Category: மே

கனகசுப்பு ( சிறுகதை ) / ஜுனைத் ஹஸனீ.

எங்கள்தெருவிசாலமாகஅமைந்திருந்தது.

வீடுகள்தங்கள்வரையறைக்குட்பட்டுதெருவைஆக்கிரமிக்காமல்கட்டப்பட்டிருந்தஆயிரத்துதொள்ளாயிரத்துஎன்பதுகளின்காலகட்டம்அது.

எங்கள்தெருவின்கடைசிவீட்டில்குடியிருந்தார்கனகசுப்பு. மச்சிவீடுகனகசுப்புஎன்றால்அனைவருக்கும்பரிச்சயம். அரசுவங்கியொன்றில்குமாஸ்தாவாகபணியாற்றினார். எங்கள்தெருவில்அவர்வீட்டில்மட்டும்தான்தொலைபேசி
இருந்தது.

அவா்வீட்டைக்கடக்கையில்எப்போதாவதுஒலிக்கும்அதன்மணிச்சத்தம்கேட்பதற்குமிகவும்ரம்மியம்.
அந்தத்தொலைப்பேசியைஎப்படியாவதுபார்த்துவிடவேண்டுமெனகங்கணம்கட்டிஅலைந்தவா்களில்என்னுட்படஎன்நண்பன்வேல்முருகனும்ஒருவன்.

அவன்பாட்டிகிராமத்தில்இறந்தசெய்திஅந்தத்தொலைப்பேசியில்தான்வந்தது.பாட்டிக்காகவருந்தாமல்அவன்தன்அம்மாவுடன்சோ்ந்துசென்றுஅந்தத்தொலைப்பேசியைபார்த்துவிட்டதாய்பலநாட்கள்வரைதம்பட்டமடித்துக்கொண்டிருந்தான்.
எங்கள்தெருவின்எல்லாஇழவுசெய்திகளும்அந்தத்தொலைபேசிக்குத்தான்வந்தது.

யார்கேட்டாலும்கொடுப்பதற்கனவேஐந்தாறுதுண்டுச்சீட்டுக்களில்தன்தொலைப்பேசிஎண்ணைஎழுதிதன்சட்டைப்பையில்தயாராய்வைத்திருப்பார்கனகசுப்பு.நடுநிசியாகஇருந்தாலும்கொஞ்சமும்சளைக்காமல்வீட்டைத்தட்டிவிஷயத்தைதெரிவித்துவிடுவார். அதுவும்அந்தத்துக்கசெய்தியைஅவா்தெரிவிக்கும்பாணிஅலாதியானது.

சம்பந்தப்பட்டவா்களின்வீட்டுக்கதவைத்தட்டிஅங்கேஇருக்கும்பெரியமனிதரைதனியாகவீட்டிலிருந்துவெளியேஅழைத்துவந்துநாசூக்காககாதில்தெரிவிப்பார்.

சிலநிமிடங்கள்அங்கேயேநின்றுஅவருக்குஆறுதல்சொல்வார். ஆனால்கனகசுப்புவின்இந்தநிதானம்அவரதுமகனிடத்தில்கொஞ்சமும்இல்லை.இந்தஊரில்இந்தப்பெயருடையவா்செத்துட்டாராம்எனகடகடவெனஒப்பித்துவிட்டுவிருட்டென்று
சென்றுவிடுவான்.

நான்ஆறாம்வகுப்புபடித்துக்கொண்டிருந்தபோதுஅதேபள்ளியில்அவன்பன்னிரன்டாம்வகுப்புபடித்துக்கொண்டிருந்தான். வழமையானபணக்காரப்பிள்ளைங்களுக்கானகா்வம்அவனிடமும்சிறிதுஇருந்தது.

அப்பொழுதெல்லாம்எங்கள்கனவுவாகனமாகஇருந்தமிதிவண்டிஅவனிடம்சொந்தமாகஇருந்தது.

ஒடிந்தபலகையைவைத்துநாங்கள்கிரிக்கெட்ஆடிக்கொண்டிருந்தோம். அவனிடம்உயா்ரககிரிக்கெட்மட்டையிருந்தது. எங்கள்தெருவின்பெரியமனிதா்களேபீடிவலித்துக்கொண்டிந்தார்கள்.அவன்பள்ளிக்குப்பின்னாலானஒருதேநீா்க்கடையில்தன்நண்பா்களோடுசிகரெட்புகைத்துக்கொண்டிருந்தான்.

ஒருமுறைஅவன்சிகரெட்புகைத்துக்கொண்டிருப்பதைநான்பார்த்துவிட்டபொழுதுஎன்னைஅருகேஅழைத்துஒருமுறுக்கைஎடுத்துநீட்டிஇதைவேறுயாரிடமும்சொல்லக்கூடாதென்றான்.

அந்தமுறுக்கிற்காகவேபலமுறைஅவன்பார்க்குமாறுகடப்பதுஎனக்குசிலநாட்கள்வரைவாடிக்கையாகிப்போனது.

எங்கள்தெருவின்முதல்தொலைக்காட்சிப்பெட்டியையும்ராமசுப்புதான்வாங்கினார்.

ஷட்டரைஇழுத்துச்சாத்தக்கூடியகறுப்புவெள்ளைத்தொலைக்காட்சிப்பெட்டிஅது.

ஞாயிற்றுக்கிழமைதிரைப்படத்திற்குமட்டும்எங்கள்தெருவாசிகளுக்குபொதுஅனுமதிவழங்கியிருந்தார்.

கூட்டம்அதிமாகிவிடவேதொலைக்காட்சியைதிரைப்படநேரத்தில்மட்டும்தன்வீட்டுக்குவெளியேவைக்கத்தொடங்கினார். அப்பொழுதெல்லாம்திரைப்படத்திற்குநடுவேஒரேஒருசிறியஇடைவேளைமட்டுமே.

அந்தநேரத்தில்சிறுவா்களுக்குஏதாவதுதின்பண்டம்தருவார்ராமசுப்பு. வீட்டுப்பாடமெல்லாம்முடித்தாகிவிட்டதாஎன்பார். ஒழுங்காகப்படிக்கவேண்டுமெனஅறிவுரைசெய்வார்.

பள்ளிக்கூடத்தில்ஒருமதியவேளைராமசுப்புவின்மகனுடன்பேசிஞாயிற்றுக்கிழமைகாலைஒளிபரப்பாகும்இராமாயாணத்திற்கும்அனுமதிவாங்கிவிட்டேன்நான்.

அதற்கும்சிறுவா்கள்கூட்டம்அதிகரிக்கதன்வீட்டுவராண்டாவில்சாக்பீஸால்ஒருகோடுவரைந்துஇந்தக்கோட்டைத்தாண்டியாரும்அமரக்கூடாதெனபுதியவிதிகொண்டுவந்தான்.

ஆனால்எனக்குமட்டும்அந்தவிதியில்சிலதளா்வுகள்இருந்தது. சமையலறைவரைசென்றுதண்ணீா்குடிப்பேன்.

தொலைக்காட்சிப்பெட்டியின்சப்தத்தைஉயா்த்துவேன். வராண்டாவில்இருக்கும்தொலைப்பேசியைஎன்காதில்வைத்துஅதன்சப்தத்தைரசிப்பேன்.

அந்தநேரங்களில்குழுமியிருக்கும்சிறுவா்களுக்குநான்ராஜாஎன்றபெருமிதம்எனக்கிருந்தது.

என்வீட்டருகாமையில்குடியிருந்தபரிமளம்என்றப்பெண்ணைகாதலித்தான்ராமசுப்புவின்மகன்.அவள்பத்தாவதுபடித்துக்கொண்டிருந்தாள். என்னிடம்அவனுக்குக்கடிதம்கொடுத்தனுப்புவாள். அவனும்என்னிடம்அதற்குபதில்கடிதமும்அதற்குகூலியாகஇருபத்தைந்துபைசாவும்கொடுப்பான். அவா்களைஆற்றுப்பாலத்தின்கீழ்ராமசுப்புகையும்களவுமாகபிடித்துவிடஅதற்குப்பின்என்னவெல்லாமோநடந்துபோனது. சென்னையில்உள்ளதன்உறவினா்வீட்டிற்குதன்மகனைஅனுப்பிவிட்டார்எனதெருவிற்குள்பேசிக்கொண்டார்கள். அதற்குப்பிறகுசிலவருடங்கள்ராமசுப்புவின்மகனைநான்பார்க்கவேஇல்லை. தன்மாமன்மகனுக்குபரிமளத்தைதிருமணம்செய்துகொடுத்துவிட்டார்கள்.
அங்கொன்றும்இங்கொன்றுமாகசிலவீடுகளில்தொலைப்பேசிவரஆரம்பித்திருந்தன.ராமசுப்புவின்தொலைப்பேசியில்இழவுசெய்திகணிசமாககுறைந்துபோனது. பலவீடுகளில்தொலைக்காட்சிப்பெட்டிவந்தபிறகும்கூடஞாயிற்றுக்கிழமையன்றுதன்வீட்டிற்குவெளியேதொலைக்காட்சியைவைக்கும்பழக்கத்தைராமசுப்புபலவருடங்கள்வரைவிடவில்லை.
எல்லோருக்குமானஇழவுசெய்திகிடைத்துக்கொண்டிருந்ததன்வீட்டுதொலைப்பேசியில்தன்இழவுசெய்திவருமெனஅவா்நினைத்திருக்கமாட்டார்.

வெளியூருக்குசென்றஇடத்தில்வாகனவிபத்தில்இறந்துவிட்டதாகஅவா்அவா்வீட்டுத்தொலைப்பேசியில்யாரோசொன்னார்கள். அப்பொழுதுகூடஅவா்தன்சட்டைப்பையில்வைத்திருந்ததொலைப்பேசிஎண்தான்அவா்வீட்டிற்குதகவல்தரஉதவியிருக்கிறது. அவா்மகன்கல்லூரிப்படிப்பைமுடித்திருந்ததால்அவா்பார்த்தகுமாஸ்தாவேலைதன்மகனுக்குகிடைத்தது.

அவருக்குஅந்தவேலையைதருவதற்காகத்தான்ராமசுப்புவேண்டுமென்றேஎங்கோபோய்மோதிஇறந்துபோனாரெனதெருவிற்குள்சிலநாக்குகள்பேசிக்கொண்டன.

ராமசுப்புவின்மகன்அடியோடுமாறிப்போனான். சோட்டாபீம்பார்ப்பதற்கென்றுஒருசிறுவா்பட்டாளம்அவன்வீட்டுதொலைக்காட்சிமுன்இன்றும்கூடுகிறது.

அவா்களுக்குஎல்லைக்கோடெல்லாம்அவன்இடுவதில்லை. எங்கள்தெருவின்முதல்கணினியும்
அவன்வீட்டிற்குத்தான்வந்தது.

விடுமுறைநாட்களில்மாணவா்களைஅழைத்துபடிப்புவிஷயமாகஆலோசனைகள்வழங்குகிறான்.

அரசுத்தோ்வுஎழுதவிரும்புவா்களுக்குபயிற்சியும்தருகிறான். அவன்மின்னஞ்சல்முகவரிமற்றும்வாட்ஸ்அப்எண்அடங்கியஅட்டைகைளதயாராய்தன்சட்டைப்பையில்வைத்திருந்துயார்கேட்டாலும்எடுத்துத்தருகிறான்.

•••

தேகம் துறத்தல் ( அறிமுகப் படைப்பாளி ) / மாயா மேம்சாப்

தேகம் துறத்தல்

பின்னிரவின் உறக்கம் கலைக்கும் மழை

இப்போதெல்லாம் புலன்களைக் கிளர்த்துவதில்லை

உனது வலுத்த கரங்களுக்குள் சிறைப்படத் துடித்த

வேட்கை நிரம்பிய நாட்களை எண்ணிப் பார்க்கிறேன்

சுரக்காத காம்புகளை வலிந்து உறிஞ்சும்

பலனற்ற எத்தனமாய் தோன்றுகிறது

இதே அறையின் சாளரத்தில், கட்டில் விளிம்பில்

குளியலறையின் நிலைப் படிகளில் என

உன் பாதம் படும் இடங்களிலெல்லாம்

தனிமையை கிடத்தி வைத்திருந்தேன்

பறவைகள் கூடடையும் அந்திக் கருக்கலில்

அதற்கு புதிய சிறகுகள் முளைக்கும்

அதன் ஓசைகளற்ற படபடப்பில்

அடிவயிற்றில் உருண்டையென உருளும்

காமத்தின் தீச்சுவடு

நீயோ என் தனிமையை அனாதையாக்கி விட்டு

உன் இருப்பை மட்டுமே நிர்வகிக்கும்

உடல் நாடகம் அரங்கேற்ற முனைகிறாய்.

காய்ந்த நிலங்களில் ஈரம் பாய்ச்சாத

மழையை ஒத்த சாரமற்ற முத்தங்கள்

கலவியின் கணங்களைத் தாங்கொணாச் சுமையாக்குகிறது

நீ எப்போதுதான் அறிந்து கொள்வாய்?

இன்பத்தைப் பேணுவதென்பது

கடும் வெப்ப நாளொன்றில்

நதியில் கால் மட்டும் நனைத்துப் போவதல்ல

நிலவறையின் பேழையில்

பூட்டிப் பாதுகாத்த பொக்கிஷத்தை எடுத்து

ஆன்மாவை அணி செய்வதற்கு ஒப்பானது..

