Category: ஜீன்

தமிழ் உதயா கவிதை ( லண்டன் )

உப்பரிகை

குரலின் விரல்களை
ஒடித்து ரகசியமாய் பதியமிடுகிறேன்
அது ஒரு மலைத் தீயை
பற்ற வைக்கிறது
மனதெங்கும் பள்ளத்தாக்கு
மெல்லிய விளைச்சலில் கூட
ஒரு கரும்பு வயலை
சாகுபடி செய்தது
யுத்தக் குரலுக்கு பின்னான
ஒரு பனிச்சிவிறல் மௌனம்
காயங்களுக்கு வார்த்தைகளை விட
மிகச்சிறிய தேடல் ஒத்தடம் ஆகிறது
குரல்களுக்கு ஒப்பந்தம் தேவையாயில்லை
உயிர்களுக்குள் தீ முளைத்தல்
அவசியம் என்பதும்
தன்னம்பிக்கைகளில் தியாகங்கள்
ஒளிந்திருக்கின்றன என்பதும்
உயிரை தண்டவாளத்தில் தற்கொலைக்கின்றன
எழுத்துத் தீவில் நீந்தும்
குரலின் விரல்களுக்கு தயக்கமில்லை
மனதைக் கொத்தும்
ஓர் அலைவூசல் நினைவுகளில்
எப்போதும் வந்து வீழும்
அன்பின் வெள்ளைக் காகிதத்தில்
கவிதை கருவுறும்
ஒரு முத்தச்சொல் ஆதித்யா

••

மொட்டை விட்டு
வெளியே வந்த பூவிற்கு
தெரிவதாயில்லை தன் முகவரி
முல்லைச்சரம் பத்திரமாய்
காய்ந்து கிடக்கிறது
மனசு மட்டும் பூப்பதை
நிறுத்தவில்லை
உடல் நனைந்தும்
தோய்ந்த நாணல்களை
நதியின் உதடுகள்
தரிசிக்காது செல்வதில்லை
இரவுகளின் நுனியில்
தவறி வீழ்கிறது
வாதைகளில் விடமறியாத
விட்டில் பூச்சிகள்
மூங்கில்களுக்கு துளைகள்
சவக்குழி என்றால்
காற்றை அது எவ்வாறு
உயிர்ப்பிக்கிறது
தினமும் சமுத்திரத்தை
இத்தனை நம்பிக்கையோடு
நீந்திக் கடக்கிறது
இந்த நிலாக்குழந்தை.
தன்னில் வீழ்ந்த
வேரின் முகவரியை
அசராமல் எழுதித் தள்ளுகிறாள் பூமி
நதியின் நாவுகள்
உப்புக் கரிப்பதில்லை
இரு துருவங்களுக்கிடையே
இரையாகும் வரையில்
என் முகவரியை
யார் எழுதக்கூடும்
என் உன்னைத் தவிர ஆதித்யா

00

காலச் சக்கரத்தில்
சிக்கிய மயில்ப்பீலி ஒன்று
ஈன்ற குட்டிகளோடு
துடித்துக் கொண்டிருக்க,
உள்ளங்கைக்குள்
அடங்கிய கவிதை
துயின்று கொண்டிருந்தது.
தாழ்வாரத்தில் உருகிச்
சிந்திய நினைவுகளை
உயிரின் ஏனத்தில்
ஏந்திக் கொண்டிருந்தேன்.
இந்த சாயங்கால வெயில்
மெல்ல மெல்ல அசைகிறது
உணர்வுகளை சிதைத்துச் சிதறிய படி.
மேலே இருள் படரப்படர
இரண்டு சிறகுகள் கூட
தேவையற்று
திரும்பி வராத தினமொன்றில்
உருண்டு வீழ்கிறாள்
ஒரு குழந்தை நிலா
இரண்டு இரவுகளுக்கு இடையே
சிக்கித் தவித்தது ஒரு பகல்
அது நீயா நிழலா ஆதித்யா

00
தூங்க மறுத்த
ஓர் இரவின் நிழலில்
காலத்தை கரைத்து ஊற்றியது
நிலாச் சாயத்தால் நனைந்து
உருண்ட நுரைகளை
விழுங்கிய நாவுகளோடு
அலைகிறது இருட்டு
இறுகித் தவித்த காயங்கள்
இன்னும் அவள் கன்னத்தில் அறைந்த
கனவுகளின் வடுக்களாக
வரலாற்றை புதைத்திருக்கின்றன
குளிர் போர்த்திய
வெள்ளைக் கம்பளியை நகர்த்தி
என் மொட்டை மாடியில்
நழுவி வீழ்கிறாள்
அந்தப் பால் நிலா
பாலை நிலத்தில்
சுவீகரித்த கீற்றின் அனல்
எப்படி இவளுள் குளிர்ந்தன
கலைந்த கேசத்திரளுக்குள் ஒளிந்து
எங்ஙனம் வெண்பூக்களை
தொங்க விடுகின்றன
இத்தனை மிருதுவாய்
இத்தனை ஈரமாய்
இத்தனை பஞ்சுப் பொதியை
முழுக் கவிதை செய்ய திணறினேன்
வந்து வீழ்ந்தது என் உயிர் மேல்
ஒரு பாலை நிலவுக்கடல் ஆதித்யா
00
பிச்சிப்பூக்களின் தீவில் இருந்து
ஒரு பீனிக்ஸ் பறவை
தேசமலைந்து பால்வீதியில்
வானத்தை தொலைப்பது
சாத்தியமில்லை என்கிறீர்கள்
புரியவில்லையா உங்களுக்கு
மேகம் மூடிய பொற்காடு
கருகிச் சாம்பலாகும்
சில கணங்களை நிகழ்த்திய
குடுவை வெயிலை பிளந்து நிழல்தேடி
அலைகிறதும் சாத்தியமில்லை
வீதியில் கடக்கும்
ராஜநாகச் செட்டையில்
ஒரு ட்ரகன் அதி நவீனமுட்டைகளை
உற்பவிக்க முனைகிறது
குடியகன்று போன
பாறையின் கனவுகளில்
கூர் தீட்டப்பட்ட இதயமுளை
பூக்கள் சொரியும் என நம்புவது
முட்களை கனியாக்கும் கடைசிச் சந்தர்ப்பம்
ஒரே ஒரு துளி
ஒரே ஒரு கீற்று
ஒரே ஒரு தளிர்
ஒரே ஒரு கனி
ஒரே ஒரு தேடல்
இன்னும்
ஒரே ஒரு நம்பிக்கை
அல்லது
நீ ஒரே ஒரு கடல் ஆதித்யா
00
எண்ணிலடங்கா பகல்களை
பறி கொடுத்தும்
சிறகுகளை மடித்து வைத்துக் கொண்டு
திசைகளுக்கு குறி சொல்லும் அவன்
இரவுகளை அசை போடுகிறான்
கனவுகளை வேட்கையுடன்
விழி செய்யும் அவன்
முதுகில் இரண்டு
சிறகுத்துண்டங்களை அணிந்தபடி
மூளிப்பகலை தன்னால் நிறைக்கிறான்
நிலத்தில் முளைத்த சூரியனை,
லாவகமாக பறக்கும் காற்றை,
வேர் துழாவும் வழி தவறிய மழையை,
கூலியற்று மகரந்தம் உடைக்கும் தும்பியை,
ததும்பும் பார்வையின் தவிப்பில்
படபடக்கும் அவன்
தன்னோடு தொலைந்து போகிறான்.
கைகட்டி ஏளனிக்கும் கடல்,
வார்த்தைகளால் கெக்கலிக்கும் மின்னல்,
சீழ்க்கையடித்த நாக்குச்சர்ப்பங்கள்,
பரவச உச்சிக்கு திரும்பிய வானம்,
ஈரலித்த உதிர்ந்த இறகின் பிசுபிசுப்பு,
இவையெல்லாம் அவனுக்கு
வைகறைக்கு முந்தையதான நிகழ்வுகள்.
தன்னை வரைந்தவன் நிழலை
யார் வரைந்திருப்பார்கள்
அந்த அசைவற்ற நிழலுக்கு கரு
உன் ஒளி அல்லவா ஆதித்யா

••

திரைக்கதை ( சிறுகதை ) / அரிசங்கர்

சிவராஜ்ஆழ்ந்தசிந்தனையில்இருந்தார், இன்றுகாலையில்தான்அவர்தன்மனைவியைக்கொன்றுவிடமுடிவுசெய்திருந்தார்.

அதைஎப்படிச்செய்வதுஎன்பதுபற்றியேஇந்தஆழ்ந்தசிந்தனை. இதைஒருவிபத்துஅல்லதுஇயற்கைமரணமாகஇருக்கவேண்டும்என்றுவிரும்பினார்.

எக்காரணமும்கொண்டுஇதில்யாருக்கும்எந்தச்சந்தேகமும்வரக்கூடாதுஎன்றுநினைத்தார். ஆனால்அதுஅவ்வளவுசுலபமில்லைஎன்றுஅவருக்குத்தெரியும். தன்னைபோலவேதன்மனைவிக்கும்பிரபல்யம்அதிகம்என்பதும், அவள்மரணத்தைஇந்தநாடேதிரும்பிபார்க்கும்என்பதும்அவருக்குத்தெரியும்.

அதனால்இதைச்சர்வஜாக்கிரதையாகசெய்யத்திட்டமிட்டார். ஆனால்எப்படிஎன்பதுஅவருக்குப்புரியவில்லை. ஒருநல்லதிட்டமில்லாமல்இதில்இறங்கக்கூடாதுஎன்றும், யாரையும்இதில்கூட்டுசேர்த்துக்கொள்ளகூடாதுஎன்றும்முடிவுசெய்தார்.
சிவராஜ்ஒருபிரபலதிரைப்படஇயக்குநர்மற்றும்தயாரிப்பாளர். ஆரம்பத்தில்தொடர்ந்துவெற்றிப்படங்கள்தந்தவர். அப்போதுதான்படத்தில்நடித்தசுப்ரஜாவைதன்முதல்மனைவியைவிவாகரத்துசெய்துவிட்டுதிருமணம்செய்துகொண்டார். அப்போதுமுதல்நடிப்பதைநிறுத்தியசுப்ரஜாதன்கணவருடன்திரைப்படதயாரிப்பிலும், திரைக்கதைஅமைப்பதிலும்ஈடுபட்டார். சுப்ரஜாவின்திரைக்கதைஅமைக்கும்திறமையைக்கண்டுஉண்மையில்சிவராஜ்வியந்துபோனார். நாட்கள்ஓடின, சிவராஜின்வெற்றிகள்குறைந்தன. வெளியாகும்ஒவ்வொருதிரைப்படமும்அவரின்பழையபிம்பத்தின்வெளிப்பாடாகமுதல்சிலநாட்கள்கல்லாகட்டின. ஆனால்விமர்சனங்கள்வந்து, அதில்அவர்படத்தைகிழித்துதொங்கவிடப்பட்டதும்பெட்டிக்குள்திரும்பிவிடும். அவர்சுப்ரஜாவின்திறமைமங்கிவிட்டதாகநினைத்தார். அதுஅவர்களுக்குள்சிலவிரிசல்களைஏற்படுத்தியது. இந்நிலையில்தான்அவர்ஒருஇந்திபடத்தைதமிழில்ரீமேக்செய்தார்அதில்சுப்ரஜாபங்கேற்கவில்லை. வளர்ந்துவரும்ஒருநடிகையைவைத்துஎடுத்தார், படம்ஓட்டமாகஓடியது. பழையசிவராஜ்திரும்பிவிட்டதாகதிரைப்படஉலகம்ஆர்ப்பரித்தது. மறுபக்கம்அதுவெறும்ரீமேக்தான்என்றும்அதில்சிவராஜின்பங்குஒன்றுமில்லைஎன்றும்சொல்லப்பட்டது. புதுநடிகையின்அதிர்ஷ்டமேகாரணம்என்றுசிவராஜ்நம்பினார். அவளுக்குநூல்விட்டுமடக்கியும்விட்டார்.ஆனால்அதற்குதடையாகஇருந்ததுசுப்ரஜா. அதனாலேயேஅவளைக்கொல்லத்துணிந்தார்.
இந்தக்கொலைக்குஒருநல்லதிட்டத்தைசுப்ரஜாவால்மட்டுமேதீட்டமுடியும்என்றுசிவராஜ்நினைத்தார். இதைசுப்ரஜாவைவைத்தேமுடிக்கத்திட்டமிட்டார். அதற்குசுப்ரஜாவிடம்முதலில்சமாதானமாகவேண்டும், அன்றுகாலையேவீட்டின்அறையில்சுப்ரஜாவிற்காககாத்திருந்தார். தூங்கிஎழுந்துஹாலுக்குவந்துஅமர்ந்துஅன்றையசெய்தித்தாளைஎடுத்தாள்சுப்ரஜா. சிவராஜைபார்க்கவேயில்லை.இருவரும்நாற்பதில்இருந்தனர். சிவராஜ்மெல்லத்துவங்கினார்,
“சுப்பு…”
சுப்ரஜாஅவரைப்பார்த்தாள்,
“இன்னும்எவ்வளவுநாள்இப்படியேஇருப்ப..”என்றார்.
சுப்ரஜாபதில்எதுவும்சொல்லவில்லைஅவர்தொடர்ந்தார்.
“நாமமறுபடியும்ஒருபடம்சேர்ந்துபண்ணனும்நாமயாருன்னுநிறுபிக்கனும்”.
“எந்தப்ரோட்யூசரும்நம்மகிட்டவரமாட்டான்”என்றாள்சுப்ரஜா.
“நாமசொந்தமாபண்ணனும், சின்னபட்ஜேட்டுல”என்றார்.
சுப்ரஜாஅமைதியாகஇருந்தாள்.
சிவராஜ்“எனக்குஉன்திறமைமேலநம்பிக்கைஇருக்கு, பொறுமையாஒருஸ்கிரிப்டுபண்ணலாம். கண்டிப்பாஇதுஜெயிக்கும்நம்பிக்கைவந்ததும்துவக்கலாம்”என்றார்.

“ஏதாவதுஒன்லைன்இருக்கா?” என்றாள்சுப்ரஜா.

“இரண்டுமூணுஇருக்கு”என்றார்சிவராஜ்.

“சொல்லுங்க”என்றாள்சுப்ரஜா, சிவராஜ்சொன்னார்.

அனைத்தையும்கேட்டுவிட்டுசற்றுயோசித்துவிட்டு,
“சரிநான்குளிச்சிட்டுவரன்,

நாமபேசுவோம்”என்றுமாடிநோக்கிச்சென்றால்சுப்ரஜா.
தன்திட்டத்தின்முதல்படிவெற்றியடைந்ததைநினைத்துமகிழ்ந்தார்சிவராஜ்.

