Category: பதிப்பக அலமாரி

மொழியில் விளையாடும் மிலார்ட் பாவிச் / எஸ்.வாசுதேவன்

download (30)

உண்மை,நம்பகத்தன்மை,அனுபவம், லட்சியம், நீதி, தர்மம், நியாயம் இத்தியாதிகளை ஒதுக்கி மொழியின் பல சாத்தியப்பாடுகளோடு பிரதியில் விளையாடுகிறார் செர்பிய எழுத்தாளர் மிலோர்ட் பாவிச். பின் நவீனத்துவ எழுத்தாளர்களில் அதிமுக்கியமானவர் பாவிச்.ஒரே கதையை வாசகனை பல்வேறு கோணங்களில் வாசிக்க தூண்டுகிறார்.நாம் நினைக்க முடியாத அளவுக்கு புனைவில் வாசகனை பங்கேற்க வைத்து மொழியின் பலவித பரிமாணங்களை வெளிக்கொணர்கிறார். தமிழில் தற்போது சடங்காக வெளிவரும் ஆயிரம் பக்கம் நாவல்களை வாசித்து பழக்கப்பட்ட ஒரு வாசகனுக்கு, பிரதியில் பாவிச் ஆடும் மொழி மாயாஜாலத்தை பிடிக்கவே முடியாது.
பாவிச் கலையை இரண்டாக பிரிக்கிறார்.

(a) சிற்பம்,ஓவியங்களை நாம் பல வித கோணங்களில் பார்க்கலாம்.ஒவ்வொருகோணத்திலும் ஒரு புதிய பரிமாணம் கிட்டும்.இதை Reversible Art என்கிறார்.

(b) இசை,இலக்கியத்தை நாம் மரபாக நேர்கோட்டு தன்மையில் கேட்கிறோம்/தொடக்கம்_முடிவு என வாசிக்கிறோம். இதை Non reversible Art என்கிறார். ஆக புனைவு இலக்கியத்தை Reversible Art க மாற்றுகிறார்.அதாவது சிற்பம்,ஓவியங்களை போல் பல விதங்களில் வாசிக்கலாம்.வாசகனை பன்முக வாசிப்புக்கு உள்ளாக்குகிறார்.

பாவிச்சின் ஒவ்வொரு நாவலை வாசிக்கும் ஒரு வாசகன், மொழியின் தீராத விளையாட்டை எதிர் கொள்கிறான். இந்த மொழிப்புதிரில் பிரதியில் தன்னை மறந்து விளையாடுகிறான்.. இப்படி பிரதியில் ஒரு வாசகன் சுதந்திரமாக ஆடுவதற்கு முன்னுரிமைக் கொடுக்கிறார்.

(1) கசார்களின் அகராதி என்ற நாவல் ஆண் பால் பதிப்பு,பெண் பால் பதிப்பு என இரண்டாக வெளிவந்துள்ளது.ஒரே கதைதான் ஆனால் ஒரு பத்திதான் இரண்டு பதிப்புக்கும் உள்ள வித்தியாசம்.ஒரு பத்தியில் மொத்த நாவலின் கதை போக்கு மாறுகிறது. கூடுதலாக, இந்த நாவலுக்குள் 3 பார்வையில் கசார்களின் அகராதி கதை சொல்லப்பட்டுள்ளது. கிறிஸ்துவம், இஸ்லாம், யூதம் என மூன்று பார்வைகளை உள்ளடக்கி, முன்னுரையில் பாவிச் எழுதியதுபோல் எங்கிருந்து வேண்டுமானாலும் ஒரு வாசகன் வாசிக்க ஆரம்பிக்கலாம்.

அதாவது கசார்கள் என்ற கற்பனையான இனக்குழுவின் வரலாறு மூன்று கலாச்சார மொழியில் எழுதப்பட்டுள்ளது. கிறிஸ்துவத்தின் அடிப்படையில் சிவப்பு நிறப் புத்தகமாகவும், இஸ்லாமியத்தின் அடிப்படையில் பச்சை நிறப் புத்தகமாகவும், யூதத்தின் அடிப்படையில் மஞ்சள் நிறப் புத்தகமாகவும் தொகுக்கப்பட்டு அவர்களின் கலாச்சார வாழ்க்கை மூன்று கோணங்களில் எழுதப்பட்டுள்ளது.

(2) இவருடைய மற்றொரு நாவலை Landscape painted with tea , மரபாக முதல் பக்கத்திலிருந்து வாசித்தால்,வாசகன் நாவலின் மத்தியில் எச்சரிக்கை வருகிறது.இது வரையில் நேர்கோட்டு தன்மையாக வாசித்தது தவறு என குறிப்பிட்டு எப்படி வாசிக்கவேண்டும் என குறுக்கெழுத்து கட்டத்தில் நாவலின் பல அத்தியாங்களை குறிப்பிடுகிறார்.அதாவது மேலிருந்து கீழாகவும்,இடமிருந்து வலமாகவும் வாசிக்கலாம்.ஒவ்வொரு வாசிப்பிலும் ஒரு புதிய கதை உருவாகுகிறது.

(3) மூன்றாவது நாவல் The Inner Side of the Wind வேறு ஒரு விளையாட்டை ஆடுகிறார். மரபாக நாம் வாசிக்கும் நாவலின் முடிவு கடைசி பக்கத்தில்தான் இருக்கும்.இந்நாவலை முதல் பக்கத்திலிருந்தும் மற்றும் கடைசி பக்கத்திலிருந்தும் வாசிக்கலாம். முடிவு நாவலின் மத்தியில் உள்ளது. ஆக இங்கேயும் இரு வித வாசிப்புகளை முன்வைக்கிறார்.

(4) அடுத்த Last Love in Constantinople நாவலோடு டாரட் கார்டும் வாசகனின் கைக்கு வருகிறது. எப்படி வேண்டுமானுலும் குலுக்கி போட்டு, வரும் அத்தியாயம் பொருத்து வாசிக்கலாம்.ஒவ்வொரு குலுக்கலிலும் கதையும் மாறும். ரம்மி சீட்டாட்டத்தில் கோடிக்கணக்கான வழிகளில் சீட்டை சேர்க்கமுடிவது போல், நாவலோடு டாரட் அட்டைகளூம் நமக்கு தரப்படுகிறது. ஒரு முறை சீட்டு குலுக்கி வரும் அத்தியாயம் பொருத்து வாசித்தால், நாவலின் முடிவு ஒரு மாதிரி இருக்கக்கூடும், அடுத்த நாள், குலுக்கி போட்டு வாசித்தால் முடிவு வேறுமாதிரி இருக்கும்.

(5) பொதுவில் புனைவு எழுத்தாளர்கள் முன்னுரையில் சொல்வது நாவலில் வரும் சம்பவங்கள்,கதாபாத்திரங்கள் கற்பனை. ஆனால் Second Body நாவலில் இப்படி ஆரம்பிக்கிறார்.

இந்நாவலில் வரும் சம்பவங்கள்,கதாபாத்திரங்கள் அனைத்தும் உண்மை.ஆனால் இதை எழுதிய எழுத்தாளன் கற்பனை என தொடங்குகிறார். வாசிக்கும் வாசகன் தன் மரணத்தை பார்க்க சாத்தியமில்லை என்றுதான் தோன்றும் ஆனால் இந் நாவலை வாசிக்கும் வாசகன் கொல்லப்படுகிறான். இதை இணையத்தில் வாசிக்கமுடியும். ஒரு சீரியஸ் வாசகன் கூகுளில் தேடினால் கிடைக்கும்.
(6) அடுத்து ஒரு விளையாட்டை “Unique Item” என்ற நாவலில் முன்வைக்கிறார். காதலை மர்ம நாவலைப்போல் எழுதியுள்ளார். ஆனால் இந்நாவலின் விஷயமே வேறு. இந்த நாவலுக்கு 100 முடிவுகள். நீங்கள் வாங்கும் நாவலின் பிரதியும், நான் வாங்கி வாசிக்கும் பிரதியும் வெவ்வேறானவை. அதாவது கதையின் முடிவு வேறானது.

இதுமாதிரி ஒரே பதிப்பில் நூறு முடிவுகளோடு ஒரு நாவல்! நாவலின் முன்னுரையில் பாவிச், ஒரு படைப்பின் மரணம் முக்கிய முடிவில் இருக்கிறது என்ற தொன்மையான கூற்றை தான் இந்நாவலில் பின்பற்றியதாக குறிப்பிட்டு, ஒரு வாசகனுக்கு கிடைக்கும் பிரதியில் வரும் முடிவை ஏற்றுக் கொண்டு, மற்ற 99 முடிவுகளைப் பற்றி தெரிந்து கொள்ளவேண்டாம் என எழுதியுள்ளார். அதாவது புகைப்பிடித்தல் தீங்கானது. அது போல், ஒரே நாவலின் 100 முடிவுகளையும் வாசிப்பதும் கேடானது. இது மரணத்தை நூறு முறை சந்திப்பதற்கு ஒப்பானது என எச்சரிக்கையுடன் தன் முன்னுரையை முடிக்கிறார்.
(7) மெய் நிகர் வெளியான இணையத்தில் இதுவரை அச்சில் வெளிவர முடியாத ஒரு குறு நாவலை எழுதியுள்ளார். கதையின் பெயர் GLASS SNAIL. கதையின் துவக்கத்தில் வாசகர்களுக்கு முன் இரு தேர்வுகள். இரு கதாபாத்திரங்கள் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு கதாபாத்திரத்தை நேர்வு செய்து அதன் வாயிலாக கதையை வாசிக்கலாம்.

கதையின் மத்தியில் வாசகர்கள் முன் மற்றொரு இரட்டைத் தேர்வுகள். அதாவது கதையின் முடிவை வாசகர்களே தீர்மானிக்கலாம். அதாவது சோக முடிவு தேவையெனில் ஒரு திசையில் வாசிக்க வேண்டும் அல்லது மகிழ்ச்சியான முடிவு தேவையெனில் அம்புக்குறியிட்ட மற்றொரு திசையில் வாசிக்கவேண்டும். கதையின் தொடக்கத்தில் உள்ள மற்றொரு கதாபாத்திரம் வாயிலாக வாசித்தால் வேறொரு கதை பிறக்கும்.

கதாபாத்திரங்கள் பெயர்கள் எகிப்து இளவரசி Hatshepsut மற்றும் பண்டைய எகிப்து கட்டிட கலைஞர் Senenmut. கதையின் ஒரு முடிவு இரு கதாபாத்திரங்களும் மாண்டு, நம் முன் எழுத்தாக உருமாறுவதாக எழுதியுள்ளார்.

அபாரமான கதை.. ஒவ்வொரு அத்தியாமும் இரண்டு அல்லது மூன்று பத்திகளுக்கு மேல் இல்லை. ஒவ்வொரு அத்தியாய இறுதியிலும் அம்பு குறி வாயிலாக அடுத்த அத்தியாயத்திற்கு நகரலாம். மீண்டும் விளையாடியிருக்கிறார் பாவிச். அதாவது வாசகர்களுக்கு கதை தொடக்கத்தில் பல்வேறு சாத்தியப்பாடுகள் மற்றும் கதை முடிவின் பல கோணங்களை முன்வைத்து வாசகர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ற முடிவை தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை வழங்கியுள்ளார்.

இப்படி பிரதியில் அனாயசமாக விளையாடியவர் பாவிச். இருபதாம் நூற்றாண்டின் அதிமுக்கிய எழுத்தாளர். இதுவரையில் இலக்கியம், வாசிப்பைப் பற்றிய அரதப்பழசான கருத்துகளை புரட்டிப் போட்டு பிரதியில் நிரூபித்து காண்பித்தவர். இவரைப்போல் மொழியில் பரிசோதனை முயற்சிகளை செய்தவர் எவரும் இல்லை. வாசகர்களுக்கு பல சாத்தியங்களையும், பன்முக வாசிப்புகளை பாவிச் போல் முன்வைத்த எழுத்தாளர் உலக சரித்திரத்தில் எவரும் இல்லை.

இப்படி பிரதியில் பாவிச் விளையாடியதற்கு உந்துதலாக இருந்தது அச்சம் என்கிறார். அதாவது பயம் அதிகரிக்கும்போதுதான் ஒரு எழுத்தாளன் பிறக்கிறான் என்கிறார். பயம் அதிகரிக்க அதிகரிக்க, நாம் உண்மைக்கு அருகில் செல்கிறோம். பயம்தான் ஒரு எழுத்தாளனுக்கு ஆகச் சிறந்த நண்பன், தனக்கு சிறுவயது முதல் இருந்த பல அச்சங்களை பட்டியலிட்டுள்ளார்.. சிறுவயதில் தனக்கு முதுமை வரக்கூடாது என்ற பயம், தனிமை கண்டு பயம், ஆளில்லாத வீட்டைக் கண்டு பயம், இருட்டு வீட்டைக் கண்டு பயம், வீட்டிற்கு ஒரு கதவுதான் என்பதைக் கண்டு பயம், மற்றும் வீட்டின் பின்பறமும் அவருக்கு அச்சமூட்டியுள்ளது.

அவருக்கு வீடு மற்றும் வீட்டை சுற்றியுள்ள பயங்கள், எழுத்தில் படைப்பாற்றலின் உச்சத்திற்கு தள்ளியுள்ளது என ஒப்புக்கொள்கிறார். அவரை பொருத்தமட்டில், ஒரு வீட்டிற்கு ஒரு முன்வாசல் மற்றும் ஒரு பின் வாசல் என்பது பலத்த கிலியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தான் ஒவ்வொரு நாவலையும் ஒரு வீடு போல் கட்டியுள்ளதாகவும். உள்ளே நுழைவதற்கு எண்ணற்ற வாயில்கள், வெளியேறுவதற்கு பல வழிகளோடு விசாலமாகவும், சுதந்திரமாக நடமாடமுடிகிற நாவல் என்ற வீட்டை பிரதியில் கட்டியுள்ளேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

எழுத்தாளனைப் பீடத்தில் ஏற்றி, சூடம் கொளூத்தும் இரண்டாம் நூற்றாண்டு கபாலத்தை சுமக்கும் தமிழ் வாசகர்கள், பாவிச்சின் எழுதியதை கவனிக்கவேண்டும். அதாவது எழுத்தாளனை மறுத்து, வாசகர்களை முன்னிலைப்படுத்தி, முக்கியத்துவம் கொடுத்து, முழு சுதந்திரத்தையும், சுயமாகச் சிந்திக்கும் பொறுப்பை தன் எழுத்து முன்வைக்கிறது என்கிறார்.

பாவிச்சை பொருத்தமட்டில் ஒரு வாசகனை நுகர்வோராகவோ அல்லது பார்வையாளனகவோ(Spectator) இருக்கக்கூடாது. பங்கேற்ப்பாளனாக (Participator) இருக்கவேண்டும் என வலியுறுத்துகிறார். அதாவது தன் நூலை வாசிக்கும் வாசகர்களுக்கு லட்சக்கணக்கான தேர்வுகளில் வாசிக்கும் சாத்தியப்பாட்டை முன்வைக்கிறேன் என்றும், இப்படி எண்ணற்ற முறையில் தன் நாவல் வாசிக்கப்படுவது திருப்தி அளிக்கிறது என்கிறார். இப்படி ஒவ்வொரு வழியில் வாசிக்கும்போது, பாவிச் என்ற எழுத்தாளர் மறைகிறார்.

ஒவ்வொரு வழியில் வாசகன் வாசித்து ஒரு புது எழுத்தாளரை கண்டடைகிறான். ஆக இப்படி பாவிச்சை மறந்து, வாசிப்பில் பல புது எழுத்தாளர்கள் பிறப்பது தனக்கு உத்வேகத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது என்கிறார்.
1969 ல் இரு கவிதை தொகுதிகளை வெளியிட்டார். பெரிதாக கவனம் பெறவில்லை. ஆனால் 1984ம் வருடம் அவருடைய முதல் நாவல் கசார்களின் அகராதி வெளிவந்தவுடன் உலக கவனத்தை தன் பக்கம் ஈர்த்தார். ஒரு எழுத்தாளனாக இருநூறு வருடங்களுக்கு முன்னால் தான் பிறந்துவிட்டதாகவும், தான் எழுதுவதற்கு தன்னுடைய மூதாதையர்களும் ஒரு காரணம் என்கிறார். இரு எழுத்தாளர்களை தன் வாழ்நாளில் சந்திக்க விருப்பப்பட்டுள்ளார்.

ஒருவர் டி.எம்.தாமஸ் மற்றொருவர் போர்ஹெ. ஆனால் போர்ஹெவிடம் உரையாடுவதற்கு தயக்கம் என்றும், அவரை சந்திக்க நேர்ந்தால், அவருடைய பேச்சை அமைதியாக கேட்கவே விருப்பபடுவேன் என்கிறார். பலமுறை நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட பாவிச், அந்த அங்கீகாரம் கிட்டாமல் தன் 80 வயதில் 2009ம் வருடம் காலமானார்.

••••

தொடர்புக்கு

யாதென அழைப்பாய்
எஸ்.வாசுதேவன்

விலை 300

பக்கங்கள்318

மருதா பதிப்பகம்
6 , முதல் தளம்
77 தாமரைத் தெரு
பிருந்தாவன் நகர்
சென்னை 600 092

95000 61608

பதினொரு நிமிடங்கள்( Paulo Coelho ) – நாவல் வாசிப்பின் பகிர்வு – தர்மினி-

18119106_10210577528092348_268904011236594745_n

‘முன்பொரு காலத்தில் மரியா எனும் விலைமகள் ஒருத்தி இருந்தாள்’என்ற முதல் வரியுடன் நாவல் ஆரம்பமாகிறது. ஆம், இது மரியா என்ற 23 வயதுப் பெண் தன் பதின்பருவ நினைவுகளாகவும் பாலியற் தொழிலில் ஈடுபடவேண்டிய சூழ்நிலைகள், அதற்கான மனப்போராட்டம், இயல்பாக அதையாரு தொழிலாக ஏற்றுக்கொண்ட மனநிலை போன்றவற்றைக் குறிப்புகளாகவும் எம்முடனான உரையாடலாகவும் சொல்லிக் கொண்டு போகும் நாவல். பாவ்லோ கொய்லாவிற்கு 1997ல் கிடைத்த கையெழுத்துப் பிரதி அப்பெண்ணின் வாழ்வின் பதிவுகள், மரியாவுடனான உரையாடல் மற்றும் இக்கையெழுத்துப் பிரதியையும் அடிப்படையாகக் கொண்டு புகழ்பெற்ற பிரேஸில் நாவலாசிரியரான Paulo Coelho எழுதியது ‘பதினொரு நிமிடங்கள்’நாவல்.

