Category: இதழ் 16

2012 இல் சிறந்த புத்தகங்கள் அறிமுகம்

இந்த வருடம் 2012 ஆம் ஆண்டில் வெளியான புத்தகங்களில் எனக்குப் பிடித்த புத்தகங்கள் நாவல் ,சிறுகதை , கவிதை,மொழிபெயர்ப்பு , கட்டுரை புத்தகங்கள் பற்றிய ஒரு பதிவாக இந்தக் கட்டுரை அமைக்க திட்டம் இங்கே குறிப்பிடுகிற புத்தகங்கள் நான் வாசித்ததில் எனக்குப் பிடித்த புத்தகங்கள் என்றுதான் இதைக் குறிப்பிட விரும்புகிறேன். இதே போல உங்களுக்குப் பிடித்த புத்தகங்களும் இருக்கலாம் . அவற்றை நீங்கள் இங்கே விருப்பப்பட்டால் குறிப்பிடலாம். அந்தக் குறிப்புகள் மற்றவர்களுக்குப் பயன்படலாம். ஆகையால் உங்களுக்குப் பிடித்த புத்தகங்கள் எவை எவையென குறிப்பிடுங்கள் நண்பர்களே தயக்கம் வேண்டியதில்லை

2012 இல் வெளியான புத்தகங்கள்

நாவல்

ஆறாவடு சயந்தன் தமிழினி பதிப்பகம் சென்னை

சிறுகதை

ஈட்டி குமார் அம்பாயிரம் உயிர் எழுத்து பதிப்பகம் திருச்சி

கவிதை

மதுக்குவளை மலர் வே.பாபு தக்கை பதிப்பகம் சேலம்

குறுநாவல்

ரமாவும் உமாவும் தீலிப்குமார் சந்தியா பதிப்பகம் சென்னை

மொழிபெயர்ப்பு

மகாராஜா வரலாற்று கட்டுரைகள் சந்தியா பதிப்பகம் சென்னை

சிறுகதை தொகுப்பு புத்தகம்

21 ஆம் நுற்றாண்டில் சிறந்த சிறகதைகள் தொகுப்பாசிரியர் கீரனுர் ஜாகீர் ராஜா ஆழி பதிப்பகம் சென்னை

(இது ஒரு முழுமையான பட்டியல் அல்ல . தொடரும் )

எச்சில் குவளை – கே.பாலமுருகன், மலேசியா

காயத்ரியின் இரு உதடுகளும் பிரிந்து தரையில் அழுத்திக் கொண்டிருக்க முகம் பாதி புதைந்து வெகுநேரம் ஆகியிருக்க வேண்டும். யாராவது தூக்கி நிமிர்த்தி உட்கார வைக்கும்வரை அவள் அப்படியே கிடப்பாள். தரையின் குளிர்ச்சியும் வாயிலிருந்து ஒழுகி பின்னர் முகத்திலும் தரையிலும் காய்ந்து ஒட்டிப்போன எச்சிலும் என சட்டென அவளைத் தரையிலிருந்து பிரித்துப் பார்ப்பவருக்கு அசூசையாக இருக்கும்.

“ஏய்ய்ய்ய்..சூச்சு”

காயத்ரிக்கு சிறுநீர் கழிக்க வேண்டும் என்பதன் சமிக்ஞை அது. 5 நிமிடம் விடாமல் அழைப்பாள். யாரையாவது. பெயரெல்லாம் அவளுக்கு முக்கியம் கிடையாது. அந்த நேரத்தில் யார் இருந்தாலும் குரலை அழுத்தி அழைப்பாள். அதிகபட்சம் 10 நிமிடம் அழைப்புத் தொடரும். 11ஆவது நிமிடம் தரை ஈரமாகியிருக்கும்.

“ஏய்ய்ய்ய்ய்ய்ய்”

அன்று அருகில் யாரும் இல்லை. மேகலா அக்காள் வெளியே சென்று விட்டாள். அம்மா அநேகமாகப் பின்கட்டில் இருப்பாள். அவள் வேலையில் மூழ்கிவிட்டாள். காÂத்ரியின் சமிக்ஞையெல்லாம் காதுக்கு எட்டாது. வேணு இருந்திருந்தால் ஓடி வந்து அவளைத் தூக்கி நிமிர்த்தி கழிவறைக்குத் தூக்கிச் சென்றிருப்பான். வேணு காயòரியின் இன்னொரு உடல். இப்பொழுது வேணு அங்கில்லை. வீட்டை விட்டு ஓடி ஒரு வாரம்தான் ஆகின்றது. காöòதிரிக்கு வேணு இருக்கும் ஞாபகம் ஒரு 2 நிமிடம்வரை தொடரலாம். பிறகு அவள் மூச்சு வாங்கும்.

வேணு அழுது புரண்ட காட்சியை அவள் அவன் இருக்கும் 2 மணிநேரம்வரை கவனிக்கவில்லை. தூக்கத்தில் குப்புர விழுந்தவள், அதன் பிறகு நிமிர முடியவில்லை. வேணுவின் உயிரும் குரலும் துடிக்கும் சத்தத்தைக் கேட்டப்படியே இருந்தாள். அது ஒரு 10 நிமிடத் துடிப்பு. அது வேணுவின் முனகல் என மட்டும் காöòரிக்குத் தெரிந்திருந்தது. அவளுக்கு மூச்சி முட்டியது. கைகளைத் தரையில் முடிந்தவரை ஓங்கி ஓங்கி அடித்தாள். கொடூரமாக முனகினாள். அதன் பிறகு முன் வாசல் கதவு திறக்கும் ஒலி. அவன் அதன் பிறகு வரவில்லை. அவன் போய் ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு அவளால் தன் அருகில் இருந்த எச்சில் குவளையை மட்டும்தான் தள்ளிவிட முடிந்திருந்தது. அது அவளின் சமிக்ஞை. அவளால் அழ முடியவில்லை.

1

வேணு. பக்கத்து வீட்டுப் பையன். காöத்ரிக்கும் அவனுக்கும் ஒரே வயதுதான். காÂத்ரி பிறந்ததிலிருந்தே இப்படித்தான். முதுகெலும்பு கால் எனக் கைகளைத் தவிர வேறெதுவும் செயலற்ற நிலை. நாள் முழுக்கத் தரையைப் பிராண்டிக் கொண்டே இருப்பதுதான் அவளுக்குத் தெரிந்த விளையாட்டு. அம்மாவின் மீது வரும் கோபத்தைத் தரையைக் குத்தி வெளிப்படுத்துவாள். சாப்பாட்டுத் தட்டைத் தள்ளிவிடுவாள். அல்லது பக்கத்து வீட்டுக்குக் கேட்கும் அளவிற்கு ஊலையிடுவாள். அது அருகில் இருப்பவர்களுக்கு அழுகையைப் போல கேட்கும். தூரத்திலிருந்து கேட்டால் ஊலைவிடுவது போல இருக்கும். வேணு காலையில் எழுந்ததும் காயத்ரி வீட்டை எக்கிப் பார்க்க முடியும் அளவிற்கான சுவர் மீதேறி அவ¨Çப் பார்த்துக்கொண்டிருப்பான். அங்கு வீடு மாற்றலாகி வந்த பிறகு அவனைப் பொறுத்தவரை காயத்ரி ஒரு விநோதமான பிறப்பு. அவளுடைய முனகல், உடல்வாகு, எச்சில் குவளை என அனைத்தையும் அவன் விநோதமாகவே பார்ப்பான்.

வேணுவின் காலை மாலை இரவு முழுக்க காயத்ரி நிரம்பியிருந்தாள். 3 கிலோ மீட்டர் அடர்த்தியான காடுகளுக்கு அப்பால் அங்கிருக்கும் ஒரு வரிசை வீட்டில் காயத்ரி குடும்பம், வேணு குடும்பம் மற்றும் ஒரு சீனக் குடும்பம் மட்டுமே இருந்தார்கள். அது புது வீடுகள் கட்டுவதற்காக அழிக்கப்பட்ட காட்டின் மீதப் பகுதிக்கு அப்பால் இருந்தது. ஆகையால், அங்கிருப்பவர்கள் பட்டணத்திற்குக்கூட 10 கிலோ மீட்டர் பயணிக்க வேண்டும். காயத்ரியின் அம்மாக்குத் தேவையான அனைத்தும் வேணுவின் அப்பாவே செய்து வந்தார். இரு வீடுகளுக்கும் தடையாக ஒரு சுவர் மட்டுமே.

“ப்பா நான் காயத்ரிக்குக்கூட வெளையாடலாமா?” வேணு கேட்ட முதல் கேள்வி அது. காயத்ரியின் உலகிற்குள் ஒரு தினசரி பார்வையாளனாக மட்டுமே இருந்த வேணு முதன் முதலாகச் சுவரைக் கடக்க வைத்தக் கேள்வி அது.

காலையில் எழுந்ததும் விளையாட யாருமற்ற வேணு காயத்ரியின் வீட்டுக்குள் போய் அவள் அருகில் அமர்ந்துகொண்டு அவளையே வெகுநேரம் பார்த்துக் கொண்டிருப்பான். அவள் எந்தவித சமிக்ஞையுமின்றி அவனுடைய பார்வையிலிருந்து விலகியிருக்க நினைப்பாள். ஆனால் அவளால் முடியாது. அம்மா வந்து அவளை வேறு பக்கம் திருப்பி படுக்க வைத்தால் மட்டுமே முடியும். வேணுவின் பார்வை அவளுக்கு எரிச்சலாக இருந்திருக்க வேண்டும். அங்குலம் அங்குலமாக அவள் உடலுக்குள் நுழைந்தான் வேணு. அவளுக்கு அசூசை. உடல் அறுவறுப்பாக இருந்தது. அவளுடைய செயலற்ற கால்களையும் வாயிலிருந்து வடியும் எச்சிலையுமே அவன் கவனித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு அது விநோதம்.

கோபமுற்ற காயத்ரி தரையை ஓங்கி அடித்தாள். இன்னும் வேகமாக அடித்தாள். வேணு இரண்டடி தள்ளி அமர்ந்தான். வெளியே சென்றால் அவனுக்கு ஒன்றும் இல்லை. வெறும் காடு, அம்மா, தனிமை. காயத்ரியைப் பார்த்து மெல்ல சிரித்தான். அது முதல் சிரிப்பு. பதிலுக்கு அவனும் தரையை ஓங்கி அடித்தான். காயத்ரியும் வேணுவும் சேர்ந்து விளையாடிய முதல் விளையாட்டு அது. இருவரும் தரையை ஓங்கி அடித்துச் சிரித்துக் கொண்டார்கள். காயத்ரியின் சிரிப்பை வர்ணிக்க இயலாது. அது சட்டென சிரிப்பாகத் தெரிய வாய்ப்பில்லை. அது கேலி செய்வது போல இருக்கும். தலையை மேலே உயர்த்தி யாரும் பார்த்திராதபடி பத்திரமாகச் சிரிப்பாள்.

காயத்ரியின் பால்ய காலத்தின் தனிமையை உடைத்தது வேணுவாக மட்டுமே இருப்பான். வேணு அதன் பிறகு பள்ளி முடிந்த கணங்களிலெல்லாம் காயத்ரியுடந்தான் இருப்பான். நாள் முழுக்க அவளுக்கு அருகில் படுத்துக் கொண்டு பேசிக் கொண்டிருப்பான். சில சமயங்களில் அப்படியே தூங்கிவிடுவான். காயத்ரி அவனையே பார்த்துக் கொண்டிருப்பாள்.

2

காயத்ரியின் அம்மா அன்று காலையிலேயே அவசரமாகப் பட்டணம் செல்ல வேண்டும். காயத்ரிக்குக் கிடைக்கும் மாதந்திர உதவி தொடர்பாக அவரை அலுவலுகத்தில் அழைத்திருந்தார்கள். ஆகையால், வேணுவே காயத்ரியை இரவுவரை பார்த்துக் கொள்ள வேண்டும். காயத்ரியைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு அவனளிக்கப்பட்ட முதல் நாள் அது. ஒரு கடமை உணர்ச்சியுடன் காலையிலேயே வந்துவிட்டான்.

பேசவும் நகரவும் முடியாத காயத்ரியுடன் இத்தனை நாள் பேசிக்கொண்டும் விளையாடிக் கொண்டும் இருந்த வேணுவிற்கு இது புதிதல்ல. அவள் இருப்பதால் அவனால் தனிமையை உணர முடிவதில்லை. அவனே கேள்விக் கேட்டு அவனே பதில் சொல்லிக் கொள்வான். அதில் அவனுக்குச் சலிப்பும் வந்ததில்லை. அவளால் பலவகையான சமிக்ஞையை வேணுவினால் கற்றுக்கொள்ள முடிந்தது. கோபத்திற்காக மட்டுமல்லாமல் சிரிக்கும்போது தரையை ஓங்கி அடிக்கும் பழக்கத்திற்கு ஆளானாள். தலையை மேலே தூக்கி சிரிக்காமல் நேரே அவனுடைய முகத்தைப் பார்த்துச் சிரிக்கப் பழகியிருந்தாள்.

“காயத்ரி.. உனக்கு ஒன்னு தெரியுமா.. எங்க அப்பா சரியில்லெ.. அவரு ரொம்பெ கெட்டவரு”

வேணுவினால் தன் உணர்வுகளைக் கொட்ட முடிந்த இடம் காயத்ரித்தான். தன் அப்பாவைப் பற்றி எப்பொழுதும் பேசிக்கொண்டே இருப்பான். வேணு வீட்டில் அவன், அம்மா, அப்பா மற்றும் ஒரு நாய். நாய் ஜோனியைக் கண்டால் அவனுக்குப் பிடிக்காது. வீட்டில் எப்பொழுதும் சண்டை.. வேணு அம்மாவுக்கு அவனுடைய அப்பாவின் நடத்தையின் மீது எப்பொழுதும் சந்தேகம். அவரும் அப்படித்தான் நடந்து கொண்டார்.

வேணுக்கு அவன் வீட்டில் மீதிருந்த ஈர்ப்பு முற்றிலுமாக குறைந்திருந்தது. காயத்ரியிடமே அவன் கவனம் முழுக்க. அன்று அவள் அம்மா வரும்வரை அவளுடன் இருந்ததில் அவனுக்குக் காயத்ரி மீதான அன்பும் ஈர்ப்பும் மேலும் அதிகமாயின. அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவளுக்குள் ஓர் அங்கமானான். அவள் விடும் மூச்சுக் காற்று அவனை எப்பொழுதும் விழித்திருக்கச் செய்தது. அப்பாவின் மீதுள்ள வெறுப்பைத் தணிக்கும் சக்தி அவளுடைய இருப்புக்கு உள்ளதை அவன் மெல்ல உணர்ந்தான்.

வேணு காயத்ரியின் எச்சில் குவளையை எக்கிப் பார்த்தான். அதில் தனிமையும் ஏக்கங்களும் உச்சரிக்கப்படாத சொற்களும் மிதந்து கொண்டிருந்தன. அப்பொழுது அவள் அவனிடம் அதிகபட்சமாக எதிர்பார்த்தது நிறைந்துவிட்ட அந்த எச்சில் குவளையைச் சுத்தப்படுத்தி வைப்பதை மட்டும்தான். வேணு அதை அசூசையாகப் பார்க்காமல் சுத்தம் செய்து வைத்தான்.

