Category: மொழிபெயர்ப்பு கவிதை

அறிமுக மொழிபெயர்ப்பாளர் கவிதைகள் தமிழில் .செல்வ.அமுதராஜ் மற்றும் சிபிச்செல்வன்

A BOOK OF LUMINOUS THINGS

 

AN INTERNATIONAL ANTHOLOGY OF POETRY

EDITED AND WITH INTRODUCTION BY CZESLAW MILOSE

 

என்ற தொகுப்பிலிருந்து சில கவிதைகளை இங்கே மொழிபெயர்த்து தருகிறோம்.

தமிழில் .செல்வ.அமுதராஜ் மற்றும் சிபிச்செல்வன்

 

 

 

 

 

 

 

 

 

 

விஸ்லாவா விம்போர்ஸ்கா கவிதை

போலிஷ் மொழி

 

 

என் சகோதரியைப் பாராட்டுகிறேன்

 

 

என் சகோதரி கவிதை எழுதமாட்டாள்

திடிரென கவிதை எழுத ஆரம்பித்துவிட்டாள்

அவளின் அம்மாவிடமிருந்தும் கவிதை எழுத கற்றுக் கொள்ளவில்லை

அவள் அப்பாவிற்கும்கூட கவிதை எழுத தெரியாது

என் சகோதிரியின் வீட்டில் நான் பாதுகாப்பாக இருக்கிறேன்.

என் சகோதிரியின் கணவனை அந்த வீட்டுச்சூழல் எதுவும் துண்டவில்லை                  கவிதை எழுத

ஆடம் மாசிடோன்ஸ்கியின் கவிதைபோல அவளின் கவிதை இருக்கிறது

எங்கள் உறவினர்களில் யாரும் கவிதை எழுதுவது கிடையாது

 

என் சகோதரியின் மேசையில்கூட அவள் எழுதிய பழைய கவிதைகள் எதுவும் இல்லை

அவளின் கைப்பையில்கூட புதிதாக அவள் எழுதிய கவிதைகள் எதுவும் இல்லை

என் சகோதரி ஒரு நாள் என்னை விருந்துக்கு அழைத்தாள்

எனக்கு கவிதை வாசிப்பதில் விருப்பமின்மையை அவள் அறிவாள்

அவள் சூப்பை நன்றாகத் தயாரித்திருந்தாள்.

அவளின்  காபியைக் குறிப்பேடுகளின் மீது கொட்டியதில்லை

பல குடும்பங்களில் யாரும் கவிதை எழுதுவதில்லை

அப்படி யாராவது கவிதை எழுதுவது அபூர்வமானது

சில சமயங்களில் தலைமுறை தலைமுறையாக கவிதை எழுதுவது தொடரும்

அப்படியிருந்தால் அது ஒரு பயப்படும் விஷயமாகிவிடும்

 

என் சகோதரி ஒரு நல்ல பேச்சாளியாக மாறத் தொடங்கியிருந்தாள்

ஒரு விடுமுறை கடிதம் எழுதுமளவிற்கு அவள் உரைநடை எழுத்து இருந்தது.

வருடா வருடம் இதோ விஷயம்தான் நடந்தேறியது

திரும்ப அவள் வந்தபோது கூறினாள்

அந்தக் கடிதத்திலிருந்து

எல்லாவற்றையும்

எல்லாவற்றையும்

•••

லீ போ

சீனக்  கவிதை

 

Translated from chinese by Sam Hamill

 

 

பறவைகள் வானிலிருந்து மறைந்து விட்டன

 

பறவைகள் வானிலிருந்து மறைந்து விட்டன

கடைசியாக வானிலிருந்த ஈரமேகமும் காய்ந்து மறைந்து விட்டது

 

மலையும் நானும் ஒருவரோடு ஒருவர் சேர்ந்து அமர்ந்திருந்தோம்

இறுதியில் மலை மட்டுமே இருந்தது.

