Category: மொழி பெயர்ப்பு நேர்காணல்

அழகைப் போல, உண்மை உருவாக்கப்படுவதுமில்லை; தொலைந்து போவதுமில்லை – நிகானோர் பர்ரா ( நேர்காணல் ) / ஸ்பானிய மூலம் : லைலா குர்ரிரோ [ Leila Guerriero ] ஆங்கிலம் : பிரான்சிஸ் ரிடில் [ Frances Riddle ] / தமிழில் : தி.இரா.மீனா

நிகானோர் பர்ரா

நிகானோர் பர்ரா

“Singer Without a Name” என்ற படைப்புடன் அறிமுகமான நிகானோர் பர்ரா பிரளயம், கர்ஜனை,காற்று என்று இலக்கிய உலகில் பல சித்தரிப்புகளுக்கு ஆளான பெருமை கொண்டவர். கம்பளியால் சுற்றப்பட்ட ஒரு சாய்வு நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறார்.டெனிம் சட்டை, ஸ்வெட்டர் ,பாண்ட் அணிந்து. அவருக் குப் பின்னால் ஒரு நகரும் கதவுடைய பால்கனி .அதில் இரண்டு நாற்காலி கள். அப்பகுதி செடிகளாலும் ,புதர் போன்ற அமைப்பாலும் மூடப்பட்டிருக்கி றது. பிறகு பசிபிக்கடல் அலைகளுடன்.
மேலே , மேலே …

அவர் ஒரு மனிதன்.ஆனால் வேதாளமாக ,கதிகலக்கும் எரிமலையின் பேரொ லியாக ,.எரிமலை ஏற்படுவதற்கு முன்னதான இறுக்கமாக இருக்கலாம். பார்த்தவுடன் கையில் கம்பளிக் குல்லாயுடன் எழுந்து நின்று..
மேலே ..மேலே.. தொடர்ந்து
சான்டியாகோவிலிருந்து 200 கிமீ தொலைவிலுள்ள லாஸ்க்ரூஸ் லிங்கன் தெருவிலுள்ள நிகனார் பர்ராவின் வீட்டிற்குப் போவது அப்படியொன்றும் கஷ் டமாயில்லை.எது கடினமானது என்றால் அவரை அடைவதுதான்..

மேலே ..மேலே ..
அவருடைய முடி கந்தகத்தின் வெள்ளையாயிருந்தது.மீசையும் நீண்ட கிருதா வும். பூமியின் உருவாக்கமான பாறை, கிளைகள் போல எந்தச் சுருக்கமு மில்லாததாக அவர் முகத்தின் உருவாக்கம். தண்ணீரால் சுத்தம் செய்யப் பட்ட உறுதியான இரண்டு வேர்கள் போலக் கைகள்.

நிகானோர் பர்ரா:

இரண்டாம் உலகப் போர் தொடக்கதின் போது இருபத்தி ஐந்து வயது, அவர்கள் ஜான் லென்னனைக் கொன்றபோது அறுபத்தி ஆறு வயது,விமானங்கள் வர்த்தக மையத்தைத் தாக்கிய போது எண்பத்தியேழு வயது.

பசிபிக் கடல் துறைமுகம் அருகே உள்ளடங்கிய சில நகரங்களில் லாஸ் க்ரூஸஸ் ஒன்று.இரண்டு மாடிகளைக் கொண்ட நிகானோர் பர்ராவின் வீடு கடலை எதிர் கொண்ட அமைப்புடையது.யாரும் எளிதாய் தொட்டுவிட முடியாதபடி வீட்டின் முன்பகுதியில் ஏராளமான செடிகள் அடர்த்தியாய் வளர்ந்திருக்க, “Antipoetry ” என்பது சுவரடி ஓவிய ஒப்பனையாகப் பதிக்கப் பட்டிருக்கிறது..

“ஆமென்,ஆமென்” என்று சிலுவைக் குறியிட்டு சொல்கிறார்.மேஜையில் Complete Works இருக்கிறது. எண்பதுகளின் பிற்பட்ட காலகட்டத்தில் அவர் பேட்டிகள் கொடுப்பதை நிறுத்திவிட்டார்.சிறிதும் எதிர்பார்க்காத நகர்வை நோக்கி உரையாடல் போய் விடுமளவிற்கு மிக நேரான கேள்விகளை எதிர்நோக்குவார்.தலைப்புகள் மீண்டும் மீண்டும் விவாதிக்கப்படும் அல்லது எங்கிருந்தோ வந்து விழும்.பேச்சுப் பொருள் வியப்பூட்டும் வகையில் இணையும்; அவராகவே தொடங்கும் பேச்சு..

’தெற்குப் பகுதிமக்கள்.அவர்களை எப்படி அழைப்பீர்கள்? சைலியின் தெற்குப் பகுதி மக்களை எப்படி அழைப்பீர்கள்?”தலையை அசைத்துக் கொண்டு மீண்டும் ”சைலியின் தெற்குப் பகுதி மக்களை எப்படி அழைப்பீர்கள்?”என்று கேட்கிறார்.முன்பு ஓனஸ் அலாகால்ஸ் மற்றும் யகனேஸ் என்று அழைக்கப்பட்டனர்…”

செல்க்நம் ? [ Selk’nam? ]

“ஆமாம் அது செல்க்நம். ஒரு வரியிருக்கிறது.நிலத்தின் நெருப்பு வெளியேறிக் கொண்டிருக்கிறது.ஆசிரியர் Francisco Coloane.அவரைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? யாரென்று தெரியுமா?”

சிலி எழுத்தாளர்?

மிகச்சிறந்த வரி.ஆனால் அவர் அன்பில்லாத வகை மனிதர். பொறுக்க முடி யாதவர். மோசமான எழுத்தாளரும் கூட”
Tierra del Fuego விற்கு எப்போதாவது போனதுண்டா?

“என்பேரன் கிறிஸ்டோபல் டோலோவுடன் அங்குபோயிருக்கிறேன்.அவனுக்குப் பதினெட்டு வயதிருக்கலாம்.வியப்பிற்குரிய சில வரிகளின் ஆசிரியர் அவன். ஒருமுறை அவன் பள்ளியின் முதல்வர் அவன் தாயை அவசரமாக அழைத் திருந்தார்.ஏன்?வருகைப் பதிவேட்டின் போது கிறிஸ்டோபல் பெயரை அழைத்தபோது அவன் பதில் சொல்லவில்லையாம்.”நான் அழைத்தபோது நீ ஏன் பதில் சொல்லவில்லை “?”என்று ஆசிரியை கேட்டாராம்.”நான் சொல்ல முடியாது.ஏனெனில் இனிமேல் என் பெயர் கிறிஸ்டோபல் இல்லை.இப்போது என் பெயர் ஹாம்லெட் “என்றானாம்.ஒரு நாள் அவன் இங்கு வந்தான்.” நான் ஹாம்லெட்”என்றேன். பதிலில்லை.” ஹாம்லெட் ,நான் உன்னை கூப்பிட்டுக் கொண்டேயிருக்கிறேன்.பதிலேயில்லையே”என்றேன். “என் பெயர் இனிமேல் ஹாம்லெட் இல்லை.என் பெயர் லேரட்ஸ் “என்றான்.அதற்குப் பிறகு நான் இலக்கியம் எழுதுவதை விட்டுவிட்டேன்.குழந்தைகள் சொல்லும் விஷயத்தை மட்டும் எழுதுகிறேன்”

இது நகைச்சுவை போலத் தெரியலாம். ஆனால் இல்லை.தனது பேரக் குழந் தைகள் அல்லது தன் வீட்டைப் பலகாலம் கவனித்து வந்த ரோசிட்டா அவந் தனோ சொல்வதைக் குறித்துக் கொண்டு எழுதுகிறார்;அல்லது தன்னைச் சந்திக்கிறவர்கள் சொல்வதை.அவைதான் எளிமையான கவிதைகளாக உருவா கின்றன.

“எனக்கு டோலோவின் வரிகள் பிடித்துள்ளது.நான் சொல்வது அடியூடு.. அடி யூடு. அது மீத்திறனான தன்முனைப்பல்ல. தன்முனைப்புமல்ல. மீத்திறனல்ல.. அடியூடு என்பதை எப்படிச் சொல்வீர்கள்?”

“அடையாளம்?

“ஆமாம்.அதுதான்.அடையாளம் என்று கூட சொல்லமுடியாது..ஆனால் கேளுங் கள்.ஊர்வன வகைக்கு நீங்கள் செல்ல வேண்டியதில்லை.பல நாடுகளில் ஊர் வன வகையேயில்லை.இந்தியாவிற்குப் போயிருக்கிறீர்களா? குழந்தைகள் கூட முதலைகள் போல இருப்பார்கள்.அங்கு மேற்கத்தியப் பார்வையில்லை. நான் பத்து தினங்கள் அங்கிருந்தேன்.எனக்கு மனுவின் சட்டங்கள் தெரியாது. எனக்கு மனுவின் விதிகள் தெரிந்திருந்தால் நான் அங்கு தங்கியிருப்பேன். ஏனெனில் மனுவின் விதிகளைத் தாண்டி எதுவுமில்லை.மனுவிதியின் கடைசி வரி இப்படி அமைகிறது ஏன் என்று ஒருவர் தன்னைக் கேட்டுக் கொள்ள வேண்டும்?இருப்பை விடத் தன்னைத் கீழ்ப்படுத்திக் கொள்வது எதுவுமில்லை”

அவர் அண்ணாந்து உத்தரத்தைப் பார்த்துவிட்டுத் தொடர்ந்தார்.” மனுவின் விதிகள் சொல்வது :மனிதனின் வாழ்வு இரண்டு மூன்று நிலைகளில்லை, நான்கு நிலைகளில்.பிரம்மசர்யம்,கிரகஸ்தம்,வானப்பிரஸ்தம்.வானப்பிரஸ்தம்.. அதன் பொருள் என்ன?முதல் பேரக்குழந்தை பிறந்தவுடன் மனிதன் உலக வாழ்விலிருந்து ஓய்வு பெறுகிறான்.உலகத்தைத் துறக்க வேண்டுமென்பது முதலில் பெண்ணைத் துறப்பது,பெண்ணில்லாத நிலை. குடும்பமில்லாத நிலை. பருப்பொருள் இல்லாத நிலை,புகழைத் தேடாத நிலை”

download

“நான்காவது பருவமென்பது?

ஓ.. நான்காவது பருவம்.சந்நியாசம்.இந்த பருவங்களைக் கடந்தவர்கள் இறக் கும் போது சன்மானம் பெறுவார்கள்.யார் கடக்கவில்லையோ அவர்கள் தண்ட னைக்குள்ளாவார்கள்.அவர்கள் கரப்பான் பூச்சியாகவோ எலியாகவோ மீண்டும் பிறப்பார்கள்.சன்னியாசிகள் மீண்டும் பிறக்க மாட்ட்டார்கள்.ஏனெனில் இருப்பை விட தன்னைக் கீழ்ப்படுத்திக் கொள்வது எதுவுமில்லை.மிகச் சிறந்த சன்மானமென்பது வரைபடத்திலிருந்து அகற்றப்படுவதுதான்.அதன் பிறகு இந்தியாவை விட்டு வெளியேறி லாக்ரூஸ்ஸ் வாருங்கள்”

“உங்கள் வீட்டின் தோற்றம் மிக அழகாக இருக்கிறது!”

“மோசமாயில்லை.இது இடையனின் [ huaso] பதில்.பொதுவாக வீட்டின் சொந்தக்காரரை அறிய வேண்டுமென்றால் நல்லதாக ஏதாவது சொல்ல வேண்டும். அவர் பதிலுக்கு வழக்கமாக என்ன சொல்வார்?”ஆமாம்.மிக அழகாக இருக்கிறது. ஆனால் மாடியிலிருந்து பார்த்தால் இன்னும் அழகாக இருக்கும் என்பார். “இது மோசமாயில்லை “என்று இடையன் சொல்வான். ஹைனாவின் கதையை உங்களுக்குச் சொல்லியிருக்கிறேனா?மலைகளில் இருக்கும் காட்டுப் பூனை”
நான் காட்டுகிறேன்” பர்ரா பால்கனியின் கதவைத் திறந்து காட்டுகிறார். பின்புறத் தோட்டம் தெரிகிறது.” என் தோட்டமுறை மிக எளிமையானது.

எதையும் தொடாத உள்ளடக்கம் அதனுடையது.எல்லாமும் கிளைகளாலும், செடிகளாலும் நிரம்பியிருக்கிறது.ஆங்கிலேயர்கள் இப்படித்தான் வைப்பார் கள்.இதற்கு மாறாக ஸ்பானியர்கள்”இங்கு ஒரு தோட்டத்தை உருவாக்கப் போகிறோம்”என்பார்கள்.இயற்கையின் அற்புதத்தை நீக்கிவிட்டு சிறுபாதை களை உருவாக்குவார்கள். அங்கு தெரியும் ஹைனாவைப் பாருங்கள்.மூர்க்கம், பகைமை,நம்பிக்கையின்மை என்று எல்லாம் உடையவளாக அவள் இருந்த தால் நெருக்கமாக வராமலிருந்தாள்.ஆனால் ஒருநாள் நான் அவளுடைய நண்பன் என்று முடிவு செய்து,எனக்கு மிக அருகில் வந்தாள் .நான் அவளைத் தொட முடிந்தது.அடுத்தநாள் அவள் இறந்து போனாள்.நான் தொட்டது அவ ளைத் தொந்தரவுக்குள்ளாகியது.தான் கற்பழிக்கப்பட்டதாக நினைத்தாள். நாங் கள் அவளுக்கு இறுதிக்கடன்கள் செய்தோம்.அவள் அங்கு புதைக்கப்பட்டிருக்கி றாள்.” அவர் நிலத்தின் ஒரு பகுதியைக் காட்டினார். நெருக்கமாக. நம்பிக்கை யாக உலகின் உள்பகுதிக்குப் போவதால் உண்டாகும் அபாயங்களை எச்சரிப்பது போல.

Buenos Aires சென்றிருக்கிறீர்களா?

“நான் Buenos Aires எத்தனை முறை சென்றிருக்கிறேன் என்று எனக்குத் தெரி யாது.ஆனால் எப்போதும் அதிர்ஷ்டமற்றவனாகவே இருந்திருக்கிறேன்.ஒரே ஒரு முறை அதிர்ஷ்டம் என் பக்கமிருந்தது.ஒரு புத்தகக் கடைக்குப் போயி ருந்தேன்.குவியல் போலப் புத்தகங்களை எடுத்தேன்.அவற்றிற்கு எவ்வளவு பணம் தரவேண்டுமென்று கேட்டபோது “எதுவும் தரவேண்டாம். நிக்கனோர் பர்ராவிடம் எப்படி பணம் கேட்கமுடியும்?”என்று பதில் தந்தார்கள்.ஒரு முறை Borges இடம் சிலியன் கவிதைகள் பற்றிய அவரது அபிபிராயத்தைக் கேட்ட னர். ”சிலியன் கவிதையா?அது என்ன?”என்று பதில் தந்தவர். நிகானோர் பர்ராவைப் பற்றிக் கேட்ட போது” மோசமான அந்தப் பெயரில் ஒரு கவிஞன் இருக்கமுடியாது “என்றார்.

“உங்களின் Complete Works திருப்தி தருவதாக உள்ளதா?”

“எனக்கு வியப்பாக இருக்கிறது.நான் அந்தக் கவிதைகளைப் படிக்கிறேன்.அதன் படைப்பாளியாக என்னை உணரவில்லை.நான் எதனுடைய ஆசிரியராகவும் என்னை நினைக்கவில்லை.ஏனெனில் நான்காற்றில் மீன் பிடிப்பவனாகவே இருந்திருக்கிறேன்.அவர்கள்ஆப்படித்தான் சொன்னார்கள;”காற்றில் கலந்த பொருட்கள்” மென்மையான வெளிச்சத்தில் பைனுக்கும்[ pines ]கடலுக்கும் இடையில் கருங்காரை மென்மையாக நழுவுகிறது. “அது மிக அழகு. இல்லையா?”

நீங்கள் வாழவேண்டும் என்ற விருப்பத்தை ஏற்படுத்துவது?”
அல்லது,” மாறாக சாகும் விருப்பத்தை ஏற்படுத்துவது.” தூங்கும் விலங்கின் அமைதியான சுவாசம் மாலை நேரத்தில். அவர்களால் எல்லாவற்ரையும் செய்ய முடிந்த்து.இந்தச் சிக்கலைத் தீர்க்கமுடியவில்லை”

“என்ன சிக்கல்?”

“இறப்பு என்னும் சிக்கல்.அவர்கள் மற்ற சிக்கல்களைத் தீர்த்து விட்டனர்.ஆனால் அவர்கள் ஏன் அதில் கவனம் காட்டக் கூடாது?”

எதிர்க்கவிதைகள் –பர்ராவின் பார்வை

கவிதைகளும் ,எதிர்க் கவிதைகளும் – நகைப்பிற்கிடமான நவீன வாழ்க்கை யின் காரணமற்ற போக்குகளை நகைச்சுவை பாணியில் மிகத் தெளிவான மொழியில் விளக்குவதாக அமைந்தன. எதிர்க்கவிதை என்பது- தன்னையும் ,மனிதத்தையும் வேடிக்கைக்குள்ளாக்கிக் கொண்டு கவிஞன் நகைச்சுவை, முரண்,கேலி ஆகியவற்றை வெளிப்படுத்துவது,கவிஞன் அங்கு பாடுவதில்லை ஆனால் கதை சொல்கிறான்—அதுதான் எதிர்க் கவிதை எதிர்க்கவிதையின் உத்தி என்பது அவரைப் பொறுத்தவரை சிரிப்பும் கண்ணீரும்- தான்

“நான் கவிதையை எப்போதும் சொற்பொழிவு மேடையில் பேசும் பாதிரியின் குரலோடு தொடர்பு படுத்துகிறேன். மனிதர்கள் பேசுகிறபோது கவிஞர்கள் இசைக்கின்றனர் “”பறவைகள் பாடிக் கொண்டிருக்கட்டும்”என்று ஒருமுறை சொன்னார்.

வாசகனுடனான உறவைப் பற்றிச் சொல்லும் போது ”நகைச்சுவை தொடர்பை எளிமைப்படுத்துகிறது.நீங்கள் நகைச்சுவை உணர்வை இழக்கும்போது உங்கள் கைத்துப்பாக்கியை ஏந்தத் தொடங்குபவராகிறீர்கள் என்பது உங்களுக்கு நினைவிருக்கட்டும்” என்கிறார்.

சில கவிதைகள்;

சோதனை
எதிர்க்கவிஞன் என்பவன் யார்?
சவப்பெட்டியையும் அஸ்திப் பேழையையும் கையாள்பவனா?
தன்னைப் பற்றி நிச்சயமாக அறியாத ஒரு படைத்தளபதியா?
எதையும் நம்பாத ஒரு பூசாரியா?
எதையும் வேடிக்கையாக ,முதுமையையும் சாவையும் கூட
வினோதமாகப் பார்க்கும் நோக்குதையவனா?
உங்களால் நம்பமுடியாத ஒரு பேச்சாளனா?
பாறையின் முகட்டிலான ஒரு நாட்டியக் கலைஞனா?
எல்லோரையும் நேசிக்கும் ஒரு தற்பூசனைவாதியா?
நாற்காலியில் உறங்கும் ஒரு கவிஞனா?
ஒரு நவீனகால ரசவாதியா?
ஒரு வெளியறிவற்ற புரட்சியாளனா?
ஒரு சிறிய முதலாளித்துவனா?
ஒரு போலியானவன்?
ஒரு கடவுள்?
ஓர் அப்பாவி மனிதன்?
சைல் சான்டிக்கோவின் விவசாயி?
சரியான பதிலில் அடிக்கோடிடவும்
எதிர்க்கவிதை என்பதென்ன?
தேநீர் கோப்பையிலிருக்கும் கொந்தளிப்பா?
பாறையின் மேலிருக்கும் ஒரு பனித்துளியா?
தந்தை சால்வட்டிரா நம்புவது போல
தட்டில் குவிக்கப்படும் மனிதக் கழிவின் குவியலா?
பொய்க்காத ஒரு கண்ணாடியா?
எழுத்தாளர் சங்கத்தலைவரின் முகத்தில் விழும் ஓர் அறையா?
(கடவுள் அவரைக் காப்பாற்றட்டும்)
இளங்கவிஞர்களுக்கு ஓர் எச்சரிக்கையா?
உந்துதலில் இயங்கும் சவப்பெட்டியா?
வட்டத்தின் மையத்திலிருந்து தள்ளப்படும் ஒரு சவப்பெட்டியா?
மண்ணெண்ணையில் இயங்கும் சவப்பெட்டியா?
பிணமின்றி இருக்கும் இறுதிச்சடங்கு இடமா?
சரியான பதிலில் எக்ஸ் குறியிடுங்கள்.
கடவுளின் பிரார்த்தனை
சொர்க்கத்திலிருக்கும் எங்கள் பிதாவுக்கு
பலவிதமான பிரச்னைகள்.
தனது புருவ நெரிப்புகளுடன்
அவர் சாதாரண மனிதர்தான்.
எங்களைப் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம்.
உங்களிடத்தை சரியாக வைக்க முடியவில்லையென்று
நீங்கள் வருந்துவது எங்களுக்குத் தெரியும்.
நீங்கள் உருவாக்கும் ஒவ்வொன்றையும்
சாத்தான் அழித்து உங்கள் அமைதியைக் குலைக்கும் என்றறிவோம்
அது உங்களைப் பார்த்துச் சிரிக்கும்
ஆனால் நாங்கள் உங்களுடன் அழுகிறோம்.
பிதாவே கேடான தேவதைகளால்
சூழப்பட்டு உள்ளீர்கள்
உண்மையில்
எங்களுக்காக அதிகம் துன்புற வேண்டியதில்லை
கடவுளர்கள் பிழைசெய்யாதவர்களில்லை என்பதை
நாங்கள் அனைவரையும் மன்னிப்போம்

உண்மையில்
எங்களுக்காக அதிகம் துன்புற வேண்டியதில்லை
கடவுளர்கள் பிழைசெய்யாதவர்களில்லை என்பதைக் கருத்திலிறுத்துங்கள்
நாங்கள் அனைவரையும் மன்னிப்போம்.
ஆரவாரக் கூச்சல் [ Lullabaloo]
பூங்காவில் ஒருநாள்
நான் நடந்து கொண்டிருந்த போது
ஒரு தேவதையைச் சந்திக்க நேர்ந்த்து.
கைகுலுக்க முயன்றபோது
தேவதை தன் காலைக் கொடுத்தது.
நீ ஓர் அற்பமான அன்னம் போல
உணர்ச்சியற்ற கடப்பாரை போல
பருத்த ஒரு வாத்துபோல
அழகற்று உன்னைப் போல என்று சொல்ல
தேவதை வாளால் வெட்ட முயன்றது.
நீ உன் வழியில் செல்
உன் நாள் நன்றாக இருக்கட்டும்
கார் மோதி இறந்து போ
ரயில் அடித்து ஒழி
இதுதான் தேவதையின் கதை முடிவு

உதவி
“எப்படி நான் இங்கு வந்தேனென்று தெரியவில்லை;
என் தொப்பி என் வலதுகையிலிருந்தது
நீங்கள் விரும்பியதுபோல் நான் மகிழ்ச்சியாக ஓடிக்கொண்டிருந்தேன்
என்னை சந்தோஷப் பித்தனாக்கிக் கொண்டிருக்கும்
மின்னுகிற ஒரு பட்டாம்பூச்சியைப் பின்தொடர்ந்தபடி.

திடீரென்று வேகம்! நான் இடறினேன்
தோட்டத்திற்கு என்ன ஆனதென்று எனக்குத் தெரியவில்லை
முழுவதும் துண்டுகளாகிப் போனது.
என் மூக்கிலும் வாயிலும் இரத்தம் கசிந்தது.
என்ன நடக்கிறதென்று நிஜமாகவே எனக்குத் தெரியவில்லை
எனக்கு ஏதாவது உதவி செய்யுங்கள்
அல்லது என் தலையை குண்டால் கொய்யுங்கள்.
ரோசிட்டா அவென்தனோ [ Rosita Avendaño ]
“அவர்கள் என்னைப் பள்ளிக்கு அனுப்ப முயன்றனர்
அங்கு நோயாளிக் குழந்தைகள்
ஆனால் என்னால் அவர்களைப் பொறுக்க முடியாது
ஏனெனில் நான் நோயாளிச் சிறுமியில்லை
என்னால் தெளிவாகப் பேசமுடியாது
ஆனால் நான் நோயாளிப் பெண்ணில்லை”
எதிர்க் கவிதை
மிகத் தாமதமாவதற்கு முன்பே
உலகின்
முதலாளிகளும் சமதர்மவாதிகளும் இணைந்துவிடுகின்றனர்.

••

இந்த வகையான கவிதைகள் அரசியல் நடுவுநிலை தவறாத பாங்குடைய வையாக அமைவதால் அவரை கேட்டிற்கு ஆட்படுத்த முடியாத சுயாதீன மானவர் என்று பர்ராவை Chilean poet Raul Zurita, குறிப்பிடுகிறார்.

•••

நன்றி: Searching for Nicanor என்ற தலைப்பில் இப்பேட்டி Berfrois இணைய
இதழில் November 3, 2014 இடம் பெற்றுள்ளது.

•••••

கவிதையின் விடுதலை / நிகனோர் பார்ரா – நேர்காணல் (தமிழில் : ராஜேஷ் சுப்ரமணியன் )

நிகனார் பார்ரா

நிகனார் பார்ரா

1914 ம் ஆண்டு சிலி (சிலே -Chile ) நாட்டில் பிறந்த நிகனோர் பார்ரா , ஸ்பானிய மொழியின் மிக முக்கியக் கவிஞர். பல முறை நோபல் இலக்கியப் பரிசுக்காகப் பரிந்துரைக்கப்பட்டவர். நூற்றாண்டைக் கடந்து வாழும் கவி ஆளுமை.

அவரது ” கவிதைகளும் எதிர்க்கவிதைகளும் ” (Poems & Antipoems ), ஸ்பானிய மொழியின் மிக முக்கியமான கவிதைத் தொகுப்பாகக் கருதப்படுகிறது. தன்னை, “எதிர்க்கவிஞன் ” என்று பிரகடனப்படுத்திக்கொண்டவர். எளிமையான வார்த்தைகளுடன், நாம் அன்றாடம் எதிர்கொள்ளும் அனுபவங்களையும் புற உலகப் பொருட்களையும் கொண்டு, அபார வீச்சுடன் வெளிப்படுபவை அவரது கவிதைகள். கேலியையும், நகைச்சுவையையும், நையாண்டியையும் ஆயுதங்களாகக் கொண்டு சமூகத்தையும், மதிப்பீடுகளையும் கேள்விக்கு உட்படுத்துபவை அவரது கவிதைகள்.

சுற்றுச்சூழல் அழிவுகளால் மனித இனம் அழிவுப் பாதையில் செல்லுவதை அவரது பிற்காலத்திய கவிதைகள் பிரதிபலிக்கின்றன. சூழலியல்-கவிஞர் (eco-poet ) என்றும் அழைக்கப்படும் அவர், Marie-Lise Gazarian Gautier என்பவருக்கு அளித்தப் பேட்டியிலிருந்து (1989) பெரும்பகுதி கீழே:

கே: லோர்க்காவின் “நாடோடிப் பாடல்புத்தகம் ( Gypsy Songbook) ” நூலின் தாக்கம் உங்களுடைய முதல் கவிதைத் தொகுப்பில் ( “Cancionero sin nombre” ) இருந்தது என்று நினைக்கிறீர்களா?

ப: கட்டாயம், எல்லா வகைகளிலும் இருந்தது.

கே: “புதிர் ” ( Puzzle ) எனும் உங்கள் கவிதையில், ” ஒரு முட்டாளாகவே நடித்துவிட்டு , ஒன்றிற்கு பதில் இன்னொன்று சொல்லிச் செல்வது மேல் ” என்று கூறுகிறீர்கள். உங்களுடனான இந்தப் பேட்டியும் ஒரு எதிர்-பேட்டியாகவே மாறி விடுமோ?

ப: நீங்கள் அவ்வாறு நினைப்பது சரியாகவே இருக்கும், ஏனெனில் நான் தொடர்ந்து எப்பொழுதும் அறிவுத்தன்மைக்கும், அறிவற்றதன்மைக்கும் இடையே இடம் மாறிக் கொண்டே இருக்கிறேன். பரந்து விரிந்த நிறமாலையின் (spectrum ) எந்த ஒரு இடத்திலும் தேங்கி நின்று விடக்கூடாது எனும் உள்மனக் கட்டமைப்புடன் இருக்கிறேன். இந்தப் பேட்டியும் வெறுப்படைய வைக்கக் கூடிய ஒன்றாக மாறிவிடக் கூடும்.

 ராஜேஷ் சுப்ரமணியன்

ராஜேஷ் சுப்ரமணியன்


கே: “வெறுப்படைய வைக்கக் கூடிய ” என்று கூறுவதின் பொருள் என்ன ?

ப: அது என்னப் பொருளை உணர்த்துகிறதோ, அது தான்- கூடுதலாக ஒன்றும் இல்லை.

கே: சிலி (சிலே ) நாடு, ஒரு கவித்துவம் மிகுந்த நாடாகக் கருதப்படுகிறது. ரூபென் டாரியோ (Ruben Dario ) எழுதிய “அஸுல் ” (Azul ) எனும் நூலின் மூலம், Modernismo என்றழைக்கப்படும் நவீனத்துவ இலக்கிய இயக்கம் அங்குதான் தோன்றியது. நோபல் இலக்கியப் பரிசு பெற்ற பாப்லோ நெருடா மற்றும் கேப்ரியலா மிஸ்ட்ரல் ஆகியோர் பிறந்த நாடு சிலி. கவிதை செழித்தோங்கும் நாடாக ஏன் சிலி அமைந்திருக்கிறது?

ப: மேற்சொன்ன பெயர்களுடன் நோபல் பரிசு பெற்றிருக்கவேண்டிய Vicente Huidobro வின் பெயரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். நீங்கள் எழுப்பியக் கேள்வி குறித்து ஒன்றிற்கு மேற்பட்ட தருணங்களில் நானும் யோசித்திருக்கிறேன். பொதுவாக சொன்னால், கவிஞர்கள் பலரும் சிலி நாட்டை சேர்ந்தவர்களாக இருப்பது ஒரு தற்செயல்தான். எல்லா விஷயங்களின் மேலும் ஏன் சட்டத்திட்டங்களைத் திணிக்க வேண்டும்? இருப்பினும், நீங்கள் விடாப்பிடியாகக் கேட்பீர்களெனில், சிலி நாடு புவியியல் ரீதியாகத் தனிமைப்படுத்தப் படுத்தப்பட்டிருப்பது மேற்சொன்னதற்கு ஒரு காரணமாக இருக்கும் என்று ஊகிக்கிறேன். அருமையான பல வைன் (wine ) பானங்கள் அங்கேத் தயாரிக்கப்படுகின்றன என்பதையும் நீங்கள் மனதில் கொள்ள வேண்டும். ஆகவே, தனிமையும், வைனும் கவித்துவ ஊற்றுடன் ஏதோ ஒரு வகையில் தொடர்புக் கொண்டுள்ளன.

கே: உங்கள் கைகளின் கீழே ஒரு நோட்டுப் புத்தகத்துடனேயே செல்வதை நீங்கள் விரும்புகிறீர்கள். ஒரு கவிஞன் என்பவன், தனது காலத்தைப் பதிவு செய்பவனாக நீங்கள் கருதுகிறீர்களா?

ப: ஆம், ஒரு நோட்டுப் புத்தகத்துடனேயே நான் வலம் வருகிறேன் என்பது உண்மைதான்; சொல்லப் போனால், ஒரு குரல் பதிவும் செய்யும் கருவியையோ (tape recorder ), கேமராவையோ எடுத்து செல்லவும் விரும்புவேன், ஏனெனில் கவிதை தன்னிச்சையாக, உரையாடல்கள் மற்றும் பேச்சிலிருந்து திடீரென எந்தத் தருணத்திலும் பிறக்க வாய்ப்புண்டு. “Hojas de Parra ” எனும் எனது சமீபத்திய நூலில் உள்ள பல கவிதைகள், நான் காதால் கேட்ட சொற்றொடர்களை அடிப்படையாகக் கொண்டது; அவற்றை, இயன்றவரை இயல்பு மாறாமல் பயன்படுத்தி இருக்கிறேன் அந்தக் கவிதைகளில். கவிதை என்பது ஒரு உரையாடல் என்னும் கருத்தாக்கத்துடன் தொடர்பு கொண்டது இது. எனவே நான் உரையாடல்களுடன் நேரடி நெருக்கத்தை உண்டாக்கிக் கொள்கிறேன்; முன்னரோ, நான் கேட்ட விஷயங்களை விவரித்து எழுதும் பழக்கம் கொண்டிருந்தேன்..

கே: ஒரு கவிஞனின் வேலை என்ன: ஒரு உலகை உண்டாக்குவது, அந்த உலகை புரிந்துக் கொள்ளும்படியாக மாற்றுவது, அதை அழிப்பது அல்லது அதனை போலித்தனங்களில் இருந்து விடுவிப்பது, இவற்றில் எது?

ப: சுற்றுச் சூழல் சீரழிந்துப் போவதையும், வாழ்வுத் தொடர்ச்சி பற்றியும் நான் செவி மடுக்க வேண்டும். தற்காலத்தில், கவிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் அனைவரும், இந்த உலகை அழிவிலிருந்துக் காப்பாற்றுவதற்கான செயல்பாடுகளில் ஒருங்கிணைத்துக் கொள்ள வேண்டும். பழையப் பிரிவினைகளும் ( யார் எதை செய்யவேண்டும் என்பது போன்றவை) வேற்றுமைகளும் அழிந்து இந்த புதிய முக்கியத்துவங்கள் புரிந்துக் கொள்ளப்பட வேண்டும்.

கே: ஆகவே, நாம் இந்த உலகைக் காக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் ?

ப: ஆமாம், முதலில் நமது பூமியைக் காப்பாற்ற வேண்டும். இந்தக் குறிக்கோளை அடைந்துவிட்டோம் என்றால் ( ஏற்கனவே காலம் கடந்து விட்டது என்றுப் பலரும் கருதுகிறார்கள்), நாம் முன்னர் கடந்தக் காலங்களில் ஈடுப்பட்ட பொழுதுப் போக்குகளில் ஈடுபடலாம்.

கே: கட்டுக்கதைகளை அழித்தொழிப்பவர் என்று அறியப்படுகிறீர்கள். அதனை ஒப்புக்கொள்கிறீர்களா?

