்? தனாவின் தலைக்குள் பூச்சிகள் பறந்தன. யாரோ நினைவு தப்புமளவிற்கு ஓங்கி காதில் அறைந்துவிட்டதைப் போல் சுயநினைவற்று நின்றான். “மாப்ள நான் ஊருக்கு கிளம்பிட்டேன். போகலாமா?” மாமாவின் குரல் எங்கோ ஒலிப்பது போன்று இருந்தது அவனுக்கு.

***

கசப்பு ( சிறுகதை ) / பாலா கருப்பசாமி

பாலா கருப்பசாமி

சாலையில்தான் எத்தனை வாகனங்கள்
இங்கே மின்விசிறி சுழல்கிறது
புத்தக மேலட்டை நடுங்குகிறது
அதைக் கட்டியணைத்து
ஒன்றுமில்லை, ஒன்றுமில்லை
என்று தேற்றவேண்டும்போல
பூமி சுழலும் வேகத்தில்
தலை கிறுகிறுத்து, வியர்த்து
பாதங்கள் நழுவி முடிவற்ற
இருள்வெளியில் தள்ளுகிறது
கொஞ்சம் ஞாபகங்கள்
சில கண்ணீர்த் துளிகள்தவிர
விட்டுச்செல்பவை ஏதுமில்லை

ஒடுக்கமான அந்த நீண்ட நடைக்கூடம் ஒவ்வாமையைத் தந்தது. தான் பார்ப்பவை எல்லாம் ஏன் இப்படி இந்த உலகத்தில் இருக்கத் தகாததாகவே இருக்கின்றன என்று அவன் வியந்துகொண்டான். ‘இதோ, முன்னால் காத்திருக்கும் இருவரில் முதல்பெண் படபடப்புடன் இருக்கிறாள். அப்படியே கொப்பளித்துச் சிந்திவிடுபவள் போல. இரண்டாவது பெரியவர் இருக்கையின் மேல்முனையைத் தாண்டி நீண்டிருக்கும் பின்னந்தலை சுவரில் சாய்ந்திருக்க (வழுக்கைத்தலை) சுவரில் எண்ணெய்த்தடம் தெரிகிறது. உள்ளேயிருந்து கசப்பு எதுக்களித்துக்கொண்டு வருகிறது.

வாந்தியாய் எடுத்துவிட்டால் எத்தனை நிம்மதியாய் இருக்கும். ஒவ்வாமை, ஒவ்வாமை, ஒவ்வாமை. மனிதர்களும், மனிதர்களால் அறிவுறுத்தியும், அறிவுறுத்தாமலும் கடைபிடிக்கப்படும் நாகரீகங்கள், அது கண்டுகொள்ளாது விட்டுச்செல்லும் மனித உணர்வுகளை ஸ்மரணையற்றுப் போகச்செய்யும் மொண்ணைத்தனம், இவையெல்லாம் சேர்ந்து வயிற்றில் சுழன்று சுழன்று மேலேற முடியாது தவிக்கும் அந்தக் கசப்பு.

சுப்புராஜ் சொன்னதுபோல இது செய்வினையாக இருக்கும் என்று வி.கே.புரத்திலிருக்கும் ஒரு சாமியாரைப் போய்ப் பார்த்தான்.
பிரதான சாலையிலிருந்து இடதுபுறம் பிரிந்துசெல்லும் நீண்ட தெருவில், வடிவ ஒழுங்கில்லாத வீடுகளைக் கடந்து, மீண்டும் இடதுபுறம் திரும்பினால் ஒதுக்குப்புறமாய் வரிசையாய் காம்பவுண்டு வீடுகள். காம்பவுண்டுகளை ஒட்டி சின்ன வாய்க்கால் பன்றியின் நிறத்தில் நிலைத்திருந்தது. சின்ன சிமிண்டுப் படிக்கட்டுகளைத் தாண்டி காம்பவுண்டுக்குள் நுழைய இடமும் வலமுமாய் இரண்டிரண்டு வீடுகள். வலதுபுறம் முதல்வீட்டு வாசலில் காவித்துண்டை மேலே போட்டபடி புருவமத்தியில் குங்குமக் கீற்றுடன் சாமியார் டெஸ்கில் ஒரு நோட்டில் ஏதோ கணக்குகள் போட்டுக்கொண்டிருந்தார். சுப்புராஜ் விவரங்கள் சொன்னான். அவர் அவனையே இமைமூடாமல் பார்த்துக்கொண்டிருந்தார். திடீரென்று இங்கு என்ன செய்கிறோம் என்ற உணர்வும், எதற்குமே அர்த்தமோ நோக்கமோ அற்ற வெயில்போல் மரத்த உணர்வு மேலிட, அப்போது அது மீண்டும் நடந்தது. கசப்பு.

