Category: நிகழ்வுகள்

கோவை இலக்கியச் சந்திப்பு 31 ஆவது கூட்டம்

literal meet

அறிவிப்பு அசோகன் முத்துசாமி முதலாமாண்டு நினைவுச் சொற்பொழிவு

92V57Tgr43F2FWAN4fbtRBCM

விளக்கு விருது பரிசளிப்பு விழா

scan0001

அஞ்சலி சினுவா ஆச்சிபி (நைரீய எழுத்தாளர் ) நினைவுக் குறிப்புகள் ஜா.தீபா

download

 

 

சினுவா  ஆச்சிபி பெயர் படிக்கும்போதெல்லாம்  ஸ்டெல்லா என்கிற பெயரும்  கூடவே என் நினைவுக்கு வந்து  விடுகிறது. ஆங்கில இலக்கியம்  படிக்கிற காலத்தில் என்னை  வெகுவாக ஈர்த்த பெயர் இது. Chinua Achebe என்பது ஒரு சிறுகதையின்  ஆசிரியர் பெயராகத் தரப்பட்டிருந்தது. அதை எப்படி உச்சரிப்பது என்பது தெரியாமல் நானும் என் வகுப்பு தோழிகளும் திண்டாடிக் கொண்டிருந்தோம். இதுவே இந்தப் பெயரின் மேல் ஒரு ஈர்ப்பை உண்டாக்கி விட்டது. மற்ற துறையைக் காட்டிலும் இலக்கியத்தை பட்டப்படிப்புக்கு தேர்ந்தெடுப்பது தவமியற்றாமல் பெறும் வரத்தைப் போன்றது. ஆசிரியர் பாடம் நடத்துவதற்கு முன்பே பாடத்தைப் படித்து விடலாம். கதாபாத்திரங்கள் பெயரைத் தோழிகளுக்கு பட்டப்பெயராக வைக்கலாம். மற்ற துறையினர் விழுந்து விழுந்து படிக்கும்போது நாங்கள் சிறுகதைகளையும், நாடகங்களையும் பற்றிப் பேசிக் கொண்டிருப்போம். ஒரு எழுத்தாளரின் கதைப் பிடித்துப் போனால் பாடத் திட்டத்தில் இல்லாமல் போனாலும் அவரின் மற்ற புத்தகங்களைப் படிக்கும் ஆர்வம் எங்களிடம் இருந்தது. இப்படிப்பட்ட ஒருவராய்த் தான் எங்களுக்குப் பிரியமாகிப் போனார் சினுவா ஆச்சிபி.

இவரிடம் எனக்குப் பிடித்தது ஜாலங்கள் இல்லாத சொற்களும், அடியோடிய நகைச்சுவை உணர்வும் தான். ஆங்கிலத்தை அப்போது தான் தங்கு தடையின்றி வாசிக்கவே  முடிந்த காலக் கட்டத்தில் முதல் வாசிப்பிலேயே புரிந்துக் கொள்ளக் கூடியதாக இருந்தது சினுவாவின் எழுத்துக்கள். இணையதளப் பயன்பாடு அதிகரிக்காத காலகட்டம் என்பதால் புத்தகங்கள் மட்டுமே வாசிப்புக்கான ஒரே வழியாக இருந்தது. அதிலும் திருநெல்வேலியில் இவருடைய பெயரையெல்லாம் சொல்லிக் கடைகளில் புத்தகங்கள் கேட்டால், நிச்சயம் விசித்திரமான பார்வையே பதிலாகக் கிடைக்கும்.

ம.தி.தா இந்துக் கல்லூரிக்கு வெளியே உள்ள புத்தகக்கடைகளில் பல சமயங்கள் நல்லப் புத்தகங்கள் கிடைத்திருக்கின்றன. நாங்கள் தேடிய தேடலில் எப்போதுமே ‘டிமான்டில்’ இருக்கும் ரமணிச்சந்திரன் நாவல்கள் கூட கிடைத்து விட்டன. ஆனால் சினுவாவின் புத்தகங்கள் அங்கு இல்லை. எனக்குக் கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தது. சரஸ்வதி லாட்ஜ் வாசலில் வேறு ஏதோ புத்தகம் தேடும்போது சிக்கினார் சினுவா. நைந்து போன நிலையில்  ‘things fall apart’ என்கிற ஒரு நாவல் கிடைத்தது. எப்பேர்பட்ட பொக்கிஷம்!

வீட்டிற்கு  வந்ததும் பத்து பக்கங்கள்  படித்துவிட்டேன். முதன் முதலில் தங்கு தடையில்லாத ஆங்கில வாசிப்பு. ஒரு நோட்டில் நான் வாசித்ததை அப்படியே தமிழில் எழுதினேன். அப்பாவிடம் காட்டினேன். எனக்கு நன்றாக கதை எழுத வருவதாக அவர் பாராட்டி தள்ளி விட்டார். முழுக்கவும் பாராட்டு மழையில் நனைந்த பின் அவரிடம் அந்தக் கதையை எழுதியது சினுவா ஆச்சிபி என்று சொல்லி நாவலையும் கையில் கொடுத்தேன். ‘எனக்கு முதல்லேயே தெரியும்..நம்ம ஊர் கதை மாதிரியே இல்லையேனு’ என்று சொல்லிக் கொண்டார். அன்றைய இரவே அவர் படித்து முடித்து விட்டார். எனக்குள் மொழிபெயர்ப்பு ஆவலைத் தூண்டியது இவருடைய எழுத்துக்கள் தான். இன்னும் நான் மொழிபெயர்த்த பக்கங்களைப் பத்திரமாக வைத்திருக்கிறேன்.