இரண்டுமணிநேரத்திற்குப்பிறகுவந்தாள்சுப்ரஜா.

மீண்டும்இருவரும்பேசதுவங்கினார்கள்.

“என்னபட்ஜேட்லபண்ணலாம்னுஇருக்கிங்க”

சிவராஜ்சற்றுயோசித்துவிட்டுப்பதிலளித்தார்.

“ரொம்பசிம்பிலானபடமாபண்ணலாம்ன்னுஇருக்கபாட்டுலாகூடஎதுவும்வேண்டாம்.

புதுமுகத்தைவெச்சிபண்ணலாம்”என்றார்.
“உங்கபட்ஜேட்டுக்குஎதனாத்ரில்லர்சப்ஜேட்பண்ணாத்தான்செட்ஆகும். நீங்கச்சொன்னஓன்லைன்லஅந்தஹஸ்பண்ட், ஓய்ப்கொலைபண்ணிட்டுதப்பிக்கிறகதையையேபண்ணலான்னுதோனுது”என்றாள்.

பட்சிதானாகவந்துசிக்கியதில்சிவராஜுக்குமிகவும்மகிழ்ச்சியாகஇருந்தது.

ஒருவேளைசுப்ரஜாவேறுஎதாவதுகதையைதேர்ந்தெடுத்தால்கூடசிவராஜ்அவள்மனதைமாற்றிஇந்தக்கதையைசெய்யலாம்என்றுகூறதிட்டமிட்டிருந்தார்.
ஆனால்சுப்ரஜாவேஇந்தக்கதையைதேர்ந்தெடுத்ததுகாற்றுஅவர்பக்கம்வீசுவதாகநினைத்தார்.

கிட்டதட்டபத்துநாட்களாகஇருவரும்மாறிமாறிபேசிக்கொண்டிருந்தனர். பலயோசனைகள்பேசப்பட்டன.

இதற்கிடையில்இருவருக்கும்சற்றுநாட்களுக்குமுன்புவரைசண்டையிட்டதயேமறந்துவிட்டார்கள்.
சிவராஜுக்கேஒருகணம்தான்உண்மையில்படம்தான்பண்ணபோகிறோமோஎன்றுசந்தேகம்வந்துவிட்டது. ஆனால்அந்தநடிகையின்முகம்மீண்டும்தன்திட்டத்தைசிவராஜுக்குஞாபகப்படுத்தியது.

சுப்ரஜாஇரண்டுமூன்றுயோசனைகளைச்சொன்னாள்.

அந்தக்கணவன்எப்படிஅந்தமனைவியைக்கொல்கிறான்என்று.ஆனால்சிவராஜுக்குஎதுவுமேபிடிக்கவில்லை.அவர்சுப்ரஜாவிடம்அலுப்பாகக்கூறினார்,
“இங்கபாருசுப்பு, ஆடியன்ஸ்லாம்முன்னமாதிரியில்ல, நிறையஇங்க்லிஷ்படம்பாக்கறாங்க.

நாமஎதுனாபுதுசாயோசிக்கணும்இல்லனாநிச்சயம்ஃப்லாப்தான். படத்தோடஆணிவேறேஅவன்எப்படிகொலைப்பண்ணான்றதுதான், அதநிச்சயம்நாமஎதனாபுதுசாபண்ணித்தாஆகனும். வேணும்னாஎதனாகொரியன், ஈரோப்பியன்படம்தேடிப்பாரு, எதுனாமாட்டனாலும்மாட்டும்”என்றார்.

பேசிக்கொண்டிருக்கும்போதேஅவர்செல்போனுக்குஅழைப்புவரச்சிரித்தபடியேவெளியேறினார், அதேநேரத்தில்சுப்ரஜாவின்செல்போனும்அழைத்தது.
ஒருவாரம்கடந்திருந்தது.

சுப்ரஜாஒருபுதுதிரைக்கதையைஉருவாக்கியிருந்தாள். போன்செய்துசிவராஜிடம்விவரத்தைச்சொன்னாள். அவர்மாலைவீட்டிற்குவருவதாகவும்இருவரும்சேர்ந்துஉணவருந்தலாம்என்றும்சொன்னார்.

இதற்கிடையில்சுப்ரஜாதன்உதவியாளரானகல்யாணியைஅழைத்துஉடனடியாகமும்பைக்குச்செல்லும்படிஉத்தரவிட்டாள். அனைத்துவிவரங்களையும்கேட்டுக்கொண்டகல்யாணிமும்பைக்குப்புறப்பட்டார்.

மீண்டும்தான்எழுதியதிரைக்கதையைசுப்ரஜாஒருமுறைவாசித்துப்பார்த்தாள்அவளுக்குமுழுதிருப்தியாகஇருந்தது. இதில்எந்தஓட்டையும்இருப்பதாகத்தெரியவில்லை. சமையல்க்காரபெண்விடுப்புஎன்றுஅப்போதுதான்ஞாபகம்வரஉடனேஎழுந்துசமையலறைக்குசென்றாள்.

மாலைபடுஉற்சாகமாகவீட்டிற்குவந்தார்சிவராஜ். தன்னைகாதலிக்கும்போதுஇருந்தசிவரஜைநீண்டநாட்களுக்குப்பிறகுஅன்றுகண்டாள்சுப்ரஜா.

சிவராஜ்குளித்துமுடித்துவந்துடைனிங்டேபிலில்வந்துஅமர்ந்தார். சுப்ரஜாஅவருக்குஉணவுபரிமாற.

“எங்கசமையக்காரபொண்ணு”என்றார்.

“அவரெண்டுநாள்லீவு”என்றாள்சுப்ரஜா.

சிவராஜுக்குபறிமாறிவிட்டிதானும்அவர்அருகில்அமர்ந்துகொண்டாள்.

சிவராஜ்சாப்பாட்டைவாயில்வைத்துக்கொண்டே“ம்.. சொல்லு..”என்றார்.

அருகிலேயேஇருந்ததன்திரைக்கதைதாள்களைஎடுத்துஒருமுறைப்பார்த்துவிட்டுகதைசொல்லத்துவங்கினாள்சுப்ரஜா.
“ஒருகணவன், மனைவி.

கணவன்எப்படினாவேலைஆகணும்னாகால்லயும்விழுவான், தேவயில்லனாகழுத்தையும்பிடிப்பா.

ஒருடைம்லஅந்தபொண்ணுகால்லவிழுந்துகெஞ்சிகல்யாணம்பண்ணிருக்கான்.

ஆணாகாலபோக்குலஅந்தமனைவியோடதேவைஅவனுக்குதேவையில்லாமபோகுதுஅவளகொல்லஒருதிட்டம்போடறான். திட்டத்தரொம்பநேர்த்தியாபோடறான்,

மறுநாள்காலையிலஅவள்மனைவியைகொன்னுடலான்னுநினைக்கும்போதுகதையிலஒருடிவிஸ்டு,” நிறுத்திவிட்டுசிவராஜ்ஒருமுறைபார்த்துவிட்டுதொடங்கினாள்.

“மறுநாள்தன்கணவன்தன்னைகொல்லப்போவதைதெரிந்துவிட்டமனைவி, முதல்நாள்இரவுஉணவிலேயேஅவனுக்குவிஷத்தைகொடுத்துட்டா, அவன்செத்ததும்யாருக்கும்தெரியாமகிளம்பிபிளைட்டுலமும்பைபோயிட்டா. அவபோனதுஅவளோடபி.ஏபேர்ல.

அன்னைக்குமதியானமே பி.ஏ.வைஅவபேர்லஅனுப்பிட்டாஅதனாலமதியானத்துலஇருந்துஅவஊர்லயில்லன்னுதான்போலிஸ்நினைக்கும், வீட்டிலயும்எந்தச்சாட்சியும்இருக்காது”என்றுசொல்லிவிட்டுசிவராஜைபார்த்தாள்சுப்ரஜா.

சிவராஜ்நாற்காலியில்இறந்துகிடந்தார். சாவுகாசமாகசுப்ரஜாமும்பைகிளம்பிசென்றாள். மறுநாள்விஷயம்கேள்விப்பட்டுமும்பையிலிருந்துவந்து கதறிழுதாள்.

அந்தநடிகைமேல்தனக்குசந்தேகம்உள்ளதாகபேட்டிக்கொடுத்தாள்.ஆறுமாதம்சென்றதுசொத்துகள்அனைத்தும்சட்டப்பூர்வமாகசுப்ரஜாவிடம்வந்ததும்சிவராஜின்கேமராமேனைதிருமணம்செய்துகொண்டாள்.

•••

விருட்சம் நினைவுகள் 4 / அழகியசிங்கர்

ஆத்மாநாமின் üழý பத்திரிகையுடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டது. எப்படி என்ற கதையை சொல்கிறேன். 1978ஆம் ஆண்டு ஆத்மாநாம் üழý என்ற சிற்றேட்டை கொண்டு வந்தார். கவிதைகள் மட்டும் உள்ள பத்திரிகை அது. ஆத்மாநாம் ஆசிரியராக இருந்தாலும், அவருடைய நெருங்கிய நண்பர்களான ஞானக்கூத்தன், ஆர் ராஜகோபாலன், ஸ்ரீனிவாஸன், வைத்தியநாதன், ஆனந்த், காளி-தாஸ் முதலிய நண்பர்கள்தான் அந்தப் பத்திரிகை வரக் காரணமானவர்கள்.

ஒரு பத்திரிகை எப்படி நடத்தவேண்டும் என்பதற்கு உதாரணம் ழ பத்திரிகை. ஏன் அப்படி சொல்கிறேன்? முதலில் ஒரு சிறுபத்திரிகை அதிகப்பக்கங்களுடன் வரக்கூடாது, இரண்டாவது மிகக் குறைவான பிரதிகளே அச்சடிக்க வேண்டும். சந்ததாதாரர்களுக்கு மட்டுமே பத்திரிகை கொண்டு வரவேண்டும். தொடர்ந்து சிறு பத்திரிகையில் எழுதுவதற்கு சிலர் முக்கிய காரணமாக இருக்க வேண்டும்.

ழ பத்திரிகை அப்படித்தான் வந்தது. அதில் தொடர்ந்து ஒருசிலர் எழுதிக்கொண்டு வந்தார்கள். உண்மையில் அவர்கள்தான் அந்தப் பத்திரிகைக்கு உயிர் கொடுத்துக்கொண்டு வந்தார்கள். இன்றைக்கு இலக்கிய உலகில் ஞானக்கூத்தன் என்ற பெயர் எல்லோருக்கும் தெரியும். ழ பத்தரிகை வந்தபோது எத்தனைப் பேர்களுக்கு ஆத்மாநாம் என்ற பெயர் தெரியும்? அவர் எழுதிய கவிதைகளை அவர் காலத்தில் ரசித்துப் பாராட்டியவர்கள் எத்தனைப் பேர்கள்?

இன்றைக்கு படைப்புலகம் அப்படித்தான் இருக்கிறது. நமக்கு யாராவது ஒரு படைப்பாளி பிடித்திருந்தால் நாம் தூக்கிக்கொண்டாடுவோம். என்னைப் பொறுத்தவரை ஆத்மாநாமுடன் இருந்த பலர் திறமையானவர்கள். யாராலும் கண்டு கொள்ளப்படாதவர்கள். ஆத்மாநாமின் தற்கொலை நடந்திருக்கக் கூடாது. அது விதி. நடந்துவிட்டது. திறமையான ஆத்மாநாமை அன்றைய சூழ்நிலை சரியாக உணரவில்லை. நம்மை யாரும் கண்டுகொள்ளவில்லை என்ற ஏக்கம் கூட அவரைக் கொன்றுவிட்டிருக்கும். அவருடைய பிறழ்வு மனநிலைக்குக் காரணம் உடனடியாக புகழ் கிடைக்கவில்லை என்பதுதான்.

உண்மையில் எழுதுபவர்கள் எல்லோரும் எழுதிமுடித்தவுடன் எழுத்தை விட்டு ஓடிப் போய்விடவேண்டும். பத்திரிகையில் பிரசுரம் செய்வது, பிரசுரம் செய்ததை யாராவது படிப்பார்களா என்று ஏங்குவது என்றெல்லாம் இருக்கக் கூடாது.

இந்த சிறிய இலக்கிய உலகில்தான் ஒருத்தரை ஒருத்தர் தாக்கிக் கொள்வது, ஒரு படைப்பாளியை மனதார பாராட்டாமல் இருக்கிறது என்பதெல்லாம் நடக்கிறது. ஆத்மாநாம் காலத்தில் அவருடைய நெருங்கிய நண்பர்கள் அவரைப் பாராட்டினார்களா என்பது எனக்குத் தெரியவில்லை.

இந்த உலகம் விசித்திரமானது. படைப்பாளி என்பவன் சாதாரணமானவன். அவன் எழுதுவதால் அசாத்தியமான திறமையாளனாக அவனால் மாறிவிட முடியாது. அவன் எழுதுகிறான். அவன் எழுத்து ஏதோ பத்திரிகையில் பிரசுரமாகிறது. அந்தப் பிரசுரமான எழுத்தை யாரோ படிக்கிறார்கள். படிக்கிறவர்கள் பெரிய மனது பண்ணி பாராட்டுகிறார்கள். இப்படி யாராலும் கண்டுகொள்ளாமல் இருக்கிற படைப்புகள் சொல்லில் அடங்காமல் நம் முன் வீற்றிருக்கின்றன. ஆத்மாநாம் காலத்தில் பத்திரிகையில் வருவதும் ஒரு படைப்பு புத்தகமாக வருவதும் மிக மிகக் கடினமாக இருந்தது.

ஆத்மாநாம் கவிதையை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

ஒரு தலைப்பிடாத கவிதையாய்
வாழ்க்கை
ஒரு நாள் இரண்டு நாள் என
தொடர்ந்து நாட்களை எண்ணினேன்
காலையைத் தொடர்ந்து மாலை
இரவாகும் காலப்புணர்ச்சியில்
பிரமித்து நின்றேன்
கடற்கரையில்

(இன்னும் வரும்)

அம்ஷன் குமாரின் கட்டுரை

இத்தொகுதியில் உணர்வுகளும் ஞாபகங்களும் எண்ணங்களும் கவிதைகளாகியுள்ளன. கவிதை பற்றியும் கவிஞன் பற்றியும் கவிதைகள் உள்ளன.

