Category: ஏப்ரல்

பிரம ஞானம் ( சிறுகதை ) / கல்யாணராமன்

பிரும ஞானம்

எனக்கு வயது முப்பத்தொன்பது. இந்த வயதில் பாரதி செத்துப்போய் விட்டான். இனிமேல்தான் எனக்குக் கல்யாணமாக வேண்டும். நான் ரோஜா நிறத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள். எங்கள் குடும்ப முன்னோரில் ஒருவர் திருமலை நாயக்கர் சபையில் வைத்தியராகப் பணி புரிந்தாராம். ராஜவம்சப் பெண் ஒருத்தியை இரண்டாந்தாரமாக மணந்தாராம். அந்த ரத்தம் என்னுள் ஓடுவதால்தான் எனக்கு இந்த நிறமும் வசீகரமும் வாய்த்ததாம். பாரம்பரியப் பெருமையுள்ள ஒரு கல்லூரியில் இளம்வயதிலேயே தத்துவப் பேராசிரியராகி விட்டேன். எனக்குத் தனிவீடு இருக்கிறது. வடகலை சம்பிரதாயத்தில் ஊறிய வயதான பெற்றோர் உள்ளனர்.

எவர் உதவியும் தேவையில்லை. கணினியும் கைப்பேசியும் போதும். இம்மாநகர் முழுதும் சுற்றிவந்துவிடுவேன். ஊபரையும் ஓலாவையும் சுளுவாய்ப் பயன்கொள்வேன். எப்பிகியூரஸ் தொடங்கி ஒஷோ வரை நிறுத்தாமல் பேசுவேன். என் வகுப்பை எந்தப் போக்கிரியும் கட்டடிக்க மாட்டான். இலக்கிய ஆசிரியர்கள் சில சமயம் என் வகுப்பில் அமர்ந்து நான் பாடம் நடத்தும் ஆழத்தைச் செவிமடுப்பர். எந்தச் சாலையைக் கடந்தாலும், எந்தக் கூட்டத்தில் நுழைந்தாலும், கடைக்குள்ளோ வங்கிக்குள்ளோ தடுமாறப் பார்த்தாலும், யாரோ ஒருத்தி ஓடிவந்து கனிவோடு உசாவித் தேவைப்படும் உதவியைச் செய்வாள். ‘கிருஷ்ணராஜா’ என்ற என் பேரைக் கேட்டுத் தெரிந்து கொண்டதும், அந்தக் குமரிகள் எவ்வளவு ஆசையாக ஒலிப்பார்கள் தெரியுமா? என்ன இருந்தும் என்ன? என் அம்மாவுக்குப் பெரிய குறை. திருக்கல்யாண மங்கைக்கும் திருவிடந்தைக்கும் எத்தனை தடவைதான் அவள் அலைவாள்? தாயாருக்குப் புடவை சாத்திச் சாத்தியே நொந்துவிட்டாள்! சாளக்ராமத்தைப் பூஜையில் வைத்து அப்பா செய்யாத பிரார்த்தனையா?நித்திய ஆராதனைதான்; நித்திய மண்டகப்படிதான். எத்தனைபேருக்குக் கேட்காமலேயே இதெல்லாம் குதிர்ந்துவிடுகிறது!

“பத்து வயசிலிருந்து இந்தப் பய இருபது வருஷமா விடாம ஆஞ்சனேய ஸ்வாமிக்கு வட மால சாத்திண்டு வரானில்லியோ? அதனால அந்தக் குரங்கு இவனயும் தன்னப்போலப் பிரம்மச்சாரியா ஆக்கிப்புடுத்தோ என்னவோ! இவம் பொறந்தப்ப எந்தம்பி பிடிவாதமா நான் எவ்வளவோ தடுத்தும் கேக்காம குமரி ஸ்நானம் பண்ணப் போனானே, அந்த ஜலப்பீடதான் இப்படி இவனத் துவச்சுக் காயப்போட்டுடுத்தோ!”என்பார் பெரியப்பா. அவருக்குத் தம்பியைக் குத்துவதில் அவ்வளவு குஷி.

என் ஒருநாள் எப்படிக் கழிகிறது? பன்னிரண்டு மணிக்குப் படுப்பேன். ஆறு மணிக்குள் விழிப்புத் தட்டிவிடும். குளித்துப் பூசைமுடித்துச் சாப்பிட்டுவிட்டுச் சரியாக ஏழுக்கெல்லாம் ஸ்டிக்குடன் கிளம்புவேன். மெதுவாய் நடந்துபோய் ரயில் பிடிப்பேன். மொபைலில் தமிழ் ஆங்கிலச் செய்திகளைப் பத்து நிமிஷம் மேய்வேன்.முகநூலில் கோட் போடுவேன். பஜகோவிந்தம் முணுமுணுப்பேன். கூலிங்கிளாஸ் மாட்டிக்கொள்வேன்.

கல்லூரிக் குமரிகள் நேரம் கேட்கும்போது அவர்கள் முகத்தை உத்தேசமாய்க் கணித்துக் கையை உயர்த்தி ஸ்டைலாய்க் காட்டுவேன். சிரித்துவிட்டு நகர்வார்கள். “இவங்கிட்டதான் நேரம் கேக்கணுமா? ச்சை…. நம்மள எல்லாம் ஒருத்தியும் மதிக்கிறதே கிடையாது. நொண்டி முடம் கூன் குருடுங்களோடதான் இந்த ஒய்யாரிங்க வழிவாளுங்க. இந்தக் காலை நேரம் இப்படியா விடியணும்? என்னவோ போ! சிட்டியிலயே பிறந்து வளந்து படிச்சு வேலை பாத்து என்ன யூஸ்? நம்மள எல்லாம் இங்க எவ சீண்டறா? நமக்குந்தான் இந்தக் கூலிங்கிளாஸ் போட்ட பயலப் போல ப்ளெஸண்ட்டா ஸ்மைல் பண்ணத் தெரியுதா, சொல்லு! ஆபிஸ்ல ஒருத்தி முகங்கொடுத்துப் பேசறாளா….. கண்ணில்லாத சனியனுக்கில்ல அதிர்ஷ்டம் அடிக்குது!” அக்குரல் நீங்காமல் என் காதில் எதிரொலித்துக்கொண்டிருக்கிறது.

அந்தக் குரலில்தான் எவ்வளவு வக்கிரம்? இவ்ளோ விஷம் கக்கறானே! இப்போது நான் என்ன செய்யணும்? கோபப்பட்டு அவனை அடிக்கப் பாயணுமா? அடித்தால் எல்லாம் சரியாகி விடுமா? இவன் ஒருவன் என்றால் மல்லுக்கு நிற்கலாம். ஊரைப் பகைத்து எங்கே போய் வாழ? தேங்கிய துக்கம் மனத்தை அழுத்தும்போது, ஒருவழிதான் இருக்கிறது. எப்போதோ அனுபவித்த எளிய சந்தோஷங்களை நினைவுக்குக் கொண்டுவந்து, நிகழின் ரணம் மறக்கவேண்டியதுதான். நேற்று ஒரு ஸ்கூல் பையன் கைப்பிடித்துக் கோவிலுக்கு வெளியே வரும்போது, “அங்கிள்! இந்தாங்க ரோஜாப்பூ. மோந்து பாருங்க!”ன்னானே. எத்தனை அற்புதக் கணம் அது?

எட்டுமணிக்குக் கல்லூரிக்கு முதல் ஆளாய் அட்டென்டென்ஸ் போட்டு விடுவேன். எட்டரைக்குப்பின் பலர் வருவார்கள். ஒருநாளுக்குப் பெரும்பாலும் ரெண்டுமணி நேரம்தான். ஓரிரு நாளில் மட்டும் மூன்று வகுப்பெடுப்பேன். சக பேராசிரியை ஒருத்தி எனக்கும் சேர்த்து மதியச் சாப்பாடு கொண்டுவருவாள். ரிடையராகப் போகிறவள். அப்படியுமே நாக்கில் நரம்பில்லாமல் பேசுவார்கள். கைம்மாறாகத் தினமும் அவளுக்கு வ்யாக்யானத்துடன் பாசுரம் சொல்வேன். அத்வைதத்தில் சந்தேகம் கேட்க மாணவிகள் வருவார்கள். மாணவர்களையும் கூடவைத்துக்கொண்டு கயிற்றரவை வியப்பேன். ஒருமணியடித்தால் போதும், கிளம்பிவிடுவேன். அரசு நிதி உதவி பெறும் மொழிச் சிறுபான்மைக் கல்லூரி. அம்மொழியிலும் எனக்குப் பழக்கமுண்டு என்பதால், நிர்வாகத்தால் பெரிய இடைஞ்சல்கள் இல்லை.

மாற்றுத்திறனாளிக்கு வேலை தந்த பெருமையிலும் அவர்கள் திளைத்திருந்தார்கள். அதைப் பயன்படுத்திக் குறித்த நேரத்தில் நான் புறப்பட்டுவிடுவேன். நேராகப் பார்வையற்றோர் மையம் செல்வேன். ஒருமணி நேரமிருப்பேன். பின் கணினிப் பயிற்சியகம் போவேன். இளம்பிள்ளைகளிடம் ஆதரவாகப் பேசுவேன். “யாருக்கும் நாம் குறைந்தவர்களில்லை. தனித்திறன் படைத்தோர் நாம். நம்மை யாரும் இங்கே வளர்த்துவிடமாட்டார்கள். நம்மை நாமாகவே வளர்த்துக்கொள்ளவேண்டும்.

நமக்குக் கண்ணில்லாதிருக்கலாம்; கூரிய மூளையுள்ளது. நம் மூளையால் இந்த உலகையே நாம் மாற்றலாம். இது வெற்றுக்கோஷம் இல்லை; நாம் நம்பவேண்டிய உண்மை” என்பேன். மிக உற்சாகமாய்க் கைத்தட்டுவார்கள். எனக்குப் பயம் வரும். துளசியை உண்டு பண்ணின பெருமாள், அதற்கு ஏற்றம் தராமலா போவான்? எனக் கேட்டுக் கொள்வேன். என் குரல் எனக்கே கேட்காது!

மூன்றரைக்குக் கார் வரும். அவள் வருவாள். சமூக சேவகி. பரமேஷே வியந்த பேரழகி. ஒரு கூட்டத்தில் நான் தத்தாத்ரேயர் பற்றிப் பேசியபோது, எனக்குச் சிநேகிதியானாள். ஐம்பதுவயது தொழிலதிபருக்கு வாழ்க்கைப்பட்ட முப்பதுவயதுக்காரி. அவளுக்குப் பணம் ஒரு பொருட்டேயில்லை. பணத்தைச் செலவழித்து என்ன நன்மை செய்வது என்பதில்தான் குழப்பம். என்மீது ஏதோ ஒரு பரிவு. சற்று அதிக வாஞ்சை. அவள் காரில் என்னை ஏற்றிக்கொள்வாள். இரண்டுமணி நேரமாவது அவளோடு ஒவ்வொரு மாலையும் செலவிடுவேன். அதிகபட்சம் ஏதாவது ஹோட்டலுக்குத்தான் போவோம். முந்திரிபக்கோடாவும் காஃபியும் ஆர்டர் கொடுப்பாள்.

அவள் பேசுவதைக் குறுக்கிடாமல் கேட்க வேண்டும். அவளுக்கு எத்தனை லவ் லெட்டரகள் வந்தன? இன்றும் எத்தனை பேர் அவளிடம் வழிகிறார்கள்? அவளை ஏன் எல்லாரும் ஏமாற்றுகிறார்கள்? அவள் புருஷன் ஏன் பணம் பணம் என்று அலைகிறான்? கவலைகள் தீர்ந்து அவள் வாழ்வில் நிம்மதி என்று வரும்? இவ்வளவையும் விஸ்தாரமாய்ச் சொல்லித் தீர்த்தால்தான் திருப்தி. இது நித்தியப்போக்கு. வாரத்தில் இருநாள் கடற்கரை போவோம். எங்குப்போனாலும் அங்குள்ளோர் விழிகள் எங்களையே மொய்ப்பதாய்ச் சொல்லிச் சிரிப்பாள். எனக்கும் சிரிப்பு வந்துவிடும். என்னோடு அவள் பேசுவதைப் பார்த்துப் பிறர் பொறாமைப்படுகிறார்கள் என்பாள்.

அதைக் கேட்கையில் வாழ்ந்த சுகம் தோன்றும்! ஒருநாள் புருஷன் கன்னத்தைக் கடித்தான் என்பாள்; மறுநாள் குடித்துவிட்டுவந்து எட்டியுதைத்தான் என்பாள். எதிர்வீட்டான் இவளையே விழுங்குவது போலப் பார்க்கிறானாம். அதற்காகப் புருஷன் அசிங்கமாய்த் திட்டுகிறானாம். இத்தனை கஷ்டத்திலும் இவளுக்குச் சிரிக்கும் முகமாம். இவள் தோழிக்கு இவள் எப்படி எப்பவும் சந்தோஷமாவே இருக்கான்னு ஆச்சர்யமாம். இவளை அவள் சாகசக்காரி, எதற்கும் துணிந்த கட்டை என்று ஏசுகிறாளாம். “புருஷனப் பிடிக்கலன்னு பிடிச்சவனோட ஓட முடியுதா? இல்ல, எவனயோ நெனச்சு அவனோட படுத்துப் பொரளாமதான் இருக்கறமா? ராஜா! இந்த மாதிரி உன்னோட பேசிக்கிட்டேயிருந்தாப் போதும்.

மீண்டும் நான் கன்னி ஆயிடுவன். ஆனா அது எப்படி முடியும்? சொல்றதப் பொறுமையாக் கேட்கற பாரு. அது போதும் ராஜா. நூறு மனுஷி பலம் வருது எனக்கு” என்பாள். அவள் பாவம் என்று எத்தனை நாள்தான் நான் நினைப்பது? கண்ணில்லை என்பதற்காக என் உணர்ச்சிகளோடு அவள் விளையாடுவதா? “யூ ஆர் நாட் பிளைண்ட். யூ ஆர் டிஃபெரண்ட்லி ஏபிள்ட். சியர் அப் மேன். மைல்ஸ் டூ கோ பிஃபோர் யூ ஸ்லீப்” என்று மேடையில் முழங்கலாம். கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் சர்க்கரையெனப் பெயர் வைத்துவிட்டால் வாழ்க்கை இனிப்பாகிவிடுமா? அதற்காகச் சேர்மனைச் சேர் பெர்சனாக்கியதை எதிர்ப்பாயா? வார்த்தையிலாவது ஒரு மாறுதல் வரட்டுமே கிருஷ்ணா ராஜா! அதைப் பரிகசிப்பதில் உனக்கு எதற்கு இத்தனை வேகம்? நீ மேம்பட்ட ஒரு மாற்றுத்திறனாளி என்று நிறுவப் போகிறாயா? கைரேகை வைக்கமாட்டாய். ஸ்டிக்கைத் தரையில் பூவைத் தொடுவது போல் ஓசையில்லாமல் அவ்வளவு மென்மையாய்ப் பதித்து நடப்பாய்.

‘கேன் யூ பிளீஸ் ஹெல்ப் மீ?’ என யாரைப் பார்த்தும் கெஞ்சமாட்டாய். பரிவும் சலுகையும் வேண்டாம் உனக்கு. கூட்டம் போடணும், பேசணும், குரூப் கூடி விவாதிக்கணும், நீ தலைமை தாங்கணும், வழிநடத்தணும், மேலே மேலே முன்போகணும்! இவையெல்லாம் ஆசைகளா, இல்லை உன் பிடிவாதங்களா? கிருஷ்ண ராஜா, உனக்கு என்ன வேண்டும்? இவ்ளோ ஹைப்பர் ஆக்டிவா ஏனிருக்க? எண்ணம் இறந்தநிலை என்கிறானே ஜிட்டு! அதப் பத்தி யோசிச்சிருக்கியா? வேட்கைகளைத் துரத்தியபடி ஓடுவதா உன் வாழ்வு!” இப்படித் தன்னுள் பேசிப் பேசிக் குழப்பம் அதிகப்பட்டதுதான் மிச்சம். இதெல்லாம் மனம் பின்னும் மாயை என்பான் சங்கரன். மாயையைச் சூன்யத்திலிருந்து கடன்வாங்கிப் பெருக்கிக்கொண்டான்.மாயையை உதறினால் பிரும்மம் புலப்பட்டுவிடுமாம். எந்த மாயையை நான் உதறுவது? கடவுளையா காமத்தையா?ராமானுஜனிடம் பெருமாள் இருக்கிறான்; சரணாகதி இருக்கிறது. அநாத்மவாதம் பேசும் புத்தனை நம்பிப் போவதற்குத் தைரியமில்லையே. வேறுவழி? நெடுஞ்சாண்கிடையாகத் தாயார் சந்நிதியில் விழவேண்டியதுதான். அப்பா அப்படித்தானே போதிக்கிறார்?

“கிருஷ்ணா! பேசாம இரு. தாயாரச் சேவி. சதா அவளயே தியானம் பண்ணு. அவ புருஷகார பூதை. தெரியாமலா வலப்பக்கத்த விஷ்ணு தந்திருக்கான்? லக்ஷ்மி, நாராயணீ, பூமாதேவி, பெரிய பிராட்டி, நப்பின்னே, திருவே, என்னப் பெத்த தாயாரேன்னு கண்ல ஜலம் பெருகத் தலமேலக் கைக்கூப்பி நில்லு. உன் பாவம்லாம் ஓடிக் கிரகலக்ஷ்மி கைப்பிடிக்க வருவா. நம்புடா கிருஷ்ணா! பொய்யா சொல்வான் அப்பா!” இந்தப் பேச்செல்லாம் எத்தனை வருஷம் நான் கேட்பது? கற்கண்டு தித்திக்குங்கறதுக்காகக் கற்கண்டயேவா மூணுவேளையும் தின்னமுடியும்?

உடம்புன்னு ஒன்னிருக்கே. அது இவா யாருக்கும் தெரியாதா? எத்தன பெண் பாத்தாச்சு! மொதல் அஞ்சு வருஷம் வடகலையாப் பாத்தோம். அப்பறம் அம்மா தென்கலையோ அய்யரோ எதுன்னாலும் பரவாயில்லன்னா. இப்ப விதவ, விவாகரத்தானவன்னாலும் பிராமணாளாயிருந்தாப் போதுங்கறா. ஆனால் எனக்கு இப்பவும் ஒரு நிபந்தனையிருக்கு. எனக்குக் கண்ணில்லை. ஒத்துக்கறன். அதுக்காகக் கண்ணில்லாதவளதான் நானும் பண்ணிக்கணுமா? என்ன இரக்கமில்லாத உலகம் இது? எவ்வளவு வாய் பேசறானுங்க, கைஒடிய எழுதறானுங்க. ரெண்டு கண்ணில்லாதவங்க ஜோடி சேர்ந்து இன்னும் ஜாஸ்தி கஷ்டப்படணுமா? கல்யாணங்கறது எதுக்கு?

ஒருத்தருக்கொருத்தர் ஒத்தாசயா இருக்கறதுக்குத்தானே. கண்ணில்லாதவனக் கண்ணுள்ளவ மணக்கறதுதானே நியாயம்? சாதியில்ல மதமில்லம்பானுங்க. ஹோமோ லெஸ்பியன் அரவாணி பத்திப் பரிவாப் பேசுவானுங்க. ஆனா இதுல மட்டும் எல்லாப் பயலும் ஒரே கட்சிதான். அந்த மேரேஜ் மேச்சிங் செண்டர் நடத்தறவ என்ன சொன்னா? “கண்ணில்லன்னா கால் நொண்டி, டமாரச் செவிடு, ஊமை, குருடு, கைமுடம், பாரிச வாயு பீடிச்சதுன்னு எதுன்னாலும் சம்மதம்னு எழுதி வெச்சா சீக்கிரம் நடந்துடும். நார்மல் பொண்ணக் கேட்டின்னா, உன் ஸ்டிக் பிடிக்க எவ எஸ் சொல்வா?”ன்னாளே! அவகிட்ட நான், “நீ என்னை அஃபண்ட் பண்ற. நீ சொல்ற வார்த்தகள இந்த நாகரீகச் சமூகம் இன்னிக்கு பேன் பண்ணியிருக்கு. மாற்றுத் திறனாளின்னு மரியாதயா நீ பேசாட்டி உம்மேல கம்ப்ளெய்ண்ட் கொடுப்பன். ட்ரீட் மீ அஸ் எ ஃபெலோ ஹ்யூமன் பீயிங். ஐ ஆல்ஸோ பிளாங் டூ யுவர் சொசைட்டி”ன்னு ஸ்ட்ரெயிட்டா சொல்லமுடியுமா? இவ்வளவு படிச்சிருந்தும் எவ்வளவு பயமாயிருக்கு! ஏன் நான் இப்பிடிக் கோழையாயிருக்கன்? கோபப் பட்டுட்டா நல்ல மேச் அமையறத அவ தடுத்திடுவான்னா? இல்ல, இது ஒரு பார்வையற்றவனோட அவஸ்த. சுதந்திரத்த சுவாசிக்க முடியாத அச்சம். இது புரியணும்னா நீங்களும் என்னப் போலப் பிறக்கணும். நெவர் எவர். உங்களுக்குப் புரியாது.

இதான் நீங்க ப்ரீச் பண்ற மனுஷத்தனமான்னு கேக்கறன். என் வேல வேணும், என் சம்பளம் வேணும், என் ஜாதி வேணும், என் வீடு வேணும். ஆனால் நான் வேணாம். பார்வையுள்ளவங்களுக்கு ஒரு நீதி, இல்லாதவங்களுக்கு அநீதியா? என்ன மாதிரி ஓர் உலகம் இது!

