Category: டிசம்பர்

ரவிசுப்பிரமணியன் கவிதைகள்

ரவிசுப்பிரமணியன்.

பெருங்கவலையும் சமாதானமும்

நீண்ட பயணத்தின்
இடை நிறுத்தத்தில்
தேநீர்க் கடையிலிருந்து
புறப்பட இருந்த பேருந்துக்கு அவசரமாய்த் திரும்பிய இளைஞன்
இத்தனை தண்ணீர் கலந்த ஒரு தேநீருக்கு
இருபது ரூபாய் வாங்கிவிட்டான்,
சூடாக இல்லை, கொஞ்சமாய் இருந்தது,
பேப்பர் கப்பில் தரவில்லையென்றல்லாம்
வெவ்வேறு விதமாய்
திரும்ப திரும்ப புலம்பிக்கொண்டே வந்தான்.
பக்கத்தில் கண்மூடி சாய்ந்திருந்த சக பயணி விழித்து
இந்த சின்ன வயதில்
உங்களுக்கு இப்படி ஒரு துயரமா எனக்கேட்டுவிட்டு
கண்களை மூடிக்கொண்டான்.

***

லபித்தல்

செல்லமாய் ஒரு நாய்குட்டி
வளர்க்க நினைக்கிறீர்கள்
வாசலுக்கு வரும் வாசனையுணர்ந்து
வாலசைத்து ஓடி வர வேண்டுமென ஆசை
நடக்கும்போதெல்லாம்
பின்னாலே வரவேண்டுமென
படுத்திருக்கும்போது காலடியில்
கிடக்கவேண்டுமென

விருந்தினர்களிடம்
அதன் இனத்தைச் சொல்லிப் பெருமைபடவேண்டுமென
இப்படி ……
மகனும் மகளும் விரும்பாத
அடுக்கக வீடு அனுமதிக்காத நாய்
சுவரில் ஒவியமாய் மாட்டப்பட்டிருப்பதை
அவ்வப்போது பார்த்துக்கொள்கிறீர்கள்
சில சமயம்
அது குரைக்கும் சப்தம்
உங்களுக்கு மட்டும் கேட்கிறது.

***

கவிழ்ந்துகிடக்கும் தானியக்குதிர்கள்

வயிற்றிலடித்துவிட்டது புயல்

எல்லாம் சரிந்த பாரந்தாளாது
அரற்றும் குரல்கள்

நிலமெங்கும் திரிந்த
ஆவினங்களும் மறிகளும்
புதைக்கப்பட்டுவிட்டன

பழக்க தோஷத்தில்
தென்னைகளை அண்ணாந்தவன்
வீழ்ந்துகிடப்பதை கணத்தில் உணர்ந்து
செய்வதறியாது பாழில் வெறித்தபடி
ஈரத்தாலான உள்ளங்கால் கொப்புளங்களுடன்
மழையில் நிற்கிறான்

தண்ணீருக்கும் அரிசிக்கும்
பிஸ்கெட்டுகளுக்கும் மெழுகுவர்த்திகளுக்குமாக
நீள்கின்றன நெல்லும் உளுந்தும் தெளித்த கரங்கள்

நிவாரணமுகாமின்
மெழுகுவர்த்திச் சுடர் விழும் சுவரில்
கைகளின் சைகைகளால்
மருதநிலத்தின் நிழல் சித்திரங்கள் காட்டும்
சிறுவனின் நிலத்தில் ஒரு மரமும் இல்லை

ஒடுகள் பறந்த தன் வீட்டு வாசலில் தொங்கிய
நெற்கதிர் பிடியின் முன் எடுத்தத் தற்படத்தை
மீன்னூட்டம் கரைந்துகொண்டிருக்கும்
அலைபேசியில் பார்த்துக்கொண்டிருக்கிறாள்
சிறுமியொருத்தி

கொடுத்தே பழகிய அன்பின் பெருநிலத்தின்
நிர்மூலத்தைக் காணச் சகியாமல்
நடவுப்பாடல்கள் கேட்ட மண்ணில்
ஒலித்துக்கொண்டிருக்கிறது ஒப்பாரி.
***
நிறையும் இரவு

உதிரப்போக்கு நாளில்
கேட்க யாருமில்லா இரவில்
மரங்களடர்ந்த கொல்லைப்புறத்திண்ணையில் அமர்ந்து
சன்ன வலி மறக்க கிறங்கும் குரலில்
கஜலைப் பாடுகிறாள் தங்கை ஹஸீனா
ஆழ்விழிகள் மூடிய லயிப்பின் தன் மறத்தலில்
துலங்கி மிளிர்கிறது கவிதை
திரும்பத் திரும்ப அழைக்கும் வரிகள்
கடந்ததில் கிடந்து விம்மும்
நிறைவுறா மனசு திறக்கிறது அசைவுகளில்
துவண்டிருக்கும் அவள் தோளணைத்து
இதம் செய்கிறது பாடலின் கருணை
திகைத்துப் பார்க்கிறது
கொட்டில்ப் பசு
பஞ்சாரத்தில் அடைந்த கோழிகளும்
சப்தமின்றி கிடக்கின்றன
எப்போதோ வந்தமர்ந்து
பின் வராமலே போன பறவையின் நினைப்பில்
மெல்ல அசைகிறதொரு தருவின் கிளை
பாடப்பாடச் சுரக்கிறது கனிவு
அநித்திய வாழ்வின்
தரிசனக் கணங்கள்

உருவின்றி நிறையும் அற்புதத்திற்காய்
காற்று வீசியிறைக்கிறது பூக்களை
அந்தக் கருங்கல் பதித்த தளமெங்கும்.

••••••••

இணையாக் கோடுகள்- யாழ்க்கோ லெனின் ,நெய்வேலி.

” இனியா… இனியா… எங்க இருக்க?”

“என்னங்க… என்ன ஆச்சு? … ஏன் இப்படி கத்துறீங்க…?”

” ஆமாம் , நான் கத்துறேன் தான்… ! எவ்வளவு நேரமா உனக்கு கால் பண்ணிட்டிருக்கேன்… வெயிட்டிங் லயே இருக்க… நடுவுல கொஞ்சம் என்னன்னு என்ட கேட்டுட்டு, பேசக் கூடாதா…?”

” சாரிங்க… !கொஞ்சம் முக்கியமான கால்… பாஸ்ட பேசிட்டிருந்தேங்க…!”

“சரி … சரி… அத விடு , லோன் கட்ட இன்னைக்கி தான் கடைசி தேதி… அதனால தான் நீ வீட்ல இருந்தன்னா, பணத்தை உன்ன எடுத்துட்டு வர சொல்லலாம்னு ஃபோன் பண்ணினேன்…”

” இருங்க , பணத்தை இதோ எடுத்திட்டு வர்றேன்…!”

” சரி, சீக்கிரமா கொண்டா… ஆமாம்,ஆதவன் எங்கே?”

” இங்க தான் எங்கயாவது விளையாடிட்டிருப்பான்…!”

அவள் பணத்தை கொண்டு வந்து கொடுக்க,” சரி அவன் வந்ததும், எனக்கு பேச சொல்லு … ”

தன் பைக்கில் வேகமாகக் கிளம்பினான் வங்கிக்கு.

வீட்டில் – மறுபடியும் இனியா செல்பேசியில் யாருடனோ கொஞ்சிக் கொண்டிருந்தாள்.

” என்னவாம் உன் புருஷனுக்கு…? எதுக்கு இப்ப வந்துட்டு போறான்…?”

” அந்தாளு கிடக்கிறார்…. !இந்த நேரத்தில ஏன் அவர ஞாபகப் படுத்துறீங்க…?!வேற ஏதாவது பேசுங்க…”

” ஓ.கே டியர்… ! சாரி… நாம நாளைக்கு எங்கயாவது வெளிய போகலாமா?”

” முடியாதுப்பா… ஆதவனுக்கு எக்ஸாம்பா… நான் இல்லைனா ரொம்ப அடம் பிடிப்பான், படிக்க மாட்டான்…”

” சும்மா, ஏதாவது சொல்லாத இனியா… நாளைக்கு நீ வர்ற… நாம கோவளம் போறோம்…!”

” இல்ல , ராபர்ட்…” அவள் சொல்லி முடிப்பதற்குள் எதிர்முனை கட் செய்தது.

மறுநாள் காலை 7 மணி –

” டேய் ஆதவா… !எழுந்திரு, எக்ஸாமுக்கு நேரமாச்சு… சீக்கிரமா கிளம்பு…”

” என்னம்மா…. நீ இன்னைக்கி லீவு போட்டுட்டு என் கூட இருக்கேன்னு சொன்ன… எங்க அதுக்குள்ள கிளம்புற…?”

” சாரி செல்லம்…! இன்னைக்கு ஆபீஸ்ல ஆடிட்டிங்பா… நான் போயே ஆகணும்பா… ”

” அடப்போம்மா… உனக்கு என்னைவிட ஆபீஸ்தான் முக்கியம் …!”

அவன் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு, ” நல்லா எக்ஸாம் எழுதிட்டு வருவியான், அம்மா உன்ன சாயங்காலம் பார்க்குக்கு கூட்டி போவனாம்…. ஓ.கே….”

வேகமாகக் கிளம்பினாள் ஸ்கூட்டியில், வழியில் ஜாகிங் முடித்துவிட்டு வந்த தன் கணவனிடம், ” முகில், டிபன் எடுத்து வச்சிருக்கேன், ஆதவன கொண்டு போய் விட்டுடுங்க… ப்ளீஸ்…”

” இன்னைக்கு என்ன சீக்கிரமே கிளம்பிட்ட…?!”

” ஆடிட்டிங் முகில்… அதான்…”

” சரி… கிளம்பு… பாத்து பத்திரமா போமா…”

சிறிது நேரத்தில் அலைபேசி ஒலிக்க, எதிர்முனையில் , ” முகில், நான் ராகவன் பேசுறேன்… எங்க இருக்கீங்க… ஒரு சின்ன உதவி…”

” வீட்டில இப்ப தான் கிளம்பிட்டிருக்கேன் …சொல்லுங்க சார்… ”

” என் கார் கொஞ்சம் ரிப்பேர்… என்ன தக்ஷின் சித்ராவில் கொஞ்சம் விட முடியுமா..?”

” கண்டிப்பா சார்… இன்னும் ஒரு அரை மணி நேரத்தில் வர்றேன் சார்… ரெடியா இருங்க… ”

முகிலன் தன் மகனை பள்ளியில் இறக்கி விட்டுவிட்டு , ராகவன் வீட்டிற்கு விரைந்தான். இவனுக்காக காத்திருந்த ராகவன் காரில் ஏற கிளம்பினர் இருவரும் . இளையராஜா இன்னிசை பின்னணியில் பழைய நினைவுகளை அசைப் போட்டனர். வேகமாக ஓட்டிக் கொண்டிருந்தவன் திடீரென ப்ரேக்கை அழுத்த , ராகவனின் அழகான பளிங்கு நெற்றியில் ஒரு ரத்தக் கட்டு சட்டென்று உதயமானது.

அவர் நெற்றியை தேய்த்துக் கொண்டே, ” ஏன் முகில்…?என்ன ஆச்சு…? என் நெத்திய பார்… !”

அவன் கன்னங்களை கண்ணீர் நனைத்திருந்தது. அவர் புரியாமல் விழிக்க , எதிரே நின்றுகொண்டிருந்த காரைக் காட்டினான். அங்கே, இனியா யாருடனோ நெருக்கமாக இருந்தாள்.

” முகில், அது இனியா தானே…! என்னப்பா இதெல்லாம்…?” அவர் இதயமும் சற்று நின்று துடித்தது.

“…………” மெளனம் மட்டுமே குடிகொண்டிருந்தது காரில் சற்று நேரம் .

” சொல்றனேன்னு கோவிச்சுக்காதே முகில்… !இது எவராலயும் தாங்க முடியாதது தான்… பக்குவமா பேசிப் பாருபா… உன் மகனப் பத்தியும் நினைச்சுப் பாரு… எதுவும் அவசரப்பட்டுடாதே…!”

அவன் கண்ணீர் மட்டுமே பதிலாய் கிடைக்க, ” சரி … நான் ஆட்டோல போயிக்கறேன், நீ பாத்து பள்ளிக்கு போ முகில்… பாத்து பக்குவமா நடத்துக்க…! ” கண்ணீருடன் விடைபெற்றார் ராகவன்.

பள்ளிக்கு போக மனமில்லாமல் , வீடு வந்து சேர்ந்தான். அவன் கண்ட அந்த காட்சியே ,அவன் மனதை கோடாரி கொண்டு சுக்குநூறாய் வெட்டிக் கொண்டிருந்தது. தற்கொலை எண்ணம் வந்து போக, ” நான் ஏன் சாக வேண்டும்…? தப்பு செய்த அவளே வாழும் போது, நான் ஏன் சாக வேண்டும்…? என் மகன் என்னாவான்…?” இப்படி எண்ணங்கள் அவன் மனதில் கூறாவளியாய் தாக்கியதில், ஆதவன் வீட்டிற்கு வந்தது கூட தெரியாமல் அசைவற்று கிடந்தான் படுக்கையில்.

” அப்பா…” என்றவாறு ஆதவன் அவன் மேல் கைவைத்ததும் தான் நினைவு வந்தவனாய், ” ஆதவா…!” கதறி அழுதான் அவனைக் கட்டிப்பிடித்தபடி. ஏதும் விளங்காமல் ஐந்து வயது ஆதவனும் அழுதான்.

” அப்பா… அப்பா … என்னப்பா ஆச்சு… ஏன் அழறீங்க…?”

” ஒண்ணுமில்லே கண்ணு….! நீ வா ,வந்து சாப்பிடு….” ஒருவகையாய் சமாளித்தான் முகிலன்.

இரவு நெடுநேரம் கழித்தே வந்து சேர்ந்தாள் இனியா.

” ஏன் இவ்வளவு லேட் இனியா…?” கோபத்தை வெளிக்காட்டாமல் கேட்டான் முகிலன்.

” அதான் காலைலேயே சொன்னேனே … ஆடிட்டிங்னு …! ”

” அப்படியா… !இந்தா இந்த லெட்டர உங்க மேனஜர்ட கொடுக்கச் சொல்லி ஆடிட்டர் தொடுத்துட்டுப் போனார்…!”

” எப்ப… எப்ப வந்தார்…?” சற்றே பதட்டமானாள் இனியா.

” அதுவா, மதியம் நீ ஃபோன் பண்ணி ஆபீஸ்ல ஆடிட்டர் கூட லஞ்ச் சாப்பிடறோம்னு சொன்னீல்ல அப்பதான்…. !” சற்றே முரைத்தான். கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் விட்டான் ஒரு அறை. அவள் கன்னம் சிவந்தேவிட்டது. கண்கள் சொருக, மயங்கி தப்பித்தாள் அப்போது .

சிறிது நேரங்கழித்து எழுந்தவள், ” அப்படின்னா என்ன சந்தேகப்படுறீங்களா முகில்…?”

” சந்தேகமே இல்லை … நீ தடம் மாறிட்டனு எனக்கு நல்லாவே தெரியுது…!”

” என்ன முகில் , என் மேல அபாண்டமா குறை சொல்றீங்க…? இது ஆண்டவனுக்கே அடுக்காது…! புரிஞ்சுக்குங்க…”

” அதெல்லாம் எனக்குத் தெரியும்டி…. நடிக்காத…. ஆடிட்டிங்குனு பொய் சொல்லிட்டு ஈசிஆர் ரோட்ல ஒருத்தன் கூட கார்ல அவ்வளவு நெருக்கமா உக்காந்திருந்தியே அதுக்கு என்னடி அர்த்தம்…?”

” அவர் என் கூட வேலை பார்க்கிறவர்… ரொம்ப நல்லவர்… அவர தப்பா நினைக்காதீங்க முகில்…!”

” அவர் ரொம்ப நல்லவர்னா, ஏன்டி மணிக்கணக்கில உன்கிட்ட ஃபோன் பேசிருக்கார்….?”

” அப்படின்னா , என்ன நம்பாம என் மொபைல் நம்பர டிராக் பண்ணிருக்கீங்களா…? உங்களுக்கே அசிங்கமாயில்ல…?”

” நான் எதுக்குடி அசிங்கப்படணும், நீ பண்ற துரோகத்திற்கு…?”

” அப்ப என்ன நம்ப மாட்ட… அப்படித் தான…?” சற்றே உக்கிரமானாள்.

” ஆமாடி… !”

” ஆமாயா… நான் என் கூட வேலை பார்க்கிற ராபர்ட்ட தான் விரும்பறேன்…! உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்க போ… ”

அவளிடம் இந்த அனல் வார்த்தைகளைக் கேட்டதும் அதிர்ந்து விட்டான். சத்தம் கேட்டு தூக்கம் தெளிந்த ஆதவன் அங்கே வர, ” ஏன்டி, இந்த பிஞ்சு முகத்த பார்த்தும் கூட உனக்கு புத்தி வரலயா?”

” ஆமா யா… உன் கூட வாழ்ந்ததுக்கு ஒரே காரணம் இவன் மட்டும்தான். காதலிச்ச, கல்யாணம் பண்ணின இருந்த பணம், நகை எல்லாத்தையும் புதுசு புதுசா பிஸினஸ் பண்றேன்னு விட்டுத் தொலைச்சே… இப்ப , வெறும் பத்தாயிரம் ரூபா சம்பளத்துக்கு ஒரு பள்ளிக்கூடத்துல பி.டி வாத்தியாரா போற. இதுக்கா உன்ன நம்பி வந்தேன். உனக்கு இருந்த பல லட்ச ரூபாய் சொத்துக்காக தான் உன் கூட ஓடி வந்தேன். ஆனா நீ தரித்திரம் பிடிச்ச மாதிரி உங்கப்பாவ எதிர்த்திட்டு எல்லாத்தையும் விட்டுட்டு வெளிய வந்து புட்ட. உன்ன மாதிரி வெறும் பய கூட இது வரைக்கும் வாழ்ந்ததைய அவமானமா நினைக்கிறேன். நீலாம் ஆம்பளைனு வெளிய சொல்லிக்காத… புரியுதா…!”

நெஞ்சை பிடித்துக் கொண்டு சாய்ந்து விட்டான் முகிலன். அருகே அழுதபடி ஆதவன். இது எதையும் கண்டுகொள்ளாமல் இனியா , ” ராபர்ட், உடனே கிளம்பிவா… அந்த ஆளுக்கு நம்ம விஷயம் தெரிஞ்சிடுச்சு.. ரொம்ப கேள்வி கேட்கிறான்…. என்ன எங்கயாவது கூட்டிட்டு போ…!”

அவள் பெட்டியில் தன் பொருட்களை எடுத்து வைக்க, ” அம்மா… எங்கள விட்டுட்டு எங்கம்மா போறே…?! அப்பா பாவம்மா… நெஞ்சுவலியால துடிக்கிறார்மா … ! ” கையை பிடித்து இழுத்தான்.

” போடா… நீயாச்சு உங்கப்பனாச்சு… அந்தாளு ஒரு வேஸ்ட்… ஒழுங்க என்கூட வந்திடு… இல்லைனா இங்கயே கிடந்து வீணாயிடுவடா… “கத்திக் கொண்டே அவனை இழுத்துச் சென்றாள். ஆதவன் வர மறுக்கவே ,அவனை அடித்தாள்.

” என் மேல உள்ள கோவத்த ஏன்டி புள்ள மேல காட்டுற…? ஊர் உலகத்திலாம் பெண்கள் எப்படி இருக்காங்க, தன் குடும்பத்துக்காக எவ்வளவோ தியாகம் பண்றாங்க…. ஆனா நீ…?, சாரி, நீ தான் பொம்பளயே இல்லயே…! உன்ன போய் அந்த புனிதமான பெண்களோட கம்பேர் பண்றதே பெரிய தப்புடி…!”