••

 

 

வாங் வூ (701- 761)

Translated from the Chinese by Tony and Willis Barnstone and Xu Haixin

விடைபெறுகிறேன்

 

என் குதிரையிலிருந்து இறங்கி

உன்னோடு மது அருந்துகிறேன்

எங்கே நீ போகிறாய் என்று கேட்டேன்

நீ சொன்னாய் நான் வாழ்வில் தோற்றவன் என

தெற்கு மலை உச்சியேறி சாகப்போகிறேன் என்றாய்

நீ இறந்த பிறகு உன்னை யாரும் நினைவில் வைத்திருக்கப் போவதில்லை

மலை உச்சியின் மீது எல்லையற்றுப் படர்ந்திருக்கும் வெண்மேகம்.

 

மொழிபெயர்ப்பு கவிதை : போரில் நான் என்ன கற்றுக் கொண்டேன்? யெஹுடா அமிச்சாய் / இஸ்ரேல் தமிழில்: இந்திரன்

மொழிபெயர்ப்பு கவிதை :

போரில் நான் என்ன கற்றுக் கொண்டேன்?

யெஹுடா அமிச்சாய் / இஸ்ரேல்

தமிழில்: இந்திரன்

 

 

 

 

 

 

 

 

 

 

போரில் நான் எதையெல்லாம் கற்றுக் கொண்டேன்:

காலியான கிணற்றில் நீர் இறைக்க முயலும் இயந்திரங்களைப் போல்

கால்களையும் கைகளையும் வீசிக்கொண்டு

குறித்த காலத்திற்குள் அணி திரண்டு நடப்பதை.

 

வரிசையில் அணி திரண்டு நடந்து கொண்டு

நடுவில் தனிமையாக இருப்பதை,

தலையனைகளிலும்,இறகு மெத்தைகளிலும்,

பிடித்த பெண்களின் உடம்புகளிலும் புதைந்தபடி

அவள் காது கேளாதபோது “அம்மா” என்று கத்துவதை,

எனக்கு கடவுள் நம்பிகை இல்லாதபோது

“கடவுளே” என்று சத்தம் போடுவதையெல்லாம் கற்றுக் கொண்டேன்.

எனக்கு அவர் மீது நம்பிக்கை இல்லாதபட்சத்தில்

நான் அவரிடம் போரைப் பற்றி சொல்லி இருக்க மாட்டேன்

வளர்ந்தவர்களின் பயங்கரங்களைக்

குழந்தைகளிடம் சொல்ல முயலாதது போல.

 

வேறு எதையெல்லாம் நான் கற்றுக் கொண்டேன்:

திரும்பிப் போவதற்கான ஒரு பாதையைத் முன்கூட்டி தேர்ந்தெடுத்து வைத்துக்கொள்வதைக் கற்றுக் கொண்டேன்.

வெளிநாடுகளில்

விமான நிலையம் அல்லது ரயில் நிலயத்தின் அருகில்

ஹோட்டல் அறையை வாடகை எடுக்கவும்,

கல்யாண வீடாக இருந்தாலும் கூட

”வெளியே போகும் வழி” என்று சிகப்பு எழுத்து போட்ட

சிறிய கதவுகளைக் கவனித்து வைத்துக் கொள்ளக்

கற்றுக் கொண்டேன்.

 

நாட்டியத்துக்கான தாள லயத்தோடு கூடிய மேள வாத்தியம்

போலத்தான் போரும்  தொடங்குகிறது

“அதிகாலையில் பின்வாங்குங்கள்” என முடிகிறது.

கள்ளக் காதலும் போரும் சில சமயம் இப்படித்தான் முடிவடைகின்றன.

 

ஆனால் இவை எல்லவற்றையும் காட்டிலும்

பொருட்களை மறைக்க உதவும் சாதனமாகிய மெய்யறிவை

நான் கற்றுக் கொண்டேன்.

தனித்துத் தெரியக் கூடாதென்றும்,

அடையாளம் காணப் படக்கூடாதென்றும்

என்னைச் சுற்றி இருப்பவற்றிலிருந்தும்,

என் பிரியமானவர்களிடமிருந்தும்கூட பிரிந்துவிடக்கூடாதென்றும்

கற்றுக் கொண்டேன்.