`கட்டுரையில் கற்கலாம்
சிறுகதை சிறந்தது
நாவல் தரிசனம் ` என்று இலக்கிய வகைமைகள் பற்றி தனது பார்வையை பதிக்கிறார் பி.கே.சிவகுமார். ஆனால் கவிதை ஓர் அனுபவம் ` என்கிறார். கவிஞன் எத்தகைய சவாலையும் ஏற்பவன் என்கிறார்.

`எதிர்பாராதபோது தடம்மாறி
கால்களுக்குள் இடம் மாற்றி
மனதாயதை யுந்தியெழுப்பிக்
கூடைப்பந்தாய்த் துள்ளுகிறான்
கவிஞனன்றி வேறு யார்?`

உற்சாகமான எண்ணங்களிலிருந்து மட்டுமின்றி அதற்கெதிரான எண்ணங்களிலிருந்தும் கவிதையைக் காண்கிறார் சிவகுமார்.

`பூக்களால் உயிர் பெறும் பிணம்போல்
ஒளிபெற்று மணக்கிறது
இருண்மையின் கவிதை `
இவற்றின்மூலம் அவர் கவிதையை எல்லாவித மனநிலைகளுக்கும் ஆட்படுத்துபவராகிறார்.

அவரது கவிதைகளில் சக மனிதராகவும் குடும்ப உறவுகளால் சூழப்பட்டவராகவும் தன்னையுணரும் தருணங்கள் முக்கிய இடம் பெறுகின்றன.

ஒரு தந்தையாக, மகனாக, கணவனாக, மாணவனாக, தான் குடியேறிய அமெரிக்காவின் பிரஜையாக உணர்வதையெல்லாம் கவிதைக்குரிய கணங்களாக அவர் தேர்கிறார்.

குழந்தைகளின் உலகைத் தொடர்ந்து கண்ணுற்று அவர் வியந்துபோகிறார். அவர் தான் வளர்க்கும் ரோஜா செடியிலிருந்து எப்போது பூ மலரும் என்று எதிர்பார்க்கிறார். நாம் நமது செயல் ஒவ்வொன்றிலும் ஆதாயத்தை தேடுபவர்களாக இருக்கிறோம். குழந்தைகள் ரோஜா செடியில் எத்தனை இலைகள் துளிர்க்கின்றன என்பதைப் பார்த்து மகிழ்கிறார்கள். இலையில் நமக்கு ஆர்வம் இல்லை. பயனுள்ள பூவில்தான் நமது தேவை பூர்த்தியாகிறது. இயற்கையின் வினோதங்களைக் கண்டு பரவசம் கொள்ளும் குழந்தைமை கவிஞரை ஆட்கொள்கிறது.

குழந்தைகள் நேரடியாகவும் கற்றுத்தருகின்றனர். வேற்று சூழலில் வளரும் குழந்தைகள் வேற்று மொழியை முன்வைத்து அறிவு புகட்டுகிறார்கள். மகன் தேர்வில் –அதாவது ஒரு தேர்வில்- எண்பத்தொன்பது மார்க்குகள் பெற்றிருக்கிறான். அதற்கு தந்தை நூறு மார்க் அதில் அவன் வாங்கியிருக்க வேண்டும் என்கிறார். ஒரு சிறு தவறு செய்யப்பட்டுவிட்டதால் மார்க் குறைந்துவிட்டது என்கிறான் மகன். தந்தை சொன்னதில் சிறு தவற்றை மகள் காண்கிறாள். நூறு என்று சொல்லக்கூடாது , ஒரு நூறு என்று சொல்லவேண்டும் என்கிறாள். உரையாடல்கள் ஆங்கிலத்தில் நடக்கின்றன.

நூறு மார்க் என்று தமிழில் சொல்வதைப்போலவே ஆங்கிலத்திலும் hundred marks என்று சொல்வது நமது வழக்கம். ஆனால் ஆங்கில மொழி பிரத்யேக வழக்குகளை பிரக்ஞையில் ஏற்றிருக்கும் அடுத்த தலைமுறை, அதுவும் ஆங்கிலத்தை தாய்மொழியாகக் கொண்டவர்களுடன் கூடி வாழ்கிற நமது பிள்ளைகள் உச்சரிப்பு உள்ளிட்டு எல்லாவற்றிலும் நம்மை திருத்தும் நிலையில் வைத்துப் பார்க்கிறார்கள். அவர்களிடமிருந்து நாம் ஆங்கிலத்தையும் கற்றுக்கொள்பவர்களாகிறோம்.

தந்தை பிள்ளைகளின் வளர்ச்சியைப் பார்த்து பெருமிதம் கொள்கிறார். பிள்ளைகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு விதமான செய்தியுடன் வீட்டிற்குள் நுழைகிறார்கள். உற்சாகம், குறைபட்டுக்கொள்ளல். உடல் வருத்தம், கதைகள், கோரிக்கைகள் என்று கொண்டுவந்தவையெல்லாம் முடிந்துபோய் இனி ஒன்றும் சொல்வதற்கில்லை என்கிற நிலையிலும் அவர்களது வருகை உவப்பாயிருக்கிறது. குழந்தைகள் பற்றி அநேக கவிதைகள் இதில் உள்ளன.அவர்களால் இன்பம் பயக்கிறது உலகம் துலக்கம் பெறுகிறது என்கிற புரிதலைத் தரும் கவிதைகள்.

புலம் பெயர்ந்து அமெரிக்க குடிமகனாகி அந்த பூமியை முழுதாக வரித்துக் கொள்பவரை இக்கவிதைகளில் காண முடிகிறது. இந்தியாவில் வாழ நேரிட இயலாததால் எதையெல்லாம் இழக்கிறோம் என்று பட்டியல் போடுபவராக அவர் இல்லை. அமெரிக்கவாழ் பெருமிதமும் இல்லை. எல்லாவற்றையும் தன்னுடன் இணைத்துக் கொண்டவராகவும் எல்லாவற்றிலிருந்தும் வேறுபட்டோம் என்கிற எண்ணமில்லாதவராகவும் உள்ளார்.

நியுயார்க் நகரத்து வாழ்க்கை அனுபவங்களை விவரிக்கும் கவிதை ` பாதாள ரயிலிலிருந்து மேலேறி வந்தவுடன் நடப்பதுபோல் ஓடுகிற லாவகம்` என்று துவங்குகிறது. அமெரிக்க வாழ்க்கையுடன் இயைந்து வாழ எதையெல்லாம் தெரிந்திருக்க வேண்டும் ; அவற்றினூடாக கொள்கிற கனவுகள் எத்தகையவை; பயங்கள், ஜாக்கிரதை உணர்வுகள் என்று ஒரு சிறு பட்டியல் தயாரிக்கிறார்.

இவற்றிலிருந்தெல்லாம் தப்பித்து இந்தியாவிற்கு ஓடி வந்துவிட வேண்டும் என்கிற எண்ணம் அல்லது இந்திய வாழ்க்கை பற்றிய ஆதங்கம் எதுவும் அதில் இல்லை.

`மற்றவர்கள் போடுகிற ஃப்ரெஞ்ச் ஃப்ரையையும்
சிக்கன் நக்கட்டையும்
ரொட்டித்துண்டையும்
கை நீட்டி வாங்கித் தின்றுவிட்டு
துணையைத் துரத்துகிற
நியுயார்க் ராக்பெல்லர் செண்டர்
மரத்து அணிலுக்கு ` என்று கவிதை முடிகிறது.

அங்குள்ள சூழலிலேயே தான் கருதும் விடுபடலை அவரால் காணமுடிகிறது, அணில் என்கிற உருவகத்தின் மூலம். அணில் அவரது இளமைக்கால நினைவையும் இணைக்கிறது.
`அணில் கடித்ததனால் சேர்ந்த ருசியை
முருங்கைப்பூ பார்க்கும்போதெல்லாம்
இப்போதும் பார்க்கிறேன்
அனுப்பிவைத்த அணில் முகங்கள்`

ஆனால் தங்களிடமிருந்து எதிர்பார்ப்புகள் கூடிய நாடாக இருப்பதால் இந்தியாவிற்கு செல்வதற்கு தயக்கங்கள் உருவாகின்றன. நமக்கு வேண்டியதெல்லாம் இங்கேயே கிடைக்கிறது. கிடைக்காத ஒன்று தமிழ் இணைப்பைத் தந்து கொண்டிருக்கும் புதிய தமிழ் நூல்கள் . அவற்றையும் இங்கிருந்தே சென்னையில் புத்தகக்கடை நடத்தும் எழுத்தாளர் திலீப்குமாரிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்ற முடிவுக்கு வருகிறார்.

இளம் பிராயத்து பெண் நினைவுகள், காதல் அனுபவங்கள், துணைவியிடம் கொள்கிற அன்பு ஆகியனவும் கவிதைகளாகின்றன. ஒரு பாம்பாக காதலன் தன்னை உருவகிக்கிறான். காதலியின் தடத்தையொட்டி அங்குலம் அங்குலமாக நகர்கிறான். வாழ்க்கைப் போராட்டங்கள் அனைத்திலும் அவளது ஞாபகங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. சட்டையுரித்து புதிய அவதாரம் கொண்டாலும் ஞாபகங்களை தொலைக்க முடியவில்லை. இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் தன்னிலைக் கவிதைகள் .ஆணாய்க் கவிஞன் எழுதிய கவிதைகள். கூடுவிட்டுக்கூடு பாய்ந்து அனுபவங்களை மேற்கொள்ளவில்லை.

புதிக்கவிதைகளில் ஆண் கவிஞர்கள் ஆண்களாயும் பெண் கவிஞர்கள் பெண்களாயும்தான் மிகுதியாக வருகிறார்கள். மரபுக்கவிதைகளில் ஆண்கள் பெண்வேடம் கொள்வதுபோல் பெண் மனநிலையிலிருந்து எழுதுகிறார்கள். அதிலும் ஆண்கள் தெரிகிறார்கள் என்பது வேறு. அதே சமயம் பெண்களின் மன உணர்வுகளை அக்கவிதைகளில்தான் நாம் பார்க்க முடிகிறது என்பதும் உண்மை.

சிவகுமாரின் கவிதைகளில் நியாயம் கேட்கிற ஆவேசங்கள் இல்லை. குமைந்து போய் சமுகம் பற்றி செய்யப்படுகிற அறிவுத்தல்களும் இல்லை. அவரது கவிதைகளில் போர்க்குணம் இல்லை.என்பதை ஒரு செய்தியாக மட்டுமே இங்கு சொல்கிறேன். ஒரு கவிஞரின் படைப்புகளில் இவையெல்லாம் இருக்கவேண்டும் என்று எதையும் குறிப்பிட்டு சொல்லமுடியாது.

எடுத்தாளப்படுபவற்றில் கவிதை எவ்விதம் உருக்கொள்கிறது என்பதைத்தான் வாசகர்கள் கவனிக்க வேண்டும். அவரது கவிதைகளிலுள்ள அமைதி சிந்தனைச் செறிவுகொண்டதாக உள்ளது. எல்லாவற்றிலும் அரசியல் காணலாம் என்பதால் அவற்றினூடகவும் அவரது அரசியல் பார்வை உருவகங்கள் வாயிலாக வெளிப்படுகின்றன. இரண்டு பறவைக் கவிதைகள் நமது கவனத்தைக் கவர்கின்றன. ஒன்றில் வீட்டுப் பறவை நாற்சுவர்களுக்குள் பாதுகாப்பாய் பறந்து கொண்டிருக்கிறது.

அதற்கு அறுசுவை உணவு வேளை தவறாது படைக்கப்படுகிறது. அளவுக்கு மீறிய அரவணைப்பு தரப்படுவதால் அது மனிதர்கள்மீது உரிமை எடுத்துக் கொள்கிறது. செல்லப் பறவை மனிதர்களைப் பெயர் சொல்லி அழைக்கிறது. வானில் பறந்தறியாத அந்தப் பறவை வாழ்க்கையை தொலைத்துவிட்டது. இயல்பினை முடக்கிக் கொண்டு வசதிகளுடன் ஜீவிப்பது வாழ்க்கையாகாது என்கிறார் அதன் வளர்ப்பாளர். இரண்டாவது கவிதை ஹைக்கூ பாணியில் எழுதப்பட்டுள்ளது.
`வானத்தைக் கூண்டுக்குள்
வரவழைக்கத் தெரிந்த கணம்
விடுதலையானது பறவை `
கூண்டுக்குள் பறவை சிறைபிடிக்கப்பட்டிருக்கிறது. முந்தைய கவிதையிலுள்ள பறவை பரந்த சிறையில் இருப்பதால் அதை உணராமல் மோசம் போகிறது. இந்தப்பறவை சிறிய கூண்டிலிருப்பதை உணர்ந்ததாயுள்ளது. எனவே அதற்கு விடுதலைக்கு வாய்ப்புண்டு. அக்கணமே அது விடுதலையானது அது என்பதை கவிக்கூற்றாகக் கொள்ளலாம். ஆனால் கவிதையிலுள்ள சொற்சேர்க்கை அதை வேறு வாசிப்பிற்கும் உட்படுத்துவதாக நினைக்கிறேன். கூண்டிலிருந்து அதனால் வெளியே செல்ல இயலாது. எனவே தான் கூண்டிலிருப்பதையே மறக்குமுகமாக கூண்டையே அண்டமாக பாவித்து இன்புறுகிறது. உடலைத்தான் சிறைவைக்க முடியும். உள்ளத்தையல்ல என்கிற ஆன்மிக விடுதலை இது .

`Stone wall don`t make a prison
Nor iron walls a cage `என்கிற லவ்லேசின் ஆங்கிலக் கவிதை நினைவுக்கு வருகிறது. `வரவழைத்த கணம் விடுதலையானது பறவை` என்று கண்டிருக்கிறது. சிறைப்படுத்தப்பட்ட நிலையில் விடுதலையை எவ்வாறு உணரமுடியும்? இந்தக் கவிதையை இவ்விதம் பார்க்கப்படுகிற சாத்தியங்கள் அதிகம் என்று கருதுகிறேன். அதன் சாரம் முந்தைய கவிதைக்கு முரணாக இருப்பதாகத் தோன்றுகிறது.

தமிழ்ப் புதுக்கவிதைகளுக்கென்று சில குணங்கள் உள்ளன. அவை பெரும்பாலும் தன்னிலைக் கவிதைகள். எள்ளல்கள் கொண்டவை. இதை இப்படியும் பார்க்கலாம் என்று தோன்றுகிற வகையில் சிந்தனை வெளிப்பாடுகள் இருக்கும். சிவகுமாரின் கவிதைகளில் அவற்றையெல்லாம் காணமுடிகிறது.