“கிருஷ்ண ராஜா! நீ யார்? ஏன் இவ்வளவு அற்ப ஜீவியா நீ இருக்க? எதுக்குடா உனக்குக் கல்யாணம்? நீ பாட்டுக்கு இப்ப இருக்கிறது போலவே சுதந்திரமாயிருந்துட்டுப் போய்த்தொலையேன்.என்ன கெட்டுடும்! தாலி கட்டிக் கூடினாத்தானா? அரிப்பெடுக்கறப்பப் போய்வந்தாப் போச்சு. இதுக்கா இவ்ளோ ஆர்ப்பாட்டம்!” இது மேல்மனம். இதை ஆழ்மனம் ஏற்கமறுக்கிறது. அது கனவு காண்கிறது. எறும்பும் உயிரே என்கிறது. நீட்ஷேவின் சூப்பர்மேனைத் தவிடு பொடியாக்கித் தன்னை அதன்மீது நிறுவிக்கொள்கிறது. நான் பலகீனன்தான். ஆனால் என்னிருப்பை அவ்வளவு லேசாய்க் காலிசெய்துவிடமாட்டேன்.

இந்த உலகில் பிற எல்லாவற்றையும் போலக் கல்யாணமும் பண்டமாற்றுத்தானே. ஒரு பெண் எனக்கு அவளைக் கொடுத்தால், நான் அவளுக்கு என்னைத் தருவேன் என்ற கணக்குத்தானே! அன்பா? அது எங்கேயிருக்கிறது? அப்படியே ஒன்றிருந்தாலும் எனக்கெல்லாம் அது எப்படிக் கிடைக்கும்? என் உண்மையும் நேர்மையும் யாருக்கும் வேண்டாமா? எவ்வளவுபேர் அடியுதைபடுகிறார்கள்! எத்தனை சவங்கள் நடமாடுகின்றன! குடும்பம் காவுகொள்ளும் பலிகளுக்குக் கணக்குவழக்குண்டா? பால்சுரண்டலைப் பேசிமுடியுமா? இத்தனைக்கிடையில், ஒரு நல்ல ஆத்மா கூடவா இல்ல என் கைப்பிடிக்கன்னு நீ ஏங்கறதில உள்ள அபத்தம் உனக்கே புரியலயா கிருஷ்ண ராஜா! நோ நோ. அன்று ஜென்னி சொன்னதே உண்மை.

இந்தச் சாதிதான் என் பிரச்னை. அவள்தான் என்னிடம் எத்தனை அன்பாயிருந்தாள்!எனக்குச் சங்கரனை ஹெகலை வாசித்தவள் யார்? அவள் ஸ்கிரைப் எழுதித்தானே கோல்டுமெடல் வாங்கினேன்! பட்டமளிப்பு விழா முடிந்து டைட்டானிக் போயிருந்தோம். படம் முடிந்ததும், ஒரு பெரும் மௌனம் எங்களுக்குள் குடிகொண்டது. அதை மறுநாளே அவள் உடைத்தாள். தயங்கித் தயங்கித் தன்னிஷ்டத்தைச் சொன்னபோது, எவ்வளவு மூர்க்கமாய் நான் அதை மறுத்தேன்?அந்தப் பாவமே இப்படிப் புலம்பச்செய்கிறது. இப்போது எல்லாம் புரிகிறது. ஜென்னிதான் என்னோடில்லை. அதுவும் நல்லதுதான். என் மாதிரி மூர்க்கனுக்கா அந்தப் பவித்திரம் பலியாவது! அம்மா சொல்வது போல் பெருமாள் போடும் கணக்கா தப்பும்?
பதினைந்து வருஷம் தலைகீழாய் நின்று பார்த்துவிட்டோம். எவளும் அமையவில்லை. என்ன மாயம்! அன்று எவ்வளவு பிடிவாதமாயிருந்தாளோ, அதற்கு முற்றெதிராய் அம்மா இன்று திரும்பிவிட்டாள்.

“ராஜா! நாம என்னடா பாவம் பண்ணினோம்? உங்கப்பாவும் நானும் நெருங்கின சொந்தந்தான். அந்தக் காலத்தில இதெல்லாம் யாருடா பாத்தா? எல்லாருந்தான் சொந்தம் போயிடக்கூடாதுன்னு பண்ணிண்டா. அப்படித்தானே நாங்களும் பண்ணிண்டோம்? நீ இப்பிடிப் பிறந்ததுக்கு அதுதான் காரணம்னு மெடிக்கல் சயின்ஸ் சொல்றதன்னு சண்டைக்கு வர்றியேடா! அதுக்காகச் சொல்றன். இந்த மாதிரினு தெரிஞ்சிருந்தா நாங்க இதச் செஞ்சிருப்போமாடா?”

“விடும்மா. ஏதோ வேகத்தில அப்படிக் கேட்டுட்டன்.
ரிசர்ச்சர்ஸ் தினம் புதுசு புதுசா ஏதாவது சொல்றான். காஃபி குடிக்காதங்கறான். அப்பறம் அவனே தப்பில்ல குடிங்கறான். அதப் போய் நீ பெரிசாப் பேசிக்கிட்டு”

“சரிதாண்டா. நீ இப்ப எனக்கு ஆறுதல் சொல்லக் கிளம்பிட்டியா? என்ன சொன்னாலும், ஒருநொடி உள்ளுக்குள்ள சுருக்குன்னு குத்தத்தான் குத்துதுடா. ஆனா இனிம அத மாத்தவா முடியும்?

“ஐயோ அம்மா. இந்தச் சுயஹிம்சயே வேணாம். எனக்காக நீ ஏன் உன்னக் கஷ்டப்படுத்திக்கிற? நான் இப்படியே இருந்துட்டுப்போறன். என்ன நஷ்டம்?”

“என்ன பேச்சுப் பேசறடா? ஒன்னே ஒன்னு பெத்தது இதக் கேக்கத்தானா? இப்போ எனக்கு விஷயம் புரிஞ்சிடுத்துடா. இந்த ஜாதிய நம்பி நாம மோசம் போயிட்டோம். ஒவ்வொருத்தியும் என்ன பேசறான்னு உனக்குத் தெரியுமாடா? வேத்தாளே தேவலாம்னு தோணிப் போச்சுடா.

நம்பளவாளாச்சேன்னு போய்க் கேட்டா பிச்சக்காரிய பாக்கறாப்பல பாத்து மூஞ்சியத் திருப்பிக்கறாளே!”

“ஊரப்பத்தி உனக்கென்ன? அப்பா என்ன சொல்றார்னு பாரு. அவரும் நீயும் சண்ட போடாம இருந்தாப் போதாதா?”

“போனவாரம் நடந்தது உனக்குத் தெரியாதா?மனுஷன் இப்ப ரொம்ப இடிஞ்சு போய்ட்டார்டா. அவர் சிநேகிதர் பொண்ணு எஸ்எஸ்எல்சிதான் படிச்சிருக்கு. பால்ய சிநேகிதர்ங்கற உரிமையில இவர் போய்க் கேட்டிருக்கிறார். அதுக்கும் முப்பத்தஞ்சாச்சேன்னு இவருக்குப் பாவம் ஆதங்கம். அந்த இன்ஷூரன்ஸ் ஏஜெண்ட் சொன்னதக் கேட்டு இவருக்கு மார்வலி வந்துடுத்துன்னா பாரேன். சமையக்காரனுக்குக் கொடுத்தாலும் கொடுப்பன்.

திருதராஷ்டிரனுக்குத் தர மாட்டேன்னாராம். போடா நாயேன்னு திட்டிப்புட்டு வந்தவர்தான். அதயேதான் திருப்பித் திருப்பிப் பேசறார். இதுங்களுக்கெல்லாம் பாடம் சொல்லித் தரணும். எந்த ஜாதின்னாலும் எனக்கு இஷ்டந்தான்னுட்டார். நானும் தீர யோசிச்சாச்சு. ஏன்? உடையவர் சம்மதமேயிருக்கு இதுக்குங்கிறா படிச்சவா.

அதுக்கும் மேல நமக்கு என்ன வேணும்? உனக்குப் பிடிச்சவளா ஒருத்தியப் பாத்துண்டு வாடா. அவள ஒரு வார்த்த அதிகப்படியா கேட்க மாட்டன். அவ பொங்கிப் போடறத நொட்டுச் சொல்லாமச் சாப்பிடுவன். போதுண்டா போ, இந்த இழவெடுத்த ஜாதிய நாம காப்பாத்தினது!”

அம்மாவா இது? அடடா, எப்படிப் பேசுகிறாள்! இது போதும் எனக்கு. இனிக் கல்யாணமானால் என்ன, ஆகாவிட்டால்தான் என்ன?

•••

அன்பாதவன் கவிதைமுற்றத்தில் சரசமாடும் இணைப்புறா குறித்த சில உரையாடல் பதிவுகள்

கவிஞர் கரிகாலனிடம் வினவினேன்
“இமையத்தின் பெத்தவ கதை படிச்சதில்லைய அன்பாதவன்”
“புத்தமும் கூட புறாக்கள் குறித்து பேசுகிறதே..வாசியுங்க தோழர்” என்றார்
முனைவர் அரங்க மல்லிகா
“அது தர்மபுரி இளவரசன் திவ்யாவின் குறியீடாகுமே”
-புது எழுத்து மனோன்மணி
சுப்ரபாரதிமணியனோ
“உடுமலை சங்கர். கவுசல்யாவின் கலைந்த கனவது” என்றாரே
செங்கோட்டில் பலியான கோகுல்நாத் அல்லவோ அது ” ஆதவன் தீட்சண்யாவின் ஆதங்க பேசி
“சங்க இலக்கியத்தில் புறாக்கள் குறித்த பதிவுண்டா…தேடிச்சொல்கிறேன்”
உத்தரவாதமளித்தார் பேரா சற்குணம்
“புறாக்களை மய்யமாக்கி புதினமெழுதுங்க நண்பரே” வேண்டிக்கொண்டார்
புதிய தோழமை சுகந்தி நாச்சியாள்
புறாக்கள் எனும் படிமங்களால் படைப்பாக்கம் பெருகட்டும் இரா.எட்வினின் வாழ்த்துக்களை முற்றத்து புறாக்கள் உணர்ந்து மகிழ
“அரசியல் புறாக்களில் இல்லை தோழா…நம் பார்வையில் தானே..அறியாதவரா அன்பாதவன்” புதியமாதவியின் உரிமைக்குரல்
கோட்டோவியங்களை அனுப்பி உசுபி விட்டான் மதி தம்பி
உரையாடல் களின் சுர ங்க வாசலைத் திறந்து வைத்தது அறியாமல்
குலவும் புறாக்கள் கொஞ்சலில்
இலாபமாயொருக் கவிதை

••

19.03.18..உடுப்பி

விருட்சம் நினைவுகள் / அழகியசிங்கர்

கவிஞர் பிரமிள்

நான் விருட்சம் ஆரம்பித்தபோது இரண்டு பிரிவினர் இருந்தார்கள். ஒன்று ஞானக்கூத்தன் பிரவினர். இரண்டாவது பிரமிள் பிரிவினர். பிரமிள் குழுவினர் ஞானக்கூத்தன் குழுவினரைச் சாடுவார்கள். அதேபோல் ஞானக்கூத்தன் குழுவினர் பிரமிள் குழுவினரைச் சாடுவார்கள். நான் இரண்டு பக்கமும் இருந்தேன். விருட்சம் கொண்டு வரும்போது பிரமிள் பிரிவைச் சார்ந்தவர்களை இழுப்பது என்று முயற்சி செய்வேன். அதனால்தான் என் முதல் இதழில் தேவதேவன் (பிரமிள்), நாராணோ ஜெயராமன் (பிரமிள்) முதலியவர்களின் கவிதைகள் இடம் பெற்றிருக்கும்.
பிரமிளை முதல் இதழ் விருட்சத்தில் கவிதை எழுத வைக்க முடியவில்லை. ஆனால் அவரை நான் போய்ப் பார்த்தேன். தி நகரில் விஷ்ணு நாகராஜன் அலுவலகத்தில் அவர் இருந்தார்.
“பத்திரிகை கொண்டு வருகிறேன்,” என்றேன்.
“ஏன் கொண்டு வருகிறீர்கள்? சும்மா இரும்..”
“இல்லை. முடிவு பண்ணியாச்சு. முதல் இதழில் உங்கள் கவிதை ஒன்றும் இடம் பெற வேண்டும்.” முதிலில் பிரமிள கொஞ்டசம் யோசித்துப் பார்த்தார். அவருக்கு என் மீது சந்தேகம். தான் எழுதித் தருகிற கவிதையை இவன் பத்திரிகையில் போடுவானா என்ற சந்தேகம்தான். அவர் என்னைப் பார்த்துச் சொன்னார் :
“நான் ஒரு கவிதை சொல்கிறேன். எழுதிக்கொள்ளுங்கள்,”என்றார் பிரமிள.
அவர் என்ன சொல்வது நான் என்ன எழுதுவது என்று யோசித்தேன். பின் அவர் ஒரு கவிதையைப் படித்தார்.
கிரணம் என்ற கவிதை ஒன்றைப் படித்தார்.

விடிவுக்கு முன்வேளை
ஆகாயத்தில் மிதக்கின்றன
நாற்காலி மேஜைகள்
ஊஞ்சல் ஒன்று
கடல்மீது மிதக்கிறது
அந்தரத்து மரச் சாமான்களைச்
சுற்றிச் சுற்றிப் பறக்கிறது
அசரீரிக் கூச்சல் ஒன்று
சிறகொடிந்து கிடக்கிறது
ஒரு பெரும் கருடப் பட்சி
கிழக்கு வெளிறிச்
சிவந்து உதித்த மனித மூளைக்குள்
வெறுமை ஒன்றன் இருட்குகை
குகைக்குள் கருடச் சிறகின்
காலை வேளைச் சிலிர்ப்பு.
ஆகாயத்தில்
அலைமேல் அனல்.
மௌனித்தது
அசரீரிக் குரல்.

இந்தக் கவிதை விருட்சம் முதல் இதழில் பிரசுரம் செய்ய நான் விரும்பவில்லை. வேண்டுமென்று கவிதை என்ற பெயரில் ஏதோ சொல்லி என்னைக் கிண்டல் பண்ணுகிறார் என்று நினைத்தேன். ஏன் நாற்காலியும் மேஜைகளும் ஆகாயத்தில் மிதக்க வேண்டுமென்று தோன்றியது.

நான் இக் கவிதையைப் பிரசுரம் செய்ய முடியாது என்று கூறிவிட்டேன். பிரமிளும் அது குறித்து பெரிதும் கவலைப்பட வில்லை. ஆனால் என் முதல் இதழ் விருட்சம் வரும்போது பிரமிள் ஒருமுறை என் வீட்டிற்கு வந்திருந்தார். என் அப்பாவைப் பார்த்து,”உங்கள் பையனை சும்மா இருக்கச் சொல்லுங்கள். ஏன் பத்திரிகையெல்லாம் ஆரம்பிக்கிறான்,” என்று சொன்னார். என் அப்பாவிற்கு ஒன்றும் புரியவில்லை.
நானும் பிரமிள் என் அப்பாவிடம் கூறியதை சீரியஸ்ஸôக எடுத்துக்கொள்ளவில்லை.
அதேபோல் ஞானக்கூத்தன் அணியிலிருந்து ஞானக்கூத்தனிடம் கவிதைக் கேட்டேன். அவர் உடனே ஒரு கவிதையை எழுதிக்கொடுத்து விட்டார். ஞானக்கூத்தன் என்னிடம் பேசும்போது கட்டாயம் விருட்சம் போன்ற பத்திரிகை வருவது அவசியம் என்று கூறினார்.
நான் விருட்சம் பத்திரிகைக் கொண்டு வரும்போது üழý என்ற ஆத்மாநாமின் பத்திரிகை வந்திருந்து நின்று போய்விட்டிருந்தது. கிட்டத்தட்ட üழý என்ற பத்திரிகை வடிவத்திலேயே விருட்சம் பத்திரிகையைக் கொண்டு வந்திருந்தேன்.
ஞானக்கூத்தனிடம் நான் எப்படிப்பட்ட பத்திரிகை கொண்டு வரப் போகிறேன் என்றெல்லாம் குறிப்பிடவில்லை. பிரமிள் அணி ஞானக்கூத்தன் அணி என்றெல்லாம் கூறினால் நான் கிண்டலுக்கு ஆளாவேன் என்றெல்லாம் எனக்குத் தெரியும். ஆனால் ýழý பத்திரிகையில் எழுதிய பல எழுத்தாளர்கள், விருட்சம் இதழுக்கும் தன் பங்களிப்பை செய்யத் தவறவில்லை.
ரா ஸ்ரீனிவாஸன், ஆர் ராஜகோபாலன், ஆனந்த், எஸ் வைத்தியநாதன், ஜெயதேவன், ஆ இளம்பரிதி என்றெல்லாம் ஞானக்கூத்தன் அணியைச் சேர்ந்தவர்கள் கவதைகள் அளித்தார்கள். முதல் இதழ் முழுவதும் கவிதைகள். முதல் பக்கத்தில் ரா ஸ்ரீனிவாஸனும் கடைசிப் பக்கத்தில் நானும் கவிதைகள் எழுதி இருந்தோம்.
எனக்கு ஆரம்பத்திலிருந்து பிரமிளிடம் பழகுவதைவிட ஞானக்கூத்தனிடம் பழகுவது எளிதாக இருக்கும்போல் தோன்றும். காரணம். பிரமிள் என்னுடன் பேசும்போது கிண்டல் செய்வார் என்று எனக்குத் தோன்றிக்கொண்டிருக்கும். மேலும் பிரமிள் கோபக்காரர். எப்போது வேண்டுமானாலும் கோபித்துக்கொண்டு போவார்.
அப்போதெல்லாம் நான் பிரமிளை ஒவ்வொரு சனிக்கிழமை மாலை நேரத்தில் ஜே கிருஷ்ணமூர்த்தி வீடியோ காட்டுமிடமான வஸந்தவிஹாரில் சந்திப்பேன். அதேபோல் ஞானக்கூத்தனை ஞாயிற்றுக்கிழமை மாலை நேரத்தில் கடற்கரையில் உள்ள வள்ளுவர் சிலை அருகில் சந்திப்பேன்.
ஆரம்பத்தில் மேட் இன் இங்கிலாந்து சைக்கிளிலும், பின் லாம்பி ஸ்கூட்டரிலும் நான் சென்னை முழுவதும் சுழன்று சுழன்று வருவேன்.
‘ஓட்டைத் தேவனார்க்கு வாழ்த்துகள்’ என்ற பெயரில் ஞானக்கூத்தன் முதல் இதழில் கவிதை எழுதிக் கொடுத்திருந்தார். அக் கவிதை வருமாறு :

அனைத்து மக்களுக்கும் சரிசம மாக
ஓட்டைகள் வழங்கி யுள்ள
அற்புதப் பொருளே
மும்முறை சொன்னேன் வாழ்த்துகள் உனக்கு

சிறிதென்றாலும் பெரிதென்றாலும்
அவரவர்க்கென்றே ஓட்டைகள்
கிடைக்கும் படிக்குச் செய்தஉன்
கருணைத் திறனை
எவர் மறந்தாலும் நான் மறப்பேனா?

அடுத்தவர் ஓட்டை தன்னதைக் காட்டிலும்
பெரிய தென்று கசந்தவர் தம்மை
நின்னருள் வழங்கிப் பாலிக்க வேண்டும்.

ஓட்டைகட் கெல்லாம் ஆதி ஓட்டையாய்
உன்புனித ஓட்டை என்றும் வாழ
ஓட்டையர் சார்பில் என்தலை வணங்கினேன்

எங்கள் ஓட்டையில் காற்றும் நீரும்
ஒளியும் உட்புகுந்து நலமுற்றிருக்க
ஓட்டைநாலயகனே நீ அருள வேண்டும்.

எங்கள் ஓட்டைகள் நாங்கள் உறங்குங்கால்
யார் ஒருவ ராலும் திருடப் படாமல்
நாங்கள் விழிக்கும் வரைக்கும் எங்களிடம்
இருக்கும் படிக்குன் காவல் விளங்குக.

எங்கள் ஓட்டையில் ஒன்றிரண்டு
கவனக் குறைவாய்த் தவறிவிட்டாலும்
பதிலுக்கு நல்ல ஓட்டைகள் கிடைக்கும்
படிக்கு நீதான் உதவவும் வேண்டும்.

எங்கள் ஓட்டையில் சூரிய சந்திர
சனியாதி சுக்கிர தேவர்கள்
தங்கு தடையின்றி ஊர்வலம் சுற்ற
தயவு செய்த நின்னருள் வாழ்க.

அனைத்து மக்களுக்கும் சரிசம மாக
ஓட்டைகள் வழங்கிய அற்புதப் பொருளே
எனக்கு நீ வழங்கிய ஓட்டைகள் சகிதம்
மும் முறை வாழ்த்தினேன் நன்றி கூற.

ஞானக்கூத்தனின் இந்தக் கவிதையைப் படித்து விழுந்து விழுந்து சிரித்தேன். ரொம்ப அற்புதம் உங்கள் கவிதை என்று அவரிடம் கூறினேன். ஆனால் அந்த இதழில் அந்தக் கவிதைதான் எல்லோருடைய கிண்டலுக்கும் ஆளானாது.
அந்த வாரம் தேவி தியேட்டரில் சினிமாப் பார்க்க நானும் பிரமிளும் சென்றிருந்தோம், அவர் கையில் முதல் இதழ் விருட்சம் வந்து விட்டது என்று கூறி இதழ் பிரதியைக் கொடுத்தேன். அதைப் பார்த்த அவர், ஒரு தோசை மாதிரி அதைச் சுருட்டி, ‘வந்துவிட்டதா?’ என்று ஓங்கி தரையில் அடித்தார்.
நானோ திடுக்கிட்டேன்.