நாம் பாலியல் வேறுபாடுகளை அறியாத குழந்தைகளாக விளையாடித்திரிந்த காலமொன்று உண்டு. பின்னொரு வயதில் நம் உடலை உற்றுக் கவனிக்கத் தொடங்குகின்றோம். நம்மைக் கவரும் மற்றைய பாலினத்தைப் பற்றிய இரகசியங்கள் எவையென யோசிக்கத் தொடங்குகின்றோம். முதலில் மாசற்ற காதலாக அது நம்மை ஈர்க்கும். மனவுணர்வுகள் மட்டுமே போதுமென்றும் உடல்கள் காதலுக்கு அப்பாற்பட்டவையென்றும் தோன்றும். ஒருவர் நம்மைக் கவனிக்கின்றார்.நாம் சிறப்பான நபராக இருக்கின்றோம். அப்போது சொற்களும் பார்வைகளும் இன்பத்தைத் துாண்டப் போதுமானவையாக இருக்கின்றன. பிறகொரு பொழுதில் வார்த்தைகள்-தீண்டல்கள்-முத்தங்கள்-தாண்டிப் பாலுறவு என்ற நிலை இருவரிடையில் ஏற்படும் போது இவ்வுலகமே இந்தப் பதினொரு நிமிடங்களுக்காகத் தான் இயங்குகிறது போல் எனக் கேள்வி ஏற்படும்.

11 வயதில் மாசற்ற காதலுற்ற மரியாவின் கதை. அவரொரு பாலியற் தொழிலாளியாகி வாழ்வு பாலின்பம் பற்றிய குழப்பங்களும் கேள்விகளும் அவற்றுக்கான விடைகளை அறிந்து அதிலிருந்து மீளும் உறுதியானவராக 23 வயதில் ஒரு நாவலுக்குரிய வாழ்க்கையைக் கடந்து அமைதியான வாழ்வொன்றைக் கண்டு கொள்கின்றார்.

15 வது வயதில் முத்தமிடுவது பற்றியும் எல்லாவற்றுக்கும் மேலாகக் காதலானது துயரத்துக்கான காரணங்களில் ஒன்றெனவும் அறிந்து கொண்டதோடு மூன்றாவதாகத் தற்செயலாகச் சுய இன்பம் பற்றியும் அறிந்து கொண்டாள்.

19 வயதில் ஆடையகம் ஒன்றில் பணிபுரியத் தொடங்கிய மரியா சேமித்த பணத்தில் ரியோ டி ஜெனிரோவிற்கு தனியாகப் பயணமாகிறாள். அங்கே சுவிஸ்நாட்டவனொருவன் வேலையொன்று இருக்கிறது என்பதன் பின்னிருக்கும் வளமான வாழ்வொன்றை நம்பி -பெற்றோருக்கு நல்ல வீடும் ஒரு பண்ணையும் தன்னால் உழைத்து வழங்க முடியுமென்ற நம்பிக்கையோடு பயணிக்கிறார் மரியா.

ஜெனிவாவில் இரவுவிடுதியில் நடனமாடும் வேலை. பிரேஸில் நாட்டைச் சேர்ந்த சக தொழிலாளி விவியன்‘சாகசம்-பணம்-கணவன் இந்த மூன்றில் ஒன்றைத் தானே தேடி வந்திருக்கிறாய்?’ என்று முதல் நாளே மரியாவை நோக்கிக் கேட்கிறார். இம்மூன்றும் எதிர்பார்த்ததைப்போல அப்பெண்களால் சாதிக்க முடியாமல் போவதற்கான சாத்தியங்களைச் சொல்லி மரியா செய்த ஒப்பந்தமும் அந்தப் பயணக்கடன் தீரவும் ஒரு வருடமாவது வேலை செய்தாலொழிய இதிலிருந்து மீள முடியாதென்ற உண்மை மரியாவைச் சோர்வடையச் செய்கின்றது. ஆனாலும்பகற்பொழுதுகளில் ஃபிரெஞ் வகுப்புக்குச் செல்வதும் நுால் நிலையம் சென்று ‘குட்டி இளவரசன்’ புத்தகத்தை எடுத்து வந்து படிக்கத் தொடங்குவதும் நாட்குறிப்புகளை எழுதுவதுமாக இயல்பிலேயே அறிவுத்தேடலும் சாதுரியமும் மிக்க பெண்ணான மரியா,அந்நியமான அந்நாட்டின் சூழலை எதிர்கொள்ளத் தொடங்கிவிடுகின்றார். ஃபிரெஞ் வகுப்பில் சந்தித்த அரபுநாட்டுக்காரரின் மீதான காதலில் ஓரிரவு மலையொன்றுக் சென்று வந்ததோடு இரவு விடுதி நடனப்பணி முடிவுக்கு வந்தது.வேலையால் நிறுத்தப்படுகின்றார் மரியா.

ஓர் இரவுக்கு ஆயிரம் ஃபிராங் தந்த மனிதன். மற்றொரு இரவு விடுதி. ஒரு பண்ணை வாங்குவதற்காக இன்னுங் கொஞ்சம் உழைக்கலாம் என்றால் என்ன? ‘இழப்பதற்கு எதுவும் இல்லையென்பதால் அவள் இதில் ஈடுபடுகின்றாள். ஏனெனில் அவள் வாழ்க்கை தொடர்ந்த அனுதின ஏமாற்றங்களைக் கொண்டது’.
ஆயினும், மரியா தன் நாட்குறிப்பேட்டின் பக்கங்களுடன் அவற்றைப் பகிர்ந்து கொண்டார். பணத்திற்கான இவ்வேலை புதிதாக எதையும் தரவில்லை. வெறுமனே கால்களை அகட்டுவதாகவும் ஆணுறை பயன்படுத்தும்படி கேட்பதாகவும் கொஞ்சம் டிப்ஸ் அதிகமாகக் கிடைக்குமென கொஞ்சம் முனகுவதாகவும் கடைசியில் ஒரு குளியல் போடும் விதமாகவும் இருந்தது.

புத்தகத்தின் ஓர் அத்தியாயத்தில் தான் தலைப்புக்கான காரணம் பதினொரு நிமிடங்கள் பற்றி ஓர் உரையாடல் ,‘ ஓர் இரவுக்கா?எங்கே சொல் மரியா,நீ மிகைப்படுத்திக் கொண்டிருக்கிறாய்.இது உண்மையில் நாற்பத்து ஐந்து நிமிடங்கள் மட்டுமே.உடைகளைக் களைவது,ப்ரியத்தை வெளிக்காட்டும் போலியான பாவனைகளைச் செய்வது,சற்று நேரம் உரையாடுவது,மீண்டும் ஆடை அணிவது இவற்றுக்காகும் நேரத்தை விட்டுவிட்டால் உண்மையில் பாலுறவுக்கு ஆகும் நேரம் பதினொரு நிமிடங்களே.

download (13)
இருபத்தி நான்கு மணிநேரங்கொண்ட ஒரு நாளில், இந்தப் பதினொரு நிமிடங்களுக்காகவே எவரொருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். குடும்பம் நடத்துகின்றனர்.வீறிடும் குழந்தைகளைச் சகித்துக்கொண்டு, வீட்டுக்குத் தாமதமாக வருவதற்குப் பைத்தியக்காரத்தனமான சாக்குகளை யோசித்தபடி, நுாற்றுக்கணக்கான இதர பெண்களைக் கடைக்கண் பார்வை பார்த்து அவர்களுடன் ஜெனிவா ஏரியைச் சுற்றி வர விரும்பியபடி…இந்தச் சமூகத்தில் ஏதோ பெரிய தவறு இருக்கவேண்டும். அது செய்தித் தாள்கள் கூறுவது போல அமோசன் மழைக்காடுகள் அழிவோ,ஓஸோன் அடுக்கில் ஏற்படும் சேதமோ,பண்டாக் கரடிகள் மரணமோ,சிகரெட்டுகளொ,புற்றுநோய் உண்டாக்கும் உணவுகளொ அல்லது சிறைச்சாலை நிலவரங்களோ இல்லை.’

அது முக்கியமாக அவள் செயற்பட்டுக் கொண்டிருக்கும் தொழில் சார்ந்தது தான் : பாலுறவு.
மரியாவைப் பார்த்து, உங்களது ‘பிரத்தியேக ஒளி’ ஓவியமாக்கச் சொல்கின்றது என்ற ஓவியன் ‘நீரினுள் கல்லொன்றை எறிந்தான்.கல் விழுந்த இடத்தில் சிறிய வட்டங்கள் தோன்றி, பெரிதாகியபடியே சென்று,தற்செயலாக அங்கே சென்று கொண்டிருந்த கூழாங்கல்லுடன் சம்பந்தம் ஏதுமில்லாத வாத்தொன்றைச் சென்று தொட்டன. அந்த எதிர்பாராத அலையைக் கண்டு பயப்பிடாமல் வாத்து அதனுடன் விளையாடத் தீர்மானித்தது.’

மரியா, ஒரு பாலியற்தொழலாளி என்பதை அறிந்திருந்த ஓவியன் ரால்ப் ஹார்ட் வாடிக்கையாளனாக மீண்டும் சந்திக்கின்றான். ஒருவரது ஆன்மா மற்றவரைத் தீண்டுகின்றது. தனது கண்டுபிடிக்கப்பட்ட காதலை மரியா உணர்கின்றார். மனதைத் தீண்டும் உடல் தான் காதலின் ஊற்று. வெறும் உடல்களால் மனதை வெல்லமுடியுமா?

90 நாட்களில் நாடு திரும்பவேண்டும். தொடர்ந்து உழைத்துச் சேமித்து ஒரு பண்ணையை தன் ஊரில் வாங்கும் திட்டம் ஒரு பக்கம்.மறுபுறம் காதலின் உணர்வுகளைக் கடக்க முடியாத பெண்ணின் இதயமாக மரியாவின் நாட்குறிப்பு சுயவிசாரணைகளைச் செய்கின்றது.

‘உங்களால் மற்றொருவரை உடைமையாக்கிக் கொள்ள முடியுமென நினைப்பது அர்த்தமற்றதென,வாழ்க்கை அவளுக்குக் கற்பித்திருந்த போதும், பொறாமையாக உணர்வது இயல்பானதே.அப்படி உடைமையாக்கிக் கொள்ள முடியுமென நம்பும் எவரும் தம்மையே ஏய்த்துக்கொள்கிறார்கள்.’
‘உறுதியான காதல் ,தனது பலவீனத்தையும்வெளிக்காட்டும் காதலாகும்…’ என்று தன்னை ஆட்கொண்ட காதல் பணத்துக்காக மேற்கொள்ளும் உறவுகளினின்று எவ்விதம் வேறுபடுகின்றது என்ற கேள்விகளை எழுப்புகின்றார்.காரணங்களை-மனித மனங்கள் பற்றிய குறுக்கறுப்புகளைச் செய்கின்றார்.
‘என் வாடிக்கையாளர்கள் நினைப்பதற்கு மாறாக ,பாலுறவை அனைத்து நேரமும் மேற்கொள்ள முடியாது.நம் அனைவருள்ளும் ஒரு கடிகாரம் இருக்கிறது.நாம் காதல் செய்யவேண்டுமானால் இரு கடிகாரங்களின் முட்களும் ஒரே சமயத்தில் ஒரே நேரத்தைக் காட்டவேண்டும்.அது தினமும் நிகழாது.நீங்கள் மற்றவரை நேசித்தால் ,நலமாக உணர்வதற்காக நீங்கள் பாலுறவைச் சார்ந்து இருக்கமாட்டீர்கள்.’ என்கிறார்.

ஆயினும், மரியாவுக்குச் சவுக்கால் அடித்து இன்பங்காணும் வாடிக்கையாளன் கொடுத்த வலியை பரவசமாய் உணர்த்தியது எது? அதுநாள் வரை அனுபவிக்காத உணர்வாக அப்பரவசத்தீண்டலை செய்தது ஒரு சவுக்கின் நுனியா?அல்லது வலிகளை-துன்பங்களை விரும்பி ஏற்கும் இரசிக்கும் மனமா?வலி , வேதனை ,சாடிசம் மற்றும் மாசோயிசத்துக்குள் அவருக்கு ஏற்பட்டவை உடலின் இன்பமா?தன்னை வருத்தும் ஒரு பெண்ணின் துயரங்களை விழுங்கிவிட்ட அனுபவமா? குளிர் காலத்தில் வெறுங்காலுடன் அவளை நடக்கச் செய்த காதலன் சொல்கின்றான்‘ நேற்று நீ வலியை அனுபவப்பட்டாய்,அத்தோடு அது இன்பத்துக்கு இட்டுச் செல்லும் என்று கண்டு பிடித்தாய்,இன்றும் நீ வலியை அனுபவப்பட்டாய் ,அமைதியைக் கண்டு கொண்டாய்,அதனால் தான் நான் உன்னிடம் சொல்கிறேன்,அதற்குப் பழகிப்போகாதே.ஏனெனில் ஒரு பழக்கத்துக்கு அடிமையாவது ரொம்ப எளிது.அது மிகவும் வலிமையான போதை. நம் தினசரி வாழ்வில் ,வெளித் தெரியாத துயரங்களில், நாம் செய்யும் தியாகங்களில்,நமது கனவுகள் அழிந்து போனதற்கு காதலைக் குறை கூறுவதில் வேதனை இருக்கிறது.வலி அதன் உண்மை முகத்தைக் காட்டும் போது, அச்சுறுத்துவதாக இருக்கும். ஆனால் தன்னல மறுப்பாகவோ, தியாகமாகவோ, கோழைத்தனமாகவோ மாறுவேடத்தில் வரும் போது மிகவும் வசீகரமானதாக இருக்கும். எவ்வளவு தான் நாம் அதனை நிராகரித்தாலும் மனிதர்களாகிய நாம் வலியுடன் இருப்பதற்கு அதனுடன் சரசமாடுவதற்கு அதனை நம் வாழ்வின் ஓர் அம்சமாக ஆக்கிக் கொள்வதற்கு ஏதாவதொரு வழியைக் கண்டுபிடித்துக் கொள்கிறோம்.’

பிரேஸிலுக்குத் திரும்பிச் செல்வதற்கு முன்னர்,பண்ணை நிர்வாகம் குறித்துப் படிக்கவென இரவல் வாங்கிய புத்தகத்தைக் கொடுப்பதற்காக நுாலகம் சென்ற மரியாவிடம் தோழியாகிவிட்ட நுாலகர், மரியா முதன் முதலாக வந்த போது ஒரு பாலியல் தொழிலாளியாகத் தான் அறிய வேண்டியவைகளுக்கு ஏதும் புத்தகம் இருக்கின்றதா எனக் கேட்டதை நினைவு படுத்துகின்றார். இதோ அந்தப் புத்தகங்களை அடுக்கி வைத்திருக்கின்றோம் என்கிறார். அப்போது அப்பெண்கள் இருவரிடையில் உரையாடல் நிகழ்கின்றது. நுாலகர் கேட்கின்றார், உனக்குத் தெரியுமா ‘கிளிட்டோரிஸ்’ சமீபத்தில் தான் கண்டுபிடிக்கப்பட்டது. 1559 ல் தான் ரியால்டோ கொலம்போ எனும் மருத்துவர் ‘டி ரி அனாடமிகா’எனும் தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்ட பிறகு தான் கிளிட்டோரிஸ் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது என்ற தகவலைச் சொல்லி, சில ஆப்பிரிக்கப் பழங்குடியினரால் இதை நீக்கும் வழக்கம் இப்போதும் இருப்பதைப் படிக்கிறோம், அது பெண்களுக்கான பாலுறவு இன்ப உரிமையை மறுத்துவருவது தான் என்கிறார்.

19 ம் நுாற்றாண்டில் ஐரோப்பியாவிலும் கூட பெண்ணுடலில் இருக்கும் முக்கியத்துவமற்ற பகுதியாகக் கருதப்பட்டு நரம்புத் தளர்ச்சி, வலிப்பு, மலட்டுத்தன்மை மற்றும் பாலுறவில் அதீத ஈடுபாடு போன்றவற்றுக்குக் காரணமென்று நம்பி அறுவைச் சிகிச்சை மூலம் நீக்கப்பட்டதும் நடைபெற்றதுதான் எனப் பெண்கள் அவர்களது இன்பத்துய்ப்புக்கான உடலின் மெல்லிய ஒரு பாகத்தை நீக்குவதில் ஆண்மையச் சமூகம் எவ்வாறு முனைப்பாயிருந்தது என்றும் நம்மைச் சிந்திக்கச் செய்யும் உரையாடலாக அது நீள்கின்றது. ஓர் ஆணால் பெண்ணுக்கு வழங்க முடியாத பரவச அனுபவத்தை பெண்ணே தன்னுடலில் கண்டுணர முடியும் என்ற அறிதலை அவர்கள் தம் வாழ்வின் உதாரணங்களோடு பகிர்ந்து கொள்கின்றனர். பெண் மனதை-உடலைப் பற்றிய புரிதலின்றி ஆண்கள் தங்களது சுயத்தை மட்டுமே முன் வைப்பவர்களாக காதலிலும் காமத்திலும் இருக்கின்றனர்.

download
பெண்கள் தம் உடலை அறியாதவர்களாகவே வளர்வதும் வளர்க்கப்படுவதுமாகத் தான் இருக்கின்றனர். அவர்கள் தம் உடல் பற்றிப் பேசுவதும் எழுதுவதும் கூட அதிர்ச்சியாகவே பலருக்கும் இருக்கின்றது. இன்றும் இலங்கை உட்பட சில நாடுகளில் குழுக்களாக மூடிய அறைக்குள் பிளேட்டுகளால் அறுத்து நடக்கும் இக்கொடுமை நிறுத்தப்படவேண்டியது. பெண்ணுறுப்பின் உணர்வரும்பின் துண்டிப்பு என்பது காது குத்துவதைப் போலவோ அல்லது ஆபிரிக்க சில இனக்குழுக்களுக்கிடையில் தம் அடையாளங்களுக்காக முகங்களில் கீறல்களைச் செய்வதைப் போலவோ இல்லை. சில துளிகள் இரத்தம் மட்டுமே அங்கு சிந்தப்படுவதில்லை. அது அவளது பாலின்ப உரிமையை மறுக்கும் வன்செயல் தான் இது. ஏன் எதற்கு எனக் கேட்காமல் பழகிப்போய்விட்ட பல சடங்குகளைப் போல, மூடநம்பிக்கைகளைப் போல மறுக்க வேண்டிய சடங்கு அது என்ற புரிதல் இன்றும் கூட அவசியமாயிருக்கின்றது. தானொரு பெண்ணாக இயல்பான உணர்வுகளோடு தன்னுடல் பற்றிய புரிதலுக்கு முன்பாகவே அதற்கான உரிமை மறுக்கப்படும் செயல் தான் இது.