” ஆமாயா , அவங்கலாம் என்ன பொறுத்தவர பிழைக்கத் தெரியாதவங்கயா… ”

” இப்பயும் சொல்றேன், இந்த பச்சப்புள்ளக்காவது எல்லாத்தையும் விட்டுபுட்டு வீட்ல ஒழுங்கா இருடி… உன்ன மன்னிச்சிடறேன்டி…. நாலு பேருக்கு தெரிஞ்சா காரி துப்புவாங்க… நல்லா யோசி இனியா…”

” நான் நல்லா யோசிச்சிட்டேன்யா … எனக்கு என் வாழ்க்கை சந்தோசம் தான் முக்கியம். அத ராபர்ட்டால மட்டும் தான் கொடுக்க முடியும்… !நான் கிளம்புறேன்… ” அவள் படிதாண்டி அங்கே காத்திருந்த கருப்பு காரில் ஏறினாள். குழந்தை கதறி அழுவதைக் கூட கண்டுகொள்ளவில்லை. பறந்தே போய் விட்டாள்.

“இப்படி தான்டா ஆதவா, உன் அம்மா உங்களலாம் அம்போன்னு விட்டுட்டு எங்கயோ ஓடி போனா இருபது வருசத்துக்கு முன்னாடி… !அவ நல்லாவே இருக்க மாட்டாடா…. என் மனசு இன்னும் ஆறவேயில்லைடா… ” பொங்கிய கண்ணீரை முந்தானையில் அடக்கினார் பாட்டி மயில்தோகை.

” அத்தை, சும்மா இருங்க… !அவன் கிட்ட ஏன் இதெல்லாம் சொல்றீங்க…. போனவ போயிட்டா…. அவளப் பத்திப் பேசி என்னாவப் போகுது…?!”

” மாப்ள… தீரா மனவேதனை எனக்கு இருக்குங்க… ஒரே பொண்ணுன்னு செல்லமா வளத்தோம்.ஆனா அவ இப்படி பண்ணுவான்னு நாங்க கொஞ்சங்கூட எதிர்பார்க்கவே இல்ல… உங்க நல்ல மனச புரிஞ்சிக்காம தன் சந்தோசம் மட்டுமே முக்கியம்னு போயிட்டாளே.அதத்தான் தாங்கிக்க முடியல…” மீண்டும் கண்ணீர் வெள்ளம்.

” விடுங்க அத்தை…. கவலைப்பட்டு கவலைப்பட்டு கண்ணீர் வத்தி போய் பட்ட மரமாயிட்டேன்… !அவ என்னை விரும்பிய காலம் மட்டுமே என் மனசுல பசுமையா இன்னும் இருக்கு…. மத்த நினைவுகள எல்லாம் அழிச்சிட்டேன்….! என்ன பொறுத்தவரை என்ன உயிரா நேசிச்ச என் தேவதை 20 வருடங்களுக்கு முன்னயே செத்துட்டா….!இனிமே இதப் பத்தி பேசறத நான் விரும்பல…” வெளியே கிளம்பிவிட்டான் .

” அப்பாவ பாத்தா ரொம்ப பாவமா இருக்கு பாட்டி….”

” ஆமாம்டா… அவ போனபிறகு உனக்காக மட்டுமே வாழுறார்… நீ தான் அவர் உயிர் … அவர நல்லா பாத்துக்க வேண்டியது உன் பொறுப்பு… புரியுதா?!”

“சரி பாட்டி… அது என் கடமை…”

அப்போது வந்தான் நண்பன் செழியன்.

” ஆதவா, இன்னும் கிளம்பலயாடா …?!”

” எங்கடா …?”

” அடப்பாவி மறந்துட்டியா… நீ தானடா சொன்ன இன்னைக்கு “முல்லை ஆதரவற்றோர் இல்ல”த்துக்கு மெடிக்கல் கேம்புக்கு போகணும்னு…”

” ஆமா மச்சி…. !பாட்டிகிட்ட பேசிட்டிருந்ததிலே மறந்தே போயிட்டேன்… இரு பத்து நிமிடத்தில வந்திடறேன்…”

” என்ன செழியன்… இப்பலாம் இந்தப் பக்கமே வர மாட்ற… ?”

” அப்படில்லாம் ஒண்ணுமில்லே பாட்டி…. ரெட் கிராஸ் சொசைட்டில கொஞ்ச பிஸியாயிட்டேன்… அதான்…!”

” என்னமோபா… ஆதவனும் நீயும் ,இல்லாதவங்க பலருக்கு நிறையா உதவிகள பண்றிங்கன்னு கேள்விப் பட்டேன்… ரொம்ப பெருமையா இருக்கு…” நெகிழ்ந்தார் பாட்டி.

” ஏதோ, எங்களால முடிஞ்சது … ”

” செழியன், வா கிளம்புவோம்… டாக்டர்ஸ்லாம் வெயிட் பண்ணிட்டிருப்பாங்க….”

இருவரும் வந்து சேர்ந்தனர் கேம்புக்கு.

” என்ன ஆதவா…. நீயே தாமதமா வந்த எப்படி…? உன்ன ரொம்ப நேரமா கேட்டிட்டிருக்கார் டாக்டர் பொழிலன்…” அவனை துரிதப்படுத்தினார் ரெட் கிராஸ் சொசைட்டி செயலர் முத்துரத்தினம் .

” இதோ, போய் பார்க்கிறேன் சார்… !” கிட்டத்தட்ட ஓடினான்.

” வாங்க ஆதவன்… எப்படி இருக்கீங்க…? பாத்தே ரொம்ப நாளாவுது…”

” நல்லா இருக்கேன் சார்… நீங்க …? இன்னைக்கு எத்தன பேர கண் அறுவை சிகிச்சைக்கு தயார் பண்ணிருக்கீங்கனு சொன்னீங்கன்னா,அதுக்கு ஏத்த மாதிரி நான் வேன் ரெடிப் பண்ணிடறேன் சார். ”

” கண்டிப்பா… !ஒரு முக்கியமான விஷயம் அதுக்காகத் தான் உங்கள தேடினேன்…”

” என்ன சார்… ?சொல்லுங்க…”

” இந்த இல்லத்துல இருக்கிற ஒரு அம்மாவுக்கு கண்ணுல பெரிய பாதிப்பு இருக்குது….!”

” என்ன பாதிப்புனு தெரிஞ்சிக்கலாமா சார்…?”

” அவங்க வலது கண் வீங்கி இருக்கு, பார்வை ரொம்ப குறைவா தெரியுதுன்னு சொல்றாங்க… கண்ணுக்குள்ள புற்றுநோய்க்கட்டி இருக்க வாய்ப்பிருக்கு ஆதவன்….!அதனால எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரமா அவங்கள மருத்துவமனைக்கு கூட்டிப் போகணும்…!”

” சரிங்க சார்… இதோ சீக்கிரமா வேன் ரெடி பண்ணிடறேன் … ”

வேனுக்கு ஏற்பாடு செய்து விட்டு , நோயாளியை அழைக்கச் சென்றான் ஆதவன். கண்களில் வீக்கத்துடன் முகம் சுரந்தபடி அங்கே பரிதாபமாக உட்கார்ந்திருந்தவரைப் பார்த்தவன் , “ஐயோ… அம்மா… !” அழக்கூட முடியாமல் நெஞ்சடைத்து விம்மினான். அவன் தன் அப்பாவின் வேதனையை நினைக்க, அம்மா அவன் எண்ணத்தில் இருந்து தூரமாய்ப் போனாள். ” இப்போது, எதிரே இருப்பது ஒரு நோயாளி… அவ்வளவு தான்… ” அவன் மனம் சொல்ல, ” நீங்க தான் இனியாங்களாமா… உங்கள டாக்டர் கூட்டி வரச் சொன்னார்… வாங்கம்மா…” அழைத்துச் சென்றான்.

மருத்துவப் பரிசோதனைகள் முடிந்ததும் –

” ஆதவன்… நான் சந்தேகப்பட்டது சரிதான், இது ‘மெலனோமா ‘ னு சொல்லக் கூடிய ஒரு வகையான புற்றுநோய். பொதுவா இது தோல்ல வரக்கூடியது… அரிதா கண்ணுக்குள்ளும் வரும். கொஞ்சம் ஆபத்தானதும் கூட…! ”

” இதுக்கு என்ன தான் சார் தீர்வு…?” குரல் கம்மியது.

“ஒரே தீர்வு வலது கண்ணையே மொத்தமாய் எடுத்துவிட்டு, கீமோதெரபி மற்றும் ரேடியோதெரபி பண்றது தான்…”

” உயிருக்கு ஏதும் ஆபத்தில்லையே…?!”

” முயற்சி செஞ்சு பார்ப்போம்… அப்புறம் இறையருள் தான்…!”

” அப்படின்னா , சீக்கிரமா ஆபரேஷன் பண்ணிடுங்க டாக்டர்… ”

” இது மேஜர் ஆபரேஷன் ஆதவன்…. யாராவது உறவினர்கள் கையெழுத்து போடணுமே… !”

” கொடுங்க டாக்டர்… நானே கையெழுத்து போடுறேன்… !”

” நீங்க எப்படி…?” யோசித்தார் டாக்டர்.

” இவங்களும் எனக்கு அம்மா மாதிரி தானே….! எப்படியாவது அவங்கள காப்பாத்துங்க டாக்டர்…! ”

புத்தி கோபித்தாலும், தாய்ப் பாசம் வென்று விடுகிறது சில நேரங்களில்.மறுநாளே கண் அறுவை சிகிச்சை முடிந்தது. புற்றுநோய் மருந்துகள் செலுத்தத் தொடங்கினர். ஆதவன் அருகிலேயே இருந்து இனியாவை நன்றாக கவனித்துக் கொண்டான்.

” என்ன இனியாம்மா…. எப்படி இருக்கீங்க… ? ”

” நல்லா இருக்கேன் டாக்டர்… ரொம்ப நன்றி டாக்டர்… ”

“இந்த அளவுக்கு உங்க உடல் நிலையில் முன்னேற்றம் வந்ததுக்கு முக்கிய காரணமே ஆதவன் தான்மா… நன்றி சொல்ல வேண்டியது அவருக்கு தான்…”

“நன்றி தம்பி… ஏதோ பூர்வ ஜென்ம பந்தம்னு நினைக்கிறேன் தம்பி நமக்குள்ள…!”

” இந்த ஜென்மத்திலயே தான் பந்தம் இருக்கே… !” மனசுக்குள் சிரித்துக் கொண்டான்.

” சரிம்மா… நீங்க ஓய்வெடுங்க… நான் காலைல வர்றேன்…”

காலை உணவுடன் வந்தான். கூடவே பாட்டி.

” எதுக்குடா என்னை இங்க கூட்டிட்டு வந்த…?”

” இரு பாட்டி, உனக்கு ஒரு சர்ப்ரைஸ்… ” சொல்லிக் கொண்டிருந்தவன் இனியாவைக் காட்டினான். மூச்சடைத்தது பாட்டிக்கு. ” யாருடா அது…? எங்கயோ பாத்த மாதிரி இருக்கு…”

” கிட்டதான் போய் பாறேன் பாட்டி…!”

அருகில் சென்ற பாட்டியை இனங்கண்டுகொண்ட இனியா, ” அம்மா, என்ன மன்னிச்சிடும்மா…!” கதறினாள்.

” டேய், இந்த ஓடுகாலிய பாக்கவா என்ன கூட்டி வந்த…?! ச்சீ …இவள பாத்தா இந்த கட்டைக்கு மோட்சமே கிடைக்காதுடா… ” கோபத்தில் காரி உமிழ்ந்து விட்டு வேகமாய் வெளியேறிவிட்டார்.

ஆதவன், தான் யாரென்பதையும் அப்பா பாட்டியைப் பற்றியும் சொல்லி முடிக்க அழுது துடித்தாள்.

” ஒரு மோசக்காரன நம்பி இந்த நல்ல வாழ்க்கையையே தொலைச்சிட்டேனே…” தேம்பித் தேம்பி அழுதாள்.

“அழாதீங்க….”

” நீ என் மகன்றதனாலத் தானா, உன்ன பாக்கும் போதெல்லாம் ஒரு சிலிர்ப்பு எனக்குள்ள…?”

” அப்பா … எப்படி இருக்கார்…?”

” நடைபிணமா இருக்கார்…. ரெண்டு முறை மாரடைப்பு வந்துடுச்சு…!”

” என்னப்பா சொல்ற…. ?நான் அவர உடனே பார்க்கணுமே… ”

” வேணாம்மா… உங்கள பார்க்க விரும்ப மாட்டார்…. ”

” எங்கயாவது ஒரு மூலைல நின்னு பாத்திடறேன்பா… ப்ளீஸ்…” கெஞ்சினாள்.

அவள் அழுது கெஞ்ச, மனம் கேட்காமல் அழைத்துச் சென்றான் .

முகிலன் வீடு –

சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடி தினமணி படித்துக் கொண்டிருந்தார். தூரத்தில் நின்று ,தன் ஒற்றைக் கண் பார்வை கொண்டு அவனை தரிசித்தாள். “இந்த மேன்மைமிகு ஆத்மாவையா விட்டு , அந்த கேடுகெட்டவனை நம்பிப் போனேன்…. ?அந்த பாவத்தின் சம்பளமே இந்த புற்றுநோய் போல…!” மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.

அப்போது, தூண் மறைவில் நின்றிருந்த அவளை கண்டு விட்ட பாட்டி , ” டேய் எதுக்குடா இவள இங்க கூட்டி வந்த … ? இவ கால் வச்சா இந்த வீடு விளங்குமாடா…?” அர்ச்சித்தார் கண்டபடி.

” என்ன சத்தம் அங்க…. ? ஆதவா…?” வெளிய வந்த முகிலன் , இனியாவைப் பார்க்க விரும்பாதவனாய் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

” எங்கள எல்லாம் துச்சமா தூக்கி எறிஞ்சிட்டு போன… இப்ப எதுக்குடி இங்க வந்த … ?”

” ஐயோ…. என்ன மன்னிச்சிடுங்க முகில்… என்ன மன்னிச்சிடுங்க ப்ளீஸ்…!” அவன் காலைப் பற்றி அழுதாள். கொஞ்ச நேரங் கழித்தே உணர்ந்தாள் அந்த வித்யாசத்தை . அது கட்டைக் கால்.

” ஆமாம் இனியா… உன் மனசு மாதிரியே என் இடது கால் மரக்கட்டை தான்… !” விரக்தியாய் சிரித்தான்.

” எ… எப்டி… ஆச்சு…?” சற்றே குழறினாள்.

” நீ போன மறுநாள், மனசு ரொம்ப பாதிக்கப்பட்டு இருந்த சூழ்நிலையில் ஏற்பட்ட விபத்து என் இடது காலை பலி வாங்கி விட்டது…!”

” அப்பா… ஒரு நிமிடம்…” என்று அவரை தனியே அழைத்தவன் , இனியாவுக்கு ஏற்பட்ட புற்றுநோய் விபரீதத்தை கூறினான். மனம் சற்றே நெகிழ்ந்தது.

” பாவம் இனியா… அவளுக்கா இந்த நிலை… ?!” தன்னிலை மறந்து முணுமுணுத்தார்.

வீட்டின் உள்ளே போன அவள், தன் படத்திற்கு மாலையிட்டிருப்பதை பார்த்தாள்.

” சரி தான்… படி தாண்டிய போதே செத்து விட்டேன்…இன்னும் கொஞ்ச நாளில் உண்மையிலேயே சாகப் போகிறேன்… இது சரிதான்…!” தனக்குத்தானே பேசிக் கொண்டாள்.

” இனியா… நீ இங்கேயே இருக்கலாம்.. ஆதவன் எல்லாவற்றையும் சொன்னான்… என் இதயக் கூட்டை உடைத்து என்னைக்கு நீ வெளியே போனியோ, அப்போதே நான் இதய நோயாளி ஆயிட்டேன்… நானும் நாட்களை எண்ணிக் கொண்டு தான் இருக்கிறேன்… அன்பு என்பதே உலகின் உயிர்… அதை கொன்னுட்டு போன அன்னைக்கு. வருடங்கள் இருபது கடந்து விட மீண்டும் வந்திருக்கிற… மன்னிப்பதற்கு பெரிய மனது வேண்டுமா என்ன…? அன்பினால் மறந்தே விட்டேன்,அன்று நடந்ததை….!மீண்டு வா நோயிலிருந்து நாம் மீண்டும் வாழ்வோம்… !”

“…….” மெளனமாய் திரும்பியவள் அவன் மடியில் விழுந்து கதறினாள். “நான் எத்தனை கோயில் ஏறி இறங்கினாலும் தீராத பாவத்த செஞ்சிருக்கேன். ஆனா உங்க இதயக்கோவில் ல எனக்கு ஒரு நிரந்தர இடம் கொடுத்திருக்கீங்களே அது போதும்… அதுவேபோதுங்க எனக்கு…!”

அவன் மடிமீது நிரந்தரமாக மூச்சை விட்டிருந்தாள் , மாலையிட்ட அவள் படத்தை நெஞ்சில் அணைத்தபடி.

” இனியா….! இனியா…. ! என்னைக்குமே நம்ம வாழ்க்கை இப்படி இணையாக் கோடுகளா ஆயிடுச்சே….!”

மனுநீதிச் சோழனும், கெளசல்யாவின் நீதியுணர்வும் ஆன்மா ( நெளிக்கோடுகளும், அசையாப் புள்ளிகளும் – 3 ) – பாலசுப்பிரமணியன் பொன்ராஜ்

கௌசல்யா சங்கர்

கௌசல்யா சங்கர்

ஒரு “கலாச்சாரக்” குற்றமான சாதிக்கலப்புத் திருமணத்தின் விளைவாக நிகழ்த்தப்பட்ட கொலை எனும் சட்ட ரீதியான குற்றத்திற்கு வழங்கப்பட்ட தீர்ப்பு ஒன்று நம்முள் குடிகொண்டிருக்கும் நீதியைக் குறித்த கருத்துக்களை வெளிக் கொணர்ந்திருக்கிறது.

கொலையுண்டது, ஒரு பெண் அவளது சுய விருப்பால் தேர்ந்தெடுத்துக் கொண்ட கணவன், தீர்ப்பில் தூக்கு தண்டனை வழங்கப்பட்டிருப்பது அவளுடைய தந்தை. சட்டத்தின் மொழியில் கொல்லப்பட்டவர், கொலை செய்தவர் என்று மட்டுமே பிரித்துச் சொல்லப்படும் இவ்விருவரும் ஒரு பெண்ணின் மீது அளவற்ற அதிகாரம் செலுத்தத் தக்கவர்கள் என்று சமூகத்தால் அனுமதிக்கப்பட்டவர்கள்.

அப்பெண் அவளுடைய தந்தையின் விருப்பத்திற்கு எதிராக வேறொரு ஆணை அதுவும் படிநிலையில் தன்னுடைய சாதிக்குக் கீழே வைக்கப்பட்டிருக்கும் ஒரு சாதியைச் சேர்ந்த ஆணைத் தேர்ந்தது கொலை செய்யப்படத்தக்க ஒரு மீறலாகப் பார்த்த அவளுடைய தந்தை, அவர்கள் இழைத்த குற்றத்திற்கு தண்டனையை வழங்கிவிட்டார். நீதியமைப்பின் கண்களில் வராமல் இத்“தண்டனை” வழங்கப்பட்டிருந்தால் அவளுடைய தந்தை, மகளின் கணவனைக் கொன்ற குற்றவுணர்வின் கனம் சிறிதளவு கூட தன் மீது ஏற்றாமல், மகிழ்ந்திருப்பார்.

ஆனால் சாதி ஒழுங்கைக் குலைத்ததனால் எழுந்த தனிப்பட்ட அவமானத்திற்குப் பதிலடியாக, பொதுவாக ஒரு கொலையின் பின்னணியிலுள்ள மறைமுகச் செய்தியை சமூகத்திற்கு உரக்கச் சொல்லும் விதமாக, பகல் வெளிச்சத்தில் அவருடைய தீர்ப்பை ஒரு கொலையின் மூலமாக எழுதினார். கலாச்சாரக் குற்றத்திற்கான அந்தத் தண்டனை ஒரு Spectacle. வழங்கப்பட்ட இந்தத் தண்டனையை எண்ணி மகிழ்ந்த தனிப்பட்ட குடும்பங்களும், திரண்டிருக்கும் ஒரு சில சமூக அமைப்புகளும் இருந்திருக்கும்.