`பாம்பு போய்விட்டது
புற்று வளர்கிறது`
நாம் அறிந்த ஒன்றை புதிய தடத்தில் எடுத்து செல்கிறது இக்கவிதை. புற்றுக்கும் பாம்பிற்கும் பிரிக்க முடியாத உறவு என்று எதுவுமில்லை. புற்று எப்போதும் தானாக வளர்ந்து கொண்டிருக்கிறது.பாம்பு அதில் குடியேறுவதைப்போல வெளியேறவும் செய்கிறது. பாம்பில்லாமல் புற்று இல்லை என்று நினைத்து பழகியவுடன் பாம்பின்றி புற்று இருப்பது விநோதமாகப் படுகிறது.

அடித்து பிடித்து ரயிலில் ஏறுகிறார்கள் அலுவலகம் செல்பவர்கள். எங்கே உட்காருவது எவர் அருகே உட்காருவது என்பதுபற்றியெல்லாம் சிறிதான மன உளைச்சல்கள். கொஞ்ச நேரம்தானே பயணம் என்கிற சமாதானத்துடன் ஏதோ ஒரு இடத்தில் அமர்கிறார்கள். எல்லாவற்றையும் மறந்துவிட்டு உடனே செல்போனில் ஆழ்ந்து போகிறார்கள். இது முற்றிலும் நகையுணர்வு தரும் கவிதையாகி இருக்கக்கூடிய ஒன்று. `செல்போனில் அமிழ்ந்துபோகும் துயரத்தை` என்ற கவிதையின் கடைசி வரியிலுள்ள `துயரத்தை` என்கிற வார்த்தை இடம் பெறாமலிருந்திருந்தால்.

கிரானைட் தளத்தில் அமர்ந்து ஆசிதரும் ஹிப்பி சித்தர் பற்றிய கவிதை முழுதாய் எள்ளலை முன்வைக்கிறது. முற்போக்காளர்கள் பற்றிய ஒரு வேடிக்கை கவிதையும் உள்ளது.பல்வேறு பாணிகளில் தன்னை வெளிப்படுத்தும் கவிஞர் ஒரு பிரத்யேகமான கவிதை நடையையும் சமீபகாலக் கவிதைகளில் பெற்றிருப்பது தெரிகிறது.`காய்தான் பிடிக்குமென்போரும் கனிவர் ` அத்தகைய கவிதைகளில் ஒன்று.

இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் பெரும்பாலானவை 2017 ஆம் ஆண்டில் எழுதப்பட்டுள்ளன. படைப்பூக்க மிக்க செழிப்பான ஆண்டாக அது கவிஞருக்கு அமைந்துள்ளது. தொடர்ந்து வரும் ஆண்டுகள் அவருக்கு கவிதைகள் கனிபவையாய் இருக்கட்டும் என்று வாழ்த்துகிறேன்.

——

நட்பின் தோட்டத்தில் பாவண்ணன் / திருஞானசம்பந்தம்

கவிஞர் பழமலய் எழுதிய சனங்களின் கதை என்ற கவிதைத் தொகுப்பை படித்துவிட்டு நானும் நண்பன் சீனிவாசனும் உருகிப்போய் பேசிக் கொண்டிருந்தோம். கவிதையின் நடையும், பேசுப் பொருளும், கிராமத்தை காட்சியாக்கிய விதமும் மிக நெருக்கமாக உணர வைத்த தருணம் அது. அந்த வேகத்தில் அவருக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினேன். அடுத்த சில நாட்களிலேயே எனக்கு அவரிடமிருந்து பதில் வந்தது. அந்த கடிதத்தில், பாஸ்கர் என்பவரின் முகவரியும் வீட்டு தொலைபேசி எண்ணும் கொடுத்து சந்திக்க எழுதியிருந்தார். அந்தக் கடிதம் தான் எனக்கு இலக்கியத்தின் எல்லா வாசல்களையும் திறக்குமென்று அப்போது தெரியாது. 1997 மார்ச் மாதத்தில் ஒரு மாலைப் பொழுதின் சந்திப்பு, கால காலத்திற்குமான உறவாகவும், நட்பாகவும் நிலைத்து நிற்கிறது. என் இலக்கிய வாசிப்பும், நண்பர்களும், பாவண்ணன் என் கைப்பிடித்து அறிமுகப் படுத்தியதே.

அவர் ஓய்வுப் பெற்றதை ஒட்டி ஒரு சந்திப்பை பெங்களூரில் ஏற்பாடு செய்யலாம். அது வண்ணதாசன், பெங்களூர் வரும் நாட்களில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளலாம் என்று மகாலிங்கத்திடம் பேசியப் போது, இந்திய அமெரிக்க வாசக நண்பர்கள் இணைந்து சென்னையில் நடத்துவதைப் பற்றி ஒரு இரகசியப் பேச்சிருக்கிறது என்றார்.

அந்த இரகசிய திட்டம் தான், பாவண்ணனைப் பாராட்டுவோம் என்ற இலக்கிய நிகழ்வாக, சென்னை கவிக்கோ மன்றத்தில் மே மாதம் இருபத்தி ஆறாம் நாள் சிறப்பாக நடந்து முடிந்தது. முழுநாள் நிகழ்வை, சிறுகதை, நாவல், கட்டுரை, மொழிப்பெயர்ப்பு என நான்கு அமர்வுகளாகவும், மாலையில் பாராட்டு விழாவாகவும் ஒருங்கு செய்து, நூற்றுக்கும் மேற்பட்ட நண்பர்கள் பங்கேற்றார்கள்.

துவக்க விழாவை வரவேற்புரையுடன் வெற்றிவேல் ஆரம்பித்து வைத்தார். ஸ்டெர்லைட் தாமிர ஆலையினை மூட வலியுறுத்தி பல ஆண்டுகளாக மக்கள் போராட்டம் நடத்தி, 100 நாட்களாகப் போராடியப் பிறகு மக்கள், ஆட்சியர் அலுவலகம் நோக்கிச் சென்ற அமைதி பேரணியின் போது எதிர்ப்பாரா விதமாக, கொடூரமாக 12 பேர் சுட்டுக் கொல்லப் பட்டார்கள். இந்தக் கொடுமையைக் கண்டித்து , கவிஞர் ரவிசுப்ரமணியன் ஒரு அறிக்கையை வாசித்தார். அரங்கில் உள்ள அனைவரும் ஒரு நிமிடம் எழுந்திருந்து மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.

பாரதி மணி தலைமையேற்று துவக்க விழா சிறப்புரை ஆற்றினார். பாவண்ணனின் படைப்புலகம் பற்றியும், அவரின் பன்முக ஆளுமைப் பற்றியும் குறிப்பிட்டு பேசினார். துவக்க விழாவை அடுத்து உடனடியாகப் படைப்பரங்க அமர்வு நிகழ்வுகள் ஆரமபமாகின. சிறுகதைகள், நாவல் மற்றும் குறுநாவல்கள், கட்டுரைகள், மொழிப்பெயர்ப்புகள் ஆகிய தலைப்புகளில் அமர்வுகள் இடம் பெற்றன.
ரவிசுப்பிரமணியன் ஒருங்கிணைத்த முதல் அமர்வில், கோபாலகிருஷ்ணன், ஒரு நீண்ட ஆய்வுக்கட்டுரையைத் தயாரித்து, அதையொட்டி தன் உரையை நிகழ்த்தினார். கடற்கரை, தான் வாசிக்க நேர்ந்த சிறுகதைகளை முன்வைத்து பாவண்ணனின் சிறுகதைகளில் அன்பும், கருணையும் கொண்ட மனிதர்களை படைத்திருப்பதாகப் பேசினார்.

தி.சிவக்குமார் ஒருங்கிணைப்பில், சித்ரா, திருஞானசம்பந்தம் நாவல்கள் குறித்தும், சாம்ராஜ் குறுநாவல்கள் குறித்தும் பேசினார்கள். அன்பு, பாசம், சக மனிதர்களின் வாழ்வின் மீது இருக்கும் அக்கறை, சமூக நடப்பின் மாற்ற முடியாத அங்கத்தின் வலி, இயற்கையின் மீதிருக்கும் ஈர்ப்பு, இவைகள்தாம் அவரின் எல்லா நாவல்களிலும் இருக்கும் பொதுத் தன்மையாகக் குறிப்பிட்டார்கள். சக மனிதர்களின் மீது வைத்த நம்பிக்கைகள் பொய்க்கும் தருணங்களின் கையறு நிலைகளையும் வெவ்வேறு வடிவங்களில் தொடர்ந்து பதிவு செய்யப் பட்டிருக்கிறது அவரின் படைப்புகளில் என்றார்கள்.

மதிய உணவிற்குப் பிறகு திருஞானசம்பந்தம், கட்டுரைகள் குறித்த அமர்வை ஒருங்கிணைத்தார். படைப்பிலக்கியத்தோடு கட்டுரைகளிலும் பாவண்ணன் முக்கியப் பங்காற்றியுள்ளார் எனக் குறிப்பிட்டார். கதை, கவிதை, பிற மொழியாக்கம் என்று தான் வாசிக்க நேர்ந்த, சந்தித்த எல்லாவற்றைப் பற்றியும் கட்டுரையெழுதி இருக்கிறார். நரேந்திரக்குமார், மதுமதி இருவரும் தம் அனுபவம் சார்ந்து, பாவண்ணனின் கட்டுரைகளை முன் வைத்து விரிவாக உரையாற்றினார்கள்.

எழுத்தாளர் திலகவதி அவர்கள் மதியமே வந்திருந்து தம் சிறப்புரையை நிகழ்த்தினார்கள். சவால்கள் நிறைந்த ஓர் அரசுப் பணியில் இருப்போரின் எழுத்து எவ்வளவு இக்கட்டான சூழலின் எழுதப் படுகிறது என்றும், அஃது எவ்வாறு மற்றவர்களால் புரிந்து கொள்ளப் படுகிறது என்றும் அவருக்கே உரிய கலகலப்போடு உரையாற்றினார். கடைசி அமர்வாக, க நாகராசன் ஒருங்கிணைப்பில், மொழியாக்கம் குறித்து, மா.அண்ணாமலை, வெளி ரங்கராஜன், தி.சிவக்குமார் மூவரும் சிறப்பாக உரையாற்றினார்கள். நாகராசன், தன் ஒருங்கிணைப்பின் ஊடாக, பல்வேறு மொழிப்பெயர்ப்புகள் பற்றித் தம் வாசிப்பனுபவத்தினைப் பதிவு செய்தார்.

மாலை பாராட்டு விழாவை சந்தியா நடராசன் தன் சொந்த அனுபவங்களோடு இணைத்து சிறப்பாக நெறிப்படுத்தினார். ரவிசுப்பிரமணியனின் இசையோடு நிகழ்வு ஆரம்பித்தது. கடலூர் வளவதுரையன் பாவண்ணனின் பள்ளிப் பருவத்தை நினைவு கூர்ந்து பாராட்டிப் பேசினார். காவ்யா சண்முகசுந்தரம், பாவண்ணனோடு தம் அனுபவத்தினைப் பகிர்ந்து கொண்டார். சா.கந்தசாமி, பாவண்ணனின் படைப்பாக்கத்தையும், மொழியாக்கத்தையும் ஒப்பிட்டுப் பேசினார். அவருக்குக் கிடைக்க வேண்டிய உண்மையான வெளிச்சமும் இடமும், அவரின் மொழிப்பெயர்ப்பின் நிழல் மறைத்து விட்டதோ என்ற ஐயத்தைப் பதிவு செய்தார். பாவண்ணன் தன் படைப்பு இலக்கியத்திற்காக சாகித்திய அகாடமி விருது உள்ளிட்ட பல சிறப்புகளைப் பெற வேண்டும் என் வாழ்த்தி அமைந்தார். பாவண்ணன் ஒரு தளும்பாத நிறைக்குடம் என்று விட்டல் ராவ் வாழ்த்தினார்.

பல்வேறு நண்பர்கள் பல ஊர்களில் இருந்து வந்திருந்து, நாள் முழுதும் பங்கேற்று பல பரிசுகளைப் பகிர்ந்து மகிழ்ந்தார்கள். இந்திய அமெரிக்க வாசகர் வட்ட விருதும், ஒரு லட்சத்திற்கான காசோலையும் அவருக்கு வழங்கப்பட்டது.

பாவண்ணன் தம் ஏற்புரையை மிகுந்த நெகிழ்ச்சியோடு ஆரம்பித்து, இந்த நிகழ்விற்காக ஏற்பாடு செய்த நண்பர்களுக்கும், பங்கேற்ற நண்பர்களுக்கும் தன் அன்பான நன்றிகளைப் பகிர்ந்து கொண்டார். நிறைவாக முகமது அலி நன்றியுரையுடன் விழா இனிதே முடிந்தது.

•••

சூலங்களுக்கு எதிரான சுனாமி – ஜெபிஏ சிவம்

சூலங்களுக்கு எதிரான சுனாமி

அரசர்

தக்க மரியாதை களுடன்

பாதம் வைத்தார் விமானத்துள்

முதல் மிருகம்

அந்த சிறுமியின் வாய்பொத்தி

தன் ஆணதிகாரத்தை திணிக்க தொடங்கியது.

ஓடுபாதை நீங்கி உயரும் போழ்தில்

இரண்டாம் வேசிமகன்

அந்த புஷ்பத்தை

கசக்கி கபளீகரித்தான்

பதனக்குளிரில் ராசா கண்ணயர

உச்சிவானில் விமான விர்ர்ர்ரொலியில்

கேட்கவில்லை

“வேணாம்ணா..விட்டுருண்ணா”

மூன்றாம் பாவியின் அழிச்சாட்டியத்தில்

குருதி வழிந்தோடும் கோயிலுக்குள்

தரையிறங்கிய மன்னர்

மலர்கொத்துக்களை மகிழ்வோடு ஏந்திய தருணம்

அய்ந்தாம் பிசாசு

பிஞ்சு பூங்கொத்தை

பிய்த்து எறிந்தான்

மாமன்னரின் ஹெலிகாப்டர் பேரொலி

விழுங்கியது

சின்னஞ்சிறு மலரின் ரத்த முனகலை

விழிசெருகிய போதும் இழிமகனின் தினவு தீரவில்லை

புழுதி கலைத்து தளவாடங்கள் போர்க்கோலம் பூண

போர் விமானங்களோ தேசக்கொடிநிறமதை வானில்

வண்ணங்களால் தூவும்போதே

இறந்து விட்டது இளங்குருத்து

அல்ல

கொல்லப்பட்டாள்

புணர்வெறியால் சாகடிக்கப்ப்ட்டாள்

பனிமலை உச்சியிலிருந்து தற்கொலை செய்துகொள்ளுமுன்

பாரத மாதா விண்ணப்பித்தாள்:

கடைக்கண் வைய்யடி..மாகாளி

ஆகாவென்றெழட்டும்

சூலங்களுக்கெதிரான சுனாமி.