கைப்பிடிக் காதலும் கைப்பிடிக் காமமும்

கலந்துண்ணாத உன் பசியைச் சபித்தவாறு

ஒவ்வொரு இரவிலும்

என் தேகம் துறந்து வெளியேறுகிறேன்

உன்னைக் கூடிக் கொண்டிருக்கும்

என்னைக் கொலை செய்து விட்டு

குருதிக் கறைகள் மணக்கும் கரங்களோடு உறங்குகிறேன்..

•••••••••

பாரதி நிவேதன் கவிதைகள்

1.

எம்பி
அருந்திய பின்
தொலைந்த பட்டாம் பூச்சியைத் தேடுதற்கு ஆகிவிட்டாய்
கடந்து செல்வதைக்கொண்டிருக்கும் கருணை முகத்தின்
சரளைக்கல் குழிகளில் அது இல்லை
ஆதியிருளுக்குள் கரைந்தும் சுவடில்லை
குமிழிகளாக உடையும் நிமிடங்களின் வண்ணத்திலுமில்லை
நிலவைச் சூரியனை கைதொழுதும் ஆவதற்கில்லை

பூக்களுக்கும் பொம்மைகளுக்குமான உறவில்
அதன் தடம்
பெருமூச்சின் போதெல்லாம் இமைக்கு வெளியே
அதன் எம்பிய சுவடு

சாம்பல் வனம் சந்தித்தாயிற்று
தொட்டணைத்தூறும் கேணி மீண்டாயிற்று
சுவர் மூலை அனாதியர் சத்தியம் செய்தாயிற்று
புடைப்புச் சிற்பங்களைத் துடைத்து மாயிற்று
பட்டாம் பூச்சிக்கான பதிலில்லை

மீண்டும் அருந்திய பின்
உடலில் தைகிறது வண்ணம்
விலாவில் மகரந்தம் சிலும்புகிறது
ஊறுகிற காலத்தில் எம்புகிறது
நகர்கிறேன் காலத்தின் துளி றெக்கையில்

2.

அடிவானம்
சூலாகிறது உன் அடிவானம் திசைகளெங்கும்
அடையாளம் வைக்கும் போது
வந்தூறிவிடும் காலம் பனியாய்

காலமற்ற காலத்தை அடுக்கத்துணியாது
திறந்தே வைத்திருக்கும் குழாயில்
வாழ்க்கை சீழ்க்கை யடிக்கிறது

பார்த்துச் சலித்துப் பார்வை பதியாத நாளொன்றில்
நழுவியோடலாம் நீரின் பதனம்
இருக்கட்டும் விதைக்கொரு காலமில்லையா

நெருங்கா வண்ணம் இருந்துவிட்டுப் போகட்டும்
கவசங்கள்
கடப்பதற்குத்தானே அடைபட்டிருத்தல்

எந்தப் புகாருமற்று பாவுவது இருத்தலின் சுகமா
நன்றன்றா
கொட்டடியில் பதுக்கியோரெல்லாம் பட்டென்று போவது
ஊழி நன்றா

இமைக்காத இப்பொழுதில்
எதையும் கனிக்கும்படி எவரையும் இறைஞ்சாமல்
சூலாகிறது உன் அடிவானம் திசைகளெங்கும்

பிழையின் மீது மழை
தமரும் உமரும் எவரும்
எதனை அருந்த வந்தோம்

நுகராத ஒரு பழஞ்சொல்லின் புகை
அதன் புற்றில் பால் வார்த்தும்
மஞ்சள் காப்பிட்டும் திருநீரு பொசிந்தும்
மசியாமல் கொத்துவதற்கு
காரணங்களை அங்கேயே வைத்துவிடு

உடலை
ஒரு அலை இழுத்துப்போர்த்த சுளுவில்லை
தொலைவிலிருக்கிற மனதோடு
நண்டுகள் விளையாடினால் என்ன
சூலாகிறது திசைகளெங்கும் உன் அடிவானம்

3.

உப்புக்கல்லும் கைமாற்றமும்

3.1

சுலபமாகக் கலந்துவிடும் உவர்ப்பு
காலங்கடந்து வந்த மழைக்குள்
கல்லாகவே கிடக்கிறது
தான் செய்த மணற்பிடியோடு
தளிர்த்தாடும் வார்த்தைகள்
கண் வைத் திருக்கிறது உப்புக்கலை
கைநழுவிய துயிலை
உடல் நழுவிய தோகையை
மழைக்குள் துவைக்கிறது மரம்
அள்ளி முடிந்தக் கூந்தலில் மௌனம்
நீந்த மழையைச் சேமிக்கும் மீன்
மண்ணைக் குத்திப் புரட்டிய மின்னலும்
உப்புக் கல்லை உரசாது நடிப்பதை
பார்த்தபடியிருக்கும் பைத்தியத்திற்கும்
வைக்கப்பட்ட சூதுதான் எனினும்
எடுக்கிறவர்களால்
சாத்தியம் துயிலடைதல்

3.2

பறவைகளிடம் கைமாற்றிக் கொள்கிறேன் நிகழை
பயணமென்பதற்கு ஒரு நிச்சயம்
தடக் தடக் இம்சையுற்ற வாழ்வின் நடுவே
தவிர்க்கப்படுமல்லவா விபத்தின் அபத்தம்

தேன் உள்ள பூவில் உணவு
கதிர் மறைந்தப் பொழுதில் அடைவு
சித்திர வேலைப்படுகள் அதிராத வனம்
சில்லறைக் காசுகளை முதுகில் சுமந்து
கட்டங்களால் ஆன கோட்டில் நடை பழகி
மூச்சு விரைத்து மயங்கி மண்டை உடைந்து
சவமான என்னைப் பார்த்துக் கலைகிறேன்
எப்படிக் கைமாறியது நிகழ்

4.

டைரி

நிலவைப்போல் மஞ்சள் கிழங்காகுவது
கிழமையொன்றில் மெட்டியாவது
கேட்டுக்கொண்டதில்லை
இறைஞ்சி இறைஞ்சி நின்றதொரு கனவின் மூலைக்கு
மீன் பிடிப்பதில் எழும் அலைகளுடன் கண்ணாடிப் பேழையாவதும்
உசிதமில்லை
புகைக்கக்கும் கங்கினில்
ஆதித்தாயின் கடலலையும் கழுவக்கூடிய ஒன்றல்ல
ஏறிவருகிற எனதருமைப் புற்று வாசலில்
திகைக்கும் படி கோணாதே போய்விடு

திசையும் விசையும் சேர்த்து
புவியீர்ப்பைத் தழுவியோடுகிற நீர்முனையால்
சித்தஞ் செய்யப்பட்ட புல்லாங்குழலை
திருடிச் செல்வதும் ஆறுதலானதில்லை
எதைத் தேர்ந்து நிற்கிறாய் எதைப் பிடியாக்கினாய்
எதை தூர்க்கிறாய்
கருந்துளையாகிவிட்ட
என் கண்கள் முன் குழையாதே போய்விடு

பிறப்பின் பிறப்பிடம் காண மார்புக்குள் ஒரு சுடர்
தள்ளாடி டைரிக்குள் விழுகிறது
உருவாக்கங்களின் பிசினிலிருந்து திறவா விழியுடன்
வெற்றிடத்திலிருந்து எட்டிக்குதித்து
ரேகையற்ற தசையுடன் ஓடுமதை
இழுத்துப்பிடித்து உதைத்தபடி சுடர்

டைரியின் கொள்ளாப் பெருவெளி சீண்டுவதில்
பேழைக்குள் மழை
உடையுந்தருவாயில் நீ நகர்ந்து விடுவதும் பேரழகு
………

நெய்னாக் குஞ்சும் குட்டிப்பூனையும் ( சிறுகதை ) / சாளை பஷீர்

நன்கு காற்றோடிக்கொண்டிருந்த மாடியறையில் அவுது லெப்பை கணினிக்கு முன்னால் உட்கார்ந்து கொண்டு எதை எழுதலாம் என மிகத்தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார். தலையிலிருந்து கழுத்து வழியாக இறங்கிய வியர்வை நெஞ்சின் மயிர்க்கால்களினூடாக வழிந்து அவரின் தொப்புளை உப்பின் நச நசநசப்புடன் நனைத்துக் கொண்டிருந்தது
அஸர் நேரமானதால் வீட்டிலுள்ள அனைவரும் வெளியே சென்றிருந்தனர். வெளியே சூரிய ஒளிக்குள் செந்நிறம் இழைந்து கொண்டிருந்தது. அன்றாடம் தன் மீது கவிழ்ந்து மூடும் மாலை நேரத்து சோர்விலிருந்து தப்புவதற்காக அவர் எதையாவது செய்ய முயன்றுக் கொண்டே இருப்பார். படம் பார்ப்பார் அல்லது கதை வாசிப்பார் .

ஒன்றுக்கும் வழியில்லையென்றால் கடற்கரைக்கு சென்று ரப்பர் விசை போல மீண்டு கொண்டிருக்கும் அலைகளை பார்த்தபடி அமர்ந்திருப்பார். பேச்சு துணைக்கு யாராவது கூட்டாளிகள் அமைந்தால் உண்டு. இல்லையென்றால் அலையைப்போல தானும் தனியன்தான் என்ற கழிவிரக்கத்தின் அலைக்கழிப்பில் மூழ்கியிருப்பார்.
கட்டுரையில் அவர் வெற்றியடைந்து விட்டார் என அவரே அவருக்கும் அவரது நெருங்கிய நண்பர்கள் சிலரும் சான்றிதழ் வழங்கிக் கொண்டிருந்தனர். எனவே அடுத்த கட்ட நகர்வாக புனைவை தேர்ந்தெடுங்கள் என அவருக்கு மிக நெருக்கமான இலக்கிய நண்பரொருவர் கொடுத்த ஆலோசனையின் பேரில் சிறுகதைக்கு முயன்று கொண்டிருந்தார்.

அவர் குடி வந்த புதிய வீடானது பழைய வீட்டைப்போலில்லை. எழுதுவதற்கும் சிந்திப்பதற்கும் எழுதியும் சிந்தித்தும் ஏற்படும் தலையின் அயர்ச்சியை போக்குவதற்கும் வேண்டிய தனிமையும் வெளிச்சமும் காற்றும் வானம் நிலத்துடனான தடையற்ற தொடர்பாடலுக்குமான வசதி அந்த பழைய வீட்டில் இருந்தது.
எனினும் திட்டி வாசலுக்குள் யானையை திணிக்கும் முயற்சியைப்போல சிறுகதையானது முதல் பத்தியைத் தாண்டி வளர மாட்டேனென தவித்து உள்ளுக்குள் நீறிக்கொண்டிருந்தது. . இயலாமையும் எரிச்சலும் மண்ட என்ன செய்வது என்று தெரியாமல் கணினி மேசையிலிருந்து எழும்பி படுக்கையில் கிடந்த அன்றைய நாளிதழை எடுத்து புரட்டத் தொடங்கினார்.

வாப்பாஹ்…. என அடித்தொண்டையிலிருந்து எழும்பிய குரல் திட்டி வாசலிலிருந்து ஒலித்தது. அது அவரது இளைய மகனுடையது. ஒலிச்சரடில் தோய்ந்திருந்த ஆதுரத்தின் இழையை பற்றிக் கொண்ட அவரது மனம் எரிச்சல் புகைச்சலிலிருந்து சட்டென வெளித்தாவியது.
“வாப்பா கதவத்தொறங்கோ” என்றான். அவரது இளைய மகனின் உண்மைப்பெயர் வேறு. ஆனால் அவர் அவனை ‘நைனாக் குஞ்சு’ என்றுதான் அழைப்பார்.
இதற்கான காரணம் அவரது நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே தெரியும். தனது இளைய பருவத்து சேட்டைகள், சீண்டல்கள், ரகசிய வரம்பு மீறல்களின் சிறு நிழலை அவர் தனது இளைய மகனில் கண்டார். அந்த நிறைவைக்கொண்டாடத்தான் அவர் அவனை நைனாக்குஞ்சு என்று பெயரிட்டு அழைத்தார். அந்த பெயருக்குரிய உட்பொருளில் தன்னைத்தானே பார்த்துக் கொண்ட தன்னிறைவு அவனைப் பார்க்கும்போதெல்லாம் அவருக்கு ஏற்படும்.

இதனால்தான் அவரது மூன்றுபிள்ளைகளிலும் அவன் மேல் அவருக்கு ஒட்டுதல் கூடுதலாக இருந்தது.
நைனாக்குஞ்சுவின் .கைகளில் பிறந்து ஒரு வாரமே ஆன பூனைக்குட்டி ஒன்று அசௌகரியமாக நெளிந்தது. அவன் அதை மார்போடு அணைத்திருந்தான். அழுக்கு வெள்ளையும் ஒழுங்கற்ற வட்ட வடிவில் இளஞ்சாம்பல் நிறத் திட்டுகளுமாக அது இருந்தது. அதன் கண்களில் வேட்டை விலங்கின் மூர்க்கமும் துளைக்கும் கூர்மையும் இன்னும் வந்து சேரவில்லை. அதன் கருவிழிகள் சாவித்துளை போல இருந்தன.