இரவு அம்மா வருவதற்கு முன் இருவரும் உறங்கிப் போயிருந்தார்கள். வேணுவினால் அவ்விடத்தைவிட்டு நகர முடியவில்லை. காயத்ரியைப் பிரிய மனமில்லாமல் அங்கேயே படுத்துக் கொண்டான். எச்சில் குவளையின் வாடையும் தரையின் குளிர்ச்சியும் அவனுக்குப் பழகியிருந்தது. சட்டென தூக்கத்திலிருந்து விழித்தக் காயத்ரி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

3

வேணுவின் அம்மாவின் மரணத்திற்குப் பிறகு அவனுடைய அப்பா எங்கோ ஓடிப்போய்விட்டார். தன் உறவுக்காரப் பெண் ஒருத்தியுடன் சென்றுவிட்டதாக எல்லோரும் பேசிக் கொண்டனர். வேணு பாதி செத்துவிட்டான். அதன் பிறகு காயத்ரி வீட்டிலேயே இருந்துவிட்டான். 17 வயது மட்டுமே. அவனுக்கு அங்கு கேட்பாரில்லை. காயத்ரி அம்மாவுடன் கொஞ்சம் சமளித்துக்கொண்டால் காயòரியுடன் மீதி நாட்களைக் கடத்திவிடலாம் என இருந்துவிட்டான். காயத்ரிக்கு வேண்டியதை அனைத்துமே அவýதான் செய்தான். அவளைத் தூக்கிக் கொண்டு கழிவறைக்கு அழைத்துச் செல்வது முதல் உணவு ஊட்டிவிடுவதுவரை வேணுத்தான் அனைத்துமே. கொஞ்சம் கொஞ்சமாக காயத்ரியின் அம்மா வெளி வேலைக்குப் போகத் தொடங்கினாள்.

வேணு வீட்டைவிட்டு காயத்ரியைவிட்டு எங்கும் நகர்ந்ததில்லை. அவளே உலகம். அவளுக்குக் கிடைக்கும் வெளிச்சம்தான் வேணுவிற்கும். முன்கதவைத் திறந்தாலோ அல்லது காயத்ரி வழக்கமாகப் படுத்திருக்கும் நேர் திசையிலுள்ள சன்னலைத் திறந்தாலோ உள்ளே வரும் வெளிச்சம்தான் வேணுவிற்கும். அவ்வளவுத்தான் அவர்களின் வெளி உலகம். அவளுக்குப் பக்கத்திலேயே படுத்துக் கிடப்பான். தொலைக்காட்சி இல்லாத அந்த வீட்டில் காயத்ரியின் முனகலும் வேணுவின் பேச்சும் மட்டுமே.

காயத்ரியைத் தவிர வேணுவினால் வேறு எதையும் சிந்திக்க முடிந்ததில்லை. தரையையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு அடுத்து அவளுக்கு என்ன தேவை எனச் செய்யத் தொடங்கிடுவான். காயத்ரியின் மூத்திரப் பையைக் கழுவதும் அவள் ஆடைகளைத் துவைப்பதும் அவளுக்கு உடை உடுத்துவதும் என அவளை முழுமையாக ஆட்கொண்டிருந்தான். இல்லை, காயத்ரித்தான் அவனை ஆக்கிரமித்திருந்தாள். அவன் கண்களை நேரேதிரே பார்த்து கூண் வளைந்த அவளுடைய முதுகை மேலும் தாழ்த்தி புன்னகைப்பாள். வாய்நீர் ஒழுக சிரித்து கைத்தட்டுவாள்.

 

4

இன்று வேணு வீட்டைவிட்டு ஓடிப்போவான் என யாருக்குமே தெரியாது. அவனுக்கும்கூட. காயத்ரியின் முகத்தில் வெகுநேரம் வெயில் சூட்டைக் கிளப்பிக்கொண்டிருந்தது. அவளால் அதைத் தடுக்கவும் முடியவில்லை. வேணுவை அழைத்தாள். தரையை ஓங்கி அடித்தாள். பின்கட்டில் கதவோரம் சாய்ந்துகொண்டு மேலே பார்த்துக் கொண்டிருந்த வேணுவிற்கு நினைவு திரும்ப கொஞ்ச நேரம் எடுத்தது.

“ஈஈஈஈஈஈஈ”எனக் கத்தினாள்.

முதன்முதலாக வேணுவிற்கு அது எரிச்சலாக இருந்தது. காயத்ரியின் குரல் அவனுக்குள் சேமித்துக் கிடந்த அதிருப்திகளைக் கிளறிவிட்டதைப் போன்று ஒலித்தது. அவள் முகத்தில் மொய்த்துக் கொண்டிருந்த ஈக்கள் சிலவற்றை அவள் விரட்ட முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தாள். ஈனமான ஒரு குரலை எழுப்பி அவனை அழைத்தாள். வேணுவிற்குச் சட்டென கோபம் தலைக்கேறியது.

“ஈஈஈஈஈஈஈ” எனப் பதிலுக்கு அதட்டலாகக் கத்திவிட்டு நடந்து வந்தான்.

வெளிச்சம் கண்களைக் கூசியது. அனைத்துச் சன்னல்களையும் முன்கதவையும் அடைத்துவிட்டு காயத்ரியின் பின்புறம் அமர்ந்தான். அவனால் பேச முடியவில்லை. அவளை எதிர்கொண்டு பார்க்கவும் முடியவில்லை. காயத்ரியைப் போலவே சமிக்ஞையால் கத்தினான். தரையை ஓங்கி ஓங்கி அடித்தான். வேணுவின் வாயிலிருந்து வாய்நீர் ஒழுகியது. சிரிப்பை உள்ளுக்குள் அடக்கி தலையை மேலே உயர்த்தி சன்னமாகச் சிரித்தான். தலையை ஓர் ஓரமாகச் சாய்த்து வெளிக்கதவைப் பார்த்தான்.

***

 

மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் _ கதிர்பாரதி – புது எழுத்து பதிப்பகம்

மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்  – கதிர்பாரதி  புது எழுத்து பதிப்பக வெளியீடு

புத்தக பின்னட்டைக் குறிப்பு

எளிமையும் வசீகர கவிமொழியும் மரபின் சாயலுடன் எளிய படிமங்களைக் கொண்டு
தம் கவிதைகளைக் கட்டமைக்கிறார் கதிர்பாரதி. தனிமனித வாழ்வின், சமூகத்தின்.
இந்நிலத்தின் மீது அன்றாடம் நிகழ்த்தப்படும் அற்புதங்களையும்
விளையாட்டுகளையும் ஆத்மார்த்தமாகத் தொட்டுணர்கின்றன. பெருங்காமப்
பேராற்றுத் தீரத்தில் ஒரு கைநீரள்ளி கோபியர் மீது தெளித்து விளையாடும்
கிருஷ்ணனின் கரங்கள் வாய்த்திருகின்றன இவரின் சில கவிதைகளுக்கு.
சமகாலச் சூழலில் மொழியையும் அதன் இறுக்கத்தையும் தளர்த்திய கவிதைகள்
இவை.

– நரன்

 

சில கவிதைகள்
==================
குளத்தில் அலைகின்றன கவிதைகள்
1.
யவ்வனம் சொட்டும் அவள் பார்வையில்
ஒரு குளம் விரிகிறது.
வழுக்கும் பாசிகளிலிருந்து
பச்சை தேவதை எழும்புகிறாள்.
மேனியெங்கிலும் வழிந்து பரவுகிறது
மகரந்தக் காடு.
தாழ்ந்துயரும் அவளது பருவ மூச்சு
பட்டாம்பூச்சியாகச் சிறகசைக்க
உதிர்ந்து நகர்கின்றன
தேவதைத் துகள்கள்.
இப்போது தேவதை குளமாகி
மகரந்தமாகத் ததும்பிக்கொண்டிக்கிறாள்.
தாகம் போக்க குளத்தில் இறங்கும்
அவன் கரைந்துபோகிறான்
ஒரு மகரந்த அலையில்.

2.
முன்மாலைக்கும்
பின்மாலைக்கும் இடையே
மிதவேகத்தில் ஓடுகிற ரயில்
ஒரு புள்ளியாகி மறைகிறது அந்திக்குளத்தில்
பிள்ளைக்குப் பாலூட்டும் ஏக்கத்தில்
பயணிக்கிற
அவளின் முலைகளை
தாலாட்டி தாலாட்டி.

3.
நிச்சலனமுற்று
இருந்த தெப்பக்குளத்தில்
கொத்துக்கொத்தாக
பார்வைகளை அள்ளி
வீசிவிட்டு வந்துவிட்டாள்.
சலனமுற்ற மீன்களில் சில
நீந்திக்கொண்டிருக்கின்றன
அவனது ஈசான மூலையில்.
4.
இரவு தளும்பிக்கொண்டு
இருக்கிற குளத்தில்
நெளிந்துகொண்டு
இருக்கிற பௌர்ணமியை
கொத்தும் கொக்கு
றெக்கை விரிக்க
நிலவு பறக்கிறது.

5.
கால் புதைய கனிந்திருக்கும்
அந்த நிலத்தின் அந்தரங்கத்துள்
புதைத்து வைத்திருக்கிறான்
புத்தன் தன் கனவை.

கிளைகளற்ற தருவாக
காய்த்து இறுகிய மலையாக
குளிர்பொருந்திய ஊற்றாக
விடம் கக்கும் பாம்பாக
எதுவாகவும் வெளிப்படலாம்
எதிர்பாரா தருணத்தில்.

கனவுக்கும் புத்தனுக்கு இடையில்
ஏக்கம் தொனிக்கக் காத்திருக்கிறது
சலனிக்காத கர்ப்பக் குளத்து இரவு.

6.
மரங்கொத்தி,
தன் சபலத்துள் பதியமிட்டு வளர்க்கும்
பச்சையகாலத்துத் தளிர்மரமொன்று
கொக்கின் கூர்மூக்குக் கனவில் தளும்பும்
மாரிக்காலக் குளத்தில்
வேர்களை இளைப்பாற்றுகிறது.
7.
புணர்ச்சிக்குப் பரிச்சயமான யோனியை
மிருதுவாக மலர்த்தி
அதிரப் புணர்கையில்
மேலெழும்பி மிதக்கும் இசையை
ஒத்திருக்கிறது
தவளைகள் தத்தித்தத்திச் செல்ல
ஒலி எழும்பி அலைமோதும்
மாரிக்கால குளம்.
இருக்கிறது
உச்சி ஆகாயத்துக்குப் பக்கத்தில்
காற்றுவெளியில் நிச்சலனமுற்று
நீந்திக்கொண்டு
இருக்கும்
அந்தப் பருந்து,
நடுநெற்றியில் தீயெரிய
போதிமரத்தடியில்
ஆழ்நிஷ்டையில்
இருக்கும்
சாக்கிய புத்தனின்
மனமாக இருக்கிறது.

காலத்தின் மீது விரைகிறது பொறுப்பு

பகலைக் கடந்து
முன்மாலைக்குள் விரைகிற இந்தப் பேருந்து
பேரூராட்சியின் பின்னிரவிலிருந்து வருகிறது.
மறுநாள் மாநகரத்தின் முன்னிரவுதான் இலக்கு.
மிகமிகப் பொறுப்பான பேருந்து இது.
பயணிகள் இருக்கைக்கு வந்துவிட்டால்
தாயின் கருவறை கதகதப்போடு தூங்கலாம்.
இதோ… இதயநோயாளி நோகாவண்ணம்
பேருந்து விரைகிறதைக் கவனிக்கிறீர்களா.
கர்ப்பிணியின் ஐந்துமாத வயிற்றில்
அவள் தாய் பூசிவிட்ட விபூதிகூட அழியவில்லை பாருங்கள்.
தகப்பன் மார்போடு அப்பிக்கொண்ட பிஞ்சுமலர்
கனவில் பொம்மைக்கு இடுகிற முத்தத்தையும்
லாகவமாகச் சுமந்து போவதை அறிகிறீர்களா.
வேங்கைப் பாய்ச்சலை இடைநிறுத்தி
அது சாலப் பரிந்தூட்டும் தேநீர், இளநீர்…
பேருந்தின் பேரன்பு என்பது புரிந்திருக்குமே.
கவனத்தோடு மாநருக்குள் நுழைகிறது.
வரவேற்பது அதன் முன்னிரவுதான்.
இதோ பாருங்கள்
அலுங்காமல் இறக்கிவிடுகிறது இதயநோயாளியை.
குலுங்காமல் இறங்குகிறாள் கர்ப்பிணி.
தூக்கத்திலிருந்து புன்னகைக்குத் தோள்மாற்றி
இறக்குகிறது சிறுமியை.
கடைசியாக, பேரூராட்சியின் பின்னிரவை
மாநகராட்சியின் முன்னிரவு
கைகொடுத்து இறக்குவதையும் பார்த்துவிட்டீர்களா.
நான்தான் சொன்னேனே
மிகமிகப் பொறுப்பான பேருந்து இதென்று.

என் தெய்வமே… தேவதையே… மோகினியே

என் மோகினிக்குப் பித்தவெடிப்புகள் மலர்ந்திருக்கின்றன
அதிலென் கனவினை இட்டு நிரப்புகிறேன்.
ஏனெனில் அவற்றிலிருந்து கவிதைகள் முளைக்கின்றன.
வழியும் மூன்றே மூன்று நரைமுடிகளில்
பால் பௌர்ணமி இறங்கி வருகிறது
அதை வணங்கி ஆராதனை செய்கிறேன்
அவற்றில் வெளிச்சம் பெறுகின்றன கண்கள்.
காற்றுக்கு அசையும் கூந்தல் கீற்றுகள் முன்
முழந்தாழிடுகிறேன்
அவைதாம் மனதை மேலெழும்பச் செய்கின்றன.
சரியும் சதையமுதங்களுக்கு என் இளமை சமர்ப்பணங்கள்
ஏனெனில் அவை குழந்தையாக்கி உறங்க வைக்கின்றன.
அவளருகே முத்தமாகிக் கிடந்த

துரோணா கெட்ட வார்த்தை

ல்லூரியில் சேர்ந்திருந்த புதிதில் உடன் படிக்கும் நண்பர்களை மச்சான் மாப்பிள்ளை என்றழைக்கக்கூட எனக்கு வாய் வராது.பள்ளியிலிருந்து,தயிர் சாத அந்தஸ்தை மட்டும் கடந்த ஒரு அரை வேக்காடாகத்தான் நான் வெளியேறியிருந்தேன்.(என்னை விட மட்டமாக இன்னமும் பருப்பு சாதமாகவே காலத்தை கழிப்பவர்களும் எங்களிடையே இருக்கத்தான் செய்கிறார்கள்). ஆனால் வளரும் தலைமுறையினரிடையே இந்த சப்பைத்தனம் துளியும் இருக்காதென தெளிவாக அறிய முடிகிறது.