ப: அப்படி ஒரு அடையாளம் பெறுவதுப் பற்றி மகிழ்ச்சியே அடைகிறேன், ஏனெனில், நான் கருதுவது என்னவென்றால், நமது புராதனக் கலாச்சாரம் மற்றும் அதனுடன் தொடர்புக் கொண்ட அணைத்து முன்னுதாரணங்கள் மற்றும் செயற்பாடுகளால் தான், நமது உலகம் இப்போது ஒரு முடிவை/அழிவை நோக்கி செல்லும் நிலையை அடைந்துள்ளது. அத்தகைய முன்மாதிரிகள் மற்றும் முன் உதாரணங்கள் அனைத்தும் அழுகிய மீன்களின் நாற்றம் கொண்டவையாகவே நான் கருதி வந்திருக்கிறேன். அணு குண்டுகளால் உண்டான நாசமும், சுற்று-சூழலியல் அழிந்ததும், விதியினால் ஏற்பட்டவை அல்ல. நம் சமூகத்தை ஆளும் இரண்டு நாசக் காரத் தத்துவங்களால் ஏற்பட்டவை அவை – முதலாளித்துவமும் , சோசியலிச பொது உடமைக் கோட்பாடும் ( அது உருவான, வளர்ந்த வகையினால்) தான் அவை.

images (5)
கே: ” கடவுள் உலகத்தை ஒரு வாரத்தில் உருவாக்கினார் , நான் அதை ஒரு கணத்தில் அழித்து விட்டேன் ” எனும் உங்கள் கவிதை வரியை விளக்க முடியுமா ?

ப: அந்தக் கவிதையின் பொருள் என்ன என்று எனக்குத் தெரியாது. கவிதைகளையோ , ஹாஸ்யங்களையோ விளக்குவதில் எனக்கு அவ்வளவு ஆர்வம் இல்லை. ஒரு ஹாஸ்யத் துணுக்கு, உங்களை உடனே சிரிக்க வைக்க வேண்டும்; ஒரு கவிதை உடனே உங்கள் உள் -மூளையைத் தாக்க வேண்டும்- அவ்வாறு அது செய்யாவிட்டால் , எந்த அளவு விளக்கம் கொடுத்தாலும், எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை.

கே: “பெயர் மாற்றம் ” ( Change of Name- “Cambios de nombre ” ) எனும் உங்கள் கவிதையில் , ” சுய மரியாதை உள்ள எந்தக் இந்தக் கவிஞனும், அவனுக்கேயான சுய-அகராதியை வைத்திருக்க வேண்டும்; நான் சொல்ல மறந்து விடுவதற்கு முன்னர் ஒன்று சொல்ல வேண்டும்- கடவுளுடையப் பெயரைக் கூட மாற்ற வேண்டும்” என்று சொல்கிறீர்கள். உங்களுடைய அகராதியில் என்னென்ன வார்த்தைகள் இருக்கின்றன மற்றும் கடவுளுக்கு என்னப் பெயர் கொடுத்து உள்ளீர்கள்?

ப: இதற்கு நான் பதில் சொல்வதற்கு முன்னர் ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன். ஒருவர், ஒரு கவிதையின் சொற்களையும், அதை எழுதிய ஆசிரியனின் உணர்வுகளையும் குழப்பிக்கொள்ளக்கூடாது. எந்தக் கவிதையுடனும் என்னை நானே ஒன்றுப் படுத்திப் பார்ப்பதில்லை, சிலத் தயக்கங்கள் இல்லாமல். முகமூடிகள் அணிந்து செயல்படுவது என்னுடைய படைப்புகளில் அதிகம் – பிரெஞ்சுக் கவிஞர் ரைம்போவுடன் (Rimbaud ) பல ஒற்றுமைகள் இந்த விஷயத்தில் உண்டு. எதிர்-கவிதை என்பது ஒரு புதிய சித்தாந்தம் என்று நினைக்கக்கூடாது. ஒன்றைச் சார்ந்து பேசுவதோ அல்லது மறுதலித்துப் பேசுவதோ கவிதை ஊடகத்தில் தம்மளவில் சுயமாகத் தாமே தனித்து நிற்கவேண்டும்; இல்லையெனில், அவை பொருத்தமற்று, பொருளற்றுப் போய்விடும்.

கே: ஒரு எதிர்க் கவிஞனின் மொழி எது? இருக்கும் மொழியை அழித்து, புதிய சொற்களை உண்டாக்குகின்றானா அவன், மொழியை மறு-உருவாக்கம் செய்ய?

ப: நான் கவிதைகள் எழுதத் துவங்கியபோது, இருவகையான மொழிகளைக் கண்டேன்: கவிஞர்கள் பயன்படுத்திய ” கவி மொழி” மற்றும் தெருக்களில் வாழ்ந்த சாதாரண மனிதர்கள் பயன்படுத்திய “இயல்பான / சாதாரண” பேச்சு மொழி. இவற்றின் இரண்டிற்கும் இடையே இருந்த பெரும் பிளவிற்கான காரணத்தை நான் கண்டறிய முடியாததால், இந்தப் பிரிவை/பிளவை அழிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தேன். சாதாரண நடைமுறை மொழி தினசரி அனுபவங்களுக்கு நெருங்கியதாக இருந்த அதே சமயத்தில், “கவி மொழி” காலத்திற்கு ஒவ்வாத குணத்தையும், மற்றக் குறைகளையும் கொண்டிருந்ததாக நம்பினேன். ஆகவே, பேச்சு மொழியில் அமைந்த கவிதையை முயற்சிக்க வேண்டும் என்று நினைத்தேன்- அந்த உள்ளுணர்வு சரி என்றும் பிற்பாடு சரியானது என்று உறுதி ஆனது, ஹெய்டெக்கரை (Heidegger ) வாசித்தப் பிறகு. அந்தத் தத்துவ அறிஞர் சொல்வார் , மொழியின் சாராம்சம் கவிதை என்று. இந்த விதிமுறையை சற்றே மாற்றி நான் கூறுவேன் – பேச்சு மொழியின் சாராம்சமே கவிதை என்று. இறுதியாக, நான் இலக்கியத்திற்கு எதிரானவன் என்று அறிவித்துக் கொள்ள விரும்பவில்லை – ஏனெனில், இலக்கியமும் மனித அனுபவத்தின் ஒரு பகுதியே ஆகையால், கவிதைக்கான ஒரு நல்லத் தொடக்கப் புள்ளியாக அது அமையக் கூடும். ஆகவே, ஒரு பேச்சுக் கவிதையின் இடையே ஒரு ” தேய்ந்துப் போன / நைந்துப் போன ” ( cliche ) சொல்லைக் கண்டு ஆச்சர்யப் படக்கூடாது.

கே: கவிதைக்கு என்னென்ன புதிய சொற்கள், சொற்றடர்களை நீங்கள் அறிமுகப் படுத்தியுள்ளீர்கள் ?

ப: எதிர்-கவிதை, முழு அகராதியையும் திறப்பதற்கு ஒரு வாயிலை தோற்றுவிக்கிறது. எந்த ஒரு வார்த்தையையும் தூக்கி எறிந்து விடக் கூடாது. அதன் காரணமாக, ஒவ்வொரு வார்த்தையும் ஏதேனும் ஒரு கவிதையில் இடம் பெறத் தகுதிக் கொண்டதே.

கே: பழக்கத்தில் தேய்ந்துப் போன /பொருள் இழந்துப் போன சொற்களைக் கவிதைகளில் பயன்படுத்தி, அக்கவிதைகளில் அவை பொருத்தமாக அமைவதற்கேற்றார் போல் செய்ய எவ்வாறு முடிந்தது?

ப: ஒரு தேய்ந்துப் போன சொல்லை மையமாக வைத்து அமைக்கும் கொலாஜ் போன்றது அது. அத்தகைய ஒரு சொல், தன்னுடைய தனித்தன்மையை ஒரு எதிர் கவிதையில் தக்க வைத்துக்கொள்வதில்லை, ஆனால், அக்கவிதையை ஒரு விசேஷமான விளைவை, தாக்கத்தை உண்டாக்கும். கூடைப் பந்தாட்டத்தில் பந்தைத் தூக்கி எறிவது போன்றது அது- பந்தை குறிப்பிட்ட முறையில் சுழற்றி எரிய வேண்டும், புள்ளிகள் பெறுவதற்கு; பழைய முறையில் ஏதோ சும்மாத் தூக்கி எறிந்தால் போதாது.

கே: இந்த உலகைப் பற்றிய யதார்த்தமான ஒரு பார்வை உங்களுக்கு இருக்கிறதா, ஒரு எதிர்-கவிஞன், சூழலியல் கவிஞன் என்ற முறையில் ?

ப: அனைத்துப் புலன் உணர்வுகளும், அனைத்து அனுபவங்களும் ஒரு முழுமையின் ஒரு பகுதியே என்றும், அவை கவிதைகளுடன் ஒன்றிணைக்கப்பட வேண்டும் எனும் அனுமானத்துடனேயே இருக்கிறேன். ஒரு கவிஞனின் வேலை, இந்த பிரபஞ்சத்தைப் பற்றிய ஒரு வரைவை உருவாக்குவதே.

images (1)
கே: ” நிகனோர் பார்ராவின் கவிதைகள்” ( “La Poesia de Nicanor Parra “)

எனும் தனது புத்தகத்தில், Marlene Gottlieb சொல்கிறார், ” கவிதையின் விடுதலையை நீங்கள் சாதித்து விட்டீர்கள் ” என்று. பழையக் கவிதை மொழியை கைவிட்டு, முதலில் எதிர்-கவிதையையும் பின்னர் சூழலியல் -கவிதையையும் நீங்கள் கைக்கொள்ளவும், அவற்றை உருவாக்கவும் உங்களைத் தூண்டியது எது?

ப: மரபார்ந்த கவிதை, சாதாரண மனிதனின் அனுபவங்களை எதிரொலிக்கவில்லை என்றே நான் எப்போதும் கருதி வந்துள்ளேன்; அத்தகைய அனுபவங்களை ஒரு தனித்த தளத்திற்குத் தள்ளி வைத்து விட்டது. அனுபவங்களை ஆராய்ந்து, அவற்றை அவை உள்ளபடி எழுதுவது, குறிப்பாக அலங்காரங்கள் இல்லாமல் எழுதுவது சரியாக இருக்கும் என்றே நான் கருதினேன். ” யதார்த்தவாதம்” என்பது நான் சொன்ன இந்த நம்பிக்கையைத்தான் பிரதிலிபலிக்கிறது எனில்,என்னுடைய எதிர்-கவிதை அதனுடன் அதிகத் தொடர்பு கொண்டது- குறியீடுகள், படிமங்கள் போன்றவற்றுடன் உள்ள தொடர்பை விட.

கே: 1938 ம் வருட தலைமுறையை ( The generation of 1938) சேர்ந்தவர் நீங்கள்; அந்த இயக்கத்தின் போர்க்குரல், ” உருவகத்துடன் சண்டையிடுங்கள்; காட்சியியலின் மரணம், யதார்த்தம் நீண்டு வாழட்டும், மீண்டும் தெளிவு பிறக்கட்டும்”. உங்கள் கவிதையை இந்த போர் முழக்கம் பிரதிநிதித்துவப் படுத்துகிறதா?

ப: நான், உவமைகள், உருவகங்கள், படிமங்கள் போன்றவற்றைப் பயன்படுத்துவதில்லை. என்னுடைய அக்கறைகள் வேறானவை. ரைம்போ, குறியீட்டாளர்கள், நவீனத்துவர்கள் ( Modernistas ) போன்றவர்கள் போல, புலன் ஆகாத விஷயங்களைத் தேடி நான் போவதில்லை. ஒரு சாதாரண மனிதனின் பார்வையில், யதார்த்தம் எப்படி தோன்றுகிறதோ, அதை அவ்வாறே உருவாக்குவதையே நான் விரும்புகிறேன்.

கே:அப்படியெனில், உங்களை “தெளிவு மற்றும் வெளிச்சத்தின் ” கவிஞர் என்று அழைக்கலாமா ?

ப: நான் எனது இருபதுகளில் இருந்தபொழுது, இதுவரை வெளியிடப்படாத ( ” பகல் பொழுதின் வெளிச்சம்”- “The Light of Day” ) எனும் நூலை எழுதினேன். அந்தப் புத்தகத்தில் இருந்துதான், ” தெளிவு” எனும் கருத்தாக்கம் பெற்றேன். பல காலத்திற்கு முன்னர் எழுதப்பட்ட , பெருமைவாய்ந்த சிலி நாட்டு விமர்சகரும் கவிஞரும் ஆன டோமஸ் லகோவின் அறிவார்த்தமான ஒரு கட்டுரையின் அடிப்படையில் கேட்கிறீர்கள் என்று நினைக்கிறன்.

கே: கவிதைகளை , ” இரவின் கவிதைகள் ” மற்றும் “விடியலின் கவிதைகள் ” என்று இருவகைகளாகப் பிரிப்போமாயின் , நீங்கள் உங்கள் கவிதைகளை பாப்லோ நெருடாவின் கவிதைகளோடு எந்த வகையில் ஒப்பிடுவீர்கள்?

ப: அவரே பல முறை சொன்னதுபோல, நெருடாவின் கவிதைகளை ” இரவின் கவிதைகள் ” என்றேக் ,கொள்ளவேண்டும். இருப்பினும், காலப்போக்கில் அவர் “விடியல் கவிதைகளையும்” எழுத முற்பட்டார் (உதாரணம், “Extravagario ” மற்றும் ” The Primary Odes” ). என்னுடைய விஷயத்தில்,நேர்மாறாக நடந்தது; நான் ” பகல் பொழுதின் கவிதைகள்” ( Poetry of Day) மற்றும் “விடியல் கவிதைகளுடன்” தான் துவங்கினேன்; இருப்பினும், எனது கவிதைகளில் நிழல்களின் இருப்பையும், மதிப்பையும் மறுக்கமுடியாது. “கற்பனையான மனிதன் ” ( “The Imaginary Man” ) போன்ற கவிதை, இசை நயத்துடனும், குறியிடுகளுடனும் இருப்பதற்கு வெட்கம் கொள்ளவில்லை.

கே: புதிர்த்தன்மையும் , தெளிவுத்தன்மையும் ஒன்றின் மேல் ஒன்று ஒரே நேரத்தில் இயங்குவதை எவ்வாறு உருவாக்குகிறீர்கள்?

ப: நான் என்ன செய்கிறேன் என்பதைப் பற்றி எனக்கே உறுதியாகத் தெரியவில்லை. ஒரு வேளை , வாசனைகளை நன்றாக முகரும் திறன் எனக்கு இயல்பிலேயே நன்றாக அமைந்திருப்பதால் இருக்கக் கூடும்.

கே: பார்வைத் திறனை விட அதிகப்படியாக அமைந்திருக்கும், மூக்கினால் வாசனைகளை நுகரும் திறனாலா?

ப: இல்லை,ஒரு உருவகத்தன்மைக்காக , உவமானம் போல சொன்னேன்; “பார்வை வாசனையும் “, ” மூக்கினால் முகரப்படும் வாசனையும் ” வெவ்வேறாக , ஆனால் இருக்கின்றன. அதனை, ஏழாவது அறிவு என்றும் அழைக்கலாம்.

கே: உங்கள் முதல் கவிதைகள் 1937 ஆம் ஆண்டு, ” Cancionero sin nombre” எனும் தலைப்பில் வெளிவந்தது. உங்களுடைய இரண்டாம் நூல், ” கவிதைகள் மற்றும் எதிர்-கவிதைகள்” 1954 ஆம் ஆண்டு வெளிவந்தது. ” கவிதைகள்” மற்றும் “எதிர்-கவிதைகள் ” ஆகிய பதங்களை விளக்க முடியுமா?

ப: எதிர்-கவிதை எனும் கருத்தாக்கத்தை நான் தான் தோற்றுவித்தேன் என்று நினைத்திருந்தேன். அப்படி ஒரு பெயர் ஏற்கனவே இருந்தது என்பது எனக்குத் தெரியாமல் இருந்தது. பிரெஞ்சுக் கவிஞர் Henri Pichette எழுதிய Apoemes எனும் புத்தகத்தில் இருந்து எனக்கு அது வந்தது. அந்தப் புத்தகத்தை நான் Oxford பல்கலைக்கழகத்தில் ஒரு புத்தகக் கடையில் 1949 ஆம் வாக்கில் பார்த்தேன். அந்தப் புத்தகம் என்னை வெகுவாகக் கவர்ந்தது; உடனடியாக எதிர்-கவிதை எனும் பதம் என் மனதிற்கு வந்தது. அந்த பிரெஞ்சுக் கவிஞரின் புத்தகம் Antipoems என்று தலைப்பிடப்பட்டிருந்தால், இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும்,ஏனெனில், எதிர்-கவிதை எனும் சொல், வலிமையானதாக,அதிக தாக்கத்தை உண்டாக்குவதாக இருக்கிறது. அந்தப் பதம் என் சிந்தனையில் ஓடிக்கொண்டே இருந்தது, நான் கடைசியில் தைரியமாக எனது புத்தகம் ஒன்றின் தலைப்பாக அதைப் பயன்படுத்தும் வரை. ஆனால், எதிர்-கவிதை என்பதுடன் ஏதோ வேறு ஒன்றையும் சேர்க்க வேண்டும் என்று நினைத்தேன்; ஆகவே,” கவிதைகள்” எனும் பதத்தையும் சேர்த்து, ” கவிதைகள்- எதிர்-கவிதைகள் ” என்று பெயரிட்டேன். அவ்வாறு செய்ததின் காரணம், எதிர்-கவிதை என்பது, முரண்பாடுகளுடன் தொடர்பு கொண்டது; அது, யதார்த்தத்தின் ஒரு பாதி அளவுடன் திருப்தி அடைந்துவிடுவதில்லை; அனுபவத்தின் முழுமையை ஆட்கொண்டதாக அது இருக்கவேண்டும். ஆராய்ந்து, அலசிப் பார்க்கும் கவிதை வகை அல்ல அது; ஒரு செயற்கையான வகைப்பாடுதான் . அந்த நாட்களில், நான் இயற்பியல் மாணவனாகவும் இருந்தேன். Bohr எனும் இயற்பியல் விஞ்ஞானியின் ஆராய்வுப் படி, ஒவ்வொரு அணுவின் மத்தியில், நேர்மறை சக்தி கொண்ட துகளும், அதை சுற்றி வட்டப்பாதையில், எதிர்மறை சக்தி கொண்ட துகளும் உண்டு. ஆன்மீக உலகிலும், நேர்மறை மற்றும் எதிர்மறை குணங்கள் பற்றிய கருத்தாக்கம் உண்டு. அதே பாணியில், கவிதையும், எதிர்-கவிதையும்.

கே: தாங்கள் இப்போது சூழலியல்-கவிதைகளும் எழுதுகிறீர்கள்; அவற்றில், எதிர்-கவிதையும் ஒரு பங்கு வகிக்கமுடியுமா?

ப: கண்டிப்பாக. எதிர்-கவிதையின் அடிப்படை முகாந்திரம், எந்த வகையான கண்முடித்தனமான நம்பிக்கையையும் மறுதலிப்பது, நான் அந்த சமயத்தில் (எதிர்-கவிதையில்) எடுத்துரைக்கும் விஷயத்தைத் தவிர. ஆகவே, உறுதிப்படுத்துதல்-மறுதலித்தல் ( Affirmation -Negation ) எனும் எதிர்மறைகளுடன் ஒரே நேரத்தில் நான் செயல்படவேண்டும். அந்த வகையில், எதிர்-கவிதை என்பது ஒரு விதத்தில் Taoist கவிதைதான் ( சீனத் தத்துவம்- நேர்மறையும் எதிர்மறையும் ஒன்றுடன் ஒன்று கூடியே வாழும்; ஒன்றின் பிம்பம் தான் மற்றையது எனக் கூறுவது). கடந்தப் பத்தாண்டுகளாக நான் Taoist தத்துவத்தில் ஆர்வம் கொண்டிருக்கிறேன் என்பது தற்செயல் அல்ல. பார்வை, முகருதல் மற்றும் மற்றப் புலன்கள் சம்பந்தமாகவும், உள்ளார்ந்த (உள்முக, அக) ஆராய்ச்சியிலும், TaoTeChing தத்துவம் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். அத்தகைய ஒரு தத்துவத்தின் தொடர்பு இல்லாமல் என்னை கற்பனை செய்துப பார்க்க இயலவில்லை இப்பொழுது.

கே: உங்களுக்கு ” கடவுள்” எவ்வாறு அர்த்தப்படுகிறார்?

ப: எனக்கு, கிறிஸ்துவர்களின் கடவுளோ அல்லது வேறு தனிப்பட்ட கடவுள்களோ இல்லை; இருப்பினும் தவிர்க்க முடியாத வகையில் சிறுவயதிலிருந்தே கிறிஸ்துவ மதத்தின் பாதிப்பு ஓரளவு இருந்துவந்திருக்கிறது. சிறுவயது முதலே , நம் உள்ளே ஆழமாக ஏற்றப்பட்டிருக்கிறது என்பதால், ஒரு நாத்திகன் கூட ஏதோ ஒரு சமயத்தில் திடீரென ஒரு கத்தோலிக்க பாதிரியிடமிருந்து புனிதப் பிரசாதத்தைப் பெற்றுக்கொள்வது ஆச்சரியம் அளிக்காது.

கே: உண்மைதான்,ஆனால் நீங்கள் நாத்திகவாதி இல்லையே?

ப: இல்லை, நான் என்னை நாத்திகவாதியாக அழைத்துக் கொள்ளமாட்டேன். இந்த விஷயத்தை சரியான முறையில் அணுகவேண்டுமென்றால், Taoist முறையில் தான் செய்ய வேண்டும். ஆகவே, என்னை நானே விவரித்துக் கொள்ள வேண்டுமென்றால், நான் சொல்வேன்,நான் ஒரு Taoist துறவி என்று, அல்லது ஒரு Taoist துறவியின் சீடன் என்று.

கே: உங்கள் குழந்தைகளுடன் உங்களுக்கு சிறப்பான உறவு இருக்கிறதல்லவா ?

ப: அவர்கள் அனைவருடனும் என்னுடைய உறவு சீராக இருக்கிறதென்றே சொல்வேன் ; ஆனாலும் என்னுடைய குழந்தைகளில் ஒருவரிடம், பெரும் பிரச்சனைகளை அனுபவித்து வருகிறேன், அதைப் பற்றி பேசவே முடியாத அளவிற்கு.

கே: உங்களுக்கு மொத்தம் எத்தனை குழந்தைகள்?

ப: ஆறு.

கே: உங்களுக்கு மிகவும் கவலை ஏற்படுத்தும் விஷயங்கள் என்னென்ன ?

ப: தற்போதய காலத்தில்,நமது கிரகம் அழியாமல் வாழ்வதுப் பற்றி மிகவும் கவலைப்படுகிறேன். இதனைப் பலமுறைகளிலும் சொல்லி இருக்கிறேன், இருப்பினும், திரும்ப சொல்வதில் தயக்கமில்லை. நான் மிகவும் அக்கறைக் கொள்வது,இந்த பூமியின் ஆரோக்கியத்திலும், சுற்றுசூழல் அழிந்துவிடாமலிருப்பதிலும். மற்றும் , அணு ஆயுதப் பேரழிவைத் தடுப்பதிலும் . மற்ற வேறு விஷயங்களில் முன்பு நான் ஆர்வம் கொண்டிருந்தேன்- புதிராகக் கடந்து செல்லும் காலம், நோய்கள்,மறுக்கப்பட்ட காதல் போன்றவற்றில். ஆனால், இன்று நம்மை எதிர்நோக்கி இருக்கும் பிரச்சனைகளோடு ஒப்பிடும்பொழுது , இவை எல்லாம் மேலோட்டமான ஆடம்பர விஷயங்கள் .

******************************

( Email: thesrajesh@gmail.com)

(Parra, Nicanor, and Marie-Lise Gazarian Gautier. “Nicanor Parra.” In Interviews with Latin American Writers, pp. 173-97. Elmwood Park, IL: Dalkey Archive Press, 1989)

1 = 1 ( கனடியன் ஆங்கிலம் ) : அன்னே கார்சன் / ANNE CARSON / தமிழில் / ச.ஆறுமுகம்

anne-carson

அன்னே கார்சன் (ஜூன் 21, 1950 இல் பிறந்தவர்) ஒரு கனடியக் கவிஞர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் செவ்வியல் பேராசிரியர். பிரின்ஸ்டன், மிச்சிகன் மற்றும் மெக்கில் பல்கலைக் கழகங்களில் 1980 – 1987 வரை பணிபுரிந்தார். 1998 இல் குக்கென்ஹீம் ஃபெல்லோஷிப் மற்றும் 2000 இல் மாக்ஆர்தர் ஃபெல்லோஷிப் பெற்றார். லேனான் இலக்கிய விருதினையும் வென்றுள்ளார்.

செவ்வியல் மொழிகள், ஒப்பியல் இலக்கியம், மானுடவியல், வரலாறு மற்றும் வணிகவியல் கலை போன்ற அறிவுப்புலங்களின் பின்னணி கொண்ட செவ்வியல் பேராசிரியரான இவர், பல்வேறு துறைகளிலிருந்தும் அடிப்படைக் கருத்துகள் மற்றும் சிந்தனைகளைக் கலந்து படைப்புகளை உருவாக்குகிறார். இதுவரையில் கவிதை, கட்டுரை, உரைநடை, திறனாய்வு, மொழிபெயர்ப்பு, நாடக உரையாடல், புனைவு மற்றும் புனைவற்றதென அனைத்து வகைகளின் கலப்புவகையினமாக 18 படைப்புகள் வெளியாகியுள்ளன.

11.01.2016 நியூயார்க்கரில் வெளியாகியிருப்பதும், தற்போது தமிழாக்கம் செய்யப்படுவதுமான படைப்பும் அந்த வகையினதாகப் புரிந்துகொள்ளக் கடும் முயற்சியைக் கோருவதாகவே உள்ளது.

****

அவள், பிறரைப் பார்த்துவரச் சென்றிருக்கிறாள். அதிகாலை விடியலில் அவர்கள் எல்லோரும் விழித்தெழுவதற்கு முன்பாகவே, பாச், முதல் க்ளாவிச்சோர்டு1 இசைக் கோர்வையினைக் கேட்டுக்கொண்டே ஏரிக்கு நடக்கிறாள். என்றைக்கு அதை முதன் முதலில் கேட்டாளோ, அன்றிலிருந்தே, அதை நினைக்கும்போதெல்லாம் ஈரம் கசிகிற அவள், ஏதோ ஒரு நாளில் நடைபெறப்போகும் அவளது ஈமச்சடங்கில் அதுதான் இசைக்கப்பட வேண்டுமென்று திட்டமிட்டிருந்த அதே இசையைக் கேட்டுக்கொண்டே நடந்துசெல்கிறாள். காற்றின் இடைவிடாக் கசையடிக் கடைதலில், ஏரி அலைவுற்றுக்கொண்டிருக்க, அலைகள் (பெரிய ஏரி) என்ன செய்யுமோ அதைச் செய்துகொண்டிருக்க, அது உள்ளேயா அல்லது வெளியேயா என்பது மட்டும் அவளுக்குத் தெரியவேயில்லை. கரையில் ஒரு ஆண் நின்றுகொண்டிருக்க, பெரிய நாயொன்று வாயில் கம்புடன் அவனை நோக்கித் திரும்பி நீந்திக்கொண்டிருக்கிறது. இது மீண்டும், மீண்டும் நிகழ்கிறது. நாய் களைப்படையவில்லை. அவள் நீச்சல் தொப்பி ஒன்றினைத் தலையில் ஒட்டிக்கொண்டு, நீர்க்கண்ணாடியணிந்து, ஏரிக்குள், குளிர்கிற ஆனால் அதிரவைக்காத நீருக்குள் நுழைகிறாள். நீந்துகிறாள். உயரமான அலைகள் ஒரே திசையில். நாய் போய்விட்டிருக்கிறது. இப்போது அவள் மட்டும் தனிமையில். நன்றாக நீச்சலடிப்பதற்கும் இந்த நீரைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்வதற்குமான உந்துதல் இருக்கிறது. நீச்சல் என்பது மிகமிக எளிதானதென்றும் முயற்சியே தேவையற்றதென்றும் சிலர் நினைக்கிறார்கள். உண்மையில் அது பெரும் எதிர்பார்ப்புகள் நிறைந்தது. அது ஒரு குளியல்! ஒவ்வொரு நீர்நிலைக்கும் அது, அதற்கே உரிய தனித்த விதிகளும் பேணல்களும் உள்ளன. தவறாகப் பயன்படுத்துவதென்பதை விவரிப்பது கடினமானது. அது, அழகினைத் தெரிந்துகொள்ளும் போராட்டத்துடன், மிகச் சரியாக அழகினைத் தெரிந்துகொள்வது, ஒருவரைச் சரியான பாதையில் செலுத்துவது, வானம்பாடியின் பாடல் கேட்கின்ற சரியான இடத்தில் அமர்வது, மணமகன் மணமகளை முத்தமிடுவதைக் காண்பது, வால்நட்சத்திர நேரத்தைக் கணக்கிடுவதோடு இணைகின்ற பொதுவிடம் கொண்டதுவோ! ஒவ்வொரு நீரும் நிலைகொள்ளவேண்டிய சரியான இடமொன்று இருக்கிறது, ஆனால், அந்த இடம் அசைந்துகொண்டேயிருக்கிறது. நீங்கள் அதைக் கண்டுபிடித்துக்கொண்டேயிருக்கவேண்டும், அதோடு அது உங்களைத் தேடிக்கண்டுபிடிக்குமாறும் செய்யவேண்டும். ஒவ்வொரு உந்துகையிலும் நீங்கள் உள்ளுக்குள்ளாக ஆழ அமிழ்ந்து, வெளிவர வேண்டும். ஒவ்வொரு முறையும் நீங்கள் அதனைத் தோற்கடிக்கமுடியும். அதன் பொருள் என்னவென்கிறீர்கள், `தோற்கடியுங்கள்` என்பதுதான்.

சிறிது நேரம் சென்றதும், அவள் கற்களின் மேலாக ஏறி, வெளிவந்து, சின்னஞ்சிறு துடுப்பணி2களை அணிந்துகொண்டு மீண்டும் நீருக்குள் நுழைகிறாள். வேறுபாடு என்னவெனில், அழகிய பொருள் ஒன்றினை மேலோட்டமாகப் பார்ப்பதற்கும் வெறித்துநோக்குவதற்குமான வேறுபாடுதான். இப்போது அவள் நீரின் வழியிலேயே சென்று அங்கேயே தங்கிவிடமுடியும். அவள் தங்குகிறாள். அவளுக்குத் தெரிந்த மிகமிக மோசமான தன்னலவாதிகளில் அவளும் ஒருத்தி; இதனைப்பற்றி, நீச்சலின்போதும், அதன் பின்னர் கரை மீதிலும், நடுங்கிக்கொண்டே துவர்த்திக்கொள்ளும்போதும், அவள் நினைத்துப் பார்க்கிறாள். அது, ஆளுமையின் ஒரு வகைக் கூறு, மாற்றுவதென்பது கடினம். பெருந்தன்மைப்போக்கினைக் கடைப்பிடிக்க, அவள் முயற்சிக்கின்றபோது, அது, கரடியின் மயிர்ப்பாதம் கொண்டு துடைப்பது போல, அடுத்தவர்களின் வாழ்க்கைக்குள்ளும் விஷயங்களை மேற்கொண்டும் கெடுத்துவிடுவதாகத்தான் தெரிகிறது. மேலும், மற்றொரு நபருடனான செயலாற்றுகையில், பகிர்தலில், கருணைக்கொடையில், இரக்கத்தில், அவள் உத்வேகத்தைக் காண்பதில்லை; அது வானத்தை நோக்கிய ஒவ்வொரு திசையிலும் வெற்றிடமே நிரம்பியுள்ள உலகத்துடனான, அசைவுகளற்ற, அமைதியான ஒரு காலையில் நீருக்குள் நுழைவதைப் போன்றதான, திருகாணியின் பரிசுத்தமான உயிர்த்தன்மையினை ஒருபோதும் அளித்ததில்லை. அந்த முதல் நுழைவு. உணர்வின் எல்லையினைக் கடந்து உள்ளுக்குள்ளாக, எதற்குள்ளாக?

மேலும், (அவள் பொருத்தமான சொல்லைத் தேடுகிறாள்) நீருக்குள்ளாக, அதன் போக்கிலேயே சமநிலைகொள்வதற்கான புரிதல் என்பது, தெளிவாகப் புலனாகிற, அனுசரிப்புடன் கூடிய எண்ணற்ற இணக்கச் செயல்முறைகள்; அது, அவளது வாழ்க்கையிலிருந்தும் மைல்கணக்கில், தொலைவுக்கும் தொலைவாக விலகிநிற்காமல், மாறுபட்டு விரியும் அதனைப் பார்த்துக்கொண்டே, ஆனால், அதற்குள்ளாகவே, அதனைப் போலவே, அதுவாகவே, காலத்தையும் மனத்தையும் ஒரேநிறமாக்கித் தோய்ப்பதாகும். தியானத்தைப் போன்றதல்ல, அது – சிந்தனையற்று, எப்போதும் கூறப்படுகிற ஒரு ஒப்புமை – ஆனால், மிகுதியும் தடய அறிவியல், கூர்ந்த கவனத்துடனான ஒரு செயல்பாடு, அதேநேரத்தில் ஓரளவுக்குத் தன்னிச்சையான அனிச்சைஇயக்கம். இந்தச் செயல்பாட்டு முறைகள் ஒன்றையொன்று விலக்கிக் கொள்வதில்லையென நீச்சல் அறிவுறுத்துகிறது. அதில் ஒரு கல்தன்மை இருக்கிறது. கற்களிலிருந்து காற்று வேறுபடுவது போல, நீரும் வேறுபடுகிறது. அதனாலேயே, அதன் அமைப்பு, அதன் தொன்மை, உங்கள் இருப்பு பற்றி எதிர்வினை ஏதுவுமில்லாத அதன் முழுமை, அப்படியான நிலையிலும், வலியப்புகுத்திய உங்களின் ஊடுருவலுக்கு இணங்குவதுமான வரலாற்று வழியில் உங்கள் பாதையை நீங்கள் தேடிக்கண்டடையவேண்டும். அங்கே உங்களுக்கென, மனிதப்பண்பு ஏதும் இல்லை. மேலும், நீருக்கு, அதன் மேலேயே ஆர்வமற்ற நிலை. கற்களின் கதையை எத்தனை அருமையாகச் சொன்னாலும், கற்கள் அக்கறைகொள்வதில்லை. உங்கள் மென்மை உணர்வுகள், ஆச்சரியப்படத்தக்க உங்கள் நற்பேற்று வாழ்க்கை, உங்கள் தாய்ப்பாசம், அழகாகக் கட்டமைக்கப்பட்ட உங்களின் மிகச்சிறந்த உவமைகள் அனைத்தும் ஆழத்தின் ஆழத்திற்கான சரிவில், தூய்மை, தூய்மைக்கேடு, இரக்கமற்ற தன்மைகளோடு காணாமற்போகின்றன. இதில் தன்னலத் துறப்பு (ஒப்பீடு: தியானம்) ஏதுமில்லை, பற்றறுப்பதான போராட்டம் இல்லை, இந்த விஷயங்கள், கடந்துபோயிருக்கின்ற இவையெல்லாவற்றிற்கும் நீங்கள் பெயர்சொல்ல முடியும். பொருள், `சென்றுவிட்டன` அவ்வளவுதான்.