வாப்பா ! ஜீலானி பள்ளி கிட்ட இது கார்ல அடிபட பாத்துது. என் ஃபிரண்டு ஹஸன்தான் காப்பாத்துனான். அவன்ட ஃப்ரண்டுலாம் இதுட வயித்துல பொடிக்கல்லாலயும் குச்சியாலயும் அடிச்சு அடிச்சு சாவடிக்க பாத்தானுவோ. அதனாலத்தான் இத நம்மோ ஊட்டுக்கு தூக்கீட்டு வந்துட்டேன். பாவம் வாப்பா…. என்று சொல்லி முடித்தவனின் கண்களில் நீர் முட்டியிருந்தது.

சரி மொத அதக் கீழ விடு…..
வெளிப்படியில் இறக்கி விட்டான். மெல்லிய மியாவ் முனகலுடன் இளஞ்சிவப்பு பின்னங்கால்களால் நிற்க முடியமல் பக்கத்து வீட்டுக்காரர்கள் கொட்டி வைத்திருந்த கருங்கல் ஜல்லி குவியலில் இடறி விழுந்தது. வீட்டு வேலை முடிந்து பல மாதங்களாகியும் ஜல்லி மணலை அகற்றாத பக்கத்து வீட்டுக்காரனின் தலையில் குட்ட வேண்டும் போல இருந்தது அவுது லெப்பைக்கு.

சமையல் கட்டுக்குள் போய் கழுவி கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கலனில் தண்ணீர் வார்த்து குட்டிப்பூனை முன்னால் வைத்தார். மெல்ல அதன் தலையைப் பிடித்து வாயை தண்ணீரின் அருகே காட்டினார்.
செடியின் பிளவுபட்ட துளிர் இலை போல இருந்த தன் துணுக்கு நாக்கினால் ஏழெட்டு துளிகள் நக்கியது. பின்னர் சின்ன ஊளையுடன் கூடிய மியாவ். அவ்வளவுதான். அதற்கு மேல் நீரருந்தவில்லை. கால் கிலோ எடையளவுள்ள பூனைக்கு ஏழெட்டு துளி நீர் எப்படி போதும் ? என்ற சந்தேகத்தில் அதன் உடலை புரட்டி புரட்டிப்பார்த்தார் அவுது லெப்பை.

அடுப்பங்கரை ஃப்ரிஜ்ஜில் இருந்த மாம்பழக்கூழ் புட்டியை எடுத்து வந்தார். அதனை சகலபாடி சென்னையிலிருந்து ஆசையாய் வாங்கி வந்திருந்தார். ஒரிஜினல் மாம்பழமே கிடைக்க கெமிக்கல் கலந்தத போய் யாராவது திம்பாங்களா ? என்ற அவுது லெப்பையின் கூடுதல் விவரப்பேச்சால் “ மச்சான் சொன்னால் சரியாத்தான் ஈக்கும்… “ என்ற முடிவிற்கு வந்தாள் கொழுந்தியாள். குப்பையில் போட மனமில்லாமல் அன்று முதல் அது ஃபிரிஜ்ஜிலேயே முடங்கியது.

இப்போது அது பூனைக்கு உணவாகப்போகின்றது என்ற மகிழ்ச்சியில் மூடியைத் திறந்து மொத்தமாக சாய்த்தார். கொளுக்… கென மொத்தமாக படியில் விழுந்தது பழக்கூழ். பூனை அதைச் சீண்டிக் கூட பார்க்கவில்லை. வீட்டுக்காரியின் திட்டுக்கு பயந்து பழைய பேப்பரால் துடைத்துக்கழுகினார். துடைத்து எறியப்பட்ட பேப்பர் உருண்டையும் வாசல்படியுமாக ஈக்கள் மாறி மாறி மொய்த்துக் கொண்டிருந்தன.
இதற்குள் பூனை வீட்டுக்குள் சென்று டிவிக்கு கீழ் உள்ள சிறிய கபோர்டுக்குள் நுழைந்து புத்தகப்பையின் அருகே போய் வளைந்து சுருண்டு படுத்துக் கொண்டது.

கூடையிலிருந்து சாம்பலை அள்ளி கொட்டினாற்போல இருள் சரிந்து கொண்டிருந்தது. மஃரிப் நேரம் நெருங்கிவிட்டதால் தான் தொழுது விட்டு வரும் வரைக்கும் பூனையை இடைக்கால ஏற்பாடாக வீட்டிற்கு பின்புறமுள்ள தோட்டத்தில் விடுமாறு சொன்னார்.

நானூறு சதுரடி உள்ள அந்த தோட்டத்தில் மா, முருங்கை, பொன்னாங்கண்ணி, கடுகு இதர காய்கறிச்செடிகள் அப்போதுதான் துளிர்த்திருந்தன. வீடு மறுகட்டுமான வேலை நடந்து முடிந்து ஒரு மாதமே ஆனபடியால் ஏற்கனவே போட்டிருந்த மரக்கறி வகைகளெல்லாம் அழிந்து விட்டிருந்தன. திடீரென கிளம்பிய காற்றானது தோட்டத்திற்குள் வளைந்து சுழன்றது.

பூனைக்குட்டி அந்த செடி கொடிகளுக்கிடையே புகுந்து செல்ல மாலை நேரத்து விளையாட்டை மறந்து நெய்னாக்குஞ்சும் அதன் பின்னாலேயே திரிந்தான். அவரின் கண்களுக்கு இரு பூனைகளாகத் தெரிந்தன. பல்லுக்குப்படாமல் சிரித்துக் கொண்டார். இரவு பகலின் மிச்ச மீதியால் பிணையப்பட்ட அந்த சந்திப்பொழுது அவுது லெப்பையின் மனதிற்குள் வினோதத்தை நிறைத்தது. தனது மிச்ச மீதியை இரவுக்குள் விட்டு விட்டு பகல் விடைபெற்றது.

பூனைகள் மீதான உம்மாவின் வெறுப்பும் றாத்தாவின் விருப்பும் ஒன்று சேர்ந்து நெய்னாக்குஞ்சுவை மருட்டிக் கொண்டிருந்தது. கிளியைப் போல பூனையும் பேசினால் எவ்வளவு ஜாலியாக இருக்கும். அது பேசாட்டி என்ன/ நான் பேசுறத அது புரிஞ்சா போதும் என தனக்குள் சொல்லிக் கொண்டிருந்தான்.

பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்மணி மங்களூர்க்காரி. நைட்டியை மீறும் உடல் பெருக்கம். மிக அபூர்வமாகத்தான் வீட்டிற்கு வெளியே அவளை பார்க்க முடியும். அவள் மீது வெங்காயத் தோல் வாடை வீசுவதாக நெய்னாக்குஞ்சு பல்முறை அவன் உம்மாவிடம் சொல்லியிருக்கின்றான்.
துளு கலந்த தமிழில் பிள்ளைகளை திட்டும் அவளது தகரக் குரலால்தான் அப்படியொருத்தி இருக்கிறாள் என்பது பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு நினைவிற்கு வரும். அவளது கணவருக்கு ரயில்வேயில் வேலை. அதனால் அவர் இங்கேயே வீடெடுத்து தங்கி விட்டார். பெற்ற மக்களை விட கூடுதலாக பூனைக்குட்டிகளை தன் வீட்டில் வளர்த்து வந்தாள். வீட்டில் வழிந்து கொண்டிருக்கும் பூனைகளை கணவர் முகமுயர்த்தி பார்ப்பதோடு சரி. ஒன்றும் சொல்லமாட்டார்.

பூனைகளுக்கென மாடியில் தனி படுக்கை, கழிப்பறை என கட்டியிருந்தாள் அவள். அந்த பூனைகளுக்கு அரபு, தமிழ், ஆங்கிலம் என மும்மொழிகளில் பெயர் சூட்டியிருந்தாள்
அதில் ஒரு பூனைக்கு பெயர் கூகுள். அதன் இரண்டு கால்களிலும் வாலிலும் பொன்னிற சடை இருக்கும். சடையும் அதன் பூச்சைக் கண்ணும் சேர்த்து பார்க்கும்போது. சடைக்கள்ளனின் நினைவு வருவதாக அவுது லெப்பையிடம் அவரின் பெண்டாட்டி ஆகிமல் புலம்பினாள். அடைமழை பெய்த ஒரு நள்ளிரவில் ஆகிமல்லின் பழைய வீட்டின் வென்டிலேட்டரில் எட்டிப் பார்த்த சடையனுக்கு வறுத்த சேமியாவின் மினுமினுப்புள்ள சடைமுடி. பெரிய வட்டக் கண்கள். அதே இரவில் இன்னொரு வீட்டில் சுவற்றை பிடித்து ஏறும்போது கல் இடிந்து மல்லாக்க விழுந்து இறந்தும் போனான் சடைக்கள்ளன்.

ஏற்கனவே அவுது லெப்பையின் மூத்த மகள் தமீளம்மா பூனையை வளர்க்கும் தனது ஆசையை அவ்வப்போது வெளியிட்டுக் கொண்டிருந்தாள். பள்ளிக்கூட விடுமுறையில் மங்களூர்க்காரியின் வீட்டில் ஒரு நாளாவது தங்கி கூகுளோட விளையாடனும் அதுக்கு பொடிமீன் கருவாடு வாங்கி போடனும் என முணுமுணுத்துக் கொண்டிருந்த நெய்னாக்குஞ்சு பனை ஓலை பையை தலைகுப்புறக் கொட்டி அதில் உள்ள சில்லறைக் காசுகளை எண்ணிக் கொண்டிருந்தான்.

மஃரிபை தொழுது விட்டு வந்த அவுது லெப்பை கருணையும் ஒளியும் மிக்க முகத்துடன் தொப்பியைக் கழற்றியவாறே வீட்டிற்குள் வந்தார். எப்போதும் தொழுகைக்கு அவசர அவசரமாக கிளம்பும் அவர் திரும்ப வரும்போது மட்டும் நிதானமடைந்து வருவார். நிதானத்தையும் அமைதியையும் நிரந்தரமாக்கும் ஒரு தொழுகையை அவுது லெப்பை எப்போது தொழுவார் ? என தொண்டை வரை வந்த கேள்வியை அவுது லெப்பையின் சிடுசிடுப்புக்கு அஞ்சி விழுங்கிக் கொண்டார் பள்ளி முக்கில் கண்ட அவரின் சிறு பருவத்து நண்பர்.

…வாப்பா, …றாத்தா பூனயப்பாத்தா சந்தோசப்படுவாதானே… என கேட்ட நெய்னா குஞ்சிடம், “ றாத்தா சரி. உம்மா என்ன சொல்வான்டு தெரியலயேமா. உம்மாவும் சாச்சியும் சம்மதிச்சா இது இங்க இரிக்கட்டும். இல்லன்னா அத வெளிய உட்டுருவோம் நம்பளுக்கு அதுட உயிரக்காப்பாத்துன நன்மயாவது கெடய்க்கும்…. “ என்றவுடன் … “ ஏன் வாப்பா பூன நம்மளோடயே ஈக்கட்டுமே என அவரைக் கெஞ்சினான். ……. நான் என்ன வாப்பா செய்யட்டும். எனக்கும் ஆசதான். சாச்சிக்கு அலர்ஜி ஈக்குரதுனால பூன முடியால அவளுக்கு கஷ்டம் வந்திரக்கூடாதும்மா… “ என்றவுடன் நெய்னாக்குஞ்சின் முகம் வாடியது..

ஒரு தட்டில் சிறிய மீன் துண்டும் ஆணமும் கொண்டு வந்து வாப்பாவும் மகனும் பூனைக்கு கொடுத்தனர். அது தட்டை முகர்ந்து பார்த்து விட்டு தலையை வலப்புறமாக திருப்பிக் கொண்டு விலகியது. பூனையை தன் இரு கைகளாலும் பிடித்து அதன் தலையை மெதுவாக பிடித்து குனிய வைத்து மீன் தட்டில் வைத்தார் அவுது லெப்பை. ஒரு தடவை மட்டும் அது ஆணத்தை நக்கி விட்டு மியாவ் என்றது. மீன் துண்டை கடிக்க அதற்கு பல் போதவில்லை. மீன் துண்டை எடுத்து செடிகளுக்குள் வீசி எறிந்தார் அவுது லெப்பை. நன்கு இருட்டிவிட்டபடியால் பூனையை வீட்டின் முன்புறமுள்ள காம்பவுண்டுக்குள் விட்டார்கள்.

வெளியே எங்கோ சென்றிருந்த அவுது லெப்பையின் மனைவி வீடு வந்து சேர்ந்தபோது மணி ஏழாகி விட்டிருந்தது. ஆகிமல்லுக்கும் அவுது லெப்பைக்கும் திருமணமாகி கால் நூற்றாண்டு கழிந்து விட்டது. ஆகிமல் என்னவோ அந்த இருபத்தைந்து வருடங்களையும் ஆற்றில் ஓடும் நீரைப்போல கடந்து விட்டாள். தொடக்கத்தில் அவுது லெப்பை மண வாழ்க்கையில் ஒட்டாமல்தான் இருந்தார்.

காரணம் அவருக்கு ஆகிமல் மேல் என்றில்லை மொத்த இல்லற வாழ்க்கையின் மீதே ஈடுபாடு இல்லாமல்தான் இருந்தது. அவருக்கு ஒன்றுக்கு மூன்றாக பிள்ளைகள் பிறந்த பிறகுதான் சுழலுக்குள் சிக்குண்ட நீர்த்துளி போல வாழ்க்கையின் மேல் ஓரளவு ஈடுபாடு வந்தது. தனது திருமண வாழ்க்கை என்பது சரியாக உண்டு தீர்க்கப்படாத பலாச்சுளைகள்தான் என்ற ஏக்கம் எப்போதும் அவருக்கு உண்டு.