பொங்கிப்பொங்கித் திரண்டு, மாதங்களை நொடியில் தாண்டும் குதிரைபோல மனம் ஓட்டமெடுத்து ஓட, அவ்வேகத்தில் வளரும் மரம்போல கசப்பு வளர்ந்து எல்லாவற்றையும் இருளைப்போல மூடிக்கொள்ள, சாகப்போவதுபோல, பிடியில்லாமல், நிற்கமுடியாமல் உட்காரமுடியாமல் தத்தளிக்க, இங்கே இருக்கக்கூடாது, எதுவும் சரியில்லை என்று நினைத்துக்கொண்டிருக்கையிலேயே வாந்தியெடுத்தான். வெறும் எச்சில் மட்டும்தான் வந்தது. ஐந்து நிமிடத்தில் சரியாயிற்று. காற்று வியர்வையில் பட்டு குளிர்ந்தது. மரக்கிளைகள், செடிகள், பளிச்சென்று சிரிக்கும் வெயில் ‘என்ன, இதுக்குப்போயி இத்தனை அமர்க்களமா’ என்று கேலி செய்வதுபோல் இருந்தது. சாமியார் திருநீறை வாயில்போட்டு தண்ணீர் குடிக்கச் சொன்னார்.

இரண்டு அரக்குநிற உருண்டைகளைக் கொடுத்து இரவு படுக்கப்போகுமுன் ஒன்றுவீதம் சாப்பிடக் கொடுத்தார். ‘செய்வினைதான். செய்வினைங்கறது தகடு இல்லை. நீங்க இருக்கதை நினைச்சி, அவங்க முன்னாடி நீங்க இல்லாட்டியும் உங்களை மனசிலே கறுவிக்கிட்டிருக்கவங்களோட, இறந்த ஆத்மாக்களோட கோபம் எல்லாமாச் சேந்து பண்றதாக்கும். மூதாதைகளுக்கு தவறாம திதி குடுங்க. சனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு எள்ளு வச்சிக் கும்பிடுங்க. பைரவருக்கு பூசணிக்காயில விளக்கேத்துங்க. எல்லாம் சரியாப் போவும்’
இது நடந்தது போனமாதம். போய் வந்த ஒருவாரத்திலேயே மீண்டும் ஆரம்பமாயிற்று. அவனுக்கு சடங்குகளில் எந்த நம்பிக்கையுமில்லை. ஆனால் மனதுக்குள் வேண்டிக்கொண்டான்.

‘அப்பா, நான் பார்த்திராத என் தந்தைகளே, மூதாதைகளே, உங்களின் ஒரு துளி நான். என் மீது கருணை கொள்ளுங்கள். என்னை இங்கே இருக்க அனுமதியுங்கள். வேரறுத்துவிடாதீர்கள். தெய்வங்களே, என் மனதை எனக்குத் திருப்பித் தாருங்கள்.’ யாருமே இல்லாமல், மனதின் நூற்றுக்கணக்கான குரல்களில் இதுவும் ஒன்றோ என்று தோன்றியது. மிகுந்த மனச்சோர்வை அடைந்தான். இரவுகள் தான் மோசம். பகல் முழுக்க மேலாண்மை பார்த்த புத்தி உறங்கும் நேரம். மனதிலிருந்து அவர்கள் கல்லறை மீட்புப் போல எழுந்து வருவார்கள். தர்க்கமே இல்லாமல் ஓடும் எண்ணங்கள் நெடுநேரம் நீளும்.
சாமியாரைப் பார்த்துவந்த பத்து நாட்களில் மீண்டும் அவனுக்கு ஒவ்வாமை தாக்கியது.