அவளது உறவாடல் முடிகிறது. மீண்டும் வீட்டில், செய்தித்தாள்கள், ஐரோப்பாவில் தரையோடு தரையாக நசுங்கிய கதவுடன் ஒரு தொடர்வண்டிப் பெட்டியோடு தென்கோடிப் போர்ப்பகுதி ஒன்றில் பாதிக்கப்பட்டவர்களில் தப்பித்துப் பிழைத்தவர்கள் மற்றும் போக்குவரத்து மறுக்கப்பட்ட மக்களின் முதல்பக்கப் புகைப்படங்கள். உயிர்பிழைத்திருக்கவேண்டிய அவசியத்தில் ஒன்றின் மேல் ஒன்றாக அழுத்தப்பட்ட அழுக்கான குடும்பங்கள் மற்றும் துயர ஆன்மாக்கள், கணக்கிட இயலாத கைகள் மற்றும் கால்கள், விரியத்திறந்து சிவந்த கண்கள், தொடர்வண்டிக்குள் அடைபட்டு, இரவு முழுவதும் விடியலுக்கான காத்திருப்பு, அவளுக்கேயான தனித்த காலைநேரத்துக்குள், அவளால் நுழையமுடியாத, எதிர்க்கருத்து நிறைந்த ஒரு காட்சி.

நாம் வாழ்கிற இந்த உலகில் இந்த இரண்டு விடியற்பொழுதுகளும் அருகருகாகவே நிகழ்வது, எந்த மாதிரியான உணர்வைத் தோற்றுவிக்கிறது என்பது ஒரு கேள்வியாக வடித்தெடுக்கப்படுமானால், அந்தக் கேள்விக்குத் தத்துவம், கவிதை, செல்வம் அல்லது அவளது மேம்போக்கான அறிவுநிலை அல்லது ஆழ்மனத்தாலுங்கூடப் பதிலளிக்கமுடியாதென அவள் அஞ்சுகிறாள். `பகுத்தறிவு` போன்ற சொற்கள், மிகுதியாகவே, நகைக்கத்தக்கனவாகின்றன. புலம்பெயர்வோர், நீந்துவோர், தன்னலவாதி, அடிமட்டத்தில் உழலும்படி விதிக்கப்பட்டோர் போன்ற பன்மைத்துவக் கூட்டுப்பொருட்களுக்கு, பகுத்தறிவு வாதங்கள் பொருந்துபவை; ஆனால், இருத்தலியலும் உணர்வும் ஒருமைக்கே உரியவை. கூட்டுப்பொருள் ஒன்றினைப்பற்றி நீங்கள் தீர்வுகளை உருவாக்கிவிடலாம். ஆனால், அதையே உங்களைநோக்கித் திருப்பிப் பார்க்குமாறு கேட்கமுடியாது. தீர்வுகள் தந்திரமானவை; கட்டுக்குள்ளிருந்து உங்களை மட்டும் வெளியேற விட்டுவிடுகின்றன;

அவள் கீழ்த்தளத்திற்கு இறங்கி, படிக்கட்டு முகப்பில் சிறிது குளிர்ச்சியாக இருக்குமென்று, அங்கு செல்கிறாள்.

சாலை ஊர்திகள் கடும்வேகத்தில் பறந்து, மறைகின்றன. ஓரப்பாதையில் சாண்ட்லர் சுண்ணக்கட்டி ஓவியம் ஒன்றை வரைந்துகொண்டிருக்கிறான். தோழர் சாண்ட்லர் என அவள் அழைக்கிறாள். அவன் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. என்ன ஓவியம்? அவன் சுண்ணக்கட்டியைத் தேய்த்துக்கொண்டிருக்கிறான். அவனது பார்வை அதற்குள்ளேயே தோய்ந்து மேற்செல்கிறது. அவன் வீட்டுக்குப் பின்புறம் எங்கேயோ வசிக்கிறான்; அதிகம் பேசுவதில்லை; நிறையவே வரைகிறான். அவள் அவனைத் தோழர் என அழைப்பதற்குக் காரணம் அவள், அவனைச் சந்தித்த கோடையில் ரஷ்யப் புத்தகங்களை வாசித்துக்கொண்டிருந்தாள் என்பதோடு அவனை அந்தரங்கமானவனென நினைத்ததுந்தான். இது ஒரு தவறு. அந்தரங்கம், ஒருவரின் தனிப்பட்ட ஆளுமை மீதான அக்கறையைக் காட்டுவதாகிறது. சாண்ட்லர் எந்த ஒரு அறைக்குள்ளும் நுழைவதை, அங்கு இருப்பதை அல்லது அறையினைவிட்டு வெளியேறுவதை, சிறிய ஒரு மனித அலை பின்னிட்டுச் சுருங்கிக்கொள்வது போல, மெல்ல ஊறிக் கசிந்து மறைவதை, ஒருபோதும் கண்டிருக்க இயலாது.

அவன் அருகிலேயே, அவள் நிற்கிறாள். ஓவியம் ஒரு பேரிக்காய் மரம். மரம் முழுவதும் பச்சைச் சுண்ண உருண்டைகளாக, மஞ்சள் நிறப் பாலேட்டு வெண்மை தெறிக்கும் அழகழகானச் சிறுசிறு காய்களை அவள் காண்கிறாள். அவற்றில் ஒன்றையாவது கடித்துவிடவேண்டுமென்று, குனிய நினைக்கிறாள், அய்யோ! ஆணியின் தலையிலேயே அடித்துவிட்டீர்கள்! தோழர், என்கிறாள். அவன் பதில் பேசவில்லை. ஒருமுறை அவர்கள் பேசிக்கொண்டபோது, சிறுசிறு துண்டுகளாகப் பல மாதங்களுக்கு நீண்ட அந்த உரையாடல், காளான்கள் பற்றியதாக இருந்தது. அவனது சிறைக்காலத்தை வெறுப்பாக்கிய ஒரே பொருள் இந்தக் காளான்கள்தான், என்றான், அவன். உணவைக் குறிப்பிடுவதாக இருந்தால், அது ஒரு பிரச்சினையாகிற அளவுக்கு, சிறையில் காளான் உணவு பரிமாறினார்கள் என்று அர்த்தமாகிறது; அல்லது சுவர் மூலைகளில் பூசணங்கள் படர்கிற மாதிரியான ஈரக்கசிவுள்ள அறையாக அவனது அறை இருந்ததெனப்பொருள்கொள்ளலாமென்றால், அது மிகமிக அதிகபட்சமாகத் தோன்றுகிறதேயெனப் பல நாட்களுக்கு அவள் இதை நினைத்து வியந்துகொண்டிருந்தாள்; பின்னர்தான், அவனது அறைச் சாளரம் வழியாக குடைக்காளான்கள் பூத்துக்கிடந்ததைப் பார்த்தானென்றும், அவன் சிறுபையனாக இருந்தபோது அவனது அம்மாவோடு காளான் பறிக்கக் காட்டுக்குப் போவது வழக்கமென்றும், அது அவனைத் துயரம்கொள்ளச் செய்ததென்றும், மெல்லமெல்ல அவள் புரிந்துகொண்டாள். காளான் மீது ஈர்ப்பு ஏதுமில்லாத அவளுக்கு, அந்தநேரத்தில் விஷயபூர்வமாகச் சொல்லிக்கொள்ள ஏதுமில்லாமலிருந்ததால், ஜான் கேஜு3ம் காளான் பறிப்பவராக இருந்தவர்தான் என்றும், அவர் அதைப்பற்றி ஒரு நூல் எழுதியிருப்பதாகவும், அது ஒரு வழிகாட்டி வகைப்பட்டதென்றும், அவள் அதனை அவனுக்குத் தருவதாகவும் சொன்னாள். சாண்ட்லர் பதிலெதுவும் சொல்லவில்லை. அவன் புத்தகங்கள் படிப்பவனா அல்லது அவனுக்கு ஜான் கேஜைத் தெரிந்திருக்குமாவென அவளுக்கு உறுதிப்பட எதுவும் தெரியவில்லை. உரையாடல் நிலையற்ற போக்குடையது. இப்போது, வட்டவட்டமான வெளிறிய சுண்ணப் பேரிக்காய்களைப் பார்க்கும்போது அவள் மனத்துக்குள் காளான்களின் நினைவு எழ, அவள் சொல்கிறாள்: ஒருநாள், எனக்கு நினைவிருக்கிறது, ஜான் கேஜ், அவரது அம்மாவுடன் காளான் பறித்துக்கொண்டிருந்தார். ஒரு மணிநேரம் போலக் கழிந்தபின், அவள் அவன் பக்கம் திரும்பிச் சொல்கிறாள்: நாம் கடைக்குப் போய் எப்போதுமே உண்மையான காளான்கள் சிலவற்றை வாங்க முடியும்.

சாண்ட்லரிடம் அமைதி. பேரிக்காய்க் காட்சிப்பகுதியில் அங்கும் இங்குமாகச் சில சிவப்புத் தீட்டல்களைச் செய்துகொண்டிருந்தான். பின்னர், திடீரென அவன், வாயெல்லாம் பல்லாகச் சிரித்தான். நகை அவனைவிட்டும் பிரிந்து மறைந்தது. அவன் சுண்ணப்பூச்சுக்குத் திரும்பினான். சீக்கிரம், சீக்கிரம் என்றும், அவளால் சரியாகக் கேட்கமுடியாத ஏதோ ஒன்றுமாக, அவனுக்குள்ளாகவே முணுமுணுக்கிறான்; அது, சின்னப்பிள்ளைத்தனமான ஏமாற்றாக இருக்கிறதே என்பது போலக் கேட்டது. அவள் படிக்கட்டு முகப்புக்குத் திரும்பிச்சென்று கீழ்ப்படியின் மேல் ஏறிநிற்கிறாள். இப்போது அந்தி சாய்ந்துவிட்டது. ஆனாலும் வெக்கையைப் பாரேன். நெடிய நாள்தான் சாண்ட்லர், என அவள் அவனது பிடரிப்பக்கம் சொல்கிறாள். அவன் நடைமேடையிலேயே கையில் சிவப்புச் சுண்ணக்கட்டியுடன் மேலும் நகர்ந்து, புதிய ஓவியத்திற்கான இடம் குறிக்கிறான். அது ஒரு நரியாகத்தான் இருக்கும். ஒவ்வொரு நாளும் முடிக்கும்போது, அவன் ஒரு நரியைத்தான் விரும்பித் தேர்வுசெய்கிறான்.

மாடி. நீந்தமுடியாமற்போன தோல்வியைப்பற்றியே மீண்டும், மீண்டுமாகச் சிந்தனை ஓடிக்கொண்டிருப்பதை அவள் உணர்கிறாள். அது, எண்ணல், எடுத்தல், முகத்தல் மற்றும் நீட்டலென அனைத்து அளவையியல் சார்ந்ததாக அதேநேரம், பண்புசார்ந்துமிருக்கலாம். இப்போதுங்கூட உலகில் எத்தனை குளம் குட்டை, தடாகங்கள், ஏரிகள், நீரிணைப்புகள், வளைகுடாக்கள், நீரோடைகள், நீச்சலுக்கு வசதியான நீர்க்கரை நீட்சிகள், இருக்கின்றன என்று கற்பனைசெய்து பாருங்கள், அவற்றில் பாதியாவது நீந்துவோர் இல்லாமல், இரவு அல்லது கருத்தின்மை காரணமாக வெறுமையாகக் கிடக்கின்றன. வெறுமை, ஆனாலும் முழுமையான பரிபூரணத்துவமுடையவை. என்ன ஒரு வீணடிப்பு, என்னவொரு அறிவுக்கொவ்வாத செய்கை – இவற்றுக்கெல்லாம் ஒருவரை ஏன் பொறுப்பாக்கக்கூடாது? மின்னித்தோன்றும் பர்ட் லங்காஸ்டரை4 ஒருபக்கமாக ஒதுக்கித்தள்ளிவிட்டு, ஒவ்வொன்றாக அல்லது அனைத்தையும் ஒரே நேரத்தில் புவியியல் அடிப்படையில் அல்லது கருத்தாக்க அடிப்படையில், எல்லா நீர்நிலைகளும் யாராவது ஒருவராலாவது பயன்படுத்தப்படவேண்டும். அவளது ஆழ்மனப் பெருங்கடலின் ஊடாக, நெரிசலாகப் பல வரிசைகளில் திணிக்கப்பட்டிருந்த பயணிகளுடன் புகலிடம் தேடும் அகதிகள் பலருமிருந்த, அவசரத்துக்குப் பயன்படுத்தப்படும் நெகிழிப்படகு ஒன்று ஆடிஆடி, ஓரமாக அமர்ந்திருந்த பயணிகள் சிலரை கடலில் உதிர்த்துக்கொண்டு மிதந்துவந்தது. அந்தப் படத்தை அவள் பார்த்திருக்கிறாள். பெருங்கப்பல்கள் மிக அருகிலேயே பயணிக்கும்போது, அவர்களின் துன்பத்தையும் துயரத்தையும் கண்டு, சிறிது தயங்கி நின்று, பின்னர் கிளம்பிச் செல்வதாகப் படித்திருக்கிறாள். அவற்றின் எந்திரங்கள் மீண்டும் இயங்கத் தொடங்கும் முன், சிலநேரங்களில் குடிநீர் அல்லது பிஸ்கோத்துப் புட்டிகள் கப்பல்களிலிருந்து அள்ளி வீசப்பட்டன. கப்பலின் எந்திரம் மீண்டும் இயங்கத் தொடங்குவதைக் கண்ணுறும்போது, அந்தக் கணத்தின் பாழ்நிலைக்கு மாற்றாக அவள் எதைக் குறிப்பிடமுடியும். அந்தப் பாழ்நிலை பெறவேண்டிய விலை என்ன, அதை யார் கொடுப்பார்கள். சில கேள்விகளுக்குக் கேள்விக்குறிகள் தேவைப்படவில்லை.

பயணிகள். பயணிக்க. நிறைவோடு பயணிக்க. விட்டுக் கடந்து செல்ல. தன்னைவிட்டுக் கடந்துசெல்லுமாறு செய்ய. யார்தலையிலாவது சுமத்திக் கழிக்க. துப்பித்தொலைக்க. கழன்றுகொள்ள. ஒருவரின் மதிப்பினைப் பெற. அழைப்பு மணி ஒலிக்கும்போது அவள் தயிர் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறாள்; சட்டையின் கைப்பகுதியால் வாயைத் துடைத்துவிட்டு, அந்த மணி வேலைசெய்கிறதென்பதே தெரியாதெனச் சொல்லிக்கொண்டே, வாசலுக்கு வருகிறாள். தோழர் சாண்ட்லர் பதிலெதுவும் சொல்லவில்லை. தெருவைப் பார்க்குமாறு தலையாலேயே சைகை காட்டுகிறான். அவர்கள் இறங்குகிறார்கள். படியிறங்கும்போது உனது கண்புருவத்தில் தயிர், எனத் தலையைத் திருப்பித் தோளுக்கு மேலாகச் சொல்கிறான். ஓ, நன்றி என்கிறாள், அவள். தெருவிளக்கு ஒன்றின் கீழாக, வரைந்து முடிக்கப்பட்ட நரி ஓவியம் ஒளிர்கிறது. ஒளி உமிழும் நிறமிகள் கொண்ட ஏதோ ஒரு வகைச் சுண்ணக் கட்டியைப் பயன்படுத்தியிருக்கிறான்; பளபளக்கும் நீலப்பச்சை வண்ணத் திண்கூழ் ஒன்றில் நீந்திக்கொண்டிருந்த நரி, எழுகின்ற வாய்ப்புள்ள விளக்கங்கள் எல்லாவற்றிலிருந்தும் தப்பிவிடுகிற ஒரு பார்வையை அதன் முகத்தில் கொண்டிருக்கிறது. அவள் நீலப்பச்சையை வெறித்துப் பார்க்கிறாள். அதில் தெளிவு, ஈரத்தன்மை, குளிர்மை, தனக்குள்ளேயே மூழ்கிப்போகும் தண்ணீரின் ஆழ்ந்த ஒளி அனைத்தும் தெரிகிறது. ஒரு ஏரியையே உருவாக்கிவிட்டீர்கள், எனச் சொல்லிக்கொண்டே அவன் பக்கம் திரும்புகிறாள்; ஆனால், அவனோ, போய்விட்டிருக்கிறான். இப்போது இரவு. கட்டவிழ்த்து, விடுவிக்கப்படுகின்ற போதெல்லாம் எங்கெங்கு போவானோ, அங்கு போய்விட்டான். அவள் சிறிதுநேரம் நிற்கிறாள், நரி நீந்துவதைப் பார்த்துக்கொண்டு, அந்த நாளினைத் திரும்பிப் பார்த்து, அதன் பிம்பங்கள் மிகமிக வலிமையானதாக இருந்தாலும், அதன் ஆன்மா – எப்படி, அதன் வாயில் எப்போதும் அமைதியைத் தக்கவைத்துக்கொள்கிறது, உயிர்ப்புடனிருக்கும்போதே அமைதிக்குள் வாயை மூடிக்கொண்டிருக்கிறதே, அது எப்படி? உயிர்ப்புடனிருப்பதே உள்ளுக்கும் வெளியிலுமான இந்த ஊற்றும் பொழிவும் தான். தேடிக்காணுதல், இழத்தல், இழைத்தல், கொடு எனக் கோருதல், முழுதும் பிடித்தாட்டுதல், தலையை நெருக்கமாக முன்நகர்த்துதல். நீச்சலுக்கு எவ்வளவு வலிமை தேவைப்படுகிறதென்று நினைக்காமலேயே நீந்த முயலுங்கள். நம்முடைய நெஞ்சைப்பிளந்த இந்தச் சிறு ஊழிக்காலத்தைப் போல அல்லாமல் உங்களால் செய்ய முடிவதைச் செய்ய முயலுங்கள். போலச் செய்வது எளிதானது. நெற்றியை ஒரு தென்றல் தழுவுவதாக உணர்கிறாள். இரவுக்காற்று. நரி சளப், சளப்பென அடிக்கும் ஒலி எதுவும் எழாமல், முன்னோக்கி உந்துகிறது. நரி தோற்பதில்லை

க்ளாவிச்சோர்டு – Clavichord – மத்திய கால இசைக்கருவி, கம்பி வாத்தியம்
துடுப்பணிகள் – Flippers – நீச்சலின்போது கை கால்களில் அணிவது.
ஜான் கேஜ் – John Cage புகழ்பெற்ற அமெரிக்கக் கவிஞர்
பர்ட் லங்காஸ்டர் – Burt Lancaster ஆண் அழகுக்குப் பெயர்பெற்ற அமெரிக்க நடிகர்

http://www.newyorker.com/magazine/2016/01/11/1-equals-1?mbid=social_twitter

•••••••••••••

சுவர்க்கத்தின் பாதை (Road to Heaven) இந்தோனேசியன் : ஆபிதா எல் காலிக்கி (Abidah El Khalieqy) ஆங்கிலம் : ஜான் எச். மெக்கிளின் (John H. McGlynn) தமிழில் ச. ஆறுமுகம்

20130213abidah-el-khalieqy

ஆபிதா எல் காலிக்கி, கிழக்கு ஜாவாவில் ஜோம்பங் நகரில் 1965ல் பிறந்தவர். இளமையிலேயே எழுதத் தொடங்கிய இவரது முதல் கவிதைத் தொகுதி 1997 ல் வெளிவந்தது. இந்தோனேசிய மொழியில் இதுவரை ஒன்பது நாவல்களும் இரண்டு சிறுகதைத் தொகுதிகளும் வெளியிட்டுள்ளார். அவரது Perempuan Berkalung Sorban என்ற நாவல் திரைப்படமாக்கப்பட்டு பல விருதுகளை வென்றது. Genijora என்ற நாவல் 2003ல் ஜாகர்த்தா கலைக் கவுன்சில் நடத்திய போட்டியில் சிறந்த நாவலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்தோனேசிய சமூகத்தில் தற்போதும் பலதார மணம், குடும்ப வன்முறை எனப் பலவகையிலும் ஒடுக்கப்படுவதாக, ஆபிதா கருதும் பெண்களின் குரலாகவே, அவரது படைப்புகள் உள்ளன.

*******
என் அம்மா இறந்தபோது, அவளது முகம் மாறியது. நான் தான் அதை முதலில் கவனித்தேன். உறவினர்களும் நண்பர்களும் மரியாதை செலுத்துவதற்காக வந்தபோது, அவர்கள் கண்களில் நான் சந்தேகத்தைக் கண்டேன்; இறந்தது, என் அம்மாதானென யாராலும் நம்பமுடியவில்லை. மூன்று ஆண்டுகளாக அம்மாவைப் பார்க்காத என் உடன்பிறந்த சகோதரன் கூட, அவள் பிணத்தைப் பார்த்ததும், இறந்தது, அம்மா அல்ல, அவளது கடைசித் தங்கையான எங்கள் சித்தி என்று அறிவித்தான். அம்மாவுக்குச் சிகிச்சையளித்துக் கவனித்துவந்த மருத்துவர்களும் செவிலியர்களும் கூட ஆச்சரியப்பட்டனர்; அவரவர் கண்களை அவர்களாலேயே நம்பமுடியவில்லை.

நான், அந்த அறையின் தொலைவான ஒரு மூலையில் ஒதுங்கி நின்று, இறந்த அம்மாவைப் பார்க்கவந்தவர்களின் முகங்களைக் கவனித்துப் பார்த்தேன். அவர்களில் யார், யார் அம்மாவை உண்மையில் நேசித்தார்கள், யார், யார் நேசிக்கவில்லையென்பதை, உடனடியான அவர்களது முகக்குறிப்பு, எனக்கு எளிதில் காட்டிக்கொடுத்தது. நிச்சயமாகச் சொல்வேன், அம்மாவைப் பார்த்த உடனேயே தனது உதடுகளைக் கடித்துக்கொண்ட ஒரே ஆள் – வேறுயாருமில்லை, என் அப்பாவேதான். நான் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டேன்.

தொலைபேசி ஒன்று எனக்குள் கிணுகிணுத்தது. ‘’அவர் பொறாமைப்படுகிறார், கடுமையான அளவுக்கு, உச்ச கட்டத்திலான பொறாமை.’’ என்று தொடர்பு துண்டித்துக்கொண்ட ஒரு குரல் சொன்னது. முகத்தில் ஒரு தேவதையின் புன்னகையைத் தாங்கியிருந்த அம்மா மிகமிக இளமையாக, இருபது ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துகொண்ட நாளில் போல, அவளது இளமைத் தோற்றத்திற்குத் திரும்பிவிட்டதாகத் தோன்றினாள்.

‘’இதுதான் என் உண்மையான முகம்,’’ என மென்மையாக இரகசியம் போல் என் காதில் பேசிய அம்மா, ‘’மணநாள் இரவில் புதுமணப்பெண் போல்.’’ என்றாள். அவள் உறுதியாகத் தீர்மானத்தோடு சொன்னாள். ‘’அமைதியான மசூதியைப் பார்த்திருந்த எங்கள் வீட்டில், ஒரு மலைப்பூட்டும் விருந்துடன் தொடங்கி, முடிவில் உடல் முழுவதும் ரணமும் வேதனைமிக்க நினைவுகளுமாகிப்போன ஒரு இரவு.’’

வலியும் வேதனையும் அவளது வாழ்க்கையில் நிரந்தரமாகிப்போனதை நினைவுபடுத்திக்கொண்டு, அவள், எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் தொடர்ந்தாள் : ‘’என் முகத்திலிருக்கும் இந்தத் தோற்றம் தான், அவருக்குள் மாளாத பெரும் பொறாமையைக் கிளப்பி, என்னைத் திட்டவும், உதைக்கவும் அந்தத் திருமண இரவில் வன்முறையாக, வலிந்து என்னை ஆக்கிரமித்துக் கொள்ளவும் செய்தது – இதற்கெல்லாம் காரணம், என் வீட்டின் முன்னாலிருந்த மசூதியில் நிகழ்ந்த நடு இரவுத் தொழுகையின் போது நானும் தஹாஜுத் பிரார்த்தனை செய்தேன் என்பது மட்டுமே தான்.’’

என் உணர்வுகள் கட்டுப்பாடின்றி மேலெழும்போதெல்லாம் நான் உணர்கின்ற, மேடை நடுக்கம் போன்ற ஒன்றினை உணர்ந்து, என் உடல் தானாகவே நடுங்கியதைக் கண்டேன். உடல் முழுதும் திடீரென வெப்பம் அதிகமாகி, இரத்த நாளங்களில் ஒரு வேதனையின் ஓட்டத்தை, மார்புக்கூட்டுக்குள் தொடர்ந்த ஒரு உலக்கை இடிப்பினைத் தாங்க முடியாமல் அம்மாவுக்கான என் முதல் கண்ணீரைச் சிந்தினேன்.

குடும்பத்தின் ஐந்து குழந்தைகளில், நான் மட்டுமே பெண். அதனால்தானோ, என்னவோ, நாங்கள் ஐந்து பேருமே, பெரும்பணக்காரரான ஹாஜி கமீலின் நான்காவது மனைவியின் ஒரே கருப்பையிலிருந்து உதித்திருந்தாலும், அம்மாவுடன் ஒரு ஒத்த உணர்வினை, நான் மட்டுமே பகிர்ந்துகொண்டேன்.

ஊர்மக்கள் என் அப்பாவைப் பெரும் சொத்துக்காரர் என்றுதான் அழைத்தார்கள். நாங்கள், அவரது குழந்தைகள், அவரது செல்வத்தில் மூழ்கிக் குளித்தோம். ஒரு மனிதனை, அவன் மனைவி மற்றும் குழந்தைகளிலிருந்து வேறுபடுத்திப் பார்க்காத சமூக உணர்வில் மூழ்கடிக்கப்பட்டிருந்தோம். நாங்கள் எல்லோருமே அதிகாரம் பொருந்திய, வலிமையும் ஆண்மையழகும் மிக்கவராகப் புகழ்பெற்ற எங்கள் அப்பாவின் உடைமைகளின் ஒரு பகுதியாகவே எல்லோராலும் கருதப்பட்டோம்.

நான் அப்பாவின் அருகில் சென்றேன். ‘’ வித்தியாசமாக, எதையாவது பார்த்தீர்களா, அப்பா? புருவத்தை ஏன் சுழிக்கிறீர்கள்?’’

‘’ஆமாம், பார்த்தேன், உன் அம்மாவின் உடம்பில் ஏதோ ஒரு வித்தியாசத்தைப் பார்த்தேன். அவளது சுகக்கேடுதான் உடல் தோற்றத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கவேண்டும்.’’

அம்மாவுக்கு மூளையில் இரத்தக் கசிவு என்று மருத்துவர் சொன்னார். உறுதியாக அதுதானா, அப்பா? நிறையப் பேர் இரத்தக்கசிவினால் சாகிறார்கள், ஆனால், அதனாலேயே நோயாளியின் தோற்றத் தன்மைகள் மாறுவதாக நான் கேள்விப்பட்டதேயில்லை.’’

‘’யாருக்குத் தெரியும்? உன் அம்மா வித்தியாசமானவள் … சாவில் கூட இப்படியொரு சிரிப்பு, சிரிக்கிறாள்.’’

‘’எனக்குப் புரியவில்லை. என்னைப் பொறுத்தவரையில், அம்மாவின் மரணம் பொருத்தமானதாக, துயரங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டதாகத் தெரிகிறது. மரணம் அவளுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவந்திருக்கிறதென்றுகூடச் சொல்லலாம். அவளது சிரிப்பைப் பாருங்கள். இப்படி ஒரு அழகான சிரிப்பினை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? திரைப்படங்களில் கூடப் பார்த்ததில்லை.’’

‘’என்ன பேசுகிறாய்? அதுவுமில்லால் உனக்கு என்னதான் தெரியும்? மூக்கு வடிக்கிற குழந்தை, நீ!’’

‘’நிச்சயமாகச் சொல்வேன், அம்மாவுக்கு இது ஒரு நல்ல சாவு – எல்லோரும் சொல்வார்களே ஹூஸ்னுல் காத்திமா, அது.’’

‘’உஷ்! போய் ஏதாவது வேலையைப் பாரு; சித்திக்கு உதவி செய்! போ, போ!’’

‘’நான் அம்மா கூடத்தான் இருக்கப் போகிறேன். அவளோடு கூட இருக்கப்போகிற கடைசி வாய்ப்பு, இது. அவளுக்காக, நான் பிரார்த்தனை செய்ய வேண்டும், அப்பா.’’

நோயர் ஊர்தி வந்த போது, எல்லோருமே இன்னும் பரபரப்பானோம்; ஆனால், நான், அம்மாவிடமிருந்து யாரும், என்னைப் பிரிக்க, என் அப்பாவாக இருந்தாலும் கூட, அனுமதிக்கப்போவதில்லை.

‘’நீ ஒரு பெண்; உனக்குப் போதிய பலம் கிடையாது; ஆம்புலன்சில் நான் கூடப் போகிறேன்.’’ என்றார், என் அண்ணன்.

‘’ நல்ல திடமாகத்தான் இருக்கிறேன்,’’ நான் வலியுறுத்தினேன். ‘’அம்மா மருத்துவ மனையிலிருந்த காலமெல்லாம், நான் தான் அவள் பக்கத்திலேயே காத்துக் கிடந்தேன். நீங்கள் ஒன்றும் கவலைப்படாதீர்கள். அம்மாவின் நெருக்கத்திலிருப்பதுதான் எனக்கு நிம்மதி.’’

‘’உன் ஒப்பாரியையெல்லாம் கேட்டுக்கொண்டிருக்கமுடியாது.’’

அழத்தேவையில்லாத காரணங்களுக்கு, ஆண்களும் கூடத்தான் அழுகிறார்கள். அம்மாவின் இறப்புக்காக நான் அழ மாட்டேன். அவள் அவரின் மாளிகைக்குப் போய்ச்சேரும்வரையில் அவளுடனேயே இருந்து, அவளைப்பார்த்துச் சிரித்துக்கொண்டேயிருப்பேன்.

‘’யாருடைய மாளிகை?’’ வாயை மூடிக்கொண்டிருந்த என் அண்ணன் கேட்டார்.

‘’நல்லது, நிச்சயமாக, அது, நீங்கள் நினைக்கும் இடமல்ல!’’

‘’நீயும் உன் முட்டாள்தனமும்!’’ என முணுமுணுத்தவாறே அகன்று சென்றார்.

‘’என் முட்டாள்தனம் எல்லாவற்றையும் ஒன்றுசேர்த்துத் திரட்டினாலும், அதைவிடவும் முட்டாள்தனமானவன் நீ’’ சிரிப்பினை அடக்கிக்கொண்டு, எனக்குள்ளாகவே சொல்லிக்கொண்டேன்.

முடிவில், நானும் எனது சித்தியும் தான், நோயர் ஊர்தியில் அம்மாவுடன் சென்றோம். அப்போது இரவாக இருந்ததால், போக்குவரத்து நெரிசல் ஏதுமின்றி சாலை எளிதாக, வசதியாக இருந்தது; யோக்யகார்ட்டாவிலிருந்து ஜோம்பங் சென்று சேர ஐந்து மணி நேரமே ஆனது. பயணத்தின் போது சித்தி, இருக்கையிலேயே தூங்கிவிட்டாள். தூக்கத்திற்கும் விழிப்புக்கும் இடையில், நான் பிரார்த்தனை செய்தேன்.

ஒரு கட்டத்தில், என் கைக்கடிகாரத்தைப் பார்த்தபோது, நடு இரவு பன்னிரண்டு தாண்டி அதிகாலை முப்பது நிமிடமாகியிருந்தது.

‘’ஆமாம்! இருபத்தோரு ஆண்டுகளுக்கு முன் இதே போன்ற ஒரு அதிகாலை பன்னிரண்டு முப்பதுக்குத்(00.30)தான், நான் வீட்டிலிருந்தும் வெளியே வந்தேன்,’’ என்றாள், அம்மா. ‘’அன்று இரவில் மசூதியின் வாசலை மிதிக்கும் தீராத பேராவலினை உணர்ந்தேன். என் இதயம் முழுவதுமாக ரோஜாக்கள் நிறைந்து, என் முகம் எதுவும் அறியாத்தன்மையில் ஒளிவீசியது. அவர் மிஹ்ரபில், நான் மெக்காவின் திசை நோக்கித் தொழுகின்ற இடத்தில் எனக்காகக் காத்திருப்பது போல, விரைந்து செல்ல முயற்சித்தேன். என்னுடைய தாமதத்தை நினைத்து, என்னையே நொந்துகொண்டு, நான் மசூதியின் மாடிப்படிகளில் ஏறினேன். தொழுகையின் போது, நான் மீண்டும் மீண்டுமாகத் தரையில் தலையால் அடிபணிந்து வணங்கினேன். ஒன்றின் பின் ஒன்றாக, ஒவ்வொரு முறையும் என் நெற்றி அவரது பார்வையில் தரையைத் தொட்டு வணங்கியது. அப்படியாக எவ்வளவு நேரம் என்னை அர்ப்பணித்திருந்தேனென்று என்னால் சொல்ல இயலாது, ஆனால், அவரோடு செலவழிக்கின்ற நேரத்தை ஒருவர் எத்தனை மணி நேரமெனக் கணக்கிட்டு எண்ணுவதில்லை. ஆனால், நான், அதன் பின்னர், எனது புதிய வீட்டிற்குத் திரும்பி, முன்வாசலில் என் காலை வைத்தேனோ இல்லையோ, அடிவயிற்றில் விழுந்த உதையில் ஒரு நிமிடம் என் மூச்சே நின்றுபோயிற்று – அதுவே முதல் அடி, அதைத் தொடர்ந்து, தீவிரமாக வளர்ந்த வெறுப்பில் கனத்த எத்தனையோ அடிகள்.’’

என் முகம் தொங்கிப்போயிற்று. அம்மாவின் தலைவிதிப் புத்தகத்திலுள்ள அனைத்துப் புனிதங்களையும் தெரிந்துகொண்டதாக நான் நினைத்தேன், ஆனால், என் கண்கள் பனித்து என் அம்மாவின் இரகசியத் தொகுப்புகளின் முழுமை அனைத்துக்குள்ளும் என் பார்வையைச் செலுத்தும் நிலையில் நான் இல்லையென்பதும் தெளிவாகவே புரிந்தது. அம்மா, மிக நெருக்கமானவள், ஆனால், அதே நேரத்தில் மிகத் தொலைவானவளுமாக…….. அவளுடைய இரகசியக் காயத்தை, அதன் வலியை, எல்லோருக்கும் நன்கு தெரிந்த அவளது பொறுமையாலும், எக்கணமும் பொழிகிற வற்றாத அன்பாலும், எவ்வளவு சுத்தமாக மறைத்திருக்கிறாள்!