 

அவர்கள் என்னை ஒரு புதர் என்றோ அல்லது ஒரு ஆடென்றோ

ஒரு மரமென்றோ, மரத்தின் நிழலென்றோ,

ஒரு சந்தேகமென்றோ,சந்தேகத்தின் நிழலென்றோ,

உயிருள்ள ஒரு வேலியென்றோ,செத்துப்போன ஒரு பாறையென்றோ

ஒரு வீடென்றோ, ஒரு வீட்டின் மூலையென்றோ

நினைத்துக் கொள்ளட்டும்.

 

நான் ஒரு தீர்க்கதரிசியாக இருப்பேனானால்

நான் பார்வையை மங்கச் செய்து

எனது நம்பிக்கையை ஒரு கருப்புக் காகிதத்தால் இருட்டாக்கி

மந்திரத்தை வலையால் மூடியிருப்பேன்.

 

என் நேரம் வரும்போது எனது முடிவின் மறைத்து வைக்கும்

சாதன அங்கியை விலக்குவேன்:

மேகங்களின் வெண்மை, வானத்தின் நிறைய நீலம்

மேலும் முடிவில்லாத நட்சத்திரங்கள்.

 

***

மொழிபெயர்ப்பு கவிதை – அஜித் சி. ஹேரத் தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

  

– அஜித் சிஹேரத்

தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

 

சித்திரவதைக் கூடத்திலிருந்து

அடுத்த கணம் நோக்கி

எதிர்பார்ப்புக்களேதுமற்று பார்த்திருப்பதைத் தவிர

முதலாமவனாகவோ இறுதியானவனாகவோ

ஆவதற்கு நான் பிரார்த்தித்திருக்கவில்லை

எவ்வளவுதான் சிரம் தாழ்த்தி அமர்ந்திருந்தபோதிலும்

அவர்களது அன்பற்ற குட்டுக்களிலிருந்து

தப்பிக்கொள்ள முடியவில்லை

சித்திரவதைக் கூடத்தில் கழித்த முதல் மணித்தியாலத்திலேயே

எண்ணங்கள் காணாமல் போயின

துயர்தோய்ந்த இறந்த கால நினைவுகள்

உடல்சதையைச் சுழற்றும் மோசமான வேதனைகள்

மரண ஓலங்கள்

அசாதாரண உருவங்களோடு மனங்கவர் வர்ணங்கள்

பயங்கரக் கனவுகளிடையே உணர்வுகளைத் தூண்டுகின்றன

பயங்கரத்தைத் தவிர

இங்கிருப்பது

மனிதத்தன்மையில் கையேதுமற்ற நிலை

சித்திரவதைக் கூடத்தில் சந்திக்கக் கிடைக்கும்

ஒரே அன்பான தோழன்

மரணமே

அவனும்

எங்களது வேண்டுகோளை உதாசீனப்படுத்துகிறான்

நேற்றிரவு கொண்டு வரப்பட்ட யுவதியின்

குரல் படிப்படியாகத் தேய்ந்தழிகிறது

சேவல் கூவ முன்பு

மூன்றாவது முறையாகவும்

எவரையும் தெரியாதெனச் சொன்ன சகோதரி

காட்டிக் கொடுப்பதற்குப் பதிலாக

அச்சம் தரும் மரணத்தையும்

கெஞ்சுதலுக்குப் பதிலாக

சாபமிடுவதையும் தேர்ந்தெடுத்த சகோதரி

எனதிரு கண்களையும் கட்டியிருக்கும் துணித் துண்டு ஈர்த்தெடுத்த

இறுதிக் கண்ணீர்த் துளிகளை

சமர்ப்பித்தது உன்னிடமே

உற்சாகமூட்டும் மேலதிகக் கொடுப்பனவு

பகலுணவிற்காகக் கிடைத்த யோகட் கோப்பையின்

அடிவரையில் நக்கிச் சுவைத்த படைவீரன்

அதை எரிந்து மிதிக்கிறான்

அடுத்தது யார்

இங்கு வாழ்க்கை இதுதான்

இங்கு மரணம் எது?