அம்மா, அண்ணன், தங்கை, மனைவி, பிள்ளைகள், நண்பர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், பொருட்கள், இடங்கள், கடவுள் எல்லாம் யாரோ கத்தரியால் வெட்டிவிட்டதுபோல் அந்நியமாக அந்தரத்தில் இருளில் மிதக்கும் அனுபவம். வானவீதியில் வெகுதொலைவில் மீண்டும் மனிதர் ஒருவரைச் சந்திக்கும் வாய்ப்பு இருக்குமா என்றே தெரியாத நிலையில் ஒருவரை நிறுத்திவைத்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு அனுபவம். பிறரெவரும் உள்ளே நுழையமுடியாத தனிமை. தனிமை. தனி…..மை.

ஏகமனதாக மனோதத்துவ நிபுணரைப் பார்ப்பதுதான் சரியாக இருக்கும் என்று முடிவுக்கு வந்து, டவுணில் மேலரத வீதியில் இருக்கும் கிளினிக்குக்கு வந்தான். அந்தப் பெரியவர் போய் ஒருமணிநேரமாகிறது. மீண்டும் ஒரு தாக்குதல் நிகழ்ந்துவிடுமோ என்று பயமாய் இருந்தது. முன்னெல்லாம், இதைப் போக்க கம்ப்யூட்டரில் கேம் விளையாடினான்.

ஒவ்வொரு குறிக்கோள்களையும் தாண்டிச் செல்வதில் ஆர்வத்துடன் ஈடுபட்டான். ஒருகட்டத்தில் அது அபத்தமாகத் தெரிய ஆரம்பிக்க நிலைமை இன்னும் மோசமானது. யாரோ தன்னை ஏமாற்றுகிறார்கள். அர்த்தமேயில்லாமல், போலியாய் ஒரு அர்த்தத்தை உருவாக்கிக்கொண்டு காலத்தைக் கடத்த இப்படிச் செய்கிறார்கள்.

இந்த வாழ்க்கையும் இதைவிட மோசமான விளையாட்டு. வெற்றி, தோல்வி என்பதெல்லாம் பெரும் பித்தலாட்டம். எந்த அர்த்தங்களுக்கும் பொருளில்லை. அர்த்தங்கள் தனியொருவரிடம் தொடங்கி, அவரிடமே முடிந்துவிடுகிறது. அர்த்தங்கள் குறித்து இந்த உலகுக்கு அக்கறையில்லை. நரகம்.

‘இதோ அருகிலிருக்கும் இவரை என்னால் புரிந்துகொள்ள முடிவதில்லை. சுவரில் அந்தப் பல்லி எதற்கு அரைமணிநேரமாய் நின்றுகொண்டிருக்கிறது? இந்த மருத்துவரைத்தான் புரிந்துகொள்ள முடியுமா? அவருக்கு கொஞ்சமும் மனதளவில் ஒட்டாமல் கேள்விகள் கேட்டு சில தீர்வுகளை, அல்லது மருந்துகளைக் கொடுப்பார். நான் காசு கொடுக்க வேண்டும்.

தொழில். என்னை நானாகவே எடுத்துக்கொள்பவர் யார்? ஒரு நண்பனால் முடியுமா? எத்தனை கழித்தும் மீதமிருக்கிறது வெறுமை’. உள்ளே அந்தப் பெரியவர் அழுவது கேட்கிறது. எல்லோருமே பரிதாபத்துக்குரியவர்கள்.

அவனுக்கு வாலிபவயதில் காதலித்த பெண்ணின் ஞாபகம் வந்தது. அவள் பெயர் தமிழ்ச்செல்வி. ஒளிர் கருமை நிறம். பார்த்துத் தீராத முகம், கோவில் சிலைபோல. அவனுக்கு 2 அக்காவும், ஒரு தம்பியும் உண்டு. 16 வயதில், 11வது படித்துக்கொண்டிருந்தபோது தமிழ்ச்செல்வியை காதலிக்க ஆரம்பித்தான்.