மரியா என்ற இக்கதாபாத்திரம் திரும்பி வந்து துணைவரும் இரு பெண் குழந்தைகளுமாக சுவிஸ் லுாசன் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் பெண் என பாவ்லோ கொய்லோ தன் பின்னுரையில் முடித்திருப்பது, அந்தரித்த படி இதை வாசித்தவர்களுக்கு ஆறுதல் தான். அவர் விரும்பாமல் தள்ளிவிடப்பட்ட சூழ்நிலையிலிருந்து தப்பிவிட்ட உறுதிநிறைந்த பெண்ணாக, காதலும் வாழ்வைத் தேடுதலும் – வலி , பணம்,பாலியற்தொழிலில் பண்டமான பெண்கள், அவர்களை விலை கொடுத்துக் கொடுமை செய்யும் ஆண்கள், மனிதர்களின் உணர்வுகளுமாகத் நிரப்பியபடியிருந்த மரியாவின் கையெழுத்துப் பிரதியின் சாரம் ஒரு நாவலாகி மனிதர்களை விசாரணை செய்கின்றது.

‘நான் இரண்டு பெண்களாக இருக்கிறேன்.ஒருத்தி அனைத்து இன்பங்களும், வாழ்க்கை எனக்களிக்கும் காதலும் சாகசமும் வேண்டுமென விரும்புகிறாள். இன்னொருத்தியோ பழக்கத்துக்கும், குடும்பவாழ்க்கை, திட்டமிட்டுச் சாதிக்க வேண்டிய விஷயங்களுக்கும் அடிமையாய் இருக்க விரும்புகிறாள். இருவரும் ஒரே உடலில் ஒருவருக்கொருவர் சண்டையிட்டபடி இருக்கின்றனர்’ என்ற வரிகள் மரியாவிற்கானதல்ல. ஒவ்வொரு பெண்ணும் இவரின் எழுத்துகளில் தம்மைக் காணக்கூடும்.அதற்கு மரியா போல் நம்மிடம் நாமே உண்மையானவர்களாய் சுயவிசாரணை செய்யாமல் இதைக் கண்டுணர முடியாது.

••

தமிழில் – க. சுப்பிரமணியன்.
எதிர் வெளியீடு –
விலை 220.
தர்மினி

உள்ளங்கை தொழில்நுட்பம் / ஷான் எழுதிய “ஆண்ட்ராய்டின் கதை” / வாசிப்பனுபவம் / பாலகுமார் விஜயராமன்

download (15)

“புதிய விஷயத்தை விளக்க, பழக்கமான சொற்களையே பயன்படுத்துங்கள்” என்பார்கள். எந்தவொரு சிக்கலான தொழில்நுட்பமும் அதனைப் பயன்படுத்தும் சாதாரண மக்களுக்கு எளிமையாக இருக்கும்பட்சத்திலேயே அது வெற்றியடையும். அதே போல ஒரு புதிய தொழில்நுட்பத்தைப் பற்றிய அறிமுகமும் எளிய வார்த்தைகளால் சொல்லப்படும் பொழுது தான், அதன் மீதான ஆர்வமும், விருப்பமும் அதிகரிக்கும்.

கவிஞராக, ஓட்டப்பந்தய வீரராக, நீச்சல்க்காரராக, சைக்கிள் வீரராக, சமூக செயல்பாட்டாளராக இணையத்தில் அறியப்படும் ஷான் கருப்பசாமி என்கிற ஷான் அவர்களின் இன்னொரு அடையாளமான தொழில்நுட்பத் திறனை வெளிக்கொணர்ந்திருக்கும் புத்தகம் “ஆண்ட்ராய்டின் கதை”. ஆண்ட்ராய்டு பற்றிய எளிய அறிமுகக் கையேடாக, கைக்கு அடக்கமான சிறிய புத்தகமாக அழகாக வந்திருக்கிறது. மொத்தமே 10 அத்தியாயங்கள், எழுபதே பக்கங்களுக்குள்… யாரும் ஒரே அமர்வில் படித்துவிடக்கூடிய எளிய மொழியில்… இன்றைக்கு உலகளவில் பெருமளவில் பயன்படுத்தப்படும் நவீன தொழில்நுட்பமான “ஆண்ட்ராய்டு” பற்றி சிறப்பானதொரு அறிமுகத்தைக் கொடுத்திருக்கிறார் ஷான்.

தொழில்நுட்பம் சார்ந்த புத்தகம் என்றவுடன், வறட்சியான மொழியில் எக்கச்சக்க தரவுகள் கொண்ட, வல்லுநர்களுக்கான சமாச்சாரம் என்று மற்றவர்கள் ஒதுங்கி விடவேண்டாம். நாம் அன்றாடம் பயன்படுத்தக் கூடிய ஸ்மார்ட் போன் தோன்றிய வரலாறையும், அதன் தொழில்நுட்பம் அடைந்த பரிணாம வளர்ச்சியையும் கதை போல விவரித்திருக்கிறார் ஷான். வரலாறு, பரிணாம்ம் என்ற காலகட்டம் எல்லாம் இன்றைய தொழில்நுட்ப அசுர வளர்ச்சியில் வெறும் பத்து ஆண்டுக்குள் நடந்த மாற்றங்கள் தான். நோக்கியா 1100 முதல் சியோமி வரையிலான பெரும்பயணத்தின் ஆதி முதல் இன்று வரையான எல்லாவற்றையும் நாம் பயனர்களாக அனுபவித்திருக்கிறோம். இப்புத்தகம் இவ்வளர்ச்சியின் பின்னாலான தொழில்நுட்பத்தையும், வர்த்தகத்தையும் நமக்குப் புரியும் மொழியில் பேசுகிறது, அவ்வளவு தான்.

Howstuffworks மாதிரியான தளங்கள் பிரபலம். ஒரு தொழில்நுட்பம் எவ்வாறு வேலை செய்கிறது என்று எளிய உதாரணங்களுடன் விளக்கப்பட்டிருக்கும். இப்புத்தகமும் அத்தகையதொரு சிறந்த முயற்சி. ஷான் அவர்கள் தொடர்ச்சியாக இது போன்று தொழில்நுட்பங்களின் புத்தக வரிசையை மேற்கொள்ள வேண்டும்.

நாம் பார்க்கும் பணி சார்ந்த விஷயங்களையே அலுவலகம் தாண்டி, பொது மக்களுக்கான படைப்பாக வெளியிடக்கூடிய வாய்ப்பு உண்மையில் ஒரு படைப்பாளிக்கு ஆத்மதிருப்தி அளிக்கக்கூடிய விஷயமாகவே இருக்கும். அவ்வகையில் முதல் அடி எடுத்து வைத்திருக்கும் ஷான் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். ஆரம்பத்தில் இருந்து இதனை எழுத ஷானை ஊக்கப்படுத்தி, அது புத்தகமாக வருவதற்கும் முன்னின்று செயலாற்றிய யாவரும் பப்ளிஷர்ஸ் ஜீவகரிகாலன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

பதின் வயது மற்றும் கல்லூரி மாணவர்களுக்குப் பரிசளிக்க உகந்த நூல். தயங்காமல் உங்கள் பரிசுப்பட்டியலில் இந்த புத்தகத்தை சேர்க்கலாம்.

•••

ஆண்ட்ராய்டின் கதை – கட்டுரைகள்

ஷான்

யாவரும் பப்ளிஷர்ஸ்

பக்கம் – 75

விலை – ரூ. 70

******

வரப்பெற்றோம்

வரப்பெற்றோம் பகுதிக்கு பதிப்பாள நண்பர்கள் ஒரு பிரதியை மலைகள் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டுகிறேன்
அந்தப் புத்தகங்களை இந்தப் பகுதியில் ஒவ்வொரு இதழிலும் அறிமுகப்படுத்த திட்டம்.

•••

download (1)

•••

download (2)

••
download-37

••

download-38

••
download (5)

••4_5430

•••

download-13

••
download (12)

•••

download (13)

•••

download (14)

•••

உயிர்கள் நிலங்கள் பிரதிகள் மற்றும் பெண்கள் / பா.வெங்கடேசன்

download-39

download-40

பிரபஞ்சத்தின் மிகப்​பெரிய சாபம்தா​னே நா​மெல்லாம்?
மனிதனில்லாத பிரபஞ்சம் களங்கமற்றதல்லவா?’ – (இழப்பு)

முருகனு​டைய 50 க​தைக​ளைக் கட்ட​மைக்கும் ஒரு
உத்​தேசக்காரணிப் பட்டியல் கீழ்கண்டபடி:
1. புறா, குரங்கு, கிளி, பாம்பு, மான், எலி, பூ​னை, காண்டா மிருகம், புழு, ஆடு, கழு​தை, சிங்கம் மற்றும் சில்லரை யாக ஆங்காங்​கே சிறுசிறு பூச்சிகள், பற​வைகள் இதர. இ​வை இடம்​பெறாத அல்லது இடம்​பெற வாய்ப்பில்லாத க​தைகளில்​ வெள்ளம், புயல், சிறு​தெய்வக் ​கோவில்கள், அல்லது புராதனக் கடிகாரம், ஊஞ்சல், கிணறு ​போன்ற​வை. இ​வை நகரம் கிராமம் என்கிற குறியீட்டுப் பின்புல மெல்லாம் இல்லாமல் இரண்டிலுமே ​பொதுவாக முன்​ வைக்கப்படுகின்றன.

2. ​பெரும்பான்​மைக் க​தைகளில் நகரப் பின்புலம் (தன் ​பெரும்பாலான க​தைகள் கிராமத்​தை அடிப்ப​டையாகக் ​கொண்ட​வை என்று ​கல்குதி​ரை (26) நேர்காணலில் முருகன் ​சொல்கிறார். ஆனால் 50 க​தைகளில் 16 க​தைகள் மட்டுமே நேரடியாகக் கிராமத்தில் நடப்ப​வை. அதாவது கிராமம் சார்ந்த சூழ​லையும் அதற்​கே ​பொருந்தக்கூடிய க​தைக் களத்​தையும் ​கொண்ட​வை).

3. இந்தத் ​தொகுப்பில் மாய யதார்த்தக் க​தைகளும் தொல் க​தைகளும் அற்புதக் க​தைகளும் நீதிக்க​​தைகளும் இடம் ​பெற்றிருக்கின்றன.

4. முருகனின் க​தைப் ​பெண்கள் அதிகப் பாலியல் ​வேட்கை உ​டையவர்களாயும் அதன்​பொருட்டு வ​ரையறுக் கப்பட்ட உறவுக​ளை மீறிய ​தொடர்புகளில் ஈடுபடுகிறவர் களாயும் இருக்கிறார்கள். ஆண்களுக்கும் இந்த ​வேட்கை இருந்தாலும் அவர்கள் அ​தை ​வெளிப்படுத்தும் ​தைரியம் அற்றவர்களாயும் தயங்கி ​வெளி​​யேறி விடுகிறவர்களாயு மிருக்கிறார்கள்.

​மேற்கண்ட இந்த நான்கு காரணிக​ளையும் எந்தச் சிந்தனைச் சரடு இ​ணைத்து முருகனின் சிருஷ்டி பரமாக வெளிப்படுத்துகிறது என்கிற ​தேடல் அவரு​டைய க​​தை களைப் புரிந்து​கொள்ள ஓரளவு உதவி ​செய்யலாம்.

முதலில் முருகனு​டைய க​தைகளில் மனித ​மையப் பிரபஞ் சம் என்பது மனிதனல்லாத பிற உயிர்களின் இருப்பால் ​தொடர்ந்து ​கேள்விக்கு உட்படுத்தப்படுவதாயும் சில
க​தைகளில் (‘கு​ளோப்’, ‘மாயக்கிளிகள்’, ‘நாய்’) கேலி ​செய்யப்படுவதாயும் இருக்கிறது. சூழல் குறித்த அதீத கவனம் அல்லது கவ​லை க​தைகளின் நனவிலியில் அ​வை அ​னைத் தின் ​பொதுத் ​தொனியாக அவற்​றை இணைக்கும் வண்ணம் ஓடிக்​கொண்​டே இருக்கிறது. இவற்​றைத் தற்​செயலான க​தை நிகழ்வு என்​றோ மனித இயல்பின் உருவகங்களாக ப​ழைய நீதிக்க​தைகள் மீதான பார்​வையி​லோ அல்லது கிராமம் து நகரம் என்கிற இரு​மை வடிவத் திலோ அர்த்தப்படுத்திக்கொள்வ​தைக் காட்டிலும் அதிக மானதும் ஆழமானதுமான ​பொருள் கொடலை அ​வை வாசகரிடம் ​வேண்டி நிற்கின்றன. ஏ​னென்றால் இந்த விலங்குகள் யாவும் (‘கு​ளோப்’ மற்றும் ‘புத்தரின் தொப்பி’ தவிர்த்து, ஆனால் அவற்​றையும்கூட முழுதாகத் தவிர்க்க ​வேண்டிய தில்​லை. அவற்றில் அவ்விலங்குகளின் செயல் பாடுகள் அவற்றின் இயற்​கை​யை நியாயப்படுத்து வதாகவேதான் வெளிப்படுகின்றன) தமக்​கே உரிய இயல்பு​கெடாமல் பிரபஞ்சத்தில் தங்கள் இருப்பிற்கான நியாயத்​தை, உரி​மை​யை, நிலத்திலும் இலக்கியப் பிரதி களிலும் மனிதனின் ஆக்கிரமிப்பை முன்னிறுத்திச் சுட்டிக் காட்டுவனவாகவே ​வெளிப்படுகின்றன. இ​வை வாசகருக்கு நீதி ​மொழியாக எ​தையும் சொல்ல​வேண்டிய தில்லை. ஆனால் புறா என்பது மருந்தாயும், குரங்கு என்பது உபத்திரவமாயும், மான் என்பது விருந்தாயும், கிளி திருட்டுத்தனமாயும், பாம்பு ப​கையாயும், கழு​தை சுய இன்பத்திற்கான கருவி யாயும் மனிதனால் சுய அடையாளங்க​ள் அழிக்கப்படுவனவாக முருகனின்
க​தைகளில் முன் ​வைக்கப்படும்​போது வாசக மனம் அனிச்​சையாகவே பதற்றத்திற்குள்ளாகிறது.

ஒரு பிணம் தின்னும் புழுவிற்குக்கூட இந்தப் பிரபஞ்சத்தில் அது பிறந்து வளர்வதற்கான காரணமும் ​தே​வையும் உரி​மை யும் இயற்​கைச் சுழற்சியில் இருக்கிறதுதா​னே. எனில்
இ​வைகளற்ற க​தைகளில் அழி​வைக்​கொண்டு வரும் இயற்​கைச் சீற்றங்க​ளையும் ​கோபக்கார ​தெய்வங்க​ளையும் இயக்கம் நின்று​போன ப​ழைய ​பொருட்க​ளையும் முருகன் ​வைப்ப​தை எ​​தேச்​​சை நிகழ்வாக எடுத்துக்கொள்ள முடிவதில்​லை. இதன் இன்​னொரு பகுதியாக மனிதனால் அழிக்கப்பட்டுவரும் பிற உயிரினங்களின் ​வேறு வழியற்ற அத்துமீற​லை முருகனின் சில க​தைகள் (‘கு​ளோப்’, ‘குரங்குகளின் வருகை’, ‘மாயக்கிளிகள்’, ‘நாய்’, ‘காண்டா மிருகம்’, ‘புழு’, ‘சாம்பல் நிறத் தேவ​தை’ (ஒரு மனிதக் காதலியின் இடத்திற்குள் ஊடுறுவுகிறது), ‘புத்தரின் ​தொப்பி’, ‘கானகம் க​லையத் தொடங்கியது…’) படம் பிடிப்ப​தையும் கணக்கில் எடுத்துக்​கொள்ள​வேண்டும்.

download-37

முருகனின் க​தைகளில் விலங்குகள் ப​ற​வைகளின்
இருப்​பை இப்படிப் புரிந்து​கொள்வது மற்​றொரு காரணி யாகிய நகரச் சூழலின் இடத்​தை அர்த்தப்படுத்திக்​கொள்ள உதவும். ஏ​னென்றால் பிரபஞ்சத்தில் பிற உயிர்களின் இருப்பு மீதான முருகனின் க​தைத்துவ அக்க​றைதான் கிராமங்களின் இருப்புக் குறித்தான பிரக்​ஞையாக அடுத்தக் கட்டத்திற்கு வளர்கிறது. முருகனின் க​தைகள் கிராமத்துச் சூழ​லை யதார்த்தவாதக் க​தைப் பாணியில் ஒரு பு​கைப் படப் பிரதி​யைப்​போலச் சித்தரிக்கும் தன்மை ​கொண்ட​வையல்ல. அதில் தனக்கு விருப்ப​மோ ஈடுபாடோ நம்பிக்​கை​யோ இல்​லை என்று முருகனும் தன் ​நேர் காணலில் சொல்கிறார். அவர் தன் க​தைக் கிராமங்களை ஒரு வி​சேஷமான இடத்தில், நி​​லையில் ​வைக்கிறார். அதாவது அவரு​டைய ​பெரும்பாலான க​தைகளில் இடம் ​பெறும் நகரச் சூழலின் நனவிலிக்குள்​ளோ அல்லது ஞாபகங்களி​லோ அல்லது உணர்வி​லோ அவரு​டைய கிராமங்கள் உள்​பொதிந்து வைக்கப்படுகின்றன.