கலாச்சாரத்தின் அடிப்படையில் குற்றத்திற்காக வழங்கப்பட்ட ஒரு தண்டனை, சட்டத்தின் அடிப்படையில் தண்டனை வழங்கப்பட வேண்டிய குற்றமாகிறது. அதற்கான தீர்ப்பு வெளியான தருணத்தில் இத்தீர்ப்பில் வழங்கப்பட்ட அதிகபட்ச தண்டனையான தூக்கு, பெரும்பாலான தனிப்பட்ட குடும்பங்களுக்கும், ஒரு சில சமூக அமைப்புகளுக்கும் அதிர்ச்சியூட்டியிருக்கும்.

இத்தீர்ப்பில் வேறு எவரையும் விட, கொல்லப்பட்டவரின் மனைவியான கெளசல்யா ஒரு தனிச்சிறப்பான கவனத்தைப் பெறுகிறார். நீதிக்கான போராட்டத்தில் கொல்லப்பட்டவரின் சார்பாக நின்ற அப்பெண், அவளுடைய தந்தைக்கு எதிராக நின்றவள் மட்டுமல்ல சாதி அமைப்பிற்கு எதிராகவும் நின்றிருக்கிறாள். இதில் அவளுடைய தந்தை சாதி அமைப்பின் ஒரு பிரதிநிதிதான். இந்தத் தெளிவே தீர்ப்பை வரவேற்ற அப்பெண்ணிடமிருக்கிறது. இப்படி ஒரு நிலை அதாவது தன்னுடைய கணவன் கொல்லப்பட்டு, அவளுடைய தந்தைக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட நெருக்கடி வருமென்று அவளுடைய திருமணத்திற்கு முன்பே ஏதாவதொரு வழியில் எதிர்காலம் காட்டப்பட்டிருந்தால் அவள் நிச்சயமாக காதலையே துறந்திருப்பாள். ஆனால் இன்றோ நிகழ்வுகள் அனைத்துமே ஒரு சமூகத்தின் பார்வைக்கும், சிந்தனைக்கும் வழங்கப்பட்டவை.

தீர்ப்பை ஒரு கொலைக்கு வழங்கப்பட்ட தண்டனை என்பதையும் கடந்து சாதி ஆணவத்திற்குக் கிடைத்த ஓர் அடி என்று பார்க்கும் தனிப்பட்டவர்களும், சமூக அமைப்புகளும் இருக்கின்றன. இத்தீர்ப்பால் சாதி ஆணவக் கொலைகள் குறையும் என்றால் அது அதிகபட்ச எதிர்ப்பார்ப்பு மட்டுமே. இருப்பினும் இந்தத் தீர்ப்பு நீதியுணர்வின் பால் வழங்கபட்டது மட்டுமல்ல, ஒரு ஜனநாயக அமைப்பில் தனிமனிதர் ஒருவருக்கு இருக்கும் விருப்பத் தேர்வெனும் அடிப்படை உரிமைக்கான ஆதரவும் கூட.

ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் எழுந்த குரல்களில் மிக முக்கியமானது ஒரு பெண்ணைப் பெற்று வளர்த்த தந்தைக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை அப்பெண்ணே வரவேற்பதா என்பதே.

நீதி குறித்த சிந்தனைகளை நமக்குக் கட்டியமைத்த தொன்மங்களில் இரண்டை இங்கே ஆராயலாம். ஒன்று கொல்லப்பட்ட பசுவிற்காக தன்னுடைய மகனை தேர்க்காலில் ஏற்றிக் கொன்ற மனுநீதிச் சோழன். இன்னொன்று தன்னுடைய மகனை கர்த்தரின் மீதிருக்கும் பக்தியைக் காட்டுவதற்காக கொலை செய்யத் துணிந்த ஆப்ரகாமினுடையது.

download (16)
அதிகபட்ச நீதியென்பதற்கு உதாரணமாகச் சொல்லப்படும் மனுநீதிச் சோழனின் கதையைக் கேட்கும் ஒருவரும், மரண தண்டனை வழங்கப்பட்ட மனுநீதிச் சோழனுடைய மகனின் மரணத்திற்காக வருத்தப்பட மாட்டார்கள். நீதி கேட்டது பசு என்பதனால் கூட அத்தண்டனை வழங்கப்பட்டிருக்கலாம். கொல்லப்பட்டது ஒரு பன்றியின் குட்டியாக இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என இப்போது ஊகிப்பது பதிலற்ற ஒன்று. ஆனால் நாம் அக்கதையில் காப்பாற்றப்பட்ட நீதியை எண்ணியும், நீதி வழுவாது தீர்ப்பளித்த மனுநீதிச் சோழன் எனும் தந்தையைக் குறித்து பெருமிதமும் அடைகிறோம்.

ஆபிரகாம் அவனுடைய மகனை பலியிடத் துணிகிறார். இறுதியில் அவன் கழுத்து வெட்டப்படுவதிலிருந்து தவிர்க்கப்பட்டாலும் அதன் பிறகு ஆபிரகாமிற்கு குற்ற உணர்வோ, அவனுடைய மகனிற்கு தன்னுடைய தந்தையே அவனைக் கொல்லத் துணிந்தது தண்டனைக்கு உரியதென்ற கேள்வியோ எழுவதில்லை. குழந்தைகளைப் பலியிடும் உரிமையை இயற்கையாகவே பெற்றோர்கள் பெற்றிருக்கிறார்கள் என்பதனையே இக்கதை சொல்கிறது. எண்ணற்ற பெண் சிசுக் கொலைகளைச் செய்த பெற்றோர்களை நம்மால் நீதியுணர்வால் அணுக முடியாது. கலாச்சாரப் பின்புலத்தில்தான் அணுகுகின்றோம். ஆகையால் அவர்கள் பிள்ளைகளுக்கு எதிராகச் செய்யும் குற்றங்களுக்கு இயற்கையாகவே ஒரு நிரந்தர தண்டனை விலக்கைப் பெற்று விடுகிறார்கள்.

இதன் நீட்சியாகவே பாப்புலர் தளத்தில் தங்கப்பதக்கம் திரைப்படத்தின் கதாபாத்திரமான செளத்ரி, அவருடைய மகன் கதாபாத்திரத்தைக் கொன்றதை நம்மால் கேள்வி கேட்காமல் வர முடிகிறது. செளத்ரி வெறும் தந்தையாக மட்டுமல்ல நீதிக்காகப் போராடுகிற ஒரு போலீஸ்காரரும் கூட. அவர் நீதியைத் தான் காக்க வேண்டியிருக்கிறது.

கெளசல்யாவை எடுத்துக் கொள்வோம், தூக்கு தண்டனை வழங்கப்பட்டது அவளுடைய தந்தையாக இருந்தாலும் அவள் இத்தீர்ப்பை நீதியின் பொருட்டு வரவேற்றிருக்கிறாள் என்பதே இதன் முக்கியத்துவமும், மேற்சொன்ன தொன்மங்களுக்கு ஒரு தலைகீழ் நிகராகவும் இருக்கிறது.

மனுநீதிச் சோழன் கன்றுக்குட்டியின் பொருட்டு தன்னுடைய மகனைக் கொன்றதை நீதியுணர்விற்கான உதாரணமாகச் சொல்லிப் பழகிவிட்ட நமக்கு, இன்னொரு தந்தையின் மகனும், தன்னுடைய கணவனுமான ஒரு மனிதன் கொல்லப்பட்டதற்கான தீர்ப்பில் நீதி உணர்வைக் கண்ட ஒரு மகளை ஏன் ஏற்றுக் கொள்ள முடியவில்லை?.

••••

SIBICHELVAN’S POEMS IN ENGLISH Rendered in English by Latha Ramakrishnan

sibichelvan

sibichelvan

3.EVERYTHING REMAINS IN THAT MOMENT

Yes of course, everything remains in that moment, they say

Have you seen that moment? They ask.

Those who have seen spin tales aplenty about that moment;

Those who haven’t are always speaking about it and nothing else.

It goes to show that none has forgotten that moment.

Thus that moment lives in each and every moment.

Therefore that moment is being blessed with eternity,

observes the philosopher.

The existentialist mocks at it.

Thus when that moment was being spent

Another moment is being born anew.

So,

there comes into being another moment

exactly as the earlier one.

Of these not knowing which is real

and which is superficial

the moment is struggling momentarily.

Thus

everything remains in that moment.

4.CLEAVING THE AFTERNOON

At dawn I left

heading towards the town with the waterfalls

Soon as I alighted the bus

the town’s afternoon welcomed me.

‘It would be wonderful to bathe in the waterfalls

Your heart would be eased of all pressures’, said the Noon.

The oil-massaging expert came after us, chasing.

Said oil-massage would cool the body;

Further it is also good for health _

So he went on, pursuing.

Asking him to give oil-massaging to noontime

I made it sit on a rock.

Pouring oil onto the top of afternoon and massaging

it with hands He screamed.

That 990 was the heat of that afternoon

the oil-massager gave a weather report.

A sachet of shampoo and also a sandal soap

I bought and gave and took along the afternoon also

to bathe in the waterfalls with me.

The waterfalls which till that time was jumping topsy-turvy

hearing the afternoon yelling joyously “Oh waterfalls! Oh waterfalls!”

suddenly turned and leapt backwards.

I was bathing in it , happiness-personified

With the shampoo’s foam swelling so white

the waterfalls was swelling, flowing overflowing

thunderously.

Standing in one corner the afternoon is watching it

relishing it to its heart’s content.

5

It was flowing with its exclusive musical sound

“Oh lass, oh lady” I called aloud.

As if not hearing she moved on swiftly.

“What is her name?”

“What is her name?”

I asked.

He who stood nearby said “Kaveri”.

“Kaveri, Oh Kaveri”, cried I and ran after her.

Even then she was running as if not hearing my call,

being cross with me.

Thinking that she couldn’t hear me because of the roaring cataract

I asked it to keep quiet for a little while,

and, calling aloud “Kaveri, Oh Kaveri” again and again

pursued her.

Thinking that she couldn’t understand my call

I called out in Telugu.

Even then she moved on without looking back

He who was near me observed that

I would better call out in Kannada.

I called out in Kannada “Kaveri, Oh Kaveri”

But, before Kaveri could turn and look

The sea had arrived..

6. SO A JOURNEY

On its own the journey had begun.

Some hours, faraway,

All others not pre-planned,

went on.

In many a milestone

they’ve written the name of an ailment

in languages not in vogue till then.

In milestones, sometimes they’ve written

the journey’s age and sometimes

the ‘volume’ of the disease.

As they’ve kept hidden

the distance of one’s destination

We are journeying all too hastily, agitatedly ,

through a terrible, challenging

want of time.

Your compasses won’t work here;

your GPS instruments won’t.

Gadgets that measure your pressure

and your ECG machine

and your treadmills

Further your ultra-modern scientific devices

don’t come to your aid.

Those who you had firmly believed

would accompany you

are waving hands, bidding goodbye to you.

At the instant when you realize

that no name nor ailment nor life

is inscribed in your journey’s unforeseen milestone

the word Nature would be written in that.

But, then your eyes would be almost closed.

How would you read Nature?

****

தீர்ப்பு மூலம் : பிரான்ஸ் காஃப்கா ஆங்கிலம் : இயான் ஜான்ஸ்டன் [ Ian Johnston ] – தமிழில் : தி.இரா.மீனா

kafka

kafka

அது வசந்தகாலத்தின் அழகிய ஒரு ஞாயிறு காலைப் பொழுது.இளைஞனான வியாபாரி ஜார்ஜ் பெண்டர்மென் முதல்மாடியிலுள்ள தனது சிறிய அந்தரங்க அறையில் உட்கார்ந்திருந்தான்.தாழ்வான ஆற்றுப் பகுதியை ஒட்டி நீண்டதாக மிக மோசமாகக் கட்டப்பட்ட கட்டிடம் அது.அவற்றின் உயரத்தையும் ,நிறத் தையும் மட்டும் வைத்தே ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரித்தறிய முடிபவை. அவன் அப்போதுதான் வெளிநாட்டிலுள்ள தன் இளம்பருவத்து நண்பன் ஒருவ னுக்கு கடிதம் எழுதிமுடித்திருந்தான்.எழுதும் மேஜையில் கையை ஊன்றி ஜன்னல் வழியாக ஆறு,பாலம்,கண்ணுக்குத் தெரிகிற பசுமையான குன்றுகள் ஆகியவற்றை நிலையின்றிப் பார்த்தபடி கடிதத்தை ஒட்டினான்.

வீட்டில் தனக்கு சாதகமான நிலையில்லாததால் அங்கிருப்பதை வெறுத்து சில வருடங்களுக்கு முன்பு ரஷ்யாவிற்கு ஓடிப்போன தன் நண்பனை நினைத்துப் பார்த்தான்.இப்போது அவன் பீட்டர்ஸ்பர்க்கில் ஒரு தொழில் நடத் துகிறான். தொடக்கத்தில் நன்றாக நடந்த தொழிலில் இப்போது தள்ளாட்டம் இருப்பதால் மிக அபூர்வமாக ஊருக்கு வரவேண்டிய தன் நிர்பந்த நிலையை வருத்தமாகச் சொல்லியிருக்கிறான். வெளிநாட்டில் வேலை செய்வதால் எந் தப் பயனுமில்லை என்ற எண்ணம் அவனுக்குள் எழுந்தது.தனது இளம்பருவ நாட்களிலிருந்து அவனுக்கு நினைவிலிருந்த அந்தமுகம் இப்போது தாடியால் மறைக்கப்பட்டு,தோல் வெளிறி, நோயாளி போன்ற தன்மையைத் தந்தது. அவன் சொன்னதுபோல அவனுக்கு அந்தக் காலனியில் தன் நாட்டு மனிதர் கள் என்று சொல்லிக் கொள்ள யாருமில்லாமல் உள்ளூர்க் குடும்பங்களோடு அத்தனை நெருக்கமின்றி தன்னை ஒரு நிரந்தர பிரம்மச்சாரியாக நினைத்துக் கொண்டான்.

அப்படிப்பட்ட ஒரு மனிதனுக்கு உதவி எதுவும் செய்யமுடியவில்லை.வருத் தம் தெரிவிப்பதைத் தவிர என்ன எழுதமுடியும்.மீண்டும் வீட்டிற்கு வரச் சொல்லி அறிவுரை சொல்லலாமா,பழைய நட்பை,உறவுகளை புதுப்பித்துக் கொள்ள – உண்மையில் அதைத் தடை செய்யமுடியாது. தன் வாழ்க்கையை இங்கே அமைத்துக் கொள்ள ,நண்பர்களின் உதவியை நாட அறிவுரை சொல் லலாமா?அப்படிச் சொல்வதும் அவன் நிலையைத் திரும்ப எடுத்துச் சொல்வ துதானே—யாரோ சொன்னது போல அது அவனை மிகுதியாகக் காயப்படுத்த லாம்—அவனுடைய முன்னாள் முயற்சிகள் வெற்றியடையாமல் போனதைச் சொல்லி அவன் அவற்றை விட்டு விட்டு வரவேண்டும், எல்லாவற்றையும் விட்டுவிட்டு திரும்பும் போது அவனை ஊதாரியாக எல்லோரும் பார்ப்பார்கள். அவனுடைய நண்பர்கள் மட்டும் புரிந்து கொள்வார்கள். குடும்பத்துடன் தங்கி யிருந்து வெற்றிபெற்ற நண்பர்களின் பேச்சிற்குப் பணிந்து வயதுவரம்பு கடந் தவனாக இருக்கவேண்டிய நிலைவரலாம்.அவனைக் குறை சொல்லியவர்க ளுக்கு இது சாதகமாகி விடுமல்லவா?அவனைத் திரும்ப ஊருக்கு வரச்சொல் வது சரியான முடிவாக இருக்காமல் போகலாம்—அவனால் தன் ஊர் நிலை யைப் புரிந்து கொள்ளமுடியாது.அறிவுரைகளால் வெறுப்படைந்த அவன் நண்பர்களைப் பிரிந்திருந்தாலும் வெளிநாட்டிலிருப்பதே சரி ஜார்ஜ் தனக்குள் சொல்லிக் கொண்டான்.

2

ஆனால் அவர்களின் அறிவுரையை ஏற்று இங்கு வந்து மன அழுத்தமடைந்து– வேண்டுமென்றே இல்லை,ஆனால் அவனுடைய சூழ்நிலையால் – நண்பர்களு டனோ ,நண்பர்களில்லாமலோ ,வாழ்க்கையோடு இணங்க முடியாமல் ,வெட் கமடைந்து ,உண்மையில் நாடோ,நண்பர்களோ இல்லாமல் வருந்துவதை விட இப்போது இருப்பது போலவே வெளிநாட்டில் இருப்பது உசிதமல்லவா? அவ னால் உண்மையாகவே இங்கு வந்து முன்னேற முடியுமா?

இந்தக் காரணங்களுக்காக, உண்மையை அப்படியே வெளிப்படுத்த முடியாமல் நட்பை கடிதங்கள் மூலமாகத் தொடர்ந்துகொண்டு, தனக்கு நெருக்கமானவர் களிடம் எவ்விதத் தடையுமின்றி பேசலாம்.நண்பன் வீட்டை விட்டுப் போய் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன.ரஷ்யாவில் உள்ள நிலையற்ற அர சியல் பிரனைகள் காரணமாகத் தன்னால் வரமுடியவில்லை என்று பொருத் தமில்லாத காரணத்தை அவன் சொல்லிக் கொண்டிருக்கிறான். ஆயிரக்கணக் கான ரஷ்யர்கள் உலகம் முழுவதும் அமைதியாகப் பயணம் செய்து கொண்டி ருக்க சிறிய வியாபாரியான அவன்சில நாட்கள் கூட வரமுடியவில்லை என் பது ஏற்கமுடியாததுதான்.

ஆனால் இந்த மூன்றுவருடங்களில் ஜார்ஜின் வாழ்க்கையில் பெரிய மாற்றங் கள் நிகழ்ந்துவிட்டன.இரண்டு வருடங்களுக்கு முன்பான தாயின் மரணத்திற் குப் பிறகு ஜார்ஜ் தன் தந்தையோடிருந்தான்.அவனுடைய நண்பனுக்கு அச் செய்தி தெரிந்து கடிதத்தில் தன் இரங்கலைத் தெரிவித்திருந்தான். வெளி நாடுகளில் அது போன்ற நிகழ்வு அத்தனை வருத்தத்தை உள்ளாக்காது என்ப தால் அவன் எழுதிய கடிதம் உணர்ச்சியற்று இருந்தது.ஆனால் அந்தச் சமயத் திலிருந்து ஜார்ஜ் தன் தொழிலையும், பிற விவகாரங்களையும் தீர்க்கமான முடிவோடு கையாளத் தொடங்கியிருந்தான்.ஜார்ஜ் தனக்கெனத் தனியாகத் தொழில் தொடங்கக் கூடாதென்பது அப்பாவின் எண்ணம்.தவிர அம்மா உயிரு டனிருந்த வரை தொழிலில் அவன் எந்தஅபிப்ராயம் சொன்னாலும் அப்பா அதற்குத் தடை சொல்பவராக இருந்தார்.அம்மாவின் மறைவிற்குப் பிறகு தொழிலில் இருந்தாரெனினும் ஒருவிதத் தளர்ச்சி அவரை ஆட்கொண்டது; அதிர்ஷ்டம் அவர்கள் பக்கம் திரும்பியது.அது மிக அரியதுதான்.இந்த இரண்டு ஆண்டுகளில் எதிர்பார்க்காமல் தொழில் நல்லவளர்ச்சி அடைந்தது. வேலை யாட்களின் எண்ணிக்கை இரண்டு பங்காக அதிகரித்தது.வருமானம் பெருகி யது. இன்னும் வரப்ப்போகும் வருடங்களில் அது பெருகும் என்பதில் சந்தேக முமில்லை

அவனுடைய நண்பனுக்கு இந்த மாற்றங்கள் பற்றியெல்லாம் தெரியாது. இரங் கல் கடிதத்தில் ஜார்ஜ் ரஷ்யாவில் குடியேறவேண்டும் என்ற தன் விருப்பத் தைத் தெரிவித்திருந்தான்.ஜார்ஜ் செய்யும் தொழில் செயின்ட்பீட்டர்ஸ்பர்க் கில் நன்றாக வளரக் கூடியது என்றும் குறிப்பிட்டிருந்தான்.அவன் குறிப்பிட்டி ருந்த அந்த நல்ல வளர்ச்சியை இப்போது இங்கேயே ஜார்ஜின் தொழில் பெற்றிருந்தது. ஆனால் ஜார்ஜுக்கு தன் தொழில் ரீதியான வளர்ச்சியை நண்ப னுக்கு தெரியப் படுத்த விருப்பமில்லை.தவிர இவ்வளவு தாமதமாக இப்போது அதைச் சொல்வது நிஜமாகவே வினோதமாகவே இருக்கும்

அதனால் ஜார்ஜ் மிக முக்கியமற்ற விவரங்களை மட்டும் நண்பனுக்கு அமை தியான ஞாயிற்றுக் கிழமையில் எழுதிய கடிதத்தில் தெரிவித்தான். தானில் லாத காலத்தில் ஊரில் நடந்தவைகள் தெரியாமல் தனது ஊரைப் பற்றிய கற்பனையில் அவன் வாழப் பழகிக் கொண்டு விட்ட நிலையை ஜார்ஜ் மாற்ற விரும்பவில்லை.