இந்த வயதில் தான் காதலிக்கவேண்டும் என்று முடிவெடுத்து, யாரைக் காதலிக்கலாம் என்று யோசித்து தற்செயலாய் அவளைப் பார்க்கையில் அவளும் அவனைப் பார்த்தாள். சந்தோசமாக இருந்தது. பின்னர் இருவரும் ஒருவரையொருவர் கவனிக்க ஆரம்பித்தார்கள். இருவருக்கும் ஒரே தெருவில்தான் வீடு. குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு தெருக்கோடியைக் காட்டுவதுபோல் அவனை நோக்கி விரல்நீட்டுவாள். குழந்தையை முத்தமிடுவாள். பொங்கிப் படர்ந்துகொண்டிருந்தான். மணம்வீசும் பூப்பூத்த செடியைப் போல வாழ்க்கை நிரம்பி வழிந்தது. ஆனால் கடைசியில் இது ஒத்துவராது வேண்டாம் என்று அவள் விலகிவிட்டாள். காரணம், இருவருக்கும் 1 வயதே வித்தியாசம்.

தனது அக்காக்களுக்கு திருமணம் முடிந்து அவனுக்கு வருவதற்குள் பல வருடங்கள் ஓடிவிடும். அவன் நொறுங்கிப் போனான். எப்படியிருப்பினும் ஏற்றுக்கொள்ளும் தாய்மைக்குப் பிறகு, பால்யகாலம் கடந்து வாலிபத்தை எட்டிப்பிடிக்கையில் ஒரு செடி தானாக வளர முயலும் முயற்சியைப் போலத்தான் காதல். அது உலகில் தன்னைப் பிடித்துவைத்துக்கொள்ள ஆதார சக்தியின் இயக்குவிசை. காதல் மறுக்கப்படும்போது வாழ்க்கை ஒருவகையில் மறுக்கப்படுகிறது. இரண்டு உயிர்களுக்குள் ஏற்படும் தொடர்பும், அதன் நிமித்தம் பூரிக்கும் காதலும் மறுக்கப்படும்போது அவர்கள் அந்நியப்படுகிறார்கள்.

தனிமை. தனிமை. தனி…மை. காதலைத் தவிர்த்து இன்னொரு உயிரிடம், ஒன்றாகிவிடுவதுபோல் கலப்பது எப்படி சாத்தியம்? இந்த அந்நியம் பிறகு உலகோடு ஒட்டவைக்கவே முடியாதபடி அந்தரத்தில், பூமியில் தங்காது தொங்க ஆரம்பிக்கிறது. எந்த உறவும் நெருங்கமுடியாதபடி சுருங்கிக் கொள்கிறது. காதல் நிராகரிக்கப்படுவது குரூரமானது. எவ்வகையிலேனும் மனிதன் காதலிக்க வேண்டும். அவனது தனிமை இந்தக் காதல் நிராகரிப்பிலிருந்துதான் தொடங்கியது என்பது அவனது எண்ணம்.

‘காதல் காதல் காதல், காதல் போயின், சாதல், சாதல், சாதல்.’
இருப்பதற்கான நியாயங்கள் வேண்டும். தான் இங்கே, இவ்விதம் இருப்பதில் மகிழக்கூடிய மனிதர்கள் சூழ இருப்பது வரம். எல்லோரும் சுயநலமிகளாய் இருக்கும் உலகில், இருத்தலுக்கான நியாயம் சுரண்டுவதும், சுரண்டப்படுவதுமாய் அமைந்துவிடுகிறது. எல்லா உறவுகளிலும் அவனால் இப்படியான சுரண்டலை மட்டுமே பார்க்கமுடிகிறது. கண்ணில் வழியும் கண்ணீர் கூட சுயத்தைப் பறைசாற்றியபடி வருவதால், இரக்கமும் மரத்துப் போய்விடுகிறது. அழகான நாய்க்குட்டி வாங்கி வளர்த்துப் பார்த்தான், மீன்தொட்டி, கிளி. எல்லா உயிரினங்களும் தன்னுடைய வாழ்க்கையைக் கொண்டாடுகின்றன.