இதில் முக்கியமாக வாசகர் நி​னைவில் இருத்திக்​கொள்ள ​வேண்டி யது என்ன​வென்றால் இப்படி இன்​மையாக இடம்​பெறும் கிராமங்கள் முருகன் க​தைகளில் ஒருபோதும் நகரத்தின் இருப்புக்கு எதிர்வாக வைக்கப்படுவதில்​லை​யென்பதுதான் (‘இரண்டாவது மரணம்’ மற்றும் ‘வழித்து​ணை’ ஆகியவை அழகான இரு உதாரணங்கள்). அதாவது இந்தக் கிராமங்கள் நகரத்​தின் பா​ழ்த்தன்​மை​யை விமர்சிப்பதற் காக​வோ அல்லது தங்களு​டைய உன்ன தத்​தை விதந்​தோதிக் ​கொள்வதற்காக​வோ க​தைகளில் இடம் ​பெறுவ தில்​லை. ​சொல்லப்​போனால் கிராமம் என்பது ஒரு உன்னதமான நிலவெளி என்கிற பிர​மை​யெல்லாம் முருகனின் க​தைப் பிரக்​ஞையில் இல்லவும் இல்​லை.

அ​வை மனிதன் தவிர்த்த பிற உயிர்கள் க​தை ​வெளியில் தங்கள் இருப்​பை வாசகருக்கு நி​னைவுபடுத்தும், மற்றும் அதன்வழி​யே அதற்கான உரி​மை​யை ​மௌனமாகப் பிரகடனப் படுத்தும் அளவிற்​கே தங்க​ளை ​வெளிப் படுத்திக்கொள்கின்றன. அ​தேசமயத்தில் இ​வை நி​னைவு களிலும் உணர்வுகளிலும் மீளும் தருணங்களில் இதற்கு ஆட்படும் கதாபாத்திரங்கள் பதற்றத்திற்கு ஆளாகிறார்கள் என்கிற வ​கையில் அ​வை மனிதனால் அழிக்கப்படும் அந்தப் பிற உயிர்க​ளைப்​போல​வே ஒருவ​கையான தவிர்க்கவியலாத அத்துமீற​லை நிகழ்த்தும் பண்​பைக் கொண்டு விடுகின்றன. அதாவது ஆக்கிரமிப்பிற்​கெதிரான அத்துமீறல் எனலாம்.

காலனிய ஆதிக்கக் காலத்தில் மனித​னையும் அவனு​டைய விஞ்ஞான அறி​வையும் மட்டு​மே முன்னிறுத்திப் ​பேசிக்​கொண்டிருந்த யதார்த்தவாதக் க​தை ​சொல்லலால் விளிம்பு நி​லைக்குத் தள்ளப்பட்ட கீ​ழைத்​தேயங்களின் மரபான க​தை​ சொல்லல் பாணி​யை இருபதாம் நூற்றாண் டின் இறுதிக்கால் பகுதியில் மீட்​டெடுக்கத் ​தொடங்கிய வரலாறு நமக்குத் ​தெரியாததல்ல. இந்த மாற்றுக்க​தை​ சொல்லல் தன்னியல்பி​லே​யே மனித ​மையப் பிரபஞ்சத்​ தைக் கேள்விக்குள்ளாக்கும் திற​னை உள்ளடக்கிய​தென்ப தால் முருகனின் 50 க​தைகளில் 20 க​தைக​ள் யதார்த்தவாதப் ​பாணியிலும் மீதம் 30 க​தைகள் ​மாற்றுக் க​தைப் பாணி யிலும் இருப்பது ஆச்சரியத்​தை ஏற்படுத்துவதாக இருப்ப தில்​லை.

முருகனின் மாய யதார்த்தக் க​தை ​சொல்லல் பாணி என்பது​யோவாகு​மேரிஸ் ​ரோஸாவின் நதியின் மூன்றாம் கரை சிறுகதையால் பாதிக்கப்பட்டதைப்போல ஒரு விதமான க​தைத்துவக் குழப்பத்​தை அடிப்ப​டையாகக் கொண்டு இயங்குவது (‘இரண்டாவது மரணம்’, ‘ஆற்​றோடு ​போனவன்’, ‘சாயல்’, ‘சத்திரம்’). மேலும் இவரின் இந்த வகைக் கதைகள் ஒ​ரே மாதிரியான க​தைப் பின்ன​லையும் ​கொண்ட​வை. பிறபாணிக் க​தைக​ளைப் ​பொறுத்த
வ​ரை அதில் அ​வை எவ்வளவு தூரம் க​தையாக ​வெற்றி ​பெற்றிருக்கின்றன என்பது தனியாக விவாதிக்கப்பட ​வேண்டிய விஷயம். ஆனால் யதார்த்தவாதக் க​தை ​
சொல்லலினூ​​டே இவற்றின் இருப்பும் அவற்றினுள் மரபான க​தை வடிவப் பிரக்​ஞையின் ஊடுறுவலும்தான் ​மே​லே விவரித்த இரண்டு காரணிகளின் நீட்சியாக இந்தக் க​தைகளின் ​செய்தி என்று வாசகர் நிச்சயமாக எடுத்துக்​கொள்ள முடியும்.

கூர்ந்து கவனித்தால் ​நேரடியாகவும் ம​றைந்தும் பாலியல் ​வேட்​கையின் பல பரிணாமங்கள் விரவிக் கிடக்கும் முருகனின் க​தைகளில் அதன் அடிப்ப​டை என்று ​
சொல்லப்பட்டிருக்கிற காதல் என்கிற மனம் சார்ந்த வஸ்து இல்ல​வே இல்​லை என்ப​தை வாசகர்கள் ஆச்சரியத் துடன் கண்டுபிடிக்க முடியும். பாலியல் வேட்​கை​யை இயல்பூக்கம் என்றும் காத​லை மனித இனக்கலாசார வளர்ச்சியின் வி​ளை​பொருள் என்றும் ​வைத்துக்​கொண் டால் முன்ன​தை உடலுக்கும் பின்ன​தை மனதிற்கும் இ​ணை ​வைக்க முடியும். எனில் உட​லை இயற்​கையின் சிருஷ்டி என்றும் மன​தை சமூகத்தின் கண்டுபிடிப்பு என்றும் பொருள்​கொள்ள, முருகனின் க​தைகள் ஏன் இயல்பாக​வே காம வயப்படுமளவிற்குக் காதல் வயப் படுவதில்​லையென்பது விளங்கும். காமம், குறிப்பாகப் ​பெண்களின் காமம், இங்​கே பிரபஞ்சத்தில் மனித​னைத் தவிர்த்த ஏ​னைய உயிர்களின் இருப்பினு​டைய குறியீடா கவே க​தைகளின் ​போக்கில் வளர்ச்சியுறுகிறது. என​வே தான் காமம் மனித விதிகளுக்குள் அடங்காத இயற்​கை வழியில் தன்​னை ​வெளிப்படுத்திக்​கொள்ள வி​ழைகிறது.

முருகன் க​தைகளில் கணவன் ம​னைவிக்கி​டை​யேயான ஒழுங்க​மைக்கப்பட்ட காமம் ஒன்​றைத் தவிர்த்து (அப்படி அபூர்வமாக நிகழும் ஒ​ரே​யொரு இ​ணைவும் விபத்தில் அடிபட்டு அற்பாயுசில் போய்விடுகிறது (‘சாயல்’) மற்றபடி ஒருத​லைக்காமம், பலர்​மேல்காமம், சுயகாமம், கள்ளக் காமம், வி​லைக்காமம், காலம் கடந்த காமம் என மண விதிகளுக்கு அப்பாற்பட்டுச் சாத்தியமுள்ள அத்த​னை வ​கைகளுக்கும் மாதிரிகள் கி​டைக்கின்றன. ஆனால் கூர்ந்த அவதானிப்புள்ள வாசகனுக்கு இ​வை உண்​மையில் குறிப்பது காமத்​தை அல்ல (அல்லது இவற்றின் ​நோக்கம் இன்பம் துய்த்தல் அல்ல) என்பதும் மனம் என்கிற, அதிகாரத்தால் கட்டப்பட்ட அ​மைப்பானது உடல்​ மேல் (இ​தை மனம் என்கிற வஸ்து வளர்ச்சியுறாத, ​வெறும் உடல்களாக​வே அ​லையும் ஆறறிவிற்குக்
கு​றைந்த உயிர் கள் என்று எடுத்துக்கொள்ள ​வேண்டும்) நிகழ்த்தும் ஆக்கிரமிப்பின் மீதான கலகம் என்பதை புரிந்து​கொள்ள முடியும். புழக்க​டைக்காமம் ஏன் முருகன் க​தைகளில் ​பெரும்பாலும் ​பெண்களா​லே​யே நிகழ்த்தப் படுகின்றன என்ப​தையும் நாம் இவ்விதமான அணுகு மு​றையில் விளங்கிக்​கொள்ள வேண்டியிருக்கிறது.

மனித ​மையப் பிரபஞ்சத்தினுள் பிற உயிர்களின் இருப்பு, நகரத்திற்குள் கிராமத்தின் இருப்பு, யதார்த்தவாதப் ​பெரும் பிரதிப்பரப் பிற்குள் மரபான க​தை​ சொல்லலின் இருப்பு ஆகியவற்​றைப்​போல​வே ஆண்களின் உலகில் ​பெண்களின் இருப்பும் பௌதீக ரீதியாக விளிம்பு நி​லைக்கும் கருத்தி யல் ரீதியாகக் கற்ப​னை நி​லைக்கும் பிரதி ரீதியாக மாய யதார்த்தத்திற்கும் நகர்வதாக இருக்கிறது. மனிதக் குடியிருப்புகளுக்குள் மிருகங்களின் ஊடுறுவ​லை முருகன் என்னவிதமான மனநி​லையில் ​சொல்கிறா​ரோ அ​தே விதமான மனநி​லையில்தான் ‘இடம்’, ‘கிழத்தி’, உரு மாற்றம், மாயக்கிளிகள் முதலான க​தைகளின் ​பெண் பாத்திரங்க​ளையும் கையாள்கிறார். அ​தே சமயத்தில் இவள் மனித இருப்பின் இரக்கமின்​மையால் காடுகளுக் குள் துரத்தப்படும், ​கொ​லையுணப்படும், மருந்தாக்கப் படும், அனா​தையாக்கப்படும் உயிர்க​ளையும் நிலங்க​ளையும் பிரதிக​ளையும் ​போலன்றி மனதின் இருப்புக்குப் புகலிடம் தரும் அ​தே அறிவின் தந்திரத்​தைப் பயன்
படுத்தித் தன் உடலின் இருப்​பை வஞ்சகமாகத் தக்க ​வைத்துக்​கொள்கிறாள். இதனால்தான் ஊருக்குள் ஊடு றுவும் விலங்குக​ளைத் திரும்பக் காட்டிற்குள் மனிதனால் விரட்ட முடிவ​தைப்​போல, ஆணால் ​பெண்க​ளைத்திரும்ப அவர்களு​டைய ஸ்திதியில் நிறுத்தி​வைக்க முடிவதில்​லை.

அங்கே அவன் ​பெரும் ​தோல்வி​யைச் சந்திக்க ​நேர்கிறது. முருகனின் க​தைகளில் ​பெண்கள் மிருக இச்சை​யோடு அதற்கான மிருகத்தனமும் பிடிபடும் சூழல் வரும்​போது மிருக பலமும் இயல்பூக்கமுள்ள தந்திரமும் மிருக உலகின் தார்மீக நியதியும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இங்​கே கலாசாரக் கட்ட​மைப்புகளான அன்பு, காதல், விசுவாசம், ​நேர்​மை போன்ற அடி​மை உணர்வுகளுக்கு ஏது இடம். ண

( 2017 சென்னைப் புத்தகக் கண்காட்சியில் ஆதி பதிப்பகத்தின் வெளியீடாக வெளிவர இருக்கும் ‘ஜீ.முருகன் சிறுகதைகள்’ தொகுப்பிற்கு எழுதப்பட்ட முன்னுரை. )

இளங்கவிஞர்க்கு கடிதங்கள் / ரெய்னார் மரியா ரில்கே..

download-38

பாரிஸ்

பிப்ரவரி 17, 1903

சில தினங்களுக்கு முன்னர்தான் உனது கடிதம் வந்தது. என்னிடம் நீ வைத்துள்ள பெரும் நம்பிக்கைக்காக உனக்கு நன்றி பாராட்ட விரும்புகிறேன். அவ்வளவுதான் நான் செய்யக்கூடியது. உன் கவிதை களை என்னால் விவாதிக்கலாகாது; எத்தகையதொரு விமர்சன நடவடிக்கையும் எனக்கு அந்நியமானதாக இருக்கும். விமர்சன வார்த்தைகள் போன்று கலையை அவ்வளவு சொற்பமாக ஸ்பரிசிப்பது எதுவுமில்லை; அவை எப்போதும் ஏறக்குறைய அதிருஷ்டவசமான தவறான புரிந்துகொள்ளலாகிவிடும். நம்மை நம்பவைக்கும் வகை யில், அவற்றை அவ்வளவு நிச்சயமானதாகவும் வெளிப்படுத்த முடிவதாகவும் காட்டுகின்றனர். ஆனால் விஷயம் அப்படியில்லை; பெரும்பாலான அனுபவங்கள் வெளிப்படுத்த முடியாதவை, எந்த வார்த்தையும் இதுவரையிலும் நுழைந்திராத ஒரு வெளியில் அவை நிகழ்கின்றன, பிற கலைகளை விடவும் அவை இன்னும் வெளிப் படுத்தமுடியாதவை, அற்பமாயும் தோன்றிமறைவதாயும் நம் வாழ்வு இருக்க, நீடித்து நிற்பதான அவை மர்மம் பொதிந்த இருப்புகளாய் உள்ளன.

இக்குறிப்பினை முன்னுரையாக வைத்துவிட்டு, உன் கவிதைகள் தமக்கான பாணியைக் கொண்டிருக்கவில்லை என்று மட்டும் சொல்ல விரும்புகிறேன். ஒருவித அந்தரங்கம் சார்ந்த நிசப்தமானதும் மறைவானதுமான தொடக்கங்களை அவை பெற்றிருப்பினும், Mதூ குணிதடூ எனப்படும் இறுதிக்கவிதையில் இதனை மிகத் தெளிவாக உணர்ந்து கொள்கிறேன். இதிலே உனக்குரிய ஒன்று வார்த்தையாகவும் இன்னோசைச் சந்தமாகவும் மாற முயலுகின்றது. ‘கூணி ஃஞுணிணீச்ணூஞீடி’ என்னும் இனிய கவிதையில் அம்மாபெரும் தனித்த உருவத்துடனான ஒருவித நெருக்கம் தோன்றவே செய்கிறது. இருப்பினும் இக் கவிதை கள் இன்னும் தன்னிச்சையானவையாக இல்லாது, தம்மளவில் ஏதுமற்றவையாகவே உள்ளன – ஃஞுணிணீச்ணூஞீடி – யைப் பற்றியதும் கடைசிக் கவிதையும்கூட இப்படியே. உனது கவிதைகளைப் படிக்கும்போது என்னால் குறிப்பிட்டுச் சொல்ல முடியாதுள்ள பல்வேறு குறைபாடு களை, உனது கவிதைகளுடன் சேர்ந்து இணைக்கப்பட்டுள்ள அன்பான கடிதம், எனக்குத் தெளிவுபடுத்தின.

உனது கவிதைகள் நன்றாக உள்ளனவா என்று கேட்கிறாய். நீ கேட் கிறாய். இதற்கு முன் மற்றவர்களிடம் கேட்டிருக்கிறாய். இவற்றைப் பத்திரிகைகளுக்கு அனுப்புகிறாய். பிறரது கவிதைகளுடன் அவற்றை ஒப்பிடுகிறாய். சில பத்திரிகை ஆசிரியர்கள் உன் கவிதைகளை நிராகரிக்கும்போது விரக்தியடைகிறாய். இவ்வாறு செய்வதை நீ நிறுத்தவேண்டுமென்று மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன் (என் ஆலோசனையை நீ விரும்புவதாகச் சொல்லியிருப்பதால்). நீ வெளிப் புறமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறாய், இப்போதும் பெரிதும் தவிர்க்க வேண்டியது அதுதான். யாரும் உனக்கு ஆலோசனையோ உதவியோ செய்யமுடியாது-யாரும்.

நீ செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான். உனக்குள் நீ போக வேண்டும். உன்னை எழுதக் கட்டளையிடும் காரணத்தைக் கண்டறிய வேண்டும்; உன் இருதயத்தின் ஆழங்களுக்குள் அது தன் வேர்களைப் படர விட்டிருக்கின்றதா என்று காண வேண்டும்; நீ எழுதுவதற்குத் தடைவிதிக்கப்பட்டால், நீ மடிந்துபோக வேண்டியிருக்குமா என்று உனக்கு நீயே அறிக்கையிட்டுக்கொள். எல்லாவற்றையும் விட இது முக்கியமானது: இரவில் மிகவும் நிசப்தமான தருணங்களில் உன்னை நீயே கேட்டுக்கொள் – நான் எழுதி ஆகவேண்டுமா? ஆழமான பதிலுக்காக உனக்குள் தோண்டிப்பார். இதற்கான பதில் இசைவாக இருப்பின், “நான் எழுதியாக வேண்டும்” என்னும் எளிய, வலுவான பதில் கிடைத்தால், இத்தேவைக்கேற்ப உன் வாழ்வைக் கட்டமைத்துக் கொள்; தனது அடக்கமானதும் மிக அலட்சியமானதும் ஆகிய வேளை யிலும் கூட உன் வாழ்வு இத்தூண்டுதலுக்கான அடையாளமாகவும் சாட்சிய மாகவும் ஆகிவிடும். அப்புறம் இயற்கையுடன் நெருங்கிவர வேண்டும். பின்னர் இதற்குமுன் யாரும் முயற்சி செய்திராதபடி, நீ பார்த்தவற்றையும் உணர்ந்தவற்றையும், நீ நேசித்தவற்றையும் இழந்த வற்றையும் சொல்ல முயற்சி செய். காதல் கவிதைகள் எழுதாதே; மிகவும் தட்டையானதும் சாதாரணமானதுமான வடிவங்களைத் தவிர்த்துவிடு. இவற்றில் ஈடுபடுவது மிகவும் சிரமமானது, தனித்து வமான ஒன்றை உருவாக்கிட முற்றிலும் முதிர்ந்த ஆற்றல் அவசிய மாகும். இம்மாபெரும் மையக் கருத்துக்களிலிருந்து உன்னை விடு வித்துக்கொண்டு, அன்றாட வாழ்க்கை உனக்குத் தரக்கூடியதைப் பற்றி எழுது; உனது கவலைகளையும் ஆசைகளையும், உன் மனதில் கடந்து போகும் எண்ணங்களையும், ஒருவித அழகில் உள்ள உன் நம்பிக்கை யினையும் விவரி – நெஞ்சார்ந்த, நிசப்தமான, பணிவான நேர்மையு டன் இவற்றையெல்லாம் விவரி; மற்றும் உன்னை வெளிப்படுத்தும் போது, உன்னைச் சுற்றியிருக்கும் பொருட்களையும், உன் கனவுகளி லுள்ள படிமங்களையும், நீ நினைவில் வைத்துள்ள பொருட்களையும் பயன்படுத்து. உனது அன்றாட வாழ்க்கை வறியதாயிருப்பின், அதனைக் குற்றம்சாட்டாதே; உன்னைக் குற்றஞ்சாட்டு; அதன் வளங்களை எடுத்துரைக்கும் அளவுக்கு நீ கவிஞனாக இல்லையென்பதை உனக்கு நீயே ஏற்றுக்கொள்; படைப்பாளியைப் பொறுத்தவரை வறுமை என்பதும் ஏழை என்பவரும் ஒதுக்கவேண்டிய இடம் என்பதும் இல்லை.