3

அதிகப் பரிச்சயமில்லாத ஒருவனின் நிச்சயதார்த்தம் குறித்து நண்பனுக்கு ஜார்ஜ் விரிவாகக் கடிதங்கள் எழுதினான்.ஜார்ஜின் எதிர்பார்ப்புக்கு மாறாக நண்பன் அந்த விஷயத்தில் ஈடுபாடு காட்டத் தொடங்கினான்.

ஆனால் ஒரு மாதத்திற்கு முன்னால் தனக்கு ப்ரீடா பிராண்டன்லெட் என்ற பெண்ணோடு தனக்கு நடந்த நிச்சயதார்தத்தை எழுதி மன்னிப்பு கேட்பதை விட இப்படியான சில விஷயங்களை எழுதுவதை விரும்பினான்.தபால் மூல மாக நண்பனுக்கு வித்தியாசமான கடிதங்கள் எழுதியது குறித்து அடிக்கடி தன் காதலியிடம் பேசியிருக்கிறான்.”அப்படியென்றால் அவர் நம் திருமணத்திற்குக் கண்டிப்பாக வர வாய்ப்பில்லை.என்றாலும் உங்கள் எல்லா நண்பர்களையும் சந்திக்கும் உரிமை எனக்கிருக்கிறது ”என்று அவள் சொன்னாள்.”நான் அவ னைக் கஷ்டப்படுத்த விரும்பவில்லை.என்னைத் தவறாகப் புரிந்து கொள் ளாதே.ஒருவேளை அவன் வரலாம் என்று நான் நினைக்கிறேன்.ஆனால் கண் டிப்பாக அவன் என்னைப் பார்த்து பொறாமைப்படலாம். மகிழ்ச்சியின்றி தனி யாக வர நேர்ந்தது பற்றி தனக்குள் பொறுக்க இயலாமல் வருந்துவான்.

“தனியாக—உனக்கு அதன் அர்த்தம் புரிகிறதா?”

ஆனால் நம் திருமணம் பற்றி அவர் வேறு வழியில் தெரிந்து கொள்ள முடி யாதா?”

ஆமாம் .அது உண்மை.என்னால் அதைத் தடுக்க முடியாது.ஆனால் அவன் வாழ்க்கை வசதிகளைப் பார்க்கும் போது அது இயலாதது என்றுதான் தோன் றுகிறது.”

“ஜார்ஜ், உங்களுக்கு அப்படியான நண்பர்களிருந்தால் நீங்கள் நிச்சயதார்த்த் ததிற்கு உடன்பட்டிருக்கக் கூடாது.””சரி,நாங்களிருவரும் தவறுக்குரியவர்கள் தான்,ஆனால் இப்போது எந்த மாறுபாடும் ஏற்படுவதை நான் விரும்ப வில்லை.” என்று சொல்லி முத்தமிட்டான்.”ஆனாலும் இது எனக்கு வருத்தம் தருகிறது.”என்றாள் அவள்.தன் நண்பனுக்கு எல்லாவற்றையும் தெரிவிப்பதில் எந்தத் தவறுமில்லை என்று அவன் நினைத்தான்.”இப்படித்தான் நான்.அவன் என்னை அப்படித்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்”என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.”நட்பு என்பதற்காக நான் இன்னொரு மனிதனாக என்னை செதுக் கிக் கொள்ள முடியாது.”

உண்மையில் அவன் தனக்கு நடந்த நிச்சயதார்த்தம் பற்றி நண்பனுக்கு எழு திய விரிவான கடிதத்தில் குறிப்பிட்டிருந்தான்.”மிக அழகான ,முக்கியமான இந்த விஷயத்தை கடைசியில் எழுதுவதற்காக நான் வைத்திருக்கிறேன். பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த பரீடா பிராண்ட்ன்பெல்டுவை மணக்கப் போகிறேன்.நீ போனதற்குப் பின்னால அவர்கள் குடும்பம் இங்கு குடியேறியது. எனவே அவர்களை உனக்குத் தெரிய வாய்ப்பில்லை.என் காதலியைப் பற்றி இன்னும் விளக்கமாகச் சொல்ல எனக்கு வாய்ப்புகளுண்டு.நான் அதிர்ஷ்டமா னவன் என்று இப்போது உனக்குத் தெரிந்தால் போதும்.நம் நட்பைப் பொறுத்த வரையில், இன்று நீ சந்தோஷமானவனாக இருக்கிறாய் என்பது எனக்கு மிக்க மகிழ்ச்சி தருகிறது.என்காதலி தன் அன்பைத் தெரிவிக்கச்சொன்னாள். உனக்கு அவள் விரைவில் கடிதம் எழுதுவாள்.சாதாரணமாக ஒரு பிரம்மாச்சாரிக்கு கிடைக்காத வகையில் உனக்கு ஓர் அருமையான பெண் தோழியாக இருப் பாள்.இங்கு நீ திரும்பி வருவதைத் தடுக்கும் வகையில் உனக்கு பல பிரச்னை கள் உண்டு என்றெனக்குத் தெரியும்.ஆனால் ஒரு நண்பனின் திருமணத் திற்காக அவைகளையெல்லாம் தூக்கியெறிந்து விட்டு வருவது உனக்குச் சரியான வாய்ப்பாக இருக்குமல்லவா?ஆயினும் உனக்கு நல்லதென்று தெரிவதைக் கவலைப்படாமல் செய்”

ஜார்ஜ் ஜன்னலைப் பார்த்தபடி நீண்ட நேரம் இந்தக் கடிதத்தோடு தனது எழுதும் மேஜையில் உட்கார்ந்திருந்தான்.தனக்குத் தெரிந்த ஒருவன் தன் நிலையைப் பாராட்டுவான் என்பது குறித்து அவனுக்குச் சந்தேகமாக இருக்க. தன்னை மறந்து சிரித்த வண்ணமிருந்தான்

4

கடைசியில் அந்தக் கடிதத்தை பையில் வைத்துக்கொண்டு தன் அறையிலி ருந்து வெளியேவந்து ,எதிராக இருந்த தந்தையின் அறைக்குப் போனான். அவன் அங்குபோய்ப் பல மாதங்களாகிவிட்டன.அவன் அங்கு போகவேண்டிய அவசியம் இதுவரை ஏற்படவில்லை.ஏனெனில் அவன் தந்தையை அலுவலகத் தில் பார்த்து விடுவான்.தினமும் இருவரும் ஒரே ஹோட்டலில்தான் மதியச் சாப்பாடு சாப்பிடுவார்கள்.மாலையில் இருவரும் அவரவருக்கு பிடித்தமான தைச் செய்வார்கள். பெரும்பாலான நேரங்களில் ஜார்ஜ் தன் நண்பர்களுடன், அல்லது தன் காதலியுடன் இருப்பான்.எனினும் இரவில் ஹாலில் இருவரும் அவரவர் செய்தித்தாளை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருப்பார்கள்.

அந்தக் காலைநேரத்திலும் தந்தையின் அறை இருட்டாக இருப்பதைப் பார்த்து ஜார்ஜ் வியப்படைந்தான்.மிகக் குறுகியதாக இருந்த முற்றத்தின் மறு பகுதி யில் உயர்வாக எழுந்திருந்த சுவர் அப்படி நிழல் விழக்காரணமாக இருந்தது. அவனுடைய தாய் பலவிதமாக அலங்கரித்து வைத்திருந்த பொருட்களின் ஞாபகம் எழும்படியாக இருந்த அந்தஅறையில் ஜன்னலோரத்தில் ஒரு கண்ணுக்கு முன்னால் செய்தித்தாளை வைத்து ,தலையைச் சாய்த்து உட் கார்ந்து தந்தை படித்துக்கொண்டிருந்தார்.அங்கிருந்த மேஜையில் இருந்த மீதமான காலைஉணவு அவர் அதிகம் சாப்பிடவில்லை என்று சொல்லியது.

ஓ,ஜார்ஜ்,” கூப்பிட்டபடி அவர் அவனருகில் வந்தார்.நடந்து வந்தபோது அவ ருடைய கனமான இரவு உடை அவரை முழுவதுமாகச் சுற்றியிருப்பது போலி ருந்தது.”இன்னும் என் அப்பா பேராற்றல் நிறைந்தவர்தான்” ஜார்ஜ் தனக்குள் சொல்லிக் கொண்டான்.

“பொறுக்க முடியாத இருட்டு அங்கே” என்று சொன்னான்.

“ஆமாம், மிக இருட்டாகத்தானிருக்கிறது”அப்பா பதிலளித்தார்.

“நீங்கள் ஜன்னல் கதவுகளையும் மூடி விட்டீர்கள்?”

“எனக்கு அதுதான் பிடிக்கிறது.”

“வெளியில் வெம்மையாக இருக்கிறது.”தான் முன்பு சொல்லியதைத் தொடர் வது போலப் பேசிவிட்டு அவன் உட்கார்ந்தான்.

அப்பா காலை உணவுத் தட்டை எடுத்து சுத்தம் செய்துவைத்தார்.

“செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிற்கு நான் என் நிச்சயதார்த்த விவரத்தை அனுப்பி யிருக்கிறேன் என்று உங்களிடம் சொல்ல வந்தேன்”அடிக்கடி மறந்து போகும் தநதைக்கு நினைவுபடுத்த விரும்பியவனாக ஜார்ஜ் அதைச் சொல்லிவிட்டு தன் பாக்கெட்டிலிருந்து ஒரு கடிதத்தை வெளியே இழுத்து பின்பு திரும்பவும் உள்ளே வைத்தான்.
“ஏன் பீட்டர்ஸ்பர்க்கிற்கு? ”தந்தை கேட்டார்.

“என் நண்பனுக்கு “சொல்லிவிட்டு அவர் கண்களை ஊடுருவிப் பார்க்க முயன் றான்.’தொழில் என்று வரும்போது அவர் மிக வித்தியாசமானவர்”என்று நினைத்தான்.மார்பில் கையைக் கட்டிக் கொண்டு எப்படி உட்கார்ந்திருக்கிறார்.

“ஆமாம், உன் நண்பனுக்கு ”அழுத்தமாகச் சொன்னார்.

“அப்பா,முதலில் என் நிச்சயதார்த்தத்தை அவனிடம் சொல்லவேண்டாமென் றுதான் நினைத்தேன்.இதற்கென்று காரணம் எதுவுமில்லை.அவன் வித்தியாச மானவன் என்று உங்களுக்கே தெரியும்.தனிமையில் வாழும் அவனுக்கு இது தெரிய வாய்ப்பில்லையென்றாலும் மற்றவர்கள் மூலமாக தெரிந்துவிடும் என்று நான் எனக்குள் சொல்லிக் கொண்டேன். அதை என்னால் தடுக்கவும் முடியாது.ஆனால் ஒருபோதும் என் மூலம் அவனுக்குத் தெரியக் கூடாது என்று நினைத்தேன்.”

“இப்போது நீ அதைப் பற்றி வித்தியாசமாக நினைக்கிறாய்?” அப்பா கேட் டார்.ஜன்னலின் கீழே செய்தித்தாளையும் ,அதன் மேல் தன் மூக்குக் கண்ணா டியையும் வைத்து கைகளால் மூடிக் கொண்டார்.

“ஆமாம், இப்போது நான் அதை மறுபரிசீலனை செய்கிறேன்”

5

அவன் என்னுடைய நல்ல நண்பனாக இருந்தால் என்னுடைய நிச்சயதார்த்தம் அவனுக்கும் மகிழ்ச்சியளிக்கும் என்று எனக்குத் தோன்றியது.அதனால் அவனி டம் சொல்வதற்கு இனி எனக்குத் தயக்கமில்லை.

“ஜார்ஜ், நான் சொல்வதைக் கேள்.இந்த விஷயத்தை விவாதிக்கத்தான் என்னி டம் நீ வந்திருக்கிறாய்.அது உன்னுடைய நல்லஇயல்புதான்.ஆனால் நீ இப் போது முழு உண்மையையும் சொல்லவில்லையென்றால் அதனால் எந்த,எந் தப் பயனுமில்லை.பொருத்தமில்லாத விஷயங்களை இங்கு பேச எனக்கு விருப்பமில்லை.அம்மாவின் மறைவிற்குப் பிறகு இங்கு சில மோசமான நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.அதைப் பற்றி பேசுவதற்கான நேரம் நாம் எதிர்பார்த்ததைவிடச் சீக்கிரமாக வந்திருக்கிறது.தொழிலில் எந்தப் பிரச் னையும் இல்லை ,அது என்னைக் காப்பாற்றுகிறது. என்னிடமிருந்து எதுவும் மறைக்கப்படவில்லை.—அதே சமயத்தில் எனக்குப் பின்னால் நடக்கிறது என்று சொல்லவும் நான் தயாரில்லை.—என்னிடம் இப்போது பலமில்லை,என் ஞாபக சக்தி குறைந்து கொண்டிருக்கிறது, பெரும்பாலான விஷயங்களில் என்னால் கவனம் செலுத்த முடியவில்லை.முதலாவதாக ,இயற்கை தன் வேலையைக் காட்டுகிறது,இரண்டாவதாக அம்மாவின் மரணம் உன்னைவிட எனக்குப் பெரிய அடி.ஆனால் நாம் இப்போது இந்தக் கடிதத்தைப் பற்றிப் பேசுவதால் ஜார்ஜ் ,உன்னைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன், என்னை ஏமாற்ற வேண் டாம்.இது ஓர் அற்பமான விஷயம், பேசக் கூடிய பெரிய விஷயமில்லை. அத னால் என்னை ஏமாற்றாதே. உனக்கு நிஜமாகவே பீட்டர்ஸ்பெர்க்கில் இந்த நண்பன் இருக்கிறானா?” அப்பா கேட்டார்.

ஜார்ஜ் சங்கடத்தோடு எழுந்து நின்றான்.”நாம் என் நண்பனை மறந்துவிடு வோம்.ஆயிரக்கணக்கான நண்பர்கள் இருந்தாலும் என் அப்பா ஸ்தானத்தை மாற்ற முடியாது.நான் என்ன நினைக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் கவனமாக உங்களைப் பார்த்துக் கொள்ளவில்லை.ஆனால் முதுமை தன் வேலையைக் காட்டுகிறது.தொழிலில் நீங்கள் எனக்கு மிக முக்கியமான வர்.-உங்களுக்கும் அது நன்றாகத் தெரியும்.-ஆனால் தொழில் உங்கள் உடல் நலத்தைப் பாதிக்குமென்றால், அது நடக்காமல் நான் நாளையே அதை மூடி விடுவேன்.உங்களுக்காக ஒரு புதிய வாழ்க்கைச் சூழலை நாம் உருவாக்க வேண்டும் ஆனால் முழுவதும் வித்தியாசமானதாக மாற்ற வேண்டும்.நீங்கள் இங்கு இருட்டில் உட்கார்ந்திருக்கிறீர்கள்.ஹாலில் நல்ல வெளிச்சமிருக்கிறது உங்கள் உடல்நலத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கு பதிலாக நீங்கள் காலை உணவைச் சரியாகச் சாப்பிடுவதில்லை.காற்று வரும் ஜன்னலின் அருகே உட் கார்ந்து கொண்டால் உங்கள் உடலுக்கு நல்லது.இல்லை, அப்பா! நான் மருத்து வரை அழைத்து வருகிறேன்..அவருடைய அறிவுரைப்படி நடப்போம்.உங்கள் அறையை மாற்றி விடலாம்.நீங்கள் முன்னறைக்கு வந்து விடுங்கள்.நான் இங்கு வந்துவிடுகிறேன்.உங்களுக்கு எந்தச் சிரமும் இருக்காது.எல்லாம் உங்க ளுடன் வந்து விடும். ஆனால் எல்லாவற்றிற்கும் ஒரு நேரமிருக்கிறது.நான் இன்னும் சிறிது நேரத்தில் உங்களுக்குப் படுக்கை போடுகிறேன்.உங்களுக்கு முழு ஓய்வுதேவை.வாருங்கள்,உடை மாற்ற உதவுகிறேன்.அல்லது இப்போதே முன்னறைக்குப் போக விரும்புகிறீர்களா. இப்போது என் படுக்கையில் நீங்கள் படுத்துக் கொள்ளலாம்.அது சரியாக இருக்கும்.”

நரைமுடியைக் கோதிக் கொண்டிருக்கும் அப்பாவின் மிக அருகில் ஜார்ஜ் நின்றான்.

“ஜார்ஜ்,” அழுத்தமாக அசையாமல் அப்பா கூப்பிட்டார்.

ஜார்ஜ் உடனே அவரருகில் மண்டியிட்டு உட்கார்ந்தான்.அவருடைய பெரிய கூர்மையான விழிகள் தன்னை வெறிப்பதை உணர்ந்தான்..

உனக்கு நண்பனென்று யாரும் பீட்டர்ஸ்பெர்க்கில் இல்லை.எப்போதும் கேலி பேசுபவனாகவே இருக்கிறாய். என்னிடம் கூட உன்னால் விளையாடாமலி ருக்க முடியவில்லை.எப்படி உனக்கு ஒரு நண்பன் அங்கிருக்க முடியும்? என்னால் நம்பவே முடியவில்லை.”

6

“ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள், அப்பா” ஜார்ஜ் சொன்னான்.அப்பாவை சாயும் நாற்காலியிலிருந்து எழுந்து நிற்க வைத்து அவர் இரவு ஆடையை களைந்தான்.அவர் வலிமையற்றுப் போய் நின்றிருந்தார்.”என் நண்பர்கள் என்னைப் பார்க்க வந்து மூன்று ஆண்டுகளாகிவிட்டன.குறிப்பாக அவனை உங்களுக்குப் பிடிக்காதென்பது எனக்கு இன்னமும் நினவிலிருக்கிறது.என் அறையில் இரண்டுமுறை அவன் உட்கார்ந்திருந்த போதும் நான் நீங்கள் அவனைச் சந்தித்து விடாதபடி பார்த்துக் கொண்டேன்.அவனை நீங்கள் வெறுப் பது எனக்கு நன்றாகத் தெரியும்.அவனுக்கென்று சில வினோதமான குணங்க ளுண்டு.பின் ஒருநாளில் நாள் நீங்கள் அவன் பேச்சைக் கவனித்தும், தலை யாட்டியும்,கேள்விகள் கேட்டும் அவனிடம் நன்றாகப் பேசினீர்கள்.எனக்கு மிகப் பெருமையாக இருந்தது.நினைத்துப் பார்த்தால் அது உங்களுக்கு ஞாபகம் வரலாம்.அப்போதுதான் ரஷ்யப் புரட்சி பற்றிய வியப்பான கதைகளை அவன் நமக்குச் சொன்னான்.உதாரணமாக ,கீவியில் அவன் தொழில் பயணம் மேற்கொண்டபோது ஒரு கலவரத்தைப் பார்க்க நேர்ந்தது. மாடியில் நின்று கொண்டிருந்த பாதிரியார் ஒருவர் சிலுவையைத் தன் உள்ளங்கையில் வைத்து அறுத்துக்கொண்டு கூட்டத்தைப் பார்த்து வேண்டிக் கொண்டதைச் சொல்லலாம்.நீங்கள் கூட அந்தக் கதையை அடிக்கடி சொல்வீர்கள்.