அந்தப்  பழையப் புத்தகமும் இப்போது  என்னிடத்தில் இருக்கிறது ஸ்டெல்லா என்கிற பெயருடன். என் கைக்கு வருவதற்கு முன்பு அந்தப் புத்தகத்தின் சொந்தக்காரராக  இருந்தது யாரோ ஒரு ஸ்டெல்லா. அவருடைய குழந்தைத் தனமான கையெழுத்தைப் பார்த்து, நானும் தோழிகளும் பேசிக்கொண்டது ஞாபகத்திற்கு வருகிறது. ‘’நாம காலேஜுக்கு வந்து தான் இதெல்லாம் படிக்கிறோம்…ஒரு சின்ன புள்ள ஸ்கூல் படிக்கும்போதே இதெல்லாம் படிச்சிருக்கு’ அவருடைய கதாபாத்திரங்கள் மட்டுமல்ல அவரது முகம் தெரியாத வாசகியையும் பற்றி எங்களைப பேச வைத்திருக்கிறார் சினுவா ஆச்சிபி.

அஞ்சலி சினுவா ஆச்சிபி (நைரீய எழுத்தாளர் )

6
Chinua Achebe
சினுவா ஆச்சிபி ( நைஜீரியா எழுத்தாளர் )
காலமானார்
அவருக்கு 82 வயது
1930 நவம்பர் 16 இல் பிறந்தவர்
மான் புக்கர் பரிசைப் பெற்றவர்
அவருடைய சிதைவுகள் புத்தகத்தைத் தமிழில் மகாலிங்கம் அவர்கள் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்
அதில் அந்த மாடுகா பாத்திரத்தின் பெயர் இன்னும் என் நினைவில்
இப்போது சினுவா ஆச்சிபியும் நினைவில்
(விரிவான குறிப்புகள் பிறுகு வரும் )

அறிவிப்பு சேலத்தில் கவிதைத் திருவிழா 18 புத்தகங்கள் விமர்சன கூட்டம்

164444_4595415318689_243696063_n

அறிவிப்பு லண்டன் நிகழ்வு

Flyer for March 16 (1)

இலக்கியக்கூட்டம் நிகழ்வு திருப்பூர்

24.02.2013

இலக்கிய கூட்டம் கோவை நிகழ்வு

FRNEW-27-MMMET-1

சவுதியில்மரணதண்டனைக்குஉள்ளானரிசானாநஃபீக்எழுதியகடிதம்!

 

download (13)

 

எனது உண்மையான வயது 19. நான் பிறந்த தேதி 02-02-1988. எனது வயது ஏஜெண்ட் அஜிர்தீன் என்பவரால் 02-02-1982 என மாற்றப்பட்டு எனக்காக கடவுச்சீட்டு வழங்கப்பட்டது. 01-04-2005-ல் நான் சவுதி அரேபியாவுக்கு வீட்டு வேலைக்காக வந்தேன். சுமார் ஒன்றரை மாதங்கள் ஒரு செல்வந்தரின் வீட்டில் வீட்டு வேலை செய்தேன். இந்த வீட்டில் சமைத்தல், பாத்திரங்களை கழுவுதல், நான்கு மாதக் குழந்தையைக் கவனித்துக் கொள்ளுதல் உள்ளிட்ட வேலைகளை நான் பார்த்து வந்தேன்.

 

 

 

குறித்த சம்பவம் நடந்த தினம் எனக்கு நினைவில் இல்லை. அது ஒரு ஞாயிற்றுக் கிழமை பகல் 12-30 மணியிருக்கும். அப்போது யாரும் வீட்டில் இருக்கவில்லை. நான் மட்டுமே இருந்தேன். அங்குள்ள நான்கு மாதக் குழந்தைக்கு நானே பால் கொடுப்பேன். அன்றைக்கும் வழமை போல பால் கொடுத்த போது குழந்தையின் மூக்கிலிருந்து பால் கொட்டியது. அப்போது நான் குழந்தையின் தொண்டையை தடவிக் கொடுத்தேன். குழந்தை கண் மூடியிருந்த படியால் நான் அது அயர்ந்து உறங்குகிறது என நினைத்துக் கொண்டேன்.

 

 

 

குழந்தையின் தாய் எஜமானி சுமார் 1-30 மணியளவில் வந்து சாப்பிட்டு விட்டு குழந்தையைப் பார்த்தார். பின்னர் என்னை செருப்பால் அடித்து விட்டு குழந்தையைத் தூக்கிச் சென்றார்.அப்போது அவர் அடித்ததில் என் மூக்கில் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. பின்னர் என்னை போலீசில் ஒப்படைத்தார்கள். அவர்கள் என்னை ஒரு பட்டியில் அடைத்து அடித்தார்கள் குழந்தையின் கழுத்தை நெறித்ததாக எழுதிக் கொடுக்குமாறும், கையொப்பமிடுமாறும் மிரட்டினார்கள்.

 

 

கையெழுத்திடவில்லை என்றால் மின்சார வதை கொடுக்கப் போவதாக மிரட்டிய போது நான் பயந்து போய் அவர்களுக்கு கையொப்பமிட்டுக் கொடுத்தேன். அப்போதுதான் நான் பயங்கரமாக உணர்ந்தேன்.சரியான நினைவு எனக்கில்லை குழம்பிய மன நிலையில் கையொப்பமிட்டேன்.

 

 

அல்லாஹ் மீது ஆணையாகச் சொல்கிறேன் நான் அக்குழந்தையின் கழுத்தை நெறிக்கவில்லை.

 

 

ரிஸானா நபீக்.

அல் த்வாத்மி சிறைச்சாலை,

அல் தவாத்மி, சவுதி அரேபியா.