முகமொன்றற்ற பிணமொன்று மற்றும்

தலைப்பொன்ற செய்தியொன்று மட்டும்

பட்டியலிடப்படாத வாழ்க்கை

பட்டியலிடப்படாத மரணத்தோடு

வந்து சேர்கிறது

பைத்தியக் கனவுகளோடு

நான் எத்தனை தடவை இங்கிருந்து தப்பித்துப் போயிருக்கிறேன்

எனினும் நான் இங்கேயேதான்

இந்தத் தெளிவு கூட

கண்டிப்பாகப் பயங்கரமானது

இங்கு படுகொலை செய்யப்பட்ட

அனேகருக்கு

மனித முகமொன்று இருந்தது

எனது இறுதிச் சாட்சியாக

எனக்குச் சொல்ல இருப்பது அது மட்டுமே

***

மொழிபெயர்ப்பு கவிதை- இந்திரன்- அந்த தொடக்கம் – வெரோனிகா வோல்கொவ் – மெக்சிகோ

அந்த தொடக்கம்

வெரோனிகா வோல்கொவ் / மெக்சிகோ

தமிழில்: இந்திரன்

 

 

 

 

 

 

1

காதலர்களுக்கு

காதலிப்பதற்காகவே கரங்கள் உள்ளன

அவர்களுக்கு கரங்கள் மட்டுமே உள்ளன.

கரங்கள் அவைதான் கால்கள் மற்றும் அவர்களின் உடம்புகளின் மீது

இறக்கைகள்

சதா தேடிக்கொண்டே இருக்கும் கரங்கள்

புதைந்த விழிகளுக்குப் பின்னே மூச்சுவிடும் மிருகங்கள்

உடம்பில் நெருப்பு மூட்டி விடும் விரல்கள்

மலர்களால் வருடப்படும் கிளைகள் அவை

மலர்கள் பறவைகள் மலர்கள் நெருப்புகள் மலர்கள் கரங்கள்

மின்னலின் எழுதுகையில் காணாமல் போகும் கரங்கள்

உடம்பின் சதையில் பயணப்படும் கரங்கள்

நட்சத்திரங்கள் விடியலைத் தொடுவதுபோல்

சூரியன் உதிப்பதுபோல்   உதய நட்சத்திரம் போல்

இரவைக் கிழிக்கும்

ரகசியமான கடவுள்களைப் போல.

2

உன் உடம்பிற்கும் என் உடம்பிற்கிற்குமிடையில்

உன் உடம்பின் அச்சுப்பதிவு

உன் விழி                            உன் உடம்பின் சத்தம்

உன் உடம்பின் மேற்கை

உனது பல்

உனது நாக்கு

உனது தொடை

எனது மொத்த தோலினால் உன் உடம்பின் வடிவத்தை

செவிமடுக்கிறேன்.

என் உடம்பிற்கும் உன் உடம்பிற்கும் இடையில்

உன் உடம்பின் இன்னொரு வடிவம்

தண்ணீர்        பனிக்கட்டியாக மாறுவதுபோல்

அல்லது திறந்த         தீநாக்குகளைப் போல்

உன் உடம்பு

என் உடம்பில் அழுகிறது

மேலும் நீ தளரவிடப்பட்ட வெறிக்கூச்சல்

சத்தம்போடும் நட்சத்திரம்

என் உடம்பில்   சதையின்  ஓசையெழாத அழுகை

சொல் அது நெருப்பல்லவா

தொலைதூர உலகங்களின் விதை

வினோதமான திடீரெனச் சம்பவித்த நசத்திரத்தின் அருகாமை?

3

நீ நிர்வாணம்

உனது மென்மை எல்லையற்றது

நீ என் விரல்களில் துடிக்கிறாய்

உனது மூச்சு உன் உடம்பிற்குள் பறக்கிறது

நீ

எனது கரத்திலிருக்கும் பறவையைப்போல்

ஆபத்திலிருக்கிறாய்

ஆசை மட்டுமே உன்னை ஆபத்திலிருக்க வைக்கிறது

இனந்தெரியாத வலியோடு நாம் ஒருவரை ஒருவர் தொட்டுக் கொள்கிறோம்

அந்த சரணாகதியில் நமக்குத் தெரியும்

பலியானவர்களை விட்டுத் தொலைப்பது.

ஒரு நாவைப் போன்ற இன்பம்

நம்மை நக்குகிறது       நம்மை விழுங்குகிறது

மற்றும் நமது விழிகள் எரிகின்றன தொலந்து போகின்றன.