இதற்கிடையே ஜார்ஜ் கவனமாக அப்பாவை உட்காரவைத்து அவருடைய ஆடைகள்,காலணி எல்லாவறையும் மெதுவாகக் களைந்தான்.அவருடைய உள்ளாடைகள் அவ்வளவு சுத்தமாக இல்லாமலிருப்பதைப் பார்த்து தான் அவரைக் கவனிக்காமல் விட்டுவிட்டதை உணர்ந்தான். அப்பாவை இது மாதியான விஷயங்களில் கவனித்துக் கொள்ள வேண்டியது தன் பொறுப்பு என்றுணர்ந்தான்.தன் காதலியிடம் அப்பாவின் எதிர்காலம் பற்றி இன்னமும் அவன் விவரமாக எதுவும் பேசவில்லை.அவர் தனியாக பழைய குடியிருப்பி லேயே தங்கிக் கொள்வாரென்று அவர்கள் நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் இப்போது அவரைத் தன்னுடனே வைத்துக் கொள்ளும் உறுதியான முடிவுக்கு வந்துவிட்டான்.மிகக் கூர்மையாக கவனித்தால் அவன் தன் அப்பா விடம் இப்போது எடுத்துக் கொள்ள விரும்பும் கவனம் எப்போதோ எடுக்கபட்டி ருக்க வேண்டுமென்பது புரியும்.அவரைத் தூக்கிக் கொண்டு படுக்கையறைக் குப் போனான்.படுக்கையை நோக்கி அவன் சென்றபோது அப்பா தன் கழுத் தில் அணிந்திருந்த சங்கிலியை இறுக்கப் பிடித்திருப்பதைப் பார்க்க முடிந்தது. படுக்கையில் அவரைக் கிடத்த முடியாதபடி அந்தச் சங்கிலியை அவர் இறுகப் பற்றியிருந்தார்.

ஆனால் படுக்கையில் அவரைக் கிடத்தியவுடன், எல்லாம் இயல்பாகத் தெரிந்தது.அவர் தானாகவே தோள்வரை போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு ஜார்ஜைப் பார்த்தார்.

“உங்களுக்கு அவனை ஞாபகமிருக்கிறதில்லையா?’அவரை உற்சாகப்படுத்தும் பாணியில் தலையை ஆட்டியபடி ஜார்ஜ் கேட்டான்.

“நான் நன்றாகப் போர்த்திக் கொண்டிருக்கிறேனா?”தன் பாதங்களைச் சரியாக மூடமுடியாதது போலக் கேட்டார்.

“படுக்கையில் படுத்தவுடன் தெம்பாகத் தெரிகிறதல்லாவா?”கேட்டபடி போர் வையைச் சரிசெய்தான்.

“நான் நன்றாகப் போர்த்திக் கொண்டிருக்கிறேனா?”அந்தக் கேள்விக்குத் தனக்கு கண்டிப்பாக பதில் கிடைக்க வேண்டுமென்பது போல மீண்டும் கேட்டார்.

“உம். இப்போது ஒய்வெடுத்துக் கொள்ளுங்கள்.”

’இல்லை,” ஜார்ஜின் பதிலைத் தடுப்பது போலக் கத்தினார்.

7

போர்வையை முழு வேகத்தோடு இழுத்து படுக்கையின் மீது விழும்படி எறிந் தார்.கம்பியை ஒரு கையால் பிடித்துக் கொண்டு ”நீ மூடி மறைக்கப் பார்க் கிறாய்–நான் சிறுபிள்ளை போலாகி விட்டேன் என்றெனக்குத் தெரியும்.—ஆனால் இன்னும் மோசமாகிவிடவில்லை.இவ்வளவுதான் எனது பலமென்றா லும் அது உனக்குப் போதும், உனக்கு அதிகமானதும் கூட. ஆமாம்,எனக்கும் உன் நண்பனைத் தெரியும்.மகனாக என் மனதுக்கு நெருக்கமானவன் என்று உனக்குத் தெரியும்.அதனால்தான் பல வருடங்களாக அவனுக்கு நீ துரோகம் செய்கிறாய்.ஏன்? நான் அவனுக்காக அழவில்லை என்று நினைக்கிறயா? அதனால்தான் உன் அறையை சாத்திக்கொண்டு முடங்கிக் கிடக்கிறாய்.—யாரும் உன்னைத் தொந்திரவு செய்யக் கூடாது. முதலாளி எப்போதும் பிஸி—அந்த வழியில்தான் இரண்டு முகம் கொண்ட நீ ரஷ்யாவுக்குக் கடிதங்கள் எழுதிக் கொண்டிருக்கிறாய்.ஆனால் அதிர்ஷ்டவசமாக ஒரு தந்தைக்கு தன் மகனை உற்று நோக்கக் கற்றுத்தர வேண்டியதில்லை.அசைய முடியாத அளவுக்கு அவன் மேல் நீ அழுந்த உட்கார்ந்து விட்டதாக நினைத்து, அந்தத் தருணத்தில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துவிட்டாய்!”

அப்பாவின் பயம்தரும் மாயத் தோற்றத்தை ஜார்ஜ் பார்த்தான். பீட்ட்ர்ஸ்பெர்க் கிலுள்ள நண்பனைப் பற்றி திடீரென்று அப்பா நன்றாகத் தெரிந்து கொண்ட விவரம் அவன் கற்பனைக்கு எட்டமுடியாததாக இருந்தது.ரஷ்யாவைப் பற்றிய விரிவான எண்ணத்தில் அவர் தொலைந்து போயிருப்பது தெரிந்தது. இழந்து விட்ட தொழிலில் அவரைப் பார்க்க முடிந்தது.சிதைந்த அவரது அலமாரிக ளில் தகர்ந்து கிடந்த பொருட்கள், உடைந்து சிதறிய பொருட்கள் எல்லாம் கிடக்க வெறுமையாய் நின்று கொண்டிருந்தார்.ஏன் அவர் அவ்வளவு தூரம் போக வேண்டும்!

“ஆனால் என்னைப் பார்”அப்பா கத்தினார்.ஜார்ஜ் அவரருகில் தன்னை மறந்து ஓடத் தொடங்கிய போது அவர் பேச்சில் திக்கல் வந்தது.”அவள் உன்னைத் தன் வசப்படுத்தியதால் நீ மயங்கி யாருடைய இடையீடுமின்றி அவள் வச மானாய்–அம்மாவின் நினைவை மறந்தாய்.உன் நண்பனுக்குத் துரோகம் செய் தாய், அசையமுடியாதபடிக்கு அப்பாவைப் படுக்கையில் கிடத்தினாய். ஆனால் அவரால் அசையமுடியும்.,முடியாதா அவரால்?”அவர் எந்த ஆதரவுமின்றி எழுந்து நின்று கால்களால் உதைத்துக் கொண்டார். உள்ளொளியால் பிழம்பு போல இருந்தார்.

ஜார்ஜ் தன்னால் இயன்ற வரை அவருக்கு வெகு தொலைவில் நின்றிருந் தான். நீண்ட நாட்களாகவே எல்லாவற்றையும் மிக நுணுக்கமாக உற்றுநோக்க அவன் முடிவு செய்திருந்தான்.அதனால் பின்னால், மேலிருந்து தொடர்பில் லாமல் கூட ஏற்படுகிற தாக்குதல் அவனை ஆச்சர்யப்படுத்தாது. பல காலத் திற்கு முன்பு எடுத்திருந்த –மறந்து போன முடிவு இப்போது ஊசியின் காதில் சிறிய நூலை வைத்திழுப்பது போல நினவுக்கு வந்தது.

“ஆனால் இப்போது உன் நண்பனுக்கு துரோகம் செய்யப்படவில்லை.அவ்வப் போது நடப்பவற்றைச் சொல்லிவிடுகிற பிரதிநிதியாக நான் இங்கிருக்கிறேன்.” தன் ஆட்காட்டிவிரலை முன்னும் பின்னும் அசைத்தபடி தன் கருத்தை உறுதி யாகச் சொன்னார்.

நீங்கள் நகைச்சுவை நடிகர்தான்!”ஜார்ஜால் அப்படி அழைப்பதை கட்டுப்படுத்த முடியவில்லை.அது எவ்வளவு தவறானது என்றுஅவன் உடனே உணர்ந்து தன் நாக்கை கடித்துக் கொண்டான்.,ஆனால் அது மிக காலதாமதமான உணர்வு என்று தெரிந்து அவன் கண்கள் வலியில் உறைந்தன.

8

“ஆமாம்,சரிதான் நான் நகைச்சுவையாளனாகத்தான் இருக்கிறேன்! நகைச் சுவை! சரியான வார்த்தை!வயதான துணையற்ற அப்பாவிற்கு வேறு என்ன ஆறுதல் இருக்க முடியும்?சொல்—பதில் சொல்லும் என்னுடைய அருமை மகன் நீ— என் அறையில் என்ன மீதமிருக்கிறது,துன்பப்படுத்தும் விசுவாச மில்லாத ஊழியர்கள் ,என் நரம்புகளில் இவை ஊடுருவி இருக்க எனக்கென்று என்ன மீதமிருக்கிறது?நான் உருவாக்கித் தந்த தொழிலை வைத்துக் கொண்டு என் மகன் உலகம் முழுவதும் மகிழ்ச்சியாகச் சுற்றிவருகிறான், தந்தை யிடமிருந்து வெகுதூரம் விலகி இறுகியநிலையில்!என்னிடமிருந்து வந்த உன்னை நான் நேசிக்கவில்லை என்று நீ நினைக்கிறாயா?”

“இப்போது வளைந்து அவர் முன்னால் வருவார்”என்று ஜார்ஜ் நினைத்தான். அவர் இப்போது கீழே விழுந்து சிதறி விட்டாலென்ன ஆகும்!”இந்த வார்த்தை கள் அவன் மண்டைக்குள் பரவிக் கொண்டிருந்தன.

அவன் அப்பா முன்னால் வளைந்தார் ,ஆனால் விழவில்லை.ஜார்ஜ் அவர் எதிர்பார்த்தது போல அருகில் வராததால் அவர் தானாகவே நிமிர்ந்து நின்றார்.

“நீ இருக்குமிடத்திலேயே நில். எனக்கு உன் உதவி தேவையில்லை!உனக்கு இங்கு வந்து நிற்க இன்னமும் பலம் இருப்பதாக நீ நினைக்கிறாய்.அதுதான் உன் விருப்பமும் கூட. ஆனால் உன் எண்ணம் தவறாக இருந்தால் ! நான் இப்போதும் உன்னைவிட பலமானவன்.நான் பின்வாங்குபவனாக ஒரு வேளை இருந்தாலும் உன் தாய் கொடுத்த பலமெனக்கு அதிகமென்பதால் உன் நண்ப னுடன் அற்புதமான உறவுத் தொடர்பிலிருக்கிறேன். உன் வாடிக்கையாளர்க ளும் என் சட்டைப் பையில்தான்!”

“அவர் சட்டையில் பாக்கெட் கூட வைத்திருக்கிறார்!”ஜார்ஜ் தனக்குள் சொல் லிக் கொண்டான்.தன்னுடைய இந்த அபிப்பிராயத்தால் அவரை உலகின் முன் கேலிக்குரியவாராக ஆக்கிவிடமுடியும் என்று நினைத்தான்.இந்த நினைவு ஒரு கணம்தான் ஏனெனில் அவன் எல்லாவற்றையும் தொடர்ந்து மறந்து கொண்டிருந்தான்

“உன் காதலியுடன் சேர்ந்து என் வழியில் நீ குறுக்கிட்டுப் பார்!நான் அவளை உன்னிடமிருந்து விசிறியடித்து விடுவேன்-எப்படி என்று உனக்குத் தெரியாது.”

ஜார்ஜ் அதை நம்பமுடியாதவன் போல முகத்தைச் சுளித்தான்.அவர் ஜார்ஜின் முகத்தைப் பார்த்துவிட்டு தான் சொன்னது உண்மை என்பது போல ஜார்ஜின் முகத்தைப் பார்த்தார்

“உன் நண்பனுக்கு நிச்சயதார்த்தம் குறித்து எழுத வேண்டுமா என்று கேட்டுக் கொண்டு இன்று எப்படி என்னிடம் வேடிக்கை காட்டுவது போல வந்தாய். முட்டாளே,அவனுக்கு எல்லாம் தெரியும்,முன்பாகவே தெரியும்!அவனுக்கு நான் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன்,ஏனெனில் நீ எழுதும் பொருட் களை என்னிடமிருந்து வாங்க மறந்து விட்டாய்.அதனால்தான் அவன் வெகு காலமாக இங்கு வரவில்லை.உன்னைவிட அவனுக்கு எல்லாம் நூறு மடங்கு தெரியும். வலது கையில் படிப்பதற்காக அவன் என் கடிதங்களை வைத்துக் கொண்டு இடது கையால் உன் கடிதங்களைப் படிக்காமல் சுருட்டிக் கசக்கு கிறான்.”

உற்சாகத்தின் வேகத்தில் தன் முழங்கையை தலைக்கு மேல் வைத்து “அவ னுக்கு ஆயிரம் மடங்கு விஷயங்கள் நன்றாகத் தெரியும்”என்றார்.

“பத்தாயிரம் மடங்கு” தன் அப்பாவை முட்டாளாக்கும் பாணியில் அவன் சொன்னான்.

“இந்த மாதிரியான கேள்வியோடு வருவாய் என்று தெரிந்து பல ஆண்டு களாக நான் உன்னை கவனித்து வருகிறேன்.எனக்கு வேறு எதிலோ கவனம் இருக்கிறதென்று நினைத்தாயா?நான் செய்தித்தாள் வாசிக்கிறேன் என்று நினைத்தாயா?பார் !”அவனை நோக்கி அவர் செய்திதாளைத் தூக்கி எறிந்தார்—அது ஜார்ஜ் கேள்விப்பட்டிராத மிகவும் பழைய ஒரு செய்திதாள்.

“பக்குவம் அடைவதற்கு எவ்வளவு காலமாக காத்திருந்தாய்!உன் தாயின் மரணம் வரைக்கும். இந்த மகிழ்ச்சியான நேரத்தை அனுபவிக்க அவளில்லை.

9

’உன் நண்பன் ரஷ்யாவில் அழிந்து கொண்டிருக்கிறான்—மூன்று ஆண்டுக ளுக்கு முன்பே தூக்கி எறியப்பட வேண்டியவன்.நான்—என் விஷயங்கள் எப்படியாகி விட்டன பார். நீ அதன் மீது கண்வைத்துவிட்டாய்”

“அதனால் எனக்காக நீங்கள் காத்திருந்தீர்கள் ”ஜார்ஜ் கேட்டான்.

“முன்பே நீ அதை மறைமுகமாகச் சொல்ல நினைத்தாய். ஆனால் இப்போது அது பொருத்தமற்றது.” என்று சிறிதுயோசனைக்குப் பிறகு இரங்கலான தொனி யில் சொன்னார்

“வெளியுலகில் என்ன நடக்கிறதென்று இப்போது உனக்குத் தெரிந்து விட்டது. இதுவரை உன்னைப் பற்றித்தான் உனக்குத் தெரியும்!அடிப்படையில் நீ அப்பா விக் குழந்தையாகத்தான் இருந்திருக்கிறாய்,ஆனால் அடிப்படையில் நீ கொடு மையான மனிதனாகவும் இருக்கிறாய். அதனால் இதைப் புரிந்து கொள்: தண்ணீரில் மூழ்கி இறக்கும் தண்டனையை நான் உனக்கு அளிக்கிறேன்!”

அந்த அறைக்குள்ளேயே தான் துரத்தப்படுவது போல ஜார்ஜ் உணர்ந்தான். அவனுக்குப் பின்னால் அப்பா படுக்கையில் விழும் பெரும் சத்தம் காதில் கேட்க அவன் போய்விட்டான்.சாய்ந்த நிலையிலிருந்த படிக்கட்டுகளில் மோதும் வேகத்தில் அவன் இறங்கிய போது இரவிற்கு முன்பாக வீட்டைச் சுத்தம் செய்ய வந்த வேலைக்காரியைப் பார்த்தான்.

யேசுவே!”கத்திவிட்டு தன் முகத்தை துணியால் மூடிக்கொண்டாள். ஆனால் அவன் அதற்குள் அவளைக் கடந்துவிட்டான்.வெளிகேட்டைப் பாய்ந்து, திறந்து சாலையின் எதிரிலிருந்த தண்ணீரை நோக்கி ஓடினான். பசியான மனிதன் உணவை வெறியோடு பறிப்பது போல வேலியை இறுக்கிப் பிடித்தான். இளமையில் உடற்பயிற்சி வல்லுனன் போல் இருந்து பெற்றோர்களுக்கு மிகப்பெருமை சேர்த்தவன். வேலியின் அருகே வரும் மோட்டார் வண்டி கண் ணில்பட அதன் ஒலியில் தான் விழும் சப்தம் ஒடுங்கி விடும் என்ற எண் ணத்தில் தன்னுடைய பிடியை மெல்லத் தளர்த்தினான்.”அன்பான பெற்றோர் களே,நான் எப்போதும் உங்களை நேசிக்கிறவன் “என்று சொல்லிக் கொண்டே மூழ்கினான்.

பாலத்தின் மேல் அந்த நேரம் முடிவில்லாத நீண்ட போக்குவரத்து தொடர்ந்து கொண்டிருந்தது.

——

இரா.இராகுலன் கவிதைகள் ( அறிமுகப் படைப்பாளி )

images (9)

1)

அச்சுறுத்த

அதிர்ச்சியூட்ட

அலைக்கழிக்க

ஏமாற்ற

முறைத்துக்கொள்ள

தழும்புகள் தர

விலகிச் சென்றிட

திரும்பிச் சேர்ந்திட

இன்னும்

எதுவும் ஏற்படுத்திக் கொள்ள

நமக்கிடையே

நீ

நான்

வேறு யாரும் தேவையில்லை.

2)

உன் பார்வை

உன் கவனம்

உன் எண்ணம்

உன் ஞாபகங்கள்

உன் சொல்

உன் விருப்பம்

உன் பயணம்

உன் ஆயுதங்கள்

உன் நம்பிக்கை

உன் இருதயம்

உன் அன்பு என் பக்கம் இருக்கிறது

மிகக் கடினம் எவருக்கும்

என்னைக் கொல்வது

உன்னைத் தவிர.

3)

அந்த உலகில்

அப்பொழுது எவருமில்லை

என்னையும்

என் நிழலையும் தவிர

இப்பொழுதும்.

4)

அன்பைத் தேடுகிற

அன்பை உருவாக்க

அன்பை வளர்க்க

அன்பைப் பாதுகாக்க

அன்பை முறிக்க

அன்பைத் தர

அன்பைப் பெற

அன்பிற்காய் காத்திருக்கிற

மனத்திற்குள்

ஒரு நூறு

தற்கொலைகள் நிகழ்கின்றன.

5)

கூடுகளற்றும்

ஒரே ஒரு பறவையேனும்

வந்தமராத மரங்களும்

மீண்டும் விருட்சமாகாத

ஒரு மரம் செடி கொடியின்

விதைகளும்

சிறகிருந்தும்

பறக்கத் தெரியாத பறவைகளும்

விளைச்சலிற்கு

உழவே செய்யப்படாத நிலமும்

நினைவுகள் சீர்படுத்தப்படாதவனாயும் இருக்கிறோம்

ஒரு பித்தனும்

ஒரு பிச்சைக்காரனும்

ஒரு நானும்

எப்படியேனும் வாழ்ந்துவிட்டுப் போகிறோம்

எங்களுக்குத் தர நீங்கள் விரும்பும் விரும்பாத

எதையேனும் யாசகமிடுங்கள்

இடாவிடினும் நன்றிகள்.