(இன்னும் வரும்)

எமிலி டிக்கன்சன் கவிதைகள் : தமிழில் ;தி.இரா.மீனா :

கவிஞர் எமிலி டிக்கன்சன்

அமெரிக்க கவிஞரான எமிலி டிக்கன்சனின் [Emilie Dickinson ] கவிதைகள் அவர் வாழ்ந்த காலகட்டத்தின் கவிதை மரபுகளை மீறி புதிய வடிவங்களோடு அமைந் தவை.பெரும்பான்மைக் கவிதைகள் மரணம் ,மரணமின்மை பற்றிய ஆழ மான சிந்தனைகளைப் பிரதிபலிப்பவை .மிகச் சிறிய வரிகளைக் கொண்டு அமைந்திருக்கும் அவருடைய கவிதைகளில் காணப்படும் அதிக அளவு நிறுத்தற் குறியீடுகள் கவிதை உலகிற்குப் புதிதானது;புதுப்பொருள் தருவது என்று விமர்சகர்கள் கருதுகின்றனர்.” வாழ்க்கை, காதல்,மரணம்.இயற்கை,நட்பு என்று அவருடைய கவிதைகளுக்கான பார்வை தனித்துவம் வாய்ந்ததாக இருந்தது. எமிலியின் கவிதைகளுக்கு தலைப்புகள் தேவையில்லை. அவரு டைய வரிகளே தொகுப்புகளாகப் பேசும் தன்மை கொண்டவை” என்று சிறந்த விமர்சகர் எஸ்தர் லொம்பார்டி [ Esther Lombardi ]குறிப்பிடுகிறார்.
நான் இறக்கும் போது ஓர் ஈயின் சலசலப்பைக் கேட்கிறேன்
நான் இறக்கும் போது ஓர் ஈயின் சலசலப்பைக் கேட்கிறேன்
சூறாவளியின் மேலிழுப்புக்கிடையில்
காற்றின் அமைதியைப் போல
அறையின் அமைதி.

சுற்றியிருந்த கண்கள் அழுது வரண்டு
விலகாமல் மூச் திரட்டி
கடைசித் தொடக்கத்திற்கு-
அறையில் சாட்சியாய்—

என் பங்கிற்கானதாக இருக்கிற
ஒதுக்கித் தரகூடிய – என் விருப்பமான
நினைவுச் சின்னத்தை –தந்துவிட்டேன்
அப்போது ஓர் ஈ குறுக்கீடாக

நீலமாக -நிச்சயமின்றி -தடுமாற்ற சலசலப்பு-
ஒளிக்கும் எனக்குமிடையே-
ஜன்னல்கள் தோற்றுப் போக –பிறகு
பார்ப்பதற்கு என்னால் பார்க்க முடியாமல் போனது.

“ நம்பிக்கை “ சிறகுகளுடன் கூடிய சாதனம்
“நம்பிக்கை” என்பது சிறகுகளோடு
ஆத்மாவில் உறைந்திருக்கும் சாதனம்
வார்த்தைகளின்றி சுருதியாய் இசைக்கும்
அது ஒரு நாளும் நிற்காதது.

புயலென்பது கடுந்துயர் தருவது –
வெம்மையை ஏற்படுத்துவது-
சிறுபறவையை குழப்பியதெனினும்
கடுங்காற்றில் அது மிக இனிமையாய் இசைக்கும்.

நான் சில்லிப்பான நிலத்தில் அதைக் கேட்டிருக்கிறேன்-
மிகு பலமான கடலிலும்.
எனினும் -ஒரு போதும் – உச்சநிலையிலும்
என் சிறுதுகளைக்கூட அது கேட்டதில்லை.
அந்த ஆத்மா அவளுடைய சமூகத்தை தேர்ந்தெடுக்கிறது—

அந்த ஆத்மா அவளுடைய சமூகத்தை தேர்ந்தெடுக்கிறது—
பிறகு –கதவுகளை மூடிக் கொள்கிறது-
ஆத்மா தவிர அவளுக்கு வேறு
வெளிப்பாடு இல்லாது போகிறது.

அவளுடைய தாழ்வான கதவை-
கடக்கும் ரதங்களை அவள் நோக்குகிறாள்.
பேரரசன் மண்டியிட்டு அவளுக்காக வந்தானெனினும்
நகர்வின்றி அவள்—

போதிய ஒன்றைத் தேர்ந்தெடுத்த பிறகு
தனது கவனிப்பிற்கான அடைப்பான்களை
கல்லாய் மூடிக் கொள்கிறாள்–
எனக்கு அவளைத் தெரியும்.

நீண்ட வேதனைக்குப் பிறகு சம்பிரதாயமான உணர்வு வருகிறது
நீண்ட வலிக்குப் பிறகு சம்பிரதாயமான உணர்வு வருகிறது
சமாதியைப் போல நரம்புகள் சடங்கானதாக இருக்கிறது
தொய்வற்ற இதயம் கேட்கிறது’
ஐயோ! ’வலியை பொறுத்துக் கொண்டவன அவனா? ”
’நேற்றா, அல்லது பல நூற்றாண்டுகளுக்கு முன்பா?’

நிலத்தின் மரப்பாதையில் சுற்றி
அல்லது ஆகாயத்தில்
அல்லது வழக்கத்தில் பொருட்டின்றி
பாதங்கள் இயந்திர கதியில் சுற்றிவருகின்றன
ஒரு படிகத்தின் திருப்தியோடு ,கல்லைப் போல.

எல்லை கடந்து வாழ்ந்திருக்கும்
உறைந்த மனிதர்களாய் ,
பனியை நினைவுகூர்ந்து
முதலில் – குளிர்- பிறகு மதி மயக்கம்- பிறகு கைவிடுதல் என்று
இது கனமான நேரம்

இரவின் பக்கங்கள் – சமயவேல் கவிதைகள்

கவிஞர் சமயவேல்

1
தூங்கும் இரவின்
ஏதோ ஒரு மடிப்பில்
விழித்து விடுகிறேன்

புதிய இடத்தின் புதிய அறை
புலப்பட மறுக்கிறது

இடமும் காலமும்
கரைந்த இருட்டு

ஞாபகச் சுவரைத் தடவிப் பிறாண்டி
கதவைத் தேடும்
சிறுநீரகம்.

அறையின்
தவிப்பு

திடுக்கிட்டெழும்
எவரோ ஒருவர்
விளக்கைப் போட
எல்லாம்
அம்பலமாகிறது.

2

விழித்துப் பார்த்தால்
அறை, அறையல்ல ரயில்
ஊர்ந்து கொண்டிருக்கிறது

உயர் படுக்கையிலிருந்து
உடலைச் சுருட்டி மடக்கி
இறங்குகிறேன்

மூன்று படிகள் ஏணி
மூவாயிரம் படிகளாகி
எந்தக் காட்டிலோ
இறங்குகிறது.

பெட்டி முழுவதும்
தூக்கத்தில் அசையும்
விதம் விதமான மனிதர்கள்

எதற்கும் அசையா இருட்டு
ஜன்னலோடு ஓடுகிறது.

3

எங்கிருக்கிறேன்
எந்த இடம்
எந்த ஊர்
மணி என்ன
நிற்கிறதா போகிறதா
ஸ்டேஷனா
எந்த ஸ்டேஷன்
கால் எங்கே
தலை எங்கே
இல்லை தலையணை எங்கே
கண்ணாடி எங்கே
போன் எங்கே
என்ன
என்ன
என்ன

4

தூங்கவும் இல்லை
விழிக்கவும் இல்லை
கூ…….கூ……..
உருண்டு புரண்டு
பறக்கும் மிதக்கும்
உடல்
மிதக்கும் கனவு
கொச முசா
சிக பிகா
ஆடி ஆடிப்
போகிறது
இரவு.

சக்கென்று
நின்று விட்டது

கப்சிப்
பேரமைதி
நின்று கொண்டே இருக்கிறது

யாரோ
இழுத்து வளைத்து
என்ஜின்
மூச்சை நிறுத்தி விட்டார்கள்

உயர் படுக்கையிலிருந்து இறங்கி
கழிப்பறை வருகிறேன்
திறந்தே கிடக்கிறது
கதவு
எதிரில் தர்மபுரி
௦6.௦4.2௦18 அதிகாலை ௦3.5௦
(அர்ஷியா நீங்களா?)

௦௦௦

முத்தொள்ளாயிரம்—51. பாடல்களும் நவீன விளக்கவுரையும் / வளவதுரையன்

முத்தொள்ளாயிரம்—51.
மடப்பிடியே!

எலாஅமடப்பிடியேஎங்கூடற்கோமான்
புலாஅல்நெடுநல்வேல்மாறன்—உலாஅங்கால்
பைஅயநடக்கவும்தேற்றாயால்நின்பெண்மை
ஐயப்படுவதுடைத்து

[எலாஅ=தோழி; கூடல்=மதுரை; புலாஅல்ந்டுநல்வேல்=பகவர்மார்பில்பாய்ந்தமையால்புலால்நாற்றமுள்ளநீண்டகைவேல்; தேற்றாயால்=தெளியாமல்இருக்கின்றாய்]

பாண்டியன்அவனோடபெண்யானைமேலஊர்வலம்வரான்அப்பஅந்தப்பெண்யானையைப்பாத்துஅவசொல்றபாட்டுஇது:
இளமையானபெண்யானையே! நீஎனக்குத்தோழிதான? நான்முன்னாடிஒன்கிட்டதானநடையையேகத்துக்கிட்டேன்; அப்பல்லாம்மெதுவாதான்நீநடந்தாயே! இப்பநல்லாபுலால்இருக்கறநீளமானவேலவச்சிருக்கறப்பாண்டியன்ஒன்மேலஏரிஊர்வலம்வரச்சமெல்லநடக்கத்தெரியலயே! நீபொண்ணான்னுஎனக்குச்சந்தேகம்வர்றமாதிரிசெஞ்சுட்டயே: இதுசரியா?”
அவனைநல்லாப்பாக்கணும்னுஅவநெனக்கறா; ஆனாயானைவேகமாநடந்துபோயிடுச்சு; அதாலஅதுக்குமெதுவாநடக்கத்தெரியிலயேன்னுசொல்றா.
முத்தொள்ளாயிரம்—52
மெல்லநடவாயோ

போரகத்துப்பாயுமாபாயாதுபாயமா
ஊரகத்துமெல்லநடவாயோ—கூர்வேல்
மதிவெங்களியானைமாறந்தன்மார்பங்
கதவங்கொண்[டு] யாமும்தொழ

[மா=குதிரை; மதிவெங்களியானை=அறிவுதிரிந்தமதயானை]

பாண்டியமன்னன்குதிரைமேலஏறிஊர்வலம்வரான்; அப்பஅவனைப்பாக்கணும்னுஆசைப்பட்டஒருத்திஅந்தக்குதிரையைப்பாத்துச்சொல்றபாட்டுஇது

”குதிரையே! நீசண்டைபோடப்போகும்போதுவேகமாப்போயிபோர்செய்வே; எனக்கும்தெரியும்; ஆனாஇப்பஒன்மேலகூராஇருக்கறவேலையும், அறிவுகலங்கிப்போயிமதம்இருக்கறயானையையும்வச்ச்சிருக்கறபாண்டியன்ஏறிவரான். நாங்கபாக்கமுடியாமஎங்களஊட்லயேஅடைச்சுவச்சிருக்காங்க; நாங்கஎங்கஊட்டுக்கதவுலஒளிஞ்சுக்கிட்டுஅவனைப்பாத்துவணங்கணும்ல; அதுக்காகநீஎன்னாசெய்யறே? இதுபோர்செய்றஎடம்இல்ல; இதுஊர்த்தெரு; அதனாலகொஞ்சம்மெதுவாபோ; நாங்களும்அவனைப்பாத்துடுவோம்”

குதிரையோடவீரத்தையும்சொல்லிஅதப்பாத்துக்கொஞ்சம்மெதுவாபோன்னுசொல்றா
முத்தொள்ளாயிரம்–53
ஏடுகொடு

ஆடுகோசூடுகோஐதார்கலந்துகொண்[டு]
ஏடுகோ[டு] ஆகஎழுதுகோ—-ஈடு
புனவட்டப்பூந்தெரியல்பொன்தேர்வழுதி
கனவட்டம்கால்குடைந்தநீறு

[ஆடுகோ=மூழ்குவேனோ; சூடுகோ= சூடிக்கொள்வேனோ; ஐதா=அழகிதாக; ஏடு=பூவிதழ்; கோடாகஎழுதுகொம்பாக; நீடு=பெரிய; புனம்=பூந்தோட்டம்; தெரியல்=பூமாலை; வட்டம்=கனவட்டம்என்பதுபாண்டியனுடையகுதிரையின்பெயர்; நீறு=புழுதி]

பாண்டியன்வீதியிலவரான்; ஆனாஇவஊட்லேந்துவெளியவர்றதுக்குள்ளஅவன்போயிட்டான்; ஆனாஅவனோடமாலை, தேரு, குதிரைஎல்லாம்அவன்நெனவுக்குவந்துடுச்சு. அதாலதன்நெஞ்சுகிட்டசொல்றா.

”ஏமனமே! பாண்டியன்மாரிலபோட்டிருக்கறமாலையிலஇருக்கறபூவெல்லாம்அழகானபெரியபூந்தோட்டத்திலேந்துகொண்டுவந்ததாக்கும்; பொன்னாலானதேருவச்சிருக்கறஅவன்அவனோடகனவட்டம்றகுதிரைமேலஏறிப்போயிட்டான்; அப்பஅவன்குதிரைகாலாலகெளப்பினபுழுதிஇதோகெடக்கு; நான்அதிலியேஉழுந்துகொளத்துலகுளிக்கறமாதிரிமூழ்குவேனோ? அல்லதுஅந்தப்புழுதியைஎடுத்துஎன்தலயிலேவச்சுசூடிக்குவேனோ? அல்லதுவாசனைப்பொருளெல்லாம்அதோடசேத்து, பூஇதழையேகொம்பாவச்சுஎன்மார்லயும்தோளிலேயும்எழுதிக்குவேனோ? என்னசெய்வேன்? எப்படிஎதைச்செஞ்சாஅவனைப்பிரிஞ்சுஇருக்கறஎன்நோவுதீரும்?”

அவனையேமனசிலநெனச்சுவச்சிருக்கறதாலஅவன்போனபுழுதிமேலகூடஅவளுக்குஅவ்வளவுமயக்கம்இருக்காம்; இதேசொற்களோடதிருவாசகத்துலகூடஒருபாட்டுஇருக்குது. பார்க்கலாம்.

”ஆர்க்கோஅரற்றுகோஆடுகோபாடுகோ
பார்க்கோபரம்பரனேஎன்செய்கென்— தீர்ப்பரிய
ஆனந்தமாலேற்றும்அத்தன்பெருந்துறையான்
தானென்பார்ஆரொருவர்தாழ்ந்து
முத்தொள்ளாயிரம்—54.
ஆபுகுமாலை

குடத்துவிளக்கேபோல்கொம்பன்னார்காமம்
புறப்படாபூந்தார்வழுதி—புறப்படின்
ஆபுகுமாலைஅணிமலையில்தீயேபோல்
நாடறிகௌவைதரும்

[கொம்பன்னார்=பூங்கொம்புபோன்றஇடையுள்ளமகளிர்; அணிமலை=அழகியமலை;]

இப்பாடலில்ஆபுகுமாலைன்றதுஅழகானசொல்லாம்; அதாவது ‘ஆ’ என்னும்சொல்பசுமாடுகளைத்தான்குறிக்கும்; அந்தமாடெல்லாம்மேய்ச்சலுக்குப்போயிட்டுத்திரும்பறமாலைப்பொழுதுன்றதைக்குறிக்கும். அந்தநேரத்துலபக்கத்துலஇருக்கறமலையிலபுடிச்சுஎரியறநெருப்புஎல்லாருக்கும்தெரியுமே! அதனாலஊர்லஇருக்கறஎல்லாரும்நல்லாகூச்சல்போடுவாங்கல்ல; அந்தநாட்லபொண்ணுங்களோடகாமம், ஆசைஎல்லாம்கொடத்துஉள்ளவச்சிருக்கறவெளிச்சம்போலமறைஞ்சுதான்கெடக்கும். ஆனாபூமாலைபோட்டிருக்கறபாண்டியன்வீதிஉலாவுக்குக்கெளம்பிட்டான்னாஅந்தமலையிலஎரியறநெருப்புதெரியறமாதிரிஎல்லாருக்கும்தெரிஞ்சுடும்; அதாலஊராரெல்லாம்அந்தக்காலத்துவழக்கப்படிஅலர்தூற்றிஆரவாரம்செய்வாங்களாம். இந்தஅலர்ன்றதுஒருவகையிலபாத்தாவம்புபேசறதுதான்.
முத்தொள்ளாயிரம்==55
யார்க்கிடுகோபூசல்இனி

வழுவிலெம்வீதியுள்மாறன்வருங்கால்
தொழுதேனைத்தோள்நலமுங்கொண்டான்—இமிழ்திரைக்
கார்க்கடற்கொற்கையர்காவலனும்தானேயால்
யார்க்கிடுகோபூசல்இனி

[வழு=குற்றம்; இமிழ்திரை=ஒலிக்கின்றஅலை; கார்க்கட=கரியகடல்;]

பாண்டியன்உலாவந்துட்டுப்போயிட்டான்; அவனைப்பாத்தஒருபொண்னுதோழிகிட்டசொல்றா;

தோழீ! இந்தப்பாண்டியன்குற்றமில்லாதஎன்தெருவழியேபோனான்; நான்வேறஒண்ணுமேசெய்யலடி; அவனைப்பாத்துத்தொழுதுகும்பிட்டேன்; அதாண்டி; அவன்என்னோடமனசு, வெட்கம், பொண்ணுன்றநெலமைஎல்லாத்தயும்எடுத்துக்கிட்டான்; என்தோளோடஅழகெல்லாம்எடுத்துக்கிட்டான். ராத்திரிபூராஎனக்குத்தூக்கமேவரல; இந்தக்கருப்புக்கடல்கிட்டசொல்லலாம்னாஅதுஎப்பபாத்தாலும்சத்தம்போட்டுக்கிட்டேஇருக்குது; அதுவும்சேந்துக்கிட்டுஎன்னைவதைக்குது; இந்தக்கடலுக்கும்கொற்கைநகரத்துக்கும்அவன்தாண்டிஅரசன்; இனிமேநான்யாருகிட்டபோயிஎன்கொறையச்சொல்லுவேன்? இங்கஅரசனேஎல்லாத்தையும்எடுத்துக்கிட்டதிருடனாஇருக்கானே? வேலியேபயிரைமேயறகதையேஇருக்கே? இப்படிஇருக்குடிஎன்நெலமை; யாருகிட்டசொல்வேண்டி?

“ஆர்க்கிடுகோதோழிஅவன்தார்செய்தபூசலையே” என்னும்நாச்சியார்திருமொழிஇங்கநினைவுக்குவருது.
முத்தொள்ளாயிரம்—56
சீரொழுகுசெங்கோல்

மன்னுயிர்க்காவல்தனதானஅவ்வுயிருள்
என்னுயிரும்எண்ணப்படுமாயின்-என்னுயிர்க்கே
சீரொழுகுசெங்கோல்செழியற்கேதக்கதோ
நீரொழுகப்பாலொழுகாவாறு

அவதன்தோழிகிட்டசொல்றா, “ஏண்டி, இந்தஒலகம்பூராபாண்டியன்தானசெங்கோலசெலுத்திகாவல்காத்துஆண்டுவரான்; அப்பஇங்கஇருக்கறஎல்லாரையும்ஒண்ணாதானநெனக்கணும்; ஆனாபந்தியிலசாப்பிடறதுக்குஎல்லாரையும்வரிசைவரிசையாஒக்காரவச்சிட்டு, ஒருவரிசையில்சாப்பிடறவங்களுக்குப்பாலையும், அடுத்தவரிசையிலஇருக்கறவங்களுக்குத்தண்ணீரையும்கொடுக்கறமாதிரி, மத்தஎல்லாருக்கும்இனிமையாநடந்துக்கறான்; ஆனாஎனக்குமட்டும்பிரிவைக்கொடுத்துத்துன்பம்கொடுக்கறானே! இதுஅவனுடையதகுதிக்குச்சரியா? நாட்டைஆளறஅரசனேஇதமாதிரிசெஞ்சாஎன்னாடிசெய்யறது?”