ஓர் உயிரின் மீது அன்பு செலுத்த என்ன காரணம் தேவை. அது இருக்கிறது அவ்வளவுதான். தொடர்பு எல்லைகளுக்கு அப்பால் இருக்கும் ஒரு மனிதன் எப்படித் தொடர்பு கொள்வது. அவனுக்கு எதிலும், யாரிடமும் ஈடுபாடு இல்லாமல் போய்விட்டது. வாழ்க்கைதான் எத்தனை விசித்திரமானது. இந்த மூன்றாவது மாடியிலிருந்து குதிக்க நினைத்தால் குதித்துவிடலாம். மரணமடைய நிறைய வாய்ப்புண்டு. அல்லது பிளேடால் மணிக்கட்டில் கீறிக்கொள்ளலாம். கயிறு மாட்டிக் தொங்கலாம். அது வலி மிகுந்த சாவு. மரணம் வாழ்க்கைக்கு எத்தனை அருகில் இருக்கிறது. பைனரியின் அடுத்த ஒரு வாய்ப்பாக அதன் கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது. எந்த நியாயமுமே இல்லாமல் உலகில் வாழ்வது பெரும் கோழைத்தனம்.

அவன் டெலி மார்க்கெட்டிங்கில் மூன்றாண்டுகளாக வேலை பார்த்துவருகிறான். பணம் என்ற ஒன்றுக்காக, ஓர் அபத்தமான பொருளை, அபத்தமான மனிதர்களிடம் விற்க, அபத்தமாய்ப் பேசவேண்டியிருப்பதுவும் பெரும் ஆயாசத்தைத் தந்தது. கடந்த ஆறு மாதங்களாக அவனது நாற்காலியில் உட்கார்ந்ததும் இந்தக் கசப்பு பொங்க ஆரம்பித்துவிடுகிறது. பரந்துவிரிந்த புறவுலகு எங்கும் அவனை நெருக்கியடித்தபடி, மூச்சுக்குத் தவிக்கும்படி செய்கிறது. அதே இடம்தான், ஆனால் தொடமுடியாத கிரகத்தின் தூரம். ஒழிந்து போவென்று அழுத்துகிறது.

இம்மாதிரி சமயங்களில் வியர்த்து ஊற்றும். மலம் கழிக்க வேண்டும்போல, சிறுநீரும் முட்டிக்கொண்டு, கையைக்கூட தூக்கமுடியாத பலவீனத்தோடு, அடுத்த நொடி மயங்கிவிழுந்துவிடுவோம் அல்லது இறந்துவிடுவோம் என்ற பீதியைக் கொடுக்கும். ஆனால் உடல் இப்படி அவஸ்தையில் இருக்கையில் மயக்கமடைய முடியுமா என்றும் தோன்றும். அவன் அறிந்தவரை மயக்கம் ஒரு தூக்கத்தைப் போல அவஸ்தையின்றி வருவதாக நினைத்துக் கொண்டிருக்கிறான். மரணம் அவஸ்தையோடு தான் வரும். எப்போது அது வந்தாலும் தன்னால் செய்யக்கூடியது எதுவுமில்லை என்றுதான் அவனுக்குத் தோன்றியது. ஒருவேளை இதுதான் நரகம். இந்தத் தண்டனைகளெல்லாம் முடிந்துவிட்டால், இந்தக் கனவு தெளிந்துவிட்டால் பதற்றமில்லாத, தனக்கே தனக்கான ஓர் உலகத்தில் நுழைந்துவிட முடியும். அதற்கெல்லாம் உத்தரவாதம் தருவது யார்?

இரவைப்போல வெளியை இருளுள் மூழ்கடிக்கும் பகல்களும் இருந்தால் எத்தனை நன்றாயிருக்கும். தான் மட்டுமான நிஜம். கண்ணை மூடிக்கொள்ளும் பூனையுலகம். இதுவும் பொய்யென்று அவனுக்கும் தெரியும். ஆயினும் இருள் அவனுக்குக் கசப்பிலிருந்து சற்று ஆறுதல் அளிக்கிறது. மனைவி இவனை நோக்கி நகர்கையில், ரொம்ப எச்சரிக்கையாய்த் தானியத்தை எடுக்கவா வேண்டாமா என்று தயங்கும் ஒரு குருவி படக்கென்று கொத்தித் திரும்புவதைப் போல ஓடிவிடுகிறான். மற்றவையெல்லாம் ஓர் ஆழ்ந்த கருணை. இரவில் வெளியெங்கும் ஒரே நிறம். வெளிதான் முழுமை போலும். தான் மட்டும் ஊர்ந்துகொண்டே இருக்கும் பூரானைப் போல சதா மனதின் அரிப்பு. தன்னிருப்புதான் இங்கு பிரச்சினை. தானற்ற உலகு முழுமையானது.