‘’ உதைப்பதற்கு வசதியாகக் காலை மாற்றிக்கொண்ட உன் அப்பா, ‘’ஏய், நீ மட்டும்தான் உண்மையான முஸ்லிமென்று நினைக்கிறாயா! நீ ஒருத்திதான் விசுவாசமுள்ள ஒரே ஆளென்று நினைக்கிறாயா! நல்லது, கேட்டுக்கொள்! இன்றையிலிருந்து, நான் உனது கணவன். வேறு எவரையும் விட, எனக்குத்தான் அதிக உரிமை இருக்கிறது. உனக்குச் சொல்கிறேன், நீ என்னுடைய உத்திரவுகளுக்குத் தான் கீழ்ப்படியவேண்டும், அதற்கும் மேலாக, வேறு எவருக்குமல்ல. உன்னுடைய விசுவாசம், நிபந்தனையற்றதாக இருக்கவேண்டும். அதுவும் எனக்கு மட்டுமேதான். புரிந்ததா?’’

‘’நான் மசூதிக்குப் புறப்படும்போது, சீட்டு விளையாடிக்கொண்டிருந்தீர்கள்….’’

‘’வாயை மூடு! ஒரு பொம்பளை, உன்னோடு நான் பேசத் தயாரில்லை!’’

‘’அதனால் நானும் வாயை மூடிக்கொண்டேன்,’’ அம்மா மிக எளிதாகச் சொன்னாள். ‘’அன்றிலிருந்து இருபது வருடங்களுக்கு என் வாயை மூடிக்கொண்டேன். பேசுகிற உரிமை உன் அப்பாவுக்கு மட்டும் தான் இருந்தது. மரணக் கூர்முனைக்கத்தியின் கீழான அச்சுறுத்தலில் உறைந்து, இறுக்கமாகி, மவுனமாகிப்போன ஒரு உலகத்தில், வாழ்க்கையின் கனவுகள் கண்ணெதிரே கடந்து செல்வதை, வார்த்தைகளின்றிப் பார்த்துக் கொண்டிருக்கும் ஊமையாக, நான் இருந்தேன். நான், உன் அப்பாவின் பலிப்பொருள். உயிர்த்திருக்கும் ஒவ்வொரு கணத்திற்கும், ஒவ்வொரு நொடிக்குமான பொருள், ஒரு முன்மாதிரிப் பலியாக எப்படி இருக்கவேண்டுமென்பதான அவரது வார்த்தைகளைக் கேட்டு, மனப்பாடம் செய்வது – இணக்கமான ஒரு சிரித்த முகத்துடன் பலிபீடத்துக்குச் செல்வதுதான். இப்போது, நான் அவருடைய கனவை நிறைவேற்றிவிட்டேன். நான், உன் அப்பாவுடைய தியாகப் பலி; நான் அவருக்காகவே இறந்ததாக எல்லோரும் நினைக்கிறார்கள்.’’

‘’நான், திடீரென்று இப்படிச் சிரிப்பதைப் பார்த்த பிறகுதான், இதுவும் இருபது ஆண்டுகளுக்கு முன்பு, மசூதியிலிருந்து திரும்பிவரும்போது – அவர் என்னை அடிக்கத் தொடங்குவதற்கு முன், என் முகத்திலிருந்ததும் ஒன்றுதானென உணர்ந்திருக்கிறார். அடுத்த இருபதாண்டுகளிலும், அவர் அந்தச் சிரிப்பை, நான் இப்போது என் இதழ்களில் அணிந்திருக்கிறேனே, இதே சிரிப்பினைத்தான் தேடினார்; ஒவ்வொரு இரவிலும், பகலிலும், அவர் அதைத் தேடித்தேடிப் பெரும் ஆசைகொண்டு, அதையே கனவாக்கிக்கொண்டார். ஆனால், அவர் கண்டதெல்லாம் வெறும் கானல்தான்; என் இதழ்கள் தாம் உறைந்த இரத்தத்தால் – அவரது முரட்டு விரல்கள் என் வாயைப்பற்றிக் கீறியதில் கசிந்த இரத்தம் – மூடிக்கிடந்தனவே.’’

அம்மா, மீண்டும் பேசத் தொடங்கும் முன், ஆழ்ந்து ஒரு பெருமூச்சினை உள்ளிழுத்து வெளியிட்டார். ‘’இப்போது நேரம் என்ன, தெரியுமா? ஆம். இப்போது காலை பன்னிரண்டு முப்பது. புதுமணப் பெண்ணாக அதைத் தொடர்ந்த முதல் மாதம் முழுவதும், எந்த அளவுக்கு முயன்றாலும், அடக்கமுடியாத, அவரது முன்னிலையில் அவரை அடிபணிந்து, வணங்கித் தொழுகை செய்கின்ற அந்தத் தணியாத பேராவலை உணர்ந்தேன். என்னுடைய ஆவல், எல்லைகள் அனைத்தையும் கடந்தது; என் பிரார்த்தனைகளுக்கும், என்னுடைய அடிபணிந்து, வணங்கல்களுக்குமான அவரது புன்னகையே அந்தத் தீராத பேராவலைப் பெருகச்செய்தது. எங்கள் புதுமண அறையின் ஒரு மூலையிலேயே, நான் மீண்டும் மீண்டுமாகத் தரையைத் தலையால் தொட்டு வணங்கி, நம்மைப் படைத்தவருடன் ஒன்றும் தீவிர எண்ணத்தின் இராகத்தில் என் மாலையின் மணிகளை உருட்டினேன்.

‘’ஒரு வேளை, நான், என்னை அறியாமலேயே சத்தமாகப் பெருமூச்சிட்டிருக்கலாம், ஆனால், அந்தப் பெருமூச்சு உன் அப்பாவின் செவிகளைத் துளைத்ததோடு, அவரது நரம்புகள், இதயம், மனம்……. எல்லாவற்றுக்குள்ளும் கொழுந்து விட்டெரிந்த பொறாமையின் தீநாக்குகளால் என் செவிகள் கருகிப்போயின. அப்புறம், அந்த அறையில் அத்தனை குரூரமாக, உறுதியாக, கனமாகத் தொங்கிக்கொண்டிருந்த முதலைத் தோல் கச்சினை நான் எப்படி மறக்க முடியும்! அவர் கச்சினை எடுத்து, உயர்த்தி என் முதுகில் பத்துப் பத்தாக இல்லை, நூற்றுக்கணக்கான முறைகள் விளாசினார். என் அமைதி அவருக்குள் இன்னும் முரட்டுத்தனமாக, பொறாமையின் தீ நாக்குகளை எழுப்பின. நான் மயங்கி விழுந்தேன்; காலைத் தொழுகைக்கான அழைப்பு என் காதுகளில் விழும்வரையில் என் நினைவு திரும்பவேயில்லை.’’

சிறிது நேரம் அம்மா எதுவுமே பேசவில்லை. அவளது கண்கள் தொலைதூரத்து வானத்தில் பதிந்திருக்க, சுவர்க்கத்தின் தேவதைக்கே பொருத்தமான அந்தச் சிரிப்பு அவள் இதழ்களில் மலர்ந்து, முகம் முழுவதும் பரந்தது.

‘’எனக்குத் தெரியும், அப்புறம் என்ன நடந்ததெனத் தெரிந்துகொள்ள விரும்புவாய்,’’ என்ற அம்மா, ‘’ எனக்குப் பைத்தியம் என்று உண்மையிலேயே உன் அப்பா நினைத்திருக்கலாம். ஏன் அப்படி? முடிவில்லாத வலியும் வேதனையும் எனக்குள் எழுந்தாலும், புதுமையான விஷயம் என்னவென்றால், அவர் மீதான என் தணியாப் பேராவல் இன்னும் தீவிரமானதுதான். அது என்னால், பொறுத்துக்கொள்ளமுடியாத அளவுக்குக் கஷ்டமாக இருந்தது. ஒவ்வொரு மூச்சுக்கும், ஒவ்வொரு நாடித் துடிப்புக்கும், அவரது முகம் என்னை நெருங்கிவந்துகொண்டேயிருந்தது.

அடிக்கடி நினைவுகள் தடுமாறி நான், எளிதில் குழப்பத்துக்காளானேன். சமைத்துக்கொண்டிருக்கும் போது, நான் பொரிக்கும் அத்தனை மீனும் வாணலியில் கரியாகப் போகிற அளவுக்குக் குனிந்து பார்த்துக் கொண்டிருப்பேன். அல்லது, இரவில் ஏதோ கதவு தட்டிய சத்தம் கேட்டது போல, வீட்டின் முன்கதவைத் திறந்து பார்ப்பேன்; ஆனால் அங்கு, எதுவுமே இருக்காது. என் நடத்தையும் செயல்பாடுகளும், நான் சபிக்கப்பட்டவளென உன் அப்பாவை நம்பச்செய்துவிட்டன. ஆவிகள் தாம் என்னைப் பீடித்திருப்பதாக அவர் நினைத்தார்.’’

அம்மாவின் கையைத் தடவித் தட்டிக்கொடுக்கவேண்டுமென நான் நினைத்தேன்; ஆனால், தூக்கக்கலக்கம் என்னை வீழ்த்திவிட்டது.

‘’இப்படியாக இருக்க, அன்றைக்கு உன் அப்பா ஏதோ வியாபார விஷயம் அல்லது வேறு ஏதோ ஒன்றுக்காக வீட்டைவிட்டுக் கிளம்பினார். அப்போது காலை ஒன்பது மணி இருக்கும். அதனால், தொழுகைக்கான சுத்தப்படுத்தல் சடங்குகள் அனைத்தையும் முடித்துவிட்டு, அவருடன் ஒன்றுவதான என் ஆவலை நிறைவேற்றிக்கொண்டிருந்தேன். என் தொழுகை மிகத் தீவிர ஈடுபாடாகி, நான் ஆழ்ந்த பணிவுடன் அடிபணிந்து, தலைவணங்கியிருந்ததில், உன் அப்பாவின் மகிழுந்து வந்த சப்தம் எனக்குக் கேட்கவில்லை. நான் உண்மையிலேயே அவரைச் சந்திக்கச் செல்வதற்கு முந்தைய எனது, கடைசித் தலைவணங்கல் அதுவாகவே அமைந்துவிட்டது. என் தலையில் விழுந்த அடியில் என்னுடைய திடமற்ற மண்டையோடு பளபளக்கும் கடினப் பீங்கான் தரை ஓடுகளில் மிகுந்த வேகமாக மோதியது; அது திடீரென ஒரு மின்னல் வெடித்தது போல அவ்வளவு கடினமாக இருந்தது; வெறிகொண்ட பார்வையைப் பிரதிபலித்த கண்களுடன் என் தலையைப் பின்னுக்கு இழுத்து என் குரல்வளையைப் பிடித்து இறுக்கிய உன் அப்பாவின் கைகள், நான் மூச்சற்றுத் தரையில் விழும்வரையில் விடவேயில்லை.’’

‘’அப்புறம் என்ன நடந்தது, அம்மா?’’

‘’திடீரென்று, எல்லாமே இருட்டாகிவிட்டது. எங்கும் ஒரே மைக்கறுப்பு! உலகம் முழுவதுமே அமைதியாகிவிட்டது. அதன் பின்னர், வெகுதூரத்தில் கண்ணைப்பறிக்கும் ஒரு ஒளி, மிகுந்த வெளிச்சத்துடன் தோன்றி, நிலைத்த ஒளிப்பாதை ஒன்றை வீசியது. அது – குழந்தையின் கனவில் தோன்றுவதைப் போல – என்னை வரவேற்க வந்துகொண்டிருந்த, ஏழு நிலவுகளின் பிரகாசத்தைக் கொண்ட ஒரு ஒளித்தேர். மந்திரவாதியின் அற்புதம் போன்ற, ஒரு கோடி கவிஞர்களால் கூட விவரிக்கமுடியாத பரவசத்தில் நான் புன்னகைத்தேன். அவரது அரியணைக்கு என்னை இட்டுச் சென்ற தேர் பயணித்த தூரம் அநேகமாக மிகமிகக் குறைந்ததாகத்தான் – எனது திருமண அறையிலிருந்து, இருபது ஆண்டுகளுக்கு முன் நம் வீட்டு முன்புள்ள மசூதிக்குக் கடந்து சென்றேனே அதைவிட அதிக தூரமில்லாமல்தான் – தோன்றியது. அங்குதான், நான் பரிபூரண அன்பினைக் கண்டேன்; அதுவே, என் இதழ்களின் புன்னகையிலும் தெரிகிறது.

‘’உன் அப்பா, அவர் மீது பொறாமை கொள்ளலாமா?’’ அம்மா நயமாகக் கேட்டாள்.

நூறு தேவதைகள் ஒன்றுசேர்ந்து இழுக்க, நோயர் ஊர்தி பறந்துகொண்டேயிருந்தது, நீர் கோர்த்த வானத்தின் கீழான மேகமூட்டத்தில், நான் என் கண்ணீரைக் கழுவ முயற்சித்தேன். பின்னர், அன்பின் ரோஜாக்கள் என் இதயத்தில் பெருமிதத்துடன் இதழ்விரித்தன. என் அம்மா, அன்பின் பெருங்கடல், சுவர்க்கத்தின் மிக அருகில் – உங்கள் ஆன்மாவின் காலடிக்குச் சற்றே கீழாகக் காணப்படுகிறாள். நல்வணக்கம், சென்று வா, அம்மா. அன்பான கடவுளே! உங்கள் நேசக்கரத்தால் அவளை ஏற்றுக்கொள்ளுங்கள். ஆமென்.

நன்றி : http://www.wordswithoutborders.org/article/road-to-heaven#ixzz3ujMye0O8

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு – பிற நாடுகளைப் போல் அல்லாமல், இந்தோனேசியா மற்றும் மலேயாவில் பெண்களும் தொழுகைக்காக, மசூதிக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இருபது ஆண்டுகளாக முதலைத் தோல் கச்சினால் அடிவாங்கி, கடைசியில் கணவனின் கையாலேயே மரணமடையும் குடும்ப வன்முறையினைப் படித்து முடித்த நேரத்தில், முகமது மீரானின் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்கும் முஸ்தபாக்கண்ணு, மனைவி மரியத்தை அடிப்பதற்காகவே, உத்தரத்தில் எப்போதும் வைத்திருந்த அந்தப் பிரம்பு நினைவுக்கு வந்து தொலைந்தது. நல்லவேளையாக, வறுமையிலும் ஒருவருக்கொருவர் ஆதரவாக வாழ்ந்த புதுமைப்பித்தனின் செல்லம்மாளும் பிரமநாயகம் பிள்ளையும், அவர்களைத் தொடர்ந்து ஆலீஸ் மன்றோவின் கிராண்ட்டும் (மலை மேல் வந்தது, கரடி) ஆறுதலுக்கு வந்தனர்

ச.ஆறுமுகம். 9442944347 arumughompillai@gmail.com

ரியோ டி ஜெனிராவுக்கு – ( போர்த்துகீசியம் ) : கான்சலோ எம். டவாரெஸ் Gonçalo M. Tavares ஆங்கிலம் : ஃபிரான்சிஸ்கோ வில்ஹெனா Francisco Vilhena – தமிழில் ச.ஆறுமுகம்

GoncaloMTavares2905

கான்சலோ டவாரெஸ் 1970ல் பிறந்தவர். 2001லிருந்து போர்த்துகீசிய மொழியில் சிறுகதைத் தொகுதிகள் மற்றும் பல நாவல்களை வெளியிட்டு வருகிறார். இலக்கிய மேதைகள் பலரும் புகழும் இவரது படைப்புகளைப் படித்துவிட்டு நோபல் விருதாளரான ஜோஸ் சரமாகோ பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

‘’போர்த்துகீசிய இலக்கிய வானில் வெடித்துக் கிளம்பியுள்ள கான்சலோ எம். டவாரெஸ் உண்மையான அசல் கற்பனைத் திறனோடு, மரபார்ந்த கற்பனையின் எல்லைகள் அனைத்தையும் உடைத்தெறிந்துவிட்டார். இத் திறன், அவருக்கே சொந்தமான மொழியுடன், துணிவார்ந்த கண்டறிதல்களுமாக இணைந்து பேச்சுவழக்கின் திறமையாகி – இன்று எழுதிக்கொண்டிருக்கும் இளம் போர்த்துகீசிய நாவலாசிரியர்கள் மீது எந்த அவதூறும் சொல்லாமல் – கான்சலோ எம். டவாரெஸுக்கு முன்னும், டவாரெஸுக்குப் பின்னும் எனக்குறிப்பிடப்படுவது மிகைப்படுத்துவதாகாது. அதற்கு முன்பாகவே நிகழ்ந்தாலும் நிகழாவிட்டாலும், இன்னும் முப்பதாண்டுகளுக்குள், அவர் நோபல் விருதினை வெல்வார் என நான் கணிக்கிறேன். என்னுடைய வாக்கு பலிக்கும் என்பதிலும் நான் நிச்சயமாக இருக்கிறேன். என் ஒரே வருத்தம், அந்த நேரத்தில் உடனிருந்து அவரைப் பாராட்டி உச்சி முகர்வதற்கு நான் இருக்க மாட்டேனேயென்பதுதான்.’’

தற்போது தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கும் படைப்பு போர்த்துக்கீசிய மொழியில் பப்ளிகோ என்ற பெயரில் வெளியாகிப் பின்னர் ஆங்கிலத்தில் அதன் மொழியாக்கம் To Rio De Janeira என்ற பெயரில் கிரந்தாவில் வெளியானது.

*********

என் தாய் மிகச்சரியாகச் சமைத்தாள்;

சோறு, சிவப்புக் காராமணி, உருளைக்கிழங்கு பொரியல்

ஆனால், அவள் பாடினாள்

அட்லியா ப்ராடோ
1

இரண்டு நபர்களுக்கிடையிலான சராசரி தூரம் அளக்கப்படுகிறது. அளவுநாடாக்கள் துளைத்துச் செல்பவை அல்ல, இருப்பினும் கண்கள் அளக்கின்றன, மதிப்பிடுகின்றன, அது அதிர்ச்சியடையச்செய்கிறது, ஆவலைத் தூண்டுகிறது. கண்கள் மட்டுமே உணர்வினை அளக்கும் கருவி, அது நிச்சயம் என்பது மட்டுமல்ல, மிகத் துல்லியமான ஒன்றாகவும் இருக்கிறது.

மற்றும் அது அங்கே மட்டும்தான் அப்படியிருக்கிறது : ரியோ டி ஜெனிராவில் மனிதர்களுக்கிடையிலான தூரம் குறைவானதாக இருக்கிறது, அதுவன்றியும் அது, மகத்தான விளைவுகளை உள்ளடக்கியதாக இருக்கிறது.

நான் ரியோ டி ஜெனிராவுக்குள் நடந்து செல்லும்போது, நகரும் மனிதத் திடல்களைக் காணுகிறேன். தோலின் நிறம் உண்மையிலேயே இல்லாமற்போகும் ஒரே நகரம் இதுதான், பிரேசிலிலும் கூட. மற்ற நகரங்களில் வெள்ளை மனிதன் ஒருவனும் கறுப்பு மனிதன் ஒருவனும் அருகருகாக நடக்கும்போது, அவர்கள் உறுதியான, மிக உயர்ந்த தோழமையிலிருந்தாலும் கூட, நான் கறுப்பு மனிதனையும் வெள்ளை மனிதனையும்தான் காண்கிறேன். ரியோவில் அப்படியில்லை. ரியோவில் மனிதர்களின் திட்டுகள் உள்ளன. இருவர் திட்டுக்குப் பிறகு, நால்வர் திடல், ஆறுபேர் கொண்ட மற்றொன்று, பெரும் முயற்சிக்குப் பிறகே, என்னால் நிறங்களை வேறுபடுத்திக் காண முடிகிறது. ( ஒரு தொழில்சாராக் கலை விமரிசகனைப் போல) அந்தத் திடல்களிலிருந்து ஒரு கறுப்பு மனிதர், ஒரு கலப்பின மனிதர் மற்றும் ஒரு வெள்ளை மனிதர் (எடுத்துக் காட்டுக்காக) வருகின்றனர் – அதுவும் பெரும் முயற்சிக்குப் பிறகு, பெரும்பான்மைச் செயற்கையாக நாம் அதனை உணர்கிறோம்.

அப்போது, இரண்டு நபர்களுக்கிடையிலான சராசரித் தூரம் : உலகிலேயே மிகக் குறுகியதாகிறது.

2

ரியோ டி ஜெனிராவில் மனிதர்கள் அருகருகாக நடப்பதில்லை, அவர்கள் தனிநபர் அதிகாரங்கள் குறித்தான புரிதல் மீது விடாமல் கேள்விக்கணைகள் தொடுக்கும் தடைகளற்று நகரும் பெருந்திரள் இயக்கத்தில் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து நடக்கிறார்கள். கேரியோக்கா1 ஒருவரின் பாதமும் தலையும் ஒரே அச்சில் எப்போதும் நிற்பதில்லை. ரியோவிலுள்ள உடல்கள் சாய்ந்து நடக்கும் உயிரினங்களுடையவை, தலை ஒருபோதுமே பாதங்களின் மேலாக அமைவதில்லை – எப்போதுமே சற்று, அல்லது அதிகமாக, அல்லது மிக அதிகமாக இடது அல்லது வலது பக்கமாகச் சாய்பவை. தலை முதல் பாதம் வரையிலான நேர்கோடுகள் அங்கு இல்லை; வளைகோடுகள் மட்டுமே உள்ளன. அதுவும் மகிழ்ச்சியில் திளைப்பனவாக உள்ளன.

(ஒரு கேரியாக்கோவின் உடல் நேராக நிமிர்ந்து நிற்பதில்லை, படுத்திருக்கும்போதுங்கூட; எல்லாமே தற்காலிகமாகச் சாய்வதற்கு வளைந்துகொடுப்பதற்கு, ஆர்வத்தோடு முந்துவதாக உள்ளன.)

3

கேரியோக்கோ யாருடனும் நான் போர்க்கப்பல் விளையாடியதில்லை. ஆனால், நிச்சயமாக இங்கு, அந்த விளையாட்டுக்கு விதிகள் வேறாக இருக்கும். கப்பல்களை ஒரேநிலையில் அப்படியே நிலையாக நிறுத்திவைப்பதைப்பற்றி நினைக்கவே முடியாது: a4.d5,a5,d8. அவை ஒவ்வொன்றும் அவற்றின் சொந்த வழியிலிருந்து இன்னொன்றின் வழிக்குள் (குறைந்தபட்சம் மாலைநேரங்களிலாவது) நுழைந்துவிடும். தலை ஓரிடமும், பாதம் வேறிடமுமாக.

ரியோவில், ஒருவரை அசையாமல் நிமிர்ந்து அமருமாறு கேட்டுக்கொள்வது – அது குழந்தையாக இருந்தாலும் சரி, நன்கு வளர்ந்துவிட்ட ஒரு ஆண் அல்லது பெண்ணாக இருந்தாலும் சரி – அது சொற்களாலானதும் உடலளவிலானதுமான வன்முறையின் வடிவமேதான். அறிவான கேரியாக்கோ பெற்றோர் எவரும் அவர்களுடைய குழந்தைகளை அசையாமல் அமைதியாக இருக்குமாறு கற்றுக்கொடுப்பதில்லை; மாறாக அவர்கள் இயங்குதலின் சில வேகங்கள் மற்றும் தீவிரங்களைச் சுட்டிக் காட்டுகிறார்கள். இடதுபுறமாகவா, வலதுபுறமாகவா, மேலாகவா அல்லது கீழாகவா – என்பதுதான் கேள்வி.

எந்த அமைதியான மனிதனும் சொர்க்கத்தின் அரசுக்குள் (சொர்க்கத்தின் அரசு ரியோ டி ஜெனிரா மாதிரியான ஏதாவது ஒன்றாக இருந்தால்) நுழையமாட்டான்.

4

அது பூமியிலிருந்து அல்லது வனங்களிலிருந்து அல்லது மலைகளிலிருந்து அல்லது தண்ணீரிலிருந்து கிளைத்ததாகவே கூட இருக்கட்டும், ஆனால், உண்மையென்னவென்றால், ரியோ டி ஜெனிராவில் மனிதர்களிடம் நடப்பதை நடனத்திற்கு மிக அருகிலான ஒன்றாக, நடனத்தை பகுதிப் பாலுணர்வினதாக, பகுதி மந்திர அசைவுகள் அவற்றால் முடிகிற அளவுக்கு நட்சத்திரங்களின் இயல்பான போக்கினை (அல்லது, குறைந்த பட்சம், மற்றொரு மனிதனின் இயல்பான திசையினை) மாற்றுவதான, அதிகப்படியான ஒரு சக்தி பிறக்கிறது.

பருவகாலத்தின் மகத்தான சக்தியினை ஒவ்வொரு மனிதரும் ஒரு மின்கலத்தைப் போலச் சக்தியேற்றப்படுவதாக வைத்துக்கொண்டால், `ஏ` க்கும் `பி`க்கும் இடையே நூறு மீட்டரே கூட இருந்தாலும், அந்த வழி மிகச்சிறந்ததாகவும் நேரானதாகவும் இருந்தாலும்கூட, யாரும் `ஏ`யிடமிருந்து `பி`க்குச் (எந்தவொரு நோர்டிக் அல்லது ஜெர்மானியரும் போல) சென்றுவிடுவதில்லை. செல்வதில்லை; ஏ மற்றும் பி இடையே கேரியாக்கோ குதித்தும் பகுதி முழுவதுமாகவும் செல்கிறார்; துடிப்பான நடன நடையென்பது சக்தியை வெளிக்காட்டுவதாகும்: என்னிடம் பகிர்ந்துகொள்ளும் அளவுக்கு சக்தி இருக்கிறது, நான் நேர்கோட்டில் நடக்கவேண்டிய அவசியமில்லை. இதுவே, முடிவில், பொதுவான கொடைப்பொருளாகிறது. நகரம் கொடுக்கிறது, உடல் திருப்பி அளிக்கிறது.

5

(ரியோ, என்னவோ, வக்கிரம் மற்றும் வன்முறை போன்ற மிகப்பெரும் முரண்பாடுகளுக்கிடையே சிக்கியிருக்கும், மிகப்பெரும் அவலங்கள் கொதித்துக்கொண்டிருக்கும் நகரம் தானென்றாலும், இப்போது, இந்தக் கணத்தில், அதன் ஆர்வத் தனித்தன்மையை, உற்சாகத்தைக் கொண்டாடுவோம்.)

முடிவாக நாம் இதைச் சொல்வோம்: மகிழ்ச்சி என்பது சக்தியற்றது. அல்லது நாம் இப்படிச் சொல்வோம் : திறமையின் மீது எப்போதுமே திண்ணமாக உறைந்த ஒரு துயரம் படிந்திருக்கிறது. திறமை துள்ளிக்குதிப்பதில்லை.

முடிவாக, ரியோ டி ஜெனிராவில் ஒருவர் புரிந்துகொள்வது என்னவெனில் மகிழ்ச்சி மட்டுமே ஒரு உயிரின் இசைவிணக்கமாகிறது. கடல், காடு, மலைகளுக்கு இணையாக மனித நிலையும் அனைத்து இயந்திரங்களுக்கும் முந்தையதாக உள்ளது.

ஒரு சதுர மீட்டர் பெருமகிழ்ச்சியின் விலை : நிர்ணயிக்கப்பட்ட அளவை அலகு

வயதான மாடுகளுக்குச் சோகக் கண்களா?

கடவுளின் தண்டனைக்குப் பெயர் துயரம்

மற்றும், துறவியாவதென்பது மகிழ்ச்சியிலிருந்தும் ஒதுங்கிக்கொள்வது.

இதுவே நான் விரும்புவது.

அட்லியா ப்ராடோ

குறிப்பு

கேரியாக்கோ – ரியோ டி ஜெனிராவின் உள்ளூர் மக்கள்

*****************

வில்லியம் பர்ன்ஸ் William Burns ஸ்பானியம் – இராபர்ட்டோ பொலானோ Roberto Bolano (Chile) ஆங்கிலம் – க்ரிஸ் ஆண்ட்ரூஸ் Chris Andrews / தமிழில் ச.ஆறுமுகம்

7748923_1060517197

( குறிப்பு – இக்கதை மொத்தமாக மூன்று பாராக்களாக மூலத்தில் இருப்பதைப் போலவே இங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது. இதை ஒரு உத்தியாகவே பொலானா பயன்படுத்துகிறார். வழக்கமான வாசிப்பிலிருந்து இது மாறுபட்டிருப்பதால் நமது வாசகர்கள் வாசித்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது நண்பர்கேள
சிபிச்செல்வன் / ஆசிரியர் / மலைகள் இணைய இதழ் )

இந்தக் கதையை, கலிபோர்னியாவின் வெஞ்சுராவைச் சேர்ந்த வில்லியம் பர்ன்ஸ், சொனோராவின் சான்டா தெரேசாவிலிருக்கும் எனது நண்பர் பாஞ்ச்சோ மோங்கே என்ற காவல்துறை காவலருக்குச் சொல்ல, அதை அவர் எனக்குச் சொன்னார். மோங்கே சொன்னபடி, அந்த வட அமெரிக்கன் எதைப்பற்றியும் அலட்டிக்கொள்ளாத, ஒருபோதும் நிதானமிழந்துவிடாத ஒரு இளைஞன் என்ற விவரணை பின்வரும் நிகழ்வுகளை வைத்துப் பார்க்கும்போது மாறுபாடாகத் தோன்றுகிறது. பின்தொடர்வது பர்ன்ஸின் வார்த்தைகள் :