அவுது லெப்பை ஸ்டோர் ரூமுக்குள் புகுந்து ஏதோ உழப்பிக்கொண்டிருந்தார். ஒற்றைத்தலை வலிக்கான பரிகாரக் குறிப்பொன்று முந்தைய தின பேப்பரில் வெளிவந்திருக்கிறது என அவுது லெப்பையின் களக்காட்டு நண்பர் தொலைபேசியில் சொல்லியிருந்தார்.

அந்த பேப்பருக்காகத்தான் அவர் அந்த அறையை தலைகீழாக புரட்டிக் கொண்டிருந்தார். அவுது லெப்பையை அவரின் பதினெட்டு வயதிலிருந்தே அதாவது முப்பது வருடங்களாகவே ஒற்றை தலைவலி நசுக்கிக் கொண்டிருந்தது. “ டியா தமிளு, நேத்திக்கு பேப்பர் எங்க போய் தொலஞ்சுது ? “ பேப்பர் கிடைக்காத கடுப்பில் இருந்த அவுது லெப்பையின் எரிந்த குரலுக்கு, உம்மாக்குதான் தெரியும் வாப்பா என உள்ளறையிலிருந்து பதில் சொன்னாள் தமிள்.

ஊர்சுத்தி உ,ம்மா வந்திட்டாதானே கரண்ட் பிடிச்சு இழுக்கிற மாதிரி அடிக்கிற அவட கமுக்காடு நாத்தம் ஒன்னே என்ட ஒத்த தலவலிக்கு போதும் வேற மருந்தே தேவயில்ல என தூசியை இரு கைகளாலும் தட்டியபடி அறையை விட்டு வெளியே வந்தார்.

இரவுணவிற்காக சப்பாத்தி சுடுவதற்காக கோதுமை மாவைப்பிசைய உட்கார்ந்த ஆகிமல். மாவுச்சட்டியின் அருகில் தரையில் கிடந்த சிவப்பு பிடி போட்ட கத்தியை விட்டெறிந்தாள். டிவி ஸ்டேண்டின் கால்களில் போய் தட்டி அரை வட்டமடித்து நின்றது கத்தி. நல்ல திமிரு…. இந்த நாத்தத்தோட இருவத்து மூணு வருஷ,ம் ஓட்டியாச்சா இல்லயா….. நாத்தமடிக்காத வேற எவளயாவது போய் பாக்க வேண்டியதுதானே… என ஆங்கரித்தாள்.

மெல்லிய மியாவ்.. உடன் பக்க வாட்டு வாசல் வழியாக வந்த வயிறு மெலிந்து நீண்டிருந்த குட்டிப்பூனையின் ஓசையானது ஆகிமல்லின் ஆங்காரத்தைக் கலைத்து போட்டது. பேச்சு திடுமென நின்றது. பூனையை முறைத்தாள் ஆகிமல்.

சற்று நேரம் நிலவிய மௌனத்தின் நடுப்புள்ளியாக பூனையின் மியாவ் ஒலி சுழன்றது. கிணற்றினூடாக ஒலிக்கும் பாதாள உலகின் கீச்சுக் குரல் போலிருந்தது. கோல் என கூச்சல் எழுந்தது. தெருவில் சிறுவர்கள் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

இது எங்கேயிருந்து வந்துது சனியம் ,ச்சீ போ என துரத்த முனைந்த ஆகிமல்லின் புடவையை பிடித்திழுத்த நெய்னாக்குஞ்சு, ….. உம்மா அத தொரத்தாதேம்மா…. எனக்கெஞ்சினான்.

ஒனக்கி பால் வாங்கி அத நீ குடிக்காம கொள்ளாம வீணாப்போவுது இதுல வேற பூனய்க்கு பாலக்கொடுத்து வளக்க போறியாக்குக்கும், என கடிந்தாள்.

நெய்னாக்குஞ்சு , உம்மா ! பூன கீழ வந்தாதானே சாச்சிக்கி ஒத்துக்காது நான் மெத்தயில கொண்டு போய் வச்சுகுர்ரேன்மா என கறாவினான். அவுது லெப்பை கட்டை விரலை மூக்கில் விட்டு குடைந்து கொண்டிருந்தார். ‘ பூனய நீ உடலனா நான் அத தூக்கி வெளிய வீசறனா இல்லியானு பார் என ஆகிமல் கூறி விட்டு அடுப்பங்கரைக்குள் நுழைந்தாள். பூனைக் குட்டி மெல்ல போய் கப்போர்டில் சுருண்டு கொண்டது.

முகம் தொய்ந்த நெய்னாக் குஞ்சும், ஆதமும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். பின்னர் இருவரும் சேர்ந்து கப்போர்டிற்குள் கைவிட்டு பூனைக் குட்டியை வாரியெடுத்தார்கள். ஆகிமல்லின் றாத்தா வீட்டு பேரனான ஆதமிற்கும் நெய்னாக் குஞ்சிற்கும் வயதில் சில மாதங்கள்தான் வித்தியாசம்.

ஆதம் தனது சரிந்து கிடந்த கறுப்பு பிரேம் கண்ணாடியை வலது புறங்கையால் சரி செய்து கொண்டே , இதுக்கு பேர் உடுவோமா ? எனக் கேட்டான். பூனைக் குட்டியை தனது மடியில் கிடத்திய நெய்னாக் குஞ்சு தனது இரண்டு தொடைகளையும் மெல்ல அதிருமாறு ஆட்டியவாறே ஷோஃபி இனி ஒம்பேரு ஷோஃபி என்றவாறே அதன் தலையைத் தடவினான். பூனைக்குட்டி கண்களை சுருக்கி மீசையை விடைத்தது.

அதன் மீசை முடியை தன் புறங்கையால் வருடிக் கொடுத்துக் கொண்டிருந்தான் நெய்னாக் குஞ்சு. அவனும் ஆதமும் தாங்கள் பள்ளிக்கூடத்தில் படித்த பூனை தொடர்பான கதைகளை நினைவுபடுத்திக் கொண்டனர்.

குருவி காக்கய்லாம் கூடு கட்டுதே பூன ஏன் அத மாரி வீடு கட்ட மாட்டீக்குது. அப்படி கட்டுனா நாம அதுக்கு எல்லா வசதியும் செஞ்சு கொடுக்கலாம்பா என்ற ஆதத்தின் ஆதங்கத்திற்கு நாம பூனய்க்கி வீடு கட்ட படிச்சு கொடுத்தா என்ன? யான , நாய் கிளிக்குலாம் மனுசன் என்னதய்லாமோ பழக்கி கொடுக்குறாந்தானே அதப்போல பூனயும் படிக்குந்தானே என பதில் சொன்னவன் சிறிய யோசனைக்கு பிறகு அதுகளுக்கு புரியுற மாதிரி சொல்லி கொடுக்க நம்பளுக்கு தெரியாதே… என்றான்.

அவுது லெப்பை நெய்னாக் குஞ்சை பார்த்து தலையை வலப்பக்க ஓரமாக உயர்த்தி கண்ணை சிமிட்டவும் பூனையைக் கொண்டு போய் அவரின் படுக்கையறையில் விட்டான். அது இப்படியும் அப்படியும் பார்த்து விட்டு மியாவ் என லேசாக முனங்கியவாறே கட்டிலின் கீழே போய் படுத்துக் கொண்டது.. கொஞ்ச நேரம் அத படுக்க விடுங்கப்பா என சொன்ன அவுது லெப்பை கட்டிலில் போய் சாய்ந்து கொண்டார்.

நெய்னாக்குஞ்சும் ஆதமும் சேர்ந்து அதை மீண்டும் மீண்டும் கூப்பிட்டு பார்த்தார்கள். மீ என பாதி முனகி விட்டு அது தலையை சாய்த்து கொண்டது. அதுட வால பிடிச்சி இழுடா வந்துரும் என்று ஆதம் சொன்னவுடன் டேய் அத அநியாயம் பண்ணாதீங்கடா. தானா வரும்டா என்ற அவுது லெப்பைக்கு ஷோஃபி தன் தாயை தேடுவது போல மனதில் பட்டது. அதனால்தான் அது வேறு கரங்களிலிருந்து தன்னை துண்டித்து கொள்ள விழைகின்றது. கட்டிலின் அரை இருட்டிற்குள் தனது தாயின் நிழலை தேடுகிறது போலும் என தனக்குள் முணுமுணுத்துக் கொண்டார்.

இரவு உணவை முடித்த பின்னர் நெய்னாக்குஞ்சு ஷோஃபியை மாடியிலிருந்து பஞ்சுப்பொதியை போல இரு கைகளிலும் ஏந்தி வந்தான். தன்னோடு அதை தூங்க வைக்க போவதாக அதன் முகத்தை பார்த்தவாறே சொன்னான். ஆகிமல் முந்துவதற்கு முன்னால் அவுது லெப்பை வாயை திறந்தார். ஏற்கனவே தாயின் நினைவில் வாடும் ஷோஃபிக்கு இனியும் சுடு சொற்கள் வேண்டாம் என அவர் நினைத்திருக்கக் கூடும்..

நெய்னா அத எடுத்து முன்னக்க காம்பவுண்டுல உடுறா . சுபுஹுக்கு பெறவு வீட்டுக்குள்ள எடுத்துருவோம் என்றார். அவரின் முன் மொழிவை எல்லாரும் ஏற்றுக் கொண்டனர்.
பிளாஸ்டிக் கிண்ணமொன்றில் குடிப்பதற்கான தண்ணீருடன் காம்பவுண்டிற்குள் ஷோஃபியை விட்ட பின்னர் முன்னறையின் கனத்த மரக் கதவை சாத்தினாள் தமிள்.. இரவு விளக்கின் நீல ஒளியானது கருப்பு உருளையிலிருந்து கசிந்து பரவும் இளந்திரவம் போல அறையெங்கும் சிந்தி கிடந்தது.

ஷோஃபி மெல்ல தனது அரைத்தொண்டையிலிருந்து மியாவ் என்றது. தூங்க முயன்ற அவுது லெப்பையின் மூக்கிற்குள் தலையணை உறையின் கோழையும் எண்ணெய் பிசுக்கும் கலந்த மக்கும் வாடை தானாகவே போய் நிரம்பியது.
தட் தட் என்ற மெல்லிய ஓசை கனத்த கதவிலிருந்து புறப்பட்டு அவுது லெப்பையின் காதுகளில் அதிர்ந்தது. படுக்கையை விட்டு எழுந்திருத்த அவர் லுங்கியை வலது கையில் பிடித்தவராக மெல்ல எழுந்து முன்னறை வாசலின் தட்டி கதவை திறந்து பார்த்தார். ஷோஃபி தன் உடலை பிறை வடிவில் வளைத்து தனது விலாவினால் கதவை இடித்துக் கொண்டிருந்தது.

தட்டி கதவை திறந்த ஓசையைக் கண்டு மேலே பார்த்தது. அவுது லெப்பை படுக்கையைனருகில் இருந்த செல்பேசியை எடுத்து வந்து அதிலிருந்த டார்ச்சை எரிய விட்டார். நேராக ஷோஃபியின் கண்களில் வெளிச்சம் பாய்ந்தது. பச்சை நிற குளத்தில் மிதக்கும் நீள்வட்ட இளஞ்சாம்பல் நிற துணுக்கு போலிருந்தது அதன் கருவிழி. தன் அரிசி பற்களை காட்டி மியாவ் என்றது.

டார்ச் லைட்டின் ஒளிக்கற்றை வழியாக ஏறி வந்த அந்த மிதக்கும் கருவிழி துணுக்கு தன்னுடன் பச்சை பாசி படிந்த குளத்தையும் சேர்த்து கொண்டு வந்தது. அவுது லெப்பை தட்டி கதவை மூடுவதற்குள் அது அவரின் கண்களின் வழியாக மூளைக்குள் போய் புகுந்து விட்டது. கண் அயரும் வரைக்கும் பிள்ளையைப்போல கறாவிக் கொண்டிருந்த ஷோஃபியனின் ஓசையை சிறு பதட்டத்துடன். கேட்டுக் கொண்டிருந்தார்.

படுக்கையில் போய் கிடந்த அவ்து லெப்பை இரவு முழுக்க அந்த பச்சை குளத்தின் பாசி படலத்தில் மீண்டும் மீண்டும் வழுக்கி விழுவதாக கனவு கண்டார். இரவின் கருமைக்குள் தன்னை இறுகக் கட்டிக் கொண்டார் அவுது லெப்பை..
சுபுஹு தொழுகைக்கு எழும்பிய அவுது லெப்பை தமிளையும் எழுப்பி விட்டார். அரவங்கேட்டு ஆகிமல்லும் எழுந்து விட்டாள்..

நெய்னாக் குஞ்சு பழுப்பு நிற குட்டி ஜட்டியோடு பாதி பின்புறம் தெரிய கவிழ்ந்து கிடந்து தூங்கிக் கொண்டிருந்தான். அவன் மட்டும் சுபுஹு தொழாமல் தூங்குறானே எங்களையெல்லாம் மட்டும் எழுப்பி உடுறியளே என்ற தமிளின் முறைப்பாட்டுக்கு அவனுக்கு பத்து வயதான பிறகு எழுப்பி விடுவதாக சமாதானம் சொன்னார்.