“நீர்ஒழுகப்பால்ஒழுகாவாறு” என்பதுபழமொழி
முத்தொள்ளாயிரம்—57
வானேற்றவையகம்

தானேதனிக்குடைக்காவலனார்காப்பதுவும்
வானேற்றவையகம்எல்லாமால்— யானோ
எளியேனோர்பெண்பாலேநீர்ந்தண்டார்மாறன்
அளியானேல்அன்றென்பார்ஆர்

தலைவிதோழிகிட்டசொல்றா, “ ஏண்டி, நானோரொம்பச்சாதாரணமானவ; அத்தோடநான்ஒருபொண்ணாவேறஇருக்கேன்; என்மனச, அழகை, வெட்கத்தைஎல்லாம்திருடிக்கிட்டஅவனோவெண்கொற்றக்குடைவச்சுக்கிட்டுஎல்லாஅரசருக்கெல்லாம்அரசனாஇருக்கான். அவன்சாதாரணஒருசின்னராஜாவாஇருந்தாநான்அவனுக்குமேலஇருக்கறராஜாகிட்டசொல்லிஎன்குறையைத்தீர்க்கலாம்; வேறநாட்டுஅரசருகிட்டசொல்லலாம்னாமானத்துக்குக்கீழேஇருக்கறஎல்லாநாட்டையும்இவன்தானேஆளறான்; குளிர்ச்சியானமாலையைப்போட்டிருக்க்கறஅவன்தானேவந்துமனம்இரங்கினால்தான்வழிஉண்டு; அவன்கிட்டபோயி “இதமாதிரிஒன்னைநெனச்சுக்கிட்டுஇருக்கறவமேலஅன்புஇல்லாமஇருக்கறதுசரியில்லன்னுசொல்றதுக்குயாருஇருக்காங்க? ஒருத்தரும்இல்லியேநான்என்னசெய்வேன்?”
முத்தொள்ளாயிரம்—58
தியேன்

பன்மாடக்கூடல்மதுரைநெடுந்தெருவில்
என்னோடுநின்றார்இருவர்அவருள்ளும்
பொன்னோடைநன்றென்றான்நல்லளேபொன்னோடைக்[கு]]
யானைநன்றென்றாளும்அந்நிலையள்யானை
எருத்தந்திருந்தஇலங்கிலைவேல்தென்னன்
திருத்தார்நன்றென்றேன்நான்
[பொன்னோடை=பொன்னாற்செய்யப்பட்டநெற்றிப்பட்டம்; தியேன்= தீயேன்]

மதுரையில்பாண்டியன்யானைமேலஏறிஊர்வலம்வரான்; எல்லாரும்பாக்கறாங்க; ஒரேநெருக்கம்; ஒரேகூட்டம்; பலபேர்பலபடிக்குப்பேசறாங்க; எல்லாத்தையும்பாத்துட்டுஒருத்திதன்மனசுகிட்டசொல்றா;

”ஏமனசே! மதுரையிலதெருவிலநெறயமாடமெல்லாம்இருக்குது; அந்தப்பெரியதெருவிலநான்நின்னுக்கிட்டுஇருந்தேன். என்னோடஇன்னும்ரெண்டுபேர்இருந்தாங்க; அப்பப்பாண்டியன்நல்லாஅலங்காரம்செய்யப்பட்டயானைமேலவந்தான். என்கூடஇருந்தரெண்டுபேர்லஒருத்தி “அந்தயானையோடபொன்னாலசெஞ்சநெத்திப்பட்டம்ரொம்பநல்லாயிருக்கு: ன்னுசொன்னா; அவளும்நல்லவதான்; இன்னொருத்தி “அந்தப்பட்டத்துக்கேத்தயானயும்கூடஅழகுதான்”ன்னுசொன்னா; அவளும்நல்லவதான்; நானும்அதேபோலசொல்லியிருக்கலாம்; ஆனாநான்சொல்லலியே; யானையின்பிடரிமேலஒக்காந்திருக்கறஅழகானவேலவச்சிருக்கறபாண்டியனோடமாரிலஇருக்கறபூமாலைதான்நல்லதுன்னுசொன்னேன்; நான்தான்தீயோன்”

பாட்டுலகடைசியில்தான்அவளோடமன்சிலஇருக்கறதுக்கம்பொங்கிவழியுது. தன்னைத்தான்கெட்டவன்னுசொல்லிக்கறா; தீயேன்றதுகுறுகிதியேன்னுவந்திருக்கு
முத்தொள்ளாயிரம்—59
வஞ்சியானல்லன்

நறவேந்துகோதைநலம்கவர்ந்துநல்கா
மறவேந்தன்வஞ்சியான்அல்லன்—துறையின்
விலங்காமைநின்றுவியன்தமிழ்நா[டு] ஐந்தினையும்
குலம்காவல்கொண்டொழுகும்கோ

[நறவேந்து=தேனைத்தாங்கிய; விலங்காமை=தவறாமை; வஞ்சி=கருவூர்;

அவஅரசன்மேலகாதல்கொண்டுதவிக்கறா;அவனோஒழுக்கமாஇருக்கறவ; அதுலேந்துதுளிகூடத்தவறாதவன்; அவன்பார்வையேகெடைக்கமாட்டேங்குது; அப்பஅவதன்மனசுக்குள்ளயேசொல்லிக்கறா

“ஏமனசே!தேன்இருக்கறபூமாலையெல்லாம்இவபோட்டிருக்கா; இந்தஅரசன்இவளோடஅழகைஎல்லாம்எடுத்துக்கிட்டான்; மறுபடியும்அதைஎல்லாம்இவளுக்குக்குடுக்காதகொடுமையைச்செஞ்சுட்டான்; அதாலஅவன்வஞ்சியான்இல்ல; அதாவதுமத்தவங்களவஞ்சிக்காதவன்இல்ல; அதாவதுவஞ்சின்றஊரைவச்சிருக்கரசோழன்இல்ல; ஆனாஅவன்பாண்டியன்; அதுவும்எப்படிப்பட்டவன்தெரியுமா? ஒழுக்கத்திலேந்துதவறாமஅஞ்சுதமிழ்நாட்டயும்காத்துநடக்கறபாண்டியன்; அதாலஅவன்பார்வைஇவளுக்குஎங்ககெடக்கப்போறது?

இந்தப்பாட்டுலஅஞ்சுதமிழ்நாடுன்றதுதான்என்னான்னுதெரியல.
முத்தொள்ளாயிரம்—60
உழுதஉழுத்தஞ்செய்

உழுதஉழுத்தஞ்செய்ஊர்க்கன்றுமேயக்
கழுதைசெவியரிந்தற்றால்—வழுதியைக்
கண்டநம்கண்கள்இருப்பப்பெரும்பணைத்தோள்
கொண்டனமன்னோபசப்பு

இந்தப்பாட்டுஒருத்திஅவமனசுகிட்டசொல்றதுதான்; இதிலஅவஒருகதைசொல்றா; அதாவதுஒருஊர்லவயல்லநெறயஉழுத்தங்காயெல்லாம்காய்த்துக்கெடந்துச்சாம். அதெல்லாத்தையும்புடுங்கிட்டதாலஅங்கநல்லாபச்சையாபுல்லுவெளைஞ்சிருந்தது. அந்தப்புல்லுஎல்லாத்தையும்அந்தஊர்லஇருக்கறபசுங்கன்றெல்லாம்வந்துமேஞ்சுட்டுப்போயிடுத்து. அந்தவயலுக்குச்சொந்தக்காரன்வந்துபாக்கும்போதுஅங்கஒருகழுதைமேஞ்சுகிட்டுஇருந்த்து. அவன்இந்தக்கழுதைதான்அந்தப்புல்லுஎல்லாத்தையும்மேஞ்சுட்டுதுன்னுநெனச்சான்; அதாலஒடனேஅந்தக்கழுதையைப்புடிச்சுஅதோடகாதைஅறுத்துட்டான். அதேபோலதான்இங்கநடந்திடுச்சு.

அதாவது ”பாண்டியன்உலாவர்றச்சநம்மகண்ணுங்கதான்அவனைப்பாத்தது; ஆனாஅதுங்களுக்குஒருதண்டனையும்இல்ல. நல்லாபருத்துமூங்கில்போலிருந்தஅழகானஎன்தோளெல்லாம்வீணாமெலிஞ்சுபோய்ப்பசலையும்பூத்துடுச்சே”ன்னுஅவதன்மனசோடசொல்லிக்கறா.

பாண்டியனோடமார்புக்குதான்உழுதஉழுத்தங்காய்இருக்கறவயலுஉவமையாம். அவன்மாரிலபலபொண்ணுங்கஅதிலஇருக்கறமுடியெல்லாம்தேயும்படிஉழுதாங்களாம். ஆனாஅதுலஅவகண்ணுபோயிதானேமேஞ்சுது; அதுக்காகதோளுக்குமெலிஞ்சுபோறதண்டனைகெடச்சுதாம்.

முத்தொள்ளாயிரம்—61
முழக்கும்கடாயானை

சென்றதுகொல்போந்ததுகொல்செவ்விபெறும்துணையும்
நின்றதுகொல்நேர்மருங்கில்கையூன்றி—முன்றில்
முழங்கும்கடாயானைமொய்ம்மலர்த்தார்மாறற்[கு]
உழந்துபின்சென்றஎன்நெஞ்சு
[செவ்வி=மன்னனைப்பார்த்துஉரையாடுவதற்குவாய்ப்பானநேரம்; நேர்மருங்கு=அழகானஇடை; முன்றில்=முற்றம்; உழந்று=ஆசைப்பட்டுச்சுழன்று]

இதுவும்அவதன்நெஞ்சுகிட்டேசொல்றதுதான்; பாண்டியன்மேலஆசைவச்சதாலஅவமனசுஅவன்பின்னாலயேபோயிடுச்சு; அப்பசொல்றா.
”பாண்டியன்அரண்மனைமுற்றத்திலேஎப்பவும்பிளிறிகிட்டேஇருக்கறமதம்புடிச்சயானைங்கநெறயஇருக்கும்.அவன்போட்டிருக்கறமாலையிலவண்டெல்லாம்மொச்சுக்கிட்டேஇருக்குமாம். அவனைக்கூடறதுக்காகஆசைப்பட்டுஅவன்பின்னாடியேஎன்நெஞ்சுபோயிடுச்சு; பாவம்; அதுஅங்கபோய்ச்சேர்ந்ததோ? இல்ல; அவன்அன்பைக்கேட்டுவாங்கிவந்துகிட்டேஇருக்குதோ? இல்லஅவன்பதில்கிடைக்கறவரையிலதன்அழகானஇடுப்பிலகையைஊனிக்கிட்டுஅங்கேயேநிக்குதோ; ஒண்ணுமேபுரியலியே”

அவளாலவண்டெல்லாம்மொய்க்கறமாலைஇருக்கறஅவன்மார்பைமறக்கமுடியல; அங்கயானையெல்லாம்இருக்குமே; அதுக்குப்பயந்துக்கிட்டுமனம், அங்கியேநிக்குதோன்னுநெனக்கறாளாம். இதிலபாருங்க; உருவமேஇல்லாதமனசுக்குஒருஉருவம்கொடுத்துஅதுவும்அழகானபெண்ணாக்கிஅதோடஅழகானஇடுப்புலகையைஊனிக்கிட்டுனிருக்குதோன்னுவேதனைப்படறா; பெரும்பாலும்இடுப்பிலகையைஊனிக்கிட்டுதானபொண்ணுங்கநிப்பாங்க;

“கதங்காத்துக்கற்றடங்கல்ஆற்றுவான்செவ்வி
அறம்பார்க்கும்ஆற்றின்நுழைந்து”
இந்தக்குறளோடஇப்பாட்டைப்பொருத்தலாமாம்.

முத்தொள்ளாயிரம்—62
திங்கள்அதற்கோர்திலதம்

மந்தரம்காம்பாமணிவிசும்[பு] ஓலையாத்
திங்கள்அதற்கோர்திலதமா—எங்கணும்
முற்றுநீர்வையம்முழுதுநிழற்றுமே
கொற்றப்போர்க்கிள்ளிகுடை
[மந்தரம்=மந்தரமலை; மணிவிசும்பு=நீலமணிபோன்றஆகாயம்; திலதம்=நடுவட்டம்; நிழற்றும்=நிழலைச்செய்யும்; கொற்றம்=வெற்றி; எங்கணும்=எவ்விடத்திலும்]

இந்தப்பாட்டுலசோழமன்னனோடகுடையுடையகுளிர்ச்சிசொல்லப்படுகிறது. அரசன்எப்பவுமேதன்குடையோடநிழலாலஇந்தஒலகத்தைக்காக்கவேணும்; அவன்குடைரொம்பரொம்பப்பெரிசாம்; மந்தரமலைதான்அந்தக்குடைக்குக்காம்பு; குடைன்னாஅதுக்குமேலகூரைஇருக்கணும்ல; அதுதான்நீலநெறமானஆகாயமாம்; மேலஇருக்கறஓலையிலஇருக்கறநடுவட்டம்தான்சந்திரனாம்; அப்படிப்பட்டஅவனோடகுடைதான்குளிர்ச்சியாஇருந்துஇந்தஒலகத்தையேகாக்குதாம்;
முத்தொள்ளாயிரம்–63.
எமக்குக்காட்டாய்
குருந்தம்ஒசித்தஞான்[று] உண்டால்அதனைக்
கரந்தவடிவெமக்குக்காட்டாய்—மரம்பெறா
போரில்குருகுஉறங்கும்பூம்புனல்நீர்நாட!
மார்பில்கிடந்தமறு
[ஒசித்த=ஒடித்துவளைத்த; குருகு=ஒருபறவை; கரந்த=ஒளித்த; போர்=வைக்கோற்போர்]

அந்தக்காலத்துலஅரசனையேகடவுளாநெனச்சிட்டிருந்தாங்க; ”மன்னனைக்கண்டேன்மாலைக்கண்டேன்”னுசொல்வாங்க; திருமால்மாரிலஒருமறுஇருக்கும்; இந்தப்பாட்டுலஅதைச்சொல்லிஅரசனையும்கடவுளாகவேநெனச்சுஒன்மாரிலஇருந்தஅந்தமறுவைநீஎங்களுக்குக்காட்டுன்னுகேக்குதுஇப்பாட்டு.
மொதல்லசோழனோடநாட்டைப்பத்திசொல்லணும்; அவன்ஊர்லவைக்கோல்போரிலஇருக்கறகதிர்லநெறயநெல்லுஇருக்கும்; அதைத்தின்றதுக்குகுருகுகள்எல்லாம்அங்கவரும்; வயிறுநெறயதின்னுடும்; அப்பறமும்அதுங்களயாரும்வெரட்டமாட்டாங்க; தூங்கறதுக்குவாகாஅந்தப்போரேபஞ்சணைபோலஇருப்பதாலதன்மரத்துக்குப்போகாமஅங்கியேதூங்கிடும்; இப்படியெல்லாம்இருக்கறதுக்குக்காவிரிவற்றாமதண்ணிவழங்கறதுதான்காரணம்; அப்படிப்பட்டநாட்டையுடையசோழனே! அன்னிக்குத்திருமாலாவந்துகுருந்தமரத்தைஒடிச்சுஆயர்பொண்ணுங்களுக்காகவளைச்சபோதுஒன்மாரிலமறுஇருந்துச்சே! அதைஒளிக்காமகாட்டு.
முத்தொள்ளாயிரம்—64
வினைவகையால்வேறு
புனல்நாடர்கோமானும்பூந்துழாய்மாலும்
வினைவகையால்வேறுபடுவர்—புனல்நாடன்
ஏற்றெறிந்துமாற்றலர்பால்எய்தியபார்மாயவன்
ஏற்றிரந்துகொண்டமையினால்

[ஏற்றெறிந்து=வேலைஎறிந்தும்வேலைஏற்றும்; ஏற்றிரந்து=நீரேற்றுஇரந்துகேட்டு]

அவசொல்றா; ”காவேரிஆறுபாயுறநாட்டைஉடையவன்சோழன்; பகைவரெல்லாம்எறியறவேலைத்தன்மாரிலஏத்துப்பான்; அத்தோடஅவனும்பகைவர்மேலஎறிவான்; அப்படிஅவங்களைஎல்லாம்தோக்கடிச்சுதானஅவங்களைநெலத்தைஎல்லாம்நம்மசோழன்எடுத்துக்கிட்டான்; ஆனாதிருமாலுமாவலிகிட்டப்போயிநின்னுஇரந்துகேட்டுத்தானநெலம்அடைஞ்சான்; அதாலசோழன்தான்தான்செஞ்சசெயலாலமேம்பட்டவன்”

போனபாட்டுலமாரிலமறுஇருக்கறதால்அரசனும்திருமாலும்ஒண்ணுதான்னுசொன்னா; திருமால்போலவேஇருந்தாலும்இரந்துகேட்காமதான்எதிரிங்களைத்தோக்கடிச்சுநெலம்அடைஞ்சதாலசோழன்தான்சிறந்தவன்னுஅவசொல்றா.
முத்தொள்ளாயிரம்—65
கூற்றிசைத்தாற்போலுமே
காவல்உழவர்களத்தகத்துப்போரேறி
நாவலோஒவென்றழைக்கும்நாளோதை—-காவலன்தன்
கொல்யானைமேலிருந்துகூற்றிசைத்தாற்போலுமே
கல்யானைக்கோக்கிள்ளிநாடு.

[நாவலோஒ= இதுநெற்களம், போர்க்களம்ஆகியவற்றில்தம்பகுதியினரைஅழைக்கும்குறியீட்டுச்சொல்; நாளோதை=காலைப்பொழுதில்இசைக்கும்இசை; இசைத்தால்=அழைத்தால்; போர்ஏறி=வைக்கோற்போர்ஏறி]

இந்தப்பாட்டுலசோழநாட்டோடவளம்சொல்லப்படுது; சோழமன்னன்பேருகிள்ளி; அவங்கிட்டநல்லயானைப்படைஉள்ளது. அந்தநாட்டுலநெற்களத்துலகாவல்காக்குறஒழவர்எல்லாரும்பலவிதமானவேலையைச்செஞ்சிட்டிருப்பாங்க. வைக்கப்போர்மேலஏறி, நெல்லடிக்கறதுக்குமத்தஆளுங்களைக்கூப்பிடறதுக்கு, “நாவலோஒ’ன்னுகுரல்எழுப்புவாங்க; காலையிலகேக்குறஅந்தஓசையானதுஎப்படிஇருக்கும்தெரியுமா? பகையாஇருக்கறவங்களைக்கொல்றயானைகளின்மேலஇருந்துக்கிட்டுவீரருஎல்லாம்மத்தவீர்ரையெல்லாம்கூப்பிடறமாதிரிஇருக்கும்.

ரெண்டுபேர்சொல்லாலவாதம்செய்யறதுக்குக்கூப்பிடும்போதும்ஒருநாவல்மரத்தின்கொம்பைநட்டுவைத்து “நாவலோஒநாவல்’ னுசொல்றதும்உண்டு. இந்தப்பாட்டுலவர்றதனிச்சீருசிலபதிப்புல “மாமலவன்” னுஇருக்கு. அதுக்குப்பொருள்யானைஏறதுலரொம்பசிறந்தவன். காஞ்சிப்புராணத்துலகூட, நாவலோஎனவிளிப்பத்தொழுவாரெல்லாம்நயந்துஎய்திவினையின்மூள்வார்” என்றுவருது. மேலும்நெற்கலத்துலகூவறதைப்போர்க்களத்துலகூவறதுக்குநல்ல்உவமையாசொல்லியிருக்காரு.
முத்தொள்ளாயிரம்—66
விற்பயில்வானகம்
மாலைவிலைபகர்வார்கிள்ளிக்களைந்தபூச்
சாலமருவியதோர்தன்மைத்தால்—காலையே
விற்பயில்வானகம்போலுமேவெல்வளவன்
பொற்பார்உறந்தைஅகம்
[சால= மிகுதியாக; மருவிய=பொருந்திய; பொற்பார்=அழகுநிறைந்த]

இந்தப்பாட்டுலஉறையூரின்வளம்சொல்லப்படுது. எதித்துவரும்எதிரிகளைஎல்லாம்அவன்வெல்லக்கூடியவன்; அதான் “வெல்வளவன்”. அழகானஅவனோடஉறையூர்நகரத்தெருக்களிலேமொதநாள்மாலைநேரத்துலபூவிக்கறவங்கபூதொடுக்கும்போதுகிள்ளிப்போட்டபூகெடக்கும். அதுஅடுத்தநாள்காலையிலபலவண்னத்துலஆகாயத்துலஇருக்கறவானவில்போலஇருக்குமாம். அந்தத்தெருவேவானவில்இருக்கறஅழகானஆகாயம்போலஇருக்கும்; கிள்ளிப்போட்டபூவேஇந்தஅளவுஇருந்ததுன்னாஅப்பதொடுத்தபூஎவ்வளவுஇருக்கும்? நெனச்சுப்பாருங்க.
முத்தொள்ளாயிரம்—67
செவ்விஇலனே
நின்றீமின்மன்னீர்நெருநல்திறைகொணர்ந்து
முன்றந்தமன்னர்முடிதாக்க—இன்றும்
திருந்தடிபுண்ணாகிச்செவ்விஇலனே
பெருந்தண்உறந்தையார்கோ
[நெருநல்=நேற்று; செவ்வி=தக்கநேரம்]

சோழஅரசன்கிட்டநெறயஅரசருங்ககப்பம்கட்டவந்திருக்காங்க; அவங்கள்ளாம்பலவிதமானபொருள்எல்லாம்கொண்டுவந்திருக்காங்க; சீக்கிரம்கொடுக்கணும்; இல்லன்னாஅரசனுக்குக்கோபம்வந்திடும்னுநெருக்கறாங்க. அப்பஅங்கஇருக்கறகாவலன்சொல்றான்

“மன்னருங்களே!நேத்திக்குநெறயஅரசருங்கபொருளெல்லாம்கொண்டுவந்துதந்துசோழனோடகாலடியிலவிழுந்துவணங்கிட்டுப்போனாங்க; அப்படிஅவங்கவிழுந்தபோதுஅவங்கபோட்டிருந்ததலைக்கிரீடம்பட்டுசோழன்காலெல்லாம்புண்ணாயிடுச்சு; அதாலநேத்திக்கேஅப்பறம்வந்தவங்களுக்கேகப்பம்கட்டநேரம்தரல; இன்னிக்கும்அதேபோலஅவன்காலடிபுண்ணாயிடுச்சு; அதாலதான்ஒங்களுக்கும்நேரம்தரமுடியல”

அவன்காலடிபுண்ணானதுபத்திக்கூடக்கவலைப்படலியாம்; ஆனாஅவங்களுக்குநேரம்ஒதுக்கித்தரமுடியலியேன்னுதான்கவலைப்படறான்னுகாட்டுது.