6)

தருமனைத் துரியோதனனாகவும்

துரியோதனனைத் தருமனாகவும்

பெருந்தவவானை மோகவானாகவும்

வீரனைக் கோழையாகவும்

கோழையை வீர்னாகவும்

ஞானியைப் பித்தனாகவும்

பித்தனை ஞானியாகவும்

கடவுளைச் சாத்தானாகவும்

சாத்தானைக் கடவுளாகவுமாக்கிவிட்டிருந்தது

தனிமையின் வரமும் சாபமும்.

7)

ஒரு உலகம்

எனக்குமெனக்குமிடையில்

இங்கே நானும்

யாருமற்ற என்னுலகும்

ஒரு உலகம்

எனக்குமுனக்குமிடையில்

இங்கே நானும் நீயும்

சிலர் மட்டும் வந்து போகிறார்கள்

சிலரை மட்டும் வரவழைத்துக்கொள்கிறோம்

ஒரு உலகம்

எனக்குமுங்களுக்கிமிடையில்

இங்கே நானும் நீங்களும்

வேறெப்படி வாழ்வது

அங்குமிங்கும் இங்குமங்கும்

அலைந்து திரிந்து தங்கி வாழ்வதைத் தவிர.

8)

மாறுகிறேன்

யாருமில்லை என்னுலகில்

சாத்தானிலிருந்து கடவுளாய்

கடவுளிலிருந்து சாத்தானாய்.

9)

உனைமீறி

எதுவும் செய்ய முடியவில்லை

என்னால்

சிறு சப்தம் எழுப்பவும்

சினப்படவும்

முகம் முறைக்கவும்

ஆயுதங்கள் தூக்கவும்

படை திரட்டவும்

நேராய் யுத்தம் புரியவும்

விலகிச் செல்லவும்

எப்பொழுதும்

சமாதானமாகிவிடுகிறேன் உன்னிடம்.

எனைச் சிறியதாக்கி வைத்திருக்கிறேன்

என்னிடம்

உன்னைப் பெரியதாக்கி வைத்திருக்கிறேன்.

10)

அவர் ஆகாயத்தின்

தெரு சந்து நகரங்களிலும்

உலாவுகிறார்

யாருடனேனும் நட்பு உறவு பூண்டு

அங்கேயே இருப்பிடம் அமைத்துக்

காலம் கழிக்கிறார்

பூமியின் எந்தத் தெரு

சந்து நகரங்களிலும் உலவ முடிவதில்லை

காலியாகிப்போன நெஞ்சுகொண்டு

எவருடனும் நட்பு உறவு பூண்டு

காலம் கழிக்க முடிவதுமில்லை

பூமி வருகிறார்

இருதயத்தின் வெற்றிடம்

குறையும்போது மட்டும்.

11)

நீ எனக்கில்லை

நான் உனக்கில்லை

நீ உனக்குமில்லை

நான் எனக்குமில்லை

யாரும் யாருக்குமில்லை

எதுவும்.

12)

மண்டியிடுகிறேன்

வாய் மூடியிருக்கிறேன்

என் நிழலை ஒப்படைத்திருக்கிறேன்

தொழிலாளியாக இருக்கிறேன்

அடிமையாக வாழ்கிறேன்

என் குரலைத் தாழ்த்துகிறேன்

பொம்மையாக இருக்கிறேன்

ஆணைகளை ஏற்று நடக்கிறேன்

உங்களிடம்

சென்று பாருங்கள்

யாரும் அமர முடியாது

உங்களுக்குச் சமமான

எதிர் இருக்கையில்

என்னைத் தவிர.

13)

கடைசி வெளிச்சம்

கடைசி துளி

கடைசி வழி

கடைசி சுவாசம்

கடைசி ஆயுதம்

கடைசி நொடி

கடைசி நம்பிக்கை

கடைசி விதை

மட்டுமல்ல

என்னுலகின்

கடைசி ஜீவனும் நீ.

14)

என் நாட்களைத் தின்கிறாய்

என் பாதையை மூடுகிறாய்

என் கனவுகளை எரிக்கிறாய்

என் அமைதியில் கல்லெறிகிறாய்

என் சிறகுகளை ஒடிக்கிறாய்

என்னைச் சந்தேகிக்கிறாய்

என்னை அவமானப்படுத்துகிறாய்

என்னை நிர்வாணப்படுத்துகிறாய்

என்னைக் கொல்கிறாய் நீ வாழ

வேறு வழியில்லை என்னிடம்

உன்னைக் கொல்வதைத் தவிர.

15)

நான் புலப்படுவதில்லை

உன் கண்களுக்கு

என் குரல்கள் கேட்பதில்லை

உன் செவிகளுக்கு

என் சுவையறிந்ததில்லை

உன் நா

என் வாசம்

உன்னால் நுகரப்படுவதுமில்லை

நான்

யார் நீயெனக்கு.

•••

முகங்கள்- ஆட்டையாம்பட்டியும் பம்பாய் டைலரும். / சரவண கணேசன் ( ஆட்டையாம்பட்டி )

ஆட்டையாம்பட்டி முருக்கு

ஆட்டையாம்பட்டி முருக்கு

ஞாயிறு மாலை நானும் என் மகளும் வீட்டிலிருந்து ஒரு சிறு நடைபயிற்சிக்கு சென்ற போது ஆட்டையாம்பட்டி தின சந்தைக்கு திரும்பும் வளைவில் இருந்த முதலியார் சமூக நந்தவன கரும்பலகையில் எழுதியிருந்த செய்தி என்னை திடுக்கிட வைத்தது.

பம்பாய் டைலர் ராஜு 11.11.2017 அன்று இயற்கை எய்தினார். அந்நாரின் இறுதிச் சடங்கு ஞாயிறு 12.11.2017 அவரது இல்லத்தில் நடைபெறும்.

எனக்கு திருமணமான புதிதில் ஆடிப்பண்டிகைக்கு மனைவியின் ஜாக்கெட் தைப்பதற்தாக நானும் மனைவியும் டைலர் வீட்டிற்கு சென்றிருந்தோம். அப்போது அவர் வீட்டில் இல்லை. அவர் மனைவி எங்களை வரவேற்ற போது அந்த வீடு எனக்கு அன்னியமாகப் படவில்லை. வாடகை வீடு. பத்துக்கு பத்து அறை. இரண்டு தையல் இயந்திரங்கள். இரண்டாகப் பிரிக்க வைத்திருந்த ஒரு இரும்ப அலமாரியில் பெண்களின் துணிகள் தைப்பதற்காக காத்திருந்தது. சிறிய கருப்பு வெள்ளை தொலைக்காட்சிப் பெட்டியில் பழைய தமிழ்ப்படம் ஓடிக்கொண்டிருந்தது. மதியம் வைத்திருந்த கறிக் குழம்பின் மணத்தோடு ஒன்று இரண்டு தட்டு முட்டு சாமான்கள். பார்த்துக்கொண்டிருக்கும் போதே மிதிவண்டியை வாசலில் நிறுத்துகிற சத்தம். தொடர்ந்து ஒல்லியான தேகத்துடன் வெள்ளை வேட்டி சட்டையில் ஒருவர் நுழைந்தார்.

வாம்மா பொண்ணு.. கல்யாணம் நல்லா முடிஞ்சுதா.. வாங்க தம்பி என எனைப் பார்த்து வணங்கினார். மனைவியைப் பார்த்து ஏம்மா மாப்பிள்ளைக்கு ஏதாவது பலகாரம் காப்பி குடுத்தியா.. இதோ என கிளம்பிப் போனாள் அவர் மனைவி.

பிழைப்புக்காக வெளியூர் சென்று பெரும்பாலும் வெறும் கையுடன் சொந்த ஊர் திரும்பி வாழ்க்கையை ஆரம்பிப்பவர்களின் வருத்தமான முகமாக காட்சி அளித்தது அவர் முகம். நான் கோவைத் தமிழில் மிகுந்த மரியாதையுடன் பேசியது அவருக்கு மகிழ்ச்சி அளித்தது அவர் நடவடிக்கையில் காண முடிந்தது. கம்பத்து கடை பக்கோடா மற்றும் காப்பியுடன் முடிந்தது எங்களது சந்திப்பு.

இரண்டாவது முறை அவரை சந்தித்து பேசிக்கொண்டிருந்தது சென்னையிலிருந்து ஒரு பெண்மணி தைப்பதற்;காக 20 ஜாக்கெட் துணியோடு வந்திருந்தார். அண்ணா சென்னையில் பலரிடம் தைத்துப் பார்த்துவிட்டேன். திருப்தி தரவில்லை. ஒரு லேடி டைலர் அளவெடுத்து தைத்தார்¸ ஆனால் நீங்கள் தைப்பதைப்போல ஜாக்கெட்டின் முன் ஸ்டார் அமைப்பு கச்சிதமாக வரவில்லை எனச் சொன்னார். அவர் முகத்தில் உதட்டோரம் வந்த புன்னகையின் கம்பீரம் தெரிந்தது. ஆனால் அன்று என் மனைவிக்கான ஜாக்கெட் ரெடியாகவில்லை. தம்பி அடுத்த வாரம் தைத்து விடுவதாக பொண்ணுகிட்டே சொல்லுங்க என்றார். அவர் மனைவி உடல் நலமில்லாமல் கட்டிலில் படுத்திருந்தார்.

ஏன் மனைவிக்கு அவருக்கும் ஏதோ பிணக்கு நேர்ந்திருக்க வேண்டும். அவள் அவரிடன் கொடுத்த துணிகளை வாங்கி வந்திருந்தாள். ஒரு நாள் காலை நான் நடைப்பயிற்சிக்கு சென்று வந்து கொண்டிருந்த போது ஒரு சைக்கிள் என்னருகே வந்தது. டைலர் அதிலிருந்து இறங்கிய தம்பி பாப்பா போன வாரம் வந்து எங்கிட்டே கொடுத்த துணியை திருப்பி வாங்கிட்டா. கொஞ்சம் சத்தம் போட்டாப்பல. எம் பொண்ணு மாதிரி.. அவளுக்கு முதல் ஜாக்கெட்டிலிருந்து நான் தான் தைக்கிறேன். கொஞ்சம் முடியலையப்பா.. கவலையுடன் சைக்கிள் ஏறிப் போனார்.

சேலம் சுகவனேஸ்வர் கோயில் அருகில் நம்பர் ஒன் ஆக இருக்கும் டைலர் ஒருவரை சந்தித்து¸ பம்பாய் டைலர் தைத்த ஒரு ஜாக்கெட்டைக் காட்டி இது போல தைத்து தரமுடியுமா என்றேன். அவர் அந்தத் துணியில் இருந்த இரட்டைத்தையல் கொண்ட அமைப்பை பார்த்துவிட்டு சார் இதெல்லாம் பொம்பளைங்க தைக்கிற ஜாக்கெட்.

இல்லை இது ஒரு ஆண் டைலர் தைத்தது தான்.

என்ன சார் இவ்வளவு வருசமா ஜாக்கெட் தை;க்கிறேன் எனக்கு தெரியாதா.. காலையிலே பொய் சொல்ல வந்துட்டாங்க.. சார் இது மாதிரியெல்லாம் எங்களால் தைக்க முடியாது. இந்த கட்டிங் ஸ்டைல் அளவு எடுத்து தைச்ச மாதிரி இருக்கு. என்னால் முடியாது. துணியை திரும்பிக் கொடுத்துவிட்டார்.

உடன் வந்த என் மனைவி சிரித்தாள். பம்பாய் டைலர் மாதிரி ஒரு சிறந்த தையற் கலைஞனை காண முடியாது. ஒரு பெண்ணை பார்த்த மாத்திரத்தில் அவளுக்கு சரியாகப் பொருந்துகிற மேலாடையை அவரால் தைக்க முடியும். அவர் அதிகமாக பேசுவது ஏம் பாப்பா கம்மாங்கட்டைய கொஞ்சம் அட்சஸ்ட் செய்தால் சரியா வந்திரும் ஜாக்கெட் என்பார். நானும் சேலத்தில் ஒன்று இரண்டு டைலரிடம் கொடுத்துப் பார்த்தேன் மனைவிக்கு சரியாக அமையவில்லை.

அந்த வருட தீபாவளிக்கு முன்பாக டைலருக்கு இனிப்பு காரம் வாங்கிக் கொண்டு அவரை இல்லத்தில் சந்தித்தேன். இந்த முறை வாடகை வீட்டை மாத்தியிருந்தார். கூடுதலாக மெத்தை தைக்கும் வேலைக்கு செல்ல ஆரம்பித்திருந்தார். அந்த அக்காவின் உடல் நிலையும் மோசமாக இருந்தது. இனிப்பை பெற்றுக் கொண்ட அந்த அக்கா ஏண்ணா.. இப்பெல்லாம் பாப்பா கட்டியிருக்கிற கோயமுத்தூர் புடவை நல்லாயிருக்கு..இந்த தீபாவளிக்கு எனக்கொன்னு வாங்கித்தாங்க என்றார். மிகுந்த சந்தோசமாக இருந்தது. அடுத்த முறை கோவையில் வாங்கிய அவர் சொன்ன வண்ணப்புடவை ஒன்றை பரிசாக தந்தோம். அதன் பிறகு என் மனைவியும் டைலரும் சமாதானம் ஆனார்கள். அடுத்தடுத்து துணி தைப்பதற்காக சென்ற போது அவரிடம் சில முறை நீண்ட நேரம் பேச வாய்ப்பு கிடைத்தது.

ஆரம்பத்தில் பெற்றோர்களுடன் சேலத்தில் வசித்துவந்த அவர் சின்னச் சின்ன வேலைகளை செய்து வந்திருக்கிறார். எதிலும் நீதி நேர்மை என உரிமையைப் பெறுவதற்காக சண்;டைக்கு செல்லும் தன் மகன் போக்கிரி ஆகிவிடுவானோ எனப் பயந்த பெற்றோர் திருமணம் செய்திருந்த அவரை வேலைக்காக பம்பாய்க்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். பம்பாய் சென்ற அவர் மனதுக்கு பிடிக்காத வேலை செய்ய பிடிக்காமல் பாலிவுட் துணை நடிகைகளுக்கு ஜாக்கெட் தைப்பவரிடம் உதவியாளராக 15 வருடங்களுக்கு மேலாக வேலை பாத்திருக்கிறார். சம்பாதித்ததை எல்லாம் தன் அன்பு மனைவியுடன் சந்தோசமாக வாழ்ந்திருக்கிறார். சேமிப்பு இல்லாத வெள்ளேந்தியான வாழ்க்கை. பிறகு பம்பாயில் வாழப்பிடிக்காமல் ஆட்டையாம்பட்டி வந்து டைலர் தொழிலை ஆரம்பிக்க அவருடன் ஒட்டிக்கொண்டது பம்பாய் டைலர்.

மனைவியின் உடல் நலம் கெட கெட அவரின் மனம் உடைந்து கவனம் மாறியது. முன்னைப் போல் அவரால் உட்கார்ந்து தைக்க முடியவில்லை. மருந்துகள் வாங்கும் பொருட்டு தைப்பதற்கு முன்பாகவே கூலியை வாங்க ஆரம்பித்தார். ஆனால் குறித்த நேரத்தில் தைக்க முடியவில்லை. தீபாவளிக்கு கொடுத்த துணியை பொங்கலுக்கு கூட தர முடியவில்லை. ஆனால் பள்ளி செல்லும் சிறுவர்களுக்கான சட்டை டிராயரை உடனே தைத்து தருவதை உடனிருந்து பார்த்திருக்கிறேன். குழந்தைகள் இல்லை. மனைவியே உலகம் என வாழ்ந்தவருக்கு மனைவி மரணத்ததை நோக்கி பயணிப்பதைக் கண்டு மிகுந்த கவலை அடைந்தார். வெண்ணந்தூர் அரசு மருத்துவமனை வைத்தியம். பெரும்பாலும் இலவம் பஞ்சு மெத்தை அடைக்கும் வேலை. தையல் இயந்திரங்கள் பழுது பார்க்கும் வேலை என எளிதாக பணம் சாம்பாரிக்கும் வேலைக்கு ஓடினார்.

மனைவியின் உடல் நலம் மிகவும் மோசமாக ஒரு நாள் அவரை சேலம் அரசு மருத்துவமனைக்கு ஆம்பூலன்சில் எடுத்துச் சென்றார். ஒரு நாள் முழுக்க படுக்கை தராமல் வரண்டாவில் கீழேயே போட்டு வைத்திருந்திருக்கிறார்கள். கோபமடைந்த டைலர் கூட்டமாக இருந்த நோயாளிகளைத் தாண்டி தலைமை மருத்துவரைப் பார்த்து சத்தமாக நியாயம் கேட்டிருக்கிறார். சிங்கமாக கர்ஜித்த அவரது குரல் அவரின் இளமைக் காலத்து நண்பர்களை திரட்டிக் கொடுத்திருக்கிறது. மனைவிக்கு சரியான சிகிச்சை கிடைத்து வீடு திரும்பினார். ஆனால் கொஞ்ச நாள் கூட வாழவில்லை. மனைவி மரணம் அடைந்தார்.

தம்பி புண்ணியம் செஞ்சவ முன்னாடி போயிட்டா. விரக்தியில் பேசினார். அவரைப் போல் மனைவியை நேசித்தவரைப் பார்க்க முடியாது. அன்னியோன்யமான தம்பதிகள். மாரியம்மன் கோவிலுக்கு முன் இருந்த சிற்றுண்டிச் சாலையில் இட்லி அவரின் பெரும்பாலான உணவாக இருந்தது. ஒரு முறை வீட்டிலிருந்து பிரியாணி கொடுத்தோம். மகிந்தார். அதற்க்குப்பிறகு என் மனைவிக்கு சில ஜாக்கெட் தெய்த்துக் கொடுத்தார். வீடு தேடி வந்து துணியை வாங்கிக் கொண்டு பேசிச் செல்வார். தனியாக கவலையுடன் இருப்பவனை மதுக்கடை போல அணைத்துக்கொள்வார் யாருமில்லை. மதுக்கடைக்கு வாடிக்கையாளர் ஆனார். துணி தைக்கும் வாடிக்கையாளர்கள் குறைந்து போனார்கள்.

ஓவியர் ஐPவா இரண்டாவது முறை ஆட்டையாம்பட்டிக்கு வந்த போது டைலரை சந்திக்க முயற்சி செய்தேன். ஆனால் அவர் மெத்தை தைக்கும் சென்று விட்டாக சொன்னார்கள். பம்பாய் குறித்து 20 வருட அனுபவமும் நிறைய தகவல்களும் அவரிடம் இருந்தது. வர்தா பாய் வரதராஜ் முதலியார் ஆட்களுடன் வேலையை செய்திருக்கிறார். எப்போது சென்றாலும் வயிறு நிறைய உணவும் கைநிறைய பணமும் தருவார் என பம்பாய் நாயகனைப் பற்றி கூறியிருக்கிறார். ஆட்டையாம்பட்டி மாமுண்டியை சேர்ந்த ஒருவர் கூட பம்பாயில் சிறப்பாக வாழ்கிறார் எனச் சொல்லியிருக்கிறார்.

டைலரின் வாடிக்கையாளர் பெரியவர் முன்னாள் சொசைட்டி செயலாளரை கேட்ட போது.. சார் 15 நாளா உடம்பு சரியில்லாம இருந்தான். நான் கூட போய் பார்த்தேன். தொண்டை¸ உணவுக் குழாய்¸ வயிறு எல்லாம் ஒரே எரிச்சலா இருக்குன்னான். ஓவரா பீடி குடிப்பாப்பல. அவ்வளவுதாண்ணா இனி தையல் வேலை பார்க்க முடியாதுன்னு சன்னமா பேசினான். அப்புறம் செத்துப் போயிட்டான்னு சேதி வந்திச்சு. அருமையான டைலர் சார். எனக்கு சட்டை தைக்க குடுத்த ஓரே நாளு உடனே தைச்சு குடுத்துருவான். என்ன கொஞ்சம் லொல்லு பேசுவான். ஜாக்கெட் அருமையான தைப்பான் சார். இனி ஆட்டையாம்பட்டி பொம்பளைக்கு ஜாக்கெட் தைக்க நல்ல டைலர் இல்லை.