உலகின் எந்தவொரு சப்தத்தையும் நுழையவிடாத சிறை ஒன்றுக்குள் நீ இருப்பினும் கூட, விலை மதிக்க முடியாத மாணிக்கமும் நினைவு களின் பெட்டகமும் ஆன குழந்தைப் பருவம், இன்னமும் உன்னிடம் இருக்கவில்லையா? அதன்பால் உன் கவனத்தைத் திருப்பு. இப்பாரிய கடந்த காலத்தின் ஒடுங்கிய உணர்வோட்டங்களை எழுப்பிட முயன்றால், உன் ஆளுமை வலுவாக வளரும், உன் தனிமை விரிவு கொள்ளும், மேலும் தொலைதூரத்திலே மற்றவர்களின் அமளிகள் கடந்து செல்கின்றதும், மங்கிய பொழுதுகளில் நீ வாழ்ந்திடக் கூடியதுமான இடமாக மாறும்.

மேலும் உனக்குள்ளான இம்மாறுதலிலிருந்து, உனக்கேயான உலகத் திற்குள் நீ இப்படி ஆழ்ந்ததன் காரணமாக, கவிதைகள் வரும், அப்போது நீ அவை நன்றாக இருக்கிறதா-இல்லையா என்று யாரைக் கேட்கலாம் என்று எண்ண மாட்டாய். இப்படைப்புகளில் பத்திரிகை களின் கவனத்தைத் திருப்பவும் முற்பட மாட்டாய். ஏனெனில் இவற்றை உனக்குப் பிரியமான இயற்கை உடைமையாக, உன் வாழ்வின் ஓர் அங்கமாக, அதனின்று வரும் ஒரு குரலாக நீ கவனிப்பாய். ஓர் அவசியத்தினின்று எழுந்திருக்குமாயின் ஒரு கலைப் படைப்பு நல்லதே. ஒருவர் மதிப்பீடு செய்வதற்கான வழிமுறை அது ஒன்றுதான்.

ஆகவே, பிரியமான நண்பனே, இது தவிர்த்து வேறெந்த ஆலோசனை களையும் என்னால் வழங்க இயலாது. உனக்குள் சென்று உன் வாழ்க்கை பிரவகிக்கும் இடம் எவ்வளவு ஆழமானது என்று கண்டுகொள்; நீ படைக்க வேண்டுமா என்னும் கேள்விக்கான பதிலை அதன் தோற்று வாயில் கண்டுகொள்வாய். அதனை விளக்குவதற்கு முற்படாது, உனக்கு அளிக்கப்பட்டபடியே, அப்பதிலை ஏற்றுக்கொள்.

அப்புறம், வெளியிலிருந்து என்ன வெகுமதி கிடைக்கும் என்று ஒரு போதும் கேட்காதே. விதியின் பாரத்தையும் பெருமையினையும் தாங்கிக்கொண்டு, அதனை உனதாக்கிக்கொள். ஏனெனில் படைப் பாளி தனக்கான உலகமாயிருக்க வேண்டும் மற்றும் தன்னிடத்திலும் இயற்கையிலும் அனைத்தையும் கண்டுகொள்ள வேண்டும் – அவனது ஒட்டுமொத்த வாழ்வும் அதற்கே அர்ப்பணிக்கப்படுகிறது.
ஆனால் உனக்குள்ளும் உனது தனிமைக்குள்ளும் ஆழ்ந்த பின்னர், கவிஞனாக மாறுவதை நீ கைவிடவேண்டிவரும். (ஏற்கனவே நான் சொல்லியுள்ளபடி, எழுதாமலேயே ஒருவர் வாழ முடியும் என்று உணரக்கூடுமாயின், அப்போது ஒருவர் எழுதவே கூடாது). இருப் பினும் அப்போது கூட இந்த அகத்தேடல் ஒன்றுமில்லாதுபோய் விடாது. உனது வாழ்க்கை அதனின்றும் தனக்கான பாதைகளைக் கண்டறியும் அவை நல்லவையாக, வளமானவையாக, பரந்து விரிந்த வையாக இருக்கும் என்பதே உன்னைப் பொறுத்து நான் ஆசைப் படுவது.

நான் வேறென்ன சொல்வது? ஒவ்வொன்றும் அதற்கேயான அழுத்தம் கொண்டுள்ளது என்றே எனக்குத் தோன்றுகிறது. கடைசியாக ஒரேயொரு ஆலோசனையை மட்டும் சொல்ல விரும்புகிறேன். உன் வளர்ச்சியின்போது நிசப்தமாகவும் நேர்மையாகவும் வளர்ந்து கொண்டிருக்க வேண்டும். அமைதியான வேளையில் உனது உள்ளார்ந்த உணர்வு மட்டுமே பதிலளிக்கக் கூடிய கேள்விக்கு, வெளிப்புறத்தில் பதில்களைத் தேடி, அதனை நீ சஞ்சலப்படுத்தக் கூடாது.

உனது கடிதத்தில் பேராசிரியர் ஹொரசெக்கின் பெயரைப் பார்த்தது எனக்குச் சந்தோஷமளித்தது. அந்த அன்பார்ந்த, கற்றறிந்த மனிதரிடம் நான் மிகுந்த மதிப்பும் ஆயுள் பரியந்தமான நன்றி பாராட்டுதலும் வைத்துள்ளேன். நான் எப்படி உணர்ந்துகொள்கிறேன் என்று அவரிடம் தெரிவிப்பாயா? அவர் இன்னும் என்னை நினைத்திருப்பது அவரது நல்ல தன்மையாகும், அதனை நான் போற்றுகிறேன்.

எனக்கு நீ அனுப்பியிருந்த உன் கவிதைகளை உனக்குத் திருப்பி அனுப்புகிறேன். உனது கேள்விகளுக்கும் நேரிய நம்பிக்கைக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி பாராட்டுகிறேன். என்னால் முடிந்த அளவு நேர்மையாகப் பதிலளித்துள்ளதன் மூலம், நிஜமாகவே ஓர் அந்நிய னான நான், என்னைச் சற்று தகுதியானவனாக ஆக்கிக்கொள்ள முயன்றிருக்கிறேன்.

மிகவும் உண்மையுள்ள உனது,

ரெய்னார் மரியா ரில்கே.

சமகாலத்தின் மீது படரும் வரலாற்றின் அபத்தம் ( தேவிபாரதியின் நட்ராஜ் மகராஜ் ) / அரவிந்தன்

download-6

புதிய கதைக் களங்கள், புதிய கூறல் முறைகள் எனத் தொடர்ந்து தனது தேடலை முன்னெடுத்துச் செல்பவர்களில் ஒருவர் தேவிபாரதி. அவர் அண்மைக் காலத்தில் எழுதியுள்ள சில சிறுகதைகள், ‘நிழலின் தனிமை’ என்னும் நாவல் ஆகியவை இதன் அடையாளங்கள். அந்த வரிசையில் இன்னொரு படைப்பைத் தந்திருக்கிறார் தேவிபாரதி. ‘நட்ராஜ் மகராஜ்’ என்னும் தலைப்பில் அவர் எழுதியுள்ள புதிய நாவல், தமிழ் நாவல் பரப்பைச் சில விதங்களிலேனும் விரிவுபடுத்தக்கூடியது.

‘நட்ராஜ் மகராஜ்’ எத்தகைய நாவல்? ந என்னும் தனிநபரின் அடையாளம் குறித்த கதையா அல்லது வரலாற்றைக் கண்டறிந்து அதைத் தன் விருப்பம்போல மீட்டுருவாக்கம் செய்யும் அரசியல் செயல்பாடுகளின் கதையா? பல்வேறு தரப்புகளும், பழம்பெருமைகளைத் தத்தமது தேவைகளுக்கேற்ற வடிவில் முன்னிறுத்தித் தனது சாதகங்களைக் கூட்டிக்கொள்ள விழையும் அரசியலைப் பேசும் கதையா? வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்யும் முயற்சிகளின் வினோதங்களைக் காட்டும் அபத்த நாடகமா? வரலாற்றை மீட்டெடுக்கும் அரசியல் நடவடிக்கையில் தனிநபரின் அடையாளம் மட்டுமின்றி அவரது வாழ்க்கையே எப்படி அடியோடு மாறிவிடும் யதார்த்தத்தைச் சொல்லும் கதையாடலா?

இவை அனைத்துமே உள்ளடங்கிய பன்முகத்தன்மை கொண்ட நாவல் என இதைச் சொல்லலாம். குறிப்பிட்ட மையத்தையோ சீரான கூறல் முறையையோ நேர்கோட்டிலான கதைப் போக்கையோ கொண்டிராத பின் நவீனத்துவ நாவல் என்றும் சொல்லலாம். வரலாற்றை மீட்டெடுக்கும் நடவடிக்கையின் ஊடுபாவுகளுக்கிடையில் வெளிப்படும் சமகால சமூக அரசியல் உளவியல் போக்குகளின் அபத்தங்களையும் தனிநபர் சார்ந்த அடையாளங்கள் அர்த்தமிழந்துபோகும் விதத்தையும் சொல்லும் இந்த நாவல், பல்வேறு சிக்கல்களும் பின்னல்களும் அடுக்குகளும் கொண்ட கதையாடலைத் தேர்ந்துகொண்டது மிகவும் இயல்பானதே.

ந என்பவன் வெறும் ந என்பவனோ ந என்னும் பெயரைக் கொண்ட சத்துணவு அமைப்பாளனோ அல்ல. நாட்டின் முதல் சுதந்திரப் போராட்ட வீரனின் நேரடி வாரிசு என்று தெரிந்த பிறகு அவன் வாழ்க்கை மாறத் தொடங்குகிறது. அந்த மாற்றம் சட்டென்று வந்துவிடவில்லை. தன் அடையாளம் இதுதான் என அவன் நம்புவதற்கே அதிக அவகாசம் தேவைப்படுகிறது. தன்னுடைய பாரம்பரியப் பெருமை தெரிந்த பிறகு அவனுக்கு ஏற்படும் மாற்றங்களைப் போலவே அதற்கு முன்னால் ஏற்படும் மாற்றங்களும் முக்கியம்தான். ஒரு விதத்தில் இந்த நாவலை மாற்றங்களின் கதையாகவும் படிக்கலாம். அந்த மாற்றங்களைச் சாத்தியப்படுத்தும் காரணிகளின் ஊடாட்டத்தையும் முரணியக்கத்தையும் இந்த மாற்றங்களின் பின்புலமாகப் பார்க்கலாம்.

இந்த ஊடாட்டங்களும் முரணியக்கமும் இந்த நாவலில் புதிரான வடிவம் கொண்ட நவீன வகை ஓவியம்போல அமைந்திருப்பது, இவற்றின் பன்முகத்தன்மையைக் காட்டுகிறது. படைப்பாளியின் பார்வை தன் அனுபவங்களை, தன் அனுபவப் பரப்புக்குள் வரும் உலகின் தன்மையை எப்படிப் பார்க்கிறது என்பதற்கான அடையாளம் இது. எதையும் எளிமைப்படுத்திப் புரிந்துகொள்வதையோ மேற்பரப்பில் புலனாகும் பிம்பங்களின் காட்சிகளில் மயங்கி நிற்பதையோ விரும்பாத கலை மனம் அனுபவ உலகினூடே மேற்கொள்ளும் தீவிரமான யாத்திரையின் வெளிப்பாடு.

***

நாவலில் சித்தரிக்கப்படும் மாற்றங்கள் மிக முக்கியமானவை. அரண்மனை வளாகம் ஒன்றின் காவல் கூண்டில் வசிக்கும் ந என்பவன், சத்துணவு அமைப்பாளன். நேர்மையும் எளிமையும் அவன் இயல்பு. குழந்தைகளுக்குச் சத்துணவு போடும் காரியத்தில் நடக்கும் முறைகேடுகள் அவனுக்கு அதிர்ச்சி அளிக்கின்றன. தன்னால் முடிந்தவரை நேர்மையாக இருக்க முயலும் அவன் விரைவிலேயே சூழலில் ஒட்டாமல் அன்னியமாகிறான். அமைப்பு அவனை எளிதாக ஓரங்கட்டுகிறது. அந்த அமைப்பு இயங்கும் விதத்தை மெல்ல மெல்லப் புரிந்துகொள்ளும் அவன் விரைவிலேயே அதன் விசுவாசமான அங்கமாக மாறுகிறான். பிழைக்கக் கற்றுக்கொள்கிறான்.

பாதுகாப்பற்ற இந்தக் காவல் கூண்டில் இருப்பதற்குப் பதில் தனக்கென ஒரு சிறிய வீடு வேண்டும் என நினைக்கும் அவன் அதற்கான முயற்சிகளை எடுக்கும்போது அவனது நடத்தையில் அதற்கேற்ற மாற்றம் ஏற்படுகிறது.

தான் வரலாற்று நாயகர் ஒருவரின் வாரிசு என அறிந்துகொள்ளும்போது அவனிடத்தில் உருவாகும் மாற்றம் மீண்டும் சூழலுடன் அவனை முரண்படவைக்கிறது. இந்தச் சமயத்தில் ஏற்படும் மாற்றத்தில் தார்மீக அம்சத்துடன் அதிகார தொனியும் சேர்ந்துகொள்கிறது. கால மாற்றம் என்னும் அலை இந்தக் கோலத்தையும் அழித்துவிட்டுப் போன பிறகு அவனது மாற்றம் வேறொரு வடிவம் எடுக்கிறது. அவன் வரலாற்று நாயகனின் வாரிசுதான் என்பது பின்னாளில், பல்வேறு வழிகளில் உறுதியான பிறகு அவன் வாழ்க்கை மீண்டும் மாற்றம் அடைகிறது. இந்த மாற்றத்தின் உச்சம் இன்றைய சமூக, அரசியல் இயக்கத்தின் அழுத்தமான வெளிப்பாடாகப் பரிணமிக்கிறது.

ந என்பவனின் வாழ்க்கையில் வெவ்வேறு கட்டங்களில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றத்தையும் நாம் கவனமாக ஆராயும்போது அந்த மாற்றங்கள் சமகால சமூக அரசியல் யதார்த்தங்களைப் பொதிந்துவைத்திருப்பது தெரியவரும். நேர்மையாளனாக இருந்தபோது அவனுக்கு ஏற்படும் அனுபவங்களும் நடைமுறைசார் அணுகுமுறையுடன் அவன் தன்னை உருமாற்றிக்கொண்டு அமைப்புடன் இணக்கமாகும் அனுபவங்களும் இன்றைய சூழலில் அமைப்புகள் இயங்கும் விதத்தை வெளிப்படுத்துகின்றன. அமைப்புக்கும் தனிநபருக்கும் இடையிலான உறவுகளின் சமன்பாட்டுகளைச் சொல்கின்றன. நாவலின் இந்தப் பகுதி துல்லியமான யதார்த்தச் சித்தரிப்புடன் கச்சிதமாக அமைந்துள்ளது.

***

நாவலின் வெவ்வேறு பகுதிகள் வெவ்வேறு தன்மைகளுடன் உருப்பெறுகின்றன. ந என்பவனின் அன்றாட வாழ்க்கை உணர்ச்சிப் பிசுக்கு அற்ற யதார்த்தச் சித்திரமாக வெளிப்படுகிறது. தொகுப்பு வீட்டுக்கான கடனுதவி பெறுவதற்கான முயற்சிகளின் சித்தரிப்புகள் அவலச் சுவையுடன் கூடிய சித்திரமாக விரிகின்றன. வரலாற்று நாயகனின் வாரிசு என்னும் நம்ப முடியாத கிரீடம் அவன் மேல் சுமத்தப்படும்போது கனவினையொத்த அனுபவங்கள் மிகுபுனைவுச் சித்திரங்களாகத் தோற்றம் கொள்கின்றன. கனவு கலைவதுபோல விரைவிலேயே இந்த நிலை மாறினாலும் வேறொரு வடிவில் அது திரும்ப வரும்போது முற்றிலும் வேறொரு விதமான அனுபவங்களைச் சாத்தியப்படுத்துகிறது.

இந்த முறை தனிநபர்கள் மூலமாக மட்டுமின்றி, ஊடகங்களின் மூலமாகவும் அந்தச் செய்தி வருகிறது. அது மெய்யான வரலாறுதான் என்பதை நிலைநிறுத்தப் பல விதமான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஒரு கட்டத்தில் அரசு அமைப்புகளும் இதில் சேர்ந்துகொள்ள, ஒரு வரலாறு அங்கே முழுமையாக மீட்டுருவாக்கம் செய்யப்படுகிறது.

நாவலின் இந்தக் கட்டத்தின் பெரும்பகுதி அபத்தச் சித்திரங்களாகத் தோற்றம் கொள்கிறது. வரலாற்றை மகோன்னதமானதாகக் கற்பிதம் செய்துகொள்வதில் சுகம் காணும் அரசு, ஊடகங்கள், பொதுமக்களின் உளவியல் ஆகியவற்றுக்கு அந்தப் பெருமையை நிலைநாட்டுவதில் இருக்கும் ஆவல் அதை அறிவியல்பூர்வமாக ஆராய்வதில் இருப்பதில்லை. இத்தகைய மனம் தான் நம்ப விரும்புவதையே உண்மையானதாகக் கட்டமைக்க முனையும். இந்த முனைப்பு யதார்த்தத்தின் மீது புனைவம்சத்தை ஏற்றிவிடுகிறது. இந்தப் புனைவையே உண்மை என நம்ப விரும்பும் மனம், புனைவை யதார்த்தமாகக் கற்பித்துக்கொள்கிறது. இத்தகைய செயல்பாட்டின் ஆதாரமாக இருக்கும் அபத்தத்தை உணர்த்தும் வகையில் இந்தப் பகுதி அபத்த நாடகமாகவே உருக்கொள்கிறது.