அவுது லெப்பை நேராக வெளி விளக்கை போட்டு தட்டிக்கதவை திறந்து பார்த்தார். பூனையை காணவில்லை. எங்காவது போயிருக்கும் வாப்பா என்றவள் , ஆமா அப்படி எங்கயாவது போய்ட்டா நல்லதுதானே என்றவர் மீண்டும் ஒரு குட்டி தூக்கத்திற்காக முன்னறையின் சோஃபாவில் சாய்ந்தார்.
காலையில் இட்லி கொண்டு வரும் வெள்ளையம்மாள் கதவை தட்டிய பிறகுதான் இரண்டாம் தூக்கத்திலிருந்து வீட்டிலுள்ள அனைவரும் விழித்தனர்.

நெய்னாக்குஞ்சு இன்னும் படுக்கையிலிருந்து எழுந்திருக்காமல் ஒரு பூனைக்குரிய பிறை வளைவுடன் சுருண்டு கிடந்தான்.
மாடிக்கு சென்ற அவுது லெப்பை அங்கிருந்து காம்பவுண்டுக்குள் சிறிய அவநம்பிக்கையுடன் எட்டிப் பார்த்தார். காம்ப்வுண்டின் கருமை நிற பெயிண்ட் அடித்த இரும்பு வாசலுக்கருகில் ஷோஃபி உடலை வளைக்காமல் நீட்டமாக படுத்து கிடந்தது.

ச்சூ ச்சூ என வாயைக் கூட்டி குரலெலுப்பிய பின்னரும் அது அசையாமல் கிடக்கவே தண்ணீரை தெளித்தார். அசைவில்லை. கூர்ந்து பார்த்தார். அதன் வாயை சுற்றி நகரும் செங்கோட்டைப் போல கட்டெறும்புகள் மொய்த்து கொண்டிருந்தன.

தகவலை சொல்ல அவுது லெப்பை கீழே வரும்போது நெய்னாக் குஞ்சு அப்போதுதான் எச்சில் வாயுடன் படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்திருந்தான். அவனருகில் அன்றைய பேப்பரில் பெண்கள் இணைப்பிதழை வாசித்துக் கொண்டிருந்த தமிளிடம் நெய்னாக்குஞ்சு தான் கண்ட கனவை சொல்லத் தொடங்கினான்.

, ஷோஃபி ,கனவுல வந்துது. நம்ம காம்பவுண்டுலதானே உட்டோம். அது அங்கேயிருந்து பெருசா வளர்ந்து காங்கீரீட் வரைக்கும் அதுட தல முட்டிக்கிட்டு நின்டுது. அதுட வாலு கதவு வழியா பூந்து ஹால் முழுசா நெறஞ்சுட்டுது. அந்த வாலு நெறய குட்டி போட்டுது. அது அவ்வளவும் வாலாத்தான் இருந்துது.

எல்லா வாலும் நெளிஞ்சு ஜன்னல் சொவருலாம் தாவிச்சுப்பா. மியாவ் மியாவ்னு எல்லா வாலும் கத்த ஆரம்பிக்கவும் காதெ செவிடாயிரும்போல இருந்துது. எல்லாமே ஒரிஜினல் பூனய போல மியாவ்னுதான் கத்திச்சி. ஆனால் புள்ள அழுவுற மாதிரி இருந்துது.. சத்தம் தாங்க ஏலாம நான் ஊட்ட உட்டு வெளிய வந்தா பத்து ஷோஃபி நிக்குதுப்பா. கழுத்து வரய்க்கும் மனுச ஒடம்பு தலை மட்டும் பூனயப்போல இருந்துதுப்பா. அவ்ளவும் பால் போல வெள்ளயா இருந்துது.

எல்லாத்துட கையிலயும் பம்பரமும் கயிறும் இருந்து. என்ன பாத்தவுடனே நெய்னா இங்க வா நாங்க பம்பரம் தர்றோம்னுச்சி. நான் தலய ஆட்டவும் ஒனக்கு தெரியாட்டா பரவாயில்லே நாங்க சொல்லி தர்றோம்னு சொல்லி பழகி தந்துது.

நான் ஒரு பம்பரத்த எடுத்து உட்டனா. அந்த பம்பரம் சுத்த சுத்த நானும் அதேபோலவே வேகமா சுத்துனேன். எல்லா பூனய்களும் அதே மாதி ஸ்பீடா சுத்திச்சி. அந்த வெட்ட ஃபுல்லா பால் கலரா இருந்துச்சு. சுத்த சுத்த அந்த மனுச புள்ள பூனய்ங்கலாம் மெழுவுத்திரி மாதிரி உருகி தண்ணியாயிட்டு. ஆனா இப்போ எல்லா பூனய்ங்களும் சிரிச்சுக்கிட்டே இருந்துச்சி. என்னய நானே பூனதான்னு நெனச்சிக்கிட்டேன். ஜாலியா இருந்துச்சுப்பா. ஆனா டக்குனு முழிச்சுட்டேம்பா. தமிளு! நாம நெனச்சா பூனயா ஆக முடியுமாப்பா ? எனக் கேட்டு கொண்டிருந்தான்.

நெய்னாக் குஞ்சு தன்னிடம் எதுவும் கேட்டு விடக்கூடாதே என்ற பதட்டத்தில் அவனை நைசாக கடந்து சென்று அடுப்பங்கரைக்குள் நுழைந்தார் அவுது லெப்பை. அங்கும் நெய்னாக்குஞ்சின் குரல் சன்னமாக அவரை தொடர்ந்தது. தேநீர் போட்டுக் கொண்டிருந்த ஆகிமல்லிடம் ஷோஃபிக்கு நடந்ததை சொல்ல ஹாலுக்குள் எட்டிப் பார்த்த அவளின் கண்கள் ஒரு கணம் வெட்டி இளஞ்சிவப்பு நிறத்தில் மின்னி இயல்பாகியது.

அவுது லெப்பையின் மூளைக்குள்ளும் மின்னல் கீற்று இழையோட கணினி மேசையின் முன்னர் போய் உற்சாகமாய் அமர்ந்தார். அந்த மின்னலுக்குள் பச்சை நிற குளத்தில் மிதக்கும் நீள்வட்ட இளஞ்சாம்பல் நிறத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்தது..

“““

சொல் விளக்கம்

அஸர் – மாலைத் தொழுகை
வாப்பா – தந்தை
மஃரிப் – சந்தி காலத் தொழுகை
சாச்சி – சித்தி
ஆணம் – குழம்பு
மெத்தை – மாடி
கறாவுதல் – நச்சரித்தல்
சுபஹ் – அதிகாலைத் தொழுகை
தட்டி கதவு – மரக்கதவில் உள்ள சிறு சாளரம்

விருட்சம் நினைவுகள் = 3 / அழகியசிங்கர்

அசோகமித்திரன்

ஒரு சிறுபத்திரிகை ஆரம்பிக்க வேண்டுமென்ற எண்ணம் சிறுபத்திரிகையுடன் தொடர்புள்ள ஒருவருக்குத்தான் தோன்றும். பல மூத்த எழுத்தாளர்களை நீங்கள் பேட்டி எடுங்கள். அவர்கள் என்ன சொல்வார்கள் என்று நினைக்கிறீர்கள்? நான் எழுத ஆரம்பிப்பதற்கு முன் கையெழுத்துப் பத்திரிகை நடத்தினேன் என்று கூறாமல் இருக்க மாட்டார்கள்.

முதலில் கையெழுத்துப் பத்திரிகை. பின் அச்சில் சிறுபத்திரிகை. எழுத ஆரம்பிக்கிற எல்லோருக்கும் பெரிய பத்திரிகைகளில் இடம் கிடைப்பதில்லை. பெரிய பத்திரிகையின் தரம் அந்த அளவிற்கு உயர்வானது என்பதற்காக அல்ல. உதாரணமாக அசோகமித்திரன் எழுத்து பெரும் பத்திரிகைகளும் பிரசுரம் செய்யக்கூடிய எழுத்துதான். ஆனால் அதே நகுலன் எழுத்தை எந்தப் பெரிய பத்திரிகை பிரசுரம் செய்யும். அசோகமித்திரன் படைப்புகள் பெரும் பத்திரிகைகளில் இடம் பெற்றன. அந்த அதிர்ஷ்டம் அவருக்கு இருந்தது.

1960 ஆண்டு வெளிவந்த üஎழுத்துý இதழில்தான் பிரமிள் படைப்பு வெளிவந்தது. 1939ல் பிறந்த பிரமிள் வயது 20தான் எழுத்து என்ற பத்திரிகையில் முதன் முறையாக எழுத ஆரம்பித்தது.

üசொல்லும் நடையும்ý என்ற பெயரில் எழுத்து பத்திரிகையில் வெளிவந்த பிரமிள் கட்டுரையை இப்போது படிக்கும்போது கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கிறது. இவ்வளவு திறமையான ஒரு கலைஞனுக்கு வாழ்க்கை என்ன கற்றுக்கொடுத்தது. வறுமையின் பாடத்தைத்தான்.

ஐஏஎஸ் தேர்வு எழுதுகிற ஒருவர் கூட இதுமாதிரியான ஒரு கட்டுரையை எழுத முடியாது. ஆனால் பிரமிள் தன் வாழ்நாள் முழுவதும் üஎழுத்துý என்ற சிறு பத்திரிகையில் எழுத ஆரம்பித்து வறுமையில் கஷ்டப்பட்டார். திறமை இருந்தும் சரியான வழியில் பயன்படுத்திக் கொள்ள முடியாத நிலை.

அதனால்தான் அசோகமித்திரனை யாராவது பார்க்கப் போனால், பார்க்க வந்தவரைப் பற்றி விஜாரிப்பார். கல்லூரியில் படிக்கும் மாணவனாக இருந்தால், எழுதவே வராதே என்று துரத்தி விடுவார். அவரும் எழுத ஆரம்பித்து வறுமையில் திண்டாடி கஷ்டப்பட்டவர்.

ஏன் இந்தச் சிறுபத்திரிகையில் எழுதுவது என்பது சிக்கலாகி விடுகிறது? என் கனவு பெரிய பத்திரிகை என்றாலும் அது நடக்காது என்று எனக்கு ஏனோ தெரிந்துவிட்டது. அதற்கு முன்னால் ஒரு வேலையில் சேர்ந்தபிறகுதான் இது மாதிரியான பத்திரிகை விவகாரத்திற்குள் நுழைவது என்று தீர்மானித்தேன்.

என்னுடன் எழுத வேண்டுமென்ற தாகத்துடன் இருந்தவர் என் பெரியப்பா பையன் சுவாமிநாதன் அவர்கள். அவரும் பெரிய முயற்சி செய்து பெரிய பத்திரிகையில் தன் படைப்புகளைச் சேர்ப்பது என்று முயற்சி செய்தார். ஓரளவு வெற்றியும் பெற்றார்.

எங்கள் இருவருக்கும் வேலைக் கிடைத்தது. அதன்பின்தான் நாங்கள் எழுதுவது பற்றி யோசித்தோம். முடிந்தால் பார்ப்பது இல்லாவிட்டால் விட்டுவிடுவது என்று கூட யோசித்தோம். அவர் ஆரம்பித்தில் தூதுவன் என்ற பெயரில் ஒரு கையெழுத்துப் பத்திரிகை ஆரம்பித்தார். எனக்கு அந்தப் பெயரே பிடிக்கவில்லை. ஏன் அந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்தார் என்பது தெரியவில்லை. அந்தப் பத்திரிகையில்தான் நான் எழுதிய கதை, கவிதை எல்லாம் தொடரந்து வந்தன. அதில் எழுதிய கதைகூட எனக்கு ஞாபகத்திற்கு வரவில்லை.

இந்தச் சந்தர்ப்பத்தில்தான் அவர் üமலர்த்தும்பிý என்ற பெயரில் ஒரு சிறுபத்திரிகை ஆரம்பித்தார். ஒரு சிறு பத்திரிகை ஆரம்பிக்க முன்னோடியாக சில பத்திரிகைகள் இருக்க வேண்டும். ஆனால் மலர்த்தும்பி என்ற பத்திரிகைக்கு முன்னோடி பெரிய பத்திரிகைகள். அந்த மாதிரியை என் சகோதரர் எடுத்துக்கொண்டார்.
அது எடுபடாது என்பது அவருக்குத் தெரியவில்லை.

உண்மையில் மலர்த்தும்பி பத்திரிகையை ஆரம்பித்து அவர் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளானார். என் திருமணத்தின்போது என் சகோதரரைச் சந்தித்த என் இலக்கிய நண்பர் ஒருவர், என் சகோதரரைக் கிண்டல் செய்ய ஆரம்பித்தார்.

üüநீங்கள் ஏன் மலர்த்தும்பி என்ற பத்திரிகை ஆரம்பித்தீர்கள்?ýýஎன்று சகோதரரை என் இலக்கிய நண்பர் கேள்வி கேட்க, ஏன் அதற்கு என்ன என்று என் சகோதரர் பதில் அளிக்க், இலக்கிய நண்பர் விடாமல், üüநீங்கள் பேசாமல் ஒரு 80 பக்கம் காலி நோட்டை வாங்கிக் கொடுத்து விடலாம், மலர்த் தும்பி பத்திரிகையைக் கொடுப்பதற்குப் பதிலாக,ýý என்றார். என் சகோதரருக்கு உண்மையில் புரியவில்லை.