முத்தொள்ளாயிரம்—68
பொன்னுரைகல்போன்ற
சாலியரிசூட்டால்மடையடைக்குநீர்நாடன்
மாலுமழைத்தடக்கைமாவளவன்-காலியன்மா
மன்னர்முடிஉதைத்துமார்பகத்துப்பூணுழக்கிப்
பொன்னுரைகல்போன்றகுளம்பு

[சாலி=ஒருவகைநெல்; அரிசூட்டால்= அடித்துக்களத்தில்அடைத்தநெற்போர்; மாலும்மழைத்தடக்கை= மேகங்கள்மயங்கிமழைபெய்வதுபோல்கொடுக்கும்கை; கால்=காற்று; இயல்=தன்மை; மா=குதிரை]

தங்கத்தைஒறைச்சுப்பார்க்கஒருகல்லுவச்சிருப்பாங்க. வள்ளுவர்கூடகருமமேகட்டளைக்கல்லுஎன்பாரு. பொன்னைஒறைச்சுஒறைச்சுஅந்தக்கல்லேஅதோடநெறம்மாறிப்போயிஅதுவேதங்கத்தோடநெறத்துக்குவந்திரும்; சோழனுடையகுதிரையோடகால்குளம்பெல்லாம்அந்தப்பொன்னைஒறைச்சகட்டளைக்கல்லுமாதிரிஆயிடுச்சாம்; ஏன்னுதெரியுமா; அந்தக்குதிரைகாத்தைவிடவேகமாப்போயிஎதிரிங்களோடசண்டைபோடுது; அப்பஅந்தஅரசருங்கதலையைஒதைக்கறச்சேஅவங்கதலையிலஇருக்கறகிரீடத்துலஅதன்கொளம்புபடுது; அப்பரம்அவங்கமாரிலஇருக்கறபொன்நகையிலஎல்லாம்காலுகொளம்புபடுது; அதுலஎல்லாம்பட்டுப்பட்டுகொளம்பேபொன்நெறத்துக்குவந்துடுச்சாம்;
சாலின்னுஇருக்கறஒருவகைநெல்லைஅறுத்து, அந்தவைக்கோலாலதண்ணிவாய்க்காமடையெல்லாம்அடைக்கறஅளவுவளம்இருக்கறநாட்டைஉடையவன்அந்தஅரசன். அத்தோடமேகம்போலஎல்லாருக்கும்கொடுக்கறவன்அவன். மொதரெண்டுஅடியிலயும்இப்படிஅரசனைப்புகழுதுஇந்தப்பாட்டு.
முத்தொள்ளாயிரம்—69.
பனிமதியம்
மண்படுதோள்கிள்ளிமதயானைமாற்றரசர்
வெண்குடையைத்தேய்த்தவெகுளியால்–விண்படர்ந்து
பாயும்கொல்என்றுபனிமதியம்போல்வதூஉம்
தேயும்தெளிவிசும்பில்நின்று
[மண்படுதோள்கிள்ளி= நிலவுலகத்தைத்தாங்கியிருக்கிறதோள்களைஉடையசோழன்; விண்படர்ந்து=ஆகாயத்தில்சென்று]

இந்தப்பாட்டுலசோழனோடயானையோடவீரத்தைஒருத்திஅவதோழிகிட்டசொல்றா.

தோழீ! இந்தசோழன்இருக்கானே; அவன்அவனோடதோள்ளதான்இந்தபூமியையேதாங்கியிருக்கான்; அவனோடமதம்புடிச்சயானைஎதிரிங்களோடவெண்கொற்றக்கொடையெல்லாம்புடுங்கிஎறிஞ்சுகோபத்துலஇருக்கு; அதைப்பாத்துட்டுஆகாயத்துலஇருக்கறசந்திரனும்நானும்வெள்ளயாதானஇருக்கோம்; ஒருவேளநம்மமேலயும்அதுபாஞ்சுடுமோன்னுநெனச்சுப்பயந்துபோயிஅங்கயேநின்னுக்கிட்டுத்தேயுது.
முத்தொள்ளாயிரம்—70
நால்வாய்ப்பொருப்பு
கானிமிர்த்தால்கண்பரிபவல்லியோபுல்லாதார்
மானனையார்மங்கலநாண்அல்லனோ—–தான
மழைத்தடக்கைவார்கழற்கால்மானவேற்கிள்ளி
புழைத்தடக்கைநால்வாய்ப்பொருப்பு
[கால்நிமிர்த்தால்=காலைநிமிர்த்துஇழுத்தால்; வல்லிக்கண்=சங்கிலிகளின்பூட்டுவாய்க்கண்கள்; பரிப=அற்றுப்போவன; புல்லாதார்=பகைவர்; மான்அனையார்=மான்போன்றவிழிகொண்டபெண்கள்; புழைத்தடக்கை=உள்ளேதுளைஉள்ளபெரியகை; நால்வாய்=தொங்கும்வாய்; பொருப்பு=மலை; மானவேல்=வீரவேல்]

கிள்ளின்றசோழஅரசரோடயானையின்வீரத்தைச்சொல்றபாட்டுஇது; ஒருத்தன்அவன்நண்பங்கிட்டசொல்றமாதிரிஇதுஇருக்குது.

”ஏண்டாநண்பா! மேகம்தான்இந்தஒலகத்துக்குபொய்செய்யாமநெறையமழைகுடுக்கும்; அதைபோலகுடுக்கறபெரியகையைஉடையவனும்வீரமானகழல்போட்டுஇருக்கறகாலைவச்சுக்கிட்டுஅத்தோடகயிலவீரமானவேலையும்கொண்டவந்தாண்டாஎங்கசோழஅரசன்; அவனோடயானைக்குப்தொளைஇருக்கறபெரியதும்பிக்கைதொங்கிக்கொண்டிருக்கும்; அதுபாக்கறதுக்குமலைபோலவேஇருக்கும்; அதுசண்டைக்குப்போக்க்கெளப்புவாங்க; அப்பஅதுகாலைநிமிர்த்திஇழுக்கும்போதுஅதைக்கட்டிவச்சிருக்கறசங்கிலிமட்டுமாஅறுந்துபோகும்; எதிரிங்கமான்போலஅழகானபொண்ணுங்களக்கட்டிக்கிட்டிருக்காங்க; அந்தப்பொண்ணுங்களோடகழுத்திலஇருக்கறதாலிக்கயிறுகூடஅறுந்துபோகும்டா”
கிள்ளியின்யானைகெளம்பினால்பகைவருங்களைஅழிச்ச்சிட்டுத்தான்வரும்றதுதெரியுது’

முத்தொள்ளாயிரம்—71

கோத்தெடுத்தகோடு

அயிற்கதவம்பாய்ந்துழக்கிஆற்றல்சால்மன்னர்
எயிற்கதவம்கோத்தெடுத்தகோட்டால்—பனிக்கடலுள்
பாய்தோய்ந்தநாவாய்போல்தோன்றுமேஎங்கோமான்
காய்சினவேல்கிள்ளிகளிறு.
[அயில்=வேல்; உழக்கி=நிலைகுலையச்செய்து; ஆற்றல்=வலிமை; எயில்=மதில்; நாவாய்=மரக்கலம்;

இப்பாட்டுலஒருயானையின்வீரம்தான்சொல்லப்படுது; யானையெல்லாம்படைகளுக்குமுன்னாலபோயிஅங்கஇருந்தஇரும்புக்கதவை, அதுவும்அந்தஇரும்புக்கதவெல்லாம்வேல்போலஇருந்துச்சாம்; ஒடிச்சுப்போட்டன. அதுக்கப்பறம்இன்னும்உள்ளேபோயிப்பாத்துதுங்க; அங்ககோட்டைமதில்லஒருபெரியகதவுஇருந்துச்சு; அந்தக்கதவைஅப்படியேஒரேகுத்தாக்குத்தித்தன்கொம்பிலியேதூக்கிவச்சுக்கிச்சு; கதவும்கொம்பிலியேமாட்டிக்கிச்சு; அப்படியேஅதுபடைங்கஇருக்கறகூட்டத்துலபோயிசேந்துக்கிச்சு. அப்பஅதைப்பாக்கறதுக்குபாய்மரத்துலபாய்ஒண்ணுக்கட்டியமரக்கலம்போலஇருந்துச்சாம். யானைதான்மரக்கலம்; தூக்கிஇருக்கறஅதன்தும்பிக்கைதான்கூம்பாம்; கதவுதான்பாய்மரமாம். என்னாஅழகானஉவமைபாருங்க.

இதேமாதிரிகலித்தொகையிலயும்ஒருபாட்டுலவருது; இதோஅந்தப்பாட்டு:

துணைபுணர்ந்[து] எழுதரும்தூநிறவலம்புரி
இணைதிரள்மருப்பாகஎறிவளிபாகனா
அயில்திணிநெடுங்கதவுஅமைத்தடைத்[து] அணிகொண்ட
எயிலடுகளிறேபோல்இடுமணல்நெடுங்கோட்டைப்
பயில்திரைநடுநன்னாட்பாய்ந்தூரும்துறைவகேள்

முத்தொள்ளாயிரம்—72
புறங்கடைநின்றதே
கொடிமதில்பாய்ந்திற்றகோடும்அரசர்
முடிஇடறித்தேய்ந்தநகமும்—பிடிமுன்பு
பொல்லாமைநாணிப்புறங்கடைநின்றதே
கல்லார்தோள்கிள்ளிகளிறு
[கோடு=கொம்புஅதாவதுதந்தம். கோட்டுக்கால்கட்டில்என்பார்ஆண்டாள்; பிடி=பெண்யானை; கல்லார்தோள்= மலபோன்றதோள்கள்]

இந்தக்கிள்ளிஇருக்கானே; அவனோடதோளெல்லாம்மலைபோலஇருக்குமாம். அவன்ஒருமுறைசண்டைக்குப்போறான்; அவனோடயானைப்படைஎல்லாம்போகுதுங்க; கடுமையானசண்டைநடக்குது; அதுவும்இந்தயானைபோயிஎதிரியோடகோட்டைமதிலைத்தன்கொம்பாலமுட்டுது; கொம்பெல்லாம்ஒடியுது; அப்பறம்இந்தயானைஎதிரிங்களாவந்திருக்கறஅந்தஅரசர்மேலப்பாய்ந்துஅவங்களைக்கீழேதள்ளுது. காலாலஅவங்களைஇடறிக்கிட்டேபோகுது; அதாலஅதன்நகமெல்லாம்தேயுது; ஒருவழியாசண்டைமுடியுது. படையிலஇருந்தவங்கள்ளாம்நாட்டுக்குவந்துஅவங்கஅவங்கஊட்டுக்குப்போறாங்க; அரசனும்அந்தப்புரம்போயிட்டான்; அந்தயானையும்யானைக்கொட்டகைஉள்ளபோகணும்ல; ஆனாபோகாமபுறங்கடையிலஅதாவதுவெளியிலியேநிக்குதாம்; ஏன்தெரியுமா?
உள்ளஅந்தக்கொட்டாயிலஅந்தஆண்யானையோடபெண்யானைஇருக்குதாம்; அதுக்குமுன்னாலஇந்தஒடைஞ்சகொம்போடும், தேஞ்சநகத்தோடும்எப்படிம்போறதுன்னுவெக்கப்பட்டுக்கிட்டுஅந்தஆண்யானைவெளியிலியேநிக்குதாம். யானைக்குக்கூடஅழகுபோயிடுத்தேன்னுவெக்கம்பாருங்க.

முத்தொள்ளாயிரம்—73

ஒருகால்மிதியாவருமே

கச்சிஒருகால்மிதியாஒருகாலால்
தத்துநீர்த்தண்ணுஞ்சைதான்மிதியாப்—பிற்றையும்
ஈழம்ஒருகால்மிதியாவருமேநம்

கோழியர்கோக்கிள்ளிகளிறு
[கோழி=உறையூர்; ஈழம்=இலங்கை; கச்சி=காஞ்சிபுரம்; உஞ்சி=உச்சயினி]

சோழனோடயானையின்வீரத்தைச்சொல்றபாட்டுஇது. ஒருவீரன்இன்னொருத்தன்கிட்டசொல்றான்.

”டேய், அதோபாருடா, நம்மஉறந்தைஅரசரோடயானைஒருகாலைஎடுத்துவச்சுக்காஞ்சிபுரத்தைமிதிக்குது;அடுத்தகாலைஎங்கவைக்குதுதெரியுமா?தண்ணீர்நெறயப்பாய்கின்றகுளிர்ச்சியானஉச்சயினியிலேவைக்குது; இன்னும்அதோபாரு. தெக்கேதிரும்பிட்டுது; காலைத்தூக்குது; ஆமா, இலங்கையிலதான்வைக்குது; அப்பறம்இங்கதான்வருது”
போருன்னுவந்துட்டாவடக்கெஉச்சயினிவரைபோயிதெக்கஇலங்கைவரைபோயிசெயிச்சுவர்றதுதான்சோழனோடவழக்கம்அதேபோலத்தான்அவனோடயானையும்இருக்குதாம். யானையோடவேகமும்இதுலதெரியவருது.
இந்தஉச்சயினியை “உஞ்சையம்பதியும்விஞ்சத்தடவியும்”னுசிலம்புலசொல்றாரு.

முத்தொள்ளாயிரம்-74

பேய்மகளிரும்ஆடவரும்

பாற்றினம்ஆர்ப்பபருந்துவழிப்படர
நாற்றிசையும்ஓடிநரிகதிப்ப—ஆற்ற
அலங்கலம்பேய்மகளிர்ஆடவருமே
இலங்கிலைவேல்கிள்ளிகளிறு

[பாற்றினம்=கழுகுக்கூட்டம்; அலங்கல்=மாலை; ஆர்ப்ப=ஆரவாரம்செய்ய; வழிப்படர=பின்தொடர்ந்துபறந்துவர; கதிப்ப=துள்ள]

சோழஅரசன்கிள்ளியோடயானையையைப்பத்திதான்இந்தப்பாட்டும்;

”அந்தஅரசன்கையில்ஒருவேலுஇருக்குது; அதுவும்அழகாஅத்தோடநுனிஇலைவடிவாஇருக்குது.அவனோடயானைகெளம்பிபோருக்குப்போவுது; அந்தயானைபோகும்போதேஎதிரிங்கஎல்லாரையும்கொலைசெஞ்சுகிட்டேபோவுது;

அவங்களோடஒடம்பைஎல்லாம்தின்னுடலாம்னுகழுகுக்கூட்டம்பின்னாடியேபறந்துகிட்டுவருது.
எதிரிங்களைத்தின்னநரிஎல்லாம்மகிழ்ச்சியாலத்துள்ளுதுங்க; பொம்பளைப்பேயெல்லாம்குடலைமாலையாபோட்டுகினுபெருமையாஆடுதுங்க; அப்படிவருதாம்அந்தயானை”

முத்தொள்ளாயிரம்—75

பெருநடஞ்செய்வெற்றி

உடைதலையும்மூளையும்ஊன்தடியும்என்பும்
குடரும்கொழுங்குருதிஈர்ப்ப—மிடைபேய்
பெருநடஞ்செய்பெற்றித்தேகொற்றப்போர்க்கிள்ளி
கருநடரைச்சீறும்களம்

[ஊன்=நிணம்; தடி=தசை; என்பு=எலும்பு; குடர்=குடல்; ஈர்த்தல்=இழுத்தல்; மிடைதல்=நெருங்குதல்; பெற்றி=தன்மை; கொற்றம்=வெற்றி; கருநடர்=கருநாடகர்]

”கருநாடகஅரசன்என்னாசெஞ்சான்தெரியுமா?வழக்கமாகுடுக்கறகப்பத்தைக்கிள்ளிக்குத்தரல; அதாலகிள்ளிஅவன்மேலபடையெடுத்தான்; போர்ரொம்பக்கடுமையாநடந்துச்சு; ஒடைஞ்சதலைகளையும், மூளைகளையும், நிணம், தசைகளையும்எலும்பையும், கொடலையும், இரத்தம்ஆறாவந்துஇழுத்துக்கிட்டுப்போகுது; பேயெல்லாம்வந்துகூட்டமாஆடிச்சுஅங்க”
அதைப்பாத்தஒருத்தன்இன்னொருத்தன்கிட்டசொல்றபாட்டுஇது.

***

பான்பராக் short story – noel nadesan

நருக் சக்கரபோத்தியா தனது சிவப்பு பொமரேனியன் நாயுடன் எதுவித முன்னறிவித்தலும் இல்லாது எமது மிருகவைத்தியக் கிளினிக்கிற்கு வந்திறங்குவார். குழந்தையைத் தூக்கி வருவதுபோல காவியபடி வந்து தனது நாயின் பிரச்சினையை சொல்வார்.

பெரும்பாலும் மதிய வேளைகளில் நான் இல்லாதபோது வந்து தெள்ளு மற்றும் புழுவுக்கான மருந்துகள் பெறுவார். பலவருடங்களாக அறிமுகமானவர்.கல்கத்தாவில் பிறந்து வளர்ந்து மெல்பேனில் வசிக்கிறார்.சில காலத்துக்கு முன்பாக இளைப்பாறிவர். அறுபத்தைந்து வயதிற்கு மேற்பட்டவர் என நினைக்கிறேன்.

மூச்சுத்திணறும் குழந்தையை அவசரமாகத் தூக்கியபடி இந்திய அரசாங்க வைத்தியசாலையின் நீண்ட கொரிடோரில் ஓடிவரும் அம்மாவின் பிம்பத்தை அவரில் பார்க்கமுடியும். ஆனால், அப்படி பெரிய பிரச்சினைகளைக் கொண்டதாக அவரது நாய் இராது.

இதுவரை காலமும் அந்த நாய் நடந்து வந்து எமது கிளினிக் உள்ளே பிரவேசித்ததில்லை. அதன் எஜமானர் உயரத்திலும் குறைந்தவர். மெலிந்த தோற்றம் உடையவர். முகத்தில் மங்கோலிய அமைப்பு. கறுப்பு நிறமானவர் தொடர்ச்சியாக இடைவெளிவிடாது பேசுவார். பேசாத நேரத்திலும் அவரது வாயின் கீழ்த்தாடை கொல்லனது துருத்தியாக தொடர்ந்து அசைந்தபடி இருக்கும்.

பற்கள் அவரது பழுப்புக்கும் கறுப்புக்கும் இடையே பல தரத்தில் இருக்கும். அவரில் அவதானித்த மறுவிடயம் உள்ளே வரும்போது மட்டுமல்ல, வெளியே செல்லும் போதும் கொதிக்கும் வெயிலில் வெறும் காலோடு நடப்பது போன்று துள்ளியபடி நடப்பார்.

நாய்க்கு தடைமருந்து போட்டபின்பு, வரவேற்பு மேசையருகே தனது தோளில் குழந்தையைப்போல் நாயைப் சுமந்தபடி நின்று பணத்தை செலுத்தினார். நான் அவரருகே நின்று அவரைப் பார்த்தபடி நின்றேன்.

அவசரமாக என் பக்கம் திரும்பியவர், நான் கேட்காமலே தான் ஒரு பிராமணன் என்று சொன்னார்.
சுவாரசியமற்று அப்படியா என்று கேட்டு வைத்தேன்.
பெற்றோர்கள் இந்துக்களென்ற போதிலும் எனது தனிப்பட்ட கருத்தில் கடவுள் நம்பிக்கை எனக்கு இல்லை. இக்காலத்தில் மதம், சாதி என்பன தேவையற்ற சுமைகள் என நினைப்பவன் நான். கிறீஸ்தவர் வந்து தான் பாதிரியார் என்றோ அல்லது முஸ்லீமொருவர் வந்து தான் முல்லா என்றாலும் எனது பதில் அப்படியே இருக்கும்.

தனிப்பட்ட நினைவுகளுக்கு அப்பால் தொழிலிலும் இன மதத்திற்கு அப்பாற்பட்டு இயங்கி வருவதோடு மதத்தை சாதியைச் சொல்லும்போது கேட்பதற்குக் பாதணி வார் அறுந்து காலைவாரும்போது ஏற்படும் சங்கடத்தை உணர்வேன்.
சக்கரபோத்தியா, “அப்படியா” என நான் சொன்னதைக்கேட்டு, நான் அவரது பேச்சை நம்பவில்லையோ என நினைத்து, தனது சேர்ட்டின் உள்ளே இருந்து அரசன் தனது வாளை உருவுவது போல் உருவி பூணுலை எடுத்துக் வெளியே காட்டினார்.

வங்காளப் பிராமணர்களைப் பற்றி புத்தகங்களில் படித்தும் திரைப்படங்களில் பார்த்தும் இருப்பதால்,
“நீங்கள் மீன் தின்னமுடியும் இல்லையா?” என்றேன் .
“நான் தின்பதில்லை” என்றார்.
பின்பொரு நாள் வந்து என்னிடம் தான் பங்களாதேசம் சென்று அங்குள்ள உறவினர்களைப் பார்க்க இருப்பதாகவும் சொல்லி, அதுவரையும் தனது மகள்தான் நாயைப் பராமரிக்கப்போவதாகவும் சொல்லி விட்டு முழுப் பரிசோதனையையும் செய்யும்படி கேட்டார். நாய்க்கு ஏதாவது பிரச்சினை வந்தால் எனது தொலைபேசி எண்ணைக் கொடுக்க விருப்பதாகவும் சொன்னார்.

அக்காலத்தில் பங்களா தேசத்தில் பல பயங்கரவாத சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அதைச் சொல்லி அவரிடம் அங்கு போவது பிரச்சினை இல்லையா என்றபோது, ” ஒரே மொழி பேசுபவர்களாக உறவினர்கள் இருப்பதால் எந்தப் பிரச்சினையும் வராது. ஆனால், இஸ்லாமியரால்தான் பிரச்சினையென்றார்.
அந்தக்கூற்றை நான் பெரிதாக எடுக்கவில்லை. மத ரீதியில் நாட்டைப் பிரித்ததில் யாருக்குத்தான் சம்மதம். அதுவும் மேற்க்குப் பகுதியில் உருது பேசுபவர்கள். அவர்களுக்கு மதமும் மொழியும் வேறாக இருந்தது. ஆனால், வங்காளிகள் மொழியால் ஒன்றுபட்டவர்கள்.
மதத்திற்காகத் தேவையில்லாமல் பிரிந்தது என்ற கருத்து முஸ்லீம் வங்காளிகளுக்கும் உள்ளது என்பதை அறிவேன்
நான் எனது கிளினிக்கில் சில மாதங்கள் பகுதி நேர வேலை செய்ததால் இரண்டு வருடங்களாக அவரைக் காணவில்லை. அவரது பொமரெனியனுக்கு இப்பொழுது 12 வயதாகிவிட்டது. ஆனாலும் தொடர்ந்து வருவதாக எனது நேர்ஸ் சொன்னாள்.
சமீபத்தில் அவர் மீண்டும் வந்தபோது அவராகவே சொன்னார்: “உங்களுக்குத் தெரியுமா சரியாக ஒரு வருடம் முன்பு எனக்கு பெரியதொரு அறுவைச் சிகிச்சை செய்தார்கள். நினைக்கவே ஆச்சரியமாக இருக்கிறது. அவுஸ்திரேலியாவில் மருத்துவம் மிகவும் திறமையானது”
“என்ன நடந்து?” எனக்கேட்டேன்.