என் வாழ்க்கையில் கவலைகொள்ளவைக்கிற இருண்ட காலமாக அது இருந்தது. வேலை விஷயத்தில் கடுமையான ஒரு கட்டத்தில் நான் பயணித்துக்கொண்டிருந்தேன். அதுவரையிலும் எந்தவகைச் சலிப்பும் அண்டாதவாறு, காப்புக் கவசம் அணிந்தவனாக இருந்த நான், அப்போது, உச்ச அளவில் சலிப்படைந்திருந்தேன். இரண்டு பெண்களோடு வெளியூர் சென்றிருந்தேன். எனக்கு அது நன்றாக நினைவிருக்கிறது. அவர்களில் ஒருத்திக்கு வயது சிறிது அதிகமிருக்கும் – என்னுடைய வயது இருப்பாள் – இன்னொருத்தி, ஒரு இளமங்கையைவிட அதிகமொன்றுமிருக்கமாட்டாள். சில நேரங்களில் அவர்கள் நோயில் சிக்கி, உயிர்வாழ அவதிப்படும், கூன்விழுந்த வயதான பெண்களைப் போலிருந்தார்கள்; மற்றநேரங்களில் விளையாட்டில் ஆர்வமுள்ள இளநங்கைகளைப் போலவே தோன்றினார்கள். அம்மாவும் மகளுமோ என நீங்கள் தவறாக நினைத்துவிடுமளவுக்கு வயதுவித்தியாசம் அப்படியொன்றும் அதிகமில்லை; அப்படியுங்கூடச் சொல்லலாம்தான். இருந்தாலும், இதைப்போன்ற விவகாரங்ளையெல்லாம் ஒரு மனிதர் யூகத்தில்தான் சொல்லமுடியுமே தவிர அது, நிச்சயமாகத் தெரிந்ததென்று கூறிவிடமுடியாது. எப்படியிருந்தாலும், அந்தப் பெண்களிடம் இரண்டு நாய்கள் இருந்தன. ஒன்று பெரியது; மற்றொன்று சிறியது. அதில், எந்த நாய் எந்தப் பெண்ணுக்குச் சொந்தமானதென்று எனக்குத் தெரியாது. கோடை விடுமுறையை அனுபவிக்கச் செல்கின்ற மலை மீதிருந்த ஒரு நகரத்தின் புறநகர் எல்லையில் அமைந்திருந்த ஒரு வீட்டை, அவர்கள் பகிர்ந்து கொண்டிருந்தனர். தெரிந்தவர் அல்லது நண்பர், அல்லது ஏதோ ஒருவரிடம் இந்தக் கோடையில் நான் அங்கு செல்லவிருப்பது பற்றிக் குறிப்பிட்டபோது, அவர் மீன்பிடி தூண்டிலையும் கொண்டுசெல்லுமாறு கூறினார்; ஆனால் என்னிடம் தூண்டிற்கோல் எதுவுமில்லை. அதற்கு வேறு சிலர், அங்கிருக்கும் கடைகள் மற்றும் தங்கும் அறைகள் பற்றிச் சொல்லி, எளிதாக எடுத்துக்கொள்ளுமாறு தேறுதல் கூறினார்கள். ஆனால், நான் அங்கு விடுமுறை அனுபவிப்பதற்காகச் செல்லவில்லை; அந்தப் பெண்களைப் பொறுப்பாகப் பார்த்துக்கொள்வதற்காகப் போகிறேன். அவர்களைப் பொறுப்பாகப் பார்த்துக்கொள்ளுமாறு ஏன் அவர்கள் கேட்கவேண்டும்? அவர்கள் சொன்னது, அவர்களைத் துன்புறுத்தும் யாரோ ஒரு இளைஞன் இருக்கிறான் என்பதுதான். அவனைக் கொலைகாரன் என்றுதான் அவர்கள் குறிப்பிட்டனர். அவனது நோக்கம் தான் என்னவென நான் கேட்டதற்கு, அவர்கள் பதில் எதுவும் சொல்லவில்லை. ஒருவேளை என்னைத் தடுமாறச்செய்வதற்காக, இருட்டிலேயே வைத்திருக்க வேண்டுமென அவர்கள் நினைத்திருக்கலாம். அதனால், நானாகவே அதனைக் கண்டுபிடிக்க முயற்சித்தேன். அவர்கள் அபாயத்திலிருப்பதாக – அது ஒரு தவறான பயமாகவுமிருக்கலாம் – நம்பினார்கள். ஆனால், ஒருவர் என்ன நினைக்கவேண்டுமென, நான் எப்படி அவர்களுக்குக் கூற முடியும்? அதிலும் என்னை வேலைக்கு அமர்த்தியிருப்பவர்களிடம் போய்க் கூறமுடியுமா? இருந்தாலும், ஒரு வாரம், அல்லது அதுபோலக் கழிந்தபின்னர், அவர்கள் கடைசியில், என்னுடைய கருத்தோட்டத்திற்கே வந்து சேர்ந்தனர். அதனால் நான் அவர்களோடும் அவர்களது நாய்களோடும் அந்த மலைகளுக்குச் சென்றேன். அங்கே, கல்லாலும் மரத்தாலும் கட்டியிருந்த ஒரு வீட்டில் குடிபுகுந்தோம். அந்த வீட்டை விட அதிகமான சாளரங்கள் கொண்டதாக, அதிலும் ஒவ்வொன்றும் பல்வேறு அளவுகளில் எந்தவொரு ஒழுங்குமற்றுப் பரவலாகச் சிதறியமைந்த சாளரங்களை நான் இதுவரையிலும் எந்த வீட்டிலும் பார்த்திருக்கவில்லையென்றுதான் நினைக்கிறேன். வெளியிலிருந்து பார்க்கும்போது, அந்த வீடு மூன்று தளங்கள் கொண்டது போன்ற தோற்றத்தை அந்தச் சாளரங்கள் ஏற்படுத்தின; ஆனால் உண்மையில் இரண்டு தளங்களே இருந்தன. உள்ளே, அதிலும் வசிப்பறையிலும் முதல் தளத்திலிருந்த சில படுக்கையறைகளிலும், அந்தச் சாளரங்கள் ஒரு மயக்கத்தை, மகிழ்ச்சியைத் தருகின்ற ஒரு பித்துணர்வினை எழுப்பின. எனக்குத் தந்திருந்த படுக்கையறையில் இரண்டே சாளரங்கள் இருந்தன; இரண்டுமே மிகவும் சிறியனவாக, ஒன்று மேல் ஒன்றாக, மேலது கூரையைத் தொட்டுவிடுவதாகவும், கீழது தளத்திலிருந்து ஒரே ஒரு அடி உயரத்திலுமாகவும் இருந்தன. அதெல்லாம் எப்படியிருந்தாலும் வாழ்க்கை என்னவோ மகிழ்ச்சியாகவே இருந்தது. வயதில் மூத்த பெண் ஒவ்வொரு நாள் காலையிலும் எழுதினாள்; ஆனால் எல்லா எழுத்தாளர்களும் எழுதும்போது கதவை மூடிக்கொள்வதாகச் சொல்கிறார்களே, அதுபோல மூடுவதில்லை; அவளுடைய மடிக்கணினியை வசிப்பறை மேசை மேல்தான் பணிசெய்ய வசதியாக அமைத்திருந்தாள். இளைய பெண் தோட்டவேலையில் அல்லது நாய்களுடன் விளையாடி, அல்லது என்னுடன் பேசிக்கொண்டிருந்து நேரத்தைச் செலவிட்டாள். அநேகமாகச் சமையல் வேலை முழுவதையும் நானே செய்தேன்; நானொன்றும் அதில் திறமையானவனில்லை; ஆனாலும், என் சமையலை அந்தப் பெண்கள் புகழ்ந்தார்கள். என் வாழ்க்கையின் மீதிக்காலத்தை அப்படியே கழித்துவிட்டிருக்கலாம் தான். ஆனால் ஒருநாள் அந்த நாய்கள் வெளியே ஓடித் தொலைக்கவே, நான் அவற்றைத் தேடிப்போனேன். கையில் ஒரே ஒரு கைவிளக்குடன் பக்கத்துக் காடெங்கும், காலி வீடுகளின் ஒவ்வொரு முற்றத்திலுமாக உற்று உற்றுப் பார்த்துச் சென்றது இப்போதும் நினைவிருக்கிறது. அவற்றை எங்கேயும் காணமுடியவில்லை. வீட்டுக்குத் திரும்பியபோது, நாய்கள் காணாமல் போனதற்கு, நான்தான் காரணமென்பதுபோல, அந்தப் பெண்கள் பார்த்தார்கள். பின்னர், அவர்கள் ஒரு நபரின் பெயரைச் சொன்னார்கள்; அதுதான், அந்தக் கொலைகாரனின் பெயர். அவர்கள் முதலிலிருந்தே அவனைக் கொலைகாரனென்றே குறிப்பிட்டார்கள். நான் அவர்களை நம்பவில்லையென்றாலும், அவர்கள் சொல்வதைக் கவனமாகக் கேட்டுவந்தேன். அவர்கள் பள்ளிப் பிராயக் காதல்கள், பணப்பிரச்னைகள் மற்றும் பகைக் காழ்ப்புகள் பற்றிப் பேசினார்கள். இருவருக்குமிடையில் அவ்வளவு வயது வித்தியாசமிருக்கும்போது, ஒரே நபருடன் இருவருக்கும் எப்படித் தொடர்புகள் அமையுமென என் தலைக்குள் சுழன்றதை என்னால் தடுக்கமுடியவில்லை. ஆனால் அதற்கும் மேலாக விவரங்கள் எதனையும் அவர்கள் சொல்வதாக இல்லை. அவர்கள் என்னைக் கடிந்திருந்த போதிலும் அன்று இரவில் அவர்களில் ஒருவள் என் அறைக்கு வந்தாள். நான் விளக்கினை எரியவிடவில்லை; அரைத் தூக்கத்தில்தான் இருந்தேன்; ஆனாலும் அது யாரெனத் தெரிந்துகொள்ளவே முடியவில்லை. முதல் கதிரின் வெளிச்சத்தில் விழித்தபோது, நான் தனியாகத்தான் இருந்தேன். நகரத்துக்குள் போய், அவர்கள் பயந்துசாகிற அந்த மனிதனைப் பார்த்துவிடுவதென்று தீர்மானித்தேன். அவனுடைய முகவரியை அவர்களிடம் கேட்டுவிட்டு, நான் திரும்பி வரும்வரையில் வீட்டுக் கதவினைத் திறக்கவேண்டாமெனச் சொல்லிவைத்தேன். வயதில் பெரியவளின் சிறிய டிரக்கினை நானே ஓட்டிக்கொண்டு, அடிவாரம் சென்றேன். நகரத்தைத் தொட்டுவிடுவதற்குச் சிறிது முன்னால், பழைய புட்டிநிரப்பும் தொழிற்சாலை முற்றத்தில் இரண்டு நாய்களையும் கண்டுவிட்டேன். அவை என்னைக் கண்டதும் பணிவோடு, வாலை ஆட்டிக்கொண்டு வந்தன. நான் அவற்றை டிரக்கின் முன் பகுதிக்குள்ளேயே அமரவைத்து, முந்தைய நாள் இரவில் எவ்வளவு கவலைப்பட்டேனென்பதை நினைத்துச் சிரித்துக்கொண்டே, சிறிது நேரத்துக்கு ஊருக்குள்ளாகவே சுற்றிவருகையில், அந்தப் பெண்கள் சொன்ன முகவரியை நோக்கி, நான் நெருங்கி வந்திருந்ததைக் கண்டேன். அந்த இளைஞனின் பெயரை பெட்லோ என்றே வைத்துக்கொள்வோம். விடுமுறை அனுபவிக்க வருபவர்களுக்காகவே, ஊரின் மையப்பகுதியில் தூண்டில்கள், தூண்டிற்கோல்கள் முதல் நிழற்கட்டமிட்ட சட்டைகள், சாக்லேட் பட்டைகள் வரையில் விற்கும் கடை வைத்திருந்தான். கொஞ்ச நேரத்துக்கு நிலையடுக்குகளைக் கண்களால் துளாவிக்கொண்டிருந்தேன். அந்த மனிதன் ஒரு திரைப்பட நடிகனைப் போலத் தோன்றினான்; முப்பத்தைந்து வயதுக்கு மேல் இருக்காது. திடமான உடற்கட்டு, அடர் கறுப்புத் தலைமுடி. செய்தித் தாள் ஒன்றினைக் கொடுக்கல் வாங்கல் மேடை மேல் பரப்பி, வாசித்துக் கொண்டிருந்தான். கித்தான் காற்சட்டையும் டி – சர்ட்டும் அணிந்திருந்தான். வியாபாரம் நன்றாகப் போய்க்கொண்டிருக்க வேண்டும்; டிராம்களும் கார்களும் வந்துபோய்க்கொண்டிருந்த மையத் தெரு ஒன்றில் கடை அமைந்திருந்தது. நான் கணக்குப் போட்டுப் பார்த்தேன். பெட்லோவின் கடையில் விலை அதிகம்; கடையை விட்டுச் செல்லும்போது, எதனாலோ, எனக்கு அந்தப் பாவப்பட்ட இளைஞன் அவ்வளவுதான், தொலைந்தான், என ஒரு நினைப்பு தோன்றியது. அங்கிருந்து ஒரு பத்து அடி கூட வந்திருக்கமாட்டேன், அவனது நாய் என் பின்னாலேயே வந்துகொண்டிருப்பதைக் கண்டேன். கடையில் கூட நான் அதைப் பார்த்திருக்கவில்லை; நல்ல, பெரிய ஒரு கறுப்பு நாய், ஜெர்மன் ஷெப்பர்டு வேறு ஏதோ ஒன்றுடன் இணைசேர்ந்த கலப்பினமாக இருக்கும். நான் ஒருபோதும் சொந்தமாக நாய் வளர்த்ததில்லை; என்றாலும் அந்தப் பாழாய்ப் போகிற சனியன்களுக்கு என்னிடம் எது பிடிக்கிறதென்று தெரியவில்லை; எதற்காகவோ பெட்லோவின் நாய் என் பின்னால் வந்தது. நான், அதை கடைக்குத் திரும்பிப் போகுமாறு துரத்தினேன் தான்; ஆனாலும் அது என்னைக் கண்டுகொள்ளவேயில்லை. அதனால், நான் அந்த நாய் என் பக்கமாக வர, டிரக்கை நோக்கி நடந்துகொண்டிருந்தேன்; பின்னர் ஒரு சீழ்க்கைச் சத்தத்தை என் பின்னால் கேட்டேன். கடைக்காரன் அவனது நாயைத் திரும்பிவருமாறு அழைத்துக்கொண்டிருந்தான். நான் திரும்பிப் பார்க்கவில்லையென்றாலும், அவன் எங்களைத் தேடி கடைக்கு வெளியே வந்துவிட்டானென்பது எனக்குத் தெரிந்தது. எனது பதில் நடவடிக்கை உடனடியானதாகவும் நான் நினைத்துப்பார்க்காததாவும் இருந்தது: அவன் என்னையும் நாயையும் கண்டுவிடாமலிருக்க முயற்சித்தேன். உறைந்து உலர்ந்த இரத்தத்தின் அடர்சிவப்பு நிறத்திலிருந்த டிராம் வண்டியின் பின்புறம் நாயை என் கால்களுக்கிடையில் இடுக்கிக்கொண்டு மறைவாக ஒளிந்து நின்றது, எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. பாதுகாப்பான இடத்திலிருப்பதாக நான் உணருகின்ற கணத்தில், அந்த டிராம் நகர்ந்து தொலைக்கவும், எதிர்ப்பக்கம் நடைபாதையில் நின்ற கடைக்காரன் என்னைப் பார்த்து, ‘’நாயைப் பிடித்துக்கொள்’’ என்றோ, ‘’நன்றாகக் கயிற்றைப் பிடித்துக்கொள்’’ என்றோ, ‘அங்கேயே இரு, ’நான் வரும்வரையில்’’ என்றோ அர்த்தமாகும் வகையில் கைகளை ஆட்டிச் சைகை காட்டினான். ஆனால், அது எதையும் நான் செய்யவில்லை. நான் அப்படியே திரும்பி, கூட்டத்தில் மறையவும், அவன் ‘நில், என் நாய்! டேய், முட்டாள், என் நாய்!’’ என்பதுபோல் என்னவோ கத்தினான். நான் ஏன் அப்படி நடந்துகொண்டேனென்று எனக்குத் தெரியவில்லை. எப்படியோ, கடைக்காரனின் நாய் என்னைப் பின்தொடர்ந்து, டிரக்கை நிறுத்தியிருந்த இடத்துக்கு வந்ததோடு, நான் கதவைத்திறந்ததுதான், தாமதம், எனக்கு நேரமே கொடுக்காமல், பொசுக்கென்று உள்ளே குதித்து உட்கார்ந்து கொண்டதோடு, பின்னர் அங்கிருந்து அசையவும் மறுத்துவிட்டது. மூன்று நாய்களோடு நான் வந்து சேர்ந்ததைக் கண்ட அந்தப் பெண்கள், என்னிடம் ஒரு வார்த்தைகூடப் பேசாமல் நாய்களோடு விளையாடத் தொடங்கிவிட்டார்கள். கடைக்காரனின் நாய்க்கு அவர்களை நீண்ட நாட்ளாகவே தெரியும் போலிருக்கிறது. அன்று பிற்பகலில் நாங்கள் எல்லா விதமான விஷயங்களைப்பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம். ஊருக்குள் என்ன நடந்ததெனச் சொல்லிப் பேசத் தொடங்கினேன். பின்னர், அவர்கள் கடந்தகால வாழ்க்கை பற்றியும் அவர்களது வேலை பற்றியும் பேசிக்கொண்டிருந்தார்கள்: ஒருவள் ஆசிரியையாகவும் மற்றவள் சிகையழகுக் கலைஞராகவும் இருந்து, இருவருமே வேலையை விட்டுவிட்டனர். இருந்தபோதிலும், அவர்கள் குழந்தைகளைப் பிரச்னைகளோடுதான் பார்த்துக்கொண்டதாக அவ்வப்போது பேசிக்கொண்டனர். ஏதோ ஒரு கட்டத்தில், இருபத்து நான்கு மணி நேரமும் வீட்டை எப்படிப் பாதுகாப்பது என்பதுபற்றி நானாகவே ஆரம்பித்துப் பேசிக்கொண்டிருந்ததை உணர்ந்தேன். பெண்கள் இருவரும் புன்னகையோடு அதைக் கேட்டுக்கொண்டிருந்துவிட்டுச் சரியானதென இசைவும் தெரிவித்தனர். ஏன்தான் அப்படிச் சொன்னோமோ என்றும் நான் வருந்திக்கொண்டேன். பின்னர் நாங்கள் உணவு அருந்தினோம். அன்றைய இரவுக்கான உணவினை நான் சமைத்திருக்கவில்லை. பேச்சு மவுனமாக உறைந்தது. அந்த மவுனமும் எங்கள் தாடை அசைவு மற்றும் பற்களின் அரைவுச் சப்தத்தாலும் வெளியே வீட்டைச் சுற்றி ஓட்டப்பந்தயம் ஓடிக்கொண்டிருந்த நாய்களின் உரசல் மற்றும் விளையாடும் சப்தத்தாலுமே அவ்வப்போது உடைந்தது. வெகு நேரத்துக்குப் பின்னர் நாங்கள் குடிக்கத் தொடங்கினோம். பெண்களில் ஒருவள், யாரென்று நினைவில்லை, பூமியின் கோளத்தன்மை மற்றும் பாதுகாப்பு குறித்தும் மருத்துவர்களின் எச்சரிக்கைகள் குறித்தும் பேசினாள். என் மனம் எங்கோயிருந்தது; அவள் பேசியதை நான் கேட்டுக்கொண்டிருக்கவில்லை; மலைச் சரிவுகளில் முன்பொரு காலத்தில் வசித்த இந்தியர்களைப் பற்றி அவள் பேசிக்கொண்டிருந்தாளென நினைக்கிறேன். சிறிது நேரம் கழிந்ததும் அதற்கு மேலும் பொறுத்துக்கொள்ள முடியாமலாகி, எழுந்து மேசையைச் சுத்தம் செய்துவிட்டு, உணவுத் தட்டு மற்றும் கலங்களைக் கழுவுவதாகச் சமையலறைக்குள் அடைந்துகொண்டேன். அப்போதும் அவர்களின் பேச்சுச் சப்தம் என் காதுகளில் விழுந்துகொண்டு தானிருந்தது. நான் வசிப்பறைக்குத் திரும்பிச் சென்றபோது, இளைய பெண் கம்பளியால் பாதி மூடியபடி சாய்மெத்தையில் படுத்திருக்க, மற்றவள் ஒரு பெரிய நகரத்தைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தாள்; அது, அவள் ஏதோ ஒரு பெரிய நகரத்தைப்பற்றி, அந்த நகரம் வாழ்க்கைக்கு எவ்வளவு சிறப்பாக இருந்தது என்பது பற்றிப் பேசிக்கொண்டிருந்தாலும், உண்மையில் அவள் அதைப்பற்றி இகழ்வாகவே பேசிக்கொண்டிருந்தாள்; நான் எதைவைத்து அப்படிச் சொல்கிறேனென்றால், இருவரும் அவ்வப்போது கமுக்கப்புன்னகை பூக்கத் தொடங்கிவிடுவார்கள். எனக்கு இந்த இரண்டுபேரிடமும் புரியாத ஒன்று: அவர்களின் நகைச்சுவை உணர்வு தான். அவர்கள் அழகாக, என்னைக் கவர்பவர்களாக இருந்தார்கள்; எனக்கு அவர்களைப் பிடித்திருந்தது. ஆனால், அவர்களது நகைச்சுவை உணர்வு போலியானதாக, வலிந்து வரவழைக்கப்பட்டதாக, ஏதோ ஒன்று எப்போதுமே தோன்றிக்கொண்டிருந்தது. இரவு உணவுக்குப் பின்னர், நான் திறந்த விஸ்கிப்புட்டியில் பாதி காலியாகிவிட்டது. அது வேறு எனக்குள் கவலையாக இருந்தது. போதையாகிவிடவேண்டுமென நான் நினைக்கவில்லை; அவர்களும் போதையாகி என்னைத் தனியாக விட்டுவிட்டுச் சென்றுவிடவேண்டுமென்றும் நான் விரும்பவில்லை. அதனால், நான் அவர்களுடனேயே உட்கார்ந்ததோடு, நாம், இன்னும் ஒரு சில விஷயங்கள் பற்றிப் பேசவேண்டுமென்றேன். ‘’ என்ன விஷயங்கள்?’’ என வியப்புற்றுக் கேட்பதாகப் பாசாங்கு செய்தனர்; ஒருவேளை அது அப்படிப் பாசாங்காக இல்லாமலுமிருக்கலாம். ‘’இந்த வீட்டில் பல்வேறு பலவீனங்கள் உள்ளன. நாம் அதற்குச் சில காரியங்கள் செய்யவேண்டும்,’’ என்றேன், நான். ‘’என்ன செய்யவேண்டும்?’’ என்றாள், ஒருவள். ஓ.கே. என்று நிலைமாற்றி, நிமிர்ந்து அமர்ந்த நான், அந்த வீடு ஊருக்குள்ளிருந்து எவ்வளவு தள்ளி இருக்கிறது, பாதுகாப்பற்ற தன்மை எப்படி வெளிப்படையாகத் தெரிகிறது என்பது பற்றியெல்லாம் பேசத் தொடங்கி, நினைவுபடுத்திக்கொண்டிருந்தேன்; ஆனால், சிறிதுநேரத்திலேயே அவர்கள் அதைக் கவனிக்கவில்லையென்பதை உணர்ந்துவிட்டேன். நான் ஒரு நாயாக இருந்தால், இந்தப் பெண்கள் என்மீது இன்னும் கொஞ்சம் கரிசனம் காட்டுவார்களாயிருக்கலாமென, எரிச்சலோடு எண்ணினேன். பின்னர், எங்களில் யாருக்குமே தூக்கம் துளி கூட வரவில்லையென்பதை நான் உணர்ந்தேன். பிறகு, அவர்கள் குழந்தைகளைப் பற்றிப் பேசத்தொடங்கினர்; அவர்களது பேச்சு எனது இதயத்தைப் புரட்டிப்போட்டது. எந்த ஒரு கடினமான மனிதனையும் உருக்கிவிடும் பயங்கரமான, தீயசெயல்கள், காட்சிகளை நான் கண்டிருக்கிறேனென்றாலும், அந்த இரவில் அந்தப் பெண்கள் பேசுவதைக் கேட்டு, எனது இதயம் அவ்வளவு வேகமாகத் துடித்துச் சுருண்டு, அநேகமாகக் கரைந்து, காணாமலாகிவிட்டது. அதைத் தடுத்துவிடும் முயற்சியில், அவர்களது குழந்தைப்பருவக் காட்சிகளை நினைவுகொண்டு பேசுகிறார்களா அல்லது தற்போதய குழந்தைகளின் உண்மையான நிலையைப் பேசுகிறார்களா எனக் கண்டுபிடிக்க முயன்றேன்; ஆனாலும் முடியவில்லை. என் தொண்டைக்குள் பஞ்சு மற்றும் பட்டைத் துணிகளால் கட்டிய உருண்டை ஒன்று எழுந்து அடைப்பது போலிருந்தது. உரையாடலின் நடுவே அல்லது இரட்டைக் குரல்களின் நடுவில் திடீரென்று எனக்குள் ஒரு முன்னுணர்வு ஏற்பட்டதில், நான் வசிப்பறையின் சாளரங்களில் பிரதான சாளரத்தின் மிக அருகிலிருந்த ஒரு மூலையில், எந்த ஒரு அவசரத்துக்கும் உதவியாக இருக்கட்டுமென அமைத்திருந்த காளைக்கண் வடிவச் சிறு சாளரம் ஒன்றினை நோக்கிப் பொய்நடையில் நகரத் தொடங்கினேன். அந்தப் பெண்களும் ஏதோ ஒன்று நடக்கப்போகிறதென உணர்ந்து என்னைப் பார்க்கத்தொடங்கிவிட்டார்கள் என்பதைக் கடைசி நிமிடத்தில் நானும் உணர்ந்துகொண்டேன். சாளரத் திரையை இழுத்து, பெட்லோவின் தலையை, அதுதான், அந்தக் கொலைகாரனின் தலையைச் சாளர வாசலில் கண்ட அந்த இக்கட்டான நேரத்தில், அந்தப் பெண்களுக்கு என் உதட்டில் ஒரு விரலை வைத்துக் காட்டுவதற்கு மட்டுந்தான் முடிந்தது. அடுத்து நிழ்ந்ததெல்லாமே குழப்பம் தான்; ஏனென்றால் பயமென்பது ஒரு தொற்றுநோய். வந்திருப்பது கொலைகாரனென்பதை நான் உடனடியாகப் புரிந்துகொண்டேன். அவன் வெளியே வீட்டைச் சுற்றி ஓடத்தொடங்கினான். அந்தப் பெண்களும் நானும் வீட்டுக்குள்ளாகவே சுற்றிச் சுற்றி ஓடத் தொடங்கினோம். இரண்டு வட்டங்கள்: நாங்கள் திறந்துகிடக்கும் சாளரங்களை மூடுவதும், கதவுகளை இழுத்துப்பார்த்து அடைப்பதுமாக ஓடியபோது, அவன் வீட்டுக்குள் நுழைவதற்காகத் திறந்து கிடக்கும் சாளரம் ஒன்றைக் கண்டுபிடித்துவிடும் முயற்சியில் ஓடினான். நான் என்ன செய்யவேண்டுமோ, அதைச் செய்யவில்லையென்று எனக்குத் தெரியத்தான் செய்தது: என் அறைக்குச் சென்று, துப்பாக்கியை எடுத்துக்கொண்டு, வெளியே சென்று, அவனைச் சரணடையச்செய்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, நாய்கள் வெளியேதானிருப்பதாவும், அவற்றுக்கு எதுவும் ஆகியிருக்காதென்றும் எண்ணத் தொடங்கினேன்; நாய்களில் ஒன்று கருவுற்றிருந்ததென்று நினைக்கிறேன், அது நிச்சயமானதாவென்று எனக்குத் தெரியாது, அப்படி ஒரு பேச்சு இருந்தது. அது எப்படியோ போகட்டும், அப்போதும், நான் ஓடிக்கொண்டேயிருந்த அந்தக் கணத்தில் பெண்களில் ஒருவர் ‘’அய்யோ, சேசுவே, அந்தப் பெண் நாய், பெண் நாய்,’’ என அரற்றியது, என் காதில் விழுந்தது; நான் டெலிபதியைப் பற்றி, அதாவது அது நிகழ்வதுபற்றி, அந்த மகிழ்ச்சியைப் பற்றி நினைத்தேன். கூடவே, நாயைப் பற்றிப் பேசிய பெண், அவர்களில் மூத்தவளோ, இளையவளோ யாராக இருந்தாலும், அதைப் பார்ப்பதற்காக கதவைத் திறந்துவிடுவாளோ என்றும் பயந்தேன். நல்லவேளை, அவர்களில் யாரும் வெளியே நகர்வதான எந்த முயற்சியும் செய்யவில்லை. எல்லாம் நல்லது தான், நல்லதேதான் என நினைத்துக்கொண்டேன். அதன் பின்னர், (நான் அதை ஒருபோதும் மறக்கவே மாட்டேன்) முதல் தளத்தில், அதுவரையிலும் நான், பார்த்தேயில்லாத ஒரு அறைக்குள் சென்றேன். அது, ஒடுக்கமாக, நீண்டு, இருட்டாக இருந்தது; நிலா வெளிச்சமும், முற்றத்து விளக்கிலிருந்து வந்த வெளிச்சமும் தான் மங்கலாகத் தெரிந்தது. அந்தவொரு கணத்தில், அந்த விதிதான் (அல்லது கெட்டநேரம் – இந்த விஷயத்தில், அதுவேதான்) என்னை அங்கே, அந்த அறைக்குக் கொண்டுவந்து சேர்த்ததென்று, பயந்துபோயிருந்த அந்தத் தெளிவற்ற மனநிலையிலும் எனக்கு உறுதிப்பாடாகத் தெரிந்தது. மறுமுனையில் சாளரத்துக்கு வெளியில் கடைக்காரனின் நிழலுருவத்தைப் பார்த்தேன். அப்படியே முழங்காலிட்டுக் குனிந்துகொண்டேன். என் உடம்பின் நடுக்கத்தை (என் உடம்பு முழுவதும் நடுங்கிக் கொண்டிருந்தது. வியர்வை ஊற்றோ ஊற்றென்று ஊற்றிக் கொண்டிருந்தது.) அடக்க முடியாமல் அடக்கிக்கொண்டு, காத்திருந்தேன். கொலைகாரன் அநியாயத்துக்கு எளிதாகச் சாளரத்தைத் திறந்து அறைக்குள் நிதானமாக, நழுவி இறங்கினான். அறைக்குள் ஒடுங்கலான மூன்று மரக்கட்டில் படுக்கைகள், ஒவ்வொன்றின் அருகிலும் ஒரு மேசையோடு இருந்தன. படுக்கைகளுக்குச் சில அங்குலங்களே உயர்வில், சுவரில் சட்டமிட்டு மாட்டப்பட்டிருந்த மூன்று அச்சுக் குறிப்புகள் தென்பட்டன. கொலைகாரன் ஒரு கணம் அப்படியே நின்றான். அவன் மூச்சுக்காற்றினை நான் உணர்ந்தேன்; அவனது மூச்சுக்குழலுக்குள் சுவாசம் எழுப்பிய சப்தம் எனக்கு நன்றாகவே கேட்டது. பின்னர், அவன், நான் அவனை எதிர்பார்த்துக் காத்திருந்த இடத்தை நோக்கி நேரடியாகத் தடவித்தடவி, சுவருக்கும் படுக்கை விளிம்புகளுக்கும் நடுவிலான வழியில் வரத்தொடங்கினான். நம்புவதற்குக் கடினமாக இருந்தாலும், அவன் கண்களில், நான், படவில்லையென்பது, எனக்குத் தெரிந்தது. எனது அதிர்ஷ்ட நட்சத்திரங்களுக்கு நன்றிசொல்லிவிட்டு, அவன் என்னருகில், எனக்கு வசதியாக நெருங்கிவந்ததும், அவனுடைய கரண்டைக் கால்களைப் பற்றிப்பிடித்துக் கீழே விழுமாறு இழுத்துத் தள்ளினேன். அவன் தரையில் விழுந்ததும் முடிந்த அளவுக்கு அதிகக் காயம் ஏற்படுத்திவிடவேண்டுமென்று வேகமாக உதைக்கத் தொடங்கினேன். ‘’இங்கேதான் இருக்கிறான், அவன் இங்கேதான் இருக்கிறான்! என்று கத்திக் கூச்சலிட்டேன். ஆனால், அந்தப் பெண்கள் என் சத்தத்தைக் கேட்ட மாதிரித் தெரியவில்லை, அல்லது, அவர்கள் வீட்டைச் சுற்றி ஓடும் சப்தமும் எனக்குக் கேட்கவில்லை. முன்,பின் அறியாத அந்த அறை எனது மூளை அதன் நீட்சியாகக் கண்டது போன்ற, ஒரு தனி வீடாக, ஒரே தங்குமிடமாகத் தோன்றியது. விழுந்து கிடந்த அந்த உடலை நான் எவ்வளவு நேரம் உதைத்துக்கொண்டிருந்தேனென்று எனக்கே தெரியவில்லை; யாரோ ஒருவர் என் பின்னாலிருந்த கதவைத் திறந்து, எனக்குப் புரியாத சொற்களைக் கூறி, ஒரு கையை என் தோளில் வைத்தது மட்டுமே எனக்கு நினைவிருக்கிறது. ஆனால், பின்னர் பார்க்கும்போது, நான் தனியாளாகவே இருந்தேன்; உடனேயே உதைப்பதை நிறுத்தினேன். சில கணங்களுக்கு என்ன செய்வதென்றே எனக்குத் தெரியவில்லை; திகைப்பாகவும் களைப்பாகவும் உணர்ந்தேன். நல்லவேளையாக, உடனேயே அதிலிருந்தும் விடுபட்டு, வசிப்பறைக்கு அந்த உடலை இழுத்துவந்தேன். அங்கே, சாய்மெத்தையில் அந்தப் பெண்கள் இருவரும் ஒருவரையொருவர் கட்டிப்பிடிக்காத குறையாக நெருக்கமாக உட்கார்ந்திருந்ததைக் கண்டேன். அந்தக் காட்சி எதனாலோ எனக்கு ஒரு பிறந்தநாள் விருந்தினை நினைக்கச் செய்தது. என்ன நிகழ்ந்ததோ என்பதைவிட, நான் கொடுத்த கொடையில் பெட்லோ கிடந்த நிலையைக் கண்டதும் ஏற்பட்ட பதற்றத்தையும், அவர்கள் கண்களில் குடிகொண்டிருந்த அச்சத்தின் தீப்பொறியையும் கண்டேன். அவர்கள் கண்களின் தோற்றம் தான் என் பிடியைத் தளர்த்தி, பெட்லோவின் உடலைத் தரைவிரிப்பின் மீது வீழ்த்தியது. பெட்லோவின் முகம் இரத்த முகமூடியாக வசிப்பறை வெளிச்சத்தில் பயங்கரமாகத் தோன்றியது. அவனது மூக்கு இருந்த இடத்தில் இரத்தக் கூழ் வழியும் ஒரு உருண்டைக்கட்டிதான் இருந்தது. அவனுடைய மார்பில் கைவைத்து இதயம் துடிக்கிறதா எனச் சோதித்துப் பார்த்தேன். அந்தப் பெண்கள் கொஞ்சம் கூட அசையாமல் என்னையே பார்த்துக்கொண்டிருந்தனர். ‘’செத்துவிட்டான்,’’ என்றேன், நான். முன்பக்கத் தாழ்வாரத்துக்கு, நான் நகர்ந்த போது, அவர்களில் ஒருவர் பெருமூச்சிடுவது என் காதுகளில் விழுந்தது. நகரத்து அதிகாரிகளை என்ன சொல்லிச் சமாளிக்கப் போகிறோமென்ற சிந்தனையில் நட்சத்திரங்களைப் பார்த்துக்கொண்டே ஒரு சிகரெட்டைப் புகைத்தேன்; திரும்பவும் உள்ளே நுழைந்தபோது, அந்தப் பெண்கள் மண்டியிட்டு, நான்கு கால்களிலுமாக நின்று, சடலத்தின் ஆடைகளை அப்புறப்படுத்திக்கொண்டிருந்தனர். எனக்குள் பீறிட்ட அழுகைச்சத்தத்தை என்னால் அடக்கிக்கொள்ள முடியவில்லை. அவர்களோ என்னைப் பார்க்கக்கூட இல்லை. ஒரு கிளாஸ் விஸ்கியை அருந்திவிட்டு, மீண்டும் வெளியே சென்றேன்; கூடவே விஸ்கிப் புட்டியையும் எடுத்துக்கொண்டேனென்றுதான் நினைக்கிறேன். அந்தப் பெண்கள் அவர்கள் வேலையை முடிக்கட்டுமென்று வெளியில் எவ்வளவு நேரம் குடித்துக்கொண்டும், புகைத்துக்கொண்டும் அமர்ந்திருந்தேனென்று எனக்குத் தெரியவில்லை. நிகழ்ந்தவை அனைத்தையும் ஒவ்வொன்றாகத் திரட்டி, ஒன்றுசேர்த்துப் பார்த்தேன். சாளரம் வழியாக, அவன் உள்ளே பார்த்ததை நினைத்தேன்; அவன் கண்களில் தெரிந்த பார்வையை நினைத்துப் பார்த்தபோது, அந்த அச்சத்தை இப்போது உணர்ந்தேன்; நாயை இழந்த தருணத்தில், அவனது கண்களை நினைத்துப் பார்த்தேன்; கடைசியாக கடைவாசலில் செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்ததை நினைத்துப் பார்த்தேன். முந்தைய பகலின் வெளிச்சத்தோடு, கடையின் உள்ளிருந்த வெளிச்சத்தையும், அவனைக் கொன்றபோது, அறைக்குள் தெரிந்த முன்பக்கத் தாழ்வார வெளிச்சத்தையும் நினைத்துப் பார்த்தேன். பின்னர், நாய்களைப் பார்க்கத் தொடங்கினேன்; அவை அப்போதும் தூங்காமல், முற்றத்தில் ஒரு மூலைக்கும் எதிர் மூலைக்குமாக ஓடிக்கொண்டிருந்தன. மரவேலி பல இடங்களில் இற்றுப்போய், உடைந்திருந்தது; என்றாவது ஒருநாள், யாராவது அதைச் சரிசெய்வார்கள், நிச்சயம், அது நானாக இருக்கப்போவதில்லை. மலைகளின் மறுபுறம், அன்றைய நாளின் விடியல் புலரத் தொடங்கியது. நாய்கள் தாழ்வாரத்தின் மேலேறி, இரவு முழுவதற்கும் விளையாடிக் களைத்ததற்கு, அன்பான ஒரு தட்டு மற்றும் தொடுகையை எதிர்பார்த்து நின்றன. வழக்கமான இரண்டு மட்டுமே வந்திருந்தன; மூன்றாவதற்காக நான் சீழ்க்கை அடித்தேன்; ஆனாலும் அது வரவில்லை. சட்டென்று எனக்குள் தோன்றிய அந்த வெளிச்சம் குளிரின் முதல் நடுக்கத்தை ஏற்படுத்தியது. இறந்தவன் கொலைகாரன் இல்லை. உண்மையான கொலைகாரனால், நாங்கள் ஏமாற்றப்பட்டிருந்தோம். அவன் விதிவசத்தால் தான் எங்கோ தூரத்தில் ஒளிந்துகொண்டிருக்க வேண்டும். பெட்லோ யாரையும் கொலைசெய்ய நினைக்கவில்லை – அவன் நாயைத்தான் தேடி வந்திருக்கிறான். பாவம், அந்த வேசிமகன், என நான் நினைத்தேன். நாய்கள், ஒன்றையொன்று துரத்தி விளையாட முற்றத்திற்குச் சென்றன. நான் கதவைத் திறந்து அந்தப் பெண்களைப் பார்த்தேன்; வசிப்பறைக்குள் என் கால்களால் நுழையவே முடியவில்லை. பெட்லோவின் சடலம் மீண்டும் ஆடைகள் அணிவிக்கப்பட்டிருந்தது. ஆடைகள் முன்பைவிட நன்றாகவே இருந்தன. நான் எதையோ சொல்லப் புகுந்தவன் அதில் பயனெதுவும் இல்லையென்று, மீண்டும் தாழ்வாரத்துக்கே திரும்பி வந்தேன். பெண்களில் ஒருத்தி என் பின்னால் வந்தாள்; ‘’நாம் இப்போது சடலத்தை ஒழித்தாக வேண்டும்,’’ எனப் பின்னால் நின்றவாறே சொன்னாள். ‘’ஆமாம்,’’ என்றேன், நான். பின்னர், பெட்லோவைத் தூக்கி அந்த டிரக்கில் ஏற்ற உதவினேன். டிரக்கை நாங்கள் மலைப்பகுதிக்குள் ஓட்டிப் போனோம். ‘’வாழ்க்கைக்கு அர்த்தமேயில்லை.’’ என்றாள், மூத்தவள். நான் பதில் சொல்லவில்லை; கல்லறை ஒன்றினைத் தோண்டினேன். நாங்கள் திரும்பி வந்து, அவர்கள் குளித்துக்கொண்டிருக்கும்போது, நான் டிரக்கைக் கழுவி முடித்து, எனது பொருட்களையெல்லாம் எடுத்து வைத்தேன். நாங்கள் தாழ்வாரத்தில் அமர்ந்து மேகங்களைப் பார்த்துக்கொண்டே காலை உணவு அருந்தும்போது, ‘’இப்போது என்ன செய்யப் போகிறாய்?’’ என அவர்கள் கேட்டார்கள். ‘’நான் நகரத்துக்கே மீண்டும் போய், எங்கே, எந்த இடத்தில் பாதையைத் தவறவிட்டேனென்று கண்டுபிடிக்கப் போகிறேன்.’’ என்றேன், நான்.