இது அபத்தத்தின் யதார்த்தமா அல்லது யதார்த்தத்தின் அபத்தமா எனக் கண்டறிய இயலாத அளவுக்கு யதார்த்தமும் அபத்தமும் பின்னிப் பிணைந்திருக்கின்றன. யாரை முன்னிட்டு இதெல்லாம் நடக்கின்றனவோ அந்த நபர் வெறும் நிமித்தமாக மாறிவிடுகிறார். மகோன்னத வரலாறு குறித்த கற்பிதங்களின் போதையில் கிறங்கும் பொதுப் புத்திக்கு யாருடைய வரலாறு கண்டறியப்படுகிறது, அந்தக் கண்டறிதலால் அவரது வாழ்வில் இப்போது எத்தகைய மாற்றங்கள் நிகழ வேண்டும் என்பதெல்லாம் முக்கியமல்ல. மீட்டுருவாக்கம் செய்யப்பட வேண்டிய வரலாறே முக்கியம். அந்த வரலாறு தங்கள் விருப்பம் சார்ந்து உருப்பெறுகிறதா என்பது முக்கியம்.

ஒரு சமூகம் தன்னுடைய வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்துகொள்ள விழையும்போது அது தனக்கேயான ஒரு வரலாற்றை நேற்றைய யதார்த்தமாகக் கற்பித்துக்கொண்டு அந்த யதார்த்தத்தின் நீட்சியாக இன்றைக் கற்பித்துக்கொள்கிறது. ஒட்டுமொத்த சமூகமும் தனக்குப் பொதுவானது என்று கருதப்படக்கூடிய வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்துகொள்ள முனையும்போது அந்தச் சமூகம் முழுவதும் இத்தகைய கற்பிதங்களைக் கைக்கொள்கிறது. இந்தக் கற்பிதங்களில் தனிநபருக்குப் பெரிய இடம் ஏதும் இல்லை. தான் மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரனின், மகாராஜாவின் வாரிசு என அறியும் நபருக்கு தன்னை முன்னிட்டு வரலாறு மீட்டுருவாக்கப்படுவதால் எந்தப் பலனும் இல்லை. ஏனென்றால் அதை அவருக்குச் சொல்லும் சமூகத்துக்கு அந்த வரலாறுதான் முக்கியம். அவரல்ல.

யதார்த்தத்தின் இந்த அபத்தத்தைச் சிறந்த அபத்த நாடகமாகச் சித்தரிக்கும் பகுதிகள் நாவலை வேறொரு தளத்துக்குக் கொண்டுசெல்கின்றன. பொதுப்புத்தி சார்ந்த சமூக அரசியல் நாடகத்தில் தனி நபரின் அடையாளம் என்பது அந்தத் தனிநபரின் வாழ்வு தொடர்பானதல்ல. அது வெறும் குறியீடு. அந்தக் குறியீட்டை நிரப்பப் பொது மனத்திற்குத் தேவை ஒரு உருவம். அவர் அல்லது அவரைப் போன்ற ஒரு உருவம். இந்த உளவியல்தான் அந்தத் தனிநபரின் வாழ்க்கைக்கும் அவரை முன்னிட்டு நடக்கும் மாபெரும் நாடகத்துக்கும் இடையிலான உறவின் அபத்தத்தைத் தீர்மானிக்கிறது. வரலாற்றில் மட்டுமல்ல, வரலாற்றின் மீட்டுருவாக்கத்திலும் தனிநபர்கள் வெறும் பகடைகள், உதிரிகள் என்பதை இந்த நாடகம் தெளிவாகக் காட்டிவிடுகிறது. நாவலின் உச்சமான இந்தப் பகுதி அவலச் சுவை கொண்ட பக்கங்களாக வெளிப்படுகின்றன.

***

நவின் கதையைச் சொல்லப் பல விதமான கதையாடல்களை தேவிபாரதி கைக்கொள்கிறார். கதையாடல் வகைகளைக் கதைச் சூழல்களே தீர்மானிக்கின்றன. ந என்பவன் வெறும் சத்துணவு அமைப்பாளனாக இருக்கும் இடங்களும் காவல் கூண்டுக்குள் உழலும் அவன் வாழ்க்கையும் துல்லியமான யதார்த்தச் சித்திரங்களாக வெளிப்படுகின்றன. வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்யும் இடங்கள் அவற்றின் தன்மைக்கேற்ப அபத்த நாடகமாக உருப்பெறுகின்றன. இடையில் வரும் பகுதிகள் இவை இரண்டுக்கும் இடையில் ஊடாடுகின்றன. ஒரு படைப்பாளி தன் கதைச் சூழல்கள் கோரும் மொழியையும் கதையாடலையும் இயல்பாகக் கண்டடைவதன் அடையாளமாக இந்த நாவலின் கதையாடல்கள் உள்ளன.

யதார்த்தம், மிகுபுனைவு, அபத்த நாடகம், யதார்த்தமும் அபத்தமும் குழம்பிக் கிடக்கும் கயிற்றரவு நிலை ஆகிய எல்லாக் கட்டங்களையும் தனித்தனியாகப் படிக்கும்போது அவை ஒவ்வொன்றும் தன்னளவில் முழுமையான பகுதிகளாக விளங்குகின்றன. ஒட்டுமொத்தமாக இணைத்துப் பார்க்கும்போது வேறு பரிமாணங்களைக் கொள்கின்றன. சில காட்சிகள் அழியாச் சித்திரங்களாக வாசகரின் மனதில் தங்கிவிடக்கூடியவை. உதாரணமாக, காவல் கூண்டு வீட்டுக்குள் பாம்பு வரும் காட்சி. கரப்பான்பூச்சிகள், சுண்டெலிகள் ஆகியவை படையெடுக்கும் காட்சிகள் யதார்த்தத்தை மீறிய மிகுபுனைவுச் சித்திரங்களாகவே உள்ளன. மாபெரும் வரலாற்று நாயகனின் வாரிசாக நம்பப்படும் ந என்பவனின் இன்றைய வாழ்நிலை எத்தகையதாக இருக்கிறது என்பதை இந்த மூன்று காட்சிகளும் உணர்த்துவதாகக் கொள்ளலாம். இவற்றின் குறியீட்டுப் பொருள்கள் காண்பவரைப் பொறுத்து மாறக்கூடும்.

சமகால வாழ்வின் மறைபரிமாணங்களைக் காட்டும் மிகுபுனைவுச் சித்திரங்களும் அபத்த நாடகங்களும் ஒருபுறம் இருக்க, நாவலில் உள்ள யதார்த்தச் சித்தரிப்புகள் சமகால வாழ்வின் தன்மைகளைக் காட்டிவிடுகின்றன. சத்துணவு போடுதல் என்னும் ஏற்பாட்டினுள் வெளிப்படும் போக்குகள், ஏழைகளுக்குத் தொகுப்பு வீடுகள் கட்டிக்கொள்ளக் கடனுதவி தரும் திட்டம் செயல்படுத்தப்படும் விதம், உள்ளாட்சி அமைப்புகளின் இயங்குமுறை ஆகியவை சமகால யதார்த்தத்தின் கசப்பான பக்கங்களாக விரிகின்றன. ஏழை எளிய மக்களுக்காகவே தீட்டப்படும் திட்டங்களும் செயல்படும் அமைப்புகளும் அந்த மக்களை எவ்வாறு நடத்துகின்றன என்பதை இவை காட்டுகின்றன.

***

ந என்பவனின் வம்ச வரைபடம் குறித்த பதிவு முக்கியமானதொரு உண்மையைக் குறியீட்டுரீதியாக உணர்த்துகிறது. ந என்பவனின் வம்ச பரம்பரை மகோன்னதமானது. அதை நிரூபிக்க அவனிடம் இருக்கும் ஆதாரம் அவனுடைய வம்சத்தைக் காட்டும் வரைபடம். திரும்பத் திரும்பப் பார்த்துப் புளகாங்கிதம் அடையக்கூடிய அந்த வரைபடம் அவன் வாழ்வில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிடவில்லை. அவன் வசிக்கும் காவல் கூண்டில் படரக்கூடிய நூலாம்படைகளுக்கும் அந்த வரைபடத்துக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. தன் அடையாளத்தை நிலைநிறுத்த அவன் எந்த மெனக்கெடலையும் மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லாமல்போகிறது. அந்த அடையாளம் அவனிடமிருந்து பிடுங்கப்பட்டுப் பொது அடையாளமாக மாறுகிறது. ந என்பவனிடம் இருக்கும் வம்ச வரைபடம் யாருக்கும் தேவையில்லை. அவனுடைய வரலாறுதான் தேவை. சமூகத்தின் சகல தரப்புகளும் சேர்ந்து அந்த வரலாற்றை மீட்டெடுத்துவிட்ட பிறகு வரைபடம், அந்த வரைபடத்தை வைத்திருக்கும் வாரிசு இரண்டுமே தேவையற்றவை. யதார்த்தத்தின் இந்தக் கூரூர முகத்தின் குறியீடாகக் கேட்பாரற்றுக் கிடக்கிறது ந என்பவனின் வம்ச வரைபடம்.

கதையின் சூழலில் ஒரு பொருளும் குறியீட்டுத் தளத்தில் வேறு பொருளும் தரக்கூடிய அம்சங்களை இந்நாவலில் நிறையவே காண முடிகிறது. பேராசிரியர் புவின் வருகை, பேரழகி ஸ்-ன் நடவடிக்கைகள், அவளைத் தூக்கிச் செல்லும் இளைஞன், கடைசிக் காட்சியில் அவனே நவைச் சுமந்து செல்லுதல் ஆகியவற்றையும் ஆழமாக நோக்கும்போது வெவ்வேறு பொருள்கள் புலப்படக்கூடும்.

***

நட்ராஜ் மகராஜ் நாவலை ஒட்டுமொத்தமாக எப்படிப் புரிந்துகொள்வது என்பது ஒரு கேள்வி. நாவலில் யாருக்குமே பெயர் குறிப்பிடப்படாமல் அவரவர் பெயர்களின் முதலெழுத்து மட்டும் குறிப்பிடப்படுவது ஏன் என்பது இன்னொரு கேள்வி. அரண்மனை வளாகத்தினுள் இருக்கும் காவல் கூண்டுக்குள் ஒண்டியபடி வாழும் ஒரு சாமானிய மனிதனின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள்தான் கதையின் அடித்தளம். பாதுகாப்பான வீடுதான் அவனுடைய ஆகப் பெரிய கனவு. அவனுடைய வாழ்க்கை, வரலாற்றின் முக்கியமானதொரு நிகழ்வுடன் தொடர்புகொண்டிருப்பது தெரியவந்ததும் கற்பனை செய்ய இயலாத அளவுக்கு அவன் வாழ்க்கை மாற்றம் அடைகிறது. ஆனால், அந்த மாற்றம் அவனுடைய பிரச்சினைகளைத் தீர்க்கப் பயன்படவில்லை. அவனுடைய தீராத ஏக்கமான பாதுகாப்பான வீடு அவனுக்குக் கிடைக்கவில்லை. அவன் அடையாளம் மாறுகிறது. அவனை வைத்து அந்த ஊரின் அடையாளம் மாறுகிறது. அவனை வைத்து அந்தப் பகுதியின் வரலாறு மாறுகிறது. ஆனால் அவன் வாழ்க்கை மாறவே இல்லை. உதிரியாக வாழும் அவனுடைய அடையாளம் மைய நீரோட்டத்தில் முக்கிய இடம் பெற்ற பிறகு அந்த அடையாளத்தைப் பொதுச் சமூகம் சுவீகரித்துக்கொள்கிறது. அவன் எப்போதும்போல அடையாளமற்றவனாக, பாதுகாப்பற்றவனாக விடப்படுகிறான். இந்த அவலத்தை, இதன் பின்னே உள்ள அபத்தத்தை அதற்கான மொழியோடும் குறியீடுகளோடும் நம் முன் நிகழ்த்திக் காட்டும் மாயம்தான் நட்ராஜ் மகராஜ் என்னும் நாவலின் சாதனை.

மனிதர்களின் பெயர்களும் அவை சார்ந்த அடையாளங்களும் அபத்தங்களாகிவிடும் சூழலில் எந்த அடையாளத்தையும் யாருடையதாகவும் முன்னிறுத்த முடியாத நிலையில் தன் பாத்திரங்களின் அடையாளங்களை அழித்துவிடுகிறார் நாவலாசிரியர். எந்தப் பாத்திரத்துக்கும் பெயர் கொடுக்கப்படாமல் இருப்பதை இப்படியும் புரிந்துகொள்ளலாம்.

***

நாவலில் வரும் அபத்த நாடகங்கள் சில இடங்களில் தேவைக்கதிகமாக நீண்டுகொண்டேபோவதாகத் தோன்றுகிறது. வரலாற்றைச் சுமந்து வரும் தூதுவர்கள் குறித்த சித்திரங்கள் புனைவின் சுதந்திரத்தை மிதமிஞ்சிப் பயன்படுத்திக்கொள்வதாகவும் தோன்றுகிறது. வரலாற்றைச் சொல்லும் தொனி கொண்ட இந்தக் கதையாடலில் பல இடங்கள் கவித்துவமாக வெளிப்படுவதைப் போலவே சில இடங்களில் மொழி தன் படைப்புசார் அழகியலைத் துறந்து தட்டையான விவரிப்பாகவும் மாறுகிறது. சில அனுபவங்கள் செறிவாக வெளிப்படுத்தப்பட்ட பிறகும் மேலும் மேலும் தம்மை வெளிப்படுத்திக்கொள்ளத் துடிப்பதையும் உணர முடிகிறது.

ந என்பவனின் வரலாற்றைச் சொல்ல வெவ்வேறு கட்டங்களில் அந்த ஊருக்கு வரும் புதியவர்கள் குறித்த காட்சிகள் கிட்டத்தட்ட ஒரே தன்மையைக் கொண்டிருப்பது இயல்பானதுதான். ஆனால் அப்படி இருப்பதாலேயே அவை சுருக்கத்தைக் கோருகின்றன. நாவலாசிரியர் அந்தக் குரலுக்குச் செவிசாய்க்காததால் சில இடங்கள் ஏற்கனவே கடந்து வந்த இடங்களின் நகல்களாகத் தோற்றமளிக்கின்றன. ந வுக்கு வரும் அஞ்சலட்டை முதலமைச்சர் அவரைப் பார்க்க விரும்புவதாகச் சொல்கிறது. அவரைச் சந்திக்க விழையும் ந வின் முயற்சி நாவலில் அந்தரங்கத்தில் தொங்க, நாவலாசிரியர் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்வதில் மும்முரமான இறங்கிவிட்டார். நாவலின் படைப்பு வெளிப்பாட்டில் உள்ள போதாமைகளாக அடையாளம் காணத் தக்க அம்சங்கள் இவை.

***

ஒரு எழுத்தாளர் புதியதொரு களத்தில் புதியதொரு மொழியில், புத்தம் புதியதான கூறல் முறையில் ஒரு படைப்பை உருவாக்குகையில் அது தான் வெளியாகும் சூழலைப் பல அடிகள் முன்னெடுத்துச் செல்கிறது. தேவிபாரதியின் இந்த நாவல் அத்தகைய தன்மையைக் கொண்டிருக்கிறது. வரலாற்றை மீட்டெடுத்தல் என்னும் பொதுச் சமூகத்தின் செயல்பாட்டின் அபத்தங்களைத் தனிநபர் வாழ்வின் பின்னணியில் வைத்துக் காட்டும் இந்த நாவல் சமகால இலக்கியச் சூழலின் பரப்பை விரிவுபடுத்தி முன்னெடுத்துச் செல்லக்கூடிய பிரதியாக வெளிப்பட்டிருக்கிறது.

••••••••

அமிர்தம் சூர்யாவின் ஓவிய ஃப்ரேமிலிருந்து வெளியேறும் பறவைகள் …

download-1

அமிர்தம் சூர்யாவின் ஓவிய ஃப்ரேமிலிருந்து வெளியேறும் பறவைகள் ….என்ற தலைப்பில் காதலியக் கவிதைகள் வெளிவரவிருக்கிறது சென்னையில்..வரும் 19 ஆம் தேதி சனிகிழமை…

இந்நூலுக்கு ….

சிலர் ஒரு மரத்தின் இலையாக இருப்பார்கள், அமிர்தம் சூர்யா போன்றவர்கள் தம்மை ஒரு மரமாக உருவாக்கிக் கொள்பவர்கள்..

அமிர்தம் சூர்யா கவிதைகள்..

காதலின் மீதான கரைதலினால் ஆனவை. உள்ளன்பினால் விளைந்த உன்மத்தங்களால் ஆனவை. அன்பின் பதற்றங்களை வெவ்வேறுவிதமாகச் சொல்லிப்பார்க்கும் கவிதைகள்

–என்று மனுஷ்ய புத்திரன் முன்னுரை அளித்துள்ளார்.

அமிர்தம் சூர்யா வின் காதலியக்கவிதைகள் ..அட ஆமாங்க..ஒரு நவீனக் கவிஞனின் காதலியக் கவிதைகள் ..பெரும்பான்மையான கவிதைகள் முகநூலில் எழுதியவை.எல்லாம் காதல் கவிதைகள் தான்.இது ஒரு புது முயற்சி.

முகப்போவியம்..நாவலாசிரியரும் ஓவியருமான சீனிவாசன் நடராஜன்..

வெளியீடு சாருநிவேதிதா

.சிறப்பு விருந்தினர் மனுஷ்யபுத்திரன்..இப்படி களைக்கட்டப்போகுது சென்னையில் விழா..

பக்கங்கள் 104 விலை-100..
மதுரை அருணாசலம் ..நண்பர்களுக்காக மேகா பதிப்ப்கம் ஆரம்பித்து இந்த நூலை கொண்டுவருகிறார்.

•••

இந்த நூலில் இருந்து ஒரு காதலியக் கவிதை

முத்தத்திற்கு ஒப்பனையிடுவது எப்படி?