மியூசியத்தில் அடைத்த காலத்தின் எலும்புக்கூடு

ஒரு காலமிருந்தது

பால்யத்தோழன் சாதி. ..

எதுவெனத் தெரியாமலிருந்தது…

பக்கத்து அக்கத்து வீட்டாரை உறவு சொல்லியழைத்து

வைபவ ங்களின் வேர்களில்

நேசநீர் ஊற்றியக் காலமொன்றிருந்தது

ஏதும் விபத்தெனில் தன்பணி விடுத்து

ஓடி உதவி குருதி கொடையளித்த

வேறுபாடுகளின் வண்ணமறியாக் காலமொன்றுமிருந்தது…

பம்பர..கோலி..பட்ட..பல்லா ங்குழி

கண்ணாமூச்சி.. தாயமெனக்

கூட்டுச்சேட்டைக் காலம் குஷியும் ருசியுமானவை

“காக்காக்கடி ” யின் மதிப்பறிவரோ

நாளதின் விரல் வித்தகர்

பண்டம் பரிமாற்ற பண்டிகைகள்

பெருங்கூட்டத் திருவிழா..

கூத்து..திரைப்படம் என

உறவும் நட்பும் இழைந்து நெய்தக்

காலமொன்று இருந்ததே..

கேபிள் வயர்கள்..முட்டாள் பெட்டிகள்…கைபேசி சிறைகள்

பிரிக்கும் பேத அரசியல்..

அந்த நன்னீரில கலக்காத காலமிருந்தது….

இப்பொழுதும் பார்க்கக்கூடும் நீங்கள்

மியூசித்திலடைத்த காலமதின்

எலும்புக்கூட்டினை….

யாரங்கே…

அந்தக் கவிஞனைக் கைது செய்யுங்கள்!

அடிமைகளின் தேசத்தில இவன்

விடுதலை விதைக்கிறான்

பொய்களின் அரங்கத்தில் இவன்

உண்மையை உச்சரிக்கிறான்

போலிகளின் கூட்டத்தில் இவன்

நிஜமாய் வாழ்கிறான்

தற்குறிகளின் கும்பலில் இவன்

படிப்பறிவோடு வாசிக்கிறான்

விளம்பரங்களின் கூக்குரலில் இவன்

மவுனத்தையே முழங்குகிறான்

ம்ஹ_ம்… இது ஆகாது!

யாரங்கே..

பிரதி துருவப் பயணம்

தென்றலின் திசையிலிருந்து தொடங்கும் பயணம்
எதிர்கால இலட்சிய மொன்றினைப் பயணப்பையில் சுமந்தபடி

முதுகுப்பை நிறைய முயற்சி
கைப்பைக்குள் சேமித்த கனவுகள்
பிராத்திக்கிறான்(ள்)
உடன்வரும் உற்ற உறவு உயிரோடு திரும்ப
பார்வைத்திறனற்ற நம் கடவுள்கள்
கேட்குன் சக்தியை இழந்த தறியாமல்

பஞ்சுமிட்டாய் மொழியில் வாசித்தவனு(ளு)க்கு வினாத்தொகுப்போ அடர்கந்தக அமிலமொழி
தேர்வரங்கத்தில் சோதகர்களின் விரல்கள் விளையாடுகின்றன
தேர்வர்களின் சிறுநீர்த் தாரை வரை
சற்றேறக்குறைய அரை நிர்வாணப்படுத்தப்பட்ட எதிர்கால மருத்துவம் சேமிக்கிறது தம் வெஞ்சினத்தை. ஆட்காட்டி விரலின் நக இடுக்கில்
அடிநாக்கில் கசப்பும் வெறுப்பும்
இளங்குருத்துகள் அறியார் இத்தேர்வின் அழுக்கரசியலை…
தேர்வு முடிவில் வெளுக்கும் அழுக்கு

#07.05.18 on NEET EXAM DAY

நிறங்களின் அதிகாரம் ( சிறுகதை ) / ந.பெரியசாமி

எரிச்சலடைந்தான். என்ன இது பைத்தியக்காரத்தனமாக இருக்கிறதே. எல்லா நேரங்களிலும் எல்லாச் சூழலிலும் இது எப்படி சாத்தியமாகும். நெருக்கடி மிகுந்த நேரங்களில் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். அதற்காக யாருமற்ற நள்ளிரவில் கூட கடைபிடிக்க வேண்டும் என்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். அரசு எப்பொழுதுமே தவறானவற்றை மட்டுமே சிந்திக்குமோ, அதிகாரம் நடைமுறைச் சிக்கலை கவனத்தில் கொள்ளாதோ, மீறலைச் செய்வோருக்கு சிறிதான அபதாரம் போட்டால் பரவாயில்லை. அதற்காக ஆதார் கார்டை பறிமுதல் செய்துவிடுவார்களாம், எல்லாவற்றிற்கும் ஆதாரை கட்டாயமாக்கிவிட்டு இப்படியொரு சட்டத்தைப்போட்டால் என்னதான் செய்வது. யாராவது காவலர்கள் நின்றால்கூட யாதாகினும் சாக்குபோக்கு சொல்லி போகலாம். அதற்கும் வழியில்லை. எங்கும் கேமராக் கண்கள்.

இரவு ஷிப்ட் வந்தாலே இதுதான் பிரச்சினை. பத்துநிமிடத்தில் வீடடைந்த சூழல் மாறி இப்பொழுதெல்லாம் ஒரு மணி நேரமாகிவிடுகிறது. யாருமற்ற போதும் நின்று நின்று வரவேண்டியிருக்கிறது. எல்லா நேரங்களிலும் சிக்னலை கடை பிடிக்க வேண்டும் இல்லையாயின் ஆதார் கார்டை பறிமுதல் செய்வோம் இது நம் தேசத்தின் நலன் பொருட்டுப் போடப்படும் சட்டம் இச்சட்டம் சமூக விரோதிகளிடமிருந்து நம் தேசத்தை காக்கும் என கையில் சூலாயுதத்தை ஓங்கி பிடித்தவாறு மோடிஜி ஆக்ரோசமாக அறிவித்த காட்சி மனதில் தோன்ற புல்லட் வண்டியின் சத்தம் நினைவைக் கிழித்து விரைந்தபடி இருந்தது. யாராவது மந்திரி மகனாகவோ சொந்தக்காரனாகவோ இருப்பான் அதான் இவ்வளவு துணிச்சலாக போகிறான் என அவ்வண்டியை பார்த்துக்கொண்டிருக்கையில் அத்தெருவில் முகப்பு வீட்டின்முன் எரிந்துகொண்டிருந்த சிவப்பு விளக்கு அணைந்தது.

•••

ஒவ்வொருவருக்குள்ளும் உருகும் பனிச்சாலைகள் – சமயவேல்

பி.கே.சிவகுமார்

பனிச்சாலைகள் நம் ஒவ்வொருவருக்குள்ளும் அவ்வப்பொழுது உருவாகின்றன. எப்போதாவது மனதுக்குள் நிகழும் பனிப்பொழிவு நமது திடமான மனதையும் பனிச்சாலையாக மாற்றிவிடுகிறது.. வாழ்வின் அளவுக்கதிகமான வெப்பத்தில், அச்சாலைகள் உடனுக்குடனே உருகி வழிந்துவிட, மீண்டும் மனம் தினசரி வாழ்வை எதிர்கொள்ளும் சராசரிச்சாலை ஆக மாறிவிடுகிறது. ஆனால் கவிஞர்கள் என்ற ஒரு இனத்தினருக்கு மட்டும் சீதோஷ்ணநிலை மாறிக் கொண்டே இருக்கிறது.

எப்போதும் புயல், சூறாவளி, வெள்ளம், உறைபனி, பூகம்பம், சுனாமி என பேரவஸ்தையில் சிக்கவே விரும்பி அலைவார்கள் போலும். அவர்களுக்குள் பனிப்பொழிவும் அடிக்கடி நிகழ்வதால், அத்தகைய பனிச்சாலைகளைக் கொஞ்சம் கவனமாகக் காப்பாற்றி வருகின்றனர். பனிச்சாலைகளின் உருகும் உறைபனிக் கட்டிகளை அவர்கள் மொழியிடம் கைமாற்றி கவிதைகளைப் பெறுகிறார்கள். அயலகத்தில், உண்மையான பனிச்சாலைகளை அடிக்கடி காண நேரிடும் புலம்பெயர்ந்த வெப்பதேச மனிதனும் கவிஞனாகிவிடுகிறான். அப்படிக் கவிஞனாகியிருக்கும் பி.கே.சிவக்குமார் ஒரு தொகுப்பு நிறையக் கவிதைகளை நமக்கு வாசிக்கத் தந்திருக்கிறார்.

மரங்களின் கவிஞன்

பி.கே.சிவக்குமாரைக் கவிஞனாக ஆக்கியிருப்பது மரங்களே என்பதைக் கண்டு மகிழ்ச்சியாக இருந்தது. மரங்களோடும் செடிகளோடும் பறவைகளோடும் பேசத்தெரிந்த எந்த மனிதனும் கவியே. குளிர்நாடுகளில் குடிபுகும் அயல் மனிதன் முதன் முதலாகப் பார்க்கும் ஒரு பனிமரம் அவனைப் போலவே அனாதரவாக நடுங்குவதைக் காண்கிறான். ஒரு டிசம்பரில் எழுதப்பட்ட கவிதையில் “இறகுகள் உதிர்த்த மரம்/குளிரில் உடல் விறைத்து” நிற்கிறது.

“சருகுகள் கொணர்ந்து அமரும்
இடம்தேடியலையும் பறவை
ஸ்பரிசம் தந்த கதகதப்பில்
சிறகுகள் முளைத்து மரம்
சிரிக்கும் கொஞ்சமாய் அசைந்து” (பக்கம் 47)

எல்லா உயிர்களும் உள்ளுக்குள் ஏங்குவது பிறப்பதற்கு முன்பு குடியிருந்த கதகதப்பையே. கவிஞன் மரத்தோடு சேர்ந்து, பறவையின் ஸ்பரிசம் ஈந்த கதகதப்பைக் கவிதையின் வழியாகப் பெற்றுக் கொள்கிறான். இன்னொரு கவிதையில் (பக்கம்-49) “சென்று பார்க்க இடமின்றி/ நின்று மரங்கள் ஏங்க) என்று எழுதுகிறார். நிலைப்பையே உயிர் இயக்கமாக மாற்றிக் கொண்ட மரங்களையும் மனிதர்களாகவே கருதும் கொஞ்சம் மனிதர்களில் பி.கே.சிவக்குமார் போன்ற கவிகளும் இருக்கிறார்கள்.

94ம் பக்கத்தில் வரும் மரம் அவரது வீட்டின் வாசலில் “காவல்தோழன் மாதிரி நிற்கிறது.”

“அதனுள் வாழும் பறவையின் கூடு மாதிரி
அது வாழ்கிறது என் வீட்டில்
அதன் பெயர் கூட அறிய முயலாத நான்
அதைப் பொருட்படுத்துவதில்லை….”
இவ்வாறு ஒரு மரத்திடம் கூட அன்னியப்பட்டு நிற்கும் நம்மை கவிஞன், மீண்டும் கொண்டுபோய் அதனுடன் இணைத்து விடுகிறார். “என் வீட்டைக் கண்டுபிடிக்க மரம் அடையாளம்/சுற்றமும் நட்பும் சொல்கிற அந்த நொடிகளில்” பி.கே.சிவகுமாருக்குப் புரிந்து விடுகிறது. மரம் பயன்பாட்டு ரீதியான ஒரு அடையாளம் மட்டமல்ல என்பது.

“அந்த மரம் கொள்கிறது என் முகம்
நான் விரிகிறேன் அதன் கிளையிளைகளில்.”
என்று கவிதையை ஒரு கண்டுபிடிப்பில் கொண்டு போய் நிறுத்துகிறார். உண்மையில் இவர் தான் மரத்தின் முகத்தைப் பெறுகிறார். அதை “நான் விரிகிறேன் அதன் கிளையிளைகளில்” என ஒப்புக்கொள்ளவும் செய்கிறார்.

நுட்பமான கவிதை மனம் இவ்வாறு தான் இயங்க முடியும். ஒரு மனிதன், பல காலம் கண்டு கொள்ளாத ஒன்றை, கவிப்பொறி திடீரென கண்டுபிடிக்க வைக்கிறது. மனிதன் மரமாகுவதும் அணில் ஆவதும் பறவைகள் ஆவதும் சாத்தியம் என்பதையும் அவ்வாறு ஆகுதல் மூலம் இயற்கையின் விஸ்வரூபத்துடன் அவன் கலக்க முடியும் என்பதையும் கவிகளே கண்டுபிடிக்கிறார்கள். மதம் சாராத ஆன்மீகத்தின் எளிய பாதையை ஆதி தமிழ்க்கவிகள் இவ்வாறே திறந்து வைத்தார்கள்.

96ம் பக்கத்தில் வரும் மரம் ஒரு தத்துவ மரமாக இருக்கிறது. அது பனிக்காலம் முதலிய நான்கு பருவங்களிலும் அவதானம் பெறுகிறது. மரத்தின் இருப்பு காலவாரியாக “பறவைகள் கைவிட்ட துர்பாக்கியம்” “வசந்த காலத்தில் வண்டுகள் தொல்லை” “இலையுதிர்காலம் துறவின் பருவம்” என்று ஓரிரு சொற்களில் அட்டவணை இடுபவர்

“நான்கு பருவத்திலும் மனிதர் பிரச்னை
தற்பித்தில் திளைத்தது போல்
நிற்கிறது எப்போதும் சாந்தமாய்”

என்று எழுதுகிறார். தன்-பித்தில் திளைத்தல் என்பது எல்லாம் கடந்த நிலை. தனக்கு வெளியே இருக்கும் அனைத்தும் மறந்து தன்னில் சுழலும் கருந்துளைக்குள் பிரபஞ்சங்களை உறிஞ்சித் துப்பும் காலாதீதம். அதனால் தான் நமது சித்தர்கள் மரத்திடம் பேசினார்கள். மரம் தன்-பித்தில் திளைத்தது போல் நிற்கிறது. அவ்வளவே. மரத்திற்குள், அதைப் பேசும் மனிதனுக்குள், என்ன நிகழ்கிறது என்னும் ஆழ்ந்த வினாக்களை எழுப்பிப் போகும் வரிகள் இவை.