நேற்று கல்லூரியின் பின் வாசல் பக்கம் நண்பனுக்காய் காத்துக் கொண்டிருந்த போது இரண்டு பொடிப் பயல்களை பார்த்தேன். இருவரும் பார்ப்பதற்கு ஒன்பதாவது படிக்கும் மாணவர்களைப் போல் இருந்தார்கள். அதிலொருவன் படு ஆவேசமான குரலில்”அந்த தெவடியாப் பையன் சுரேஷ் மட்டுந்தான் மச்சான் உயிர எடுக்கிறான். அவன் மட்டுந் தனியா சிக்கட்டும். கல்லாலயே அடிச்சு மண்டைய பொளக்குறேன் ” என்று கடன் கொடுத்த வட்டிக்காரன் மாதிரி கண்டமேனிக்கு விட்டு ஏறிக்கொண்டிருந்தான். கூட இருந்தவனையும் சும்மா சொல்லக்கூடாது. அவனும் ஆள் பயங்கர கடுப்பில்தான் இருந்தான் போலிருக்கிறது. “ஆமா மாப்ள அந்த பன்னாடையாலத்தான் எல்லா எழவும்” என்று பதிலுக்கு அவன் பங்கை சூடாக ஊற்றிக்கொண்டிருந்தான்.தொடர்ந்து மிகுந்த அறச்சீற்றத்தோடு பேசியபடி(சுரேஷ் ஒரு கேக்கூ,ஒரு லூசுக்கூ) அவர்கள் என்னைத் தாண்டி போவதை கண்கொட்டாது பார்த்துக் கொண்டேயிருந்தேன்.என்னுடைய யூகம் சரியாக இருப்பின், சுரேஷ் என்கிறவர் அவர்களின் கணக்கு ஆசிரியராகவோ அல்லது வேதியியல் ஆசிரியராகவோ இருக்கவேண்டும்.

அந்த சுரேஷிற்கும் இந்த கதைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்பதால் அவரை பற்றிய மேலதிக தகவல்களை தெரிந்துக் கொள்ள எந்த தேவையுமில்லை.நான் சொல்ல வந்தது அந்த பயல் பயன்படுத்திய கெட்ட வார்த்தைப் பற்றி. இந்த வயதிலேயே தெவடியா பையன் என்றெல்லாம் பேசுகிற அளவிற்கு அவனுக்கு தைரியம் வாய்த்திருக்கிறது. பின்நவீனத்துவ சமூகத்தில் பிள்ளைகள் எப்படியெல்லாம் கெட்டுப் போகிறார்கள் பாருங்கள் என்று முதுகை சொறிந்துக் கொண்டு பேசுகிற அளவிற்கு நானொன்றும் உத்தம மயிரில்லை. ஒருவேளை நீங்க அந்த மாதிரியான கோஷ்டியை சேர்ந்தவர் என்றால் தயவு செய்து இந்த கதையை தொடர்ந்து படிக்காதீர்கள். உங்களுடையே சங்காத்தமே எனக்கு வேண்டாம். கதையை தொடர்வதைப் பார்த்தால் நீங்களும் என்னைப் போன்ற திருட்டுக்கூனாத் தான் போலிருக்கிறது. இருக்கட்டும். விஷயம் என்னவென்றால், அவனைப் பார்த்ததும் சட்டென்று எனக்கு என்னுடைய நினைவே பரிதாபமாய் மனதுள் வந்துப் போனது.

பன்னிரெண்டாம் வகுப்பு படித்து முடிக்கிற வரையிலும்கூட நான் பேசிய மோசமான கெட்ட வார்த்தை என்பது மயிரு புடுங்கி என்பதாகத்தான் இருந்தது.நம் இளையத் தளபதி அப்பொழுதே தனது திரைப்படங்களில் “பாடு” என்றெல்லாம் கத்தி வசனம் பேசி பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்தார்.இப்படி உப்பு சப்பில்லாமல் உருண்டுக் கொண்டிருந்த வாழ்க்கையில் ஏகத்திற்கும் ஞானப்பழங்களை அம்பாரமாய் வழங்கி, எனது அறிவுக்கண்ணை அகலமாய் திறந்து வைத்தது என்னுடைய கல்லூரி நண்பர்களே. அப்படியே அள்ள அள்ளக் குறையாத தங்கச் சுரங்கம் மாதிரி பேசப்பேச தீராத கெட்ட வார்த்தைகளை அவர்கள் தங்களது சேகரிப்பில் பத்திரமாய் வைத்திருந்தார்கள்.

வெங்கட் என்றொருவன் இருக்கிறான். மனிதன் தங்கமானவன்.நெற்றியில் திருநீறு இட்டுக் கொண்டு காலையில் கல்லூரிக்கு வந்தானென்றால் பார்ப்பதற்கே அவ்வளவு பாந்தமாக இருக்கும். சாயுங்காலம் பார்த்தால்கூட சட்டையில் ஒரு மடிப்பு கசங்கியிருக்காது.இவை யாவற்றையும் விட முக்கியமானது அவனது சொற்பிரயோகங்கள். சராசரியாக ஒரு வரிக்கு இரண்டிலிருந்து நான்கு தடவைவரை புண்டை என்கிற வார்த்தையை சேர்த்துக் கொள்வான். வகுப்பிற்குள் நுழைந்ததும் பையை பயபக்தியோடு பெஞ்சில் வைத்துவிட்டு, முன்னால் இருக்கிற என்னிடம், “என்ன படிப்பு புண்ட, சீக்கிரம் வந்துட்ட,இந்த புண்டயிலலாம் கரெக்டா இருப்பியே??சரி,எந்த புண்ட பீரியட் ஃபர்ஸ்ட்?” என்று கேட்பான்.இதில் நான் எந்த புண்டைக்கு முதலில் பதில் சொல்வதென்று தெரியாமல் கேனையன் மாதிரி விழித்துக் கொண்டிருப்பேன்.

இந்த கெட்ட வார்த்தையை எல்லாம் முதலில் கேட்டப்போது நான் கொஞ்சம் அதிர்ச்சியடைந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவை வெகு இயல்பாக பேச்சு வழக்கோடு இசைந்து போய்விட்டன.கல்லூரிகளை பொருத்த வரையில் மதிய உணவு இடைவேளை என்பது ரணக் கொடூரமான ஒரு நேரம்.சாப்பாட்டிற்காக தெரு நாய்கள் மாதிரி நாங்கள் அடித்து மாண்டுக் கொண்டிருப்போம்.விசேஷமாய்தான் ஏதாவது இருக்க வேண்டும் என்றில்லை. சாதாரணப் புலி சாதத்திற்கெல்லாம் சர்க்கஸ் கூத்துக்கள் நடக்கும். அவனவன் தனது டிபன் பாக்ஸை பாதுகாத்துக் கொள்வது என்பது இருட்டு வழியில் தனியாக பணத்தோடு போவது மாதிரிதான். எங்கிருந்து எவன் தாவி வருவான் என்றே கணிக்கமுடியாது. இதில் ஒருத்தன் மட்டும் எதையாவது தனியாக தின்றுத் தொலைத்து விட்டான் என்றால் அவ்வளவுதான். ஒரேடியாக ஓத்துட்டான் மச்சான் என்று ஒரு கூட்டமே சப்தமாக கத்தியலறும்.

ஒரு நாள் வீட்டில் ஆசையாய் பையன் சாப்பிட்டு வளரட்டும் என்று முட்டைக் கட்டிக் கொடுத்திருந்தார்கள். மதியம் வரை பொறுமையாய் இருக்காமல் காலை இடைவெளியின் போதே ஏதோ ஆர்வத்தில் அதை எடுத்து முழுங்கிவிட்டேன். போன நொடி வரை எங்கிருந்தானோ தெரியவில்லை,திடீரென்று கிராஃபிக்ஸில் முளைத்து வந்த கடவுள் மாதிரி என் முன்னே தரிசனம் கொடுத்தான் அரவிந்த். இந்த இடத்தில் அவனுடைய உடல்மொழியை குறிப்பிட்டு சொல்லவேண்டும். நான் சாப்பிட்டது என்னவோ ஒரு மூன்றரை ரூபாய் பெருமானமுள்ள முட்டை, அதற்கு அவன் காட்டில் கரடியிடம் நண்பனை தனியாக மாட்டி விட்டு மரமேறிய சோமுவை முறைப்பது மாதிரி மேலும் கீழுமென நான்கு முறை என்மேல் நிர்கதியான கண்களை மேயவிட்டான்.அவனது அடுத்த செயல்தான் உச்சக்கட்டம். கீழ்ஸ்தாயியிலிருந்து குரலெழுப்பி-நல்ல குரல்வளம் அவனுக்கு. கட்சிக் கூட்டங்களில் வாழ்க என்று குரல் கொடுப்பதற்காகவே நேர்ந்துவிட்ட தொண்டை- மச்சான் முட்டையை தனியா ஓத்துட்டான்டா என்று கதறினான்.(சத்தியமாகவே கதறத்தான் செய்தான்). அந்த குரல் நிறைவடையும்போது பத்து பதினைந்து துணைக் குரல்கள் உடன் சேர்ந்திருந்தன.

இந்த வார்த்தைகளோடு அதிகம் பரிச்சயம் ஏற்பட்டிராத காலமது.(அதானே, பிறக்கும்போதே ஓத்தா,ங்கொம்மா என்ற படியேவா பிறக்கிறோம்??).ஓத்துட்டான் என்பதை அவ்வளவு சத்தமாக கேட்டதும் எனக்கு முந்தைய நாள் பார்த்த பிட்டு படத்தின் உடலசைவுகளெல்லாம் ஞாபகத்திற்கு வர என்னுடைய புலன்கள் சடுதியில் புல்லரித்து விறைந்துக் கொண்டன. இதற்கிடையே மனதிற்குள் மின்னல் வெட்டாய் முட்டையின் காட்சி வடிவம் வேறு.இதற்கு பிறகு வாழ்க்கையில் முட்டை சாப்பிடும்போது பிட்டு படத்தை நினைக்காமல் இருக்க முடியுமா இல்லை பிட்டு படம் பார்க்கும்போதுதான் முட்டையை நினைக்காமல் இருக்க முடியுமா?ஆனால் அரவிந்திற்கு அதெல்லாம் ஒரு பொருட்டேயில்லை.

பொய் சொல்வதற்கும், ஏமாற்று வேலை செய்வதற்கும்கூட புளியந்தோப்பு அகராதியில் ஓத்துட்டான் என்றுதான் இருக்கும் போல. அதையே கொஞ்சம் மெருகேற்றி மூலக்கடை பாஷையில் சொன்னால் பச்சை ஓல் ஓத்துட்டான்.நம்முடைய தமிழ் மொழி எத்தனை வார்த்தைகளை,அவற்றில் திரிபுறும் எத்தனை அர்த்தங்களை கஷ்டப்பட்டு செரித்துக் கொண்டு தன்னை பலப்படுத்திக் கொள்கிறது என்பதை நினைக்கவே பெருமையாக இருக்கிறது. உதாரணத்திற்கு தெவடியா என்ற வார்த்தையை எடுத்துக் கொள்ளுங்கள். காலங்காலமாக இது பெண் பாலைக் குறிக்கின்ற சொல்லாகத்தானே பயன்படுத்தப் பட்டு வருகிறது. ஆனால் அந்த எண்ணத்தை தவிடுபொடியாக்கியவன் ஜகதீஷ்.அவனுக்கு கோபம் வந்தால் ஆத்திரத்தில் உதிர்க்கும் முதல் சொல் “நாறத் தெவடியா” தான்.பால் மற்றும் திணை பேதங்களின்றி ஆண்கள்,பெண்கள்,மிருகங்கள்,பட்சிகள் என எல்லோருமே அல்லது யாவுமே தெவடியாவாக இருக்கக்கூடிய சாத்தியங்களை பலமாக நிறுவும் ஆற்றல் அவனுக்கு இருக்கிறது.அதிலும் அவன் தெவடியா என்று சொல்வதை காதுக் குளிர கேட்பதே ஒரு அற்புதமான ஆன்மீக அனுபவம். ராகமெடுத்து தெவடிய்ய்யாஆஆஆ என்று அவன் திட்டும்போது சரஸ்வதியே அவன் நாக்கில்தான் குடியிருக்கிறார் என்று நினைக்க தோன்றும்.

இவனிடம் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால், ஒரு வார்த்தையில் மட்டும் திட்டிவிட்டு போவதென்கிற பேச்சே அவன் வழக்கில் கிடையாது.திட்ட ஆரம்பித்தான் என்றால் மடையில் இருந்து நீர் கொட்டுவது மாதிரி நீரின் போக்கில் நாம் அலைவுற வேண்டியதுதான். “ஊர் மேயப்போன நாறத் தெவடியா கிறுக்குக்கூதி” என தொடங்கி இறுதியில் “நாலு வாட்டி வந்துட்டு போடா” என்று அவன் அர்ச்சனையை முடிப்பதற்குள் நமக்கு மூச்சிரைத்து வாயில் நுரைத் தள்ளிவிடும்.அநாயசமான மொழிப் புலமையும் உண்டு என்பதால் வார்த்தை பற்றாக்குறையே இல்லாமல் புதுப்புது வார்த்தைகளால் திட்டுவான். கவித்துவமான சொல்லாடலும் உண்டு. லவடேகபால் என்பது லவடா முண்டை என்றும் திருட்டு முண்டை என்பது திருட்டு கபால் என்றும் உருமாற்றம் அடையும். கெட்டவார்த்தைகளை கையாள்வதற்கான ரசவாதத்தை எங்கேயாவது படித்தானா என்று தெரியவில்லை.

அதீத கோபத்திற்கும் சந்தோஷத்திற்கும்தான் கெட்ட வார்த்தைகள் பேசவேண்டும் என்பதில்லை. வெகு சாதாரணமாக பேசும்போதே கெட்ட வார்த்தைகள் பிற வார்த்தைகளோடு இரண்டறக் கலந்துவிடுகின்றன. பஃப்ஸுக்கு பத்து ரூபாய் கொடு மச்சான் என்றால் ம்ஹீம்.. ஊம்புறியா மச்சான் என்றுதான் பதில் சொல்வான் ராஜேஷ்.உண்மையில் அவன் சொல்வதை கேட்கும்போது அது கெட்ட வார்த்தை மாதிரியே இருக்காது. பர்ஸ வீட்ல வச்சிட்டேன் மச்சான் என்று சொல்லும் தொனியில்தான் இருக்கும்.

வேற யாராவது கேட்டால் வெட்டுக் குத்தே ஆகும் வகை கெட்ட வார்த்தைகள் எல்லாம் பசங்களிடையே பிரயோகமாகும்போது மட்டும் தங்கள் உண்மை பொருளை இழந்து பயங்கர சிரிப்பாக மாறிவிடுகின்றன. இதனாலேயே ஒரு பிரச்சனை என்னவென்றால் வீட்டில் இருக்கும்போதும் ஏதாவது ஏடாகூடமாக உளறி வைக்க அதிகம் வாய்ப்பு உண்டாகிவிடுகிறது. அன்றைக்கு அப்படித்தான் வீட்டிற்கு சித்தப்பா வந்திருந்தார். வந்தவர் அவர் பாட்டிற்கு அமைதியாய் போயிருக்கலாம். அதை விட்டுவிட்டு என்னிடம் படிப்பு பற்றி விசாரனை கேள்விகள் கேட்டு ஒழுங்காக படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று அறிவுரை வழங்க ஆரம்பித்துவிட்டார். அந்த மயிரு புண்டையெல்லாம் எங்களுக்கு தெரியும் என்று வார்த்தைகள் நுனிநாக்கு வரை வந்துவிட்டன.நல்லவேளை சித்தாப்பாவிற்கு ராகு இல்லாதததால் தப்பித்தார். இல்லையென்றால் தன் வாழ்நாளின் ஆகச் சிறந்த மொக்கையை என்னிடம் வாங்கும் துர்பாக்கியத்தை அடைந்திருப்பார்.