குளத்தை மூடிக்கவ்விக் கொள்ளும்
வெங்காயத்தாமரையென
முத்த சிந்தனையை இதழ்முழுக்கப் பரவ
திட்டமிடு…..அதற்குமுன்…

அதரரேகையில்இருக்கும்அவளின்
ஆதிகால சிறாய்ப்புகளின்மீது
நிபந்தனையற்ற அன்பிலிருந்து
எடுத்த களிம்பைப் பூசு.

அவள் உதட்டுகரையோரம் ஒதுங்கி
பழையகாதலில் செத்துக் கரையொதுங்கிய
உறுத்தல்சிப்பிகளைக்
கூச்சமின்றி அப்புறப்படுத்து

இறுகிப்போன உன் புத்திவண்ணம் எதுவாயினும்
அதை எச்சிலால் மட்டுமே
கரைத்துக் குழைக்க முடிவெடு

நெருங்கும்போது கண்கள்கூசும் ஆயினும்
இமைகளை மூடாமல்
அவளின் முகபிம்பத்தை
முழுவதும் விழுங்க முயற்சிசெய்

இப்போது
சூரிய கதிர் தரையைத் தழுவுவதுபோல்
சத்தத்தை சாகடித்து சாந்தமாய்
இதழோடு புத்தியைச் சேர்த்து ஒட்டு

தாய்ப்பசு பிறந்தகுட்டியை அசூயையின்றி
நக்குவதுபோல் அவள் உதட்டின்மேல் அப்பியுள்ள
காமத்தை நக்கிப் பளிச்சென்று தெரியும்
காதலை பக்தனைப் போல் தரிசி..

கடைசியில்
நீவேறு முத்தம்வேறு என்று இல்லாமல்
முத்தமாகவே மாறிவிடவேண்டும் –
அதுதான்முக்கியம்..

சரி..நான் சொன்னதையெல்லாம் செய்தாயா
இனி முத்தம் பற்றி விரிவாகப் பேசலாம் வா..

•••

நெடுஞ்சாலை வாழ்க்கை / கா.பாலமுருகன்

download-24

லாரி டிரைவர் ஆகவேண்டும் என்பதுதான் என் லட்சியம். என் குடும்பத்தில் கடைக்குட்டி நான். எந்த அளவுக்கு செல்லம் கொடுக்கப்பட்டதோ, அதே அளவுக்கு கட்டுப்பாடுகளுடன் வளர்க்கப்பட்டவன். விவரம் தெரியாத வயதில் ஒருமுறை தொலைந்துபோய் மீண்டேன். விவரம் அறிந்த வயதில், வீட்டை விட்டு ஓடிப்போய்த் திரும்பினேன். என் தந்தை, தக்காளி கமிஷன் ஏஜென்டாக இருந்தார். விவசாயிகளிடம் தக்காளிக் கூடைகளைச் சேகரித்து, மதுரை மார்க்கெட்டுக்கு லாரியில் ஏற்றி அனுப்பும் பொறுப்பு அவருடையது.
தேனி அருகே உள்ள என் கிராமமான வடபுதுப்பட்டிக்கு அப்போது ‘வாகனம்’ என்றால், அது பஸ் மட்டுமே. அது தவிர்த்து அவர்கள் அறிந்த வேறு ஒரு வாகனம் என்றால், தக்காளி ஏற்றிச் செல்லும் லாரிதான். வாரம் இரண்டு முறை அந்த லாரி என் வீட்டைக் கடந்து, ஊரின் தென்கோடியில் இருக்கும் இடத்தில் தக்காளிக் கூடைகளை ஏற்றிக்கொண்டு திரும்பும்.

லாரி வரும் மாலை நேரத்தில் சாலையின் அருகிலேயே காத்திருப்பேன். லாரி வருவதைக் கண்டதும் சாலையின் குறுக்கே உற்சாகமாகப் பாய்ந்தது, இப்போதும் ஞாபகம் இருக்கிறது. வீட்டின் அருகே இருந்து என்னை ஏற்றிக்கொண்டு, மீண்டும் அதே இடத்தில் இறக்கிவிடும் அந்த லாரி. நான் டிரைவர் அருகில்தான் உட்காருவேன். அவர் ஸ்டீயரிங்கை வளைப்பதை ஆச்சர்யத்தோடு பார்த்துக்கொண்டே இருப்பேன். என்னை இறக்கிவிடும்போது, டிரைவர் லேசாக எழுந்து நின்று, அவர் உட்கார்ந்திருந்த பிளாஸ்டிக் வயர் பின்னிய பலகையைத் தூக்குவார். அதில் இருக்கும் பெட்டியில் சில்லறைக் காசுகளாக இறைந்துகிடக்கும். அதிலிருந்து ஐந்து பைசாவை எடுத்து எனக்குக் கொடுப்பார். இதுதான் ‘லாரி டிரைவர் ஆக வேண்டும்’ என்ற எனது சிறுவயது லட்சியத்துக்கான காரணம்.

என் தாய்மாமா அழகர்சாமி, முன்னாள் ராணுவ வீரர்; தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர். பெரியம்மாக்களின் மகன்களான மூன்று அண்ணன்களுமே டிரைவர்கள்தான். அதில் ஓர் அண்ணன், சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் இறந்துபோனார். ஊரில் வேலையற்று இருந்த நாட்களில், நண்பர்களில் சிலர் நேஷனல் பெர்மிட் லாரி டிரைவர்களாகவும் கிளீனர்களாகவும் இருந்தார்கள். அவர்களிடம் இருந்து பல திகிலூட்டும் சாகச அனுபவங்களைக் கேட்டிருக்கிறேன். ஒருமுறை, `நான் கிளீனர் வேலைக்கு வரட்டுமா?’ என்று கேட்டபோது, சொல்லிவைத்ததுபோல எல்லோருமே, ‘வேண்டாம் உனக்கு இந்த வேலை’ என்றார்கள். அது ஏன் என்று இன்று வரை புரியவில்லை. பின்னாட்களில் அதில் ஒருவன் நோய்வாய்ப்பட்டு இறந்துபோனான்; இன்னொருவன் வடநாட்டில் நடந்த லாரி விபத்தில் மாண்டான். ஆனாலும், ஒரு வாகனத்தை இயக்கும் ஓட்டுநரின் திறமை அபாரமானதாகத்தான் இருக்க வேண்டும் என்ற நம்பிக்கை, என்னை மீண்டும் மீண்டும் டிரைவர் என்ற பிம்பத்தை நோக்கி உந்தித் தள்ளிக்கொண்டே இருந்தது.

உறவினரின் டிராக்டரை ஓட்டிப் பழகலாம் என அதில் கிளீனர் வேலை கேட்டேன். ஏனென்றால், டிராக்டருக்கும் கிளீனர்தான் முதல் படி. அந்தத் தகவல் என் வீட்டுக்குத் தெரிந்து, ‘நமக்கு அந்தத் தொழில் வேண்டவே வேண்டாம்’ என மறுத்துவிட்டார்கள்.

காலம் என்னை தேனியில் உள்ள டிராக்டர் கம்பெனிக்கே வேலைக்குக் கொண்டுபோய் சேர்த்தது. அங்கே முதன்முதலில் டிராக்டர் ஓட்டப் பழகினேன்; பின்புதான் ஜீப், கார் என பலவகை வாகனங்கள் ஓட்டும் வாய்ப்பு அங்கு கிடைத்தது. மேலும், சென்னையில் உள்ள தலைமை நிறுவனத்தின் பயிற்சி மையத்தில், மெக்கானிக் முதல் விற்பனையாளர் வரை பல்வேறு பயிற்சிகள் பெற்றேன். ஆட்டோமொபைல் துறையின் அரிச்சுவடியை இங்கேதான் கற்றுக்கொண்டேன்.

என் வாசிப்பு அனுபவமும், கலை இலக்கிய ஆர்வமும், பத்திரிகைத் துறையை நோக்கித் தள்ளியது. விகடனில் பணியில் சேர்ந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு `மோட்டார் விகடன்’ தொடங்கியபோது, என் ஆட்டோமொபைல் துறை அனுபவம் காரணமாக அதில் இணைந்தேன். லாரியில் பயணம் செய்து, அதை அனுபவக் கட்டுரையாக எழுதலாம் என்ற ஐடியாவைத் தந்து, இந்தப் பயணத்துக்கான வாய்ப்பை எனக்கு வழங்கியவர், என் மதிப்புக்குரிய மோட்டார் விகடன் ஆசிரியர் ரா.கண்ணன் அவர்கள். அதற்காக அவருக்கு என் முதல் நன்றி. என்னுடன் பயணம் செய்ய போட்டோகிராபர் ஒருவர் வேண்டுமே என்றபோது, ‘லாரியிலா…’ எனப் பலரும் தயங்கிய வேளையில், முதன்முதலில் ஆர்வத்தோடு முன்வந்த தி.விஜய், இந்தப் பயணங்களில் என் சக பயணி. எங்கள் முதல் பயணம் கோடைக்காலமாக இருந்தது. ஆந்திர மாநிலத்தின் வெப்பத்தில் உடல்நலம் குன்றி நான் சோர்ந்தபோது, என்னை உற்சாகப்படுத்தி, பயணத்தை நிறைவு செய்யவைத்தவன். அதேபோல், ‘நானும் உங்களுடன் வருவேன்’ என ஆர்வமாக பின்னாட்களில் உடன்வந்த போட்டோகிராபர் ரமேஷ் கந்தசாமி ஆகிய இருவருமே, இந்தப் பயணத்தின் முக்கியத் தூண்கள்.

download-25
‘லாரியில பத்திரிகைக்காரரை கூடக் கூட்டிட்டுப் போகணுமா… அது சிக்கல் ஆச்சே… எங்களுக்குப் பிரச்னை வந்துடும்’ எனப் பலரும் அழைத்துச் செல்லத் தயங்கியபோது, மோட்டார் விகடன் வாசகர் கோவை புவனேசுவரன்தான் முதன்முதலில் கொல்கத்தாவுக்குச் செல்ல ஏற்பாடு செய்துகொடுத்தார். அந்த லாரியின் ஓனர் கம் டிரைவரான முருகன், எங்களுடன் பயணம் செய்த மற்ற இரு லாரிகளின் டிரைவர்கள் சிவக்குமார், ஜலேந்திரன், கதிர்வேல், நடராஜன்; இரண்டாவது பயணத்தில் சேட்டு – சரவணன்; மூன்றாவது பயணத்தில் இணைந்த சேகர் – சிவா; நான்காவது பயணத்தில் பெரியவர் சேதுராமன்; ஐந்தாவது பயணத்தில் காஷ்மீர் வரை சென்ற மணி – பரமேஸ்வரன் ஆகியோரின் அன்புக்கு என் அன்பு வணக்கங்கள்.

தன்னுடைய பால்ய சினேகிதனிடம் பகிர்வதைப்போல, தொழில் முதல் குடும்ப விஷயங்கள் வரை எல்லா கவலைகளையும் என்னிடம் பகிர்ந்துகொள்ளும் அளவுக்கு, இந்தப் பயணத்தில் அவர்களின் நம்பிக்கையைப் பெற்றிருந்தது என் பெரும் பேறு. இருவேளை உணவு என்றாலும் சமைத்துத்தான் பரிமாறினார்கள் அன்போடு. இவர்களுடனான மனம் திறந்த பேச்சுதான் இதை ஒரு புத்தகமாக்க உதவியிருக்கிறது.

முதல் பயணம் முடித்து மோட்டார் விகடனில் எழுத ஆரம்பித்ததும், வாசகர்கள் அளித்த உற்சாக வரவேற்பும், என்னுடன் பணியாற்றும் சக நண்பர்களின் பாராட்டும்தான், என்னைத் தொடர்ந்து பயணங்கள் செல்லத் தூண்டியது. குறிப்பாக, பத்திரிகையாளர் பொன்ஸீ, ‘யாருக்கும் தெரியாத வாழ்க்கை இது. முதன்முறையாக நீங்கள்தான் எழுதுகிறீர்கள். சிறப்பாகச் செய்யுங்கள்’ என்று என் பொறுப்பை உணர்த்தினார். அவருக்கு என் நன்றி. தொடர் கட்டுரைக்கு முதல் வாசகராக இருந்து, ‘இந்த விஷயத்தை இன்னும் விரிவாக எழுதுங்கள்; இதில் மேலும் தகவல்களைச் சேருங்கள்’ என்று மெருகேற்றிய மோட்டார் விகடன் தலைமை நிர்வாக ஆசிரியர் பி.ஆரோக்கியவேல், பொறுப்பாசிரியர் சார்லஸ், ஒவ்வொரு கட்டுரைக்கும் பொருத்தமான படங்களைத் தேர்ந்தெடுத்து, சிறப்புற வடிவமைத்த மோட்டார் விகடன் தலைமை வடிவமைப்பாளர் ராஜா, தமிழ்த் தென்றல் ஆகியோருக்கு என் அன்பை சமர்ப்பிக்கிறேன்.

தொழில்முறையாளர்கள் சொல்வதுபோல ஒவ்வொரு முறையும் ‘லாரிக்குச் செல்கிறேன்’ என்று சொல்லிக் கிளம்பும்போது, திரும்புவதற்கு குறைந்தது ஒரு வாரமாவது ஆகும் எனத் தெரியும். ஆனாலும், என் வேலையின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு வழியனுப்பும் என் மனைவி கல்பனாவின் சம்மதமே பயணத்தின்போது வீட்டின் கவலைகள் இல்லாமல் இருக்க உதவியது.

‘நெடுஞ்சாலை வாழ்க்கை’ தொடர் கட்டுரையை புத்தகமாகக் கொண்டுவர வேண்டும்; அனைத்து பக்கங்களும் வண்ணப் பக்கங்களாக இருந்தால்தான் நன்றாக இருக்கும் என ஒவ்வொரு கட்டுரையையும் சிறப்புக் கவனம் எடுத்து வடிவமைத்து, அழகான அட்டை வடிவமைத்து, சிறப்பான முறையில் அச்சிட்டுக் கொண்டு வந்துள்ள விகடன் பிரசுரத்துக்கு மனமார்ந்த நன்றி.

2013 மே மாதம் முதல் 2015 அக்டோபர் வரை, ஐந்து முறை சுமார் 11,000 கி.மீ தூரம் இந்தியாவின் பல பகுதிகளுக்கு லாரியில் பயணம் செய்திருக்கிறேன். இதற்கு முன்பு இந்தியாவில், எந்தப் பத்திரிகையாளரும் ‘லாரியில் பயணம் செய்து, அந்த அனுபவங்களை எழுதியது இல்லை’ என்ற தகவல் எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது.

இந்தியாவின் பொருளாதாரத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதில் பெரும் பங்கு, நேஷனல் பெர்மிட் லாரிகளுக்கு மட்டுமே உண்டு. கடந்த 60 ஆண்டுகளில் நம்முடன் சேர்ந்தே வளர்ந்து நிற்கிறது இந்தத் தொழில். நிலையற்ற எரிபொருள் விலை; டிரைவர் பற்றாக்குறை; அதிக டோல்கேட் கட்டணம்; குறைவான வாடகை; கொள்ளை, கொலை என சமீபகாலமாக இந்தத் தொழில் கொஞ்சம் கொஞ்சமாக நசிந்துகொண்டு வருகிறது.
download-13
லாரி டிரைவர் என்றாலே, சமூகத்தில் தொழில்ரீதியாக, குணாம்ச ரீதியாக கீழாக வைத்துப் பார்க்கப்படும் பார்வை நம் எல்லோருக்கும் உண்டு. எல்லோருமே உழைத்துத்தான் வாழ்கிறோம். ஆனால், உயிருக்கு எந்த உத்தரவாதமும் இல்லாமல், மொழி தெரியாமல், வடமாநில நெடுஞ்சாலைகளில் அரை வயிற்றோடு இன்ஜின் மீது அமர்ந்திருக்கும் வெப்ப மனிதர்கள் மீது இருக்கும் வெறுப்பைக் களைவதே இந்தப் புத்தகத்தின் நோக்கம். சிறு துளி அளவுக்காவது அவர்களைப் புரிந்துகொள்ள இந்த நூல் உதவினால், அதுவே இந்தப் புத்தகத்தின் வெற்றி.

நன்றி!

தோழமையுடன்,
கா.பாலமுருகன்

தொடர்புக்கு:
balamv@vikatan.com

*****

குறிப்பு

நண்பர் பாலமுருகன் இந்தத் தொடரை தொடக்கத்தில் என்னை எழுத சொல்லியிருந்தார் . ஆனால் அப்போது தவிர்க்க இயலாத காரணங்களால் இந்த கட்டுரைகளையும் பயணங்களையும் செய்ய இயலாமல் போய்விட்டது. மோட்டார் விகடனில் தொடராக வரும்போது வாசித்துக்கொண்டே வந்தேன். அதை எழுதுகிற வாய்ப்பு தவறிப்போனது குறித்து எனக்கு லேசான வருத்தம் உண்டு. ஆனால் நண்பர் பாலமுருகன் சிறப்பாக எழுதியிருக்கிற இந்தப் புத்தகத்தினை அறிமுகம் செய்வதில் பெரும் உவகை கொள்கிறேன். இயலுபவர்கள் இந்தப் புத்தகத்தை வாங்கி வாசிக்கலாம்

சிபிச்செல்வன்
மலைகள் இணைய இதழின் ஆசிரியர்

மரணத்தில் மிதக்கும் சொற்கள் / பாலகுமார் விஜயராமன்

images-6

“மரணத்தின் கிளர்ச்சி உண்மையை வெளிக்கொணர்ந்து விடும். அதனால் தான் நீங்கள் மரணத்திலிருந்து தப்பிக்க முயன்று கொண்டே இருந்தீர்கள்”

(குர்ஆன் 50:19)
இம்மையில் தான் வாழ்கின்ற வாழ்வானது மறுமைக்கான ஆயத்தம் என்றே ஒவ்வொரு முகமதியனும் நம்புகிறான். அவன் இறக்கும் போது அவனது இந்த வாழ்வுக்கான மொத்த அழுக்குகளும் கழுவப்பட்டு, தூய வெள்ளைத் துணியை உடுத்திக் கொண்டு, புனிதமான து’வாவை கேட்டபடியே, மறுமை வாழ்விற்குச் செல்ல “கபர்” குழியில் அடைக்கலமாகிறான். ஒவ்வொரு ஆன்மாவும் மரணத்தை ருசிக்கட்டும் என்பது குரானின் செய்தி. அல்லாவிலிருந்து ஒருவன் இந்த பூமிக்கு வருகிறான். தன் பணி முடிந்ததும், மீண்டும் அல்லாவிடமே திரும்பிச் செல்கிறான. மரணத்தின் தேவதை அவனை கனிவோடு தன்னுடன் அழைத்துச் சென்று இறைவனிடம் சேர்க்கிறது.