அணிலாடும் தமிழ்க் கவிதை

சங்க காலத்திலிருந்தே அணில், தமிழ்க் கவிதையில் ஒரு அடையாளமாக இருந்து வருகிறது. குறுந்தொகையில் “அணிலாடும் முன்றில்” என்று மகிழ்ச்சியோடு கூறப்படவில்லை. மனிதர்கள் இல்லாத வீட்டின் முற்றத்தில் அணில்கள் ஆடுகின்றன. அதற்காக வருந்தும் வீட்டைப் போல தலைவி வருந்துகிறாள் என்பது ஒரு துயரம்.

ஆனால் இங்கே, ஊரில் விட்டு வந்த முருங்கை மரம், உயிர்ப்புடன் கூடியதொரு அற்புதக் காணொளிச் சித்திரமாக விரிகிறது. (பக்கம்-86-87) அது ஒரு “அணிலாடும் முருங்கை” என எழுதுகிறார். அணில், குரங்குகள், அணிலைப் புகார் சொல்லாமல் குரங்குகளை மட்டும் விரட்டும் தாத்தா, அணிற்பிள்ளை என செல்லமாய் அழைக்கும் பாட்டி, உறவினர் வீடுகள் போகும் முருங்கைக் காய்கள், நெய் காய்ச்ச கீரை கேட்கும் அக்கம்பக்கம் என முருங்கையைச் சுற்றி ஒரு பெரிய இயக்கமே நடக்கிறது.

“முருங்கைப்பூ பார்க்கும் போதெல்லாம்
இப்போதும் பார்க்கிறேன்
அனுப்பி வைத்த அணில் முகங்கள்”

என்று கவிதை முடிகிறது. நிலைப்பையே உயிர் இயக்கமாக நிகழ்த்திக் காட்டும் இயற்கையின் சாகசம் ஒரு மரம் எனில், அதை ஒரு கவிதையாய் வளர்ப்பது கவிஞனின் சாகசம்.

30-31ம் பக்கக் கவிதையில் அமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்த ஒரு தமிழனின் வண்ணமயமான தினசரி வாழ்க்கை பத்தி பத்தியாய் அடுக்கப்படுகிறது. கடைசிப் பத்தி

“எதுவுமில்லை
மற்றவர் போடுகிற
ஃபிரெஞ்ச் ஃப்ரையையும்
சிக்கன் நக்கட்டையும்
ரொட்டித் துண்டையும்
கைநீட்டி வாங்கித் தின்றுவிட்டு
துணையைத் துரத்துகிற
நியுயார்க் ராக்பெல்லர் சென்டர்
மரத்து அணிலுக்கு”

“எதுவுமில்லை” என்ற ஒரே சொல்லுக்குள் பூமியின் அனைத்து உயிர்களின் இருத்தலியல் தர்க்கமும் அடங்கிவிடுகிறது. நமது அணில் பி.கே.சிவகுமாருக்காகவே நியுயார்க் சென்று வாழ்வின் அடிப்படையைப் போதித்திருகிறது.

98ம் பக்கத்தில் உள்ள பாம்பு கவிதையில் இருத்தலின் இறுதி நெருக்கடியே பேசப்படுகிறது.

“பாம்பு என்னைப் பார்த்துப் பயந்தது
நான் பாம்பைப் பார்த்துப் பயந்தேன்
உறைந்து நாங்கள் நின்ற வேளை
தளுக்கென்று தண்ணீரில் குதித்து மறைந்தது தவளை”

அவ்வளவே. திருமூலரின் செய்யுள் போன்ற ஒரு எளிய குழந்தைக் கவிதை வரிகளில், வாழ்வியல் நெருக்கடி தீர்க்கப்படுகிறது. சங்கிலியாய் நகரும் கணங்களின் வரிசையில் திடீரென ஒரு எதிர்பாராக் கணம் குதித்து தவளையைக் காப்பாற்றிவிடுகிறது.

பௌதிக உறவு

இவ்வாறு மரங்கள், அணில்கள் என்னும் உயிருள்ளவை மட்டுமல்ல, பௌதிக பொருட்களையும் உயிருள்ளவைகளாகப் பாவிக்கும் போக்கை குழந்தைகளிடமும் கவிஞர்களிடமும் மட்டுமே நாம் காண முடியும். டிரெட்மில்லைப் பற்றி இந்தத் தொகுப்பில் இரண்டு கவிதைகள் இருப்பது நாம் யாருமே எதிர்பாராதது. 61ம் பக்கத்தில் உள்ள கவிதை ஒரு பயன்படுத்தப்படாத டிரெட்மில் பற்றியது.

“ஆனாலுமிந்த டிரெட்மில்லைத்
தூக்கியெறிய மனமில்லை
என் காலடித்தடங்களை
வைத்திருக்கிறதே.”

இவர் ஒரு கவிஞனாக இருப்பதை உறுதி செய்வதற்காக எழுதப்பட்ட கவிதையோ என்னும் ஐயமும் வருகிறது. 114ம் பக்கக் கவிதையில் டிரெட்மில்லை இவரைப் போன்ற ஒரு ஆணாகவே மாற்றி அதைப்பற்றிய புலம்பலாகக் கவிதையை அமைக்கிறார்.

“என்கூட நிற்கிறது
நடக்கிறது ஓடுகிறது
மூச்சிரைக்கிறது முனகுகிறது
வியர்ப்பதில்லை உடல் இளைப்பதில்லை”

என்று கவிதையைத் தொடங்கி :

“ஓடாமல் நிற்கும்போதும்
இப்படி ஓடிக்கொண்டிருக்குமோ அது”

எனக் கேட்டு கவிதையை முடித்துவிடுகிறார். எண்ணியல் (digital) உலகின் அபத்த உபகரணங்களுடனும் கவிஞன் உரையாட முடிவது கவிதையின் சாகசம் ஆகும்.

கவிதையின் சமகாலமும் குழந்தைமையும்

சமகாலம் என்பது மிக சிக்கலான காலமாக இருக்கிறது. ஒரு சமகாலக் கவிஞன் இயல்பாக சுவாசம் கொள்கிற உறவாக குழந்தைகளுடன் கூடிய உறவே இருக்கிறது. இன்னும் ஈரம் காயாத பச்சையம் நிறைந்த குழந்தைமையை சமகாலக் கவிகள் பலரும் கொண்டாடுவதைப் பார்க்க ஆசுவாசமாக இருக்கிறது. பி.கே.சிவக்குமாரின் சில கவிதைகள் குழந்தைமையால் துளிர்த்து அசைகின்றன.

“எத்தனை இலை
துளிர்க்கிறதென தினம்
எண்ணி மகிழ்கின்ற
குழந்தைகளைப் பார்த்த பின்னே” (பக்கம்-19)

இந்தப் பகுதியை வாசித்த பிறகு எதிர்கால சமூகம் மேல் மிகுந்த நம்பிக்கை உண்டாயிற்று. கான்கிரீட் காடுகளுக்குள் அடைத்து வைக்கப்பட்ட குழந்தைகள் செடிகளின் மேல் வைத்திருக்கும் ப்ரியம் பெரும் நம்பிக்கை அளிக்கிறது. இலைகளை எண்ணி மகிழ்கின்ற குழந்தைகளுடன் மட்டுமே சமகாலக் கவிஞன் உரையாட முடியும். 35ம் பக்கக் கவிதையில் குழந்தைகள் ஒரு நீண்ட கவிதையை எழுத வைக்கிறார்கள். குழந்தைகள் அற்று தனியாக முதியோர்கள் தெருவில், அடுக்ககத்தில் வாழும் எண்ணிறந்த முதியவர்கள் பல முறை படித்து மகிழலாம்.

“எதையெடுத்துக் கொண்டு
உள்ளே நுழைந்தாலும்
இல்லாமல் போயிருந்த
புதிய சந்தோஷம் ஒன்றையும்
ஒவ்வொரு முறையும்
உடனழைத்து வந்தார்கள்” (பக்கம்-35)

என்ன நிகழ்ந்தாலும் சட்டென்று உடனே தங்களது இயல்புநிலைக்குத் திரும்பிவிடும் குழந்தைகளிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதையும் இந்தக் கவிதை மென்மையாக வலியுறுத்துகிறது.

91ம் பக்கத்தில் உள்ள கவிதையில் குழந்தைகள் குழந்தைகளுடனும் அம்மாக்களுடனும் போக்கர் ஆட்டம் ஆடுகிறார்கள். கவிஞன் தேர்ந்தெடுக்கும் கவிதைக் களங்களில் முதன்மையான இடங்கள் இத்தகைய மென்-பித்த வெளிகளே எனலாம். விளையாட்டுகளில் ஜெயிப்பது தோற்பது என்னும் எளிய இருமையின் படிகளில் அமர்ந்து ஊஞ்சலாடுகையில் ஆட்டக்காரர்களும் பார்வையாளர்களும் மென்பித்த வெளியில் மிதக்கிறார்கள்.

“குழந்தைகள் நிபுணர்கள் கண்டுபிடிப்பதில்
அம்மாக்களைத் தோழியாக்கும் விளையாட்டுகளை”

இந்தக் கவிதையில் அப்பாக்களும் அம்மாக்களும் குழந்தைகளும் ஒரு புதிய ஒளியில் மிளிர்கிறார்கள். அது குழந்தைமையின் ஒளி. 92ம் பக்கத்தில் உள்ள பாதாள உலகத்திற்கு வழிகாட்டும் கவிதையும் குழந்தைமையின் ரகசியத்தை வெளிப்படுத்துகிறது. கதை கேட்டல் நிகழும் அத்துவானக் காட்டில் குழந்தைகள் மட்டுமே சோர்வின்றி அலைய முடியும். கதைகளில் தொற்றி எதன் மூலமும் வியப்படையும் மாயவெளியில் மிதக்கும் குழந்தைகள் பாதாள உலகம் என்ன, ஏழேழு உலகத்திற்கும் கூட வழி கண்டுபிடிப்பார்கள்.

56ம் பக்கத்தில் உள்ள சிறிய கவிதையின் இரண்டு வரிகளுக்குள் எதிர்காலம் அறிந்ததொரு கவிஞன் தென்படுகிறான்.

“முட்டைகளைக் கவனித்தேன்
எதையும் நம்பியிருக்கவில்லை”

தாய்மார்களின் கருப்பைக்குள் நுழையும் லட்சக்கணக்கான முட்டைகள் எதை நம்பிக் குழந்தையாகின்றன? அது பிறக்க இருக்கும் குடும்பம் பற்றியோ அந்த ஊரைப் பற்றியோ உலகம் பற்றியோ ஏதும் அறியா முட்டைகள் அவை. எதையும் நம்பியிருக்காத கவிஞரின் முட்டைகள் அவை. அந்தக் கவிஞரின் பெயர் பி.கே.சிவக்குமார்.

———-

உள்ளுருகும் பனிச்சாலை
(கவிதைகள்)

பி.கே.சிவக்குமார்
பிரக்ஞை பதிப்பகம்,
சென்னை 600017
விலை ரூ.110/-
.

.

வெல்லும் சொல் வெளியீடாக வரயிருக்கும் அமர்நாதின் ‘மாயபிம்பம்’ நாவலின் ஒரு பகுதி மாயபிம்பம் – நாவல் அமர்நாத்