சந்தோஷ் என்றொரு நண்பன் இருக்கிறான்.தர்மபுரி பக்கத்து ஊரை சேர்ந்தவன். அவன் தான் எனக்கு கண்டாரவொளி என்கிற வார்த்தையை அறிமுகம் செய்தவன். தினேஷ் சார் என்னவோ சொன்னதற்கு – என்ன சொல்லியிருக்க போகிறார் ரெக்கார்ட் எழுது என்றிருப்பார் – அந்த கண்டாரவொளி சொல்லுவானாமாம் நான் அந்த கூதி மயிரை கேக்கனுமாம் என்று என்னிடம் வந்து கோபமாக பேசினான். எனக்கு முகம் சட்டென்று பிரகாசமாகிவிட்டது.புதிதாய் ஒரு கெட்ட வார்த்தை என்றதும் மனதுக்குள் ஜிவ்வென்றிருந்தது.அதற்கு என்ன அர்த்தம் என்றெல்லாம்கூட கேட்டுத் தெரிந்து கொள்ளவில்லை. பொருள் தெரிந்து என்ன இலக்கிய மயிரா எழுதாப் போகிறோம்? தொடர்ந்து நான் அதை என் பேச்சு மொழியில் உபயோகப்படுத்த அப்படியே அது என் நண்பர்களிடையே பரவி பெரும்பாலானவர்களை முழுமையாக ஆட்கொண்டு விட்டது. (கெட்ட விஷயங்கள் தான் என்றில்லை.கெட்ட வார்த்தைகளும்கூட எளிதில் பரவிவிடும்).

ஒருநாள் காலையில் வெங்கட் அதிசயமாக சட்டை கசங்கியபடி கல்லூரிக்கு வந்து சேர்ந்தான். படு வேகமாய் என்னை நோக்கி வந்தவன், ஓத்தா புண்டை அந்த கண்டாரவொளி புண்டைக்கு என்னடா அர்த்தம் என்று கர்ஜித்தான்.அப்பொழுதுதான் கவனித்தேன் வெங்கட்டுக்கு ஒரு பக்கம் கன்னம் பழுத்திருந்தது.பேருந்தில் வரும்போது யாரோ ஒருத்தன் இவன் காலை மிதித்து விட்டிருக்கிறான். இவன் போனால் போகிறதென்று பொத்திக் கொண்டிருந்திருக்கலாம்.ஆனால் விதியை நாம் என்ன பண்ண முடியும்? கண்டாரவொளி கண்ணையென்ன கழுத்துலயா வச்சிருக்க (இதில் மோனை எழவு வேறு) என்று எகிறியிருக்கான். அவ்வளவுதான், செவில் திரும்பிவிட்டது. கன்னத்தில் கை வைத்து உட்காந்திருந்தவனை பார்க்கவே பரிதாபமாகத்தான் இருக்கிறது என்றாலும் ஒரு வலுவான கெட்ட வார்த்தையை கற்றுக் கொண்டதில் சின்னதாக நமட்டு சந்தோஷமும் மனதிற்குள் எட்டிப் பார்க்கிறது.

சமயங்களில் சமூக மேன்மைக் கருதி கெட்ட வார்த்தையே பேசக்கூடாது என்று சபதமெல்லாம் எடுப்பேன். ஆனால் அப்பொழுதுதான் தர்ம சங்கடங்களாய் வந்து சேரும். அப்புறம் அதிகமான கெட்ட வார்த்தைகளை பேச நேர்ந்துவிடும். அப்படியுமொரு நாள் விடாமல் முயன்று பார்த்துவிடுவது என்று முடிவு பண்ணி அரவிந்திடம் பந்தயம் வைத்தேன்,நாள் முழுக்க கெட்ட வார்த்தைகள் பேசு போவதில்லையென.என்னை என்னாலேயே நம்ப முடியவில்லை என்கிற அளவிற்கு ஒரு கெட்ட வார்த்தைக் கூட பேசாமல் முக்கால்வாசி பொழுதை கழித்து விட்டிருந்தேன்.கெட்ட வார்த்தையே பேசாமல் சாந்தசொரூபியாக உருக்கொண்டபோது ஒரு கை முறிந்தாற்போல்தான் இருந்தது.என்றாலும் மனம் தளராதிருந்தேன். கடைசியில் பந்தயம் முடிகிற நொடியில் ஆனந்தம் முற்றிப் போக “பார்த்தலே அசிங்கமாவே பேசலை என் புளுத்தி” என்று வசனம் பேசித் தொலைத்துவிட்டேன்.அன்றைக்குப் பிறகு இது மாதிரி எந்த விபரீத பந்தயங்கள் பக்கமும் மறந்தும் தலை வைப்பதில்லை.

வந்ததிலிருந்தே கவனித்துக் கொண்டுதானிருந்தேன்.ஜகதீஷ் ஒரு மாதிரி சோகமாகவே இருந்தான். என்னக் காரணமென்று தெரியவில்லை. அவனை கேட்பதற்கும் என்னவோ போலிருந்தது. அப்புறம் ராஜேஷ் வந்து விஷயத்தை சொன்னான்.அவன் காதலித்த யாஸ்மினை வேற துறையை சேர்ந்த பையன் எவனோ உஷார் செய்துவிட்டானாம்.இத்தனைக்கும் உஷார் செய்தவன் ஜகதீஷுடன் ஒரே பள்ளியில்தான் படித்திருக்கிறான். கவிழ்ந்த கப்பலோடு சேர்ந்து தானும் மூழ்குகிற மாதிரியான முக பாவனையிலிருந்த ஜகதீஷை பார்க்கவே ரொம்பவும் பாவமாய் இருந்தது. சரி அவனை சமாதானம் செய்வோம் என்று பிரயாசைப்பட்டு நானும் முகத்தை எதையோ பறிகொடுத்தவன் மாதிரி வைத்துக் கொண்டு அவனருகே சென்றேன்.ஒரு வேகத்தில் கிளம்பிவிட்டேனே தவிர என்ன சொல்லி அவனை ஆற்றுப்படுத்துவதென என ஒரு வழியும் தெரிந்தபாடில்லை.அவனோ எழவு செய்தி கேட்டவன் மாதிரி அதிர்ந்து போய் அசையாமல் உட்கார்ந்திருக்கிறான்.

அப்பொழுதுதான் வழக்கம்போல் எங்கிருந்தோ தாவிக் குதித்து வந்து சேர்ந்தான் அரவிந்த். செம கோபமான கண்களோடு ஜகதீஷிடம் சென்று மச்சான் எந்த பொட்ட பையனோ உன் ஆளை ஓத்துட்டானாமேடா என்று ஆவசேமாக பேசினான். எப்பொழுதுமே அரவிந்த் இப்படி ஓத்துட்டான் வகை வார்த்தைகளை சேர்த்துக் கொண்டுதான் பேசுவான் என்றாலும் இந்த இடத்தில் அவன் அதை பிரயோகித்திருக்க வேண்டாம். பின்ன,காதலியை வேற ஒருத்தன் மடக்கிவிட்ட சோகத்தில் இருப்பவனிடம் போய் உன் ஆளை எவனோ ஓத்துவிட்டானாமே என்று கேட்டால் ஆத்திரம் தலைக்கேறாது? ஜகதீஷுக்கு ஏகத்திற்கும் கோபம் ஏறியது.

அரவிந்தின் சட்டையை பிடித்து பளாரென்று ஒரு அறை விட்டான். அரவிந்திற்கு என்ன ஏதென்றே புரியாமல் இருந்திருக்கவேண்டும்.சில நொடிகளுக்கு பேய் முழி விழித்துவிட்டு சட்டென்று வலியை உணர்ந்தவனாய் ஜகதீஷின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை கொடுத்தான். பதிலுக்கு அவன் மறுபடியும் இவனை அடிக்க, இவன் திரும்பவும் அவனை அடிக்க என இருவரும் உருண்டு பிரண்டு சண்டையிட ஆரம்பித்தார்கள்.இவையெல்லாம் நான் சூழலை கிரகிப்பதற்குள்ளாகவே கணப்பொழுதில் நடந்து முடிந்துவிட்டிருந்தன.அப்புறம் பயங்கரமாக பாடுப்பட்டு ஒரு வழியாக அவர்கள் இருவரையும் விலக்கி பிரிப்பதற்குள் போதும் போதுமென்றாகிப் போனது.

ஜகதீஷை தனியே விட்டுவிட்டு அரவிந்தை மட்டும் உடன் அழைத்துக் கொண்டு வகுப்பறையை விட்டு வெளியே வந்தேன். அரவிந்த் செம காண்டில் இருந்தான்.ஆறுதல் சொல்லப் போன என்னை ஏன் அவன் அடிக்க வேண்டும் என்று ஆக்ரோஷமாய் கேட்டான்.நான் பொறுமையாக அவன் சொன்ன வார்த்தையின் நேரடி அர்த்தத்தை விளக்க ஆரம்பித்தேன். அவனுடைய வாழ்நாளில் முதல்முறையாக ஓத்துட்டான் என்ற வார்த்தையின் உண்மை அர்த்தத்தையே அப்பொழுதுதான் உணர்கிறவன் போல் சிறிது நேரத்திற்கு அமைதியாக இருந்தான்.அவனுள் குற்றவுணர்ச்சி எழுந்திருக்க வேண்டும். மச்சான் நான் போய் அவன்கிட்ட சாரி கேக்குறேன்டா என்றபடி என்னையும் இழுத்துக் கொண்டு ஜகதீஷை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.இப்பொழுது வேண்டாம் கொஞ்ச நேரம் ஆகட்டும் என்று நான் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் இப்பொழுதே மன்னிப்பு கேட்டால்தான் ஆனது என்கிற வேகத்தில் அவன் செயல்பட்டான்.

ஜகதீஷிடம் இன்னமும் கோபம் வற்றியிருக்கவில்லை.நாங்கள் வருவதைப் பார்த்ததும் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான். நான் மெதுவாக அரவிந்திடம் மச்சான் வாயை அடக்கி பேசு என்று எச்சரிக்கை செய்து,அவர்களிடமிருந்து சிறிது இடைவெளிவிட்டு நகர்ந்து நின்றுக் கொண்டேன்.

ஜகதீஷின் கைகளை ஆதுரமாக பிடித்துக் கொண்டு அரவிந்த் பேச ஆரம்பித்தான். “மச்சான் சத்தியமா நான் வெளயாட்டுக்கு பேசலைடா..கலாய்க்கனும்னுந் எதுவும் சொல்லலை பார்த்துக்க… உனக்காக பேசனும்னுதான்டா வந்தேன்.செம கடுப்புலதான் அந்த வார்த்தை எனக்கே தெரியாம வாயில இருந்து வந்துடுச்சு.அதுவும் உனக்காகத்தான்டா… த்தா ஏதோவொரு தெவடியா பையன் உன் ஆளை ஓத்துட்டான்னதும் வெறியாடுச்சு மச்சான்”

கெட்டது குடியென்று நான் தலையில் அடித்துக் கொண்டேன். மறுபடியும் அந்த கிறுக்குக்கூ அரவிந்திற்கு தான் என்ன சொல்கிறோம் என்பதே உரைக்கவில்லை.திரும்பவும் சண்டை வரப்போகிறது என்று பயந்து நான் என்னையே ஆய்த்தப் படுத்திக் கொண்டேன். அடித்துக் கொண்டார்கள் என்றால் பிரித்துவிட தயார் நிலையில் இருக்க வேண்டும் இல்லையா?

ஆனால் நான் எதிர்பார்த்த மாதிரி எதுவும் நடக்கவில்லை. மாறாக ஜகதீஷ் தழுதழுத்த குரலில்,”ஆமாம் மச்சான் அந்த தெவடியா பையன் அவளை ஓத்துட்டு போய்ட்டான்டா..”என்றபடி அரவிந்தை இறுக கட்டிபிடித்துக் கொண்டான். அவனது கண்களில் கண்ணீர் கோர்த்திருந்தது.
*****

அவிநாசி- திருச்சி சாலை சித்திரங்கள் இளஞ்சேரல்

பதிப்பக அலமாரி  NH அவிநாசி- திருச்சி சாலை சித்திரங்கள்  இளஞ்சேரல்

 

download (15)

 

 

 

முன்னுரை

 

 

வாழ்வில் ஒரு கதைத் தொகுப்பு வெளியிடுவேன் என்பதை நினைத்துப் பார்த்தி்ருக்கவில்லை. நவீன மனிதனின் சமூக வாழ்வில் திரைக்கதைகளின் பாதிப்புதான் எண்பதாண்டுகளாக இருந்து வந்திருக்கிறது. ஒவ்வொரு குடும்பங்களும் திரைக் காட்சிகளை அமைப்பதைப் போலவே தமது சம்பவங்களைக் கோர்க்கிறது. அத்திரைக்கதைகளின் பரிணாமங்களை ஒவ்வொரு பத்தாண்டுகளின் வளர்ச்சி-சிதைவுகள் பற்றிய பெருந்தொகுப்பை தயாரிப்பது என்னுடைய ஆவலாக இருந்தது. மாறாக அதுபோலவே தற்காலத்தின் திரைக்கதைகளின் மொழி பற்றியும் விரிவாக எழுதிக் கொண்டிருந்தேன். ஆயினும் தற்போதைக்கு அது எப்போது முடியும் என்பது தெரியவில்லை.

அத்திரைக்கதைகளின் கச்சாவான கதைகளின் மீதான ஆர்வத்தை எனக்கு பால பிராயத்திலேயே வளர்த்து விட்ட கா.சு வேலாயுதன் அவர்களையும் என்பதுகளின் மத்திய காலத்தில் தமுஎச இருகூர் எட்டாவது ஒன்பதாவது வார்டு கிளைகளின் தோழர்களையும் இந்த நூல் வெளியாகும் காலத்தில் நினைத்துக் கொள்கிறேன். இயக்கத்தில் உள்ள இலக்கியப் பேரன்பர்களின் மனதில் தங்கி விட்ட கூட்டு வண்டி, நதிச்சருகு போன்ற சிறுகதைகளை இதில் சேர்க்க முடியாமல் போனது வருத்தமே. சமன்படுத்தப்படாத மேய்ச்சல் நிலமாக தான் போகும் போக்கில் போகும் மக்களின் வாழ்கதைகள் பிரத்யேகமானது. தொன்னூறுகளின் மத்தியில் எனது கதையை முழுமையாக பிரசுரம் செய்த செம்மலர் இதழ் மற்றும் தாமரை தீக்கதிர் வண்ணக்கதிர் இதழ்களையும் இப்போது நினைக்கிறேன்.