“எனது தாடை எலும்பில், எலும்பு புற்றுநோய் வந்ததால் அதை முற்றாக எடுத்துவிட்டு, எனது காலில் இருந்த எலும்பை எடுத்துப் பொருத்தினார்கள்” எனச்சொன்னவாறு தனது காற்சட்டையை உயர்த்தி காலில் எலும்பெடுத்த இடத்தைக் காட்டினார்.

” முகத்தில் எந்த வித்தியாசமும் தெரியவில்லையே. காலில் கூட தழும்பில்லையே?” என்றேன்.

“உண்மையில் திறமான வேலை செய்தார்கள். அதைச் செய்தவர் பாகிஸ்தானில் இருந்து வந்த முஸ்லீம் சத்திரசிகிச்சை நிபுணர். மிகவும் திறமைசாலி.” என உற்சாகமாகச் சொன்னார்.
என் மனதில் தோன்றிய சிந்தனைகளைப் புறந்தள்ளிவிட்டு, “எப்படி உங்களுக்கு தாடைஎலும்பில் புற்றுநோய் வந்தது?” எனக்கேட்டேன்.

“பான்பராக் போடுவதால் எனச் சொல்கிறார்கள்” என்றார்.
“நானும் சிறுவயதில் இலங்கையில் அம்மாவிடமிருந்து வெற்றிலை எடுத்து போட்டதுண்டு. அந்தப் பழக்கத்தை அவுஸ்திரேலியா வந்ததும் தொடரவில்லை. ஆனாலும் இப்படி புற்றுநோய் வரும் எனப் பலருக்கும் தெரியாது.

இந்தமுறை இந்தியா போனால் நீங்கள் பான்பராக்குக்கு எதிராக பிரசாரம் செய்யவேண்டும். அவுஸ்திரேலியாபோல் இந்தியாவிலோ பங்களாதேசத்திலோ இப்படி அறுவை சிகிச்சை நிபுணர்கள் கிடைத்தாலும் அங்கிருக்கும் எல்லோராலும் பணம் கொடுக்க முடியாதே?” என்றேன்.
“உண்மைதான். நான் என்னைச் சந்திப்பவர்களுக்கெல்லாம் எனது அனுபவத்தை எடுத்துச் சொல்லி வருகிறேன்.” என்றுஉறுதியளித்து விட்டு தனது தோளில் தனது பிரியத்திற்குரிய நாயை சுமந்தபடி வாசலைக் கடந்து சென்றார் நருக் சக்கரபோத்தியா.
***

கனவில் நெளியும் வாசனை முகம் – இதயா ஏசுராஜ்

சித்ரா பூத்தின் முன்னே வந்து நிற்பதைக் கவனித்தவுடன், பக்கத்துக்கடை நாயர் யாரோவொருவரை அழைத்து அவளுக்கு உதவுமாறு சொல்வது கேட்டது. அம்மனிதர் வருவதற்குள் அவள் பூட்டைத் திறந்து காத்திருந்ததும், வந்தவர் பலம் கொண்டமட்டும் ஷட்டரை மேலே தூக்கிவிட்டார். அவருக்கு நன்றி சொல்லிவிட்டு உள்ளே நுழைந்தபோது ஒருவித இறுக்கம் வந்து சூழ்வதை உணர்ந்திட முடிந்தது.

ஜன்னலைத் திறந்து வைக்க, உள் புகுந்த மெல்லிய காற்றின் குளிர்ச்சி சற்று இதமாகவே இருந்தது. தோள்ப்பையைக் கழற்றி சுவரிலடித்திருக்கும் ஆணியில் மாட்டிவிட்டு துடப்பத்தையெடுத்து பெருக்கத்தொடங்கினாள். நாசியிலேறும் தூசியால் நாலைந்துமுறை தும்மிவிட்டு பெருக்கி முடித்தாள். மேஜையைச்சுத்தப்படுத்தி அதன் மேலிருக்கும் டெலிபோனைத் துடைக்கையில், பூத்துக்கு இடபுறம் பூக்கடை வைத்திருக்கும் ஜோதியம்மா உள்ளே வந்தாள். ” நீயேம்மா கஷ்டப்படுறே, என்னைக் கூப்பிட்டிருந்தா நான் வந்து பெருக்கித்தர மாட்டேனா ” வென உரிமையோடு கடிந்து கொண்டு, ” வெள்ளிக்கிழமையும் அதுவுமா இப்படி வெறும் தலையோட இருக்கலாமா ” என்றவாறே, தன் கையில் வைத்திருக்கும் இரண்டு முழம் மல்லிகைப்பூவை அவள் தலையில் வைத்து விட்டாள்.

வெள்ளிக்கிழமை என்ற கணக்கெல்லாம் கிடையாது, ஒவ்வொரு நாளும் இப்படி வந்து அன்பொழுகப்பேசி பூவைத்து விடுவது ஜோதியம்மாளின் வழக்கம். சித்ரா மீது அவளுக்கு அப்படி தனியானதொரு பாசமிருந்தது. இந்த விசயத்தில் நாயரையும் சேர்த்துக் கொள்ளலாம். பூக்காரம்மா படியிறங்கிப்போன அடுத்த கணம் அவர் கடைப்பையன் வந்து, ” யக்கா, நாயர் டீ கொடுத்துட்டு வரச்சொன்னாரு ” எனச்சொல்லி டீயையும் ஒரு வடையையும் வைத்துவிட்டுப் போனான்.

இவ்விருவரிடமும் பணம் கொடுக்கும் போதெல்லாம், எங்க தங்கச்சியிடம் காசு வாங்குவோமாவெனக் கோவித்துக் கொள்கிறவர்களாக இருந்தார்கள். இத்தகையோரின் அன்பின் காரணமாகவே, அவளின் தனிமையை ஒருவழியாக கடந்துவிட முடிந்திருந்தது.

ஆயினும், சொற்ப நாட்களாக ஏற்பட்டிருக்கிற நெருடல் அவளைப் பாடாய் படுத்தியது. யாரிடமும் சொல்ல முடியாமலும், அனுமதியின்றி உள்ளே நுழைகிற அந்நினைவுகளைத் துரத்தியடிக்க வகையின்றியும் திணறிப்போயிருந்தாள்.

மேஜையின் உள்ளறையைத் திறந்து அதனுள்ளிருந்த புதிய வார, மாதப்பத்திரிக்கைகளை அள்ளியெடுத்து மேலே போட்டு, கைகளால் தடவி தடவியே எது ராணி, தேவி, மாலைமதி, ராணிமுத்து, குங்குமம், குமுதம் என வகைப்பிரித்தவள், அவற்றை அவளுக்கு பின்புறமாக கட்டியிருக்கும் கயிற்றில் வரிசையாகத் தொங்கவிட்டாள். எந்த புத்தகத்தை எங்கே மாட்டியிருக்கிறோம் என்பதை மனதில் பதிய வைத்துக் கொண்டாள். இனி, நாற்காலியில் நன்றாக சாய்ந்து உட்கார்ந்து, முகத்தில் பூத்திருக்கும் வியர்வைத் துளிகளைக் கைகுட்டையால் துடைத்து கொண்டபோது, வாசலேறி வருகிற முதல் வாடிக்கையாளரின் அரவம் கேட்கவே விறைப்படைந்தாள்.

வந்தவர், ” ஒரு போன் பண்ணிக்கிறேம்மா ” எனச்சொல்லி விட்டு எண்களைச்சுழற்றத் தொடங்கினார். அவர் பேச ஆரம்பித்தவுடன் கேட்கும் ” பீப் ” சத்தங்களை உன்னிப்பாக கவனித்தாள். அதன் எண்ணிக்கையை உடனுக்குடன் உள்ளுக்குள்ளே குறிப்பெடுத்துக் கொண்டாள். சரியாக ஒன்பதாவது சத்தத்திற்கு பிறகு அவர் போனை வைத்துவிட்டு ”எவ்வளவு ஆச்சுமா ” என்றார். 9 பெருக்கல் 1.50 எனக்கணக்கிட்டு பதிமூணு ரூபாய் 50 காசு என்றாள்.

அவர் ரூபாய் தாள்கள் இரண்டினைக் கொடுக்க, அவற்றை அழுத்தமாக தடவிப்பார்த்து ஒன்று பத்து ரூபாயென்றும், இன்னொன்று ஐந்து ரூபாயென்னும் இனம் கண்டுக்கொண்டு மீதி ஒரு ரூபாய் ஐம்பது காசினைக் கொடுத்து அனுப்பினாள். அதன் பிறகு மத்தியானம் வரை ஆட்கள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தார்கள். சலிப்பின்றி இயங்கி வேலைப் பார்த்தவள், இரண்டு மணிக்கு பிறகு வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த டிபன் பாக்ஸை எடுத்தாள். கல்லாவைப் பூட்டிவிட்டு சாவியை எடுத்து கொண்டு, கடைக்குள்ளாகவே பக்கவாட்டில் சென்று தரையில் அமர்ந்து லெமன் சாதத்தை ஊறுகாயோடு சாப்பிட்டு முடித்தாள்.

மூணுமணி வாக்கில் ஒரு பெரியவர் வந்து தனக்கு போன் பண்ணத்தெரியாது என்று அவளையே பண்ணிக் கொடுக்குமாறு சொன்னபோது, நல்லவேளையாக அப்பொழுது கல்கி புத்தகம் வாங்க வந்திருந்த ஒரு சிறுமியிடம் அவர் வைத்திருக்கும் காகிதத்திலிருக்கிற எண்களைப் படிக்கச்சொல்லி, டயல் செய்து கொடுத்தாள்.

பெரியவர் எங்கோவிருக்கும் தன் மகனிடம் பேசுகிறார் எனப்புரிந்தது. தங்கைக்கு கல்யாணம் வைத்திருப்பதால் அவன் தான் முன்னே நின்று நடத்தணும் என்று அவர் சொன்னபோது, அவன் என்ன பேசினானோ தெரியவில்லை, அவரது குரல் தடுமாறியது. ” இப்படிச்சொன்னா எப்படிப்பா ” என புலம்பினார். பின் சற்று மெளனமும் குரலுடைந்த வார்த்தைகளுமாக நிரம்பிய அவ்வுரையாடல் சித்ராவின் இதயத்தை கனக்க செய்தது.
பெரியவர் சென்று விட்ட பிறகும், அவர் ஏற்படுத்தியிருந்த அதிர்வலைகள் அவளை நிலைக்குலையச்செய்திருந்தன. சில வருடங்களுக்கு முன்னால் விபத்தில் பலியான தன் தந்தை மட்டும் இப்பொழுது உயிரோடு இருந்திருந்தால் தான் இப்படி நிர்கதியில் அலைந்திடும் நிலை உருவாகியிருக்காதே என வருந்தினாள்.

உடம்புக்கு முடியாத நிலையிலும் அவளம்மா நாலு வீட்டில் பத்துப் பாத்திரம் தேய்த்து கிடைக்கும் காசியில் குடும்பத்தின் வறுமையை ஒழிக்கப் போராட, அவளும் வேலைக்கு வருவதால் ஏதோ கெளரவமாகப் பிழைக்க முடிகிறது. ஆயினும், அப்பெரியவரின் இதயமில்லாத மகனைப் போலவே தனக்கும் ஒரு தம்பி இருக்கிறான் என்ற கசப்பான உண்மையை அவளால் நினைக்காமலிருக்க முடியவில்லை.

பணக்கார வீட்டுப் பெண்ணைக் காதலித்து, கல்யாணம் செய்து கொண்டு, மாமனார் வீட்டிலேயே செட்டிலாகி விட்ட அவனுக்கு தன் தாயையும், குருட்டு அக்காளையும் பற்றிய ஞாபகங்கள் முற்றிலுமாக மறந்து போயிருந்தன. மனசு தாங்காமல் அசலூரிலிருக்கிற அவனைப் பார்க்க அவளுடைய அம்மா சென்றிருந்தபோது, நீ யாரென்று கேட்டிருக்கிறான், அன்று வீழ்ந்தவள் தான் அவளம்மா, இப்பேரிடியைத் தாளாமல் பாதியாகிப் போனாள்.

துன்பமேகங்கள் சூழ்ந்து அழுத்திட, சிதறிடும் கண்ணீர் துளிகளை சித்ரா சட்டென்று துடைத்துக் கொண்டாள். அவள் வேதனையை மேலும் நீடித்திடும் விதமாக பழக்கப்பட்ட செண்டின் வாசனைக் கடைக்குள் புகுந்தது. நெருப்பை மிதித்தது போல பதறி எழுந்தவளுக்கு வருகிற அம்மனிதனை நினைத்ததும் வெடவெடவென்று உடம்பு நடுங்கியது. அது அவனேதானென, போனையெடுத்து அவன் பேசத்தொடங்கியதும் ஊர்ஜிதமானது.

எழுந்தோடி பூக்காரம்மாவையும் நாயரையும் கூப்பிடலாமாவென எண்ணிய யோசனையை அவளுக்குள்ளிருந்து ஏதோவொன்று தடுத்து நிறுத்தியது. அதே நேரம், அவன் எத்தனை கால் செய்கிறான் என்பதை கணக்கிட வேண்டும், இதில் தவறு ஏற்படும் பட்சத்தில் மாலை கணக்கு கேட்க வருகிற முதலாளியிடம் திட்டு வாங்க நேரிடும் என்ற பயமுண்டாக, பல்லைக் கடித்துக் கொண்டு பீப் சத்தத்தை விரல்விட்டு எண்ணினாள்.

பேசிமுடித்ததும் அதற்கானப் பணத்தை அவன் கொடுத்தான். அவள் யாரிடமும் கைநீட்டி காசு வாங்காமல், ” டேபிளில் வைத்து விடுங்கள், நான் எடுத்து கொள்கிறேன் ” என்பாள். இதையே அவனிடமும் சொல்லியிருக்கிறாள். அப்படியாக அவன் மேஜையின் மீது வைத்த பணத்தை எண்ணிப்பார்த்தபோது மிக சரியாகவே இருந்தது. அவன் எப்பொழுதும் அப்படித்தான், தான் பேசுகிற காலுக்குரிய பணத்தை சில்லறைகளோடு மிக சரியாகவே கொடுக்கக்கூடியவனாக இருந்தான். வீட்டிலிருந்து கிளம்பும்போதே கணக்கு பண்ணிக்கொண்டு வருவானோ என்று நினைத்தவள், இதிலெல்லாம் நாணயமாக நடந்து கொள்கிறவன் அநாகரீகமானவனாக இருக்கிறானே என மனசுக்குள் பொறுமினாள்.

வாசல் நோக்கி அவன் செல்வதை உணர்ந்தவுடன் தப்பித்தோமென பெருமூச்சு விட்டு அமர நினைக்கையில் திடீரென திரும்பி வந்து அவளது புட்டத்தில் கையை வைத்து அழுத்தி பிசைந்து விட்டான். சகலமும் கலங்கிப்போக, பதறித்துடித்து வேகமாய் நகர்ந்து சுவரோடு சுவராக ஒட்டிக்கொண்டாள். கண்ணீர் வெடித்து சடுதியில் கீழிறங்கியது. மெல்லிய சிரிப்பொன்றை உதிர்த்துவிட்டு அவன் பூத்தை விட்டு அகன்று சென்று விட்டான்.

தட்டுத் தடுமாறி ஆவேசமாக அவள் வெளியே ஓடிவருவதைக் கண்டதும், என்னாச்சும்மா…. என்று பதட்டத்துடன் பூக்காரம்மா கேட்கவே, நடுங்கும் கால்களை சிரமப்பட்டு ஊன்றி நின்று வேகமாக மூச்சிரைத்தாள். ” போன் பேச வந்தவரு, மீதி சில்லறைய வாங்காம போயிட்டாரு ” என்ற பொய்யை அப்பொழுது தான் ஏன் சொன்னோம் என புரியாமல் அவள் குழம்பி நிற்க, ” நல்ல பொண்ணுமா நீ, இதற்காகவா இப்படி ஓடி வந்தே ” ஜோதியம்மா கிண்டல் செய்தாள்.

படபடப்பு குறையாமல் தன்னிருக்கையில் சென்று உட்கார்ந்து கொண்டவள் அம்மனிதன் நடந்து கொண்ட இழிச்செயலையும், அது உண்டாக்கியிருந்த உஷ்ணத்தின் தீவிரத்தையும் தாங்கிக்கொள்ள முடியாமல் திண்டாடினாள். ஒவ்வொரு நாளும் எத்தனையோ மனிதர்களை அவள் சந்திக்கக்கூடியவளாக இருந்தாள். வேறு யாரும் இவனைப்போல இப்படி முறைதவறி நடந்து கொண்டதில்லை. பார்வையற்றவள் என்ற இரக்கமும் பச்சாதாபமும் உடையவர்களின் மத்தியில் இப்படியும் ஒருவனா என்னும் வெறுப்பு மேலிட்டது.

முதல் முறை முதுகைத் தடவியும், அடுத்து இடுப்பைக் கிள்ளியும் சில்மிஷம் செய்தவன் இன்று புட்டத்தை பிடித்து அழுத்தும் அளவுக்கு வந்துவிட்டான். இனியும் பேசாமலிருந்தால் அது விபரீதத்தில் சென்று முடியும் என்ற பீதி ஏற்பட்டாலும், தான் ஏன் அவனைக் கடிந்து கொள்ளவோ, கத்தி கூச்சல் போடவோ, கையில் கிடைத்ததை எடுத்து அடிக்கவோ செய்யவில்லை என்ற கேள்வியை அவள் திரும்ப திரும்ப தனக்குள் கேட்டுக் கொண்டாள்.

இரவில் தூங்காது புரண்டு புரண்டுப் படுத்துக்கொண்டிருக்கும் தன் மகளை ஆற்றாமையோடு நோக்கினாள் வடிவு. முப்பது வயதைத் தாண்டிய பிறகும் இன்னும் அவளைக் கல்யாணம் செய்து கொடுக்காமல் வைத்திருக்கும் தன்னுடைய செயலற்ற நிலையை எண்ணி வேதனையுற்றாள். பார்வைக் குறைபாடு இல்லாதவளாக அவளிருந்திருந்தால் அவளுடைய அழகுக்கு இந்நேரம் யாராவது ஒருவன் தேடி வந்திருப்பான். ஆனால் இப்பொழுது பெண் வேண்டும் எனச்சொல்லி எவரும் இத்தனை வருடத்தில் அவர்களின் வீட்டுப்பக்கம் வந்ததே இல்லை. வடிவும் தனக்கு தெரிந்த ஜோதிடர்களிடம் எல்லாம் சொல்லி வைத்திருந்தாள். ஆனாலும் அப்படியொரு அதிசயம் நிகழவே இல்லை.

” தூக்கம் வரலையாம்மா… நா வேணா வரகாப்பி வச்சுத்தரவா ” வெனத் தோளைத்தொட்டுக் கேட்கும் அம்மாவுக்கு வேண்டாமென பதிலளித்த சித்ரா, அவளை நிம்மதியாக படுத்து தூங்குமாறு கூறிவிட்டு கையை நீட்டி வானொலிப் பெட்டியை இழுத்து தன்னருகே வைத்து கொண்டு அதனை முடுக்கினாள். தமிழ்ப்பாடல்கள் எல்லாம் முடிந்து போயிருக்க விகிதபாரதியில் இந்திப்பாடல்கள் ஒலித்து கொண்டிருந்தன.

இப்படி அர்த்த ராத்திரியில் இந்திப்பாடல்களைக் கேட்பது இவள் ஒருத்தியாகத்தான் இருக்க முடியும். கிஷோர் குமார், மன்னாடி. முகமது ரபி, லதா மங்கேஷ்கர், ஆஷா போன்லே, ஆர்.டி.பர்மன், லஷ்மிகாந்த் பியாரிலால் என்று இது தொடர்புடைய பெயர்களை அவள் மனப்பாடம் செய்து வைத்திருக்கிறாள். படுத்தவுடனே அசதியில் தூங்கிப்போய்விடும் அவளம்மாவுக்கு தன் மகள் இரவெல்லாம் இந்திப்பாடல்களுடன் கொண்டிருக்கும் தொடர்பு தெரியாமலே போயிருந்தது. இச்சமயம் இச்சத்தம் அம்மாவின் தூக்கத்திற்கு இடையூறாக இருந்து விடுமோ என்ற கவலையில் சித்ரா, முடிந்தவரை ஒலியளவை குறைத்து வைத்துக் கொண்டு பாடல்களைக் கேட்டவாறே உறங்கிவிடுவதற்கான முயற்சியில் இறங்கினாள்.

அம்முயற்சி தோல்வியின் வழியே அழைத்து செல்லும் விதமாகவே அமைந்திருந்தது. குருடி தானே, எப்படி வேண்டுமானாலும் அத்துமீறி நடந்து கொண்டாலும் பொறுத்துக் கொள்வாள் என்ற எண்ணம் கொண்டிருந்த அம்மனிதன் மீதான கோபம் மேலும் கூடியிருந்தது. அதே நேரம் அவனது பெயர் என்னவாக இருக்கும் என்ற சிந்தனை ஓடியது. இதுவரை போனில் உரையாடும்போது ஒருமுறையேனும் அவனுடைய பெயரை அவன் குறிப்பிட்டதாக அவளுக்கு ஞாபமில்லை.