முதல்மாதத்தைவிடஇரண்டாவதுவேகமாகப்போய்விட்டது. இத்தனைக்கும்அக்டோபரில்கூடஒருநாள். மறுநாள்சம்பளம்வந்ததும்இரண்டுமாதம்சேர்த்தபணத்திலிருந்துஆன்டர்சன்பெயரில்நானூறுடாலருக்குசெக்வாங்கிஅனுப்பிவிட்டால்கடனைஅடைத்தநிம்மதிவரும். அப்பென்டிக்ஸ்வெட்டியசிகிச்சைக்குப்பின்ஏவ்ரம்நான்குநாள்படுக்கையில்முழுஓய்வுஎடுத்தான். பிறகுஒருவாரம்பாதிநாள்வேலை. கடைக்குப்போவது, சமைப்பது, வீட்டைசுத்தம்செய்வதுஎல்லாம்அருளின்பொறுப்பு. இப்போதுகிட்டத்தட்டசாதாரணநிலை.
அன்றுஹலோவீன். அதுபேகன்களின்பண்டிகைஎன்பதுபாஸ்டோரலின்கொள்கை. பிசாசுகளையும், பூதங்களையும்சிறப்பிக்கும்விரும்பத்தகாதவழக்கம். அதேசமயம்வித்தியாசமாகஇருக்கக்கூடாதுஎனநுழைவாயிலைஒட்டியதிறந்தவெளியில்பிற்பகல்நான்குமணிக்குஒருகொண்டாட்டம். ஏழெட்டுஸ்டால்கள். பல்கலைக்கழகத்தைச்சுற்றிவசிக்கும்குழந்தைகள்மாறுவேடங்களில்திரிந்தார்கள். அன்றையஆண்டுபெண்களுக்குபிரபலமானவேஷம்போகஹான்டாஸ். பையன்களுக்குநிஞ்சாஆமைகள். ஒருஸ்டாலில்ரவியும்அருளும். சிறுவர்கள்வெறுமனே ‘ட்ரிக்ஆர்ட்ரீட்!’ சொன்னால்மட்டும்போதாது. ரவிகேட்டகேள்விக்குசரியாகபதில்சொன்னால், அருளிடமிருந்துஒருநீளஹெர்ஷி. தவறாகச்சொன்னால், சரியானபதிலுடன்அதேஹெர்ஷிபரிசு.
“இயேசுகிறித்துவுக்குஎத்தனைசீடர்கள்?”
“அவர்களில்அவருக்குயாரைஅதிகம்பிடிக்கும்?”
“சொர்க்கத்தில்இயேசு (பைபிள்) கடவுளுக்குஎப்பக்கம்அமர்ந்திருக்கிறார்?”
ஐந்தரைமணிக்குரவியும்அருளும்கடைகட்டினார்கள். மீந்துபோனஇனிப்புகளைதிருப்பிக்கொடுக்கமாணவர்மையம்நோக்கிஒருநடை.
“உன்ரூம்மேட்டின்மனமாற்றம்எப்படிப்போகிறது?”
“ம்ம்ம். நிறையவிவாதிக்கிறோம், ஒருவன்மற்றவனின்சிந்தனையைத்தூண்டுகிறமாதிரி. ஆனால், அவன்இம்மியும்நகரக்காணோம்.”
“சரி, தொலைகிறான்விடு! இன்னும்ஒருமாதம்தான்அவன்சகவாசம்.”
அதற்குப்பிறகும்முடிந்தபோதுஏவ்ரமைசந்தித்துஉரையாடஅருளுக்குஆசை.
“அவன்உன்னைமாற்றிவிடப்போகிறான். எதற்கும்ஜாக்கிரதையாகஇரு!”
“ஹ! அதுமட்டும்நடக்காது.”
“சரி! இயேசுபற்றியஆராய்ச்சிஎங்கேநிற்கிறது?”
“வரும்புதனுக்குஅடுத்தபுதன்கிழமை, இஸ்ரேலில்இருந்துஆர்டீஸ்திரும்பிவருகிறார். அதற்குள்ஒருஅவுட்லைன்எழுதப்பார்க்கிறேன்.”
“பரவாயில்லையே!”
“எனக்குநேரம்நிறைய. படிக்கவும்பிடிக்கும்.”
“இப்போதுஎன்னபடிக்கிறாய்?”
“முதல்நூற்றாண்டுரோமஆட்சியின்சமுதாயஅமைப்புபற்றி. ஆர்டீஸ்பரிந்துரைத்தபுத்தகங்களில்அதுவும்ஒன்று. பொடிஎழுத்தில்அறுநூறுபக்கமாவதுஇருக்கும். இயேசுவைநன்குஅறியஅதுஉதவுகிறது.”
“அத்தனைசிரமம்எதற்கு? லூயிஸைப்படித்தால்போதுமே.”
“எந்தலூயிஸ்? ‘க்ரானிக்ல்ஸ்ஆஃப்நார்னியா’எழுதியவரா?”
“அவரேதான். சி. எஸ். லூயிஸ்சிறுவயதில்நாத்திகர். கடவுளைத்தேடஉலகமதங்கள்அத்தனையும்ஆராய்ந்து, கடைத்தேறஒரேவழிகிறித்துவம்தான்என்றமுடிவுக்குவந்துஅதைப்பின்பற்றியவர். அவருடைய ‘மியர்க்றிஸ்டியானிடி’ஒருஅற்புதபடைப்பு! அதன்முதல்அத்தியாயத்தைமட்டும்படித்துகிறித்துவைநம்பத்தொடங்கியநாத்திகவிஞ்ஞானிகள்எத்தனையோபேர்!”
“படித்துப்பார்க்கிறேன்.”
“அப்புத்தகத்தில்இயேசுகிறித்துயார்என்பதைஅவர்அறிவுபூர்வமாகநிரூபிக்கிறார். ஏப்ரஹாமுக்கும்முந்தியேநான்இருந்தேன், பாவங்களைமன்னிக்கும்அதிகாரம்எனக்குமட்டுமே, என்வழியாகத்தான்மனிதர்களுக்குஉய்வு – என்றுஇயேசுசொன்னதைஎல்லாம்கூட்டிப்பார்த்தால்அவர்பைத்தியமாகவோ, பொய்யராகவோ, இல்லைகடவுளாகவோதான்இருக்கமுடியும். ஜெருசலம்கோவிலில்பன்னிரண்டுவயதிலேயேமெத்தப்படித்தவர்களைதன்ஞானத்தால்வியக்கவைத்தஒருவர்நிச்சயம்பைத்தியமாகஇருக்கமுடியாது. காஸ்பெல்சொல்வதுஅத்தனையும்நிஜம், உண்மையைத்தவிரவேறுஇல்லை, என்றுலூக்ஆரம்பத்திலேயேஉறுதிதருவதால்இயேசுசொன்னதுபொய்இல்லை. அதனால், அவர்கடவுளாகத்தான்இருக்கமுடியும்”என்றுரவிஅழுத்திச்சொன்னான்.
“ஆக… இயேசுபிரான்பித்தன், பித்தலாட்டக்காரன், அல்லதுபிரபுஎன்கிறமூன்றுசாய்ஸ்தானாஎனக்கு?”153 மாயபிம்பம்
“அதுபோதாதா? அவர்வேறுயாராகஇருக்கமுடியும்?”
அருள்ஒருகணம்யோசித்தான்.
“நற்செய்திஜான்இயேசுவின்வாழ்க்கைமுடிந்துஎழுபதுஎழுபத்தைந்துஆண்டுகள்கடந்தபிறகுதான்எழுதப்பட்டது.”
அந்தவரலாற்றுத்தகவல்சரியென்றுஎப்படிச்சொல்லமுடியும்?
“அதன் 8:1-8:11 உனக்குநிச்சயம்தெரிந்திருக்கும்.”
“படித்திருக்கிறேன்.”
“அப்பகுதிபிற்காலத்தில்எழுதிசேர்க்கப்பட்டதற்குஆதாரம்இருக்கிறது. வரலாறுஇல்லையென்றாலும்சம்பவம்நிஜமாகநடந்திருக்கக்கூடும். என்நோக்கில்… இயேசுயார்என்பதைஅதுதெளிவாகக்காட்டுகிறது. இயேசுகோவிலில்சமநீதிபோதிக்கிறார். அப்போது, யூதஅதிகாரிகள்ஒருபெண்ணைஇழுத்துவந்துஇயேசுமுன்நிறுத்தி ‘இவள்சோரம்போய்விட்டாள், இவளைஎன்னசெய்வது?’ என்றுகேட்கிறார்கள். இதுஅவரைமாட்டிவைக்கும்சூழ்ச்சி. இயேசு ‘அவள்செய்தபாவத்துக்குசரியானதண்டனைஅவளைகல்லால்அடித்துக்கொல்வது’என்றால்அவர்போதித்தஅன்பு, கருணை, மன்னிப்பு, எல்லாம்அர்த்தமற்றுப்போய்விடும். ‘பாவம்! ஆதரவற்றஅபலை. தவறுசெய்யாதவர்கள்இவ்வுலகில்யார்? போனால்போகிறது, தயவுசெய்துஅவளைவிட்டுவிடுங்கள்!’ என்றால் (பைபிள்) கடவுள்சொல்லித்தரமோசஸ்இயற்றியசட்டம்அவருக்குத்தெரியவில்லையே, தெரிந்தாலும்அதைக்கடைப்பிடிக்கவில்லையேஎன்றஅவச்சொல்வரும். இயேசுஇக்கட்டைஎப்படிசமாளிக்கிறார்? ‘உங்களில்எவன்பாவம்செய்யவில்லையோஅவன்முதல்கல்லைஅவள்மேல்வீசட்டும்’என்றுசொல்லிவிட்டுகுனிந்துதரையில்கிறுக்குவதுபோல்பாவனைசெய்கிறார். ஒவ்வொருவராகபழிசுமத்தியவர்கள்அகன்றதும்நிமிர்ந்து ‘உன்னைப்பழிக்கயாரும்இல்லையா?’ என்றுஅந்தப்பெண்ணைக்கேட்கிறார். ‘இல்லைஐயா!’ என்கிறாள்அவள். ‘நானும்உன்னைப் 154 அமர்நாத்
பழிப்பதாகஇல்லை. இனிநல்லபடியாகநட!’ என்றுஅறிவுரைசொல்லிஅனுப்புகிறார். இந்தசம்பவத்தில்இயேசுதன்பெயரைமட்டுமல்ல, அந்தப்பெண்ணின்உயிரையும்காப்பாற்றிவிடுகிறார். என்னசாமர்த்தியம்!”
ரவிக்குசந்தேகத்தில்வரும்குழப்பம். அருள்சொன்னவிளக்கத்தில்குற்றம்குறைஇல்லாவிட்டாலும்ஏதோஉதைத்தது. நற்செய்திஜான்நிஜமானவரலாறா, இல்லைகற்பனைகலந்ததா? கிறித்துவைகடவுள்என்றுஅவன்ஏற்கிறானா, இல்லையா? உதவிப்ரோவோஸ்ட்நெட்டில்ஸிடம்அருளின்மனப்போக்கைஎச்சரிக்கநினைத்தான். பிறகு, இன்னும்கொஞ்சகாலம்பொறுத்துப்பார்க்கலாம்என்றுமனதைமாற்றினான். எப்படியும்இரண்டுவாரத்தில்அருளின்மென்டோர்திரும்பிவருகிறார். அவன்அறிக்கையைப்படித்துவிட்டுஅவரேஒருமுடிவுஎடுக்கட்டும். எதற்கும், தவறானபாதையில்அருள்வெகுதூரம்போவதற்குமுன்அவனைஇழுத்துப்பிடிக்க…
“என்னைக்கேட்டால், நீ ‘மியர்க்றிஸ்டியானிடி’யைஇப்போதேபடிப்பதுநல்லது. தள்ளிப்போடாதே! என்னிடம்ஒருபிரதிஇருக்கிறது. தரட்டுமா?” என்றான்.
“வேண்டாம்! எனக்குபுத்தங்கள்சேகரிக்கப்பிடிக்கும். நானேவாங்குகிறேன்.”
“லூயிஸின் ‘மிரக்ல்ஸை’யும்சேர்த்துக்கொள்! அறிவியல்தத்துவம்படித்தநீஅற்புதங்கள்நிகழாதுஎனநம்பலாம். அப்புத்தகம்உன்மனதைமாற்றிவிடும்.”
மாணவர்புத்தகக்கடைக்குப்போய்இரண்டுபுத்தகங்களையும்அருள்வாங்கியதைப்பார்த்தபிறகேரவிஅவனிடமிருந்துவிடைபெற்றான்.

வியாழன்உயிரியல்உதவிவகுப்பு. பிரதானவகுப்பில்முடிக்கப்பட்டபாடத்தைஅன்றுஅருள்கால்மணிக்குள்விளக்கிவிட்டான். மீதிநேரத்தைவீணாக்காமல்அடுத்தபாடத்துக்குமுன்னுரை. டேவிட்டாதேஎழுதிய ‘ஹிஸ்டாரிகல்ஜியாலஜி’என்றபுத்தகத்தில்இருந்துஇரண்டுநாட்களாகசேகரித்தவிஷயங்களின்சுருக்கம்.
உயிரினங்களின்வரலாறு
சரித்திரத்தின்முதல்படிகாலக்கணக்கு. இரண்டுநிகழ்வுகளில்எதுமுன்னது, எதுபிந்தையதுஎன்றுஅறிவதுஅவசியம். பிரமிட்கள், பார்த்தனான்கோவில், ரோமவிளையாட்டுஅரங்கு – இவைஇவ்வரிசையில்இந்தந்தக்காலங்களில்கட்டப்பட்டனஎன்றுபலபதிவுகளைஆராளிணிந்துவரலாற்றாசிரியர்கள்நிர்ணயித்துஇருக்கிறார்கள். அதுபோல, மரங்களின்குறுக்குவட்டங்கள்மற்றும்பவளத்தின்மேல்வரிகள், இவற்றைவைத்துஅவைதோன்றிய
காலத்தைஅறியலாம். வரலாற்றுக்குமுந்தையகற்களின்வயதைஅளவிடவும்வழிகள்இருக்கின்றன. பாறைப்படிவங்களில்காலத்தில்முற்பட்டதுஅடியிலும், பிற்பட்டதுமேல்மட்டத்திலும்அமைந்திருப்பதைபத்தொன்பதாம்நூற்றாண்டிலேயேஅறிஞர்கள்கவனித்தார்கள். ஜுராஸிக்சமீபத்தியகாலம், கேம்ப்ரியன்மிகப்பழமையானதுஎன்றாலும்அவற்றின்வயதுஆண்டுக்கணக்கில்யாருக்கும்சரிவரத்தெரியாது. கதிரியக்கம்கண்டுபிடிக்கப்பட்டபிறகுஎரிகற்களின்வயதைநிர்ணயிக்கமுடிகிறது. அதற்குப்பரவலாகபயன்படுத்தப்படும்தனிமம்பொட்டாஷியம்-40. இதுசிதைந்துஆர்கான்வாயுவாகமாறபலபில்லியன்ஆண்டுகள்ஆகின்றன. இரண்டின்அளவுகளையும்ஒப்பிட்டுகல்லின்வயதுகணக்கிடப்படுகிறது.
இதுசரியானமுறைஎன்றுஎப்படித்தெரியும்?
ஒருஎரிகல்லில்ஒன்றுக்குமேற்பட்டகதிரியக்கத்தனிமங்கள்இருந்துஅவற்றைஅளவிடும்போதுஏறத்தாழஒரேவயதுதான்அறியப்படுகிறது. பலஆளிணிவுக்கூடங்களின்முடிவுகளும்தங்களுக்குள்ஒத்துப்போகின்றன. ஒருஎரிகல்லுக்குள்இன்னொருஎரிகல்புகுந்திருந்தால், பின்னதுவயதில்குறைவாகஇருக்கும்எனஎதிர்பார்ப்போம். கதிரியக்கசிதைவிலும்அதைத்தான்காண்கிறோம்.
சலவைக்கல், சுண்ணாம்புபோன்றபடிவுக்கற்களின்வயது?
அதைஇம்முறையில்நேரடியாகஅளக்கவழியில்லை. அவற்றைஒட்டியஎரிகற்களின்வயதுகளிலிருந்துதோராயமாகஅதுஅறியப்படுகிறது.
எலும்புகளின்வயது?
கார்பன்14 உயிரினம்உயிர்வாழும்போதுஅதன்உடலில்தங்குகிறது, இறந்ததும்சிதைகிறது. மிச்சமிருக்கும்கார்பன்14 மூலம்எலும்புகளின்காலத்தைநிர்ணயிக்கலாம். ஆனால், ஐம்பதாயிரம்ஆண்டுகளுக்குமுந்தையஎலும்புகளில்கார்பன்14 கிட்டத்தட்டமறைந்துவிடுவதால்இவ்வழிஉதவாது. அவைபுதைந்தகற்களிலிருந்துஅவற்றின்காலம்கணக்கிடப்படுகிறது.

முடிவுகள்எவ்வளவுநிச்சயம்?
கணக்கில்பிழைகள்ஏற்படலாம்இல்லையா?
சந்தேகம்இல்லாமல்,

எந்தஅளவிடும்முறையிலும்நிச்சயமின்மைஇருப்பதுஇயற்கை. அதனால்தான்ஒன்றுக்குப்பலமுறைஅளக்கிறோம். இரத்தத்தில்கொலஸ்டராலின்அளவைநூற்றியறுபதுக்குமேல்நூற்றியெழுபதுக்குள் (மில்லிகிராம்) என்றுஇருவரம்புக்குள்குறிப்பிடுகிறோம். அதனால், அதுதவறுஎன்றுஆகாது.