ஒரே மாதிரியான மனநிலையுடன் கால் நூற்றாண்டாக இருப்பது என்பது ஒரு மாதிரியான நவீன மனநோய்தான். அல்லது சூழல்கள் ஒன்றும் மாறிவிடவில்லை என்றுதான் கொள்ள வேண்டும். இப்போதும் கூட பவுண்டரிக்கு வேலைக்குப் போகிறவர் அங்கேயும் கழிவுப் பஞ்சாலைக்குப் போகிறவர் அங்கேயும் கேரம் போர்டு ஆடிக்கொண்டிருப்பவர் அதே இடத்திலும் எங்கள் ஊர் பெண்டிர்கள் இன்னும் அப்படியே தான் குடிதண்ணீருக்கு அலைந்து கொண்டுதான் இருக்கிறார்கள். சிலர் மலம் கழிப்பதற்காக அதிகாலையில் எங்கெங்கோ திரிகிறார்கள்..

நவீன பின் நவீன இலக்கியம் எனக்கு முழுமையாகக் கைவரப் பெற்றபோது இடதுசாரி அரசியல் இயக்கங்களுடன் விலக நேர்ந்தது மட்டுமின்றி அதே அளவு மார்க்சீயத்தின் மீதான அன்பும் அவசியமும் அதிகமாகவும் ஆகிக்கொண்டி ருப்பதையும் நான் உணராமலில்லை. இடதுசாரிகளின் மீது பொதுப் படையான மனோநிலையுடன் விமர்சனம் செய்கிற திராவிட மனோநிலை மீது கடுங்கோபம் வரும்போது இப்படித்தான் யோசிக்கிறேன். மாறாக அவர்கள் நியாயப்படி ஆட்சி அதிகாரத்தை இடதுசாரிகளிடம் தந்திருக்க வேண்டும். காரணம் மாறி மாறி ஆட்சிக் கட்டிலில அமர வைத்து ஒரு கவுன்சிலர் சொந்த விமானம் வைத்துக் கொள்ளும் அளவிற்கு தமிழ்த்திராவிடக் கழகங்களை வளர்த்தவர்கள் அவர்கள்தான்.

இலக்கியத்தில் அரசியலை முழுமையாகச் சேர்ப்பதுதான் நவீன பின் நவீனத்துவம். அதில் அரசியல் செய்வது என்பது நவ முதலாளித்துவக் காலனியம்

இந்தக் கருமாந்திரத்தைச் சொல்லக் கூடாது என்றாலும் முடியவில்லை. உலகத்தில் லாட்டரிச் சீட்டு வாங்கிப் பழகிய கூட்டம் வாழ்ந்து கொண்டுதான் இரக்கிறது. அதே பாணியில்… அப்டிங்களா எப்ப எங்க..நான் இன்னும் படிக்கலைங்களே.. நடந்துட்டு இருக்குங்களா..ஓ..அவருதானா..என்று கேள்வி கேட்டு சிங்கள ராணுவத்தை விடவும் சித்ரவதை செய்து விடுகிறவர்கள் உலவும் சூழலில்தான் வாழ்கிறோம். தொடர்ந்து இச் சமூகத்திற்காக சிந்திக்க வேண்டியவர்கள் டாஸ்மாக்கில் இருக்க தன்வாழ்நாள் முழுவதும் சோசியகாரன்தான் மனிதனின் ஏற்றம் குறித்து சதா சிந்தித்துக் கொண்டிருக்கிறான். இந்தக் கால் நூற்றாண்டில் பிறந்தவர்களில் புதியதாக ஒருத்தன் கூட அரசியலுக்கோ சமூகக் கலாச்சார நடவடிக்கைக்கோ இலக்கிய இயக்கங்களுக்கோ வந்து சேரவில்லை. செம்மறி யாட்டுக் கூட்டதினில் வாழ்கிறான்.

ஒருவகையில் கல்வித்துறையில் இருந்த கிருத்துவ டாமினேசனை தகர்த்ததற்காக சந்தோசம் கொண்டாலும் முழுமையான பேராலய நடவடிக்கையில் இயங்குவதான் நவீன புரட்சியோ என்னவோ.. ஒரு வேளை முன்னூறு ஆண்டு பழியைத் தீர்க்கவும் இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளைக் கைப்பற்றி பதிலுக்கு அருநூறு ஆண்டுகள் ஆள்வதற்கு முயற்சி செய்கிறார்களோ என்ன எழவோ..

இந்தியத் தமிழ் நவீன பின்நவீன இலக்கியச் செயல்பாடுகளில் இருக்கும் அனுபவமின்மை மற்றும் பாதி வெந்த நிலை வாசிப்பு மற்றும் எழுத்து பற்றிய எனது கடுங்கோபத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். ஒரு சிலருடன் பழகும் போது பேரதிர்ச் சியாகவும் இருந்தது. எங்கள் ஊர் பம்பை-உடுக்கைக் கலைஞர்கள்-புரோட்டா மாஸ்டர்-இட்லி சுட்டு விற்கும் பாட்டிகள் கூட அதிநவீனமான முறைகளை பயண்படுத்துகிறார்கள். யோசிக்கிறார்கள் புதுமையைக் கவனிக்கிறார்கள். ஜவுளிக் கடைக்குப் போனால் பிளாஸ்டிக் செடி கொடி மலர்களை ஆர்வத்துடன் பார்க்கிறார்கள்.

ஆயினும் சளைக்காமல் தனது சேமிப்பை, தங்கம். நகை, நிலம், செங்கல், மணல்,சிமெண்ட் பெயிண்ட் என்று செலவழிக்காமல் இலக்கியத்திற்காக இயங்கும் ஒரு சில நூறு நவீன இலக்கிய வாசிப்பு, எழுத்து, இதழியக்கம் என்று தனது வாழ்நாளைக் கழிக்கும் இலக்கியவாதிகளின் அன்பிலும் நிழலிலும் வாழலாம் என்கிற சரணாகதியுடன் எனது எழுத்தும் வாழ்வும் கழிகிறது.

என்னை எல்லா ஊர்த் திருவிழாவிற்கும் சந்தைக்கும் அழைத்துப் போகிற தாய்மை கொண்ட தோழமையையும் தோழமையாக மாறிப் போன நண்பர்களையும் நண்பர்களாகிவிட்ட தோழர்களும் எனது ஆகாயப் பந்தல். கைதட்டும் போது ஏற்றுக் கொள்கிற மனோநிலை கண்ணத்தில் அறையும் போதும் அதே மனோநிலை இருக்கவேண்டும்

இணைய காலச் சூழலில் என்னுடன் முகமறியா நட்பு கொண்டாடும் முகநூல் நண்பர்களையும் அப்படியே வணங்கி மகிழ்வேன்.

இந்தக் கதைகள் வெவ்வேறு காலச் சூழல்களில் ஒவ்வொரு வகைமையான வசந்தம் கோடை இலையுதிர் நாட்களில் எழுதப்பட்டவை. மட்டுமின்றி எந்த இதழிலும் பிரசுரம் ஆகாத கதைகள். அகத்துறவு இதழில் சில கதைகள் வந்தது. ஊக்கப்டுத்திய நவீன இலக்கியப் படைப்பாளர்கள் மயுரா ரத்தினசாமி, மயுரா அச்சக நண்பர்கள், பொன் இளவேனில் மற்றும் நூலாக்கிடக் காசு கொடுத்து உதவிய தம்பிகள், மைத்துனரகள் ஆகியோருக்கு எனது நன்றிகள். இலக்கியம், சினிமா, அரசியல் என்று பலநாள் கெட்டுப் போன பலூன் உடலுடன் அதே நோய்மையுடன் வாழந்து கொண்டிருக்கும் யுவராஜ்,கார்த்தி,விஜியை அச்சேறாமால் போகும் எழுத்துகள் பின் நாளில் சோறூட்டும் என நம்புகிறேன்.

ஒரு குறிப்பிட்ட சூழலுக்குப் பிறகு தமிழ் நவீன இலக்கியத்தில் சரத்பாபு, சந்திரசேகர், நிழல்கள் ரவி, மேஜர் சுந்தர ராஜன், டெல்லி கணேஷ் ரோல்களை செய்து கொண்டிருக்கக் கூடாது. அல்லது செய்யவும் முடியாது என்பதை உணர்த்திய இந்தோ-ஐரோப்பிய இலக்கிய விமர்சகர்களுக்கு நன்றி..

அப்பா யாருக்காக அந்த பத்தாயிரத்துச் சொச்சத்தைச் சேமித்தார் என்று தெரியவில்லை. அவர் காலமானதிற்குப் பிறகு மூத்தவன் என்கிறதால் என் கைக்கு வந்து சேர்ந்தது. அதன் மூலம் நூல்கள் சிலவற்றைக் கொண்டு வந்ததில் மனசாட்சியும் சில காகஙகளும் ஓயாமல் வீட்டிற்கு வந்து அவ்வப்போது கத்துவதால் வேறு வழியின்றி இந்தத் தொகுப்பை மரியாதையாக அப்பாவிற்கு சமர்ப்பிக்கிறேன்..

போதிய அங்கீகாரமும் மரியாதையும் கிடைக்காத தமிழச் சமூகத்தின் ஒப்பற்ற கலைஞர்கள்

 

மதுரை சோமுவும் இருகூர் கலைமணி முத்துவும்

என்னை மன்னிப்பார்களாக..

 

 

 

 

 

மணிவண்ணன் வெங்கடசுப்பு கவிதை

அறிமுக படைப்பாளி
மணிவண்ணன் வெங்கடசுப்பு கவிதை

இந்த உலகமே
அழும்போது
நீ மட்டும் சிரித்துக்கொண்டிருந்தாய்
உன்னை
காலத்தின் நிராகரிக்கப்பட்ட தழும்பு
என்று வெறியுடன் எதிர்த்தோம்
உன் சிரிப்பு
எங்களிடம் தொற்றிக்கொண்ட பொழுதில்
உன்னை அழவைத்து
கைகொட்டி சிரித்தோம்
நீ அழுத கண்ணீர்
ஆறாய் பெருகி ஓடுகையில்
அதில் மலம் கழுவி
பிணத் தெப்பம் விட்டு
பிலாக்கணம் பேசினோம்
தாய்மையுடன் எங்களை
நீ
தழுவ முற்படுகையில்
உன் பாலூட்டும் தனங்களை
பேய்களென பிய்த்து தின்றோம்
ஒவ்வொரு முறையும்
இரவில் உனை தூக்கிலிட்டு
பகலில் உயிரிப்பித்தோம்
இன்னும் எங்களுக்கென
என்ன வைத்திருக்கிறாய்?
கேள்விகளாலேயே உனை துளைத்து எடுத்து
அலாதி திருப்தி காண்கிறோம்
ஆயினும்
உனைப் புரியாமல்
நாங்கள் வாழ்ந்த அந்த நாட்கள்
அதி அற்புதமானவை!

காந்தி புத்தகம் – சந்தியா பதிப்பகம்

முதற்பதிப்பின் முன்னுரை

சுமார் பத்து வருஷங்களுக்கு முன்பு எழுதிய வரலாறு இச்சிறிய நூல். எழுதிய எனக்கே இதை இப்போது படிப்பதற்குப் புதுமையாகத் தோன்றியது. தமிழர்களின் ஆற்றலையும் உள்ளத்தையும் ஒருவாறு அறிந்துள்ள கலைமகள் காரியாலயத்தார் இதைப் பிரசுரிக்க விரும்பிய பொழுது அதன் உண்மை எனக்கு விளங்கவில்லை. இப்பொழுது நன்கு விளங்குகிறது.

தமிழில் பிரயாணங்களில் உண்டாகும் தோற்றங்கள், உணர்ச்சிகள், கற்பனைகள், பொது வாழ்வில் காணப்படும் காட்சிகள் – இவைகள் அடங்கிய நூல்கள் இருக்கின்றனவோ என்பது எனக்குச் சந்தேகம். அப்படி ஒரு சமயம் ஒன்றிரண்டு இருந்தாலும், அநேகமாகத் தமிழர்களின் மத்தியில் உலவக் காணவில்லை. புது மலர்ச்சி பெற்றுச் செழித்து வளர்ந்து வரும் தமிழ் நடையில், காதற் கதைகளும் இன்பக் கனவுகளும் நிறைந்திருக்கின்றன. படிக்கும் அவாவிற்கு அளவில்லை. இத்தகைய மனோபாவம் நிறைந்து ஊக்கம் உடையவர்களுக்கு, கருத்துப் பொருந்திய நிகழ்ச்சிகள் தகுதியுடையவை.

காந்திஜி சுற்றுப்பிரயாணத்தில் ஓயாது பறை சாற்றிய ஒரு சித்தாந்தம் மறக்க முடியாதது. “தீண்டாமை என்னும் பழக்கத்திற்குச் சாத்திரத்தில் ஆதாரம் இல்லை” என்று சொல்லிய வாக்குறுதியின் காரணத்தால் ஹிந்து மதத்திற்கு ஏற்பட்டிருக்கும் இழிவு குறைந்துவிட்டது. உலகப் போக்கு பலவிதத்திலும் மாறுபாடு அடைந்து வருகிறது. பழைய கொள்கைகள் உருமாறியும் மறைந்தும் வருகின்றன. காலத்தின் தன்மையால் நம்மை அறியாமலே நாம் மாறி வந்து கொண்டிருக்கிறோம். இதை வலியுறுத்தியும், உண்மையை வெளிப்படையாக எல்லா மக்களும் அறியும் வண்ணமும் எடுத்துரைப்பது சான்றோர் கடமை.

சுமார் எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னர் அவதரித்த வைணவ சித்தாந்த ஸ்தாபகராகிய ஸ்ரீமத் ராமாநுஜர் அக்காலத்திலேயே தாம் குருவினிடம் கற்ற ரகசியத்தைத் திருக்கோட்டியூர்க் கோபுரத்தின் மீது ஏறி, மக்கள் அனைவரும் உய்யும் வண்ணம் உரக்க எடுத்துக் கூறினார். “இந்த ரகசியத்தை மக்கள் உய்யும் பொருட்டு நான் வெளிப்படுத்தினேன். இச் செய்கையால் எனக்கு நரகம் கிடைக்குமென்று என் குருநாதர் சொல்லியிருக்கிறார். நான் ஒருவன் நரகம் போனாலுங் கூட, பல்லாயிரக் கணக்கான மக்கள் நற் பதவி அடைவதால், எனது நரக வேதனை எனக்கு மகிழ்ச்சியைத் தரும்” என்று சொன்னார் என்பது சரித்திரம். இக்காலத்தில் உயர்வு பெற்ற
ஸ்ரீ வைஷ்ணவரான மகாத்மா காந்தியும் அதே உண்மையைத் தமிழ் நாடெங்கும் தமது சுற்றுப் பிரயாணத்தின் பொழுது ஒரு கோடி தமிழ் மக்களுக்கு உரக்க எடுத்துக் கூவினார். “ஸநாதன தர்மம் என்று சொல்லப்படும் ஹிந்து மதம் உயிர் வாழ வேண்டுமானால் தீண்டாமை என்னும் கொடிய வழக்கம் ஒழிய வேண்டும். தீண்டாமை ஒழியாவிட்டால் ஹிந்து மதம் ஒழிந்துவிடும்” என்று ஐயந்திரிபறப் பறை சாற்றினார் காந்தியடிகள். பலர் மனம் மகாத்மாவைப் பின்பற்றியது. சிலர் மனம் துடித்தது. பல ஆண்டுகளாகப் பரவி, வேரூன்றிய கொடிய பழக்கம் வேரோடு ஆட்டம் கொடுத்தது. வேரும் ஒடிந்து விட்டது. மரம் சிறுகச் சிறுகச் சாய்ந்து வருகிறது. தீண்டாமை கிராமங்களில் கூட மறைந்து வருகிறது. இந்தச் சுற்றுப் பிரயாணம் சரித்திரத்தில் இடம் பெற்றது. இதைக் “காந்தி சகாப்தம்” என்றே சொல்லலாம். பின்வரும் சந்ததியார் களும் மறக்காமலிருக்க வேண்டி இச்சரித்திரம் திரும்ப எழுதப்பட்டிருக்கிறது.