அவன் பார்ப்பதற்கு எப்படியிருப்பான் எனத்தெரியாது போனாலும் அவனது இனிமையான குரல் அவளைக் கவர்ந்திடவே செய்தது. தடித்த, கரடு முரடான, மிரட்டும் தொனியில் அமைந்த, பெண் தன்மைக் கொண்ட பலவிதமானக் குரல்களைக் கேட்டு கேட்டு சலித்து போயிருந்த அவளுக்கு அவனின் தெளிவான உச்சரிப்புடன் கூடிய குரல் வசீகரித்தது.

குரலைப்போலவே அவன் பூசிவருகிற அத்தரின் வாசனையும் அவளை ஈர்க்கவே செய்தது. குடிக்காரர்கள், குளிக்காமல் வருகிறவர்கள், மாதவிடாய் பெண்கள் என்று அடையாளம் கண்டுக்கொள்கிறவள், அவனது இருப்பைக் கோடிட்டுக் காட்டும் அந்த வாசனையை ரசிக்கவே செய்தாள்.

அவன் தொட்டவுடன் தோன்றும் சீற்றத்தையும் மீறி அவள் உடலில் உண்டாகும் ரசாயன மாற்றத்தை அவள் உணர்ந்துவிட்டிருந்தாள். அதுவே அவன் நிராகரிக்கப்பட வேண்டியவனல்ல என்ற நினைப்பை ஏற்படுத்தியிருந்தது. திடீரென துணுக்குற்றவளாக நெஞ்சில் கைகளை வைத்தப்படியே எழுந்து உட்கார்ந்தாள். தான் எதற்காக அவனையே நினைத்துக் கொண்டிருக்கிறோம் என்ற நிஜம் பிரமாண்டமாக மேலேழும்பி அவளை அதிர வைத்தது.

வகுப்பைப் புறக்கணித்து விட்டு தன் காதலனுடன் போனில் கொஞ்சிக்கொண்டிருக்கும் பதினோராவது படிக்கும் பெண்ணொருத்தியின் பேச்சு சித்ராவுக்கு எரிச்சலூட்டியது. கிசுகிசுப்பான குரலோடு அடிகடி கள்ளப்புன்னகையை சிந்தியவாறு, தான் சினிமா தியேட்டரின் வாசலில் காத்திருக்கப் போவதாகவும் அவனை சீக்கிரமாக வந்து விடுமாறும் சொன்னவள், அதற்கு அவன் கூறிய மறுமொழிக் கேட்டு வெடித்து சிரித்தாள். பேசி முடித்ததும் காசை வீசிவிட்டு அவசரமாகப் போகிறவளை இழுத்து நாலறை விடணும் போலிருந்தது சித்ராவுக்கு.

பெண் படிக்கப் போகியிருக்கிறாள் என நம்பியிருக்கும் பெற்றோரை ஏமாற்றி இப்படி சீரழியத் துடிக்கும் அம்மாணவியின் நடவடிக்கை அருவறுப்பூட்டியது. விம்மித் தழும்பும் உணர்வுகளைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கையில், ” சித்ரா ” வென அழைத்தவாறே வருகிற நீலவேணியின் வருகை பெரும் ஆறுதலைத் தருகிறவிதமாகவே அமைந்திருந்தது.

அடுத்த தெருவில் வசிக்கிற அவள், மத்தியானப் பொழுதுகள் சிலவற்றில் இங்கே வந்து சித்ராவுக்கு கதைப் படித்துக் காட்டுவதுண்டு. நீலவேணி வந்ததினால் இவ்வார ஆனந்த விகடனிலிருக்கிற தனக்கு பிடித்தமான தொடர்கதையைப் பற்றிய நினைவு எழவே, உவகையுடன் எழுந்து அவ்விதழை எடுத்து கொடுத்தாள்.

கடும்வெயில் நேரம் என்பதாலோ என்னவோ போன் பேச எவரும் வராத காரணத்தால் ஒருமணி நேரப்பொழுது நீலவேணியுடன் ஆனந்தமாக கழிந்தது. அத்தொடர்கதையோடு வேறு இதழ்களில் வந்திருந்த சில சிறுகதைகளையும் அவள் படித்து காட்டினாள். அக்கதைகள் காட்சி வடிவங்களாக சித்ராவின் மனத்திரையிலோடி அவளைக் குதூகலப்படுத்தின. துயரங்களை மறந்த ஆழ்ந்த நிம்மதி நெஞ்சில் நிலவியது. அந்நிம்மதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமான சம்பவமொன்று சற்று நேரத்திற்கு பிறகு நிகழவே செய்தது.

நீலவேணிப் போன பிறகு தாகம் எடுக்கவே, பின்புறமாக சென்று பானையிலிருக்கும் தண்ணீரையெடுத்து குடித்துவிட்டு திரும்பியபோது, அவளை மையல் கொள்ள செய்திருக்கும் அச்செண்டின் மணமானது அவ்விடம் முழுவதுமாக வந்து நிரம்பியது. அத்தோடு காலடியோசையும் கேட்கவே மிரட்சியும், தடுமாற்றத்திற்கும் உள்ளாகி அப்படியே அசைவற்று நின்று விட்டாள். நெருங்கிவந்த அம்மனிதனின் கைகளிரண்டும் இப்பொழுது அவளது இடையைச்சுற்றி வளைத்து தன் பக்கமாக இழுத்து கொண்டன.

சடசடவென்று அவளுக்குள் ஏதோவொன்று முறிந்து விழுந்து, அங்கிருந்து வண்ணப்பூக்களின் குவியல் மேழேலும்பியது. தன்னை மீறிய பூரிப்பால் நிறையப்பட்டிருந்தவள், அதனை வெளிப்படுத்தும் அளவின் நிர்ணயம் புரியாது பெரும் மகிழ்வோடு அவனை இறுகத் தழுவிக்கொண்டு அவனது முகத்தில் முத்தங்களை அள்ளியிறைத்தாள். சற்றும் எதிர்பாராத இக்கணங்களை அவன் எப்படி எதிர்கொண்டானென்று தெரியவில்லை. உடனே அவளிடமிருந்து விலகியவனின் விரைந்து செல்லும் காலடியோசைகளை மட்டுமே அப்பொழுது கேட்க முடிந்தது.

மின்னலில் தாக்குண்டாற் போன்று நிலைக்குலைந்துப் போனவள், அச்சமயம் அங்கே என்ன நடந்தது என்ற பேருண்மையின் தெளிவினை மிக தாமதமாகவே உணர்ந்து கொண்டாள். மானசீகமாகத் தன் உருவத்தை முன்னிருத்திக் காறிதுப்பினாள். அன்றிரவு வேலை முடிந்து சென்றவள் அதன் பிறகு ஒருவார காலம் பூத்துக்கு வரவேயில்லை.

என்னவாச்சுவென்று அவள் தாயார் எப்படியெல்லாமோ கேட்டு பார்த்தும் மெளனத்தை மட்டுமே நீடிக்கக்கூடியவளாக அவளிருந்தாள். அதட்டியும் மிரட்டியும் பேசிப் பழக்கமில்லாத அத்தாயிக்கு பெருங்குரலில் அழுதிட மட்டுமே அப்பொழுது முடிந்திருந்தது. இடையில் ஒரு நாள் பூக்காரம்மாளும், நாயரும் வந்து ஏன் வேலைக்கு வரவில்லை எனக்கேட்டதற்கு உடம்புக்கு முடியவில்லை என்பதைத்தாண்டி அவள் வேறேதும் சொல்லவில்லை.

உடல் நோவோடு மனகஷ்டமும் சேர்ந்து வாட்ட, எழுந்து வீட்டு வேலைகளுக்கு செல்லமுடியாமல் அவள் தாயார் சோர்வடைந்து விட்ட நாளில், ஒரு வாரக்காலமும் லீவில் வந்திருந்த தன் மகனை வைத்து பூத்தைப் பார்த்து கொண்ட கடை முதலாளி, அவள் வருகிறாளா இல்லை வேறு யாரையாவது வைத்து கொள்ளட்டுமா எனக்கேட்டு ஆளை அனுப்பிவிட, அவள் கண்களைத் துடைத்துக் கொண்டு மறு நாளே வருவதாக சொல்லி அனுப்பினாள்.

இந்த ஒரு மாதக்காலமும் அதிக மனவுளைச்சலுக்கு ஆளாகியிருந்த சித்ரா, அதிலிருந்து விடுபட மிகுந்த பிரயத்தனம் கொண்டிருந்தாள். ஆனாலும் அக்காட்சி திரும்பத் திரும்பத் தோன்றி அவளை வதைத்திடவே செய்தது.

தனது ஒரு சொல் கூட அடுத்தவர் மனதை புண்படுத்திவிடக் கூடாது என்று எப்பொழுதும் நிதானித்து பேசுகிறவளுக்கு, தான் இப்படியொரு பெரும் தவறை எவ்விதம் செய்தோமென்ற அதிர்ச்சியிலிருந்து மீண்டுவர முடிந்திடவில்லை.

இழிபிறவியாய் ஆகிவிட்ட துயரத்தையும் கடந்து அவளுக்குள் ஒரு கேள்வி குடைந்து கொண்டேயிருந்தது. தன்னைத் தொட்டு தொட்டு இளகிடவைத்த அம்மனிதன், தான் அணைத்து கொண்டபோது அதை வரவேற்காமல் விலகிப்போனது மட்டுமல்லாமல், இத்தனை நாளாகியும் இன்னும் பூத் பக்கம் வராமல் இருப்பது புரியாத புதிராகவே இருந்தது.

நீளும் அவஸ்தையில் தவித்திடும் அப்பொழுதில், வயிற்றைப் பிசைந்து இயற்கை உபாதை வருவதற்கான அறிகுறி தோன்றவே, கல்லாவை பூட்டி விட்டு, கருப்பு கண்ணாடியை அணிந்தவாறு கையில் ஸ்டிக்கை எடுத்து தட்டிக் கொண்டே மெதுவாக படியிறங்கினாள். பூக்காரம்மாவிடம் கொஞ்ச நேரம் பார்த்திருக்கச்சொல்லி விட்டு இங்கிருந்து ஏழேட்டு கடைகள் தள்ளியிருக்கும் கட்டணக்கழிப்பிடம் நோக்கி நடந்தாள். இடையிலிருக்கும் ஆடியோ கேஸட் கடையிலிருந்து, ” கல்யாணத்தேன் நிலா, காய்க்காத பால் நிலா” பாடல் ஒலித்து கொண்டிருந்தது. அந்த மனநிலையிலும் அப்பாடலின் இனிமை அவளை சுண்டியிழுக்கவே, அதனை ரசித்தவாறே சென்று கழிப்பறையை அடைந்தாள்.

படியேற தடுமாறியபோது அங்கு வேலை பார்க்கும் சுமதியக்கா ஓடிவந்து அவளைத் தாங்கிப் பிடித்து உள்ளே அழைத்து சென்றாள். கழிப்பிடத்தை விட்டு வெளியே வந்து பூத்திக்கு திரும்பும்போது ” மாலையில் யாரோ மனதோடு பேச” வென்று சொர்ணலதா பாடிக்கொண்டிருந்தார். இது அவளுக்கு மிகவும் பிடித்தமானப் பாடல். வானொலியில் அவளுக்கு பிடித்த பாடல்கள் வரும்போது மட்டும் வால்யூமைக் கூட்டி வைத்து கேட்பது அவளது வழக்கம். அவ்வகையில் இப்பாடல் முதலிடத்தைப் பிடித்திருந்தது. எனவே அங்கிருந்து நகர மனமில்லாமல் ரோட்டோரமாக ஒதுங்கி நின்றாள்.

அவள் அங்கே நிற்பதைக் கவனித்த கேஸட் கடை முதலாளி, உள்ளே வந்து உட்கார்ந்து பாட்டைக் கேட்டு விட்டுப் போகுமாறு கரிசனத்தோடு சொன்னபோது, சிரித்தபடியே பரவாயில்லையண்ணே என்றவள், பாடல் முடிந்ததும் பூத்துக்கு வந்தாள்.

உள்ளே காலடியெடுத்து வைத்ததும் அவளுக்கு நெருக்கமான அந்த செண்ட் வாசனையின் மிச்சம் அங்கிருப்பதை அறிய முடிந்து, யாராவது வந்தார்களாவென பூக்காரம்மாவிடம் கேட்டாள். எப்பொழுதும் வந்து போகிற இருவர் வந்து, பேசிவிட்டு காசை மேஜை மீது வைத்துவிட்டு போயிருப்பதாக அந்தம்மா சொன்னாள். அதன்பிறகு பணியில் கவனம் செலுத்த முடியாது அம்மனிதன் பற்றிய சிந்தனையே அவளுக்குள் வியாபித்திருந்தது. தான் தவறவிட்ட அத்தருணத்தையெண்ணி மனபாரம் அதிகரித்திட கைகளைப் பிசைந்தவாறு கடைக்குள்ளாகவே இங்கும் அங்குமாக நடந்தாள்.

அன்றிரவை வழக்கம் போல் இந்திப்பாடல்களுடன் கழித்துவிட்டு விடியற்காலம் அரைகுறைத் தூக்கம் கண்டு விழித்தெழுந்தவளுக்கு ஆழ்ந்த அமைதியும் ஒருவித குறுகுறுப்பும் ஏற்பட்டிருந்தது. இன்றைக்கு அம்மனிதனை நிச்சயமாக சந்திக்கப்போகிறோம் என்ற உள்ளுணர்வும் உற்பத்தியாகியிருந்தது. மிகுந்த கலகலப்போடு வேலைக்கு புறப்பட்டுப் போகிறவளின் திடீர் மாற்றம் அவள் தாய்க்கு வியப்பைக் கொடுத்தாலும் அதனூடாக நிம்மதியான பெருமூச்சு வெளிப்படவே செய்தது.

சிரித்த முகத்தோடு வாடிக்கையாளர்களை அணுகிக்கொண்டிருந்தவளின் புலன்களனைத்தும் எதிர்பார்ப்பின் உச்சத்தில் வீற்றிருக்கும் வேளையில், முற்பகல் பதினொரு மணிவாக்கில் பூத்துக்கு வெளியே எழுந்த பெரும் சத்தத்தை அவள் கேட்டாள்.

தொடர்ந்து உண்டான இரைச்சல்களும் கூக்குரல்களும் அவளை பதற செய்திடவே, ஓடோடிச்சென்று வாசலில் நின்று என்ன நடக்கிறது என்ற விளங்கிக் கொள்ள முடியாமல் பூக்காரம்மாவிடம் விசாரித்தபோது, மாமூலாகப் போன் பேச வருகிற ஒரு இளைஞனை எதிரே வந்த லாரி அடித்துப் போட்டு விட்டு போய்விட அவன் அப்பொழுதே பிணமானான் எனச்சொல்லப்பட்டதும் பிரளயமே சம்பவித்தது போல் அவள் பீதியுற்றாள்.

இன்னும் கீழாகச்சென்று விபத்து நடந்த அப்பகுதியை ஆராயும் நோக்கில் நின்றிருக்க, ரம்மியமான அச்செண்டின் வாசனை காற்றில் மிதந்து வந்தது.

……………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….

வாழ்வெனும்எளியஎலி – – நெகிழன்

1)

காலத்தின்மகத்தான கலைஞர் ஒருவருடன்
கல்யாணத்துக்கு சென்றேன்.
அங்கே சின்னஞ்சிறிய மண்பாண்டங்களில்,
வைக்கப்பட்டிருந்த
பனிக்கூழ், பாயாசம், லட்டு, பால்கோவா, ஜிலேபி என
பல்வகைஇனிப்புகளைக்கண்டதும்
தானொரு
காலத்தின்மகத்தான கலைஞன் என்ற பிரக்ஞை கிஞ்சித்துமல்லாது
சின்ன பிள்ளையைப்போல
பனிக்கூழை வாய் பூராவும் ஆக்கிக்கொண்டுஅம்பியாட்டம் நின்றார்.
சாப்பிட்டு முடித்ததும் தன் பொற்கரங்களை
பேண்ட்பாக்கெட்டில் விட்டு
நன்கு சுத்தமாய் துடைத்துக்கொண்டுவிட்டார்.
ஹோ.. என்னே அழகு!
அத்தனையையும் கண்ட பின்னரே சொல்கிறேன்
அவர் ஒரு நல்ல சாமர்த்தியமான கலைஞன்தான்.
நம்புங்கள்ப்ளீஸ்!

2)

இல்லத்தார்தூங்கிவிட்டநிசியில்
மின்விசிறியும்சுவர்கடிகாரமும்
பேசிக்கொண்டன.
அப்போது
இருவரில் எவர் பிரதானம் என்கிற வாதம் எழுந்தது.
அவற்றின் ஓலங்கள்
அவ்வீட்டு இளைஞன் செவியை மட்டுமே அடைந்தன.
அவன் ஒரு பெருங்கோவக்காரனாய் இருந்தான்.
எழுந்த வேகத்தில்
அவ்விரண்டின்உயிர்நிலைகளையும் பிடுங்கி
ஜோப்புக்குள் போட்டுக்கொண்டு
பரம சாந்தியாய் தூங்கினான்.
விடியலின்போது
நித்திய தூக்கத்திலிருந்த அவனது ஜோப்பிலிருந்து
ஒன்றபின் ஒன்றாக வெளியேறின இரு தவளைகள்.

3)

சதா வீட்டிலேயே உள்ள நான்
ஊரார் நினைப்பதுபோல சும்மா இல்லை.
உரலில்மாவாட்டும்
கொழுந்தியாளுக்கு கூட மாட உதவுகிறேன்.
பகலில் கரண்ட் போன பின்பும்ஆழ்ந்துறங்கும் மனைவிக்கு விசிறி விடுகிறேன்.
லேசாக தலைவலிப்பது போல் இருக்கிறதென்று கூறும்
மாமியாருக்கு தேநீர் கலக்கித் தருகிறேன்
சமயத்தில் தைலம் கூட தடவிவிடுகிறேன்.
தன் சங்கேதமொழியினூடே
டூவீலரை துடைக்க அழைக்கும் மச்சினனின்ஆணையைசெய்துமுடித்து நல்ல பெயர் வாங்குகிறேன்.
இதற்கு மேல் ஒரு மனிதன் என்ன வேலைதான் செய்துவிட முடியும்.

மச்சினனே..
முன்னிரவு உன் அக்காளை
எப்படியெல்லாம்துடைத்தேன் தெரியுமா…
இந்த வண்டியைபோலவே தான்.

4)

தொடர்ச்சியாக கவிதைகள் வாசித்ததின் விளைவாக
சமீபமாய்
எனது கண் பார்வை மங்க ஆரம்பித்துவிட்டது.
சாதாரண வெல்டிங்தொழிலாளிக்குக் கூட
பாதுகாப்பு கருதி பணியிடத்தில்
கண் கண்ணாடி வழங்கப்படுகிறதாமே!.
வாய் ஒரு திசையில்கோணிக்கும் அதேசமயம்
கைகால்கள் வேறு திசையில் இழுக்கின்றன.

நெடுஞ்சாலையில்விருட்டென
பைக்ரைடிங் போகும் வாலிபனே
நீயாவது இரவல் தாயேன்
ஹெல்மட் அணிந்துகொண்டு வாசித்தால் சற்று கூடுதலான பாதுகாப்புணர்வைப் பெற்றுத் தொலைவேன்.
இலவசஇணைப்பாக
கர்ணனின்உடற்கவசம்போலஒன்றெனக்குதருவாயானால்
உனக்கொரு சலாம் போட்டு
மணிக்கட்டில்முத்தமிடுவேன்.

5)

ஒரு ஊரின் ராஜா ,
ராஜாவாகவே இல்லை.
எவரும் சந்தேகிக்காதபடிக்கு
மிகச்சிக்கலான முறையில் மாறுவேடமிட்டுக்கொண்டு
நாயர்கடையில் டீ கிளாஸ்கழுவிக்கொண்டிருந்தார்.

அந்த மீசை,
அந்த தாடி,
அந்த தலைப்பாகை
எல்லாம் கச்சிதம்தான்
ஆனாலும்
பசைப்பிடிமானமற்று உரிந்து தொங்குவதுமீசையாமுகமா என வெகுவாககுழம்பிபோயிருந்தார்.

நாலு வீடு தள்ளியுள்ள சுமதி
கிணற்றுக்குபோகும்போதும் வரும்போதும்
பிங்க் கலர் லாலிபாப்பைசப்பியபடியேராஜாவை நோக்கி ஏதோ சிக்னல் கொடுத்தாள்.

அவரும்
ஏதோ புரிந்துவிட்டதுபோலமலாரென ஓடிப்போய்
ஒரு கோணி சாக்குக்குள்
தன்னை பத்திரப்படுத்திக்கொண்டார்.

6)

சிறுவன் திருவிழா முடிந்த கடை வீதிகளில் பொறுக்கினான்
உடைந்த விளையாட்டு சாமான்களை,
மண்ணில் புதையுண்டசில்லறைக்காசுகளை,
காகிதஉதிரிப்பூக்களை
மற்றும்
சில வெடித்த, வெடிக்காதபலூன்களை.

இளஞ் சிவப்பு நிற பலூனின்உதடுகளோடு உதடுகள் பொருத்தி ஊதியபோது
துவக்கத்தில் அதுவொருஆண்குறியைப்போலவும்
காற்று உட்புகப் புக
பாலூறிப் பருத்த
ஒரு தாயின் முலையை போலவும் தெரிந்தது.

7)

பகற்பொழுதுகளில் ஊர் சுற்றுமவன்
ஒரு மஞ்சள் பை நிறைய
துண்டு பீடிகளை, துண்டு சிகரெட்களைநிரப்பிக்கொண்டு
அறைக்கு திரும்புகிறான்.
மேற்கூரையற்றஇருசுவர்மட்டுமேயுடைய
அறை அது.

பூட்டு இல்லை,
கொண்டி இல்லை,
கதவு இல்லை
எனினும் அது நிச்சயமொருவீடுதான்.