எழுத்தாளர் எஸ்.அர்ஷியா அவர்கள் எழுதிய சிறுகதைத் தொகுப்பான ”மரணத்தில் மிதக்கும் சொற்கள்” முழுவதிலுமே ”மரணம்”, சகபயணியாக நம் கூடவே பயணிக்கிறது. கனரக வாகனத்தில் அடிபட்டு மூளை சிதறிய உடலை, பிணவரங்கில் வைத்துப் பார்க்கும் பெரியவருக்கு எதிரில், ”மௌத்” ஆனவர்களின் உடலை கழுவி சுத்தம் செய்வதற்காக காலங்காலமாக பயன்படுத்தப்படும் மரக்கட்டிலின் மீது, “கபர்” குழி வெட்டிவிட்டு, தன் மகளின் பரிட்சைக்குத் தேவையான பணத்திற்காக, நடு ராத்திரி வரை கூலிக்காக காத்திருக்கும் தொழிலாளியின் எரிச்சலில், வாழ்நாள் எல்லாம் உடன்பிறந்தவர்களின் கைப்பாவையாய் இருந்து, கட்டிய மனைவியின் விருப்பங்களை உணரத்தவறிய, ஊருக்கு நல்லவரை போற்றும் துதிகளில் என மரணமும், அதன் நிகழ்வின் நினைவுகளும் இத்தொகுப்பு முழுவதும் வியாபித்திருக்கிறது.

தொகுப்பிலுள்ள முதல் கதை, மௌனச்சுழி. ஏதேனுமொரு மனவருத்தத்தின் பொருட்டு, நமக்குப் பிரியமானவர்களை நம் வாழ்விலிருந்து அழித்துவிட்டதாய் நினைத்து அவர்களை புறக்கணிப்பதற்கும், எதிர்பாராவிதமாக அவர்களது அகால மரணம் பற்றி கேள்விப்பட்டு, அது வரை பிடிவாதமாய் வெளிக்காட்டாமல் பொதிந்து வைத்திருந்த உள்ளன்பை புலம்பலாக கொட்டித் தீர்ப்பதற்குமான இணைப்பைப் பற்றி பேசுகிறது இக்கதை. இழப்பின் வலியை உணர, ஒருவர் மீதான நமது பிரியத்தை வெளிப்படுத்த, அவரின் மரணம் வரை காத்திருக்க வேண்டி இருக்கிறது என்பது தான் துரதிஷ்டவசமான உண்மையாய் இருக்கிறது. சமுதாயத்தில் தனக்கு அவமானம் ஏற்படுத்தும் விதமாய், மாற்று மதத்தை சேர்ந்த இளைஞனுடன் திருமணம் செய்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறிச் செல்லும் செல்ல மகள் மீது ஒரு தந்தைக்கு இருக்கும் தார்மீகமான கோபம், அவளது செய்கையை ஒத்துக்கொள்ளவும் முடியாமல், அதே நேரம் அவளை தண்டிக்கவும் மனமின்றி, அவளை இறந்தவளாக அறிவித்து விட்டு அவர் மனதுக்குள் புழுங்கிக் கொண்டிருக்கும் சித்திரம் யதார்த்தமாக விரிகிறது.

ஒரே நேரத்தில் பாம்பாகவும், பிடாரனாகவும் காட்சி தரும் ஹஜ்ரத் பிர்லோடி தாயம்கான் ரஹ்மானி. சர்பங்களின் கட்டுக்குள் திணறும் இரையாகவும், பாம்பாகவும் தன்னை உணரும் முகம்மத் வஜீர் அலிகான். இவர்கள் இருவருக்குள்ளான அன்பின் பரிமாற்றத்தை, ஹஜ்ரத்தின் “பயானை”க் கேட்பது மூலமாக அலிகன் அவர்கள் உள்வாங்கி ஆறுதல் அடைவதாக செல்கிறது கதை. ”பயான்” சொல்லவரும் உலகப்பிரசித்தி பெற்ற ஹஜ்ரத்தைப் பார்க்கும் போது, அந்த தந்தைக்கு தன் மகளின் உருவமே தெரிகிறது. ஹஜ்ரத்தின் நடை, செயல், பேசும்முறை எல்லாம் தன் மகளை நினைவுபடுத்துவதாகவும், தன் மகள் தான் அவர் உருவில் வந்து தனக்கு ஆறுதல் சொல்வதாகவும் உணர்கிறார். எதிர்பாராத ஒரு திடீர் மரணம், மூடி போட்டு தன்னைத் தடுத்து வைத்திருக்கும் கோபம், மனவருத்தம், வீம்பு, வீராப்பு, சமூக அந்தஸ்து ஆகியவற்றை உடைத்து விட்டு, தன்னுள் பொதிந்திருக்கும் பரிசுத்தமான அன்பு மட்டும் வெளிப்படுவதை உணர்கிறார்.

ஜரிகைக்காரத் தெரு, காஜிமார்த்தெரு, தேர்மூட்டி, சப்பாணி கோயில் தெரு என்று தென்மதுரையின் அச்சு அசல் சித்திரத்தை அத்தனை இயல்பாக பதிவு செய்திருக்கிறது “தகைத்தல்” சிறுகதை. திருமணங்களை தகைத்து வைக்கும் உஸ்தாத்பீ என்ற பெண்மணியின் வழியாக துவங்கி, சமூக மாற்றங்களுக்கு இளையவர்கள் தயாராக இருந்தாலும், காலத்துக்கு ஒவ்வாத பழக்கவழக்கங்களையும், அசட்டுப் பிடிவாதங்களையும், ஜபர்தஸ்த்தையும் வீட்டிலுள்ள பெரியவர்கள் எப்படி நைச்சியமாக நுழைத்து விடுகிறார்கள் என்பதைப் பேசுகிறது “தகைத்தல்” சிறுகதை. பெண் வீட்டாரிடமிருந்து வரதட்சணை பெறுவதை அவமானமாகக் கருதும் இன்றைய காலத்து இளைஞன் அஸ்கர் அலி. திருமண மேடையிலேயே பெண் வீட்டுக்குத் தரவேண்டிய “மஹர்” பணத்தை கொடுத்து திருமணம் முடிக்க வேண்டுமென விரும்புகிறான். அவனிடம் நேரடியாக எதிர்த்துப் பேச முடியாத அவனது தாய், எப்படி பெண் வீட்டாரிடம், அவர்கள் செய்ய வேண்டியதை மறைமுகமாக வர்ப்புறுத்துகிறாள் என்பது உஸ்தாத்பீ பார்வையில் சொல்லிச் செல்கிறது.

சொத்துப் பிரச்சனையின் காரணமாக நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக பூட்டியிருந்த வீடு திறக்கப்படும் நாளில், வீட்டினுள் தூசி மண்டி அடைந்து போயிருக்கும் பழைய பொருட்களனைத்தும் அப்புறப்படுத்தப் படுகிறது. வீட்டு உரிமையாளரனான பால்ய நண்பன், அந்தப் பொருட்களில் தேவைப்படுவதை எடுத்துக் கொள்ளச் சொல்கிறான். சிறுகச் சிறுகச் சேர்த்து வைத்து கட்டிய தன் சிறுவீட்டுக்கு நிலைக்கதவாக செய்து கொள்ளலாம் என்று எண்ணி, அங்கு கிடந்த பழங்காலத்து கட்டில் ஒன்றைக் கேட்டு எடுத்து வருகிறான் உஷேன். அன்றிரவு வீட்டு வாசலில் கட்டிலைப் போட்டு அதன் மீது படுத்து உறங்குகிறான். அந்தப் பகுதியில் இறந்தவர்களின் உடலைக் கழுவுவதற்காக, காலங்காலமாக பயன்படுத்தப்பட்டு வந்த கட்டில் அது. உஷேன் அன்று உறங்கும் போது, “மௌத்” ஆன ஒவ்வொருவராய் கட்டிலிலிருந்து வந்து தங்கள் கதைகளைச் சொல்வதைப் போல அவனுக்குத் தோன்றுகிறது. ஆனால் வீட்டுக்குக் கதவு போட வசதியில்லாத அவனுக்கு இலவசமாய் வந்த அந்த கட்டில் பலகையை விடவும் மனது வரவில்லை. அந்த இரவில் உஷேனின் செய்கைகளை இலகுவான மொழியில் அங்கதத்துடன் சொல்லும் கதை “கட்டில் பலகை”

கிணறு வெட்டுவது, வீடுகளுக்கு வெள்ளை அடிப்பது, கூடை முடைவது, பூட்டு ரிப்பேர், எலக்ட்ரிக் வேலை, நிமுந்தாள் வேலை என்று பலதொழில் வித்தகனான, இறந்தவர்களைப் புதைக்க குழி வெட்டும் பாபுகானின் கதை “உப்புக்குழி”. பெண்பித்தின் காரணமாக சொத்துக்களை இழந்த, வாழ்ந்து கெட்ட குடும்ப வாரிசான பாபுகான் இன்று அன்றாடங்காச்சியாக சுற்றித் திரிகிறான். ஜமான் என்ற கிழவர் மூலமாக கபர்க்குழி வெட்ட பழகிக் கொண்டவனுக்கு நாளடையில் அதுவே அடையாளமாகிப் போனது. ஊரில் எங்கேனும் மரணம் சம்பவித்தால் உடனே கபர்ஸ்தானில் குழி வெட்ட பாபுகானை தேட வேண்டியதாகி விட்டது. தொழில் சுத்தமாய் வேலை செய்யும் பாபுகானுக்கு வெட்டுவனாய் ஆனதில் எல்லாம் வருத்தமில்லை. கூலி கொடுக்க மூக்கால் அழும் “ஜமாத்” ஆட்களிடம் தான் கோபம். தனது ஆற்றாமையை, கேலியாக உடனிருக்கும் ரஷீத்திடம் அவ்வப்பொழுது சொல்லி நக்கலடித்துக் கொள்வான். மதம் மாறி திருமணம் செய்து கொண்ட பெண் இறந்துவிட, தன் மகளுக்குத் திருமணம் செய்து தான் அழகு பார்க்கவில்லை, இறுதி சடங்கையாவது தங்கள் முறைப்படி செய்ய அனுமதிக்க வேண்டுமென்று, கணவன் வீட்டாரிடம் கேட்கிறார் தாவூத்சாயுபு. இறந்து போன அவரது மகளுக்காக “கபர்க்குழி” வெட்டுகிறான் பாபுகான். இறுதியில் அது உப்புக்குழியாக மூடப்படுவதை காட்சிப்படுத்துகிறது இக்கதை.

தினமும் ஒவ்வொரு வீடாக முறை சோறு வாங்கி உண்ணும் நிலையிலிருக்கும் விளிம்பு நிலை குடும்பத்தின் கதை “தள்ளுபடியான ஆவணங்கள்”. சிறுவயது முதலே மதிய நேரத்தில் தூக்குச் சட்டியை தூக்கிக் கொண்டு போய் முறை சோறு வாங்குவதில் அசனுக்கு எந்த தாழ்வுணர்வும் இல்லை. ஆனால் அவன் படித்து முடித்து கடை வேலைக்குச் செல்லும் நாளில் அந்தத் தூக்கு வாளி அவனது தம்பியான உசேன் கைகளுக்கு மாறுகிறது. பல ஆண்டுகளாக தங்கள் ஆதார உணவிற்கான கொள்கலனாக, தங்கள் பசியைப் போக்கிய தூதுவனாக இருந்த அந்த அலுமியத் தூக்கு வாளிக்கு பதிலாக, புதிய அடுக்கு டிபன் கேரியரை வாங்கி வருவதாக முடிகிறது கதை.

தன்னை பெண்ணாக உணரும் பதின்பருவத்து சிறுவனின் மன அவஸ்தைகள், அவனுக்கு இயல்பாகத் தோன்றும் ஆனால் சமூகம் ஏற்றுக் கொள்ளாத பழக்கவழக்கங்கள், அதனால் அவன் பெற்றோரிடமும், மற்றவர்களிடமும் அடையும் அவமானம், அவனது வலி ஆகியவற்றை சொல்லும் கதை “வனம்புகுதல்”. மிக நுட்பமாக சித்தரிக்கப்பட்டிருக்கும் கதைக்குப் பொருத்தமான தலைப்பு.

ஆண் பெண் தாம்பத்ய உறவின் துவக்க சிக்கல்களை, ஒருவருக்கு மற்றவர் மேல் இருக்கும் ஆசை, எதிர்பார்ப்பு, உரிமை ஆகியவற்றை ஆண் கூற்றாகவும், பெண் கூற்றாகவும் உரைக்கும் கதை “வேட்கை”. திருமணமான முதல் இரவு மிகுந்த அன்போடு மனைவியை நெருங்கும் கணவன், அவளது வேட்கைக்கு ஈடு கொடுக்க முடியாமல் சரிகிறான். அது குறித்து அவனுக்கு குற்ற உணர்ச்சியில்லை. கணவன் மனைவி உறவு இயல்பாய் மலரும் பூ, காலங்காலத்துக்கு வளர்பிறையாய் வளரும் என்று நம்புபவனுக்கான முதல் அடி, மறுநாள் காலை “இவன் ஆம்பிளையே இல்லை” என்று புதுப்பெண் பலபேர் முன் பொதுவில் சொல்லும் வார்த்தை. இடி விழுந்தவனைப் போன்று உணர்ந்தவன், பின் சுதாரித்துக் கொண்டு நிகழ்வை ஆராய முனைகிறான். மறுபுறம் சிறுவயதில் இருந்து பல்வேறு பாலியல் சுரண்டல்களில் இருந்து தன்னைக் காத்து வந்தவள், நேர்மையான வழியில் தனக்கு உரிமையானவனிடம் உரிய முறையில் தன்னை முழுமையாக கொடுக்க வருபவளுக்கு ஏற்படும் அதிருப்தி விஷம் தோயந்த வார்த்தைகளாக கொட்டி விடுகிறது. பல சமாதானங்களுக்குப் பிறகு மறுநாள் இரவு அவர்கள் சேர ஆயத்தமாவதுடன் முடிகிறது கதை.

தேவைக்குத் திருடும் சில்லரைத் திருடனான சேதுராமன், அரசு அதிகாரிகள், சிப்பந்திகள், டீக்கடைப் பட்டறையில் டீ ஆற்றுபவர், டீக்கடையில் அமர்ந்து கதையடிக்கும் இளைஞர்கள், ட்ரை கைக்கிள்க்காரர்கள், மத்திய, கீழ்மத்திய வர்க்கத்து ஆண்கள், பெண்கள் என சமூகத்தின் பல்வேறு அடுக்குகளில் இருக்கும் அனைவரும் செய்யும் சில்லரைத் தனங்களைக் கண்டு மனம் வெதும்புகிறான். ஒருவேளை வயிற்றுப் பாட்டுக்காக, ரோட்டில் வித்தை செய்யும் ஒரு கழைக்கூத்தாடி குடும்பத்தையும், அதிலுள்ள பெண்களை பார்வையாளர்கள் பார்த்து, சீண்டி, வேடிக்கை பொருளாய் பாவிப்பதை எண்ணி வருந்துகிறான். முந்தைய இரவு தான் திருடிய பணத்திலிருந்து ஒரு ஐநூறு ருபாயை அவர்களுக்குத் தரவிரும்பி அவர்கள் இருக்கும் இடத்தைத் தேடி அலைகிறான். இறுதியில் கழைக்கூத்தாடி இவன் கொடுக்கும் பெரிய பணத்தின் பின் இருக்கும் தொல்லைகளை எண்ணி வாங்க மறுக்கும் போது, அவன் கைகளின் பணத்தை திணித்து விட்டு திரும்பிப் பார்க்காமல் செல்கிறான். ”வெயிலின் நிழல்” கதையின் தலைப்பு. ஒரு திருடனுக்குள் இருக்கும் மனிதாபிமானத்தை இயல்பாய் சொல்லும் கதை.

தன் வாழ்க்கை முழுவதையும், அண்ணன், அண்ணி, தங்கை அவர்கள் குடும்பம் என்று அற்பணித்து விட்டு, ஊருக்கு நல்லவராய் வாழ்ந்த முகன்னத் ஜலீல் அஹ்மத் ரப்பானி “மௌத்” ஆகிப் போன நாளில் கேட்கும் ஒப்பாரி சத்தத்தில் அவரின் அருமை பெருமைகள் எல்லாம் பறைசாற்றப்படுகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எவ்வாறு முக்கியமாய் இருந்தார் என்ற முழக்கங்களில், தன்னை ஒரு பொருட்டாக மதித்து, தன் உணர்வுகளை புரிந்து கொள்ளவில்லையே என்றும், ஊருக்கெல்லாம் நல்லவராக இருந்தவர் தனக்கு என்னவாக இருந்தார் என்று அடிவயிறு நடுநடுங்க கத்திக் கதறிய அவரின் மனைவியின் குரல் மற்ற குரல்களுக்கிடையே அப்போதும் அமுங்கித் தான் போய் விடுகிறது. அவளின் உணர்வுகளை சொல்லாத வார்த்தைகள் மூலமாக உணர வைக்கும் கதை “மய்யம்”

மதுரை நகரின் வாழ்வியலையும், விளிம்பு நிலை மணிதர்களின் அன்றாடங்களையும், குறிப்பாக முஸ்லிம் சமூக பழக்கவழக்கங்களை அச்சு அசலான உயிரோட்டமுள்ள சித்திரமாகத் தீட்டிக் காட்டும் வலிமை அர்ஷியா அவர்களின் எழுத்துக்கு இருக்கிறது. அயற்சியூட்டாத, இயல்பான மொழிநடையில் எளிய மக்களின் அன்றாடங்களை இலக்கியமாக்கும் சவாலை அழகாகவும் நேர்த்தியுடனும் நிறைவேற்றியிருக்கிறார். அவரது இலக்கியப்பயணம் மென்மேலும் தொடர மனம் நிறைந்த வாழ்த்துக்கள் !

—–

மரணத்தில் மிதக்கும் சொற்கள் (சிறுகதைத் தொகுப்பு)

எஸ்.அர்ஷியா

புலம் வெளியீடு – டிசம்பர் 2014

பக்கங்கள்: 160, விலை: ரூ.130