அதுபோல, டைரானாசாரஸ்ரெக்ஸ்வாழ்ந்தகாலம்அறுபத்தியெட்டுமில்லியன்ஆண்டுகளுக்குமுன்னால்என்றுசொல்லும்போதுஒருசிலமில்லியன்கூடுதலாகவோ, குறைவாகவோஇருக்கலாம்தான்.
அருள்பேசிமுடித்துமாணவர்களின்கேள்விகளுக்குக்காத்திருந்தான். சிலநிமிடங்களின்அமைதி. அதிர்ச்சியால்வந்தநிசப்தம்.
மாணவர்கள்சார்பில்ஸ்டேசிசந்தேகம்கிளப்பினாள். எப்போதும்போல்உச்சியிலிருந்துதழைந்தஇரட்டைப்பின்னல்.
“நீசொல்லும்காலம்மில்லியன்கணக்கில்ஓடுகிறது. பூமியின்வயதுஆறாயிரம்ஆண்டுகள்தானே.”
“அதுஎப்படிஅறியப்பட்டதுஎன்றுசொல்கிறேன். முன்னூற்றிஐம்பதுஆண்டுகளுக்குமுன்அயர்லாந்தைச்சேர்ந்தபிஷப்உஷர்போட்டகணக்கு.

பாபிலோன்அரசர்நெபுகட்நெஸர்முற்காலம் 597-இல்இறந்ததாகவரலாற்றுப்பதிவுகள்தெரிவிக்கின்றன. அதுஜுடாவின்அரசன்ஜெஹோசின்நாடுகடத்தப்பட்டமுப்பத்திஏழாவதுஆண்டு (2 அரசர்கள் 25:27) எனபைபிள்குறிப்பிடுகிறது. அதில்தொடங்கிஇஸ்ரேலைஆண்டஅரசர்களின்ஆட்சிக்காலங்களைக்கூட்டிஏப்ரஹாம்முற்காலம் 2200-இல்வாழ்ந்ததாகநினைத்தார். ஆதாமில்இருந்துஏப்ரஹாம்வரையிலானஆண்கள்பாரம்பரியவரிசையையும், ஒவ்வொருவருக்கும்மூத்தமகன்எப்போதுபிறந்தான்என்ற

விவரத்தையும்பைபிள்தருகிறது. (950 ஆண்டுகள்வாழ்ந்தநோவாவுக்குஅவன்ஐநூறுவயதானபோதுமுதல்பிள்ளைபிறந்தான் – படைப்பு 5:32) காலத்தில்பின்னோக்கிச்சென்று, ஆதாமை (பைபிள்) கடவுள்படைத்ததுமுற்காலம் 4004 என்றுஅவர்கணக்கிட்டார்.”
“இரண்டுஎண்களில்எதுசரி?”
இரண்டுமுறைகளையும்விளக்குவதுஎன்கடமை. அவற்றைப்புரிந்துகொள்வதுஉங்கள்அறிவுவளர்ச்சிக்கும், நான்கொடுக்கப்போகும்தேர்வுக்கும்அவசியம்.
“உன்சொந்தஅபிப்பிராயம்என்ன?”
“அதைச்சொல்லிஉன்கருத்தைநான்மாற்றுவதுநியாயம்இல்லை. நீயாகவேஇரண்டுமுறைகளையும்ஒப்பிட்டுஎதுஏற்கத்தக்கதுஎன்றுதீர்மானிக்கவேண்டும்ஞ்”ஸ்டேசிவிடுவதாகஇல்லை.
“பைபிளின்ஆறாயிரம்ஆண்டுக்கணக்குஎப்பவும்மாறவேமாறாது. ஆனால், அறிவியல்மதிப்பீடுஅப்படிஇல்லை. சென்றநூற்றாண்டில்லார்ட்கெல்வின்இருபதுமில்லியன்ஆண்டுகளுக்குமுன்உலகம்தோன்றியதாகக்கணக்கிட்டார். இந்தநூற்றாண்டின்ஆரம்பத்தில்உலகின்வயதுஒருபில்லியனாகஇருந்தது. தற்போதுநாலரைபில்லியன். இப்படிஎண்களைஅடிக்கடிமாற்றிக்கொண்டேஇருக்கும்விஞ்ஞானத்தைஎப்படிநம்புவது?”

“ஏர்லைஸ்டேசிநன்றாகமாட்டிவிட்டாள். அவளிடம்பேசிஜெயிக்கமுடியுமா?” என்றுசந்தோஷப்பட்டான்ரவி,
அருள்சிலநொடிகள்யோசித்து ”வாடவேவாடாதகாகிதப்பூ. வாசம்வீசி, வண்டுகளைக்கவர்ந்து, ஒருநாளில்வாடிகனியாகமாறும்மலர். இரண்டையும்ஒப்பிடமுடியுமா? அதுபோலத்தான்”என்றான்.
அருளின்சாமர்த்தியபதிலைக்கேட்டு ”சும்மாசொல்லக்கூடாது, பயல்நன்றாகவேசமாளிக்கிறான்”என்றுரவிபாராட்டினான்.
வகுப்புகலைந்தது.

ஒவ்வொருவியாழனும்பிற்பகல்மூன்றுமணிக்குலீடர்ஷிப்செமினார். ஜோன்ஸ்ஹாலைஒட்டியபிருமாண்டமானஅரங்கில். ஆராளிணிச்சிமாணவர்களும், இறுதிஆண்டுஇளங்கலைமாணவர்களும்கட்டாயம்ஆஜராகவேண்டும். விருப்பப்பட்டால்மற்றவர்களும்கலந்துகொள்ளலாம். படித்தபிறகுமாணவர்கள்கிறித்துவத்தில்மட்டுமின்றி, அரசியல், அறிவியல், வணிகம்என்றுஎல்லாத்துறைகளிலும்முன்நின்றுமற்றவர்களைவழிநடத்தவேண்டும்என்றநோக்கில், சமுதாயத்தில்சாதனைபுரிந்தவர்களின்சொற்பொழிவுகள்.
அதுவரைபேசியசிலரும், அவர்களின்உரையும்… பெண்களின்ஒழுக்கத்தைக்கெடுக்கும்கருத்தடைக்குசட்டப்படிதடைபோடமுயற்சிக்கும்காங்கிரஸ்
அங்கத்தினர்எலிஸபெத்ப்ரௌன்,
அமெரிக்கப்பல்கலைக்கழகங்களின்சமயசார்பற்றகல்வியைஎதிர்க்கும்வில்லியம்பக்லி, எல்லாநாடுகளையும்ஒரேமட்டத்தில்வைக்கும்ஐக்கியநாடுகள்சபையிலிருந்துயு.எஸ். விலகுவதைவலியுறுத்தும்ஜான்போல்ட்டன்.
இரண்டரைக்குஅருள்தன்மேஜையிலிருந்துஎழுந்தான். நீண்டநேரம்பொடிஎழுத்துகளைப்படித்ததாலோஎன்னவோகாற்றாடநடக்கவேண்டும்போல்இருந்தது. சாலைவழியேபோகாமல்பேலிஹாலின்பின்புறத்துமரங்களின்நடுவேநடந்தான்.

ஒருமரத்தில்கிட்டத்தட்டஎல்லாஇலைகளும்செம்மைபடர்ந்துதீயில்எரிவதுபோல்தோன்றின. அதன்அழகைரசித்தபடிநின்றான். அவன்கண்எதிரிலேயேஒருஇலைஉதிர்ந்துதரையில்விழுந்தது. அதைக்கையில்எடுத்துஅதிசயமாகப்பார்த்தான். அதன்காலம்முடிந்துவிட்டது.

அருளுக்குமரணத்தைப்பற்றியசிந்தனை. ஆனால், அதுஅப்போதுஅச்சத்தையோ, அதிர்ச்சியையோதரவில்லை. மிருகத்துக்குஎன்னநேர்கிறதோ, அதுவேமனிதனுக்கும். ஒன்றுஇறப்பதுஉண்மையென்றால்மற்றதுக்கும்அதேகதிஎன்கிறபைபிளின்தத்துவமனப்பான்மை.

உயிர்கள்அனைத்துக்கும்சுவாசம்ஒன்றுதான். மனிதன்எவ்விதத்திலும்மிருகங்களைக்காட்டிலும்உயர்ந்தவன்அல்ல, அவன்எவ்வளவுதம்பட்டம்அடித்தாலும். கடைசியில், எல்லாரும்போகும்இடமும்ஒன்றுதான்.

– பிரசங்கியார் 3:19
ஆனால், அதற்குமுன்நிறையசாதிக்கவேண்டும்என்றஉந்துதல். பின்னோக்கிப்பார்த்தான். முதன்முறைசந்தித்தபோதுஏவ்ரம்புகழ்ந்ததுபோல்பரந்தஅறிவு, கட்டுப்பாடானஒழுக்கம், அளவானஆசைகள்என்றுவாழ்க்கைக்குநல்லஅஸ்திவாரம்போட்டிருக்கிறான்.

இனிஅதன்மேல்பலருக்குஉபயோகமானகட்டடம்எழுப்பவேண்டும். அதுதான்அவன்குறிக்கோள். கட்டிமுடித்ததும், எல்லாஉயிரினங்களையும்போல, எந்தப்புழுதியில்இருந்துதோன்றினானோஅதேபுழுதிக்குஅவன்திரும்பிவிடுவான்.

அவன்விட்டுச்செல்லும்எச்சம்தான்அருள்ஆனந்தம்என்றுஒருவன்இவ்வுலகில்வாழ்ந்தான்என்பதற்குஅத்தாட்சி.
இந்தகருத்தில்ஒருசமயசிற்றுரைபுனைந்தால்…

மாயபிம்பம் (நாவல்)
வெல்லும் சொல் வெளியீடு
ஜூன் வெளியீடு
பக்கங்கள் : 896 , Hard Binding விலை : 800/-
முன்பதிவு விலை ( ஜூன் 15 வரை) ரூ 550/-

பூதக்கண்ணாடி ( கவிதைகள் ) / வே.நி.சூர்யா

வே.நி.சூர்யா

0
ஒரு தனித்தனியான ஆள் என்ன செய்வான்
தனியாக இருப்பான்
மேலும் தனியாக இருப்பான்
பின்பு தனித்தனியாக தன்னை உடைத்துப் போடுவான்
கடைசியிலும் தனியாக இருப்பான்
ஒரு நீர்த்துளி மெல்லச் சிரிக்கும்
இன்னொரு சிலந்திப்பூச்சியோ
அவனை சுற்றி வலைபின்னும்
மழைத்துளியின் கழுத்தில் கயிற்றை கட்டியிழுப்பதாக கனவு வரும்
அதற்குபிறகும் அவன் தனியாக இருப்பான்

0
அவனுடைய கண்ணீர் அனைத்தும் உப்பாயிற்று
அந்த உப்பை கொண்டு அவன் ஒரு மண்வெட்டி செய்தான்
அம்மண்வெட்டியை எடுத்துக்கொண்டு ஒரு கொடிய இரவில் தன்னைத்தானே
தோண்டத் தொடங்கினான்
அவனுக்கு பல இரவுகளுக்கு பிறகு ஒரு புதையல் கிடைத்தது:
இன்னும் நூறு மண்வெட்டி செய்யும் அளவுக்கு உப்பு

0
வெட்டவெளியில் தன்னைத்தானே எழுப்பிக் கொள்கிறது ஒரு கோவில்
காற்றில் ஒரு கோபுரம்
நீரால் ஒரு பிரகாரம்
சந்தேகமேயில்லை கோவில் கட்டப்பட்டாயிற்று
அங்கே அவனை
சிலையாக நிறுவுகிறது வாழ்க்கை
கறுப்பு மழை பொழிய
அந்தம் வந்து நடையை சாத்துகிறது
இனி
கோவில் வேகமாக பாழடையும்
அவனுடைய சிலை வெடித்து உடையும்
எதுவும் புரியாது வெளவால்களுக்கு

0
இறுதியாய் எதிலுமே இருட்டையே அவன் தேர்கிறான்
இருட்டும் மனமும் ஒன்றுதான் என்றாகின்றன அப்போது
உடனே தெரிகிறது
ஒரு முறிந்துபோன காதல்
இன்னும் தூரத்தில்
அவனுடைய பால்யம்
அதற்கும் தொலைவில்
பிறப்பதற்கு முன்பிருந்த இடம்
அங்கே சென்றாக வேண்டும் அவனுக்கு

0
அவன் தன்னை தனித்தனியாக கழட்டிபோட்டிருக்கிறான். இப்போதைக்கு அவனுக்கு இது ஓய்வு. கால்கள் இரண்டையும் கட்டி ஒரு துடைப்பத்தை செய்திருந்தான், அவன் ஒரு ஊன்றுகோல் செய்திருந்தால் கைகளில் கால்களை பிடித்துக்கொண்டு நடக்கும் மனிதனாக இருந்திருப்பான். கண்களை மிளகு டப்பாவினுள் போட்டு தொலைகாட்சி பெட்டிக்கு முன்பு மூடிவைத்திருந்தான், அநேகமாக இதற்குமுன் அவை வறட்டு இருமலில் அவதிப்பட்டிருக்கக்கூடும். குளிர்சாதனபெட்டியில் காதுகளை வைத்திருந்தான், ஏனென்றே தெரியவில்லை. சோபாவுக்கு அடியில் மூக்கை வைத்திருந்தான், ஒருவேளை ஈர மரக்கட்டையின் வாசனை பிடிக்குமோ என்னவோ. நீளமான நாக்கை சீனி டப்பாவினுள் புதைத்து வைத்திருந்தான், எறும்புகள் வந்துவிடக்கூடாது என்ற பிரார்த்தனை எறும்புக்கொல்லியாய் சுற்றி தூவப்பட்டிருந்தது. தலையை கால்பந்திற்கு அருகே வீசியிருந்தான். வியப்பாக உள்ளது இரண்டு கைகளையும் ஒரேசமயத்தில் யார் உதவியுமின்றி எப்படி கழட்டிவைத்தானென்பது, அவையிரண்டும் சமையலறையில் காஃபி போட்டுக் கொண்டிருக்கின்றன. தலையணையில் கழுத்தை வைத்து தூங்கிக் கொண்டிருக்கிறது அடியும் முடியுமில்லாத உடல். எவ்வளவு அழகாக ரத்தம் வடிந்துகொண்டிருக்கிறது தெரியுமா. எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறான் தெரியுமா

**