ஒவ்வொரு துண்டு பீடியாய்
ஒவ்வொரு துண்டு சிகரெட்டாய்
புகைத்தான்.
ஒவ்வொரு துண்டு பீடியிலிருந்தும்
ஒவ்வொரு துண்டு சிகரெட்டிலிருந்தும்
ஒவ்வொரு மனிதனின் எச்சில் சுவையின் போகம்..
கட்டக் கடைசியாக முழு பீடியாய், சிகரெட்டாய்
தன்னையே புகைக்கத் துவங்கினான்.
ஒரு வெண் மேகம்
காற்றில் ஒரு பீடியைப்போலஉருண்டபடியேவானேகிற்று.

8)

சமீபகாலமாகசெயலிழந்துவிட்டதாய் நினைத்த மூளையிலிருந்து இன்று
ஒரு புழுவின் சிறு நெளிவை உணர்ந்தேன்.
அநேகமாக அதற்கு இரு கொம்புகள்இருக்கலாமெனயூகிக்கிறேன்.
உள்ளிருந்து முட்டுவதாலோ என்னவோ
மண்டையோட்டில்தொடர்ச்சியாய்அதிர்வலைகள்எழுந்தவண்ணமே இருக்கின்றன.
நான் எனக்குள் சொல்லிக்கொள்வதுஒன்றேயொன்றுதான்
நான் இந்த இக்கட்டான நேரத்தில்
சிறிதளவும் அதிர்ச்சிக்குள்ளாகாமல்
மிக இயல்பாக ஒரு கோப்பைத்தேநீரைபருகியாக வேண்டும்.

9)

நான் வெண்ணிற உடை அணிந்திருந்தேன்
எதிரி கருப்பு நிறத்தில்.
இருவரின் உடைகளும்ஸ்பைடர்மேனுடையதைப்போல
முழுவுடலைவிழுங்கியிருந்தன.
எதிரியைதுரத்திக்கொண்டுஓடியபோது
அவன் ஒரு சதுரங்கப்பலகையின்
கருப்பு கட்டத்தில் ஒளிந்துகொண்டான்.
தவிர அது சொல்லிவைத்தாற்போல கருப்பு காய்களின் அணி..
விரைந்து சென்று வெள்ளைக் காய்கள் அணியில் என்னை இணைத்துக்கொண்டேன்.

காய் நகர்த்தும் அந்த ஆட்டக்காரர்கள் திடுக்கிட்டுப்போனார்கள்.
வாய் பிளந்தார்கள்
எந்த காயையும்நகர்த்த விடாமல்
நாங்களே ஒருவரையொருவர் அடித்துக்கொண்டோம்.
மற்ற காய்கள் வெறுமனே வேடிக்கைப்பார்த்தன.
இந்த ஆட்டத்தை மேலும் விறுவிறுப்பாக்கஎதிரியோர்
யோசனை கூறினான்

“நாம் ஏன்,
நம்மை நாமே அடித்துக்கொள்வதற்கு பதிலாக
வெட்டிக்கொள்வதற்கு பதிலாக
இம்மாந்தர்களை வெட்டி வெட்டி
இவ் விளையாட்டை மேலும் சுவாரசியமாக்கக்கூடாது?” என்றான்

பதிலுக்கு நான்

“ஆமாம் சமீபமாக எனக்கும் கூட இந்த வாள்
துருவேறிவிட்டதுபோல்தோன்றுகிறது”என்றேன்.

திடுக்கிட்ட ஆட்டக்காரர்கள்
தங்களிடமிருந்த உயர் ரகபிஸ்டலை
துழாவினர்.
திடீரென ஞாபகம் வந்தவர்களாக
ஓ.. நாமொருமுட்டாக்கழுதைகள் என்று ஒருசேர கத்தினர்.

10)

தம் அட்டூழியங்களை அரங்கேற்ற
பெரும்பாலும் இரவுகளையே தெரிவு செய்கின்றன எலிகள்.
சில நேரம் கேபிள்வயரிலும்
சில நேரம் எங்களில் ஒருவரின் மார்பிலும்ஏறிச்செல்கின்றன.
தேங்காய் தக்காளியிலிருந்து
சவகாரம்ஈரிழைத்துண்டு வரை
ஒன்றையும் விட்டு வைப்பதில்லை.
எல்லாவற்றிலும்முடை நாற்றம்.
வரவர எலிகளின்மூத்திர வாடை
ஒரு சிறந்த வாசனைத்திரவியம்போல
துணிகளிலிருந்துவெளியேறுகிறது என்று மனைவி ஸ்பானிஷில் முணுமுணுத்தாள்.
இதில் ஆச்சரியமென்னவெனில்
அவள் இப்போதுதான் முதன்முதலில்ஸ்பானிஷில் பேசுகிறாள்.

கரையும்நினைவுகள்… – அரிசங்கர்.

சபரி வீட்டு காம்பௌண்ட்க்குள் நுழைவதை சத்தம் கேட்டு வாசல் அருகில் இருக்கும் ஜன்னல் வழியாகப் பார்த்தாள் அவன் அம்மா பார்கவி. சபரியைக் கண்டதும் கோவமாகக் கதவை திறந்து வெளியே வந்தாள், அதற்குள் அவன் வண்டியை ஸ்டாண்ட் போட்டு வீட்டிற்கு நுழைய முற்பட்டான். அவனை வாசலிலேயே தடுத்து நிறுத்திய பார்கவி,

“ஏண்டா ஹெல்மெட் போடாம வந்த” என்றால்.
“தெருமுனை வரைக்கும் போட்டுட்டு தான் வந்தன்ம்மா. கடைல பால் வாங்கிட்டு அப்படியே வந்துட்டன். ரெண்டு நிமிஷத்துல என்ன வந்துச்சி இப்போ” என்றான்.

பார்கவி கோவமாக “ ரெண்டு நிமிஷமோ, ரெண்டு நொடியோ வாசக்கதவ தாண்டறவரைக்கும் உன் தலையில ஹெல்மெட் இருக்கனும். இனிமே இப்படி பண்ண..”

அவள் பேசிக்கொண்டிருக்கும் போதே அவன் வேகமாக உள்ளே நுழைந்து தன் வேலைகளைப் பார்க்க துவங்கினான். பார்கவி கோவமாக சென்று அமர்ந்துகொண்டாள். உடைகளை மாற்றிக்கொண்டு வந்த சபரி தன அம்மா கோவமாக இருப்பதைக் கண்டு அவனே சமையல் அறைக்குச் சென்று சாப்பாட்டை போட்டுக் கொண்டு வந்து பார்கவியின் அருகில் அமர்ந்துகொண்டு தொலைக்காட்சியை இயக்கினான்.
அவன் சாப்பிட்டு முடிக்கும் வரைக்கும் காத்திருந்த பார்கவி மெல்ல அவனிடம் வார்த்தைகளில் கோவமில்லாமல் பேச்சுக் கொடுத்தாள்,

“நாளைக்கு அந்த பொண்ணு எப்போ வருதுனு சொன்ன”
“எப்போ வரணும்னு சொல்லு”

“எப்போ வேணும்னா வரச் சொல்லு, அது பிரச்சனையில்ல, நான் சொல்ல சொன்னத சொல்லிட்டியா?”

“அதெல்லாம் அவசியம் சொல்லனுமா”

“ஆமா, கண்டிப்பா சொல்லனும். நீ எல்லாத்தையும் சொல்லி அதுக்கப்பறம் அந்த பொண்ணு சரினு சொன்னா தான் கல்யாணம். உன்னால முடியலனா சொல்லு நான் சொல்லிக்கிறன்” என்றாள்.

அவன் எதுவும் சொல்லாமல் எழுந்து படுக்கைக்கு சென்றுவிட்டான்.

இருவரும் அவரவர் படிக்கையில் படுத்துக் கொண்டிருந்தனர். ஆனால் இருவரும் ஒரே நினைவுகளிலேயே சூழுந்திருந்தனர். ஒரே பட்டாம்பூச்சி இருவரின் கண்முன்னே பறந்து கொண்டிருந்தது. சபரியை விட பார்கவிக்கு அதிக நினைவுகள் இருந்தது. அவள் கவலை கொள்ள அதுவே கூட காரணமாக இருக்கலாம்.

“நாளைக்கு நாம சொல்லப்போறத அந்த பொண்ணு எப்படி எடுத்துக்கும்” என்று பார்கவியும், சொல்லத்தான் வேண்டுமா என்று சபரியும் சிந்தனையில் ஆழ்ந்திருந்தனர். எப்போது உறங்கினோம் என்று தெரியாமலேயே இருவரும் உறங்கிவிட்டிருந்தனர்.

மறுநாள் காலை சபரி அவசர அவசரமாக அலுவலகத்திற்குப் புறப்பட்டுக்கொண்டிருந்தான். பிரியாவை பத்து மணிக்கு மேல் வரச் சொல்லியிருந்தான். அவள் வரும் போது அவன் இருப்பதைத் தவிர்த்தான். சபரி எழுந்ததிலிருந்து மிகவும் பதட்டமாகவே இருந்தான். பார்கவியும் அதை கவனித்துக் கொண்டிருந்தாள்.

சபரி காலணியை மாட்டிக்கொண்டிருக்கும் போதே அழைப்பு மணி அடித்தது. பார்கவி கதவை திறக்கும் சத்தமும் தொடர்ந்து பிரியாவை வரவேற்கும் சத்தமுன் கேட்டது. வேகமாக அனைத்தையும் எடுத்துக்கொண்டு வெளியே வந்தான். பிரியா நாற்காலியின் நுனியில் அடக்கமாக அமர்ந்திருந்தாள். பிரியா பார்த்ததும் பெரியதாகச் சிரிக்க துவங்கியவன், அருகில் அம்மா இருப்பதைக் கண்டதும் சிரிப்பதைச் சுருக்கிக்கொண்டான். பிரியா பட்டுப்புடவை கட்டிக்கொண்டு, தலையில் பூவெல்லாம் வைத்திருந்தாள். தன்னை ஹோம்லியாக காட்டிக்கொள்ள முயன்றிருந்தாள். ஆனால் அனுபவம் வாய்ந்தவர்கள் பார்த்தவுடன் சொல்லிவிடுவார்கள் பிரியா அப்படியெல்லாம் இல்லை என்று.

“அம்மா நான் கிளம்பறன்” என்று அம்மாவிடம் சொல்லிக் கொண்டே பிரியாவை பார்த்து தலையசைத்தான். பார்கவி அவனுடன் வாசல் வரை வந்தாள். அவன் ஹெல்மெட் போட்டு புறப்படும் வரை அவனை கண்காணித்துக் கொண்டிருந்தாள். இது தினமும் நடப்பது தான் என்றாலும் இன்று அவனுக்குச் சற்று எரிச்சலாக இருந்தது. அவன் தெருமுனையை அடையும் வரை காத்திருந்துவிட்டு திரும்பும் போது தான் கவனித்தாள் மழை மேகம் திரண்டு கொண்டிருந்தது. பிரியாவை பார்த்து புன்னகைத்த படியே,

“என்னமா சாப்பிடற” என்றாள்.

“இல்ல ஆண்டி, நான் சாப்பிட்டு தான் வந்தேன்” என்றாள் பிரியா.

“அதுக்காக மொத தடவ வந்து எதுவும் சாப்பிடாமயா இருப்ப, இரு போய் காபி கொண்டுவறன்” என்று உள்ளே சென்றாள்.
காபியெல்லாம் குடித்து, பொதுவான குடும்ப விஷயங்கள், சொந்தங்கள், படிப்பு, வேலை, தொழில், வீட்டில் ஒத்துக் கொள்வார்களா என்றெல்லாம் பேசிவிட்டு பார்கவி மெல்ல பிரியாவிடம் கேட்டால்,
“எங்களப்பத்தி உனக்கு எல்லாம் தெரியுமா?”
“உங்களுக்கு சபரி ஒரே பையன், நீங்க டீச்சரா இருக்கீங்க, சபரியோட அப்பா சின்ன வயசிலேயே விபத்துல இறந்துட்டாரு, சபரி பி.டெக். படிச்சிருக்காரு கிட்டதட்ட எல்லாம் தெரியும்” என்றாள்.
மெல்ல புன்னகைத்துக் கொண்ட பார்கவி,
“அது இல்லமா, எங்க பூர்வீகம் எது, எங்க சொந்த ஊர் எது, அத விட்டுட்டு நாங்க ஏன் இங்க வந்தோம் இதெல்லாம் தெரியுமா?” என்றாள்.
“இல்ல ஆண்டி, அத பத்தியெல்லாம் சபரி எதுவும் சொன்னதில்லை”
பார்கவி பெருமூச்சி விட்டபடி சொல்ல ஆரம்பித்தால்,
“எங்க சொந்த ஊர் சென்னைல நந்தனம். நானும் சபரியோட அப்பாவும் வீட்ட எதிர்த்துகிட்டு கல்யாணம் பண்ணிகிட்டோம். அவரும் ஸ்கூல்ல வாத்தியாரா தான் இருந்தாரு. சபரிக்கு மூணு வயசு இருக்கும் போது லாரில அடிப்பட்டு இறந்துட்டாரு. அவர் இறந்ததும் அவர் வேலை எனக்கு கிடைச்சுது. எதோ சபரிக்காக தான் நான் இருந்தேன். சபரிக்கு பத்து வயசு இருக்கும் போது ஒரு நாள் சாயங்காலம் வீட்டுக்கு வரவேயில்ல. நல்லா மழை பெஞ்சிட்டு இருந்தது. நான் குடையை எடுத்துகிட்டு அவன் ஸ்கூல் பக்காமா ஓடினேன். ஸ்கூல் வாசலேயே மழைல நனைஞ்சிட்டு நின்னுகிட்டு இருந்தான். அவன பார்த்ததும் தான் எனக்கு மூச்சே திரும்ப வந்தது. அவன வீட்டுக்கு கூட்டிட்டு வந்து தலையெல்லாம் துவட்டிவிட்டு தான் அவனை கவணிச்சேன். எல்லாத்தையும் புதுசாப் பாத்திகிட்டு இருந்தான். “என்னடானன்?” என்னையே புதுசா பாத்திட்டு இருந்தான். எதுவுமே பேசல. அவன புடிச்சி உளுக்கினான். எதுவும் இல்ல. வச்சகண்ண மாத்தாமா பாத்துகிட்டே இருந்தான். எனக்கு பயமாடுச்சி, புள்ள எதயோ பார்த்து பயந்துட்டானு தான் முதல்ல நினைச்சேன். உடனே அவன துக்கிட்டு கோவிலுக்கு போய் மந்திரிச்சிட்டு வந்தேன். இரண்டு நாளா புள்ள அப்படியே தான் இருந்தான். ஆஸ்பத்திரிக்கு ஓடினேன். அங்க இருந்த எந்த டாக்டருக்கும் எதுவும் புரில. அவங்க எது கேட்டாலும் இவன் முழிக்கிறான். நான் யாருனு கேட்டா மட்டும் அம்மானு சொல்றான். மத்தபடி எதுவும் தெரில. டாக்டர் எங்கிட்ட,
“எப்போலருந்து இப்படி” என்றார்.
“இரண்டு நாளுக்கு முன்னாடி சாயங்காலம் மழைல நனைஞ்சதுலருந்து டாக்டர்”
“சரி பையன அட்மீட் பண்ணிடுங்க, ஸ்கேன் எடுத்து பார்ப்போம்” என்றார்.
எனக்கு அழுகையா வந்தது, ஒரே பையன். வாழறதே அவனுக்காகதான். எதுவும் ஆகக்கூடாதுனு எல்லா சாமிகிட்டயும் வேண்டிக்கிட்டன். பத்து நாலு அப்படியே போச்சி, ஆஸ்பத்திரியே கதினு இருந்தன். திடிர்னு அவன தனி அறைக்கு மாத்திட்டாங்க. நர்ஸ்கிட்ட ஏன்னு கேட்டான். டாக்டர கேக்க சொன்னாங்க.
டாக்டரே என்ன கூப்பிட்டார்.

“இங்க பாருங்கமா, உங்க பையனுக்கு என்னனு கண்டுபிடிக்க முடில, ஆனா மழைல நனைஞ்சதுனால தான் அவன் எல்லாத்தையும் மறந்துட்டான். அவன கொஞ்ச நாள் இங்கயே அபசர்வெஷன்ல வெக்கனும். இதப்பத்தி முழுசா ஆராயனும்னு பெரிய டாக்டர் சொல்லிருக்காரு” என்றார்.
எனக்கு அழுகையாக வந்தது அழுகையை அடக்கிக்கொண்டு அவரிடம் கேட்டேன்,
“இல்ல சார் நான் அவன வீட்டுக்கு கூட்டிட்டு போய்டறன்”
“அப்படிலாம் அனுப்ப முடியாதும்மா, பெரிய டாக்டர் சொல்லிட்டாரு, நீங்க வேனும்னா அவர்கிட்ட பேசிக்கங்க” என்றார்.

பெரிய டாக்டரிடம் பேச வெளியே வந்த போது, ஒரு கம்பவுண்டர் என்னை கூப்பிட்டார்.
“இங்க பாரும்மா, இவனுங்க உன் புள்ள வுடமட்டானுங்க. ஏதோ ஆராய்ச்சி அது இதுனு பேசினு இருக்கானுங்க. அதுக்கு தான் உன் புள்ளய தனியா மாத்திட்டானுங்க. ஒரே வழி புள்ள துக்கினு ஓடிடறது தான், அதுவும் சுலபமில்ல. இவளோ பெரிய ஆஸ்பத்திரில கண்டிப்பா மாட்டிப்ப” என்றார்.
“இப்ப என்ன பன்றது”

“எனக்கு ஆயிரபா குடு, உன் புள்ளய யாருக்கும் தெரியாம தூக்கியாந்து தரன்” என்றார்.
எனக்கு அப்போ பணம் பெரிசா தெரியல. சபரி கிடைத்தால் போதும் என்று தான் இருந்தது. “சரி” என்றேன்.
“அப்பறம் முக்கியமான விஷயம், புள்ள இட்டுகினு எங்கனா போய்டு, இங்க இருந்த இவனுங்க கண்டிப்ப தேடினு வருவானுங்க” என்றார்.

“பணத்தை குடுத்து சபரியை மீட்டு, இருந்த ஹவுஸிங் போர்ட் வீட்டை வித்துட்டு யாருக்கும் தெரியாம பாண்டிச்சேரிக்கு வந்தேன். அப்போலருந்து அவன மழைல நனையவிடாம பொத்தி பொத்தி வளர்க்கறன். தலைக்கு கூட தண்ணிய மெதுவா, கொஞ்சமா நானே தான் ஊத்துவன். நீ இதெல்லாம் கண்டிப்பா தெரிஞ்சிக்கனும். அவன் கூட வாழப்போறவ அவன் பிரச்சனை தெரியாம இருக்க கூடாது”

பிரியா சிலை போல் அமர்ந்திருந்தாள். எதுவும் பேசவில்லை.

“சரி இரும்மா, நான் சாப்பாடு ரெடி பன்றேன், நீ டிவி பாத்திட்டு இரு” என்று டிவியை இயக்கி விட்டு சமையலைக்கு சென்றாள். வெளியே மழை பெய்துக் கொண்டிருந்தது.

சமையல் வேலை பாதியில் இருக்கும் போது பார்கவியின் கைபேசி அழைத்தது. அடுப்பை அனைத்து விட்டுச் சென்று யார் என்று பார்த்தால். சபரி என்றிருந்தது. அவசராமாக இயக்கினாள் ஆனால் வேறு ஒரு குரல்,
“மேடம் உங்க பையனுக்கு ஆக்ஸிடண்ட் ஆயிடுச்சி” என்றது.
“ஐயோ… என்னாச்சி” என்றாள்

“பயப்படாதிங்க மேடம் கால்ல மட்டும் லேசான ஆடி நீங்க உடனே ரமணி ஆஸ்பிட்டலுக்கு வாங்க என்றார்.
பார்கவி வேகமாகக் கிளம்பினாள். பிரியா இன்னும் சிலையாகவே இருந்தாள்.

“பிரியா, சபரிக்கு ஆக்ஸிடண்ட் ஆயிடுச்சாம் வாம்மா போலாம்” என்றாள்.

அப்போது தான் பிரியாவுக்கு சுயநினைவே வந்தது. இருவரும் வேகமாக மருத்துவமனைக்குச் சென்றார்கள். பெயர் சொல்லி விசாரித்துவிட்டு சபரியிருந்த அறை வாசலுக்குச் சென்றார்கள். அதற்குள் அவன் நண்பர்கள் சிலர் வந்திருந்தனர்.

பார்கவி சபரியை கவணித்தாள். முழுக்க நனைந்திருந்தான். தலையில் ஈரம் இருந்தது. இப்போது பார்கவிக்கு அடிப்பட்டதைவிட வேறு கவலைகள் வந்து சேர்ந்தது. அவன் பேசுவதையே பார்த்துக்கொண்டிருந்தாள். உள்ளே நுழையப் போன பிரியாவை இழுத்து தன்னுடன் நிறுத்தினாள். பழைய நண்பர்களிடம் மட்டுமே பேசினான். புதியவர்களைத் தெரியவில்லை. அலுவலகம் அவனுக்கு நினைவிருந்தது. பெரிய பாதிப்பில்லை என்று நினைத்துக்கொண்டாள்.

நண்பர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராகப் புறப்பட்டனர். அனைவரும் சென்றபின் பார்கவியும், பிரியாவும் மட்டும் இருந்தனர். சபரி பார்கவியிடம் மட்டுமே பேசிக்கொண்டிருந்தான். பிரியா அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளை பார்த்த சபரி தன் அம்மாவிடம்,
“இவங்க யாரு” என்றான்.

இருவரும் ஒருவாறு அதை எதிர்பார்த்தே இருந்தனர்.
பார்கவி பதில் சொல்லவதற்குள், முந்திக்கொண்ட பிரியா,
“நான் உங்க பிரண்ட் தான், உங்க கூட உங்க ஆபிஸ்ல தான் வேலை பார்க்கறன்” என்று சொல்லிவிட்டு தலையை குனிந்து கொண்டாள்.