பாஞ்ச்சோ மோங்கோ சொன்னபடியென்றால், ஆறு மாதத்திற்குப் பின் வில்லியம் பர்ன்ஸ் அடையாளம் தெரியாத கொலைகாரர்களால் கொலை செய்யப்பட்டான் என்பதே கதையின் முடிவு.

நன்றி:- www.newyorker.com/magazine/2010/02/08/william-burns

தாரிணி மாமாவும் வேதாளமும் – சத்யஜித் ரே – தமிழில்: எஸ்.அற்புதராஜ்

satyajit-ray-watercolour-1942

படம் சத்யஜித் ரே வரைந்தது

ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில் ஒரு நாள் முழுவதும் மழை தூறிக் கொண்டே இருந்தது. தாரிணி மாமா இருள் கவியத் தொடங்கிய மாலைப் பொழுதில் தன் வீட்டிற்குத் திரும்பி வந்தார். வந்தவுடன் தன்னுடைய திண்டின் மீது ஏறி அமருமுன்;, தன்னுடைய ஜப்பானியக் குடையை மடக்கி அதைச் சுவரையொட்டி சார்த்தி வைத்தார். தன்னுடைய குஷனை அருகில் இழுத்து வைத்துக் கொண்டு, ‘எங்கே இந்தப் பசங்க எல்லாம், போய் அவர்களை யெல்லாம் அழைத்து வா. அதற்கு முன் நிகுஞ்சாவிடம், கெட்டிலில் புதிதாக வெந்நீர் வைத்து கொண்டு வருமாறு சொன்னார். பிறகு கொஞ்சம் டீ குடிக்க வேண்டும் போல் இருக்கிறது.

இவை எல்லாம் முடிந்ததும் மின்சாரம் நின்று போனது. ஹாலின் நடுவில் இரண்டு மெழுகு திரிகள் ஏற்றப்பட்டன.

நிகுஞ்சா கெட்டிலில் புதிதாக தண்ணீர் எடுத்து கொதிக்க வைத்து விட்டு, மற்ற பையன்களை அழைக்கச் சென்றான். சற்று நேரத்தில் நேப்ளா, பப்லு, கோபு மற்றும் சுநந்தா ஆகியோர் வந்து சேர்ந்தனர்.

‘ஒரு நாள் இருள் கவிந்த இன்றுபோல ஈரமான மாலைப் பொழுது, அணையத் துடித்துக் கொண்டிருக்கும் மெழுகுதிரி விளக்கு’ நேப்ளா ஆரம்பித்தான்.

‘நீங்கள் பேய்க் கதையா கேட்க விரும்புகிறீர்கள்?’ தாரிணி மாமா கேட்டார்.

‘ஆமாம், உங்களுடைய ஸ்டாக்கிலிருந்து ஏதாவது மீதமிருந்தால் சொல்லுங்கள்’.

‘என்னுடைய ஸ்டாக்கிலிருந்தா? விடுபட்டுப் போன இரண்டு அராபிய இரவுக் கதைகள்?’

‘அதாவது இரண்டாயிரத்து இரண்டு அராபிய இரவுக் கதைகள்?’

நேப்ளா மட்டுமே தாரிணி மாமாவிடம் துணிந்து பேசக் கூடியவன், ‘ஆமாம், ஆமாம்,’ மாமா பதிலளித்தார், ‘ஆனால் எல்லாக் கதைகளும் பேய்க் கதைகள் அல்ல’.

தாரிணி மாமாவின் கதைகள் எப்பொழுதுமே விறுவிறுப்பும் சுவையும் நிறைந்ததாகவே இருக்கும். அவைகள் எல்லாம் உண்மையான சம்பவங்களா, கட்டுக் கதைகளா என்று யாருமே அவரிடம் இதுபற்றிக் கேட்டதில்லை. எங்களுக்குத் தெரிந்த தெல்லாம், அவர் கடந்த நாற்பத்தைந்து ஆண்டுகளாக நாடு முழுவதும் சுற்றி அலைந்து பரந்து பட்ட அனுபவம் மிக்கவர். அதனாலேயே அவர் விநோதமான, திகிலூட்டும், பரபரப்பான அனுபவங்களைக் கொண்டிருந்தார்.

‘இன்றைக்கு என்ன விதமான கதையைச் சொல்லப் போகிறீர்கள் மாமா?’ பப்லு கேட்டான்.

‘நல்லது. இன்றைக்கு நான் சொல்லப் போவது பேய்க்கதை என்றோ, எலும்புக் கூட்டின் கதை என்றோ வைத்துக் கொள்ளலாம்.’

‘ஒரு பேயும், ஒரு எலும்புக் கூடும் ஒன்றாகக் கூடுமா என்று எனக்குத் தெரியவில்லை,’ நேப்ளா ஆச்சரியத்துடன் கேட்டான்.

‘உங்களுக்கென்ன தெரியும் பசங்களா? இரண்டும் ஒன்றில்லைதான். ஆனால் சமயங்களில் இரண்டும் ஒன்றாகக் கூடும். அப்படிப் பட்டதொரு சம்பவத்தை என் கண்முன்னாலேயே நான் கண்டேன். உங்களுக்குக் கேட்க தைரியமிருந்தால் கேளுங்கள், நான் சொல்கிறேன்’.

‘ம்….ம்…. சொல்லுங்கள் மாமா, நாங்கள் கேட்கிறோம்,’ ஐவரும் ஏககுரலில் சம்மதம் தெரிவித்தார்கள்.

தாரிணி மாமா கதையை ஆரம்பித்தார்.

நான் மலபாரில் ஏலக்காய் வாங்கி விற்கும் தொழிலை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருந்த வேளையில், அந்த வேலையிலும் ஒரு தொய்வு ஏற்பட்டு, முடிவுக்கு வருவது போல் இருந்தது. நான் கொச்சியிலிருந்து கோயம்புத்தூர், பிறகு அங்கிருந்து பெங்களூர், பெங்களூரிலிருந்து குன்னூர், அங்கிருந்து ஹைதராபாத் என்று இப்படி சுற்றியலைந்தேன். என்னுடைய பாக்கெட்டில் நிறைய பணம் இருந்தது. எனவே நான் சென்ற இடங்களுக்கெல்லாம் முதல் வகுப்பிலேயே பயணம் செய்தேன். நல்ல ஹோட்டல்களில் தங்கினேன். நகரின் உள்ளாக பயணம் செய்ய வேண்டி இருந்தால் டாக்ஸியில் பயணம் செய்தேன். முக்கியமாக ஹைதராபாத்தில் சாலார்ஜங் மியூசியத்தைப் பார்க்க விரும்பினேன். அதைப் பார்க்கும் வரை ஒரு தனிமனிதனால் அவ்வளவு பிரம்மாண்டமான மியூசியத்தை உருவாக்க முடியுமா என்பதை என்னால் நம்பவே முடியவில்லை.

அந்த மியூசியத்தைப் பார்த்து விட்டு நான் கோல்கொண்டா சென்றேன். பின்னர் ஹைதராபாத்துக்குத் திரும்பி வந்து மற்றொரு பயணத்துக்கு திட்டமிட்ட பொழுது, உள்ளூர் பத்திரிகையில் விளம்பரம் ஒன்று பார்த்தேன். ஹைதராபாத்தில் உள்ள தன்ராஜ் மார்ட்டியாண்ட் என்ற ஓவியர், தன்னுடைய ஒரு புராணக் கதைக்கான ஓவியம் ஒன்றுக்கு மாடலாக இருக்க ஒரு நபரைத் தேடுவதாக இருந்தது. நீங்கள் ரவி வர்மாவைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அவர் திருவாங்கூர் அரச குடும்பத்தில் பிறந்தவர். அவருடைய இதிகாச ஓவியங்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரசித்தமானவை. இந்தியாவின் அநேக அரண்மனைகள் அவருடைய ஓவியங்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தன. தன்ராஜ் மார்ட்டியாண்ட்டின் ஓவியங்கள் ரவி வர்மாவின் பாணியிலேயே அமைந்திருந்தன. முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு மார்ட்டியாண்ட் ஓய்வு ஒழிச்சல் இல்லாத ஒரு பிஸியான ஓவியராகத் திகழ்ந்தார்.

அந்த விளம்பரம் என்னை வெகுவாகக் கவர்ந்தது. அவர் தன்னுடைய விளம்பரத்தில் ஒரு ஆண்மகன் மாடலாக இருக்க வேண்டும் என்று கேட்டிருந்தார். மாடலாக இருக்க விரும்புபவர் நல்ல அழகிய தோற்றம் உள்ளவராகவும், ஒவ்வொரு நாளும் மாடலிங்க்காக மணிக்கணக்காக அமர வேண்டும் என்றும் கோரியிருந்தார். அவருக்கு நல்ல சன்மானம் வழங்கபப்டும் என்றும் தெரிவித்திருந்தார். நான் ஏற்கனவே உங்களுக்கு சொல்லியிருந்தபடி, அன்றைக்கு மிகவும் இளைஞனாகவும், ஒரு இளவரசனைப்போல் தோற்றம் கொண்டவனாகவும் இருந்தேன். மேலும் தினசரி கொஞ்சம் உடற்பயிற்சி செய்து வந்ததால் நான் கட்டான உடல் அமைப்பைக் கொண்டிருந்தேன். நான் ஒரு பட்டாடையை அணிந்து கொண்டு, தலையில் ஒரு மகுடத்தையும், இடுப்பில் ஒரு வாளையும் செருகியிருந்தேனெனில் நான் ஒரு ராஜாவைப் போலவே தோற்றமளித்திருப்பேன். நான் விண்ணப்பித்த ஒரு வாரத்திற்குள் நேர் காணலுக்கு வருமாறு அழைக்கப்பட்டிருந்தேன்.

நேர்காணல் அன்று நான் ஒரு புதிய பிளேடால் முகச் சவரம் செய்து கொண்டு, என்னிடம் இருந்த மிகச் சிறந்த உடையை அணிந்து கொண்டு மார்ட்டியாண்ட் வீட்டைச் சென்றடைந்தேன். அவர் வசித்து வந்த அந்த வீடு ஒரு குட்டி அரண்மனை போன்று இருக்க, இது ஒரு காலத்தில் ஒரு நவாப்புக்குச் சொந்தமானதாக இருந்திருக்க வேண்டும் என்று தோன்றியது. எங்கே பார்த்தாலும் சலவைக் கற்களாலும், மொசைக் தரையாலும் அழகுபட விளங்கியது. தெளிவாகச் சொல்லப்போனால் அந்த இடம் முழுக்கவே இதிகாச ஓவியங்களால் செல்வம் நிரம்பி வழிவதை உணர முடிந்தது.

சீருடை அணிந்த பணியாள் ஒருவன், வரிசையாக நாற்காலிகளால் நிரப்பப்பட்ட ஒரு அறையைக் காட்டினான். ஏற்கனவே எனக்கு முன்பாக ஐந்து பேர் அந்த அறையில் உட்காந்திருக்க, அவர்களனைவரும் அறுவை சிகிச்சை டாக்டரின் அழைப்பிற்காகக் காத்திருப்பவர்கள் போல் காணப்பட்டனர். அவர்களில் ஒருவர் மட்டும் ஏற்கனவே பரிச்சயமான முகமாக இருந்தது. ஆனால் அவரை இன்னாரென்று கண்டு கொள்ள முடியவில்லை. நான் உள்ளே சென்று அமர்ந்த மறுகணம், அந்தப் பணியாள் வந்து, ‘விஸ்வநாத் சோலங்கி’, என்று கூவினான். இப்பொழுது எனக்கு ஞாபகம் வந்து விட்டது. அவருடைய புகைப் படங்களை சில சினிமாப் பத்திரிகைகளில் பார்த்திருக்கிறேன். அவர் ஏன் இந்த வேலைக்கு வர வேண்டும்?

பேராவல் மிகுதியால் அருகிலிருந்த மனிதரை நான் வினவினேன், ‘ஏன் சார் இப்ப போனாரே அவர் ஒரு சினிமா நட்சத்திரம் தானே?’ அந்த மனிதர் புன்னகையோடு சொன்னார், ‘அப்படியிருந்தால் அவர் இங்கே வரவேண்டிய அவசியமில்லை. என்றாலும் அவர் ஒரு சினிமா நட்சத்திரமாக முயற்சி செய்தார். ஆனால் வரிசையாக மூன்று படங்கள் தோல்வியடையவே, அவர் மாற்று வழியில் முயற்சி செய்தார்’.

அதைத் தவிர அவர் மேலும் சில செய்திகளைச் சொன்னார், ‘சோலங்கி ஹைதராபாத்தில் செல்வச் செழிப்பான குடும்பத்;தில் பிறந்தவர். ஆனால் அவர் சூதாட்டத்தில் நிறைய பணத்தை இழந்ததுமல்லாமல் பம்பாய் சென்று சினிமா கதாநாயகனாக முயற்சி செய்து தோல்வியடைந்தார். மீண்டும் சொந்த ஊரான ஹைதராபாத்திற்கே வந்து சேர்ந்தார்.’

எனக்குச் செய்தி சொன்னவரும் நேர்காணலுக்குத்தான் வந்திருந்தார். வந்திருந்த ஐந்து பேரும் ஓவிய மாடலாகவே விரும்பி வந்திருந்தனர். அவர்களில் சோலங்கி மட்டுமே கொஞ்சம் நல்ல தோற்றம் உடையவராக இருந்தார். ஆனால் அவரும் தேவையான ஆண்மைத் தோற்றம் இல்லாததால் நிராகரிக்கப்பட்டார்.

இறுதியாக நானே அழைக்கப்பட வேண்டியவன். இதுவரை நேர்காணல் நிகழ்ந்த அறை எனக்காக திறந்து விடப்பட்டது. ஒரு புறம் மிகப் பெரிய சன்னல், ஒரு ஓவியச் சட்டகம், மற்றும் வண்ணக் கலவைகள், பிரஷ்கள் ஒரு மேசையின் மீது வைக்கப்பட்டிருந்தன. அறையின் நடுமையத்தில் ஒரு சாய்வு மேசையும் அதன் ஒருபுறம் இரண்டு நாற்காலிகளும் போடப்பட்டிhருந்தன. அவர் கொக்கி போன்று நீண்டு வளைந்த மூக்கையும், ஆட்டுத் தாடிபோல் ஒரு தாடியும் கொண்டு, அவர் தோளின் மீது புரளும் அளவுக்கு நீண்ட முடியையும் கொண்டிருந்தார். அவர் அணிந்திருந்த உடையைக் கண்டு நிலைகுத்தி நின்றேன். நான் இதுவரை கண்டிராக ஜப்பானிய, ஐரோப்பிய, முஸல்மான் பாணியல்லாத அவருக்கென்றே பிரத்யேகமான கலவை உடையைத் தோந்தெடுத்திருந்தார். ஆனால் மிகவும் சரளமாகப் பேசினார். ஒரு பிறவி ஆங்கிலேயனைப் போலவே ஆங்கிலம் பேசினார்.

நாங்கள் ஒரு ஐந்து நிமிடம் போல் பேசிக்கொண்டிருந்தோம். பிறகு என்னுடைய சட்டையைக் கழற்றச் சொன்னார். என்னுடைய மார்பளவையும், தசைகளையும் பார்த்து விட்டு என்னை தேர்ந்து கொண்டார். நான் அவருடைய வேலைக்கு நியமிக்கப் பட்டு விட்டேன். ஒவ்வொரு அமர்வுக்கும் நூறு ரூபாய் சம்பளம். ஒரு மாதத்திற்கு மூவாயிரம் ரூபாய் சேர்ந்து விடும். இன்றைய கணக்கிற்கு பதினைந்தாயிரம் ரூபாய் ஆகும்.

மறுநாள் முதல் வேலை தொடங்கி விட்டது. அவர் நினைக்கும் கதையின் பிரதான ஆண் பாத்திரமாக மாடல் கொடுக்க வேண்டும். அவர் என்ன கதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்று எனக்குத் தெரியாது. அவருடைய மனைவி, அவர்களுடைய மகள் சகுந்தலா அந்தக் கதையின் பெண் பாத்திரங்கள். மேலும் சில மாதிரிகள் சிறுசிறு பாத்திரங்களுக்கான ஆண் வடிவங்கள் இருந்தன. மார்ட்டியாண்ட் ஏராளமான பாத்திரங்களுக்கான மாதிரி வடிவங்கள் வைத்திருந்தார். அவைகளில் முக்கியமாக தலைப்பாகைகள், மகுடங்கள், பட்டாடைகள், இடுப்புக் கச்சைகள், நெக்லஸ் வகைகள் மற்றும் இந்திய இதிகாசங்களுக்குத் தேவையான நானாவித பொருட்கள் அங்கே இருந்தன. முதல் ஓவியமாக அர்ஜுனன் ஒரு பறவையின் கண்ணைப் பார்த்து அம்பு எய்யும் காட்சியை ஆரம்பித்தார். மார்ட்டியாண்ட் எல்லோரையும் மிகவும் கவரும் வகையில் மிகப்பெரிய அம்பு ஒன்றை இதற்காக ஏற்பாடு செய்திருந்தார்.

அந்த வேலை எனக்குக் கிடைத்ததும், நான் ஹுசைன் சாகர் ஏரிக்கரையிலிருந்து, என்னுடைய வேலைக்கு நடந்து செல்லும் தூரத்தில் ஒரு புதிய இடத்திற்கு மாறினேன். மாதத்திற்கு நூற்றி ஐம்பது ரூபாய் அளவில் இரண்டு அறைகளை எடுத்துக் கொண்டேன். என்னுடைய நிலக்கிழார் முல்டானி ஹுசைன் மிகவும் நல்ல மனிதர். காலை உணவை முடித்துக் கொண்டு என்னுடைய வேலைக்குப் புறப்பட்டுச் சென்றேன். காலையுணவு என்பது சில ரொட்டித் துண்டுகளும் முட்டையும் கலந்து செய்த டோஸ்ட் ஆகும். காலை ஒன்பது மணிக்கு வேலையில் சேர வேண்டும். ஓவியர் முன்னிலையில் அவர் சொல்கிறபடி அமர்ந்திருக்க வேண்டும். பதினோரு மணிக்கு கொஞ்சம் டீயுடன் சிறு இடைவேளை. என்னுடைய வேலை முடிந்ததும் மீதிப் பொழுதில் எனக்கு ஓய்வுதான். மாலைப்பொழுதுகளில் நகரின் எல்லாப் பகுதிகளையும் நடந்தே சுற்றிப் பார்த்து வருவேன். அறைக்குத் திரும்ப இரவு பத்துமணி ஆகிவிடும். இதைத் தவிர எனக்கு வேறு ஒரு வேலையும் இருந்தது. அதாவது மார்ட்டியாண்ட்டுக்குத் தேவையான இதிகாசங்களைப் படிக்க வேண்டும். தகுந்த நேரத்தில் அவருக்குச் சொல்ல வேண்டும். அவர் ராமாயணம், மகாபாரதம் கதைகளை முழுமையாக அறிந்திருக்கவில்லை. எனவே அவர் தேர்ந்தெடுக்கும் கதைப் பகுதிகள், தவிர்க்க முடியாமல் மீண்டும் மீண்டும் வருவதாகவே அமைந்து விடும்.

மார்ட்டியாண்டுக்கு நான் ராஜா விக்ரமாதித்யன் கதையைச் சொல்ல நேர்ந்தது. அவற்றை அவர் வெகுவாக ரசித்தார். என்னுடைய உடல்தோற்றம் விக்ரமாதித்ய மகாராஜாவுக்கும் பொருத்தமாக இருக்கும் என்பதை நன்றாக அறிவேன். எனக்கு அதில் ஆசையும் இருந்தது. ஆனால் சில காரியங்கள் தடம் மாறியதால் விக்ரமாதித்தன் வேடம் அணிய முடியாமலேயே போயிற்று. பிறகு சொல்கிறேன் என்ன நடந்தது என்று.

நான்கு மாத காலம் எல்லாம் சுமூகமாக நிகழ்ந்து கொண்டிருந்தன. தினந்தோறும் நான் அமர்வில் இருந்தேன். இந்த காலகட்டத்தில் என்னுடைய ஓவியர் எட்டு ஓவியங்களை வரைந்து முடித்திருந்தார். ஒரு நாள் மாலை நான் ஏரிப்பகுதியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த வேளையில் யாரோ என் தலையில் தாக்கியது போல் உணர்ந்தேன். அந்த இடம் தனிமையான ஆளரவமற்ற இடம். பள்ளி வாசலிலிருந்து அதிக தூரமில்லை. நான் பள்ளி வாசலைக் கடந்து ஒரு புளிய மரத்தினடியில் நடந்து கொண்டிருந்த போது இந்த தாக்குதல் நிகழ்ந்தது. நான் விழுந்த சில வினாடிகளில், என் கண்முன்பாக வானில் பிரகாசமான நட்சத்திரங்கள் தோன்றின. பிறகு என்ன நிகழ்ந்தது என்று எனக்குத் தெரியாது.

நான் மயக்கம் தெளிந்து பார்த்த பொழுது, ஒரு மருத்துவ மனையில் இருந்தேன். நான் சாலையோரத்தில் மயங்கிக் கிடப்பதைப் பார்த்து, ஒரு பெரிய மனிதர் தன்னுடைய காரில் ஏற்றிக்கொண்டு, இந்த மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார். தலையிலும், ஒரு கையிலும் பலமான அடிபட்டதில் அதிகமான வலி இருந்தது. நான் தாக்குண்டு விழுந்ததில் என்னுடைய முழங்கைப் பகுதி ஒரு பாறையின் மீது பட்டதில் முழங்கையில் எலும்பு முறிவு (குசயஉவரசந) ஏற்பட்டிருந்தது. அது மட்டுமல்ல நான் என்னுடைய கைப்பையில் வைத்திருந்த நூற்றி ஐம்பது ரூபாய் பணமும், எழுநூறு ரூபாய் பெறுமான ஒமேகா கைக்கெடிகாரமும் பறிபோய் இருந்தன. போலீஸுக்குத் தகவல் தெரிவித்த பொழுது, இதுபோன்ற நிகழ்வுகள் அடிக்கடி நிகழக் கூடுமென்றும், போலீஸ்காரர்கள் குற்றவாளிகளைக் கண்டு பிடிப்பதில் எந்தவிதக் அக்கறையும் கொள்வதில்லை என்று அறிந்து கொண்டேன்.

நான் கையில் கட்டு போடப்பட்ட நிலையில் மூன்று வாரங்கள் மருத்துவமனையில் இருக்க நேர்ந்தது. நான் மார்ட்டியாண்ட்டுக்கு ஒரு தபால் கார்டில் எனக்கு என்ன நிகழ்ந்தது என்பது குறித்து எழுதி இருந்தேன். மூன்று நாட்களில் மார்ட்டியாண்டிடம் இருந்து பதில் வந்தது. அது ஒரு மோசமான செய்தியைத் தாங்கி வந்திருந்தது. அதில் அவர் விக்ரமாதித்யன் முழுக்கதையையும் வரையும்படி பணிக்கப்பட்டிருந்தார். அது ஒரு குறிப்பிட்ட தேதிக்குள் முடிக்க பணிக்கப் பட்டிருந்ததால் விக்ரமாதித்யனுக்கு வேறு ஒருவரை மாடலாக நியமித்து விட்டிருந்தார். மேலும் இந்தத் தொடரை முடிக்கும் பொழுது எனக்குத் தெரிவிப்பதாகவும் எழுதியிருந்தார்.

இதில் என்னால் செய்யக் கூடியது ஒன்றுமில்லை. எனவே நான் என்னுடைய ஓய்வு நேரத்தை உபயோகமான வழியில் பயன்படுத்தி சிறிது பணம் சம்பாதிக்க விரும்பினேன். எனவே நான் ‘ஆந்திரா ஹெரால்டு’ என்ற பத்தரிகைக்கு எழுத ஆரம்பித்தேன். மார்ட்டியாண்ட் இந்தத் தொடரை முடிக்க எப்படியும் மூன்று மாதங்களாவது எடுத்துக் கொள்வார் என்று நினைத்தேன்.

ஒரு மாதம் கழிந்ததும், மார்ட்டியாண்ட் என்னுடைய நிலக்கிழாரை ஃபோனில் தொடர்பு கொண்டு எனக்கு ஒரு தகவல் சொல்லியிருந்தார். நான் அவரை உடனடியாக சந்திக்க வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆவல் மிகுதியால் நான் அவருடைய ஸ்டுடியோவிற்குச் சென்றேன். எதற்காக என்னைத் தேடுகிறார்?

‘எனக்காக ஒரு எலும்புக் கூடு பெற்றுத் தரமுடியுமா?’ மார்ட்டியாண்ட் என்னைக் கேட்டார், ‘நான் இரண்டு மூன்று பேரிடம் இதுபற்றிக் கேட்டேன். யாரும் உதவ முன் வரவில்லை. அப்பொழுது உன்னை நினைத்தேன். உன்னால் உதவ முடியுமானால் நிறைய கமிஷன் கொடுக்கிறேன்.’

‘ஒரு எலும்புக்கூடு? எதற்காக உங்களுக்கு எலும்புக் கூடு தேவை?’ நான் கேட்டேன்.

மார்ட்டியாண்ட் விளக்கினார். தனது அடுத்த ஓவியம் வேதாளம் பற்றியது. ராஜா விக்ரமாதித்தன் தன்னுடைய தோளில் எலும்புக்கூட்டைச் சுமந்து செல்வது மாதிரி இருக்க வேண்டும். இன்றைய குழந்தைகள் வேதாளம் பற்றி கதைகளை படித்திருப்பார்களா என்று தெரியவில்லை. நாம் இதைப் பயன்படுத்தி அவர்களை வெகுவாக மகிழ்விக்க வேண்டும். விக்ரமாதித்தன் ஒரு சாதுவைச் சந்திக்கிறான். அவர் சொன்னார், ‘இங்கிருந்து இரண்டு மைல் தூரத்தில் ஒரு சுடுகாடு இருக்கிறது. இறந்த உடல் ஒன்று அங்கே ஒரு மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. நீ போய் எனக்காக அதை எடுத்து வர வேண்டும்’. விக்ரமாதித்தன் சாதுவின் வார்த்தைகளுக்குப் பணிகிறான். விகிகிரமாதித்தன் அந்த சுடுகாட்டிற்குச் சென்று அங்கே அந்தப் பிரேதம் மரத்தில் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தான். அவன் தன்னுடைய வாளால் கழுத்துச் சுருக்கில் வெட்டினான். அந்தப் பிரேதம் தரையில் விழுந்ததும் ஒரு வெடிச்சிரிப்புச் சப்தம் கேட்டது.

நான் சிறுவனாக இருந்தபோது ‘;ஜிந்தா லாஷ்’ (உயிர்ப்பிணம்) என்றவொரு ஹிந்திப்படம் பார்த்தேன். இதுவும் அதே மாதிரி ‘ஜிந்தா லாஷ்’ தான். அதாவது அது ஒரு தீய ஆவியால் சூழப்பட்ட பிரேதம். அதுதான் வேதாளம் என்று அழைக்கப்படுகிறது. விக்ரமாதித்தன் அதைக் கையில் எடுத்ததும் வேதாளம் அவன் தோளின் மீது அமர்ந்து கொள்கிறது. அப்பொழுது அது சொன்னது, ‘நீ என்னை ஒரு சாதுவிடம் அழைத்துச் செல்கிறாய் போகும் வழியில் நான் பல விடுகதைகளைப் போடுவேன். அதற்கெல்லாம் நீ சரியான விடை சொல்லிவிட்டால், நான் என்னுடைய மரத்திற்குத் திரும்பிச் சென்று விடுவேன். இல்லையென்றால் உன்னுடைய இதயம் வெடித்து அந்தக் கணத்திலேயே இறந்து விடுவாய்’.

இந்தக் கதையை மீண்டும் நினைவு படுத்திப் பார்க்கிறேன். விக்ரமாதித்தன் கண்டது பிரேதம், எலும்புக் கூடு அல்ல என்று மார்ட்டியாண்ட்டுக்குச் சொன்னேன்.

‘எனக்குத் தெரியும்,’ அவர் சொன்னார், ‘எனக்கு எலும்புக் கூடு கிடைத்தால் போதும் நான் அதை பிரேதமாக மாற்றிவிடுவேன். அது ஒரு ப்ரச்னை அல்ல. இப்பொழுது எனக்கு ஒரு எலும்புக் கூடு தேவை’.

‘சரி சார் முயற்சி செய்கிறேன். ஆனால் உங்களுடைய மாடல் அதைத் தோளில் சுமக்க முடியுமா?’

‘முடியும். நான் ஏற்கனவே என்னுடைய மாடல்காரரிடம் இதுபற்றிப் பேசி விட்டேன். அவருக்கு அதைப் பற்றிக் கவலை இல்லை. அவர் மிகவும் தைரியமான மனிதர். இப்பொழுது நீ சொல்! உன்னால் எலும்புக் கூட்டைப் பெற்றுத் தர முடியுமா?’

‘என்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறேன். ஆனால் அதற்கு நிறைய பணம் செலவாகும் என்று நினைக்கிறேன். ஒரு நிபந்தனை உங்களுடைய ஓவியம் முடிந்ததும் அந்த எலும்புக் கூட்டைத் தந்தவரிடம் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும்’.

மார்ட்டியாண்ட் உடனடியாக இருநூறு ரூபாய் கொடுத்தார். ‘ஒரு வாரத்திற்கு மட்டுமே எனக்கு வேண்டும். அதை விலைக்கு வாங்க விரும்பவில்லை. உனக்கு ஒருநூறு ரூபாய் கொடுத்து விடுகிறேன்’.

உங்களுக்குத் தெரியும், இந்தக் காலத்தில் எலும்புக்கூட்டை பெறுவது என்பது அத்தனை சுலபமல்ல. எல்லாமே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மேலும் அந்த நாட்களில் ஹைதராபாத்தில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் மட்டுமே கிடைக்கக் கூடியதாக இருந்தது. அதையும் தேடிக் கண்டுபிடிப்பது மிகவும் சிரமம். எனவே கண்ட இடங்களில் தேடி அலைவதைவிட என்னுடைய நிலக்கிழார் திரு.ஹுசைனிடம் கேட்டுக் பார்க்கலாம் என்று நினைத்தேன். அவர் ஹைதராபத்திலேயே நாற்பத்தி இரண்டு வருடங்களாக வசித்து வருபவர். அவர் இந்த நகரின் செய்திகளை மிகவும் அறிந்து வைத்திருப்பார்.

என்னுடைய வேண்டுகோளைக் கேட்டதும் நிலக்கிழார் சற்றே முகம் சுளித்தார். பிறகு சொன்னார், ‘எனக்கு ஒரு எலும்புக் கூடு பற்றித் தெரியும். ஆனால் அது உண்மையானது தானா அல்லது செயற்கையானதா என்று தெரியாது. மேலும் அதன் உரிமையாளர் அதை வைத்திருக்கிறாரா என்றும் தெரியாது’.

‘யார் அதன் உரிமையாளர்?’.

‘ஒரு மந்திரவாதி’ அவருடைய உண்மையான பெயர் எனக்குத் தெரியாது. அவர் போஜராஜன் என்று அழைக்கப்பட்டார். அவருடைய எலும்புக்கூடு நிகழ்வுகளில் ஒன்று – அது அவருடன் சமமாக உட்கார்ந்து டீ குடிக்கும். சீட்டு விளையாடும், அது உண்மையிலேயே வியத்தகு செயலாக இருக்கும். அந்த மனிதர் தனக்கென புகழை, நற்பெயரைத் தேடிக் கொண்டிருந்தார். பின்னர் ஓய்வு பெற்றுவிட்டார். கடந்த பதினைந்து வருடங்களுக்கு மேலாக நான் அவரைப் பற்றி எதுவும் கேள்விப்படவில்லை’.

‘அவர் ஹைதராபாத்காரர் தானா?’

‘ஆமாம். ஆனால் அவருடைய முகவரி எனக்குத் தெரியாது. எதற்கும் நீங்கள் ‘ஆந்திரா அசோஷியேஷனில்’, கேளுங்கள். அவர்கள் தான் வருடா வருடம் அவருடைய நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்வார்கள்’.

‘ஆந்திரா அசோஷியேஷன்’, எனக்கு நன்றாக உதவி செய்தது. அவர்களிடமிருந்து போஜராஜன் கடைசியாக வசிக்கும் இடம் தெரிந்து கொண்டேன். அதிர்ஷ்டவசமாக அவருடைய இருப்பிடத்தை சிரமமின்றி கண்டடைய முடிந்தது. சௌக்பஜாரில் ஒரு அபார்ட்மென்ட்டில் இரண்டு அறைகள் கொண்ட வீட்டில் இருந்தார். அநேகமாக அவருடைய வயது எண்பதைத் தாண்டியிருக்கும். செம்பழுப்பு நிற அடர்த்தியான தாடி. வழுக்கைத் தலை, கருங்காலி மரம் போன்ற கறுப்பு நிறம். என்னை ஒரு பார்வை பார்த்து விட்டுச் சொன்னார், ‘நீ ஒரு வங்காளி. கடினமான பொருள் ஒன்றைத் தேடி வந்திருக்கிறாய்’.