இதை மறுபடியும் ஒரு புத்தக உருவத்தில் வெளியிட இசைந்து, ஆனந்த விகடனில் வெளியான கட்டுரைகளைப் பதிப்பிக்க உதவி செய்து தமது உரிமையை எனக்கு அளித்த ஸ்ரீ எஸ்.எஸ். வாஸன் அவர்களுக்கு என் மனமார்ந்த வந்தனம். இதை அச்சிட்டு வெளியிட்டுப் பிரசுரம் செய்துள்ள கலைமகள் பிரசுராலயத்தார் அவர்களுக்கும் எனது நன்றி உரியது. தமிழ் மக்கள் இந்நூலை அன்புடன் வரவேற்பார்களென்று நம்புகிறேன்.

தி.சே.சௌ. ராஜன்
**
Sandhya Publications
Nutech Vaibhav,
New No. 77, Old No. 57A,
53rd Street, 9th Avenue,
Ashok Nagar, Chennai – 83.
044-24896979

’ஆழி’ பதிப்பக வெளியீடாக வரவிருக்கும் மாகடிகாரம் விழியன்

ஆழி’ பதிப்பக வெளியீடாக வரவிருக்கும்

மாகடிகாரம்
விழியன்

சிறார் நாவலிலிருந்து ஒரு பகுதி…

 

ஹெர்குலஸின் குடிசைக்கு இருவரும் வந்து சேர்ந்தனர். அந்த குடிசை விநோதமாக இருந்ததை தீமன் இதை கவனிக்காமல் இல்லை. மிகவும் பழையப் பொருட்களால் நிறைந்து இருந்தது. தாத்தாவுடன் யாரும் இல்லை. இவர் மட்டுமே தனியாக இருக்கின்றார் எனத் தெரிந்தது.

“தாத்தா, நீங்க மட்டும் தனியாகவா இந்தக் காட்ல இருக்கீங்க?”

ஆமாம் என்பதை தலையாட்டி தெரிவித்தார். நெருப்பு மூட்டி அதில் சின்ன சட்டி வைத்து கஞ்சி காசினார். மிகவும் ருசியாக இருந்தது என தீமன் கஞ்சியை ருசித்தபடி தெரிவித்தான். அது விசேஷமான ஒரு கஞ்சி. எந்த பருவத்திலும் பருகலாம், யார் பருகினாலும் கசக்கும். ஆனால் தீமனுக்கு இனித்தது.

“தீமா, அந்த யானையைப் பார்த்து உனக்கேன் பயமே வரவில்லை? அது கொடிய மிருகம் அல்லவா? அதற்கு எப்படி உதவ வேண்டும் என தோன்றியது உனக்கு?”

“தாத்தா, யானை என்றால் எனக்கு பயம் தான், ஆனால் அதன் காலில் அடிப்பட்டிருந்ததை பார்த்ததும் அதற்கு உதவ வேண்டும் என்றுத் தோன்றியது. என்ன செய்யலாம் எனப் பார்த்துக்கொண்டிருந்த போது தான் நீங்கள் வந்து சேர்ந்தீர்கள். நல்லவேளை நீங்க கொடுத்த மூலிகையினால் விரைவில் குணமானது..”

கஞ்சி பருகியதும், தீமனின் உடலில் சில பரிசோதனைகளை செய்தார். வழக்கமாக இந்த கஞ்சி குடித்தால் உடல் வியர்த்துவிடும், அதிக மூச்சு வாங்கும். ஆனால் தீமன் சாதாரணமாக இருந்தான். அறிவு, இறக்கம், உடல் பலம் என எல்லாவற்றிலும் இவன் தான் சரியான ஆள் என முடிவிற்கு வந்தார் ஹெர்குலஸ்.

ஆம் தீமன் தான் ஹெர்குலசின் வாரிசு. அந்த குறிப்பிட்ட தினத்தில் தான் தன் வாரிசை ஹர்குலஸ் சந்திப்பார் என ஏற்கனவே எழுதி வைக்கப்பட்டிருக்கு.

இனி தீமன் தான் ஹெர்குலஸின் வேலைகளை அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்குச் செய்ய வேண்டும். அதன் பின்னர் தீமனுக்கு ஒரு வாரிசை கண்டுபிடிக்க வேண்டும். முதலில் தீமன் மரியானா அகழிக்கு சென்று மாகடிகாரத்தை செயல்படுத்தும் சாவியினை எடுத்துக்கொண்டு மெளன லோஆ(MOUNA LOA) தீவிற்கு செல்ல வேண்டும், அங்கே மாகடிகாரத்தை செயல்படுத்திவிட்டு அங்கே இருக்கும் மடாகஸ் மற்றும் இதர வீரர்களுடன் சில நாள் இருந்துவிட்டு திரும்பச் சொந்த ஊருக்கு வந்துவிடலாம். மற்றதை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.

மீண்டும் ஐந்து வருடத்திற்கு ஒரு முறை இதே போல் சென்றுச் செயல்படுத்திவிட்டு வந்தால் போதும். ஊரில் மற்றவர்கள் யாருக்கும் இந்த விஷயத்தை சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. வீட்டாருக்கு மட்டும் தெரிவிக்கலாம். கடந்த பல தலைமுறையாக இப்படித்தான் நடந்து வருகின்றது. ஏலகிரி மலையில் தான் அந்த கண்டுபிடிப்பு நிகழும். அந்த மலைக்கு அப்படி ஒரு விசேஷ சக்தி உண்டு.

தீமனுக்கு முதலில் மாகடிகாரம் பற்றியும் அவன் செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றியும் விளக்கினார். பைத்தியக்காரத்தனமாக இருக்கின்றதே என முதலில் அவனுக்கு தோன்றியது. ஆனாலும் ஹெர்குலஸ் சொன்ன எல்லா விஷயத்தையும் கவனித்தான். மறுநாள் காலையே அவன் கிளம்பவேண்டும் என்றும் தீமன் வீட்டாருக்கு ஹெர்குலசே நேரில் சென்று விஷயத்தை தெரிவிப்பதாகச் சொன்னார்.

ஓவியங்கள் நிறைந்த ஒரு பழைய புத்தகம் ஒன்றை தீமனுக்கு கொடுத்தார். அதில் மாகடிகாரம் பற்றிய விளக்கமும், முறைகளும் விளக்கப்பட்டு இருந்தது. பெட்டி ஒன்றினையும், மெளன லோவா தீவில் இருக்கும் மடாகஸிற்கு ஒரு கடிதமும் கொடுத்து அனுப்பினார்.

“தீமா, பத்திரம் இந்த உலக சுழற்சியே உன்னிடம் தான் இருக்கு, பொறுப்பறிந்து செயல்படு” என சொல்லி வாழ்த்தி அனுப்பினார். யூக் என்னும் இளைஞன் தீமனை அழைத்துச் சென்றான். இவர்கள் இருவருக்காக காத்திருந்தது ஒரு நீர்மூழ்கிக் கப்பல்.

***

நாஞ்சில் நாடன்.. சாலப்பரிந்து

(காலச்சுவடு நவீனத் தமிழ் கிளாசிக் சிறுகதை வரிசை)

ஆசிரியர்: நாஞ்சில் நாடன்

மண்ணும் மனிதரும் . . .

(முன்னுரை)

நாஞ்சில் நாடனின் கதைகளை முதலில் படிக்க நேர்ந்தபோது நான் முதிரா இளைஞன். வாசிப்பில் அதீத ஆர்வமும், அதே சமயத்தில் இலக்கியம் குறித்து திட்ட வட்டமான கருத்தாக்கங்கள் கொண்டவனாகவும் இருந்தேன். எந்த ஒரு நூலையும் படித்த முதல் தடவையி லேயே அதைப் பற்றிய கறாரான ஒரு முடிவுக்கு வந்து விடும் கூருணர்வும் எனக்கு அப்போது அதிகமாகவே இருந்தது. நாஞ்சில் நாடன் என்ற அவருடைய புனை பெயர் எனக்கு அவ்வளவு உவப்பான ஒன்றாக அல்லா மல் சற்றே மனவிலக்கத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. காரணம், சாதிப்பற்று, மதப்பற்று போலவே ஊர்ப்பற்று, மொழிப்பற்று, இனப் பற்று முதலிய பிற பற்றுகளும் புதுமை நாட்டமற்ற ஒரு மனம் சுமக்க விரும்பும் பழம் பெருமை என்பதான எண்ணமே அன்றிருந்தது.

சிறுகதை என்றதுமே என் மனதில் எழும் ஒரு தோற்ற வரையறையானது இறுக்கம், செறிவு, துல்லியம், ஒருமை, முடிவை நோக்கிய விரைந்த நடை என்பவை போன்ற சில அளவீடுகளைக் கொண்டிருந்தது. நாஞ்சி லின் கதைகள் பலவும் இந்த வரையறைக்குள் பொருந்தா மல் மீறியும், வழிந்தும் ஆங்காங்கே துருத்திக்கொண்டு நின்றன. கதாபாத்திரங்களின் குண இயல்புகளுக்குத் தகவே கதையின் மொழிநடை பயின்று வரவேண்டும். கவித்துவமான முடிவும், கதை விளக்கப்படுத்தும் மேல்தளப் பிரதிக்கப்பால் ஆழமான மறைபிரதியும் கூடுதல் தகுதியாகக் கொள்ளத்தக்கவை என்பனபோல் என் வரையறைக்கு மேலதிகமான சில எதிர்பார்ப்புகளும் இருந்தன. கதாசிரியனின் பிரசன்னம் இல்லாத கதை என்பது நாஞ்சிலிடத்தில் அரிதாகவே காணக் கிடைப்பது. தவிரவும் அவருடைய கதாபாத்திரங்கள் மண்ணில் காலூன்றி எதார்த்தத்தில் அடிவைத்து நடக்கிறவர்கள். அவர்களால் தங்களது எண்ண விசாரங்களைத் தத்துவார்த்த தளங்களுக்கு நகர்த்தவோ, நம்மால் அவரது கதைகளிலிருந்து நுட்பமான மறைபிரதிகளைப் பெறவோ முடியவில்லை. எனவே அன்றைய அவ்வாசிப்பில் என்னை ஈர்த்தது அவருடைய மும்பை அனுபவத்தையொட்டிய சில கதைகள் மாத்திரமே. மற்றபடி அவர் ஒரு மரபான கதைசொல்லி என்ற மனப்பதிவே என்னிடம் தங்கியிருந்தது.

2000இல் நாஞ்சிலின் சிறுகதைகள் மொத்தத் தொகுப்பாக (தமிழினி) வெளிவந்தது. தொடர்ந்து விகடன் தொடர் மற்றும் சாகித்திய அக்காதெமி விருது காரணமாக அவருடைய புகழ் நட்சத்திர மதிப்பை எட்டியது. அவரது வாசகர்களுடைய எண்ணிக்கையும் பேரளவு கூடியது. பல பழைய புத்தகங்கள் மறுபதிப்பு செய்யப்பட்டன. தவிர நாஞ்சில் நாடனை நேரில் சந்திக்கவும் பழகுவதற்குமான சந்தர்ப்பங்களும் வாய்த்தன. இப்பின்னணியில் மீளவும் அவருடைய கதைகளைப் படிக்க விரும்பினேன். அவ்வப்போது அவருடைய கதைகளைப் பத்திரிகைகளில் வாசித்திருந்தபோதிலும், ஒரேமூச்சில் வாசிக்கும்போது மட்டுமே நுட்பமான பல விஷயங்களை அவதானிக்கவும் ஒட்டுமொத்தமாக ஒரு மதிப்பீட்டிற்கும் வர இயலும் என எண்ணினேன். முதல் தடவையாக நாஞ்சிலைப் படித்ததற்குப் பிறகு பல வருடங்கள் கடந்துவிட்டன. வாழ்க்கை பற்றியும் இலக்கியம் பற்றியும் எனது பார்வை இன்று வெகுவாக மாறிவிட்டிருக்கிறது. ஒரு வசதிக்காக உருவம், உள்ளடக்கம் என்ற பாகுபாட்டை அனுமதிப்போமெனில், இந்த மத்திம வயதில் நான் இலக்கியப் படைப்புகளில் உருவம் சார்ந்த கவர்ச்சித் தன்மையை இழந்து, உள்ளடக்கம் சார்ந்த விஷயங் களில் மனம் தோயத் தொடங்கிவிட்டேன் என்றே கூற வேண்டும். அன்று கச்சிதமான நடையியலாளர்களின் ஈர்ப்புத் தன்மைக்கு முன்னால் மங்கலாகத் தோன்றிய பல கதை சொல்லிகளை இப்போது புதிய வெளிச்சத்தில் நோக்குகையில் அவர்களுடைய சாரமான உயிர்ப்புத் தன்மையை உணரவியல்கிறது. கு. அழகிரிசாமி, ஆ. மாதவன், கி.ரா., பூமணி, சோ. தர்மன், லெட்சுமணப் பெருமாள், சு. வேணுகோபால், அழகிய பெரியவன், கண்மணி குணசேகரன் முதலியோரின் உலகத்திற்குள் என் வாசிப்பின் பிந்தைய கட்டத்திலேயே நான் வந்து சேர முடிந்தது. நாஞ்சில் கதைகளின் தனி ருசியையும் இவ்வாறாகத் தாமதமாகவே கண்டடைந்தேன். மேற்கண்ட எழுத்தாளர்களின் கதைகளுக்கிடையே பல அம்சங்களிலும் பாரிய வேறுபாடுகள் காணக்கிடைப்பினும் அடிப்படையான ஒற்றுமை ஒன்றுண்டு. அது அவர்கள் தங்கள் கதைகளின் வாயிலாகத் தீட்டிக்காட்டும் வாழ்வின் சித்திரங்கள் அந்தந்த மண்ணின், மனிதர்களின், மொழியின், பண்பாட்டின் உயிர்த் துடிப்புடன் கூடியவையாக அமைந்தவை என்பதேயாகும்.