அவர் லொல்லு என்று சொன்னது டைலரிடம் இருந்த உரிமைக்காக போராடும் போர்க்குணம் தான். தையல் கலைஞன் என்றாலும் அவர் உரிமையை ஒரு நாளும் விட்டுக் கொடுக்கமாட்டார். தைக்க முடியலை இப்ப என்னாங்குறே வேண்டாம்னா இந்தா துணி எடுத்துப்போங்க. .பல் இளிக்கும் வேலை ஒரு நாளும் அவரிடம் இல்லை. பொது இடங்களில் சாதரண மனிதர்களின் உரிமைக்கு குரல் கொடுக்கும் நபராகவே வாழ்ந்தார்.

நியாய விலைக்கடைக்கு ஒட்டிய ஒரு சிறு சந்தில் அவர் வீட்டு வாசலில் சைக்கிள் இருந்தால் அவர் உள்ளே தைத்துக்கொண்டு இருப்பார். இன்று சைக்கிள் இருக்கிறது அவர் இல்லை. பம்பாய் டைலர் ராஜூவின் மரணச் செய்தியை ஒரு நாள் முன்பு பார்த்திருந்தால் தம்பி என அன்போடு அழைத்தவரின் முகத்தை கடைசியாக ஓரு முறை பார்த்திருக்கலாம். அடித்தட்டு மக்களின் உரிமைக்காக தைரியமாக குரல் கொடுத்த ஒரு தையல் கலைஞரை ஆட்டையாம்பட்டி இழந்திருக்கிறது.

••••

வே.தினகரன் ( அறிமுகப் படைப்பாளி )- இலஙகை

download (14)

1.
தன்

நான்கு குழந்தைக்குமான

புத்தாடைகளுக்காக

தெருவில் விரிந்த அங்காடிக்கடைகளின்

ஏளன கூவல்களிடையே ஏறி

இறங்கி
‘ புத்தாடை பொதியோடு’ “அப்பாடா”என்று வீடுவந்து சேர்ந்த போதுதான்

அம்மா எழுந்துவந்து கதவைத்திறந்தாள்.

அவன் குழந்தையாக

இருந்தபோது

எத்தனையோ தீபாவளிகளை இப்படித்தான்

கடந்திருக்கிறாள்.
தன் பிள்ளை

நாட்கூலியாவான் என அவள் நினைத்தாளா என்ன..

2.

காற்றுக்கு காத்திருந்த

களைத்தவனின் முகத்தைக்

கடந்து போயிருந்தது

காலத்தின் கொலைவாள்.

அந்த தேர்தல் முடிந்திருந்தது.

•••••••

சைலபதியின் நாவலிலிருந்து

சைலபதி

சைலபதி

சைலபதி எழுதிக்கொண்டிருக்கும் நாவலின் ஒரு பகுதி . 2018 சென்னைப் புத்தகக் காட்சிக்கு வெளிவருகிறது
•••

பிரமோத் சட்டையைக் கழற்றித் தன் கேபினில் உலரவைத்துவிட்டு அவசரத்துக்கு வைத்திருக்கும் டி சர்டொன்றைத் தன் அலமாரியில் இருந்து எடுத்துப் போட்டுக்கொண்டான். மின்சாரம் இல்லாததால் ஏசி ஓடவில்லை. ஆனபோதும் அறை அதிக சில்லிட்டிருந்தது. புண்ணியத்திற்குக் காப்பி மேக்கரில் பவர் இருந்தது. ஜென்செட்டாய் இருக்கலாம். வழக்கமான கருப்புக் காப்பியைப் பிடித்துக்கொண்டு அந்த ஹாலின் ஓரத்தின் கண்ணாடி அருகே நகர்ந்து வெளியே சாலையைப் பார்த்தார்ன். சாலை என்ற ஒன்று அங்கு இல்லை. நடுவில் இருக்கும் கான்கிரீட் தடுப்புகள் மறைந்துபோகும் அளவுக்குத் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. நடுவில் உயர்ந்து நிற்கும் விளக்குக் கம்பங்கள் மட்டும் இல்லை என்றால் சாலையின் மய்யத்தைக் கணிக்கமுடியாது. வாகனங்கள் எதுவும் இல்லை. வந்தால் கார்கள்கூட நிச்சயம் நின்றுவிடும். லாரிகள் அல்லது பேருந்துகள் நிறுத்தாமல் ஓட்டமுடிந்தால் கடந்துவிடலாம். ஓரிருவர் வண்டியைத் தள்ளிக்கொண்டு போனார்கள். சற்றுமுன் பிரமோத் தள்ளிக்கொண்டு வந்ததைப் போல.

பிரமோத் காலை ஒன்பதுமணிக்கு சைதாப்பேட்டையில் கிளம்பி மதியம் பன்னிரெண்டு மணிக்கு ராமாபுரம் வந்து சேர்ந்தான். கிண்டியைத் தாண்டியதும் அவனுக்கு மூச்சே முட்டிவிட்டது. நந்தம்பாக்கம் திடல் அருகே ஓடிய ஆற்றின் வேகம் அவனால் சமாளிக்க முடியாதிருந்தது. நடக்கும் மக்கள் ஒருவரை ஒருவர் கரம்பற்றிக்கொண்டுதான் நடந்தார்கள். கொஞ்சம் அசந்தாலும் கீழே தள்ளிவிடும் வேகம். பிரமோத்துக்கு அது மழையில் பெருகும் வெள்ளம் மட்டும் அல்ல என்று தோன்றியது.

இது ஒரு நதியின் வழிதானோ என்று நினைத்தான். வரும் வழியில் இப்படி ஓடிவரும் நதி வழிகள் என்று குறைந்தது மூன்று நான்கு நீர்ப்பாதைகளைச் சொல்லலாம். அப்படியானால் சென்னையில் ஒருகாலத்தில் ஓடிய நதிகள் தான் மொத்தம் எத்தனை. இதெல்லாம் எப்படி தூர்ந்துபோனது. எப்படி மொத்த நிலமும் கட்டிடக் காடுகள் ஆனது. மனிதன் ஏன் நிலங்களின் மேல் இத்தனை பிரியமுள்ளவனாய் இருக்கிறான். இந்தப் பிரபஞ்சத்தில் நீர் விட்டுக்கொடுத்த பிச்சைத் துண்டு அல்லவா இந்த நிலம். அதனுடைய இடத்தில் இருந்துகொண்டே அதன் வழிகளைக் களவாடுவது எப்படி. ஏன் மனிதர்கள் உண்டவீட்டிற்கு இரண்டகம் நினைக்கிறார்கள். ஒரே தாவலில் மொத்த நிலத்தையும் தன் வயிறுக்குள் சுருட்டிக்கொள்ளும் வல்லமை கொண்டதல்லவா நீர். ஆனாலும் மனிதன் நிலத்தை அவ்வளவு மோகிக்கிறான். வலிமையுள்ளவன் கையகப்படுத்துகிறான். வசதியுள்ளவன் அதை வாங்கிக்கொள்கிறான். அதில் தங்களின் பேராசையைக் கட்டி எழுப்புகிறார்கள். பேராசைகள் தான் இந்த நிலமெங்கும் பெரும் கட்டிடங்களாகி விட்டன. பாருங்கள் இந்த நதிகூட அந்தக் கட்டிடங்களில் மோதி அவைகளை ஒன்றும் செய்யாது அதற்கு அண்மையாய் ஓடி இந்த நிலத்தை வாழவும், உழவும், தொழவும், வீழவும் மட்டுமே பயன்படுத்துகிற சனங்களின் குடிசைகளைத் தான் குலைத்து உருட்டிக்கொண்டு போகிறது. அடுக்குமாடிகளின் மீதிருந்து தரையில் நுரைகொப்பளிக்க ஓடும் நதியைப் பார்ப்பது கூட ஓர் அழகான காட்சிதான். ஆனால் அதில் உருண்டு ஓடும் உயிர்களின் உடமைகளின் வழியும் இரத்தம் பற்றி யாருக்கு என்ன கவலை.

பிரமோத் காப்பியைக் காலிசெய்ததும் கொஞ்சம் ஆசுவாசமடைந்தான். வந்து அவன் இருக்கையில் அமர்ந்துகொண்டான். செல்போனை நோண்டினான். இணையம் வேலை செய்யவில்லை. அலுவலக கம்பியூட்டரிலும் இணையம் வேலைசெய்யவில்லை. ஏன் என்றுகேட்டபோது மோடம் இருக்கும் தளத்தில் உள்ள பேட்டரிகள் ஏற்கனவே செத்துவிட்டன என்றார்கள். அவனுக்கு கொடுமையாக இருந்தது. வீட்டிலேயே இருந்திருக்கலாம். அவ்வப்போது அலைபேசியின் சிக்னல் வரும். அப்பொழுது ஒரு கணம் முகநூலில் ஓடி வெளிவரலாம். அதெல்லாம் இப்பொழுது சர்வ நிச்சயமாய் முடியாது. லாவண்யா இன்று வாழ்த்தியிருப்பாளா. சொன்னதுபோல அவளின் புகைப்படத்தை ஏற்றியிருப்பாளா. அவள் எப்படி இருப்பாள். சரி எப்படி இருந்தால் தான் என்ன அவள் என்னவள் என்று ஆகிவிட்டாள். காதலைச் சொன்னால் என்ன செய்வாள். வெறுப்பாளா, திட்டுவாளா அல்லது என் மூஞ்சிலேயே முழிக்காதே என்று பிளாக் செய்துவிடுவாளா. செய்யட்டுமே எதில் என்ன இருக்கிறது. அது அவள் உரிமை. ஆனால் ஏன் அப்படி எல்லாம் நினைக்க வேண்டும். கொஞ்சம் பாசிட்டிவ் ஆக நினைக்கலாம். அவள் இன்று தன் புகைப்படத்தை வலை ஏற்றினால் அவள் என் காதலை ஏற்பாள் என்று யூக்கிக்கலாம்.

பிரமோத்துக்கு இருப்பே கொள்ளவில்லை. அங்கும் இங்கும் நடந்து பார்த்தான். அலுவலகத்தில் பெரும்பாலானவர்கள் வரவில்லை. வந்த எல்லோருக்கும் ஏனடா வந்தோம் என்கிற மனநிலை தான். பிரமோத ஒருகட்டத்தைல் வெறுப்பாகித் தன் இருக்கையில் அமர்ந்து கொஞ்ச நேரத்தில் உறங்கிவிட்டான். நண்பன் ஒருவன் வந்து தொட்டு எழுப்புகிறபோது மணி மூன்றாகியிருந்தது.

“ஏண்டா இங்க ஒரு போரே நடந்துகிட்டு இருக்கு நீ என்னடான்னா தூங்கிக்கிட்டு இருக்க, கெட் அப் மேன்”

பிரமோத் அதிர்ந்து விழித்தான்.

“வாட் ஹாப்பெண்ட் பையா”

“நல்லா கேளு, நம்ம கம்பெனிக்குப் பின்னாடி இருக்கிற ஏரியா பையாஸ் எல்லாம் சேர்ந்து நம்ம கம்பெனி சுவத்த இடைச்சுட்டாங்க பையா. சோ தண்ணி உள்ள ஒரு ஆறாட்டாம் ஓடிக்கிட்டு இருக்கு வந்து பாரு”

பிரமோத் எழுந்து வந்தான். நண்பன் காட்டிய இடம் பில்டிங் இருந்த இடத்திலிருந்து கொஞ்சம் தொலைவில் குறைந்தது ஒரு 500 மீட்டர் தொலைவில் தண்ணீர் சலசலத்து ஓடிக்கொண்டிருந்தது. தூரத்தில் இருந்து பார்க்க ஒரு பெரிய நீரோடை போல இருந்தது. பிரமோத்துக்கு உறக்கம் கலைந்து உற்சாகம் தொற்றிக்கொண்டது. கடகடவென்று கீழே இறங்கி ஓடினான். படிக்கட்டுக்கள் வழுக்கின. ஆனாலும் நில்லாமல் ஓடித் தரைத் தளம் வந்தான். அங்கு ஒரே பதட்டமாக இருந்தது. செக்யூரிட்டிகள் கூட்டமாகக் கூடிப் பேசிக்கொண்டிருந்தார்கள். மழை வெழுத்து வாங்கிக்கொண்டிருந்தது. நனைவதைப் பற்றியெல்லாம் கவலைப் படாமல் கட்டிடத்துக்குப் பின்பக்கமாக நடந்தான். குறைந்தது அரைக் கிலோமீட்டருக்கும் மேலான தொலைவில் சுவர் எழுந்து நின்றது. சுவரின் ஒரு பகுதி உடைக்கப்பட்டு ஒரு பெரிய துளை உருவாக்கப்பட்டிருந்தது. அந்தத் துளையின் ஊடாக நீர் பாய்ந்து வந்துகொண்டிருந்தது.

சென்னையில் தரிசனம் தரும் மற்றுமொரு நதி. சென்னையில் பார்க்குமிட மெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கிறதே இந்த நதிகள். அடைபட்ட பாட்டிலின் மூடியைத் திறந்ததும் வெளியேறிப் பெருத்து நிற்கும் பூதம் இந்த நதிகள். சின்ன சீசாவுக்குள் எப்படி இவ்வளவு பூதங்கள். மந்திரக்காரனின் கட்டுகள் அவிழ்ந்துகொண்ட பிசாசுகளின் வேகம் இந்த நீரின் பாய்ச்சலில் இருக்கிறது. இது தனக்கு எதிர்ப்படுகிறவனில் நல்லவன் கெட்டவன் எல்லாம் பார்க்காமல் அறைந்து இழுத்துச் செல்கிறது.

பிரமோத் இந்த முறை ‘மா கங்கா’ என வில்லை. இது ‘மா’ தான் ஆனால் தன் மார்பினை ஊட்டி உயிர்காக்கும் ‘கங்கா’ இல்லை. தன் ஆங்கார ரூபத்தில் நாவினை நீட்டிக்காட்டி குருதி கேட்கும் மாகாளி. இதைக் கண்டு, தொழுது கொள்வதுபோலவே கொஞ்சம் அஞ்சவும் தான் வேண்டியிருக்கிறது.

பிரமோத் நடப்பதை நிறுத்திக்கொண்டான்.

அங்கு ஒரு செக்யூரிட்டி வந்துகொண்டிருந்தான்.

“கியா குவா பையா, கூ டிட் திஸ்”

“சார், தெர்ல சார், பின்னாடி ஏரியா ஜனங்கோன்றாங்க, அவங்க ஊட்டுக்குள்ளாற தண்ணி பூந்துகிச்சுன்னு சுவத்த இடிச்சிட்டுக்கிறாங்க. விசாரிச்சாத்தான் தெரியும்”

“ஒகே, ஒகே, யூ பிரம் தட் ஏரியா?”

“நோ, சார் , நான் இன்னும் தூரம்.” என்றான் படபடப்பாக.

“ஹரே பையா கூல், ஐ ஜஸ்ட் ஆஸ்கிடு. வாட் இஸ் யுவர் நேம்”

“கோபால் சார்” என்று வெட்கத்தோடு சொல்லிவிட்டு நகர்ந்தான்.

*

தண்ணீர் ஓட்டத்தை எல்லோரும் கவனிக்க ஆரம்பித்தார்கள். சுவர் வழி ஓடும் நீர் ஒன்றும் கொஞ்சம் குறைந்திருந்தது. சலசலக்கும் சிறு ஓடை அவ்வளவுதான். மழை மீண்டும் பிடித்துக்கொண்டது. இப்பொழுதும் அது அப்படியே ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் பிரச்சனை வேறு திசையில் இருந்து வந்தது.

மழையில் சாலையில் ஓடும் நீரின் அளவு அதிகமாகி அது இப்பொழுது வாசல் வழியாக உள்ளே நுழைந்துகொண்டிருந்தது. வாசல் வரைதான் உயரம். அதைக் கடந்துவிட்டால் பள்ளம். குதிக்கும் தண்ணீருக்கு அதைவிட வேறு என்ன வேண்டும். நீர் வேக வேகமாக ஓடி வந்து வளாகத்துக்குள் பரவிப் படர்ந்தது. சில நிமிடங்களில் அது வேகமெடுத்து கட்டிடத்து அருகில் பெருகியது. துறத்தும் பகைக்குத் தப்ப புதிய வழிகளைக் கண்டுபிடிக்கும் கள்வனின் அவசரம் அதில் இருந்தது. கட்டிடத்தின் முன்புறமாக சறுக்குகளில் தொடங்கும் கீழ்த்தளப் பார்க்கிங் ஏரியாவினைக் கண்டுகொண்டு அதனுள் பாயத் தொடங்கியது.

ஒரு நீண்ட சருக்கிற்குப் பின் முதல் கீழ்த்தளம் அதனில் இருந்து வளைந்து மற்றுமொரு சருக்கினைத் தொடர்ந்து விரியும் அடுத்த தளம். அதனின்றும் வளைந்து இறங்கி ஓடும் சருக்கு நிற்கும் இடம் மூன்றாம் கீழ்த்தளம். முதல் கீழ்த் தளத்தில் இரு சக்கர வாகனங்கள் நிற்கும். இன்று அதிகம் இல்லை. ஒன்றிரண்டு. தண்ணீர் ஓடும் வேகத்தில் சரிவில் பாய்வதுபோக மீதம் அத்தளத்திலும் பாய்ந்து மேடான பகுதிகளில் நிற்கத் தொடங்கியது. ஆனாலும் பெரும்பாலான நீர் மூன்றாம் கீழ்த்தளம் பி3 யை நிறைக்கத் தொடங்கியது. ஏற்கனவே நான்கில் மூன்று நின்று போக ஒரே ஜென்செட் ஓடிக் கொண்டிருந்தது. அது வெளியேற்றும் நீரின் வேகத்தை விட வந்து சேரும் நீரின் வேகம் மிகையாக இருந்தது. பி3 இல் இருந்த கார்களில் சில விலையுயர்ந்த கார்கள். சில நிறுவனங்களின் எம். டி போன்றவர்களின் கார்கள். தேவைக்கு மட்டுமே அவை எடுக்கப்படும். நீர் மட்டம் இப்பொழுது டயரை மூழ்கடித்துவிட்டது. உடனடியாக மற்ற ஜென்செட்களும் ஓடவில்லை என்றால் நிச்சயம் அவை சீக்கிரம் மூழ்கிவிடலாம்.

கோபாலுக்கு ஒரு யோசனை தோன்றியது. அங்கிருந்த வேன் ஒன்றிலிருந்து டீசலை எடுத்துப் பயன்படுத்தலாம் என்றான். எல்லோருக்கும் அப்படி ஒரு மகிழ்ச்சி. முதலில் வேனில் இருந்து ஒரு கேன் டீசலை எடுத்தார்கள். இப்பொழுது மற்றுமொரு ஜென்செட் வேலை செய்தது. இதே யோசனையைக் கார்களுக்கும் பயன்படுத்தினால் என்ன என்று தோன்ற ஊழியர்களை அழைத்துவர இருக்கும் டீசல்கார்கள் ஒன்றிரண்டு அங்கு இருந்தது. அதிலிருந்தும் டீசலை எடுத்து மீதமிருந்த ஜென்செட்டையும் ஓடவிட்டார்கள். நான்கு ஜென்செட்களும் சேர்ந்து மழைக்கு சவால் விட்டுக்கொண்டிருந்தன. மழை பெய்து தண்ணீர் வந்துகொண்டிருந்த போதும் மூழ்கியிருந்த டயர்கள் தெரிய ஆரம்பித்தன. இன்னும் கொஞ்ச நேரத்தில் நிலைமை கட்டுக்குள் வந்துவிடும் போல இருந்தது.