‘அவருக்கு எப்படித் தெரியும்? சோதிடம் சொல்லக் கூடியவரா அவர். எது எப்படியோ, நான் நேரடியாகவே விஷயத்திற்கு வந்தேன். நான் எல்லாவற்றையும் விளக்கமாக சொல்லிவிட்டு, எனக்கு ஒரு எலும்புக்கூடு வேண்டும் என்றேன். மேலும் கேட்டேன்’, உங்களிடம் அது இருக்குமானால் ஒரு வாரத்திற்கு மட்டும் வாடகைக்கு தரமுடியுமா? நீங்கள் கொடுத்தீர்கள் என்றால் அதிர்ஷ்டம் என் பக்கம் வரும்,’ என்றேன். மேலும் ‘என்னிடம் எலும்புக்கூட்டைக் கேட்ட அந்த மனிதர் இரண்டாயிரம் ரூபாய் தரத் தயாராக இருக்கிறார்’, என்றேன்.

‘இருக்கிறதாவா? ஒன்று போதுமா, என்னிடம் இரண்டு இருக்கின்றன,’ என்று சொல்லிவிட்டு ஹா ஹா ஹா வென வெடிச்சிரிப்பு சிரித்தார்.

நான் தன்னுணர்வு பெற்றவனானேன். ‘அந்த விஷயமாகத்தான் உங்களிடம் எலும்புக் கூடு பெற வந்தேன். போஜராஜன் சொன்னார், ‘அது கிடைத்தால் நீ எப்படி அதைத் தூக்கிச் செல்லுவாய். உன்னுடைய எலும்புக் கூட்டை நான் தெளிவாகப் பார்க்க முடிகிறது. உன்னுடைய முழங்கை எலும்பு முறிந்திருக்கிறது. மருத்துவர்கள் அதைச் சரிசெய்திருக்கிறார்கள். நீ இளைஞனாக இருப்பதால் சீக்கிரம் குணமாக்கி விட்டது. அது மாதிரியான சம்பவம் எனக்கு நிசழ்ந்திருந்தால், ஒரு போதும் குணமாக்கியிருக்க முடியாது’.

இதுதான் சந்தர்ப்பம் என்று நான் அவரிடம் கேட்டேன். ‘என்னைத் தாக்கியவன் யாரென்று தெரியுமா உங்களுக்கு?’

‘ஒரு சாதாரண போக்கிரிதான். ஆனால் அதன் பின்னால் வேறு யாரும் இருக்கிறார்களா என்று தெரியவில்லை. சரி அது போகட்டும். என்னுடைய எலும்புக் கூட்டிற்குத் தெரியும். என்னைவிட பல விஷயங்கள் எலும்புக் கூட்டிற்குத் தெரியும். நான் எலும்புக் கூட்டைத் தர சம்மதிக்கிறேன். வெகுநாட்களாக நான் ஒரு பைசா கூட வருமானம் இல்லாமல் இருக்கிறேன். எனக்கு மொத்தமாக இரண்டாயிரம் ரூபாய் கடன் இருக்கிறது, அதையெல்லாம் அடைந்துவிட்டால் நிம்மதியாகச் சாவேன். அதற்கு முன் சில விஷயங்களை நான் உனக்கு சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். இந்த எலும்புக் கூடானது சாதாரண எலும்புக் கூடு இல்லை. அது ஒரு யோகியினுடையது. அவருக்கு சில விசேஷமான சக்திகளுண்டு. அவர் எழுந்து நின்றால் ஆறடி உயரமிருப்பார். அவர் காற்றிலிருந்துதான் ஜீவாதாரமான உணவைக் கிரகித்துக் கொள்வார். மற்றபடி உணவு என்பது அவரைப் பொறுத்தவரை அநாவசியம். ஒருமுறை அவர் தியானம் செய்வதற்காக வெளியே உட்கார்ந்திருந்த பொழுது ஒரு திருடன் அவருடைய பொருட்களில் சிலவற்றைத் திருட முயன்றான். அவர் கையை நீட்டியதும் அந்தக் கணத்திலேயே அவனுடைய கை மற்றும் விரல்கள் எல்லாம் வளைந்து நெளிந்து குஷ்டரோகியைப் போல் ஆகிவிட்டன. ஒருமுறை நாகம் ஒன்று தீண்ட முயன்ற பொழுது அவருடைய பார்வைபட்ட அந்தக் கணத்திலேயே அது கைப்பிடியளவு சாம்பலாகிப் போனது. எனவே அவர் மிகவும் சக்தி வாய்ந்தவர்.

‘ஆனால் நீங்கள் அவருடைய எலும்புக்கூட்டைக் கையாளத் தெரிந்தவர். உங்களுடைய ஒவ்வொரு ஏவலுக்கும் அதைப் பணித்து விடக் கூடிய வல்லமை பெற்றவர் என்று நான் உணர்கிறேன். அது மேடையில் ஏராளமான தந்திர வித்தைகளைச் செய்யக் கூடியது, அப்படித்தானே?’

‘அப்படியல்ல, போஜராஜன் புன்னகைத்தார். தொடர்ந்து சொன்னார், ‘நான் எலும்புக் கூட்டைக் கையாள்வதில் ஒரு போதும் நிபுணனல்ல. எது நடந்திருந்தாலும் அது என்னுடைய யோகியின் விருப்பத்தின்படியே நடக்கும். மக்கள் நினைத்;தார்கள், ஏதோ நான் நவீன கருவிகளைப் பொருத்தி எலும்புக் கூட்டை இயக்குவதாக. ஆனால் அது உண்மையல்ல. என்ன நடந்தது எனில் நான் யோகியினுடைய அபாரசக்தியால் ஈர்க்கப்பட்டு பத்து வருடங்கள் அவருடைய சீடனாக இருந்தேன். நான் அவருடைய தந்திர வேலைகள் குறித்து கூரிய கவனமும் அக்கறையும் கொண்டிருந்தேன். அவ்வளவுதான். நான் ஒரு மாஜிக் நிபுணனாக மாறுவேன் என்ற ஒரு போதும் நினைத்ததே இல்லை.

‘பத்து வருடங்கள் வரை குருஜி என்னைக் கண்டு கொள்ளவே இல்லை. பின்னர் ஒரு நாள் திடீரென்று அழைத்து, ‘மகனே, நான் உன்னுடைய செயல்பாடுகளில் மிகவும் திருப்தியுற்று இருக்கிறேன். ஆனால் ஒருபோதும் என்னை விட்டு, இந்த வீட்டை விட்டுப் போக வேண்டும் என்று நினைக்காதே. நீ நிறைய சாதிக்க வேண்டி இருக்கிறது. ஒரு நாள் நீ சிறந்த மந்திரவாதியாவாய். நான் உனக்கு என்றும் உதவி செய்வேன். நீ கடந்த சில வருடங்களாக எனக்குச் செய்த உதவிகளுக்காக. ஆனால் இப்பொழுது என்னால் ஒன்றும் செய்ய இயலாது. என்னுடைய சாவுக்குப்பின் நான் உனக்கு உதவி செய்வேன்’.

‘எப்படி? எப்படி குருஜி அது நடக்க முடியும்?’

குருஜி எதிர்காலத்தில் ஒரு தேதியைச் சொன்னார். அவர் சொன்னார். ‘அந்த நாளன்று நர்மதை நதிக்கரையிலுள்ள புராதன நகரமான மன்தாதா என்ற மாநகருக்குச் சென்றால், அங்கு நீ ஒரு சுடுகாட்டைக் காண்பாய். அங்கே ஒரு விளாம்பழ மரம் இருக்கும். அங்கிருந்து மேற்காக நடந்து செல். நதியை ஒட்டியே நடந்து செல்ல வேண்டும். தொள்ளாயிரத்து தொண்னூற்றொன்பது தப்படிகள் நடந்ததும் ஒரு புளியமரம் தெரியும் புளிய மரத்தின் அருகில் சென்றதும் ஒரு புதரின் பின்னால் தரையில் எலும்புக் கூடு கிடக்கும். அது என்னுடைய எலும்புக் கூடு. அதை எடுத்துக் கொள். அதை உன்னுடைய மேடை நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். உன்னுடைய ஏவல்களுக்கெல்லாம் அது பணிந்து நடந்து மேடை நிகழ்ச்சிகளுக்கெல்லாம் முழு ஒத்துழைப்புக் கொடுக்கும். மேலும் உன்னை அதிர்ஷ்டசாலியாகவும், புகழ்மிக்கவனாகவும் ஆக்கிவிடும். உன் வேலைகள் முடிந்ததும் அதை ஆற்றில் எறிந்து விடு. இன்னும் அதற்கான வேலைகள் மீதமிருக்கும் எனில் அது ஆற்றில் மூழ்கி விடாமல் மிதக்கும். அதை மீண்டும் எடுத்துக் கொண்டு வந்து விடு’.

போஜராஜன் பேசி முடிக்கும் வரை அவருடைய கதையைக் கேட்டுக் கொண்டேயிருந்தேன். சில நிமிடங்கள் கழித்து நான் அவரிடம் கேட்டேன், ‘ஆற்றில் எறிவதற்கான நேரம் இன்னும் வரவில்லையா?’

‘ம் ஹும். அதற்கான நேரம் இன்னும் வரவில்லை. நான் முயற்சி செய்தேன் அது ஆற்றில் மூழ்கவே இல்லை இப்பொழுது உணர்கிறேன் அது உன்னுடைய வருகைக்காகவே காத்திருக்கிறது’.

‘எனக்காகவா?’

‘ஆமாம். நீ கடகராசிக்காரனா?’

‘ஆமாம்’.

‘பௌர்ணமிக்குப்பின் ஐந்தாம் நாளில் நீ பிறந்திருக்கிறாய்’.

‘உண்மைதான்’.

‘அப்படியெனில் அது உனக்காகத்தான் காத்திருக்கிறது. அப்படியே உன்னுடைய ராசி மாறியிருந்தாலும் பாதகமில்லை. எனக்குத் தெளிவாகத் தெரிகிறது. நீ ரொம்ப நல்லவன். உன்னுடைய கைகளில் தான் என் குருநாதர் நிம்மதியடைவார். நானும் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். அவருக்கு உன்னைப் பிடித்துப் போயிற்று. அவர் நல்ல நேர்மையான மனிதர்களை அடையாளம் கண்டு கொள்வார்’.

‘இப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும்?’

‘அதோ அங்கே ஒரு பெட்டி இருக்கிறதல்லவா போய் அதைத் திற’.

அங்கே ஒரு மூலையில் பெரிய பெட்டி ஒன்று இருந்தது. ஏறக்குறைய பீரோவைப் போன்ற பெரிய பெட்டியாக இருந்தது. அதன் மூடியைத் திறந்தேன். அதற்குள் ஒரு சிவப்பு வெல்வெட் துணி சுற்றப்பட்டு முழங்கால் மடங்கிய நிலையில் எலும்புக் கூடு இருந்தது. ‘அதை இங்கே கொண்டு வா’, போஜராஜன் சொன்னார். அந்தப் பெட்டிக்குள் இருந்து இரண்டு கைகளாலும் எலும்புக் கூட்டைத் தூக்கினேன். எல்லா எலும்புகளும் மெல்லிய செப்புக் கம்பிகளால் இணைக்கப்பட்டு மிகவும் பலஹீனமான நிலையில் இருந்தன.

‘அதை நேராக நிமிர்த்திவை’.

நான் தரையில் நேராக நிமிர்த்தி வைத்து என் கைகளால் முட்டுக்கொடுத்து நின்றேன். ‘இப்பொழுது உன் கைகளை எடுத்துவிடு’. போஜராஜன் கட்டளையிட்டார்.

நான் என்னுடைய கைகளை விடுவித்தேன். என்ன ஆச்சர்யம்! இப்பொழுது எலும்புக்கூடு எந்தவித ஆதாரமும் இல்லாமல் நேராக நிமிர்ந்து நின்றது.

‘அதற்கு ஒரு சல்யூட் அடி. இப்பொழுது அது உன்னுடைய சொத்து, அதன் இறுதிப்பணி முடியும் வரை உன்னுடைய பொறுப்பிலிருக்கும்’.

‘இறுதிப் பணி என்றால் என்ன, இது குறித்து எனக்கு எந்தப்ரக்கையும் இல்லை. இதை நான் எனக்காக எந்த விதத்திலும் பயன்படுத்தப் போவதில்லை. இதற்கு நான் சல்யூட் செய்வதை விடவும் சாஷ்டாங்கமாக குப்புற விழுந்து வணங்குகிறேன்.’

‘நீ எடுத்துக் கொண்டிருக்கும் எலும்புக் கூட்டின் முக்கியத்துவம் என்னவென்று புரிகிறதா,’ போஜராஜன் தெரிந்துகொள்ள விரும்பினான். – ‘நீ கேள்விப்பட்டதெல்லாம் உண்மையென்று நம்புகிறாயா?’

‘நான் கேட்டது ஒவ்வொன்றையும் திறந்த மனதோடு ஏற்றுக் கொள்கிறேன்’. மேலும் தொடர்ந்து சொன்னேன். ‘நான் மறுவாழ்வை நம்புகிறேன். மந்திர வித்தையை நம்புகிறேன். அறிவியலையும் நம்புகிறேன்’, என்று சொன்னேன்.

‘ரொம்ப நல்லது. இப்பொழுது இதை எடுத்துச் செல். குருஜி வேண்டுகோளையும் ஞாபகத்தில் கொள். வேலை முடிந்ததும் முஸி ஆற்றில் எறிந்துவிடு.

மார்ட்டியாண்ட் எலும்புக் கூட்டைக் கண்டதும் பெருமகிழ்ச்சியடைந்தார். முன்னர் வாக்களித்த இருநூறு ரூபாய்க்குப் பதிலாக ஐநூறு ரூபாய் கொடுத்தார். பின்னர் கேட்டார், ‘இன்று மாலை என்ன செய்யப் போகிறாய்?’

‘ஏன் கேட்கிறீர்கள்?’ என்றேன்

‘நான், ‘விக்ரமாதித்தனும் வேதாளமும்’, கதையைத் தொடங்கப் போகிறேன். அப்பொழுது நீங்கள் இங்கிருக்க வேண்டும். என்று விரும்புகிறேன்’.

‘நீங்கள் பகலில் தானே ஓவியம் வரைவீர்கள்?’.

‘யெஸ். ஆனால் இது ஒரு ஸ்பெஷல் கேஸ். ஒருவித பிரத்யேக மனோ நிலையும், சூழ்நிலையும் இருப்பதால் இன்றைக்கே ஆரம்பித்து விடலாம் என்று நினைக்கிறேன். அதற்கு இந்த இரவு நேரம் சரியான தருணம் என்று கருதுகிறேன். அதற்காக நான் பிரத்யேக ஒளி அமைப்புகள் எல்லாம் ஏற்பாடு செய்திருக்கிறேன். அதை நீங்கள் பார்க்க வேண்டும்’.

‘ஆனால் உங்களுடைய மாடல்காரர் ஆட்சேபித்தால்?’

‘அவருக்கு நீங்கள் இங்கே இருப்பது தெரியாது. மாலை ஏழு மணிக்கு வந்து விடுங்கள். அந்த மூலையில் நின்று கொள்ளுங்கள். எல்லா விளக்குகளும் அந்த மாடல் மீதே விழும்படியாக இருக்கும். இன்னொரு புறத்தில் என்ன இருக்கிறதென்று யாராலும் கண்டுகொள்ள முடியாது’.

நான் அமெச்சூர் மேடைகளில் நடித்திருக்கிறேன். ஒளிவெள்ளத்தில் இருக்கும் நடிகனால் எதிரிலிருக்கும் பார்வையாளர்களைக் கண்டு கொள்ள முடியாது. மார்ட்டியாண்ட் அப்படியொரு எண்ணத்தில் இருந்ததால் நான் மாலையில் திரும்பி வருவதற்குச் சம்மதித்தேன்.

மாலை ஏழு மணிக்கு நான் அங்கு சென்ற பொழுது என் இதயம் வழக்கத்திற்கு மாறாக வேகமாக அடித்துக் கொண்டது. மார்ட்டியாண்டின் வேலைக்காரன் சரவணன் கதவைத்த திறந்து விட்டு, நான் ஸ்டுடியோவுக்குள் செல்லும்போது தடுக்கி விடாமல் இருக்க உதவி செய்தான்.

மாடல் மனிதர் இன்னும் வரவில்லை. ஆனால் விளக்குகள் எல்லாம் போடப்பட்டு தயாராக இருந்தன. உண்மையிலேயே அந்த இடம் பேய்களும், ஆவிகளும் உலாவக் கூடிய இடமாகவும், பொருத்தமானதாகவும் இருந்தது.

மார்ட்டியாண்ட் ஓவியத் திரை முன் உட்கார்ந்திருந்தார். அவரருகில் பளிச்சென்ற ஒளி பரவியிருந்தது. அவர் கதவைநோக்கி பார்வையைச் செலுத்திய பொழுது எனக்குத் தெரியும் படியாக எதிர் அறையில் மாடல் தயாராகிக் கொண்டிருந்தார்.

அப்பொழுது நான் ஒன்றைக் கவனித்தேன், அந்த எலும்புக்கூட்டை மார்ட்டியாண்ட் ஒரு தொப்பிஸ்டாண்டில் தொங்க விட்டிருந்தார். ஒரு மங்கலான பேய் மாதிரி அமைப்பில் ஒளி அதன் மீது விழுந்து கொண்டிருந்தது. பற்களை நறநறவென்று கடிப்பது போல இருந்தது. அது எப்பொழுதும் நம்மைப் பார்த்து பற்களை நெரடுவது போல பற்கள் பளிச்சென்று தெரியுமாறு அமைக்கப்பட்டிருந்தது.

ஒரு மென்மையான க்ளிக் சப்தம் இன்னொரு அறையின் வழியாக பார்க்கத் தூண்டியது. அந்த எதிர் அறையில் விக்கிரமாதித்தன் ஒரு அரசனுக்குரிய பிரத்யேக உடையில் கையில் வாளுடன் நின்று கொண்டிருந்தான். அடர்த்தியான மீசையும், புஷ்டியான நீண்டதாடியும், அலையென தலை முடியும் கொண்டிருந்தான். அது ரொம்பவும் பொருத்தமாக இருந்தது. ஒரு கணம் அந்த வாய்ப்பை இழந்ததில் பொறாமை கொண்டேன். ஒரு கன நிகழ்வில் அந்த வாய்ப்பை இழந்து போனது வருத்தமாக இருந்தது.

அந்த மாடல் மனிதர் ஒளி வெள்ளத்தில் விக்ரமாதித்தனாய் மேடை மீது வந்து நின்றார் அவருக்குச் சிறுசிறு மாற்றங்கள் செய்து விட்டு தொப்பிஸ்டாண்டிலிருந்து எலும்புக் கூட்டை எடுத்து வந்தார். எலும்புக் கூட்டை உங்கள் தோளில் அமரச் செய்யுங்கள்.

உங்கள் கைகளை விரித்துக் கொண்டு உங்கள் வலது கையால் எலும்புக்கூட்டை இறுக்கிப்பிடித்துக் கொள்ளுங்கள். கால்கள் இரண்டும் உங்களுடைய இடுப்பைச் சுற்றியபடி இருக்கட்டும்;. இடது கையால் கால்களை இடுப்பைச் சுற்றி வளைக்கவும்.’

மாடல் மனிதர் எந்த வித தயக்கமும், அசௌகர்யமும் இன்றி மார்ட்டியாண்டு சொன்னபடியே கேட்டு நடந்தார். அவருடைய மனோதைரியத்தைக் கண்டு ஆச்சர்யப்பட்டேன்.

மார்ட்டியாண்ட் ஓவியம் வரைய ஆரம்பித்தார். முதலில் கரித்துண்டைக் கொண்டு அவுட் லைன் வரைந்து கொண்டு பின்னர் வண்ணங்களைப் பூசினார். நான் மாடலிங்க்குக்காக நிற்கும் பொழுது அவர் எப்படி வரைகிறார் என்பதைக் காணமுடிந்ததில்லை. இப்பொழுது நான் அதைப் பார்க்க நேர்ந்த பொழுது, அவர் எவ்வளவு விரைவாகவும், கைதேர்ந்த திறமையுடன் நேர்த்தியாக வரைவதைக் காண முடிந்தது.

ஐந்து நிமிடத்திற்குள்ளாக ஒரு வினோதமான ஒலியைக் கேட்டேன். அது மேடையிலிருந்து வந்த புலம்பல் ஒலி போல இருந்தது. ஓவியர் தன்னுடைய வேலையில் மூழ்கியிருந்தார். அவர் மேடையில் நிகழும் எதையும் கண்டு கொள்ளாதவர் போலக் காணப்பட்டார். அவர் சொன்னதெல்லாம் ‘அசையாதே, அசையாதே’, ஏனெனில் மாடல் மனிதர் ஏனோ அசைந்து நெளிந்து கொண்டிருந்தார்.

இப்பொழுது தெளிவாகப்புரிய வந்தது, ஓவியரின் கட்டளை ஒலித்துக் கொண்டேயிருந்தது. மாடல் மனிதர் நேராக நிற்க முடியவில்லை. ஏதோ வேதனையில்; இப்படியும் அப்படியும் வளைந்து நெளிந்து கொண்டிருந்தார். ஏதோ வேதனையில் முனகிக் கொண்டிருப்பதை உணர முடிந்;தது.

‘ என்ன நடக்கிறது அங்கே?’ மார்ட்டியாண்ட எரிச்சலுடன் கேட்டார். அங்கு என்ன நடக்கிறது என்று எனக்குத் தெளிவாகத் தெரிய வந்ததும் என் கண்களை என்னாலேயே நம்ப முடியவில்லை.

எலும்புக் கூட்டின் கைகள் கீழ் நோக்கித் தொங்குவதற்குப் பதிலாக கைகள் உயர்ந்து மாடல் மனிதரின் கழுத்தைச் சுற்றிக்கொண்டு, தாடையை இறுகப் பற்றியிருந்தது. கைகள் மேலும் மேலும் தன் பிடியை இறுக்கிக் கொண்டு, ஒரு பேயின் தழுவலைப் போல் பயங்கரத் தோற்றம் கொண்டிருந்தது, ஆனால் கைகள் மட்டும் அல்ல. இடுப்பைச் சுற்றியிருந்த கால்களும்; பிரிக்க முடியாதபடி இறுகிக் கொண்டிருந்தது.

மாடல் மனிதர் பரிதாபமாகக் காட்சியளித்தார். மெல்லிய முனகல் பயங்கர அலறலாக மாறியது. அவர் தன்னுடைய வாளைத் தூக்கி எறிந்து விட்டு எலும்புக்கூட்டின் பிடியிலிருந்து பலங்கொண்ட மட்டும் தப்பிக்க முயன்று தோற்றுப்போனார்.

அதைக் கவனித்த மார்ட்டியாண்ட், மாடல் மனிதருக்கு உதவி செய்ய ஓடினார். ஆனால் அவருடைய முயற்சிகள் தோல்வியடைந்தன. சிறிது நேரத்தில் அவரும் தன் முயற்சியை கைவிட்டு விட்டு, தள்ளாடிய நிலையில் ஓவியச் சட்டகத்தில் மோதியதில் அதுவும் கவிழ்ந்து போக, இறுதியாக சுவரில் சரிந்து, என் அருகிலேயே தரையில் விழுந்தார்.

இந்த நேரத்தில் அதிர்ச்சியிலிரு;தும், ஆச்சர்யத்தினின்றும் மீண்டேன். மாடல் மனிதர் தரையில் விழுந்து புரண்டாலும் எழும்புக் கூடு தன் பிடியிலிருந்து அவரை விடவில்லை. ‘ஏதாவது செய்’, மார்ட்டியாண்ட் கரகரப்பான குரலில் கேட்டுக் கொண்டார்.

நான் மேடையை நோக்கி நடந்தேன். ஏதோவொரு உள்ளுணர்வு எனக்குச் சொன்னது, ‘ எலும்புக் கூடு உனக்கு ஒரு தீங்கும்; செய்யாது. அது உன்னுடைய வழியில் குறுக்கிடாது.’

நான் கிட்ட நெருங்கியதும் என் நினைவுகள் பின்னோக்கி சென்றன. இந்தப் போராட்டத்திற்கிடையில்; மாடல் மனிதனின் விக், தாடி, தலைப்பாகை எல்லாம் சிதறிப் போயிருந்தன. அவனுடைய முகம் தெளிவாகத் தெரிந்தது. நான் கண்டு கொண்டேன். அவன் வேறு யாருமல்ல, தோற்றுப் போன கதாநாயகன் விஸ்வநாத் சோலங்கி தான்.

உடனே கண்முன்னே திரைச் சீலை விலகியது போல் தௌ;ளத் தெளிவாக உண்மை விளங்கியது. அதே நேரத்தில் ஒரு தந்திரம் என் மனதில் பளிச்சிட்டது.

நான் குனிந்து அவனை நோக்கினேன். ‘ உண்மையைச் சொல் சோலங்கி, ஒரு ரௌடியை ஏவி விட்டு என்னைத் தாக்கியது நீ தானே, நீ என்னிடமிருந்து தப்பிக்கமுடியாது. உண்மையைச் சொல்லும் வரை உன்னை விடமாட்டேன்.’

சோலங்கியின் கண்கள் எந்தக் கணத்திலும் வெளியே விழுந்து விடும் போல் இருந்தது. ‘ஆமா, ஆமா, ஆமாம்,’ அவன் பெருமூச்சிற்கிடையே சொன்னான், ‘என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள். ‘

நான் மார்ட்டியாண்ட் பக்கம் திரும்பி, ‘கேட்டீர்களா நீங்கள் எனக்குச் சாட்சியாக இருக்க வேண்டும்? நான் இவனைப் போலீஸில் ஒப்படைக்கப் போகிறேன்.’

மார்ட்டியாண்ட் ஆமோதிப்பது போல் தலையை அசைத்தார்.

நான் பின்னால் திரும்பி, எலும்புக் கூட்டின் தோளை இதமாகத் தொட்டு திருப்பினேன். அதுவும் உடனடியாகத் தான் பிடியை விட்டு விட்டு மாடல் மனிதனை விட்டு விலகியது.

கோலங்கி தன்னுடைய மாடலிங் வேலைக்கு விடைகொடுத்து விட்டான். விரைவிலேயே சிறையில் நீண்ட நாட்கள் கழிக்க வேண்டியதிருக்கும்.

அந்த மனிதரை நீக்கி விட்டு அதற்குப் பதிலாக தாரிணிச்சரண் பானர்ஜியாகிய நான் விக்ரமாதித்தன் வேடத்தைப் போட்டுக் கொண்டேன்.

மார்ட்டியாண்ட் இந்தச் சம்பவம் குறித்து மிகவும் நொந்து போயிருந்தார். ஒரு வாரத்தில் மீண்டும் பழைய உணர்வு பெற்று, புத்துணர்வு பெற்று முழு மூச்சாய் வேலையில் ஈடுபட்டார்.

விக்ரமாதித்தனும் வேதாளமும் ஓவியம் நிறைவு பெற்ற மறுநாளே, நான் எழும்புக் கூட்டை எடுத்துச் சென்று முஸி ஆற்றில் எறிந்தேன்.

கண் மூடித் திறப்பதற்குள் எந்த வித தடையமுமின்றி ஆற்றில் முழுகிப் போனது எலும்புக் கூடு.

_______________

வாஸ்கோ போப்பா கவிதைகள் / ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பு / கருப்பன்

8850_b_7178
வாஸ்கோ போப்பா கவிதைகள்
ஆங்கிலித்திலிருந்து தமிழ் மொழியாக்கம்    கருப்பன்


விளையாட்டிற்கு முன்பு 


முதலில் ஒரு கண்ணை மூடு
பின்னர் 
மற்றதையும் மூடு
உங்களை 
எந்த மூலையிலிருந்தும் பார்வையிடலாம்
ஒவ்வொரு  நககண்ணளவையும் கூர்ந்து கவனித்துக்கொள்ளுங்கள்திருடர்கள் உள்ளனரா எனப் பார்த்துக்கொள்ளவும்
குயிலின் முட்டைகள் இருக்கின்றனவா எனப் பார்த்துக்கொளளவும் 


ஒரு கண்ணை மூடு
பின்னர் மற்ற கண்ணையும் மூடு
உட்கார்  மேலும் குதி 
உயர உயர உயர செல்லவும்
உங்களுக்கும் மேலே

விழு
உங்கள் எடையை இழுந்து விழ
நாட்களின் மீது விழ மேலும் மேலும் விழ
அதலபாதளாத்திற்குள் விழு


துண்டு துண்டாக யாராலும் உடைக்க முடியாதவற்றிலிருந்து
முழுமையாக எழு
நாடகங்கள்

•••••••••••

தற்பெருமையின் தவறுகள்

முன்னொரு காலத்தில் ஒரு தவறு இருந்தது
மிகவும் சிறிய 
இவ்வளவு சிறிய
அதை  
யாரும் கவனிக்கவில்லை என்று

அதனால் தாங்க முடியவில்லை
தன்னைத்தானே கேட்கவும்  தன்னைத்தானே பார்க்கவும்

அனைத்து முறைகளிலும் கண்டுபிடிக்கப்பட்டது
இந்த விஷயங்களை 
அதை வெறுமனே நிரூபிக்க
அது உண்மையில் இல்லை என்று

அதை விண்வெளியில் கண்டுபிடித்தார்கள்
அதன் சான்றுகளை வைத்து
காலத்தின் சான்றுகளை வைத்து
உலகமே அதன் சான்றுகளை பார்க்க

அதைக்குறித்து இட்டுக்கட்டிய அனைத்தும்
படுமோசமானதாக இருந்ததா ?
அல்லது மிக மிக சிறியதாக 
ஆனால் நிச்சயமாக தவறாக இருந்தது

அது இருக்கிறது வேறுவிதமாக 

••••••••••

ஓட்டம்

மற்றவர்களிடமிருந்து சில கடிகள்
ஒரு கால் ஒரு கை அல்லது வேறு எங்காவது

அவர்களின் பற்களிலிருந்து விடுபட்டு 
விரைவாக ஓடி இந்த 
பூமி முழுவதும் ஒளிய 

எல்லா இடங்களிலும் பரவியிருக்கிறார்கள்
மோப்பம் பிடி மோப்பம் பிடி
பூமியின் அடியாழம்வரை தோண்டி

அவர்களுக்கு அதிருஷ்டமிருந்தால் ஒரு கை அல்லது
ஒரு கால் கண்டால் அல்லது வேறு எதையாவது
கடிக்க  இப்போது அவர்கள் முறை 
உற்சாகமான  வேகத்தில் விளையாட்டு  தொடர்கிறது

கைகள் உள்ள வரையில்
கால்கள் இருக்கிற வரையில்
ஏதாவது இருக்கிற வரையில்


•••••••••••••••


எங்களுக்கு தொலைவிலிருந்து

நாங்கள் எங்கள் கைகளை உயர்த்தினோம்
தெருவிலிருந்து வானத்திற்கு 
எங்கள் கண்களை கீழே நோக்கிப் பார்த்தோம்
அது பூமியைப் பிளந்துகொண்டு பாதளம்வரை பாய்ந்தது


எங்கள் வலிகளிலிருந்து
குறிப்பாக எதுவும் இல்லை
செஷ்நெட் மரம் வளர்ந்துகொண்டிருக்கிறது
மர்மங்களுக்குப் பின்னிருந்துஒரு விடிவெள்ளி போல
எங்களுக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது 
அது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது
எங்களுக்கு முன்பாக
தொலைதூரத்திலிருந்து அது நகர்ந்துகொண்டிருக்கிறது

எங்கள் நெற்றிக்குமுன் ஒரு புல்லட்குண்டு
பறந்து போய்க்கொண்டிருப்பது கேட்கிறதா?
எங்களை ஒரு புல்லட்குண்டு  முத்தமிட
காத்திருப்பது கேட்கிறதா?

•••••••••••
தொலைபேசி அழைப்பு ( Phone Calls ) ஸ்பானியம் – இராபர்ட்டோ பொலானோ (சிலி) Roberto Bolano ஆங்கிலம் – மார்க் ஸ்கேஃபர் / Mark Schafer / தமிழில் ச. ஆறுமுகம்.

download (2)

 

 

 

 

 

 

 

இராபர்ட்டோ பொலானோ (28, ஏப்ரல் 1953 – 15 ஜூலை 2003)

மரணம், நிச்சயமென்றபோதிலும், நாம் ஒருபோதும் வாழ்வதை நிறுத்துவதில்லை. அதுபோலத்தான், ஒவ்வொரு புத்தகமும் முடிவுக்கு வருகின்றபோதிலும், வாசிப்பினை நாம், ஒருபோதும் நிறுத்துவதில்லை.

இராபர்ட்டோ பொலானோ

இராபர்ட்டோ பொலானாவை வாசிப்பதென்பது, இரகசியக் கதையைக் கேட்டது போல், குறிப்பிட்ட ஒன்றின் இழை காட்சியாகி, கலை மற்றும் வாழ்க்கையின் பாதைகள் தொடுவானத்தில் இணைவதை, இணைந்து ஒரு கனவு போல் நின்றாடுவதைக் கண்டு, அங்கிருந்து நாம் விழித்தெழுந்து உலகத்தினை இன்னும் உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்குவதாகும்.

– ப்ரான்கைன் ப்ரோஸ் (நியூயார்க் டைம்ஸ் புக் ரிவ்யூ)

*****

 

 

`பி` `எக்ஸ்` மீது காதலாகவே இருக்கிறான். அது ஒரு துரதிர்ஷ்டமான காதல்தான். காதலிக்கும் ஒவ்வொருவரும், நினைப்பது மற்றும் சொல்வது போலவே சற்று அதிகமாகவோ அல்லது குறைவாகவோ, `பி`யும் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் `எக்ஸ்`சுக்காக எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறான். `எக்ஸ்` அவனிடமிருந்து துண்டித்துக் கொள்கிறாள்; ஆம், தொலைபேசி மூலமாகவே அவனிடமிருந்து துண்டித்துக்கொள்கிறாள். `பி` முதலில், உளைச்சலில் தான் இருக்கிறான். ஆனால், பின்னால், எல்லாவற்றையும் போலவே அதனையும் கடக்கிறான். ஆண்டுகள் பலவும் கடக்கின்றன.

செய்வதற்கு வேலையொன்றும் இல்லாத, ஒரு இரவில், இரண்டே தொலைபேசி அழைப்புகளில் `பி` `எக்ஸ்`சுடன் தொடர்பினை ஏற்படுத்திக்கொண்டான். இருவரில் எவருமே இளமையாக இல்லை என்பதை ஸ்பெயினின் ஒரு எல்லையிலிருந்து இன்னொரு எல்லையைக் கூடக் கடந்துவிடும் அவர்களது குரலிலிருந்தே தெரிந்துகொள்ள முடியும். அவர்களது நட்பு மறுபடியும் பிறப்பெடுக்கிறது; சில நாட்களுக்குப் பின், அவர்கள் நேரில் சந்திப்பதெனத் தீர்மானிக்கின்றனர்.