üüஉண்மையில் உங்கள் பத்திரிகையைப் படிப்பதற்குப் பதில் காலி 80 பக்க நோட்புக்கைக் கொடுத்தால், எல்லோரும் அவரவர் விருப்பப்பட்டத்தை எழுதி வாசிப்பார்கள்,ýýஎன்றார் நண்பர். என் சகோதரர் தொடர்ந்து பேசவிரும்பவில்லை. இந்த நிகழ்ச்சியும் ஒரு காரணமாக இருக்கும் மலர்த்தும்பி என்ற பத்திரிகை நிற்க.

அந்த மலர்த்தும்பியில் வெளிவந்த என் கவிதையை இங்கு தர விரும்புகிறேன் :

பதவி

எத்தனையோ பேர்
எங்கோ போய்
வாழ்ந்து சரித்த
சரித்திரங்கள்
மயான பூமியில்
புதைக்கப் பட்டுள்ளன
பதவி ஆசை
இல்லாமல்…..
ஒரே வரிசையில்
புன்னகைக்கிறார்கள்.

சனங்கள் என்ற என் கதையும் மலர்ததும்பியில் பிரசுரமானது. மலர்த்தும்பி தொடர்ந்து வராமல் நின்று போனாலும், என் மனதில் ஒரு பத்திரிகை ஆரம்பிக்க வேண்டுமென்ற எண்ணம் என்னை அறியாமல் இருந்துகொண்டுதான் இருந்தது.

என் திருமணத்திற்குப் பிறகு மலர்த்தும்பி ஆசை நின்று போய்விட்டது. என் சகோதரர் தீவிரமாக பெரிய பத்திரிகைகளில் இடம் முயற்சி செய்து கொண்டிருந்தார். பெரிய பத்திரிகைகளல் இடம் பெற்றால்தான் புகழ் பெற முடியும் என்றெல்லாம் அவர் கற்பனை செய்ய ஆரம்பித்துவிட்டார்.

நானோ கணையாழி, தீபம் போன்ற பத்திரிகைகளைப் படிக்க ஆரம்பித்தேன். தீபத்தை விட நான் கணையாழிக்கு நான் அதிகம் முக்கியத்துவம் கொடுத்தேன். ஏன்எனில் மு மேத்தா போன்ற படைப்பாளிகள் படைப்புகள் கணையாழியில் இடம் பெற வில்லை. மேலும் கணையாழி அசோகமித்திரன் ஆசிரியப் பொறுப்பில் வெளிவந்து கொண்டிருந்தது

(இன்னும் வரும்)

காலவரம்பற்ற கன்னிமைச் சொற்களின் ஒழுங்கின்மை — கவிதை / மொழிபெயர்ப்பு கவிதைகள்; மூலம் : தியோடர் ரோத்கே தமிழில் : தி.இரா.மீனா


–தியோடர் ரோத்கே
தியோடர் ரோத்கே ( Theodore Roethke1908-1963 ) அமெரிக்கக் கவிஞர்.தற்சோதனை ஒலிநயம்,புனைவாற்றல் கற்பனை என்பவை அவர் கவிதாம்சங்களில் சில வாகும்.கீட்ஸ், எலியட்,ஆடென் என்று அவரது போற்றுதலுக்குரிய கவிஞர் கள் இருப்பினும், மிக வெளிப்படையாகத் தன் அனுபவங்களையே பெரும் பான்மைக் கவிதைகளின் பாடுபொருளாக்கியது ரோத்கேயின் தனிச் சிறப்பு என்று விமர்சகர்கள் மதிப்பிடுகின்றனர். அவர் கவிதைகளை வரிசைப்படுத்திப் படிக்கும்போது வாசகன் எல்லாக் கவிதைகளிலும் குறிப்பிட்ட பாங்கும்,கருது பொருள்களும் தவிர்க்க முடியாது வெளிப்பட்டிருப்பதை உணரமுடியும். இயற் கைக்கு ஒத்த கலைசார்ந்த தொனி, பரிணாம வளர்ச்சி கருக்கள்,அழுத்தத்தின் பின்னணியிலான அனுபவங்கள் என்ற பார்வை தொடர்ந்து வெளிப்பட்டிருப் பதை அறியமுடியும்.இந்த வெளிப்பாடுகளால் அவரை முறைசார்பு கவிஞர் என்றோ சோதனை சார்பு, கவிஞர் என்றோ குறையேற்பு கவிஞர் என்றோ எதற்குள்ளும் அடையாளப் படுத்த முடியாமல் போகிறதெனவும், எல்லாம் ஒருங்குடைய கவிஞராக வெளிப்படுத்துவதாகவும் Simonetti குறிப்பிடுகிறார். The Waking, The Lost Son, The Far Field, Words for the Wind அவருடைய குறிப்பிடத் தக்க படைப்புகள். Pulitzer Prize, National Book Award ஆகியவை அவருக்குக் கிடைத்த குறிப்பிடத்தக்க சிறந்த விருதுகள்

ஓர் இருள் நேரத்தில்
ஓர் இருள் நேரத்தில் கண் பார்க்கத் தொடங்குகிறது,
நான் என் நிழலை ஆழமான சாயையில் சந்திக்கிறேன்;
நான் என் எதிரொலியை வனத்தின் எதிரொலியில் கேட்கிறேன்.
இயற்கைக் கடவுள் ஒரு மரத்திடம் அழுகிறது.
நாரைக்கும் சிறுகுருவிக்கும் மலை விலங்குகளுக்கும்
பாம்புகளின் குகைகளுக்கும் இடையில் வாழ்கிறேன்.
பித்துப் பிடித்தலென்பது சூழ்நிலைக்கான முரண்பாடுகளில்
ஆத்மாவின் பெருந்தன்மை? அந்த நாள் அக்னியில் எரிகிறது
பரிசுத்தமான மனத்தளர்ச்சியின் தூய்மை என்பது எனக்குத் தெரியும்
என் நிழல் ஒரு புழுங்கலான சுவற்றிற்கு எதிராகப் பொருந்தியிருக்கிறது
பாறைகளுக்கு இடையிலான இடம்-ஒரு குகையா,
அல்லது சுழலுகிற வழியா? எனக்குத் தெரிவது விளிம்புதான்.

ஒரு நிலையான சூறாவளியின் தொடர்புகள்!
ஓர் இரவு பொங்கி வழியும் பறவைகளுடன், ஒரு கந்தை நிலா,
கடும்பகலில் இரவு மீண்டும் வருகிறது!
ஒரு மனிதன் தான் யாரென்பதைக் காணத் தொலைவில் போகிறான்-
கண்ணீரற்ற நீண்ட இரவில் சுயத்தின் இறப்பு
எல்லா இயற்கையானவடிவங்களும் இயற்கைக்கு மாறாகச் சுடர் விடுகின்றன

இருள்,என் விளக்கையும் ,என் விருப்பத்தையும் இருளாக்குகிறது.
என் ஆன்மா சூட்டில் தவிக்கும் கோடைக்கால ஈயாய்
நிலைவிட்டத்தில் ரீங்கரித்துக் கொண்டிருக்கிறது.நான் எந்த நான்?
ஒரு விழுந்த மனிதன் ,நான் அச்சத்திலிருந்து எழுகிறேன்.
மனம் மனதிற்குள் போகிறது, கடவுள் மனம்,
ஒன்று ஒன்றேதான், கிழியும் காற்றில் சுதந்திரமாய்.

இன்னொரு முறை , அந்தச் சுற்று
எது உயர்ந்தது, கூழாங்கல் அல்லது குளம்?
எது அறியமுடிவது? அறிய முடியாதது.
என் மனச்சாட்சி ஒருமலையை நோக்கி ஓடுகிறது.
இன்னும்! ஓ, இன்னும் மறைவற்றதாக
நான் இப்போது என் வாழ்க்கையைப் போற்றுகிறேன்
பறவையுடன்,தொடரும் இலையுடன்,
மீனுடன் , வேட்கையான நத்தையுடன்,
பார்வை எல்லாவற்றையும் மாற்றுகிறது.
நான் வில்லியம் பிளேக்குடன் நடனமாடுகிறேன்.
காதலுக்காக, காதலுக்கான காரணமாக
நாம் நடனமாடும்போது , நடனமாடும் போது
எல்லாம் ஒன்றாகிறது.

சரியான விஷயம்

இயலுமெனில் மற்றவர்கள் புதிரை கண்டறியட்டும்.
கைதிகள் அனுமதிப்பின் வாழ்க்கை அதன் போக்கில் அமையும்
சந்தோஷமான மனிதனுக்கு சரியான விஷயமே நடக்கிறது.
பறவை வெளியே பறக்கிறது,மீண்டும் உள்ளே வருகிறது;
மலை பள்ளத்தாக்காகிறது, இன்னமும் அப்படி;
இயலுமெனில் மற்றவர்கள் புதிரைக் கண்டறியட்டும்.
கடவுள் வேர்களை ஆசீர்வதிக்கிறார்! -உடலும் ஆன்மாவும் ஒன்றுதான்!
சிறியது மிக உயரியதாகிறது, உயரியது சிறியதாகிறது;
சந்தோஷமான மனிதனுக்கு சரியான விஷயமே நடக்கிறது.
இரவின் குழந்தை சூரியனில் பாய முடியும்,
அவனிருப்பு தனிதான் அது எல்லாமாகவும்;
சந்தோஷமான மனிதனுக்கு சரியான விஷயமே நடக்கிறது
அல்லது, சுயஅழிவு மற்றவர்களை அச்சுறுத்துறுத்தும் போது
அவன் திட வடிவாய் இன்னமும் அமர்ந்தபடி ,
தனக்குண்டான புதிருக்குள் அமிழ்கிறான்

இரவு மெதுவாக ஊடுருவும் போது நிலை மாறுகிறது
தன் விருப்பங்களை சரணடையச் செய்து தன்னை மறைக்கிறான்
புதிர் இல்லாதவரை ;செய்ய முடிவதும் எதுவுமில்லை
சந்தோஷமான மனிதனுக்கு சரியான விஷயமே நடக்கிறது .

கணக்கிடுதல்
எல்லா லாபங்களும் மறைந்து விட்டன; சுலபமான
ஆதாயத்தின் பயன் பதுக்குதல்,ரகசியத் தொகை
இப்போது அச்சம் தருகிற லக்கம் பழைய வலி என்று
எங்கள் வீட்டைத் தாறுமாறாகத் திருப்பியிருக்கிறது
அழிவுக்கான காரணத்தைத் தேடுகிறோம்,கூட்டல்,
கழித்தல் என்று எங்களை அடமானம் வைக்கிறோம்;
அட்டையை நாங்கள் எவ்வளவு உரசித் தேய்த்தாலும்,
விழுந்த பிழையை எங்களால் அடையாளம் காணமுடியவில்லை

ஏழைகளை அபகரிக்கும் நாணயமாய்
அந்தக் குறைபாடு எங்களை அடையாளப்படுத்தும்;
நாங்கள் தேடுவது எதுவெனில் ஒரு வழிச்
சவாரிதான்,பாதுகாப்பிற்கான ஒரு வாய்ப்பு:

ரோத்கேயின் சில மேற்கோள்கள்:
எல்லா மலர்களும் ,ஆழமான வேர்களில் ஒளியைத் தேக்கியிருக்கின்றன
கவிதையின் அழகான கால வரம்பில்லாத கன்னிமை கொண்ட சொற்களின் ஒழுங்கின்மையால் நான் ஆட்கொள்ளப்பட்டிருக்கிறேன்
நான் என்கிறது சுயம் :நான் குறைந்தவன் என்கிறது மனம்;நீ எதுவுமற்றவன் என்கிறது ஆன்மா
கட்புலம் என்னை வெளியேற்றுகிறது.நான் நிழலில் கரைந்து போகிறேன்.

மஜித் மஜிதியின் நிலா பார்த்தல் ( திரை விமர்சனம் ) : சமயவேல்

மஜித் மஜிதி

மஜித் மஜிதி எனது மனங்கவர்ந்த இயக்குநர். அவரது ‘பரன்’ படத்தைக் கணக்கற்ற முறைகள் பார்த்திருக்கிறேன். அவரது புதிய படம் ‘Beyond the Clouds’ மதுரையில் ஐநாக்ஸில் பார்க்க முடிந்ததில் பெரும் மகிழ்ச்சி. படத்திற்குச் செல்வதற்கு முன்பு இணையத்தில் படத்தின் விமர்சனங்களை வாசித்தேன். ஆங்கில விமர்சனங்கள் எல்லாமே இது மும்பையைப் பற்றிய படம் என்றும் வழக்கமான மஜீத் மஜீத்தின் படம் இல்லை என்றும் ஒரே குரலில் எழுதியிருந்தன. அனைவருமே குறைவான மதிப்பெண்களையே அளித்திருந்தார்கள். IMDB மட்டும் 69 மதிப்பெண் அளித்திருந்தது பெரும் ஆறுதல். மும்பையைக் களமாகக் கொண்ட ‘சலாம் பாம்பே!’ ஸ்லம்டாக் மில்லியனர்’ போன்ற முந்தைய திரைப்படங்களின் ஞாபகத்துடனே பலரும் படம் பார்த்திருக்கிறார்கள். ஆனால் “மேகங்களுக்கு அப்பால்” ஒரு முற்றிலும் புதிய வகைத் திரைப்படம். மஜித் மஜிதியின் படங்களின் வழக்கமான தன்மைகளையும் உள்ளடக்கிய ஒரு பரிசோதனைப் படம்.