ஆனால் அவனுக்கு தற்கொலை செய்யுமளவுக்குத் திராணியில்லை. மரணம் பிறப்பைப்போல அருவாகி, கருவாகி, உருவாகி வந்து பிறப்பதுபோல், இந்த இயக்கம் தானாய் செயல் சுருங்கித் தேய்ந்து ஓய்ந்து இயல்பாய் நிற்கவேண்டும். அந்த மரணம் மட்டுமே ஏற்கத்தக்கது. தன் கட்டுப்பாடின்றி நிகழும் விபத்துக்களுக்கு ஒன்றும் செய்யமுடியாது. ஆனால் இதையெல்லாம் யாரிடம் முறையிடுவது? கடவுள் பேசாமலேயே போனதினால் அறிவியல் கடவுளின் இடத்தைத் தானே எடுத்துக் கொள்கிறது.

நோயென்றால் யாரும் மந்திரிப்பதில்லை. மருத்துவரிடம் போகிறார்கள். அறிவியலும் கடவுளைப் போலத்தான். நோய்முதல் நாடி எல்லாம் அதற்குத் தேவையில்லை. தொந்தரவு தரும் பிரச்சினை எதுவோ அதைச் சரிப்படுத்தும் வரம் தருகிறது. எந்த வரமும் அதற்கு மாற்றான தீதை உள்ளே வைத்துத்தான் இருக்கிறது. எல்லா புராணக் கதைகளிலும் வரம் பெறுபவர் பெரும்பாலும் வரத்தால் தவறு செய்கிறார். அது அவரை அழிவுக்குத்தானே இட்டுச் செல்கிறது. – இப்படி எத்தனை எத்தனை எண்ணங்கள் இரவில் ஓடுகின்றன. எந்த இடத்திற்கும் இட்டுச் செல்லாத வீணான எண்ண ஒழுக்கு. ஆயினும் இரவுகள் ஆறுதலளிப்பவை.

அவனுக்கு ஒரு புத்தகக்கடையில் பார்த்த ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் புத்தகத் தலைப்பு நினைவுக்கு வந்தது: ‘Truth is a Pathless Land’. எல்லோருக்குமா இந்த அவஸ்தை இருக்கிறது? பாதையற்ற பாதை எனில் எப்படிச் செல்வது. அவனுக்கு வரும் துர்கனவுகளில் ஒன்று (இன்னொன்று பாம்புகள்) உயரமான மலையுச்சியில் ஒற்றைப் பிடிமானத்தில் தொங்கிக் கொண்டிருக்க பட்டென்று கைநழுவி கீழே ஆழமறியா இருளுக்குள் விழுவது. ஒவ்வொருமுறையும் அவனை இந்தக் கனவு நடுங்கச் செய்யும்.

உயிர் பயம் அது. அப்படித் தொங்காமல் துணிந்து அந்த இருளுக்குள் குதிக்க வேண்டுமோ? இருள்தான் எத்தனை அழகானது. கண்ணை மூடினால் போதும். உள்ளே வந்துவிடலாம், தன்னுடைய வீட்டுக்குள் நுழைவதுபோல. எப்போதும் இருள், ஆம் அது தான் தீர்வு. கண்களைத் திறந்தான். வாகனங்கள் பரபரப்பாக இடதும் வலதும் பதட்டத்துடன் ஓடிக் கொண்டிருந்தன. கீய்ங் கீய்ங் ஹாரன் இப்போது தொந்தரவாய் இல்லை. சடாரென்று வேகமாய்ப் பாயும் கார் முன்னால் விழுந்தால் போதும். சாலைக்குச் செல்ல 10 நொடிகள். காரையும் நேரத்தையும் கணக்கிட 10 நொடிகள். பாய ஒரே நொடி. 21 நொடிகள். 21 நொடிகளில் மரணம். சாசுவதமான இருள். அவன் எழுந்தபோது பெரியவர் வெளியே வந்தார். அவன் உள்ளே நுழைந்தான்.

••