 

இருவருமே மணவிலக்கு, புதிய நோய்கள், விரக்தி எனப் பலவற்றையும் சுமக்கின்றனர். எக்ஸின் நகரத்துக்குச் செல்லும் தொடரியில் ஏறும்போதுகூட, `பி`க்கு காதல் இல்லைதான். எக்ஸின் வீட்டிற்குள்ளேயே முதல் நாள் முழுவதும் அடைபட்டுக்கொண்டு அவரவர் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றியே பேசுகின்றனர். (உண்மையில் `எக்ஸ்` தான் பேசுகிறாள்; `பி` கவனித்துக் கேட்டு, அவ்வப்போது கேள்வி கேட்கிறான்.) இரவில் தன்னுடன் படுத்துக்கொள்ளுமாறு `எக்ஸ்` அழைக்கிறாள். எக்ஸுடன் படுக்கும் ஆர்வம் ஒன்றும் உள்ளூற இல்லையென்றாலும், அவன் ஒப்புக்கொள்கிறான். காலையில் கண்விழிக்கும்போது `பி` மீண்டும் காதல்வயப்படுகிறான். ஆனால், அவன் எக்ஸ் மீது காதல்கொள்கிறானா அல்லது காதல்வயப்படுவது என்ற சிந்தனை மீது காதல்கொள்கிறானா? அவர்களுக்கிடையிலான உறவு சிக்கலாக இருந்தாலும், அது உணர்வு பூர்வமாக ஆழமாகிறது. நாளுக்கு நாள் எக்ஸ் தற்கொலையின் விளிம்புக்கே செல்கிறாள் – மாத்திரைகள், அவளுக்கு எந்தவிதத்திலும் உதவாத ஏராளமான பலவகை மாத்திரைகள் என மனநலச் சிகிச்சையிலிருக்கிறாள். அவள் அடிக்கடி அழுகிறாள்; எந்தக் காரணமும் இல்லாமலேயே அழுகிறாள். அதனால் `பி` எக்ஸுடனிருந்து, அவளைப் பார்த்துக்கொள்கிறான்.

 

அவன் அவளைக் கனிவுடன், மிகுந்த அக்கறையுடன், ஆனாலும் கூடவே அருவருப்பாகவும்தான் பார்த்துக்கொள்கிறான். அவனுடைய சேவைப்பணிகள் என்னவோ உண்மையாகக் காதல்கொண்ட நபரைப் போன்றதாகவே தோன்றுகின்றன. `பி` அதனை மனத்தாலேயே உணர்கிறான். மன அழுத்தத்திலிருந்தும் அவளை வெளியே கொண்டுவர அவன் முயற்சிக்கிறான்; ஆனால் அது, இன்னும் பாதாளத்திற்கு, அல்லது அதலபாதாளமென அவன் கருதியதொரு ஆழத்திற்கு அழுத்துவதில்தான் போய் முடிகிறது. அவன் தனியாக இருக்கும்போது அல்லது `எக்ஸ்` தூங்குவதைக் கவனித்துக்கொண்டிருக்கும்போது, சில நேரங்களில் எல்லாமே அதனதன் முடிவுக்குச் சென்றுவிட்டதாகவே உணர்கிறான். அதனை மாற்றுகின்ற ஒரு நடவடிக்கையாக, அவனது இழந்த காதல்களை மீண்டும் நினைவுகூர முயற்சிக்கிறான்; எக்ஸ் இல்லாமலே, அவனால் தனியாக வாழமுடியுமெனத் தனக்குத்தானே நம்பிக்கை கொள்ள முயல்கிறான்.

 

ஒரு நாள் இரவில் எக்ஸ் அவனை வெளியேறச் சொல்கிறாள்; `பி`யும் தொடரியைப் பிடித்து நகரத்தை விட்டுப் புறப்படுகிறான். அவனை வழியனுப்ப `எக்ஸ்` தொடர்வண்டி நிலையத்திற்கு வருகிறாள். அவர்களது பிரியாவிடை பாசம் மிக்கதாகத் தாங்கொணாத் துயரம் மிக்கதாக இருக்கிறது. படுக்கை வசதிப் பெட்டியிலேயே `பி` பயணித்தும் வெகுநேரம் வரையில் அவனால் தூங்க இயலாமலாகிறது. கடைசியில் அவன் தூங்கும்போது, பனியில் உருவாக்கப்பட்ட ஒரு குரங்கு பாலைவனத்தில் நடந்துசெல்வதாக ஒரு கனவு காண்கிறான். குரங்கின் பாதை அடைபட்டு, அநேகமாகத் தோல்வி தென்படுகிறது. ஆனால், குரங்கு அதனை அலட்சியப்படுத்தவே விரும்புகிறது; அதன் தந்திரமே அதன் உறுதியாக மாறுகிறது. உறைந்த நட்சத்திரங்களே சாட்சியாக, அது, அந்தப் பாலையில் இரவெல்லாம் நடக்கிறது. அவன் கண்விழித்தபோது, (இப்போது அவன் பார்சிலோனாவின் சான்ட்ஸ் தொடர்வண்டி நிலையத்திலிருக்கிறான்.) அவனது கனவின் பொருளைப் புரிந்துகொள்வதாக, (அப்படியொன்று இருந்தால்) அவன் நம்புவதோடு, தன் பாதையே சரியெனத் தன்னை ஆறுதல்படுத்திக்கொள்கிறான்.

 

அன்று இரவு அவன் எக்ஸை அழைத்து, அவன் கண்ட கனவினைச் சொல்கிறான். எக்ஸ் எதுவுமே சொல்லவில்லை. அடுத்த நாள் அவன் மீண்டும் எக்ஸை அழைக்கிறான். அடுத்த நாளும் அழைக்கிறான். ஒவ்வொரு அழைப்பிலும் `பி` நேரத்தை வீணடிப்பது போல, எக்ஸின் நடவடிக்கைகள் இறுகிச் சுழியும் முகத்தைக் காட்டுகின்றன. நான் மறைந்துகொண்டிருக்கிறேன். அவள் என்னைத் துடைத்து, அழித்துக்கொண்டிருக்கிறாள், என `பி` நினைக்கிறான்.

 

அவள் என்ன செய்துகொண்டிருக்கிறாளென்றும், ஏன் அப்படிச் செய்துகொண்டிருக்கிறாளென்றும் அவன் அறிவான். ஒரு நாள் இரவில், தொடரியைப் பிடித்து, மறுநாள் அவள் வாசலில் நிற்பதாக, `பி` எக்ஸை மிரட்டுகிறான். அந்தமாதிரி நினைப்புகளையெல்லாம் உன் மனத்திலிருந்து அழித்துவிடு என்கிறாள், எக்ஸ். நான் வந்தே விடுவேன். இனிமேலும் இந்தத் தொலைபேசிகளை என்னால் பொறுத்துக்கொள்ளமுடியாது, நான் பேசும்போது, எனக்கு, உன் முகத்தைப் பார்க்க வேண்டுமென்கிறான், `பி`. நீ வந்தால், நான் கதவைத் திறக்கவே மாட்டேன், எனச் சொல்கிற எக்ஸ் ஒலிவாங்கியை அப்படியே தொங்கலில் விடுகிறாள். `பி`க்கு ஒன்றினை மட்டும் விளங்கிக்கொள்ள இயலவில்லை. மிக நீண்ட காலமாக, அவன் நினைக்கிறான், ஒரு மானிடப் பெண்ணால், அவளது ஆசைகளை, அவளது உணர்வுகளை ஒரு உச்சத்திலிருந்து அதன் எதிர் உச்சத்திற்கு எப்படி மாற்றிக்கொள்ள முடிகிறது? பின்னர் அவன் குடிபோதையில் ஆழ்ந்து, ஒரு புத்தகத்தில் ஆறுதலைத் தேட முயல்கிறான். நாட்கள் நகர்கின்றன.

ஒன்றரை ஆண்டுகள் கழிந்தபின், ஒரு நாள் இரவில், `பி` தொலைபேசியில் எக்ஸை அழைக்கிறான். அவனது குரலை எக்ஸ் உணர்ந்துகொள்ளச் சிறிது நேரம் பிடிக்கிறது. ஓ, நீதானா, என அவள் சொல்கிறாள். அவன் மயிர்க்கால்களைக் குத்திடச் செய்வதற்கு, அந்த அலட்சியமே போதுமானதாக இருக்கிறது. என்றாலும், எக்ஸ் எதையோ அவனிடம் சொல்லவிரும்புவதாக அவன் நினைக்கிறான். நேற்றுத்தான் பேசியது போல, நேரம் போவதே தெரியாதது போல, அவள் கேட்டுக்கொண்டிருப்பதாக அவன் நினைக்கிறான். எப்படியிருக்கிறாயெனக் கேட்கிறான், `பி.` ஏதாவது பேசு, என்கிறான்.

 

ஓரசைச்சொற்களிலயே பதில் சொல்கிற எக்ஸ் சிறிது நேரத்துக்குப் பின் ஒலிவாங்கியைத் தொங்கலில் விடுகிறாள். திகைத்துக் கடுப்பேறிய `பி` எக்ஸின் எண்ணுக்கு மீண்டும் சுழற்றுகிறான். எனினும், இணைப்பு கிடைத்தபோது, `பி` எதுவும் பேசாமலிருக்கவே விரும்புகிறான். மறுமுனையில் எக்ஸின் குரல் கேட்கிறது : ஹலோ, ஹலோ, யாரு? அமைதி. பின்னர் அவள் ஹலோ சொல்வதோடு அமைதியாகிறாள். எல்லாம், நேரம் – நேரம் தான் பியையும் எக்ஸையும் பிரித்தது. `பி`யால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை – தொலைபேசி இணைப்பு வழியாகக் கடக்கின்ற நேரம், இணைப்பின் தன்மையைக் காட்டும் விதமாக அழுத்தமாகி, நீண்டு கிடந்தது. `பி` அதை உணர்ந்துகொள்ளாமல், அழத் தொடங்குகிறான். அழைப்பது யாரென எக்ஸ் அறிவாள் என்பது `பி`க்குத் தெரியும். பின்னர், அவன் அமைதியாக, ஒலிவாங்கியைத் தொங்கலில் விடுகிறான்.

இந்தக் கட்டம் வரையிலும், இது நன்குதெரிந்த ஒரு கதைதான் – சோகமானதென்றாலும் நன்கு அறியப்பட்ட ஒன்றுதான். மேற்கொண்டு எக்ஸை ஒருபோதும் அழைக்கக்கூடாது என்பது `பி`க்குப் புரிகிறது. ஒருநாள், அவனது வாசற்கதவு தட்டப்படும் ஓசை அவனுக்குக் கேட்கிறது. அங்கே `ஏ`யும் `இசட்`டும் நிற்கின்றனர். அவர்கள் காவல்துறைப் பணியிலிருக்கும் காவலர்கள்; அவர்கள் அவனைச் சில கேள்விகள் கேட்க விரும்புகின்றனர். என்ன காரணமென `பி` கேட்கிறான். அதைச் சொல்வதற்கு `ஏ` தயாராக இல்லை. அருவருப்பாகச் சுற்றிவளைத்த பின், `இசட்` விவரிக்கிறான். ஸ்பெயினின் மறுமூலையில், மூன்று நாட்களுக்கு முன்னர் எக்ஸை யாரோ ஒருவர் கொலை செய்திருக்கிறார்.

 

முதலில், `பி` நிலைகுலைந்துவிட்டான்; பின்னர், அவனும் கூட, ஒரு சந்தேகத்திற்குரிய நபர் என்பதை உணர்கிறான்; உயிர்வாழும் இயல்பூக்கம் அவனை எச்சரிக்கைகொள்ளவைக்கிறது. காவலர்கள் குறிப்பான இரண்டு நாட்கள் பற்றி அவனைக் கேள்விகள் கேட்கின்றனர். அந்த இரண்டு நாட்களில் யார், யாரைப் பார்த்தான், என்னென்ன செய்தான் என்று `பி`க்கு ஞாபகம் இல்லை. அவனுக்குத் தெரியும் – எப்படித் தெரியாமலிருக்கமுடியும் – அவன் பார்சிலோனாவை விட்டு அகலவில்லை. உண்மையில் அவன், ஊரகப் பகுதியைவிட்டு, அவ்வளவுக்கு ஏன், வீட்டைவிட்டுக்கூட வெளியேறவில்லை; ஆனால், அதை அவனால் நிரூபிக்க இயலாது. காவல்துறை அவனைப் பிடித்துச் செல்கிறது.

 

காவல்நிலையத்திலேயே `பி` இரவைக் கழிக்கிறான். விசாரணையின் ஒரு கட்டத்தில் அவர்கள் அவனை எக்ஸின் நகரத்துக்கு அழைத்துச் செல்வார்களோவென்றும், அதன் சாத்தியக்கூறு, அவனுக்கு வினோதமான ஒரு மருட்டலாகவும் தோன்றியது; ஆனால், கடைசியில், அது நிகழவில்லை. அவர்கள் அவனுடைய கைரேகை அடையாளங்களை எடுத்துக்கொண்டதுடன் இரத்தப் பகுப்பாய்வு செய்வதற்கு அனுமதியும் கோரினர். `பி` ஒப்புக்கொண்டான். அடுத்த நாள் காலையில் அவர்கள் அவனை வீட்டுக்குச் செல்ல அனுமதிக்கின்றனர். அலுவல்பூர்வமாக, `பி` கைது செய்யப்படவில்லை. கொலை வழக்கினை ஒரு முடிவுக்குக் கொண்டுவர, அவன் காவல்துறையுடன் ஒத்துழைப்பதாக ஒப்புக்கொண்டிருக்கிறான்.

 

வீட்டிற்கு வந்ததும், `பி` படுக்கையில் விழுந்து, உடனேயே அயர்ந்து தூங்குகிறான். அவன் பாலைவனம் மற்றும் எக்ஸின் முகம் பற்றி, கனவுகள் காண்கிறான். விழிப்பதற்கு முன், அவை இரண்டும் ஒன்றே எனப் புரிந்துகொள்கிறான். அவன் அந்தப் பாலைவனத்தில் தொலைந்துபோனதான முடிவுக்கு வருவதில் அவனுக்கு எந்தச் சிரமமும் இருக்கவில்லை.

அன்று இரவில், அவன் சில ஆடைகளை பயணப்பையில் திணித்துக்கொண்டு, தொடர்வண்டி நிலையத்துக்குச் சென்று, கடைசிச் செல்லிடமாக எக்ஸின் நகரத்திற்கே செல்கின்ற தொடரியைப் பிடிக்கிறான். ஸ்பெயின் நாட்டின் ஒரு எல்லையிலிருந்து மறு எல்லை வரையிலுமான அந்த முழு இரவுப் பயணத்தின் போது, அவனால் தூங்கவே முடியவில்லை. எக்ஸுக்கு அவனால் கொடுக்க முடிந்திருக்கிற அனைத்தைப்பற்றியும், ஆனாலும் கொடுக்காமலிருந்ததைப்பற்றியும், அவனால் என்னவெல்லாம் செய்யமுடிந்திருக்குமென்பது பற்றியும், ஆனாலும் செய்யாமலிருந்தது பற்றியும் நினைத்துக்கொண்டே, நேரம் முழுவதையும் கழிக்கிறான்.

 

மேலும் அவன் நினைக்கிறான்: நான் இறந்த எக்ஸாக இருந்திருந்தால், இந்தப் பயணத்தை வேறு திசையில் மேற்கொண்டிருக்கமாட்டேன். மேலும் அவன் நினைக்கிறான்: அதுவேதான், நான் எப்படி இப்போதும் உயிரோடிருக்கிறேன் என்பதற்குத் மிகத்துல்லியமான பதிலாகும். தூக்கமற்ற அந்தப் பயணத்தில், அவன், கடைசி முறையாக, விருப்பமில்லாமலே, எக்ஸ் முதன்முதலாக எப்படித் தோற்றமளித்தாளோ, அதனை அப்படியே மனக்காட்சியாகப் பார்க்கிறான்; அவன் மீண்டும் அவள் மீதான காதலை உணர்கிறான்; தன் மீது வெறுப்பு கொள்கிறான். அதிகாலையிலேயே வந்துசேர்ந்துவிட்ட அவன், நேராக எக்ஸின் உடன்பிறந்தான் வீட்டுக்குச் செல்கிறான். எக்ஸின் உடன்பிறந்தான் வியப்புடன் குழப்பமுமடைந்தாலும், அவனை வரவேற்றதோடு, காபி சாப்பிடுமாறு உபசரிக்கத் தவறவில்லை.

 

அவன் அப்போதுதான் எழுந்து, முகம் கழுவியிருந்தான்; அரை ஆடையிலேயே இருந்தான். அவன் குளித்திருக்கவில்லையென்பதை `பி` கவனிக்கிறான். அவன் முகத்தை மட்டுமே கழுவிவிட்டு, தலையில் தண்ணீரைத் தெளித்துத் தடவியிருக்கிறான். அவனது காபி யோசனையினை `பி` ஏற்றுக்கொள்கிறான்; பின்னர், அவன், எக்ஸின் கொலை குறித்து அப்போதுதான் தெரியவந்ததாகவும், காவல்துறையினர் அவனை விசாரித்ததாகவும், அதனால் என்ன நடந்ததென்று அவனுக்குச் சொல்லவேண்டுமென்பதற்காகவே, வந்ததாகவும் சொல்கிறான். அது பயங்கரமான துயரம்தான். ஆனாலும் இதிலெல்லாம் நீங்கள் என்ன செய்துவிட முடியுமென்றுதான் நான் நினைக்கிறேனென்கிறான், எக்ஸின் உடன்பிறந்தான், சமையலறையில் காபி தயாரித்துக்கொண்டே.

 

நான்தான் கொலைசெய்திருப்பேனோ, என காவல்துறைக்குச் சந்தேகம், என்கிறான், `பி`. எக்ஸின் உடன்பிறந்தான் சிரிக்கிறான். உங்களுக்கு எப்போதுமே துரதிர்ஷ்டம் தான் என்று அவன் சொல்கிறான். நான்தான் உயிரோடிருக்கிறேனே, அப்படியும், அவன் அப்படிச் சொல்வது வேடிக்கைதானென `பி` நினைக்கிறான். ஆனால், அதே நேரத்தில், எக்ஸின் உடன்பிறந்தான் தன்னைச் சந்தேகிக்கவில்லையென்பதற்காக அவன் மீது நன்றிகொள்கிறான். பின்னர், எக்ஸின் உடன்பிறந்தான் வேலைக்குச் செல்கிறான். `பி` வீட்டிலேயே இருக்கிறான். சிறிது நேரமானதும் சோர்வடைந்து, ஆழ்ந்த உறக்கத்தில் விழுகிறான். எல்லோரும் எதிர்பார்ப்பது போலவே, `எக்ஸ்` அவன் கனவில் தோன்றுகிறாள்.

விழித்தபோது, கொலைகாரனைத் தனக்குத் தெரியுமென அவன் நினைக்கிறான். அவன் முகத்தை, `பி` பார்த்திருக்கிறான். அன்று இரவு, அவன் எக்ஸின் உடன்பிறந்தானோடு வெளியே செல்கிறான். அவர்கள் மதுவகங்களுக்குச் சென்று ஒன்றுமில்லாத, பொதுவான சில விஷயங்களைப் பேசுகிறார்கள். ஆனால், போதை வேண்டுமென்று எவ்வளவுதான் அதிகம் சிரமப்பட்டு, அதிகம் குடித்தாலும் போதை ஏறவில்லை.

 

வீட்டுக்குச் செல்வதற்காக, ஆளரவமற்ற தெருக்களில் அவர்கள் நடக்கும்போது, ‘’ஒருமுறை எக்ஸைத் தொலைபேசியில் அழைத்துவிட்டுப் பேசாமலிருந்துவிட்டதாக, `பி` அவனிடம் சொல்கிறான். நாய்க்குப் பிறந்தவனே, என்கிறான், எக்ஸின் உடன்பிறந்தான். நான் அப்படி ஒரே ஒருமுறைதான் செய்தேன், ஆனால், அதுபோன்ற அழைப்புகள் எக்ஸுக்கு அடிக்கடி வருகின்றன என்பதைப் பின்னர்தான் தெரிந்துகொண்டேன். ஆனால், அது நான்தானென எக்ஸ் நினைத்தாள். என்கிறான், `பி`. நான் பேசுவதைக் கேட்கிறாயா? என்கிறான் `பி`. அந்தப் பெயர் தெரியாத அழைப்பாளிதான் கொலைகாரனா? எனக் கேட்கிறான், எக்ஸின் உடன்பிறந்தான். அவனேதான்! ஆனால், அது நான்தான் என்று எக்ஸ் நினைத்தாள், என்கிறான், `பி`. எக்ஸின் உடன்பிறந்தான் கடுகடுத்தான்.

 

அவளுடைய பழைய காதலர்களில் ஒருவன்தான் கொலைகாரனென்றல்லவா நான் நினைத்தேன். அவளைப் பெண் கேட்டு, நிறையப் பேர் வந்தனர், என்கிறான், அவன். பதிலெதுவும் சொல்லாமலிருப்பதே நல்லதென்று (எக்ஸின் உடன்பிறந்தான், ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ளவில்லையென்று தோன்றுகிறது) நினைக்கிறான். `பி`. வீடு சேரும்வரையில் இருவரும் பேசிக்கொள்ளவில்லை.

மின்னேற்றியில் செல்லும்போது, வாந்தியெடுக்கவேண்டும் போல பி உணர்கிறான். வாந்தியெடுக்கப் போகிறேன், என்கிறான், அவன். கொஞ்சம் பொறுத்துக்கொள், என்கிறான், எக்ஸின் உடன்பிறந்தான். பின்னர், அவர்கள் அறைக்கூடத்தில் விரைந்து கடக்க, எக்ஸின் உடன்பிறந்தான். கதவைத் திறக்கவும், அம்பு போலக் குளியலறை நோக்கிப் பாய்ந்தான், `பி`. ஆனால், அங்கு சென்றதும் வாந்தி வரவில்லை; வாந்தியெடுக்கவும் தோன்றவில்லை. அவனுக்கு வியர்த்துக் கொட்டுகிறது; வயிறு வலிக்கிறது; ஆனால் வாந்தியெடுக்க முடியவில்லை.

 

கழிப்பறைக் கோப்பையின் மூடி உயர்ந்து திறந்திருக்க, அது, அவனுக்குப் பொக்கை வாய் ஒன்று, ஈறுகளைக் காட்டிக் கேலியாகச் சிரிப்பது போலிருக்கிறது. முகத்தைக் கழுவியபின், கண்ணாடியில் பார்க்கிறான்: முகம் வெற்றுக் காகிதம் போல வெளுத்துப் போயிருக்கிறது. அந்த மீதி இரவில் அவனால் தூங்கவே முடியவில்லை. வாசிக்க முயற்சித்துக்கொண்டும், எக்ஸின் உடன்பிறந்தான் குறட்டை விடுவதைப் பார்த்துக்கொண்டும் நேரத்தைக் கடத்துகிறான். அடுத்த நாள் அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் விடைபெறும் நல்வாழ்த்து சொல்கின்றனர். `பி` பார்சிலோனாவுக்குப் புறப்படுகிறான். ‘’இங்கே எக்ஸ் இல்லை; அதனால் இந்த நகரத்திற்கு இனிமேல் எங்கே வரப்போகிறேன்? வரப்போவதேயில்லையென அவன் நினைக்கிறான்

ஒரு வாரத்திற்குப் பின்னர், காவல்துறையினர் கொலைகாரனைப் பிடித்துவிட்ட தகவலைச் சொல்வதற்காக எக்ஸின் உடன்பிறந்தான் அவனை அழைக்கிறான். அந்த ஆள், தொலைபேசி மூலம் எக்ஸைப் பெயர்சொல்லா அழைப்புகளால் அலைக்கழித்துத் தொல்லைப்படுத்தியிருக்கிறான் என்கிறான், உடன்பிறந்தான். `பி` பதிலெதுவும் சொல்லவில்லை. ஒரு பழைய காதலன், என்கிறான், எக்ஸின் உடன்பிறந்தான். இதைக் கேட்டதில் எனக்கு நிரம்ப மகிழ்ச்சி, என்கிறான், `பி`. என்னை அழைத்துச் சொன்னதற்கு நன்றி. பின்னர் எக்ஸின் உடன்பிறந்தான் ஒலிவாங்கியைத் தொங்கலில் வைத்தான். `பி` தன்னந்தனியாக இருக்கிறான்.

 

•••

 

From Grand Street 68, in memory of Roberto Bolaño, 1953-2003

••••••••••••••

 

 

 

 

 

 

 

 

 

 

 

சிங்கம் – ஒரு நீதிக்கதை  –    The Lion – A Moral Tale – ஸ்லாவோமிர் மிரோஜெக் (போலிஷ்) – Slawomir Mrozek –  ஆங்கிலம் : எய்ன்ட் ஓ கல்லகன் ( Einde O’Callaghan ) – தமிழில் ச. ஆறுமுகம்  

download (4)

 

சீசர் கையைக் காட்டினான். கூண்டின் வாயிற்கதவு மேலாக உயர்ந்தது. இருண்ட குகைக்குள்ளிருந்து இடியைப் போன்ற முழக்கம் எதிரொலித்தது. அரங்கத்தின் மையத்தில் நின்ற கிறித்துவர்கள் ஒருவருக்கொருவர் நெருங்கிக் கைகளைக் கோர்த்துக்கொண்டனர். கூட்டம் நன்கு பார்ப்பதற்கு வசதியாக எழுந்து நின்றது. மாபெரும் பனிப்பாறை  வீழும் கனத்த சத்தம் – என்ன நிகழுமோ, எப்படி நிகழுமோ என்ற  எதிர்பார்ப்பில் எழுந்த ஆழப்பெருமூச்சுகளும் அச்சத்தின் கூக்குரல்களும் பரவிச் சூழ்ந்தது. மிகுந்த வேகம் கொண்ட முதல் சிங்கம், அதற்கு இசைவாக இயங்கும் உடலோடு அரங்கத்தில் குதித்தது. விளையாட்டு தொடங்கியது.

சிங்கக் காப்பாளன் போன்டனி கையஸ் நீண்ட கம்பும் கையுமாக, எல்லா விலங்குகளையும் களமிறக்குவதில் குறியாக நின்றான். அவன் `அப்பாடா` என நிம்மதிப் பெருமூச்சொன்றை வெளியிடும் நேரத்தில், கடைசிச் சிங்கம் மட்டும் அரங்கத்தில் குதிக்காமல், குகை வாயிலில் அமைதியாக அமர்ந்துகொண்டதோடு, காரட் ஒன்றை ருசித்துச் சுவைக்கவும் தொடங்கியது. கையஸ் வசவுகளைப் பொழிந்தான். எல்லா விலங்குகளையும் களத்திலிறக்குவது அவன் கடமையில்லையா, என்ன? அவன் அதனருகில், ஆனால், உயிருக்கும் உடலுக்கும் பாதுகாப்புக்காகப் பணிவிதிகள் அனுமதிக்கும் குறைந்தளவு தூரத்தில் எட்டி, சிங்கத்தின் பின்னால் நின்று கையிலிருந்த நீளக்கம்பால்  குத்திக்குத்தி, அதை எழுப்பிவிடத் தூண்டினான். ஆனால், அதுவோ, ஆச்சரியப்படும்படியாகச் சுற்றிலும் ஒரு நோட்டமிட்டுப் பார்த்துவிட்டு அமைதியாக வாலைக் குழைத்தது. கையஸ் மீண்டும் கொஞ்சம் வலுவாகக் குத்தி எழுப்ப முயற்சித்தான்.

‘’ஷ்ஷூ, சும்மாயிரு’’ என்றது சிங்கம்.

கையஸ் தலையைச் சொறிந்தான். சிங்கம் அடியையோ வசவுகளையோ விரும்பவில்லையென்பதைத் தெளிவாகவே காட்டியது. கையஸ் ஒன்றும் மோசமான வேசிமகன் இல்லை. ஆனாலும் மேற்பார்வையாளன் பார்த்துத் தொலைத்துவிட்டால், வேலையில் அசட்டையென்று சொல்லி அரங்க மையத்தில் கிறித்துவர்களோடு கொண்டு போய் நிறுத்திவிடுவான். மேலும் சிறிது முயற்சிப்பதென அவன் தீர்மனித்தான்.

‘’நீ இதை எனக்காகச் செய்துதான் தீர வேண்டும்’’ என்றான் சிங்கத்திடம்.

‘’என்னைக் கழுதையென்று நினைத்துவிடாதே,’’ என்றது சிங்கம், காரட் சுவைப்பதை நிறுத்தாமலேயே.

போன்டனி குரலைத் தாழ்த்திக்கொண்டான். ‘’நீ ஒன்றும் யாரையும் தின்ன வேண்டாம். ஆனால், உன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவாவது, அது மாதிரி சும்மா, நடித்துக் காட்டேன்,’’. சிங்கம் திரும்பித் தன் வாலை, விழித்து நோக்கியது.

‘’இங்கே பார், கிழவா, நானொன்றும் முட்டாள் அல்ல. அவர்கள் எல்லோரும் தான் பார்ப்பார்கள்; மறந்து விடுவார்களா என்ன? நான் யாரையுமே சாப்பிடவில்லையென்று சொன்னால், பிற்காலத்தில் யாரும் நம்ப மாட்டார்கள்.’’

காப்பாளன் களைத்துப் பெருமூச்சு விட்டான். ஆனால், சிறிது வருந்தும் குரலில் கேட்டான். ‘’ என்ன இழவுக்குத் தான் இப்படி அடம் பிடிக்கிறாய்?’’

சிங்கம் சிந்தனை நோக்கோடு அவனை நேருக்கு நேராக அவன் கண்களில் பார்த்தது.

‘’உன்னைக் காப்பாற்றிக்கொள்ளவாவது’’ என்றாயில்லையா? இந்த ரோமாபுரிக் கோமான்கள் இறங்கி வந்து, அவர்களே இந்தக் கிறித்துவர்களைத் தின்ன வேண்டியதுதானே? ஏன் எங்களைத் தின்னச் சொல்கிறார்கள்?’’

‘’அது எனக்குத் தெரியாது. அவர்கள்  எல்லோருக்குமே மிகவும் வயதாகிவிட்டது…. போதாக்குறைக்கு ஆஸ்துமா வேறு …. உடம்பும் அவ்வளவுக்கு வளையாது…….’’

‘’ஆமாமா, ரொம்பத்தான் கிழவன்கள்!’ சிங்கம் இகழ்ச்சியும் சினமுமாக வார்த்தைகளைத் துப்பியது.

‘’உனக்கு அரசியல் பற்றி ஒன்றுமே தெரியவில்லை. அவர்கள் தங்கைளத் தற்காத்துக்கொள்கிறார்கள்.’’

‘’அது சரி, யாரிடமிருந்து?’’

 ‘’எதுவும் மாறி, எப்படியுமாகலாம் என்ற விதியிலிருந்து. வரலாற்றில் ஒருவன் எப்போதுமே மாற்றத்தின் செயல்பாடுகளைக் கவனத்தில் கொண்டிருக்கவேண்டும். இந்த கிறித்துவர்களும் ஒருநாள் ஆட்சி அதிகாரத்துக்கு வருவார்கள் என்று உனக்குத் தோன்றவேயில்லையா?

‘’அவர்களா? ஆட்சிக்கா?’’

‘’ஒருவிதத்தில் சரிதான். ஆனால், நீ வரிகளுக்கிடையில் வாசிக்கப் பழக வேண்டும். இன்றோ, நாளையோ என்றோ ஒருநாள், கிறித்துவர்களோடு, ரோமானியச் சக்கரவர்த்தி,  கான்ஸ்டன்டைன் தி கிரேட் சமரசமாகப் போவார். அப்புறம் என்னவாகும்? மறுவிசாரணை, வழக்கு, இழப்பீடு, மறுவாழ்வு என்று எல்லாமும். இன்றைக்கு மேடையில் இருப்பவர்கள் எல்லோருமே கையை விரித்துவிடுவார்கள். மிகவும் எளிதாகச் சொல்வார்கள், நாங்கள் எதுவும் செய்யவில்லை, எல்லாம் அந்தச் சிங்கங்கள்தான், என்று.’’

‘’உண்மையில் நான் இப்படியெல்லாம் நினைத்துக் கூடப் பார்க்கவேயில்லை.’’

‘’அதனால்தான் சொல்கிறேன், ஆனால், நானொன்றும் அவர்களைப் பற்றிக் கவலைப்படவில்லை, என்னை எப்படிக் காப்பாற்றிக்கொள்வதென்றுதான் பார்க்கிறேன். அப்படியொரு மாற்றம் நிகழ்ந்தால், எல்லோருக்கும் தெரியும், நான் இங்கே தனியாக உட்கார்ந்து காரட் மட்டுந்தான் சாப்பிட்டுக் கொண்டிருந்தேனென்று. அப்புறம், மற்றொன்று, இது நமக்குள் மட்டும், அவர்கள் இரத்தத்தை விரும்பிச் சுவைக்கிறார்கள்.’’

‘’உன் நண்பர்கள், கிறித்துவர்களைப் பிறாண்டிப் பிறாண்டித் தின்றாலும், அவர்கள் தான் சரியாகச் செய்து கொண்டிருக்கிறார்கள்.’’ என்றான், கையஸ் சிறிதும் இரக்கமின்றி.

சிங்கம் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டது.

‘’அடிமைகள். அவர்களது மூக்குக்கு அப்பால் என்ன நடக்கிறதென்பதைக்கூட அறியமாட்டாதவர்கள். அவர்கள் எதனோடு வேண்டுமானாலும் சேர்ந்துகொள்வார்கள். தந்திரம் என்றால் என்னவென்றே தெரியாது. தொலை தூரக் கிராமங்களின் விவசாயிகள்.’’

‘’நான் சொல்வதைக் கொஞ்சம் கேள்…’’ திக்கித் திணறினான், கையஸ்.

‘’ம், சொல்லு, என்ன?’’

‘’கிறித்துவர்கள் ஒரு வேளை எப்போதாவது ….சரி, நல்லது…’’

‘’என்ன, நல்லது?’’

‘’இல்லை, நல்லது, அவர்கள் எப்போது அதிகாரத்துக்கு வந்து….?’’

‘’சரி?’’

‘’எது வேண்டுமானாலும் நடக்கலாமென்று நீ சொல்லவில்லையா? நானொன்றும் உன்னைக் கட்டாயப்படுத்தவில்லை.’’

ஒருவரின் மிக முக்கிய கடமை நாட்டைப் பாதுகாப்பதுதான், நாட்டின் பாதுகாப்புக்கும் மேலானது எதுவுமில்லை.’’ எனத் தலையை நிமிர்த்திச் சொல்லிவிட்டு, மீண்டும் காரட்டைத் தின்னத் தொடங்கிவிட்டது.

https://www.marxists.org/history/etol/newspape/isj/1960/isj003/mrozek.htm