திரை விமர்சகர் ரோகர் எபர்ட் தளத்தில் மட்டும், “ஆனால் ‘மேகங்களுக்கு அப்பால்’ ஒரு பெருநகர இசைக்கோர்வை அல்ல; குரூரமான ஆனால் வசீகரமான ஒரு சேரிக்கு, முரண்பாட்டுடன் கூடியதொரு காணிக்கை” என்று ஒரு விமர்சகர் எழுதுகிறார். அவருமே கதாசிரியர்களின் (மஜித், கஷாணி) பார்வை முழுமையடையாமல் இருக்கிறது எனக் கூறி இரண்டு நட்சத்திரங்கள் (2/4) மட்டுமே வழங்குகிறார்.

ஆனால் படத்தைப் பார்த்த பிறகே புரிந்தது, இவர்கள் எல்லோருமே, படம் முழுக்க ஒரு மறைபிரதிக் கதையாடல் (meta-narrative) இயங்குவதைக் காணத் தவறிவிட்டார்கள் என்பதை. இவர்கள் எவருமே இந்தியாவின் சமகால அரசதிகாரப் போக்கையும் அதன் நுண்ணரசியலையும் அறிய மாட்டார்கள். மஜித் மஜிதி ஒரு அரசியல் படம் கொடுப்பார் என்பது எவரும் எதிர்பாராதது. இது பாம்பே பற்றிய படம் அல்ல. மொத்த இந்தியாவையும் பற்றிய படம். “கறுப்புப்பணம் ஒழிக்கப்பட்டு எங்கள் டிஜிட்டல் இந்தியா அபரிதமாக வளர்ந்துவிட்டது” என நெஞ்சைத் தூக்கிக்கொண்டு அலைபவர்களிடம் “இதுதான் உங்கள் இந்தியா” என கன்னத்தில் அறையும் படம்.

வெற்றுக் கேளிக்கைகளும் மெகா நடனங்களும் காய்கறி மார்க்கெட் சண்டைக் காட்சிகளும் ஸ்பெஷல் எஃபக்ட் வாகனத் துரத்தல்களும் நிரம்பிய மாறா வகைமாதிரிப் (stereotype) படங்களான பாலிவுட் கோலிவுட் திரைப்படங்களைப் பகடி செய்யும் விதத்தில், அப்படங்களின் பாணியில், பெருநகரம் முழுவதும் அலைந்து போதைப் பொருள் விற்கும் இளம் கதாநாயகன், காமத்திபுராவின் மையத்தில் வேடிக்கை பார்ப்பவன், மும்பையின் சந்து பொந்துகளுக்குள்ளும் நுழைந்தோடி காவல்துறைக்கும் பெப்பே காட்டும் அவனது சாகசங்கள் எனத் திரைப்படத்தைத் தொடங்குகிறார். இந்தியப் படங்களின் கண்களைக் கூச வைக்கும் காட்சிகளையும் காதைப் பிளக்கும் சப்தத்தையும் படம் முழுவதும் அங்கங்கே பகடியுடன் கூடிய மறைபிரதியாகவே செருகி வைக்கிறார். .

படம் தொடங்கும் முதல் காட்சியில் இரு திசைகளிலும் வாகனங்கள் விரைந்தோடும் ஒரு மும்பைச் சாலை காட்டப்படுகிறது. அப்படியே நிற்கும் காமிரா சில நிமிடங்களுக்குப் பிறகு கீழிறங்கி, சிமிண்டுக் குழாய்களுக்குள் வாழும் சேரிக் குடும்பங்களைக் காட்டுகிறது. படச்சட்டகம், அடுத்தடுத்து நகரும் இரு பாகங்களால் ஆகியது என்பது முதலிலேயே கூறப்படுகிறது. காமிரா மட்டுமே நகரும் பெருங்காட்சிகள் வழியாக மறைபிரதியும் கதாப்பாத்திரங்கள் உறவாடும் நாடக நிகழ்வுகள் வழியாகத் திறந்த பிரதியும் நகர்கின்றன.

அனில் மேத்தாவின் காமிரா வஞ்சகமில்லாமல் காட்டும் மெஹா காட்சிகளில், மஜிதி தனது அரசியல் செய்தியை வைக்கிறார். உதாரணமாக மும்பை ஜெயில். இந்த ஜெயில் ‘லைஃப் ஈஸ் ஃப்யூட்டிஃபுல்’ படத்தில் வரும், இரண்டாம் உலகப் போரின் நாஜிகளின் வதை முகாம்களை விடவும் கேவலமாக இருக்கிறது. இப்படி ஒரு சிறை இந்தியாவில் அதுவும் மும்பையில் இருக்கிறது என்பது அனில் மேத்தாவின் காமிரா மூலமே நமக்குத் தெரிய வருகிறது.

கதாநாயகன் அமீர் (இஷான் ஹாட்டர்) போலீசிலிருந்து தப்பித்து ஓடும் மார்க்கெட் பகுதிகள் மற்றும் சந்து பொந்துகள், அழுக்குப் படிந்த தெருக்கள், கட்டிடங்கள், சுற்றுச் சூழல் சீரழிந்து கொண்டிருக்கும் புறநகர்ப் பகுதிகள், பெண்கள் காய்கறிகளைப் போல குவிந்து கிடக்கும் காமாத்திபுரா, அதில் நாலாபுறமும் பெண்கள் கொத்துக்கொத்தாக குழுமி நிற்கும் ஒரு அடுக்குமாடி பிராத்தல், அந்தப் பெரிய தோபி காட் (சலவையகம்). செஞ்சாம்பல் நிறத்தில் விரியும் இந்தக் காட்சிகள் எல்லாம் சேர்ந்து ‘இது தானா இந்தியா’ என நம்மைக் கலக்குகிறது. இதை அனில் மேத்தாவின் காமிரா அற்புதமான முறையில் சுழன்று சுழன்று படமாக்கியிருக்கிறது.

நகர சலவையகத்தில் தியோ ஆஞ்செலோபௌலோஸ் படம் ஒன்றில் வருகிற மாதிரி வரிசை வரிசையாக வெயிலில் காற்றிலாடி உலரும் வெள்ளைத் துணிகளின் நடுவில் அமீரின் அக்கா தாராவுடன் (மாளவிகா மோகனன்) அங்கே வேலை செய்யும் அக்ஷி (கௌதம் கோஷ்) வல்லுறவு கொள்ள முயற்சிப்பதும், அதை எதிர்த்து தாரா ரத்தம் தெறிக்க அவனைத் தாக்குவதும், வெண் துணிகளுக்குப் பின்னால் பொம்மலாட்ட நிழல்களாகக் காட்டப்படுகிறது. உலக செவ்வியல் படக்காட்சிகளை பாலிவுட் காட்சிகளுக்கு அருகருகே வைக்கும் சாகஸ உத்தியே இப்படம் முழுவதும் இயங்குகிறது. அக்ஷி பலத்த காயமடைந்து நினைவிழக்கிறான். போலீஸ் தாராவைக் கைது செய்கிறது. போலீசின் வளையத்துக்குள் வந்துவிட்டாலே, சாமானியப் பிரஜைகள் சகல உரிமைகளும் இழந்த புழு பூச்சிகளாகவும் அடிமைகளாகவும் நடத்தப்படுவது, சிறைக்குள் இருக்கும் தாராவுக்கு அமீர் எதுவும் செய்ய முடியாமல் போவது எல்லாம் மிகையின்றி, கதாநாயக சாகசங்கள் இன்றி, மிக இயல்பாகக் காட்டப்படுகின்றன.

அக்ஷி கண் விழித்து நற்சாட்சியம் அளித்தால் தான் தாரா சிறையிலிருந்து வெளியேற முடியும். அவன் இறந்துவிட்டாலோ தாரா கொலைக் கைதியாகி ஆயுள் முழுக்க சிறையில் இருக்க வேண்டியதுதான். எனவே அமீர் மருத்துவமனைக்குச் சென்று அக்ஷியைக் கவனித்துக் கொள்கிறான். மருந்துகள் வாங்கித் தருகிறான். இடையிடையே அவனை மிரட்டியும் வைக்கிறான். கௌதம் கோஷ் படுத்துக் கொண்டே கண்களால் மட்டுமே நடிக்க வேண்டியதைச் சரியாகவே செய்கிறார்.

இந்த இடத்தில் மஜித் மஜிதியின் வழக்கமான திரைக்கதை, மருத்துவமனையில் இருக்கும் அக்ஷியைக் காண வரும் தமிழ்க் குடும்ப வடிவில் படத்திற்குள் நுழைகிறது. குழந்தைகள் மற்றும் பதின்ம வயதுப் பெண்ணும் ஆணுமே, துயரம் நிரம்பிய அழகியலை அவரது வழக்கமான படங்களில் நிரப்புவது, இந்தப் படத்திலும் நிகழ்கிறது. ஒரு துணிப் பொட்டலத்தை கக்கத்தில் இடுக்கியிருக்கும் இந்தியத் தாய், அவளது பால்முக பதின்ம வயதுப்பெண், ஒரு குட்டிப் பெண்குழந்தை என இக்குடும்பம் பழைய கிராமப்பற இந்தியாவிலிருந்து நேரடியாகப் படத்துக்குள் நுழைந்துவிடுகிறது. இந்தக் குடும்பத்தின் மூலம் போதைப்பொருள் மாஃபியாவைச் சேர்ந்த அமீருக்குள் அவனது குழந்தைமை, மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக துளிர்க்கத் தொடங்குகிறது. அவனது பருவத்தில் ஏற்பட வேண்டிய பெண்மயக்கம், அந்தச் சிறுபெண்ணின் மேல் ஏற்படுகிறது. ‘பரனி’ல் வரும் ஈரானியப் பெண், இங்கே ஒரு தமிழ்ப் பெண்ணாக மாறியிருக்கிறாள். சிறையிலிருக்கும் அமீரின் அக்கா தாராவின் புறாக்கள் வாழும் சிதிலமடைந்த வீட்டில், மீண்டும் மனித வாழ்க்கை துளிர்க்கிறது. குழந்தைகள் எல்லோரும் சேர்ந்து ஒரு வண்ணச் சித்திரத்தை அந்த வீட்டுச் சுவரில் தீட்டுகிறார்கள். அந்தச் சித்திரத்தில் ஒரு அழகிய மனிதக் குடியிருப்பு துளிர்க்கிறது. பிரம்மாண்ட மும்பைக்கு எதிராக இயக்குநர் எழுப்பும் குடியிருப்பே இந்தச் சுவரோவியம்.

இந்தப் படத்தின் இன்னுமொரு முக்கியப் பாத்திரம் தாரா. அந்த வலுவான தைரியம் மிக்க பெண், மாநகரின் பிரம்மாண்ட சலவையகத்தில் துணிக் குவியல்களுக்கு மத்தியில் துணிகளை அயர்ன் செய்து கொண்டிருக்கும் அற்புத ஓவியப் பெண்ணாக அறிமுகமாகிறார். தனித்து வாழும் தாராவும், சத்யஜித் ரேயின் மாணவரான மஜிதியின் கதாப்பாத்திரமே. சிறையில் நோயில் இறந்து கொண்டிருக்கும் சக கைதி ஒருத்தியின் குட்டிப்பையன் ‘சோட்டு’ இவளுடன் சினேகிதமாகிறான். சோட்டு சிறையிலேயே பிறந்து வளர்ந்தவன். சிறைச் சுவர்ப் பொந்து ஒன்றில் வாழும் பெருச்சாளிகளைத் துணிந்து பிடித்து விளையாடும் பையன். சூரியன், சந்திரன், காற்று என்று எதுவுமே அவனுக்குத் தெரியவில்லை. சோட்டு இந்தியாவின் எதிர்காலப் பிரஜை. அல்லது அவன்தான் நள்ளிரவில் சுதந்திரம் வாங்கியும் கார்ப்பரேட் காலனியத்துக்குள் சிக்கியிருக்கும் இந்தியா.

சோட்டுவின் அம்மா ஒருநாள், கொடூரமாக இருமி இருமி மூச்சுவிட முடியாமல் இறந்து போகிறாள். தாரா அவனது தாயின் இடத்தைப் பெறுகிறாள். இந்தச் சமயத்தில் தான் அக்ஷியின் இறப்புச் செய்தியும் வருகிறது. சோட்டுவின் அம்மாவைப் போலவே இவளும் இறக்கும் வரை சிறையில் இருக்க வேண்டும் என்பது முடிவாகியதும் பித்துப் பிடித்தவளாகக் கூச்சலிடுகிறாள்.

அமீர் எதுவும் செய்ய இயலாமல் சிறையை விட்டு வெளியே வருகிறான். மீண்டும் பாலிவுட் கதை. காமாத்திபுரா ஆட்கள் இவனைத் துரத்துகிறார்கள். சூழலியல் அழிவில் இருக்கும் கடலோரப் புறநகர்ப் பகுதியின் ஒரு பெரும் சேற்றுப் பகுதியில் ஒரு சண்டைக்காட்சியும் இடம் பெறுகிறது.