துளிகள் கூடி அலையென எழுந்து, அடித்து ஓய்ந்தபின் கடலெனக் காணக் கிடைப்பது போலவே நாஞ்சில் நாடனின் கதைகளின் வாயிலாக அறியக் கிடைக்கும் பல்வேறு பண்பாட்டுத் தகவல்கள், பழமொழிகள், உணவுப் பழக்கங்கள், வழிபாடு, சமயச் சடங்குகள், தாவரங்கள், வைத்தியம் போன்ற குறிப்புகள், அப்பகுதியின் பிரத்யேகமான மொழிக் கூறுகளுடன் கூடி முயங்கப் பெற்றமையால் உருவாகும் சிறுசிறு சித்திரங் கள் மொத்தமும் கட்டியெழுப்புவதே அவருடைய நாஞ்சில் நாடு. நாஞ்சிலின் எழுத்துக்கள் மொத்தத்தையும் படித்த வாசக னொருவனின் மனதில் அது கொண்டிருக்கும் விஸ்தீரணம் மிகப் பரந்தது. நாஞ்சில் என்ற சொல் சங்க காலத்திலிருந்தே வழங்கிவருகிறது. நாஞ்சில் பொருநன் என்ற ஆட்சியாளனைப் பற்றிய குறிப்பு ஒரு புறநானூற்றுப் பாடலில் வருகிறது. எனவே கொங்கு நாடு, தொண்டை நாடு, பறம்பு நாடு என்பதுபோல நாஞ்சில் நாடு என்பதுவும் பரந்தவொரு நிலப்பரப்பு. சில, பல குறுநில மன்னர்களும், வேளிர் தலைவர்களும் அதைத் தொன்றுதொட்டு ஆண்டு வந்திருக்கக்கூடும் என்பது போன்ற ஒரு எண்ணமே இருந்தது. ஆனால் கன்னியாகுமரி மாவட்டத் தின் இரண்டு தாலுகா பரப்பளவே நாஞ்சில் நாடு என்பதை அறிய வரும்போது ஆச்சரியமாகவும், ஏன் சற்று ஏமாற்ற மாகவும்கூட இருந்தது. அந்தக் குறுகிய நிலப் பரப்பு எழுத்தின் வாயிலாக நம் மனதில் எவ்வளவு விஸ்தீரணம் கொள்கிறது என்பதை யோசிக்க வியப்பே தோன்றுகிறது.

சுந்தர ராமசாமியும், நீல. பத்மநாபனும், ஐசக் அருமை ராசனும், ஹெப்சிபா ஜேசுதாசனும், ஜெயமோகனும், தோப்பில் முகமது மீரானும், குமார செல்வாவும் தம் எழுத்துக்கள் வாயிலாக எதிரொலிப்பது ஏகதேசம் ஒரே நிலப்பகுதியின் வாழ்வைத்தானென்றாலும் அவை ஒவ்வொன்றும் உயர்த்திப் பிடிப்பவை ஒவ்வொரு கோணத்திலான ஆடியை அல்லவா! மொழியாலான அந்த ஆடிகளின் தடிமனும் விட்டமும் குவி மையமும் வேறுவேறு. அதில் பட்டுத் தெறிக்கும் வெளிச்சக் கீற்றுகளின் விளைவான வண்ண மாறுபாடுகளும் தனித்தனி அலை நீளம் கொண்டவையே. ஆக நாஞ்சில் நாடனின் எழுத்துக்களை வட்டார எழுத்து என ஒரு நிலப்பரப்போடு மட்டும் சம்பந்தமுடையவையாகப் பார்ப்பது என்பது நமது பார்வையைக் குறுகலான ஒன்றாக ஆக்கிவிடும். மாறாக அம்மண்ணில் வேர் ஊன்றி முளைத்தெழுந்தபோதிலும் அவருடைய எழுத்துக்கள் கிளைத்துத் தேட முயலும் திசைகளும், விரிந்து பற்ற முயலும் ஆகாயமும் எவையென நோக்க எத்தனிப்பதே தர்க்கபூர்வமான காரியமாகும்.

நாஞ்சிலின் கதைகளை வகைப்படுத்த விரும்புவோமெனில் எளிமையும் வசதியும் கருதி அவற்றை மூன்று பிரிவுகளாகப் பகுத்துவிடலாம். முதலாவது அவருடைய பால்யத்தை, மண்ணைப் பிரதிபலிக்கும் கதைகள். இரண்டாவது அவருடைய மும்பை வாழ்க்கையை, பயண அனுபவங்களைப் பிரதி நிதித்துவப்படுத்தும் கதைகள். மூன்றாவது அவருடைய பிற்கால சிருஷ்டியான கும்பமுனியைப் பிரதான பாத்திரமாகக் கொண்ட கதைகள். நாஞ்சில் நாடனின் கதைகளை மேலெழுந்தவாரி யாகப் படிக்க நேரிடும் வாசகன்கூட அவற்றில் காணப்படும் ஒரு முக்கியமான வேறுபாட்டை உணர முடியும். கிராமம் எளிமையானது, அன்பானது, வெளிப்படையானது. எனவே போற்றுதலுக்குரியது. மாறாக, நகரம் சிக்கலானது. ஒளிவு மறைவு கொண்டது, நட்பற்றது. ஆகவே விமர்சனத்திற்குரியது என்ற வழக்கமான இருமை எதிர்வுப் பண்பிற்குள்ளாக இக் கதைகள் அடங்குவதில்லை என்பதே அவ் வேறுபாடு. அந்த வகையில் நாஞ்சில் நாடன் காட்டும் கிராமம் நேர்மறையானது என்பதைவிடவும் இயல்பானது என்பதே சாலப் பொருந்தும். ஏனெனில் கிராமத்தில் இன்றளவும் விரவிக் கிடக்கும் சாதிப் பற்று, மூடநம்பிக்கை, போலிப் பெருமிதம், வறுமை முதலிய இன்ன பிற குணக் கேடுகளையும் விமர்சனப் பாங்கில் நோக்கும் கதைகளே அவரிடத்தில் ஒப்பீட்டளவில் அதிகம். இதற்கானப் புறவயமான காரணம் ஒன்றும் உள்ளது. அது அவர் இக் கதைகளை எழுத நேர்ந்தது கிராமத்தில் வாழ்ந்த போதல்ல, மாறாகத் தன் சொந்த மண்ணைவிட்டு வெகு தொலைவில் மொழி தெரியாத மாநகரத்தில் வசிக்க நேர்ந்தபோதுதான். இந்தத் தொலைவு மற்றும் தனிமையினால் உருவான மானசீக மான, இடைவெளிக்கப்பாலிருந்து தன் கிராமத்தைப் புரிந்துகொள்ளவும், தனக்காக மீட்டெடுத்துக் கொள்ளவுமான முயற்சியினின்றும் பிறந்தவையே இக்கதைகள்.

நாஞ்சில் நாடனின் படைப்புலகம் சார்ந்த மற்றொரு புறக்கணிக்கவியலாத கூறு, பயணங்கள். அவரது நகர வாழ்வின் தொடர்ச்சியாக அமைந்தவை அவருடைய பணிநிமித்தமான நெடும் பயணங்கள். அவை தன்னையும் வாழ்க்கையையும் புரிந்துகொள்ள மிகவும் உதவியாக அமைந்தன எனக் கூறுகிறார். சற்றேறக்குறைய அவருடைய எழுத்து வாழ்க்கைக்குச் சமமான கால அளவு கொண்டது அவருடைய நகர வாழ்க்கை. ஒரு வேரற்ற நீர்த்தாவரம் போல ஒட்டாத மனநிலையுடனே நகர வாழ்க்கையை அவர் மேற்கொள்கிறார். அதற்குக் காரணம் அசலான கிராமத்து மனம் நகர வாழ்க்கையின்போது உணர நேரிடும் வழக்கமான ஒவ்வாமை அல்ல.

‘நகரங்களின்மீது எனது படைப்பு மனம் கொள்ளும் அருவருப்பு, சாக்கடைகள் சார்ந்தோ, குப்பைகள் சார்ந்தோ, தூசும் புகையும் சார்ந்தோ, வாகன நெருக்கடிகள் சார்ந்தோ மட்டுமல்ல. தன் பெண்டுபிள்ளைகளிடம்கூட இயல்பாக இருக்கவிடாத, எத்தைச் செய்தும் சொத்தைத் தேடு என்று அலைகிற, முழுவதும் யாந்திரீக வயமாகிப்போன, தன்னை மிஞ்சிய அறிவு எதுவுமில்லை எனும் மடம் பட்ட, எல்லா சிதைவுகளுக்கும் களனாகிக்கொண்டிருக்கிற மனங்கள் சார்ந்தது. வாழ்தல் என்பது ரசனை அற்றுப் போதல் என்றும் சுயநலமாகச் சுருளுதல் என்றும் நகரம் எனக்கு நாளும் கற்பிக்க முனைகையில் அதில் முகம் அழிந்துபோகாமல் என்னை நான் மறுபடி மறுபடி கண்டெடுத்துக்கொள்ளும் முயற்சிகள் தாம் என் கதைகள்’ என்று தன் கட்டுரையொன்றில் குறிப்பிடுகிறார். ஒரு விதத்தில் இந்த மனவிலக்கமும் ஒவ்வாமையுமே அவருடைய வாழ்வனுபவங்களைப் புறவயமாக நின்று ஆராயவும், அதைத் தனது கதைகளுக்கான மூலப்பொருளாக மாற்றிப் படைத்துக்கொள்ளவும் ஏதுவாக அமைந்தன எனலாம்.

நாஞ்சிலின் கதைகளில் சமீபமாக இடம்பெறத் தொடங்கியவர் கும்பமுனி. அவர் தனித்துத் தோன்றவில்லை. உடன் அவரது சுயத்தின் எதிர்பிரதிமையான தவசிப்பிள்ளையும் சேர்ந்தே பிரசன்னம் கொள்கிறார். ரிஷி மூலம் ஆராய்ச்சிக்குரியதன்று என்பதனால், இப்பாத்திரத்தில் நாஞ்சிலின் சாயல் எத்தனை சதவீதம் அல்லது வேறு எந்த எழுத்தாளரின் நிழலாவது அதன்மீது விழுந்திருக்கிறதா என்பது போன்ற பூர்வாசிரம விவரங்களை விடுத்து கும்பமுனியின் வரவால் நாஞ்சிலின் கதைகள் அடைந்திருக்கும் பண்புமாற்றங்கள் எவையெனக் காண்பதே பயனுள்ளது. நாஞ்சிலின் படைப்பில் சற்றுத் தூக்கலாகவும் வெளிப்படையாகவும் தென்படுவது அவருடைய விமர்சனக் குரல். கரிப்பும் காரமுமாக வெளிப்படும் அக்குரல் தணிந்து, அங்கதமாக, தன்னிலிருந்து தொடங்கிப் படைத்தவன் ஈறாக சகலத்தையும் நகையாடும் எள்ளலாகக் கும்பமுனி கதை களில் குழியிடுகிறது. இதுவும்கூட அவருடைய தன்மையிலான ஒருவகை விமர்சனம்தான். ஆனால் கொஞ்சம் கோணலாக்கப் பட்ட ஒன்று. பழைய கசப்பிற்கு மாற்றாக இதில் சற்றே கனிவு கூடியிருக்கிறது எனலாம். நாஞ்சிலின் கதையுலகம் நமக்கு நல்கும் அனுபவத்தை மொத்தமாகத் தொகுத்துப் பார்ப்போமெனில், ஒரு கிராமத்துக் கோபக்கார இளைஞன், உதர நிமித்தம் இடம்பெயர்ந்து, பயணங்களால் பண்பட்டு, முதிர்ந்து ஒரு குறும்புக்காரக் கிழவராகப் பரிணமிக்கும் ஒரு மனச் சித்திரத்தையே நமக்கு அளிக்கிறது.

ஓர் எழுத்தாளரின் தனித்துவத்தை நிர்ணயிப்பதில் பெரும் பங்குவகிப்பது அவருடைய மொழி. வெறும் தகவல் விவரணை என்பதிலிருந்து கூடுதலாக வாசிப்பை ஓர் அனுபவமாக மாற்றுவதும் அதுவே. அவ்வகையில் சிறப்பித்துக் கூறப்பட வேண்டியது நாஞ்சிலின் கதைமொழி. காலத்தின் களிம்பு அவ்வளவாகப் படியாத, பண்பாட்டின் செழுமை மிளிரும் மொழி நாஞ்சிலுடையது. அவருடைய ஆளுமையும் ரசனையும், குறிப்பாக மரபு இலக்கியங்களின் பாற்பட்ட அவரது மனச்சாய்வும் அவருடைய கதைகளின் வரிகளுக்குக் கூடுத லான வண்ணங்கள் சேர்ப்பவையாகின்றன.

நாஞ்சிலின் கதைகளைப் பொருத்தவரையில் அவற்றின் மீது வைக்கப்பெறும் விமர்சனங்களில் பிரதானமானவையென இரண்டைச் சுட்டலாம். ஒன்று அவருடைய அதிகப்படியான விவரணைத் தன்மையால் கதையின் வடிவம் சமயங்களில் குலைவுபட்டு ஒருவகைக் கட்டுரைத் தன்மை மிகுகிறது. மற்றது அவருடைய கதைகள் முழு முற்றாக லௌகீக தளம் சார்ந்து மட்டுமே இயங்குவது. அதற்கப்பால் மனித அகம் சார்ந்த தத்துவார்த்த அடிப்படைகள், உளவியல் ஆழங்கள், ஆன்மீக நெருக்கடிகளை அவை கணக்கிலெடுத்துக்கொள்வதில்லை என்பது.

முதலாவது விமர்சனத்தைப் பொருத்தவரையில் தன்னியல்பாக மட்டுமல்லாது பிரக்ஞைபூர்வமாகத் தெரிந்தே அத்தகைய விவரணைத் தன்மையை நாஞ்சில் தன் கதைகளில் மேற் கொள்கிறார் எனப்படுகிறது. ஆனால் அதற்கான நியாயம் ஒன்றை அவர் தன்னிடத்தே கொண்டிருக்கிறார். “எனக்குத் தெரிந்து சுமார் 27 வகைக் கடல் மீன்கள் நாஞ்சில் நாட்டில் விற்பனைக்கு வருகின்றன. இந்த எல்லா வகை மீன்களின் பெயரும் அங்குள்ள பெண்களுக்குத் தெரியும். அந்தந்த மீன்களின் முள்ளின் போக்குகள் தெரியும். உலும்பு வாடையின் வேறுபாடுகள் தெரியும். தோல் உரிக்க வேண்டுமா கூடாதா என்பது தெரியும். சுவை வேறுபாடுகள் தெரியும். எல்லா வகை மீன்களையும் அவர்கள் ஒரேவிதமாகக் கறி சமைப்பதில்லை. மீனின் தன்மைக்குத் தகுந்தவாறு பக்குவம் மாறும். மாற்றிச் செய்தால் குடிமுழுகிப்போவது ஒன்றும் இல்லை. என்றாலும் குறிப்பட்ட பக்குவத்தில் அந்த மீனைச் செய்யும்போதுதான் அதன் சுவை மேலோங்கி நிற்கும். எழுதிக்கொண்டு போகிற போக்கில் ஏதோ ஒரு மீனையோ அதன் பக்குவத்தையோ சொல்லிச்செல்வது என்பது இயல்பான விஷயம். கடல் மீனையே காணாத பகுதியில் வாழும் மனிதர்களுக்கு இவை நூதனமாக இருக்கும். ஏன் தேவையற்ற விஸ்தரிப்பாகக்கூட இருக்கும். ஆனால் எனக்குப் பொத்தாம் பொதுவாக, ‘மீன் வாங்கிக் குழம்பு வைத்தாள்’ என எழுதிச்செல்வதில் சம்மதமில்லை. அந்த வாக்கியத்தை மீன் காட்சிசாலையில் மட்டுமே மீன்களைப் பார்த்த ஒருவரால்கூட எழுதிவிட முடியும். அதை எழுதுவதற்கு நாஞ்சில் நாடன் வேண்டாம்” என்பது அவருடைய தீர்மானமான முடிவு.