*

பிரமோத் பேசாமல் வீட்டுக்கு நடந்தே போய்விடலாமா என்று நினைத்தான். ஆனால் அது அத்தனை பாதுகாப்பானதல்ல என்றும் தோன்றியது. அலுவலகக் கேண்டீனில் கடும் டீயும் பிரெட் சாண்விட்சும் தவிர வேறு கிடைக்கவில்லை. டோஸ்ட் செய்யாத மென்னையைப் பிடிக்கும் காய்ந்த் சாண்விட்சுகள். ஆனாலும் பசிக்கு வேறு என்ன செய்வது. அதைத் தின்று பசியாறினான். மீண்டும் கேபின் திரும்பியபோது இருட்டியிருந்தது. அலுவலகத்தில் இருந்து வெளியில் பார்க்க எதுவும் தெரியவில்லை. குளிர்காய்ச்சல் காரணுக்கு காதுவரைக்கும் மூடிவிடுவதைப்போல இருள் நகரத்தை மூடிவிட்டிருந்தது. நேரம் தெரிந்து கொள்ள முடியாத இருள். அலுவலகத்திலும் ஒரு தளத்திற்கு ஒன்றிரண்டு விளக்குகளுக்கு மேல் இல்லை.

வெளியே மழை நன்கு பிடித்துக்கொண்டதும் பிரமோத்திற்குள் மீண்டும் லாவண்யாவின் நினைவுகள் தூற ஆரம்பித்தன. ஒரு ஜடம் போல உறைந்துபோயிருந்த மொபலை மீண்டும் உருட்டிக்கொண்டான். அது நாடிபிடித்துப் பார்ப்பதைப்போல அதில் எண்களை அமுக்கினான். நோ நெட்வொர்க் என்றது. அட போங்கடா என்றிருந்தது. கேபினின் தடுப்பை எட்டி உதைத்தான். கால் வலித்தது. அதை அப்பொழுது உள்ளே வந்த நண்பன் ஒருவன் பார்த்துவிட்டான்.

“ஹரே தும் ஹியா கர்ரே, என்னப்பா ஆச்சு, வாட் இஸ்யுவர் பிராபளம்”

பிரமோத்துக்கு நாணமாக இருந்தது. சிரித்தான்.

“நத்திங் யார், அதான் பிராபளம். இதோ திஸ் மொபல், நோ சிக்னல், நோ இண்டெர்நெட், ஐ நீடு டொ டாக்டு சீ சம் மெசேஜ். பட் குட்நாட். டெல் மீ கோபம் வராதா”

“அட இதுதானா உன் பிரச்சனை. மீ டூ ஹடு டு மேக் அ கால். ஐ வெண்ட் பேஸ்மெண்ட் 1, தேர் ஒன்லி சர்வர் ரூம். ஸ்டில் தெ மோடம் சர்வர் ஸ் வொர்க்கிங். இட் ஹஸ் அ யூனிக் பேட்டரி. பட் தெ டிரான்ஸ்மீட்டர் டோண்ட் ஹவ் கரெண்ட். அரௌண்ட் 10 மீட்டர்ஸ் நெட் இச் வொர்க்கிங். மீ டு மேட் அ வாட்சப்கால். வொய் டோண்ட் யு கோ அண்ட் ட்ரை யுவர் லக்” (இதுதான் உன் பிரச்சனையா. எனக்குக் கூட ஒரு கால் பண்ண வேண்டியிருந்தது. கீழ்த்தளம் ஒன்றிற்குப் போனேன். அங்குதான் சர்வர் உள்ளது. உனக்குத் தெரியுமா, இப்பொழுதும் சர்வர் வேலை செய்கிறது. அதற்கென்று நீடித்துளைக்கும் பேட்டரியோடு பொருத்தப் பட்டிருக்கிறது. அதனோடு இணையும் டிரான்ஸ்மீட்டர் செயல்படத்தான் மின் இணைப்பு இல்லை. அதனால் சர்வரைச் சுற்றி பத்துமீட்டருக்கு இன்னும் இணையம் வேலைசெய்கிறது. நான் வீட்டுக்கு வாட்சப் கால் பேசிவிட்டுத்தான் வருகிறேன். வேண்டுமானால் நீ ஒன்று செய். நீ போய் உன் அதிர்ஷ்டத்தை சோதித்துத்தான் பாரேன்)

பிரமோத் பரபரத்தான், “ரியலி, ஓ ஷிட். யூ ஷுட் கவ் டோல்ட் மீ எர்லியர்” என்று சொல்லிவிட்டு கீழ்த்தளம் நோக்கி ஓட்டமும் நடையுமாகச் சென்றான்.

*

“ஹலோ, ஆதி கேசவன் நான் பேசுறது கேக்குதா, எங்க இருகீங்க, உங்க போன் ரொம்ப நேரமாப் போகவேயில்லை, ஹலோ ஹலோ”

“டிஜே, கேக்குது டிஜே, இங்க செம மழை. அதோட சத்தம் தான் அதிகமா இருக்கு. நான் செம்பரம்பாக்கத்துல இருந்து கிளம்பி ரொம்ப நேரமாச்சு. நான் இப்போ பட்டாமிராம்ல இருக்கேன்.”

“என்ன ஆச்சு, எப்போ செம்பரம்பாக்கதுல இருந்து கிளம்பினீங்க, அங்க என்ன நிலவரம்”

“சார், எதுவும் சொல்றதுகில்ல சார், நாம பயந்தமாதிரி இல்லை இல்லை அதைவிட மோசமா எல்லாம் நடக்குது. மொத்தம் அஞ்சு ஷட்ட்ரையும் முழுசா திறந்தாச்சு. விநாடிக்கு 30 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேறுது”

“என்ன சொல்றீங்க ஜீ, 30 ஆயிரமா? கொஞ்சம் முன்னாடி வரைக்கும் இருபதாயிரம் தான சொன்னாங்க. இப்போ ஏன் அவ்வளவு திறக்கிறாங்க?”

“சார் இதுவே குறைவுதான். மொத்த ஷட்டரையும் திறந்தாச்சு. இதுக்குமேல அதிகமா வெளியேத்த முடியல. ஆனா வர்ற அளவு அதுக்கும் மேல இருக்கு. ஒரு நிமிஷம் நிறுத்தினாக்கூட ஏரி தாங்காது. அதனால வேற வழியே இல்லாம இதச் செஞ்சுட்டாங்க. சுத்துப்பட்டு எல்லாம் பேய்மழை. பூண்டி வேற நிரம்பி அந்த தண்ணீவேற இங்கதான் வருது. இது இல்லாம நந்திவரம், மணிமங்கலம் பெருங்களத்தூர் நு சுத்துப்பட்டு ஏரி எல்லாம் நிறைஞ்சிடுச்சு. இப்போ அந்தத் தண்ணி செம்பரம்பாக்கம் தண்ணி எல்லாம் சேர்ந்து ஊருக்குள்ள வந்துகிட்டு இருக்கு சார். என்ன நடக்குமோ”

“இன்னும் எவ்ளோ நேரத்துல அவ்ளோ வெள்ளம் வரும் ஆதி”

“தெர்ல சார், திருநீர்மலை, குன்றத்தூருக்கு இப்பவே வந்திருக்கும். அப்படியே குளத்தூர் மனப்பாக்கம் வர இன்னும் அரை அவர் ஆகலாம் சார். சார், உங்க வீட்டாண்ட எல்லாம் ஒண்ணும் பிரச்சனை இல்லையே”

“அதெல்லாம் இல்ல ஆதி, நீங்க சேஃபா இருங்க. நான் முடிஞ்சா நெட்வொர்க் கிடைச்சா திரும்பக் கூப்பிடுறேன்”

“சரி சார். ஒரு விசயம், மழை எப்ப சார் நிக்கும்?”

“தெரியல ஆதி சார், இப்போ இருக்கிற நிலமையப்பார்த்தா இன்னும் ரெண்டு நாளைக்கு கனமழை இருக்கிற மாதிரித்தான் இருக்கு. அப்படிப் பெஞ்சா நிலமை இன்னுமே மோசமா இருக்கும்”

“உலகத்துல எங்க பொளைக்க முடியலைன்னாலும் இந்த ஊருக்கு வந்தாக்காப் பொளைச்சுக்கலாம் சார். அப்படி எத்தினியோ ஜனம் வந்து வாழ்ந்திருக்கு. அதுல எதுனா புண்ணியம் இருந்தா இந்த ஊரு திரும்ப சரியாகும்.. பாக்கலாம். சரி சார். நான் வைக்கிறேன்”

*

மழை குறைவாக இருந்தபோதும் வாசலில் ஓடும் நீரும் கீழ்த்தளத்துக்குள் நுழையும் நீரும் அதிகமாகிக் கொண்டே யிருந்தது. செக்யூரிட்டிகள் ஓடி ஓடி ஏதோ வேலை செய்துகொண்டிருந்தார்கள்.

பிரமோத் படிக்கட்டுகள் வழியாக தரைத் தளத்தில் இறங்கி உள்வழியாக பி 1க்கு நடந்தான். இறங்கிவரும் படிக்கட்டுகளுக்குப் பின்னால் சர்வர் ரூம் இருந்தது. அவன் போவதை யாரும் பார்க்கவில்லை. அவர்களுக்கு அதிக வேலை இருந்தது. பிரமோத் கடைசிப் படிக்கட்டில் நின்றபடி அந்தத் தளத்தைப் பார்த்தான். எல்லா வாகனங்களின் டயரும் நீரின் பாதி மூழ்கியிருந்தது. எட்டி சர்வர் ரூமைப் பார்த்தான். சர்வரில் பச்சை விளக்கு எரிந்துகொண்டிருந்தது. தன் மொபலை எடுத்து வைஃபை ஆன் செய்தான். சில நிமிடப் போராட்டங்களில் கனெக்ட் ஆனது. முகநூலைத் திறந்தான். திறந்தால், வாவ். லாவண்யா அவளின் புகைப்படத்தை பதிவிட்டிருந்தாள். அவள் அத்தனை அழகாய் இருந்தாள். இன்று வலையேற்றுவதற்காகவே அவள் இந்தப் படத்தை எடுத்திருக்கவேண்டும். அவள் கண்களுக்குக் கீழ் சிறு சுருக்கத்தில் சிரிப்பு ஒன்றும் நன்கு மொழுமொழுவென்று புசுபுசுத்திருந்த கன்னங்களில் ஒரு வெட்கமும் படர்ந்திருந்தது.

“ஹுர்ரே” பிரமோத் கத்தினான். கால் செய்ய முயன்றான் போகவில்லை. சிக்னல் இருக்கும் நேரத்தில் எதாவது செய்யவேண்டும் என்று தோன்றியது. அவளுக்குத் தனிச் செய்தி ஒன்றை டைப் செய்தான்.

Pramod Pramod : Lavanya, your profile pic.is awesome. Past three days here heavy rain. So No Internet. Even today rain got worst. Almost I came by swim to office. Y I came you know, becase I need internet. My office has Uninterrepted internet. Y I need net? Because I need to chat with you. OMG, I saw your pic. And becme crazy about you. I take this pic. as my birthday gift. And I am going to tell you one thing, Even if you didn’t uploaded ur pic, I will be telling the thing. Now I cant resist my self from tell that . That is I LOVE YOU lavanya. Bye

டைப் செய்து அனுப்பிவிட்டு மொபலையே பார்த்துக்கொண்டு நின்றான். ஏதேனும் பதில் வருமா என்று எதிர்பார்த்தான். ஆனால் சிக்னல் நிலைகொள்ளாமல் துடித்தது. சில நிமிடங்கள் அங்கேயே நின்று பார்க்கலாம் என்று யோசித்தான். அவன் யோசித்துப் பார்த்துக்கொண்டிருக்கும் போதே சறுக்கல் வழியாக பெரும் திரளாக தண்ணீர் இறங்கத் தொடங்கியது.

அடக் கடவுளே இது என்ன? எங்கிருந்து வருகிறது இந்த நீர்? மதகு ஒன்றைத் திறந்தார்ப்போலத் தண்ணீர் நுரைத்துக்கொண்டு உள்ளே நுழைகிறது. ஒர் நிமிடத்தில் உட்புகுந்த நீர் வேகவேகமாக ஓடி பி3 ஐ நிறைந்தது. பி3 இல் இருந்து பெரும் சத்தம் கேட்கிறது. பிரமோத் செய்வதறியாது திகைத்தான். கீழிருந்து ‘ஐய்யோ’ என்ற சத்தம் எழுந்தது. அந்தச் சத்தத்தில் பிரமோத்தின் உடல் ஒரு கணம் நடுங்கியது. அவன் தன் மன வலிமையனைத்தையும் திரட்டிக்கொண்டு படியிலிருந்து இறங்கி அந்தத் தளத்தின் மையத்துக்கு வருகிறான். அந்தத் தளத்திலேயே தண்ணீர் கால் முட்டிவரை சேர்ந்துவிட்டது. ஆனால் பெரும்பான்மை நீர் கீழ்நோக்கிதான் ஓடியது. அங்கிருந்த செக்யூரிட்டிகள் ஓடி மேலே வந்தார்கள். அவர்களில் யாரோ ஒருவர்தான் அந்தச் சத்தத்தை எழுப்பியிருக்க வேண்டும்.

பிரமோத் ஒரு கைப்பிடிச்சுவர் அருகே போய் கீழே எட்டிப் பார்த்தான். சுருள் போல் இறங்கிய அந்தப் படிக்கட்டுகளின் ஊடாக கீழ்த் தளங்களைப் பார்க்க முடிந்தது. கீழ்த்தளம் பார்க்கக் குளம் போல் இருந்தது. ஒரு கார்கள் அதில் மிதந்தன. அப்படியானால் தண்ணீர் அந்தத் தளத்தை மூழ்கடித்துவிட்டது.. இன்னும் எஞ்சியிருப்பது பி2 தான். அங்கிருந்து சில செக்யூரிட்டிகள் ஏறிவர முயன்றார்கள். அவர்களில் சிலரால் கீழ் நோக்கிவரும் நீரின் எதிர் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் அலறியபடி கீழேயே விழுந்தனர். அதிலும் ஓரிருவர் சுவர்களைப் பற்றிக்கொண்டே மேலே வந்தனர். பிரமோத் அவர்கள் இன்னும் கொஞ்சம் மேலே ஏறிவந்தால் கைகொடுத்து அவர்களைத் தூக்கிவிடத் தயாரானான். அந்த செக்யூரிட்டிகளில் முன்னால் வந்தவன் மதியம் பார்த்தவன்.

“ப்ரோ, கம் சேஃப், கம் சேஃப் அண்ட் பாஸ்ட்”

அவர்கள் சர்வ ஜாக்கிரதையாக சுவரில் முதுகை ஒட்டிக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்துகொண்டிருந்தார்கள். இன்னும் சில அடிகளில் அவர்கள் பி1 இ கால் வைத்துவிடலாம். தண்ணீர் இப்பொழுது இன்னும் வேகமாகப் பாய்கிறது. கால்கள் சறுக்குகின்றன. நகராமல் நிலைத்து நிற்கிறார்கள். பின்பு மெதுவாக அடி எடுத்துவைக்கிறார்கள். இப்பொழுது பிரமோத்திற்கே நிற்க சிரமமாக இருந்தது. ஆனாலும் அங்கிருந்து நகர்ந்து படிக்கட்டுவரைப் போக மனமில்லை. இதோ ஒரு நிமிடம் அவர்கல் மேலே வந்துவிடக் கூடும்.

பிரமோத் தன் கைகளைத் தேய்த்து அதைக் காயவைத்துக்கொண்டு காத்திருந்தான். இன்னும் நாலைந்து அடிகள் போதும், அவர்கள் மேலே வர. பிரமோத்திற்குக் கொஞ்சம் நம்பிக்கை வந்தது.

“கமான் ப்ரோ கம் குயிக்”

அவன் சொல்லிமுடித்த கணத்தில் அணை உடைந்ததுபோல ஓர் வெள்ளம் உள் நுழைந்தது. சறுக்கும் தளத்தின் மேற்கூரையும் நிறையும்படிக்கும் இருந்தது வெள்ளம். எங்கிருந்து வந்தது, எங்கு போகிறது. பிரமோத் பார்த்துக்கொண்டே இருந்த விநாடிகளில் அது உள் நுழைந்தது. அவர்கள் பி1 ல் கால்வைத்தார்கள். பிரமோத் அவர்களைப் பற்றி தரைக்கு இழுத்தான். அப்பொழுது பாய்ந்த அந்தப் பெருவெள்ளம் தளத்தில் இருந்த சில வாகனங்களைப் புரட்டித் தூக்கி அடித்தது. அதில் ஒன்று பிரமோத் மேல் விழுந்தது. அதில் அவன் நிலைகுலைந்து கீழே விழுந்தான். அவனோடு சேர்ந்து அந்த செக்யூரிட்டிகளும் வீழ்ந்தார்கள். பிரமோத் பற்றிக்கொள்ள எதையாவது தரையில் தேடினான். எதுவும் அகப்படவில்லை. அதற்குள் வெள்ளம் அவர்களை மூன்றாம் கீழ்தளத்துக்குக் கொண்டுபோய்விட்டது. பிரமோத் ஹெல்ப் என்று கத்த வாய் திறந்தான். அதற்குள் வெள்ளம் அவனை மூழ்கடித்தது. திறந்த வாய்க்குள் நீர் புகுந்தது. அவன் மார்புக்கூட்டுக்குள் நீர் நிறைவதை அவன் உணர்ந்தான். கண்களுக்கு எதுவும் தெரியவில்லை அடுத்து என்ன என்பதை அவன் அந்த நொடியில் உணர்ந்தான். உடல் உதறியது அவன் கண்களை மூடிக்கொண்டான். கண்களுக்குள் சந்தனப்பொட்டுடன் சிரிக்கும் லாவண்யா வந்தாள். அந்த நினைவில் அவன் நெகிழ்ந்த கணத்தில் அவன் மூழ்கிக்கொண்டிருந்த நீர் மட்டத்துக்கு மேலாக சில நீர்க்குமிழிகள் எழும்பின.

••••

பூவிதழ் உமேஷ் கவிதைகள்

download (7)

1. வளர்ச்சி

வெயில் காலத்தில்
செடி வரைந்திருந்தேன்
மழையில் நனைந்துபோன
நோட்டை எடுத்துப் பார்த்தேன்
செடி ~ மரமாகி இருந்தது.

2. நாய்

கதவில் ஒட்டிய படத்திலிருந்து
சிறுவனைப் பார்த்து
குலைத்தபடியே இருந்தது நாய்

ஏன் காகிதத்தின் பின்னால்
சோற்றை வைத்தாய் என்று.

3. மையம்

நண்பா வா…
தொலைந்த சொல் முளைத்திருக்கிறது

நீ வளர்ப்பதாய் சொன்ன பறவை
தண்ணீர் குடிப்பதற்காக
வானத்தை இழுத்து விளையாடுகிறது

நிறத்தின் அடிப்படையில் பார்த்தால்
வானம் காகத்திற்குதான் சொந்தம்
ஆனாலும்
கொக்குகள் பறக்கும் போது
கோலம் போட புள்ளிகளாகின்றன

நேற்று
பருந்துகள் வட்டமிட்டன
ஒரே மையத்திலிருந்து எத்தனை வட்டங்கள்
அதன் மயத்தை “O” என்று குறிக்கலாம்
காணாமல் போனவரின் பிணம் என்றும் குறிக்கலாம்
அப்பா என்றும் குறிக்கலாம் .


4. மணல் லாரிகள் எப்படி செல்லும் ?

நதியை
பூவிலிருந்து உற்பத்தியாவதாய்
வரைந்துகொள்

யாராவது
வண்டுகளின் இறக்கையிலிருந்து
படகு செய்வார்கள்

செல்லமாக பெயரிடு
வறட்சி ~ பசி என்பதைத் தவிர

கால்வாய் வெட்டி
பாறைகள் இல்லாத நிலத்திற்கு
நீர் பாய்ச்சுகிறாயா ?

அதோ ! அந்த மொட்ட பாறையைப் பார்
விதை நெல்லுக்குப் பதிலாக
அங்கிருந்து மூட்டையில் வந்தான் ஒரு விவசாயி

சட்டென ஆற்றின் கரைகளை உயர்த்தாதே
மணல் லாரிகள் எப்படி செல்லும் ?
“தாசில்தாரின் உடம்பை மேடாக்கி ஏறும்” .

***