சோட்டுவுக்கு நிலாவைக் காட்டும் முயற்சியைத் தாரா தொடங்குகிறாள். ஒரு பெண் வார்டருக்கு அவளது மோதிரத்தை லஞ்சமாக வழங்குகிறாள். இரவில் லேசாக வெளிக்கதவைத் திறந்து நிலாவைக் காட்ட வார்டர் சம்மதிக்கிறார். ஆனால் அது ஒரு மழை இரவாக ஆகிவிடுகிறது. மேகங்களுக்கு அப்பால் நிலா ஒளிந்து கொள்கிறது. பூட்டுக்குப் பின்னால் இருந்து மழையைக் காட்டும் காமிரா, மழையைப் பூட்டுப் போட்டு பூட்டி விட்டார்கள் என நம்மிடம் பிராது கொடுக்கிறது.

படம் மீண்டும் பாலிவுட்டுக்குத் திரும்புகிறது. அமீர் தப்பித்துவிடுகிறான். எவற்றைப் பற்றியும் கவலை கொள்ள முடியாத இந்தியா, தெருவில் வண்ணமயமாக இரைச்சல் இசையுடன் ஹோலியைக் கொண்டாடுவதுடன் படம் முடிந்துவிடுகிறது. ஏ.ஆர்.ரகுமானின் இசை இயக்குநருக்கு மிகுந்த ஒத்துழைப்பைத் தருகிறது. மிக அடக்கமாக வரும் செவ்வியல் இசைக் கோர்வைகளும், சப்தம் மிக்க இந்திய நாட்டுப்புற இசையும் மாறி மாறி மஜீதியின் இரட்டைப் பிரதியை வேறுபடுத்த உதவுகிறது. செவ்வியல் இசைக் குறிப்புகளில் நாம் மயங்கிப் போகிறோம். நான் இதுவரை காணாத ஒரு ரகுமானை இந்தப் படத்தில் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது.

மஜித் மஜிதியின் ரசிகனாக நான், இந்தப் படத்திற்கு 9/1௦ மதிப்பெண் தர விரும்புகிறேன்.

௦௦௦

ரோஷான் ஏ.ஜிப்ரி கவிதை.

பிரியத்தின் தாய்மொழி!

வன்மத்தை புகட்டாத
நேசத்தின் மொழியிலிருந்து
நீ உதிர்த்த சுடும் சொற்கள்
மறுபடியும்
என் தூய்மையில் கறைபடிய
மஞ்சல் காவிக்கு ஒப்பாகிற்று

பாவம் அறியாமல்
உன் பந்தியில் இலையாய் இருக்கும் என்மேல்
பற்றி எரிக்கும்
நெருப்பை
சமைத்துப்போட
எப்படித்தான் உன்னால் முடிகிறதோ?

பிட்டு தேங்காய்ப்பூ என
பிதற்றிவிட்டு
மண்போட்டு பிசைகிற
மார்க்கத்தை
பொறுப்பு வாய்ந்த நீ
எப்படி போதிக்கிறாயோ..?

அன்பு வேர்விடும்
என் பார்வை கிளையிலிருந்து
ஒவ்வொரு முறையும்
ஒட்டாமல் உதிர்கின்றாய் வெற்றிலைகளாய்
ஆயினும்;
உனக்காய் துளிர்க்கின்றன
எனக்குள் புன்னகைப் பூக்கள்

முன்பொருமுறை
விழுந்த இடத்தில் நீ
மீண்டும் பள்ளத்தாக்கில்….,
நான் எழுந்த இடத்திலிருந்தே ஏறிக்கொண்டிருக்கிறேன்
சூரியனுக்கு நிகராய் என் சூட்சுமம்

நீ
சுட்டுப்போட்ட போதும்
சொல்லால்
வெட்டி நட்ட போதும்
உன்னை சபிக்க முடியாதவாறு
சமீபித்தபடி
பிரியத்தின் இனிமைகளுடன்
••

விருட்சம் நினைவுகள் 2 அழகியசிங்கர்

ஞானக்கூத்தன்

1981 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் ‘கவனம்’ என்ற சிற்றேடு வெளிவந்தது. இதன் ஆசிரியர் ஞானக்கூத்தன். திருவல்லிக்கேணியிலிருந்து வெளிவந்த பத்திரிகை இது. இப் பத்திரிகை குறித்து üகணையாழிý இதழில் அறிவுப்பு வந்தது. இந்த அறிவிப்பைப் பார்த்தவுடன் நான் மேற்கு மாம்பலத்திலிருந்து திருவல்லிக்கேணிக்கு பஸ்ஸில் சென்று இப் பத்திரிகையை வாங்கினேன்.

கவனம் பத்திரிகை இணை ஆசிரியர் ராஜகோபாலன் வீட்டிற்குத்தான் போனேன். அப்போது என்னை யார் என்று அவருக்குத் தெரியாது. அவரை யார் என்று எனக்கும் தெரியாது. அப்போது நான் விருட்சம் என்ற பத்திரிகை ஆரம்பிக்கவில்லை.

கவனம் இதழை நான் வழக்கமாகச் சென்று கொண்டிருக்கும் மின்சார வண்டியில் படித்துக்கொண்டு வந்தேன். அப்போது ஷங்கரலிங்கம் என்ற கவிஞர் என் எதிரில் அமர்ந்திருந்தார். அவர் கேட்டார் : “என்ன பத்திரிகை இது?” என்று.

“கவனம் என்ற பத்திரிகை. ஞானக்கூத்தன் ஆசிரியர்,” என்றேன்.

ஷங்கரலிங்கம் அந்தப் பத்திரிகையைப் பார்க்கக் கேட்டார். கொடுத்தேன்.

ஒரு சிறுபத்திரிகையை இன்னொரு சிறுபத்திரிகையை வாசிக்கும் வாசகர்தான் அறிவார்.

“உங்களுக்கு பிரமிளைத் தெரியுமா?” என்று கேட்டார்.
“கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் தெரியாது..அவர்தான் வெங்கட்சாமிநாதனுடன் சண்டைப் போட்டுக் கொண்டிருப்பாரே,” என்றேன்.

“அவர் என்னைப் பார்க்க வருவார்.. உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்,” என்றார். அவரிடம் என் அலுவலக முகவரியைக் கொடுத்தேன்.

‘கவனம்’ என்ற பத்திரிகைதான் எனக்கு பிரமிள் என்ற படைப்பாளியை அறிமுகப்படுத்தியது.

பிரமிள் என் அலுவலகத்தில் என்னைப் பார்க்க வந்தபோது, ‘மேல் நோக்கிய பயணம்,’ என்ற அவருடைய கவிதைப் புத்தகத்தை வாங்கிக்கொள்ள முடியுமா என்று கேட்டார்.

வாங்கிக்கொண்டேன்.

பின் சில தினங்கள் கழித்து வந்தார். இந்த முறை ஷங்கரலிங்கத்துடன் வரவில்லை. அதன்பிறகு இந்த ஷங்கரலிங்கத்தையே நான் பார்க்கவில்லை.

“என் கவிதைகளைப் படித்தீரா?” என்று பிரமிள் கேட்டார்.

மேல் நோக்கிய பயணம் என்ற அந்தக் கவிதைத் தொகுதியில் மேல் நோக்கிய பயணம் என்ற கவிதை ஒரு நீண்ட கவிதை.

அந்த நீண்ட கவிதைû எத்தனை முறை படித்தாலும் என் மனதில் ஏறவில்லை. ஆனால் இன்னொரு கவிதை எனக்குப் பிடித்திருந்தது.

அந்தக் கவிதையின் பெயர், வண்ணத்துப் பூச்சியும் கடலும்.

அந்தக் கவிதையை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

சமுத்திரக் கரையில்
பூந்தோட்டத்து மலர்களிலே
தேன் குடிக்க அலைந்தது ஒரு
வண்ணத்துப் பூச்சி

வேளை சரிய
சிறகின் திசை மீறி
காற்றும் புரண்டோட
கரையோர மலர்களை நீத்து
கடல்நோக்கிப் பறந்து
நாளிரவு பாராமல்
ஓயாது மலர்கின்ற
எல்லையற்ற மலர்கின்ற
எல்லையற்ற பூ ஒன்றில்
ஓய்ந்து அமர்ந்தது

முதல் கணம்
உவர்த்த சமுத்திரம்
தேனாய் இனிக்கிறது

பிரமிளிடம் இந்தக் கவிதை இந்தத் தொகுதியில் எனக்குப் புரிகிறது என்றேன். அதைக் கேட்டு அவருக்கு ஆச்சரியம். üüடேவிட்டுக்கு இந்தக் கவிதை புரியவில்லை என்று சொன்னார்,ýý என்றார்.

“எனக்கு நீண்ட கவிதைதான் புரியவில்லை,” என்றேன்.

“அவருக்கு அதுதான் புரிகிறது,” என்றார் பிரமிள்.

பிரமிளுடன் எனக்கு இப்படித்தான் நட்பு ஏற்பட்டது. அடிக்கடி அவரைச் சந்திப்பதும் பேசுவதுமாக இருந்தது.

என் நண்பர் எஸ் வைத்தியநாதன் என்ற ஒருவர். அவர் மயிலாப்பூரில் இப்போதும் குடி இருக்கிறார். அவர்தான் முதல் முறையாக இலக்கியச் சந்திப்பு ஆண்டுதோறும் நடக்கும் கூட்டத்தில் என்னை ஞானக்கூத்தன், ஆனந்த், ரா ஸ்ரீனிவாஸன், ராம் மோஹனுக்கு அறிமுகப்படுத்தினார். அப்போது நான் ஆத்மாநாமை சந்தித்ததில்லை. அவரைப் பற்றி கேள்விப்பட்டிருந்தேன். அவருடைய நண்பர்கள் ரகசியமாக அவருக்கு உடம்பு சரியில்லை என்று குறிப்பிட்டார்கள்.

ஞானக்கூத்தன் அவருடைய நண்பர்களை வைத்தியநாதனுடன் கடற்கரையில் ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக்கிழமை சந்திப்பேன். நாங்கள் எல்லோரும் சேர்ந்து அமர்ந்துகொண்டு தமிழ் இலக்கியச் சூழலைப் பற்றிப் பேசுவோம்.

அந்த நண்பர்களில் சிலருக்கு நான் பிரமிளுடன் பழகுவது தெரியும். üüஅவருடன் ஜாக்கிரதையாகப் பழகுங்கள்,ýý என்று எச்சரிக்கைச் செய்வார்கள். ஏன் அப்படி சொல்கிறார்கள் என்று யோசித்துக் கொண்டிருப்பேன்.

அதனால் நான் பிரமிளை சந்திப்பதைப் பற்றி அவர்களிடம் பேச மாட்டேன். அது தேவையில்லாத வம்பை விலைக்கு வாங்குவதாகத் தோன்றும். உண்மையில் பிரமிளை நான் சனிக்கிழமை அன்று, ஜே கிருஷ்ணமூர்த்தி பவுண்டேஷனில் சந்திப்பேன். அங்கு ஜே கேயின் வீடியோவை நாங்கள் பார்த்துக்கொண்டிருப்போம்.

ஞாயிற்றுக்கிழமை கடற்கரையில் ஞானக்கூத்தன் அவர் நண்பர்களையும் சந்திப்பேன். எனக்கு நல்ல பொழுதுபோக்காகத்தான் இது தோன்றியது. ஆனால் இப்போது யோசித்துப் பார்க்கிறேன். அந்தத் தருணங்களில் நாங்கள் எல்லோரும் என்ன பேசிக்கொண்டிருந்தோம் என்பதை. ஒன்று கூட என் கவனத்தில் வரவில்லை.

(இன்னும் வரும்)

சிபிச்செல்வன் கவிதை / தினசரி தலைவலி

தினசரி தலைவலி
••

தினசரி தலைவலிக்கிறது
ஒருநாளும் வலிக்காமலிருந்தது இல்லை
என்ன செய்யலாம் என யோசித்துக்கொண்டிருப்பதால்தான்
தலைவலிக்கிறது என்கிறாள் அவள்.
யோசிக்காமல் இருக்கவும் என அன்போடு அறிவுரை சொல்கிறாள்.
ஒருநாளும் நான் யோசித்ததில்லை என்பதை அப்படியொரு அப்பட்டமாக ஒப்புக்கொள்ள மனமில்லாததால்
மீண்டுமொருமுறை தலைவலிக்கிறது என்றேன்
அவள் அருகில் வந்து தலையைத் தொட்டு பார்த்து ஆம் இப்படி விண்விண்னென்று வலிக்கிறதேயென்றாள்
ஆம் விண்ணை முட்டுகிற வலிதான் என்று கசப்பான சிரிப்பை உதிர்த்தேன்
அப்போதுதான் அந்த ஆச்சர்ய நொடி நிகழ்ந்தது
தலைக்குமேல் பறந்து போய்
அது
அந்த தலைவலியின்மீது உட்கார்ந்தது
மெல்ல அது இன்னொரு தலையில் அமர்ந்துகொள்வதற்குள்
தலையில்லாதவர்கள் எல்லோரும் ஓடிக்கொண்டிருந்தார்கள்
ஆக
தலைவலி இவ்வாறாக விடைபெற்றது

••
21 / 06 / 2017
பின்னிரவு மிகச் சரியாக 1 மணி