தொடக்கத்தில் நாஞ்சில் நாடனின் கதைகளில் காணப் படும் உணவுப் பதார்த்தங்களின் விலாவாரியான பட்டியல், அவற்றிற்கான சமையல் குறிப்புகள் ஆகியவற்றைப் படிக்கும் போது இது ஒருவகையான மனப்பீடிப்போ என்றுகூட அதிகப் படியாக எண்ணியதுண்டு. ஆனால் சமீபத்தில் படித்த ஒரு கட்டுரையில் நம்மிடையே பாரம்பரியமான அரிசி வகைகள் மாத்திரம் ஆயிரத்திற்கும் அதிகமாகப் புழக்கத்தில் இருந்து வந்ததாகவும், அவற்றின் எண்ணிக்கை இப்போது வெறும் முப்பதுக்கும் குறைவாக அருகிவிட்டதாகவும், அவற்றின் பெயர்கள்கூடத் தெரியவரவில்லை என்றும் படித்தபோதுதான் நாஞ்சில் நாடன் மாதிரியான எழுத்தாளர்கள் தேவைக்கும் அதிகமாகத் தங்கள் படைப்புகளில் அள்ளித் தெளித்துவிட்டுப் போகும் பண்பாட்டுத் தகவல்களின் அருமையும் அபூர்வமும் உறைத்தன.

இரண்டாவது விமர்சனக் கருத்தையொட்டி நோக்கும் பட்சத்தில் நாஞ்சிலின் கதாபாத்திரங்கள் தினசரி பூசை நியமங் கள், கோவில் வழிபாடு, திருவிழாக் களியாட்டங்கள் என்பதைத் தாண்டி பெரிய ஆன்மீகத் தேட்டங்கள் அல்லாதவர்களே. அவர்கள் அந்த மண்ணில் பிறந்து, உழன்று, உதிர்ந்து மட்கி அம்மண்ணிற்கே உரமாகிறவர்களேயன்றி ஆகாயத்து விண்மீன் களைக் கருதி அவாவுறுகிறவர்கள் அல்லர். இன்னும் சொல்லப்போனால் இகம் பற்றிய சுகதுக்கங்களில் ஆழ்ந்துபோய் அவர்கள் தங்கள் வாழ்வில் வானத்தை அண்ணாந்து பார்க்கும் தருணங்களே அதிகம் வாய்க்காதவர்கள் என்று கூறுலாம். மண்ணின்மீதும் சக மனிதர்கள்மீதும் பற்றுகொண்ட, வெற்றி தோல்விகளுக்கப்பால் வாழ்வின்மீது நேர்மறையான பிடிப்பு உடைய எழுத்தாளர்கள் பலரும் அவ்வளவாக ஆன்மீக நாட்டம் அற்றவர்களாகவே தம் எழுத்தில் வெளிப்படுகிறார்கள். மாறாக அவர்களிடம் மிக ஆழமாகவும் அழுத்தமாகவும் வெளிப்படும் மனிதாபிமானமும் நீதியுணர்வும் உண்டு. இந்தத் தொகுப்பில் அடங்கியுள்ள ‘யாம் உண்பேம்’ என்கிற கதையில் வரும் அந்தப் பசித்த கிழவரின் குரலில் வெளிப்படும் அந்த அருள் உணர்வு எந்த வகையிலான ஆன்மீக உணர்வுக்கும் குறையாதது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

‘எனது சிறுகதைகளின்மீது எனக்கிருக்கும் அபிப்பிராயம் ஒரு போதாமை; ஒரு நிறைவின்மை’ என்று குறிப்பிடும் நாஞ்சில் நாடனுக்கு, வாழ்க்கை தனக்குக் கொடையளித்த அனுபவங்கள் தானுணர்ந்து உள்வாங்கிக்கொண்ட விதத்தில் எழுதிச் செல்லுதல் என்பது தனக்கு உவக்கும் பணி என்பதைத் தாண்டி தனது எழுத்துக்கள் குறித்து ஊதிப் பெருக்கப்பட்டப் பிரமைகளோ (அ) கழிவிரக்கத்துடன் கூடிய தடுமாற்றங்களோ கிடையாது. தனிப்பட்ட வாழ்வில் தானடைய முடியாத உயரங்களைத் தன் எழுத்தின் வழி அடைந்துவிடலாம் என்ற அவாவில் தன் நிழலைத் தானே தாண்ட முயலாதவர் அவர். இந்தத் தன்னம்பிக்கையும் சுயமதிப்பும் அவருடைய எழுத்திற்கு நல்கியுள்ள வசீகரத்திற்கும் அப்பால் அவருடைய படைப்புகள் நமக்குக் கையளிக்க விரும்பும் சங்கதி ஒன்றுண்டு. நாஞ்சில் தன் தந்தையுடனான தனிப்பட்ட உரையாடல் ஒன்றினைப் பதிவுசெய்துள்ளார்.

வயல் அறுவடையின்போது காலில் மண்ஒட்டாத, ஆனால் காலடித்தடம் பதியும்படி உலர்ந்த வயலில், ஏராளமாக நெல்மணிகள் தொளிவதைப் பார்த்து அப்பாவிடம் கேட்டேன்:

“இவ்வளவு நெல்லும் நமக்கு சேதம்தானே? இப்பிடி நெல் தொளிந்து போகாமல் இருக்க விவசாய விஞ்ஞானிகள் வழி கண்டுபிடிக்கக் கூடாதா?”

அப்பா சொன்னார், “இங்க வீசக்கூடிய காத்துக்கு, பெய்யப்பட்ட மழைக்கு, அடிக்கக்கூடிய வெயிலுக்கு எல்லாம் ரூவாயா கொடுக்கோம்? நாம பாடுபட்டதுக்குக் கூலி எடுத்துக்கிடலாம். நம்மை சுத்திக் காக்கா, குருவி, எலி, பாம்பு, தவளை, புழு, பூச்சி எல்லாம் சீவிக்கணும். அதை மறந்திரப்பிடாது.”

வாழ்வைத் தொடர் ஓட்டப்பந்தயமாகக் கருதித் தமக்கான இடத்தை அடைவதற்காகப் பிறரை முந்திக்கொண்டு ஓடும் நம் தலைமுறையினர் மறந்துவிட்ட அல்லது நினைவுபடுத்திக்கொள்ள விரும்பாத சேதி இது. நாஞ்சிலின் கதைகள் அளிக்கும் இலக்கிய அனுபவத்திற்கும் மேலாக நான் மதிப்பது அவரது கதைகளில் உள்பொதிந்திருக்கும் பண்பாட்டின் சாரமான மதிப்பீடுகளைக் கொண்டிருக்கும் இத்தகைய சேதிகளையே.

ஈரோடு க. மோகனரங்கன்

4.12.2012

தலைப்பு: சாலப்பரிந்து . . .

(காலச்சுவடு நவீனத் தமிழ் கிளாசிக் சிறுகதை வரிசை)

ஆசிரியர்: நாஞ்சில் நாடன்

தேர்வும் தொகுப்பும்: க. மோகனரங்கன்

மொத்தப் பக்கங்கள்: 240

விலை:190

ISBN : 978-93-81969-30-4

முகவரி:
காலச்சுவடு பதிப்பகம்
கே.பி சாலை,
நாகர்கோவில் 629001
Email: publications@kalachuvadu.com

இசை பாமரர் முதல் பண்டிதர் வரை பயணிக்கும் இசை – மதுரை மணி ஐயர் பாஸ்கர் லக்ஷ்மன்

பாமரர் முதல் பண்டிதர் வரை பயணிக்கும் இசை – மதுரை மணி ஐயர்
பாஸ்கர் லக்ஷ்மன்

 

download (11)

 

 

 

 

தன்னுடைய திறமை, உழைப்பு என அனைத்தையும் ஒரு துறையில் ஒருமுகப்படுத்தி தன் வாழ்க்கையை முழுதும் அர்பணித்த ஆளுமைகள் பலர். அப்படிப்பட்ட ஒருவர் தான் மதுரை மணி ஐயர் அவர்கள். அவர் கொடுத்துச் சென்ற இசை இந்த நிமிடத்திலும் எங்கோ ஒலித்துக் கொண்டு இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. சமீப காலத்தில் மதுரை மணி ஐயர் அவர்களை நினைக்கும் சமயம் க.நா.சு வைப் பற்றிய எண்ணங்கள் வருவது தவிர்க்க முடியாததாக இருக்கிறது.. இருவரின் நூற்றாண்டும் ஒரே வருடத்தில் வந்திருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.க.நா.சுவும் தன் வாழ்நாள் முழுதும் இலக்கிய சிந்தனையுடன் கழித்த ஓர் ஆளுமை. இருவரின் வாழ்க்கையும் பொருள் பட அமைந்தது என்பதை மறுக்க முடியாது.

 

மதுரை மணி அவர்கள் மிகவும் புகழ்பெற்ற பாடலாசிரியர் மற்றும் கர்நாடக இசை விற்பன்னர் ஹரிகேசவ நல்லூர் முத்தையா பாகவதிரிடம் சங்கீதம் பயின்றார். தனெக்கென ஒரு தனி பாணியை அமைத்துக் கொண்டு ஓர் உயர்ந்த சங்கீதத்தை கொடுத்து ரசிகர்களை மகிழ்வித்தார். இவரைப் பற்றி பல தகவல்கள் என் வீட்டுப் பெரியோரிடம் இருந்து கேள்விப் பட்டிருக்கிறேன். அவற்றில் சில. தான் பணம் வாங்கிக் கொண்டு பாடுவதால் கல்யாணியில் அமைந்த “நிதி சால சுகமா ராமுனி சந்நிதி சேவை சுகமா” (பணம் பெரிதா இல்லை ராமனுக்கு சேவை செய்வது பெரிதா) பாடலை பாடியதே இல்லை. பணம் பெற்றாலும் கொடுப்பதை வாங்கிக் கொள்வர் என்பார்கள். சாதாரண பிள்ளையார் கோவிலில் பாடச் சொன்னாலும் வெறும் தேங்காய் மூடி வாங்கிக் கொண்டு மணிக்கணக்கில் பாடுவார்என்பார்கள். ஒரு முறை ஒரு ரிக்க்ஷா ஓட்டுனரிடம் சவாரிக்கு வருவாயா எனக் கேட்டவரிடம், இல்லை “ஐயர் பாடப் போகிறார்” வர முடியாது என்றாராம். மகாராஜபுரம் விஸ்வநாதையர் (மகாராஜபுரம் சந்தானம் அவர்களின் தந்தை) மோகனம், ஆரபி போன்ற ராகங்களை மிகவும் தேர்ந்த முறையில் கையாள்பவர். அவரே ஒருமுறை மணி அவர்கள் மோகனம் பாடியதைக் கேட்டு அவரை “மோகன மணி” என்றாராம். கர்நாடகா சங்கீதத்தின் மிகப் பெரிய ஆளுமையான அரியக்குடி அவர்கள் மணியின் பாடல் “மணி”யாக இருக்கும் என்றிருக்கிறார். ஒரு முறை மணி அவர்கள் திருவல்லிக்கேணி ஹிந்து பள்ளியில் “அபராம பக்தி எந்தோ” என்ற பந்துவாரளியில் அமைந்த கீர்த்தனையில் “கபி (குரங்கு)வாரிதி தாடுணா” என பக்தியுடன் பாடும் சமயம் எங்கிருந்தோ ஒரு குரங்கு ஒரு நிமிடம் வந்து காட்சியளித்து மறைந்ததாம்.

 

மணி அவர்கள் கற்பனை ஸ்வரம் பாடுவதைக் கேட்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஒரு நல்ல பேச்சாளர் பேச்சை நிறுத்தும் போது இன்னும் சிறிது பேச மாட்டாரா என்று நினைக்கத் தோன்றும். அதுபோல் தான் மணி அவர்களின் ஸ்வரம் பாடுதலும். மடை திறந்த வெள்ளம் போல் ஸ்வரங்கள் வந்து விழும். சிலர் பாடும் போது ரசிகர்களும் சேர்ந்து கற்பனை ஸ்வரம் பாடுவதைக் காணலாம். இவர்கள் ஒரே மாதிரி எல்லா கச்சேரிகளிலும் பாடுவதின் விளைவு. ஆனால் மதுரை மணி அவர்கள் பாடுவதைக் கேட்கும் சமயம் வெவ்வேறு ஸ்வரங்கள் வந்து விழும் போது ஏற்படும் சந்தோஷத்திற்கு அளவே கிடையாது.

 

“தாயே யசோதா எந்தன்” என்ற தோடி ராகத்தில் அமைந்த பாபநாசம் சிவன் அவர்களின் பாடலில் “காலினில் சிலம்பு” என்ற இடத்தில் மணி அவர்களின் நிரவல் கேட்கக் கேட்க இன்பம். சிவனின் மற்றொரு பாடலான “கா வா வா கந்தா வா வா” என்ற வராளி ராகத்தில் அமைந்த பாடலை அருமையாகப் பாடி பிரபலப்படுத்தினார். மற்றுமொரு தமிழ் பாடலான “சேவிக்க வேண்டும் அய்யா” என்ற ஆந்தோளிகா ராகத்தில் அமைந்த முத்துத் தாண்டவர் பாடலை சிறப்பாக பாடியிருப்பார். தியாகராஜரின் “நன்னு பாலிம்ப நடசி ஓச்சி” என்ற மோகன ராகப் பாடல் மற்றும் “சக்கணி ராஜ மார்கமு” என்ற கரகரப் பிரியா ராகத்தில் அமைந்த பாடலும் எனக்கு மிகவும் பிடித்தவைகள்.

 

கச்சேரியின் இறுதியில் முக்கிய பாடல் பாடிய பிறகு தனி ஆவர்தனத்திற்குப் பின் “துக்கடா” எனப்படும் பிற பாடல்கள் பாடப்படும். இந்த துக்கடா பாடல்களைக் கேட்க என்றே ஒரு ரசிகர் கூட்டம் வரும். இந்த வகையில் மணி அவர்களின் “வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாள்”, “கற்பகமே கடைக் கண் பாராய்” மற்றும் “எப்போ வருவாரோ” முதலிய பாடல்கள் மிக முக்கியமானவைகள். மணி அவர்களின் ஆங்கில நோட்ஸ் மிகவும் பிரபலம். அதை இயற்றியவர் ஹரிகேசவ நல்லூர் முத்தையா பாகவதராக இருந்தாலும் அதை மணி அவர்கள் பிரபலப் படுத்தியதால் மணி நோட்ஸ் என்றே வழக்கிலுள்ளது.

 

அவருடைய நூற்றாண்டுக் கொண்டாட்ட வருடத்தில், டிசம்பர் இசை நிகழ்ச்சிகள் நடைபெறும் தருணம் மணி அவர்களின் இசையைப் பற்றி பகிர்ந்து கொள்வதில் ஆனந்தம்.